தோழர் ஜெயபாலன் கைதும் மரபு சார் எழுத்துலக வக்கிரங்களும்…
சிவாசின்னப்பொடி
தோழர் ஜெயபாலன் கைது செய்யப்பட்ட விடயம் கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் பேசப்படு பொருளாக இருக்கிறது.
ஏற்கனவே ஈழத்துக்கு சென்ற தமிழீழ ஆதரவாளர்கள் பலர் கைது செய்யப்பட்டிருந்த போதிலும் தோழர் ஜெயபாலனுக்கு இருக்கும் கவிஞர் நடிகர் என்ற ஊடக வெளிச்சம் அவரது கைதுக்கு அதிக ஒளியை பாச்சியிருக்கிறது.
தோழர் ஜெயபாலனின் கைது தொடர்பாக கருத்து வெளியிட்டிருக்கும் யாழ் மையவாத கருத்து கந்தசாமிகள் ….
ஓட்டுக் குழு உறுப்பினன்
ரோ ஏஜண்ட்
சுய விளம்பரம் தேடும் பிழைப்புவாதி….
ஏன்றெல்லாம் தங்களது வழமையான கருத்தியல் வறுமையின் பாற்பாட்ட சேறடிப்புக்களை செய்திருக்கின்றனர்-செய்தும் வருகின்றனர்.
ஜெயபாலனின் கைது ஒரு நாடகமாக ஏன் இருக்கக் கூடாது? என்றும்
கைது செய்யப்பட்டவரை தொலைபேசியில் பேச அனுமதித்தது? எப்படி என்றும் இவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்
முகநூலில் தாயகம் செல்லப் போகிறேன் என்று ஜெயபாலன் அறிவித்துவிட்டு சென்றதன் மூலம் தன்னை அவர் விளம்பர படுத்த முயன்றிருக்கிறார் என்று சிலர் குற்றம் சாட்டுகின்றனர்.
ஆனால் இவர்கள் எல்லோருமே ஜெயபாலனின் தனிப்பட்ட அரசியல் விருப்பு வெறுப்புகள் குறைபாடுகளுக்கு அப்பால் அவரது கைதின் மூலம் மகிந்த அரசாங்கம் தமிழர் பேசும் மக்களுக்கு சொல்ல வந்த செய்தியை கவனிக்க மறந்துவிட்டனர்.அல்லது அதை கவனித்தும் அது மக்களைச் சென்றடையக் கூடாது என்று திட்டமிட்டு மறைக்கின்றனர்.
யாழ்ப்பாணம் சென்ற ஜெயபாலன் அங்கு மீள் குடியேறியுள்ள முசுலீம் தலைவர்களை சந்தித்து தமிழ் முசுலீம் ஒற்றுமை பற்றியும் முசுலீம்களின் பாதுகாப்பு தமிழர்களுடன் ஒன்றுபட்ட இருப்பதிலே தான் தங்கியிருக்கிறது என்றும் வலியுறுத்தியிருக்கிறார்.இதைத் தான் அவர் ஆரம்பத்தில் இருந்தே சொல்லி வந்திருக்கிறார்.தற்போது முசுலீம்களுக்கு எதிராக பௌத்த சிங்கள பேரினவாதிகள் தாக்குதலை தொடுத்திருக்கும் நிலையில் தமிழர்களையும் மோதவைத்து பிளவுபடுத்தி அதன் மூலம் தமிழின அழிப்பையும் தாயக சிதைப்பையும் மேற்கொண்ட வந்த சிறீலங்கா ஆட்சியாளர்களும் ஜெயபாலன் முகமறிந்த ஒரு நடிகானாக வந்து தமிழ் முசுலீம் ஒன்றுமை பற்றி பேசியது பயத்தை உண்டாக்கியது.
தோழர் ஜெயபாலனின் நடிகன் கவிஞன் என்ற ஊடக விளம்பரத்தை வைத்தே தமிழ் பேசும் மக்களுக்கு ‘எவராவது தமிழ் முசுலீம் ஒன்றுமைக்கு முயற்சி எடுத்தால் அல்லது அது பற்றிப் பேசினால் அவர்கள் கடத்தப்படுவார்கள் கைது செய்யப்படுவார்கள் என்ற எச்சரிக்கை செய்தியை மகிந்தவும் கோத்தபாயவும் சொல்லியிருக்கிறார்கள்.
இந்தச் செய்தி உலகளவில் பரவ வேண்டும் என்பதற்காகத்தான் அவரை தொலை பேசியில் பேச அனுமதித்திருக்கிறார்கள்.
இதை விட தோழர் ஜெயபாலனின் கைது இன்னொரு செய்தியையும் புலம் பெயர்ந்த தமிழருக்கு உணர்த்தியிருக்கிறது.
அதாவது அங்கே இப்போது சமாதானம் சகவாழ்வு வந்துவிட்டதாக கூறிக்கொண்டு இங்கேயிருந்து செல்லும் பலர் காணிவாங்குவது கட்டிடம் கட்டுவது முதலீடு செய்வது என்று மறைமுகமாக சிறீலங்கா பௌத்த சிங்கள பேரினவாத அரசின் பொருளாதார இருப்புக்கு துணை புரிந்துகொண்டிருக்கிறார்கள். புலம்பெயர்ந்த நாடுகளிலுள்ள பெரும் தமிழ் நிறுவனங்கள் சிலவும் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உவுகிறோம் என்ற கறிவேப்பிலை காரணங்களை சொல்லிக்கொண்டு திரை மறைவில் மகிந்த அன் கொம்பனியுடன் பெரும் வணிக ஒப்பந்தங்களை செய்திருக்கின்றன.
ஆனால் எப்போது வேண்டுமானாலும் உங்கள் சொத்துக்கள் முதலீடுகள் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானது சமாதனம் சகவாழ்வுக்கு இடையூறானது என்று கையகப்படுத்தப்படலாம் நீங்களும் கைகழுவிவிடப்படலாம் கைது செய்யப்படலாம் அல்லது நாடுகடத்தப்படலாம் என்பதே அந்த செய்தியாகும்.
இவற்றை முதன்படுத்துவதை விடுத்து—
ஜெயபாலன்
ஓட்டுக் குழு உறுப்பினன்;….
ரோ ஏஜண்ட்…
சுய விளம்பரம் தேடும் பிழைப்புவாதி…
என்று சேறடிப்பதன் முலம் இந்த கருத்து கந்தசாமிகள் எதை சாதிக்க நினைக்கிறார்கள்? யாரை காப்பாற்ற விரும்புகிறார்கள்
http://sivasinnapodi.wordpress.com/2013/11/26/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0/