Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நந்தி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by நந்தி

  1. ஏலுமெண்டால் அமெரிக்கா வந்து சண்டித்தனம் காட்டட்டும் பாப்பம்? அவன் ஹெலி கொடுக்கும்போதே அதனுள் TAG வச்சித்தான் கொடுத்தவன். அது விளங்காத இந்தக்கூட்டம் அவன் கொடுத்த இரவலை இவ்வளவு காலமும் பாவிச்சுக்கொண்டு, அவனுக்கே வாய்ச்சவால் விட்டுக்கொண்டு வந்தார்கள். இடம், பொருள், ஏவல் பார்த்திருந்து முடிச்சிட்டான்.
  2. இந்த நேரத்தில் இப்படியும் ஒரு செய்தி வந்தது...ரைசியின் பிளேன் கட்டுநாயக்காவில் இறங்க 10 நிமிடம் முன் ..இஸ்ரேலின் பிளேன் ஒன்று இறங்கி உடன் புறப்பட்டுச் சென்றதாம்...எவ்வளவுகாலமாக பின் தொடர்ந்தார்களோ தெரியாது..இறுதியில் இஸ்ரேலின் பெரியண்ணன் கெலியில் புறப்பட்டது..வாழைப்பழத்தை உரித்து வாயில் வைத்ததுபோல் ...வாய்ப்பாகிவிட்டது...இஸ்ரேலுக்கு.. அணில் ஒரு நரி என்று அப்போதே சொன்னவர்கள்.
  3. இவர் அண்மையில் இலங்கைத்திருநாட்டுக்கும் சென்று, பத்திரமாக நாடு திரும்பி இருந்தவர்தானே.
  4. உண்மைதான்! மனம் வேதனை அடையும்தான். ஆனால் அப்படியான மனம் மற்ற இனங்களுக்கும் இருக்குமில்ல.அவங்கட மனங்களும் வேதன அடையுமில்ல, அதையும் நினைச்சுப் பார்கணுமில்ல. சரி சரி, இந்த புத்தாண்டு லிஸ்ற் இல்லாட்டி என்ன , அடுத்த வெசாக் லிஸ்ற், பொசன் லிஸ்ற், இல்லாட்டி ஒரு ஸ்பெசல் லிஸ்ற் வராமலா போகும். அவர் வெளியில் வந்திருவார். அவர் வருவாரே ! வெளியில் வருவாரே !
  5. ஆனால் வடக்கு, கிழக்கில் வாழும் சகோதர்களுக்கும், அவர்களின் பிரச்சனைகளுக்கும் என்னிடம் எந்தத் தீர்வும் இல்லை, என்னால் எதுவும் கொடுக்கவும் முடியாது.
  6. இனமானம் காக்க இன்னுயிரை விதைத்த எம் தெய்வ மாவீரரே , மண்மீது உங்கள் மாபெரும் தியாகம் மரணத்தை வென்று வாழும். வீரவணக்கங்கள்.
  7. கால் நூற்றாண்டுகளாய் களம் கண்டு-நின்றியங்கும், யாழ் இணையம்- நூறாண்டு மேல் உயர வாழ்த்துக்கள் ! மச்சானின் நெல் வயலில் மகிழ்ந்திருந்த நெல் மணிகள், கச்சான் காத்தடித்ததனால் கதிர் விலகிச் சிதறினவே. அருகினிலே சில மணிகள் ஆழ மண்ணில் சில மணிகள் தெருவினிலே சில மணிகள் தேசம் விட்டுச் சில மணிகள். கலகலத்துச் சிரித்துவிட்டு கச்சான் காத்தோய்ந்து போக, வெலவெலத்துப் போன மச்சான் வெளிப்பட்டான்-செயற்பட்டான். பதறிப் போன மச்சானும் சிதறிப்போன மணிகளதைக், கதறிக் கொண்டு சேகரித்துக் கட்டிச் சேர்த்தான் கோணியிலே. சிதறிப் போன மணிகளாகச் சிறிலங்காத் தமிழர் இன்று. கட்டிச் சேர்த்த கோணியாக களம் இந்த யாழ் -இங்கு. ஒன்றாவோம் உரிமைகளை வென்றாவோம். நன்றாவோம் நாளை நமது என்றாவோம்.!
  8. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகோ கிருபன். நோய் நொடி இன்றி நூறாண்டுகள் மேல் வாழ்க.
  9. இனிய பிறந்த நன்நாள் வாழ்த்துக்கள் சகோதரி யாயினி.
  10. கார்த்திகை இருபத்தி ஏழு-எங்கள் காவல் தெய்வங்கள் புவிவரும் நாளு பார்த்திருந்தோம் இந்த நாளை-உங்கள் பாதத்தில் மலர்சூடி விளக்கேற்ற நாங்கள் இதயத்தின் துடிப்பாக என்றும் -இங்கே இருக்கின்றீர் நொடிகூடபிரியாது எம்மில் உதயத்தைத் தந்தவர் நீரே-எங்கள் உத்தம வீரரே கைதூப்பி தொழுதோம்.
  11. கடைசியில் கேட்ட கேள்வியில கடவுளே கவுந்திட்டார் 😀😀😀😀😀😃😃😃😃 உருகி உருகி பிரார்த்திக்கும் முருகேசுக்கு, கடவுளிடம் ஒரு நாள் பேச சந்தர்ப்பம் கிடைத்தது. முருகேசு: கடவுளே..! நான் உங்க கிட்டே ஒரு விளக்கம் கேட்கலாமா.?🙂 கடவுள் : தாராளமாகக் கேள் மகனே.. முருகேசு : பொறுமையாக, கோபப்படாமல் பதில் சொல்வீர்களா..? கடவுள் : கண்டிப்பாக.. முருகேசு : இன்றைய தினம், ஏன் எனக்கு இப்படி ஒரு மோசமான நாளைக் கொடுத்தீங்க..?😐 கடவுள் : என்னப்பா சொல்ற நீ..? முருகேசு : எப்பவும் சரியா எழுந்திருக்கிற நான் இன்னைக்கு எழுந்திரிச்சதே லேட்.. ! கடவுள் : ஆமாம்..! அவசரத்துல என்னைக் கூட கும்பிடாம ஆபீஸ்க்கு புறப்பட்டுட்ட.. முருகேசு : கிளம்பினதே லேட்.. இதுல என் பைக் வேற பஞ்சர் ஆகியிருந்தது..😢 கடவுள் : ஆமாம்.. எனக்குத் தெரியும். முருகேசு : சரி, பஸ்ல போலாம்னு பஸ்ஸை பிடிச்சா வழியில ஏதோ ஆக்சிடெண்ட் போல.. ஒரே டிராஃபிக் ஜாம். ஆபீஸ்க்கு நான் ஒரு மணிநேரம் லேட்.😨 கடவுள் : ஆமாம்..! தெரியுமே.. முருகேசு : மதியம் சாப்பிட கொஞ்சம் லேட் ஆயிருச்சு. அதுக்குள்ளே கேண்டீன்ல சாப்பாடு காலியாயிருச்சு. கடைசில பசிக்கு ஏதோ கிடைச்சதை அரைகுறையா சாப்பிட்டுட்டு வந்தேன்.😤 கடவுள் : ஆமாம், அதுவும் தெரியும். வங்கியில் பர்சனல் லோன் அப்ளை பண்ணியிருந்தேன். அது விஷயமா ஒருத்தர்கிட்டே இருந்து நான் ஃபோனை எதிர்பார்த்திருந்தேன். சாயந்திரம் வீட்டுக்கு திரும்பும்போது அவர்கிட்டேயிருந்து எனக்கு கால் வந்தது. பேட்டரியில சார்ஜ் இல்லாம மொபைல் அந்த நேரம் பார்த்து ஆஃப் ஆயிடிச்சு.😟 கடவுள் : ஆமாம், தெரியும். முருகேசு : அதை பிடிச்சி.. இதை பிடிச்சி.. முட்டி மோதி வீட்டுக்கு வந்து, கொஞ்ச நேரம் ரூம்ல ஏ.சி.யில உட்கார்ந்து டி.வி.யை பார்த்து ரிலாக்ஸ் பண்ணலாம்னா ஏ.சி. ரிப்பேர் போல. வேலையே செய்யல..😖 இன்று எனக்கு எதுவுமே சரியில்லையே..! ஒரு நாள் உங்களைக் கும்பிட மறந்ததுக்கு இவ்ளோ கஷ்டங்களா கடவுளே..?😭 (கடவுள் பலமாக சிரிக்கிறார். சில வினாடிகள் கழித்து பேச ஆரம்பிக்கிறார்) கடவுள் : இன்னைக்கு உன் கர்மாவின்படி மிகவும் மோசமான நாள். நீ காலை அசந்து தூங்கிகிட்டிருக்கும்போதே மரணதேவன் உன்னை நோக்கி வந்துவிட்டான். அவன் கூட வாக்குவாதம் பண்ணி உன்னை காப்பாற்ற வேண்டி உன்னை கொஞ்சம் அதிக நேரம் தூங்க வெச்சேன். முருகேசு : (அதிர்ச்சியுடன்) ஓ....!!!😳😳 கடவுள் : உன் பைக்கை பஞ்சராக்கினேன். ஏன்னா, நீ ஆபீஸ் போகும்போது.. நீ போற ரூட்ல பிரேக் பிடிக்காம தாறுமாறா ஓடுற வேன் ஒன்னு உன் மேல இடிக்கிறதா இருந்தது. அந்த வேன் ஆக்சிடெண்ட்டாகி தான் டிராபிக் ஆச்சு. நீ பைக்ல போயிருந்தா அந்த வேன் மரணதேவன் கணக்குப்படி உன் மேல இடிச்சிருக்கும்.. முருகேசு : (அடக்கத்துடன்) ஓ..😦 கடவுள் : மதியம் உனக்கு சாப்பாடு கிடைக்காம போனதுக்கு காரணம், கடைசியா மிச்சமிருந்த குழம்புல எலிக்கு வெச்சிருந்த எலி பாஷாணம் எப்படியோ தவறி விழுந்துடிச்சு..! யாரும் அதைக் கவனிக்கல. அதை நீ சாப்பிட்டிருந்தா என்னாயிருக்கும்..? முருகேசு : (கண்கலங்கியபடி) ம்ம்..!!!😰 கடவுள் : சாயந்திரம் உன் அலைபேசி சுவிச் ஆப் ஆனதுக்குக் காரணம், அந்த நபர் உனக்கு தவறான வாக்குறுதிகள் கொடுத்து இக்கட்டில் மாட்டிவிட இருந்தார். எனவே அதிலிருந்து காப்பாற்ற வேண்டி, உன் ஃபோனை செயலிழக்கச் செய்துவிட்டேன். முருகேசு : ம்ம்...😧 கடவுள் : அப்புறம், அந்த ஏ.சி. மெஷின் எர்த் கோளாறு ஏற்பட்டு அதில் முறையற்ற முறையில் கரண்ட் வந்துகொண்டிருந்தது. ஒருவேளை முகம் கழுவிக்கொண்டு ஈர கைகளுடன் எப்போதும் போல நீ சுவிட்சை தொட்டிருந்தால், அந்தக் கணமே தூக்கி எறியப்பட்டிருப்பாய். ஆகையால் அதை செயலிழக்கச் செய்தேன். என்னை வணங்க மறந்ததால் அன்று முழுதும் நீ சோதனையை சந்தித்தாய் என்று என்னை தவறாக நினைத்துகொண்டாய். ஆனால் அனுதினமும் நீ என்னை வணங்கி வந்த காரணத்தால் நீ என்னை மறந்த அன்றும் கூட நான் உன்னை காக்க மறக்கவில்லை. முருகேசு : இத்தனை ஆபத்துலேர்ந்து என்னை காப்பாத்துனீங்களே..!😞 ஆனா என் கல்யாணத்தன்னிக்கு எங்க போயிருந்தீக 😨😨😡😡😡 கடவுள் : 😳😳😳😳😳😐😐😐😐... கேட்டாம்பாரு ஒரு கேள்வி....
  12. வாழ்ந்தோம்,இறந்தோம் என்றில்லாமல்,இறந்தும்--இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கும் எம் இதய தெய்வங்கள்.
  13. இனிய பிறந்த நன்நாள் வாழ்த்துகள் உறவுகளே.இன்று போல் என்றும் இன்பமாய் வாழ வாழ்த்துகின்றேன்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.