Everything posted by Cruso
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
தப்பி ஓடினாலும் பரவாயில்லை. சிலர் ஓடும்போது மக்கள் கொடுத்த பணம் , நகை நாட்டு எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு இல்லையா ஓடி விடடார்கள். எப்படியோ அவர்கள் நன்றாக வாழட்டும். இன்னுமாடா இவர்கள் இயக்கங்களுக்கு வெள்ளையடிக்கிறார்கள்? ஒவ்வொரு இரவு விடியும்போதும் தூண்களில் பிணங்களை கணடவர்கள் நாங்கள். அந்த திறதுக்குள்ள ஒரு விளக்கமும் எழுதி வைத்திருப்பார்கள். அந்த அப்பாவிகளின் ரத்தம் இவர்களை சும்மா விடாது. நிச்சயமாக பழிவாங்கும்.
-
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா
ஓடுங்கள், ஓடுங்கள் நன்றாக ஓடுங்கள். அப்பத்தான் உங்கள் உடம்பு சுகப்படும். உங்கள் வயதை கருத்தில் கொண்டு ஓடுங்கள். 😜
-
புலம்பெயர் இலங்கையர்களை கணக்கெடுக்கும் பணிகள் விரைவில் ஆரம்பம்
அதட்குத்தான் உங்களை பதிவு செய்ய சொல்லுகிறார்கள். நீங்கள் ரெட்டை பிரஜாவுரிமையை பெற்றுக்கொள்ளலாம். அல்லது இலங்கையில் பிறந்தவர் என்பதை ஆதாரமாக வைத்து உங்கள் ஆலோசனையை கூறலாம் . இறந்தவர்களை பற்றி பேசவேண்டிய அவசியம் இருக்காது. விரைவில் ஜனாதிபதி, பாராளுமன்ற தேர்தல்கள் வர இருக்கின்றன. பணமும் ஒதுக்கப்பட்டிருக்கின்றது. அந்தளவுக்கு யூரோ அதிகரிக்க சந்தர்ப்பமில்லை.
-
வவுனியாப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவிக்குப் பெரும்பான்மை இனப் பேராசிரியரும் விண்ணப்பம்!
இவர்கள் எல்லாம் இனவாதம் , மத வாதம் என்று மற்றவர்களை தூற்றுவார்கள். தங்கள் யார் என்பதை ஒரு நாளும் எண்ணியது கிடையாது. வெள்ளையடிக்கப்படட கல்லறைகள். இவர்கள் தங்களது நிலையை, தாங்கள் எங்கேயிருக்கிறோம் என்று முதலில் உணரும் வரைக்கும் தமிழனுக்கு விடிவில்லை. எத்தியோப்பிய பல்கலை கழகத்தை குறிப்பிட்டிருந்தீர்கள். சில வேளைகளில் அவர்களை பிழையாகா நாம் விளங்கி இருந்தாலும் நம்மைவிட ஒருபடி மேலேதான் இருக்கிறார்கள். ஒரு பழமொழி சொல்லுவார்கள் அது இந்த தமிழர்களுக்கு நன்றாகவே பொருந்தும். எத்தியோப்பியன் தன் தோலையும் சிவிங்கி தன் புள்ளியையும் மாற்றினாலும் மாற்றும் இவர்களோ மாற மாடடார்கள் என்று. நிறையபேர் இந்த பாகுபாடடை அனுபவித்திருக்கிறார்கள். ஆனால் உண்மையை எழுதும்போது தாம் தூம் என்று துள்ளு குதிப்பார்கள்.
-
வவுனியாப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவிக்குப் பெரும்பான்மை இனப் பேராசிரியரும் விண்ணப்பம்!
சில வேளைகளில் தமிழர்களை விட சிங்களவர்கள் சிறப்பாக செயல்படுவார்கள். முன்னர் யாழில் லயனல் பெர்னாண்டோ என்னும் சிங்கள அரச அதிபர் இருந்தார். அவரை அங்கிருந்து மாற்றலாகி செல்வதட்கு அங்குள்ள மக்கள் அனுமதிக்கவில்லை. மக்களால் மிகவும் நேசிக்க படடார். எனவே எல்லோரையும் எடுத்தவுடன் இனவாதி, கெடடவர், துரோகி என்று சொல்ல கூடாது. எப்படி இருந்தாலும் அவர் அங்கு போட்டியிட வேண்டும், தெரிவு செய்யப்பட வேண்டும், பேரவை முடிவு செய்ய வேண்டும் போன்ற பல படிகள் உண்டு. அங்குள்ளவர்கள் அவர் தகுதியானவர் என்று கருதினால் யாரும் எதுவும் செய்ய முடியாது.
-
வழக்குத் தொடுநர்களுடன் சமரசத்துக்காக மூவர் கொண்ட குழுவை நியமித்தது தமிழரசு கட்சி; மீள் தெரிவுக்கு தாயாரென மீண்டும் அறிவித்தார் சிறீதரன்
ஜனாதிபதி சடடதரணி தவராசாவுக்கே கட்சியின் யாப்பு தெரிந்திருக்கவில்லை என்பதுதான் பெரிய சிரிப்பு. அவரே இப்போது எல்லாவற்றையும் நடத்த போகின்றாராம். இது இப்போதைக்கு முடியும் காரியமில்லை. உயர் நீதி மன்றம், மேன்முறையீட்டு மீதி மன்றம், உச்ச நீதி மன்றம் எண்டு போய் வர ஒரு வடடமடிக்க வேண்டும். இதெல்லாம் அந்த சொம்பு அல்லக்கைகளுக்கு என்க விளங்க போகுது.
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
இதெல்லாம் மணடயில் போடு முன்னர் கேட்கப்பட வேண்டிய கேள்விகள். எல்லாவற்றையும் நாசமக்கிப்போட்டு இப்படி கேட்க கூடாது.
-
புலம்பெயர் இலங்கையர்களை கணக்கெடுக்கும் பணிகள் விரைவில் ஆரம்பம்
நீங்கள் முதலில் உங்களை பதிவு செய்யுங்கள். உங்கள்கேள்விக்கும் பதில் கிடைக்கும். உங்களுக்கு வாக்களிக்கும் சந்தர்ப்பம்கிடைக்கும். நிச்சயமாக தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கலாம். அதன்மூலம் எமது தமிழர்களின் போராட்டத்தில் ஒரு முன்னேற்றம் ஏட்படும்தானே. இலங்கை அரசசு ஒரு நல்ல நோக்கத்தில் செய்யும் வேலைக்கு உங்கள் ஒத்துழைப்பு அவசியம். இதட்கு ஒரு தமிழரைதான் பொறுப்பாக நியமித்திருக்கிறார்.
-
எட்கா ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டால் இந்தியர்கள் இலங்கையின் நிரந்தர குடியேற்றவாசிகளாவர் - விமல் வீரவன்ச சாடல்
இவர் முன்னரும் இந்தியாவை காட்டி காட்டித்தான் சீனாவிடம் பணம் கறந்து கொண்டிருந்தார். அப்போது ஜேவிபி யும் இன்னும் சிலரும் இந்தியா எதிர்ப்பு கோஷங்களை போட்டுக்கொண்டிருந்தார்கள். தொழில் சங்கங்களும் எதிர்ப்பு கோசம் போடுவதில்லை. இப்போது அநேகமாக விமல் கும்பலை தவிர மற்ற எல்லோரும் அமைதி காப்பது இவருக்கு பிரச்சினை ஆகி விட்ட்து. சீன பணம் கொடுப்பதையும் நிறுத்தி விட்ட்தாக அல்லது குறைத்து விட்ட்தாக அறிய கிடைக்கிறது. எனவேதான் இன்னும் ஆக்ரோஷமாக இருக்கிறார்.
-
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா
நான் அதனை எழுதியது மக்கள் எதிர்நோக்கும் கருதினைக்கொண்டே. முன்னர் போல உணவு, மலசல கூட வசதிகள்போன்ற அத்தியாவசிய சேவைகள் செய்யப்படுவதில்லை என்றும், அரசு அல்லது உள்ளூர் நிர்வாகம் பணம் ஒதுக்குவதில்லை என்றும் கூறப்பட்டிருந்தது. மடற்ப்படி அவர்கள் பணம் செலவு செய்தோ, நடந்து சென்றோ , உடலை வருத்தி இறைவனை தேடும்போதுதான் அங்கு மகிழ்ச்சி இருக்கின்றது.
-
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்
உண்மை. எம்மைவிட அந்த மீனவர்களுக்குத்தான் அது தெரிந்திருக்க வேண்டும். பொதுவாக இந்தியாவில் அதுவும்தமிழ் நாட்டில் இரண்டு மாதங்களுக்கு மீன் பிடிக்க அனுமதிக்க படுவதில்லை. மீன் உட்பதியாகும் காலம் என்று அறிவித்து அதை சடடமாகவே செயல் படுத்துகிறார்கள். இருந்தாலும் தடை செய்யப்படட மீன்பிடி முறையை என் தொடர அனுமதிக்க படுகின்றது என்பதும் பிரச்சினை. மீனவர்கள் அமர்ந்து இதட்கு முடிவு கட்டினாலே ஒழிய கடட்படையோ, அரசியல்வாதிகளோ, இரு நாட்டு அரசுகளோ தீர்க்க போவதில்லை.
-
தலைமன்னார் இறங்கு துறை பகுதியில் மணல் அகழ்விற்கு சென்றவர்களை தடுத்து நிறுத்திய மக்கள்
மன்னார் மக்களே தேர்தல் வருகின்றது தவறாமல் உங்கள் ஓட்டுக்களை அடைக்கலநாதனுக்கும் , சார்ள்ஸ் நிர்மலநாதனுக்கும் போட்டு விடுங்கள். அவர்கள்தான் மன்னார் மக்களின் பாதுகாவலர்கள்.
-
பௌர்ணமி பொங்கலை தடுத்து நிறுத்திய பொலிஸார்
போரின் காரணமாக அம்பாறையில் எப்படி தமிழ் கிராமங்கள் முஸ்லீம் கிராமங்களாக மாறியதோ அதே போலத்தான் இதுவும். இங்கு இடப்பெயர்வை காரணமாக வைத்து அதை தொல்லியல் திணைக்களம் விஹாரைக்குரிய இடமாக மாற்றி விடடார்கள். அதை அண்டிய இடங்களில் நிறைய சிங்கள குடியேற்றங்களும் உருவாக்க பட்டு விட்ட்து. அரசியல்வாதிகள் ஒதுங்கி விடுவார்கள் , மக்கள் போராட வேண்டியதுதான். மீண்டும் போராட்டம். நாமும் கருத்துக்களை பதிவிடுவோம்.
-
பௌத்த பிக்குகள் பாராளுமன்றத்துக்கு வர கூடாது, விகாரைகளில் இருக்க வேண்டும் - இராஜாங்க அமைச்சர் டயனா கமகே
புத்தரின் போதனைகளை பின்பற்றும் எறும்புக்கு கூட தீங்கு நினைக்காத மக்கள் வாழும் ஜனநாயக நாடு இது. உங்களுக்கு பகிடியாக இருக்கலாம். ஆனால் இங்குள்ள மக்கள் புத்தரின் போதனையை தவறாமல் பின்பற்றுகிறார்கள் என்பது உங்களுக்கு தெரியாமல் இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. 😜
-
யாழ். சர்வதேச விமான நிலைய விஸ்தரிப்புக்காக காணி சுவீகரிப்பு : எதிர்ப்பு போராட்டங்களை முன்னெடுக்க தீர்மானம்
ஈழம் கேட்க்கிறோம். எனவே எமக்கு ஒரு சர்வதேச விமான நிலையம் தேவை. அப்படி என்றால் எப்படி எதிர்ப்பு தெரிவிக்க முடியும். அபிவிருத்தி என்று வரும்போது சில விட்டு கொடுப்புக்கல்செய்யதான் வேண்டும். கொழும்பு மராயன் டிரைவ் அமைக்கும்போது பல பிரச்சினைகள். நிறைய வீடுகள் அகற்ற வேண்டும். வேறு வழியில்லை. அவர்களுக்கு நஷ்ட்டஈடு கொடுத்து எல்லாமே இடிக்கப்படடன. எனவே இதுவும் அப்படிதான்.
-
தமிழரசுக்கட்சியின் குழப்பநிலைக்கு சுமந்திரனே காரணம்: எழுந்துள்ள கடும் குற்றச்சாட்டு
நாங்கள் எல்லாம் எழுதி முடிச்சிட்டிடம் நீங்க மைக்க புடிங்க சீக்கிரம் .
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
அதையும் குறிப்பிட்டு எழுதுங்கள். பின்னர் அதை பார்த்து வெறுப்பா இல்லையா என்று தெரிந்து கொள்ளலாம். சும்மா சும்மா எழுதக்கூடாது.
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
மண்டையில் இருந்து வராமல் இடுப்புக்கு கிழே இருந்தா வரும்? உங்களது இந்த வெறுப்பு எங்கிருந்துவந்து? அதையும் எழுதுங்கள்.
-
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்
ஒன்று இலங்கை கடடபரப்பில் வந்து மீன் பிடிப்பது தவறு. அதை விடுவம். இரண்டாவது இங்குள்ள மீன் உட்பதியாகும் வளங்களை அழித்து நாசமாக்குவது. அவர்கள் சாதாரண அனுமதிக்கப்படட வலைகளை பாவித்தால் பிரச்சினை இல்லை. அதனை இங்குள்ள மீனவர்கள் விட்டுக்கொடுப்புடன் செய்வார்கள். அங்குள்ள மீன் உடபதியாகும் வளங்களை அழித்தொழித்ததால்தான் அவர்களது கடடபகுதியில் மீன் வளம் அழிந்து போனது. எனவே அவர்களது தடை செய்யப்படட மீன் பிடிப்பு முறைதான் எல்லா பிரச்சினைகளுக்கும் மூல காரணம்.
-
பௌத்த பிக்குகள் பாராளுமன்றத்துக்கு வர கூடாது, விகாரைகளில் இருக்க வேண்டும் - இராஜாங்க அமைச்சர் டயனா கமகே
உங்கள் நாட்டில் நடப்பவற்றை கருத்தில் கொண்டு நீங்கள் எழுதுகிறீர்கள். இலங்கையொரு மக்கள் ஜனநாயக குடியரசு என்பதில் உங்களுக்கு நம்பிக்கை இல்லை போல தெரிகின்றது.
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
நிர்வாகம் தூக்கி விட்ட்தா இல்லையா என்று எனக்கு தெரியாது. நான் ஒருதரம் எழுதியதை மீண்டும் போய் தேவையில்லாமல் பார்ப்பதில்லை. நீங்கள் சொல்வதை பார்த்தல் பிரபாகரனை விமர்சித்தால் இங்கு அந்த கருத்து காணாமல் போகுமென்கிறீர்கள். நீங்கள் விளங்கினதையும் எழுதினால் நல்லது. நீங்கள் யார் , நான் யார் என்பதல்ல பிரச்சினை. நீங்களும் எழுதுகிறீர்கள், நானும் எழுதுகிறேன். அதனை ஏற்று கொள்ளுவதும், ஏற்று கொள்ளாததும் ஒவ்வொருவரை பொறுத்தது. ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். அதட்காக கொலை செய்வதட்கு எவருக்கும் உரிமை இல்லை. நிச்சயமாக அப்பாவிகளை கொலை செய்தவர்களை அவர்களது இரத்தம் பழி வாங்கும். எவருமே தப்ப முடியாது. எல்லோரயும் எழுதும்போது நீலனின் பெயரும் இங்கு வந்ததன் அடிப்படையில் எழுதினேன். மடற்ப்படி நீலனுக்காக மட்டும் நான் இங்கு எழுதவில்லை.
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
நிச்சயமாக. நல்லவர்களை கெடடவர்களாகவும், கெடடவர்களை நல்லவர்களாகவும் வெள்ளையடிக்கும்போதுதான் இங்கு பிரச்சினை உருவாகின்றது. நீலன் திருச்செல்வமில்லை, குறைந்தது புலிகளின் மதியுரைஞர் அன்டன் பாலசிங்கத்துக்கு செவிகொடுத்திருந்தால் கூட பிரச்சினை இங்கு கொண்டு வந்து நிறுத்தியிருக்காது.
-
எட்கா ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டால் இந்தியர்கள் இலங்கையின் நிரந்தர குடியேற்றவாசிகளாவர் - விமல் வீரவன்ச சாடல்
அப்படி என்றால் அங்குவாழும் தமிழர்கள் வாழ்க தமிழ் ஈழம் என்று சொல்லுவதில்லையோ? அது சரிதான் ஆங்கிலேயரும், பிரெஞ்சு காரரும் எதுக்கு வாழ்க தமிழ் ஈழம் சொல்ல வேண்டும்.
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
ஒரு பிரச்சினை முடிவுக்கு கொண்டு வரும்போது போராடியவர்களுக்கு நிச்சயமாக பாதுகாப்பு வழங்கப்படும். அப்படி இல்லாவிடடாள் அது தீர்வாக இருக்காது. அவர் எதை , எந்த தீர்வு பொதியை கொண்டு வந்தார் என்பதோ பிரச்சினையில்லை. அதட்காக மண்டையில் போடுவதுதான் தீர்வு என்றால் அது நடக்காது. இப்போது எங்கே நிட்கிறோம்?
-
தமிழரசுக்கட்சியின் குழப்பநிலைக்கு சுமந்திரனே காரணம்: எழுந்துள்ள கடும் குற்றச்சாட்டு
சகல கலா வல்லவன் சுமந்திரன். சுமந்திரன் இல்லாவிடடாள் ஈழம் அல்லது சுயாட்சி கிடைத்திருக்கும் . அதாவது சுமந்திரனை அகற்றினால் நிச்சயமாக ஈழம் அல்லது சமஷடி கிடைக்கும் என்று சொல்லுகிறார்கள். இப்போது நல்ல ஒரு தலைமை கிடைத்திருக்கிறது. எனவே அவர் சுமந்திரனை அகற்றி எமது கனவை நிறைவேற்றுவார் என்று கனவு காண்போம். அப்துல் கலாம் ஐயாவும் நன்றாக கனவு காணும்படி விசேடமாக மாணவர்களுக்கு அறிவுரை கூறினார். அது பகல் கனவா அல்லது இரவு கனவா என்பதுதான் பிரச்சினை.