Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நன்னிச் சோழன்

கருத்துக்கள உறவுகள்+

Everything posted by நன்னிச் சோழன்

  1. செய்திகள் வலைத்தளம்: தமிழ்நெற் திகதி: 05/09/1998 கொழுவி: https://www.tamilnet.com/art.html?catid=13&artid=1979 தமிழாக்கம்: நன்னிச் சோழன் ஆயுததாரி இஸ்லாமியக் குழு வெளிப்பட்டது அம்பாறை மாவட்டத்தின் தென்கிழக்கு கரையோரத்தில் உள்ள அக்கரைப்பற்றில் தமிழர்களுக்கு எதிராக வன்முறையை தூண்டுவதற்கு பி.எல்.ஓ என அழைக்கப்படும் ஒரு முஸ்லிம் ஆயுததாரி அமைப்பு முயற்சித்து வருவதாக அங்கிருக்கும் வட்டாரங்கள் தெரிவித்தன. பி.எல்.ஓ தமிழர்களை அச்சுறுத்தும் துண்டுக் காகிதங்களை வெளியிட்டதோடு தமிழர்களை முஸ்லிம்கள் ஆதிக்கம் செலுத்தும் நகரத்தின் பகுதிக்குள் நுழைவதைத் தடையும் செய்தது. அக்கரைப்பற்று நகரின் தமிழ் பகுதியிலுள்ள நான்காயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இஸ்லாமிய ஆயுததாரிகளின் அச்சுறுத்தல்களினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தென்கிழக்கு நகரவாசிகள் இன்று மாலை தெரிவித்தனர். 1985 மற்றும் 1990 ஆம் ஆண்டுகளில் அக்கரைப்பற்றில் தமிழர்களுக்கு எதிரான படுகொலைகளுக்கு, இதில் பத்திரகாளியம்மன் கோவில் உட்பட, நகரின் தமிழ் பகுதியின் பெரும் பகுதி எரிந்து நாசமானது, பின்னால் இருந்த ஆயுதமேந்திய இஸ்லாமிய ஜிஹாத்தின் (புனிதப் போர்) கூறுகளால் உருவாக்கப்பட்ட ஒரு குழுதான் பி.எல்.ஓ. என்று அக்கரைப்பற்றில் உள்ள தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. விடுதலைப் புலிகள் அப்பரப்பில் தங்களது அனைத்து நடவடிக்கைகளையும், குறிப்பாக ஊருக்கு தெற்கே உள்ள நெல் வயல்களில் இருந்து நெல்லை சேகரிப்பதை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று பி.எல்.ஓ. (சுருக்கம் எதைக் குறிக்கிறது என்பது குறித்து யாருக்கும் உறுதியாகத் தெரியவில்லை) ஒரு துண்டுக் காகிதத்தில் கோரியுள்ளது. இன்று பிற்பகலில் இங்கு வசிக்கும் தமிழர்கள், பி.எல்.ஓ.க்கு உள்ளூர் சிறிலங்கா காவல்துறை மற்றும் சிறப்பு அதிரடிப்படைப் பிரிவுகளின் மறைமுக ஆதரவு இருப்பதாகத் தோன்றுகிறது என்று கூறினர். விடுதலைப் புலிகள் இயக்கம் அண்மையில் அப்பரப்பில் தங்கள் செயற்பாடுகளை நிறுத்தியதைத் தொடர்ந்து பி.எல்.ஓ. வளர்ந்ததாக அவர்கள் தெரிவித்தனர். அக்கரைப்பற்று நகருக்கு தென்மேற்கே 15 கிலோமீற்றர் தொலைவில் தொடங்கும் கஞ்சிக்குடிச்சாறு காடுகளில் புரட்சியாளர்கள் தங்கள் தளத்தை அடைய பயன்படுத்திய கேந்திர போக்குவரத்துப் புள்ளியை அறிந்த புலிகளின் ஆதரவாளர் ஒருவரை சில கிழமைகளுக்கு முன்பு சிறப்பு அதிரடிப்படையினர் கைது செய்தது. இந்த முன்னேற்றத்தின் வலுவால், சிறப்பு அதிரடிப்படையினர், தகவலறிந்த ஆதாரங்களின்படி, ஒரே கிழமையில் இந்த வழித்தடத்தில் புலிகளின் உறுப்பினர்கள் இருபது பேரை பதுங்கியிருந்து கொன்று சில ஏந்தனங்களை மீட்டனர். இந்த முன்னேற்றத்தையடுத்து அக்கரைப்பற்றில் புலிகள் தமது செயற்பாடுகளை தற்காலிகமாக நிறுத்தியிருந்தனர். இதுவே இதுவரை செயலற்ற நிலையில் இருந்த இஸ்லாமிய ஆயுததாரிகளை மீண்டும் அக்கரைப்பற்றில் குரல் எழுப்புவதற்கு ஊக்கமளித்ததாக இந்த கிழக்கு நகர தமிழர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இருப்பினும், பி.எல்.ஓ. உடன் நன்கு அறிமுகமான உள்ளூர் முஸ்லீம் வட்டாரம் இன்று இந்தக் குற்றச்சாட்டுகளை தற்செயலாக நிராகரித்துள்ளார். பி.எல்.ஓ. க்கு சிறப்பு அதிரடிப்படை மற்றும் சிறிலங்கா காவல்துறையினர் ஆதரவு அளித்தனர் என்று கூறப்படுவதில் உண்மை இல்லை என்று அவர் கூறினார். "பி.எல்.ஓ. என்பது ஒரு தன்னிச்சையான அமைப்பாகும், இது இங்கு இஸ்லாத்தின் நோக்கத்தில் மட்டுமே ஆர்வமாக உள்ளதோடு ஒசாமா பின்லேடனின் வீரச் செயல்களால் தங்கள் புனித பணியில் மீண்டும் ஈர்க்கப்பட்ட உறுதியான இளைஞர்களை உள்ளடக்கியது." என்று அவர் கூறினார், அக்கரைப்பற்று பி.எல்.ஓ. இன் அழைப்பாளரின் அடையாளத்தை அவர் வெளிப்படுத்த மறுத்துவிட்டார், ஆனால் விடுதலைப் புலிகள் சி.ஐ.ஏ. ஆதரவு பயங்கரவாதக் குழு என்று குற்றம் சாட்டினார். இதேவேளை, அக்கரைப்பற்றில் பி.எல்.ஓ.வினால் ஏற்பட்டுள்ள பதற்றத்தை கலைப்பதற்கான வழிமுறைகளை கிழக்கு நகர முஸ்லிம் மற்றும் தமிழ் சமூகத் தலைவர்கள் ஆராய்ந்து வருவதாக கொழும்பைத் தளமாகக் கொண்ட தமிழ் FM வானொலி நிலையமான 'சூரியன்' தனது மாலைச் செய்தியில் இன்று தெரிவித்துள்ளது. நாளேடு: உதயன் திகதி: 05/9/1998 பக்கம்: 1 சுவரொட்டிகளால் அம்பாறையில் பதற்றம் அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்றுப் பிரதேசத்தில் ஒட்டப்பட்டுவரும் அநாமேதய சுவரொட்டிகளினால் தமிழ்-முஸ்லிம் சமூகங்களிடையே பதற்றம் ஏற்பட்டிருக்கின்றது. "தமிழ்த்தொழிலாளர்கள் முஸ்லிம் பிரதேசத்துக்குள் வரக்கூடாது" என்று பி. எல். ஒ- சிறிலங்கா' என்ற அமைப்பாலும்- தமிழ்த் தொழிலாளர்கள் மறு அறிவித்தல் வரை முஸ்லிம் பிரதேசங்களுக்குள் செல்லக் கூடாது. முஸ்லிம்களுக்கு சலவை, சவரத்தொழில்கள் செய்யக்கூடாது. முஸ்லிம் வர்த்தகர்களிடம் பொருள்கள் வாங்கக் கூடாது." - என்று ஏ.டி. ரி எஸ். என்ற அமைப்பின் பெயராலும் - சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இந்தச் சுவரொட்டிகளால் இரு சமூகங்களையும் சேர்ந்த அன்றாட உழைப்பாளிகள் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகின்றது. (உ- 21) *****
  2. செய்திகள் வலைத்தளம்: தமிழ்நெற் திகதி: 04/02/1998 கொழுவி: https://www.tamilnet.com/art.html?catid=79&artid=7392 தமிழாக்கம்: நன்னிச் சோழன் வீரமுனையின் முடிவில்லாத அச்சம் ஜனவரி 3 ஆம் திகதி இரவு, முஸ்லிம் ஊர்காவல் படையினரின் தொடர்ச்சியான சுடுகல வேட்டொலி அம்பாறை மாவட்டத்தின் வீரமுனை ஊர்வாசிகளால் செவிமடுக்கப்பட்டது. இது சுமார் மாலை 9:15 மணியளவில் தொடங்கி மறுநாள் வைகறை 3:00 மணி வரை நீடித்தது. "நவநாதன், நித்தியானந்தன் இருவரும் எங்களுடன் வசித்து வந்தனர். நாங்கள் வெருண்டு வீட்டுக்குள்ளேயே இருந்தோம். அதிகாலை 4 மணியளவில் முன்பக்கக் கதவு தட்டப்படும் ஓசை கேட்டது. நான் அதைத் திறந்தபோது ஆயுதம் ஏந்திய இரு ஊர்காவலர்கள் வெளியே நின்று கொண்டிருந்தனர். அவர்கள் வீட்டினுள்ளே நுழைந்து சிறுவர்களை உலுக்கி எழுப்பி வெளியே கொணர்ந்தனர். பின்னர், சிறுவர்கள் எங்கள் கண் முன்னே சுட்டுக் கொல்லப்பட்டனர்.” என்று விடுதலைப் புலிகளின் தாக்குதலில் தமது தோழர்களில் ஒருவரின் சாவிற்குப் பகரடியாக முஸ்லிம் ஊர்காவல் படையினரால் இந்த மாத தொடக்கத்தில் கொல்லப்பட்ட தமிழ் இளைஞர்களில் ஒருவரான நவநாதனின் தந்தை திரு. இராசையா தெரிவித்தார். தமிழ்நெட் ஊடகவியலாளர் இந்த கிழமை அப்பரப்பிற்குச் சென்று பல குடியிருப்பாளர்களிடம் பேசினார். நிகழ்வின் பின்னர் சம்மாந்துறை காவல்துறையினர் இரு சிறுவர்களின் கொலையுடன் தொடர்புடையவர்கள் என ஐயப்படும் ஏழு ஊர்க்காவல் படையினரை கைது செய்தனர். அடையாள அணிவகுப்பு நடந்தது. கொலையாளிகளை அடையாளம் காணுமாறு நித்தியாந்தனின் தந்தை கே.மூத்தம்பியிடம் கோரப்பட்டது. "எங்கள் குழந்தைகளை சுட்டுக் கொன்றவர்கள் இந்த ஏழு பேரில் இல்லை என்றால், நாங்கள் என்ன செய்வது?" என்று திரு மூத்தம்பி கேட்டார். மூன்று நாட்களுக்குப் பிறகு ஒரு குழுவினர் வீட்டிற்கு வந்து திரு.மூத்தத்தம்பியிடம், கைது செய்யப்பட்ட ஊர்க்காவல் படையினருக்கு ஏதாவது நேர்ந்தால், அதற்கு அவர் மிகவும் வருந்த வேண்டியதாக இருக்குமென்று கூறினார்கள். ஆனால், ஜன.3ம் தேதி இரவு நவநாதன் மற்றும் அவரது முதல் மச்சான் நித்தியானந்தன் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வு அந்த ஊரில் வசிப்பவர்களுக்கு புதிதல்ல. கடந்த 15 ஆண்டுகளில், முஸ்லிம் ஊர்காவல் படையினரும் தரைப்படையினரும் வீரமுனை மற்றும் அதனைச் சூழவுள்ள தமிழ் ஊர்களைச் சேர்ந்த போகூழான அப்பாவி மக்களைக் கொன்று கடத்துவதற்கு பேர்போனவர்களாவர். இருப்பினும் 1990ல் இந்த துன்புறுத்தல் தீவிரமடையத் தொடங்கியது. உள்ளூர் பாடசாலை ஆசிரியரான டி. சபாநாயகம் 1990ல் நடந்த நிகழ்வுகளை நன்றாக நினைவில் வைத்திருக்கிறார். 1990 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இரண்டாம் ஈழப்போர் வெடித்தவுடன் கிழக்கிற்குச் சென்ற சிறிலங்கா தரைப்படையினர் அம்பாறை மாவட்டத்தில் சிங்கள எல்லைக்கு அருகாமையில் உள்ள தமிழர் பரப்புகளில் வெறியாட்டத்தில் ஈடுபட்டபோது, முதலில் துயருற்றவர்கள் அண்டை ஊர்களிலிருந்து இடம்பெயர்ந்து வீரமுனைக்கு வந்த தமிழர்களேயாவர். "வளத்தாப்பிட்டி, மல்வத்தை, வீரச்சோலை, மல்லிகைத்தீவு, புதுநகரம், கந்தபுரம் ஆகிய பரப்புகளைச் சேர்ந்த 17,500 அகதிகள் வீரமுனையில் உள்ள சிந்தயாத்திரைப் பிள்ளையார் கோவிலுக்குத் தப்பிச் சென்றுள்ளனர். இடப்பற்றாக்குறை காரணமாக அருகில் உள்ள ராமகிருஷ்ணா வித்தியாலயத்தையும் எடுத்துக்கொள்ள வேண்டியதாயிற்று. " ஜூலை 12, 1990க்குப் பிறகு ஒரு மாதத்திற்கு, தரைப்படையைச் சேர்ந்த "கிளியரிங்க் பாட்டி" ஐந்து முறை முகாமைச் சுற்றி வளைத்து, 280 இளைஞர்களைக் கைது செய்தது. "இந்த சிறுவர் சிறுமிகள் உயிருடன் இருக்கிறார்களா அல்லது இறந்துவிட்டார்களா என்பது இன்னும் யாருக்கும் தெரியாது. அவர்களுக்கு என்ன நடந்தது என்பது கூட யாருக்கும் தெரியாது" என்றார் திரு.சபாநாயகம். இந்த அச்சுறுத்துகிற நிகழ்வுகளின் தொடர்ச்சி 1990 ஆகஸ்ட் 12 அன்று உச்சக்கட்டத்தை எட்டியது. அன்று காலை 9.15 மணியளவில் சம்மாந்துறை ஊர்காவல்படையின் பிரிவொன்றின் ஐந்து ஆயுததாரிகள் முகாமுக்குள் நுழைந்து கண்மூடித்தனமாக சுடத் தொடங்கினர். "சுமார் 40 நிமிடங்களுக்கு அவர்கள் தொடர்ந்து சுட்டுத் தள்ளினர். வேட்டு நிறுத்தப்பட்டதும், 21 ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் இறந்து கிடந்ததோடு 140 பேர் காயமடைந்தனர்." என்று திரு. சபாநாயகம் கூறினார். காயமடைந்தவர்களில் வீரமுனை ஊரின் குமுகாயத் தலைவராக இருந்த ஊரின் பிள்ளையார் கோவில் முகாமையாளர் (வண்ணாக்கர்) சிந்தாத்துரையும் அடங்குவார். அவர்கள் அனைவரும் பண்டுவத்திற்காக அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் காயத்திற்கு இழிவுபண்ணுவது போல், திரு.சிந்தத்துரை உட்பட மேலும் பத்து பேர் மறுநாள் மருத்துவமனையில் இருந்து கடத்தப்பட்டனர். ஆலய முகாமையாளர் திரு.சிந்தத்துரை வீரமுனையில் தமிழர்களுக்கு சிக்கல்களை ஏற்படுத்திய முஸ்லிம் ஊர்க்காவல் படையினருக்கு கீழ்ப்படியாத அஞ்சாதவராவார். அவர் ஊர்க்காவல் படையினரால் தான் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதாக திரு. சபாரத்தினம் நம்புகிறார். இந்த மாதிரியான நிலைமையால் வீரமுனையில் வாழ முடியாத நிலை ஏற்பட்டது. அகதிகளை உடமைகளை பொதி செய்யுமாறு உள்ளுராட்சி அலுவலர்களால் உத்தரவிடப்பட்டு, அம்பாறை மாவட்டத்தின் தென்கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள பெரிய தமிழ் ஊரான தம்பிலுவிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். 1992 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதி, அகதி முகாம்களில் இரண்டு ஆண்டுகள் வசித்த பின்னர், ஊர் மக்கள் வீரமுனையில் மீள்குடியேற்றப்பட்டனர். ஆனால் ஓராண்டு கூட ஆகாத நிலையில், மேகநாதன் என்ற இளைஞன் அருகில் உள்ள கடையில் சாமான்களை வாங்கச் சென்றபோது காணாமல் போனான். "அடுத்த கிழமையில் மேகநாதனின் சட்டையும் சரமும் ஊரின் முஸ்லீம் குடியிருப்பில் உள்ள அலவாக்கரையில் உள்ள வாழைத்தோட்டத்தில் ஒரு குழியினுள் காணப்பட்டன. அவருக்கு என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியாது. அவர் கொலை செய்யப்பட்டார் என்று நாங்கள் கருதுகிறோம்" என்று திரு. சபாரத்தினம் கூறினார். இந்த நிகழ்வுகள் குறித்து செல்வாக்கு மிக்க ஆட்களுக்கு தகவல் தெரிவித்தும் ஊர் மக்களுக்கு எந்த இடர்தணிப்பும் கிடைக்கவில்லை. அவர்களை புத்திசாலிகளாக மாற்றிய மோசமான பட்டறிவுகளால் இன்று வீரமுனை மக்கள் முன்பு போல வடுப்படத்தக்கவர்களாகவே உள்ளனர். "நாங்கள் நிம்மதியாக வாழ வேண்டுமாயின் வீரமுனை - சம்மாந்துறை எல்லையில் அமைந்துள்ள ஊர்காவல் படையினர் முகாம் அகற்றப்பட வேண்டும்" என மூத்தம்பி தெரிவித்தார். *****
  3. இறுவட்டு அட்டைகள் கடலிலே காவியம் படைப்போம் இந்த இறுவட்டுத் தயாரிப்பில் தான் தமிழீழத்தில் முதன்முறையாக தொழில்நுட்பம்/கணினிகள் பாவிக்கப்பட்டன. கடலிலே காவியம் படைப்போம்" - மதிப்பீட்டுரை திறனாய்வு: பேராசிரியர் அ. சண்முகதாஸ் மூலம்: வெளிச்சம் (புரட்டாதி 1994) பக்கம்: 44-43 நெய்தல் நில மக்களின் நெஞ்சத்து உணர்வுகளுக்கு மெட்டுக்கட்டி கடற்புலிகளின் வீரத்துக்குப் பாட்டுக்கட்டி, "கடலிலே காவியம் படைப்போம்" என்னும் பாடல் ஒலிப்பதிவு நாடா வெளிவருகின்றது. நெய்தல் நில மக்களுடைய சோகத்தை ஏற்கெனவே தமிழீழ விடுதலைப் புலிகள் கலை பண்பாட்டுக் கழகத்தின் வெளியீடாகிய "நெய்தல்" என்னும் பாடல் ஒலிப்பதிவு நாடா மூலம் நன்கு உணர்ந்தோம். கடற்புலிகளின் வீரமும், அவ்வீரம் தீர்த்துவைத்த சோகமும் பற்றிக் கலை, பண்பாட்டுக் கழகத்தின் இந்த வெளியீடாகிய "கடலிலே காவியம் படைப்போம்" ஒலிப்பதிவு நாடாப் பாடல்கள் விரித்துக் கூறுகின்றன. இந்த ஒலிப்பதிவு நாடாவுக்கு ஒரு சிறப்புண்டு. அது என்னவெனில், இந்த மண்ணிலே முதன்முதலாகக் கணனியைப் பயன்படுத்தி இப்பாடல் ஒலிப்பதிவு நாடா தயாரிக்கப்பட்டமையேயாகும். கவிஞர் புதுவை இரத்தினதுரை, கவிஞர் வாஞ்சிநாதன், பண்டிதர் பரந்தாமன் ஆகியோர் பாடல்களை இயற்றியுள்ளனர். பெரும்பாலும் நல்ல கவிதைகள் நல்ல இசைப்பாடல்களாகி விடுகின்றன. நல்ல கவிதையாக அமையாவிட்டால், அது நல்ல பாட்டாகவும் ஆகிவிடமுடியாது. இந்த ஒலிப்பதிவு நாடாவிலே எல்லாப் பாடல்களுமே நன்றாக அமைந்துவிடுகின்றன. "இந்தக் கடல் ஈழத்தமிழரின் சொந்தக் கடல் இங்கு ரத்தம் சிந்திச் சிவந்திடும் தந்தைக் கடல் பொங்கிப் பகை வெல்லக்கடற்புலி போகுங்கடல் பிரபாகரன் தோன்றிய ஊரைத் தழுவிடும் வீரக்கடல்" என்று புதுவை இரத்தினதுரை எழுதிய பாடலிலே "பிரபாகரன் தோன்றிய ஊரைத் தழுவிடும் வீரக்கடல்" என்ற அடியும், "நிலவற்ற வானத்தில் வெள்ளி சிரிக்கும் - அந்த நீலக்கடல் இருளினிலே பொங்கிக் கொதிக்கும் அலை மேலே எங்களின் பயணம் நடக்கும் - வள்ளம் அக்கரையில் சேருமட்டும் ஆவிதுடிக்கும்" என்று பண்டிதர் பரந்தாமன் எழுதிய பாடலிலே "வள்ளம் அக்கரையில் சேருமட்டும் ஆவிதுடிக்கும்" என்ற அடியும், "சத்தமிட்டு முத்தமிடும் வாடைக்காற்று - வந்து சுத்திச் சுத்திக் கடல்மீது கோலம்போடும் தத்தித் தத்திப் படகொன்று பயணம் போகும் - இருள் நித்தம் நித்தம் விழியோடு கதைகள் பேசும்" என்று வாஞ்சிநாதன் எழுதிய பாடலிலே "தத்தித் தத்திப் படகொன்று பயணம் போகும்" என்ற அடியும் கவிதை ஓவியங்களாக அமைந்துவிடுகின்றன. இப்படியான பல கவிதை ஓவியங்களைக் கொண்ட பாடல்களுக்குத்தான் இந்த மண்ணிலே மிகச் சிறந்த இசையமைப்பாளராகிய கண்ணன் இசைவழங்கியுள்ளார். பாடல்களின் பொருளுக்கேற்றபடி இசை வழங்கப்பட்டுள்ளது. இந்த நாடாவின் இரண்டாம் பகுதியிலுள்ள மூன்றாம் பாடல் முதலிற் சோகத்தையும் பின்னர் வீரத்தையும் புலப்படுத்துகின்றது. அதற்கேற்றபடி இசையமைக்கப்பட்டுள்ளது. முதலிலே, கிளாலிக் கடலிலே கடற்படையினரால் மக்கள் பட்ட இன்னல்கள் கூறப்படுகின்றன. மூன்று பாட்டுருக்கள் இவ்வின்னல்களைக் கூறுகின்றன. வாத்தியக் கருவிகளெல்லாம் கசிந்து அழுகின்றன. இச் சோகப் போக்கினை இடைநிறுத்தி வீரமும் பரபரப்புமுள்ள இசை வழங்கப்படுகின்றது. பல படகுகள் வேகமாக வருகின்றன என்ற உணர்வை இசை தோற்றுவிக்கின்றது. மக்களுக்குத் துன்பஞ் செய்தவர்களை விரட்டியடிக்கக் கடற்புலி வருகின்றது. "ஏலேலோ ஏலேலோ" என்ற தருவுடன் "நாகதேவன்துறை நீங்கள் வந்து ஆளவோ - நாங்கள் நடுக்கடலில் துடிதுடித்து வெந்துமாளவோ வேக ஓடம் உங்கள் கையில் இனியும் ஆகுமோ - கடல் வேங்கைவர எங்கே போனவோ" என்ற பாடல் ஒலிக்கின்றது. கேட்பவர்கள் உண்மையிலே பரவசம் அடைவார்கள். வீர உணர்வு பொங்க நிமிர்ந்து நிற்பார்கள். இந்த ஒலிப்பதிவு நாடாவுக்கு இன்னொரு உயர்பண்பும் உண்டு. அதாவது விடுதலைப் புலிகள் கடலிலே சாதனைகள் செய்ய மழையென்றும் காற்றென்றும் பாராமல், தாய் பிள்ளை தாரமென்று பாராமல் கடலிலே படகுகளை ஓட்டிய ஓட்டிகளுக்கு நன்றி கூறுவதாகப் புதுவை இரத்தினதுரை இயற்றிய பாடல் இதில் சேர்க்கப்பட்டுள்ளமையேயாகும். "ஓட்டிகளே படகோட்டிகளே - எங்கள் உணர்வினிற்கே வழிகாட்டிகளே" என்று தொடங்கும் பாடல் மனதை உருக்குவதாக அமைகின்றது. தொழில் செய்பவன், தன் தொழிலுக்குரிய கருவிகளுக்கு நன்றிகூறுவதாகப் பல நாட்டார் பாடல்களுண்டு. இந்தப் பாடலும் அந்த வகையைச் சார்ந்ததே. கண்ணனுடைய இசையமைப்புக் கடற்புலிகளின் வீரத்தையும் நெய்தல் நிலத்தின் சோகத்தினையும், வெற்றியினால் ஏற்படும் களிப்பினையும் புலப்படுத்தும் வகையிலே அமைந்துள்ளது. சிட்டு, சாந்தன், சுகுமார், விஜயலட்சுமி, நிரோஜன், விஜயகுமார், ஸ்ரனி சிவானந்தன் ஆகியோர்களுடைய குரல்கள் ஏற்ற வகையிலே இசையுடன் இசைவுறுகின்றன. விஜயலட்சுமி "வெள்ளலையே நில்லலையே வேதனையைக் கேளலையே" என்ற பாடலைப்பாடும் போது அவருடைய குரல் சோகத்துடன் இழைகின்றது. பக்கவாத்தியக் கலைஞர்களெல்லாம் தக்கமுறையிலே இசைக்கு அணிசெய்துள்ளனர். இசையும் கவிதையும் இணைகின்ற போது ஏற்படும் கவிக்கோலங்களை இந்த ஒலிப்பதிவு நாடாவிலே தரிசிக்கலாம் நெய்தலின் சோகத்தினை, "காலை விடிகின்ற வரையும் நீரில் மிதக்கின்றோம் காற்றுடனே போர்தொடுத்து ஊர் திரும்புகின்றோம்" "பாய்விரித்து ஓர் இரவு மீன்பிடித்தான் பிள்ளை! பத்துமாதம் போனதையா! ஏன் திரும்பவில்லை?" என்னும் அடிகள் உணர்த்த, நெய்தலின் அழகினை "நிலவற்ற வானத்தில் வெள்ளி சிரிக்கும்" என்னும் அடி உணர்த்துகின்றது. நெய்தலின் உழைப்பும் மனநிறைவும் "சின்னவலை போட்டுக் கைகள் சிவந்து போகும் - கருங் கண்ணி படக் கவலையெல்லாம் மறைந்துபோகும்." *****
  4. இறுவட்டு அட்டைகள் எல்லாளன் பெயர் சொல்லி இவ்வெறுவெட்டினுள் "எல்லாளன்" திரைப்படத்தில் வெளியான "தாயக மண்ணே" என்ற பாடலும் இணைக்கப்பட்டுள்ளது.
  5. இறுவட்டு அட்டைகள் எம் வானம் விடியும் இந்த இறுவட்டில் உள்ள பாடல்களை சேகரித்து வைக்கவும். அரிதான ஒன்று. இவ்விறுவட்டின் மூல அட்டை கிடைக்கப்பெறவில்லை. வணிக நோக்கில் வெளியிடப்பட்ட அட்டைகள் மட்டுமே காணக்கிடைக்கின்றன. இதற்குள் : 01 அறிமுகம் 1:13 02 படைவருது படைவருது பகையழித்து 6:13 03 தங்கமே ஆடிவரும் தங்கரதம் நானே 5:25 04 ஒரு நாளும் மறவேன் என் தமிழீழ 4:25 05 கண் கண்ட எங்கள் தெய்வங்களே, நீர் வாழும் திசை நோக்கி கரம் கூப்பினோம் 4:42 06 ஊசி பாசி விற்கும் நாங்கள் 6:18 07 புலம்பெயர் இளையவர்கள் நாங்கள் 4:10 08 கனவுகளில் வாழும் தமிழீழம் என்ற 3:15 09 படைவருது படைவருது (தனி இசை) 6:14 ஆகிய பாடல்கள் இருந்தன.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.