-
என்னை அரசியலில் இருந்து ஓரங்கட்ட முடியாது – எஸ்.சிறிதரன்
- கிறுக்கல்கள்
கிறுக்கல்கள்-
கருத்துப்படம் 24.01.2026
-
கருத்துப்படம் 06.06.2026
-
கருத்துப்படம் 01.01.2026
-
கருத்துப்படம் 01.01.2026
-
கருத்துப்படம் 31.12.2025
-
கருத்துப்படம் 30.12.2025
-
கருத்துப்படம் 29.12.2025
-
கருத்துப்படம் 28.12.2025
-
கருத்துப்படம் 27.12.2025
-
கருத்துப்படம் 27.12.2025
-
கருத்துப்படம் 26.12.2025
-
கருத்துப்படம் 24.12.2025
-
கருத்துப்படம் 21.12.2025
-
கருத்துப்படம் 21.12.2025
-
கருத்துப்படம் 21.12.2025
-
கருத்துப்படம் 20.12.2025
-
கருத்துப்படம் 19.12.2025
-
கருத்துப்படம் 17.12.2025
-
கேலி 15.12.2025
-
கருத்துப்படம் 12.12.2025
- யாழிணைய நிர்வாகி திரு மோகன் அவர்களின் அருமைத் துணைவியார் இன்று (14-01-2026) காலமானார்.
மோகன், ஆழ்ந்த இரங்கல்கள். காலம் உங்கள் கவலையைப் போக்கட்டும்.- IMG_9441
- முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்
முன்னோடி உதவி நிறுவனத்தின் அடிப்படை சுகாதாரத் திட்டத்துக்காக தனியான வங்கிக் கணக்கு திறக்கப்பட்டிருக்கிறது. தனியாக யாழ்கள உறவுகளால் மட்டும் இதை நடைமுறைப்படுத்த இயலாது. வெளியாரிடமும் இருந்து உதவிகள் பெற வேண்டிய தேவை அவசியம். ஆகவே முன்னோடி உதவி நிறுவனத்தின் நோக்கம் மற்றும் செயல்பாடுகள் பற்றிய தகவல்கள் மக்களிடம் கொண்டு சேர்க்கப்பட வேண்டும். மாதாந்தம் குறைந்தது பத்து டொலர்கள் அளவிலாவது, முழுமையாக தன்னார்வ அடிப்படையில், உதவி வழங்குமாறு மக்களிடம் கேட்டுக்கொள்ளலாம். குமாரசாமி தன்னால் நூறு பேர்களை இணைக்க முடியும் என தெரிவித்திருக்கிறார். அதேபோல், மற்றவர்களும் தங்களுக்குத் தெரிந்தவர்களை முன்னோடி நிறுவனத்துடன் இணைக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும். இந்த மாதத்திலிருந்து எனது மாதாந்த உதவித் தொகையை ஏராளன் குறிப்பிட்ட வங்கிக் கணக்குக்கு அனுப்பி வைக்க உள்ளேன். மேலும், எனக்குத் தெரிந்தவர்களிடமும் இதுகுறித்து தெரிவிப்பேன். இந்தத் திட்டங்கள் அனைத்தும் வங்கிக் கணக்கில் சேரும் பொது நிதியின் அடிப்படையிலேயே செயல்படுத்தப்பட வேண்டும். எனவே, தனிநபர் பொறுப்பாக அல்லாது, அனைவரும் இணைந்து பங்களிக்கும் கூட்டு முயற்சியாக இந்தச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதே எனது கருத்தாகும். குமாரசாமி, நான் பங்களிப்புடனேயே நிறுத்திக் கொள்ள விரும்புகிறேன். நீங்கள், வாத்தியார் இருவரும் பேசித் தீர்மானிக்கலாம். ஒன்றும் அவசரமில்லை. நேரம் எடுத்து முடிவெடுங்கள். தற்சமயம் முன்னோடியின் முதல் திட்டத்தை ஆரம்பிப்போம். இணைந்து பயணிப்போம்.- முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்
முன்னோடி’ நகரத் தொடங்கியிருப்பதில் மகிழ்ச்சி. மாதாந்த பங்களிப்பு செய்பவர்களின் தனிப்பட்ட விபரங்களை பொதுவெளியில் அறிவிக்க வேண்டிய அவசியமில்லை என நினைக்கிறேன். ஆனால், முன்னோடி மூலம் நடைமுறைப்படுத்தப்படும் பிரத்தியேக மற்றும் அவசர உதவுத் திட்டங்கள், அவற்றுக்கான நிதி தொகை, செயற்படுத்தும் காலஅளவு, மற்றும் உதவி பெற்றோர் தொடர்பான அடிப்படை விபரங்கள் அறிவிக்கப்படுவது நல்லது என்பது என் கருத்து. இது நிறுவனத்தின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தும். ஒவ்வொருவரும் தனித்தனியாக தாயகத்தில் உள்ள முன்னோடிக்கான வங்கிக் கணக்குக்கு நேரடியாகப் பணம் அனுப்பும் போது வங்கி கட்டணங்கள் போன்ற கூடுதல் செலவுகள் ஏற்படலாம். அனுப்பப்படும் தொகைகளின் விபரங்கள் வங்கியில் பதிவாகினாலும், அவற்றை ஒரே நபர் அல்லது குழு பொறுப்புடன் கண்காணித்து பராமரிப்பது அவசியம். அதற்காக, முன்னோடியில் நிதிப் பொறுப்பாளர் ஒருவரை அல்லது இருவரைக் கொண்ட குழுவை நியமிப்பது சிறந்தது எனக் கருதுகிறேன். அந்த பொறுப்புக்கு கோசன் ஜி, குமரசாமி, வாத்தியார் ஆகிய மூவரில் ஒருவரை அல்லது இருவரை தெரிவு செய்யலாம். மாற்றாக, ஒவ்வொரு நாட்டிலும் முன்னோடியின் நாட்டு பொறுப்பாளரை நியமித்தால், அந்த நாட்டில் உள்ளவர்கள் அவர்களிடம் பணம் அனுப்பி வைக்கலாம். தேவையான விபரங்களையும் அவர்களிடம் இருந்தும் பெறலாம். அந்தந்த நாட்டில் திரட்டப்படும் தொகைகளை, பொறுப்பாளர்கள் முன்னோடியின் பொதுக் கணக்கில் முறையாக சேர்த்துவிடலாம். இது செலவுகளைக் குறைப்பதுடன், நிதி நிர்வாகத்தையும் எளிதாக்கும். நான் இருக்கும் நாட்டிற்கான பொறுப்பாளராக குமரசாமியை முன்மொழிகிறேன். அவர் சம்மதித்தால், எனது மாதாந்த பங்களிப்பை அவர் குறிப்பிடும் வங்கிக் கணக்கிற்கு அனுப்பி வைக்கத் தயாராக இருக்கிறேன். இதுபோன்ற அமைப்புசார், வெளிப்படையான மற்றும் பலராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய செயற்பாடுகளுக்குள் நானும் முழுமையாக இணைந்து செயல்படுவேன். உங்களது கருத்துகளையும் முன்மொழிவுகளையும் பகிர்ந்து கொள்ளுங்கள். பலராலும் ஏற்றுக் கொள்ளப்படும் செயற்பாடுகளுக்குள் நானும் இணைந்து கொள்கிறேன்.- Eko: வாழ்வை உணர வைக்கும் சிலிர்ப்பூட்டும் சாகசம் | ஓடிடி விரைவுப் பார்வை
நல்லதொரு திரைப்படம். நீண்டகாலம் நினைவில் நிற்கும்- முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்
நல்லது. பரீட்சார்த்தமாகவும் இருக்கும். படிப்பினையையும் தரும். அந்தத் திட்டம் நல்லமுறையில் நடந்தால் புது உத்வேகமும் கிடைக்கும். இன்னும் நாங்கள் ஆரம்பப் புள்ளிக்கே வரவில்லை. பேச்சளவில்தான் நிற்கின்றோம். அடுத்த நகர்வைக் காணவில்லை. என்னிடம் இந்தக் கேள்விகள் இருக்கின்றன, முன்னோடி அமைப்பை ஏதாவது நாட்டில் சட்டபூர்வமாகப் பதிவு செய்யப் போகின்றோமா? (இப்போது இல்லாவிட்டாலும் எதிர்காலத்தில்) இதை நடைமுறைப் படுத்துபவர்(கள்) யார்? வங்கி விபரங்கள் என்ன? திட்டங்களுக்கென்று பணம் தரப்பட வேண்டுமா? அல்லது மாதாந்தமாக/ அன்பளிப்புகளாக பெறும் பணத்தில் திட்டங்கள் நிறைவேற்றப்படப் போகின்றனவா? வரும் தைப் பொங்களுக்கு தொடங்கலாமா?- வெனிசுலா ஜனாதிபதி மதுரோவும் அவரது மனைவியும் அமெரிக்க இராணுவத்தினரால் கைது!
இவர்தான் அந்தத் தம்பர்- மேல் மாடிகளை கட்டுவதை விடுத்து முதலீடுகள் செய்வதற்கு முன்வரவேண்டும்
- முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்
குமாரசாமி, உங்களது ஆதங்கம் நியாயமானதே. எனக்கும் இவ்வாறான அனுபவங்கள் இருக்கின்றன. எங்கள் இருவருக்கும் இருக்கும் இந்தப் பிரச்சினை பலருக்கும் இருக்கும். தனியாளாக உதவி செய்ய முன்வரும் போது இந்தச் சிக்கல் கண்டிப்பாக எவரும் எதிர்நோக்க வேண்டி வரும். இதில் யாரையும் குறை சொல்ல முடியாது. அங்கே அவர்களின் தேவைகள், எதிர்பார்ப்புகள் அதிகம். முன்னோடி, ஒரு உதவி நிறுவனமாக செயற்பட ஆரம்பிக்கும் போது, அதற்கான தனி வங்கிக் கணக்கு இருக்கும். எனக்கு நம்பிக்கை இருக்கிறது. முன்னோடியின் செயற்பாடுகள் பற்றி அதன் செயற்பாட்டாளர்கள் விரைவில் அறிவிப்பார்கள். காத்திருப்போம்.- நான்காவது கொலை - கருணாகரன்
சொல்லவேண்டிய விடயம்தான். ஆனால் அதைச் சொன்ன இடம் எனக்கு சரியெனப்படவில்லை. அவர் ஒரு அரச அதிகாரி அவர் தனக்குத் தரப்பட்ட வேலையை ஒழுங்காகச் செய்ய வேண்டும். அவரிடம் போய் விவாதிப்பதில் எதுவும் நடந்து விடாது. கேட்க வேண்டிய இடம் MOD. அங்கெல்லாம் நாங்கள் போய் கேட்க மாட்டோம். ஆனாலும் அவருக்கு தனது ஆதங்கத்தை தெரியப் படுத்தியதிலும், வெளியார் பார்வைக்கு கொண்டு வந்ததிலும் திருப்தி.- ஒரு கிலோ டூனா மீனின் விலை 11,413 யூரோக்கள்.
உலகின் பல நாடுகளில் நிலவும் சில பாரம்பரியங்கள் சில நேரங்களில் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்திவிடுகின்றன. அப்படிப்பட்ட ஒரு விசித்திரமான நம்பிக்கையே ஐப்பானியர்களிடையே காணப்படுகிறது. புத்தாண்டு தினத்தில் பிடிக்கப்படும் புளூபின் டூனா (Bluefin Tuna) மீன் அதிர்ஷ்டத்தை வரவழைக்கும் என்று அவர்கள் உறுதியாக நம்புகிறார்கள். அதனால் தான் ஆண்டின் தொடக்கத்தில் சந்தைக்கு வரும் அந்த டூனா மீன் ஏலத்தில் ஆச்சரியப்படவைக்கும் விலைக்கு விற்கப்படுகிறது. இந்த ஆண்டும் அதற்கு விதிவிலக்கு இல்லை. ஏலத்தில் விடப்பட்ட 243 கிலோ எடையுள்ள டூனா மீன், 2.8 மில்லியன் யூரோக்களுக்கு விற்கப்பட்டிருக்கின்றது. கணக்குப் போட்டுப் பார்த்தால், ஒரு கிலோ டூனாவின் விலை 11,413 யூரோக்கள். இவ்வளவு விலைக்கு அந்த மீன் தரமானதா, சுவையானதா என்றெல்லாம் பெரிதாக அவர்கள் ஆராய்ச்சிகள் செய்வதில்லை. “புதிய ஆண்டு நல்லதைத் தர வேண்டும்” என்ற ஒரு நம்பிக்கையே எல்லாவற்றையும் மீறி அவர்களிடம் இருக்கிறது. அந்த நம்பிக்கையே பணமாக மாறுகிறது. மக்களின் நம்பிக்கையை வியாபாரமாக மாற்றிக் கொள்ளும் சந்தையின் தந்திரம் இதுதான் போலும். சில நேரங்களில் பாரம்பரியம், நம்பிக்கை, வியாபாரம் மூன்றும் ஒன்றாகக் கலந்தால் உருவாகும் அதிர்ஷ்டம் இதுதான். https://edition.cnn.com/2026/01/05/travel/japan-bluefin-tuna-record-auction-intl-hnk- தையிட்டி விகாரைக்கெதிராக போராடியவா்களுக்கு சொந்தப் பிணை
சுமந்திரன் எடுத்துத் தந்தால் தமிழிழமே வேண்டாம் என்று சொன்ன தமிழ்சிறி அவர்களுடய கவனத்துக்கு இதைக் கொண்டு வருகின்றேன்.- முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்
குமாரசாமி, இந்த எண்ணத்தைத் தவிர்க்கலாம் என்பதே எனது நிலைப்பாடு. ஏராளன் ஏற்கனவே ஒரு அமைப்பை உருவாக்கி, அதனூடாக பல்வேறு செயற்திட்டங்களைச் சிறப்பாக முன்னெடுத்து வருகின்றார். அவரது அமைப்பிற்கும் செயற்பாடுகளுக்கும் தனித்துவமான சில கட்டுப்பாடுகளும் நடைமுறைகளும் உள்ளன. எனவே, எந்தவித இடையூறும் இல்லாமல் அவர் தனது புலம் அமைப்பில் தொடர்ந்து செயற்படுவதுதான் உகந்ததாக இருக்கும். அதே நேரத்தில், அவரது முயற்சிகளுக்கு உதவுவதை யாழ்கள உறுப்பினர்கள் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். “எலி வளையானாலும் தனி வளை வேண்டும்” என்பதுபோல, ஒவ்வொரு முயற்சியும் தனது தனித்தளத்தில் வளர்வதே சிறந்தது. நாம் முன்னெடுக்க உள்ள அடிப்படை சுகாதார வசதி திட்டம் தனித்துவமானது. அதைச் செயற்படுத்துவதற்காக ‘முன்னோடி’ என்ற உதவி நிறுவனத்தை ஆரம்பிப்பது குறித்து ஏற்கனவே ஒரு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை யாரும் அதற்கு எதிரான கருத்தை முன்வைக்காததும் குறிப்பிடத்தக்கது. மேலும், ஏராளனும் இதற்கு தனது ஒப்புதலை வழங்கியுள்ளார். தற்சமயம், அவர் இந்தத் திட்டத்திற்கு தன்னாலான உதவிகளை வழங்க முன்வந்துள்ளதும் மகிழ்ச்சியளிக்கிறது. ‘முன்னோடி’ தற்போது ஒரு திட்டத்தை கையில் எடுத்துள்ளது. ஆகவே, அதை உறுதியுடன் செயற்படுத்துவோம். ‘முன்னோடி’க்கு தனியான கணக்கு இருப்பது பங்களிப்பாளர்களுக்கு வெளிப்படைத்தன்மையையும் நமக்குச் செயற்பாட்டு இலகுவையும் அளிக்கும். துளித் துளியாகச் சேர்ப்போம். எதிர்காலத்தில் அது நிறைந்த குடமாக மாறலாம். - கிறுக்கல்கள்
Important Information
By using this site, you agree to our Terms of Use.