தாயகக் கனவுகளுடன் ....... [23]
"தமிழரின் பிரச்சினைக்கு சமாதானவழியில் நிரந்தரமான
அரசியற்தீர்வு காணப்படவேண்டுமாயின் தமிழர் பற்றிய
சில அடிப்படை உண்மைகளை சிங்களதேசம் ஏற்றுக்
கொண்டே ஆகவேண்டும்.அத்தோடு தமிழ்மக்கள் எத்தகைய
தீர்வை விரும்புகிறார்கள் என்பதையும் அவர்களது அடிப்படை
அபிலாசைகள் என்ன என்பதையும் புரிந்துகொள்ளவேண்டும்.
ஈழத்தமிழர்கள் தனித்துவமான இனஅடையாளத்தைக்
கொண்டவர்கள்.ஒரு தேசிய இனக்கட்டமைப்போடு,அந்த
இனத்துவப் பிரக்ஞையோடு வாழும் ஒரு மக்கள் சமூகம்.
அவர்களுக்கு வரலாற்றுரீதியான தாயகமண்ணாக சொந்த
நிலம் உண்டு.எமது மக்கள் விரும்புவதெல்லாம் ஒன்றுதான்.
தமது சொந்தமண்ணில் நிம்மதியாக நிறைவாக வாழ
வேண்டும் என்பதுதான்.மற்றையவர்களின் அதிகாரஆதிக்கமோ,
நெருக்குவாரங்களோ இல்லாத ஒரு அரசியற் சூழலில்
தம்மைத்தாமே ஆட்சிபுரிந்து கௌரவமாக வாழவேண்டும்
என்பதே எமது மக்களின் ஆழமான அபிலாசையாகும்.
சிங்களமக்கள் இதனைப் புரிந்துகொள்ளவேன்டும். இந்தப்
புரிந்துணர்வின் அத்திவாரத்திலிருந்துதான் ஒரு நியாயமான,
நிரந்தரமான தீர்வைக் கட்டியெழுப்புவது சாத்தியமாகும்."
--- தமிழீழத் தேசியத்தலைவர் வே.பிரபாகரன்
-------------------------------------------------------------------------------------------------------
தாயகக் கனவுகளுடன் ....... [24]
"குட்டக்குட்டத் தலைகுனிந்து அடிமைகளாக அவமானத்துடன்
வாழ்ந்த தமிழனைத் தலைநிமிர்த்தி தன்மானத்துடன் வாழ-
வைத்த பெருமை எமது விடுதலை இயக்கத்தையே சாரும்."
"விடுதலை என்ற இலட்சியத்தை நாம் இலகுவாகத் தேர்ந்தெடுக்க-
வில்லை.வரலாறுதான் அதை எம்மிடம் வலுக்கட்டாயமாகக்
கையளித்தது.சுதந்திரம் வேண்டுவதைத்தவிர வேறு வழி
எதையும் வரலாறு எமக்கு விட்டுவைக்கவில்லை."
"கரடுமுரடான பாதைகள் நிறைந்த இந்த இலட்சியப்பயணத்தில்
எமக்கு ஒரேயொரு ஊன்றுகோலாக இருப்பது எமது உறுதிதான்."
--- தமிழீழத் தேசியத்தலைவர் வே.பிரபாகரன்