இதில் அவர் விரும்பி திருமணம் செய்தவர் விசாலி அக்கா என்று நினைக்கிறேன் அவர் பூநகரி தாக்குதலுக்கு ஒரு படையணி தளபதியா சென்றார் அப்பொழுது எல்லோரும் சாக்கு தொப்பி அணிய வேண்டும் என்று கட்டாயம் இருந்ததாம் ஆனால் விசாலி அக்கா அதை அணியாது போனபோது அதை கண்ணுற்ற தளபதி சொர்ணம் கூப்பிட்டு எங்கோ உங்கள் தொப்பி என்று கேட்டு இருக்கிறார் அவர் அது தனது பாதுகாப்பு அரணில் இருபதாக கூற இங்கிருந்தது வாத்து நடையில் சென்று தொப்பியை எடுத்து வரும்படி கட்டளை இட்டார் ....
பின்னாளில் அவரையே திருமணமும் செய்தார் ஒரு கண்டிப்பான தளபதி .
ஒரு முறை தலைவரை சாவகச்சேரி பகுதியில் உள்ள முகாமில் சந்திப்பதிக்கு தளபதி ஜனா அவர்கள் பிக் கப் வாகனத்தில் சென்றார் சொர்ணம் அண்ணையின் பாதுகாப்பு பிரிவு போராளி அவரை வாசலில் மறித்து சோதனை இடவேண்டும் என்று கூற கோவம் கொண்ட ஜெனா நான் ஒரு தளபதி என்னை சோதனை இடவேண்டிய தேவை இல்லை என்று கூறி விட்டு கடந்து போக போராளி தனது ஏகேயால் வாகன டையரை நோக்கி சுட்டு நிறுத்தினான் ....
அவனின் இந்த செயலுக்கு தளபதி சொர்ணம் பாராட்டு தெரிவித்து இருந்தாராம் யாரா இருந்தாலும் கட்டளை ஒன்று என்று சொன்னார் இப்படி தலைவரின் பாதுகாப்பில் தூங்காமல் இருந்த ஒரு தளபதி .
இவை பழைய போராளிகள் சொல்ல கேட்ட கதைகள் .