Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. Published By: RAJEEBAN 26 MAR, 2024 | 05:42 PM பாக்கிஸ்தானில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலில் ஐந்து சீன பிரஜைகள் கொல்லப்பட்டுள்ளனர். பாக்கிஸ்தானின் வடமேற்கு பகுதியில் சீன பிரஜைகள் பயணித்த வாகனத்தொடரணி மீதுதற்கொலை குண்டுதாரியொருவர் தாக்குதலை மேற்கொண்டார் என இராணுவ அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். கைபர் பக்துன்வா மாகாணத்தின் டசுவில் உள்ள தங்கள் முகாமிற்கு இஸ்லாமபாத்திலிருந்து சீன பொறியியலாளர்கள் வாகனத்தில் சென்றுகொண்டிருந்தனர் அவ்வேளை தற்கொலை குண்டுதாரி தனது வாகனத்தை அவர்களின் வாகனத்தை நோக்கி செலுத்தி வெடிக்கவைத்தார் என இராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார். ஐந்து சீன பிரஜைகளும் அவர்களின் வாகனச்சாரதியான பாக்கிஸ்தான் பிரஜையும் கொல்லப்பட்டுள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார். தாசு என்பது முக்கியமான நீர்மின்நிலையத்திற்கான அணையாகும்.இதனை சீன நிறுவனம் உருவாக்கிவருகின்றது இதேவேளை இந்த பகுதியில் கடந்த காலங்களிலும் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன,2021 இல் பேருந்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 9 சீன பிரஜைகள் கொல்லப்பட்டனர். https://www.virakesari.lk/article/179775
  2. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், பல்லப் கோஷ் பதவி, அறிவியல் செய்தியாளர் 6 மணி நேரங்களுக்கு முன்னர் நம்மைச் சுற்றி மர்மமான 'பேய்' துகள்கள் (Ghost particles) உள்ளதாகவும், இந்த பிரபஞ்சத்தின் உண்மைத் தன்மை பற்றிய நமது புரிதலை மேம்படுத்த அவை உதவும் என்றும் சில இயற்பியலாளர்கள் நீண்ட காலமாக நம்பி வந்தனர். அத்தகைய பேய் துகள்கள் நிஜமாகவே இருக்கிறதா இல்லையா என்பதை நிரூபிக்க ஒரு வழியைக் கண்டுபிடித்துவிட்டதாக கூறுகிறார்கள் விஞ்ஞானிகள். ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனம் (சிஇஆர்என்- CERN) அந்த துகள்களுக்கான ஆதாரங்களைக் கண்டறிய ஒரு புதிய சோதனைக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதுபோன்ற துகள்களைக் கண்டறிய தற்போது பயன்பாட்டில் உள்ள கருவிகளை விட ஆயிரம் மடங்கு அதிக உணர்திறன் கொண்ட ஒரு புதிய கருவி இந்த சோதனையில் பயன்படுத்தப்படும். அணு ஆராய்ச்சி நிறுவனத்தின் முக்கிய சாதனமான பெரிய ஆட்ரான் மோதல் கருவி (Large Hadron Collider- எல்.எச்.சி) துகள்களை ஒன்றோடொன்று மோதச் செய்யும். ஆனால் இந்த புதிய கருவி, துகள்களை ஒரு கடினமான மேற்பரப்பில் மோதச் செய்து அவற்றை நொறுக்கி விடும். இந்த பேய் துகள்கள் என்றால் என்ன, அவற்றைக் கண்டறிய ஒரு புதிய அணுகுமுறை ஏன் தேவைப்பட்டது என்பது குறித்து இந்தக் கட்டுரையில் விரிவாகக் காண்போம். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஹிக்ஸ் போஸான் போன்ற நன்கு அறியப்பட்ட துகளும் இந்தக் குடும்பத்தில் உள்ளது. 17 துகள்கள் கொண்ட குடும்பம் துகள் இயற்பியலின் தற்போதைய கோட்பாடு ஒரு நிலையான மாதிரி என்று அழைக்கப்படுகிறது. அதன்படி, பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் 17 துகள்கள் கொண்ட குடும்பத்தால் ஆனது. எலக்ட்ரான் மற்றும் கடவுள் துகள் என்று அழைக்கப்படும் ஹிக்ஸ் போஸான் (Higgs boson) போன்ற நன்கு அறியப்பட்ட துகள்களும், அதிகம் அறியப்படாத சார்ம் குவார்க் (Charm quark), டவ் நியூட்ரினோ (Tau neutrino) மற்றும் குளுவான் (Gluon) போன்றவையும் இதில் அடக்கம். நமது உலகம், விண்வெளியில் நாம் பார்க்கும் நட்சத்திரங்கள் மற்றும் விண்மீன் திரள்களின் உருவாக்கத்தில் பல நம்ப முடியாத சிறிய துகள்களின் பங்கு உள்ளது. மற்ற துகள்கள் இயற்கையின் சக்திகளில் முக்கிய பங்காற்றுகின்றன. ஆனால் இதில் ஒரு சிக்கல் உள்ளது. வானியலாளர்கள் வானத்தில் உள்ள விஷயங்களைத் தொடர்ந்து கவனித்திருக்கிறார்கள். உதாரணமாக விண்மீன் திரள்கள் நகரும் விதம் போன்றவற்றை குறிப்பிடுகிறார்கள். இருப்பினும் நாம் கவனிக்கக் கூடிய அனைத்தும் பிரபஞ்சத்தின் ஐந்து சதவிகிதம் மட்டுமே என்று உறுதியாகக் கூறுகிறது. சில பொருட்கள் அல்லது பிரபஞ்சத்தின் அனைத்தும் கூட, 'பேய்' அல்லது ‘ரகசிய’ துகள்களால் உருவானவையாக இருக்கலாம். துகள் இயற்பியலின் நிலையான மாதிரி கூறும் 17 துகள்களைப் போல அந்த பேய் துகள்கள் இருக்கலாம் என்று கருதப்படுகிறது. பட மூலாதாரம்,VICTOR DE SCHWANBERG/SCIENCE PHOTO LIBRARY படக்குறிப்பு, பேய் துகள்களை தற்போது வரை கண்டறிய முடியவில்லை. பேய் துகள்களை கண்டறிவது ஏன் கடினம்? ஆனால் இவற்றை கண்டறிவது மிகவும் கடினம். ஏனென்றால் அவை நமக்குத் தெரிந்த இயற்பியல் உலகத்துடன் மிகவும் அரிதாகவே தொடர்பு கொள்கின்றன. பேய்களைப் போலவே, அவை எல்லாவற்றையும் நேரடியாகக் கடந்து செல்லும், மேலும் பூமியின் எந்த சாதனத்தாலும் அவற்றை கண்டறிய முடியாது. ஆனால் கோட்பாடு என்னவென்றால், மிகவும் அரிதாக, நிலையான மாதிரி துகள்களைச் சிதைத்து உள்ளே நுழைந்துவிடும். அப்போது இவை அந்த சாதனங்களால் கண்டறியப்படலாம். துகள்களின் மோதல்களை பெரிதும் அதிகரிப்பதன் மூலம் இந்த சிதைவுகளைக் கண்டறியும் வாய்ப்புகளை அதிகரிக்கிறது புதிய கருவி. பெரும்பாலான தற்போதைய சோதனைகளைப் போல, துகள்களை ஒன்றோடொன்று மோத விடுவதற்குப் பதிலாக, அந்தத் துகள்களை ஒரு கடினமான மேற்பரப்பில் மோத விட்டு, அவற்றை சிதைக்கும். இதன் பொருள் அனைத்து துகள்களும் சிறிது சிறிதாக உடைக்கப்படும். இந்தச் சோதனையானது "ரகசிய துகள்களைத் தேடுவதில் ஒரு புதிய சகாப்தத்தைக் குறிக்கிறது" என்று லண்டனின் இம்பீரியல் கல்லூரியின் பேராசிரியர் மற்றும் திட்டத்தின் தலைமையாளர் ஆண்ட்ரே கோலுட்வின் கூறினார். "துகள் இயற்பியலின் பல முக்கிய சிக்கல்களைத் தீர்ப்பதற்கான தனித்துவமான வாய்ப்பைக் கொண்டுள்ளது இந்தச் சோதனை. மேலும் இதற்கு முன் அறிந்திராத துகள்களைக் கண்டுபிடிப்பதற்கான வாய்ப்பும் எங்களுக்கு உள்ளது" என்று அவர் கூறினார். பேய் துகள்களை கண்டறிவதற்கு பிரத்யேகமாக மாற்றியமைக்கப்பட்ட உபகரணங்கள் தேவைப்படுகின்றன. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பெரிய ஆட்ரான் மோதுவி. பேய் துகள்களை பிடிக்க புதிய அணுகுமுறை சாதாரண சோதனைகள் மூலம் பெரிய ஆட்ரான் மோதல் கருவியைப் பயன்படுத்தி, மோதலின் மையப் புள்ளியில் இருந்து ஒரு மீட்டர் வரை உள்ள புதிய துகள்களை மட்டுமே கண்டறிய முடியும். ஆனால் பேய்த் துகள்கள் சிதைந்து தங்களை வெளிப்படுத்துவதற்கு முன்பாகவே இந்த கருவிக்குத் தெரியாமல் நூற்றுக்கணக்கான மீட்டர்கள் கூட பயணித்து விடும். எனவே இந்த புதிய சோதனையில் டிடெக்டர்கள் வெகு தொலைவில் வைக்கப்பட்டுள்ளன. இம்பீரியல் கல்லூரியின் பேராசிரியர் மிதேஷ் படேல், “இந்த புதிய அணுகுமுறை புத்திசாலித்தனமானது” என்று விவரித்தார். "பரிசோதனையைப் பற்றி மிகவும் அட்டகாசமான விஷயம் என்னவென்றால், இந்த துகள்கள் நம் முன்னால் தான் உள்ளன, ஆனால் அவை தொடர்பு கொள்ளும் விதம் அல்லது அவை தொடர்பு கொள்ளாத விதம் காரணமாக அவற்றை ஒருபோதும் பார்க்க முடியவில்லை. நாங்கள் ஆய்வாளர்கள். இந்த புதிய சோதனையில் சுவாரஸ்யமான ஒன்றைக் காண முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். எனவே, நாம் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்." ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனத்தின் உள்ள இயற்பியலாளர் டாக்டர் கிளாடியா அஹ்திடாவின் கூற்றுப்படி, நிறுவனத்தில் இருக்கும் வசதிகளுக்குள் இந்த சோதனை செய்யப்படும். "தற்போதுள்ள பாதாள சோதனை அறை, உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் பகுதிகளை நாங்கள் பயன்படுத்துவோம். அதை முடிந்தவரை மீண்டும் பயன்படுத்த முயற்சிப்போம். எங்களிடம் இருக்கும் வசதிகள் இந்த பேய் துகள்களை தேடிப் பிடிக்க உதவும்" என்று கூறினார் அவர். பட மூலாதாரம்,GETTY IMAGES 2030இல் தொடங்கும் ‘பேய் துகள்களுக்கான’ தேடல் இந்த புதிய கருவி மற்றும் சோதனை முறை அணு ஆராய்ச்சி நிறுவனத்தின் மற்ற அனைத்து சோதனை முறைகளுடன் இணைந்து இயங்கும். இதில் மிகப்பெரியது பெரிய ஆட்ரான் மோதல் கருவி ஆகும். அது 2008ஆம் ஆண்டில் ரூபாய் 40,000 கோடி ரூபாய் செலவில் கட்டமைக்கப்பட்டது. அப்போதிலிருந்து பிரபஞ்சத்தின் 95% பேய் துகள்களை தேடி வருகிறது. இதுவரை அந்த மாதிரித் துகள்கள் எதையும் கண்டுபிடிக்க வில்லை, எனவே இதை விட மூன்று மடங்கு பெரிய மற்றும் மிகவும் சக்திவாய்ந்த இயந்திரத்தை உருவாக்க திட்டம் போடப்பட்டுள்ளது. மற்றொரு எதிர்கால மோதல் கருவியின் பட்ஜெட் ஒரு லட்சத்து இரண்டாயிரம் கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதன் திட்டமிடப்பட்ட தொடக்க தேதி 2040களின் இடையில் இருக்கும். இருப்பினும் அடுத்த முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு புதிய துகள்களைக் கண்டறிவதற்கான முழு திறன் அதற்கு இருக்காது என்று கூறப்படுகிறது. இதற்கு நேர்மாறாக, இந்த புதிய சோதனையானது 2030இல் புதிய துகள்களைத் தேடத் தொடங்கும் என திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் மற்ற மோதல் கருவிகளுடன் ஒப்பிடுகையில் பட்ஜெட் சுமார் நூறு மடங்கு மலிவானதாக இருக்கும். ரகசிய துகள்களைக் கண்டறிந்தால், அது இயற்பியலில் மிகப்பெரிய முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் என்பதால் சாத்தியமான அனைத்து முறைகளையும் ஆராய, அனைத்து அணுகுமுறைகளும் தேவை என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். https://www.bbc.com/tamil/articles/c0v35dpd2w5o
  3. அமெரிக்காவில் இந்திய குழு இயக்கிய கப்பல் பாலத்தில் மோத யார் காரணம்? கப்பல் நிறுவனம் தகவல் பட மூலாதாரம்,EPA 26 மார்ச் 2024, 08:27 GMT புதுப்பிக்கப்பட்டது 34 நிமிடங்களுக்கு முன்னர் அமெரிக்காவின் பால்டிமோர் நகரில் கப்பல் மோதியதில் பாலம் ஒன்று இடிந்து ஆற்றில் விழுந்தது. ஏழு பேர், பல வாகனங்கள் ஆற்றில் விழுந்ததாக தற்போது சம்பவ இடத்தில் இருக்கும் பால்டிமோர் நகர தீயணைப்புத் துறை அதிகாரிகள் கூறுகின்றனர். பாலம் முழுவதுமாக தண்ணீரில் விழுவதை சமூக ஊடகங்களில் காணொளிகளில் காண முடிகிறது. மோதிய கப்பல் சிங்கப்பூர் கொடியுடன் வந்ததாகத் தெரியவந்துள்ளது. 300 மீட்டம் நீளம் கொண்ட இந்த கப்பல் இலங்கையின் கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்தது. அதில் இருந்த மாலுமிகள் உள்பட அனைத்து பணியாளர்களும் இந்தியர்கள் ஆவர். போலீஸ் ஹெலிகாப்டர்கள் அப்பகுதியில் பலமுறை சுற்றி வருவதை விமானப் போக்குவரத்து ராடார்கள் காட்டுகின்றன. கப்பல் மோதிய போது பாலத்தில் சென்ற வாகனங்கள் என்ன ஆயின? அந்த நேரத்தில் பாலத்தில் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்களின் கதி என்ன? மோதல் நிகழ்ந்த போது கப்பல் எப்படி இருந்தது? கப்பலை இயக்கிய சினெர்ஜி மரைன் குரூப் நிறுவனம் என்ன கூறுகிறது? என்பது குறித்த புதிய தகவல்கள் கிடைத்துள்ளன. Play video, "அமெரிக்காவில் கப்பல் மோதியதில் பாலம் இடிந்து ஆற்றில் விழுந்தது", கால அளவு 1,23 01:23 காணொளிக் குறிப்பு, அமெரிக்காவில் கப்பல் மோதியதில் பாலம் இடிந்து ஆற்றில் விழுந்தது கப்பலில் இருந்த ஊழியர்களுக்கு காயம் இல்லை கப்பல் ஊழியர்களுக்கு காயங்கள் எதுவும் இல்லை என்று நிறுவனம் கூறுகிறது சிங்கப்பூர் கொடியுடன் வந்த டாலி என்ற கன்டெய்னர் கப்பல் மோதியதை கப்பல் நிறுவனமான சினெர்ஜி மரைன் குழு உறுதிப்படுத்துகிறது. "சம்பவத்தின் சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை," என்று அது கூறுகிறது. கப்பலில் இருந்த இரண்டு மாலுமிகள் உட்பட அனைத்து பணியாளர்களும் கணக்கிடப்பட்டுள்ளனர். மேலும் காயங்கள் எதுவும் இல்லை என்று அது மேலும் கூறுகிறது. பட மூலாதாரம்,REUTERS பிபிசி செய்தியாளர் கூறுவது என்ன? இது தெளிவாக ஒரு பெரிய சம்பவமாகும். மேலும் அவசர சேவைகள் மீட்புப் பணியில் இறங்கியுள்ளன. உள்ளூர் நேரப்படி அதிகாலை 1:30 மணியளவில், ஒரு பெரிய கன்டெய்னர் கப்பல் இந்த பாலத்தில் மோதியது. பின்னர் என்ந நடந்தது என்பதை காட்சிகள் கூறுகின்றன. இந்தகப் கப்பல் உண்மையில் சிங்கப்பூரில் கொடியுடன் வந்தது என்பது தெரியவருகிறது. பெரும்பாலும் கன்டெய்னர் கப்பல்களில் வெவ்வேறு நாடுகளின் கொடிகள் உள்ளன - அதாவது, அவை அந்த நாட்டைச் சேர்ந்தவை என்று அர்த்தமல்ல. அவை எங்கிருந்து கண்காணிக்கப்படுகின்றன என்பதை இதன் பொருளாகும். பட மூலாதாரம்,EPA மேரிலேண்ட் மாநிலத்தில் அவசரநிலை பிரான்சிஸ் ஸ்காட் கீ பாலம் இடிந்து விழுந்ததைத் தொடர்ந்து மேரிலேண்ட் மாநிலத்தில் அவசர நிலையை ஆளுநர் வெஸ் மூர் அறிவித்துள்ளார். "பைடன் நிர்வாகத்திலிருந்து மத்திய (Federal) சேவைகளை விரைவாகப் பெறுவம் வகையில் நாங்கள் ஒரு இடைநிலைக் குழுவுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம்." என்று அவர் கூறினார். "பாதிக்கப்பட்டோரை மீட்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வரும் துணிச்சலான ஆண்களுக்கும் பெண்களுக்கும், அனைவரின் பாதுகாப்பிற்காகவும் பிரார்த்தனை செய்கிறேன்" என்று அவர் தெரிவித்தார். மீட்பு முயற்சிகளை மேற்கொண்டு வரும் மத்திய, மாநில மற்றும் உள்ளூர் அமைப்புகளுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதாகவும் அவர் கூறுகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES மார்க்ஸ் நிறுவனத்தால் வாடகைக்கு எடுக்கப்பட்ட கப்பல் பாலத்தில் மோதிய கப்பல் மார்ஸ்க் நிறுவனத்தால் வாடகைக்கு எடுக்கப்பட்டது என்று தெரியவந்துள்ளது. கப்பல் நிறுவனமான மார்ஸ்க், இந்தத் தகவலை உறுதி செய்துள்ளது. "பால்டிமோரில் நடந்தது பற்றி நாங்கள் திகிலடைந்துள்ளோம். பாதிக்கப்பட்ட அனைவரையும் நினைத்துக் கொண்டிருக்கிறோம்," என்று அந்த நிறுவனம் கூறுகிறது. கப்பலில் மார்ஸ்க் பணியாளர்கள் யாரும் இல்லை என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது. விபத்து ஏற்பட்டது எப்படி? பாலத்தில் மோதிய கப்பலை இயக்கிய சினெர்ஜி மரைன் குழுமத்திற்கான தகவல்தொடர்புகளை கையாளும் அதிகாரியான பால் ஆடம்சன், "கப்பல் பணியாளர்கள் அனைவரும் இந்தியர்கள். அவர்களுடன் 22 பேர் இருந்தனர்" எனத் தெரிவித்தார். கப்பல் குழுவைச் சேர்ந்த ஒருவரது தலையில் ஒரு சிராய்ப்பு ஏற்பட்டது. ஆனால் ஆனால் காயங்கள் ஏதும் இல்லை என்று அவர் கூறுகிறார். மியாமி மற்றும் ஓக்லஹோமாவில் இருந்து, நிறுவனத்தின் அமெரிக்க குழுவின் இரண்டு உறுப்பினர்கள் பால்டிமோர் சென்று விசாரித்து வருகின்றனர் அவர் குறிப்பிட்டார். பட மூலாதாரம்,BALTIMORE FIRE STATION நீருக்குள் மூழ்கிய வாகனங்களின் கதி என்ன? பால்டிமோர் தீயணைப்புத் தலைவர் கூறுகையில், "எங்கள் சோனார் கருவி தண்ணீரில் வாகனங்கள் மூழ்கி இருப்பதைக் கண்டறிந்துள்ளதை நான் உறுதியாகச் சொல்ல முடியும்", ஆனால் எத்தனை வாகனங்கள் உள்ளன என்பதை எங்களால் உறுதிப்படுத்த முடியவில்லை என்று கூறுகிறார். பணியாளர்கள் இன்னும் கப்பலில் இருப்பதாக அவர் கூறுகிறார். "நாங்கள் கடலோர காவல்படையுடன் தொடர்பு கொண்டுள்ளோம்" என்று அவர் மேலும் கூறினார். சில தொழிலாளர்கள் இன்னும் பாலத்தில் இருப்பதாக அவரது குழுவிடம் கூறப்பட்டுள்ளது, ஆனால் அவர்கள் இதை இன்னும் உறுதிப்படுத்தவில்லை. பாலத்தில் பணி செய்த ஒப்பந்ததாரர்கள் என்ன ஆனார்கள்? அமெரிக்க கடலோர காவல்படையுடன் இணைந்து மேரிலாந்தின் போக்குவரத்துச் செயலர் பால் வைடெஃபெல்ட்டும் செய்தியாளர்களுக்கு தகவல்களை வழங்கினார். பாலம் இடிந்து விழுந்த நேரத்தில் அதில் பணிபுரிந்த ஒப்பந்ததாரர்கள், "கான்கிரீட் தளத்தில் சில பழுது நீக்கும் பணிகளை பார்த்துக் கொண்டிருந்தனர்" என்று வைடெஃபெல்ட் கூறினார். தேடுதல் மற்றும் மீட்பு பணி தொடர்வதால் பால்டிமோர் துறைமுகத்திற்கு உள்ளேயும் வெளியேயும் கப்பல் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். அமெரிக்க கடலோர காவல்படையின் செய்தித் தொடர்பாளர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "தண்ணீரில் உயிர் பிழைத்தவர்கள் யாரேனும் இருக்கிறார்களா என்பதைத் தேடுவதே முதன்மை பணி. சம்பவ இடத்தில் மூன்று சிறிய படகுகள், 87 அடி ரோந்து படகு மற்றும் ஹெலிகாப்டர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன." என்றார். இதுவரை உயிரிழப்புகள் எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று வைடெஃபெல்ட் கூறினார். பாலம் இடிந்து விழுந்ததற்கு என்ன காரணம் என்பதை இப்போதே உறுதியாக கூற முடியாது என்றும் கூறினார். பட மூலாதாரம்,BALTIMORE FIRE STATION பாலத்தின் மோதும் முன்பே கப்பல் உந்து சக்தியை இழந்தது அரசாங்க நிறுவனமான சைபர் செக்யூரிட்டி மற்றும் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் செக்யூரிட்டி ஏஜென்சி (CISA )யின் வகைப்படுத்தப்படாத மெமோ, சிங்கப்பூர் கொடியுடன் இருந்த டாலி கப்பல் "உந்து சக்தியை இழந்து" அதன் பின்னரே "பாலத்தின் துணைக் கோபுரத்தில்" மோதியதை உறுதிப்படுத்தியுள்ளது. கப்பல் நிறுவனம் கூறுவது என்ன? கப்பலை இயக்கிய சினெர்ஜி மரைன் குரூப் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "சிங்கப்பூர் கொடி தாங்கிய சரக்கு கப்பல் டாலி, மார்ச் 26ஆம் தேதி உள்ளூர் நேரப்படி 1.30 மணிக்கு இரண்டு மாலுமிகளுடன் சென்று கொண்டிருந்தபோது, பால்டிமோர் பிரான்சிஸ் ஸ்காட் கீ பாலத்தின் தூண்களில் ஒன்றின் மீது மோதியது. மாலுமிகள் உட்பட அனைத்து பணியாளர்களுமே இதற்கு பொறுப்பானவர்கள். இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அங்கே, எவ்வித மாசும் ஏற்படவில்லை. சம்பவத்திற்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை" என்று தெரிவித்துள்ளது. மேலும், இந்த கப்பலில் 22 பணியாளர்கள் உள்ளனர் என்றும் அனைவரும் இந்தியர்கள் என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது. பட மூலாதாரம்,LSEG படக்குறிப்பு, கப்பல் விபத்து நிகழ்ந்த பொழுதை காட்டும் வரைபடம் சினெர்ஜி மரைன் குழும அதிகாரி தகவல் இதேபோல் சினெர்ஜி மரைன் குழுமத்தின் செய்தி அதிகாரி பகிர்ந்துள்ள தகவலில், "மோதல் காரணமாக பணியாளர்களில் ஒருவருக்கு சிறிய அளவில் காயம் ஏற்பட்டது, சிகிச்சைக்கு பின்னர் அவர் நலமுடன் இருக்கிறார். இந்த சம்பவம் தொடர்பாக பணியாளர்கள் குழுவினரிடம் ஃபெடரல் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். 22 பணியாளர்களில் 16 பேருடன் அவர்களின் குடும்பத்தினர் தொடர்புகொள்ள முடிந்தது. விபத்து குறித்து மற்ற குடும்ப உறுப்பினர்களுக்கு தெரிவிக்க முயற்சிகள் எடுக்கப்பட்டன. தொடர்ந்து விசாரணை நடந்து வருவதால் குழுவினருடன் பேச முடியாத நிலை உள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.bbc.com/tamil/articles/cgxdgqjxj14o
  4. வட, கிழக்கில் வழிபாட்டுத்தலங்களை இலக்குவைத்து நிகழும் நில அபகரிப்புக்களால் சமூகங்களுக்கு இடையில் பதற்றம் - பிரிட்டனின் பொதுநலவாய, அபிவிருத்தி அலுவலகம் சுட்டிக்காட்டு Published By: VISHNU 26 MAR, 2024 | 06:41 PM (நா.தனுஜா) இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்ந்தும் கரிசனைக்குரியதாகவே காணப்படுகின்றது. நாட்டின் வட, கிழக்கு மாகாணங்களில் குமுறைகளுக்கும் முகங்கொடுத்துவருகின்றன. அதுமாத்திரமன்றி அப்பகுதிகளில் கரிசனைக்குரிய மட்டத்தில் காணி அபகரிப்புக்கள் அதிகரித்துவருவதுடன், சிலவேளைகளில் அவை மத வழிபாட்டுத்தலங்களை இலக்குவைத்தவையாகக் காணப்படுகின்றன. இவ்வாறான செயற்பாடுகள் சமூகங்களுக்கு இடையில் பதற்றத்தைத் தோற்றுவித்துள்ளன என்று பிரிட்டனின் பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகம் தெரிவித்துள்ளது. பிரிட்டனின் பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தினால் கடந்த ஆண்டு ஜுலை மாதம் 2022 ஆம் ஆண்டுக்கான வருடாந்த மனித உரிமைகள் மற்றும் ஜனநாயக அறிக்கை வெளியிடப்பட்டது. அவ்வறிக்கை குறிப்பாக மனித உரிமைகள் அல்லது ஜனநாயக ரீதியிலான சவால்களுக்கு முகங்கொடுத்திருக்கும் 32 நாடுகளைப் பட்டியலிட்டிருந்தது. அதன்படி 2023 ஆம் ஆண்டு ஜனவரி 1 - ஜுன் 30 வரையான 6 மாதகாலப்பகுதியில் அந்த 32 நாடுகளின் மனித உரிமைகள் மற்றும் ஜனநாயக நிலைவரம் தொடர்பில் ஆராய்ந்து வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையிலேயே பிரிட்டன் பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகம் மேற்கண்டவாறு சுட்டிக்காட்டியுள்ளது. புதுப்பிக்கப்பட்ட அவ்வறிக்கையில் இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் ஜனநாயக நிலைவரம் தொடர்பில் கூறப்பட்டுள்ள விடயங்கள் வருமாறு: இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்ந்தும் கரிசனைக்குரியதாகவே காணப்படுகின்றது. தற்போது நடைமுறையிலுள்ள பயங்கரவாதத்தடைச்சட்டத்தைப் பதிலீடு செய்வதை முன்னிறுத்திய பல்வேறு முயற்சிகளுக்கு மத்தியிலும், அச்சட்டம் தொடர்ந்து பயன்படுத்தப்படுவதுடன் கருத்து வெளிப்பாடு மற்றும் ஒன்றுகூடுவதற்கான சுதந்திரத்தை மட்டுப்படுத்தும் ஏனைய சட்டங்களும் பிரயோகிக்கப்பட்டுவருகின்றன. அதேபோன்று அமைதியான முறையில் நடத்தப்பட்ட போராட்டங்கள் மற்றும் நினைவுகூரல் நிகழ்வுகள் கடுமையான முறையில் அடக்கப்பட்ட சம்பவங்களும் பதிவாகியுள்ளன. அதேபோன்று நாட்டின் வட, கிழக்கு மாகாணங்களில் வாழும் சமூகங்கள் பாதுகாப்புத்தரப்பினரின் தொடர் கண்காணிப்புக்கும், ஒடுக்குமுறைகளுக்கும் முகங்கொடுத்துவருகின்றன. அதுமாத்திரமன்றி அப்பகுதிகளில் கரிசனைக்குரிய மட்டத்தில் காணி அபகரிப்புக்கள் அதிகரித்துவருவதுடன், சிலவேளைகளில் அவை மத வழிபாட்டுத்தலங்களை இலக்குவைத்தவையாகக் காணப்படுகின்றன. இவ்வாறான செயற்பாடுகள் சமூகங்களுக்கு இடையில் பதற்றத்தைத் தோற்றுவித்துள்ளன. உண்மை மற்றும் நல்லிணக்க விவகாரத்தில் முன்னேற்றத்தை அடைந்துகொள்வதற்கான கடப்பாட்டை இலங்கை கொண்டிருப்பது வரவேற்கத்தக்கதெனினும், அதனை நடைமுறைப்படுத்துவதற்கான திட்டங்கள் எவையும் 2023 ஜுன் மாதமளவில் வெளியிடப்பட்டிருக்கவில்லை. இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரில் நாம் சமர்ப்பித்த அறிக்கையில் யுத்தத்துக்கும், தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்குக்கும் வழிவகுத்த அடிப்படைக்காரணிகளைக் கண்டறிந்து களைவதற்குரிய பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தவேண்டும் எனவும், வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல், அனைவரையும் உள்ளடக்கிய தன்மை என்பன பேணப்படவேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தோம் என்று அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/179776
  5. ஆவோஜி ஆவோஜி... அண்ணை உங்களால விமானப் பயணிகளுக்கும் விமானத்திற்கும் ஆபத்து நேராதோ? என்னமோ எடை எல்லாம் கணித்து அதுக்கேற்ற அளவில் எரிபொருள் நிரப்பித் தானே விமானத்தை இயக்குகிறார்கள். 10கிலோ கூடினால் எரிபொருள் விரைவாக தீராதோ?
  6. அதிமுகவும் பாஜகவும் பிரிந்து போட்டியிடுவதால் யாருக்கு லாபம்? பட மூலாதாரம்,GETTY IMAGES/ANNAMALAI FACEBOOK கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் 26 மார்ச் 2024, 02:27 GMT நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் உச்சகட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், மாநிலத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க., நா.த.க. என பல முனைப் போட்டி ஏற்பட்டிருக்கும் நிலையில் போட்டி தீவிரமடைந்திருக்கிறது. தி.மு.க. கூட்டணியில், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், ம.தி.மு.க., மக்கள் நீதி மய்யம், கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி ஆகியவை இடம்பெற்றுள்ளன. அ.தி.மு.க. கூட்டணியில், அ.தி.மு.க., தே.மு.தி.க, புதிய தமிழகம், எஸ்.டி.பி.ஐ. ஆகிய கட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன. பா.ஜ.க. கூட்டணியைப் பொறுத்தவரை, பா.ஜ.க., பா.ம.க., டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், தமிழ் மாநில காங்கிரஸ், இந்திய ஜனநாயகக் கட்சி, புதிய நீதிக் கட்சி, தேவநாதனின் இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம், ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், ஓ. பன்னீர்செல்வத்தின் அணி ஆகியவை இடம்பெற்றுள்ளன. ஓ. பன்னீர்செல்வத்தின் நிலைப்பாடு தெரியாததால், பா.ஜ.க. கூட்டணியை முடிவுசெய்வது இழுத்துக்கொண்டே போனது. நாம் தமிழர் கட்சி 40 இடங்களிலும் தனித்துப் போட்டியிடுகிறது. எல்லா கட்சிகளுமே தங்கள் வேட்பாளர்களை அறிவித்து, பரப்புரையில் இறங்கிவிட்டன. இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சி மட்டும் மயிலாடுதுறை தொகுதிக்கு வேட்பாளரை இன்னும் அறிவிக்கவில்லை. பட மூலாதாரம்,UDHAYANIDHI STALIN FACEBOOK இந்தியத் தேர்தல் வரலாற்றில் பலமுனைப் போட்டிகள் இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு தமிழ்நாட்டில் நடந்த நாடாளுமன்றத் தேர்தல்களில் இதுபோல பலமுனைப் போட்டி நிலவுவது ஒன்றும் புதிதல்ல. 1951ல் நடந்த பொதுத் தேர்தலில் துவங்கி, 1991 வரையிலான தேர்தல்களில் 1962, 1967ஆம் ஆண்டு தேர்தல் தவிர்த்த அனைத்து நாடாளுமன்றத் தேர்தல்களிலுமே இரு முனைப் போட்டிதான் நிலவியது. 1962, 1967 ஆகிய தேர்தல்களில் மட்டும் காங்கிரஸ் - தி.மு.க. - இடதுசாரிகள் என மும்முனைப் போட்டி நிலவியது. ஆனால், 1991க்குப் பிறகு தமிழ்நாட்டில் கட்சிகள் உடைந்ததால், புதிய கட்சிகள் துவங்கப்படுவதால் காட்சிகள் மாறின. ஆகவே, 1996ஆம் ஆண்டிலிருந்து தமிழ்நாட்டில் பலமுனைப் போட்டிதான் நடைபெற்று வருகிறது. 1996ல் நடந்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி, தி.மு.க. கூட்டணி, ம.தி.மு.க. - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணி, பா.ம.க. - திவாரி காங்கிரஸ் கூட்டணி என நான்கு முனைப் போட்டி நிலவியது. 1998, 1999, 2004, 2009 நாடாளுமன்றத் தேர்தல்களில் மும்முனைப் போட்டி நிலவியது. ஆனால், 2014ல் தேசிய கட்சிகளுக்கும் மாநிலக் கட்சிகளுக்கும் இடையில் கூட்டணி ஏற்படாமல் போன நிலையில், அந்தத் தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க., பா.ஜ.க. - தே.மு.திக. கூட்டணி, காங்கிரஸ், இடதுசாரிக் கூட்டணி என ஐந்து முனைப் போட்டி ஏற்பட்டது. அதேபோல, 2019ஆம் ஆண்டு தேர்தலில் அ.தி.மு.க. உடைந்ததோடு, நாம் தமிழர், மக்கள் நீதிமய்யம் என புதிய கட்சிகளும் களத்தில் இறங்கியதால், அ.தி.மு.க., தி.மு.க., அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் என ஐந்து முனை போட்டி நிலவியது. இப்போது, கடந்த தேர்தலில் தனியாக நின்ற கட்சிகள் கூட்டணியில் ஐக்கியமாகியிருப்பதால், மீண்டும் நான்கு முனைப் போட்டிக்கு திரும்பியிருக்கிறது தேர்தல்களம். ஆனால், தேர்தல் ஆய்வாளர்களைப் பொறுத்தவரை ஒரு கட்சியையோ, அணியையோ ஒரு முனையாக எடுத்துக்கொள்ள வேண்டுமென்றால் ஒரு குறிப்பிட்ட அளவு வாக்குகளைப் பெற்றிருக்க வேண்டும் என்கிறார் மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம். "அந்த மூன்றாவது கட்சியோ அல்லது அணியோ கடந்த தேர்தலில் ஆறில் ஒரு சதவீத வாக்குகளைப் பெற்றிருக்க வேண்டும். அதாவது, ஒரு வேட்பாளர் தனது டெபாசிட்டைத் திரும்பப் பெற, பெற்றிருக்க வேண்டிய வாக்கு சதவீதமான சுமார் 16.6 சதவீத வாக்குகளைப் பெறும் கட்சியோ, அணியோதான் ஒரு முனையாக இருக்க முடியும். அப்படிப் பார்த்தால், பெரும்பாலான தேர்தல்களில் தமிழ்நாட்டில் இரு முனைப் போட்டியே நிலவியிருக்கிறது" என்கிறார் ஷ்யாம். படக்குறிப்பு, மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம். எந்தெந்த தொகுதிகளில் மும்முனைப் போட்டி கடந்த தேர்தல் முடிவுகளை வைத்துப் பார்தால், இந்தத் தேர்தலிலும் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. அணிகள் மட்டுமே அந்த அளவுக்கு வாக்கு சதவீதத்தைப் பெற்றிருந்தன. ஆகவே, இந்த முறையும் இருமுனைப் போட்டி என்றுதான் சொல்ல வேண்டும் என்றாலும், சில தொகுதிகளில் பா.ஜ.க. கூட்டணியின் முக்கியமான வேட்பாளர்கள் களத்தில் இறங்கியிருப்பதால், அந்தத் தொகுதிகள் மட்டும் மூன்று முனைப் போட்டியைச் சந்திப்பதாகச் சொல்லலாம். மிகச் சில இடங்களில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள், கட்சியின் பொதுவான வாக்கு சதவீதத்தைவிட கூடுதல் வாக்கு சதவீதத்தைப் பெறக்கூடும். ஒரு இடத்தில் மூன்று முனைப் போட்டி நிலவும்போது, அந்தத் தொகுதியில் போட்டியிடும் மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் வாக்குகள் பிரிந்து, அந்தத் தொகுதியில் வெற்றிபெறும் வேட்பாளரின் வாக்கு வித்தியாசம் மிகக் குறைவானதாகவே இருக்கும். கடந்த ஆண்டு தேர்தலில் தேனி தொகுதிதான் மிகக் கடுமையான மும்முனைப் போட்டியை சந்தித்தது. தி.மு.க. கூட்டணியின் சார்பில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனும் அ.தி.மு.க. கூட்டணியில் ஓ.பி.எஸ். ரவீந்திரநாத்தும் அ.ம.மு.கவின் சார்பில் தங்க தமிழ்ச்செல்வனும் போட்டியிட்டனர். இதில் ரவீந்திரநாத் 5,04,813 வாக்குகளைப் பெற்றார். ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் 4,28,120 வாக்குகளையும் தங்க தமிழ்ச்செல்வன் 1,44,050 வாக்குகளையும் பெற்றனர். ரவீந்திரநாத் 76,693 வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே வெற்றிபெற்றார். (வேறு சில தொகுதிகளில் வாக்கு வித்தியாசம் மிகக் குறைவாக இருந்தாலும், அவை தி.மு.க. - அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களுக்கு இடையிலான போட்டி கடுமையாக இருந்ததால் அம்மாதிரி நிலை ஏற்பட்டது. உதாரணமாக சிதம்பரம், வேலூர் தொகுதிகளில் அதுபோன்ற நிலை ஏற்பட்டது) இந்த முறை பின்வரும் 11 தொகுதிகள் மூன்று முனை போட்டியை எதிர்கொள்வதாகச் சொல்லலாம்: 1. தென் சென்னைத் தொகுதி (தி.மு.க. சார்பில் தமிழச்சி தங்கபாண்டியன், அ.தி.மு.க. சார்பில் ஜெ.ஜெயவர்தன், பா.ஜ.க. சார்பில் தமிழிசை சௌந்தர்ராஜன்), 2. வேலூர் தொகுதி (தி.மு.க. சார்பில் கதிர் ஆனந்த், அ.தி.மு.க. சார்பில் எஸ். பசுபதி, பா.ஜ.க.கூட்டணி சார்பில் ஏ.சி. சண்முகம்), 3. தர்மபுரி தொகுதி (அ.தி.மு.க., தி.மு.க., வேட்பாளர்கள் தவிர, பா.ஜ.க. கூட்டணி சார்பில் சௌமியா அன்புமணி), 4. நீலகிரி தொகுதி (தி.மு.க. சார்பில் ஆ. ராசா, அ.தி.மு.க. சார்பில் லோகேஷ் தமிழ்ச்செல்வன், பா.ஜ.க. சார்பில் மத்திய இணையமைச்சர் எல். முருகன்), 5. கோயம்புத்தூர் தொகுதி (தி.மு.க. சார்பில் கணபதி ராஜ்குமார், அ.தி.மு.க. சார்பில் சிங்கை ராமச்சந்திரன், பா.ஜ.க. சார்பில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை), 6. பெரம்பலூர் தொகுதி (தி.மு.க. சார்பில் அருண் நேரு, அ.தி.மு.க. சார்பில் என்.டி. சந்திரமோகன், பா.ஜ.க. கூட்டணி சார்பில் பாரி வேந்தர்), 7. தேனி தொகுதி (தி.மு.க. சார்பில் தங்க தமிழ்ச்செல்வன், அ.தி.மு.க. சார்பில் வி.டி. நாராயணசாமி, பா.ஜ.க. கூட்டணி சார்பில் டிடிவி தினகரன்), 8. விருதுநகர் (தி.மு.க. கூட்டணியில் சார்பில் காங்கிரசின் மாணிக்கம் தாகூர், அ.தி.மு.க. கூட்டணியின் சார்பில் தே.மு.தி.கவின் விஜய பிரபாகரன், பா.ஜ.க. கூட்டணி சார்பில் ராதிகா சரத்குமார்), 9. ராமநாதபுரம் (தி.மு.க. கூட்டணி சார்பில் முஸ்லீம் லீகின் நவாஸ் கனி, அ.தி.மு.க. சார்பில் ஜெயபெருமாள், பா.ஜ.க. கூட்டணி சார்பில் ஓ. பன்னீர்செல்வம்), 10. திருநெல்வேலி (காங்கிரசின் சார்பில் சி. ராபர்ட் ப்ரூஸ், அ.தி.மு.க. சார்பில் எம். ஜான்சிராணி, பா.ஜ.க. கூட்டணி சார்பில் நயினார் நாகேந்திரன்), 11. கன்னியாகுமாரி (காங்கிரஸ் சார்பில் விஜய் வசந்த், அ.தி.மு.க. சார்பில் நாசரேத் பசிலியான், பா.ஜ.க. கூட்டணி சார்பில் பொன். ராதாகிருஷ்ணன்). படக்குறிப்பு, தென் சென்னை, வேலூர், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திருநெல்வேலி, பெரம்பலூர் ஆகிய தொகுதிகளில் கடுமையான போட்டி நிலவுவதாகச் சொல்லலாம். இந்த 11 தொகுதிகளிலும் தென் சென்னை, வேலூர், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திருநெல்வேலி, பெரம்பலூர் ஆகிய தொகுதிகளில் கடுமையான போட்டி நிலவுவதாகச் சொல்லலாம். பா.ஜ.கவின் முக்கியத் தலைவர்கள் போட்டியிடுவது, பா.ஜ.கவுக்கு அடிப்படையிலேயே செல்வாக்குமிக்க தொகுதியாக இருப்பது போன்ற காரணங்களால் இந்தத் தொகுதிகள் மும்முனைப் போட்டியை எதிர்கொள்கின்றன. மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம் பேசுகையில், "அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய இரு கட்சிகளுக்கும் எல்லாத் தொகுதிகளிலும் குறிப்பிடத்தக்க வாக்கு சதவீதம் உண்டு. இதைத் தாண்டி மற்றொரு கட்சியின் வேட்பாளர் வெற்றிபெற வேண்டுமென்றால் நன்கு அறியப்பட்டவர்களாக, தொகுதிக்குள் தொடர்ந்து பணியாற்றியவர்களாக இருக்கவேண்டும். அவர்களுக்கு எதிரான அம்சங்கள் ஏதும் அந்தத் தொகுதியில் இருக்கக்கூடாது. அப்படிப் பார்க்கும்போது நயினார் நாகேந்திரன், டி.டி.வி. தினகரன், ஏ.சி. சண்முகம், பாரிவேந்தர், பொன். ராதாகிருஷ்ணன் ஆகியோர் மூன்றாவது முனையில் கடுமையான போட்டியைக் கொடுப்பார்கள். இவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் அவரவர் தொகுதியில் செல்வாக்கைப் பெற்றவர்கள். நீலகிரியில் நிற்கும் எல். முருகனும் கோயம்புத்தூரில் நிற்கும் கே. அண்ணாமலையும் நட்சத்திர வேட்பாளர்களாக இருக்கலாம். ஆனால், அவர்களுக்கு சாதகமல்லாத அம்சங்கள் அந்தத் தொகுதிகளில் உண்டு. நீலகிரி தொகுதியில் உள்ள மலையக மக்களின் வாக்குகளை எல். முருகனால் பெற முடியுமா என்பது சந்தேகம்தான். அதேபோல, கோயம்புத்தூரில் அ.தி.மு.கவுக்கும் தி.மு.வுக்கும் உள்ள கட்சிக் கட்டமைப்பைத் தாண்டி அடிமட்டத்தில் பா.ஜ.கவால் பணியாற்ற முடியுமா என்பதையும் பார்க்க வேண்டும். தவிர, இந்தத் தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க., பா.ஜ.க. கூட்டணி தவிர, நாம் தமிழரும் களத்தில் நிற்கிறது. இரு திராவிடக் கட்சிகளையும் பிடிக்காதவர்கள் நாம் தமிழருக்குப் வாக்களிப்பார்களா, பா.ஜ.கவுக்கு வாக்களிப்பார்களா என்பது முக்கியமான கேள்வியாக இருக்கும்" என்றார். இம்மாதிரியான மும்முனைப் போட்டிகளில் வெற்றிவாய்ப்பு யாருக்கு? "பொதுவாகத் தேர்தல் முடிவுகளை யாரும் கணிக்க முடியாது. இருந்தபோதும், பல முனைப் போட்டி இருக்கும்போது, அ.தி.மு.க., தி.மு.கவின் அடிப்படையான வாக்கு வங்கி அவர்களுக்குச் சென்றுவிடும். மீதமுள்ள வாக்குகளை மற்ற கட்சிகள் எல்லாம் பிரித்துக்கொள்ள வேண்டியிருக்கும். ஆனால், இதையெல்லாம் தாண்டி கட்சிகளின் பிரச்சாரம், மக்களிடையே உள்ள அதிருப்தி ஆகியவையும் முடிவுகளை தீர்மானிக்கும் முக்கிய காரணியாக இருக்கும்" என்கிறார் ஷ்யாம். https://www.bbc.com/tamil/articles/c4nd77kwnnko
  7. Published By: VISHNU 26 MAR, 2024 | 08:26 PM இந்த வருடம் ஒக்டோபர் மாதம் முதல் வாரத்தில் அரசியலமைப்பு ரீதியாக ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அமைச்சரவை அமைச்சர்களுக்கு ஜனாதிபதி அறிவித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அத்துடன், அண்மையில் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட அரசியல் அமைச்சரவைக்கு இது அறிவிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் உள்ளக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. https://www.virakesari.lk/article/179779
  8. Published By: DIGITAL DESK 3 26 MAR, 2024 | 03:46 PM யாழ்ப்பாணத்தில் தவறான அக்குபஞ்சர் சிகிச்சை முறையால் ஒருவர் உயிரிழந்துள்ளார். அச்சுவேலி கிழக்கை சேர்ந்த மாணிக்கம் சற்குணராஜா (வயது 64) என்பவரே உயிரிழந்துள்ளார். முழங்கால் வலியினால் அவதிப்பட்டு வந்தவர் யாழ்.நகர் பகுதியை அண்மித்த பிறவுண் வீதியில் அக்குபஞ்சர் சிகிச்சை நிலையம் என்ற பெயரில் இயங்கி வரும் சிகிச்சை நிலையத்திற்கு சமூக ஊடகங்களில் வந்த விளம்பரங்களை நம்பி சிகிச்சைக்காக சென்றுள்ளார். அங்கு முழங்கால் வலிகளை போக்குவதாக முழங்கால்களில் ஊசிகளை குத்தி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. சிகிச்சையின் பின்னர் கடுமையான வலிகள் ஏற்பட்டமையால் , யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உடற்கூற்று பரிசோதனையின் போது, அக்குபஞ்சர் சிகிச்சை என தவறான முறைகளில் செலுத்தப்பட்ட ஊசிகள் மூலம் கிருமி தொற்றுக்கள் ஏற்பட்டு, அவை உடல் முழுவதும் பரவியதால் மரணம் சம்பவித்துள்ளது என கண்டறியப்பட்டுள்ளது. சமூக ஊடகங்களில் வெளியாகும் விளம்பரங்களை நம்பி தவறான சிகிச்சை முறைகளை பெற்றுக்கொள்வோர் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து செல்லும் நிலையிலும், அது தொடர்பிலான விழிப்புணர்வுகள் மக்கள் மத்தியில் போதாமையாக உள்ளதாகவும், இவ்வாறான போலி மருத்துவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுப்பதன் ஊடாகவே போலி மருத்துவர்களிடம் இருந்து மக்களை காப்பாற்ற முடியும் என வைத்திய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. https://www.virakesari.lk/article/179759
  9. 26 MAR, 2024 | 03:40 PM முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட இரண்டு பிரதிவாதிகளுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை தொடர்ந்து முன்னெடுத்து செல்ல முடியாது என பிரதிவாதிகள் முன்வைத்த பூர்வாங்க ஆட்சேபனையை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை (26) நிராகரித்துள்ளது. இதன்படி, முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் அச்சக கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ஜயம்பதி பண்டார ஹீன்கெந்த ஆகியோருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கைத் தொடர கொழும்பு மேல் நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது . இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தார். இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை டிதிர்வரும் ஜூலை 22 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. 2012 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15 ஆம் திகதி முதல் 2012 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதி வரையான காலப்பகுதியில், அமைச்சர் .கெஹலிய ரம்புக்வெல்ல, அரச நிதியிலிருந்து 2,30,000 ரூபாவை தனிப்பட்ட தேவைக்காக செலவு செய்தமை தொடர்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/179753
  10. 26 MAR, 2024 | 05:06 PM அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்படுவதற்கு எதிராக விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் ஜூலியன் அசஞ்சே முன்னெடுத்துள்ள போராட்டத்தில் அவருக்கு சிறிய வெற்றி கிடைத்துள்ளது. அமெரிக்காவும் பிரிட்டனும் உரிய உத்தரவாதங்களை வழங்காவிட்டால் அசஞ்சே தான் நாடு கடத்தப்படுவதற்கு எதிராக மேல்முறையீடு செய்யலாம் என பிரிட்டனின் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேல்முறையீடு செய்வதற்கு அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தால் அடுத்த சில நாட்களில் அவர் அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்பட்டிருப்பார். வேவுபார்த்த குற்றச்சாட்டுகளிற்காக அவரை நாடு கடத்தவேண்டும் என அமெரிக்கா வேண்டுகோள் விடுத்துள்ளது. இரண்டுநாட்கள் விசாரணையின் பின்னர் நீதிபதிகள் ஜூலியன் அசஞ்சேயின் வழக்கறிஞர்கள் அசஞ்சேயிடம் வாதிடக்கூடிய வழக்குள்ளதை என்பதை உறுதி செய்துள்ளனர் மேல்முறையீடு செய்வதற்கு அனுமதி வழங்கவேண்டும் என தீர்ப்பளித்துள்ளனர். எனினும் அமெரிக்காவும் பிரிட்டனும் உரிய உத்தரவாதங்களை வழங்கமுடியாவிட்டால் மாத்திரம் அவரின் மேல்முறையீடு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும். https://www.virakesari.lk/article/179770
  11. யாழ்ப்பாணம் – கீரிமலை ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள பகுதியில் முன்னெடுக்கப்பட்ட அளவீட்டுப்பணி மக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டுள்ளது. கீரிமலை, ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள பகுதியை நகர அபிவிருத்தி நடவடிக்கைக்காக சுவீகரிக்கும் அடிப்படையில் அளவீடுகள் செய்வதற்கு நில அளவைத்திணைக்கள அதிகாரிகள் இன்று (26) வருகை தந்திருந்தனர். இதன்போது குறித்த காணி அளவீட்டுக்கு காணி உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பை வெளியிட்டதுடன், நில அளவைத்திணைக்களத்தின் வாகனத்தினையும் இடைமறித்ததால் சற்றுநேரம் பதற்றநிலை ஏற்பட்டது. பின்னர் காணி உரிமையாளர்களின் நீண்ட நேர எதிர்ப்பினை அடுத்து, காணியினை அளவீடு செய்வதற்கு தமக்கு விருப்பம் இல்லை என காணி உரிமையாளர்கள் கடிதம் எழுதிக் கையொப்பமிட்டு வழங்கியதை அடுத்து நில அளவைத்திணைக்கள அதிகாரிகள் அங்கிருந்து திரும்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. https://thinakkural.lk/article/297160
  12. 26 மார்ச் 2024, 08:27 GMT புதுப்பிக்கப்பட்டது 36 நிமிடங்களுக்கு முன்னர் அமெரிக்காவின் பால்டிமோர் நகரில் உள்ள ஒரு பாலம், கன்டெய்னர் கப்பல் மோதியதில், படாப்ஸ்கோ ஆற்றில் முற்றிலுமாக இடிந்து விழுந்தது. ஏழு பேர், பல வாகனங்கள் ஆற்றில் விழுந்ததாக தற்போது சம்பவ இடத்தில் இருக்கும் பால்டிமோர் நகர தீயணைப்புத் துறை அதிகாரிகள் கூறுகின்றனர். பாலம் முழுவதுமாக தண்ணீரில் இறங்குவதை சமூக ஊடகங்களில் காணொளிகளில் காண முடிகிறது. மோதிய கப்பல் சிங்கப்பூர் கொடியுடன் வந்ததாகத் தெரியவந்துள்ளது. 300 மீட்டம் நீளம் கொண்ட இந்த கப்பல் இலங்கையின் கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்தது. போலீஸ் ஹெலிகாப்டர்கள் அப்பகுதியில் பலமுறை சுற்றிவருவதை விமானப் போக்குவரத்து ராடார்கள் காட்டுகின்றன. காணொளிக் குறிப்பு, அமெரிக்காவில் கப்பல் மோதியதில் பாலம் இடிந்து ஆற்றில் விழுந்தது கப்பலில் இருந்த ஊழியர்களுக்கு காயம் இல்லை கப்பல் ஊழியர்களுக்கு காயங்கள் எதுவும் இல்லை என்று நிறுவனம் கூறுகிறது சிங்கப்பூர் கொடியுடன் வந்த டாலி என்ற கன்டெய்னர் கப்பல் மோதியதை கப்பல் நிறுவனமான சினெர்ஜி மரைன் குழு உறுதிப்படுத்துகிறது. "சம்பவத்தின் சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை," என்று அது கூறுகிறது. கப்பலில் இருந்த இரண்டு மாலுமிகள் உட்பட அனைத்து பணியாளர்களும் கணக்கிடப்பட்டுள்ளனர். மேலும் காயங்கள் எதுவும் இல்லை என்று அது மேலும் கூறுகிறது. பட மூலாதாரம்,REUTERS பிபிசி செய்தியாளர் கூறுவது என்ன? இது தெளிவாக ஒரு பெரிய சம்பவமாகும். மேலும் அவசர சேவைகள் மீட்புப் பணியில் இறங்கியுள்ளன. உள்ளூர் நேரப்படி அதிகாலை 1:30 மணியளவில், ஒரு பெரிய கன்டெய்னர் கப்பல் இந்த பாலத்தில் மோதியது. பின்னர் என்ந நடந்தது என்பதை காட்சிகள் கூறுகின்றன. இந்தகப் கப்பல் உண்மையில் சிங்கப்பூரில் கொடியுடன் வந்தது என்பது தெரியவருகிறது. பெரும்பாலும் கன்டெய்னர் கப்பல்களில் வெவ்வேறு நாடுகளின் கொடிகள் உள்ளன - அதாவது, அவை அந்த நாட்டைச் சேர்ந்தவை என்று அர்த்தமல்ல. அவை எங்கிருந்து கண்காணிக்கப்படுகின்றன என்பதை இதன் பொருளாகும். https://www.bbc.com/tamil/articles/cgxdgqjxj14o
  13. ஒருவாரத்தில் இலங்கைக்கு அனுப்பப்படவுள்ள முருகன், ஜெயக்குமார் மற்றும் ரொபர்ட் பயாஸ் இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுவிக்கப்பட்டு திருச்சி முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள முருகன், ஜெயக்குமார், ரொபர்ட் பயாஸ் ஆகியோர் இன்னும் ஒரு வாரத்தில் இலங்கைக்கு அனுப்பப்படவுள்ளதாக சட்டத்தரணி ஆர். முனியப்பராஜ் தெரிவித்துள்ளார். குறித்த விடயத்தை இன்றையதினம் (26.03.2024) சென்னை உயர் நீதிமன்றத்தில் வைத்து அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், முருகன் தனக்கு அடையாள அட்டை வழங்குமாறு கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அடையாள அட்டை லண்டனில் உள்ள எனது மகளுடன் சென்று வசிப்பதற்கு விசா எடுக்க விண்ணப்பிக்க இருப்பதால் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை கட்டாயம் தேவை என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. எனினும், தனக்கு உரிய அடையாள அட்டையை வழங்கும்படி கடந்த ஜனவரி மாதம் மறுவாழ்வு இயக்குநரிடம் விண்ணப்பித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதால் அடையாள அட்டை வழங்க மறுவாழ்வு இயக்குநருக்கு உத்தரவிட வேண்டும் எனவும் அதில் தொடர்ந்து குறிப்பிடப்பட்டிருந்தது. மத்திய அரசின் அனுமதி இந்நிலையில், இந்த மனு மீதான விசாரணை இன்று இடம்பெற்ற போது, முருகன், ஜெயக்குமார், ரொபர்ட் பயாஸ் ஆகிய மூவருக்கும் இலங்கை துணை தூதரகம் தரப்பில் பாஸ்போர்ட் வழங்கவிட்டதாக தமிழக அரசு சார்பில் முன்னிலையாகியிருந்த சட்டத்தரணி ஆர். முனியப்பராஜ் தெரிவித்துள்ளார். அத்துடன், முருகன், ஜெயக்குமார், ரொபர்ட் பயாஸ் ஆகிய மூவரையும் இலங்கைக்கு அனுப்ப அனுமதி கோரி மத்திய அரசுக்கு நேற்று கடிதம் எழுதப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசின் அனுமதி கிடைத்தவுடன் ஒருவாரத்தில் மூவரும் இலங்கைக்கு அனுப்பப்படுவர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். https://tamilwin.com/article/murugan-jeyakumar-rober-payas-sri-lanka-1711440183
  14. இந்திய முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்குடன் தொடர்புடைய முருகன், ஜெயக்குமார் மற்றும் ரொபர்ட் பயஸ் ஆகியோருக்கு இலங்கை துணை உயர்ஸ்தானிகரகம் கடவுச்சீட்டு வழங்கியுள்ளதாக தமிழக அரசு சென்னை மேல்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இந்திய முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் விடுவிக்கப்பட்டு திருச்சி சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள முருகன் தமக்கு அடையாள அட்டை வழங்கக் கோரி சென்னை மேல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். லண்டனில் உள்ள தமது மகளுடன் வசிப்பதற்காக தாம் விசா பெற போவதாகவும் அதற்கு விண்ணப்பிக்க வேண்டுமாயின் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை கட்டாயமாகும் எனவும் அவர் தமது மனுவில் குறிப்பிட்டுள்ளார். இதன்படி, தமக்கு உரிய அடையாள அட்டையை வழங்குமாறு மறுவாழ்வு பணிப்பாளருக்கு உத்தரவிட வேண்டும் எனவும் முருகன் கோரியுள்ளார். இந்த நிலையில் குறித்த மனு மீதான விசாரணை இன்று, நீதிபதிகளான ஆர்.சுரேஷ் குமார் மற்றும் குமரேஷ் பாபு ஆகியோர் முன்னிலையில் இடம்பெற்றது. முருகன், ஜெயக்குமார் மற்றும் ரொபர்ட் பயஸ் ஆகிய மூவருக்கும் இலங்கை துணை உயர்ஸ்தானிகரகம் கடவுச்சீட்டு வழங்கியுள்ளதாக தமிழக அரசு சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி இதன்போது தெரிவித்துள்ளார். குறித்த மூவரையும் இலங்கைக்கு அனுப்புவதற்காக மத்திய அரசிற்கு நேற்று கோரிக்கை கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசின் அனுமதி கிடைத்தவுடன் ஒரு வாரத்திற்குள் அவர்கள் இலங்கைக்கு அனுப்பப்படுவார்கள் எனவும் சட்டத்தரணி மன்றுரைத்துள்ளார். அத்துடன், எதிர்வரும் ஒரு வாரத்துக்குள் மத்திய அரசு அனுமதி அளிக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சமர்ப்பணங்களை ஆராய்ந்த நீதிபதிகள், இலங்கை உயர்ஸ்தானிகரகத்தால் கடவுச்சீட்டு வழங்கப்பட்டுள்ள நிலையில் அடையாள அட்டை தேவையில்லை என அறிவித்து முருகனின் மனுவை நிறைவு செய்து உத்தரவிட்டதாக தமிழக தகவல்கள் தெரிவிக்கின்றன. https://thinakkural.lk/article/297165
  15. அண்ணை நெல் விளைந்து அறுவடைக்கு தயாராகும் போது தைப்பூசத்தில் புதிர் எடுப்பது ஒரு சம்பிரதாயமாக இருக்கிறது. அது இதுக்குத் தானோ?!
  16. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சிராஜ் பதவி, பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் தமிழ்நாட்டின் பல தேநீர் கடைகளில் ‘இனிப்பு அதிகமாக போடுங்கள்’ என்று சொல்பவர்களின் முகத்தில் அல்லது சொல்லும் தொனியில் ஒரு மெல்லிய கர்வம் தென்படும். எனக்கு உடலில் எந்த பிரச்னையும் இல்லை அல்லது நான் அதிகமாக இனிப்பு சாப்பிடுவேன், ஆனால் என் உடலுக்கு ஒன்றும் ஆகாது என்ற எண்ணத்தின் பிரதிபலிப்பாக அது இருக்கும். அதுவே நாட்டுச் சர்க்கரை அல்லது கருப்பட்டி கலந்த தேநீராக இருந்தால் இன்னும் மனநிறைவுடன் வாங்கிப் பருகுவார்கள். சாதாரண தேநீரை விட விலை அதிகமாக இருந்தாலும், வெள்ளைச் சர்க்கரை என்றால் தானே பிரச்னை, நாட்டுச் சர்க்கரை அல்லது கருப்பட்டி என்றால் உடலுக்கு நல்லது, இதை தாராளமாக குடிக்கலாம் என்ற எண்ணம் தான் காரணமாக இருக்கும். அதே சமயத்தில், உடல் எடை குறித்து அதிகம் கவலைக் கொள்பவர்கள் சர்க்கரை சேர்த்த உணவு என்றாலே சற்று விலகி நிற்பார்கள். கொஞ்சம் கூட சர்க்கரை சேர்த்துக்கொள்ள மாட்டேன், ஒரு கிராம் சர்க்கரை எடுத்தால் கூட ஒரு கிலோ உடல் எடை கூடிவிடும் என்பது போல ஒரு அச்ச உணர்வு அவர்களுக்கு இருக்கும். உணவில் அல்லது பானங்களில் சேர்க்கப்படும் இனிப்பு குறித்து அனைவரிடமும் பொதுவாக எழும் சில கேள்விகள், வெள்ளைச் சர்க்கரைக்கு மாற்று தான் நாட்டுச் சர்க்கரை, கருப்பட்டி, தேனா? தினமும் எவ்வளவு வெள்ளைச் சர்க்கரை சேர்த்துக்கொண்டால் பிரச்னை இல்லை அல்லது எடை கூடாது? இனிப்பை முழுதாக தவிர்த்துவிட்டால் உடலுக்கு நல்லது தானா? இத்தகைய கேள்விகளுக்கான பதில் தான் இந்தக் கட்டுரை. பட மூலாதாரம்,GETTY IMAGES சர்க்கரை என்றால் என்ன? “சர்க்கரை என்றாலே நம் கண் முன் கலக்கப்படும் வெள்ளைச் சர்க்கரை அல்லது கடைகளில் இருக்கும் இனிப்பு பொருட்கள், சாக்லேட்டுகள் என்று தான் நினைக்கிறோம். ஆனால் காலையில் உண்ணும் இட்லியில் இருந்து தோசை, சாதம் என அனைத்திலும் சர்க்கரை உள்ளது” என்கிறார் குழந்தைகள் நல மருத்துவர் மற்றும் உணவு ஆலோசகர் அருண் குமார். “சர்க்கரை என்றாலே அடிப்படையில் அது சுக்ரோஸ் தான். குளுக்கோஸ் மற்றும் பிரக்டோஸ் கலந்தது தான் இந்த சுக்ரோஸ். நாம் வழக்கமாக சாப்பிடும் இட்லி, தோசை, சிறு தானியங்களில் இருப்பது தான் குளுக்கோஸ். உடலுக்கு ஆற்றல் தருவது இந்த குளுக்கோஸ் தான். ஆனால் அதனுடன் இருக்கும் பிரக்டோஸ் தான் சிக்கலே. ஏனென்றால் சர்க்கரையில் இருக்கும் குளுக்கோஸ் உடலில் எளிதாக கரைந்து ஆற்றலாக மாறும். ஆனால் பிரக்டோஸ் என்பது கல்லீரலுக்கு சென்று அங்கிருந்து ஆற்றலாக மாற்றப்படும். எனவே அதிகமாக இனிப்பு அல்லது சர்க்கரையை எடுத்துக் கொள்ளும்போது, அதை ஆற்றலாக மாற்ற முடியாமல் கல்லீரல் திணறும். அப்போது பிரக்டோஸ் கொழுப்பாக கல்லீரலில் படிந்து விடும்” என்கிறார் மருத்துவர் அருண்குமார். பட மூலாதாரம்,GETTY IMAGES தொடர்ந்து பேசிய அவர், “இவ்வாறு படியும் கொழுப்பு, ரத்தத்திலும் கலந்து விடும். எனவே தான் உலக சுகாதார நிறுவனம் ஒரு நாளுக்கு 25 கிராமுக்கு (5 ஸ்பூன் அளவு) மேல் சர்க்கரை எடுத்துக்கொண்டால் ஆபத்து என பரிந்துரைக்கிறது. உடனே பலர் நினைக்கலாம், நான் ஒரு ஸ்பூன் அல்லது இரண்டு ஸ்பூன் சர்க்கரை தானே தேநீரில் கலந்து குடிக்கிறேன், எனவே பிரச்னை இல்லை என. ஆனால் முன்னர் சொன்னது போல, பல உணவுப் பொருட்களில் இயற்கையாகவோ அல்லது செயற்கையாகவோ சர்க்கரை உள்ளது. எனவே அதையும் கணக்கில் கொள்ள வேண்டும். இதையெல்லாம் சேர்த்து தான் 25 கிராம் சர்க்கரை என்று சொல்கிறது உலக சுகாதார நிறுவனம். எனவே முடிந்தளவு நேரடி சர்க்கரையை குறைத்துக் கொள்ள வேண்டும்” என்கிறார் மருத்துவர் அருண்குமார். பட மூலாதாரம்,GETTY IMAGES வெள்ளைச் சர்க்கரைக்கு மாற்றா நாட்டுச் சர்க்கரை, கருப்பட்டி, தேன்? பலரும் நாட்டுச் சர்க்கரை அல்லது கருப்பட்டியை வெள்ளைச் சர்க்கரைக்கு மாற்றாக முன்வைக்கிறார்கள். அதில் செய்யப்படும் இனிப்புகள் அல்லது பலகாரங்களை, மக்கள் அதிக விலை கொடுத்து வாங்கவும் செய்கிறார்கள். உண்மையில் நாட்டுச் சர்க்கரை உடலுக்கு நல்லதா என ஊட்டச்சத்து நிபுணர் மீனாக்ஷி பஜாஜிடம் கேட்டோம். “வெள்ளைச் சர்க்கரையோ, நாட்டுச் சர்க்கரையோ, தேனோ அல்லது பனை வெல்லமோ, எல்லாமே மாவுச் சத்து தான். 1 கிராம் மாவுச்சத்தில் 4 கலோரிகள் உள்ளது. இது பொதுவானது. ஆனால் சத்துக்கள் என்று பார்த்தால் வெள்ளைச் சர்க்கரைக்கும் வெல்லத்திற்கும் வித்தியாசம் உள்ளது. வெல்லத்தில் கால்சியம், இரும்பு, பொட்டாசியம் சத்துக்கள் உள்ளது. இதனால் தான் குழந்தைகளுக்கு வெள்ளைச் சர்க்கரையை விட வெல்லம் கொடுப்பது நல்லது” என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் மீனாக்ஷி. தொடர்ந்து பேசிய அவர், “கிளைசிமிக் இன்டெக்ஸ் (Glycemic index) என்ற ஒரு குறியீடு உள்ளது. அதாவது ஒரு உணவை எடுத்துக்கொள்ளும்போது, நம் உடலின் சர்க்கரை அளவு எவ்வளவு கூடுகிறது என்பதன் குறியீடு. கருப்பட்டி எடுத்துக்கொள்ளும்போது உடலில் சர்க்கரை அளவு அதிகம் உயராது. அப்போது கிளைசிமிக் இன்டெக்ஸ் 35 ஆக இருக்கும்." "ஆனால் வெள்ளைச் சர்க்கரை எடுத்துக்கொண்டால் 60 ஆக இருக்கும், இது மிகவும் அதிகம். எனவே இந்த விதத்தில் பார்த்தால் கருப்பட்டி நல்லது தான். தேனும் அப்படிதான், உடலின் சர்க்கரை அளவை அதிகமாக பாதிக்காது. மேலும் வெல்லத்தை விட கருப்பட்டியில் இன்னும் அதிக சத்துக்கள் உள்ளன. இதுதான் வித்தியாசம். மற்றபடி எந்தவகை சர்க்கரை என்றாலும் அதிகமானால் ஆபத்து தான்” என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் மீனாக்ஷி. இதுகுறித்து பேசிய மருத்துவர் அருண்குமார், வெள்ளைச் சர்க்கரைக்கு, நாட்டுச் சர்க்கரை அல்லது கருப்பட்டி ஒருபோதும் மாற்று இல்லை எனக் கூறுகிறார். “கரும்பிலிருந்து முற்றிலும் சுத்திகரிக்கப்பட்டு, 100% சுக்ரோஸுடன் வருவது தான் வெள்ளைச் சர்க்கரை. அதுவே நாட்டுச் சர்க்கரை அல்லது வெல்லம் என்றால், 90 முதல் 92% சுக்ரோஸ் இருக்கும். கருப்பட்டி என்றால் 85 முதல் 90% சுக்ரோஸ், தேன் என்றால் 80%. எனவே மக்கள் நினைப்பது போல பெரிய வித்தியாசம் இல்லை." "நாட்டுச் சர்க்கரையில் இனிப்பு சுவை குறைவாக இருக்கும். எனவே ஒரு ஸ்பூன் வெள்ளை சர்க்கரை பயன்படுத்த வேண்டிய இடத்தில் 2 அலலது 3 ஸ்பூன் நாட்டுச் சர்க்கரை போடுவார்கள். அது மிகவும் ஆபத்து. எனவே எல்லா வகை சர்க்கரையையும் அளவாக தான் எடுக்க வேண்டும்” என்கிறார் மருத்துவர் அருண்குமார். பட மூலாதாரம்,GETTY IMAGES தேன் சாப்பிட்டால் உடல் எடை குறையுமா? மிதமான வெந்நீரில் தேன் கலந்து குடித்தால் உடல் எடை குறையும் என பலர் நம்புகிறார்கள். இது குறித்து மருத்துவர் அருண்குமாரிடம் கேட்டோம். “முழுக்க முழுக்க பொய். அதிக உடல் எடை என்பது அதிக கொழுப்பு. எனவே எளிய உண்மை என்னவென்றால், உணவைக் குறைத்து உடற்பயிற்சி செய்தால் தான் கொழுப்பு கரைந்து ஆற்றலாக மாறும். மாவுச் சத்து குறைவாக எடுப்பது, விரதம் இருப்பது போன்ற முறைகளும் உதவி செய்யலாம். வெந்நீரில் அல்லது எலுமிச்சை சாறில் தேன் கலந்து குடித்துவிட்டு, வழக்கமாக உண்ணும் உணவையே எடுத்துக்கொண்டால் எந்த பயனும் இல்லை” என்கிறார் மருத்துவர். பட மூலாதாரம்,GETTY IMAGES பழங்களில் இருக்கும் சர்க்கரை நல்லதா? “ஒவ்வொரு பழத்திலும் குளுக்கோஸ், சுக்ரோஸ், பிரக்டோஸ் என மூன்று வித சர்க்கரைகளும் வெவ்வேறு அளவுகளில் உள்ளது. நேரடி சர்க்கரைக்கும் பழங்களில் உள்ள சர்க்கரைக்கும் உள்ள முக்கிய வித்தியாசம் என்னவென்றால், பழச் சர்க்கரை நார்ச்சத்துடன் இணைந்து வருகிறது” என்கிறார் மருத்துவர் அருண்குமார். தொடர்ந்து பேசிய அவர், “பழச்சாறாக இல்லாமல் முழு பழமாக எடுத்துக்கொண்டால் அந்த நார்ச்சத்து கிடைக்கும். அது போல உடலில் சர்க்கரை ஏறும் விகிதமும் (கிளைசிமிக் இன்டெக்ஸ்) குறைவாக இருக்கும். இட்லி, தோசை அல்லது சாதம் போன்றவற்றை விட பழங்கள் குறைவாகவே ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கூட்டும். ஆனால் அதற்காக பழங்களையும் அதிகம் எடுத்துக்கொள்ளக் கூடாது. சிலர் ஃப்ரூட் டயட் (Fruit diet- பழங்களை மட்டும் உண்பது) என்ற முறையை பின்பற்றி, அதிக பழங்களை மட்டுமே உண்டு, கல்லீரலில் கெட்டக் கொழுப்பு படிந்து, எங்களிடம் சிகிச்சைக்கு வருகிறார்கள். எனவே எந்தப் பழமாக இருந்தாலும் ஒரு 100 கிராம் போல எடுத்துக்கொண்டால் போதும்” என்கிறார் மருத்துவர் அருண்குமார். பட மூலாதாரம்,GETTY IMAGES நீரிழிவு உள்ளவர்களுக்கு எவ்வளவு சர்க்கரை நல்லது? இது குறித்து பேசிய ஊட்டச்சத்து நிபுணர் மீனாக்ஷி, “நீரிழிவு பிரச்னை வரக்கூடாது, உடல் எடையை குறைக்க வேண்டும் என நினைப்பவர்கள் நேரடி சர்க்கரையை தவிர்ப்பது நல்லது அல்லது இரண்டு ஸ்பூன் அளவு வரை எடுத்துக்கொள்ளலாம். அதுவே நீரிழிவு இருப்பவர்கள் என்றால் கண்டிப்பாக நேரடி சர்க்கரை எடுத்துக் கொள்ளக் கூடாது. அது எந்த வகை சர்க்கரையாக அல்லது இனிப்பாக இருந்தாலும் சரி” என்றார். “சில நீரிழிவு உள்ளவர்கள் உணவுக்கு பதிலாக பழங்களை எடுத்துக்கொள்கிறார்கள். அது தவறு. தன் உடலின் ரத்த சர்க்கரை அளவைப் பொறுத்து, எவ்வளவு பழங்களை, எந்த நேரத்தில் அவர்கள் எடுத்துக்கொள்கிறார்கள் என்பதும் முக்கியம். ஆனால், குறிப்பிட்ட சில பழங்களில் பொட்டாசியம் சத்து இருப்பதால் குறைவான அளவில் பழங்களை எடுத்துக்கொள்வது அவர்களுக்கு நல்லது தான்” என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் மீனாக்ஷி. நீரிழிவு உள்ளவர்கள் எடுத்துக்கொள்ளவேண்டிய சர்க்கரையின் அளவு குறித்துப் பேசிய மருத்துவர் அருண்குமார், “நீரிழிவு நோயாளிகளுக்கு நேரடி சர்க்கரையை விட, அரிசி உணவுகள் தான் ஆபத்து. அதுதான் ரத்த சர்க்கரை அளவை உடனே அதிகப்படுத்தும். சில விளம்பரங்கள் ‘சுகர்-ப்ரீ’ என்ற பெயரில் பிரக்டோஸ் மட்டுமே உள்ள சர்க்கரையை தேநீர் அல்லது காபியில் கலந்து குடிக்கச் சொல்கிறார்கள். பிரக்டோஸ் ரத்த சர்க்கரை அளவை உடனே உயர்த்தாது ஆனால் நீரிழிவு நோயின் வீரியத்தை அதிகப்படுத்தும். எனவே நீரிழிவு நோயாளிகள் அறவே சர்க்கரையை தவிர்க்க வேண்டும் அல்லது மிகக்குறைவாக எடுக்க வேண்டும்” என்கிறார் அவர். பட மூலாதாரம்,GETTY IMAGES சர்க்கரை அதிகம் எடுத்துக்கொண்டால் என்னவாகும்? சர்க்கரை அதிகம் எடுத்துக்கொண்டால் உடல் பருமன் மட்டுமல்லாது இதய நோய்களுக்கான அபாயமும் அதிகரிக்கும் என்கிறார் மருத்துவர் அருண்குமார். “சர்க்கரை அளவுக்கு அதிகமாக எடுக்கும்போது, கல்லீரல், ரத்தத்தில் கொழுப்பு கூடும், இன்சுலின் எதிர்ப்புத் தன்மை அதிகமாகும். சர்க்கரை அதிகம் எடுத்து பழகியவர்களுக்கு, மற்ற உணவுகளில் திருப்தி இருக்காது. எனவே அதிகமாக உணவுகளை எடுத்துக்கொள்வார்கள். இது உடல் பருமனுக்கும் இதய நோய்களுக்கும் வழிவகுக்கும். பெண்களுக்கு பிசிஓடி எனப்படும் சினைப்பை நோய்க்குறி (PCOD) ஏற்படும். உயர்ரத்த அழுத்தம், யூரிக் ஆசிட் பிரச்னை என அதிக சர்க்கரையால் பல சிக்கல்கள் உருவாகும். எனவே ஒரு வெள்ளைச் சர்க்கரை வில்லன், நாட்டுச் சர்க்கரை ஹீரோ என்பது முற்றிலும் தவறு. எதையும் அளவோடு எடுப்பது நல்லது” என்றார் மருத்துவர் அருண்குமார். சர்க்கரை அதிகமானால் அது மதுவை விட மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் மீனாக்ஷி. “எந்த சர்க்கரையாக இருந்தாலும் அதிகமாக எடுத்துக் கொண்டால், உடலில் கெட்டக் கொழுப்பு கூடும். உதாரணமாக ஒரு பாட்டில் குளிர்பானத்தில் 8 முதல் 10 ஸ்பூன் என்ற அளவில் சர்க்கரை சேர்க்கப்பட்டிருக்கும். எனவே தினமும் குளிர்பானம் குடித்தால், கல்லீரலில் கெட்டக் கொழுப்பு கூடும். எப்படி அதிகமாக அல்லது தினமும் மது குடித்தால் கல்லீரல் கெடுமோ, அதிகமாக சர்க்கரை எடுப்பதாலும் அதே அளவில் கல்லீரல் கெடும். உடல் எடை கூடுவது, நீரிழிவு நோய், இதய நோய் என சர்க்கரையுடன் பல உடல்நலப் பிரச்னைகளுக்கு தொடர்பு உள்ளது” என எச்சரித்தார் ஊட்டச்சத்து நிபுணர் மீனாக்ஷி. https://www.bbc.com/tamil/articles/cpek2zgxp8eo
  17. சிட்டுக் குருவிகளை காக்கப் போராடும் ஆந்திராவின் ஓய்வு பெற்ற ஆசிரியர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் வேகமாக அழிந்துவரும் சிட்டுக்குருவிகளை காப்பாற்ற போராடி வருகிறார் ஆந்திராவின் காக்கிநாடாவைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் பொலுவர்த்தி தலிநாயுடு. தனது ஓய்வூதியப் பணத்தைக் கொண்டு, சிட்டுக்குருவிகளை காப்பாற்றுவதற்காக உணவுக்கூடுகளை உருவாக்கி வருகிறார் இவர். மேலும் சிட்டுக்குருவிகள் பாதுகாப்பிற்காக ஹரிதா விகாஸ் என்ற அறக்கட்டளையை தொடங்கியுள்ளார். வரி குச்சுலு எனும் உணவுக் கூடுகளை தயாரிப்பதும் அதை செய்வது எப்படி என மக்களுக்கு கற்றுக்கொடுப்பதும் இந்த அறக்கட்டளையின் முக்கியப் பணி. சமீபத்தில் அறுவடை செய்யப்பட்ட நெல் கதிர்களைக் கொண்டு பறவைகளுக்காக இந்த உணவுக்கூடுகள் உருவாக்கப்படுகின்றன. இது குறித்து பேசிய அவர், “எங்கள் முக்கிய நோக்கம் பறவை உணவுக்கூடுகளைத் தயாரிப்பது. அதை செய்வது எப்படி என்பதை கிராமத்தில் பலரும் மறந்துவிட்டனர். நான் ஆசிரியராக வேலை செய்த போது, சுப்பா ராவ் என்பவர் கோவில்களில் நெல் உணவுக்கூடுகளை தொங்கவிடுவார். அதைப் பார்த்தாலே சந்தோஷமாக இருக்கும். அவரிடமிருந்து தான் இதை எப்படிச் செய்வது என் கற்றுக்கொண்டேன். இதை விதவிதமாக செய்து, மற்றவர்களுக்கும் கற்றுக்கொடுக்க எண்ணினேன். பலரும் தீவனக்கூடுகளை செய்து, வீட்டில் வைத்தால் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை கூடும். அவற்றின் எண்ணிக்கை அதிகரித்தால், மைனாக்கள், கிளிகள், போன்ற பல பறவைகள் மற்றும் அணில்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். இந்த உயிர்கள் நமது வாழ்வாதாரங்களை உயர்த்தும். இதுவே எனது நோக்கம்” என்கிறார். பணி ஓய்வுக்குப் பிறகு கிராமங்களுக்குச் சென்று, சிட்டுக்குருவிகளுக்கான உணவுக்கூடுகளை வீடுகளில் தொங்க விடுவது குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தி வருகிறார். இவரது முயற்சியால், பல கிராமங்களைச் சேர்ந்த மக்களும் தங்கள் வீடுகளில், ஊர் கோவில்களில், சுற்றுப்புறங்களில் தீவனக்கூடுகளை வைக்கத் தொடங்கியுள்ளனர். தனது ஒரு ஏக்கர் நிலத்தில் நெல் சாகுபடி செய்து வருகிறார் தலிநாயுடு. இதிலிருந்து கிடைக்கும் நெல்லை தீவனக்கூடுகளைத் தயாரிக்க மட்டுமே பயன்படுத்துவதாக கூறுகிறார். பறவை கூடுகளை உருவாக்குபவர்களுக்கும் ஊதியம் வழங்கப்படுகிறது. ஒரு ஏக்கர் நிலத்தில் பயிர் செய்ய ஒரு லட்ச ரூபாய் செலவாகிறது என்கிறார் தலிநாயுடு. சிட்டுக்குருவிகளைக் காப்பாற்ற இவர் எடுத்துள்ள முயற்சிகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 2012 முதல், பறவைகள் குறிப்பாக சிட்டுக்குருவிகளைப் பாதுகாப்பதற்கான இவரது முயற்சிகளைப் பாராட்டி பல விருதுகளை அளித்துள்ளது அரசு. 2019 முதல் ஹரிதா விகாஸ் அறக்கட்டளை மூலமாக சிட்டுக்குருவிகளை பாதுகாக்கவும் அவற்றின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் தீவிரமாக செயல்பட்டு வருகிறார் தலிநாயுடு. செய்தியாளர்: வி.சங்கர் ஒளிப்பதிவு: ரவி பெடாபொலு https://www.bbc.com/tamil/articles/crg388x463lo
  18. Published By: RAJEEBAN 26 MAR, 2024 | 10:54 AM அமெரிக்காவைசேர்ந்த மில்லியன் கணக்கானவர்கள் சீனாவின் இணைய வழி ஹக்கிங் நடவடிக்கைகளில் சிக்குண்டமை குறித்த அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. மில்லியன் கணக்கான அமெரிக்கர்களின் இணையவழி கணக்குகள் ஹக்கிங்கில் சிக்குண்டுள்ளதாக எவ்பிஐயும் அமெரிக்க நீதி திணைக்களமும் தெரிவித்துள்ளன. ஏழு சீன பிரஜைகளிற்கு எதிராக அதிகாரிகள் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளனர். குற்றச்சாட்டப்பட்டுள்ள ஏழு சீன பிரஜைகளும் 14 வருடங்களிற்கு மேல் இவ்வாறான குற்றசெயலில் ஈடுபட்டனர் என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள ஏழு நபர்கள் குறித்த விபரங்களைதருபவர்களிற்கு 10 மில்லியன் அமெரிக்க டொலர் சன்மானம் வழங்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது. சீனாவை விமர்சனம் செய்யும் அமெரிக்கர்கள் வெளிநாட்டவர்கள் வர்த்தகர்கள் அரசியல்வாதிகளை சீனாவை சேர்ந்த இந்த நபர்கள் இலக்குவைத்தனர் என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவர்கள் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஆபத்தான மின்னஞ்சல்களை அனுப்பினார்கள். இதன் காரணமாக பல கண்டங்களை சேர்ந்த மில்லியன் கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டனர் என தெரிவித்துள்ள அமெரிக்க நீதித்திணைக்களம் இது சீனா அரசாங்கத்தின் ஆதரவுடன் முன்னெடுக்கப்பட்ட உலகளாவிய ஹக்கிங் நடவடிக்கை எனவும் தெரிவித்துள்ளது. இன்றைய அறிவிப்பு நமது நாட்டின் இணைய பாதுகாப்பை குறைமதிப்பிற்கு உட்படுத்தவும் அமெரிக்கர்களை குறிவைத்து அவர்களின் கண்டுபிடிப்புகளை குறிவைக்கவும் சீனா மேற்கொண்டுள்ள தொடர்ச்சியான முயற்சிகளை அம்பலப்படுத்தியுள்ளது என எவ்பிஐயின் இயக்குநர் கிறிஸ்டர் ரே தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179717
  19. மைத்திரியின் வாக்குமூலம் ; உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்த முக்கிய விடயத்தினை தனக்கு தெரிவித்தவர் யார் என்பதை சிறிசேன தெரிவிக்கவில்லை Published By: RAJEEBAN 26 MAR, 2024 | 11:22 AM சிஐடியினருக்கு வாக்குமூலம் வழங்கியவேளை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனக்கு முக்கியமான விடயங்களை தெரிவித்தவர் குறித்து எதனையும் தெரிவிக்கவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரிகள் யார் என்பது தனக்கு தெரியும் என கண்டியில் வெளியிட்டகருத்துக்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி நேற்று சிஐடியினரிடம் ஐந்து மணிநேரத்திற்கு மேல் வாக்குமூலம் வழங்கினார். காலை பத்தரைமணிக்கு இலங்கை குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு சென்ற அவர் 3.50 அளவில் அங்கிருந்து வெளியேறினார். முன்வாசல் வழியாக வந்த சிறிசேன வழமையான கேள்விகளை எதிர்கொண்டார் என சிஐடி வட்டாரங்களை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன. உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரின் கண்காணிப்பில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளார். குறுக்கு விசாரணைகளும் இடம்பெற்றுள்ளன. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் முக்கிய சூத்திரதாரிகள் யார் என்பது மூன்று வாரத்திற்கு முன்பே தனக்கு தெரியவந்ததாக விசாரணையின் போது தெரிவித்துள்ள மைத்திரிபால சிறிசேன தனக்கு யார் அந்த விடயத்தினை தெரிவித்தது என்பதை தெரிவிக்கவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னாள் ஜனாதிபதி தெரிவித்த விடயங்களை மீளாய்வு செய்வோம் என தெரிவித்துள்ள பொலிஸ் அதிகாரியொருவர் சட்டமா அதிபரின் உத்தரவின் படி அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுப்போம் எனவும் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி தெரிவித்த விடயங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க சிஐடியினர் திட்டமிட்டுள்ளனர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. https://www.virakesari.lk/article/179720
  20. கேலி செய்தவர்களுக்கு பேட்டால் பதிலளித்த கோலி - தனது புகழ், குடும்பம், சாதனைகள் பற்றி கூறியது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பெங்களூருவில் நேற்று நடந்த ஐபிஎல் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது ஆர்சிபி அணி. கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் கிரிக்கெட்டில் நடக்கமுடியாதது, சாத்தியமில்லாதது நடப்பது டி20 போட்டியில்தான். எந்த நேரத்தில் எந்தப் பந்துவீச்சாளர், பேட்டர் ஆட்டத்தை திருப்புவார் என ஊகிக்க முடியாது. பெங்களூருவில் நேற்று நடந்த ஆட்டமும் யாரும் நினைத்துப் பார்க்க முடியாத அளவில் பெரிய ட்விஸ்ட்களுடன் முடிந்தது. விராட் கோலியின் பொறுப்பான பேட்டிங், தினேஷ் கார்த்திக்கின் கடைசி நேர ஃபினிஷர் ரோல் ஆகியவைதான் ஆர்சிபி அணி சொந்த மைதானத்தில் வெற்றி பெற முக்கியக் காரணமாக அமைந்து. பெங்களூருவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 6-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது ஆர்சிபி அணி. முதலில் பேட் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ஆர்சிபி அணி 4 பந்துகள் மீதமிருக்கையில் 6 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் சேர்த்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, விராட் கோலி(77) ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் மைனஸ் ரன்ரேட்டில் ஆர்சிபி இந்த வெற்றி மூலம் ஆர்சிபி அணி புள்ளிக் கணக்கைத் தொடங்கினாலும், நிகர ரன்ரேட் இன்னும் மைனஸில்தான் இருக்கிறது. அதனால், 2 புள்ளிகள் பெற்றாலும் 6-ஆவது இடத்துக்கு ஆர்சிபி தள்ளப்பட்டுள்ளது. அடுத்துவரும் போட்டிகளில் ஆர்சிபி அணிக்கு பெரிய வெற்றி கிடைத்தால் புள்ளிப்பட்டியலில் முன்னேறும். ஆர்சிபி அணியின் வெற்றிக்கு ஆங்கர் ரோல் எடுத்து வெற்றிக்கு அருகே வரை கொண்டு சென்ற விராட் கோலி(77) ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கோலிக்கு டிராவிட் கூறிய அறிவுரை ஆட்டநாயகன் விருது வென்ற கோலி கூறுகையில் “ ரசிகர்களே ரொம்பவும் உற்சாகமடையாதீர்கள். 2 போட்டிகள்தான் முடிந்துள்ளது, ஆரஞ்சு தொப்பி யாருக்கு வேண்டுமானாலும் செல்லலாம். விளையாட்டைப் பற்றி அதிகமாகப் பேசுகிறார்கள், கடைசியில், சாதனைகள், புள்ளிவிவரங்கள், எண்ணிக்கைகள், நினைவுகளைப் பற்றி பேசுவதில்லை. நீ இழந்ததை ஒருபோதும் மறக்காதே என்று டிராவிட் என்னிடம் சொல்வார். நான் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி, என்னால்முடிந்த பங்களிப்பைத் தருகிறேன். விக்கெட்டுகள் சரிந்தவுடன் சூழலைப் புரிந்து கொண்டு பேட் செய்தேன். இதுபோன்ற நேரத்தில் இதுபோன்று விளையாடுவது தவறு இல்லை.சரியான ஷாட்களை அடிக்க வேண்டும், தவறான ஷாட்களைஅடிக்க கூடாது என்று நினைத்தேன். என்னால் பினிஷர் ரோல் செய்ய முடியாதது வருத்தமாக இருக்கிறது. 2 மாதங்களுக்குபின் நான் விளையாடினாலும் மோசமாக பேட் செய்யவில்லையே” எனத் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES கலக்கும் தமிழ்நாட்டு வீரர்கள் ஐபிஎல் தொடர் தொடங்கியதிலிருந்தே தமிழக வீரர்கள் கலக்கி வருகிறார்கள். சன்ரைசர்ஸ் அணியில் நடராஜன், குஜராத் அணியில் சாய் கிஷோர், சுதர்சன் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினா். இந்த ஆட்டத்தில் டிகே உண்மையில் ஹூரோவாக ஒளிர்ந்தார். இந்த ஆட்டத்தில் கோலிக்கு இணையாக ஆட்டநாயகன் விருது அளிக்கப்பட வேண்டியவர் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக். கடைசி இரு ஓவர்களில் டிகேவின் ஆட்டம் ஒட்டுமொத்த பஞ்சாப் கிங்ஸ் ரசிகர்களின் நம்பிக்கையைத் தகர்த்துவிட்டது. 10 பந்துகளில் 2 சிக்ஸர், 3 பவுண்டரி உள்பட 28 ரன்கள் சேர்த்து டிகே தனித்துவமாகத் தெரிந்தார். விராட் கோலி களத்தில் இருந்தவரை ஆர்சிபி எளிதாக வெற்றி பெற்றுவிடும் என்று ரசிகர்கள் நினைத்திருந்தனர். ஆனால், ஹர்சல் படேல் ஓவரில் 2 பவுண்டரி அடித்தநிலையில் கடைசிப்பந்தில் டீப் பேக்வார்டில் பிராரிடம் கேட்ச் கொடுத்து கோலி 77 ரன்னில் வெளியேறியது நம்பிக்கை தகர்ந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஐபிஎல் தொடர் தொடங்கியதிலிருந்தே தமிழக வீரர்கள் கலக்கி வருகிறார்கள். திக்திக் கடைசி 4 ஓவர்கள் அப்போது கடைசி 4 ஓவர்களில் ஆர்சிபி அணி வெற்றிக்கு 47 ரன்கள் தேவைப்பட்டது. சான்கரன் வீசிய 17-வது ஓவரின் முதல் பந்தில் ராவத் கால்காப்பில் வாங்கி 11 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்தடுத்து விக்கெட்டுகள் சென்றதும் ஆர்சிபி கதை முடிந்துவிட்டதா என்ற ரசிகர்கள் கவலை கொண்டனர். மகிபால் லாம்ரோர், டிகே கூட்டணி ஆட்டத்தை வெற்றி நோக்கி நகர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. சாம்கரனின் 17வது ஓவரில் லாம்ரோர், டிகே இருவரும் தலா ஒரு பவுண்டரியுடன் 11 ரன்கள் சேர்த்தனர். பட மூலாதாரம்,GETTY IMAGES லாம்ரோர் அதிரடி அர்ஷ்தீப் வீசிய 18-ஆவது ஓவரில் ஸ்லாட்டில் வீசப்பட்ட பந்தில் லாம்ரோர் சிக்ஸர்,பவுண்டரியாக பறக்கவிட ரசிகர்கள் உற்சாகத்தில் முழங்கினர். அந்த ஓவரில் ஆர்சிபி 13 ரன்கள் சேர்த்தது. கடைசி 2 ஓவர்களில் ஆர்சிபி வெற்றிக்கு 23 ரன்கள் தேவைப்பட்டது. இருவரில் ஒருவர் ஆட்டமிழந்தாலும் ஆட்டம் பஞ்சாப் கைகளுக்கு சென்றுவிடும் நிலை இருந்தது. 19-வது ஓவரை ஹர்சல் படேல் வீசினார். இந்த ஓவரில் டிகே ஒரு பவுண்டரியும், ஃபைன்லெக்கில் ஒரு சிக்ஸரும் விளாசி 13 ரன்கள் சேர்த்தார். கடைசி ஓவரில் ஆர்சிபி வெற்றிக்கு 10 ரன்கள் தேவைப்பட்டது, ரசிகர்களின் இதயத்துடிப்பு எகிறியது. அர்ஷ்தீப் கடைசி ஓவரை வீசினார். முதல் பந்தில் டிகே ஸ்கூப் ஷாட்டில் சிக்ஸர் அடிக்க ரசிகர்களின் சத்தம் காற்றைக் கிழித்தது. அடுத்த பந்தை அர்ஷ்தீப் வைடாக வீசினார். அடுத்த பந்தில் டிகே பவுண்டரி விளாச ஆர்சிபி அணி அபாரமாக வெற்றி பெற்றது. விராட் கோலி, அனுஜ் ராவத் அடுத்தடுத்து ஆட்டமிழந்து சென்றபின் ஆட்டம் பஞ்சாப் கிங்ஸ் கரங்களுக்கு மாறிவிட்டது என்று ரசிகர்கள் நினைத்த நேரத்தில் ஆட்டத்தை ஆர்சிபி கரங்களுக்கு மாற்றியது லாம்ரோர், டிகே ஆட்டம்தான். நீண்ட காலத்துக்குப் பிறகு ஜொலித்த தினேஷ் கார்த்திக் வங்கதேசத்துக்கு எதிரான ஆசியக் கோப்பையில் ஃபினிஷர் ரோல் எடுத்து ஹீரோவான டிகே, நீண்டகாலத்துக்குப்பின் ஜொலித்துள்ளார். அணையும் விளக்கு பிரகாசமாக ஒளிரும் என்பார்கள். இந்த சீசனோடு டிகே ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ள நிலையில் அவரின் பேட்டிங் ஃபார்ம் இரு போட்டிகளாக தனித்துவமாக இருந்து வருகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தினேஷ் கார்த்திக் இந்த சீசனோடு டிகே ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார். கேட்சை கோட்டை விட்டதற்கான விலை சாம்கரன் வீசிய ஓவரில் விராட் கோலி அடித்த ஷாட்டை ஸ்லிப்பில் நின்றிருந்த பேர்ஸ்டோ பிடிக்காமல் கோட்டைவிட்டார். இந்த கேட்சை நழுவவிட்டதற்கான விலையை பஞ்சாப் கிங்ஸ் அணி கடைசியில் கொடுத்தது. இதை அணியின் கேப்டன் ஷிகர் தவண் ஒப்புக் கொண்டார். கோலிக்கு அந்தக் கேட்சை மட்டும் பிடித்திருந்தால், ஆட்டம் வேறுமாதிரியாகத் திரும்பியிருக்கும். ஹர்பிரித் பிரார், ரபாடா அற்புதமான பந்துவீச்சு ஆர்சிபி அணி நடுப்பகுதி ஓவர்களில் ரன் சேர்க்க முடியாமல் திணறியது. விராட் கோலி, ரஜத் பட்டிதார் களத்தில் இருந்தபோதிலும் கூட பவுண்டரி அடிக்கவும், ஸ்ட்ரைக்கை மாற்றி ஓடவும் கடும் சிரமப்பட்டனர். இதற்கு காரணம் இடதுகை சுழற்ப்பந்துவீச்சாளர் ஹர்பிரித் பிரார்தான். பெங்களூரு சின்னசாமி மைதானம் போன்ற சிறிய மைதானத்தில் பவுண்டரி, சிக்ஸர் அடிக்கவிடாமல் பேட்டர்களை கட்டிப்போடுவது எளிதானது அல்ல. அதிலும் டி20 ஆட்டத்தில் நினைத்துப் பார்க்க முடியாத செயல். அதை பிரார் எளிதாகச் செய்தார். 4 ஓவர்கள் வீசிய பிரார் 13 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளையும் சாய்த்தார். அடுத்ததாக ரபாடாவின் பந்துவீச்சும் குறிப்பிடத்தகுந்தது. 4 ஓவர்கள் வீசிய ரபாடா 23 ரன்கள் கொடுத்து 2விக்கெட்டுகளையும் சாய்த்தார். பஞ்சாப் கிங்ஸ் அணியில் இருவர் மட்டுமே நடுப்பகுதி ஓவர்களில் வெற்றியை தங்கள் அணிக்கு இழுத்துவந்தனர். ஆனால் மற்ற பந்துவீச்சாளர்களான சாம்கரன், அர்ஷ்தீப் சிங், ஹர்சல் படேல் ஆகியோர் சொதப்பிவிட்டனர். ராகுல் சஹர் ஒரு ஓவரில் 16 ரன்கள் வழங்கியதால் அதன்பின் வாய்ப்பு வழங்கப்படவில்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, டி20 போட்டிகளில் 50 ரன்களுக்குமேல் 100-வதுமுறைாக சேர்த்த 3வது வீரர் என்ற பெருமையைப் பெற்றார் கோலி. டி20-யில் கோலியின் சாதனை விராட் கோலி நேற்றைய ஆட்டத்தில் 77 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இதன் மூலம் அனைத்து டி20 போட்டிகளிலும் 50 ரன்களுக்குமேல் 100-வதுமுறைாக சேர்த்த 3வது வீரர் என்ற பெருமையைப் பெற்றார். முதலிடத்தில் கெயில், 2வது இடத்தில் வார்னர் உள்ளனர். அது மட்டுமல்லாமல் டி20 போட்டிகளில் அதிக கேட்சுகளைப் பிடித்த வீரர் என்ற சாதனையை நீண்டகாலமாக சுரேஷ் ரெய்னா(172கேட்ச்) வைத்திருந்தார். ஆனால் நேற்றைய ஆட்டத்தில் பேர்ஸ்டோ, தவண் இருவருக்கும் கோலி பிடித்த கேட்ச் மூலம் ரெய்னா சாதனையை தகர்த்தார். 173 கேட்சுகளுடன் கோலி முதலிடத்தைப் பிடித்தார். ரோஹித் சர்மா 167 கேட்சுகளுடன் 3வது இடத்தில் உள்ளார். கோலியின் ஆங்கர் ரோல் சரியா? இந்திய அணியோ அல்லது ஆர்சிபி அணியோ இக்கட்டானநிலையில் சிக்கும்போது, ஆங்கர் ரோல் எடுத்து கோலி விளையாடுவது பல நேரங்களில் விமர்சிக்கப்படுகிறது. ஏனென்றால், ஆங்கர் ரோல் எடுத்து கோலி பேட் செய்யும்போது, மோசமான பந்துகளில் கூட பெரிய ஷாட்கள் அடிக்க தவறவிடுகிறார், வரவேண்டிய ஸ்கோர் அளவுகூட வருவதில்லை. டி20ஃபார்மெட்டுக்கு உகந்தவகையில் கோலி பேட் செய்வதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. டி20 உலகக் கோப்பைத் தொடருக்கு கோலி இந்திய அணியில் கைவிடப்பட்டாலும் அதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. ஆனால், தன்னுடைய ஆங்கர் ரோல் கடைசிவரை வெற்றிக்காகவே இருக்கும் என்பதை கோலி பலமுறை நிரூபித்துள்ளார். ஆங்கர் ரோல் எடுத்தாலும், ஃபினிஷராக இருந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றுள்ளார், அவரின் வேகம் குறைவாக இருக்கலாமேத் தவிர அவரின் பங்களிப்பு தவறாக இருந்தது இல்லை. இந்த ஆட்டத்தில்கூட கோலி 77 ரன்கள் குவித்தார். தொடக்க ஆட்டக்காரர களமிறங்கி 15 ஓவர்கள்வரை நிலைத்திருந்து ஆட்டமிழந்தார். கோலி நேற்றை ஆட்டத்தில்ல 11பவுண்டர்கள் அடித்தார். இ்ந்த 11 பவுண்டரிகளில் 8பவுண்டரிகள் அவரின் 30 ரன்களுக்கு அடித்து நான் மந்தமானபேட்டர் இல்லை என்பதை நிரூபித்தார். அது மட்டுமல்லாமல் 2சிக்ஸர்களையும் கோலி விளாசினார். இதுபோன்ற சிறிய மைதானத்தில் கோலி சிக்ஸர், பவுண்டரி அடிக்கலாம் பெரிய மைதானங்களில் கோலியால் இவை சாத்தியமா என்பது அடுத்துவரும் போட்டிகளில் தனது ஆங்கர் ரோல் சரியா என்பதை நிருபிப்பார் என எதிர்பார்க்கலாம். பட மூலாதாரம்,GETTY IMAGES ‘பேஸ்-பால்’ ஸ்டைல் எங்கே? பஞ்சாப் கிங்ஸ் அணியில் வெளிநாட்டு வீரர்கள் பேர்ஸ்டோ, லிவிங்ஸ்டோன், சாம்கரன் இருந்தும், பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. அந்த அணியில் ஒருவர்கூட அரைசதமும் அடிக்கவில்லை. தவண் சேர்த்த 45 ரன்கள்தான் அதிகபட்சம். சாம் கரன்(23), ஜிதேஷ் சர்மா(27) பிரப்சிம்ரன் சிங்(25) ஆகியோர் ஓரளவுக்கு பராவாயில்லை. மற்றவகையில் பெரிதாக எந்த பேட்டரும் ஸ்கோர் செய்யவில்லை. பேஸ்பால் ஆட்டத்தை கையாளும் இங்கிலாந்து பேட்டர்கள் பேர்ஸ்டோ, லிவிங்ஸ்டோன், சாம் கரன் ஏன் டி20 ஆட்டங்களில் ஏன்அதே பாணியை கையாளவில்லை என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுகிறது. ஆர்சிபியிலும் ஜோலிக்காத வெளிநாட்டு வீரர்கள் ஆர்சிபி அணி 2வது போட்டியில் நேற்று விளையாடியது. சிஎஸ்கேவுடனான முதல் ஆட்டத்திலும் டூப்பிளசிஸ், மேக்ஸ்வெல், கேமரூன் கிரீன் பெரிதாக ரன்கள் ஸ்கோர் செய்யவில்லை. இந்த ஆட்டத்திலும் சொதப்பிவிட்டனர். பேட்டிங் வரிசை பலமாக இருப்பதாக வெளியே தெரிந்தாலும் இருவரும் சொதப்புவது யாரேனும் ஒரு பேட்டர் மீது சுமையை அதிகரிக்கிறது. விராட் கோலி ஆங்கர் ரோல் எடுக்காமல் இருந்திரும்தால், ஆர்சிபி தோல்வி எழுதப்பட்டிருக்கும். இந்த 3 பேட்டர்களில் ஒருவர் நிலைத்திருந்தால்கூட நேற்றைய ஆட்டம் இழுபறியாக இருந்திருக்காமல், 2 ஓவர்கள் முன்கூட்டியே ஆட்டம் முடிந்திருக்கும். பட மூலாதாரம்,GETTY IMAGES புகழ், குடும்பம் பற்றி விராட் கோலி கூறியது என்ன? ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்ட கோலி, தனது குடும்பம், புகழ் ஆகியவை பற்றிப் பேசினார். "இந்த நாட்களில் உலகம் முழுவதும் டி20 விளையாட்டை விளம்பரப்படுத்த எனது பெயர் அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது என்பதை நான் அறிவேன். " "[கடந்த இரண்டு மாதங்கள்] நாங்கள் நாட்டில் இல்லை. மக்கள் எங்களை அடையாளம் காணாத இடத்தில் நாங்கள் இருந்தோம். இரண்டு மாதங்கள் சாதாரண மனிதர்களாக உணர்வது ஒரு அபூர்வ அனுபவமாக இருந்தது. நிச்சயமாக, குடும்பக் கண்ணோட்டத்தில் பார்த்தால் இரண்டு குழந்தைகளுடன் வாழ்க்கை முற்றிலும் மாறி வருகிறது. மூத்த குழந்தையுடனான தொடர்பும் அற்புதமானது. குடும்பத்துடன் நேரத்தை செலவிட எனக்கு கிடைத்த வாய்ப்பிற்காக நான் கடவுளுக்கு என்னால் நன்றி சொல்லிவிட இயலாது. கடந்த இரண்டு மாதங்களாக இல்லாததால் குரல்கள் மிகவும் சத்தமாகிவிட்டன என்று தோழர்களிடம் சொல்லிக்கொண்டிருந்தேன். சாலையில் ஒரு சாதாரண இருப்பது ஆச்சரியமாக இருந்தது. நான் தொப்பிகளுக்காக விளையாடவில்லை, இது மற்றொரு வாய்ப்பு. அவ்வளவுதான்!" என்றார் கோலி. https://www.bbc.com/tamil/articles/c2xv4vy2j4vo
  21. Published By: DIGITAL DESK 3 26 MAR, 2024 | 11:03 AM கென்யாவிற்கு நேற்று திங்கட்கிழமை (25) விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கையின் பாதுகாப்புப் படைகளின் பிரதானி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நைரோபியிலுள்ள அந்நாட்டு பாதுகாப்புத் தலைமையகத்திற்கு சென்றுள்ளார். அங்கு ஜெனரல் சவேந்திர சில்வாவை கென்யாவின் பாதுகாப்புப் படைகளின் தலைவர் ஜெனரல் பிரான்சிஸ் ஒகோல்லா வரவேற்றார். சவேந்திர சில்வா கென்ய பாதுகாப்பு படையின் தலைவர், பாதுகாப்புப் படையின் துணைத் தலைவர், சேவைத் தளபதிகள் மற்றும் கென்யா பாதுகாப்புப் படைகளின் ஜெனரல் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் கலந்துரையாடலை மேற்கொண்டார். கென்யாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு இராணுவ உறவுகளை வலுப்படுத்துதல், கூட்டு இராணுவப் பயிற்சிகளை நடத்துதல், இராணுவத் திறனை மேம்படுத்துதல் மற்றும் சமாதான ஆதரவு நடவடிக்கைகளில் ஈடுபாடு போன்ற பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. இரு நாடுகளும் தங்களின் மனித வளத்தை மேம்படுத்துவதில் மட்டும் அல்லாமல், தங்கள் செயல்பாடுகளை நவீனமயமாக்குவதிலும் நெறிப்படுத்துவதிலும் தொடர்ந்து ஒருங்கிணைந்து செயல்படுவதை உறுதி செய்வதில் இரு இராணுவத் தலைவர்களும் தங்கள் உறுதிப்பாட்டை எடுத்துரைத்தனர். சவேந்திர சில்வா உஹுரு கார்டன்ஸ் தேசிய நினைவுச்சின்னம் மற்றும் அருங்காட்சியகத்திற்கு (UGNM&M) விஜயம் செய்தார். அங்கு அவரை பணிப்பாளர் கர்னல் கேத்தரின் லாகட் வரவேற்றார். மேலும், கென்ய சுற்றுப்பயணத்தின் போது தேசிய பாதுகாப்பு கல்லூரி (NDC) மற்றும் சர்வதேச அமைதி ஆதரவு பயிற்சி மையம் (IPSTC) ஆகியவற்றை பார்வையிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/179708
  22. காஸா போர் நிறுத்தம்: ஐ.நா. தீர்மானத்தை தடுக்காத அமெரிக்கா மீது இஸ்ரேல் கோபம் - என்ன செய்தது? பட மூலாதாரம்,GETTY IMAGES 25 மார்ச் 2024 காசாவில் "உடனடியாக போர் நிறுத்தத்தை" அமல்படுத்துவதற்கான தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில். இதில் அமெரிக்கா தனது முந்தைய நிலைப்பாட்டில் இருந்து மாறி இந்தமுறை நடவடிக்கையை வீட்டோ செய்யாமல் தவிர்த்துவிட்டது. இந்த தீர்மானத்தின் படி அனைத்து பணயக்கைதிகளையும் உடனடியாக மற்றும் நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டுமெனவும் கூறப்பட்டுள்ளது. இஸ்ரேல் - பாலத்தீனம் இடையே அக்டோபரில் போர் தொடங்கியதில் இருந்து போர் நிறுத்த தீர்மானத்தை கொண்டு வர முடியாமல் ஐநா பாதுகாப்பு கவுன்சிலுக்கு சில முட்டுக்கட்டைகள் இருந்தன. இந்நிலையில் தற்போது அமெரிக்காவின் இந்த நடவடிக்கை, காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் தொடர்பாக, அதற்கும் அதன் நட்பு நாடான இஸ்ரேலுக்கும் இடையே வளர்ந்து வரும் கருத்து வேறுபாட்டைக் குறிப்பதாக அமைந்துள்ளது. இந்த தீர்மானத்தின் மீது ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் 15 உறுப்பினர்களில் அமெரிக்கா தவிர மற்ற நாடுகள் வாக்களிக்க, அமெரிக்கா மட்டும் வாக்களிக்காமல் ஒதுங்கி நின்றது. இதற்கு முன்னதாக இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கும் வேளையில், போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கும் தீர்மானங்களை ஆதரிக்க முடியாது என்று முன்னர் அவற்றை தடுத்தது அமெரிக்கா. ஆனால் வியாழனன்று, போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கும் தனது சொந்த வரைவு அறிக்கை ஒன்றை முதல்மு றையாக முன்வைத்தது அமெரிக்கா. இது இஸ்ரேல் மீதான அதன் நிலைப்பாடு கடுமையாகியுள்ளதை குறிப்பதாக அமைந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES புறக்கணித்தது ஏன்? அமெரிக்க தூதர் விளக்கம் ஐ.நா. பாதுகாப்புச் சபையின் காசா தீர்மானத்தை அமெரிக்கா ஏன் புறக்கணித்தது என்பது குறித்து ஐ.நா.வுக்கான அமெரிக்கத் தூதர் லிண்டா தாமஸ்-கிரீன்ஃபீல்ட் விளக்கம் அளித்துள்ளார். ரஷ்யா மற்றும் சீனாவால் தடுக்கப்பட்ட முந்தைய அமெரிக்க தீர்மானத்தை அவர் முதலில் குறிப்பிட்டார், "அக்டோபர் 7-ம் தேதி ஹமாஸ் நடத்திய பயங்கரவாதத் தாக்குதல்களைக் கண்டிக்க அவர்களால் இன்னும் முடியவில்லை". என்று அவர் கூறினார். "இராஜதந்திர முயற்சிகள் மூலம் நீடித்த அமைதியை முன்னெடுப்பதில் அவர்கள் உண்மையில் ஆர்வம் காட்டவில்லை என்பதை அவர்கள் மீண்டும் மீண்டும் காட்டியுள்ளனர்," என்று லிண்டா தாமஸ்-கிரீன்ஃபீல்ட் கூறினார். இன்றைய தீர்மானத்தில், "முக்கிய திருத்தங்கள்" புறக்கணிக்கப்பட்டதாக தாமஸ்-கிரீன்ஃபீல்ட் தெரிவித்தார். குறிப்பாக ஹமாஸின் கண்டனம் தெரிவிக்கப்படாதது குறித்து அவர் ஏமாற்றம் தெரிவித்தார். "தீர்மானத்தில் உள்ள அனைத்தையும் நாங்கள் ஏற்கவில்லை," என்று அவர் கூறினார். "அந்த காரணத்திற்காக, எங்களால் துரதிருஷ்டவசமாக ஆம் என்று வாக்களிக்க முடியவில்லை."என்றார் அவர். அவர் மேலும் கூறுகையில் "இருப்பினும், நான் முன்பு கூறியது போல், இந்த கட்டுப்பாடற்ற தீர்மானத்தில் சில முக்கியமான நோக்கங்களை நாங்கள் முழுமையாக ஆதரிக்கிறோம். அனைத்து பணயக்கைதிகளின் விடுதலையுடன் எந்தவொரு போர் நிறுத்தமும் வர வேண்டும் என்பதை சபையில் பேசுவதும் தெளிவுபடுத்துவதும் முக்கியம் என்று நாங்கள் நம்புகிறோம்." என்று ஐ.நா.வுக்கான அமெரிக்கத் தூதர் லிண்டா தாமஸ்-கிரீன்ஃபீல்ட் கூறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES அமெரிக்கா பின்வாங்கியிருப்பதாக இஸ்ரேல் அதிருப்தி போர் நிறுத்த தீர்மானத்தை வீட்டோ செய்ய அமெரிக்கா தவறியிருப்பது முந்தைய நிலைப்பாட்டில் இருந்து அந்நாட்டின் "தெளிவான பின்வாங்கல்" என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறினார். காசாவில் ஹமாஸுக்கு எதிரான போர் முயற்சிகளையும், அங்கு அடைத்து வைக்கப்பட்டுள்ள 130க்கும் மேற்பட்ட பணயக்கைதிகளை விடுவிக்கும் முயற்சிகளையும் இது பாதிக்கும் என்று அவர் கூறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES அமெரிக்காவுக்கான இஸ்ரேல் தூதுக்குழு பயணம் ரத்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இந்த வாரம் வெள்ளை மாளிகைக்கான இஸ்ரேலிய பிரதிநிதிகளின் பயணத்தை அதிகாரப்பூர்வமாக ரத்து செய்துள்ளார். ஆன்லைனில் வெளியிட்ட அறிக்கையில், "அமெரிக்காவின் நிலைப்பாட்டில் ஏற்பட்ட மாற்றத்தின் காரணமாகவே" இந்த முடிவு எடுக்கப்பட்டதாக இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. காசாவில் இஸ்ரேலிய தரைவழித் தாக்குதலை எதிர்பார்க்கும் முன் வரும் இந்த விஜயத்தை ரத்து செய்வதாக நெதன்யாகு முன்னர் அச்சுறுத்தியிருந்தார். இதை பைடன் நிர்வாகம் எதிர்த்துள்ளது. இஸ்ரேல் நடவடிக்கையால் அமெரிக்கா ஏமாற்றம் இந்த வாரம் அமெரிக்காவிற்கான பயணத்தை இஸ்ரேல் ரத்து செய்ததற்கு அமெரிக்கா ஏமாற்றம் தெரிவித்துள்ளது. வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி கூறுகையில், அமெரிக்கா "மிகவும் ஏமாற்றமடைந்துள்ளது" என்று கூறியுள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES 6 மாதங்களாக நீடிக்கும் போர் ஓயுமா? ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகம் வழங்கியுள்ள தகவலின்படி, இஸ்ரேலின் குண்டுவீச்சினால் 32,000க்கும் அதிகமான மக்கள், முக்கியமாக பெண்கள் மற்றும் குழந்தைகள் காஸாவில் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் அதிகரித்து வரும் உயிரிழப்பு எண்ணிக்கை குறித்து சமீப காலமாகவே அமெரிக்கா முன்பை விட அதிகமாக இஸ்ரேலை குற்றம்சாட்டி வருகிறது. காஸாவில் உள்ள மக்கள் அனைவரும் உணவு இன்றி தவிப்பதாக கூறும் அமெரிக்கா, அவர்களுக்கு கூடுதல் மனிதநேய உதவிகளை செய்யுமாறு இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுத்துள்ளது. மனிதநேய உதவிகளை செய்ய இஸ்ரேல் தடையாக இருப்பதாக ஐநா சபை குற்றம் சுமத்தியிருந்தது. அதே சமயம் உதவிகளை விநியோகிப்பதில் ஐநா சரியாக செயல்படவில்லை என்று இஸ்ரேல் குற்றம் சாட்டியது. காஸாவை ஆட்சி செய்து வரும் பாலத்தீன இஸ்லாமியக் குழுவான ஹமாஸ், இஸ்ரேல் மீது முன்னறிவிப்பில்லா தாக்குதலை நடத்தியதில், 1200 பேர் உயிரிழந்தனர். மேலும் 253 பணயக்கைதிகளையும் பிடித்து வைத்துக் கொண்டது. அதனால், அக்டோபர் 7 தொடங்கிய போர் தற்போது வரை நடந்து வருகிறது. https://www.bbc.com/tamil/articles/c3gmw4p94yeo
  23. சப்ரகமுவ, மேல், வடமேல் மாகாணங்களிலும் மன்னார், வவுனியா, அனுராதபுரம், காலி மாவட்டங்களிலும் கடும் வெப்பம்! 26 MAR, 2024 | 06:18 AM சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் மன்னார், வவுனியா, அனுராதபுரம் மற்றும் காலி மாவட்டங்களிலும் இன்று அதிகரித்த வெப்பநிலை காணப்படுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார். இன்றைய வானிலை குறித்து அவர் மேலும் கூறுகையில், கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் பொலன்நறுவை மாவட்டத்திலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் தென் மாகாணங்களின் பல இடங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். தென் மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன் அம்பாறை மற்றும் மொனராகலை மாவட்டங்களின் சில இடங்களிலும் 100 மில்லிமீற்றரிலும் கூடிய பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களின் சில இடங்களிலும் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படும். பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக் கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப் படுகின்றனர். திருகோணமலை தொடக்கம் மட்டக்களப்பு, ஹம்பாந்தோட்டை ஊடாக காலி வரையான கரையோரத்திற்குஅப்பால் உள்ள கடல் பிராந்தியங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். கொழும்பு தொடக்கம் காலி வரையான கடல் பிராந்தியங்களின் சில இடங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 20 - 30 கிலோமீற்றர் வேகத்தில் வடகிழக்குத் திசையில் இருந்து காற்று வீசும். புத்தளம் தொடக்கம் மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 40 கிலோமீற்றரிலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து அதிகரித்து வீசக்கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும். ஆனால் இடியுடன் கூடிய மழை பெய்யகின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்றார். https://www.virakesari.lk/article/179705
  24. பட மூலாதாரம்,GETTY IMAGES 25 மார்ச் 2024 புதுப்பிக்கப்பட்டது 25 மார்ச் 2024 மாலத்தீவைத் தொடர்ந்து, வங்கதேச அரசியலிலும் இந்தியா குறித்த விவாகரம் தற்போது சூடுபிடித்துள்ளது. ஆளும் அவாமி லீக் மற்றும் எதிர்க்கட்சியான வங்கதேச தேசியவாத கட்சி (பிஎன்பி) ஆகியவற்றின் தலைவர்களுக்கு இடையே அரசியல் ரீதியாக கடும் விவாதம் நடந்து வருகிறது. இந்த விவாகரம் தொடர்பாக இந்தியாவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் சமூக வலைத்தளங்களிலும் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. 'இந்தியாவே வெளியேறு' என்று சொல்லப்படும் பிரசாரம் அல்லது இந்திய தயாரிப்புகளை புறக்கணிப்பது என்கிற முழக்கம் , ஒரு சில எதிர்க்கட்சிகளால் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது சமூக வலைத்தளங்களிலும் அது வைரலாகி வருகிறது. இந்த பிரசாரத்தை எதிர்க்கும் பலரும், இது வழக்கமான இந்திய எதிர்ப்பு அரசியலின் ஒரு பகுதிதான் என்று குறிப்பிடுகிறார்கள். இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர் சந்திப்பில் பேசிய வங்கதேச வெளியுறவுத்துறை அமைச்சர் ஹசன் மஹ்மூத், “இந்திய தயாரிப்புகளை புறக்கணிக்கும் கோஷத்தின் நோக்கம், சந்தையை சீர்குலைத்து பொருட்களின் விலையை உயர்த்துவதே ஆகும்” என்று கூறியுள்ளார். ஆனால், அனைத்து இந்திய தயாரிப்புகளையும் புறக்கணிப்பதன் மூலம் வங்கதேச சந்தையை அப்படியே வைத்திருக்க முடியுமா? என்ற கேள்வியை அவர் முன்வைத்துள்ளார். அதேசமயம், பி.என்.பி. கட்சியின் நிலைக்குழு உறுப்பினர் கயேஷ்வர் சந்திர ராய், இந்தக் குற்றச்சாட்டு ஆதாரமற்றது என்றும், பொதுமக்களிடையே உள்ள கோபத்தால்தான் இந்தியப் பிரச்னை அரசியல் விவாதமாக மாறியுள்ளது என்றும் கூறியுள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தேர்தல்கள் எந்த பாதுகாப்புமே இல்லாமல் இந்தியாவால் செயல்படுத்தப்படுகிறது என்கிறார் பிஎன்பி கட்சியின் நிலைக்குழு உறுப்பினர் கயேஷ்வர் சந்திர ராய் இது குறித்து பிபிசி வங்கதேச பிரிவிடம் பேசிய அவர், "உண்மையில் தேர்தல்கள் எந்த பாதுகாப்புமே இல்லாமல் இந்தியாவால் செயல்படுத்தப்படுகிறது. இதன் காரணமாக மக்களால் வாக்களிக்க முடியவில்லை அல்லது அவர்களின் வாக்களிக்கும் உரிமை பறிபோகிறது. இது மக்களிடம் வெறுப்பை உருவாக்கியுள்ளது. பி.என்.பி. கட்சியால் மக்களின் வெறுப்பை அகற்ற முடியாது" என்று கூறுகிறார். மறுபுறம் பிபிசியிடம் பேசிய அவாமி லீக் கட்சியின் மூத்த தலைவரும் ஜவுளி மற்றும் சணல் துறை அமைச்சருமான அப்துர் ரஹ்மான், "இது பிஎன்பியின் இந்திய எதிர்ப்பு அரசியலின் தொடர்ச்சி என்றும், அவர்கள் அரசியல் ஆதாயங்களுக்காக இதைச் செய்தாலும், மக்கள் அதை நிராகரித்துவிட்டனர்" என்று கூறியுள்ளார். ஆனால் இந்தியப் பிரச்சினையில் பி.என்.பி.யும் அவாமி லீக்கும் ஏன் முரண்படுகின்றன? டாக்கா பல்கலைக்கழகத்தின் அரசியல் ஆய்வாளரும் ஆசிரியையுமான ஜோபைடா நஸ்ரீன், இந்தியா மீதான பி.என்.பி மற்றும் அவாமி லீக்கின் நேரெதிரான அறிக்கைகளுக்கான காரணங்கள் பற்றி பிபிசியிடம் பேசினார். இதுகுறித்து அவர் கூறுகையில், "பி.என்.பி.யோ அல்லது அதை போன்ற ஒத்த எண்ணம் கொண்ட கட்சிகள் மற்றும் தலைவர்களோ இந்திய தயாரிப்புகளை புறக்கணிப்பது அல்லது இந்தியாவை எதிர்க்கும் போது, அவாமி லீக் கட்சி அரசியல் காரணங்களுக்காக இந்தியாவின் பங்கை நியாயப்படுத்த முயற்சி செய்கிறது” என்று கூறுகிறார். படக்குறிப்பு, வங்கதேசத்தின் பிஎன்பி கட்சி பலமுறை இந்தியாவை எதிர்த்துள்ளது. பி.என்.பி.க்கும் இந்தியாவுக்குமான கசப்பான வரலாறு வங்கதேசத்தின் எதிர்க்கட்சியான பி.என்.பி. இந்தியாவை எதிர்ப்பது வரலாற்றில் இது ஒன்றும் புதிதோ அல்லது முதல்முறையோ அல்ல. ஆனால் கடந்த பத்து-பதினைந்து ஆண்டுகளில், பல்வேறு சமயங்களில் இதே கட்சியின் ஒரு பிரிவினர் இந்தியாவுடன் நல்லுறவை வளர்த்துக் கொள்ள முயற்சி செய்துள்ளனர். ஆனால், சில சமயங்களில் கட்சியின் இந்தியாவுக்கு எதிரான குழு பலமாகி, ஆதரவு குழுவின் முயற்சிகளை சீர்குலைத்து விட்டது. இதற்கு முக்கிய உதாரணமாக, 2013ஆம் ஆண்டு அப்போதைய இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி டாக்கா சென்றிருந்த போது, அன்றைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த பி.என்.பி. தலைவர் கலீதா ஜியா அந்தக் கூட்டத்தை ரத்து செய்ய முடிவெடுத்ததை பலரும் குறிப்பிட்டு சொல்கின்றனர். பின்னர், பிரதமர் நரேந்திர மோதி டாக்கா சென்ற போது அவரை ஹோட்டலில் வைத்து சந்தித்தார் ஜியா என்பதும் வரலாறு. 2014 ஆம் ஆண்டு வங்கதேசத்தில் நடைபெற்ற பொதுத் தேர்தலை பி.என்.பி புறக்கணித்த போதிலும் தேர்தல் நடத்தப்பட்டது. தேர்தலுக்கு முன்பு இந்திய அதிகாரிகளின் தொடர் செயல்பாடு அங்கு தென்பட்ட போதிலும், பி.என்.பி அதைப் பற்றி அதிகம் பேசவில்லை. ஆனால், 2018 தேர்தலுக்குப் பிறகு, பிஎன்பி இந்தியாவின் பிரச்னையை நோக்கி நகர்வதை போல் தெரிந்தது. 2019ஆம் ஆண்டு பிரதமர் ஷேக் ஹசீனாவின் இந்தியப் பயணத்தின் போது, இரு நாடுகளுக்கும் இடையேயான ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பி.என்.பி. போராட்டத்தில் இறங்கியது. வங்கதேச சுதந்திரத்தின் பொன்விழா நிகழ்ச்சிக்காக 2021ஆம் ஆண்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி டாக்கா வருவதை எதிர்த்து வங்கதேசத்தில் வன்முறைப் போராட்டங்கள் வெடித்தன. இது இந்தியாவுக்கும், பி.என்.பி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கும் இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி விட்டதாக பலரும் நம்புகின்றனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கானா ஓதிகார் பரிஷத் தலைவர் நூருல் ஹக் நூர், தேர்தல் முடிந்த சில நாட்களிலேயே இந்தியாவை புறக்கணிக்கும் குரலை முதலில் எழுப்பினார். 12வது நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பிருந்தே, பி.என்.பி., இந்தியாவின் பங்கு குறித்து அதிருப்தியை வெளிப்படுத்தி வந்தது. இந்தியாவின் பிடிவாதமான அணுகுமுறையால், சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்காக அவாமி லீக் அரசாங்கத்தின் மீது அமெரிக்கா உட்பட மேற்குலக நாடுகள் கொடுத்த அழுத்தம் நீர்த்துப்போய் விட்டது என்று பி.என்.பி கட்சியின் தலைவர்கள் நம்புகின்றனர். பி.என்.பி நிலைக்குழு உறுப்பினர் கயேஷ்வர் சந்திர ராய் பேசுகையில், “தேர்தல் வந்த உடனே இந்திய தலைவர்கள் செயல்பட தொடங்கி விடுகிறார்கள். இந்நிலையில் நான்கு தேர்தல்களாக வாக்களிக்க முடியாமல் இருப்பதால் மக்கள் மனதில் கோபம் எழுந்துள்ளது. அந்த கோபமே மக்கள் இயக்கமாக மாறியுள்ளது. மக்கள் இயக்கத்தை தடுப்பது ஒன்றும் பி.என்.பியின் வேலை இல்லை" என்று கூறுகிறார். கானா ஓதிகார் பரிஷத் தலைவரும், டாக்கா மத்திய பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் முன்னாள் துணைத்தலைவருமான நூருல் ஹக் நூர், தேர்தல் முடிந்த சில நாட்களிலேயே இந்தியாவை புறக்கணிக்கும் குரலை முதலில் எழுப்பினார். அதன் பிறகே, 'இந்தியா அவுட்' இயக்கம் அல்லது இந்திய தயாரிப்புகளை புறக்கணிக்கும் இயக்கம் தொடங்கியது. மார்ச் 21 அன்று, பிஎன்பி செய்தித் தொடர்பாளரும், மூத்த இணைச் செயலாளருமான ருஹுல் கபீர் ரிஸ்வி இந்த இயக்கத்திற்கு தனது ஆதரவை தெரிவித்தார். இதற்கு எதிர்வினையாற்றும் விதமாக ஆளும் அவாமி லீக் கட்சியின் பொதுச் செயலாளர் ஒபைதுல் குவாடர் ஒரு நிகழ்வில், பி.என்.பி கட்சி எந்த அரசியல் பிரச்னையும் இல்லாமலேயே, இந்தியாவை எதிர்க்கத் தொடங்கியுள்ளது என்று தெரிவித்தார். “பாகிஸ்தான் காலகட்டத்தில் இருந்தே எந்த விதமான அரசியல் பிரச்னையும் இல்லாமல் அவாமி லீக்கிற்கு எதிராக இதே பிரச்னை கொண்டு வரப்படுவதை நான் பார்த்திருக்கிறேன். அது முன்பு பங்கபந்துவுக்கு எதிராக இருந்தது, இப்போது ஷேக் ஹசீனாவுக்கு எதிராக உள்ளது. அதுதான் இந்திய எதிர்ப்பில் உள்ள பிரச்னை" என்று கூறினார் அவர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்திய பிரதமர் நரேந்திர மோதியை எதிர்த்து வங்கதேசத்தில் போராட்டம் முன்னதாக, மார்ச் 16 அன்று சமூக ஊடகங்களில் வெளியான 'இந்தியா அவுட்' பிரசாரத்தை குவாடர் விமர்சனம் செய்திருந்தார். அப்போது அவர், "இந்தியாவுக்கு எதிரான உணர்வைத் தூண்டும் முயற்சிகள் ஏன்? தேர்தலில் பங்கேற்காதவர்கள் இந்தப் பிரசாரத்தை கேடயமாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர். அவாமி லீக் ஆட்சியில் உள்ள போது, இந்தியாவுக்கு எதிரான குழு இணைந்து கொள்கிறது. இந்த நேரத்தில் பிஎன்பி இதைத்தான் செய்து கொண்டிருக்கிறது." என்று கூறியிருந்தார். கடந்த மார்ச் 22ஆம் தேதி கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலும் அவர் இதுகுறித்துப் பேசினார். அந்த சந்திப்பில், "இந்திய தயாரிப்புகளை புறக்கணிக்கிறோம் என்ற போர்வையில், நாட்டின் சந்தை அமைப்பை சீர்குலைக்கும் ஆழமான சதியில் பி.என்.பி. ஈடுபட்டுள்ளது. பி.என்.பி.யின் வேண்டுகோளுக்கு மக்கள் முக்கியத்துவம் கொடுக்க மாட்டார்கள்" என்று கூறியிருந்தார் அவர். மறுபுறம், பி.என்.பி துணைத் தலைவர் மற்றும் ஓய்வு பெற்ற மேஜர் ஹபீசுதீன் அகமது, “இன்னொரு நாட்டிடம் மண்டியிடும் வெளியுறவுக் கொள்கையே தற்போதைய ஆளும் கட்சியின் வழக்கமாக உள்ளது. டெல்லி எங்கு உள்ளதோ, அவர்களும் அங்குதான் இருக்கிறார்கள். இதை சொல்வதில் அவாமிக்கு வெட்கமே இல்லை" என்று விமர்சித்தார். பிபிசியிடம் பேசிய கயேஷ்வர் சந்திர ராய், "பி.என்.பி. எந்த நாட்டுக்கும் எதிரானது அல்ல, ஆனால் தேசியவாத அரசியலுக்குத் தேவையானதைச் செய்யும். ஒவ்வொரு முறையும் இந்தியா நம் நாட்டின் தேர்தல்களில் தீவிரமாக தலையிட்டு, மக்களின் வாக்குரிமையைப் பறித்துள்ளது. எனவே மக்கள் கிளர்ந்தெழுகிறார்கள். நாம் ஏன் அதைத் தடுக்க வேண்டும்?" என்று கூறினார். மறுபுறம், “ஒரு தீய சக்தி திடீரென இந்தியாவுக்கு எதிரான பிரச்னையை அரசியலாக்கி அரசியல் ஆதாயம் தேட முயல்கிறது. அதை பொதுமக்கள் நிராகரித்துள்ளனர்” என்று அமைச்சர் அப்துர் ரஹ்மான் தெரிவித்தார். மேலும் ஜனநாயகத்தின் நலன் கருதி, இந்தியா உட்பட அனைத்து கூட்டாளி நாடுகளும் 12வது நாடாளுமன்றத் தேர்தலை சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடத்த உதவி செய்துள்ளன என்று கூறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, வங்கதேச அரசியலில் இந்தியா எப்போதும் முக்கியத்துவம் வாய்ந்தது என்கிறார் டாக்கா பல்கலைக்கழகத்தின் அரசியல் ஆய்வாளரும் ஆசிரியையுமான ஜுபைதா நஸ்ரீன் சர்ச்சைக்கான காரணம் என்ன? டாக்கா பல்கலைக்கழகத்தின் அரசியல் ஆய்வாளரும் ஆசிரியையுமான ஜுபைதா நஸ்ரீன், வங்கதேச அரசியலில் இந்தியா எப்போதும் முக்கியத்துவம் வாய்ந்தது, எனவே தற்போதைய சூழ்நிலையிலும் இந்தியாவுக்கு பங்கு உண்டு என்று கூறுகிறார். இதுகுறித்து பிபிசியிடம் பேசிய அவர், " பி.என்.பி. மற்றும் அதை ஒத்த சித்தாந்தம் கொண்ட எந்தவொரு கட்சியும் இந்திய தயாரிப்புகளை புறக்கணிக்கவோ அல்லது இந்தியாவுக்கு எதிராகப் பேசுவதற்கோ முற்படும் போது, அரசியல் காரணங்களுக்காக அவாமி லீக் பதிலளிக்க வேண்டியுள்ளது" என்கிறார். அவரது கருத்துப்படி, இரண்டு கட்சிகளின் அரசியலிலும் இந்தியாவுக்கு செல்வாக்கு உள்ளது. "இந்தப் பிரச்னையில் பொதுமக்களின் உணர்வுகளை பி.என்.பி தூண்டும் நிலையில், இந்தியாவுடன் நல்லுறவில் இருக்கும் புள்ளியில் இருந்து அவாமி லீக் அதற்கு ஆதரவாக பேச வேண்டிய தேவை உள்ளது” “இந்திய எதிர்ப்பு என்ற பெயரில் அவாமி லீக் கட்சிக்கு எதிராக பொதுமக்களை தூண்டி விட நினைக்கிறது பி.என்.பி. இதுவே அவாமி லீக் தரப்பிலிருந்தும் எதிர் தாக்குதல்கள் வருவதற்கு காரணம்” பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, “இந்திய தேர்தலில் பங்களாதேஷுக்கு அவ்வளவாக செல்வாக்கு இல்லை. ஆனால் நரேந்திர மோதி மீதான வெறுப்பு பிஎன்பியில் அதிகரித்துள்ளது.” என்கிறார் ஜுபைதா நஸ்ரீன் எதுவாகினும், இந்தியாவில் பொதுத் தேர்தல்கள் நெருங்கி வருவதால், நாட்டின் எதிர்க்கட்சிகள் இந்தியாவுக்கு எதிரான பிரசாரத்தை தீவிரப்படுத்த அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று ஜுபைதா நஸ்ரீன் நம்புகிறார். “இந்திய தேர்தலில் வங்கதேசத்திற்கு அவ்வளவாக செல்வாக்கு இல்லை. பி.என்.பி மற்றும் அவாமி லீக் இடையேயான பேச்சுவார்த்தையும் அவர்களுக்கு முக்கியமல்ல. ஆனால் நரேந்திர மோதி மீதான வெறுப்பு பி.என்.பி.யில் அதிகரித்துள்ளது.” எனவே, "இந்தியத் தேர்தலை மனதில் வைத்து, வங்கதேசத்தில் மோதிக்கு எதிரான உணர்வை மேலும் தூண்டுவதற்கு எதிர்க்கட்சிகள் வாய்ப்பைத் தேடிக் கொண்டிருக்கலாம். அதனால்தான் அரசியல் அரங்கில் இந்தியாவின் பிரச்னை உச்சத்தில் உள்ளது" என்கிறார் ஜூபைதா. பட மூலாதாரம்,TWITTER படக்குறிப்பு, சமூகவலைத்தளங்களில் இந்தியாவுக்கு எதிரான பிரச்சாரம் இங்கே, பி.என்.பி மற்றும் அவாமி லீக்கின் பிரச்னைகளுக்கு இடையில், முகநூலில் இந்திய தயாரிப்புகளை புறக்கணிப்போம் என்ற குழுவை உருவாக்கி ஒரு அணி இந்திய எதிர்ப்பு பிரசாரத்தை தொடங்கியுள்ளது. அதில் ஆயிரக்கணக்கானோர் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த குழுவில் உள்ள இர்பான் அகமது என்ற நபர், "உள்ளூர் பொருட்களை வாங்கி, இந்திய பொருட்களை புறக்கணித்துள்ளேன்" என்று எழுதியுள்ளார். அகமது இம்ரான் என்ற மற்றொரு நபர், "மக்கள் எங்கு செல்வார்கள், எங்கு சாப்பிடுவார்கள், எங்கு சிகிச்சை பெறுவார்கள் என்பதில் ஏன் இவ்வளவு குழப்பம்?” “இந்தியா உலகிலேயே இயற்கை அழகு கொண்ட ஒரு நாடு. ஒரு அண்டை நாடாக உங்களால் மிகக் குறைந்த கட்டணத்தில் அங்கு பயணம் செய்ய முடியும். ஒருசிலர் எல்லாவற்றிலும் மூக்கை நுழைப்பதை நிறுத்தி கொள்ள வேண்டும்" என்று எழுதியுள்ளார். https://www.bbc.com/tamil/articles/c258rvdwdkpo

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.