Everything posted by ஏராளன்
-
இன்றைய வானிலை
15 மாவட்டங்களுக்கு இடி, மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை Published By: DIGITAL DESK 3 27 MAR, 2024 | 03:17 PM நாட்டில் இன்று புதன்கிழமை (27) மேல், மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அநுராதபுரம், மன்னார், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் கடுமையான இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். https://www.virakesari.lk/article/179826
-
அமெரிக்காவில் கப்பல் மோதியதில் பாலம் இடிந்தது - ஆற்றில் மூழ்கிய வாகனங்கள்
கப்பல் இயங்குவது எப்படி? குறுகிய கால்வாய்கள், பாலங்களை கப்பல் எவ்வாறு கடக்கும்? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ச.பிரசாந்த் பதவி, பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்காவின் பால்டிமோர் நகரில் உள்ள ஒரு பாலத்தில், கன்டெய்னர் கப்பல் மோதிய விபத்தில் பாலம் இடிந்து ஆற்றில் விழுந்தது. இதில், ஆற்றில் மூழ்கிய ஆறு பேர் உயிரிழந்தனர். பாலங்கள், குறுகிய கால்வாய்களை கப்பல்கள் கடப்பது எப்படி? மின் சக்தி தீர்ந்தால் அவசர நேரத்தில் கப்பலை நிறுத்துவது சாத்தியமா? பால்டிமோர் பால விபத்து நேரிட்டது எப்படி? அமெரிக்காவின் பால்டிமோர் துறைமுகத்தில் இருந்து, மார்ச் 26ம் தேதி இரவு இலங்கை கொழும்பு நோக்கி, 300 மீட்டர் நீளமுள்ள கன்டெய்னர் சரக்கு கப்பல் புறப்பட்டுச் சென்றது. சற்று நேரத்திலேயே கப்பலின் மின் சக்தி திடீரென இல்லாமல் போன போது, அவசர கால ஜெனரேட்டரை இயக்கியுள்ளனர். ஆனாலும், கப்பலை இயக்குவதற்கு தேவையான மின் சக்தி அவர்களுக்கு கிடைக்காமல் போய்விட்டது. இதனால், கப்பலை முழுமையாக கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. துறைமுகம் அருகேயிருந்த ஒரு பாலத்தில் கப்பல் மோதியது. பாலம் இடிந்து படாஸ்கோ ஆற்றில் விழுந்ததால் பாலத்தில் சென்ற கார்களும் ஆற்றில் மூழ்கின. ஆற்றில் தத்தளித்தவர்கள் மீட்கப்பட்ட நிலையில், ஆறு பேர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது போன்ற விபத்துகள் ஏற்படுவதற்கான காரணம் என்ன? கப்பல்களின் இயக்கம் மற்றும் அவசர காலங்களில் என்னென்ன செய்வார்கள் என, பிபிசி தமிழிடம் முன்னாள் கப்பல் கேப்டன் மற்றும் மாலுமிகள் தகவல்களை பகிர்ந்துள்ளனர். கப்பலை இயக்குவது எப்படி? பட மூலாதாரம்,GETTY IMAGES கப்பல்களை இயக்குவது தொடர்பாக சென்னையைச் சேர்ந்த சரக்கு கப்பலின் முன்னாள் கேப்டன் குமார் மற்றும் மாலுமி மதன் பிபிசி தமிழுக்கு விளக்கம் அளித்தனர். ‘‘கப்பல்களில் பல வகைகள் உள்ளன. நிலக்கரி, விவசாய உரங்கள் எடுத்துச் செல்லும் சரக்கு கப்பல், ஆயில் டேங்கர், கன்டெய்னர் எடுத்துச் செல்லும் கப்பல் மற்றும் பயணிகளை ஏற்றிச் செல்லும் குரூயிஸ் கப்பல் என பல வகைகள் உள்ளன. சரக்கு கப்பலை பொருத்தவரையில், 70 முதல் 400 மீட்டர் நீளம் அளவிற்கு உள்ளன. இதில், நீளத்தை பொறுத்து, 20 முதல் ஆயிரம் பேர் வரையில் பணியாற்றுவார்கள். இயக்கத்தை பொருத்தவரையில், கேப்டன் தான் கப்பலின் நேவிகேஷன் எனப்படும் கப்பலை வழிநடத்தும் பணியை செய்பவர். இவருக்கு அடுத்தபடியாக தலைமை பொறியாளர் (Chief Engineer) கப்பலின் இயந்திரங்களை கட்டுப்பாட்டில் வைத்திருப்பார்,’’ என்கின்றனர். கடலில் எங்கு எத்தனை வேகத்தில் செல்ல வேண்டும் எனவும், எங்கெல்லாம் செல்லக்கூடாது என்பதை தெரிவிக்க பிரத்யேக வரைபடம் உள்ளது என்றும் அவர்கள் கூறுகிறார்கள். ‘‘இந்திய கப்பல்களுக்கு தனியாக இந்திய வழிகாட்டி வரைபடம் (Navigation Map) உள்ளது. அதேசமயம் பிரிட்டிஷ் கப்பல்கள் உலக அளவிலான தகவல்கள் அடங்கிய வரைபடத்தை கொண்டுள்ளது. இதில், எந்தப் பகுதியில் எத்தனை ஆழம் உள்ளது, கப்பல் தரைதட்டும் வாய்ப்பு உள்ளதா? எந்ததெந்த துறைமுகங்கள் அருகே பாலங்கள் உள்ளன, அதன் உயரம் என்ன, குறுகலான கால்வாய்கள் எவை என அனைத்து தகவல்களும் அந்த டிஜிட்டல் வரைபடத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும். இதைக்கொண்டு தான் கப்பல்கள் இயக்கப்படுகின்றன. அதேபோல், அனைத்து கப்பல்களும், விமானங்களைப் போல அருகேயுள்ள துறைமுகங்களில் தகவல்கள் கொடுக்க வேண்டும், அவர்கள் நம்மை ஜிபிஎஸ் வாயிலாக கண்காணிப்பார்கள். அவசர காலத்தில் தகவல் கொடுத்தால் துறைமுகத்தில் இருந்து உதவி செய்வார்கள்,’’ என்று கேப்டன் குமார் கூறினார். அவசர காலத்தில் தகவல் தொடர்பு எப்படி சாத்தியம்? பட மூலாதாரம்,GETTY IMAGES கப்பல்களில் மின் சக்தி தீர்ந்தால் என்னவாகும்? என்ற கேள்வியை நாம் முன்வைத்தோம். அதற்கு பதிலளித்த அவர்கள், ‘‘கப்பல்களை பொருத்தவரையில் மின் சக்திக்காக மூன்று வசதிகள் உள்ளன. கப்பல்களில் முதன்மை எரிபொருளாக டீசல் அல்லது Heavy Fuel Oil அல்லது Low Sulfur Fuel Oil ஆகிய மூன்று வகை எரிபொருள் பயன்படுத்தப்படுகிறது. இவைதான் முதன்மை எரிபொருள். கப்பல்களில் இந்த முதன்மை சக்தி தீர்ந்து போனால், அவசர காலத்திற்காக ஜெனரேட்டர் வைக்கப்பட்டிருக்கும். மூன்றாவதாக, கப்பல் இயங்காமல் போனாலும் தகவல் பரிமாற்றத்திற்காக பேட்டரிகள் இருக்கும். கப்பல் இயக்கத்திற்கான உந்துவிசைக்காக Propeller எனப்படும் உந்துவிசை காற்றாடியும், திசையை மாற்றுவதற்கு Rudder என்ற கருவியும் ஜெனரேட்டர்களை வைத்து இயக்க முடியும். முதன்மை மின் சக்தியுடன் ஜெனரேட்டரும் செயலிழந்து போனால் நம்மால் கப்பலை கட்டுப்படுத்த முடியாது, அதன் திசையையும் மாற்ற முடியாது, பேட்டரியை வைத்து தகவல் தொடர்பை மட்டுமே பயன்படுத்த முடியும்,’’ என்றனர். நங்கூரத்தை கொண்டு உடனடியாக கப்பலை நிறுத்த முடியுமா? பட மூலாதாரம்,GETTY IMAGES மின் சக்தி தீர்ந்துபோனால் கப்பலை நங்கூரம் கொண்டு நிறுத்துவதும் மிகவும் கடினம் எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். கப்பல்களின் வேகத்தை நாட் – (Knot – Nautical Mile) என்ற அளவீட்டின் மூலம் அளக்கப்படுகிறது. கப்பலின் வேகத்தை பொறுத்து தான் நங்கூரம் பயன்படும். ஒரு பெரிய சரக்கு கப்பல் 2 – 4 நாட் வேகத்தில் சென்றாலே, நங்கூரத்தை வைத்து நிறுத்துவது கடினம். வேகம் அதிகமாக இருக்கும் போது நங்கூரத்தை பயன்படுத்தினால் நங்கூரத்தின் சங்கிலி அறுந்து பயனற்றுப்போகும். அத்துடன், கப்பலில் நங்கூரம் பொருத்தப்பட்ட பகுதியே பெரும் சேதத்திற்குள்ளாகும். இதனால், வேகத்தை பொறுத்தே நங்கூரத்தின் மூலம் கப்பலை நிறுத்த முடியும் எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். குறுகிய கால்வாய்கள், பாலங்களை கப்பல் எப்படி கடக்கும்? பட மூலாதாரம்,GETTY IMAGES சரக்கு போக்குவரத்து பயணத்தில் சூயஸ் கால்வாய், பனாமா கால்வாய் போன பல முக்கியமான கால்வாய்கள் உலகெங்கிலும் உள்ளன. இரண்டு முக்கியமான கடல்களை அல்லது வழித்தடங்களை இணைக்க இந்த குறுகலான கால்வாய்கள் பயன்படுகின்றன. ஆனால் சூயஸ், பனாமா போன்ற குறுகலான கால்வாய் மற்றும் பால்டிமோர், பாம்பன் போன்ற பாலங்களை கப்பல் கடந்து செல்லும் போது குறைவான இடத்தில் அதிக துல்லியத்துடன் கப்பலை இயக்க வேண்டும். இப்படிப்பட்ட சிக்கலான பகுதிகளை கப்பல்கள் எப்படி கடக்கிறது என்பதை கப்பலில் பணிபுரியும் மாலுமியான மதன் விளக்கினார். கடல் நீரின் மேற்பரப்பிலிருந்து நீருக்கடியில் கப்பல் எவ்வளவு ஆழத்திற்கு உள்ளது என்பதை Draft அல்லது Draught எனவும், கடல் நீரின் மேற்பரப்பிலிருந்து கப்பல் எவ்வளவு உயரத்திற்கு உள்ளது என்பதை Air Draft என்ற அளவீடுகள் மூலம் அளக்கப்படுகிறது. கப்பல்கள் துறைமுகத்தை அடைந்ததும், அங்குள்ள பாலங்களை அந்த கப்பல் கடக்க முடியுமா முடியாதா என்பதை Draft அளவீடுகளை வைத்து தீர்மானித்த பின் தான், பாலத்தை கடக்க அனுமதியே வழங்கப்படும். அதேபோல், கப்பலின் நீளத்தை பொறுத்து தான் குறுகிய கால்வாய்களை கடக்க அனுமதி அளிக்கப்படும். பாலத்தையும், குறுகலான கால்வாய் பகுதிகளையும் கடக்கும் போது, அந்தந்த துறைமுகத்தை சேர்ந்த வழிகாட்டுதல்களில் மிகவும் தேர்ச்சி பெற்ற பைலட் ஒருவர் நமது கப்பலில் வந்து கேப்டனுக்கு வழிகாட்டுவார். அப்போது, மிக எளிதாக பாலத்தையோ, கால்வாய்களையோ கடக்க முடியும் என்றார். பால்டிமோர் கப்பல் விபத்திற்கான காரணம் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES அமெரிக்காவில் கப்பல் விபத்து ஏற்பட்டதற்கான சில பொதுவான காரணங்களையும் குறிப்பிடுகிறார் சரக்கு கப்பல் கேப்டன் குமார். இது குறித்து பேசிய அவர், ‘‘அமெரிக்காவில் விபத்து ஏற்பட்டதற்கான முழுமையாக காரணம் இன்னமும் வெளியாகவில்லை. ஆனால், விபத்திற்கான சில சாத்தியக்கூறுகளை நாம் உணர முடிகிறது. Air Draft அளவீட்டின் படி அந்தப் பாலத்தை கடக்க அக்கப்பல் அனுமதி பெற்று லோக்கல் பைலட் உடன் பயணித்த போது, முதன்மை மின் சக்தி இல்லாமல் போனது. அப்போது, ஜெனரேட்டரின் சக்தி இஞ்ஜினின் இயக்கத்திற்கு போதுமானதாக இல்லாத நிலை ஏற்பட்டிருக்கும். குறிப்பிட்ட வேகத்தில் வந்த அந்தக் கப்பலின் Propeller மற்றும் Rudder கருவியை இயக்க முடியாமல், கப்பலின் திசையை மாற்ற முடியாத சூழல் ஏற்பட்டிருக்கும். நங்கூரம் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டோ அல்லது நங்கூரம் பயன்படாத நிலை ஏற்பட்டு தான், பாலத்தின் உயரம் குறைவான பகுதியில் கப்பல் மோதியிருக்க வேண்டும். விபத்தின் வீடியோக்களை பார்க்கும் போது, இந்த பொதுவான காரணங்களை நாம் உணர முடிகிறது. இவை விபத்திற்கான சாத்தியக்கூறுகளாக இருந்திருக்கும்,’’ என்கிறார் அவர். https://www.bbc.com/tamil/articles/cw4zjjl77kno
-
ஐ.பி.எல் 2024 - செய்திகள்
INNINGS BREAK 8th Match (N), Hyderabad, March 27, 2024, Indian Premier League Sunrisers Hyderabad (20 ov) 277/3 Mumbai Indians MI chose to field. Current RR: 13.85 • Last 5 ov (RR): 75/0 (15.00) Win Probability:SRH 99.01% • MI 0.99% SRH end up 277 for 3 - the highest total ever in the IPL, going past RCB's 263 for 5. Mumbai's plan was to save Bumrah for Klaasen. But Head and Abhishek did the early damage. Head got to his fifty off just 18 balls, the fastest for SRH. But the record was broken soon after when Abhishek brought up his off 16 balls. By comparison, Klaasen's was pedestrian, off 23 balls, but he finished on 80 off 34.
-
முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அகிலேந்திரன் வீதி விபத்தில் உயிரிழப்பு
27 MAR, 2024 | 08:59 PM வவுனியா ஓமந்தை பகுதியில் இன்று புதன்கிழமை (27 ) மாலை இடம்பெற்ற கோர விபத்தில் முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அகிலேந்திரன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். டிப்பர் வாகனமும் கப் வாகனமும் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் இவ் விபத்துச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. வைத்தியர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இரவு 7.00மணியளவில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதுடன் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். மருத்துவ நிர்வாக முதுமாணிப் பட்டதாரியான இவர் வவுனியா வைத்தியசாலை மற்றும் செட்டிக்குளம் ஆதார வைத்தியசாலை ஆகியவற்றின் முன்னாள் பணிப்பாளரும் ஆவார். https://www.virakesari.lk/article/179845
-
அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்த ஜனாதிபதிக்கு மக்களாணை கிடையாது - நாமல்
27 MAR, 2024 | 03:26 PM (இராஜதுரை ஹஷான்) பாராளுமன்றத்தின் ஊடாக அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்தும் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு ஜனாதிபதிக்கு மக்களாணை கிடையாது. கட்சியின் தீர்மானங்களுக்கு எதிராக செயற்படுபவர்கள் வெளியேறலாம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். கொழும்பில் புதன்கிழமை (27) இடம்பெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, பொருளாதார நெருக்கடிக்கு 2015 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஆட்சியில் இருந்த நல்லாட்சி அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும். சர்வதேச பிணைமுறிகளில் இருந்து 12 பில்லியன் டொலர் கடன்களை பெற்றது. இந்த நிதிக்கு என்ன நேர்ந்தது என்பதை அறியவில்லை. மறுபுறம் அம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவுக்கு விற்கப்படடது. அந்த நிதியும் மாயமானது. நல்லாட்சி அரசாங்கம் தேசிய உற்பத்திகளை மேம்படுத்த எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை. இறக்குமதி, பொருளாதாரத்தில் மாத்திரம் கவனம் செலுத்தியது. தேசிய பொருளாதாரத்துக்கு வலுசேர்க்கும் வகையில் புதிய அபிவிருத்தி திட்டங்கள் ஏதும் நிர்மாணிக்கப்படவில்லை. இவ்வாறான பின்னணியில் தான் பொருளாதார பாதிப்பு தீவிரமடைந்தது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தின் ஊடாக அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்தும் செயற்பாடுகளை முன்னெடுக்கிறார். இதற்கு அவருக்கு மக்களாணை கிடையாது. அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்துவதாக இருந்தால் ஜனாதிபதி புதிதாக மக்களாணை பெற்றுக்கொள்ள வேண்டும். ஜனாதிபதி தேர்தல் குறித்து கட்சி மட்டத்தில் எவ்வித தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை. கட்சி ரீதியில் எடுக்கப்படும் தீர்மானங்களுக்கு எதிராக செய்படுபவர்கள் கட்சியில் இருந்து தாராளமாக வெளியேறலாம் என்றார். https://www.virakesari.lk/article/179829
-
தாக்குதலில் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்படாவிடின் திருக்கோவில் வைத்தியசாலை நிரந்தரமாக மூடப்படும்
திருக்கோவில் வைத்தியசாலை நாளை முதல் வழமை போன்று செயற்படும் கடந்த 11 ஆம் திகதி முதல் மூடப்பட்டிருந்த திருக்கோவில் வைத்தியசாலையின் செயற்பாடுகள் நாளை (28) முதல் வழமை போன்று முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் இடம்பெற்ற அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. கடந்த 11 ஆம் திகதி அம்பாறை – திருக்கோவிலிலுள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற மரதன் ஓட்டப்போட்டியில் பங்கேற்ற மாணவன் சுகவீனமடைந்த நிலையில், திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், மேலதிக சிகிச்சைகளுக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி குறித்த மாணவன் உயிரிழந்தார். இதனையடுத்து, திருக்கோவில் ஆதார வைத்தியசாலையை அண்மித்து இடம்பெற்ற எதிர்ப்பினையடுத்து வைத்தியசாலை மூடப்பட்டது. வைத்தியசாலைக்கு சேதம் விளைவித்தவர்களும் வைத்தியருக்கு அச்சுறுத்தல் விடுத்தவர்களும் கைது செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து கல்முனை சுகாதார பிரிவிற்குட்பட்ட பகுதியில் பணிப்பகிஷ்கரிப்பு நேற்று முன்னெடுக்கப்பட்டது. இந்த நிலையில், அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்ற போது, திருக்கோவில் ஆதார வைத்தியசாலையை மீள திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது. சம்பவம் தொடர்பிலான முக்கிய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் தெரிவித்தனர். https://thinakkural.lk/article/297347
-
அமெரிக்காவில் கப்பல் மோதியதில் பாலம் இடிந்தது - ஆற்றில் மூழ்கிய வாகனங்கள்
அமெரிக்க கப்பல் விபத்து: ஏராளமான உயிர்களை காப்பாற்றிய கடைசி நேர அழைப்பு - என்ன நடந்தது? பட மூலாதாரம்,GETTY IMAGES 27 மார்ச் 2024, 08:34 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் 948 அடி நீள கன்டெய்னர் கப்பலான டாலியின் குழுவினர் என்ன நடக்கிறது என்பதை உணர்ந்து கொள்ளும்போது, மிகவும் தாமதமாகிவிட்டது. பால்டிமோர் துறைமுகத்திலிருந்து இலங்கைக்கு 27 நாள் பயணத்தின் தொடக்கம் அது. துறைமுகத்தை விட்டு வெளியேறியதும் கப்பல் மின்சாரத்தை முற்றிலும் இழந்துவிட்டது. அப்போது பால்டிமோர் நகரத்தின் சின்னமான பிரான்சிஸ் ஸ்காட் கீ பாலத்தை நோக்கி கப்பல் சென்று கொண்டிருந்தது. அது நள்ளிரவு நேரம். கப்பலின் விளக்குகள் திடீரென அணைந்ததால், கப்பலில் இருந்த பணியாளர்கள் இருளில் மூழ்கினர். கப்பல் இறந்துவிட்டது - மின்னணு சாதனங்கள் ஏதும் இல்லை. இயந்திரம் செயலிழந்துவிட்டது. கப்பலில் இருந்தவர்கள் என்னவெல்லாமோ செய்து பார்த்தார்கள். நடப்பது எதையும் தடுக்க முடியவில்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES என்ன செய்வதென்றே தெரியாமல் தவித்த கப்பல் மாலுமிகள் சிக்கலைச் சரிசெய்து மீண்டும் கப்பலைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான முயற்சிகள் தோல்வியுற்றன. பல சோதனை முயற்சிகள் செய்யப்பட்டதால் ஏராளமான அலாரங்கள் ஒலித்தன. கப்பலில் இருந்த ஒரு உள்ளூர் மாலுமி வெறித்தனமாக கட்டளையிட்டார். சுக்கான் துறைமுகத்திற்கு கப்பலைத் திருப்பவும், பாலத்தை நோக்கி நகர்வதைத் தடுக்க நங்கூரத்தை இறக்கவும் பணியாளர்களிடம் கூறினார். எமர்ஜென்சி ஜெனரேட்டர் ஆன் செய்யப்பட்டதாக நம்பப்பட்டாலும், கப்பல் அதன் என்ஜின்களின் திறனை மீண்டும் பெறவில்லை. விமானிகள் வேறு வழியின்றி தவித்தனர். உள்ளூர் நேரப்படி நள்ளிரவு 1.30க்கு சற்று முன், அவர்கள் கடைசி நேர அவசர அழைப்பை (Mayday Call) விடுத்தனர். கப்பல் மோதப்போகிறது என்று எச்சரித்தனர். "ஒரு கப்பல் நெருங்கி வருகிறது, அது திசைமாற்றி கட்டுப்பாட்டை இழந்துவிட்டது," என்று மேரிலாந்து போக்குவரத்து ஆணையத்தின் அதிகாரி ஒருவர் ரேடியோ டிராஃபிக்கில் சிறிது நேரத்திற்குப் பிறகு கூறுவதைக் கேட்க முடிந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES பல உயிர்களை காப்பாற்றிய அவசர அழைப்பு "நீங்கள் அதைக் கட்டுப்படுத்தும் வரை, நாங்கள் எல்லா போக்குவரத்தையும் நிறுத்த வேண்டும்." என்று அவர் கூறிக் கொண்டிருந்தார். மேரிலாண்ட் ஆளுநர் வெஸ் மூர் கப்பல் குழுவினரை "ஹீரோக்கள்" என்று பாராட்டியதற்கு இந்த அவசர அழைப்புதான் காரணம். அவர்களின் விரைவான நடவடிக்கை "உயிர்களைக் காப்பாற்றியது" என்று கூறினார். ஏனெனில் அழைப்புக்கும் மோதலுக்கும் இடையிலான இரண்டு நிமிடங்களில் பாலத்தின் மீது வாகனப் போக்குவரத்தை அதிகாரிகளால் நிறுத்த முடிந்தது. ஆனாலும், 2.4 கிமீ நீள பாலத்தின் மீது ஒரு கான்கிரீட் தூணில் டாலி கப்பல் மோதுவதை அவர்களால் நிறுத்த முடியவில்லை. படாப்ஸ்கோ ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பாலம் இருண்ட, குளிர்ந்த நீரில் துண்டு துண்டாக இடிந்து விழுந்தது. பாலத்தில் பணிபுரியும் ஒரு சாலைக் குழுவைச் சேர்ந்த 6 பேர் இறந்துவிட்டதாகக் கருதப்படுகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES மேரிலேண்ட் மக்களுக்கு முக்கியமான பாலம் ஆறு தொழிலாளர்கள் மெக்சிகோ, குவாத்தமாலா, ஹோண்டுராஸ் மற்றும் எல் சால்வடோர் ஆகிய நாடுகளின் குடிமக்கள் என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. பிபிசி இதை சுயாதீனமாக உறுதிப்படுத்தவில்லை. கருத்துக்காக தூதரக அதிகாரிகளை தொடர்பு கொண்டுள்ளது. கப்பலில் இருந்த 22 பணியாளர்களும் இந்தியர்கள். இந்தியாதான் உலகளாவிய கடல்வழித் தொழிலில் முக்கிய பங்கு வகிக்கிறது. கப்பலின் பணியாளர்கள் யாருக்கும் குறிப்பிடத்தக்க பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை. 47 ஆண்டுகளுக்கு முன்பு திறக்கப்பட்ட பாலம் இடிந்து விழுந்தது, ஆளுநர் மூர் உட்பட நகரத்தில் பலரை உலுக்கியது. "நாள்தோறும் சுமார் 30,000 மேரிலேண்ட் மக்களுக்கு இது ஒரு வழக்கமான பயணப் பாதையாகும். "47 ஆண்டுகளுக்கும் மேலாக, இது எங்களுடன் இருந்தது." என்று ஆளுநர் மூர் ஒரு செய்தியாளர் சந்திப்பில் கூறினார். டாலி கப்பல் கட்டுப்பாட்டை இழந்ததற்கு என்ன காரணம் என்பது தெளிவாகத் தெரியவில்லை. தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியத்தின் தலைவரான ஜெனிஃபர் ஹோமண்டி, புலனாய்வாளர்கள் இப்போது பயணத் தரவுப் பதிவேட்டில் இருந்து தரவை ஆய்வு செய்ய முற்படுவார்கள் என்று கூறினார். செவ்வாய்க் கிழமை காலை பால்டிமோரில் சூரியன் உதித்தபோது, பாலத்திற்கு அருகிலுள்ள பலதரப்பட்ட மக்கள் பாலத்தின் மீது கப்பல் மோதிய காட்சியைக் கண்டு அதிர்ச்சியை வெளிப்படுத்தினர். "நான் அதை உணர்ந்தேன்... வீடு முழுவதும் அதிர்ந்தது," என்று தண்ணீருக்கு அருகில் வசிக்கும் ஜான் ஃபிளான்ஸ்பர்க் பிபிசியிடம் கூறினார். பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு, நிகழ்விடத்தில் மேரிலேண்ட் மாநில ஆளுநர் வெஸ் மூர். பொருளாதார சிக்கல் ஏற்படும் அபாயம் காணாமல் போனவர்களைத் தேடுவதில் தங்கள் கவனம் உள்ளது என்று அதிகாரிகள் மீண்டும் மீண்டும் வலியுறுத்தினாலும், இந்த சம்பவம் அமெரிக்காவின் கிழக்கு கடற்கரையில் மிகவும் பரபரப்பான துறைமுகங்களில் ஒன்றான பால்டிமோர் துறைமுகத்திலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். மேரிலாந்து செனட்டர் பென் கார்டின் செய்தியாளர்களிடம் கூறுகையில், நீர்வழிப்பாதையை மீண்டும் திறப்பது அமெரிக்க பொருளாதாரத்திற்கு "முக்கியமானதாக" இருக்கும் என்றார். எஃகு மற்றும் அலுமினியம் முதல் விவசாய உபகரணங்கள் வரையிலான பொருட்களுக்கான முக்கிய பிராந்திய மையமாக இந்த துறைமுகம் உள்ளது, மேலும் இது ஜெனரல் மோட்டார்ஸ் மற்றும் ஹோண்டா உள்ளிட்ட கார் தயாரிப்பாளர்களால் பயன்படுத்தப்படுகிறது. மேரிலாண்ட் துறைமுக நிர்வாகத்தின் தரவுகளின்படி, கடந்த ஆண்டு குறைந்தது 750,000 வாகனங்களை இந்தத் துறைமுகம் கையாண்டதாகக் காட்டுகிறது. டாலி கப்பல் இப்படி விபத்தில் சிக்குவது இது முதல் முறை அல்ல. பெல்ஜியத்தின் ஆண்ட்வெர்ப் துறைமுகத்தில் 2016 ஆம் ஆண்டில் இந்தக் கப்பல் மற்றொரு மோதலில் ஈடுபட்டது. அந்த நேரத்தில் காயங்கள் அல்லது குறிப்பிடத்தக்க சேதம் எதுவும் இல்லை. https://www.bbc.com/tamil/articles/c72e7v8jrrro
-
ஐ.பி.எல் 2024 - செய்திகள்
ஓமண்ணை ட்ரவிஸ் ஹெட், அபிசேக் சர்மா ஆகியோர் அகோர அடி.
-
காசாவை நோக்கி பரசூட்கள் மூலம் உணவுப்பொதிகளை வீசியது அமெரிக்கா
கடலுக்குள் விழுந்த உதவிப் பொருட்களை மீட்க முயன்ற 12 பேர் பலி - காசாவில் தொடரும் துயரம் Published By: RAJEEBAN 27 MAR, 2024 | 12:18 PM காசாமீது வான்வெளி ஊடாக வீசப்பட்ட உதவிப் பொருட்கள் கடலில் விழுந்தவேளை அவற்றை எடுக்க முயன்ற 12 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இஸ்ரேலின் ஆறுமாத இராணுவ நடவடிக்கை காரணமாக காசவில் பெரும் பட்டினிநிலை உருவாகியுள்ளது என்ற அச்சத்தின் மத்தியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. வடகாசாவில் உள்ள பென்லகியா கடற்கரையோரத்தை நோக்கி பொதுமக்கள் ஒடுவதையும் அதன் பின்னர் ஆழமான நீரில் பொதுமக்கள் காணப்படுவதையும் பின்னர் அவர்களின் உடல்கள் மீட்கப்படுவதையும் காண்பிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன. தாடியுடன் காணப்படும் இளம்வயது நபர் ஒருவரின் உடல் கடலில் இருந்து மீட்கப்படுவதையும் ஆனால் அவரின் கண்களில் அசைவில்லாததையும் நபர் ஒருவர் அவரை காப்பாற்ற முயல்வதையும் அவர் இறந்துவிட்டார் என யாரோ தெரிவிப்பதையும் வீடியோ காண்பித்துள்ளது. அவர் தனது பிள்ளைகளிற்கு உணவை பெற்றுக்கொள்வதற்காக கடலுக்குள் நீந்தி சென்றார் அவர் தியாகியாக மாறிவிட்டார் என கடற்கரையில் காணப்படும் ஒருவர் தெரிவிப்பதை வீடியோ காண்பித்துள்ளது. அவர்கள் தரைவழி ஊடாக மனிதாபிமான உதவிகளை வழங்கவேண்டும் ஏன் இப்படி செய்கின்றார்கள் என அவர் கேள்விஎழுப்பியுள்ளார். 18பொதிகளில் மனிதாபிமான உதவிகளை பரசூட் மூலம் வீசியதாக தெரிவித்துள்ள பென்டகன் பரசூட் இயங்காததால் அவை கடலிற்குள் விழுந்தன என தெரிவித்துள்ளது. காசாவில் சிலர் களைகளை உண்பதற்கும் விலங்குகளின் உணவிலிருந்து தயாரிக்கப்படும் ரொட்டியை உண்பதற்குமான முயற்சிகளில் ஈடுபட்டுள்ள பரிதாபமான நிலையில் அங்கு மனிதாபிமான பொருட்கள் விநியோகத்தின் போது உயிரிழப்புகள் ஏற்படுவது வழமையாகியுள்ளது. https://www.virakesari.lk/article/179813
-
தெற்காசியாவின் மிகப்பெரிய மகப்பேறு மருத்துவமனை நாளை மக்களிடம் கையளிக்கப்படும்!
கராப்பிட்டியவில் புதிய மகப்பேறு வைத்தியசாலை திறப்பு Published By: DIGITAL DESK 3 27 MAR, 2024 | 12:22 PM காலி, கராப்பிட்டியவில் ஜேர்மன் – இலங்கை நட்புறவு புதிய மகப்பேறு வைத்தியசாலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதனை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று புதன்கிழமை (27) காலை திறந்து வைத்தார். வைத்தியசாலையில் 640 படுக்கைகள், 06 சத்திர சிகிச்சை பிரிவுகள், தீவிர சிகிச்சை, குழந்தைகள் பிரிவு மற்றும் நவீன வசதிகள் உள்ளன. இந்த வைத்தியசாலை இலங்கையில் மாத்திரமன்றி தெற்காசியாவிலேயே மிகப் பெரிய மகப்பேறு வைத்தியசாலையாகவும் விளங்குகிறது. https://www.virakesari.lk/article/179812
-
டி20 உலகக் கோப்பைச் செய்திகள்
டி20 உலகக்கோப்பை: இந்திய அணியில் ரோகித், கோலி இடம் பெறுவதில் என்ன பிரச்னை? கோலியால் பிசிசிஐ-க்கு என்ன சவால்? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், விமல் குமார் பதவி, மூத்த விளையாட்டு செய்தியாளர், பிபிசி இந்தி 26 மார்ச் 2024 “டி20 கிரிக்கெட் என்று வரும்போது, அதனை பிரபலப்படுத்த என் பெயர் உலகின் பல்வேறு பகுதிகளிலும் பயன்படுத்தப்படுகிறது என்பதை நான் அறிவேன். என்னுள் இன்னும் கிரிக்கெட் (டி20) இருப்பதாக உணர்கிறேன்.” விராட் கோலியின் இந்த கருத்து எதிர்பார்த்தது போலவே, சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. தனது குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவதற்காக கோலி கடந்த சில மாதங்களாக கிரிக்கெட்டில் இருந்து விலகி இருந்தார். சமீபத்தில், இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் கூட அவர் விளையாடவில்லை. இதற்கிடையில், ஜூன் மாதம் நடைபெறவுள்ள டி-20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் கோலி தேர்வு செய்யப்படுவது கடினம் என்பது போன்ற ஊகங்கள் தொடர்ந்து எழுந்தன. மனம் திறந்து பேசிய விராட் கோலி அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பைத் தொடரில் இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் ஷர்மா இருப்பார் என்பதை சில வாரங்களுக்கு முன்பு பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா உறுதிப்படுத்தினார். அதே நேரம், உலகக் கோப்பை தொடரில் கோலி விளையாடுவது குறித்த கேள்வியை அவர் தவிர்த்துவிட்டார். இதைத் தொடர்ந்து பல்வேறு ஊடகங்கள், உலகக் கோப்பை தொடருக்கான அணியில் கோலி இடம்பெற மாட்டார் என்று தங்களுக்கு தகவல் கிடைத்ததாக செய்திகளை வெளியிட்டன. இதற்கெல்லாம் மேலாக, இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரும் கோலிக்கு மிகவும் நெருக்கமானவராக கருதப்படுபவருமான ரவி சாஸ்திரியும், குஜராத் டைட்டன்ஸ் மும்பை இந்தியன்ஸ் இடையேனான ஐபிஎல் போட்டியின் வர்ணனையின்போது, வரவிருக்கும் உலகக் கோப்பையில், இளம் வீரர்கள் மற்றும் ஃபார்முக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்று கூறியிருந்தார். கோலியின் பெயரை அவர் நேரடியாக குறிப்பிடவில்லை என்றாலும், கோலி குறித்துதான் அவர் கூறினார் என்பது தெளிவானது. காரணம், இதே போட்டியில் சக வர்ணனையாளராக இருந்த இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன், "சர்வதேச அளவில் டி20 கிரிக்கெட்டின் பரவலை விரிவுபடுத்துவதற்காக கிரிக்கெட்டின் உச்ச அமைப்பான ஐசிசி, கோலி போன்ற ஜாம்பவான்களையும் அவரது பிராண்டையும் பயன்படுத்துகிறது. அப்படியிருக்கும் போது, உலகக் கோப்பையில் கோலி இல்லாத இந்திய அணியை எப்படி நினைத்துப் பார்க்க முடியும்" என்று பேசியிருந்தார். பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு, கோலி மார்ச் 25ஆம் தேதி நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 49 பந்துகளில் 77 ரன்கள் குவித்த கோலி அணியின் வெற்றிக்கு உதவியதோடு ஆட்ட நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார். போட்டிக்கு பின்னர், ஹர்ஷா போக்லேவுக்கு விராட் கோலி அளித்த பேட்டியில் மனம் திறந்துபேசினார். அவரது இந்த பேச்சு ரசிகர்களுக்கு சென்றடைய பேசப்பட்டவை அல்ல, மாறாக பிசிசிஐ தேர்வாளர்களை சென்றடைவதற்காக பேசப்பட்டவை. இந்த பேட்டிக்கு பின்னர், இந்திய அணியின் தேர்வாளரான அஜித் அகர்கர் மற்றும் அவரது குழுவினர் பக்கம் பந்தை கோலி திருப்பிவிட்டுள்ளார். உலகக் கோப்பை தொடர்பான கேப்டன் ரோகித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோரின் திட்டங்களுடன் தான் தற்போதும் பொருந்தி போவதை கோலி நன்கு அறிந்துள்ளார். ஆனால், இதில் தேர்வாளர்களுக்கு சில தயக்கங்கள் உள்ளன. பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு, டிராவிட்- அஜித் அகத்கர் ரோகித், கோலி இருவரும் ஒருசேர இடம் பெறுவதில் என்ன பிரச்னை? 2021 மற்றும் 2022ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தோல்விக்கு இந்தியாவின் டாப் ஆர்டர் மூவரும்தான் (ரோகித்-கே.எல். ராகுல்-கோலி) காரணம் என்பதில் சந்தேகமில்லை. ஆங்கர் ரோலில் மூவரும் ஒரே மாதிரி பேட் செய்கிறார்கள். ஒருநாள் உலகக் கோப்பையின் போது, கேப்டன் ரோஹித் முற்றிலும் ஆக்ரோஷமான அணுகுமுறையைக் கடைப்பிடித்தார். 50 ஓவர் கிரிக்கெட்டில் டி20 போட்டி போன்ற அதிரடியை வெளிப்படுத்தினார். கே.எல். ராகுலை விட இடது கை ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சிறந்த தேர்வாகத் தெரிகிறார். இப்போது தேர்வாளர்கள் முன் இருக்கும் கேள்வி மூன்றாவது இடத்துக்கு கோலியை தேர்வு செய்வதா அல்லது சுப்மன் கில்லை தேர்வு செய்வதா என்பதுதான். ஏனெனில் மிடில் ஆர்டரில் சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரவீந்திர ஜடேஜா ஆகியோரின் இடம் உறுதியாகி இருக்கிறது. கோலி அல்லது கில் விளையாடினால், ரிங்கு சிங்கை ஆறாவது இடத்தில் பினிஷராக பயன்படுத்த முடியாது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, விராட் கோலி - ரோகித் சர்மா அத்தகைய சூழ்நிலையில், தேவைப்பட்டால், விளையாடும் 11 பேர் பேர் கொண்ட அணியில் கில்லை தேர்வு செய்யாமல் இருக்கலாம். ஆனால், விராட் கோலியை அப்படி செய்ய முடியாது. கோலி அணியில் நீடிக்கலாமா என்ற விவாதம் இங்கிருந்து தொடங்கியது. அனுபவம் மிக்க தற்போதைய கேப்டனை மேட்ச் வின்னராக கருதும்போது, முன்னாள் கேப்டனிடம் ஏன் இந்த மாற்றாந்தாய் மனப்பான்மை என்று கோலியின் ஆதரவாளர்களும் ரோகித் சர்மாவின் விமர்சகர்களும் கேள்வி எழுப்புகின்றனர். சராசரி மற்றும் ஸ்ட்ரைக் ரேட் இரண்டிலும் ரோகித்தை விட கோலி சிறப்பான நிலையில் இருக்கிறார். ஆனால், ஒருநாள் உலகக் கோப்பையின் போது ஹர்திக் பாண்டியா காயமடையாமல் இருந்திருந்தால் ரோகித் இந்த அணியில் இருந்திருக்க மாட்டார் என்றும், ரோகித் தனது ஆட்டத்தில் திடீரென்று இவ்வளவு பெரிய மாற்றத்தை கொண்டு வந்திருக்க மாட்டார் என்றும் பிசிசிஐ மற்றும் தேர்வாளர்கள் கருதுகின்றனர். ரோகித், கோலி ஆகிய இரண்டு ஜாம்பவான்களையும் ஆடும் லெவனில் ஒருசேர வைத்திருப்பது அணியின் சமநிலையை பாதிக்கக் கூடும் என்ற சிக்கலும் உள்ளது. கோலியால் பிசிசிஐ-க்கு புதிய சவால் ரோகித் உலகக் கோப்பையின் ஒரு அங்கமாக இருந்தால், அவரை யாரும் அணியில் இருந்து நீக்க முடியாது என்பது கோலிக்கு தெரியும். காரணம், ரோஹித்தின் ஸ்ட்ரைக் ரேட் குறைவாக இருந்தாலும் டி20 கிரிக்கெட்டில் மற்ற எந்த வீரரையும் விட மேட்ச் வின்னிங் இன்னிங்ஸ்களை அவர் அதிகம் விளையாடியுள்ளார் என்பதற்கு வரலாறு சாட்சி. எல்லாவற்றிற்கும் மேலாக, மெல்போர்னில் 2022 உலகக் கோப்பையின் போது பாகிஸ்தானுக்கு எதிரான அவரது வரலாற்று இன்னிங்ஸை ஒருவரால் எப்படி மறக்க முடியும்? ஒட்டுமொத்தமாக, தற்போது சிறப்பான இன்னிங்ஸை விளையாடியதன் மூலம் அணி தேர்வாளர்களுக்கு கோலி சவால் விடுத்துள்ளார். பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரராக கோலி விளையாடி வருவதால், ரோகித்துடன் இணைந்து தொடக்க ஆட்டக்காரராக விளையாட வேண்டும் என்பதும் அவரது வாதமாக இருக்க வேண்டும். ஆனால் இந்த இரண்டு வீரர்களும் தொடக்க ஜோடியாக இணைந்து சில போட்டிகளில் மட்டுமே விளையாடியிருப்பது தேர்வாளர்களுக்குப் பிரச்னையாக இருக்கும். வரும் வாரங்களில் கோலி மீண்டும் சிறப்பான ஸ்கோர்களை குவித்தால், தேர்வாளர்களின் வாதம் முறியடிக்கப்படலாம். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரோகித் சர்மா - டிராவிட் ஐபிஎல்லில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குவதால்தான் கோலி ரன்களை குவிக்கிறார், ஃபார்மில் இருக்கிறார். மாறாக, இந்திய அணியில் அவர் மூன்றாவது இடத்தில் களமிறங்குகிறார் என்றும் தேர்வாளர்கள் கூறக் கூடும். உண்மையை சொல்ல வேண்டுமென்றால், கோலியின் தேர்வு தொடர்பான விசயத்தில் பிரச்னை தீர்க்கப்படுவதற்கு பதிலாக தற்போது தேர்வாளர்களுக்கு பெரிய சவாலாக மாறியுள்ளது. கோலியின் சமீபத்திய கருத்துகளால் தேர்வாளர்களின் பிரச்னை மேலும் அதிகரித்துள்ளது. ஆனால், டி-20 போட்டிகளுக்கு கோலிக்கு பதிலாக இளம் வீரரை தேர்வு செய்யுமாறு பிசிசிஐ, அணி தேர்வாளர்களுக்கு (மறைமுகமாக) செய்தி கொடுத்திருந்தால், இந்த கடினமான முடிவை எடுப்பதில் அகர்கர் சற்று ஆறுதல் அடையக் கூடும். ஆனால், பதினோரு பேர் கொண்ட அணியில் கோலிக்கு இடம் இல்லை என்பதை பயிற்சியாளர் டிராவிட்டும் கேப்டன் ரோகித் சர்மாவும் ரசிகர்கள் முன் எப்படி நியாயப்படுத்த முடியும்? ஒட்டுமொத்தமாக, இந்த விஷயம் தற்போது சுவாரஸ்யமான கட்டத்தை எட்டியுள்ளது. ஐபிஎல் தொடரின் சில வாரங்கள் கோலியின் பேட்டிங்கிற்கு மிகவும் முக்கியமான காலகட்டமாக இருக்கக் கூடும். https://www.bbc.com/tamil/articles/cz4z8wl831no
-
சீனாவிற்கு விஜயம் செய்தார் பிரதமர்
இலங்கையின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளிற்கு சீனா ஆதரவு - இலங்கை பிரதமரிடம் சீன பிரதமர் Published By: RAJEEBAN 27 MAR, 2024 | 11:37 AM இலங்கையின் கடன்மறுசீரமைப்பு நடவடிக்கைகளிற்கு சீனா வலுவான ஆதரவை வெளியிட்டுள்ளது. சீனாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை பிரதமர் தினேஸ் குணவர்த்தனவுடனான சந்திப்பின்போது சீன பிரதமர் லிகியாங் இலங்கையின் கடன்மறுசீரமைப்பு நடவடிக்கைகளிற்கு சீனா தொடர்ந்தும் உதவும் இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கு தொடர்ந்தும் உதவும் என தெரிவித்துள்ளார். பிரதமர் தினேஸ்குணவர்த்தனவும் அவரது குடும்பத்தினரும் சீனா இலங்கைஉறவுகளை வலுப்படுத்துவதற்காக தொடர்ச்சியாக பாடுபட்டுள்ளதாக சீன பிரதமர் பாராட்டியுள்ளார். இலங்கை தொடர்ச்சியாக ஒருசீன கொள்கையை பின்பற்றிவருகின்றது சர்வதேச அரங்கில் ஆதரவளித்துவருகின்றது என சீன பிரதமர் தெரிவித்துள்ளார். கொழும்பு விமானநிலையம் அம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் கொழும்புதுறைமுகம் ஆகியவற்றை அபிவிருத்திசெய்வதற்கு சீனா தொடர்ந்தும் உதவும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179808
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
பாடல் :- ஆறுபடை வீடும் அருள் வழங்கும் முருகா.... பாடியவர் :- கோவை கமலா
-
இலங்கையில் 30,000க்கும் மேற்பட்ட சிறுவர்கள் யாசகம் பெறுகின்றனர்!
27 MAR, 2024 | 01:24 PM இலங்கையில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுவர்கள் யாசகம் பெறுவதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளி விபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார். நாட்டில் பல்வேறு பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் மூலம் இந்த எண்ணிக்கை உறுதி செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இது மிகவும் ஆபத்தான நிலைமையாகும். இந்நிலைமை எதிர்காலத்தையும் பாதிக்கலாம். இது தொடர்பில் கவனம் செலுத்தாவிட்டால் வீதியில் யாசகம் பெறும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்து போதைப்பொருள் விற்பனை, திருட்டு மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் உள்ளிட்ட குற்றச் செயல்கள் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன. இந்த சிறுவர்களில் சிலர் தங்களது பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்களினால் யாசகம் பெறுவதற்கும் பணம் சம்பாதிக்கும் பிற நடவடிக்கைகளுக்கும் தள்ளப்படுவதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளன. 4 முதல் 15 வயதுக்கு உட்பபட்ட பெரும்பாலான சிறுவர்கள் பாடசாலைகளுக்கு செல்லாமல் வீதிகளிலும் புனிதத் தலங்களிலும் சன நெரிசல் மிக்க இடங்களிலும் யாசகம் பெறுகின்றனர். சில பெற்றோர்கள் இந்த சிறுவர்களை கூலி வேலைகளுக்காகவும் வீதியோர வியாபாரங்களுக்காகவும் பயன்படுத்துகின்றனர். இந்த சிறுவர்களில் சிலர் போதைப்பொருள் பாவனைக்கும் பல்வேறு குற்றச்செயல்களுக்கும் அடிமையாகி இருப்பதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது. https://www.virakesari.lk/article/179819
-
ஒக்டோபர் முதல் வாரத்தில் ஜனாதிபதி தேர்தல்; ஜனாதிபதி ரணில் அறிவிப்பு!
நாடாளுமன்ற தேர்தல் இந்த வருடம் நடைபெற்றாலும் ஜனாதிபதி தேர்தல் உரிய காலத்தில் - தேர்தல் ஆணையாளர் Published By: RAJEEBAN 27 MAR, 2024 | 11:20 AM நாடாளுமன்ற தேர்தல் இந்த வருடம் நடைபெற்றாலும் ஜனாதிபதி தேர்தல் உரிய காலத்தில் அதாவது செப்டம்பர் 17 ம் திகதிக்கும் ஒக்டோபர் 17ம் திகதிக்கும் இடையில் நிச்சயமாக நடைபெறும் என தேர்தல்கள் ஆணையாளர் ஆர்எம்ஏஎல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி நாடாளுமன்றத்தை கலைத்தால் நாடாளுமன்ற தேர்தலை நடத்துவதை தவிர வேறு வழியில்லை என குறிப்பிட்டுள்ள அவர் நாடாளுமன்ற கலைக்கப்பட்டால் தேர்தலை நடத்த முடியாது என நாங்கள் தெரிவிக்க முடியாது அதனைநடத்தவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். ஒரு சில மாதங்களிற்குள் இரண்டு தேர்தல்களை நடத்துவதில்ஏதேனும் பிரச்சினை உள்ளதா என்ற கேள்விக்கு பிரச்சினைகள் காணப்பட்டாலும் நாங்கள் உரிய விதத்தில் நாங்கள் அவற்றைகையாண்டு தேர்தலை நடத்தவேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்ற தேர்தலை நடத்தவேண்டியுள்ளதால் ஜனாதிபதி தேர்தலைநடத்துவதில் எந்த தாக்கமும் ஏற்படாது அது உரியநேரத்தில் இடம்பெறும்எனவும் தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதிதேர்தல் செப்டம்பர் 17 திகதி முதல் ஒக்டோபர் 17ம்திகதிக்குள் நடைபெறும் ஜூலை மாத இறுதியில் அல்லது ஆகஸ்ட்மாதத்தில் இது குறித்த அறிவிப்பைவெளியிடுவோம் எனவும் அவர்தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179805
-
மருந்து தரப் பரிசோதனையில் தோல்வியுற்ற நிறுவனங்களிடம் பல கோடி ரூபாய் நிதி பெற்ற கட்சி எது? ஏன்?
பட மூலாதாரம்,REUTERS கட்டுரை தகவல் எழுதியவர், ராகவேந்திர ராவ் மற்றும் ஷதாப் நஸ்மி பதவி, பிபிசி செய்தியாளர்கள் 26 மார்ச் 2024 இந்தியாவில் மருந்துகள், சிகிச்சை மற்றும் மருத்துவ சேவைக்கான செலவு அதிகரித்து வருவது அனைவரும் அறிந்தே. இந்நிலையில், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மலேரியா, கோவிட் அல்லது இதய நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் பல பிரபலமான மருந்துகள் மருந்து தரப் பரிசோதனையில் தோல்வியடைந்து வருவது தெரிந்தால் அது சாமானியர்களுக்கு கவலையளிக்கக் கூடும். அதே நேரத்தில் மருந்து தரப் பரிசோதனையில் தோல்வியடைந்த நிறுவனங்கள், கோடிக்கணக்கிலான ரூபாய் மதிப்பிற்கு தேர்தல் பத்திரங்களை வாங்கி அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக வழங்கியது தெரியவரும் போது விஷயம் இன்னும் தீவிரமாகிறது. உச்ச நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு பாரத ஸ்டேட் வங்கி தேர்தல் ஆணையத்திற்கு வழங்கிய தேர்தல் பத்திரங்கள் தொடர்பான தரவுகளின் பகுப்பாய்விலிருந்தும், தேர்தல் ஆணையத்தால் பகிரங்கப்படுத்தப்பட்ட தகவல்களில் இருந்தும் இதை நாம் அறிந்துகொள்ள முடிகிறது. தரவுகளை ஆய்வு செய்ததில், 23 மருந்து தயாரிப்பு நிறுவனங்களும், ஒரு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையும் தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு சுமார் 762 கோடி ரூபாய் நன்கொடை அளித்திருப்பது தெரிய வந்துள்ளது. மருந்து தரப் பரிசோதனையில் தோல்வியடைந்த எந்தெந்த மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் தேர்தல் பத்திரங்களை வாங்கி அரசியல் கட்சிகளுக்கு வழங்கியுள்ளன என்பதை முதலில் பார்ப்போம். பட மூலாதாரம்,GETTY IMAGES 1. டோரெண்ட் ஃபார்மாசூட்டிக்கல்ஸ் லிமிடெட் • இந்த நிறுவனத்தின் பதிவு செய்யப்பட்ட அலுவலகம் குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ளது. • 2018 மற்றும் 2023 க்கு இடையில் இந்த நிறுவனம் தயாரித்த மூன்று மருந்துகளின் மருந்து தரப் பரிசோதனைகள் தோல்வியடைந்தன. • இந்த மருந்துகள் Deplatt A 150, Nikoran IV 2 மற்றும் Lopamide. • Deplet A 150 மாரடைப்பை தடுக்கிறது மற்றும் Nicoran IV 2 இதயத்தின் வேலைச்சுமையை குறைக்கிறது. லோபாமைடு (Lopamide) குறுகிய கால அல்லது நீண்ட கால வயிற்றுப்போக்குக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது • இந்த நிறுவனம் 2019 மே 7 முதல் 2024 ஜனவரி 10 ஆம் தேதி வரை 77.5 கோடி ரூபாய் மதிப்புள்ள தேர்தல் பத்திரங்களை வாங்கியது. • இந்த 77.5 கோடி ரூபாயில் 61 கோடி ரூபாய் பாரதிய ஜனதா கட்சிக்கு வழங்கப்பட்டது. • இந்த நிறுவனம் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சாவுக்கு 7 கோடியும், காங்கிரஸுக்கு 5 கோடி ரூபாயும் வழங்கியது. 2. சிப்லா லிமிடெட் • சிப்லா லிமிடெட்டின் பதிவு செய்யப்பட்ட அலுவலகம் மும்பையில் உள்ளது. • 2018 மற்றும் 2023 க்கு இடையில், இந்த நிறுவனம் தயாரித்த மருந்துகள் ஏழு முறை மருந்து தரப் சோதனைகளில் தோல்வியடைந்தன. • மருந்து தரப் பரிசோதனையில் தோல்வியடைந்த மருந்துகளில் ஆர்சி கஃப் சிரப், லிப்வாஸ் மாத்திரைகள், ஒன்டான்செட்ரான் மற்றும் சிப்ரெமி ஊசி போன்றவை அடங்கும். • சிப்ரெமி ஊசியில் கோவிட் சிகிச்சையில் பயன்படுத்தப்படும் ரெம்டெசிவிர் மருந்து உள்ளது. • லிப்வாஸ், கொலஸ்ட்ராலைக் குறைக்கவும், இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கவும் பயன்படுகிறது. • புற்றுநோய் கீமோதெரபி, கதிர்வீச்சு சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சையால் ஏற்படும் குமட்டல் மற்றும் வாந்தியைத் தடுக்க ஒண்டான்செட்ரான் பயன்படுத்தப்படுகிறது. • இந்த நிறுவனம் 2019 ஜூலை 10 முதல் 2022 நவம்பர் 10 ஆம் தேதிக்கு இடையே 39.2 கோடி ரூபாய் மதிப்புள்ள தேர்தல் பத்திரங்களை வாங்கியுள்ளது. • இவற்றில் 37 கோடி ரூபாய் மதிப்பிலான பத்திரங்கள் பாஜகவுக்கும், 2.2 கோடி மதிப்புள்ள பத்திரங்கள் காங்கிரசுக்கும் கொடுக்கப்பட்டன. பட மூலாதாரம்,GETTY IMAGES 3. சன் பார்மா லேபரட்டரீஸ் லிமிடெட் • சன் பார்மா லேபரட்டரீஸ் மும்பையை தலைமையிடமாகக் கொண்டுள்ளது. • 2020 முதல் 2023 வரை ஆறு முறை இந்த நிறுவனம் தயாரித்த மருந்துகளின் மருந்து தரப் பரிசோதனைகள் தோல்வியடைந்தன. • சோதனையில் தோல்வியடைந்த மருந்துகளில் கார்டிவாஸ், லாடோப்ரோஸ்ட் ஐ ட்ராப்ஸ் மற்றும் ஃப்ளெக்சுரா டி ஆகியவை அடங்கும். • கார்டிவாஸ் உயர் ரத்த அழுத்தம், இதயம் தொடர்பான மார்பு வலி (அன்ஜைனா) மற்றும் இதய செயலிழப்புக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது. • 2019 ஏப்ரல் 15 மற்றும் 2019 மே 8 ஆகிய நாட்களில் இந்த நிறுவனம் மொத்தம் 31.5 கோடி ரூபாய் மதிப்புள்ள தேர்தல் பத்திரங்களை வாங்கியது. • இந்த பத்திரங்கள் அனைத்தும் பாஜகவுக்கு வழங்கப்பட்டுள்ளன. 4. ஃஜைடஸ் ஹெல்த்கேர் லிமிடெட் • ஃஜைடஸ் ஹெல்த்கேர் லிமிடெடின் தலைமை அலுவலகம் மும்பையில் உள்ளது. • 2021 ஆம் ஆண்டில் இந்த நிறுவனம் தயாரித்த ரெம்டெசிவிர் மருந்துகளின் ஒரு தொகுதியில் தரம் இல்லாதது பற்றி பிகாரின் மருந்து ஒழுங்குமுறை அமைப்பு கூறியது. • கோவிட் தொற்றுக்கான சிகிச்சையில் ரெம்டெசிவிர் பயன்படுத்தப்படுகிறது • 2022 அக்டோபர் 10 மற்றும் 2023 ஜூலை 10 க்கு இடைப்பட்ட காலத்தில் இந்த நிறுவனம் 29 கோடி ரூபாய் மதிப்புள்ள பத்திரங்களை வாங்கியுள்ளது. • இதில் பாஜகவுக்கு 18 கோடியும், சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சாவுக்கு 8 கோடியும், காங்கிரஸுக்கு 3 கோடியும் கொடுக்கப்பட்டது. பட மூலாதாரம்,GETTY IMAGES 5. ஹெட்ரோ ட்ரக்ஸ் லிமிடெட் மற்றும் ஹெட்ரோ லேப்ஸ் லிமிடெட் • இந்த நிறுவனங்களின் தலைமையகம் தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ளது. • 2018 மற்றும் 2021 க்கு இடையில் இந்த நிறுவனம் தயாரித்த மருந்துகள் தொடர்பாக நடத்தப்பட்ட 7 மருந்து தரப் பரிசோதனைகள் தோல்வியடைந்தன. • மருந்துப் பரிசோதனையில் தோல்வியடைந்த மருந்துகளில் ரெம்டெசிவிர் ஊசி, மெட்ஃபோர்மின் மற்றும் கோவிஃபோர் ஆகியவை அடங்கும். • ரெம்டெசிவிர் மற்றும் கோவிஃபோர் ஆகியவை கோவிட் சிகிச்சையில் பயன்படுத்தப்படுகின்றன. மெட்ஃபோர்மின் சர்க்கரை நோய் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படுகிறது. • ஹெட்ரோ ட்ரக்ஸ் லிமிடெட் 2022 ஏப்ரல் 7 மற்றும் 2023 ஜூலை 11 ஆகிய தேதிகளில் 30 கோடி ரூபாய் மதிப்புள்ள தேர்தல் பத்திரங்களை வாங்கியது. • இந்தப் பத்திரங்கள் அனைத்தும் தெலங்கானாவின் பாரத் ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) கட்சிக்கு வழங்கப்பட்டன. • ஹெட்ரோ லேப்ஸ் லிமிடெட், 2022 ஏப்ரல் 7 மற்றும் 2023 அக்டோபர் 12 ஆகிய தேதிகளில் 25 கோடி ரூபாய் மதிப்புள்ள பத்திரங்களை வாங்கியது. • இதில் 20 கோடி ரூபாய் மதிப்புள்ள பத்திரங்கள் சந்திரசேகர் ராவின் பிஆர்எஸ் கட்சிக்கும், 5 கோடி ரூபாய் மதிப்புள்ள பத்திரங்கள் பாஜகவுக்கும் கொடுக்கப்பட்டது. 6. இண்டாஸ் ஃபார்மசூட்டிக்கல்ஸ் லிமிடெட் • இண்டாஸ் ஃபார்மசூட்டிக்கல்ஸ் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ளது. • 2020 ஜூலையில் இந்த நிறுவனம் தயாரித்த எனாபிரில் மருந்தின் சோதனை தோல்வியடைந்தது. • எனாபிரில், உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதய செயலிழப்பு சிகிச்சைக்கு பயன்படுத்தப்படுகிறது. மாரடைப்புக்குப் பிறகும் இந்த மருந்து கொடுக்கப்படுகிறது. • இந்த நிறுவனம் 2022 அக்டோபர் 10 ஆம் தேதி 20 கோடி ரூபாய் மதிப்புள்ள தேர்தல் பத்திரங்களை வாங்கியது. • இந்த பத்திரங்கள் அனைத்தும் பாரதிய ஜனதா கட்சிக்கு நன்கொடையாக வழங்கப்பட்டது. பட மூலாதாரம்,GETTY IMAGES 7. ஐபிசிஏ லபோரட்ரீஸ் லிமிடெட் • இந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகம் மும்பையில் உள்ளது. • 2018 அக்டோபரில் இந்த நிறுவனம் தயாரித்த லாரியாகோ மாத்திரையின் மருந்து தரப் சோதனை தோல்வியடைந்தது. • மலேரியாவைத் தடுக்கவும் சிகிச்சை அளிக்கவும் லாரியாகோ பயன்படுத்தப்படுகிறது. • 2022 நவம்பர் 10 முதல் 2023 அக்டோபர் 5 ஆம் தேதி வரை இந்த நிறுவனம் 13.5 கோடி ரூபாய் மதிப்புள்ள பத்திரங்களை வாங்கியுள்ளது. • இதில் 10 கோடி ரூபாய் மதிப்பிலான பத்திரங்கள் பாஜகவுக்கும், 3.5 கோடி மதிப்புள்ள பத்திரங்கள் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சிக்கும் வழங்கப்பட்டது. 8. க்ளென்மார்க் ஃபார்மசூட்டிக்கல்ஸ் லிமிடெட் • இந்த நிறுவனம் மும்பையை தலைமையிடமாகக் கொண்டுள்ளது. • 2022 மற்றும் 2023 க்கு இடையில், இந்த நிறுவனம் தயாரித்த மருந்துகளின் ஆறு மருந்து தரப் பரிசோதனைகள் தோல்வியடைந்தன. • மருந்து தரப் பரிசோதனையில் தோல்வியடைந்த மருந்துகளில் டெல்மா ஏஎம், டெல்மா எச் மற்றும் ஜிடென் மாத்திரைகள் அடங்கும். • டெல்மா ஏஎம் மற்றும் டெல்மா ஹெச் ஆகியவை உயர் ரத்த அழுத்தத்திற்கு சிகிச்சையளிக்கப் பயன்படுகின்றன. நீரிழிவு நோய் சிகிச்சையில் ஜிட்டென் மாத்திரை (Ziten Tablet) பயன்படுகிறது. • இந்த நிறுவனம் 2022 நவம்பர் 11 ஆம் தேதி 9.75 கோடி ரூபாய் மதிப்புள்ள பத்திரங்களை வாங்கியது. • இந்த பத்திரங்கள் அனைத்தும் பாஜகவுக்கு கொடுக்கப்பட்டது. பட மூலாதாரம்,GETTY IMAGES மருந்து நிறுவனங்களின் தரப் பிரச்னை கே. சுஜாதா ராவ், இந்திய அரசின் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் செயலராக பணியாற்றியுள்ளார். சிவில் சர்வீஸ் ஊழியராக தனது 36 ஆண்டுகால பணியில் 20 ஆண்டுகளை சுகாதாரத் துறையில் பல்வேறு பதவிகளில் அவர் செலவிட்டுள்ளார். "எந்தப் பிரதிபலனும் இல்லாமல் (quid pro quo) எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ஒரு அரசியல் கட்சிக்கு ஏன் பணம் கொடுக்க வேண்டும்? மருந்து நிறுவனங்களை யார் கட்டுப்படுத்துகிறார்கள்? கட்டுப்பாடு அரசின் கைகளில்தான் உள்ளது. ஒரு நிறுவனம் அதிகாரத்தில் இருக்கும் ஒரு கட்சிக்கு பணம் கொடுத்திருந்தால், அவர்களிடமிருந்து பலன் பெறுவதற்காகவே இது செய்யப்பட்டுள்ளது என்பது தெள்ளத்தெளிவு. நன்கொடை அளித்த நிறுவனத்திற்கு அரசு ஏதேனும் பலன் அளித்ததா இல்லையா என்பது வேறு விஷயம்," என்று அவர் கூறுகிறார். இந்தியாவில் உள்ள மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் தொடர்பாக எப்போதுமே ஏதாவது பிரச்சனை இருந்து கொண்டே இருக்கிறது என்று கூறும் சுஜாதா ராவ், இந்த நிறுவனங்களின் தரம் தொடர்பாக சிக்கல்கள் உள்ளன என்றும் தெரிவித்தார். “தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை அளித்த பிறகு இந்த நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுப்பதை அரசு நிறுத்தியிருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும். அப்படி எந்த தொடர்பும் இல்லை என்றால், அதனை அரசுடன் நல்லுறவை உருவாக்க தனியார் துறையின் முதலீடா என்று சொல்வது கடினம். மருந்து நிறுவனங்கள் நிச்சயமாக பாதுகாப்பின்மையை உணருகின்றன,” என்றார் அவர். இந்த மருந்து நிறுவனங்களின் மருந்துகள் தரப் சோதனையில் தோல்வியடைந்த பிறகு என்ன நடந்தது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். அவர்கள் மீது ஏதாவது நடவடிக்கை எடுக்கப்பட்டதா? அந்த நிறுவனங்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதா? ஆம் எனில், பத்திரங்கள் மூலம் நன்கொடை செலுத்தப்பட்ட பிறகு அந்த நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டதா? போன்றவை குறித்து விசாரிக்க வேண்டும் என்று அவர்கள் கூறுகின்றனர். மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் கட்டுப்பாட்டாளராக அரசு இருப்பதால், தர சோதனைகள் மற்றும் ஒப்புதல்கள் அளித்தல் ஆகியவை தொடர்பாக அரசு அவர்களின் வணிகங்களில் அதிக செல்வாக்கை செலுத்துகிறது என்பதும் நிபுணர்களின் கருத்தாக உள்ளது. ஏதாவது ஒரு விஷயத்திற்கு அனுமதி வழங்குவதில் சிறிது தாமதம் ஏற்பட்டால் கூட இந்த நிறுவனங்களுக்கு சுமை அதிகமாகும். ஒருவேளை இவை அனைத்தையும் தவிர்க்கவே இந்த நிறுவனங்கள் அரசியல் கட்சிகளுக்கு பணம் கொடுக்கின்றன என்று நம்பப்படுகிறது. மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் ரெய்டுக்கு பிறகு எந்த கட்சிக்கு பணம் கொடுத்தன? எஸ்பிஐ முதல் தொகுப்பில் தேர்தல் ஆணையத்திற்கு வழங்கிய தரவுகளை பகுப்பாய்வு செய்ததில், அமலாக்க இயக்குநரகம் அல்லது வருவான வரித்துறையின் சோதனைக்கு உள்ளான நிறுவனங்கள் சில நாட்களிலேயே தேர்தல் பத்திரங்களை வாங்கியிருந்தன என்று நாங்கள் சொல்லியிருந்தோம். இதேபோல், ஒரு நிறுவனம் தேர்தல் பத்திரங்களை வாங்குவதும் பின்னர் சோதனைக்கு உள்ளாவதும் அதன் பிறகு மீண்டும் தேர்தல் பத்திரங்களை வாங்கிய நிகழ்வுகளும் உள்ளன. இந்த நிறுவனங்களில் சில மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் ஒரு மருத்துவமனையும் அடங்கும். அமலாக்க இயக்குநரகம் (ED) அல்லது வருமான வரித் துறையால் ரெய்டு செய்யப்பட்ட அந்த நிறுவனங்கள் தேர்தல் பத்திரங்களை வாங்கி எந்த அரசியல் கட்சிகளுக்கு அளித்தன என்பதைப் பார்ப்போம். யசோதா சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை • யசோதா சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் தலைமையகம் தெலங்கானாவில் உள்ளது. • இந்த நிறுவனம் 2021 அக்டோபர் 4 முதல் 2023 அக்டோபர் 11 ஆம் தேதி வரை 162 கோடி ரூபாய் மதிப்புள்ள தேர்தல் பத்திரங்களை வாங்கியது. • 2020 டிசம்பர் 22 ஆம் தேதி வருமான வரித் துறை அந்த நிறுவனத்தில் சோதனை நடத்தியது. • 2021 அக்டோபர் 4 முதல் இந்த நிறுவனம் தேர்தல் பத்திரங்களை வாங்கத் தொடங்கியது. இந்த நிறுவனம் பாரத ராஷ்டிர சமிதி கட்சிக்கு 94 கோடி ரூபாய் மதிப்பிலான பத்திரங்களை வழங்கியது. மேலும் அந்த நிறுவனம் காங்கிரசுக்கு 64 கோடி மதிப்பிலான பத்திரங்களையும், பாஜகவுக்கு 2 கோடி ரூபாய் மதிப்பிலான பத்திரங்களையும் வழங்கியது. பட மூலாதாரம்,GETTY IMAGES டாக்டர் ரெட்டீஸ் லேப் • தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இதன் தலைமையகம் உள்ளது. • 2019 மே 8 முதல் 2024 ஜனவரி 4 வரை 84 கோடி ரூபாய் மதிப்புள்ள தேர்தல் பத்திரங்களை வாங்கியுள்ளது. • சட்டவிரோத பணப் பரிவர்த்தனைகள் தொடர்பாக இந்த நிறுவனத்துடன் தொடர்புடையவர்கள் மற்றும் அதன் கூட்டாளிகள் தொடர்பான இடங்களில் வருமான வரித்துறை 2023 நவம்பர் 12 ஆம் தேதி சோதனை நடத்தியது. • 2023 நவம்பர் 17 அன்று இந்த நிறுவனம் 21 கோடி ரூபாய் மதிப்புள்ள பத்திரங்களை வாங்கியது. • 2024 ஜனவரி 4 ஆம் தேதி இந்த நிறுவனம் 10 கோடி ரூபாய் மதிப்புள்ள பத்திரங்களை வாங்கியது. இந்த நிறுவனம் பாரத ராஷ்டிர சமிதி கட்சிக்கு 32 கோடி ரூபாய் மதிப்பிலான பத்திரங்களை வழங்கியது. மேலும் பாஜகவுக்கு 25 கோடி ரூபாய் மதிப்பிலான பத்திரங்களும், காங்கிரசுக்கு 14 கோடி ரூபாய்க்கான பத்திரங்களும் தெலுங்கு தேசம் கட்சிக்கு 13 கோடி ரூபாய்க்கான பத்திரங்களும் வழங்கப்பட்டுள்ளன. அரபிந்தோ ஃபார்மா • அரபிந்தோ ஃபார்மாவின் தலைமை அலுவலகம் தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ளது. •இந்த நிறுவனம் 2021 ஏப்ரல் 3 முதல் 2023 நவம்பர் 8 வரை 52 கோடி ரூபாய் மதிப்புள்ள பத்திரங்களை வாங்கியது. • 2022 நவம்பர் 10 ஆம் தேதி நிறுவனத்தின் இயக்குநர் பி சரத் சந்திர ரெட்டி பணமோசடி வழக்கில் அமலாக்க இயக்குனரகத்தால் கைது செய்யப்பட்டார். • 2022 நவம்பர் 15 ஆம் தேதி நிறுவனம் 5 கோடி ரூபாய் மதிப்புள்ள பத்திரங்களை வாங்கியது. இவை அனைத்தும் பாஜகவுக்கு அளிக்கப்பட்டது. வேறு எந்த மருந்து நிறுவனங்கள் தேர்தல் நன்கொடை அளித்தன? தேர்தல் பத்திரங்களை வாங்கி அரசியல் கட்சிகளுக்கு கோடிக்கணக்கில் பணம் கொடுத்த இந்த நிறுவனங்களில் பெரும்பாலானவை மருந்து தரப் சோதனையில் தோல்வியடைந்த நிறுவனங்களாகவோ அல்லது ED அல்லது வருமான வரித்துறையால் ரெய்டு செய்யப்பட்ட நிறுவனங்களாகவோ உள்ளன. இந்த நிறுவனங்களைத் தவிர வேறு சில நிறுவனங்களும் பல அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் கோடிக்கணக்கில் நன்கொடை அளித்துள்ளன. பட மூலாதாரம்,GETTY IMAGES நாட்கோ ஃபார்மா • நாட்கோ ஃபார்மாவின் தலைமையகம் ஐதராபாத்தில் உள்ளது. • இந்த நிறுவனம் 2019 அக்டோபர் 5 முதல் 2024 ஜனவரி 10 வரை, 69.25 கோடி ரூபாய் மதிப்புள்ள பத்திரங்களை வாங்கியுள்ளது. • இதில் பிஆர்எஸ் கட்சிக்கு 20 கோடியும், பாஜகவுக்கு 15 கோடியும், காங்கிரஸ் கட்சிக்கு 12.25 கோடியும் வழங்கப்பட்டது. எம்எஸ்என் ஃபார்மாகெம் லிமிடெட் • இதன் தலைமை அலுவலகம் ஹைதராபாத்தில் உள்ளது. • இந்த நிறுவனம் 2022 ஏப்ரல் 8 மற்றும் 2023 நவம்பர் 16 ஆகிய தேதிகளில் மொத்தம் 26 கோடி ரூபாய் மதிப்பிலான தேர்தல் பத்திரங்களை வாங்கியது. • இதில் பிஆர்எஸ் கட்சிக்கு ரூ. 20 கோடியும், பாஜகவுக்கு ரூ. 6 கோடியும் கொடுக்கப்பட்டது. யூஜியா ஃபார்மா ஸ்பெஷாலிட்டீஸ் • இதன் தலைமை அலுவலகம் ஐதராபாத்தில் உள்ளது. • இந்த நிறுவனம் 2023 நவம்பர் 8 அன்று 15 கோடி ரூபாய் மதிப்புள்ள பத்திரங்களை வாங்கியது. • இந்த பத்திரங்கள் அனைத்தும் பாஜகவுக்கு கொடுக்கப்பட்டது. அலெம்பிக் ஃபார்மசூட்டிக்கல்ஸ் • குஜராத்தின் வதோதராவில் இதன் தலைமையகம் உள்ளது. • இந்த நிறுவனம் 2022 நவம்பர் 14 முதல் 2023 ஜூலை 5 வரை, 10.2 கோடி ரூபாய் மதிப்புள்ள பத்திரங்களை வாங்கியுள்ளது. • இந்த பத்திரங்கள் அனைத்தும் பாஜகவுக்கு கொடுக்கப்பட்டது. ஏபிஎல் ஹெல்த்கேர் லிமிடெட் • ஏபிஎல் ஹெல்த்கேர் லிமிடெட் ஐதராபாத்தை தலைமையிடமாகக் கொண்டுள்ளது. • இந்த நிறுவனம் 2023 நவம்பர் 8 ஆம் தேதி 10 கோடி ரூபாய் மதிப்புள்ள பத்திரங்களை வாங்கியது. • இந்த பத்திரங்கள் அனைத்தும் பாஜகவுக்கு கொடுக்கப்பட்டன. https://www.bbc.com/tamil/articles/c514v02x0n3o
-
சீனாவிற்கு விஜயம் செய்தார் பிரதமர்
சீனாவுக்கும் இலங்கைக்குமிடையில் ஒன்பது ஒப்பந்தங்கள் கைச்சாத்து சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையில் ஒன்பது புதிய ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. குறித்த ஒப்பந்தங்கள் இலங்கை பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் சீன பிரதமர் லீ கியாங் தலைமையில் நேற்று (26) கைச்சாத்திடப்பட்டுள்ளன. சீனாவின் தியானன்மென் சதுக்கத்தில் உள்ள மக்கள் மாவீரர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பிரதமர் இராணுவ மரியாதையை பெற்றுக்கொண்டதன் பின்னர் இருதரப்பு கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. பெய்ஜிங்கில் நடைபெற்ற இருதரப்பு கலந்துரையாடலின் போது, பொருளாதார ஒத்துழைப்புடன் சமூக, கலாசாரம், கல்வி மற்றும் விவசாயத்துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், தூய்மையான எரிசக்தி மற்றும் தொலைத்தொடர்பு ஆகியவற்றில் ஒத்துழைப்பு திறனை ஆராய்வதற்கு இரு தரப்பும் பரஸ்பர அழைப்பு விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மேலும், கைச்சாத்திடப்பட்ட ஒன்பது புரிந்துணர்வு உடன்படிக்கைகளின் ஊடாக இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு மற்றும் ஒத்துழைப்பின் புதிய அத்தியாயம் ஆரம்பிக்கப்படும் என இரு நாட்டு பிரதமர்களும் உறுதிப்படுத்தியுள்ளனர். இதனிடையே, இலங்கையில் முதலீடு செய்வதற்கு அதிகமான நிறுவனங்களை சீனா ஊக்குவிப்பதுடன், இலங்கையின் தரமான பொருட்களின் இறக்குமதியை அதிகரிக்கத் தயாராக இருப்பதாகவும், சீன நிறுவனங்களுக்கு நல்ல வர்த்தக சூழலை இலங்கை வழங்க முடியும் என நம்புவதாக சீன பிரதமர் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/297211
-
வடமாகாண விவசாயிகளின் மின்கட்டணத்துக்கு நிவாரணம்
விவசாய தேவைகளுக்காக மின்சாரத்தை பயன்படுத்தும் வடமாகாண விவசாயிகளின் மின்கட்டணத்துக்கு நிவாரணம் வழங்கும் வகையிலான அமைச்சரவை யோசனை ஒன்று முன்வைக்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். விவசாய நடவடிக்கைகளில் பெரும் முயற்சியுடன் அனைத்துப் பணிகளையும் முன்னெடுக்கும் வடமாகாண மக்களின் அர்ப்பணிப்பை கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அபிவிருத்தி நடவடிக்கைகளை அமுல்படுத்தும் போது அமைச்சுக்களுக்கு ஒதுக்கப்படும் நிதியின் பெரும்பகுதியை வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு ஒதுக்க வேண்டும் என ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார். வடமாகாணத்தில் 30 வருடங்களாக இடம்பெற்ற யுத்தத்தினால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனினும், அந்த பிரச்சினைகளுக்கு மத்தியிலும் அவர்கள் விவசாயத்தை கைவிடவில்லை. எனவே, வட மாகாண விவசாயிகள் தங்களது விவசாய நடவடிக்கைகளுக்கு மின்சாரத்தை பயன்படுத்தும் போது ஓரளவு நிவாரணம் வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கமைவாக, விவசாய தேவைகளுக்காக பயன்படுத்தப்படும் மின்சாரக் கட்டணங்களுக்கு ஓரளவு நிவாரணம் வழங்கும் வகையில் அமைச்சரவை யோசனை முன்வைக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/297199
-
உலகின் மிகப்பெரிய மலைப்பாம்பு வேட்டைக்காரர்களால் கொல்லப்பட்டது!
27 MAR, 2024 | 11:18 AM உலகின் மிகப்பெரியதெனக் கருதப்படும் 26 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு (அனகொண்டா்) வேட்டையர்களால் கொல்லப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அமேசான் காடுகளின் கடந்த பெப்ரவரி மாதம் இந்த மிகப்பெரிய பெண் மலைப்பாம்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது . இந்த பெண் மலைப்பாம்புக்கு அன்னா ஜூலியா' என்று பெயரிடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது . இவ்வகையான பாம்புகள் உலகின் மிகப்பெரிய பாம்புகளாகக் கருதப்படுகின்றன. https://www.virakesari.lk/article/179804
-
மீனவர் பிரச்சினையை ஆராய இந்திய - இலங்கை கூட்டு செயற்குழு விரைவில் கூடவுள்ளது!
மீனவர் பிரச்சினை தொடர்பில் ஆராய்வதற்காக இந்திய-இலங்கை கூட்டு செயற்குழு விரைவில் கூடவுள்ளதாக இந்திய மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது. Fishermen Care என்ற தனியார் அமைப்பு தாக்கல் செய்த பொதுநல வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று (25) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, குறித்த மனுவிற்கு பதிலளிக்கும் வகையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள எதிர் பிரமாணப் பத்திரத்தில் இந்திய மத்திய அரசாங்கம் இதனை குறிப்பிட்டுள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பரில் மீன்பிடி தொடர்பான இந்திய-இலங்கை கூட்டு செயற்குழுவின் ஆறாவது கூட்டத்தை நடத்த முன்மொழியப்பட்ட போதிலும், உள்நாட்டு பிரச்சினைகளால் அந்த திட்டம் பலனளிக்கவில்லை என இந்திய மத்திய அரசாங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று தெரிவித்துள்ளது. இந்திய வெளியுறவு அமைச்சு இந்த கூட்டத்தை கூடிய விரைவில் நடத்த நடவடிக்கை எடுத்து வருவதாக, இந்திய மீன் வளத்துறை அமைச்சு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இரு நாட்டு மீனவர்களுக்கு இடையே நீண்டகாலமாக நிலுவையில் உள்ள பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில், 2016 ஆம் ஆண்டு இடம்பெற்ற அமைச்சர்கள் மட்ட மாநாட்டில் எட்டப்பட்ட தீர்மானங்களுக்கு அமைய, இந்திய-இலங்கை கூட்டு செயற்குழு உருவாக்கப்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, 2017-18 ஆம் ஆண்டு காலப்பகுதியில் தமிழகத்தின் பாரம்பரிய மீனவர்களுக்கு இழுவைமடி படகுகளுக்குப் பதிலாக 750 ஆழ்கடல் மீன்பிடி படகுகளை கொள்வனவு செய்ய உதவியாக தமிழக அரசாங்கத்திற்கு மத்திய அரசாங்கம் 300 கோடி இந்திய ரூபாவை விடுவித்தமையும் இதன்போது நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. ஆழ்கடல் மீன்பிடியை ஊக்குவிக்கும் வகையில், இராமேஸ்வரம் குந்துகால் பகுதியில் மீன்பிடி இறங்கு தளமொன்றை அமைக்கவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இந்திய மீனவர்கள் சர்வதேச கடல் எல்லையை தாண்டுவதைத் தடுக்கும் வகையிலான நடவடிக்கைகளை இந்திய கடலோர காவல்படையினர் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருவதாகவும், இந்திய மத்திய அரசாங்கம் தாக்கல் செய்துள்ள பதில் சத்தியக்கடதாசியில் குறிப்பிடப்பட்டுள்ளது. பதில் சத்தியக்கடதாசியை ஆராய்ந்த நீதிபதிகள், பொதுநல வழக்கினை ஜூன் 11 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தனர். https://thinakkural.lk/article/297172
-
வர்த்தக நிலையங்களில் உணவு வகைகளை பரிசோதிக்க 3000 பொதுச் சுகாதார பரிசோதகர்கள்!
27 MAR, 2024 | 10:44 AM பண்டிகை காலத்தை முன்னிட்டு வர்த்தக நிலையங்களில் விற்பனை செய்யப்படும் உணவு வகைகளைப் பரிசோதிப்பதற்காக நாடளாவிய ரீதியில் 3,000 பொதுச்சுகாதார பரிசோதகர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் ஒன்றியம் தெரிவித்துள்ளது. இதேவேளை, பண்டிகைக் காலத்துக்காக தயாரிக்கப்பட்ட பல உணவுகளின் மாதிரிகள் பரிசோதனைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அதன் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார். உணவு உற்பத்தி நிலையங்களில் உணவு தயாரிக்கும் நபர்கள் மருத்துவ பதிவுகளைப் பெற்றுக்கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும் உபுல் ரோஹன மேலும் குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/179798
-
அமெரிக்காவில் கப்பல் மோதியதில் பாலம் இடிந்தது - ஆற்றில் மூழ்கிய வாகனங்கள்
பாலம் உடைந்து வீழ்ந்த விபத்தில் 6 பேர் உயிரிழப்பு! அமெரிக்காவின் Baltimore நகரிலுள்ள Francis Scott Key பாலம் உடைந்து வீழ்ந்ததில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். 2.6 கிலோமீற்றர் நீளமான இந்த பாலத்தின் தூணொன்றை சரக்கு கப்பலொன்று மோதியதையடுத்து பாலம் உடைந்து வீழ்ந்துள்ளது. பாலத்துடன் மோதுவதற்கு முன்னர் அந்த கப்பலில் மின்சார கோளாறு ஏற்பட்டிருந்ததாகவும் அபாய உதவி அழைப்பை அது விடுத்திருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். Francis Scott Key பாலத்தை கப்பல் மோதிய போது, அதில் ஏராளமான வாகனங்கள் பயணித்துள்ளன. இலங்கை நோக்கி பயணத்தை ஆரம்பித்திருந்த கப்பலில், துறைமுகத்திலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே மின்சார விநியோகம் முழுவதும் அற்றுப்போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/297190
-
கொழும்பு வடக்கு ராகம போதனா வைத்தியசாலையில் எம்.எச். ஓமார் விசேட கல்லீரல் நோய் சிகிச்சை நிலையம் ஜனாதிபதியால் திறந்துவைப்பு
27 MAR, 2024 | 11:01 AM இலங்கை மக்களுக்கு உயர்தர சுகாதார சேவையை வழங்குவதை உறுதி செய்வதற்காக கொழும்பு வடக்கு ராகம போதனா வைத்தியசாலையில் நிறுவப்பட்ட "எம்.எச். ஓமார் விசேட கல்லீரல் நோய் சிகிச்சை நிலையம்” நேற்று (26) பிற்பகல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் திறந்து வைக்கப்பட்டது. கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலைக்கு வருகைதந்த ஜனாதிபதியை, வைத்தியசாலையில் வெற்றிகரமாக செய்யப்பட்ட கல்லீரல் சத்திர சிகிச்சையின் மூலம் குணமடைந்த சிறுமியொருவர் வரவேற்றது விசேட அம்சமாகும். இலங்கையில் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் மத்தியில் நாட்பட்ட கல்லீரல் நோயின் பாதிப்பு அதிகரித்து வருகிறது. கல்லீரல் செயலிழப்புக்கு கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சை மட்டுமே பயனுள்ள சிகிச்சையாகும். இந்த சிக்கலான கல்லீரல் நோய்களுக்கான சிகிச்சைக்கு விசேட அறிவு மற்றும் விலையுயர்ந்த உபகரணங்கள் அவசியம். கல்லீரல் மாற்று சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்வது ஒரு நாட்டின் சுகாதார பாதுகாப்பின் வளர்ச்சியின் குறிகாட்டியாகும். பட்டப்பின்படிப்பு பயிற்சி மையமாகவும் வடகொழும்பு கல்லீரல் நோய்களுக்கான மையம் செயற்படுவதோடு கல்லீரல் நோய்களில் உயர்தர ஆராய்ச்சியை நடத்தி, இலங்கையில் கல்லீரல் புற்றுநோய் சிகிச்சையின் மிகப்பெரிய தரவுத்தளத்தை பேணுகிறது. இந்த கல்லீரல் நோய் விசேட சிகிச்சை நிலையத்தை நிர்மாணிப்பதற்காக எம்.எச். ஓமார் நிதியம் இரண்டரை பில்லியன் ரூபாய்களை நன்கொடையாக வழங்கியுள்ளது. இது இலங்கையின் சுகாதாரம் மற்றும் கல்வி சேவைகளுக்கு இலங்கையில் தொழில்முனைவோர் வழங்கிய மிகப்பெரிய நன்கொடையாகும். எம்.எச். ஓமார் இந்த நாட்டில் புகழ்பெற்ற பிராண்டிக்ஸ் குழுமத்தின் ஸ்தாபகர் ஆவார். பெயர்ப் பலகையை திரைநீக்கம் செய்து எம். எச்.ஓமார் விசேட கல்லீரல் நோய் சிகிச்சை நிலையத்தை திறந்துவைத்த ஜனாதிபதி அதன் வசதிகளை அவதானிக்கவும் இணைந்துகொண்டார். இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அங்கு வைக்கப்பட்டுள்ள விசேட அதிதிகளின் நினைவுப் புத்தகத்தில் குறிப்பு ஒன்றையும் இட்டார். அதனைத் தொடர்ந்து, நடைபெற்ற வைபவத்தில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஓமார் குடும்பத்தினர் வழங்கிய தனித்துவமான நன்கொடை மற்றும் பிராண்டிக்ஸ் வர்த்தகத்தின் ஊடாக நாட்டின் பொருளாதாரத்துக்கு ஆற்றிய பங்களிப்பை பாராட்டினார். கல்லீரல் மாற்று சத்திரசிகிச்சைகளுக்கு பிராந்தியத்தில் சிறந்த நாடாக இன்று இலங்கை மாறியுள்ளதை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அந்த குழு நாட்டுக்கு வழங்கிய நற்பெயருக்கு நன்றி தெரிவித்தார். அத்துடன், இந்நாட்டில் சுகாதாரத்துறையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான அரசாங்கத்தின் வேலைத்திட்டம் குறித்தும் ஜனாதிபதி இங்கு கருத்து தெரிவித்தார். சிசு இறப்பு மற்றும் தாய் இறப்பு விகிதங்களின் அடிப்படையில் நமது நாடு புள்ளிவிபர அடிப்படையில் சிறந்த நிலையில் உள்ளது என்றும், கொவிட் தொற்றுநோய் காலத்திலும் அதைத் தொடர்ந்து வந்த பொருளாதார நெருக்கடி காலத்திலும் இலங்கை வலுவாக முன்னேற முடிந்ததாக இந்நிகழ்வில் உரையாற்றிய சுகாதார மற்றும் கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார். கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலையில் இந்த வசதிகளுக்காக 2.5 பில்லியன் ரூபாய் பெரும் தொகையை நன்கொடையாக வழங்கிய எம்.எச்.ஓமார் மற்றும் குடும்பத்தினருக்கு அவர் நன்றி தெரிவித்தார். உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன், எம்.எச். ஓமாரின் பேரனும் பிராண்டிக்ஸ் குழுமத்தின் பணிப்பாளருமான ஹாசிப் ஓமார், களனி பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் நிலாந்தி டி சில்வா, சுகாதார அமைச்சின் செயலாளர் பி.ஜி. மஹிபால, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன, கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சம்பத் ரணவீர, சுகாதார அமைச்சின் அதிகாரிகள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/179801
-
ஐ.பி.எல் 2024 - செய்திகள்
பாய்ந்து, பறந்த தோனி; சீறிய இளம் வீரர்கள் - இதுதான் உண்மையான சிஎஸ்கே 2.0 அணியா? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் 42 வயதிலும் கிரிக்கெட் ஆடுவதற்கான முழுத் தகுதியுடன் இருப்பதை நிரூபிக்கும் வகையில் பாய்ந்து சென்று தோனி கேட்ச் பிடிக்கும் காட்சியைப் பார்த்து அவரது ரசிகர்கள் பார்த்துப் பூரித்துப் போயிருக்கின்றனர். அதே நேரத்தில் புதிய அணித்தலைவரின் கீழ் அடுத்தடுத்து இரண்டு போட்டிகளை சிஎஸ்கே அணி வென்றிருப்பதன் மூலம் தலைமுறை மாற்றத்துக்கு தயாராக இருக்கிறது என்பதையும் நிரூபித்திருக்கிறது. சென்னை சேப்பாக்கத்தில் நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 7-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 63 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது சிஎஸ்கே அணி. முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 20 ஓவர்களில்6 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் சேர்த்தது. 207 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி 8 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் மட்டுமே சேர்த்து தோல்வி அடைந்தது. இதன் மூலம் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு சிஎஸ்கே அணி முன்னேறியது. நிகர ரன்ரேட்டும் 1.97 புள்ளிகளுடன் வலுவாக சிஎஸ்கே வைத்துள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES இளம் சிஎஸ்கே படை இளம் பேட்டர்கள் ஷிவம் துபே(23பந்துகளில் 51 ரன்கள்), ரச்சின் ரவீந்திரா(20பந்துகளில்46), கெய்க்வாட்(36பந்துகளில் 46), ரிஸ்வி(6 பந்துகளில் 14) ஆகிய 4 பேரும் சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே அணி இமாலய ஸ்கோரை எட்டுவதற்கு முக்கியக் காரணமாக அமைந்தனர். அதிலும் நடுப்பகுதி ஓவர்களில் குஜராத் டைட்டன்ஸ் சுழற்பந்துவீச்சாளர்களை ஓடவைத்த துபேவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. கடந்த ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் பேட்டர்களைக் கட்டிப்போட்ட ரஷித் கான், சாய் கிஷோர் இருவராலும் துபே பேட்டிங்கை கட்டிப்படுத்த முடியவில்லை. இது சேப்பாக்கம் மைதானம்தானா? சேப்பாக்கம் மைதானம் என்றாலே சுழற்பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம்தான் கடந்த காலங்களில் இருந்துள்ளது. ஆனால் இந்த ஆட்டத்தில் சிஎஸ்கே அணியில் ரவீந்திர ஜடேஜா தவிர வேறு எந்த சுழற்பந்துவீச்சாளர்களும் பந்துவீசவில்லை, சுழற்பந்துவீச்சாளர் ஜடேஜாகூட விக்கெட் வீழ்த்தவில்லை. மாறாக, 8 விக்கெட்டுகளையும் வேகப்பந்துவீச்சாளர்களான தேஷ்பாண்டே(2), முஸ்தபிசுர் ரஹ்மான்(2), தீபக் சஹர்(2), டேரல் மிட்ஷெல்(1), பதிரண(1) ஆகியோர் வீழ்த்தினர். சேப்பாக்கம் மைதானத்தில் சுழற்பந்துவீச்சு எடுக்கவில்லை என்பதே வியப்புக்குரிய செய்தாக இருக்கிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES மும்பை வீரர்கள் vs தமிழக வீரர்கள் சென்னையைச் சேர்ந்த சிஎஸ்கே அணி என்று பெயரளவுக்கு இருந்தாலும், அந்த அணியில் பெரும்பாலும் மும்பை, மகாராஷ்டிரா வீரர்கள் ஆதிக்கம் அதிகம் இருக்கிறது. குஜராத் டைட்டன்ஸ் அணியில் 3 தமிழக வீரர்கள் விளையாடினார்கள். இருவருக்கும் இடையிலான ஆட்டத்தில் மும்பை, மகாராஷ்டிரா வீரர்கள் வென்றனர். ரச்சின் ரவீந்திரா அமைத்துக் கொடுத்த அடித்தளத்தை, கெய்க்வாட், ரஹானே எடுத்துச்சென்றனர். அதன்பின் ஸ்கோரை உயர்த்தும் பணியை துபே கையில் எடுத்து பெரிய உயரத்துக்கு கொண்டு சென்றார். தனது முதல் ஐபிஎல் போட்டியில் களமிறங்கிய சமீர் ரிஸ்வி தனக்குரிய பங்களிப்பாக 2 சிக்ஸர்களை விளாசி ஸ்கோர் உயர்வுக்கு பங்காற்றினார். பீல்டிங்கில் தோனிஎடுத்த அற்புதமான கேட்ச, ரஹானேவின் மிரட்டலான டைவ் கேட்ச், ரவீந்திராவின் 3 கேட்சுகள் என சிறப்பாகச் செயல்பட்டனர். பாய்ந்து, பறந்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய தோனி இந்த ஆட்டத்தில் டேரல் மிட்ஷெல் வீசிய ஓவரை விஜய் சங்கர் அடிக்க முற்பட்டபோது, பந்து அவுச் ஸ்விங் ஆகி, பேட்டில் பட்டு முதல் ஸ்லிப்புக்கு சென்றது. விக்கெட் கீப்பரான 42 வயது தோனி, ஏறக்குறைய 4 அடிவரை பாய்ந்து சென்று பந்தை லாவகமாகப் பிடித்தார். தோனியின் விக்கெட் கீப்பிங்கைப் பார்த்தபோது, தோனிக்கு உண்மையில் 42 வயதாகியதா என்று ரசிகர்கள் நினைத்தனர். தோனி தற்போது இருக்கும் உடற்தகுதியைப் பார்த்தால் இன்னும் பல ஐபிஎல் சீசன்களுக்கு விளையாடுவார் போலத் தெரிகிறது என்று ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் புகைப்படத்தை பகிரந்து கருத்துத் தெரிவித்தனர். பட மூலாதாரம்,GETTY IMAGES ரச்சின் ஆட்டம் பிரமாதம் ரச்சின் ரவீந்திரா ஃபேக்புட் பிளேயர். அவரின் டிரைவ்கள் அனைத்தும் ஆட்டத்தின் பகுதியாகவே இருக்குமே தவிர பிராதனமாக இருக்காது. ஆனால்,உலகக் கோப்பையில் பேட் செய்ததைவிட, டி20 ஃபார்மெட்டுக்கு விரைவாக தனது மனதையும், பேட்டிங் ஸ்டைலையும் ரவீந்திரா மாற்றிக்கொண்டுள்ளார். இந்த ஆட்டத்தில் அவர் பேட் செய்த ஸ்ட்ரைட் ட்ரைவ், பிரண்ட்ஃபுட் பவுண்டரிகள், ஷார்ட் பந்தை பஞ்ச் செய்தது, விரைவாக பந்தை பிக் செய்து ஷாட்களை அடித்தது ஆகியவை டி20 ஃபார்மெட்டுக்கு விரைவாக மாற்றிக்கொண்டதை காண முடிகிறது. இளம் வீரர்கள் பலம் சிஎஸ்கே கேப்டன் கெய்க்வாட் பேசுகையில் “ இன்றைய ஆட்டம் ஆகச்சிறந்த ஆட்டத்துக்கு உதாரணம். பந்துவீச்சு, பேட்டிங், பீல்டிங்கில் சிறப்பாகச்செயல்பட்டோம். குஜராத் போன்ற வலிமையான அணிக்கு இதுபோன்ற செயல்பாடு அவசியம். சேப்பாக்கம் விக்கெட் பற்றி முழுமையாகத் தெரியாத நிலையில் 10ஓவர்களி்ல் 100 ரன்களைக் கடந்தோம். “ “கடைசி 10 ஓவர்களுக்கு பேட்டர்களுக்கு விக்கெட் நன்றாக உதவியது. ரச்சின், துபே, ரிஸ்வி சிறப்பாக பேட் செய்தனர். துபே என்ன செய்ய வேண்டும்என்று நிர்வாகமும் தனிப்பட்ட முறையில் செயல்ப்பட்டது,தோனியும் அறிவுரைகளை வழங்கினார். எப்படி பேட் செய்ய வேண்டும், எந்த பந்துவீச்சாளரை குறிவைக்க வேண்டும்என்று துபேவுக்கு தெளிவாகத் தெரியும். பீல்டிங் சிறப்பாக அமைந்தது. அணியில் 3 இளம் வீரர்கள் வந்துள்ளது கூடுதல் பலம்” எனத் தெரிவித்தார். ரச்சின் ரவீந்திரா அதிரடியாட்டம் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் சுப்மான் கில் பீல்டிங்கைத் தேர்வு செய்தார். சிஎஸ்கே கேப்டன் கெய்க்வாட், ரச்சின் ரவீந்திரா ஆட்டத்தைத் தொடங்கினர். முதல் ஓவரில் மட்டும்தான் சிஎஸ்கே ரன்கள் சேர்க்கவில்லை. அதன்பின், ஓமர்சாய், உமேஷ் குமார் யாதவ் ஓவர்களை ரச்சின் ரவீந்திரா துவம்சம் செய்துவிட்டார். சிக்ஸர், பவுண்டரிகள் என ரவீந்திரா வெளுக்கவே, சிஎஸ்கே ரன்ரேட் எகிறியது. வேறுவழியின்றி 6-வது ஓவரிலேயே ரஷித்கான் பந்துவீச அழைக்கப்பட்டார். அவரின் வருகைக்கும் நல்ல பலன் கிடைத்தது. ரவீந்திரா 20 பந்துகளில் 46 ரன்கள் சேர்த்தநிலையில் சஹாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இவரின் கணக்கில் 3 சிக்ஸர்கள், 6பவுண்டரிகள் அடங்கும். பவர்ப்ளே ஓவர்கள் முடிவில் சிஎஸ்கே அணி, ஒரு விக்கெட் இழப்புக்கு 69 ரன்கள் சேர்த்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES ரஹானே-கெய்க்வாட் நிதானம் 2வது விக்கெட்டுக்கு வந்த ரஹானே, கெய்க்வாட்டுடன் சேர்ந்தார். தனது வழக்கமான அதிரடி ஆட்டத்தை ஆடாமல் நிதானமாக ரஹானே பேட் செய்தார். கெய்க்வாட்டும், ரஹானேவும் நிதானமாக ஸ்கோரை உயர்த்தினர். 9.5 ஓவர்களில் சிஎஸ்கே அணி 100 ரன்களை எட்டியது. அதிரடியாக ஆடக்காடிய ரஹானே ஒரு பவுண்டரிகூட அடிக்காமல் 12 ரன்கள் சேர்த்தநிலையில் சாய் கிஷோர் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார். 2வது விக்கெட்டுக்கு ரஹானே, கெய்க்வாட் ஜோடி 42 ரன்கள் சேர்த்தனர். அடுத்து ஷிவம் துபே களமிறங்கி, கெய்க்வாட்டுடன் சேர்ந்தார். ஷிவம் துபே களமிறங்கி சாய்கிஷோர் ஓவரில் சந்தித்த முதல் பந்திலும், 2வது பந்திலும் அடுத்தடுத்து சிக்ஸரை பறக்கவிட்டார். ஒருபுறம் அரைசதத்தை நோக்கி நகர்ந்த கெய்க்வாட் ஏமாற்றம் அளித்தார். ஸ்பென்சர் ஜான்சன் வீசிய 13-வது ஓவரில் விக்கெட் கீப்பர் சாஹாவிடம் கேட்ச் கொடுத்து கெய்க்வாட் 46ரன்னில் விக்கெட்டை இழந்தார். அடுத்துவந்த டேரல் மிட்ஷெல் துபேயுடன் சேர்ந்தார். துபே விளாசல் துபே களமிறங்கியதால், ரன்ரேட்டை கட்டுப்படுத்த ரஷித்கான் 14-வது ஓவரை வீச அழைக்கப்பட்டார். ரஷித்கான் ஓவரையும் விட்டு வைக்காத துபே ஒருபவுண்டரி, சிக்ஸர் 13 ரன்கள் சேர்த்தார். ஜான்சன் வீசிய 15வது ஓவரிலும் துபே சிக்ஸர், பவுண்டரி என சேர்த்து சிஎஸ்கே ரன்ரேட்டை எகிறவைத்தார். ஒருபுறம் துபே குஜராத் பந்துவீச்சை வெளுத்துவாங்க, மறுபுறம் மிட்ஷெல் பெரிய ஷாட்டுக்கு முயன்றும் பேட்டில் பந்து சிக்கவில்லை. மோகித் சர்மா வீசிய 18-வது ஓவரில் சிக்ஸர் அடித்து 22 பந்துகளில் துபே அரைசதத்தை நிறைவு செய்தார். ஐபிஎல் தொடரில் துபயின் 7-வது அரைசதம் இதுவாகும். 19-வது ஓவரை வீச ரஷித்கான் அழைக்கப்பட்டார். 2வது பந்தில் துபே தூக்கி அடிக்க எக்ஸ்ட்ரா கவரில் சங்கரிடம் கேட்சானது. துபே 5சிக்ஸர், 2பவுண்டரி) 23 பந்துகளில்(51 ரன்னில் ஆட்டமிழந்தார். 4வது விக்கெட்டுக்கு மிட்ஷெல்-துபே கூட்டணி 57 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துப்பிரிந்தனர். பட மூலாதாரம்,GETTY IMAGES அதிரடி அறிமுகம் அடுத்து ரிஸ்வி களமிறங்கினார். ஐபிஎல் தொடரில் முதல் ஆட்டத்தில் களமிறங்கிய ரிஸ்வி, தான் ஐபிஎல்தொடரில் சந்தித்த முதல்பந்தில், அதிலும் ரஷித்கான் பந்தில் சிக்ஸருக்கு பறக்கவிட்டு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார், அதே ஓவரின் கடைசிப்பந்தில் மீண்டும் ரிஸ்வி ஒரு சிக்ஸர் விளாசினார். ஐபிஎல் ஏலத்தில் ரிஸ்வியை ரூ.8 கோடிக்கு சிஎஸ்கே வாங்கியது குறிப்பிடத்தக்கது. கடைசி ஓவரை மோகித் சர்மா வீசினார். 2வது பந்தில் ரிஸ்வி தூக்கி அடிக்க முயன்று, லாங்ஆன் திசையில் மில்லரிடம் கேட்ச் கொடுத்து 14 ரன்னில் விக்கெட்டை இழந்தார். அடுத்துவந்த ஜடேஜா பவுண்டரி மட்டும்அடிக்க கடைசிப்பந்தில் ரன்அவுட் ஆகினார். தோனி கடைசிவரை வரவில்லை சேப்பாக்கில் அமர்ந்திருந்த அனைத்து ரசிகர்களும் ஜடேஜாவுக்குப் பதிலாக தோனி களமிறங்குவார் என எதிர்பார்த்திருந்தனர். ஆனால், ஜடேஜா களமிறங்கியவுடன் அனைத்து ரசிகர்களும் ஏமாற்றம் அடைந்தனர். சிஎஸ்கே அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் சேர்த்தது. அடுத்தடுத்து விக்கெட் இழப்பு 207 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் கடின இலக்கோடு குஜராத் அணி களமிறங்கியது. சுப்மான்கில், சாஹா அதிரடியான தொடக்கத்தை அளி்த்தனர். சஹர் வீசய முதல் ஓவரில் கில் சிக்ஸரும், முஸ்தபிசுர் வீசிய 2வது ஓவரில் சஹா 2பவுண்டரிகளையும் விளாசினார். சஹர் வீசிய 3வது ஓவரில் சஹா 2 பவுண்டரிகள் வீசிய நிலையில் அதே ஓவரில் கில் ஸ்லோபாலில் கால்காப்பில் வாங்கி 8 ரன்னில் ஆட்டமிழந்தார். 2வது விக்கெட்டு சாய்சுதர்சன் களமிறங்கி சஹாவுடன் சேர்ந்தார். சஹர் வீசிய 5வது ஓவரின் 4வது பந்து பவுன்ஸராக வீசவே, அது சஹாவின் ஹெல்மெட்டில்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், அடுத்தபந்தை சஹா தூக்கி அடிக்கவே ஸ்குயர் லெக் திசையில் தேஷ்பாண்டேவிடம் கேட்ச் கொடுத்து 21 ரன்னில் ஆட்டமிழந்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES சென்னைக்கு எதிராக களமிறங்கிய தமிழ்நாட்டு ஜோடி அடுத்து விஜய் சங்கர் களமிறங்கி, சுதர்சனுடன் சேர்ந்தார். இரு தமிழக வீரர்கள் அதிலும் சேப்பாக்கம் மைதானத்தில் இருந்தது சிறிது மெய்சிலிர்ப்பாக இருந்தது. அணியை வெற்றி நோக்கி இருவரும் எடுத்துச் செல்ல முயன்றனர். தேஷ்பாண்டே ஓவரில் சங்கர் அற்புதமான சிக்ஸர் விளாசினார். பவர்ப்ளே ஓவரில் குஜராத் அணி 2 விக்கெட் இழப்புக்கு 43 ரன்கள் சேர்த்தது. மித வேகப்பந்துவீச்சுக்காக டேரல் மிட்ஷெல் அழைக்கப்பட்டார். மிட்ஷெல் வீசிய 3வது பந்தை அவுட் ஸ்விங்காக மாற, சங்கர் பேட்டில் பட்டு முதல் ஸ்லிப்பில் சென்றது. விக்கெட் கீப்பிங் பணியில் இருந்த தோனி, பறந்து சென்று அந்தக் கேட்ச்சைப் பிடித்து எந்தவிதமான அலட்டலும் இல்லாமல் மிகவும் இயல்பாக பந்தைதூக்கி எறிந்து நடந்து சென்றார். ரஹானேவின் அருமையான கேட்ச் அதன்பின் மில்லர் களமிறங்கி, சுதர்சனுடன் சேர்ந்தார். மில்லர், சுதர்சன் இருவரும் ஓவருக்கு ஒருபவுண்டரி அடித்து ஸ்கோரை மெல்ல உயர்த்தினர். 10ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 3 விக்கெட் இழப்புக்கு 80 ரன்கள் சேர்த்தது. பதிரனா பந்துவீச வந்தபின் குஜராத் ரன்ரேட் வேகம் சற்று குறைந்தது. தேஷ்பாண்டே வீசிய 12-வது ஓவரை மில்லர் எதிர்கொண்டார். யார்கராக வீசப்பட்ட 5வது பந்தை ப்ளிக் செய்து மில்லர் தட்டிவிட,பவுண்டரி லைனில் இருந்த ரஹானே பறந்து சென்று அருமையான கேட்ச் பிடித்தார். இந்த கேட்சை எதிர்பாராத மில்லர் 21 ரன்னில் ஏமாற்றத்துடன் வெளியேறினார். அதன்பின் ஓமர்சாய் களமிறங்கி, சுதர்சனிடம் சேர்ந்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES ரன்ரேட் நெருக்கடி அதன்பின் குஜராத் அணிக்கு ஸ்கோர் உயரவில்லை என்பதால் களத்தில் இருந்த சுதர்சன், ஓமர்சாய் மீது ரன்ரேட் அழுத்தம் அதிகரித்தது. இதனால் இருவரும் பெரிய ஷாட்களுக்கு முயன்றனர். பதிரணா வீசிய 15-வது ஓவரின் 2வது பந்தை சுதர்சன் எக்ஸ்ட்ரா கவரில் தூக்கி அடிக்க அந்தப் பந்தை ரச்சின் ரவீந்தரா பிடிக்காமல் கோட்டைவிட்டார். ஆனால், அதே ஓவரி்ன் 5வது பந்தில் ரிஸ்வியிடம் கேட்ச் கொடுத்து சுதர்சன் 37 ரன்னில் ஆட்டமிழந்தார். 15 ஓவர்களுக்குப்பின் குஜராத் அணி பேட்டர்கள் பெவிலியனிலிருந்து களத்துக்கு வருவதும், மீண்டும் பெவிலியன் செல்வதுமாக இருந்தனர். ஓமர்சாய் 11 ரன்னில் தேஷ்பாண்டே பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். ரஷித் கான் ஒரு ரன்னில் முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திவேட்டியா 6 ரன்னில் முஸ்தபிசுர் பந்துவீச்சில் ரவீந்திராவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ஜான்ஸன் 5, உமேஷ் 10 ரன்களுடன் களத்தில் இருந்தனர். 20 ஓவர்கள் முடிவில்குஜராத் அணி 8 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் சேர்த்து 63 ரன்களில் தோல்விஅடைந்தது. https://www.bbc.com/tamil/articles/c98rdn4y5yeo
-
அமெரிக்காவில் கப்பல் மோதியதில் பாலம் இடிந்தது - ஆற்றில் மூழ்கிய வாகனங்கள்
US Bridge Collapse: கப்பலில் இருந்து வந்த 'May Day' குரல்; சுதாரிப்பதற்குள் தரைமட்டமான Bridge