Everything posted by தூயவன்
-
இந்துக்களை விழிப்படையுமாறு கோரி துண்டுப்பிரசுரம்
பந்தியை நிறைவு செய்யவில்லை போலுள்ளது. கடைசியாக இப்படி முடிக்க வேண்டியது தானே... நல்ல சட்டையை யேசுநாதர் பணமாகத் தருவார். வாங்கிப் போட்டுக் கொள்ளுங்கள் என்று. ஏன் இப்படி வேடம் போடுகின்றீர்கள். மதம் என்பது சட்டை போன்றது என்பார்கள் என்று ஏதாவது தத்துவஞானி வந்து சொன்னாராக்கும்... என் பங்கிற்கு நானும் ஒன்று சொல்கின்றேன். உன் கற்பினைத் தா சட்டையைத் தருகின்றேன் என்று சொல்வது போலத் தான் மத ஸ்பானங்களின் நடவடிக்கைகள். இதில் சாண்டமருதன் என்ன சொல்கின்றார் என்றால், நேரடியாக இந்துக்கள் என்பதை எதிர்த்தால் அது நேரடி மதவெறியாகி விடும் என உணர்ந்து, இதை இந்திய அரசோடு சேர்த்துக் கதைப்பதின் ஊடாக மறைமுகமாகத் தாக்க முயல்கின்றார் என்று புரிகின்றது. இந்துக்கள் என்பதற்காக இந்தியாவோடு ஒன்றிணைந்து வாழ வேண்டும் என்ற தேவைகளை இத்தனை கால வரலாறு சொன்னதே இல்லை. மேலைத்தேயர் இந்தியாவைக் கைப்பற்றும்வரை பல அரசர்களாக, பல சிற்றரசர்களாகப் பிரிந்து தான் இந்தியா இருந்தது. அங்கே இந்து என்பவன் பல ஆட்சிகளோடு பிரிந்து தான் இருந்தான். தவிர காந்தி ஒப்புதல் அளிக்கவிடில், இன்றைய பாகிஸ்தானும் , பங்களாதேசமும் இந்தியாவோடு தான் இணைந்து இருக்க வேண்டும். எனவே சாண்டமருதன் சொல்கின்ற வாதங்கள் எல்லாமே நேரடியாக குழந்தைக்கு சாப்பாடு கொடுக்கமுடியாவிடின் புச்சாண்டி காட்டுவது போல இந்தியா என்பதற்குள் இந்து என்பதை அடக்கி, மதவியாபாராத்தை நியாயப்படுத்துகின்றார். மடுமாதா பற்றிய கதைக்கு ஏற்கனவே நான் முதலில் சொன்ன என் வளர்ப்புக் குழந்தைகள் பற்றிய கதையே உதாரணம். இப்படித் தேவாலயத்தில் கேட்கின்றார் என்பதற்காக யாருமே மதம் என்பதைக் கண்டு கொள்ளாமல் தான் பணம் அனுப்புகின்றார்கள். உதவி செய்கின்றார்கள். ஆனால் இடைத்தரகர்களாகிய சில போதகர்கள் வாங்கிய பணத்தை மதமாற்றத்துக்கு உபயோகம் செய்கின்றார்கள். ஏன் யாழ்பாணத்திலும், இன்று வரை பல கொன்வன்ற் பாடசாலைகளில் திருநீறு, மற்றும் இந்து அடையாளங்கள் அணியத் தடை விதிக்கப்படுகின்றது. வவுனியா கொன்வன்ற் பாடசாலையில் இணைந்த உறவுக்காரச் சிறுமிக்கு சிலவருடங்களுக்கு முன் நடந்த அனுபவம். ஆனால் நீங்கள் தாரளமாக சிலுவை அடையாளம் போட்ட சங்கிலிகளை அணிந்து கொள்ளலாம். மக்களை மதம் மாற்றுகின்றது பெரியளவிலான வியாபாராம். நிச்சயம் அதற்கு நிறையத் திட்டங்கள் ஆண்டுகாலமாகப் போட்டுத் தான் செய்கின்றார்கள்.
-
இந்துக்களை விழிப்படையுமாறு கோரி துண்டுப்பிரசுரம்
எழுந்மானம் என்பதை எழுந்தமானமாகக் கதைக்காமல் எதைப் பற்றிக் கதைக்கின்றீர்கள் என்பதைத் தெளிவிடுவது நல்லது.
-
இந்துக்களை விழிப்படையுமாறு கோரி துண்டுப்பிரசுரம்
சம்பந்தர் பற்றிய இங்கு பதியப்பட்ட கருத்துக்கு என் பதில் சொல்ல வேண்டும். சம்பந்தர் மங்கயற்கரசின் வேண்டு கோளுக்கு அமைய மதுரை வருகின்றார். அங்கே அவர் தங்கியிருந்த மடத்துக்கு சமணர்கள் நெருப்பு வைக்கின்றனர்.அதில் இருந்து சம்பந்தர் தப்புகின்றார். ஆனால் அது கூன் பாண்டியனுக்கு வெப்புநோய்( பெரும்பாலும் நெருப்புக்காய்ச்சல்) ஆக மாறி பாதிகப்படுகின்றார் பிற்பாடு அனல், புனல் வாதம் நடந்து அதில் சம்பந்தர் வெற்றி பெறுகின்றார். ஆனால் அதில் தோற்றுப் போன சமணர்களைக் கழுமரம் ஏற்றுவித்தார் என்பது பெரியபுராணத்தில் சொல்லப்படுவதாகக் கூறப்படுகின்றது. இது எவ்வளவு துாரம் சரி என்பதற்கு அப்பால், அப்படி ஒரு சம்பவம் சமணத்தில் இருந்து சைவத்துக்கு மாறிய கூன் பாண்டியனே செய்வித்தான் என்கின்றது. ஒரு அரசனுக்குத் தான் அந்த சக்தி இருந்திருக்க முடியும். தவிர இச் சந்தர்ப்பத்தில் சம்பந்தர் தோற்று இருப்பினும் அவரும் கழுமரத்தில் ஏற்றப்பட்டிருப்பார். சமணர்கள் மயில்பீலியால் தடவி நடந்தாலும், அவர்கள் இரக்கமானவர்களாக அன்று இருக்கவில்லை போலுள்ளது. இன்று சிங்களவர்கள் பசுவதை எதிர்த்தபடி மனிதவதையை ஆதரிப்பது போல. ஏன் என்றால் இறுதியாகச் சம்பந்தர் திருமணம் முடிகின்றார் அங்கே தீ வளர்ந்து அந்த ஜோதியில் வந்தவர்களோடு ஐக்கியமாகின்றார் என்கின்றது. சம்பந்தர் வரலாறு. ஆனால் ஒரு திருமணத்தை முடித்து ஏன் அந்தச் சோதியில் சம்பந்த் ஐக்கியமாக வேண்டும். அப்படி ஒரு தேவையே இல்லையே. அத்தோடு அவர் தனிய என்றில்லாமல், திருமணத்துக்கு வந்த அனைவரும் அச் சோதியில் ஐக்கியமாவார்களாம். அவருக்கு அப்படிச் செய்ய என்ன மண்டைப் பிழையா? உண்மையில் சமணர்கள் மீண்டும் வழமை போல அவர் மண்டபத்தினைத் தீ மூட்டி அதில் அனைவரையும் கொன்றுவிட்டிருப்பார்கள் என்றே நினைக்கின்றேன். திருமண நேரத்தில் சம்பந்தர் அது பற்றிய அஜாக்கிருதையாக இருந்திருக்க கூடும். அப்படி ஒரு மரியாதைக்கு உரியவர் கொல்லப்பட்டார் என்பது சரியாக இருக்காது என்பதால் அவரை ஜோதியில் கலந்தார் என்று முடித்து விட்டிருக்க கூடும். அக்காலத்தில் தலைமறைவு, தப்பித்துப் போதல், மீண்டும் வருவார் என்ற இந்தக் கால கதைகள் தெரியாமல் இருந்திருக்கலாம். சம்பந்தரை பிடிக்கும் ஏனெனில், அவர் ஒரு வடமொழி எதிர்ப்பளராகவே இருந்திருப்பார் என நம்புகின்றேன். தமிழால் இத்தனை சாதிக்க முடியும் என்பதைக் காட்டியவர்களில் அவரின் பங்கும் முக்கியமானது.
-
இந்துக்களை விழிப்படையுமாறு கோரி துண்டுப்பிரசுரம்
கிறிஸ்தவம் தமிழில் வழிபாடு செய்கின்றார்கள் எனச் சிலர் சொல்கின்றார்கள். இந்துக்களும் அவ்வாறு செய்ய வேண்டும் என்பதும் என் அவா. ஆனால் உண்மையில் கிறிஸ்தவம் அப்படி இனம் மொழியில் வழிபாடு செய்ய ஒரு காரணம். மதத்துக்கு ஆள் பிடிக்க வேண்டிய தேவை. அதை விட முக்கியமானது, இயேசுநாதர் ஒரு இஸ்ரேல்காரர். ஒரு யூதர். அவரின் தாய்மொழியான ஹப்றுவை இஸ்ரேல் மீள உருவாக்கப்பட்ட பின்னர் தான் மீளப்பெற்றார்கள். அது அழிந்து போனமொழியாக இருந்தது. இப்போதும் முதியவயதுள்ள யூதர்கள் ஹப்று தெரியாதவர்களாகவும், இளைய தலைமுறையே இனவுணர்வோடு அதைக் கற்கின்றவர்களாகவும் உள்ளனர் அத்தோடு யூதர்கள் கிறிஸ்தவத்தை ஏற்கவில்லை. அது வத்திகானுக்கு நகர்ந்தது. அங்கே எல்லாமே மாற்றமடைந்தது. பிற்பாடு பிரித்தானியா தன் சாம்ராச்சியத்தில் என்னுமொரு பிரிவை உருவாக்கியது. இப்படி அலைந்து திரிந்தால் அது ஹப்றுவைத் தொலைத்து எல்லா மொழிகளுக்கும் பரவவித்திட்டது எனலாம். மற்றும்படி இஸ்லாமியர் அரபிலும், பௌத்தர்கள் பாளியிலும் சமணர்கள் பிரகித மொழியிலும் தான் இன்றுவரை வழிபடுகின்றனர். சமஸ்கிருதம் எப்படி எமக்குள் புகுந்தது என்றால் என்னுடைய ஊகம் ஆதிசங்கரர்(கேரளா) அனைத்து மதங்களையும் ஒன்றாக்கியதன் விளைவாகவே இருக்கும் என நினைக்கின்றேன். இன்று ஆங்கிலம் போல ஒரு பொதுமொழியாக அது எமக்குள் ஊடுருவியது. யாருடைய தாய்மொழியாகவும் இருக்கதால் அதுவே பொதுமொழி என அன்று எண்ணியிருக்கலாம். அதனால் சமஸ்கிருதம் தெரிந்தவர்ககளுக்கு கோவில்கள் தாரை வார்க்கப்பட்டார்கள். அதுவும் தமிழும் சேர்ந்து தமிழில் இருந்து பலமொழிகள் உருவாகிச் சிதைய நாங்களே காரணம் ஆனோம். அத்தோடு பல அழிவுகள். எம்மால் தமிழை முழுமையாகப் பெற்றுக் கொள்ள முடியாத பெரும் அழிவுகள். மற்றும்படி கடவுள் கொடுத்த மொழி சமஸ்கிருதம் என்பதெல்லாம் நல்ல பூச்சுத்தல்கள். ஆனால் அன்று எப்படி நாங்கள் சமஸ்கிருதத்தை உள்ளே வாங்கி எவ்வாறு தமிழைச் சிதைவடைய வைத்தோமோ அதே தப்பினை இன்று ஆங்கிலத்தை உள்வாங்கிச் செய்கின்றோம். சமஸ்கிருதம் ஆவது பரவாயில்லை. ஒரு சில கோவில் பூசாரிகளே மட்டும் கற்றும் மொழியாக இருந்தது. அப்படி இருந்தும் இத்தனை அpவு எமக்கு... ஆனால் இன்று ஆங்கிலம் கொடுக்கப் போகும் அழிவு அப்படியானது அல்ல... அது மிகப்பெரிய அழிவைத் தரப் போகின்றது. என்னமும் 2,3 தலைமுறைகளில் நாம் திரும்பிப் பார்க்கின்றபோது கோடியில் இருந்து வெறும் லட்சக்கணக்கானவர்களே தமிழைப் பேசுகின்ற மொழியாக அது மாறிவிடும். இங்கே எழுதப்பட்டவை சில என் எண்ணதின்பால் வெளிப்பட்டவை. வரலாற்று ஆதாரம் கொண்டிருக்கவில்லை.
-
இந்துக்களை விழிப்படையுமாறு கோரி துண்டுப்பிரசுரம்
இந்த சந்தர்ப்பத்தில் தான் இந்தக் கதையைச் சொல்ல முடியும் என்று நினைக்கின்றேன். நான் இரண்டு குழந்தைகளை 2009ம் ஆண்டு யுத்தத்தின் பிற்பாடு தத்தெடுப்பாக உறுதி செய்து, ஒரு தேவாலயம் ஊடாகச செய்து வந்தேன். இரண்டு குழந்தையில் ஒன்றுக்கு பெற்றோர் உறவினர் இல்லை. மற்றவரின் தாய் போராளி என்பதால் சிங்கள அரசு புனர்வாழ்வு என்ற பெயரில் வைத்திருந்தது. எனக்கு அவர்களின் மீதான அன்பு ஏதோ என் குழந்தைகளாகவோ, சகோதரங்களாக இருந்தால் எப்படி ஒரு உணர்வைத் தருமோ, அது போன்றதொரு பாசத்தை உருவாக்கியது. எனக்குத் திருமணம் ஆகாததால் தத்தெடுக்கமுடியாது, மற்றும் கனடா கொண்டு வரமுடியாது என்பதாலும், குழந்தைப் பாக்கியம் இல்லாத உறவினர் ஊடாக அவர்களிருவரையும் வளர்ப்பதற்காக முயன்றபோது, அதற்கு மறுப்புத் தெரிவிக்கப்பட்டது. விசாரித்தபோது இரு குழந்தைகளும் மதம் மாற்றப்பட்டிருந்தனர். எனக்கு உள்ள வருத்தம் என்னவெனில், குழந்தைகளிடம் ஏன் மதமாற்றத்தைத் திணிக்க வேண்டும்? அதற்கான வயதா அவர்கள்? இத்தனைக்கும் என்னிடம் இருந்து உதவி பெறும்போதாகட்டும், அந்தக் குழந்தைளாகட்டும், இடையில் நின்ற தரகர்கள் அவர்கள் அந்தக் குழந்தைகளின் எதிர்காலம் பற்றி முடிவெடுக்கும்போது சுயநலவாதிகளாகவே என் கண்ணில் தெரிந்தார்கள். இப்படி நான் தத்தெடுக்கும் விடயம் பற்றிய சிந்தனையை வெளிப்படுத்தியதுடன், என்னிடமான தொடர்பு தூண்டித்தார்கள். உண்மையில் சொல்கின்றேன். ஒரு காலத்தில் அன்னை திரேசா மீது நான் கொண்டிருந்த மரியாதை இதற்குப் பிற்பாடு உடைந்து போனது. அவர் தொழுநோயாளர்களைக் கவனித்த சேவை பெரிதாயினும், அதன் பின்ணனியில் மதமாற்றம் என்ற ஒரு வியாபாரமும் இல்லாமல் இருந்திருந்தால் உயர்வாகவே இருந்திருப்பார்கள். ஆனால் அவர் கடவுள் என்பதைப் பண்டமாற்றுச் செய்து தானே அவர்களைப் பார்த்துக் கொண்டார்....
-
இந்துக்களை விழிப்படையுமாறு கோரி துண்டுப்பிரசுரம்
அருமை... அருமை... எங்களிடம் வீரம் இல்லைத் தான். நீங்கள் வீரமானவர் தானே உங்களின் வீரத்தை முசுலீம்களிடம் காட்டுங்களேன். நான்கு விதமாக கதைக்கின்ற நாத்திகத்தை அல்லாவை வைத்து எழுதுங்கள். வீரம் எங்களுக்கு இப்படித் தான் காட்டமுடியும். அதனால் விட்டு விடுங்கள்.... உண்மையில் இந்துக்கள் ஒற்றுமை மட்டுமல்லாமல் சீர்திருத்தங்கள் என்பதும் தேவையான ஒன்று. உலகம் உறுண்டை என்று சொன்னதற்காக பலரைக் கொலை செய்த கிறித்தவம் பிற்பாடு எல்லாவற்றையும் மதப்பிரச்சாரம் என்பதினூடாக வழியைத் தெரிவு செய்த பிற்பாடு" இப்போதும் மூடநம்பிக்கைகளை ஏந்திக் கொண்டு சில செயற்கைகளூடாக இந்து மதம் இருப்பதை முதலில் மாற்ற வேண்டும். வெறி என்பது அவசியம். அப்படிப்பட்ட வெறிதான் எங்களின் அடையாளங்களை இழக்க வைக்காதிருக்கும். இனவெறி என்பதும் அவ்வகையானதே அதனால் தான் இன்றுவரை என் அடையாளங்களைத் தொலைக்கவில்லை. அந்தவெறியை எப்படிப் பாவிக்கின்றோம் என்பதில் தான் எங்களின் வெற்றி இருக்கின்றது நடிகர் வியய்யின் தந்தை கிறித்தவர். அவர் சோபானாவைத் திருமணம் செய்யும்போது அவர் இந்து. பிற்பாடு அதைத் தழுவினார். யோசப் வியய் பிற்பாடு திருமணம் செய்தது இந்து. அவர் கிறித்தவர் ஆகி இரண்டு பிள்ளைகளும் கிறித்தவர் ஆனார். இது சரி தவறா என்று சொல்லவரவில்லை. பொதுவாகவே நான் அறிந்தது தேவாலயங்களில் மதம் மாறவில்லை எனில் திருமணம் செய்து வைக்கமாட்டார்கள் என்பது.
-
சென்னை மெட்ரோ ரயில்...
இதை இயக்குவதற்கும் நிறைய மின்சாரம் தேவைப்படப் போகின்றேதே. என்ன செய்யப் போகின்றார்கள்? விமானநிலையம் பற்றி மேலே சொன்னீர்களே. என் நண்பர் ஒருவர் தமிழகம் சென்ற போது மலசலகூடம் சென்னார். அங்கே பழைய வடிவான மலசலகூடம். வேறுவழி இல்லை என்றுபோனனால் வாசலில் அசிங்கம் செய்து வைத்திருந்தார்கள். எந்தப் பணியாளரும் அதைச் சுத்தம் செய்து வைத்திருக்கவில்லை. அவன் விமானத்தில் ஏறித் தான் கடமையை(?) முடித்தான். ஒரு சர்வதேசத் தரம் கொண்ட விமான நிலையத்தின் நிலைமை இது. இதைவிடச் சிறிலங்காவில் உள்ள விமானநிலையம் தரம் வாய்ந்தவை.
-
சென்னை மெட்ரோ ரயில்...
குப்பைகளை அங்கும் போட்டு வைத்துள்ளனர். உங்களின் மண் மீது உங்களுக்கே அக்கறை இல்லையா?
-
கவிஞர் ஜெயபாலன் (பொயட்) கைது!
சரி. எல்லோரும் இத்தோடு நிறுத்திக் கொள்வோம்...
-
கவிஞர் ஜெயபாலன் (பொயட்) கைது!
ஆமாம். எனக்கும் அவர்களுக்குமிடையில் தொடர்பு இருக்கு... அது தான் ... சொல்லி விட்டு ஒரு சிரிப்புச் சிரித்திருப்பார்களே!!
-
கவிஞர் ஜெயபாலன் (பொயட்) கைது!
ஏன் அவர்கள் விட்டார்கள் என இப்போது தான் தெரிகின்றது... எங்களாலேயே முடியவில்லை....
-
கவிஞர் ஜெயபாலன் (பொயட்) கைது!
//. தமிழ் தேசிய வாத முகம் காட்டும் என் நண்பர் ஒருவர் தேனியில் சிங்கள் இனவாத பத்திரிகையாளரின் அதே நோக்கத்தோடு என்னை இகழ்ந்து கட்டுரை எழுதினார். //நீங்கள் சொன்னது தான். கருத்து இலக்கம் #226 கடைசிப் பந்தி:
-
கவிஞர் ஜெயபாலன் (பொயட்) கைது!
கடைசியாக எழுதிய வசனத்தில் உங்களை நான் எங்கே குறி வைத்தேன். அதில் தெனிக்கான வெள்ளையடித்தல் பற்றியே எழுதியிருந்தேன். இதில் எனிப் பதில் எழுதுதல் வேலை வெட்டியற்ற நிலை என நினைக்கின்றேன்.
-
கவிஞர் ஜெயபாலன் (பொயட்) கைது!
தமிழ் தேசிய முகம் உள்ளவர் தேனியில் இருப்பதாகச் சொல்வதே பெரிய சுத்துமாத்து. தேனி யாருடைய ஊடகம் என்று தெரியாமல் கதைக்கின்றீர்களா? அல்லது அதற்கு வெள்ளையடிக்க முயல்கின்றீர்களா? சிங்களத்தை அண்டிப்பிளைப்பவர்களைத் தமிழ்த்தேசியவாதிகள் என சுத்த வேண்டாம் ஐயா
-
கவிஞர் ஜெயபாலன் (பொயட்) கைது!
ஐயாவின் பணி, பற்றிப் புகழ்ந்து 200,300 பக்கங்கள் இத்தலைப்பு போக வேண்டும் என இறைவனை இறைஞ்சுகின்றேன் ஆமாம். இவர்கள் உலகத்துக்குத் தானே எல்லாவற்றையும் தாரை வார்த்தவர்கள்... எல்லாவற்றையும் என்றால்....... எல்லாவற்றையும் தான்
-
கவிஞர் ஜெயபாலன் (பொயட்) கைது!
சரி அவ்வளவு தானே. வந்ததில் சந்தோசம். இதில் எனிக் கதைப்பதற்கு ஒன்றுமில்லை என நினைக்கின்றேன். தலைப்பினை நிர்வாகம் மூடிவிடலாம்..
-
கவிஞர் ஜெயபாலன் (பொயட்) கைது!
நீங்கள் இப்போது எந்தப் பக்கம் நிற்கின்றீர்கள். எங்களின் பக்கமா? அவர்கள் பக்கமா? அதை வைத்துத் தான் ஏதும் சொல்ல முடியும்...
-
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் சுற்றுச் சுவர் இடிப்பு கம்பி வேலி போட்டது போலீஸ்!
பிணத்தில் மேலே பணம் பார்த்துத் தானே புலத்திற்கு ஓடி வந்தீர்கள். அதில் மற்றவர்களைப் பற்றிக் கதைக்கின்றீர்கள். " இப்போது அங்கே சனம் சந்தோசமாக இருக்கு" " எங்களின் மக்களை நிம்மதியாக இருக்க விடுங்கோ!" என்று சிங்களப்பல்லை எங்களுக்குக் காட்டுகின்ற எத்தனையோ பேரை நாங்களும் பார்த்துவிட்டோம். அதுக்கு "லைக்" வேறு.... ஜல்ரா ஆவது பரவாயில்லை... ஏதோ தங்களுக்கு மக்கள் மேலே பற்று என்று நடிக்கின்ற எச்சில்பொறுக்கிகளைத் தான் நம்பமுடியாது....
-
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் சுற்றுச் சுவர் இடிப்பு கம்பி வேலி போட்டது போலீஸ்!
அவர் அழவில்லை.... பாவம்... புலம்புகின்றார்....
-
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் சுற்றுச் சுவர் இடிப்பு கம்பி வேலி போட்டது போலீஸ்!
ஓ நல்லது! அப்படி எனில் நீங்கள் என்னத்தைக் கிழிக்கலாம் என எதிர்பார்க்கின்றீர்கள். சீமான் ஒரு பதவிக்கு வந்து ஒன்றுமே செய்யாமல், ஏமாற்றி இருந்தால் கூட அவரைத் திட்டுவதில் நியாயம் உள்ளது. ஆரம்பித்த கட்சியே என்னமும் முழுமையடையவில்லை. அதுக்குள் அவர் இப்படித் தான் என்று சொல்ல நீங்கள் என்ன குடுகுடுப்புக்காரனா? உங்களை யாரும் நம்பச் சொல்லவில்லை. நீங்கள் எது முடியுமோ அதைச் சொல்லுங்கள். நாங்களும் வருகின்றோம். இல்லையெனில் பொத்திக் கொண்டு வேலையைப் பாருங்கள்...
-
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் சுற்றுச் சுவர் இடிப்பு கம்பி வேலி போட்டது போலீஸ்!
நாளை உங்களைப் பார்த்து கள்ளமட்டை, கள்ளத்தோணி, தட்டுக்கழுவி என்று யாராவது விமர்சித்தால் எப்படி அது அசிங்கமாக இருக்குமோ அது போன்றே உங்களது கருத்தும் இருக்கின்றது. உங்களைப் போன்றவர்கள் நியாயமான விமர்சனம் என்பதற்கு அப்பால், அவருவருப்பான கருத்துக்களையே தூண்டுகின்றீர்கள். ஏன் பெண்களுக்கு இனவுணர்வு இருக்கக்கூடாதா? நெடுமாறன் ஐயா கைது செய்யப்படும்போது, அவரது மகளும் அருகில் தான் இருந்தார். சீமானை விமர்சிப்பது என்பது நியாயமாக இருப்பின் அதற்குப் பதிலைத் தருகின்றேன்.
-
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் சுற்றுச் சுவர் இடிப்பு கம்பி வேலி போட்டது போலீஸ்!
திரு. நெடுமாறன் ஐயா கைது செய்யப்பட்டுள்ளார்.
-
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் சுற்றுச் சுவர் இடிப்பு கம்பி வேலி போட்டது போலீஸ்!
http://tamil.thenseide.com/seide/index.php?option=com_content&view=article&id=614:2013-11-13-03-41-04&catid=28:specialnews&Itemid=2
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
6000 கருத்துக்கள் வரை எழுதியிருக்கின்றீர்கள் சுண்டல்.... ஆனால் இன்று வரை தமிழ்... உகும்....
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
இங்குள்ள சிலருக்குத் தங்களை விட்டு விட்டு, புதுசு புதுசாக வருகின்ற ஆட்கள் மட்டறுத்தினர்களாக வருகின்றார்களே, அவர்களை நிர்வாகம் இணைக்கின்றதே என்ற வயிற்றெரிச்சல்... தான் இப்படிப் புலம்ப வைத்துக் கொண்டிருக்கின்றது... யாழ்களம் என்றைக்குமே, இந்தத் தகுதி கொண்டவர்களைத் தான் மட்டறுத்தினராக நியமிக்கப்படுவார்கள் என விதி எழுதி வைத்திருக்கவில்லை. அவர்களுக்கு எவர்களைத் தகுதியாகத் தெரிகின்றதோ, அவர்களை நியமிக்கின்றார்கள். தவிரவும், அது அவர்களது விருப்பமும் ஆகும். இங்கே மட்டறுத்தினரை யாரை நியமிக்க வேண்டும் என்று முடிவெடுக்க வேறு யாருக்காவது அதிகாரம் உள்ளதா என்ன?? இந்த முந்திரிக் கொட்டைகளைச் சுவரில் வைத்து 4 சாத்து சாத்த வேண்டும். சகோதரனோ, சகோதரியோ தெரியாது, நியானி தன் பணியைச் சிறப்பாகச் செய்ய வாழ்த்துக்கள். சாத்திரி, யாழினியைப் பற்றிச் சொல்கின்றீர்கள்? இராவணன் என்ன நிறையக் கருத்துக்கள் எழுதினவரா? ஆனால் அவர் கண்டதுண்டமாக கருத்துக்களை வெட்டி அழிக்கும்போது மௌனமாகத் தானே இருந்தார்கள்... அவ்வாறே சின்ன விடயத்துக்கே மோகன் அண்ணாவிடம் வாய்க்கு வாய் கேள்வி கேட்டவர்கள், அதை விட மோசமாக வலைஞன் நடந்து கொண்டபோது, பேசாமத் தானே இருந்தீர்கள். ஏன் என்றால் இராவணனும் சரி, வலைஞனும் சரி, இந்த முந்திரிக் கொட்டைகளைக் கண்டு கொண்டதில்லை. நியானி, உங்களுக்குச் சரியானதாகத் தோன்றுவற்றைச் செய்யுங்கள். நீங்கள் உங்களை அறிமுகம் செய்த விதத்தில், ஒரு நெகிழ்வுத்தன்மை தெரிவதால் எல்லோரும் மடம் காட்ட முயற்சிக்கின்றார்கள்...