Everything posted by பசுவூர்க்கோபி
-
கருவில் கலைந்து போன ஒரு காதலின் கதை...! (பகுதி -3)
- அசரீரி..!
அசரீரி..! ******* மனிதா... உலகம் உனக்கென யாரவர் சொன்னார் உயிரினம் யாவையும் உந்தனின் படைப்பா இயற்கையின் அழகை எப்படி அழிப்பாய்-உன் இறப்புக்குள் மட்டுமா உலகத்தை படைத்தான். பிறப்புக்கு முன்னே எத்தனை கோடி-உன் இறப்புக்கு பின்னாலும் எத்தனை கோடி வாழ வருகின்ற உயிரினமுண்டு-உன் வாழ்க்கைக்கு மட்டுமா வையகமுண்டு. உன்னையே நீயே வெறுக்கின்ற காலம் உன்னால் தானே உருவானதிங்கு-நீயோ விண்ணையும், மண்ணையும் விஞ்ஞானமென்று அன்னையின் கண்ணையே அபகரித்தாயே. ஒவ்வொரு உயிரினம் வாழ்வதற்க்கேற்ப ஒவ்வொரு நிலமாக பிரித்துமே தந்தான் ஒவ்வொரு நிலத்தையும் உன் நிலமாக்கி-மற்ற உயிரினம் அனைத்தையும் அழிய நீ வைத்தாய். மனிதனாய் வாழவே உன்னை படைத்தான் மனிதநேயமும் உன்னுக்குள் வைத்தான் பொது நலம் தவிர்த்து நீ சுயநலமானாய்-பூமி பொறுமை இழந்துமே போராளியானாள். அன்புடன் -பசுவூர்க்கோபி- 16,03.2021- 0-02-0a-04e3db356866f85e858989e4ea5581721b8a4ace993f79df8ccb28a0521f22ad_1c6da4e99f53f3.jpg
From the album: பசுவூர்க்கோபி
- சுதந்திரம் எம் சுவாசம்.
சுதந்திரமாய் வாழ நினைத்தோமே சுவாசத்தை அடுத்த தலைமுறைக்கு கடத்திவிட முயன்றோமே யூதாசும்,ப்ரூட்டசும், எட்டப்பனும் காக்கை வன்னியனும், கருணா நிதியும் நிதிக்காகவே அலைவார்களா --- நிகரில்லா சுதந்திரத்தை விற்பார்களா காலங்கள் தோறும் பிறந்து வருவார்களா அருமை யான கவிதை. மண்மீட்ப்புக்காய் சென்று விதையாகிப்போன அத்தனை தியாக தீபங்களையும் வணங்குகின்றேன். பல பிரிவுகளாக இருந்தாலும் நோக்கம் ஒன்றாகத்தான் ஆரம்பிக்கப்பட்டது.பின்பு எனோ இந்தநிலை.- ஊர் வம்பும் கைபேசியும்..!
எனது கவிதையை உள்ளடக்கி சொல்லப்பட்ட வார்தைதைகள் அருமை அக்கா நன்றிகள்- மொழி ஆதிக்கம்..!
இன்று சிங்களத்தின் தேசீய கொடி, நாளை புத்த பிரானின் திருவுருவம் அடுத்தவர்களின் காலில் மிதி படும் போது, பொத்திக் கொண்டு இருக்க வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு உள்ளது! அருமையாக சொன்னீர்கள்.நன்றிகள் உண்மையே.. புரட்சிகர தோழருக்கு நன்றிகள்.- மொழி ஆதிக்கம்..!
உங்கள் கருத்துக்கு நன்றிகள் நன்றிகள்- மொழி ஆதிக்கம்..!
மொழி ஆதிக்கம்..! ************ சிங்கள நகரமெல்லாம் சீன எழுத்துக்கு முதலிடமா.. சிங்களம் ஆங்கிலம் அதற்கு கீழே இருப்பது சிரிப்பைத் தருகிறது. ஊர் பலகையில்-தமிழ் மொழி இல்லையென்று உனக்கு மகிழ்வு இருந்தால் விரைவில்.. உன் மொழியும் அழிந்து உலக மொழியொன்று வியாபிக்கும்.. இது உண்மை. அப்போதும் உணருவாயோ தெரியவில்லை ஏனென்றால் இப்போது தேசத்தின் கீதம் கூட குயிலாக இருந்தாலும் மயிலாக இருந்தாலும் சிங்கம் போலத் தான் கர்ச்சிக்க வேண்டுமாமே. உன்நாட்டில்.. அன்புடன் -பசுவூர்க்கோபி-- 0-02-05-d057c2fea2b195cadc6841bd6f93688ebdf4588fa3458c9f88fa890d7d992bda_1c6da32650370c.jpg
From the album: பசுவூர்க்கோபி
- இனி இளவேனில் காலம் - நிழலி
இளவேனில் காலத்தை இனிமையாக காணப்போகிறோம் என்ற வர்ணனை இனிமையாக இருக்கின்றது. அருமையான வரிகள் பாராட்டுக்கள்- ஊர் வம்பும் கைபேசியும்..!
நன்றிகள்- ஊர் வம்பும் கைபேசியும்..!
உண்மையை அழகாக தந்தீர்கள் நிழலி உளமார்ந்த நன்றிகள்.- வெண்பனித்தூறல்..!
நன்றிகள் கவிதாஜினி அவர்களுக்கு.- ஊர் வம்பும் கைபேசியும்..!
அன்புடன் நன்றிகள் மல்லிகை வாசம்- ஊர் வம்பும் கைபேசியும்..!
நீங்கள் சொல்வது போல் கெட்டதை தவிர்த்து நல்லதை எடுக்க கற்ருக்கொண்டாலே வாழ்வு மேம்படும். உண்ணைமையே அன்பின் உடையாருக்கு நன்றிகள்.- ஊர் வம்பும் கைபேசியும்..!
அன்பு வார்த்தைகள் நிறய எழுத தூண்டுகிறது உளமார்ந்த நன்றிகள்.- ஊர் வம்பும் கைபேசியும்..!
எனது கவிதைக்கேற்ற உங்கள் வார்த்தைகளும் அருமை யாயினி நன்றிகள் உளமார்ந்த நன்றிகள்;- ஊர் வம்பும் கைபேசியும்..!
உங்களுக்கும் உளமார்ந்த நன்றிகள்- ஊர் வம்பும் கைபேசியும்..!
உண்மைதான் ஈழப்பிரியன் அவர்களே நன்றிகள்.- அன்புள்ள அம்மா....
அன்பின் தெய்வம் அம்மாவை நினைக்கவைத்த அருமைக் கடிதம்.- ஊர் வம்பும் கைபேசியும்..!
ஊர் வம்பும், கைபேசியும்..! ********************* அந்தக்காலம்.. நல்லதண்ணிக் கிணத்தில நாலுபேர் கூடுமிடத்தில பக்கத்து வீட்டு பழசுகள்-2 பவ்வியமாய் வந்தாலே குலநடுங்கி போகுமாம் குடும்பங்கள் எல்லாம். மூல வீட்டுப் பெட்ட முளங்காலுக்கு மேல போடுது சட்ட ஓல வீட்டுப் பொடியன் ஒருத்தியோட ஓடிட்டான். வேலைக்கு அவன் போக-வீட்ட வேறொருவன் நிக்கிறான் காலக் கொடுமையென கதிராச்சி முடிக்க முன்ன.. குப்பத்தொட்டியில ஒரு குழந்த கிடந்தது-அது பக்கத்து வீட்டு பணக்காரச் சமாச்சாரம். எண்டு தொடங்கி எல்லா வரலாறும் சொண்ட நெளிச்சு சொல்லி முடிக்குமாம் மற்றது.. கடுகளவு உண்மையை மடுவளவு பெரிதாக்கி வதந்திய பரப்பிவிட்டு வாயமூடு நமக்கேன்-ஊர் வம்பு என்று சொல்ல.. வந்த சனமெல்லாம் வாயும் காதும் வைத்து சொந்தங்களுக்குள்ளே சொறிநாயாய் கடிபட்டு வெட்டுக்குத்தில போய்-ஊரே வெடிச்சு பிளந்து உண்மை பொய் தெரியாமல் ஓராயிரம் பிரச்சனைகள். கலியாணக்குளப்பமும் கருமாரியும்-வதந்தி கதை பேச்சால் நடந்த அந்தகாலம். இன்றும் வேறு வடிவில வீட்டுக்குள்ள திரியுதாம் எச்சரிக்கை.. கையில இருக்கிற கை பேசியை நம்பிறதால் பொய் வதந்தியெல்லாம் பொட்டளமாய் கொட்டி குடுப்பத்தை குலைத்து கொடுமை நடக்கிறது. கணவனுக்கு போண் வந்தால் மனைவிக்கு தூக்கமில்லை மனைவிக்கு மெசேச் வந்தால் கணவனுக்கு வாழ்க்கையில்லை. உள்ளத்து தூய்மையில்லா உணர்வு எமக்கிருந்தால் கள்ளப் போண் வருகுதென்று கணவன் மனைவிக்கே கை பேசி மூட்டி விட்டு-பல கலவரங்கள் அது பார்க்கும். பிள்ளைகளை வழி நடத்த முதலில்.. பெற்ரோரே முடிவெடுங்கள் இல்லையேல் ஒவ்வொரு மூலையாய் உங்களைப் போல் பிள்ளைகளும். குரோதம் தவிர்த்து குடும்பத்துக்குள்ளே திறந்த மனதுடன் திறப்பின்றிப் “போணை” அனைவரும் பார்க்க அனுமதித்தாலே வதந்திகள் பயப்படும் வாழ்வே ஒளி பெறும். அன்புடன் -பசுவூர்க்கோபி- 07.03.2021- 0-02-05-cbd1d9980061c8cb1a79630838aac7a848eadade3004c700e4a767e5f48bc4ad_1c6da161f29868.jpg
From the album: பசுவூர்க்கோபி
- கருவில் கலைந்து போன ஒரு காதலின் கதை...! (பகுதி -2)
உங்களின் கதையில் எனது ஊர் வாசனை அடிப்பதோடு பால்சுறாவும் குழல் புட்டும் வந்து இனிக்கிரது. தொடருங்கள் அருமை இனிமை.- வெண்பனித்தூறல்..!
நன்றிகள்- கருவில் கலைந்து போன ஒரு காதலின் கதை...! (பகுதி -1)
புங்குடு தீவுக்குள் தொடங்கி நயினாதீவைத் தொட்டு நெடுந்தீவுக்குள் இறங்கி விட்டீர்கள். அந்த சந்திரன் அண்னாவையும் எனக்கு தெரியும் போலக்கிடக்கு அருமையாக இருக்கிறது கதை..எனக்கும் ஊரின் நினைவுகள் உள்ளுக்குள் வந்து உசுப்புகிறது.அன்பின் புங்கையூரான் அவர்களே. தொடருங்கள் - அசரீரி..!
Important Information
By using this site, you agree to our Terms of Use.