Everything posted by ஏராளன்
-
மட்டக்களப்பு நகரில் 128.9 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி
காத்தான்குடி முதல் கல்லடி வரை வெள்ளக்காடு Feb 19, 2026 - 11:17 AM கடந்த சில நாட்களாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வருவதுடன், இன்று (19) காலை முதல் கடற்பகுதிகளில் பலத்த காற்று வீசி வருவதாக 'அத தெரண' செய்தியாளர்கள் தெரிவித்தனர். பலத்த மழை காரணமாக காத்தான்குடி, பூநொச்சிமுனை, நாவலடி, கல்லடி உள்ளிட்ட பல பகுதிகளில் நாளாந்த நடவடிக்கைகள் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன், சாதாரண மக்கள் வாழ்க்கையும் முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடல் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படுவதால் மீன்பிடி நடவடிக்கைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக மீன்பிடி நடவடிக்கைகளுக்கு பாரிய தடங்கல் ஏற்பட்டுள்ளதாக அத தெரண செய்தியாளர்கள் மேலும் தெரிவித்தனர். தொடர்ச்சியாகப் பெய்து வரும் பலத்த மழை காரணமாக அப்பகுதியில் உள்ள பல சிறுவர் பூங்காக்கள் மற்றும் விளையாட்டு மைதானங்கள் முழுமையாக நீரில் மூழ்கியுள்ளன. https://adaderanatamil.lk/news/cmlt0n9v8000q356nldabywht
-
இலங்கையின் மிகப்பெரிய சூரிய சக்தி பூங்கா ஹம்பாந்தோட்டையில் : 2027 இல் தேசிய மின்கட்டமைப்புடன் இணைக்க திட்டம்
இலங்கையின் மிகப்பெரிய சூரிய சக்தி பூங்கா ஹம்பாந்தோட்டையில் : 2027 இல் தேசிய மின்கட்டமைப்புடன் இணைக்க திட்டம் Published By: Vishnu 19 Feb, 2026 | 04:52 AM (க.சிவலிங்கமூர்த்தி) இலங்கை மின்சார சபையின் வழிகாட்டலில் ஹம்பாந்தோட்டையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் 150 மெகாவாட் கொள்ளளவு கொண்ட நாட்டின் மிகப்பெரிய சூரிய சக்தி பூங்காவைப் பார்வையிடுவதற்கான விசேட ஊடக விஜயம் செவ்வாயக்கிழமை (17) நடைபெற்றது. இவ் கள விஜயத்தில் ஊடகவியலாளர் உள்ளடக்கிய குழு புதன்கிழமை (16) ஹம்பாந்தோட்டை கொன்னொருவ பிரதேசத்திற்கு இந்த கள விஜயத்தை மேற்கொண்டது. இலங்கையின் எரிசக்தி வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் கொன்னொருவ கிராம உத்தியோகத்தர் பிரிவில் நாட்டின் மிகப்பெரிய சூரிய சக்தி பூங்கா கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 150 மெகாவாட் மின்சார உற்பத்தித் திறனைக் கொண்ட இந்த பிரம்மாண்டத் திட்டம் 2027 ஆம் ஆண்டளவில் தனது முதலாவது மின்சாரப் பங்களிப்பை தேசிய மின்கட்டமைப்பிற்கு வழங்கத் தயாராகி வருவதாக சூரிய பூங்கா கட்டுமான பணிகளின் ஆலோசனை பொறியாளர் திலங்க பண்டார இந்தத் திட்டம் இலங்கையின் மீள்சுழற்சி எரிசக்தி இலக்குகளை அடைவதில் ஒரு பாரிய பாய்ச்சலாக அமையும் எனத் தெரிவித்தார். அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்; சுமார் 150 மில்லியன் அமெரிக்க டாலர் முதலீட்டில் உருவாக்கப்படும் இத்திட்டம் முழுமையாக ஒரு தனியார் துறை முதலீட்டுத் திட்டமாகும். இதற்காக அரசாங்கத்திடமிருந்து எந்தவித நிதிச் செலவுகளும் கோரப்படவில்லை. விக்டோரியா மற்றும் மேல் கொத்மலை நீர்மின் நிலையங்களுக்கு அடுத்தபடியாக நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய மீள்சுழற்சி எரிசக்தி திட்டமாக இது அமையவுள்ளது. இத்திட்டத்திற்காக சுமார் 450 ஏக்கர் நிலப்பரப்பு ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 150 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு இரண்டு வெவ்வேறு நிறுவனங்கள் முறையே 70 மெகாவாட் மற்றும் 80 மெகாவாட் என முதலீடுகளைப் பகிர்ந்துள்ளன. இந்த சூரிய சக்தி பூங்காவிலிருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை தேசிய கட்டமைப்பிற்கு கொண்டு செல்வதற்கான மின் கடத்தல் தொகுதிகளுக்கு சுமார் 16 மில்லியன் டாலர்கள் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தச் செலவை இலங்கை மின்சார சபை ஏற்காமல் முதலீட்டாளர்களே அத்தொகுதிகளை நிர்மாணித்து மின்சார சபையிடம் ஒப்படைக்க உள்ளமை ஒரு விசேட அம்சமாகும். தரைவழி சூரிய மின்சக்தித் தொழில்நுட்பத்தில் இலங்கையில் தற்போது பயன்படுத்தப்படும் ஆகச்சிறந்த நவீன முறைகள் இங்கு கையாளப்படுகின்றன. நிலத்தை உச்ச அளவில் பயன்படுத்துவதற்காக, இத்திட்டத்தில் ஒரு புதிய தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முந்தைய திட்டங்களைப் போலன்றி இங்கு சூரிய மின்தகடுகள் தரையிலிருந்து சுமார் 5 அடி உயரத்தில் பொருத்தப்பட உள்ளன. இதன் மூலம் மின்தகடுகளுக்குக் கீழே உள்ள இடைவெளியில் காளான்கள் போன்ற குறைந்த சூரிய ஒளி தேவைப்படும் பயிர்களைப் பயிரிடும் விவசாயத் திட்டங்களை முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக விவசாயத் துறை நிபுணர்களின் ஆலோசனைகள் ஏற்கனவே பெறப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 750 முதல் 1000 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆரம்பக் கட்டத்தில் 400 முதல் 500 பேர் வரை நேரடியாகப் பணியமர்த்தப்பட்டுள்ளதோடு பராமரிப்புப் பணிகளுக்காக நீண்ட கால அடிப்படையில் மேலும் பலர் உள்வாங்கப்பட உள்ளனர். மேலும் இப்பகுதியில் உள்ள யானைகள் ஊருக்குள் புகுவதைத் தடுக்கும் வகையில் சூழல் நட்பு ரீதியான நில மேலாண்மை முறைகளும் இங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளன. ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் கொன்னொருவ பகுதியில் அமைந்துள்ள இந்த மகாவலி அதிகாரசபைக்குச் சொந்தமான நிலப்பரப்பில் உருவாகும் இத்திட்டம் வறட்சி காலங்களில் நிலவும் மின்சாரத் தட்டுப்பாட்டிற்கு ஒரு நிரந்தர தீர்வாக அமைவதுடன் நாட்டின் பகல் நேர மின் தேவையில் 20 சதவீதத்தைப் பூர்த்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார். https://www.virakesari.lk/article/239013
-
டெல்லி ஏஐ மாநாட்டின் தொடக்க நாள் 'குழப்பம்' - சர்வதேச ஊடகங்கள் விவாதிப்பது என்ன?
செயற்கை நுண்ணறிவின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் டெல்லி உச்சிமாநாடு! Feb 19, 2026 - 09:07 AM செயற்கை நுண்ணறிவு (AI) இன்று உலகைப் புதிய தொழில்நுட்ப யுகத்திற்கு இட்டுச்செல்லும் ஒரு பலமான சக்தியாக மாறி வருகிறது. இவ்வாறானதொரு பின்னணியில், மனித குலத்தின் நன்மைக்காக AI-ஐப் பொறுப்புடன் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு 'AI Impact Summit 2026' புதுடெல்லியில் நடைபெறுகிறது. ஐந்து நாட்கள் நடைபெறும் இந்த உச்சிமாநாட்டில் 20 நாடுகளின் அரச தலைவர்கள் மற்றும் 45-க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ளனர். மாநாடு கடந்த 16 ஆம் திகதி ஆரம்பமானதுடன், எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை நடைபெறவுள்ளது. "People, Planet, Progress" – கருப்பொருளை அடிப்படையாகக் கொண்ட கலந்துரையாடல் “People, Planet, Progress” என்ற தொனிப்பொருளின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த உச்சிமாநாடு, AI மூலம் பொருளாதார வளர்ச்சி, சமூக சமத்துவம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது. விசேடமாக வளரும் நாடுகளுக்கு AI தொழில்நுட்பத்தின் அணுகலை விரிவுபடுத்துவது குறித்த ஆழமான கலந்துரையாடல்கள் இங்கு இடம்பெறுகின்றன. இம்மாநாட்டில் உலகின் முன்னணி தொழில்நுட்பத் தலைவர்கள் பலர் கலந்துகொண்டுள்ளதுடன், சுந்தர் பிச்சை, சாம் ஆல்ட்மேன் மற்றும் ஜென்சன் ஹுவாங் போன்ற தலைவர்கள் பிரதான உரைகளை நிகழ்த்தினர். மேலும் அரசாங்கப் பிரதிநிதிகள், கொள்கை வகுப்பாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் ஸ்டார்ட்அப் கண்டுபிடிப்பாளர்கள் எனப் பெருமளவானோரும் இதில் இணைந்துள்ளனர். மாநாட்டுக்கு இணையாக AI Expo, Hackathon போட்டிகள், ஆராய்ச்சி மாநாடு மற்றும் கொள்கை உரையாடல் தொடர்களும் நடைபெற்று வருவதுடன், சுகாதாரம், விவசாயம், கல்வி மற்றும் பாதுகாப்பு போன்ற துறைகளில் புதிய AI தீர்வுகள் காட்சிப்படுத்தப்படுகின்றன. இலங்கையின் பங்கேற்பு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பிற்கு இணங்க, இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க 'AI Impact Summit 2026' இல் கலந்துகொள்வதற்காக நேற்று (18) புதுடெல்லியைச் சென்றடைந்தார். ஜனாதிபதி இன்று (19) மாநாட்டில் உரையாற்றவுள்ளதுடன், இந்த விஜயத்தின் போது பல இருதரப்புப் பேச்சுவார்த்தைகளையும் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. ஜனாதிபதியுடன் டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர் ஹான்ஸ் விஜேசூரிய மற்றும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் செயலாளர் வருண ஸ்ரீ தனபால ஆகியோரும் இணைந்துள்ளனர். உலகளாவிய கொள்கைகள் மற்றும் பொறுப்புகள் AI இன் தாக்கம் எல்லையற்றது என்பதால், அதனைப் பொறுப்புடனும் நியாயமாகவும் பயன்படுத்துவது குறித்த சர்வதேச கவனம் அதிகரித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள், G20 AI கொள்கைகள், மற்றும் செயற்கை நுண்ணறிவு தொடர்பான உலகளாவிய கூட்டாண்மை (GPAI) போன்ற செயற்திட்டங்கள், AI இற்கான பொறுப்பான உலகளாவிய கட்டமைப்பை உருவாக்குவதற்காக எடுக்கப்பட்ட முயற்சிகளாகக் கருதப்படுகின்றன. இந்த அனைத்து முயற்சிகளும் AI என்பது ஒரு நாட்டுக்கு மாத்திரம் சொந்தமான தொழில்நுட்பம் அல்ல, மாறாக முழு உலகிற்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் உலகளாவிய விடயம் என்பதைச் சுட்டிக்காட்டுகின்றன. AI – ஒரு வாய்ப்பா? ஆபத்தா? AI மூலம் கல்வி, சுகாதாரம், விவசாயம், நிதிச் சேவைகள் மற்றும் அரச நிர்வாகம் உள்ளிட்ட பல துறைகளின் முன்னேற்றத்தைத் துரிதப்படுத்த முடியும் என்பதுடன், வளரும் நாடுகளுக்கு "விரைவான முன்னேற்றத்தை" அடைவதற்கான வாய்ப்பையும் இது வழங்குகிறது. பன்மொழி மற்றும் பல்லூடக திறன்கள் ஊடாக, இதற்கு முன்னர் அணுகலைப் பெறாத மக்கள் கூட்டங்களுக்குக் கல்வி மற்றும் பொருளாதார வாய்ப்புகளைப் பெருமளவில் விரிவுபடுத்த முடியும். எனினும், அந்த வாய்ப்புகளுடன் வேலைவாய்ப்புச் சந்தையில் ஏற்படும் மாற்றங்கள், தரவுச் சார்புநிலை, தனியுரிமைப் பிரச்சினைகள் மற்றும் சக்தி நுகர்வு போன்ற ஆபத்துகளும் உள்ளன. எனவே AI தொடர்பான பதில் நடவடிக்கைகள் கொள்கை ரீதியான அறிவிப்புகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படாமல், செயற்பாட்டு ரீதியான மற்றும் அளவிடக்கூடிய கொள்கைகள் மற்றும் ஒழுங்குமுறை நடவடிக்கைகளை நோக்கி நகர்வது அத்தியாவசியமானதாகும். 'AI Impact Summit 2026' அந்த உரையாடலை உலகளாவிய மட்டத்திற்குக் கொண்டு சென்று, செயற்கை நுண்ணறிவு ஊடாக எதிர்கால உலகைக் கட்டியெழுப்பும் திசையைத் தீர்மானிக்கும் ஒரு தீர்க்கமான தளமாக முன்னோக்கி வருகிறது. https://adaderanatamil.lk/news/cmlswpp2r000m356n0ga6ovvg
-
யாழ்ப்பாணம் மண்டைதீவில் ஜனாதிபதி தலைமையில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு!
மண்டைதீவில் அமைக்கப்பட்டுவரும் சர்வதேச கிரிக்கெட் மைதான அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் Published By: Vishnu 19 Feb, 2026 | 04:46 AM மண்டைதீவில் அமைக்கப்பட்டுவரும் சர்வதேச கிரிக்கெட் மைதான அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில், விளையாட்டுத்துறை அமைச்சின் மேலதிக செயலாளர் எம். பி. என். எம். விக்ரமசிங்க மற்றும் விளையாட்டுத்துறை அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளர் நாயகம் எஸ். அச்சுதன் ஆகியோரின் பங்குபற்றலுடன் புதன்கிழமை (18) மாவட்ட செயலக அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் விளையாட்டுத்துறை அபிவிருத்தி திணைக்களப் பணிப்பாளர் நாயகம் கருத்து தெரிவிக்கையில், இக் கலந்துரையாடலின் நோக்கம் யாழ்ப்பாண மாவட்டத்தில் கிரிக்கெட் மைதானம் அமைப்பதன் ஊடாக விளையாட்டு நகரம் உருவாக்கப்படும் எனவும், இதனூடாக பல்வேறு இணைந்த உட்கட்டமைப்பு வசதிகள் அதனுடன் இணைந்த சேவைகள் போன்றவை தொடர்பாக இக் கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், அதனால் சூழலுக்கு பாதிப்புக்கள் ஏற்படாதவகையில் மத்திய சுற்றாடல் அதிகார சபை கையாளுவதாகவும், இவ் மைதானத்தை அமைப்பதன் ஊடக வெளிநாட்டு முதலீடுகளை பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும் எனவும், வடக்கு மாகாண சபை மற்றும் பிரதேச சபையின் வருமானங்கள் அதிகரிக்கும் வாய்ப்புகள் காணப்படுவதாகவும் தெரிவித்து சர்வதேச விளையாட்டு மைதானம் தொடர்பான பல்வேறு கருத்தாடல்களை பகிர்ந்து கொள்ளுமாறும் தெரிவித்துக் கொண்டார். இக் கலந்துரையாடலில் வேலணை பிரதேச சபையின் தவிசாளர் எஸ். அசோக், ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளரும் யாழ்ப்பாண மாநகர சபையின் உறுப்பினருமான எஸ் கபிலன், விளையாட்டு அமைச்சின் பணிப்பாளர் டிலும் தயாரத்தின, இலங்கை கிரிக்கெட் சங்கத்தினைச் சேர்ந்த சாலக்கா என். சில்வா மற்றும் முகாமைத்துவ பணிப்பாளர் ஸ்ரீ பெரேரா, மேலதிக அரசாங்க அதிபர் கே. சிவகரன், வேலணை பிரதேச செயலாளர் ரி. அகிலன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இ. சுரேந்திரன்நாதன், உதவி மாவட்ட செயலாளர் செல்வி உ.தா்சினி, நில அளவைகள் திணைக்கள சிரேஷ்ட அத்தியட்சகர் எம். தர்மபால, மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர்கள் மற்றும் மற்றும் துறை சார் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/239012
-
நிழல் மாகாண சபை முறைமை செயற்படுத்தும் முயற்சியை அரசாங்கம் கைவிட வேண்டும் - செல்வம் அடைக்கலநாதன்
நிழல் மாகாண சபை முறைமை செயற்படுத்தும் முயற்சியை அரசாங்கம் கைவிட வேண்டும் - செல்வம் அடைக்கலநாதன் Published By: Vishnu 19 Feb, 2026 | 04:21 AM (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) சட்டரீதியற்ற நிலையில் உள்ள நிழல் மாகாண சபையை இல்லாமல் செய்ய வேண்டும். இது நடைமுறைக்கு ஒவ்வாதது. நிழல் மாகாண சபை முறைமை செயற்படுத்தும் முயற்சியை அரசாங்கம் கைவிட வேண்டும். இதனை நாங்கள் எதிர்க்கிறோம். ஜனநாயக ரீதியில் மாகாண சபைகள் தேர்தல் ஊடாக அரசியல் செய்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும் என ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினரான செல்வம் அடைக்கலநாதன் வலியுறுத்தினார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (18) நடைபெற்ற விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழான கட்டளைகள், மற்றும் மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழான இரண்டு ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது; உணவுப் பொருட்கள் நிர்ணய விலைக்கு அமைய எங்கும் விற்பனை செய்யப்படுவதில்லை. அதிகாரிகள் இந்த விடயத்தில் கண்டும் காணாமலும் இருக்கின்றனர். இந்த உத்தியோகத்தர்கள் தொடர்பில் அரச அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும். ஊழலுக்கு எதிராக இந்த அரசாங்கம் கவனம் செலுத்தும் நிலையில் மக்கள் நியாயமான விலையில் பொருட்களை பெற்றுக்கொள்ளக்கூடிய வகையிலான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். புகையிரத போக்குவரத்து நிலையில்லாத நிலைமையே காணப்படுகின்றது. குறிப்பாக இரவு நேர மன்னார் புகையிரத போக்குவரத்து சேவைகள் தொடர்பில் போக்குவரத்து அமைச்சர் கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன். அரசாங்கம் மிக மோசமான விடயத்தை செய்ய முயற்சிக்கின்றது. மாகாண சபைகள் தேர்தலை நடத்தாமல், மாகாண சபை நிழல் அரசாங்கத்தை நடைமுறைப்படுத்தும் செயற்பாட்டை முன்னெடுக்கிறது. இதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது. மாகாண சபைகளின் அமைச்சுக்களை உருவாக்கி,ஆளுநர் தலைமையில் அதிகாரிகளை சந்தித்து அரசாங்கம் போன்று நடத்தும் வகையில் அரசியலமைப்பில் இல்லாத விடயத்தை செய்வதற்கு அரசாங்கம் செயற்படுத்த முயற்சிக்கிறது. இந்த விடயத்தில் ஜனாதிபதி கவனம் செலுத்த வேண்டும். சட்டரீதியற்ற நிலையில் உள்ள நிழல் மாகாண சபையை இல்லாமல் செய்ய வேண்டும். இது நடைமுறைக்கு ஒவ்வாத முறையே. இதனை நாங்கள் எதிர்க்கின்றோம். இதனை நிறுத்தி மாகாண சபைகள் தேர்தல் ஊடாக அரசியல் செய்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும் என்று கேட்கின்றோம் என்றார். https://www.virakesari.lk/article/239007
-
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்
எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 22 தமிழக மீனவர்கள் கைது! Feb 19, 2026 - 09:29 AM இலங்கை கடற்பரப்பினுள் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 22 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு கடற்பரப்பு அருகே 12 இராமேஸ்வரம் மீனவர்கள் இரண்டு படகுகளுடனும் மன்னார் கடற்பரப்பில் 10 இராமேஸ்வரம் மீனவர்கள் இரண்டு படகுகளுடனும் கடற் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர். மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக இவர்கள் இன்றைய தினம் ஊர்காவற்றுறை மற்றும் மன்னார் நீதவான் நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். -யாழ். நிருபர் பிரதீபன்- https://adaderanatamil.lk/news/cmlsxfzod000n356niddicu6d
-
ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர்
நமிபியாவை வீழ்த்தி சுப்பர் 8 சுற்றில் இணைந்தது பாகிஸ்தான்; 2026 ரி20 உலகக் கிண்ணத்தில் சாஹிப்ஸதா சதம் குவித்த மூன்றாவது வீரரானார் Published By: Vishnu 18 Feb, 2026 | 10:13 PM (நெவில் அன்தனி) கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்தில் புதன்கிழமை (18) நடைபெற்ற பி குழு போட்டியில் நமிபியாவை நையப்புடைத்து 102 ஓட்டங்களால் வெற்றியீட்டிய பாகிஸ்தான், கடைசி அணியாக ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண சுப்பர் 8கள் சுற்றில் விளையாட தகுதிபெற்றது. இந்த வருட ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் சதம் குவித்த மூன்றாவது வீரர் என்ற பெருமையைப் பெற்ற பாகிஸ்தான் வீரர் சாஹிப்ஸதா பர்ஹான் தனது அணியின் வெற்றிக்கு வித்திட்டார். அத்துடன் உஸ்மான் தாரிக் பதிவுசெய்த 4 விக்கெட் குவியலும் பாகிஸ்தானின் வெற்றியில் முக்கிய பங்காற்றியது. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 20 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 199 ஓட்டங்களைப் பெற்றது. சாஹிப்ஸதா பர்ஹான், சய்ம் அயூப் (14) ஆகிய இருவரும் 31 பந்துகளில் 40 ஓட்டங்களைப் பகிர்ந்து ஒரளவு சிறப்பான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். தொடர்ந்து அணித் தலைவர் சல்மான் அலி அகாவுடன் 2ஆவது விக்கெட்டில் மேலும் 67 ஓட்டங்களை சாஹிப்ஸதா பர்ஹான் பகிர்ந்தார். சல்மான் அலி அகா (38), கவாஜா நபே (5) ஆகிய இருவரும் 11 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். இதனை அடுத்து சாஹிப்ஸதா பர்ஹான், ஷதாப் கான் ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 4ஆவது விக்கெட்டில் 81 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை பலமான நிலையில் இட்டனர். போட்டியின் கடைசி ஓவரில் சாஹிப்ஸதா பர்ஹான் சதத்தைப் பூர்த்திசெய்தார். அவர் 57 பந்துகளில் சதத்தைப் பூர்த்திசெய்ததுடன் 11 பவுண்டறிகள், 4 சிக்ஸ்கள் உட்பட 100 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். ரி20 உலகக் கிண்ணத்தில் இது அவரது முதலாவது சதமாகும். அத்துடன் ரி20 உலகக் கிண்ண வரலாற்றில் சதம் குவித்த இரண்டாவது பாகிஸ்தானியர் சாஹிப்ஸதா பர்ஹான் ஆவார். பாகிஸ்தான் சார்பாக முதலாவது ரி20 உலகக் கிண்ண சதம் குவித்தவர் அஹ்மத் ஷெஹ்ஸாத் ஆவார். அவர் பங்களாதேஷுக்கு எதிராக 2014இல் சதம் குவித்திருந்தார். மேலும் 19 வருட ரி20 உலகக் கிண்ண வரலாற்றில் இந்த வருடமே ஒரே அத்தியாயத்தில் மூன்று பேர் சதம் குவித்துள்ளனர். பெத்தும் நிஸ்ஸன்க (இலங்கை), யுவ்ராஜ் சர்மா (இத்தாலி), சாஹிப்ஸதா பர்ஹான் (பாகிஸ்தான்) ஆகியோர் இந்த வருட உலகக் கிண்ணத்தில் கடந்த 3 தினங்களில் சதங்கள் குவித்ததுடன் மூவரும் ரி20 உலகக் கிண்ணத்தில் கன்னி சதங்களைப் பெற்றது குறிப்பிடத்தக்க அம்சமாகும். 200 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நமிபியா 17.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 97 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. துடுப்பாட்டத்தில் ஆரம்ப வீரர் லோரென் ஸ்டீன்காம்ப் (23), மத்திய வரிசை வீரர் அலெக்ஸாண்டர் பசிங் வோல்ஸ்சென்க் (20) ஆகிய இருவரே ஒற்றை இலக்க எண்ணிக்கையைக் கடந்தனர். பந்துவீச்சில் உஸ்மான் தாரிக் ஒரு ஓட்டமற்ற ஓவர் உட்பட 3.3 ஓவர்களில் 16 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் ஷதாப் கான் 4 ஒவர்களில் 19 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகன்: சாஹிப்ஸதா பர்ஹான் https://www.virakesari.lk/article/239002
-
மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் மன்னிப்பு கோருகிறேன் - பிமல் ரத்நாயக்க
மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் மன்னிப்பு கோருகிறேன் - பிமல் ரத்நாயக்க 18 Feb, 2026 | 07:05 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) இராணுவத்தின் 20 பேருக்கு புகையிரத சேவை தொடர்பில் பயிற்சி வழங்குவதற்கு எடுத்த தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து புகையிரத தொழிற்சங்கத்தினர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதாக அறிவித்தார்கள். அவசர நிலைமையின் போது பயன்படுத்துவதற்காகவே இராணுவத்தினருக்கு பயிற்சி வழங்க தீர்மானிக்கப்பட்டது. அதை தவிர்த்து அவர்களை புகையிரத சேவைக்கு இணைத்துக்கொள்வதற்கல்ல, கல்வி பொது தராதர சாதாரண பரீட்சை இடம்பெறுகின்ற நிலையில் மாணவர்களை பயணமாக கொண்டு போராட்டத்தில் ஈடுவடுவதாக அறிவித்தார்கள். இவ்வாறானவர்கள் போக்குவரத்து துறையில் இருப்பதையிட்டு கவலையடைகிறேன். மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் மன்னிப்பு கோருகிறேன் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (18) நடைபெற்ற விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழான கட்டளைகள், மற்றும் மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழான இரண்டு ஒழுங்குவிதிகள் மீதான விவாதம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, புகையிரத தொழிற்சங்கத்தினர் நேற்று திடீர் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்திருந்தார்கள். இந்த போராட்டம் பற்றி நாட்டு மக்களுக்கு உண்மையை குறிப்பிட வேண்டும். தித்வா புயல் தாக்கத்துக்கு முன்னர் புகையிரத சேவை நாடளாவிய ரீதியில் 1700 கிலோமீற்றர் தூரத்தை வரையறுத்ததாக காணப்பட்டது. டித்வா புயல் தாக்கத்துக்கு பின்னர் 400 கிலோமீற்றர் தூரத்தை உள்ளடக்கியதாக புகையிரத சேவை காணப்பட்டது. ஆனால் தற்போது புகையிரத சேவை 1200 கிலோமீற்றர் தூரத்தை உள்ளடக்கியதாக காணப்படுகிறது. முப்படையினரின் முழுமையான ஒத்துழைப்பால் சேதமடைந்த புகையிரத பாதைகள் மற்றும் புகையிரத பாலங்களை குறுகிய காலத்துக்குள் புனரமைக்க முடிந்தது. புகையிரத திணைக்கள சேவையாளர்கள் மாத்திரம் புகையிரத பாதைகளை புனரமைக்கவில்லை. முப்படையினரின் ஒத்துழைப்பு இல்லாமல் இருந்திருந்தால் புகையிரத பாதைகளை மறுசீரமைக்க குறைந்தது ஒரு வருடமேனும் சென்றிருக்கும். இராணுவத்தின் 20 பேருக்கு புகையிரத சேவை தொடர்பில் பயிற்சி வழங்குவதற்கு எடுத்த தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து புகையிரத தொழிற்சங்கத்தினர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதாக அறிவித்தார்கள். அவசர நிலைமையின் போது பயன்படுத்துவதற்காகவே இராணுவத்தினருக்கு பயிற்சி வழங்க தீர்மானிக்கப்பட்டது. அதை தவிர்த்து அவர்களை புகையிரத சேவைக்கு இணைத்துக் கொள்வதற்கல்ல, இந்த தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதாக அறிவித்தார்கள். கல்வி பொதுதராதர சாதாரண பரீட்சை இடம்பெறுகின்ற நிலையில் மாணவர்களை பயணமாக கொண்டு போராட்டத்தில் ஈடுவடுவதாக அறிவித்தார்கள்.இவ்வாறானவர்கள் போக்குவரத்து துறையில் இருப்பதையிட்டு கவலையடைகிறேன். மாணவர்கள் மற்றும் பெற்றோரிடம் மன்னிப்பு கோருகிறேன் என்றார். https://www.virakesari.lk/article/238998
-
இளையராஜாவுக்கு இடைக்கால தடை - டெல்லி உயர் நீதிமன்றம்
'மடை திறந்து தாவும் நதியலை நான்' - இளையராஜாவுக்கு தடை விதிக்கப்பட்ட பாடல்களில் 15 பிரபல பாடல்கள் எவை? பட மூலாதாரம்,X/ilaiyaraaja கட்டுரை தகவல் விஜயானந்த் ஆறுமுகம் பிபிசி தமிழ் 18 பிப்ரவரி 2026 வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள் 'சரிகம இந்தியா லிமிடெட் நிறுவனத்துக்கு சொந்தமான ஒலிப்பதிவுகள் மற்றும் இசை படைப்புகளை (musical works) பயன்படுத்தவோ, உரிமை கோரவோ கூடாது' என இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பிப்ரவரி 13-ஆம் தேதியன்று டெல்லி உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. 'இளையராஜாவின் இசையில் வெளியான 134 படங்களுக்கு இது பொருந்தும்' எனவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவில் பட்டியலிடப்பட்டுள்ள படங்கள் என்னென்ன? அதில் பிரபல 15 பாடல்கள் எவை? சரிகம இந்தியா லிமிடெட் நிறுவனம், இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தது. மனுவில், 'தங்கள் நிறுவனம் 1976 முதல் 2001-ஆம் ஆண்டு வரை படத்தின் தயாரிப்பாளர்களுடன் பல்வேறு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது' எனக் கூறியுள்ளது. இந்தப் படங்களின் ஒலிப்பதிவுகள், இசை படைப்புகளின் உரிமை தங்களிடம் உள்ளதாகவும் தங்களுக்கும் இளையராஜாவுக்கும் இடையே சில வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் சரிகம இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. தங்களின் பதிப்புரிமை பெற்ற படைப்புகளை பயன்படுத்துவதைத் தடுக்கும் நோக்கத்தில் இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளதாக மனுவில் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. படக்குறிப்பு,டெல்லி உயர் நீதிமன்றம் 'தயாரிப்பாளரே முதல் உரிமையாளர்' தங்களிடம் இளையராஜா இசையமைத்த 134 படங்களின் பாடல்கள் தொடர்பான ஒப்பந்தங்கள் உள்ளன என மனுவில் கூறியுள்ள சரிகம இந்தியா லிமிடெட் நிறுவனம், 'கடந்த பிப்ரவரி மாதம் அமேசான் மியூசிக், ஐ டியூன்ஸ் மற்றும் ஜியோ சாவ்ன் ஆகிய தளங்களுக்கு பாடல் உரிமையை இளையராஜா வழங்கியுள்ளார்' என்கிறது. '1957-ஆம் ஆண்டு காப்புரிமைச் சட்டத்தின்படி படத்துக்காக உருவாக்கப்படும் இசைக்கு அதன் தயாரிப்பாளரே முதல் உரிமையாளர்' என சரிகம இந்தியா லிமிடெட் நீதிமன்றத்தில் தெரிவித்தது. அந்தவகையில், பதிப்புரிமை பெற்ற படைப்புகளை மாற்றியமைக்கவும் மீண்டும் உருவாக்கவும் பொதுவில் அதனைப் பயன்படுத்தவும் தங்களுக்கே பிரத்யேக உரிமை உள்ளதாகவும் மனுவில் அந்நிறுவனம் கூறியது. பதிப்புரிமை பெற்றுள்ள பாடல்களின் மீது சட்ட மீறல்களில் இளையராஜா தரப்பு ஈடுபட்டுள்ளதாகக் கூறி அதுதொடர்பான சில ஸ்க்ரீன் ஷாட்டுகளை சரிகம இந்தியா லிமிடெட் நிறுவனம் இணைத்துள்ளது. அதில், 'கவிக்குயில்' படத்தில் இடம்பெற்ற 'சின்னக் கண்ணன் அழைக்கிறான்' பாடல், பாரதி படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள், 'ஆகாய கங்கை' ஆகிய பாடல்கள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன. பட மூலாதாரம்,Facebook/Ilaiyaraaja 'ஈடுசெய்ய இயலாத இழப்பு' - நீதிபதி வழக்கின் மனுவை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி துஷார் ராவ் கெடேலா, 'பட்டியலிடப்பட்டுள்ள திரைப்படங்களின் ஒரு பகுதியாக இருக்கும் ஒலிப்பதிவுகள், இசை ஆகியவற்றை பயன்படுத்துதல் அல்லது உரிமை கோரல்களை மேற்கொள்ளக் கூடாது' எனக் கூறி, இளையராஜா மற்றும் அவர் சார்ந்த நபர்களுக்கு இடைக்கால தடை விதித்துள்ளது. 'அவ்வாறு தடை விதிக்கப்படாமல் இருந்தால் சரிகம நிறுவனத்துக்கு ஈடுசெய்ய இயலாத இழப்பு ஏற்படும்' எனவும் உத்தரவில் நீதிபதி குறிப்பிட்டுள்ளார். வழக்கில் இளையராஜா தரப்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகாததால் நான்கு வாரங்களுக்குள் பதில் மனுவை தாக்கல் செய்யுமாறு கூறி வழக்கை ஏப்ரல் 2-ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்துள்ளார். இதுதொடர்பாக, இளையராஜாவின் வழக்கறிஞர் சரவணன் அண்ணாதுரையிடம் பிபிசி தமிழ் பேசியது. "தீர்ப்பில் கூறப்பட்டுள்ள விவரங்களைப் பார்த்த பிறகு பேசுகிறேன்" என்று அவர் பதில் அளித்தார். படக்குறிப்பு,சரவணன் அண்ணாதுரை நீதிமன்ற உத்தரவில், இளையராஜாவின் இசையில் 1976-ஆம் ஆண்டு வெளியான 'பத்திரகாளி' படம் முதல் 2001-ஆம் ஆண்டு வெளியான 'உசிரே' என்ற கன்னட படம் வரையில் பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது. 'பாரதி கண்ணம்மா' படத்தின் கன்னட ரீமேக் ஆக 2001-ஆம் ஆண்டு 'உசிரே' படம் வெளியாகியிருந்தது. தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் இளையராஜா இசையமைத்துள்ள 134 படங்களின் பட்டியலை சரிகம இந்தியா லிமிடெட் நிறுவனம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. 2000-ஆம் ஆண்டில் ஞானராஜசேகரன் இயக்கத்தில் வெளியான 'பாரதி' படத்தில் இடம்பெற்ற பாடல்களுக்கும் அந்நிறுவனம் உரிமை கோரியுள்ளது. நீதிமன்றத்தில் சரிகம இந்தியா லிமிடெட் நிறுவனம் பட்டியலிட்டுள்ள இளையராஜா இசையமைத்த பாடல்களில் 15 பிரபல பாடல்கள் எவை? 'செந்தூரப்பூவே...செந்தூரப்பூவே...' பட மூலாதாரம்,Youtube/Pyramid Glitz Music படக்குறிப்பு,'செந்தூரப்பூவே' பாடலை எஸ்.ஜானகி பாடியிருந்தார் 1977-ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் '16 வயதினிலே' படம் வெளியானது. நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த், ஸ்ரீதேவி நடித்த இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. படத்தில் இடம்பெற்ற பாடல்கள் தனிக்கவனம் பெற்றன. கங்கை அமரனின் வரிகளில் இடம்பெற்ற 'செந்தூரப்பூவே' பாடலை எஸ்.ஜானகி பாடியிருந்தார். 'ஆட்டுக்குட்டி முட்டையிட்டு கோழிக் குஞ்சு வந்ததென்ன' என்ற பாடலை மலேசியா வாசுதேவனும் எஸ்.ஜானகியும் இணைந்து பாடியிருந்தனர். இதே படத்தில் இடம்பெற்ற 'செவ்வந்தி பூ முடிச்ச சின்னக்கா...' பாடலை மலேசியா வாசுதேவன், பி.சுசீலா ஆகியோர் இணைந்து பாடியிருந்தனர். 'என் கண்மணி உன் காதலி...' 1978-ஆம் ஆண்டு தேவராஜ் - மோகன் இயக்கத்தில் 'சிட்டுக்குருவி' படம் வெளியானது. சிவக்குமார், சுமித்ரா ஆகியோர் நடித்திருந்த இந்தப் படத்தில், எஸ்.பி.பாலசுப்ரமணியம் - பி.சுசீலா பாடிய 'என் கண்மணி உன் காதலி இளமாங்கனி... உனைப் பார்த்ததும் சிரிக்கின்றதே' என்ற பாடல் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. பேருந்து பயணத்தில் காதலனும் காதலியும் பாடுவதுபோல இந்தப் பாடலின் காட்சியமைப்பு வடிவமைக்கப்பட்டிருந்தது. இதே படத்தில் 'அடடடா மாமரக் கிளியே...உன்னை இன்னும் நான் மறக்கலியே' என்ற பாடலும் 'உன்ன நம்பி நெத்தியிலே... பொட்டு வச்சேன் மத்தியிலே' ஆகிய பாடல்கள் ரசிகர்களை ஈர்த்தன. 'கோவில் மணி ஓசை தன்னைக் கேட்டதாரோ...' பட மூலாதாரம்,Youtube/GLV படக்குறிப்பு,கோவில் மணி ஓசை தன்னைக் கேட்டதாரோ பாடலின் காட்சி 1978-ஆம் ஆண்டு 'கிழக்கே போகும் ரயில்' வெளியானது. '16 வயதினிலே' படத்துக்குப் பிறகு பாரதிராஜா இயக்கிய இந்தப் படத்தில் சுதாகர், ராதிகா ஆகியோர் நடித்திருந்தனர். படத்தில் கண்ணதாசனின் வரிகளில் இடம்பெற்ற 'கோவில் மணி ஓசை தன்னைக் கேட்டதாரோ...' பாடலை மலேசியா வாசுதேவனும் எஸ்.ஜானகியும் இணைந்து பாடியிருந்தனர். இதே படத்தில் கங்கை அமரன் எழுதிய 'பூவரசம் பூ பூத்தாச்சு...' பாடல், ஜெயச்சந்திரனின் குரலில் இடம்பெற்ற 'மாஞ்சோலை கிளிதானா...மான்தானோ...வேப்பம்தோப்பு குயிலும் நீதானோ' ஆகிய பாடல்களை ரசிகர்கள் கொண்டாடினர். 'செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்...' 1978-ஆம் ஆண்டு மகேந்திரன் இயக்கிய 'முள்ளும் மலரும்' படம், எழுத்தாளர் உமா சந்திரன் எழுதிய நாவலின் கதையை மையமாக வைத்து உருவாகியிருந்தது. படத்தில் கண்ணதாசனின் வரிகளில் உருவான 'செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்...' பாடலை கே.ஜே.யேசுதாஸ் பாடியிருந்தார். இது ரசிகர்களின் விருப்பப் பாடலாக மாறியது. அடுத்து, பஞ்சு அருணாச்சலத்தின் வரிகளில் இடம்பெற்ற 'அடி பெண்ணே...பொன்னூஞ்சல் ஆடும் இளமை...வண்ணங்கள் தோன்றும் இயற்கை' என்ற பாடலை ஜென்சி பாடியிருந்தார். இதே படத்தில் கங்கை அமரன் எழுதிய இரு பாடல்கள் வரவேற்பைப் பெற்றன. அவர் எழுதிய 'நித்தம் நித்தம் நெல்லு சோறு... நெய் மணக்கும் கத்திரிக்காய்... நேத்து வச்சு மீன் குழம்பு என்னை இழுக்குதய்யா' என்ற பாடலை வாணி ஜெயராம் பாடியிருந்தார். அடுத்து, 'ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்...' பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியமும் எல்.ஆர்.அஞ்சலியும் இணைந்து பாடியிருந்தனர். பட மூலாதாரம்,x படக்குறிப்பு,இளையராஜா இசையமைத்த பல பாடல்களுக்கு கங்கை அமரன் வரிகளை எழுதியுள்ளார். 'ஆகாய கங்கை... பொன்தேன் மலர் சோலை' 1979-ஆம் ஆண்டு ஆர்.சி.சக்தி இயக்கத்தில் 'தர்மயுத்தம்' படம் வெளியானது. ரஜினிகாந்த், ஸ்ரீதேவி நடித்திருந்த இந்தப் படத்தில் 'ஆகாய கங்கை பொன்தேன் மலர் சோலை...' என்ற பாடல் வரவேற்பைப் பெற்றது. எம்.ஜி.வல்லபனின் வரிகளில் இடம்பெற்ற இந்தப் பாடலை மலேசியா வாசுதேவனும் எஸ்.ஜானகியும் இணைந்து பாடியிருந்தனர். இதே படத்தில் இடம்பெற்ற 'ஒரு தங்க ரதத்தில் பொன் மஞ்சள் நிலவு' பாடலும் ரசிகர்களை ஈர்த்தது. கண்ணதாசனின் வரிகளில் இடம்பெற்றிருந்த இந்தப் பாடலை மலேசியா வாசுதேவன் பாடியிருந்தார். 'ஆயிரம் மலர்களே... அமுத கீதம் பாடுங்கள்' பட மூலாதாரம்,Youtube/pyramid music படக்குறிப்பு,ஆயிரம் மலர்களே பாடலின் காட்சி 1979-ஆம் ஆண்டு வெளிவந்த 'நிறம் மாறாத பூக்கள்' படத்தை பாரதிராஜா இயக்கியிருந்தார். இந்தப் படத்தில் சுதாகர், ராதிகா, விஜயன் ஆகியோர் நடித்திருந்தனர். படத்தில் 'ஆயிரம் மலர்களே... மலருங்கள்... அமுதகீதம் பாடுங்கள்' என்ற பாடலை ஜென்சி, எஸ்.பி.சைலஜா, மலேசியா வாசுதேவன் ஆகியோர் இணைந்து பாடியிருந்தனர். பாடலை பஞ்சு அருணாச்சலம் எழுதியிருந்தார். 'மலர்களில் ஆடும் இளமை புதுமையே' கமல்ஹாசன் ஸ்ரீதேவி நடிப்பில் 1979-ஆம் ஆண்டு 'கல்யாணராமன்' படம் வெளியானது. ஜி.என்.ரங்கநாதன் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அதிக வரவேற்பைப் பெற்றன. மலேசியா வாசுதேவன் பாடிய 'ஆஹா வந்துருச்சு....காதல் வந்துருச்சு... ஆசையில் ஓடிவந்தேன்' பாடல், 'காதல் தீபம் ஒன்று நெஞ்சிலே ஏற்றி வைத்தேன்...' பாடலும் எஸ்.பி.சைலஜா பாடிய 'மலர்களில் ஆடும் இளமை புதுமையே.. மனதுக்குள் ஓடும் நினைவு இனிமையே...' ஆகியவை கவனம் பெற்றன. 'உச்சி வகுந்தெடுத்து பிச்சிப் பூ வச்சு கிளி..' 1979-ஆம் ஆண்டு வெளியான 'ரோசாப்பூ ரவிக்கைக்காரி' படத்தில் சிவகுமார், தீபா உன்னிமேரி உள்பட பலர் நடித்திருந்தனர். படத்தில் எஸ்.பி.பாலசுப்ரமணியமும் எஸ்.பி.சைலஜாவும் இணைந்து பாடிய 'உச்சி வகுந்தெடுத்து பிச்சிப் பூ வச்சு கிளி...' பாடலும் 'மாமன் ஒருநாள் மல்லிகைப் பூ கொடுத்தான்...' என்ற பாடல்கள் ரசிகர்களை ஈர்த்தன. 'சிறு பொன்மணி அசையும் அதில் தெறிக்கும் புது இசையும்...' 1980-ஆம் ஆண்டு வெளியான 'கல்லுக்குள் ஈரம்' படத்தை எஸ்.பி.நிவாஸ் இயக்கியிருந்தார். படத்தில் பாரதிராஜா, சுதாகர், அருணா ஆகியோர் நடித்திருந்தனர். கங்கை அமரனின் வரிகளில் இடம்பெற்ற 'சிறு பொன்மணி அசையும் அதில் தெறிக்கும் புது இசையும்... இரு கண்மணி பொன் இமைகளில் தாள லயம்..' பாடலை மலேசியா வாசுதேவனும் எஸ்.ஜானகியும் இணைந்து பாடியிருந்தனர். 'பொதுவாக என் மனசு தங்கம்...' பட மூலாதாரம்,Youtube/AP international படக்குறிப்பு,பொதுவாக என் மனசு தங்கம் பாடலின் காட்சி எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் 1980-ஆம் ஆண்டு 'முரட்டுக்காளை' படம் வெளியானது. ரஜினிகாந்த், ரதி அக்னிஹோத்ரி ஆகியோர் நடித்திருந்த இந்தப் படத்தில் இடம்பெற்ற பாடல்கள் இன்றளவும் வரவேற்பைப் பெற்று வருகின்றன. பஞ்சு அருணாச்சலத்தின் வரிகளில் இடம்பெற்ற 'பொதுவாக என் மனசு தங்கம்... ஒரு போட்டியின்னு வந்துவிட்டா சிங்கம்...' பாடலை மலேசியா வாசுதேவன் பாடியிருந்தார். 'எந்தப் பூவிலும் வாசம் உண்டு... எந்தப் பாட்டிலும் ராகம் உண்டு...' என்ற பாடலையும் பஞ்சு அருணாச்சலம் எழுதியிருந்தார். இந்தப் பாடலுக்கு எஸ்.ஜானகியின் குரல் தனி அழகைக் கொடுத்தது. 'மடை திறந்து தாவும் நதியலை நான்...' பாரதிராஜா இயக்கத்தில் 1980-ஆம் ஆண்டு 'நிழல்கள்' படம் வெளியானது. இந்தப் படத்தில் சந்திரசேகர், ரோகிணி, ராஜசேகர் உள்பட பலர் நடித்திருந்தனர். படத்தில் வாலியின் வரிகளில் இடம்பெற்ற 'மடை திறந்து தாவும் நதியலை நான்... மனம் திறந்து கூவும் சிறு குயில் நான்...' பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடியிருந்தார். கங்கை அமரனின் வரிகளில் இடம்பெற்ற 'பூங்கதவே தாழ் திறவாய்...' பாடலும் வைரமுத்து எழுதிய 'இது ஒரு பொன்மாலைப் பொழுது... வான மகள் நாணுகிறாள்..' ஆகிய பாடல்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தன. 'சின்னஞ்சிறு வயதில் எனக்கோர்...' 1981-ஆம் ஆண்டு ஜி.என்.ரங்கநாதன் இயக்கத்தில் 'மீண்டும் கோகிலா ' படம் வெளியானது. கமல்ஹாசன், ஸ்ரீதேவி ஆகியோர் நடித்த இந்தப் படத்தில் 'சின்னஞ்சிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோணுதடி...' என்ற பாடலை கே.ஜே.யேசுதாசும் எஸ்.பி.சைலஜாவும் இணைந்து பாடியிருந்தனர். இதே படத்தில் இடம்பெற்ற 'ராதா.. ராதா.. நீ எங்கே.. கண்ணன் எங்கே... நான் அங்கே' என்ற பாடலை எஸ்.பி.பாலசுப்ரணியமும் எஸ்.ஜானகியும் இணைந்து பாடியிருந்தனர். 'ராமனின் மோகனம்... ஜானகி மந்திரம்...' பட மூலாதாரம்,Youtube/ Bayshore Records படக்குறிப்பு,ராமனின் மோகனம்... ஜானகி மந்திரம் பாடலின் காட்சி 1981-ஆம் ஆண்டு எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் 'நெற்றிக்கண்' படம் வெளியானது. இந்தப் படத்தில் தந்தை - மகன் என இரு வேடங்களில் ரஜினிகாந்த் நடித்திருந்தார். படத்தில் கே.ஜே.யேசுதாஸ், ஜானகி ஆகியோர் இணைந்து பாடிய 'ராமனின் மோகனம்... ஜானகி மந்திரம்... ராமாயணம்...பாராயணம்... காதல் மங்கலம்' பாடலும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய 'தீராத விளையாட்டு பிள்ளை... இவன் சிங்கார மன்மதன் தான் சந்தேகம் இல்லை..' பாடலும் வரவேற்பைப் பெற்றன. இப்படத்தில் இடம்பெற்ற 'மாப்பிள்ளைக்கு மாமன் மனசு...' என்ற பாடலை மலேசியா வாசுதேவனும் பி.சுசீலாவும் இணைந்து பாடியிருந்தனர். 'அந்தி மழைபொழிகிறது...' 1981-ஆம் ஆண்டு சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் 'ராஜ பார்வை' படம் வெளியானது. இந்தப் படத்தில் கமல்ஹாசன், மாதவி ஆகியோர் நடித்திருந்தனர். படத்தில் வைரமுத்துவின் வரிகளில் இடம்பெற்ற 'அந்தி மழைபொழிகிறது... ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது' பாடல் அதிக கவனம் பெற்றது. இந்தப் பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியமும் எஸ்.ஜானகியும் இணைந்து பாடியிருந்தனர். 'தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி..' பாக்கியராஜ் இயக்கத்தில் 1982-ஆம் ஆண்டு 'தூறல் நின்னு போச்சு' படம் வெளியானது. இந்தப் படத்தில் பாக்கியராஜ், சுலோசனா, நம்பியார் உள்பட பலர் நடித்திருந்தனர். படத்தில் கே.ஜே.யேசுதாஸ் பாடிய 'ஏரிக்கரை பூங்காற்றே... நீ போற வழி தென்கிழக்கோ' பாடலை சிதம்பரநாதன் எழுதியிருந்தார். இதே படத்தில் வைரமுத்துவின் வரிகளில் 'தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி தானே கொஞ்சியதோ...' பாடலும் முத்துலிங்கம் வரிகளில் 'பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்' பாடலும் ரசிகர்களிடம் அதிக வரவேற்பைப் பெற்றன. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cm2xe7e812po
-
டெல்லியில் பூத்த இராஜதந்திர நட்பு: பாரத் மண்டபத்தில் ஜனாதிபதிக்கு விருந்து!
டெல்லியில் பூத்த இராஜதந்திர நட்பு: பாரத் மண்டபத்தில் ஜனாதிபதிக்கு விருந்து! Feb 19, 2026 - 07:24 AM ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. நேற்று (18) இரவு புதுடெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. "AI Impact Summit 2026" உச்சிமாநாட்டில் கலந்துகொள்வதற்காக இந்தியா சென்றுள்ள சந்தர்ப்பத்திலேயே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இந்தியப் பிரதமருக்கும் இடையில் இந்தச் சந்திப்பு நிகழ்ந்துள்ளது. இதன்போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியினால் வழங்கப்பட்ட விசேட இரவு விருந்துபசாரத்திலும் ஜனாதிபதி கலந்துகொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. "AI Impact Summit 2026" உச்சிமாநாட்டில் கலந்துகொள்வதற்காக இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று (19) அந்த மாநாட்டில் உரையாற்றத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பிற்கு இணங்க, இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி கடந்த 17 ஆம் திகதி நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றார். செயற்கை நுண்ணறிவை (AI) மனித குலத்தின் நன்மைக்காகப் பொறுப்புடன் பயன்படுத்தும் நோக்கில், அரச தலைவர்கள் மற்றும் உலகின் தொழில்நுட்பத் துறையின் பிரதானிகளின் பங்கேற்புடன் புதுடெல்லியில் இந்த உச்சிமாநாடு நடைபெறுகிறது. ஐந்து நாட்கள் நடைபெறும் இம்மாநாட்டில் 20 நாடுகளின் அரச தலைவர்கள் மற்றும் 45 இற்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. https://adaderanatamil.lk/news/cmlst1she000i356n40tfllzd
-
தமிழ் அரசியல் கட்சித் தலைவர்களுடன் பிரிட்டன் துணைப் பிரதமர் சந்திப்பு : நல்லிணக்கம் மற்றும் நீதியியல் விடயங்கள் குறித்து கலந்துரையாடல்
தமிழ்த் அரசியல் கட்சித் தலைவர்களுடன் பிரிட்டன் துணைப் பிரதமர் சந்திப்பு : நல்லிணக்கம் மற்றும் நீதியியல் விடயங்கள் குறித்து கலந்துரையாடல் Published By: Vishnu 18 Feb, 2026 | 06:47 PM (வீ.பிரியதர்சன்) இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஐக்கிய இராச்சியத்தின் துணைப் பிரதமர் டேவிட் லாமி, தமிழ்த் அரசியல் கட்சித் தலைவர்களுடன் நேற்று சந்தித்து முக்கிய கலந்துரையாடலில் ஈடுபட்டார். இந்த சந்திப்பில் இலங்கைக்கான பிரிட்டனின் உயர்ஸ்தானிகர் ஆண்ட்றூ பற்றிக் உடனிருந்தார். கலந்துரையாடலின் போது நல்லிணக்கம், சர்வதேச நீதியியல் (Transnational Justice), மற்றும் தமிழர் சமூகங்கள் எதிர்கொள்ளும் தொடர்ச்சியான பிரச்சினைகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழர் பிரதிநிதிகளின் குரல்கள் தொடர்ந்து கேட்கப்படுவதை உறுதிப்படுத்துவதிலும், நீதி மற்றும் சமத்துவத்தை முன்னிறுத்துவதிலும், அர்த்தமுள்ள முன்னேற்றத்துக்கு ஆதரவு வழங்குவதிலும் ஐக்கிய இராச்சியம் உறுதியாக இருப்பதாக பிரிட்டன் தரப்பு வலியுறுத்தியுள்ளது. இலங்கையில் நிலையான நல்லிணக்கமும், சமூக நீதி நடைமுறைகளும் உறுதிப்படுத்தப்பட வேண்டிய அவசியம் குறித்து இருதரப்பினரும் கருத்து பரிமாறிக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. https://www.virakesari.lk/article/238989
-
டெல்லி ஏஐ மாநாட்டின் தொடக்க நாள் 'குழப்பம்' - சர்வதேச ஊடகங்கள் விவாதிப்பது என்ன?
டெல்லி ஏஐ மாநாட்டின் தொடக்க நாள் 'குழப்பம்' - சர்வதேச ஊடகங்கள் விவாதிப்பது என்ன? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,டெல்லியின் பாரத் மண்டபத்தில் பிப்ரவரி 16-ஆம் தேதி தொடங்கிய ஏஐ உச்சிமாநாடு பிப்ரவரி 20 வரை நடைபெறும். 41 நிமிடங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள் டெல்லியில் நடந்துவரும் ஏஐ உச்சிமாநாட்டின் தொடக்க நாளில் (திங்கள் கிழமை) கலந்துகொண்டவர்களுக்கு ஏற்பட்ட அசௌகரியங்களுக்காக மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் செவ்வாய்க்கிழமை வருத்தம் தெரிவித்திருந்தார். அதே நேரத்தில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மோதி அரசாங்கத்தின் "முழுமையான குழப்பம் மற்றும் கடுமையான நிர்வாகச் சீர்கேடு" என விமர்சித்துள்ளார். இந்த உச்சிமாநாட்டின் தொடக்கத்தின்போது நிரம்பி வழிந்த அரங்குகள், நீண்ட வரிசைகள், பலவீனமான இணைய இணைப்பு மற்றும் நுழைவுக்கான அறிவுறுத்தல்களில் குழப்பமான நிலை ஆகியவை காணப்பட்டன. அதிகப்படியான கூட்டம் காரணமாகப் பாதுகாப்புப் பரிசோதனை செயல்முறையினாலும் மக்களுக்குப் பெரும் சிரமங்கள் ஏற்பட்டன. பிரதமர் நரேந்திர மோதி மாநாட்டின் எக்ஸ்போவுக்கு வருவதற்கு முன்னதாக சில அரங்குகள் தற்காலிகமாக காலி செய்யப்பட்டன. குழப்பங்களுக்கு மத்தியில் சில பங்கேற்பாளர்கள் தங்களது பொருட்கள் காணாமல் போனது அல்லது திருடப்பட்டது குறித்தும் புகார் அளித்தனர். ரோபோ நாய் குறித்த சர்ச்சை தவிர, இந்தியாவின் ஒரு பல்கலைக்கழகம் ஏஐ உச்சிமாநாட்டில் ஒரு ரோபோ நாயைத் தன்னுடைய தயாரிப்பு என்று கூறிக்கொண்டது, ஆனால் அது சீனாவைச் சேர்ந்தது. இது குறித்தும் சமூக வலைதளங்களில் பலத்த விமர்சனங்கள் எழுந்தன. விமர்சனங்களுக்குப் பிறகு, அந்த ரோபோ நாயைத் தாங்கள் உருவாக்கவில்லை என்று கல்கோடியாஸ் பல்கலைக்கழகம் செவ்வாய்க்கிழமை விளக்கமளித்தது. முன்பு வெளியான செய்தியை "தகவல் தொடர்பு பிழை" என்று கூறியது. மேலும் மாநாட்டில் இருந்த தனது ஸ்டாலில் இருந்து வெளியேறியது. Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading அதிகம் படிக்கப்பட்டது மோதி அழைப்பை ஏற்க வங்கதேச புதிய பிரதமர் தாரிக் ரஹ்மான் தயங்குவது ஏன்? ஹசீனாவை தங்க வைத்துள்ள இந்தியா வங்கதேசத்தின் புதிய அரசுடன் உறவை எவ்வாறு பராமரிக்கும்? பாகிஸ்தானுக்கு வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட 3 இந்தியர்கள் - 30 மாதங்கள் அங்கு என்ன செய்தனர்? பாலியல் சித்ரவதை செய்யப்பட்ட சிறுமியை மீட்க துப்பறிவாளருக்கு 'செங்கல்' உதவியது எப்படி? End of அதிகம் படிக்கப்பட்டது நியோசேபியன் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தனஞ்சய் யாதவ் எக்ஸ் தளத்தில், பிரதமரின் வருகைக்கு முன்னதாகப் பாதுகாப்புப் பணியாளர்கள் அரங்கைக் காலி செய்யச் சொன்னதாகவும், பொருட்கள் பாதுகாப்பாக இருக்கும் என்று உறுதியளித்ததாகவும் எழுதியுள்ளார். பின்னர் நிறுவனத்தின் சில அணியக்கூடிய செயற்கை நுண்ணறிவுச் சாதனங்கள் திருடப்பட்டதாக அவர் குற்றம் சாட்டினார். தனஞ்சய் யாதவ் எக்ஸ் தளத்தில், "யோசித்துப் பாருங்கள், நாங்கள் விமானம், தங்குமிடம் மற்றும் பூத் வரை அனைத்திற்கும் செலவழித்துள்ளோம். பலத்த பாதுகாப்பு இருந்த இடத்திலிருந்தே எங்களது அணியக்கூடிய சாதனங்கள் மாயமாகிவிட்டன. பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் அதிகாரப்பூர்வ குழுவினருக்கு மட்டுமே அனுமதி இருந்தது என்றால், இது எப்படி நடந்தது? இது மிகவும் ஏமாற்றமளிக்கிறது" என்று பதிவிட்டுள்ளார். ரீஸ்கில் நிறுவனர் புனீத் ஜெயின் ஆரம்பக்கால குழப்பங்களை விமர்சித்து, பல பிரதிநிதிகள் தண்ணீர் மற்றும் தெளிவான அறிவுறுத்தல்கள் இன்றி வெளியே நின்று கொண்டிருந்ததாகக் கூறினார். இருப்பினும், செவ்வாய்க்கிழமை நிலைமை மேம்பட்டதை அவர் ஏற்றுக்கொண்டார். தொழில்முனைவோர் பிரியான்ஷு ரத்னாகர் என்பவரும் நீண்ட வரிசைகள், அரங்குகளை அணுகுவதில் சிரமங்கள், பலவீனமான இணைய இணைப்பு மற்றும் பதிவு தொடர்பான சிக்கல்களைக் குறிப்பிட்டு, செயல்பாட்டை விட 'காட்சிப்படுத்தல்' (Show-off) அதிகமாக இருந்ததாகக் கூறினார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அசௌகரியங்களுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார். வெளிநாட்டு ஊடகங்களிலும் விவாதம் இது ஒரு சர்வதேச நிகழ்வு மற்றும் இதில் 20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர். இத்தகைய சூழ்நிலையில், சர்வதேச ஊடகங்களின் பார்வையும் இந்த உச்சிமாநாட்டின் மீது உள்ளது. வெளிநாட்டு ஊடகங்களில் இந்த உச்சிமாநாடு பல காரணங்களுக்காக விவாதிக்கப்படுகிறது. அமெரிக்க ஊடகமான ப்ளூம்பெர்க், "சமீபத்திய ஆண்டுகளில் இந்தியாவின் மிகப்பெரிய வணிக உச்சிமாநாடு இந்த வாரம் குழப்பத்தில் சிக்கியது. திடீர் பாதுகாப்பு கெடுபிடிகள் காரணமாக நூற்றுக்கணக்கான பிரதிநிதிகள் உணவு மற்றும் தண்ணீர் இன்றி சிக்கித் தவித்தனர். ஏஐ துறையில் நாட்டின் முன்னேற்றத்தைப் பறைசாற்றுவதை நோக்கமாகக் கொண்ட அந்த நிகழ்விற்கு இது ஒரு பின்னடைவாகும்," என எழுதியது. "இந்தியா ஏஐ உச்சிமாநாட்டின் முதல் நாளில் நிலவிய குழப்பங்களுக்குப் பிறகு, செவ்வாய்க்கிழமை நிலைமை சீராவது தெரிந்தது. செவ்வாய்க்கிழமை பங்கேற்பாளர்கள் டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தின் பிரமாண்டமான கண்காட்சி வளாகத்தின் ஹால்களுக்கு இடையே தடையின்றி நடமாடுவதைக் காண முடிந்தது." ப்ளூம்பெர்க் தனது செய்தியில், "கென்யாவிலிருந்து வந்த மோசஸ் திகாவுக்கு இந்த உச்சிமாநாட்டின் அளவு வியக்கத்தக்கதாக உள்ளது. பன்னாட்டு நிறுவனங்களின் இருப்பு அவரைக் கவர்ந்தது. தொடக்க நாளில் நூற்றுக்கணக்கான பங்கேற்பாளர்கள் பல மணிநேரம் வளாகத்திற்குள் அடைக்கப்பட்டு அல்லது வெளியே நிறுத்தப்பட்டதால் நிலவிய குழப்பங்கள் குறித்து அவருக்கு எந்த குறையும் இல்லை," என்று எழுதியுள்ளது. பிரதமர் நரேந்திர மோதி அங்கு வரும் வரை அனைத்தும் சீராக நடந்ததாக திகா கூறினார். மோதியுடன் வந்த பாதுகாப்புப் படை முழு வளாகத்தையும் சீல் வைத்தது. நடமாட்டத்திற்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. மோதி செல்லும் வரை தாங்கள் பல மணிநேரம் உணவு மற்றும் தண்ணீர் இன்றி உள்ளேயே இருந்ததாகப் பல பங்கேற்பாளர்கள் தெரிவித்தனர். பட மூலாதாரம்,Getty Images 'திறன் குறித்து சந்தேகம்' ராய்ட்டர்ஸ் தனது செய்தியில், இந்தியா எந்த நோக்கத்திற்காக ஏஐ உச்சிமாநாட்டை நடத்தியதோ, அதற்கு மாறாகத் திங்கள்கிழமை விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது என்று எழுதியுள்ளது. பங்கேற்பாளர்கள் நீண்ட வரிசைகள், கூட்ட நெரிசல் மற்றும் ஏற்பாடுகள் தொடர்பான குறைபாடுகள் குறித்துப் பல புகார்களைத் தெரிவித்துள்ளதாக ராய்ட்டர்ஸ் எழுதியுள்ளது. "பிரதமர் நரேந்திர மோதி அரசாங்கத்திற்கு, சர்வதேச அளவிலான இந்த நிகழ்வில் ஏற்பட்ட குழப்பம் என்பது வெறும் பிம்பம் சார்ந்த கேள்வி மட்டுமல்ல, மாறாக ஏற்பாட்டு ரீதியான குறைபாடுகள் இந்தியாவின் தொழில்நுட்பத் திறன் குறித்த செய்தியையும் பாதிக்கும் அபாயத்தை உருவாக்கியது." ஏஐ வாய்ஸ் ஸ்டார்ட்அப் நிறுவனமான 'போல்னா' வின் இணை நிறுவனர் மைத்ரேய வாக் எக்ஸ் தளத்தில், "வாயில்கள் மூடப்பட்டுள்ளன, எனவே ஏஐ உச்சிமாநாட்டில் எனது சொந்த பூத் வரை கூட என்னால் செல்ல முடியவில்லை. நீங்களும் வெளியே சிக்கியிருந்து போல்னா குழுவைச் சந்திக்க விரும்பினால், எனக்கு டிஎம் செய்யுங்கள்" என்று எழுதியுள்ளார். அவர் கிண்டலாக, "ஒருவேளை நாம் கன்னாட் பிளேஸில் உள்ள ஏதேனும் ஒரு கஃபேயில் ஒரு சிறிய மினி-பூத் அமைத்துக் கொள்ளலாம்" என்றார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,பிப்ரவரி 16-ஆம் தேதி உச்சிமாநாட்டின் தொடக்க நாளில் குழப்பமான சூழல் நிலவியது. இந்தியா எதைச் சாதிக்க முடியும்? பைனான்சியல் டைம்ஸ் இந்தியாவின் ஏஐ குறிக்கோள்கள் குறித்துக் கேள்விகளை எழுப்பியுள்ளது. தனது செய்தியில், "இந்தியாவின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான செலவு கடந்த தசாப்தத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.7 சதவீதத்திற்கும் கீழே வந்துவிட்டது, இது சீனாவின் 2.5 சதவீதம் மற்றும் அமெரிக்காவின் 3.5 சதவீதத்துடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவு" என்று எழுதியுள்ளது. "இதில் பெரும்பகுதி செலவு பாதுகாப்பு ஆராய்ச்சிக்குச் செலவிடப்படுகிறது, இதனால் மக்களுக்கான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளுக்குக் குறைந்த அளவிலான வளங்களே மிஞ்சுகின்றன. 2022-இல் மின்னணு அமைச்சகத்திற்கு ஒட்டுமொத்த ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு செலவில் வெறும் இரண்டு சதவீதம் மட்டுமே கிடைத்தது." "இந்தியாவின் தனியார் துறையும் ஏஐ விவகாரத்தில் மந்தமாகவே உள்ளது. கடந்த ஆண்டு வரை கூட தொழில்துறையின் சில மூத்த தலைவர்கள் இந்தியா தனது சொந்த பெரிய மொழி மாதிரிகளை உருவாக்க வேண்டுமா என்ற கேள்வியை எழுப்பினர் மற்றும் ஏஐ வளர்ச்சியை சிப் தயாரிப்பாளர்களால் பெரிதாக ஊதப்பட்ட பிரசாரம் என்று குறிப்பிட்டனர்.'' என எழுதியுள்ளது "இந்தியா உலகத் தலைவர்களை ஒரே மேடையில் கொண்டு வந்து வளர்ச்சிக்காக ஏஐ-யை ஆதரிக்க முடியும். ஆனால் நிகழ்வை நடத்துவதால் மட்டும் ஏஐ பந்தயத்தில் சமநிலையைப் பெற முடியாது," "ஏஐ உச்சிமாநாட்டை ஒரு ராஜீய காட்சியிலிருந்து அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்ல வேண்டுமென்றால், இந்தியா உறுதியான உள்நாட்டு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். வெளிநாட்டுத் தொழில்நுட்பச் சூழலைச் சார்ந்து இருந்துகொண்டு இந்தியா உலகளாவிய தெற்கு பகுதியில் செயற்கை நுண்ணறிவில் முன்ன்னிலையில் இருப்பதாக கூறிக்கொள்ள முடியாது." என பைனான்சியல் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,20 நாடுகளின் அதிபர்கள், பிரதமர்கள் மற்றும் துணை அதிபர்கள் டெல்லி ஏஐ இம்பாக்ட் உச்சிமாநாட்டிற்கு வந்துள்ளனர் 'சவால் விடுவதற்கான ஒரு படி' சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் குரலாகக் கருதப்படும் ஆங்கில நாளிதழான குளோபல் டைம்ஸ், "அமெரிக்கா மற்றும் சீனாவுடனான ஏஐ இடைவெளியைக் குறைப்பதற்கான பந்தயத்தில், இந்தியா பெரிய அளவில் டிஜிட்டல் வளர்ச்சியை வேகப்படுத்த ஒரு பிரமாண்டமான புதிய 'டேட்டா சிட்டி' திட்டத்தைத் தீட்டி வருகிறது." என கூறியுள்ளது. பெய்ஜிங் தபால் மற்றும் தொலைத்தொடர்பு பல்கலைக்கழகத்தின் மனித-இயந்திர தொடர்பு மற்றும் அறிவாற்றல் பொறியியல் ஆய்வகத்தின் இயக்குநர் லியூ வெய் செவ்வாய்க்கிழமை குளோபல் டைம்ஸிடம், ''இந்த உச்சிமாநாடு உலகளாவிய ஏஐ போட்டியில் இந்தியாவின் தீவிரப் பங்களிப்பு முயற்சிகளையும் வேகத்தையும் பிரதிபலிக்கிறது மற்றும் வளர்ந்த நாடுகளின் நீண்டகால ஆதிக்கத்திற்குச் சவால் விடுவதற்கான ஒரு படியாகும்'' என்றார். "ஏஐ துறையில் இந்தியா இன்னும் நெடுந்தொலைவு செல்லவேண்டியுள்ளது," என குளோபல் டைம்ஸ் எழுதியுள்ளது, "இந்தியா ஈர்க்கக்கூடிய ஒரு செயல் திட்டத்தை முன்வைத்துள்ளது, ஆனால் அடிப்படை ஆராய்ச்சி, கணினி ஆதாரங்கள், திறமைகளின் ஆழம் மற்றும் சூழல் அமைப்பின் முதிர்ச்சி தொடர்பான சவால்கள் காரணமாகத் தனது முழுமையான ஏஐ திறனை அடையத் தொடர்ச்சியான முயற்சிகளும் சர்வதேச ஒத்துழைப்பும் தேவைப்படும்," என்று லியூ கூறுகிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c8xy8jqpjyzo
-
மனைவியை சரமாரியாகக் தாக்கிய கணவன்!
அண்ணை, இந்நிலையில் நேற்றைய தினம் இரவு வழமை போன்று தனது வியாபர நிலையத்தில் வியாபர நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வேளை கணவன், மதுபோதையில் கையில் மதுபான போத்தலுடன் வியாபர நிலையத்தினுள் புகுந்து மனைவி மீது மது போத்தலால் தலையில் தாக்கியுள்ளார். அதில் போத்தல் உடைந்ததும், உடைந்த கண்ணாடி போத்தலால் வயிறு, நெஞ்சு உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.
-
பாடசாலைக் கட்டடங்களில் அவசர கால வெளியேற்றப் பாதை இன்மை தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு
இதுபோல ஆபத்துகால முன்னாயத்த கருவிகள் ஏதாவது பாடசாலைகளில் இருக்கிறதா? பக்கவாதம் ஏற்பட்டவுடன் விழுங்க வேண்டிய லோடிங் டோஸ் மருந்துகள், மாரடைப்பால் ஏற்படும் இதய செயலிழப்பில் இருந்து மீட்கக்கூடிய சிபிஆர் சிகிச்சை எல்லோரும் கற்றுக்கொள்ள வேண்டும்.
-
மனைவியை சரமாரியாகக் தாக்கிய கணவன்!
குடும்ப தகராறு ; பிரிந்து வாழும் மனைவியை போத்தலால் குத்திய கணவன் Published By: Digital Desk 3 18 Feb, 2026 | 04:56 PM குடும்ப தகராறினால் தன்னை பிரிந்து வாழும் மனைவியின் வர்த்தக நிலையத்தினுள் அத்துமீறி நுழைந்து, மனைவியை மதுபான போத்தலால் குத்தி காயங்களை ஏற்படுத்தி விட்டு கணவன் தப்பி சென்றுள்ளார். நாகர்கோவில் பகுதியில் செவ்வாய்க்கிழமை (17) இரவு இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, குடும்ப தகராறினால் கணவனை விட்டு பிரிந்து பிள்ளைகளுடன் தாக்குதலுக்கு இலக்கான பெண் வாழ்ந்து வந்துள்ளார். ஆசிரியரான குறித்த பெண்,மேலதிக வருவாயை பெறும் நோக்குடன் வீட்டின் முன்பாக சிறிய வியாபர நிலையம் ஒன்றினையும் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் நேற்றைய தினம் இரவு வழமை போன்று தனது வியாபர நிலையத்தில் வியாபர நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வேளை கணவன், மதுபோதையில் கையில் மதுபான போத்தலுடன் வியாபர நிலையத்தினுள் புகுந்து மனைவி மீது மது போத்தலால் தலையில் தாக்கியுள்ளார். அதில் போத்தல் உடைந்ததும், உடைந்த கண்ணாடி போத்தலால் வயிறு, நெஞ்சு உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். காயமடைந்த பெண்ணை அங்கிருந்தவர்கள் மீட்டு, பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். தாக்குதலை நடாத்தி விட்டு தப்பி சென்ற அப்பெண்ணின் கணவனை கைது செய்ய பொலிஸார் தீவிர நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். தாய் மீது தந்தை தாக்குதலை நடத்துவதை தடுக்கும் முகமாக அவர்களது சிறுவயது மகன் தந்தையை தடுக்கும் காட்சிகள் கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமராக்களில் பதிவாகி இருந்த நிலையில், அந்த காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. https://www.virakesari.lk/article/238975
-
தனித்து விடப்படும் முதியவர்கள்
பராமரிப்புத் தொழிலை ஒரு கேவலமான தொழிலாக கருதுவோரும் உளர். பராமரிப்புத் துறை சார்ந்து பயிற்றுவிப்பும் அதன் பின்னான தொழில் வாய்ப்பும் நல்ல சம்பளமும் இபிஎப், ஈரிஎப் உரிமைகளும் நிலை நாட்டப்பட வேண்டும்.
-
மனைவியை சரமாரியாகக் தாக்கிய கணவன்!
மனைவியை சரமாரியாகக் தாக்கிய கணவன்! Feb 18, 2026 - 03:43 PM கணவனால் சரமாரியாகக் தாக்கப்பட்ட மனைவி படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நாகர்கோவில் பகுதியில் நேற்று (17) இரவு 7.20 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஆசிரியையான குறித்த பெண், வர்த்தக நிலையம் ஒன்றையும் நடத்தி வந்துள்ளார். சம்பவத்தன்று வர்த்தக நிலையத்திற்குள் புகுந்த கணவர், மனைவியின் தலை, வயிறு மற்றும் நெஞ்சுப் பகுதிகளில் சரமாரியாகக் தாக்கியுள்ளார். தாக்குதலை நடத்திய பின்னர் கணவர் தப்பியோடியுள்ளார், எனினும் இந்த தாக்குதலுக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை சம்பத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணைகளை மருதங்கேணி பொலிஸார் முன்னெடுத்த வருகின்றனர். -யாழ். நிருபர் பிரதீபன்- https://adaderanatamil.lk/news/cmlrvh2eh0004356n6qsq4di6
-
'ஹைப்பர்பேரிக் ஆக்சிஜன் தெரபி' சிறப்பு சிகிச்சை!
காயத்திலிருந்து 'விரைவில்' மீள ரிஷப் பண்ட் எடுத்து வரும் சிறப்பு சிகிச்சை என்ன? பட மூலாதாரம்,Getty Images 2 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள் மார்ச் இறுதியில் தொடங்கவுள்ள ஐபிஎல் 2026 தொடருக்கு முன்னதாக, இந்திய விக்கெட் கீப்பரும் பேட்டருமான ரிஷப் பண்ட், 'ஹைப்பர்பேரிக் ஆக்சிஜன் தெரபி' எனும் ஆக்சிஜன் சிகிச்சை எடுத்து வருகிறார். கடந்த ஆண்டு ஜூலை மாதம் இந்தியா - இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் தொடரின் போது, ரிஷப் பண்ட்-க்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது. அப்போது ஒருவரின் தோளில் கைவைத்தபடி, ஒரு காலில் நடந்தவாறு அவர் மைதானத்தை விட்டு வெளியேறிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது. அதற்கு முன்னதாக, லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் விக்கெட் கீப்பிங் செய்தபோது அவரது இடது கை விரலில் காயம் ஏற்பட்டது. இந்தியன் எக்ஸ்பிரஸில் வெளியான செய்தியின்படி, போட்டியின் போது அடுத்தடுத்து ஏற்பட்ட இந்தக் காயங்கள் மற்றும் ஐபிஎல் தொடங்குவதற்கு இன்னும் ஒரு மாதமே உள்ளதைக் கருத்தில் கொண்டு, ரிஷப் பண்ட் ஹைப்பர்பேரிக் ஆக்சிஜன் தெரபியைத் தொடங்கியுள்ளார். ஐபிஎல் போட்டிகளுக்குத் திரும்புவதற்கு ரிஷப் பண்ட் நம்பியிருக்கும் இந்த சிகிச்சை எப்படிப்பட்டது? இது எவ்வளவு பயனுள்ளது மற்றும் எந்தச் சூழ்நிலைகளில் வழங்கப்படுகிறது? இது தொடர்பாக, பனாரஸ் இந்து பல்கலைக்கழக மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் ட்ராமா சிகிச்சை மைய பேராசிரியர் டாக்டர் சௌரப் சிங்கிடம் பிபிசி பேசியது. ஹைபர்பேரிக் ஆக்ஸிஜன் சிகிச்சை பட மூலாதாரம்,Getty Images ஹைப்பர்பேரிக் என்ற சொல், சாதாரண அளவை விட அதிகமான என்ற பொருள் கொண்ட 'ஹைப்பர்' மற்றும் அழுத்தம் என்ற அர்த்தத்தைக் கொடுக்கும் 'பேரிக்' ஆகிய இரு சொற்களின் சேர்க்கையாகும். ஹைப்பர்பேரிக் ஆக்சிஜன் தெரபி, சாதாரண அளவை விட அதிகப்படியான ஆக்சிஜனை வழங்கி, உடல் நலம் தேறுவதை விரைவுபடுத்தும் ஒரு சிகிச்சை முறையாகும். அறிவியல் ரீதியாக, நமது வளிமண்டலத்தில் 78% நைட்ரஜன் மற்றும் 21% ஆக்சிஜன் உள்ளது. ஆனால், இதில் சிசிச்சை பெறும் நபருக்கு 100% சுத்தமான ஆக்சிஜன் வழங்கப்படுகிறது. இந்த ஆக்சிஜன் ஒரு சிறப்பு அழுத்த கேபினில் வழங்கப்படுகிறது, அங்கு காற்றின் அழுத்தம் சாதாரண நிலையை விட 2 முதல் 3 மடங்கு அதிகமாக இருக்கும். அழுத்தம் அதிகமாக இருக்கும்போது, சிசிச்சை பெறும் நபரின் நுரையீரல்கள் சாதாரண நிலையை விட மிக அதிகமான ஆக்சிஜனை உள்வாங்கிக்கொள்ள முடியும். இந்தக் கூடுதல் ஆக்சிஜன், ரத்தத்தின் வழியாக உடலில் காயம், புண் அல்லது தொற்று உள்ள பகுதிகளை சென்றடைகிறது. '' திசுக்கள் அல்லது காயமடைந்த பகுதிகள் அதிக ஆக்சிஜன் பெறுவதால் வேகமாக குணமடைகின்றன. இதன் மூலம் உடலில் புதிய செல்கள் உருவாகும் செயல்முறை மேலும் விரைவாகிறது.'' என்கிறார் சௌரப் சிங். மேற்கத்திய நாடுகளில் இது ஆரம்பத்தில் நுரையீரல் தொடர்பான பிரச்னைகளுக்கே பயன்படுத்தப்பட்டது. "ஹைப்பர்பேரிக் ஆக்சிஜன் தெரபி தொடர்ந்து ஆராய்ச்சிக்கு உட்பட்டு வருகிறது. முன்னதாக ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் மட்டுமே இருந்த இதன் பயன்பாடு, தற்போது பல்வேறு உடல்நலப் பிரச்னைகளுக்காக மருத்துவர்களும் நோயாளிகளும் இந்தத் தெரபியைத் தேர்வு செய்யும் அளவில் மேம்பட்டுள்ளது" என்று தெரிவித்தார் சௌரப் சிங். பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு,2022 ஆம் ஆண்டு, ரிஷப் பண்ட் ஒரு சாலை விபத்தில் படுகாயமடைந்தார். எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும்? டாக்டர் சௌரப்பின் கூற்றுப்படி, இந்தத் தெரபி மிகவும் நல்ல பலன்களை வழங்கி வருகிறது. குறிப்பாக செல்கள் வேகமாக உருவாகி அழியும் பகுதிகளில், குணமடைய அதிக ஆக்சிஜன் தேவைப்படும் இடங்களில் இந்த சிகிச்சை சிறப்பாக செயல்படுகிறது என்று அவர் கூறுகிறார். "பார்வை இழப்பு, கதிர்வீச்சினால் ஏற்படும் திசு சேதம், கடுமையான ரத்த சோகை, தோல் ஒட்டுதல் அதாவது 'ஸ்கின் கிராஃப்டிங்' எனப்படும் உடலின் ஒரு பகுதியில் உள்ள தோலை நீக்கிவிட்டு மற்றொரு பகுதியின் தோலைப் பொருத்தும் முறை, பலத்த காயம், எலும்பு அல்லது தோலில் ஏற்படும் தீவிரத் தொற்றுகளுக்கும் இதன் மூலம் தீர்வு காணலாம்" என்று கூறுகிறார். "அதேபோல், தீக்காயங்களால் தோல் அல்லது திசுக்களுக்கு ஏற்படும் பாதிப்பு, 'ஆஸ்டியோமைலிடிஸ்' எனப்படும் எலும்பில் ஏற்படும் தீவிரத் தொற்று, கேட்கும் திறன் குறைபாடு ஏற்படும் பிரச்னைக்கும் தற்போது இந்த சிகிச்சை முறை பயன்படுத்தப்படுகிறது," என்று டாக்டர் சௌரப் குறிப்பிட்டார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் இந்தச் சிகிச்சைக்கு எவ்வளவு செலவாகும்? இந்தியாவில் இந்த சிகிச்சையை வழங்கும் மையங்கள் அல்லது நிபுணர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது. சிகிச்சைக் கட்டணத்தைப் பொறுத்தவரை, அரசு மையங்களில் இது முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கான தேவை மிகவும் அதிகரித்துள்ளதால், பனாரஸ் இந்து பல்கலைக்கழக மையத்தில் ஒரு அமர்வுக்கு நோயாளியிடமிருந்து 100 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.'' என்கிறார் சௌரப் சிங். அதே நேரத்தில், தனியார் மையங்களில் ஒரு அமர்வுக்கு 2,500 ரூபாய் முதல் 4,000 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அமர்வு எவ்வளவு நேரம் நீடிக்கும் என்பது உங்கள் காயம் அல்லது உடல்நலப் பிரச்னையைப் பொறுத்தது. சராசரியாக ஒவ்வொரு அமர்வும் 45 நிமிடங்கள் முதல் ஒன்றரை மணி நேரம் வரை இருக்கும். அழகுக்கலையில் பயன்பாடு வயதான தோற்றத்தைக் குறைப்பதற்காகவும், முகத்தில் ஏற்படும் சுருக்கங்களை நீக்குவதற்காகவும் ஹைப்பர்பேரிக் ஆக்சிஜன் தெரபி பயன்படுத்தப்படுவதாக இணையதளங்களில் பார்க்கமுடிகிறது. பல அழகு நிலையங்கள் இந்த வசதியை வழங்குகின்றன. இந்த சிகிச்சை உண்மையிலேயே பாதுகாப்பானதா? இந்தக் கேள்விக்கு பதிலளித்த டாக்டர் சௌரப், "உண்மையில், இந்தத் தெரபியை எடுத்துக்கொள்வதால் சருமம் இளமையாக மாறும் என்பதற்கான எவ்வித ஆதாரமும் இல்லை. ஹைப்பர்பேரிக் ஆக்சிஜன் தெரபி தற்போது அதிகாரப்பூர்வ அங்கீகாரம் பெறாத சில விஷயங்களுக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சிலர் இந்தச் சிகிச்சைக்குப் பிறகு தங்கள் முகம் பொலிவு பெற்றதாகக் கூறுகிறார்கள், ஆனால் அவை தனிப்பட்ட அனுபவங்களே தவிர, இதற்கான போதிய அறிவியல் சான்றுகள் இல்லை" என்று கூறுகிறார். விடாமுயற்சி ரிஷப் பண்ட் மற்றும் அவரைப் போன்ற மற்ற வீரர்கள் காயங்களிலிருந்து விரைவாக மீண்டு வர இந்த சிகிச்சைமுறையைப் பயன்படுத்தி வருகிறார்கள். 2022-ஆம் ஆண்டு ரிஷப் பண்ட் ஒரு மோசமான சாலை விபத்தில் சிக்கினார். அவருக்கு ஏற்பட்ட காயங்கள் மிகக் கடுமையானவை. பண்ட் 2024-ஆம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட்டுக்குத் திரும்பியது மட்டுமல்லாமல், மிகவும் அதிரடியாகத் தனது வருகையைப் பதிவு செய்தார். இருப்பினும், விளையாட்டின் போது அவருக்கு அவ்வப்போது ஏற்படும் காயங்களில் இருந்து வெளிவர அவர் ஹைப்பர்பேரிக் ஆக்சிஜன் தெரபியை மேற்கொள்கிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cvg15gdjvx7o
-
மீனவர்களுக்கு அவசர அறிவுறுத்தல்!
மீனவர்களுக்கு அவசர அறிவுறுத்தல்! Feb 18, 2026 - 05:39 PM இலங்கைக்கு தென்கிழக்காக, தென்மேற்கு வங்காள விரிகுடா கடல் பகுதிகளில் நிலவிய குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்ந்தும் அதே பகுதியில் நிலை கொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த தொகுதியின் தாக்கம் காரணமாக, குறித்த கடல் பகுதிகளில் பலத்த மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுவதுடன், மணிக்கு (50-60) கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும், இதனால் கடல் பகுதிகள் கொந்தளிப்பாக அல்லது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியின் நகர்வுகள் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் தொடர்ச்சியான அவதானத்தை செலுத்தி வருவதால், இது தொடர்பாக திணைக்களத்தினால் வெளியிடப்படும் எதிர்வரும் முன்னறிவிப்புகள் மற்றும் அறிவிப்புகள் குறித்து அவதானத்துடன் இருக்குமாறு மீனவ மற்றும் கடற்படை சமூகம் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். https://adaderanatamil.lk/news/cmlrzmkx20002356nxrenk1dx
-
ஆஸ்திரியாவில் மலையேற்றத்தின் போது காதலி மரணம்; காதலனுக்கு எதிராக வழக்கு பதிவு
ஆஸ்திரியாவில் மலையேற்றத்தின் போது காதலி மரணம் ; காதலனுக்கு எதிராக வழக்கு பதிவு Published By: Digital Desk 3 18 Feb, 2026 | 05:10 PM ஆஸ்திரியாவின் மிக உயர்ந்த மலைச்சிகரமான கிராஸ்க்ளோக்னரில் (3,798 மீ), கடந்த ஆண்டு குளிர்காலத்தில் தனது காதலியை கடும் குளிரில் தவிக்கவிட்டு உயிரிழக்கச் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட மலையேற்ற வீரர் மீதான விசாரணை வியாழக்கிழமை ஆரம்பமாகியுள்ளது. கடந்த 2025-ஆம் ஆண்டு ஜனவரி 19-ஆம் திகதி அதிகாலையில், 33 வயதுடைய பெண், கடும் பனிப்புயலில் சிக்கி உடல் உறைந்து உயிரிழந்தார். அவருடன் சென்ற 36 வயதுடைய காதலன், காதலி மிகவும் சோர்வடைந்த நிலையில் அவரை மலை உச்சியில் தனியே விட்டுவிட்டு உதவி தேடிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இந்த வழக்கை விசாரிக்கும் இன்ஸ்ப்ரூக் அரசாங்க தரப்பு சட்டதரணிகள் காதலன் மீது 'கடுமையான கவனக்குறைவால் நேரிட்ட கொலை' என்ற பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவர் மீது 09 குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. அனுபவக் குறைவு: போதிய அனுபவமில்லாத காதலியை மிகக் கடினமான குளிர்கால மலையேற்றத்திற்கு அழைத்துச் சென்றது. காலதாமதம்: திட்டமிட்ட நேரத்தை விட 2 மணிநேரம் தாமதமாக மலையேற்றத்தைத் தொடங்கியது. தவறான காலணி: பாறைகளும் பனியும் நிறைந்த பகுதிக்கு, பனிச்சறுக்கு விளையாட்டில் பயன்படுத்தப்படும் மென்மையான 'Snowboard boots'-களை காதலி அணிய அனுமதித்தது. எச்சரிக்கையை மீறியது: மணிக்கு 74 கி.மீ வேகத்தில் காற்று வீசியபோதும், -20 டிகிரி செல்சியஸ் குளிரிலும் மலையேற்றத்தைத் தொடர்ந்தது. உதவியை மறுத்தது: இரவு 10:50 மணியளவில் உதவிக்கு வந்த பொலிஸ் ஹெலிகொப்டரை நோக்கி அவசர சமிக்ஞை எதையும் காட்டாமல் பயணத்தைத் தொடர்ந்தது. தொலைபேசி மௌனம்: பொலிஸார் அவரைத் தொடர்பு கொள்ள முயன்றபோது தனது அலைபேசியை 'Silent' முறையில் வைத்தது. பாதுகாப்பின்மை: காதலியை விட்டுப் பிரிவதற்கு முன் அவருக்கு முறையான பாதுகாப்பு உடைகளையோ அல்லது அவசர காலப் போர்வைகளையோ வழங்கத் தவறியது. இந்த வழக்கில் அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பு, எதிர்காலத்தில் மலையேற்றத்தில் ஈடுபடும் கூட்டாளிகளுக்கு இடையிலான பொறுப்புணர்வை வரையறுக்கும் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும்," என ஆஸ்திரிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. காதலன் தரப்பு சட்டதரணி, "இது ஒரு திட்டமிடப்படாத துயரமான விபத்து மட்டுமே. இருவரும் சரிசமமான அனுபவத்துடனும், முழு விருப்பத்துடனமே இந்த மலையேற்றத்தைத் ஆரம்பித்தனர்," என வாதிடுகிறார். https://www.virakesari.lk/article/238980
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
Live 35th Match, Group A (D/N), Colombo (SSC), February 18, 2026, ICC Men's T20 World Cup Pakistan (14/20 ov) 121/3 Namibia Pakistan chose to bat. Current RR: 8.64 • Last 5 ov (RR): 44/2 (8.80) Live Forecast: PAK 188 போற போக்கில நமீபியா நாமம் போடுமோ?!🤣
-
வவுனியாவில் 120 இயலாமையுடன் கூடிய பெண்களுக்கு அவசர மனிதாபிமான உதவி
வவுனியாவில் 120 இயலாமையுடன் கூடிய பெண்களுக்கு அவசர மனிதாபிமான உதவி 18 Feb, 2026 | 03:20 PM CFLI நிறுவனத்தின் நிதி அனுசரனையுடன் இயலாமையுடன் கூடிய பெண்களுக்கான அவசர மனிதாபிமான உதவித் திட்டத்தின் கீழ் CFLI நிறுவனத்தின் அமுலாக்கத்தில் வவுனியா மாவட்டத்தின் நான்கு பிரதேச செயலகங்களிலும் தெரிவு செய்யப்பட்ட இயலாமையுடன் கூடிய 120 பெண் குடும்பங்களுக்கு தலா 35000 ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள், வீட்டுப் பொருட்கள் மற்றும் சுகாதாரப் பொருட்கள் வழங்கப்பட்டன. இதன் முதல் நிகழ்வு கடந்த வருடம் 28.01.2025 இல் வவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் கலாஞ்சலி டர்சன அருனசாந்த தலைமையில் இடம் பெற்றது. இந்நிகழ்வில் கனடா நாட்டின் இலங்கை மற்றும் மாலைதீவு நாடுகளுக்கான உயர் ஸ்தானிகர் இசபெல் மார்ட்டின் கலந்து கொண்டு பொருட்களை வழங்கி வைத்தார். 1. வவுனியா வடக்கு நெடுங்கேணி – 40 இயலாமையுடன் கூடிய பெண்கள் 2. வவுனியா நகர் - 30 இயலாமையுடன் கூடிய பெண்கள் 3. வெண்கலச் செட்டிகுளம் – 30 இயலாமையுடன் கூடிய பெண்கள் 4. வவுனியா தெற்கு – 20 இயலாமையுடன் கூடிய பெண்கள் இயலாமையுடன் கூடிய 120 பெண் குடும்பங்கள் பயன் பெற்றனர். https://www.virakesari.lk/article/238956
-
இரான் அருகே போர்க்கப்பல்கள் மற்றும் போர் விமானங்களை குவிக்கும் அமெரிக்கா - பிபிசி புலனாய்வு
இரான் அருகே போர்க்கப்பல்கள் மற்றும் போர் விமானங்களை குவிக்கும் அமெரிக்கா - பிபிசி புலனாய்வு படக்குறிப்பு,உலகின் மிகப்பெரிய போர்க்கப்பலான யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஆர் ஃபோர்டையும் அமெரிக்கா மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்பியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன, இது அடுத்த மூன்று வாரங்களுக்குள் இப்பகுதிக்கு வரக்கூடும் என்றும் கூறப்படுகிறது. கட்டுரை தகவல் ரிச்சர்ட் இர்வின்-பிரவுன், அலெக்ஸ் முர்ரே 2 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள் இரானுக்கு அருகே அமெரிக்க விமானந்தாங்கி போர்க்கப்பலான யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் நிலை கொண்டிருப்பதை செயற்கைக்கோள் படங்களைப் பயன்படுத்தி பிபிசி வெரிஃபை உறுதிப்படுத்தியுள்ளது. இரானின் ராணுவத் திட்டம் மற்றும் போராட்டக்காரர்கள் மீதான அதன் ஒடுக்குமுறையைத் தொடர்ந்து அந்நாட்டின் மீது அமெரிக்கா தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது. ஒரு தாக்குதல் குழுவை வழிநடத்தும் யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் போர்க்கப்பல் எஃப்35 போர் விமானங்கள் உட்பட 90 விமானங்கள் மற்றும் 5,680 பணியாளர்களைக் கொண்டுள்ளது. இது ஜனவரி பிற்பகுதியில் வளைகுடா பிராந்தியத்தில் நிறுத்தப்பட்டதாகக் கூறப்பட்டது, ஆனால் இப்போது வரை செயற்கைக்கோள் படங்களில் காணப்படவில்லை. இது இரானில் இருந்து சுமார் 700 கிமீ தொலைவில் ஓமன் கடற்கரையில் உள்ளது. உலகின் மிகப்பெரிய போர்க்கப்பலான யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஆர் ஃபோர்டையும் அமெரிக்கா மத்திய கிழக்கு பிராந்தியத்திற்கு அனுப்பியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன, இது அடுத்த மூன்று வாரங்களுக்குள் இப்பகுதிக்கு வரக்கூடும் என்றும் கூறப்படுகிறது. கடந்த சில வாரங்களாக மத்திய கிழக்கில் அமெரிக்காவின் தற்போதைய ராணுவக் கட்டமைப்பைப் பற்றி நாம் அறிந்தவற்றோடு ஆபிரகாம் லிங்கன் போர்க்கப்பலின் வருகையும் இணைகிறது. அங்கு அமெரிக்க போர் கப்பல்கள் மற்றும் போர் விமானங்களின் இருப்பு அதிகரித்துள்ளதை பிபிசி வெரிஃபை பின்தொடர்ந்துள்ளது. பட மூலாதாரம்,Reuters படக்குறிப்பு,பிப்ரவரியில் அமெரிக்க ராணுவம் அரபிக் கடலில் யுஎஸ்எஸ் ஆப்ரஹாம் லிங்கன் விமானந்தாங்கி போர்க்கப்பலின் படத்தை வெளியிட்டது. மத்திய கிழக்கிற்கு அமெரிக்கா எத்தகைய ராணுவ உபகரணங்களை நகர்த்தியுள்ளது? ஐரோப்பிய சென்டினல்-2 செயற்கைக்கோள்களில் இருந்து பொதுவில் கிடைக்கும் படங்கள், ஓமன் கடற்கரையிலிருந்து சுமார் 150 மைல் (240 கிமீ) தொலைவில் அரபிக்கடலில் ஆபிரகாம் லிங்கன் கப்பல் இருப்பதைக் காட்டுகின்றன. ஜனவரி மாதம் இப்பகுதிக்குள் நுழைந்ததாகக் கூறப்பட்டதிலிருந்து இது தென்படவில்லை. ஆனால் செயற்கைக்கோள் கண்காணிப்பு குறைவாக உள்ள திறந்த கடற்பரப்பை இது கடந்து கொண்டிருந்தது. நிலத்தில் உள்ள ராணுவ தளவாடங்கள் மிகவும் தெளிவாகத் தெரிவதோடு, செயற்கைக்கோள்களில் அடிக்கடி படம்பிடிக்கப்படுகின்றன. அதாவது, மத்திய கிழக்கில் 12 அமெரிக்க கப்பல்களை இப்போது செயற்கைக்கோள் படங்கள் மூலம் நாங்கள் கண்காணித்துள்ளோம். அணுசக்தியால் இயங்கும் நிமிட்ஸ்-வகை விமானந்தாங்கி கப்பலான ஆபிரகாம் லிங்கன் ஒரு தாக்குதல் குழுவை வழிநடத்துகிறது. மேலும் நீண்ட தூர ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தும் திறன் கொண்ட கப்பல்கள் மற்றும் வளைகுடாவில் உள்ள பஹ்ரைன் கடற்படை தளத்தில் தற்போது நிறுத்தப்பட்டுள்ள மூன்று சிறப்புப் போர்க்கப்பல்களும் இதில் அடங்கும். இப்பகுதியில் அமெரிக்க போர் விமானங்களின் வருகையையும் நாங்கள் பின்தொடர்ந்து வருகிறோம். ஜோர்டானில் உள்ள முவாஃபக் சால்டி ராணுவத் தளத்தில் நிறுத்தப்பட்டுள்ள எஃப்-15 மற்றும் இஏ-18 போர் விமானங்களின் அதிகரிப்பையும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிலிருந்து மத்திய கிழக்கை நோக்கி நகரும் அமெரிக்க சரக்கு விமானங்கள், எரிபொருள் நிரப்பும் மற்றும் தகவல் தொடர்பு விமானங்களின் அதிகரிப்பையும் நாங்கள் கண்காணித்து வருகிறோம். இரான் எவ்வாறு பதிலளித்துள்ளது? பிப்ரவரி 6-ஆம் தேதி அரபிக்கடலில் அமெரிக்க மத்திய கட்டளை மையம் யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் போர்க்கப்பலுடன் பிற போர்க் கப்பல்கள், போர் விமானங்கள், கண்காணிப்பு விமானங்கள் மற்றும் கடலோர காவல்படை கப்பல்கள் சூழ்ந்திருக்கும் படங்களை வெளியிட்டது. இது ராணுவ வலிமையை வெளிப்படுத்தும் நடவடிக்கையாக கருதப்படுகிறது. இதற்கு பதிலளிக்கும் வகையில் இரானும் தனது சொந்தப் படை பலத்தைக் காட்டியுள்ளது. திங்களன்று இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC), ஓமன் மற்றும் இரானுக்கு இடையே வளைகுடாவில் அமைந்துள்ள ஹோர்முஸ் நீரிணையில் ஒத்திகையைத் தொடங்கியது. இதில், ஒரு கப்பலில் இருந்து ஏவுகணைகள் ஏவப்படுவதற்கு முன்பாக ஐஆர்ஜிசி தலைமைத் தளபதி மேஜர் ஜெனரல் முகமது பாக்பூர் ஆய்வு செய்ததாக ஐஆர்ஜிசி-யுடன் தொடர்புடைய தஸ்நிம் செய்தி முகமை தெரிவித்துள்ளது. இந்த நீரிணை உலகின் மிக முக்கியமான கப்பல் போக்குவரத்துப் பாதைகளில் ஒன்றாகவும், முக்கியமான எண்ணெய் போக்குவரத்து மையமாகவும் கருதப்படுகிறது. இரானின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி முனையமான கார்க் தீவு உட்பட, உலகின் எண்ணெய் மற்றும் எரிவாயுவில் சுமார் ஐந்தில் ஒரு பங்கு இந்த நீரிணை வழியாகவே செல்கிறது. இரானின் சமீபத்திய ராணுவ நடவடிக்கைகளைக் காட்டும் அந்த அறிக்கையில், பாக்பூர் அந்தத் தீவின் மீது ஹெலிகாப்டரில் பறப்பதைக் காண முடிந்தது. பட மூலாதாரம்,Getty Images வெனிசுவேலா மற்றும் ஆபரேஷன் மிட்நைட் ஹேமருடன் தற்போதைய நடவடிக்கை எவ்வாறு ஒப்பிடப்படுகிறது? கடந்த ஜனவரியில் முன்னாள் வெனிவேசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை கைது செய்வதற்கு முன்னரோ அல்லது கடந்த ஜூன் மாதம் இரானின் அணுசக்தி நிலையங்கள் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்திய நடவடிக்கையின் போதோ இருந்ததை விட, மத்திய கிழக்குப் பகுதியில் அமெரிக்கா தற்போது மேற்கொண்டு வரும் ராணுவ முன்னெடுப்புகள், "அதிக தீவிரமும் நிலைத்தன்மையும்" கொண்டிருப்பதாக ராணுவப் புலனாய்வு நிபுணர் ஜஸ்டின் க்ரம்ப் பிபிசி வெரிஃபையிடம் தெரிவித்தார். கடந்த ஆண்டு வெனிசுவேலா மற்றும் இரானில் அமெரிக்கா தனது பலத்தை முற்றிலும் மாறுபட்ட சூழ்நிலைகளில் நிலைநிறுத்தியது. வெனிசுவேலா மீதான தாக்குதல்களுக்கு முன்னதாக அமெரிக்கா யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஆர் ஃபோர்டை கரீபியன் கடலுக்கு அனுப்பியது, அந்த நேரத்தில் அந்தப் பகுதியில் நாங்கள் கண்காணித்த எட்டு போர்க்கப்பல்களில் இதுவும் ஒன்று. இருப்பினும், அது குறைவான விமானங்களையே பயன்படுத்தியது, ஏனெனில் அது அமெரிக்க நிலப்பரப்பில் உள்ள சுற்றியுள்ள அமெரிக்க தளங்களில் இருந்தோ அல்லது பியூர்டோ ரிக்கோவில் உள்ள அதன் தளத்திலிருந்தோ எளிதாக போர் விமானங்களை அனுப்ப முடியும். அமெரிக்கா கரீபியன் பகுதிக்குள் நீர்நில தாக்குதல் கப்பல்களையும் நிலைநிறுத்தியது. இவை மதுரோ பிடிபட்டபோது பார்த்தது போல ஹெலிகாப்டர் நடவடிக்கைகளுக்கான ஏவுதளங்களாகப் பயன்படுத்தப்படலாம். ஆனால் வெனிசுவேலாவின் ராணுவம் பொதுவாகத் தன்னைத் தற்காத்துக் கொள்ளவோ அல்லது அமெரிக்காவிற்கு எதிராகப் பதிலடி கொடுக்கவோ குறைந்த திறன் கொண்டதாகவே பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு இரானின் அணுசக்தி நிலையங்களைக் குறிவைத்து 'ஆபரேஷன் மிட்நைட் ஹேமர்' மூலம் அமெரிக்கா இரானைத் தாக்கியபோது, வெனிசுவேலாவை விட மிகவும் சக்திவாய்ந்த ராணுவத்தைக் கொண்ட ஒரு நாட்டை அது தாக்கியது. இரானின் ராணுவம் மத்திய கிழக்கு முழுவதும் உள்ள அமெரிக்க தளங்களைத் தாக்கும் திறன் கொண்டது. 'மிட்நைட் ஹேமர்' நடவடிக்கையின் போது, அமெரிக்கா அந்தப் பிராந்தியத்தில் இரண்டு விமானந்தாங்கி போர்க்கப்பல் தாக்குதல் குழுக்களையும், மத்திய தரைக்கடல் மற்றும் செங்கடல்களில் போர்க் கப்பல்களையும், வளைகுடாவில் மூன்று போர் கப்பல்களையும் கொண்டிருந்தது. இது அமெரிக்காவிலிருந்து ஐரோப்பாவிற்கு விமானப் படைகளையும் எரிபொருள் நிரப்பும் விமானங்களையும் நகர்த்தியது, ஆனால் ஃபோர்டோ, இஸ்பஹான் மற்றும் நடான்ஸ் அணுசக்தி தளங்களைத் தாக்கப் பயன்படுத்தப்பட்ட பி2 குண்டுவீச்சு விமானங்கள் உண்மையில் மிசௌரியில் உள்ள அமெரிக்கத் தளங்களிலிருந்தே புறப்பட்டன. அமெரிக்கப் போர்க்கப்பல்கள் மற்றும் விமானங்களின் அதிகரிப்பு, அத்துடன் அந்தப் பிராந்தியத்தில் உள்ள எட்டு விமானப்படை தளங்கள் ஆகியவை, இரானின் எந்தவொரு பதிலடியையும் "பயனற்றதாக" மாற்றும் நோக்கத்துடன், ஒரு நாளைக்கு சுமார் 800 வான்வழித் தாக்குதல்களை "மிகவும் தீவிரமான மற்றும் நீடித்த விகிதத்தில்" நடத்த அனுமதிக்கும் என்று ஆபத்து மற்றும் நுண்ணறிவு நிறுவனமான சிபிலைனின் தலைமை நிர்வாகி க்ரம்ப் கூறினார். "நாம் காண்பது வெறும் தாக்குதல் தயாரிப்பு மட்டுமல்ல, மாறாக அளவை கூட்டவோ குறைக்கவோ கூடிய ஒரு விரிவான தடுப்பு நடவடிக்கையாகும்," என்று அவர் கூறினார். "இதன் பொருள், கடந்த ஆண்டு வெனிசுவேலா அல்லது மிட்நைட் ஹேமர் ஆகியவற்றுக்காக செய்யப்பட்ட முன்தயாரிப்புகளை விட இது அதிக தீவிரமும் நிலைத்தன்மையும் கொண்டது. இது ஒரு மோதலைத் தக்கவைத்து, அந்தப் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்கச் சொத்துகள் மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான அனைத்து சாத்தியமான பதிலடிகளையும் எதிர்கொள்ளவும் வடிவமைக்கப்பட்டுள்ளது" என்றும் அவர் விவரித்தார். கூடுதல் அறிக்கை : பார்பரா மெட்ஸ்லர், கோன்சே ஹபிபியாசாத், தாமஸ் கோப்லேண்ட், யி மா - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c2lrjl1gnrgo
-
நாட்டை கட்டியெழுப்பும் தேசிய நிதியத்திற்கு ‘Rebuilding Sri Lanka’ பல்வேறு அமைப்புகள் நன்கொடை
‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு MARKS AND SPENCER PLC இனால் நிதி நன்கொடை 18 Feb, 2026 | 12:25 PM டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அரசாங்கத்தின் ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு MARKS AND SPENCER PLC இனால் 4,684,139.50 ரூபா நன்கொடை வழங்கப்பட்டது. இதற்கான காசோலையை MARKS AND SPENCER PLC இன் பொது முகாமையாளர் ரிபாட் அர்மான் (Rifat Arman) மற்றும் பிராந்திய முகாமையாளர் ஷப்ரி அஹர் Shabry Aher ஆகியோர் செவ்வாய்க்கிழமை (17) பிற்பகல் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் கையளித்தனர். MARKS AND SPENCER PLC இனைப் பிரதிநிதித்துவப்படுத்தி சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/238941
-
மட்டக்களப்பு நகரில் 128.9 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி
வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பு; மட்டக்களப்பில் அதிக்கூடிய மழை வீழ்ச்சி பதிவு Published By: Digital Desk 3 18 Feb, 2026 | 12:15 PM மட்டக்களப்பில் நேற்று செவ்வாய்க்கிழமை (17) அதிகபட்சமாக 128.9 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதேவேளை, நுவரெலியாவில் மிகக் குறைந்த வெப்பநிலை 13.4°C ஆக பதிவாகியுள்ளது. நாட்டின் தென்கிழக்கே, தெற்கு வங்காள விரிகுடாவின் மத்திய பகுதிகளில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தொடர்ந்து நீடிப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அதன்படி, வளிமண்டலவியல் திணைக்களத்தால் வெளியிடப்படும் எதிர்கால முன்னறிவிப்புகள் மற்றும் ஆலோசனைகள் குறித்து பொதுமக்கள் கவனமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில், காலி முதல் அம்பாந்தோட்டை வரையிலான கரையோரப் பகுதிகளிலும், மட்டக்களப்பு வழியாக திருகோணமலை வரையிலான கரையோரப் பகுதிகளிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். நாட்டை சூழவுள்ள பிற கடல் பகுதிகளில், மாலை அல்லது இரவு நேரங்களில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். களுத்துறை முதல் புத்தளம் மற்றும் மன்னார் வரையிலான கரையோரப் பகுதிகளிலும், மாத்தறை முதல் அம்பாந்தோட்டை மற்றும் பொத்துவில் வரையிலான கரையோரப் பகுதிகளிலும் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக்கூடும். இந்தக் கரையோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள கடல் பகுதிகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும், அதேவேளை நாட்டை சூழவுள்ள பிற கடல் பகுதிகள் ஓரளவு கொந்தளிப்பாக இருக்கும். இடியுடன் கூடிய மழை பெய்யும் போது, தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும், மேலும் கடல் நிலைமைகள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/238940