Everything posted by Cruso
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
இங்கு நீலன் திருச்செல்வம் என்ன , வேறு எவராவது உருப்படியான எதையாவது செய்திருக்கிறார்களா என்றுகேடடாள் யாருக்குமே பதில் இருக்காது. எவராவது கொலை , கொள்ளை , கடத்தல் செய்திருக்கிறார்களா எண்டால் நிறையவே எழுதலாம். இருந்தாலும் நீலன் திருச்செல்வம் மற்றவர்கள் காண வேண்டும், பேச வேண்டும் என்பதட்கு அப்பால் மறைமுகமாக நிறையவே காரியங்களைச்செய்து கொண்டிருந்தார். வெளி நாட்டு ராஜதந்திரிகளுடனும் , உள்நாட்டு அரசியல்வாதிகளுடனும் பல பேச்சுவார்த்தை நடத்தி ஒருதேர்வு திடத்தை நகர்த்தி இருந்தார். அப்படியான ஒன்று இப்போது கனவிலும் நடக்காது. இப்போது போலீஸ் அதிகாரம் அதிலிருந்து அகற்ற பாராளுமன்றில் கம்மன்பில ஒரு பிரேரணை கொண்டு வந்திருக்கிறார். அது அதிகமாக நிறைவேற்ற படும். எனவே போலீஸ் அதிகாரம் முடிவுக்கு வருகின்றது. இது சரியாக முடிவுற்றால் நிச்சயமாக காணிஅதிகாரத்தை அகற்றுவதட்கும் ஒரு பிரேரணை கொண்டுவருவார்கள். அதுக்கு பிறகு என்ன, அது பூரணமான அதிகாரம் கொண்ட மாகாண சபைதான்.
-
இலங்கை மன்னாரில் அதானி நிறுவன திட்டத்திற்கு முறைகேடாக அனுமதி தர முயற்சியா? புதிய சர்ச்சை
ஈழத்தில் இந்தியாவை தவிர வேறு எவருக்கும் அனுமதியில்லை. எனவே அது அதனியோ, அம்பானியாகவோ மட்டுமே இருக்கலாம். வேறு எவருக்கும் அனுமதி இல்லை. அப்படி வந்தால் ஈழ மக்கள் புரட்சி செய்வார்கள். 😜
-
முன்மாதிரி கிராமமாக நயினாதீவை மாற்ற வேண்டும் - வடக்கு ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ்
இன மத பேதமில்லாமல் அங்கு மக்கள் கலந்து கொண்டுள்ளனர். அப்படியே இந்து பவுத்த ஆலயங்கள் இருப்பதுபோல் மற்ற மதத்தினருக்கும் அமைத்து கொடுத்தால் வசதியாக இருக்கும். உறவு இன்னும் மேம்படும்.
-
இரணைமடு குளத்தையும் வயல் நிலங்களையும் சட்டவிரோத மணல் அகழ்வோரிடமிருந்து காப்பாற்றுங்கள் - பிரதேச மக்கள் அவசர கோரிக்கை
தலைவர் ஸ்ரீதரன் ஐயாவிடம் முறையிட்டும் பலன் இல்லையா? ஐயோ பாவம் அப்பாவி மக்கள். கொஞ்சம் பொறுங்கள் மகாவலி நீர் இப்போது இரணைமடு குளத்துக்கு கொண்டுவரும் வேலைகள் விரைவாக நடக்கின்றது. அது முடிந்தவுடன் குளமும் அண்டிய பகுதிகளும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வந்து விடும். அப்போது நிச்சயமாக இவையெல்லாம் தடுக்கப்படும்.
-
மன்னாரில் புதிய காற்றாலை திட்டத்தை அமைக்க திட்டம்
காற்றாலைகள் மன்னர் ஊடாக பூநகரி மற்றும் அம்பந்தோடடை பிரதேசங்களில் அமைப்பதட்கான சூழ்நிலைகள் காணப்படுகின்றன. அரசாங்கம் சுற்று சூழல்களை கவனத்தில் கொண்டு அமைப்பதில் எவருக்குமே பிரச்சினை இருக்காது. இருந்தாலும் மின்சார கடடனம் குறையுமா என்பதுதான் பிரச்சினை. இங்கும்கூட தனி நபர் (முதலீடு செய்பவர்) தான் விலையை தீர்மானிக்க போகின்றார்.
-
பௌத்த பிக்குகள் பாராளுமன்றத்துக்கு வர கூடாது, விகாரைகளில் இருக்க வேண்டும் - இராஜாங்க அமைச்சர் டயனா கமகே
உண்மை. இருந்தாலும் அவர் சொல்வதிலும் உண்மை இல்லாமல் இல்லை. மத தலைவர்கள் மத கடமைகளுடன் இருந்திருந்தால் நாட்டில் இந பிரச்சினையும் எப்போதோ தீர்ந்திருக்கும். அதாவது காவிகள் வீதிக்கு இரங்கி அரசியல் செய்யவிடடாள் மக்களும் வீதிக்கு இறங்க மாடடார்கள். அதனால்தான் அவர்கள் வீதிக்கு இறங்கு முன்னர் அவர்களிடம் மண்டியிடுகிறார்கள்.
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
இங்கு சிலர் போராளிகளின் தவறுகளை, விஸேடமாக புலிகளின் தவறுகளை சுட்டி காடட கூடாது என்பதில் கருத்தாக இருக்கிறார்கள். மனடையன் குழு, ஈபிடிபி, ப்ளட் போன்ற இயக்கங்களை பற்றி எழுதினபோது எதிர்க்கருத்து இல்லை. நன்றாக பச்சை குத்தினார்கள். இப்போது நிலைமை வேறாக மாறி இருக்கிறது. நெற்றி கண் திறப்பினும் குற்றம் குற்றமே.
-
குச்சவெளி பிரதேசத்தின் 4 விகாரைகள் இலங்கையின் அதி முக்கியத்துவம் வாய்ந்த பௌத்த இடங்களாக பிரகடனம்
அப்படி எண்டால் அடுத்தது யால் முற்ற வெளிதான்.
-
எட்கா ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டால் இந்தியர்கள் இலங்கையின் நிரந்தர குடியேற்றவாசிகளாவர் - விமல் வீரவன்ச சாடல்
விமலுக்கு இந்தியர்கள் என்றால் தமிழர்கள் என்ற எண்ணம். அதனால்தான் அவர் இந்திய என்று வரும்போது வீராவேசம் போடுகின்றார். நீங்கள் கூறியதுபோல் நிறைய மலையாளிகள் இங்கு சிங்களவர்களாக , தமிழர்களாக மாறி இருக்கிறார்கள். குருநாகல் எத்தனால் ஜான்சன் பெர்னாண்டோவும் ஒரு மலையாளிதான். ஆனால் நாட்டுப்பற்றுள்ள சிங்களவர்கள் போல பேசுவார்.
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
உண்மையை எழுதியதட்காக எனக்கு இங்கு ஒருவர் துரோகி படடம் குத்தி உள்ளார். இந்த உண்மையை எழுதின உங்களுக்கும் இங்கு துரோகி படடம் குத்தினாலும் குத்துவார்கள். இதுதான் இங்குள்ள யதார்த்தம்.
-
முல்லைத்தீவில் 2 ஆவது நாளாகவும் தங்க வேட்டை!
நீங்கள் போகும்போது கொண்டு போய் விடீர்கள் என்பது இந்த மடயர்களுக்கு எங்க விளங்க போகுது. நீங்கள் சொல்லுவதை பார்க்கும்போது எம்மிடம் வாங்கிய நகைகள் ஒன்றும் இங்கு இல்லை என்பது நிச்சயம்.
-
குச்சவெளி பிரதேசத்தின் 4 விகாரைகள் இலங்கையின் அதி முக்கியத்துவம் வாய்ந்த பௌத்த இடங்களாக பிரகடனம்
இப்பதான் இரண்டு வகுப்பு முடிந்திருக்கிறது. மூன்றாம்வகுப்பு வவுனியாவிலாம். இந்த வகுப்பெல்லாம் முடியிறதுக்குள்ள அவன் எல்லாவற்றையும் பிரகடனப்படுத்தி முடிச்சிடுவான். சிறப்பாகசெய்கிறார்கள்.
-
மத்திய வங்கி அதிகாரிகளின் சம்பளத்தை இலட்சக்கணக்கில் அதிகரிப்பதில் எந்தளவுக்கு நியாயம் - விமல் வீரவன்ச
இலங்கையின் பொருளாதாரத்தை பாதுகாக்கும் இவர்களுக்கு இந்த பெரிய சம்பளத்தை கொடுப்பதில் ஆட்ச்சேபனை இருக்க முடியாது. இலாவிடடால் இலங்கை பொருளாதாரத்தில் வீழ்ச்சி கண்டிருக்கும். அதுவும் கப்ரால் மத்திய வங்கி ஆளுநராக இருந்தபோது மிகவும் சிறப்பாக இருந்தது. 😜
-
எட்கா ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டால் இந்தியர்கள் இலங்கையின் நிரந்தர குடியேற்றவாசிகளாவர் - விமல் வீரவன்ச சாடல்
அதை கழட்டி இப்போது வெள்ளையும் சொள்ளையுமாகத்தான் திரிகிறார். ஆனாலும் இந்த ஒப்பந்தம் என்னவென்று சரியாக வெளிப்படுத்தப்பட வில்லை. அப்படி இருக்குமாக இருந்தால் அவர் சொலவதில் உண்மையில்லாமலும் இல்லை. நிச்சயமாக மலையாளிகள் இங்கு வந்து குடியேறுவார்கள்.
-
இலங்கை இந்திய ஒப்பந்தத்திற்கு அழுத்தம் கொடுக்கும் மோடி அரசு!
நீங்கள் இருப்பது தீயின் தணலில். பெயரிலும் அக்கினி. அப்படி என்றால் தீயை வென்ற ஒரு மனிதனாக இருக்க வேண்டும். அது சரி எந்த நாட்டில் இருக்குகிறீர்கள்? வசதியான நாடா? இன்னும் துரோகி பட்டம் கொடுத்து மணடயில் போடுவதை நிறுத்தவில்லை போல தெரிகின்றது. அது 2009 உடன் முடிந்து விட்ட்து என்பதை மறக்க வேண்டாம். நீங்கள் பணம், நகை நட்டுகளுடன் இங்கிருந்து போய் வெளி நாட்டில் வசதியாக வசிப்பதில் எங்களுக்கு பிரச்சினை இல்லை. ஆனால் இலங்கை தமிழர்களை துரோகி படடம் கொடுத்து மண்டையில் போடலாம் எண்டு மட்டும் கனவிலும் நினைக்க வேண்டாம். அப்படியான எண்ணங்கள் இருந்தால் அது உங்கள் சுதந்திரம். இலங்கை பக்கம் வர மாடடீர்கள் என்று நினைக்கிறேன். நன்றி.
-
யாழ். மத்திய கல்லூரிக்கு பெண் அதிபர் நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்
அப்படி என்றால் ஆதிக்கம் என்று எழுதி இருக்க மாடடார்.
-
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா
இதே அந்தோனியார்தான் மன்னார் தள்ளாடியிலும் இருக்கிறார் , இன்னும் கொச்சிக்கடையிலும் இருக்கிறார். இங்கெல்லாம்போய் கும்பிடலாம்தானே? அங்குஏதும் விஸேடம் என்றால் அதை செய்யலாம்.
-
குச்சவெளி பிரதேசத்தின் 4 விகாரைகள் இலங்கையின் அதி முக்கியத்துவம் வாய்ந்த பௌத்த இடங்களாக பிரகடனம்
பாவம் மக்கள் போராடி ஓய்ந்து விடடார்கள். இதுதான் இங்குள்ள நிலைமை. தமிழ் தலைமையே அடிபிடி பட்டுக்கொண்டு இருக்கும்போது இனி இதுதான் நிலைமை. இதுதான் சந்தர்ப்பம் என்று அவர்கள் காய்களை நகர்த்துகிறார்கள். தமிழ் தலைமைகள் நீதிமன்ற படி ஏறி திரியவேண்டியதுதான் அவர்கள் தங்கள் காரியத்தை நடத்துகிறார்கள். இனியென்ன கருத்து களத்தில் எழுதி தள்ள வேண்டியதுதான்.
-
முல்லைத்தீவில் 2 ஆவது நாளாகவும் தங்க வேட்டை!
தங்கத்தை வாங்கினவன், எடுத்தவன் எல்லாம் தங்கத்தோடு உலகம் முழுவதும் வசதி வாழ்க்கை வாழ்கிறான். இந்த பயித்தியங்கள் எல்லாம் தங்கம் தங்கம் எண்டு நிலத்தை பிளக்குதுகள். பாவம், எத்தனை நாளைக்குத்தான் இப்படியே நேர காலத்தை, பணத்தை வீணாக்க போகிறார்களோ தெரியவில்லை.
-
இந்திய மீனவர்களின் தொல்லை : இந்தியா தூதரகத்தை முற்றுகையிட முடிவு - யாழ்ப்பாண மீனவ அமைப்புக்கள் தெரிவிப்பு
சுரண்டுவது வேறு , கொள்ளையடிப்பது வேறு. இந்திய மீனவர்கள் இப்போது கடத்தி கொள்ளையர்களாக மாறி விடடார்கள். கொள்ளையடித்தல் மட்டும் பரவாயில்லை அங்குள்ள மீன் உட்பதியாகும் பாறைகளெல்லாவற்றையும் அடியோடு நாசமாகி விட்டு செல்லுகிறார்கள். அவர்களது பகுதியில் மீன்கள் இல்லாமல் போவதட்கு முக்கிய காரணமே இதுதான். இலங்கை கடட்படை இதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இப்படி எழுதினால் துரோகி படடம் கிடைத்தாலும் கிடைக்கும்.
-
இலங்கை அமெரிக்காவின் பிராந்தியமல்ல - அமெரிக்க தூதுவரின் கருத்துக்கு அரசாங்கம் பதில்
அதாவது இந்தியாவுக்கு அடி இருக்குதென்று சொல்ல வருகிறீர்கள். இருந்தாலும் இந்தியாவிடம் இருந்து வாங்கின கடன் அதிகமாக இருப்பதால் இப்போதைக்கு அந்த நிலைமை வராது. இருந்தாலும் அடி இருக்கின்றது.
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
உண்மை எப்போதும் கசக்கத்தான் செய்யும். பச்சைகுத்துக்காக எழுதுபவன் நான் இல்லை. நான் எப்போதும் வெள்ளையும் சொள்ளையுமாகத்தான் இருப்பேன் , அப்பா எதுக்கு வெள்ளை பெயிண்ட் அடிப்பான். 😜
-
இலங்கை இந்திய ஒப்பந்தத்திற்கு அழுத்தம் கொடுக்கும் மோடி அரசு!
அப்பவே ஐயா நல்லா அடி வாங்கி இருக்கிறார் போல. பாவம், ஐயாவுக்கு இப்போது நல்லா வயதாகியும் இருக்கும். சரி சரி நடக்கிறதைப்பார்ப்பம். வடக்கு கிழக்கு மலையக மக்கள் பாலும் தேனும் ஓடும் தேசம் கிடைக்கும் எண்ட ஒரு நப்பாசையில்தான் ஒட்டு போடுகிறார்கள். பாவம், அவர்கள் எண்ணத்தில் ஏன் மண் அள்ளி போடுவான். கட்சிக்குள்ளயேயே பாலும் தேனும் ஓடும்போது மக்களுக்கு கிடைக்காமலா போக போகுது.
-
தேர்தல் பத்திரங்கள் சட்டவிரோதமானவை - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
நான் தமிழ் ஈழத்தில் சீவிக்கிறேன். அதுக்கு ஆங்கிலத்தில் தேட வேண்டும்? நீங்கள் ஆங்கிலேயர் , ஆங்கிலேயர் நாட்டில் வசிக்கிறீர்க்ள் உங்களுக்கு ஆங்கிலம் விளங்கும். எனக்கு தேடவும் பிடிக்காது, ஆங்கிலமும் விளங்காது. நன்றி. பூனை கண்ணை மூடினால் உலகமிருந்து விட்ட்டதென்று நினைக்குமாம். நாங்கள் ஒன்றும் பூனைகள் இல்லை. புலிகள். விளங்கினாள் சரிதான். எனக்கு ஆங்கிலம் புரியாததினால் அதனை மொழி பெயர்த்து அனுப்புங்கள். அப்போதாவது விளங்குதா எண்டு பார்ப்பம்.
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
எந்த அனுபவத்தை சொல்லுகிறீர்கள். மக்கள் பிச்சைகாரகளான அனுபவத்தையா அல்லது பாலும் தேனும் ஓடும் தேசத்தை உருவாக்கி கொடுப்போம் என்று சொன்ன அனுபவத்தையா? இங்க வாங்கையா, இங்க வந்து சொல்லுங்க. அங்கு சொகுசா இருந்து கொண்டு மைக்க பிடிக்காதீங்க.