-
முன்னாள் பெண் போராளி வெளிநாட்டில் உயிரிழப்பு.!
வீர வணக்கங்கள்.!!🙏🙏
-
-
இந்திய- தமிழீழப் போர் மூள முன்னர் இந்தியப்படை செய்த நாசங்கள்
https://www.facebook.com/reel/1567565054
-
சீனாவின் மலிவான இறக்குமதி - பிரித்தானியாவில் பணவீக்கம் குறைய வாய்ப்பு
மாற்றம் ஒன்றே மாறாதது. அமெரிக்காவின் ஏற்றம் இறங்கத் தொடங்கியுள்ளது. 🤔
-
தமிழரசுக் கட்சி உறுப்புரிமையிலிருந்து நீக்கப்பட்ட உறுப்பினர். - சுமந்திரன் அதிரடி. -
மகிந்தரின் திட்டப்படி, சம்பந்தர்மூலம் திருவளர் சுமந்திரன் அவர்களை தமிழரசுக் கட்சிக்குள் கொண்டுவந்ததே கட்சியைக் காலிபண்ணுவதற்கு என்ற ஐயம் உள்ளது. இது ஐயமில்லை உண்மையே என்பதுபோல், சுமந்திரனும் தான் உள்ளேவந்த காரியத்தைக் கனகட்சிதமாக நிறைவேற்றி வருவது கண்கூடு. என் கதை முடியும் நேரம் இது என்பதை சொல்லும் தமிழரசுக் கட்சி
-
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது!
ஐயையோ டக்ளஸ் தேவானந்தா கைதா?? இவருக்காக தீக்குளிக்கப் போவது யார்???🧐
-
தையிட்டி திஸ்ஸ விகாரை போலியானது - வட இலங்கையின் சங்க நாயக்க தேரர்
ஏற்கெனவே அல்ல, இன்றும் தமிழர்கள் புத்தரைக் கடவுளாகவே வணங்குகிறார்கள், வழிபடுகிறார்கள். சாதி, சமயம், மதம் கடந்து எங்கு ஒரு கடவுளுக்குரிய கோவிலைக் கடந்து செல்லும் சந்தர்ப்பம் நேரும்போதும் நெஞ்சில் கைவைத்து மானசீகமாகவேனும் தமிழர்கள் வணங்கிச் செல்வதைக் காணலாம். தமிழ் இனத்தவரைத் தவிர வேறு எந்த இனத்தவரிடையும் இந்தப் பண்பைக் காண்பது அரிது.
-
தையிட்டி திஸ்ஸ விகாரை போலியானது - வட இலங்கையின் சங்க நாயக்க தேரர்
தையிட்டியில் மட்டுமல்ல இலங்கையில் தமிழர்களுக்குச் சொந்தமான பகுதிகள் எங்குமே விகாரைகள் வரப்போவது உறுதி. “நந்தவனத்தில் ஓர் ஆண்டி” பாடல் இலங்கைத் தமிழருக்காகவே பாடப்பட்டதுபோல் உள்ளது.
-
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
குடும்பத்துக்குள்ளேயே ஏற்றத்தாழ்வு, தராதரம் பார்ப்பவர்கள் நிறைந்த மாவட்டம் யாழ்ப்பாண மாவட்டம். இதற்குள்தான் நானும் பிறந்து வளர்ந்தேன். குறியேறிகளுக்கு தேனீர் கொடுக்கவும் சிரட்டையை நாடுதே என்மனம்.🧐
-
இலங்கைத் தமிழர் தீர்வு விடயத்தில் அழுத்தங்களை வழங்குவோம் - தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்
நம்பிட்டோம்.🥴
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நிழலி அவர்கள் என்றும் இளமையாக இருந்து யாழுக்கு நிழல்தர வேண்டுகிறேன்.🙏
-
“பிரித்தானியா ஒரு கிறிஸ்தவ நாடு” என இஸ்லாமிய மாணவரிடத்தில் கூறிய ஆசிரியர் பணிநீக்கம்!
யாழ்தேவி தொடர்உந்தில் உள்ள கழிப்பறையில் உள்ள நீர்த்தொட்டியில் யாரோ ஒருவர் தனது அந்த உறுப்பையும் கழுவிவிட்டு சென்றுவிட அத்தொட்டியில் நீர் நிரப்பி தன்முகம் கழுவிய இன்னொருவரின் கண்கள் பழுதடைந்ததான செய்தியை பத்திரிகை ஒன்றில் அன்று படித்த ஞாபகம் உள்ளது.🫣
-
வரலாறு, சித்திரக்கலை பாடங்களிலிருந்து தமிழர்களின் வரலாறு குறித்த விடயங்கள் நீக்கப்படவில்லை – பிரதமர்!
சிங்கப்பூரே போற்றும் தமிழர்களின் நிர்வாகத்தில் சிறப்புற்று விளங்கிய இலங்கையை, சிங்களவர் நிர்வாகத்தைக் கொண்டுவந்து எப்படிச் சிதைவடையச் செய்தோம் என்ற வரலாறும் இருக்கிறதே, அதுவும் கற்பிக்கப்படுகிறதா??.🤔
-
அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் முன்னாள் ஜனாதிபதி ரணில் அழைப்பு
கடல்நீரில் தத்தளிப்பவன் சிறு துரும்பைக் கண்டாலும் அதனைப்பற்றி தன் உயிர் காப்பாற்றவே முயல்வான். துரும்புபற்றி ஆராயமாட்டான். சொல்லவெண்ணா துன்பங்களை அனுபவித்துவரும் தமிழர்களும் அப்படித்தான். கோத்தபாயாவே அனுரா வடிவில் வந்தாலும் பற்றிக்கொள்ளவே முயல்வார்கள்.
-
அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் முன்னாள் ஜனாதிபதி ரணில் அழைப்பு
நிலாவைக் காட்ட நரி நண்டுகளை அழைத்த கதையை, அம்புலிமாமாவில் என் சிறுவயதில் படித்துள்ளேன்.🤣🤣
-
பகிடிவதையில் ஈடுபட்ட குற்றத்தில் யாழ்.பல்கலை மாணவர்கள் 19 பேர் மறியலில்
இது பகிடிவதை அல்ல சகோதரவதை. “அறியாதார் வாயில் மண்ணு” இதனைத் தீர்க்கப் பெற்றோரிடம் சென்றிருக்க வேண்டும். ஏன் நீதிமன்றம் சென்றார்கள்.???🤔