Everything posted by நன்னிச் சோழன்
-
05/06/2000 அன்று இரு சிங்களக் கடற்கலங்கள் மூழ்கடிக்கப்பட்டது தொடர்பான சிறு குறிப்பு
05.06.2000 அன்று ஆழ்கடல் விநியோக நடவடிக்கையில் ஈடுபட்ட படகுகளுக்கு பாதுகாப்பு வழங்கி அவ்விநியோகப் படகுகள் தளம் திரும்பிய பின்னர் சண்டைப்படகுகள் தத்தம் தளம் திரும்பிக் கொண்டிருந்தன. இந்த வேளையில் லெப். கேணல் ஆண்டான் தலைமையிலான சண்டைப்படகுத் தொகுதி மீது சிறிலங்காக் கடற்படையினரின் டோறாக் கலங்கள் வழிமறித்துத் தாக்குதல் நடாத்த முற்பட்டவேளை அம்மறிப்புத் தாக்குதலை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தினர் அக்கடற்புலிகள். சிறப்புத் தளபதி சூசை அவர்களின் ஆலோசனையுடன் லெப். கேணல் ஆண்டான் மறிப்புச் சமரை நடாத்திக்கொண்டிருக்க இவர்களுக்கு உதவியாக லெப். கேணல் பகலவன், மேஜர் ஆழியன் மற்றும் கடற்கரும்புலி லெப். கேணல் அமுதசுரபி ஆகியோர்களின் வழிநடாத்தலில் ஒரு முறியடிப்புத் தாக்குதலை கடற்புலிகள் மேற்கொண்டனர். இத் தாக்குதலின் போது சமராடிக்கொண்டிருந்த சிங்களக் கடற்படைக்கு மேலதிக உதவியாக திருகோணமலையிலிருந்தும் காங்கேசன்துறையிலிருந்தும் வந்த டோறாப்படகுகள் மீதும் உக்கிர மோதல்கள் ஆரம்பிக்கப்பட்டன. ஒருகட்டத்தில் டோறாப் படகொன்று கடற்புலிகளின் சுற்றிவளைப்பிற்குள் வந்து வசமாக மாட்டிக்கொண்டது. இதைக் கட்டளை மையத்திலிருந்து ராடர் மூலம் அவதானித்த சிறப்புத்தளபதி சூசை அவர்களின் ஆக்ரோசமான கட்டளைகளுக்கு செயல்வடிவம் கொடுத்த கடற்புலிகள் கடுமையாகச் சமராடி அவ்டோறாவை கனரக ஆயுதங்களாலும் பிற ஆயுதங்களாலும் தாக்கி மூழ்கடித்தனர். தொடர்ந்த மோதலில் கடற்படையினருக்கு உதவியாக விமானப்படையினரும் தாக்குதல்களைத் தொடுத்தனர். இவைகளுக்கும் மத்தியில் தொடர்ந்த கடும் கடற்சமரில் மற்றொரு டோறா சேதமடைந்து நின்றது. அவ்டோறா மீது தாக்குதல் நடாத்தி மூழ்கடிக்க முற்பட்டவேளையில் லெப். கேணல் ஆண்டான் உட்பட சில போராளிகள் வீரச்சாவடைந்தனர். இருந்தபோதிலும் ஏனைய கடற்புலிகள் விடாமல் தொடர்ந்து சமர்புரிந்து அவ்டோறாவையும் மூழ்கடித்தனர். பெரும் வெற்றியோடு ஏனைய சண்டைப்படகுகள் ஆண்டானின் சண்டைப்பகை மீட்டு தளம் திரும்பினர். ஆறு மணித்தியாலயமாக இடம்பெற்ற இவ் வெற்றிகரச் சமரில், லெப். கேணல் ஆண்டான் மேஜர் அமுதப்பிரியா மேஜர் மதிவண்ணன் மேஜர் மருதா கப்டன் சோபனா கப்டன் சத்தியரூபி கப்டன் இளஞ்சேரன் கப்டன் குயில்மாறன் கப்டன் சேசிகா லெப். மதிவதனன் லெப். குட்டிக்கண்ணன் 2ம் லெப். கலைமுகிலன் வீரவேங்கை மதியழகன் ஆகியோர் வீரச்சாவடைந்தனர். https://www.thaarakam.com/news/135480
-
போரியல் குணத்தில் உச்சம் தொட்ட கடற்கரும்புலி லெப். கேணல் புரட்சிநிலவன்
https://www.eelamview.com/2019/07/06/bt-lt-col-puradsi/ கடற்கரும்புலி லெப். கேணல் புரட்சிநிலவன் ! தேன் ஊறும் மரங்களும் அம் மரங்களின் வளர்ச்சியால் நிலம் தெரியா காடுகளும், பச்சைப்பசேல் என்று வானம் தொடும் தென்னை மரங்களும் அங்கே கீச்சிட்டுக் கொண்டு ஓடித்திரியும் தூக்கணாங்குருவிகளும், வாடி வீட்டை நனைத்துக் கொண்டிருக்கும் நிலவொளியும், அவ்வொளியில் மினுமினுக்கும் சமுத்திரமுமென தமிழீழம் தன் அடையாளங்களை சுமந்து நிமிர்ந்திருந்த காலம் மட்டுமல்லாது, தமிழீழம் என்ற இலக்குக்காக தம்மை ஒறுத்து தம் நாட்டின், தம் மக்களின் நிம்மதியான வாழ்வுக்காக கரங்களில் சுடுகலன்களை சுமந்து நின்ற விடுதலைப் போராளிகளையும், தமிழ் இனத்தையே கருவறுத்து விட துடித்த சிங்கள வெறியர்களையும் அவர்களோடிணைந்த துரோகிகளையும் சுமந்து நின்ற காலம் அது. தமிழீழம் என்ற இலட்சியக் கனவோடு வட/ தென் தமிழீழம் எங்கும் புலிகள் வரியுடுத்தி களத்திடை மேவித் திரிந்த அக்காலத்தில், படையக ரீதியாக பல வளர்ச்சியைக் கண்டிருந்த விடுதலைப்புலிகளின் மரபுவழி தமிழீழ இராணுவம் தன் படையக வளங்கல்களை நிலைநிறுத்தவும், மேம்படுத்தவும் என விநியோக நடவடிக்கைகளை விரிவுபடுத்தி பயணித்தனர். ஒற்றைப் படகு மூலம் இந்தியா சென்று அங்கிருந்து விநியோகப் பணிகளை செய்த விடுதலைப்புலிகளின் கடற்புறா அணி கடற்புலிகளாக பரினாம வளர்ச்சி பெற்று பல நூறு சண்டைப் படகுகள், பல நூறு விநியோகப் படகுகள்,உயர் தொழில்நுட்பம் கொண்ட தொலைத் தொடர்பாடல்கள் என அதி உச்ச வளர்ச்சியை அடைந்திருந்த காலம். அக்காலத்தில் தான் வட/ தென் தமிழீழத்தின் ஆயுத வளங்கல்களை பலப்படுத்தவும் தமிழீழ படைக்கட்டுமானத்தை நிலைநிறுத்தவும் வட தமிழீழத்தில் இருந்து தென் தமிழீழத்துக்கும் அங்கிருந்து வடதமிழீழத்துக்கும் படையக / ஆளணிகளை நகர்த்தும் பணியை பல போராளிகள் செய்து வந்தார்கள். அதில் முக்கியமானவன் லெப். கேணல் புரட்சிநிலவன். புரட்சிநிலவனை அறியாத கடற்புலிப் போராளிகள் குறைவு. அத்தகைய வீரமும் விவேகமும் கொண்ட இளைய போராளி. இயக்க வாழ்வு என்பது புரட்சிக்கு வெறும் 5 வருடங்கள் தான். ஆனாலும் அதி உச்சப் பணிகள் மூலமாக உயர்ந்து நின்ற போராளி. அதிகமான காலங்களில் விநியோக நடவடிக்கைகளையே தன் பணியாக கொண்டவன். அதுவும் பல இன்னல்கள் நிறைந்த பயணங்களை மிக சாதாரணமாக செய்து முடிப்பவன். நினைவாற்றல் நிறைந்த ஒரு போராளி, புரட்சி என்றால் “ஆள்கூறு “ என்று போராளிகள் கிண்டல் செய்வார்கள். உண்மையும் அதுவே புரட்சிக்கு தமிழீழத்தின் பெரும்பான்மையான ஆள்கூறுகள் அனைத்தும் மனதில் நிறைந்து கிடக்கும். குறித்த இடத்துக்கு செல்ல வேண்டும் என்றால் வரைபடத்தில் ஆள்கூறுகளை பார்த்து உறுதிப்படுத்துவதற்கு முன்பாகவே பூமிநிலை காண் தொகுதி (Global Positioning System) கருவியில் அந்த ஆள்கூற்றை உட்செலுத்தி தயாராகிவிடுவான் புரட்சி. அவ்வாறு நினைவாற்றல் மிகுந்தவன் இப் போராளி. கடல் அலைகளின் தாலாட்டில் நிதம் நிதம் மகிழ்ந்திருக்கும் வடமராட்சி கிழக்கின் ஆழியவளை, தாளையடியை சொந்த இடமாகவும். மருதநிலமும், பாலைவனமும் நிமிர்ந்து நிற்கும் விசுவமடுவை வதிவிட இடமாக கொண்டிருந்த வைரமுத்து வசீகரன் உயர்தரத்தில் வர்த்தகப் பிரிவில் கல்வி பயின்று கொண்டிருந்த காலத்தில் விடுதலையின் தேவையை உணர்ந்து பாசறை புகுந்து புரட்சிநிலவனாகினான். அடிப்படைப் பயிற்சியை முடித்து படையணித் தளபதிகளினால் போராளிகள் தம் படையணிகளுக்கு உள்ளிணைக்கப்பட்ட போது கடற்புலிகளின் அணிக்கு தெரிவாகி உள்வாங்கப்படுகிறான். அங்கே சிறப்பு கடற்பயிற்சிகளை முடித்த புரட்சி நிலவன் முழுநிலை கடற்புலியாக உருவாகினான். படகு இயந்திரவியலாளனாக தேர்ச்சி பெற்ற புரட்சிநிலவன் நடுக் கடலில் வைத்தே இயந்திரத்தை கழட்டி மாற்றி படகை இயக்கும் வல்லமை கொண்டவன். ஒரு தடவை சர்வதேச கடல் விநியோக போராளிகளிடம் இருந்து பெறப்பட்ட பொருட்களுடன் சாலை முகாம் நோக்கி வந்து கொண்டிருந்த படகின் பிரதான இயந்திரவியலாளர்களான சென்றது புரட்சி நிலவனும் நக்கீரன் என்ற போராளியும். கரை நோக்கி வந்து கொண்டிருந்த அப்படகு இயந்திரம் இயங்காததால் இடையில் நின்றுவிட, பழுதடைந்துவிட்ட அவ்வியந்திரத்தின் பிரதான தொகுதியை நடுக்கடலில் வைத்தே மாற்றி சர்வதேச விநியோக போராளிகளிடம் இருந்து கிடைத்த புதிய இயந்திரத் தொகுதியை நிறுவி அப்படகை இயக்கிக் கொண்டு வந்து சேர்த்திருந்தனர். அவ்வாறு வலிமை மிக்க டீசல் இயந்திரவியலாளனாகவும் போராளியாகவும் மிளிர்ந்த புரட்சிநிலவன் கடற்புலிகள் அணியில் இருந்து கடற்கரும்புலிகள் அணிக்கு செல்வதற்காக தேசியத்தலமையிடம் அனுமதி கோருகிறான். நெஞ்சுக்கும் தோள்மூட்டுக்கும் இடைப்பட்ட பகுதியில் அவன் பெற்றிருந்த விழுப்புண் அவனின் செயற்பாடுகளுக்கு தடையாக இருக்குமோ என எண்ணத்தை உருவாக்கினாலும் அவனின் துணிவும், தன்நம்பிக்கையும் விவேகமான செயற்பாடுகளும் புரட்சிநிலவனை கடற்கரும்புலியாக மாற்றுகிறது. கடற்புலிகளின் பெரும் பணியாக இருந்த ஒன்று கடல் விநியோகம். அவ்விநியோகத்தினூடாக படையகப் பொருட்களை தமிழீழத்துக்கு கொண்டு வருவது முக்கிய பணியாக விரிந்து கிடந்தது. அப்பணியை செய்த போராளிகளுள் புரட்சி நிலவனும் முக்கியம் பெறுகிறார். அப்பணியில் முக்கியம் பெறுவது தென்தமிழீழத்துக்காக படையக பொருட்கள் விநியோகம். அவ்விநியோகத்தை தன் உச்ச வீரத்தால் செய்து கொண்டிருந்த புரட்சிநிலவன் பல முக்கிய ஆயுதங்களை தென் தமிழீழத்துக்குக் கொண்டு போய் சேர்த்தான். அவ்விநியோகத்தின் பெறுபேற்றை தென்தமிழீழத்தில் நிலை கொண்டிருந்த சிங்களப் படைகள் நிச்சயம் உணர்ந்திருக்கும். அதை இரண்டு 152 MM ஆட்லறி எறிகணையின் மூலம் விடுதலைப்புலிகளின் படையணிகள் உணர்த்திக் காட்டின. திருகோணமலை துறைமுகம் தொடக்கம் அங்கே இருந்த எதிரிகளின் பாசறைகள் பல அத் தாக்குதல்களால் திணறிக் கிடந்தன. ஆட்லறி எறிகணையால் எம் மக்களின் வாழ்வாதாரத்தையே சிதைத்து கொடுங்கோலாட்சி நடாத்திய சிங்கள தேசம் விடுதலைப்புலிகளின் ஆட்லறி எறிகணையின் துல்லிய தாக்குதல்களால் திணறிப் போய்க் கிடந்தது. அதற்கு மூல காரணமாகியது புரட்சியிலவன் என்றால் அதில் எந்த பொய்மையும் இல்லை. தனது விவேகத்தாலும், புத்திசாதுரியத்தாலும், ஒரு போராளியும் இரண்டு பொதுமகன்களையும் தனது ஆளணியாக கொண்டு தென் தமிழீழத்தின் கிட்டுபீரங்கிப் படையணியை வானம் தொட்டுவிடச் செய்வதற்காக அவ்விரண்டு ஆட்லறி எறிகணை செலுத்திகளையும் படகினூடாக கொண்டு வந்து சேர்த்தது புரட்சி நிலவனின் போரியல் குணத்தின் முக்கிய உச்சமாகிறது. அதுவே தென்தமிழீழத்தில் பல வெற்றிகளுக்கு காரணமாகிறது. அவற்றை அங்கே கையளித்து சற்று ஓய்வும் இன்றி தென் தமிழீழத்தில் இருந்து வட தமிழீழம் நோக்கி வந்து கொண்டிருந்த புரட்சிநிலவனும் அவனின் அணியும் தமது படகில் இன்னும் ஒரு ஆட்லறியை சுமந்து கொண்டு மன்னார் பகுதி நோக்கி பயணிக்கின்றனர். அப்போது அந்த பயங்கரம் நடக்கின்றது. ஆனால் அதை பயங்கரம் என்று நினைக்காத புரட்சிநிலவன் தனது விவேகத்தால் அன்றைய நாளில் விடுதலைப் போராட்டத்தின் முக்கிய படையகச் சொத்தொன்றை காப்பாற்றியது மட்டுமல்லாமல் விடுதலைப்புலிகள் எந்த நிலையிலும் தளர்வற்றவர்கள் என்பதை சொல்லிச் சென்றான். அவர்கள் பயணித்துக் கொண்டிருந்த போது திடீர் என்று மன்னார் கடற்படை முகாமில் இருந்து வந்த சிங்களக் கடற்படையின் ரோந்துப் படகு ஒன்றை இவர்களை இடைமறிக்கிறது. மீனவர்கள் போல் பயணித்துக் கொண்டிருந்த அவர்களின் படகிற்குள் ஆட்லறி எறிகணை செலுத்தி இருப்பதனால், பொதுமகன்கள் இருவரும் சற்றுக் கலவரமானார்கள். சோதனை என்ற பெயரில் இவர்களின் படகிற்குள் வந்த கடற்படை ஒருத்தன் இவர்களை மிரட்டும் தொணியில் கேள்விகளை கேட்ட போது, பொதுமகன்கள் இருவராலும் கலவரப்படாமல் இருக்க முடியவில்லை. ஆனால் எந்த அதிர்ச்சியும் அடையாத புரட்சிநிலவன் சிங்கள மொழியில் உரையாடத் தொடங்கினான். சிங்களப் படையின் காலுக்கு கீழ் இருக்கும் சிறிய கதவு ஒன்றை திறந்தால் உள்ளே இருக்கும் பொருட்களை அவன் நிச்சயம் கண்டுவிடுவான். அதனால் அவனின் நினைவுகளை திசை திருப்புவதற்காக முயல்கிறான் புரட்சி நிலவன். உடனடியாக அவனின் கையை பிடித்து படகின் பின்பகுதிக்கு அழைத்துச் சென்றான். சிங்களத்தில் “ உனக்கு என்ன வேணும் சொல்லு தாறன்” என்று கேட்டது மட்டுமல்லாது அந்தச் சிங்களக் கடற்படைக்கு அவர்களிடம் இருந்த அதிக விலை கொண்ட கருவாட்டை அவனுக்கு அன்பளிப்பாக வழங்குகிறான். அவ் அன்பளிப்பினாலும் உபசரிப்பினாலும் தன் நிலை இழந்த கடற்படை சிரித்தபடி தனது டோரா படகிற்கு திரும்பினான். அவ்வாறு புரட்சிநிலவன் செய்யவில்லை என்றால், நிச்சயமாக அந்த கடற்படை காலடியில் இருந்த கதவை திறந்திருப்பான். அதனை கண்டிருப்பான். அதன் பின் யாருமே எதிர்பார்க்காத சம்வங்கள் நடந்து முடிந்திருக்கும். ஆனால் புரட்சிநிலவனின் அந்த விவேகமான செயற்பாடு அவரின் அணியும் உள்ளே அமைதியாக இருந்த ஆட்லறியும் எந்த சேதமும் இல்லாமல் கரையேறியதற்கு காரணமாகியது. இல்லையென்றால் அன்று எமக்காக கொண்டுவரப்பட்டிருந்த விடுதலைப் போராட்டத்தின் பெரும் சொத்து பெற்ரோல் ஊற்றி கொழுத்தப்பட்டு அழிக்கப்பட்டிருக்கும். அதோடு நிச்சயம் இரண்டு போராளிகளும் வீரச்சாவடைந்திருப்பர். பொதுமகன்கள் இருவரும் கைதாகி இருப்பர் அல்லது அவர்களும் வீரச்சாவடைந்திருப்பர். ஆனால் புரட்சிநிலவனின் சாதுரியமான செயற்பாடு அன்றைய களச்சூழலை மாற்றிவிட்டது. இக் களச் சூழலையும் சாதுரியமாக நடவடிக்கையை வெற்றிபெறச் செய்த புரட்சிநிலவனின் நடவடிக்கையினையும் அறிந்த தேசியத்தலைவர் உடனடியாக தன்னிடம் அழைத்தது மட்டுமல்லாது, CBZ உந்துருளி ஒன்றும் நடவடிக்கைக்குத் தேவையான பல பொருட்களையும் பரிசளித்து மதிப்பளித்தார். அதன் பின்பான நாட்கள் விநியோக நடவடிக்கைகளில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்ட போது, உயர் தொழில்நுட்ப தொடர்பாடல் முறைகளை கொண்டு வர வேண்டி களச்சூழல் ஏற்பட்டது. அதனால் உயர் தொழில்நுட்ப தகவல்பரிமாற்ற முறமையினை கற்றுக் கொள்வதற்காக தெரிவு செய்யப்பட்ட அணியில் புரட்சி நிலவனும் ஒருவராகிறார். அந்த கற்றல் செயற்பாடு முடிவடைந்து சிறப்புத் தேர்ச்சி பெற்ற புரட்சிநிலவன் எதிரியின் கோட்டைக்குள்ளே நின்று சிங்கள எதிரியை திணறடிக்க செய்யும் படையக பொருட்களை தமிழீழத்துக்கு அனுப்ப வேண்டிய முக்கிய பணி ஒன்றுக்காக தெரிவு செய்யப்பட்டார். தென்னிலங்கையின் முக்கிய கடல் சார்ந்த நகரம் ஒன்றிற்கு அனுப்பப்பட்ட போது, புலி ஒருத்தன் மீனவனாக மாறி நின்று படையகப் பொருட்களை கப்பலில் இருந்து இறக்குவதும், அதை தமிழீழத்துக்கு எந்த இடரும் இல்லாது அனுப்புவதுமாக தனது விநியோகப் பணியை செய்து கொண்டிருந்தார். பயப்பிடவில்லை, சோர்ந்து போகவில்லை, இலக்கொன்றே அவனின் மூச்சாக தன் பணியில் ஈடுபட்டு பல படையக பொருட்களை தமிழீழத்திற்கு கிடைக்கச் செய்தார். ஒரு படகின் அணித் தலைவனாக பணியாற்றிய அப் போராளிக்கு அவன் கற்றுத் தேர்ந்திருந்த சிங்கள மொழி பெரிதும் உதவியது என்பது உண்மையே. இவ்வாறான இடர் மிக்க பணிகளினால் தமிழீழ விடுதலைக்காக உழைத்த அப்போராளியும் அவரது அணியும் உறுதியாக இறுதி வரை பயணித்தார்கள். கடல் விநியோகம் என்பது சாதாரணமானதல்ல. சிங்கள கடற்படை இந்திய கடற்படை என கடல் வல்லூறுகளும், தொழில்நுட்ப அரக்கர்களாக இருக்கக்கூடிய சர்வதேச நாடுகளின் செய்மதிகள் மற்றும் இரகசிய கண்காணிப்பு நடவடிக்கைகளும் என தமிழீழ கடற்பரப்பில் சிறு பணியை செய்வதற்கும் பல தடைகள் எழுந்து நின்றன. அதே நேரம் அதையும் தாண்டி, இயற்கையும் பாதகத்தை விளைவிக்கும். அவ்வாறான இடர்களை எல்லாம் தம் தோழ்களிலே சுமந்து தமிழீழ கடல் அன்னையின் மடியில் தவழ்ந்து திரிந்தனர் இப் போராளிகள். ஒன்றல்ல இரண்டல்ல மாதங்கள் பல கடந்தும் கரையேறாத பணி. ஒழுங்கான தூக்கம் இல்லை, உணவில்லை. ஆனாலும் சோர்ந்து போக மாட்டார்கள். தன்நம்பிக்கையையும் துணிவையும் தமதாக்கி பயணப்பட்டுக் கொண்டிருந்தார்கள். இவ்வாறான ஒரு சந்தர்ப்பம் ஒன்றில் ஒன்றரை மாதங்களாக கடலில் பயணித்துக் கொண்டிருந்த புரட்சிநிலவன் கரையேறி இரண்டு நாட்கள் ஆகி இருந்தது. கிடைத்த சிறு ஓய்விலும் முகாமை விட்டு நகராது தமிழீழ விடுதலைக்காக பணி செய்தார். அப்போது இன்னும் ஒரு அணி கடல் விநியோக நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தது. அவ்வணியின் படகு இயந்திரகோளாறால் பாதிக்கப்பட்டு பயணிக்க முடியாத சூழல் வந்த இடைநடுவில் நின்ற போது, சிறப்புத்தளபதி சூசை அவர்களால் புரட்சிநிலவனிடம் அப் படகை மீட்டுவருவதற்கான வேண்டுகை விடப்பட்டது. அது மட்டும் அல்லாது அப்படகின் கட்டளை அதிகாரியாக வந்த போராளி முக்கிய பணி ஒன்றுக்காக வேறு ஒரு படகிற்கு செல்ல வேண்டிய தேவை எழுந்திருந்தது. இவற்றின் காரணமாக அப் படகை பொறுப்பெடுக்கவும், இயந்திரத்தை திருத்தி கரைக்கு கொண்டு வந்து சேர்க்கவும் சரியான தெரிவாக புரட்சிநிலவனே இருந்தார். அதனால் உடனடியாக தனது அணியோடு கடலேறிய புரட்சிநிலவன் படகை கொண்டு வந்து சேர்க்கும் பணியை சரியாக செய்தார். பழுதடைந்த படகினை சென்றடைந்து, அப்படகின் கட்டளை அதிகாரியாக இருந்த போராளியிடம் இருந்து படகை பொறுப்பெடுத்து அவரது பணிக்காக அவரை அனுப்பிய பின் படகை கரையேற்றும் பணியில் ஈடுபட்டார்கள் புரட்சிநிலவனின் அணியினர். பல இடர்களை சுமந்து குறிப்பிட்ட சில வருட போராட்ட வாழ்விலே உச்ச வீரத்தோடு களப்படியாற்றிய, தமிழீழ மக்களின் மனங்களை வென்ற அப் போராளிக்கு அப்பணியே இறுதிப்பணி என்று யாரும் எண்ணவில்லை. மன்னார் கடல் அன்று அமைதியாக இல்லை. தன் வீரக் குழந்தைகளின் மேனி தொட்டு வரும் காற்றில் கடல் அலை ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தது. சிங்களத்தின் கடற்படையின் படகுகளை எதிர்க்க முடியாது அந்த அலைகள் சீறிக் கொண்டிருந்தன. தன் பிள்ளைகளை தன் அலை எனும் சிறகுகளால் பாதுகாக்க முனைந்து கொண்டிருந்தது அந்த கடல். அதனூடாகவே புரட்சி நிலவனும், மோகன் ஐயாவும், மோகனதாஸ் ஐயாவும். அப்படகோடு பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். மன்னார் கடல் பகுதியில் அடிக்கடி குறுக்கே வரும் சிங்களப்படைப் படகுகள் திடீர் என்று எதிர் வந்தன. சர்வதேசத்தாலும் இந்திய வல்லாதிக்க சக்திகளாலும் கண்காணிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் அக் கடல் மீதான எமது நடவடக்கைகள் ஒவ்வொன்றிலும், அவர்களுக்கெல்லாம் போக்குக் காட்டி ஒவ்வொரு வெற்றி நடவடிக்கைகளையும் செய்த புரட்சிநிலவனின் அணி அன்று சிங்களப் படைகளினால் இடைமறிக்கப்படுகிறது. புரட்சி நிலவனும் அவரின் அணியும் எதிர்த்து களமாடுகிறார்கள். தொலைத் தொடர்புக் கருவிகள் நிலமையை கட்டளைப் பீடத்துக்கு கொண்டு செல்கின்றன. ஆனாலும் சண்டையின் தீவிரம் உச்சம் பெற்று படகு சண்டை இட முடியாத அளவுக்கு சேதமடைகிறது. ஆனாலும் இறுதிவரை உறுதியாக புரட்சிநிலவன் சிங்களப்படைகளை எதிர்கொள்கிறார். கட்டளைப் பணியகத்தில் இருந்து உதவி அணிகள் சென்றடைய முன்பாகவே சண்டை உக்கிரமமடைந்து அப்படகு கட்டளை அதிகாரியான கடற்கரும்புலி புரட்சிநிலவன் லெப். கேணல் புரட்சிநிலவனாகவும், மோகன், மற்றும் மோகனதாஸ் என்ற பொதுமகன்கள் நாட்டுப்பற்றாளர்களாகவும் வீரச்சாவடைந்திருந்தார்கள். மன்னார் கடல் அலைகள் ஆர்ப்பரித்து எழுந்ததைப் போலவே தமிழீழம் என்ற உன்னத இலக்குக்காக ஆர்ப்பரித்துப் பயணித்த புரட்சிநிலவனும் அவரது அணியும் தம் பணியின் போதே விழி மூடி கடல் மடியில் வெடியோடு சங்கமித்து போயினர். “கடலிலே காவியம் படைப்போம்” என்ற உயர்ந்த வாசகத்தை தாரகமந்திரமாக கொண்டு பயணித்த கடற்புலிகள் பாரிய துறைமுகங்களை கொண்ட ஒரு அரச கடற்படையாக இல்லாத நிலையிலும், பல சிறு கடற்துறைமுகங்களை கொண்டிருந்ததும் விநியோக நடவடிக்கைகளில் உச்சம் பெற்றிருந்ததும், தமிழீழ கடற்படையின் இவ்வாறான போராளிகளின் தியாகங்கள் உச்சம் பெற்றிருந்ததும் வரலாறாக பதிவாகி கிடக்கின்றது.
- வேவுப்புலிகள் இன் படிமங்கள் | Recon Tigers' Images
- வேவுப்புலிகள் இன் படிமங்கள் | Recon Tigers' Images
-
மாவீரர் துயிலுமில்லங்கள் இன் படிமங்கள் | Maaveerar Thuyilumillam Images
'தமிழீழத் தலைநகர்' திருக்கோணமலையில் இருந்த ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லம் இது சம்பூரில் அமைந்திருந்தது. இதன் சிறப்பு யாதெனில் தமிழீழத்தில் அமைக்கப்பட்டிருந்த மாவீரர் துயிலுமில்லங்களிலே மிகவும் வேறுபாடான தோற்றங்கொண்ட கல்லறைகளாக இங்கிருந்த கல்லறைகள் காணப்பட்டன. திருமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் எழிலன் அவர்களோடு வெள்ளைக்காரர்கள்(SLMM) கதைத்துக் கொண்டிருக்கின்றனர். இந்தச் சாரணர்கள் அங்கு வரும் மாவீரர் பெற்றொருக்கு அவர்களின் செல்வங்களின் கல்லறைகள் மற்றும் நினைவுக்கற்கள் இருக்கும் விதப்பான இடத்தினை குறிப்பிட்டுச் சொல்வார்கள்:
- 234 replies
-
- துயிலுமில்ல நினைவுக்கற்கள்
- தமிழீழ விடுதலைப்புலிகள்
- மாவீரர்கள்
- துயிலும் இல்லம்
-
Tagged with:
- துயிலுமில்ல நினைவுக்கற்கள்
- தமிழீழ விடுதலைப்புலிகள்
- மாவீரர்கள்
- துயிலும் இல்லம்
- கல்லறைகள்
- மாவீரர்
- மாவீரர் நாள்
- thuyilumillam images
- துயிலுமில்லம்
- நினைவுக்கற்கள்
- ltte cemetry
- துயிலுமில்ல கல்லறைகள்
- ஈகைச்சுடர்
- மாவீரர்நாள்
- விடுதலைப்புலிகள்
- கல்லறை
- ltte heroes day
- maaveerar
- maveerar
- maverar
- great heroes day tamil
- great heroes day ltte
- tamil heroes day
- tamil eelam maaveerar day
- துயிலுமில்லங்கள்
- tamil cemetery
- tamil tigers cemetery
- heroes cemetery ltte
-
hansaya A-540 .jpg
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
கடற்புலிகளால் அழிக்கப்பட்ட, சேதப்பட்ட & கைப்பற்றப்பட்ட சிறிலங்காச் சார்புக் கடற்கலங்கள் | திரட்டு
ஆண்டு: 1998 திகதி: பெப்ரவரி 22, 1998 அடிபாட்டுக் காலம்: மாலை 7:15 மணியிலிருந்து அடுத்த நாள் வைகறை 2:00 மணி வரை வலம்புரி மீது இடியன் மோதிய நேரம்: மாலை 8:00 மணியளவில் பப்பதா மீது இடியன் மோதிய நேரம்: மாலை 9:30 மணியளவில் நிகழ்வு இடம்: வெற்றிலைக்கேணி & காங்கேசன்துறை கடற்பரப்பு நிகழ்வு விரிப்பு: தொடரணியில் சென்று கொண்டிருந்த இரு கடற்கலங்கள் கடற்புலிகளால் மூழ்கடிக்கப்பட்டன. நிகழ்வின் முழு விரிப்பு: மூழ்கடிக்கப்பட்ட கடற்கலங்கள்: 2 கடற்கலப் பெயர்: பப்பதா கல வகை: எந்திரமயப்பட்டவை தரையிறக்கக் கலம் (LCM) கடற்கலப் பெயர்: வலம்புரி கல வகை: படைய வலசை (Military ferry) படிமம்: சமர் நடந்த நாளில் கடற்புலிகளால் எடுக்கப்பட்ட நிகழ்படக் காட்சியிலிருந்து: இடது பக்கம் நிற்பது வலம்புரி, வலது பக்கம் நிற்பது பப்பதா | படிமப்புரவு(Img. court.): நிதர்சனம் சிறிலங்கா கடற்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: 47 பேர் காயப்பட்டோர்: 62 பேர் (நீரில் தத்தளித்து சிங்களச் சுழியோடிகளால் மீட்கப்பட்டோர் மற்றும் நீந்திக் கரைசேர்ந்தோர்) மேலும் நால்வர் நீந்தித் தமிழ்நாடு சென்று அங்குள்ள தமிழ் மக்களால் காப்பாற்றப்பட்டு மீண்டும் வானூர்தி மூலம் சிறிலங்காவிடம் ஒப்படைக்கப்பட்டனர். வீரச்சாவடைந்த கடற்கரும்புலிகள்: 11 பேர் தரநிலையுடனான பெயர்கள்: லெப். கேணல் கரன், கப்டன் மேகலா, மேஜர் வள்ளுவன், மேஜர் குமரேஸ் எ குமரேசன், கப்டன் ஜனார்த்தனி, கப்டன் வனிதா, மேஜர் மாமா எ சுலோஜன், மேஜர் நைற்றிங்கேள் எ தமிழ்நங்கை, மேஜர் தமிழினியன், கப்டன் நங்கை, மேஜர் தமிழின்பன் எ மொறிஸ் கடற்கரும்புலி வகை: நீர்மேல் தாக்குதல் கரும்புலிகள் சக்கை வண்டிகள், எண்ணிக்கை: 5 வகுப்புப் பெயர்: அறியப்பட்டவை: மூன்று வெள்ளை வகுப்பு மற்றும் ஒரு சூடை வகுப்பு ஆதாரம்: உதயன்: 20, 21 & 24/02/1998, 01,02 &/03/1998 | உயிராயுதம் - 7 | தமிழ்நெற்: 23/02/1998 (Two tanks on sunk ships), (Eleven Tigers killed in naval battle), (Sea tigers sink ship carrying troops - radio) திகதி: பெப்ரவரி 25, 1998 அடிபாட்டுக் காலம்: சாமம் 11:50 மணியளவில் தொடங்கியது நிகழ்வு இடம்: கிளாலி கடற்படைத்தளம் நிகழ்வு விரிப்பு: கடற்படையின் சிறப்புப் படகுச் சதளத்தின் கிளாலித் தளத்தினுள் புயலெனப் புகுந்து அங்கிருந்த படகுகள் மீது தாக்குதல் நடாத்தினர் கடற்சிறுத்தைகள். நிகழ்வின் முழு விரிப்பு: அழிக்கப்பட்ட கடற்கலங்கள்: 1 கடற்கல வகுப்புப் பெயர்: வோட்டர் ஜெட் சேதப்பட்ட (மோசமாக) கடற்கலங்கள்: 2 கடற்கலப் வகுப்புப் பெயர்: அறியில்லை கலவகை: சுடுகலப் படகுகள் சிறிலங்கா கடற்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: 5 பேர் காயப்பட்டோர்: அறியில்லை கடற்சிறுத்தைகள் ஆளணியினரில்: வீரச்சாவடைந்தோர்: 3 பேர் தரநிலையுடனான பெயர்கள்: 'நடவடிக்கைக் கட்டளையாளர்' மேஜர் குயிலன், கப்டன் ஜெயந்தன், கப்டன் சூரி எ சூரியன் காயமடைந்தோர்: 3 பேர் ஆதாரம்: உதயன்: 27/02/1998, 01/03/1998 | தமிழ்நெற்: 26/02/1998 (SLN boat destroyed in commando raid - Radio) | திரைப்படம்: ‘உப்பில் உறைந்த உதிரங்கள்’ என்ற இந்நடவடிக்கையினை அப்படியே காட்சியாக மனக்கண்முன் நிறுத்திய திரைப்படம் திகதி: மார்ச் 11, 1998 அடிபாட்டுக் காலம்: சாமம் வோட்டர் ஜெட் மீது இடியன் மோதிய நேரம்: சாமம் 1:30 மணி நிகழ்வு இடம்: திருமலை வட்டத்தீவுக் கடற்பரப்பு நிகழ்வு விரிப்பு: இக்கரும்புலித் தாக்குதலின் இலக்காக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது தலைநகர் திருமலையின் துறைமுக நுழைவுவாசலில் உள்ள வட்டத்தீவிற்கும் அதற்கருகிலுள்ள யானைத்தீவிற்கும் இடையில் சுற்றுக்காவலில் ஈடுபடும் வோட்டர் ஜெட் வகுப்புப் படகேயாகும். இதற்காக கடற்புலிகளின் கடல் அதிரடிப்படையான "கடற்சிறுத்தைகள்" அணியிலிருந்து இருவர் கடற்கரும்புலிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டு அனுப்பப்பட்டனர். இவர்களை வட்டத்தீவு வரை அழைத்துச் செல்லும் பணி கடற்புலிகளான லெப். கேணல் ஜோன்சன் மற்றும் லெப். கேணல் தர நிலையுடைய புலவர் ஆகியோருக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. அதற்கமைவாக கடற்கரும்புலிகளை அழைத்துச் சென்று வட்டத்தீவிற்கு அருகில் உள்ளவொரு சிறிய தீவு ஒன்றில் சில நாட்கள் தளமிட்டிருந்தனர். முன்னர் பெயரிடப்படாத அத்தீவில் நுளம்புகள் அதிகமாக இருந்ததால் "நுளம்பான் தீவு" என்று இவர்கள் அத்தீவிற்குப் பெயர் சூட்டினர். அத்தீவிலேயே இவர்கள் சமைத்துண்டு படுத்துறங்கினர். அத்தோடு அங்கிருந்தபடியே தாக்குதலிற்கான மேலதிக வேவுகளை கடற்கரும்புலிகளும் அழைத்துச் சென்றோருமாக மாறிமாறி எடுத்தனர். தாக்குதல் நாளன்று குறித்த இலக்கு மீது கவிர் வகுப்புக் குண்டுப்படகை வட்டத்தீவு வரை நீரில் தள்ளி நகர்த்திச் சென்று, பகைவருக்கு அசுமாத்தம் காட்டக்கூடாது என்பதற்காக, அங்கால் இடியர்கள் ஓட்டிச் சென்று வெற்றிகரமாக மோதியிடித்தனர். சிங்களவரின் படகில் இருந்த கடற்படையினர் எழுவரில் ஐவர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டனர். இத்தாக்குதலை கடற்கரும்புலி லெப். கேணல் பாண்டியன் எ வள்ளுவன் நேரடியாக வழிநடாத்தினார். இத்தாக்குதலில் கடற்புலிகளின் கட்டளையாளர்களில் ஒருவரான திரு. புலவரும் பங்கெடுத்திருந்தார். மூழ்கடிக்கப்பட்ட கடற்கலங்கள்: 1 கடற்கல வகுப்புப் பெயர்: வோட்டர் ஜெட் சிறிலங்கா கடற்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: 2 பேர் காயப்பட்டோர்: இல்லை வீரச்சாவடைந்த கடற்சிறுத்தைக் கடற்கரும்புலிகள்: 2 பேர் தரநிலையுடனான பெயர்கள்: கப்டன் இசையாளன், கப்டன் ஆர்வலன் கடற்கரும்புலி வகை: நீர்மேல் தாக்குதல் கரும்புலிகள் சக்கை வண்டிகள், எண்ணிக்கை: 1 வகுப்புப் பெயர்: கவிர் ஆதாரம்: உதயன்: 12 & 13/03/1998 | தமிழ்நெற்: 11/03/1997 (Two Sea Tigers killed - Radio), (Sea tigers sink SLN boat) | உயிராயுதம் பாகம்-7 | இத்தாக்குதலில் பங்குபற்றிய கடற்புலிகளின் கட்டளையாளர் திரு. புலவரின் வாக்குமூலம் | கட்டுரை: 'திருமலைத் துறைமுக வாசலில் வோட்டர் ஜெட்டை மூழ்கடித்த கடற்சிறுத்தைக் கரும்புலிகள்' திகதி: மார்ச் 10 & 11, 1998 கடற்சமர்க் காலம்: சாமம் 10:30 மணி முதல் வைகறை 4:30 மணிவரை நிகழ்வு இடம்: புல்மோட்டைக் கடற்பரப்பு நிகழ்வு விரிப்பு: திருமலையிலிருந்து சுற்றுக்காவலிற்காக வந்த சிங்களக் கலத்தொகுதி மீதான வலிதாக்குதல். புலிகளின் படகுகள் எதுவும் மூழ்கடிக்கப்படவில்லை. சேதமாக்கப்பட்ட (மெல்லிய) கடற்கலங்கள்: 3 கடற்கல வகுப்புப் பெயர்: டோறா (விதப்பான வகுப்பு அறியில்லை) சிறிலங்கா கடற்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: அறியில்லை காயப்பட்டோர்: 4 பேர் வீரச்சாவடைந்த கடற்புலிகள்: 2 பேர் தரநிலையுடனான பெயர்கள்: மேஜர் கருணாகரன் (10/03), கப்டன் கோமளன் (11/03) ஆதாரம்: தமிழ்நெற்: 11/03/1998 (4 Tiger boats sunk - SLN) | உதயன்: 11/03/1998 திகதி: ஏப்பிரல் 29, 1998 நிகழ்வு இடம்: முல்லைக் கடற்பரப்பு நிகழ்வு விரிப்பு: சத்துருக்கொண்டான் காவல் நிலையம் முன்பிருந்த வாவியில் நிறுத்தப்பட்டிருந்த புளூ ஸ்ரார் வகுப்புப் படகு ஒன்று வாவியின் மறுபக்கத்திலிருந்து, சிங்களப் படையக் கட்டுப்பாடற்ற பரப்பு, நீரடியில் நீந்தி வந்த கடற்புலிகளால் கடத்தப்பட்டது. படகோடு சில படைக்கலன்களும் கைப்பற்றப்பட்டன. கைப்பற்றப்பட்ட கடற்கலங்கள்: 1 கடற்கல வகுப்புப் பெயர்: புளூ ஸ்ரார் கடற்கல வகை: கட்டைப்படகு சிறிலங்கா கடற்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: இழப்பில்லை காயப்பட்டோர்: இழப்பில்லை வீரச்சாவடைந்த கடற்புலிகள்: இழப்பில்லை ஆதாரம்: உதயன்: 1/05/1998 திகதி: சூலை 21, 1998 நிகழ்வு இடம்: கச்சதீவுக் கடற்பரப்பு நிகழ்வு விரிப்பு: குறித்த கடற்பரப்பில் கடற்புலிகளுக்கும் படையினருக்கும் மோதல் நடைபெற்றது. மோதலின் பின்னர் கடற்புலிகளின் படகுகள் இராமேஸ்வரம் கடற்கரையை நோக்கிச் சென்றன. சேதமாக்கப்பட்ட (சிறிதளவு) கடற்கலங்கள்: 2 கடற்கல வகுப்புப் பெயர்: அறியில்லை கடற்கல வகை: படையப் படகு (விதப்பான கல வகை அறியில்லை) சிறிலங்கா கடற்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: இழப்பில்லை காயப்பட்டோர்: 1 ஆள் வீரச்சாவடைந்த கடற்புலிகள்: இழப்பில்லை ஆதாரம்: உதயன்: 23/07/1998 திகதி: ஓகஸ்ட் 14, 1998 நிகழ்வு இடம்: முல்லைக் கடற்பரப்பு நிகழ்வு விரிப்பு: 60 டன் சரக்குகளை ஏற்றியபடி எம்.வி.பிரின்சஸ் காஷ் என்ற சிறிலங்காவின் வழங்கல் கப்பலானது தனது கன்னிப் பயணத்தைத் தொடங்கியது. இக்கப்பலானது 'குட்வில் கைட் (Goodwill Guide) என்ற உள்நாட்டு நிறுவனத்தால் 1998 ஏப்பிரல் மாதத்தில் துபாயிலிருந்து தருவிக்கப்பட்டு உள்நாட்டிலில் திருத்தப்பட்டது ஆகும். 11ஆம் திகதி கொழும்பிலிருந்து புறப்பட்டு திருமலை சென்று அங்கிருந்து பருத்தித்துறையை நோக்கிச் செல்வதற்காக 14ம் திகதி இரவு முல்லைத்தீவுக் கடற்பரப்பில் சென்றுகொண்டிருந்தது. அப்போது சிக்கலுக்குரிய முல்லைத்தீவுக் கடற்பரப்பில் இரவில் பயணிக்க முடியுமா என்று சிறிலங்காக் கடற்படையிடம் கலக்குழுவினர் கேட்க, அதற்கு அவர்கள் வேண்டாம் என்றும் பகலில் செல்லுமாறும் அறிவுறுத்தி கப்பலை முல்லைக் கடலிலேயே நிறுத்துமாறு கலக்குழுவினருக்கு உத்தரவிட்டனர். ஆனால் மெய்யில், 12,13 ஆம் திகதிகளில் கலக்குழுவினரோடு கதைத்தவர்கள் கடற்புலிகளே! கடலில் நிறுத்துமாறு கூறியவர்களும் அவர்களே! கப்பல் முல்லைத்தீவுக் கடலில் கரையிலிருந்து குறிப்பிட்ட தொலைவில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டது. அப்போது கப்பல் முல்லைக் கடலில் நிற்பதை அறிந்து கடற்புலிகள் 2 சண்டைப்படகுகளில் வந்து 2:30 மணியளவில் கப்பலின் தளத்தில் ஏறி கப்பலை சோதனையிட்டனர். பின்னர் முல்லைத்தீவுக் கடற்பரப்பில் நின்றிருந்த கப்பலை அம்மாவட்டக் கடற்கரையை நோக்கிச் செலுத்துமாறு பணிக்க தண்டையலும் அதன்படி ஒழுகினார். கப்பலும் கடத்தப்பட்டது. இக்கப்பலில் 22 பேர் கொண்ட கலக்குழுவினர் இருந்தனர்; அவர்களில் கப்பலின் தண்டையல் உட்பட 18 பேர் இந்தியரும் எஞ்சியோர் சிங்களவரும் ஆவர். அனைவரும் கடற்புலிகளால் சிறைப்படுத்தப்பட்டு கடற்கரைக்கு கொண்டு செல்லப்பட்டனர். கப்பல் தடுத்து நிறுத்தப்பட்டிருந்த போது, கப்பலை தரிப்பிடத்திலிருந்து ஆழ்கடல் நோக்கி நகர்த்துமாறோ அல்லது தாம் குண்டுவீசுவதற்காக கலக்குழுவினருடன் கப்பலை கைவிடுமாறோ சிறிலங்காக் கடற்படை தொடர்ந்து பணிப்புரையிட்டனர். இவ்வாறு நண்பகல் 10 மணி முதல் எற்பாடு 2:00 மணி வரை மீண்டும் மீண்டும் விடுக்கப்பட்டுக்கொண்டிருந்தது. முதன்முறை விடப்பட்ட போது, கரைக்குக் கொண்டு செல்லப்பட்ட கப்பலின் தண்டையல் வி.என். கப்ரோ, தாங்கள் கப்பலில் இருப்பதாகவும், விடுதலைப்புலிகள் கலக்குழுவினரிடம் உசாவல் நடத்தி வருவதாகவும், பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முடியும் என்றும் அதுவரை எந்தவிதமான படைய நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் எனவும் சிறிலங்காக் கடற்படையிடம் பிழையன தகவலை புலிகளின் வேண்டுகோளிற்கிணங்க கோரினார். கோரிக்கையைப் பொருட்படுத்தாமல் சிங்களக் கடற்படை கப்பலை நோக்கி மூன்று தடவை எழுதருகை வேட்டுகளை தீர்த்தனர். புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்ததால் பணிப்புரையை ஏற்கமுடியாததால் மேலும் 30 நிமிடங்கள் காலவேளை வழங்கப்பட்டது, சிங்களக் கடற்படையினரால். ஆனாலும் சிங்களவரின் பணிப்புரை ஏற்கப்படவில்லை. அதே போல் சிங்களவரும் தண்டையலின் கோரிக்கையை பொருட்படுத்தவில்லை. இந்நிலையில், 14ம் திகதி எற்பாடு 3:30 மணியளவில் சிறிலங்கா வான்படையின் கிபீர் குண்டுதாரி இரண்டு அவ்விடத்திற்கு விரைந்தது. இத்தாரை குண்டுதாரிகளில் ஒன்று குண்டுவீச முனைந்த போது அவற்றில் ஒன்றை இலக்குவைத்து மேற்பரப்பிலிருந்து வான் நோக்கி புலிகள் ஏவுகணை தாக்குதல் மேற்கொண்டனர். ஆனால் கிபிர் தப்பிவிட்டது. தொடர்ந்து தரையிலிருந்து வான்நோக்கி புலிகள் சுட்டாலும் எற்பாடு 4:15 மணியளவில் நான்கு வான்குண்டுகள் கப்பல் மீது வீசப்பட்டு அழிக்கப்பட்டது. கப்பலின் தண்டையல் "விடுதலைப் புலிகளுக்கு உடந்தையாகச் செயல்படுகிறார்" எனக் கூறப்பட்டதை அடுத்து, புலிகளுக்கு "ஊறான சரக்குகள்" வழங்கப்படுவதைத் தடுக்க குண்டுவீசப்பட்டதாக சிறிலங்காக் கடற்படை கூறியது. தாம் கரையிலிருந்து 55 கடல்மைல் தொலைவில் கப்பலை நிறுத்தக் கூறியதாகவும் அனால் கப்பலின் கப்டன் கரையிலிருந்து 14 கடல் மைல் தொலைவில் நிறுத்தியதாகவும் கூறியது கடற்படை. பின்னர், குழுவினரில் 17 இந்தியர்களும் ஓகஸ்ட் 16 அன்று செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டனர். சுமார் 600 யாழ்ப்பாண வியாபாரிகள், கப்பல் மீது குண்டு வீசப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்களை பட்டினியால் வாட்டுவதாகவும், வழங்கலை குறைத்து வருவதாகவும் அவர்கள் சிங்கள அரசாங்கத்தைக் குற்றம் சாட்டினர். சிறிலங்காவின் வான்படையால் அழிக்கப்பட்ட சரக்குகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என சிறிலங்கா அரசிடம் கோரிக்கையும் விடுத்தனர். கப்பலில் இருந்த பொருட்களாவன: கட்டடப்பொருட்கள் கூட்டுத்தாவனத்திற்குரிய, 3,500 மெற்றிக் தொன் சீமெந்து கூரைப் பொருட்கள் கட்டடப் பொருட்கள் 104 உந்துருளிகள் 20 தானுந்து முச்சக்கரவண்டிகள் 20 லான்ட் மாஸ்டெர்கள் 2 பாவிக்கப்பட்ட மகிழுந்துகள் சாராயம், பியர் போன்ற குடிவகைகள் குளிர்பானங்கள் பல நூற்றுக்கணக்கான தேங்காய் எண்ணெய் உருள்கலன்கள் அரிசி, பருப்பு, சீனி, கோழித்தீன், ஆகியன அடங்கிய ஆயிரம் தொன் பொருட்கள் கோடா நீர்மம் (சுருட்டுக்கானது) தனியாருக்குரிய, 84,000 சீமெந்துப் பொதிகள் (1,500 மெற்றிக் தொன்) காகிதாதிகள் மூழ்கடிக்கப்பட்ட கடற்கலங்கள்: 1 கடற்கலப் பெயர்: எம்.வி. பிரின்சஸ் காஷ் (MV Princess Kash) கல வகை: சரக்குக் கப்பல் படிமம்: சிங்கள வான்படையின் குண்டுவீச்சில் அழிந்து போய் பின்னர் கறள் பிடித்த நிலையில் பல ஆண்டுகளிற்குப் பிறகு எடுக்கப்பபட்ட நிழற்படம். இக்கப்பலைக் கடந்து செல்வது கடற்புலிகளின் வேவ் ரைடர் வகுப்பைச் சேர்ந்த 'இசையரசி' என்ற கலப்பெயரைக் கொண்ட சண்டைப்படகு ஆகும். | படிமப்புரவு: விக்கிப்பீடியா சிறிலங்கா கடற்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: இழப்பில்லை காயப்பட்டோர்: இழப்பில்லை வீரச்சாவடைந்த கடற்புலிகள்: இழப்பில்லை ஆதாரம்: உதயன்: 15,16,17,19/08/1998 | தமிழ்நெற்: 16/08/1998 (Counterclaims over 'Princess Kash' bombing) | ரெட்டிஃவ்: 02/09/1998 (“The most dangerous of all my trips…”), (“I thought I would be killed in the crossfire”) திகதி: ஒக்டோபர் 30, 1998 அடிபாட்டுக் காலம்: காலை 7:30 மணியளவில் தொடங்கியது நிகழ்வு இடம்: முல்லைக் கடற்பரப்பு நிகழ்வு விரிப்பு: வைகறை 4:30 மணியளவில் காங்கேசன்துறையிலிருந்து 525 பயணிகளுடன் திருமலை நோக்கிப் புறப்படவிருந்த "லங்கா முடித" என்ற கப்பலுக்குப் பாதுகாப்பு அளிப்பதற்காக முல்லைத்தீவுக் கடலில் காத்திருந்த சிங்களக் கடற்படையின் 8 டோறாக்களைக் கொண்ட கலத்தொகுதியுடன் மிண்டிய கடற்புலிகளின் பல்வேறு வகுப்புகளைச் சேர்ந்த சுமார் 20 படகுகளைக் கொண்ட பல கலத்தொகுதிகள், ஒரு டோறாவை மூழ்கடித்ததுடன் இன்னும் இரண்டைச் சேதப்படுத்தின. மூழ்கடிக்கப்பட்ட கடற்கலங்கள்: 1 கடற்கல வகுப்புப் பெயர்: டோறா (விதப்பான வகுப்பு அறியில்லை) சேதப்பட்ட (சிறிதளவு) கடற்கலங்கள்: 2 கடற்கல வகுப்புப் பெயர்: டோறா (விதப்பான வகுப்பு அறியில்லை) சிறிலங்கா கடற்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: 20+ பேர் காயப்பட்டடோர்: 8 பேர் வீரச்சாவடைந்த கடற்புலிகள்: 2 பேர் தரநிலையுடனான பெயர்கள்: கப்டன் மேனன், கப்டன் இளங்கதிர் ஆதாரம்: உதயன்: 31/10/1998 | தமிழ்நெற்: 31/10/1998 (Tigers sink Sri Lankan gunboat) ******
- 27 replies
-
- ஈழம்
- கடற்கரும்புலிகள்
- கடற்படை
- கடற்புலி
-
Tagged with:
-
கடற்புலிகளால் அழிக்கப்பட்ட, சேதப்பட்ட & கைப்பற்றப்பட்ட சிறிலங்காச் சார்புக் கடற்கலங்கள் | திரட்டு
ஆண்டு: 1997 திகதி: சனவரி 15, 1997 அடிபாட்டுக் காலம்: நண்பகல் 12:30 மணியளவில் நிகழ்வு இடம்: மண்டைதீவுக்கும் கல்முனைக்கும் (பூநகரி) இடைப்பட்டக் கடற்பரப்பு நிகழ்வு விரிப்பு: குறித்த கடற்பரப்பில் தரைப்படையினரையும் கடற்படையினரையும் ஏற்றிக்கொண்டு வந்த இரு கட்டைப்படகுகள் கடற்புலிகளின் தாக்குதலிற்கு இலக்காகின. இதில் ஒன்றிலிருந்த படையினர் கொல்லப்பட்டதோடு 21 அடி நீள கட்டைப்படகும் கைப்பற்றப்பட மற்றையது தப்பியது. கடற்படையினரின் சடலங்கள், சில படைக்கலன்கள் மற்றும் தொலைத்தொடர்பு ஏந்தனங்கள், வெளியிணைப்பு மின்னோடிகள் (Outboard Motor) ஆகியன கைப்பற்றப்பட்டன. புலிகளின் தரப்பில் உயிரிழப்புகள் ஏற்படவில்லை. கைப்பற்றப்பட்ட கடற்கலங்கள்: 1 கடற்கல வகுப்புப் பெயர்: அறியில்லை கல வகை: கட்டைப்படகு சிறிலங்காக் கடற்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: 3 பேர் காயப்பட்டோர்: இல்லை வீரச்சாவடைந்த கடற்புலிகள்: இழப்பில்லை ஆதாரம்: உதயன்: 17/01/1997 | மாவீரர் பட்டியல் திகதி: மார்ச் 8 & 9, 1997 நிகழ்வு இடம்: மன்னார்க் கடற்பரப்பு நிகழ்வு விரிப்பு: கடற்படைக்கும் கடற்புலிகளுக்கும் நடைபெற்ற மோதல். விடுதலைப்புலிகள் தரப்பில் இழப்புகள் ஏற்படவில்லை. சேதப்பட்ட (சிறிய) கடற்கலங்கள்: 1 கடற்கல வகுப்புப் பெயர்: டோறா (விதப்பான வகுப்புப் பெயர் அறியில்லை) சிறிலங்காக் கடற்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: அறியில்லை காயப்பட்டோர்: அறியில்லை வீரச்சாவடைந்த கடற்புலிகள்: இழப்பில்லை ஆதாரம்: உதயன்: 20/03/1997 | மாவீரர் பட்டியல் திகதி: மார்ச் 15, 1997 அடிபாட்டுக் காலம்: காலை 9:45 மணியளவில் நிகழ்வு இடம்: சாலை கடற்பரப்பு நிகழ்வு விரிப்பு: சாலைக் கடற்பரப்பில் சூழ்ச்சிப்பொறியாக நடமாடிய கடற்புலிகளின் படகொன்றைத் தாக்கும் எண்ணத்தோடு நெருங்கிய டோறா மீது ஏற்கனவே எதிர்தாக்குதல் நடத்த கடற்கரையில் அணியமாயிருந்த விடுதலைப்புலிகள், டோறா தம் கரையை அண்மித்தவுடன் அதன் மீது மூன்று கணையெக்கி (mortar) எறிகணைகளை ஏவினர். அவை டோறாவுக்குள் வீழாமல் அருகில் வீழ்ந்து வெடித்ததில் டோறா மெல்லிய சேதமடைந்தது. சேதப்பட்ட (மெல்லிய) கடற்கலங்கள்: 1 கடற்கல வகுப்புப் பெயர்: டோறா (விதப்பான வகுப்புப் பெயர் அறியில்லை) சிறிலங்காக் கடற்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: இல்லை காயப்பட்டோர்: இல்லை வீரச்சாவடைந்த கடற்புலிகள்: இழப்பில்லை ஆதாரம்: உதயன்: 20/03/1997 | மாவீரர் பட்டியல் திகதி: மார்ச் 24, 1997 அடிபாட்டுக் காலம்: சாமம் 12:30 மணி முதல் வைகறை 5:30 நிகழ்வு இடம்: புல்மோட்டைக் கடற்பரப்பு நிகழ்வு விரிப்பு: கடற்புலிகளின் சாலைக் கடற்தளம் மீது வலிதாக்குதல் நடத்தவென கொடிக்கப்பலான பராக்கிரமபாகுவோடு அதற்கு ஏமமாக (escort) மூன்று சுடுகலப் படகுகளும் எட்டு டோறாக்களுமாக முல்லைத்தீவு நோக்கி வந்துகொண்டிருந்தன. பராக்கிரமபாகுவிலிருந்த உந்துகணைகளின் மூலம் கடற்புலிகளின் தளம் மீது தாக்குதல் நடத்துவது என்பதுவே சிங்களவரின் திட்டமாக இருந்தது. இதை மாறிப் புரிந்து, அதாவது வருவது சில சிங்களக் கடற்கலங்கள் என்றும் அதன் மீதே தாக்குதல் நடத்தச் செல்கிறோம் என்ற எண்ணத்தோடு சென்ற கடற்புலிகளுக்கு, தம் வலுவை விஞ்சியதான, தம் மீதே தாக்குதல் நடத்தும் வலுவோடு கடற்படையினர் வருகின்றனர் என்பது தெரிந்திருக்கவில்லை. எனவே முன்னகர்ந்து வந்த கடற்படையோடு முதலில் மிண்டிய கடற்புலிகளுக்கும் சிங்களக் கடற்படைக்கும் கடற்சமர் வெடித்தது. 30 கடல்மைல் தொலைவில் வந்துகொண்டிருந்த பராக்கிரமபாகுவை தம் முதன்மை இலக்காகக் கருதிய கடற்புலிகள் முன்னால் வந்த டோறாக்களை அடித்து விலத்தி, கப்பல் மீது தாக்குதலைத் தொடுக்கின்றனர். கடற்புலிகளின் வேவ் ரைடர் வகுப்பைச் சேர்ந்த 'ஒஸ்கார்' என்ற சண்டைப்படகின் முதன்மைச் சூட்டாளரும் கடற்புலிகளின் சிறந்த சூட்டாளருமாகிய லெப். கேணல் ஒஸ்காரின் சூட்டில் பராக்கிரமபாகுவின் முதன்மைச் சுடுகலத்தின் சூட்டாளர் கொல்லப்பட அவரோடு நின்ற மேலும் ஏழு படையினர் காயமடைந்தனர். இத்தாக்குதலின் மூலம் ஏற்பட்ட இடைவெளியைப் பயன்படுத்தி கடற்கரும்புலிகளான மேஜர் நாவலன், கப்டன் கலைவள்ளி ஆகியோர் மோதச் சென்ற போது கப்பலில் நின்ற ஏனைய கடற்படையினரின் வேட்டில், எட்டுவதற்கு இன்னும் 30 மீட்டர்களே எஞ்சிய நிலையில், இடியன் தீப்பிடித்து எரிந்து போனது. இரண்டாவது இடியன் மேற்கொண்டு நடந்த சமரில் கடற்படையின் தாக்குதலிற்கு இலக்காகி வெடித்தது. சேதப்பட்ட (மெல்லிய) கடற்கலங்கள்: 1 கடற்கல வகை: சுடுகலப் படகு சிறிலங்கா கடற்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: 1 பேர் காயப்பட்ட கடற்படையினர்: 7/8 பேர் வீரச்சாவடைந்த போராளிகள்: 5 பேர் கடற்கரும்புலிகள்: 4 பேர் தரநிலையுடனான பெயர்கள்: மேஜர் மதீஸ் எ நாவலன், மேஜர் தமிழ் மாறன், கப்டன் வானதி, கப்டன் கலைவள்ளி கடற்கரும்புலி வகை: நீர்மேல் தாக்குதல் கரும்புலிகள் கடற்புலிகள்: 1 ஆள் தரநிலையுடனான பெயர்கள்: லெப். சுகுணன் எ மாவேந்தன் சக்கை வண்டிகள், எண்ணிக்கை: 2 வகுப்புப் பெயர்: அறியில்லை ஆதாரம்: உதயன்: 30/05/1997 | உயிராயுதம் - 6 திகதி: ஏப்பிரல் 10,1997 அடிபாட்டுக் காலம்: காலை நிகழ்வு இடம்: தலைமன்னார்க் கடற்பரப்பு நிகழ்வு விரிப்பு: மன்னார் தீவில் தலைமன்னாரிலிருந்து பேசாலை நோக்கிச் சென்று கொண்டிருந்த கடற்படையின் இரு கட்டைப்படகுகள் கடற்புலிகளால் வழிமறிக்கப்பட்டு தாக்கப்பட்டன. இதில் ஒரு படகு புலிகளால் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டதோடு அதிலிருந்த மூன்று காவல்துறையினரும் ஐந்து கடற்படையினரும் கொல்லப்பட்டனர். தொடர்ந்த கடற்சமரில் மேலுமொரு கடற்படையினன் கொல்லப்பட்டார். கைப்பற்றப்பட்ட படகிலிருந்த எட்டுச் சடலங்களும் மாங்குளத்தில் வைத்து செஞ்சிலுவைச்சங்கத்தின் அனைத்துலகக் குழுவிடம் கையளிக்கப்பட்டது. புலிகளின் தரப்பில் உயிரிழப்புகள் ஏற்படவில்லை. மூழ்கடிக்கப்பட்ட கடற்கலங்கள்: 1 கடற்கல வகுப்புப் பெயர்: அறியில்லை கல வகை: கட்டைப்படகு சிறிலங்காக் கடற்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: 9 பேர் கடற்படையினர்: 6 பேர் காவல்துறையினர்: 3 பேர் காயப்பட்டோர்: இல்லை வீரச்சாவடைந்த கடற்புலிகள்: இழப்பில்லை ஆதாரம்: உதயன்: 11 & 14 /04/1997 | மாவீரர் பட்டியல் திகதி: மே 27, 1997 அடிபாட்டுக் காலம்: சாமம் 12:30 மணி முதல் வைகறை 5:30 நிகழ்வு இடம்: கொக்கிளாய்க் கடற்பரப்பு நிகழ்வு விரிப்பு: இவ்வலிதாக்குதலில் இயற்கை தமிழருக்குச் சாதமில்லாமல் போனதால் பேரிழப்பு ஏற்பட்டது. முள்ளிவாய்க்கால் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படைக்கு எதிரான வலிதாக்குதல் ஒன்று செய்வதற்காக கடற்புலிகளின் ஆறு சண்டைப்படகுகளும் ஆறு இடியன்களுமாக அணியமாகி நின்றன. அதே நேரம் செம்மலையிலிருந்து தலைநகரான திருமலைக்கு ஒரு வழங்கல் நடந்துகொண்டிருந்தது. அதில் பங்கெடுத்த ஒரு நடுத்தர மற்றும் ஒரு சிறிய தர வகை படகு என்பன பணியை முடித்து விட்டு இக்கலமணியோடு சேர்ந்துகொண்ட போது இவ் வழங்கல்களை முடித்துவிட்டு திரும்பிய படகுகளை தாக்கவென உயரக்கடலில் நின்ற எட்டு டோறாக்கள் கீழிறங்கி வந்தன. அவற்றோடு பொருதவென கடற்புலிகள் உயரச் சென்ற போது எதிர்பாராமல் ஏற்பட்ட முரட்டுத்தனமான கடலாலும் காற்றாலும் கனமாக அலை எழுந்து மோதியதால் சென்ற ஆறு இடியன்களில் நான்கு வெடித்துச் சிதறின. மேற்கொண்டு கடற்படையோடு மிண்டிய கடற்புலிகள் பின்னர் கரை திரும்பினர். சேதப்பட்ட (சிறிதளவு) கடற்கலங்கள்: 2 கடற்கலப் வகுப்புப் பெயர்: டோறா (விதப்பான வகுப்பு அறியில்லை) சிறிலங்கா கடற்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: இல்லை காயப்பட்ட கடற்படையினர்: 1 ஆள் வீரச்சாவடைந்த கடற்கரும்புலிகள்: 8 பேர் தரநிலையுடனான பெயர்கள்: மேஜர் அன்பு, மேஜர் இளமகன், மேஜர் வலம்புரி, மேஜர் வினோதா, மேஜர் சந்திரா, கப்டன் சுதாகரன், கப்டன் அருளர்சன், கப்டன் சித்தா கடற்கரும்புலி வகை: நீர்மேல் தாக்குதல் கரும்புலிகள் சக்கை வண்டிகள், எண்ணிக்கை: 4 வகுப்புப் பெயர்: அறியில்லை ஆதாரம்: உதயன்: 30/05/1997 | உயிராயுதம் - 6 திகதி: மே 29, 1997 வகைறை நிகழ்வு இடம்: திருமலைத் துறைமுகம் நிகழ்வு விரிப்பு: தலைநகர் திருமலையிலிருந்த பிரிமா ஆலைக்கு 52 ஆயிரம் மெற்றிக் தொன் கோதுமை தானியத்தை ஏற்றிவந்த கிரேக்க நாட்டுக் கப்பல் மே 23 ஆம் திகதி முதல் திருமலை துறைமுகத்திற்கு வெளியே தரித்திருந்தது. தரித்திருந்த கப்பலின் கலக்கூட்டில் கடற்புலிகளின் நீரடி நீச்சல் பிரிவினர் 29/05/1997 அன்று சாம இறுதியில் நீரடி நேரக்கணிப்புக் குண்டுகளைப் பொருத்தி வெடிப்பித்ததின் மூலம் பொறி அறை சேதமடைந்தது. உடைப்பு ஏற்பட்டு கடல் நீரும் உட்புகுந்தது. பின்னர் கொழும்பிலிருந்து அழைத்து வரப்பட்ட வல்லுநர்கள் மூலம் சேதம் சரிசெய்யப்பட்டு 16/07/1997 அன்று சிறிலங்காவின் 'வெரிதாஸ்' என்ற இழுவைப்படகு மூலம் சிங்கப்பூர் நோக்கி இழுத்துச் செல்லும் பணி தொடங்கப்பட்டது. சேதமாக்கப்பட்ட (மோசமாக) கடற்கலங்கள்: 1 கடற்கல வகுப்புப் பெயர்: அதேனா (Athena) கல வகை: சரக்குக் கப்பல் சிறிலங்காக் கடற்படை/ ஊழியர் ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: இல்லை காயப்பட்டோர்: இல்லை வீரச்சாவடைந்த கடற்புலிகள்: இழப்பில்லை ஆதாரம்: உதயன்: 30 & 31/05/1997, 16/07/1997 திகதி: சூலை 1, 1997 நிகழ்வு இடம்: பேசலைக் கடற்பரப்பில் கரையிலிருந்து அரைக் கிலோமீட்டர் தொலைவிலுள்ள கடற்பரப்பு நிகழ்வு விரிப்பு: காங்கேசன்துறையிலிருந்து மன்னாருக்கும் திருமலைக்கும் பயணிகள் மற்றும் ஏதிலிகளை ஏற்றிப்பறிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறது என்னும் போர்வையில் படையினரையும் ஏற்றிப்பறிக்கும் பணியிலும் ஈடுபட்டிருந்தது இக்கப்பல். 500 பேர் வரை ஏற்றிச்செல்லக் கூடிய இக்கப்பலில் 300 ஏதிலிகளை மட்டுமே ஏற்றிச் செல்ல சிங்களக் கடற்படை அனுமதி வழங்கியிருந்தது. மிச்ச இடத்திற்கு ஏன் அனுமதி வழங்கவில்லை என்பது தெரியவில்லை. அவ்விடங்களில் தான் தவிபு கூறுவது போன்று படையினரை ஏற்றிச் சென்றிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. நிகழ்வன்று இக்கப்பல் காங்கேசன்துறையில் ஏதிலிகளை இறக்கிவிட்டு அடுத்த தடவைக்காக மன்னார் நோக்கி சென்றுகொண்டிருந்தது. இதனோடு 'தாராகி' என்ற கலப்பெயர் கொண்ட இன்னொரு வலசையும் (ferry) சென்றுகொண்டிருந்தன. காலையில் நேரத்துடன் மன்னாரை அண்மித்த இவ்வலசை இறங்குதுறைக்குச் செல்வதற்கான கடற்படையின் அனுமதியை எதிர்பார்த்து பேசாலைக் கடற்பரப்பில் கரையிலிருந்து அரைக் கிலோமீட்டர் தொலைவில் நங்கூரமிட்டிருந்தது. அப்போது காலை 6:30 மணியளவில் 5 சண்டைப்படகுகளில் வந்த கடற்புலிகள் கப்பல் ஊழியர்கள் 9 பேர் உட்பட 39 பேரைக் கடத்தியதோடு கப்பலையும் எரித்துவிட்டுச் சென்றனர். இச்செயலைக் கண்ட பின்னால் வந்த மற்ற வலசை ஆழ்கடல் வழியே தலைமன்னார் துறைக்கு ஓட்டமெடுத்தது. கடத்திச் செல்லப்பட்ட கப்பல் ஊழியர்கள் 9 பேரில் இருவர் இந்தோனேசியர், ஐவர் சிங்களவர், ஒருவர் தமிழன் மற்றும் ஒருவர் முசிலீமும் ஆவர். இந்தோனேசிய கப்பல் ஊழியர்கள் இருவரும் 04/07/1997 அன்று விடுதலை செய்யப்பட்டனர். பொதுமக்களில் 7 பேர் 14/07 அன்று விடுதலை செய்யப்பட்டனர். ஏனையவர்களில் ஒருவர் தவிர்த்து அனைவரும் அநுராதபுரத்தில் கைதுசெய்யப்பட்ட ஐந்து விடுதலைப்புலிகளை விடுவிப்பதற்காக மாற்றிக்கொள்ளப்பட்டனர். எஞ்சிய ஒரு சிங்களவர் (கலக்குழு உறுப்பினர்) தடுப்பிலிருந்து விடுதலை செய்யப்பட்டு 25/10/1998 அன்று செஞ்சிலுவைச்சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டார். தாங்கள் யாரும் வேதனைப்படுத்தப்படவோ இல்லை வதைக்கப்படவோ இல்லையென்றும் நல்லபடியாகவே நடத்தபட்டோம் என்றும் பன்னாட்டு மன்னிப்பு அவையிடம் தெரிவித்திருந்தனர். மூழ்கடிக்கப்பட்ட கடற்கலங்கள்: 1 கடற்கல வகுப்புப் பெயர்: எம்.வி. மிசென் (MV Misen) கல வகை: வலசை கப்பல் ஊழியர் ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: இல்லை காயப்பட்டோர்: இல்லை வீரச்சாவடைந்த கடற்புலிகள்: இழப்பில்லை ஆதாரம்: உதயன்: 2 & 5/07/1997 | தமிழ்நெற்: 11/07/1997 (Tigers target sea bridge) | asa370191997en.pdf (பன்னாட்டு மன்னிப்பு அவை அறிக்கை) திகதி: சூலை 8, 1997 அடிபாட்டுக் காலம்: மாலை 8:30 மணியளவில் நிகழ்வு இடம்: பருத்தித்துறைக் கடற்பரப்பு நிகழ்வு விரிப்பு: காங்கேசன்துறையில் வழங்கல் சரக்குகளை இறக்கிவிட்டு திருமலை நோக்கிச் சென்றுகொண்டிருந்த "மின்செல் இன்டர்னசனல் லிமிடெட்" என்ற நிறுவனத்திற்குச் சொந்தமான இக்கப்பலானது முல்லைத்தீவில் வைத்து புலிகளால் தடுத்து நிறுத்தப்பட்டது. ஆனால் திடீரென ஆழ்கடல் நோக்கி கப்பல் செல்லத் தொடங்கிய வேளை கப்பலை வலுக்கட்டாயமாக நிறுத்துவதற்காக கடற்புலிகள் எழுதருகை (warning) வேட்டுகளைத் தீர்த்தனர். பின்னர் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது. அதன் பின்னரே அதிலிருந்த வடகொரிய கலக்குழுவினரில் ஒருவர் கொல்லப்பட்டு விட்டாரென்பது தெரிய வந்தது. பேந்து, கப்பல் அளம்பில் நோக்கி கொண்டு செல்லப்பட்டு கலக்குழுவினர் 38 பேரும் தரைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். கப்பலில் இருந்த கொல்லப்பட்ட ஊழியரின் சடலமும் ஏனைய ஊழியர்களும் சூலை 13 அன்று செஞ்சிலுவைச் சங்கத்திடம் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டனர். விடுவிக்கப்பட முன்னர் புலிகளின் முகாம் ஒன்றில் அவர்களுக்கு தமிழ் மரபுப்படி விருந்து கொடுக்கப்பட்டது. அதில் புலிகளின் இசை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்ட போது கலக்குழுவினரும் அவர்களோடு சேர்ந்து பாடி ஆடினர். கப்பலின் தண்டையல் சிறிலங்கா அரசாங்கம் தமிழர்களை துன்புறுத்துவதில் 'இரக்கமற்றது' என்று விரித்ததாகவும், ஆயுதப் போராட்டத்திற்கு அனுதாபம் காட்டியதாகவும் கூறப்படுகிறது. இக்கப்பலானது 01/09/1997 அன்று கொரிய கப்பல் நிறுவனத்திடம் அலுவல்சாராக கையளிக்கப்பட்டது. அதை செஞ்சிலுவைச் சங்கத்தின் 'சிகிரி' என்ற இழுவைப்படகு முல்லை. இருந்து திருமலை நோக்கி இழுத்துச் சென்றது. கைப்பற்றப்பட்ட கடற்கலங்கள்: 1 கடற்கல வகுப்புப் பெயர்: எம்.வி. மொ றான் பொங் (MV Mo Ran Bong) கல வகை: சரக்குக் கப்பல் படிமம்: படிமப்புரவு: சன்டே ரைம்ஸ், 1996 கப்பல் ஊழியர் ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: 1 காயப்பட்டோர்: இல்லை வீரச்சாவடைந்த கடற்புலிகள்: இழப்பில்லை ஆதாரம்: உதயன்: 09 & 13/07/1997, 23 & 25/08/1997, 02/09/1997 | தமிழ்நெற்: 11/07/1997 (Tigers target sea bridge), 13/07/1997 (Mo Ran Bong's Crewmen Released) திகதி: சூலை 25, 1997 அடிபாட்டுக் காலம்: காலையில் 7 மணிநேரம் நிகழ்வு இடம்: முல்லை கடற்பரப்பிற்கும் புல்மோட்டை கடற்பரப்பிற்கும் இடைப்பட்ட கடற்பரப்பு நிகழ்வு விரிப்பு: கடற்புலிகளின் படகுகளைக் கண்டு அவற்றின் மேல் கடற்படையினர் மேற்கொண்ட வலிதாக்குதலிற்கு எதிரான தாக்குதல் இதுவாகும். சேதமாக்கப்பட்ட (சிறிதளவு) கடற்கலங்கள்: 1 கடற்கல வகுப்புப் பெயர்: கடற்படைப் படகு (விதப்பான வகுப்புப் பெயர் அறியில்லை) சிறிலங்காக் கடற்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: அறியில்லை காயப்பட்டோர்: அறியில்லை வீரச்சாவடைந்த கடற்புலிகள்: இழப்பில்லை ஆதாரம்: உதயன்: 26/07/1997 | மாவீரர் பட்டியல் திகதி: ஓகஸ்ட் 14, 1997 அடிபாட்டுக் காலம்: சாமத்திலிருந்து வைகறை 3:30 வரை மூன்று மணிநேரம் நடந்தது நிகழ்வு இடம்: அளம்பிலுக்கும் புல்மோட்டைக்கும் இடைப்பட்ட கடற்பரப்பு நிகழ்வு விரிப்பு: முல்லைத்தீவிலிருந்து எட்டுப் படகுகளில் சென்றுகொண்டிருந்த கடற்புலிகளை குறித்த கடற்பரப்பில் வழிமறித்த போது சிங்களக் கடற்படைக்கும் கடற்புலிகளுக்கும் கடற்சமர் வெடித்தது. சேதமாக்கப்பட்ட (மெல்லிய) கடற்கலங்கள்: 1 கடற்கல வகுப்புப் பெயர்: டோறா (விதப்பான வகுப்புப் பெயர் அறியில்லை) சிறிலங்காக் கடற்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: அறியில்லை காயப்பட்டோர்: அறியில்லை வீரச்சாவடைந்த கடற்புலிகள்: 1 ஆள் தரநிலையுடனான பெயர்: லெப். செல்வன் ஆதாரம்: உதயன்: 15/08/1997 | மாவீரர் பட்டியல் திகதி: செப்டெம்பர் 9, 1997 அடிபாட்டுக் காலம்: சாமம் 1:30 மணி முதல் நிகழ்வு இடம்: புல்மோட்டைக் கடற்பரப்பு நிகழ்வு விரிப்பு: "சீன ஓசன் சிப்பிங் கொம்பனி" என்ற சீன நாட்டு கப்பலேற்றும் நிறுவனத்திற்குச் சொந்தமான இக்கப்பலானது சிறிலங்கா சிறப்புப் படையினரும் சிங்களக் கடற்படையின் சுடுகலப் படகுகளும் பாதுகாப்பு வழங்கிக்கொண்டிருக்க புல்மோட்டையிலிருந்து நியூயோர்க்கிற்கு 15 மில்லியன் மதிப்புள்ள 26,235 மெற்றிக் தொன் இல்மனைட்டு தனிமத்தை ஏற்றிச்செல்ல அணியமாக இருந்த போதே கடற்புலிகளின் அதிரடித் தாக்குதலிற்கு இலக்கானது. உந்துகணைகளை ஏவியும் இயந்திரச் சுடுகலன்களால் சுட்டபடியும் சிங்களத்தின் கடல் திரையைக் கிழித்து முன்னகர்ந்த கடற்புலிகள் கடற்சிறுத்தைகளை கப்பல் தளத்தில் ஏற்றினர். கடற்சிறுத்தைகள் கப்பலின் தளத்தில் காவலிற்கிருந்த சிறிலங்கா அதிரடிப்படையினருடன் முரட்டுடன் மிண்டினர். ஒரு கட்டத்தில் கைகலப்புமானது. பின்னர் தளத்திலிருந்த கடற்சிறுத்தைகளால் கப்பல் கைப்பற்றப்பட்டு சக்கை வைத்து வெடிக்க வைக்கப்பட்டதில் தீப்பிடித்து மூழ்கத்தொடங்கியது. கப்பல் தளத்தில் நடந்த சண்டையில் ஆகக் குறைந்த 15 அதிரடிப்படையினர் கொல்லப்பட்டதோடு இரு கன்னைக்கும் நடுவில் சிக்குண்டதால் குறுக்குச்சூட்டில் சீனக் கலக்குழுவினரில் சிலரும் உள்ளூர் தொழிலாளிகள் சிலரும் கொல்லப்பட்டனர். கடலில் நடந்த சமரில் மூன்று "கடற்படைப் படகுகள்" மூழ்கடிக்கப்பட்டதுடன் (தமிழ்நெற் செய்தியாளர்களுடன் கதைத்த சிங்கள அதிகாரி ஒருவரால் இத்தகவல் உறுதி செய்யப்பட்டது) மேலும் ஒன்று புலிகளால் கைப்பற்றப்பட்டது. எவ்வாறெயினும் மற்ற அறிக்கைகளின்படி அங்கு காவலுக்கு நின்றிருந்த கனமாக ஆயுதம் பூண்ட டோறாக்கள் மூன்றும் உதவிக்கு விரைந்த டோறாக்கள் மூன்றும் தப்பியோடியதால் கப்பலில் நின்ற வலுவெதிர்ப்புக்காரர்கள் தற்காத்துக்கொள்ளும்படி ஆயிற்றாம். தமது முதல் தாக்குதல் மூலம் விடுத்த எழுதருகையை (warning) புறக்கணித்து தொடரப்பட்ட தமிழ் மக்களின் கனிம வளங்கள் சுறண்டப்படுவதை தடுக்கும் நோக்கிலேயே சிறிலங்கா அரசால் வாடகைக்கு எடுக்கப்பட்ட இக் கப்பலை அழித்ததாக புலிகள் தெரிவித்தனர். ஏனைய ஊழியரும் தொழிலாளிகளும் கடலில் குதித்து நீந்தி உயிர் பிழைத்தனர். 14ம் திகதியளவில் முற்றாக மூழ்கிவிட்ட கப்பலில் ஏற்றப்பட்டிருந்த சரக்கில் இரண்டாயிரம் தொன் மட்டுமே மீட்கப்பட்டது. சிறிதளவு படைக்கலன்களும் படகும் நான்கு கடல் அதிரடிப்படையினரின் சடலங்களும் புலிகளால் கைப்பற்றப்பட்டன. இந்நடவடிக்கை தொடர்பில் 11/09/1997 அன்று இலண்டனிலிருந்து புலிகள் வெளியிட்ட ஊடக வெளியீட்டின் உரை பின்வருமாறு: மூழ்கடிக்கப்பட்ட கடற்கலங்கள்: 4 கடற்கல வகுப்புப் பெயர்: எம்.வி. கோர்டியாலிட்டி (MV Cordiality) கல வகை: சரக்குக் கப்பல் படிமம்: கடற்கல வகுப்புப் பெயர்: அறியில்லை கல வகை: "கடற்படைப் படகு" (மொத்தம் மூன்று) கைப்பற்றப்பட்ட கடற்கலங்கள்: 1 கடற்கல வகுப்புப் பெயர்: அறியில்லை கல வகை: அறியில்லை சிறிலங்காக் ஆயுதப்படை ஆளணியினரில், தரைப்படை கொல்லப்பட்டோர்: 5 பேர் காயப்பட்டோர்: அறியில்லை அதிரடிப்படை கொல்லப்பட்டோர்: 10 பேர் காயப்பட்டோர்: அறியில்லை கப்பல் ஊழியர் (சீனர்) ஆளணியினரில், கொல்லப்பட்டர்: 8 பேர் காயப்பட்டோர்: 22 பேர் உள்ளூர் தொழிலாளர் ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: 5 பேர் காயப்பட்டோர்: 5 பேர் வீரச்சாவடைந்த போராளிகள்: இழப்பில்லை ஆதாரம்: உதயன்: 10, 11 & 15 /09/1997 | தமிழ்நெற்: 12/09/1997 (LTTE allays shipping fears) | LTTE PRESS COMMUNIQUÉ 11/09/1997 திகதி: ஒக்டோபர் 19, 1997 அடிபாட்டுக் காலம்: மாலை 9:00 மணி முதல் ஐந்து மணித்தியாலங்களுக்கு மேலாக நடைபெற்றது டோறா மீது இடியன் மோதிய நேரம்: அதிகாலை 1:45 மணியளவில் நிகழ்வு இடம்: புல்மோட்டைக் கடற்பரப்பு நிகழ்வு விரிப்பு: திருகோணமலையிலிருந்து வெற்றிநிச்சயம் (ஜெயசிக்குறுய்) நடவடிக்கைக்காக வன்னிக்குப் போராளிகளைக் கொண்டுவரும் பணியில் மாலை 6 மணி முதல் ஈடுபட்டிருந்த கடற்புலிகளுக்கும் அவர்களைத் தடுக்கவென திருமலையிலிருந்தும் காங்கேசன்துறையிலிருந்தும் வந்திருந்த ஒன்பது டோறாக்களும் இடையில் மாலை 9:00 மணி முதல் தொடராக கடற்சமர் வெடித்தது. தொடராக நடந்த கடற்சமரின் விளைவாய் சாமம் 1:30 மணியளவில் லெப். கேணல் நிரோஜன் (பின்னாளைய கடற்புலிகளின் துணைக் கட்டளையாளர்) தனது சுடுகலனால் டோறாவைச் சுட்டு நிலைகுலையவைக்க அவருடன் நின்ற கடற்கரும்புலிகள் இருவரால் ஓட்டப்பட்ட குண்டுப்படகொன்று டோறாவில் மோதியிடித்து அதை மூழ்கடித்தது. கொல்லப்பட்ட கடற்படையினன் ஒருவனின் சடலம் 23ம் திகதி கொக்கிளாய்க் கடற்கரையில் கரையொதுங்கியது. மூழ்கடிக்கப்பட்ட கடற்கலங்கள்: 1 கடற்கல வகுப்புப் பெயர்: பேபி டோறா சேதப்பட்ட கடற்கலங்கள்: 2 கடற்கலப் வகுப்புப் பெயர்: டோறா (விதப்பான வகுப்பு அறியில்லை) சிறிலங்கா கடற்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: 7 பேர் காயப்பட்டோர்: 2 பேர் வீரச்சாவடைந்த போராளிகள்: 5 பேர் கடற்புலிகள்: 3 பேர் தரநிலையுடனான பெயர்கள்: மேஜர் வீரமணி, கப்டன் பரமு, கப்டன் நவநீதன் எ மதிவதனன் கடற்கரும்புலிகள்: 2 பேர் தரநிலையுடனான பெயர்கள்: மேஜர் சிறி, கப்டன் சின்னவன் கடற்கரும்புலி வகை: நீர்மேல் தாக்குதல் கரும்புலிகள் படிமங்கள்: சக்கை வண்டிகள், எண்ணிக்கை: 1 வகுப்புப் பெயர்: அறியில்லை ஆதாரம்: உதயன்: 20, 21 & 24.10.1997 | உயிராயுதம் - 6 | தமிழ்நெற்: 19/10/1997 (Tigers sink Sri Lankan gunboat) ******
- 27 replies
-
- ஈழம்
- கடற்கரும்புலிகள்
- கடற்படை
- கடற்புலி
-
Tagged with:
-
கடற்புலிகளால் அழிக்கப்பட்ட, சேதப்பட்ட & கைப்பற்றப்பட்ட சிறிலங்காச் சார்புக் கடற்கலங்கள் | திரட்டு
ஆண்டு: 1996 திகதி: மார்ச் 15, 1996 அடிபாட்டுக் காலம்: நண்பகல் 12:20 மணி நிகழ்வு இடம்: மன்னார் பள்ளிமுனையிலிருந்து 3 கிமீ தொலைவில் நிகழ்வு விரிப்பு: மன்னார் கடலில் சூழ்ச்சிப்பொறியாக நடமாடிய கடற்புலிப் படகுகளின் நடமாட்டத்தைக் கண்டு சிறிலங்காத் தரைப்படை-கடற்படையின் அணிகள் எருக்கலம்பிட்டியிலிருந்தும் பள்ளிமுனையிலிருந்தும் மூன்று கடற்படைப் படகுகளில் வெளிக்கிட்டு கூட்டாகக் கடலில் சுற்றுக்காவலில் ஈடுபட்டனர். அப்போது ஈருடகத் தாக்குதலணியினர் (2008இல் சேரன் ஈருடகத் தாக்குதலணி என்று பெயர் மாற்றப்பட்டனர்) கரையோரப் பற்றைக்குள் பதுங்கியிருந்து கடலில் வந்தவர்கள் நோக்கி வலிதாக்குதல் நடாத்தினர். வெற்றிகரமான இம்மோதலில் இரு சடலங்கள், சிறிதளவு படைக்கலன்கள் மற்றும் ஒரு படகு ஆகியன கைப்பற்றப்பட்டன. தமிழர் தரப்பில் இழப்புகள் ஏற்படவில்லை. மூழ்கடிக்கப்பட்ட கடற்கலங்கள்: 1 கடற்கல வகுப்புப் பெயர்: அறியில்லை (வெளுறிய நிறம்) கல வகை: கட்டைப்படகு சேதப்பட்ட கடற்கலங்கள்: 1 கடற்கல வகுப்புப் பெயர்: அறியில்லை (கடு நிறம்) கல வகை: கட்டைப்படகு கைப்பற்றப்பட்ட கடற்கலங்கள்: 1 கடற்கல வகுப்புப் பெயர்: புளூ ஸ்ரார் (நீல நிறம்) கல வகை: கட்டைப்படகு சிறிலங்காக் கடற்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: 10-16 பேர் காயப்பட்டோர்: 4 ஆதாரம்: உதயன்: 16/03/1996 | ஒளிவீச்சு 1996 ஏப்ரல் திகதி: மார்ச் 30, 1996 அடிபாட்டுக் காலம்: நண்பகல் நிகழ்வு இடம்: சுண்டிக்குளம் கடற்கரையிலிருந்து 15 கிமீ தொலைவில் நிகழ்வு விரிப்பு: இத்தாக்குதலின் நோக்கமானது திருமலையிலிருந்து வெற்றிலைக்கேணிக்கு நடைபெற்றுவரும் வழங்கலை நிறுத்துவதே ஆகும். குறித்த நாளில் காங்கேசன்துறை கடற்படைத் தளத்திலிருந்து திருகோணமலை துறைமுகம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த இரண்டு எந்திரமயப்பட்டவை தரையிறக்கக் கலங்கள், இரண்டு விரைவுச் சுடுகலப் படகுகள், மற்றும் வேறு நான்கு கடற்கலங்கள் (ஆகக் குறைந்தது ஒரு சாதாரண டோறாவும் ஒரு சால்டாக்கும்) ஆகியன அடங்கிய தொடரணியே கடற்புலிகளின் இலக்காகவிருந்தது. இத்தாக்குதலிற்காக லெப். கேணல் டேவிட் தலைமையில் அவர் உட்பட லெப். கேணல் நிமலன், லெப். கேணல் குணேஸ் ஆகியோரை கட்டளை அதிகாரிகளாகக் கொண்ட மூன்று வோட்டர் ஜெட் சண்டைவண்டிகளும், சில இடியன்களுமாக பூனைத்தொடுவாயில் காத்திருந்தன. அப்போது காங்கேசன்துறையிலிருந்து வந்துகொண்டிருந்த தொடரணியை நோக்கி லெப். கேணல் நிமலனின் சண்டைப்படகு விரைந்து சென்று பொருதியது. தொடர்ந்த கடற்சமரில் பகைத் தாக்குதலால் அன்னாரின் வோட்டர் ஜெட் வகுப்புச் சண்டை வண்டி மூழ்கடிக்கப்பட்டது. ஆயினும் ஏனைய வோட்டர் ஜெட்களும் தொடர்ந்து கடற்சமரில் ஆடின. அதன் போது நிலைகுலைந்து நின்ற டோறா ஒன்றின் மீது கடற்கரும்புலித் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு அது மூழ்கடிக்கப்பட்டது. தொடர்ந்த கடற்சமரில் சால்டாக் ஒன்றும் மீளப்பாவிக்கேலதபடி சேதப்பட்டதோடு இன்னுமொரு சுடுகலப் படகும் சேதமாக்கப்பட்டது. பின்னாளில் இங்கு மூழ்கடிக்கப்பட்ட டோறாவின் முதன்மைச் சுடுகலன் உட்பட சில படைக்கலன்கள் கடற்புலிகளின் நீரடி நீச்சல் பிரிவினரால் கழட்டியெடுக்கப்பட்டு கடற்சமர்களில் பயன்படுத்தப்பட்டன மூழ்கடிக்கப்பட்ட கடற்கலங்கள்: 1 கடற்கலப் பெயர்: டோறா கல வகை: விரைவுத் தாக்குதல் கலம் சேதப்பட்ட (மீளப் பாவிக்கேலாது) கடற்கலங்கள்: 1 கடற்கல வகுப்புப் பெயர்: சால்டாக் கல வகை: விரைவுத் தாக்குதல் கலம் சேதப்பட்ட (சிறிய) கடற்கலங்கள்: 1 கடற்கல வகுப்புப் பெயர்: அறியில்லை கல வகை: விரைவுச் சுடுகலப் படகு சிறிலங்காக் கடற்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: 14 பேர் கொல்லப்பட்டோரில் இருவர் (லெப். விஜேதுங்க, துணை லெப். குணவர்த்தன) ஆகியோர் காணாமல் போயுள்ளதாகவும் அவர்கள் தவிபுவிடம் சிறைப்பட்டிருக்கலாம் என்றும் கொழும்புப் பாதுகாப்பு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டன. காயப்பட்டோர்: 5 பேர் வீரச்சாவடைந்த போராளிகள்: 21 பேர் கடற்கரும்புலிகள்: 2 பேர் தரநிலையுடனான பெயர்கள்: மேஜர் ஜெகநாதன், கப்டன் இளையவள் கடற்கரும்புலி வகை: நீர்மேல் தாக்குதல் கரும்புலிகள் கடற்புலிகள்: 19 பேர் தரநிலையுடனான பெயர்கள்: ‘சண்டைப்படகு கட்டளை அதிகாரி’ லெப். கேணல் நிமல் எ நிமலன், லெப். கேணல் குணேஸ் எ எழில்வண்ணன், மேஜர் கனியன், மேஜர் மன்னவன், மேஜர் செம்மலை, மேஜர் மோகன், மேஜர் மலர்மொழி, கப்டன் கரன், கப்டன் நல்லவன், கப்டன் மிதுனன், கப்டன் கனகா, கப்டன் திருமாறன், லெப். குமுதினி, லெப். பிருந்தா, லெப். செல்வக்குமார், லெப். கீதா, லெப். மகேஸ்வரி, லெப். எழுமதி, கப்டன் ஆனந்தி சண்டை வண்டியில் பயணித்த தரைப்புலிகள்: 1 ஆள் தரநிலையுடனான பெயர்: கப்டன் இராவணன் (ராதா விமான எதிர்ப்பு அணியினன், இ.பா.ப.) சக்கை வண்டிகள், எண்ணிக்கை: 1 வகுப்புப் பெயர்: அறியில்லை ஆதாரம்: உதயன்: 01 & 03/04/1996 | ஒளிவீச்சு 1996 ஏப்ரல் | உயிராயுதம் - 5 திகதி: ஏப்ரல் 12, 1996 அடிபாட்டுக் காலம்: சாமம் 1:30 மணி முதல் வைகறை 5:45 மணிக்கு மேல் வரை துறைமுகம் மற்றும் வணிகக் கப்பல்கள் மீது படகிலிருந்து தாக்குதல் நடத்தப்பட்ட நேரம்: வைகறை 5:45 மணி முதல் நிகழ்வு இடம்: கொழும்புத் துறைமுகம் நிகழ்வு விரிப்பு: கொழும்புத் துறைமுகத்தினுள் புகுந்து அங்கிருந்த மூன்று வணிகக் கப்பல்கள் மற்றும் மூன்று படையக் கப்பல்களுடன் கட்டடத் தொகுதி மேல் தாக்குதல் நடத்துவதே இலக்காகும். இதற்காக 9 கடற்கரும்புலிகள் உயிராயுதங்களாகச் சென்றனர். இவர்களில் நீரடி நீச்சல் கரும்புலிகளான 6 பேர் முற்கொண்டு செல்லப்பட்டு குறிக்கப்பட்ட இடத்தில் மாலை 9:30 மணியளவில் இறக்கப்படுவர். முதலில், சாமம் 12:00 மணிக்கு, துறைமுக வாயிலில் முதலாவதாக நின்றிருந்த எரிபொருள் தாங்கியிலும் அதிலிருந்து 700 மீட்டர் தொலைவில் நின்றிருந்த இரு கொள்கலன் காவிகளிலும் நீரடி நேரக்கணிப்புக் குண்டுகளைப் பொருத்திய மேஜர் பொய்யாமொழி, மேஜர் மீனக்கொடியோன், கப்டன் விக்கி ஆகியோர் பின்வாங்கி ஏற்கனவே தயார் நிலையில் நிற்கும் படகில் ஏறிட வேண்டும். எஞ்சிய மூவரான மேஜர் தென்னமுதன், கப்டன் சுபாஸ், கப்டன் மதனி ஆகியோர் 2700 மீட்டர் தொலைவிலிருந்த கடற்படையின் வலுவான 6 கப்பல்களில் மூன்றிற்கு நீரடிக் குண்டுகளைப் பொருத்தி சாமம் 1:30 மணிக்குத் தம்மோடு சேர்த்து வெடித்திட வேண்டும். இவற்றோடு மற்றைய மூன்றுமாக ஆறு கப்பல்களும் வெடித்துச் சிதறும். பின்னர் 5:45 மணியளவில் உட்புகும் படகிலிருந்து உந்துகணை பிலிறுந்தும் கைக்குண்டுகள் (RPG) 65ஐ ஏவியும் ஏனைய கனவகை இயந்திரச் சுடுகலன்களால் சுட்டும் அங்குள்ள கப்பல்கள் மற்றும் துறைமுகக் கட்டடத் தொகுதி மீது தாக்குதல் நடத்தி இறுதிவரை சமராடி அழிக்க வேண்டும். இதுவே தாக்குதல் திட்டமாகும். ஆனால் சாமம் 10 மணிக்கு கடலில் இறக்கப்பட்டோர் வைகறை 6 மணியாகியும் இயற்கைத் தயவின்மையால் போய்ச்சேர இயலவில்லை. ஆகையால் கடற்படைப் படகுகள் இவர்களைக் கண்டுகொண்டதாலோ என்னமோ இவர்கள் தம்மைத் தாமே குண்டுவைத்து அழித்துக்கொண்டனர். சமநேரத்தில் 5:45 மணிக்கு உட்புகுந்த 'கண்ணன்' என்ற கலப்பெயரைக் கொண்ட படகிலிருந்த நடவடிக்கைக் கட்டளையாளர் லெப். கேணல் பிரதாபன், துணைக் கட்டளையாளர் மேஜர் ரதன், ஓட்டி மேஜர் வளநாடன் ஆகிய மூன்று கடற்கரும்புலிகளுமாக அங்கிருந்த கட்டடத் தொகுதி மற்றும் நீரடி நீச்சல் கரும்புலிகள் இலக்கு வைத்த கப்பல்கள் மீது தாக்குதல் நடத்திக்கொண்டிருந்த போது வழிமறித்த கடற்படையோடு வெடித்த மோதலில் படகை அழித்து வீரச்சாவடைந்தனர், கடற்கரும்புலிகள். இந்த படகு கொழும்பு முகத்துவாரதிலிருந்து வந்திருக்கலாம் என்று தாம் ஐயுறுவதாக கடற்படையினர் தெரிவித்தனர். இத்தாக்குதல் தொடர்பாக புலிகள் உடனடியாக வெளியிட்ட ஊடக வெளியீடு தவறானது என அவர்கள் பின்னாளில் வெளியிட்ட 'உயிராயுதம் பாகம் - 5' இல் மறைமுகமாக ஏற்றுக்கொண்டனர். மேலதிகத் தகவல்: இச்சமரில் 9 கடற்கரும்புலிகள் "வீரச்சாவடைந்தனர்" என விடுதலைப்புலிகள் அறிவிருந்தனர். ஆனால் உயிராயுதம் என்ற கரும்புலிகளின் வரலாறு கூறும் நிகழ்படத்தில் 7 நீரடி நீச்சல் கரும்புலிகள் இத்தாக்குதலிற்கு அணியமாகுவது போலக் காட்டப்பட்டிருக்கிறது. அவர்களோடு இன்னும் 3 பேருமாக (படகில் சென்றோர்) மொத்தம் 10 பேர் கரையோரமாக கைகோர்த்தபடி நடமாடுவது போலவும் காட்டப்பட்டிருக்கிறது. ஆனால் தலைவரோடு நின்று படமெடுத்த போது 9 பேர் மட்டுமே நிற்கின்றனர். அவர்களிலும் ஒருவரின் முகம் மறைக்கப்பட்டிருக்கிறது. எனவே, இத்தாக்குதலிற்கு முதலில் அணியமான ஏழு நீரடி நீச்சல் கரும்புலிகளிலிருந்து தெரிந்தெடுக்கப்பட்ட ஆறு பேரில் ஒருவர் இறுதிக் கணத்தில் ஏதோ காரணத்தினால் அனுப்பப்படாமல் போக மாற்றாள் ஒருவர் (அந்த ஏழு பேரிலிருந்து முதலில் தெரிவாகமல் விடுப்பட்டவர்) தெரிவுசெய்யப்பட்டு அனுப்பப்பட்டிருக்கிறார் என்று அறுதியில்லாமல் ஊகிக்கிறேன். சேதப்பட்ட (சிறிய) கடற்கலங்கள்: 4 கடற்கலப் பெயர்: மெர்கஸ் மாகோ எ ஆர்மா (MERCS MAHO a.k.a. ARMA) கல வகை: எரிபொருள் தாங்கி இக்கப்பல் சேதமடைந்ததாக உதயனும் 1996ம் ஆண்டே செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. படிமப்புரவு: MarineTraffic.com கடற்கலப் பெயர்: சிங்க ஏஸ் (SINGA ACE) கல வகை: மகிழுந்து காவி இதற்குள்ளிருந்த ஏழு மகிழுந்துகள் சேதமடைந்திருந்தன என்று தாக்குதல் நடந்த அடுத்தநாளே உதயன் செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. படிமப்புரவு: FleetMon கடற்கலப் பெயர்: சீ லான்ட் என்டேவர் (SEA LAND ENDEAVOUR) கல வகை: கொள்கலன் காவி படிமப்புரவு: MarineTraffic.com கடற்கலப் பெயர்: நெட்லொய்ட் ஓப்ரிட்ஜோன் (NEDLOYED OBRIDJAN) கல வகை: கொள்கலன் காவி படிமப்புரவு: shumsw3.tripod.com சிறிலங்கா ஆயுதப்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: இல்லை காயப்பட்ட கடற்படையினர்: ஆகக்குறைந்தது ஒருவர் வீரச்சாவடைந்த கடற்கரும்புலிகள்: 9 தரநிலையுடனான பெயர்கள்: ‘நடவடிக்கைக் கட்டளையாளர்’ லெப். கேணல் ரதீஸ் எ பிரதாபன், ‘நடவடிக்கை துணைக் கட்டளையாளர்’ மேஜர் ரதன், ‘படகு ஓட்டி’ மேஜர் ரவாஸ் எ வளநாடன் கடற்கரும்புலி வகை: நீர்மேல் தாக்குதல் கரும்புலிகள் தரநிலையுடனான பெயர்கள்: மேஜர் பரன் எ தென்னமுதன், மேஜர் பொய்யாமொழி, மேஜர் ஜனார்த்தனன் எ மீனக்கொடியோன், கப்டன் சுபாஸ், கப்டன் விக்கி, கப்டன் மதனி கடற்கரும்புலி வகை: நீரடி நீச்சல் கரும்புலிகள் படிமங்கள்: நீரடி நீச்சல் கடற்கரும்புலிகளான மேஜர் பொய்யாமொழி மற்றும் மேஜர் ஜனார்த்தனன் எ மீனக்கொடியோன் (இ-வ) தேசியத் தலைவரோடு நின்று பொதிக்கின்றனர்(pose) சக்கை வண்டிகள், எண்ணிக்கை: 1 கல வகை: படகு கலப்பெயர்: கண்ணன் ஆதாரம்: உயிராயுதம் - 5 | உதயன்: 13 & 15/04/1996 | Island: 12/10/2022 (A forgotten episode: Black Sea Tiger raid on Colombo port) - நெட்லொய்ட் ஓப்ரிட்ஜோன், சீ லான்ட் என்டேவர் ஆகிய இரண்டு சேதமடைந்த கடற்கலங்களின் பெயர்களைப் பெற மட்டுமே இச் சிங்கள இனவாத நாளேட்டைப் பயன்படுத்தினேன். திகதி: சூன் 11, 1996 அடிபாட்டுக் காலம்:சாமம் நிகழ்வு இடம்: காரைநகர் கடற்படைத்தளம் நிகழ்வு விரிப்பு: காரைநகர் கடற்படைத்தளத்தினுள் ஊடுருவிய நீரடி நீச்சல் கரும்புலியாலும் மற்றொரு கடற்புலி நீரடி நீச்சல் போராளியாலும் குறித்த கடற்கலங்களின் கலக்கூட்டில் நீரடி வெடிகுண்டுகள் பொருத்தப்பட்ட பின்னர் கூடச்சென்ற கடற்புலிப் போராளியை பின்னுக்கு அனுப்பிவிட்டு பேபி டோறாவின் கலக்கூட்டில் வெடிகுண்டை பொருத்தி அதனையும் மற்றைய இரு கடற்கலங்களையும் தகர்த்து தானும் வீரச்சாவடைந்தார். மூழ்கடிக்கப்பட்ட கடற்கலங்கள்: 3 கடற்கல வகுப்புப் பெயர்கள்: சவட்டன்: 2 பேபி டோறா: 1 சிறிலங்காக் கடற்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: அறியில்லை காயப்பட்டோர்: அறியில்லை வீரச்சாவடைந்த கடற்கரும்புலிகள்: 1 ஆள் தரநிலையுடனான பெயர்கள்: மேஜர் இளங்கோ எ ஜீவறஞ்சன் கடற்கரும்புலி வகை: நீரடி நீச்சல் கரும்புலிகள் ஆதாரம்: உயிராயுதம் - 5 திகதி: சூன் 11, 1996 அடிபாட்டுக் காலம்: நண்பகல் ஏவுகணை ஏவப்பட்ட நேரம்: சரியாக நண்பகல் 11:50 மணிக்கு ஏவுகணை ஏவியவர்: பிரிகேடியர் கடாபி பாவிக்கப்பட்ட ஏவுகணை செலுத்தி: மேற்பரப்பிலிருந்து வான்நோக்கி ஏவும் ஏவுகணை - 14 (SAM-14) நிகழ்வு இடம்: சுண்டிக்குளம் கடற்பரப்பு நிகழ்வு விரிப்பு: எவ்வாறு நிகழ்ந்தது என்பது பற்றி என்னால் அறியமுடியவில்லை. கூடுதலாக சுற்றுக்காவல் வந்த டோறா மீது கடலில் ஏதேனும் ஒரு கட்டைப்படகிலிருந்து ஏவப்பட்டிருக்கலாம். இதில் டோறாவில் ஏவுகணை ஏவுண்ணியிருக்கிறது. அதனால் டோறாவிற்கு ஏற்பட்ட விளைவுகள் பற்றித் தெரியவில்லை. ஆனால் விளைவுகள் பாரதூரமாக இருந்திருக்கலாம் என்று மட்டும் ஊகிக்கூடியவாறு உள்ளது. சிங்களம் இப்படி ஒரு தாக்குதல் நடைபெற்றது பற்றி மூச்சுக்கூட விடவில்லை. இன்னும் சோகமாக, யாழ் குடாநாட்டில் நடைபெற்றுக்கொண்டிருந்த சிங்களப் படையெடுப்பிற்கு எதிரான உக்கிர எதிர்ச் சமர்களால் இக்காலத்தில் புலிகளின் நாளேடுகளோ இல்லை உதயனோ வெளிவரவில்லை. இதனால் இத்தாக்குதல் பற்றி எதுவும் அறியமுடியவில்லை. மூழ்கடிக்கப்பட்ட அ சேதப்பட்ட கடற்கலங்கள்: 1 கடற்கல வகுப்புப் பெயர்: டோறா (விதப்பான வகுப்புப் பெயர் தெரியவில்லை) சிறிலங்காக் கடற்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: அறியில்லை காயப்பட்டோர்: அறியில்லை வீரச்சாவடைந்த விடுதலைப்புலிகள்: இழப்பில்லை ஆதாரம்: இத்தாக்குதலின் போது பயன்படுத்தப்பட்டு இறுதிப்போரில் சிங்களவரால் கைப்பற்றப்பட்டு தற்போது இரத்மலானை 'சிறிலங்கா வான்படை அருங்காட்சியகத்தில்' வைக்கப்பட்டுள்ள ஏவுகணை செலுத்தியில் பொறிக்கப்பட்டிருந்த வரலாற்றுத் தகவல். திகதி: சூலை 19, 1996 அடிபாட்டுக் காலம்: சூலை 18 எற்பாடு - சூலை 21 (மணி அளவுகள் அறியில்லை) ரணவிரு மீது இடியன் மோதிய நேரம்: அண்ணளவாக எற்பாடு 5:45 மணி நிகழ்வு இடம்: முல்லைத்தீவுக் கடற்பரப்பு நிகழ்வு விரிப்பு: முல்லைத்தீவை முற்றாக மீட்பதற்காக தவிபு தொடுத்த 'ஓயாத அலைகள்- 1' நடவடிக்கையின் போது புலிகளால் பரம்பப்பட்ட (overrun) படைத்தளத்தை மீளக் கைப்பற்ற சிங்களப் படை 'மும்முனைத் தாக்குதல்' (சி. திரிவிட பகர) என்று பெயர் சூட்டப்பட்ட படைய நடவடிக்கையை சூலை 19, 1996 அன்று தொடங்கினர். இதன் மூலம் அளம்பில் கடற்கரையை உவர்க்கத்தலையாக்கி (Beach head) சிங்கள அதிரடிப்படையினைத் தரையிறக்கி முல்லைப் படைத்தளைத்தை மீளக் கைப்பற்றிவிடலாம் என்ற நப்பாசையோடு கடற்படை எடுத்த முயற்சிக்கு எதிராக கடற்புலிகள் புரிந்த கடற்சமர் இதுவாகும். முல்லைப் படைத்தளம் மீதான புலிகளின் நடவடிக்கையின் போது படைத்தளப் பாதுகாப்பிற்காகப் பகைவன் கடல் மூலம் தாக்குவானென ஏற்கனவே கடற்புலிகள் எதிர்பார்த்திருந்ததால் கடலில் வலுவான கடல்வேலியை அமைத்திருந்தனர். எதிர்பார்த்தபடியே கடற்படையுடன் முட்டினர். பெரும் கடற்சமர் வெடித்தது. ஒரு கட்டத்தில் கடற்படையின் ரணவிரு என்ற விரைவுச் சுடுகலப் படகு கடற்புலிகளால் இலக்குவைக்கப்பட்டது. அதனை மோதியிடிப்பதற்காக முதலில் மேஜர் கண்ணபிரானும் மேஜர் பார்த்தீபனும் ஓட்டிச்சென்ற வெள்ளை வகுப்பைச் சேர்ந்த "மங்கை" என்ற கலப்பெயர் கொண்ட இடியனானது மோதுவதற்கு இன்னும் ஐந்து மீட்டர்களே இருந்த பொழுது பகைவரின் வேட்டு மழையில் தீப்பிடித்து எரிந்து போனது. எனவே அடுத்த இடியனில் கவனமாக சென்ற மேஜர் செல்லப்பிள்ளையும் மேஜர் சுடரொளியும் வெற்றிகரமாக கப்பலின் கடையாரில் மோதியிடித்து வெடித்தனர். இயந்திரப் பகுதி நொறுங்கி கடலில் கப்பல் சுழலத் தொடங்கியது. அதை மறு புறத்தால் நெருங்கி இடிக்க முயன்ற மற்றொரு குண்டுப்படகு, வெள்ளை வகுப்பைச் சேர்ந்த "நளாயினி" என்ற கலப்பெயர் கொண்டது, இயந்திரக் கோளாறால் வெடிக்காமல் போனது. மேஜர் மிதுபாலன் அதை பின்வாங்குவது போலப் பாசாங்கு செய்து, பின்னுக்கு எடுத்து, வேகம் கூட்டி மீண்டும் மோதிய போதும் அது வெடிக்கவில்லை. நீர் புகத்தொடங்கிய குண்டுப்படகிலிருந்த கடற்கரும்புலிகளில் ஒருவரான கப்டன் இன்னிசை காயப்பட்ட போதிலும் குண்டுப்படகை சாதுரியமாக பின்னுக்குக் கொண்டுவந்தார் மற்றைய கடற்கரும்புலியான மேஜர் மிதுபாலன். பின்னர் இவர் இருவரும் கடற்புலிகளின் மாதவி என்ற கலப்பெயர் கொண்ட படகில் ஏற்றப்பட்டனர் (அக்கரும்புலிப்படகிற்கு என்ன நடந்தது என்பது தெரியவில்லை). பேந்து இன்னொரு இடியனில் சென்ற மேஜர் பதுமன் அக்கப்பலின் அணியத்தில் மோதியிடிக்க கப்பல் மூழ்கத் தொடங்கியது. எவ்வாறெயினும் இறுதியில் கடல்வேலி ஊடறுக்கப்பட்டு பகைவன் வெற்றிகரமாக அளம்பிலில் தரையிறக்கினான். ஆயினும் தரையிறங்கியோரில் 120 பேர் வரை கொல்லப்பட்டு அந்நடவடிக்கை தோல்வியில் முடிந்தது. சூலை 18 - சூலை 21 வரையான கடற்சமர்களில் லெப் கேணல் சுதர்சன் உட்பட 27 கடற்புலிப் போராளிகளும் வீரச்சாவடைந்தனர். மூழ்கடிக்கப்பட்ட கடற்கலங்கள்: 1 கடற்கல வகுப்புப் பெயர்: ரணவிரு கல வகை: விரைவுச் சுடுகலப் படகு சிறிலங்கா கடற்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: 35 பேர் காயப்பட்ட கடற்படையினர்: 1 வீரச்சாவடைந்த கடற்கரும்புலிகள்: 5 தரநிலையுடனான பெயர்கள்: மேஜர் கண்ணபிரான் எ அப்துல்லா, மேஜர் பார்த்தீபன் எ வேதமணி, மேஜர் பதுமன், மேஜர் செல்லப்பிள்ளை, மேஜர் சுடரொளி கடற்கரும்புலி வகை: நீர்மேல் தாக்குதல் கரும்புலிகள் சக்கை வண்டிகள், எண்ணிக்கை: 4 வகுப்புப் பெயர்: வெள்ளை வகுப்பு மற்றும் பெயர் அறியில்லா வகுப்பு ஆதாரம்: உதயன்: 21/07/1996 | உயிராயுதம்-5 திகதி: சூலை 23, 1996 அடிபாட்டுக் காலம்: பகல் பொழுது நிகழ்வு இடம்: முல்லைத்தீவுக் கடற்பரப்பு நிகழ்வு விரிப்பு: முல்லைப் படைத்தளத்தை மீட்க சிங்களப் படை நடாத்திக்கொண்டிருந்த 'மும்முனைத் தாக்குதல்' என்ற தரையிறக்க நடவடிக்கையின் போது தரையிறக்கிக் கொண்டிருந்த கலம் மீது விடுதலைப்புலிகள் ஏவிய கணையெக்கி எறிகணையொன்று வீழ்ந்து வெடித்ததில் கடற்கலத்தினுள் இருந்த 22 பேர் கொல்லப்பட்டதுடன், மேலும் 28 பேர் காயமுற்றனர். அத்துடன் கடற்கலமும் மெல்லிய சேதமடைந்தது. சேதப்பட்ட (மெல்லிய) கடற்கலங்கள்: 1 கடற்கல வகுப்புப் பெயர்: ரணகஜ கல வகை: தரையிறக்கக் கலன் சிறிலங்கா கடற்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: 22 பேர் காயப்பட்ட கடற்படையினர்: 28 வீரச்சாவடைந்த கடற்புலிகள்: இழப்பில்லை ஆதாரம்: உதயன்: 28/10/1996 திகதி: செப்டெம்பர் 9,1996 அடிபாட்டுக் காலம்: வைகறை நிகழ்வு இடம்: புல்மோட்டைத் துறைமுகம் நிகழ்வு விரிப்பு: புல்மோட்டையில் அமைந்துள்ள சிறிய துறைமுகம் ஒன்றிலிருந்து இல்மனைட்டு என்ற கனிமத்தை சப்பானுக்கு ஏற்றிப்பறிப்பதற்காக பிலிப்பைன்சு நாட்டைச் சேர்ந்த கப்பலொன்றில் ஏற்றிக்கொண்டிருந்தனர், சிறிலங்கா அரசாங்கத்தின் வேலைக்காரர். அப்போது கடற்புலிகளின் நீரடி நீச்சல் பிரிவைச் சேர்ந்த போராளிகளால் கப்பல் தகர்க்க முயற்சிக்கப்பட்டு மோசமான சேதத்திற்குள்ளானது. தாக்குதலிற்குள்ளான போது கப்பலில் 3,000 தொன் இல்மனைட்டு கனிமம் அடங்கிய மணல் ஏற்றப்பட்டிருந்தது. தமிழர்களின் கனிம வளம் களவு போவதைத் தடுக்கவே தாங்கள் இத்தாக்குதலை மேற்கொண்டதாகப் புலிகள் பேந்து அறிக்கைவிட்டிருந்தனர். வெளிநாட்டுக் கப்பல் ஊழியர்கள் யாருக்கும் இதில் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை. கப்பலில் இல்மனைட்டை ஏற்றிக்கொண்டிருந்த உள்ளூர் தொழிலார்கள் 9 பேரே காயமுற்றனர். அவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாகயிருந்தது. சேதமாக்கப்பட்ட கடற்கலங்கள்: 1 கடற்கல வகுப்புப் பெயர்: எம். வி. பிரின்சஸ் வேவ் (MV Princess Wave) கல வகை: சரக்குக் கப்பல் சிறிலங்கா ஊழியர் ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: இல்லை காயப்பட்டோர்: 10 வீரச்சாவடைந்த கடற்புலிகள்: இழப்பில்லை ஆதாரம்: உதயன்: 10/08/1996 | தமிழ்நெற்: 12/09/1997 (LTTE allays shipping fears) திகதி: செப்டெம்பர் 14, 1996 அடிபாட்டுக் காலம்: சாமம் நிகழ்வு இடம்: புல்மோட்டைக்கும் குச்சவெளிக்கும் இடைப்பட்ட கடற்பரப்பு நிகழ்வு விரிப்பு: திருமலையின் சூடைக்குடா (ஃவௌல் பொயின்ற்/Foul Point) பரப்பிலிருந்து வன்னி நோக்கிச் சென்றுகொண்டிருந்த கடற்புலிகளின் படகுகளை வழிமறித்து சிங்களக் கடற்படையினர் தொடுத்த வலிதாக்குதலிற்கு எதிரான முறியடிப்புக் கடற்சமர். கடற்புலிகள் தரப்பில் உயிரிழப்புகள் ஏதும் நிகழவில்லை. சேதமாக்கப்பட்ட (சிறிதளவு) கடற்கலங்கள்: 1 கடற்கல வகுப்புப் பெயர்: அறியில்லை கல வகை: படகு (விதப்பான கல வகை அறியில்லை) சிறிலங்காக் கடற்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: 2 காயப்பட்டோர்: 6 வீரச்சாவடைந்த கடற்புலிகள்: இழப்பில்லை ஆதாரம்: உதயன்: 16/09/1996 | குறித்த நாளின் மாவீரர் பட்டியல் திகதி: ஒக்டோபர் 21, 1996 அடிபாட்டுக் காலம்: காலை 6:00 மணி நிகழ்வு இடம்: பூனைத்தொடுவாயில் அமைந்திருந்த கடற்புலிகளின் கடற்கண்காணிப்பு நிலையம் நிகழ்வு விரிப்பு: வெற்றிலைக்கேணி மற்றும் கட்டைக்காடு கூட்டுப்படைத்தளத்திற்கு அச்சுறுத்தலாக பூனைத்தொடுவாயில் அமைந்திருந்த கடற்புலிகளின் கடற்கண்காணிப்பு நிலையத்தைத் தாக்கியழிப்பதற்காக கடலால் கொணரப்பட்ட சிறிலங்காத் கடற்படையின் சிறப்புப் படகுச் சதளம் (SBS) தரையிறக்கத் தாக்குதலொன்றை மேற்கொண்டது. வெற்றிகரமாக கரையை அண்மித்து தரையிறக்கப்பட விட்ட பின்னர், கடற்புலிகளின் தளத்திற்கு பாதுகாப்பாகயிருந்த கடற்புலிகளின் தரைத்தாக்குதல் படையணியான சூட்டி தரைத்தாக்குதல் அணியினர் (மகனார்) அவர்களுடன் வேகமாக மிண்டினர். தரையிறக்கத்திற்கு சூட்டாதரவாக சிங்கள வான்படையினரும் (எம்.ஐ. 24 முதற்கொண்டு) தரைப்படையினரின் சேணேவி எறிகணைவீச்சும் துணை நின்றனர். இச்சமரில், தரையிறக்கத்திற்கு படையினரைக் கொணர்ந்த ஒரு உட்கரைச் சுற்றுக்காவல் கலம் கடற்புலிகளின் உந்துகணை பிலிறுந்தும் கைக்குண்டுத் (ஆர்.பி.ஜி) தாக்குதலில் முற்றாக எரிந்து அழிக்கப்பட்டதுடன் மற்றொரு உட்கரை சுற்றுக்காவல் படகும் எம்.ஐ.17 போக்குவரவு உலங்குவானூர்தி ஒன்றும் சேதமடைந்தது. கொல்லப்பட்ட படையினரிடமிருந்து பல படைக்கலன்கள் கைப்பற்றப்பட்டன; இங்குதான் முதன் முதலாக ஓட்டோ டொங்கான் என்ற குறியீட்டுப்பெயருடைய தானியங்கி கைக்குண்டு செலுத்தி கைப்பற்றப்பட்டது. சிங்களக் கடற்படையினரின் இவ் அதிரடித் தாக்குதல் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டு வந்த படையினர் கட்டைக்காடு கடற்படைத்தளம் நோக்கி பின்வாங்கப்பட்டனர். இச்சமரில் தரைத்தாக்குதலணியின் 42 போராளிகள் பங்கெடுத்திருந்தனர். இத்தாக்குதலில் அப்போதைய சூட்டி தரைத்தாக்குதல் அணியின் கட்டளையாளர் களத்தை வழிநடாத்த அனைத்து செயற்பாடுகளையும் ஒருங்கிணைத்து கடற்புலிகளின் சிறப்புக் கட்டளையாளர் பிரிகேடியர் சூசை வழிநடாத்தியிருந்தார். இத்தாக்குதலில் சிங்கள வான்படையின் சில உலங்குவானூர்திகளும் சேதமடைந்திருந்தன. மூழ்கடிக்கப்பட்ட கடற்கலங்கள்: 1 கடற்கல வகுப்புப் பெயர்: வோட்டர் ஜெட் கல வகை: உட்கரைச் சுற்றுக்காவல் கலம் (40 அடி நீளம் கொண்டது) சேதப்பட்ட (சிறிய) கடற்கலங்கள்: 1 கடற்கல வகுப்புப் பெயர்: வோட்டர் ஜெட் கல வகை: உட்கரைச் சுற்றுக்காவல் கலம் சிறிலங்கா ஆயுதப்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: 9 பேர் கடற்படையினர்: 9 பேர் காயப்பட்டோர்: 44 பேர் கடற்படையினர்: 9 பேர் தரைப்படையினர்: 35 பேர் வீரச்சாவடைந்த கடற்புலிகள்: 3 தரநிலையுடனான பெயர்கள்: லெப். கெங்கன் எ கெங்காதரன், கப்டன் ஆனந்தபாபு, லெப்.கேணல் வாசன் எ தனராஜ் ஆதாரம்: உதயன்: 22 & 24 /10/1996 | உயிராயுதம் - 5 | கட்டுரை: பூனைத்தொடுவாய் தளத்தை தாக்க தரையிறங்கிய படையினர் மீதான முறியடிப்பு சமர் திகதி: ஒக்டோபர் 25, 1996 அடிபாட்டுக் காலம்: சாமம்: 11:00 மணியளவில் டோறா மீது இடியன் மோதிய நேரம்: அண்ணளவாக எற்பாடு 5:45 மணி நிகழ்வு இடம்: முல்லைத்தீவுக் கடற்பரப்பு நிகழ்வு விரிப்பு: பூனைத்தொடுவாய் நிகழ்விற்கு பகரடி நடத்தும் நோக்கோடு திருமலை துறைமுகத்தை பத்திற்கும் மேற்பட்ட படகுகளில் கடற்புலிகளின் கலத்தொகுதிகள் சில அண்மித்தன. அவ்வேளையில் இதைக் கண்ட சிங்களக் கடற்படையின் இரு டோறாக்கள் அவற்றைத் தடுத்து நிறுத்த நெருங்கிய போது அவற்றில் ஒன்றின் மீது கடற்கரும்புலித் தாக்குதல் நடைபெற்றது. இதில் ஒரு டோறா மூழ்கியது. அதன் கலக்கூட்டில் ஓட்டை விழுந்து அது நீரில் அமிழ்ந்துகொண்டிருந்த போது லெப். கேணல் நிரோஜன் (கடற்புலிகளின் பின்னாளைய துணைக் கட்டளையாளர்) தனது சண்டைப்படகை அதற்கு அருகில் நகர்த்தி அதன் மீது ஏறினார். பின்னர் அதிலிருந்த 20 மிமீ சுடுகலனை கழட்டிக்கொண்டிருக்கும் போது இதைக் கண்டுகொண்ட மற்றொரு டோறா இவர்களைத் தாக்க எத்தனிக்க டோறாவிற்கு அருகில் நின்றுகொண்டிருந்த கடற்புலிகளின் சண்டைப்படகு மறுபக்கத்தால் திரும்பி அந்த டோறாவைத் தாக்கியது. நிரோஜனும் சுடுகுழலை மட்டும் கழட்டியபடி நீriனுள் பாய்ந்து நீந்தி தனது படகில் ஏறினார். மற்றைய டோறா ஏனைய கடற்படைப் படகுகளின் உதவி கிடைக்கும் வரை கடற்புலிகளின் கலத்தொகுதியுடன் மிண்டிச் சமாளித்தது. வெற்றிகரமாய் இலக்கு அழிபட்டமையால் கடற்புலிகள் தம் தளம் நோக்கிப் பின்வாங்கினர். மூழ்கடிக்கப்பட்ட கடற்கலங்கள்: 1 கடற்கல வகுப்புப் பெயர்: டோறா (சாதாரணம்) தொடரெண்: P-457 சிறிலங்கா கடற்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: 12 பேர் காயப்பட்ட கடற்படையினர்: இல்லை வீரச்சாவடைந்த கடற்கரும்புலிகள்: 2 தரநிலையுடனான பெயர்கள்: மேஜர் நளினன் எ தில்லையன், கப்டன் ஜெயராஜ் எ பெரியதம்பி கடற்கரும்புலி வகை: நீர்மேல் தாக்குதல் கரும்புலிகள் சக்கை வண்டிகள், எண்ணிக்கை: 1 வகுப்புப் பெயர்: அறியில்லை ஆதாரம்: உதயன்: 27/10/1996 | உயிராயுதம் - 5 | கட்டுரை: லெப். கேணல் நிரோஜனின் வாழ்க்கை வரலாறு திகதி: நவம்பர் 11, 1996 நிகழ்வு இடம்: காரைநகர் கடற்பரப்பு நிகழ்வு விரிப்பு: காரைநகரிலிருந்து காங்கேசன் துறைமுகம் வரை சுற்றுக்காவலில் ஈடுபடும் டோறாக் கலம் இலக்கு வைக்கப்பட்டது. இதற்காக சக்கைவண்டி ஒன்று மன்னாரிலிருந்து புறப்பட்டு நெடுந்தீவு, காரைநகர் எனக் கடற்பயணம் செய்து, காரைநகரிற்கு அண்மையில் வைத்து துரத்திச்சென்று மோதியிடித்தது. இலக்குச் சற்று விலகி விட்டதால் டோறா சேதத்துடன் தள்ளாடியது. பின்னர் நடந்த மோதலில் மற்றொன்று கடற்புலிகளின் சூட்டில் சேதமடைந்தது. விடுதலைப்புலிகள் தரப்பில் கடற்கரும்புலிகள் தவிர வேறு யாரும் உயிரிழக்கவில்லை. சேதப்பட்ட கடற்கலங்கள்: 2 கடற்கல வகுப்புப் பெயர்: டோறா (விதப்பான வகுப்புப் பெயர் அறியில்லை) சிறிலங்காக் கடற்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: அறியில்லை காயப்பட்டோர்: 4 பேர் வீரச்சாவடைந்த கடற்கரும்புலிகள்: 2 பேர் தரநிலையுடனான பெயர்கள்: மேஜர் பாரதி, கப்டன் இன்னிசை கடற்கரும்புலி வகை: நீர் மேல் தாக்குதல் கரும்புலிகள் சக்கை வண்டிகள், எண்ணிக்கை: 1 வகுப்புப் பெயர்: அறியில்லை ஆதாரம்: உயிராயுதம் - 5 | உதயன்: 12/11/1996 | குறித்த நாளின் மாவீரர் பட்டியல் ******
- 27 replies
-
- ஈழம்
- கடற்கரும்புலிகள்
- கடற்படை
- கடற்புலி
-
Tagged with:
-
படைத்துறையின் கல்லூரிகள் மற்றும் நிறுவனங்களின் சீருடைகள்
இதனுள் தமிழீழ நடைமுறையரசின் படைத்துறையின் கல்லூரிகள் மற்றும் நிறுவனங்களின் சீருடைகள் பற்றிய தகவல் உள்ளது. இந்தத் திரியினைச் சொடுக்கி அதனைக் காணவும்.
-
கடற்புலிகளால் அழிக்கப்பட்ட, சேதப்பட்ட & கைப்பற்றப்பட்ட சிறிலங்காச் சார்புக் கடற்கலங்கள் | திரட்டு
ஆண்டு: 1995 திகதி: ஏப்ரல் 19, 1995 அடிபாட்டுக் காலம்: சாமம் நீரடிக் குண்டுகள் வெடித்த நேரம்: சாமம் ஒரு மணியளவில் - சில நிமிட வேறுபாட்டில் இரண்டும் வெடித்தன நிகழ்வு இடம்: திருகோணமலைத் துறைமுகம் நிகழ்வு விரிப்பு: திருகோணமலைத் துறைமுகத்தினுள் ஊடுருவிய நீரடி நீச்சல் கரும்புலிகளால் கரும்புலித்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. குறித்த கடற்கலங்களினோடு நீர்முழுகி இலக்கிய மிதந்து அமிழக்கூடிய கடற்கலத்தால் மோதியிடித்துக் கரும்புலித்தாக்குதல் நடத்தப்பட்டது என்று சிறிலங்காக் கடற்படையினர் தெரிவித்தனர். அக்கடற்கலத்தில் ஒரு பெயர் இருந்ததாகவும் அதிருந்த பகுதி தம்மால் மீட்கப்பட்டுள்ளதகாவும் அப்பெயரானது அக்கடற்கலத்தை கட்டிய வல்லுநரின் பெயர் என்றும் தெரிவித்தனர். ஆனால் கூடுதலாக அப்பெயரானது அக்கடற்கலத்தின் பெயராக இருக்கவே வாய்ப்புள்ளது என்று கருதுகிறேன். ஏனெனில் புலிகளின் இடியன்களில் கலப்பெயர் பொறிக்கப்பட்டிருப்பது வழமையே! மூழ்கடிக்கப்பட்ட கடற்கலங்கள்: 1 கடற்கலப் பெயர்கள்: ரணசுறு, சூரயா கல வகை: விரைவுச் சுடுகலப் படகு (FGB) கடற்கலப் படிமம்: படிமப்புரவு: தவிபு படிமப்புரவு: BBC படிமப்புரவு: BBC சிறிலங்காக் கடற்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: 11 காயப்பட்டோர்: 23 வீரச்சாவடைந்த கடற்கரும்புலிகள்: 4 பேர் தரநிலையுடனான பெயர்கள்: மேஜர் மதுசா, கப்டன் சாந்தா, மேஜர் தணிகைமாறன், மேஜர் கதிரவன் கடற்கரும்புலி வகை: நீரடி நீச்சல் கரும்புலிகள் படிமங்கள்: ஆதாரம்: உதயன்: 20/04/1995, 15/05/1995 திகதி: சூன் 04, 1995 நிகழ்வு இடம்: காங்கேசன் துறைமுகத்திற்கு மிக அண்மையான கடற்பரப்பு நிகழ்வு விரிப்பு: மனிதநேய அடிப்படையிலான பொருட்களையும் நோயாளர்களையும் ஏற்றிப்பறிக்கும் சேவையில் ஈடுபட்டிருந்தது 'சீ டான்சர்' என்ற கப்பல். இது 4ம் திகதி செஞ்சிலுவைச் சங்கக் கொடியுடன் பருத்தித்துறையிலிருந்து காங்கேசன் துறைமுகம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த போது துறைமுகத்திற்கு மிக அண்மையில் வைத்து கடற்புலிகளின் கடல் கண்ணிவெடியில் சிக்கிக்கொண்டது. வேறொரு கப்பலை இலக்கு வைத்து வைக்கப்பட்ட கண்ணிவெடியில் இது சிக்கியதால் வலுத்த சேதமடைந்து 5ம் திகதி முற்றாக மூழ்கி அமிழ்ந்தது. இச் சம்பவமானது போக்கூழானது என்று தமிழீழத் தேசியத் தலைவர் வருத்தத்தைத் தெரிவித்ததுடன் செஞ்சிலுவைச் சங்கத்தின் பாதுகாப்புடன் செல்லும் கடற்கலங்களுக்கு எந்தவொரு ஊறும் ஏற்படுத்தக்கூடாது என்ற சம இணக்கத்தை புலிகள் தொடர்ந்தும் தீவிரக் கவனத்துடன் கடைப்பிடிப்பர் என்று மீண்டும் உறுதிபடத் தெரிவித்திருந்தார். இந்தோனேசியாவைச் சேர்ந்த தனியார் நிறுவனமொன்றிற்குச் சொந்தமான இக்கப்பலானது 1995ம் ஆண்டு பெப்ரவரியில் செஞ்சிலுவைச் சங்கத்தினரால் வாடகைக்கு அமர்த்தப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மூழ்கடிக்கப்பட்ட கடற்கலங்கள்: 1 கடற்கல வகுப்புப் பெயர்: சீ டான்சர் (Sea Dancer) கல வகை: கப்பல் படிமம்: படிமப்புரவு: சிறிலங்காக் கடற்படை ரிசோல்வ் மரைன் சால்வேஜ் என்ற நிறுவனத்தின் பாரந்தூக்கி சங்காடம் (crane barge) ஒன்றின் மூலம் வெளியில் எடுக்கப்படும் காட்சி | படிமப்புரவு: சிறிலங்காக் கடற்படை சீ டான்சரின் கலக்கூட்டில் விழுந்த ஓட்டை | படிமப்புரவு: சிறிலங்காக் கடற்படை கப்பல் ஊழியர் ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: 1 ஆள் காயப்பட்டோர்: இல்லை வீரச்சாவடைந்த கடற்புலிகள்: இழப்பில்லை ஆதாரம்: உதயன்: 05/06/1995, 07/06/1995, 10/06/1995 திகதி: சூலை 16, 1995 அடிபாட்டுக் காலம்: சாமம் 1:15 மணி முதல் சுமார் நான்கு மணி நேரம் நீரடிக் குண்டுகள் வெடித்த நேரம்: சாமம் 1:30 மணி இடியன் பகைச் சூட்டால் வெடித்த நேரம்: வைகறை 5:30 மணி நிகழ்வு இடம்: காங்கேசன்துறை துறைமுகம் நிகழ்வு விரிப்பு: இது காங்கேசன்துறை துறைமுகத்தினுள் ஊடுருவிய நீரடி நீச்சல் கடற்புலிகளாலும் கடற்கரும்புலிகளாலும் மேற்கொள்ளப்பட்ட வலிதாக்குதல் ஆகும். இத்தாக்குதலிற்கு கடற்புலிகளின் தாக்குதல் கட்டளையாளர் லெப். கேணல் நரேஸ் தலைமையில் கடற்புலிகளின் நான்கு வோட்டர் ஜெட் வகுப்புச் சண்டை வண்டிகள் உட்பட பல சண்டைப்படகுகளோடு லெப். கேணல் குணேஸ், லெப். கேணல் நிமல், லெப். கேணல் இரும்பொறை, லெப். கேணல் சதீஸ், லெப். கேணல் நாவரசன், லெப். கேணல் மாதவி, மேஜர் விசும்பன் என பல போராளிகள் புறப்பட்டுச் சென்றனர். முதலில் உட்சென்ற நீரடி நீச்சல் கரும்புலிகள் எடித்தாரா கடற்கலனின் கலக்கூட்டில்(hull) நீரடி வெடிகுண்டுகளைப் பொருத்தி அதை தகர்த்தனர். பின்னர் அங்கிருந்த கடற்கலங்களின் மீது ஊடுருவி உட்சென்றிருந்த கடற்புலிகள் தாக்குதலைத் தொடுக்க கடற்புலிகளுடன் சிங்களக் கடற்படையினர் மிண்டினர். கடற்சமர் வெடித்த சிறிது நேரத்தில் லெப். கேணல் நரேஸ் வீரச்சாவடைய தாக்குதல் துணைக் கட்டளையாளர் லெப். கேணல் குணேஸ் கடற்சமரை பொறுப்பெடுத்து வழிநடத்தினார். தொடர்ந்த கடற்சமரில் கடற்படையின் யுனான் வகுப்பைச் சேர்ந்த தரையிறக்கக் கலத்தினை இலக்குவைத்து நோக்கி விரைந்த இடியனொன்று பகைவரின் வேட்டிற்கு இலக்காகி மூழ்கியது. அதில் சென்ற கடற்கரும்புலிகளில் ஒருவர் வீரச்சாவடைய மற்றையவர் உயிர்தப்பி 17ம் திகதி கரைமீண்டார். இக்கடற்சமரில் லெப். கேணல் மாதவி கட்டளை அதிகாரியாகச் சென்ற வோட்டர் ஜெட் படகு கலக்குழுவினரோடு மூழ்கடிக்கப்பட்டது. இதுவே கடற்புலிகள் தரப்பில் மூழ்கடிக்கப்பட்ட முதலாவது பெரிய சண்டை வண்டி ஆகும். மூழ்கடிக்கப்பட்ட கடற்கலங்கள்: 1 கடற்கலப் பெயர்: எடித்தாரா கல வகை: கண்காணிப்புக் கட்டளைக் கப்பல் படிமங்கள்: எடித்தாராவின் படிமம் மேலே 1990 ஆம் ஆண்டுப் பெட்டியில் கொடுத்துள்ளேன். 'எடித்தாராவின் அணியத்தில் தான் நீரடிக்குண்டு பொருத்தப்பட்டது. அதனால் அதன் அணியப் பக்க கலக்கூட்டில் ஓட்டை விழுந்து, நீர் புகுந்து, அது மூழ்கும் காட்சி | படிமப்புரவு: சிங்களக் கடற்படை' கடுமையாக சேதமடைந்துள்ள கப்பலின் அடிக்கட்டை (keel) | படிமப்புரவு: சிங்களக் கடற்படை' கீழே உள்ளது யுனான் வகுப்பைச் சேர்ந்த தரையிறக்கக் கலமாகும் 'படிமப்புரவு: navy.lk' சிறிலங்காக் கடற்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: 3 பேர் காயப்பட்டோர்: 10 பேர் வீரச்சாவடைந்த போராளிகள்: 16 பேர் கடற்புலிகள்: 10+2 பேர் தரநிலையுடனான பெயர்கள்: 'கடற்புலிகளின் தாக்குதல் கட்டளையாளர்' லெப். கேணல் சந்திரன் எ நரேஸ், 'கடற்புலிகளின் மகளீர் பிரிவுச் சிறப்புக் கட்டளையாளர்' & ‘சண்டைப்படகு கட்டளை அதிகாரி’ லெப். கேணல் மாதவி, கப்டன் வில்வன், கப்டன் கமலம், கப்டன் தாயகி, லெப். பூமதி, லெப். தவமலர், லெப். சோபிதா, லெப். சுபத்திரா, 2ம் லெப். அருள் மதி, 2ம் லெப். நதியரசி, 2ம் லெப். நித்தியா (இந்தப் 12 பேருள் இரு பெண் போராளிகள் போர்க்கைதிகளாகி சிங்களச் சிறையில் வன்புணர்ச்சி செய்யப்பட்டு வதைக்கப்பட்டனர்) கடற்கரும்புலிகள்: 3 பேர் தரநிலையுடனான பெயர்கள்: கப்டன் தமிழினி (இடியன் பகைவேட்டிற்கு இலக்காகி மூழ்கியது. இதில் அன்னார் வீரச்சாவடைய இவரோடு சென்ற மற்றைய இடியரான கப்டன் செவ்வானம் நீந்திக் கரைமீண்டார்.) கடற்கரும்புலி வகை: நீர்மேல் தாக்குதல் கரும்புலி தரநிலையுடனான பெயர்கள்: மேஜர் தங்கம், மேஜர் நியூட்டன் எ செந்தாளன் கடற்கரும்புலி வகை: நீரடி நீச்சல் கரும்புலிகள் படிமங்கள்: சக்கை வண்டிகள், எண்ணிக்கை: 1 வகுப்புப் பெயர்: அறியில்லை ஆதாரம்: உதயன்: 17 & 18 /07/1995 | எரிமலை: நவம்பர் 1995 | கட்டுரைகள்: 'எடித்தாரா மீதான இரண்டாவது கடற்கரும்புலித் தாக்குதல் வரலாறு', 'லெப். கேணல் சந்திரனின் வாழ்க்கை வரலாறு' திகதி: ஓகஸ்ட் 29, 1995 சாமம் நிகழ்வு இடம்: முல்லைத்தீவுக் கரையோரத்திலிருந்து ஏழு கடல்மைல் தொலைவுக் கடற்பரப்பு நிகழ்வு விரிப்பு: சுருக்கமாக, ஈபிடிபி என்ற தேச விரோதக் குழுவால் இயக்கப்பட்டு யாழ். நோக்கி கப்பல் ஊழியர்கள் உட்பட 120 பேருடன் (4 சிங்கள & 4 தமிழ் கப்பல் ஊழியர்கள், 63 ஆண்கள், 58 பெண்கள், 15 சிறுவர்) பயணம் செய்த 'எம்.வி. ஐரிஸ் மோனா' (MV Irish Mona) என்ற வலசைக் (ferry) கப்பல் முல்லைக் கடற்பரப்பில் கரையிலிருந்து 15மைல் தொலைவில் வைத்து கடற்புலிகளின் மகளீர் படையணிப் போராளிகளால் வைகறை 2:30 மணியளவில் தடுத்து நிறுத்தப்பட்டது. அதிலிருந்த அத்தனை பேரும் பாதுகாப்பாக கரை சேர்ப்பிக்கப்பட்ட பின்னர் அக்கப்பலானது சிங்களக் கடற்படையை ஈர்க்கும் ஒரு சூழ்ச்சிப் பொறியாக மாற்றப்பட்டடது. பின்னர் காணாமல் போன கப்பலைத் தேடி வந்த சிங்களக் கடற்படையினர் கப்பல் தனியாக நிற்பதை அறிந்து அதைச் சோதனை செய்ய நெருங்கிய போது கடற்கரை மணலில் தாட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்த தகரியால் (tank) விடுதலைப்புலிகள் சுட்டு முதலாவது டோறாவைத் தாட்டனர். முதல் டோறாவின் கதி அறிய நாடிய இரண்டாவது டோறாக்கும் அதே கதி. இரண்டையும் சுட்டுத் தாட்டவர் 'சூரன் கவச அணி'யின் கட்டளையாளர் சோ ஆவார். அதோடு வந்த ஜெயசாகர என்ற கட்டளைக் கப்பல் பிழைத்தோடியது. மூழ்கிக்கொண்டிருந்த கலமொன்று கடற்புலிகளின் மகளிர் பிரிவால் கயிறு கட்டி கரைக்கு இழுத்து வரப்பட்டு அதிலிருந்தும் மூழ்கிய மற்றையதிலிருந்தும் ஏராளமான படைக்கலன்களும் போர்த்தளவாடங்களும் கைப்பற்றப்பட்டன. பின்னர் கரைக்குக் கொண்டுவரப்பட்ட சுப்பர் டோறா மக்கள் பார்வைக்கென வைக்கப்பட்டது. மேற்கொண்டு தேடுதல் வேட்டையை நிறுத்திப் பின்வாங்கிக்கொண்டனர், சிங்களக் கடற்படையினர். பின்னர், தம் நோக்கம் நிறைவேறியதும் சில நாட்கள் கழித்து கப்பலையும் பயணிகளையும் பாதுகாப்பாக விடுதலை செய்தனர், புலிகள். ஆனாலும் கப்பலின் ஊழியர்கள் (கலக்குழு) தொடர்ந்து தடுப்பிலிருந்தனர். இவர்களில் இரு தமிழர்கள் 27/04/1997 அன்றும் இரு சிங்களவர் 25/10/1998 அன்றும் விடுதலை செய்யப்பட்டு செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டனர். ஏனைய இரு தமிழரும் சிங்களவரும் பின்னர் விடுதலை செய்யப்பட்டனர். அவர்களில் இக்கப்பலின் தண்டையல் கே.பி. விஜயக்கோன் மனிதநேய அடிப்படையில் 10/04/2000 அன்று விடுதலை செய்யப்பட்டார். படிமங்கள்: எம்.வி. ஐரிஸ் மோனா | படிமப்புரவு: தவிபு ஜோன் பொஸ்கோ பாடசாலையில் தங்க வைக்கப்பட்டிருந்த எம்.வி. ஐரிஸ் மோனாவில் பயணம் செய்த பயணிகள் | படிமப்புரவு: உதயன் மூழ்கடிக்கப்பட்ட கடற்கலங்கள்: 2 கடற்கல வகுப்புப் பெயர்: சுப்பர் டோறா விதம்-1 & பேபி டோறா கல வகை: விரைவுத் தாக்குதல் கலம் சிறிலங்கா கடற்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: 20 பேர் முதலில் அடி வேண்டிய டோறாவில்: 12 பேர் இரண்டாவதாக அடி வேண்டிய டோறாவில்: 8 பேர் காயப்பட்ட கடற்படையினர்: இல்லை வீரச்சாவடைந்த போராளிகள்: இழப்பில்லை ஆதாரம்: உதயன்: 30/08/1995, 01, 02 & 07/09/1995, 27/04/1997, 11/04/2000 | எரிமலை: ஒக்டோபர் 1995 | தமிழ்நெற்: 19/10/1997 (Tigers sink Sri Lankan gunboat) | களத்தில்: 04/10/1995 திகதி: செப்டெம்பர் 3, 1995 அடிபாட்டுக் காலம்: மாலை 9:30 மணி முதல் சாமம் வரை டோறா மீது இடியன் மோதிய நேரம்: மாலை 10 மணிக்குக் கிட்டவாக நிகழ்வு இடம்: புல்மோட்டைக் கடற்பரப்பு நிகழ்வு விரிப்பு: ஐரிஸ் மோனாவில் வெடிகுண்டுகள் ஏதேனும் பொருத்தப்பட்டுள்ளனவோ என்று ஐயுற்று, அதனை நெருங்க அஞ்சியதால் தொலைவில் நின்றவாறு நோட்டமிட்டுக்கொண்டிருந்தனர், வல்வளைக்கப்பட்ட தமிழர் தலைநகரிலிருந்து புறப்பட்ட சிங்களக் கடற்படையினர். இதனைக் கவனித்த கடற்புலிகள் அவர்களை குச்சவெளிக் கடற்பரப்பில் வலித்து, சமராடி, தந்திரப் பின்வாங்கல் மூலம் 20 நிமிட ஓட்டத்தில் குச்சவெளியியிலிருந்து புல்மோட்டையை அடைந்தனர். பின்னர் காரிருட்டைப் பாவித்து புல்மோட்டைக் கடற்பரப்பில் வைத்து அவர்களைத் தாக்கியழித்தனர், புல்மோட்டையிலிருந்தே புறப்பட்ட கடற்கரும்புலிகள். இத்தகவலை அப்போதைய சந்திரிக்கா அம்மையாரின் அரசாங்கம் மூடி மறைத்தது. கடற்கலம் மூழ்கடிக்கப்பட்ட பின்னர் அக்கடற்பரப்பில் எம்.ஐ. 24 உலங்குவானூர்தி ஒன்று வந்த பல நிமிடங்கள் வட்டமடித்து விட்டுச் சென்றதைக் கடற்புலிகள் கண்டனர். மூழ்கடிக்கப்பட்ட கடற்கலங்கள்: 1 கடற்கல வகுப்புப் பெயர்: சுப்பர் டோறா கல வகை: விரைவுத் தாக்குதல் கலம் சிறிலங்கா கடற்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: 10 பேர் காயப்பட்ட கடற்படையினர்: இல்லை வீரச்சாவடைந்த போராளிகள்: 4 பேர் கடற்கரும்புலிகள்: 2 பேர் தரநிலையுடனான பெயர்கள்: கப்டன் கண்ணாளன், மேஜர் நகுலன் எ தோமஸ் கடற்கரும்புலி வகை: நீர்மேல் தாக்குதல் கரும்புலி கடற்புலிகள்: 2 பேர் தரநிலையுடனான பெயர்கள்: கப்டன் செங்கண்ணன், கப்டன் பூவேந்தன் சக்கை வண்டிகள், எண்ணிக்கை: 1 வகுப்புப் பெயர்: அறியில்லை படிமம்: மேஜர்களான நகுலனும் கண்ணாளனும் கரையிலுள்ள இடியனில் அமர்ந்திருக்கின்றனர். | படிமப்புரவு: தவிபு மேஜர்களான நகுலனும் கண்ணாளனும் கடலினில் ஓடும் இடியனில் அமர்ந்திருக்கின்றனர். | படிமப்புரவு: தவிபு ஆதாரம்: உதயன்: 05/09/1995 | எரிமலை: ஒக்டோபர் 1995 திகதி: ஒக்டோபர் 11, 1995 அடிபாட்டுக் காலம்: வைகறை அடிபாட்டுக் காலம்: மாலை 6 மணி தொடங்கி 6 மணி நேரம் தொடர்ந்தது நிகழ்வு இடம்: காங்கேசன் துறைமுகம் நிகழ்வு விரிப்பு: குறித்த நாள் சாமத்தில் கடலினுள் இறங்கி வைகறைப் பொழுதில் இலக்கினை அண்மித்த கடற்கரும்புலி கடல் வேவுப்புலிகளின் துணையுடன் கலத்தின் மீது கரும்புலித் தாக்குதலை மேற்கொண்டார். இதில் கலம் சேதமடைந்தது. ஆனால் சேத விரிப்புகளை சிங்களக் கடற்படை வெளியிட மறுத்துவிட்டது. சேதப்பட்ட கடற்கலங்கள்: 1 கடற்கலப் பெயர்: அறியில்லை கல வகை: தரையிறக்கக் கலம் (விதப்பான வகை அறியில்லை) சிறிலங்கா கடற்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: அறியில்லை காயப்பட்டோர்: அறியில்லை வீரச்சாவடைந்த போராளிகள்: 3 பேர் கடற்கரும்புலிகள்: 1 ஆள் தரநிலையுடனான பெயர்கள்: கப்டன் அருள்ஜோதி கடற்கரும்புலி வகை: நீரடி நீச்சல் கரும்புலி கடற்புலிகள்: 2 பேர் தரநிலையுடனான பெயர்கள்: 'விசேட கடல்வேவுப் பிரிவின்' கட்டளையாளர்' மேஜர் மோகன், கடல் வேவுப்புலி கப்டன் ராம்குமார் ஆதாரம்: உதயன்: 12/09/1995 | ஒளிவீச்சு: செப்டெம்பர் 1995 திகதி: செப்டெம்பர் 20, 1995 அடிபாட்டுக் காலம்: எற்பாடு 5 மணி முதல் மாலை 10 மணி வரை டோறா மீது இடியன் மோதிய நேரம்: எற்பாடு 5:30 மணி வழங்கல் கப்பல் மீது இடியன் மோதிய நேரம்: எற்பாடு 5:40 மணி நிகழ்வு இடம்: காங்கேசன் கடற்பரப்பு, மாதகல் கடற்பரப்பு நிகழ்வு விரிப்பு: காங்கேசன் துறைமுகத்தினுள் ஊடுருவி நுழைந்த கடற்புலிகளும் கடற்கரும்புலிகளும் அங்கிருந்த டோறாக் கலங்களுடனும் விரைவுச் சுடுகலப் படகு ஒன்றுடனும் மிண்டின. கடற்சமர் தொடங்கி அரை மணிநேரத்தில் மும்முனைத் தாக்குதல் எல்லைக்குள் நின்ற டோறா மீது மேற்கொள்ளப்பட்ட கரும்புலித் தாக்குதலில் டோறா தீப்பிடித்தெரிந்து 10 மணியளவில் மூழ்கியது. சமநேரத்தில் துறைமுகத்தில் படையேற்பாடுகளை அவசரமாக இறக்கிவிட்டு காரைநகர் நோக்கி விரைந்த 'லங்கா முடித' வை துரத்திச் சென்ற கடற்புலிகள் மாதகல் கடலில் வைத்து கரும்புலித் தாக்குதல் மேற்கொண்டனர். அதில் கப்பல் பாரிய சேதமடைந்தது. பின்னர் தமிழரின் தாக்குதலைச் சமாளிக்க ஏலாமல் சிங்களவரின் ஏனைய கடற்கலங்கள் பின்வாங்கி ஓடின. மூழ்கடிக்கப்பட்ட கடற்கலங்கள்: 1 கடற்கல வகுப்புப் பெயர்: சுப்பர் டோறா கல வகை: விரைவுத் தாக்குதல் கலம் சேதப்பட்ட (பாரிய) கடற்கலங்கள்: 1 கடற்கல வகுப்புப் பெயர்: லங்கா முடித கல வகை: வழங்கல் கப்பல் படிமப்புரவு: FleetMon சிறிலங்கா கடற்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: 12 பேர் காயப்பட்ட கடற்படையினர்: இல்லை வீரச்சாவடைந்த கடற்கரும்புலிகள்: 4 தரநிலையுடனான பெயர்கள்: முன்னாள் 'முல்லை மாவட்ட கடற்புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர்' மேஜர் அந்தமான் எ அன்பு, மேஜர் கீர்த்தி, கப்டன் செவ்வானம், கப்டன் சிவன் எ சிவா கடற்கரும்புலி வகை: நீர்மேல் தாக்குதல் கரும்புலிகள் சக்கை வண்டிகள், எண்ணிக்கை: 2 வகுப்புப் பெயர்: அறியில்லை ஆதாரம்: உதயன்: 22/09/1995 | எரிமலை: ஒக்டோபர் 1995 திகதி: ஒக்டோபர் 2, 1995 அடிபாட்டுக் காலம்: நண்பகல் அடிபாட்டுக் காலம்: மாலை 6 மணி தொடங்கி 6 மணி நேரம் தொடர்ந்தது நிகழ்வு இடம்: சுண்டிக்குளம் கடற்கரையிலிருந்து 15 கிமீ தொலைவில் நிகழ்வு விரிப்பு: புலிப்பாய்ச்சல் நடவடிக்கை முறியடிக்கப்பட்ட பின்னர் அதேபோன்று நடந்துகொண்டிருந்த இடிமுழக்கம் நடவடிக்கைக்கான வலுவூட்டத்திற்குத் தேவையான படையப்பொருட்களையும் ஆளணியினையும் திருமலையிலிருந்து காங்கேசன்துறை நோக்கி நகர்த்திக் கொண்டிருந்தனர், சிங்களப் படைதுறை தரப்பு. அதன் விதமாக திருகோணமலை துறைமுகத்திலிருந்து காங்கேசன்துறை துறைமுகம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த இரண்டு எந்திரமயப்பட்டவை தரையிறக்கக் கலங்கள் (LCM), இரண்டு விரைவுச் சுடுகலப் படகுகள், மற்றும் வேறு நான்கு கடற்கலங்கள் (ஆகக் குறைந்தது ஒரு சாதாரண டோறாவும் ஒரு சால்டாக்கும்) ஆகியன அடங்கிய தொடரணியினை வழிமறித்துத் தாக்க தலைவரின் பணிப்பிற்கமைய கடற்புலிகள் முடிவு செய்தனர். தாக்குதலிற்கான வேவு நடவடிக்கையில் ஈடுபட்ட கட்டளையாளர் பிருந்தன் மாஸ்டர் தலைமையிலான போராளிகள் வழங்கிய தகவலின் அடிப்படையில் கடற்புலிகளின் படகுகள் முள்ளிவாய்க்காலில் வந்து காத்திருந்தன. அக்காலகட்டத்தில் முல்லைத்தீவிலிருந்து வெற்றிலைக்கேணி வரையிலான கடற்பரப்பில் கரையிலிருந்து குறைந்த தொலைவிலும் அதன் பின்னர் உயர்க்கடலிலும் செல்வது சிங்களக் கடற்படையின் வாடிக்கையாக இருந்தது. அதனால் முல்லைத்தீவு சுண்டிக்குளக் கடற்பரப்பில் வைத்து சிங்களத் தொடரணியைத் தாக்குவதென்று முடிவெடுக்கப்பட்டது. இத்தாக்குதலின் போது புதிய உத்தியாக கடற்புலிகளின் சண்டைவண்டிகளால் தாக்கப்பட்டு நிப்பாட்டப்படும் சிங்களக் கடற்கலத்தை சுலோஜன் நீரடி நீச்சல் பிரிவுப் போராளிகள் நீரடி நேரக்கணிப்புக் குண்டு பொருத்தி தகர்க்கப்படுவதும் சேர்க்கப்பட்டிருந்தது. அத்துடன் இது மும்முனைத் தாக்குதலாகவும் வடிவமைக்கப்பட்டிருந்தது. திட்டத்திற்கு அமைவாக லெப்.கேணல் தன்ராஜ், லெப் கேணல் இளநிலா மற்றும் கடற்புலிகளின் அப்போதைய துணைக் கட்டளையாளர் பிருந்தன் மாஸ்ரர் ஆகியோரைக் கட்டளை அதிகாரிகளாகக் கொண்ட சண்டைப்படகுகளும் (எண்ணிக்கை அறியில்லை) கடற்கரும்புலிகளான மேஜர் அருமை தலைமையில் கப்டன் தணிகை ஆகியோர் ஒரு வெடிப்படகிலென முள்ளிவாய்க்காலில் வந்து காத்திருந்தனர். தொடரணியில் வந்த ரணகஜவிற்கு ஏமமாக வந்த டோறாப் படகுகள் மீது லெப் கேணல் இளநிலா தலைமையிலான சண்டைப்படகுகள் தாக்குதலை மேற்கொண்டனர். அதே சமயம் லெப் கேணல் தன்ராஐ் மற்றும் பிருந்தன் மாஸ்ரரின் சண்டைப்படகுகள் ரணகஜவைக் குறிவைத்து தாக்கி அதைனோக்கி வழியமைத்துக் கொடுக்க கடற்கரும்புலிகள் தரையிறங்குக்கலம் மீது அதன் கடையாரில் மோதி வெடித்தனர். ஆயினும் கப்பல் தப்பியது. திடீரென கடலில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையால நீரடி நீச்சல் போராளிகள் செல்ல இயலாமல் போனது. தொடர்ந்த கடற்சமரில் டோறா ஒன்றும் சேதமாக்கப்பட்டது. சேதப்பட்ட (சிறியளவு) கடற்கலங்கள்: 2 கடற்கல வகுப்புப் பெயர்: டோறா (விதம் அறியில்லை) கல வகை: விரைவுத் தாக்குதல் கலம் கடற்கல வகுப்புப் பெயர்: ரணகஜ கல வகை: எந்திரமயப்பட்டவை தரையிறக்கக் கலம் படிமம்: இது ரணகஜ. பப்பதாவும் இதனை ஒத்த தோற்றத்தையே கொண்டது | படிமப்புரவு: navy.lk சிறிலங்கா ஆயுதப்படை ஆளணியினரில், கொல்லப்பட்ட கடற்படையினர்: 18 பேர் காயப்பட்டோர்: 54 பேர் தரைப்படையினர்: 40 பேர் கடற்படையினர்: 14 பேர் வீரச்சாவடைந்த போராளிகள்: 5 பேர் கடற்கரும்புலிகள்: 2 பேர் தரநிலையுடனான பெயர்கள்: மேஜர் அருமை, கப்டன் தணிகை கடற்கரும்புலி வகை: நீர்மேல் தாக்குதல் கரும்புலிகள் கடற்புலிகள்: 3 பேர் தரநிலையுடனான பெயர்கள்: 'நளாயினி சிறப்புக் கடற்தாக்குதல் அணி' கட்டளையாளர் லெப்.கேணல் இளநிலா, கப்டன் சுஜீவன், லெப். அமுதன் சக்கை வண்டிகள், எண்ணிக்கை: 1 வகுப்புப் பெயர்: அறியில்லை ஆதாரம்: உதயன்: 04, 05/10/1995 | கட்டுரை: ரணகஜ உள்ளடங்கிய வழங்கல் தொடரணி மீதான கடற்புலிகளின் தாக்குதல் | எரிமலை: நவம்பர் 1995 திகதி: ஒக்டோபர் 17, 1995 அடிபாட்டுக் காலம்: சாமம் நிகழ்வு இடம்: திருகோணமலைத் துறைமுகம் நிகழ்வு விரிப்பு: வல்வளைக்கப்பட்டுள்ள வடக்கு-கிழக்கில் உள்ள சிறிலங்காப் படையினருக்கு படையேற்பாடுகள் மற்றும் இன்றியமையாப் பொருட்களை வழங்கும் சேவையில் ஈடுபட்டிருந்த கப்பல் திருமலைத் துறைமுகத்தில் தரித்து நின்ற போது நீரடி நீச்சல் கரும்புலிகள் ஊடுருவி நீரடிக்குண்டு பொருத்தி மூழ்கடித்தனர். மூழ்கடிக்கப்பட்ட கடற்கலங்கள்: 1 கடற்கல வகுப்புப் பெயர்: இல்லை கடற்கலத் தொடரெண்: ஏ 512 கல வகை: வழங்கல் கப்பல் சிறிலங்கா ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: 9 பேர் கடற்படையினர்: 2 பேர் கப்பல் ஊழியர் (சிங்களவர்) 2 பேர் காயப்பட்ட கடற்படையினர்: 9 பேர் வீரச்சாவடைந்த கடற்கரும்புலிகள்: 3 பேர் தரநிலையுடனான பெயர்கள்: மேஜர் சிவசுந்தர், கப்டன் ரூபன், கப்டன் சிவகாமி கடற்கரும்புலி வகை: நீரடி நீச்சல் கரும்புலிகள் ஆதாரம்: உதயன்: 18/10/1995 ******
- 27 replies
-
- ஈழம்
- கடற்கரும்புலிகள்
- கடற்படை
- கடற்புலி
-
Tagged with:
-
கடற்புலிகளால் அழிக்கப்பட்ட, சேதப்பட்ட & கைப்பற்றப்பட்ட சிறிலங்காச் சார்புக் கடற்கலங்கள் | திரட்டு
ஆண்டு: 1994 திகதி: ஓகஸ்ட் 14, 1994 அடிபாட்டுக் காலம்: சாமம் 1:45 நிகழ்வு இடம்: அராலிக் கடற்பரப்பு நிகழ்வு விரிப்பு: அராலிக் கடற்பரப்பில் சுற்றுக்காவல் வந்த சிறிலங்காக் கடற்படையினர் மீது அதிரடித் தாக்குதல் நடாத்தப்பட்டது. படகு கைப்பற்றப்பட்டு அதிலிருந்த படையினனின் சடலமும் பெருமளவு படைக்கலன்களும் கைப்பற்றப்பட்ட பின்னர் படகு மூழ்கடிக்கப்பட்டது. மூழ்கடிக்கப்பட்ட கடற்கலங்கள்: 1 கடற்கல வகுப்புப் பெயர்: கொழும்புச் சவட்டன் கலப் படிமம்: இதையொத்த கலமே அன்று மூழ்கடிக்கப்பட்டது. படிமப்புரவு: navypedia.org சிறிலங்காக் கடற்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: 3 காயப்பட்டோர்: பலர் வீரச்சாவடைந்த கடற்புலிகள்: இழப்பில்லை ஆதாரம்: உதயன்: 14 & 15/08/1994 | navypedia.org (http://www.navypedia.org/ships/sri_lanka/srl_cf_p201.htm) திகதி: ஓகஸ்ட் 16, 1994 | வைகறை 12:45 மணி நிகழ்வு இடம்: காங்கேசன்துறை துறைமுகம் நிகழ்வு விரிப்பு: தரித்து நின்ற கண்காணிப்புக் கையாற்றிக் கப்பல் மீது நீரடி நீச்சல் கரும்புலி மேற்கொண்ட வலிதாக்குதல் இதுவாகும். கரும்புலித் தாக்குதலால் கப்பலில் பற்றிய தீ அருகில் நின்றிருந்த இழுவைப்படகிலும் மூண்டதால் அதுவும் எரிந்து மூழ்கியது. மூழ்கடிக்கப்பட்ட கடற்கலங்கள்: 2 கலப் பெயர்: தீரா கல வகை: இழுவைப்படகு (Tugboat) தொடரிலக்கம்: A 516 கல வகை: கண்காணிப்புக் கையாற்றி (Surveillance Tender) கடற்கலப் படிமம்: படிமப்புரவு: தவிபு சிறிலங்காக் கடற்படை ஆளணியினரில், காணாமல்போனோர்: 2 பேர் காயப்பட்டோர்: அறியில்லை வீரச்சாவடைந்த கடற்கரும்புலிகள்: 1 தரநிலையுடனான பெயர்: கப்டன் அங்கயற்கண்ணி கடற்கரும்புலி வகை: நீரடி நீச்சல் கரும்புலி ஆதாரம்: ஈழநாதம்: 23/08/1994 | உதயன்: 17/08/1994 திகதி: செப்டெம்பர் 19, 1994 அடிபாட்டுக் காலம்: சாமம் 11:25 மணி முதல் 12:30 மணி வரை இடியன்கள் மோதிய நேரம்: சாமம் 11:25 மணி (இடியன்கள் மோதிய பின்னரே கடற்சமர் தொடங்கியது) கப்பல் சாமம் 12:30 மணிக்கு மூழ்கடிக்கப்பட்டது. நிகழ்வு இடம்: அரிப்புகுடாக் கடற்பரப்பு நிகழ்வு விரிப்பு: மன்னாரிலுள்ள கடற்புலிகள் தளத்திலிருந்து 5 கிமீ தொலைவிலுள்ள அரிப்புக்குடா கடற்பரப்பில் 31 மணித்தியாலங்களாக தரிபெற்றிருந்த கப்பல் மீது கடற்கரும்புலிகளும் கடற்புலிகளுமாக மேற்கொண்ட மேற்கொண்ட வலிதாக்குதல் இதுவாகும். முதலில் நீரடியால் நீந்திச் சென்ற கடற்புலிகளின் சுலோஜன் நீரடி நீச்சல் பிரிவினர் கப்பலின் சுழலியைச் சேதப்படுத்தினர். இதனை நீரடி நீச்சல் அணியைச் சேர்ந்த மேஐர் இன்பநிலா உட்பட கடற்கரும்புலி மேஐர் பரன் தலைமையிலான அணி வெற்றிகரமாக செய்து முடித்தது. இதனால் கப்பலின் நகர்திறன் பாதித்தது. பேந்து, விரைந்து சென்ற முதலாவது இடியன் கடையாரில் மோதியிடித்து வெடித்த பின்னர் கடற்படையினர் கன்னாபின்னா என்று சுடத் தொடங்கினர். அவ்வேளையில் இரண்டாவது இடியனும் அடுத்து மோதியிடித்தது. தொடர்ந்து கடற்சமர் வெடித்தது. தாக்குதல் கட்டளையாளர் லெப். கேணல் டேவிட் தலைமையில் லெப். கேணல் நிமல், லெப். கேணல் சலீம், கடற்கரும்புலி லெப். கேணல் ரதீஸ், மேஜர் கண்ணன், மேஜர் சிங்கன், மேஜர் கனியன், கடற்கரும்புலி மேஜர் சுடரொளி, கடற்கரும்புலி மேஜர் வினோதா, கடற்கரும்புலி கப்டன் தணிகை, கப்டன் தாயகி, கப்டன் வில்வம் ஆகியோர் தமது சண்டைப்படகுகளால் கப்பலைத் தாக்கினர். எனினும் ஏற்கனவே இடியனின் மோதலால் ஏற்பட்ட ஓட்டையின் வழியே புகுந்த நீரால் கப்பல் மூழ்கத் தொடங்கியது. தாக்குதலுக்கு உள்ளான ஒரு மணிநேரத்திலேயே கப்பல் மூழ்கிவிட்டது. சிறிதளவு நவீனப் படைக்கலன்களும் பல சி.க. சார் ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. ஒக்க நடவடிக்கையினையும் தேசியத் தலைவர் அவர்கள் நேரடியாக நெறிப்படுத்த, சிறப்புக் கட்டளையாளர் பிரிகேடியர் சூசை, கட்டளையாளர் லெப். கேணல் கங்கையமரன் மற்றும் துணைக் கட்டளையாளர் பிருந்தன் மாஸ்ரர் ஆகியோர் வழிநடாத்தியிருந்தனர். மூழ்கடிக்கப்பட்ட கடற்கலங்கள்: 1 கடற்கலப் பெயர்: சாகரவர்த்தனா கல வகை: ஆழ்கடல் சுற்றுக்காவல் கலம் கடற்கலப் படிமம்: படிமப்புரவு: அறியில்லை சிறிலங்காக் கடற்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: 25 பேர் காயப்பட்டோர்: 4 பேர் போர்க்கைதிகளானோர்: கப்பல் தண்டையல் அஜித்குமார் பொயகொட மற்றும் அவரது கூட அதிகாரியான என்.ஈ. விசித்த கமகே வீரச்சாவடைந்த கடற்கரும்புலிகள்: 4 பதவி & தரநிலையுடனான பெயர்கள்: 'கடற்புலிகளின் மகளீர் படையணி சிறப்புக் கட்டளையாளர்' லெப். கேணல் நளாயினி, மேஜர் மங்கை, கப்டன் தூயமணி எ வாமன், கப்டன் இசைவாணன் எ லக்ஸ்மன் கடற்கரும்புலி வகை: நீர்மேல் தாக்குதல் கரும்புலிகள் சக்கை வண்டிகள்: எண்ணிக்கை: 2 வகுப்புப் பெயர்: அறியில்லை ஆதாரம்: ஈழநாதம்: 21/09/1994 | உதயன்: 21/09/1994 | கட்டுரை: சாகராவர்த்தனா கப்பலை கற்பிட்டிக் கடலில் மூழ்கடித்த கடற்கரும்புலித் தாக்குதல் திகதி: ஒக்டோபர் 9, 1994 அடிபாட்டுக் காலம்: வைகறை 4:30 மணி நிகழ்வு இடம்: வெற்றிலைக்கேணிக் கடற்பரப்பு நிகழ்வு விரிப்பு: 1200 தொன் எடையுள்ள பொருட்களை (உணவுகள் என்கிறது சிங்களம்) படைய வள்ளம் ஒன்றிற்கு மாற்றுவதற்காக வெற்றிலைக்கேணி கடற்பரப்பில், கரையிலிருந்து காணக்கூடியளவு சில மைல் தொலைவில், நங்கூரமிட்டு தரிபெற்றிருந்தது. அவ்வேளையில் திடீரென அங்கு வந்த கடற்புலிகள் வேட்டுகளைத் தீர்த்து கப்பலின் இரு பக்கங்களிலும் சக்கை வைத்து வெடிப்பித்த பின்னர் மூழ்கும் போது அதிலேறி கப்பலிலிருந்த கதுவீ மற்றும் தொலைத்தொடர்பு ஏந்தனங்களைக் கைப்பற்றிச் சென்றனர். இத்தாக்குதலின் வழிமறிப்புத் தாக்குதலில் கடற்கரும்புலிகளின் மகளீர் அணி பங்கேற்றிருந்தது. மூழ்கடிக்கப்பட்ட கடற்கலங்கள்: 1 கடற்கலப் பெயர்: ஓசன் ரேட் கல வகை: வழங்கல் கப்பல் கடற்கலப் படிமம்: படிமப்புரவு: அறியில்லை கப்பல் ஊழியரில் (சிங்களவர்), கொல்லப்பட்டோர்: யாருமில்லை காயப்பட்டோர்: யாருமில்லை வீரச்சாவடைந்த போராளிகள்: யாருமில்லை ஆதாரம்: ஈழநாதம்: 09/10/1994 | உதயன்: 21/09/1994 | களத்தில்: 18.10.1995 திகதி: நவம்பர் 8, 1994 கடற்சமர் காலம்: சாமம் 12:26 மணி முதல் சுமார் மூன்று மணி நேரம் நிகழ்வு இடம்: வெற்றிலைக்கேணி கடற்கரையோரத்தில் நிகழ்வு விரிப்பு: வெற்றிலைகேணி கடற்கரையோரத்தில் படையத் தளவாடங்கள் இறக்கிக்கொண்டிருந்த போது கடற்புலிகளும் கடற்கரும்புலிகளுமாக இணைந்து மேற்கொண்ட வலிதாக்குதல் இதுவாகும். இந்நடவடிக்கைக்கான வேவில் பெண் போராளி ஒருவரே ஈடுபட்டார். அதற்காக தலைவரினால் உந்துருளி ஒன்று பரிசாக வழங்கப்பட்டது. சேதப்பட்ட (சிறியளவு) கடற்கலங்கள்: 1 கடற்கலப் பெயர்: பப்பதா கல வகை: பயனுடைமை தரையிறக்கக் கலம் (LCU) கடற்கலப் படிமம்: ரணகஜவின் தோற்றத்தில் இருக்கும் சிறிலங்காக் கடற்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: அறியில்லை காயப்பட்டோர்: அறியில்லை் வீரச்சாவடைந்த கடற்கரும்புலிகள்: 1 ஆள் தரநிலையுடனான பெயர்கள்: மேஜர் வித்தி கடற்கரும்புலி வகை: நீர்மேல் தாக்குதல் கரும்புலிகள் சக்கை வண்டிகள், எண்ணிக்கை: 1 வகுப்புப் பெயர்: அறியில்லை ஆதாரம்: ஈழநாதம்: 10/11/1994 | உதயன்: 10/11/1994 | களத்தில்: 18.10.1995 ******
- 27 replies
-
- ஈழம்
- கடற்கரும்புலிகள்
- கடற்படை
- கடற்புலி
-
Tagged with:
-
கடற்புலிகளால் அழிக்கப்பட்ட, சேதப்பட்ட & கைப்பற்றப்பட்ட சிறிலங்காச் சார்புக் கடற்கலங்கள் | திரட்டு
ஆண்டு: 1993 திகதி: பெப்ரவரி 26, 1993 அடிபாட்டுக் காலம்: வைகறை நிகழ்வு இடம்: கிளாலிக் களப்பு நிகழ்வு விரிப்பு: கிளாலிக் களப்பில் கடற்புலிகளுக்கும் சிறிலங்காக் கடற்படைக்கும் இடையில் ஏற்பட்ட கடற்சமர் இதுவாகும். இச்சமரின் போது உணவுப் பொருட்களுடனான படகு ஒன்று கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது. ஆனால் அது பொதுமக்களினதா அல்லது தவிபு-வினரதா என்பது தெரியவில்லை. சேதப்பட்ட கடற்கலங்கள்: 1 கடற்கல வகுப்புப் பெயர்: வோட்டர் ஜெட் சிறிலங்காக் கடற்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: இழப்பில்லை காயப்பட்டோர்: 1 ஆள் வீரச்சாவடைந்த கடற்புலிகள்: இழப்பில்லை ஆதாரம்: உதயன்: 12&14/02/1993 திகதி: பெப்ரவரி 26, 1993 நிகழ்வு இடம்: கிளாலிக் களப்பு நிகழ்வு விரிப்பு: கிளாலிக் களப்பில் கடற்புலிகள் மேற்கொண்ட கடல் கண்ணிவெடித் தாக்குதல் இதுவாகும். இக்கண்ணிவெடியை சேரன் என்ற கடற்புலிப் போராளி விதைத்தார். இவரோடு நம்பி, எல்லாளன், சரத்பாபு ஆகிய கடற்புலிகளும் இந்நடவடிக்கையில் பங்கெடுத்திருந்தனர். ஆனால் அவர்களின் பாத்திரங்கள் அறியில்லை. இவர்கள் அனைவருக்கும் தேசியத் தலைவர் 06/03/1993 அன்று பரிசில்கள் வழங்கி மதிப்பளித்தார்; போராளி சேரனுக்கு அதிசிறப்புப் பரிசு வழங்கப்பட்டது என்று அறிவிக்கப்பட்டது, தவிபுவினரால். மூழ்கடிக்கப்பட்ட கடற்கலங்கள்: 1 கடற்கல வகுப்புப் பெயர்: வோட்டர் ஜெட் சிறிலங்காக் கடற்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: 4 பேர் காயப்பட்டோர்: 3 பேர் வீரச்சாவடைந்த கடற்புலிகள்: இழப்பில்லை ஆதாரம்: உதயன்: 27&28/02/1993, 08/03/1993 | ஈழநாதம்: 27&28/02/1993 திகதி: மார்ச் 3, 1993 அடிபாட்டுக் காலம்: சாமம் 12:00 மணியளவில் நிகழ்வு இடம்: கிளாலிக் களப்பு நிகழ்வு விரிப்பு: கிளாலிக் கடற்பரப்பில் சுற்றுக்காவல் சென்ற சிங்களக் கடற்படையினர் மீது கடற்புலிகள் வலிதாக்குதல் நடாத்தினர். படகு எரிந்து மூழ்கியது. கடற்புலிகளின் தாக்குதலிற்கு ஈடுகொடுக்க முடியாத ஏனைய சிங்களப் படகுகள் பின்வாங்கிச் சென்றன. மூழ்கடிக்கப்பட்ட கடற்கலங்கள்: 1 கடற்கல வகுப்புப் பெயர்: அறியில்லை சிறிலங்காக் கடற்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: 1 ஆள் காயப்பட்டோர்: அறியில்லை வீரச்சாவடைந்த கடற்புலிகள்: 1 ஆள் தரநிலையுடனான பெயர்கள்: கப்டன் வேந்தன் ஆதாரம்: உதயன்: 04/03/1993 | ஈழநாதம்: 04/03/1993 திகதி: ஓகஸ்ட் 26, 1993 அடிபாட்டுக் காலம்: சாமம் 1:55 மணி முதல் வைகறை 5:05 மணி வரை இடியன்கள் மோதிய நேரங்கள்: வைகறை 2:05, 4:00 மணிகள் நிகழ்வு இடம்: கிளாலிக் களப்பு நிகழ்வு விரிப்பு: கிளாலிக் களப்பில் பயணம் செய்துகொண்டிருந்த பொதுமக்களை தாக்கும் நோக்கோடு நாகதேவன்துறையிலிருந்து ஐந்து வோட்டர் ஜெட்களில் வந்த சிங்களக் கடற்படையினரை பயணத்திற்கு பாதுகாப்பு வழங்கிக்கொண்டிருந்த கடற்புலிகள் வழிமறித்து மேற்கொண்ட வலிதாக்குதல் இதுவாகும். இக்காலகட்டத்தில் ஒவ்வொரு தடவையும் கடலில் அடிபடும் போதும் சிங்களக் கடற்படையினர் மாறுபட்ட தாக்குதல் திட்டங்களோடு வருவதே வழக்கமாகும். இம்முறை பகை இரு கடலணியாகப் பிரிந்து முன்னகர்ந்தது. ஒரு கடலணி மக்களை தாக்கவெனவும் மற்றொன்று அவர்களைப் பாதுகாக்க வரும் கடற்புலிகளை மறிக்கவெனவும் நகர்ந்தது. ஆனால், கடற்புலிகள் இதனை அறிந்து இரு முனையிலும் சிங்களக் கடற்படையினை எதிர்கொண்டனர். ஒரு கட்டத்தில், ஒரு சமர்முனையில், கடற்புலிகளிடம் சிக்கியுள்ள சிங்களக் கடற்படையின் வோட்டர் ஜெட்டினை இடிக்குமாறு கரையில் காத்திருந்த கப்டன் மதனுக்கு கட்டளை வழங்கப்பட்டது. கப்டன் மதன் தனது குப்பியைக் கழற்றி கடற்கரும்புலி கப்டன் கண்ணாளனிடம் கொடுத்துவிட்டு புறப்பட்டார். தன்னை நோக்கி வரும் கரும்புலிப்படகை கண்ட வோட்டர் ஜெட் (P 115) தப்பியோட எத்தனித்தது. ஆயினும் அதற்கு அவகாசம் வழங்காமல் அதன் கலக்கூட்டின் நடுப்பகுதியில் மோதியிடித்து தாட்டார், கப்டன் மதன். பின்னர் தொடர்ந்தும் சமர் நீண்டது. பேந்து ஒரு கட்டத்தில் மற்றொரு சமர்முனையில் இன்னொரு வோட்டர் ஜெட் கடற்புலிகளால் தப்ப வழியின்றி சுற்றிவளைக்கப்பட்டது. அது உதவிக்காக கட்டளை மையத்திற்கு தகவல் அனுப்பிவிட்டு இறுதிவரை சமராட தீர்மானித்திருந்தது. அதை இடிக்குமாறு மேஜர் நிலவனுக்கு கட்டளை வழங்கப்பட - புறப்பட்டுச் சென்றார். காரிருட்டில் நட்புப் படகுகளை இனங்கண்டு, விலத்தி ஒட்டி, உதவி வருவதற்குள் தப்ப ஏதுவின்றி நின்ற வோட்டர் ஜெட்டை (P 121) மோதியிடித்துத் தாட்டார், மேஜர் நிலவன். இப்படகிலிருந்து சிறிதளவு படைக்கலன்களும் கைப்பற்றப்பட்டன. இவ்விரு கடற்கரும்புலிகள் பற்றி ஒரு விடையத்தைக் குறிப்பிட விரும்புகிறேன். ஒவ்வொரு முறையும் கடற்சமர் வெடிக்கும் போது பகைப்படகை இவர்களின் சக்கைவண்டிகள் துரத்தும். அப்போது தப்பியோடும் பகைக்கும் கடற்கரும்புலிகளுக்கும் இடையிலான இடைவெளி குறுகும் போது பகைவன் தன் நவீன வோட்டர் ஜெட் படகினை ஒரு அடியான ஆழம் குறைந்த நீரினுள் செலுத்துவான். அவ்வாறு செல்லும் வல்லமை கடற்கரும்புலிகளின் படகிற்கு இல்லாமையால் தரைதட்டும் என்பதால் கடற்கரும்புலிகள் திரும்பிடுவர். இவ்வறு இக்கரும்புலித் தாக்குதலில் ஈடுபட்ட இரு கடற்கரும்புலிகளும் கரும்புலித் தாக்குதலுக்காக கடலில் இலக்குத்தேடி மொத்தம் 61 நாட்கள் அலைந்தனர். இலக்குக் கிடைக்காவிடத்து காத்திருந்து, 62வது நாள் இரவில் இலக்குக் கிட்டிய போதே மோதியிடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மூழ்கடிக்கப்பட்ட கடற்கலங்கள்: 2 கடற்கல வகுப்புப் பெயர்: வோட்டர் ஜெட் சேதப்பட்ட (சிறிய) கடற்கலங்கள்: 1 கடற்கல வகுப்புப் பெயர்: வோட்டர் ஜெட் தாக்குதல் வகை: உந்துகணை செலுத்தி மூலம் ஏவப்பட்ட உந்துகணையால் சிறிலங்காக் கடற்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: 10 பேர் (நால்வரின் சடலங்கள் கைப்பற்றப்பட்டன) காயப்பட்டோர்: பலர் வீரச்சாவடைந்த போராளிகள்: 5 பேர் கடற்கரும்புலிகள்: 2 பேர் தரநிலையுடனான பெயர்கள்: மேஜர் நிலவன் எ வரதன், கப்டன் மதன் எ பற்றிக் கடற்கரும்புலி வகை: நீர்மேல் தாக்குதல் கரும்புலிகள் கடற்புலிகள்: 3 பேர் தரநிலையுடனான பெயர்கள்: கப்டன் சிவா, லெப். பூபாலன், 2ம் லெப். சுரேந்தர் சக்கை வண்டிகள்: எண்ணிக்கை: 2 வகுப்புப் பெயர்: குருவி கலப் பெயர்: குமரப்பா (மேஜர் நிலவன் எ வரதன்), புலேந்திரன் (கப்டன் மதன் எ பற்றிக்) படிமம்: படகுகாவி மேலுள்ள "குமரப்பா" என்ற கடற்கலப்பெயர் கொண்ட குருவி வகுப்பு இடியனில் அமர்ந்திருக்கும் மேஜர் நிலவன் | படிமப்புரவு: தவிபு ஆதாரம்: ஈழநாதம்: 27/08/1993 | உதயன்: 27/08/1993 | உயிராயுதம் பாகம் - 1 | விடுதலைப்புலிகள் புரட்டாசி-ஐப்பசி 1993 திகதி: ஓகஸ்ட் 29, 1993 அடிபாட்டுக் காலம்: காலை 9:00 மணி முதல் நண்பகல் 10:30 மணி வரை இடியன் மோதிய நேரம்: காலை 9:20 மணி காலை 9:20 மணியிலிருந்து 12 மணி வரை கலம் எரிந்துகொண்டிருந்தது. நிகழ்வு இடம்: பருத்தித்துறை நகரிற்கு கிழக்கிலுள்ள முனை என்ற பரப்பின் கடற்கரையிலிருந்து சுமார் 5 கடல்மைல் தொலைவில் நிகழ்வு விரிப்பு: திருகோணமலையிலிருந்து முன்னதாக கட்டைக்காடு கடற்படைத்தளம் வந்த இக்கலம், காங்கேசன்துறை நோக்கிச் சுற்றுக்காவல் சென்றுகொண்டிருந்தது. அப்போது பருத்தித்துறைக் கடற்பரப்பில் வைத்து கடற்புலிகளின் நான்கு படகுகள் (வகுப்புப் பெயர் அறியில்லை) வழிமறித்துத் வலிதாக்குதல் நடாத்தின, பின்னர் கடற்கரும்புலித் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இத்தாக்குதலுக்கு வழியெடுத்துக் கொடுக்கும் தாக்குதலில் மகளிர் படையணி ஒரு சண்டைப்படகுடன் சென்று சண்டையிட்டது. தாக்குதலின் முடிவில் லெப். கேணல் பாமா தன் தலைமையிற் படகு கொண்டு சென்று கடலில் நின்ற புலிகளுக்குத் துணையாகத் தாக்குதல் நடாத்தி மற்றைய எமது படகுகள் திரும்பி வருவதற்கு வழியமைத்துக் கொடுத்தார். கரும்புலித் தாக்குதலில் எரிந்து மூழ்கிக்கொண்டிருந்த கலத்தில் ஏறிய கடற்புலிகள் அதிலிருந்த முக்கிய சில படைக்கலன்களைக் கழற்றிக் கைப்பற்றிக் கரைசேர்த்தனர். மேலதிகத் தகவல்: இத்தாக்குதலில் வீரச்சாவடைந்த கடற்கரும்புலிகளுள் ஒருவரான கப்டன் மணியரசனே 'உயிராயுதம்' என்ற பிடாரச்சொல்லை (new term) முதன் முதலில் மொழிந்தவர் ஆவார். மூழ்கடிக்கப்பட்ட கடற்கலங்கள்: 1 கடற்கல வகுப்புப் பெயர்: சுப்பர் டோறா விதம்- 1 சிறிலங்காக் கடற்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: 12 பேர் காயப்பட்டோர்: அறியில்லை வீரச்சாவடைந்த கடற்கரும்புலிகள்: 2 பேர் தரநிலையுடனான பெயர்கள்: மேஜர் புகழரசன் எ புவீந்திரன், கப்டன் மணியரசன் கடற்கரும்புலி வகை: நீர்மேல் தாக்குதல் கரும்புலிகள் சக்கை வண்டிகள்: எண்ணிக்கை: 1 வகுப்புப் பெயர்: சீ நோர்/Cey Nor (ஒரு வகுப்பான வள்ளம்) ஆதாரம்: ஈழநாதம்: 30/08/1993 | உதயன்: 30/08/1993 | உயிராயுதம் பாகம் - 2 | கரும்புலி காவியம் பாகம் - 1 | களத்தில்: 18.10.1995 திகதி: நவம்பர் 10, 1993 நிகழ்வு இடம்: நாகதேவன்துறை கடற்தளம் நிகழ்வு விரிப்பு: பூநகரி கூட்டுப்படைத்தளம் மீதான தவளைப் பாச்சல் நடவடிக்கையின் போது பூநகரி கூட்டுப்படைத்தளத்தின் நாகதேவந்துறையைக் கைப்பற்றுவதும், அச்சண்டை முடியும் வரை பூநகரிக் கூட்டுப்படைத் தளத்திற்கு கடல்வழியால் சிங்களப் படைகளுக்கு உதவி கிடைக்க விடாமல் செய்வது என்பன கடற்புலிகளின் பணியாகும். அச்சமரின் போது நாகதேவன்துறை கடற்படைத்தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஐந்து வோட்டர் ஜெட்கள் கடற்புலிகளினால் கைப்பற்றப்பட்டது. இவற்றில் ஒன்று கடற்புலிகளின் மகளீர் பிரிவுப் போராளிகளினால் - லெப். கேணல் பாமா தலைமையிலான பெண் போராளிகளில் - கைப்பற்றப்பட்டது. முதல் நாள் ஒரு வோட்டர் ஜெட் படகைக் கைப்பற்றிக் கொண்டுவந்து கரை சேர்த்தனர், இவர் தலைமையிலான அணியினர். பின்னர் அடுத்த நாள் அதிகாலை மீண்டும் சமரிற்கு வேறொரு படகில் சென்ற போது நடந்த கடற்சமரில் காலில் காயப்பட்டு வீரச்சாவினைத் தழுவிக்கொண்டார். மேலும் கைப்பற்றப்பட்டுத் தளம் கொணரப்படும் வேளையில் பூநகரி கல்முனைக்கு அண்டிய கடற்பரப்பில் சிங்கள வான்படையின் வான்குண்டு வீச்சில் இரண்டு மூழ்கிட எஞ்சியவை கடற்புலிகளின் சண்டைப்படகுகளானது. கைப்பற்றப்பட்ட கடற்கலங்கள்: 3 கடற்கல வகுப்புப் பெயர்: வோட்டர் ஜெட் படிமம்: வீரச்சாவடைந்த கடற்புலிகள்: வீரச்சாவடைந்த மொத்த 460 போராளிகளுள் லெப். கேணல் பாமா உள்ளிட்ட சில கடற்புலிப் போராளிகள் ஆதாரம்: தவளைப் பாச்சல் நடவடிக்கை ஆவண நிகழ்படம் | உயிராயுதம் பாகம் - 3 | கட்டுரை: 'லெப். கேணல் பாமாவின் வாழ்க்கை வரலாறு' | உதயன்: 12/10/1994 | களத்தில்: 18.10.1995 ******
- 27 replies
-
- ஈழம்
- கடற்கரும்புலிகள்
- கடற்படை
- கடற்புலி
-
Tagged with:
-
கடற்புலிகளால் அழிக்கப்பட்ட, சேதப்பட்ட & கைப்பற்றப்பட்ட சிறிலங்காச் சார்புக் கடற்கலங்கள் | திரட்டு
ஆண்டு: 1992 திகதி: பெப்ரவரி 3, 1992 அடிபாட்டுக் காலம்: எற்பாடு நிகழ்வு இடம்: ஆனையிறவுக் களப்பு (lagoon) நிகழ்வு விரிப்பு: பூநகரி கடற்படைத்தளத்திலிருந்து ஆனையிறவு முகாமிற்கு தளவாடங்களை ஏற்றிச்சென்ற எட்டு படகுகளைக் கொண்ட தொடரணி மீது கடற்புலிகளால் கடல் கண்ணிவெடித் தாக்குதல் நடாத்தப்பட்டது. திகைத்த படையினர் மூழ்கிக்கொண்டிருந்த படையினரையும் ஆளணியினரையும் மீட்க முயன்றனர். அப்போது பிருந்தன் மாஸ்ரர், லெப். கேணல் சாள்ஸ் உட்பட சில போராளிகள் படையினரை நோக்கி பி.கே. இயந்திரச் சுடுகலனால் மட்டும் சுட்டபடி ஒரு படகில் (வகுப்புப் பெயர் அறியில்லை. அக்காலத்திய குருவி/ சூடை/ சுப்பர் சொனிக் வகுப்புகளில் ஒன்றாக இருக்கலாம்) விரைந்து சென்றனர். விரைந்து வந்த படகைக் கண்ட படையினர் பயந்து பின்வாங்கியோடினர். பின்னர், பயனற்ற விதத்தில் உடைந்துபோய் மூழ்கியிருந்த சிங்களப் படகை அப்போதைய கடற்புலிகளின் துணைக் கட்டளையாளர் லெப். கேணல் சாள்ஸ் தலைமையிலான சில போராளிகள் சுழியோடி கட்டியிழுத்துக் கரைக்குக் கொணர்ந்து மக்கள் பார்வைக்கு வைத்தனர். மூழ்கடிக்கப்பட்ட கடற்கலங்கள்: 1 கடற்கல வகுப்புப் பெயர்: வோட்டர் ஜெட் சிறிலங்காக் கடற்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: 4 காயப்பட்டோர்: இல்லை வீரச்சாவடைந்த கடற்புலிகள்: இழப்பில்லை ஆதாரம்: உதயன்: 05/02/1992 | நூல்: தாய்நிலத்து வீரர் (மாவீரர் தொகுப்பு-02) இல் உள்ள லெப். கேணல் சாள்ஸின் வாழ்க்கை வரலாறு திகதி: பெப்ரவரி 27, 1992 நிகழ்வு இடம்: தாளையடிக் கடற்பரப்பு நிகழ்வு விரிப்பு: காங்கேசன்துறையிலிருந்து கடல் & தரை படையினரோடு கட்டைக்காடு கடற்படைத்தளம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த சவட்டன் மீது கடற்புலிகள் மேற்கொண்ட வலிதாக்குதல் இதுவாகும். சேதப்பட்ட (மோசமாக) கடற்கலங்கள்: 1 கடற்கல வகுப்புப் பெயர்: சவட்டன் சிறிலங்காக் கடற்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: 2 பேர் காயப்பட்டோர்: 3 பேர் (ஒரு தரைப்படை படைஞன் உட்பட) வீரச்சாவடைந்த கடற்புலிகள்: இழப்பில்லை ஆதாரம்: விடுதலைப்புலிகள்: ஐப்பசி - கார்த்திகை 1994 | உதயன்: 1/03/1992 | ஈழநாதம்: 27/02/1992 திகதி: மார்ச் 3, 1992 நிகழ்வு இடம்: மாதகல் கடற்பரப்பு நிகழ்வு விரிப்பு: மாதகல் கடலில் கடற்புலிகள் மேற்கொண்ட கடல் கண்ணிவெடித் தாக்குதல் இதுவாகும். 1994 ஆம் ஆண்டு வரை சேதமடைந்த டோறா சரிசெய்யப்படவில்லை. சேதப்பட்ட (மோசமாக) கடற்கலங்கள்: 1 கடற்கல வகுப்புப் பெயர்: டோறா சிறிலங்காக் கடற்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: 1 காயப்பட்டோர்: அறியில்லை வீரச்சாவடைந்த கடற்புலிகள்: இழப்பில்லை ஆதாரம்: விடுதலைப்புலிகள்: ஐப்பசி - கார்த்திகை 1994 திகதி: ஓகஸ்ட் 29, 1992 அடிபாட்டுக் காலம்: சாமம் 1:30 நிகழ்வு இடம்: மண்டைதீவுக் கடற்பரப்பு நிகழ்வு விரிப்பு: மண்டைதீவு தரைப்படை-கடற்படை கூட்டுப் படைத்தளம் கடற்புலிகளின் 'ஆசீர் சிறப்புத் தாக்குதலணி'யால் தாக்கப்பட்டு அங்கே கட்டிவைக்கப்பட்டிருந்த வோட்டர் ஜெட் கைப்பற்றப்பட்டுத் தளம் கொண்டுவரப்பட்டது. அதிலிருந்த பல்வேறு நவீன போர்த் தளவாடங்கள் கைப்பற்றப்பட்டன. இத்தாக்குதலில் நான்கு பேர் கொண்ட கடற்புலிகளின் சிறப்புச் சதளம் (Special Squad) ஒன்று ஈடுபடுத்தப்பட்டிருந்தது. இதில் ஆழியன், தம்பி, தென்னவன் மற்றும் ஜீவா ஆகிய கடற்புலிப் போராளிகள் இடம்பெற்றிருந்தனர். இவர்களின் இத்தீரச் செயலைப் பாராட்டி 16/1/1993 அன்று தேசியத் தலைவர் பரிசில்கள் வழங்கி மதிப்பளித்தார். கைப்பற்றப்பட்ட கடற்கலங்கள்: 1 கடற்கல வகுப்புப் பெயர்: வோட்டர் ஜெட் கடற்கல நிகழ்படம்: https://eelam.tv/watch/british-water-jet-captured-by-ltte-கடற-ப-ல-கள-ல-க-ப-பற-றப-பட-ட-இங-க-ல-ந-த-ந-ர-ந-த-வ-ச-ப-படக_8lbRw2x8rLvJwui.html கடற்கலப் படிமம்: படிமப்புரவு: தவிபு சிறிலங்காக் கடற்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: அறியில்லை காயப்பட்டோர்: பலர் வீரச்சாவடைந்த கடற்புலிகள்: இழப்பில்லை ஆதாரம்: விடுதலைப்புலிகள்: ஐப்பசி - கார்த்திகை 1994 | ஈழநாதம்: 30/09/1992 | உதயன்: 14/1/1993 ******
- 27 replies
-
- ஈழம்
- கடற்கரும்புலிகள்
- கடற்படை
- கடற்புலி
-
Tagged with:
-
கடற்புலிகளால் அழிக்கப்பட்ட, சேதப்பட்ட & கைப்பற்றப்பட்ட சிறிலங்காச் சார்புக் கடற்கலங்கள் | திரட்டு
ஆண்டு: 1991 திகதி: மே 4, 1991 அடிபாட்டுக் காலம்: இரவு நிகழ்வு இடம்: பருத்தித்துறைக் கடற்பரப்பு நிகழ்வு விரிப்பு: இது பருத்தித்துறைக் கடற்பரப்பில் தரிபெற்று தமிழக-தமிழீழ வழங்கல்களைக் குழப்பிக்கொண்டிருந்த தாய்க்கப்பல் மீது கடற்புறாக்களும் கடற்கரும்புலிகளுமாக மேற்கொண்ட வலிதாக்குதல் ஆகும். குறித்த நாள் இரவு தாக்குதல் கட்டளையாளர் லெப். கேணல் சாள்ஸ் தலைமையிலான சண்டைப்படகுகள் மற்றக் கடற்கலங்கள் மீது தாக்குதல் நடாத்தி அபிதா வரை கடற்கரும்புலிகளை அழைத்து சென்று விட அபிதா மீது கடற்கரும்புலிகள் மோதியிடித்தனர். மொத்த நடவடிக்கையினை அப்போதைய கடற்புறாப் பொறுப்பாளரான கட்டளையாளர் சங்கர் எ தாத்தாவின் துணையுடன் கட்டளையாளர் பிருந்தன் மாஸ்ரரும் கட்டளையாளர் லெப். கேணல் கங்கையமரனும் வழிநடாத்தினார்கள் (இவர்களின் விதப்பான பணி அறியில்லை). இந்நடவடிக்கைக்கு அப்போதைய வடமராட்சிப் பொறுப்பாளரும் பின்னாளைய கடற்புலிகளின் சிறப்புக் கட்டளையாளருமான பிரிகேடியர் சூசை, கட்டளையாளர் லெப். கேணல் கடாபி, கட்டளையாளர் லெப். கேணல் டேவிட் எ முகுந்தன் ஆகியோர் தங்களது முழுப் பங்களிப்பையும் வழங்கியிருந்தனர். போதியளவு வெடிமருந்து இல்லாத காலமென்பதாலும் எவ்வளவு வெடிமருந்து பயன்படுத்த வேண்டுமென்ற பட்டறிவு இல்லாததாலும் கப்பல் மூழ்கடிக்கப்படவில்லை. சேதப்பட்ட (மீளப் பாவிக்கேலாது) கடற்கலங்கள்: 1 (பின்னாளில் கடற்படையில் இருந்து ஆணையிழக்கப்பட்டது) கடற்கலப் பெயர்: அபிதா கல வகை: கண்காணிப்புக் கட்டளைக் கப்பல் கடற்கலப் படிமம்: படிமப்புரவு: சிறிலங்காக் கடற்படை | மூழ்கடிக்கப்பட முன்னர் எடுத்த படிமம் படிமப்புரவு: SLN சிறிலங்காக் கடற்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: 9 பேர் காயப்பட்டோர்: 8 பேர் வீரச்சாவடைந்த கடற்கரும்புலிகள்: 2 பேர் தரநிலையுடனான பெயர்கள்: கப்டன் சிதம்பரம், கப்டன் ஜெயந்தன் கடற்கரும்புலி வகை: நீர்மேல் தாக்குதல் கரும்புலிகள் சக்கை வண்டிகள்: எண்ணிக்கை: 1 வகுப்புப் பெயர்: அறியில்லை படிமம்: படிமப்புரவு: தவிபு வேறு கடற்கரும்புலிகள் ஓட்டும் இவர்கள் பாவித்ததையொத்த இடியனின் தோற்றம் : படிமப்புரவு: தவிபு ஆதாரம்: ஈழநாதம்: 05/05/1991 | கட்டுரை: 'அபிதா மீதா கடற்கரும்புலித் தாக்குதல் வரலாறு' திகதி: சூலை 24, 1991 அடிபாட்டுக் காலம்: இரவு நிகழ்வு இடம்: நெடுந்தீவுக் கடற்பரப்பு நிகழ்வு விரிப்பு: கடற்புறாக்களுக்கும் சிறிலங்காக் கடற்படையினருக்கும் இடையில் கடலில் நடந்த மோதல் இதுவாகும். இம்மோதலில் மூழ்கடிக்கப்பட்ட படையப் படகிலிருந்த கொல்லப்பட்ட ஆறு கடற்படையினரில், ஒருவரின் சடலம் 24 ஆம் திகதி காலை புங்குடுதீவில் கரையொதுங்கியது. இன்னும் மூன்று சடலங்கள் 25ம் திகதி நண்பகலில் புங்குடுதீவு மருத்துவமனைக்கு அண்மையில் கரையொதுங்கின. அவற்றில் ஒன்று நிர்வாணமாகவும் ஏனைய மூன்றும் படைப்பொறிகளுடன் (Military insignia) சீருடையிலும் காணப்பட்டன. மேலும் மூன்று சடலங்கள் புங்குடுதீவு கிழக்குக் கடற்பரப்பில் தமிழ் மீனவரின் வலைகளில் சிக்கிப் பின்னர் அவர்களால் தட்டிவிடப்பட்டன. அந்த இரு சடலங்களும் பின்னர் மண்டைதீவை நோக்கி மிதந்து சென்றன. மூழ்கடிக்கப்பட்ட கடற்கலங்கள்: 1 கடற்கல வகுப்புப் பெயர்: அறியில்லை கல வகை: படையப் படகு (விதப்பான கல வகை அறியில்லை ) சிறிலங்காக் கடற்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: 6 பேர் காயப்பட்டோர்: அறியில்லை வீரச்சாவடைந்த கடற்புறாக்கள்: இழப்பில்லை ஆதாரம்: ஈழநாதம்: 26/07/1991 | உதயன்: 26/07/1991 திகதி: செப்டெம்பர் 22, 1991 அடிபாட்டுக் காலம்: வைகறை நிகழ்வு இடம்: காரைநகர்க் கடற்பரப்பு நிகழ்வு விரிப்பு: இதுவே கடற்புலிகளின் முதலாவது கடல்சார் தாக்குதல் ஆகும். நெடுந்தீவிலிருந்து குறிகட்டுவான் நோக்கி செல்லும் கடற்படைப் படகு கடற்புலிகளால் குறிவைக்கப்பட்டது. இதற்காக பிருந்தன் மாஸ்ரரால் இயக்கப்பட்ட கதுவீ (RADAR) மூலம் கிடைக்கப்பெற்ற வேவுத்தகவல்களின் அடிப்படையில் கடல் கண்ணிவெடிகளைப் பயன்படுத்தி ஒரு தாக்குதல் முயற்சி எடுக்கப்பட்டது. இதற்கான கடல் கண்ணிவெடிகளை மேஜர் மூர்த்தி மாஸ்ரர் உள்ளூர் தொழினுட்பத்தில் உருவாக்கியிருந்தார்; 'கொலின்ஸ் கடல் கண்ணிவெடி'. இக்கடல் கண்ணிவெடிகளைக் குறித்த கடற்பரப்பில் முதல்நாள் இரவில் கடற்புலிகளின் அப்போதைய கடற்தாக்குதல் கட்டளையாளர் லெப்.கேணல் சாள்ஸ் தலைமையில் கட்டளையாளர் லெப். கேணல் கங்கையமரன், மேஜர் வசந்தன் உள்ளிட்டவர்கள் படகுகள் மூலம் எடுத்துச் சென்று பிருந்தன் மாஸ்ரரின் கதுவீயின் கண்காணிப்பில் வைத்தனர். கடற்புலிகள் கண்ணிவெடியை விதைத்து விட்டுத் திரும்ப அடுத்த நாள் வைகறையில் கடற்படையின் இலக்குவைக்கப்பட்ட படகு சிக்கி மூழ்கியது. உடைந்த படகையும் அதிலிருந்த போர்த் தளவாடங்களையும் மீட்க லெப். கேணல் சாள்ஸ் தலைமையிலான கடற்புலிகள் சென்றனர். அவர்கள் லெப். கேணல் கங்கையமரன் மற்றும் ஏனைய நீரடி நீச்சல் போராளிகளின் துணையுடன் மீட்டுக் கரைக்குக் கொணர்ந்தனர். படகு மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது. இந்த மொத்த நடவடிக்கையில் மூர்த்தி மாஸ்ரருக்கு உதவியாக கப்டன் மைக்கலும் பிருந்தன் மாஸ்ராருக்கு உதவியாக மேஜர் தீபன் உள்ளிட்ட கடற்புலிப் போராளிகளின் பங்கு மிகவும் அளப்பரியது. மூழ்கடிக்கப்பட்ட கடற்கலங்கள்: 1 கடற்கல வகுப்புப் பெயர்: சீ கார்ட் கல வகை: உட்கரைச் சுற்றுக்காவல் கலம் சிறிலங்காக் கடற்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: 6 பேர் (வல்வளைக்கப்பட்ட வட தமிழீழத்திற்கான சிறிலங்கா கடற்படைக் கட்டளையாளர் கப்டன் ரிச்சார்ட் அமரவீர பின்னர் காயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்டார்) காயப்பட்டோர்: 1 வீரச்சாவடைந்த கடற்புலிகள்: இழப்பில்லை ஆதாரம்: விடுதலைப்புலிகள்: ஐப்பசி - கார்த்திகை 1994 | உதயன்: 24/09/1991 | நூல்: தாய்நிலத்து வீரர் (மாவீரர் தொகுப்பு-02) இல் உள்ள லெப். கேணல் சாள்ஸின் வாழ்க்கை வரலாறு | கட்டுரை: 'நீரடி நீச்சல் பிரிவின் தொடக்கக் கால வரலாறுகள்' திகதி: ஒக்டோபர் 1, 1991 அடிபாட்டுக் காலம்: சாமம் நிகழ்வு இடம்: தீவகக் கடற்பரப்பு நிகழ்வு விரிப்பு: நயினாதீவு கடற்படை முகாமிலிருந்து ஊர்காவற்துறை கடற்படைத் தளத்திற்குச் சென்றுகொண்டிருந்த 2 படகுகள் வழிமறிக்கப்பட்டு கடற்புலிகளால் மேற்கொள்ளப்பட்ட மும்முனை வலிதாக்குதல் இதுவாகும். இத்தாக்குதலிற்கு லெப். கேணல் கங்கையமரனின் துணையோடு கடற்புலிகளின் துணைக்கட்டளையாளர் லெப். கேணல் சாள்ஸ் வேவு பார்த்தார். பின்னர் தாக்குதலிற்கான வியூகத்தை லெப். கேணல் சாள்ஸே அணியமாக்கி தானே கடற்சமரை வழிநடாத்தினார். இச்சண்டையில் தான் முதற் தடவையாக கடற்புலிகளால் ஒரு சிங்களப் படகு கலைத்து விரட்டப்பட்டது. இத்தாக்குதலிற்கு 50 கலிபர் மற்றும் பொதுநோக்கு இயந்திரச் சுடுகலன்கள் பொருத்தப்பட்ட கட்டைப்படகுகளே (Dinghy/மீனவர் படகுகள்) பயன்படுத்தப்பட்டன. மூழ்கடிக்கப்பட்ட படகிலிருந்து சிறிதளவு படைக்கலன்களும் கைப்பற்றப்பட்டன. மூழ்கடிக்கப்பட்ட படகையும் கைப்பற்றப்பட்ட இலகு இயந்திரச் சுடுகலனையும் மக்கள் பார்வைக்காக வைத்தார், கடற்புலிகளின் அப்போதைய துணைக் கட்டளையாளர் லெப். கேணல் சாள்ஸ். மூழ்கடிக்கப்பட்ட கடற்கலங்கள்: 1 கடற்கல வகுப்புப் பெயர்: கூகர் சிறிலங்காக் கடற்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: 6 பேர் காயப்பட்டோர்: அறியில்லை வீரச்சாவடைந்த கடற்புலிகள்: இழப்பில்லை ஆதாரம்: விடுதலைப்புலிகள்: ஐப்பசி - கார்த்திகை 1994 | உதயன்: 3/10/1991 | நூல்: தாய்நிலத்து வீரர் (மாவீரர் தொகுப்பு-02) இல் உள்ள லெப். கேணல் சாள்ஸின் வாழ்க்கை வரலாறு திகதி: திசம்பர் 29, 1991 அடிபாட்டுக் காலம்: எற்பாடு 2:30 மணி நிகழ்வு இடம்: யாழ். குடாநாட்டுக் களப்பு நிகழ்வு விரிப்பு: யாழ். களப்பில் நாகதேவன்துறையிலிருந்து ஆனையிறவு நோக்கிச் சென்றுகொண்டிருந்த சிங்களக் கடற்படையினரின் 5 'வோட்டர் ஜெட்' படகுகள் வழிமறிக்கப்பட்டு கடற்புலிகள் மேற்கொண்ட வலிதாக்குதல். மூழ்கடிக்கப்பட்ட படகிலிருந்து சிறிதளவு படைக்கலன்களும் கைப்பற்றப்பட்டன. மூழ்கடிக்கப்பட்ட கடற்கலங்கள்: 1 கடற்கல வகுப்புப் பெயர்: வோட்டர் ஜெட் சிறிலங்காக் கடற்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: 9 பேர் காயப்பட்டோர்: இல்லை வீரச்சாவடைந்த கடற்புலிகள்: இழப்பில்லை ஆதாரம்: விடுதலைப்புலிகள்: ஐப்பசி - கார்த்திகை 1994 | உதயன்: 30 & 31/12/1991, 05/02/1992 ******
- 27 replies
-
-
- 1
-
-
- ஈழம்
- கடற்கரும்புலிகள்
- கடற்படை
- கடற்புலி
-
Tagged with:
-
கடற்புலிகளால் அழிக்கப்பட்ட, சேதப்பட்ட & கைப்பற்றப்பட்ட சிறிலங்காச் சார்புக் கடற்கலங்கள் | திரட்டு
ஆண்டு: 1990 திகதி: சூன் 15, 1990 அடிபாட்டுக் காலம்: காலை வேளை நிகழ்வு இடம்: தலைமன்னார் பழையபாலம் இறங்குதுறை நிகழ்வு விரிப்பு: தலைமன்னார் கோட்டை காவல்துறை நிலையம் கைப்பற்றப்பட்ட பின்னர் பழையபாலம் இறங்குதுறை பரப்பில் அமைந்திருந்த கடற்படை முகாம் மீது காலை வேளையில் விடுதலைப்புலிகள் திடீர் தாக்குதலை மேற்கொண்டனர். சமரின் முடிவில் கடற்படை முகாம் விடுதலைப்புலிகள் வசமானது. அப்போது அங்கே தரித்து நின்ற படகொன்று புலிகளால் தாக்கப்பட்டு அதிலிருந்த படைக்கலன்களும் படைய ஏந்தனங்களும் கைப்பற்றப்பட்டதுடன் படகும் மூழ்கடிக்கப்பட்டது. அத்துடன் ஒட்டு மொத்த தலைமன்னாரும் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது. மூழ்கடிக்கப்பட்ட கடற்கலங்கள்: 1 கடற்கல வகுப்புப் பெயர்: அறியில்லை கல வகை: சுடுகலப் படகு சிறிலங்காக் கடற்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: அறியில்லை காயப்பட்டோர்: அறியில்லை வீரச்சாவடைந்த போராளிகள்: 1 ஆள் தரநிலையுடனான பெயர்: வீரவேங்கை புலொமின் ஆதாரம்: உதயன்: 16/06/1990 | ஈழநாதம்: 16/6/1990 திகதி: சூன் 16, 1990 அடிபாட்டுக் காலம்: பகல் வேளை நிகழ்வு இடம்: காங்கேசன்துறை ஹாபர் வியூ படைமுகாம் நிகழ்வு விரிப்பு: காங்கேசன்துறை ஹாபர் வியூ படைமுகாமில் தரித்து நின்று கரையோரப் பரப்புகள் மீது சுட்டுக்கொண்டிருந்த கப்பல் மீது தவிபு இனர் மேற்கொண்ட உந்துகணைத் (rocket/unguided missile) தாக்குதல்களில் அக்கப்பலின் இயந்திர அறை, கணினி கட்டுப்பாட்டறை, மற்றும் கதுவீ (RADAR) என்பன உடைத்தெறியப்பட்டது. இத்தாக்குதலில் அதிலிருந்த கடற்படையினரில் 20 பேர் கொல்லப்பட்டனர் என சிறிலங்கா பாதுகாப்புச் செயலாளர் நாயகம் சிறில் ரணதுங்கா 23/06/1990 அன்று தெரிவித்தார். புலிகள் தரப்பில் தாக்குதலின் போது இழப்பேதுமில்லை. ஆனால் நடந்த எதிர்பாராத வெடிநேர்ச்சி ஒன்றில் 6 போராளிகள் வீரச்சாவைத் தழுவிக்கொண்டனர். சேதப்பட்ட (சிறியளவு) கடற்கலங்கள்: 1 கடற்கலப் பெயர்: அறியில்லை கல வகை: (படைத்துறை) கப்பல் சிறிலங்காக் கடற்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: 20 பேர் காயப்பட்டோர்: அறியில்லை வீரச்சாவடைந்த போராளிகள்: 6 பேர் தரநிலையுடனான பெயர்கள்: மேஜர் விவேகன், கப்டன் அன்சார், 2ம் லெப்டினன்ட் ஸ்ராலின், வீரவேங்கை கரன், வீரவேங்கை தவா, வீரவேங்கை சிறி ஆதாரம்: ஈழநாதம்: 17&24 /6/1990, உதயன்: 17/06/1990 திகதி: சூலை 7, 1990 அடிபாட்டுக் காலம்: அறியில்லை நிகழ்வு இடம்: காங்கேசன்துறை துறைமுகம் நிகழ்வு விரிப்பு: யாழ் குடாநாட்டிலுள்ள சிறிலங்காப் படையினருக்குத் தேவையான உணவுப்பொருட்களையும் போர்த்தளவாடங்களையும் வழங்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த காங்கேசன் துறைமுகத்திற்கு அருகில் நின்றிருந்த சிறிலங்கா கடற்படைக்குச் சொந்தமான கப்பல் ஒன்றின் மீது விடுதலைப்புலிகள் தாக்குதல் நடாத்தினர். இதில் கப்பல் சேதமடைந்தது. சேத விரிப்பு தெரியவில்லை. இத்தாக்குதலால் வழங்கல் முயற்சி தோல்வியடைந்து கப்பல் பின்வாங்கியது. இத பின்னர் அவ்விடத்திற்கு வந்த கடற்படைப்ப் படகு ஒன்று கடலில் நின்றபடி கரையோரப் பரப்புகள் மீது சுடுகலன் கொண்டு தாக்குதல் நடாத்தியது. ஆயினும், அப்பரப்பு மக்கள் ஏற்கனவே இடம்பெயர்ந்துவிட்டமையால் எவ்வித உயிர்ச்சேதம்மும் ஏற்படவில்லை. சேதப்பட்ட கடற்கலங்கள்: 1 கடற்கல வகுப்புப் பெயர்: கப்பல் கல வகை: சுடுகலப் படகு சிறிலங்காக் கடற்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: அறியில்லை காயப்பட்டோர்: அறியில்லை வீரச்சாவடைந்த போராளிகள்: இழப்பில்லை ஆதாரம்: ஈழநாதம்: 9/7/1990 திகதி: சூலை 10, 1990 அடிபாட்டுக் காலம்: சாமம் 10:15 நிகழ்வு இடம்: வல்வெட்டித்துறைக் கடற்பரப்பு நிகழ்வு விரிப்பு: இது வல்வெட்டித்துறையில் தரிபெற்று தமிழக-தமிழீழ வழங்கல்களைக் குழப்பிக்கொண்டிருந்த தாய்க்கப்பல் மீது கடற்புறாக்களும் கடற்கரும்புலிகளுமாக மேற்கொண்ட வலிதாக்குதல் ஆகும். தாக்குதல் கட்டளையாளர் லெப். கேணல் டேவிட் எ முகுந்தனின் கட்டளையின் கீழ் அவர் உட்பட லெப் கேணல் அருச்சுனா மற்றும் கப்டன் தினேஸ் ஆகியோரை படகுக் கட்டளை அதிகாரிகளாகக் கொண்ட 3 படகுகள் எடித்தாராவிற்குப் பாதுகாப்பாக நின்ற கடற்கலங்கள் மீது தாக்குதலைத் தொடுத்து அவற்றைத் திசைதிருப்பக் கடற்கரும்புலிகள் எடித்தாரா மீது மோதியிடித்தனர். இத்தாக்குதலை தேசியத் தலைவர் அவர்கள் வல்வெட்டித்துறைக் கடற்புறாத் தளத்திலிருந்து நெறிப்படுத்திக் கட்டளைகளை வழங்க கட்டளையாளர் பிருந்தன் மாஸ்ரர் மற்றும் துணைக் கட்டளையாளர் லெப். கேணல் சாள்ஸ் எ புலேந்திரன் ஆகியோர் தேசியத் தலைவரின் அருகிலிருந்து அக்கட்டளைகளுக்குச் செயல்வடிவம் தந்தனர். இந்நடவடிக்கைக்கான மேலதிக வேலைத் திட்டங்களை தண்டையல் கப்டன் மோகன் மேத்திரி தலைமையிலான அணி செவ்வனவே செய்து தந்திருந்தது குறிப்பிடத்தக்கது. போதியளவு வெடிமருந்து இல்லாத காலமென்பதாலும் எவ்வளவு வெடிமருந்து பயன்படுத்த வேண்டுமென்ற பட்டறிவு இல்லாததாலும் கப்பல் மூழ்கடிக்கப்படவில்லை. சேதப்பட்ட கடற்கலங்கள்: 1 கடற்கலப் பெயர்: எடித்தாரா கல வகை: கண்காணிப்புக் கட்டளைக் கப்பல் படிமம்: படிமப்புரவு: சிறிலங்காக் கடற்படை சிறிலங்காக் கடற்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: பலர் காயப்பட்டோர்: பலர் வீரச்சாவடைந்த கடற்கரும்புலிகள்: 3 பேர் தரநிலையுடனான பெயர்கள்: மேஜர் காந்தரூபன், கப்டன் கொலின்ஸ், கப்டன் வினோத் கடற்கரும்புலி வகை: நீர்மேல் தாக்குதல் கரும்புலிகள் சக்கை வண்டிகள், எண்ணிக்கை: 1 வகுப்புப் பெயர்: அறியில்லை ஆதாரம்: உயிராயுதம்-1 | உதயன்: 12/07/1990 | கட்டுரை: எடித்தாரா மீதான முதலாவது கடற்கரும்புலித் தாக்குதல் வரலாறு | கரும்புலி காவியம் பாகம் - 1 திகதி: செப்டெம்பர் 13, 1990 நிகழ்வு இடம்: யாழ் களப்பு (Jaffna lagoon) நிகழ்வு விரிப்பு: சிறிலங்காப் படைத்துறையானது தவிபுவின் யாழ் கோட்டை முற்றுகையை முறியடித்து யாழ் நகரையே கைப்பற்றும் திட்டத்தோடு 13/09/1990 அன்று 'போட் (Fort) நடவடிக்கை' என்ற பாரிய படைய நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டது. இது முப்படைகளையும் ஒருங்கிணைத்து மண்டைதீவைக் கைப்பற்றி அங்கு நிலைபெறும் படையினரைக் கொண்டு நடத்தப்பட்ட ஒரு தரையிறக்க முயற்சியாகும். இதற்காக கஜபாகு கப்பல், 28 சுடுகலப் படகுகள் (வகுப்புப் பெயர் அறியில்லை), 4 சிறிய படகுகள், 20 சேணேவிகள், நான்கு தாக்குதல் உலங்குவானூர்திகள் மற்றும் இரண்டு அவ்ரோ வானூர்திகள், இரண்டு "சீனச் சகடை" என்ற தமிழ்ப் பட்டப்பெயரைக் கொண்ட வை- 8, வை - 12 வானூர்திகள், ஆகக்குறைந்தது ஒரு சியாமா செட்டி உட்பட எட்டு வானூர்திகள் ஆகியன உடன் கஜபாப் படையணி மற்றும் சிங்கப் படையணிகளின் வீரர்களைக் கொண்ட 4000 தரைப்படையினர் இந்நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டனர். இவர்கள் குறித்த சமயத்தில் மண்டைதீவிலிருந்து கடற்படைப் படகுகள் மூலம் யாழ் கோட்டையை அண்மித்த வேளை கோட்டை வலுவெதிர்ப்பில் ஈடுபட்டிருந்த தவிபுக்கும் கடற்படையினருக்குமிடையே கடற்சமர் வெடித்தது. இந்தக் கடற்சமரில் கடற்படையினரின் படையெடுப்பு முயற்சி முறியடிக்கப்பட்ட போதிலும் சில படையினர் காயக்காரர்களோடு கோட்டைக்குள் சேணேவிகளையும் கொண்டு உள்நுழைந்தனர். இச்சமரில் கடற்படைப் படகுகள் சில மூழ்கடிக்கப்பட்டதாக தவிபு அறிவித்திருந்த போதிலும் சிங்களத் தரப்போ தம் தரப்பில் 6 படையப் படகுகள் சேதமடைந்தன என்று செய்தி வெளியிட்டிருந்தது. இச்சமரில் கொல்லப்பட்ட படையினரின் சடலங்கள் கரையிலும் கடலினுள்ளும் கிடந்தன. ஏனைய படையினர் மண்டைதீவுக்குப் பின்வாங்கினர். இதன் போது தரைப்படையினருக்கு உதவியாக வந்த வான்படையின் சியாமா செட்டி குண்டுவீச்சு வானூர்தி விடுதலைப்புலிகளால் கடலினுள் சுட்டு வீழ்த்தப்பட்டது. அதே சமயம் அற்றை நாளில் வான்படையினரின் அவ்ரோ வானூர்தி 10 "பொஸ்பரஸ்" குண்டுகளை யாழ்நகரில் மாலை 5 மணி முதல் 6 மணிவரை வீசியது. கடற்படைக்கு உதவியாக வந்த கஜபாகு கலம் மூலம் நான்கு சிறிய படகுகளில் படையினர் சிறுத்தீவு ஆத்துவாயை நோக்கிச் சென்றுகொண்டிருந்த நேரம் நீர் ஆழமின்மையால் கரைதட்டிக்கொண்டன. இவர்களை எதிர்கொண்ட தவிபு-க்கும் படையினருக்கும் இடையில் மோதல் வெடித்தத்தில் சில படையினர் கொல்லப்பட்டிருக்கலாமென்று புலிகள் தெரிவித்தனர். இப்படகுகளைப் பாதுகாக்க மூன்று குண்டுதாரிகள் தொடர்ந்து குண்டுவீச்சில் ஈடுபட்டன. அத்தோடு அப்படகுகளில் இரண்டை கடற்படையினர் மிகுந்த இடர்களுக்கும் நடுவணில் கட்டியிழுத்துச் சென்றனர். இரண்டை மாலை நான்கு மணியளவில் கடற்படையினர் வந்து கொண்டு சென்றனர். இச்சமரின் போது கோட்டைப் பரப்பிலிருந்து சிறிதளவு ஆயுதங்களும் படையத் தளபாடங்களும் புலிகளால் கைப்பற்றப்பட்டன. இதே நேரம் யாழ் கோட்டை வாசலில் நடந்த சமரில் “சலாமன்” என்ற கவசப் பாரவூர்தி தகர்க்கப்பட்டதோடு கோட்டையின் பக்கவாடு, பண்ணைப் பரப்பில், மற்றொரு கவசவூர்தி கண்ணிவெடியில் சிக்கிச் சிதறியது. இதில் படையினர் பலர் கொல்லப்பட்டனர். படிமங்கள்: கோட்டை வாயிலில் அழிக்கப்பட்ட சலாமன் கவசவூர்தி | படிமப்புரவு: தவிபு வழியாக உதயன் தரையிறங்க வந்த படையினர் விட்டுச் சென்ற கண்ணிவெடி கண்டுபிடிக்கும் ஏந்தனம் (equipment) | படிமப்புரவு: தவிபு வழியாய் உதயன் தோல்வியில் முடிந்த கோட்டை முற்றுகை முறியடிப்புச் சமரில் கொல்லப்பட்ட படையினரின் சடலங்கள் சிதறிக்கிடப்பதைக் காண்க | படிமப்புரவு: ஈழநாதம் 17/9/1990 சேதப்பட்ட கடற்கலங்கள்: 6 கடற்கலப் வகுப்புப் பெயர்: அறியில்லை கல வகை: சுடுகலப் படகுகள் (விதப்பான கடற்கலவகை அறியில்லை) சிறிலங்காக் முப்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: 26 பேர் வான்படை: ஒரு வானோடி தரைப்படை: நான்கு அதிகாரிகள் மற்றும் 19 தரைப்படையினர் கடற்படை: 2 கடற்கலவர் (Seamen) காயப்பட்டோர்: 106 பேர் வீரச்சாவடைந்த தரைப்புலிகள்: 13 பேர் தரநிலையுடனான பெயர்கள்: கப்டன் ஆனந்தபாபு, கப்டன் அஞ்சனா, லெப். நெப்போலியன், வீரவேங்கை ரெஜினோல்ட், வீரவேங்கை சுரேன், வீரவேங்கை குணேஸ், வீரவேங்கை நிவாஸ், வீரவேங்கை றொபின், வீரவேங்கை தமிழ்ச்செல்வன், வீரவேங்கை குருபரன், வீரவேங்கை நிக்கலஸ், வீரவேங்கை விஜயன், வீரவேங்கை சந்திரபாபு ஆதாரம்: உதயன்: 14,15 & 16/09/1990 | ஈழநாதம்: 14 & 16/09/1990 | கட்டுரை: 'அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை - 192' திகதி: செப்டெம்பர் 16, 1990 அடிபாட்டுக் காலம்: அறியில்லை நிகழ்வு இடம்: காங்கேசன்துறை கடற்பரப்பு நிகழ்வு விரிப்பு: படகில் பயணம் செய்த படையினர் மீது கடற்புறாக்கள் கடலில் வைத்தே தாக்குதல் நடத்திப் படகைச் சேதப்படுத்தினர். சேதப்பட்ட (சிறிதளவு) கடற்கலங்கள்: 1 கடற்கல வகுப்புப் பெயர்: அறியில்லை கல வகை: கடற்படைப் படகு (விதப்பான கல வகை அறியில்லை) சிறிலங்காக் கடற்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: 1 ஆள் காயப்பட்டோர்: 1 ஆள் வீரச்சாவடைந்த கடற்புறாக்கள்: இழப்பில்லை ஆதாரம்: உதயன்: 17/09/1990 திகதி: ஒக்டோபர் 14, 1990 அடிபாட்டுக் காலம்: சாமம் 10:30 மணியளவில் நிகழ்வு இடம்: தலைமன்னார் கடற்பரப்பு நிகழ்வு விரிப்பு: பொதுமக்களின் மீன்பிடிப்படகு ஒன்றைத் தாக்குவதற்காக சிங்களக் கடற்படையினர் அதைத் துரத்திச் சென்ற போது கடற்புறாக்கள் வழிமறித்து வலிதாக்குதல் செய்தனர். சிங்களப் படகு சேதமடைந்தது. சிறிதளவு படைக்கலன்கள் கைப்பற்றப்பட்டன. சேதமடைந்த படகிற்கு என்ன நடந்தது என்பது பற்றிப் புலிகள் தெரிவிக்கவில்லை. சேதப்பட்ட (சிறிதளவு) கடற்கலங்கள்: 1 கடற்கல வகுப்புப் பெயர்: அறியில்லை கல வகை: சிறு படகு (விதப்பான கல வகை அறியில்லை) சிறிலங்காக் கடற்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: 1 ஆள் காயப்பட்டோர்: அறியில்லை வீரச்சாவடைந்த கடற்புறாக்கள்: இழப்பில்லை ஆதாரம்: உதயன்: 16/10/1990 திகதி: ஒக்டோபர் 25, 1990 அடிபாட்டுக் காலம்: வைகறை 5:30 மணியளவில் நிகழ்வு இடம்: செம்பியன்பற்றுக் கடற்பரப்பு நிகழ்வு விரிப்பு: புலிகளின் கடல் கண்ணிவெடியில் சிக்கிப் படகு வலுத்த சேதமடைந்தது. சேதப்பட்ட (மோசமாக) கடற்கலங்கள்: 1 கடற்கல வகுப்புப் பெயர்: அறியில்லை கல வகை: கடற்படைப் படகு (விதப்பான கல வகை அறியில்லை) சிறிலங்காக் கடற்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: பலர் காயப்பட்டோர்: அறியில்லை வீரச்சாவடைந்த கடற்புறாக்கள்: இல்லை ஆதாரம்: உதயன்: 27/10/1990 திகதி: நவம்பர் 7, 1990 அடிபாட்டுக் காலம்: காலை 8:30 மணியளவில் நிகழ்வு இடம்: முள்ளிக்குளம் (புத்தளம்) கடற்பரப்பு. இன்னும் விதப்பாகவெனில் குதிரைமலையைச் சுற்றியுள்ள கடற்பரப்பு நிகழ்வு விரிப்பு: குறித்த கடற்பரப்பில் இரண்டு படகில் படையினர் வந்த போது தரையிலிருந்து 500 யார் தொலைவில் வைத்து பின்னால் வந்த இரண்டாவது படகு மீது உந்துகணை செலுத்தி (ஆர்பிஜி) மூலம் உந்துகணைத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அந்தப் படகு நகராமல் நிற்க முன்னால் வந்த படகு அதைக் கட்டியிழுத்துச் செல்ல முற்பட்டது. அப்போது அப்படகு மீது புலிகள் சுடுகலச் சூடு நடத்தினர். பின்னர் படையினர் மேலும் மூன்று படகுகளில் வந்து சேதமடைந்த படகைக் கட்டியிழுத்துச் சென்றனர். சேதப்பட்ட (சிறிய) கடற்கலங்கள்: 1 கடற்கல வகுப்புப் பெயர்: அறியில்லை கல வகை: படகு (விதப்பான கல வகை அறியில்லை) சிறிலங்காக் கடற்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: அறியில்லை காயப்பட்டோர்: அறியில்லை வீரச்சாவடைந்த கடற்புறாக்கள்: இல்லை ஆதாரம்: உதயன்:09/11/1990 ******
- 27 replies
-
-
- 1
-
-
- ஈழம்
- கடற்கரும்புலிகள்
- கடற்படை
- கடற்புலி
-
Tagged with:
-
கடற்புலிகளால் அழிக்கப்பட்ட, சேதப்பட்ட & கைப்பற்றப்பட்ட சிறிலங்காச் சார்புக் கடற்கலங்கள் | திரட்டு
ஆண்டு: 1986 திகதி: பெப்ரவரி 7, 1986 அடிபாட்டுக் காலம்: காலை 10:00 மணியளவில் நிகழ்வு இடம்: கடற்கோட்டைக்கும் காரைநகர் கடற்படை முகாமிற்கும் இடைப்பட்ட கடற்பரப்பு நிகழ்வு விரிப்பு: குறித்த கடற்பரப்பில் பயணித்துக்கொண்டிருந்த சிறிலங்கா கடற்படையின் காரைநகர் கடற்படை முகாமிற்குச் சொந்தமான கடற்கலம் ஒன்று விடுதலைப்புலிகளால் அக்கடற்பரப்பில் விதைக்கப்பட்டிருந்த கடல் கண்ணிவெடியில் சிக்கிச் சேதமடைந்தது. இக்கடற்கலத்தை ஏனைய கடற்கலங்கள் மற்றும் உலங்குவானூர்தியின் துணையுடன் மிகுந்த சிரமங்களுக்கு நடுவணிலும் சிறிலங்காக் கடற்படை மீட்டதாக புலிகளின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அன்றைய உதயன் செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் இதில் சிறிலங்காக் கடற்படைக்கு ஏற்பட்ட உயிர்ச்சேதங்கள் தொடர்பில் தகவல் இல்லையென்று விடுதலைப்புலிகள் மாதயேடு செய்தி வெளியிட்டுள்ளது. "தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் முதல் தடவையாக நவீன முறையில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட கடல் கண்ணிவெடித் தாக்குதல் இது" என்று அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டிருந்ததாக உதயன் செய்தியிட்டுள்ளது. தமிழீழ விடுதலைப்புலிகளின் எவ்வகையான தாக்குதலிலும் சேதமடைந்த முதலாவது கடற்கலம் இதுவே என்பது வரலாற்றுத் தகவல் ஆகும். சேதப்பட்ட கடற்கலங்கள்: 1 கடற்கல வகுப்புப் பெயர்: அறியில்லை கல வகை: உட்கரைச் சுற்றுக்காவல் கலம் சிறிலங்காக் கடற்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: அறியில்லை காயப்பட்டோர்: அறியில்லை வீரச்சாவடைந்த புலிகள்: இழப்பில்லை ஆதாரம்: உதயன்: 09/02/1986 | விடுதலைப்புலிகள்: குரல் 9, ஏப்ரல், 1986 திகதி: மார்ச் 3, 1986 அடிபாட்டுக் காலம்: அறியில்லை நிகழ்வு இடம்: நைனாதீவு கப்பல்துறைக்கு அண்மையிலுள்ள கடற்பரப்பு நிகழ்வு விரிப்பு: நைனாதீவு கப்பல்துறைக்கு அண்மையிலுள்ள கடற்பரப்பில் விதைக்கப்பட்டிருந்த கடற்கண்ணிவெடியை தொலை கட்டுப்பாட்டுக் கருவி மூலம் வெடிக்க வைத்ததில் இக்கடற்கலம் சிதறடிக்கப்பட்டது. இத்தாக்குதலை கடற்புலிகள் செய்தனர். இதுவே சிங்களக் கடற்படையின் கடற்கலமொன்று சிதறடிக்கப்பட்ட முதல் நிகழ்வாகும். இத்தாக்குதலின் பின்னர் சிங்களக் கடற்படையினர் தீவுப்பற்றில் பல கொடூரங்களை செய்ய முயற்சித்த போதும், அது விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டது. மூழ்கடிக்கப்பட்ட கடற்கலங்கள்: 1 கடற்கல வகுப்புப் பெயர்: மொடல் 118 கல வகை: அறியில்லை சிறிலங்காக் கடற்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: ஒரு லெப்டினன்ட் உட்பட 14 பேர் காயப்பட்டோர்: யாருமில்லை வீரச்சாவடைந்த புலிகள்: இழப்பில்லை ஆதாரம்: விடுதலைப்புலிகள்: குரல் 9, ஏப்ரல், 1986 திகதி: மே 19, 1986 அடிபாட்டுக் காலம்: பிற்பகல் நிகழ்வு இடம்: வல்வெட்டித்துறை கடற்பரப்பு நிகழ்வு விரிப்பு: இத்தாக்குதல் தொடர்பில் 20ம் திகதி புலிகள் 'உதயன்' நாளேட்டிற்கு அளித்த ஊடக வெளியீட்டில், குறித்த கடற்பரப்பிற்கு சிறிலங்கா கடற்படையின் கடற்படை 'போர்க்கப்பல்' ஒன்று வந்தது. அதிலிருந்து கரைக்கு வந்த சிறிய சுற்றுக்காவல் படகு ஒன்று தமது 'உந்துகணைத்' தாக்குதலில் தீப்பற்றி எரிந்து நிர்மூலமானதாம். சுடுகலப் படகு ஒன்று தகர்க்கப்பட்டதாம். மற்றொரு சுற்றுக்காவல் படகு பாரிய தாக்குதலிற்குள்ளானதை அடுத்து அனைத்துக் கப்பல்களும் பின்வாங்கினவாம். ஆனால், 'விடுதலைப்புலிகள்' என்ற புலிகளின் அலுவல்சார் மாதயிதழின் சூலை 1986 பதிப்பில் இத்தாக்குதலின் போது மூன்று பீரங்கிப் படகுகளும் ஒரு 'போர்க்கப்பல்' உம் சேதமடைந்தன என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே தகவல்கள் இவ்வாறு ஒன்றிற்கு ஒன்று முரணாக இருப்பதால் நான் இறுதியாக புலிகளின் அலுவல்சார் மாதயிதழில் வெளியான தகவலை அறுதியான தகவலாக எடுத்துக்கொள்கிறேன். சேதப்பட்ட கடற்கலங்கள்: 4 கடற்கல வகுப்புப் பெயர்: அறியில்லை கல வகை: சுடுகலப் படகுகள் - 3 கல வகை: போர்க்கப்பல் - 1 சிறிலங்காக் கடற்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: அறியில்லை காயப்பட்டோர்: அறியில்லை வீரச்சாவடைந்த புலிகள்: இழப்பில்லை ஆதாரம்: உதயன்: 20/05/1986 | விடுதலைப்புலிகள்: சூலை, 1986 ******
- 27 replies
-
-
- 1
-
-
- ஈழம்
- கடற்கரும்புலிகள்
- கடற்படை
- கடற்புலி
-
Tagged with:
-
கடற்புலிகளால் அழிக்கப்பட்ட, சேதப்பட்ட & கைப்பற்றப்பட்ட சிறிலங்காச் சார்புக் கடற்கலங்கள் | திரட்டு
ஒவ்வொரு மறுமொழிப் பெட்டியினுள்ளும் ஒவ்வொரு ஆண்டிலும் சிங்களக் கடற்படையுடனான கடற்சமர்களில் அவர்களின் கடற்கலங்கள் ஏதேனும் சேதப்பட்டோ மூழ்கடிக்கப்பட்டோ அல்லது கைப்பற்றப்பட்டோ இருப்பின் அக்கடற்சமர் மட்டும் பற்றிய விரிவான குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. நடந்தவொரு கடற்சமரில் சிங்களக் கடற்கலங்களுக்கு எதுவிதச் சேதமும் ஏற்படவில்லையெனில் அக்கடற்சமரின் பற்றியம் தவிர்க்கப்பட்டுள்ளது. வெகுசில கடற்சமர்கள் தொடர்பான முழுத் தகவலும் கிடைக்கப்பெற்றிருப்பதால் அவற்றிற்கான யாழ் கருத்துக்களக் கொழுவிகளும் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை சொடுக்கி முழு வரலாறையும் வாசித்தறிக. மேலும், ஈற்றில், ஒவ்வொரு ஈழப்போரிலும் சிங்களக் கடற்படை இழந்த கடற்கலங்களின் எண்ணிக்கையும் கொடுக்கப்பட்டுள்ளது. உங்களுக்குத் தேவையான ஆண்டை கீழே உள்ள பட்டியலில் சொடுக்கினால் அது உங்களை குறித்த ஆண்டுள்ள மறுமொழிப்பெட்டிக்கு எடுத்துச் செல்லும். இதன் மூலம் இவ்வாவணத்திற்கான உங்களின் அணுகல் இலகுவாகும். தேடிய அலைய வேண்டியதில்லை. 1986 1990 1991 1992 1993 1994 1995 1996 1997 1998 1999 2000 2001 2006 2007 2008 2009 இனி ஒவ்வொரு கடற்றாக்குதல்களையும் பட்டியல் வடிவில் காண்போம்.
- 27 replies
-
- ஈழம்
- கடற்கரும்புலிகள்
- கடற்படை
- கடற்புலி
-
Tagged with:
-
Super Dvora mk 2 Sri Lanka.jpg
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
Rigid Hull Inflatable Boats
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
கடற்புலிகளால் அழிக்கப்பட்ட, சேதப்பட்ட & கைப்பற்றப்பட்ட சிறிலங்காச் சார்புக் கடற்கலங்கள் | திரட்டு
சிறிலங்காக் கடற்படையின் கடற்கலங்கள் ஈழப்போரின் கடற்சமர்களில் சிங்களவரின் பல வகுப்பைச் சேர்ந்த பல கடற்கலங்கள் தொடர்ந்து மூழ்கடிக்கப்பட்டுள்ளதால் ஒரே கடற்கலத்தின் படிமத்தை மீளப் பதிவிடும் போது பதிவு நீளமாகும் என்பதால் பொதுவாக அனைத்து உட்கரைச் சுற்றுக்காவல் படகுள் மற்றும் விரைவுத் தாக்குதல் கலங்கள் ஆகியவற்றின் வகுப்புப் பெயர்களையும் படிமங்களையும் இம் மறுமொழிப் பெட்டிக்குள் பதிவிட்டுள்ளேன். இங்கே ஈழப்போரின் போது பயன்படுத்தப்பட்டவை மட்டுமே பதிவிடப்பட்டுள்ளன. இதனை ஒரு கண்ணோட்டம் விட்டுவிட்டு மேற்சென்று வாசிப்பது தகவல்களை வாசிக்கும் போது படகுகளின் படிமங்களை மனக்கண் முன் கொண்டுவந்து நிறுத்த உதவும் என்று நம்புகிறேன். உட்கரைச் சுற்றுக்காவல் கலங்கள் (Inshore Patrol Crafts):- வோட்டர் ஜெட் (Water Jet) படிமப்புரவு: Unknown இப்படிமத்தில் நீங்கள் காணும் வோட்டர் ஜெட் வகுப்புப் படகு மண்டைதீவிலிருந்து கடற்புலிகளால் கைப்பற்றப்பட்டது ஆகும் | படிமப்புரவு: Tamil Tigers சீ கார்ட் (Sea Guard) படிமப்புரவு: navy.lk கே-71 (K-71) இது சிறிலங்காக் கடற்படையிடமிருந்து கடற்புலிகளால் கைப்பற்றப்பட்ட படகாகும். படிமம் கடற்புலிகளால் பயன்படுத்தப்பட்ட போது எடுக்கப்பட்டது ஆகும். | படிமப்புரவு: Youtube.com கே-72 (K-72) படிமப்புரவு: CharithMania.Blogspot.Com வேவ் ரைடர் (Wave Rider) இவை பருத்தித்துறை துறைமுகத்தில் 2007 மே மாதம் மூழ்கிப் பின்னர் சிங்களக் கடற்படையால் மீட்டெடுக்கப்பட்ட கடற்புலிகளின் 'இந்துமதி' என்ற கலப்பெயரைக் கொண்ட வேவ் ரைடர் (கல்லப்படாதது) வகுப்புச் சண்டைப்படகினை மாதிரியாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டது. 2008 முதல் சமரிற்கு கொண்டுவரப்பட்டது . படிமப்புரவு: prokerala.com கூகர் (Couger) படிமப்புரவு: Youtube.com கரையோரச் சுற்றுக்காவல் கலங்கள் (Coastal Patrol crafts): சவட்டன் (Cheverton) படிமப்புரவு: Navypedia.org கொழும்பு டொக்யார்ட் சவட்டன் (Colombo Dockyard Cheverton) படிமப்புரவு: Navypedia.org படிமப்புரவு: Navypedia.org படிமப்புரவு: Unknown வேகத் தாக்குதல் கலங்கள் (Fast Attack Crafts):- சீ சென்ரினெல் (Sea Sentinel) இவை போன்ற தோற்றமுடிய கடற்கலங்கள் உள்நாட்டிலும் வடிவமைக்கப்பட்டுள்ளன. அவை கொழும்பு டொக்யார்ட் சீ சென்ரினெல்கள் எனப்படும். படிமப்புரவு: Unknown றினிட்டி மரைன் (Trinity Marine) படிமப்புரவு: theguardian.com சால்டாக் விதம் 2 (Shaldaq Mk-2) படிமப்புரவு: navy.lk கொழும்பு டொக்யார்ட் டோறா எ பேபி டோறா (Colombo Dockyard Dvora/ Baby Dvora) : விதம்-1, 2, 3, 4, 5 (Mark-1, 2, 3, 4, 5) இவை இசுரேலியர்களின் சால்டாக் வகுப்பு படகுகளை மாதிரியாகக்கொண்டு உள்நாட்டில் கட்டப்பட்டனவாகும். படிமப்புரவு: navy.lk டாபர் (Dabur) படிமப்புரவு: navy.lk டோறா (Dvora)/ சுப்பர் டோறா விதம்-1 (Super Dvora Mark-1) (படிமம் கிடைக்கப்பெறவில்லை) சுப்பர் டோறா விதம்-2 (Super Dvora Mark-2) படிமப்புரவு: AFP images சுப்பர் டோறா விதம்-3 (Super Dvora Mark-3) படிமப்புரவு: navy.lk கில்லர் (Killer) படிமப்புரவு: Unknown சிறப்புப் படகுச் சதளத்தின் படகுகள் (Boats of Special Boat Squadron):- இறப்பர் படகுகள் (Rubber Boats) உள்நாட்டில் கட்டப்பட்ட இறப்பர் படகுகள். படிமப்புரவு: Sri Lanka Navy அதிவிறைப்பு கலக்கூட்டு உப்பயானம்/ Rigid Hull Inflatable Boats (RHIBs) படிமப்புரவு: Sri Lanka Navy எஸ்.பி.எஸ். ஜாவலின் (SBS Javelin) படிமப்புரவு: Sri Lanka Navy அரோ (Arrow): இவை சுற்றுக்காவலுக்கும் தாக்குதலிற்கும் பாவிக்கப்படும் வேகப் படகுகளாகும். இவை தலைநகர் திருமலையில் புதைத்து வைக்கப்பட்டிருந்த கடற்புலிகளின் 16 அடி நீள மாதிரிப் படகு ஒன்றை 2006 இல் எடுத்துச்சென்று மறிநிலை பொறியியல் (reverse engineering) மூலம் உருவாக்கப்பட்டவையாகும். ஈழப்போர் முடிந்த பின்னர் இவை செட்ரிக் (Cedric) வகுப்புப் படகுகள் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு அழைக்கப்பட்டன. படிமப்புரவு: Sri Lanka Navy களவாடிச் செல்லப்பட்ட கடற்புலிகளின் படகின் வகுப்புப் பெயர் 'சுப்பர் சொனிக்' என்று அறிகிறேன். அவற்றின் படிமங்கள் இதோ: கலப்பெயர்: சிதம்பரம் (இ), ஜெயந்தன் (வ). இவை இரண்டாம் கடற்கரும்புலிகளின் நினைவாய் சூட்டப்பட்ட கலப்பெயர்கள் ஆகும். இப்படகுகளின் வெள்ளோட்டத்தின் போது இப்படிமம் எடுக்கப்பட்டிருக்கலாம் என்று துணிபுகிறேன், சிதம்பரத்தின் அணியத்தில் உள்ள மாலையை நோக்கும் போது | படிமப்புரவு: Tamil Tigers | காலம்: 1992-1995 ******
- 27 replies
-
- ஈழம்
- கடற்கரும்புலிகள்
- கடற்படை
- கடற்புலி
-
Tagged with:
-
Super Dvora Mk 3
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
Trinity Marine
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
shaldag class boat sri lankan navy
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
Baby Dvora Sri Lanka
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்