Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. ஓமண்ணை பேச்சு வழக்கில் குறிப்பிடுவார்கள். முருக்கு, மாமரம் போன்றவை நிற்பதாலும் பறவைகள் வருகின்றன. அவற்றை தொந்தரவு செய்ய எங்கள் வீட்டில் ஒருவரும் இல்லாததாலும் அவை சுதந்திரமாக வந்து செல்கின்றன.
  2. அமெரிக்க அதிபர் தேர்தலில் புதிய திருப்பம்... டிரம்ப் ஆதரவாளராக மாறிய எலான் மஸ்க் அமெரிக்க அதிபர் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் எக்ஸ் தளத்தின் உரிமையாளரான எலான் மஸ்க் புதிய திருப்பமாக தனது ஆதரவை டொனால்ட் டிரம்ப் பக்கம் திருப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பான பதிவொன்றினையும் அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார், அதில் அவரது ஆதரவு நிலைப்பாடு டிரம்ப் பக்கம் இருப்பது தெளிவாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதன்படி தனது பதிவில், தனது முந்தைய ஜனநாயகக் கட்சி ஆதரவை ஒப்புக்கொண்ட எலான் மஸ்க், தற்போது அமெரிக்காவுக்கு ’சிவப்பு அலை’ வேண்டும் என பதிவிட்டிருக்கிறார். சிவப்பு அலை என்பது குடியரசுக் கட்சியை குறிக்கிறது. தேர்தலுக்கு முன் அதாவது மீண்டும் டிரம்ப் அதிபராக வரவேண்டும் என்பதை எலான் மஸ்க் வெளிப்படையாக பொதுவெளியில் தெரிவித்திருக்கிறார். ”தேர்தலுக்கு முன்பாக நான் ஒரு பரிசீலிக்கப்பட்ட முடிவை எடுக்க விரும்புவேன். ஒரு வேட்பாளரை ஆதரிக்க முடிவு செய்தால், அதற்கான காரணத்தை நான் சரியாக விளக்குவேன்" என்று முன்னதாக தெரிவித்திருந்த எலான் மஸ்குக்கு, தற்போது அதற்கான சூழல் வந்திருக்கிறது என்று அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். முன்னதாக 2020 அதிபர் தேர்தலில் ஜோ பைடனுக்கு தான் வாக்களித்ததாக எலான் மஸ்க் தெரிவித்திருந்தார், ஆனால் 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற மின் வாகனங்கள் தொடர்பான உச்சி மாநாட்டில் எலான் மஸ்கின் டெஸ்லாவுக்கு இடம் இல்லை என தெரிய வந்ததும் மஸ்க் நிலைப்பாடில் பெரும் மாற்றம் நிகழத் தொடங்கியது. எலான் மஸ்குக்கே விற்க முடிவு அது மாத்திரமன்றி, எக்ஸ் தளத்தில் வெகுவாக விமர்சிக்கப்பட்ட டிரம்ப் இதனால் வெறுப்புற்ற நிலையில் ட்விட்டருக்கு போட்டியாக ட்ரூத் சோஷியல் என புதிய சமூக ஊடகத்தை தொடங்கினார். ஆனால் டொனால்ட் ஆதரவாளர்களுக்கு அப்பால் அது மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெறவில்லை. எனவே எக்ஸ் தளத்திற்க்கு மீண்டும் பயனர்களை இணைக்கும் யுக்தியாகவும் இது இருக்கலாம் என பலதரப்பட்டோராலும் தற்போது பேசப்பட்டு வருகிறது, இந்நிலையில் தற்போது மீண்டும் எக்ஸ் தளத்துக்கு திரும்பியதை அடுத்து தனது ட்ரூத் சோஷியலை எலான் மஸ்குக்கே விற்க டிரம்ப் முடிவு செய்திருப்பதாகவும், அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://ibctamil.com/article/elon-musk-starts-endorsing-trump-than-joe-biden-1711371224
  3. விறுவிறுப்பான ஐபிஎல் தொடர்: முழு போட்டி அட்டவணையை வெளியிட்ட பிசிசிஐ ஐபிஎல் 2024 தொடரின் போட்டிகளுக்கான முழு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. ஐபிஎல் 2024 தொடரானது கடந்த 22 ஆம் திகதி சென்னை சேப்பாக்கத்தில் ஆரம்பமாகியது. ஐ.பி.எல். நடைபெற்று வரும் சமயத்தில் இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் இதனை கருத்தில் கொண்டு 17 நாட்களுக்கான அட்டவணை மட்டுமே வெளியிடப்பட்டிருந்தது. அதில் 21 போட்டிகள் வரும் ஏப்ரல் 7-ம் திகதி வரை நடைபெற உள்ளன. இந்நிலையில் நடப்பு ஐ.பி.எல். தொடருக்கான முழு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. முழு அட்டவணை அதன்படி 2வது கட்ட போட்டிகள் ஏப்ரல் 8 திகதி முதல் மே 26-ம் திகதி வரை நடைபெற உள்ளன. 2வது கட்டத்தின் முதல் போட்டியும் சென்னை சேப்பாக்கம் மைதானத்திலேயே நடைபெற உள்ளது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. லீக் போட்டிகள் மே 19-ம் திகதியுடன் முடிவடைய உள்ளன. பிளே ஓப் சுற்றில் தகுதிகாண் போட்டிகள் மே 21 திகதியும், தகுதி நீக்க போட்டிகள் 22ஆம் திகதியும் நடைபெற உள்ளது. தகுதிகாண் 2 மே 24ஆம் திகதியும், இறுதிப்போட்டி மே 26ம் திகதியும் நடைபெற உள்ளன. மேலும் தகுதிகாண் போட்டிகள் 1 மற்றும் தகுதி நீக்க போட்டிகள் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்திலும், தகுதிகாண் போட்டிகள் 2 மற்றும் இறுதிப்போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்திலும் நடைபெறுவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://ibctamil.com/article/ipl-2024-schedule-csk-dhoni-chennai-chepauk-1711370015
  4. தெற்காசியாவின் மிகப் பெரிய மகப்பேறு வைத்தியசாலையாக காலி கராப்பிட்டியவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஜேர்மன் – இலங்கை நட்புறவு புதிய மகளிர் வைத்தியசாலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நாளை (மார்ச் 27) திறந்து வைக்கப்படவுள்ளது. ஆறு மாடிகளைக் கொண்ட இந்த மருத்துவமனையில் அறுநூறு படுக்கைகள் மற்றும் ஆறு அறுவை சிகிச்சை அரங்குகள் கொண்டது , அவசர சிகிச்சைப் பிரிவுகள், தீவிர சிகிச்சைப் பிரிவுகள், ஆய்வகங்கள், சிசு தீவிர சிகிச்சைப் பிரிவுகள், சிறப்பு குழந்தைகள் பிரிவுகள் உள்ளிட்ட அனைத்து நவீன மருத்துவ வசதிகளும் உள்ளதாக மருத்துவமனை இயக்குநர் பி. விமலசேன தெரிவித்துள்ளார். இதற்காக ஜேர்மன் அரசாங்கம் இருபத்தைந்து மில்லியன் யூரோக்கள். (ரூ. 357 கோடி) வழங்கியுள்ளது. ஆரம்பத்தில் வைத்தியசாலை நிர்மாணிப்பிற்காக எண்ணூறு பேர்ச்சஸ் பெறப்பட்டதுடன் பின்னர் மேலும் இரண்டு காணிகள் கிடைத்ததால் வைத்தியசாலையின் தற்போதைய அளவு ஆயிரம் பேர்ச்களை அண்மித்துள்ளது. வைத்தியசாலை திறக்கப்பட்டதன் பின்னர் கராப்பிட்டிய புறநகர் அபிவிருத்தியை ஆரம்பிக்க நகர அபிவிருத்தி அதிகார சபை திட்டமிட்டுள்ளது. ஜேர்மனியின் முன்னாள் ஜனாதிபதி ஹெல்முட் கோல் 2004 டிசம்பரில் விடுமுறைக்காக இலங்கை வந்தபோது, தென் மாகாணத்தில், சுனாமியில். காலி மஹாமோதர வைத்தியசாலையில் ஏற்பட்ட சேதத்தைப் பார்த்து நன்கொடையாக வழங்கிய 300 கோடி ரூபாயில் இந்த வைத்தியசாலையின் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. அதன்படி 2007ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க இந்த புதிய வைத்தியசாலைக்கு அடிக்கல் நாட்டினார். ஆனால் அதனை நிர்மாணிக்கும் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்ட அரச சார்பற்ற நிறுவனம் அதனை பாதியிலேயே நிறுத்திவிட்டு இலங்கையை விட்டு வெளியேறியதால் அப்பகுதியே பின்னர் நுளம்புகள் உற்பத்தியாகும் இடமாக மாறியதுடன் சுற்றுச்சூழலுக்கு பெரும் கேடு விளைவிக்கும் இடமாக மாறியது. இதேவேளை, கடந்த அரசாங்கத்தின் தலையீட்டினால் வைத்தியசாலையின் நிர்மாணப் பணிகள் மீள ஆரம்பிக்கப்பட்டதுடன், அதற்காக ஜேர்மனியிடம் இருந்து இருபத்தைந்து மில்லியன் யூரோக்களை பெற்றுக்கொள்வதற்கான ஒப்பந்தங்கள் 2015ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்டன. புதிய மருத்துவமனை திறக்கப்பட்ட பிறகு, மஹ்மோதரா மகப்பேறு மருத்துவமனை அந்த இடத்திலிருந்து அகற்றப்படும். https://thinakkural.lk/article/297022
  5. செம்பகம் முருங்கையில் இருக்கும் மசுக்குட்டியை தேடித் தேடி விழுங்கும். ஆனால் கூட்டமாக அடிமரத்தில் இருப்பவற்றை கண்டும் காணாதது போல செல்கிறது!
  6. பட மூலாதாரம்,GETTY IMAGES 11 நிமிடங்களுக்கு முன்னர் காசாவில் "உடனடியாக போர் நிறுத்தத்தை" அமல்படுத்துவதற்கான தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில். இதில் அமெரிக்கா தனது முந்தைய நிலைப்பாட்டில் இருந்து மாறி இந்தமுறை நடவடிக்கையை வீட்டோ செய்யாமல் தவிர்த்துவிட்டது. இந்த தீர்மானத்தின் படி அனைத்து பணயக்கைதிகளையும் உடனடியாக மற்றும் நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டுமெனவும் கூறப்பட்டுள்ளது. இஸ்ரேல் - பாலத்தீனம் இடையே அக்டோபரில் போர் தொடங்கியதில் இருந்து போர் நிறுத்த தீர்மானத்தை கொண்டு வர முடியாமல் ஐநா பாதுகாப்பு கவுன்சிலுக்கு சில முட்டுக்கட்டைகள் இருந்தன. இந்நிலையில் தற்போது அமெரிக்காவின் இந்த நடவடிக்கை, காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் தொடர்பாக, அதற்கும் அதன் நட்பு நாடான இஸ்ரேலுக்கும் இடையே வளர்ந்து வரும் கருத்து வேறுபாட்டைக் குறிப்பதாக அமைந்துள்ளது. இந்த தீர்மானத்தின் மீது ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் 15 உறுப்பினர்களில் அமெரிக்கா தவிர மற்ற நாடுகள் வாக்களிக்க, அமெரிக்கா மட்டும் வாக்களிக்காமல் ஒதுங்கி நின்றது. இதற்கு முன்னதாக இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கும் வேளையில், போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கும் தீர்மானங்களை ஆதரிக்க முடியாது என்று முன்னர் அவற்றை தடுத்தது அமெரிக்கா. ஆனால் வியாழனன்று, போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கும் தனது சொந்த வரைவு அறிக்கை ஒன்றை முதல்மு றையாக முன்வைத்தது அமெரிக்கா. இது இஸ்ரேல் மீதான அதன் நிலைப்பாடு கடுமையாகியுள்ளதை குறிப்பதாக அமைந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகம் வழங்கியுள்ள தகவலின்படி, இஸ்ரேலின் குண்டுவீச்சினால் 32,000க்கும் அதிகமான மக்கள், முக்கியமாக பெண்கள் மற்றும் குழந்தைகள் காஸாவில் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் அதிகரித்து வரும் உயிரிழப்பு எண்ணிக்கை குறித்து சமீப காலமாகவே அமெரிக்கா முன்பை விட அதிகமாக இஸ்ரேலை குற்றம்சாட்டி வருகிறது. காஸாவில் உள்ள மக்கள் அனைவரும் உணவு இன்றி தவிப்பதாக கூறும் அமெரிக்கா, அவர்களுக்கு கூடுதல் மனிதநேய உதவிகளை செய்யுமாறு இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுத்துள்ளது. மனிதநேய உதவிகளை செய்ய இஸ்ரேல் தடையாக இருப்பதாக ஐநா சபை குற்றம் சுமத்தியிருந்தது. அதே சமயம் உதவிகளை விநியோகிப்பதில் ஐநா சரியாக செயல்படவில்லை என்று இஸ்ரேல் குற்றம் சாட்டியது. காஸாவை ஆட்சி செய்து வரும் பாலத்தீன இஸ்லாமியக் குழுவான ஹமாஸ், இஸ்ரேல் மீது முன்னறிவிப்பில்லா தாக்குதலை நடத்தியதில், 1200 பேர் உயிரிழந்தனர். மேலும் 253 பணயக்கைதிகளையும் பிடித்து வைத்துக் கொண்டது. அதனால், அக்டோபர் 7 தொடங்கிய போர் தற்போது வரை நடந்து வருகிறது. https://www.bbc.com/tamil/articles/c3gmw4p94yeo
  7. பிலாக்கொட்டைக் குருவி, பிலினி, செம்பகம் எல்லாம் மதிய நேரத்தில் தண்ணீர் தாங்கி நிரம்பி வழியும் நீரில் குளிக்க வருவார்கள். இரட்டைவால் குருவியையும் கண்டிருக்கிறேன்.
  8. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், இம்ரான் குரேஷி பதவி, பிபிசி இந்தி ஒரு மணி நேரத்துக்கு முன்னர் தொழில்நுட்ப உலகில் விரைவான மாற்றங்களுக்கு மத்தியில், "எல்லாவற்றையும், அனைவரையும் நம்ப வேண்டாம்" என்று மக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. செயற்கை நுண்ணறிவு மூலம் இளைஞர்கள் மற்றும் மூத்த குடிமக்களிடம் மோசடி செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ள நிலையில் சைபர் பாதுகாப்பு துறையின் வல்லுநர்கள் இந்த ஆலோசனையை வழங்கியுள்ளனர். செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி ஒரு நபரின் குரலை நகல் செய்வதன் மூலம் பெரிய நிதி மோசடிகள் செய்யப்படுகின்றன. இந்த மோசடியின் போது எந்த ஆதாரமும் கிடைப்பதில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் விசாரணை கூட கடினமாக உள்ளது. ஏமாற்றப்பட்ட பணத்தை திரும்பக் கொண்டு வருவதும் இயலாத செயலாக உள்ளது. தெரியாத எண்கள் அல்லது தெரியாத நபர்களிடமிருந்து வரும் அழைப்புகளை ஏற்க வேண்டாம் என்று மக்களுக்கு அறிவுறுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மத்திய பிரதேசத்தில் ஒரு நபருக்கு வந்த கால் மூலம் நிதி மோசடி செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிந்தனையை மாற்ற வேண்டும் இந்தச் சவால்களை எதிர்கொள்ள நமது சிந்தனையில் மாற்றத்தைக் கொண்டு வருவது அவசியம் என்று சைபர் பாதுகாப்புத் துறை வல்லுநர்கள் கருதுகின்றனர். "புதிய உலகில் நீங்கள் அனைவரையும் அல்லது அனைத்தையும் நம்ப முடியாது. எல்லாவற்றையும் சந்தேகிக்கும் நபராக நீங்கள் உங்களை வடிவமைத்துக் கொள்ள வேண்டும். மேலும் எல்லாவற்றையும், எல்லோரையும் நம்ப வேண்டாம். உங்கள் சிந்தனையில் மாற்றம் கொண்டு வரவேண்டும்," என்று க்ளவுட் சீக் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ராகுல் சஷி பிபிசி இந்தியிடம் தெரிவித்தார். மத்திய பிரதேசத்தில் ஒரு நபருக்கு வந்த கால் மூலம் நிதி மோசடி செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொலைபேசியில் அழைத்த நபர் பதிலளித்த நபரிடம், ’அவரின் பதின்வயது மகன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாகவும், அதை மூடி மறைக்க வேண்டுமென்றால் ஐம்பதாயிரம் ரூபாய் தர வேண்டும்’ என்றும் கூறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மோசடி செய்பவர்கள் உறவினரை போல பேசி பணம் பறிக்க பார்ப்பார்கள் இணைய பாதுகாப்பு தனது மகனின் அழு குரலையும் தந்தை கேட்டார். இதை தொடந்து அவர் உடனடியாக ஐம்பதாயிரம் ரூபாயை ட்ரான்ஸ்ஃபர் செய்தார். பின்னர் தனது மகன் நலமாக இருப்பதும், அது போலியான அழைப்பு என்றும் தெரியவந்தது. மோசடி செய்பவர் வேறு ஒரு நபரைப் போல குரலை மாற்றிக்கொண்டு, அந்த நபரின் நண்பரை அழைத்து, ’தான் தெரியாத நாட்டில் சிக்கித் தவிப்பதாகவும், உடனடியாக பணம் தேவைப்படுவதாகவும்’ கூறுவது போன்ற மோசடி சம்பவங்களை ஒத்ததாக இது உள்ளது. "இது என்னுடைய நண்பருக்கு நடந்தது" என்கிறார் SecureIT கன்சல்டன்சி சர்வீசஸின் இணைய பாதுகாப்பு நிபுணர் சஷிதர் சிஎன். "இது என்னுடைய நண்பருக்கு நேர்ந்தது. சமூக வலைதளத்தில் உதவி கேட்டு தனது நண்பரின் குரலில் அவருக்கு ஒரு செய்தி வந்தது. தனது உடமைகள் அனைத்தையும் இழந்துவிட்டதாகவும், உடனடி நிதி உதவி தேவை என்றும் அந்த குரல் கூறியது,” என்று அவர் சொன்னார். “இந்தியாவில் இருக்கும் இவர் தன் நண்பருக்கு போன் செய்து நலம் விசாரித்த போது, தான் நன்றாக இருப்பதாக அவர் கூறியதை கேட்டு ஆச்சரியமடைந்தார். தனது நண்பரிடம் நடந்ததை விளக்கிய அவர், சமூக வலைதளத்தில் அவர் குரலை கேட்குமாறு கூறினார். தன் குரலைப் போலவே அது இருப்பதை கேட்டு அந்த நண்பர் அதிர்ச்சி அடைந்தார்,” என்று சஷிதர் சிஎன் குறிப்பிட்டார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, படித்தவர்கள், படிக்காதவர்கள் என அனைவரையும் குறிவைக்கும் ஆன்லைன் மோசடி இது போன்ற மோசடிகள் படிக்காதவர்கள் மத்தியில் மட்டுமல்லாமல் படித்தவர்களுக்கும் நடக்கிறது. "சில நாட்களுக்கு முன்பு எனக்கு ஒரு அழைப்பு வந்தது. இந்த அழைப்பு தொலைத்தகவல் தொடர்பு துறையில் இருந்து செய்யப்படுகிறது என்று கூறப்பட்டது. KYC விவரங்களை இரவுக்குள் கொடுக்காவிட்டால் என் பெயரில் இருக்கும் எல்லா எண்களும் ரத்து செய்யப்படும் என்று என்னிடம் கூறப்பட்டது,” என்றார் சஷிதர். ”தொடர்வதற்கு ஒரு நம்பரை டயல் செய்யுமாறு சொல்லப்பட்டது. இதில் யார் வேண்டுமானாலும் ஏமாற முடியும்.” “KYC விவரங்களை பெறுவதற்கான ஃபிஷிங் மோசடி இது என்று எனக்குத் தெரியும். இந்த விவரங்களை வைத்து மோசடி செய்யப்படுகிறது. அந்த எண் யாருடையது என்பதை ஒரு செயலி மூலம் நான் சரிபார்த்தேன். இது மத்திய பிரதேசத்தின் ஒரு நம்பர் என்று எனக்கு தெரியவந்தது. நான் அந்த எண்ணை ப்ளாக் செய்தேன். செயலியில் அதை ஃப்ராட் (மோசடி எண்) என்று விவரித்தேன். இதன் மூலம் அந்த எண்ணிலிருந்து யாருக்காவது அழைப்பு வந்தால், அது ஒரு மோசடி அழைப்பு என்பதை அவர்கள் தெரிந்துகொள்ளமுடியும்." பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஒருவரின் குரல் மற்றும் நடத்தை மாதிரியைப் பயன்படுத்தி அசல் போன்ற போலி வீடியோக்களை உருவாக்கக்கூடிய பல கருவிகள் இணையத்தில் உள்ளன. பேஸ்புக், இன்ஸ்டாவில் புகைப்படம், வீடியோ பகிர்வதால் என்ன ஆபத்து? இதுபோன்ற சந்தர்ப்பங்களில் தொலைபேசி அழைப்புகளை, வரும் மெஸேஜூகளை கண்மூடித்தனமாக நம்பக்கூடாது என்று அவர் கூறுகிறார். ஒருவரின் குரல் மற்றும் நடத்தை மாதிரியைப் பயன்படுத்தி அசல் போன்ற போலி வீடியோக்களை உருவாக்கக்கூடிய பல கருவிகள் இணையத்தில் உள்ளன. அதை யார் செய்தார்கள் என்று கண்டுபிடிக்க இயலாது என்று அவர் குறிப்பிட்டார். "நான் தொலைபேசி அழைப்புகளை செய்து அதை பதிவு செய்ய முடியும். இதன் மூலம் போலி அழைப்புகளைச் செய்ய போதுமான டேட்டா எனக்கு கிடைத்துவிடும். சில அலோக்ரிதமுக்கு seed data தேவை. வீடியோ அல்லது சாதாரண அழைப்புகள் மூலம் seed data வை பெற முடியும். இது மிகவும் எளிது. முன்பின் தெரியாத எந்த நபருடனும் அழைப்பில் பேசலாம். இந்த உரையாடலின் போது மோசடி செய்வதற்காக அவரது குரலை பதிவு செய்யலாம்," என்று ராகுல் சஷி கூறுகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தற்போது டீப் ஃபேக் உருவாக்க தொழில்நுட்பம் உள்ளது. ஆனால் அதை முறியடிக்க தொழில்நுட்பம் இல்லை. "இது போன்ற மோசடி செய்யும் பெரும்பாலானவர்களுக்கு சமூக ஊடகங்கள் ஒரு கஜானா போல உள்ளது. இங்கு குரல்களுடன் கூடவே வீடியோக்களையும் புகைப்படங்களையும் நகலெடுக்க முடியும். அவர்களின் கவனம் குழந்தைகளின் சமூக ஊடக கணக்குகளில் உள்ளது. அங்கிருந்து அவர்கள் மிக அதிக தகவல்களை பெற முடியும்,” என்கிறார் சைபர் சட்டக் கல்வியாளர் நாவி விஜயசங்கர். தற்போது டீப் ஃபேக் உருவாக்க தொழில்நுட்பம் உள்ளது. ஆனால் அதை முறியடிக்க தொழில்நுட்பம் இல்லை. "இது ஒரு வகையான விழிப்புணர்வு விவகாரம். அதிர்ச்சியில் மக்கள் அதற்கு எதிர்வினையாற்றுகிறார்கள். ஆனால் பெரிய அளவிலான விழிப்புணர்வு பிரசாரங்களை நடத்துவதன் மூலம் இதற்கு தீர்வு காண முடியும். இதைத்தவிர இதற்கு வேறு தீர்வு இல்லை," என்று விஜய்சங்கர் கூறினார். வங்கித் துறை, தொழில்நுட்பத்தின் உதவியுடன் பாதிக்கப்பட்டவர்களின் தகவல்களை பாதுகாக்க வேண்டும் என்று விஜயசங்கர் அறிவுறுத்துகிறார். "ஒரு நபர் இதுபோன்ற மோசடிக்கு ஆளாக நேரிடும்போது அவர் பயந்துபோய் ஆன்லைனில் பணம் செலுத்துகிறார். இது அதிகாரப்பூர்வ பணம் செலுத்தல் என்பதால் வங்கிகள் அதை கவனிப்பதில்லை. அவர் சாதாரணமாக செய்யும் பரிவர்த்தனைகளை காட்டிலும் தொகை மிக அதிகமாக இல்லாதவரை வங்கி அதை கவனிக்காது." "கணக்கு வைத்திருப்பவர் இது குறித்து புகார் அளிக்கும்போது பணம் டெபாசிட் செய்யப்பட்ட வங்கியை தொடர்பு கொள்ளமுடியும். நமது வங்கி அமைப்பில் உள்ள குறைபாடுகளில் ஒன்று என்னவென்றால் பாதிக்கப்பட்டவரின் வங்கி, மோசடி செய்தவரின் வங்கிக்கணக்கு உள்ள வங்கியை தொடர்பு கொள்வதில்லை. இது தானியங்கி முறையாக மாற வேண்டும்," என்றார் விஜய்சங்கர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தெரியாத என்ணில் இருந்து வரும் அழைப்புகளுக்கு பதில் அளிக்காமல் இருக்காதீர்கள். அவர்களிடம் டெக்ஸ்ட் செய்யுமாறு, அல்லது வாட்ஸ் அப் செய்யுமாறு சொல்லவும். தப்பிக்க என்ன செய்யவேண்டும், என்ன செய்யக்கூடாது? போனில் கால் வெரிஃபிகேஷன் செயலியை இன்ஸ்டால் செய்யவேண்டும். தெரியாத என்ணில் இருந்து வரும் அழைப்புகளுக்கு பதில் அளிக்காமல் இருக்காதீர்கள். அவர்களிடம் டெக்ஸ்ட் செய்யுமாறு, அல்லது வாட்ஸ் அப் செய்யுமாறு சொல்லவும். நான் உங்களை சந்தித்தேன் என்று யாராவது ஒருவர் தொலைபேசியில் சொன்னால், அப்போது நீங்கள் எந்த நிறத்தில் ஷர்ட் அணித்திருந்தீர்கள் என்று கேளுங்கள். தெரியாத எண்ணில் இருந்து வரும் அழைப்புகளை நம்பாதீர்கள். உங்கள் போனில் Anti virus App கட்டாயம் வையுங்கள். அப்படிb செய்யவில்லையென்றால் நீங்கள் மோசடி வலையில் எளிதாகச்சிக்கும் ஆபத்து உள்ளது. Anti virus App, போலி இணைப்புகளை அடையாளம் காண உதவும். Fake link வீடியோ அல்லது டெக்ஸ்டை திறக்காதீர்கள். ஏனென்றால் வீடியோ மூலமும் malware ஐ அனுப்ப முடியும். சமூக ஊடகங்களில் உங்களுடைய மற்றும் உங்கள் குழந்தைகளின் புகைப்படங்கள், வீடியோக்களை பகிரும் போது கவனமாக இருங்கள். https://www.bbc.com/tamil/articles/cj7v9k0yxjgo
  9. 147 வருட டெஸ்ட் கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை படைத்தார் கமிந்து மெண்டிஸ் 25 MAR, 2024 | 04:05 PM (நெவில் அன்தனி) இலங்கை கிரிக்கெட் அணியின் சகலதுறை ஆட்டக்காரர் கமிந்து மெண்டிஸ், 147 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அரிய சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார். ஏழாவது அல்லது அதைவிட கீழ் வரிசை இலக்கத்தில் துடுப்பெடுத்தாடி ஒரே டெஸ்டில் 2 இன்னிங்ஸ்களிலும் சதங்களைக் குவித்த முதலாவது வீரர் என்ற பெருமைக்குரிய சாதனையையே கமிந்து மெண்டிஸ் நிலைநாட்டினார். பங்களாதேஷுக்கு எதிராக சில்ஹெட் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று திங்கட்கிழமை (25) நிறைவுக்கு வந்து முதலாவது டெஸ்ட் போட்டியில் 328 ஓட்டங்களால் இலங்கை வெற்றிபெற்றது. இந்த டெஸ்ட் போட்டியில் இலங்கை வெற்றிபெறுவதற்கு முக்கிய பங்காற்றிய ஐவரில் கமிந்து மெண்டிஸும் ஒருவராவார். போட்டியின் முதலாம் நாளான கடந்த வெள்ளிக்கிழமை (22) இலங்கை அதன் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்களை இழந்து 57 ஓட்டங்களைப் பெற்று திணறிக்கொண்டிருந்தபோது அணித் தலைவர் தனஞ்சய டி சில்வாவுடன் 7ஆம் இலக்க வீரராக இணைந்த கமிந்து மெண்டிஸ், 6ஆவது விக்கெட்டில் சாதனைமிகு 202 ஓட்டங்களைப் பகிர்ந்தார். அவர்கள் இருவரும் தலா 102 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ஆட்டம் இழந்தனர். இதன் பலனாக இலங்கை 280 ஓட்டங்ளைப் பெற்றது. பங்ளாதேஷை 188 ஓட்டங்களுக்கு கட்டுப்படுத்திய பின்னர் 2ஆவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை, 2ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட்களை இழந்து 119 ஓட்டங்களைப் பெற்று மீண்டும் தடுமாற்றத்தை எதிர்கொண்டது. அன்றைய தினம் 5ஆவது விக்கெட் வீழ்ந்தபோது தனஞ்சய டி சில்வாவுடன் இராகாப்பாளராக விஷ்வா பெர்னாண்டோ இணைந்து அன்றைய நாளை மேலதிக விக்கெட் இழப்பின்றி முடிவுக்கு கொண்டுவந்தார். ஆனால், போட்டியின் மூன்றாம் நாள் காலை விஷ்வா பெர்னாண்டோ ஆட்டம் இழந்ததும் 8ஆம் இலக்க வீரராக களம் நுழைந்த கமிந்து மெண்டிஸ், மிகவும் பொறுப்புணர்வுடன் துடுப்பெடுத்தாடி இலங்கை அணியை மீட்டெடுத்தார். இதனிடையே தனஞ்சய டி சில்வா 108 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார். அவருடன் 7ஆவது விக்கெட்டில் 173 ஓட்டங்களைப் பகிர்ந்த கமிந்து மெண்டிஸ் சதம் குவித்ததன் மூலம் கீழ் வரிசையில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதங்கள் குவித்த முதலாவது வீரர் என்ற அற்புதமான சாதனையை நிலைநாட்டினார். இதேவேளை, இலங்கை சார்பாக இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதங்கள் குவித்த முதலாவது அணித் தலைவர் என்ற அரிய சாதனையை தனஞ்சய டி சில்வா நிலைநாட்டினார். அதேவேளை தனஞ்சய டி சில்வாவும் கமிந்து மெண்டிஸும் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதங்கள் குவித்த முதலாவது இலங்கை ஜோடி என்ற மற்றொரு சாதனையை நிலைநாட்டினர். அவர்களது சதங்களின் உதவியுடன் 2ஆவது இன்னிங்ஸில் இலங்கை 418 ஓட்டங்களைக் குவித்தது. டெஸ்ட் போட்டி ஒன்றில் 2 இன்னிங்ஸ்களிலும் சதங்கள் குவித்த மூன்றாவது ஜோடி கடந்த 50 வருடங்களில் டெஸ்ட் போட்டி ஒன்றில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதங்கள் குவித்த மூன்றாவது ஜோடி என்ற பெருமையை தனஞ்சய டி சில்வாவும் கமிந்து மெண்டிஸும் பெற்றுக்கொண்டனர். நியூஸிலாந்துக்கு எதிராக வெலிங்டனில் 1974இல் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலியாவின் செப்பெல் சகோதரர்களான இயன் (145, 121) மற்றும் க்றெக் (247, 133) ஆகியோரே முதன் முதலில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதங்கள் குவித்த முதலாவது ஜோடி என்ற சாதனையை நிலைநாட்டினர். 40 வருடங்கள் கழித்து அவுஸ்திரேலியாவுக்கு எதராக நடுநிலையான அபு தாபியில் 2014இல் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் பாகிஸ்தானின் அஸார் அலி (109, 100 ஆ.இ.), மிஸ்பா உல் ஹக் (101, 101 ஆ.இ.) ஆகிய இருவரும் சதங்கள் குவித்திருந்தனர். அவர்களைத் தொடர்ந்து அந்த சாதனைக்கான ஏடுகளில் இப்போது தனஞ்சய டி சில்வாவும், கமிந்து மெண்டிஸும் இணைந்துகொண்டுள்ளனர். இதில் ஒரு விசேடம் என்னவென்றால் இரண்டு வருடங்களுக்கு முன்னர் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டி மூலம் காலியில் டெஸ்ட் அரங்கில் அறிமுகமான கமிந்து மெண்டிஸ் அதன் பின்னர் இப்போதுதான் மீளழைக்கப்பட்டுள்ளார். தனது மீள்வருகையில் ஒரே போட்டியில் முதலிரண்டு சதங்களைக் குவித்தன் மூலம் கமிந்து மெண்டிஸ் பெரும் பாராட்டைப் பெற்றார். பங்களாதேஷ் 2ஆவது இன்னிங்ஸில் 182 ஓட்டங்களுக்கு சுருண்டு படுதோல்வி அடைந்தது. https://www.virakesari.lk/article/179677
  10. சிஐடியிலிருந்து வெளியேறினார் மைத்திரிபால சிறிசேன! Published By: DIGITAL DESK 3 25 MAR, 2024 | 04:36 PM வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்குச் சென்றிருந்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனது வாக்குமூலத்தை வழங்கிய பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால் சிறிசேன வெளியிடப்பட்ட சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் வாக்குமூலம் வழங்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விடுக்கப்பட்ட அழைப்பையடுத்து அவர் இன்று திங்கட்கிழமை (25) அங்கு சென்று வாக்குமூலம் வழங்கினார். https://www.virakesari.lk/article/179681
  11. பெண்கள் வேலைக்குச் செல்வதாலும் தாமதத் திருமணங்களாலும் கடந்த பத்தாண்டுகளாகக் கர்ப்பத்துக்குப் பின்னால் மட்டுமல்ல கர்ப்பம் தரிக்கும் முன்னும் செக்கப் செய்துகொள்வது என்பது வழக்கமாகி இருக்கிறது. கர்ப்பம் ஆகுமுன்னே வந்து மருத்துவரை அணுகி தங்களுக்கு உடல் கோளாறு ஏதும் இல்லை என செக்கப் செய்து கொள்வது தாய்க்கும் சேய்க்கும் நலம் பயக்கும். இதயத்தில் மர்மர் சத்தம்., தைராய்ட்., இரத்த அழுத்தம். , ஹீமோக்ளோபின்., ஃபைப்ராயிட் கட்டிகள் இருக்கா என எல்லாம் செக் செய்து கொள்ள வேண்டும். அதற்குத் தகுந்த மருந்துகள் எடுத்துக் கொள்ள வேண்டும். உடல்நலத்தில் கோளாறு இல்லாமலிருக்கிறதா, நீரிழிவு நோய் இருக்கிறதா மேலும் எல்லாத் தடுப்பு ஊசிகளும் ( ஜெர்மன் மீசில்ஸ்) போடப்பட்டிருக்கா என செக்கப் செய்து கொள்வது ப்ரி கன்சப்ஷன் செக்கப் எனப்படுகிறது PRE CONCEPTION CHECK UP ஐ PRE CONCEPTION CLINIC சென்று செய்து கொள்வது அவசியம். அதன் பின் கருத்தரிப்பது நல்லது. கர்ப்பம் தரிப்பது தாமதப்பட்டால் ஃபோலிக் ஆசிட் குறைபாடு இருந்தால் ஃபோலிக் ஆசிட் எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. அது குழந்தையின் நரம்பு மண்டல வளர்ச்சிக்கும் மூளை வளர்ச்சிக்கும் முக்கியமானது. ஃபோலிக் ஆசிட் குறைபாட்டால் கருச்சிதைவுகளும் ஏற்படலாம். கரு உருவான பின் ஓரிரு நாட்களிலேயே அதன் உயிரணுக்களின் எண்ணிக்கை விரைவாகவும் இரட்டிப்பு அடைந்தும் அதிகரிக்கும். ஐந்து நாட்களில் இந்த இளம்கருவளர் பருவம் ப்ளாஸ்டோசிஸ்ட் என அழைக்கப்படுகின்றது. இது மூன்று படலங்களைக் கொண்டிருக்கும். புறப்படலம் தோல், நரம்புத் தொகுதியையும், இடைப்படலம் தசை, எலும்புத் தொகுதியையும் அகப்படலம் ஜீரண மண்டலம், சுவாசத் தொகுதியையும் உருவாக்க வல்லவை. கரு எம்பிரியோ என்றும் அதன் தொப்புள் கொடி அம்பிளிகல் கார்ட் என்றும் அழைக்கப்படுகின்றது. கருப்பையில் தாயிடமிருந்து சேய்க்கு ஆக்ஸிஜனையும் உணவையும் வழங்குவதோடு கழிவுப் பொருட்களை அகற்றுவதும் இந்தத் தொப்புள்கொடியின் பங்கு. கருவைச் சுற்றி இருக்கும் திரவம் பனிக்குடம் எனப்படுகின்றது. தொடர் வளர்ச்சியில் கண், விரல்கள், வாய், காதுபோன்ற உடல் உறுப்புகள் 8 வாரங்களில் முழுமை பெற்றுவிடும். அப்போது இது முதிர்கரு (ஃபோயட்டஸ்) என்று அழைக்கப்படும். மூன்றாவது மாதத்தில்தான் கருவின் பால் உறுப்புக்கள் வெளித் தெரிய ஆரம்பிக்கும். கரு உருவாகி இருப்பதை மாதவிடாய் தள்ளிப் போவதன் மூலமும் பரிசோதனைகள் மூலமும் அறிந்து கொள்ளலாம். உடல் மென்மையாதல், மார்பகங்கள் தளர்தல் எனத் தாயின் உடற்கூறியியலும் மாற்றங்கள் ஏற்படும். குழந்தைப் பேறுக் காலங்களை 14 வாரங்கள் எனக் கணக்கில் கொண்டு மூன்று பதிநான்கு வாரங்களாக ( 42 வாரங்கள் ) முப்பருவங்களாகப் பிரிக்கின்றார்கள் மருத்துவர்கள். கரு உருவாகி முப்பருவத்தின் முதல் 14 வாரத்தில் எலுமிச்சை அளவில் கரு வளர்ந்து இருக்கும்போது தலைசுற்றல், வாந்தி, மசக்கை எனக் கருத்தரிப்பின் அறிகுறிகளும் சங்கடங்களும் அதிகமாக இருக்கும். அப்போது இரட்டைக் குழந்தையா., குழந்தையின் இதயத் துடிப்பு சரியா இருக்கா., கர்ப்பம் உள்ளே இருக்கா., அல்லது வெளியே இருக்கா ., குழந்தையின் உறுப்புக்களில் பிரச்சனை இருக்கா., தாய்க்கு ஃபைப்ராயிட் ., ஓவரி கட்டிகள் இருக்கான்னு ஸ்கேன் செய்து கொள்வது நல்லது. இன்னொரு ஸ்கான் 11 முதல் 13 வாரத்தில் செய்ய வேண்டும். டவுன் சிண்ட்ரோம் பேபியா., உறுப்புகள் சரியான வளர்ச்சி உள்ளதா ., என பார்க்க முடியும். அதற்கு அறிகுறிகள் இருந்தால் ப்ளட் டெஸ்ட் செய்து ஸ்கான் செய்வதால் தெரியவரும். முடிந்தவரை கர்ப்பகாலத்தில் எக்ஸ்ரேக்கள் எடுக்காமல் இருப்பது நல்லது. அதன் கதிர்கள் கர்ப்பத்தில் இருக்கும் சிசுவைப் பாதிக்கலாம். மேலும் காய்ச்சல், தலைவலி, சளி போன்றவற்றிற்குக் கூட டாக்டரிடம் ஆலோசனை பெற்றபின்பே மருந்துண்ண வேண்டும். பல் தொடர்பான பிரச்சனைகள், பல் எடுத்தல் போன்றவற்றை டாக்டரிடம் கேட்டுவிட்டே செய்யவேண்டும். முதல் மூன்று மாதங்களில் குழந்தை கொஞ்சம் கொஞ்சமாக வளர ஆரம்பிக்கும் போது ப்ளட் டெஸ்ட்., ஹீமோக்ளோபின்.( HAEMOGLOBIN) , ரத்த குரூப்.,(BLOOD GROUP) ஹெச் ஐ வி ( HIV) இருக்கா., ஹெப்பாட்டைட்டிஸ் பி ( HEPAPATITIES B) , இவை எல்லாம் செக் செய்து கொள்ள வேண்டும். இது கட்டாயம். இரண்டாவது முப்பருவத்தில் குழந்தையின் எடை லேசாக அதிகரிக்கத் தொடங்கும். கருப்பை எப்போதும் இருப்பதை விட 20 மடங்கு அதிகரிக்கும். கருப்பையில் குழந்தையின் அசைவு தெரிய ஆரம்பிக்கும். இரண்டாவது 3 மாதத்தில் இரும்புச்சத்து மாத்திரை., கால்சியம் மாத்திரை எடுத்துக் கொள்ள வேண்டும். 20 வாரத்தில் சிசுவுக்கு ஏதாவது பெரிய குறைபாடு இருக்கா., உறுப்பு வளர்ச்சி இருக்கா என்று ஸ்கான் மூலம் அறியலாம். டெட்டனஸ்., டிப்தீரியாவுக்கு இன்ஜெக்‌ஷன் 4 முதல் 6 வாரத்தில் ஒரு டோஸ் கொடுக்க வேண்டும் . இரண்டாவது டோஸ் ., 30 அல்லது 36 வாரத்தில் கொடுக்க வேண்டும். உணவு இரண்டாவது 3 மாதத்தில் கொஞ்சம் கொஞ்சமாக அடிக்கடி சாப்பிடலாம். இயற்கையாய் தயாரிக்கும் சத்துமாவுக் கஞ்சி எடு்த்துக் கொள்ளலாம். பருப்பு, பயறு போன்ற ப்ரோட்டீன் நிறைந்த ஆகாரம் முக்கியம். காய்கறி., கீரை., பயிறு வகைகள்., பழம் அதிகம் சேர்க்கலாம். முட்டை, பால், காரட், பழவகைகள் அனைத்தும் எடுத்துக்கலாம். அவ்வப்போது டையபடீஸுக்கும் ஹீமோக்ளோபினுக்கும் செக்கப் செய்து கொள்வது அவசியம். முப்பருவத்தின் மூன்றாவது பகுதியிலேயே குழந்தையின் எடை விரைவாக அதிகரிப்பதாலும் குழந்தையின் தலைப்பகுதி இடுப்பின் கீழ்நோக்கித் திரும்புவதாலும் தாயின் வயிறு மிகப்பெரிதாகக் காணப்படும். இந்த அழுத்தத்தினால் சிறுநீர்ப்பை அடிக்கடி நிரம்பியது போன்று உணர்வார்கள். உப்பு ஹீமோக்ளோபின்., சர்க்கரை., இரத்த அழுத்தம், எடை ஆகியவை அடிக்கடி சோதனை செய்து கொள்ளலாம். கர்ப்ப ஸ்த்ரி 10 லிருந்து 13 கிலோ எடை ஏறவேண்டும். முதலில் எடை ஏறாது மூன்றாம் மாதத்தில் இருந்து சுமாரா இரண்டு கிலோ எடை ஏறணும். கர்ப்பகாலத்தில் தாயின் உடல்நலமும் உள்ள நலமும் பேணிப்பாதுகாக்கப்படவேண்டும். நெஞ்செரிச்சல், அமிலச் சுரப்பு, வாயில் கசப்பு அல்லது புளிப்பு, தூக்கமின்மை, உட்கார்வதில், படுப்பதில் சிரமம், உணர்வுப்பூர்வமாக ஏற்படும் ஏற்ற இறக்கம், சிலசமயம் அரிப்பு, உடல் சூடாக உணர்தல், தலைமுடி தோலில் மாற்றம் போன்றவை நிகழும். குமட்டல் வாந்தி இருந்தால் இஞ்சி உபயோகிக்கலாம் எனக் கூறப்படுகின்றது. மேலும் சரியான இடைவெளிகளில் உணவு உண்ணுதலும், அமரும்போதும் படுக்கும் போதும் சரியான நிலையைப் பேணுதலும் அறிவுறுத்தப்படுகின்றது. மலச்சிக்கல், மூலநோய் போன்றவை இருந்தால் கீரை போன்ற நார்ப்பொருள் கொண்ட உணவுகளை அதிகமாக உண்ணும்படிப் பரிந்துரைக்கிறார்கள். குழந்தை எடை கூடுவதால் அதன் அழுத்தம் தாளாமல் காலில் ஏற்படும் வெரிகோஸ் வெயின் எனப்படும் சிரைகள் வீங்கி நீலநிறமாகக் காணப்பட்டால் காலில் பாண்டேஜ் போன்றவை பயன்படுத்தும்படிக் கூறுகிறார்கள். சிலருக்கு துர்நாற்றம், அரிப்பு, புண் இவற்றோடான யோனி வெளியேற்றமோ அல்லது மாதவிடாய் ரத்தப் போக்கோ ஏற்படலாம். பரிசோதனை செய்து தொற்று ஏதும் இல்லை என உறுதி செய்து கொண்டு அதற்குத் தக்க மருத்துவம் எடுத்துக் கொள்ள வேண்டும். முதுகுவலி, இடுப்பு செயல் பிறழ்ச்சி, இடுப்பெலும்பு, தொடை மற்றும் அடிவயிற்று வலி, நடப்பதில் சிரமம் போன்றவை ஏற்பட்டால் சரியான உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும். வெந்நீர்க் குளியல் மசாஜ் போன்றவை எடுத்துக் கொள்ள வேண்டும். காலில் வீக்கம் ஏற்பட்டால் உணவில் உப்பைக் குறைத்து உண்ணுதல் வேண்டும். பொதுவாகவே காரம், இனிப்பு, உப்பைக் குறைக்க வேண்டும். ஒன்பது மாதங்களில் பிரசவம் எளிதாகச் செய்யக்கூடிய உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, மூச்சுப் பயிற்சி, பிரணாயாமம் இவற்றைச் செய்யலாம். http://honeylaksh.blogspot.com/2024/03/15.html
  12. கட்டுரை தகவல் எழுதியவர், ரியாஸ் சோஹைல் பதவி, பிபிசி உருது, கராச்சி 24 மார்ச் 2024 புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் கஸ்பானோ பலூச்சின் வீடு குவாதர் துறைமுகத்தின் பழைய பகுதியில் உள்ளது. அது இப்போது மழையால் முற்றிலும் இடிந்ததுவிட்டது. இவருக்கு ஒரு மகள் உள்ளார். இவரது மருமகன் ஒரு தையல்காரரிடம் தினக்கூலியாக வேலை செய்து வருகிறார். மீன்பிடி துறைமுக சாலையில் உள்ள வீட்டில் வசித்து வந்தார் கஸ்பனோ. 16 மணி நேரம் தொடர்ந்து பெய்த மழையால் அப்பகுதி வெள்ளத்தில் மூழ்கியதாகவும், தண்ணீரின் அளவு மிகவும் அதிகமாக இருந்ததாகவும் கூறுகிறார். கஸ்பானோவின் கூற்றுப்படி, 2021ஆம் ஆண்டில் தாக்கிய புயலை விட இது மிகவும் மோசமானது. கனமழையால் தண்ணீர் வீட்டுக்குள் புகுந்தது. அதன்பிறகு, கஸ்பானோவின் வீடு, சமையலறை, சாலையின் குறுக்கே இருந்த ஒரு கடையும் இடிந்து விழுந்தது. தனது வீடு இடிந்து விழுந்ததால் வாடகை வீட்டில் வசித்து வருகிறார் கஸ்பானோ. குவாதர் துறைமுகம் மூழ்குவது ஏன்? இந்த கனமழை மிகவும் அசாதாரண ஒரு நிகழ்வு என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பிப்ரவரியின் பிற்பகுதியிலும் மார்ச் மாத தொடக்கத்திலும் ஒரே வாரத்தில் சுமார் 250 மிமீ மழை பெய்தது. முன்னதாக, குவாதர் மாவட்டத்தில் மார்ச் மாதத்தில் 38 மிமீ மழை பதிவானது. இயற்கை பேரழிவுகளைக் கையாள்வதற்கான மாநில அமைப்பான பிடிஎம்ஏ (PDMA- மாகாண பேரிடர் மேலாண்மை ஆணையம்) அறிக்கையின்படி, 450 வீடுகள் மழையால் முற்றாக இடிந்துள்ளன. அதேநேரத்தில் 8,200 வீடுகள் மற்றும் கட்டிடங்கள் பொருளாதார சேதத்தை சந்தித்துள்ளன. இந்த மழையால் குவாதர் நகரம் ஏரி போல காட்சியளிக்கிறது. இப்படி நடப்பது இது முதல் முறையல்ல. 2005 முதல் 2024 வரை, குவாதர் ஐந்து முறை நீரில் மூழ்கியுள்ளது. வெள்ளம் போன்ற சூழல், மழையால் மட்டும் ஏற்பட்டதா அல்லது குவாதரில் வேகமாக நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகள், திட்டங்களால் ஏற்பட்டுள்ளதா என்பது கேள்விக்குறியாக உள்ளது. இந்தக் கேள்விகளுக்கான விடைகளை அறிய பிபிசி முயற்சித்துள்ளது. சீனாவால் கட்டப்பட்ட துறைமுகம் குவாதர் நகரில் பெரும்பாலும் வசிப்பது மீனவ மக்களே. ஆனால், 2007இல் முன்னாள் ராணுவத் தலைவர் ஜெனரல் பர்வேஸ் முஷாரப் அங்கு துறைமுகத்தைத் திறந்து வைத்ததில் இருந்து, விஷயங்கள் வேகமாக மாறிவிட்டன. இந்த துறைமுகம் சீனாவால் கட்டப்பட்டது. சிபிஇசி (சீனா-பாகிஸ்தான் பொருளாதாரப் பாதை- CPEC) திட்டம் 2015இல் அறிவிக்கப்பட்ட போது, குவாதர், இந்த திட்டத்தின் மையப் புள்ளியாக மாறியது. ஆசிய வர்த்தகத்தில் தனது அதிகாரத்தை நிலைநிறுத்துவதற்கும், நீண்டநாள் போட்டியாளரான இந்தியாவிற்கு எதிரான தனது மேலாதிக்கத்தை நிலைநிறுத்துவதற்கும், மிகவும் தீவிரமாக பல பொருளாதார யுக்திகளை முன்னெடுத்து வருகிறது சீனா. அதன் முக்கியமான பகுதி தான் சிபிஇசி திட்டம். இந்த துறைமுகத்தின் உட்பகுதி மற்றொரு 'ஷென்சென்' என்று வர்ணிக்கப்பட்டது. சீனாவின் மூன்றாவது பெரிய நகரமாக தற்போது மாறியுள்ளது ஷென்சென். கோ-இ-படீல் (Koh-e-Batil) மலை அடிவாரத்தில் கட்டப்பட்ட இந்த துறைமுகம் உள்ளூர் மக்களுக்கு பல தடைகளை உருவாக்கியது மட்டுமல்லாமல், மழைநீர் செல்வதற்கான பாதையையும் அடைத்தது. கோ-இ-படீலுக்கும் துறைமுகத்துக்கும் இடையே அமைந்துள்ள கோத்ரி பஜார் என்ற அரசு உயர்நிலைப் பள்ளியை அடைந்த போது, பள்ளியின் உட்புறமும், தரையும் வெள்ளத்தில் மூழ்கியிருப்பதைக் காண முடிந்தது. பள்ளியின் முதல்வர் முகமது ஹசன், நனைந்த பதிவேடுகளை என்னிடம் காட்டி, எதிரே உள்ள கணினி ஆய்வகத்தைக் காட்டி சைகை செய்தார். அங்கு அனைத்து கணினிகளும் தண்ணீரில் மூழ்கியிருந்தன. முதல்வர் முகமது ஹசனின் கூற்றுப்படி, கனமழை பெய்தது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பு கனமழை பெய்தபோது தண்ணீர் கடலில் கலக்க வழி இருந்தது. சீன கட்டுமானங்களால் இயற்கை நீர்வழித் தடங்கள் அடைப்பு “முதலில் நிலத்திலிருந்து கடலுக்கு செல்லும் அமைப்பான ஜெட்டி கட்டப்பட்டது, பின்னர் துறைமுகம் கட்டப்பட்டது, அதன் பிறகு எக்ஸ்பிரஸ்வே கட்டப்பட்டது. இதனால் மக்கள் வசிக்கும் பகுதிக்குள் தண்ணீர் வரத் தொடங்கியது. முன்பு தண்ணீர் செல்வதற்கு ஒரு இயற்கை வாய்க்கால் இருந்தது, அதன் மூலம் தண்ணீர் கடலுக்குள் சென்றது.” என்கிறார் முகமது ஹசன். தொடர்ந்து பேசிய அவர், “சாலைகள் மூடப்பட்டன, ஆனால் மாற்று சாலைகள் அமைக்கப்படவில்லை. இப்போது, தண்ணீர் செல்ல ஒரு வழி தேவை இல்லையா? இதனால் மக்கள் வசிக்கும் பகுதிக்குள் தண்ணீர் சென்றதுடன், வீடுகளும் இடிந்து விழுந்தன” என்கிறார். குவாதர் துறைமுகத்தையும் மக்களையும் பிரிக்க ஒரு கான்கிரீட் சுவர் உள்ளது. மாலாபந்தின் ஒரு பகுதியில், மழை நீர் வெளியேறும் வகையில், ஒரு மூலையில் இருந்து சுவர் உடைக்கப்பட்டது. இப்படி நடப்பது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பும் சுவர்களை இடித்து மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குவாதர் மேம்பாட்டு ஆணையத்தின் தலைமைப் பொறியாளர் சையத் முகமது கூற்றின்படி, முன்பு துறைமுகப் பகுதியை நோக்கி நீர் ஓட்டம் இருந்தது. அப்போது அங்கு திறந்த வாய்க்கால் ஒன்று அமைக்கப்பட்டு, பின்னர் மூடப்பட்டது. அவர் கூறுகையில், “இந்த வாய்க்கால் ஏன் மூடப்பட்டது என்பது துறைமுகத்தை நிர்வகிப்பவர்களுக்கு மட்டுமே தெரியும். இதனால் தண்ணீர் அனைத்தும் ஊரின் மயானம் வழியாக சென்று மாலாபந்த் பகுதிக்கு வந்தது." என்கிறார். கடற்கரைக்கு முன்பாக மரைன் டிரைவ் எனப்படும் ஆறுவழிச் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலையானது அப்பகுதிக்கு அழகு சேர்த்தாலும், குடியிருப்பு பகுதிக்கும் கடலுக்கும் இடையே ஒரு அணையைப் போல உருவெடுத்துள்ளது. துறைமுகம் மற்றும் அதனுடன் தொடர்புடைய உள் கட்டமைப்புகளுக்கு குவாதரில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. 2018ஆம் ஆண்டில், துறைமுகத்தில் இருந்து சரக்குகளை ஏற்றிச் செல்ல ஆறு வழிகள் கொண்ட 19 கிமீ விரைவுச் சாலையை அரசாங்கம் அமைத்தது. இந்த சாலையால், நிலைமை மேலும் மோசமாகியது. இந்த அதிவேக நெடுஞ்சாலையின் மேற்பரப்பு, குடியிருப்பு பகுதியை விட உயரமாக இருக்கிறது. இதனால் இயற்கை வடிகால் கால்வாய்களும் அடைக்கப்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். முனிசிபல் கார்ப்பரேஷன் தலைவர் ஷெரீப் மியான்தத் கூறுகையில், “இது மெகா சிட்டி, துபாய் சிட்டி, சீபாக் சிட்டி என்று அழைக்கப்படுகிறது, ஆனால் முந்தைய குவாதர் இதை விட சிறப்பாக இருந்தது. மழை பெய்யும் போதெல்லாம், மழைநீர் கடலுக்குச் சென்றது. இங்கு வலப்புறமும் இடப்புறமும் இரண்டு வடிகால்கள் இருந்தன. இங்கிருந்து தண்ணீர் கடலில் கலக்கும் நிலை இருந்தது. இருபுறமும் மேம்பாடு என்ற பெயரில் சாலைகள் கட்டப்பட்ட போது பிளாஸ்டிக் ஷீட்களால் மூடப்பட்டன. கடல் நீர் உள்ளே வராமல் இருக்க இது செய்யப்பட்டது, இதனால் மழைநீர் அங்கு செல்லவில்லை” என்றார். மோசமான நிலையில் கழிவு மேலாண்மை திட்டங்கள் முராத் பலோச் ஒரு மீனவர். 2010 மழையில், அவரது வீட்டின் மூன்று அறைகள் இடிந்து விழுந்தன. சமீபத்தில் பெய்த மழையால், இவரது வீட்டின் இரண்டு அறைகள், கழிப்பறை, சமையலறை ஆகியவற்றில் இரண்டாவது முறையாக விரிசல் விழுந்தது. நாங்கள் அவரைச் சந்தித்தபோது, ஜெனரேட்டர் மூலம் வீட்டில் இருந்து தண்ணீரை வெளியேற்றிக் கொண்டிருந்தார். “முதலில் வாளிகள் மூலம் தண்ணீரை எடுக்க முயற்சித்தேன், ஆனால் முடியவில்லை. உள்ளூர் கார்ப்பரேட்டரிடம் சென்று ஜெனரேட்டர் வேண்டும் என்று கேட்டபோது பெட்ரோல் இல்லை என்று கூறிவிட்டார்” என்கிறார் முராத் பலோச். பெட்ரோலை தானே வாங்கிய முராத் பலோச், நண்பர்கள் மற்றும் பக்கத்து வீட்டுக்காரர்களிடமிருந்து குழாய்களை சேகரித்து, தண்ணீரை வெளியேற்ற ஒரு நீண்ட குழாய் உருவாக்கினார். தனது பகுதியில் வடிகால் அமைப்பு சரியில்லாததால் இந்த முயற்சிகள் அனைத்தையும் அவர் செய்ய வேண்டியிருந்தது. கடந்த 15 ஆண்டுகளில் ஒவ்வொரு முறையும் மழை பெய்த போது, தண்ணீர் வெளியேற்றுவதற்காக குழி தோண்டப்பட்டது. இன்னொரு முறை குழாய் மூலம் தண்ணீரை வெளியேற்றுவது. குவாதர் மேம்பாட்டு ஆணையமும் இதே முறையைத் தான் பின்பற்றுகிறது. இதையெல்லாம் செய்வதால் சாலைகள் மீண்டும் சேதமடைந்துள்ளன. 2004இல் குவாதர் மேம்பாட்டு ஆணையம் (ஜிடிஏ) நிறுவப்பட்டபோது நகரத்திற்கான ஒரு மாஸ்டர் பிளான் தயாரிக்கப்பட்டது. இந்த மாஸ்டர் பிளானில், நகர்ப்புற உள்கட்டமைப்புக்கு 25 ஆயிரம் கோடி ரூபாய் வழங்குவதாக அந்நாட்டு மத்திய அரசு அறிவித்தது. ஜிடிஏ அதிகாரிகள் கூறுகையில், 20 ஆண்டுகளுக்குப் பிறகும், பாதி தொகை மட்டுமே வசூலிக்கப்பட்டுள்ளது. இதில் நகர சாக்கடைக்கான பணம் இன்னும் சேர்க்கப்படவில்லை. பலுசிஸ்தானில், மாலிக் பலூச்சின் அரசு பதவிக்கு வந்த பிறகு, குவாதர் வடிகால் அமைப்பிற்கு மாநில அரசு ரூபாய் 1.35 கோடி ஒதுக்கீடு செய்தது. அதில் பாதி தொகை மட்டுமே செலவிடப்பட்டு முதல் கட்ட பணிகள் முடிவடைந்துள்ளன. ஜிடிஏ தலைமை பொறியாளர் சையத் முகமது கருத்துப்படி, இதுவரை 8.5 கிமீ மற்றும் 16 கிமீ வடிகால்களை அமைத்துள்ளனர். ஓல்ட் டவுன் பகுதியின் 15 முதல் 16 சதவீதம் வரையிலான நிலப்பரப்பை இது உள்ளடக்குகிறது. இந்தக் கட்டுமானத்தில், தண்ணீர் தேங்கும் பகுதிகளுக்கு தாம் முன்னுரிமை அளித்ததாகவும். எங்கெல்லாம் பணிகள் மேற்கொள்ளப்பட்டதோ, அங்கு தண்ணீர் வெளியேறிவிட்டது என்கிறார் சையத் முகமது. கடல் மற்றும் நிலத்தடி நீர் மட்டம் உயர்வு அல்ஹதாத் பலூச்சின் வீடும், தெருவும் வெள்ளத்தில் மூழ்கின. அவர்கள் வீட்டிலிருந்து தண்ணீரை வெளியேற்றினார்கள், ஆனால் காலையில் மீண்டும் அப்பகுதி வெள்ளத்தில் மூழ்கியது. நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இதனால் ஒருபுறம் கழிவுநீர் செல்ல வழியில்லாமல், மறுபுறம் கடல் அரிப்பு ஏற்பட்டு, தண்ணீர் முன்னோக்கி சென்றுள்ளது. கடல் மட்டம் உயர்ந்து வருவதாக புவியியலாளர் பஜிர் பலோச் எச்சரிக்கிறார். அவர் பேசுகையில், ''கழிவுநீர் அமைப்பு பல இடங்களில் இல்லை. கழிவுநீர் அமைப்பு உள்ள இடங்களில், அது சரிவர இயங்குவதில்லை. மீண்டும் தண்ணீர் ஊருக்குள் வருகிறது. மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப, கட்டுமான பணிகளும் அதிகரித்துள்ளன. இதனால், தண்ணீர் செல்லும் இயற்கை பாதை மாறியுள்ளது. ஓவர் பம்பிங் ஏற்படும் போது, கடல் நீர் தானாகவே முன்னோக்கி நகர்கிறது. அதனால் ஏற்படும் மாற்றங்களால், நிலம் கொஞ்சம் கொஞ்சமாக மூழ்கி வருகிறது” என்றார். குவாதர் மேம்பாட்டு ஆணையத்தின் தலைமைப் பொறியாளர் சையத் முகமது கூறுகையில், “நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. நகரின் பழைய பகுதிகளில் ஒன்றரை அடிக்கு மேல் கடல் நீர் வருகிறது. பல இடங்களில் இரவோடு இரவாக தண்ணீரை வெளியேற்றி கால்வாய்கள் கட்டியுள்ளனர். வீட்டுக்கு அஸ்திவாரம் போட்டாலும், அதற்கு நிலத்தடி நீரை எடுக்க வேண்டும். மக்கள் தொகை அதிகரித்தால், நிலத்தின் மீதான சுமை அதிகரிக்கும். முன்பு மண் வீடுகள் இருந்தன, இப்போது மக்கள் கான்கிரீட் வீடுகளைக் கட்டுகிறார்கள்” என்கிறார். குவாதர் துறைமுகம், துறைமுக ஆணையத்தால் நிர்வகிக்கப்படுகிறது. நகரத்தின் மற்ற பகுதிகள் குவாதர் மேம்பாட்டு ஆணையத்தால் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த இரண்டுக்கும் இடையில் மற்றொரு அமைப்பு உள்ளது, முனிசிபல் கமிட்டி- குவாதர். இது உள்ளூர் மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட அமைப்பாகும். ஒரு மெகா நகரத்திற்கான திட்டமிடல் இங்கு உள்ளது, ஆனால் உள்ளூர் அமைப்பு கிராமப்புற அமைப்பாக உள்ளது. தேவையான ஆதாரங்களோ அல்லது வடிகால் அமைப்புகளோ அங்கு இல்லை. குவாதரில் குடிநீர் தட்டுப்பாடு உள்ளது. இந்த தண்ணீர் எங்கிருந்து கொண்டு வரப்படும் என்பதுதான் இங்கு முதல் கேள்வி. அதே நேரத்தில் கழிவு நீர் எங்கே போகும் என்ற கேள்வியும் உள்ளது. ஏனெனில் சர்வதேச விமான நிலையம், புதிய குடியிருப்பு திட்டங்கள் மற்றும் தொழிற்சாலைகள் இந்த மண்டலத்தில் அமைக்கப்பட்டால், அதிகளவு தண்ணீரை வெளியேற்ற வேண்டிய நிலை உண்டாகும். https://www.bbc.com/tamil/articles/c72dlpxn50lo
  13. Published By: DIGITAL DESK 3 25 MAR, 2024 | 03:54 PM நாட்டின் பிள்ளைகளுக்கு சிறந்த கல்வியை வழங்குவதற்காக அவர்களுக்கு பாடம் தொடர்பான அறிவை வழங்கி பரீட்சைகளுக்கு தயார்படுத்துவதைப் போன்றே அவர்களின் போசாக்கும் பாதுகாக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார். அத்துடன் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட நவீன தொழிநுட்ப அறிவை பிள்ளைகளுக்கு வழங்க வேண்டும் என்று தெரிவித்த ஜனாதிபதி, அதற்கமைவாக பாடசாலை கல்வி மற்றும் பரீட்சை முறைகளில் மாற்றம் ஏற்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டார். நாரஹேன்பிட்டி சுஜாதா மகளிர் கல்லூரியில் இன்று (25) முற்பகல் இடம்பெற்ற “2024 பாடசாலை உணவுத் திட்டம்” ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார். நாட்டிலுள்ள தரம் 1-5 வரை உள்ள அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் பாடசாலையில் போசாக்கு உணவு வழங்குவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. போசாக்கு நிபுணர்களின் பரிந்துரைகளை கருத்திற்கொண்டு மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு முன்னர் காலை 7.30 மணிக்கும் 8.30 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் இந்தக் காலை உணவை வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். "ஆரோக்கியமான சுறுசுறுப்பான தலைமுறை" என்ற கருப்பொருளின் கீழ், 2024 ஆம் ஆண்டிற்கான பாடசாலை உணவுத் திட்டம், பாடசாலை மாணவர்களிடையே போசாக்குப் பிரச்சினைகளைக் குறைத்தல், மாணவர்களின் தினசரி பாடசாலை வருகையை அதிகரித்தல், நல்ல உணவுப் பழக்கம் மற்றும் சுகாதாரப் பழக்கங்களை மேம்படுத்துதல், கல்வி மேம்பாட்டு மட்டத்தை நோக்கமாகக் கொண்டுள்ளதுடன் இது உள்நாட்டு உணவு கலாசாரத்தை கட்டியெழுப்புவதற்கான அடிப்படை நோக்கங்களை நிறைவேற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. 9134 அரச பாடாசலைகளிலும், 100க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட அனைத்துப் பாடசாலைகளிலும் ஆரம்ப வகுப்புகளில் உள்ள அனைத்து மாணவர்களையும் உள்ளடக்கிய இந்த வருட பாடசாலை உணவு வழங்கல் திட்டத்தின் மூலம் 1.6 மில்லியன் மாணவர்கள் பயனடைந்துள்ளனர். இதற்காக ஒன்பது மாகாண சபைகளுக்கு அரசாங்கம் நேரடியாக 16,600 மில்லியன் ரூபா நிதியை ஒதுக்கியுள்ளதுடன், உலக உணவுத் திட்டம் மற்றும் அமெரிக்காவின் விவசாயத் திணைக்களம் (USDA) உட்பட ஏனைய அமைப்புகளும் அனுசரணை வழங்குகின்றன. இந்த போசாக்குத் திட்டத்திற்கு தேவையான உணவு வகைகள், முக்கிய உள்நாட்டு விநியோகஸ்தர்களிடமிருந்து பெறப்படுவதுடன், நேரடி மற்றும் மறைமுகமான புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுவதன் ஊடாக நாட்டின் உற்பத்தி பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கான பங்களிப்பாகவும் உள்ளது. இந்தப் பாடசாலை உணவுத் திட்டம் தொடர்பான அனைத்து நிதி நிர்வாகங்களையும் வெளிப்படைத்தன்மையுடனும் அறிக்கைகளுடனும் முன்னெனெடுப்பதற்கான பொறிமுறையும் நடைமுறையில் உள்ளது. கொள்கை வகுக்கப்பட்டது முதல் அதன் அனைத்து முக்கிய நிர்வாக மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை கல்வி அமைச்சின் சுகாதாரம் மற்றும் போசாக்கு பிரிவு மேற்கொள்கின்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டமைக்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அதிபர் திருமதி பிரியங்கிகா விஜேசிங்க நினைவுப் பரிசையும் வழங்கினார். இந்நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்ததாவது, பாடசாலை உணவுத் திட்டம் இன்று ஆரம்பிக்கப்படுகிறது. அரசாங்கத்தின் எதிர்பார்ப்புகளில் ஒன்றை நிறைவேற்றுவதற்கான வாய்ப்பாக இந்த சந்தர்ப்பத்தை நான் பார்க்கிறேன். கல்விச் செயற்பாடு பூரணமடைவதற்கு, மாணவர்களுக்கு பாட அறிவை வழங்கி, பரீட்சைக்குத் தயார் படுத்துவதைப் போன்றே அவர்களின் போசாக்கையும் பாதுகாக்க வேண்டும். உலகில் பல நாடுகள் இந்த பாடசாலை உணவு திட்டத்தை செயல்படுத்தி வருகின்றன. நமது நாட்டில் போசாக்குக் குறைபாடு பாரிய பிரச்சினையாக மாறியுள்ளது. 'அஸ்வெசும' திட்டத்தின் மூலம் குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு வழங்கப்படும் நிதி நிவாரணத்தை மூன்று மடங்காக உயர்த்தியுள்ளோம். பாடசாலை மாணவர்களிடையே போசாக்குக் குறைபாடு அதிகரிப்பதற்கு வருமான அளவு மட்டும் காரணம் அல்ல. சில மாணவர்கள் பாடசாலைக்குச் செல்வதற்காக காலை 6.00 மணியளவில் வீட்டை விட்டு வெளியில் வருகிறார்கள். இதனால் அவர்களுக்கு காலை உணவு சாப்பிட முடிவதில்லை. மேலும் பகலுணவையும் சாப்பிட முடிவதில்லை. எனவே எந்த அந்தஸ்த்தை கொண்டிருந்தாலும்,எந்த இனத்தை அல்லது மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும் சகல மாணவர்களும் இந்த சிக்கலை எதிர்கொள்கின்றனர். எனவே, மாணவர்களுக்கு பாடசாலையில் உணவு கிடைப்பதற்கு சந்தர்ப்பம் வழங்குவது மிகவும் அவசியம். தற்போது நாட்டில் நவீன கல்வி முறையை உருவாக்குவதற்கு நாங்கள் முயற்சி செய்து வருகிறோம். 2024 ஆம் ஆண்டுக்கு மாத்திரமன்றி 2030 ஆம் ஆண்டுக்கும் உகந்த கல்வி முறையை உருவாக்க வேண்டும்.அந்தப் பணிகளை இப்போது செய்து வருகிறோம். ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தல், நவீன தொழில்நுட்ப அறிவை வழங்குதல் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. மேலும், ஒவ்வொரு பாடசாலையிலும் செயற்கை நுண்ணறிவு திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம். முதலில் பாடசாலைகளில் AI சங்கங்கள் தொடங்கப்பட வேண்டும். மேலும், தேசிய AI மையம் சட்டப்படி நிறுவப்பட உள்ளது.இந்த ஆராய்ச்சி மற்றும் கல்வி நடவடிக்கைகளுக்காக அரசாங்கம் ஆயிரம் மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது என்பதைக் கூற வேண்டும். அதன்படி, அடுத்த சில ஆண்டுகளில், செயற்கை நுண்ணறிவுத் திட்டத்தை ஆரம்பப் பாடசாலைகள் மட்டுமின்றி, உயர்கல்வி கற்பிக்கப்படும் அனைத்துப் பாடசாலைகளிலும் அறிமுகப்படுத்த உள்ளது. நவீன தொழில்நுட்பத்துடன் நாம் முன்னேற வேண்டும். அந்த தொழில்நுட்ப அறிவை பிள்ளைகளுக்கு கொடுக்க வேண்டும். அதன்படி, பாடசாலைக் கல்வி மற்றும் பரீட்சை முறையை மாற்றியமைப்பது குறித்து கவனம் செலுத்தியுள்ளோம். இந்த நவீன தொழில்நுட்ப அறிவோடு பிள்ளைகளின் ஆங்கில மொழி அறிவையும் வளர்க்க வேண்டும். அதற்கான திட்டங்களையும் வகுத்துள்ளோம் என்றும் ஜனாதிபதி இங்கு தெரிவித்தார். கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேம்ஜயந்த், பின்தங்கிய பிரதேசங்களில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு இந்த உணவுத் திட்டம் முன்பு செயல்படுத்தப்பட்டது.ஆனால் இந்த ஆண்டு முதல் முதலாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு போசாக்குள்ள உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்படும். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிதியமைச்சராக 16,600 மில்லியன் ரூபாவை இதற்காக ஒதுக்கியுள்ளார்.மேலும், ஐக்கிய நாடுகளின் உணவுத் திட்டம் மூலமாகவும் உதவி பெறப்படுகிறது.அதன்படி, 17 இலட்சம் ஆரம்ப வகுப்பு மாணவர்களுக்கும் காலையில் போசாக்குள்ள உணவு வழங்குவது சாத்தியமாகியுள்ளது. பரிந்துரைக்கப்பட்ட தரத்தில் போசாக்குள்ள உணவு வழங்க சம்பந்தப்பட்ட துறைகளுக்கு ஏற்கனவே அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. கல்விகற்பிப்பதற்கு முன்னர் அனைத்து மாணவர்களின் வயிற்றையும் நிரப்புவதன் மூலம், சிறப்பாக கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான வாய்ப்பைப் பெறுகிறார்கள், இது மாணவர்களின் மன நிலையை சீர்செய்யவும் உதவுகிறது. கடந்த மாதம் பாடசாலை மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டன. மேலும் சீருடைகள் சரியான நேரத்தில் வழங்கப்பட்டன. இன்று முதல் போசாக்குள்ள உணவு வழங்கப்படும்.ஆனால் இதற்கு ஊடகங்கள் மூலம் கிடைத்த பிரசாரம் மிகவும் குறைவு.பத்திரிகைகளில் போசாக்கு குறைபாடு பற்றிய செய்திகளை பெரிய எழுத்தில் வெளியிடும் ஊடக நிறுவனங்களும் இந்த போசாக்குள்ள உணவு வழங்கல் திட்டம் தொடர்பில் மக்களுக்கு தெரிவிக்கும் என நம்புகிறேன். கல்வி அமைச்சின் செயலாளர் திருமதி வசந்தா பெரேரா, கல்வித்துறையில் மாற்றத்தை ஏற்படுத்தும் ஜனாதிபதியின் வேலைத்திட்டத்தின் நீட்சியாக மாணவர்களின் போசாக்கை அதிகரிக்கும் வகையில் இன்று முதல் உணவுத்திட்டம் அமுல்படுத்தப்படுகிறது.கல்வி அமைச்சு என்ற வகையில், புதிய கல்விச் சீர்திருத்தங்கள் மூலம் எதிர்காலத்துக்கு ஏற்ற மாணவர் சமூகத்தை உருவாக்க நாங்கள் பணியாற்றி வருகிறோம்.நவீன உலகிற்கு ஏற்ற கல்வி முறையுடன் கூடிய அறிவாற்றல் மிக்க சமுதாயத்தை உருவாக்குவதே இதன் நோக்கமாகும் என்று தெரிவித்தார். மேல்மாகாண ஆளுநர் மார்ஷல் ஆஃப் த எயார் போர்ஸ் ரொஷான் குணதிலக்க, இராஜாங்க அமைச்சர்களான விஜித பேருகொட, அரவிந்த குமார் மற்றும் கல்வி அமைச்சின் அதிகாரிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/179675
  14. Published By: DIGITAL DESK 3 25 MAR, 2024 | 04:08 PM அநுராதபுர வரலாற்று சிறப்பு மிக்க ஜயஸ்ரீ மஹாபோதி விகாரையில் கடமையில் ஈடுபட்டுள்ள பொலிஸாருக்கு புதிய சீருடை இன்று திங்கட்கிழமை (25) அறிமுகப்படுத்தப்பட்டது. நேற்று ஞாயிற்றுக்கிழமை (24) காலை புதிய சீருடையில் கடமைகளை பொறுப்பேற்ற அதிகாரிகள் மகாசங்கத்தினரின் ஆசிகளை பெற்றுக்கொண்டனர். அடமஸ்தானதிபதி கலாநிதி அதி வணக்கத்துக்குரிய பல்லேகம ஹேமரத்தன தேரரினால் தர்மோபதேச பிரித் ஓதப்பட்டது. பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் மற்றும் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் ஆகியோரிடம் அடமஸ்தானதிபதி கலாநிதி அதி வணக்கத்துக்குரிய பல்லேகம ஹேமரத்தன தேரர் விடுத்த வேண்டு கோளுக்கு இணங்க புதிய சீருடை அறிமுகப்படுத்தப்பட்டது. உடமலுவ பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி டபிள்யூ.சி.எல்.ஆர்.கே.பி. வெத்தேவ உட்பட பல உயர் பொலிஸ் அதிகாரிகள் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/179666
  15. 25 MAR, 2024 | 05:16 PM இலங்கையில் இளநீர் ஏற்றுமதி மூலம், 2024 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் ஈட்டப்பட்ட மொத்த வருமானம் சுமார் 3,439 மில்லியன் ரூபா என தென்னை அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்நிலையில், இலங்கையின் இளநீர் ஏற்றுமதி மூலம், கடந்த 2023 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் ஈட்டப்பட்ட மொத்த வருமானம் 2,705 மில்லியன் ரூபாவாகும். கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது இந்த வருடத்தின் முதல் இரண்டு மாதங்களில், ஈட்டப்பட்ட வருமானம் 734 மில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளதாக தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ரொஷான் பெரேரா தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179685
  16. Moscow Attack: 137 பேர் உயிரை குடித்த தாக்குதலை நடத்தியது யார்? ரஷ்யா எடுத்த நடவடிக்கை என்ன?
  17. ரஸ்யாவின் இரண்டு கப்பல்களை அழித்ததாக உக்ரைன் தெரிவிப்பு - பிரிட்டன் வரவேற்பு 25 MAR, 2024 | 03:00 PM கிரிமியாவில் ரஸ்யாவின் இரண்டு தரையிறங்கு கலங்கள்மீது தாக்குதலைமேற்கொண்டுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. கிரிமியாவில் ரஸ்யாவின் கருங்கடல் படையணி பயன்படுத்தும் இரண்டு தரையிறங்கு கப்பல்கள்மற்றும் தொலைத்தொடர்புநிலையம் ஆகியவற்றின் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ள உக்ரைன் யமல் அசோவ் என்ற இரண்டு கப்பல்களை அழித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதல்களை வரவேற்றுள்ள பிரிட்டனின் பாதுகாப்பு அமைச்சர் கிரான்ட் சாப்ஸ் உக்ரைனின் யுத்தத்தில் இது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்;ந்த தருணம் என தெரிவித்துள்ளார். 1783 முதல் கருங்கடலில் ரஸ்ய கடற்படை காணப்படுகின்ற போதிலும் புட்டின் எதிர்காலத்தில் கருங்கடலில் சுதந்திரமாக உடற்பயிற்சியில் ஈடுபடமுடியாது என்பதே இந்த தாக்குதலின் செய்தி எனவும்அவர் தெரிவித்துள்ளார். உலகம் உக்ரைன் யுத்தத்தில் தோல்வியடைய முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/179667
  18. காசாவில் மேலும் இரண்டு மருத்துவமனைகளை இஸ்ரேலிய படையினர் சுற்றிவளைப்பு; டாங்கி தாக்குதல் - செம்பிறை சங்கம் 25 MAR, 2024 | 01:39 PM இஸ்ரேலிய படையினர் மேலும் இரண்டு மருத்துவமனைகளைமுற்றுகையிட்டுள்ளனர் என தெரிவித்துள்ள சர்வதேச செம்பிறை குழு கடும் துப்பாக்கி பிரயோகம் இடம்பெறுவதாக தெரிவித்துள்ளது. எங்கள் குழுக்கள் கடும் ஆபத்தில் சிக்குண்டுள்ளன முற்றாக செயல்இழந்துள்ளன என செம்பிறை சங்கம் ரொய்ட்டருக்கு தெரிவித்துள்ளது. கான் யூனிசில் நாசெர் அல்அமால் மருத்துவமனைகள் அமைந்துள்ள பகுதிக்குள் இஸ்ரேலிய படையினர் திடீரென டாங்கிகளுடன் உள்நுழைந்து தாக்குதலை மேற்கொண்டதில் தங்களின் பணியாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என செம்பிறை சங்கம் தெரிவித்துள்ளது. கடும் மோதல்கள் இடம்பெறுகின்றன பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் பல உடல்களை காணமுடிந்துள்ளது என தப்பியோடிய பாலஸ்தீனியர்கள் சர்வதேச ஊடகங்களிற்கு தெரிவித்துள்ளனர். டாங்கிகள் அவ்வப்போது எறிகணை வீச்சில் ஈடுபடும் என மருத்துவமனையிலிருந்து 100 மீற்றர் தொலைவில் உள்ள ஐந்துமாடிக்கட்டிடத்தில் வசிக்கும் ஒருவர் சர்வதேச செய்திச்சேவைக்கு தெரிவித்துள்ளார் எங்களை அச்சுறுத்தவே இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/179644
  19. பங்களாதேஷை 328 ஓட்டங்களால் வென்ற இலங்கை, முதலாவது ஐ.சி.சி. டெஸ்ட் சம்பியன்ஷிப் புள்ளிகளையும் பெற்றது 25 MAR, 2024 | 02:37 PM (நெவில் அன்தனி) பங்களாதேஷுக்கு எதிராக சில்ஹெட் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 328 ஓட்டங்களால் இலங்கை அமோக வெற்றியீட்டியது. இதன் மூலம் ஐ.சி.சி. டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் இலங்கை முதலாவது வெற்றிப் புள்ளிகளைப் (12) பெற்றுக்கொண்டது. ஓட்டங்கள் ரீதியாக இலங்கை ஈட்டிய இரண்டாவது மிகப் பெரிய வெற்றி இதுவாகும். இதற்கு முன்னர் பங்களாதேஷுக்கு எதிராகவே மிகப் பெரிய வெற்றியை இலங்கை ஈட்டியிருந்தது. சட்டோக்ரோமில் 2009இல் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 465 ஓட்டங்களால் பங்களாதேஷை இலங்கை வெற்றிகொண்டிருந்தது. அணித் தலைவர் தனஞ்சய டி சில்வா, கமிந்து மெண்டிஸ் ஆகிய இருவரும் 2 இன்னிங்ஸ்களிலும் குவித்த சாதனைமிகு சதங்கள், கசுன் ராஜித்தவின் 8 விக்கெட் குவியல், விஷ்வா பெர்னாண்டோ, லஹிரு குமார ஆகியோரின் மிகத் துல்லியமான பந்துவீச்சுகள் என்பன இலங்கையை இலகுவாக வெற்றி அடையச் செய்தது. இந்த டெஸ்ட் போட்டியில் இலங்கையின் வேகப் பந்துவீச்சாளர்கள் மூவரும் பங்களாதேஷின் 20 விக்கெட்களையும் கைப்பற்றியமை விசேட அம்சமாகும். நினைத்துப் பார்க்க முடியாததும் கடினமானதுமான 511 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் 4ஆம் நாளான இன்று திங்கட்கிழமை (25) மதிய போசன இடைவேளைக்கு சற்று பின்னர் சகல விக்கெட்களையும் இழந்து 182 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. போட்டியின் மூன்றாம் நாள் பிற்பகல் தனது 2ஆவது இன்னிங்ஸை ஆரம்பித்த பங்களாதேஷ், இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்வதில் சிரமத்தை எதிர்கொண்டு அடுத்தடுத்து விக்கெட்களை தாரைவார்த்தது. மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட்களை இழந்து 47 ஓட்டங்களைப் பெற்று மிக மோசமான நிலையிலிருந்த பங்களாதேஷ், நான்காம் நாளான இன்று காலை ஆட்டத்தைத் தொடர்ந்தது. மொமினுள் ஹக் 7 ஓட்டங்களுடனும் தய்ஜுல் இஸ்லாம் 6 ஓட்டங்களுடனும் தங்களது துடுப்பாட்டத்தை தொடர்ந்தனர். தய்ஜுல் இஸ்லாம் அதே எண்ணிக்கையில் ஆட்டம் இழந்தார். (51 - 6 விக்.) அதனைத் தொடர்ந்து மொமினுள் ஹக், மெஹிதி ஹசன் மிராஸ் ஆகிய இருவரும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி 7 ஆவது விக்கெட்டில் 66 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது மிராஸ் 33 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். தொடர்ந்து மொமினுள் ஹக், ஷொரிபுல் இஸ்லாம் ஆகிய இருவரும் 8ஆவது விக்கெட்டில் 47 ஓட்டங்களைப் பகிர்ந்து இலங்கையின் வெற்றியை சற்று தாமதித்தனர். ஆனால், ஷொரிபுல் இஸ்லாம் (12) உட்பட கடைசி 3 விக்கெட்கள் 18 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சரிய இலங்கையின் வெற்றி உறுதியாயிற்று. மொமினுள் ஹக் மிகவும் பொறுமையுடன் துடுப்பெடுத்தாடி 148 பந்துகளை எதிர்கொண்டு 12 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் உட்பட 87 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். எண்ணிக்கை சுருக்கம் இலங்கை 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 280 (தனஞ்சய டி சில்வா 102, கமிந்து மெண்டிஸ் 102, காலித் அஹ்மத் 72 - 3 விக்., நஹித் ரானா 87 - 3 விக்.) பங்களாதேஷ் 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 188 (தய்ஜுல் இஸ்லாம் 47, லிட்டன் தாஸ் 25, காலித் அஹ்மத் 22, விஷ்வா பெர்னாண்டோ 48 - 4 விக்., லஹிரு குமார 31 - 3 விக்., கசுன் ராஜித்த 56 - 3 விக்.) இலங்கை 2ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 418 (கமிந்து மெண்டிஸ் 164, தனஞ்சய டி சில்வா 108, திமுத் கருணாரட்ன 52, ப்ரபாத் ஜயசூரிய 25, ஏஞ்சலோ மெத்யூஸ் 22, மெஹிதி ஹசன் மிராஸ் 74 - 4 விக்., தய்ஜுல் இஸ்லாம் 75 - 2 விக்., நஹித் ரானா 128 - 2 விக்.) பங்களாதேஷ் 2ஆவது இன்: (வெற்றி இலக்கு 511 ஓட்டங்கள்) சகலரும் ஆட்டம் இழந்து 182 (மொமினுள் ஹக் 87 ஆ.இ., மெஹிதி ஹசன் மிராஸ் 33, ஸக்கிர் ஹசன் 19, ஷொரிபுல் இஸ்லாம் 12, கசுன் ராஜித்த 56 - 5 விக்., விஷ்வா பெர்னாண்டோ 36 - 3 விக்., லஹிரு குமார 39 - 2 விக்.) ஆட்டநாயகன்: தனஞ்சய டி சில்வா https://www.virakesari.lk/article/179662
  20. படக்குறிப்பு, மியா(MIA) எனப்படும் கருவியால் மருத்துவர்கள் தவறவிட்ட கட்டிகளைக் கண்டறிய முடிந்தது. கட்டுரை தகவல் எழுதியவர், ஜோ க்ளீன்மேன் பதவி, பிபிசி உலக சேவை ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பிரிட்டிஷ் மருத்துவமனைகளில் பரிசோதிக்கப்பட்ட ஒரு செயற்கை நுண்ணறிவு (AI) கருவி, மருத்துவர்களால் கவனிக்கப்படாமல் போன 11 பெண்களில் மார்பக புற்றுநோயின் சிறிய அறிகுறிகளை அடையாளம் கண்டுள்ளது. மியா(MIA) என்று அழைக்கப்படும் இந்தக் கருவி, பிரிட்டனில் உள்ள பல சுகாதார மையங்களில் சோதிக்கப்பட்டது. இந்த கருவி கிட்டத்தட்ட 10,000 மேமோகிராம்களை பகுப்பாய்வு செய்தது. அவற்றில் பெரும்பாலானவை புற்றுநோயின் அறிகுறிகளைக் காட்டவில்லை. ஆனால் மருத்துவர்களால் கண்டறியப்படாத 11 நோயாளிகளை அந்தக் கருவியால் வெற்றிகரமாக அடையாளம் காண முடிந்ததுள்ளது. ஆரம்ப கட்டங்களில், புற்றுநோய்கள் மிகவும் சிறியதாகவும், அடையாளம் காண்பது கடினமாகவும் இருக்கும். மனிதக் கண்ணுக்கு தெரியாத அத்தகைய கட்டிகளை, செயற்கை தொழில்நுட்பக் கருவியால் சுட்டிக் காட்ட முடிந்தது. அந்த கட்டிகள், அவற்றின் கலவையைப் பொறுத்து, மிக விரைவாக வளர்ந்து பரவுகின்றன. கருவி மூலம் புற்றுநோய் கண்டறியப்பட்ட 11 நோயாளிகளில் பார்பராவும் ஒருவர், ஆனால் அவரது படங்களை ஆய்வு செய்த மருத்துவர்களால் அந்த கட்டியை கண்டறிய முடியவில்லை. வெறும் 6 மிமீ அளவில் உள்ள அந்தக் கட்டி, ஆரம்பத்தில் கண்டறியப்பட்டது. எனவே அவருக்கு ஒரு அறுவை சிகிச்சை மற்றும் ஆறு நாட்கள் கதிரியக்க சிகிச்சை மட்டுமே தேவைப்பட்டது. நோயறிதலின் போது 15 மில்லி மீட்டருக்கும் குறைவான கட்டிகளைக் கொண்ட புற்றுநோயாளிகள், அடுத்த ஐந்து ஆண்டுகளில் 90% உயிர்வாழும் வீதத்தைக் கொண்டுள்ளனர். பார்பரா தனது சகோதரி மற்றும் தாயின் சிகிச்சையை விட மிகவும் குறைவான நாட்கள் சிகிச்சையில் இருந்ததால் மகிழ்ச்சியடைவதாக கூறுகிறார். அவர்களும் புற்றுநோய் பாதிப்பில் இருந்தவர்கள். படக்குறிப்பு, மியா கருவியின் அவதானிப்பிலிருந்து நோயறிதலைப் பெற்ற நோயாளிகளில் பார்பராவும் ஒருவர். கருவி எப்படி பயன்படுகிறது? செயற்கைத் தொழில்நுட்பக் கருவி இல்லாமல், பார்பராவின் புற்றுநோய் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அவரது அடுத்த மேமோகிராம் வரை கண்டறியப்பட்டிருக்காது. நோயறிதலின் போது, அவருக்கு நோயின் அறிகுறிகள் எதுவும் இல்லை. அவை உடனடியாக வேலை செய்வதால், மியா போன்ற ஏஐ கருவிகள் முடிவுகளுக்கான காத்திருப்பு நேரத்தை 14 நாட்களில் இருந்து வெறும் 3 ஆகக் குறைக்கும் திறனைக் கொண்டுள்ளன என்று அதனை உருவாக்கிய கெய்ரான் மெமிக்கல் (Kheiron Medical) நிறுவனம் தெரிவித்துள்ளது. மருத்துவ பரிசோதனையில் உள்ள நோயாளிகளின் பரிசோதனை முடிவுகள் கருவியால் மட்டுமே பகுப்பாய்வு செய்யப்படவில்லை; ஒவ்வொன்றும் பல மருத்துவர்களால் மதிப்பாய்வு செய்யப்பட்டது. தற்போது இரண்டு கதிரியக்க வல்லுநர்கள் ஒவ்வொரு இமேஜிங் ஆய்வையும் மதிப்பாய்வு செய்கிறார்கள், ஆனால் அவை கருவி மூலம் மாற்றப்படலாம், இது மதிப்பாய்வு பணியின் செயல்திறனை மேம்படுத்தும். மருத்துவ பரிசோதனையில் பங்கேற்ற 10,889 பெண்களில், 81 பேர் மட்டுமே தங்கள் முடிவுகளைப் படிக்க கருவியைப் பயன்படுத்த விரும்பவில்லை என்று சோதனையை மேற்கொண்ட திட்டத்தின் இயக்குனர் ஜெரால்ட் லிப் விளக்கினார். ஒரு குறிப்பிட்ட நோயின் அறிகுறிகளைக் கண்டறிவதில் ஏஐ கருவிகள் சிறப்பாகச் செயல்படுகின்றன என்றும் அவர் கூறினார். படக்குறிப்பு, சாரா கெருயிஷ், கீரோன் மெடிக்கலின் தலைமை வியூக அதிகாரி. தற்போது, முடிந்தவரை அதிக அளவிலான நோயாளிகளிடமிருந்து புற்றுநோய் அறிகுறிகளை பிரதிபலிக்கும் படங்களைக் கொண்டு, அந்த ஏஐ கருவியை பரிசோதிக்கலாம். ஆனால், இது நோயாளிகளின் ரகசியத்தன்மை மற்றும் தரியுரிமை காரணமாக அனைத்து தகவல்களையும் பெற்று பரிசோதிப்பதில் சிக்கல் இருக்கலாம். உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான பெண்களின் மேமோகிராம்களால் உருவாக்கப்பட்ட ஒரு பெரிய தரவுத்தளத்திற்கு நன்றி செலுத்தும் ஒரு கருவியான மியாவை உருவாக்க அவர்களுக்கு ஆறு ஆண்டுகள் ஆனது என்று கீரோன் இன் மூலோபாயத் தலைவர் சாரா கெர்ருஷ் கூறினார். மார்பக புற்றுநோய் மருத்துவர்கள் ஆண்டுக்கு 5,000 சோதனைகள் வரை மதிப்பாய்வு செய்கின்றனர். "அந்த வேலை சோர்வானது," என்று லிப் கூறுகிறார். இந்த கருவி ஒரு நாள் வேலையை மாற்றிவிடும் என்று கவலைப்படுகிறீர்களா என்று லிப்பிடம் கேட்டபோது, இந்த தொழில்நுட்பம் நோயாளிகளுடன் அதிக நேரம் செலவிட அனுமதிக்கும் என்று அவர் கூறுகிறார். "மியாவை ஒரு நண்பராகவும், எனது பணியின் நீட்டிப்பாகவும் நான் பார்க்கிறேன்," என்று லிப் கூறுகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 15 மி.மீ.க்கும் குறைவான கட்டிகளைக் கொண்ட புற்றுநோயாளிகள் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 90% உயிர்வாழும் வீதத்தைக் கொண்டுள்ளனர். கருவியின் குறைகள் என்ன? மியா, நிச்சயமாக முழுமையானது. நோயாளிகளின் மருத்துவ வரலாற்றை இந்த கருவியால் அறிய முடியாது. எடுத்துக்காட்டாக, முந்தைய ஸ்கேன்களில் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட மற்றும் தீங்கற்றதாகக் கண்டறியப்பட்ட நீர்க்கட்டிகளைக் கூட இந்தக் கருவி மீண்டும் அடையாளம் காட்டுகிறது. கூடுதலாக, தற்போதைய சுகாதார விதிமுறைகள் காரணமாக, சோதனையின் போது ஏஐ கருவியின் இயந்திர கற்றல் உறுப்பு முடக்கப்பட்டுள்ளது. எனவே அதன் வேலையைச் செய்யும்போது கற்றுக்கொள்ள முடியவில்லை. ஒவ்வொரு முறையும் அது புதுப்பிக்கப்படும்போது அது ஒரு புதிய மதிப்பாய்வுக்கு செல்ல வேண்டியிருந்தது. மியாவின் சோதனையானது ஒரு இடத்தில் நடத்தப்படும் ஆரம்ப சோதனை மட்டுமே. அபெர்டீன் பல்கலைக்கழகம் சுயாதீனமாக இந்த ஆராய்ச்சியை சரிபார்த்தது, ஆனால் மதிப்பீட்டு முடிவுகள் இன்னும் மதிப்பாய்வு செய்யப்படவில்லை. "இந்த முடிவுகள் ஊக்கமளிக்கின்றன. நோயறிதலுக்கு ஏஐ வழங்கும் அற்புதமான திறனை முன்னிலைப்படுத்த உதவுகின்றன. நிஜ வாழ்க்கை மருத்துவ கதிரியக்க வல்லுநர்கள் அவசியம் மற்றும் ஈடுசெய்ய முடியாதவர்கள் என்பதில் சந்தேகமில்லை, ஆனால் ஏஐ கருவிகளின் அறிவைப் பயன்படுத்தும் மருத்துவ கதிரியக்க நிபுணர் நோயாளியின் பராமரிப்பில் ஒரு வலிமையான சக்தியாக இருப்பார்," என கதிரியக்கவியல் கல்லூரியின் தலைவர் கேத்தரின் ஹாலிடே கூறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, உடல்நலப் பிரச்னைகளைக் கண்டறிய உதவும் சில செயற்கை நுண்ணறிவு கருவிகள் ஏற்கெனவே உள்ளன. ஜூலி ஷார்ப்,பிரிட்டனின் புற்றுநோய் ஆராய்ச்சி சுகாதாரத் தகவல் தலைவர், ஒவ்வொரு ஆண்டும் கண்டறியப்படும் புற்றுநோய் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், என்ஹெச்எஸ் பராமரிப்பை மேம்படுத்துவதற்கு தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் "முக்கியமானதாக" இருக்கும் என்று கூறினார். "புற்றுநோயாளிகளுக்கான விளைவுகளை மேம்படுத்த இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான சிறந்த வழிகளைக் கண்டறிய கூடுதல் ஆராய்ச்சி தேவைப்படும்," என்றும் அவர் கூறினார். பிற உடல்நலம் தொடர்பான ஏஐ சோதனைகள் பிரிட்டன் முழுவதும் நடந்து வருகின்றன, இதில் ப்ரிசிம்டம் ஹெல்த்(Presymptom Health) என்ற நிறுவனத்தின் கருவி, அறிகுறிகள் தோன்றுவதற்கு முன், செப்சிஸின் அறிகுறிகளுக்கான ரத்த மாதிரிகளை பரிசோதிக்கிறது. ஆனால், அதன் முடிவுகள் குறித்து பலர் கவலை தெரிவிக்கின்றனர். https://www.bbc.com/tamil/articles/c0d3k9v10lyo
  21. வட்டுக்கோட்டை வாள்வெட்டு விவகாரம்: பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட மூவர் கைது யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை இளைஞனை கடத்தி படுகொலை செய்த குற்றச்சாட்டில் பிரதான சந்தேக நபர்களில் ஒருவர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 11ஆம் திகதி காரைநகருக்கு சென்று விட்டு வட்டுக்கோட்டை திரும்பும்போது, 23 வயதான தவச்செல்வம் பவிதரன் என்ற இளைஞர் கடத்தப்பட்டு வாள்வெட்டு மற்றும் சித்திரவதைக்கு இலக்காகி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார், ஏற்கனவே ஆறு பேரை கைது செய்து, நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு 28ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணை அவர்களில் இருவர் அடையாள அணிவகுப்பின் போது, கொல்லப்பட்ட இளைஞனின் மனைவியால் அடையாளம் காட்டப்பட்டுள்ளனர். இந்நிலையில், தொடர் விசாரணைகளை முன்னெடுத்து வரும் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் வவுனியா, ஒட்டுசுட்டான் மற்றும் கிளிநொச்சி பகுதிகளில் தலைமறைவாகி இருந்த பிரதான நபர்களில் ஒருவர் உள்ளிட்ட மூவரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ளவர்களிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வரும் பொலிஸார் அவர்களை மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர். சட்ட நடவடிக்கை அதேவேளை, சந்தேக நபர்களுக்கு அடைக்கலம் கொடுத்த நபர்களுக்கு எதிராகவும் கடுமையான சட்ட நடவடிக்கையை பொலிஸார் முன்னெடுக்கவுள்ளனர். தேடப்படும் சந்தேகநபர்களுக்கு அடைக்கலம் கொடுப்பது சிறைத்தண்டனைக்கு உரிய குற்றமாகும். எனவே, வட்டுக்கோட்டை சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்து பாதுகாக்கும் நபர்கள் சந்தேகநபர்கள் குறித்து பொலிஸாருக்கு அறிய தருமாறு பொலிஸார் கோரியுள்ளனர். https://tamilwin.com/article/three-arretsed-regarding-vaddukoddai-murder-1711355844
  22. தன் நாட்டில் நடக்கும் வன்முறைகளுக்கு அமெரிக்க துப்பாக்கி நிறுவனங்களிடம் ரூ.80,000 கோடி இழப்பீடு கோரும் அண்டைநாடு பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்காவின் சில பழமையான நிறுவனங்களின் எதிர்காலத்தின் மீது ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு வழக்கின் விசாரணைக்கு அமெரிக்க நகரமான பாஸ்டனில் உள்ள ஒரு நீதிமன்றம் 2024 ஜனவரியில் ஒப்புதல் அளித்துள்ளது. ஏழு ஆயுத உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் ஒரு விநியோகஸ்தர் மீது போடப்பட்டுள்ள வழக்கு இது. இதில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால் ஆயுத உற்பத்தி நிறுவனங்களுக்கு எதிராக போடப்பட்டுள்ள இந்த வழக்கு, ஆயுதங்களால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது அவர்களது உறவினர்கள் எவராலும் தாக்கல் செய்யப்படவில்லை. இந்த வழக்கை மெக்ஸிகோ அரசு தொடுத்துள்ளது. இந்த நிறுவனங்களிடம் இருந்து 10 பில்லியன் டாலர் இழப்பீடு கோரப்பட்டுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளின் கட்டுப்பாட்டிற்காக வன்முறை மோதலில் ஈடுபடும் மெக்ஸிகன் கிரிமினல் குழுக்கள் அல்லது கும்பல்கள் இந்த ஆயுதங்களை பெறுகின்றன என்பதை இந்த நிறுவனங்கள் நன்கு அறிந்திருப்பதாக மெக்ஸிகோ அரசு கூறுகிறது. கோல்ட்ஸ் ஸ்மித் & வேசன் போன்ற பெரிய ஆயுத உற்பத்தி நிறுவனங்கள் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளன. இந்த நிறுவனங்கள் தயாரிக்கும் பொருட்கள் குற்றச் செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டால் அதற்கு அவை பொறுப்பல்ல என்ற சட்டப்பூர்வ பாதுகாப்பு இந்த நிறுவனங்களுக்கு உள்ளது. ஆனால் இந்த வழக்கின் வாதங்களுக்கு எதிராக இந்த பாதுகாப்பு போதுமானதாக இருக்கும் என்று தோன்றவில்லை. அமெரிக்க துப்பாக்கி நிறுவனங்களுக்கு எதிரான வழக்கில் மெக்ஸிகோ வெற்றிபெற முடியுமா என்பதைக் கண்டறிய நாம் முயற்சிப்போம். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஒழுங்கமைக்கப்பட்ட கிரிமினல் கும்பலிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்களை அழித்த மெக்சிகன் இராணுவம். மெக்ஸிகோவில் குற்ற அலை இயோன் கிரில்லோ, மெக்ஸிகோவைச் சேர்ந்த பத்திரிகையாளர். அங்கு திட்டமிட்டு நடத்தப்படும் குற்றங்கள் குறித்து பல புத்தகங்களை அவர் எழுதியுள்ளார். மெக்ஸிகோவில் கிரிமினல் குழுக்களுக்கு இடையேயான சண்டை அங்கொன்றும் இங்கொன்றுமாக நடக்கும் மோதல்கள் அல்ல. மாறாக அது போரின் வடிவத்தை எடுத்துள்ளது என்று அவர் கூறுகிறார். அவரது புத்தகங்களில் ஒன்றான ‘Blood Gun Money: How America Earns Gangs and Cartels’, இந்த வழக்கில் பரவலாக குறிப்பிடப்பட்டுள்ளது. “2006 முதல் மெக்ஸிகோவில் 4 லட்சம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். அதில் 70 சதவிகிதம் பேர் துப்பாக்கிகளால் கொல்லப்பட்டுள்ளனர். சில சண்டைகள் மிகவும் கடுமையானவை. 500 துப்பாக்கி ஏந்தியவர்களுக்கும் இரண்டாயிரம் போலீசாருக்கும் இடையே நீண்ட நேரத்திற்கு துப்பாக்கிச் சண்டைகள் நடக்கின்றன. ஒவ்வொரு நாளும் சுமார் 100 கொலைகள் நடக்கின்றன," என்று இந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. சுமார் 12 கோடியே 90 லட்சம் மக்கள்தொகை கொண்ட இந்தப்பரந்த நாட்டில் இது எல்லா இடங்களிலும் நடப்பதில்லை. ஆனால் இது எங்கு நடந்தாலும் ஆயுதக் குழுக்களின் நடவடிக்கைகள் மிகவும் கொடூரமானவை மற்றும் வன்முறை நிறைந்தவை. பல சமயங்களில் சாதாரண மக்கள் இந்த மோதலுக்கு பலியாகின்றனர். துப்பாக்கி ஏந்தியவர்கள் வந்து கண்மூடித்தனமாக ஒருவரையொருவர் சுட்டுக்கொள்கின்றனர். பல சமயங்களில் கார்களில் செல்லும் சாதாரண மக்கள் அல்லது சாலையோர வண்டிகளில் இருந்து உணவு உண்பவர்களும் இதற்கு பலியாகின்றனர் என்றும் அயன் கிரில்லோ கூறுகிறார். கடந்த சில ஆண்டுகளில், இந்த மாஃபியா குழுக்கள் அல்லது கார்டெல்கள் தங்களுடைய சொந்த ராணுவத்தை உருவாக்கியுள்ளன. பல தாக்குதல்களில் சுமார் 100-200 பேர், AK-47 மற்றும் AR-15 போன்ற துப்பாக்கிகளால் தாக்குகிறார்கள். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, டெக்சாஸில் உள்ள ஒரு துப்பாக்கி கடை. மெக்ஸிகோவுக்குள் சட்டவிரோதமாக கொண்டு வரப்படும் ஆயுதங்கள் ஆனால் நாட்டுக்குள் ஆயுதங்கள் சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்டதை எப்படி அறிவது? குற்றவாளிகளிடமிருந்து ஆயுதங்கள் காவல்துறையால் கைப்பற்றப்படும்போது அல்லது குற்றம் நடந்த இடத்தில் இருந்து மீட்கப்படும்போது காவல்துறை அவற்றின் வரிசை எண்களை அமெரிக்க நிர்வாகத்திடம் கொடுக்கிறது. இந்த ஆயுதங்கள் எங்கிருந்து வந்தன என்பதை அது கண்டுபிடிக்கிறது என்று அயன் கிரில்லோ விளக்குகிறார். இதில் 70 சதவிகித ஆயுதங்கள் அமெரிக்க துப்பாக்கி கடைகள் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து மெக்ஸிகோவை சென்றடைந்ததாக தெரியவந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 2 லட்சம் துப்பாக்கிகள் அமெரிக்காவில் இருந்து கடத்தல் மூலம் மெக்ஸிகோவை அடைவதாக அரசு மதிப்பிடுகிறது. இது வன்முறைக்கு வழிவகுக்கிறது. “ராணுவம் பயன்படுத்தும் மட்டத்தில் உள்ள துப்பாக்கிகள் இங்கு வந்தடைகின்றன. பல துப்பாக்கிகள் மிகவும் சக்திவாய்ந்தவை. அவை 50 காலிபர் தோட்டாக்களைப் பயன்படுத்துகின்றன. அவை போலீஸ் கவச வாகனங்களைத் துளைக்கும் சக்தி கொண்டவை,” என்று அவர் குறிப்பிட்டார். மெக்ஸிகோவில் தனிநபர்கள் துப்பாக்கிகளை வாங்க முடியும். ஆனால் ஒரே ஒரு துப்பாக்கி கடை மட்டுமே ராணுவத்தால் நடத்தப்படுகிறது. துப்பாக்கிகளை வாங்கும் செயல்முறை கடுமையாக கட்டுப்படுத்தப்படுகிறது. "இந்த கடையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அங்கு ஆயுதங்களின் விலை மிகவும் அதிகம். மிக முக்கியமாக அடையாள அட்டை உட்பட ஏழு வெவ்வேறு வகையான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். ஆயுதம் வாங்கும் நபருக்கு குற்றப்பின்னணி பதிவு இல்லை என்று சான்றளிக்கும் காவல் துறையின் ஆவணம் அவற்றில் ஒன்று,” என்று இதுகுறித்து அயன் கிரில்லோ கூறினார். ஆனால் கார்டெல் நபர்கள் அத்தகைய ஆயுதங்களை அமெரிக்காவிடமிருந்து எளிதாகப் பெற முடியும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஹூஸ்டனில் உள்ள ஒரு துப்பாக்கி கடை. அமெரிக்காவிலிருந்து வரும் 2 லட்சத்திற்கும் அதிகமான ஆயுதங்கள் மெக்ஸிகோவில் அதிகாரப்பூர்வமாக 16,000 ஆயுதங்கள் விற்பனையாகின்றன. ஆனால் அதே நேரம் அமெரிக்காவிலிருந்து 2 லட்சத்திற்கும் அதிகமான ஆயுதங்கள் இங்கு வந்துசேருகின்றன. ”கடைகளில் குற்றப்பின்னணி பதிவுகள் இல்லாதவர்களுக்கு ஆயுதங்கள் விற்கப்படுகின்றன. அவர்கள் டஜன் கணக்கான ஏகே 47 ரக துப்பாக்கிகளை வாங்கி கார்டெல்லிடம் ஒப்படைக்கிறார்கள், அதற்கு அவர்களுக்கு கமிஷன் கிடைக்கும்,” என்று அயன் கிரில்லோ விளக்குகிறார். மற்றொரு வழி அமெரிக்காவில் உள்ள தனியார் விற்பனையாளர்களிடமிருந்து துப்பாக்கிகளை வாங்குவது. அவர்கள் குற்றப்பதிவுகள் மற்றும் ஆவணங்களைப் பற்றி அதிகம் கவலைப்படுவதில்லை. அமெரிக்காவிலிருந்து நூற்றுக்கணக்கான துப்பாக்கிகளை வாங்கி மெக்ஸிகோவிற்கு கொண்டு வருவதன் மூலம் வாரத்திற்கு 15-20 ஆயிரம் டாலர்களை தாங்கள் சம்பாதித்ததாக, மெக்ஸிகோ சிறைகளில் உள்ள பல குற்றவாளிகளை தான் நேர்காணல் செய்தபோது அவர்கள் குறிப்பிட்டதாக கிரில்லோ கூறுகிறார். இந்த வர்த்தகத்தை நிறுத்துமாறு பல ஆண்டுகளாக அமெரிக்காவிடம் கெஞ்சிய பிறகு மெக்ஸிகோ அரசு இப்போது சட்டப் போராட்டத்தின் பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES வழக்கறிஞர்கள், துப்பாக்கிகள் மற்றும் பணம் ”தற்போது அமெரிக்காவில் சாதாரண குடிமக்களிடம் 40 கோடி ஃபயர் ஆர்மஸ் அதாவது துப்பாக்கிகள் மற்றும் ரிவால்வர்கள் போன்ற ஆயுதங்கள் உள்ளன,” என்று கலிஃபோர்னியாவில் உள்ள யுசிஎல்ஏ சட்டக்கல்லூரியில் சட்டப் பேராசிரியரான ஆடம் விங்க்லர் கூறினார். “அமெரிக்க அரசியலமைப்பின்படி தனிநபர்களுக்கு ஆயுதம் வைத்திருக்க உரிமை உண்டு. மக்கள் பாதுகாப்பிற்காக மட்டுமல்லாமல் தெருக்களில் ஏற்படும் அச்சுறுத்தல்களைச் சமாளிக்கவும் துப்பாக்கிகளை எடுத்துச் செல்லலாம் என்று நீதிமன்றம் இதை விளக்குகிறது." ஆனால் இதைக் கட்டுப்படுத்த வேண்டிய தேவையும் உள்ளது. எனவே இந்த விஷயத்தில் முதலில் ஆயுதத் தொழிலை பார்ப்போம். "2000வது ஆண்டின் முற்பகுதியில் நாடாளுமன்றம் ஒரு சட்டத்தை இயற்றியது. அதன்படி கம்பெனிகள் தயாரிக்கும் ஆயுதங்கள் வன்முறைக்கு பயன்படுத்தப்பட்டால் தயாரிப்பு நிறுவனங்கள் அல்லது விற்பனையாளர்களை குற்றவாளிகளாக கருத முடியாது," என்று ஆடம் விங்கிள் கூறினார். "இந்தச்சட்டம் ’ஆயுதங்களின் சட்டப்பூர்வ வர்த்தகத்திற்கான பாதுகாப்புச் சட்டம்’ என்று அழைக்கப்படுகிறது. இதன் காரணமாக, நிறுவனங்கள் தயாரிக்கும் ஆயுதங்கள் குற்றச்செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டால், ஆயுத உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பது மிகவும் கடினம்." அதாவது, ஆயுதம் தயாரிப்பவர்கள் மீது பொறுப்புக் கூற முடியாதா? ஆயுதங்கள் பழுதடைந்தால் அல்லது பயன்பாட்டின் போது வெடித்தால், நிறுவனம் மீது வழக்குத் தொடரலாம். ஆனால் அவை கடத்தப்பட்டாலோ அல்லது கள்ளச் சந்தையில் விற்கப்பட்டாலோ நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுப்பது கடினம் என்று ஆடம் விங்கிள் குறிப்பிட்டார். வழக்குகளில் இருந்து நிறுவனங்களை பாதுகாப்பது அமெரிக்காவின் மிகவும் செல்வாக்கு மிக்க ஆயுதம் தாங்கும் உரிமை அமைப்பான நேஷனல் ரைஃபிள் அசோசியேஷனுக்கு முன்னுரிமை பணியாக இருந்தது. வழக்குகள் தங்கள் வணிகத்தை பாதிக்கக்கூடும் என்று அஞ்சுவதால் ஆயுத நிறுவனங்கள் இந்த வழக்குகளில் இருந்து விடுபடுவதற்கு ஆர்வலர்களுடன் இணைந்து செயல்பட்டதாக ஆடம் விங்க்லர் கூறினார். "புகையிலை மற்றும் சிகரெட் நிறுவனங்கள் வழக்குகளுக்குப் பிறகு பாதிக்கப்பட்டவர்களுக்கு பில்லியன் கணக்கான டாலர்களை இழப்பீடாக வழங்க வேண்டியிருந்தபோது உடனடியாக ஆயுத உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கு வழக்குகளில் இருந்து பாதுகாப்பு வழங்கப்பட்டது. ஏனென்றால் அவர்களுக்கு எதிராக இதேபோன்ற வழக்குகள் பதிவு செய்யப்படும் அபாயம் இருந்தது.” பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஆயுத உற்பத்தியாளர் ரெமிங்டன் அமெரிக்காவின் பலவீனமான துப்பாக்கிச் சட்டங்கள் அமெரிக்காவில் உள்ள ஒவ்வொரு மாகாணத்திற்கும் அதன் சொந்த சட்டங்கள் உள்ளன. பல மாகாணங்களில் அவை மிகவும் தளர்வாக உள்ளன. மெக்ஸிகோவுக்கு செல்லும் நெடுஞ்சாலையில் வாகனங்களில் மக்கள் ஆயுதங்களை எடுத்துச் செல்கிறார்கள். இது ஆயுதக் கடத்தலுக்கான முக்கிய வழித்தடமாக இருக்கிறது என்று ஆடம் விங்க்லர் கூறினார். இந்தக் கடத்தலை கண்காணிக்கும் பொறுப்பு உள்ள அமெரிக்க நிறுவனம், ’Bureau of Alcohol, tobacco and fire arms explosive’ அதாவது ஏடிஎஃப் என்று அழைக்கப்படுகிறது. “ATF மிகவும் பயனுள்ளதாக இல்லை. அமெரிக்காவில் இருக்கும் 40 கோடி ஆயுதங்களின் நடமாட்டத்தை கண்காணிப்பது கடினம். இந்தப் பணிக்கு இந்த ஏஜென்சியிடம் போதிய பணம் இல்லை,” என்று அவர் கூறுகிறார். அமெரிக்காவிலிருந்து மெக்ஸிகோவிற்கு ஆயுதங்கள் கடத்தப்படுவதைத் தடுக்க மெக்ஸிகோவின் எல்லை போலீஸாருக்கும் சமமான பெரிய பொறுப்பு உள்ளது. மெக்ஸிகோ எல்லை போலீசார் அங்கு வரும் வாகனங்களை கண்டிப்புடன் சோதனை செய்வதில்லை என்கிறார் ஆடம் விங்க்லர். மெக்ஸிகோ அரசு 2021இல் அமெரிக்க ஆயுத நிறுவனங்களுக்கு எதிராக மாசசூசெட்ஸில் ஒரு வழக்கைத் தாக்கல் செய்தது. ஆனால் நிறுவனங்களுக்கான பாதுகாப்பு சட்டத்தைக் காரணம் காட்டி ஒரு வருடம் கழித்து நீதிமன்றம் அதை நிராகரித்தது.. மெக்ஸிகோ அதை எதிர்த்து மேல்முறையீடு செய்தது. மெக்ஸிகோ ஒரு இறையாண்மை நாடு என்றும் அமெரிக்காவின் இந்த பாதுகாப்பு அளிக்கும் சட்டத்தின் வரம்பிற்கு அப்பாற்பட்டது என்றும் வாதிட்டது. அதன் முறையீடு வெற்றி பெற்றது. அமெரிக்க ஆயுத நிறுவனங்கள் தங்கள் சொந்த நலனுக்காக சட்டவிரோத வர்த்தகத்தை ஊக்குவிக்கும் கொள்கையை வேண்டுமென்றே பின்பற்றுவதாக மெக்ஸிகோ கூறுகிறது. 2005 இல் இயற்றப்பட்ட ’ஆயுதங்களில் சட்டப்பூர்வ வர்த்தகத்திற்கான பாதுகாப்புச் சட்டம்,’ அமெரிக்க ஆயுத நிறுவனங்களை வழக்குகளில் இருந்து பாதுகாத்து வருகிறது, ஆனால் அது தொடருமா? ராபர்ட் ஸ்பிட்சர், SUNY Cortland பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் பேராசிரியராக உள்ளார். துப்பாக்கி கொள்கை குறித்து அவர் பல புத்தகங்களை எழுதியுள்ளார். அவர் நேஷனல் ரைஃபிள் சங்கத்தின் உறுப்பினராகவும் உள்ளார். 2005 ஆம் ஆண்டில் ஆயுத உற்பத்தி நிறுவனங்களுக்கு வழக்குகளில் இருந்து விலக்கு அளிக்கும் சட்டம் இயற்றப்பட்டதை அடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. சாண்டி ஹூக் தொடக்கப் பள்ளி துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்களால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது,” என்று அவர் குறிப்பிட்டார். 2012 ஆம் ஆண்டு நடந்த இந்த துப்பாக்கிச் சூட்டில் 20 வயதான துப்பாக்கி ஏந்தியவர் ஒருவர் பள்ளிக்கூடத்தில் தானியங்கி துப்பாக்கியால் சுட்டதில் 20 குழந்தைகள் மற்றும் 6 பெரியவர்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் கனெக்டிகட்டின் உள்ளூர் சட்டத்தின் கீழ் வேறு வாதத்தை முன்வைத்து, 200 ஆண்டுகள் பழமையான ஆயுத உற்பத்தியாளர் ரெமிங்டன் நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்தனர். “1970 முதல் கனெக்டிகட்டில் ஒரு சட்டம் உள்ளது. நியாயமற்ற மற்றும் பொறுப்பற்ற மார்க்கெட்டிங் செய்யும் நிறுவனங்களுக்கு எதிராக பயன்படுத்தக்கூடிய சட்டம் அது. இந்த வழக்கில் 2022 இல் ஏற்பட்ட ஒரு சட்ட தீர்வின் கீழ் பாதிக்கப்பட்டவர்கள் ரெமிங்டன் நிறுவனத்திடமிருந்து 73 மில்லியன் டாலர்கள் இழப்பீடு பெற்றனர். துப்பாக்கி நிறுவனம் இதுவரை செலுத்திய மிகப்பெரிய இழப்பீடு இது ஆகும்,” என்று பர்ட் ஸ்பிட்சர் விளக்குகிறார். இந்த வழக்கின் வெற்றிக்கு இழப்பீடு மட்டுமே முக்கிய காரணியாக இருக்கவில்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES “சமூகத்தின்மீது ஏமாற்றமடைந்த இளைஞர்களை தனது தானியங்கி துப்பாக்கிகளின்பால் ஈர்க்க, விளம்பரம் மற்றும் சந்தைப்படுத்தல் உத்திகளை பயன்படுத்தியதைக் குறிக்கும் ஆயிரக்கணக்கான உள் ஆவணங்களை பகிரங்கப்படுத்த வேண்டிய கட்டாயம் ரெமிங்டன் நிறுவனத்திற்கு ஏற்பட்டது,” என்று ராபர்ட் ஸ்பிட்சர் கூறினார். இந்த ஆயுதங்களின் ராணுவத் திறனை நிறுவனம் வலியுறுத்திக் கொண்டிருந்தது. அதாவது இவை தற்காப்புக்காகவோ, துப்பாக்கிச் சூடு இலக்கு பயிற்சி அல்லது பொழுதுபோக்கிற்காக பயன்படுத்தக்கூடிய ஆயுதங்கள் அல்ல. சட்டப்பூர்வ தீர்வின் கீழ் ரெமிங்டன் நிறுவனம் தனது தவறை ஒப்புக்கொள்ள நிர்பந்திக்கப்படவில்லை. சமரசம் ஏற்பட்டு வழக்கு முடிந்தது. விசாரணை முழு அளவில் நடந்திருந்தால், கொலை செய்யப்பட்ட பள்ளி மாணவர்களின் பெற்றோர் வெற்றி பெற்றிருப்பார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்று ராபர்ட் ஸ்பிட்சர் கூறுகிறார். அதே நேரத்தில் பொறுப்பற்ற சந்தைப்படுத்தலுக்கு எதிரான சட்டம் கனெக்டிகட் மாகாணம் உட்பட நாட்டின் ஐந்து மாகாணங்களில் மட்டுமே உள்ளது. அத்தகைய சூழ்நிலையில் முழு நாட்டிற்கும் இது பொருந்தாது. இதுபோன்ற மற்றொரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக ராபர்ட் ஸ்பிட்சர் கூறினார். இந்த வழக்கு ஃப்ளோரிடாவில் உள்ள பார்க்லேண்ட் உயர்நிலைப் பள்ளியில் 2018 ஆம் ஆண்டு நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்துடன் தொடர்புடையது. இதுபோன்ற வழக்குகளில் இருந்து தப்பிக்க இப்போது துப்பாக்கி நிறுவனங்கள் தங்கள் ஆயுத சந்தைப்படுத்தல் கொள்கைகளை மறுபரிசீலனை செய்கின்றன என்று அவர் குறிப்பிட்டார். பட மூலாதாரம்,GETTY IMAGES நீதிமன்றப் போராட்டம் எந்த அளவுக்கு வெற்றி பெறும்? ”மெக்ஸிகோ அரசால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு பெரிய மாற்றங்களைக் கொண்டு வரக்கூடும். ஏனெனில் இந்த நிறுவனங்கள் இதுவரை பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்டப்பூர்வ பொறுப்புக்கூறலை தவிர்த்துவந்துள்ளன. இப்போது மற்ற நாடுகளும் இந்த திசையில் பார்க்கின்றன,” என்று ஹேக்கில் உள்ள ’ஏசர் இன்ஸ்டிடியூட் ஃபார் இன்டர்நேஷனல் அண்ட் யுரோபியன் லா’ வின் மூத்த ஆராய்ச்சியாளர் லியோன் காஸ்டெல்லானோஸ் ஜனேகிவிச் குறிப்பிட்டார். “லத்தீன் அமெரிக்க நாடுகளில் துப்பாக்கியால் ஏற்படும் 70 முதல் 90 இறப்புகளுக்கு பயன்படுத்தப்படும் ஆயுதங்கள் அமெரிக்காவிலிருந்து சட்டவிரோதமாக வந்தவை. குவாத்தமாலா, ஹோண்டுராஸ் மற்றும் ஈக்வடார் போன்ற மத்திய அமெரிக்க நாடுகளிலும் இதே போக்கு காணப்படுகிறது," என்றார் அவர். "ஜமைக்கா போன்ற கரீபியன் நாடுகளிலும் இதேதான் நடக்கிறது. இப்போது ஆன்டிகுவா மற்றும் பார்படாஸ் நீதிமன்றத்தில் மெக்ஸிகோவின் கோரிக்கையை ஆதரித்துள்ளன. இந்த வழக்கில் மெக்ஸிகோ வெற்றி பெற்றால் இந்த நாடுகளில் சில அந்த அமெரிக்க துப்பாக்கி நிறுவனங்கள் மீது வழக்குத் தொடரக்கூடும்.” மெக்ஸிகோ வெற்றி பெற்றால் ஆயுத நிறுவனங்கள் செயல்படும் விதத்தில் முதல் மாற்றம், அவர்களின் சந்தைப்படுத்தல் கொள்கைகளாக இருக்கும் என்று அவர் நம்புகிறார். மரணத்தை அதிகரிக்கும் விதமாக மாற்றியமைக்கக்கூடிய பிற ஆயுதங்களிலும் மாற்றம் ஏற்படுத்தப்படும். அரிசோனா மற்றும் டெக்சாஸ் மாகாணங்களில் எல்லைக்கு அருகில் அமைந்துள்ள கடைகளில் இருந்து ஆயுதங்கள் தனது நாட்டை வந்தடைகின்றன என்பதை மெக்ஸிகோ நிரூபித்துள்ளது. அரிசோனா ஆயுத விற்பனையாளர்கள் மீது ஆயுதக் கடத்தல் குற்றச்சாட்டையும் மெக்ஸிகோ பதிவு செய்துள்ளது. இதன் பொருள் நிறுவனங்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கு எதிரான வழக்குகள் மூலம் இவர்கள் இருவருமே சட்டத்தின் வரம்பிற்குள் கொண்டு வரப்படுவார்கள். பட மூலாதாரம்,GETTY IMAGES வழக்கில் என்ன நடக்கும்? மெக்ஸிகோ தாக்கல் செய்த வழக்கு இன்னும் தொடங்கவில்லை ஆனால் இந்த வழக்கில் என்ன நடக்கும்? "மெக்ஸிகோ, நீதிமன்றத்திற்கு வெளியே எந்த தீர்வையும் ஏற்றுக்கொள்ளாது. ஏனெனில் அதன் நோக்கம் இந்த துப்பாக்கி நிறுவனங்களை அம்பலப்படுத்துவதாகும். இந்த ஆயுதங்கள் அதன் பொருளாதாரத்திற்கும் மக்களுக்கும் பெரும் இழப்பை ஏற்படுத்துகின்றன. இந்த நிறுவனங்களிடம் இருந்து 10 பில்லியன் டாலர் இழப்பீடாக மெக்ஸிகோ கோரியுள்ளது. ஆனால் மெக்ஸிகோவுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தாலும், இவ்வளவு பெரிய இழப்பீட்டு தொகைக்கு நீதிபதி உத்தரவிடுவார் என்று தோன்றவில்லை” என்றார் லியோன் காஸ்டெல்லானோஸ் ஜனேகிவிச். அமெரிக்க துப்பாக்கி நிறுவனங்களுக்கு எதிரான தனது போராட்டத்தில் மெக்ஸிசிகோ வெற்றிபெறுமா? மெக்ஸிகோ அமெரிக்க துப்பாக்கி நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட சட்டப்பூர்வ பாதுகாப்பு தடையை முறியடித்துள்ளது. ஆனால் இப்போது இந்த நிறுவனங்களுக்கு எதிராக கடத்தல் தொடர்பான உறுதியான ஆதாரங்களை அந்த நாடு முன்வைக்க வேண்டும். மெக்ஸிகோ எல்லைப் போலீசார் சோதனைகளில் மெத்தனமாக இருக்கிறார்கள். அதற்கு அவர்கள்தான் பொறுப்பு. இது ஒரு நீண்ட மற்றும் செலவுமிக்க சட்டப் போராட்டமாக இருக்கும் என்று நிபுணர்கள் கூருகின்றனர். இந்த வழக்கின் முடிவு என்னவாக இருக்கும் என்பதை மற்ற நாடுகளும் உன்னிப்பாக கவனித்து வருகின்றன. முடிவு எதுவாக இருந்தாலும் சரி, அது நிச்சயமாக ஆயுதக் கட்டுப்பாட்டுப் பிரச்னை தொடர்பான விவாதத்தை தீவிரப்படுத்தியுள்ளது. அதிலிருந்து எதோ ஒரு நன்மை நிச்சயமாக ஏற்படும். https://www.bbc.com/tamil/articles/c6p4np1v7xdo
  23. மைத்திரிபால சிறிசேன குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் விசாரணைக்காக முன்னிலையாகியுள்ளார். குறித்த விசாரணை இன்றையதினம் (25.03.2024) காலை 10.30 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மைத்திரிபால சிறிசேன, உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பின்னால் உள்ள பிரதான சூத்திரதாரிகளை தனக்கு தெரியும் என கடந்த சில தினங்களுக்கு முன் கருத்து தெரிவித்திருந்தார். சிஐடி விசாரணைக்கு இதனையடுத்து, அவர் மீது உரிய விசாரணைகளை முன்னெடுக்குமாறு பொதுப் பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளார். https://www.facebook.com/LankasriTv/videos/407240731913452/?ref=embed_video&t=0 அதற்கமைய, இன்றையதினம் மைத்திரிபால சிறிசேன குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். இதனால், அப்பகுதியில் மைத்திரிபால சிறிசேனவின் ஆதரவாளர்கள் குவிந்துள்ளதோடு பொலிஸாரினால் பலத்த பாதுகாப்பும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. https://tamilwin.com/article/maithripala-sirisena-easter-attack-issue-1711342639
  24. கடந்த நான்கு தசாப்தங்களாக மேற்கொள்ளப்பட்ட அவதானிப்புகளின் படி நாட்டின் 18 மாவட்டங்களில் சிட்டுக்குருவி அழிந்துள்ளதாக சூழலியல் ஆர்வலர் சட்டத்தரணி ஜகத் குணவர்தன தெரிவித்துள்ளார். உலக சிட்டுக்குருவிகள் தினத்தை முன்னிட்டு கொழும்பு பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிகழ்ச்சியை இலங்கை பறவையியல் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது . ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 20 உலக சிட்டுக்குருவி தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது. சட்டத்தரணி ஜகத் குணவர்தன மேலும் தெரிவிக்கையில், சிட்டுக்குருவியை பாதுகாக்கப்பட்ட பறவையாக அறிவிக்குமாறு 2007ஆம் ஆண்டு சுற்றாடல் அமைச்சிடம் கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும், அதன்படி தற்போது சிட்டுக்குருவி பாதுகாக்கப்பட்ட பறவையாக கருதப்படுவதாகவும் தெரிவித்தார். மலேரியாவைக் கட்டுப்படுத்த மலத்தியான் என்ற இரசாயனத்தை தெளிக்க ஆரம்பித்ததில் இருந்து சிட்டுக்குருவியின் அழிவு தொடங்கியது, மேலும் 1990 களில் கொசுவர்த்தி சுருள்களின் பயன்பாடு அதிகரித்ததால், ஊவா, தெற்கு மற்றும் மத்திய மாகாணங்களில் சிட்டுக்குருவிகள் அழிந்தன. இந்த கொசுவர்த்திச் சுருள்களில் உள்ள இரசாயனம் பறவைகளின் பெருக்கத்தில் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும் அவர் கூறினார். இப்போது சிட்டுக்குருவி மிகவும் அருகிவரும் பறவையாக உள்ளதாகவும் சிட்டுக்குருவியின் அழிவு குறித்து முதலில் இலங்கையில் இருந்தும், பின்னர் இந்தியாவில் இருந்தும் பதிவாகியதாகவும் அவர் கூறினார். புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டிடங்களில் சிட்டுக்குருவிகள் வாழ்வதற்கு ஏற்ற சூழல் இல்லாததும் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை குறைவதில் பலத்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக சிட்டுக்குருவிகள் தொடர்பில் ஆய்வொன்றை மேற்கொண்ட இலங்கை இளம் விலங்கியல் நிபுணர்கள் சங்கத்தின் உறுப்பினர் நிசாலி தயானந்தா தெரிவித்துள்ளார். இரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள் போன்றவையும் சிட்டுக்குருவிகள் அழிந்து வருவதற்கு காரணம் என்றும் அவர் கூறினார். https://thinakkural.lk/article/296962
  25. வடக்கில் சிறுமிகள் மீதான தவறான நடத்தை தொடர்பில் வெளியாகியுள்ள தகவல் வடக்கு மாகாணத்தில் கடந்த ஆண்டு பதிவு செய்யப்பட்ட பொலிஸ் முறைப்பாடுகளின் பிரகாரம் பதிவான தவறான நடத்தை சம்பவங்களில் 70 சதவீதமானவை பாதிக்கப்பட்ட சிறுமிகளின் சம்மதத்துடனேயே இடம்பெற்றுள்ளது என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக பொலிஸ் திணைக்களத்திடம் கோரப்பட்ட தகவல்கள், வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் மஹிந்த குணரத்னவால் வழங்கப்பட்டுள்ளன. குறித்த அறிக்கையிலேயே இந்த விடயம் தெரியவந்துள்ளது. சந்தேகநபர்கள் வடக்கு மாகாணத்தில் தவறான நடத்தைகள் தொடர்பில் 131 பொலிஸ் முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவற்றில் 90 சம்பவங்கள் சிறுமிகளின் இணக்கத்துடன் இடம்பெற்றுள்ளதுடன் 33 சம்பவங்கள் மாத்திரமே அவர்களின் இணக்கமில்லாது நடந்துள்ளன. மேலும், இந்த சம்பவங்களுடன் தொடர்புடைய 143 சந்தேகநபர்கள் கைதாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. https://tamilwin.com/article/shocking-information-release-misbehavior-girls-1711334315

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.