Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நன்னிச் சோழன்

கருத்துக்கள உறவுகள்+
  • Joined

  • Last visited

Everything posted by நன்னிச் சோழன்

  1. சிறப்பு மருத்துவப் போராளியாகவும் நோயாளிகளின் அன்பிற்குரியவனாக‌வும் மட்டுமன்றி பின்நாளில் இளம் பல் வைத்தியனாக தமிழீழத்தின் பட்டிதொட்டி எங்கும் அறியப்பட்டவனாகி எம் மக்கள் எல்லோருக்கும் வேண்டியவனுமானான். உடுப்பிட்டி யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட திரு திருமதி கந்தசாமி தம்பதிகளின் தவப்புதல்வனாய். 1975 ஆண்டு “றூபன்” என்ற இயற்பெயருடன் அந்த குடும்பத்தின் வரவாகியவன். குடும்ப பாசத்தை நெஞ்சினில் சுமந்து ஈழமண் காக்க, விடுதலைப் போரிற்கு தன் தோள் கொடுக்கப் புறப்பட்டான். காலம் அவனை மருத்துவத்துறைக்கு அனுப்பியது. .மருத்துவப் போராளியாக இருந்த போதே பல் மருத்துவத்தைக் கற்று அதில் சிறப்பு பெற்று வளர்ந்தான். போராளிகளின் பயிற்சி முகாம் தொடங்கி விசேட பாசறைகள்‌ வரை சுதர்சனின் நடமாடும் பல் வைத்திய சேவை விரிந்தது. அது மட்டுமின்றி நடமாடும் மருத்துவ சேவையுடாக ஊர் ஊராய் சென்று மக்களின் பல் நலன்காத்த உத்தம புத்திரன். 2002 ஆம் ஆண்டின் பின்னர் முற்று முழுதாக மக்களிற்காக மருத்துவ தேவையைப் பார்த்து கொண்டிருந்த தமிழீழ நிழலரசின் அங்கமான தமிழீழ சுகாதார சேவையில் சுதர்சனின் கால்கள் பதித்த நாட்கள் முதன்மையானவை. போராட்ட வாழ்வில் அவன் மக்களிற்கு மருத்துவ சேவை செய்யக் கிடைத்த சந்தர்ப்பத்தை முழுமையாகப் பயன்படுத்தினான். வடக்கு மட்டுமன்றி, கிழக்கு மாகாணம் வரை அவன் கால்கள் பதிந்தன. தமிழீழ சுகாதார சேவையின் ஓயாத புயலானான். தியாகதீபம் தீலிபன் மருத்துவமனைகளிலும் சிறப்புப் பல் வைத்தியனாக வலம் வந்தான். பாடசாலை மணவர்களும் சுதர்சனை‌ மறந்து விடமாட்டார்கள் .பற்சுகாதர அணியுடன் ஒவ்வொரு பாடசாலைகளாய் ஏறியிறங்கி வர, முன் காப்பதற்காய் பற்சுகாதாரம் பற்றி தெளிவூட்டல் கருத்தரங்குகளை மாணவர்கள் மட்டுமின்றி சாதாரண‌ மக்களும் புரியும்படி செயற்படுத்துவதில் அவனுக்கு நிகர் அவனே. எப்பொழுதும் சோர்ந்து போகாத மனவுறுதி கொண்டவன். தன்னுடன் சேர்ந்து பணிபுரிவோர்களையும் உற்சாகமாகவே வைத்திருக்கும் நகைச்சுவை திறன் கொண்டவன். எப்போதும் மற்றவர்களின் திறமைகளை பார்த்து வாழ்த்துவதில் பின் நிற்கமாட்டான். ஒரு இடத்திற்கு போக வேண்டும் என்றால் வாகனவசதி கிடைக்காவிட்டாலும் ஏதோவொரு வழியில் சென்று கடமை முடிப்பான். தூக்கம், பசி எல்லாமே அவன் கடமை கண்டு அஞ்சிப்போகும். ஒரு பொழுது அக்கராயன் மருத்துவ மனையில் வேலை முடித்து இரவு இரண்டு மணியளவில் கிளிநொச்சியில் உள்ள எமது கிளி மருத்துவ மனைக்கு வரும் வழியில் நித்திரை’, பசி களைப்பால் வந்த அசதியால் கோணாவில் அக்கரையான் வீதியில் நிறுத்தி‌ வைக்கப்பட்டிருந்த உழவு இயந்திரப்பெட்டியுடன் மோதி மூக்கில் காயத்துடன் இரத்தம் சிந்த வந்து சேர்ந்தான்‌. நண்பர்கள் எல்லோரும் “நின்ற பெட்டியை உடைத்த பெருமைக்குரியவ ன்” அதை சொல்லி சொல்லி சிரித்தால் தானும் சேர்ந்து சிரித்து சமாளித்து விடுவான். மூக்கில் தையல்கள் போடப்பட்டன அன்று, அடுத்த நாள் நாகர்கோவில் பகுதியில் மக்களிற்கான சிறப்பு மருத்துவ முகாம்‌ ஒழுங்கும் ஒன்று இருந்தது. “சுதர்சன் நீங்கள் வர வேண்டாம் தையல் போட்டிருக்கு, பற் சிகிச்சையை நிறுத்திவிட்டு மற்றவைகளைப் பார்ப்போம். நீங்கள் ஓய்வு எடுங்கள்” என்று பொறுப்பு வைத்தியர் கூற இல்லை என்று அடம்பிடித்து முதல் ஆளாய் பற்சிகிற்சைப் பொருட்களுடன் வாகனத்தில் ஏறிக்கொண்டது, இன்றும் அவன் பணிபற்றியதை நினைத்துப் பெருமைப்பட வைக்கின்றது. சில நாட்கள் முன் கிளிநொச்சி மாவட்ட வேராவில் கிராமத்தை சேர்ந்த வயதான தாயொருவருடன் கதைத்தேன் எந்தத் தடுமாற்றமும் இன்றித் தெளிவாகப் பெயர் சொல்லி “சுதர்சன் டொக்டர்‌ இப்போ எங்கே” என‌க் கேட்டபோது பதில் சொல்ல‌ முடியாமல் தவித்து நின்ற எனக்கு அந்தப் பிள்ளை என்ர பல்லை எப்படி நோகாமல் கொள்ளாமல் வடிவா கதைச்சு கதைச்சுப் பிடுங்கிவிட்டவர். வெற்றிலை போடக்கூடாது ,புகையிலையும் போட வேண்டாம் என்று ஒவ்வொரு முறையும் கிளினிக்( clinic ) வரும் போது சொல்லிச் சொல்லி நிறுத்த வைத்திட்டார். தங்கமான பிள்ளை அது தான் என்ர வருத்தம் எல்லாம் குறைஞ்சு உயிருடன் இருக்கிறன். இந்த வயது வரை அதை நான் மறக்கவில்லை என்றார்‌” இவரைப் போல் இன்னும் எத்தனை அம்மாக்கள் உன்னைத் தேடிக்கொண்டிருப்பார்கள் சுதர்சன். இவன் நாட்டிற்கும் எம் மக்களிற்கும் செய்த சேவைகளை மறந்து போகமாட்டார்கள். ஊர் உறங்கிப் போனாலும் உன் நினனவுகள் .ஊற்றெடுத்துக் கொண்டேயிருக்கும் எம் மண்ணிலிருந்து……………….. இவனது சேவையின் சாட்சியாய் இவரைப் போல் இன்னும் பலரும் உயிருடன் உள்ளனர். நீ மட்டும் இன்றில்லை மருத்துவ பொருட்களிற்கு தடை போட்ட நாட்களில் கிடைத்த தொழில் நுட்பத்தில் Diagnostic Radiology (X _ray) பரிசோதனைகள் செய்வதில் அன்று நீ எங்கள் போராளி நோயாளிகளின் கதாநாயகன். “சுதர்சன் அண்ணா எப்ப எக்ஸ்ரே எடுக்கிறது” என்று மருத்துவமனையில் உள்ள என்பு முறிவு நோயாளர்கள் உன்னையே சுற்றுவார்கள். அதற்கான மருத்துவப் பொருட்கள் வரும்வரை அவர்களை சமாளிக்க‌ நீ படும்பாடு. ஏன் எம்மைக் கேட்டாலும் நாம் தப்பிவிட உன்னைத் தானே காட்டுவோம். உனக்கு உதவியாக எந்த போராளி வந்தாலும் உனக்கு தெரிந்தவற்றை அவர்களிற்கு சொல்லிக்கொடுத்து அவர்களை அத்துறையில் வளர்ப்பதில் உனக்கு நிகரில்லை. மருத்துவப் பிரிவில் மட்டுமின்றி படையணி போராளிகள், பொறுப்பாளர்கள் ,தளபதிகள் என்று‌‌ நட்பு பாராட்டிய தோழன் “எல்லோருக்கும் செல்லப்பிள்ளையாக இருந்த நீ, இன்று எல்லோரையும் தேடலில் தவிக்க விட்டுச் சென்றாயே. யாருக்கு என்ன உதவி தேவையென்றாலும் முதலாவது ஆளாக வந்து நிற்பாயே ”! அன்றொரு நாள் உடனே இரத்தம் ஏற்ற வேண்டியிருந்தபோது முதலாவது ஆளாக நீதானே தந்தாய். சுதர்சன்.உன் நினைவுகள் என்றென்றும் எம்முடன் வாழும்”. இவ்வாறு அண்மையில் பெண் போராளி இவன்‌ நினைவைப் பகிர்ந்து கொண்டாள். இவன்‌ தன் தேசத்தை மட்டும் நேசிக்கவில்லை. நண்பர்களையும் அதிகமாக நேசித்தான். ‌அவர்கள்‌‌ எதைக்கேட்டாலும் இல்லை என்று சொல்லாமல் செய்து முடிப்பது இவனுக்குத் தனிச்சிறப்பு . சில வேளைகளில் நண்பர்களிற்காக நீயே தண்டனையையும் பெற்றிருக்கின்றாய். அவ்வளவு பரந்த மனம். மற்றவர்களின் மகிழ்வில் இவன் முகம் மலரும்‌. , இவனுக்கு நண்பர்கள் பல செல்லப்பெயர்களை வைத்து அழைத்த போதும் நீ கடிந்து கொண்டதாய் நான் அறியவில்லை. சுதர்சன்‌‌ உந்துருளியில் பயணிக்கும் போது வீதியால் எந்தத் தாய் நடந்து வந்தாலும் அவர்களை ஏற்றி உன் பயண முடிவுவரை அழைத்துப் போவாய், ‌ இன்று அமரத்துவம் அடைந்து விட்ட மாவீரனின் தாயும் நாட்டுப்பற்றாளரும், மருந்தாளருமாக இருந்த கந்தசாமி அம்மாவை நான் பார்த்த போது கட்டிப்பிடித்து கதறிவிட்டு சுதர்சன் எங்கே இருக்கிறான் என்று கேட்டா நான் நொருங்கிய இதமாய் தவித்து உன் செய்தியை ஆறுதலாகவே சொன்னேன் உன் இழப்பிலிருந்து மீளமுடியாது தவித்தா, “என்ர பிள்ளை எங்க கண்டாலும் என்ன ஏத்தி கொண்டுபோய் விடும்” தன் மனத்திற்கு எது சரியோ அதை செய்துவிடுவான்.புகைப்படம் எடுப்பதில் அலாதிப் பிரியம் அவனுக்கு இப்படியான குறும்பு தனங்களிற்கு தண்டனை வாங்குவதைப்பற்றி கவலைப்படுவதே இல்லை அவன். நான் பிரான்ஸ் சென்ற போது உன் நண்பர் ஒருவர் புகைப்படங்களை வைத்து உன் நினைவில் உருகிப்போய் இருப்பதை பார்த்தேன், உனக்கு எப்போதும் பிடித்த இந்த பெட்டி சேட் புகைப்படங்கள் அவரிடம் பெற்றதே உன் காதுகளிற்கு கேட்காத இந்த நினைவுகளை நாம் எமக்குள் சொல்லிக் கொள்கின்றோம், உன் அன்பிற்கும் மதிப்புற்குமான மூத்த வைத்தியர்கள் உன் பற்றிய நினைவுகளை பேசும் போதெல்லாம் உடைந்து போகின்றார்கள். உன் உறவுகள் நீ இல்லாத செய்தியால் கண்ணீரில் கரைகின்றனர்…. உனக்கு கேட்காத அந்த செய்திகளை நாம் அவ்வப்போது பகிர்ந்து கொள்கின்றோம்… இறுதி நாளில் நீ எங்கே போனாய் என்று இன்றுவரை அறியாதவர்களாய்த் தேடுகின்றோம் எப்படி மறப்பது நடமாடும் வைத்திய சேவையின் தமிழீழச் சிறப்பு பல் மருத்துவர் சுதர்சன் ஒன்றாக இருந்த நாட்களை‌ இறுதியாக வட்டுவாகலில் மே 17,ம் திகதி வைத்து விசாரணைக்காக‌ இலங்கை இராணுவ புலானாய்வு துறையினர் கூட்டி சென்று இருத்தி வைத்திருந்ததை பார்த்ததாக உன் நண்பன் வண்ணன் கூறினான். இன்று வரை எங்கே என்று தேடுகின்றோம்‌. சுதர்ஷன் பற்றிய நினைவுகள் நெஞ்சக்கூட்டை பலமாய் அழுத்துகின்றது. நிஜமாக அவனுடன் பேசமுடியவில்லை எம் நிழலாக விட்டுச்சென்ற கனதிகளுடன் பேசுகின்றோம். மிதயா கானவி.
  2. பல மாவீரர்களை தாயக விடுதலைக்காக தந்த பருத்தித்துறை மண்ணில் இருந்து 1991 இல் தாயகப் போருக்காக தன்னையும் இயக்கத்தில் இணைத்துக் கொண்டான் ஜெயரூபன்.மூன்று அண்ணன்களுக்கு தம்பியாகவும் தங்கைக்கு அண்ணாவாகவும் ஜெயராசா தம்பதிகளுக்கு மகனாக10.08.1975 அன்று பிறந்தான் ஜெயரூபன். போராளியாக இணைந்தவனை படையணியின் சரத்பாபு 02 பயிற்சி முகாம் உரமூட்டி வளர்த்தது. ஜெயரூபன் அற்புதனாகி வெளிவந்தான். பயிற்சியை முடித்து வெளி வந்தவனின் முதல் களம் ஆகாய.கடல் .வெளி சமர் வரவேற்றது. ஆவன் வீரத்தை வெளிப்படுத்த அக்களமே வழிவகுத்தது . மீண்டும் தளம் திரும்பியவனை படையணி தளபதியாக இருந்த பிரிகேடியர் சொர்ணம் அவர்களால் விமான எதிர்ப்பு அணிக்குத் தெரிவு செய்யப்பட்டான். சிறப்பாகத் தனது பயிற்சியைச் செய்து கொண்டிருந்தவனை மீண்டும் களம் அழைத்தது. காட்டைக்காடு மினி முகாம் தகர்ப்பு. இம்ரான் பாண்டியன் படையணி பெயர் சூட்டப்பட்ட தாக்குதல் பலவேய 02 சமர்களில் பங்கு கொண்டு தனது வீரத்தை வெளிக்காட்டினான். மீண்டும் விமான எதிர்ப்பு அணியில் பணியாற்றினான். இவனின் கடமை உணர்வை அறிந்த தளபதி சொர்ணம் அவர்கள் தலைவருக்கான வெளி பாதுகாப்புப் பணிக்குத் தெரிவு செய்தார். அங்கு தனது திறமையையும் கடமை உணர்வையும் சிறப்பாகவே வெளிக்கட்டினான். இதனால் வெளி பாதுகாப்பு அணியில் சில பகுதிகளுக்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டான். வெளிப்பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட பொழுது மக்களின் மதிப்பையும் பெற்ற சிறந்த போராளியாக விளங்கினான். 1995 ஆம் ஆண்டு இறுதியில் விசேட இராணுவப் பயிற்சிக்குத் தெரிவு செய்யப்பட்டான். கடுமையான பயிற்சிகளையெல்லாம் மிகவும் இலகுவாகச் செய்து முடிப்பான். இதனால் ஆசிரியர்களால் முன்னுதாரணமாக எப்போதுமே காட்டப்பட்டு பாராட்டுக்களையும் பெற்றவன். இவன் இருக்குமிடம் என்றும் கலகலப்புக்கு குறைவே இருக்காது. அற்புதன் தனது தலை முடியில் மிகவும் கவனம் கூடியவன். பெண்கள் தோற்றுப் போகும் அளவுக்கு நீண்ட நேரம் கண்ணாடி முன் நின்று தலையை இழுப்பான். அவனது அழகின் பெருமையே அவனது தலைமுடிதான். எப்போதும் தலைமுடியை அழகாகவே வைத்திருப்பான். யாழ் இடப்பெயர்வுக்குப் பின் வன்னி மண்ணில் சில காலம் பணியாற்றியவன். சண்டைக்கு போகப்போகிறேன் என அடம்பிடித்து ஆனையிறவு , பரந்தன் ஊடறுப்புச் சமரில் 7பேர் கொண்ட அணிக்கு பொறுப்பாளராக சென்றான். உப்பளப் முகாம் மீட்புக்கான சமரில் சமராடிய அற்புதன் 09.01.1997 அன்று உப்பளக் காற்றுடன் சங்கமமாகி மாவீரனாகினான். எங்களின் தோழன் கப்டன் அற்புதனை நாங்கள் இழந்து போனோம் உப்பளத்தில். கரும்புலியாகப் போக விரும்பி தலைவருக்குக் கடிதம் அனுப்பியிருந்ததான். ஆனால் அவன் விரும்பிய கரும்புலிக்கான பதில் வர முன் அவன் மாவீரன் ஆகிவிட்டான். எங்கள் தோழன் அற்புதன். எங்கள் தோழன் எங்களைப் பிரிந்து பல ஆண்டுகள் இன்றோடு நிறைகிறது. அவன் விட்டுச் சென்ற கனவுகள் தொடர்ந்து கொண்டேயிருக்க அவன் நினைவுகளை நாங்கள் சுமந்து கொண்டு செல்கிறோம். தமிழீழ தாயக விடுதலைக்காகவும் தமிழீழ மக்களின் விடிவுக்காகவும் எதிரியுடன் களமாடி வீழ்ந்த கப்டன் அற்புதன் அண்ணாவிற்கு எங்கள் வீர வணக்கத்தை தெரிவித்து கொள்கின்றோம். மற்றும் இதே நாள் வீரச்சாவடைந்த ஏனைய போராளிகளுக்கும் எங்கள் வீர வணக்கத்தை தெரிவித்து கொள்கின்றோம். தமிழீழம் கிடைக்கும் வரை உங்களை நிச்சயம் தொடர்வோம். || புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் || - நினைவுப்பகிர்வு – எழிலகன் (09.01.2014)
  3. 2008 ல் மன்னார் களமுனையில் சாதனை புரிந்த தமிழீழ விடுதலைப்புலிகளின் போராளிகளுக்கு மதிப்பளிக்கும் நிகழ்வில் சிறப்புரையாற்றும் போது கேணல் பானு “எமது பலத்தை நிரூபிக்கும்போது சர்வதேசம் வலிந்து உதவும்” என தெரிவித்திருந்தார். இந்நிகழ்வில் மன்னார் கட்டளைத் தளபதி கேணல் பானு ஆற்றிய மதிப்பளிப்பு உரை: ஒரு படையணியின் செயற்பாடு என்பது அதன் செயற்பாட்டிலேயே தங்கியுள்ளது. தமிழீழ தேசியத் தலைவரின் எண்ணங்களுக்கு வடிவம் கொடுக்க பிரிகேடியர் தமிழ்ச்செல்வனால் உருவாக்கப்பட்ட பூநகரிப் படையணி திறம்படச் செயற்பட்டு வருகின்றது. மன்னார் களமுனையில் பூநகரிப் படையணி சிறப்பாக செயற்பட்டிருக்கின்றது. எதிரியின் முன்னேற்ற நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துவதில் பூநகரிப் படையணியின் செயற்பாடு பாராட்டுக்குரியது. எதிரியின் பல நடவடிக்கைகள் தொடர்ச்சியாக எமது போராளிகளால் முறியடிக்கப்பட்டிருக்கின்றது. பெருமளவில் எதிரிகளை நாம் களமுனையில் இருந்து அகற்றியிருக்கின்றோம். எமது போராளிகள் வீரச்சாவடைந்திருக்கின்றனர். போர்க்களங்களில் இழப்புக்களில் இருந்தே பட்டறிவையும் வெற்றிகளையும் அடைகின்றோம். தமிழர்களைப் பொறுத்த வரை போரியல் வெற்றிகள் மூலமே பல மாற்றங்களை உருவாக்க முடியும். அதனை நாம் உறுதிப்படுத்தி வருகின்றோம் என்றார் அவர். தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் போர் மூலோபாயங்களுக்குச் செயல் வடிவம் கொடுப்பதற்கு நாம் ஒன்றுதிரண்டு உழைக்க வேண்டும். நாம் எமது நிலங்களை எதிரியின் வல்வளைப்பு வலிந்த தாக்குதல் போரில் இழந்திருக்கின்றோம். ஆனால் நாம் எமது பலத்தை இழக்கவில்லை. நாம் போரில் வெற்றி பெறுவது உறுதி. 2009 ம் ஆண்டை தனது “படையினரின் ஆண்டு” எனப் பிரகடனப்படுத்தியுள்ளார் மகிந்த ராஜபக்ச. அவரது படையினருக்கான ஆண்டை நாம் அவர்களது “அழிவு ஆண்டு” என மாற்றுவோம். எமது மக்கள் சிறிலங்கா படைத் தாக்குதல் மற்றும் வல்வளைப்புக்களால் இடம்பெயர்ந்து பெரும் துயரை அனுபவித்து வருகின்றனர். மிக மோசமான அவலத்தை சந்தித்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அவர்கள் நம்பிக்கையுடன் இருக்கின்றனர். இறுதி வெற்றி யாருக்கு என்பதை நாம் பார்க்கலாம். சிங்கள அரசு வெளிநாடுகளின் உதவிகளை பெற்றுக்கொண்டு போரை நடத்துகின்றது. நாம் எமது மக்களின் பலத்தில் நிற்கின்றோம். நாம் பலத்தை நிரூபிக்கின்ற போது வெளிநாடுகள் தாமாகவே என்ன உதவி வேண்டும் என்று கேட்கும் நிலை வரும். நாம் எமது மக்களுக்கு எதிரி தரும் அவலங்களை திருப்பிக்கொடுக்க வேண்டும். இன்று சிறிலங்கா பெரும் நெருக்கடிக்குள் இருக்கின்றது. அது பெரும் பொருண்மிய நெருக்கடிக்குள் சிக்கியுள்ளது. இன்னும் பெரும் பொருண்மிய உடைவு அவர்களுக்கு ஏற்படவுள்ளது. உறுதியாக நாம் வெல்லுவோம் எனவும் கேணல் பானு தெரிவித்துள்ளார். https://eelavarkural.wordpress.com/2012/05/16/brigadier-banu/
  4. கைமாறிய கனவுகளோடு களங்காணும் 2ம் லெப் மாலதி படையணி. வல்வெட்டித்துறை – தீருவில் வெளியில் பன்னிரு வேங்கைகளின் வித்துடல்களும், எரியக்காத்திருக்கும் சிதையின் மேல் அடுக்கப்பட்டன. ” இந்தியா எமது மக்களைக் காப்பாற்றும் என்ற நம்பிக்கையில் கீழே வைத்த ஆயுதங்களை இப்போது மறுபடி மேலே உயர்த்துகிறோம் ” என்று ஒரு குரல் ஓங்கி ஒலித்தது. சுடுகலன்கள் மேலே உயர்த்தப்பட்டன. வானத்தைக் கிழித்தபடி மரியாதை வேட்டுக்கள் செந்நிறமாகப் பயணித்தன. இந்திய – ஈழப்போர் தொடங்கிவிட்டது. நாவற்குழிப் படைத்தளத்திலிருக்கும் இந்திய இராணுவம் முன்னேறினால் மோதவென கோப்பாயில ; பதினைநது பேர் கொண்ட பெண்களணி தயாரானது. கைகளில் இரண்டொரு நாட்களின் முன் அவசர அவசரமாக வழங்கப்பட்ட AK 47, ஒரேயொரு ரவைக்கூட்டுடன் அதுகூட எல்லோரிடமுமில்லை. ஏனையவர்கள் ரவைகளைத் துணி முடிச்சில் கட்டியபடி, குண்டுகளுடன். 2ஆம் லெப் மாலதி, 2ஆம் லெப் கஸ்தூரி, வீரவேங்கைகள் விஜி, ஜெனா, தயா, ரஞ்சி தம்மிடம் உள்ளவற்றுடன் தயார் நிலையில். முன்னேறிவந்த இந்தியப் படைகளுக்கும், இவர்களுக்கும் சண்டை ஆரம்பித்தது. கடும் சண்டை. ரவை முடிய முடிய நிரப்பி நிரப்பிச் சண்டை. பெரும் பலத்துடன் பெருந்தொகையில் வந்து நின்ற உலகின் அன்றைய நான்காம் வல்லரசுப் படைகளோடு நின்று சண்டையிட முடியாத களநிலைமை எம்மவர்களைக் கோப்பாய் சந்திநோக்கி, சண்டையிட்டவாறு பின்னநகர்த்தத் தொடங்கியது. மாலதிக்குத் தொண்டையில் பெருங்காயம். நடக்க முடியவில்லை. இராணுவமோ நெருங்கிக்கொண்டிருந்தது. மாலதியை இழுத்துச் செல்ல விஜி முயற்சித்துக்கொண்டிருந்தார். முடியவில்லை. வல்லரசுப் படைகளுடனான போரில் தன்னால் இழப்பு வரக்கூடாது என்று முடிவெடுத்த மாலதி சயனைட்டை அருந்தினார். ” என்னை விட்டிட்டு ஆயுதத்தைக் கொண்டுபோய் அண்ணையிட்டைக் குடு ” என்றபடி தமிழீழ விடுதலைப் புலிகளின் முதல் பெண் மாவீரரானார். 2ம் லெப் மாலதியின் வீர வரலாற்று நினைவுகள். கருவி கைமாறியது கனவுகள் கைமாறின. மாலதி, தாய் நிலம் விடியும் எனும் கனவோடு மண்ணிலே நீ விழுந்தாய். உன் பெயர் சொல்லி எம் படையணி தன்னை அண்ணன் வளர்த்தெடுத்தான். (நன்றி – கவிதை அம்புலி) சூரியக் கதிர் – 01 எதிர் நடவடிக்கையின் முடிவில், விடுதலைப்புலிகள் மகளிர் படையணி, தன்னை 2ஆம் லெப்.மாலதி படையணியாக உருமாற்றியிருந்தது. சூரியக் கதிர் – 02 நடவடிக்கைக்கு சிங்களப் படைத்தலைமை தயாரானது. 2ஆம் லெப்.மாலதி படையணி வடமராட்சியின் வாதரவத்தை, கப்புதூ, மண்டான், வல்வை வெளி, தொண்டமனாற்றுச்சந்திப் பகுதிகளில் நிலைகொண்டது. சிங்களப் படையினரின் நடவடிக்கையில் தெரிந்த வேறுபாடு, அவர்களின் வரவு வாதரவத்தைப் பக்கமாக இருக்கலாம் என்ற ஊகத்தை ஏற்படுத்தியது. எமது வேவு நடவடிக்கை தொடங்கியது. வாதரவத்தையின் வெளிப்புறக் காப்பரண்களைக் கடந்து எம்மவர்கள் உள்நுழைய, இரவைப் பகலாக்கும் மின் விளக்குகள் ஒப்பவில்லை. கப்டன் கோபியின் அணி மறுபடி மறுபடி முயன்றது. காப்பரண்களுக்கு முன்னால் நாட்டப்பட்டுள்ள கம்பங்களில் சில மின்விளக்குகள் எமது புறமாகவும், சில படையினரைப் பார்த்தபடியும் கட்டப்பட்டிருந்தன. எமக்கு எதிர்த்திசையில் கட்டப்பட்ட மின் விளக்கு ஒளிரும்போது எம் திசையிலிருக்கும் கம்பம் சிறுகோடாக நிழலை விழுத்தும். அந்த நிழலைப் பயன்படுத்திக்கூட பகையரணை நெருங்க பலமுறை முயன்றும் …… படையினர் நடவடிக்கையைத் தொடங்கப்போகின்றனர் என்று உள்ளுணர்வு சொன்னது. இன்று நான்காவது நாள் எப்படியாவது போயாக வேண்டும். இப்போது முன்னிலவு. பின்னிருட்டு நள்ளிரவில் மின் பிறப்பாக்கி ஓய்வெடுக்கும் 10 – 15 நிமிட இடைவெளியைப் பயன்படுத்தி உள்நுழைந்து, நிலைமையை அவதானித்து திரும்பிவரும் முடிவை கோபி எடுத்தார். இது சரிவருமா, இல்லையா என்று யோசித்துக்கொண்டிருக்க நேரமுமில்லை. இதை விட்டால் படைத் தளத்தினுட்புக வேறு வழியுமில்லை. 1996 ஏப்பிரல் 02 கோபியின் அணி நகர்ந்தது. முன்னணி அவதானிப்பு நிலையை அடைந்தது. சற்று நிதானித்து, மேலும் முன்னகர்ந்து தடைக் கம்பியை நெருங்க முன்பே வழியில் இராணுவம் எதிர்ப்பட்டது. முயற்சியைக் கைவிடமுடியாது. போகத்தான் வேண்டும். மெல்லப் பக்கவாட்டாக விலகி, மீண்டும் முன்னேற, மறுபடியும் இராணுவம் எதிர்ப்பட்டது. மீண்டும் பக்கவாட்டாக விலகி, முன்னோக்கி நகர முயல, மின்பிறப்பாக்கி ஓய்ந்தது. இனித் தாமதிக்க முடியாது. பத்து நிமிடங்களுள் உள்நுழைந்து வெளித்திரும்ப வேண்டும் ஓட்டத்தில் போய் முதலாவது தடைக் கம்பியை உள்நுழைவதற்காக உயர்த்திப் பிடிக்க, ஒருவர் உள்நுழைய முயல, தடைக் கம்பியிலிருந்து ஐந்து மீற்றர் முன்னே இராணுவம் நிற்பதைக் கண்ட கோபி, சைகை காட்டி, நகர்வை நிறுத்தினார். அதற்குள் மின் விளக்குகள் உயிர் பெற்றன. இனி ஒரு கணம் அங்கே நிற்பதும் தற்கொலைக்கு ஒப்பானது. இவர்கள் விலகத்தொடங்க சிறிலங்கா இராணுவம் சுடத்தொடங்க, இவர்களும் கைக்குண்டுகளை வீசியபடி சுட்டுச் சுட்டுப் பின்னகர, அந்த வெட்டை வெளிச்சண்டையில் கப்டன் கோபி 2ம் லெப்.மாலதி படையணியின் முதல் மாவீரராகி, இப்போது பத்தாண்டுகள். 2ம் லெப்.மாலதியின் பெயரைச் சுமக்கும் படையணி, முதல் மாவீரர் கப்டன் கோபியைப் போலவே முடியாதென்று எதையும் விடாது, எங்கும் எப்போதும் முயன்றபடி. 2ம் லெப் மாலதி படையணி உண்மை வெற்றி – 01 எதிர் நடவடிக்கையின் ஆரம்ப நாட்களிலேயே கொம்பனிக்குரிய வேவு அணியில் ஒருவராக லெப்.தமிழ்பிரியா பயிற்றுவிக்கப்பட்டார். நிதானமும் அமைதியுமான இயல்பைக்கொண்ட அவருக்கு வேவு மிகவும் பொருத்தமான பணிதான். தாக்குதலணிகளின் காப்பரண்களைக் கடந்து முன்புறம் போய் இரவெல்லாம் சிங்களப் படைக்கு மிக அருகேயும், பகலில் சற்றுப் பின்னே வந்து உயரமான மரங்களில் ஏறி நின்று படையினரைக் கண்காணிப்பதுமான கடின வேவுப்பணியில் தமிழ்பிரியா ஈடுபட்டார். உருத்திரபுரம் புனித பற்றிமா கல்லூரியில் நிலைகொண்டிருந்த சிங்களப் படையினரை 1996.09.26 அன்று நாம் உட்புகுந்து தாக்கியழித்த நடவடிக்கையில் காயமடைந்த போராளிகளுக்கு வழிகாட்டிப் பின்னே நகர்த்திவிட்டு, மறுபடி முன்னேவந்து காயக்காரர்களைப் பின்னே கூட்டிப்போய் என்று, நடவடிக்கை முடியும் வரை இடைவிடாத நடைதான். மாபெரும் படை நகர்வொன்று சிங்களப் படைகளால் முன்னெடுக்கப்பட்டிருந்தது. எப்படி, எப்போது எங்கே என்பது தெரியவில்லை. 2ம் லெப்.மாலதி படையணியின் கொம்பனி ஒன்று உடங்காவில் நிலைகொண்டிருந்தது. பரந்துபட்ட நிலப்பரப்பைக் கண்காணிப்பில் வைத்திருக்கப் போதிய ஆளணியில்லாததால் 2ஆம் லெப் மாலதி படையணியின் வேவு அணிகள் சம்பளங்குளம், ஒதியமலை, உடங்கா, தண்ணீர் முறிப்புப் பகுதிகளில் உலாவிக்கொண்டிருந்தன. உடங்காப் பகுதியில் இரு தடவைகள் சிறிலங்காப் படையினரின் வேவு அணிகளைச் சந்தித்து, எமது அணிகள் தாக்கியிருந்தன. இந்தா, அந்தா என்றிருந்தது சண்டை தொடங்கும் நாள். 1997.05.13 அன்று தொடங்கியது ” வெற்றி நிச்சயம் ” என்று பெயர் சூட்டப்பட்ட, சிங்களத்தின் தோல்வி நடவடிக்கை. உடங்கா வெட்டையில் நின்ற 2ஆம் லெப்.மாலதி படையணியின் வேவு அணியையே வெற்றி நிச்சயம் நடவடிக்கைப் படைகள் முதலில் சந்தித்தன. வெற்றி நிச்சயம் எதிர் நடவடிக்கையின் முதல் மாவீரராக லெப்.தமிழ்பிரியா வரலாற்றில் பொறிக்கப்பட்டார். ” புளியங்குளச் சந்திப் பகுதியை வேறு படையணிகள் பாதுகாக்கும். சந்திக்கருகே இராணுவம் வந்து நிலைகொண்டு சண்டை பிடிக்குமானால், தளத்தைத் தக்கவைப்பது கடினம். நீண்டகாலம் புளியங்குளச் சந்தியை எமது கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டுமானால் நீங்கள் அவர்களுக்கு வெளிப்புறமாகத் தடுப்பரண்களை அமைத்து நின்று, சண்டையிட்டு எதிரிக்குச் சேதத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்க வேண்டும். அதை நீங்கள் போய் செய்யுங்கள் ” என்றார் தமிழீழத் தேசியத் தலைவர் திரு.வே.பிரபாகரன் அவர்கள். வீரர்களின் வாழ்வில் முடியாது என்று ஒன்று இருக்கின்றதா? புறப்பட்டது 2ஆம் லெப்.மாலதி படையணி. நெடுங்கேணியிலிருந்து புளியங்குளத்துக்குக் கால் நடையாகவே வந்து சேர்ந்தது. தலைவர் சொன்னபடி தளத்துக்கு வெளிப்புறமாகத் தடுப்பரண்களை அமைத்தது. வவுனியா – கிளிநொச்சி நெடுஞ்சாலையின் இருபுறமும் சிறகுகள் வடிவில் விரிந்து நின்று, புளியங்குளத் தளத்துக்குக் காப்பு வழங்கியது. தனக்கு முன்னே படையணியின் வேவு அணியினரை உலாவவிட்டது. 1997.06.23 அன்று அதிகாலை பெருமெடுப்பில் ராங்கிகள் இரைய, குண்டுவீச்சு விமானங்கள் கூவ, எறிகணைகளை மழையாக வீசியபடி முன்னேறி வந்த படையினரோடு முதலில் மோதியது மேஜர் அரசியின் தலைமையிலான ஐந்து வேவுப் போராளிகளே. பழைய காயங்கள், நோய் காரணமாக களமுனை மருத்துவ வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தவர்களை முன்னரங்குக்கு நகர்த்தி, முன்னரங்கில் நின்றவர்கள் தம்மைத் தயார்ப்படுத்தும் வரை வேவு அணி சண்டையிட, எல்லோரும் தயாரானதும் அவர்கள் பின்னகர, முன்னரங்கப் போராகளிகள் சண்டையிட்டனர். எறிகணைகளால் தூக்கி விசிறப்பட்டு மண்குவியல்களான காப்பரண்களைக் கைகளால் விறாண்டி விட்டுப் படுத்திருந்து அடித்தவர்களும், இயங்கு நிலைத்தடையேற்பட்ட கனரக ஆயுதங்களை சீர் செய்து, சீர் செய்து அடித்தவர்களும், காயங்களைக் கட்டிவிட்டுத் தொடர்ந்து நின்று சண்டையிட்டவர்களும் வெற்றியை எமக்கே உரித்தாக்கியிருந்தனர். காலை 5.00 மணியளவிலிருந்து மாலை 5.00 மணியளவு வரை தொடர்ந்த அந்தப் பெருஞ்சண்டையில் படையணி 2ம் லெப்.மாலதியின் பெயரையும் கப்டன் கோபியின் பெயரையும் நிலைநிறுத்தியிருந்தது. தமிழீழ விடுதலைப் போராட்டத்தை உலுப்பிய இரு பெரும் சமர்களான இந்திய இராணுவப் போரையும், வெற்றி நிச்சயம் நடவடிக்கையையும் எதிர்கொண்டு, முதல் மாவீரர்களை ஈகம் செய்த நிமிர்வில், இனிவரும் சமர்களையும் வெற்றிகொள்ளும் துணிவில், களமெங்கும் காத்திருக்கின்றது படையணி. “ஆயிரத்து நூற்று இருபத்தைந்து மாவீரர்களை மண்ணுக்கு ஈர்ந்து பெருமையோடு நிமிர்ந்துகொள்கின்றது படையணி” - மலைமகள். தமிழீழ விடுதலைப்புலிகள் இதழ் (மாசி – பங்குனி 2006)
  5. நீண்ட வரலாற்றையும், காலத்திற்குக்காலம் எழுச்சிகொண்டு அரசாட்சி உரிமையையும் தன்னகத்தே கொண்டுள்ள தமிழினம், தமிழீழத்தில் எழுச்சிகொண்டபோது தாய்மண்ணின் விடுதலைக்காக எழுந்த மாபெரும் விடுதலைப்போரில் விடுதலைப் புலிகள் இயக்கம் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் உறுதியான வழிநடத்தலில் இலக்குத்தவறாத இலட்சியப் பாதையில் முள்ளிவாய்க்கால் வரை பயணித்தது. தமிழ்மக்களின் விடுதலைக்காகப் போராளியாகப் பிறந்தவர் எமது தேசியத் தலைவர். அவரினால் உருவாக்கப்பட்ட போராளிகளில் இணைந்த காலம்முதல் இறுதிவரை பயணித்த தளபதிகளில் பிரிகேடியர்.பானு அவர்களும் ஒருவராகவிருந்தார். உலகில் அடக்கப்பட்டு,அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற ஒரு தேசிய இனத்தின் விடுதலைப் போர் பற்றிய வரலாறு என்பது காலம் குறித்து எழுதி முடிக்கப்படக்கூடிய ஒன்றல்ல,விரிவாக ஒவ்வொரு காலகட்டத்தையும் வைத்து எழுதப்பட வேண்டிய ஒன்றாகும்.தளபதி பானு அவர்களைப் பற்றி எழுதுகின்றபோது, முழு வரலாறும் எழுத வேண்டிய நிலை இருந்தும் இத் தொடரில் அதனை எழுத முடியாது என்பதனால் அவருடைய விடுதலை சார்ந்த சில நிகழ்வுகளை இங்கு பதிவாக வைப்பதற்கு விரும்புகின்றோம்.இணைந்த காலம் முதல் இறுதிவரை பயணித்த தளபதிகளில் ஒருவரான பானு அவர்களைப் பற்றி குறிப்பிடுகின்றபொழுது மாபெரும் விடுதலை இயக்கத்தின் முக்கிய வரலாற்று நிகழ்வுகளிலும் அவருடைய பங்களிப்பு இருந்திருக்கின்றது. தமிழீழத்தின் யாழ் மண்ணின் பெருமைக்குரிய தளபதிகளில் ஒருவரான பானு அரியாலை என்னும் ஊரைப் பிறப்பிடமாகக்கொண்டவர்.காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் வேலை செய்துகொண்டிருந்தபோது 1983 ம் ஆண்டு யூலை மாதத்தில் இடம்பெற்ற தமிழின அழிப்பின் கோரத்தைக்கண்டு சினந்தெழுந்த இளைஞர்களில் ஒருவராக விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். யாழ்ப்பாணத்தில் அரியாலை என்கின்ற ஊர் போராட்ட வரலாற்றில் புதிய அத்தியாயம் ஒன்றை ஆரம்பித்து அழியாத பதிவைக் கொண்டுள்ள விடுதலைப் புலிகளின் ஆரம்ப மறைவிடங்களில் ஒன்றாகவும் பதியப்பட்டுள்ளது. மூத்த மாவீரர்களான லெப்.சீலன், லெப் .கேணல் புலேந்திரன் போன்ற முன்னணிப் போராளிகள் விடுதலைக்கான செயல்பாடுகளுக்காக இங்கு தங்கியிருந்து செயல்பட்டனர். யாழ்ப்பணத்தில் ஏனைய பகுதிகளில் தாக்குதல்களை நடத்தியபோதும், போராளிகளின் மறைந்த வாழ்விடம் அரியாலையிலும் அமைந்திருந்தது. இந்தவகையில் போராட்ட வரலாற்றில் முக்கிய இடத்தையும் அரியாலை பெற்றுள்ளது.தமிழ்மக்களின் விடுதலைக்காக முழு மூச்சாக எழுந்த மூத்த போராளிகளான லெப்.கேணல் சந்தோசம், தளபதி பொட்டம்மான் போன்றவர்கள் அரியாலை மண்ணில்தான் பிறந்தார்கள் என்பதில் இந்தமண்ணுக்கு மேலும் சிறப்பான ஓர் இடம் வரலாற்றில் கிடைத்திருக்கின்றது. இந்தியாவில் விடுதலைப் புலிகளின் இரண்டாவது பாசறையில் படைத்துறைப் பயிற்சியைப் பெற்றுக்கொண்ட தளபதி பானு மன்னார் மாவட்டத்தளபதி லெப்.கேணல் விக்டர் அவர்களின் குழுவில் இணைக்கப்பட்டார். லெப்கேணல்.விக்டர் தலைமையிலான குழுவினர் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து பணியை மேற்கொண்டிருந்தவேளையில் தேசியத் தலைவர் அவர்களின் ஆணையின்படி மன்னார் மாவட்டத் தளபதியாக விக்டர் நியமனம் பெற்றார். அந்த வேளையில் தளபதி பானு லெப்கேணல் விக்டர் அவர்களுடன் மன்னார் மாவட்டத்திற்குச் சென்று விடுதலைக்கான பணியை மேற் கொண்டிருந்த வேளையில் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கான பொருளாதார மேம்பாட்டைக்கருத்தில்கொண்டு விவசாயப் பண்ணைகள்,நெற்செய்கை ,வியாபாரம் சிறு கைத்தொழில் போன்றவைகளை தனது இளம் வயதில் மிகுந்த திட்டமிடலில் மேற்கொண்டு ஏனைய மாவட்டப் போராளிகளுக்கு முன்மாதிரியாகவிருந்தார். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம், தமிழீழத்தில் யாழ்ப்பாணம், வன்னி, மன்னார்,திருகோணமலை,மட்டக்களப்பு-அம்பாறை ஆகிய ஐந்து பெரும்பிரிவுகளுக்கும் பொறுப்பாக தளபதிகள் பணிநியமனம் செய்தபோது மன்னார் மாவட்டத்திற்குத் தளபதியாக லெப் கேணல் விக்டர் பொறுப்பேற்றுக்கொண்டார். தேசியத்தலைவர் அவர்களின் மிகவும் நம்பிக்கைக்குரிய தளபதிகளில் லெப் கேணல் விக்டர் அவர்களும் ஒருவர் என்பதில் மன்னார் மண் பெருமிதம் கொள்ளுகின்றது. இக் காலத்தில் மன்னார் மாவட்ட விடுதலைப்புலிகள் என்றால் அவர்களுக்கு ஒரு அதிரடி அடையாளத்தை பெற்றுக்கொடுத்ததற்கு தளபதி விக்டர் அவர்களின் விடுதலையிலிருந்த பற்றும்,தீவிர தாக்குதல் நடவடிக்கைகளும்,தேசியத் தலைவர் மீது வைத்திருந்த மதிப்பும் காரணமாக அமைந்திருந்தன.விடுதலை புலிகள் இயக்கத்தின் முதல் லெப் கேணல் என்ற நிலையிலும் தளபதி விக்டர் போராட்ட வரலாற்றில் முக்கிய பதிவாகவும் இடம்பெற்றார். தளபதி விக்டர் உடன் களமாடிய பானு அன்று ஒவ்வொரு தாக்குதல்களிலும் விக்டருக்கு பாதுகாப்பு அரணாகவே பங்கெடுப்பார். தளபதி விக்டர் அவர்களைப் பாதுகாப்பதற்காக முன்னேறிய நிலையிலே தனது தாக்குதலை மேற்கொள்ளுவார் என்பதை அக் காலத்தில் போர்ப் பணியிலிருந்த போராளிகள் மூலமாக அறிந்துகொள்ளமுடிகின்றது. தமிழீழத்தில் தாய்த் தமிழகத்துக்கு மிக நெருக்கமாக அமைந்துள்ள மன்னார் தமிழர்களுடைய வரலாற்றில் எல்லோராலும் அறியப்பட்ட மிக முக்கியத்துவம் வாய்ந்த இடமாகவும் விளங்குகின்றது. தாய்த் தமிழகத்திற்கும், தமிழீழத்திற்குமான போக்கு வரவு த்துத்துறைமுகமாக இருக்கவேண்டிய நிலையிலுள்ள மன்னார் பல உலக நாடுகளின் எதிர் பார்ப்பில் எண்ணை வளமுள்ள இடமாகவும் மன்னார் வளைகுடா இருப்பதும்,இதற்கு ஒரு காரணமாக அமைகின்றது. லெப்கேணல் விக்டர் அவர்களின் வீரச்சாவினைத் தொடர்ந்து லெப் கேணல் ராதா மன்னார் மாவட்டத் தளபதியாக பணிநியமனம் பெற்றார். இக் காலத்தில் பானு தளபதி ராதா அவர்களின் தலைமையில் நடந்த பல தாக்குதல்களில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். நேர்த்தியான திட்டமிடலிலும், நிருவாகத்திறமையிலும் சிறந்து விளங்கிய தளபதி ராதா தேசியத் தலைவரினால் இனங்காணப்பட்ட மற்றுமொரு சிறந்த தளபதியாகும், விடுதலைப் புலிகளின் ஐந்தாவது பாசறையில் பயிற்றுனராக பணியாற்றிய தளபதி ராதா தேசியத் தலைவரினால் மிகவும் விரும்பப்பட்டவர்களில் ஒருவராகவிருந்தார்.மன்னார் மாவட்டத்தில் தளபதி ராதா அவர்களின் தாக்குதல் பணிகள் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு மேலும் ஒரு பலமான நிலையை உருவாக்கிக்கொடுத்தன. அமைதியும்,ஆற்றலும் நிறைந்த தளபதி ராதா அவர்களிடமிருந்து பல விடயங்களைக் கற்றுக்கொண்ட தளபதி பானு அவர்கள்,தளபதி ராதா அவர்கள் யாழ்மாவட்ட தளபதியாக தேசியத் தலைவரால் நியமிக்கப்பட்ட வேளையில் அவருடன் தான் பிறந்த மண்ணுக்கு பயணமானார்.அங்கும் தளபதி ராதா அவர்களின் தலைமையில் சிங்கள இராணுவத்தினருக்கெதிரான தாக்குதல்களில் பங்குகொண்டார். முகாமுக்குள் முடக்கி வைக்கப்பட்டிருந்த சிங்கள இராணுவத்தினரின் முன்னேற்ற நடவடிக்கைகளை தளபதி ராதா அவர்களின் தலைமையில் முன்னின்று தடுத்து ராதா அவர்களின் தாக்குதல் போராளிகளில் முதன்மைப் போராளியாக மாறியிருந்தார். யாழ்ப்பாணம் கட்டுவன் என்ற ஊரில் முன்னேறிய சிங்களப் படையினரை தடுத்து தாக்கும் பணியில் நடந்த சண்டையில் போராளிகளை தளத்திற்கு அனுப்பிவிட்டு திரும்பும் வேளையில் தளபதி ராதா தாக்குதலில் வீரச்சாவடைந்தார். வரலாற்றுக் கடமையைச் செய்வதற்காக,வரலாறு உருவாக்கிய தளபதிகள்,தங்கள் வீரச்சாவு வரை விழி மூடாது விடுதலைக்காக உழைத்தனர்.தங்கள் பாதம் பதிந்த தாய் மண்ணில் இறுதிவரை பயணித்தனர். 1987 ம் ஆண்டு காலப்பகுதியில் இந்திய இராணுவத்தினருடனான போர் மூண்டது. தேசியத் தலைவர் அவர்கள் மணலாறு சென்றார். தேசியத் தலைவரின் அழைப்பின் பேரில் மணலாறு சென்ற தளபதி பானு தலைவர் அவர்களின் பாதுகாப்புப் படைப்பிரிவில் பணியாற்றினார்.மணலாற்றில் நடந்த பல தாக்குதல்களில் ஈடுபட்டு தலைவர் அவர்களினால் தெரிவு செய்யப்பட்ட தளபதிகளில் ஒருவரானார். மன்னார் மாவட்டத் தளபதியாக பானு தலைவரின் கட்டளைப்படி பொறுப்பேற்றுக்கொண்டார். இக் காலத்தில் மன்னார் மாவட்ட போராளிகள் குழம்பிப் போயிருந்தனர்.வழிநடத்தல் ஒழுங்கின்றி சிதறிப் போயிருந்தனர்.தளபதி பானு அவர்களின் மன்னார் வருகையைத் தொடர்ந்து மன்னாரில் போர் எழுச்சி மீண்டும் புத்துயிர் பெற்றது.போராளிகளை ஒன்றுபடுத்தினார்.புதிய போராளிகளை இணைத்து பயிற்சிப் பாசறையை ஆரம்பித்தார். நூற்றுக்கு மேற்பட்டவர்களை போராளிகளாக உருவாக்கி தலைவரின் பாதுகாப்புப் படைப்பிரிவுக்கும் அனுப்பி வைத்தார்.பானு அவர்கள் முதலில் தளபதியாகப் பொறுப்பேற்றுக்கொண்டதும் விடுதலைக்காக முதல் களமாடிய மன்னார் மாவட்டத்தில் தான் என்பதை நினைவு கூர்வது பொருத்தமானது.ஏனெனில் மன்னார் போராளிகளையும்,மக்களையும் மிகவும் நெஞ்சார நேசித்தார்.அக்காலத்தில் தான் பிறந்த யாழ் மண்ணை விட மன்னார் மண் தளபதி பானுவுக்கு மிகவும் பரீட்சியமானது. களத்தில் அனைத்தும் தெரிந்த தளபதியாக பானு காணப்பட்டார்.இயக்கத்தின் பாசறைகளில் தேவையான அனைத்து உபகரண அமைப்புக்களையும்,மின்சார இணைப்புக்களையும் முன்னின்று செய்து தளபதிக்குரிய முன்மாதிரியை வெளிப்படுத்தினர். தளத்தில் , களத்தில் தளபதி பானு தலைசிறந்த போராளியாக தென்பட்டார்.ஆரம்ப காலத்தில் நீண்ட காலம் மன்னாரில் பணியாற்றி மன்னார் மக்களின் பாசத்திற்குரியவரானார். மன்னார் மாவட்டத்தின் தெற்குப் புறமாக அமைந்துள்ள வயலும்,காடும், கடலும் ஒன்றாக பிணைந்து இருக்கின்ற வட்டமாக முள்ளிக்குளம் இருக்கின்றது. மன்னார் மாவட்டத் தளபதியாக பானு பணியிலிருந்த வேளையில் இந்தியப் படையினரின் ஆதரவோடு இயங்கிய தமிழ்த் தேசத்துரோகக்கும்பல் ( PLOT ) முள்ளிக்குளத்தில் தங்கியிருந்தனர்.இங்கு 25 .11 .1984 அன்று யாழ்ப்பாணம் சுழிபுரம் என்னுமிடத்தில் சுவரொட்டிகளை ஓட்டுவதற்காக சென்றிருந்த விடுதலைப் புலிகளான புவி , தேவன் ,ஈஸ்வரன் ,சின்னச்சிவா,சிவா ,சிவம், சீலன் ஆகியோரை படுகொலைசெய்த சங்கிலி தலைமையிலான குழுவினர் தங்கி மேலும் கொலைகள், காசு பறிப்பு கொள்ளை ,என்பவற்றில் ஈடுபட்டிருந்தனர். இவர்களை தாக்கியழிப்பதற்காக 1990 .01 .01 அன்று கடல் வழியாக தரையிறங்கிய விடுதலைப் புலிகள் போராளிகளுக்கு தளபதி பானு தலைமை தாங்கியிருந்தார்.இத் தாக்குதலில் தேசத்துரோகக் கும்பல் முற்றாக அழிக்கப்பட்ட நிலையில் மேஜர் அகத்தியர் உட்பட்ட 10 போராளிகள் வீரச்சாவடைந்தனர். தளபதி பானு விழுப்புண் அடைந்த நிலையில் தேசியத் தலைவர் அவர்களின் ஆணையின்படி தாய்த் தமிழகத்துக்கு மருத்துவ சிகிச்சைக்காகச் சென்று குணமடைந்து திரும்பியிருந்தார். சுபன் மன்னார் மாவட்ட தளபதியாக பொறுப்பேற்றவுடன் தளபதி பானு அவர்கள் யாழ் மணியம் தோட்டத்தில் தங்கியிருந்த விடுதலைக்கான எதிர்ப்பாளர் குழுவினரை விரட்டியடிக்கும் நோக்கோடு தான் பிறந்த மண்ணில் மீண்டும் கால்பதித்து குறிப்பிட்ட பணியை நிறைவு செய்து 1990 ம் ஆண்டு தான் பிறந்த மண்ணின் தளபதியாக தேசியத் தலைவர் அவர்களால் நியமிக்கப்பட்டார். பலம் பொருந்திய அமைப்பாகவும், படைத்துறை விரிவாக்கம் பெற்ற நிலையிலும்,நிருவாக்கக் கட்டுமானங்கள் உருவாக்கம் பெற்ற காலத்திலும் மக்கள் போராட்டமாக தேசிய விடுதலைப் போராட்டம் மாற்றியமைக்கப்பட்ட காலத்திலும் தளபதி பானு யாழ் மாவட்டத்தில் தளபதியாக பணியிலிருந்ததனால் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் யாழ் மாவட்ட செயலகத்தை திறம்பட,சிறப்பாக,தேசியத் தலைவர் பாராட்டுமளவுக்கு செய்து காட்டினார். யாழ் மண்ணின் மூலைமுடுக்கெல்லாம் தமிழ்ப் படையின் தேசியசீருடையில் பவனிவந்த பானு மக்கள், போராளிகள் எல்லோரிடமும் அன்பாகப் பழகி எல்லோருடைய அபிமானத்தையும் பெற்றிருந்தார்.படைத்துறையில் நிருவாகச் செயல்பாட்டில் சிறந்து விளங்கியவர், போராளிகள் தங்குகின்ற முகாம்கள்,பயிற்சி பெறுகின்ற பாசறைகள்,எதிரியை தடுத்து நிறுத்தும் தடை முகாம் அமைப்புக்கள் என்பவற்றில் தனித்திறமையை வெளிக்காட்டி தலைவரின் பலமான தளபதிகளில் ஒருவரானார். மூத்த போராளிகளை மதிக்கும் திறன் அவர்களுக்குரிய பணியை பகிர்ந்தளித்து சிறப்பான பயன்பாட்டை பெற்றுக்கொள்ளும் முறை என்பவற்றில் தளபதி பானு அவர்களின் நிருவாகத்திறன் வெளிப்படுத்தப்பட்டதை போராளிகளின் கருத்துக்களிலிருந்து தெரிந்து கொள்ளக்கூடியதாகவுள்ளது. யாழ் மாவட்டம்,தமிழீழத்தில் மக்கள் தொகை கூடிய மாவட்டமாகும் தமிழர்களின் தனிச் சிறப்புக்கு அடையாளமாகவும்,மண்வாசனையோடு தமிழரின் பண்பாடு மேலோங்கிய இடமாகும் இருக்கின்றது ஆனால் இம் மண்ணில் எம்மை ஆண்டாண்டு காலமாக அடிமைநிலையில் வைத்திருந்த அன்னிய ஆதிக்கத்தின் அடையாளமான யாழ் கோட்டை தீவுகளோடு இணைந்ததாக யாழ் தீபகற்பத்தில் அழிக்க முடியாதவாறு அமைக்கப்பட்டிருந்தன. இக் கோட்டை தமிழர்களின் தனித்துவத்தைப் பொறுத்தமட்டில் அவமானச்சின்னமாகும்.எம்மை அடக்கி ஒடுக்கியவர்கள் வாழ்ந்த இடமாகவும் இருப்பதனால் தமிழரின் அடிமை வரலாற்றிலிருந்து இது அழிக்கப்பட வேண்டும் என்பதுதான் விடுதலை வீரர்களின் நினைவாகவுமிருந்தது. ஆக்கிரமிப்பு முகமூடியை அகிம்சைப் போர்மூலம் கிழித்தெறிந்த தற்கொடைப் போராளி லெப்கேணல் திலீபன் 1987 ம் ஆண்டு அகிம்சைப் போர் மேடையில் கூறிய கருத்துக்களின்போது இக் கோட்டையைப் பற்றி பின்வருமாறு கூறினார் . அன்னியர்கள் மாறி மாறி நிலைகொண்டிருந்த யாழ் கோட்டையில் தமிழரின் தேசியக் கொடியான புலிக்கொடி பறக்கின்ற நாள்,தமிழ் மக்களின் விடுதலையின் ஆரம்ப நாள் என்று குறிப்பிட்டார். தீர்க்கதரிசனமாக திலீபன் கூறியவைகள் அமைந்ததுபோல் 1990 ம் ஆண்டு யூனி மாதம் யாழ்கோட்டை மீதான தாக்குதல் போர் தொடுக்கப்பட்டது. தேசியத் தலைவர் அவர்களின் திட்டமிடலில்,தளபதி பானு அவர்களின் வழிநடத்தலில்,மட்-அம்பாறைத் தளபதி லெப்கேணல் யோய் அவர்கள் ஆர் .பி. ஜி . உந்துகணைத் தாக்குதலைத் தொடுத்து யாழ் கோட்டை அழிப்பிற்கான விடுதலைப்போர் ஆரம்பிக்கப்பட்டது .உத்வேகத்துடன் போராளிகள் எழுச்சியுடன் தாக்குதலில் ஈடுபட்டனர் தமிழ் மக்களின் குரல்கள் போர்ப்பறையாகமாறி போராளிகளுக்கு புதுத்தென்பைக் கொடுத்தன. 107 நாள்கள் நடந்த கோட்டை அழிப்பிற்கான வரலாற்றுச்சமரைத்தொடந்து அடிமைச்சின்னமான யாழ்கோட்டை 1990 ம் ஆண்டு 09 ம் மாதம் 26 ம் நாள் தமிழர் படையிடம் வீழ்ந்தது,தமிழரின் வீரம் தரணியில் எழுந்தது. விடுதலை ஒளி எங்கும் பரவியது. தேசியத்தலைவரின் ஆணையில் தளபதி பானு தமிழீழத்தேசியக்கொடியை யாழ் கோட்டையில் ஏற்றி, வரலாற்றுத் தளபதிகளில் ஒருவராக யாழ் மண்ணில் உயர்ந்து நின்றார். அதற்குப் பிறகு யாழ் கோட்டையை அழித்து அகற்றும்பணியை தமிழ் மக்கள் ஆரம்பித்தனர். 1985 ம் ஆண்டு காலப்பகுதியில் கோட்டையில் நிலைகொண்டிருந்த சிங்களப்படை தமிழர் ஊருக்குள் முன்னேறுவதை முதன்முதலில் தடுத்து நிறுத்தி கோட்டைக்குள் முடக்கி வைத்தவர் தளபதி கேணல் கிட்டு, இதே கோட்டையை விடுதலைப் புலிகள் வீழ்த்திக்கைப்பற்றியபோது கோட்டையில் புலிக்கொடியை ஏற்றிப்பறக்கவிட்டவர் தளபதி பானு என்பது தமிழரின் விடுதலைப் போராட்டத்தில் அழிக்கமுடியாத வரலாற்றுப் பதிவாகும். தேசியத் தலைவர் அவர்களின் ஆணையின்படி,1991 ம் ஆண்டு காலப்பகுதியில் தேசியத் தலைவர் அவர்களின் பாதுகாப்புப் படைப்பிரிவில் பணியிலிருந்த லெப் கேணல் ஜோய், மேஜர் வினோத், லெப் கேணல் விஜயகாந்த் போன்றவர்கள் மட்-அம்பாறை மாவட்டத்திற்கு அனுப்பப்பட்ட வேளையில் இவர்களுடைய படைத்துறை ஆலோசகராக தளபதி பானு அவர்களும் உடன் சென்றார். இவர்களுடைய வருகையைத் தொடர்ந்து மட்டக்களப்பு – அம்பாறை மாவட்டங்களில் சிங்கள இராணுவத்தினருக் கெதிரான தாக்குதல்கள் தீவிரப்படுத்தப் பட்டன.ஒரு நாள் ஒரு சிங்கள இராணுவத்தினன் என்றரீதியில் தொடராக சிங்களப் படையினர் அழிக்கப்படுமளவுக்கு தாக்குதல்கள் உக்கிமடைந்தன.தளபதி பானு மட்டக்களப்பு மாவட்டத்தில் 49 மாவடி முன்மாரிக்கோட்டத்தில் (படுவான்கரை பிரதேசம் ) என்றழைக்கப்பட்ட தனது விடுதலைப் பணியை தொடந்தார். எப்போதும் எங்கும் சிறந்த ஒரு போராளியாக தன்னை நிலைநிறுத்தும் பானு வயலும்,வயல் சார்ந்த காடும் அமைந்துள்ள ஊர்களை உள்ளடக்கிய இக் கோட்டத்தில் மக்களோடு மக்களாக,போராளிகள் வேறுபட்டவர்கள் இல்லை,அவர்கள் மக்களிலிருந்து உருவானவர்கள் என்பதற்கமைய வேலைத்திட்டங்களை திட்டமிட்டு மேற்கொண்டார். எங்கு சென்றாலும் மக்களுடன் அன்பாகப் பழகி ஆதரவோடு செயல்படும் தளபதி பானுவுக்கு மக்களின் அபிமானம் விரைவில் கிடைத்துவிடும்.மன்னார், யாழ்ப்பாணம்,மட்டக்களப்பு அம்பாறை என கால்பதித்த இடங்கள் எல்லாம் தமிழ் மக்கள் தங்கள் தோள் கொடுத்து விடுதலைக்கு பலம் கொடுத்தனர் .ஒரு போராளியின் புனிதத் தன்மையே மக்கள் பானு அவர்களிடம் கண்டுகொண்டதனால் மக்களினால் மறக்க முடியாத தளபதிகளில் பானு அவர்களும் ஒருவரானார். மட்டக்களப்பின் வடபுலத்தில் 46 என அழைக்கப்பட்ட ஆண்டான்குளம் ( வாகரை ) கோட்டத்திற்கு பானு அவர்களின் அடுத்த பயணம் அமைந்திருந்தது.இயற்கை எழில் கொஞ்சும், மகாவலி கங்கை ஊடறுத்து ஓடுகின்ற,தேனும், பாலும் பழமும் மலிந்து கிடக்கின்ற, ஆறும் கடலும் தொட்டு நிற்கின்ற அழகிய ஊர்கள் அடுத்து ,அடுத்ததாக நீண்ட நெடுஞ்சாலையின் ஓரத்தில் உள்ளடங்கியிருக்கின்ற இக்கோட்டம் தமிழரின் பாரம்பரிய தாயகத்தின் மிக முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் ஒன்றாகும். பானு அவர்கள் ஆண்டான்குளம் கோட்டத்தில் விடுதலைக்கான பணியிலிருந்த போது அவ்வூர்களில் வாழ்ந்த மக்களுடன் மிகுந்த பாசப்பிணைப்பை ஏற்படுத்திக்கொண்டார்.மிகக் குறுகிய காலத்தில் அம்மக்களால் மிகவும் நேசிக்கப்பட்ட தளபதிகளில் உள்ளடங்கப்பட்டிருந்தார். தமிழரின் பூர்வீகக் குடிகளான இம்மக்கள் தாங்கள் வாழ்ந்த பாரம்பரியத் தாயகப் பூமியை ஆழமாக நேசித்தனர்.இதனால் என்றும் இம் மண்ணை விட்டு வெளியேறி வாழ்வதற்கு விருப்பமில்லாமல் இருந்தனர்.இம் மக்களின் இவ்வாறான பற்று தளபதி பானு அவர்களை மிகவும் கவர்ந்திருந்தது.இதனால் மக்களோடு மக்களாக இக் கோட்டத்தில் தனது விடுதலைக்கான பணியை மிகவும் மகிழ்ச்சிகரமாக மேற்கொண்டார்.தமிழீழத்தில் வளர்ச்சியடைந்த ஊர்கள் பொருண்மிய மேம்பாடடைந்த மக்கள் இருந்த போதும் வாகரையண்டிய ஊர்களில் வாழ்ந்த மக்கள் இயற்கையோடு ஒன்றித்து தமிழர் பண்பாட்டோடு வாழ்ந்தது,தளபதி பானு அவர்களின் மனதில் உயர்ந்த இடத்தில் இம் மக்களை வைத்து பார்க்கமுடிந்தது. தனது இறுதிக்காலம் வரையும் இவ்வுறவுகளை எண்ணி தனது போராளி நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டதை குறிப்பிட்ட போராளிகள் மூலமாக அறியமுடிந்தது. போராளி என்பவன் எதற்காக தான் போராளியானான் என்பதைப் பொறுத்து வாழ்க்கை அமைந்து விடுகின்றது. உண்மையான போராளி தான்சார்ந்த இனத்தின் விடுதலையை கையில் எடுத்தபின் இனத்தின் மீது கொண்ட பற்றுக்காரணமாக உறவுகளோடு பிரிக்கமுடியாத உறவினை உணர்த்தும் உன்னதமான போராளியாக தன்னை மாற்றிக்கொள்ளுகின்றான். இறுதிவரை இனப்பற்றோடு வாழ்ந்து தனது இறுதிக்காலத்தை நிறைவு செய்கின்றான்.இவ்வாறானவர்களில் ஒருவராகத்தான் தளபதி பானு அவர்களை வரலாற்றில் பதிவு செய்கின்றோம். 1992 ம் ஆண்டு காலப்பகுதில் சிங்கள இராணுவத்தினருக்கான முக்கிய இரண்டு தாக்குதல்களை வாகரை கோட்டத்தில் தங்கியிருந்த தளபதி பானு மிகவும் திட்டமிட்டு,உணர்வுமிக்க போராளிகளுடன் இணைந்து வெற்றிகரமாக மேற்கொண்டார். தமிழீழத்தின் தலைநகர்,தமிழரின் பாரம்பரியத்தை,நிலைநிறுத்தி கொண்டிருக்கின்ற,இயற்கைத் துறைமுகத்தோடு இணைந்ததாக தமிழீழத்தின் பெருமையை உலகிற்கு பறைசாற்றிக் கொண்டிருக்கின்ற திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் கோட்டத்தில் கல்லாறு என்ற ஊரின் அருகாமையில் சிங்கள இராணுவத்தினரை வழிமறித்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.இத் தாக்குதலில் பல இராணுவத்தினர் கொல்லப்பட்டும், போர்க்கருவிகளும் கைப்பற்றப்பட்டன.போராளிகளும் வீரச்சாவடைந்தனர். அடுத்த தாக்குதல் நாவலடி வெருகல் நெடுஞ்சாலையில் பால்சேனை என்ற கடற்கரை ஊரில் குறுகியகால இடைவெளியில் போராளிகள் ஒருங்கிணைக்கப்பட்டு,பானு அவர்களின் கட்டளையில் வீரத்துடன் எழுந்த விடுதலைப் புலிப்போராளிகள் ஏழு மைல்களுக்கு அப்பால் அமைந்திருந்த வாகரை சிங்களப் படைமுகாம் வரை படையினரை விரட்டியடித்தனர். தமிழர் படை சீற்றத்தால் சிங்களப் படை சிதறி ஓடிய வரலாற்று நிகழ்வை எமது தாய் மண்ணில் அன்று நாம் பார்த்தோம். வன்னியிலிருந்து கடல் வழியாக வந்த விடுதலைப் புலிப் போராளிகள் அதிகாலை வேளை தரையிறங்கி பால்சேனைக் கடற்கரையில் இருந்தபோது வாகரை ஊரில் நிலை கொண்டிருந்த சிங்கள இராணுவத்தினர் நடு இரவு நேரத்திலிருந்து முன்னேறி குறிப்பிட்ட கடற்கரையில் போராளிகள் மீது தாக்குதல் நடத்திய வேளையில் தளபதி பானு அவர்கள் கதிரவெளி ஊரையண்டிய காட்டுப்பகுதியில் போராளிகளின் தளத்தில் தங்கியிருந்தார்.செய்தி யறிந்து படையணியுடன் குறித்த இடம் விரைந்து சிங்கள இராணுவத்தினர் மீது ஓட ஓட விரட்டியடித்து வாகரை வரை தாக்குதல் நடத்தினர்.இத் தாக்குதலில் 20 க்கு மேற்பட்ட இராணுவத்தினர் கொல்லப்பட்டு,போர்க் கருவிகளும் கைப்பற்றப்பட்டன.லெப்கேணல் பாலேந்திரா உட்பட்ட முன்னணி இளந் தளபதிகள், தளபதி பானு அவர்களுக்கு துணையாக நின்று களமாடினர். மடடக்களப்பு மண்ணில், மண்ணின் வாசனையோடு,மக்களோடு ஒன்றித்து, ,உறவாடி விடுதலைக்காய் களமாடிய தளபதி பானு தேசியத் தலைவரின் அழைப்பின் பேரில் மட்டக்களப்பு – அம்பாறை படையணி வட தமிழீழம் சென்ற போது அவர்களோடு இணைந்ததாக மீண்டும் யாழ் மண்ணில் கால் ஊன்றினார். மட்டக்களப்பு மக்களையும் போராளிகளையும் அன்பாக நேசித்தவர் அந்தப் போராளிகளோடு இணைந்திருந்து யாழ் மண்ணில் போர் நடவடிக்கையில் ஈடுபட விரும்பி தேசியத் தலைவர் அவர்களுக்கு விரிவான கடிதமொன்றை அனுப்பி இருந்தார். மக்களையும்,அவர்களுடைய இனப்பற்று,விடுதலைப்பற்று,மண்பற்று போராளிகளின் தன்னலமற்ற தமிழீழத் தாய் நாட்டுப்பற்று என்பவற்றையும்,வயலோடு சார்ந்த ஊர்களில் வாழ்கின்றமக்களின் வாழ்க்கைத் தரம் பற்றியும் தனது மடலில் குறிப்பிட்டியிருந்தார். ஒரு சிறந்த போராளியின் எண்ணங்களில் நிறைந்திருக்க வேண்டிய மக்களின் விடுதலை சார்ந்த அனைத்தும் தளபதி பானு அவர்களிடம் இருந்ததை தலைவர் அவர்கள் உள்வாங்கி மட்டக்களப்பு – அம்பாறை மாவட்ட படையணியோடு செயலாற்ற அனுமதித்தார்.போராளிகளோடு,போராளியாக இருந்து அவர்களுக்கான வசதிகளை மேம் படுத்தி மிகவும் தீவிரமாக படையணி மாற்றமடைவதற்கும்,எதிர் காலத்தில் சாதிப்பதற்கும் பானு அவர்கள் காரணமாக விருந்தார் என்பதை மாவட்ட போராளிகள் கூறக்கேட்டிருக்கின்றோம் எந்தவொரு நாட்டிலும்,எந்தவொரு இனத்திலும் விடுதலைப் போராட்ட காலத்தில் நடத்தப்படாத சமர்கள் தமிழீழத்தில் நடந்தேறியுள்ளன.இந்த வகையில் தமிழீழத்தில் முதல் யாழ்கோட்டைத்தளம் புலிகளிடம் வீழ்ச்சியடைந்த வரலாற்றுச் சமரைத் தொடர்ந்து 1991 .11 .12 அன்று ஆகாயம்,கடல் வெளிச்சமர் ஆணையிறவில் எமது தேசியவிடுதலை இயக்கத்தினால் மேற்கொள்ளபட்டது. அடுத்தசமர் வட தமிழீழத்தில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த எமது வரலாற்றை நிலை நிறுத்துகின்ற பூநகரி சிங்களப்படைத்தளம் மீது மேற் கொள்ளப்பட்டது. இந்த வரலாற்றுச்சமருக்கு “தவளைப் பாய்ச்சல்“ எனத் தேசியத் தலைவரால் பெயர் சூட்டப்பட்டது.இச் சமரில் தமிழீழத்தில் எல்லாப் பகுதிகளிலிருந்தும் படையணிகள் வரவழைக்கப்பட்டிருந்தன.மட்டக்களப்பு – அம்பாறை மாவட்ட பெரியதோர் படையணி,மன்னார் படையணி,மணலாறு படையணி, யாழ்ப் படையணி, வன்னிப்படையணி,மகளிர் படையணி,இதனோடு இணைந்ததாக கடல் புலிகள் மற்றும் பின்தள வேலைகளுக்காக அரசியல் போராளிகள் நிதித்துறைப் போராளிகள் என அனைவரும் அணிதிரண்டு தேசியத் தலைவர் அவர்களின் நெறிப்படுத்தலில் தளபதி பொட்டம்மான் அவர்களின் ஒருங்கிணைப்பில்,கடல் புலிகளை தளபதி சூசை வழிநடத்த, தரைப்புலிகளை தளபதி சொர்ணம் வழி நடத்த, முன்னணித் தளபதிகள் இணைப்புடன் இச்சமர் வெற்றிகரமாக மேற் கொள்ளப்பட்டது. மடக்களப்பு – அம்பாறை பெரியதோர் படையணியின் நிருவாக ஒழுங்கமைப்பை மேற் கொண்டவாறு தளபதி பானு தாக்குதல் நடவடிக்கைகளில் முழு வீச்சாக தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். இச் சமரின் மூலம் மரபுவழிப் போர்முறையில் தமிழீழ விடுதலைப் புலிகள் ஒரு படி மேலுயுயர்ந்து தமிழரின் போர் ஆற்றலுக்கு ஒரு முகவரியை உலகத்தில் பதிவுசெய்தனர். இச் சமரில் பங்கெடுத்த ஒவ்வொரு தளபதியும் தலைவரினால் போரியலில் வார்த்தெடுக்கப்பட்ட வல்லமையுள்ளவர்களாக இருந்தனர்.இச் சமரில் களமாடிய மணலாற்று மாவட்டத் தளபதி லெப்கேணல் அன்பு, லெப்கேணல் குணா உட்பட பல போராளிகள் வீரச்சாவடைந்தனர். பெறுமதி மிக்க போர் உபகரணங்கள் உட்பட போர்க்கருவிகள் தமிழர் மண்ணில் ஆக்கிரமிப்புப் படையாக நிலைகொண்டிருந்த சிங்களப் படையினரிடமிருந்து கைப்பற்றப் பட்டன. இச்சமரினைத் தொடர்ந்து தளபதி பானு தேசியத் தலைவர் அவர்களினால் படைத்துறை அதிகாரிகள் பயிற்சிக்கல்லூரிக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டார்.தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முதலாவது படைத்துறை அதிகாரிகள் பயிற்சிக்கல்லூரி தேசியத் தலைவரால்,ஆரம்பிக்கப்பட்டபோது அதன் பொறுப்பாளராக லெப் கேணல் ராஜன் நியமிக்கப்பட்டார். தேசியத் தலைவரின் மிகவும் நம்பிக்கைக்குரிய தளபதியாகவும்,இயக்கத்தின் மீதும் விடுதலையின் மீதும் அளவற்ற பற்று வைத்திருந்த லெப் கேணல் ராஜன் படைத்துறை அதிகாரிகளாக போராளிகளை பயிற்றுவிப்பதற்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டது பொருத்தமான ஒன்றாக அன்று கருதப்பட்டது. நிருவாகத்திலும்,திட்டமிடலிலும் அதிக ஆற்றலை தேசியத்தலைவரினால் பெற்றுக்கொண்ட தளபதி பானு சிறந்த முறையில் அப்பணியை நிறைவு செய்து ஆற்றல் மிக்க இளந்தளபதிகளை போர்க் களத்திற்குப் பெற்றுக்கொடுத்தார். யாழ் தீபகற்பத்துடன் இணைக்கப்பட்டதாக தீவுகள் பல அமைந்ததுதான் யாழ் மாவட்டம்.பாக்கு நீரிணைக்குள் அமைந்துள்ள இத்தீவுகள் பார்பதற்கு மிக அழகாக காட்சியளித்து தமிழீழத்தின் இயற்கை வனப்புக்கு மேலும் சிறப்பைக் கொடுத்துக்கொண்டிருக்கின்றது.சிங்களத்தின் கோரப்பிடிக்குள் அகப்பட்டுக்கிடக்கும் இத் தீவுகளில் தமிழர்கள் தலைநிமிர்ந்து வாழ்ந்ததாக இன்றைய வரலாறு சொல்லவில்லை.தமிழீழத்தின் பிறபகுதிகள் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டபோதும் இத் தீவுகள் சிங்களத்தின் ஆக்கிரமிப்புக்குள் இருந்துவந்தன. யாழ் கோட்டையை தொட்டதான நிலையில் அமைத்திருக்கின்ற மண்டைதீவில் தமிழர் வாழ்விடத்தில் சிங்களத்தின் படைத்தளமொன்று சிங்களக் கடல்படையின் உதவியோடு அமைக்கப்பட்டு இத் தீவு ஆக்கிரமிக்கப்பட்டிருந்தன.யாழ் கோட்டையைக் கைப்பற்றிய விடுதலைப்புலிகளின் அடுத்த இலக்கில் மண்டைதீவு சிங்களப் படைத்தளம் வீழ்த்தப்படுவதன்மூலம் தீவுகளை படிப்படியாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டுமென்று விடுதலைப் புலிகளின் எதிர்கால எண்ணமாகவிருந்தது. படைத்துறை அதிகாரிகள் பயிற்சிக் கல்லுரி தளபதியாக பானு பணியிலிருந்த வேளையில் தேசியத்தலைவரின் நெறிப்படுத்தலில் தளபதி சொர்ணம்,தளபதி சூசை ஆகியோரின் இணைப்புடன் தளபதி பானு அவர்களின் கட்டளையில் 1995 .06 . 28 அன்று அதிகாலை வேளையில் மண்டைதீவு படைத்தளம் கடற்புலிகளின் உதவியோடு தாக்கியளிக்கப்பட்டது.இத் தாக்குதலில் கடல் புலிகளின் அதிரடிப் பிரிவு ஒன்றுக்கு லெப்கேணல் சூட்டி தலைமையேற்றிருந்தார்.கடல் புலிகளின் தளபதி சூசை அவர்கள் இந்த அதிரடித் தாக்குதலுக்குரிய ஆலோசனைகளை வழங்கியிருந்தார்.படைக்கருவிகள் பல அள்ளப்பட்ட இத் தாக்குதல் வெற்றிகரமாக அமைந்தபோதும் இத் தாக்குதலில் லெப் கேணல் சூட்டி உட்பட எட்டு போராளிகள் வீரச் சாவடைந்தனர். ஒவ்வொரு தாக்குதலிலும்,தனிமுகவரி ஒன்றைப் பதிவு செய்த தளபதி பானு தேசியத் தலைவர் அவர்களுக்குப் பக்கபலமாகவும், தமிழரின் படைத்துறை விரிவாக்கத்துக்கு வலுச்சேர்த்தவராகவும் தனது விடுதலைப் பயணத்தைத் தொடந்தார். வரலாற்றில் இடம்பெற வேண்டுமென்றால் வரலாறு படைக்கவேண்டும்.இவ்வாறு வரலாறு படைத்தவர்கள்தான் எமது வீரமிகு தளபதிகள் என்பதுவும் அழிக்க முடியாத வரலாற்றுப் பதிவாகும். வன்னிப்பெருநிலத்தை நோக்கிய சிங்களப்படையின் ஜெயசிக்குரு தாக்குதலின் எதிர் சமரின்போது தலைவரின் ஒழுங்கமைப்புக்கு ஏற்றவாறு கிட்டு பிரங்கி படையணி உருவாக்கப்பட்டு அதற்கு பொறுப்பான தளபதியாக பானு அவர்கள் களத்தில் பணியாற்றினார்.ஒவ்வொரு பணியிலும்,உயர்ந்த நிலையில் சிறப்பாக செயலாற்றிய தளபதி பானு தமிழீழமெங்கும் களமாடிய காவிய நாயகர்களில் ஒருவராக தமிழர் வரலாற்றின் சிறப்பு மிக்க போர்க் காவிய படைப்புகளில் பதிவாகியுள்ளார். எமது தேசியத் தலைவர் சமர்களுக்கும்,தொடர் போர்களுக்கும் பெயர் சூட்டும் போது அதற்குள் பொதிந்துள்ள அர்த்தம் ஆயிரம் பலத்தை போராளிகளுக்குப் பெற்றுக்கொடுக்கும்.தமிழனின் பெருமையை தமிழோடு பறைசாற்றும், இந்தவகையில் ஆகாயம் கடல் வெளிச்சமர்,புலிப் பாய்ச்சல், தவளைப் பாய்ச்சல்,இதய பூமி, ஓயாத அலைகள் 1 ,2 ,3 போன்றவைகளை குறிப்பாகச் சொல்ல முடியும் ஓயாத அலைகள் 3 ன் ஒரு கட்டத்தின் போது கட்டளைத் தளபதியாக தேசியத் தலைவரால் நியமிக்கப்பட்டதளபதி பானு தேசியத்தலைவரின் நெறிப்படுத்தலில், 40 ஆண்டுகளைக் கடந்தும் சிங்கள ஆக்கிரமிப்புக்குள் இருந்த ஆனையிறவு மண்ணை போராளிகளுடன் இணைந்து களமாடி, மீட்டெடுத்து சாதனை படைத்தார்.பல போராளிகள் சிந்திய செங்குருதியினால் நனைந்து சிவந்து கிடந்த மண்ணை மீட்டெடுத்த தளபதி பானு ஒவ்வொரு வரலாற்று நிகழ்வுகளிலும் ஒவ்வொரு வரலாற்றைப் பதிவு செய்தார். தமிழீழத்தின் கழுத்தை இறுக்கிப்பிடித்துக்கொண்டிருந்த ஆனையிறவு ஆக்கிரமிப்புத்தளம் எமது நிலத்தொடர்பை மறித்து வைத்திருந்தது. இத்தளம் கைப்பற்றப்பட்டதிலிருந்து தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மிகப்பெரிய வரலாற்று வெற்றியை எமது தேசிய விடுதலை இயக்கம் பெற்றிருந்தது. 2000 .04 .02 ம் நாள் அன்று ஓயாத அலைகள் மூன்றின் வெற்றிநாளாக அமைந்தது.ஆனையிறவு மீட்கப்பட்டு எமது தேசியக் கொடியை தளபதி பானு ஏற்றிவைத்தார். எண்ணற்ற எமது போராளிகளின் அர்பணிப்புக்களுக்கு மத்தியில் 19 ம் நூற்றாண்டின் இறுதியில் தமிழரின் இழந்த தாயாகமீட்பில் இன்னோர் அத்தியாயத்தை எமது தேசிய விடுதலை இயக்கம் உருவாக்கியது. யாழ் கோட்டையைக் கைப்பற்றி புலிக்கொடியை ஏற்றியவன்.ஆனையிறவுச் சமரில் பல ஆண்டு காலம் சிங்களவன் காலில் மிதிபட்டுக்கிடந்த தமிழீழ மண்ணை மீட்டெடுத்து புலிக்கொடியை ஏற்றினான்.இவன் சாதனை வீரன், எமது முப்பாட்டன் சோழனின் தளபதிகள் போல் காலம் எமக்குத் தந்த தலைவன் கரிகாலன் தளபதிகளில் ஒருவன் தளபதி பானு எமது வரலாற்றை எம்மால் நினைத்துப் பார்க்க வைத்தவர்களில் ஒருவர் என்பது எமது விடுதலை வரலாற்றில் பதிவான ஒன்றாகும். 2001 ம் ஆண்டு நான்காம் மாதம் 25 ம் , 26 ம் , 27 ம் நாட்கள் தீச்சுவாலை முறியடிப்புச் சமரை முன்னின்று எதிர்கொண்ட தளபதிகளில் பானு அவர்களும் களமிறங்கினார்.போராளிகளின் முன்னேறிய பாய்ச்சல் எதிரியை புறமுதுகிட்டு ஓட வைத்தன.மீட்கப்படும் தமிழர் நிலங்களில் புலிக்கொடியை ஏற்றி,பறக்கவிடும் தளபதியாக பானு அவர்களை வரலாறு எமக்கு ஏற்படுத்தித்தந்தது. என்றும் பழைய நினைவுகளோடு தான் நேசித்த இடங்களையும்,மக்களையும் நினைவு கூருவது இறுதிவரை பானுவிடம் காணப்பட்ட,பற்றோடு அமைந்த குணங்களில் ஒன்றாகவிருந்தது. 2004 ம் ஆண்டு காலப்பகுதியில் மட்டக்களப்பு – அம்பாறை மாவட்டத்தின் சிறப்பு தளபதியாக பணியாற்றிக் கொண்டிருந்த வேளையில் ஆழிப் பேரலையின் அனத்தத்தினால் மட்டக்களப்பு கடற்கரை ஊர்கள் மிகவும் பாதிப்புக்கு உட்பட்டிருந்தது.தளபதி பானு தனது பாதுகாப்பையும் கருத்தில் கொள்ளாது போராளிகளுடன் இணைந்து மக்களுக்கான சேவைகளை தன்னால் இயன்ற வரை செய்து அந்த மக்களின் புனர்வாழ்வு நடவடிக்கையிலும்,சிதைந்து போன பொருளாதாரத்தை மேம்படுத்துவதிலும் முன்னின்று பணியாற்றினார். மட்டக்களப்பு – அம்பாறை மாவட்டத்தில் வாகரை கோட்டத்தில் பானு அவர்கள் பணியிலிருந்த வேளையில் மக்களோடு பழகிய நினைவுகளை பகிர்ந்து கொள்ளும்போது கண்கள் பனிக்க கதை சொல்வதை போராளிகள் எம்மிடம் கூறக்கேட்டிருக்கின்றோம்.அங்கு இருந்த போது தான் பாவித்த சவர்காரப் பெட்டியை உடைந்த போதும் காலம் கடந்தும் நினைவுக்காக பாதுகாத்து வைத்திருந்ததை போராளி ஒருவர் எம்மிடம் கூறிய போது அந்த மண்ணையும்,மக்களையும் இறுதிவரை அவரால் மறக்க முடியவில்லை என்பதற்கு அடையாளம்தான் இந்தபெட்டி என்றார்.உண்மையான ஒரு போராளிக்கு உணர்வான உறுதியான மக்களை என்றும் மறக்கமுடியாது என்பதற்கு தளபதி பானு அவர்கள் ஒரு உதரணமாகும். இதே போல் இன்றும் அம்மக்கள் தளபதி பானு அவர்களை நினைவு கூர்ந்து கதைப்பதை எண்ணி எமது மனம் நிறைவாக இருக்கின்றது.உண்மையான போராளிகளை மக்கள் என்றும் நினைவில் வைத்திருப்பார்கள். தமிழீழத்தின் இதய பூமியில் தனியரசு அமைத்து தமிழர்கள் தங்களை ஆட்சிசெய்து வாழ்ந்த வேளையில் உலகத்தின் சில நாடுகளின் உதவியோடு தமிழீழ மண்ணை முழுமையாக ஆக்கிரமிக்க சிங்கள அரசு தொடுத்த போரை மன்னார் பகுதியில் தடுத்து களமாடிய பானு இரண்டு வருடங்களாக நடந்த வரலாற்றுப் போரில் களமாடி எதிரியை அழித்தொழிப்பதில் முன்னணி தளபதிகளுடன்,தலைவரின் வழிநடத்தலில் முள்ளிவாய்க்கால் வரைத் தொடந்தார். சிங்கள அரசின் தகவலின்படி 40 ஆயிரத்திக்கு மேற்பட்ட சிங்கள இராணுவத்தினரை இழந்து தமிழர் தாயகத்தை முழுமையாக ஆக்கிரமித்த சிங்கள அரசின் உண்மையான தமிழின அழிப்பு நடவடிக்கையை உலகத்திற்கு வெளிப்படுத்துவண்ணமாக இப்போர் அமைந்திருந்தது. சில நாட்டின் ஆதரவோடும்,படைக்கல விநியோகத்தோடும் தமிழீழ மண் இறங்கிய சிங்கள ஆக்கிரமிப்புப் படையை எந்த நாட்டின் ஆதரவு மில்லாமல்,நீண்ட காலம் எதிர்த்துக் களமாடிய முதல் விடுதலை இயக்கம் என்ற வரலாற்றுப் பெருமையையும் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கமான தமிழீழ விடுதலைப் புலிகள் பெற்று தமிழரின் வரலாற்றில் உயர்ந்து நிற்கின்றார்கள். தளபதி பானு இறுதிக்களமாடிய முள்ளிவாய்க்கால் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்திருக்கின்ற பழந்தமிழ் வரலாற்று ஊர். இக்காலத்தில் எழுச்சி கொண்ட தமிழினம் தாய்நாட்டை மீட்டெடுக்கும் புனிதப்போரில் இறுதிப்போர் கண்ட வரலாற்றுமண்,இந்தமண்ணில் சிங்கள எதிரியின் படைகள் சிதறடிக்கப்பட்டு, முற்றாக அழிக்கப்பட்ட சிறப்பான வரலாற்றுச் சமரைச் சந்தித்த எமது மூதாதையர்கள் குடிகொண்டிருந்த முல்லை மண்ணின் கடற்கரை ஊர். சோழன் கொண்டகப்பல்படை தேசியத் தலைவர் பிரபாகரன் கண்ட கடல்புலிகள் ஆண்ட எங்கள் கடலின் ஓரத்தில் அமைந்துள்ள சிவந்த மண். எமது தளபதிகள் நிமிர்ந்து நின்று,நேருக்குநேர்,எதிரியுடன் களமாடி நிமிர்ந்து விழ்ந்து தமிழரின் புறநானுற்று வீரத்தை மீண்டும் நினைவுபடுத்திய தமிழரின் பாரம்பரியமண்.தமிழ் உறவுகள் அழிக்கப்பட்டு,சிந்திய செங்குருதியால் நனைந்தமண். இந்த மண்ணில் எமது வீரத்தளபதி பிரிகேடியர் பானு அவர்களும் களமாடி விழ்ந்தார். நிமிர்ந்து நெஞ்சினை உயர்த்தி தாய்மண்ணின் வீரத்தை சிங்களத்திற்கும்,உலகத்திற்கும் தெரியப்படுத்தினார்.தமிழர்கள் கோழைகள் அல்ல,வீரம் செறிந்தவர்கள்,என்பதை ஒவ்வொரு தமிழனையும் உணரவைத்தனர் . தேசியத் தலைவர் அவர்களின் சிந்தனைகளுக்கு செயல்பாட்டு வடிவம் கொடுத்த தளபதிகளில் பானு அவர்களும் ஒருவராகவுள்ளார்.தேசியத் தலைவர் அவர்களின் நெறிப்படுத்தலில் தளபதி பானு கண்ட களங்கள்,வீரமிகு தாக்குதல்கள்,சாதனை மிகுந்த செயல்பாடுகள் என அடுக்கிக்கொண்டே போகமுடியும்.ஏனெனில் முள்ளிவாய்க்கால்வரை தனது விடுதலைக்கான பயணத்தைத் தொடர்ந்த தளபதி பானு தமிழர்களின் வரலாற்றில் வீரமிகு தளபதிகளில் ஒருவராக என்றும் தமிழர்களின் வாழ்க்கை வட்டத்தில் வலம்வந்துகொண்டிருப்பார். தளபதி பானு அவர்களை பெற்றதிலிருந்து பெற்றோர்கள் பெருமை கொள்ளுகின்றனர். இவரை பெற்றதிலிருந்து யாழ் அரியாலைமண் போராட்டவரலாற்றில் மேலும் சிறப்பான இடத்தில் உயர்ந்து நிற்கின்றது. தமிழீழத்தில் விடுதலைப் பற்றோடு வாழ்கின்ற மக்களின் நெஞ்சங்களில் இவருடைய நினைவுகள் என்றும் நிலைத்திருக்கும். உலகத்திற்கு வீரத்தைக் கற்றுக்கொடுத்தவர்கள் தமிழர்கள் . “வீரம் என்றால் பிரபாகரன் என்று அர்த்தம் இது உலகத்தில் பதியப்பட்ட புதுத்தமிழ் அகராதி“ அடுத்த மாவீரர் தொடரில் …….. என்றும் எழுகதிர். ******** https://eelavarkural.wordpress.com/2012/05/16/brigadier-banu/
  6. குறிக்கோள் பொருண்மியத் தடை காரணமாக எமது மக்கள் தாங்கொணாச் சுமைகளைத் தாங்கி நிற்க நிர்ப்பந்திக்கப்பட்டனர். எனினும், இந்தப் பெரும் பளுவின் விளைவாக, எமது மக்கள் மத்தியில் ஒரு புதிய விழிப்புணர்வும் ஏற்படத் தவறவில்லை. தடைகளால் விளைந்த பாதிப்பும், அதனால் எழுந்த பற்றாக்குறையும் அந்தப் பற்றாக்குறையால் பிறந்த தேவைகளும், ஒட்டு மொத்தத்தில் சுயசார்புப் பொருளாதாரத்தின் அவசியத்தையும் முக்கியத்துவத்தையும் எமது மக்களுக்கு நன்கு உணர்த்தின. தன்னிறைவான – தன்னில் தானே தங்கி நிற்கும் – பொருளாதார வாழ்வுடைய சமூகமாக எமது தேசம் உருவாக வேண்டும் என்பதே, எனது விருப்பம். மேதகு வே.பிரபாகரன், தேசியத்தலைவர் தமிழர்களுக்கான ஒரு வங்கி அமைப்பைத் தொடங்க வேண்டுமென்ற, எங்களுடைய மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு ஒரு முன் முயற்சியை மேற்கொள்ள வேண்டுமென்ற, தமிழர்களுக்கென்ற – ஒரு சிறப்பான முறையிலே தமிழ் மக்களுடைய பொருண்மியத்தை மேம்படுத்தக் கூடியதாக – அவர்களுடைய வாழ்க்கைத் தரத்தை உயர்த்திடக் கூடியதாக ஒரு வைப்பகத்தை ஆரம்பிக்க வேண்டுமென்ற எண்ணப்பாட்டை எமது தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் நீண்ட நாட்களாகக் கொண்டிருந்தார்கள். அதன் செயல் வடிவமே தமிழீழ வைப்பகத்தின் தோற்றம் ஆகும். திரு. செ.வ.தமிழேந்தி, நிதிப்பொறுப்பாளர், தமிழீழ விடுதலைப்புலிகள். தமிழீழ வைப்பகம். தமிழரின் சொத்து எனப் பெருமையுடன் தலை நிமிர்ந்து நிற்கும் தமிழீழ வைப்பகம் இன்று தனது பத்தாவது ஆண்டில் கால் பதித்து நிற்கின்றது. தமிழ் மக்களின் பொருண்மிய வல்லமையை வலுப்படுத்த வேண்டும். அதற்காக வைப்பக அமைப்பொன்றை ஆரம்பிக்க வேண்டும் என்ற கருத்தை எமது தேசியத் தலைவர் அவர்கள் நீண்டகாலமாகக் கொண்டிருந்தார். இக்கருத்திற்குச் செயல் வடிவம் கொடுக்கும் வகையில் 1994 ஆம் ஆண்டு வைகாசி மாதம் 23 ஆம் நாளில் தமிழீழ வைப்பகம் உதயமானது. தமிழ் மக்களின் அழிவுக்குள்ளான பொருளாதார இருப்பை மீண்டும் கட்டியெழுப்ப உதவுவதனூடாக தமிழ் மக்களின் காப்பகமாக இருக்க வேண்டும், என்னும் கோட்பாட்டின் அடிப்படையில் இது ஆரம்பிக்கப்பட்டது. இன்றைய உலக ஒழுங்கில் பொருள் வல்லமை எவ்வாறு ஆதிக்கம் செலுத்துகின்றது என்பதைக் காண்கின்றோம். உலக அரசியலைத் தீர்மானிக்கின்ற வலுவை பன்னாட்டு வைப்பகங்கள் கொண்டுள்ளன. தமிழ்த் தேசியத்தை உருவாக்கும் மூலவிசைகளில் ஒன்றாகத் தமிழர்களிற்கென வைப்பகம் ஒன்றை உருவாக்கும் எண்ணக்கரு தோற்றம் பெற்றது. இதன் விளைவே தமிழீழ வைப்பகம் ஆகும். எந்தவொரு தேசத்தைப் பொறுத்த வரையிலும் அங்குள்ள வங்கிகளில் உள்ள வாடிக்கையாளரின் வைப்புக்களிற்கு அந்நாட்டு அரசுகளே உத்தரவாதமளிக்கின்றன. அது போலவே தமிழீழ வைப்பகத்தின் வழமைதாரர்களது வைப்புக்களிற்குத் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினால் முழுமையான உத்தரவாதம் அளிக்கப்படுகின்றது. 1994 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட தமிழீழ வைப்பகம் இன்று தனது பத்தாவது (10 ஆவது) ஆண்டில் தனது செயற்பாட்டை முன்னெடுத்துச் செல்கின்றது. இப்பத்தாண்டு காலத்தில் பல்வேறுபட்ட வைப்பகப் பணிகளை மேற்கொண்டதன் மூலம் எமது தேசத்தின் மேம்பாட்டிற்குத் தமிழீழ வைப்பகம் கணிசமான பங்களிப்பைச் செய்துள்ளது. தொடர்ந்தும் இப்பணியைச் சிறப்பாகச் செய்வதற்கு உறுதி பூண்டுள்ளோம். தமிழர்களின் சொத்தான தமிழீழ வைப்பகம் உறுதியான வளர்ச்சி காணுவதன் மூலம் தமிழ்த் தேசியத்தின் பொருண்மிய வல்லமையை தேசம் பெற அனைத்து மக்களும் எம்முடன் இணைந்து நடப்பார்கள் என நம்புகின்றோம். இதனையே “தமிழீழ வைப்பகம் தமிழரின் காப்பகம்” என்னும் தொலை நோக்குச் சிந்தனையூடாக வெளிப்படுத்துகின்றோம். திரு. ம.வீரத்தேவன், மேலாண்மைப் பணிப்பாளர், தமிழீழ வைப்பகத்தின் கிளைகள் கிளைகள் ஆரம்ப நாள் யாழ்ப்பாணம் 23-05-1994 கிளிநொச்சி 05-06-1995 நெல்லியடி 14-09-1995 முல்லைத்தீவு 14-05-1996 ஊரகக் கிளைகள் ஆரம்ப நாள் மாங்குளம் 07-07-1997 விசுவமடு 01-06-2001 புளியங்குளம் 24-07-2002 பளை 14-03-2003 முழங்காவில் 14-01-2004 பணிகள் நிலையான வைப்புகள் Fixed Deposits தேட்ட வைப்புகள் Savings Deposits நடைமுறைக் கணக்குகள் Current Accounts தேட்டச் சான்றிதழ்கள் Savings Certificates ஏழு நாள் அழைப்பு வைப்புகள் Seven Days call Deposits வெளிநாட்டு நாணய மாற்று Foreign Currency Exchange கடன்கள் Loans மேலதிக வரைவுகள் Overdrafts நகையடைவு Pawn Broking காசோலைக் கொள்வனவு Cheque Purchase Facilities வாடகைக் கொள்வனவு Hire Purchase நிலையான கட்டளைகள் Standing Orders பொதி பாதுகாப்புப் பணி Packet Custody Service நிலையான வைப்புத்திட்டங்கள் Fixed Deposit Schemes நிலையான வைப்புத்திட்டங்கள் வட்டி வீதம் 24 மாத நிலையான வைப்பு 08.50 % 12 மாத நிலையான வைப்பு 08.00 % 06 மாத நிலையான வைப்பு 07.00 % 03 மாத நிலையான வைப்பு 06.00 % 24 மாத நிலையான வைப்பு (மாதவட்டி) 08.00 % 12 மாத நிலையான வைப்பு (மாதவட்டி) 07.50 % வெளிநாட்டு நிலையான வைப்புத்திட்டங்கள் Foreign Fixed Deposit Schemes நிலையான வைப்புத்திட்டங்கள் வட்டி வீதம் 24 மாத நிலையான வைப்பு 07.50 % 12 மாத நிலையான வைப்பு 07.00 % 24 மாத நிலையான வைப்பு (மாதவட்டி) 07.50 % 12 மாத நிலையான வைப்பு (மாதவட்டி) 07.00 % தாயகஒளி வதியாதோர் வெளிநாட்டு நிலையான வைப்புத்திட்டங்கள் THAYAKAOLI Non-Resident Foreign Fixed Deposit Schemes நிலையான வைப்புத்திட்டங்கள் வட்டி வீதம் 24 மாத நிலையான வைப்பு 07.50 % 12 மாத நிலையான வைப்பு 07.00 % 24 மாத நிலையான வைப்பு (மாதவட்டி) 07.50 % 12 மாத நிலையான வைப்பு (மாதவட்டி) 07.00 % தேட்ட வைப்புத்திட்டங்கள் Savings Deposit Schemes தேட்ட வைப்புத் திட்டங்கள் வட்டி வீதம் வளர்ந்தோர் தேட்ட வைப்புத்திட்டம் 06.00% சிறுவர் தேட்ட வைப்புத்திட்டம் 06.50% நல்லைத் தேட்டம் 06.00% நல்லைச் சிறுவர் தேட்டம் 06.50% சிறார் உண்டியல் திட்டம் 06.50% ஊற்றுக்கண் பெண்கள் தேட்ட வைப்புத்திட்டம் 06.00% அமுதம் சிறார் தேட்டம் 06.50% பணியாளர் காப்பு நயநிதித் திட்டம் 06.50% கடன் திட்டங்கள் Loan Schemes கடன் திட்டங்கள் வட்டி வீதம் நகையடைவுக் கடன் திட்டம் 18.00% வாணிபக் கடன் திட்டம் 16.00% மேம்பாட்டுக் கடன் திட்டம் வேளாண்மைக் கடன் திட்டம் 15.00% கடற்றொழில் கடன் திட்டம் 15.00% கைத்தொழில் கடன் திட்டம் 15.00% சுழற்சி முறையிலான வாணிபக் கடன் திட்டம் 23.00% சுயதொழில் முயற்சிக் கடன் திட்டம் 14.00% கதிரொளி மின்னாக்கித் தொகுதிக்கடன் திட்டம் 17.00% (Based on the data retrieved on Jan 08 2008 from http://www.bankoftamileelam.net) https://eelavarkural.wordpress.com/2019/11/23/bank-of-tamil-eelam-2/
  7. மே 18 என்பது தமிழர் வாழ்வியலில் மறக்கப்பட முடியாத ஒரு துயர நாள் தான், அதேநாளில் அதற்கு முன்னர் நிகழ்ந்தேறிய வரலாற்றுப்பதிவுகளை பிரட்டிப்பார்ப்பது பொருத்தமானதாக அமையும். அதன் ஒரு அங்கமான வன்னி ஊடகவரலாற்றில் தனி இடம் பெற்றிருந்த புலிகளின்குரல் தோற்றம் அது எதிர்கொண்ட சவால்கள் அதன் இறுதிப்பயணம் தொடர்பிலான மேலோட்டமான பார்வை, 21ஆம்நாள் நவம்பர் மாதம் 1990 ஆண்டு அன்;று புலிகளின் குரல் வானொலி தமிழீழ தேசியத்தலைவர் அவர்களினால் தொடங்கிவைக்கப்படுகின்றது.யாழ்குடாநாட்டினை முதன்மையாக கொண்டு அன்றைய காலப்பகுதியில் விடுதலைப்புலிகளின் செயற்பாடுகள் காணப்படுகின்றன, யாழ்ப்பாணத்தில் மக்கள் செறிந்துவாழும் நிலையில் யாழ்ப்பாண கோட்டைக்கு அருகில் வைத்து பண்பலையில் 98 அதிர்வெண்யில் புலிகளின் குரல் வானொலி இயங்கிக்கொண்டிருக்கின்றது தமிழீழ விடுதலையினை சீர்குலைக்கும் நோக்கில் சில தீயசக்திகளின் எதிர்ப்புக்களுக்கு மத்தியிலும்,நாசகார வேலைகளுக்கு மத்தியிலும் புலிகளின் குரல் தனதுசெயற்பாட்டினை மக்கள் மத்தியில் முன்னெடுத்துசெல்கின்றது,அதாவது ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களின் உரிமைக்குரலாகவும், எதிரியின் பொய்மைக்கு எதிரான, உண்மைக்குரலாகவும், ஓங்கி ஒலிக்கவேண்டும் என்ற தமிழீழ தேசியத்தலைவர் அவர்களின் விருப்பத்துடன் செயற்பட்டுக்கொண்டிருக்கும் ஊடாகமாக அன்று புலிகளின் குரல் காணப்படுகின்றது,தமிழீழ விடுதலைப்போராட்டத்தினை ஓடுக்க சிங்களஅரசு எத்தனையோ முயற்சிகள்மேற்கொண்டு தோல்வியையே கண்டுள்ளது., தமிழ்மக்களின் விடுதலையினை மக்களுக்கு தெழிவுபடுத்தும் நோக்கில் புலிகளின் குரல்வானொலியில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஊடாக மக்களுக்கான கருத்துக்கள் முன்னெடுக்கப்படுகின்றுது,அந்தவகையில்தான் தமிழ்மக்களின் கலை கலாச்சாரத்தையும் தொன்மையினையும் வரலாறுகளையும் பன்னாடுகளின் வரலாறுகளையும் எடுத்துக்கூறும் பல்வேறு நிகழ்சிகள் வானொலியில் இடம்பெற்றது, இவ்வாறு யாழ்ப்பாணத்தை 1994 ஆம்ஆண்டு சூரியக்கதில் படைநடவடிக்கை மூலம் வல்வளைப்பு செய்த ஸ்ரீலங்காப் படையினர் அங்கிருந்த ஜந்து லட்சத்திற்கு மேற்பட்ட மக்களை ஒர்இரவில் வெளியேற்றினார்கள், இந்தவேளையில் மக்களிற்கான ஒர்ஊடகமாக புலிகளின் குரல் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றது,ஒலிபரப்பு நிலையத்தினை இடம்பெயர்திக்கொண்டு ஓர்நாள்கூட இடைநிறுத்தாது பனைமரங்களிலும் பாரிய உயரமரங்களிலும் தனது கோபுர செயற்பாடுகளை மேற்கொண்டு இடம்பெயர்ந்துகொண்டிருக்கும் மக்களுக்கான உடகமா செயற்பட்டுக்கொண்டிருந்தவேளையில் யாழ்பாணத்தில் இருந்து தமிழீழ விடுதலைப்புலிகளின் அனைத்துசெயற்பாடுகளும் வன்னிக்கு மாற்றப்படுகின்றது இன்னிலையில் கிளிநொச்சிப்பகுதிக்கு புலிகளின் குரலின் நிறுவன செயற்பாடுகள் மாற்றப்படுகின்றன கிளிநொச்சிப்பகுதியில் இருந்து செயற்பட்டுக்கொண்டிருந்த புலிகளின் குரல், ஸ்ரீலங்காப் படையினரின் வல்வளைப்புகாரணமாக மக்களும் வானொலியும் இடம்பெயர்ந்து மாங்குளம் பகுதியில் சிறிதுகாலம் இயங்குகின்றது, இவ்வாறு பல பொருட்கள் இழப்புக்கள் ஊடகத்திற்கான இலத்திரனியல் பொருட்கள் இழப்புக்களுக்கு மத்தியில் தான் புலிகளின் குரல் வானொலி மக்களுக்கான கருத்து ஊடகாமாக இடைவிடாது செயற்பட்டுக்கொண்டிருந்தது, இவ்வாறு பல்வேறு பட்டஇடர்களுக்கு மத்தியில் பலதடவைகள் வானொலியின் ஒலிபரப்பு சேவையின் தளத்தினை மாற்றிஅமைக்கப்படுகின்றது,இன்னிலையில் தான் ஒட்டிசுட்டான் கூழாமுறிப்பில் உள்ள உயரமான இடத்தில் தனது ஒலிபரப்பு நிலையத்தினை அமைத்து இயங்கிக்கொண்டிருந்தது,இருந்தும் இழப்புக்களை எதிர்கொண்டு இடைவிடாது மக்களுக்கு கருத்துசொல்லும் செயற்பாடுகளில் புலிகளின் குரல் வானொலிசெயற்பட்டுக்கொண்டிருக்கின்றது, சமாதானம் வரையான காலப்பகுதிகளில் பல்வேறு தாக்குதல்கள் புலிகளின்குரல் வானொலியினை நோக்கி நடத்தப்படுகின்றன. பத்திற்கும் மேற்பட்ட வான் தாக்குதல்கள் நடத்தப்பட்ட போதிலும் அதன் பணி இடையறாது தொடர்ந்து நடைபெறுகிறது.சமாதான காலத்தில் புலிகளின்குரலின் வளர்ச்சியில் அடுத்த படிநிலையினை எட்டுகின்றது.இதில் பல்வேறு பட்ட வளர்சிகளை கொண்டு தாயகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் புலிகளின் குரல் வானொலி பண்பலையில் ஒலிபரப்பாகப்படுகின்றது, திருகோணமலையில் வெருகல் கல்லடி என்ற இடத்தில் மீள்ஒலிபரப்பு நிலையம் அமைக்கப்பட்டு அங்கிருந்து கிழக்கிற்கான வானொலி செயற்பட்டுக்கொண்டிருக்கையில் ஸ்ரீலங்கா அரசின் பயங்கரவாத செயல்கள் காரணமாக பணியினை இடைநிறுத்தி வன்னியில் இருந்துகொண்டு விரிவுபடுத்தப்பட்ட ஒலிபரப்பு தொழில்நுட்ப வசதிகளுடன் இயங்கிக்கொண்டிருக்கின்றது. 2005ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து புலிகளின் குரல் புலம்பெயர் தமிழ்மக்களும் கேட்க வேண்டும் அத்துடன் வளர்ந்து செல்லும் தொழில்நுட்ப வளர்சிக்கு ஏற்றால்போல் புலிகளின் குரல் வானொலியும் தன்னை வளர்த்துகொண்டு இணையத்தளத்தில் ஏறி உலகம் முழுக்க ஒலித்ததுடன் நிகழ்ச்சிகளையும் செய்திகளையும் உடனுக்குடன்பதிவேற்றம் செய்து கொண்டிருந்தது இந்நிலையில் விடுதலைப்புலிகளின் உத்தியோக பூர்வ வானொலியாக தமிழீழ விடுதலைப்புலிகளின் அறிவிப்புக்கள் உள்ளிட்ட களமுனையில் எதிரிமீதான தாக்குதல்கள்,போராளிகளின் வீரச்சாவு என்பனவற்றை உறுதிப்பட மக்களுக்கு வழங்கிக்கொண்டிருக்கையில் வன்னியில் இருந்து தனது சேவையினை விரிவு படுத்தும்நோக்கில் கொக்காவில் பகுதியில் வானொலி ஒலிபரப்பு தளத்தினை அமைத்து செயற்பட்டுக்கொண்டிருக்கையில் 2006ஆம்ஆண்டு09 மாதம் 18 ஆம் திகதி புலிகளின் குரலின் கொக்காவில் ஒலிபரப்பு கோபுரம் உள்ளிட்ட ஒலிபரப்பு நிலையம் தகர்த்து அளிக்கப்படுகின்றது. இந்தத் தாக்குதல் சம்பவம் புலிகளின் குரல் நிறுவனம் மீது நடத்தப்பட்ட பதினோராவது நேரடியான தாக்குதலாகும்.2007ஆம்ஆண்டு 11 ஆம்மாதம், 27 ஆம் நாள் மாவீரர்நாள் ஒலிபரப்பு நடைபெற்றுக்கொண்டிருந்தது. மாலை இடம்பெறும் தலைவர்கள் அவர்களின் மாவீரர்நாள் உரையினை தடுக்கும் நோக்கில் கிளிநொச்சி 115ஆம் கட்டைப் பகுதியில் அமைந்திருந்த வானொலியின் நடுவப்பணியகம் மீது தாக்குதல் கிபிர் விமானங்கள் மிக மோசமான தாக்குதலை நடத்துகின்றன. இந்த வான்தாக்குதலில் அறிவிப்பாளர் இசைவிழிசெம்பியன் பொறியியல்பகுதியினை சேர்ந்த சுரேஸ்லிம்பியோ, ஓட்டுநர் தர்மலிங்கம் புலிகளின் குரல் வானொலியின் பணியாளர்கள் நாட்டுப்பற்றாளர்களாக உயிரிழந்தார்கள். (இசைவிழி செம்பியனின் பிள்ளைகள் மூவரும் தந்தையாரோடு மே 18 இல் இராணுவத்தினரிடம் சரணடைந்த நிலையில் இன்றுவரை அவர்கள் பற்றிய எந்தத் தகவலும் வெளித்தெரியாது) கிபிர் தாக்குதல் நடத்தப்பட்ட போதிலும் அதன் ஒலிபரப்பில் தடங்கல் ஏற்படவில்லை. குறித்த நேரத்தில் மாவீரர் நாள் உரை ஒலிபரப்பாகியது. இதன்பின்னான காலத்தில் எதிரியின் வல்வளைப்புகளுக்கு மத்தியில் கொக்காவில் பகுதியில் உள்ள ஒலிபரப்பு கோபுரத்தினை கழற்றி அங்கிருந்து வேறு பகுதிக்கு கொண்டு செல்வதற்கான பணியில் ஏனைய போராளிகளுடன்; ஈடுபட்டுக்கொண்டிருக்கையில், 12.09.2008 அன்று புலிகளின்குரல் போராளி லெப்.இசையரசன், நாட்டுப்பற்றாளர் விக்கினேஸ்வரன், ஆகியோர் உயிர் துறக்கின்றனர். பல்வேறு நெருக்கடிகளுக்கும் உயிரிழப்புக்களுக்கும் மத்தியியில் கிளிநொச்சியின் பலஇடங்களில் நகர்த்தப்பட்டு ஒலிபரப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. கரடிப்போக்கு சந்திக்கு அண்மித்த பகுதியில் இரண்டு இடங்களிலும் பரந்தன் பகுதியில் இரண்டு இடங்களிலும் புலிகளின் குரலின் ஒலிபரப்புக்கள் ஸ்ரீலங்காப்படையின் அச்சுறுத்தல்கள் மாற்றப்பட்ட போதிலும் அதன் ஒலிபரப்பில் தடைகள் ஏற்படவில்லை. ஸ்ரீலங்காஅரசின் அச்சுறுத்தல்கள் காரணமாக மீண்டும் விசுவமடு தொட்டியடிப்பகுதிக்கு மாற்றப்பட்ட புலிகளின் குரல் அங்கிருந்துகொண்டு 2008ஆம்ஆண்டு மாவீரர் நாள் ஒலிபரப்பினை மேற்கொண்டு இருந்தது.. இன்நிலையில் 2008 ஆம் ஆண்டும் மாவீரர்நாள் உரை மக்களைச் சென்றடைய விடாது பரந்தனில் இருந்த புலிகளின் குரலின் ஒலிபரப்பு நிலையம் மீதும் ஸ்ரீலங்கா வான்படையால் தாக்குதல் நடத்தப்படுகின்றது. இவ்வாறு எதிரியின் பல்வேறு தாக்குதல்களுக்கு புலிகளின் குரல் வானொலியின் பொறுப்பாளரின் திட்டமிடலின் அடிப்படையில் தாக்குதல்களில் இருந்து தப்பித்துக்கொள்கின்றது, வன்னிமீதான போர்நடவடிக்கை காரணமாக ஸ்ரீலங்காப்படையினர் தொடரான வல்வளைப்பினை மேற்கொண்டிருக்கின்ற காலப்பகுதியில் மக்களுக்கு ஆறுதலாக புலிகளின்குரல் மட்டுமே செயற்பட்டது. விசுவமடுவில் இருந்து இடம்பெயர்ந்த வானொலி உடையார்கட்டு, சுதந்திரபுரம், தேவிபுரம், இரணைப்பாலை என்று நகர்ந்து இடைவிடாது இடம்பெயர்ந்து கொண்டிருக்கும் மக்களுக்கு உறவுப்பாலமாக செயற்பட்டுக்கொண்டிருந்தது, மரங்களில் அன்ரனாக்கள் கட்டப்படும், அறிவிப்பு நடைபெறும் இடமும், செய்தி தொகுக்கும் இடமும் ஒரே இடமாகவே மாறிய நிலையையும் புலிகளின்குரல் எதிர்கொண்டது. ஒலிரப்பில் பாடல்கள் ஒலிபரப்பாகிக்கொண்டிருக்போது செய்தித் தகவல்கள் பெற்றுக்கொள்ளப்படும், அறிவிப்பு இடம்பெறும் போது அந்த இடத்தில் அமைதி பேணப்பட முயற்சி செய்யப்பட்டாலும் போரின் ஒலி அந்த இடத்தினை வந்து சேருவதை தவிர்க்க முடியாது. இதனைவிடவும் புலிகளின் குரலின் ஒலிபரப்புக் கலையகமாக சிறிய வாகனங்களைப் பயன்படுத்திய நிகழ்வும் நிகழ்ந்தேறியது. வாகனத்தின் இருக்கைகள் சில அகற்றப்பட்டு ஒலிப்பதிவுக் கணிணிகள், ஒலிவாங்கிகள் என்பவற்றுடன் சிறிய ஒலிபரப்பு மற்றம் ஒலிப்பதிவுக் கலையகமாகவும் புலிகளின்குரல் வாகனங்கள் சிலவற்றைப் பயன்படுத்தியிருந்தது.இந்நிலையில் இறுதியில் இடைவிடதாது மக்களுக்கான கருத்துக்களையும் விடுதலைப்புலிகளின் தாக்குதல்களையும் ஸ்ரீலங்காப்டையினரின் தாக்குதல்களின் உயிரிழந்த உறவுகளின் விபரங்களையும் மக்களுக்கும் பன்னாடுகளுக்கும் உடனக்குடன் தெரிவத்துக்கொண்டிருந்த புலிகளின் குரல் வானொலி இறுதியில் வலைஞர்மடப்பகுதியிலும், பின்பு முள்ளிவாய்கலில் மூன்றிற்கு மேற்பட்ட இடத்திலும் இடம்பெயர்ந்துகொண்டு தனது சேவையினை வழங்கியது. முள்ளிவாய்க்கால் மேற்குப் பகுதியில் புலிகளின்குரல் செயற்பட்டுக்கொண்டிருந்த போது நடைபெற்ற எறிகணைத் தாக்குதலின் போதே அதற்கு அருகாக நின்றிருந்த விடுதலைப்புலிகளின் இராணுவப் பேச்சாளர் இளந்திரயன், அரசியல் துறையைச் சேர்ந்த தியாகராஜா ஆகியோரும் வானொலி அறிவிப்பாளரான அந்தணனும் காயமடைகின்றனர். 2009ஆம்ஆண்டு மே மாதம் 15 ஆம் நாள் தொடர்ந்தும் ஒலிபரப்பினை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்படுகின்றது. ஒலிவாங்கியின் ஊடாக இராணுவத் துப்பாக்கி வேட்டொலிச் சத்தங்கள் வானொலிகளில் கேட்கின்றன. துப்பாக்கிச் சன்னங்கள் ஒலிபரப்பு சாதனங்களைத் துளையிடுகின்றன. தொடர்ந்தும் பணிசெய்யமுடியாத நெருக்கடியில் வானொலிச் சாதனங்கள் ஆவணங்கள் அனைத்தும் தீ மூட்டி அழிக்கப்பட்டதுடன் புலிகளின்குரல் என்றொரு சாம்ராஜ்ஜம் முற்றுப்பெறுகிறது. புலிகளின்குரலை வழிநடத்தியவர் நா.தமிழன்பன் எண்பதுகளின் பிற்பகுதியில் தன்னை போராட்டத்துடன் இணைத்துக் கொண்டவர் அவர் ஜவான் என்ற பெயராலேயே நன்கு அறியப்பட்டவர். ஊடகத்துறையில் பல்துறை ஆற்றல் கொண்டவர் அவர் மூத்த தளபதி கேணல் கிட்டு அவர்களின் புடம்போடலிலேயே வளர்ந்தவர். அதனால் கமெராக்களைக் கையாள்தல், பத்திரிகைத்துறையின் சகல நுணுக்கங்கள், வானொலியின் ஒலிபரப்பு தொழில்நுட்பம் முதல் கவிதையின் சந்தம் வரையில் அவர் கைதேர்ந்தவராகவே விளங்கினார். போரில் ஒரு காலை இழந்த அவரின் வேகமான செயற்பாட்டிற்கு ஈடுகொடுப்பதென்பது மிக கடினமானவிடயம், ஆனாலும் அவரால் உருவாக்கப்பட்ட அவரால் புடம்போடப்பட்ட பல ஊடககர்கள் இன்னமும் வௌ;வேறு பகுதிகளில் இருக்கிறார்கள். அனலொக் தொழில் நுட்பத்தில் இடம்பெற்ற புலிகளின்குரல் வானொலியை டிஜிற்றல் தொழில்நுட்பத்திற்கு மாற்றி இணையத்தளம் செய்மதியில் வெளிவரச் செய்தமை அவரது தனிப்பட்ட உழைப்பின் வெளிப்பாடே என்பதற்கு மாற்றுக்கருத்தில்லை வானொலியின் இறுதிக்கணம் வரையில் அதற்காக உழைத்த அவரும் புலிகளின்குரலுக்காக இறுதிவரை பணியாற்றிய தி.தவபாலனனும் (இறைவன்) இறுதி நாட்களில் காணாமல் போனார்கள்.. அவர்கள் பற்றிய தேடல் இன்னமும் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கின்றன.. https://eelavarkural.wordpress.com/2012/05/17/voice-of-tigers/
  8. ஒவ்வொரு பாடலிலும் ஒவ்வொரு நினைவிருக்கு நினைவிலே சுகமிருக்கு நெஞ்சே….இசைநெஞ்சே” …… இதுவொரு சினிமாப்பாடல். இந்தப்பாடல் போல பலரது நினைவுகளை பல பாடல்களும் அவர்கள் விரும்பிக் கேட்ட அல்லது விரும்பிப் பாடியவையும் நினைவுகளாய் தந்த ஞாபகங்கள் எல்லோருக்குமே இருக்கும். அந்த நினைவுகள் பலரது இழப்புகளை அவர்களது தியாகங்களை வரலாற்றில் பதித்து விட்டுச் சென்ற கதைகள் ஆயிரம். அத்தகையதொரு நினைவைத் தந்து சென்ற ஒரு மாவீரனை நினைவு தருகிற பாடல் :- “வானுயர்ந்த காட்டிடையே நான் இருந்து பாடுகின்றேன் வயல் வெளிகள் மீது கேட்குமா-இது வல்லை வெளி தாண்டிப் போகுமா வயல் வெளிகள் மீது கேட்குமா” இந்தப்பாடல் எனக்கு அறிமுகமான காலம் இந்திய இராணுவகாலம். ஈழத்தில் இந்தியப்படைகள் ஆக்கிரமித்திருந்த காலங்களில் விடுதலைப்புலிப் போராளிகள் ஊர்களில் ஒவ்வொரு வீடுகளின் பிள்ளைகளாகவும் பிரியமானவர்களாகவும் அவர்களைக் காப்பாற்றிய கோவில்களாகவும் பல ஊர்கள் இருந்திருக்கிறது. அத்தகையதொரு காப்பிடமாக எனது ஊரும் இருந்திருக்கிறது. பனைமரக் கூடல்களிலும் தோட்டங்களில் பசுமைவிரித்த மறைவுகளிலும் போராளிகள் உறங்கிய காலங்களில் எங்கள் ஊருக்குள் வந்து எங்கள் ஊரின் பிள்ளையாக வாழ்ந்த கப்டன் றோய் என்ற மாவீரனை எங்களுக்கு ஞாபகமாய்த் தந்த பாடல் இது.இப்பாடல் தேனிசை செல்லப்பாவின் குரலில் பாடப்பட்டிருந்தது.ஆனால் ஒவ்வொரு முறையும் இந்தப்பாடல் எனக்குள் நினைவில் நிறுத்தியிருப்பது றோயண்ணாவின் குரலையே. அது 1989 – 1990 காலப்பகுதி. இந்திய இராணுவத்தின் துப்பாக்கிகளே ஊர்களை ஆண்டவேளை. சயிக்கிள்களில் சாரம் கட்டிய புலிகள் உலாவிய காலமது. பெரும்பாலும் இரண்டு பேராகவே சயிக்கிளில் வருகிறவர்களின் கைகளில் இன்னொரு சாரத்தால் அல்லது உரப்பையால் மூடிமறைத்தபடியிருக்கும் துப்பாக்கி. உறக்கம் மறந்த விழிகளில் தெரிகிற பசிக்களைப்பும் நித்திரைக்களைப்பும் போக நம்பிக்கையான வீடுகளில் சிலமணிகள் உறங்கிவிடுகிற அந்த உறங்காத கண்களைக் காவல் காக்கிற வீடுகளில் அவர்கள் அப்போதைய கடவுளர்கள். ஒரு இரவு திடீரென நாய்கள் குரைக்க எங்கள் சமாதி கோவிலடி வீடுகளில் மெல்லிய அழுகைச் சத்தங்களும் ஆரவாரமுமாக இருந்தது. அம்மம்மாவோடு ஒட்டியிருந்த என்னை விட்டுவிட்டு அம்மம்மா கதவைத் திறந்து அடுத்தவளவில் இருந்த சின்னம்மா வீட்டை எட்டிப்பார்த்தா. அதற்கடுத்த அன்ரி வீட்டிலிருந்து அன்ரியின் பிள்ளைகள் அழுவது கேட்டது. அன்ரியும் பிள்ளைகளும் சின்ன அம்மம்மாவும் பாய்களோடு சின்னம்மா வீட்டுக்குள் வந்தார்கள். அன்று புதிதாக வந்திருந்த போராளிகளில் 20 பேர்வரையில் எல்லா வீடுகளுக்குள்ளும் புகுந்து அன்றைய இரவு அங்கேயே தங்கிக் கொள்ள அனுமதி கேட்டார்கள். எப்போதுமே இறஞ்சி எதனையும் எங்கள் இனத்திடம் பெறமுடியாத நிலமை. அன்றும் அந்தப் போராளிகளின் கெஞ்சல் எதுவும் எடுபடாது போக கட்டாயமாக ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் குறித்த சில போராளிகள் புகுந்தார்கள்.திடீர் திடீரென வருகிற இந்திய இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்படுவோமென்ற பயத்தில் அவர்களை ஏற்க மறுத்தவர்களின் கதைகளை உள்வாங்காமல் வெற்று நிலத்தில் படுக்கையை விரித்தார்கள். பின்வீட்டிலிருந்து அத்தை ஓடிவந்தா. காரணம் எங்கள் வீட்டுக்குள்ளும் 3 போராளிகள். 2 பேர் மலேரியாக் காச்சலோடு. அன்று பயத்தில் எல்லா வீடுகளும் சிவராத்திரி நித்திரை முளிப்பாகவே இருந்தது. காலமை போயிடுவார்கள் என்ற நினைப்பும் போய் அத்தையின் வீட்டில் மலேரியாவோடு இருந்த போராளிகளுக்கு அன்று பகல் 11 மணிவரையும் சுடுதண்ணீரும் குடுக்காமல் அத்தை விரதமிருந்தா. அன்று காலையில் குப்பிளான் சந்திக்கு தெற்காக இந்தியப்படைகள் சுற்றிவழைத்து தேடுதலில் ஈடுபட்டார்கள். வடக்குப்பக்கம் வந்தார்களானால் எல்லா வீடுகளும் சுற்றிவழைக்கப்பட்டாலென்ற பயம் எல்லாருக்கும். தம்பியவை எப்ப போவியள் ? இதுதான் அத்தையின் தொடர் கேள்வி. அப்போதான் உயர்ந்த மெல்லிய உருவமாக முதுகில் துப்பாக்கியைக் கொழுவியபடி வந்தார் றோயண்ணை. மலேரியாவில் இருந்த இருவருக்கும் குளிசை கொடுத்தார். அதற்கு மேல் அத்தை கல்லாயிருக்காமல் தேனீர் ஊற்றிக் கொடுத்து பாணும் வாங்கி வந்து குடுத்தா. இனி அவர்கள் எங்கள் பிள்ளைகள் என்ற நிலமைக்கு ஒவ்வொரு வீடும் தங்களை நம்பி இரவு அடாத்தாக புகுந்த போராளிகளை மறுநாள் உறவாக ஏற்றுக் கொண்டார்கள். அத்தோடு றவியண்ணாவும் (மாதகல் புலனாய்வுப்பிரிவு) வந்திருந்தார். றவியண்ணா 1990இல் விபத்தில் சாவடைந்தார். அன்று எங்கள் வீட்டில் காலடி வைத்த றோயல் என்ற போராளி எங்களுக்கு றோயண்ணாவாகினார். பாடக்கொப்பிகளில் தனது அழகான கையெழுத்தால் பெயர் எழுதிவிடுவார். தியாகி திலீபன் அவர்கள் சொல்லிச் சென்ற ‘மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்’ போன்ற வசனங்கள் உட்பட பல போராளிகளின் நினைவுகள் தாங்கிய வசனங்களை ஓவியம் போல கொப்பிகளில் வரைந்து விடுவார். அயலில் உள்ள வீடுகளிற்கெல்லாம் போய்வருகிற நேரங்களில் எல்லாம் அந்தந்த வீட்டுப் பிள்ளைகளின் கொப்பிகளின் கடைசி அல்லது கடைசிக்கு முதல் பக்கத்தில் றோயண்ணாவின் கையெழுத்தில் ஏதாவதொரு வசனமாவது இருக்கும். அந்த வசனங்கள் எல்லாமே போராளியொருவனின் நினைவாக அல்லது அவனது நினைவுக்கல்லாக றோயண்ணா கீறிய ஓவியமாகவுமே அமைந்திருக்கும். றோயண்ணாவின் கையெழுத்தை எனது கொப்பிகளில் பார்த்துப் பார்த்து நானாகவே அந்த அழகான கையெழுத்தின் சாயலில் எனது எழுத்தை மாற்றி எழுதப்பழகினேன். ஓரளவு றோயண்ணாவின் எழுத்தா என மற்றவர்கள் கேட்கும்படி எனது கையெழுத்தினை மாற்றிக் கொண்டேன். கவிதைகள் மீது ஈடுபாடு கொண்ட றோயண்ணா தனது கவிதைகளையும் கிடைக்கிற கொப்பிகளில் எல்லாம் எழுதிவிடுவார். எனது சமூகக்கல்வி , தமிழ் கொப்பிகள் றோயண்ணாவின் கவிதைகளையும் தாங்கியிருக்கிறது. முதல் முதலில் இயக்கப்பாட்டு கேட்டது கூட றோயண்ணா கொண்டு வந்த களத்தில் கேட்கும் கானங்கள் ஒலிநாடாவில் தான். சுற்றிவர நின்ற இந்திய இராணுவத்தின் காதுகளுக்குக் கேட்காமல் களத்தில் கேட்கும் கானங்கள் பாடல்கள் எங்கள் மனங்களில் பதியமானதும் றோயண்ணாவினால்தான். இப்படி எங்கள் ஊரில் வாழ்ந்த எல்லாருக்குள்ளும் றோயண்ணாவின் ஞாபகம் எங்கோவொரு மூலையில் நிச்சயம் ஒட்டியிருக்கும். இந்திய இராணுவத்தின் கண்களுக்கால் தப்பித்து றோயண்ணாவும் அவருடன் வாழ்ந்த போராளிகள் பலருக்கும் அந்த நெருக்கடியான காலத்தில் கிடைத்த அனுபவங்கள் நிறைய. அத்தகைய ஒரு அனுபவத்தை றோயண்ணா ஒருமுறை சொல்லியிருந்தார்:- குப்பிளான் சந்தியிலிருந்து ஏழாலை செல்லும் வீதியில் முதலாவதாக பெரியசங்கக்கடையின் அருகால் வடக்காகப் போகிற சொக்கர் வளவுப்பிள்ளையார் கோவிலடிக்குக் கிட்டவான வீடொன்றில் நித்தியகல்யாணி மரங்கள் அதிகமாக இருந்தது. கோட்டார் மனைக்கால் சொக்கர்வளவுப் பிள்ளையார் பின் வீதியை அடைந்த றோயண்ணாவிற்கு அங்கே இந்திய இராணுவம் படுத்திருந்தது தெரியாது. திடீரென நிலமையை உணர்ந்த றோயண்ணாவிற்கு தப்பிக்க காப்பிடமாய் அமைந்தது அந்த வீடொன்றில் இருந்த நித்திய கல்யாணி மரமொன்றே. கையில் இருந்த தனது ஆயுதத்தையும் காப்பாற்ற வேண்டிய கடமை. ஏதிரி கண்டுவிட்டால் தன்னை அழித்துக் கொள்ள சயனைட்டையும் தயாராக வைத்துக் கொண்டு இருந்தார். எல்லா வீடுகளுக்குள்ளும் புகுந்த இந்திய இராணுவம் திடீரென மறைந்த றோயண்ணாவையே தேடிக் கொண்டிருக்க பகைவரே நினைக்காத வகையில் தனது காப்பிடத்தை ஒரு நித்தியகல்யாணிக் கூடலுக்குள் படுத்திருந்து அவதானித்துக் கொண்டிருந்தார்.இராணுவம் முழுமையாக ஊரைவிட்டு புன்னாலைக்கட்டுவன் முகாமுக்குப் போய்விட்டதாக உறுதியாகி வீதியில் ஆட்கள் நகரும் வரை 6 மணித்தியாலங்களுக்கு மேலாக நித்தியகல்யாணி மரத்தின் கீழ் படுத்திருந்து வெளியில் வந்த போதுதான் அந்த வீட்டு அன்ரி றோயண்ணாவைக் கண்டார். குடும்பத்தோடை செத்திருப்பம் தப்பீட்டம் என சொக்கர்வளவுப் பிள்ளையாரை வேண்டிய அந்த வீட்டு அன்ரி றோயண்ணாவுக்கு தேனிரும் உணவும் கொடுத்து அனுப்பி வைத்தார். எத்தனையோ இடர்களையும் சிரமங்களையும் தாங்கிய இந்திய இராணுவ காலம் முடிவுற்ற 1990. அப்போது விடுதலைப் புலிகளின் மகளீர் அணிக்கான போராளிகள் சேர்ப்பு றோயண்ணா மூலமே முதலில் எங்கள் ஊரில் தொடங்கியது. றோயண்ணாவும் அவரது தோழர்களும் இருக்கின்ற புளியடியில் வருகிற வாகனங்களில் ஏறிச்சென்ற ஏழாலை, மல்லாகம், சுன்னாகம் இருந்தெல்லாம் இயக்கத்தில் சேர வந்த பிள்ளைகளை போராளிகளாக்கியது றோயண்ணாவின் ஆழுமையும் முயற்சியுமே. அப்போது யாழ்நகர் பகுதி, கோண்டாவில், திருநெல்வேலி, நல்லூர் என விடுதலைப்புலிகளின் அலுவலகங்கள் உருவாகியிருந்தது. திடீரென ஒருநாள் எங்கள் ஊரிலிருந்த போராளிகள் காட்டுக்குப் போகப் போவதாகவும் புதிய போராளிகள் வரப்போவதாகவும் செய்தி வந்தது. செய்தி வந்த மறுநாள் மதியம் றோயண்ணா உட்பட அங்கிருந்த அனைவரும் எங்களைவிட்டு போய்விடப்போவதாக தயாராகினார்கள். ஒவ்வொரு வீடாக போய் நன்றி சொல்லி விடைபெறும் நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. ‘அடைக்கலம் தந்த வீடுகளே போய் வருகின்றோம் நன்றி நெஞ்சை அடைக்கும் துயர் சுமந்து செல்கின்றோம் உங்கள் அன்புக்கு புலிகள் நன்றி.’ அன்ரி வீட்டின் கிணற்றடியில் குளித்துக் கொண்டு பாடியது கேட்டது. அந்தக் குரல் வேறு யாருமல்ல எங்கள் நெஞ்சங்களில் நிறைந்த றோயண்ணாவே. எங்களைவிட்டுப் போகிற அவர்களின் பிரிவை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. ஆனால் அவர்கள் போய்விடப் போகிற நேரத்தை தள்ளிப்போட முடியாது நேரம் மாலையாகியது. அன்று எதையும் கதைக்க முடியாத மனநிலை எல்லோருக்கும். ஏதாவது எழுதித்தாங்கோ எனக் கொடுத்த கொப்பியின் பின் தாளில் இப்படித்தான் ஓவியம் போல சிவப்பு , நீல நிறங்களால் எழுதியிருந்தார். நான் சரியும் மண்ணில் நாளை பூ மலர்ந்து ஆடக் கூடும் தேனெடுக்கும் ஈக்கள் கூட்டம் தேடி வந்து பாடக் கூடும் எந்த நிலை வந்து சேருமோ-அதை இந்த விழி பார்க்க் கூடுமோ? நாளை தமிழ் ஈழ மண்ணில் நாங்கள் அரங்கேறக் கூடும் மாலை கொடியோடு எங்கள் மன்னன் சபை ஏறக் கூடும் இந்த நிலை வந்து சேருமோ-அதை எந்தன் விழி காணக் கூடுமோ….. எந்த நிலை வந்து சேருமோ-அதை இந்த விழி பார்க்க கூடுமோ? அடியில் அன்புடன் றோயண்ணா என தனது கையெழுத்தால் எழுதித்தந்தார். ஏற்கனவே என்னிடமிருந்த அந்தப் பாடலின் ஒலிநாடாவைத் திருப்பிக் கேட்க மறந்தாரோ தெரியாது நானும் சொல்லவில்லை. றோயண்ணாவின் ஞாபகமாய் கொடுக்காமல் வைத்துவிட்டேன். அவர்களை ஏற்றிப்போக வாகனம் வந்தது. றோயண்ணா போகும் போதும் எப்போதும் பாடுகிற „’வானுயர்ந்த காட்டிடையே நான் இருந்து பாடுகின்றேன் „’ பாடலைப் பாடிக்கொண்டே வெளிக்கிட்டார். எங்களோடிருந்த உறவுகளை இழந்தது போல றோயண்ணாவும் அவரோடு கூடப்போனவர்களும் ஊரைவிட்டுப்போன பின்னர் புதியவர்கள் வந்தார்கள். ஆனால் பிரிந்து போன பழையவர்களின் ஞாபகங்களைத் தருகிறவர்களாக அதே உறவு சொல்லிய அழைப்புகளோடு….! அவர்கள் தான் றோயண்ணா இப்போது நல்லூரடியில் ஒரு முகாமில் இருப்பதாகச் சொன்னார்கள். இந்த இடைவெளியில் சிலதடவைகள் றோயண்ணா எங்கள் ஊருக்கு வந்து போனார். பிறகு வரவேயில்லை. அதற்குள் 2ம் கட்ட ஈழப்போர் ஆரம்பமாகியிருந்தது. 1990 யூன் 16 எனது பிறந்தநாளில் நாங்கள் மீண்டும்; இடம்பெயரத் தொடங்கினோம். எங்களோடு சிலகாலம் வரை வாழ்ந்து எங்கள் வீடுகளில் சகோதரர்களாக பிள்ளைகளாக வாழ்ந்தவர்களே எங்கள் ஊரையும் காக்கும் புனிதப்போரில் காவலரண் அமைத்து கடமையில் இருந்தார்கள். மீண்டும் றோயண்ணா வசாவிளான், கட்டுவன், குரும்பசிட்டி பகுதிகளில் கடமைக்கு வந்திருந்தார். பலாலியிலிருந்து முன்னேறிவரும் இராணுவத்தை எதிர்த்து சண்டையிடும் களவீரனாக மாறியிருந்தார். களங்களில் நிற்கின்றவர்களின் வாழ்வும் உத்தரவாதமில்லாதது. அவர்களுக்காக சாமிகளிடம் நேத்தி வைத்து அவர்கள் வாழ செய்த பிரார்த்தனைகளை அந்தச் சாமிகள் மட்டுமே அறியும். இப்போது றோயண்ணா சண்டைக்காரனாக…. 1990 தீபாவளி நாளில் இராணுவம் பலாலியிலிருந்து பெருமெடுப்பில் முன்னேறத் தொடங்கியது. றோயண்ணாவும் அவர்போன்ற பலநூறு போராளிகளும் இரவுபகல் பாராமல் அமைத்த தொடர் பதுங்கு குளிகளுக்கு பின்புறமாக இராணுவத்தினரின் துப்பாக்கிகள் இயங்கியது. சென்றியிருந்த போராளிகளைத் தாண்டி சில நூறுமீற்றர்கள் முன்னுக்கு வந்து உள்ளிருந்தவர்களை வளைத்ததில் பலர் காயமடைந்தார்கள் வீரச்சாவணைத்தார்கள். அத்தகைய பலருள் றோயண்ணாவும் கடும் காயமுற்று மானிப்பாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். றோய்க்கு காயமாம்…. செய்தி காற்றாய் றோயண்ணாவை நேசித்த எல்லோரையும் சென்றடைந்தது. மானிப்பாய் மருத்துவமனையில் சென்று பார்த்த போது றோயண்ணா பேச்சு மூச்சின்றிக் கிடந்தார். எங்கள் முன் உலாவிய அழகன் றோயண்ணாவின் அழகிய முகம் வெளுறியிருந்தது. உயர்ந்த அந்த உருவம் என்றும் கண்ணுக்குள் நிறைகிற சிரிப்பு எல்லாம் ஒடுங்கி ஒற்றைக்கட்டிலில் விழுந்து கிடந்தது. நாட்கள் செல்லச் செல்ல றோயண்ணா உயிர்தப்பும் நம்பிக்கையும் குறைந்து கொண்டு போனது. றோயண்ணா யாழ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அப்போது யாழ் மருத்துவமனைக்கு போராளிகளைப் பார்வையிட எல்லோரையும் புலிகள் அனுமதிப்பதில்லை. அவர்களது பாதுகாப்பு காரணங்களுக்காக வைத்தியசாலைக்கு எதிர் வீதியில் சற்றுத் தூரத்தில் அமைந்திருந்த அலுவலகத்தில் பதிவு செய்தே போக முடியும். பதிவுப் பிரச்சனையால் அடிக்கடி போக முடியாது. அம்மம்மாவையும் கூட்டிக்கொண்டு 4தடவை றோயண்ணாவை பார்த்திருக்கிறேன். 4வது முறை போனபோது றோயண்ணாவுக்கு படுக்கைப்புண் வந்துள்ளதாகச் சொன்னார்கள். அந்த முறை றோயண்ணாவின் ஒரு அண்ணன் றோயண்ணாவை பராமரித்துக் கொண்டிருந்தார். அப்போதுதான் றோயண்ணா தங்கள் வீட்டின் கடைக்குட்டியென்றதையும் அவர்மீதான தங்கள் குடும்பத்தின் நம்பிக்கையையும் அந்த அண்ணா சொன்னார். வசதியான குடும்ப வாழ்வு உயர்தரம் வரையான படிப்பு மேற்கொண்ட படிப்பைத் தொடர்ந்திருந்தால் நிச்சயம் பல்கலைக்கழகம் போயிருக்க வேண்டிய றோயண்ணா தாயகக்கனவோடு போராளியாகி எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து எங்கேயோ பிறந்த எங்களோடு உறவாகி அன்று பேச்சின்றி மூச்சின்றி நினைவுகள் தவறிக் கிடந்ததைப் பார்க்க அழுகைதான் வந்தது. அம்மம்மா அந்த அண்ணாவிடம் றோயண்ணா பற்றி கதைத்துக் கொண்டிருந்தா. றோயண்ணாவின் தலைமாட்டில் நின்றபடி றோயண்ணா றோயண்ணா என அழைத்தேன். சின்ன அசைவு தெரிந்தது. ஆனால் கண்திறக்கவேயில்லை. கத்தியழ வேண்டும் போலிருந்தது. எனினும் உயிர் தப்புவாரென்றே உள் மனம் நம்பியது. பார்வையாளர்கள் நேரம் முடிந்து எல்லோரையும் வெளியேறும்படி அறிவித்தார்கள். அந்த இடத்தைவிட்டு அசையவே முடியாதிருந்தது. அம்மம்மா வரும் வழியெங்கும் றோயண்ணா பற்றியே சொல்லிக் கொண்டு வந்தா. றோயண்ணா அதிகம் பகலில் இருப்பது எங்கள் பிள்ளையார் தேரடிதான். அந்தப் பிள்ளையார் றோயண்ணா காப்பாற்றுவாரென அம்மம்மா நம்பினா. 5வது முறையாக றோயண்ணாவை பார்க்க தோழி மேனகாவோடு ஏழாலை களவாவோடை அம்மனிற்குச் செய்த அரிச்சனை விபூதியுடன் போய் அனுமதிக்கு பதிவு செய்யக் காத்திருந்த போது அங்கே பதிவு செய்யும் போராளி சொன்னான் றோயண்ணா மேலதிக மருத்துவத்திற்காக இந்தியா கொண்டு செல்லப்பட்டுவிட்டதாக. இந்தியாவிலிருந்து றோயண்ணா சுகமாகி வருவரென்ற நம்பிக்கையில் காத்திருந்தோம். 31.12.1990 இரவு புலிகளின் குரல் இரவுச்செய்தியில் கப்டன்.றோய் வீரமரணம் என்ற செய்தியை வாசித்தார்கள். மீண்டும் வருவாரென்ற நம்பிக்கை பொய்யாகி றோயண்ணா மாவீரனாகி….. இதேபோலொரு 31ம் திகதி பல நூறு போராளிகள் உலாவிய எங்கள் ஊருக்குள் மறக்கப்படாமல் நினைவுகளில் இருக்கிற குறிப்பிட்ட சில மறக்க முடியாதவர்களுள் றோயண்ணாவும் ஒருவராய்…. ஒவ்வொரு வருட முடிவிலும் றோயண்ணாவின் நினைவோடு முடிகிற வருடங்கள் இன்றோடு றோயண்ணாவின் நினைவுகள் சுமந்து 27வருடங்களைக் காலம் கெளரவப்படுத்தியிருக்கிறது. எல்லாமுமாய் எங்களின் வசந்தம் நீ (கவிதை)…… றோயைத் தெரியுமா ? உங்கடை ஊரில இருந்த பொடியன் ? அண்மையில் நண்பர் ஒருவர் கேட்டார். ஓம் ஏன் ? அந்த றோயை விரும்பின பிள்ளை இன்னும் கலியாணம் கட்டேல்ல இங்கைதான் இருக்கு போனமாதம் சந்திச்சனான் என்றார். அழகன் முருகனென்பார்கள் ஆனால் றோயண்ணாவின் அழகை முருகன் கூட பொறாமைப்படுவான். அத்தகைய அழகும் உயரமும் சுருள் முடியும் எல்லாரையும் கவர்கிற கதையும் ஓர் அழகனாய் எங்கள் ஊரில் உலவியவர். அந்த அழகன் பலரது நெஞ்சுக்குள் சின்னக் காதலாக அரும்பியிருந்ததை ஊரில் கேட்டிருக்கிறேன். இன்று றோயண்ணா இல்லாது போய் 27 ஆண்டுகள் நிறைவாகிறது. ஆனால் றோயண்ணாவின் காதலை இன்றுவரை கௌரவப்படுத்தித் தனது வாழ்வை தனிமையாகக் கழிக்கிற அந்த அக்கா மீதான மதிப்பு மேலுயர்கிறது. கப்டன் றோய் அவர்கள் உறங்கும் கல்லறை தமிழகத்தில் கொளத்தூர் அருகில் புலியூர் காட்டுப்பகுதியில் (மேட்டூர் பகுதி)………….. எங்களோடு எங்கள் ஊரோடு நினைவாகிப் போன றோயண்ணா 27வது வருட நினைவு நாளில் மீண்டும் உங்களை நினைக்கிறேன்…. வணங்குகிறேன்…. காலம் தோறும் பலர் வருவார்கள் சிலர் மட்டும் காலங்கள் பல கடந்தாலும் நினைவுகளோடும் உறவுகளோடும் வாழ்வார்கள்… றோயண்ணா இன்றும் எங்கள் மனங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். இன்றும் உங்கள் முகமும் சிரிப்பும் நீங்கள் பாடுகிற வானுயர்ந்த காட்டிடையே நான் இருந்து பாடுகின்றேன் பாடலும் உங்கள் ஞாபகங்களைத் தந்தபடி… உங்களுக்கு எங்கள் வீரவணக்கங்கள்…. உங்கள் கனவுகள் நனவாகும் கனவோடு உங்கள் நினைவுநாளில்….. உங்களுக்கு எங்கள் வீரவணக்கங்கள் றோயண்ணா. நினைவுப்பகிர்வு:- சாந்தி ரமேஷ் வவுனியன் https://www.uyirpu.com/?p=8288
  9. ஆ, இல்லை. நான் அதைச் செய்யவில்லை. வேண்டுமென்றால் தாங்கள் இங்கிருந்து அவற்றைப் பெற்றுக்கொள்ளலாம்: கவனி: இவற்றிற்குள் 2009இற்குப் பிறகு வந்த - போரிற்குப் பிந்தைய - பாடல்களும் உள்ளன. https://www.eelammusic.com/popular-tracks https://tamileelamsongs.com/a-z-eelam-songs/ https://telibrary.com/albums/ https://trfswiss.com/alubm.php https://songs.tamilmurasam.com/norway-3/ https://eelasongs.com/
  10. யாழில் 1995<
  11. யாழில் 1995<
  12. பாகம் - 04 அடுத்து இந்தியப் படைக் காலத்தில் போராளிகளின் உடல்களுக்கு என்ன நடந்தது என்பது பற்றிக் காண்போம். இந்தியப்படைக் காலம்: குலை நடுங்கும் கொடூரங்கள் நிரம்பியது இந்தியப்படைக் காலமாகும். இக்காலத்தில் தமிழ்ப் பெண்களில் கற்புகள் எல்லாம் இந்தியப் படையினரால் சூறையாடப்பட்டுக்கொண்டிருந்தன. சிங்களப் படையினர் செய்ய மறந்த கொடுமைகளை எல்லாம் இந்தியப் படையினர் செய்துகொண்டிருந்தனர். போதாக்குறைக்கு தமிழ் தேச வெறுப்புக் கும்பல்களான ஈ.பி.டி.பி., ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எஃவ்., ஈ.என்.டி.எல்.எஃவ், தமிழ் தேசிய ராணுவம் போன்ற இந்தியக் கூலிப்படைகளும் தம் பங்கிற்கு தமிழ் மக்களை அழித்துக்கொண்டிருந்தன. இந்தியப்படைக் காலத்தில் இயக்கக் கட்டமைப்புகள் எல்லாம் சிதைவடைந்து புலிகள் மீளவும் கரந்தடிப் போராட்டத்தை தொடங்கியிருந்தனர். இதனால், சில போராளிகள் காடுகளுக்குச் சென்றனர். சில போராளிகள் ஊர்வழிய நின்றனர். தமிழ் மக்களும் விடுதலைக்காக போராடிக்கொண்டிருந்த புலிவீரர்களுக்கு தம்மால் ஆன ஒத்துழைப்புகளை வழங்கினர். எனினும் ஆங்காங்கே காட்டிக்கொடுப்புகளும் நடந்துகொண்டிருந்தது. இந்தியப் படையினருடனான அடிபாடுகளின் போது அடவி/காடுகளில் வீரமரணமடையும் போராளிகளின் உடல்களை பெற்றோரிடம் ஒப்படைக்க முடியாத சூழ்நிலை இருந்தது; காட்டைச் சுற்றிவர இந்தியப் படையினர் காவலிருந்தனர். அதனால் புலிகளே அவற்றை காடுகளிற்குள்ளேயே புதைத்தனர். இஃது ஏனெனில், காட்டில் உடல்களை எரித்தால் எழும் புகை மூலம் புலிகளின் இருப்பிடத்தை இந்தியப்படையினர் கண்டு பிடித்து விடுவார்கள் என்பதால் தான் வழமையான எரித்தல் முறைமை இங்கு கடைப்பிடிக்கப்படவில்லை. இதற்கு மற்றொரு காரணம், 1991 ஐப்பசி-கார்த்திகை விடுதலைப்புலிகள் இதழின்படி, இந்தியப் படைகளுடனான சமரின் போது புலிகள் பெற்ற வெற்றிகளுக்கு உறுதுணையாக இருந்தது மணலாற்றுக் காடாகும். ஆகவே இங்கிருந்து சமராடிய புலிவீரர்கள் தாம் வீரமரணமடையும் போது இக்காட்டினிலேயே புதைக்கப்பட வேண்டும் (அப்போது "விதைத்தல்" என்ற சொல் பாவனைக்கு வரவில்லை) என்று விரும்பினர். அவர்களின் ஆசையும் அவ்வாறே நிறைவேற்றப்பட்டது. மேலும், மணலாற்றில் நின்று சமராடிய போராளிகள் பலர் தாம் வேறிடங்களிற்குச் சென்று வீரமரணமடைந்தாலும் தமது உடலானது தம் வாழ்வோடு ஒன்றறக் கலந்துவிட்ட மணலாற்றிலேயே தான் புதைக்கப்பட வேண்டும் என்று வாய்மூலமும் எழுத்துமூலமும் தேசியத் தலைவரிடம் கோரிக்கை விடுத்தனர். அக்கோரிக்கையும் நிறைவேற்றப்பட்டது. எடுத்துக்காட்டிற்கு மணலாற்றுக் காட்டில் நடைபெற்ற ஒரு போராளியின் உடல் புதைப்பு நிகழ்வினைக் காண்போம். இப்புதைப்பு நடைபெற்ற காலம் தெரியவில்லை. இது ஏப்ரல் 1999 அன்று வெளியான ஒளிவீச்சிலிருந்து எடுக்கப்பட்டது ஆகும். மாவீரரின் வித்துடலிற்கு போராளிகள் அகவணக்கம் செலுத்துகின்றனர். படிமப்புரவு: ஒளிவீச்சு 04/1999 தலைவர் புதைகுழியினுள் மண் தூவுகின்றார். படிமப்புரவு: ஒளிவீச்சு 04/1999 இந்நிகழ்படத்தின் படி, முதலில் கதிரைகள் வைத்து ஏற்படுத்தப்பட்ட மேசையின் மேல் இரு உடல்கள் வைக்கப்பட்டுள்ளன. அதனைச் சுற்றிவர போராளிகள் நின்று அகவணக்கம் செலுத்துகின்றனர். பின்னர் வேறொரு இடத்தில் 6 அடி புதைகுழியினுள் இரு உடல்கள் விதைக்கப்படுகின்றன. அப்போது தலைவர் தொடங்கி வைக்க ஒவ்வொரு போராளியாக வந்து புதைகுழியினுள் மண் தூவிவிட்டுச் செல்கின்றனர். பின்னர் சில நாட்கள் கழித்து அவ்விடத்தில் கற்கள் மூலமாக ஆக்கப்பட்ட ஒரு கல்லறை உருவாக்கப்பட்டிருந்ததைக் காணக்கூடியதாக உள்ளது. இடம் மணலாற்றுக் காடு. காலம்: 1988. படிமப்புரவு: த.வி.பு. இதே போன்று மற்றொரு படிமத்தினையும் நோக்குக. இப்படிமத்தில் இரு மாவீரர்களின் உடலை ஏனைய போராளிகள் இறுதிவணக்கத்திற்கு தயார் செய்வதையும் சுற்றிவர பெண் போராளிகள் வீரவணக்கம் செலுத்துவதையும் காணலாம். இவ்விரு மாவீரர்களின் உடல்களும் இரு உருள்கலன்கள் மேல் வைக்கப்பட்டுள்ளதையும் நான்மூலைகளிலும் மெழுகுவர்த்திகள் ஏற்றப்பட்டுள்ளதையும் காண்க. மாணலாற்றுக் காட்டினுள் கற்கள் மூலமாக ஆக்கப்பட்ட பல கல்லறைகள். படிமப்புரவு: எரிமலை ஆயுதவழி விடுதலைப் போராட்ட வீரர் ஒருவர் எனக்களித்த நேரடி வாக்குமூலத்தின் படி, பின்னாளில் கோடாலிக்கல் மாவீரர் துயிலுமில்லமென அழைக்கப்பட்ட இடத்திலிருந்த கல்லறைகள் யாவும் 1988 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியிலேயே மேலுள்ள படத்திலுள்ளவாறு உருவாக்கப்பட்டு விட்டதென்று தெரிவித்தார். இவர் இந்தியப் படையின் காலத்தில் இம்முகாமினுள் கடமையில் ஈடுபட்டிருந்தவர் ஆவார். இதே காலத்தில் மணலாறு மற்றும் வவுனியாக் காடுகள் தவிர்ந்த பகுதிகளில் வீரமரணமடைந்த போராளிகள் அந்தந்த சூழ்நிலைகளுக்கு ஏற்ப விடுபட்டன அ அரிதாக போராளிகளால் எடுக்கப்பட்டு உரியவர் பெற்றாரிடம் கமுக்கமான முறையில் ஒப்படைக்கப்பட்டன. விடுபட்டவை இந்தியப்படைகளால் கைப்பற்றப்பட்டு உசாவலின் பின்னர் சில வேளைகளில் பெற்றாரிடம் ஒப்படைக்கப்பட்டன. அவர்கள் வழக்கமான சமய முறைப்படி உடல்களை சுடுகாடு அ இடுகாடுகளில் அடக்கம் செய்தனர், சைவம், வேதம், இஸ்லாம் என்ற பேதமின்றி. பெரும்பாலான வேளைகளில் இந்தியப்படையினர் புலிவீரர்களின் உடல்களை அவ்விடத்திலையே விட்டுவிட்டுச் சென்றுவிடுவர். அவற்றை அவ்வூர் பொதுமக்கள் எடுத்து சுடுகாடுகளில் எரித்துவிடுவர். அடுத்து சிங்களப் படைகளுக்கும் புலிகளுக்குமான இணக்க காலத்தின் இறுதிப் பகுதியில், 1990இற்கு மேல், நடைபெற்ற ஒரு வீரமரண நிகழ்வினைக் காண்போம். எடுத்துக்காட்டிற்கு, மேஜர் சோதியாவின் வீரமரண நிகழ்வினைக் காணலாம். இவர் 11.01.1990 அன்று சுகவீனம் காரணமாக புலிகளின் முகாமொன்றில் சாவடைந்தார். இவரது உடலானது முதலில் புலிகளின் முகாமில் கட்டளையாளர்கள் உள்ளிட்டவர்களால் வீரவணக்கம் செலுத்தப்பட்டு முடிய வீட்டிற்கு அனுப்பப்பட்டது. புலிகளின் முகாமில் வீரவணக்கம் நடைபெறுகிறது சவப்பெட்டி முகாமிலிருந்து வெளியில் கொண்டுவரப்படுகிறது பின்னர் உடல் யாழ்ப்பணத்தில் உள்ள இவரது வீட்டிற்கு போராளிகளாலையே கொண்டுவரப்பட்டது, அவர்கள் மூன்று விதமான சீருடை அணிந்திருந்தனர். இதுவே வரலாற்றில் முதன் முறையாக புலிவீரர்கள் வரிப்புலியில் மக்கள் முன்றலில் தோன்றிய நிகழ்வாக இருக்கக்கூடும். ஆனால் அனைவரும் அன்று வரிச் சீருடையில் வரவில்லை. சிலர் இந்திய சீருடையை ஒத்து புலிகளால் வடிவமைக்கப்பட்டிருந்த சீருடையிலும் வந்திருந்தனர். அன்னாரின் தாயர் விழிமூடிய மகளின் திருமுகம் கண்டு விம்முகிறார் பெற்றோர் இருமருங்கிலும் அமர்ந்திருக்க இந்தியப் படைகளின் சீருடையை ஒத்த சீருடை அணிந்த புலிவீரிகள் சூழ்ந்து நிற்கின்றனர். படிமப்புரவு: தமிழீழ விடுதலைப்புலிகள் அலங்காரவூர்தியில் ஊர்வலத்திற்காக ஏற்றப்பட அணியமான நிலையில் உடல் கொண்ட சந்தனப் பேழை உள்ளது. அதன் தலைமாட்டிற்கு நேரே வரிப்புலி அணிந்த புலிவீரனொருவன் நிற்பதைக் காண்க. படிமப்புரவு: தமிழீழ விடுதலைப்புலிகள் மேற்கூறப்பட்ட அனைத்து சமயச் செய்கைகளும் அன்னாரின் வீட்டில் நடந்து முடிவடைந்தது. அங்கு நடந்த இறுதிவணக்கத்தின் போது படைக்கலன் பூண்ட புலிவீரர்களும் நின்றிருந்தனர். பின்னர் மக்கள் வெள்ளத்தில் அன்னாரின் சவப்பெட்டி தாங்கிய அலங்காரவூர்தி இடுகாடு நோக்கி கொண்டு செல்லப்பட்டது. அப்போது வழியெங்கிலும் நின்று பொதுமக்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். மக்கள் வெள்ளத்தில் அலங்காரவூர்தியில் ஊர்வலத்தின் போது உடல் கொண்ட சந்தனப் பேழை. படிமப்புரவு: தமிழீழ விடுதலைப்புலிகள் வழியெங்கிலும் மலர்தூவி அஞ்சலிக்க ஆயத்தமாய் தமிழீழ மக்கள் நிற்கின்றனர். படிமப்புரவு: தமிழீழ விடுதலைப்புலிகள் இறுதியாக இடுகாடு ஒன்றில் அன்னாரது உடல் புதைக்கப்பட்டது. அப்போது புனித படைய மரியாதை வழங்கப்பட்டதா என்பது குறித்துத் தெரியவில்லை. பின்னர் அவ்விடத்தில் அவருக்கு ஒரு நினைவுச்சின்னம் எழுப்பப்பட்டது. மேஜர் சோதியாவின் சமயப்படியான கல்லறை. படிமப்புரவு: தமிழீழ விடுதலைப்புலிகள் இந்தியப்படைக் காலத்திலிருந்து முதல் வித்துடல் விதைப்பு வரை: இந்தியப் படையின் காலத்திற்கு பின்னரிருந்து உடல் விதைக்கும் இயக்க மரபு நடைமுறைப்படுத்தப்படும் வரை, இந்தியப்படை வருவதற்கு முன்னர் என்ன நடைமுறை கடைப்பிடிக்கப்பட்டதோ அதுதான் தொடர்ந்தும் கடைப்பிடிக்கப்பட்டது. (தொடரும்) ஆக்கம் & வெளியீடு: நன்னிச் சோழன்
  13. நான் நினைக்கின்றேன், இந்த ஒன்ராறியோ மாகாணத்தில் தான் அதிகமான தமிழர்கள் வசிக்கிறார்கள் என்று.
  14. செல்வகுமார் என்றால், ஒரே வரியில் கூறமுடியும் எழிமையான போராளி. இந்திய இராணுவத்துடன் போர் உச்சம் பெற்றிருந்த நேரம், 1989களில் என்று நினைக்கின்றேன், லெப். கேணல். சூட்டண்ணையால், மிகவும் நெருக்கடியான நேரத்தில் அறிமுகப் படுத்தி வைக்கப்பட்டார். நான் சந்திக்கும் போது போராளிக்குரிய எந்த சாயலும் இல்லாது சாதாரணமாக இருந்தார். அந்த நேரத்தில் யாழ் நகரை கலக்கிய போராளிகளான சூட்டண்ணை, யவானண்ணை போன்றவர்களுடன் குமாருக்கும் முக்கிய பங்குண்டு. இவர்கள் இந்திய இராணுவத்தை நித்திரை கொள்ளவிடாமல் செய்தவர்களில் முக்கியமானவர்கள். இந்திய இராணுவம் தோல்விகளுடன் வெளியேறி சென்றபின் புதிதாக பொட்டு அம்மான் தலைமையில் புலனாய்வுத்துறை மீள் உருவாக்கம் பெற்றபோது குமாரும் அதனுள் உள்வாங்கப்பட்டார். ஆரம்பகாலங்களில் இந்திய இராணுவத்துடன் சேர்ந்து இயங்கிய துரோகிகளைக் களை எடுப்பதில் முக்கிய பங்காற்றினார். காலில் பல தடவைகள் செருப்பும் இல்லாது தான் குமாரைக் காணமுடியும். குமாரே சத்தியம் பண்ணி, தான் ஒரு போராளி என்று கூறினாலும் யாரும் நம்ப மாட்டார்கள். அவனது தோற்றம் அப்படித்தான் இருக்கும். மிக எளிமையான உடை அலங்காரத்துடன் யாழ் நகர வீதிகளில் எந்த நேரமும் காணமுடியும். 1991ம் ஆண்டு ஆரம்ப காலத்தில் தமிழ்நாட்டில் ஒரு முக்கிய பணிக்காக அனுப்பப்பட்டிருந்தான். அங்கு சென்று சிறிது காலத்தில் அங்கு நடந்த குண்டு வெடிப்பொன்றின் காரணமாக தமிழ்நாட்டில் தங்கி இருந்த விடுதலைப் புலிகள் அமைப்பை சேர்ந்த எல்லாப் பிரிவுப் போராளிகளும் IB யால் இலக்கு வைக்கப்பட்டு, கைது செய்ய முற்படும் போது ஒரு சில போராளிகளைத் தவிர, யுத்தகளத்தில் படுகாயமடைந்து, மருத்துவத்திற்காக தங்கி இருந்த போராளிகள் உட்பட அனைவரும் சயனைட் அருந்தி வீரச்சாவடைந்தனர். எப்படியோ IB இன் கண்களில் மண்ணைத் தூவி குமாருடன் தொலைத்தொடர்பைச் சேர்ந்த போராளியும், இன்னுமொரு போராளியுமாக மூவரும் கரையில் புலிகளின் படகுக்காக காத்திருந்தனர். ஆனால் அவர்களுக்காக யாரும் வரவில்லை இவர்களுக்கு உதவி செய்யவும் தமிழ்நாட்டு மக்களும் பின்வாங்கிய நேரம். அப்போது இவர்களுக்கும் குப்பியைக் கடிப்பதைத் தவிர வேறு வழி இல்லை. இந்த முடிவுக்கு குமாரை தவிர மற்ற இரு போராளிகளும் வந்திருந்தனர். அப்போது குமார், சாவது பிரச்சனை இல்லை அதற்கு முன் தப்புவதற்கு முயற்சி செய்வோம் முடியாவிட்டால் குப்பியைக் கடிப்போம் என்று முடிவெடுத்து அன்று இருட்டிய பின் கரையில் இருந்த சிறு தோணி ஒன்றில் தங்கள் கைகளையும், துடுப்பையும் நம்பி, நம்பிக்கையுடன் தாயகம் நோக்கி புறப்பட்டார்கள். அந்த நேரத்தில் இயற்கை இவர்களுக்கு சாதகமாக காற்றும் அடுத்தமையால், தங்கள் சாரம் (லுங்கி) கொண்டு தற்காலிக பாய்மரம் ஒன்றை உருவாக்கி இருவர் அதை பிடிக்க ஒருவர் துடுப்பு பிடிக்கத் தோணி வேகமெடுத்தது. இப்படியே பாய்மரமும், துடுப்பும் போட்டு மூன்று நாட்கள் உணவும் இல்லாது கொண்டு வந்த 5L நீரும் தீர்ந்து போக அரை மயக்கத்தில் கடல்தொழிலில் ஈடுபட்டிருந்த எம் மக்களால் கரை சேர்க்கப்பட்டார்கள். அன்று குமாரின் நம்பிக்கை மூன்று போராளிகளின் உயிரைத் காத்தது. அதன் பின்னரான காலங்களில் யாழில் இருந்தபடி தனது புலனாய்வு வேலைகளை விஸ்தரித்து தனது நேரடி வழிநடத்தலில் கொழும்பில் சில தாக்குதலும் வெற்றிகரமாக நடத்தி முடித்தார். எப்போதும் போராளிகளுடன் மென்மையான போக்கையே கையாளும் குமார் தட்டிக் கொடுத்து வேலைவாங்குவதில் கெட்டிக்காரன். ஓய்வுறக்கமின்றி சுழன்ற போராளி. சிறிது காலம் சாள்சுக்கு (கேணல்.சாள்ஸ்) அடுத்த நிலையிலும், இறுதிக்கலாங்களில் தனி நிர்வாகம் ஒன்றை பொறுப்பெடுத்து செய்த சிறந்த நிர்வாகி. 12/01/1998 அன்று குமாரின் குழந்தையின் 31 விழாவிற்கான ஆயத்தங்கள் வீட்டில் நடந்து கொண்டிருந்த போதும், இலக்கொன்றை அழிப்பதற்கு, குண்டு ஒன்றை அனுப்புவதற்கான ஆயத்தங்களின் இறுதிக் கட்டம், கடமை தான் முக்கியமாக கருதிய அந்த போராளி அந்தக் குண்டை கொண்டு செல்லும் போது தவறுதலாக அது வெடித்து வீரச்சாவைத் தழுவியிருந்தார். இந்த செய்தியை நான் செய்தி. ஊடகங்கள் ஊடக அறிந்த போது அதிர்ந்துதான் போனேன். நான் ஊர் வரும் போதெல்லாம் எனக்காக காத்திருந்த நல்ல நட்பு பாதியிலேயே போய்விட்டது. மிகவும் திறமை மிக்க போராளி ஒருவனை எம் தேசம் அன்று இழந்தது..!! – நினைவுகளுடன் ஈழத்து துரோணர்..!!!
  15. எம்மின தமிழ்ப் பெண்களின் கற்பைத் தின்ற இந்தியப் படையினரின் கால்களைக் கழட்டிய பொறிவெடி 1988-1989 இது தான் "(b)பாட்டா" பொறிவெடி என்று எண்ணுகிறேன். சரியாகத் தெரியவில்லை.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.