• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

Athavan CH

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  11,326
 • Joined

 • Last visited

 • Days Won

  13

Athavan CH last won the day on September 25 2017

Athavan CH had the most liked content!

Community Reputation

1,492 நட்சத்திரம்

3 Followers

About Athavan CH

 • Rank
  Advanced Member
 • Birthday திங்கள் 20 மே 1974

Profile Information

 • Gender
  Male
 • Location
  Swiss

Recent Profile Visitors

12,741 profile views
 1. ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 39ஆவது கூட்டத்தொடரும் நியூயோர்க்கில் உள்ள ஐ.நா.பொதுச்சபையின் 73ஆவது கூட்டத்தொடரும் நிறைவடைந்திருக்கின்றன. இம்மாதம் 15ஆம் திகதி ஆரம்பமான ஐ.நா.மனித உரிமை பேரவையின் 39ஆவது கூட்டத்தொடர் 3வாரங்கள் நடைபெற்றன. கடந்த வெள்ளிக்கிழமை 28ஆம் திகதி அக் கூட்டத்தொடர் நிறைவடைந்திருக்கிறது. ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 73ஆவது கூட்டத்தொடர் கடந்த 18ஆம் திகதி ஆரம்பமாகி 25ஆம் திகதி நிறைவடைந்திருக்கிறது. 9 நாட்களை கொண்ட இக் கூட்டத்தொடரில் ஐ.நா.பொச்சபையில் அங்கம் வகிக்கும் நாடுகளின் தலைவர்கள் உரையாற்றினர். ஜெனிவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை கூட்டத்தொடர் வேறு. நியூயோர்க்கில் நடைபெறும் ஐ.நா.பொச்சபை கூட்டத்தொடர் வேறு என்பதை புரியாது இரண்டும் ஒன்றுதான் என எண்ணுபவர்கள் பலர். சாதாரண பொதுமக்கள் மட்டுமல்ல சில தமிழ் ஊடகங்களுக்கும் இதுபற்றிய சரியான விளக்கம் தெரிவதில்லை. ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 39ஆவது கூட்டத்தொடரில் இலங்கையில் சட்டத்திற்கு புறம்பாக தடுத்து வைக்கப்பட்டிருப்போர் பற்றி ஐ.நா.மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தின் விசேட அறிக்கையாளர்கள் சமர்ப்பித்த அறிக்கையை தவிர வேறு விவாதங்கள் நடைபெறவில்லை. இலங்கை அரசாங்க தரப்பு பிரதிநிதிகளாக ஜெனிவாவில் உள்ள தூதரக அதிகாரிகளே கலந்து கொண்டனர். கொழும்பிலிருந்து வெளிவிவகார அமைச்சரோ அல்லது அமைச்சு மட்ட அதிகாரிகளோ கலந்து கொள்ளவில்லை. வழக்கமாக தமிழர் தரப்பு பிரதிநிதிகள் மனித உரிமை பேரவையின் பக்க அறைகளில் நடைபெறும் கூட்டங்களில் கலந்து கொள்வார்கள். இம்முறை இலங்கையிலிருந்து பிரதான தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், மனித உரிமை அமைப்புக்களின் பிரதிநிதிகளின் வரவு குறைவாகவே காணப்பட்டது. புலம்பெயர் தமிழ் அமைப்புக்களான பிரித்தானியா தமிழர் பேரவை, பிரான்ஸ் தமிழர் மனித உரிமை மையம் உட்பட சில அமைப்புக்கள் கலந்து கொண்டன. பக்க நிகழ்வுகள் சிலவற்றையும் நடத்தியிருந்தன. இலங்கையிலிருந்து சர்வதேச பௌத்த சங்கத்தின் பிரதிநிதியும் முன்னாள் படைஅதிகாரியும் நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் வீரசேகர தலைமையில் இலங்கையிலிருந்தும் இத்தாலி, லண்டன், பிரான்ஸ் உட்பட ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் பெருந்தொகையான சிங்களவர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் பக்க நிகழ்வுகள் பலவற்றை நடத்தியிருந்தனர். விடுதலைப்புலிகள் போர்க்குற்றங்களை செய்தனர். சிறுவர்களை படையில் சேர்ந்தனர். எல்லைக்கிராமங்களில் உள்ள சிங்கள மக்களை படுகொலை செய்தனர். உலகில் மிகப்பெரிய பயங்கரவாத அமைப்பாக விடுதலைப்புலிகள் காணப்பட்டனர் என்ற குற்றச்சாட்டுக்கள் அடங்கிய கையேட்டை விநியோகித்து பிரசாரத்தில் ஈடுபட்டார்கள். ஐ.நா.மனித உரிமை பேரவைக்கு முன்னால் உள்ள மைதானத்தில் சிறிலங்கா இராணுவம் செய்த படுகொலைகள் என படங்கள் தமிழர் தரப்பால் வைக்கப்பட்டிருந்தது. அங்கு வந்த சிங்களவர்கள் சிலர் இந்த படுகொலைகளை விடுதலைப்புலிகளே செய்தனர் என வெளிநாட்டு பிரதிநிதிகளுக்கு பிரசாரம் செய்தனர். அதனை வீடியோ எடுத்து உலகம் எங்கும் பிரசாரம் செய்தனர். அதனை தமிழர் தரப்பு சரியாக எதிர்கொள்ள முடியாமல் கைகட்டி நின்றனர். சரத் வீரசேகர தலைமையில் வந்த சிங்களவர்களை எதிர்கொள்ளும் ஆற்றல் தமிழர் தரப்பிடம் இல்லை என்பதே உண்மையாகும். தமிழர் தரப்பு ஜெனீவா தொடர்பாக ஒருங்கிணைந்த முடிவொன்றை எடுத்து ஒரே இலக்குடன் பயணிக்காமையே தமிழர் தரப்பின் பலவீனத்திற்கு காரணமாகும். 2015ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற மனித உரிமை பேரவையின் 30ஆவது கூட்டத்தொடரில் அமெரிக்கா தலைமையிலான நாடுகள் கொண்டு வந்த தீர்மானத்தில் சொல்லப்பட்ட விடயங்களை நிறைவேற்றுவோம் என சிறிலங்கா தரப்பும் ஐ.நா.மனித உரிமை பேரவைக்கு வாக்குறுதி வழங்கியிருந்தது. இந்த பிரேரணைக்கு சிறிலங்காவும் இணை அனுசரணை வழங்கியிருந்தது. இந்நிலையில் 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற கூட்டத்தொடரில் சிறிலங்காவுக்கு மேலும் இருவருடகால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இந்த இரு வருடகாலத்தில் போர்க்குற்ற விசாரணைகள், காணாமல் போனவர்கள் பற்றிய விசாரணை, காணிவிடுவிப்பு, வடக்கிலிருந்து படையினரின் வெளியேற்றம், மீள்குடியேற்றம் என 20க்கு மேற்பட்ட விடயங்கள் அதில் சொல்லப்பட்டிருந்தன. இருவருட காலஅவகாசம் நிறைவடைவதற்கு இன்னும் 5 மாதங்களே உள்ளன. 2015ஆம் ஆண்டு பிரேரணை நிறைவேற்றப்பட்டு மூன்று ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. இந்த பிரேரணையில் சொல்லப்பட்ட பிரதான விடயங்கள் எதனையும் சிறிலங்கா நிறைவேற்றவில்லை. போர்க்குற்றத்தில் ஈடுபட்ட படையினர் மீது பன்னாட்டு நீதியாளர்களை கொண்ட விசாரணை நடத்தப்பட வேண்டும், காணாமல் போனவர்களை கண்டறிவதற்கான பொறிமுறையை அமைக்க வேண்டும், வடக்கில் படையினர் விலக்கி கொள்ளப்பட வேண்டும், பொதுமக்களின் நிலங்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்ற பரிந்துரைகள் உட்பட 20க்கு மேற்பட்ட விடயங்கள் இதில் அடங்கியிருந்தன. இதில் பொதுக்களின் காணிகள் சொற்ப அளவில் விடுவிக்கப்பட்ட போதிலும் ஏனைய விடயங்கள் பற்றி சிறிலங்கா அரசாங்கம் அக்கறைப்படவே இல்லை. முக்கியமாக போர்க்குற்றங்களில் ஈடுபட்ட படையினர் மீதான விசாரணை என்பதை சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவும் அமைச்சர்களும் மறுதலித்தே வந்துள்ளனர். ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 73ஆவது கூட்டத்தொடரில் பேச செல்வதற்கு முதல் கொழும்பில் பத்திரிகை ஆசிரியர்கள் ஊடக நிறுவனங்களின் பிரதானிகளை சந்தித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா இலங்கை படையினருக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுகளில் இருந்து – அவர்களை விடுவிப்பதற்கான யோசனைகளை ஐ.நா.பொதுச்சபையில் முன்வைக்கப்போவதாக தெரிவித்திருந்தார். ஜெனிவா தீர்மானத்தை எதிர்த்து அதில் சில திருத்தங்களை செய்யும் பிரேரணையை முன்வைப்பேன் என்றும் தெரிவித்திருந்தார். எனினும் இலங்கையிலிருந்து கொண்டு செல்லப்பட்டிருந்த உரையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஐ.நா.பொதுச்சபையில் உரையாற்றினார் என கூறப்படுகிறது. யுத்தம் நிறைவடைந்து 10 வருடங்கள் கடந்துள்ள பின்னணியில் போருக்குப் பின்னரான பொறுப்புக்களை உரியவாறு நிறைவேற்றிவரும் இந்த சந்தர்ப்பத்தில் எமது தாய்நாட்டை புதியதோர் கோணத்தில் பாருங்கள் என மைத்திரிபால சிறிசேனா உலக மக்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். நாங்கள் ஒரு சுதந்திர நாடு. எங்கள் மீது யாரும் ஆதிக்கம் செலுத்துவதை நாம் விரும்பவில்லை. எங்கள் பிரச்சனைகளை எமது மக்களே தீர்த்துக் கொள்ள அனுமதியுங்கள் என சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா உலக நாடுகளின் தலைவர்கள் மத்தியில் உரையாற்றினார். மோசமான பயங்கரவாதிகளை தோற்கடித்து எமது நாட்டின் இறைமையையும் ஒருமைப்பாட்டையும் அமைதியையும் ஏற்படுத்திய எமது துருப்புக்களை எமது தேசம் வணங்குகிறது என சிறிலங்கா படையினருக்கு நற்சான்றிதழ் ஒன்றையும் வழங்கிய மைத்திரிபால சிறிசேனா ஐ.நா.மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் சொல்லப்பட்டிருக்கும் போர்க்குற்றம் புரிந்த படையினர் மீது பன்னாட்டு நீதியாளர்கள் முன்னிலையிலான நீதி விசாரணை என்ற பேச்சுக்கே இடமில்லை என மறைமுகமாக சுட்டிக்காட்டினார். 2015ஆம் ஆண்டு இலங்கையின் பொறுப்புக் கூறலை வலியுறுத்தி ஐ.நா.மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை முன்னின்று வழிநடத்தியது அமெரிக்கா ஆகும். ஆனால் அமெரிக்கா தற்போது ஐ.நா.மனித உரிமை பேரவையிலிருந்து விலகி விட்டது. அமெரிக்காவின் ஜனாதிபதி ரம் ஐ.நா.மனித உரிமை பேரவை மீது கடுமையான விமர்சனங்களையும் குற்றச்சாட்டுக்களையும் முன்வைத்து வருகிறார். கடந்த வாரம் ஐ.நா.பொதுச்சபையில் உரையாற்றிய அமெரிக்க ஜனாதிபதி ரம்பின் உரை தெளிவு படுத்துகின்றது. இந்நிலையில் ஐ.நா.மனித உரிமை பேரவையில் மார்ச் மாதம் நடைபெற இருக்கும் 40ஆவது கூட்டத்தொடரில் ஐ.நா.மனித உரிமை பேரவையின் ஆணையாளர் அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்க உள்ளார். 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மற்றும் அதற்காக 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் வழங்கப்பட்ட இரண்டு வருட கால அவகாசம், அக்காலப்பகுதியில் சிறிலங்கா இப்பிரேரணையில் சொல்லப்பட்ட விடயங்களை நிறைவேற்றியிருக்கிறதா என்பது தொடர்பான விரிவான அறிக்கையாக இது அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐ.நா.மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தையும், சிறிலங்கா வழங்கிய வாக்குறுதிகளையும் சிறிலங்கா அரசாங்கம் நிறைவேற்றவில்லை என்பது ஐ.நா.மனித உரிமை பேரவையில் உள்ள நாடுகளுக்கு தெரியும். வாக்குறுதிகளை நிறைவேற்றாது காலம் கடத்தி வரும் சிறிலங்கா மீது என்ன நடவடிக்கை எடுப்பது என்பதுதான் இப்போது பிரேரணையை முன்னின்று வழிமொழிந்த நாடுகளிடம் உள்ள கேள்வியாகும். இப்பிரேரணையை வழிமொழிந்த நாடுகளில் அமெரிக்கா இப்போது ஐ.நா.மனித உரிமை பேரவையிலிருந்து விலகி விட்டது. அமெரிக்காவின் பொறுப்பை இன்று பிரித்தானியாவே எடுக்க வேண்டும். ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை ஆணையாளர் சிறிலங்காவுக்கு தண்டனை வழங்க கூடிய அதிகாரம் கொண்டவர் அல்ல. சிறிலங்கா மீது காத்திரமான நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பு உறுப்பு நாடுகளிடம் தான் உள்ளது. சர்வதேச நீதிபதிகள் அடங்கிய நீதிவிசாரணையை நடத்தப்போவதில்லை என்றும் படையினரை தண்டிக்கப்போவதில்லை என்றும் சிறிலங்கா ஜனாதிபதி திட்டவட்டமாக அறிவித்துள்ள நிலையில் சிறிலங்காவின் சர்வதேச குற்றங்கள் மீது, சுதந்திரமான அனைத்துலக விசாரணைப் பொறிமுறை ஒன்றை நோக்கியே சர்வதேச நாடுகளை நகர்த்த வேண்டிய பொறுப்பு தமிழர் தரப்பிடம் காணப்படுகிறது. சிறிலங்காவுக்குள் தமிழர்களுக்கு நீதி கிடைக்காது. பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தில்தான் நீதி கிடைக்க வாய்ப்புண்டு. சிறிலங்காவைப் பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தின் பார்வைக்கு அனுப்புமாறு கோரும், 1.7 மில்லியன் மக்களின் கையெழுத்து அட்டையை அண்மையில் ஐ.நா. பொதுச்சபையிடம் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்ற அமைப்பு சமர்ப்பித்திருந்தது. தமிழர்களின் மனித உரிமைகளை சிறிலங்கா அரசு தொடர்ந்து மீறி வருவதாகத் தெளிவாக்குகிறது. அது தொடர்ந்து சித்திரவதையைப் பயன்படுத்துகிறது என்பதையும், உள்நாட்டளவில் இடம்பெயர்ந்த தமிழர்களை மீள் குடியமர்த்தம் செய்யத் தவறியதையும், வேறுபல மோசமான தோல்விகளையும் எடுத்துக்காட்டுகிறது. இவற்றுக்கெல்லாம் ஒருபோதும் யாரும் பொறுப்பாக்கப்படவே இல்லை. பாதிப்புற்ற தமிழர்கள் நீதியை மேலும் நெருங்கவும், ஐநாவின் ஆணையுரிமையையும் நம்பகத்தன்மையையும் விழுமியங்களையும் பாதுகாக்கவும் பன்னாட்டுச் சமுதாயத்துக்கு கடப்பாடு உண்டெனவும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் சுட்டிக்காட்டியுள்ளது. இந்நிலையில், குறைந்தது ஐ.நாவின் மூன்று அறிக்கைகளில் ஆவணப்படுத்தியுள்ளவாறு, சிறிலங்கா அரசு புரிந்த மனிதநேயச் சட்ட மீறல்களையும், மானிட விரோதக் குற்றங்களையும், புலனாய்வு செய்யவும் ஆவணப்படுத்தவும் அவை மீது வழக்குத் தொடுக்கவும் நடுநிலையான, சுதந்திரமான அனைத்துலக பொறிமுறை ஒன்றைத் தோற்றுவிக்குமாறு,ஐ.நா பொதுமன்றை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கேட்டுக் கொண்டுள்ளது. இந்நிலையில் அடுத்த வருடம் மார்ச் மாதம் ஜெனிவாவில் இடம்பெற இருக்கும் ஐ.நா.மனித உரிமை பேரவையின் 40ஆவது கூட்டத்தொடரில் இலங்கை விவகாரம் முக்கிய பேசுபொருளாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு இந்த அரசாங்கத்தில் மட்டுமல்ல எதிர்காலத்தில் ஆட்சியில் அமரப்போகும் அரசுகளாலும் இலங்கையில் நீதி கிடைக்காது என்பதே யதார்த்தம். மகிந்த ராசபக்சவின் செயற்பாடுகளைப் போலவே மைத்திரிபால சிறிசேனாவின் செயற்பாடுகளும் அமைந்திருக்கின்றன. இன்னும் 5 மாதங்கள் கடந்த பின் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெற இருக்கும் 40ஆவது கூட்டத்தொடரிலும் சிறிலங்கா இன்னுமொரு கால அவகாசத்தை கோரலாம். சிறிலங்காவை காப்பாற்றுவதற்கு ஐ.நா.மனித உரிமை பேரவையில் சிங்கள தரப்பு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு முன்னால் தமிழர்கள் தோல்வியடைந்த தரப்பாகவே உள்ளனர். ( இரா.துரைரத்தினம் ) https://thinakkathir.com/?p=69715
 2. மணல் கடத்திச் செல்கின்ற டிப்பர் வாகனங்கள் எழுதுமட்டுவாழ் கிராமத்தின் உள்வீதிகளில் செல்வதால் தாம் ஆபத்தை எதிர்கொள்வதாக கிராம மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர். கிராம அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் எழுதுமட்டுவாழ் பொது நோக்கு மண்டபத்தில் நேற்று இடம்பெற்றபோதே மக்கள் மேற்கண்டவாறு தெரிவித்தனர். ஏ9 பிரதான வீதியின் எழுதுமட்டுவாழ் சந்தியில் கடத்தல்களை தடுக்க பொலிஸ் காவலரண் ஒன்றை அமைத்துள்ளனர். இதனால் அனுமதியின்றி மணல் கடத்தி வருகின்ற டிப்பர் வாகனங்கள் கிராமத்தின் உள்வீதிகளூடாக வேகமாக செல்கின்றனர். இதன்காரணமாக கால்நடைகள் வாகனங்களில் மோதி இறப்பதோடு மக்களும் நடமாட அச்சப்படுகின்றனர். இது தொடர்பாக டிப்பர் சாரதிகளிடம் கேட்க முற்படுகின்றபோது அச்சுறுத்துவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். அண்மையில் கூட மணல் கடத்தி வந்த டிப்பர் வாகனம் மின்சாரத் தூண்கள் மீது மோதியதில் 6 மின்கம்பங்கள் முறிந்து வீழ்ந்ததாகவும் குறிப்பிட்டனர். மணல் கடத்தல் தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் வழங்கினால் தமக்கு ஏதாவது அச்சுறுத்தல் நிகழலாம் எனவும் பொதுமக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர். இந்த விடயத்தை கேட்டறிந்த வட மாகாண சபை உறுப்பினர் பா. கஜதீபன், உடனடியாக நாடாளுமன்ற உறுப்பினர் த. சித்தார்த்தன் ஊடாக பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தி சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தார். http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/மணல்-கடத்தல்காரர்களால்-ஆபத்தை-எதிர்கொள்ளும்-எழுதுமட்டுவாழ்/71-222769
 3. தனது நாட்டை மீண்டும் பேண்தகு வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்வதற்கு சிறிலங்கா தயாராகியுள்ளது. அடுத்துவரும் பத்தாண்டில் வளர்ந்து வரும் சந்தைகளில் தமக்கான வாய்ப்பைப் பெற்றுக்கொள்வதற்காகத் தம்மை நன்றாகத் தயார்ப்படுத்தும் சில நாடுகளின் பட்டியலில் சிறிலங்காவும் உள்ளடங்குவதாக அண்மையில் மக்கின்சி பூகோள நிறுவகத்தால் – McKinsey Global Institute – மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் சிறிலங்காவின் இந்த வளர்ச்சிக்கு சீனா தடையாக இருக்கும். சிறிலங்காவின் மனித மூலதனமே அதன் பலமாக உள்ளது. 2015ல் சிறிலங்காவின் மனித மேம்பாட்டுச் சுட்டியானது 0.766 ஆகக் காணப்பட்டது. இதனால் சிறிலங்காவானது உயர் மனித மேம்பாட்டு வகைக்குள் உள்ளடக்கப்பட்டது. உலக வங்கியால் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வின் பிரகாரம் 188 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் சிறிலங்காவானது அதன் மனித மேம்பாட்டுச் சுட்டியில் 73வது நாடாகத் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது. 1990 தொடக்கம் 2015 காலப்பகுதியில் சிறிலங்காவின் மனித மேம்பாட்டுச் சுட்டியானது 0.626 இலிருந்து 0.766 ஆக அதாவது 22.4 சதவீதத்தால் அதிகரித்தது. சிறிலங்காவானது சுதந்திரமடைந்த பின்னரான மூன்று பத்தாண்டுகளில், ஆசிய வளர்ச்சி அதிசயத்தை பற்றிப் பிடிக்கும் நிலையில் காணப்பட்டது. இதன் பின்னர் சிறிலங்காவில் ஏற்பட்ட உள்நாட்டு யுத்தம் காரணமாக இதன் அபிவிருத்தி பாதிக்கப்பட்டது. ‘1960களில், சிறிலங்காவானது அடுத்த ஆசிய வளர்ச்சியின் அதிசய நாடாக உருவாகி வந்த நிலையில், நாட்டில் தோன்றிய உள்நாட்டுப் போர் காரணமாக இது தடுத்து நிறுத்தப்பட்டது’ எனBreakout Nations என்கின்ற நூலின் ஆசிரியர் றுச்சிர் சர்மா தெரிவித்தார். 1948ல் சிறிலங்கா சுதந்திரம் பெற்றதைத் தொடர்ந்து, சிங்களப் பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த தலைவர்களால் பிரித்தானிய கொலனித்துவ ஆட்சியில் ஏற்பட்ட அநீதிகளைச் சீர்செய்வதற்கான நகர்வுகள் முன்னெடுக்கப்பட்ட போது இதனால் சிறுபான்மைத் தமிழ்மக்கள் பாரபட்சப்படுத்தப்பட்டனர்’ என ஆசிரியர் றுச்சிர் சர்மா குறிப்பிட்டுள்ளார். இதன் பின்னர் சிறிலங்காவில் இடம்பெற்ற சம்பவங்கள் வரலாறாகக் காணப்படுகிறது. ‘தமிழீழ விடுதலைப் புலிகள் என்கின்ற பெயரில் 1977ல் உருவாகிய தமிழ்க் கலகக்காரர்கள் உள்நாட்டு யுத்தத்தில் ஈடுபட்டனர். இவர்கள் சிறுவர்களைப் படையில் இணைத்தமை மற்றும் தற்கொலைக் குண்டுதாரிகளை யுத்தத்தில் பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டது. யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில், சிறிலங்காவின் மத்திய அரசாங்கமானது புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த பிரதேசத்தை நாட்டின் ஏனைய பகுதிகளிலிருந்து தனிமைப்படுத்தியதுடன் பல்வேறு தடைகளையும் இட்டனர்’ என ஆசிரியர் சர்மா குறிப்பிட்டுள்ளார். ஆனால் இது நடந்து முடிந்து விட்டது. தற்போது சிறிலங்காவானது மீண்டும் வெற்றி நாடாக மிளிர்வதற்கான இரண்டாவது வாய்ப்பைப் பெற்றுள்ளது. ‘உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து விட்டது. யுத்த வடுக்களை ஆற்றுவதற்கான நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன. இந்நிலையில் சிறிலங்கா மீண்டும் வளர்ச்சி நாடாக மாறுவதற்கானா வாய்ப்பைப் பெற்றுள்ளது’ என சர்மா தெரிவித்தார். ஆனால் சிறிலங்கா இவ்வாறானதொரு வளர்ச்சிப் பாதையை நோக்கிச் செல்வதற்கு சீனா தடையாக இருக்கலாம். சீனாவிடமிருந்து சிறிலங்கா பெற்றுக் கொண்ட கடனை மீளச் செலுத்த முடியாததால் சிறிலங்கா தனது பாரிய துறைமுகங்களை சீனாவிற்குத் தாரை வார்க்க வேண்டிய நிலையிலுள்ளது. ரொய்ட்டர் அறிக்கையின் பிரகாரம், சீனாவிடமிருந்து பெற்றுக் கொண்ட 1.12 பில்லியன் டொலர் கடனை அடைக்கும் நோக்குடன் கடந்த ஆண்டு சிறிலங்கா தனது அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை 584 மில்லியன் டொலர் பெறுமதிக்கு சீனாவிடம் குத்தகைக்கு வழங்கியது. ஜூலை 2017ல் கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கையின் கீழ், அம்பாந்தோட்டைத் துறைமுகமானது 99 ஆண்டுகால குத்தகைக்கு சீனாவிடம் கையளிக்கப்பட்டது. தமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்காக சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவிற்கு இராணுவ மற்றும் இராஜதந்திர ஆதரவுகளை 2007ல் சீனா வழங்கியதிலிருந்து சிறிலங்காவில் சீனாவின் பிரசன்னம் அதிகரிக்கத் தொடங்கியது. சிறிலங்காவில் கட்டுமான அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்வதற்கு சீனா உயர் வட்டி வீதத்தில் கடன்களை வழங்கியது. சீனாவிடமிருந்து சிறிலங்கா பெற்றுக் கொண்ட கடனானது 2017ல் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 77.60 சதவீதமாகும். 1950 – 2017 வரையான காலப்பகுதியில் இது 69.69 சதவீதமாகக் காணப்பட்டது. இதேவேளையில், சிறிலங்கா அரசாங்கத்தின் வரவுசெலவுத் திட்டப் பற்றாக்குறையானது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 5.5 சதவீமாக உள்ளது. சிறிலங்கா மீதான கடன் சுமையானது சிறிலங்கா ஆசியாவின் பொருளாதார வளர்ச்சி அதிசய நாடாக உருவாவதற்கு கிடைக்கப் பெறும் வாய்ப்பிற்குத் தடையாக இருக்கலாம் என ஆய்வில் சுட்டிக்காட்டப்படுகிறது. வழிமூலம் – forbes ஆங்கிலத்தில் – Panos Mourdoukoutas மொழியாக்கம் – நித்தியபாரதி http://www.puthinappalakai.net/2018/09/28/news/33140
 4. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தம்முடன் மகிழ்ச்சியாக இல்லை என்றால், அடுத்த மாகாணசபைத் தேர்தலில், புதிய அரசியல் முன்னணி ஒன்றின் மூலம் போட்டியிடப் போவதாகத் தெரிவித்துள்ளார் வடக்கு மாகாண முதுலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன். கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள செவ்வியில், “எனது செயற்பாடுகள் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள சிலர் மகிழ்ச்சியடையவில்லை என்பது எனக்குத் தெரியும். நான் திரும்பத் திரும்ப, ஒரு நாடாளுமன்ற உறுப்பினரால் விமர்சிக்கப்படுகிறேன். முரண்பாட்டு அரசியலைத் தொடர நான் விரும்பவில்லை. எனக்கு அளிக்கப்பட்ட ஆணையின் படியே செயற்பட்டிருக்கிறேன். எனது ஆற்றலைக் கொண்டு, அதனைச் செய்திருக்கிறேன். எமது மாகாணசபையின் ஆயுள்காலம் முடிவதற்கு முன்னர், அதன் செயற்பாடுகள் தொடர்பான அறிக்கையை வெளியிடுவேன்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதேவேளை, புதிய கூட்டணியை அமைப்பது குறித்து முதலமைச்சர் விக்னேஸ்வரனுடன் பேச்சுக்கள் நடத்தப்பட்டு வருவதாகவும், அவரிடம் இருந்து தமக்கு சாதகமான பதில் கிடைத்துள்ளது என்றும் ஈபிஆர்எல்எவ் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். http://www.puthinappalakai.net/2018/09/30/news/33178
 5. வடக்கு மாகாணசபைக்கான அடுத்த தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புதிய முதலமைச்சர் வேட்பாளர் ஒருவரை நிறுத்த திட்டமிட்டுள்ளதாக, கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், ”தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாப்பை விக்னேஸ்வரன் மீறிவிட்டார். மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறி விட்டார். மாகாணசபைக்கு ஒதுக்கப்பட்ட நிதி மக்களின் நலன்களுக்காக பயன்படுத்தப்பட வேண்டும். ஆனால் ஆளுனரின் கையில் இன்னமும் நிதி உள்ளது.” என்று குறிப்பிட்டார் http://www.puthinappalakai.net/2018/09/30/news/33180
 6. மொழிபெயர்ப்பாளர் ஜி.குப்புசாமி பேட்டிவாசிப்பிலிருந்து தான் சிறந்ததாகக் கருதும் படைப்புகளை மொழிபெயர்ப்புக்காகத் தேர்ந்தெடுக்கும் அபூர்வமான மொழிபெயர்ப்பாளர்களுள் ஜி.குப்புசாமியும் ஒருவர். ஒரு படைப்பை மொழிபெயர்க்க வேண்டுமென்றால் அந்தப் படைப்பாளியின் எல்லா படைப்புகளையும் வாசித்திருக்க வேண்டும் என்பதில் நம்பிக்கை கொண்டிருப்பவர். அதனாலேயே, இவரின் மொழிபெயர்ப்புகள் வாசகர்களின் நம்பிக்கைக்குரிய தேர்வாக இருந்துகொண்டிருக்கிறது. அரசுப் பணியிலிருந்து ஓய்வுபெற்று முழு நேர மொழிபெயர்ப்பாளராக ஆகியிருக்கும் வேளையில் அவருடன் உரையாடியதிலிருந்து... கிட்டதட்ட 30 வருட அரசுப் பணி. இப்போது என்ன தோன்றுகிறது? ஒவ்வொருநாளும் கரடுமுரடான சாலைகளில் ஓட்டை பஸ்களில் குலுங்கிக் குலுங்கி 130 கி.மீ. பயணிப்பதிலிருந்து விடுதலை. தினமும் அதிகாலை அலாரம் ஒலிக்க எழுந்திருப்பதிலிருந்து விடுதலை. ஆடிட் செல்லும் இடங்களில் சில விஷயங்களுக்காக எரிச்சலடைந்து ரத்த அழுத்தத்தை அதிகரித்துக்கொள்வதிலிருந்து விடுதலை. முகாம் செல்லும் இடங்களில் என் அபிமான ஃபில்டர் காபி கிடைக்காமல் வேறு வழியின்றி அசட்டுத்தனமான தேநீர்களைக் குடிக்க நேர்வதிலிருந்து விடுதலை. ஆனால், நான் இழக்கவிருக்கும் பல விஷயங்கள் உண்டு. அந்த நல்ல விஷயங்களை இழக்கப்போவது குறித்து எந்த வருத்தமும் இல்லை என்று திரும்பத் திரும்ப எனக்கு நானே சொல்லிக்கொண்டு என்னையே ஏமாற்றிக்கொள்ள முயல்கிறேன். பணி நிறைவு பாராட்டு விழாவில் நேர்மையானவர், லஞ்சம் வாங்காதவர் என சக ஊழியர்கள் புகழ்ந்தபோது நீங்கள் சங்கடமாக உணர்ந்தது ஏன்? லஞ்சம் வாங்காதவர், நேர்மையானவர் என என்னை யாராவது குறிப்பிடும்போது அவமானப்படுகிறேன். இதுவரை இவர் ஒரு கொலைகூட செய்யாதவர் என யாரையாவது நீங்கள் சுட்டிக்காட்டிச் சொல்வதுண்டா? நேர்மையாக இருப்பது என்பது அடிப்படையான ஒரு விஷயம். சிறப்புத் தகுதி அல்ல. மேலும், நேர்மையாகப் பணியாற்றுவது என்பது உங்கள் சுயமரியாதை சார்ந்த விஷயம். அறம், தர்மம் என்ற கோட்பாடு வழியாக நான் நேர்மையைப் பார்க்கவில்லை. என்னுடைய பணிக்காலத்தில் நான் நிறைவேற்றிய கடமைகள் குறித்து எனக்கு எந்தவொரு குற்றவுணர்வும் இல்லையென்பதுதான் நிம்மதியளிக்கும் விஷயம். ஓரான் பாமுக்போல இனி ஒரு நாளைக்கு பத்து மணி நேரம் எழுத்தும் வாசிப்பும் எனத் திட்டமிட்டிருக்கிறீர்களா? பாமுக் ஒரு நேர்காணலில், “ஒரு குமாஸ்தாவைப் போல பணியாற்றுகிறேன்” என்றார். அவருடைய மொழிபெயர்ப்பாளனான நானும் ஓவர்டைம் பார்ப்பது என்று முடிவெடுத்திருக்கிறேன். எழுத்தைவிட இந்த ஓய்வுகாலத்தில் அதிக நேரம் வாசிப்புக்குச் செலவிட வேண்டுமென்பதுதான் ஆசை. இவ்வளவு நாட்களாக பயணம் செல்ல வேண்டும் என்று நினைத்திருந்த இடங்கள் ஒவ்வொன்றுக்கும் வரிசையாகச் செல்லவும் திட்டமிட்டிருக்கிறேன். பல வருட உழைப்பில் ஒரு மொழிபெயர்ப்பை சாத்தியமாக்குகிறீர்கள். ஆனால், மிகக் குறைந்த அளவில் வாசிக்கப்படும் சூழல்தான் இங்கே இருக்கிறது. தொடர்ந்து உற்சாகத்தோடு இயங்க எது உந்துதல் தருகிறது? வாசகர்கள் வாசிப்பதை வைத்து நான் மகிழ்ச்சியோ சோர்வோ அடைவதில்லை. மூலப் படைப்பாளியின் ஆன்மாவை என்னுள் முழுமையாக இறக்கிவைத்துக்கொண்டு என் மூலமாகத் தமிழ் மொழியில் அந்தப் படைப்பாளியை எழுத வைப்பதும் அதற்கு என்னை ஒரு மீடியமாக ஒப்புக்கொடுப்பதும்தான் மொழிபெயர்ப்பாளனாக எனக்குத் திருப்தியளிக்கும் விஷயம். என்னைத் தொடர்ந்து ஊக்குவிப்பது நான் வாசிக்கும் அபாரமான படைப்புகள்தானே தவிர, வாசகர்களின் எதிர்வினை அல்ல. தவிரவும், தமிழின் எந்தவொரு படைப்பாளியைவிடவும் தமிழ் அறிஞர்களைவிடவும் தமிழ் அரசியல்வாதிகளைவிடவும் தமிழின் பலம், வீச்சு எவ்வளவு மகத்துவமானது, ஆழமானது என்பது ஒரு மொழிபெயர்ப்பாளனுக்குத்தான் தெரியும் என்று நம்புகிறேன். உலகின் எந்த மகத்தான படைப்பையும் அதன் சாரம் குறையாமல் மொழிபெயர்ப்பதற்குத் தமிழ் இடம் கொடுக்கும். ஆனால், அது சவால் நிறைந்தது. இந்த சவால்தான் என்னை இயக்கிக்கொண்டிருக்கும் ஆதார சக்தி. சமகாலத்தில், மொழிபெயர்ப்பு நாவல்கள் வெளியாகும் அளவுக்குத் தமிழில் நாவல்கள் எழுதப்படுவதில்லை. பெரும்பாலான நாவல் முயற்சிகள் தோல்வியில் முடிகின்றன. நாவலை நேசிக்கும் ஒரு வாசகராக இதற்கு என்ன காரணமென்று நினைக்கிறீர்கள்? எண்ணிக்கை அளவில் அதிகம் இல்லையென்றாலும் சில முக்கியமான நாவல்கள் வந்துகொண்டுதான் இருக்கின்றன. தேவகாந்தன், பா.வெங்கடேசன், தேவிபாரதி, சு.வேணுகோபால் நாவல்கள் மிகவும் வெற்றியடைந்தவைதான். உமா மகேஸ்வரியின் ‘அஞ்சாங்கல் காலம்’ இன்னும் சற்று இறுக்கமாக எடிட் செய்யப்பட்டிருந்தால் தமிழில் வந்த பெண்களின் உலகத்தை மிகச் சிறப்பாக சித்தரித்த நாவலாக இருந்திருக்கும். உங்களைப் பொறுத்தவரை, ஒரு புத்தகத்தின் வெற்றியை எப்படி அளவிடுவீர்கள்? பாமுக்கின் ‘வெண்ணிறக் கோட்டை’ அவருடைய நாவல்களில் முக்கியமானதாக எனக்குத் தோன்றுகிறது. ஆனால், ஒவ்வொரு வாசகருக்கும் அவரது வேறுவேறு நாவல்கள் பிடித்திருக்கின்றன. ஒரு புத்தகத்தின் வெற்றியைப் பொதுமைப்படுத்த முடியாது. வாசகரின் வாசிப்பில்தான் அந்த வெற்றி முழுமையடைகிறது. டால்ஸ்டாய்/தஸ்தாயேவ்ஸ்கி? முப்பது வயதுக்கு முன்பு டால்ஸ்டாய், அதற்குப் பிறகு தஸ்தாயேவ்ஸ்கி. ரேமண்ட் கார்வெர்/ஹாருகி முரகாமி? கார்வெர். அருந்ததி ராய்/ஓரான் பாமுக்? ஒப்பீடே தவறு. இரண்டு பேரும் வெவ்வேறானவர்கள். குடும்பம்/இலக்கியம்? எந்தவொன்றுக்காகவும் எதையும் விட்டுத்தர முடியாது. இரண்டும் ஒன்றோடொன்று பிணைந்தவை. https://tamil.thehindu.com/general/literature/article25085407.ece?homepage=true
 7. சென்னை விமான நிலையத்தில் மேற்கூரை மற்றும் கண்ணாடி விழுந்து நொறுங்குவது என்பது ஒரு வழக்கமான நிகழ்வாக மாறிவிட்டது. கண்ணாடி விழுந்து நொறுங்குவதில் சதம் அடிக்க சென்னை விமான நிலையம் காத்திருக்கும் நிலையில் தற்போது சென்னை மெட்ரோ ரயில் நிலையத்திலும் இதே அவலம் ஏற்பட்டுள்ளது. சென்னை ஷெனாய்நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில் மேற்கூரையில் பதிக்கப்பட்டிருந்த டைல்ஸ் ஒன்று பயணி மீது விழுந்ததில் கைக்குழந்தையுடன் வந்த பெண் ஒருவர் காயம் அடைந்தார். காயமடைந்த பெண் பயணி உடனடியாக தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். முதல்முறையாக மெட்ரோ ரயில் நிலையத்தில் இதுமாதிரியான விபத்து நடந்துள்ளது. இதனால் சென்னை விமானம் நிலையம் போல் தொடர்கதை ஆகாமல் உடனடியாக இதுமாதிரி இன்னொரு விபத்து நடக்காவண்ணம் மெட்ரோ ரயில் நிலைய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். http://tamil.webdunia.com/article/regional-tamil-news/roof-tiles-broken-at-chennai-metro-rail-station-one-injured-118092900008_1.html
 8. இலங்கைத் தமிழர் பிரச்சினையில், இந்திய அரசாங்கம், இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார். திருகோணமலையில் அமைந்துள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில், நேற்று (28) மாலை நடைபெற்ற சிநேகபூர்வக் கலந்துரையாடலில் உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். இக்கலந்துரையாடல், தமிழகப் பத்திரிகையாளர்கள், சட்டத்தரணி மற்றும் அரசியல் கட்சிப் பிரதிநிகள் குழாமுக்கும் கிழக்கு மாகாணத்திலுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளான நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநகர முதல்வர்கள், உள்ளூராட்சி மன்றப் பிரதிநிதிகள், கட்சியின் மூத்த உறுப்பினர்கள் ஆகியோருக்கும் இடையே நடைபெற்றது. இங்கு தொடர்ந்து உரையாற்றிய மாவை சேனாதிராஜா எம்.பி, “நாங்கள் இந்த அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இழந்து வருகின்றோம். எமது மக்களுடைய விடயங்களில் அரசாங்க நடவடிக்கைகள் மிகவும் தாமதமாகவே நகர்கின்றன. “அன்று எம்மிடம் இரண்டு போராட்ட சக்திகள் இருந்தன. ஒன்று விடுதலைப் புலிகளின் ஆயுதபலம். மற்றையது எமது மக்களின் வாக்குப்பலம். அவற்றில் ஒன்றை நாம் இப்போது இழந்துள்ளோம். “எனவே, தற்போது எம்மிடம் உள்ள மக்களின் ஜனநாயக பலத்தை மட்டுமே நம்பியுள்ளோம். “எமது தேசத்தை இரண்டு காலகட்டங்களாகப் பிரித்தால் யுத்தத்துக்கு பின், யுத்தத்துக்கு முன் என இரண்டு காலகட்டங்களில் நோக்க முடியும். அவை இரண்டிலும் பிரிக்க முடியாதது. எம்மக்களின் கண்ணீர் நீடித்துக் கொண்டே உள்ளது. “அவற்றைத் தீர்க்க எமது தமிழகத்தின் மூலமாக கொடுக்கப்படும் செய்தி மத்திய அரசாங்கத்துக்குச் சென்று, அது இலங்கை அரசாங்கத்துக்கு தமிழரின் தீர்வு தொடர்பாக அழுத்தம் கொடுக்க வேண்டிய தேவையுள்ளது” என்றார். http://www.tamilmirror.lk/திருகோணமலை/எமக்காக-இந்தியா-தொடரந்தும்-குரல்-கொடுக்க-வேண்டும்/75-222755
 9. மட்டக்களப்பு சிறையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிள்ளையான் என அழைக்கப்படும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். இன்று (சனிக்கிழமை) காலை 10 மணியளவில் மட்டக்களப்பு சிறைசாலைக்கு சென்ற நாமல், சிவநேசதுறை சந்திரகாந்தனை சந்தித்து கலந்துரையாடியதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2005ஆம் ஆண்டு டிசம்பர் 25ம் திகதி மட்டக்களப்பில் வைத்து, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இவ்விடயம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் பிள்ளையான் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் குறித்த வழக்கு தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. https://www.quicknewstamil.com/2018/09/29/பிள்ளையானை-நேரில்-சென்று/
 10. யாழ்ப்பாண மாவட்டத்தில் பதின்ம வயது திருமணங்கள் மற்றும் இணைந்து குடும்பம் நடத்தும் தம் பதியரின் எண்ணிக்கை அதிகரி த்து வருகிறது. அதனைத் தடுக்க பதின்ம வயது தம்பதியர் அனைவருக்கும் எதிராக நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று யாழ்ப்பாண மாவட்ட பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாண மாவட்ட சமூகப் பாதுகாப்புக் குழுக் கூட்டம் மூத்த பொலிஸ் அத்தியட்சகர்தலைமையில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் நேற்று நடைபெற்றது. யாழ்.மாவட்டத்திலுள்ள சகல பிரதேச செயலக பிரிவுகளையும் சேர்ந்த சிறுவர் பாதுகாப்பு அலுவலர்கள், சிறுவர் நன்நடத்தை அலுவலர்கள், குடும்பநல உத்தியோக த்தர்கள், பெண்கள் அபிவிருத்தி உத்தியோக த்தர்கள் ஆகியோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர். இதன்போது பிரதேச செயலக ரீதியாக சிறுவர் மற்றும் பெண்கள் பாதுகாப்புத் தொடர்பில் கூட்டத்தில் பங்கேற்ற தரப்பினரால் எடுத்துரைக்கப்பட்டது. யாழ்ப்பாண மாவட்டத்தில் 16 வயதுக்கு ட்பட்ட பெண் பிள்ளைகளும் 18 வயதுக்குட் பட்ட ஆண் பிள்ளைகளும் இணைந்து வாழ் கின்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அதற்கு சட்டத்தில் இடமில்லை. அத்துடன், பல்வேறு குடும்ப வன்முறைகளுக்கும் இந்தச் செயற்பாடு வழிவகுக்கின்றது என்று கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது. யாழ்.மாவட்டத்திலுள்ள பிரதேச செயலர் பிரிவுகள் அனைத்திலும் பதின்ம வயதுத் திருமணங்கள் மற்றும் இணைந்து வாழ்கின்ற சம்பவங்கள் தொடர்பில் முறைப்பாடுகள் உள்ளன. அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கையை பொலிஸார் முன்னெ டுத்து வருகின்றனர். பதின்ம வயது திருமணங்கள் மற்றும் இணைந்து வாழ்கின்றவர்களுக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும். இருவரது பெற்றோர் இணக்கமாகச் சென்றாலும் குற்றமிழைத்த பதின்ம வயதினருக்கு எதி ராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலி ஸார் உறுதியளித்தனர். http://www.valampurii.lk/valampurii/content.php?id=17000&ctype=news
 11. பொறுப்புக்கூறல் பொறிமுறையில் சர்வதேச ஈடுபாடு இருக்கும் என்ற இரண்டு பிரேரணைகளுக்கு அரசாங்கம் இணை அனுசரணை வழங்கியுள்ள நிலையில் தற்போது சர்வதேச தலையீடுகள் இல்லாத செயற்பாடுகளே கையாளப்படும் என ஜனாதிபதி கூறியுள்ளமை தீர்வு விடயத்தில் எமக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்தார். அரசியலமைப்பு உருவாக்கத்திலும் சரியான அரசியல் தலைமைத்துவத்தை வழங்காது ஜனாதிபதி செயற்படும் விதம் தமிழ் மக்களை ஏமாற்றுவதை போன்றே அமைந்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார். ஐக்கிய நாடுகள் சபையின் 73 ஆவது பொதுச் சபை கூட்டத்தொடர் ஆரம்பமாகியுள்ள நிலையில் இதில் இலங்கையின் நிலைப்பாடு குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிகழ்த்திய உரை குறித்து பிரதான எதிர்க்கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டினை தெரிவிக்கையிலேயே சுமந்திரன் எம்.பி இதனைக் குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், ஜனாதிபதி ஐ.நா. பொதுச்சபையில் உரையாற்றும்போது இராணுவத்தை காப்பாற்றும் புதிய யோசனையொன்றை முன்வைப்பதாக கூறியிருந்தார். இராணுவ வீர்கள் மீதான குற்றச்சாட்டுக்களை தவிர்க்கவும் அவர்களை பாதுகாக்கவும் நடவடிக்கை எடுப்பதாக கூறினார். அப்போதே நாம் எமது தரப்பு எதிர்ப்பினை வெளிப்படுத்தினோம். இராணுவத்தை மன்னிக்கும் எந்த ஒரு நகர்வுக்கும் ஒரு அங்குலமேனும் இடமளிக்க முடியாது என்பதை நாம் தெளிவாக கூறியிருந்தோம். அதேபோன்று அண்மையில் பாதுகாப்பு படைகளின் பிரதானி மீதான குற்றச்சாட்டில் ஜனாதிபதி நேரடியாக தலையிட்டு அவரை காப்பாற்ற நடவடிக்கை எடுத்தமைக்கும் நாம் எமது கண்டனத்தை வெளிப்படுத்தினோம். இலங்கையின் உள்ளக நீதிப்பொறிமுறை மீது எந்தவித நம்பிக்கையும் இல்லை என்பதை வெளிப்படுத்தும் வகையில் ஜனாதிபதியின் நேரடித் தலையீடுகள் இருந்தமை வெளிப்பட்டன. தற்போது சர்வதேச சக்திகளின் தலையீடு வேண்டாம் என ஜனாதிபதி கூறினாலும் கடந்த 2015 மற்றும் 2017 ஆம் ஆண்டு அமெரிக்கா இரண்டு தீர்மானங்களை கொண்டுவந்த போது இலங்கை அரசாங்கம் அதற்கு இணை அனுசரணை வழங்கியது. இதில் நீதிமன்ற பொறிமுறையில் சர்வதேச ஈடுபாடு இருக்கும் என்பது தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த தீர்மானத்திற்கு இலங்கை அரசாங்கம் இணை அனுசரணை வழங்கியது. அவ்வாறு இருக்கையில் ஜனாதிபதி தற்போது சர்வதேச தலையீடுகள் அவசியம் இல்லை, எமது பிரச்சினைகளை நாமே பார்த்துக்கொள்கிறோம் என்ற கூறியுள்ளமை தீர்வு விடயத்தில் எமக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது. தீர்வுகள் குறித்து அன்று அரசாங்கம் கொடுத்த வாக்குறுதிகளில் இருந்து ஜனாதிபதி பின்வாங்குகின்றார் என்பதாக நாம் உணர்கின்றோம். கடந்தகால குற்றங்கள் மேலும் நிகழாமை குறித்த நகர்வுகளில் புதிய அரசியலமைப்பே ஒரே தீர்வு என ஆரம்பத்தில் அரசாங்கம் சர்வதேசத்திற்கு வாக்குறுதி வழங்கியது. புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தின் மூலமாக சகல பிரச்சினைகளுக்கும் தீர்வுகளை பெற்றுத்தர தயாராக உள்ளதாக அரசாங்கம் வாக்குறுதி வழங்கியது. அதற்கமைய 2016 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் புதிய அரசியல் அமைப்பு உருவாக்க நகர்வுகள் ஆரம்பிக்கப்பட்டன. இந்த நடவடிக்கைகள் 2016 ஆம் ஆண்டு இறுதிக்குள் முடிவடையும் நிலைமைகள் காணப்பட்டன. எனினும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் மிகவும் மெதுவான போக்கில் செயற்பட ஆரம்பிக்கவும், அரசியல் அமைப்பு விடயங்களை தடுக்கும் பல தடைகள் ஏற்படவும் ஜனாதிபதியே காரணமாக இருந்தார். அரசியல் அமைப்பு உருவாக்கத்தில் சரியான அரசியல் தலைமைத்துவம் ஒன்றினை ஜனாதிபதி கொடுக்கவில்லை. அதுவே பிரதான தடையாக காணப்படுகின்றது. கடந்த ஜனாதிபதி தேர்தலின் போதும் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கிய மைத்திரிபால சிறிசேன தமிழ் மக்களுக்கு பல வாக்குறுதிகளை வழங்கினார். அதில் அரசியல் அமைப்பின் மூலமாக தீர்வுகளை பெற்றுத்தருவேன் என்ற வாக்குறுதி பிரதானமானது. அந்த வாக்குறுதிகளை நம்பியே தமிழ் மக்கள் தமது முழுமையான ஆதரவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு வழங்கினர். ஆனால் அவர் கொடுத்த வாக்குறுதிகளை மீறும் வகையில் இன்று அவரது செயற்பாடுகள் அமைந்துள்ளன. அரசியலமைப்பு உருவாக்கத்தில் தெற்கின் அடிப்படைவாத அரசியலுக்கு அஞ்சியும் தனது இருப்பினை தக்கவைக்க வேண்டும் என்ற நோக்கத்திலும் அவர் தமிழ் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை மீறுகின்றார். ஆனால் இவை ஒரு காரணமாக கூற முடியாதது, இந்த நாட்டின் பெரும்பான்மை ஆதரவில் ஆட்சிக்கு வந்தவர் என்ற வகையில் கொடுத்த வாக்குறுதிகளை அவர் நிறைவேற்ற வேண்டும். இன்று ஜனாதிபதி செயற்படும் விதம் தமிழ் மக்களை ஏமாற்றுவதை போலவே அமைந்துள்ளது என்றார். https://www.tamilnaatham.org/2018/09/suma-tna.html
 12. இறக்குமதி செய்யப்படும் ஆடம்பரப் பொருட்களைக் கொள்வனவு செய்வதை நிறுத்தி, தேசிய பொருளாதாரத்தைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர கொழும்பில் நேற்று (27) நடைபெற்ற நிகழ்வில் தெரிவித்தார். சந்தைக்கு நிதியைப் பகிர்ந்தளிப்பது தீர்வல்ல எனவும் டொலரை சேமிப்பதே முக்கியம் எனவும் மங்கள சமரவீர குறிப்பிட்டார். அனைத்து அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான சொகுசு வாகனங்களை வௌிநாட்டில் இருந்து இறக்குமதி செய்வதை நிறுத்த வேண்டும் எனவும் அடுத்த வருடம் அதற்கான சந்தர்ப்பத்தை அவர்களுக்கு வழங்கப் போவதில்லை எனவும் மங்கள சமரவீர தெரிவித்தார். ஆடம்பரப் பொருட்களை சில நாட்களுக்கு இறக்குமதி செய்வதை நிறுத்துவது இந்த சந்தர்ப்பத்தில் சிறந்தது என கூறிய அமைச்சர், ஆடம்பர வைன் வகைகளைக் கொள்வனவு செய்வதை நிறுத்துமாறும் அனைத்து வீடுகளிலும் உணவுகளுக்குப் பயன்படுத்தக்கூடிய பொருட்களை உள்நாட்டு உற்பத்திகளாக வரையறை செய்துகொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார். பொருளாதார வீழ்ச்சி உலக முடிவல்ல. எமது நாட்டின் ஏற்றுமதிகளை அதிகரித்துக் கொண்டு நாட்டை ஏற்றுமதி நாடாக மாற்றுவதற்கு இது நல்ல சந்தர்ப்பம். தற்போது எமது ஏற்றுமதியாளர்கள் சிறந்த முறையில் செயற்படுகின்றனர். டொலரின் பெறுமதி அதிகரிக்க ஏற்றுமதியாளர்களுக்கான இலாபமும் அதிகரிக்கும். அதேபோல், வௌிநாட்டில் பணிபுரிவோருக்கும் தங்களுடைய வருமானத்தை குடும்பங்களுக்கு அனுப்பி வைப்பதற்கு இது ஒரு சிறந்த சந்தர்ப்பம். என மங்கள சமரவீர மேலும் தெரிவித்தார். சர்வதேச சந்தையில் எரிபொருளின் விலை 81 டொலர் வரை அதிகரித்துள்ளது. அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான தற்போதைய நிலை காரணமாக எரிபொருளின் விலை 100 டொலர் வரை அதிகரிக்கக்கூடும் என செய்திகள் வெளியாகியுள்ளன. இதனை இலங்கையர்களும் எதிர்கொள்ள வேண்டி வரும். எரிபொருள் விலைச்சூத்திரம் மீண்டும் தேவைப்படும். அதற்கும் தயாராக இருங்கள். என அவர் குறிப்பிட்டார். https://www.quicknewstamil.com/2018/09/29/ஆடம்பர-நுகர்வுகளை-நிறுத்/
 13. சவுதி அரேபிய அரசு இலங்கை அரசாங்கத்திற்கு 300 மில்லியன் அமெரிக்க டொலர்களை நன்கொடையாக வழங்கியுள்ளது. இரு நாடுகளுக்கிடையில் காணப்படும் வலுவான இராஜதந்திர தொடர்பு காரணமாகவே சவுதி அரசாங்கம் இந்த நன்கொடையினை வழங்க முன்வந்துள்ளதாக இலங்கைக்கான சவுதி அரேபிய தூதுவர் கூறியுள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில், இந்த நன்கொடையானது விவசாய மற்றும் நெடுஞ்சாலைகள் அபிவிருத்தித் திட்டங்களுக்காக பயன்படுத்தப்படும் என குறிப்பிட்டார். எனினும் மொரகஹகந்த நீரத்தேக்க கட்டுமானப்பணிகளுக்கு சவுதி அரசு நிதியுதவி செய்திருந்தும்கூட இலங்கை அரசு அது பற்றி எவ்விதத்திலும் தகவல்களை வௌியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. http://metronews.lk/article/33423
 14. கண்ணுக்குப் புலப்படாத அதிகாரத்தின் அடுக்குகள் ஏறி மிதிக்க நினைக்கும். `உனக்கெல்லாம் இது ஒரு கேடா?' என ஆயிரமாயிரம் கண்கள் கேள்விகளோடு துளைக்கும். தலைமுறைகளாகத் தொடரும் வறட்டு ஆணவம் தாமிரபரணியின் தண்ணீரில் துரத்தி மூழ்கடிக்கத் துடிக்கும். இவை அனைத்தையும் எதிர்த்துக் கேள்வி கேட்டு நிமிர்ந்து நின்றால்... அவன்தான் `பரியேறும் பெருமாள்.' வழக்கமாக இங்கே கதை சொல்வதுதான் வழக்கம். ஆனால், இங்கே பரியன் வழியே மாரி செல்வராஜ் சொல்லியிருப்பது பல தலைமுறைகளின் வலிநிறைந்த வாழ்க்கையை... அதை எப்படி அவரால் யதார்த்தமாக இரண்டரை மணிநேர சினிமாவில் சொல்ல முடிந்தது என்பதே ஆச்சர்யமாக இருக்கிறது. ரத்தமும் புழுதியும் கூத்தும் வேட்டையுமான அவ்வளவு அடர்த்தியான வாழ்க்கையை ஒரு சின்னப் பத்திக்குள் அடைக்கவே முடியாது. `இதுதான் கதை' என்ற முன்முடிவுகள் எதுவுமில்லாமல் போய் உட்காருங்கள். நாக்கில் எச்சில் ஊற முதல் காட்சியில் மோப்பம் பிடித்து அலையும் கறுப்பி முதல், இறுதிக் குறியீடாக ஓங்கி நிற்கும் இரண்டு டீ க்ளாஸ்கள் வரை எல்லாமும்... எல்லாரும் உங்களிடம் வலி பகிர்வார்கள், கதை சொல்வார்கள், கதறி அழுவார்கள், சுற்றி நின்று நடனமாடுவார்கள்... கடைசியாகக் குத்திக் கிழிக்கும்படி கேள்வியும் கேட்பார்கள். பரியனாகக் கதிர். அவரை ஒவ்வொரு முறை திரையில் பார்க்கும்போதும் தோன்றும் கேள்வி ஒன்றுதான். `இவ்வளவு திறமை இருந்தும் இவர் ஏன் நிறைய படங்கள் பண்றதில்ல?' பரியேறும் பெருமாளில் கறுப்பியுடனான முதல் காட்சியிலேயே இந்தக் கேள்வியை மீண்டும் உரக்கக் கேட்க வைக்கிறார். டைட்டில் ரோலை ஏற்று நடிப்பது சாதாரணமல்ல. அதுவும் அடர்த்தியான கதை கொண்ட படத்தில் அப்படி நடிப்பது மிகப்பெரிய சவால். மொத்தமாகத் தூக்கி சுமக்கின்றன அவரின் தோள்கள். பரியன்தான் இந்தப் படத்தின் ஆன்மா. 'யப்பா... எவ்ளோ கதை இருக்கு உன்கிட்ட? எனக்கெல்லாம் சொல்ல ஒண்ணுமே இல்ல' - இதுதான் ஆனந்தி. கிராமத்துத் தெருக்களில் இறங்கி நடக்கும்போது எதிர்ப்படும் முதல் முகம். `இந்த உலகத்துல இருக்குற நல்லவங்க எல்லாம் என்னைச் சுத்திதான் இருக்காங்க' என நம்பும் வெகுளிப் பாத்திரத்துக்கு இயல்பாகவே பொருந்திப்போகிறார். நடுவே சில காலம் கமர்ஷியல் சினிமா பக்கம் ஒதுங்கியவரை இழுத்துவந்து `இதுதான் உங்களுக்கான இடம்' என நிறுத்தியிருக்கிறார் மாரி. பரியேறும் பெருமாளைப் பல்லக்கில் வைத்துத் தாங்குகின்றன நான்கு கேரக்டர்கள். முதலாவது ஆர்.கே ராஜா. `நீ படிச்சு மேல வந்துடுய்யா! அதுவரைக்கும் அத்தனை அடியையும் இந்த உடம்பு தாங்கும்' என அவர் சொல்லுமிடத்தில் நமக்குக் கண்களில் முட்டி நிற்கிறது நீர். இரண்டாவது கராத்தே வெங்கடேசன். `குலசாமிக்குப் பண்றமாதிரி நினைச்சுக்கிட்டு இதைப் பண்ணிட்டு இருக்கேன்' எனத் தன் செய்கைகளை அவர் நியாயப்படுத்தும்போது, பாகுபாடில்லாமல் எல்லாருக்குமே ஆத்திரம் பொங்குகிறது. மூன்றாவது மாரிமுத்து. இடைநிலை சாதியில் கிடந்து அல்லல்படும் சராசரி தகப்பன். `என் மகளையும் சேர்த்துக் கொன்னுடுவாங்கப்பா' என அவர் உடையுமிடத்தில் சாதிப் பெருமையில் ஆர்வமில்லாத, அதேசமயம் சுற்றியிருப்பவர்களின் பேச்சை நிராகரிக்க முடியாத ஒரு ஊஞ்சாலட்டத்தைக் கண்முன் நிறுத்துகிறார் இயக்குநர். நான்காவதும் மிக முக்கியமானதுமான கேரக்டர், கதிரின் அப்பாவாக வரும் தங்கராஜ். பரியனின் பாஷையில் - அம்மா சத்தியமாகச் சொல்லலாம், இப்படி ஒரு பாத்திரப் படைப்பு இதற்கு முன் தமிழ் சினிமாவில் நிகழ்ந்ததே இல்லை. ஒவ்வொரு முறை அவரைப் பார்க்கும்போது நெஞ்சு ஏகத்துக்கும் கனத்துப்போகிறது. இதற்காகவே ஸ்பெஷல் முத்தங்கள் மாரி! இறுக்கமான கதை நம்மை அழுத்தும்போதெல்லாம் இடையே நுழைந்து நெகிழச் செய்து சிரிப்பு மூட்டுகிறார், யோகிபாபு. வழக்கமான உருவகேலிகள் இதிலில்லை. தனக்கு சீரியஸாக நடிக்கவும் தெரியும் என இரண்டாம் பாதி முழுக்க நிரூபித்திருக்கிறார். நம் எல்லாருக்குமே இப்படி ஒரு நண்பன் இருந்திருப்பான். லிஜீஷ், ஒரே ஒரு காட்சியில் வரும் சண்முகராஜன், `மெட்ராஸ்' ஜானி என எல்லோருமே பக்கா பொருத்தம். படத்தின் ஒவ்வொரு கேரக்டரும் ஒரு குறியீடுதான். ஆர்.கே.ராஜாவின் கேரக்டர் அவமானங்களால் தோல் மரத்துப்போன அடிமைத்தனத்தின் குறியீடு. கராத்தே வெங்கடேசன் சாதியத்தைத் தாங்கிப் பிடிக்கும் பழைமைவாதத்தின் குறியீடு. சட்டக்கல்லூரி முதல்வர், ஒடுக்கப்பட்டவர்களைக் கல்வி மீட்டெடுக்கும் என்பதற்கான குறியீடு. ஓடியாடி அலைந்து தலை சிதறி மரித்துப்போகும் கறுப்பி காலங்காலமாக நிலவிவரும் சாதியச் செருக்கின் குறியீடு. கதையாக மட்டுமல்லாமல், காட்சிகளாகவும் கனமேற்றுகிறார் மாரி செல்வராஜ். பரியனும் நண்பர்களும் குளித்துவிட்டு வரும் குட்டையில் சிலர் சிறுநீர் கழிப்பது, `நீ அப்பனான்னு பார்ப்போம்' என வக்கிரத்தை வலிமை இல்லாதவரிடம் காட்டுவது, `கோட்டால வந்தா, கோழிமுட்டைதான் போடணும்' என ஆங்கிலத்தை அளவீடாக வைத்து அவமானப்படுத்துவது... `இதென்ன உங்கப்பனுக்குப் புதுசா?' எனக் கண்ணீரோடு சமாதானப்படுத்துவது, யப்பா... எப்படித் தாங்குவது இத்தனை கனத்தை? இசையை புளியங்குளத்தின் செம்மண்ணிலிருந்து வெட்டியெடுத்திருக்கிறார் சந்தோஷ் நாராயணன். ஓர் இளம் தலைமுறை இசையமைப்பாளர் இப்படியான முயற்சிகளுக்கு உடன் நிற்பது படத்துக்குப் பெரிய பலம் சேர்க்கிறது. நிறைய பரீட்சார்த்த முயற்சிகள். அவை எல்லாமே படத்தை அடுத்தகட்டத்துக்கு உயர்த்தியிருக்கின்றன. ஸ்ரீதரின் ஒளிப்பதிவு, பாலை நிலத்துப் புழுதியையும் பாறைகள் உமிழும் வெப்பத்தையும் அப்படியே கடத்தியிருக்கிறது. பாயின்ட் ஆஃப் வியூ, டாப் வியூ என ஒவ்வொரு கோணமும் காட்சிவழி கதை சொல்கிறது. ஆலமரமாய் பரியன் நிற்க, அவனிலிருந்து தொடங்கும் ஒவ்வொரு விழுதும் ஒவ்வொரு கதை சொல்கிறது. அதை அத்தனையையும் எடுத்துக் கோத்த விதத்தில் ஒளிர்கிறார் படத்தொகுப்பாளர் செல்வா. சண்டைக்காட்சிகள் வடிவமைத்த மாதிரியெல்லாம் இல்லை. ஒவ்வோர் அடியுமே நிஜம். தத்ரூபம். `ஸ்டன்னர்' சாமிக்கு இது மிக முக்கியமான படம். திரைக்கதையில் தேவையற்ற காட்சியென்றோ, வசனமென்றோ சொல்ல ஒன்றுகூட இல்லை. படத்தில் நடக்கும் ஒவ்வோர் அசைவுக்குப் பின்னும் ஒரு காரணமிருக்கிறது, அது வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் சொல்லப்பட்டிருக்கிறது. பெயர், ஊருக்கு அடுத்தபடியாக `என்ன சாமி கும்பிடுறீக' என்ற கேள்வியைச் சந்தித்திருக்கிறீர்களா, அதன் பதில் எதிராளியின் முகத்தில் தரும் ஏளனச் சிரிப்பால் கூனிக் குறுகியிருக்கிறீர்களா, பிறப்பால் மட்டுமல்ல... நிறத்தால் நிகழ்த்தப்படும் கொடுமைகளை அனுபவத்திருக்கிறீர்களா, கிழிந்த சதைகளிலிருந்து வெளியேறத் துடிக்கும் ரத்த வெடிப்பில் சிறுநீரின் உவர்ப்பு பட்டு துடித்திருக்கிறீர்களா, முகத்தை மூக்கால் உரசிக் கொஞ்சும் செல்ல நாயை ஆறறிவு(?) மனித மிருகங்களுக்குக் காவு கொடுத்திருக்கிறீர்களா, மிரட்சி ஏற்படுத்தும் இருள் வெளிகளில் சிறு வெளிச்சக் கீற்றாய் தென்படும் தேவதையைப் பார்த்திருக்கிறீர்களா, இதில் ஏதேனும் ஒன்றைச் சந்தித்திருந்தால், நீங்களும்தான் இந்தப் `பரியேறும் பெருமாள்.' இன்னும் உறுதியாக எழுந்து நில்லுங்கள். உங்களுக்கான விடியல் வரும். இது எதுவும் நிகழாத ஆனந்தியின் வாழ்க்கை உங்களுக்கு வாய்த்திருக்கிறதா, உங்கள் அருகில்... உங்கள் நட்பு வட்டத்தில் ஒரு `பரியேறும் பெருமாள்' இருப்பான். அவனை இறுக்க அணைத்துக்கொள்ளுங்கள். தோளோடு தோள் நில்லுங்கள். பல்லாயிரம் ஆண்டுகளாக நிகழ்ந்த கொடுமைகளுக்கு முடிவு நாம் ஒருவருக்கொருவர் நிகழ்த்தும் அணைப்பில்தான் இருக்கிறது. அந்த அணைப்பு எல்லா வித்தியாசங்களையும் அகற்றட்டும். மாரி செல்வராஜ் மட்டுமல்ல... தமிழ் சினிமாவே மார்தட்டி சொல்லிக்கொள்ளும்படியான படைப்பு, இந்தப் `பரியேறும் பெருமாள்'. https://cinema.vikatan.com/movie-review/138320-pariyerum-perumal-movie-review.html
 15. இதுவரைகாலமும் மௌனத்தை பேணிவந்த தமிழரசுக்கட்சியின் மூத்த உறுப்பினரான அருந்தவபாலன் அக்கட்சியில் காணப்படும் குறைபாடுகளை பற்றி வெளிப்படையாக தொலைக்காட்சியில் தோன்றி தெரிவித்தமை அக்கட்சி மட்டத்தில் கடும் அதிருப்தியை தோற்றுவித்திருப்பதாக நம்பகமாக அறியமுடிகின்றது. 625.500.560.350.160.300.053.800.900.160.90 இதில் சுமந்திரனின் தீடிர் வளர்ச்சியும் பேரினவாத அரசுகளின் கைப்பொம்மையாக தமிழரசுக்கட்சி செயற்பட்டுக்கொண்டிருப்பதையும் வெளிப்படையாக குற்றஞ்சாட்டியுள்ளார் அருந்தவபாலன். வாக்குமோசடி மூலமே தான் தோற்கடிக்கப்பட்டேன் என்பதை மீண்டும் கோடிகாட்டிய அருந்தவபாலன் சம்பந்தன் சுமந்திரன் மாவை ஆகியோரின் தனிப்பட்ட நலன்களே தற்போதைய நெருக்கடி நிலைக்கு காரணம் எனவும் தெரிவிக்கின்றார். மேலும் தெரிவித்த முக்கிய விடயங்கள் வருமாறு: # சயந்தனின் தனிமனித ஒழுக்கம் # சுமந்திரனின் தனித்த முடிவும் திமிரான செயற்பாடுகளும் # சிறிதரனும் சுமந்திரனுக்கு மறைமுகமாக ஒத்துப்போகும் நிலை # தேர்தலின்போது வாக்கு எண்ணிக்கையில் நடைபெற்ற # மோசடியும் திட்டமிட்டு ஏமாற்றப்பட்ட விதமும் # ச. பவனுக்கு வாக்குகளை அதிகரித்தும் எனக்கு குறைத்து விகிதம் மாற்றப்பட்ட முறை # பேராசிரியர் சிற்றம்பலத்தை பின்னுக்கு தள்ளுவதற்கே சரவணபவன் முன்னிலைப்படுத்தப்பட்டார். # தமிழ் மக்கள் பேரவையில் இணைந்தமை சாட்டி சிற்றம்பலம் நீக்கப்பட்டமை தவறானது. # மாவை இடையில் விட்டுப்போன கட்சியை காப்பாற்றியவர் சிற்றம்பலம் ஐயா # தமிழ்த்தேசிய மக்கள் முன்னனயின் தமிழ்த்தேசியம் தொடர்பான சமரசமற்ற போக்கு. # தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் இருக்கின்ற ஒரேயொரு கட்சி ரெலோ மட்டுமே. தமிழரசுக்கட்சி அதில் ஒரு அங்கம் அல்ல. முழுமையான நேர்காணல் இணைப்பு https://www.tamilnaatham.org/2018/09/arunthavabalan.html