Everything posted by ஏராளன்
-
குடியேற்றவாசிகள் கைதுசெய்யப்பட்டதை தொடர்ந்து லொஸ் ஏஞ்சல்சில் பெரும் ஆர்ப்பாட்டங்கள் - வாகனங்கள் தீக்கிரை - ஆர்ப்பாட்டக்காரர்களை கட்டுப்படுத்த தேசிய காவல்படையினரை அழைத்தார் டிரம்ப்
சட்டவிரோத குடியேற்றம் : தொடரும் வன்முறை சம்பவங்கள்; அமெரிக்க கடற்படையினர் கட்டுப்பாட்டில் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரம்! Published By: DIGITAL DESK 3 10 JUN, 2025 | 01:07 PM போராட்டங்கள் நான்காவது நாளை எட்டியுள்ள நிலையில், லொஸ் ஏஞ்சல்ஸில் அமெரிக்க கடற்படையினர் 700 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில், சட்டவிரோதமாக குடியேறிய 44 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் அங்கு இடம்பெற்ற எதிர்ப்பு போராட்டம் வன்முறையாக உருவெடுத்தது. போராட்டத்தை கட்டுப்படுத்த என்.ஜி., எனப்படும் தேசிய காவல் படை பொலிஸாரை அனுப்பி வைத்து ட்ரம்ப் அதிரடி நடவடிக்கை எடுத்தார். இந்நிலையில் ஜனாதிபதி ட்ரம்ப் அரசின் செயல்பாடுகளால் ஆத்திரமடைந்த கலிபோர்னிய ஆளுநர் கவின் நியூஸ்கம் உள்ளூர் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தார். ஆனாலும் வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்த, நூற்றுக்கணக்கான அமெரிக்க கடற்படையினர் லொஸ் ஏஞ்சல்ஸ் பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளனர். 700 கடற்படையினர் லொஸ் ஏஞ்சல்ஸிற்கு அனுப்பப்பட்டு உள்ளதாக அமெரிக்காவின் வடக்கு கட்டளைப்பிரிவு தெரிவித்துள்ளது. இந்த கடற்படையினர், ஏற்கனவே அங்குள்ள தேசிய பாதுகாப்புப் படையினருக்கு ஆதரவாக செயல்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கலிபோர்னியா கவர்னர் கவின் நியூசம் மற்றும் லொஸ் ஏஞ்சல்ஸ் ஆளுநர் கரேன் பாஸ் ஆகியோர், கடற்படையினரின் வருகை தேவையற்றது என்றும், இது நிலைமையை மேலும் மோசமாக்கும் என்றும் வன்மையாக கண்டித்துள்ளனர். இதேவேளை, போராட்டத்தைச் செய்தியாகக் கொடுத்துக் கொண்டிருந்த ஊடகவியலாளர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு உள்ளாகியுள்ளார். https://www.virakesari.lk/article/217075
-
மன்னாரில் காற்றாலை மின் உற்பத்தி, கனிய மணல் அகழ்வுக்கு எதிராக மாபெரும் கவனயீர்ப்பு பேரணி; ஆதரவு வழங்குமாறு பிரஜைகள் குழு கோரிக்கை
Published By: DIGITAL DESK 2 10 JUN, 2025 | 01:39 PM மன்னாரில் மக்களின் வாழ்வியலை பாதிக்கும் வகையில் முன்னெடுக்கப்பட்டு வரும் காற்றாலை மின் உற்பத்தி மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாளைய தினம் புதன் கிழமை (11) மன்னாரில் இடம் பெற உள்ள கவனயீர்ப்பு பேரணியில் அனைவரும் கலந்து கொண்டு ஆதரவை வழங்குமாறு மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை மாக்கஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். மன்னார் பிரஜைகள் குழுவில் இன்று செவ்வாய்க்கிழமை (10) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், மன்னாரில் மக்களின் வாழ்வியலை பாதிக்கும் வகையில் காற்றாலை மின் உற்பத்தி மற்றும் கனிய மணல் அகழ்வு இடம் பெற்று வருகிறது. காற்றாலை மின் உற்பத்தி மக்களுக்கு நன்மையை ஏற்படுத்தும் செயல் திட்டமாக காணப்பட்டாலும், குறித்த காற்றாலைகள் அமைக்கப்படும் இடம் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. மேலும் மன்னார் தீவு மற்றும் பெரு நில பரப்பிலும் கனிய மணல் அகழ்வு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. மக்கள் தொடர்ச்சியாக எதிர்ப்பை தெரிவித்து வருகின்ற போதும், குறித்த நடவடிக்கை தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது. எனவே மக்களின் வாழ்வியலை பாதிக்கின்ற காற்றாலை மின் உற்பத்தி மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவற்றிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மன்னார் பிரஜைகள் குழு, பொது அமைப்புக்கள், மீனவ அமைப்புகள் உள்ளடங்களாக சிவில் அமைப்புக்கள் இணைந்து நாளைய தினம் புதன்கிழமை காலை மன்னாரில் கவனயீர்ப்பு பேரணி ஒன்றை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கவனயீர்ப்பு பேரணியானது, காலை 9 மணிக்கு மன்னார் பொது விளையாட்டு மைதான வீதியில் ஆரம்பமாகி பிரதான வீதியூடாக மன்னார் பஜார் பகுதியை சென்றடையும். அதனை தொடர்ந்து ஜனாதிபதிக்கு கையளிக்கப்பட வேண்டிய கோரிக்கை அடங்கிய மகஜர் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபருக்கு வழங்கி வைக்கப்படும். எனவே குறித்த பேரணியில் மன்னார் மாவட்ட மக்கள், வர்த்தகர்கள் உள்ளடங்களாக அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டு எமது இருப்பை தக்க வைக்க அனைவரும் குரல் கொடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/217086
-
கதிர்காம காட்டுப்பாதை 20ஆம் திகதி திறக்கப்படும்; அடையாள அட்டை அவசியம் - சிந்தக்க அபேவிக்கிரம
10 JUN, 2025 | 03:01 PM வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காம ஆடிவேல் விழாவிற்கு செல்லும் பாதை யாத்ரீகர்களுக்கான காட்டுப்பாதை எதிர்வரும் வெள்ளிக்கிழமை (20) திறக்கப்பட்டு, மீண்டும் குறித்த காட்டுப்பாதை ஜூலை மாதம் 04ம் திகதி மூடப்படும் என அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக்க அபேவிக்கிரம தெரிவித்தார். கதிர்காமம் மற்றும் உகந்தமலை முருகன் ஆலயங்களின் வருடாந்த ஆடிவேல் விழா 26 ஆம் திகதி ஆரம்பமாகி ஜூலை மாதம் 11ஆம் திகதி தீர்த்தோற்சவ அத்துடன் நிறைவடையும் என கூறினார். கதிர்காமத்திற்கு பாதயாத்திரையாக செல்வோர் உகந்தமலை முருகன் ஆலயத்தில் ஓரிரு நாட்கள் தங்கியிருந்து குமண யால காட்டினூடாக பிரவேசித்து கதிர்காமத்தை சென்றடைவது வழக்கமாகும். வெள்ளிக்கிழமை 20 ஆம் திகதி காலை உகந்தமலை முருகன் ஆலயத்தில் நடைபெற இருக்கும் ஆரம்ப வைபவத்தை அடுத்து காட்டுப்பாதை காலை ஆறு மணி முதல் பிற்பகல் மூன்று மணி வரை மாத்திரமே திறந்து இருக்குமெனவும் அக் காலப்பகுதிக்குள் மட்டுமே காட்டுக்குள் செல்ல யாத்திரீகர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றார். https://www.virakesari.lk/article/217083
-
வடக்கில் சிறுவர் உரிமை மீறல்களை கண்காணிப்பதற்கு கண்காணிப்பு கமராக்கள் பொருத்தப்பட வேண்டும்; ஓய்வுபெற்ற நீதிபதி
வடக்கில் சிறுவர் உரிமை மீறல்களை கண்காணிப்பதற்கு கண்காணிப்பு கமராக்கள் பொருத்தப்பட வேண்டும்; ஸ்ரீநிதி நந்தசேகரன் 10 JUN, 2025 | 11:56 AM பாடசாலை மட்டத்தில் ஏற்படும் சிறுவர் உரிமை மீறல்களை கண்காணிப்பதற்கு முறைப்பாட்டுப்பெட்டி, கண்காணிப்பு கமரா என்பன பொருத்தப்பட வேண்டும் என ஓய்வுபெற்ற நீதிபதி ஸ்ரீநிதி நந்தசேகரன் தெரிவித்துள்ளார். சிறுவர்களின் நலன்சார் செயற்பாடுகளில் பங்கேற்கும் சகல உத்தியோகத்தர்களும் வழிகாட்டுதல் கலந்துரையாடல் வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போது, அதில் வளவாளராக பங்குபற்றி கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், நலிவுற்ற சமுதாயத்தினரே கூடியளவு சமூகப் பிரச்சினைகளான பாலியல் துஸ்பிரயோகம், உயிர்கொல்லி போதைப்பொருள் பாவனை போன்ற விடயங்களால் அதிகமாக பாதிப்படைகின்றனர். இதற்கு மேலதிகமாக குடும்பங்களின் வறுமையும், சமூகத்தில் ஏற்படும் கலாசார மாற்றம், தொலைபேசி பாவனை, சமூக வலைத்தள பாவனை போன்றவற்றினூடான இடர்பாடுகளும் காரணமாக உள்ளன. இவர்களுக்கான முறையான வழிகாட்டல்களுடன் சமூகப்பொறுப்புணர்வுடன் சகலரும் இணைந்து பணியாற்ற வேண்டும். பாடசாலை மட்டத்தில் ஏற்படும் சிறுவர் உரிமை மீறல்களையும், முறைப்பாடுகளையும் கண்காணிப்பதற்கு முறைப்பாட்டுப்பெட்டி, கண்காணிப்பு கமரா என்பன சில இடங்களில் பொருத்தப்பட்டுள்ளன. ஏனைய பாடசாலைகளிலும் இவை பொருத்தப்பட்டு முறைப்பாட்டுப் பெட்டியின் திறப்பு நன்னடத்தை உத்தியோகத்தர், சிறுவர் உரிமை பாதுகாப்பு உத்தியோகத்தரிடம் கையளிக்கப்பட்டு அவர்கள் முன்னிலையிலேயே திறக்கப்பட வேண்டும். இரட்டை பிரஜாவுரிமையில் குழந்தை தத்தெடுப்பது தொடர்பான விடயங்களில் தேசிய நன்னடத்தை மற்றும் சிறுவர் கவனிப்பு சேவைகள் திணைக்களம் கையாள்வதே பொருத்தமானதாக அமையும். சகல உத்தியோகத்தர்களும் கூட்டுப்பொறுப்புடனும் குழந்தைகளின் நலன்சார் செயற்பாடுகளுக்கு முன்னுரிமையளித்தும் செயற்படவேண்டும். சிறுவர் இல்லங்கள் மற்றும் ஏனைய பாதிக்கப்பட்ட நிலையிலுள்ள சகல சிறுவர்களுக்கும் சிறுவர் சார்பான கடமை உத்தியோகத்தர்களின் விவரங்கள், தொலைபேசி இலக்கங்கள் என்பன தெரிவிக்கப்பட வேண்டும். சமூக கண்காணிப்பை உறுதி செய்வதற்கான விழிப்புணர்வுக் குழுக்கள் சமூக மட்டத்தில் உருவாக்கப்பட்டு நலன்சார் விடயங்கள் கவனிக்கப்படவேண்டும் எனவும், சகல விடயங்களையும் ஒருங்கிணைக்க பொலிஸ் உத்தியோகத்தர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது என்றார். https://www.virakesari.lk/article/217079
-
சட்டவிரோத திஸ்ஸ விகாரை கட்டுமானத்திற்கு எதிராக கவனயீர்ப்புப் போராட்டம் தொடர்கிறது
சட்டவிரோத தையிட்டி விகாரைக்கு எதிராக தொடரும் போராட்டம் : கலகமடக்கும் பொலிஸார் குவிப்பு! Published By: DIGITAL DESK 2 10 JUN, 2025 | 10:26 AM சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்டுள்ள தையிட்டி திஸ்ஸ விகாரையை அகற்றக்கோரியும், விகாரை அமைந்துள்ள காணி மற்றும் அதனைச் சூழவுள்ள காணிகளைக் காணி உரிமையாளர்களிடம் மீளவும் வழங்குமாறு வலியுறுத்தியும் இன்று செவ்வாய்க்கிழமை (10) போராட்டம் நடைபெற்று வருகிறது. திஸ்ஸ விகாரையில் இன்று (10) நடைபெறவுள்ள பொசன் பௌர்ணமி வழிபாட்டு நடவடிக்கைகளுக்காக ஆயிரக்கணக்கான சிங்கள மக்கள் அழைத்து வரப்படவுள்ளனர். இந்நிலையில் தையிட்டி விகாரை பகுதியில் குழப்பமான சுழல் உருவாகலாம் என்ற முன்னெச்சரிக்கையின் அடிப்படையில் பொலிஸாரின் நீர்த்தரைப் பிரயோக இயந்திரம் கொண்டு வரப்பட்டுள்ளதுடன் கலகமடக்கும் பொலிஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை பலாலி பொலிஸாரினால் மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் கட்டளையொன்றும் பெறப்பட்டு போராட்ட பகுதியில் ஒட்டப்பட்டுள்ளது. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், காணி உரிமையாளர்கள் உள்ளிட்ட 27 நபர்கள் மற்றும் அமைப்புக்களுக்கு எதிராகவே குறித்த கட்டளை பெறப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/217070
-
ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில் மகேந்திர சிங் தோனி - ஹால் ஆஃப் ஃபேம் என்றால் என்ன?
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,2011, ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பையுடன் தோனி 51 நிமிடங்களுக்கு முன்னர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம் (Hall of Fame) பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார். "அழுத்தத்தின் போதும் நிதானமாக இருக்கும் இயல்புடனும், ஒப்பிடமுடியாத கிரிக்கெட் திறமையுடனும், குறுகிய வடிவ கிரிக்கெட்டின் முன்னோடியாக கொண்டாடப்படுகிறார் எம்.எஸ். தோனி. கிரிக்கெட்டின் மிகச்சிறந்த பினிஷர்களில் ஒருவராகவும், கேப்டனாகவும், விக்கெட் கீப்பராகவும் இருக்கும் தோனி, ஐ.சி.சி கிரிக்கெட் ஹால் ஆஃப் ஃபேமில் சேர்க்கப்பட்டதன் மூலம் கௌரவிக்கப்படுகிறார்" என்று ஐசிசி-யின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. திங்கள்கிழமை (ஜூன் 9) லண்டனில் நடைபெற்ற ஐசிசி நிகழ்வில் இந்த அறிவிப்பு வெளியானது. எம்.எஸ்.தோனி, தென்னாப்பிரிக்காவின் ஹாசிம் அம்லா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ ஹைடன், நியூஸிலாந்தைச் சேர்ந்த டேனியல் வெட்டோரி உள்பட 5 கிரிக்கெட் வீரர்கள் மற்றும் 2 கிரிக்கெட் வீராங்கனைகள் ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம் என்றால் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம் தொப்பியுடன் சச்சின் (2019) ஜனவரி 2, 2009 அன்று ஐசிசியின் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (FICA) உடன் இணைந்து, ஐசிசி கிரிக்கெட் ஹால் ஆஃப் ஃபேம் தொடங்கப்பட்டது. கிரிக்கெட் விளையாட்டுக்கு சிறந்த முறையில் பங்களிப்பு அளித்த கிரிக்கெட் ஜாம்பவான்களின் சாதனைகளை போற்றும் வகையில் 'ஹால் ஆஃப் ஃபேம்' அங்கீகாரத்தை ஐசிசி வழங்கி வருகிறது. இந்த வருடம் அறிவிக்கப்பட்டுள்ள ஏழு பேரைச் சேர்த்து, இதுவரை இந்தப் பட்டியலில் 122 கிரிக்கெட் வீரர்கள், வீராங்கனைகளின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இவ்வாறு 'ஹால் ஆஃப் ஃபேமில்' சேர்க்கப்படுபவர்களுக்கு ஐசிசி கிரிக்கெட் ஹால் ஆஃப் ஃபேம் தொப்பி (Cap) வழங்கப்படுகிறது. ஒருவேளை அந்த கிரிக்கெட் வீரர் அல்லது வீராங்கனை உயிரோடு இல்லையென்றால், அவர்களின் குடும்பத்தாரிடம் இந்த தொப்பி வழங்கப்படும். இந்த 'ஹால் ஆஃப் ஃபேமில்' சேர்க்கப்படுபவதற்கான அடிப்படை தகுதி என்பது, அந்த வீரர் அல்லது வீராங்கனையின் இறுதி சர்வதேச கிரிக்கெட் போட்டி, ஐந்து ஆண்டுகளுக்கு முன் நடந்திருக்க வேண்டும். தோனியைப் பொறுத்தவரை, 2019 (ஜுலை 10) ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி ஆட்டம் தான் அவர் கடைசியாக விளையாடிய போட்டி. 2020 ஆகஸ்ட் மாதம் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து அவர் ஓய்வு பெற்றார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கிரிக்கெட் வரலாற்றில் மூன்று ஐசிசி வெள்ளை பந்து (White Ball) கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டன் தோனி மட்டுமே. 2025 வருடத்திற்கான ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்கள், எம்.எஸ். தோனி - இந்தியா கிரயெம் ஸ்மித்- தென்னாப்பிரிக்கா ஹாசிம் அம்லா- தென்னாப்பிரிக்கா மேத்யூ ஹைடன்- ஆஸ்திரேலியா டேனியல் வெட்டோரி- நியூஸிலாந்து வீராங்கனைகள்: சனா மிர்- பாகிஸ்தான் சாரா டெய்லர்- இங்கிலாந்து. இந்த அறிவிப்பு குறித்து பேசிய ஐசிசி-யின் தலைவர் ஜெய் ஷா, "ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம் மூலம், கிரிக்கெட்டின் பாரம்பரியத்திற்கு பங்களித்து, பல தலைமுறைகளுக்கு உத்வேகம் அளித்த கிரிக்கெட் வீரர்களை நாங்கள் கௌரவிக்கிறோம். இந்த ஆண்டு, சிறந்த ஏழு நபர்களை இந்த மதிப்புமிக்க குழுவில் சேர்ப்பதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். ஐசிசி சார்பாக, அவர்கள் ஒவ்வொருவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார். ஐசிசி ஹால் ஆஃப் ஃபேமில் இந்தியர்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சுனில் கவாஸ்கருக்கு ஹால் ஆஃப் ஃபேம் தொப்பியை வழங்கும் கபில் தேவ் இந்த ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம் தொடங்கப்பட்ட வருடமான 2009இல் சுனில் கவாஸ்கர் மற்றும் பிஷன் பேடியின் பெயர்கள் சேர்க்கப்பட்டன. அதன் பிறகு 2010இல், கபில் தேவின் பெயர் சேர்க்கப்பட்டது. 2015இல் அனில் கும்ப்ளேவின் பெயர் சேர்க்கப்பட்டது. பின்னர், 2018இல் ராகுல் டிராவிட்டும், 2019இல் சச்சின் டெண்டுல்கரும் இதில் சேர்க்கப்பட்டனர். 2021இல் வினோ மன்காட், 2023இல் வீரேந்திர சேவாக் ஆகியோரது பெயர்கள் ஐசிசி ஹால் ஆஃப் ஃபேமில் சேர்க்கப்பட்டன. இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள 11-வது இந்தியர் தோனி. இவர்கள் தவிர்த்து டயானா எடுல்ஜி, நீது டேவிட், ஆகிய இந்திய கிரிக்கெட் வீராங்கனைகளின் பெயர்களும் ஐசிசி ஹால் ஆஃப் ஃபேமில் இடம்பெற்றுள்ளன. கடந்த 2004-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அறிமுகமான தோனி, 2007-ம் ஆண்டு இந்திய டி20 கிரிக்கெட் அணியின் கேப்டனாக ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரை வென்றார். அதன் பிறகு 2011-ல் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை தொடர் மற்றும் 2013-ல் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரை அவரது தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வென்றது. கிரிக்கெட் வரலாற்றில் மூன்று ஐசிசி வெள்ளை பந்து (White Ball) கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டன் தோனி மட்டுமே. ஐசிசி ஹால் ஆஃப் ஃபேமில் தனது பெயர் சேர்க்கப்பட்டுள்ளது குறித்து பேசிய தோனி, "தலைமுறைகளைக் கடந்து, உலகம் முழுவதிலுமிருந்து கிரிக்கெட் வீரர்களின் பங்களிப்புகளை அங்கீகரிக்கும் ஐ.சி.சி ஹால் ஆஃப் ஃபேமில் எனது பெயரும் இடப்பெற்றது மிகப்பெரிய கௌரவம். வரலாற்றின் சிறந்த கிரிக்கெட் ஜாம்பவான்களுடன் என் பெயரும் நினைவுகூரப்படும் என்பது ஒரு அற்புதமான உணர்வு." என்று கூறியுள்ளார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c249j903qjjo
-
நிதி மோசடி தண்டனை பெற்றவருக்கு மன்னிப்பு : ஜனாதிபதி, சிறைச்சாலை திணைக்களத்தின் முரண்பட்ட அறிக்கை
கைதானார் பணி இடைநீக்கம் செய்யப்பட்ட சிறைச்சாலை ஆணையாளர்! Published By: VISHNU 09 JUN, 2025 | 09:20 PM பணி இடைநீக்கம் செய்யப்பட்ட சிறைச்சாலை ஆணையாளர் ஜெனரல் துஷார உப்புல்தெனிய குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டார். கைதிகளுக்கான ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் போது அனுமதியற்ற முறையில் சிலரை விடுதலை செய்த குற்றச்சாட்டின் பேரிலேயே இவர் கைது செய்யப்பட்டார். https://www.virakesari.lk/article/217055
-
'ஒருவனுக்கு ஒருத்தி' மனிதனின் இயல்பான குணமா? கலாசாரங்களில் பலதார மணம் எப்படி இருந்தது?
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க்ரவுட்சயின்ஸ் நிகழ்ச்சி பதவி, பிபிசி உலக சேவை 9 ஜூன் 2025, 10:12 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் டேட்டிங் செயலிகள் முடிவில்லாத வாய்ப்புகளை வழங்கி, உறவுகளின் லேபிள்களும் மாறி வரும் இன்றைய காலகட்டத்தில் மனிதர்கள் இயற்கையாகவே ஒருதார மணம் செய்யும் தன்மை (மோனோகமி) கொண்டவர்களா என்கிற கேள்வி முன்பு எப்போதையும் விட பொருத்தமுள்ளதாகிறது. லண்டனில் வசிக்கும் ரோமானியரான அலினா 'பாலிஅமோரி' அனுபவம் பெற்ற பிறகு இதே எண்ணத்தில் தான் இருந்தார். பாலிஅமோரி என்பது சம்மந்தப்பட்டவர்களின் ஒப்புதலுடன் ஒரே நேரத்தில் பல நெருக்கமான உறவுகளில் இருப்பது. "நான் சமீபத்தில் பாலிஅமோரி பின்பற்றும் ஒருவரைச் சந்தித்தேன், அவர் எப்போதுமே அப்படித்தான் இருந்துள்ளார்" என விவரித்தவர், நாம் ஏன் ஒரு சமூகமாக ஒருதார மணம் தான் விதி என ஏற்றுக் கொண்டோம் எனக் கேள்வி எழுப்புகிறார். நம்முடைய பரிணாம வளர்ச்சி பாதை புரிந்து கொள்ள நமக்கு நெருக்கமான உயிரினங்களின் இனப்பெருக்க உத்திகளை ஆராய்வது உதவியாக இருக்கும். "கொரில்லாக்கள் பல தார மணம் செய்பவை, ஒரு ஆண் உயிரினம் பல பெண் உயிரினங்களுடன் இனச்சேர்க்கை மேற்கொள்ளும்" என பிரிட்டனில் உள்ள ப்ரிஸ்டால் பல்கலைக்கழகத்தில் பரிணாமத்தை ஆய்வு செய்யும் உயிரியலாளரான கிட் ஓபி தெரிவித்தார். "எனவே அந்தக் குழுவில் உள்ள சந்ததியினர் அனைவரும் தந்தை ஒருவராக இருப்பார், ஆனால் தாய் வேறு வேறாக இருப்பார்கள்" என்றார். ஆனால் இது ஒரு திறன்மிகு இனப்பெருக்க உத்தி இல்லை என்கிறார் ஓபி. ஏனென்றால் இது அதிக அளவிலான சிசுக் கொலைக்கு வழிவகுக்கும் எனக் கூறுகிறார். சிசுக்கொலை என்பது கொரில்லா வாழ்க்கையில் மிகவும் கொடூரமான ஒன்று எனக் கூறும் அவர், "ஒரு ஆண் கொரில்லா தனக்கு பிறக்காத குழந்தை கொரில்லாக்களை கொல்லும், இதன் மூலம் அதன் தாயுடன் விரைவாக இனப்பெருக்கம் மேற்கொள்ள முடியும். இத்தகைய பரிணாம உத்தியை நாம் பின்பற்ற முடியாது" என்றார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பெண்கள் குரங்குகள் பல ஆண் குரங்குகளுடன் இனப்பெருக்கும் மேற்கொள்ளும். ஆனால் மனிதருக்கு நெருக்கமான குரங்கினங்களான சிம்பன்சிக்கள் மற்றும் போனோபோஸ்களில் பெண்கள் வேறு விதமான பரிணாம உத்தியைப் பின்பற்றுகின்றன. பெண் குரங்குகள், பல ஆண் குரங்குகளுடன் இனப்பெருக்கும் மேற்கொள்ளும். இதன் மூலம் தந்தை யார் என்பதில் குழப்பம் ஏற்பட்டு குழந்தை கொரில்லாக்கள் தாக்கப்படுவதற்கான சாத்தியங்கள் குறையும். மனிதகுலமும் கிட்டத்தட்ட இதே போன்ற அமைப்பில் இருந்து தான் தொடங்கி இருக்கக்கூடும். ஆனால் இரண்டு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு அனைத்தும் மாறின. இதற்கு காலநிலை மாற்றம் தான் காரணம் என்கிறார் ஓபி. "நம் மூதாதையர்கள் வாழ்ந்த ஆப்பிரிக்காவில் ஏற்பட்ட வறட்சியால் பல இடங்கள் தரிசாக மாறின. ஆதி மனிதர்கள் தங்களை வேட்டை விலங்குகளிடமிருந்து பாதுகாத்து கொள்ள பெரிய குழுக்களில் இருக்க வேண்டியிருந்தது. இத்தகைய பெரிய சிக்கலான குழுக்களை சமாளிப்பதற்காக மூளை பெரிதாகியது, இதனால் பாலூட்டும் காலமும் அதிகரித்தது" என்றார். பெரிய குழுக்களில் அதிக ஆண்கள் இருப்பதால், தந்தை வழியை பின்பற்றாதிருப்பது கடினமானது. "அதே நேரத்தில் பெண்களுக்கு தங்களின் பிள்ளைகளை வளர்க்க ஆண்களின் துணை தேவைப்பட்டது. எனவே அவர்கள் ஒரு தார மணம் என்கிற முறைக்கு மாறினர்" மோனோகமி சிறந்த உத்தியா? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பெரிய மூளை கொண்ட மெதுவாக வளரும் ஆண் குழந்தைகளை வளர்க்க அதிக அளவிலான பெற்றோரின் ஈடுபாடு தேவைப்பட்டது. இந்த மாற்றம் என்பது மோனோகமி சிறந்தது என்பதனால் நிகழவில்லை, அது தான் ஒரே சாத்தியமான வாய்ப்பு என்பதால் தான் சாத்தியமானது என ஓபி கூறுகிறார். பெரிய மூளை கொண்ட மெதுவான வளரும் ஆண் குழந்தைகளை வளர்க்க அதிக அளவிலான பெற்றோரின் ஈடுபாடு தேவைப்பட்டது. இது ஒரு தாயால் சமாளிக்கக்கூடியதை விட மிகுதியானது. ஆதி மனிதர்கள் ஒரு தார மணம் செய்பவர்களாகப் பரிணமித்ததாக வரலாறு கூறினாலும், அதனை தேர்வு செய்தவர்கள் ஒருவருக்கு மட்டும் உண்மையாக இருக்க சிரமப்பட்டனர். "வாழ்நாள் முழுவதும் ஒருவருடனே வாழ்ந்து, ஏமாற்றாத உயிரினங்களும் உள்ளன. ஆனால் அவை மிகவும் அரிது" என்கிறார் முனைவர் ஓபி. மேலும் அவர், "நமக்கு மிகவும் நெருக்கமான உறவினர் கிப்பன் குரங்குகள் தான். கிப்பன்கள் மற்ற ஜோடிகளிடம் இருந்து தனித்து வசிப்பதால், காட்டில் தங்கள் பகுதிக்குள் யார் வருகிறார்கள், யார் வருவதில்லை போன்றவற்றை கட்டுப்படுத்துவது ஆண்கள் மற்றும் பெண்களுக்கு எளிதாக இருந்தது." "ஆனால் மனிதர்கள் போன்ற அதிக ஆண்கள், அதிக பெண்கள் வாழும் குழுக்களில் நீங்கள் இருந்தால், அங்கு கட்டுப்படுத்துவது என்பது கடினம், உங்களின் துணை ஏமாற்றுகிறாரா இல்லையா என்று அறிவது கடினம்" என்கிறார். அந்த விதத்தில் பார்க்கையில் ஒரு தார மணம் என்பது இயற்கையான தேர்வு என்பதை விட பிழைக்கும் உத்தியாகவே உள்ளது. ஆனால் இதில் குறைகளும் உள்ளன. பந்தம் உருவாக்குவதன் பின்னணி என்ன? நாம் காதலில் விழுந்தாலோ அல்லது உண்மையாக இருந்தாலோ நம் மூளைகளில் என்ன நடக்கிறது என்ற கேள்வி எழாமல் இல்லை. அமெரிக்காவின் எமோரி பல்கலைக்கழகத்தில் நரம்பியல் முனைவர் பட்ட மாணவரான சாரா ப்ளூமெந்தல், பிரேரி வோல்ஸ் என்கிற உயிரினத்தை ஆய்வு செய்து வருகிறார். இந்த சிறிய உயிரினங்கள், மனிதர்களைப் போல நீண்ட கால பிணைப்புகளை மேற்கொள்பவை. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பிரேரி வோல்ஸின் மூளையில் அதிக அளவிலான ஆக்ஸிடாஸின் ரிசப்டர்கள் உள்ளன. அவர்களின் மற்ற வோல் உறவினர்களைப் போல அல்லாமல் பிரேரி வோல்ஸின் மூளையில் அதிக அளவிலான ஆக்ஸிடாஸின் ரிசப்டர்கள் உள்ளன. ஆக்ஸிடாஸின் "கட்டிள் ஹார்மோன்" (cuddle hormone) என்றும் அழைக்கப்படுகிறது. இவை தொடுதல் ஏற்படுகிற சமயங்களில் மூளையில் வெளியாகும் நியூரோகெமிக்கல் ஆகும். "நாம் பரிசோதனை முறையில் பிரேரி வோல்ஸ்களில் உள்ள ஆக்ஸிடாஸின் அளவை சீண்டினால் அவர்களால் வலுவான பந்தத்தை உருவாக்க முடியவில்லை. அவர்களின் துணைகளுடன் குறைவான நேரத்தையே செலவிடுகின்றனர்" என்றார் ப்ளூமெந்தல். பட மூலாதாரம்,GETTY IMAGES மனிதர்களிடமும் இதே போன்ற ஆக்ஸிடாஸின் அமைப்பு தான் உள்ளது, நம்முடைய மூளை பந்தம் மேற்கொள்வதை நேர்மறையாக அணுகுவதற்கு கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதைக் காட்டுகிறது. ஆனால் மற்றொரு கெமிக்கலான டோபமைன், அர்ப்பணிப்பு என்பதற்கு மாறாக புதுமையை நோக்கி நம்மை தள்ளுகிறது. பந்தத்தின் தொடக்க கட்டத்தில் நம்முடைய மூளையில் டோபமைன் நிரம்பி வழிகிறது, இது ஈர்ப்பு மற்றும் வெளிப்படைத்தன்மையை தூண்டுகிறது. பந்தம் உருவான பிறகு டோபமைன் வடிவங்கள் மாறுகின்றன. பல கணவன்கள் கொண்ட பெண்கள் ஒரு தார மணத்திற்கான பரிணாம வாதம் இருந்தாலும், மனித கலாச்சாரங்கள் எப்போதுமே பல தரப்பட்ட உறவு ஏற்பாடுகளைக் கொண்டுள்ளன. அமெரிக்காவின் சிகாகோவில் உள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மானுடவியலாளர் முனைவர் கேட்டி ஸ்டார்க்வெதர், நேபாள், திபெதி தொடங்கி ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் அமெரிக்கா என உலகம் முழுவது, 50-க்கும் மேற்பட்ட பாலியண்ட்ரி சம்பவங்களை ஆவணப்படுத்தியுள்ளார். பாலியண்ட்ரி என்றால் ஒரு பெண் பல கணவன்கள் வைத்திருக்கும் முறையைக் குறிக்கிறது பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பாலியண்ட்ரி என்றால் ஒரு பெண் பல கணவன்கள் வைத்திருக்கும் முறையைக் குறிக்கிறது ஒரு தார மணத்திற்கான பரிணாம வாதம் இருந்தாலும், மனித கலாச்சாரங்கள் எப்போதுமே பல தரப்பட்ட உறவு ஏற்பாடுகளைக் கொண்டுள்ளன. அமெரிக்காவின் சிகாகோவில் உள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மானுடவியலாளர் முனைவர் கேட்டி ஸ்டார்க்வெதர், நேபாள், திபெதி தொடங்கி ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் அமெரிக்கா என உலகம் முழுவது, 50-க்கும் மேற்பட்ட பாலியண்ட்ரி சம்பவங்களை ஆவணப்படுத்தியுள்ளார். பாலியண்ட்ரி என்றால் ஒரு பெண் பல கணவன்கள் வைத்திருக்கும் முறையைக் குறிக்கிறது. பாலிஜினியை (ஒரு ஆண் பல மனைவிகள் வைத்திருப்பது) விட பாலியண்ட்ரி அரிதானது என்றாலும் அந்த கூற்றை நம்ப முடியாத ஒன்றாகப் பார்க்க வேண்டாம் என எச்சரிக்கிறார் ஸ்டார்க்வெதர். "பல பார்ட்னர்கள் வைத்திருப்பதன் மூலம் பெண்கள் பொருளாதார ரீதியாக பலன் அடையலாம். ஒருவரின் முதன்மையான கணவன் இறந்தாலோ அல்லது சில பூர்வகுடி வட அமெரிக்க குழுக்களிடம் இருப்பதைப் போன்று நீண்ட காலம் கணவன் காணாமல் போனாலோ மாற்று திட்டம் கையில் வைத்திருப்பது சிறந்தது தான்" என அவர் கூறுகிறார். சில சந்தர்ப்பங்களில், பல தார ஏற்பாடுகள் மரபணு நன்மைகளையும் வழங்கியுள்ளன. "மக்கள் அதிகமான நோய்வாய்ப்பட்டு அதனால் உயிரிழக்கும் சூழல்களில், நீங்கள் சற்று வேறு விதமான மரபணு அமைப்பு கொண்ட பல பிள்ளைகளைக் கொண்டிருந்தால் நீங்கள் நல்ல நிலையில் தான் இருப்பீர்கள்" என ஸ்டார்க்வெதர் விவரிக்கிறார். "அவர்கள் நடப்பு சூழலில் நன்றாகப் பொருந்திப் போவார்கள்" என்றும் தெரிவித்தார். ஆனால் பல தார முறையில் சவால்களும் இல்லாமல் இல்லை. பல உறவுகளைச் சமாளிப்பதற்கு, நேரம், உணர்வியல் சக்தி மற்றும் பேச்சுவார்த்தை தேவைப்படும். "நீங்கள் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் சரி பல துணைகள் வைத்திருப்பது மிகவும் கடினமானது. பொருளாதார ரீதியாகவும் உணர்வு ரீதியாகவும் சரி அது மிகவும் கடினம். ஒரு தார மணம் என்பது எண்ணிக்கை அளவில் மிகவும் பொதுவான திருமண வடிவமாக இருப்பதற்கு இது தான் முதன்மை காரணம் என நினைக்கிறேன்" என்று தெரிவித்தார் ஸ்டார்க்வெதர். பாலிஅமோரி அனுபவம் எப்படி உள்ளது? அலினாவுக்கு அவருடைய முந்தைய ரிலேஷன்ஷிப்பில் மோனோகமி வேலை செய்யவில்லை என்கிறார். தற்போது பாலிஅமோர் உறவில் இருக்கும் அவர் பல சிக்கலான உணர்வுகளைக் கடந்து வருகிறார். பொறாமை என்பது மிகவும் கடினமாகவும் வலுவாகவும் இருக்கும் என்பதை அவர் ஒப்புக் கொள்கிறார். "ஆனால் எனக்கு தனிப்பட்ட முறையில், இந்த உணர்வுகளில் பெரும்பாலானவை நம்முடைய பார்ட்னர் நம்மிடம் நேர்மையாக இல்லை என்கிற உணர்வில் இருந்து தான் வருகின்றன. அவர் நேர்மையாக தான் இருக்கிறார் எனத் தெரிவது பொறாமை உணர்வை சமாளிக்க உதவுகிறது" என்றார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சிலருக்கு பல தார முறை என்பது உணர்வியல் சுதந்திரம் மற்றும் பொருளாதார நெகிழ்வுத்தன்மையை வழங்குகிறது. பொறாமை என்பது பெரிய பிரச்னை இல்லை என அவரின் பார்ட்னர் கூறுகிறார். "பல ஆரோக்கியமான உறவுகளை சமாளிக்க தேவைப்படும் நேரம் மற்றும் முயற்சி பெரும் சுமையாக இருக்கலாம்" என்றார். அவர்கள் இருவருமே இது சரியானது தான் என்கின்றனர். முன்னரே தீர்மானிக்கப்பட்ட விதிகள் எதுவும் இல்லை என்கிறார் அலினா. மேலும் அவர், "அது உங்களை உரையாட வைக்கிறது, மற்ற சந்தர்ப்பங்களில் நீங்கள் அதை மேற்கொள்ள மாட்டீர்கள், அது தான் எங்கள் உறவை வலுவானதாக்குகிறது" என்றார். எனவே, நாம் இயற்கையில் ஒரு தார தன்மை கொண்டவர்களா எனக் கேள்வி எழுப்பினால் ஆம் மற்றும் இல்லை என்கிற இரண்டுமே தான் பதிலாக அமையும். வரலாறு மற்றும் கலாச்சாரங்கள் முழுவதுமே, மனிதர்களின் தங்களின் சமூக, பொருளாதார மற்றும் சூழலியல் சந்தர்ப்பங்களுக்கு ஏற்ற பல வகையான உறவு முறைகளை உருவாக்கியுள்ளனர். சிலருக்கு பல தார முறை என்பது உணர்வியல் சுதந்திரம் மற்றும் பொருளாதார நெகிழ்வுத்தன்மையை வழங்குகிறது. ஆனால் பிறருக்கு, காதலைக் கடத்திச் செல்ல ஒரு தார மணம் என்பது எளிமையான மற்றும் சமாளிக்கக்கூடிய வழியாக உள்ளது. மனிதர்கள் நெகிழ்வாக இருக்க பரிணமித்துள்ளனர். இது நாம் உறவுகள் வைத்திருப்பது மற்றும் திருமணம் செய்து கொள்ளும் முறை ஆகியவற்றை உள்ளடக்கும் எனக் கூறும் ஸ்டார்க்வெதர் "நாம் உலகின் அனைத்து விதமான சுற்றுச்சூழலிலும் வாழ்கிறோம். அதற்கு நாம் கொண்டிருக்கும் நெகிழ்வுத்தன்மை மற்றும் அணுகுமுறையே காரணம்" என்றார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c39xe3mj21ro
-
மீண்ட ருவாண்டாவும், மீளாத இலங்கையும்
Published By: DIGITAL DESK 2 08 JUN, 2025 | 03:20 PM ஹரிகரன் 31 ஆண்டுகளுக்கு முன்னர் மிகப்பெரிய இனஅழிப்பை எதிர்கொண்ட ருவாண்டா தொடர்பாக, ஆங்கில நாளிதழ் ஒன்றில் ஒரு கட்டுரை வெளியாகியிருந்தது. ருவாண்டாவுக்கான இலங்கையின் கௌரவ தூதுவராக இருக்கின்ற கல்லி அலெஸ் (Cally Alles) அந்தக் கட்டுரையை எழுதியிருந்தார். ருவாண்டாவின் வரலாறு, இனப்படுகொலையில் எதிர்கொண்ட அழிவுகள், அதற்குப் பின்னர் அங்கு ஏற்பட்டிருக்கின்ற பொருளாதார, அரசியல், சமூக மாற்றங்கள் குறித்து மிகவிரிவாக அந்தக் கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது. அந்த கட்டுரையை எழுதிய கல்லி அலெஸ், 1978 ஆம் ஆண்டிலிருந்து ருவாண்டாவில் வசித்து வருகின்ற- இலங்கையரான தேயிலைத் தோட்டத் தொழிலதிபர். 1994 ஆம் ஆண்டு ருவாண்டாவின் ஜனாதிபதியாக இருந்த ஜூவேனல் ஹபியாரிமானா, பயணம் செய்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதை அடுத்து, டுட்சி சிறுபான்மையினர் மீது, ஹூட்டு பெரும்பான்மையினர் இனப்படுகொலையை கட்டவிழ்த்து விட்டனர். தலைநகர் கிகாலியில் இலட்சக்கணக்கான மக்கள் தங்கி இருந்த அகதிகள் முகாம்களுக்குள் நுழைந்து ஈவிரக்கமற்ற இனப்படுகொலைகள் அரங்கேற்றப்பட்டன. சுட்டும் வெட்டியும், இலட்சக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். பெண்கள், பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டார்கள். கடந்த நூற்றாண்டில் மிகக் கோரமாக அரங்கேறிய ஒரு இனப்படுகொலையாக இது அடையாளப்படுத்தப்படுகிறது. சுமார் 3 மாத காலப்பகுதிக்குள் ருவாண்டாவில் சுமார் 8 இலட்சம் வரையிலான சிறுபான்மை டுட்சிக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதாக பதிவுகள் கூறுகின்றன. சுமார் 5 இலட்சம் வரையான பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டார்கள். இதற்குப் பின்னர், அங்கு சர்வதேச தலையீட்டுடன் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஆட்சியில் இருந்த- இனப்படுகொலை அரசாங்கம விரட்டியடிக்கப்பட்டது. அதன் பின்னர் இனப்படுகொலை தொடர்பான விசாரணைகள் சர்வதேச அளவில் முன்னெடுக்கப்பட்டன. இப்போது ருவாண்டா ஆபிரிக்காவிலேயே மிகமிக அமைதியான ஒரு நாடாக விளங்குகிறது. உலகளவில் கூட, அமைதியான நாடு என்று சொல்லக் கூடிய நிலையில் இருக்கிறது. ருவாண்டா என்றால் எதிர்மறையான ஒரு எண்ணமே மனதில் தோன்றும். அந்தளவுக்கு அங்கு நிகழ்ந்த இனஅழிப்பின் அடையாளம் உலகம் முழுவதும் பதிவாகியிருக்கிறது. ஆனால், இப்போது அந்த நாட்டின் நிலைமை அதற்கு மாறாக உள்ளது என்பதை, ருவாண்டாவுக்கான இலங்கையின் கௌரவ தூதுவர் கல்லி அலெசின் கட்டுரை தெளிவுபடுத்துகிறது. பாதுகாப்பு மிக்க ஒரு நாடாக அது மாறியிருக்கிறது. பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. 2023 ஆம் ஆண்டு 8.2 வீத பொருளாதார வளர்ச்சியை கொண்டிருந்த ருவாண்டா, 2024 ஆம் ஆண்டு 8.9 சதவீத பொருளாதார வளர்ச்சியை எட்டியிருக்கிறது. இது அந்த நாடு எந்தளவு வேகமாக பொருளாதார ரீதியாக வளர்ந்து கொண்டிருக்கிறது என்பதைக் காட்டுகிறது. அங்கு சேவைகள் துறையும், தொழிற்துறைகளும், விவசாயத் துறையும் வேகமாக வளர்ச்சி அடைகின்றன. குறிப்பாக பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான நாடாக அது மாறியிருக்கிறது. அந்த நாட்டின் பாராளுமன்றத்தின் மொத்த உறுப்பினர்களில் 63.75% வீதமானோர் பெண்களாக இருக்கின்றனர். பெண்கள் அங்கு மிகவும் பாதுகாப்பான நிலையை உணர்கிறார்கள். பெண் சுற்றுலா பயணிகள் தனித்து சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கு மிகஉகந்த இடமாக இருக்கிறது. இப்படி ருவாண்டாவின் புகழை அடுக்கியிருக்கிறார், கல்லி அலெஸ். நீண்ட இனஅழிப்பு வரலாற்றை கொண்டிருக்கும் இலங்கைத்தீவு போரில் இருந்து முற்று முழுதாக விடுபட்டு, 16 ஆண்டுகள் கடந்து விட்டன. ஆனாலும், இலங்கைத் தீவு அரசியல் ரீதியாகவோ, பொருளாதார ரீதியாகவோ, சமூக ரீதியாகவோ அனைவருக்கும் பாதுகாப்பான நாடாக உருவாகவில்லை- உருவாக்கப்படவில்லை. நாட்டின் பொருளாதாரம் உறுதியான நிலையில் இல்லை, அது மோசமாக வீழ்ச்சி அடைந்திருக்கிறது. வங்குரோத்து நிலையில் இருந்து மீளுவதாகச் சொல்லப்பட்டாலும், மக்களின் வாழ்க்கைத் தரமும் பொருளாதார நிலையும் மோசமான நிலையை நோக்கியே நகர்ந்து கொண்டிருக்கிறது. நாட்டின் பொருளாதாரம் மீட்சி பெற்று வருவதாக கூறப்படுகின்ற போதும், அதனை நிரூபிக்கக் கூடிய வகையில், மக்களால் உணரக் கூடிய வகையில், நாட்டின் பொருளாதாரம் செழிப்பை நோக்கி நகரவில்லை. அனைத்து சமூகங்களுக்குமான பொருளாதாரப் பாதுகாப்பு நிலை உறுதிப்படுத்தப்படாமல், கேள்விக்குறியான நிலையே நீடிக்கிறது. அதேவேளை, அரசியல் ரீதியாக பிரச்சினைகளை தீர்ப்பதற்கான எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. போருக்கான அடிப்படைக் காரணிகளை தீர்ப்பதற்கு ஆட்சியில் இருந்த எந்த அரசாங்கமும் உறுதியான நடவடிக்கைகளை எடுக்கவில்லை. இப்போதைய அரசாங்கம், முன்னைய அரசாங்கங்கள் செயற்படுத்திய விடயங்களை கூட, வலுவற்றதாக்கும் செயற்பாடுகளையே முன்னெடுக்கிறது எந்த ஒரு போருக்கும் அரசியல் ரீதியான காரணிகள் இருக்கும். இலங்கையில் இடம்பெற்ற தமிழர்களின் ஆயுதப் போராட்டத்துக்கும் அரசியல் காரணிகள் இருந்தன. தமிழர்கள் மீது தொடர்ச்சியாக இழைக்கப்பட்டு வந்த அநீதிகளும் அட்டூழியங்களும் இனப்படுகொலைகளும் தான் பெரும் போருக்குள் நாடு தள்ளப்படுவதற்கு காரணம். அரசியல் ரீதியாக தமிழர்களுக்கு அதிகாரங்கள் பகிரப்படாமல், அவர்களின் உரிமைகள் உறுதிப்படுத்தப்படாமல் போனதன் விளைவு அது. அதற்காக முன்னெடுக்கப்பட்ட அமைதி முயற்சிகளும் சமாதான பேச்சுக்களும் எந்த பயனும் தராத நிலையில் இலங்கையின் ஆட்சியாளர்கள், தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தை நசுக்குவது என்ற பெயரில் மிகப்பெரிய இனஅழிப்பை அரங்கேற்றினார்கள். அதன் பின்னரும், தமிழர்களுக்கு அதிகாரங்களைப் பகிரவோ உரிமைகளை உறுதிப்படுத்தவோ இன்னமும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அரசியல் ரீதியாக அதனை உறுதிப்படுத்தாமல் நிலையான அமைதியை ஏற்படுத்த முடியாது. ஆனாலும் எந்த ஒரு சிங்கள ஆட்சியாளரும் அதற்குத் தயாராக இல்லை. அதேபோல, போரின்போது இடம்பெற்ற இனஅழிப்பு, போர்க்குற்றங்கள், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பாக, நம்பகமான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, குற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்படவோ, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி பெற்றுக் கொடுக்கப்படவோ இல்லை. பொறுப்புக்கூறல் பொறிமுறையை உருவாக்குவதற்கு எந்த ஒரு சிங்கள ஆட்சியாளர்களும் துணியாத நிலையிலேயே இருக்கின்றனர். இதன் காரணமாக, பாதிக்கப்பட்டவர்கள் நீதி கிடைக்காமல் போராடுகின்ற நிலை இன்று வரை தொடர்கிறது. பொறுப்புக்கூறல் இல்லாமல் நல்லிணக்கத்தை உருவாக்க முடியாது. ஆனால், இலங்கையின் ஆட்சியாளர்கள் எந்தப் பொறுப்புக்கூறலும் இல்லாமல் - குற்றமிழைத்தவர்களை தண்டனையிலிருந்து தப்பிக்க வைத்து, நல்லிணக்கத்தை ஏற்படுத்த முனைகிறார்கள். இது இலங்கையில் நல்லிணக்கம், நிலையான அமைதி ஏற்படுவதற்கு உள்ள மிகப்பெரிய தடையாக உள்ளது. 31 ஆண்டுகளுக்கு முன்னர் மிகப்பெரிய இனஅழிப்பை எதிர்கொண்ட இருபதாம் நூற்றாண்டில் மிகப்பெரிய அவலத்த எதிர்கொண்ட ருவாண்டா இன்று , மீள் எழுச்சி பெற்றிருக்கிறது என்றால், அதற்கு ஒரே காரணம், அங்கு இடம்பெற்ற இனஅழிப்புக்கு பொறுப்புக்கூறல் இடம் பெற்றதுதான். இனஅழிப்பை மேற்கொண்டவர்கள் பெருமளவில் கைது செய்யப்பட்டு, தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள். பெருமளவானோர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். இதன் ஊடாக, முற்று முழுதாக இல்லாவிட்டாலும், பொறுப்புக்கூறல் கடப்பாடு பெரும்பாலும் நிறைவேற்றப்பட்டிருக்கிறது, அதற்கு சர்வதேச துணையும் இருந்தது. ஆனால், இலங்கையைப் பொறுத்தவரையில், அத்தகைய நிலை இல்லை. சர்வதேசமும் தனது முழுமையான அதிகாரத்தை பிரயோகிக்கவில்லை, இலங்கை அரசும் பொறுப்புக்கூறலை ஒரு முக்கிய கடப்பாடாக கருதி, நிறைவேற்றவில்லை. தற்போதைய அரசாங்கம் கூட, ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. உண்மை நல்லிணக்க ஆணைக்குழுவை அமைத்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு தீர்வு வழங்குவதாக கூறிய இப்போதைய அரசாங்கம், அதனை தொடங்கவே இல்லை. இவ்வாறான நிலையில், இலங்கையின் நிலையான அமைதிக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும், சமூக மேம்பாட்டுக்கும் எந்த வகையிலும் ஏற்ற சூழல் உருவாக்கப்படவில்லை. போருக்குப் பிந்திய அமைதி என்பது, அரசியல், பொருளாதார, பொறுப்புக்கூறல், சமூக ரீதியாக மாற்றங்களின் ஊடாகத் தான், சாத்தியப்படும். அத்தகைய மாற்றங்களை இலங்கை சந்திப்பதற்கான வாய்ப்புகள் ஏதும், கண்ணுக்கு எட்டிய தூரத்தில் தென்படுவதாக இல்லை. https://www.virakesari.lk/article/216935
-
கப்பலில் காசாவிற்கு புறப்பட்டார் கிரெட்டா தன்பேர்க் - இனப்படுகொலை குறித்த உலகின் மௌனத்தை விட இந்த பயணம் ஆபத்தானதில்லை என தெரிவிப்பு
மனிதாபிமான கப்பலை இஸ்ரேலை நோக்கி படையினர் கொண்டு செல்கின்றனர் - சர்வதேச ஊடகங்கள் Published By: RAJEEBAN 09 JUN, 2025 | 08:45 AM சூழல் ஆர்வலர் கிரெட்டா தன்பேர்க் உட்பட செயற்பாட்டாளர்கள் பலருடன் காசாவை நோக்கி மனிதாபிமான பொருட்களுடன் பயணித்துக்கொண்டிருந்த கப்பலிற்குள் அத்துமீறி நுழைந்த இஸ்ரேலிய படையினர் அந்த கப்பலை இஸ்ரேலை நோக்கி கொண்டு செல்கின்றனர். இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சு இதனை தெரிவித்துள்ளது, கப்பலை பாதுகாப்பாக இஸ்ரேலிற்கு கொண்டுசெல்கின்றோம் அதில் உள்ளவர்கள் அவர்களின் நாட்டிற்கு பாதுகாப்பாக அனுப்பிவைக்கப்படுவார்கள் என இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை கப்பலிற்குள் இஸ்ரேலிய படையினர் நுழைந்த பின்னூ பிரீடம் புளோட்டிலா அமைப்பு வீடியோவொன்றை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் செயற்பாட்டாளர்கள் நாங்கள் தடுக்கப்பட்டுள்ளோம் எங்களைஇஸ்ரேலிய படையினர் கடத்தியுள்ளனர் என தெரிவிக்கின்றனர். https://www.virakesari.lk/article/216975
-
நிதி மோசடி தண்டனை பெற்றவருக்கு மன்னிப்பு : ஜனாதிபதி, சிறைச்சாலை திணைக்களத்தின் முரண்பட்ட அறிக்கை
அனுராதபுரம் சிறைச்சாலை கண்காணிப்பாளருக்கு விளக்கமறியல் 09 JUN, 2025 | 06:26 PM கைது செய்யப்பட்ட அனுராதபுரம் சிறைச்சாலை கண்காணிப்பாளரை எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அனுராதபுரம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் அனுராதபுரம் சிறைச்சாலையின் கைதி ஒருவரை சட்டவிரோதமாக விடுவித்த குற்றச்சாட்டில் குற்றப் புலனாய்வு பிரிவினரால் இவர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/217048
-
நாட்டின் மிகப்பெரிய மருந்து உற்பத்தி ஆலையின் கட்டுமான பணிகளை பார்வையிட்டார் சுகாதார அமைச்சர்
Published By: DIGITAL DESK 3 09 JUN, 2025 | 05:45 PM நாட்டிலேயே மேற்கத்திய மருந்துகளுக்கான மிகப்பெரிய உள்ளூர் உற்பத்தி ஆலையின் கட்டுமானம் சுகாதார அமைச்சரின் மேற்பார்வையின் கீழ் நடைபெறுகிறது. இந்த மருந்து உற்பத்தி ஆலையில் உற்பத்தி நடவடிக்கைகள் தொடங்குவதன் மூலம், நாட்டின் மருந்து உற்பத்தித் துறையில் ஒரு பெரிய புரட்சி தொடங்கும் என்று சுகாதார அமைச்சர் தெரிவித்தார். பிங்கிரியா ஏற்றுமதி செயலாக்க வலயத்தில் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டு அடிப்படை ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும், நாட்டின் மிகப்பெரிய மேற்கத்திய மருந்து உற்பத்தியாளரான சினெர்ஜி பார்மாசூட்டிகல்ஸ் கார்ப்பரேஷன் பிரைவேட் லிமிடெட், (Synergy Pharmaceuticals Corporation Private Limited) சமீபத்தில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவால் ஆய்வு செய்யப்பட்டது. பிங்கிரியா ஏற்றுமதி செயலாக்க வலயத்தில் சுமார் 1000 ஏக்கர் பரப்பளவில் 15 ஏக்கர் பரப்பளவில் 120 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (USD 120M) நிதி முதலீட்டில் சர்வதேச தரத் தரங்களின்படி கட்டப்பட்டு வரும் இந்த மருந்து தொழிற்சாலையின் கட்டுமானப் பணிகளின் தற்போதைய நிலை, சமீபத்திய தொழில்நுட்பம் மற்றும் தரநிலைகளுக்கு ஏற்ப நிறுவப்பட்ட அதிநவீன மருந்து உற்பத்தி இயந்திர அமைப்பு மற்றும் இங்குள்ள அடிப்படை மருந்து உற்பத்தி நடவடிக்கைகள் ஆகியவற்றை சுகாதார அமைச்சர் ஆய்வு செய்தார். மருந்து உற்பத்தி நிலையத்தில் பணிபுரியும் 700க்கும் மேற்பட்ட ஊழியர்களை தங்க வைப்பதற்காக கட்டப்பட்டு வரும் தங்குமிட கட்டிடத்தையும் சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ ஆய்வு செய்தார். தற்போது இறக்குமதியை பெரிதும் நம்பியுள்ள நாட்டிற்குத் தேவையான அனைத்து அத்தியாவசிய மருந்துகளையும் உற்பத்தி செய்ய உள்ளது. கூடுதலாக, சினெர்ஜி இந்த ஆண்டு இறுதிக்குள் ஆரம்ப மருந்து உற்பத்தி நடவடிக்கைகளைத் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. செனுரா சிவில் இன்ஜினியரிங் (பிவிடி) லிமிடெட் வடிவமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. மருந்து உற்பத்தி ஆலையை ஆய்வு செய்த பின்னர் பேசிய சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இந்த மருந்து உற்பத்தி ஆலை திறக்கப்படுவது நாட்டின் மருந்து உற்பத்தி துறையில் ஒரு புரட்சியின் தொடக்கத்தைக் குறிக்கிறது என்றும், இந்த மருந்து உற்பத்தி ஆலை நவீன மருந்து உற்பத்தித் துறையில் புரட்சியை முன்னோடியாகக் கொள்ள முடியும் என்றும் கூறினார். அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள், இந்த ஆலையால் உற்பத்தி செய்யப்படும் சர்வதேச தரத்திலான மருந்துப் பொருட்கள் அரசு மருத்துவமனைகளிலும் சந்தையிலும் கிடைக்கும் என்றும் அவர் கூறினார். அனைத்து குடிமக்களுக்கும் தற்போது கிடைக்காத அனைத்து மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளையும் உயர் தரத்தில் வழங்குவதே தனது இலக்கு என்று சுகாதார அமைச்சர் தெரிவித்தார். கடந்த காலங்களில் மருந்துத் துறையில் இருந்த பிரச்சினைகள் காரணமாக, இந்தப் பிரச்சினையை இன்னும் பல மாதங்களுக்கு எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும், அடுத்த ஆண்டு முதல் மருத்துவமனை அமைப்புக்கு வழங்கப்பட வேண்டிய மருந்துகளில் குறைந்தது 95 சதவீதத்தையாவது தொடர்ந்து வழங்க சுகாதார அமைச்சகம் நம்புகிறது என்றும் அவர் கூறினார். மக்களுக்கு மருந்துகளை வழங்குவதற்காக அரசாங்கம் ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 200 பில்லியன் ரூபாய்களை ஒதுக்குவதாகவும், அரசாங்கம் எவ்வளவு பணம் ஒதுக்கினாலும், விநியோகச் சங்கிலியில் உள்ள பலவீனங்கள் காரணமாக மக்களுக்கு மருந்துகளை சரியான நேரத்தில் வழங்க முடியவில்லை என்று அரசாங்கம் தொடர்ந்து குற்றம் சாட்டப்படுவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். இந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான மிகச் சரியான பதில், நாட்டில் மருந்துகளின் உள்ளூர் உற்பத்தியை அதிகரிப்பதாகும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். இதற்குத் தேவையான பல மருந்துகளை அதிக நிதி முதலீட்டில் உற்பத்தி செய்வதில் கவனம் செலுத்துவது மிகவும் முக்கியம் என்றும், இந்த மருந்து உற்பத்தி ஆலையின் தயாரிப்புகள் எப்போதும் உயர் தரத்திலும் சர்வதேச தரத்தின்படியும் தயாரிக்கப்பட வேண்டும் என்றும் அமைச்சர் கூறினார். எதிர்காலத்தில் மருந்து உற்பத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக நாட்டிற்கு அதிக முதலீட்டாளர்களை பெரிய அளவில் கொண்டு வருவது புதிய அரசாங்கத்தின் நோக்கம் என்றும் அமைச்சர் கூறினார். உள்ளூர் உற்பத்தியாளர்கள் உயர்தர மருந்துகளை உற்பத்தி செய்தால், அவர்களுக்கு சாத்தியமான அனைத்து ஆதரவையும் வழங்க அரசாங்கம் தயங்காது என்றும் அமைச்சர் கூறினார். பிங்கிரிய ஏற்றுமதி பதப்படுத்தும் வலயத்தை நாட்டின் ஒரு பெரிய பொருளாதார வலயமாக மேம்படுத்தும் அரசாங்கத்தின் திட்டத்திற்குள் இந்த மருந்து உற்பத்தி ஆலை நிறுவப்படுவதன் மூலம், நாட்டின் ஏற்றுமதி பொருளாதாரம் பலப்படுத்தப்படுவது மட்டுமல்லாமல், இந்தப் பகுதியில் ஏராளமான மக்களுக்கு நேரடி வேலை வாய்ப்புகளையும் உருவாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் தொழிற்சாலையில் மட்டும் சுமார் 2,500 வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்தச் சந்தர்ப்பத்தில், சினெர்ஜி பார்மாசூட்டிகல்ஸ் கார்ப்பரேஷன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் ரவி விஜேரத்ன, நிர்வாக இயக்குநர் ரோஹன் விஜேசூரியா, தலைமை இயக்க அதிகாரி இந்திய நாட்டவர் ஆர்.கபாதாஜி, முதலீட்டு வாரியத்தின் தலைவர் அர்ஜுன ஹேரத், மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தின் செயல் தலைமை நிர்வாக அதிகாரி ஒழுங்குமுறை இயக்குநர் அர்ஜுன பத்மகுமார, மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒழுங்குமுறைத் தலைவர் வசனா வெலிபிட்டிய, இலங்கை வங்கியின் துணைப் பொது மேலாளர் சம்பத் பெரேரா மற்றும் பலர் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/217047
-
இங்கிலாந்து இந்திய டெஸ்ட் கிரிக்கெட் தொடர்
ஷுப்மான் கில்லை விராட் கோலியுடன் ஒப்பிடுவது நியாயமா? - இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் காத்திருக்கும் சவால்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, டைகர் பட்டோடி, சச்சின் டெண்டுல்கர், கபில் தேவ் மற்றும் ரவி சாஸ்திரி ஆகியோருக்குப் பிறகு ஐந்தாவது இளைய டெஸ்ட் கேப்டனாக ஷுப்மான் கில் (வலது) இருப்பார் கட்டுரை தகவல் எழுதியவர், ஷார்தா உக்ரா பதவி, மூத்த விளையாட்டு பத்திரிகையாளர், பிபிசிக்காக 58 நிமிடங்களுக்கு முன்னர் இன்றைய விளையாட்டு சூழலில், கிரிக்கெட் வீரர் ஷுப்மான் கில்லை விராட் கோலியுடன் ஒப்பிடுவது சரியானதாக தெரியவில்லை. இருப்பினும், 2014ஆம் ஆண்டில் திடீரென மகேந்திர சிங் தோனி ஓய்வு பெற்ற பிறகு உடனடியாக விராட் கோலிக்கு வழங்கப்பட்ட டெஸ்ட் அணியின் தலைமைப் பதவியுடன் தற்போதைய நிலைமையை ஒப்பிட்டுப் பார்த்தால், சிலபல வித்தியாசங்கள் இருப்பதை உணரமுடியும். 2014ஆம் ஆண்டில் விராட் கோலி டெஸ்ட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டபோது, அவர் 29 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1,855 ரன்கள் எடுத்திருந்தார். ஆறு சதங்கள் மற்றும் ஒன்பது அரை சதங்கள் எடுத்திருந்த கோலியின் சராசரி ரன்ரேட் 39.46 ஆக இருந்தது, அப்போது அவருக்கு வயது 26 மட்டுமே. ஜூன் 20ஆம் தேதி ஹெடிங்லியில் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாக களம் இறங்கும்போது ஷுப்மான் கில்லின் வயது 25 ஆண்டு 285 நாட்களுமாக இருக்கும். கேப்டன்சியைப் பொறுத்தவரை, டைகர் பட்டோடி, சச்சின் டெண்டுல்கர், கபில் தேவ் மற்றும் ரவி சாஸ்திரி (ஒரே ஒரு டெஸ்டுக்கு மட்டுமே தலைமை தாங்கியவர்) ஆகியோருக்குப் பிறகு ஐந்தாவது இளைய வீரராக ஷுப்மான் கில் இருப்பார். ஷுப்மான் கில் இதுவரை 32 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1,893 ரன்கள் எடுத்துள்ளார். இந்த காலகட்டத்தில், அவர் ஐந்து சதங்களையும் ஏழு அரை சதங்களையும் அடித்து சராசரி ரன்ரேட் 35.05 வைத்திருக்கிறார். 2011ஆம் ஆண்டுக்குப் பிறகு, விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தினார் என்றாலும், டெஸ்ட் கேப்டன் என்ற பதவிதான் கோலியை கிரிக்கெட் ஜாம்பவான் ஆக்குவதில் முக்கிய பங்கு வகித்தது என்றால் அது மிகையாகாது. பட மூலாதாரம்,GETTY IMAGES கோலி தன்னை மிகவும் வெற்றிகரமான கேப்டனாக நிலைநிறுத்திக் கொண்டுள்ளார். விராட் கோலியின் இந்த அபரிமிதமான எழுச்சியை கில் நேரில் கண்டிருக்கிறார். அதாவது, சிறந்த இந்திய கேப்டனாக மாற விரும்பினால், டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு தேவைப்படும் கடினமான அம்சங்களைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்பது ஷுப்மான் கில் நன்கு அறிவார். கில் இளைஞராக இருப்பதால் சாதிக்க போதுமான நேரம் அவருக்கு இருக்கிறது. 2014ஆம் ஆண்டில் கோஹ்லி கேப்டனாக பொறுப்பேற்றபோது இளம்வயது என்ற அம்சம் அவருக்கு சாதகமாக இருந்தது. தற்போது, இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு மட்டுமே கில் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார், ஆனால் தேர்வுக் குழுத் தலைவர் அஜித் அகர்கர், "ஒன்று அல்லது இரண்டு சுற்றுப்பயணங்களுக்கான கேப்டனைத் தேர்ந்தெடுக்க வேண்டாம். எதிர்காலத்தில் பயனுள்ளதாக இருக்கும் முதலீட்டை நாங்கள் செய்ய விரும்புகிறோம்" என்று கூறியிருந்தார். இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணத்துடன், இரண்டு வருட கால உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளும் தொடங்கிவிடும். ஒரு வகையில் பார்க்கப்போனால், கில் தாக்குப்பிடிப்பாரா இல்லையா என்பதைப் பார்க்க அதிரடியாக களத்தில் இறக்கப்பட்டிருக்கிறார். கேப்டன்கள் அனைவரும் ஒரே மாதிரி இருப்பதில்லை. கோலியின் ஆக்ரோஷம், மற்றும் ரோஹித் சர்மாவின் நிதானமான அணுகுமுறையுடன் ஒப்பிடும் ோது, கில்லின் ஆளுமை பிறரிடம் இருந்து மாறுபட்டதாக இருக்கலாம். கோலி மற்றும் ரோஹித் இருவரின் சில குணங்களும் கில்லிடம் உள்ளன என்பதும் உண்மையே. ரோஹித் போன்ற அமைதியான நடத்தையுடனும், கோஹ்லி போன்ற சுய விழிப்புணர்வுடனும் செயல்படுகிறார் ஷுப்மான் கில். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கடந்த இரண்டு சீசன்களாக ஐபிஎல்லில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக கில் இருந்து வருகிறார் ஐபிஎல் கேப்டன் கில் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்குப் பின் தற்போதைய சூழ்நிலையில், கில்லின் பேட்டிங் திறனைத் தவிர, தேர்வாளர்கள் அவரிடம் கண்ட மிக முக்கியமான விஷயம் அவரது ஆளுமையில் உள்ள 'நிலைத்தன்மை' ஆகும். இருபது ஓவர் கிரிக்கெட்டில் அடைந்த வெற்றியை டெஸ்ட் கிரிக்கெட்டின் வெற்றியுடன் ஒப்பிடுவது சரியல்ல என்றாலும், டி20 போட்டியில் ஒவ்வொரு பந்துக்கும் கேப்டன் எதிர்வினையாற்ற வேண்டும். இது நிச்சயமாக அழுத்தத்தின் கீழ் செயல்பட வேண்டிய ஒரு கேப்டனின் செயல்திறனைப் பற்றிய ஒரு பார்வையை அளிக்கிறது. ஷுப்மான் கில், குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக இரண்டாவது ஐபிஎல் சீசனில் களம் இறங்கியிருந்தார். ஆனால் கே.எல். ராகுல், சஞ்சு சாம்சன் மற்றும் ரிஷப் பந்த் போலல்லாமல், கில்லின் பேட்டிங்கில் எந்த எதிர்மறையான தாக்கத்தையும் அவரது கேப்டன் என்ற பொறுப்பு ஏற்படுத்தவில்லை. இந்த ஆண்டு, கில் தனது ஐபிஎல் அணியான குஜராத் டைட்டன்ஸ் மீதான தனது கட்டுப்பாட்டைப் பேணியது மட்டுமல்லாமல், வெற்றி தோல்வி என எந்தவொரு சூழ்நிலையிலும், நிதானமாகவும் புரிந்துணர்வுடனும் செயல்பட்டார். ஆனால், ஷுப்மான் கில்லுக்கு உண்மையான சோதனை கிரிக்கெட்டின் கடினமான வடிவமான டெஸ்ட் கிரிக்கெட்டில் தான் தொடங்க உள்ளது. ஐபிஎல்லில் வெற்றிகரமான வீரராக இருந்தபோதிலும், பச்சை குத்தாமல், தாடி இல்லாமல் ஷுப்மான் கில் பளிச் என்ற தோற்றத்துடன், அந்த கால கிரிக்கெட் வீரரைப் போலவே இருக்கிறார். ஊடகங்கள் மற்றும் கேமராவின் முன் இல்லாமல் மைதானத்தில் செயல்படுவது தான் அவருடைய உண்மையான வேலை. கடந்த பார்டர்-கவாஸ்கர் தொடரில், கில் ஐந்து டெஸ்ட் போட்டிகளில் மூன்றில் மட்டுமே விளையாடினார். ரோஹித் சர்மா சிட்னி டெஸ்டில் (கடைசி டெஸ்ட்) பங்கேற்காமல் இருக்க முடிவு செய்தபோது, கில் மீண்டும் களம் இறங்கினார். கடந்த டெஸ்டின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் கில் சீக்கிரமே ஆட்டமிழந்தார். முதல் இன்னிங்ஸில், மதிய உணவுக்கு சற்று முன்பு கில்லை தனது சுழலில் சிக்க வைத்து நாதன் லியோன் ஆட்டமிழக்கச் செய்தார். இரண்டாவது இன்னிங்ஸில், நடுத்தர வேகப்பந்து வீச்சாளர் பியூ வெப்ஸ்டரின் பந்தில் கில் ஆட்டமிழந்தார். இதற்குப் பிறகு நான்கே மாதங்களில் ஷுப்மான் கில்லை டெஸ்ட் கேப்டனாக மாற்றுவது என்பது ஒரு கிரிக்கெட் வீரரின் வாழ்க்கையை மட்டுமல்ல, இந்திய கிரிக்கெட்டின் திசையையும் மாற்றும் ஒரு முடிவாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்திய அணியின் கவலை முன்னாள் இந்திய கேப்டன் அனில் கும்ப்ளே, கில் "முதலில் ஒரு பேட்ஸ்மேனாக தன்னை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும்" என்று கூறியுள்ளார். காயம்பட்டபோதிலும், அவர் இப்போது ஒரு கேப்டனாக குறைந்தது பத்து இன்னிங்ஸ்களாவது விளையாட வேண்டும். இங்கிலாந்தில் விளையாடும்போது கில்லின் செயல்திறன் மோசமாக இருக்கிறது. அங்கு ஆறு இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள அவர், 14.66 சராசரியுடன் 88 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இங்கிலாந்தில், கே.எல். ராகுல் 18 இன்னிங்ஸ்களில் 34.11 சராசரியுடன் 614 ரன்கள் எடுத்துள்ளார். இதில் ஒரு சதம் மற்றும் ஒரு அரை சதம் அடங்கும். அதே நேரத்தில், துணை கேப்டன் ரிஷப் பந்த் 15 இன்னிங்ஸ்களில் 34.06 சராசரியுடன் 511 ரன்கள் எடுத்துள்ளார். இந்த காலகட்டத்தில் பந்த் இரண்டு சதங்கள் மற்றும் இரண்டு அரை சதங்களை அடித்துள்ளார். இந்த இருவரையும் தவிர, அணியில் உள்ள வேறு எந்த பேட்ஸ்மேனுக்கும் இங்கிலாந்தில் டெஸ்ட் அனுபவமோ வெற்றியோ இல்லை என்பது இந்திய ரசிகர்களுக்கு இயல்பாகவே கவலை ஏற்படுத்தும் அம்சமாக உள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 2014ஆம் ஆண்டு கோலி பதவியேற்றபோது அவர் கிரிக்கெட்டின் ஒரேயொரு வடிவத்திற்கு மட்டுமே கேப்டனாக இருந்ததைப் போலவே ஷுப்மான் கில்லும் தற்போது டெஸ்ட் கிரிகெட்டிற்கு மட்டுமே கேப்டனாக உள்ளார் கில்லுக்கு சாதகமாக உள்ள காரணிகள் யாவை? தற்போது ஷுப்மானுக்கும் இந்தியாவுக்கும் இரண்டு நல்ல விஷயங்கள் நடக்க உள்ளன. வெளிப்புற கோரிக்கைகள் மற்றும் அழுத்தங்களின் காரணமாக பேட்ஸ்மேன்கள் தங்கள் நிலையை விட்டு முன்னேறி ஆட்டத்தில் சிறப்பாக விளையாட வேண்டிய கட்டம் வரும். இந்த ஊக்குவிப்புக் கட்டத்தில் ஷுப்மான் இருக்கிறார். விராட் கோஹ்லிக்கும் இதேபோன்ற நிலை இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது, 2014ஆம் ஆண்டு கோலியைப் போலவே, கில்லும் ஒரே ஒரு வடிவத்திற்கு மட்டுமே கேப்டனாக உள்ளார். இரண்டாவது விஷயம் என்னவென்றால், வேகப்பந்து வீச்சாளர்களான ஜிம்மி ஆண்டர்சன் மற்றும் ஸ்டூவர்ட் பிராட் ஆகியோரின் ஓய்வுக்குப் பிறகு இங்கிலாந்து அணியின் பந்துவீச்சு, மாற்றத்தின் கட்டத்தில் இருக்கிறது. கேப்டனாக களம் இறங்கும் ஷுப்மான் கில்லின் ஆரம்பத் தொடரில், அவருக்கு பயிற்சியாளர் கவுதம் கம்பீருடனான ஒருங்கிணைப்பு மிக முக்கியமான விஷயம் ஆகும். ரோஹித் மற்றும் கம்பீர் இடையிலான ஒருங்கிணைப்புக்காக அபிஷேக் நாயர் இந்திய அணியில் சேர்க்கப்பட்டதாகக் கூறப்பட்டது. ஆனால் இப்போது நாயர் போய்விட்டார், அவர் இல்லாத நிலையில் கம்பீருடன் ஒத்துப்போக கில் தனது சொந்த வழியைக் கண்டுபிடிக்க வேண்டும். பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு, பயிற்சியாளர் கவுதம் கம்பீருடனான கில்லின் ஒருங்கிணைப்பு முக்கியத்துவம் பெறுகிறது வங்கதேசம், நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர்களில் கம்பீரின் மேலாண்மை மற்றும் முடிவெடுக்கும் பாணியைக் கூர்ந்து கவனிக்கும் வாய்ப்பு கில்லுக்குக் கிடைத்தது. தோல்விகளுக்குப் பிறகு, கிரிக்கெட்டில் மாற்றத்திற்கான கட்டம் தொடர்கிறது என்பதையும் ஷுப்மான் கில் அறிந்திருப்பார். முதலில் கேப்டன் வெளியேறினார், பின்னர் பயிற்சியாளர் வெளியேறினார்... இந்தியா தனது கடைசி இரண்டு டெஸ்ட் தொடர்களை இழந்துள்ளது. இந்தத் தோல்விகளுக்குப் பிறகு, கேப்டன் வெளியேறிவிட்டார், இப்போது வாள் பயிற்சியாளர் கம்பீரின் கழுத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில் ஷுப்மான் கில் கேப்டன்சியில் தன்னை நிரூபிக்க ஒரு நல்ல வாய்ப்பு உள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cgq35dlwwqno
-
இந்த வருடத்தில் இலக்குவைக்கப்பட்ட மதுவரி வருமானத்தில் 104% ஐ ஈட்ட முடிந்துள்ளது – மதுவரித் திணைக்கள அதிகாரிகள் தெரிவிப்பு
Published By: DIGITAL DESK 2 09 JUN, 2025 | 05:54 PM இந்த வருடத்தில் இலக்கு வைக்கப்பட்ட மதுவரி வருமானமான ரூபா 242 பில்லியனில் 2025 மே 31ஆம் திகதியாகும்போது எதிர்பார்க்கப்பட்ட இலக்கில் 104%ஐ ஈட்டமுடிந்திருப்பதாக மதுவரித் திணைக்களத்தின் அதிகாரிகள் அண்மையில் கூடிய வழிவகைகள் பற்றிய குழுவில் தெரிவித்தனர். 2025ஆம் ஆண்டுக்கு இலக்கு வைக்கப்பட்ட மதுவரி வருமானமான ரூபா 242 பில்லியனில் ரூபா 240 பில்லியனை மதுபானங்களிலிருந்தும், ரூபா 2 பில்லியனை பீடியிலிருந்தும் ஈட்டுவதற்கு எதிர்பார்த்திருப்பதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர். நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் ஷர்ஷன சூரியப்பெரும தலைமையில் வழிவகைகள் பற்றிய குழு கடந்த 6ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடியபோதே அதிகாரிகள் இந்த விடயங்களைத் தெரிவித்தனர். மதுவரித் திணைக்களத்தின் செயலாற்றுகை மற்றும் பாதுகாப்பு அம்சங்களின் முகாமைத்துவம் குறித்துக் கலந்துரையாடுவதற்காக இக்குழு கூடியிருந்தது. கடந்த வருடத்தில் மே 31ஆம் திகதி வரையாகும்போது மதுவரி வருமானம் ரூபா 88 பில்லியன் என்றும், இதற்கு அமைய இந்த வருடத்தில் வருமானம் ரூபா 10 பில்லியனால் ஏற்கனவே அதிகரித்திருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது. புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததும் சட்டவிரோதமான மதுபானத் தயாரிப்பில் ஈடுபட்டிருந்த பலர் விலகியிருப்பது, அரங்கத்திற்குக் கிடைக்க வேண்டிய வருமானம் அதிகரிப்பதற்குப் பிரதான காரணம் என்றும், இது தொடர்பான சுற்றிவளைப்புக்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். மதுபானப் போத்தல்களில் ஒட்டப்பட்டுள்ள QR குறியீட்டுடன் கூடிய பாதுகாப்பு ஸ்டிக்கர்களை கையடக்கத்தொலைபேசிகளில் உள்ள செயலியின் மூலம் ஸ்கான் செய்து போலியான மதுபானப் போத்தல்களை அடையாளம் காண்பதற்கு ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ள புதிய செயற்றிட்டத்தின் முன்னேற்றம் தொடர்பில் அமைச்சர் கேள்வியெழுப்பினார். இச்செயற்றிட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் குறிப்பிட்டினர். 2024ஆம் ஆண்டின் பிற்பகுதியில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தப் புதிய QR குறியீட்டு ஸ்டிக்கர் முறையின் பின்னர் போலியான ஸ்டிக்கர்களுடன் கூடிய மதுபானப் போத்தல்கள் கண்டுபிடிக்கப்படவில்லையென்று அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போது அதிகாரிகளுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ள QR குறியீட்டின் மூலம் மதுபானப் போத்தல்களின் உண்மைத் தன்மையைப் பரிசீலிக்கும் திட்டம் எதிர்காலத்தில் பொதுமக்களுக்களுக்கும் திறக்க வேண்டியதன் அவசியத்தையும் பிரதியமைச்சர் அமைச்சர் சுட்டிக்காட்டினார். இந்தப் புதிய செயற்றிட்டத்தைப் பயன்படுத்தி சுப்பர் மார்க்கட்டுக்கள் மற்றும் ஏனைய இடங்களில் உள்ள மதுபான சாலைகள் மற்றும் மதுக்கடைகள் ஆகியவற்றில் போலியான மதுபானப் போத்தல்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளனவா என்பதை ஆராய்வது மற்றும் திடீர் சுற்றிவளைப்புக்களை மேற்கொள்ள வேண்டியதன் அவசியம் ஆகியவற்றையும் அவர் அதிகாரிகளிடம் வலியுறுத்தினார். மதுவரித் திணைக்களத்தில் காணப்படும் குறைபாடுகளைத் திருத்த வேண்டியதன் அவசியத்தையும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். இதன் அடிப்படையில் திருத்தத்திற்கான முன்மொழிவுகளை முன்வைக்குமாறும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மதுபானத்தின் விலை அதிகமாக இருப்பதால் சட்டவிரோதமான மதுப்பாவனை அதிகரிப்பதாகவும், இதற்குத் தீர்வாக நியாயமான விலையில் தரமான மதுபானத்தைத் தயாரிப்பதற்கான வாய்ப்புக்கள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. அபிவிருத்தியடைந்த நாடு என்ற இலக்கை நோக்கிய பயணத்தில் முக்கிய கட்டத்தில் நாம் இருப்பதாகக் குறிப்பிட்ட பிரதியமைச்சர், வரி செலுத்தும் நடைமுறையில் சகல பிரஜைகளும் இணைந்துகொள்ள வேண்டும் என்றும், பொது மக்களின் வரிப்பணத்தை ஒரு ரூபா கூட வீண்விரயமாக்காமல் அபிவிருத்திக்குப் பயன்படுத்துவோம் என்றும் வலியுறுத்தினார். பிரதி அமைச்சர்களான சதுரங்க அபேசிங்ஹ, எரங்க வீரரத்ன, பாராளுமன்ற உறுப்பினர்களான அஷோக சபுமல் ரண்வல, அஜித்.பி பெரேரா, சுஜித் சஞ்சய் பெரேரா மற்றும் சட்டத்தரனி ஹசாரா லியனகே உள்ளிட்டோர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/217043
-
ஆக்ஸியம் 4: 41 ஆண்டுகள் கழித்து விண்வெளிக்கு செல்லும் 2வது இந்தியர் அங்கு என்ன செய்வார்?
ஆக்ஸியம் 4: விண்வெளி வீரர்கள் அன்னப் பறவை பொம்மை, அல்வா எடுத்துச் செல்வது ஏன்? பட மூலாதாரம்,X/AXIOM SPACE கட்டுரை தகவல் எழுதியவர், ஶ்ரீகாந்த் பக்ஷி பதவி, 8 ஜூன் 2025 புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர் சர்வதேச விண்வெளி மையத்திற்கு இது வரை 270 விண்வெளி ஆய்வாளர்கள் சென்றுள்ளனர். ஆனால் ஒரு இந்தியர் கூட அங்கே செல்லவில்லை. இந்தியாவில் பிறந்து வளர்ந்த சுபான்ஷு சுக்லா இந்த கவலையை நிவர்த்தி செய்யப் போகிறார். இவரின் இந்த பயணம் மூலமாக இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி புதிய மைல்கல்லை எட்டப் போகிறது. சோயுஸ் விண்கலத்தின் மூலமாக, சோவியத் யூனியனின் உதவியோடு ராகேஷ் சர்மா முதன்முறையாக விண்ணுக்குச் சென்றார். 1984-ஆம் ஆண்டு இந்த பயணம் நிகழ்ந்தது. விண்ணுக்குச் சென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார் அவர். அதன் பின், கல்பனா சாவ்லா மற்றும் சுனிதா வில்லியம்ஸ் போன்றோர் விண்ணுக்குச் சென்றனர். ஆனால் அவர்கள் இந்திய வம்சாவளிகளே அன்றி இந்தியாவில் பிறந்து வளர்ந்தவர்கள் அல்ல. ராகேஷ் சர்மாவின் விண்வெளிப் பயணத்தைத் தொடர்ந்து 40 ஆண்டுகள் கழித்து சுக்லா விண்ணுக்குச் செல்கிறார். விண்ணுக்குச் செல்லும் இரண்டாவது இந்தியராகவும் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்லும் முதல் இந்தியராகவும் அவர் இருப்பார். ஆக்ஸியம் 4 திட்டத்தின் கீழ், அமெரிக்காவின் ஃப்ளோரிடாவில் அமைந்துள்ள நாசாவின் கென்னடி விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து, சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சுக்லா செல்கிறார். அவருடைய பயணம் சரியாக ஜூன் 10-ஆம் தேதி மாலை 5.52 மணிக்கு ஆரம்பமாக உள்ளது. இந்த பயணத்தில் அவர் குரூப் கேப்டனாக பணியாற்ற உள்ளார். பட மூலாதாரம்,AXIOM SPACE படக்குறிப்பு, விண்வெளி ஆய்வுகளுக்காக பல ஆண்டுகளாக சர்வதேச விண்வெளி மையம் பயன்படுத்தப்பட்டு வந்தது. 20230-ஆம் ஆண்டில் அதன் செயல்பாடுகளை நிறுத்த நாசா திட்டமிட்டுள்ளது. ஆக்ஸியம் திட்டம் என்றால் என்ன? விண்வெளி ஆய்வுகளுக்காக பல ஆண்டுகளாக சர்வதேச விண்வெளி மையம் (ISS) பயன்படுத்தப்பட்டு வருகிறது. 2030-ஆம் ஆண்டில் அதன் செயல்பாடுகளை நிறுத்த நாசா திட்டமிட்டுள்ளது. அதன் பிறகு ஆக்ஸியம் மையம் ஒன்று அங்கே உருவாக்கப்படுகிறது. மேம்பட்ட விண்வெளி ஆராய்ச்சி மையமாக அது இருக்கும். அந்த மையத்தின் கட்டுமானப் பணிகளுக்காக ஒவ்வொரு பொருட்களும் இங்கிருந்து எடுத்துச் செல்லப்பட்டு சர்வதேச விண்வெளி மையத்தில் பொருத்தப்படும். ஆக்ஸியம் விண்வெளி மையம் முழுமையாக கட்டப்பட்ட பிறகு இந்த உபகரணங்கள் ஒன்றொன்றாக நீக்கப்பட்டு ஆக்ஸியம் மையத்துடன் இணைக்கப்படும். பிறகு சர்வதேச விண்வெளி மையத்தின் (ISS) செயல்பாடு நிறுத்தப்படும். இதற்காக உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் மற்றும் வீரர்கள் ஆக்ஸியம் 3 திட்டத்தின் கீழ் சர்வதேச விண்வெளி மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அதன் தொடர்ச்சியாக தற்போது ஆக்ஸியம் 4 திட்டத்தின் கீழ் இந்தியா, போலந்து, ஹங்கேரி ஆகிய நாடுகளில் இருந்து ஆராய்ச்சியாளர்கள் அனுப்பப்படுகின்றனர். கடந்த 40 ஆண்டுகளில் இந்த நாடுகளில் இருந்து யாரும் விண்வெளிக்கு சென்றதில்லை. ஆக்ஸியம் 4 திட்டத்தின் கமாண்டராக இருக்கும் பெக்கி விட்சனுக்கு இது ஐந்தாவது விண்வெளி பயணமாகும். அவர் இதற்கு முன்பு இரண்டு முறை சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்றுள்ளார். நூறு நாட்களுக்கும் மேலாக அங்கே இருந்த அவர் 10 முறை விண்வெளி நடை மேற்கொண்டிருக்கிறார். இந்த திட்டத்தில் சுக்லா விமானியாக செயல்பட உள்ளார். அவர் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ சார்பில் செல்கிறார். திட்ட நிபுணர்களான ஹங்கேரியின் திபோர் காப்பும், போலந்தின் ஸ்லாவோஜ் உஸ்னான்ஸ்கி விஸ்னிவ்ஸ்கியும் இந்த திட்டத்தின் கீழ் விண்வெளிக்கு அனுப்பப்படுகின்றனர். ப்ளானட்டரி சொசைட்டி ஆஃப் இந்தியாவின் இயக்குநர் ரகுநந்தன் பிபிசியிடம் பேசிய போது, விமானியின் பங்கு விண்கலத்தின் செயல்பாடுகளில் மிகவும் முக்கியமானது. தலைமைக்கு அடுத்தபடியாக விமானி செயல்படுவதால் விண்ணில் ஏவப்படுவது முதல் மீண்டும் பூமிக்கு திரும்புவது வரை அனைத்து செயல்பாடுகளிலும் அவர் முக்கியப் பங்கைக் கொண்டிருப்பார் என்று கூறினார். பட மூலாதாரம்,AXIOM SPACE படக்குறிப்பு, ஆக்ஸியம் 4 திட்டத்தின் கீழ் இந்தியா, போலந்து, ஹங்கேரி நாடுகளில் இருந்து ஆராய்ச்சியாளர்கள் அனுப்பப்படுகின்றனர். ஐந்தாவது உறுப்பினர் அன்னப் பறவை ஏற்கனவே நான்கு குழு உறுப்பினர்கள் தேர்வாகியுள்ள நிலையில் ஜாய் என்ற சிறிய அன்னப் பறவை பொம்மையும் ஐந்தாவது நபராக விண்வெளிக்கு செல்கிறது. மே 25 முதல் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ள குழு உறுப்பினர்கள், ஜூன் 3 அன்று நடத்திய ஆன்லைன் ஆலோசனைக் கூட்டத்தின் போது ஜாயை உலகிற்கு அறிமுகம் செய்தனர். புவி ஈர்ப்பு விசையை தாண்டி வெளியே செல்லும் போது இந்த பொம்மைதான் ஒரு குறிப்பானாக செயல்படும். விண்ணுக்கு செல்ல தயாராக இருப்பதாகவும், அனைத்துவிதமான பயிற்சிகளும் நிறைவு பெற்றுவிட்டதாகவும் பெக்கி விட்சன் தெரிவித்தார். குழு கேப்டன் சுக்லா தனது ஆர்வத்தை விளக்க வார்த்தைகளே இல்லை என்று கூறினார். அவர் விண்ணுக்குச் செல்லும் போது வெறும் ஆய்வுப் பொருட்களை மட்டும் எடுத்துச் செல்லவில்லை, இந்தியர்களின் நம்பிக்கைகளையும் எடுத்துச் செல்வதாக கூறினார். பயணம் வெற்றி பெற பிரார்த்தனை செய்யுமாறும் அவர் இந்தியர்களிடம் கேட்டுக் கொண்டார். பட மூலாதாரம்,AXIOM SPACE படக்குறிப்பு, விண்ணுக்கு செல்ல தயாராக இருப்பதாகவும், அனைத்துவிதமான பயிற்சிகளும் நிறைவு பெற்றுவிட்டதாகவும் பெக்கி விட்சன் தெரிவித்தார். தற்போது என்ன நடக்கிறது? ஆக்ஸியம் 4 திட்டத்தின் உறுப்பினர்கள் தங்களை சில நாட்களாக தனிமைப்படுத்தியுள்ளனர். விண்ணுக்கு செல்வதற்கான இறுதிக் கட்டப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த குழு ஸ்பேஸ்எக்ஸ் ஃபால்கன் 9 ராக்கெட்டின் மூலம் டிராகன் கலனில் விண்ணுக்குச் செல்கிறது. 28 மணி நேரத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைய இருக்கும் அவர்கள் அங்கே 31 நாடுகளுக்கு சொந்தமான 60 ஆராய்ச்சிகளை 14 நாட்கள் மேற்கொள்வார்கள். நிலைத்தன்மையுடன் மனிதன் விண்ணில் வாழ்வது எப்படி என்பது தொடர்பாக அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆய்வுகளை மேற்கொள்வார்கள் இவர்கள் என்று பெக்கி விட்சன் கூறினார். இது விண்ணில் இருக்கும் மனிதனுக்கு மட்டுமின்றி பூமியில் உள்ளவர்களுக்கும் நன்மை அளிக்கக் கூடியதாக இருக்கும் என்றும் அவர் கூறினார். வருங்காலத்தில், நீரிழிவு நோய் உடையவர்கள் விண்வெளிக்கு செல்ல அனுமதிக்கும் வகையிலான ஆராய்ச்சி, விண்வெளியில் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்க உருவாக்கப்பட்டிருக்கும் இரண்டு புதிய மருந்துகளின் செயல்திறனை ஆராய்வது போன்ற முக்கிய ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படும் என்று பெக்கி கூறுகிறார். விண்வெளியில் நுண்ணீர்ப்பு தொடர்பாக இந்திய ஆய்வு நிறுவனங்கள் மேற்கொண்ட 7 சோதனைகளை சுக்லா விண்ணில் ஆய்வுக்குட்படுத்துவார். விண்ணில் இருந்த வண்ணம், இந்திய மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களிடம் பேச இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தின் மூலம் பெறப்படும் அனுபவங்கள் யாவும் இந்தியாவின் ககன்யான் மற்றும் இந்திய விண்வெளி மையம் தொடர்பான திட்டங்களில் பயனுடையதாக இருக்கும் என்றும் சுக்லா தெரிவித்தார். பூஜ்ஜிய ஈர்ப்பு விசையைக் குறிக்கும் ஒரு குறிப்பானாகவே அன்னப்பறவை பொம்மை எடுத்துச் செல்லப்படுவதாகவும் அவர் கூறினார். அன்னப்பறவை இந்திய கலாசாரத்தில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது என்று கூறினார். யார் இந்த சுபான்ஷு சுக்லா? அக்டோபர் 10, 1985-ஆம் ஆண்டு சுபான்ஷு சுக்லா உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் பிறந்தார். இந்திய விமானப்படையில் போர் விமானியாக 2006-ஆம் ஆண்டு பணியில் சேர்ந்தார். ஆக்ஸியம் ஸ்பேஸ் வழங்கும் தகவலின் படி 2000 மணி நேரம் அவர் பல்வேறு போர் விமானங்களை ஓட்டிய அனுபவத்தைக் கொண்டுள்ளார். பிபிசியிடம் பேசிய அவருடைய சகோதரி சுச்சி மிஸ்ரா, சுபான்ஷு இந்திய விமானப்படையில் சேர்ந்தது எதிர்பாராத ஒன்று என்று கூறினார். "அவருக்கு 17 வயது இருக்கும் போது அவருடைய நண்பர் ஒருவர் தேசிய பாதுகாப்பு பயிற்சி மையத்திற்கு (NDA) விண்ணப்பிக்க முயற்சி செய்தார். ஆனால் விண்ணப்பிக்கத் தேவையான வயதை தாண்டிவிட்டார் என்பதால் அவர் விண்ணப்பிக்கவில்லை. அப்போது அந்த விண்ணப்ப படிவத்தை வீணடிக்க விரும்பவில்லை என்பதால் சுபான்ஷு அதனை பூர்த்தி செய்தார். அதில் தேர்வும் ஆனார். அதன் பின்னர் அவருடைய வாழ்க்கையே மாறிவிட்டது," என்றும் கூறினார் மிஸ்ரா. பட மூலாதாரம்,AXIOM SPACE படக்குறிப்பு, அக்டோபர் 10, 1985-ஆம் ஆண்டு சுபான்ஷு சுக்லா உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் பிறந்தார் விண்வெளிக்கு எடுத்துச் செல்லப்படும் ரகசிய பொருள் என்ன? ககன்யான் திட்டத்தை 2018-ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோதி அறிவித்த பிறகு இஸ்ரோவில் பயிற்சி பெற விண்ணப்பித்ததாகக் கூறுகிறார் சுக்லா. ஆக்ஸியம் வேர்ல்ட் மீடியாவுக்கு அளித்த பேட்டியில், ராகேஷ் சர்மாவைப் பார்த்து தான் விண்ணுக்குச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் தோன்றியதாகக் கூறினார் சுக்லா. சிறு வயது முதலே விண்ணுக்குச் செல்ல வேண்டும் என்ற கனவு இருந்ததாகவும் அவர் தெரிவிக்கிறார். ராகேஷ் ஷர்மாவுக்கு சிறப்புப் பரிசு ஒன்றை தர விரும்புவதாக தெரிவிக்கும் சுக்லா, அப்பொருளை விண்ணுக்கு எடுத்துச் சென்று, பூமிக்குத் திரும்பிய பிறகு தர இருப்பதாக தெரிவித்தார். தற்போது அது என்ன பொருள் என்பது ரகசியம் என்றும் அவர் கூறினார். தொழில்நுட்பம் சார்ந்த பொருட்கள் மட்டுமின்றி அவர்களுக்கு பிடித்த உணவுகளையும் விண்வெளிக்கு இந்த வீரர்கள் எடுத்துச் செல்கின்றனர். சுக்லா மாம்பழச்சாறு, பருப்பு அல்வா மற்றும் கேரட் அல்வா போன்றவற்றை எடுத்துச் செல்வதாக கூறினார். இந்த உணவுகளை அவர்கள் சர்வதேச விண்வெளி மையத்தில் இருக்கும் இதர விண்வெளி வீரர்களோடு பகிர்ந்து கொள்வார்கள். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cp8d7lr7v91o
-
இணுவில் - காரைக்கால் பகுதியில் குப்பைகள் கொட்டப்படுவதை கண்டித்து பிரதேச மக்கள் போராட்டம்
09 JUN, 2025 | 04:25 PM (எம்.நியூட்டன்) யாழ்ப்பாணம், இணுவில் - காரைக்கால் பகுதியில் சட்டவிரோதமான முறையில் குப்பைகள் கொட்டப்படும் செயற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டமொன்று இன்று திங்கட்கிழமை (9) நடைபெற்றது. யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்துக்கு முன்பாக சமூக செயற்பாட்டாளர்களின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அப்பகுதியில் ஆலயங்கள் உள்ளதோடு, மக்களின் குடிமனைகள் அதிகரித்து, சன நெரிசல் மிக்க பகுதியாக உள்ள நிலையில், குப்பைகளும் கழிவுகளும் அதிகமாக காணப்படுகிறது. அப்பகுதியில் நல்லூர் பிரதேச சபையால் கழிவகற்றல் செயற்பாடு முன்னெடுக்கப்படுகின்ற நிலையிலும் எத்தகைய கண்காணிப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படாததால் பிரதேசவாசிகள் அசௌகரியங்களையும் சிக்கல்களையும் சந்தித்தவண்ணம் உள்ளதாக தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/217022
-
மத்திய அரசு அறிமுகம் செய்த 2 மரபணு மாற்ற அரிசி ரகங்களுக்கு வேளாண் நிபுணர்கள் எதிர்ப்பு ஏன்?
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,புதிய வகைகள் அதிக விளைச்சல் தரும் என அரசு கூறுகிறது கட்டுரை தகவல் எழுதியவர், கரிகிபதி உமாகாந்த் பதவி, பிபிசிக்காக 9 ஜூன் 2025, 02:37 GMT சமீபத்தில் இரண்டு புதிய மரபணு மாற்றப்பட்ட அரிசி வகைகள் மத்திய வேளாண் அமைச்சர் சிவ்ராஜ் சௌகானால் டெல்லியில் அறிமுகப்படுத்தப்பட்டன. இதில் புசா டிஎஸ்டி அரிசி -1 வகை, புசாவில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐசிஏஆர்) ஒரு அங்கமான இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. அதே போல் டிஆர்ஆர் 100 அரிசி (கமலா) வகை ஹைதராபாத்தின் ராஜேந்திர நகரில் உள்ள இந்திய அரிசி ஆராய்ச்சி நிறுவனத்தால் மே 4-ஆம் தேதி அறிவிக்கப்பட்டிருந்தது. "இந்த இரண்டு புதிய வகை விதைகள் 20 சதவிகிதம் வரை விளைச்சலை அதிகரிக்கும். பசுமை இல்ல வாயுக்கள் உமிழ்வை குறைக்கும். இந்த புதிய நெல் விதைகள் உரப் பயன்பாட்டைக் குறைக்கும். இந்த விதைகளைப் பயிரிடுவதன் மூலம் தண்ணீரை சேமித்து காலநிலை நெருக்கடிகளை சமாளிக்க முடியும்" என மத்திய வேளாண் அமைச்சர் தெரிவித்தார். இந்த இரண்டு வகைகளும் அறுவடை காலத்தை 20 நாட்கள் வரை குறைக்கின்றன. வழக்கமாக, நெல் பயிரின் விளைச்சல் காலம் 130 நாட்கள் என்ற நிலையில் இந்த விதைகள் 110 நாட்களிலே விளைச்சலைத் தரும். ஒட்டுமொத்த பயிர் காலம் குறைந்து விளைச்சல் அதிகரிக்கும் என அமைச்சர் தெரிவித்தார். டிஆர்ஆர் 100 அரிசி வகை ஒவ்வொரு நெல்லுக்கும் அதிக தானியங்களைக் கொடுக்கும் என வேளாண் அமைச்சகம் தெரிவிக்கிறது. அதே போல் புசா டிஎஸ்டி 1 அரிசி வகை உப்புத்தன்மை மற்றும் களர் நிலங்களில் விளைச்சலை 9.66 சதவிகிதத்தில் இருந்து 30.4 சதவிகிதமாக உயர்த்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வகைகள் ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, கர்நாடகா, தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, சத்தீஸ்கர், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ஒடிசா, ஜார்க்கண்ட், பீகார், உத்திரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களுக்காக வடிவமைக்கப்பட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். காலநிலை மாற்றத்தால் அதிகரித்து வரும் புவி வெப்பமடைதலை சமாளித்து 20 சதவிகிதம் அதிக விளைச்சலைத் தரும் இந்த மரபணு மாற்றப்பட்ட அரிசி வகைகள் இரண்டும் கிறிஸ்ப்ர்-கிராஸ்-9 என்கிற புதிய மரபணு திருத்த தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. எப்படி உருவாக்கப்பட்டது? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இரண்டு புதிய மரபணு மாற்றப்பட்ட அரிசி ரகங்கள் மத்திய வேளாண் அமைச்சர் சிவ்ராஜ் சௌகானால் டெல்லியில் அறிமுகப்படுத்தப்பட்டது மரபணு திருத்தம் என்பது ஒரு தொழில்நுட்பம் ஆகும். ஒரு உயிரணுவின் மரபணு வரிசையை ஒரு உயிரியல் ஆய்வகத்தில் வெட்டி ஒட்டுவதைப் போன்றது. இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒரு தாவரம் அல்லது விலங்கின் டிஎன்ஏவில் சிறிய மாற்றங்களை விஞ்ஞானிகளால் செய்ய முடியும். இந்த வகை தொழில்நுட்பம் கிறிஸ்ப்ர் சிஏஎஸ்9 என்கிற கருவியை பயன்படுத்துகிறது. இதனை மரபணு கத்திரிக்கோல் என கூறலாம். "கிறிஸ்ப்ர் சிஏஎஸ்9-ஐ பயன்படுத்தி விஞ்ஞானிகள் மரபணு வரிசையில் குறிப்பிட இடங்களில் டிஎன்ஏவை வெட்டுகின்றனர் அல்லது மரபணுவை அழிப்பது அல்லது திருத்துவது போன்ற வேலைகளைச் செய்கின்றனர்" என வேளாண் பொருளாதார நிபுணர் முனைவர் கிலாரு பூர்ணசந்திர ராவ் பிபிசியிடம் தெரிவித்தார். டிஆர்ஆர் அரிசி 100 (கமலா) வகை சம்பா முசோரி வகையைச் சார்ந்தது. இது ஹைதராபாத்தில் உள்ள இந்திய அரிசி ஆராய்ச்சி நிறுவனத்தால் சம்பா முசோரி (பீபிடி-5204) அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. புசா டிஎஸ்டி அரசி-1 வகை இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தால் எம்டியூ 1010 அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. "சம்பா முசோரியின் பீபிடி 5204 வகை குறுகிய காலத்தில் அதிக விளைச்சலைப் பெறும் வகையில் மரபணு திருத்தப்பட்டுள்ளது. ஆனால் இது பரிசோதனை கட்டத்தில் இருந்து கள நிலைக்குச் செல்வதற்கு இன்னும் காலம் எடுக்கும். பீபிடி 5204 வகை நாற்பது வருடங்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்டது. இன்று நம் மாநிலத்தில் பெரும்பாலான மக்களால் உட்கொள்ளப்படும் அரிசி சம்பா முசோரி, குர்னூல், நந்த்யால், சோனா அரிசி மற்றும் இதர அரிசி வகைகள் பீபிடி 5204-ஐ சேர்ந்தது தான்." என பபாட்லாவில் உள்ள ஆச்சாரியா என்.ஜி ரங்கா வேளாண் பல்கலைக்கழகத்தின் இயக்குநர் முனைவர் சதீஷ் யாதவள்ளி பிபிசியிடம் தெரிவித்தார். மத்திய வேளாண் அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ள கமலா மற்றும் புசா என்கிற இரண்டு மரபணு மாற்ற அரிசி வகைகளுக்கும் சில வேளாண் வல்லுநர்கள் ஆட்சேபனை தெரிவித்துள்ளனர். மணல் கலவை, ஊட்டச்சத்துகள், தண்ணீர் மற்றும் நுண் உயிர்கள் போன்ற காரணிகளை கருத்தில் கொள்ளாமல் ஒரு மாற்றத்தை மட்டும் செய்து விளைச்சலை அதிகரிக்க முடியுமா என விஞ்ஞானிகள் கேள்வி எழுப்புகின்றனர். இந்த புதிய வகை அரிசி விதை விளைச்சலை அதிகரிக்கவே என அரசு கூறுகிறது. இந்த விதைகளால் என்ன பயன்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,விவசாயிகளின் நேரடி பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்கிறார் வேளாண் நிபுணரான முனைவர் டோந்தி நரசிம்ம ரெட்டி விவசாயிகளின் நேரடி பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்கிறார் வேளாண் நிபுணரான முனைவர் டோந்தி நரசிம்ம ரெட்டி "அதிகரித்து வரும் செலவுகள் மற்றும் சமாளிக்க முடியாத விலையேற்றம் போன்ற விவசாயிகள் சந்திக்கும் நிஜப் பிரச்சனைகள் மீது கவனம் செலுத்தாமல் இந்த அறிவியல்பூர்வமற்ற மரபணு திருத்தப்பட்ட விதைகளால் என்ன பயன்?" என அவர் கேள்வி எழுப்புகிறார். "மத்திய வேளாண் அமைச்சக அதிகாரிகள் இந்த அரிசி வகைகள் ஒரு புதிய தொழில்நுட்ப புரட்சி என்கின்றனர். அரசியில் உள்ள ஒரு மரபணு அதிக விளைச்சலைத் தரும் என்கின்றனர். அவர்கள் மரபணுவை திருத்துவதால் வரும் நீண்ட கால விளைவுகளைப் பற்றி பேசுவதில்லை. இந்த விதைகளை உற்பத்தி செய்யும் மக்கள் மீது இது என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என யாருக்கும் தெரியாது. இத்தகைய விதைகளால் இயற்கை விதைகள் மாசடைந்தால் அதனை தூய்மைப்படுத்துவது சாத்தியமற்றதாகிவிடும். ஆராய்ச்சி, அவதானிப்புகள் மற்றும் பரிசோதனைகள் இன்னும் சில வருடங்களுக்கு ஆய்வகங்களில் மேற்கொள்ள வேண்டிய தேவை உள்ள நிலையில் அவசர கதியில் இந்த இரண்டு வகைகளையும் மத்திய அரசு வெளியிட்டது சரியில்லை" என பிபிசியிடம் தெரிவித்தார். "இது விமர்சனங்களுக்கான நேரம் இல்லை" பட மூலாதாரம்,GETTY IMAGES "மத்திய அமைச்சர் அதனை அன்று சம்பிரதாயமாக அறிமுகம் செய்து வைத்தார், ஆனால் இந்த வகைகள் அனைத்தும் தற்போது ஆராய்ச்சி கட்டத்தில் தான் உள்ளன. இந்த அரிசி விதைகள் பற்றிய தெளிவு மூன்று, நான்கு மாதங்கள் கழித்து தான் கிடைக்கும். தற்போது அதைப்பற்றி பேசவோ விமர்சனங்களுக்கு பதில் அளிக்கவோ முடியாது" என இந்திய அரிசி ஆராய்ச்சி நிறுவனத்தின் முதன்மை விஞ்ஞானி சாய் பிரசாத் பிபிசியிடம் தெரிவித்தார். "இந்த புதிய மரபணு மாற்றப்பட்ட வகைகளைப் பற்றி நிலத்தில் பரிசோதித்த பிறகு பேசுவதே சிறந்ததாக இருக்கும். தற்போதே அதைப்பற்றி பேசுவது சரியாக இருக்காது. பலரும் இவற்றை மரபணு மாற்றப்பட்ட விதைகள் என நினைக்கின்றனர். வேறொரு உயிரினத்தின் உயிரணுக்களில் இருந்து கொண்டு வரப்பட்டு இணைக்கப்பட்டால் அவை மரபணு மாற்றப்பட்டது என அழைக்கப்படுகிறது" என ஓய்வுபெற்ற வேளாண் பொருளாதார நிபுணரான கிலாரு பூர்ணசந்திர ராவ் பிபிசியிடம் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், "காட்டன் விதைகளுக்குள் பேசிலஸ் துரிஞ்சியென்ஸ் பாக்டீரியாவில் இருந்து ஒரு மரபணுவை செலுத்தி பிடி காட்டன் உற்பத்தி செய்யப்பட்டது. இது மரபணு மாற்றம் என அழைக்கப்படுகிறது. இங்கு அது செய்யப்படவில்லை. விஞ்ஞானிகள் இங்கு மேற்கொண்டது மரபணு திருத்தம் மட்டுமே. அதாவது, தாங்களே அரிசி விதைகளில் சில திருத்தங்களை மேற்கொண்டுள்ளனர். எனவே தான் களத்தில் பரிசோதித்து முடிவுகளை அறிந்த பிறகே அவற்றைப் பற்றி நாம் பேச முடியும்" என்று கூறினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c1e61gq6wewo
-
நிதி மோசடி தண்டனை பெற்றவருக்கு மன்னிப்பு : ஜனாதிபதி, சிறைச்சாலை திணைக்களத்தின் முரண்பட்ட அறிக்கை
சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்தை பணி இடைநீக்கம் செய்ய நடவடிக்கை! 09 JUN, 2025 | 07:55 PM சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனியவை பணி இடைநீக்கம் செய்ய அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் பெயரிடப்படாத கைதிகளை விடுவித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுடனான தொடர்பிலேயே சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனியவை பணி நீக்கம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்று திங்கட்கிழமை (09) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/217018
-
கப்பலில் காசாவிற்கு புறப்பட்டார் கிரெட்டா தன்பேர்க் - இனப்படுகொலை குறித்த உலகின் மௌனத்தை விட இந்த பயணம் ஆபத்தானதில்லை என தெரிவிப்பு
மனிதாபிமான உதவிக்கப்பல் காஸாவை நோக்கிப் பயணிக்க இடமளியுங்கள்; இஸ்ரேலிடம் வலியுறுத்தல் Published By: VISHNU 09 JUN, 2025 | 07:33 PM (நா.தனுஜா) பலஸ்தீனத்தில் பதிவாகிவரும் சம்பவங்கள் இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலையை ஒத்திருப்பதாகவும், இப்பேரழிவைத் தடுப்பதற்கு பலஸ்தீனத்துக்கு எதிரான தமது ஒடுக்குமுறைகளை இஸ்ரேல் முடிவுக்குக்கொண்டுவரவேண்டும் எனவும் கொழும்பில் ஒன்றுகூடி வலியுறுத்தியுள்ள செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள், இஸ்ரேலியப்படையினரால் நிறுத்தப்பட்டிருக்கும் 'மட்லீன் சுதந்திரக் கப்பல்' காஸாவை நோக்கிய அதன் பயணத்தை வெற்றிகரமாகப் பூர்த்திசெய்வதற்கு இடமளிக்கப்படவேண்டும் எனக் கோரியுள்ளனர். சூழலியல் செயற்பாட்டாளர் கிரெட்டா தன்பேர்க் உள்ளடங்கலாக பல்வேறு நாடுகளைச்சேர்ந்த மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களுடன் மனிதாபிமான உதவிப் பொருட்களை ஏற்றியவாறு காஸாவை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த கப்பலுக்குள் அத்துமீறி நுழைந்த இஸ்ரேலியப்படையினரால் அக்கப்பல் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் அக்கப்பல் விடுவிக்கப்பட்டு, காஸாவுக்கான அதன் பயணத்தை வெற்றிகரமாகப் பூர்த்திசெய்வதற்கு இடமளிக்கப்படவேண்டும் எனவும், இஸ்ரேலின் பிடிக்குள் இருந்து காஸாவை மீட்கவேண்டும் எனவும் வலியுறுத்தி இலங்கையில் இயங்கிவரும் பலஸ்தீன விடுதலை இயக்கத்தினால் நேற்று திங்கட்கிழமை மாலை 5.00 மணிக்கு கொழும்பு கொள்ளுப்பிட்டி லிபர்ட்டி சுற்றுவட்டத்துக்கு அருகாமையில் கவனயீர்ப்புப்போராட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இப்போராட்டத்தில் மனித உரிமைகள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், மதத்தலைவர்கள், பலஸ்தீன விடுதலை ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர். அவர்கள் 'பலஸ்தீன விடுதலை', 'பலஸ்தீனம் பலஸ்தீனர்களுக்கே உரியது', 'நாம் பலஸ்தீனத்துடன் உடன்நிற்கிறோம்', 'பலஸ்தீன இனவழிப்பை நிறுத்துங்கள்', 'ஐக்கிய நாடுகள் சபையா? அல்லது நியாயமற்ற நாடுகள் சபையா?', 'இலங்கையே, சரியான தரப்பின் பக்கம் நில்' என்பன உள்ளடங்கலாக பலஸ்தீனத்துக்கு ஆதரவான வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியிருந்தனர். அங்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் சார்பில் கருத்து வெளியிட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர் அருட்தந்தை சக்திவேல், பலஸ்தீனத்தில் இடம்பெற்றுவரும் சம்பவங்கள் இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலையை ஒத்திருப்பதாகவும், இப்பேரழிவைத் தடுப்பதற்கு பலஸ்தீனத்துக்கு எதிரான தமது ஒடுக்குமுறைகளை இஸ்ரேல் முடிவுக்குக்கொண்டு வரவேண்டும் எனவும் வலியுறுத்தினார். https://www.virakesari.lk/article/217052
-
குடியேற்றவாசிகள் கைதுசெய்யப்பட்டதை தொடர்ந்து லொஸ் ஏஞ்சல்சில் பெரும் ஆர்ப்பாட்டங்கள் - வாகனங்கள் தீக்கிரை - ஆர்ப்பாட்டக்காரர்களை கட்டுப்படுத்த தேசிய காவல்படையினரை அழைத்தார் டிரம்ப்
லாஸ் ஏஞ்சலிஸ் வன்முறை: மூன்றாவது நாளாக போராட்டம், ஆயுதப்படை வீரர்களை குவித்த டிரம்ப் - என்ன நடக்கிறது? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், கிறிஸ்டல் ஹேய்ஸ் பதவி, பிபிசி செய்திகள் 9 ஜூன் 2025, 07:44 GMT புதுப்பிக்கப்பட்டது 23 நிமிடங்களுக்கு முன்னர் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் குடியேற்றக் கட்டுப்பாடுகளை எதிர்த்து போராட்டங்கள் வெடித்துள்ள லாஸ் ஏஞ்சலிஸுக்கு அருகே உள்ள ஒரு வன்பொருள் கடையின் கார் நிறுத்துமிடத்தில், ஜுவானும் அவரது நண்பர்களும் கூடியிருந்தனர். பொதுவாக, தினக்கூலிக்கு வேலை செய்யும் தொழிலாளர்கள் அங்கு கூடியிருப்பர். அந்தக் கூட்டத்தில் உள்ள ஆவணமற்ற குடியேறிகள் பலர், அங்குள்ள கடைக்காரர்களிடமிருந்தோ அல்லது ஒப்பந்த வேலை தரும் ஆட்களிடமோ வேலை தேடுகிறார்கள். ஆனால் ஞாயிற்றுக்கிழமை, பாரமவுண்ட் புறநகரில் உள்ள ஹோம் டிப்போவுக்கு (கட்டுமானப் பொருட்கள் உள்ளிட்ட வன்பொருட்களை விற்பனை செய்யும் கடை) வெளியே, கூரை போடுதல், பழுதுகளை சரி செய்வது மற்றும் வண்ணம் பூசுதல் போன்ற வேலைகளுக்கு உதவுவதாக அறிவித்துக் கொண்டு இரண்டு சிறிய வாகனங்கள் மட்டுமே நின்றிருந்தன. இந்த பகுதியில் 82% க்கும் மேற்பட்டோர் ஹிஸ்பானிக் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இங்கு தினக்கூலி தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டதாக பரவிய வதந்திகள் காரணமாக, அந்தக் கடை குடியேற்றப் போராட்டத்தின் மையமாக மாறியது. அதன் மறுநாள் முதலில் மேற்கூறிய சம்பவம் நடந்தது. அந்த சமூகத்தில் வசிக்கும் பலர், அப்பகுதியில் குடியேற்ற அமலாக்கத் துறையின் வாகனங்களைக் கண்டதாக பிபிசியிடம் கூறினர். அதனால் அப்பகுதியில் உடனடியாக பயமும் குழப்பமும் ஏற்பட்டது. பிறகு, அமெரிக்கா முழுவதும் ஆவணமின்றி வாழும் குடியேறிகள் வேலை தேடிச் செல்லும் ஹோம் டிப்போவில், தினக்கூலி தொழிலாளர்கள் சோதனை செய்யப்பட்டு கைது செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகின. பட மூலாதாரம்,GETTY IMAGES அதனைத் தொடர்ந்து, ஹிஸ்பானிக் மக்கள் அதிகம் வசிக்கும் இந்த நகரத்தில் போராட்டங்கள் வெடித்தன. சிலர் கற்கள் மற்றும் கண்ணாடி பாட்டில்களை வீசியதால் வன்முறையாக மாறியது. கூட்டத்தை அடக்க அதிகாரிகள் பெப்பர் ஸ்பிரே, ரப்பர் தோட்டாக்கள் மற்றும் புகை குண்டுகளைப் பயன்படுத்தினர். ஆனால் பாரமவுண்டில் நடந்த ஆர்ப்பாட்டங்கள் தவறான தகவல்களால் உருவானதாகத் தெரிகிறது. அப்பகுதியில் உள்ள பிற இடங்களில் பல்வேறு குடியேறிகள் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருந்தாலும், அந்த வன்பொருள் கடையில் சோதனை நடந்ததாக பரவிய செய்தி உண்மையல்ல என்று அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை (DHS) விளக்கியது. "தவறான தகவல்கள் இருந்தபோதிலும், லாஸ் ஏஞ்சலிஸில் உள்ள ஒரு ஹோம் டிப்போவில் குடியேற்ற மற்றும் சுங்கப் பாதுகாப்புத் துறையின் (ICE) 'ரெய்டு' எதுவும் நடக்கவில்லை," என்று அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை பிபிசியிடம் தெரிவித்துள்ளது. அதனால் அப்பகுதியில் உடனடியாக பயமும் குழப்பமும் ஏற்பட்டது. பிறகு, அமெரிக்கா முழுவதும் ஆவணமின்றி வாழும் குடியேறிகள் வேலை தேடிச் செல்லும் ஹோம் டிப்போவில், தினக்கூலி தொழிலாளர்கள் சோதனை செய்யப்பட்டு கைது செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகின. பட மூலாதாரம்,GETTY IMAGES அதனைத் தொடர்ந்து, ஹிஸ்பானிக் மக்கள் அதிகம் வசிக்கும் இந்த நகரத்தில் போராட்டங்கள் வெடித்தன. சிலர் கற்கள் மற்றும் கண்ணாடி பாட்டில்களை வீசியதால் வன்முறையாக மாறியது. கூட்டத்தை அடக்க அதிகாரிகள் பெப்பர் ஸ்பிரே, ரப்பர் தோட்டாக்கள் மற்றும் புகை குண்டுகளைப் பயன்படுத்தினர். ஆனால் பாரமவுண்டில் நடந்த ஆர்ப்பாட்டங்கள் தவறான தகவல்களால் உருவானதாகத் தெரிகிறது. அப்பகுதியில் உள்ள பிற இடங்களில் பல்வேறு குடியேறிகள் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருந்தாலும், அந்த வன்பொருள் கடையில் சோதனை நடந்ததாக பரவிய செய்தி உண்மையல்ல என்று அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை (DHS) விளக்கியது. "தவறான தகவல்கள் இருந்தபோதிலும், லாஸ் ஏஞ்சலிஸில் உள்ள ஒரு ஹோம் டிப்போவில் குடியேற்ற மற்றும் சுங்கப் பாதுகாப்புத் துறையின் (ICE) 'ரெய்டு' எதுவும் நடக்கவில்லை," என்று அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை பிபிசியிடம் தெரிவித்துள்ளது. "உண்மையில் என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியவில்லை. எல்லோரும் பயப்படுகிறார்கள்" என தனது இரண்டு நண்பர்களுடன் ஒரு சிறிய டொயோட்டா பிக்அப் டிரக்கின் உள்ளே சாய்ந்தபடி, ஜுவான் கூறினார். பாரமவுண்டில் ஒரு கார் தீக்கிரையாக்கப்பட்டு, கடைகள் சூறையாடப்பட்ட போது ஏற்பட்ட பரபரப்பான சூழல், லாஸ் ஏஞ்சலிஸ் முழுவதும் கலவரங்கள் பரவுவதற்கு காரணமானது என்று பெடரல் அதிகாரிகள் தெரிவித்தனர். சனிக்கிழமை, அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது அதிகாரத்தை பயன்படுத்தி கலிபோர்னியா தேசிய காவல்படையை அழைத்தார். இது வழக்கமாக மாநில ஆளுநரால் முடிவு செய்யப்படும் ஒன்று. அந்த நேரம், நகரத்தில் இரண்டாவது நாளாக போராட்டங்கள் தீவிரமாக நடந்துகொண்டிருந்தன. மூன்றாவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் போராட்டங்கள் வெடித்ததால், அந்த வன்பொருள் கடைக்கு எதிரே உள்ள ஒரு பாதுகாக்கப்பட்ட வணிகப் பூங்காவை தேசிய காவல்படை வீரர்கள் பாதுகாத்தனர். அந்த பகுதியில், ஹம்வீ வாகனங்களை (ராணுவ பாணியிலான) நிறுத்தி, போராட்டக்காரர்களை நேரடியாக எதிர்கொண்டது தேசிய காவல்படை. மோதலின் போது மெக்சிகன் கொடிகள் மற்றும் பதாகைகளை அசைத்து போராட்டக்கார்கள் கூச்சலிட்டனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,அதிபர் டிரம்ப் லாஸ் ஏஞ்சல்ஸுக்கு தேசிய காவல்படையை அனுப்பினார். "உங்களுக்கு இங்கே வரவேற்பு இல்லை!' என்று லாஸ் ஏஞ்சலிஸ் அணியின் தொப்பி அணிந்த ஒருவர் வீரர்களை நோக்கி கத்தினார். அதே நேரத்தில், மற்றொரு போராட்டக்காரர் ஸ்ப்ரே பெயிண்டால் அமெரிக்க குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத் துறையை பற்றி ஆபாசமாக எழுதினார். பாதுகாக்கப்பட்ட அந்தப் பகுதியில் தங்களுடைய அலுவலகங்களில் ஒன்று உள்ளது. அதிகாரிகள் அதை "செயல்பாட்டுத் தளமாகப் பயன்படுத்தி வந்தனர். ஆனால், அந்த பகுதியை போராட்டக்காரர்கள் கண்டுபிடித்துள்ளனர்" என்று அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை (DHS) பிபிசியிடம் தெரிவித்துள்ளது. இந்த வாரம் லாஸ் ஏஞ்சலிஸ் பகுதியில் 118 சட்டவிரோத குடியேறிகளை கைது செய்துள்ளதாக அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை பிபிசியிடம் தெரிவித்துள்ளது. இந்த குடியேறிகளில் சிலர் மீது போதைப்பொருள் கடத்தல், தாக்குதல் மற்றும் கொள்ளை போன்ற முந்தைய குற்றச்சாட்டுகள் இருந்ததாகவும் அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை குறிப்பிட்டுள்ளது. லாஸ் ஏஞ்சலிஸில் "வன்முறையாளர்கள்" சிலர் உள்ளனர், அவர்கள் தப்பிக்க முடியாது என்று, ஞாயிற்றுக்கிழமை நியூ ஜெர்சியின் மோரிஸ்டவுனில் ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் ஏறத் தயாராகும் போது, அதிபர் டிரம்ப் செய்தியாளர்களிடம் கூறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES முந்தைய இரவில் தனது நகரத்தை மாற்றிய அதிர்ச்சியூட்டும் சம்பவங்களை நம்ப முடியாமல், டோரா சான்செஸ் குழம்பி இருந்தார். ஞாயிற்றுக்கிழமையன்று அந்தப் பகுதியைச் சேர்ந்த மற்றவர்களுடன் இணைந்து 'சேப்பல் ஆஃப் சேஞ்ச்' தேவாலயத்தில் அவர் கூடியிருந்தார். அந்த தேவாலயம் முந்தைய நாள் நடந்த போராட்டம் நடந்த இடத்துக்கு வெகு அருகில் இருந்தது. இந்த ஹிஸ்பானிக் சமூகம் பல ஆண்டுகளாக எப்படி புத்துயிர் பெற்று, அண்டை வீட்டார்கள் ஒருவரையொருவர் அறிந்து கவனித்துக் கொள்ளும் நெருக்கமான சமூகமாக மாறியது என்பது குறித்து, டோராவும் தேவாலயத்தில் இருந்த மற்றவர்களும் பேசிக்கொண்டிருந்தனர். "இந்தப் போராட்டங்கள் புலம்பெயர்ந்த சமூகத்துக்கு திருப்புமுனையாக இருந்தது," என்று டோரா குறிப்பிட்டார். சிறுபான்மை குழுக்களைச் சேர்ந்தவர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதி லாஸ் ஏஞ்சல்ஸில். வேறு எந்த இனக்குழுவையும் விட ஹிஸ்பானியர்கள் லாஸ் ஏஞ்சலிஸ் நகரத்தின் மக்கள்தொகையில் பெரும் பங்கைக் கொண்டுள்ளனர். குறிப்பாக மெக்சிகோவில் இருந்து வந்த குடியேறிகள், இங்குள்ள வரலாறு மற்றும் கலாசாரத்தின் முக்கிய பகுதியாக உள்ளனர். பட மூலாதாரம்,GETTY IMAGES இந்த நகரம் "புகலிட நகரம்" என்ற அந்தஸ்தைக் கொண்டுள்ளது. அதாவது, குடியேற்றம் குறித்த அமெரிக்க பெடரல் அரசின் நடவடிக்கைகளுடன் (federal immigration enforcement) இந்த நகர நிர்வாகம் ஒத்துழைக்காது. பல நாட்களாகக் கொந்தளித்துக் கொண்டிருந்த பதற்றம், லாஸ் ஏஞ்சலிஸில் உள்ள ஆவணமற்ற குடியேறிகளை டிரம்ப் நிர்வாகம் குறிவைத்தபோது வெடித்தது போல தோன்றியதாக அங்குள்ள சிலர் கூறினர். "எழுந்து நிற்க வேண்டிய நேரம் இது", "இவர்கள் என் மக்கள்"என்று பாரமவுண்டில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மரியா குட்டியர்ரெஸ் கூறினார். மரியா மெக்சிகோவில் பிறந்ததாகவும், ஆனால் சிறுமியாக இருந்ததிலிருந்து இங்கு வசித்து வருவதாகவும் தெரிவித்தார். இங்குள்ள பலரைப் போலவே, அவரும் அமெரிக்காவில் சட்டவிரோதமாக வசிக்கும் குடும்ப உறுப்பினர்கள் இருப்பதாகக் கூறுகிறார். "இது லாஸ் ஏஞ்சலிஸ்", என்று கூறிய மரியா, "இது நம் அனைவரையும் பாதிக்கிறது.", "இங்கே, ஏறக்குறைய அனைவருக்கும் குடும்பம் இருக்கிறது, அல்லது அவர்கள் ஆவணமில்லாத ஒருவரை அறிந்திருக்கிறார்கள்," என்றார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c15n12097yyo
-
விரட்டியதால் வந்த விபரீதம்: குழியில் விழுந்த புலி..!
விரட்டியதால் வந்த விபரீதம்: நாயோடு குழியில் விழுந்த புலி..! Published By: VISHNU 09 JUN, 2025 | 02:38 AM தமிழகம் - கேரளா எல்லையில் உள்ள மயிலாடும்பாறை பகுதியில் 08ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை, புலி ஒன்று இரைக்காக நாயைத் துரத்திக் கொண்டிருந்தது. அப்போது, அங்கிருந்த ஏலக்காய் தோட்டத்தில் வெட்டப்பட்டிருந்த உரக் குழிக்குள் எதிர்பாராதவிதமாக இரண்டும் விழுந்தது. இதையடுத்து அவைகள் எழுப்பிய சத்தத்தைக் கேட்டு ஓடிவந்து பார்த்த பொதுமக்கள், இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த வனத்துறையினர், நாய் மற்றும் புலியை மயக்க மருந்து செலுத்தி பத்திரமாக மீட்டனர். பின்னர் அந்த புலி, பெரியார் புலிகள் காப்பகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. பல மணி நேரம் நாயும் புலியும் ஒரே குழிக்குள் இருந்தாலும், விரட்டி வந்த நாயை புலி தனக்கு இரையாக்கிக் கொள்ளவில்லை என்பது அப்பகுதி மக்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. https://www.virakesari.lk/article/216971
-
குடலில் இருக்கும் ஆபத்தான பாக்டீரியாவை அழிக்க 'மல மாத்திரை' உதவுமா?
பட மூலாதாரம்,GSTT கட்டுரை தகவல் எழுதியவர், ஜேம்ஸ் கல்லாகர் பதவி, மருத்துவம் மற்றும் அறிவியல் செய்தியாளர் 8 ஜூன் 2025 ஆபத்தான சூப்பர்பக்ஸ் தொற்றுகளை அழிக்க, உறைந்த நிலையில் உலர்த்தப்பட்ட மலம் கொண்ட "poo pills" பயன்படுத்த பிரிட்டன் மருத்துவர்கள் முயற்சித்து வருகின்றனர். இந்த மாத்திரையில் பயன்படுத்தப்படும் மல மாதிரிகள் ஆரோக்கியமான நன்கொடையாளர்களிடமிருந்து பெறப்படுகின்றன. அவற்றில் நல்ல பாக்டீரியாக்கள் நிரம்பியுள்ளன. இதன் மூலம் குடலில் இருக்கும் சூப்பர்பக்ஸை வெளியேற்றிவிட்டு, அதற்கு பதில் ஆரோக்கியமான குடல் பாக்டீரியாக்களின் கவலையை ஏற்படுத்த முடியும் என மருத்துவ பரிசோதனையின் ஆரம்பத் தரவுகள் தெரிவிக்கின்றன. ஆன்டிபயாடிக்கை மீறி செயல்படும் பாக்டீரியா தொற்றுகள் சூப்பர்பக்ஸ் என அழைக்கப்படுகிறது. சூப்பர்பக்ஸ்களால் ஆண்டுதோறும் பத்து லட்சம் மக்கள் உயிரிழப்பதாகக் கருதப்படும் நிலையில், இந்தத் தொற்றுகளைக் கையாள்வதற்கான ஒரு புதிய அணுகுமுறை இது என்றே சொல்லலாம். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மல மாதிரிகளில் ஆபத்தான எதுவும் இல்லை என்பதை உறுதிப்படுத்த, பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன ஆன்டிபயாடிக் மருந்துகள் வேலை செய்யவிடாமல் தடுக்கும் பாக்டீரியாக்கள் அதிகம் உள்ள குடலில் கவனம் செலுத்தும் விதமாக இந்த மாத்திரை உருவாக்கப்பட்டுள்ளதாக கைஸ் மற்றும் செயிண்ட் தாமஸ் மருத்துவமனையில் இந்த மாத்திரைகளை பரிசோதித்து வரும் டாக்டர் பிளேர் மெரிக் கூறுகிறார். மருந்துகளை எதிர்க்கும் திறன் கொண்ட சூப்பர்பக்ஸ் பாக்டீரியாக்கள், அவை தங்கியிருக்கும் குடலில் இருந்து வெளியேறி, உடலில் வேறு இடங்களில் குறிப்பாக சிறுநீர்ப்பாதை அல்லது ரத்த ஓட்ட தொற்றுகள் போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தக்கூடும். "'உங்கள் குடலில் இருந்து சூப்பர்பக்ஸை அகற்ற முடியுமா?' என்பதைத் தெரிந்துக் கொள்ள அனைவருக்கும் ஆர்வம் அதிகமாக உள்ளது," என்கிறார் டாக்டர் மெரிக். 'மல மாத்திரைகள்' என்ற வார்த்தையைக் கேட்டு, இது அபத்தமான யோசனையாக இருப்பதாக கருதவேண்டாம். மலம் மாற்று அறுவை சிகிச்சை, டிரான்ஸ்-பூ-ஷன் என்றும் அழைக்கப்படுகிறது. இது, க்ளோஸ்ட்ரிடியம் டிஃபிசைல் பாக்டீரியாவால் ஏற்படும் கடுமையான வயிற்றுப்போக்கிற்கு சிகிச்சையளிக்க ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இருந்தபோதிலும், C. difficile எனப்படும் கடுமையான குடல் பாக்டீரியா தொற்றின்போது, மல மாற்று அறுவை சிகிச்சைகள் சூப்பர்பக்ஸையும் அகற்றுவதை விஞ்ஞானிகள் அவதானித்தனர். பட மூலாதாரம்,GETTY IMAGES மருந்து எதிர்ப்பு பாக்டீரியா தொற்று பாதித்த நோயாளிகளை மையமாகக் கொண்டு ஆறு மாதங்களாக புதிய ஆராய்ச்சி ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த நோயாளிகளுக்கு, மல வங்கிக்கு மக்கள் நன்கொடையாக வழங்கிய மலத்திலிருந்து தயாரிக்கப்பட்ட மாத்திரைகள் வழங்கப்பட்டன. பெறப்படும் மல நன்கொடைகள் ஒவ்வொன்றும் தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, அதில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியா எதுவும் இல்லை என்பதை உறுதிப்படுத்தப்படுகிறது. மேலும், மலத்தில் இருக்கும் செரிக்கப்படாத உணவுகள் அகற்றப்படுகின்றன. அதன்பிறகு, எஞ்சிய மலம் உலர்த்தி பொடியாக்கப்பட்டு உறைய வைக்கப்படுகிறது. மாத்திரையின் உள்ளே செலுத்தப்படும் இந்த மலத் துகள்கள், வயிற்றின் வழியாக சேதமின்றிச் சென்று குடலை அடைந்து, அங்கு கரைந்து அதன் உள்ளிருக்கும் மலத்துகள்கள் வெளியாகும். பெரிய அளவிலான ஆய்வுக்கான அடித்தளத்தை அமைப்பதற்காக லண்டனில் உள்ள கைஸ் மற்றும் செயிண்ட் தாமஸ் மருத்துவமனைகளில் 41 நோயாளிகளிடம் இந்த சோதனை நடத்தப்பட்டது. இந்த மல மாத்திரையை எடுத்துக்கொள்ள நோயாளிகள் தயாராக இருப்பதாகவும், தானம் பெறப்பட்ட பாக்டீரியாக்கள் குறைந்தது ஒரு மாதத்திற்குப் பிறகும் நோயாளிகளின் குடலில் இருப்பதையும் அந்த ஆய்வு வெளிப்படுத்தியது. அதிகரித்து வரும் சூப்பர்பக்ஸின் தாக்குதலை சமாளிக்க மல மாத்திரைகள் உதவும். மேலும், குடலின் உட்புறத்தில் உணவு மற்றும் இடத்திற்கான போட்டியில் சூப்பர்பக்ஸும், தானம் செய்யும் பாக்டீரியாக்களும் நுண்ணுயிர் போருக்குச் செல்லக்கூடும் என்பதற்கும் "நம்பிக்கைக்குரிய சமிக்ஞைகள்" இருப்பதாக டாக்டர் மெரிக் கூறுகிறார். அத்துடன், உடலில் இருந்து அவற்றை முற்றிலுமாக அகற்றலாம் அல்லது "பிரச்னைகளை ஏற்படுத்தாத அளவிற்கு அவற்றைக் குறைக்கலாம்" என்றும் அவர் கூறுகிறார். இந்த சிகிச்சைக்குப் பிறகு குடல் பாக்டீரியாக்கள் மிகவும் மாறுபட்டதாக மாறும் என்றும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது. இது சிறப்பான ஆரோக்கியத்தின் அறிகுறியாகும், இது "நோய் எதிர்ப்பை ஊக்குவிக்கக்கூடும்". எனவே புதிய தொற்றை ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள் உள்ளே நுழைவது கடினம் என்றும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது. "இந்த ஆய்வு ஊக்கம் கொடுப்பதாக உள்ளது. இருபது ஆண்டுகளுக்கு முன்னதாக, அனைத்து பாக்டீரியாக்களும் வைரஸ்களும் நமக்கு தீங்கு விளைவிக்கும் என்று கருதப்பட்டது. ஆனால், தற்போது அவை நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு முற்றிலும் அவசியமானவை என்பதை உணர்த்தும் அளவுக்கு மாற்றம் ஏற்பட்டுள்ளது," என்று டாக்டர் மெரிக் தெரிவித்தார். நாம் பிறந்த சில மணிநேரங்களில் நம் உடலில் காணப்படும் நல்ல பாக்டீரியாக்கள், நுரையீரல் தொற்றுடன் இளம் குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அபாயத்தை பாதியாகக் குறைப்பதாக, இந்த வார தொடக்கத்தில் விஞ்ஞானிகள் காட்டியுள்ளனர். நமது உடலின் செல்கள், நமக்குள் வாழும் பாக்டீரியா, பூஞ்சை மற்றும் பிற நுண்ணுயிரிகள் மிகவும் அதிக எண்ணிக்கையில் உள்ளன. இது கிரோன் நோய் முதல் புற்றுநோய், மன ஆரோக்கியம் வரை அனைத்திலும் நுண்ணுயிரியலை உட்படுத்தும் ஆராய்ச்சிக்கு வழிவகுத்துள்ளது. விரிவான ஆய்வுகளில் சூப்பர்பக்ஸுக்கு எதிராக மல மாத்திரைகள் செயல்படுவதாக நிரூபிக்கப்பட்டால், ஆபத்தில் உள்ளவர்களுக்கு சிகிச்சை மற்றும் தடுப்பு ஆகிய இரண்டிற்கும் அவற்றைப் பயன்படுத்தலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் நினைக்கிறார்கள். புற்றுநோய் சிகிச்சைகள் மற்றும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் உட்பட நோயெதிர்ப்பு மண்டலத்தை அடக்கும் மருத்துவ நடைமுறைகள் உடலை மேலும் பாதிக்கப்படக்கூடியதாக மாற்றும். "இந்த நபர்களில் பலருக்கு மருந்து எதிர்ப்பு உயிரிகளால் அதிக அளவிலான தீங்கு ஏற்படுகிறது," என்று டாக்டர் மெரிக் சொல்கிறார். தற்போது 450க்கும் மேற்பட்ட நுண்ணுயிரியல் மருந்துகள் உருவாக்கத்தில் இருப்பதாக, பிரிட்டனின் மருந்துகள் ஒழுங்குமுறை நிறுவனமான மருந்துகள் மற்றும் சுகாதாரப் பொருட்கள் ஒழுங்குமுறை நிறுவனம் (MHRA) தெரிவித்துள்ளது. "அவற்றில் சில வெற்றி பெறும், எனவே மிக விரைவில் மருந்து எதிர்ப்பு உயிரிகளின் பாதிப்புகளை சமாளிக்கமுடியும் என நான் நினைக்கிறேன்," என்று மருந்துகள் மற்றும் சுகாதாரப் பொருட்கள் ஒழுங்குமுறை நிறுவனத்தின் நுண்ணுயிரியல் ஆராய்ச்சித் தலைவர் டாக்டர் கிறைசி செர்காகி கூறினார். "எதிர்காலத்தில், நுண்ணுயிரியல் சிகிச்சைகள் மூலம் நுண்ணுயிர் எதிர்ப்பிகளை மாற்ற முடியும், அதற்கான சாத்தியக்கூறுகள் பிரகாசமாக உள்ளன." - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cp3q0lp8w0jo
-
இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு புதிய பணிப்பாளர் நியமனம்
09 JUN, 2025 | 11:44 AM இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் (விசாரணைப்பிரிவு) பணிப்பாளராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் எம்.எஸ். மொஹான்லால் சிறிவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் சிலரும் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. மேலும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஏ.எஸ்.கே பண்டார அம்பாறை பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவிலிருந்து குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். https://www.virakesari.lk/article/216991
-
கப்பலில் காசாவிற்கு புறப்பட்டார் கிரெட்டா தன்பேர்க் - இனப்படுகொலை குறித்த உலகின் மௌனத்தை விட இந்த பயணம் ஆபத்தானதில்லை என தெரிவிப்பு
காஸாவுக்கு கிரெட்டா துன்பர்க் உணவுப் பொருள் ஏற்றி சென்ற படகை சிறைபிடித்ததா இஸ்ரேல்? பட மூலாதாரம், FREEDOM FLOTILLA COALITION படக்குறிப்பு, நிவாரணப் படகில் சென்றவர்கள் கைகளை உயர்த்திய நிலையில் உள்ள புகைப்பட்ம கட்டுரை தகவல் எழுதியவர், ஜரோஸ்லாவ் லுகிவ் பதவி, பிபிசி நியூஸ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் காஸாவிற்கு நிவாரணப் பொருட்களை ஏற்றிச் சென்ற படகில் இஸ்ரேல் படைகள் ஏறியுள்ளதாக தன்னார்வலர்கள் தெரிவித்துள்ளனர். காஸா பகுதிக்கு நிவாரணப் பொருட்களைக் கொண்டு சென்ற மேட்லீன் படகில் இஸ்ரேலியப் படைகள் ஏறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது மேட்லீன் படகின் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்டதாக ஃப்ரீடம் ஃப்லோடில்லா கோயலிஷன் (எஃப்.எஃப்.சி) குழு தனது டெலிகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளது. உயிர்க் கவசம் அணிந்தபடியுள்ள தன்னார்வலர்கள் கைகளை உயர்த்திய நிலையில் இருக்கும் புகைப்படத்தை அவர்கள் வெளியிட்டுள்ளனர். ஆனால் அது சுயாதீனமாக உறுதி செய்யப்படவில்லை. எகிப்து கரையில் இருந்து கிளம்பிய அந்தப் படகில் காலநிலை செயற்பாட்டாளர் கிரேட்டா துன்பர்க் உள்ளார். "தடை செய்யப்பட்ட பகுதியை நோக்கி வந்ததால்" படகை வழிமாறிச் செல்லுமாறு அறிவுறுத்தியதாக இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகம் முன்னர் தெரிவித்திருந்தது. காஸாவில் உள்ள ஹமாஸ் ஆயுதக் குழுவினருக்கு ஆயுதங்கள் செல்லாமல் தடுக்க இந்த முற்றுகை அவசியம் என இஸ்ரேல் தெரிவிக்கிறது. கடந்த வெள்ளிக்கிழமை சிசிலியில் இருந்து புறப்பட்ட படகு நிவாரணப் பொருட்களை எடுத்துச் செல்வதாகக் கூறியுள்ள எஃப்.எஃப்.சி, "இஸ்ரேல் தாக்குதலுக்கான சாத்தியத்திற்கும் தயாராக இருக்கிறோம்" எனத் தெரிவித்திருந்தது பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, நிவாரணப் பொருட்களை ஏற்றிச் செல்லும் கப்பலில் பயணிக்கும் செயற்பாட்டாளர்கள் குழு படகு திரும்பிச் செல்ல வேண்டும் என்றும் இஸ்ரேலின் முற்றுகையை மீறும் எந்த முயற்சிக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ் எச்சரித்திருந்தார். "மேடலெய்ன் படகு காஸா கரையைச் சேராமல் தடுக்க வேண்டும். அதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க ஐடிஎஃப்-ற்கு (இஸ்ரேலியப் பாதுகாப்பு படை) உத்தரவிட்டுள்ளேன்" என ஞாயிறு அன்று வெளியிட்ட எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார். 2007-ல் இருந்து அமலில் உள்ள இஸ்ரேலின் முற்றுகையின் நோக்கம் ஹமாஸிற்கு ஆயுதங்கள் செல்லாமல் தடுப்பதே என கட்ஸ் கூறியுள்ளார். இஸ்ரேலின் பாதுகாப்பிற்கு இது அவசியமானது என்றும் அவர் தெரிவித்துள்ளார். கடல் முற்றுகை என்பது சட்டவிரோதமானது என எஃப்.எஃப்.சி வாதிடுகிறது. கட்ஸின் கருத்து, பொதுமக்களுக்கு எதிராக சட்டவிரோதமாக படைகளைப் பயன்படுத்துவதற்கான இஸ்ரேலின் அச்சுறுத்தல் மற்றும் அதனை நியாயப்படுத்துவதற்கான முயற்சிகளுக்கு எடுத்துக்காட்டு ஆகும் என எஃப்.எஃப்.சி கூறுகிறது. "எங்களை மிரட்ட முடியாது. உலகம் பார்த்துக் கொண்டிருக்கிறது" என எஃப்.எஃப்.சியின் ஊடக அலுவலர் ஹே ஷா வியா தெரிவித்துள்ளார். காஸா: இடிபாடுகளுக்கு நடுவே பக்ரித் தொழுகை நடத்திய மக்கள் முழு சிகிச்சை கிடைக்காமல் ஜோர்டானில் இருந்து திரும்பி அனுப்பப்படும் காஸா குழந்தைகள் காஸா உண்மையில் யாருக்கு சொந்தம்? டிரம்பின் திட்டம் என்ன? - 5 கேள்விகளும் பதில்களும் காஸா அணுகுமுறையால் நெருக்கடியை சந்திக்கும் இஸ்ரேல் பட மூலாதாரம்,FREEDOM FLOTILLA COALITION படக்குறிப்பு, மேட்லீன் படகில் பயணித்த செயற்பாட்டாளர்கள் "மேட்லீன் பொதுமக்கள் பயணிக்கும் படகு, ஆயுதம் ஏந்தாமல் உலகம் முழுவதிலும் இருந்து நிவாரணப் பொருட்கள் மற்றும் மனித உரிமை பாதுகாவலர்களைச் சுமந்து கொண்டு சர்வதேச கடல் பகுதியில் பயணித்துக் கொண்டிருக்கிறது. காஸாவை சென்றடையும் எங்களின் முயற்சியைத் தடுக்க இஸ்ரேலுக்கு எந்த அதிகாரமும் இல்லை" என அவர் தெரிவித்துள்ளார். மேட்லீன் படகு அரிசி, பால் பவுடர் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களைக் கொண்டு செல்வதாக அந்தக் குழு தெரிவித்துள்ளது. இதில் பிரேசில், பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து, ஸ்பெய்ன், சுவீடன் மற்றும் துருக்கியின் குடிமக்கள் உள்ளனர். 2010-ல், காஸாவிற்கு நிவாரணப் பொருட்களை ஏற்றிச் சென்ற துருக்கி கப்பலான மாவி மர்மராவில் பயணித்த 10 பேரையும் இஸ்ரேல் வீரர்கள் கொன்றனர். மூன்று மாத தரை வழி முற்றுகைக்குப் பிறகு இஸ்ரேல் குறிப்பிட்ட அளவிலான நிவாரணங்களை மட்டும் தற்போது காஸாவிற்குள் அனுமதித்து வருகிறது. அதனையும் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆதரவு பெற்ற காஸா ஹியுமானிடேரியன் ஃபவுண்டேஷன் மூலமாக மட்டுமே விநியோகிக்க அனுமதிக்கிறது. இதற்கு நிவாரணக் குழுக்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பாலத்தீனர்களுக்கு வாழ்வா, சாவா என்கிற வாய்ப்பு மட்டுமே வழங்கப்படுவதாக ஐநா மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் வோல்கர் துர்க் தெரிவித்துள்ளார். "ஒன்று பட்டினியால் சாகுங்கள் அல்லது கிடைக்கின்ற சொற்ப உணவைப் பெற முயற்சித்து கொல்லப்படுங்கள் என்கிற இரு கடுமையான வாய்ப்புகள் தான் அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது" என்றார் வோல்கர் துர்க். 2023 அக்டோபர் 7-ல் ஹமாஸ் இஸ்ரேலில் நடத்திய எல்லை கடந்த தாக்குதலில் 1,200 கொல்லப்பட்டும் 251 பேர் சிறைபிடிக்கப்பட்டனர். அதன் பிறகு காஸாவில் இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கை தொடங்கி தற்போது 20 மாதங்கள் ஆகிவிட்டது. தற்போது வரை காஸாவில் 54,880 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஹமாஸின் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. "கிரேட்டா மற்றும் மற்றவர்கள் விளம்பரம் வேண்டும் என்பதற்காகவே இதனை நடத்துகின்றனர். அவர்கள் ஒரு லாரிக்கும் குறைவான நிவாரணப் பொருட்களையே எடுத்து வந்தனர், கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் இஸ்ரேலில் இருந்து காஸாவிற்கு 1,200 லாரிகள் நிவாரணப் பொருட்களைக் கொண்டு சென்றுள்ளன. இதனுடன் கூடுதலாக காஸா ஹியுமானிடேரியன் ஃபவுண்டேஷன் மூலமாக காஸாவில் உள்ள பொதுமக்களுக்கு 11 மில்லியன் சாப்பாடு நேரடியாக வழங்கப்பட்டுள்ளது" என இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகம் திங்கள் காலை வெளியிட்ட எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளது. மேலும், "காஸா பகுதிக்கு நிவாரணங்களை வழங்க பல வழிகள் உள்ளன. அதில் இன்ஸ்டாகிராம் செல்ஃபிக்கள் அடங்காது" என்றும் அது தெரிவித்துள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c1ld179rv8qo
-
தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை முற்றாக முடங்கும் அபாயத்தில்
8 - 4 என நினைக்கிறேன்.