Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நன்னிச் சோழன்

கருத்துக்கள உறவுகள்+
  • Joined

  • Last visited

Everything posted by நன்னிச் சோழன்

  1. செய்திகள் நாளேடு: உதயன் திகதி: 20/4/1994 பக்கம்: 1 ஏறாவூரில் இரு முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் கைது கொழும்பு.ஏப்.20 ஏறாவூர்ப் பிரதேச சபையில் தலைவரைச் சுட்டுக் கொலை செய்வதற்கு முயற்சித்தவர்கள் என்று சந்தேகிக்கப்படும் இரு நபர்களை ஆயுதங்களுடன் ஏறாவூர்ப் பொலீஸார் கைது செய்தனர் என்று அறிவிக்கப்படுகிறது. அந்த இரு நபர்களும் முஸ்லிம் அமைப்பு ஒன்றைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. [ஒ-எ- 6] *****
  2. செய்திகள் நாளேடு: உதயன் திகதி: 21/1/1994 பக்கம்: 1 முஸ்லிம் ஒருவரின் வீட்டிலிருந்து வாழைச்சேனையில் ஆயுதங்கள் மீட்பு வாழைச்சேனை பகுதியில் முஸ்லிம் ஒருவரின் வீட்டிலிருந்து ஏராளமான ஆயுதங்களை பொலீஸார் கைப்பற்றினர். துப்பாக்கி றவைகள், குண்டுகள், வோக்கிடோக்கிகள், பராகுண்டுகள் என்பனவற்றுடன், பொலீஸாரின் சின்னங்களும் கைப்பற்றப்பட்டன என்றும்- வீட்டைச்சுற்றி இவை புதைத்து வைக்கப்பட்டிருந்தன என்றும் தெரிவிக்கப்படுகிறது. (இ- 9) *****
  3. செய்திகள் நாளேடு: உதயன் திகதி: 17/12/1993 பக்கம்: 1 முஸ்லிம் ஊர்காவலர் தமிழர் மீது கெடுபிடி யாழ்ப்பாணம், டிச. 17 மூதூர் பகுதியில் தமிழ் மக்கள் மீது முஸ்லிம் ஊர்காவல் படையினர் கெடுபிடிகளை பிரயோகித்து வருகின்றனர். அப்பகுதியில் உள்ள தமிழ் மக்கள் ஊர்காவல் படையினரால் தாக்கப்படுவதுடன், அவர்கள் உடைமைகளும் பறிக்கப்படுகின்றன. (இ- 3) *****
  4. செய்திகள் நாளேடு: உதயன் திகதி: 16/06/1993 பக்கம்: 1 அம்பாறையில் 2 தமிழர் கொலை யாழ்ப்பாணம், ஜூன் 16 அம்பாறை மாவட்டம் தாண்டியடிப் பகுதியில் இரு தமிழர்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. சடலங்கள் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டன. உமிரி என்ற கிராமத்தைச் சேர்ந்த இவர்களை முஸ்லிம்களே கொலை செய்தனர் என அங்குள்ள மக்கள் சந்தேகம் தெரிவித்ததாக அறிவிக்கப்பட்டது. (த) *****
  5. செய்திகள் நாளேடு: உதயன் திகதி: 21/02/1993 பக்கம்: 1 தமிழர் விரட்டியடிப்பு: மட்டு. பொறுப்பாளர் தகவல் அம்பாறை மாவட்டத்தில் இராணுவ நடவடிக்கைகளின் போது தமிழ்க் கிராமங்களில் இருந்து சுமார் 14 ஆயிரம் தமிழ் மக்கள் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். ஸ்ரீலங்கா படையினரின் ஒத்துழைப்போடு சிங்களவரும் முஸ்லிம்களுமே தமிழ் மக்களை விரட்டியடித்துள்ளனர். மட்டு. - அம்பாறை மாவட்ட அரசியல் நிர்வாகப் பொறுப்பாளர் திரு கரிகாலன் புலிகளின்குரலுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு தெரிவித்துள்ளளார். அம்பாறை மாவட்டத்தில் தற்பொழுது திருக்கோவில், தம்பிலுவில் ஆகிய இரு கிராமங்களில் மட்டுமே தமிழர்கள் வசித்து வருகின்றனர். ஏனைய கிராமங்களைச் சேர்ந்தவர்கள் தமது உடைமைகளை இழந்து வேறு இடங்களுக்குச் சென்று அகதிகளாக தங்கியுள்ளனர். மட்டக்களப்பிலும் எல்லைக் கிராமங்கள் பல சிறிலங்காப் படையினரால் அழிக்கப்பட்டுவிட்டன. அங்குள்ள மக்களும் உடைமைகளை இழந்து பரிதவிக்கின்றனர் - என்றும் திரு கரிகாலன் தமது பேட்டியில் தெரிவித்துள்ளார். (ஓ) *****
  6. செய்திகள் நாளேடு: உதயன் திகதி: 14/11/1992 பக்கம்: 1 "ஜிகாத்"தை தொடங்க முஸ்லிம்கள் ஆதரவாம்: மாத இதழ் கருத்துக் கணிப்பு கொழும்பு, நவ 14 "ஜிகாத்" எனப்படும் புனிதப் போரைத் தொடங்க வேண்டும் என்ற முஸ்லிம் காங்கிரஸ் தலைடீர் கஷ்ரப்பின் கருத்தை முஷ்லிம்களில் பெருபொலானோர் ஆதரிப்பதாக "அல் இஸ்லாம்" என்ற பத்திரிகை தகவல் வெளியிட்டுள்ளது. தான் நடத்திய கருத்துக் கணிப்பு ஒன்றின் மூலம் விடுதலைப் புலிகளுக்கு எதிராக "ஜிகாத்" நடத்த வேண்டும் என்பதனை பெரும் எண்ணிகையான முஸ்லிகள் ஆதரித்திருப்பதாக இந்தப் பத்திரிகை அறிவித்திருக்கிறது. தனியான முஸ்லிம் பிரிவு ஆரம்பிக்கப்படுவதையும் கணிசமான முஸ்லிம் மக்கள் ஆதரிக்கின்றனர் எனவும் "அல் இஸ்லாம்" மாத இதழ் தெரிவித்துள்ளது. இத்த மாத இதழ் முஸ்லிம் காங்கிரஸையும் அதன் தலைவர் அஷ்ரப்பையும் கடுமையாக விமர்சித்து வரும் சஞ்சிகை என்றும் ஆனால் "ஜிகாதி" யோசனையை இது ஆதரித்துள்ளதாகவும் அவதானிகள் சிலர் தெரிவித்தனர். விடுதலைப் புலிகளுக்கு எதிராக ஏனைய கொழும்புத் தமிழ்க் குழுக்களை இராணுத்துடன் சேர்த்துப் போராடும் அரசின் நடவடிக்கையையும் இந்த மாத இதழ் கண்டித்திருக்கிறது. *****
  7. செய்திகள் நாளேடு: உதயன் திகதி: 04/11/1992 பக்கம்: 1 ஆயுதப் போருக்கு அரபு நாடுகளிடம் உதவி கோருகிறது முஸ்லிம் அமைப்பு ஆயுதம் ஏந்திப் போராடு வதற்காக கிழக்கிலங்கை முஸ்லிம் இயக்கம் ஒன்று பலஸ்தீன கெரில்லா இயக்கம் ஒன்றிடம் உதவி கோரியிருக்கிறது. நம்பத்தகுந்த வட்டாரங்களை ஆதாரமாகக்காட்டி "லங்காதீப" வார இதழ் இவ்வாறு செய்தி வெளியிட்டிருக்கிறது. யாசீர் அரபாத் தலைமையில் இயங்கும் பலஸ்தீன விடுதலை இயக்கத்துக்கு எதிராகச் செயற்படும் கெரில்லா இயக்கம் ஒன்றிடமே இந்த உதவி கோரப்பட்டுள்ளதாகவும் - இது தொடர்பாக பல கடிதங்கள் கடந்த சில வாரங்களில் பரிமாறப்பட்டுள்ளதாகவும் அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. "முஸ்லிம் மக்கள் விடுதலை இயக்கம்" என்ற பெயரில் ஆரம்பிக்கப்படவுள்ள இந்த இயக்கம், இப்போராட்டத்துடன் முஸ்லிம் மக்களுக்கென புதிய அரசியல் கட்சி ஒன்றையும் பதிவு செய்ய முடிவு செய்திருப்பதாக தெரியவருவதாகவும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. பல அரபு நாடுகளிடம் உதவி கேட்டு இந்த இயக்கம் எழுதியுள்ள கடிதங்களில் வடக்கு - கிழக்கு யுத்தத்தில் இதுவரையில் சுமார் 2 ஆயிரத்து 500 முஸ்லிம்கள் உயிரிழந்திருப்பதாகவும், ஆயிரத்து 500 முஸ்லிம்கள் அங்கவீனர்களாக்கப்பட்டுள்ளதாகவும் சுமார் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட முஸ்லிம்கள் அகதிகளாகியிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. (உ- 10) *****
  8. செய்திகள் நாளேடு: உதயன் திகதி: 02/11/1992 பக்கம்: 1 ஏறாவூரில் தமிழர்கள் மீது முஸ்லிம் குண்டர்கள் தாக்கு: ஒருவர் பலி; நால்வர் காயம் கொழும்பு, அக். 2 ஏறாவூரில் முஸ்லிம் குண்டர் கோஷ்டி ஒன்று கத்திகள், பொல்லுகள் கொண்டு தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தியதில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் 4 பேர் காயமடைத்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. பக்கத்துக் கிராமம் ஒன்றில் இடம்பெற்ற தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியதாகவும்- பொலீசார் கண்ணீர்ப் புகைக் குண்டு வீசி ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைத்ததாகவும்- அதனால் ஆத்திரமுற்ற முஸ்லிம்கள் இத்தாக்குதலை நடத்தியதாகவும் பி.பி.ஸி. தெரிவித்தது. (உ- 10) *****
  9. செய்திகள் நாளேடு: உதயன் திகதி: 11/08/1992 பக்கம்: 1 வெலிகந்தைச் சம்பவம்: 24 தமிழர் படுகொலை பொலன்னறுவை - மட்டக்களப்பு மாவட்டங்களின் எல்லையில் உள்ள வெலிகந்தைப் பகுதியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற சம்பவத்தில் படுகொலையுண்ட தமிழர்களின் எண்ணிக்கை 24 என அறிவிக்கப்படுகிறது. மேலும் 8 தமிழர் படுகாயமடைந்தனர். முஸ்லிம் குண்டர்களினால் இவர்கள் படுகொலை செய்யப்பட்டனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. (உ- எ- 3) *****
  10. செய்திகள் நாளேடு: உதயன் திகதி: 10/08/1992 பக்கம்: 1 கிழக்கில் 21 தமிழர் நேற்றுப் படுகொலை! புதுடில்லி. ஆக. 10 கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று இடம்பெற்ற சம்பவம் ஒன்றில் தமிழ்க் கிராமவாசிகள் 21 பேர் படுகொலையுண்டனர். மேலும் 10 தமிழர்கள் படுகாயமடைந்தனர். இச்சம்பவம் குறித்து மேல் விவரங்கள் கிடைக்கவில்லை என்று ஏஜென்ஸிச் செய்தி ஒன்று தெரிவித்ததாக இந்திய வானொலி நேற்றிரவு அறிவித்தது. (உ- எ) *****
  11. செய்திகள் நாளேடு: உதயன் திகதி: 27/07/1992 பக்கம்: 1 மட்டக்களப்பில் ஊர்காவலர் தமிழர் மீது வன்முறைகள்: வீதியில் நடமாட முடியாதவாறு நிலைமை மோசம் கொழும்பு. ஜுலை 23 யாழ்ப்பாணம். ஜூலை 27 மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களாக தமிழ் மக்கள் மீதான வன்முறைகளை முஸ்லிம் ஊர்காவல் படையினர் கட்டவிழ்த்து விட்டுள்ளனர் என்று அங்கிருந்து வரும் செய்திகள் தெரிக்கின்றன. தமிழ் மக்கள் வீதிகளில் நடமாட முடியாத நிலையில் உள்ளனர். ஏறாவூரில் பஸ் ஒன்றில் பயணம் செய்த 3 தமிழர்கள் முஸ்லிம் ஊர்காவல் படையினரால் கண்டபடி வெட்டப்பட்டு காயப்படுத்தப்பட்டனர் என்றும் - ஓட்டமாவடியில் 4 தமிழரும் காத்தான்குடிப் பகுதியில் ஒரு தமிழரும் ஊர்காவலர்களால் கத்தியால் வெட்டப்பட்டுக் காயப்படுத்தப்பட்டனர் என்றும் - அவர்கள் ஆபத்தான நிலையில் உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டது. அதேசமயம் மட்டக்களப்பு, வாழைச்சேனை அகதி முகாமில் உள்ள தமிழ் மக்களை முஸ்லிம் ஊர்காவல் படையினர் தாக்கியுள்ளனர். அகதி முகாமில் உள்ளவர்கள் அச்சுறுத்தப்பட்டனர் என்றும் தெரிவிக்கப்பட்டது. *****
  12. செய்திகள் நாளேடு: உதயன் திகதி: 23/07/1992 பக்கம்: 1 வாழைச் சேனையில் தமிழர் மீது தாக்குதல் கொழும்பு. ஜுலை 23 நேற்று முன்தினம் மட்டக்களப்பு மாவட்டம் சித்தாண்டியில் இடம்பெற்ற சம்பவத்தை அடுத்து நேற்று வாழைச்சேனையில் தமிழர்களுக்கு எதிராக முஸ்லிம்கள் கலவரத்தில் இறங்கினார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது. தமிழ் சாரதி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். கலவரத்தை அடக்க பொலீஸார் துப்பாக்கிப் பிரயோகம் செய்த போது இரண்டு முஸ்லிம்கன் கொல்லப்பட்டனர் என்று ஏஜென்சி செய்தி ஒன்று தெரிவித்தது. வாழைச்சேனயில் முஸ்லிம்கள் வீதியால் சென்ற தமிழர்களின் வாகனங்களை நோக்கி கற்களை வீசினார்கள் என்றும் அப்போதே தமிழ் சாரதி ஒருவர் கொல்லப்பட்டார் என்றும் தெரிவிக்கப்படுகிறது. கல்வீச்சுக்கு உள்ளான இந்த வாகனத்தின் சாரதி வாகனத்தைக் கட்டுப்படுத்த இயலாது முன்னால் சென்று கொண்டிருந்த பொலீஸ் ஜீப்புடன் மோதினார் என்றும் இந்தச் சம்பவத்தில் ஜீப்பில் இருந்த பொலிஸ்காரர் ஒருவரும் கொல்லப்பட்டார் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இதற்கிடையில் நேற்று முன்தினம் சித்தாண்டியில் அனைத்து ரயில் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 40க்கு அதிகம் என்றும் அவர்களில் பலர் முஸ்லிம்கள் என்றும் தமிழ் கட்சிகளில் ஒன்று தெரிவித்துள்ளது. [இ-எ- 10] பக்கம்: 1 மேலும் 2 தமிழர்களின் சடலங்கள் கண்டுபிடிப்பு வாழைச்சேனைப் பகுதியில் மேலும் இரண்டு தமிழர்களின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆரையம்பதியைச் சேர்ந்த அருணாசலம், களுவன்கேணியைச் சேர்ந்த தங்கராசா புஸ்பராசா ஆகியோரது சடலங்களே அவை என அடையாளம் காணப்பட்டுள்ளது. வாழைச்சேனைப் பகுதியில் அண்மையில் இதே போன்று நான்கு தமிழர்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டிருந்தன. வாழைச்சேனையில் உள்ள தமிழ் அகதி முகாமில் இருந்த எட்டுப்பேர் முஸ்லிம் வன்முறைக் கும்பல் ஒன்றினால் சமீபத்தில் கடத்திச் செல்லப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. (இ- 5) *****
  13. செய்திகள் நாளேடு: உதயன் திகதி: 20/07/1992 பக்கம்: 1 வாழைச்சேனை - பேய்த்தாளை அகதி முகாம் தமிழரை அச்சுறுத்தும் முஸ்லிம் குழு! யாழ்ப்பாணம், ஜூலை 20 மட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனை, பேய்த்தாளை அகதி முகாமில் தங்கியிருக்கும் அப்பாவித் தமிழர்களைக் கடந்த நான்கு நாட்களாக முஸ்லிம் குழுவினர் அச்சுறுத்தி வருகின்றனர் என்று தெரிவிக்கப்படுகிறது. அகதி முகாமில் இருந்து இரு தமிழர்களை அந்தக் குழுவினர் கடத்திச் சென்றுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டது. கடந்த வாரமும் முஸ்லிம் குழுவினரால் 8 தமிழர்கள் கடத்திச் செல்லப்பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதேவேளை- மஞ்சத்தொடுவாய் அகதிமுகாமில் தங்கியுள்ளோரும் கடந்த இரு தினங்களாக அச்சுறுத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டது. [ஒ- 3] *****
  14. செய்திகள் நாளேடு: உதயன் திகதி: 13/07/1992 பக்கம்: 1 சந்திவெளிப் பகுதியில் இரு தமிழரின் சடலங்கள்! யாழ்ப்பாணம். ஜூலை 13 முஸ்லிம்களினால் கோரமாகக் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் இரு தமிழர்களின் சடலங்கள் கடந்த வியாழனன்று வாழைச்சேனை, சந்திவெளிப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டன என்று அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. அதே பகுதியில் அண்மையிலும் கூட தமிழர்கள் மூவரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன என்றும் தெரிவிக்கப்பட்டது. அண்மையில் வாழைச்சேனை பேய்த்தாளை அகதி முகாமிலிருந்து எட்டுத் தமிழர்கள் முஸ்லிம்களால் கடத்திச்செல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை. கடந்த செவ்வாய்க்கிழமை முதல் படையினரின் சுற்றிவளைப்பு நடவடிக்கைக்கு உள்ளாகியிருக்கும் மட்டக்களப்பு பழுகாமம் பகுதியில் தமிழர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது. *****
  15. செய்திகள் நாளேடு: உதயன் திகதி: 10/07/1992 பக்கம்: 1 3 தமிழர் சுட்டுக் கொலை மட்டக்களப்பு மாவட்டத்தில் ஊர்காவல் ப்ஃடையினரால் மூன்று தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். வந்தாறுமூலையில் கடந்த செவ்வாய்க்கிழமை இரு தமிழர்களும்- கரடியனாறுப் பகுதியில் கடந்த புதன்கிழமை ஒரு தமிழரும் - ஊர்காவல்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். கரடியனாறுப்பகுதியில் ஊர்காவல்படையினரின், சூட்டுக்கு சிறுமி ஒருத்தியும் காயம் அடைந்தார். [இ- 3] *****
  16. .
  17. செய்திகள் நாளேடு: உதயன் திகதி: 08/07/1992 பக்கம்: 1 அம்பாறையில் 18 தமிழர் சுட்டுக் கொலை! யாழ்ப்பாணம், ஜூலை 8 அம்பாறை மாவட்டம் - காட்டுப் பகுதி எல்லையில் நேற்று முன்தினம் 18 தமிழர்கள் சிறிலங்கா இராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். காட்டுப்பகுதி எல்லையில் உள்ள குடியிருப்புக்களில் வாழ்ந்த அப்பாவித் தமிழர்களே கோரமாக சுட்டுக் கொலை செய்யப்பட்டனர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இராணுவத்தினதும், முஸ்லிம்களினதும் அச்சுறுத்தல்களால் கிராமங்களை விட்டு வெளியேறிய தமிழர்கள் வசித்து வந்த காட்டுப் பகுதி ஒன்றைத் திடீரென சுற்றிவளைத்த படையினர், கண்டபடி சுட்டதில் 18 பேர் கொல்லப்பட்டனர் எனத் தெரிவிக்கப்பட்டது. [உ- 5] பக்கம்: 1,6 முஸ்லிம்களுக்கு ஆயுதம் வழங்கிய அரசின் நடவடிக்கைக்கு கண்டனம் அதுவே கிழக்கு வன்செயல்களுக்கு காரணம் என்கிறது மன்னிப்புச்சபை லண்டன். ஜூலை 8 கிழக்கு மாகாணத்தில் வன்முறைகள் அதிகரித்தமைக்கு அங்குள்ள முஸ்லிம் குழுக்களுக்கு ஆயுதங்கள் வழங்கிய ஸ்ரீலங்கா அரசின் நடவடிக்கையே காரணமாகும். இவ்வாறு ஸ்ரீலங்கா அரசைக் கண்டித்திருக்கிறது சர்வதேச மன்னிப்புச் சபை. ஸ்ரீலங்கா நிலைமை குறித்து மன்னிப்புச் சபை விடுத்த ஆகப் பிந்திய அறிக்கையிலேயே இப்படிக் குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறது. பத்துப் பக்கங்களைக் கொண்ட இந்த அறிக்கையில் கடந்த ஏப்ரல் மாதம் பொலன்னறுவை மாவட்டத்தில் முத்துக்கல், கரப்பொல மற்றும் அழிஞ்சிப்பொத்தானைக் கிராமங்களில் தமிழ், முஸ்லிம் மக்கள் படுகொலை செய்யப்பட்டது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கிழக்கு முஸ்லிம் குழுக்களுக்கு ஆயுதங்கள் வழங்கும் அரசின் நடவடிக்கை குறித்து சர்வதேச மன்னிப்பு சபை கடந்த ஆண்டே கவலை தெரிவித்திருந்தது. மன்னிப்புச்சபையின் அந்த அறிவிப்பை ஊர்ஜிதப்படுத்துவது போல பொலன்னறுவைப் படுகொலைகள் இடம்பெற்றிருப்பதாக இப்போது சுட்டிகாட்டப்படுகிறது. இந்தப் படுகொலைகள் குறித்து விசாரணை நடத்த விசாரணைக்குழு ஒன்றை அரசு நியமித்திருப்பதை வரவேற்றுள்ள மன்னிப்புச்சபை., அந்த விசாரணை அறிக்கை பகிரங்கப்படுத்தப்பட வேண்டும் என்றும் கேட்டிருக்கிறது. அறிக்கை இப்போது பாதுகாப்பு அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டது. இந்த வருடத்தின் மிக மோசமான இனப்படுகொலை என்று கருதப்படும் இந்த வன் செயல்களுக்குவர்கள் காரணமான தண்டிக்கப்பட வேண்டும் என்றும் - நாட்டின் கிழக்குப் பகுதியில் தமிழ், முஸ்லிம் கிராம மக்கள் வேண்டுமெறே கொல்லப்படுவது குறித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மன்னிப்புச் சபை கேட்டிருக்கிறது. இன அடிப்படையில் கொலைகளில் ஈடுபடுவதை விடுதலைப் புலிகள் நிறுத்த வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் கேட்கப்பட்டிருக்கிறது. வலைத்தளம்: www.amnestyusa.org கொழுவி: https://web.archive.org/web/20110222090212/http://www.amnestyusa.org/document.php?lang=e&id=CBABB2C2398D0E9B802569A6006028CF "............. மதுரங்கலையில் உயிரிழந்த 6 பேரில் 3 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 1. பி.பக்கியராஜா 2. சுந்தரலிங்கம் 3. பீரிஸ் விஜயசிங்க 29 ஏப்ரல் 1992, முத்துகல் ஊரில் நடந்ததாகக் கூறப்படும் சட்டத்திற்குப் புறம்பான கொலைகளில் பாதிக்கப்பட்ட 51 பேரின் பெயர்களும் அறிக்கப்படுத்தப்பட்ட வயதுகளும். எஸ் பேபி, 1 எஸ் மங்கையற்கரசி, 2 எஸ் சுதர்சன், 3 டி ரீகன், 3 எஸ் தங்கேஸ்வரன், 3 எஸ் செல்வசசி, 3 எஸ் ரதீஸ், 4 டி விஜயேந்திரன், 4 கே கனகநாதன், 4 டி சுகந்தி, 4 எஸ் ரூபி, 5 என் விஸ்வலிங்கம், 7 டி இன்பவதி, 8 என் மனோகந்தன், 10 டி பஞ்சிலகாமி, 12 பி லோகேஸ்வரன், 12 டி ரவிச்சந்திரன், 12 எஸ் லட்சுமி, 12 டி வசந்தகுமாரி, 13 பி திருலோகநாதன், 14 டி பாபு, 14 டி கீதா, 14 டி விஜயகுமாரி, 15 பி சுலோச்சாதேவி, 18 கே தங்கராணி, 21 டி உதயகுமாரி, 22 எஸ் பாலையா, 27 சுந்தரலிங்கம், 28 பி மகேஸ்வரி, 29 டி நவமணி, 30 பி சுலோச்சன்தேவி, 30 வி நித்தியகல்யாணி, 30 எஸ் (அல்லது ஏ) சிவபதி, 32 கே குபேந்திரராஜா, 33 கே சதாசிவம், 34 வி தெய்வநாயகம், 35 பி குலேந்திரராணி, 35 கே கோபிகிருஷ்ணன், 35 பாக்கியராஜா, 37 டி (அல்லது கே) கண்ணகை, 40 எஸ் சிவநேசராஜா, 40 கே.கோபாலப்பிள்ளை, 40 எஸ் யோகசங்கரி, 40 பி வில்லியம் சிங்கோ, 44 வி தர்மலிங்கம், 49 எஸ் யோகம்மே, 65 எஸ் தெய்வானைப்பிள்ளை, 70 கந்தையா, 78 எஸ் மடந்தை, 80 வி நீதாப்பிள்ளை, 80 29 ஏப்ரல் 1992, கரபொலவில் நடந்ததாகக் கூறப்படும் சட்டத்திற்குப் புறம்பான கொலைகளில் பாதிக்கப்பட்ட 38 பேரில் 31 பேரின் பெயர்களும் அறிக்கைப்படுத்தப்பட்ட வயதுகளும். சுபாகர், 7 சுதர்சன், 7 ஜானகி, 8 சாரதாதேவி, 18 சிவமணி, 18 அன்னலட்சுமி, 18 சிவரூபி, 28 குஞ்சன், 30 கந்தசாமி, 35 சிவஞானம், 40 தங்கராஜா, 45 ராசையா, 60 சின்னமுத்து, 68 அன்னம்மா, வயது தெரியவில்லை ஐயாத்துரை கண்ணம்மா கந்தசாமி லீலாவதி மாரிமுத்து முத்துப்பிள்ளை முத்தன் நிரஞ்சன் பாலன் பூமணி ரத்தினம் சரஸ்வதி மற்றும் குழந்தை சின்னத்தங்கம் சசிகரன் தங்கம்மா தங்கராஜா எம் தோமஸ் " *****
  18. செய்திகள் நாளேடு: உதயன் திகதி: 16/06/1992 பக்கம்: 1 பஸ் பயணிகளை வழிமறித்து கிரான்குளத்தில் 15 தமிழரை ஆயுதபாணிகள் கடத்தினர்! முஸ்லிம் குண்டர்கள் அட்டகாசம் கொழும்பு, ஜூன் 16 மட்டக்களப்பு மாவட்டம் கிரான்குளத்தில் நேற்று முன்தினம் இ. போ. ச. பஸ் ஒன்றில் பயணம் செய்த பதினைந்து அப்பாவித் தமிழர்கள் ஆயுதம் தாங்கிய முஸ்லிம் குண்டர் குழு ஒன்றினால் கடத்திச் செல்லப்பட்டனர். கடத்தப்பட்டோர் என்னவானார்கள் என்பது குறித்து இதுவரை தகவல் ஏதும் வெளியாகவில்லை. திருக்கோயிலில் இருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த பஸ்ஸை கிரான்குளத்தில் வழி மறிக்கப்பட்டது. ரி௫6 ரகத் துப்பாக்கிகளை வைத்திருந்ததாகக் கூறப்படும் மூவர்குழு ஒன்று 15 பயணிகளை பஸ்ஸை விட்டு இறக்கிக் கடத்திச் சென்றதாகவும் - எஞ்சிய பயணிகளோடு பஸ்ஸைத் தொடர்ந்து செல்ல அவர்கள் அனுமதித்தனர் என்றும் தெரிவிக்கப்பட்டது. *****
  19. செய்திகள் நாளேடு: உதயன் திகதி: 07/06/1992 பக்கம்: 1, 2 சிங்களவரும், முஸ்லிம்களும் செட்டிகுளத்தில் குடியேற்றம் வவுனியா செட்டிகுளம் பகுதியில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஒன்பது தமிழ்க் கிராமகளில் சிங்கள, முஸ்லிம் குடும்பங்களைக் குடியேற்றும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருவதாகத் தெரியவருகிறது. பெரிய புளியங்குளம், நெடுங்கரைச்சேனை, பெரிய நொச்சிமுனை, கிட்டன்குளம், தீரியான்குளம், முதலியான்குளம், கரம்பைமடு, முகத்தான்குளம், பாவற்குளம் ஆகிய தமிழ்க் கிராமங்களே குடியேற்றத்துக்கு உட்படுத்தப்படவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. பாவற்குளம் கிராமத்தில் ஏற்கனவே முஸ்லிம்களும் சிங்களவர்களும் குடியமர்த்தப்பட்டு விட்டனர். செட்டிகுளம் பகுதியில் மேற்படி கிராமங்களில் இருந்து விரட்டப்பட்ட தமிழ் மக்கள் மடு போன்ற அகதி முகாம்களில் தங்கியுள்ளனர். செட்டிகுளம் பகுதியில் குடியமர்த்தப்படும் சிங்கள, மற்றும் முஸ்லிம் மக்களுக்குத் தேவைக்கு அதிகமான உதவிகளும் சலுகைகளும் வழங்கப்பட்டு வருகின்றன என்றும் தெரியவருகிறது. குடியமர்த்தப்பட்ட முஸ்லிம்களின் பாதுகாப்பை முன்னிட்டு அங்கு ஓர் பொலிஸ் நிலையம் அமைக்கப்பட்டிருப்பதாகவும் முஸ்லிம் உதவி அரச அதிபர் பிரிவு ஒன்றும் ஏற்படுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. (ஒ-5) *****
  20. செய்திகள் நாளேடு: உதயன் திகதி: 2/05/1992 பக்கம்: 1 முஸ்லிம் கிராமத்தில் 6 தமிழர் வெட்டிக் கொலை மட்டக்களப்பு, கள்ளமடு முஸ்லிம் கிராமத்தில் ஆறு தமிழர்களை இனந்தெரியாதவர்கள் வெட்டிக்கொன்றனர். இராணுவப் பேச்சாளர் கேணல் சரத் முனசிங்க நேற்று நடைபெற்ற வாராந்த பத்திரிகையாளர் மாநாட்டில் இத்தகவலைத் தெரிவித்தார். இதேசமயம், காட்டுக்குள் விறகு வெட்டச்சென்ற கஹவத்தமுனை கிராமத்தைச் சேர்ந்த முஸ்லிம் ஒருவரின் சடலத்தை இராணுவத்தினர் கண்டெடுத்துள்ளனர் என்றும் கேணல் முனசிங்க கூறினார். (ஒ-த) *****
  21. செய்திகள் நாளேடு: உதயன் திகதி: 14/05/1992 பக்கம்: 1, 6 *வாழைச்சேனையில் கடத்தப்பட்ட 12 தமிழரும் கொலை செய்யப்பட்டனர்? மட்டக்களப்பு, மே 14 வாழைச்சேனை காகித ஆலை சுற்றாடலில் கடந்த மாதம் 29 ஆம் திகதியன்று கடத்திச் செல்லப்பட்ட 12 தமிழரும் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தற்போது நம்பப்படுவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. விறகு பொறுக்கச் சென்ற 13 தமிழர் கடத்தப்பட்டதும் - அவர்களில் ஒரு சிறுவன் தப்பி வந்து கடத்தல் சம்பவம் பற்றி உறவினர்களுக்குத் தகவல் கொடுத்ததும் தெரிந்தவையே. முஸ்லிம் ஊர்காவல் படையினரே இவர்களை கடத்திச் சென்று கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. கொலை செய்யப்பட்டிருக்கலாம் என நம்பப்படும் 12 பேரில் அறுவர் மாணவிகள் என்பதும் இவர்கள் வாழைச் சேனை இந்துக் கல்லூரியில் கல்வி பயின்று வந்தவர்கள் என்பதும், இவர்களின் பெற்றோர் வாழைச்சேனை காகித ஆலை ஊழியர் என்பதும் குறிப்பிடத்தக்கவை. [ஒ- 3] பக்கம்: 6 புலிகளுடன் பேசுவதற்கு முஸ்லிம் காங்கிரஸ் தயார் கொழும்பு.மே.14 ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எவருடனும் பேசத் தயாராக உள்ளது. விடுதலைப் புலிகளும் அதற்கு விதிவிலக்கு அல்ல. இவ்வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஜனாப் எம்.ஏச். எம் அஷ்ரப் பி.பி.ஸி.க்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார். இதுவரை புலிகள் அமைப்பிலிருந்து எவரும் தன்னைப் பேச்சுவார்த்தைக்கு அழைக்க அணுகவில்லை என்றும் அவர் கூறினார். (இ-10) பக்கம்: 6 கட்டாயமாக குடியமர்த்த முயற்சி யாழ்ப்பாணம் மே 14 அண்மைபில் படுகொலைகள் இடம்பெற்ற மட்டக்களப்பு முத்துக்கல கிராமத்தில் இருந்து இடம்பெயர்ந்துள்ள தமிழ் குடும்பங்களை வாழைச்சேனைப் பகுதியில் குடியமர்த்த அரச அதிகாரிகள் முயற்சிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. வாழைச்சேனைப் பகுதி, தமிழர்களுக்குப் பாதுகாப்பற்ற இடமாக இருப்பதால் அங்கு சென்று வாழ அவர்கள் அச்சமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. [இ- 5] *****
  22. .
  23. செய்திகள் நாளேடு: உதயன் திகதி: 8/05/1992 பக்கம்: 1 முஸ்லிம் ஊர்காவல் படையினருக்கு ஆயுதம் வழங்குவதை அரசு நிறுத்துமா? கொழும்பு, மே.8 முஸ்லிம் ஊர்காவல் படையினருக்கு ஆயுதம் வழங்குவதை அரசு நிறுத்துமா? என்பது குறித்து விசாரணைக் குழுவின் அறிக்கையின் பின்னரேயே ஆராயப்படும். பொலனறுவை மாவட்டம் அழிஞ்சிப்பொத்தனை படுகொலைகள் தொடர்பாக பி. பி.ஸி செய்தியாளர் லரிஜோன் கேட்ட கேள்வி ஒன்றுக்குப் பதில் அளிக்கையில் ஜனாதிபதியின் ஆலோசகர் பிரட்மன் வீரகோன் மேற்கண்டவாறு பதில் அளித்தார். இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்காக நாடாளுமன்றத் தெரிவுக்குழு என்ன செய்கிறது? என்ற மற்றொரு கேள்விக்கு திரு. பிரட்மன் வீரக்கோன் பதில் அளிக்கையில் அரசியல் தீர்வு ஏற்பட முயற்சி நடக்கிறது. தற்போது நம்பிக்கை அளிக்கும் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன" என்றார். (இ- 10) பக்கம்: 5 மட்டக்களப்பு, அம்பாறை கிராமங்கள் தோறும் புரிந்துணர்வுக் குழுக்கள் சமாதான மாநாட்டில் தீர்மானம் மட்டக்களப்பு, மே 8 மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள முஸ்லிம், தமிழ் இனமோதலைத் தடுக்க கிராமங்கள் தோறும் புரிந்துணர்வுக் குழுக்கள் அமைக்கப்பட வேண்டும். மட்டக்களப்பில் நடந்த சமாதான மாநாட்டில் இவ்வாறு தீர்மானம் எடுக்கப்பட்டது தமிழ் - முஸ்லிம் மக்களிடையே மீண்டும் இனமோதல்கள் ஏற்படுவதைத் தடுக்கும் வழிவகைகளைக் காண ஏற்பாடு செய்யப்பட்ட இந்த சமாதான மாநாடு கடந்த திங்கட்கிழமை மட்டக்களப்பு செயலகத்தில் நடைபெற்றது. அரச அதிபர் திரு. எஸ். மோனகுருசாமி மாநாட்டுக்குத் தலைமை வகித்தார். அமைச்சர் ஏ.ஆர். மன்சூர், ராஜாங்க அமைச்சர் பி பி. தேவராஜ் மற்றும் மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட எம். பிக்கள் மாநாட்டில் கலந்துகொண்டன. தமி்ழ் - முஸ்லிம்களுக்கு இடையேயான பிரச்சினை தொடருமானால் கிழக்கிலங்கை பல்கலைக்கழகத்தை மூடிவிட - வேண்டிய நிலை ஏற்படும் என்றும் அமைச்சர் மன்சூர் எச்சரிக்கை விடுத்திருக்கின்றார். இதே சமயம் - தமிழ் - முஸ்லிம் மக்கள் மத்தியில் மீண்டும் ஒற்றுமையை ஏற்படுத்த அனைத்து முயற்சிகளையும் நான் மேற்கொண்டுள்ளேன் என்று மட் டக்களப்பில் நடந்த விபுலாநந்தர் நூற்றாண்டு விழாவில் அமைச்சர் மன்சூர் பேசுகையில் தெரிவித்தார். (ஒ- 3) *****
  24. செய்திகள் நாளேடு: உதயன் திகதி: 6/05/1992 பக்கம்: 1 மட்டு. அம்பாறை தமிழருக்கு கொலைப் பயமுறுத்தல் அங்கு பெரும் பதற்ற நிலை மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் தமிழர்களுக்கு பயமுறுத்தல் விடுக்கப்பட்டு வருவதால், அங்கு பெரும் பதற்றநிலை நிலவுவதாகத் தெரியவருகிறது. முஸ்லிம்களும், ஊர்காவல் படையினருமே தமிழ் மக்களுக்கு கொலைப் பயமுறுத்தலை விடுக்கின்றனர் என்று தெரிவிக்கப்பட்டது. இதேசமயம் திருகோணமலை அகதி முகாம்களில் உள்ள தமிழ் மக்களும் கொலை செய்யபடுவர் என்று மிரட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதனிடையில் கடந்த 28 ஆம் திகதி முதல் 30 திகதி வரை மட்டக்களப்பு -பொலன்னறுவ எல்லைப்புற கிராமங்களில் 78 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் அதையடுத்து அங்குள்ள மக்கள் பெருமளவில் இடம் பெயர்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது (ஒ- 3) பக்கம்: 5 உயிரிழந்த தமிழர்களின் எண்ணிக்கை 78 பொலன்னறுவ மாவட்டத்தில் முத்துக்கல் மற்றும் சரப்பொலை ஆகிய தமிழ்க் கிராமங்களில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்களில் உயிரிழந்த தமிழரின் எண்ணிக்க 78 என அறிவிக்கப்படுகிறது. முன்னர் அலஞ்சிப்பொத்தானை என்னும் இடத்தில் இடம்பெற்ற தாக்குதலில் 58 முஸ்லிம்கள் உயிரிழந்தனர் என்பது தெரிந்ததே. (ஒ-எ) *****
  25. செய்திகள் நாளேடு: உதயன் திகதி: 5/05/1992 பக்கம்: 1 *வாழைச்சேனையில் 6 மாணவிகள் உட்பட 13 தமிழர் கடத்தப்பட்டனர் கொழும்பு,மே 5 வாழைச்சேனை காகித நகரில் கடந்த புதனன்று 13 தமிழர்கள் முஸ்லிம் குண்டர்களினாலும், முஸ்லிம் ஊர்காவல் படையினராலும் கடத்தப்பட்டனர். காகித ஆலை பதிமருந்துத் தோட்டத்தினுள் விறகு பொறுக்கச் சென்ற 6 இளம் பெண்கள், ஒரு வயோதிப மாது, நான்கு சிறுவர்கள், இரு சிறுமியர் ஆகியோரே கடத்திச் செல்லப்பட்டனர். கடத்தப்பட்ட சிறுவர்களில் ஒருவன் வெட்டுக் காயங்களுடன் தப்பி ஓடி வந்ததை அடுத்து கடத்தல் சம்பவம் பற்றிய முழு விவரமும் வெளியானது. கடத்தப்பட்டவர்கள் காவத்தைமுனைக் கிரமத்துகுக் கொண்டு செல்லப்பட்டதாகவும் அச்சிறுவன் தகவல் வெளியிட்டான். இதனையடுத்து காவத்தைமுனையிலும், அதைச் சுற்றி உள்ள காடுகளிலும் தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் தேடுதல் முயற்சி பலனளிக்கவில்லை. கடத்தப்பட்ட ஆறு இளம் பெண்களும் வாழைச்சேனை இந்துக் கல்லூரியில் கல்வி பயிலும் மாணவிகள் என்றும், அவர்களின் பெற்றோர்கள் காகித ஆலை ஊழியர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது. *****

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.