Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

  1. குளிர்காலத்தில் தண்ணீர் குறைவாக குடித்தால் மாரடைப்பு ஏற்படுமா? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,குளிர் காலத்தில் நாம் வழக்கமாக குறைந்த அளவு தண்ணீரையே குடிக்கிறோம் (சித்தரிப்புப் படம்) கட்டுரை தகவல் சுப் ராணா பிபிசி இந்திக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் கோடை வெப்பத்தில் வியர்க்கும்போது, எப்போதும் கையில் ஒரு தண்ணீர் பாட்டிலை வைத்திருப்போம். வீட்டை விட்டு வெளியே செல்லும் போதும், திரும்பி வரும் வழியிலும், வீட்டிற்கு வந்த பிறகும் தண்ணீர் குடித்துக்கொண்டே இருப்போம். ஆனால் குளிர்காலம் வந்தவுடன் அனைத்தும் மாறிவிடுகிறது. தண்ணீர் பாட்டிலுக்கும் நமக்குமான தூரம் சற்றே அதிகரிக்கிறது. குளிர்காலத்தில் ஏன் தாகம் எடுப்பதில்லை என்பதை நீங்கள் கவனித்துள்ளீர்களா? குளிர்காலத்தில் உடலுக்கு அதிக தண்ணீர் தேவைப்படும் என்று மருத்துவர்கள் அடிக்கடி கூறுகிறார்கள். ஆனால் குளிர்காலத்தில் தாகம் குறைவாகவே எடுக்கிறது ஏன்?? தண்ணீரை குறைந்த அளவில் குடிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் என்ன? இதனால் அதிகம் பாதிக்கப்படுவது குழந்தைகளா அல்லது முதியவர்களா? குளிர்காலத்தில் தாகம் எடுக்காதது ஏன்? டெல்லி ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையின் மருத்துவத் துறை இயக்குநர் மருத்துவர் புலின் குமார் குப்தா கூறுகையில், "குளிர் காலத்தில் நமது தாகம் கணிசமாகக் குறைகிறது. நமக்கு குறைவாகவே வியர்க்கும், அதனால் உடலுக்குக் குறைந்த அளவு தண்ணீரே தேவைப்படுவதைப் போல நாம் உணர்கிறோம்," என்று விளக்கினார். "பலர், குறிப்பாக முதியவர்கள் மற்றும் பணிக்குச் செல்பவர்கள், அதிக தண்ணீர் குடித்தால் அடிக்கடி கழிவறைக்குச் செல்ல வேண்டியிருக்கும் என்று நினைத்து, வேண்டுமென்றே தண்ணீரை குறைவாகக் குடிக்கிறார்கள்" என்றார். மேலும், "கோடைக் காலத்தைப் போலவே குளிர் காலத்திலும் உடலுக்கு அதே அளவிலான தண்ணீர் தேவை என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. வீடுகள் மற்றும் அலுவலகங்களில் உள்ள ஹீட்டர்கள், டிரையர்கள் மற்றும் உட்புற வெப்பமூட்டும் அமைப்புகள் காற்றை மிகவும் வறண்டதாக மாற்றுகின்றன. இது நீர் இழப்பை மேலும் அதிகரிக்கிறது" என்றும் அவர் குறிப்பிட்டார். நாம் குறைந்த அளவு தண்ணீரைக் குடிப்பதால், உடலில் தொடர்ந்து நீர் இழப்பு ஏற்பட்டு, அது நாள்பட்ட நீர்ச்சத்துக் குறைபாட்டிற்கு வழிவகுக்கும் என்றார் அவர் பட மூலாதாரம்,Getty Images அமெரிக்க இதய சங்கத்தின் 2019ஆம் ஆண்டு ஆய்வின்படி, நீண்ட காலம் குறைந்த அளவில் தண்ணீர் குடிப்பவர்களுக்கு நாள்பட்ட சிறுநீரக நோய், சிறுநீரக கற்கள் மற்றும் சிறுநீர் பாதையில் நோய்த்தொற்றுகள் ஏற்படுவதற்கான அபாயம் அதிகம் உள்ளது. "குளிர் அதிகரிக்கும்போது, வெப்பத்தைப் பாதுகாக்க புற ரத்த நாளங்களை உடல் சுருக்குகிறது" என்று மெட்டாமார்போசிஸ் (ஒரு ஆரோக்கியம் சார்ந்த தளம்) அமைப்பின் தலைமை செயல் அதிகாரியும், ஆரோக்கியம் தொடர்பான ஆலோசகர் மற்றும் உணவு நிபுணருமான திவ்யா பிரகாஷ் கூறுகிறார். "இதனால் உடலின் மையப் பகுதிகளில் ரத்தத்தின் அளவு அதிகரிக்கிறது. இதனால் உடல் எல்லாம் சரியாக இருப்பதாகவும், தண்ணீர் பற்றாக்குறை இல்லை என்றும் உணர்கிறது. இதன் காரணமாக, தாகம் எடுக்கும் உணர்வு 40% வரை குறையலாம். ஆனால் உடலின் அடிப்படைத் தண்ணீர் தேவையில் வானிலை சூழல் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது, அந்தத் தேவை எப்போதுமே சுமார் 2.5 முதல் 3.5 லிட்டர் வரை இருக்கும்." என்றார் அவர் பட மூலாதாரம்,Getty Images குறைவாக தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் தீமைகள் நமது உடலில் சுமார் 60% நீர் உள்ளது. இதுகுறித்துப் பேசிய மருத்துவர் புலின் குமார் குப்தா, "இந்த நீர் ரத்தத்தில் உள்ளது. ரத்தத்தின் மூலமாகத்தான் ஆக்சிஜன், ஊட்டச்சத்துகள் மற்றும் பிற முக்கியமான பொருட்கள் முழு உடலின் செல்களுக்கும் சென்றடைகின்றன," என்கிறார். "நீரின் அளவு குறையும்போது, ரத்தம் அடர்த்தியாகிறது. இது மூளை செயலிழப்பு மற்றும் மாரடைப்பு அபாயத்தை கணிசமாக அதிகரிக்கிறது. இந்த அபாயம் குறிப்பாக குளிர் காலத்தில் அதிகமாக இருக்கும். அடர்த்தியான ரத்தத்தை உடல் முழுவதும் செலுத்துவதற்கு இதயம் கடினமாக உழைக்க வேண்டியுள்ளது, இது ரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது." உடலில் நீரின் அளவு குறைவாக இருப்பது ரத்த நாளங்களைச் சுருங்கச் செய்து, மூளை ரத்தக் கசிவு ஏற்படும் அபாயத்தை அதிகரிப்பதாக அவர் கூறுகிறார். இது சிறுநீரகங்களுக்கு அழுத்தத்தைக் கொடுத்து, சிறுநீரகக் கற்கள் உருவாகும் வாய்ப்பைக் கணிசமாக அதிகரிக்கிறது என்றார் அவர். மருத்துவர்களின் கூற்றுப்படி, குறைந்த அளவு தண்ணீர் குடிப்பது செரிமான மண்டலத்தைப் பாதித்து, மலச் சிக்கல், அஜீரணம் போன்ற பிரச்னைகளை உண்டாக்குகிறது. மேலும், நீண்ட காலம் குறைந்த அளவு தண்ணீர் குடிப்பது சோர்வு, தலைவலி, தலைச்சுற்றல், தோல் வறட்சி போன்ற பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனையின் முன்னாள் உணவு நிபுணரும், 'ஒன் டயட் டுடே' அமைப்பின் நிறுவனருமான மருத்துவர் அனு அகர்வால் இது தொடர்பாகப் பேசும்போது, "அதிகப்படியான மந்தநிலை, பலவீனம், சோர்வு, அதிகரித்த மன அழுத்தம், பதற்றம் (நீர்ச்சத்துக் குறைபாடு கார்டிசோல் ஹார்மோன் சுரப்பை அதிகரிக்கிறது), தலைச்சுற்றல், ஆக்சிஜன் பற்றாக்குறை போன்ற உணர்வுகள் என நீர்ச்சத்துக் குறைபாட்டை உணர்த்தும் சில சமிக்ஞைகளை நம் உடல் வெளியிடுகிறது. இந்த சமிக்ஞைகள் அனைத்தும் உடல் செல்களுக்கு அதிக தண்ணீர் தேவைப்படுவதைக் குறிக்கின்றன," என்றார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,நெருப்பால் உடலை சூடுபடுத்துவது உடலிலுள்ள நீரின் அளவை குறைக்கிறது. யாருக்கு அதிக ஆபத்து உள்ளது? முதியவர்கள், ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் உள்ளவர்கள், இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் அல்லது ரத்தத்தின் அடர்த்தியைக் குறைக்கும் மருந்துகளை உட்கொள்பவர்களுக்கு குறைந்த அளவு தண்ணீர் குடிப்பதால் அதிக பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாகக் கூறுகிறார் மருத்துவர் அனு அகர்வால். குறைந்த அளவு தண்ணீர் குடிப்பதன் விளைவுகள் வெவ்வேறு வயதுப் பெண்களுக்கு வெவ்வேறு விதமாக இருக்கும் என்றும் மருத்துவர் அனு அகர்வால் விளக்குகிறார். ''இளம் பருவத்தினர் மற்றும் நடுத்தர வயதுடைய (40 வயது வரை) பெண்களுக்கு ஏற்கெனவே உடலில் ஹார்மோன் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கும். மாதவிடாயின்போது ஏற்படும் ரத்த இழப்பு உடலில் நீர்ச்சத்து குறைய வழிவகுக்கிறது. இதனால் மாதவிடாய் வலி அதிகரிக்கிறது, மேலும் வாயு மற்றும் வயிறு உப்பசம் போன்ற பிரச்னைகள் பொதுவாகக் காணப்படுகின்றன.'' தொடர்ந்து பேசிய அவர், "குறைந்த அளவு தண்ணீர் குடிப்பது ரத்த ஓட்டத்தைக் குறைக்கிறது, நச்சுகள் உடலில் தங்கி கட்டிகள் உருவாக வழிவகுக்கிறது" என்றார். பட மூலாதாரம்,Getty Images தண்ணீர் குடிக்க சரியான வழி என்ன? தண்ணீர் குடிக்க உகந்த வழி குறித்தும் மருத்துவர் அனு அகர்வால் விவரித்தார் குளிர்காலத்தில், காலையில் தூக்கத்தில் இருந்து எழுந்த 2-3 மணிநேரத்திற்குள் 2-4 கிளாஸ் தண்ணீரை மெதுவாகக் குடிக்கவும். உங்கள் தூக்கச் சுழற்சி பாதிக்கப்படுவதைத் தவிர்க்க, மாலை 5 மணிக்குள் உங்கள் தினசரி தண்ணீர் தேவையைப் பூர்த்தி செய்து கொள்ளுங்கள். மாலைக்கு பிறகு அதிக தண்ணீர் குடிப்பது அடிக்கடி சிறுநீர் கழிப்பதற்கும் தூக்கம் கலைவதற்கும் வழிவகுக்கும். மேலும், "குளிர் காலத்தில் மக்கள் தண்ணீருக்குப் பதிலாகத் தேநீர், காபி, சூப் அல்லது மிக அதிக சூடான தண்ணீரைக் குடிக்கிறார்கள். ஆனால் மிக அதிக சூடான தண்ணீரைக் (50-60 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கு மேல்) குடிப்பது நல்லதல்ல. ஏனெனில் நமது உடலின் இயல்பான வெப்பநிலை சுமார் 37 டிகிரி செல்சியஸ். இத்தகைய சூழ்நிலையில், வெதுவெதுப்பான தண்ணீரைக் குடிப்பதே சரியான வழியாகும். இது உடலுக்குச் சிறந்தது மற்றும் எளிதில் உறிஞ்சப்படும் - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cwy1xn7j2jyo
  2. பருத்தித்துறை நீதிமன்றில் களஞ்சியப்படுத்தப்பட்ட 600 கிலோ கேரளா கஞ்சா தீயிட்டு அழிப்பு Published By: Vishnu 04 Jan, 2026 | 07:18 PM யாழ்ப்பாணம் - பருத்தித்துறை நீதாவன் நீதிமன்றில் சான்று பொருட்களாக களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த சுமார் 600 கிலோ கிராம் கேரளா கஞ்சா நீதவான் முன்னிலையில் தீயிட்டு அழிக்கப்பட்டுள்ளன. பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நியாயதிக்க எல்லைகளுக்குள் கடந்த காலங்களில பல்வேறு சந்தர்ப்பங்களில் கைப்பற்றபட்ட கஞ்சா போதைப் பொருட்கள் வழக்கின் சான்று பொருட்களாக நீதிமன்றில் பதிவாளரின் பொறுப்பில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்தன. அந்நிலையில் அவற்றில் வழக்குகள் முடிவுற்று, நீதவானினால் அழிக்க உத்தரவிட்டப்பட்ட சுமார் 600 கிலோ கேரளா கஞ்சா நீதாவனின் நேரடி கண்காணிப்பில் பொலிகண்டி குப்பைத்திடலில் அவை தீயிட்டு அழிக்கப்பட்டன. https://www.virakesari.lk/article/235214
  3. "வகுப்புவாத அழுத்தம்" - டி20 உலகக் கோப்பையில் இந்தியாவில் விளையாட மறுக்கும் வங்கதேசம் பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு, 3 மணி நேரங்களுக்கு முன்னர் 2026 டி20 உலகக் கோப்பையில் விளையாடுவதற்காக, வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவுக்குப் பயணம் செய்யாது என்று வங்கதேச கிரிக்கெட் வாரியம் (BCB) முடிவு செய்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை மதியம் நடந்த வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் 17 இயக்குநர்கள் அடங்கிய வாரியக் கூட்டத்தில் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது. ஐசிசிக்கு வங்கதேச கிரிக்கெட் வாரியம் இது தொடர்பாக மின்னஞ்சல் அனுப்ப உள்ளது. மேலும், வங்கதேச அணி பங்கேற்கும் போட்டிகள் இலங்கையில் நடைபெறும் வகையில், போட்டி நடைபெறும் இடத்தை மாற்றுமாறு வங்கதேச கிரிக்கெட் வாரியம் ஐசிசியிடம் முறையிட உள்ளது. பாகிஸ்தான் ஏற்கனவே தனது அனைத்துப் போட்டிகளையும் இலங்கையில் விளையாட உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக வங்கதேச கிரிக்கெட் வாரியம் பின்னர் விரிவான அறிக்கை வெளியிடும் என வங்கதேச கிரிக்கெட் வாரிய இயக்குநர் நஜ்முல் அபதீன் ஃபஹீம் கூறினார். 2026 ஐசிசி டி20 உலகக் கோப்பையை இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்துகின்றன. இந்தத் தொடர் பிப்ரவரி 7 ஆம் தேதி தொடங்க உள்ளது. வங்கதேசத்தின் முதல் போட்டி கொல்கத்தாவில் வெஸ்ட் இண்டீஸ்-க்கு எதிராக நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. பட மூலாதாரம்,Getty Images முஸ்தஃபிசுர் ரஹ்மான் விவகாரத்தில் தொடங்கிய சர்ச்சை முன்னதாக, ஐபிஎல் அணியான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணியிலிருந்து முஸ்தஃபிசுர் ரஹ்மான் நீக்கப்பட்டதற்கு, வங்கதேசத்தின் இடைக்கால அரசாங்கம் கடும் எதிர்வினையாற்றியுள்ளது. "வங்கதேச கிரிக்கெட் வீரர்களுக்கும் நாட்டிற்கும் ஏற்படும் அவமானத்தை எந்தச் சூழ்நிலையிலும் பொறுத்துக்கொள்ள முடியாது" என்று இளைஞர் மற்றும் விளையாட்டு விவகார ஆலோசகர் ஆசிஃப் நஸ்ருல் கூறியிருந்தார். 2026 ஐபிஎல் தொடரிலிருந்து வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தஃபிசுர்ரஹ்மான் நீக்கப்பட்டதை வன்மையாகக் கண்டித்த அவர், "வங்கதேச கிரிக்கெட், கிரிக்கெட் வீரர்கள் மற்றும் வங்கதேசத்திற்கு ஏற்படும் எந்த அவமானத்தையும் எந்தச் சூழ்நிலையிலும் நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம். அடிமைத்தனத்தின் நாட்கள் முடிந்துவிட்டன," என்றார். ஆசிஃப் நஸ்ருல் தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், "வகுப்புவாதக் குழுக்களின் அழுத்தத்தின் கீழ் பிசிசிஐ, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை முஸ்தஃபிசுர் ரஹ்மானை அணியிலிருந்து நீக்குமாறு உத்தரவிட்டது," என்று குற்றம் சாட்டியிருந்தார். இந்த முழு விவகாரத்தையும் ஐசிசி-க்கு விளக்கி கடிதம் எழுதுமாறு வங்கதேச கிரிக்கெட் வாரியத்தை அவர் கேட்டுக்கொண்டார். ஆசிஃப் நஸ்ருல் அவரது பதிவில், "ஒரு வங்கதேச கிரிக்கெட் வீரர் ஒப்பந்தம் இருந்தபோதிலும் இந்தியாவில் விளையாட முடியாதபோது, முழு வங்கதேச கிரிக்கெட் அணியும் உலகக் கோப்பையில் விளையாட இந்தியா செல்வது பாதுகாப்பானது என்று உணர முடியாது என்பதை வாரியம் தெளிவுபடுத்த வேண்டும்," என்று எழுதினார். இத்துடன், வங்கதேசத்தில் ஐபிஎல் ஒளிபரப்பை நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு தகவல் மற்றும் ஒளிபரப்பு ஆலோசகரிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். பட மூலாதாரம்,Getty Images முஸ்தஃபிசுர் ரஹ்மானின் கருத்து என்ன? டிசம்பர் 16 ஆம் தேதி அபுதாபியில் நடைபெற்ற ஏலத்தில் கேகேஆர் அணி வங்கதேச வேகப்பந்து வீச்சாளரான முஸ்தஃபிசுர் ரஹ்மானை ரூ.9.2 கோடிக்கு வாங்கியிருந்தது. இருப்பினும், பிசிசிஐ உத்தரவின் காரணமாக கேகேஆர் அணி முஸ்தஃபிசுர் ரஹ்மானை விடுவிக்க வேண்டியிருந்தது. இந்த விவகாரம் குறித்து முஸ்தஃபிசுர் ரஹ்மான், "அவர்கள் என்னை விடுவித்தால் நான் என்ன செய்ய முடியும்?" என்று கூறியிருந்தார். வங்கதேச கிரிக்கெட் வாரியத்தைத் தவிர, வங்கதேச கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் தபிஷ் அவலும் ஐபிஎல்-லிருந்து முஸ்தஃபிசுர் நீக்கப்பட்டதற்கு ஆழ்ந்த ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முஸ்தஃபிசுர் ரஹ்மானை அவரது கிரிக்கெட் திறமையின் அடிப்படையிலேயே தேர்ந்தெடுத்தது, ஆனால் "அரசியல் தலையீடு காரணமாக அவர் போட்டியிலிருந்து நீக்கப்பட்டார், இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது" என்று அவர் கூறினார். 'மக்களை ஒன்றிணைக்கவும், பிளவுகளைக் குறைக்கவும் விளையாட்டுக்கு ஒரு அசாதாரண சக்தி உள்ளது' என்று அவர் கூறினார். 'பிளவுகளை உருவாக்க அல்லாமல், பரஸ்பர புரிதலையும் மரியாதையையும் வளர்க்க விளையாட்டு பயன்படுத்தப்பட வேண்டும்' என்றும் அவர் குறிப்பிட்டார். இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c23r8xle38ro
  4. வெனிசுலா ஜனாதிபதி மற்றும் மனைவியை விடுவிக்குமாறு அமெரிக்காவை சீனா வலியுறுத்தியுள்ளது Published By: Vishnu 04 Jan, 2026 | 06:48 PM வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியின் தனிப்பட்ட பாதுகாப்பை உறுதிசெய்து உடனடியாக அவர்களை விடுவிக்குமாறு சீனா அமெரிக்காவை வலியுறுத்துகிறது. குறித்த சம்பவத்தை சீனா கடுமையாக எதிர்க்கிறது என்று சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். அமெரிக்காவின் நடவடிக்கையை கண்டித்து பிரேசில், பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளும் அறிக்கைகளை வெளியிட்டுள்ளன. இராணுவ இலக்குகள் உட்பட பல இடங்களில் அமெரிக்கா நடத்திய தொடர் தாக்குதல்களைத் தொடர்ந்து, வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவும் அவரது மனைவி சிலியா புளோரஸும் 3ஆம் திகதி சனிக்கிழமை அமெரிக்கப் படைகளால் கைது செய்யப்பட்டனர், மேலும் அவர்கள் இப்போது நியூயார்க்கிற்கு அழைத்துச் செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/235212
  5. உலக கிண்ணத்திற்காக இந்தியா செல்ல பங்களாதேஷ் அணி மறுப்பு Jan 4, 2026 - 06:21 PM எதிர்வரும் இருபதுக்கு 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் இந்தியாவில் நடைபெறவுள்ள போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியா செல்வதை பங்களாதேஷ் அணி மறுத்துள்ளது இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் அரசியல் ரீதியான பதற்றமான சூழ்நிலையில், பங்களாதேஷ் வீரர்களின் "பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை" கருத்திற்கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, இத்தொடரில் பங்களாதேஷ் அணி இந்தியாவில் விளையாடவிருந்த போட்டிகளை இலங்கைக்கு மாற்றுமாரு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மற்றும் இந்தியா இணைந்து நடத்தும் உலக கிண்ண இருபதுக்கு 20 தொடர் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ளது. இத்தொடரில், பங்களாதேஷ் அணி கொல்கத்தாவில் 3 போட்டிகளில் விளையாடவிருந்தது. எதிர்வரும் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக விளையாடவிருந்த முஸ்தபிசுர் ரஹ்மான் திடீரென அந்த அணியிலிருந்து விடுவிக்கப்பட்டமை, இரு நாடுகளுக்கும் இடையிலான இந்தப் பதற்றத்திற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. பங்களாதேஷில் வாழும் சிறுபான்மையினருக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலேயே முஸ்தபிசுர் இவ்வாறு நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. https://adaderanatamil.lk/news/cmjzqczd403i3o29ngw2om12w
  6. பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் மோசமான பல கூறுகள் புதிய வரைவிலும் உள்ளன ; வரைவை உடன் வாபஸ் பெறுமாறு அரசாங்கத்திடம் சமூக ஊடகப் பிரகடனத்துக்கான கூட்டிணைவு வலியுறுத்தல் 04 Jan, 2026 | 02:21 PM (நா.தனுஜா) பயங்கரவாதத்தடைச்சட்டம் நிராகரிக்கப்படுவதற்குக் காரணமாக அமைந்த பல்வேறு அடிப்படைக் கூறுகள், அதற்குப் பதிலீடாகப் புதிதாக வெளியிடப்பட்டுள்ள வரைவில் உள்வாங்கப்பட்டுள்ளன. ஜனநாயகக் கோட்பாடுகள் வலுவிழப்பதைப் புறந்தள்ளிவிட்டு, தேசிய பாதுகாப்பை மாத்திரம் தனித்து முன்னிலைப்படுத்த முடியாது. எனவே இப்புதியவரைவை அரசாங்கம் உடனடியாக வாபஸ் பெறவேண்டும் என சமூக ஊடகப் பிரகடனத்துக்கான கூட்டிணைவு வலியுறுத்தியுள்ளது. தற்போது நடைமுறையில் உள்ள 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத்தடைச் சட்டத்துக்குப் பதிலாக பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம் எனும் புதிய சட்டத்தைக் கொண்டுவருவதற்கு அவசியமான நடவடிக்கைகள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதனை இலக்காகக்கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள சட்ட வரைவு நீதியமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளப்பக்கத்தில் வெளியிடப்பட்டிருப்பதுடன், அதுபற்றிய கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதிக்கு முன்னர் தமக்கு அனுப்பிவைக்குமாறு நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார அறிவித்துள்ளார். அதற்கமைய நாடளாவிய ரீதியில் மனித உரிமைகள் நிலைவரத்தை மேம்படுத்தும் நோக்கில் சிவில் சமூக அமைப்புக்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் இணைந்து உருவாக்கிய சமூக ஊடகப் பிரகடனத்துக்கான கூட்டிணைவு எனும் அமைப்பு இப்புதிய வரைவு தொடர்பான தமது கரிசனைகளை உள்ளடக்கி அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டிருக்கும் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவானது, தற்போது நடைமுறையிலிருக்கும் பயங்கரவாதத்தடைச்சட்டத்துடன் ஒப்பிடுகையில் அடையப்பட்டிருக்கும் மனித உரிமைகள் சார்ந்த பெருவெற்றி போல் காண்பிக்கப்படுகின்றது. அந்த பிம்பத்தின் விளைவாக நிர்வாக ரீதியான தடுத்துவைப்பு, இராணுவ அதிகாரங்கள், கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரம் சார்ந்த குற்றங்கள் என்பன உள்ளடங்கலாக அவ்வரைவில் உள்வாங்கப்பட்டுள்ள மிகமோசமான அடிப்படைகள் பற்றிய தெளிவற்ற தன்மை நிலவுகின்றது. பயங்கரவாதத்தடைச்சட்டம் நிராகரிக்கப்படுவதற்குக் காரணமாக அமைந்த பல்வேறு அடிப்படைக் கூறுகள் இவ்வரைவில் உள்வாங்கப்பட்டுள்ளன. பயங்கரவாதக்குற்றங்கள் தொடர்பில் குற்றவியல் சட்டத்துடன் அவசியமேற்படும் பட்சத்தில் அவசரகால வழிகாட்டல்களை இணைந்துப் பிரயோகிப்பதை விடுத்து, பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம் பிரயோகிக்கப்படுமாயின், அது சம்பந்தப்பட்ட நபருக்கான பாதுகாப்பு தளர்த்தப்பட்ட குற்றவியல் அடிப்படையுடன், பரந்துபட்ட நிறைவேற்றதிகாரப் பிரயோகத்துக்கும் இடமளிக்கும். பரந்துபட்ட அதிகார வழங்கலுக்கு வாய்ப்பளிக்கும் இச்சட்ட வரைவின் அடிப்படை நோக்கம், அதன் பெயரில் உள்ளவாறு பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாப்பதே தவிர, வன்முறைகளிலிருந்து சாதாரண மக்களைப் பாதுகாப்பது அல்ல. ஜனநாயகக் கோட்பாடுகள் வலுவிழப்பதைப் புறந்தள்ளிவிட்டு, தேசிய பாதுகாப்பை மாத்திரம் தனித்து முன்னிலைப்படுத்த முடியாது. எனவே இவ்வரைவை உடன் வாபஸ் பெறுமாறும், சர்வதேச மனித உரிமைகள் நியமங்களுக்கு ஏற்புடையவாறு புதிய சட்டத்தை உருவாக்குவது குறித்து சகல தரப்பினருடனும் பரந்துபட்ட கலந்துரையாடல்களை முன்னெடுக்குமாறும் அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம் என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/235179
  7. 2026 கல்வி ஆண்டு நாளை ஆரம்பம்: கல்வி அமைச்சு அறிவிப்பு Jan 4, 2026 - 08:50 AM 2026ஆம் கல்வி ஆண்டின் முதல் தவணையின் முதற்கட்ட நடவடிக்கைகளுக்காக அனைத்துப் பாடசாலைகளும் நாளை (05) திறக்கப்படவுள்ளன. இதற்கமைய, அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் மற்றும் பிரிவெனாக்களில் நாளை முதல் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 2026ஆம் கல்வி ஆண்டின் முதல் தவணை நடவடிக்கைகள், கடந்த டிசம்பர் 09ஆம் திகதி வெளியிடப்பட்ட சுற்றுநிருபத்திற்கு அமைவாக முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிங்கள மற்றும் தமிழ் மொழிமூலப் பாடசாலைகளுக்கான 2025ஆம் கல்வி ஆண்டு கடந்த டிசம்பர் 22ஆம் திகதியும், முஸ்லிம் பாடசாலைகளுக்கு டிசம்பர் 26ஆம் திகதியும் நிறைவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://adaderanatamil.lk/news/cmjz5z4m303hko29ny8bybbd3
  8. 2024 ரி20 உலகக் கிண்ணத்தில் விளையாடிய 7 வீரர்கள் தென் ஆபிரிக்காவின் 2026 குழாத்திலும் இடம்பெறுகின்றனர் Published By: Vishnu 02 Jan, 2026 | 09:56 PM (நெவில் அன்தனி) இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஐக்கிய அமெரிக்காவிலும் கரிபியன் தீவுகளிலும் கூட்டாக நடத்தப்பட்ட ஐசிசி ரி20 உலகக் கிண்ணத்தில் தென் ஆபிரிக்கா சார்பாக விளையாடிய 7 வீரர்கள், இந்த வருடத்துக்கான ரி20 உலகக் கிண்ண குழாத்திலும் இடம்பெறுகின்றனர். வழமையான ரி20 அணித் தலைவர் ஏய்டன் மார்க்ராம், குவின்டன் டி கொக், டேவிட் மில்லர், கேஷவ் மஹாராஜ், மார்க்கோ ஜென்சன், கெகிசோ ரபாடா, அன்றிச் நோக்யா ஆகிய எழுவரே தென் ஆபிரிக்காவின் ரி20 உலகக் கிண்ண குழாத்தில் மீண்டும் இடம்பெறுகின்றனர். உபாதை காரணமாக இரண்டரை மாதங்கஞக்கு மேல் ஓய்வுபெற்றுவந்த கெகிசோ ரபாடா வேக்கப்பந்து வீச்சில் முன்னணி வீரராக இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார். அவருடன் அன்றிச் நோக்யா, மார்க்கோ ஜென்சன், கோபின் பொஷ், லுங்கி நிகிடி, க்வேனா மபாக்கா ஆகியோர் மற்றைய ஐந்து வேகப்பந்து வீச்சாளர்களாக குழாத்தில் இடம்பெறுகின்றனர். அவர்களில் மார்க்கோ ஜென்சென் சிறந்த சகலதுறை வீரராவார். மபாக்கா, பொஷ் ஆகியோருடன் துடுப்பாட்ட வீரர்களான டிவோல்ட் ப்ரெவிஸ், டோனி டி ஸோர்ஸி, ஜேசன் ஸ்மித், ஜோர்ஜ் லிண்டே, டொனவன் பெரெய்ரா ஆகியோர் முதல் தடவையாக ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடவுள்ளனர். இடதுகை சுழல்பந்துவீச்சாளர்களான கேஷவ் மஹாராஜ், ஜோர்ஜ் லிண்டே ஆகிய இருவரும் தொடர்ந்து அணியில் இடம்பெறுவதுடன் அணித் தலைவர் மார்க்ராம், பெரெய்ரா ஆகிய இருவரும் வலதுகை பந்துவீச்சாளர்களாக விளையாடுவர். பெரெய்ரா விக்கெட் காப்பாளராகவும் விளையாடக் கூடியவர். தென் ஆபிரிக்க குழாத்தில் இடம்பெறும் வீரர்கள் அனைவரும் இந்த மாதம் SA20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவுள்ளனளர். அதனைத் தொடர்ந்து மேற்கிந்தியத் தீவுகளுடன் தனது சொந்த நாட்டில் ரி20 தொடரில் தென் ஆபிரிக்கா விளையாடும். குழு டியில் இடம்பெறும் தென் ஆபிரிக்காவின் போட்டி விபரங்கள் பெப்ரவரி 9: எதிர் கனடா (அஹமதாபாத்) பெப்ரவரி 11: எதிர் ஆப்கானிஸ்தான் (அஹமதாபாத்) பெப்ரவரி 14: எதிர் நியூஸிலாந்து (அஹமதாபாத்) பெப்ரவரி 18: எதிர் ஐக்கிய அரபு இராச்சியம் (டெல்ஹி) ரி20 உலகக் கிண்ண தென் ஆபிரிக்க குழாம் ஏய்டன் மார்க்ராம் (தலைவர்), கோபின் பொஷ், டிவோல்ட் ப்ரெவிஸ், குவின்டன் டி கொக், டோனி டி ஸோர்ஸி, டொனவன் பெரெய்ரா, மார்க்கோ ஜென்சன், ஜோர்ஜ் லிண்டே, கேஷவ் மஹாராஜ், க்வேனா மபாக்கா, டேவிட் மில்லர், லுங்கி நிகிடி, அன்றிச் நோக்யா, கெகிசோ ரபாடா, ஜேசன் ஸ்மித். https://www.virakesari.lk/article/235078
  9. வெனிசுவேலா மீதான அமெரிக்க தலையீடு : ஜே.வி.பி கடும் கண்டனம்! Published By: Digital Desk 1 04 Jan, 2026 | 03:07 PM வெனிசுவேலாவிற்கு எதிரான அமெரிக்காவின் இராணுவத் தலையீட்டை கடுமையாகக் கண்டித்து, வொஷிங்டன் இறையாண்மையை மீறுவதாக மக்கள் விடுதலை முன்னணி கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை (04) மக்கள் விடுதலை முன்னணி அறிக்கையொன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது. அந்த அறிக்கையில், சுதந்திரமான, இறைமையுள்ள நாடான வெனிசுவேலாவுக்குள் அத்துமீறி நுழைந்து, அங்கு மக்கள் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியைக் கடத்திச் சென்று, அமெரிக்கா வெனிசுலாவுக்கு எதிராக மேற்கொண்ட இராணுவ ரீதியிலான ஆக்கிரமிப்புத் தலையீட்டை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம். உலகின் எந்தவொரு சுதந்திர, இறைமையுள்ள நாட்டைப் போலவே வெனிசுவேலாவினதும் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் மற்றும் ஆட்சியாளர்கள் யார் என்பதைத் தீர்மானிக்கும் இறைமை அதிகாரம் அந்நாட்டு மக்களுக்கே உரியது. அதனை மீறுவதற்கு எந்தவொரு வல்லரசுக்கும் உரிமை இல்லை. நவீன சமூகமும், அரச நிர்வாகமும் மிகவும் பண்பட்டதாக இருக்க வேண்டும் என்பது பொதுவான நம்பிக்கையாகும். ஜனநாயகம், மனித உரிமைகள், நாடுகளின் சுதந்திரம் மற்றும் இறைமை என்பன உலகமே ஏற்றுக்கொள்ளும் கோட்பாடுகளாகும். எந்தக் காரணத்திற்காகவும் அவற்றை மீறி, நாடுகளுக்குள் இராணுவத் தலையீடுகள் அல்லது ஆக்கிரமிப்புகளை மேற்கொள்வது நவீன நாகரிக உலகில் நியாயமானதல்ல. இத்தகைய சூழ்நிலையில், அமெரிக்காவினால் வெனிசுவேலாவுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பலவந்தமான இராணுவத் தலையீட்டை உலகில் எவரும் அங்கீகரிக்க மாட்டார்கள் என நாம் உறுதியாக நம்புகிறோம். எனவே, அமெரிக்கா வெனிசுலாவுக்கு எதிராக மேற்கொண்ட இந்த இராணுவ ஆக்கிரமிப்பைக் கண்டிக்கும் மக்கள் விடுதலை முன்னணியினரான நாம், வெனிசுவேலாவின் இறைமை மற்றும் சுதந்திரத்திற்காகக் குரல் கொடுக்கின்றோம் எனக் குறிபிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/235186
  10. வெறும் 2 மணி 20 நிமிடங்களில் மதுரோவை பிடித்த அமெரிக்கா - ஒரு வீரரை கூட இழக்காமல் செய்து முடித்தது எப்படி? பட மூலாதாரம்,Donald Trump/ Truth Social கட்டுரை தகவல் கேரத் எவான்ஸ் வாஷிங்டன் 3 மணி நேரங்களுக்கு முன்னர் மாதக்கணக்கில், அமெரிக்க உளவாளிகள் வெனிசுவேலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவின் ஒவ்வொரு அசைவையும் கண்காணித்து வந்தனர். வெனிசுவேலா அரசுக்குள் இருந்தபடியே உளவு சொன்ன ஒருவரையும் (source) உள்ளடக்கிய ஒரு சிறிய குழு, 63 வயதான மதுரோ எங்கு உறங்குகிறார், என்ன சாப்பிடுகிறார், என்ன உடை அணிகிறார் என்பதோடு, உயர்மட்ட ராணுவ அதிகாரிகள் கூறுவதுபோல், "அவரின் செல்லப்பிராணிகள்" வரையிலும் கண்காணித்து வந்தது. அதன்பிறகு, டிசம்பர் தொடக்கத்தில், 'ஆபரேஷன் அப்சல்யூட் ரிசால்வ்' என்று பெயரிடப்பட்ட ஒரு திட்டம் இறுதி செய்யப்பட்டது. இது பல மாதங்கள் நீடித்த நுட்பமான திட்டமிடல் மற்றும் ஒத்திகைகளின் விளைவாகும். இந்த ஒத்திகைகளில், அமெரிக்கப் படையினர் (Elite troops), தாங்கள் நுழைய வேண்டிய வழிகளைப் பயிற்சி செய்வதற்காக, மதுரோவின் கராகஸ் பாதுகாப்பு இல்லத்தின் உண்மையான, முழு அளவிலான பிரதியையும் உருவாக்கியிருந்தனர். பனிப்போருக்குப் பிறகு இல்லாத வகையில் லத்தீன் அமெரிக்காவில் அசாதாரணமான அமெரிக்க ராணுவத் தலையீட்டிற்கு வழிவகுத்த அந்தத் திட்டம் மிகவும் ரகசியமாகப் பாதுகாக்கப்பட்டது. இதுபற்றி, அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்படவோ அல்லது ஆலோசிக்கப்படவோ இல்லை. துல்லியமான விவரங்கள் அனைத்தும் தயாரான நிலையில், உயர்மட்ட ராணுவ அதிகாரிகள் தாக்குதலைத் தொடங்குவதற்கு உகந்த சூழ்நிலைகளுக்காக வெறுமனே காத்திருக்க வேண்டியிருந்தது. திட்டத்தின் ஆச்சரியக்கூறை (surprise element) அதிகப்படுத்த அவர்கள் விரும்பினார்கள் என்று அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர். நான்கு நாட்களுக்கு முன்னதாகவே அதிபர் டிரம்ப் ஒப்புதல் அளித்திருந்த போதிலும், சிறந்த வானிலைக்காகவும், மேகமூட்டம் குறைவாக இருப்பதற்காகவும் அவர்கள் காத்திருக்கத் தீர்மானித்ததால், ஒரு தவறான தொடக்கம் (false start) ஏற்பட்டது. "கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு முழுவதும் பல வாரங்களாக, அமெரிக்க ராணுவத்தைச் சேர்ந்த ஆண்களும் பெண்களும் தயாராக இருந்தனர். சரியான நேரத்திற்காகவும், அதிபர் உத்தரவுக்காகவும் அவர்கள் பொறுமையாகக் காத்திருந்தனர்" என்று நாட்டின் மிக உயர்ந்த பதவியில் உள்ள ராணுவ அதிகாரியான ஜெனரல் டான் கெய்ன் சனிக்கிழமை காலை ஒரு செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார். 'அதிர்ஷ்டமும் தெய்வ ஆசியும்' பணியைத் தொடங்குவதற்கான உத்தரவு அதிபரிடமிருந்து இறுதியாக வெள்ளிக்கிழமை இரவு 10:46 மணிக்கு (கிழக்கு நேர மண்டலம் Eastern Daylight Time EDT) வந்தது. "நாங்கள் இதை நான்கு நாட்களுக்கு முன்பு, மூன்று நாட்களுக்கு முன்பு, இரண்டு நாட்களுக்கு முன்பு செய்யவிருந்தோம். பின்னர் திடீரென்று வாய்ப்பு உருவானது. அவர்களைப் போகச் சொன்னோம்" என்று சனிக்கிழமை அதிகாலைத் தாக்குதலுக்குப் பிறகு, ஃபாக்ஸ் & ஃப்ரெண்ட்ஸ் (Fox & Friends) நிகழ்ச்சியில் கூறினார் டிரம்ப். "அவர் எங்களுக்கு அதிர்ஷ்டமும் கடவுள் ஆசியும் உடனிருக்கும் என்று கூறினார்" என்று தெரிவித்தார் ஜெனரல் கெய்ன். டிரம்பின் உத்தரவு கராகஸில் நள்ளிரவுக்குச் சற்று முன்பு வந்தது. இது இரவின் பெரும்பகுதி இருளில் செயல்பட ராணுவத்திற்கு அவகாசம் அளித்தது. அதன்பிறகு, வான்வழி, தரைவழி மற்றும் கடல்வழியாக இரண்டு மணி நேரம் இருபது நிமிடங்கள் நீடித்த அந்தப் பணி, வாஷிங்டனையும் உலகெங்கிலும் பலரையும் திகைக்க வைத்தது. அளவு மற்றும் துல்லியத்தின் அடிப்படையில், இது கிட்டத்தட்ட முன்னெப்போதும் இல்லாத ஒன்றாக இருந்தது. இது பல பிராந்திய சக்திகளிடமிருந்து உடனடி கண்டனங்களைப் பெற்றது. பிரேசில் அதிபர் லூலா டா சில்வா, வெனிசுவேலா தலைவரைக் சிறைபிடித்த வன்முறைச் செயல் முழு சர்வதேச சமூகத்திற்கும் மற்றொரு மிகவும் ஆபத்தான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியதாகக் கூறினார். டிரம்ப் வெள்ளை மாளிகையின் சூழல் அறியும் அறையிலிருந்து (Situation Room) இந்த நிகழ்வைப் பின்தொடரவில்லை. அதற்குப் பதிலாக, அவர் புளோரிடாவின் பாம் பீச்சில் உள்ள தனது மார்-எ-லாகோ கிளப்பில் தனது ஆலோசகர்களால் சூழப்பட்டிருந்தார். அங்கு அவர் சிஐஏ இயக்குநர் ஜான் ரேட்கிளிஃப் மற்றும் வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ ஆகியோருடன் சேர்ந்து ராணுவ நடவடிக்கையை நேரடிலையில் பார்த்தார். "பார்க்க நம்ப முடியாத ஒரு விஷயமாக அது இருந்தது" என்று டிரம்ப் சனிக்கிழமை கூறினார். "நடந்ததைப் பார்த்திருந்தால், அதாவது, நான் அதை ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியைப் பார்ப்பது போலப் பார்த்தேன். நீங்கள் அந்த வேகம், அந்த வன்முறை... ஆகியவற்றைப் பார்த்திருந்தால், அது ஒரு ஆச்சரியமான விஷயம். இந்த வீரர்கள் செய்தது ஒரு அற்புதமான வேலை." பட மூலாதாரம்,Donald Trump / TruthSocial படக்குறிப்பு,டிரம்ப் தனது புளோரிடா பண்ணை வீட்டிலிருந்து நடவடிக்கையை நேரலையில் பார்த்தார். கடந்த சில மாதங்களில், அதிபர் டிரம்ப், மதுரோ மீது போதைப்பொருள் கடத்தல் மற்றும் போதைப்பொருள் பயங்கரவாதம் (narco-terrorism) ஆகிய குற்றச்சாட்டுகளை முன்வைத்ததைத் தொடர்ந்து, அமெரிக்கா ஆயிரக்கணக்கான படைவீரர்களை அந்தப் பிராந்தியத்திற்கு அனுப்பியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, ஒரு விமானம் தாங்கிக் கப்பலும் டஜன்கணக்கான போர்க்கப்பல்களும் இணைந்து, அந்த பிராந்தியத்தில் பல தசாப்தங்களில் காணப்படாத அளவிலான மிகப் பெரிய ராணுவ குவிப்பு நடைபெற்றது. மேலும், அந்தப் பிராந்தியத்தின் வழியாக போதைப்பொருள்களை கடத்துவதாகக் குற்றம் சாட்டப்பட்ட டஜன் கணக்கான சிறிய படகுகளையும் அமெரிக்கா அழித்துள்ளது. ஆனால், 'ஆபரேஷன் அப்சல்யூட் ரிசால்வ்' நடவடிக்கையின் முதல் அறிகுறிகள் வானில் தென்பட்டன. அமெரிக்க அதிகாரிகளின் தகவலின்படி, அந்த இரவு முழுவதும் நடந்த நடவடிக்கையின் போது, குண்டுவீசும் விமானங்கள், போர் விமானங்கள், கண்காணிப்பு விமானங்கள் உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்ட விமானங்கள் பயன்படுத்தப்பட்டன. "இது மிகவும் சிக்கலானது, மிகமிக சிக்கலானது. முழு இயக்கமும், தரையிறக்கங்களும், பயன்படுத்தப்பட்ட விமானங்களின் எண்ணிக்கையும்..." என்று ஃபாக்ஸ் செய்திகளுக்கு டிரம்ப் தெரிவித்தார். "எந்தவொரு சூழ்நிலைக்கும் தயாராக, எங்களிடம் ஒரு போர் விமானம் இருந்தது" என்றும் அவர் கூறினார். உள்ளூர் நேரப்படி அதிகாலை 2 மணியளவில் கராகஸில் பலத்த வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாகவும், நகரத்தின் மேல் புகை மேகங்கள் எழுந்ததை காண முடிந்ததாகவும் தகவல்கள் தெரிவித்தன. "நான் மிகப் பெரிய சத்தத்தைக் கேட்டேன். ஒரு பெரும் வெடிப்புச் சத்தம்," என்று செய்தியாளர் அனா வனெஸ்ஸா ஹெரேரோ பிபிசிக்கு கூறினார். "அது அனைத்து ஜன்னல்களையும் அதிரவைத்தது. உடனே, முழு பார்வையையும் மறைத்துவிடும் அளவுக்கு ஒரு பெரிய புகை மேகத்தை நான் பார்த்தேன். நகரம் முழுவதும் விமானங்களும் ஹெலிகாப்டர்களும் பறந்துகொண்டிருந்தன" என்றும் அவர் கூறினார். பட மூலாதாரம்,LUIS JAIMES/AFP via Getty Images வானில் ஏராளமான விமானங்கள் பறப்பதைக் காட்டும் காணொளிகளும், வெடிப்புகளுக்குப் பிந்தைய நிலையை காட்டும் பிற காணொளிகளும் விரைவில் சமூக ஊடகங்களில் பரவத் தொடங்கின. அவற்றில் ஒன்றில், குண்டுவெடிப்புகளால் எழுந்ததாகத் தோன்றும் புகை மேகங்கள் மேலெழும்ப, கராகஸின் மேல், தாழ்வான உயரத்தில் ஹெலிகாப்டர்கள் ஒரு அணிவகுப்பாகப் பறந்ததை காண முடிந்தது. "அதிகாலை சுமார் 1:55 மணியளவில், வெடிப்புச் சத்தம், கராகஸின் மேல் பறந்த விமானங்களின் ஓசையும் கேட்டு நாங்கள் விழித்தோம்" என்று டேனியலா என்பவர் பிபிசிக்கு கூறினார். "அனைத்தும் முழு இருளில் மூழ்கியது. அருகில் குண்டுவெடிப்புகளால் ஏற்பட்ட வெளிச்சமே ஒரே ஒளியாக இருந்தது". "அபார்ட்மெண்ட் வாட்ஸ்ஆப் குழுவில் ஒருவருக்கொருவர் செய்தி அனுப்பிக் கொண்டிருந்தனர். என்ன நடக்கிறது என்பதையே புரியாமல், அந்த சத்தங்களால் அனைவரும் பயந்திருந்தனர்" என்றும் அவர் கூறினார். கராகஸின் பல பகுதிகளில் ஏற்பட்ட குண்டுவெடிப்புகள், தீப்பற்றல்கள் மற்றும் புகை மேகங்களை காட்டும் பல காணொளிகளை பிபிசி வெரிஃபை ஆய்வு செய்து, சரியாக எந்த இடங்கள் இலக்காகத் தாக்கப்பட்டன என்பதைக் கண்டறிந்துள்ளது. இதுவரை, ஜெனரலிசிமோ பிரான்சிஸ்கோ டி மிராண்டா விமானப்படைத் தளம், லா கார்லோட்டா என அறியப்படும் விமானத் தளம், லா குவாய்ரா துறைமுகம் உள்ளிட்ட ஐந்து இடங்கள் குறிவைத்து தாக்கப்பட்டுள்ளன என்பதை அது உறுதிப்படுத்தியுள்ளது. பட மூலாதாரம்,Reuters அமெரிக்க தாக்குதல்களில் சில வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் பிற ராணுவ இலக்குகளைக் குறிவைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். பணி தொடங்குவதற்கு முன்பு கராகஸில் உள்ள மின்சாரத்தை துண்டிக்க டிரம்ப் பரிந்துரைத்தார். இருப்பினும் அவர் எப்படி என்று குறிப்பிடவில்லை. "எங்களிடம் உள்ள ஒரு குறிப்பிட்ட நிபுணத்துவம் காரணமாக கராகஸின் விளக்குகள் பெரும்பாலும் அணைக்கப்பட்டன. இது இருட்டாக இருந்தது மற்றும் அது கொடியது" என்று அவர் கூறினார். 'நாங்கள் வருவது அவர்களுக்குத் தெரியும்' கராகஸின் பல பகுதிகளில் தாக்குதல்கள் தொடர்ந்த வேளையில், அமெரிக்கப் படைகள் நகருக்குள் நுழைந்தன. அதில், அமெரிக்க ராணுவத்தின் மிக உயரிய சிறப்பு நடவடிக்கை அலகான டெல்டா ஃபோர்ஸின் உறுப்பினர்களும் அடங்கியிருந்தனர் என்று, பிபிசியின் அமெரிக்க கூட்டாளியான சிபிஎஸ்-க்கு தகவல் அளித்த வட்டாரங்கள் தெரிவித்தன. அவர்கள் கனரக ஆயுதங்களுடன் இருந்ததோடு, மதுரோவின் பாதுகாப்பு இல்லத்தின் உலோகக் கதவுகளை வெட்ட வேண்டிய நிலை ஏற்பட்டால், அதற்குப் பயன்படுத்துவதற்காக ஒரு ப்ளோடோர்ச்சையும் எடுத்துச் சென்றிருந்தனர். ஜெனரல் கெய்னின் தகவலின்படி, உள்ளூர் நேரப்படி அதிகாலை 2:01 மணிக்கு தாக்குதல்தொடங்கிய பிறகு, அந்தப் படையினர் மதுரோ இருந்த இடத்தை அடைந்தனர். கராகஸின் மையப் பகுதியில் அமைந்துள்ள அந்தப் பாதுகாப்பு இல்லத்தை, கடுமையாக பாதுகாக்கப்பட்ட ராணுவ கோட்டை என்று டிரம்ப் விவரித்தார். "அவர்கள் எங்களுக்காகத் தயாரான நிலையில் காத்திருந்தார்கள். நாங்கள் வருவதை அவர்கள் அறிந்திருந்தார்கள்" என்று அவர் கூறினார். படைகள் அங்கு வந்தவுடன் எதிர்தாக்குதல் நடந்தது.. ஒரு அமெரிக்க ஹெலிகாப்டர் தாக்கப்பட்டாலும், அதனால் தொடர்ந்து பறக்க முடிந்தது. "மதுரோவின் வளாகத்திற்குள் நுழைந்த படை, வேகம், துல்லியம் மற்றும் ஒழுக்கத்துடன் செயல்பட்டது" என்று ஜெனரல் கெய்ன் தெரிவித்தார். "அவர்கள் அப்படியே உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்தார்கள். உண்மையில் உடைக்க முடியாததாக அமைக்கப்பட்ட இடங்களையும் அவர்கள் உடைத்தனர். இதற்காகவே அமைக்கப்பட்டிருந்த எஃகு கதவுகளைக்கூட" என்று டிரம்ப் கூறினார். மதுரோவின் மனைவி சிலியா ஃப்ளோரஸும் பிடிபட்ட இந்த நடவடிக்கை நடைபெற்று கொண்டிருந்த போதுதான், வெளியுறவுத் துறை அமைச்சர் ரூபியோ இதுகுறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தகவல் அளிக்கத் தொடங்கினார். இந்த முடிவு, நாடாளுமன்ற உறுப்பினர்களில் சிலருக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. "நான் தெளிவாகச் சொல்கிறேன்: நிக்கோலஸ் மதுரோ ஒரு சட்டப்பூர்வமற்ற சர்வாதிகாரி. ஆனால் நாடாளுமன்றத்தின் அனுமதி இன்றியும், அதன் பின்பு என்ன செய்யப் போகிறோம் என்பது குறித்த திட்டமின்றியும் ராணுவ நடவடிக்கையை தொடங்குவது பொறுப்பற்ற செயல்," என்று செனட்டில் ஜனநாயகக் கட்சித் தலைவராக இருக்கும் சக் ஷூமர் கூறினார். முன்கூட்டியே நாடாளுமன்றத்திற்கு விளக்கம் அளித்திருந்தால், அந்த நடவடிக்கை ஆபத்துக்குள்ளாகியிருக்கும் என்று சனிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ரூபியோ தெரிவித்தார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,வெனிசுவேலாவில் தலைநகர் கராகஸைச் சுற்றியுள்ள பல இடங்களை அமெரிக்கா தாக்கியது. வெனிசுவேலா அதிபர் மதுரோ தன் வளாகத்திற்குள் அமெரிக்காவின் எலைட் படையினர் பெருமளவில் நுழைந்தபோது, ஒரு பாதுகாப்பு அறைக்குத் தப்பிச் செல்ல முயன்றதாக டிரம்ப் தெரிவித்தார். "அவர் பாதுகாப்பான இடத்துக்குச் செல்ல முயன்றார். ஆனால் அது பாதுகாப்பான இடமல்ல. ஏனெனில், சுமார் 47 விநாடிகளில் அந்தக் கதவை நாங்கள் வெடிக்கச் செய்திருப்போம்," என்று அவர் கூறினார். மேலும், "அவர் கதவு வரை வந்தார். ஆனால் அதை மூட முடியவில்லை. அவ்வளவு வேகமாக அவரைச் சுற்றி நெருங்கிவிட்டார்கள். அதனால் அவர் அந்த அறைக்குள் செல்லவே முடியவில்லை" என்றும் அவர் கூறினார். 2013-ஆம் ஆண்டு அதிபர் பதவியை ஏற்றுக்கொண்ட மதுரோ, கைது செய்யப்படும் போது எதிர்த்திருந்தால், அமெரிக்கா அவரை கொல்லக்கூடிய நிலையிலிருந்ததா என்ற கேள்விக்கு, "அது நடந்திருக்க வாய்ப்பு இருந்தது" என்று டிரம்ப் பதிலளித்தார். அமெரிக்கா தரப்பில் இரண்டு வீரர்கள் தாக்குதலுக்கு இலக்கானதாக அவர் கூறினார். ஆனால் எந்த அமெரிக்க வீரரும் உயிரிழக்கவில்லை. வெனிசுவேலா அதிகாரிகள் இதுவரை எந்த உயிரிழப்பையும் உறுதிப்படுத்தவில்லை. மதுரோவைக் கைது செய்ய வழிவகுக்கும் தகவலைத் தந்தால் 5 கோடி அமெரிக்க டாலர் பரிசுத்தொகை வழங்கப்படும் என்று அமெரிக்கா ஏற்கனவே அறிவித்திருந்தது. ஆனால் சனிக்கிழமை அதிகாலை உள்ளூர் நேரப்படி 4:20 மணிக்குள், மதுரோவும் அவரது மனைவி சிலியா ஃப்ளோரஸும் ஹெலிகாப்டர்களில் வெனிசுவேலா எல்லையை விட்டு வெளியேறப்பட்டனர். அவர்கள் அமெரிக்க நீதித்துறையின் காவலில், இறுதியாக நியூயார்க் அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்கள் மீது கிரிமினல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. சரியாக சுமார் ஒரு மணி நேரத்திற்கு பின்னர், மதுரோவை சிறைபிடித்த செய்தியை டிரம்ப் உலகுக்கு அறிவித்தார். "மதுரோவும் அவரது மனைவியும் விரைவில் அமெரிக்க நீதியின் முழு வலிமையையும் எதிர்கொள்ளப் போகிறார்கள்" என்று அவர் கூறினார். கூடுதல் தகவல்கள்: ரிஸ்டோபல் வாஸ்கெஸ் - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/crmlzlyj29go
  11. ஒவ்வொரு இரண்டு நிமிடங்களிலும் கர்ப்பப்பை புற்றுநோயால் ஒரு பெண் உயிரிழப்பு – ஐ.நா. எச்சரிக்கை 03 Jan, 2026 | 04:50 PM உலகளவில் ஒவ்வொரு இரண்டு நிமிடங்களிலும் ஒரு பெண் கர்ப்பப்பை புற்றுநோயால் ( cervical cancer) உயிரிழக்கிறார் என ஐக்கிய நாடுகள் சபை அதிர்ச்சியளிக்கும் தகவலை வெளியிட்டுள்ளது. இந்த நோய் முழுமையாகத் தடுப்பதற்கும் ஆரம்ப நிலையில் குணப்படுத்துவதற்கும் இயலும் என்றாலும், சமமற்ற சுகாதார அணுகுமுறைகள் காரணமாக பல உயிரிழப்புகள் தொடர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார நிறுவனம் (WHO) முன்னெடுத்துள்ள கர்ப்பப்பை புற்றுநோய் ஒழிப்பு முயற்சியின் ஒரு பகுதியாக பேசிய ஜீனெட் என்ற பெண், “என் உடலே என்னை ஏமாற்றியது போல உணர்ந்தேன்” என்று கூறியுள்ளார். கர்ப்பப்பை புற்றுநோய் என கண்டறியப்பட்ட ஒரு ஆண்டுக்குள் அவர் உயிரிழந்ததாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. கர்ப்பப்பை புற்றுநோய் என்றால் என்ன? கர்ப்பப்பை புற்றுநோய் என்பது பெண்களின் இனப்பெருக்க அமைப்பில் உள்ள கர்ப்பப்பையில் உருவாகும் புற்றுநோய் ஆகும். ஆரம்ப நிலையில் கண்டறியப்படாவிட்டால், இது உடலின் பிற பகுதிகளுக்கும் பரவக்கூடும். உலக சுகாதார ஸ்தாபனத்தின் தரவுகளின்படி, 2022 ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் சுமார் 6.6 இலட்சம் பெண்களுக்கு கர்ப்பப்பை புற்றுநோய் கண்டறியப்பட்டதுடன், 3.5 இலட்சம் பெண்கள் இதனால் உயிரிழந்துள்ளனர். ஐக்கிய நாடுகள் சபையின் யுனிசெப் நிறுவனம், இந்த நோயால் ஒவ்வொரு இரண்டு நிமிடங்களுக்கும் ஒரு பெண் உயிரிழக்கிறார் என எச்சரித்துள்ளது. காரணம் என்ன? கர்ப்பப்பை புற்றுநோய் பெரும்பாலும் HPV (Human Papillomavirus) எனப்படும் வைரஸ் தொற்றுடன் தொடர்புடையது. இது பாலியல் தொடர்பு மூலம் பரவும் மிகப் பொதுவான வைரஸ் ஆகும். பாலியல் செயலில் ஈடுபடும் பெரும்பாலானவர்கள் வாழ்க்கையில் ஒருமுறையாவது HPV வைரஸ் தொற்றுக்குள்ளாகலாம். பெரும்பாலும் உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பு அதை தானாகவே நீக்கிவிடும். ஆனால் சில வகை HPV தொற்றுகள் நீடித்தால், அசாதாரண செல்கள் உருவாகி பின்னர் புற்றுநோயாக மாறும் அபாயம் உள்ளது. தடுப்பு மற்றும் சிகிச்சை கர்ப்பப்பை புற்றுநோய் தடுப்பதற்கும் குணப்படுத்துவதற்கும் கூடிய நோயாகும். உலக சுகாதார ஸ்தாபனத்தில் பரிந்துரைகளின் படி, 9 முதல் 14 வயதுடைய அனைத்து சிறுமிகளுக்கும் HPV தடுப்பூசி வழங்க வேண்டும் என்பதுடன் 30 வயதிலிருந்து பெண்களுக்கு கர்ப்பப்பை பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக HIV தொற்றுள்ள பெண்களுக்கு 25 வயதிலிருந்து கர்ப்பப்பை பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று கூறுகின்றது. ஆரம்ப நிலையில் கண்டறியப்பட்டால், இது மிகவும் வெற்றிகரமாக சிகிச்சையளிக்கக்கூடிய புற்றுநோய்களில் ஒன்றாகும் எனவும் உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. உலகளாவிய முயற்சி 2020 ஆம் ஆண்டு, 194 நாடுகள் இணைந்து கர்ப்பப்பை புற்றுநோயை ஒழிப்பதற்கான உலகளாவிய திட்டத்தை தொடங்கின. அந்த நாள், நவம்பர் 17, தற்போது உலக கர்ப்பப்பை புற்றுநோய் ஒழிப்பு நாள் ஆகக் கடைபிடிக்கப்படுகிறது. 2030க்குள் அடைய வேண்டிய இலக்குகள்: * 15 வயதிற்குள் 90% சிறுமிகளுக்கு HPV தடுப்பூசி * 35 மற்றும் 45 வயதுகளில் 70% பெண்களுக்கு பரிசோதனை * நோய் கண்டறியப்பட்ட 70% பெண்களுக்கு முழுமையான சிகிச்சை இந்த இலக்குகள் நிறைவேற்றப்பட்டால், 2120 ஆம் ஆண்டுக்குள் 7.4 கோடி புதிய நோய் சம்பவங்களைத் தவிர்க்கவும், 6.2 கோடி உயிர்களை காப்பாற்றவும் முடியும் என உலக சுகாதார ஸ்தாபனம் மதிப்பிட்டுள்ளது. உலக சுகாதார ஸ்தாபனம் மற்றும் யுனிசெப் ஆகிய சர்வதேச அமைப்புகள், கர்ப்பப்பை புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு, தடுப்பூசி மற்றும் பரிசோதனை வசதிகளை சமமாக அனைவருக்கும் கிடைக்கச் செய்ய வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/235114
  12. டிரம்ப் தமது ட்ரூத் சோஷியல் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவு ஒன்றில் நிக்கோலஸ் மதுரோ என குறிப்பிட்டு ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அமெரிக்க போர்க்கப்பலான USS Iwo Jima-வில் மதுரோ இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
  13. ரி20 உலகக் கிண்ணத்தில் ஆப்கானிஸ்தான் அணிக்கு சுழல்பந்துவீச்சு நட்சத்திரம் ராஷித் கான் தலைவர் Published By: Vishnu 02 Jan, 2026 | 03:23 AM (நெவில் அன்தனி) இலங்கையிலும் இந்தியாவிலும் இந்த வருடம் கூட்டாக நடைபெறவுள்ள ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்குபற்றவுள்ள ஆப்கானிஸ்தான் அணிக்கு உலகின் தலைசிறந்த சுழல்பந்துவீச்சு நட்சத்திரம் ராஷித் கான் தலைவராக நியமிக்ப்பட்டுள்ளார். ஐக்கிய அமெரிக்காவிலும் மேற்கிந்தியத் தீவுகளிலும் 2024இல் நடைபெற்ற ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் அரை இறுதிவரை ஆப்கானிஸ்தான் முன்னேறி இருந்தது. ராஷித் கான் தலைமையிலான உலகக் கிண்ண குழாத்தில் சகலதுறை வீரர் முன்னாள் அணித் தலைவர் குல்பாதின் நய்ப், இடதுகை வேகப்பந்து வீச்சாளர் பஸால்ஹக் பாறூக்கி, சுழற்பந்துவீச்சாளர் முஜீஜ் உர் ரஹ்மான், வலதுகை வேகப்பந்து வீச்சாளர் நவீன்-உல்-ஹக் ஆகிய அனுபவசாலிகளும் இடம்பெறுகின்றனர். உலகக் கிண்ணத்துக்கு பெயரிடப்பட்டுள்ள அதே குழாத்திலுள்ள வீரர்கள் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ள 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடரிலும் விளையாட உள்ளனர். உலகக் கிண்ணத்துக்கு தங்களைத் தயார்படுத்தும் தொடராக இரண்டு அணிகளுக்கும் இது அமையவுள்ளது. இந்தத் தொடர் ஜனவரி 19இலிருந்து 22ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது. ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் பலம் வாய்ந்த டி குழுவில் ஆப்கானிஸ்தான் இடம்பெறுகின்றது. இக் குழுவில் நியூஸிலாந்து, தென் ஆபிரிக்கா, ஐக்கிய அரபு இராச்சியம், கனடா ஆகிய அணிகளும் இடம்பெறுகின்றன. சென்னையில் பெப்ரவரி 8ஆம் திகதி நடைபெறவுள்ள தனது ஆரம்பப் போட்டியில் நியூஸிலாந்தை ஆப்கானிஸ்தான் எதிர்த்தாடும். ஆப்கானிஸ்தானின் ஏனைய போட்டிகள் பெப்ரவரி 11 எதிர் தென் ஆபிரிக்கா (அஹமதாபாத்) பெப்ரவரி 16 எதிர் ஐக்கிய அரபு இராச்சியம் (டெல்லி) பெப்ரவரி 19: எதிர் கனடா (சென்னை) மே. தீவுகள் மற்றும் ரி20 உலகக் கிண்ணம் ஆகயவற்றுக்கான ஆப்கானிஸ்தான் குழாம் ராஷித் கான் (தலைவர்), இப்ராஹிம் ஸ்த்ரான் (உப தலைவர்), ரஹ்மானுல்லா குர்பாஸ், மொஹம்மத் இஷாக், சிதிக்குல்லா அத்தல், தாவிஷ் ரசூலி, ஷஹிதுல்லா கமல், அஸ்மத்துல்லா ஓமர்ஸாய், குல்பாதின் நய்ப், மொஹம்மத் நபி, நூர் அஹ்மத், முஜீப் உர் ரஹ்மான், நவீன்-உல்-ஹக், பஸால்ஹக் பாறூக்கி, அப்துல்லா அஹ்மத்ஸாய். பதில் வீரர்கள்: ஏ.எம். கஸன்பர், இஜாஸ் அஹ்மத்ஸாய், ஸியா உர் ரஹ்மான் ஷரிபி https://www.virakesari.lk/article/234981
  14. '2 லட்சம் ஆண்டுக்கு முன் மனிதர்கள் வாழ்ந்த குகை'; நீங்களும் டிரெக்கிங் போகலாம் - Gudiyam Caves Tour திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள குடியம் குகை குறித்து விவரிக்கிறது இந்த காணொளி. தயாரிப்பு - ஹேமா ராக்கேஷ் ஒளிப்பதிவு & படத்தொகுப்பு - ஜனா #GudiyamCave #Tamilnadu இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.