Everything posted by ஏராளன்
-
இலங்கைக்கு விஜயம் மேற்கொள்கின்றார் ஐநாவின் மனித உரிமை ஆணையாளர் - அரசாங்கம் அனுமதி
ஐ.நா. மனித உரிமை உயர்ஸ்தானிகர் செம்மணிக்கு விஜயம் செய்வது அவசியம் : பிரித்தானிய தமிழர் பேரவை வலியுறுத்து 11 JUN, 2025 | 07:40 PM இலங்கைக்கு விஜயம் செய்யும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் போரால் பாதிக்கப்பட்ட வடக்கு,கிழக்கு பகுதிகளுக்கு நேரில் சென்று மக்களைச் சந்திப்பதுடன் செம்மணி மனித புதைகுழு அகழ்வுபப்பணிகளையும் நேரில் பார்வையிட வேண்டும் என்று பிரித்தானிய தமிழர் பேரவை வலியுறுத்தியுள்ளது. மேலும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, உயர்ஸ்தானிகரின் இலங்கை விஜயமானது உண்மை மற்றும் நீதிக்கான எமது தேடல் தொடர்பில் ஒரு திருப்புமுனையாக அமைவதுடன் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகராலய கூட்டத்தொடர் நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்கான வழியொன்றை ஏற்படுத்தித் தரும் என நாம் நம்புகிறோம். ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் இந்த ஜூன் மாதம் மூன்றாவது வாரம் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். இந்த விஜயமானது கடற்த 9 வருட காலப் பகுதியில் உயர்ஸ்தானிகரால் இலங்கைக்கு மேற்கொள்ளப்படும் முதலாவது உத்தியோகபூர்வ விஜயமாக உள்ளதுடன் அது வடக்கு, கிழக்கு பிராந்தியங்களில் குறிப்பாக திருகோணமலை, செம்மணி மற்றும் முள்ளிவாய்க்காலில் கடந்த காலத்திலும் தற்போதும் இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்கள் குறித்து சாட்சியமளிக்கவும் உரையாடவும் முக்கிய வாய்ப்பொன்றை வழங்குவதாக உள்ளது. பிரித்தானிய தமிழர் பேரவையால் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகராலயத்தின் இலங்கையின் பொறுப்புக்கூறல் திட்டத்துக்கு தாக்கல் செய்யப்பட்ட அடையாள வழக்கின் முழுமையாக நிருபிக்கப்பட்ட ஆவணங்கள் மத்தியில் செம்மணி புதைகுழி மற்றும் கிரிஷாந்தி குமாரசுவாமி படுகொலை என்பன குறிப்பிடத்தக்க பகுதிகளைக் கொண்டிருந்தன. இந்த 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதம் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் இலங்கைக்கு 3 நாட்கள் விஜயத்தை மேற்கொள்ளவுள்ளமை குறித்தும் பாரம்பரிய தமிழ் பிராந்தியமான திருகோணமலைக்கு மட்டுமே விஜயம் செய்யவுள்ளமை பிரித்தானிய தமிழர் பேரவை அறிந்தவுடன் அது செம்மணி மற்றும் முள்ளிவாய்க்கால் உள்ளடங்கலான ஏனைய பிரதேசங்களுக்கு விஜயம் செய்யவும் அந்தப் பிராந்தியங்களில் இடம்பெற்ற கொடூரமான மனித உரிமை மீறல்கள் குறித்து பாதிக்கப்பட்ட தமிழ் மக்களிடம் கலந்துரையாடவும் வலியுறுத்தி உயர்ஸ்தானிகருக்கு கடந்த மே 27 ஆம் திகதி கடிதமொன்றை எழுதி அனுப்பி வைத்திருந்தது.. அண்மையில் செம்மணி மனிதப் புதைகுழியிலிருந்து சில மீற்றர்கள் தொலைவில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள் மற்றும் ஆடைகள் களையப்பட்ட நிலையில் காணப்பட்ட எலும்புக்கூடுகள் உள்ளடங்கலாக 17 க்கு மேற்பட்ட எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை என்பன தொடர்பில் வோல்கர் டர்க் செம்மணிக்கு விஜயம் செய்வதற்கும் நிலைமையை நேரில் பார்வையிடுவதற்கும் பாதிக்கப்பட்டவர்களை மையப்படுத்திய கலந்தாலோசனைகளுடன் இணைந்த நீதி மற்றும் பொறுப்புப்கூறலுக்கு உறுதிப்படுத்துவதற்கும் நெறிமுறை ரீதியான கடப்பாட்டுக்குரியவராகிறார். பிரித்தானிய தமிழர் பேரவையானது உயர்ஸ்தானிகருருடன் இதுவரை ஏற்படுத்தியிருந்த தொடர்பாடல்களைின் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தியுள்ளது. 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 22 திகதியிடப்பட்ட கடிதமானது ஐக்கிய நாடுகள் நிறுவனங்களின் குறிப்பிடத்தக்க தோல்வியானது இலங்கை மாதிரியை தம்மைப் பிணைக்கும் நீதியிலிருந்து தப்பிக்கும் நாடுகளுக்கு முன்மாதிரியாக்குவதுடன் இலங்கையை அதன் மோசமான மாதிரியிலிருந்து நல்ல மாதிரிக்கு மாற்றுவதற்கான அவசியத்திலிருந்து வழுவுவதாக உள்ள அதேசமயம் இது மற்றைய நாடுகள் பின்பற்றுவதற்கு ஒரு தடையாக அமைவதாக எச்சரிக்கிறது. அத்துடன் 2024ஆம் ஆண்டு செப்டெம்பர் 16 ஆம் திகதியிடப்பட்ட மின்அஞ்சலானது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானகராலயத்தின் தீர்மானத்துக்காக தமிழ் மக்களால் முன்வைக்கப்பட்ட பொதுப் பிரேரணை குறித்து அச்சமயத்தில் ஐக்கிய நாடுகள் மனித உயர்ஸ்தானிகராலயத்தின் மந்தமான முன்னேற்றம்தொடர்பில் கவலையை வெளிப்படுத்துகிறது. இந்த 2025ஆம் ஆண்டு மார்ச் 10 திகதியிடப்பட்.ட கடிதமானது புதிய தேசிய மக்கள் சக்தி ( ஜே.வி.பி) அரசாங்கம் தொடர்பில் குறிப்பிட்டு அதன் சிங்கள அடிப்படைவாதக் கொள்கைகள் சம்பந்தமாக மேற்கோள்காட்டி இலங்கையில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறல் என்பவற்றுக்கு வழியமைத்துத் தர வேண்டிய அவசியம் குறித்து வலியுறுத்துகிறது. அதேசமயம் இந்த வருடம் மே மாதம் 27 திகதியிடப்பட்ட கடிதமானது இலங்கைக்கு இந்த 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதம் உயர்ஸ்தானிகர் விஜயம் செய்ய உத்தேசித்துள்ளமை குறித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளது. அந்தக் கடிதத்தில் பிரித்தானிய தமிழர்கள் மன்றம் முள்ளிவாய்க்கால் மற்றும் செம்மணிக்கு விஜயம் செய்து உள்நாட்டுப் போர் நிறைவுபெற்று 16 வருடங்களாகியும் துன்பத்தை அனுபவித்து வரும் போரால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலையை நேரில் காண்பதற்கும் தோண்டியெடுக்கப்படும் புதைகுழிகளை பார்வையிடவும் வேண்டிய அவசியம் உள்ளடங்கலானவை குறித்து வலியுறுத்தியுள்ளது. உயர்ஸ்தானிகரோ அல்லது சர்வதேச சமூகமோ இலங்கை அரசாங்கம் அதனது சுத்தமான இலங்கை என்ற வேடங்களுடன் மனித உரிமைகளை மதிப்பதில் சரியான பாதையில் செல்வதாக நிலவும் பொது எண்ணக்கருவுக்கு ஈர்க்கப்படாது ஐக்கிய நாடுகள் சபையில் உத்தரவாதமளிக்கப்பட்டுள்ள உண்மைகள் மற்றும் புள்ளிவிபரங்களை கவனத்தில் எடுத்துக் கொள்வதன் மூலம் சாதுர்யமாக இருக்க வேண்டியுள்ளதாக பிரித்தானிய தமிழர் பேரவை சுட்டிக்காட்டியுள்ளது. . மேலும், ஐக்கிய நாடுகள் அமைப்புகளும் சர்வதேச சமூகமும் தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தனது உள்ளக குற்றவியல் மற்றும் விசாரணை பொறிமுறை மூலம் போர் குற்றங்களாலும் மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றச்செயல்களாலும் படுகொலைகளாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியையும் பொறுப்கூறலையும் வழங்கும் என நம்பி தம்மைக் கைவிடுமா என தமிழ் மக்கள் கவலையடைந்துள்ளனர். இந்நிலையில் தமிழ் மக்கள் ஐக்கிய மனித உரிமைகள் உயர்ஸ்தானகராலயத்தின் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் இடம்பெறவுள்ள 60 ஆவது கூட்டத்தொடர் தமிழர்களுக்கான நீதி, சமாதானம் நாட்டுக்கு ஸ்திரத்தன்மை மற்றும் சுபீட்சம் என்பவற்றைப் பெற்றுத் தரவதற்கு வழியேற்படுத்தித் தரும் என நம்பிக்கை கொண்டுள்ளனர். தற்போது உயர்ஸ்தானிகருக்கு இலங்கையின் படுகொலைத் தளங்கள், மனிதப் புதைகுழிகள், மறைந்துள்ள சித்திரவதை கூடங்கள், சட்டவிரோத தடுப்பு நிலையங்கள் மற்றும் பாதிக்கப்பட்ட சமூகம் என்பன தொடர்பில் சர்வதேச சமூகத்தின் கவனத்தை குவிப்பதற்கான வாய்ப்பு உள்ளது. இலங்கையின் 77 வருட வரலாற்றின் அடிப்படையில் ஐக்கிய நாடுகள் சபையும் ஏனைய சர்வதேச சமூகத்தினரும் மோதல்களுக்கான வடிவங்கள் மற்றும் மூல காரணங்கள் தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதி பொறிமுறை மூலம் மட்டுமே அடையாளம் காண முடியும் என்பதையும் இலங்கையில் அவசியமான கட்டமைப்பு மாற்றங்களை ஸ்தாபிப்பதனூடாகவே சுழற்சிமுறையில் வன்முறை மீண்டும் இடம்பெறாமல் இருப்பதை உறுதிப்படுத்த முடியும் என்பதையும் ஒப்புக்கொள்வார்கள் என பிரித்தானிய தமிழர் பேரவை தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/217211
-
ஜனாதிபதியின் செயலாளரை சந்தித்தனர் டோனி பிளேயர் நிறுவன பிரதிநிதிகள் ; நான்கு முக்கிய நிறுவனங்களுக்கு நிதி, தொழில்நுட்ப உதவிகள்
11 JUN, 2025 | 07:24 PM ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவுக்கும் உலகளாவிய மாற்றத்துக்கான டோனி பிளேயர் நிறுவனத்தின் அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று (11) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. புதிய அரசாங்கத்தினது திட்டங்களின் முன்னுரிமைகளை இனங்கண்டு அதற்கு ஆதரவளிப்பதே இந்த சந்திப்பின் நோக்கமாகும். டிஜிட்டல் பொருளாதார அமைச்சு, கமத்தொழில் அமைச்சு, ஏற்றுமதி அபிவிருத்தி சபை மற்றும் முதலீட்டு சபை ஆகியவற்றால் செயற்படுத்தப்படும் திட்டங்களை ஆய்வு செய்து, அவற்றின் முன்னுரிமைகளை அடையாளம் கண்டு, அவற்றுக்கான நிதி மற்றும் தொழில்நுட்ப ஆதரவை வழங்குவது குறித்து, இந்தக் கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது. டோனி பிளேயர் நிறுவனத்தின் அதிகாரிகளினால் மேற்கொள்ளப்படும் உலகளாவிய மாற்றத்துக்கான இந்த களப் பயணத்தின்போது, ஒவ்வோர் அமைச்சுக்கும் சென்று திட்டங்களை உன்னிப்பாகக் கண்காணிப்பதுடன், செயற்றிட்டங்களுக்கு ஆதரவளிப்பது தொடர்பில் இதன்போது இணக்கம் காணப்பட்டது. ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரசல் அபோன்சு, டோனி பிளேயர் நிறுவனத்தின் ஆசிய பசுபிக் ஆலோசனைப் பிரிவின் முகாமைத்துவப் பணிப்பாளர் ஜலீல் ரஷீத், ஆசிய பசுபிக் பணிக்குழாமின் அரசதுறை இணைப்புத் தலைவர் எனா ஏடின், கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் பணிப்பாளர் (கமத்தொழில் தொழில்நுட்பம் ) பீ.எம்.வீ.எஸ் பஸ்நாயக்க, டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் பணிப்பாளர் (அபிவிருத்தி) ஜானக கீகியனகே, இலங்கை முதலீட்டு சபையின் பணிப்பாளர் நாயகம் ரேணுகா எம். வீரகோன், ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் தலைவர் / பிரதான நிறைவேற்று அதிகாரி மங்கள விஜேசிங்க மற்றும் பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/217206
-
யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி
கிருபன் 20 சுவி 20 ஈழப்பிரியன் 20 வாதவூரான் 20 ரசோதரன் 20 எப்போதும் தமிழன் 20 வீரப்பையன் 10 ஏராளன் 10 புலவர் 10 வசி 10 வாத்தியார் 10 அல்வாயான் 10 பிரபா 10 கோஷான் 10 கந்தப்பு 10 நுணாவிலான் 00 செம்பாட்டான் 00 மேலுள்ளவாறு போட்டால் எங்களுக்கு விளங்க இலகுவாக இருக்கும் ஆண்டவரே!
-
சிறுவர்கள் காய்கறிகள், பழங்களை உட்கொள்வதை தவிர்த்து வருகின்றனர் - அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ
தற்போதைய சிறுவர்கள் காய்கறிகள், பழங்களை உட்கொள்வதை தவிர்த்து வருகின்றனர்; பெற்றோர்களும் சமூகமும் விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும் - அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ 11 JUN, 2025 | 06:07 PM தற்போதைய இளைய தலைமுறையினர் காய்கறிகள் மற்றும் பழங்களை உட்கொள்வதை வேகமாக தவிர்த்து வருகின்றனர். சுற்றுச்சூழலில் சத்தான மற்றும் சிறந்த பொருட்கள் காணப்பட்டாலும், பள்ளிகளில் அவை குறித்து எவ்வளவு தூரம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டாலும், சிறுவர்கள் காய்கறிகள் மற்றும் பழங்களை விரும்புவதில்லை. பெற்றோர்களும் சமூகமும் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும் என்று சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். 2025ஆம் ஆண்டுக்கான தேசிய ஊட்டச்சத்து மாதத்துக்காக இன்று (11) காலை பத்தரமுல்லையில் உள்ள வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் நடைபெற்ற தேசிய நிகழ்வில் பங்கேற்று உரையாற்றியபோதே அமைச்சர் இதனை தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறுகையில், சுகாதார அமைச்சகம் ஒவ்வோர் ஆண்டும் ஜூன் மாதத்தை தேசிய ஊட்டச்சத்து மாதமாக அறிவித்துள்ளது. ஊட்டச்சத்து விடயத்தில் வெகுஜன ஊடகங்கள் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கின்றன. ஊடக நிறுவனங்கள் ஒளிபரப்பும் செய்திகள் மற்றும் அறிவார்ந்த நிகழ்ச்சிகளில் மட்டுமல்லாமல், அனைத்து அரசு மற்றும் தனியார் ஊடகங்களும் ஊட்டச்சத்து தொடர்பான சரியான செய்தியை பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும். அதற்கான முறையான திட்டம் தயாரிக்கப்பட வேண்டும். ஊட்டச்சத்து என்பது சுகாதாரத் துறையுடன் மட்டும் தொடர்புடைய ஒரு விடயம் அல்ல. மாறாக பல அமைச்சகங்களின் தலையீட்டின் மூலம் வெற்றிகரமாக அடைய வேண்டிய ஒரு விடயம். இந்த ஆண்டு தேசிய ஊட்டச்சத்து மாதம் 'காய்கறிகள் மற்றும் பழங்கள்’ என்ற கருப்பொருளின் கீழ் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கருப்பொருளின் கீழ் நான்கு முக்கிய விடயங்களை அடையாளம் கண்டு சமூகத்துக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த சுகாதார அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது. தினமும் குறைந்தது இரண்டு வகையான காய்கறிகள், ஒரு வகை கீரை மற்றும் இரண்டு வகையான பழங்களை உட்கொள்ளுதல் ஆரோக்கியத்துக்கு மிக முக்கிய விடயமாகும். முடிந்தவரையில், ஆரோக்கியமான காய்கறிகள் மற்றும் பழங்களை உண்ணுதல், குறைந்த விலையில் உள்ளூரில் கிடைக்கும் காய்கறிகள் மற்றும் பழங்களைத் தெரிவு செய்தல் என்பன முக்கிய விடயங்களாக கருதப்படுகின்றன என்றார். இந்த நிகழ்வில் சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் செயலாளர் டாக்டர் அனில் ஜாசிங்க, யுனிசெஃப் பிரதிநிதி கிறிஸ்டியன் ஸ்கூக், சுகாதார அமைச்சின் செயலாளர்கள், துணை இயக்குநர்கள், மாகாண சுகாதார சேவை இயக்குநர்கள், பிராந்திய சுகாதார சேவை இயக்குநர்கள், மருத்துவமனை இயக்குநர்கள், சிறப்பு மருத்துவர்கள், மருத்துவர்கள், ஊட்டச்சத்து நிபுணர்கள், செவிலியர்கள் மற்றும் அரசு, அரசு சாரா நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/217204
-
ஜனாதிபதி அநுர ஜேர்மனியை சென்றடைந்தார்
ஜேர்மன் ஜனாதிபதியை சந்தித்தார் ஜனாதிபதி அநுர : அரச மரியாதையுடன் வரவேற்பு 11 JUN, 2025 | 07:57 PM ஜேர்மனியக் கூட்டாட்சி குடியரசிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு, ஜேர்மன் ஜனாதிபதி பிராங்க் - வோல்டர் ஸ்டெய்ன்மியரினால் (Frank-Walter Steinmeier) இன்று புதன்கிழமை (11) சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டது. பேர்லினின் பெல்வீவ் மாளிகைக்கு (Bellevue Palace) சென்ற ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ஜேர்மன் முப்படை மரியாதையுடன் வரவேற்கப்பட்டதுடன், முப்படைகளின் அணிவகுப்பையும் பார்வையிட்டார். உத்தியோகபூர்வ வரவேற்பு நிகழ்வின் பின்னர், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் ஜேர்மன் ஜனாதிபதி பிராங்க் வோல்டர் ஸ்டெய்ன்மையருக்கும் (Frank-Walter Steinmeier) இடையில் இருதரப்பு பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் சர்வதேச உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், தொழில் பயிற்சி மற்றும் சுற்றுலாக் கைத்தொழில் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும் இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டது. https://www.virakesari.lk/article/217213
-
கல்மடுக்குளத்தையும் அதன் கீழான வயல்நிலங்களையும் விடுவியுங்கள் - வனவளத் திணைக்களத்திடம் ரவிகரன் வலியுறுத்து
11 JUN, 2025 | 06:23 PM வவுனியா வடக்கு பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட தமிழர்களின் பூர்வீக கல்மடுக்குளத்தையும், அதன் கீழான வயல்நிலங்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு வவுனியா மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் பிரதி அமைச்சருமான உபாலி சமரசிங்கவிடம் வன்னி மாவட்டநாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார். அத்தோடு தமிழ் மக்கள் நீண்டகால இடப்பெயர்வைச் சந்தித்த இடங்கள், தற்போது பயன்பாடின்றி பற்றைக்காடுகளாகக் காணப்படுகின்றபோது, அந்த இடங்களை வனப்பகுதியாகக் கருதி, வனவளத் திணைக்களம் ஆக்கிரமிக்கும் செயற்பாட்டிற்கும் ரவிகரன் வன்மையாக கண்டனம் தெரிவித்தார். இவ்வருடத்திற்கான இரண்டாவது வவுனியா வடக்கு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (11) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே ரவிகரன் இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், கல்மடுக்குளம் என்றொரு குளம் இருப்பின், அக்குளத்தின் கீழ் மக்களுக்கு வயல்காணிகள் கட்டாயம் இருந்திருக்கும். எனவே, அக்குளத்தின் கீழ் மக்களுக்கு வயல் காணிகள் பகிர்ந்தளிக்கப்படவேண்டும். இவ்வாறிருக்கும்போது வனவளத் திணைக்களம் மக்களுக்குரிய வயல்காணிகளை பகிர்ந்தளிக்க முடியாது எனக் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாதென ரவிகரன் கூறினார். அதற்கு வனவளத் திணைக்கள அதிகாரி பதிலளிக்கையில், கல்மடுக்குளம் என வனவளத் திணைக்களத்தால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள பிரதேசம் நடுக்காட்டுக்குள், ஐந்து கிலோமீற்றர் தூரத்திலேயே காணப்படுகிறது. அந்த வகையில் அக்குளம் நடுக்காட்டுக்குள் காணப்படுவதால், அது வனமாக பாதுகாக்கப்படும் காரணத்தினால், அதனை விடுவித்துக் கொடுக்க முடியாத நிலை காணப்படுவதாகத் தெரிவித்தார். வனவளத் திணைக்கள அதிகாரியின் இக்கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தெரிவித்த ரவிகரன், கடந்தகால அசாதாரண சூழ்நிலை காரணமாக குறித்த பகுதியில் குடியிருந்த, விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்ட தமிழ் மக்கள் அப்பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்துவிட்டதாகத் தெரிவித்தார். இவ்வாறு இடம்பெயர்வைச் சந்தித்த மக்கள், அவர்களுடைய பகுதிகளில் மீளக் குடியமர்த்தப்படாத நிலை காணப்படுகிறது. அத்தோடு, அவர்கள் விவசாய நடவடிக்கைக்காகப் பயன்படுத்திய குளங்களும், குளங்களுக்குக் கீழான வயல்நிலங்களும் விடுவிக்கப்படாத நிலையில் உள்ளன. இந்நிலையில், மக்கள் குடியிருந்த மற்றும் விவசாய நடவடிக்கைக்குப் பயன்படுத்திய நிலங்கள் பற்றைக்காடுகளாக காணப்படுகின்றன. மக்கள் விவசாயத்துக்காக பயன்படுத்திய குளமும் வயற்காணிகளும் நீண்டகாலமாக பயன்படுத்தாத நிலையில் பற்றைக்காடுகளாக காணப்படும்போது, அப்பகுதியை வனப்பகுதி எனக் கூறிக்கொண்டு வனவளத் திணைக்களம், அப்பகுதியை விடுவிக்காமல் தொடர்ச்சியாக ஆக்கிரமித்து வைத்திருப்பது நியாயமற்ற செயற்பாடு. கல்மடுக்குளம் என்ற பகுதியில் மக்களால் முன்பு விவசாயம் செய்யப்பட்டமையினால்தான் தற்போதும் கமநல அபிவிருத்தி திணைக்களத்தில் இக்குளம் தொடர்பான பதிவுகள் காணப்படுகின்றன. எனவே, அந்த காணிகளை அரசாங்கம் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும். அதைவிடுத்து இவ்வாறாக திணைக்களங்கள் மக்களின் காணிகளை தொடர்ந்தும் அபகரித்து வைத்திருந்தால் மக்கள் எங்கே செல்வார்கள்? கடந்த காலங்களில் முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், கிளிநொச்சி என பாரியளவில் மக்களால் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு, நெல் வடக்கிலிருந்து தென்பகுதிக்கு ஏற்றுமதி செய்த வரலாறுகளே காணப்படுகின்றன. இவ்வாறு மக்களால் நெற்செய்கைக்காக பயன்படுத்தப்பட்ட பெருமளவான காணிகளை அரச திணைக்களங்கள் ஆக்கிரமித்துள்ள நிலையே தற்போதுள்ளது. இந்த விடயத்தில் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும், பிரதி அமைச்சருமான உபாலி சமரசிங்க கூடுதல் கவனம் எடுக்கவேண்டும். அரச திணைக்களங்களால் அபகரிக்கப்பட்டுள்ள மக்களின் குடியிருப்பு மற்றும் விவசாயக் காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என பல்வேறு விடயங்களை ரவிகரன் சுட்டிக்காட்டினார். அதேவேளை கல்மடுக்குளத்தின் கீழ் பயிர்ச்செய்கை மேற்கொள்வதற்கு விண்ணப்பித்தவர்களின் தரவுகளையும், அங்கு ஏற்கனவே மக்கள் பயிர்ச்செய்கை மேற்கொண்டமைக்கான ஆதாரங்களையும் வவுனியா வடக்கு பிரதேச செயலரிடம் சமர்ப்பிக்குமாறு கமநல அபிவிருத்தித் திணைக்கள உத்தியோகத்தரிடம் ரவிகரன் இதன்போது அறிவுறுத்தினார். https://www.virakesari.lk/article/217198
-
கீழடி ஆய்வறிக்கை ஏன் இன்னும் அங்கீகரிக்கப்படவில்லை? - விளக்கும் மத்திய அமைச்சர், எழும் விமர்சனங்கள்
கீழடி ஆய்வறிக்கையில் அறிவியல்பூர்வ ஆதாரங்கள் இல்லை
-
நிதி மோசடி தண்டனை பெற்றவருக்கு மன்னிப்பு : ஜனாதிபதி, சிறைச்சாலை திணைக்களத்தின் முரண்பட்ட அறிக்கை
பொது மன்னிப்பில் ஆள்மாறாட்டம் - இலங்கையில் ஜனாதிபதி பெயரிலேயே நடந்த முறைகேடு பட மூலாதாரம்,PMD கட்டுரை தகவல் எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத் பதவி, பிபிசி தமிழுக்காக 10 ஜூன் 2025 ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படுகின்ற சிறைக் கைதிகள் தொடர்பில் இம்முறை பாரிய சர்ச்சை எழுந்துள்ளது. ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்ய அனுமதிக்கப்பட்ட சிறை கைதிகளுக்கு பதிலாக வேறு கைதி விடுதலை செய்யப்பட்டதை அடுத்தே இந்த சர்ச்சை எழுந்துள்ளது. இந்த சர்ச்சை தொடர்பில் உடனடியாகப் பணி நீக்கம் செய்யப்பட்ட சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய, குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருந்தார். இவ்வாறு கைது செய்யப்பட்ட சிறைச்சாலை திணைக்கள ஆணையாளர் நாயகம், கொழும்பு நீதவான் முன்னிலையில் இன்றைய தினம் முன்னிலைப்படுத்தப்பட்டார். அவரை நாளை வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அத்துடன், இந்தச் சம்பவம் தொடர்பில் அநுராதபுரம் சிறைச்சாலையின் பொறுப்பாளர், குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். என்ன நடந்தது? அநுராதபுரம் மேல் நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்ட சிறைக் கைதி ஒருவர், இம்முறை ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டிருந்தார். நாற்பது லட்சம் ரூபா நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட நிதி நிறுவனமொன்றின் அநுராதபுரம் கிளை முகாமையாளருக்கு சிறைத் தண்டனை வழங்கப்பட்ட நிலையில், தண்டனை முழுமையாக நிறைவேற்றப்படுவதற்கு முன்பாக ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. வடமத்திய மாகாண மேல் நீதிமன்ற நீதிபதி லக்மாலி ஹேவாசமினால், இந்தக் குற்றவாளி விடுதலை செய்யப்பட்டிருந்தார். இந்தச் சம்பவம் தொடர்பில் முறைப்பாட்டாளர், மீண்டும் முறைப்பாடு ஒன்றைச் செய்த நிலையிலேயே இந்தச் சம்பவம் மீண்டும் சர்ச்சையைத் தோற்றுவித்துள்ளது. அநுராதபுரம் சிறைச்சாலை அதிகாரிகள், எழுத்து மூலம் நீதிமன்றத்திற்கு முன்வைத்த ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டே இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வெசக் பூரணை தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியால் வழங்கப்பட்ட பொது மன்னிப்பின் கீழ் இந்தக் குற்றவாளி விடுதலை செய்யப்படுவதாக சிறைச்சாலை அதிகாரிகள் நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தனர். இந்த விடயங்களை ஆராய்ந்த நீதிபதி, குற்றவாளிக்கு எதிரான வழக்கில் இருந்து விடுதலை செய்திருந்தார். ஜனாதிபதி செயலகத்தில் பதில் பட மூலாதாரம்,PMD இந்நிலையில், ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டவர்களின் பெயர்ப் பட்டியலில், அநுராதபுரம் சிறைச்சாலையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட நிதி மோசடியுடன் தொடர்புடைய நபரின் பெயர் உள்ளடக்கப்படவில்லை என ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கையானது முறைகேடான நடவடிக்கை எனவும் ஜனாதிபதி செயலகம் அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. 2025 வெசாக் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் அனுராதபுரம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த டபிள்யூ.எச். அதுல திலகரத்ன என்பவர் விடுவிக்கப்பட்டதாகவும், இந்தச் சம்பவத்தின் பின்னணியில் கடுமையான முறைகேடு இருப்பதாகவும் வெளியான செய்தி குறித்து ஜனாதிபதி செயலகம் கவனம் எடுத்தள்ளது. அரசியலமைப்பின் 34 (1) பிரிவின்படி, கைதிகளுக்குப் பொது மன்னிப்பு வழங்க ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளது. அதன்படி, சிறைச்சாலை அதிகாரிகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட கைதிகளின் பட்டியல் நீதி அமைச்சுக்கு அனுப்பப்படும். இந்தப் பட்டியல் நீதி அமைச்சினால் பரிசீலிக்கப்பட்டு ஜனாதிபதி செயலகத்திற்கு அனுப்பப்படுகிறது. அதன்படி, ஜனாதிபதியின் அனுமதியுடன், குறித்த கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படும். எவ்வாறாயினும், மேற்குறித்த சம்பவத்திற்கு அமைவாக 2025-05-06 தேதியிடப்பட்ட மற்றும் (06ஃ01 යෝජිතஃ ජ.පො.සමාஃ 05-12ஃ2025) இலக்கத்தில் சிறைச்சாலை ஆணையாளர் நாயகத்தால் ஜனாதிபதி செயலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த பொது மன்னிப்பு கிடைக்க வேண்டியவர்களின் பெயர்ப் பட்டியலில் 388 கைதிகளின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தன. அத்துடன், அனுராதபுரம் சிறைச்சாலையில் நிதி மோசடி தொடர்பாகச் சிறையிடப்பட்ட நபரின் பெயர் அந்தப் பட்டியலில் எங்கும் சேர்க்கப்பட்டிருக்கவில்லை. அதாவது, ஜனாதிபதியால் பொது மன்னிப்புக்காக அனுமதிக்கப்பட்ட 388 பெயர்களில் அந்த நபரின் பெயர் சேர்க்கப்படவில்லை. இந்தச் சம்பவம் தொடர்பாக ஜனாதிபதி செயலகம் ஜூன் 06ஆம் தேதி 'ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் சிறைக் கைதிகளை விடுவிப்பது தொடர்பாக' என்ற தலைப்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் நாட்களில் இது தொடர்பாக முறையான விசாரணை நடத்தப்பட்டு, அதற்குப் பொறுப்பான அதிகாரிகள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கு முன்னரும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளனவா? கடந்த காலங்களில் நாடு பூராகவும் உள்ள சிறைச்சாலைகளில் ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்ட சிறைக் கைதிகளில் தகுதியற்ற சிலர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலையில், இவ்வாறான சம்பவங்கள் தொடர்பிலும் விசாரணைகளை நடத்த வேண்டும் எனப் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படுவோரின் பட்டியலில் தகுதியற்ற கைதிகள் விடுதலை செய்யப்படுகின்றமைக்குப் பின்னணியில் சிறைச்சாலை ஆணையாளர் மாத்திரமன்றி, பின்னணியில் பலரும் இருக்கக்கூடும் என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், ஃபேஸ்புக் பதிவொன்றின் ஊடாகத் தெரிவித்துள்ளார். அதோடு, இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய அதிகாரிகள், அரசியல்வாதிகள் அனைவரும் அடையாளம் காணப்பட்டு, விசாரணை, குற்றப் பத்திரிகை, வழக்கு, சிறைத் தண்டனை என்ற பாதையில் பயணிக்க வைக்கப்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். அத்துடன், இது நிச்சயமாக முதல் சம்பவமாக இருக்க முடியாது எனவும், முன்னைய ஆட்சிக் காலத்திலும் நடந்த இத்தகைய விடுவிப்பு சம்பவ வரலாறுகள் தோண்டி எடுக்கப்பட்டு சட்டம் தன் கடமையைச் செய்ய வேண்டும் எனவும் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c8xgkdrdkqeo
-
இஸ்ரேலிய அமைச்சர்களிற்கு எதிராக பிரிட்டன் உட்பட ஐந்து நாடுகள் தடை
பாலஸ்தீனியர்களிற்கு எதிரான வன்முறைகளை தூண்டும் விதத்தில் கருத்துக்கள் - இரண்டு இஸ்ரேலிய அமைச்சர்களிற்கு எதிராக பிரிட்டன் உட்பட ஐந்து நாடுகள் தடை 11 JUN, 2025 | 12:31 PM ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குகரையில் உள்ள பாலஸ்தீனியர்களிற்கு எதிரான வன்முறைகளை தூண்டும் விதத்தில் தொடர்ச்சியாக கருத்துக்களை வெளியிட்ட இஸ்ரேலின் இரண்டு வலதுசாரி அமைச்சர்களிற்கு எதிராக பிரிட்டன் உட்பட நான்கு நாடுகள் தடைகளை விதித்துள்ளன. பிரிட்டன் நோர்வே கனடா அவுஸ்திரேலிய நியுசிலாந்து ஆகிய நாடுகளும் பிரிட்டனுடன் இணைந்து தடைகi விதித்துள்ளன. ஆகிய இரண்டு இஸ்ரேலிய அமைச்சர்களும் பிரிட்டனிற்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்படும் மேலும் பிரிட்டனில் உள்ள இருவரினதும் சொத்துக்களும் முடக்கப்படும். இருவரும் கடும் வன்முறைகளை தூண்டினார்கள் பாலஸ்தீனியர்களின் மனித உரிமைகளிற்கு பெரும் ஆபத்தினை ஏற்படுத்தினார்கள் என பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சரும் தேசிய பாதுகாப்பு அமைச்சரும் கூட்டாக தெரிவித்துள்ளனர். தீவிரவாத இஸ்ரேலிய குடியேற்றவாசிகளின் மோசமான வன்முறைகளால் பாலஸ்தீனியர்கள் பெரும் துன்பத்தினை அனுபவிக்கின்றனர்,இது எதிர்கால பாலஸ்தீன தேசத்தினையும் குறைமதிப்பிற்கு உட்படுத்துகின்றது என தெரிவித்துள்ள பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சு பிரிட்டன் நோர்வே கனடா நியுசிலாந்து அவுஸ்திரேலியாவுடன் இணைந்து பதில் நடவடிக்கைகளை தீவிரப்படுத்துகின்றது என தெரிவித்துள்ளது. இவ்வாறான நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படமுடியாதவை இதன் காரணமாகவே நாங்கள் தற்போது நடவடிக்கை எடுத்துள்ளோம் - பொறுப்புகூறலிற்கு உட்படுத்தியுள்ளோம் என பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சர் டேவிட் லமி தெரிவித்துள்ளார். இதேவேளை தனது மக்களால் தெரிவு செய்யப்பட்ட நாடளுமன்ற உறுப்பினர்கள் இவ்வாறன நடவடிக்கைகளிற்கு உட்படுத்தப்படுவது குறித்து இஸ்ரேல் கடும் சீற்றம் வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/217150
-
15 வீதத்தால் உயர்வடைகிறது மின்சாரக் கட்டணம்!
மின்சாரக் கட்டணத்தை 15% அதிகரிப்பது மக்கள் ஆணையை காட்டிக் கொடுக்கும் செயலாகும். மக்கள் ஆணைக்கு இழைக்கும் துரோகமுமாகும் - எதிர்க்கட்சித் தலைவர் சஜித் Published By: DIGITAL DESK 3 11 JUN, 2025 | 05:07 PM மின்சாரக் கட்டணத்தை 15% அதிகரிப்பது மக்கள் ஆணையை காட்டிக் கொடுக்கும் செயலாகும். மக்கள் ஆணைக்கு இழைக்கும் துரோகமுமாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நாளை வியாழக்கிழமை (12) நள்ளிரவு முதல் மின்சாரக் கட்டணத்தை 15 சதவீதத்தால் அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இலங்கை மின்சார சபையும், அரசாங்கமும் முன்வைத்த முன்மொழிவின் அடிப்படையில் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு இந்த முடிவை எடுத்துள்ளது. இந்த மின்சாரக் கட்டண அதிகரிப்பு மக்கள் ஆணையை மீறும் செயலாகும். மக்களின் குரலுக்கு செவிசாய்க்காத போக்காகும். இது இந்நாட்டு மக்களை ஏமாற்றும் நடவடிக்கையாகும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். ஜனாதிபதி தேர்தலின் போது, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மின்சாரக் கட்டணத்தை ரூ.9000 இல் இருந்து ரூ.6000 ஆகவும், ரூ.3000 கட்டணத்தை ரூ.2000 ஆகவும் குறைப்போம் என்றார். மின்சார கட்டணத்தை 33% ஆல் குறைப்போம் என்றும் மேடைக்கு மேடை பிரஸ்தாபித்தார். பின்னர், பொதுத் தேர்தலில் அக்கட்சி வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை ஈட்டி 159 ஆசனங்களை தனதாக்கிய சந்தர்ப்பத்திலும் கூட மின்சாரக் கட்டணத்தை 33% ஆல் குறைத்திருக்க வேண்டும். ஆனால் அது நடக்கவில்லை. நாட்டு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை அப்பட்டமாக மீறி, ஜனாதிபதியே தான் வெளியிட்ட அறிக்கைகளை பொய்களாக மாற்றும் வகையில், மின்சாரக் கட்டணத்தை 15% ஆல் அதிகரிக்க தற்போது இந்த அரசாங்கம் எடுத்த நடவடிக்கை, இந்த நாட்டின் மின்சார நுகர்வோரின் உரிமைகளை அப்பட்டமாக மீறும் செயலாக அமைந்து காணப்படுகின்றது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பாக இன்று புதன்கிழமை (11) விசேட கூற்றொன்றை முன்வைத்து கருத்துத் தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார். சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) அடுத்த கட்ட தவணையைப் பெறுவதற்காக மின்சாரக் கட்டணங்கள் இவ்வாறு அதிகரிக்கப்பட்டுள்ளன. நீட்டிக்கப்பட்ட கடன் வசதியை பெற வேண்டுமானால் மின்சார கட்டணங்களை அதிகரிக்க வேண்டும் என்ற நிபந்தனையை சர்வதேச நாணய நிதியம் விதித்துள்ளது. திசைகாட்டி தலைமையிலான ஜே.வி.பி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் புதிய சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தமொன்றையும் இணக்கப்பாடொன்றையும் எட்டுவோம் என வாக்குறுதியளித்திருந்தது. என்றாலும் ஆட்சிக்கு வந்தவுடன் தனது ஆணையை மீறியுள்ளதுடன், முந்தைய அரசாங்கத்தின் சர்வதேச நாணய நிதிய இணக்கப்பாட்டை அவ்வாறே முன்கொண்டு செல்கிறது. இந்த அரசாங்கம் மக்கள் ஆணையை மீறி செயல்பட்டு வருகிறது. மக்கள் ஆணையை காட்டிக் கொடுத்து பொதுமக்களின் கருத்தை கிடப்பில் போட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்தின் இணக்கப்பாட்டை இவர்கள் அதே முறையில் செயல்படுத்தியதன் விளைவாக, நாடும் மக்களும் இன்று இவ்வாறான நிலைமைகளுக்கு ஆளாகியுள்ளனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார். ஐக்கிய மக்கள் சக்தியும் கூட சர்வதேச நாணய நிதியத்துடன் இணங்கி செயல்படும். என்றாலும் IMF பிரதிநிதிகளை சந்தித்தபோது நாம் புதியதொரு இணக்கப்பாட்டுக்கு வருவோம் என தெரிவித்திருந்தோம். ஐக்கிய மக்கள் சக்தி (SJB) இன்றும் அந்த நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது. தற்போதைய அரசாங்கம் பொதுமக்களுக்கு வழங்கிய அனைத்து வாக்குறுதிகளையும் பொய்யாக்கி, மின்சார கட்டணத்தை 15% ஆல் அதிகரித்துள்ளது. அரசாங்கம் எடுத்துள்எ இந்த நடவடிக்கையால் ஏழைகள், சாதாரண மக்கள், உழைக்கும் மக்கள், தொழில்முனைவோர்கள் மற்றும் சுற்றுலாத் துறையில் ஈடுபட்டு வருவோரை கடுமையான சிக்கலுக்குள் தள்ளும். எனவே, மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்றி, வழங்கப்பட்ட மக்கள் ஆணையை காட்டிக் கொடுக்க இடமளிக்க வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம். மின்சாரக் கட்டணத்தை 15% அதிகரிப்பதற்கு பகரமாக மின்சாரக் கட்டணத்தை 33% ஆல் குறைக்கும் நடவடிக்கையையே இந்த அரசாங்கம் எடுத்திருக்க வேண்டும். வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் வரை மின்சார நுகர்வோருடன் இணைந்து ஐக்கிய மக்கள் சக்தி குரல் எழுப்பும். ஐக்கிய மக்கள் சக்தி ஜனநாயக ரீதியிலான போராட்டத்திலும் ஈடுபடும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/217187
-
புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டி பற்றாக்குறை - பாடசாலை மாணவிக்கு நேர்ந்த கதி!
11 JUN, 2025 | 04:01 PM பாடசாலை மாணவி ஒருவர் தலை வலி, வாந்தி, மயக்கம் போன்ற உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டு புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் இன்றைய தினம் (11) அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அவரை, மேலதிக சிகிச்சைக்காக மாஞ்சோலை வைத்தியசாலைக்கு கொண்டுசெல்ல நோயாளர் காவு வண்டியின்றி வைத்தியசாலை நிர்வாகம் காணப்பட்டதால் உடல்நிலை பாதிக்கப்பட்ட மாணவியும் அவரது பெற்றோரும் பெரும் சிரமங்களுக்கு ஆளாகியுள்ளனர் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டி பற்றாக்குறையால் இதுபோன்ற பல பிரச்சினைகள் தொடர்ந்து காணப்பட்டு வருவதோடு, நோயாளர்களும் பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர். மாணவியின் நிலை தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது, இன்று காலை உடையார் கட்டில் உள்ள பாடசாலைக்குச் சென்ற இந்த மாணவி உடல்நலக் குறைவு ஏற்பட, உடனடியாக பாடசாலை நிர்வாகத்தினர் மாணவியை பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர். அதன் பின்னர் மாணவியுடன் பெற்றோர் புதுக்குடியிருப்பு வைத்தியசாலைக்கு சென்றுள்ளனர். புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் இருந்து மேலதிக சிகிச்சைக்காக மாணவியை மாஞ்சோலை வைத்தியசாலைக்கு அனுமதிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் இருந்து மாஞ்சோலை வைத்தியசாலைக்கு மாணவியை கொண்டு செல்வதற்காக, நோயாளர் காவு வண்டியை எதிர்பார்த்து மாணவியும் பெற்றோரும் காத்திருந்துள்ளனர். அதன் பின் சுமார் 3 மணிநேரத்தின் பின் மாணவியின் தந்தை, அவ்வைத்தியசாலையில் சேவையாற்றும் வைத்தியரிடம் சென்று, நோயாளர் காவு வண்டிக்காக தாம் காத்திருப்பதாக தெரிவித்துள்ளார். அதற்கு அந்த வைத்தியர், வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டி பற்றாக்குறை காணப்படுவதாக கூறியதோடு, காத்திருக்க கடினமெனில், சுய விருப்பத்தின் பேரில், சொந்த செலவில் மாணவியை அழைத்துச் செல்லுமாறும் மாணவியின் தந்தையிடம் முரண்பாடாக பேசியுள்ளார். அதன் பின், மாணவியை அவரது தந்தை, தன் சொந்த செலவில் மாஞ்சோலை வைத்தியசாலைக்குக் கொண்டு சென்று பார்த்தபோது, மாஞ்சோலை வைத்தியசாலை வளாகத்தில் நோயாளர் காவு வாகனங்கள் பல நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாக தெரிவித்துள்ளார். அத்துடன், வசதியற்ற நோயாளர்கள் எதிர்கொள்ளும் இதுபோன்ற பாரிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் மாணவியின் தந்தை வேண்டுகோள் விடுத்துள்ளார். https://www.virakesari.lk/article/217176
-
குடல் ஆரோக்கியம்: தோசை, தயிர், டார்க் சாக்லேட் போன்ற எதை சாப்பிடலாம்? எதை சாப்பிடக் கூடாது?
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஒரு நபரின் மூளையை அவர்களின் குடலுடன் இணைக்கும் ஒரு கிராஃபிக் கட்டுரை தகவல் எழுதியவர், ஆர்மென் நெர்செசியன் பதவி, பிபிசி உலக சேவை 7 மணி நேரங்களுக்கு முன்னர் காரணமேயில்லாமல் வயிறு உப்புசம், சோர்வு அல்லது ஏதோவொரு விதமான குழப்பத்தில் இருப்பதாக உங்களுக்கு எப்போதாவது தோன்றியிருக்கிறதா? அப்படியிருந்தால், அது உங்களுடைய குடல் ஏதாவது செய்தி சொல்ல முயற்சிப்பதாகவும் எடுத்துக் கொள்ளலாம். குடல் ஆரோக்கியம் என்பது செரிமானம் என்பதுடன் அடங்கிவிடுவதில்லை. நோய் எதிர்ப்பு சக்தி, மனநலம் மற்றும் நமது ஒட்டுமொத்த உயிர் சக்தியின் ஆணிவேர் என்று சொல்லலாம். நாம் உண்ணும் ஊட்டச்சத்து நிறைந்த, சீரான உணவில் டிரில்லியன்கணக்கான பாக்டீரியாக்கள் மற்றும் குடல் நுண்ணுயிரிகள் செழித்து வளர்கின்றன. ஆனால் நாம் செய்யும் மோசமான உணவுத் தேர்வுகள் இந்த நுட்பமான உடலுறுப்பை சீர்குலைத்து, செரிமான பிரச்னைகள், வீக்கம் மற்றும் நாள்பட்ட நோய்களுக்கு வழிவகுக்கின்றன. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, நமது குடலின் ஆரோக்கியம் நமது நடத்தை, மன அழுத்த அளவுகள் மற்றும் நல்வாழ்வு உணர்வைப் பாதிக்கும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர். குடல் ஆரோக்கியம் பற்றி பேசிய லண்டன் இம்பீரியல் கல்லூரியின் பாக்டீரியா எதிர்ப்பு உயிரியல் மையத்தின் மூத்த விரிவுரையாளர் டாக்டர் ஜூலி மெக்டொனால்ட், குடலில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகள் செரிமான அறிகுறிகள் மூலம் மட்டுமல்லாமல் வேறுபல வழிகளிலும் வெளிப்படும் என்று சொல்கிறார். கைரேகைகள் ஒருவரைப் போல மற்றொருவருக்கு இருக்காது என்பதைப் போலவே, ஒவ்வொரு நபரின் குடல் நுண்ணுயிரியமும் தனித்துவமானது. இதன் பொருள், சில தனிநபர்கள் இயற்கையாகவே மீள்தன்மை கொண்ட செரிமான அமைப்புகளைக் கொண்டிருக்கலாம், சிலருக்கு செரிமானக் கோளாறுகள் இருக்கலாம். மரபியல், சுற்றுச்சூழல், உணவுமுறை போன்றவை மட்டுமல்ல, ஒருவர் அறுவை சிகிச்சை மூலம் பிறந்தாரா அல்லது இயற்கையான பிரசவம் மூலம் பிறந்தாரா என்பது போன்ற ஆரம்ப கால வாழ்க்கை காரணிகள் அனைத்துமே குடல் ஆரோக்கியத்தை வடிவமைப்பதில் பங்கு வகிக்கின்றன. நமது குடல் நுண்ணுயிரியின் இந்த தனித்துவமான தன்மை ஆராய்ச்சியாளர்களுக்கு ஒரு சவாலை முன்வைக்கிறது. நன்மை பயக்கும் பாக்டீரியாக்களின் முக்கிய குழுக்களை விஞ்ஞானிகள் அடையாளம் காண முடிந்தாலும், உடல்நலக் குறைவு மற்றும் நோய்க்கு காரணமான சரியான நுண்ணுயிரிகளை சுட்டிக்காட்டுவது இன்றுவரை சிக்கலானதாகவே உள்ளது. நீ என்ன சாப்பிடுகிறாயோ அதுவே நீ "குடல் நுண்ணுயிரியல் பன்முகத்தன்மையில் நமது உணவுத் தேர்வுகள் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன," என்று லண்டன் இம்பீரியல் கல்லூரியின் மருத்துவ ஆராய்ச்சி சக மற்றும் ஆலோசகர் மருத்துவரான டாக்டர் பெஞ்சமின் முல்லிஷ் கூறுகிறார். "இறைச்சி உட்கொள்வதைக் குறைத்தல் அல்லது நார்ச்சத்து அதிகரிப்பது போன்ற உணவில் ஏற்படும் மாற்றங்கள் குடல் பாக்டீரியாவில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதை ஆய்வுகளில் பார்த்திருக்கிறோம்." எடுத்துக்காட்டாக, தயிர் மற்றும் கேஃபிர் போன்ற புளித்த பால் பொருட்களை அறிமுகப்படுத்துவது, ஒட்டுமொத்த நுண்ணுயிரியல் பன்முகத்தன்மையை அதிகரிக்காவிட்டாலும்கூட, லாக்டோபாசில்லஸ் மற்றும் பிஃபிடோபாக்டீரியம் போன்ற நன்மை பயக்கும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் என ஆராய்ச்சி கூறுகிறது. ஆனால் உணவுமுறை மட்டுமே குடல் ஆரோக்கியத்தைக் கட்டுப்படுத்தும் காரணி என்று சொல்லிவிட முடியாது. நமது குடல் ஆரோக்கியத்தில் ஏற்படும் பிற முக்கிய தாக்கங்கள் பின்வருமாறு: தூக்கம் மற்றும் மன அழுத்தம்: தூக்கக்குறைவு மற்றும் நாள்பட்ட மன அழுத்தம் குடல் ஆரோக்கியத்தை பாதிக்கிறது உடற்பயிற்சி: ஆரோக்கியமான நுண்ணுயிரியலை ஊக்குவிக்க உடல் செயல்பாடுகள் அவசியமானவை நுண்ணுயிரி மருந்துகள்: மருத்துவம் மற்றும் விவசாயத்தில் நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் அதிகப்படியான பயன்பாடு குடல் பாக்டீரியாவை சீர்குலைத்து நுண்ணுயிர் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஜப்பானில் மேற்கொள்ளப்பட்ட சமீபத்திய ஆய்வு ஒன்றில், பருப்பு வகைகள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுவது நன்மை பயக்கும் குடல் பாக்டீரியாவை அதிகரிப்பதன் மூலம் மன அழுத்தத்தைக் குறைக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. ஆயிரம் பேர் கலந்துக் கொண்ட அந்த ஆய்வில் ஆரோக்கியமான, பெரியவர்கள் அதிலும் குறிப்பாக பெண்கள் மீதான ஆய்வில், புரோபயாடிக்குகள் மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவு போன்ற நன்மை பயக்கும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவு, குடல் ஆரோக்கியத்தையும் ஒருங்கிணைப்பையும் பராமரிக்க அவசியமான லாக்னோஸ்பைரா பாக்டீரியாவை பெருக்க உதவும் என்று கண்டறியப்பட்டது. குடலுக்கும் மூளைக்குமான தொடர்பையும் குறிப்பிடும் டாக்டர் முல்லிஷ், "வேகஸ் நரம்பு, மூளை மற்றும் குடலை இணைக்கிறது. செரோடோனின் மற்றும் டோபமைன் போன்ற நரம்பியக் கடத்திகள் குடலில் உருவாகின்றன. நடத்தை, மன அழுத்த அளவுகள் மற்றும் மன நலனையும் குடல் ஆரோக்கியம் பாதிக்கலாம் என்று ஆராய்ச்சி கூறுகிறது." ஆரோக்கியமான குடலுக்கான சிறந்த உணவு புளித்த உணவுகளில் புரோபயாடிக்குகள் உள்ளன, இவை குடல் நுண்ணுயிரியை சமநிலைப்படுத்த உதவும் உயிருள்ள பாக்டீரியாக்கள் ஆகும். புரோபயாடிக் நிறைந்த உணவுகளை உட்கொள்வது செரிமானத்தை மேம்படுத்தும், வீக்கத்தைக் குறைக்கும் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை ஆதரிக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. புளித்த உணவுகளில் பிரபலமானவை: தயிர் கெஃபிர்: பால் (மாடு, ஆடு அல்லது செம்மறி) மற்றும் கேஃபிர் தானியங்கள் (பாக்டீரியா மற்றும் ஈஸ்ட் கலவை) ஆகியவற்றிலிருந்து தயாரிக்கப்படும் ஒரு பால் பானம் சார்க்ராட்: துண்டாக்கப்பட்ட முட்டைகோஸ் மற்றும் உப்புடன் தயாரிக்கப்படும் புளிக்க வைக்கப்பட்ட முட்டைக்கோஸ் கிம்ச்சி: நாபா முட்டைக்கோஸ், முள்ளங்கி, பூண்டு, இஞ்சி, மிளகாய்த்தூள், மீன் சாஸ் மற்றும் சால்ட்மிசோ ஆகியவற்றிலிருந்து தயாரிக்கப்படும் ஒரு கொரிய உணவு மிசோ: சோயாபீன்ஸ், உப்பு மற்றும் கோஜி (பெரும்பாலும் அரிசி அல்லது பார்லியில் இருந்து தயாரிக்கப்படுகிறது) ஆகியவற்றிலிருந்து தயாரிக்கப்படும் ஒரு ஜப்பானிய பேஸ்ட் டெம்பே: சோயாபீன்ஸ் மற்றும் ரைசோபஸ் அச்சு கலாச்சாரத்திலிருந்து தயாரிக்கப்படும் ஒரு உறுதியான, புரதம் நிறைந்த இந்தோனேசிய தயாரிப்பு பிற: கொம்புச்சா (உலகளவில்), தோசை (இந்தியா), மற்றும் நாட்டோ (ஜப்பான்) குறிப்பு: புளிக்கவைக்கப்பட்ட உணவுகளை புதிதாக உண்ணத் தொடங்குபவராக இருந்தால், செரிமான பிரச்னையைத் தவிர்க்க, சிறிய அளவில் சாப்பிடத் தொடங்குங்கள். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கொரிய சிறப்பு உணவான கிம்ச்சி போன்ற புளித்த உணவுகள், அவற்றின் சுகாதார நன்மைகளுக்காக உலகம் முழுவதும் பிரபலமாகிவிட்டன. நார்ச்சத்து ஒரு ப்ரீபயாடிக் ஆக செயல்பட்டு, புரோபயாடிக் உணவுகளில் காணப்படுவதைப் போல நன்மை பயக்கும் குடல் பாக்டீரியாக்களை வளர்க்கிறது, மேலும் செரிமானத்தை ஒழுங்குபடுத்துகிறது. நார்ச்சத்து நிறைந்த உணவுகள், இரைப்பை குடல் நோய்களின் அபாயத்தைக் குறைத்து எடையை பராமரிக்க உதவும் என்று ஆராய்ச்சி சுட்டிக்காட்டுகிறது. நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளில் பின்வருவன அடங்கும்: முழு தானியங்கள் (ஓட்ஸ், குயினோவா, பழுப்பு அரிசி போன்றவை) பருப்பு வகைகள் (பருப்பு, கொண்டைக்கடலை, கருப்பு பீன்ஸ் போன்றவை) பழங்கள் (ஆப்பிள், வாழைப்பழங்கள், பெர்ரி போன்றவை) காய்கறிகள் (ப்ரோக்கோலி, கேரட்போன்றவை) பருப்புகள் மற்றும் விதைகள் (பாதாம், ஆளி விதைகள், சியா விதைகள் போன்றவை) குறிப்பு: வீக்கம் அல்லது அசௌகரியத்தைத் தடுக்க படிப்படியாக நார்ச்சத்து உட்கொள்ளலை அதிகரிக்கவும். செரிமானம் மேம்பட தண்ணீர் அதிகம் குடிக்கவும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தயிர் போன்ற புரோபயாடிக்குகளை, பெர்ரி போன்ற ப்ரீபயாடிக்குகளுடன் சேர்த்து உண்பதால் குடல் ஆரோக்கியம் அதிகரிக்கும் பாலிஃபீனால்கள் என்பது குடல் நுண்ணுயிரி பன்முகத்தன்மையை மேம்படுத்தி வீக்கத்தைக் குறைக்கும் ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்ட தாவர சேர்மங்கள் ஆகும். பாலிஃபீனால் உள்ள உணவுகள் பின்வருமாறு: டார்க் சாக்லேட் (குறைந்தது 70% கோகோ) க்ரீன் டீ பெர்ரி ஆலிவ் எண்ணெய் குறிப்பு: பாலிஃபீனால் நிறைந்த உணவுகளை ஆரோக்கியமான கொழுப்புகளுடன் (அவகோடோ அல்லது கொட்டைகள் போன்றவை) இணைந்து உண்டால், உடல் அதிக அளவிலான பாலிஃபீனாலை உறிஞ்ச ஏதுவாக இருக்கும். எலும்பு சூப்பில் கொலாஜன் மற்றும் குளுட்டமைன் போன்ற அமினோ அமிலங்கள் நிறைந்துள்ளன, இது குடல் புறணி ஒருமைப்பாட்டை பராமரிக்கவும் வீக்கத்தைக் குறைக்கவும் உதவும். இருப்பினும், இந்த நன்மைகளை உறுதிப்படுத்த கூடுதல் ஆராய்ச்சி தேவை. குறிப்பு: இதை சூப்களில் பயன்படுத்தியும், தனியாகவும் சமைத்து உண்ணலாம். குடல் ஆரோக்கியத்திற்கு குலைக்கும் உணவுகள் மிகவும் பதப்படுத்தப்பட்ட உணவுகளில் பொதுவாக சேர்க்கப்படும் ரசாயனங்கள், பதப்படுத்துதல் மற்றும் நொதித்தல் பொருட்கள் உள்ளன, அவை குடல் பாக்டீரியா கலவையை மாற்றி வீக்கத்தை ஏற்படுத்தலாம். பொதுவான உதாரணங்கள் பின்வருமாறு: பேக்கேஜ் செய்யப்பட்ட தின்பண்டங்கள் (சிப்ஸ், பட்டாசுகள், உடனடி நூடுல்ஸ்) பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் (ஹாட் டாக், தொத்திறைச்சி, பன்றி இறைச்சி, டெலி இறைச்சிகள்) சர்க்கரை சேர்க்கப்பட்ட தானியங்கள் தயார்நிலை உணவுகள் குறிப்பு: கொட்டைகள், பழங்கள் அல்லது வீட்டில் தயாரிக்கப்பட்ட கிரானோலா போன்ற குறைந்தபட்ச பதப்படுத்தப்பட்ட தின்பண்டங்களை தேர்வுசெய்யலாம். அஸ்பார்டேம் மற்றும் சாக்கரின் போன்ற சில செயற்கை இனிப்புகள், குடல் பாக்டீரியா மற்றும் குளுக்கோஸ் வளர்சிதை மாற்றத்தில் எதிர்மறையான மாற்றங்களை ஏற்படுத்தும். செயற்கை இனிப்புகள் உள்ள உணவுப்பொருட்கள்: டயட் சோடாக்கள் சர்க்கரை இல்லாத கலோரி குறைந்த திண்பண்டங்கள் குறிப்பு: ஸ்டீவியா அல்லது மாங்க் பழம் போன்ற இயற்கை மாற்றுகளைத் தேர்வு செய்யவும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, துரித உணவுகளில் பெரும்பாலும் அதிக பதப்படுத்தப்பட்ட, அதிக சர்க்கரை உள்ள உணவுகள் அடங்கும், எனவே அவற்றை குறைவாகவே உட்கொள்ள வேண்டும் அதிக சர்க்கரை உள்ள உணவு, தீங்கு விளைவிக்கும் குடல் பாக்டீரியாக்களின் வளர்ச்சியையும் வீக்கத்தையும் ஊக்குவிக்கும் அதே நேரத்தில் நன்மை பயக்கும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியைக் குறைக்கிறது. சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை அதிகம் உள்ள உணவுகள் பின்வருமாறு: பேஸ்ட்ரிகள் மற்றும் கேக்குகள் வெள்ளை ரொட்டி மற்றும் பாஸ்தா சர்க்கரை பானங்கள் (சோடா, எனர்ஜி பானங்கள், பழச்சாறுகள்) குறிப்பு: இனிப்பு உண்ண விரும்பினால் பழங்கள் அல்லது டார்க் சாக்லேட் உண்ணுங்கள். அனைத்து வகை மதுபானங்களும் குடலில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும். தூக்க முறைகளைத் தொந்தரவு செய்வதன் மூலமும், மன நலனைப் பாதிப்பதன் மூலமும், குடல் நுண்ணுயிரிகளின் கலவையை மாற்றுவதன் மூலமும் குடல் பாதிக்கப்படும். சிவப்பு ஒயினில் பாலிபினால்கள் நிறைந்திருந்தாலும், இது குடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்ற கருத்து தவறானது என்று, ஐபிஎஸ் (எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறி) ஆலோசகர் உணவியல் நிபுணர் கிர்ஸ்டன் ஜாக்சன் பிபிசியிடம் கூறினார். ஏனெனில் பாலிபினால்களினால் ஏற்படும் நன்மைகளை சிவப்பு ஒயினின் உள்ள ஆல்கஹால் ஒன்றுமில்லாமல் செய்துவிடும் என்று அவர் கூறுகிறார். குறிப்பு: மது அருந்தும்போது குடலுக்கு உகந்த உணவுகளுடன் மிதமாக குடிக்கவும். சிவப்பு மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சி அதிகம் உள்ள உணவுகளை உண்பதால், குடல் நுண்ணுயிரியலில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கும். எனவே, சிவப்பு மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சி உண்பதைக் குறைத்து, மீன், கோழி அல்லது தாவர அடிப்படையிலான மாற்றுகள் என மெலிந்த புரதங்களைத் தேர்ந்தெடுப்பதை பரிசீலிக்கவும். குறிப்பு: சிவப்பு மாமிசத்தை தவிர்த்து, நுகர்வை படிப்படியாக குறைக்க முயற்சிக்கவும். சிறிய மாற்றங்கள், பெரிய தாக்கம் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான எளிய வழிகளில் ஒன்று உணவு நார்ச்சத்து உட்கொள்ளலை அதிகரிப்பது என்று டாக்டர் மெக்டொனால்ட் பரிந்துரைக்கிறார். "நன்மை பயக்கும் நுண்ணுயிரிகளை நார்ச்சத்து வளர்க்கிறது, செரிமான ஆரோக்கியத்தையும் நோய் எதிர்ப்பு சக்தியையும் மேம்படுத்துகிறது." தினமும் குறைந்தது 30 கிராம் நார்ச்சத்துடன், பல்வேறு வகையான, தாவர அடிப்படையிலான உணவைப் பின்பற்ற பரிந்துரைக்கிறார், உணவியல் நிபுணர் கிர்ஸ்டன் ஜாக்சன். முழு தானியங்கள், கொட்டைகள், விதைகள், பழங்கள் மற்றும் காய்கறிகள் ஆகியவை குடல் நுண்ணுயிரிகளை வளர்க்கவும் மலச்சிக்கலைத் தடுக்கவும் உதவும் என்று அவர் அறிவுறுத்துகிறார். ஆரோக்கியமான குடலுக்கான எளிய குறிப்புகள்: உணவு பன்முகத்தன்மையை அதிகரிக்கவும் (வெவ்வேறு தாவர அடிப்படையிலான உணவுகளை உண்ணவும்) புரோபயாடிக்குகளை (தயிர், கேஃபிர்) ப்ரீபயாடிக்குகளுடன் (நார்ச்சத்து நிறைந்த உணவுகள்) சேர்த்து உண்ணவும் செரிமானத்திற்கு உதவ நீர்ச்சத்தை பராமரியுங்கள் தியானம், உடற்பயிற்சி மற்றும் தூக்கத்துடன் மன அழுத்தத்தைக் குறைக்கவும் அவசியமில்லாத பட்சத்தில் ஆண்டிபயாடிக் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தவும் சிறிய, நிலையான உணவுமுறை மாற்றங்கள் என்பது தீவிரமான மாற்றங்களை விட நிலையானவையாக இருக்கும். ஒவ்வொரு வாரமும் சிறிய, அடையக்கூடிய இலக்குகளை நிர்ணயிப்பது நீண்டகால குடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ள அணுகுமுறையாக இருக்கும் என்று திருமதி ஜாக்சன் கூறுகிறார். உணவு மற்றும் வாழ்க்கை முறையை கவனத்துடன் தேர்வு செய்வதன் மூலம் உங்கள் செரிமானத்தை மேம்படுத்தலாம், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம், அத்துடன் மன நலனையும் மேம்படுத்தலாம். https://www.bbc.com/tamil/articles/cx2qzp0k7dpo
-
ஜனாதிபதி அநுர ஜேர்மனியை சென்றடைந்தார்
ஜனாதிபதி ஜேர்மனியை சென்றடைந்தார் - ஜேர்மனி ஜனாதிபதியை பிற்பகல் சந்திக்கவுள்ளார் 11 JUN, 2025 | 03:06 PM ஜேர்மனியக் கூட்டாட்சி குடியரசிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று (11) முற்பகல் பெர்லினின் பிராண்டன்பேர்க் சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார். ஜனாதிபதியை வரவேற்கும் உத்தியோகபூர்வ வரவேற்பு நிகழ்வு, ஜேர்மன் ஜனாதிபதி பிராங்க்-வால்டர் ஸ்டெய்ன்மியரின் (Frank-Walter Steinmeier) தலைமையில் இன்று பிற்பகல் பெர்லினில் உள்ள பெல்வீவ் மாளிகையில் (Bellevue Palace) நடைபெறும். இதைத் தொடர்ந்து, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் ஜேர்மன் ஜனாதிபதி பிராங்க்-வால்டர் ஸ்டெய்ன்மியருக்கும் (Frank-Walter Steinmeier) இடையில் உத்தியோகபூர்வ சந்திப்பு நடைபெறவுள்ளது. வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் ஜனாதிபதியுடன் இந்த விஜயத்தில் கலந்துகொண்டுள்ளனர். https://www.virakesari.lk/article/217167
-
நிதி மோசடி தண்டனை பெற்றவருக்கு மன்னிப்பு : ஜனாதிபதி, சிறைச்சாலை திணைக்களத்தின் முரண்பட்ட அறிக்கை
அநுராதபுரம் சிறைச்சாலையின் அத்தியட்சகருக்கு விளக்கமறியல் நீடிப்பு! 11 JUN, 2025 | 02:15 PM அநுராதபுரம் சிறைச்சாலையின் அத்தியட்சகர் மொஹான் கருணாரத்னவை எதிர்வரும் 13 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு அநுராதபுரம் நீதவான் நீதிமன்றம் இன்று புதன்கிழமை (11) உத்தரவிட்டுள்ளது. அநுராதபுரம் சிறைச்சாலையின் அத்தியட்சகர் மொஹான் கருணாரத்ன, நிதி மோசடி குற்றச்சாட்டின் கீழ் அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த டபிள்யூ.எச். அத்துல திலகரத்ன என்பவரை ஜனாதிபதி பொது மன்னிப்பை பயன்படுத்தி சட்டவிரோதமாக விடுதலை செய்த குற்றச்சாட்டின் பேரில் கடந்த 08 ஆம் திகதி குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்ட நிலையில் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/217164
-
15 வீதத்தால் உயர்வடைகிறது மின்சாரக் கட்டணம்!
11 JUN, 2025 | 01:41 PM மின்சாரக் கட்டணம் இன்று நள்ளிரவு (12) முதல் அமுலுக்கு வரும் வகையில் உயர்வடைவதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி மின்சாரக் கட்டணம் 15 சதவீதத்தால் உயர்வடையவுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று (11) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் கே.பி.எல். சந்திரலால் இதனைத் தெரிவித்தார். இதேவேளை, இலங்கை மின்சார சபை (CEB) 2025ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டுக்கான மின்சார கட்டணங்களை 18.3 வீதத்தால் அதிகரிக்குமாறு முன்மொழிந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/217159
-
மன்னாரில் காற்றாலை மின் உற்பத்தி, கனிய மணல் அகழ்வுக்கு எதிராக மாபெரும் கவனயீர்ப்பு பேரணி; ஆதரவு வழங்குமாறு பிரஜைகள் குழு கோரிக்கை
மன்னாரில் காற்றாலை மின் உற்பத்தி, கனிய மணல் அகழ்வுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் - ஜனாதிபதிக்கான மகஜர் கையளிப்பு 11 JUN, 2025 | 02:19 PM மன்னாரில் மக்களின் வாழ்வியலை பாதிக்கும் வகையில், காற்றாலை மின் உற்பத்தி மற்றும் கனிய மணல் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று (11) ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றுள்ளது. மன்னார் பிரஜைகள் குழு மற்றும் சிவில், பொது அமைப்புக்கள் இணைந்து ஏற்பாடு செய்த இந்த மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் இன்றைய தினம் காலை 9.30 மணியளவில் மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமானது. மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை மாக்கஸ் அடிகளார் தலைமையில் ஆரம்பமான இந்த கவனயீர்ப்பு பேரணியில் மன்னார் மாவட்டத்தில் உள்ள சிவில் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், சர்வமத தலைவர்கள், வர்த்தகர்கள், அரசியல் பிரதிநிதிகள் உள்ளடங்கலாக ஆயிரக்கணக்கான மக்களும் பங்குகொண்டனர். மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் இருந்து ஆரம்பமான இந்த பேரணி, பிரதான வீதியூடாக சென்று மன்னார் பஜார் பகுதியை அடைந்தது. பின்னர் பேரணியில் கலந்துகொண்டவர்கள் மன்னார் மாவட்டச் செயலகத்துக்கு முன்னால் ஒன்றுகூடி பதாதைகளை ஏந்தியவாறு பலவாறு கோஷம் எழுப்பினர். “மன்னாரில் மக்களின் வாழ்வியலை பாதிக்கும் வகையிலான காற்றாலை மின் உற்பத்தி மற்றும் கனிய மணல் அகழ்வை உடனடியாக நிறுத்து”, “எங்கள் மண்ணை சுடுகாடாக்காதே”, “அடிக்காதே, அடிக்காதே எங்கள் வயிற்றில் அடிக்காதே” உள்ளிட்ட பல்வேறு வசனங்கள் குறிப்பிடப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு இந்த கவனயீர்ப்புப் பேரணியில் பங்கேற்றனர். இந்த பேரணியில் மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு ஞானப்பிரகாசம் அடிகளாரும் வருகை தந்திருந்தார். இந்நிலையில், மன்னார் மக்கள் எதிர்நோக்கும் இந்த இரு பிரச்சினைகள் தொடர்பாக ஜனாதிபதிக்கு அளிக்கவேண்டிய மகஜரினை, மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரனிடம் மன்னார் ஆயர் மற்றும் சர்வமத தலைவர்கள் இணைந்து கையளித்தனர். மகஜரை பெற்றுக்கொண்ட அரசாங்க அதிபர், மன்னார் மாவட்ட மக்கள் நீண்ட காலமாக காற்றாலை மற்றும் கனிய மணல் அகழ்வுக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றமை குறித்து நான் நன்கறிவேன். மக்களின் கோரிக்கை அடங்கிய மகஜர் சர்வமத தலைவர்கள் ஊடாக ஜனாதிபதிக்கு வழங்கும் வகையில், என்னிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இதனை நான் உடனடியாக ஜனாதிபதிக்கு அனுப்பிவைப்பேன் என்றார். ஜனாதிபதிக்கு வழங்குவதற்காக கையளிக்கப்பட்ட மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: "எங்களையும், எங்கள் வாழ்விடங்களையும், எங்கள் வளங்களையும் பாரிய அழிவிலிருந்து பாதுகாக்க உங்களை வேண்டுகின்றோம்" கடந்த ஆண்டுகளாக பல்வேறு முயற்சிகளை நாம் சாத்வீக முறையில் தொடர்பாடல்கள் வழியாகவும், போராட்டங்கள் மூலமாகவும், பல துறை சார்ந்த அமைச்சர்கள், அதிகாரிகள் உட்பட பல அரச நிறுவனங்களுடன் மாவட்ட, மாகாண மத்திய அரசின் உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடியதன் மூலமாகவும் எமது நாட்டையும் எமது மாவட்டத்தையும் எமது வாழ் விடங்களையும் எமது வளங்களையும் எமது வாழ்வாதாரங்களையும் பெரும் அழிவிலிருந்து பாதுகாக்கவும், அபிவிருத்தி செய்யவும், மகிழ்வுடன் வாழவும் முயற்சிகள் பலவற்றை முன்னெடுத்து வருகிறோம். ஆனால் இதுவரைக்கும் இலங்கை நாட்டு மக்களாகிய நாம் பல்வேறு தளங்களிலும், பல்வேறு விடயங்களிலும், திட்டமிட்ட முறையில் நடைபெறும் பல பயங்கரமான அழிவுகளை சந்தித்துவருகிறோம். எங்களுக்குரிய மனித உரிமைகள் அனைத்தும் இழந்த நிலையில், நம்பிக்கைகள் அனைத்தும் அழிக்கப்பட்ட, பாதிக்கப்பட்ட நிலையில் உங்கள் ஆட்சியில் வாழ நேரிட்டிருப்பது வேதனைக்குரிய, ஏற்றுக்கொள்ளப்பட முடியாத நிலையாக உள்ளது. எமது மாவட்டத்தில் நடைபெறும் சரியான முறையில் திட்டமிடப்படாத திட்டங்களும், மக்களுடன் கலந்தாலோசித்து முடிவுகள் எடுக்காத திட்டங்களும், நாட்டில் உள்ள பல்வேறு சட்டதிட்டங்களை மீறி முன்னெடுக்கப்படும் திட்டங்களும், எமது மனித உரிமைகளை மீறும் திட்டங்களையும், எமது வாழ்விடங்களையும், வளங்களையும், வாழ்வாதாரங்களையும் அழிக்கும் திட்டங்கள் அனைத்தையும் உடன் நிறுத்தி, மக்களுடன் கலந்தாலோசித்து மக்களின் நீண்ட வாழ்வினை பாதிக்காத, வளங்களை பாதுகாக்கின்ற, வதிவிடங்களை அழிக்காத, சுற்றுச்சூழலை பாதிக்காத திட்டங்களை மட்டும் முன்னெடுக்குமாறு இலங்கை நாட்டு மக்களாகிய நாம் அன்புடன் கேட்டு நிற்கின்றோம். இப்போது எமது மாவட்டத்தில் எமது வாழ்வினை அழித்துக்கொண்டிருக்கும் திட்டங்கள், மனித உரிமை மீறல்கள் சில... 1. மன்னார் தீவில் மேற்கொள்ளப்படும் காற்றாலை மின் உற்பத்தி திட்டங்கள் (பல நிறுவனங்கள், இலங்கை மின்சார சபையின் அனுமதியுடன் ஆதரவுடன் செய்து வருகிறது. உதாரணம் தாழ்வுபாடு, கீரி, தரவன் கோட்டை, சாந்திபுரம், சவுத்பார், சிலாவத்துறை, காயாக் குழி போன்ற சில இடங்களில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. 2. வெளிநாட்டு தனியார் கொம்பனிகளினால் எமது இலங்கை நாட்டையும், மன்னாரையும் முற்றாக அழித்து எங்கள் வளங்கள் முழுவதையும் வெளிநாடுகளுக்கு எடுத்துச் செல்ல மன்னார் தீவிலும், மன்னார் பெரும் நிலப்பரப்பிலும் மேற்கொள்ளப்படும், மேற்கொள்ளப்படவுள்ள பாரிய வளங்களை அழிக்கும், மனிதன் வாழும் உரிமைகளை அழிக்கும் பல கனிய மணல் அகழ்வு திட்டங்கள். இரண்டு நிறுவனங்களால் கனிய மண் அகழ்வுத் திட்டங்களை முன்னெடுப்பதற்கான திரைமறைவில் பல முயற்சிகள் செய்யப்படுகிறது. 3. பல ஆண்டுகளாக அழிக்கப்பட்டு வரும் கடல் வளங்கள், அத்துமீறிய இந்திய மீனவர்கள் வருகை, சட்டங்களுக்கு எதிரான மீன்பிடி முறைகளை பயன்படுத்துதல், திட்டமிடாத அபிவிருத்தி திட்டங்கள் மேற்கொள்ளப்படுதல் போன்ற செயல்களால் கடல் வளங்கள் பாரிய அளவில் அழிக்கப்பட்டு வருகிறது. 4. மக்களின் வாழ்விடங்களும் காணிகளும் அபகரிக்கப்படுதல். மக்களின் தேவை கருதியும், அவர்களின் மனித உரிமைகள் மதிக்கப்படும் வகையில் காணிகள் இன்னும் பங்கிட்டு கொடுக்கப்படாமல் காலங்கள் பிற்போடப்பட்டு பல ஆண்டுகளாக மக்கள் ஏமாற்றப்பட்டு வருகிறார்கள். (இதுவரை 4000க்கு மேற்பட்ட குடும்பங்கள் வாழ்வதற்கு காணிகள் கேட்டும், 800 க்கு மேற்பட்ட இளையோர் சுய தொழில்கள் தொடங்க காணிகள் கேட்டும், மன்னார் மாவட்ட செயலகத்தில் விண்ணப்பித்துள்ளார்கள்.) இவை போன்ற பல பாரிய அழிவுகளை இலங்கைக்கும் எமது மாவட்டத்துக்கும் மக்களுக்கும் ஏற்படுத்தும், பல சட்டவிரோத அடிப்படை மனித உரிமைகளுக்கு எதிரான அனைத்து திட்டங்களையும் உடன் நிறுத்தி, மக்களுடன் நல்ல முறையில் கலந்துரையாடி, பாரிய அழிவுகளை ஏற்படுத்தும் திட்டங்களை கைவிட்டு, மக்களுக்கு நலன்கள் கொண்டு வரும், மக்களை பாதிக்காத திட்டங்கள் நல்ல முறையில் திட்டமிட்டு மேற்கொள்ள வேண்டும் என்று, இந்த கண்டன, எதிர்ப்பு ஊர்வலத்தில் நீங்கள் ஆட்சி செய்யும் இலங்கை நாட்டின், மன்னார் மாவட்டத்தின் மக்களாகிய நாங்கள் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/217154
-
யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி
LUNCH Final, Lord's, June 11 - 15, 2025, ICC World Test Championship Day 1 - Session 1: South Africa chose to field. Australia (23.2 ov) 67/4 Current RR: 2.87 • Min. Ov. Rem: 65.4 • Last 10 ov (RR): 34/2 (3.40) South Africa
-
உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் (WTC) இறுதிப் போட்டி
டெஸ்ட் சாம்பியன் பைனல்: ஆஸ்திரேலியா செய்துள்ள மாற்றம் தென் ஆப்ரிக்காவை குழப்பும் உத்தியா? பட மூலாதாரம்,X/JAY SHAH கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 11 ஜூன் 2025, 02:12 GMT புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர் ஐசிசி நடத்தும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் நகரில் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று (ஜூன் 11) தொடங்குகிறது. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து முதல்முறையாக பைனலுக்கு முன்னேறிய தென் ஆப்ரிக்க அணி மோதுகிறது. 1998 ஐசிசி நாக்அவுட் சாம்பியன் பட்டத்தை வென்றதற்கு பின் தென் ஆப்ரிக்கா இதுவரை ஐசிசி சார்பில் எந்த கோப்பையையும் வென்றதில்லை. ஆஸ்திரேலியா Vs தென் ஆப்ரிக்கா ஐசிசி சார்பில் டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றதற்கு பின் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தென் ஆப்ரிக்கா தகுதி பெற்றுள்ளது. ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தென் ஆப்ரிக்கா தகுதி பெற்று, கோப்பைக்காக போராடுவதும் இதுதான் முதல்முறையாகும். லார்ட்ஸ் மைதானத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் போட்டி நடப்பதும் இதுதான் முதல்முறையாகும். ஆனால் இந்த மைதானத்தில் ஆஸ்திரேலியாவும், தென் ஆப்ரிக்காவும் மோதுவது முதல்முறை அல்ல. நூற்றாண்டுகளுக்கு முன்பே இரு அணிகளும் இதே லார்ட்ஸ் மண்ணில் டெஸ்ட் போட்டியில் விளையாடியுள்ளதாக வரலாறு இருக்கிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தென் ஆப்ரிக்கா தகுதி பெற்று, கோப்பைக்காக போராடுவது இது முதல்முறையாகும். ஆஸ்திரேலியா ஆதிக்கம் இந்த லார்ட்ஸ் மைதானத்தில் மட்டும் ஆஸ்திரேலிய அணி 40 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 18 வெற்றிகளையும், 7 தோல்விகளையும் சந்தித்து 15 போட்டிகளை டிரா செய்துள்ளது. தென் ஆப்ரிக்க அணி 18 போட்டிகளில் 6 வெற்றிகள், 8 தோல்விகள், 4 டிரா செய்துள்ளது. நூற்றாண்டு வரலாறு 1912ம் ஆண்டில் முத்தரப்பு டெஸ்ட் போட்டி இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா இடையே நடந்தது. அந்த நேரத்தில் இந்த 3 அணிகள்தான் டெஸ்ட் போட்டியில் விளையாடக்கூடியவை. அப்போது 5வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவும், தென் ஆப்ரிக்கா அணியும் இதே லார்ட்ஸ் மைதானத்தில்தான் விளையாடின. 113 ஆண்டுகளுக்கு முன் நடந்த அந்த டெஸ்ட் போட்டியில் தென் ஆப்ரிக்காவை 10 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வென்றது. அந்தத் தொடரில் இங்கிலாந்து சாம்பியன் பட்டம் வென்றது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, டெம்பா பவுமா கேப்டனாக வந்தபின் கடைசியாக ஆடிய 8 டெஸ்ட் போட்டிகளில் 7 வெற்றிகளை தென் ஆப்ரிக்க அணி பெற்றுள்ளது 27 ஆண்டுகளாக காத்திருப்பு ஆஸ்திரேலிய அணியைப் பொருத்தவரை ஐசிசி சார்பில் நடத்தப்படும் அனைத்துப் போட்டிகளிலும் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ளது. ஆனால், தென் ஆப்ரிக்க அணி 1998 நாக்அவுட் சாம்பியன் பட்டத்தைத் தவிர வேறு எந்த ஐசிசி பட்டத்தையும் 27 ஆண்டுகளாக வென்றதில்லை என்ற பெரிய அவமானத்துடன் இருக்கிறது. தென் ஆப்ரிக்க அணியில் கேப்டன்ஷிப் மாற்றப்படுவதற்கு முன்பாக கடந்த 2 ஆண்டுகளில் முதல் 5 டெஸ்ட் போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வென்றிருந்தது. ஆனால் டெம்பா பவுமா கேப்டனாக வந்தபின் கடைசியாக ஆடிய 8 டெஸ்ட் போட்டிகளில் 7 வெற்றிகளை தென் ஆப்ரிக்க அணி பெற்றுள்ளது, ஒரு ஆட்டம் டிராவில் முடிந்துள்ளது. கடைசியாக இரு அணிகளும் 2022-23ம் ஆண்டில் டெஸ்ட் தொடரில் விளையாடின. அதன்பின் கடந்த 3 ஆண்டுகளாக இரு அணிகளும் தங்களுக்குள் டெஸ்ட் தொடரில் ஆடவில்லை. அந்த டெஸ்ட் தொடரிலும் ஆஸ்திரேலிய அணிதான் 2-0 என்று தொடரைக் கைப்பற்றியது. இதுவரை இரு அணிகளுக்குள் 101 டெஸ்ட் போட்டிகள் நடந்துள்ளன. அதில் தென் ஆப்ரிக்க அணி 26 வெற்றிகளும், ஆஸ்திரேலிய அணி 54 வெற்றிகளுடன் ஆதிக்கம் செய்கிறது. 21 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன, வெளிநாடுகளில் நடந்த டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 29 வெற்றிகளும், தென்ஆப்ரிக்க அணி 10 வெற்றிகளைப் பெற்றுள்ளது. பொதுவான இடத்தில் 1912ல் நடந்த 3 போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணிதான் 2-0 என வென்றுள்ளது. இந்த இரு வெற்றிகளும் லார்ட்ஸ், மான்செஸ்டர் மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு கிடைத்துள்ளன. ஆகவே கடந்த காலங்களில் இருந்து ஒப்பீடு செய்தால், டெஸ்ட் தொடர்களில் தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக ஆஸ்திரேலிய அணிதான் ஆதிக்கம் செய்து வந்துள்ளது தெரியவருகிறது. ஆனால், சமீபத்திய நிகழ்வுகள், கடந்த கால வெற்றிகள், அணியில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், வீரர்கள் வருகையால் தென் ஆப்ரிக்க அணி புத்துணர்ச்சி பெற்றுள்ளதால், கடந்த கால வரலாற்றை மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை கேப்டன் பவுமா தலைமையில் தென் ஆப்ரிக்க அணி டெஸ்ட் போட்டியில் தோல்வியைத் தழுவியதில்லை என்ற நம்பிக்கை அந்த அணிக்கு கூடுதல் உற்சாகத்தை அளிக்கும். அனுபவம் ஆஸி.க்கு வலிமை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஆஸ்திரேலிய அணியைப் பொருத்தவரை ஐசிசி சார்பில் நடத்தப்படும் அனைத்துப் போட்டிகளிலும் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ளது. ஆஸ்திரேலிய அணியில் இருக்கும் பந்துவீச்சாளர்கள், பேட்டர்கள் பெரும்பாலானவர்கள் இதற்கு முன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் ஆடிய அனுபவம் உடையவர்கள். இதுபோன்ற பெரிய தொடர்களில் எப்படி விளையாடலாம், எப்படி கையாளலாம் என்பதை நன்கு தெரிந்தவர்கள். அதனால்தான் கடந்த 4 ஆண்டுகளில் ஐசிசி சார்பில் நடந்த 3 விதமான போட்டித்தொடர்களில் 4 கோப்பைகளை ஆஸ்திரேலிய அணி வென்றுள்ளது. பந்துவீச்சில் உலகின் தலைசிறந்த வீரர்களான பேட் கம்மின்ஸ், ஹேசல்வுட், நாதன் லேயான், மிட்ஷெல் ஸ்டார்க் கூட்டணியும், பேட்டிங்கில் அனுபவம் மிக்க ஸ்டீவ் ஸ்மித், இரு பைனல்களில் சதம் அடித்த டிராவிஸ் ஹெட்டும் இருப்பது அந்த அணிக்கு பெரிய பலமாகும். இதில் பேட் கம்மின்ஸ், ஹேசல்வுட், நாதன் லேயான், மிட்ஷெல் ஸ்டார்க் கூட்டணி இதுவரை டெஸ்ட் போட்டிகளில் 4 பேரும் சேர்ந்து தலா 250 விக்கெட்டுகள் குவித்துள்ளனர். ஆனால், ரபாடா மட்டும் தனித்து 327 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். தென் ஆப்ரிக்காவை குழப்பும் ஆஸ்திரேலியா புதிய உத்தியா? ஆனால், இந்த பைனலில் தென் ஆப்ரிக்க அணியை குழப்பும் விதத்தில் பேட்டிங் வரிசையையே ஆஸ்திரேலிய அணி மாற்றி அமைத்திருக்கிறது. காயத்தால் பல மாதங்கள் ஓய்வில் இருந்து அணிக்குத் திரும்பிய கேமரூன் க்ரீன் பந்துவீச முடியாத நிலையிலும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். டெஸ்ட் தொடரில் முதல்முறையாக உஸ்மான் கவாஜாவுடன் சேர்ந்து லாபுஷேன் தொடக்க வீரராகக் களமிறங்குகிறார். 3வது வீரராகக் களமிறங்கும் டிராவிஸ் ஹெட் நடுவரிசைக்கு மாற்றப்பட்டுள்ளார். இவை அனைத்தும் ஆஸ்திரேலிய அணி பரிசோதனைக்காகச் செய்துள்ளதா அல்லது தென் ஆப்ரிக்க பந்துவீச்சாளர்களைக் குழப்பும் வகையில் மாற்றி அமைத்துள்ளதா என்பது தெரியவில்லை. இளம் படையுடன் தென் ஆப்ரிக்கா பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தென் ஆப்ரிக்காவின் வேகப்பந்துவீச்சாளர் காகிசோ ரபாடா தென் ஆப்ரிக்க அணியைப் பொருத்தவரை இதுபோன்ற பைனலில் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களின் உத்தி, திறன், தாக்குதல் குறித்து அறிந்திருக்கவில்லை, முதல்முறையாக பைனலில் ஆஸ்திரேலிய பந்துவீச்சை எதிர்கொள்கிறது. மார்க்ரம், ரிக்கெல்டனுடன் சேர்ந்து ஆட்டத்தைத் தொடங்குவார். டிரிஸ்டன் ஸ்டெப்ஸ், கேப்டன் பவுமா, முல்டர், டேவிட் பெடிங்காம் நடுவரிசையில் களமிறங்குவார்கள். ஐபிஎல்லில் ஸ்டார்க், ஹேசல்வுட், கம்மின்ஸ் பந்துவீச்சை சந்தித்த அனுபவத்தை இந்தத் தொடரில் பயன்படுத்தலாம். ஆஸ்திரேலிய அணிக்கு பெரிய அச்சுறுத்தலாக இருக்கப் போவது தென் ஆப்ரிக்காவின் வேகப்பந்துவீச்சாளர் காகிசோ ரபாடாவின் பந்துவீச்சுதான். கடந்த முறை இதே லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்து பேட்டர்களை சிதைத்து பெரிய வெற்றியை ரபாடா பெற்றுக் கொடுத்தார். டெஸ்ட் போட்டிகளில் ரபாடாவின் மின்னல் வேக, ஈட்டிபோல் இறக்கும் பந்துவீச்சு ஆஸ்திரேலிய பேட்டர்களுக்கு பெரிய சவாலாக இருக்கும். தென் ஆப்ரிக்க அணியில் வேகப்பந்துவீச்சுக்கு ரபாடா தவிர்த்து லுங்கி இங்கிடி, மார்கோ யான்சென், முல்டர் உள்ளனர். டேன் பாட்டர்ஸ் சேர்க்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இங்கிடி சேர்க்கப்பட்டுள்ளார். சுழற்பந்துவீச்சுக்கு சேகவ் மகராஜ், மார்க்ரம் மட்டுமே உள்ளனர். வழக்கமாக ஆஸ்திரேலிய, தென் ஆப்ரிக்க அணிகள் கூக்கபுரா பந்துகளில்தான் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுபவை. ஆனால், லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கும் பைனலில், டியூக் பந்து பயன்படுத்தப்படுகிறது. டியூக் பந்தில் ரபாடாவின் பந்துவீச்சு பெரிய அளவுக்கு சிறப்பாக இருக்கும் என நம்பப்படுவதால், அவர் தென் ஆப்ரிக்காவுக்கு துருப்புச்சீட்டாக இருப்பார். லாபுஷேனுக்கு புதிய பொறுப்பு பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, லாபுஷேன் இதுவரை 57 டெஸ்ட் போட்டிகளில் 4000 ரன்களுக்கும் மேல் சேர்த்துள்ளார். ஆஸ்திரேலிய அணியில் இந்த முறை கவனத்தை ஈர்த்திருப்பவர் லாபுஷேன். முதல்முறையாக டெஸ்ட் போட்டியில் தொடக்க வீரராகக் களமிறங்கும் லாபுஷேன் இதுவரை 57 டெஸ்ட் போட்டிகளில் 4000 ரன்களுக்கும் மேல் சேர்த்துள்ளார். கடந்த 6 ஆண்டுகளில் முதல்முறையாக ஒன்டவுனில் இருந்து மாறி லாபுஷேன் பேட் செய்கிறார். லாபுஷேனின் சமீபத்திய சர்வதேச ஃபார்ம் கவலைக்குரியதாக இருந்தாலும், அவர் உள்நாட்டில் ஆடிய ஆட்டம், அடித்த சதம் நம்பிக்கையை அளித்து அணியில் இடம் பெறவைத்துள்ளது. டெஸ்ட் போட்டிகளில் லாபுஷேனின் அனுபவம் ஆஸ்திரேலிய அணிக்கு பெரிய பலமாகும். ஆஸ்திரேலிய அணி முதல்முறையாக லாபுஷேனை தொடக்க வீரராகக் களமிறக்கி பரிசோதிக்கிறது. கேமரூன் க்ரீன் 3வது வீரராக களமிறங்குகிறார், அவரால் பந்துவீச முடியாததால் பேட்டராக பயன்படுத்தப்படுகிறார். கூடுதல் வேகப்பந்துவீச்சாளருக்காக பியூ வெப்ஸ்டர் சேர்க்கப்பட்டுள்ளார்.காயத்திலிருந்து மீண்டு ஹேசல்வுட் வந்துள்ளதால், ஸ்காட் போலந்து நீக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலிய அணியில் வேகப்பந்துவீச்சுக்கு ஸ்டார்க், ஹேசல்வுட், கம்மின்ஸ், வெப்ஸ்டர் ஆகியோரும், சுழற்பந்துவீச்சுக்கு லேதன் லயான், டிராவிஸ் ஹெட், ஸ்மித் ஆகியோர் உள்ளனர். நடுவரிசை பேட்டிங்கில் கேமரூன் க்ரீன், ஸ்டீவன் ஸ்மித், டிராவிஸ்ஹெட், வெப்ஸ்டர், அலெக்ஸ் கேரே ஆகியோர் உள்ளனர். ப்ளேயிங் லெவன் ஆஸ்திரேலிய அணி விவரம் (உத்தேச அணி) உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுஷேன், கேமரூன் க்ரீன், ஸ்டீவன் ஸ்மித், டிராவிஸ் ஹெட், வெப்ஸ்டர், அலெக்ஸ் கேரே, பாட் கம்மின்ஸ் (கேப்டன்), மிட்ஷெல் ஸ்டார்க், நாதன் லேயான், ஜோஷ் ஹேசல்வுட் தென் ஆப்ரிக்க அணி விவரம் (உத்தேச அணி) எய்டன் மார்க்ரம், ரியான் ரிக்கெல்டன், முல்டர், டெம்பா பவுமா (கேப்டன்), டிரிஸ்டன் ஸ்டெப்ஸ், டேவிட் பெடிங்காம், கெயில் வெர்னே, மார்கோ யான்சென், கேசவ் மகராஜ், காகிசோ ரபாடா, லுங்கி இங்கிடி ஆடுகளம் எப்படி? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, லண்டன் நகரின் லார்ட்ஸ் மைதானம் இங்கிலாந்தில் கோடைகாலம் தொடங்கியிருக்கிறது. ஆதலால் பகல்நேரத்தில் நல்ல வெப்பம் நிலவும், அதேசமயம், மாலை நேரத்தில் இடியுடன் மழையும் வரலாம். ஜூன் மாதத்தில் லார்ட்ஸ் மைதானத்தில் அதிகமான ஆட்டங்கள் ஆடிய அனுபவம் ஆஸ்திரேலிய, தென் ஆப்ரிக்க அணிகளுக்கு இல்லை ஆதலால் காலநிலையை அறிந்து பந்துவீச இரு அணிகளுக்கும் சிறிது நேரம் ஆகலாம். ஆடுகளம் வறண்டிருப்பதால் சுழற்பந்துவீச்சுக்கு நன்கு ஒத்துழைக்கும், இரு அணிகளிலும் இருக்கும் திறமையான சுழற்பந்துவீச்சாளர்கள் ஆட்டத்தின் துருப்புசீட்டாக இருப்பார்கள். ஆட்டத்தின் தொடக்கத்தில் வேகப்பந்துவீச்சுக்கு ஏற்றவாறு ஆடுகளம் இருக்கலாம். ஆனால், 2 நாட்களுக்கு ப்பின் ஆடுகளத்தில் சுழற்பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செய்யக்கூடும். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cjrnxv4207po
-
சிறைச்சாலை தலைமையகமே சட்டவிரோதமாக செயற்பட்டது; கைதிகள் விடுப்பு தொடர்பில் ஜனாதிபதி அநுர தெரிவிப்பு
Published By: DIGITAL DESK 2 10 JUN, 2025 | 06:44 PM (இராஜதுரை ஹஷான்) சமூகம் தொடர்பில் பொறுப்புக்கூற வேண்டிய நிறுவனங்கள் வீழ்ச்சியடைந்துள்ளன. குற்றங்களை தடுக்க வேண்டிய பொலிஸ் சேவையில் ஒருசிலர் குற்றவாளிகளை பாதுகாக்கின்றனர். சிறைச்சாலை தலைமையகம் சட்டவிரோதமான முறையில் கைதிகளை விடுவித்துள்ளது. சிறந்த மாற்றத்துக்கு அனைவரும் தயாராக வேண்டுமென ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். அநுராதபுரம் - மிஹிந்தலை விகாரையில் செவ்வாய்க்கிழமை (10) நடைபெற்ற தேசிய பொசன் உற்சவத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். ஜனாதிபதி அங்கு மேலும் உரையாற்றியதாவது, சமூகம் மற்றும் சமூகம் தொடர்பில் பொறுப்புக்கூற வேண்டிய நிறுவனங்கள் வீழ்ச்சியடைந்துள்ளன. குற்றங்களை தடுக்க வேண்டிய பொலிஸ் சேவையில் ஒருசிலர் குற்றவாளிகளை பாதூக்கின்றனர். இதுவே உண்மை. சட்டவிரோதமான வெளிநாட்டு கடவுச்சீட்டு விநியோகத்தை தடுப்பது குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பிரதான பொறுப்பாகும். ஆனால் அந்த குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் பாதாளக்குழுக்களின் தலைவர்களுக்கு சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு கடவுச்சீட்டு வழங்கியுள்ளது. நிறுவனத்தின் பொறுப்பு மீறப்பட்டுள்ளது. சிறைக்கைதிகளுக்கு தேவையான வசதிகள் மற்றும் பாதுகாப்பை வழங்குவது சிறைச்சாலை தலைமையகத்தின் பிரதான பொறுப்பாகும். ஆனால் அந்த திணைக்களம் சட்டவிரோதமான முறையில் கைதிகளை விடுவித்துள்ளது. மோட்டார் வாகனத்தின் செயற்பாடுகள் குறிப்பிடுவதற்கு ஒன்றுமில்லை. மக்களுக்கு சேவையாற்றும் அனைத்து நிறுவனங்களிலும் பிரச்சினைகள் காணப்படுகிறது. வீழ்ச்சியடைந்துள்ள நிறுவன கட்டமைப்பை முதலில் மறுசீரமைக்க வேண்டும். சமூக கட்டமைப்பு முழுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. சமூகம் மற்றும் சமூக கட்டமைப்பிலான நிறுவனங்களை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும். வரலாற்று சிறப்புக்களை மாத்திரம் குறிப்பிட்டுக்கொண்டிருந்தால் சமூகம் என்ற ரீதியில் முன்னேற்றமடைய முடியாது. சமூக கட்டமைப்பில் சிறந்த மாற்றத்தை ஏற்படுத்த கடுமையான தீர்மானங்களை எடுக்க வேண்டும். அவற்றை முறையாக அமுல்படுத்த வேண்டும். பழக்கத்தால் அடிமையான ஒருவிடயத்தை சட்டங்களால் மாத்திரம் மாற்றியமைக்க வேண்டும். செயற்பாடுகள் மற்றும் அடிப்படை விடயங்களில் மாற்றம் ஏற்பட வேண்டும். ஆகவே சிறந்த மாற்றத்துக்கு அனைவரும் தயாராக வேண்டும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்தார். https://www.virakesari.lk/article/217113
-
123 இந்திய ரோலர் படகுகளை கடலுக்குள் போடுவதற்கு நடவடிக்கை; கடற்தொழில் நீரியல் வள அதிகாரி
தமிழக மீனவர்களிடம் பறிமுதல் செய்த படகுகளை கடலில் மூழ்கடிக்க இலங்கை முடிவு - என்ன சொல்கிறது? கட்டுரை தகவல் எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத் பதவி, பிபிசி தமிழுக்காக 8 ஜூன் 2025 புதுப்பிக்கப்பட்டது 9 ஜூன் 2025 இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைப்பற்றப்பட்ட இந்திய மீன்பிடி படகுகளை கடலில் மூழ்கடிப்பதற்கான நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் எடுத்து வருகின்றது. அதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் பிபிசி தமிழுக்கு தெரிவித்தார். இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் 123ற்கும் அதிகமான படகுகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் மயிலிட்டி துறைமுகம் மற்றும் மன்னார் பகுதிகளில் இந்த படகுகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது. படக்குறிப்பு,இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் 123ற்கும் அதிகமான படகுகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளன. படகுகளின் தற்போதைய நிலைமை இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோதமான முறையில் பிரவேசித்து மீன்பிடி நடவடிக்கைகளின் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் கைப்பற்றப்பட்ட படகுகள் இருவேறு பகுதிகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளன. மயிலிட்டி துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள படகுகள் அனைத்தும் சேதமாகியுள்ளதை அவதானிக்க முடிகின்றது. சில படகுகள் நீருக்குள் மூழ்கியுள்ளதுடன், பல படகுகள் உடைந்து காணப்படுவதாகயும் அவதானிக்க முடிந்தது. இந்திய படகுகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளமையினால் உள்ளுர் மீனவர்களின் அன்றாட நடவடிக்கைகளுக்கு பாதிப்புக்கள் ஏற்பட்டு வருவதாக மீனவர்கள் குறிப்பிடுகின்றனர். இந்த நிலையில், குறித்த படகுகளை கடலில் மூழ்கடிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கடற்றொழில் மற்றும் நீரியல்வள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் குறிப்பிடுகின்றார். இந்தியாவில் இந்த படகுகள் பதிவு செய்யப்பட்டுள்ளமையினால், இந்த படகுகளை உள்ளுர் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த முடியாது என சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர். அத்துடன், அரசுடமையாக்கப்பட்டுள்ள இந்த படகுகளை உரிமையாளர்களிடம் கையளிக்க முடியாது என கடற்றொழில் மற்றும் நீரியல்வள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவிக்கின்றார். படக்குறிப்பு,கடற்றொழில் மற்றும் நீரியல்வள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் இலங்கை அரசாங்கம் என்ன கூறுகின்றது? இந்திய படகுகளை கடலில் மூழ்கடிப்பதற்காக பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவிக்கின்றார். படகுகளை ஆழ்கடலுக்கு இழுத்து செல்வதற்கான தயார்ப்படுத்தல்களை தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிடுகின்றார். ''இலங்கை கடற்பரப்பில் மீன் வளங்கள் குறைவடைந்து வருகின்றன. இந்த படகுகளை நீரில் மூழ்கடிப்பதன் ஊடாக மீன் வளங்கள் அதிகரிக்கும் சாத்தியம் உள்ளது. அதேநேரம், இந்திய படகுகளின் வருகையை தடுத்து நிறுத்துவதற்கான சந்தர்ப்பமாகவும் இது அமையும்.'' என கடற்றொழில் மற்றும் நீரியல்வள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் குறிப்பிடுகின்றார். இந்த விடயம் தொடர்பாக கொழும்பிற்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்திடம் வினவிய போதிலும், இந்திய உயர்ஸ்தானிகராலயத்திடமிருந்து எந்தவித பதிலும் கிடைக்கவில்லை. படக்குறிப்பு,மயிலிட்டி துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள படகுகள் அனைத்தும் சேதமாகியுள்ளதை அவதானிக்க முடிகின்றது. 'இந்திய படகுகளின் வருகை குறைந்துள்ளது' இந்திய அரசாங்கத்தினால் மீன்பிடி தடை காலம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய மீனவர்களின் வருகை இல்லாமை காரணமாக தாம் மிகுந்த மகிழ்ச்சியுடன் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக யாழ்ப்பாணம் மீனவர்கள் தெரிவிக்கின்றனர். ''இந்திய அரசாங்கத்தினால் தடை காலம் அறிவிக்கப்படும் போது அதனை கடமை பிடிக்கும் இந்திய மீனவர்கள், ஏனைய காலத்திலும் கடமை பிடிக்கும் வகையில் இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என யாழ்ப்பாணம் மீனவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். ''இரண்டு மாத கால தடை அறிவிக்கப்பட்டுள்ளமையினால், எங்களுடைய தொழிலாளர்கள் மிக சந்தோசமாக எங்கேயும் சென்று தொழில் செய்யக்கூடிய வகையில் இருக்கின்றது. இந்திய படகுகள் வந்தால் எமது வாழ்க்கை இல்லாது போகின்றது. இந்த இரண்டு மாத காலம் இந்திய படகுகள் வரவில்லை. எமது குடும்பத்தோடு நாங்கள் மிகுந்த சந்தோசமாக இருக்கின்றோம்'' என யாழ்ப்பாணத்தில் மீனவ தொழிலில் ஈடுபடும் லோகநாதன் தெரிவிக்கின்றார். தமிழக மீனவர்கள் கூறுவது என்ன? இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய ராமேஸ்வரம் அனைத்து விசைப்படகு மீனவர் சங்கத் தலைவர் ஜேசுராஜா,'' இலங்கை இந்திய மீனவர் பிரச்னை கடந்த 40 ஆண்டுகளாக தொடர்ந்து இருந்து வருகிறது. இரு நாட்டு மீனவர் பிரச்னையில் தமிழக மீனவர்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து வருகின்றனர்.'' என்கிறார். ''தமிழக மீன்பிடி படகுகள் ஒவ்வொன்றும் ரூ.10 லட்சம் தொடங்கி அதிகபட்சமாக ஒரு கோடி ரூபாய் மதிப்பிலானது. தமிழக படகுகளை மூழ்கடிக்கும் திட்டத்தை தடுத்து நிறுத்த இலங்கை அரசிடம் இந்திய அரசு பேசும் என நாங்கள் பெரிதும் எதிர்பார்த்த நிலையில் இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் சந்திரசேகர் தமிழக மீன்பிடி படகுகள் கடலில் நிச்சயம் மூழ்கடும் என தெரிவித்திருந்தார். இலங்கை அரசு அவர்களின் நிலைப்பாட்டில் திட்டவட்டமாக இருப்பதால் அரசுடமையாக்கப்பட்ட பல லட்ச ரூபாய் மதிப்பிலான படகு ஒரு நாள் விடுவிக்கப்படும் என்ற நம்பிக்கையில் இருந்த தங்கச்சிமடம், பாம்பன், ராமேஸ்வரம் பகுதிகளில் மீனவர்கள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர். இலங்கை இந்திய மீனவர்களிடையே பல ஆண்டுகளாக நடைபெறாமல் உள்ள இருநாட்டு மீனவர் பேச்சு வார்த்தையை துரிதப்படுத்தி பேச்சுவார்த்தை நடத்தி ஒரு உரிய தீர்வு எட்டும் வரை தமிழக மீனவர்கள் மிதான கைது நடவடிக்கையை இலங்கை அரசு நிறுத்தி படகுகளை கடலில் மூழ்கடிக்கும் திட்டத்தை கை விட வேண்டும்.'' என்றார் ஜேசுராஜா - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cwywrgzzwxqo
-
தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் முருகன் அரசியல் எடுபடுமா? கடந்த காலம் சொல்வது என்ன?
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் 15 நிமிடங்களுக்கு முன்னர் மதுரையில் ஜூன் 22ஆம் தேதி மிகப்பெரிய முருகன் மாநாட்டை நடத்த இந்து முன்னணி திட்டமிட்டுள்ளது. இந்த மாநாட்டிற்கு, பா.ஜ.கவும் பிற இந்து அமைப்புகளும் ஆதரவளிக்கின்றன. மதுரையில் நிர்வாகிகள் மாநாட்டில் பேசிய அமித் ஷா முருகனை குறிவைத்து சில விஷயங்களையும் பேசியிருக்கிறார். முருகனை முன்வைத்து செய்யும் அரசியலுக்கு தமிழ்நாட்டில் பலன் இருக்குமா? மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஞாயிற்றுக்கிழமையன்று மதுரையில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்ட ஒரு கூட்டத்தில் பேசினார். அப்போது, திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை என தி.மு.க. அழைப்பதாகவும் ஜூன் 22ஆம் தேதி மதுரையில் நடக்கும் முருகன் மாநாட்டில் அனைவரும் திரளாகக் கலந்துகொள்ள வேண்டுமென்றும் குறிப்பிட்டார். அமித் ஷா குறிப்பிடும் முருகன் மாநாட்டை, 'முருக பக்தர்கள் மாநாடு' என்ற பெயரில் இந்து முன்னணி ஜூன் 22ஆம் தேதி நடத்தவுள்ளது. இந்த மாநாட்டில் தமிழ்நாடு முழுவதும் இருந்து சுமார் 5 லட்சம் பேரை பங்கேற்க வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த மாநாட்டில் கலந்துகொள்ள உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மதுரை பாண்டி கோவிலுக்கு அருகிலுள்ள அம்மா திடலில் இந்த மாநாட்டை நடத்த இந்து முன்னணி திட்டமிட்டிருக்கிறது. இந்தத் திடலில் மாநாடு நடப்பதற்கு முன்பாகவே, அறுபடை வீடுகளின் மாதிரிகளை வைத்து பூஜைகளை நடத்தவும் பொது மக்களுக்குப் பிரசாதம் கொடுக்கவும் மாநாட்டு அமைப்பாளர்கள் திட்டமிட்டிருந்தனர். ஜூன் 10ஆம் தேதியில் இருந்து மாநாடு நடக்கும் ஜூன் 22ஆம் தேதிவரை இந்த நிகழ்வுகளை நடத்த திட்டமிட்டுள்ளனர். ஆனால், காவல் துறை இந்த நிகழ்வுகளுக்கு அனுமதி மறுத்துவிட்டது. இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றக் கிளை, ஜூன் 12ஆம் தேதிக்குள் காவல்துறை முடிவெடுக்க வேண்டுமெனக் கூறியுள்ளது. இந்த மாநாடு குறித்து தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், நாம் தமிழர், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. "மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு என்ற போர்வையில் இந்து சமய நம்பிக்கை உள்ள மக்களை பா.ஜ.க. தனது அரசியல் சுய லாபத்திற்காகப் பயன்படுத்திக் கொள்ளும் சதியில் ஈடுபட்டுள்ளது" என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விமர்சித்துள்ளது. தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஓர் ஆண்டே இருக்கும் நிலையில், இந்த மாநாட்டை பா.ஜ.க. அரசியலுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் கருதப்படுகிறது. தமிழ்நாடு அரசியலில் முருகன் பட மூலாதாரம்,L MURUGAN/X படக்குறிப்பு,பா.ஜ.க 2020ஆம் ஆண்டில் இருந்து முருகனைப் பற்றிப் பேச ஆரம்பித்தது. தமிழ்நாட்டில் முருகனை முன்வைத்து அரசியலை முன்னெடுப்பது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பு பல சந்தர்ப்பங்களில் இது நடந்துள்ளது. சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி ஆரம்பத்தில் இருந்தே முருகனை முன்னிறுத்தி வருகிறது. 2015ஆம் ஆண்டு பிப்ரவரியில் முருகனை முன்னிறுத்தி வீரத்தமிழர் முன்னணி என்ற துணை அமைப்பை பழனியில் துவங்கினார் சீமான். இதற்கு அடுத்த மாதமே திருச்செந்தூர் முருகன் கோவிலில் தமிழில் வழிபாடு நடத்த வேண்டுமெனக் கோரி வீரத்தமிழர் முன்னணி பேரணி ஒன்றை நடத்தியது. 2016ஆம் ஆண்டில் இருந்து வேல் வழிபாடு என்ற பெயரில் தைப்பூச நாளில் விழா ஒன்றையும் அக்கட்சி நடத்தி வருகிறது. பா.ஜ.கவை பொறுத்தவரை 2020ஆம் ஆண்டில் இருந்து முருகனைப் பற்றிப் பேச ஆரம்பித்தது. அந்த ஆண்டு ஜூலையில் கறுப்பர் கூட்டம் என்ற யுடியூப் சேனலில் முருகனைப் போற்றிப் பாடும் கந்த சஷ்டி கவசத்தை அவமதித்ததாக இந்து அமைப்புகளும் பா.ஜ.கவினரும் போராட்டம் நடத்தினர். இது தொடர்பானவர்களைக் கைது செய்ய வேண்டுமென சென்னை மாநகர காவல் ஆணையரிடம் பா.ஜ.க. புகார் அளித்தது. அந்த யுடியூப் சேனலை தடை செய்ய வேண்டுமெனக் கோரி போராட்டங்களையும் பா.ஜ.க. நடத்தியது. மேலும், அ.தி.மு.க., தி.மு.க. போன்ற கட்சிகள் இந்த விஷயத்தில் கருத்துகளைத் தெரிவிக்க வேண்டுமென்றும் அழுத்தம் கொடுத்தது. முடிவில் அந்த சேனலை சேர்ந்தவர்கள் அனைவரும் கைதுசெய்யப்பட்டனர். சிலர் குண்டர் சட்டத்தின் கீழும் சிறையில் அடைக்கப்பட்டனர். கறுப்பர் கூட்டம் சர்ச்சையின் தொடர்ச்சியாக வேல் யாத்திரை ஒன்றை நடத்தப் போவதாக பா.ஜ.கவின் அப்போதைய மாநிலத் தலைவர் எல். முருகன் அறிவித்தார். நவம்பர் 6ஆம் தேதி திருத்தணியில் துவங்கி, டிசம்பர் 6ஆம் தேதி திருச்செந்தூரில் இந்த யாத்திரையை முடிக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. அந்தத் தருணத்தில் கொரோனா பரவல் இருந்ததால், அந்த யாத்திரைக்கு தமிழ்நாடு அரசு அனுமதி மறுத்தது. கூட்டணிக் கட்சியாக இருந்தும் வேல் யாத்திரைக்கு அ.தி.மு.க. அரசு அனுமதி மறுத்தது அந்தத் தருணத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இருந்தபோதும் நவம்பர் 6ஆம் தேதி சென்னையில் இருந்து திருத்தணிக்குப் பெரும் ஊர்வலமாகப் புறப்பட்டார் எல். முருகன். இதை காவல்துறை தடுத்து நிறுத்தி, பிறகு சில வாகனங்களுடன் அனுமதித்தது. பின்னர் திருத்தணியில் இருந்து தனது வேல் யாத்திரையைத் தொடங்கிய முருகனை காவல்துறை கைது செய்தது. இதுபோல, தினமும் வேல் யாத்திரை செய்ய முருகன் முயல்வதும், கைது செய்யப்படுவதும் தொடர்ந்து நடந்தது. முடிவில் டிசம்பர் 6ஆம் தேதி திருச்செந்தூரில் நிறைவு மாநாட்டை நடத்தினார். இதில் அப்போதைய மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர். முருகன் வழிபாடு – ஆன்மீகமா? அரசியலா? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,திருப்பரங்குன்றம் மலையின் ஒருபுறம் முருகன் கோவில் உள்ளது, மறுபுறம் சிக்கந்தர் பாதுஷா தர்கா அமைந்துள்ளது. "வீரத் தமிழர் முன்னணி மூலம் முதன்முதலில் முருகனை முன்னிறுத்தியது நாங்கள்தான். திருமுருகப் பெருவிழா என்ற விழாவை ஒவ்வோர் ஆண்டும் நடத்துகிறோம். முருகன் ஒரு கடவுள் என்பதற்காக அல்ல, அவன் எங்கள் முப்பாட்டன், எங்கள் முன்னோர் என்று கூறி இதை நடத்தி வருகிறோம். இதற்கும் தேர்தல் அரசியலுக்கும் சம்பந்தமில்லை" என்கிறார் நாம் தமிழர் கட்சியின் சர்வதேச செய்தித் தொடர்பாளரான சே. பாக்கியராசன். இப்போது பா.ஜ.கவும் அதைத்தான் சொல்கிறது. "இதை நாங்கள் தேர்தல் அரசியலுக்காகச் செய்யவில்லை. காலங்காலமாக இந்து சமயத்தினர் நம்பும் ஒரு கோவிலில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் அசைவ உணவை அருந்தினார். அவர் மீது தமிழ்நாடு அரசு கடும் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், அப்படிச் செய்யவில்லை. தமிழ்நாட்டை ஆளும் கட்சி, இந்து சமயத்திற்கு எதிரான கட்சியாக இருக்கிறது. இதனால், இஸ்லாமியர்களின் வாக்கு மொத்தமாக தி.மு.க-வுக்கு விழுகிறது. இந்தச் சூழலில் சாதாரணமான எதிர்ப்புக்கெல்லாம், அரசு மசிவதாக இல்லை. ஆகவே, தமிழ்நாட்டில் அதிகமாக வழிபடக்கூடிய தெய்வமான முருகனை முன்வைத்து எதிர்ப்பு தெரிவிக்கிறோம்" என்று தெரிவித்தார் பா.ஜ.கவின் மாநிலப் பொறுப்பாளரான எஸ்.ஆர். சேகர். மேலும், "கோடிக்கணக்கான முருக பக்தர்கள் இருக்கிறார்கள். அந்த பக்தர்கள் மூலமாக எதிர்ப்பைக் காண்பிக்கலாம் எனக் கருதுகிறோம். இந்த எதிர்ப்பை பா.ஜ.கவும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் முன்னெடுத்துச் செய்வதால் அரசியலாகப் பார்க்கப்படுகிறது" என்று குறிப்பிட்டார். அதோடு, அரசியல் கட்சியான தாங்கள் இதைச் செய்ய வேண்டியிருப்பதற்குக் காரணமாக "இந்து சமயத்தில் இப்படி எதிர்ப்புகளை முன்னெடுத்துச் செல்ல ஆட்கள் இல்லை. தமிழ்நாட்டில் இருக்கும் மடாதிபதிகளையும் சங்கங்களையும் இதன் மூலம் ஒன்றிணைக்க நினைக்கிறோம். இந்த மாநாடு இந்த சமய அவமானத்தைத் துடைக்கும் மாநாடு. இந்த மாநாட்டின் மூலம் இந்துக்களை ஒருங்கிணைக்க முடியும் என நினைக்கிறோம்" என்றார் எஸ்.ஆர். சேகர். இந்த மாநாட்டின் மூலம் எவ்வித தேர்தல் லாபத்தையும் இலக்கு வைக்கவில்லை என்றும், இந்து உரிமைகளைப் பெறுவதுதான் நோக்கம் என்றும் கூறுகிறார் அவர். "ஆனால், இதன் விளைவு அரசியல் ரீதியாக பா.ஜ.கவுக்கு சாதகமாக இருக்கலாம்" எனத் தெரிவித்தார் எஸ்.ஆர். சேகர். ஆனால், இதற்கு முந்தைய இதுபோன்ற முயற்சிகளுக்கு அப்படி எந்தச் சாதகமான விளைவும் கிடைக்கவில்லை. 2021ஆம் ஆண்டின் சட்டமன்றத் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பாக பா.ஜ.க. முருகனை முன்னிறுத்தி வேல் யாத்திரையை நடத்தியும்கூட, 2021ஆம் ஆண்டில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் அக்கட்சிக்குப் பெரிய வெற்றி கிடைக்கவில்லை. அ.தி.மு.கவின் கூட்டணியில் 20 இடங்களில் போட்டியிட்ட அக்கட்சியால் நான்கு இடங்களையும் 2.62 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது. பாக்கியராசனும் இதையேதான் கூறுகிறார். "தமிழ்நாட்டு மக்கள் இது போன்ற விஷயங்களை தேர்தலோடு இணைத்துப் பார்ப்பதில்லை. அரசியல் வேறு, ஆன்மீகம் வேறு என்றுதான் இருக்கிறார்கள். மதம் சார்ந்த செயல்பாடுகள் ஒருபோதும் தேர்தலில் எதிரொலித்தது இல்லை. ஒரு சில தொகுதிகளில் மதம் சார்ந்த நிகழ்வுகள் தாக்கத்தை ஏற்படுத்தலாம். மாநிலம் தழுவிய அளவில் மதம் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்துவதில்லை. மதத்தையும் அரசியலையும் இணைப்பதை தமிழ்நாடு மக்கள் ஒருபோதும் விரும்பியதில்லை" என்று கூறினார். முருகன் வழிபாடு பாஜகவுக்கு பலன் தருமா? படக்குறிப்பு,மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் திருப்பரங்குன்றம் விவகாரத்தை உள்ளூர்க்காரர்களே பெரிதாக விரும்பாத நிலையில், பா.ஜ.க. அதைக் கையில் எடுத்திருப்பதால் எந்தப் பலனும் கிடைக்கப் போவதில்லை என்கிறார் மூத்த பத்திரிகையாளரான ப்ரியன். அதுகுறித்து விரிவாகப் பேசியபோது, "பா.ஜ.கவை பொறுத்தவரை பொதுவாக ராமரை முன்வைத்து அரசியல் செய்வதாகக் கருதப்பட்டாலும், ஒவ்வொரு மாநிலத்திலும் எந்தக் கடவுள் பிரபலமாக இருக்கிறாரோ, அந்தக் கடவுளை முன்னிறுத்தவும் பா.ஜ.க. முயல்வதுண்டு. ஒடிசாவுக்கு சென்றால் ஜெய் ஜெகன்னாத் என்பார்கள். கொல்கத்தாவுக்கு சென்றால் ஜெய் துர்கா என்பார்கள். தமிழ்நாட்டில் முருகனை தூக்கிப் பிடிப்பார்கள். ஆனால், இதற்கெல்லாம் பலன் கிடைக்குமா என்பது சந்தேகம்தான். ராமர் கோவிலைக் கட்டிய பிறகும் உத்தர பிரதேசத்தில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. அதன் காரணமாகவே பெரும்பான்மை கிடைக்காமல் போய்விட்டது," என்று விளக்கினார். மேலும், தமிழ்நாட்டில், கறுப்பர் கூட்டம் வீடியோவை வைத்து வேல் யாத்திரையெல்லாம் சென்றும் 2021 தேர்தலில் எந்தப் பலனும் கிடைக்கவில்லை என்பதைக் குறிப்பிட்ட ப்ரியன், தற்போதும் திருப்பரங்குன்றத்தை முன்வைத்துச் செய்யும் அரசியலுக்கும் எந்தப் பலனும் கிடைக்காது என்கிறார். "அங்கே பெரிய கூட்டத்தைக் கூட்டலாம். அவர்கள் எல்லாம் ஏற்கெனவே பா.ஜ.கவில் இருப்பவர்கள்தான். முருகனைக் காப்பாற்றப் போகிறார்கள், திருப்பரங்குன்றம் மலையைக் காப்பாற்றப் போகிறார்கள் என யாரும் புதிதாக அந்தக் கூட்டத்தில் இணையப் போவதில்லை. உள்ளூர்வாசிகளே இதை ரசிக்க மாட்டார்கள்" என்கிறார் ப்ரியன். தமிழ்நாட்டில் தோன்றும் முருகனின் பிரமாண்ட சிலைகள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,மலேசியாவில் உள்ள பிரமாண்ட முருகன் சிலை (கோப்புப் படம்) இவையெல்லாம் ஒருபுறமிருக்க கடந்த சில ஆண்டுகளாக தமிழ்நாட்டில் முருகனுக்கு பிரம்மாண்டமான அளவில் சிலை வைக்கும் போக்கும் தொடங்கியுள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டில் சேலம்-உளுந்தூர்பேட்டை நெடுஞ்சாலையில், வாழப்பாடிக்கு அருகிலுள்ள புத்திரகவுண்டன்பாளையத்தில் 146 அடி உயரத்தில் பிரமாண்டமான முருகன் சிலை நிறுவப்பட்டது. சில நாட்களுக்கு முன்பாக, வேலூர் தீர்த்தகிரி வடிவேல் சுப்பிரமணியர் கோவிலில் 92 அடி உயரத்தில் முருகன் சிலை அமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதற்கிடையில் மருதமலை கோவிலில் 160 அடி உயரத்தில் கற்களால் ஆன முருகன் சிலையை பிரதிஷ்டை செய்வது குறித்து ஆய்வு நடந்து வருவதாகவும் அப்படி ஒரு சிலை அமையும்பட்சத்தில் அந்தச் சிலை ஆசியாவிலேயே மிக உயரமான முருகன் சிலையாக இருக்கும் எனவும் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்திருக்கிறார். இதுபோல முருகனுக்கு ஒரு பிரமாண்டமான சிலையை வைப்பது மலேசியாவில்தான் நடந்தது என்கிறார் முருகன் வணக்கத்தின் மறுபக்கம் என்ற நூலின் ஆசிரியரான சிகரம் ச. செந்தில்நாதன். மலேசியாவில் உள்ள பட்டு மலையின் (Batu Caves) அடிவாரத்தில் 2006ஆம் ஆண்டில் 140 அடி உயரத்திற்கு ஒரு முருகன் சிலை அமைக்கப்பட்டது. இந்தச் சிலை அமைக்கப்பட்டபோது உலகிலேயே மிகப்பெரிய முருகன் சிலையாக இது அடையாளம் காணப்பட்டது. இந்த நிலையில்தான் தற்போது தமிழ்நாட்டிலும் இதுபோல மிகப்பெரிய அளவில் முருகன் சிலைகளை வைக்கும் போக்கு துவங்கியிருக்கிறது. ஆனால், இது மரபு அல்ல என்கிறார் சிகரம் ச. செந்தில்நாதன். "தமிழ்நாட்டில் கோபுரங்களைத்தான் பெரிதாகக் கட்டுவார்கள். சிலைகளை இப்படிப் பெரிதாக வைக்கும் வழக்கம் கிடையாது. சிலைகளை இப்படிப் பெரிதாக வைத்தால், அவற்றுக்கு ஆராதனை செய்வது சிக்கலாகிவிடும். இவ்வளவு பெரிய சிலைகள் குறித்து எந்த ஆகமத்திலும் குறிப்பிடப்படவில்லை" என்கிறார் அவர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கோப்புப் படம் ஆன்மீகப் பேச்சாளரான சுகி சிவமும் இந்தப் போக்கு சரியானதல்ல என்கிறார். "மரபுகளோ சிந்தனையோ இப்போது தேவையில்லை என்றாகிவிட்டது. ஆகம விதிகளின்படி, ஒரு சிலை எந்த அளவுக்கு இருக்கிறதோ அந்த அளவுக்கு நெய்வேத்தியம் செய்ய வேண்டும். இவ்வளவு பெரிய சிலைக்கு அப்படிச் செய்ய முடியுமா? ஆனால், அந்தக் கணக்கெல்லாம் இப்போது யாருக்கும் தேவையில்லை என்றாகிவிட்டது. கூட்டமும் சுற்றுலா மூலம் கிடைக்கும் வருவாயும் போதுமென்று நினைக்கிறார்கள். மதம் இப்போது அரசியல்வாதிகளாலும் வியாபாரிகளாலும் கைப்பற்றப்பட்டுவிட்டது. இதெல்லாம் தவறு எனச் சொல்ல வேண்டியவர்கள்கூட இதனால் பேசாமல் இருக்கிறார்கள்" என்கிறார் சுகி சிவம். முருகனுக்கான முக்கியத்துவம் மீண்டும் அதிகரிக்கிறதா? தமிழ்நாட்டில் மிக நீண்ட காலமாக முருகனை வழிபடும் மரபு இருக்கிறது. சங்க இலக்கிய நூல்களில் பிற்காலத்தைச் சேர்ந்த நூலான பரிபாடலில் திருப்பரங்குன்றத்தில் முருகனை வழிபடுவது குறித்த செய்திகள் இருப்பதை நா. வானமாமலை தனது 'பரிபாடலில் முருக வணக்கம்' நூலில் சுட்டிக்காட்டுகிறார். இதற்குப் பிறகு வட இந்திய வழிபாட்டு மரபுகளின் தாக்கம் ஏற்பட்டது என்கிறார் நா. வானமாமலை. "ஆனால், அதற்குப் பிறகு தேவார காலத்தில் முருக வழிபாடு பின்னால் சென்றுவிட்டது. சோழர்கள் முழுக்க முழுக்க சிவன் வழிபாட்டைத்தான் முன்னெடுத்தார்கள். சிவனுடைய மகன் என்ற வகையில்தான் முருகன் வழிபடப்பட்டார். பிறகு நாயக்கர் காலத்தில் அருணகிரிநாதர்தான் மீண்டும் முருகன் வழிபாட்டிற்கு முக்கியத்துவம் அளித்தார். நாயக்கர் காலத்தில் சமஸ்கிருதம் மற்றும் தெலுங்கு மொழிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டபோது, மீண்டும் முருகனுக்கு முக்கியத்துவம் அளித்தார் அவர். சிவன் கோவில்கள் பிராமணர்களின் கட்டுப்பாட்டில் இருந்த நிலையில், தமிழ்க் கடவுளாக முருகன் முன்னிறுத்தப்பட்டார்" என்கிறார் ச. செந்தில்நாதன். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cgq3d4lg755o
-
மீனவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்
10 JUN, 2025 | 05:49 PM கடற்படையினர் மற்றும் மீனவர்கள் மறு அறிவித்தல் வரை கடல் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கை புதன்கிழமை (11) பிற்பகல் 2.30 மணி வரை அமுலில் இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் அறிவித்துள்ளது. அதன்படி, சிலாபம் முதல் புத்தளம் மற்றும் மன்னார் வழியாக காங்கேசன்துறை வரையிலும், காலி முதல் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலும் உள்ள கடற்கரையோரக் கடல் பகுதிகளுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவநிலையின் தாக்கம் காரணமாக, காற்றின் வேகமானது, அவ்வப்போது மணிக்கு 60-70 கி.மீ. வரை அதிகரிக்கக்கூடும், என்பதுடன் அந்த கடல் பகுதிகள் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாக காணப்படக்கூடும். இந்த கடல் பகுதிகளுக்கு மறு அறிவிப்பு வரும் வரை பயணம் செய்ய வேண்டாம் என கடற்சார் மற்றும் மீனவ சமூகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களத்தால் வெளியிடப்படும் அடுத்தடுத்த அறிவிப்புகளை கவனமாக பின்பற்றுமாறு மீனவ மற்றும் கடற்சார் சமூகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/217100
-
நிதி மோசடி தண்டனை பெற்றவருக்கு மன்னிப்பு : ஜனாதிபதி, சிறைச்சாலை திணைக்களத்தின் முரண்பட்ட அறிக்கை
சிறைச்சாலை ஆணையாளர் துஷார உப்புல்தெனியவிற்கு விளக்கமறியல் Published By: DIGITAL DESK 2 10 JUN, 2025 | 04:18 PM குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்ட சிறைச்சாலைகள் ஆணையாளர் துஷார உப்புல்தெனியவை நாளை புதன்கிழமை (11) வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்வைக்கப்பட்ட தரவுகளை பரிசீலித்த பின்னர் கொழும்பு மேலதிக நீதிவான் மஞ்சுள ரத்நாயக்க இந்த உத்தரவை பிறப்பித்தார். கைதிகளுக்கான ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் போது அனுமதியற்ற முறையில் சிலரை விடுதலை செய்த குற்றச்சாட்டின் பேரிலேயே இவர் கைது செய்யப்பட்டார். https://www.virakesari.lk/article/217099
-
சட்டவிரோத திஸ்ஸ விகாரை கட்டுமானத்திற்கு எதிராக கவனயீர்ப்புப் போராட்டம் தொடர்கிறது
யாழ். தையிட்டியில் ஆர்ப்பாட்டம் - தமிழ் ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு 10 JUN, 2025 | 03:55 PM பொசன் பௌர்ணமி தினமான இன்று செவ்வாய்க்கிழமை (10) யாழ். தையிட்டி பகுதியில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ். தையிட்டி பகுதியில் உள்ள திஸ்ஸ விகாரையானது சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டுள்ளது என தெரிவித்து அப்பகுதியில் ஒவ்வொரு பௌர்ணமி தினத்தன்றும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் குறித்த இடத்துக்கு சிங்கள ஊடகவியலாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், தமிழ் ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/217097
-
யாழ். சென். பற்றிக்ஸ் கல்லூரியின் T-10 கிரிக்கெட் சுற்றுப்போட்டி
10 JUN, 2025 | 06:04 PM யாழ்ப்பாணம் சென். பற்றிக்ஸ் கல்லூரியின் 175வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு நடாத்தப்படும் விளையாட்டு விழாவின் T-10 கிரிக்கெட் சுற்றுப்போட்டி கடந்த 7, 8 ஆகிய திகதிகளில் ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நாளை 11ஆம் திகதி அரையிறுதிப் போட்டியுடன் இறுதிப்போட்டி நிறைவு பெறவுள்ளது. இதன் ஆரம்ப நிகழ்வு கடந்த 7ஆம் திகதி யாழ்ப்பாணம் சென். பற்றிக்ஸ் கல்லூரியின் மைதானத்தில் நடைபெற்றது. வட மாகாணத்தைச் சேர்ந்த 14 அணிகள் பங்குபற்றும் இந்த கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் ஆரம்ப நிகழ்வானது கல்லூரியின் அதிபர் அருட்திரு A.P. திருமகன் அடிகளார் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கல்லுரியின் புகழ்பூத்த விளையாட்டு வீரர் யூவான் ரைற்றஸ் அவரது பாரியாருடன் கலந்துகொண்டார். இப்போட்டியின் இறுதி அங்கமாக நாளை காலை 8.30 மணிக்கு இரண்டு அரையிறுதிப் போட்டிகள் நடைபெறவுள்ளதாகவும் ஒன்றில், சென். பற்றிக்ஸ் கல்லூரியும் சென். ஜோன்ஸ் கல்லூரியும், மற்றைய போட்டியில் யாழ்ப்பாணக் கல்லூரியும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியும் மோதவுள்ளன எனவும் கூறப்படுகிறது. தொடர்ந்து, பகல் 1 மணியளவில் மூன்றாம் இடத்துக்கான போட்டியும் மாலை 3 மணிக்கு இறுதிப் போட்டியும் கல்லூரி மைதானத்தில் நடைபெறும். https://www.virakesari.lk/article/217101