Everything posted by நந்தி
-
டொனால்ட் டிரம்பிற்கு 'FIFA சமாதான விருது' வழங்கப்பட்டது
இதை உதாரணம் காட்டி அடுத்த தடவைக்கான நோபலையும் நோகாமல் பெற்று விடுவார். இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் பெற்றிடலாம்.
-
அரசமாளிகையில் இருந்து வெளியேறுகிறார் மஹிந்த!
இதென்னடா இப்படி முன்னுக்குப்பின் முரணான கதை. பாதுகாப்பு கேட்கிற சிங்கம். இது அசிங்கம்.
-
யாழ்ப்பாண தமிழ் பெண்கள், சிங்களவர்களை திருமணம் முடிப்பது அதிகரிப்பு.
ஒழிக்கப்படமுடியாது. ஒழிக்கப்படவிடார்கள். புலம்பெயர் தேசங்களில் வேண்டுமென்றால் 3 , 4 சந்ததிகள் கடந்த பிறகு சாத்தியப்படலாம். ஆனால் தாயகத்தில் அது சாத்தியமில்லை.
-
யாழ்ப்பாண தமிழ் பெண்கள், சிங்களவர்களை திருமணம் முடிப்பது அதிகரிப்பு.
என்ர பெடியன் சைனிஸ் காரியை கட்டியிருக்கிறான், என்ர பிள்ளை டொமினிகன்காரனை கட்டியிருக்கிறாள் என்று சொன்னால் அதுக்குமேல் கேள்வியில்லை. ஆனால் சிறிலங்காவில கட்டியிருக்கிறார் என்றால்தான் அடிமடியில கைவைக்கும் ஆயிரம் கேள்வி. எந்த இடம், என்னசாதி, ஏன் அந்தச்சாதி, ஏன் இந்தச்சாதி ?வடக்கா ? கிழக்கா? வேற இடம் கிடைக்கலியா ? ஐயையோ . “தமிழர் என்றோர் இனமுண்டு , தனியே அவர்க்கோர் குணமுண்டு “
-
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது
சிறிய குற்றம் என்கிறார் மகி, பெரிய குற்றம் என்கிறார் சுமி. இருவரும்கதைத்து ஒரு முடிவுக்கு வாங்க. வெள்ளிக்கிழமை விசாரிக்க கூப்பிடிறானுகள் , உள்ளுக்குள்ள அள்ளிப்போட்டாலும் இரெண்டு நாளைக்கு மல்லாக்கக் கிடக்கனும் , திங்கள் கிழமை வாறன் என்று சொல்ல குள்ள நரியின் கள்ளப் புத்திக்கு தெரியலயே. குள்ள நரிக்கும் மெல்ல அடி சறுக்கும் போல.
-
"மூன்று கவிதைகள்"
கவிதைகள் அருமை. காலகாலமாக காளையர்க்கு இருக்கும் பிரச்சனையே இவைதானே, காதல், காம ம், கன்னி. பள்ளிக்குப்போய் படிப்பை விட்டதும், பாடையில போறளவு உயிரை விடுறதும்.
-
பிறப்பு விகிதத்தை அதிகரிக்க சீனா ஒரு குழந்தைக்கு 1500 டொலர்!
நீங்கள் சொல்வதும் உண்மைதான், இருந்தும் என்ன செய்வது “ சல்லி ஒன்றே சர்வ ரோக நிவாரணி” என்ற மனநிலையிலிருந்து இன்னும் விடுபட முடியவில்லை.
-
பிறப்பு விகிதத்தை அதிகரிக்க சீனா ஒரு குழந்தைக்கு 1500 டொலர்!
எமது நாட்டிலும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழரின் எண்ணிக்கை மிக க்குறைவு. பிறப்பு வீதமும் குறைவு. சிறுபான்மையிலும் சிறுபான்மையாக மாறும் சீரிய நிலை. புலம்பெயர்ந்த புண்ணியவான்கள் நலம் புரிந்தால் குலம் வாழும்.
-
பெருந்தொகை போதைப்பொருட்களுடன் கனடா பிரஜை கைது
சின்ன வீடு இருந்தால் அதையும் பெரிதாக்கி …
-
மட்டக்களப்பில் குரங்குகள் கடித்து ஆறு பெண்களுக்கு படுகாயம்!
பெண்களை மட்டும் குறிவைத்துத் தாக்குவதன் காரணம் என்னவாக இருக்கலாம் என ஆய்வு செய்ய வேண்டும். பெண் குரங்குகளால் பாதிக்கப்பட்ட ஆண் குரங்குகளாக இருக்குமோ ?
-
அடைக்கலம் தருவதற்கு இந்தியா ‘தர்ம சத்திரம்’ அல்ல- ஈழ அகதி வழக்கில் உச்சநீதிமன்றம்!
“காந்தி தேசமே காவல் இல்லையா நீதிமன்றமே நியாயம் இல்லையா பதவியின் சிறைகளில் பாரத மாதா பரிதவிக்கிறாள் சுதந்திர தேவி சுயநல மனிதரின் துணி துவைக்கிறாள்” என்ற பாடல் நினைவுக்கு வருகிறது. மனிதத்துவம் மலிவாக மரணித்துக்கொண்டிருக்கிறது பல நாடுகளில்.
-
மகன் வாங்கிய சீன வெடியை கடித்து பார்த்த பெண் பல் வைத்தியர் வைத்தியசாலையில் அனுமதி!
நல்லவேளை உள்ளே விழுங்க இல்லை.
-
இந்தியாவை தாக்க 130 அணு ஆயுதங்கள் தயாராக உள்ளன - பாக். அமைச்சரின் மிரட்டல் பேச்சு
அணுவாயுதங்கள் இருக்கிறது என்று சொல்லுவது ஒரு சாதாரண நடைமுறையாகிவிட்டது. அவருக்கு ஒரு வீடு இருக்கிறது, இவருக்கு இரண்டு மனைவி இருக்கிறது என்பது போல. என்னே உலகம்.
-
”ரணில் ராஜபக்சவின் முடியையும் அரசாங்கம் தொடாது”
இயலுமானதைத்தானே அரசாங்கத்தால் செய்ய முடியும். நீங்கள் சொல்பவர்கள் பழம் திண்டு, கொட்டையும் போட்டு, விருட்சமும் வளர்த்தவனுகள். ஆமா நீங்கள் சொல்லுற முடி = மயிர் தானே ?
-
பகிடிவதைக்குள்ளான யாழ்.பல்கலையின் விஞ்ஞான பீட மாணவன் : காது கேட்கும் திறனும் இழப்பு
மனிதத்துவம் தங்களிடமிருந்து மரணித்தது தெரிந்தும்கூட, சில மனிதர்கள் வாழ்கிறார்கள் தங்களை மனிதர் என்று சொல்லிக்கொண்டு இன்னும் மரணிக்காமல்.
-
நித்தியானந்தா இறந்துவிட்டார்? சகோதரி மகன் பகீர் தகவல்
ஆனந்தாவுக்கு ஆனந்தமே ஆனந்திகளுடன் ஆனந்தப்படுவது. ஆனந்திகள் உள்ளவரை ஆனந்தாவும் உள்ளவரே.
-
இந்தக் கிழமை நீயாநானாவில் விசித்திரமான நிகழ்ச்சி.
கடவுளுக்கு நன்றி சொல்வோம், இப்படியான ஒரு தாரத்தைத் தராமைக்கு.
-
அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு இல்லை!
நீதி என்பது அவர்களுக்குக் களிமண், எங்களுக்கு கருங்கல்.
-
ரஸ்ய ஜனாதிபதி புட்டினின் கார் வெடித்து சிதறியது
இருக்கும், கொலையைக் குலையாகச் செய்யும் கலை தெரிந்த தலைகள் இவர்கள்.
-
சின்ன வயதில்... உண்மை என நம்பிய, பொய்கள் என்ன?
அவங்களுக்கு ஏழு சுழி அங்க இருக்கிறதாம்.
-
ரஸ்ய ஜனாதிபதி புட்டினின் கார் வெடித்து சிதறியது
எத்தனை அதிகாரிகளின் தலையைப் புட்டின் கட்டிங் செய்யப் போறாரோ ?
-
யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இடைநிறுத்தம்
மாவட்ட அபிவிருத்திக்கு முன்பாக சம்பந்தப்பட்டவர்கள் தங்கள் வார்த்தைகளை அபிவிருத்தி செய்ய முற்பட வேண்டும். தனிநபர்கள் தங்களின் அந்தரங்களை பொது வெளியில் போட்டுத்தாக்குவது எதிர்கால இளவல்களுக்கு நல்ல முன் உதாரணம் அல்லவே. எங்கே செல்லும் இந்தப் பாதை ?
-
உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிட கட்டுப்பணம் செலுத்திய ஜெர்மன் பெண்!
அந்தப் பதவி நிலைஇன்னமும் வெற்றிடமாக இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
-
எங்கள் பாசமிகு தந்தையார் மறைவு.
ஆழ்ந்த அனுதாபங்கள் சகோ.
-
நுணாவிலான் அவர்களின் தந்தையார் இயற்கை எய்தினார்
ஆழ்ந்த அனுதாபங்கள் சகோ.