Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

narathar

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Joined

  • Last visited

  1. //அர்ஜுணன், ஒருதுறையில் இருக்கும் அதிஸ்ட்டமான வாழ்வு எனக்கு வாய்க்கவில்லை. பலதுறையில் இருப்பதாலான என் ஞாபக மறதி எல்லோருக்கும் தெரியும்.//
  2. செயபாலன் , நிழலியும் துளசியும் மட்டும் அல்ல உங்களை நன்கு அறிந்தவர்கள், பொது வெளியில் எழுதுபவர்கள் எல்லோருடமும் உங்களைப் பற்றிய பார்வை இவ்வாறே உள்ளது. உங்களை பல்துறை விற்பன்னர் என்று நீங்களே நினைத்துக் கொள்வது ஒரு உளவியற் பிரச்சைனையாகவே நான் கருதுகிறேன். ஆகவே உங்களின் தனிப்பட்ட பிரச்சினையை, தமிழர்களைத் துன்பப்படுத்தும் செயற்பாடாக மாற்ற வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். துன்பப்பட்ட துன்பப் படும் மக்களுக்கு நீங்கள் செய்யக் கூடிய பேருபகாராம், கவிதை எழுதுவது படத்தில் நடிப்பது என்னும் துறைகளில் உங்கள் கவனத்தைத் திருப்புங்கள்.இது உங்களுக்கும் நல்லது தமிழ் மக்களுக்கும் நல்லது. எனது யோசனையை சீர்தூக்கி நடப்பீர்கள் எனக் கருதுகிறேன். நன்றி.
  3. சபேசன் அப்படியாயின் உங்களின் அண்மைய கருத்துக்களும் இவ்வாறான உள் நோக்கம் கொண்டவையோ? உங்களின் தனிப்பட்ட நலங்களுக்காக உண்மைகளைப் பொய்களாக எழுதும் உங்களைப் போன்றவர்களின் எழுத்துக்கள் எமது போராட்ட அரசியலுக்குத் தேவையா என்று சிந்திக்க வேண்டி இருக்கிறது ?
  4. தாம் அதி புத்திசாலிகள் என்று நினைத்துக் கொண்டு மாறி மாறி முதுகு சொரியும் கூட்டத்தின் வண்டவாளாம் தண்டவாளம் ஏறிக் கன நாளாச்சு என்று தெரியாமால் பூச்சுற்றும் நடிகர்கள் உண்மையில் அதி மடையர்கள்.
  5. சிறிலங்காவில் சுதந்திரம் இருக்கு என்று எழுதிய சோபசக்தி முதல் வரை கருணாகரன் வரை வரை இதற்குப் பதில் சொல்ல வேண்டும். மேலும் இவர் அனந்தி உடன் எடுத்துக் கொண்ட படம் முகநூலெங்கும் உலாவியது. முகநூலைப் பார்த்தாலே புலனாய்வாளர்களுக்கு போதிய தகவல் கிடைத்திருக்கும். சிறிலங்காவின் சுதந்திரம் என்ன என்பதை இனிக் கருணாகரன் வந்து சொல்ல வேணும். சோபசக்தியும் இதற்க்கு ஒரு பொழிப்புரை எழுதுவார்.
  6. துளசி, நீங்கள் லீனா மணிமேகலை , மற்றும் சில பெண் கவிஞர்கள் எழுதிய கவிதைகளை வாசிக்கவில்லைப் போலும். இதில் எது சரி எது பிழை என்பதை நாங்கள் தான் எமக்காகத் தீர்மானிக்க முடியும். நடைமுறை வாழ்வை இலக்கியம் பிரதிபலிக்கிறது என்றால் , இக் கவிதையில் சொல்லப்பட்டது எதுவுமே ஆபாசம் அல்ல. இதில் எது ஆபாசம் என்பதை யார் தீர்மானிக்க முடியும்? முன்னர் நான் டிசே எழுதிய ஒரு கவிதையை இணைத்த போது நிகழந்த்த வாதப் பிரதிவாதங்கள் நாபகம் வருகிறது.அந்தக் கவிதையும் பஸ்ஸில் பெண்களின் மார்பகங்களைப் பார்ப்பவர்கள் பற்றி எழுதப்பட்டதாக இருந்தது. ஆனால் அதில் காரசாரமாக எழுதியவர்கள் தற்போது , தங்கள் கருத்துக்களில் முதிர்ச்சி பெற்றுள்ளனர்.அது போல் நீங்களும் முதிர்ச்சி பெறுவீர்கள். கருத்துக் களம் அதற்காகத் தானே இருக்கிறது.பலர் வருவார்கள்,போவார்கள்.அவற்றில் எமக்குத் தேவையானவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.
  7. இந்த சந்தோசமான செய்தியைப் பகிர்ந்து கொள்ள சமாதனத்தையும்,சாணக்கியனையும
  8. புதுப் பொலிவா? ஏன் யமுனாவுக்கு என்ன நடந்தது? எங்க புத்தனையும் கன நாளாக் காணன்?எதாவது சுகவீனமா? சுண்டலையும் காணன்?
  9. இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது. ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம். எனக்கு மதங்களைப் பற்றிய அறிவிருக்கிறதா என்ற கேள்வியும் சந்தேகமும் யாருக்காவது எழுந்தால் அவர்கள் என்மேலான தீர்ப்பை எழுதுவதற்கு நான் உதவத் தயாராய் இருக்கிறேன். எனது கேள்விகள் உறுத்தாமல் இருக்கவேண்டுமானால் என்னைப் பற்றிய தீர்ப்பை எழுதி, ஒரு அடையாளமிட்டு வைத்துவிடுவது அவர்களுக்கு நல்லது. எனக்கு மதங்களைப்பற்றிய அறிவு எவ்வளவு என்பதை எந்த அளவையிலும் சொல்ல விருப்பமில்லை. அதேபோல் சக மக்களின் மீதான அன்பையும் எந்த அளவையிலும் சொல்லவிருப்பமில்லை. நான் தீவிர வலதுசாரி இந்து வெறியனாக இருந்திருக்கிறேன். கம்யூனிஸ நம்பிக்கைகளை எடுத்துகொண்டு திரிந்திருக்கிறேன். தமிழ் தேசியம் கொஞ்சகாலம் இருந்தது. எல்லாவற்றையும் எனது அவற்றினூடான தீவிரமான ஈடுபாட்டலும், சார்பாலும் தான் கடந்து வந்திருக்கிறேன்; வெறுப்பால் அல்ல. மக்களின் மேல் உள்ள அன்பும், மதங்களின் (நிறுவனங்களின்) மேல் உள்ள விமர்சனமும் எந்த இசத்தின் பாற்பட்டதுமானது அல்ல. எந்த மேலுலகின் கனிகளுக்காகவோ, கடவுளரின் கருணாவிலாசத்துக்காகவோ அல்லது புதியதொரு பொன்னுலகத்தை நிர்மாணிக்க புறப்பட்டோ இதைச் செய்யவில்லை; இரக்கம், மனித நேயம், கருணை இவை போன்ற பெருமிதப்படத்தக்க பதக்கங்களை என் ஆத்துமாவில் நிறைத்துக்கொள்ளவும் விரும்பி இதைச் (மக்களின் மேலுள்ள என் அன்பும், நிறுவனங்களின் மேலமைந்த என் கேள்விகளும்) செய்யவில்லை. மக்களின் மேலான அன்பு என்மேல் உள்ள சுயகாதல்; இந்தக்கேள்விகள் என்னை நிறுவனப்படுத்தி இருக்கும் அமைப்புக்கு எதிரான சுய விடுதலையை முன்னெடுக்கிற கேள்விகள். அவ்வளவே! *** இப்போது விதயத்துக்கு வருவோம். இந்து மதம் என்று இன்று முன்னிருத்தப்படுகிற வேதங்களை ஒத்துக்கொள்ளும் எந்த தத்துவப்பிரிவும் மனிதனுக்கு எதிரானது. பெண்களையும் உள்ளடக்கியே! இதில் யோனி-லிங்க வழிபாடுகள், பெண்களை சக்தியாகவும், தெய்வமாகவும் சித்தரிக்கும் வழிபாடுகள் போன்றவை வேத மதங்களுக்கு எதிரானதாக உண்மையில் தோன்றிய தந்திரா வகை தத்துவங்களை சேர்ந்தவை. அதே போன்று வேத மதங்களை எதிர்த்தே 2300 ஆண்டுகளுக்கு முன்னேயே புத்தரும் தோன்றி இந்தத் துணைக்கண்டமெங்கும் மனித விரோத வேத மதங்களை (இன்றைய இந்து மதமாக முன் வைக்கப்படும் உள்ளீட்டை) வீழ்த்தி அப்புறப்படுத்தினார். இதற்காக அவர் மேற்கொண்ட விவாதங்கள், எதிர்கொண்ட சதிகள் போன்றவைகளை பெளத்த- சமண தத்துவங்களில் பரிச்சயம் கொள்ள முனையும் யாவரும் அறியலாம். தென்னிந்தியாவில் தோன்றி இருந்த உலகாயத்தை முன்வைத்த தத்துவப்பிரிவுகள் மிக எளிதாக பெளத்தத்தோடு இணங்கி, பரவிவந்த வேத அடிப்படை கருத்துக்களை எதிர்கொண்டதற்கான குரலை திருக்குறளிலும், மற்ற காப்பியங்களிலும் காணலாம். புத்தரின் இந்த வெற்றியைத் தொடர்ந்தே கர்ம காண்டமாகிய வேதமதங்கள் யாகம் போன்ற சுரண்டல் வழிகளை குறைத்துக்கொண்டன. சாதி என்ற வருண அமைப்பின் மீதான அதன் பிடி தகர்ந்துபோனது. புத்த மத்தின் தாக்கங்களாலேயே ஞானமார்க்கங்கள் தளிர்விடத்துவங்கி உபநிடதங்கள் தோன்ற ஆரம்பித்தன. பெளத்த நெறிகளை வேராகவும் தந்திரா போன்ற வழிபாட்டு முறைகளை தனது உடலாகவும் கொண்ட சன்மதங்களை ‘பிரசன்ன பெளத்தராகிய‘ சங்கரர் ஸ்தாபித்து அவற்றின் மூலம் வேத மேலாண்மையை மீளக்கொண்ர்ந்தார். அதற்காக பிராமணீயம் அவருக்கு தீராத கடன்பட்டிருக்கிறது. வேத தத்துவங்களை அதன் மனித விரோத தன்மைக்காக புத்தர் தொடங்கி (புத்தருக்கு முன்பாகவே செயினர், சார்வாகர்கள், சாக்கியம், லோகாயத்தின் பலபிரிவுகளும் இந்த எதிர்ப்பைச் செய்திருந்தாலும்) பல நூற்றாண்டுகளாக பல ஞானிகளாலும், சித்தர்களாலும் எதிர்க்கப்பட்ட உழைக்கும் சமூக விரோத, ஆணாதிக்கச் சிந்தனைகள் என அடையாளங்காட்டப்பட்ட ஒன்றை அம்பேத்காரும், பெரியாரும் ஒழிக்க நினைத்தது, முயன்றது ஏதோ நேற்று நடந்த சமூக மாற்றமோ, ஒரு சாதிக்கு எதிரானதோ அல்ல. பாரத தேசத்திலே புத்தமதம் ஜீவகாருண்யம், சர்வஜன சமத்துவம் என்ற இரண்டு தர்மங்களையும் நெடுந்தூரம் ஊன்றும் படி செய்தது என்கிறார் பாரதி (பாரதியின் பகவத்கீதை). சாஸ்திரங்கள், இதிகாசங்களை முற்றாகப் புறக்கணித்து உபநிடதங்களின் மேலாக சாதி/ வருண மறுப்பைத் தொடர நினைத்த ஆரியசமாஜம் போன்ற செயல்பாடுகளும் வேதக்கொடுமைகளை ஒழிக்கக் கிளைத்தவையே. இந்த சீர்திருத்தங்களும் ஏனைய வேத மதங்களின் உள்ளேயே நடந்த மற்ற சீர்த்திருத்தங்களை (இராமனுஜர் போன்ற) போல வருணாஸ்ரமத்தையும், மனுவையும் தாங்கி நிற்கும் பகுதியினரால் வெற்றிகொள்ளப்பட்டன. இப்போது இரண்டு கேள்விகள் இருக்கின்றன. 1. வேதத்தில் வருணாசிரமத்தை ஆதரிக்கும் கருத்து இருக்கிறதா? 2. இன்றைய இந்து மதமாகக் காட்டப்படுகிற நிறுவனத்துக்கு (அதைக்காப்பற்ற முனைகிறவ்ர்களுக்கு) வருணாசிரமத்தை, மனுநீதியை காப்புற்றும் முனைப்பும், அதை வலியுறுத்தும் வேலைத்திட்டமும் இருக்கிறதா?இவைகளைப் பார்ப்போம். 1. வேதத்தில் வருணாசிரமத்தை ஆதரிக்கும் கருத்து இருக்கிறதா? வேதத்தை மூலப்புத்தகமாகக் கொண்ட பல சாஸ்திரங்களும், சமயப்புத்தகங்களும் வருணாசிரமத்தை, சாதி அடிமைமுறையை, பலவேறு சாதிகளின் கடமைகளை பிராமணர்களின் மேலாதிக்கத்தைச் சொல்லுவன. இதில் குறிப்பாக மனுஸ்மிருதியைக் குறிப்பிடலாம். அது சூத்திரர்களின் வாழ்விடங்கள் மண்ணால் கட்டப்பட்ட்டிருக்கவேண்டும், உலோகங்களை பாத்திரங்களாக பயன் படுத்தக்கூடாது, மண்ணிற்கு அடியில் உள்ள கிழங்குகள் , வேர்களையே சாப்பிட வேண்டும், சூத்திரர்கள், பஞ்சமர்கள் இடுப்புக்கு மேல் உடையணியத் தடை, அத்தியாவசியத்தின் காரணமாக ஊருக்குள் நடக்கும் போது கைக்கொள்ளவெண்டியமுறைகள், பொது நீர்நிலைகளை பயன்படுத்த, கல்வி கற்க, இடம்பெயர செய்யப்படவேண்டிய தடைகள், அவை மீறப்பட்டால் கொடுக்கப்படவேண்டிய தண்டனைகள் போன்ற பலவற்றை விரிவாகப் பேசுகிறது. அது தவிர பெண்ணடிமைத்தனம், பால்யவிவாகம், பால்யவிவாகம் செய்யாவிட்டால் ஏற்படக்கூடிய பாதகங்கள், சதி (உடன் கட்டை ஏறல்) போன்ற கருத்துக்களையும் சொல்கிறது. இது தவிர பிராமணர்களுக்கான சலுகைகள், சிறப்புகள் போன்றவையும் குறிப்பிடப்படுகின்றன. மனுவின் இந்த சட்டப்புத்தகம் மிக முக்கியமான ஸ்மிருதிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. ஸ்மிருதிகள் என்பவை நினைவில் வைக்கப்பட்டது என்று பொருள் படுபவை. இவை யுகங்கள் தோறும் மாறக்கூடியவை என்றாலும் யுகங்கள் பல நூற்றாண்டுகளைக் கொண்டதால் நடைமுறையில் அவை மாறாத தன்மைகொண்டவையாகவே இருக்கின்றன. மனு ஸ்மிருதி பல நூற்றாண்டுகளாக செல்வாக்கு செலுத்தி வருவது அப்படியே. மேலும் ஸ்ருதி (ஸ்ருதி என்றால் கேட்கப்பட்டவை என்று பொருள் கொள்ளலாம்; ஸ்ருதிகள் என்றும் மாறத்தன்மை கொண்டவை) என்றழைக்கப்படும் வேதங்களையும் இந்த ஸ்மிருதிகளையும் எந்தக்காரணம் கொண்டும் கேள்விக்குட்படுத்தக்கூடாது என்பது மனுவின் சட்டம் (மனு ஸ்மிருதி (பாகம் 2 சூத்திரம் 10). இந்நிலையில் மனு உலகத் தொடக்கம் பற்றிய பகுதியிலேயே மனிதனின் உருவாக்கத்தைப்பற்றி பேசும் போது“But for the sake of the prosperity of the worlds he caused the Brahmana, the Kshatriya, the Vaisya, and the Sudra to proceed from his mouth, his arms, his thighs, and his feet.” (மனு ஸ்மிருதி பாகம் 2 சூத்திரம் 31) இப்படியாகக் குறிப்பிடுகிறார். இதில் நான் குறிப்பிடவிரும்புவது மனிதனைப் படைக்கும் போதே அவனை நால் வருணங்களாய் படைக்கிறார் என்பதைத்தான். செய்யும் தொழிலைக்கொண்டே வருணங்கள் பிரிக்கப்பட்டன என்று விளக்கமளிக்கும் ‘சமத்துவபுர ஜெண்டில்மேன்கள்‘, நவீன பெளராணிகர்கள் இதை சாமர்த்தியமாக மறைக்கப் பார்க்கலாம். இதை வருணாஸ்ரமத்துக்கான துவக்கப்புள்ளி என்பதால் (இந்தப்புத்தகத்தில்) குறிப்பிடுகிறேன். மற்ற சாதியக் கடமைகள், கட்டுப்பாடுகள், தண்டனைகள், பெண்களுக்கு எதிரான சதித்திட்டங்களை வாசகர்கள் படித்தறிய வேண்டுகிறேன். ஆங்கில மனுஸ்மிருதிக்கான சுட்டி கீழே உள்ளது; தமிழில் திரிலோக சீத்தாரம் மொழிபெயர்த்த (தமிழினி வெளியீடு என்று நினைக்கிறேன்) மனுஸ்மிருதியும் கிடைக்கிறது. இதைத்தவிர வேறு சில பதிப்புகளும் கிடைக்கின்றன. சரி மனுஸ்மிருதி மாறக்கூடியது. இடைக்காலத்தில் தோன்றியிருக்கலாம், மூலப்புத்தகமான வேதத்தில் இதற்கு ஆதாரம் உள்ளதா என்று நண்பர்கள் வினாவலாம். வேதங்களில் பழமையானதும், முதன்மையானதுமாகக் கருதப்படுவது ரிக். அதன்கண் உள்ள புருச சூக்தத்தில் (PURUSHA SUKTA, Verse 13) காணப்படுவதே மனுவினால் எடுத்தாளப்பட்டுள்ளது. 13 வது சம்ஹிதை இது. brAhmaNo asya mukhamAseet | bAhoo rAjanya: krta: | ooru tadasya yad vaishya | padbhyAm shoodro ajAyata || 12 || (asya) His (mukham) mouth (Aseet) became (brAhmaNa:) the Brahmin, (bAhoo) his arms (krta:) were made (rAjanya:) Kings. (yad) what were(asya ooru) his thighs, (tad) they were made into (vaishya:) the merchants, (padbhyAm) and from his feet (shoodro) were the servants (ajAyata) born. அதாவது மாறக்கூடிய ஸ்மிருதியும், மாறாத ஸ்ருதியும் (வேதமும்) மனிதனை பிறப்பினால் பிரிக்கவே செய்கின்றன. மனிதனின் பலவேறு தொழிகளின் பேரில் இப்படி தோற்றம் பெற்றதாக யாரும் இதை ‘திரிக்க‘ முடியாது. ஏனெனில் உலகம் தோற்றம் பெறுகையிலேயே மனிதன் இப்படியான சாதிகளாக தோற்றம் பெறுவதாக மனுவும், புருஷ சூக்தமும் சொல்லுகின்றன. ஆனால் அறிவியலை நம்புகிறவர்கள் பரிணாமவளர்ச்சியில் மனிதனாகி, காட்டாளாகி, சமூகமாய் மாறுகையில் தான் இந்த வேலைஅடிப்படை பிரிவினைகள் தோன்றியிருக்கமுடியும் என்று அறிவார்கள். ஆனால் புருஷ சூக்தம் மற்றும் மனுவின் நோக்கம் மனிதனை அவனது சாதி அடிப்படையிலான பிறப்பே மிக இயல்பானதாகவும், கடவுளின் திட்டமாகவும், மாற்ற முடியாததாகவும் காட்டவும் அதனடிப்படையில் சாதியச் சுரண்டலை காலங்காலமாக நிலைநிறுத்தவும்தான் என்பதை கொஞ்சம் யோசிக்கத் தெரிந்த, நேர்மையான அணுகுமுறை கொண்ட எவரும் புரிந்துகொள்ள முடியும். இதனால் தான் வர்ணாசிரமத்தை இத்தனை ஆழமாகவும், ஆண்டுகளாகவும் இந்திய சமூகத்தில் காப்பாற்ற முடிந்தது. சமயச் சீர்திருத்தக்காரர்களால் (இராமானுஜர் போன்ற) நிலையான எந்த சமூக மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாமல் போனதற்குக் காரணமும் அவர்கள் வருணாசிரமத்தின் வேராகிய வேதத்தை மறுக்காததுதான்; ஒழிக்காததுதான். சரி, இந்த வேதமும், மனுவும் ஒழியட்டும். பதிலாக இன்று இந்துக்களின் புனித நூலாக காட்டப்படும் பகவத் கீதையாவது சுத்தமாக இருக்கிறதா என்றால் அதுவும் வருணாஸ்ரமத்தை வலியுறுத்துவதாயும், சாதிக்கலப்பு நடந்துவிடக்கூடாதென பதைப்பதாகவும் இருக்கிறது. பெண்களும், சூத்திரர்களும் பாவ யோனிகளிலேயே பிறப்பதாக பெண்களைப்பற்றிய கருத்தை விதைக்கிறது. இது தொடர்பான ஜெயமோகனின் திண்ணை கட்டுரைகளும், அதைத்தொடர்ந்து நான் எனது பதிவில் எழுதிய கீதையின் பெயரில் சில கட்டுரைகளும் படிக்கத் தக்கன. தவிர வேதமும், மனுவும் சொல்லும் சம்ஸ்கிருத மேலாதிக்கத்தையும், மற்ற நீச பாசைகளைப்பற்றிய குறிப்புகளையும் அக்னிஹோத்ரம் இராமாஜ தத்தாசாரியார் இப்படிக் குறிப்பிடுகிறார்: வைணவத்திலும் சரி… சைவத்திலும் சரி… தமிழ் இப்படி தள்ளிவைக்கப் பட்டதற்கு என்ன காரணம்?இதற்கு வேதங்களில் இருந்துதான் பதில் கிடைக்கிறது. சுக்லயஜுர் வேதத்தில் ஒரு மந்த்ரம் பாருங்கள். “தஸ்மாது ப்ராம்மணேன நம்லேச்சித வை நம அபபாஷித வை…” இந்த சின்ன வரிகள் தேக்கி வைத்திருக்கும் கருத்துகள் பெரியவை. அதாவது தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையே போர் நடந்தது. இதில் நான் ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன். நல்லவனை தேவன் என்றும் கெட்டவனை அசுரன் என்றும் வேதம் சொல்லியிருக்கிறது என்று. இதன்படி இந்த போரில் சமஸ்கிருத பாஷை பேசிய தேவர்கள் ஜெயித்தார்கள். மிலேச்சபாஷை… அதாவது சமஸ்கிருதம் அல்லாத பாஷை பேசிய அசுரர்கள் தோற்றார்கள். எனவே, தெய்வீகமான பிராமணர்கள் சமஸ்கிருதம் தவிர மற்ற பாஷைகளெல்லாம் கெட்டவர்களின் கெட்ட பாஷை. மிலேச்ச பாஷை அதாவது தெய்வத் தன்மை யற்ற பாஷை… என்கிறது வேதம். இப்படிப்பட்ட வேதத்தை எளிமைப்படுத்துவதற்காக அவதரித்த மநுவும் தன் பங்குக்கு சொல்கிறார். “…தயோ ரேவ அந்ததம் கிரியோஹா தேவ நதியோஹா யதந்தரம் தம்தேவ நிர்மிதம் தேசம் ஆரிய வர்த்தம் விதுர் புதாஹா…” அதாவது… விந்திய மலை, இமயமலை இந்த இரண்டு மலைகளுக்கு இடையேயுள்ள பகுதியும்… கங்கை, யமுனை நதிகள் பாயும்… இந்த நதிகளுக்கு இடையே உள்ள பகுதியும்தான் ஆரியவர்த்தம் என அழைக்கப்படும். இங்குதான் தெய்வீகத்தன்மையும் சமஸ்கிருத பாஷையும் நிலைத்து நிற்கும். அதனால்… இந்த பகுதியை தவிர… மற்ற பகுதிகள் தெய்வீகத்தன்மை இல்லாதவை….2. இன்றைய இந்து மதமாகக் காட்டப்படுகிற நிறுவனத்துக்கு வருணாசிரமத்தை, மனுநீதியை காப்புற்றும் முனைப்பும், அதை வலியுறுத்தும் வேலைத்திட்டமும் இருக்கிறதா? இந்தகேள்விதான் முதல் கேள்வியைவிட முக்கியமானது. இதற்கான பதிலே இந்துமதத்தை அழிக்காமல் சாதியை ஒழிக்க முடியாது என சொல்லவைக்கிறது. இந்து மதமென்ற இன்றைய நிறுவனம் பலம் பெறும்போது அது வருணாசிரமத்தை, சாதிய படிநிலையை, பெண் அடிமைத்தனத்தை கண்டிப்பாக முன்னெடுக்கும், வலியுறுத்தும். வருணாசிரமத்தை நடைமுறைப்படுத்த அது எந்த வழிமுறையையும் கையாளத் தயங்காது என்பது பலமுறை நிரூபனமான ஒன்று. சமூக வரலாற்றை கூர்ந்து நோக்கும் எவரும் இன்றைய நவீன உலகில் கூட இதைச் செய்யத்தயங்காத இந்துத்துவ சக்திகளின் செய்லபாடுகளை அறியலாம். இது எங்கெங்கே எந்த விதத்தில் நடந்தது? பட்டியல் போட்டுக்காட்டுக என்று நண்பர்கள் கேட்க மாட்டார்கள் என்று நம்புகிறேன். அவர்களும் தங்கள் அக்கறையின் பேரில் கொஞ்சம் உழைக்க வேண்டும். ஆனால் இந்த நிறுவனப்படுத்தப்பட்ட இந்து மதத்துக்கு வருணாசிரமத்தை தூக்கிப்பிடிக்க வேண்டிய கடமையும் இருந்தது, அதற்காக மறைந்த சந்திரசேகர சரஸ்வதியின் தலைமையில் அது இந்திய துணைக்கண்ட (பாகிஸ்தானை உள்ளடக்கிய) அளவில் பாரிய முயற்சியை முன்னெடுத்தது என்பதை இங்கு சொல்லவிரும்புகிறேன். நேரு இந்தியாவின் பிரதமராக இருந்த காரணத்தால் தான் அது நடக்காமல் போனது. அது மட்டும் நடந்திருந்தால் சுதந்திர இந்தியாவில் வருணாசிரமம் சட்டபூர்வமாக (இன்று மட்டுமென்ன வாழுகிறது!) ஆக்கப்பட்டு சாதியச் சுரண்டலும் பெண்ணடிமைத்தனமும் செய்யபட்டிருக்கும். இதை வெகு முனைப்போடு செய்ய இந்திய அளவில் தமது திறனனைத்தையும் பயன்படுத்தியதால் தான் அவரை ‘மகா பெரியவர்‘ என்று அழைக்கிறார்கள் போலும். இதை யாரோ திகவில் இருந்தவரோ, பெரியார் அடிப்பொடியோ சொல்லவில்லை. வருணாசிரமத்தை சட்டப்பூர்வமாக்க மகாபெரியவரின் ஆக்ஞையை ஏற்று உழைத்த அக்னிஹோத்ரம் இராமாஜ தத்தாசாரியார் நக்கீரனில் எழுதிய ‘இந்து மதம் எங்கே போகிறது?’ என்ற கட்டுரைத் தொடரிலேயே இதைப் பதிவு செய்துள்ளார். (அது இப்போது நூலாக வெளிவந்துள்ளது). வருணாசிரத்தை சட்டப்பூர்வமாக்க ஆடுதுறையில் நள்ளிரவில் அந்தணர்களைக் கூட்டி மீட்டிங் போட்டு செயல்திட்டத்தை ஆரம்பித்திருக்கிறார் ‘மகா பெரியவர்‘. தாத்தாச்சாரியார் எழுதுகிறார்… இப்போது மகாபெரியவரின் மீட்டிங்குக்கு வருவோம். இப்படியாக ஏற்கெனவே பிரிட்டிஷ் ஆட்சியில் மநு, வர்ணாஸ்ரம தர்மங்களை சற்று தலை தட்டி வைப்பது போன்ற சட்டங்கள் போடப்பட்டிருந்தன. நம் தேசம் ஸ்வராஜ்யம் (சுதந்திரம்) அடைய இருந்த நேரத்தில்… பிரிட்டிஷ் நாட்டிலிருந்து Parliamentary deligation ஒன்று நமது தேசத்துக்கு வந்தது. அதாவது… நமது தேஸத்துக்கு சுதந்திரம் வழங்குவதற்கு முன்பு அது பற்றிய விவாதங்கள் நடத்துவதற்காக… எப்படி கொடுக்கலாம் என்று முடிவு பண்ணுவதற்காக… பிரிட்டிஷ் பார்லிமெண்ட் உறுப்பினர்கள் அடங்கிய குழு ஒன்று இங்கே வந்தது. அதுதான் Parliamentary deligation இந்த குழு வந்த காலகட்டத்தில்தான் அந்த ஆடுதுறை கூட்டம். “ஏற்கெனவே பால்ய விவாஹத்துக்கு தடை பண்ணிட்டா… இன்னும் என்னெல்லாம் நம்ம சம்ப்ரதாயத்து மேல அட்டாக் பண்ணப் போறாளோ… அதனால… இப்ப வந்திருக்குற அந்த டெலிகேஷன்கிட்ட… சனாதன வர்ணாஸ்ரம தர்மத்துக்கு எந்த பாதிப்பும் வரக்கூடாதுன்னு நாம சொல்லியாகணும்… என்ன சொல்றேள்?….”-என மகாபெரியவர் கேட்க… சிஷ்யாளோ… ‘ஸ்வாமி… இப்படியெல்லாம் அவாளை கேட்கறது எங்களுக்கு என்னமோ உசிதமா படல. அவா செய்தா செய்யட்டும்… சில விஷயங்களை மாத்தறது நல்லதுதானே…’ என்றனர். ஆனால்… சங்கராச்சாரியார் இதனை ஏற்றுக் கொள்ளவில்லை. அவர் வெளியே வந்தார். உட்கார்ந்திருந்த என்னிடம்…`தாத்தாச்சாரீ… நீரும் நானும் தான் மிச்சம்’ என்றார். என்ன ஸ்வாமீ?… என்றேன். “நான் சொன்னதை யாரும் ஏத்துக்கல. ஆனா இதை விடக்கூடாது. நம் சம்ப்ரதாயத்தை காப்பாத்தணும். இதுக்காக அந்த பிரிட்டிஷ் டெலிகேஷனுக்கு மெமோரண்டம் கொடுக்கப் போறோம். அதுக்காக உம்மைதான் செலக்ட் பண்ணியிருக்கேன்…” என்றார். எனக்கு ஒன்றுமே புரியவில்லை… `நீர் இதுக்காக டெல்லிவரை போக வேண்டியிருக்கும்…’ அதுக்கு முன்னால… டெலிகேஷனுக்கு நம் அபிப்பிராயத்தை தந்தி அடிக்கணும். அந்த ராத்திரி 11 மணிப்பொழுதில் தந்தி வாசகங்களை தயார் பண்ணினோம். ஒன்றா… இரண்டா?… நூறு தந்திகள். அந்தக் காலத்தில் ஒரு தந்தி அடிக்க வேண்டுமென்றால், ரொம்ப கஷ்டம். ஏனென்றால், பெரிய பெரிய நகரங்களில் தான் தந்தி ஆபீஸ் இருக்கும். ஒரு தந்தி என்றால் அடித்து விடலாம். நூறு தந்திகள். ஒரே இடத்திலிருந்து கொடுத்ததாக இருக்கக் கூடாது. தேஸத்தின் பல பகுதிகளிலிருந்தும் அனுப்பவேண்டும். `பாரத தேசத்தின் மதாச்சார கர்மானுஷ்டாங்களுக்கு பாதுகாப்பு வேண்டும். புது அரசியல் மூலம் எங்கள் மத ஸ்வதந்த்ரம் பாதிக்கப்படக் கூடாது’ என்பதுதான் தந்தி வாசகம். இதை தேசத்தின் பல இடங்களிலிருந்தும் டெல்லிக்கு அனுப்பினோம். 100 தந்திகள்… அதுவும் வெவ்வேறு இடத்திலிருந்து. செலவை மகாபெரியவரே ஏற்றுக் கொண்டார். நான் உதவி செய்தேன். தந்தியடித்த பிறகு, மறுபடியும் என்னை அழைத்த மகாபெரியவர், `நாம அவாளை நேர்ல பார்த்து நம்ம மத சம்ப்ரதாயத்தை பத்தி பிரஸ்தாபிச்சு சனாதன மதத்துக்கு ஸ்வதந்த்ரம் கேக்கணும்… அதை நீர்தான் பண்ணணும்’ என்றார். அப்போது… `பார்லிமெண்ட் டெலிகேஷன்’ மெம்பர்கள் பத்திரிகைக் கார்யாலயங் களுக்கெல்லாம் விஜயம் செய்து… ஸ்வராஜ்யம் பற்றி தேஸம் என்ன நினைக்கிறது என்றெல்லாம் கேட்டுத் தெரிந்துகொள்வார்கள். ஏனென்றால், நம் தேசத்தின் சுதந்திர எழுச்சியைப் பல பத்திரிகைகள் தட்டி எழுப்பியபடி இருந்தன. அந்த வகையில்… சென்னைக்கு வந்தது பார்லிமெண்ட் டெலிகேஷன். அன்று தேஸத்தின் மிக முக்கிய பத்திரிகையான `தி ஹிண்டு’ ஆங்கிலப் பத்திரிகை ஆபீசுக்கு டெலிகேஷன் வந்திருந்தது. இதையறிந்த மகாபெரியவர்… உடனே என்னை அழைத்து அவர்களைப் போய் பார்க்கச் சொன்னார். நானும் `ஹிண்டு’ பத்திரிகை ஆபீசுக்குப் போனேன். அப்போது… `ஹிண்டு’வின் எடிட்டராக இருந்த சிறீ.கே. சீனிவாஸன் என்னை பார்லிமெண்டரி டெலிகேஷனிடம் அறிமுகப்படுத்தி வைத்தார். எப்படியென்றால் `இவர் மதாச்சாரியார்களின் பிரதிநிதி’ என்று. டெலிகேஷனில் இருந்த சோரன்சன் என்ற பாதிரியாரும் நானும் பரஸ்பர வணக்கத்தைப் பரிமாறிக் கொண்டோம். நான் முதலில் 100 தந்தி விடயத்தை அவரிடம் ஞாபகப்படுத்தினேன். ‘oh’ என ஞாபகப்படுத்திக் கொண்ட சோரன்சன்… ‘We meet tonight’ என்றார். அன்று ராத்திரி பிரபல அட்வகேட் ஒருவரின் வீட்டில் இருந்த சோரன்சன்னை சந்தித்தேன். பத்து மணி ராத்திரிப் பொழுதில் எனக்கும், சோரன்சன்னுக்கும் நடந்த ஆங்கில உரையாடலை இங்கே தருகிறேன். சோரன்சன்: Welcome. What do you want? நான்: We lives in India. But havings not any rights to follow our religion. We must need freedom to follow our “Dharma”. சோரன்சன்: Oh… it is very serious matter… give me a memorandam and meet me in Delhi என்றார். நான் உடனே கும்பகோணம் விரைந்து மகாபெரியவாளிடம் விஷயத்தைச் சொன்னேன். சில அட்வகேட்கள் சம்ப்ரதாயஸ்தர்கள் ஆகியோரை வைத்துக்கொண்டு… “வர்ணாஸ்ரம தர்மத்துக்கு முழு சுதந்திரம் வேண்டும்’’ என்ற மெமோரண்டத்தைத் தயார் பண்ணினோம். டெல்லிக்கு போய் நேரில் கொடுக்க இருந்தோம். அதற்குள் அந்த டெலிகேஷன் மெம்பர் அஸ்ஸாம் போய் அங்கே தேஸ நிலைமையை ஆராய்ந்து கொண்டிருந்தார். இந்த விஷயம் கேள்விப்பட்டவுடன்… மெமோரண்டத்தை அஸ்ஸாமுக்கே ஒரு காப்பி முதலில் அனுப்பி வைத்துவிட்டோம். பிறகு டெல்லி போனேன். அங்கே வக்கீல் சிவராவின் வீடு, பகல் 11 மணிக்கு காங்கிரஸ் தலைவர்களான அச்சுத பட்டவர்தன், ஜெயப்பிரகாஷ் நாராயண் ஆகியோர் டெலிகேஷனை சந்திக்கக் காத்திருந்தார்கள். அவர்கள் பார்த்துவிட்டுப் போனவுடன், நான் சில அட்வகேட்களுடன் டெலிகேஷனை சந்தித்தேன். `வர்ணாசிரம மதாச்சாரத்தைப் பின்பற்ற ஜீவாதார உரிமை வேண்டும்’ என்ற மெமோரண்டத்தைப் பார்லிமெண்ட்ரி டெலிகேஷனிடம் நேரடியாகவே கொடுத்தோம். வாங்கிக் கொண்டு போய்விட்டார்கள். இதன் பிறகு… பிரிட்டிஷ் நாட்டிலிருந்து Cabinet deligation வந்தது. அந்த குழுவினருக்கும் தந்தியடித்தோம். மெமோரண்டம் கொடுத்தோம். அவர்களோ “உங்கள் அரசியல் சாசனத்தை உங்கள் தலைவர்கள்தான் உருவாக்கப் போகிறார்கள். அதனால் உங்கள் தேசத் தலைவர்களையே பாருங்கள்’’ என சொல்லி விட்டார்கள். சரி… என சொல்லிவிட்டு நம் தேஸத் தலைவரான சர்தார் வல்லபாய் பட்டேலை பார்க்கச் சென்றோம். அவர்… மெமோரண்டத்தைப் பார்த்துவிட்டு… “சனாதன மதத்தைப்பற்றியும் மடங்களைப்பற்றியும் நீங்கள் சொல்வது வாஸ்தவம்தான். ஆனால், மடாதிபதிகள் தங்களுடைய ஸ்தாபனத்தின் கீழ் ராஜபோகத்தை அனுபவிக்கிறார்கள். அவரவர்களுக்கும் அவரவர்களுடைய சிஷ்யர்களோடுதான் பழக்கம். வெளி உலகத்தோடு மக்களோடு உறவே இல்லை. மக்களின் பொதுவான பணிக்கோ, மதப் பணிக்கோ அவர்கள் முன்வரவில்லை. முக்கியமாக ஹரிஜனங்களுடைய முன்னேற்றத் திட்டத்தில் மதமும், மடாதிபதிகளும் முக்கியத்துவம் காட்டவே இல்லை. முதலில் மக்களின் தேவையை உணர்ந்து அவர்களுக்குப் பணி செய்ய மதாச்சாரியார்களை வரச் சொல்லுங்கள்…’’ என்று கண்டிப்பாக என்னிடம் கூறினார் பட்டேல். நான்… `பழைய காலத்தில் அப்படி இருக்கலாம். புது பாரத தேசம் உருவாவதால் அவர்கள் பொதுப் பணிகளை நிறைவேற்றுவார்கள்’ என சொல்லிப் பார்த்தேன். ம்ஹூம்… பட்டேல் ஒப்புக் கொள்ளவில்லை. இதை மகாபெரியவரிடம் சொன்னபோது… `ஆமாம் இது முழுவதும் உண்மைதான்’ என்றார். அடுத்து பண்டிட் நேருஜியை பார்த்தேன். …………… ஏதோ நேரு உறுதியாக இருந்ததால் பிழைத்தோம். அப்புறமும் இந்து மடங்களின் உரிமைகளைக் காக்க (அதாவது வருணாசிரமத்தை அவை வலியுறுத்த இருக்கும் சுதந்திரத்தை, அதிகாரத்தை காக்க) அவர் நாடளாவிய மடாதிபதிகளின் கூட்டமொன்றைக் கூட்டினார். ஆனால் அந்த நேரத்தில் அவ்வளவு விழித்துக்கொள்ளாத வடநாட்டைச் சேர்ந்த மற்ற மடாதிபதிகள் இதில் ஆர்வம் காட்டவில்லை. இப்படி நிறைவேறாமல் போன வருணாசிரமத்தை மீண்டும் சட்டப்பூர்வமாக நிறைவேற்றத்தான் பஜகவும் RSS உயிரைக்கொடுத்து (எடுத்து) உழைக்கின்றன. உயிரைக்கொடுத்துஎடுத்துஉழைக
  10. சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது? பேராசிரியர் சோ. சந்திரசேகரன் இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும். இலங்கை போன்ற வளர்முக நாடுகளில் இவ்வகையான முறை சார்ந்த கல்வியை வழங்குவதில் அரசாங்கம் முன்னிலை வகித்து வந்துள்ளது. பொதுவுடைமை நாடுகள் தவிர்ந்த ஏனைய வளர்முக நாடுகளில் அரசாங்கத்துறையோடு தனியார் துறை சார்ந்த கல்வி நிறுவனங்களையும் காணமுடியும். உதாரணமாக இந்தியாவில் மத்திய அரசு, மாநில அரசுகள், உள்ளூராட்சி நிறுவனங்கள் நடாத்தும் பாடசாலை முறைக்கு அப்பால் கல்வித்துறையில் தனியார் துறையின் பங்கும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஆனால், இலங்கையில் கடந்த ஆறு தசாப்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட கல்விச் சீர்திருத்தங்களின் விளைவாக, கல்வித்துறையில் அரசாங்கத்தின் பங்கு அதிகரித்துள்ளது. இவ்வாறு இலங்கை உள்ளடங்கிய வளர்முக நாடுகளில் பாடசாலை மற்றும் உயர்கல்வியில் அரசாங்கத்தின் பங்களிப்பு முக்கியத்துவம் பெறக் காரணம். அரசாங்க உதவியும் தலையீடும் இன்றி நலிவடைந்த பிரிவினர் கல்வி வாய்ப்புகளைப் பெற முடியாது என்பதாகும். இலங்கையில் அரசாங்கம் வழங்கும் இலவசக்கல்வி, புலமைப்பரிசில்கள், கிராமப்புறங்களில் விரிவான முறையில் அரசாங்கம் அமைத்துள்ள பாடசாலைகள், இலவச பாடநூல், இலவச சீருடை - இவையாவும் நலிவடைந்த கிராமப்புற, நகர்ப்புறப் பிரிவினருக்கும் தோட்டப்பகுதிப் பிள்ளைகளுக்கும் பெரிய உதவியாக அமைந்துள்ளதை மறுக்க முடியாது. இன்று இலங்கையில் கல்வித்துறையில் தனியார் மயமாக்கத்துக்கு எதிராக முன் வைக்கப்படும் முக்கிய வாதம், அந்நடவடிக்கை நலிவடைந்த பிரிவினரின் கல்வி மேம்பாட்டுக்கு எதுவித உதவியையும் வழங்காது என்பது தான். இலங்கையில் வளர்ச்சிபெற்ற சமூகநல அரசு வழங்கிய இலவசக் கல்வி, இலவச சுகாதார வசதிகள் என்பன, நலிவுற்ற பிரிவினரும் மனித வள மேம்பாட்டுக்கான வரப்பிரசாதமாக அமைந்ததை மறுக்க முடியாது. தற்போது இச்சமூகநல நோக்குடன் பெருமளவு நிதியை அரசாங்கம் கல்விக்கு ஒதுக்கி வருகின்றது. இது சுதந்திரகாலம் முதல் செய்யப்பட்டு வரும் உதவி. அண்மைக்காலங்களில் அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி, போருக்கான ஆயத்தத்துக்கு ஒதுக்கப்படும் பெரிய அளவிலான நிதி என்பன கல்வித்துறைக்கான நிதி ஒதுக்கீட்டில் பல வீழ்ச்சிகள் ஏற்படக்காரணமாக உள்ளன. இது இலங்கைக்கு மட்டுமன்றி ஏனைய வளர்முக நாடுகளும் எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினையாகும். அரசாங்கங்களின் கல்விச் செலவு ஒப்பீட்டு ரீதியில் தேசிய வருமானத்தினதும் அரசாங்கச் செலவினதும் எத்தனை வீதமாக இருக்கின்றது என்று பார்க்கும்போது அதில் பல வீழ்ச்சிகளைக் காணமுடியும். இப்புள்ளி விபரம் இலங்கையில் அரசாங்கத்தின் கல்விச் செலவு குறைந்திருப்பதையே காட்டுகின்றது. தேசிய வருமானம், அரசாங்கச் செலவு என்பவற்றுடன் கல்விச் செலவை ஒப்பிட்டுக் காணும் வீதாசாரமும் 1998 முதல் குறைந்து சென்றுள்ளது. தேசிய வருமானத்தின் வீதாசாரமாகக் கல்விச் செலவு 1998 இல் 3.1 ஆக இருந்து 2002 இல் 2.9 வீதமாகக் குறைந்தது. இதே காலப்பகுதியில் அரசாங்கச் செலவின் வீதாசாரமாக கல்விச் செலவு 8.4 சதவீதத்திலிருந்து 6.8 ஆகக் குறைந்துள்ளது. தற்போது பல சிரமங்களுடன் கல்வித் துறைக்கு ஆண்டுக்கு 4000 கோடி ரூபா ஒதுக்கப்படுகின்றது. இவ்வாறு சிரமத்துடன் ஒதுக்கப்படும் அரசாங்க நிதியும் கல்விக்கான வெளிநாட்டு உதவிகளும் எக்கல்வி நிலைக்குப் பிரதானமாகச் செலவிடப்படல் வேண்டும்? பல்வேறு கல்வி நிலைகளில் எந்நிலைக்கு நிதி ஒதுக்கீட்டில் முன்னுரிமை வழங்கப்படல் வேண்டும்? என்ற முக்கிய வினாக்கள் எழுகின்றன. முன்னுரிமை வழங்கப்பட வேண்டிய கல்விநிலை இதுதான் என எவ்வாறு முடிவுசெய்ய முடியும்? குறிப்பிட்ட கல்விநிலைக்கு முன்னுரிமை வழங்க வேண்டுமாயின் அக்கல்வி நிலை சமூகத்துக்கும் தனி மனிதனுக்கும் அதிக அளவிலான பயனைத் தருவதாக இருத்தல் வேண்டும். இப்பிரச்சினையைத் தீர்க்க ஒரே வழி சமூகத்துக்கும் தனி மனிதனுக்கும் அதிக பலனை அளிக்கக் கூடிய கல்வி நிலையைத் தெரிவு செய்வது தான். அவ்வாறு தெரிவு செய்யப்படும் கல்விநிலைக்கு நிதி ஒதுக்கீட்டில் முன்னுரிமை வழங்கினால் இப்பிரச்சினை தீர்கின்றது என்பது கல்வியின் சமூக விளைவுகள் பற்றியும் தனியாள் விளைவுகள் பற்றியும் ஆராய்பவர்களின் கருத்தாகும். இவ்வாறு கல்விமுறையைத் திட்டமிட முனைந்தவர்கள், தாம் எதிர்நோக்கிய இந்த நிதி ஒதுக்கீட்டுப் பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ளக் கையாண்ட வழிமுறைதான் விளைவு வீத அணுகுமுறையாகும். (Rate of Return Approach) இலங்கையில் கல்வியின் மீது இடப்படும் முதலீடு பல நன்மைகளைத் தரும் என பொதுவாக எதிர்பார்க்கப்பட்டது. அவையாவன: - பொருளாதார சமத்துவத்தை ஏற்படுத்தல்; -இரு சமூக தலைமுறையினருக்கிடையில் சமூக நகர்வை ஏற்படுத்துதல்; -உழைப்பாளரின் உற்பத்தித் திறனையும் சம்பாத்தியத்தையும் கூட்டுதல்; -உடல் ஆரோக்கியமான செல்வம்மிக்க சமூகத்தை உருவாக்குதல்; இவற்றோடு ஆய்வாளர்கள் கல்வியின் மீதான முதலீட்டினால் இரு சமூக நன்மைகளையும் (Returns) எதிர்பார்த்தனர். -வினைத்திறன் மற்றும் -சமூக நியாயத்தில் ஏற்படும் முன்னேற்றங்களே அவையாகும். இலங்கையில் உலகவங்கி செய்த இவ்விளைவு வீதம் தொடர்பான ஆய்வுகள் பல முக்கிய முடிவுகளைத் தந்துள்ளன. இவை எக்கல்வி நிலைகள் சமூகப்பயனையும் தனியாருக்கான நன்மையையும் வழங்குவன என்பதை எடுத்துக் காட்டுகின்றன. ஆண்களின் (1) பல்கலைக்கழக கல்வியினால் 11 சமூகத்துக்குக் கிடைக்கும் நன்மையை விட கட்டாயக் கல்வி நிலையும் 15 சிரேஷ்ட இடைநிலைக் கல்வியும் 20 சமூகத்துக்கு வழங்கும் நன்மை, பயன் அதிகமானது. (2)பெண்களும் கட்டாயக் கல்வியினால் பயனடைகின்றனர். (20). பல்கலைக்கழகக் கல்வி, சிரேஷ்ட இடைநிலைக் கல்வி என்பவற்றால் பெண்கள் பெறும் சமூகப் பயன்குறைவு (முறையே 10, 18) இவ்விரண்டு ஆய்வு முடிவுகளும் ஒப்பீட்டு ரீதியில் பல்கலைக்கழகங்களின் சமூக நன்மை குறைவானது என்பதையே வலியுறுத்துகின்றன. அத்துடன், பல்கலைக்கழகக் கல்வி நிலையை விட கட்டாயக் கல்வி நிலையே அதிக அளவு சமூகப் பயனுடையது என்பதையே உலக வங்கியின் 2002 ஆம் ஆண்டின் இலங்கை ஆய்வு எடுத்துக் காட்டுகின்றது. இலங்கையில் (2002) செய்யப்பட்ட இந்த ஆய்வு ஏறத்தாழ 1973, 1980 களில் செய்யப்பட்ட பல உலகளாவிய ஆய்வு முடிவுகளை ஒத்திருப்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாண்டுகளில் Psacharopoulos என்ற ஆய்வாளர் இவ்வாய்வை 60 நாடுகளில் செய்து கல்வியின் விளைவு வீதத்தைக் கணித்தார். அவருடைய ஆய்வின்படி வளர்முக நாடுகளில் கல்வியின் விளைவு வீதம் பின்வருமாறு அமைந்தது: கல்விநிலை விளைவு% ஆரம்பக்கல்வி 27% இடைநிலைக்கல்வி 16% உயர்கல்வி 11% இவ்வாய்வு முடிவுகளை ஏறத்தாழ ஒத்ததாக இலங்கையின் ஆய்வு முடிவுகள் அமைந்துள்ளன. இவ்வாய்வுகளின் பின்புலத்தில், இவ்வாய்வு முடிவுகளை ஆதாரமாகக் கொண்டு நோக்குமிடத்து "கல்வி முதலீட்டைப் பொறுத்தவரையில் ஆரம்பக்கல்விக்கே அதிக முன்னுரிமை வழங்கப்படல் வேண்டும்; அத்தோடு உயர்கல்வியின் சமூகப் பயன்குறைவு என்பதால், அதன் மீது அதிக அளவு மானியங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. இந்த ஆய்வு முடிவுகள் உயர்கல்வியின் வளர்ச்சிக்குச் சாதகமாக இல்லை என்பதோடு அக்கல்வி நிலையை ஊக்குவிக்கவில்லை. இத்தகைய, ஆய்வுகள் இலங்கை போன்ற நாடுகளில் ஒரு கட்டுப்பாடான, வளர்ச்சி குன்றிய உயர்கல்வி நிலைக்கு இட்டுச் சென்றுள்ளன. ஆரம்பக்கல்வி வயதினரில் சேர்வு வீதம் 100 என்றால் உயர்கல்வி வயதினரின் சேர்வு வீதம் (பல்கலைக்கழகத்தில்) இன்று 3 ஆக மட்டுமே உள்ளது. வேலையில்லாதவர்களின் பட்டியலைப் பார்த்தால் அவர்களில் உயர்கல்வி படித்தவர்கள் அதிகம்; ஆரம்பக்கல்வி பயின்றவர்கள் வீதம் குறைவு. அண்மைக்காலத்தில் 40,000 பட்டதாரிகள் வேலையற்று இருந்த நிலையில் அவர்களுடைய சமூக விளைவு குறைவாக இருந்திருப்பதில் ஆச்சரியமில்லை. சுதந்திரம் பெற்றது முதல் தொடர்ந்து பதவி ஏற்ற அரசாங்கங்கள் பல்கலைக்கழகக் கல்வியின் விரிவினைக் கட்டுப்படுத்தி வந்துள்ளமைக்கு அக்கல்வி நிலையின் குறைந்த சமூக நன்மை ஒரு காரணமாக இருக்கலாம். ஆண்டுதோறும் வெளியேறும் 9000 பட்டதாரிகள் உடனடியாக வேலையின்மைப் பிரச்சினையைப் பலகாலங்களுக்கு எதிர்நோக்குகின்றனர். தாங்கள் உருவாக்கிய பட்டதாரிகளைத் தாங்களே மதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு அரசின் மீது உண்டு. அரச பல்கலைக்கழகங்களிலிருந்து வெளியேறும் பட்டதாரிகளுக்கு அது தெரியாது, இது தெரியாது (ஆங்கில, தகவல் தொழில்நுட்பம்) என்பதால் அவர்கள் வேலைகளில் அமர்த்தப்பட முடியாதவர்கள் (Unemployable) என்ற கருத்தைச் சில அதிகார தரப்பினரே தெரிவித்துள்ளனர். எவ்வாறாயினும், இவ்வாய்வுகள் உயர்கல்வியின் சமூக பயனைக் குறைத்தும் ஆரம்பக்கல்வியின் பயனை அதிகமாகவும் மதிப்பிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய ஆய்வு முடிவுகளின் அடிப்படையிலேயே உலக வங்கி போன்ற சர்வதேச நிறுவனங்கள் உயர்கல்வியின் விரிவுக்கு ஆதரவளிப்பதில்லை. இலங்கை போன்ற வளர்முக நாடுகள் தமது பற்றாக்குறையான நிதியை ஆரம்பக் கல்வியில் செலவிடுவது பயனுடையது என்பது உலக வங்கியின் ஆலோசனைகளின் அடிப்படையானது. "ஆரம்பக்கல்வியில் மேலும் அதிகளவு நிதியை முதலீடு செய்யுங்கள்; இதற்காக, பல்கலைக்கழகங்களுக்கு ஒதுக்கும் நிதியைக் குறைத்தாலும் ஆட்சேபனையில்லை" என்ற முறையில் உலக வங்கியின் ஆலோசனைகள் அமைகின்றன. இன்று சார்பளவில் இலங்கையில் ஆரம்பக்கல்வி அடைந்திருக்கும் வளர்ச்சிக்கும் (சேர்வு வீதம் ஏறத்தாழ 100%) பல்கலைக்கழகக் கல்வி அடைந்திருக்கும் வீழ்ச்சிக்கும் (சேர்வு வீதம் 3% மட்டுமே) இவ்வாறான கல்விநிலைகள் தொடர்பான விளைவு வீத ஆய்வு முடிவுகளின் செல்வாக்கே காரணம் எனலாம். சுருங்கக்கூறின், இந்த ஆய்வு முடிவுகள் பல்கலைக்கழகக் கல்வியை விட கட்டாயக் கல்வி நிலையே சார்பளவில் சமூகப் பயனுடையது என்பதை வலியுறுத்துகின்றன. இந்த ஆய்வுமுறைகள் எப்படிப்பட்டவை? அவை பற்றிய விமர்சனங்கள் எவை? என்னும் விடயங்கள் தனியாக நோக்கப்பட வேண்டியவை. http://www.thinakural.com/New%20web%20site...6/Article-1.htm
  11. ** கார்த்திகேசு சிவத்தம்பி** நினைவின் சுவடுகள் நிறைவேறும் ஓர் ஆசை 1997 இல், இக்கட்டுரையை எழுதியபொழுது நான் இலங்கைக் கிழக்கப் பல்கலைக்கழகத்தில் ஒப்பந்தநிலைப் பேராசிரியராகக் கடமையாற்றினேன். 1998 செப்டம்பர் வரை அது நீடித்தது. யாழ்ப்பாணத்துக்குத் திரும்பமுடியாத உடல் நிலை. பல்கலைக்கழகச் சேவையின் இறுதி வருடங்களைக் கிழக்குப் பல்கலைக்கழகத்திற் செலவிடுதலில் ஒரு தார்மீக நியாயம் இருப்பதாகவே எனக்குப் பட்டது. கிழக்குப் பல்கலைக்கழகம் ஒரு சுவாரசியமான இடம். நான் அங்கு தங்கிய காலத்தில் எனது போக்குவரத்துக்கான ஒழுங்கு, பல்கலைக்கழக ஊழியர் வாகனத்திற் செய்யப்பட்டிருந்தது. காலை போய் மாலை திரும்புவோம். அது ஒரு 'றோசா' பஸ். அதன் சாரதி அம்பலவாணர். அதில் பயணிப்போர் மோகன், சூரி, ஆனந்தராஜன், ஸ்ரீ எனப் பலர். மட்டக்களப்பின் இயல்பான கிண்டற் குறிப்புரைகள் மாறி மாறிப் பறக்கும். அதற்குள் ஓர் உறவுக்குழுமம் இருந்தது. எனக்கு அவர்கள் அபரிமிதமான அன்பு காட்டினர். என்னை நேசித்தனர். ஒரு முதுபுலமையாளனை எவ்வாறு நடத்தவேண்டும் என்பதை அறிந்திருந்தனர். அவர்களின் அந்தச் செயல்கள் எனக்கு ஒரு 'மானுடத்திடலாக' இருந்தது. நான் அதில் நின்று கொண்டு மட்டக்களப்பின் மனிதாபிமானத்தைச் சுவைத்தேன். அவர்களை நான் என்றும் மறக்கமாட்டேன் என்பதற்கு இச்சிறு அர்ப்பணம் சாட்சி. சென்னை 5-10-99 கா. சிவத்தம்பி பதிப்புரை ஆங்கில ஆட்சியில் வேலை வாய்ப்புகள் உள்ளிட்ட அனைத்தையும் சென்று அள்ளிக் கொண்ட பிராமணர்கள் பெற்ற அதே பேறுகளைத் தாங்களும் பெறவேண்டும் என்ற நோக்கில், படித்த பிராமணரல்லாத பிரிவினரால் தொடங்கப்பட்ட 'சென்னை மகாஜன சபை'யின் தோற்றம், அன்றைய காலகட்டத்தில் பிராமணர்களின் செல்வாக்கால் அழுத்தப்பட்டுக்கிடந்த சைவம், தனித்தமிழ் உள்ளிட்ட பல்வேறு போக்குகளை எழுச்சிபெறச் செய்து இதில் கலக்க வைத்தது, பிராம­யத்தின் சமூக-பண்பாட்டுப் பிடிப்பினை எதிர்த்துத் தோற்றம் பெற்று, சமத்துவம்-சமதர்மம் உள்ளிட்ட பொருளாதாரத் தன்மைகளையும் மையப்படுத்தியதாக அமைந்திருந்த பெரியாரின் சுயமரியாதை இயக்கமும் அப்போது பிராம­ய எதிர்ப்புச் சக்திகளை ஈர்த்துக்கொண்டிருந்தது. இந்த நிலையில், நீதிக்கட்சி ஆட்சியில் இடஓதுக்கீடு, கடன் நிவாரணச் சட்டம் அல்லாத வேறெந்தச் சமூக-பண்பாட்டு மாற்றத்துக்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. சமூக சக்தியாக மாறாமல், நிலவுடைமை மற்றும் வணிக நலன்களையே பேணிவந்த நீதிக்கட்சி செல்வாக்கிழந்து தனது இருப்பையே உறுதி செய்துகொள்ள இயலாத நிலையில், பெரியார் என்ற பேராற்றில் கலக்கவேண்டியதாயிற்று. நிலவுடைமை-வணிகர்-படித்தவர் நலன்களை மட்டுமே அடித்தளமாகக் கொண்டிருந்த நீதிக் கட்சி, பிராமணரல்லலாத அடித்தட்டு மக்களின் எழுச்சியை அப்போ‘து உறுதிப்படுத்தியிருந்த சுயமரியாதை இயக்கமெனும் தீயில் விழுந்துவிட்டது. இந்தத் தீயில் உருக்கியெடுக்கப்பட்டதுதான் திராவிட இயக்கக் கருத்துநிலை. இது, அரசியல்-சமூக-பொருளாதார-பண்பாட்டு செயல்திட்டத்துக்கான ஒரு நிலைப்பாடு. திராவிட இயக்கத்தின் பெயரால் அமைந்த கட்சிகள் இதிலிருந்து நழுவியிருந்தாலும், மாநிலக் கட்சிகளிலேயே திமுக இன்றும் வேறுபட்டதாகவே பார்க்கப்படுகிறது. ஒரு கட்சி என்ற முறையிலோ ஆட்சி வகைப்பட்டோ, திமுகவின் அரசியல் முடிவுகள்-செயல்பாடுகள்கூட, சமூக-பண்பாட்டுப் பின்னணியிலேயே மதிப்பிடப்படுகின்றன. தங்களது மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்துவனவாகவே பிற மாநிலங்களிலுள்ள கட்சிகள் காட்டிக்கொண்டாலும், அவை அரசியல் இயக்கங்களாகக் குறுக்கிடக்கின்றனவேயன்றி, சமூக-பொருளாதார-பண்பாட்டுத் தளத்தில் தங்களை நிறுத்திக்கொள்ளவில்லை. தலித் இயக்கங்களின் இருப்பு சற்று வேறுபட்டது என்றாலும், இவையும் அரசியல் அளவுகோலுக்கு அப்பாற் செல்லவில்லை. இத்தகைய பின்னணியில் நாம் புரிந்துதுகொள்ளவேண்டிய-எதிர்நோக்கவேண்டிய தன்மைகளைத் தமக்கேயுரிய நுணுக்கத்தோடு-பார்வையோடு மார்க்žயப் பேரறிஞரும் ஆய்வுப் பேராசிரியருமான கலாநிதி கார்த்திகேசு சிவத்தம்பி அவர்கள் இந்நூலில் விளக்கியுள்ளார்கள். 11.10.1999 மே.து.ராசு குமார். முன்னுரை தமிழ்த் தேசிய உணர்வு வளர்ச்சி பற்றிய எனது ஆய்வுகளில் இது மூன்றாவது, தனித்தமிழ் இயக்கத்தின் அரசியல் பின்னணி (1979) Understanding the Dravidian Movement - Problems and Perspective (1988-95) என்பனவற்றைத் தொடர்ந்து இது வருகிறது. 1996-97 இல் தமிழகத்தில் முன்னிலைப்பட்ட தலித் எழுச்சியும் சாதிச் சண்டைகளும் திராவிட இயக்கக் கருத்துநிலையின் பொருத்தப்பாடு' என்பது பற்றி ஒரு கருத்தரங்கத்தை நடத்துவதற்குத் தூண்டின. மதுரை ஆராய்ச்சி வட்டத்தைச் சேர்ந்த திரு.வி.எம்.எஸ். சுபகுணராஜன் முதலியோர், நண்பர் அ.மார்க்சினுடைய உதவியுடன் 1994 மே 24-25இல் 'திராவிட இயக்கமும் கருத்தியலும்: நோக்குகளும் போக்குகளும்' என்ற கருத்தரங்கை நடத்தினர். அதில் திறப்புரையாக எனது இந்தக் கட்டுரை அமைந்தது. நான் இவ்வுரையினை எழுதுவதற்குக் காலாக இருந்த நண்பர் அ.மார்க்சுக்கு எனது நட்புக் கலந்த நன்றி. திராவிட இயக்கச் செல்வாக்குக் காரணமாகத் தமிழ் நாட்டில் அடிநிலை எழுச்சி திடீரென வந்துவிடாது என மண்டல் கமிஷன் உள்ளிட்ட பலரது முன்னுரைப்புக்குப் பின்னரும் தமிழ்நாட்டில் சாதிக் கலவரங்களும் தலித் எழுச்சியும் தோன்றியுள்ளமை வெறும் சாதாரண அரசியல் நிகழ்வு அன்று. 19-20ஆம் நூற்றாண்டுத் தமிழ்நாட்டு வளர்ச்சியின் பல அடிப்படை முரண்பாடுகளை அது வெளிக்கொணர்ந்தது. ஒருவகையில் பார்க்கும்பொழுது இந்தக் கிளர்ச்சிகளைத் தமிழ் நாட்டின் சனநாயகமயவாக்க நடைமுறையின் தவிர்க்க முடியாப் பெறுபேறு என்று கொள்ள முடியும் என்றாலும் திராவிட இயக்கம் குறிப்பாகப் பெரியாரியம் வற்புறுத்திய சமூக விடுதலை உணர்வு, பிராமணியத்துடன் நேரடி மோதுதலில் ஈடுபடாதிருந்த ஆழ்அடிநிலை மக்களிடத்துச் செல்லவில்லையோ என்ற ஐயங்கிளம்புவது இயல்பாயிற்று. இது பற்றிய நோக்கலுக்கு வருவதற்கு முன்னர் திராவிடக் கருத்துநிலை (Dravidian Ideology) 20ஆம் நூற்றாண்டின் தமிழர் எழுச்சியில் தமிழர் பண்பாட்டில் சில மாற்று நியமங்களையும் குறியீடுகளையும் (alternate norms and symbols) உண்டாக்கியுள்ளது என்பதை மறுக்க முடியாது, தமிழை முதன்மைப்படுத்தும் ஒரு சிந்தனைப்போக்குக் காரணமாக, தமிழர்கள் என்கின்ற வகையில் ஒரு பொதுப்படையான எழுச்சி மேற்கிளம்புவதைக் காணலாம். இதற்குள் சாதக அம்சங்களும் உள்ளன; பாதக அம்சங்களும் உள்ளன. அவை பற்றி ஆராயாது இந்தப் பண்பாட்டு முனைப்பு ஏன் ஒரு குறிப்பிட்ட மட்டத்தோடு நின்றுவிட்டது என்பது பற்றி நோக்குவது முக்கியமான ஓர் ஆய்வாகும். இக்கட்டத்தில்தான் மார்க்žய நோக்கு பயனுடையதாகக் காணப்படும். வர்க்கம் என்கின்ற எண்ணக் கரு சாதியத்தை எவ்வாறு பயன்படுத்தியுள்ளது என்பது இந்த ஆய்வுகளினூடாக வெளிவரும். அத்துடன் வரலாற்று அசைவியக்கம் என்பதும் ஒரு முக்கியமான அம்சமாகும். வரலாற்றின் இயக்கியல் தன்மை காரணமாக ஏற்பட்டுள்ள மாற்றங்களை விரிவாக ஆராய்தல் வேண்டும். காலனித்துவம் பாரம்பரியச் சமூக அமைப்பைச் சற்று வேறுபடுத்தியதே தவிர மாற்றவில்லை. அதனுடைய அடிப்படையான சமூக அடுக்குநிலையையும் (Social Hierarchies) அடுக்கு நிலை உணர்வையும் மாற்றவில்லை. இந்த அடுக்குநிலையோடு காலம்காலமாக ஒரு சமனற்ற பொருளாதார வளர்ச்சிப் போக்கு சம்பந்தப்பட்டிருப்பதனை, உண்மையில் தமிழ்நாட்டின் நானில ஐந்திணை வகுப்புக் காலம் முதலே இருந்து வருவதை ஆய்வுகள் சுட்டிக்காட்டியுள்ளன. இந்தச் சமனற்ற பொருளாதார வளர்ச்சி ஏற்படுத்திய சமனற்ற வாழ்நிலைப் பண்பாட்டு நிலைமைகள் பற்றி அதிகம் கவனம் செலுத்தப்படவில்லை. இந்தப் பொருளாதாரக் குழுமநிலைமையைப் பேணுவதற்கான ஒரு சமூக ஒதுக்கற்பாட்டுணர்வும் சேர்ந்தே வளர்ந்து வந்துள்ளது. சாதி அமைப்பு விதித்த தொழிற்பிரிவினை (division of labour) சமூக ஒதுக்கற்பாட்டினையும் வலியுறுத்தி ஊடாட்டங்களை மிகக் குறைந்த பட்சத்துக்குக் கொண்டு வந்தது. இந்து மதம் இதற்கான இறையியல், சடங்காசார நிலைப்பாடுகளை வழங்கிற்று. இவை யாவும் சமூக அடிநிலை பற்றிய நமது பார்வையைத் தீர்மானித்தன எனலாம். அதே வேளையில் சமூக விடுதலை பெற்ற இடைநிலையினர்களுக்கு வேண்டிய தொடர்ச்சியான அரசியற்கல்வி (Continued Political Education) அளிக்கப்படவில்லை. இதனால் பிராமணித்தியலும் பார்க்க 'நமது' பண்பாடு சிறப்புடையது என்ற ஒரு திருப்திநிலையே ஏற்பட்டது. இந்தத் திருப்திநிலையைச் சகலசாதி மட்டத்திற்கும் கொண்டு செல்ல முடியாததாகிவிட்டது. இதற்குக் காரணம், பிராமணிய எதிர்ப்பு முதலில் சமூக-பொருளாதார உயர்மட்டத்தினராலே மேற்கொள்ளப்பட்டமையேயாகும். அவர்கள் தங்கட்குக் கீழே வந்தவர்களைச் சமமாக நடத்தத்தயாராகவிருக்கவில்லை. இவை காரணமாக ஒரு தேக்கம் ஏற்பட்டது உண்மையே. வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் சாதியொழிப்பிற்கு உதவுவதாக அமையவில்லை. முரணிலையாக அதன் 'இருப்பை', தொடர்ச்சியை அது வலியுறுத்துகிறது. இந்த வரலாற்றுப் பொறிக்குள் நாம் சிக்கிக் கொள்கிற பொழுது விடுபடுவது என்பது மிகுந்த நிதானத்துடன் மேற்கொள்ளப்படவேண்டிய ஒன்றாகிறது (Thesis, antithesis ஆக மாறுவதற்கு இது ஒரு நல்ல உதாரணம்). இவ்வாறு நோக்கும் பொழுதுதான் காலனித்துவத்தின் தாக்கம் பற்றி நாம் போதுமான தமிழ்நிலை ஆய்வுகள் மேற்கொண்டு விட்டோமா எனும் வினா மேலெழும்புகின்றது. காலனித்துவம் இந்தச் சமூக முரண்பாட்டைத் தனக்குச் சாதகமாக எவ்வாறு பயன்படுத்திக்கொண்டது என்பது பற்றிய ஒரு தெளிவும் அவசியம், இக்கட்டுரை வரலாற்றுப் போக்கினைச் மிகச்சிறிய அளவிற் பார்க்க முனைகிறது. புதிய நூற்றாண்டில் தமிழகத்தின் அரசியல் சமூகச் சிந்தனை உணர்வுகள் எவ்வாறு செல்லும் என்பதற்கான ஓர் இலங்கியல் உதாரணமாக இக்கட்டுரைப் பொருள் அமைகிறது. இதனை எழுதுபொழுது எனது ஆள்நிலை (personal) விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாலேயே நிற்பதாக நான் கருதும் வரலாற்றின் தர்க்கத்திற்கு இங்கு முதலிடம் கொடுத்துள்ளேன். இந்தக் கட்டுரையில் கூறப்படுவன விரிவான விவாதங்களுக்கு உட்படுத்தப்படவேண்டியவை என்பதை ஏற்றுக் கொள்கிறேன். தமிழ்நாட்டை இன்று எதிர்நோக்குகின்ற இந்த, மேற்செலவைத் தடுக்கும், கருத்துநிலைத் தடைப்பாட்டை (ideological impasse) உடைப்பதற்கான ஒரு மனந்திறந்த புலமைக் கருத்தாடல் நடத்தல்வேண்டும். அதைச் செய்வதற்கான புலமை எதுவும் வளமும் தமிழ்நாட்டில் இன்று நிச்சயமாக உண்டு. தமிழகத்தின் இன்றைய வரலாற்றுக்கட்டம், அத்தகைய ஒரு கருத்தாடலைக் கோரி நிற்கின்றது. சமூக சக்தியாகத் தொடங்கி, அரசியல் சக்தியாக மாறியுள்ள திராவிடக் கருத்துநிலைக்கான வரலாற்றுத் தேவை இன்று உண்டா; உண்டெனின் அது எவ்வாறு பரிணமிக்கின்றது என்பது சுவாரசியமான வினாவாகும். திராவிட இயக்க வளர்ச்சியைத் தமிழ்நாட்டுப் புலமையாளர் மிக நுண்ணிதாக ஆராயத் தொடங்கிவிட்ட இன்றைய காலகட்டத்தில், திராவிடக் கருத்துநிலையின் வகிபாகத்தை (role) மிக ஆழமாக ஆராயவேண்டிய தேவை அவசியமாகிறது, திராவிடக் கருத்துநிலை தனது வரலாற்றுப் பணியை நிறைவேற்றிவிட்டதா என்பது ஒரு முக்கிய வினாவாகும். இந்தக் கருத்தாடலில், மார்க்சியப் பகுப்பாய்வாளர்கள், தமிழகச் சமூக உருவாக்கம் (social formation) பற்றிய தீட்சண்ணியம் நிறைந்த ஆய்வுகளால் இக்கருத்தாடலுக்கு நிறைய உதவலாம். இக்கட்டுரைக்கான நன்றிக் கடப்பாட்டில் இரண்டு நிலைகளுக்குரிய நன்றிக் கடன்கள் உள்ளன. முதலில் இது 1997 இல் எழுதப்பட்டபொழுது ஏற்பட்டவை. திராவிட அரசியற் போக்குகளைச் சில புதிய கண்ணோட்டத்தில் பார்க்குத் தராக்கி டி.சிவராம் இந்தக் கட்டுரைப் பொருள்பற்றி விரிவாக விவாதித்து உதவினார். நண்பர் தெ. மதுசூதனனுடைய உதவி மறக்க முடியாதது. செ.யோகராசா சில முக்கிய நூல்களைத் தந்து உதவினார். மாநாட்டு மட்டத்தில் நண்பர் அ.மார்க்சினுடைய குறிப்புரைகள் பெரிதும் உதவின. சென்னையில் இதுபற்றி அப்பொழுது விவாதித்துதவியவர்கள் தோழர் சி.மகேந்திரன், வீ.அரசு ஆகியோர். இரண்டாவது கட்டம் இப்பொழுதுள்ளதாகும். இது 'ஆராய்ச்சி' சஞ்சிகைக்கான கட்டுரையாகவும் தனிச் சிறு நூலாகவும் வெளிவருகின்ற இந்தக் கட்டமாகும். மாநாட்டுக்கான கட்டுரை வரைவினைத் தமது உன்னிப்பான விமர்சனங்களை வைத்து விளங்க எடுத்துக்கூறி உதவினார் டாக்டர் மே.து. ராசுகுமார்; அவருக்கு எனது நன்றி. இவ்விடயம் தொடர்பான கருத்தாடல் நடத்தியுதவியவர் முனைவர் தெயவசுந்தரம்; இப்பொழுது இதனைத் திருத்துவதற்கான அலுவல்களில் உதவியுள்ளவர் கி.பார்த்திபராஜா; இவர்களுக்கு எனது நன்றி உரித்து. பல்கலைக்கழக விருந்தினர் விடுதி மெரினா சென்னை 600 005 17.09.1999 கார்த்திகேசு சிவத்தம்பி திராவிட இயக்கக் கருத்துநிலையின் இன்றைய பொருத்தப்பாடு -ஒரு வரலாற்று நோக்கு 'கருத்துநிலையின் பிரச்சினை', அது ஒரு பௌதீகக் கொள்கை அமைப்புக்குள் நின்றுகொண்டு, சமூகக் கருத்துக்கள் எவ்வாறு எழுகின்றன என்பது பற்றி ஒரு விளக்கம் தரவேண்டும் என்பதாகும். ஒரு குறிப்பிட்ட சமூக உருவாக்கத்தில் இவற்றின் (சமூகக் கருத்துக்களின்) வகிபாகம் யாது என்பதை நாம் விளங்கிக்கொள்ளல்வேண்டும். அப்பொழுதுதான் சமூகத்தை மாற்றுவதற்கு எவ்வாறு போராடவேண்டுமென்பதைத் தெரிவித்து, சமூகத்தின் சமதர்ம மாற்றத்துக்கான பாதைகளைத் திறந்துவிடலாம். 'கருத்துநிலை' (ideology) என்பதன் மூலம் நான் கருதுவது, பல்வேறு வர்க்கங்களும் சமூகக் குழுமங்களும், சமூகமானது எவ்வாறு இயங்குகின்றது என்பதைப் புரிந்துகொள்வதற்கும் அந்த இயங்குமுறையின் தன்மையை அறிந்துகொள்வதற்கும், வரைவிலக்கணம், கொடுப்பதற்கும் தெளிவாக விளக்குவதற்கும் பயன்படுத்தும் மனக் கட்டமைப்புக்களையேயாகும்-அதாவது அது பயன்படுத்தும் மொழிகள், எண்ணங்களுக்கான வகைபாடுகள் சிந்தனைப்படிமங்கள், சித்திரிப்பு முறைகள் ஆகியவை கருத்துநிலையாகும். எனவே கருத்துநிலை பற்றிய பிரச்சினை என்பது, பல்வேறு கருத்துக்கள் எவ்வாறு மக்கள் திரள்களின் மனங்களை இறுகப்பற்றி, அதன் காரணமாக, ஒரு 'பிண்டப் பிரமாணமான சக்தியாக' அமைகின்றது என்பதேயாகும். பெரிதும் அரசியல் மயப்படுத்தப்பட்ட இந்தப் பார்வைப்பரப்பில், கருத்துநிலை பற்றிய கொள்கை (theory) என்பது, கிராம்ஸ்சி கொள்வதுபோன்று, எவ்வாறு சில கருத்துத் தொடைகள் (sets of ideas), ஒரு வரலாற்றுக் குழுமத்தின் சிந்தனை மீது மேலாதிக்கம் செலுத்துகின்றன என்பதாகும்; அவ்வாறு செய்யும்பொழுது, அது, அந்தக் குழுமத்தை அதனுள்ளேயே நின்று அதனை ஒற்றுமைப்படுத்தி, முழுச் சமூகத்தின் மீதும் அதற்குள்ள அதன் மேலாண்மையையும் தலைமையையும் பேணுவதற்கு உதவுகின்றது என்பதை அறிந்து கொள்வதாகும். கருத்துநிலை என்பது, ஒரு குறிப்பிட்ட வகை அதிகாரத்தையும் மேலாண்மையையும் பேணுவதற்கான நடைமுறைநிலை, எண்ணக்கருக்கள் அவற்றுக்கான மொழிகள் சம்பந்தப்பட்டதாகும். அல்லது, குறிப்பிட்ட ஒரு சமூக உருவாக்கத்துக்குள், மக்களிற் பெருந்தொகையினரை, அவர்கள் தம் கீழ்நிலையை மன இசைவுடன் ஏற்றுக்கொள்வதற்கும், ஏற்று அதனுள் வாழ்வதற்கும் வேண்டிய எண்ணக்கருக்கள் முதலியன பற்றியதாகும். அது மாத்திரமல்லாது கருத்துநிலை என்பது, நடப்பு நிலையிலுள்ள முறைமைக்கெதிராக வரலாற்று முக்கியத்துவமுள்ள செயற்பாடுகளில் ஈடுபட மக்கள் திரளை ஊக்குவிக்கும், புதிய பிரக்ஞை வடிவங்கள், உலகம் பற்றிய புதிய எண்ணக்கருக்கள் தோன்றுகின்ற நடைமுறைகள் பற்றியதுமாகும். சமூகப் போராட்டத்தின்பொழுது இந்த விடயங்களே விவாதங்களுக்குள்ளானவையாக அமைகின்றன. இவற்றை விளக்குவதற்கு, இவற்றை நன்கு புரிந்துகொள்வதற்கும், இந்தக் கருத்துநிலைப் போராட்டத்தின் களங்களை விளக்கி அவற்றை வசப்படுத்துவதற்கும் எமக்கு ஒரு கொள்கை தேவைப்படுகிறது. அது வெறுமனே ஒரு கொள்கையாகவல்லாது, நாம் விளக்கவிருக்கும் சிக்கற்பாடுகள் எல்லாவற்றுக்கும் போதுமானதான ஒரு கொள்கையாக இருத்தல்வேண்டும்.* -- ஸ்ருவாற் ஹோல் 1 திராவிடக் கருத்துநிலையின் இன்றைய பொருத்தப்பாடு பற்றி நோக்க முனையும் நம்முன் உள்ள வினாக்கள் தெட்டத் தெளிவானவை: --இக் கருத்துநிலை எவ்வாறு தோன்றுகிறது? --அது எவ்வெவ் அமிசங்களைக் கொண்டுள்ளது? ------- * Stuart Hall. 'The Problem of Ideology: Marxism without Guarantees', Critical Dialogues in Cultural Studies, David Morlay Kuang Hsing Chan, London, 1996. .... --இது எவ்வாறு மக்கள் திரளின் மனங்களைக் கவ்விப் பிடித்து ஒரு பிண்டப் பிரமாணமான (நிஜமான) சக்தியாக அமைகின்றது; அமைந்துள்ளது? என்பனவே அவை. 2 இந்த விஷயங்களைப் பற்றிய ஆய்வுக்கு இறக்குவதற்கு முன்னர், தமிழ்நாட்டின் முக்கியமான அண்மைக் காலத்துப் புலமை வளர்ச்சியொன்றினைப் பதிவு செய்தல் அவசியமாகும். திராவிட இயக்கம் பற்றி 1984 இல் நான் எழுதிய ஒரு நீண்ட கட்டுரையில் திராவிட இயக்கம் பற்றிய செயற்பாடுகளுக்குத் தளமாக எந்த மொழி அமைகின்றதோ அந்த மொழியில்--தமிழில்--இது சம்பந்தமாக விமர்சனபூர்வமான ஆய்வு எதுவும் இதுவரை வெளிவராதது துரதிர்ஷ்டவசமானது ஆகும். என்று குறிப்பிட்டிருந்தேன்.* ஆனால் இப்பொழுதோ, குறிப்பாக 1990 முதல் ஏற்பட்டுள்ள ஒரு புலமை முன்னேற்றம் காரணமாக இன்று இரண்டு முக்கிய வளர்ச்சிகள் ஏற்பட்டுள்ளன: 1 திராவிட இயக்கம், கருத்துநிலை தமிழ் மக்களிடையே ஏற்படுத்திய தாக்கங்கள், விளைவுகள் பற்றிய விமர்சனபூர்வமான தமிழ் ஆய்வெழுத்துக்கள்; 2 திராவிட இயக்கத்தின், நோக்கம், செயற்பாடு, முனைப்பு ஆகியன பற்றிய தமிழ்நிலைநிற்கும் ஒரு நோக்கினை வெளிப்படுத்துகின்ற தமிழர்களாகிய புலமையாளர்களின் ஆங்கில எழுத்துக்கள். முதலில் கூறப்பட்டுள்ள செல்நெறிக்கு உதாரணம் நிறப்பிரிகைக் குழுவினர் ஆற்றியுள்ள பணி. பெரியாரியம் பற்றிய விவாதத்தை ஒரு புதிய தளத்துக்குக் கொண்டு சென்றுள்ளமை முக்கியமான ஒரு விஷயமாகும். ஆய்வாளர்கள், விமர்சகர்கள் எனத் தனிப்பட நோக்கும்பொழுது, நிறப்பிரிகைக் குழுவினரும் ---- * K. Sivathamby, Understanding the Dravidian Movement--Problems and Perspectives, Chennai, 1995. ..... வேறு சிலரும் முக்கியமாகின்றனர். கோ. சேவகன், கருணா மனோகரன், அ. மார்க்ஸ், பொ. வேலுசாமி, ராஜ் கௌதமன் என இந்தப் பட்டியல் நீளும். இவர்கள் எல்லோரும் ஒரே கருத்தினை உடையவர்கள் அல்லர். ஆனால் திராவிடக் கருத்துநிலை பற்றிய கருத்தாடலில் (discourse) இவர்கள் முக்கிய இடம் வகிக்கின்றனர். இந்தப் பட்டியலில் எஸ்.வி. ராஜதுரை, வி. கீதா (பெரியார் 1996) ஆகியோரும் இடம் பெறுகின்றனர். திராவிடக் கருத்து நிலை, இயக்கம் பற்றிய வரலாறெழுதியலில் தமிழ் நிலைப்பட்ட கண்ணோட்டத்தை நிலை நிறுத்தி, இதுவரை இது பற்றி ஆங்கிலத்தில் எழுதப்பட்ட நூல்கள் சிலவற்றின் கருத்துநிலை எடுகோள்கள் ஆகியனவற்றைக் கேள்விக்குள்ளாக்கி, இந்த விவாதத்திற்கு இது சம்பந்தப்பட்ட சர்வதேச ஆராய்ச்சியாளரிடையே தமது வருகையையும் இருக்கையையும் வன்மையாகப் பதிவு செய்துகொண்டவர்களாக, எம்.எஸ்.எஸ். பாண்டியன், ஆ. இரா. வெங்கடாசலபதி, எஸ். ஆனந்தி ஆகியோரைக் குறிப்பிடல் வேண்டும். எஸ்.வி. இராஜதுரையும் வி. கீதாவும், ஆங்கிலத்தில் இக்காலப் பகுதியில் எழுதியுள்ளனர். இந்த எழுத்துக்கள் காரணமாக, இக்கண்ணோட்டத்தில் தொண்ணூறுகளுக்கு முன்னர் நம்பியாரூரன் மங்கள முருகேசன், ஈ.சா. விஸ்வநாதன் ஆகியோரின் ஆய்வுகள் மீள நினைவுகூரப்படுகின்றன. இந்தப் புலமைப் பங்களிப்புக்கள், திராவிட இயக்கம் பற்றியும் பெரியார் ஈவெரா அவர்களின் கொள்கைகள் பற்றியும் செய்யப்படும் ஒரு முக்கியமான சமூக-அரசியல்வாத விவாதத்தினூடேயே வந்துள்ளன. இவ்விவாதம் தமிழகத்தின் இனம், சமூக அறிவியல் ஆய்வாளர்களிடையே ஒரு புதிய முனைப்பினை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் நாட்டினது வரலாற்றின் இதுவரை தெரியப்படாத பகுதிகள் ஆய்வு ஒளிவீச்சுகளுக்கு ஆட்படுகின்றன. இந்தக் கருத்தரங்கினைக்கூட இந்தப் புலமையார்வத்தின் ஒரு வெளிப்பாடு ஆகவே கொள்ளவேண்டும். 3 திராவிடக் கருத்துநிலையின் பொருத்தப்பாடு பற்றிய ஆய்வினை மேற்கொள்ளும் பொழுது, தொடக்கத்தில் திராவிடக் கருத்துநிலை என்பது யாது, அது எதனை அல்லது எவற்றைச் சுட்டி நிற்கின்றது என்பதனைத் தெளிவுபடுத்திக் கொள்ளல் அவசியம். தமிழ்நாட்டில் வாழும் பிராமணரல்லாத சாதிக் குழுமங்களைச் சேர்ந்தவர்கள், தங்களின் சமூக நிலைமையையும் தங்கள் சமூக அசைவியக்கத்தையும் வரையறை செய்த 'பிராமணக் கருத்து நிலை' தம்மீது திணித்ததென அவர்கள் கண்ட, கொண்ட மேலாண்மைக்கெதிராக நடத்திய போராட்டங்களினூடே மேற்கிளம்பியதும், அந்தப் போராட்டங்களை நியாயப்படுத்துவதற்குப் பயன்படுத்தப்பட்டதுமான சிந்தனை நிலைப்பாடே, 'திராவிடக் கருத்துநிலை'யாகும்; அரசியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் 'தமிழ்ப் பிரக்ஞை' ஏற்படுவதற்கு இது தளமாக அமைந்து வந்துள்ளது. இது, மதம் சமூக நடத்தை முறை பற்றிய ஒரு குறிப்பிட்ட கண்ணோட்டத்தினை எடுத்துக்காட்டுவதாகவும் அமைந்துள்ளது (அந்தக் கண்ணோட்டத்தின் பிரதான எண்ணக்கருக்கள் 'நாத்திகம், பகுதித்தறிவுவாதம், சுயமரியாதை' என்பனவாகும்; இது 'ஆரிய'த்தைப் 'பிராம­யமாக நோக்குவதுடன், 'திராவிடம்' என்பது 'பிராம­யம்' என்று கொள்ளப்படுவதன் எதிர்நிலையாகக் கொள்ளப்படுவதாகும். இது காலனித்துவ ஆட்சிக் காலத்தில் வடிவம் பெற்றது. அத்துடன், இந்திய வரலாறு, பண்பாடு பற்றிய காலனித்துவ வாசிப்புக்களினால் உந்துதல் பெற்றதும் உண்மையாகும். (சிவத்தம்பி 1979). இந்தச் சொற்பிரயோகத்துக்கு, ஆங்கில ஆட்சி, தென்னிந்திய நிர்வாகத்துக்கெனத் தோற்றுவித்த சென்னை மாநிலம் (Madras Presidency) என்ற அலகினது சனத்தொகையமைப்பினுள் ஒரு நியாயப்பாடு இருந்தது. அந்தச் சென்னை மாநிலம் உள்ளடக்கியிருந்த கன்னடப்பிரதேசம், ஆந்திரா (தெலுங்கானா நீங்கலாக), தமிழ்நாடு, (சமஸ்தானங்கள் தவிர்த்த) கேரளம் ஆகிய பிரதேசங்களை இணைப்பதற்கு, அவற்றினூடே ஓர் ஒருமைப்பாட்டைக் காண்பதற்கு, அக்காலத்திற் 'கண்டு பிடிக்கப் பெற்ற', 'திராவிடர்' என்ற மொழி நிலைக் கருதுகோள் உதவிற்று (சிவத்தம்பி 1995). இந்திய வரலாறெழுதியலில் இந்தத் தொடர், தென்னித்தியாவின் பிரிநிலைத் தன்மையையும் தமிழரின் தனித்துவத்தையும் குறிப்பாகக் கொள்ளப்பட்டது. 'திராவிடம்' என்பது 'ஆரிய'த்தின் எதிர்நிலையாகக் கொள்ளப்பட்டது. இந்தச் சொற்பிரயோகத்துக்கான ஒரு வன்மையான தேவையுமுள்ளது. தமிழ்நாட்டில் வாழும் சகல சமூகக்குழுமங்களையும் 'தமிழர்' என்ற தொடராலே சுட்டிவிட முடியாது. தெலுங்கு பேசும் சில குழுமங்களும் (ரெட்டியார், நாயுடு முதலியோர்) கன்னடம் பேசும் சில குழுமங்களும் (நாயக்கர் முதலியோர்) இந்தப் பதக்குடையின் கீழ் வரமாட்டார்கள். அத்துடன் 'தமிழர்' என்னும் சொல், தமிழ்ப் பிராமணர்களையும் உள்ளடக்கிவிடும். இதனால் திராவிடர் என்ற பதப்பிரயோகம் அவசியமாகிறது என்று கருதப்படுகிறது. மேலும் இந்தச் சொற்பிரயோகம், கடந்த காலத்து வரலாற்று நினைவுகளைத் தரும் ஒன்றாகவும் பயன்படுகிறது. இந்தியாவின் ஆரிய வருகைக்கு முற்பட்ட திராவிட வரலாற்றுப் புகழை மீட்பதற்கும் (சிந்துவெளி நாகரிகத்தின் தோற்றம் பற்றிய சில கொள்கைகள்) தமிழ்நாட்டில், ஆரியச் செல்வாக்குக்கு முற்பட்டதாகக் கருதப்படும் தமிழ் நாகரிகத்தைச் சுட்டவும் (சங்க காலம்) இந்தப் பதம் வாய்ப்பான ஒன்றாக அமைகின்றது. மாக்ஸ் முல்லர் வழிவந்த இந்தோ-ஆரிய மேன்மைக் கோட்பாட்டின் எதிர்நிலையாக இது வழங்கி வருகின்றது. குறிப்பாக மொழியியல் ஆய்வில் இது ஒரு வரலாற்று நிதர்சனமாகவே ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இந்தியாவில் வழங்கும் இந்தோ-ஆரிய மொழிகளிலிருந்து (சமஸ்கிருதம், அதன் வழிவருவன) வேறபட்ட மொழியமைப்பைக் கொண்ட அடுத்த பிரதான மொழிக் குடும்பம் 'திராவிடமே' ஆகும். அண்மைக்கால மொழியியல் ஆராய்ச்சிகளில் திராவிட மொழியியல், இந்திய மொழியியல் துறையில் முக்கிய இடம் பெறுவதாகும். இவற்றைவிட 'திராவிடர்', 'திராவிடக் கருத்து நிலை என்ற இந்தப் பதப்பிரயோகங்கள், இன்று, அதாவது சமகாலத் தமிழ்நாட்டுச் சமூகப் பார்வையில், பெரியார் ஈவெராவினால் நடத்தப்பெற்ற சுயமரியாதை இயக்கத்தினை நினைவுறுத்துவனவாக அமைகின்றன. இந்தச் சுயமரியாதை இயக்கத்தின் மெய்யியல் எடுகோள்கள் ஐரோப்பாவில் 19 ஆம் நூற்றாண்டில் நிலவிய பகுத்தறிவுவாதத்தின் (Atheism) அடியாக வந்தனவாகும். இங்கர்சால் என்ற அமெரிக்கச் சிந்தனையாளரின் எண்ணங்கள் இதிற் பெரும்பங்கு வகிக்கின்றன. சென்னையில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பாகத்தில் நிறுவப்பட்ட பிரம்மஞான இயக்கம் (Theosophical Movement) சம்பந்தப்பட்டவர்கள் இங்கர்சால் பற்றிச் சிரத்தை கொண்டிருந்தனர் என்பதற்கான சில வரலாற்றாதாரங்கள் உள்ளன (ஹார்வாட் பல்கலைக்கழக இறையியல் துறை நூலகத்திலுள்ள பிரசுரிக்கப்படாத அமெரிக்க மிஷன் ஆவணங்கள்). 'திராவிடம்' என்ற இத்தொடர் இந்தியச் சுதந்திர காலத்துக்கு முன்னரிருந்து கையளிக்கப்பட்ட ஒரு சிந்தனை மரபின் பெறுபேறாக அமைகின்றது என்பது இதுவரை கூறியவற்றினாலே புலனாகின்றது. சுதந்திர காலம் முதல் இத்தொடர் வன்மையான அரசியல் கட்சிநிலைப் பதமாகவும் தொழிற்படுகிறது. 1949 முதல் இன்று வரையுள்ள சென்னை/தமிழ் நாட்டு மாநில ஆட்சி 'திராவிட' என்ற அடையைக் கொண்ட கட்சிகளால் நடத்தப்படுவதையும், அக்கட்சிகளுக்குள்ளே பிளவுகள் ஏற்படும்பொழுதுங்கூட 'திராவிட' என்ற அடை தொடர்ந்து பேணப்படுவதையும் (திமுக, அதிமுக, மதிமுக முதலியன) நோக்கும்பொழுதும் இப்பதம் ஒரு அரசியற் குறியீடு ஆகியுள்ளது என்பது புலனாகின்றது. அரசியற் பலத்தை நாடாத, ஆனால் தமிழகத்தின் பிரதான அமுக்கக்குழுக்களில் (Pressure groups) ஒன்றாக விளங்கும் திராவிடர் கழகமும் (பெரியாரின் உத்தியோக பூர்வவாரிசாகத் தன்னைச் சுட்டிக் கொள்வது) அந்தப் பிரயோகத்தையே பயன்படுத்துவது நோக்கப்படவேண்டிய ஒன்றாகும். 4 'திராவிட' என்னும் அடையின் இன்றைய அர்த்த விகசிப்புக்களை நோக்கிய நாம் அடுத்து , இத்தொடர் சுட்டும் கருத்து நிலையின் இன்றைய (சமகால) பொருத்தப்பாட்டை நோக்கத் தொடங்கல்வேண்டும். அவ்வாறு நோக்க முனையும்பொழுது மூன்று முக்கிய விடயங்கள் ஆராயப்படவேண்டியனவாகின்றன: 1 திராவிட இயக்கம்/கருத்துநிலை பெற்றிருந்த வரலாற்று வகிபாகம்--அதாவது வரலாற்று நோக்கில் அது ஆற்றியுள்ளவை; 2 அனைத்திந்திய மட்டத்தில் இன்று காணப்படும் அரசியல் நிலைமை; 3 ஏக வல்லரசாண்மை கொண்ட பூகோளக் கிராமத்திலும், சர்வதேசியச் சந்தை முதலாளித்துவம் உலக ஆண்மை செலுத்தும் நிலையிலும், தமிழ்ப் பிரக்ஞை/தமிழ்த் தேசியம் பெறும் இடம். இந்த மூன்று அமிசங்களும் மிக விரிவான ஆய்வுக்கு உட்படுத்தப்படவேண்டியனவாகும

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.