Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நன்னிச் சோழன்

கருத்துக்கள உறவுகள்+
  • Joined

  • Last visited

Everything posted by நன்னிச் சோழன்

  1. ஜெயசிக்குறு எதிர்ச்சமர் காலத்திய படிமங்கள் இப்படிமங்களின் பெரிய அளவிலான படிமங்கள் உங்கள் ஆரிடமேனும் இருந்தால் கொடுத்துதவுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
  2. 1992 காலப்பகுதியில் கடற்புலிகள் அமைப்பிற்கு வந்த நாட்களிலிருந்து எட்டு வருடங்கள் தொடர்ந்த நட்பொன்று மூச்சிழந்துபோனது. எந்தக் கடல் சண்டையெனிலும் படகுக் கட்டளை அதிகாரியாய் அங்கே பழனி நிற்பான். "பப்பா வண்" எனும் கோட்வேட் அவனுக்கு பொருத்தமாய் அனைவர் வாயினிலும் உச்சரிக்கலானது. பூநகரி தவளைப்பாச்சல் சமர் தொடக்கம், முல்லை வெற்றிச்சமர், ஆனையிறவு முப்படைத்தள அழிப்பு வரை குறிப்பாக வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த குடாரப்பு தரையிறக்க நடவடிக்கையின் கதாநாயகன் எங்கள் பழனி என்பது தமிழர் வரலாற்றுப்பதிவுகளில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்படவேண்டியது. சிங்களத்தின் கடற்கலங்களை எல்லாம் புரட்டிப் போட்ட சமர்களிலெல்லாம் பழனியின் கொமாண்டும் கணிசமாய் இருக்கும். உகண, பபதா, வலம்புரி, லங்காமுடித போன்ற சிங்களத்தின் ஆழ்கடல் வினியோக கலங்களை கடலுக்கடியில் 28 Njrj;jpd; Fuy; Fuy; 31 அனுப்பிவைத்த கடற்சண்டைகளில் முன்னின்று சமராடிய மூத்த கடற்புலி போர்வீரன் எங்கள் பழனி. மொத்தத்ததில் அவனின்றி கடற்புலிகளின் வரலாற்றுச் சாதனைகளை முழுமையாக எழுதி விடமுடியாத கடற்புலி மறவன் இந்த லெப் கேணல் பழனி. சிங்களக்காடையரின் இனக்கலவரமொன்றில் குடும்ப உறவுகள் அனைவரையும் பறிகொடுத்து எங்கோ அநாதரவாய் கைவிடப்பட்ட பிள்ளையாய் பதுளையிலிருந்து தனது 15வது வயதில் போராடப் புறப்பட்டு வந்தவனை வன்னிக்காடு அரவணைத்துக்கொண்டது, அன்றிலிருந்து இயக்கமே அவனது குடும்பமென்றானது. விடுமுறையில் வீட்டுக்குச் செல்ல குடும்ப உறவுகள் இல்லாத போராளியாய் பழனி இருந்தான். போர்க்களமே அவனுக்கு பொழுதுபோக்காய் ஆனது. 1991 இல் எமது விடுதலை இயக்கத்தால் முதன் முதலில் பெயர்சூட்டி நடத்தப்பட்ட மரபுவழிப்போர் நடவடிக்கையான ஆகாயக்கடல் வெளிச்சமரில் இயக்கத்தின் முதல் மரபுவழி தாக்குதல் படையணியான சாள்ஸ் அன்ரனி படையணியின் போர்வீரனாய் களமிறங்கியவன், 1992 காலப்பகுதியில் கடற்புலிகள் அமைப்பு உருவாக்கம் பெற்றபோது அதில் இணைந்துகொள்கிறான். யாழ் வடமராட்சி திக்கம் பகுதியில் அமைந்திருந்த 1-6 (வண் சிக்ஸ்) எனப்படும் கடற்போக்குவரத்து வழிகாட்டுதல் கற்கைநெறி முகாமில் கடல்சார் கற்கை நெறியை முடித்துக்கொண்டு கிளாலி கடல்நீரேரியின் பொதுமக்களின் போக்குவரத்து காவலனாய் கண்விழித்துக் களமாடினான். படிப்படியாய் உயர்ந்தவன் சிறந்த கடலோடியாக, கனரக பீரங்கி சூட்டாளராக, படகுக்கட்டளை அதிகாரியாக, ஆழ்கடலில் பன்னாட்டுப் பெருங்கடலில் ஆயுத நடவடிக்கையில் ஈடுபட்ட கப்பலொன்றின் கப்டனாக, ஒரு சிறந்த பொறுப்பாளராக, தாக்குதல் தளபதியாக, அனைவ ருக்கும் அன்பான அண்ணனாக, சகோரதனாக, நண்பனாக தன்னை அமைத்துக் கொண்டான். தேசியத்தலைவர் தோள்தட்டி வளர்க்கும் தளபதியாய் வளர்ந்து உயர்ந்தவன். கடலில் நடைபெற்ற மூர்க்கமான சண்டைகளிலெல்லாம் பழனியைச்சுற்றி எமது அலைவரிசைக் கருவிகள் முழுதும் குரலெழுப்பிய காலங்கள் தான் இன்றும் காதுகளில் இரைகின்றது. பலவெற்றிச் சமர்களுக்கெல்லாம் வித்திட்டு நின்ற வீரவேங்கையவன். சிங்களத்தின் திட்டமிட்ட நில அபகரிப்பு நடவடிக்கைகளான ஜெயசிக்குறு, சத்ஜெய போன்ற பாரிய படையெடுப்புகளை முறியடித்து முடக்க கடற்புலிகளின் கனரக பீரங்கிப்படைகளை தரையால் கொண்டுசென்று மோதித்தகர்த்த மூர்க்கப் போர்வீரன் அவன். இயக்கத்தின் கடைசி மூச்சென்று தலைவரால் கூறப்பட்டு பெயர்சூட்டி நடத்தப்பட்ட அந்த இரகசிய கடல் நடவடிக்கையான ‘மூச்சு நடவடிக்கை’ எனும் ஆழ்கடல் ஆயுத வினியோக நடவடிக்கையில் தொடராக 25 நாட்கள் முக்குளித்து நின்று வானில் எமது வான்கலங்கள் பறப்பதற்காய் அந்தக் கலங்களையே சுமந்துவந்த படகில் இவனுமாய் பத்திரமாய் கரைசேர்த்த பாரி அவன். ஒன்றாயிருந்து ஒருவேளைகூட விட்டுப்பிரியா உறவாகி தோள்கொடுத்துநின்ற நண்பனிவன் 15/08/2000 அன்று தனது இன்னுயிரை எம் தேசத்துக்காய் தந்து வீரவரலாறாய் மண்ணை முத்தமிட்டான். விட்டுப்பிரிய முடியாத நினைவுககளுடன், புலவர், கடற்புலிகள்.
  3. Two shapes of these Stealth 16' Boats used by Sea Tigers These boats were called Kfir (Tamil: கவிர்/ Romanized: Kavir) class boats by the Navy of Tamil Eelam a.k.a. Sea Tigers of Liberation Tigers. Type 1: Mostly two-man crew (boater & radio operator who also act as an LMG gunner) during Sea Black Tiger attacks and sometimes one manned too. Less than 10 people could travel in it. They were also used during sea-borne special operation missions like marine attacks on Sri Lankan naval installations or infiltrations. This design was the most produced design of the stealth 16' in the Eealm Wars and the most used suicide vessel by Sea Tigers. These were produced from 1998 until the end of the Eelam War. Images: Type 2: These were one-man-crew (boater alone) Sea Black Tigers' boats. Not much is known about this type.
  4. The stealth boat is a product of the Mangai boat construction of the LTTE's Sea Tigers The design of the boat started in accordance with the idea of our national leader and Soosai Anna that the Black Tigers' boat should be made invisible to the radar and with increased speed. Mr. V Master brought an English magazine of that time to the model yard. It contained pictures of a stealth aircraft and some notes. stealth aircraft are specifically designed around stealth technology and it's invisible to RADAR. Yes, the plane will hide itself completely from the radar. After looking at the picture, the map for the bow hull was drawn as a pointed hull design and the rear was drawn as a tunnel hull design. Then a small 8″ model of the bottom was made by the carpenter. For that Gunwale; angles were made according to the shape of the aircraft, a small model was made on cardboard, how the angles refracted the radiation was observed using the torchlight light, and then it was corrected. Then a small model was made on the plywood. At that time there were no technical facilities or computer facilities Under the guidance of Master V, the drawing section women fighters drew pictures for Stealth 16′. 'P carpenter' and four of his workmen along with model yard Women Fighters built the model using board and plywood in about a month. It was then docked to a fibreglass yard. There the carpentry work for the mold was carried out with a team led by a woman fighter who had experience and skill in fiberglass work and a woman fighter who had gone from a model yard. After 20 days the mold is removed from the model. Then 3 days shan paper was put on it and it was ready for production. The same crew also made the boat. In 25 days the first Stealth 16' was painted like a bird of prey and stood majestically named as Thanikai, a Sea Black Tiger named Captain Thanikai. After the technical section, the male fighters put the respective engine and did the wiring work and the boat work was completed. Whenever a boat is to be moulded from any model (Only to the first of its kind) it is always sent off after a Pongal in the traditional Tamil style. Then the boat will be garlanded, coconut will be broken on the floor and a lamp is lit and then only it is sent away from the yard. They did the same to the 'Thanikai' boat too. Our national leader and Soosai Anna came to see the beautiful boat in the evening. Anna, who was happy to see Stealth 16', asked the boat builders of this boat to go up to Velottam (the first entry of any boat into the water body) as well. The Velloottam of the Thanikai boat took place in the Vattuvagal Sea (in Mullaitivu) with the boat builders. Estimated speed with and without load. Hull design calculates the speed at 45–50 knots when it reaches its highest speed of 50–55 knots. The main factor to be considered while designing a boat is the 'Center of Buoyancy and Center of Gravity'. Both of these should come on the same line. This is very rare. But for Stealth 16' both centers are 3′ 6″ away from the rear so it rotates 360°. It also completely hid itself from the radar It is a successful product of Sea Tigers. Our salute to Lt. Col. Soba and Lt. Col. Sudarmani, who participated in the mould and production of the Thanikai boat from the construction of the boat to the final battle. Author: Mangai Boat Building Unit Source: https://eelavarkural.wordpress.com/2020/10/13/seatigers-boat/ Translated from Tamil by: Nane Chozhan (with the help of Google Translate).
  5. Author: Vaakai Via: Thesaththinkural magazine, 03/2022 ------------------------------------- A Stealth boat is a type of vessel that is especially used as a war vessel, and it employs Stealth technology construction techniques in an effort to ensure that time is hard to detect by one or more radar, visual, sonar, and infrared methods. The main detectors that find out whether a Navy vessel of an enemy is in the oceanic water are the sander, the radar, and the infrared. Stealth boats are designed in such a way that they are invisible, but unlike a Navy ship, which is not, it gives a very big boost and advantage to the stealth boat to launch an attack. These techniques borrow from stealth aircraft technology. The earliest known Ship to incorporate stealth technology is the US Navy Sea Shadow. It was completed in the mid-80s, but the public got its first view in 1993. Which was eventually scrapped in 2006. Our Tamil leaders, the Honourable P.V. Prabhakaran and Brigadier Soosai, were attracted by the F117A stealth fighter and decided to build their own stealthy speedboat with a low profile. The Mangai boatyard, which was founded in 1993 and established under the direct observation of the LTTE Leader and the direct guidance of the Sea Tiger leader, In early 1998, the Mangai boat yard's design and model/plug building yard started the construction of a stealth 16‘ in the Vanni jungle, several miles away from the sea. The major feature that is taken into account while constricting a stealth boat is the right angle, which is designed in such a way that it deflects and reflects the radar, and the infrared rays that hit this reflecting surface are known as the radar cross-section. By not constricting the boat with any right angles, such deflection and emerging are avoided, making the vessel a stealth boat. Distinctive low and wide wing-like structure designed to help lift the heavy bow section out of the water during high speed; the upper surface is angular with a ridge along the bow, lending to an open-topped cockpit. The important thing is the stealth, which is designed, and the plug or model construction is done without any mechanical aids or devices. The sea tiger women have done freehand boat line drawing with their master‘s instruction. 8" model of a stealth 16‘ built out of plywood, checked the angles manually, and corrected them, then its final blueprint is ready for plug building. 'Tri-V Hull | Image Screenshotted by Nane Chozhan' The stealth 16‘ Hull is designed with Montego's patented Tunnel hull or tri-V hull. This design provides unusual comfort and excellent stability at high-performance speeds. When it comes to hull design, the most important concern is: i. The centre of gravity is the point in a body where the gravitational force may be taken to act. ii. The centre of buoyancy is the centre of gravity for the volume of water that a hull displaces. When the hull is upright, the centre of gravity and centre of buoyancy are on the same vertical line, and the hull is stable. When the hull line drawings are ready, plug builders will check each line by drawing in the original measurements. After the corrections, the hull line drawings and blueprint will be finalised. Building a boat plug is the first major step in fibreglass boat construction. The boat-designed construction of the plug or model calls for the traditional skills of a boat builder; wood and plywood are the principal materials for construction. Though traditional skills are required, if carpenters will be made in terms of accuracy and quality of workmanship and require constant encouragement by an experienced technician, our sea tiger women who did with their Mastery (Mestiri//master carpenter) Building the plug upside-down is normal, but in LTTE boat yards, they don‘t have a permanent place, so they have to build it strong and firm so it can be easily transported. A Stealth 16‘ plug constructed together with the upper surface, canwall, and hull, which is an exact duplicate of the real boat, will be used once and thrown away. It resembled an F117A stealth fighter. The next step is to build the main structure of the fibreglass boat, which is the mould. From here, all the construction was done by women only. The plug will receive hand-sanding several times to make sure it is smooth enough to receive a layer of hard tooling gel coat, which eventually gives the polished surface when the mould is lifted. When the time comes to make the mould, the process is a faithful reproduction of the plug surface. The mould thickness is up to twice the finished hull thickness. This layout gives the required dimensional stability once the mould has cured, with extra stability added and a mounting caste to allow it to be moved. All this is done, the mould is released or removed from the plug, and then final hand sanding and polishing are done. The Mother mould will be ready to be used for boat construction. Once all the major construction is done, building a boat is not a big deal for the Mangai boatyard ladies. The same team that built the mould also built the first stealth 16-foot boat. They consider it a small boat, which makes them construct it in just 25 days. The only struggle when joining the canwall and hull is that of its unusual wing-like structure; they have to expose themselves to fibreglass mixtures that produce adhesive vapours. When inhaled, these fumes can lead to various respiratory issues. The first stealth boat was named Thanikai (தணிகை) to honour Black Tiger captain Thanikai. On top of the gel coat, the Thanikai stealth boat is painted with a lookalike eagle. Then the Sea Tigers outboard motor technicians did the wiring, fixed the gearbox, and attached a single 200-hp outboard engine at the stern. Mangai Boat Yard always gave an awesome send-off for their boats; they did the traditional Tamil Pongal, gave it a turmeric water bath, and put a garland on the bow. Before it was dispatched, our honourable LTTE Leader visited, congratulated them, and appreciated the hard work of these lady fighters. Speaking to their Leader gave them confidence and made them feel empowered. A stealth 16-foot Thanikai boat casts off in the Vadduvakal Sea. This super-stable speed hull design calculates the speed at 45–50 knots when it reaches its highest speed of 50–55 knots. The centre of gravity and the centre of buoyancy are on the same vertical line, and their stability never vanishes at any point when making a sudden turn. The stealth technology of their construction and their inherent low profile make them difficult to spot. Stealth 16‘ was used as an explosive black tiger boat for many battles until the last war. This is one successful stealthy design boat of LTTE, Which is 90% women-built boats.
  6. செஞ்சிலுவைச் சங்க நிகராளிகளோடான தமிழீழக் காவல்துறையினரின் சந்திப்பு தமிழீழ காவல்துறை நடுவப்பணியகம் கிளிநொச்சி 27/03/2006 | காலை 11:00 மணியளவில் அப்போதைய த.கா. பொறுப்பாளர் பா. நடேசன், த.கா. ஆளுவப் பொறுப்பாளர் தே. கானகன், த.கா. குற்றத் தடுப்புக் கண்காணிப்பாளர் பா. இயலரசன், த.கா. பயிற்சிக் கல்லூரி கண்காணிப்பாளர் ச. தமிழரசன் ஆகியோர் இலங்கைக்கான ஐ.நா. மனித உரிமைகள் ஆலோசகர் ரொறி மாங்கோவன், செஞ்சிலுவைச் சங்கத்தின் கிளிநொச்சி தலைமை அதிகாரி மரின் டின் கஜ்டொம்கய் ஆகியோர் இதில் கலந்துகொண்டனர். (எங்கடையாக்கள் த.கா. சீருடையில் சமூகமளித்திருக்கலாம்!) த.கா. நடுவப்பணியகக் கண்காணிப்பாளர் மாதவன்
  7. காட்டினுள்ளே அமர்ந்து உணவுண்ணும் கேணல் ரமேஸ் மற்றும் இன்னொரு போராளி
  8. மாவீரர்கள்
  9. தவறான தகவல் நீக்கப்பட்டு இவ் ஆவணம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. நான் ஒன்றும் போராளி அன்று. அன்னவர்களைப் பார்த்து வளர்ந்தவன். அவர்களின் வரலாறு மீது இருந்த ஈர்ப்பினால் என்னால் இயன்றளவு அவர்கள் தொடர்பான தகவல்களைச் சேகரித்து கோர்வையாக்கி எழுதி வருகிறேன். எழுதும் போது அதில் ஏற்படும் தவறுகளை அச்சமயம் உள்ள தகவலின்படி என்னால் அடையாளம் காண ஏலாமல் இருந்தாலும் பின்னாளில் கிடைக்கும் தகவலை வைத்து முன்னர் எழுதியதிலுள்ள தவறுகளை சரிசெய்கிறேன். அப்படித்தான் இன்றும் பல தகவல் தவறுகளைச் சரி செய்தேன். இவ் ஆவணம் நான் சிறுகச் சிறுகச் சேகரித்த தகவல்களை ஒவ்வொன்றாகப் பதிவிட்டு இற்றைப்படுத்தியதால் உருவானதே. ஒரே நாளில் சேகரிக்கப்பட்டவை அன்று. இன்னமும் அங்கொன்று இங்கொன்றாகக் கிடைப்பவற்றை சேகரித்து பதிவிட்ட வண்ணமே உள்ளேன். இவை தொடர்பான தகவல் அறிந்தோர் விருப்பமிருந்தால் எனக்கு உதவுங்கள், சரியான வரலாற்றை எழுத.
  10. ஆண்டு: 2007 திகதி: சனவரி 21, 2007 அடிபாட்டுக் காலம்: எற்பாடு 3:45 மணி முதல் மாலை 6:30 மணி வரை நிகழ்வு இடம்: திக்கத்திற்கும் பொலிகண்டிக்கும் இடைப்பட்ட கரையிலிருந்து 3 மைல் தொலைவிலுள்ள கடற்பரப்பு நிகழ்வு விரிப்பு: வெற்றிலைக்கேணியிலிருந்து 15 முதல் 20 வரையான சண்டைப்படகுகளைக் கொண்ட கடற்புலிகளின் பல கலத்தொகுதிகள் பருத்தித்துறை துறைமுகத்தை நோக்கி வலிதாக்கும் நோக்கத்தோடு சென்றுகொண்டிருந்தன. அப்போது எதிர்பாராத வேளையாக கடற்புலிகளின் சில கலத்தொகுதியினர் சிங்களக் கடற்படையினரோடு முட்டுப்பட மோதலொன்று வெடித்தது. சம நேரத்தில் பருத்தித்துறைத் துறைமுகத்தில் சிட்டி ஒஃவ் லிவர்பூல் கப்பல் பொருட்களை (சிறிலங்கா அரசின் தகவலின் படி உணவுப்பொருட்களாம்) இறக்கிவிட்டு நின்றிருந்த வேளையே தாக்குதல் நடந்ததால் அதன் பாதுகாப்பின்பொருட்டு நங்கூரம் உயர்த்தப்பட்டு காங்கேசன்துறை நோக்கிப் பயணமானது. அப்போது கப்பலை 5 அல்லது 6 பல வகுப்புப் படகுகளைக் கொண்ட கடற்புலிகளின் இரு கலத்தொகுதிகள் பின்தொடர்ந்து சென்றன. உடனே கப்பலின் பாதுகாப்பிற்காக தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த சுமார் 10 கடற்படையினர் கடற்புலிகளை நோக்கிச் சுடத்தொடங்க அங்கும் ஒரு மோதல் வெடித்தது. சமரின் நடுவே கப்பலை இலக்குவைத்து நோக்கிப் பாய்ந்துசென்ற கடற்கரும்புலிகளின் இடியன் ஒன்று பகைச் சூட்டிற்கு இலக்காகி வெடித்துச் சிதறியது. அதன் வெடிப்பில் கப்பலின் கலக்கூடு (hull) சிறிது சேதமடைந்தது. எனினும் கப்பல் 3:45 மணி முதல் 5:45 மணிவரை கடற்புலிகளால் சுற்றிவளைக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. கடற்புலிகள் அவ்விடத்தை விட்டகன்ற பின்னரே சிங்களக் கடற்படையின் கடற்கலங்கள் கப்பலை நெருங்கின. பின்னர் கப்பல் காங்கேசன்துறை நோக்கிப் படையினரால் கொண்டுசெல்லப்பட்டது. தொடர்ந்த கடற்சமரில் கடற்படையின் கடற்கலங்களை தாம் தொண்டைமானாறு வரை அடித்துக் கலைத்துச் சென்று விரட்டிவிட்டுத் திரும்பியதாகக் கடற்புலிகள் தெரிவித்தனர். நடந்த கடற்சமரில் கடற்புலிகளுடன் மிண்டிய சிங்களக் கடற்படையின் பல்வேறு வகுப்புகளைச் சேர்ந்த 15 சுடுகல & டோறாப் படகுகளுக்கு ஆதரவாக மாலை 6 மணியளவலிலிருந்து சிங்கள வான்படையின் மிக்-29 தாரை வானூர்திகள்-2, கிபிர் தாரை வானூர்திகள்-2, எம்.ஐ. 24 வகை தாக்குதல் உலங்குவானூர்திகளும் தாக்குதல் நடாத்தின. கடற்படையினருக்கு உதவியாக தரையிலிருந்து முள்ளி, நாகர்கோவில், மந்திகை ஆகிய முகாம்களிலிருந்து சேணேவி, தகரி மற்றும் பல்குழல் உந்துகணைத் தாக்குதல்கள் கடலை நோக்கி மேற்கொள்ளப்பட்டன. இக் கடற்சமரால் கரையோரப் பகுதி மக்கள் இடம்பெயர்ந்து வேற்றிடங்களுக்குச் சென்றனர். கடலில் மோதல் வெடித்ததிலிருந்து பலாலி மற்றும் பல்லப்பை ஆகிய இடங்களிலிருந்து வடமராட்சி வடக்குப் பரப்பு நோக்கி சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட கண்மூடித்தனமான எறிகணை வீச்சில் ஒரு எறிகணை அல்வாய் சிறிலங்காப் பாடசாலையில் வீழ்ந்தது. இதன் சிதறல்களால் கிறேசியன் பானுமதி என்ற பெண் கொல்லப்பட்டதோடு அவருக்கு அருகில் நின்றிருந்த அவரின் இரு பிள்ளைகளும் காயமடைந்தனர். இக்கப்பலானது யாழ்ப்பாணத்தில் உள்ள சிறிலங்காப் படையினருக்கும் பொதுமக்களுக்கும் வழங்கல் பொருட்கள் எடுத்து வரப்படும் கப்பல்களில் ஒன்றாகும். இக்கப்பலில் 10 சிறிலங்காப் படையினரும் 15 பொதுமக்களும் பயணித்திருந்தனர். இதிலிருந்த 15 பொதுமக்கள் கலக்குழுவினரில் பெரும்பாலாtனோர் இந்தியர்கள் ஆவர். கப்பலிலிருந்த கலக்குழுவினருக்கோ கடற்படையினருக்கோ எவ்விதச் சேதமுமில்லையென்று சிறிலங்கா அரசின் படைத்துறைப் பேச்சாளர் பிரசாத் அமரசிங்கே அற்றைநாளே ஊடகங்களுக்குத் தெரிவித்தார். சேதப்பட்ட (சிறிய) கடற்கலங்கள்: 1 கடற்கலப் பெயர்: சிட்டி ஒஃவ் லிவர்பூல் (City of Liverpool) கல வகை: சரக்குக் காவி படிமம்: படிமப்புரவு: அறியில்லை சிறிலங்கா கடற்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: அறியில்லை காயப்பட்டோர்: அறியில்லை வீரச்சாவடைந்த கடற்கரும்புலிகள்: 1 ஆள் தரநிலையுடனான பெயர்கள்: லெப். கேணல் கார்குழலி கடற்கரும்புலி வகை: நீர்மேல் தாக்குதல் கரும்புலிகள் சக்கை வண்டிகள், எண்ணிக்கை: ஆகக்குறைந்தது 1 கல வகை: அறியில்லை ஆதாரம்: உதயன்: 22/01/2007 | தமிழ்நெற்: 21/01/2007 (Sea Tiger boats enter Point Pedro harbour), (SLA shelling kills mother, wounds children in Pt. Pedro) திகதி: சனவரி 29 & 30, 2007 அடிபாட்டுக் காலம்: வைகறை 5:40 மணியளவில் நிகழ்வு இடம்: கொழும்புத் துறைமுகம் நிகழ்வு விரிப்பு: கொழும்புத் துறைமுகத்தினுள் ஊடுருவிய கடற்கரும்புலிகளால் அங்கு தரித்து நின்ற நான்கு புளு ஸ்ரார் வகுப்புப் படகுகள் அழிக்கப்பட்டன. வெடிப்பு அதிர்வால் துறைமுகத்தினுள் இறங்கிக்கொண்டிருந்த ஒரு சரக்குக் கப்பலும் மெல்லிய சேதமடைந்தது. ஆனால் இவற்றை மூடி மறைந்த சிங்களம் தாம் துறைமுகத்தினுள் நுழைந்த மூன்று இடியன்களை சுட்டு வெடிக்க வைத்துவிட்டதாகவும் ஒரு தமிழர் மற்றும் 8 சிங்களவர் என மொத்த 9 மீனவர்களைக் கைது செய்து அவர்கள் புலிகள் என்றும் அவர்களில் ஒருவர் சயனைட் உட்கொண்டு தற்கொலை செய்தார் என்றும் மற்றொருவர் சயனைட் உட்கொண்ட படி பிடிபட்டார் என்றும் கதை அளந்தது. ஆனால் 31 ம் திகதி மட்டில் அகில இலங்கை மீனவ சங்கம் பிடிக்கப்பட்டவர்கள் முன்னக்கரையைச் சேர்ந்த மீனவர்கள் என்றும் அவர்களுக்கும் இதற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லையென்று கூறிட சிங்களத்தின் குட்டு உடைபட்டது. பின்னர் கரையோர மக்கள் போர்க்கொடி தூக்க அவர்களில் சிலர் விடுவிக்கப்பட்டனர். ஆனால் அந்த அப்பாவித் தமிழர் மட்டும் சிங்களப் புலனாய்விப் பிரிவினரால் தொடர்ந்து மறியலில் வைக்கப்பட்டார். தாக்குதலின் முழு விரிப்புக் கிடைக்கப்பெறவில்லை. புலிகளும் இத்தாக்குதல் தொடர்பாக எந்தவொரு அறிக்கையையும் வெளியிடவில்லை. வீரச்சாவடைந்த கரும்புலிகளின் பெயர் விரிப்பினை மட்டும் அறிவித்தனர். இந்த மீனவர் சிக்கல் தொடர்பாக தொடர்பாக மேலும் வாசிக்க: மூழ்கடிக்கப்பட்ட கடற்கலங்கள்: 4 கடற்கல வகுப்புப் பெயர்: புளூ ஸ்ரார் (விதப்பான கல வகுப்பு அறியில்லை. இந்த புளூ ஸ்ரார் நிறுவனத்தால் படைத்துறைக்கு K-71, K-72, சீ கார்ட் ஆகிய வகுப்புக் கடற்கலங்கள் உருவாக்கப்படுகின்றன) கல வகை: அறியில்லை சேதப்பட்ட (மெல்லிய) கடற்கலங்கள்: 1 கடற்கலப் பெயர்: பெலொபோனேசியன் பிறைட் (PELOPONESIAN PRIDE) கல வகை: கொள்கலன் காவி படிமம்: படிமப்புரவு: MarineTraffic.com சிறிலங்கா கடற்படை ஆளணியினkozhuரில், கொல்லப்பட்டோர்: அறியில்லை காயப்பட்டோர்: அறியில்லை வீரச்சாவடைந்த கடற்கரும்புலிகள்: 5 பேர் தரநிலையுடனான பெயர்கள்: மேஜர் சுகந்தன், மேஜர் தீக்கதிர், லெப். மணிக்கொடி, கப்டன் முறையமுதன், லெப். எழுகடல் இவர்களில் லெப். எழுகடல் மற்றும் கப்டன் முறையமுதன் ஆகியோர் இத்தாக்குதலிற்கு கடல் வேவுப்புலிகளாகச் சென்று பின்னர் கடற்கரும்புலிகளாகி வீரச்சாவடைந்தனர் என நான் தமிழீழத்தில் வசிக்கும் போது கேள்விப்பட்டனான். கடற்கரும்புலி வகை: நீர்மேல் தாக்குதல் கரும்புலிகள் வீரச்சாவடைந்த கடற்புலிகள்: அறியில்லை ஆதாரம்: தமிழ்நெற்: 27/01/2007 (Attack boats enter Harbour of Colombo, SLN claims destroying 3 boats), (Confusion amidst harbour attack black out), 31/01/2007 (Union: Navy destroyed fishing boats, not Tiger craft), 02/02/2007 (Fishing hamlet fears backlash after Navy arrests) | எரிமலை: மார்ச் 2007 திகதி: மார்ச் 28 & 29, 2007 அடிபாட்டுக் காலம்: மாலை 10:00 மணி முதல் சாமம் 1:00 மணி வரை நிகழ்வு இடம்: முல்லைத்தீவிற்கும் அளம்பிலிற்கும் இடைப்பட்ட கடற்பரப்பு நிகழ்வு விரிப்பு: விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுக் கடற்பரப்புக்குள் நுழைந்த சிறிலங்காக் கடற்படையின் 23 டோறாக்கள் மீது கடற்புலிகள் நடாத்திய எதிர்த்தாக்குதல் இதுவாகும் என்று தவிபு தெரிவித்திருந்தனர். இதில் சிறிலங்காக் கடற்படையின் 2 டோறாக்கள் மோசமாக சேதமடைந்தன. சேதமடைந்த டோறாக்களை ஏனைய டோறாக்கள் கட்டியிழுதவாறு திருமலை நோக்கி தப்பியோடின. கடற்புலிகள் அவர்களை திருமலை வரை விரட்டிச்சென்றுவிட்டுத் திரும்பினர். இத்தாக்குதலில் குறைந்தது 10 வரையான கடற்புலிப் படகுகள் பங்குபெற்றியிருந்தன என்று சிங்களக் கடற்படை தெரிவித்தது. கடற்புலிகள் தரப்பில் படகுகள் எதுவும் மூழ்கடிக்கப்படவில்லை. இக்கடற்சமரினிடையே அளம்பில் கரையோரத்தில் சிங்களக் கடற்படையினர் சேணேவித் தாக்குதல் நடாத்துவதால் அங்கு வசித்து வந்த மக்கள் அவலப்பட்டு பாதுகாப்பான இடம்தேடி இடம்பெயர்ந்தனர். இத்தாக்குதலில் ஒரு தரைப்புலிப் போராளி வீரச்சாவடைந்துள்ளதை வைத்துப் பார்க்கும் போது இது தென் தமிழீழத்திலிருந்து வட தமிழீழத்திற்குப் போராளிகளை ஏற்றிப்பறிக்கும் நடவடிக்கையின் போது ஏற்பட்ட முட்டலால் வெடித்த கடற்சமரெனத் துலங்குகிறது. சேதப்பட்ட (மோசமாக) கடற்கலங்கள்: 2 கடற்கல வகுப்புப் பெயர்: டோறா (விதப்பான கல வகுப்பு அறியில்லை) சிறிலங்கா கடற்படை ஆளணியினkozhuரில், கொல்லப்பட்டோர்: அறியில்லை காயப்பட்டோர்: அறியில்லை வீரச்சாவடைந்த தரைப்புலிகள்: 1 ஆள் தரநிலையுடனான பெயர்கள்: லெப். கேணல் குட்டிவீரன் எ கனிவாளன் வீரச்சாவடைந்த கடற்புலிகள்: அறியில்லை ஆதாரம்: உதயன்: 30/03/2007 திகதி: ஏப்ரல் 6, 2007 அடிபாட்டுக் காலம்: நண்பகல் 15 மணியிலிருந்து 11:30 மணிவரை நிகழ்வு இடம்: மன்னாரின் புலிகளின் கட்டுப்பாட்டுக் கற்பிட்டி கடற்பரப்பு நிகழ்வு விரிப்பு: இரு தரப்பின் சுற்றுக்காவல் கலத்தொகுதி ஒன்றை ஒன்று நேருக்கு நேர் சந்தித்த போது வெடித்த கடற்சமர் இதுவாகும். இதில் கடற்புலிகளின் சுற்றுக்காவல் படகுத்தொகுதியின் கட்டளையாளரின் தகவலின் படி சிங்களவரின் வோட்டர் ஜெட் ஒன்று மூழ்கடிக்கப்பட்டதாக தவிபு படைத்துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்தார். எனினும் சிறிலங்காப் படையினர் இதை மறுத்ததோடு கடற்கரும்புலிப் படகொன்றை தாம் மூழ்கடித்ததோடு அதன் வெடியதிர்வில் தமது வோட்டர் ஜெட் ஒன்று சேதமடைந்தது என்றனர். அதனால் அது கற்பிட்டி கடற்றுறைக்கு இழுத்துவரப்பட்டது என்றும் கூறினர். ஆயினும் விடுதலைப்புலிகளின் மாவீரர் பட்டியலின் படி கடற்கரும்புலிகள் யாரும் இத்தாக்குதலில் வீரச்சாவடையவில்லை. மேலும் சிறிலங்காக் கடற்படையின் வட்டாரங்களின் படி காயப்பட்டு கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த 8 சிங்களக் கடற்கலவர் சிறிலங்கா வான்படையால் காப்பாற்றப்பட்டு கொழும்புக்கு வான்தூக்கிச் செல்லப்பட்டனர். ஆகவே இதில் கடற்படையின் படகு ஒன்று மூழ்கடிக்கப்பட்டிருப்பது உறுதியாவதோடு கடற்படையின் வழமையான மறைப்பும் இங்கு தெரிகிறது. மூழ்கடிக்கப்பட்ட கடற்கலங்கள்: 1 கடற்கல வகுப்புப் பெயர்: வோட்டர் ஜெட் சிறிலங்கா கடற்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: 7 பேர் காயப்பட்டோர்: சிறிலங்காக் கடற்படையின் வட்டாரங்களின் படி 8 பேர் கடலில் காயப்பட்டு தத்தளித்துக்கொண்டிருந்னர். வீரச்சாவடைந்த கடற்புலிகள்: ஆகக்குறைந்தது 1 ஆள் தரநிலையுடனான பெயர்கள்: கப்டன் றெஜி ஆதாரம்: உதயன்: 7/04/2007 | தமிழ்நெற் 6/04/2007 (SLN vessel sunk, 7 killed in Mannar seas - LTTE) திகதி: மே 4 & 5 , 2007 அடிபாட்டுக் காலம்: சாமம் 11:30 மணியளவில் தொடங்கி அடுத்தநாள் விடிகாலை வரை தொடர்ந்தது. நிகழ்வு இடம்: புல்மோட்டைக் கடற்பரப்பு நிகழ்வு விரிப்பு: இரு தரப்பின் சுற்றுக்காவல் கலத்தொகுதிகள் நேருக்கு நேர் சந்தித்த போது வெடித்த கடற்சமர் இதுவாகும் என்று புலிகள் தெரிவித்தனர். எனினும் அக்கால கட்டத்தில் கடல்வழியாக திருமலையிலிருந்து வன்னிக்கு போராளிகளை ஏற்றிப்பறிக்கும் நடவடிக்கை நடந்துகொண்டிருந்ததால் அதில் ஈடுபட்ட கடற்புலிகளுக்கும் சிங்களக் கடற்படைக்கும் ஏற்பட்ட கடற்சமராக இது இருக்கலாம் என்று இவ்வெழுத்தாளர் கருதுகிறார். மூண்ட சமரில் கடற்படையின் இரு டோறாக் கலங்கள் மோசமாகச் சேதப்படுத்தப்பட்டன. அவை சமரின் முடிவில் கடற்படையினரால் கட்டியிழுத்துச் செல்லப்பட்டன. இதே வேளை கடற்படையினருக்கும் கடற்புலிகளுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் சிக்கி திரியாய்க் கடற்பரப்பில் மூன்று சிங்கள மீனவர்கள் கொல்லப்பட்டனர் என்று கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சேதப்பட்ட (மோசமாக) கடற்கலங்கள்: 2 கடற்கல வகுப்புப் பெயர்: டோறா (விதப்பான கல வகுப்பு அறியில்லை) சிறிலங்கா கடற்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: பலர் காயப்பட்டோர்: பலர். வீரச்சாவடைந்த போராளிகள் : ஆகக்குறைந்தது 3 பேர் கடற்கரும்புலிகள்: 1 ஆள் தரநிலையுடனான பெயர்கள்: லெப்.கேணல் தமிழவன் எ புதியவன் கடற்புலிகள்/ தரைப்புலிகள்: ஆகக்குறைந்தது 2 பேர் தரநிலையுடனான பெயர்கள்: லெப். கேணல் சதா, வீரவேங்கை தூயோன் ஆதாரம்: உதயன்: 6/05/2007 திகதி: மே 24, 2007 அடிபாட்டுக் காலம்: சாமம் 12:45 மணிக்குத் தரையிறக்கப்பட்டு சாமம் 1:15 மணிக்கு தளம் முற்றுக்கையிடப்பட்டு தாக்குதல் தொடுக்கப்பட்டு வைகறை 2:45 மணிக்கு முற்றாக அழிக்கப்பட்டது. நடவடிக்கை இரண்டு மணிநேரம் நீடித்தது நிகழ்வு இடம்: நெடுந்தீவு குந்துவாடியில் அமைந்துள்ள குயின்ராக் கடற்படைத்தளம் & அண்டிய கடற்பரப்பு நிகழ்வு விரிப்பு: நெடுந்தீவின் குந்துவாடியில் 2006ம் ஆண்டு சிறிலங்கா கடற்படையினர் அமைத்த குயின்ராக் கடற்படைத்தளம் மீதான ஈரூடகத் தாக்குதலணியின் (2008இல் 'சேரன் ஈரூடகத் தாக்குதலணி' எனப் பெயர் சூட்டப்பட்டப்பெற்றனர், இதன் முதலாவது கட்டளையாளரின் பெயரால்) தாக்குதல் இதுவாகும். தமிழீழத்தின் மேற்குப் பக்கத்திலுள்ள கடற்புலித் தளமொன்றிலிருந்து 23ம் திகதி மாலை வேளையில் கடற்புலிகளின் துணையுடன் ஈரூடகத் தாக்குதலணியினர் புறப்பட்டனர். இவர்கள் 6 கட்டைப்படகுகளில் (Dinghy) ஏற்றிச்செல்லப்பட்டனர். இவற்றோடு வேறு பல படகுகள் என மொத்தம் 12 படகுகள் இத்தாக்குதலில் பங்கேற்றிருந்தன. சென்றவர்கள் நெடுந்தீவு வெள்ளைப் பரப்பில் சாமம் 12:45 மணியளவில் தரையிறக்கப்பட்டனர். அங்கிருந்து குந்துவாடி நோக்கி நகர்ந்த தமிழரின் ஈரூடகப் படையினர் சாமம் 1:15 மணிக்குத் தளத்தை முற்றுகையிட்டு தாக்குதலைத் தொடுத்தனர். வைகறை 2:45 மணியளவில் தளம் முற்றாக அழிக்கப்பட்டது. இந்நடவடிக்கை இரண்டு மணிநேரம் நீடித்தது. தளத்தினுள் சமர் நடந்துகொண்டிருக்கும் போது உதவிக்கு விரைந்த கடற்படையினர் மீதும் தாக்குதல் நடாத்தப்பட்டது. அப்போது டோறா ஒன்று தாக்குதலிற்குள்ளாகி அருகிலிருந்த முருகைப் பாறையில் மோதி முற்றாகச் சேதமடைந்தது. மேலும் இரு வோட்டர் ஜெட்கள் சேதமடைந்தன. அத்தளத்தினுள்ளிருந்த போர்த்தளவாடங்கள் - குறிப்பாக கதுவீ (RADAR) ஒன்று - மற்றும் படைக்கலன்கள், கணைகள் என்பனவற்றைக் கைப்பற்றிக்கொண்டு பாதுகாப்பாகத் தளம் திரும்பினர், ஈரூடகப் படையினர். கடற்படையின் தளக் கட்டமைப்புகளுக்கு வலுத்த சேதம் விளைவிக்கப்பட்டது. தளத்தினுள் கடற்படையினரின் 34 சடலங்கள் கிடக்கக் காணப்பட்டது கடற்புலிகளால் உறுதிப்படுத்தப்பட்டது. இத்தாக்குதலில் யாழ் மாவட்ட கடற்புலிகளின் பொறுப்பாளர் லெப் கேணல் அருணன் மாஸ்டரும் பங்காற்றியிருந்தார். இத்தக்குதலின் போது படைத்தளத்தினுள்ளிருந்த படையினர் சிறிலங்கா வான்படையினை உதவிக்கு அழைத்தும் அவர்கள் உதவிக்கு கடைசிவரை வரவேயில்லை. இத்தீவில் வெட்டுக்கழி, பெரிய கழி, பேய்க்கழி, வெள்ளைக்கழி, செம்பட்டைக்கழி, இராமிழாப்புக்கழி, இரவதைக்கழி போன்ற கழிகளும் சண்ணாங்குளம், நெழுவினிக்குளம், கம்பராமடை, சமனன் குளம், வடக்குறாவெளிக் குளம் போன்ற குளங்களும் காணப்படுகின்றன. நிகழ்படம்: https://eelam.tv/watch/24-05-2007-ச-ற-த-த-வ-camp-attack-video_sFX5YAPmUeXthd2.html படிமங்கள்: படிமப்புரவு: நிலாவரை நூல் சேதமடைந்த கடற்கலங்கள்: 2 கடற்கல வகுப்புப் பெயர்: வோட்டர் ஜெட் சேதமடைந்த (முற்றாக) கடற்கலங்கள்: 2 கடற்கல வகுப்புப் பெயர்: டோறா (விதப்பான வகுப்புப் பெயர் அறியில்லை) சிறிலங்கா கடற்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: 34 பேர் காயப்பட்டோர்: அறியில்லை வீரச்சாவடைந்த போராளிகள்: 7 பேர் ஈரூடகத் தாக்குதலணியினர்: 4 பேர் தரநிலையுடனான பெயர்கள்: மேஜர் தமிழ்வேந்தினி & பெயர் அறியில்லாப் போராளிகள் சிறிலங்கா அரசாங்கத்தின் தகவலின் படி தரநிலை அறியில்லாத முகிலன் (வீரசிங்கம் ஜங்கரன்), சுகிர்தன் (பாஞ்சாளன் சுகந்தன்), சிறிமாறன் (சந்திரசேகரன் மயூரன்), தமிழ்வேந்தினி, ??னிவிழி (செபஸ்தியாம்பிள்ளை மேரி கனிஷ்ரா), காலைத்தென்றல் (கதிரிப்பிள்ளை மரியா கௌரி), காதல்மைந்தன் (பிரான்ஸிஸ் ??னிகுமார்) தரை நடவடிக்கையின் போது 4 போராளிகள் மட்டுமே வீரச்சாவடைந்ததாக தவிபு அறிவித்தனர். ஆனால் சிறிலங்கா அரசின் (ஒற்றாடலால் அறியப்பட்டதாம்) இத்தகவலில் 7 பேர் வீரச்சாவடைந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. எனவே மேலதிகமான மூன்று பேர் கடலில் நடந்த சமரில் வீரச்சாவடைந்திருக்கலாம் என்று எண்ணுகிறேன். ஆதாரம்: உதயன்: 24/05/2007 | தமிழ்நெற் 24/05/2007 (Tigers attack Sri Lanka Navy installations in Delft) | கட்டுரை: மேஜர் தமிழ்வேந்தினியின் வாழ்க்கை வரலாறு திகதி: சூன் 19, 2007 அடிபாட்டுக் காலம்: எற்பாடு 5:30 மணிக்குத் தொடங்கி சாமம் 10:30 மணி வரை நிகழ்வு இடம்: பருத்தித்துறை முனை கடற்பரப்பிற்கும் வெற்றிலைக்கேணி - பருத்திக்காடு கடற்பரப்பிற்கும் இடைப்பட்ட கடற்பரப்பு நிகழ்வு விரிப்பு: சிறிலங்காக் கடற்படையின் கட்டுப்பாட்டிலுள்ள நீர்ப்பரப்பான முனைக்குள் நின்றுகொண்டிருந்த கடற்புலிகள் மீது சிறிலங்காக் கடற்படையினர் மேற்கொண்ட வலிதாக்குதல் இதுவாகும். இதன்போது வெடித்த கடற்சமரில் கடற்புலிகளின் கல்லப்படாத வேவ் ரைடர் வகுப்பைச் சேர்ந்த 'இந்துமதி' என்ற கலப்பெயரைக் கொண்ட சண்டைப்படகு ஒன்று மூழ்கடிக்கப்பட்டது. அது பின்னர் சிறிலங்காக் கடற்படையினரால் மீட்டெடுக்கப்பட்டது (இதை மறுநிலை பொறியியல் (reverse engineering) செய்து அதன் மூலமே சிறிலங்காக் கடற்படையினர் தமது வேவ் ரைடர் வகுப்புப் படகை 2008இல் உருவாக்கினர் என்று நம்பப்படுகிறது). வேறு சண்டைப்படகுகள் ஏதேனும் சேதப்படுத்தப்பட்டதா என்பது பற்றிய தகவல் தெரியவில்லை. இவ் மூழ்கடிக்கப்பட்ட சண்டைப்படகிலிருந்து பல ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை கடற்படையினர் கைப்பற்றினர். இதிலிருந்த நான்கு வித்துடல்களையும் தரைவழிப் பாதை மூடப்பட்டுள்ளதால் கடல் வழியாக புலிகளிடம் கையளிக்க செஞ்சிலுவைச் சங்கம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சிறிலங்காக் கடற்படை தெரிவித்திருந்தது. கடற்படையினருக்கு தமது வரணி மற்றும் பல்லப்பை ஆகிய இடங்களிலுள்ள படைமுகாம்களிலிருந்து பல்குழல் உந்துகணை செலுத்தி மூலம் தரைப்படையினர் சூட்டாதரவை வழங்கினர். அவை வடமராட்சிக் கடற்பரப்பில் நீண்ட நேரமாக கடற்புலிகள் நின்றுகொண்டிருந்த இடங்களில் வீழ்ந்து வெடித்தன. சிறிலங்காக் கடற்படையினர் தரப்பில் அவர்களின் டோறா ஒன்று சேதப்படுத்தப்பட்டு சிங்கள கடற்படையினரால் கட்டியிழுத்துச் செல்லப்பட்டது. சேதப்பட்ட கடற்கலங்கள்: 1 கடற்கல வகுப்புப் பெயர்: டோறா (விதப்பான கல வகுப்பு அறியில்லை) சிறிலங்கா கடற்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: அறியில்லை காயப்பட்டோர்: அறியில்லை வீரச்சாவடைந்த கடற்புலிகள்: ஆகக்குறைந்தது 4 பேர் தரநிலையுடனான பெயர்கள்: 'படகு கட்டளை அதிகாரி' லெப். கேணல் முல்லைமகள், லெப். வர்மா, வீரவேங்கை இளங்கீரன், கப்டன் அன்புமலர் (இவர் காயமடைந்து மருத்துவமனையில் காயச்சாவடைந்தவர்) ஆதாரம்: உதயன்: 21 & 23/06/2007 | தமிழ்நெற் : 19/06/2007 (SLN, Sea Tigers battle at Point Pedro seas) திகதி: சூலை 7, 2007 அடிபாட்டுக் காலம்: அதிகலை சுமார் 3 மணிநேரம் நிகழ்வு இடம்: கொக்கிளாய் தொடக்கம் கொக்குத்தொடுவாய், புல்மோட்டை வரையான கடற்பரப்பு நிகழ்வு விரிப்பு: தமிழீழக் கடற்பரப்புக்குள் நுழைய முற்பட்ட சிறிலங்காக் கடற்படையின் 21 டோறாக் கலங்களை வழிமறித்து கடற்புலிகள் மேற்கொண்ட முறியடிப்புத் தாக்குதல் இதுவாகும். தாக்குதலின் போது கடற்படையினருக்கு தமது கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், புல்மோட்டை ஆகிய இடங்களிலுள்ள படைமுகாம்களிலிருந்து சேணேவிகள் மூலம் தரைப்படையினர் சூட்டாதரவை வழங்கினர். ஆயினும் கடற்படையினர் திருமலை நோக்கி விரட்டப்பட்டனர் என்று கடற்புலிகள் தெரிவித்தனர். சிறிலங்காக் கடற்படையினர் தரப்பில் அவர்களின் டோறாக்கள் மூன்று சேதப்படுத்தப்பட்டு சிங்கள கடற்படையினரால் கட்டியிழுத்துச் செல்லப்பட்டன. கடற்புலிகளின் சண்டைப்படகுகளுக்கு ஏற்பட்ட சேத விரிப்புகள் தெரியவில்லை. எனினும் சிறிலங்காக் கடற்படையின் பேச்சாளரோ கடற்புலிகள் குச்சவெளியிலிருந்த தமது படைமுகாமை தரைவழியாகவும் கடல்வழியாகவும் (ஆகக்குறைந்தது 15 படகுகள்) நுழைந்து தாக்கினர் என்றும் மூண்ட முரட்டுத்தனமான இருமுனைச் சமர் முறியடிக்கப்பட்டது என்றும் அவர் கூறினார். எவ்வாறெனினும் அற்றை நாள் சமரில் இரு போராளிகளே வீரச்சாவடைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. சேதப்பட்ட கடற்கலங்கள்: 3 கடற்கல வகுப்புப் பெயர்: டோறா (விதப்பான கல வகுப்பு அறியில்லை) சிறிலங்கா கடற்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: அறியில்லை காயப்பட்டோர்: அறியில்லை வீரச்சாவடைந்த கடற்புலிகள்: 2 பேர் தரநிலையுடனான பெயர்கள்: லெப். கேணல் நீலன், வீரவேங்கை சுடர்வேந்தன் ஆதாரம்: உதயன்: 9/07/2007 | தமிழ்நெற்: 8/07/2007 (SLN, Sea Tigers clash in the seas off Pulmoaddai) திகதி: ஓகஸ்ட் 12 & 13, 2007 அடிபாட்டுக் காலம்: சாமம் 10:00 மணி முதல் வைகறை 2:30 மணி வரை நிகழ்வு இடம்: கொக்கிளாய், நாயாறு, புல்மோட்டை ஆகிய கடற்பரப்புகள் நிகழ்வு விரிப்பு: கடற்புலிகளிடம் தலைநகர் திருமலையின் புல்மோட்டையில் இருந்து வன்னிக்கு பின்வாங்கி வந்த போராளிகளை ஏற்றிப்பறிக்கும் பணி ஒப்படைக்கப்பட்டது. இதனை சிறிலங்காப் படையினரினர் தமது கட்டளைப் பீடத்திற்கு அனுப்பியதை புலிகளின் ஒற்றாடல் பிரிவினர் அறிந்து கடற்புலிகளுக்குத் தெரிவித்திருந்தனர். இதனை அறிந்தபடியே புல்மோட்டையை நோக்கிக் கடற்புலிகளின் வழங்கல் படகுகளை உள்ளடக்கிய கலத்தொகுதிகள் தாக்குதல் கட்டளையாளர் லெப். கேணல் தியாகனின் தலைமையில் புறப்பட்டுச் சென்றன. அப்போது கரையை நோக்கித் தரைவழியாக நகர்ந்துகொண்டிருந்த தரைப்புலிகள் எதிர்பார்த்தது போலவே சிறிலங்கா தரைப்படையுடன் முட்டுப்பட்டதால் அவ்விடத்தில் சமரொன்று வெடித்தது. அதேவேளை புலிகளின் நகர்வினை ஏற்கனவே அறிந்து வைத்திருந்த சிறிலங்காக் கடற்படையினர் வெளியேற எத்தனித்த போராளிகளை ஏற்றவென வந்த கடற்புலிகளை தடுக்கும் கடல் வியூகத்தினையும் கடலில் அமைத்தார்கள். புல்மோட்டையை நோக்கி வந்த கடற்புலிகளின் கலத்தொகுதிகளுக்கும் காத்திருந்த கடற்படையினரின் 20இற்கும் மேற்பட்ட டோறாக்களுக்கும் இடையில் கடுஞ்சமர் வெடித்தது. இதேவேளை கடற்படையினருக்கு ஆதரவாக தரைப்படையினரும் கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், புல்மோட்டை ஆகிய இடங்களிலிருந்து கடலை நோக்கி எறிகணை வீச்சு நடாத்தினர். சிறிலங்காக் கடற்படையினர் தரப்பில் 3 டோறாக்களை கடற்புலிகள் சேதமாக்கியதாகவும் அவர்களை திருமலை நோக்கி விரட்டியடித்ததாகவும் புலிகள் அறிவித்தனர். ஆனால் கடற்புலிகளால் தரைப்புலிகள் அற்றை நாளில் அங்கிருந்து ஏற்றிப்பறிக்கப்பட்டனரா என்பது தெரியவில்லை. முல்லைத்தீவு மற்றும் சிலாவத்தையில் புலிகளின் ஆட்புலங்களில் பொதுமக்கள் வசிக்கும் பரப்புகளை நோக்கியும் எறிகணைகள் வீசப்பட்டன. கரையோரங்களில் உள்ள மக்கள் முள்ளியவளை மற்றும் முள்ளிவாய்க்கால் பரப்புகளுக்கு இடம்பெயர்ந்தனர். இந்தச் சமரில் தமிழரின் வேவ் ரைடர் வகுப்பைச் சேர்ந்த சண்டைவண்டியான ராஜ்மோகன் என்ற கலப்பெயரைக்கொண்ட படகு மூழ்கடிக்கப்பட்டது. இதன் படகு கட்டளை அதிகாரியாக லெப். கேணல் தியாகன் செயற்பட்டிருந்தார். சேதப்பட்ட கடற்கலங்கள்: 3 கடற்கல வகுப்புப் பெயர்: டோறா (விதப்பான கல வகுப்பு அறியில்லை) சிறிலங்கா கடற்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: அறியில்லை காயப்பட்டோர்: அறியில்லை வீரச்சாவடைந்த கடற்புலிகள்: 6 பேர் தரநிலையுடனான பெயர்கள்: ‘படகு கட்டளை அதிகாரி’ & 'தாக்குதல் கட்டளையாளர்' லெப். கேணல் தியாகன், 'படகு கட்டளை அதிகாரி' லெப். கேணல் கன்னியத்தம்பி, கப்டன் அகன்போர் எ செவ்வந்தன், 2ம் லெப். அகரக்கடல், 2ம் லெப். ஒளிநிலவன், 2ம் லெப். செந்தமிழ்வாணன் ஆதாரம்: உதயன்: 14/08/2007 | தமிழ்நெற்: 13/08/2007 (SLN, Sea Tigers battle at Point Pedro seas) | கட்டுரை: லெப். கேணல் தியாகனின் வாழ்க்கை வரலாறு திகதி: செப்டெம்பர் 26 & 27, 2007 அடிபாட்டுக் காலம்: சாமம் 10:30 மணியிலிருந்து வைகறை 3:30 மணிவரை நிகழ்வு இடம்: கொக்கிளாய்-புல்மோட்டைக் கடற்பரப்பு நிகழ்வு விரிப்பு: சுருக்கமாக, திருமலையின் பேராறு மற்றும் கும்புறுபிட்டிக் காடுகளில் மறைந்திருந்த 300 இற்கும் மேற்பட்ட போராளிகளை வன்னிக்கு ஏற்றிப்பறிக்கும் கடல் நடவடிக்கை இதுவாகும். இக்கடல் நடவடிக்கையின் போது கடற்புலிகளின் சுமார் 20 வழங்கல் மற்றும் சண்டைப்படகுகள் பயன்படுத்தப்பட்டன. நடவடிக்கையின் போது சிறிலங்காக் கடற்படையின் 17இற்கும் மேற்பட்ட டோறாக்களுடன் ஏற்பட்ட கடற்சமர் வெடித்தது. இதேவேளை கடற்படையினருக்கு ஆதரவாக தரைப்படையினரும் கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், புல்மோட்டை ஆகிய இடங்களிலிருந்து கடலை நோக்கி எறிகணை வீச்சு நடாத்தினர். புலிகளின் அலுவல்சார் அறிக்கையின்படி, நடந்த கடற்சமரின் ஒரு கட்டத்தில் கடற்புலிகள் கடற்படையின் டோறாக்களை புல்மோட்டை வரை பின்தள்ளிச் சென்று அங்கு வைத்து தீவிர தாக்குதல் தொடுத்தனர். இதன் போது கடற்படையின் இரு டோறாக்கள் மீளப்பாவிக்கேலாத நிலைக்கு சேதப்படுத்தப்பட்டன. அவற்றை கட்டியிழுத்துச் செல்லவென திருமலையிலிருந்து வந்த டோறாக்கள் மீதும் கடற்புலிகள் கலைத்து வலுவாக அடித்தனர். இதன் போது திருமலை துறைமுகத்திற்கு அருகில்வைத்து மேலுமொரு டோறா சேதமாக்கப்பட்டது. இழப்புகளுடன் சிறிலங்காக் கடற்படையினர் திருமலைக்குப் பின்வாங்கினர். புலிகள் தரப்பில் எந்தவொரு படகுகளும் மூழ்கடிக்கப்படவில்லை. அதே வேளை புலிகளின் படகுகள் சில சேதமடைந்தன. ஆனால் வழக்கம் போல் சிறிலங்காக் கடற்படையினர் தமது டோறாக்களுக்கு எவ்விதச் சேதமுமில்லையென்றும் கடற்புலிகளுக்கே அள்ளுகொள்ளையான இழப்புகளென்றும் கதை கட்டினர். முழு நிகழ்வின் விரிப்பையும் வாசிக்க: சேதப்பட்ட (மீளப்பாவிக்கேலாது) கடற்கலங்கள்: 2 கடற்கல வகுப்புப் பெயர்: டோறா (விதப்பான கல வகுப்பு அறியில்லை) சேதப்பட்ட கடற்கலங்கள்: 1 கடற்கல வகுப்புப் பெயர்: டோறா (விதப்பான கல வகுப்பு அறியில்லை) சிறிலங்கா கடற்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: அறியில்லை காயப்பட்டோர்: அறியில்லை கடற்புலிகளின் ஆளணியினரில் வீரச்சாவடைந்தோர்: 3 பேர் தரநிலையுடனான பெயர்கள்: ‘படகு கட்டளை அதிகாரி’ லெப் கேணல் நிசாந்தன், பெயர் அறியா கடற்புலி (‘படகு கட்டளை அதிகாரி’ சுதாவின் படகில் இருந்த சூட்டாளர்களில் ஒருவர்), மற்றும் இன்னுமொரு பெயர் அறியா கடற்புலி காயப்பட்டோர்: பலர் ஆதாரம்: உதயன்: 29/09/2007 | தமிழ்நெற்: 28/09/2007 (Sea Tigers, Sri Lanka Navy clash in Eastern waters) திகதி: ஒக்டோபர் 13, 2007 அடிபாட்டுக் காலம்: காலை 9:45 மணி முதல் நண்பகல் 10:45 மணி வரை கடற்கலம் மூழ்கடிக்கப்பட்ட நேரம்: நண்பகல் 10:45 மணியளவில் நிகழ்வு இடம்: கல்லடி - முகத்துவாரக்கட்டை ஆகிய பரப்புகளுக்கு இடைப்பட்ட கடற்பரப்பு நிகழ்வு விரிப்பு: விடுதலைப் புலிகளின் நீர்ப்பரப்புக்குள் புகுந்த சிறிலங்கா கடற்படையின் மூன்று கடற்கலங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட வலிதாக்குதலால் மூண்ட கடற்சமர் இதுவாகும். இக்கடற்சமரின் போது சிறிலங்காக் கடற்படையினர் தரப்பில் ஒரு சுடுகலப் படகு மூழ்கடிக்கப்பட்டதோடு அதிலிருந்த படைக்கலன்களும் மூன்று சடலங்களும் கைப்பற்றப்பட்டன. கடற்புலிகள் தரப்பில் ஆளணியோ கடற்கல இழப்புகளோ ஏற்படவில்லை. கடற்சமரின் போது கடற்படையினருக்கு ஆதரவாக தரைப்படையினரும் பலாலியிலிருந்து கடலை நோக்கி எறிகணை வீச்சு நடாத்தினர். இவ்வெறிகணைகள் கொழும்புத்துறை, மணியந்தோட்டம், அரியாலை கிழக்கு ஆகிய பரப்புகளில் வீழ்ந்து வெடித்தன. இதனால் இப்பரப்பு மக்கள் பதற்றமாகினர். இக்கடற்சமரால் கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த மீனவர்கள் அலறித் துடித்து ஓடினர். எனினும் மீனவர்கள் ஆருக்கும் பாதிப்பு வரவில்லை. மாலை 7:30 மணியளவில் 40 மீனவர்கள் படையினரால் கைது செய்யப்பட்டு அவர்களின் கடல் "பாஸ்" பெறப்பட்டது. அதனை அடுத்த நாள் மாதா கோவிலடி படைமுகாமில் வந்து பெற்றுக்கொள்ளவும் என்று கடற்படையினர் கூறினராம். ஆனால் மீனவர்கள் குருநகர் படைமுகாமில் தடுத்து வைக்கப்பட்டனர். பாசையூர் - குருநகர் கடற்பரப்பில் 13/10 இடம்பெற்ற மோதலின் போது கொல்லப்பட்ட சிறிலங்காக் கடற்படை வீரர்களின் 3 சடலங்களை விடுதலைப் புலிகளின் அரச சார்பற்ற நிறுவனமும் ஐ.நா.வின் தொடர்பு அதிகாரியுமான எம். பாவரசன் கிளிநொச்சியில் உள்ள பன்னட்டு செஞ்சிலுவைச் சங்க நிகராளி திருமதி கட்ஜா லோரன்ஸிடம் 14ம் திகதி காலை 10:00 மணியளவில் கையளித்தார். மூழ்கடிக்கப்பட்ட கடற்கலங்கள்: 1 கடற்கல வகுப்புப் பெயர்: அறியில்லை கல வகை: உட்கரை சுற்றுக்காவல் கலம் படகிலிருந்து கைப்பற்றப்பட்ட படைக்கலன்கள் வீரச்சாவடைந்த கடற்புலிகள்: இழப்பில்லை சிறிலங்கா கடற்படை ஆளணியினரில், காயப்பட்டோர்: அறியில்லை கொல்லப்பட்டோர்: 5 பேர் படிமங்கள்: ஆதாரம்: உதயன்: 14/10/2007 | தமிழ்நெற்: 13/10/2007 (SLN arrests 32 Jaffna fishermen), (Sea Tigers sink SLA vessel, recover 3 bodies), 14/07/2007 (LTTE hands over 3 SLA bodies to ICRC) திகதி: நவம்பர் 23, 2007 அடிபாட்டுக் காலம்: காலை 7:50 மணியளவிலிருந்து தொடங்கி 2:35 மணி நேரமாகத் தொடர்ந்தது. நிகழ்வு இடம்: பேசாலை & தலைமன்னார் கடற்பரப்பு நிகழ்வு விரிப்பு: பேசாலைக் கடற்பரப்பில் தமிழீழ விடுதலைப்புலிகளின் நீர்ப்பரப்புக்குள் நுழைந்த சிறிலங்காக் கடற்படையின் 6 வோட்டர் ஜெட் வகுப்புப் படகுகள் மீது கடற்புலிகள் தாக்குதல் நடாத்தி விரட்டியடித்தனர். இத்தாக்குதலின் போது இரு வோட்டர் ஜெட் படகுகள் சேதமடைந்தன. கடற்படையின் நடவடிக்கையை வெற்றிகரமாக முறியடித்துவிட்டுத் திரும்பும் போது பேசாலைக் கடற்படைத்தளம், அதன் காவலரண்கள் மற்றும் காவல் நிலையம் மீது கடற்புலிகள் சுட்டனர். கடற்புலிகள் கரைக்கு அண்மையாக 75 மீட்டர்கள் வரை நெருங்கி வந்து தாக்குதல் நடாத்தினர் என மன்னார் சிறிலங்காக் காவல்துறையினர் தெரிவித்தனர். இதனால் கடற்படைத்தளக் கட்டடங்கள் சேதமடைந்தன. இம் மொத்த தாக்குதலில் எவ்வித சேதமுமின்றி கடற்புலிகள் பாதுகாப்பாகத் தளம் திரும்பினர் என்று தவிபு படைத்துறைப் பேச்சாளர் மார்சல் தெரிவித்தார். மன்னார் காவல்துறை வட்டாரங்களின் மேலதிகத் தகவலின் படி, கடற்புலிகளுடன் பேசாலை மற்றும் வங்காலைப்பாடு கடற்படையினர் கரையிலிருந்து 2 கிமீ தொலைவில் மிண்டியதால் மோதல் ஒன்று வெடித்து 35 நிமிடங்கள் நீடித்தது. பின்னர் அது வடமேற்காகப் பெயர்ந்து தலைமன்னார் கடற்பரப்பில் மேலும் 2 மணிநேரம் நீடித்தது. மோதலின் போது பேசாலை கரையோரத்தில் உள்ள சிறுதோப்பு மற்றும் வங்காலைப்பாடு ஆகிய சிற்றூர்களைச் சேர்ந்த சில வீடுகள் சேதம் அடைந்ததுடன் 01, 02, 03 மற்றும் 04 ஆகிய வட்டங்களில் உள்ள 400+ பொதுமக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி வெற்றி மாதா தேவாலயத்தில் தஞ்சம் புகுந்தனர். பின்னர், மீதமுள்ள நான்கு வட்டங்களை சேர்ந்த பொதுமக்களும் செயின்ட் மேரிஸ் பாடசாலையில் தஞ்சம் அடைந்தனர். ஏ௧4 வீதியில் பேசாலை ஊடாக தலை மன்னார் மற்றும் அங்கிருந்து புறப்படும் அனைத்துப் போக்குவரத்துகளும் காலை 7.50 மணி முதல் நிறுத்தப்பட்டன. சேதப்பட்ட கடற்கலங்கள்: 2 கடற்கல வகுப்புப் பெயர்: வோட்டர் ஜெட் சிறிலங்கா கடற்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: அறியில்லை காயப்பட்டோர்: அறியில்லை வீரச்சாவடைந்த கடற்புலிகள்: இழப்பில்லை ஆதாரம்: உதயன்: 24/11/2007 | தமிழ்நெற்: 23/11/2007 (Sea Tigers open fire on coastal sentry in Peasaalai) திகதி: திசம்பர் 25 & 26, 2007 அடிபாட்டுக் காலம்: நண்பகல் 11:00 மணி முதல் 1:50 மணி வரை நிகழ்வு இடம்: நெடுந்தீவுக்கும் கச்சதீவுக்கும் இடைப்பட்ட கடற்பரப்பு நிகழ்வு விரிப்பு: நெடுந்தீவுக் கடற்பரப்பில் கடற்புலிகள் தமது வழமையான கடற்பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது தொலைவில் ஒரு கடற்கலம் தென்பட்டது. அது இரணைதீவிலிருந்து 4 அ 5 கடல்மைல் தொலைவில் நின்றுகொண்டிருந்தது. அது எப்படியான இலக்கு என்று காண்பதற்காக பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த கடற்புலிகளின் இரு சண்டைப்படகுகளைக் கொண்ட கலமணி (squadron) ஒன்று புறப்பட்டுச் சென்றது. கடற்புலிகளின் சண்டைப்படகுகள் அதனை அண்மித்ததும் அக்கடற்கலம் கடற்புலிகளை நோக்கி வேட்டுகளைத் தீர்க்கத் தொடங்கியது. உடனே கடற்புலிகளும் சிங்களவரின் டோறா தாக்குகின்றது என்பதை அறிந்து பகரடித் தாக்குதலில் களமிறங்கினர். கடற்புலிகளின் தாக்குதலில் டோறாவில் சில வேட்டுகள் பட்டுத் தெறிக்க அது காரைநகரை நோக்கி ஓட்டம்பிடித்தது. எனவே கடற்புலிகளின் சண்டைப்படகுகளும் அதனை துரத்தியபடி உயரச் சென்றன. அப்போது இவ் டோறாவோடு தலைமன்னாரிலிருந்து வந்திருந்த வேறு மூன்று டோறாக்கள் கரைநகரை நோக்கிச் சென்றுகொண்டிருந்த கடற்புலிகளின் சண்டைப்படகுகளை கீழாக வழிமறித்து சுற்றிவளைப்பதற்காக கீழே இறங்கி வந்துகொண்டிருந்தன. இதைக் கரையிலிருந்து கவனித்த கடற்புலிகள் அவசரமவசரமாக இரு கலத்தொகுதிகளை (6-7 சண்டைப்படகுகள்) கடலேற்றினர். கடற்புலிகளின் சண்டைப்படகுகள் தம்மை நோக்கி வருவதைக் கவனித்த சிங்களக் கடற்படையின் மூன்று டோறாக்களும் நெடுந்தீவுக்கு உயர கச்சதீவை நோக்கி செல்லத் தொடங்கினர். அதாவது சிங்களக் கடற்படையினர் தந்திர வழிவகையாக தமது பாதுகாப்பு எல்லைக்குள் ஓடுகின்றனர். ஓடிய கடற்படையினர் மேலதிக உதவியினைக் கோரினர். காரைநகர் கடற்படைத்தளத்திலிருந்து 30 மிமீ தெறுவேயங்கள் (Cannons) பொருத்தப்பட்ட சூட்டுவலு கூடிய டோறாக்கள் உடனே உதவிக்கு விரைந்தன. இப்போது கடற்படையின் தரப்பில் டோறாக்களின் எண்ணிக்கை 11 (பேபி டோறாக்கள் & சுப்பர் டோறாக்கள்) ஆகக் கூடியது. இவற்றைக்கொண்டு சிங்களவர் அங்கு கடல் வியூகமொன்றை அமைத்தனர். அது அவர்களின் வழமையான அரைநிலவு வடிவ வளைய வியூகமாகும். அந்நேரத்தில் கடற்புலிகளுக்கும் சிங்களக் கடற்படைக்குமான இடைவெளி கிட்டத்தட்ட 5 கிமீ ஆக இருந்தது. உடனே கடற்புலிகள் நெடுந்தீவைத் தாண்டியதும் தமது ஓட்டத்தை நிறுத்தி மேலதிக உதவியினை அனுப்புமாறு கட்டளைப்பீடத்திடம் கோரினர். ஏனெனில் அப்பொழுது கச்சதீவிற்கு கிட்டவாக நின்ற டோறக்களின் எண்ணிக்கை காரைநகரிலிருந்து அனுப்பப்பட்ட உதவிகளால் பத்தைத் தாண்டிவிட்டிருந்தது. கடற்புலிகளின் கட்டளைப்பீடமும் அதற்கமைவாக மேலதிக கலத்தொகுதிகளை அனுப்பி வைத்தது. கடற்புலிகளின் படகுகளின் எண்ணிக்கை இப்போழுது 16 படகுகளாக ஏகிறியது. சமரும் வெடித்தது. தமது வியூகத்திற்குள் கடற்புலிகளை உள்ளிழுத்துத் தாக்கியழிக்க எண்ணிய போது கடற்புலிகளும் உட்செல்வது போன்று சென்று போக்கிக்காட்டி பகைவர் மேல் கடுமையான தாக்குதலை தொடுத்தனர். சிங்களக் கடற்படையினருக்கு ஆதரவாக அ'புரத்திலிருந்து சிங்கள வான்படையின் எம்.ஐ. 24 உலங்குவானூர்தியொன்றும் விரைந்து சூட்டாதரவு வழங்கியது. எனவே கடற்புலிகள் அத்தாக்குதலிலிருந்து தமது கடல் வியூகத்தை விரித்தனர். உலங்குவானூர்தி தாக்குதல் நடாத்திக்கொண்டிருக்கையில் சிங்களக் கடற்படையின் டோறாக்கள் அதன் பக்கவலுவோடு கீழிறங்கி வந்து கடற்புலிகளோடு பொருத அது பாரிய கடற்சமராக மூண்டது. எனினும் கடற்புலிகள் விடாது தாக்கினர். அதனால் ஒவ்வொரு டோறாக்களும் தம் நிலையிலிருந்து தளர அவை ஒவ்வொன்றிற்கும் இடையிலான இடைவெளி 100, 200, 300 மீட்டர்கள் என கூடிக்கொண்டு சென்றது. ஒரு கட்டத்தில் சிறிலங்காக் கடற்படையின் டோறா ஒன்று செயலிழந்தது. அதாவது அதன் கலக்குழுவினர் சிலர் கொல்லப்பட்டதோடு அதன் வேகமும் குறைந்த நிலையில் சென்றுகொண்டிருந்தது. அப்போது சிங்களவரின் கடல் வியூகத்திற்கும் வான்தாக்குதலிற்கும் நடுவணிலும் வெடிப்படகொன்று ஊடறுத்துச் சென்று சிங்கள வியூகத்தின் பக்கவாட்டிலிருந்து மூன்றாவதாக நின்றிருந்த டோறா மீது நண்பகல் 12:45 மணிக்கு மோதியிடித்து அதை மூழ்கடித்தது. இரண்டாவது கடற்கரும்புலித் தாக்குதல் எப்பொழுது மேற்கொள்ளப்பட்டது என்பது தெரியவில்லை. தொடர்ந்த கடற்சமரில் கடற்படையின் மற்றொரு டோறா நண்பகல் 1:00 மணியளவில் திருத்த வேலைகளக்கு அப்பால் சேதமாக்கப்பட்டது. மற்றொன்று 1:50 மணியளவில் சேதமாக்கப்பட்டது. அத்துடன் சிங்களக் கடற்படையினர் தமது தளங்களுக்கு பின்வாங்கி ஓடினர். இத்தாக்குதலை கடற்புலிகளின் தாக்குதல் கட்டளையாளர் லெப். கேணல் செழியன் கடலில் வழிநடாத்தினார். இங்கு சிறிலங்காக் கடற்படையினர் இரு வேறு வியூகம் அமைத்துக் கடலில் இறங்கியிருந்தனர். கடற்புலிகளை கரைவரை அண்மித்துத் தாக்குவது அல்லது அவர்களை சீண்டி வலிந்திழுத்து தமக்கு ஏலுமான கடற்பரப்பில் வைத்துத் தாக்குவது (சூழ்ச்சிப்பொறி) ஆகியனவாகும். ஆனால் கடற்புலிகளின் எதிர் வியூகங்களால் அவர்களின் இரண்டு வியூகமும் பொய்த்திடவே சிங்களம் பின்வாங்கி ஓடியது. மூழ்கடிக்கப்பட்ட கடற்கலங்கள்: 1 கடற்கல வகுப்புப் பெயர்: டோறா (விதப்பான கல வகுப்பு அறியில்லை) தொடரெண்: பி 413 சேதப்பட்ட கடற்கலங்கள்: 1 கடற்கல வகுப்புப் பெயர்: டோறா (விதப்பான கல வகுப்பு அறியில்லை) சேதப்பட்ட (மீளப்பாவிக்கேலாது) கடற்கலங்கள்: 1 கடற்கல வகுப்புப் பெயர்: டோறா (விதப்பான கல வகுப்பு அறியில்லை) சிறிலங்கா கடற்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: ஒரு அதிகாரி உட்பட 11 பேர் காயப்பட்டோர்: 2 பேர் வீரச்சாவடைந்த போராளிகள்: 13 பேர் கடற்கரும்புலிகள்: 4 பேர் தரநிலையுடனான பெயர்கள்: லெப். கேணல் சங்கரி, லெப். கேணல் கலையரசி, மேஜர் ஈழவீரன், மேஜர் மதிமுகிலன் கடற்புலிகள்: 13 பேர் பதவிநிலை & தரநிலையுடனான பெயர்கள்: 'படகு கட்டளை அதிகாரி' லெப். கேணல் நிலவன் எ மாறன், கப்டன் ஈகைத்தீ, லெப். அகப்புலவன், 2ம் லெப். சந்தன அறிவன், 2ஆம் லெப். கோதைக்கொற்றவன், 2ஆம் லெப். செந்தமிழரசு, 2ஆம் லெப். அகக்கதிர், 2ஆம் லெப். ஈழத்திண்ணன், கப்டன் தப்தகி எ இந்து மற்றும் நான்கு பேர். சக்கை வண்டிகள், எண்ணிக்கை: 2 கல வகை: அறியில்லை ஆதாரம்: உதயன்: 24/11/2007 | தமிழ்நெற்: 26/12/2007 (Black Sea Tigers sink SLN Dvora attack craft in the seas off Delft island) | நெடுந்தீவுத் தாக்குதல் விரிப்பு நிகழ்படம் ******

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.