Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. 07 JUN, 2025 | 05:43 PM சாவகச்சேரியில் கருங்கற்களுக்குள் தேக்கு மர குற்றிகளை மறைத்து ஏற்றிச் சென்ற லொறியின் சாரதி சனிக்கிழமை (07) கைது செய்யப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர். ஒட்டுசுட்டான் பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி மர குற்றிகளை கொண்டு சென்ற போது சாவகச்சேரி பகுதியில் வைத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைப்பற்றப்பட்ட தேக்கு மர குற்றிகள் 15 இலட்சம் ரூபா பெறுமதியுடையது என சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கு எதிராக சாவகச்சேரி நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/216878
  2. 07 JUN, 2025 | 10:32 PM (எம்.மனோசித்ரா) 'கடன் மற்றும் மூலதனம் குறித்த உரையாடல் : மதிப்பீடுகள் மற்றும் ஒழுங்குமுறைகள் மூலம் நம்பிக்கையை உருவாக்குதல்' என்ற தொனிப்பொருளில் வெள்ளிக்கிழமை (06) கொழும்பிலுள்ள ரத்னதீபா ஹோட்டலில் விசேட கலந்துரையாடலொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ்ஜா, பிரதி நிதி அமைச்சர் ஹர்ஷண சூரியப்பெரும, பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் இதில் கலந்து கொண்டனர். சர்வதேச நிதிச் சேவை மைய ஆணையம், இந்திய அரசாங்கம், என்.எஸ்.ஈ. சர்வதேச பரிமாற்றம், கேர்எட்ஜ் குளோபல் ஆகியவை கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம், இந்தோ - இலங்கை வர்த்தக மற்றும் தொழில்துறை சபை, டி.டபிள்யு க்ரோப் (பிரைவேட் லிமிடெட் மற்றும் இந்திய தலைமை நிர்வாக அதிகாரி மன்றம் ஆகியவற்றுடன் இணைந்து இந்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் ஹர்ஷன சூரியப்பெரும கலந்து கொண்டார். மேலும் இந்திய மற்றும் இலங்கை வங்கிகள், பல்வேறு வர்த்தக சபைகளின் உறுப்பினர்கள், ஊடகங்கள் மற்றும் பொருளாதார நிபுணர்கள் உள்ளிட்ட பலரும் இதில் கலந்து கொண்டிருந்தனர். இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா வரவேற்புரையாற்றியதோடு, குஜராத் சர்வதேச நிதி தொழில்நுட்ப நகரத்தின் சர்வதேச நிதிச் சேவை மைய ஆணையத்தின் நிர்வாக பணிப்பாளர் பிரதீப் ராமகிருஷ்ணன், கேர்எட்ஜ் குளோபல் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ரேவதி பராக் கஸ்தூர் மற்றும் என்.எஸ்.ஈ. சர்வதேச பரிமாற்றத்தின் தலைமை நிர்வாக அதிகாரி வெங்கடரமணி பாலசுப்பிரமணியம் ஆகியோர் கிப்ட் சிட்டி சுற்றுச்சூழல் அமைப்பு, கடன் மதிப்பீட்டு வழிமுறைகள் மற்றும் அதன் உலகளாவிய போட்டித்தன்மையை மேம்படுத்திய சமீபத்திய ஒழுங்குமுறை சீர்திருத்தங்கள் பற்றிய விடயங்களைப் பகிர்ந்து கொண்டனர். இதன் போது கிப்ட் சிட்டி மூலம் சர்வதேச மூலதன சந்தைகளை அணுக விரும்பும் நிறுவனங்களுக்கான பட்டியலிடல் தேவைகள் பற்றிய கண்ணோட்டத்தையும் தேசிய பங்குச் சந்தை வழங்கியது. மேலும் நிதி மற்றும் முதலீடு தொடர்பான களங்களில் கூட்டு முயற்சிகளை மேலும் முன்னேற்றுவதற்கு இந்த நிகழ்வு ஒரு ஊக்கியாக அமைந்தது. https://www.virakesari.lk/article/216876
  3. செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு இன்றுடன் நிறைவு : 19 முழுமையான எனித என்புத்தொகுதிகள் அடையாளம்! 07 JUN, 2025 | 10:07 PM யாழ்ப்பாணம், அரியாலை, செம்மணி சித்துபாத்தி இந்து மயானத்திற்கு அருகிலுள்ள மனித புதைகுழியின் பரீட்சார்த்த அகழ்வு பணிகள் இன்றுடன் நிறைவுக்கு வந்துள்ள நிலையில், இதுவரை 19 முழுமையான மனித என்பு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா தெரிவித்தார். அகழ்வுப் பணிகள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா இதனை தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், செம்மணி சித்துபாத்தி மயான மனிதப் புதைகுழி அகழ்வு பணிகள் இன்று ஒன்பதாவது நாளாக நடைபெற்றது. கடந்த ஒன்பது நாட்களாக பரீட்சார்த்த அகழ்வு பணி மேற்கொள்ளப்பட்டு இன்றுடன் நிறைவுக்கு வருகிறது. இன்றைய நிலையில் மொத்தமாக 19 முழுமையான மனித என்பு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு குறிக்கப்பட்டுள்ளன. இன்றைய நிறைவு நாளில் 19 என்பு தொகுதிகளும் முழுமையாக அகழ்வு பணி செய்யும் இடத்திலிருந்து அகழப்பட்டு பாதுகாப்பாக சேகரிக்கப்பட்டு சட்ட வைத்திய அதிகாரி ஊடாக நீதிமன்றத்தின் பாதுகாப்பில் வைக்கப்படும். குறித்த பகுதி குற்றம் நிகழ்ந்த பிரதேசமான மனிதப் புதைகுழியாக நீதிமன்றினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பான மேலதிக நடவடிக்கைகளை சட்ட வைத்திய அதிகாரியின் கோரிக்கைக்மைய தொடர்ந்து 45 நாட்களுக்கு மேற்கொள்ள அதற்கான செலவு பாதீட்டை கால தாமதமின்றி ஒப்படைக்க கூறிய அடிப்படையில் பாதீடு இன்று கையளிக்கப்பட்டது. நிதிகளை வழங்கும் அரச நிறுவனங்களிடம் பாதீடு கையளிக்கப்பட்டு இரண்டு வார கால அவகாசத்தில், உத்தேச திகதியாக ஜூன் மாதம் 20ஆம் திகதி மீளவும் அகழ்வாய்வு பணியை ஆரம்பிப்பதற்காக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. பாதீட்டிற்கு அங்கீகரிக்கப்பட்டு நிதி அனுசரணை வந்த பின்னர் குறித்த திகதியில் அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்படுமா இல்லையா என்பதை நீதிமன்றம் தீர்மானித்து. இது குறித்து அகழ்வில் பங்குபற்றும் தரப்பினருக்கு அறிவிக்கப்படும். அகழ்வு பணிகள் இன்று ஆரம்பித்த நேரத்தில் ட்ரோன் கமராவின் உதவியுடன் மேலுமொரு மனித புதைகுழி இருக்குமென சந்தேகப்படும் பகுதியில் படங்கள் எடுக்கப்பட்டு தற்போது ஆய்வுக்காக பேராசிரியர் ராஜ் சோமதேவாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. குறித்த படங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு நீதிமன்றத்திற்கு அது தொடர்பிலான அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்றார். https://www.virakesari.lk/article/216887
  4. 07 JUN, 2025 | 02:05 PM எதிர்காலத்தில் இங்கு முதலீட்டாளர்கள் ஊடாக தொழில்வாய்ப்புக்கள் உருவாக்கப்படும்போது அதில் பங்கெடுக்கும் வகையில் எம்மை நாம் தயார்படுத்திக்கொள்ளவேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் குறிப்பிட்டார். 'பி.எல்.சி. கம்பஸின்' (BLC Campus) இணைவு விழா (Fusion Fest) வலம்புரி ஹோட்டலில் சனிக்கிழமை (07) நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட ஆளுநர், நிறுவனத்தின் விரிவுரையாளர்களுக்கான கௌரவத்தை வழங்கி வைத்தார். ஆளுநர் தனது உரையில், நாங்கள் கல்வி கற்கின்ற காலத்தில் வாய்ப்புக்கள் மிகக் குறைவு. எங்களுக்கு அப்போதிருந்த தெரிவு அரசாங்கத்தின் பல்கலைக்கழகம் மட்டுமே. ஆனால் இன்று அப்படியல்ல. இங்கு பல தனியார் கல்வி நிறுவனங்கள் செயற்படுகின்றன. அதன் ஊடாக உயர்கல்வி கற்பதற்கு வாய்ப்புக்கள் கிடைக்கின்றன. கல்விப்பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் அரசாங்க பல்கலைக்கழகத்துக்கு வாய்ப்புக் கிடைக்காவிட்டால் அன்று வேறு தெரிவு என்பது குறைவாக இருந்தது. ஆனால் இன்று பல தெரிவுகள் - வாய்ப்புக்கள் உங்கள் முன்னால் இருக்கின்றன. இன்று வேலை வாய்ப்பு என்பது சவலானதாக உள்ளது. அரசாங்க வேலை வாய்ப்பாக இருக்கலாம், தனியார்துறை வேலை வாய்ப்பாக இருக்கலாம் எதுவென்றாலும் அவை சவாலானதாகவே இருக்கின்றன. ஆட்சிமாற்றத்தின் பின்னர் முதலீட்டாளர்கள் வடக்கை நோக்கி முதலிடுவதற்கு வருகின்றார்கள். வெகு விரைவில் இங்கு தொழிற்சாலைகள் உருவாகும். வேலை வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கின்றேன். இன்று இங்கு சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ளும் உங்களின் எதிர்காலம் சிறக்க வாழ்த்துகின்றேன் என்றார். https://www.virakesari.lk/article/216859
  5. மிரட்டும் டிரம்ப், கலகலக்கும் மஸ்கின் தொழில் சாம்ராஜ்யம் - நாசாவுக்கு சிக்கல் வருமா? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், லில்லி ஜமாலி பதவி, ஒரு மணி நேரத்துக்கு முன்னர் அரசியலில் இருந்து விலகுவதாக சமீபத்தில் தொழில் அதிபர் ஈலோன் மஸ்க் தெரிவித்தார். இதனால், மஸ்க் தனது கவனத்தை, அவர் நடத்தி வரும் நிறுவனங்களின் மீது திருப்புவார் என்று அவற்றில் முதலீடு செய்திருந்த முதலீட்டாளர்கள் எதிர்பார்த்திருந்தனர். டொனால்ட் டிரம்புடன் ஏற்பட்டுள்ள முரண்பாடு மற்றும் வெள்ளை மாளிகை குறித்து வெளிப்படையாக அவர் முன்வைத்த விமர்சனங்கள் போன்றவை, முதலீட்டாளர்கள் நினைத்தது போன்று மஸ்கின் கவனம் திரும்பவில்லை என்பதை சுட்டிக்காட்டுகிறது. மக்களின் பார்வையில் இருந்து விலகி டெஸ்லா மற்றும் இதர நிறுவனங்களின் செயல்பாட்டை மேற்பார்வையிடுவதற்கு பதிலாக, அவரின் மிக முக்கியமான வாடிக்கையாளரான டிரம்பின் பெடரல் அரசு அவருடைய நிறுவனத்தை புறக்கணிக்கும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளார். டெஸ்லாவின் பங்குகள் பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளன. டொனால்ட் டிரம்ப் குறித்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட பிறகு அவருடைய பங்குகளின் மதிப்பு 14% வரை குறைந்தது. ஆனால் வெள்ளிக்கிழமை இருவருக்கும் இடையே பதற்றம் தணிந்ததற்கான அறிகுறிகள் தென்பட்டன. இருப்பினும் கூட பல மாதங்களாக நிபுணர்களும், முதலீட்டாளர்களும் மஸ்க் அவருடைய போனை கீழே வைத்துவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இருப்பினும் அவர்கள் நினைத்ததற்கு எதிரான சூழலே நிலவுகிறது. "டெஸ்லா ஏற்கனவே பின்தங்கியுள்ளது" மஸ்கின் தொழிலில் இருக்கும் பிரச்னையானது, தற்போது டிரம்புடன் இருக்கும் சிறு சச்சரவைக் காட்டிலும் ஆழமானது என்று சிலர் வாதிடுகின்றனர். டிரம்ப் நிர்வாகத்தில் மஸ்கிற்கு வழங்கப்பட்ட சர்ச்சைக்குரிய பதவியானது மஸ்கின் தொழிலை முடிவுக்கு கொண்டுவந்துவிட்டது என்றும் கூறுகின்றனர். மூத்த தொழில்நுட்ப பத்திரிகையாளரான காரா ஸ்விஷர், டெஸ்லா விவகாரத்தில் இது உண்மையாகிவிட்டது என்று கூறுகிறார். "டெஸ்லா முடிவுக்கு வந்துவிட்டது," என்று இந்த வாரம் சான் ஃபிரான்சிஸ்கோவில் நடைபெற்ற ஊடக மாநாட்டில் பிபிசியிடம் அவர் தெரிவித்தார். "அந்த கார் நிறுவனம் மிகவும் சிறப்பாக இருந்தது. தானியங்கி கார்கள் பிரிவில் திறம்பட போட்டியிட இயலும். ஆனால் அவர்கள் பின்தங்கியுள்ளனர். சான்ஃபிரான்சிஸ்கோ நகரில் செயல்பாட்டிற்கு வந்த வாகன ஓட்டிகள் இல்லாத வேமோ (Waymo) வாகனத்துடன் போட்டியிட டெஸ்லா நீண்ட காலமாக முயற்சி செய்து வந்தது. கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பபெட் வேமோவை உற்பத்தி செய்து வருகிறது. சான்ஃபிரான்சிஸ்கோ மட்டுமின்றி தற்போது பல நகரங்களிலும் வேமோ இயக்கப்பட்டு வருகிறது. டெக்சாஸில் அமைந்திருக்கும் ஆஸ்டனில் தானியங்கி ரோபோக்களால் இயக்கப்படும் டெஸ்லா கார்களை அறிமுகம் செய்யும் பணியை இந்த மாதம் மஸ்க் மேற்பார்வையிடுகிறார். கடந்த வாரம் எக்ஸ் தளத்தில், மின் வாகன உற்பத்தியாளரான அவரின் நிறுவனம், ஓட்டுநரே இல்லாத மாடல் ஒய் (Model Y) காரை சோதனை செய்து வருகிறது" என்று கூறினார். "டெஸ்லாவின் 90% எதிர்கால மதிப்பீடானது தானியங்கி மற்றும் ரோபோக்களை சார்ந்தே இருக்கும்," என்று டான் இவ்ஸ் பிபிசியிடம் தெரிவித்தார். வெட்புஷ் செக்யூரிட்டீஸில் நிபுணராக பணியாற்றி வரும் அவர் ஆஸ்டினில் நடைபெற இருக்கும் அறிமுக விழா இந்த நோக்கத்தின் முக்கிய கட்டமாக இருக்கும் என்று கூறினார். "இதன் முதல் படியானது, தானியங்கி என்ற பார்வையை செயல்பாட்டிற்கு கொண்டு வருவதான்," என்று இவ்ஸ் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,டொனால்ட் டிரம்ப் குறித்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட பிறகு மஸ்கின் பங்குகளின் மதிப்பு 14% வரை குறைந்தது. தற்போது மஸ்கின் கவனம் திசை திரும்பியுள்ளதால் இந்த திட்டத்தின் வெற்றி வாய்ப்புகள் அதிகரித்து இருப்பது போல் தோன்றுகிறது. இதில் மற்றொரு காரணியும் உள்ளது. அது மஸ்கின் சொந்த உத்வேகம். மஸ்கால் என்ன முடியும் என்கிற பேச்சு குறைந்து அவர் எதைப் பற்றியாவது கவலைப்படுகிறாரா என்ற பேச்சு சிலிக்கான் பள்ளத்தாக்கில் அதிகரித்துள்ளது. "எதிலாவது கவனம் செலுத்தும் போது அவர் மிகவும் பலம் வாய்ந்த நபராக செயல்படுவார்," என்று கெர்பெர் கவாசகி வெல்த் அண்ட் இன்வெஸ்ட்மெண்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் முதன்மை செயல் அதிகாரியான ராஸ் கெர்பெர் கூறுகிறார். "இதற்கு முன்பு, வேறு யாராலும் செய்ய இயலாத மின்சார வாகனங்களை உருவாக்க இயலும் என்பதை உலகுக்கு நிரூபித்தார். அதன் பிறகு அவரால் ராக்கெட்டுகளை உருவாக்க இயலும் என்பதையும் நிரூபித்துக் காட்டினார். அவர் நிரூபித்துக் காட்ட நிறைய இருந்தது," என்று அவர் தெரிவிக்கிறார். நீண்ட கால டெஸ்லா முதலீட்டாளரான கெர்பெர் தன் வசமிருந்த பங்குகளை குறைத்துக் கொண்டுள்ளார். மஸ்க் வலதுசாரி அரசியலில் இணைந்த பிறகு தன்னுடைய முதலீட்டை கெர்பெர் குறைத்து வருகிறார். பங்குகள் வீழ்ச்சி அடைந்ததை சுட்டிக்காட்டிய அவர், "வியாழக்கிழமை மிகவும் வலி மிகுந்த நாள்," என்று குறிப்பிட்டார். "நீங்கள் செய்யக் கூடிய அதிகபட்ச முட்டாள்தனம் என்னவென்றால், அமெரிக்காவில் நீங்கள் அதிபரைக் காட்டிலும் பலமிக்க நபர் என்று நினைப்பதாகத் தான் இருக்கும்," என்று டிரம்புக்கு எதிராக மஸ்க் வெளியிட்ட பதிவுகளை சுட்டிக்காட்டினார் கெர்பெர். எக்ஸ், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களை அணுகி மஸ்கின் கருத்துகளை பெற முற்பட்டது பிபிசி. ஆனால் இதுவரை இந்த விவகாரம் தொடர்பாக அவர் பிபிசியிடம் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,மஸ்கால் என்ன முடியும் என்கிற பேச்சு குறைந்து அவர் எதைப் பற்றியாவது கவலைப்படுகிறாரா என்ற பேச்சு சிலிக்கான் பள்ளத்தாக்கில் அதிகரித்துள்ளது. டெஸ்லா இறங்குமுகம் டொனால்ட் டிரம்பின் அதிருப்தியை சம்பாதிப்பதற்கு முன்பாகவே, மஸ்கின் கார் உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவுக்கு எதிராக சமூக வலைதளங்கில் அடிமட்ட அளவில் பிரசாரம் ஒன்று நடைபெற ஆரம்பித்துவிட்டது. டிரம்ப் மீண்டும் அதிகாரத்திற்கு வந்த பிறகு ஒவ்வொரு வார இறுதியிலும் #TeslaTakedown என்ற ஹேஷ்டேக்கில் அமெரிக்கா முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் கார் விற்பனையானது 20% வரை குறைந்துள்ளது என்று டெஸ்லா நிறுவனம் கடந்த ஏப்ரலில் அறிவித்தது. அந்த நிறுவனத்தின் லாபம் 70%-க்கும் அதிகமாக வீழ்ச்சியை சந்தித்துள்ளது. அதனைத் தொடர்ந்து அதன் பங்குகளும் வீழ்ச்சி அடைந்துள்ளன. "நம்முடைய அரசை சில்லுசில்லாக நொறுக்கி நம் ஜனநாயகத்தின் தலையெழுத்தை அவர் தீர்மானிக்கக் கூடாது. இது சரியல்ல," என்று இந்த பிப்ரவரி மாதம் கலிஃபோர்னியாவின் டெஸ்லா டீலர் அலுவலகத்தின் முன்பு நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற லிண்டா கொஸ்டினென் என்னிடம் கூறினார். மஸ்கிற்கு எதிராக வெளிப்படையான நிலைப்பாட்டை எடுக்க விரும்புவதாக லிண்டா கூறினார். இந்த போராட்டங்கள் டெஸ்லா நிறுவனம் பற்றியதோ அதன் தொழில்நுட்பம் பற்றியதோ இல்லை என்று கூறுகிறார் ஜான் டோனோவன். #TeslaTakedown போராட்டங்களை சமூக வலைதளங்களில் இணைந்து ஒருங்கிணைத்த அவர் போலி செய்திகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளும் முக்கியமான ஆய்வாளராவார். "இந்த போராட்டம் டெஸ்லாவின் பங்குகள் எவ்வாறு மக்களுக்கு எதிரான ஆயுதமாக பயன்படுத்தப்பட்டன என்பது பற்றியது. இது எவ்வாறு மஸ்கிற்கு வெளிப்படைத்தன்மையற்ற அதீத அதிகாரத்தை வழங்கியது என்பதைப் பற்றியது," என்று டோனோவன் கூறுகிறார். ஈலோன் மஸ்கின் சாம்ராஜ்ஜியத்தின் மற்றொரு அம்சமான சமூக வலைதள நிறுவனமான எக்ஸும் அவர் எதிர்ப்பாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்திய ஒன்றாகும். முன்பு டிவிட்டர் என்று அறியப்பட்ட நிறுவனத்தை மஸ்க் வாங்கினார். "அதன் மூலம் அவர் செல்வாக்கு மிக்கவராக இருக்க இயலும். எந்தவிதமான தயக்கமும் இன்றி லட்சக்கணக்கான மக்களை அணுக இயலும்," என்று டோனோவன் கூறினார். தனிப்பட்ட பிராண்ட் இங்கு மற்றொரு சாத்தியமும் இருக்கிறது. டிரம்புடன் இதற்கு முன்னதாக மஸ்க் நெருங்கிய நட்பைக் கடைபிடித்ததால் விலகிச் சென்ற மக்களை, இந்த சச்சரவின் பின்னணியில் மீண்டும் ஈர்க்க முடியுமா? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. மூர் இன்சைட்ஸ் & ஸ்ட்ராடெஜி நிறுவனத்தின் தலைமை நிபுணர் பேட்ரிக் மூர்ஹெட் இது சாத்தியம் என்கிறார். பிபிசி தொலைபேசி மூலம் அவரை தொடர்பு கொண்ட போது, "நாம் மன்னிக்கும் தன்மை கொண்ட நாடு," என்று கூறினார். "இது நடக்க நீண்ட காலம் ஆகலாம். ஆனால் இது ஒன்றும் முதன்முறையாக நடக்கும் நிகழ்வு அல்ல," என்றும் அவர் கூறினார். காரா ஸ்விஷர் இது குறித்து பேசும் போது, மஸ்கின் தனிப்பட்ட பிராண்டை, இருபது ஆண்டுகளுக்கு முன்பு மைக்ரோ சாஃப்டை நிறுவிய இணை நிறுவனர் பில்கேட்ஸுடன் ஒப்பிடுகிறார். "முரட்டுத்தனம் மற்றும் பிடிவாதம் காரணமாக," சிலிகான் பள்ளத்தாக்கின் டார்த் வாடெராக" அறியப்பட்டவர் பில்கேட்ஸ் என்று ஸ்விஷர் கூறுகிறார். ஸ்டார் வார்ஸ் திரைப்படத்தில் வரும் வில்லன் கதாபாத்திரத்தின் பெயர் டார்த் வாடெர் என்பது குறிப்பிடத்தக்கது. தன்னுடைய குறைபாடுகளையும் தாண்டி மஸ்க் தன்னுடைய பிம்பத்தை அவர் மீள்கட்டமைப்பு செய்து கொண்டார். "அவர் கற்றுக் கொண்டார். மாறினார். மக்கள் மாறுவார்கள்," என்று கூறுகிறார் அவர். மஸ்க் உண்மையாகவே பிரச்னைக்குரியவராக இருப்பினும் அவரும் மாறுவார் என்று நம்பிக்கைத் தெரிவிக்கிறார் ஸ்விஷர். நாசாவுக்கு சிக்கல் வருமா? மஸ்க் மற்றும் அவரின் நிறுவனங்களின் எதிர்காலம் தொடர்பான பிரச்னைகள் என்பது அவர் என்ன செய்ய உள்ளார் என்பது மட்டுமல்ல, டிரம்ப் என்ன முடிவெடுக்கிறார் என்பதைப் பொறுத்தும் அமைகிறது. குறைந்தபட்சம் அதிபர் பதவிக்கு போட்டியிடுவதற்கான நிதியை அளிக்க டிரம்பிற்கு மஸ்கின் உதவி தேவைப்பட்டது. இப்போது அவருக்கு எந்த விதமான உதவி தேவை என்பதில் தெளிவில்லை. நோவாபினியன் சப்ஸ்டாக் என்ற பெயரில் எழுதி வரும் நோவா ஸ்மித், "எவ்வளவு முறையற்றதாக இருந்தாலும் கூட ட்ரம்ப் கிரிப்டோகரன்சி மூலமாக அதிக லாபம் ஈட்டியிருப்பது, மஸ்கை நாடியிருக்கும் சூழலில் இருந்து வெளியேற உதவியிருக்கலாம்," என்று கூறுகிறார். "இப்படி இருந்தால் மட்டுமே அவர் ஈலோன் பிடியில் இருந்து வெளியேற இயலும்," என்று நினைப்பதாக ஸ்மித் கூறுகிறார். மஸ்கின் அரசாங்க ஒப்பந்தங்களை ரத்து செய்யலாம் என்று மிரட்டும் வகையில் டிரம்ப் கருத்து ஒன்றை பதிவு செய்திருந்தார். 38 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான ஒப்பந்தங்கள் அவை. இந்த ஒப்பந்தங்களில் குறிப்பிட்ட அளவானது மஸ்கின் ராக்கெட் நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸுடன் கையெழுத்திடப்பட்டுள்ளது. டிரம்பின் அறிவிப்பால் இதன் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. இருப்பினும் டிரம்பின் எச்சரிக்கையானது வெறும் சலசலப்பை ஏற்படுத்தும் ஒன்றாகவும் இருக்கலாம். ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு ஆராய்ச்சியாளர்கள் மற்றும் சரக்குகளை கொண்டு செல்கிறது. தற்போது அங்கே நாசா விஞ்ஞானிகள் 3 பேர் பணியாற்றி வருகின்றனர். இது ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் அமெரிக்க விண்வெளித்துறை மற்றும் தேசிய பாதுகாப்பு குறித்த அம்சங்களில் வேரூன்றி இருப்பதை காட்டுகிறது. எனவே டிரம்பின் மிரட்டலை அவ்வளவு எளிதில் நிறைவேற்ற இயலாது. மஸ்கின் இணைய சேவை வழங்கும் நிறுவனமான ஸ்டார்லிங்கிற்கும் இது பொருந்தும். இதற்கு மாற்று கண்டுபிடித்துவிட இயலும் என்று கூறுவது எளிதாக இருக்கும். ஆனால் நடைமுறையில் சாத்தியமில்லை. ஆனால் டிரம்பால் என்ன செய்ய முடியும் என்பதற்கு வரம்புகள் இருப்பது போன்றே மஸ்கிற்கும் வரம்புகள் இருக்கின்றன. டிரம்புடனான மோதல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே, மஸ்க் தன்னுடைய டிராகனை கலைத்துவிடுவதாக கூறினார். ஆனால் பின்னர் அதில் இருந்து பின்வாங்கிவிட்டார். எக்ஸ் பயனர் ஒருவர் கேள்வி எழுப்பிய போது, "நல்ல ஆலோசனை. ஓகே. நாங்கள் அப்படியெல்லாம் செய்ய மாட்டோம் (டிராகனை கலைப்பது),"என்று மஸ்க் பதில் அளித்தார். டிரம்ப் - மஸ்க் இடையேயான நட்பு முடிவுக்கு வந்துவிட்டது. ஆனால் ஒருவரை மற்றொருவர் நாடியிருக்கும் சூழல் நிச்சயமற்றதாக இருக்கிறது. மஸ்க் நிறுவனத்தின் எதிர்காலம் எப்படி இருந்தாலும் சரி, டிரம்ப் மற்றும் அவரின் நிர்வாக நடவடிக்கைகள் அதில் முக்கிய பங்காற்றும் என்பது மட்டும் வெளிப்படையாக தெரிகிறது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c74qyxv98dxo
  6. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், எஸ்.தினேஷ் குமார் பதவி, பிபிசி தமிழுக்காக 12 நிமிடங்களுக்கு முன்னர் 2023-ல் மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் கடைசி ஓவருக்கு முன்பாக ரிட்டயர்ட் அவுட் (Retired out) கொடுத்து சாய் சுதர்சன் பெவிலியன் திரும்பினார். அதிரடியாக விளையாட மாட்டார் என நினைத்து குஜராத் டைட்டன்ஸ் (GT) அணி நிர்வாகம் எடுத்த முடிவு அது. இன்று, அதே அணிக்காக 54.21 என்ற வியக்க வைக்கும் சராசரியில் 156.17 ஸ்ட்ரைக் ரேட்டில் 759 ரன்கள் குவித்து ஐபிஎல் சீசனில் ஆரஞ்சு தொப்பியை வென்றிருக்கிறார். ஒருநாள், T20 வடிவங்களை தொடர்ந்து தற்போது இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அவர் அறிமுகமாகவுள்ளார். எப்படி சாதித்தார் சாய் சுதர்சன்? சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்தாலும் பிற கிரிக்கெட் உச்ச நட்சத்திரங்கள் போல பி.ஆர். ஏஜென்சி வைத்து தன் புகழை பரப்புவதில் சாய் சுதர்சன் கவனம் செலுத்துவதில்லை. கடந்த 2 வருடங்களில் எவ்வளவோ சாதனைகள் செய்தும் கூட அவை பேசுபொருளாக மாறாததற்கு இதுவும் கூட ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால், கவனச்சிதறல் இல்லாமல் தன் ஆட்டத்தில் முழு கவனத்தையும் செலுத்துவதற்கு இந்த மீடியா வெளிச்சமின்மை சுதர்சனுக்கு கைகொடுத்துள்ளது எனலாம். சிறந்த பேட்டருக்கான 5 அம்சங்களும் ஒருங்கே பெற்றர் சாய் சுதர்சன் பட மூலாதாரம்,GETTY IMAGES "ஒரு பேட்டர் உண்மையான குணம் அவருடைய பேட்டிங்கில் வெளிப்பட்டுவிடும். ஒரு பேட்டர் தன் முழு திறமையையும் வெளிக்கொணர விரும்பினால், தன் இயல்புக்கு நேர்மையாக இருக்க வேண்டும். பேட்டிங்கின் அடிப்படை லட்சணம், கட்டுக்கோப்பாக இருப்பது. வாழ்க்கையை மனம்போன போக்கில் வாழும் ஒருவர் நல்ல பேட்டராக இருக்க முடியாது" என்கிறார் கிரிக்கெட் வல்லுநர் சைமன் ஹியூஸ். சாய் சுதர்சன் தன் இயல்புக்கு நேர்மையாக இருப்பதால்தான் அவருடைய ஆட்டத்தை போலவே அவருடைய பேச்சிலும் அமைதியும் வசீகரமும் ஒருசேர இழையோடுகின்றன. ஒரு சிறந்த பேட்டருக்கான அடிப்படை என ஐந்து லட்சணங்களை கிரிக்கெட் எழுத்தாளர் மார்க் நிக்கோலஸ் வரையறுத்துள்ளார். உயர் இடது முன்கை (high left elbow), அசைவற்ற தலை (A still Head), நேரான பேட் (Gun-barrel straight bat), ஷாட் விளையாடும் போது அலைபாயாத உடல் (Body Shape), ஆதிக்கம் செலுத்தும் உடலின் இடது பாகம் (dominant left side of the body). இவை அனைத்தும் இயல்பாகவே சாய் சுதர்சனுக்கு வாய்த்துள்ளன. கூடவே ரேஞ்ச் ஹிட்டிங் (Range Hitting) பயிற்சியின் மூலம், T20-க்கு அவசியமான வலுவையும் கூட்டிக் கொண்டார். சுதர்சனின் பேட்டிங் டெக்னிக்கை கவாஸ்கருடன் முன்னாள் வீரர் நவ்ஜோத் சிங் சித்து ஒப்பிடுகிறார். ஆனால், கவாஸ்கர் போல சுதர்சனை ஒரு முழுமையான கிளாசிக்கல் பேட்டர் என்று சொல்லிவிட முடியாது. ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் டாம் மூடி அவதானிப்பது போல மைக் ஹஸ்ஸி பாணியிலான ஒரு வீரர் இவர். கட்டுக்கோப்பான டெக்னிக், கடுமையான உழைப்பு, நேர்மறையான சிந்தனை. இதுதான் சுதர்சனின் தாரக மந்திரம். அவருடைய பேட்டை உயர்த்திப் பிடிக்கும் பாணி, சில சமயம் லாராவை நினைவூட்டுவதையும் தவிர்க்க முடிவதில்லை. வாய்ப்பை கெட்டியாக பிடித்துக் கொண்ட சாய் சுதர்சன் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,2023-ல் இந்தியாவுக்கும் தென் ஆப்பிரிக்காவுக்கும் இடையே நடைபெற்ற மூன்றாவது சர்வதேச ஒரு நாள் போட்டியில் சாய் சுதர்சன் பங்கேற்றிருந்தார். இந்தியாவில் திறமையான பேட்டர்களுக்கு பஞ்சமில்லை. ஆனால், உச்சபட்ச கிரிக்கெட்டில் எல்லாரும் சாதிப்பதில்லை. பிரித்வி ஷா தொடங்கி ரஜத் படிதார் வரை நிறைய உதாரணங்களை சொல்லலாம். சாய் சுதர்சன் மற்ற பேட்டர்களிடம் இருந்து எவ்வாறு தனித்து நிற்கிறார்? ஒரு நல்ல வீரருக்கு அழகு, கிடைத்த வாய்ப்பை உடனடியாக பயன்படுத்திக்கொள்வது. டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த முதல் 10 பேட்டர்களில் பெரும்பான்மையினர் தங்களுடைய முதல் 3 ஆட்டங்களுக்குள் சதமோ அரைசதமோ அடித்தவர்கள். சாய் சுதர்சன் தனது அறிமுக ஒருநாள் ஆட்டத்தில் அரை சதமும் அறிமுக ரஞ்சி கோப்பை ஆட்டத்தில் சதமும் அடித்தவர். ஐபிஎல்லில் குஜராத் டைட்டன்ஸ் அணியில் நிலையான இடமின்றி இருந்த அவர், 2023 சீசனில் வில்லியம்சன் காயம் காரணமாக விலகியதும் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டார். உள்ளூர் லிஸ்ட் ஏ, டி20 அறிமுக ஆட்டங்களில் கூட சுதர்சன் சோடை போகவில்லை என்பது அவருடைய மனத்திட்பத்துக்கு (Temperement) சான்று. சாய் சுதர்சன் பேட்டிங்கில் குறிப்பிடத்தக்க அம்சம், அவருடைய ஃபுட் ஒர்க். கிரிக்கெட்டில் ஒருவர் சாதிப்பதற்கு நல்ல லென்த்தில் (good length) வீசப்படும் பந்துகளை விளையாடுவதில் கைதேர்ந்தவராக இருக்க வேண்டும். ஏனெனில் சர்வதேச கிரிக்கெட்டில் இந்த வகையான பந்துகளே அதிகம் வீசப்படுகின்றன. இந்த ஐபிஎல் சீசனிலேயே ஷமி, பும்ரா போன்றவர்களின் அத்தகைய பந்துகளை சுதர்சன் அநாயசமாக எதிர்கொண்டதை பார்த்தோம். இதை எப்படி சுதர்சன் சாதிக்கிறார்? ஒன்று, இறங்கிவந்து விளையாடி பவுலரின் திட்டத்தை கெடுத்து, தனக்கு வேண்டிய இடங்களில் பந்துவீச மறைமுகமாக அழுத்தம் கொடுக்கிறார். இல்லையென்றால், தனக்கு இருக்கும் அற்புதமான டைமிங்கை (Timing) பயன்படுத்தி, பந்தின் பாதையை கணித்து நன்றாக உள்வாங்கி கடைசி நொடியில் ஆளில்லாத பகுதிக்கு விரட்டுகிறார். சாய் சுதர்சனின் பலவீனங்கள் ஒரு சிறந்த பேட்டர் சரியாக கால்களை நகர்த்தினால் மட்டும் போதாது; தலையையும் சரியாக நகர்த்த வேண்டும் என்கிறார் இங்கிலாந்து பேட்டிங் ஜாம்பவான் கெவின் பீட்டர்சன். குறிப்பாக சுழற்பந்து வீச்சை எதிர்கொள்ள, இந்த தலை நகர்வு மிகவும் அவசியம். 6 அடி உயரம் என்பதால் கால்களுடன் தலையையும் முன்னகர்த்தி விளையாடும் போது சுதர்சனால் எந்தவொரு சுழற்பந்து வீச்சாளருக்கும் நெருக்கடி கொடுக்க முடிகிறது. தலை முன்செல்ல அதனைத் தொடர்ந்து காந்தம் போல உடலும் கால்களும் பின்னே செல்கின்றன. கோலி தன்னுடைய பேட்டிங்கில் உச்சத்தில் இருந்தபோது இதே பாணியில் தான் சுழற்பந்து வீச்சை எதிர்கொண்டார். சாய் சுதர்சன் ஆட்டத்தில் பலவீனங்களும் இருக்கத்தான் செய்கின்றன. இப்போது கூட சில சமயங்களில் பவுன்சர் பந்துகளுக்கு அவர் தடுமாறுவதை பார்க்க முடிகிறது. அதேநேரம், பவுன்சர் வீசினால் அவர் விக்கெட்டை எடுத்துவிடலாம் என்று பந்துவீச்சாளர்கள் நம்பும் நிலை இல்லை. இந்திய இடக்கை பேட்டர்கள் பவுன்சர் பந்துகளுக்கு தடுமாறுவது புதிதல்ல. கங்குலி, யுவராஜ், ரெய்னா என ஒரு நீண்ட பாரம்பரியம் உள்ளது. ஆனால், இவர்கள் அளவுக்கு பவுன்சரை எதிர்கொள்வதில் சுதர்சன் பலவீனமானவர் அல்ல. முடிந்தவரை மைதானத்தின் கோணங்களை பயன்படுத்தி அதன் வீரியத்தை மட்டுப்படுத்தி விடுகிறார். கோலிக்கும் ஆரம்ப காலத்தில் இந்த பிரச்னை இருந்ததை இங்கே குறிப்பிட்டாக வேண்டும். சாய் சுதர்சனின் டெக்னிக் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான களங்களில் செல்லுபடியாகாது என தமிழ்நாடு அணியின் முன்னாள் பயிற்சியாளர் சுலக்ஷன் குல்கர்னி கூறிருந்தார். இந்த குறைபாட்டை நிவர்த்தி செய்யும் முயற்சியாகத்தான் இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட்டில் பங்கேற்று சுதர்சன் விளையாடினார். இந்த ஐபிஎல் சீசனில் அவருடைய பேட்டிங்கை பார்க்கும் போது, அந்த குறைபாடு பெரிதாக வெளிப்படவில்லை. கடந்த காலங்களில் இந்த பலவீனத்தை வைத்துக் கொண்டே வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான களங்களில் அவர் ரன்கள் குவித்ததை மறுக்க முடியாது. ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமான போது, தாறுமாறான தென்னாப்பிரிக்க ஆடுகளங்களில் அவர் ரன் குவித்துள்ளார். இந்தியா ஏ அணி சார்பில் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆஸ்திரேலிய மண்ணில் சதமடித்துள்ளார். கவுண்டி கிரிக்கெட் அனுபவம் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் அவருக்கு கைகொடுக்கும் என நம்பலாம். பவுன்சர் விளையாடுவதில் குறைபாடுள்ள பிராட்மேன்தான் 99.94 என்ற சராசரியில் ரன் குவித்தார் என்பதை எப்படி புரிந்துகொள்வது? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,2023-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற கவுண்டி சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்று ஆடினார் சாய் சுதர்சன். சாய் சுதர்சன் அவ்வளவு எளிதாக தனது பேட்டிங்கில் திருப்தியடைந்து விடமாட்டார். சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில், இந்திய டி20 அணியில் மீண்டும் இடம்பெறுவது குறித்த கேள்விக்கு, "டி20 ஆட்டங்களில் தன்னுடைய ஆட்டம் இன்னும் முழுமைபெறவில்லை; இன்னும் கற்றுக்கொள்ள வேண்டியது உள்ளது" என கூறியுள்ளார். உலகமே பார்த்த ஐபிஎல் தொடரில் 759 குவித்த ஒருவர் இப்படி பேசினார் என்பதை நம்ப முடிகிறதா? சுதர்சன் மட்டுமல்ல எந்தவொரு உச்சபட்ச பேட்டரும் தங்களுடைய ஆட்டத்தில் நிறைவு பெற்றுவிட மாட்டார்கள். சச்சின், சங்ககாரா போன்றோர் கடைசி ஆட்டம் வரை தங்கள் பேட்டிங் நுட்பங்களை மேம்படுத்திக் கொள்ளவே முயன்றார்கள். GT vs SRH: தமிழக வீரர் சாய் சுதர்சன் முதலிடம் - சுப்மன் கில் ரன் அவுட் சர்ச்சையானது ஏன்? சாய் சுதர்சன் சதம்: குஜராத் வெற்றியால் 3 அணிகள் பிளேஆஃப் முன்னேற்றம் - நான்காவது அணி எது? தொடர்ந்து சிறப்பாக ஆடியும் இந்திய அணியில் இடம் கிடைக்காதது ஏன்? மனம் திறந்தார் சாய் சுதர்சன் ஆர்சிபி அணியின் 'நாக் அவுட்' பலவீனத்தை தினேஷ் கார்த்திக் சரி செய்தது எப்படி? பட மூலாதாரம்,GETTY IMAGES சாய் சுதர்சனிடம் உள்ள பாராட்டப்பட வேண்டிய ஓர் அம்சம், விமர்சனங்களை அவர் நேர்மறையாக எடுத்துக்கொள்ளும் பாங்கு. வேகப்பந்து வீச்சை எதிர்கொள்ள மாட்டார் என்றார்கள். கவுண்டி போட்டியில் கலந்துகொண்டு சிவப்பு பந்து கிரிக்கெட்டின் அடிப்படைகளை மெருகேற்றிக்கொண்டார். டி20-க்கு ஏற்ற வீரர் இல்லை என்றார்கள். ஆஸ்திரேலியாவின் பிரபல பவர் ஹிட்டிங் பயிற்சியாளர் ஷனான் யங் (Shanon young) பயிற்சியின் கீழ் தன் ஆட்டத்தின் வேகத்தை கூட்டிக்கொண்டார். இப்போது அவர் டெஸ்டில் தாக்குப்பிடிப்பாரா என விமர்சகர்கள் சிலர் சந்தேகம் எழுப்புகின்றனர். இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் சாய் சுதர்சன் அதற்கும் தனது பேட்டால் பதில் கொடுப்பார் என நம்புவோம். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c1j5yl4dr68o
  7. கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி - “மாடுகள் மேய்கின்றன, நாய்கள் அலைந்து திரிகின்றன – பாதுகாப்பு வேலி எதுவும் இல்லை” Published By: RAJEEBAN 07 JUN, 2025 | 10:18 AM Thyagi Ruwanpathirana முன்னர் 52 மனிதஎச்சங்களுடன் பாரிய மனித புதைகுழி கண்டுபிடிக்கப்பட்ட பகுதியில் தற்போது மாடுகள் மேய்கின்றன.நாய்கள் நடமாடுகின்றன. திருகோணமலையிலிருந்து முல்லைத்தீவிற்கு செல்லும் வீதியின் ஓரத்தில் தற்போது குழியொன்று சொல்லக்கூடிய ஒன்றுமாத்திரம் காணப்படுகின்றன. புதைகுழிகளை தோண்டும் நடவடிக்கைகள் 2024 இல் முடிவடைந்து கிட்டத்தட்ட ஒரு வருடமாகின்றது.இந்த அகழ்வின் போது விடுதலைப்புலிகள் இயக்கத்தவர்கள் என கருதப்படுபவர்கள் 52பேரின் மனித எச்சங்களும்,சீருடைகள் போன்ற உடைகளும் தங்களை அடையாளம் காண்பதற்காக விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்கள் அணியும் பட்டிகளும் மீட்கப்பட்டன. இந்த உடல்கள் எப்போது இங்கு புதைக்கப்பட்டன என்பதை அறிய உதவும் தடயவியல் அறிக்கைகளிற்காக குடும்பத்தவர்கள் உறவினர்கள் காணப்படுகின்றனர். மீட்கப்பட்டவை யாருடைய உடல்கள் என்பதை அடையாளம் காணும் நடவடிக்கைகள் இன்னமும் ஆரம்பமாகவில்லை சந்தேகநபர்கள் என கருதப்படுபவர்களின் குடும்பத்தவர்கள் உறவினர்களின் மரபணுவை சேகரித்து மனித எசசங்களின் மரபணுக்களுடன் ஒப்பிட்டு பார்க்கும் நடவடிக்கைகள் இன்னமும் ஆரம்பமாகவில்லை. மனித புதைகுழியை தோண்டும் நடவடிக்கைகள் இடம்பெற்ற பின்னர், அந்த இடத்தை சுற்றிபாதுகாப்பு வேலியொன்று அமைக்கப்படவில்லை,அங்கு குற்றம் நடந்தது என்பதை தெரிவிக்கும் அறிவிப்புகள் எதனையும் காணமுடியவில்லை. சர்வதேச மனிதாபிமான சட்டத்தின்கீழ் கைதிகளும் போர்க்கைதிகளும் பாதுகாக்கப்பட்டவர்கள். போர்க்கைதிகளை கொலை செய்வது சித்திரவதை செய்வது ஈவிரக்கமற்ற விதத்தில் நடத்துவது மோசமானவிதத்தில் நடத்துவது போன்றவை யுத்த குற்றங்களாகும். இந்த பதிவின் 7 இறுதி புகைப்படங்கள் கம்போடியாவின் கொலைகளங்களின் மனித புதைகுழிகள் காணப்பட்ட இடத்தில் எடுக்கப்பட்டவை.பாரியமனித புதைகுழிகளை உலகின் ஏனைய நாடுகளில் எவ்வாறு கையாண்டுள்ளனர் என்பது குறித்த சிறந்த தெளிவுபடுத்தலை இந்த படங்கள் உங்களிற்கு வழங்குகின்றன. அவர்களின் வீடுகள் மனித புதைகுழிகளிற்கு அருகில் இருந்தாலும் கொக்குதொடுவாயின் தமிழ் சமூகத்தினர் போரில் இழந்தவர்களை நினைவுகூருவதற்காக நடமாடும் நினைவுச்சின்னங்களை நாடவேண்டிய நிலையில் உள்ளனர். இலங்கையில் போர் முடிவடைந்து 16 ஆண்டுகள் முடிவடைந்த பின்னரும் இன்னமும் அதிகளவு இராணுவமயப்படுத்தப்பட்ட நிலையில் காணப்படுகின்ற பகுதிகளில் நினைவுத்தூபிகளை ஏற்படுத்தினால் என்ன நடக்கும் என்ன அச்சம் காரணமாகவே நடமாடும் நினைவுத்தூபிகளை அவர்கள் நாடுகின்றனர். நாளை சிஐடியினர் இங்கு வந்து நேற்று யார் வந்தது என விசாரணை செய்வார்கள் என மனிதபுதைகுழிக்கு அருகில் வசிக்கும் ஒருவர் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/216841
  8. 07 JUN, 2025 | 10:07 AM யாழ்ப்பாணம், சங்கானைப் பிள்ளையார் ஆலய வளைவு வீதியில் பட்டா ரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்துள்ளார். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். வெள்ளிக்கிழமை (06) காலை 9.00 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவத்தில் மாதகல் மேற்க்கைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான 56 வயதுடையவர் ஆவார். மேற்படி குடும்பஸ்தர் இன்னொருவரை மோட்டார் சைக்கிளில் பின் இருக்கையில் ஏற்றிக் கொண்டு சங்கானையில் இருந்து சித்தங்கேணி நோக்கி மோட்டார் சைக்கிள் சென்றுள்ளார். இதன்போது, சங்கானை பிள்ளையார் கோவில் வளைவு பகுதியில் மேற்படி மோட்டார் சைக்கிள் முச்சக்கர வண்டி ஒன்றை மத்திய கோட்டை தாண்டி முந்தி செல்ல முற்பட்டபோது எதிர்த் திசையில் வந்த பட்டா ரக வாகனத்துடன் மோதி இருவரும் மயக்கம் அடைந்தனர். உடனடியாக சங்கானை வைத்தியசாலையை கொண்டு செல்லப்பட்டு பின்னர் யாழ். போதனா வைத்தியசாலைக்கு இருவரும் மாற்றப்பட்ட நிலையில் மேற்படி குடும்பஸ்தர் உயிரிழந்ததுடன் மற்றவர் மயக்கம் அடைந்த நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றார். இம் மரணம் தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி விசாரணைகளை மேற்கொண்டதுடன் சாட்சிகளை மானிப்பாய் பொலிஸார் நெறிப்படுத்தினர். https://www.virakesari.lk/article/216835
  9. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம் பதவி, பிபிசி தமிழ் 6 ஜூன் 2025 புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் 'ரிசர்வ் வங்கி மூலமாக இந்திய அரசு ரகசியமாக இரிடியத்தை விற்பனை செய்வதால் அதில் முதலீடு செய்தால் அதிக பணம் கிடைக்கும்' எனக் கூறி சுமார் 4.5 கோடி ரூபாயை மோசடி செய்ததாக 6 பேரை தமிழ்நாடு சிபிசிஐடி போலீஸ் கைது செய்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி அதிகாரிகள் போல ஆள்மாறாட்டம் செய்தும் போலி ஆவணங்களைத் தயாரித்தும் அவர்கள் மோசடியில் ஈடுபட்டதாக, ஜூன் 2-ஆம் தேதி சிபிசிஐடி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு கூறுகிறது. பிளாட்டினம், தங்கத்தைவிட அதிக மதிப்புள்ளதாக இருப்பதால் இரிடியத்தை மையமாக வைத்து மோசடிகள் அரங்கேறுவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இரிடியம் மோசடியில் ஈடுபட்டதாக 6 பேர் சிக்கியது எப்படி? இரிடியத்தை முன்வைத்து மோசடி நடப்பது எப்படி? இரிடியம் மோசடி நடந்தது எப்படி? படக்குறிப்பு, இரிடியம் இந்திய ரிசர்வ் வங்கியின் உதவி பொதுமேலாளர் ஏ.ஜே.கென்னடி, கடந்த ஆண்டு மே மாதம் சென்னை காவல் ஆணையரிடம் புகார் மனு ஒன்றைக் கொடுத்துள்ளார். நிதி மோசடிப் புகார்கள் தொடர்பான புகார்களைக் கையாளும் ரிசர்வ் வங்கியின் 'SACHET' இணையதளத்தில் தனி நபர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில், புகார் மனுவை ஏ.ஜெ.கென்னடி அளித்திருந்தார். தனது மனுவில், 'இந்திய ரிசர்வ் வங்கியின் பெயர் மற்றும் சின்னங்களைப் பயன்படுத்தியும் போலியான ஆவணங்களைத் தயார் செய்தும் பொதுமக்களை சிலர் ஏமாற்றி வருகின்றனர். ரிசர்வ் வங்கி மூலமாக இந்திய அரசிடம் இருந்து இரிடியம் மற்றும் தாமிரம் விற்பனைக்காக பல்லாயிரம் கோடி ரூபாய் பணம் பெறப்பட்டதாகவும் இந்தப் பணத்தை வெளியில் கொண்டு வருவதற்கு ரிசர்வ் வங்கிக்கு சேவைக் கட்டணம் செலுத்த வேண்டும் எனவும் சிலர் பொதுமக்களை நம்ப வைத்து ஏமாற்றியுள்ளனர்' என்று அவர் குறிப்பிட்டுள்ளார். பணத்தைப் பெறுவதற்கு ரிசர்வ் வங்கி அதிகாரிகளுக்கு கமிஷன் தொகை கொடுக்க வேண்டும் எனவும் அவ்வாறு செலுத்தினால் அதிக வட்டியுடன் முதலீட்டுத் தொகை திரும்பக் கிடைக்கும் எனக் கூறி ஏமாற்றியுள்ளதாக மனுவில் அவர் கூறியிருந்தார். இதுதொடர்பான போலி ஆவணங்களை நம்பி சிலர் ஏமாந்துள்ளதாக மனுவில் கூறப்பட்டிருந்தது. இதையடுத்து, வழக்கு சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டது. போலீஸ் நடத்திய விசாரணையில் கடந்த மே மாதம் 28 அன்று தஞ்சாவூரை சேர்ந்த நித்யானந்தம், சந்திரா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் அவர்கள் மீது 419, 465, 468, 471, 420 IPC & 66 D of IT Act 2000 3 r/w 5of Emblems & Name (Prevention of improper use) Act 1950 ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏமாற்றுதல், மோசடி, ரிசர்வ் வங்கி முத்திரையை தவறாகப் பயன்படுத்துதல் ஆகியவற்றை இப்பிரிவுகள் குறிக்கின்றன. இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சேலத்தைச் சேர்ந்த அன்புமணி, முத்துசாமி, கேசவன், தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த காடி சார்லா கிஷோர்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டதாக, சிபிசிஐடி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. இவர்களிடம் இருந்து தங்க நிற உலோகம், போலி ஆவணங்கள், செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறியுள்ள சிபிசிஐடி, சென்னை, தஞ்சாவூர், கோவை, சேலம், நாமக்கல் மற்றும் தருமபுரி ஆகிய மாவட்டங்களில் சுமார் 20-க்கும் மேற்பட்ட நபர்களை இவர்கள் ஏமாற்றியுள்ளது தெரியவந்துள்ளதாக கூறியுள்ளது. 'மும்பை, டெல்லியில் ரகசிய கூட்டம்' இரிடியம் வர்த்தகத்தை மத்திய அரசு ரகசியமாக மேற்கொண்டு வருவதாகக் கூறி ரிசர்வ் வங்கி சின்னத்துடன் கூடிய போலி சான்றிதழ்களைக் காட்டி பண மோசடியில் இக்குழுவினர் ஈடுபட்டு வந்துள்ளதாக சி.பி.சி.ஐ.டி கூறியுள்ளது. ஒருகட்டத்தில் முதலீட்டுத் தொகையை வாடிக்கையாளர்கள் கேட்டுள்ளனர். 'அவர்களை நம்ப வைப்பதற்காக டெல்லி மற்றும் மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டல்களுக்கு அவர்களை வரவழைத்து ரிசர்வ் வங்கி அதிகாரிகள் போல சிலரை நடிக்க வைத்து நம்ப வைத்துள்ளனர்' என சிபிசிஐடி தெரிவித்துள்ளது. இரிடியம்-காப்பர் திட்டத்தில் முதலீடு எனக் கூறி சுமார் 4.5 கோடி ரூபாய் வரை இக்குழுவினர் ஏமாற்றியுள்ளது, விசாரணையில் தெரியவந்துள்ளதாக சிபிசிஐடி தெரிவித்துள்ளது. தங்களை ரிசர்வ் வங்கியின் அதிகாரிகள் என்றும் இரிடியம்-செம்பு வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் எனக் கூறி கட்டாயப்படுத்தி முதலீடு செய்ய வைத்ததாக, சில ஊடகங்களிடம் சிபிசிஐடி பிரிவின் கூடுதல் காவல்துறை இயக்குநர் டி.எஸ்.அன்பு தெரிவித்துள்ளார். ரிசர்வ் வங்கி அதிகாரிகள் கூறுவது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES மோசடியைக் கண்டறிந்தது தொடர்பாக மேலதிக தகவல்களை அறிய, இந்திய ரிசர்வ் வங்கியின் சென்னை மண்டல கிளை அலுவலகத்தை பிபிசி தமிழ் தொடர்பு கொண்டது. "ரிசர்வ் வங்கியின் புகார் தளத்தில் (Sachet) தனி நபர் அளித்த தகவலின் அடிப்படையில் உதவிப் பொது மேலாளர் புகார் அளித்தார். அவர் தற்போது ஓய்வுபெற்றுவிட்டார்" எனக் கூறினார், பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர். "நிதி மோசடி தொடர்பாக புகார்கள் வந்தால் அதுகுறித்து பொருளாதார குற்றப்பிரிவுக்குத் தகவல் தெரிவிக்கப்படும். அதன்பேரில் அவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள்" எனக் கூறிய அவர், "இதுதொடர்பாக, மும்பையில் உள்ள தலைமை அலுவலகத்தில் இருந்து மட்டுமே அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளிவரும்" என்று மட்டும் பதில் அளித்தார். தொடரும் இரிடியம் மோசடிகள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பூமிக்கு அடியில் மிகக் குறைவாக கிடைக்கும் உலோகங்களில் ஒன்றாக இரிடியம் உள்ளது தமிழ்நாட்டில் இரிடியத்தை முன்வைத்து தொடர்ந்து பல்வேறு மோசடிகள் நடைபெற்று வருகின்றன. 2023 ஆம் ஆண்டில் திருவண்ணாமலையில் இரிடியம் விற்பனை தொடர்பாக 4 பேருக்குள் ஏற்பட்ட மோதல், மோசடியை வெளிக்கொண்டு வந்தது. முதல் தகவல் அறிக்கையின் படி, "ஆந்திர மாநிலம் திருப்பதியை சேர்ந்த சீனி முகமது என்ற நபர், திருவண்ணாமலையை சேர்ந்த ரவி என்பவரை அணுகியுள்ளார். அவரிடம், தன்னிடம் இரிடியம் உள்ளதாகவும் அதை விற்பனை செய்தால் பல லட்சம் சம்பாதிக்கலாம் என சீனி முகமது கூறியுள்ளார். இதை நம்பி ரவி உள்பட மூன்று பேர் சில லட்சங்களை முதலீடு செய்துள்ளனர். ஒருகட்டத்தில், தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்து சீனி முகமதுவிடம் தகராறு செய்துள்ளனர். இதையறிந்து நான்கு பேரையும் திருவண்ணாமலை போலீஸ் கைது செய்துள்ளது." கடந்த ஆண்டு ஜூலை மாதம் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த தி.மு.க பிரமுகர் மீது இரிடியம் மோசடியில் ஈடுபட்டதாகக் கூறி மதுரை தெற்கு வாசல் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மதுரை தெற்குவாசல் பகுதியைச் சேர்ந்த தெய்வேந்திரனிடம், இரிடியம் கலசத் தொழிலில் ஈடுபட்டால் பல லட்சம் சம்பாதிக்கலாம் எனப் பெண் ஒருவர் கூறியதை நம்பி திருவள்ளூரை சேர்ந்த தி.மு.க பிரமுகரிடம் சுமார் 18 லட்ச ரூபாய் வரை இழந்துவிட்டதாக, காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இரிடியம் மூலம் சுமார் 20 கோடி வரை லாபம் கிடைக்கும் எனக் கூறி மோசடி செய்ததாக காவல்துறையில் தெய்வேந்திரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, முகமது ரபி, கலைச்செல்வி ஆகியோர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. இரிடியத்துக்கு இவ்வளவு மதிப்பு ஏன்? படக்குறிப்பு,பிளாட்டினம், தங்கம் ஆகியவற்றைவிட இரிடியத்தின் விலை 2 அல்லது 3 மடங்கு அதிகம் என்கிறார் பார்த்திபன். கடந்த 10 ஆண்டுகளாக இரிடியத்தை முன்வைத்து பல்வேறு வடிவங்களில் மோசடிகள் நடப்பதாகக் கூறுகிறார், அசாமில் உள்ள தேசிய மருந்தியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் மூத்த விஞ்ஞானி பார்த்திபன். "பூமிக்கு அடியில் மிகக் குறைவாக கிடைக்கும் உலோகங்களில் ஒன்றாக இரிடியம் உள்ளது. கனடா, மெக்ஸிகோ மற்றும் தென் அமெரிக்க நாடுகளில் இரிடியம் அதிகமாக கிடைக்கிறது. குறிப்பாக, கடற்கரையோர பகுதிகள் மற்றும் வண்டல் (sediment) படிமங்களில் இவை கிடைக்கிறது. பிளாட்டினம், தங்கம் ஆகியவற்றைவிட 2 அல்லது 3 மடங்கு இதன் விலை அதிகம். சர்வதேச சந்தையில் ஒரு கிராம் இரிடியத்தின் விலை என்பது நான்காயிரம் முதல் ஐந்தாயிரம் டாலர்களாக உள்ளது. அதனால் இதனை மோசடியாக வாங்கி விற்பதில் சிலர் முயற்சிக்கின்றனர்" எனக் கூறுகிறார் பார்த்திபன். 'தங்கத்தைவிட அடர்த்தி அதிகம்' "இரிடியத்தின் அணு எண் 191. இதை வேதியியல் ஆய்வகத்தில் வினை ஊக்கியாக (Catalyst) பயன்படுத்துகின்றனர். தங்கம், பிளாட்டினம் ஆகியவற்றைவிடவும் அதிக அடர்த்தி கொண்ட உலோகமாக இரிடியம் உள்ளது" எனவும் அவர் குறிப்பிட்டார். "நீர், அமிலம் என இரிடியத்தை எங்கு தூக்கிப் போட்டாலும் அதற்கு ஒன்றும் ஆகாது" எனக் கூறும் பார்த்திபன், "அடர் அமிலத்தில் அதிக நேரம் வைத்திருந்தால் மட்டுமே அதற்கு பாதிப்பு ஏற்படும். எளிதில் தீப்பிடிக்காது என்பதால் விமானத்தில் மின்சாதன கருவிகளில் பயன்படுத்துகின்றனர்" என்கிறார். "இரிடியம் பூசப்பட்ட (coated) எல்.இ.டி விளக்குகள், லேப்டாப் போன்றவற்றுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. இதை தொழிற்சாலைகளில் அதிகம் பயன்படுத்துகின்றனர்" எனவும் அவர் குறிப்பிட்டார். "இரிடியத்தை நியூட்ரான் கொண்டு மோதவிடும்போது அது இரிடியம் 192 ஆக மாறிவிடும். இதை ரேடியோ ஆக்டிவ் ஐசோடோப் (radio active isotope) என்கின்றனர். அப்போது அதிக கதிரியக்க தன்மை வாய்ந்த கதிர்கள் வெளிப்படும்" எனக் கூறுகிறார் பார்த்திபன். 'மனித உயிருக்கே ஆபத்து' "இவ்வாறு மாற்றப்படும் போது அதை இயல்பாக கையாள முடியாது. பாதுகாப்பான கருவிகள் அல்லது மரத்தால் ஆன பொருள் மூலம் மூடப்பட வேண்டும் (Personal protected equipment (PPE). சுமார் 90 அடி வரையில் அதை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். அவ்வாறு கையாளாவிட்டால் கதிரியக்கம் வெளிப்பட்டு மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும்" எனவும் தெரிவித்தார். மருத்துவமனைகளில் இரிடியம் 192 பயன்படுத்துவதாகக் கூறும் அவர், "ப்ராஸ்டேட் புற்றுநோய், தோல் புற்றுநோய் மற்றும் மார்பக புற்றுநோய்க்கான சிகிச்சையில் இவை பயன்படுத்தப்படுகிறது. புற்றுநோய் செல்களை அழிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன" எனக் கூறுகிறார். கோவில் கலசங்களில் இரிடியம் உள்ளதா? பட மூலாதாரம்,GETTY IMAGES "கோவில் கலசங்களில் இரிடியம் உள்ளதாக மோசடிகள் நடந்தன. இதில் உண்மை உள்ளதா?" எனக் கேட்ட போது, "தங்கம், செம்பு உள்பட வேறு உலோகங்களுடன் வினைபுரியும்போது துணைப் பொருளாக (Bi Product) இரிடியம் கிடைக்கிறது. மிகப் பழைமையானதாக இருக்கும் உலோகத்தில், இவை இயல்பாகவே உருவாகும்" எனக் கூறுகிறார். உதாரணமாக, பழமையான கோவில் கலசத்தில் 2 கிராம் அளவு தங்கம் இருந்தால் அதில் சுமார் 500 மி.கி அளவு இரிடியம் கிடைக்க வாய்ப்புள்ளதாகக் கூறும் அவர், "மிகக் குறைவாக கிடைத்தாலும் அதன் விலை என்பது மிக அதிகம். அரசு அனுமதி பெற்ற ஆய்வகங்களுக்கு 1 கிராம் சுமார் 83 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்படுகிறது" என்கிறார். தொடர்ந்து பேசும்போது, "இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களுக்கு அலாய் வீல்களைத் தயாரிக்கும்போதும் நகை தயாரிப்பிலும் இரிடியம் உருவாகின்றன. அவ்வாறு கிடைத்தால் சட்டவிரோதமாக யாருக்கும் விற்கக் கூடாது என இந்திய அரசு தடை விதித்துள்ளது" எனக் கூறினார். "இரிடியம் 192 வகையை மிகப் பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டும்" எனக் கூறும் பார்த்திபன், 2015 ஆம் ஆண்டு மெக்ஸிகோ நாட்டில் உள்ள டாபாஸ்கோ (Tabasco) மாநிலத்தில் மருத்துவ ஆய்வகத்தில் இருந்து இரிடியத்தை சிலர் சட்டவிரோதமாக திருடிய சம்பவத்தை மேற்கோள் காட்டினார். "இரிடியத்தை மூடப்பட்ட கலனில் பாதுகாப்பாக கொண்டு செல்லாததால் நிறைய பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது. இதில் தொடர்புடைய நபர்களை அந்நாட்டு அரசு கைது செய்தது" எனக் கூறுகிறார் பார்த்திபன். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cd62l1z4710o
  10. உக்ரைன் தலைநகர் உட்பட பல நகரங்களை இலக்குவைத்து ரஸ்யா பாரிய ஆளில்லா விமான, ஏவுகணை தாக்குதல் 07 JUN, 2025 | 09:34 AM உக்ரைன் தலைநகர் உட்பட பல நகரங்களை இலக்குவைத்து ரஸ்யா மேற்கொண்ட பாரிய ஆளில்லா விமான, ஏவுகணை தாக்குதல்களில் ஐவர் கொல்லப்பட்டுள்ளனர். ரஸ்யாவின் அதிநவீன போர் விமானங்களை உக்ரைன் தாக்கியழித்தமைக்கு பதிலடி கொடுக்கும் விதத்திலேயே ரஸ்யா இந்த தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது. ரஷ்யா குரூஸ் ஏவுகணைகளையும், ஆளில்லா விமானங்களையும் பயன்படுத்தியது என தெரிவித்துள்ள உக்ரைன் அதிகாரிகள் ஐவர் கொல்லப்பட்டுள்ளனர் 80க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர் என தெரிவித்துள்ளனர். உக்ரைன் தலைநகரையும் உக்ரைனின் மேற்குகில் உள்ள நகரமொன்றையும், வடமேற்கில் உள்ள நகரங்களையும் ரஸ்யா தாக்கியதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. உக்ரைனின் பயங்கரவாத தாக்குதல்களிற்கு பதிலடியாக இந்த தாக்குதல்களை மேற்கொண்டதாக தெரிவித்துள்ள உக்ரைனின் இராணுவ இலக்குகள் தாக்கப்பட்டன என தெரிவித்துள்ளது. மிகவும் துல்லியமாக தாக்ககூடிய நீண்டதூரம் செல்லும் வான் தரை கடல் ஆயுதங்களை பயன்படுத்தியதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/216836
  11. காசாவை நோக்கி கிரெட்டா தன்பேர்க்குடன் பயணிக்கும் கப்பலை தடுத்து நிறுத்த தயாராகின்றது இஸ்ரேலிய கடற்படை - டைம்ஸ் ஒவ் இஸ்ரேல் Published By: RAJEEBAN 06 JUN, 2025 | 04:10 PM காசாமீதான இஸ்ரேலின் முற்றுகைக்கு சவால் விடும் நோக்கி காலநிலை செயற்பட்டாளர் கிரெட்டா தன்பேர்க்குடன் பயணிக்கும் பிரீடம் புளோட்டிலா அமைப்பின் கப்பலை இஸ்ரேலிய கடற்படை தடுத்து நிறுத்தும் என டைம்ஸ் ஒவ் இஸ்ரேல் தெரிவித்துள்ளது. டைம்ஸ் ஒவ் இஸ்ரேல் மேலும் தெரிவித்துள்ளதாவது, காசாமீதான இஸ்ரேலின் முற்றுகைக்கு சவால் விடும் நோக்கி காலநிலை செயற்பட்டாளர் கிரெட்டா தன்பேர்க்குடன் பயணிக்கும் கப்பல் இஸ்ரேலிய கடற்பரப்பினை நெருங்கினால் இஸ்ரேலிய கடற்படை தடுத்து நிறுத்தும். பாலஸ்தீன சார்பு இஸ்ரேல் எதிர்ப்பு பீரிட்டம் புளோட்டிலா கூட்டணி ஏற்பாடு செய்துள்ள மட்லீன் படகில் மோதல்கள் இடம்பெற்றால், இராஜதந்திர சமூகம் அதற்கு கடும் எதிர்ப்பை வெளியிடும், பிரான்ஸ் பிரிட்டன் போன்ற நாடுகள் ஏற்கனவே இந்த படகின் பயணத்தை கண்காணித்துவருவதாக தெரிவித்துள்ளன. பிரிட்டனின் கொடியுடன் பயணிக்கும் இந்த படகில் 12 செயற்பாட்டாளர்கள் உள்ளனர் அவர்களில், பிரான்சை சேர்ந்த பாலஸ்தீனத்தை பூர்வீகமாக கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரிமா ஹசனும் உள்ளார். கடந்த பெப்ரவரியில் இவர் இஸ்ரேலிற்குள் நுழைய முற்பட்டவேளை இவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது, இஸ்ரேலிற்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டு வந்துள்ளார் என்ற குற்றச்சாட்டின் கீழ் இவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. படகின் பாதையை கண்காணித்து வருவதாக இஸ்ரேலின் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளன. மத்தியதரை கடலை கடப்பதற்காக சூடானின் குடியேற்றவாசிகள் பயன்படுத்தும் கடற் பாதையிலேயே இந்த படகு பயணிக்கின்றது. இந்த படகு காசாவை நோக்கி பயணித்தால், கடற்படை அதனை தடுத்து நிறுத்தும் என அதிகாரிகள் தெரிவித்தனர். மட்லீன் வாரஇறுதியில் காசா பள்ளத்தாக்கினை சென்றடையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மட்லீன் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள இஸ்ரேலிய இராணுவம் காசா பகுதியில் கடல்சார் முற்றுகையை நடைமுறைப்படுத்தியுள்ளோம், அரசியல் பிரிவின் வழிகாட்டுதல்களுடன் பல்வேறு சூழ்நிலைக்கும் தயாராவதாக தெரிவித்துள்ளது. படகில் ஆறு பிரான்ஸ் பிரஜைகள் உள்ளதால் பிரான்ஸ் நிலைமையை உன்னிப்பாக அவதானித்து வருவதாக தெரிவித்துள்ள பிரான்ஸ் இராஜதந்திரியொருவர், படகில் உள்ள தங்களின் நாட்டவர்களிற்கு தேவைப்பட்டால் உதவிகளை வழங்க பிரான்ஸ் தயாராக உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். பிரிட்டனும் நிலைமையை உன்னிப்பாக அவதானித்து வருவதாக சனல் 12க்கு தெரிவித்துள்ள பிரிட்டிஸ் அதிகாரியொருவர், பிரிட்டிஸ் கொடியுடன் அந்த படகு பயணிப்பது பிரிட்டனிற்கு தெரியாது என குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/216788
  12. Published By: VISHNU 06 JUN, 2025 | 09:53 PM இந்திய அரசின் நிதியுதவியுடன் ஊர்காவற்துறையில் கடற்றொழிலாளர்களுக்கு 30 மீன்பிடி வலைகளும் 150 பேருக்கான உலர் உணவு பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் ஊர்காவற்துறை பிரதேச செயலகத்தில் வெள்ளிக்கிழமை (6) மாலை குறித்த நிகழ்வு நடைபெற்றது. இதன்போது யாழ் இந்திய துணைத் தூதுவர் சாய் முரளி, ஊர்காவற்துறை பிரதேச செயலாளர், ஊர்காவற்துறை கடற்றொழிலாளர் சங்க பிரதிநிதிகள், இந்திய துணைத் தூதரக அதிகாரிகள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் உரையாற்றிய துணை தூதர் சாய் முரளி, ஊர்காவற்துறை என்பது யாழ்ப்பாணத்தின் வரலாற்று முக்கியத்துவம் மிக்க, பண்பாட்டு செழுமை வாய்ந்த பகுதியென்று குறிப்பிட்டார். இந்திய ஆதரவுடன் நவீனமயமாக்கப்பட்ட குருநகர் மீன்பிடி வலை தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட வலைகளை வழங்குவதில் மகிழ்ச்சி எனத் தெரிவித்தார். உள்ளூரிலேயே தயாரிக்கப்படும் இவ்வலைகள் மூலம் பலன்கள் சமூகத்துக்குள் தங்குகின்றன என்றும் குறிப்பிட்டார். உலர்ந்த அத்தியாவசியப் பொருட்களை வழங்கும் போது, இந்திய அரசின் பொது மக்களுக்கான சேவைத் திட்டங்களும் சமூக பங்களிப்பையும் அதிகரிக்கவுள்ளது என்ற உறுதியை துணை தூதரக ஸ்தானிகர் மீண்டும் வலியுறுத்தினார். வட மற்றும் கிழக்கு மாகாணங்களில் இந்தியா மேற்கொண்டு வரும் வீடுகள், சுகாதாரம், கல்வி, வேலைவாய்ப்பு, கலாசாரம் மற்றும் திறனறிதல் பயிற்சிகள் ஆகியவற்றை உள்ளடக்கிய அபிவிருத்தித் திட்டங்களை அவர் விளக்கினார். வட மாகாண மக்கள், குறிப்பாக ஊர்காவற்துறை பகுதியில் வாழும் மக்களைப் பற்றிய சவால்கள் குறித்து தானறிந்திருப்பதாகவும், இந்தியா எப்போதும் அவர்களுடன் இருந்தது என்றும் இருக்கும் என்றும் தூதர் உறுதியளித்தார். நம்பிக்கையும், வாய்ப்புகளும், அமைதியும் நிரம்பிய எதிர்காலத்தை கட்டியெழுப்ப இந்தியா எப்போதும் நண்பனாக துணை இருக்கும் என அவர் வலியுறுத்தினார். https://www.virakesari.lk/article/216822
  13. செம்மணி மனித புதைகுழியாக பிரகடனம் - மேலும் 45 நாட்கள் அகழ்வு செய்ய அனுமதி Published By: VISHNU 06 JUN, 2025 | 09:37 PM யாழ்ப்பாணம் செம்மணி சிந்துபாத்தி மாயான பகுதியை மனித புதைகுழியாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில், மேலும் 45 நாட்கள் அகழ்வு பணிகளை முன்னெடுக்க யாழ். நீதவான் நீதிமன்று கட்டளை பிறப்பித்துள்ளது. செம்மணி சிந்துபாத்தி இந்து மயான பகுதியை மனித புதைகுழியாக பிரகடனப்படுத்துமாறு சட்டத்தரணிகள் மன்றில் விண்ணப்பம் செய்திருந்த நிலையில், வெள்ளிக்கிழமை (06) கட்டளைக்காக வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அதன் போது, சட்ட வைத்திய அதிகாரி மற்றும் தடயவியல் பேராசிரியர் ஆகியோரின் நிபுணத்துவ அறிக்கை மற்றும் அபிப்பிராய அறிக்கை ஆகியவை மன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. அகழ்வு இடம்பெறும் இடத்தில் 1.6 அடி ஆழத்தில் மனித சிதிலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. ஒழுங்கு முறையின்றி குழப்பமான சூழலில் மனித என்புக்கூடுகள் புதைக்கப்பட்டுள்ளது. ஆடைகளோ அல்லது தனிப்பட்ட அணிகலன்களோ குறித்த இடங்களில் காணப்படவில்லை போன்ற விடயங்கள் மன்றின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. அத்துடன் இதுவரையில் 18 மனித எலும்பு கூட்டு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவற்றில் 05 முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமையுடன் (7) முதலாம் கட்ட அகழ்வு பணிகள் நிறைவடைவதனால் , தொடர்ந்தும் அப்பகுதியில் அகழ்வு பணிகளை முன்னெடுக்க மன்று அனுமதிக்க வேண்டும் என மன்றில் விண்ணப்பம் செய்யப்பட்டது. அதனை அடுத்து , மேலும் 45 நாட்களுக்கு அகழ்வு பணிகளை முன்னெடுக்க மன்று அனுமதித்துள்ளது. https://www.virakesari.lk/article/216821
  14. 06 JUN, 2025 | 05:00 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) நுகர்வோரை பாதிக்கும் வகையில் இறக்குமதி செய்யப்படும் உப்பை விலை அதிகரித்து விற்பனை செய்ய முற்பட்டால் அதனை தடுப்பதற்கு நடவடிக்கை எடுப்போம் என்று வர்த்தகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (6) இடம்பெற்ற வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில், ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் ஹேஷா விதானகே எம்.பியினால் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், நாட்டில் உப்புக்கு ஏற்பட்ட தட்டுப்பாட்டை போக்குவதற்காக உப்பு இறக்குமதிக்கு சந்தையை திறந்துவிட்டோம். அதற்கு இருந்த வரையறையை நீக்கி இருந்தோம். என்றாலும் இறக்குமதி செய்வதற்கு உணவு கட்டுப்பாட்டு பிரிவில் அதற்கான அனுமதியை பெற்றுக்கொள்ள வேண்டும். உப்பு, உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வதாக இருந்தால், அதுதான் நாட்டின் சட்டம். அதன் பிரகாரம், இதுவரை இரண்டு இலட்சத்து 68 ஆயிரம் மெட்ரிக் தொன் உப்பு இறக்குமதி செய்ய அனுமதி பெறப்பட்டிருக்கிறது. அந்தளவு உப்பு இறக்குமதி செய்யும் என நாங்கள் நினைக்கவில்லை. நேற்று முன்தினம் வரை 15ஆயிரத்தி 800 மெட்ரிக்தொன் வரை நாட்டுக்குள் இறக்குமதி செய்யப்பட்டிருக்கிறது. இந்த தொகையில் அயடின் மற்றும் அயடின் அல்லாத இரண்டு வகை உப்பும் வந்திருக்கிறது. இவ்வாறு இறக்குமதி செய்யப்பட்ட உப்பு ஒரு கிலோவின் அதிகபட்ச விலை 84, 85 ரூபாவுக்கும் குறைந்தபட்ச விலை 65 ரூபாவுக்கும் விற்பனை செய்யவே நடவடிக்கை எடுத்திருக்கிறோம். என்றாலும் சந்தையில் இந்த உப்பை 120 ரூபாவில் இருந்து 280 ரூபா வரை விற்பனை செய்ய முயற்சிக்கின்றனர். என்றாலும் நாட்டில் ஏற்பட்டுள்ள உப்புக்கான தட்டுப்பாட்டை பயன்படுத்தி, அதன் மூலம் விலை அதிகரித்து விற்பனை செய்ய முயற்சிக்க வேண்டாம் என இறக்குமதியாளர்களுக்கு தெரிவித்திருக்கிறோம். எனவே இந்த நடவடிக்கையில் நுகர்வோருக்கு பாதிப்பு ஏற்படுமாக இருந்தால், அதனை தவிர்ப்பதற்கு நாங்கள் நடவடிக்கை எடுப்போம் என்றார். https://www.virakesari.lk/article/216801
  15. Published By: RAJEEBAN 06 JUN, 2025 | 11:19 AM இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவிற்கு எதிராக பிடியாணை பிறப்பித்த நீதிபதி உட்பட சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் நான்கு நீதிபதிகளிற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் தடைகளை விதித்துள்ளது. நால்வரில் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படையினரின் நடவடிக்கைகளை இலக்குவைத்து செயற்பட்ட நீதிபதியொருவரும் உள்ளமை குறிப்பிடத்தக்கது. சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் நீதிபதிகளான இந்த நால்வரும் அமெரிக்காவையும் அதன் நெருங்கிய சகாவான இஸ்ரேலையும் இலக்குவைத்து ஐசிசியின் சட்டவிரோத ஆதாரமற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டனர் என அமெரிக்க இராஜாங்க செயலாளர் மார்க்கோ ரூபியோ தெரிவித்துள்ளார். சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அரசியல்மயமாக்கப்பட்டுள்து என அவர் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு நீதிமன்றத்தின் முன் விசாரணை மற்றும் விசாரணைப் பிரிவைச் சேர்ந்த நீதிபதிகள் ரெய்ன் அடிலெய்ட் சோஃபி அலபினி கன்சோ மற்றும் பெட்டி ஹோஹ்லர் ஆகியோர் நெதன்யாகு மற்றும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலண்ட் ஆகியோரை குறிவைத்து பிடியாணைகளை பிறப்பிப்பதற்கு அனுமதி வழங்கினார்கள் என அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கை சர்வதேச நீதித்துறை நிறுவனத்தின் சுதந்திரத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் தெளிவான முயற்சி என தெரிவித்துள்ள ஐசிசி பொறுப்புக்கூறலிற்காக பாடுபடுபவர்களை இலக்குவைப்பதுமோதலில் சிக்குண்டுள்ள மக்களிற்கு எந்த வகையிலும் உதவாது என தெரிவித்துள்ளது. ஐ.சி.சியின் மேல்முறையீட்டுப் பிரிவைச் சேர்ந்த நீதிபதிகள் உகாண்டாவைச் சேர்ந்த சோலோமி பலுங்கி போசா மற்றும் பெருவைச் சேர்ந்த லஸ் டெல் கார்மென் இபனெஸ் கார்ரான்சா ஆகியோர் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் அமெரிக்க படையினர் இழைத்ததாக தெரிவிக்கப்படும் யுத்த குற்றங்கள் குறித்து ஐ.சி.சி விசாரணையைத் தொடங்க வழி வகுத்த குழுவில் இடம்பெற்றனர் நவம்பர் 2024 இல் ஐ.சி.சி தலைமை வழக்கறிஞர் கரீம் கான் நெதன்யாகு மற்றும் கேலன்ட் மற்றும் மூன்று மூத்த ஹமாஸ் தலைவர்களுக்கு எதிராக கைது வாரண்டுகளை பிறப்பித்தார். இந்த நடவடிக்கை பைடன் நிர்வாகத்திடமிருந்து எதிர்ப்புகளைப் பெற்றது முன்னாள் ஜனாதிபதி இதை "மூர்க்கத்தனமானது" என்று அழைத்தார். ஐ.நா தலைமையிலான பாலியல் துஷ்பிரயோக விசாரணைக்கு மத்தியில் கான் கடந்த மாதம் தனது பதவியில் இருந்து விலகினார் ஜனாதிபதி டிரம்பின் முதல் பதவிக் காலத்தில் அமெரிக்க அரசாங்கம் ஐ.சி.சி வழக்கறிஞர் ஃபடோ பென்சவுடா மற்றும் மூத்த அதிகாரி ஃபாகிசோ மோச்சோச்சோகோ ஆகியோர் மீது ஆப்கானிஸ்தானில் அமெரிக்க இராணுவத்தால் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் போர்க்குற்றங்களை விசாரித்ததற்காக தடைகளை விதித்தது - பின்னர் பைடன் நிர்வாகத்தால் நீக்கப்பட்டது. அப்போதைய வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பியோ மற்ற ஐ.சி.சி அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு விசா கட்டுப்பாடுகளை விதித்தார். இந்த நடவடிக்கையை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் வரவேற்க வாய்ப்புள்ளது - மார்ச் 2023 இல் நீதிமன்றம் அவருக்கு பிடியாணை பிறப்பித்தது. ஐ.சி.சி-யை நிறுவிய ரோம் சட்டத்தில் அமெரிக்காவோ அல்லது இஸ்ரேலோ கைச்சாத்திடவில்லை.. https://www.virakesari.lk/article/216747
  16. Published By: DIGITAL DESK 3 06 JUN, 2025 | 04:27 PM நாடளாவிய ரீதியில் தென் மேற்கு பருவமழை இம்மாதம் (ஜூன்) 10 ஆம் திகதி முதல் வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், நாட்டின் தென் மேற்கு பகுதியில் 10 ஆம் திகதி முதல் அடுத்த சில நாட்களுக்கு மழையுடனான வானிலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன், நாடு முழுவதும் மற்றும் நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்புகளில் பலத்த காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் எதிர்வு கூறல்கள் மற்றும் எச்சரிக்கைகள் தொடர்பில் பொது மக்கள் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். https://www.virakesari.lk/article/216785
  17. காஸா மக்களின் பசி தீர்க்க உணவுப் பொருட்களுடன் விரையும் கிரெட்டா துன்பெர்க் <iframe width="400" height="500" frameborder="0" src="https://www.bbc.com/ws/av-embeds/articles/c8e68xdkz38o/p0lgl5nc/ta"></iframe> 8 மணி நேரங்களுக்கு முன்னர் காஸாவில் பஞ்சம் மற்றும் பட்டினி ஏற்பட்டுள்ள நிலையில் உலக மக்கள் அனைவரையும் பாலத்தீனியர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் நிகழ்வுகள் ஆங்காங்கே அரங்கேறி வருகின்றன. தற்போது சுற்றுச்சூழல் ஆர்வலரான கிரேட்டா துன்பர்க் மற்றும் மேலும் சில மனித உரிமை செயற்பாட்டாளர்கள், ஃப்ரீடம் ஃப்ளோட்டில்லா கூட்டமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள படகு ஒன்றில் காஸாவை நோக்கி சென்று கொண்டிருக்கிறார். பால், பழச்சாறு, டின்னில் அடைக்கப்பட்ட உணவுகள், ப்ரோட்டின் பார் என்று உணவுப் பொருட்களை அந்த படகில் வைத்து அவர்கள் எடுத்துச் செல்கின்றனர். இந்த பயணமானது ஞாயிறு அன்று சிசிலியில் துவங்கியது. பயணம் துவங்கி, இரண்டு நாட்கள் கழித்து பேசிய அவர், இஸ்ரேலின் சாத்தியமான தாக்குதலையும் யோசித்தே இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், மனிதநேய உதவிகள் பாலத்தீனர்களிடம் சேர்வதை தடுக்கும் இஸ்ரேலியப் படையின் செயல்பாட்டிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் இந்த பயணம் மேற்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c8e68xdkz38o
  18. ‘மொத்த உலகமும் பார்த்துக்கொண்டிருக்கிறது’: Gaza சூழல் குறித்து BBC நேர்காணலில் Red Cross Chief சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத் தலைவர் மிர்யானா ஸ்போல்யாரிச் Gaza-வில் நிலைமை நரகத்தை விட மோசமாக உள்ளது என எச்சரிக்கை செய்துள்ளார். மேலும் உலக தலைவர்களை விரைந்து நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை வைத்துள்ளார்.
  19. 06 JUN, 2025 | 04:29 PM எல்லை தாண்டி வரும் இந்திய மீனவர்களை சுட்டுப் பிடிக்குமாறு யாழ்ப்பாணம் மீனவ சங்கங்களின் சம்மேளனத்தின் தலைவர் அந்தோனிப்பிள்ளை மரியதாஸ் தெரிவித்துள்ளார். இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் உள்ள அவர்களது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு ஆவேசமாக கடற்படையினரிடம் கோரிக்கை முன்வைத்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த 60 நாட்களும் எந்தவித பிரச்சினைகளும் இன்றி எமது வாழ்வாதாரமான கடற்றொழிலை நாங்கள் சிறப்பாக செய்து வந்தோம். வருமானமும் திருப்திகரமாக இருந்தது. இந்திய மீனவர்கள் மீண்டும் 16ஆம் திகதி எமது கடற்பரப்புக்குள் வரப்போகின்றார்கள். அவர்களது அட்டூழியங்களால் இதுவரை காலமும் எமது யாழ்ப்பாண மீனவர்கள் பல்வேறு விதமான போராட்டங்களை முன்னெடுத்தும் எமது அரசாங்கத்தாலோ அல்லது இந்திய அரசாங்கத்தாலோ எந்தவிதமான தீர்வுகளும் வழங்கப்படவில்லை. கடப்படையானது தோளோடு தோள் நின்று எமக்கு பக்கபலமாக செயல்பட வேண்டும். இந்திய இழுவைமடிப் படகுகளை வராமல் தடுக்க வேண்டும். இரண்டு நாட்டு அரசாங்கமும் இனிமேலாவது கதைத்து எமக்கு ஒரு நல்ல முடிவை கூற வேண்டும். அத்துடன் நமது கடற்படைக்கு ஒரு முக்கிய வேண்டுகோளை விடுகின்றோம். அதாவது இந்திய மீனவர்களை கட்டுப்படுத்த முடியாவிட்டால் சுட்டாவது அவர்களை பிடியுங்கள். இவ்வாறு பிடித்து அவர்களை சிறையில் அடைத்து விட்டு படக்குகளை கைப்பற்றுங்கள். எமது மீனவர்களையும் குடும்பங்களையும் காப்பாற்றுவதற்கு இதனைத் தவிர வேறு வழி இல்லை என்றார். https://www.virakesari.lk/article/216790
  20. டிரம்ப் vs மஸ்க்: அதிகாரமும் செல்வமும் சேர்ந்த சக்தி வாய்ந்த கூட்டணியில் பிரிவு ஏன்? அடுத்தது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கோப்புப் படம் கட்டுரை தகவல் எழுதியவர், அந்தோணி ஸுர்ச்சர் பதவி, பிபிசி செய்தியாளர் 6 ஜூன் 2025, 08:37 GMT மிகப்பெரிய பணக்காரருக்கும், மிகவும் சக்திவாய்ந்த ஒரு அரசியல் தலைவருக்கும் இடையே மோதல்கள் ஏற்படும் போது என்ன நடக்கும்? அத்தகைய ஒரு காட்சியைத் தான் நாம் காண்கிறோம். டொனால்ட் டிரம்ப் மற்றும் ஈலோன் மஸ்க் இடையேயான ஒரு கருத்து வேறுபாடு இப்போது வார்த்தைப் போராக மாறியுள்ளது. இருவருமே, தங்களுக்கான சொந்த சமூக ஊடக தளங்களை வைத்திருப்பதால் பரஸ்பரம் எதிர் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். பல டிரில்லியன் டாலர் வரி விலக்குகள் மற்றும் பாதுகாப்புத் துறைக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்கும் டிரம்பின் பட்ஜெட் மசோதாவால் 'ஏமாற்றம்' அடைந்ததாக ஈலோன் மஸ்க் அண்மையில் கூறியிருந்தார். அதைத் தொடர்ந்து, மே மாத இறுதியில், அதிபர் டொனால்ட் டிரம்பின் செலவுக் குறைப்பு பணிக்குழுவை (டோஜ்- DOGE) வழிநடத்தும் தனது பதவிக்காலம் 'முடிவுக்கு வருகிறது' என்று ஈலோன் மஸ்க் தெரிவித்தார். பின்னர் தனது எக்ஸ் தளத்தில், டோஜ் துறையை வழிநடத்த வாய்ப்பு அளித்தமைக்காக டிரம்புக்கு நன்றி தெரிவித்து, 'சிறப்பு அரசாங்க ஊழியர்' எனும் பொறுப்பிலிருந்து வெளியேறினார். ஆனால், டிரம்பின் பட்ஜெட் மசோதாவை விமர்சித்திருந்த நிலையில், மஸ்க் வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒன் பிக் பியூட்டிஃபுல் பில் (One big beautiful bill) எனப்படும் அந்த மசோதா டிரம்ப் நிறைவேற்ற நினைக்கும் முக்கியமான மசோதாவாகும். அதன் பிறகு, அந்த மசோதா குறித்தும், டிரம்ப் குறித்தும் பல விமர்சனங்களை முன்வைத்தார் மஸ்க். இந்த மோதல் நேற்று (ஜூன் 5) உச்சக்கட்டத்தை எட்டியது. டிரம்ப் மிரட்டலுக்கு மஸ்கின் பதிலடி என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஈலோன்- டிரம்ப் இடையே மீண்டும் இயல்பான சூழல் ஏற்படலாம் என்பதை கற்பனை செய்வது கடினம். அமெரிக்க அரசாங்கத்துடனான மிகப்பெரிய வணிக ஒப்பந்தங்கள் ஈலோன் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் திட்டத்திற்கு உயிர்நாடியாக உள்ளன. இப்போது அவற்றை ரத்து செய்யப் போவதாக டிரம்ப் அச்சுறுத்தியுள்ளார். "நமது பட்ஜெட்டில் பில்லியன்கணக்கான டாலர்கள் பணத்தை மிச்சப்படுத்துவதற்கான எளிதான வழி, ஈலோனின் அரசாங்க மானியங்கள் மற்றும் ஒப்பந்தங்களை நிறுத்துவதாகும்" என்று டிரம்ப் தனது சொந்த சமூக ஊடக வலைத்தளமான ட்ரூத் சோஷியலில் பதிவிட்டுள்ளார். டிரம்ப், அமெரிக்க அரசாங்க இயந்திரத்தை மஸ்க்கிற்கு எதிராகத் திருப்பினால், அது மஸ்க்கிற்கு வேதனை தரக்கூடிய ஒரு நகர்வாக இருக்கும். இந்த மோதலைத் தொடர்ந்து வியாழக்கிழமை (ஜூன் 5) அன்று டெஸ்லாவின் பங்கு விலை 14% சரிந்தது. இருப்பினும், இது ஒரு வழிப் பாதை அல்ல. இந்த வார்த்தை மோதல்களைத் தொடர்ந்து, டிரம்பை பதவி நீக்கம் செய்ய அழைப்பு விடுத்த மஸ்க், தனது நிறுவனங்களுக்கான நிதியைத் தடுக்க முடியுமென்றால், அதைச் செய்யுமாறு டிரம்புக்கு சவால் விடுத்தார். அமெரிக்க விண்வெளி வீரர்கள் மற்றும் பொருட்களை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு கொண்டு செல்ல, ஈலோன் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலங்களை சார்ந்துள்ளது அமெரிக்கா (நாசா). டிரம்பின் அச்சுறுத்தல்களுக்கு பதிலடியாக, நாசாவிற்கான தனது டிராகன் விண்கல சேவையை நிறுத்தும் பணியை துரிதப்படுத்தவிருப்பதாக மஸ்க் தெரிவித்தார். மஸ்க் முன் உள்ள வாய்ப்புகள் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES டிரம்புக்கு பதிலடி தர மஸ்க்கிற்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. உதாரணத்திற்கு, அடுத்த வருட தேர்தல்கள் மற்றும் முதன்மைத் தேர்தல்களில், குடியரசுக் கட்சியின் எதிர் தரப்பு வேட்பாளர்களுக்கு அவர் நிதியுதவி அளிக்கலாம். வியாழக்கிழமை பிற்பகலில், தனது எக்ஸ் தளப் பக்கத்தில், 'ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தக் கூடிய செய்தியை சொல்ல வேண்டிய நேரம்' என்று பதிவிட்ட மஸ்க் - மறைந்த பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான வெளியிடப்படாத கோப்புகளில் டிரம்பின் பெயரும் இடம்பெற்றுள்ளது எனக் கூறினார். ஆனால் தனது கூற்றுக்கு ஆதாரங்கள் எதையும் அவர் அளிக்கவில்லை. மஸ்க்கின் கூற்றுகள் மற்றும் குற்றச்சாட்டுகளுக்கு, வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட் ஒரு லேசான மறுப்பை மட்டுமே வழங்கினார். "ஒன் பிக் பியூட்டிஃபுல் மசோதாவின் மீதான ஈலோனின் அதிருப்திக்குக் காரணம், அதில் அவர் விரும்பிய கொள்கைகள் இல்லை என்பது தான். இது ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம்" என்று கூறினார். டிரம்பின் ஒட்டுமொத்த அரசாங்கத்திற்கும் எதிரான போராட்டத்தில் மஸ்க் வெற்றி பெறாமல் போகலாம், ஆனால் டிரம்ப் மற்றும் குடியரசுக் கட்சியினருக்கு தனிப்பட்ட மற்றும் அரசியல் ரீதியாக மிகப்பெரிய இழப்பை அவரால் ஏற்படுத்த முடியும். இதை நன்கு அறிந்த டிரம்ப், நேற்றைய நாளின் (ஜூன் 5) இறுதிக்குள் பதற்றத்தை சற்றே தணித்தார். வெள்ளை மாளிகையில் நடைபெற்ற காவல்துறை பாராட்டு நிகழ்வில் பொதுவில் தோன்றியபோது மஸ்க் குறித்து கருத்து தெரிவிப்பதை அவர் தவிர்த்தார். பின்னர் தனது ட்ரூத் சோஷியல் பதிவில் "அவருக்கு (மஸ்க்) எதிராகத் திரும்புவதில்" தனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை என்றும், ஆனால் பல மாதங்களுக்கு முன்பே அரசாங்க வேலையிலிருந்து மஸ்க் ராஜினாமா செய்திருக்க வேண்டும் என்று விரும்புவதாகவும் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து, அவர் தனது 'ஒன் பிக் பியூட்டிஃபுல்' மசோதா மற்றும் செலவுச் சட்டத்தை ஆதரித்து பேசுவதில் கவனம் செலுத்தினார். இருப்பினும், வியாழக்கிழமை நடந்த மோதல்களைத் தொடர்ந்து, ஈலோன்- டிரம்ப் இடையே மீண்டும் இயல்பான சூழல் ஏற்படலாம் என்பதை கற்பனை செய்வது கடினம். டிரம்ப் குற்றச்சாட்டுக்கு மஸ்க் பதில் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தன்னுடைய 'ஒன் பிக் பியூட்டிஃபுல்' மசோதாவை மஸ்க் விமர்சித்தது குறித்த ஆச்சரியத்தை வெளிப்படுத்தினார் டிரம்ப். கடந்த வாரம் தொடங்கிய இந்த மோதல், புதன்கிழமை தீவிரமடைந்து, வியாழன் அன்று அமெரிக்க அதிபரின் ஓவல் அலுவலகத்தில் உச்சகட்டத்தை எட்டியது. அன்றைய தினம், விருந்தினராக வெள்ளை மாளிகைக்கு வந்திருந்த ஜெர்மனியின் அதிபர் ஃபிரீட்ரிக் மெர்ஸ் சங்கடத்துடன் மௌனமாக அமர்ந்திருந்த போது, அதிபர் டிரம்ப் ஒருவித விரக்தியுடன் பேசுவதைக் காண முடிந்தது. தன்னுடைய 'ஒன் பிக் பியூட்டிஃபுல்' மசோதாவை மஸ்க் விமர்சித்தது குறித்த ஆச்சரியத்தை வெளிப்படுத்தினார் டிரம்ப். 'மஸ்க்கின் நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர்கள் நிதியுதவி இல்லையென்றால் கடந்த ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் தோற்றிருப்பார்' என்ற கருத்துக்கு டிரம்ப் மறுப்பு தெரிவித்தார். மின்சார வாகனங்களுக்கான வரிச் சலுகைகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான குடியரசுக் கட்சியின் அழுத்தத்தால் மஸ்க்கின் கார் நிறுவனமான டெஸ்லா பாதிக்கப்படும் என்பதே மஸ்க் தனக்கு எதிராக திரும்ப காரணம் என டிரம்ப் கூறினார். இதற்கு உடனடியாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிலளித்தார் மஸ்க். அவரை எக்ஸ் தளத்தில் 22 கோடி பேர் பின்தொடர்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கார் மானியங்களைப் பற்றி தனக்கு கவலையில்லை என்றும், தேசியக் கடனைக் குறைக்க விரும்புவதாகவும், அது நாட்டின் இருப்பு சார்ந்த அச்சுறுத்தல் என்றும் அவர் கூறினார். தனது உதவி இல்லாமல் கடந்த ஆண்டு அதிபர் தேர்தலில் டிரம்ப் மற்றும் அவரது கட்சியினர் வெற்றி பெற்றிருக்க மாட்டார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். "டிரம்பிற்கு நன்றியுணர்வு இல்லை" என்று அவர் விமர்சித்தார். பின்னர், நேற்று பிற்பகலில், ஈலோன் மஸ்க் தனது தொடர்ச்சியான எக்ஸ் தள பதிவுகள் மூலம் டிரம்புக்கு எதிரான அதிர்ச்சியூட்டும் தாக்குதல்களைத் தொடங்கினார். அதன் பிறகு தான் இந்த மோதல் தீவிரமடையத் தொடங்கியது. மஸ்க் - டிரம்ப் சக்தி வாய்ந்த கூட்டணி பிரிந்தது எப்படி? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான பிரசார கூட்டத்தில் டிரம்ப், மஸ்க் மஸ்க்கும் டிரம்பும் ஒரு சக்தி வாய்ந்த ஆனால் சாத்தியமற்ற கூட்டணியை உருவாக்கினர். அதன் விளைவாக டிரம்பின் நிர்வாகத்தில் அரசின் பட்ஜெட்டைக் குறைக்கும் திட்டத்தில் ஒரு முக்கிய பதவியைப் பெற்றார் மஸ்க். அதிபர் டொனால்ட் டிரம்பின் செலவுக் குறைப்பு பணிக்குழுவை (DOGE) வழிநடத்தும் பொறுப்பு ஈலோன் மஸ்க்கிடம் கொடுக்கப்பட்டது. அமெரிக்க அதிபராக டிரம்பின் 'முதல் 100 நாட்கள்' என்ற பிரசாரத்தில் இந்த செலவுக் குறைப்பு பணிக்குழு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. ஏனெனில் அது பல நிறுவனங்களை மூட வழிவகுத்தது, ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. சிறந்த நண்பர்களாக டிரம்பும் மஸ்க்கும் தங்களை காட்டிக்கொண்ட போதும், இந்த இரு ஆளுமைகள் எங்கே, எப்போது வேண்டுமானாலும் மோதிக் கொள்ளக் கூடும் என்பது பற்றிய ஊகங்கள் சமீபத்தில் தான் வெளிவரத் தொடங்கின. அந்த கணிப்புகள் தொடக்கத்தில் தவறாகத் தோன்றின. மஸ்க்கின் புகழ் குறைந்து வந்தாலும், நிர்வாகத்தில் அதிகாரிகளுடன் அவருக்கு பகைமைகள் இருந்தபோதிலும் டிரம்ப் மஸ்க்கிற்கு ஆதரவாகவே இருந்தார். ஒரு பிரிவு வரும் என எதிர்பார்க்கப்பட்ட ஒவ்வொரு முறையும், ஓவல் அலுவலகத்திலோ, அமைச்சரவை அறையிலோ அல்லது மார்-எ-லாகோவிற்கு அதிபர் ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் பயணிக்கும் போதோ மஸ்க் உடனிருப்பார். அமெரிக்க அரசில், மஸ்க் ஒரு "சிறப்பு அரசாங்க ஊழியர்" ஆக நியமிக்கப்பட்டிருந்தார். ஒவ்வொரு ஆண்டும் 130 நாட்கள் அரசு வேலையில் பணியாற்ற அவர் அனுமதிக்கப்பட்டார். ஜனவரி 20-ஆம் தேதி டிரம்ப் பதவியேற்றதிலிருந்து கணக்கிட்டால், மே மாத இறுதியில் அவரது பணிக்காலம் முடிவடைந்தது. மஸ்க்கிற்கு ஓவல் அலுவலகத்தில் ஒரு ஆடம்பரமான 'ஃபேர்வல்' விழா நடத்திய டிரம்ப் வெள்ளை மாளிகைக்கான தங்கச் சாவியை பரிசளித்தார். மஸ்க் எப்போதாவது திரும்பி வரக்கூடும் என்ற குறிப்பும் வழங்கப்பட்டது. ஆனால், இனி திரும்பி வருவதற்கான அழைப்பு வராது என்பதையும், தங்கச் சாவிக்கு பயன் இருக்காது என்பதையும் நாம் இப்போது சொல்ல முடியும். "ஈலோனுக்கும் எனக்கும் இடையே ஒரு சிறந்த உறவு இருந்தது," என்று டிரம்ப் வியாழக்கிழமை கூறினார். இங்கு அவர் 'இருந்தது' என்ற கடந்த கால வார்த்தையை குறிப்பிட்டது முக்கியமானது. புதன்கிழமை இரவு டிரம்ப் திடீரென அறிவித்த 12 நாடுகளுக்கான புதிய பயணக் கட்டுப்பாடுகள், ஹார்வர்ட் பல்கலைக்கழகம் மீதான கூடுதல் தடைகள் மற்றும் முன்னாள் அதிபர் ஜோ பைடன் நிர்வாகம் தொடர்பான விசாரணை ஆகியவை மஸ்க்கின் விமர்சனத்திலிருந்து கவனத்தை திசைதிருப்புவதற்கான முயற்சிகள் என்று சிலர் கருதினர். மஸ்க்கின் முந்தைய விமர்சனங்களுக்குப் பிறகு, வெள்ளை மாளிகையும், அதன் ஆதரவாளர்களும் மஸ்க்கை மேலும் பகைத்துக் கொள்ளாமல் இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருந்தனர். பின்னர் டிரம்ப் பேசினார், அதற்குப் பிறகு மஸ்க்கிடமிருந்து எதிர்வினைகள் குவிந்தன. அடுத்து என்ன நடக்கும்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, செலவுக் குறைப்பு பணிக்குழுவை (DOGE) வழிநடத்தும் பொறுப்பிலிருந்து மஸ்க் விலகியபோது, அவருக்கு ஒரு நினைவுப் பரிசை டிரம்ப் அளித்தார் இப்போது மிகப்பெரிய கேள்வி என்னவென்றால், இந்தப் பதற்றம் அடுத்து எந்தத் திசையில் செல்லும் என்பதுதான். ஈலோன் மஸ்க்கின் தொடர்ச்சியான விமர்சனங்களுக்கு மத்தியில், அமெரிக்க நாடாளுமன்றத்தில் குடியரசுக் கட்சித் தலைவர்கள் டிரம்பின் மசோதாவை ஆதரிப்பது சற்று கடினம். குறிப்பாக, அவ்வாறு எதிர்ப்பவர்களுக்கு வாய்மொழியாக மட்டுமல்லாது, நிதி பாதுகாப்பையும் மஸ்க் வழங்க முடியும். மஸ்க் உடனான அரசாங்க ஒப்பந்தங்களை முடிவுக்குக் கொண்டு வருவதாக டிரம்ப் ஏற்கனவே எச்சரித்துள்ளார். இருப்பினும், அவர் செலவுக் குறைப்பு பணிக்குழுவில் (DOGE) மஸ்க்கின் முன்னாள் நண்பர்களை குறிவைக்கலாம் அல்லது பைடன் அதிபராக இருந்தபோது மஸ்க்கின் நிறுவனங்களின் பரிவர்த்தனைகள் குறித்த விசாரணைகளை மீண்டும் தொடங்கலாம். தற்போது, அவருக்கு எல்லா வாய்ப்புகளும் உள்ளன. இதற்கிடையில், இருவருக்கும் இடையே நடந்து வரும் மோதலைப் பார்த்துக் கொண்டிருக்கும் ஜனநாயகக் கட்சி உறுப்பினர்களால் எவ்வாறு எதிர்வினையாற்றுவது என்பதை இன்னும் தீர்மானிக்க முடியவில்லை. மஸ்க் இதற்கு முன்பு ஜனநாயகக் கட்சிக்கு நன்கொடை அளித்தவர் என்பதைக் கருத்தில் கொண்டாலும், மிகச் சில ஜனநாயகக் கட்சி தலைவர்களே மஸ்க்கை மீண்டும் தங்கள் முகாமிற்கு வரவேற்க விரும்புகிறார்கள். ஆனால் எதிரிக்கு எதிரி நண்பன் என்று ஒரு பழைய பழமொழி உண்டு. "ஆனால் இந்த விளையாட்டில் இருவருக்குமே லாபம் இல்லை" என்று ஜனநாயக கட்சியின் மூலோபாய நிபுணர் லியாம் கெர், பொலிட்டிகோ எனும் டிஜிட்டல் நாளிதழிடம் கூறினார். "அவர் ஜனநாயகக் கட்சியினரை நோக்கி எந்த வகையில் காய் நகர்த்தினாலும், அது குடியரசுக் கட்சியினருக்கு தீங்கு விளைவிக்கும்" என்கிறார். இப்போதைக்கு, ஜனநாயகக் கட்சியினர் இந்தப் பிரச்னையில் அமைதியாக இருக்க விரும்புவதாகவும், டிரம்ப்- மஸ்க் இடையிலான மோதல் தொடர்வதை அனுமதிப்பதாகவும் தெரிகிறது. இருவருக்கும் இடையிலான இந்த கூச்சல், குழப்பம் அடங்காத வரை, அமெரிக்க அரசியலில் உள்ள மற்ற அனைத்து விஷயங்களும் இருட்டடிப்பு செய்யப்பட வாய்ப்புள்ளது. ஆனால் இந்த மோதல் விரைவில் முடிவடையும் என்று எதிர்பார்க்க முடியாது. "டிரம்பின் அதிபர் பதவி என்பது இன்னும் மூன்றரை ஆண்டுகள் தான், ஆனால் எனக்கு இன்னும் 40 ஆண்டுகளுக்கு மேல் உள்ளது" என்று எக்ஸ் தளத்தில் மஸ்க் பதிவிட்டுள்ளார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cq85127ewdqo
  21. ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணிக்கும் தமிழ் தேசிய பேரவைக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தை ஏற்று தமிழரசுக்கட்சி இந்த கூட்டு முயற்சிக்கு வரவேண்டும் - கஜேந்திரகுமார் பொன்னம்பலம் Published By: RAJEEBAN 06 JUN, 2025 | 01:41 PM ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணிக்கும் தமிழ் தேசிய பேரவைக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தை ஏற்று தமிழரசுக்கட்சி இந்த கூட்டு முயற்சிக்கு வரவேண்டும்என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வேண்டுகோள் விடுத்துள்ளார். கூட்டு முயற்சிக்கு வருவதன் ஊடாக தமிழரசுகட்சிக்கு தேவைப்படுகின்ற சபைகளின் பதவிகளை நாங்கள் உறுதிப்படுத்த தயார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் இதனை தெரிவித்துள்ள அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணியும் தமிழ்தேசிய பேரவையும் கொள்கை ரீதியிலான ஒரு நிலைப்பாட்டிற்கு வந்திருக்கின்றன , நாங்கள் இணங்கியமைக்கான பிரதான காரணம் உள்ளுராட்சி தேர்தலில் தமிழ் மக்கள் தமிழ்தேசியத்திற்கான ஒரு பெரும் ஆணையை வழங்கியிருந்தார்கள். தனித்தனியாக எந்தவொரு கட்சிக்கும் அறுதிப்பெரும்பான்மையை எந்தவொரு சபையிலும் வழங்கியிருக்காவிட்டாலும், தமிழ்தேசிய தரப்பிற்கு தங்கள் ஆணையை வழங்கியிருந்தார்கள் தமிழ்தேசியம் பேசி வாக்குகளைகோரிய ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி,தமிழ்தேசிய பேரவை தமிழரசுக்கட்சிக்கு மிகப்பெரிய பெரும்பான்மை வாக்குகளை மக்கள் வழங்கியிருந்தார்கள். ஆகவே உண்மையிலே நடக்கவேண்டியது என்னவென்றால் ,எவ்வாறு தமிழரசுக்கட்சியும்ஜனநாயக தேசிய கூட்டணியும் கொள்கை ரீதியான இணக்கப்பாட்டிற்கு வந்தனவோ அதேபோன்று,தமிழரசுக்கட்சியும் அந்த இணக்கப்பாட்டிற்கு வந்து அதன் ஊடாக ஒவ்வொரு சபையிலும் ஒரு ஸ்திரதன்மையை உருவாக்குவதுதான் பொருத்தமாகயிருக்குமே தவிர,அதனை விட்டுவிட்டு மக்கள் வழங்கிய ஆணைக்கு நேர்மாறாக, செயற்படுகின்ற தரப்புகளுடன் கூட்டு சேர்வதும், அதுவும் தமிழ் தேசியத்துடன் இருக்ககூடியஈ ஏற்கனவே இருக்ககூடிய ஒரு பலமான கூட்டை தோற்கடிப்பது அதற்காக செயற்படுவது உண்மையிலே பொருத்தமற்றது. இது தமிழ்தேசியத்திற்கு ஒரு பாரிய ஏமாற்றத்தை அளிக்கும், மக்களிற்கும் ஒரு பாரிய ஏமாற்றத்தை அளிக்கும். எம்மை பொறுத்தவரையில் நாங்கள் இந்த கூட்டில் கைச்சாத்திட்டவேளை இலங்கை தமிழரசுக்கட்சிக்கு பகிரங்கமாக ஒரு கோரிக்கை விடுத்திருந்தோம்,எங்கள் கதவுகள் திறந்துதான் இருக்கின்றது, ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணியும் தமிழ்தேசிய பேரவையும் ஒன்றிணைந்து இருப்பது,இது தமிழரசுக்கட்சியை ஓரங்கட்டுவதற்காக செய்யப்பட்ட ஒரு கூட்டல்ல, மாறாக, இந்த கூட்டின் ஒப்பந்தத்தை படித்து, எவரும் பிழைகண்டுபிடிக்க முடியாத வகையிலேயே அந்த ஒப்பந்தம் கைசாத்திடப்பட்டுள்ளது, ஆகவே தமிழரசுகட்சி அதனை ஏற்றுக்கொள்வதற்கு எந்த விதமான தயக்கம் இருக்க முடியாது. உண்மையிலே தமிழ்தேசியத்தை நேசித்து அதற்கு நேர்மையாக நடப்பதாகயிருந்தால் அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எந்தவொரு விடயத்தையும் எதிர்க்க முடியாத நிராகரிக்க முடியாத நிலைதான் இருக்கின்றது. இண்டைக்கும் நாங்கள் கேட்கின்றோம், ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணிக்கும் தமிழ் தேசிய பேரவைக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட அந்த ஒப்பந்தத்தை ஏற்று தமிழரசுக்கட்சி இந்த கூட்டு முயற்சிக்கு வரவேண்டும். கூட்டு முயற்சிக்கு வருவதன் ஊடாக தமிழரசுகட்சிக்கு தேவைப்படுகின்ற சபைகளின் பதவிகளை நாங்கள் உறுதிப்படுத்த தயார். https://www.virakesari.lk/article/216765
  22. கட்டுரை தகவல் எழுதியவர், நித்யா பாண்டியன் பதவி, பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் போக்சோ வழக்கில் கைதாகி, 20 ஆண்டுகள் தண்டனை உறுதி செய்யப்பட்ட இளைஞரை உச்ச நீதிமன்றம் சமீபத்தில் விடுதலை செய்துள்ளது. மே 23 அன்று உச்ச நீதிமன்றத்தின், நீதிபதிகள் அபய் எஸ் ஓகா மற்றும் உஜ்ஜல் புயான் அடங்கிய அமர்வு போக்சோ குற்றவாளி ஒருவரை விடுதலை செய்து அறிவித்துள்ளது. மேலும் இந்தியா முழுவதும் பாலியல் கல்வியை அறிமுகம் செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு மத்திய அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது. போக்சோ வழக்கின் தன்மை, அதன் நிலை, குழந்தை திருமணங்கள் தொடர்பான தரவுகளை சேகரித்து, உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் நிகழ் நேர (real time dash board) கண்காணிப்பு அமைப்பை உருவாக்க வேண்டும் என்றும் பரிந்துரை செய்துள்ளது. அரசியல் சாசன பிரிவு 142-ஐ பயன்படுத்தி, குற்றவாளியை விடுதலை செய்த நீதிமன்றம், "இந்த வழக்கு ஒரு முன்மாதிரியாக இருக்கக் கூடாது. இருக்காது. இது, நம்முடைய சமூகம் மற்றும் நீதித்துறையின் தோல்வியின் பிரதிபலிப்பு," என்று மேற்கோள்காட்டியது. (2018-ஆம் ஆண்டில்) 14 வயது சிறுமியைத் திருமணம் செய்த 25 வயது மதிக்கத்தக்க நபர் வழக்கில் இருந்து வெளிவந்தது எப்படி? பாலியல் கல்வியை மாணவர்களுக்கு கற்றுத் தர வேண்டிய கட்டாயம் இருப்பது குறித்து உச்ச நீதிமன்றம் தெரிவித்தது என்ன? இந்த வழக்கில் நடந்தது என்ன? இது ஏன் மாறுபட்ட வழக்காக கருதப்படுகிறது? 2018-ஆம் ஆண்டு மேற்கு வங்கத்தில், 25 வயது மதிக்கத்தக்க ஆணுடன், 14 வயது சிறுமி வாழ்ந்து வந்துள்ளார். அவரின் தாயார் அந்த நபருக்கு எதிராக வழக்கு பதிவு செய்து, அந்த மகளை தன்னுடன் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். ஆனால் சில மாதங்களுக்குப் பிறகு மீண்டும் அந்த பெண் குற்றம் சுமத்தப்பட்ட நபருடன் சேர்ந்து வாழ்ந்தார். பின்னர் திருமணம் செய்து கொண்டனர். விரைவில் அவர் பெண் குழந்தைக்கு தாயானார். ஆனால் 2021-ஆம் ஆண்டு அந்த இளைஞர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் செய்த குற்றங்களுக்காக போக்சோ மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகளின் கீழ் மொத்தமாக 29 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது. ஆனால் அந்த தண்டனைக்கு எதிராக அந்த சிறுமி, சட்டப் போராட்டம் நடத்தியுள்ளார். கைது செய்யப்பட்ட அந்த இளைஞரை மீட்பதற்காக ரூ. 1,35,000 வரை செலவிட்டுள்ளார். உச்ச நீதிமன்றம் தன்னுடைய தீர்ப்பில், "சட்டம் இதை ஒரு குற்றமாக கருதுகிறது. ஆனால் பாதிக்கப்பட்ட பெண் அவ்வாறு கருதவில்லை. அவருக்கு இழைக்கப்பட்ட குற்றம் அவருக்கு பாதிப்பை ஏற்படுத்தவில்லை. ஆனால், வழக்கிற்கு பிறகு காவல் மற்றும் நீதித்துறை, அந்த நபரை விடுதலை செய்வதற்காக அப்பெண் நடத்திய போராட்டம், மகளுக்கு சிறப்பானதை செய்ய வேண்டும் என்ற எண்ணம், பொருளாதார சிக்கல்கள் போன்றவை தான் அவரை பாதித்துள்ளது. தன்னை "பாதிக்கப்பட்ட பெண்ணாக" கருத விரும்பாத பெண்ணுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் உறுதி செய்ய வேண்டும். இது அவரின் குடும்பத்தை பாதுகாக்கும் என்றால், அந்த பெண்ணுக்குப் பிறந்த குழந்தையின் நலனை கருத்தில் கொண்டு அந்த உதவிகள் வழங்கப்படும்," என்று குறிப்பிட்டுள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தாயால் தனித்துவிடப்பட்ட அவர் பிறகு, குற்றஞ்சுமத்தப்பட்ட நபருடன் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்தார். வழக்கில் நடந்தது என்ன? மேற்கு வங்க மாநிலத்தில் 2018-ஆம் ஆண்டு தன்னுடைய 14 வயது மகளைக் காணவில்லை என்று பெண் ஒருவர் புகார் மனு அளிக்கிறார். விசாரணையின் போது, குற்றம் சுமத்தப்பட்ட 25 வயதான நபரின் தூண்டுதலின் பேரிலே அந்த சிறுமி வீட்டைவிட்டு வெளியேறியதாக தெரிய வந்தது. புகார் அளித்து விசாரணை துவங்கிய பிறகு, அந்த சிறுமி குற்றம் சாட்டப்பட்டவரின் வீட்டில் இருந்து அழைத்துவரப்பட்டு, மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு அரசு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார். ஆனால் எந்த வித பாதுகாப்பும் அந்த சிறுமிக்கு வழங்கப்படாத சூழலில், அவருடைய தாயார் அவரை அரசு இல்லத்தில் இருந்து அழைத்து வந்து வீட்டில் வைத்திருக்கிறார். ஆனால் 2019-ஆம் ஆண்டு அந்த சிறுமி, குற்றஞ்சாட்டப்பட்ட நபரின் வீட்டிற்கு சென்று வாழ ஆரம்பித்திருக்கிறார். இந்த சூழலில் அவர் கர்ப்பம் அடைந்து ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார். அதே சமயத்தில் அந்த நபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். போக்சோ சட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்ட சிறப்பு நீதிபதி, விசாரணைக்குப் பிறகு குற்றவாளிக்கு போக்சோ சட்டம் பிரிவு 6-ன் கீழ் 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்தார். மேலும், இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 363-ன் கீழ் (கடத்தல் குற்றங்களுக்காக பதிவு செய்யப்படும் பிரிவு) 4 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், 366-ன் கீழ் (18 வயது பூர்த்தி அடையாத பெண்ணை கடத்துதல் மற்றும் திருமணம் செய்ய நிர்பந்திக்கும் குற்றங்களுக்காக பதியப்படும் பிரிவு) ஐந்தாண்டுகள் கடுங்காவல் தண்டனையையும் வழங்கினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, போக்சோ சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டது தண்டனையை நிறுத்தி வைத்த உயர் நீதிமன்றம் இந்த தீர்ப்புக்கு எதிராக கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார் குற்றவாளி. 2023-ஆம் ஆண்டு அக்டோபர் 18 அன்று, சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நிறுத்தி வைத்து, குற்றவாளியை வழக்கில் இருந்து விடுதலை செய்து அறிவித்தது. இது தொடர்பான தீர்ப்பை வழங்கும் போது, கொல்கத்தா உயர் நீதிமன்றம், சில அவதானிப்புகளை கவனத்தில் கொண்டது. முதலில் இந்திய தண்டனைச் சட்டம் 363 மற்றும் 366 பிரிவில் பதிவு செய்யப்பட்ட குற்றங்களில் இருந்து குற்றவாளியை விடுதலை செய்தது. " போக்சோ சட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்ட நீதிபதி, குற்றவாளிக்கும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் இடையே திருமணம் நடைபெற்றது என்பதை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் இல்லை என்பதை தன்னுடைய தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். எனவே குழந்தை திருமண சட்டம் 2006, பிரிவு 9-ன் கீழ் அவர் மீது சாட்டப்பட்ட குற்றம் நிரூபிக்கப்படவில்லை. ஐ.பி.சி. 363 மற்றும் 366 - ன் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் இருந்து குற்றவாளி விடுவிக்கப்படுகிறார்," என்று குறிப்பிட்டிருந்தது. பாதிக்கப்பட்ட பெண்ணின் நலனை கருத்தில் கொண்டு போக்சோ வழக்கில் இருந்து குற்றவாளி விடுதலை செய்யப்படுவதாகவும் அறிவித்தது உயர் நீதிமன்றம். அதில், "பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் அவரின் மகளையும் பேத்தியையும் கைவிட்டுவிட்டார். வேறு வழியேதுமின்றி, அந்த சிறுமி குற்றவாளியின் குடும்பத்தினருடனே வாழ்ந்து வந்தார்," என்றும் குறிப்பிட்டிருந்தது. இந்த விவகாரத்தில் தாமாக முன்வந்து விசாரணை செய்த உச்ச நீதிமன்றம், கொல்கத்தா உயர் நீதிமன்ற தீர்ப்பை நிறுத்தி வைத்தது. வழக்கறிஞர்கள் மாதவி திவான் மற்றும் லிஸ் மேத்யூ ஆகியோரை "அமிக்கஸ் கியூரியாக" நியமனம் செய்து வழக்கின் தன்மை குறித்து அறிக்கையை சமர்ப்பிக்க உத்தரவு பிறப்பித்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தாமாக முன்வந்து விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றம், கொல்கத்தா உயர் நீதிமன்ற தீர்ப்பை நிறுத்தி வைத்தது. அமிக்கஸ் கியூரியின் பரிந்துரைகள் "பெற்றோர் மற்றும் அரசிடம் இருந்து சிறுமிக்கு தேவையான எந்த உதவியும் கிடைக்கவில்லை. பாதிக்கப்பட்ட சிறுமியை பாதுகாக்கும் பொறுப்பை சரியாக செய்ய அரசாங்கம் தவறிவிட்டது. தன்னுடைய எதிர்காலம் குறித்து எந்தவிதமான முடிவையும் எடுக்க வாய்ப்புகள் ஏதுமற்ற சூழலில் அவர் குற்றவாளியின் வீட்டிலேயே தங்கும் நிலை ஏற்பட்டது," என்று குறிப்பிட்டிருந்தனர். "முறையான விழிப்புணர்வு இருந்தால் இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படாமலே தவிர்த்திருக்க இயலும். சாத்தியா சாலா, ஹெல்லோ ஷஹேலி போன்ற டிஜிட்டல் தளங்கள், பாலியல் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியத்திற்கு இடையே இருக்கும் இடைவெளியை நிரப்ப உருவாக்கப்பட்டது. இத்தகைய முன்னெடுப்புகள் இந்தியாவில் இருந்தும் கூட, யுனெஸ்கோவின் தி ஜேர்னி டுவார்ட்ட்ஸ் காம்ப்ரெஹென்சிவ் செக்சுவாலிட்டி எஜூகேஷன்: க்ளோபல் ஸ்டேட்டஸ் ரிப்போர்ட் (2021) அறிக்கையின் படி, எச்.ஐ.வி மற்றும் பாலியல் சார்ந்த கல்விகள் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கே வழங்கப்படுகிறது. முறையான கொள்கை சீர்திருத்தங்கள், மேம்படுத்தப்பட்ட ஆசிரியர் பயிற்சி மற்றும் பாடத்திட்டங்கள் இல்லையெனில் இந்தியா பதின் பருவ ஆரோக்கிய சீர்கேடுகள், தவறான தகவல்கள், பாலியல் மற்றும் இனப்பெருக்கம் தொடர்பான கல்வி குறித்து நிலவும் தவறான பார்வையால் இந்தியா அவதிப்பட்டுக் கொண்டிருக்கும். எனவே விரிவான பாலியல் சார் கல்வியை இந்தியாவில் அறிமுகம் செய்ய வேண்டும்," என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதற்கான குழு ஒன்றை உருவாக்க பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை வாயிலாக மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது உச்ச நீதிமன்றம். பாலியல் கல்வியை செயல்படுத்தல், ஆலோசனை சேவைகள், போக்சோ வழக்குகளின் நிலை, குழந்தை திருமணங்கள் போன்றவற்றை கண்காணித்தல் உள்ளிட்ட முக்கிய விவகாரங்களின் நிகழ்நேரத் தரவைச் சேகரிப்பதன் மூலம், அரசு இது போன்ற முக்கியப் பிரச்சினைகளைக் கையாள்வதில் வெளிப்படைத் தன்மையை மேம்படுத்த இயலும்," என்றும் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டிருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, யுனெஸ்கோ 2021-ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கை ஒன்றில் எச்.ஐ.வி மற்றும் பாலியல் சார்ந்த கல்வி இந்தியாவில் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கே வழங்கப்படுகிறது என்று சுட்டிக்காட்டியது. மனித உணர்வுகளின் அடிப்படையில் பார்க்கப்பட்ட வழக்கு "பொதுவாக இது போன்ற வழக்குகளில், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாதுகாப்பு வழங்கப்படுவதோடு, குற்றவாளிக்கு கடுமையான தண்டனையே உறுதி செய்யப்படும். ஆனால் இந்த வழக்கை ஒரு குற்றவழக்காக கருதாமல், மாறாக மனித உணர்வுகளின் அடிப்படையில் பார்க்கப்பட்ட வழக்காக அமைந்திருக்கிறது. பாதிக்கப்பட்ட பெண்ணின் மன நலனையும் குடும்ப நலனையும் கருத்தில் கொண்டு இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது," என வழக்கறிஞர் சுவகதா ரகா தெரிவித்தார். கர்நாடகாவில் போக்சோ வழக்குகளில் வாதிடும் அவர், உச்ச நீதிமன்றம் பாலியல் கல்வியை அறிமுகம் செய்வதற்கான குழு ஒன்றை அமைக்க உத்தரவு பிறப்பித்திருப்பதை வரவேற்றார். "பதின் பருவ குழந்தைகள், தேவையற்ற மன அழுத்தத்தை எதிர்கொள்வதற்கும், 'ரொமாண்டிக் உறவில்' ஈடுபட்ட காரணத்திற்காக சிறை செல்வதை குறைக்கவும் பாலியல் கல்வி கட்டாயம் உதவும். மத்திய அரசு இதற்காக அதிக நிதியை ஒதுக்கீடு செய்து, இது போன்ற விவகாரங்களில் குழந்தைகள் சிக்கிக் கொள்வதை தடுக்க உதவ வேண்டும்," என்று தெரிவித்தார். இது தொடர்பாக மேற்கொண்டு பேசிய, சென்னை மகளிர் நீதிமன்றத்தில் சிறப்பு அரசு வழக்கறிஞராக பணியாற்றும் ஆர்த்தி பாஸ்கரன், "சில நேரங்களில் பாதிக்கப்பட்ட பெண் கர்ப்பம் அடையும் போதோ, அல்லது அவருக்கு குழந்தை பிறக்கும் போதோ சிக்கல்கள் நீடிக்கின்றன. இது போன்ற தேவையற்ற மன உளைச்சலை தவிர்க்க, இத்தகைய கல்வி கட்டாயம் உதவும்," என்று கூறினார். "போக்சோ சட்டத்தில் மாற்றங்கள் வேண்டும்" போக்சோ வழக்குகளைப் பொருத்தமட்டில், சென்னை நீதிமன்றங்கள் மாறுபட்ட அணுகுமுறையைக் கொண்டுள்ளன என்றும் சுட்டிக் காட்டுகிறார் ஆர்த்தி. "சிறார்/சிறுமிகளுக்கு எதிராக நடைபெறும் பாலியல் சுரண்டல்கள் மற்றும் வன்முறை போன்ற வழக்குகள் மட்டுமே போக்சோ நீதிமன்றங்களில் நடைபெறுகின்றன. ஆனால் வீட்டில் இருந்து வெளியேறும் பதின்பருவ காதலர்கள் தொடர்பான வழக்கை தீர்த்து வைக்கவே அவர்கள் மகளிர் நீதிமன்றத்தை நாடி வருகின்றனர். பதின்ம வயதில் தோன்றும் காதல்கள் குறித்து சென்னை நீதித்துறையில் ஒரு நல்ல புரிதல் இருக்கின்ற காரணத்தால், இதில் சம்பந்தப்பட்ட சிறார் மற்றும் சிறுமிகளுக்கு தேவையான மன நல ஆலோசனை வழங்கப்படுகிறது. சிலர் 18 வயதான பிறகு திருமணம் செய்து கொள்வோம் என்று கூறுகின்றனர். சில பெற்றோர்கள், அவசரப்பட்டு வழக்கு பதிவு செய்துவிட்டோம் குழந்தைகளின் எதிர்காலம் கெட்டுவிடும் என்று கோரிக்கை வைத்து வழக்கை ரத்து செய்ய முன்வருவார்கள். சில நேரங்களில் வழக்கில் சம்பந்தப்பட்ட பதின்பருவ பெண், பதின்பருவ ஆணைக் காட்டிலும் வயதில் மூத்தரவாக இருப்பார். இது போன்ற 'க்ரே ஏரியாக்கள்' வரும் போது, இரு தரப்பின் நலனையும் கருத்தில் கொண்டே வழக்குகள் முடித்து வைக்கப்படுகிறது," என்று கூறுகிறார் ஆர்த்தி. 2021-ஆம் ஆண்டே சென்னை உயர் நீதிமன்றம், போக்சோ சட்டத்தின் நோக்கம் காதல் வயப்படும் பதின்ம வயதினரை சிறையில் அடைப்பதில்லை. இருப்பினும் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர்கள், இந்த சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்த வண்ணம் இருக்கின்றனர். எனவே இந்த சட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று கூறியது. "ஆனால் எக்காரணம் கொண்டும் ஒன்றுக்கும் மேற்பட்ட சிறுமிகளை பாலியல் ரீதியாக சுரண்டுபவர்கள், ஏற்கனவே திருமணம் செய்து கொண்ட நபர் குற்றவாளியாக கைது செய்யப்படும் போது, சரித்திர பதிவேட்டுக் குற்றவாளியாக இருக்கும் போது, கடுமையான தண்டனைகள் அவர்களுக்கு உறுதி செய்யப்படும்," என்றும் ஆர்த்தி கூறுகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, போக்சோ வழக்குகளில் மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் 2021-ஆம் ஆண்டு தெரிவித்தது "கொள்கை அளவிலான மாற்றங்கள் நன்மை அளிக்கும்" "உச்ச நீதிமன்றம் தரவுகளை சேகரித்து, போக்சோ வழக்குகளின் தன்மை குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது. இது நிச்சயமாக வரவேற்கக் கூடியது," என்று கூறுகிறார் கோவை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழுவில் பணியாற்றும் ஹஃப்சா. "பதின்பருவ காதல் விவகாரங்களில் சிறார் பள்ளிகளுக்கு செல்லும் பதின்ம வயது ஆண்களின் நிலையும் பிரச்னைக்குள்ளானதாகவே உள்ளது. அவர்கள் சிறார் சீர் திருத்தப் பள்ளியில் இருக்கும் போதும் சரி, வெளியே வந்து பிறகும் சரி அவர்களை பார்க்கும் சமூகத்தின் பார்வை அவர்களை குற்றவாளிகளாகவே கருதுகிறது. இயற்கையாக நடக்கும் ஒரு உறவில், அவர் குற்றவாளியாக கருதப்படுதல் காலத்திற்கும் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள், ஆசிரியர்களுக்கு இது தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துகின்றோம். அது போன்று 'கம்யூனிட்டி அவுட் ரீச்' திட்டங்களையும் செயல்படுத்துகின்றோம். இது பதின்பருவத்தில் காதல் வயப்படும் இரு தரப்பினரையும் இயல்பான மக்களாக நடத்த பெரிய அளவில் உதவும் என்று நம்புகின்றோம். உச்ச நீதிமன்றத்தின் பரிந்துரைகள் செயல்முறைக்கு வரும் போது, பெரிய அளவில் மாற்றங்களை அது உருவாக்கும்," என்றும் ஹஃப்சா கூறுகிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cd90zjj2dgko
  23. Published By: DIGITAL DESK 3 06 JUN, 2025 | 01:33 PM கொழும்பு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளில் இலவச பகல் உணவு வழங்கும் திட்டத்தை ஆரம்பிப்பதற்காக இந்தியாவின் அக்ஷய பத்ரா அறக்கட்டளையுடன் பாத்ஃபைண்டர் அறக்கட்டளை உத்தியோகபூர்வமாக புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் (MoU) கையெழுத்திட்டுள்ளது. இந்தியாவின் பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்ட அக்ஷய பத்ரா அறக்கட்டளையானது பாடசாலைகளில் இலவச உணவு வழங்கும் உலகின் மிகப்பெரிய இலாப நோக்கற்ற அமைப்பாகும். இந்தியாவின் 16 மாநிலங்கள் மற்றும் 3 முக்கிய நகரங்களில் செயல்படும் இந்த அறக்கட்டளையானது, தற்போது 23,581 பாடசாலைகளில் நாளாந்தம் 2.25 மில்லியனுக்கும் அதிகமான மாணவர்களுக்கு போசாக்கான பகல் உணவை வழங்கி வருகிறது. இந்த திட்டத்தினூடாக 78 மத்திய மையப்படுத்தப்பட்ட சமையலறைகளில் இருந்து உணவு வழங்கப்படுகிறது. அங்கு சர்வதேச உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் பின்பற்றப்படுகின்றன. இந்திய அரசாங்கத்தின் முதன்மையான "PM POSHAN" ஊட்டச்சத்து திட்டத்தில் அக்ஷய பத்ரா முக்கியமானதொரு பங்காளியாகவும் உள்ளது. இதற்கு முக்கிய நன்கொடையாளர்கள் மற்றும் வர்த்தக தலைவர்கள் ஒத்துழைப்பு வழங்குகின்றார்கள். பெங்களூரில் உள்ள அறக்கட்டளையின் தலைமையகத்தில் பாத்ஃபைண்டர் அறக்கட்டளையின் ஸ்தாபகர் மிலிந்த மொரகொட மற்றும் அக்ஷய பத்ரா அறக்கட்டளையின் தலைவர் ஸ்ரீ மது பண்டித் தாசா இடையே அண்மையில் நடந்த சந்திப்பைத் தொடர்ந்து இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. சந்திப்பின் போது, இலங்கையில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளில் முன்னோடியாக பகல் உணவு திட்டம் ஒன்றை ஆரம்பிப்பதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் இரு இரு தரப்பினரும் கலந்துரையாடினர். புதிதாக கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ், பாத்ஃபைண்டர் அறக்கட்டளையினால் செயல்படுத்தப்படும் கொழும்பில் பாடசாலைகளில் பகல் உணவு வழங்கும் திட்டத்துக்கு அக்ஷய பத்ரா உணவு தயாரித்தல் மற்றும் விநியோகத்திற்கான தொழில்நுட்ப செயல்பாட்டுக்கு ஒத்துழைப்பு வழங்கவுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் MMBL பாத்ஃபைண்டர் குழுமத்தின் பணிப்பாளரும், பிரதம நிறைவேற்று அதிகாரியுமான கே. பாலசுந்தரம் மற்றும் பாத்ஃபைண்டர் அறக்கட்டளையின் தலைவர் பெர்னார்ட் குணதிலக்க ஆகியோர் கையெழுத்திட்டனர். அக்ஷய பத்ராவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நிர்வாக அதிகாரிகள் சஞ்சலபதி தாசா மற்றும் சிவா சுவீர் சனிதாஸ் ஆகியோர் பெங்களூருவிலிருந்து மெய்நிகர் வழியாக கையெழுத்திட்டனர். https://www.virakesari.lk/article/216764
  24. 06 JUN, 2025 | 10:29 AM அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் - தொழிலதிபர் எலான் மஸ்க் இடையேயான மோதல் பொதுவெளியில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இருவரும் ஒருவர் மீது ஒருவர் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். “எலான் மஸ்க் உடன் எனக்கு சிறந்த நட்பு ரீதியிலான உறவு இருந்தது. ஆனால் இனியும் நாங்கள் அப்படி இருப்போமோ இதை தொடருவோமோ என எனக்கு தெரியவில்லை. மஸ்க் மீது நான் மிகவும் ஏமாற்றம் அடைந்துள்ளேன்” என ‘தி ஓவல்’ அலுவலகத்தில் செய்தியாளர் சந்திப்பின் போது ட்ரம்ப் தெரிவித்தார். இது நேரலையில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. “எல்லோரையும் விட இந்த புதிய சட்டமூலம் மசோதா குறித்து மஸ்க் முழுவதுமாக அறிவார். அதன் உள் விவரங்களையும் அவர் நன்கு தெரியும். இந்தச் சூழலில் திடீரென்று இப்போது அவருக்கு என்ன பிரச்சினை என்று தெரியவில்லை. மஸ்க் எனக்கு எதிராக இருப்பது குறித்து நான் பொருட்படுத்தவில்லை. ஆனால் அவர் இதை முன்பே செய்திருக்க வேண்டும்” என ட்ரம்ப் கூறினார். உடனடியாக நிகழ்நேரத்தில் எக்ஸ் வலைதளத்தில் ட்வீட் மூலம் மஸ்க் பதிலடி கொடுத்தார். ட்ரம்ப்பின் புதிய வரி மசோதாவுக்கு வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவித்திருந்தார் மஸ்க். தொடர்ந்து அமெரிக்க அரசு செயல்திறன் துறையின் (டிஓஜிஇ) சிறப்பு ஊழியர் பொறுப்பில் இருந்து அண்மையில் அவர் விலகினார். “நான் மட்டும் இல்லையென்றால் 2024 தேர்தலில் ட்ரம்ப் தோற்றிருப்பார். அவர் நன்றி இல்லாதவர். ட்ரம்ப் பொய் சொல்கிறார். அந்த மசோதா எனது பார்வைக்கு கிடைக்கவில்லை. இது இந்த ஆண்டின் பிற்பாதியில் பொருளாதார மந்த நிலையை உருவாக்கும். ட்ரம்ப் எனது நிறுவனங்களின் அரசு ஒப்பந்தத்தை ரத்து செய்வது குறித்து பேசினார். அந்த வகையில் ஸ்பேஸ்-எக்ஸின் டிராகன் விண்கலன் திட்டம் சார்ந்த செயல்பாடுகளை உடனடியாக நிறுத்துகிறது” என மஸ்க் எக்ஸ் தளத்தில் தெரிவித்தார். இதோடு ட்ரம்ப்பை நீக்கிவிட்டு துணை அதிபர் ஜே.டி.வான்ஸை அதிபராக நியமிக்க வேண்டும் என எக்ஸ் தளத்தில் பயனர் ஒருவர் தெரிவித்திருந்தார். ‘ஆம்’ என அதற்கு பதில் கொடுத்துள்ளார் மஸ்க். மேலும் அமெரிக்காவில் புதிய கட்சியை உருவாக்க வேண்டுமா என்பது குறித்து எக்ஸ் தளத்தில் வாக்கெடுப்பு ஒன்றையும் மஸ்க் முன்னெடுத்துள்ளார். எப்ஸ்டீன் ஃபைல்ஸ் வெளியிடாதது குறித்தும் மஸ்க் கேள்வி எழுப்பியுள்ளார். இதில் ட்ரம்ப் சம்மந்தப்பட்டு இருப்பது தான் காரணம் என தெரிவித்துள்ளார். பின்னணி என்ன? - அமெரிக்காவின் பட்ஜெட் திட்டம் ஏமாற்றம் அளித்ததால்ர் ட்ரம்ப் நிர்வாகத்தில் இருந்து தொழிலதிபர் எலான் மஸ்க் கடந்த வாரம் வெளியேறினார். அமெரிக்க ஜனாதிபதியாக ட்ரம்ப் 2-வது முறையாக பதவியேற்றதும் அரசு செலவினங்களை குறைப்பதற்காக தொழிலதிபர் எலான் மஸ்க் தலைமையில் அரசு செயல்திறன் துறை (டிஓஜிஇ) என்று உருவாக்கப்பட்டது. ஆண்டுதோறும் எலான் மஸ்க் 130 நாட்கள் சிறப்பு அரசு ஊழியராக செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டது. இத்துறை அரசு ஊழியர்களின் எண்ணிக்கையை குறைப்பது உட்பட பல ஆலோசனைகளை அமெரிக்க அரசுக்கு வழங்கி வந்தது. இதற்கு அமெரிக்காவில் எதிர்ப்பும் கிளம்பியது. இந்நிலையில் அமெரிக்க அரசின் பட்ஜெட் தயார் செய்யப்பட்டது. இது எலான் மஸ்க் தலைமையிலான அரசு செயல்திறன் துறை தெரிவித்த பரிந்துரைகளுக்கு மாறாக இருந்துள்ளது. மக்களுக்கு ஏராளமான வரிச்சலுகைகளுடன்இ ராணுவ பட்ஜெட் செலவினங்களும் அதிகமாக இருந்தது. கடந்த 2017-ம் ஆண்டு அதிபர் ட்ரம்ப் நிர்வாகம் பல வரிச்சலுகைகளை அளித்தது. அதேபோல் தற்போதும் 4 பேர் கொண்ட குடும்பத்துக்கு 1இ300 டாலர் கூடுதல் வருவாய் கிடைக்கும் வகையில் வரிச்சலுகை அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் லட்சக்கணக்கான அமெரிக்கர்கள் பயனடைவர். பட்ஜெட் அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் நிறைவேற்றப்பட்டது. ட்ரம்பின் மிகப் பெரிய மற்றும் அருமையான பட்ஜெட் ஏமாற்றம் அளிப்பதாக தொழிலதிபர் எலான் மஸ்க் கூறினார். ‘‘சிறப்பு அரசு ஊழியராக எனக்கு ஒதுக்கப்பட்ட நேரம் முடிவுக்கு வருகிறது. வீண் செலவினங்களை குறைக்க வாய்ப்பளித்த டொனால்டு ட்ரம்ப்புக்கு நன்றி. அமெரிக்க அரசின் மிகப் பெரிய பட்ஜெட் நிதி பற்றாக்குறையை அதிகரித்துள்ளது. அரசு செயல்திறன் துறையின் பணிகளை குறைத்து மதிப்பிட்டுள்ளது. இந்த பட்ஜெட் பெரியதாக இருக்கலாம் அல்லது அருமையானதாக இருக்கலாம். ஆனால் இரண்டும் சேர்ந்ததாக இருக்குமா என தெரியவில்லை’’ என மஸ்க் அப்போது தெரிவித்தார். அரசுப் பணி காலத்தில் போதைப் பொருள் பயன்படுத்தியதாக மஸ்க் மீது குற்றச்சாட்டு எழுந்தது. அதை அவர் மறுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/216740
  25. Published By: RAJEEBAN 05 JUN, 2025 | 11:16 AM காசாவில் உடனடி நிபந்தனையற்ற நிரந்தரயுத்த நிறுத்தத்தை கோரும் ஐக்கியநாடுகள் பாதுகாப்பு சபையின் தீர்மானத்திற்கு எதிராக அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தியுள்ளது. 14 நாடுகள் இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ள நிலையிலேயே அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தியுள்ளது. இஸ்ரேலை பாதுகாப்பதற்காக அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தியுள்ளமை இது ஐந்தாவது தடவையாகும். யுத்தநிறுத்த கோரிக்கைக்கும் ஹமாஸ் தன்னிடமுள்ள பணயக்கைதிகளை விடுதலை செய்வதற்கும் நேரடி தொடர்பில்லை என தெரிவித்து கடந்த நவம்பரில் ஜோபைடன் நிர்வாகமும் யுத்தநிறுத்த தீர்மானத்திற்கு எதிராக வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தியிருந்தது. காசாவின் நிலைமையை பேரழிவு என வர்ணித்து காசாவிற்குள் மனிதாபிமான உதவிகள் உடனடியாக சென்றடைவதற்காக அனைத்து கட்டுப்பாடுகளையும் உடனடியாக நீக்கவேண்டும்,என கோரும் இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக பிரிட்டனும் பிரான்சும் வாக்களித்திருந்தன. இஸ்ரேலை இலக்குவைத்து பாதுகாப்பு சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை நிராகரித்தன் மூலம் அமெரிக்கா ஒரு வலுவான செய்தியை தெரிவித்துள்ளது என அந்த நாட்டின் இராஜாங்க செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார். இஸ்ரேலிற்கும் ஹமாசிற்கும் இடையில் ஒரு தவறான தவறான ஒரு சமாந்திரத்தை வரையும் இஸ்ரேல் தன்னை தானே பாதுகாப்பதற்காக உள்ள உரிமையை புறக்கணிக்கும் எந்த தீர்வையும் அமெரிக்கா ஏற்றுக்கொள்ளாது என தெரிவித்துள்ள அவர் ஐநாவில் தொடர்ந்தும் அமெரிக்கா இஸ்ரேலிற்கு ஆதரவாகயிருக்கும் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/216640

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.