-
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
பாசத்தோடு அவர்களை அழைத்தால் மட்டும் போதாது, எந்தவித பொருளாதார கல்வி வேலைவாய்ப்பு வதிவிடங்கள் இல்லாத மக்களுக்கு இதெல்லாம் ஏற்படுத்தி தர சுமந்திரன் ஐயா தயாராவும் இருக்கணும். இலங்கையின் பொருளாதாரத்தின் உயிர்நாடியே தேயிலை ஏற்றுமதிதான், தேயிலை தோட்ட தொழிலை மலையக தமிழரை தவிர இலங்கயில் வேறு எந்த பிரிவினரும் தேடி சென்று செய்யபோவதில்லை தேடி போனாலும் அவர்களால் அரைவயிறு கஞ்சியுடன் அடுத்து மாற்று துணியும், நாள்முழுக்க உழைத்துவிட்டு வீட்டுக்கு போனால் கால்நீட்டிக்கூட படுக்க முடியாத அளவிற்கு லயன் வீட்டு வாழ்க்கையுடனுமோ வாழ முடியாது. அப்படி எவரும் இலகுவாக செய்யமுடியாத ஆனால் இலங்கைக்கு காசை கொட்டும் ஒரு தொழிலை செய்யும் மக்கள் கூட்டத்தை வேறு இடங்களில் குடியேற விட்டுவிட்டு முதுகில் கூடையை கட்டிக்கொண்டு தேயிலை கொழுந்து பறிக்க சிங்களவன் தயாரா இருப்பான்னா நினைக்கிறீங்க? எக்காரணம் கொண்டும் அந்த மக்களை அந்த நிலத்தைவிட்டும் நகர தொழிலை விட்டும் சிங்களவன் ஒருபோதும் அனுமதிக்கமாட்டான். வேண்டுமென்றால் ஒரு சில குடும்பங்கள் இடம் பெயரலாம். நிலசரிவில் பாதிக்கப்பட்டு வசிப்பிடம் இல்லாமல் நிப்பது மலையக தமிழர்கள் மட்டுமல்ல சிங்களவர் முஸ்லீம்களும் அடங்கும். மலையக மக்கள் ஏறக்குறைய இருநூறு வருடங்களாய் வாழ்ந்த புவிசார்பை விட்டு நீங்கமறுத்தால், அங்கு பாதிக்கப்பட்ட சிங்களவரும் முஸ்லீம்களும் மலையக மக்கள் தமிழர்பகுதியில் குடியேறலாம் என்றால் நாங்கள் மட்டும் ஏன் அங்கு குடியேற கூடாது என்று கேள்வி எழுப்புவார்கள், அவர்களுக்கு சிங்கள அரசுகளும் எதிர்கட்சி அமைப்புகளும் முடிந்தவரை உதவி செய்தே ஆவார்கள், ஆனால் தமிழர்களுக்கு அதனை எதிர்பார்க்க முடியாது. அப்போது நிலமை சும்மாபோன தேரை சுமந்திரன் சொரிஞ்சுவிட்டு நடு ரோட்டில இழுத்து விட்டமாதிரி ஆகும் நிலமை.சுமந்திரன் கற்றறிவில் மேலானவரா இருக்கலாம், ஆனால் பட்டறிவில் சுத்த ஞான சூனியம். அதற்கப்பால் வடகிழக்கு மண்ணில் அவர்கள் குடியேறுவதில் எந்த தவறும் இல்லை, ஆனால் குடியேறவிட்டுவிட்டு இவங்கள் ஏசி காரில் தங்கட அலுவல்களை பாத்துக்கொண்டு திரிவார்கள், வாக்களித்த தமிழர்களைபற்றியே நினைக்காத இந்த தத்தி தலைவர்கள் வாழ்வோடு தினமும் போராடும் அந்த மக்கள் தம் காலில் நிக்கும்வரை துணையாக நிப்பார்கள் என்றா நினைக்கிறோம்? அடுத்து பார்க்கவேண்டிய விடயம், ஏற்கனவே கிளிநொச்சி வன்னி, யாழ்ப்பாணத்தில் மலையக மக்கள் வாழ்ந்தார்கள்தான், அவர்களை வடகிழக்கு சமூகம், தோட்ட வேலைக்கும், தேத்தண்ணி கடையில் கிளாஸ் கழுவுற வேலைக்கும், பண்ணைகளை கவனிக்கவும், மேலே ரசோதரன் குறிப்பிட்டதுபோல் மனித மல வண்டிகளை தள்ளுற வேலைகளுக்கும், லொறியில் இருந்து சாமான் இறக்குற வேலைக்கும் அமர்த்தி இன்று மலையக மக்கள் அரசிடம் இருந்து பெறும் மாத வருவாயில் பாதிகூட வருஷ வருவாயாக கொடுக்காது, ஒரு வேட்டி சேலை, ஒரு சில ஆயிரம் அவர்களின் இரத்தத்தை உறிஞ்சியதுக்கு கூலியாக கொடுத்து போதாக்குறைக்கு வீட்டுக்கு வெளியே நிக்க வைத்தும் , வயசு முதிர்ந்தவர்கள் பெண்களாக அவர்கள் இருந்தாலும் மரியாதையே துளியும் கொடுக்காமல் ஒருமையில் வாடா போடி என்று அழைத்தும் அவமானபடுத்தியும் மனித குலத்தில் என்னமோ அவர்கள் இவர்களுக்கு சேவகம் செய்ய பிறந்தவர்கள் போல் நடத்தும் அடிமைதன வாழ்வை வடக்கு கிழக்கில் பெறுவதைவிட சொந்த நிலத்தில் தமக்கு தெரிந்த தொழிலை செய்து வாழ்வதே அவர்களுக்கு சுய கெளரவம். வடக்கு கிழக்கில் குடியேறிய மலையக மக்கள் இன்றுவரை தமது சொந்த உழைப்பில் கல்வி பொருளாதாரத்தில் முன்னேறி வெற்றிபெற்ற தமிழர்களாக வாழ்ந்த ஒரு குடும்பத்தை கண்டதுண்டா? அதற்கு பிளடி வடகிழக்கு தமிழன் அவர்களை அனுமதித்ததுண்டா? மலையமக்கள் தொழிலை பார்க்கும் இடத்திற்கு செல்லகூடிய வகையில் பாதுகாப்பான இடங்களில் குடியேறுவதே சிறப்பானதாக இருக்கும். மறுபார்வையில் மலையக எம் தமிழ்மக்கள் தமது இடத்தைவிட்டு லட்சங்களில் வெளியேறினால் தமிழர்கள் வாழ்ந்த அப்பிரதேசம் முற்றுமுழுதாக சிங்கள முஸ்லீம்களால் நிரப்பபட்டுவிடும், வடக்க்கு கிழக்கில் எம் நிலங்களை பறிகொடுத்தது போதாதென்று இலங்கை முழுவதும் தமிழர் இருப்பை முற்றுமுழுதாய் கைவிட்டு போகவேண்டுமா? நாலு நல்ல வார்த்தையா பேசி பழகு சுமந்து.
-
யாழ். சாவகச்சேரி வைத்தியசாலை பிரச்சினையை வைத்து அரசியல் செய்து பாராளுமன்றம் வந்தவர் இன்றுவரை அந்த மக்களுக்கு எந்த உதவியும் செய்ய செல்லவில்லை - இளங்குமரன்
இவர்தான் தேர்தல் பிரச்சாரத்தின்போது ஒருமுறை வடக்குக்கு ஒதுக்கப்பட்ட பணம் பயன்படுத்தப்படாமல் திரும்பி சென்றது இதுகளை எல்லாம் எலெக்சனில் வென்று மாற்றி காட்டோணும் எண்டு பேசியதாக நினைவு இப்போ இவரே வடக்குக்கு பணம் வேண்டாம் எங்கிறார். கடந்த தேர்தலில் வடக்கில் அதிக ஆசனங்களை வென்றது தேசிய மக்கள் சக்தி அவர்களிடம் பணத்தை கொடுக்காமல் யாரிடம் கொடுப்பார்கள்? ஓரிருவாரங்கள் முன்னர்தான் தேசிய தலைவருக்கும் மாவீரர்களுக்கும் மரியாதை செலுத்துகிறேன் என்று பாராளு மன்றத்தில் குதியோ குதியெண்டு குதிச்சார் இப்போ அதே வாயால தலைவரையும் போராளீகளையும் மக்களையும் கொன்று குவித்தவர்களை ராணுவவீரர்கள் என்று அவர்களை மரியாதையாக அழைக்கோணும் எண்டுறார். ஒரு தொகுதியில் மாத்திரம் வென்ற இவர் முழு வடக்குக்கும் பணம் தேவையில்லை என்று சொல்ல யாரிடமிருந்து அதிகாரத்தை பெற்றார்? அத்துடன் அநுர ஒருதடவை யாழ்வந்து நகரசபை கூட்டத்தில் கலந்து கொண்டபோது தையிட்டியில் விகாரை அமைத்தது சரி அதை வரவேற்கிறோம் அகற்ற தேவையில்லைஎன்று அர்ச்சுனா கூறியது காணொலி பதிவாக வந்தது. இந்த மூன்று விஷயங்களுமே கடந்தகால ஆட்சியாளர்கள் செய்ய நினைத்த ஒன்று, அர்ச்ச்சுனாவை உள்ளே போட்டபோது நாமல் ஓடி வந்தார் இப்போலாம் அரசல் புரசலாக அர்ச்சுனா நாமலின் பினாமி என்று சமூக வலைதளங்களில் ஒரு செய்தி உலாவருகிறது , அறிஞ்சு தெரிஞ்சவனுகதான் அப்படி உலவவிடுறாங்களோ யார் அறிவாரோ? இப்போலாம் வடக்கின் பிரதிநிதிகள் என்று பாராளுமன்றத்தில் குதிப்பவர்கள் வடக்கு மக்களுக்காக பேசுகிறார்கள் என்றா நினைக்கிறோம்? உண்மையில் அங்கே நடப்பது இளங்குமரனுக்கும் அர்ச்சுனாவுக்கும் இடையில் உள்ள தனிப்பட்ட வன்மம். ஒரு இயற்கைகோரத்தின் பின்னர் தமது பாகுதிகளை சீரமைக்க வேறுபாடுகளை மறந்து சிங்களவர்கள் முஸ்லீம்கள் எதிர்கட்சிகள் என அனைவருமே ஒன்றிணைந்து நிக்கிறார்கள், நமது வெண்ணெய்வெட்டி வீரர்கள் மூண்டுநாலுபேர் இருந்துகொண்டு இந்த நேரத்திலும் தங்கட பிரச்சனைகளை பேசுறதுக்கு பாராளுமன்றத்தை பாவிக்கும் நகைச்சுவை செய்துகொண்டிருக்கிறார்கள். காலங்களும் காட்சிகளும் ஆட்சிகளும் மாறிக்கொண்டேயிருக்கு ஆனால் அந்தகாலத்திலிருந்து இந்தக்காலம்வரை தமிழர் பிரதிநிதிகள் என்று தெரிவு செய்யப்பட்டு சிங்கள சபைக்கு செல்லும் தமிழர்கள் அன்றிலிருந்து இன்றுவரை அதே குணங்களுடன் தான் அலைகிறார்கள். நாட்கள்தான் மாறிவிட்டது ஆட்கள் மாறவில்லை. இந்த லட்சணத்தில் எங்களுக்கு எதுவும் செய்யவில்லையென்று அமிர்தலிங்கம், சிவ சிதம்பரம் மாவை சம்பந்தனை திட்டி என்ன பிரயோசனம், அவர்களை திட்டிய அதே இளம் தலைமுறையும் அவர்களைவிட கேவலமாகதானே நடக்கிறது. இந்த கோமாளி கூட்டத்தின் செயற்பாடுகளால் எதிர்காலத்தில் யாழ்மண்ணில் சிங்களவனே நேரடியாக தேர்தலில் போட்டியிட்டு வென்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
-
கோவை கமலா
- தமிழர்களின் குடித்தொகைப் பெருக்கத்தில் பாரிய வீழ்ச்சி - ச.லலீசன் சுட்டிக்காட்டு
மலையக தமிழர்கள் எப்போது இலங்கை தமிழர்களாக அடையாளப்படுத்தப்பட்டார்கள்? இலங்கை தமிழர் என்று அரசால் வரையறை செய்யப்பட்ட தமிழர்கள் பிறக்கும்போதே இலங்கை குடியுரிமை கொண்டவர்களாக பிறக்கிறார்கள், மலையக தமிழர்கள் எனப்படுவோர் காலம் காலமாக இலங்கைக்கு பொருளாதார ரீதியாக தமது ரத்தத்தை செலவிட்டாலும் காலம் காலமாக சிங்கள தேசியகட்சிகளுடன் இணைந்தே அவர்கள் பயணித்திருந்தாலும் பல தசாப்தங்களாக அவர்களுக்கு இலங்கை பிரஜை என்ற குடியுரிமை இல்லாமலிருந்ததே வரலாறு. ஒரே இனம் மொழி என்ற ரீதியில் மானசீகமாக மலையக தமிழர் எமது இனம் என்று நோக்கப்பட்டாலும், சட்டரீதியாகவோ அரசியல் ரீதியாகவோ இலங்கை தமிழரும் மலையக தமிழர்களும் சேர்ந்து பயணித்ததாக வரலாறே இல்லை. அவர் யாழ்ப்பாண மக்கள் தொகையை குறிப்பிடபோய் இலங்கை தமிழர்களுடன் குழப்பிக்கிட்டார் என்று தோன்றுகிறது, 2023 கணக்கின்படி 6 லட்சத்து 30 ஆயிரமாக இருந்த யாழ்மக்கள் தொகை படிபபடியாக குறைந்து செல்கிறது என்பதே யதார்த்தம். யாழுக்கென்று ஒரு சிறப்பு உண்டு யாழ்மண்ணில் வாழும் மக்கள் தொகையைவிட இந்தியா அமெரிக்க ஐரோப்பிய மற்றும் வேலைவாய்ப்புக்காய் மத்திய கிழக்கு என்று புலம்பெயர்நாடுகளில் வசிக்கும் யாழ் மக்கள் தொகை ஏறக்குறைய அதிகம். போதாக்குறைக்கு படித்துவிட்டு வேலைதேடி கொழும்பு நோக்கி பெயரும் தமிழர்களும் கணிசம் அவர்களில்பெரும்பாலானோர் யாழுக்கு திரும்பி அங்கே வாழ்வதில்லை. ஆனால் ஒன்று இன்னும் ஓரிரு தசாப்தங்களில் இலங்கையில் முதல் சிறுபான்மையினம் முஸ்லீம்களே, அவர்களுக்கும் எமக்குமான சனதொகை வித்யாசம் வெறும் மூன்றரை லட்சங்கள் என்றே நினைக்கிறேன். அதைவிட முக்கியம் முஸ்லீம்களும் சிங்களவர்களும் தமிழர்களைபோல் பெரும் எடுப்பில் நாட்டைவிட்டு வெளியேறிவதில்லை, போதாகுறைக்கு பெரும்பான்மை தமிழர்களால் யாழ்ப்பாணம் நிறைந்திருப்பது சிங்களவர் முஸ்லீம்களின் கண்களை உறுத்திக்கொண்டே இருக்கிறது. அதனால்தான் மஹிந்த கோத்தபாய, மைத்திரி ஆட்சியில் சிங்களவர்களை யாழ்ப்பாணத்தில் திணிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன, இன்று முஸ்லீம்கள் அதனை முயற்சிக்கிறார்கள், அதன் பிரதிபலிப்பே எந்த தடையும் இல்லாதபோதும் இன்றும் வாராவாரம் முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டார்கள் முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டார்கள் என்று கூவுகிறார்கள். அதன் அப்பட்டமான சூழ்ச்சியே யாழிலிருந்து வெளியேற்றதாக சொல்லப்படும் முஸ்லீம்களைவிட அதற்கு சம்பந்தப்படாத முஸ்லீம்களே வெளியேற்றம்பற்றி அப்பப்போ தூண்டிவிடுவதும் துவேசத்தை வளர்ப்பதும். யாழின் மக்கள் தொகையை பேண இந்தியாவில் எந்த அடிப்படை வசதிகளும் இன்றி தகர கொட்டகைகளிலும் தவிக்கும் வெய்யிலிலும் வாழும் எம்மக்கள் தாயகம் திரும்பலாம், ஆனால் ஏற்கனவே தாயகத்தை விட்டு விலகிய நாம் அவர்களை திரும்பு என்று சொல்லும் தகுதியை இழந்துவிடுகிறோம், ஆனாலும் அங்கு படும் கஷ்டத்தைவிட, வெளியேற்றப்பட்டோம் வெளியேற்றப்பட்டோம் என்று சொல்லி யாழை செல்லரிக்க காத்திருக்கும் கூட்டத்தின் சதியை முறியடிக்கவாவது அங்கு துயரப்படும் எம் மக்கள் சுய விருப்பில் தாயகம் திரும்பலாம் என்பது மனக்கிடக்கை, கட்டளை அல்ல. இன்று இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை கொடுக்கபோவதா சொல்கிறார்கள், அப்படி கொடுத்தாலும் எத்தனை தலைமுறையாக அங்கு வாழ்ந்தாலும் சிலோன் அகதிகள் என்றே தமிழகத்தில் பெரும்பாலானோர் அழைப்பார்கள். அது அவர்களில் பெரும்பாலானோர் குணம்.- யாழ்.பல்கலை நூலகத்தில் இருந்து மகசீன்கள் மீட்பு ; சோதனை நடவடிக்கைக்கு பொலிஸ் முஸ்தீபு
அதுதானே அநியாயமாக பழி போட்டிருப்பார்கள். முஸ்லீம்களுக்கு வெடிகுண்டு துப்பாக்கி என்றால் என்னவென்றே தெரியாது என்று செத்துபோன சஹ்ரானில் இருந்து கமாஸ் ஹிஸ்புல்லா, தலீபான்வரை சொல்லியிருக்காங்க.- யாழுக்கு வருகை தந்தார் கவிஞர் வைரமுத்து
சின்மயி வைரமுத்து பற்றி பேசினாலும் அதற்குள் தனிநாட்டை கொண்டுவந்து சொருவுறது உங்கள் தவறணைக்காலம்.- தங்கத்திற்காகவே சுமார் 1 இலட்சம் வடக்கு முஸ்லீம் மக்களை விடுதலைப்புலிகள் வெளியேற்றினர் ; கறுப்பு ஒக்டோபர் தின நிகழ்வில் சட்டமாணி பி.எம் முஜிபுர் ரஹ்மான்
ஐயா ஒரு ஆய்வு ஒரு ஆய்வு எங்கிறாரேயொழிய இறுதிவரை அது என்ன ஆய்வு என்று எவரால் எங்கு மேற்கொள்ளப்பட்ட ஆய்வு என்பதை சொல்லாமலே போய்க்கொண்டிருக்கிறார். வடக்கிலிருந்து முஸ்லீம்கள் அவர்களால் எடுத்து செல்லக்கூடிய மட்டுப்படுத்தப்பட்ட பொருட்களுடனும் கணிசமான பணத்துடனும் வெளியேற அனுமதிக்கப்பார்கள் என்பதே காலம் காலமாக சொல்லப்பட்டுவரும் கதை. இந்த 35 ஆண்டுகால முஸ்லீம்களின் யாழிலிருந்து வெளியேற்றம் எனும் வன்ம பரப்புரையில் தங்கத்திற்காகவே முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டார்கள் என்ற கதை இதுவரை வெளியேறிய முஸ்லீம்களாலேயே சொல்லப்பட்டதில்லை, ஆனால் இப்போது சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். காலம் காலமாக வடக்கிலிருந்து 72 ஆயிரம் முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டனர் என்று அவர்கள் வாயாலேயே அடிக்கடி சொல்லப்பட்டதுண்டு, இப்போது ஒரு லட்சமாகி நிற்கிறது, அந்த எக்ஸ்ட்ரா 28 ஆயிரமும் தங்கம் ஆய்வுபோல ஒரு ஆய்வா? உலகம் முழுவதும் குண்டு,கத்திகுத்து, வாகனமோதல், துப்பாக்கிச்சுடு என்று வகை வகையாக கொலை செய்யும் இந்த இனம் என்றாவது உண்மையை பேசியதுண்டா? தாமும் தவறு செய்தோம் என்று ஒத்துக்கொண்டதுண்டா? வேண்டுமென்றால் அடுத்த இனம்மீதும், நாட்டுக்காரன் மீதும் பழிபோடும். பழிபோடுதல் அவர்கள் மார்க்க கடமைகளிலொன்றா யாமறியோம். முஸ்லீம்களை வெளியேற்றியது தவறென்று புலிகளும் ஒத்துக்கொண்டனர் தமிழனும் ஒத்துக்கொண்டான், அதன் பின்பும் ஆறிய காயங்களை சுரண்டி சுரண்டி இனங்களுக்கிடையே தீமூட்டுகிறது இந்த இனம். போர் காலத்தில் வியாபாரம் அழிந்தது சொத்து அழிந்தது என்று கதறும் இனம், திருமலை மட்டக்களப்பு என தமிழர்களுக்கு மட்டும் இவர்களால் அந்த நிலமை ஏற்பட்டதில்லையென்று ஒரு ஆய்வு செய்து சொல்லுமா? முடிந்தவற்றை முடிந்தவையாக பார்த்து முறுகலின்றி வாழ முற்படுகிறது எம் இனம். இன்று புலிகள் இருந்தாலாவது ஆற்றாமையில் பேசுகிறார்கள் என்று ஒத்துக்கொள்ளலாம், ஆனால் யாருமே இல்லாத நிலையில் இன்றும் விஷம் கக்குகிறார்கள் என்றால் தமிழர்களை எதிரிகளாகவே எப்போதும் கருதவேண்டுமென்று அவர்களின் அடுத்த தலைமுறைக்கும் சொல்லி வளர்க்கிறார்கள் என்பதைதவிர அடுத்தொரு கருத்து கிடையாது. இன்று நல்லூர் திருவிழாவிலிருந்து முற்றவெளி உட்பட வடக்கின் அனைத்து பகுதிகளிலும் தமிழர்விழா காலங்களில் வியாபாரம் பணம் அள்ளல் என்று 90% முஸ்லீம்களாலேயே மேற்கொள்ளப்படுகின்றன, அந்த மண்ணும் மக்களும் அவர்களை வேறொருவராக பார்க்கவில்லை, ஆனால் அவர்கள் எங்களை காசு தேவையை தவிர்த்து விரும்ப தகாதவர்களாகவே பார்க்கிறார்கள் என்பதற்கு அப்பப்போ வரும் அவர்களின் அறிக்கைகளே சாட்சி. ஆனாலும் காசுக்கு மட்டுமே தமிழன் வேண்டும், மற்றும்படி கருநாகம்போல் எம்மை போட்டு தள்ளி சந்தர்ப்பம் பாத்து காத்துக்கொண்டிருக்கிறது இந்த சமூகம், அதன் வெளிப்பாடே எண்ணெய் ஊற்றி ஊற்றி வக்கிர புத்திகொண்டு வெறிகொண்டு நிற்கிறது. இவர்கள் குணம் அறிந்தே மாறி மாறி வரும் அரசுகளுக்கு தாளம் போட்டு அரச உயர்பதவிகளை பெற்று அதனை தமது மதமும் இனமும் வளர்க்க பயன்படுத்தும் இவர்களுக்கு எந்த அரச உச்ச பதவியும் தராமல் தூரத்தே வைத்திருக்கும் அநுர அரசை இதற்காக என்றாலும் பாராட்டலாம்.- யாழ்.கள உறவு.... அஜீவன் காலமானார்.
காலங்கள் ஓட ஓட தொட்டுவிடும் தூரத்தில்தான் நான் நீ நாம் உட்பட எவரையும் விட்டு வைக்காத மரணம். யாழ்கள மூத்த கருத்தாளர் அஜீவன் அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலிகள்.- பெண்கள் புழங்கும் இடங்களில் ஜன்னல் வைக்க தலிபான் தடை
அந்த மண்ணில் பிறந்த பெண்களை நினைத்தால் மிகவும் பரிதாபமாக இருக்கிறது என்று மனது கவலைப்பட்டாலும், தலீபான்கள் இப்படியே இருப்பது நல்லது என்றும் மனசு சொல்கிறது. காட்டான்களிடம் கல்வியும் பொருளாதாரமும் சேர்ந்துவிட்டால் அது இப்போ உலகுக்கு அவர்களால் ஏற்படும் ஆபத்தைவிட மோசமானதாக இருக்கும்.- ரூ.1,000 கோடி நஷ்டம் : அழிவை நோக்கி போகிறதா தமிழ் திரையுலகம்?
லைக்காவின் தாயாரிப்புக்களில் 90% சராசரி படங்களாகவும் தோல்வி படங்களாகவும் பேரழிவு தயாரிப்பாகவுமே அமைந்தன. ஆனால் 2024 தயாரிப்புக்களில் 1000 கோடி நஷ்டம் என்றால் அதில் குறைந்தது 400 கோடி லைக்காவையே சாரும். லைக்கா திரைப்பட விளம்பரங்களுக்கு செலவிடுவதில்லையென்றும் அதுவே தோல்விகளுக்கு காரணம் என்றும் சொல்கிறார்கள், மிக விரைவில் லைக்கா லண்டன் நோக்கி விமானம் ஏறும் வாய்ப்புள்ளதாகவும் சொல்கிறார்கள். உலகவியாபாரத்தின் சூட்சுமம் தெரிந்த லைக்கா உலக வியாபாரத்தில் குப்புற விழும் வாய்ப்பு அதிகமுள்ள சினிமா துறையில் பணத்தை கொண்டுபோய் லொறிலொறியாக கொட்டுவது ஏன் எனும் மர்மத்துக்கான விடை அவர்களுக்கே சொந்தமானது. அப்படி சத்தமாக சொல்லாதீர்கள் தமிழ்சிறி, ஏனென்றால் எங்கட ஆக்களுமெல்லோ சாகவேணும். இது இன்றைய யாழ்ப்பாண கூத்து: கடவுளே அஜித்தே என கதறிய இளைஞர்கள் யாழில்- இரணைமடுத் தண்ணீர்: கேட்கின்றார் யாழ் அர்ச்சுனா! மறுக்கின்றார் கிளி சிறிதரன்!
அடிக்கடி இரணைமடு நீரை யாழுக்கு கொண்டு வாருங்கள் என்று குரல் எழுப்புகிறார்கள். என்னுள் புரியாத புதிராய் எப்போதும் இருப்பது என்னவென்றால், இரணைமடுகுளம் ஒன்றும் வற்றாத ஜீவநதி அல்ல, மாரிகாலத்தில் நிரம்பி வழிவதும் கோடைகாலத்தில் வற்றிபோவதுமாயுள்ள நீர்பிடிப்பு பகுதி. மாரிகாலத்தில் யாழுக்கு குடிநீர்தேவை வராது, கோடைகாலத்துக்குத்தான் அதிகமாக தேவை , கோடைகாலத்தில் வற்றி காணப்படும் இரணைமடு கோடைகாலத்தில் தண்ணீர் பஞ்சமுள்ள யாழ்மண்ணின் தேவையை எப்படி பூர்த்தி செய்யும்? நீர்மட்டம் கீழிறங்கி காணபடும் இறணைமடுவிலிருந்து பல லட்சம் மக்கள் குடிதொகையை கொண்ட யாழ்ப்பாணத்தின் தேவையை பூர்த்தி செய்ய எப்படி நீரை வழங்கமுடியும்? ஒரே உறிஞ்சலில் அணையிலுள்ள நீரே காலி ஆகிவிடும். மறுபக்கம் இரணைமடுவை நம்பியிருக்கும் நமது விவசாயிகள் எப்படி நெற்செய்கை பயிற்செய்கைகளில் ஈடுபடமுடியும்? யாழ்ப்பாணத்துக்கு குடிக்க நீர் தேவையென்றால் கிளிநொச்சி விவசாயிகளுக்கு உணவை உற்பத்தி செய்ய நீர் வேண்டும். இதில் எதை இழக்கலாம் என்று எப்படி முடிவு செய்வது? முதலில் யாழ்பகுதி மக்கள் நீரின் அத்தியாவசியத்தை உணர்ந்து நீரை சிக்கனமாக பயன்படுத்துதல், மழைநீர் சேகரிப்பு திட்டம், அளவுக்கதிகமாக குளாய்கிணறுகளை அமைத்து நிலத்தடிநீரை ஒட்ட உறிஞ்சி எடுப்பதை தவிர்ப்பது, நீர்பிடிப்பு இருக்ககூடிய பகுதிகளில் கட்டிடங்களை அமைப்பது, குப்பைகளை கொட்டுவது போன்ற நடவடிக்கைகளை முற்றாக தவிர்க்கவேண்டும். மூன்றுபக்கமும் உப்புநீராலும், குடாநாட்டை ஊடறுத்தும் ஓடும் உப்புநீர் அகழிகளாலும் சூழப்பட்டிருக்கும் நமது பிரதேசம் பொறுப்பற்றமுறையில் நன்னீரை வீணாக்கினால் எதிர்காலம் ஒட்டுமொத்தமாக உப்புநீர் மண்ணாக மாறிவிடும். சிறிது காலத்தின் முன்னர் தாளையடி பகுதியில் கடல்நீரை குடிநீராக்குகிறோம் அதை யாழுக்கு வழங்கபோகிறோம் என்று ஆரம்பகட்ட நடவடிக்கைகளீல் இறங்கி பெரும் எடுப்பில் பிலிம் காட்டினார்கள், பின்பு அதுபற்றிய பேச்சையே காணோம். எனக்கென்னமோ இன்னும் ஓரிரு தசாப்தங்களில் நீர் விஷயத்தில் மிக பெரும் அபசகுனத்தை யாழ் எதிர்கொள்ளபோகிறது என்று அச்சமுள்ளது.முடிந்தவரை நீரை சிக்கனமாக பாவிக்க கற்றுக்கொள்ளூங்கள், சிங்களவன் நமக்கு எப்போ நாக்கு வரண்டு சாவோம் என்று பார்த்துக்கொண்டிருக்கிறான் அதற்கான வாய்ப்புகளை நாமே தேடி கொடுக்ககூடாது, புலம்பெயர்ந்த உறவுகள் உணவில்லையென்றால் காசு அனுப்பலாம், உடையில்லையென்றால் அதற்கும் உதவலாம், நீர் இல்லையென்றால் எதுவுமே யாரும் செய்ய முடியாது அதற்கு மக்களிடையே விழிப்புணர்வை இப்போதே ஏற்படுத்தவேண்யது அரசியல்வாதிகள், கற்றவர்கள், சமூக ஆர்வலர்களது கடமை.- சின்ன வயதில்... உண்மை என நம்பிய, பொய்கள் என்ன?
சின்னவயசுல நாம இருந்தபோது ஆடாத ஆட்டமெல்லாம் ஆடி ஓய்ஞ்சுபோன அந்தகால பெரிசுங்க நமக்கு அந்த ராணுவ ரகசியம் தெரியாம இருக்கணும்கிறதுக்காக குழந்தைகள் பிறப்பது சாமி கும்பிட்டுத்தான் என்று சொல்லி வைத்தார்கள். நாமும் ஆறாம் வகுப்புவரை அப்படித்தான் எல்லோரும் சாமிகும்பிட்டு கும்பிட்டுத்தான் இறக்குமதியானாங்க எண்டு நம்பிக்கொண்டிருந்த காலகட்டத்தில், பருவ வயதின் எல்லைக்குள் நுழைந்தபோது நம் சொல்வழி கேக்காத மழலை ஒன்று காலம் காத்தாலயே அமெரிக்க ஏவுகணை வானத்தை பார்த்தமாதிரி அதுபாட்டுக்கு தனது கடமையை கவனித்தபோதுதான் , என்னாச்சு இது ஏதோ ஒரு மாற்றம் என்று பள்ளி தோழர்களுடன் விவாதித்தபோது, அனைவரும் படிப்படியாக சிக்கிகொண்ட அந்த அணிவகுப்பு உணர்வுபற்றி, அனைவருடனும் சகஜமா பேசும் சுகாதார ஆசிரியரிடம் பயமறியா ஒரு மாணவன் துணிவா கேட்க மனித உடல்களின் சேர்க்கைதான் இன்னொரு மனிதன், கடவுள் நம்பிக்கை என்பது மனிதர்கள் சேர்ந்தும் குழந்தைகள் கிடைக்காவிட்டால் இந்த சமுதாயத்தின் அசிங்கப்படுத்தலிலிருந்து தப்புவதற்கான வேண்டுதல் என்று விளங்கப்படுத்தியபோது, முதலில் அதிர்ச்சியாக இருந்தது, பின்பு நம்ம மம்மி டாடி நீங்களுமா என்ற கேள்வியும் எழுந்தது, பின்னாளில் பாலியல் கல்விமுறையை முறையை ஏதோ பாவம்போல் மறைத்து வைத்து தெரியாமல் பொத்தி வைப்பது எவ்வளவு பெரிய விழிப்புணர்வற்ற தன்மை என்றும் தோன்றியது. முடிவாக 7ம் வகுப்புவரை இச்சு இச்சு இச்சு கொடு என்று இரண்டுபேர் வாழ்ந்தால்தான் குழந்தை பிறக்கும் என்பதை அறியாமல் சாமி கும்பிட்டால் மட்டும்தான் அது எல்லாம் நடக்குமென்று உண்மையென்று நம்பியதை இப்போ நினைச்சாலும் ஒரே அசிங்கமா போச்சு குமாரு நிலமைதான்.- யாழில் இம்முறை தேசிய தைப்பொங்கல் விழா
ஏன் வேறு எங்கு நடத்துவதாய் ஐடியா இருந்தது? கடந்தமாத மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள், மீனவர்களுக்கு ஏதாவது நிவாரணம் வழங்கியமாதிரி தெரியவில்லை, அதனை முதலில் செய்யுங்கள் பட்டங்களை கையில் வைத்துக்கொண்டு வேலை வேண்டுமென்று கொளுத்தும் வெயிலில் நின்று போராடும் பட்டதாரிகளுக்கு ஏதாவது வழிகாட்டுங்கள் இரண்டுநாள் தொடர்ந்து மழை பெய்தால் வெள்ளத்தில் மூழ்கிபோகும் யாழ்ப்பாணத்தை மீட்க நீர்நிலைகளை தூர்வாரி, வடிகாலமைப்பு செய்து மக்கள் துயருக்கு வழி காணுங்கள் சுகாதார பணியாளர்களின் வேலையை உறுதிபடுத்துங்கள் இதையெல்லாம் ஆரம்பகட்டமாகவாவது பண்ணினால் அரசாங்கம் தேசியபொங்கல் வைக்க தேவையில்லை அங்குள்ள மக்களே அரசாங்கத்தை தங்களுடன் சேர்ந்து தேசிய பொங்கல் வைக்க கூப்பிடுவார்கள். இலங்கையிலேயே இதுவரை இல்லாத புரட்சிகரமான மாற்றத்தை கொண்டுவருகிறோம் என்று சொல்லிவிட்டு, முன்பிருந்த அரசுகள் செய்ததுபோலவே நல்லூர் கோவிலுக்கு போவது, பொங்கல் வைப்பது, தீபாவளி வாழ்த்து சொல்வதென்று பூச்சாண்டி காட்டினால் உங்கள் ஆட்சி அது வழமைபோல அனைவரும் செய்த வாயால் வாணவேடிக்கை காட்டும் ஒரு நிகழ்வுதான்.- யாழ். போதனா வைத்தியசாலையில் இருந்து நீக்கப்பட்ட தொண்டர் ஊழியர்கள்: சுகாதார அமைச்சிற்கு அழைத்துச் சென்ற அர்ச்சுனா எம்.பி
மருத்துவர் அர்ச்சுனா அவர்கள் பாராளுமன்றத்துக்கு தேர்வாகி அங்கே போனதும், குழந்தைபிள்ளைபோல் எதிர்கட்சி சிங்களவன் கதிரையில் குந்தபோயி அவங்களோட புடுங்குபட்டதும், தேவையற்ற முறையில் தலைவரையும் போராளிகளையும் இழுத்து பேசியும் சிங்களவனுக்கு பேட்டிகள் கொடுத்தும் எந்த திட்டங்களும் ஆரம்பிக்காமலே ஏகப்பட்ட சர்ச்சைகளில் சிக்கியதும், இவருக்கெல்லாம் எதுக்கு அரசியல், வாக்குப்போட்ட மக்களின் கோபத்தை சம்பாதிக்கபோகிறார், இவரெல்லாம் பாராளுமன்றத்துக்கு போனதே தவறு என்று பதிவிட்டதுண்டு, விசனப்பட்டதுண்டு. ஆனால் வெள்ளநிலவரத்தில் வீடுவீடாக சென்று பார்வையிட்டதும், தெருவில் நின்று போராடிய வேலையில்லா பட்டதாரிகளை சந்தித்து குறை கேட்டதும் அவர்களுக்கு ஆதரவா குரல் கொடுத்ததும், இப்போது மருத்துவ பணியாளர்களுக்கு ஆதரவா அவர்களை கொழும்புவரை அழைத்து சென்று நீதி கேட்டதும் மெச்சத்தக்க விஷயங்கள். அப்படியே முன்னாள் போராளிகள் நிலவரம் பற்றியும் கவனம் எடுங்கள் மாறிவரும் உங்கள் போக்கு மிகவும் சிறப்பாக அமையும். அப்படியே எது பேசினாலும் பத்துவினாடி யோசித்துவிட்டு பேசுங்கள், அர்த்தமற்ற ஆக்ரோசங்கள், ஆக்கபூர்வமாக அமையாது கோமாளிதனமாக மாறிவிடும். தவறு செய்யும்போது தவறென்று சுட்டிக்காட்டுவதும், சரியாக செயல்படும்போது பாராட்டுவதும், மீண்டும் தவறு செய்யும்போது மறுபடியும் திட்டுவதுமே உண்மையான விமர்சனம், இல்லாமல் ஒரு பக்கம் மட்டுமே சார்ந்த கருத்துக்கள் என்றால் அது விமர்சனம் அல்ல காழ்ப்புணர்ச்சி என்றாகிவிடும். மருத்துவ தொண்டர் பணியாளர்கள் விடையத்தில் அவர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுத்தால் மகிழ்ச்சியானதே. பெரும்பாலும் பெண்கள் தலைமையேற்று நடத்தும் குடும்பங்களை சேர்ந்தவர்கள் வறுமை, குடும்ப சுமை, வயிற்று பசி என்பவற்றுடன் எவ்வளவு தூரம் போராடுவார்களென்பது யாரும் சொல்லி யாரும் அறியவேண்டியதில்லை, அவர்களுக்கு ஏதாவது ஒரு சிறு ஒளியை புலம்பெயர் உறவுகளின் உதவியுடன் உண்மையாகவே இவரால் ஏற்படுத்தி கொடுக்க முடியுமென்றால் அது என்ன நடக்க போகிறதென்று பார்க்காமலே ஏகப்பட்ட விசனங்கள் தெரிவிப்பது முறையல்ல. அது உதவும் உறவுகளுக்கும் அர்ச்சுனாவுக்கும் இடையிலுள்ள தகராறு, நாம் எதுக்கு முண்டியடிக்கணும்? புலம்பெயர் உறவுகளிடம் காசுவாங்கி பொதுமக்களுக்கு உதவுகிறோம் என்று சொல்லி ஒன்றுக்கு இரண்டு மூன்று வீடுகளும், கார்,அயல்நாட்டு பயணங்கள் உயர்தர பைக்குகள் என்று கொடிகட்டி பறக்கும் யூடியூபர்களுடன் ஒப்பிடும்போது அர்ச்சுனா அப்படியொன்றும் பெரிய தப்பான காரியங்களில் இறங்குவதாய் தெரியவில்லை. மக்களிடம் வாக்கை வாங்கிக்கொண்டு மக்கள் பணியாற்றவில்லையென்றே முன்பிருந்த தமிழரசியல்வாதிகளை திட்டி தீர்த்து வீட்டுக்கு துரத்தினோம், இப்போ மக்கள் பிரச்சனைகளில் கரிசனம் காண்பிப்பவர்களையும் திட்டினால், குழப்பம் அவர்களிடமில்லை, நம்மிடம்தான்.- கச்சதீவு தொடர்பில் இந்தியாவுடன் பேசவேண்டிய அவசியமில்லை - சரத் வீரசேகர
அசப்பில வெண்ணிற ஆடை மூர்த்திபோல இருக்கும் இந்தாளை பாத்தா சிரிக்குறதா அழுறதா தெரியல. சரி அரசாங்கத்துக்கு இந்தியாவுக்கெதிரான ஆலோசனை எல்லாம் வழ்ங்கினீர்களே, நீங்கள் ஆட்சியிலிருக்கும்போது இதெயெல்லாம் நடைமுறைப்படுத்தினீர்களா? நீங்க மட்டுமல்ல, இந்தியாவை சுற்றியிருக்கும் நேபாளம், பூட்டான், பங்களாதேஸ் மியன்மார்,மற்றும் கடல்ரீதியாக எல்லையை கொண்ட மாலைதீவு உட்பட்ட குட்டிநாடுகள் ஒருபோதும் இந்தியாவை மீறி எதுவும் செய்யமுடியாது , அப்படி செய்தால் இந்தியா தன் வழிக்கு இவர்களை கொண்டுவர என்ன செய்ய வேண்டுமோ அதெல்லாம் ஈவிரக்கமின்றி செய்யும். மாலைதீவு அண்மையில் முயற்சித்தது, பின்னர் வாலை சுருட்டிக்கொண்டது. இந்த சிறிய நாடுகளெல்லாம் இந்தியாவை எதிர்த்து சுயமாக இயங்கவேண்டுமென்றால் , ஒன்று பொருளாதாரம், இல்லையேல் ஆயுதபலம் இந்தியாவைவிட அதிகமாகவோ அல்லது சமநிலையிலோ கொண்டிருக்கவேண்டும். ஆனால் அது அது ஒருபோதும் சாத்தியமில்லை. நம்மை பொறுத்தவரை சிங்களவன் விஷ தேள் என்றால் இந்தியா ராஜநாகம் , இரண்டுமே நமக்கு ஒத்துவராது, ஆனால் இந்த இரண்டும் முட்டிக்கொள்வதை வேடிக்கை பார்ப்பது அதன் முடிவை தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டுவது ஒத்துவரும். அரசியல் பொருளாதாரம் அதிமீறிய கடன்,பாதுகாப்பு, வீதிகள் தண்டவாளங்கள் என்று அனைத்திலும் இந்தியாவின் காலடியில் கிடந்து சேவகம் செய்யும் இலங்கை எழுந்து நின்று வாலாட்டினால் அதை நசுக்கியே கொன்றுவிடும் இந்திய காட்டுயானை. நம்மை பொறுத்தவரை சிங்கள எகத்தாளத்தை எவன் நசுக்கினாலும் மகிழ்ச்சி. ஒருவேளை சிங்களவன் ஆசைப்படி இந்தியா இலங்கையிடம் தோற்றுப்போனால் அதுவும் மகிழ்ச்சிதான். - தமிழர்களின் குடித்தொகைப் பெருக்கத்தில் பாரிய வீழ்ச்சி - ச.லலீசன் சுட்டிக்காட்டு
Important Information
By using this site, you agree to our Terms of Use.