Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நன்னிச் சோழன்

கருத்துக்கள உறவுகள்+
  • Joined

  • Last visited

Everything posted by நன்னிச் சோழன்

  1. படுகொலை விரிப்புகள் அரசும் முஸ்லிம்களும் பண்டைய தமிழ் ஊரை புனிதமழிக்கின்றனர் (State and Muslims Desecrate Ancient Tamil Village) மூலம்: https://tamilnation.co/tamileelam/muslims/0305desecrate.htm வெளியிடப்பட்ட ஆண்டு: மே/சூன் 2003 மூல எழுத்தாளர்: கே.என்.தர்மலிங்கம் - நோர்த் ஈஸ்ரேன் ஹெரால்ட் மொழிபெயர்ப்பு: - “… for my father’s faith I suffered chains and courted death; That my father perished at the stake For tenets he could not forsake; And, for the same his lineal race In darkness found a dwelling place…” – Lord Byron The above stanza, quoted from the Prisoner of Chillon reflects appropriately the miseries of a race – the Tamils – trapped between state terrorism and the non-Tamil communities inhabiting the Amparai District. Of the Tamil villages in the Amparai District that were victim to violence unleashed by the Sri Lankan armed forces, the police, home guards and armed civilians, the village of Veeramunai, perhaps, suffered the most. In the final stages, even their civilian non-Tamil neighbours joined in attacks against the Tamils. The state of course failed to uphold the often-quoted constitutional safeguards available to its citizens. The Universal Declaration of Human Rights did not help the Tamils either. To comprehend the nature of the excesses committed on Veeramunai, a little peep into the history of the region would be an advantage. Veeramunai is described as the ancient capital of Nandeniya, or, ‘Naadhu-kaadu.’ The Monograph of Batticaloa says Naadhu-kaadu was once very fertile country that turned into jungle in the course of time. A ‘naadhu’ (fertile land) becomes ‘kaadu’ (jungle) and vice versa when fortunes change. Nandeniya had a pre-eminent place in the history of the east coast where human settlement is believed to have begun nearly 3000 years ago as revealed in the Mattakalappu Manmiyam. In the concatenation of events as recorded in the history of the Eastern Province, Mattakalappu Manmiyam lends support to the theory that human occupation began in Sri Lanka in much earlier times than recorded in the Pali chronicle Mahavamsa. Nandeniya, according to Mattakalappu Manmiyam, appears to have been a centre of much human activity as early as Kali Era 800. From what is evident from the Mattakalppu Manmiyam, one is unable to resist the conclusion that a community governed by a matriarchal system (claming kinship through women), existed in the Eastern Province, and Veeramunai was the centre of much activity. The people there were divided according to caste and the leading castes were the Chetty-Vellala Kudy and the Seerpathar Kudy. The present Veeramunai – a small portion of the extensive Nandeniya – is situated near the lake called Kalappu and now forms the areas of a grama sevaka division within the Sammanthurai Pattu. The region had earlier been known as Veera-munai to identify a place where a warrior clan lived, which fought for the tribe. During Portuguese times the entire east coast of the present Amparai District was known as Mattakalappu (Batticaloa) and under the rule of three vanniahs. In the beginning of the 20th century the entire region was divided into four divisions called ‘pattus:’ Karavahu Pattu-Nindoor Pattu, Sammanthurai-Naadhu Kaadhu Pattu, Akkaraipattu and Panama Pattu and these divisions were under the charge of C. Chetty Tambiah, C. D. Kadramapody and Nilamai Chinnatamby. Veeramunai lies three miles west of Karativu adjoining the present Sammanthurai village. To the north is Sorrikalmunai, while to the south and west are lush, green paddy fields. Sammanthurai derives its name from ‘Sampan,’ the vessel, and ‘Sammankaran’ who were Mohammedans from India who came to Batticaloa during the Portuguese period. When the Portuguese dominated the Western Province, General Constantine de Sa ordered Muslims inhabiting that part of the country to leave. On expulsion orders, the Muslims went to King Senarat of Kandy and sought permission to settle in his capital. The king persuaded the Muslims to go and live among the Tamils in Batticaloa (Mattakalappu). The Tamils assured the Muslims who had suffered discrimination under the insolent Portuguese of protection as well as hospitality. The Tamils, who had received the ‘pattanis’ as soldiers, accepted the Muslims who were expelled from Portuguese territory. With the passage of time the two communities established enduring friendship, mutual trust and goodwill and the Muslims succeeded in creating prosperous townships such as Kalmunai, Kattankudy, Sammanthurai, Akkaraipattu, Pottuvil, Eravur and Valaichenai centred round Tamil hamlets where trade was a matter of primacy. The Muslims who were traders when they first settled in the east later took to agriculture and industry and eventually to law, engineering, education, medicine and leadership in politics by aligning with the Federal Party. In the early years of independence, the Sammanthurai Muslim division and Veeramunai Tamil division constituted the local authority called Sammanthurai town council. In 1954 Latiff of Sammanthurai was elected chairman of the council and Manickam of Veeramunai became the vice-chairman. A private dispute between Manickam and the Muslim village headman Seenithamby Viddan arose during the festive week of the Tamil New Year in 1954. Veeramunai was set on fire. Lives and properties were destroyed. The community of farmers at Veeramunai, prosperous from birth, became paupers in a matter of minutes after the fire. For the first time in the history of the district, people were driven into the adjoining jungles to save themselves from the fury of sections of the Muslim community, which had turned against them. There were of course Muslims who shed tears at the misery of the Tamils and provided relief lavishly. Many who fled shook the dust of Veeramunai from their feet and opted never to return. They developed into smiling new villages in the jungles where they had sought refuge. The villages now known as New Town, Ganapathipuram and Veeracholai are some of these jungle-turned-villages. The residents of the new villages sold their properties in Veeramunai to Muslims and part of Veeramunai thus passed into Muslim hands. The few who returned to Veeramunai began a new chapter in their lives. Since their homes were destroyed together with their possessions, they had a penurious start. But time healed the scars of violence. Amidst the challenges of the emerging order, with militancy of the Jihad and SLMC on the one hand, and the Tamil groups – TELO, EPRLF, PLOTE and LTTE – on the other, Muslims and Tamils at Sammanthurai and Veeramunai continued to exist side by side despite strains in their relationship until 1990, when a spate of violent incidents was to flare up. The armed forces arrived at the Tamil villages of Sammanthurai Pattu in the third week of June 1990. It was explained the military was sent to destroy the ‘enemy.’ When innocent Tamils were killed and their homes looted and burnt it was understood who the ‘enemy’ was. A resident of Ganapathipuram, who was a witness said, “When the army entered the limits of Malwattai, the soldiers shot people at sight, while houses were looted and burnt. We, on hearing gunshots and seeing flames rising from burning homes, fled with our family to save the women and children. We reached the Veeramunai kovil on foot and found people from other villages had arrived at the kovil earlier. Subsequently, people from Amparai, Mallikaitivu and Sammanthurai Tamil division joined us.” A resident from Veeramunai said, “We found the soldiers were creating a climate of terror. People were picked up from their homes, on the road and their paddy fields. To escape from possible arrest and death, we went to the kovil that was made a refugee camp. I am aware that persons in the employment of the government on their way to work were seized, killed and burnt at a place called Aandhi junction.” While Tamil civilians suffered death, a government news bulletin said the state was at a war with terrorists and not against the Tamils. Contrary to the Geneva Convention (1949) declaring, “Neither civilian persons or properties shall be the object of attack,” the armed forces going on the rampage in 1990 were a reminder of the state’s brutality. Article 3 of the Universal Declaration of Human Rights proclaims to the world, “Everyone has the right to life, liberty and security of person,” but the army went on a killing spree, destroying lives and properties, which were later justified as necessary. It was also a violation of Article six of the International Covenant on Civil and Political Rights (ICCPR) that states, “Every human being has an inherent right to life.” From the remarks made by the late General Ranjan Wijeratne, the then deputy minister of defence, targeting civilian life and property at Veeramunai appears to have been given official sanction. When he visited Tirukovil, he told me that he continued to receive enquiries from the United Nations Working Group on Enforced and Involuntary Disappearances and Amnesty International about alleged enforced involuntary disappearances from Veeramunai. “I throw their letters into the wastepaper basket and collect the foreign postage stamps,” he said. The operation of the army at Veeramunai was described by a mother who said, “On 20 June (1990) at 2.00 p.m. a number of army vehicles drove into the Veeramunai temple, where thousands of people (Tamils) had taken refuge. The soldiers made an announcement through the loudspeakers requiring all males over the age of 15 to assemble in the temple courtyard. People were agitated since the refugees had left their homes because of fear of the soldiers who had gone on a killing spree there. One by one the men went out into the open space opposite the temple and stood. Women were the most disturbed and stood watching. “The soldiers entered the temple and examined the inner sanctum to ascertain whether anyone was hiding inside. They found none and began to inspect the youths standing opposite the temple. Of the number surveyed, the soldiers began picking some youths and able-bodied children and got them to board a CTB bus they had brought. The women went before the soldiers and asked them what they were trying to do. One of the officers said they were being taken for questioning and would be released after interrogation. The women pleaded with the soldiers stating that their children were never associated with any form of terrorism and that every one picked up by the army was an innocent youth. The soldiers ignored the tears of the women and started to leave the temple premises with the youths. “We fell in front of the vehicles and worshiped the soldiers to leave our boys. The officer who led the raid spoke harshly to us wailing women that he would order his men to shoot every man and women who was obstructing. The women fearing the worst, retreated and the army carried away our children. A few returned later – battered and bruised, following severe torture.” A youth who had a narrow escape from sure death after arrest, made the following statement. He said, “I was one among those arrested on 20 June from the Veeramunai temple. The soldiers having picked up a number of young men, who were refugees at the kovil, took us to the Sammanthurai Al-Marjan Muslim school where we were beaten severely without any reason. The soldiers first attacked us with gun butts and thereafter kicked us and boxed our faces. “The young men picked up at the refugee camp were later paraded before a fair, fat youthful stranger. When I was produced before him, he said “No,” and I was taken aside. I found that the stranger saying ‘Yes’ to most of the young men produced before him that evening. The people to whom he said, ‘Yes’ were taken into another building. Those who were taken aside on the pronouncement of ‘No,’ were produced before another officer who made a speech in Tamil. I was in no mood to grasp what he said. The torture I had suffered a little while before had robbed me of my strength and vitality. I could hardly keep standing as around 15 men assaulted me simultaneously. “The officer told us to get back to the kovil from where we were picked up. The others who were separated from us, we learnt were carried to a place called Malaikadu – a rocky place in shrub jungle – in army trucks and killed. Of the many picked up from the refugee camp at the kovil, only around 20 returned. “We learnt that half burnt human bodies were rotting at Malaikadu and the Muslims, unable to bear the stench of decomposing human flesh, carried several tractor loads of paddy husks to cover the rotting bodies and burnt them.” Sixty-nine persons, all civilian youths, disappeared from Veeramunai kovil, In spite of the numerous complaints made to authorities about the illegal arrests and subsequent disappearances, the state did not take any meaningful steps to identify the perpetrators or to hold an inquiry into the complaints. If the army was acting under provisions of the Emergency Regulations, they could have arrested only those who had committed an offence under ER and not innocent people. And at any rate they should not have been summarily executed. The distressing events at the Veeramunai kovil made the refugees very depressed. Eight days after the first raid, on the 29 June, the army made a similar raid on the temple at Veeramunai. Having surrounded the temple and school they ordered the men to line up at the temple courtyard. The women wept and wailed; fell at the feet at the feet of the soldiers pleading the LTTE had not infiltrated the refugee camp. But the army, regardless of their entreaties carried away 60 men in a CTB bus to Kondawattuwan army camp. The day following the second raid, the late General Ranjan Wijeratne made another hurried trip to the Amparai District, this time to Sammanthurai, accompanied by the service chiefs and police. The only Tamil member of parliament, who was representing the Tamil constituency, whom the people of Veeramunai supported at the parliamentary elections held the previous year was also present. About 125 women whose children, spouses were among the disappeared attempted to meet the deputy minister to complain about the raids on their camp, abduction of their children, and the failure of the army to follow established procedures of arrest and to know about the fate of their loved ones taken into custody from refugee camp. The women could not meet the deputy minister without the intervention of the MP on their behalf. The women approached the Tamil MP but were very disappointed when the MP was reluctant to take up their cause. Thus a good opportunity went by default. The protagonists of the crimes against the Tamils gloated over the powerlessness of the peoples’ representatives to protect the unfortunate community. Everyone felt depressed, frustrated and helpless. Some families from Malwattai, New Town and Veeramunai thought their proximity to Sammanthurai village and Kondawatuwan army camp was a threat to their security and that they could save their children from arrest if they moved to Karativu. They left Veeramunai and found accommodation at Karativu Maha Vidyalaya refugee camp. On the 4 July, two days after they were relocated at Karativu, the armed forces raided the refugee camp and carried away 11 youths. They were never seen again. The mothers who thought that they could save their children by change of location from Veeramunai to Kraitivu found to their bitter dismay that Tamils were not safe anywhere. They returned to Veeramunai after losing 11 young men.The army from Kondawattuwan headquarters made a fourth raid on Veeramunai camp in the much-dreaded ‘white van’ without number plates. It was on a warm day at noon when four persons who were resting under the shade of a tree near the camp. The army raided the Veeramunai camp once again on the 10 July and took away another 11 youths as the women wailed and wept. None of the persons were seen again.Eight women left Veeramunai refugee camp on the 16 July to inspect the homes they had abandoned a month ago consequent to the army entering the area. The women never returned, but there was evidence to show that the army at Malwattai seized them.On the 26 July the army raided the Veeramunai kovil once again and carried away several youths. Once again the government failed to account for all those whom the army took into its custody. Records maintained at HHR reveal carried away 32 teenagers, of who 23 were school going and nine school dropouts on that particular day. Nothing was ever heard of them. Eight highly qualified schoolteachers from Veeramunai also disappeared after being taken into custody by the Sri Lanka army. The army picked them up on the road while they were journeying with their families, including little children, according to statements recorded. No action was taken on the complaints made and the police too could be considered as aiding and betting the enforced disappearances. Speaking about disappearances of school children, one is reminded of a similar occurrence at Embilipitiya in 1989 during the height of the JVP insurrection of the late 1980s. Political leaders, the press, human rights activists and even members of parliament brought intense pressure to bear on the government on the disappearance of 32 school children and those responsible for the abduction were brought before the law. However, when the disappearance of schoolchildren at Veeramunai was reported together with eight teachers, the state took no action, nor did civil society. Apart from discrimination, it goes to prove that an arm of the state, which should provide safety and security to the citizens, engaged in acts of genocide. The second raid made with a white van on Veeramunai camp was on 22 July, where the police and home guards allegedly carried away Jayenthiran (20) N. Wigneswaran (36) and N. Kopalan, father of five. The raids forced inmates of the refugee camp to be confined like prisoners for the sake of security. They could not go out and any person who ventured out paid the price with death. Several more disappeared (presumably killed) in July 1990. On 26 July, Arumugam Kandasamy (23) disappeared. On 29 July Sinnathurai Kaalikutty (47) and Masilamany Dharmalingam (43) who went to inspect their houses disappeared. Kaathamuthu Shanmuganathan (41) who visited his home was found dead inside with gunshot injuries. Maruthanis Selvarasa (42), a farmer, Thangarasa Kaneshan (22), a farmer, Arumugam Theiveindran (34), a carpenter and a father of three and Alagiah Siva (34), a farmer, disappeared on 8 August after the army took them into custody. On the 11 August 18 persons, including four women and one child went along Chavalakade road to Navithanvelly to collect food. The soldiers, police and home guards seized them, while they were going through Chavalakade. The 18 were attacked with knives, dismembered and burnt inside the temple at Chavalakade. The home guards are accused of desecrating the place of worship. On the 12 August, around 10 o’clock in the forenoon, an armed gang, carrying guns, knives, swords and crowbars broke into the refugee camps in the kovil and school and began attacking the inmates. One group opened fire at a section of the camp’s inmates that included women and children, while another group attacked other refugees with knives and swords. The refugees told me they never anticipated such brutality from the Muslims of Sammanthurai. When victims were felled by gun and sword, the injured and the others raised cries rather than fight back. Despite the sounds of gunshots and cries of the hapless, the police did not respond. Females A. Sinnapillai (50), A. Valliammah (52) A. Shubashini (17), a GCE student; males U. Nadarajah (5), K. Vellayan (7), both children, S. Manickam (35), R. Mylvaganam (50) K. Sivalingam (48) and Tambimuthu Sinthathurai (52), a VIP of the area who was also the chief trustee of the temple were among those killed on that fateful day. The refugees allege (and there is strong evidence to corroborate this) that the law enforcement authorities and other government officers were biased favourably towards the attackers and did not respond to the cries of alarm from the refugees. It took nearly half to one hour for the STF to arrive at the scene of the tragedy. The witnesses named the persons who attacked the refugees killing 10 and injuring several. However the police have failed to take appropriate action up to now.The injured were rushed to the Sammanthurai hospital but the hospital refused to admit them on the grounds the injured were Tamils and the perpetrators Muslims. When Sammanthurai hospital refused to admit the injured, despite imminent danger to their lives, a risk was taken by the relatives of the wounded to have the victims admitted to the Amparai hospital. Of the seven admitted to that hospital, three injured persons disappeared from the hospital wards, apparently with the connivance of the armed forces. When stories surfaced that the injured had been abducted and burnt alive in the Amparai cemetery, the remaining four sensing the danger to their lives fled from the hospital stealthily at night and reached Veeramunai. The injured who disappeared from the Amparai hospital include Kandiah Nadarajah of Malwattai, and Vallipuram Kandasamy of Veeramunai.The Department of Health failed to inquire into the involuntary disappearances of the three injured persons. The dead were buried and the people of Veeramunai, Malwattai, Mallikaitivu, New Town, Ganapathipuram, Walathapitty, and Sammanthurai were taken to Tambiluvil in STF trucks and a refugee camp was established for the displaced at the Tambiluvil Madhya Maha Vidiyalayam. The STF based at Tirukovil provided food and medicine to the affected people until the government issued them dry-rations. Tamils of Veeramunai were expelled from their homes. They lost their houses, their possessions, their livelihood, their children and their breadwinners. In the course of expelling the Tamils from Veeramunai, 600 houses were destroyed; an estimated 1352 houses were destroyed in the neighbouring villages. The people of Veeramunai were thus forced to leave the village where their forefathers founded a kingdom and a capital 3000 years before. In his ‘The theory of Force’ spelt out in 1080, Pope Gregory VII describes, “The subjugation of the weaker by the stronger through wars… brings power to the triumphant. Kings and Lords, ignorant of God, by arrogance, rapine, perfidy, slaughter, by every crime with every devil … have contrived to rule over their fellowmen.” By arrogance, rapine, perfidy and slaughter did government forces and the Muslims of the area contrive to impose hegemony over their Tamil brethren in Veeramunai, while slowly and systematically destroying the livelihoods and homes of those unfortunate people, which are the bases of civilised community, for a second time in the space of 40 years. A woman who lost her son told me, “We left our home in Malwattai to save our skins. But the hope of our life is lost, our home is lost and our goods looted by the army. We have actually lost everything.” ***** தொகுப்பாளர் குறிப்பு: இத்தாக்குதல் தொடர்பான விரிவான தகவல்கள் முஸ்லிம்களால் எழுதப்பட்ட "ஈழத்தின் இன்னுமொரு மூலை" (ஓகஸ்ட், 1992) என்ற நூலின் மூன்றாவது அலகில் உள்ளது. அவ்வலகில் வீரமுனை எரிக்கப்பட்டது சரியென்ற வாதத்தில் முஸ்லிம்களால் எழுதப்பட்டிருப்பது எரியும் நெருப்பில் எண்ணை ஊற்றி வளர்ப்பது போலுண்டு. எனினும் அப்போது இது இனச்சிக்கலென்ற வகையில் எரிக்கப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது. தமிழர் தரப்பில் "ராஜாபதி" என்பார் "தீயுண்ட வீரமுனை" (1954) என்ற நூலில் இக்கலவரம் தொடர்பில் கவிபாடியுள்ளார்.
  2. 1990இற்கு முன்னர் தமிழர்கள் மீது முஸ்லிம் காடையர்களால் தென் தமிழீழத்தில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் மற்றும் விரட்டியடிப்புகளின் பட்டியல், திகதி வாரியாக மூலம்: முஸ்லிம்களால் அபகரிக்கப்பட்ட தமிழரின் கிழக்கு மாகாண நிலங்கள் | பாகம் - 1, 2, 3, மார்க்கண்டு தேவராஜா New Year’s Bloody Dawn: Karativu 1985, K.N.Tharmalingam AMPARAI MASSACRE, Anti-Tamil pogroms and killings (via tchr.net) வீரமுனை (சம்மாந்துறை, மட்டக்களப்பு) - 1954 ஏப்ரல் 15,16 மற்றும் 1958 கரவாகு/ சாய்ந்தமருது தமிழ் பிரிவு (புதிய பெயர்: கல்முனைக்குடி | கல்முனை, அம்பாறை) - 1967 மீனோடைக்கட்டு (அட்டாளைச்சேனை, அம்பாறை) - 1978 மற்றும் 1985.07.12 மீராவோடை (வாழைச்சேனை, மட்டக்களப்பு) - 1983 உப்பாறு (கிண்ணியா, திருமலை) - 1983, 1985 ஏறாவூர் (ஏறாவூர்பற்று, மட்டக்களப்பு) - 1983 சூன் மற்றும் 1985 சூன் தியாவட்டவான் (கோறளைப்பற்று மத்தி, வாழைச்சேனை, மட்டக்களப்பு) - 1983 ஓகஸ்ட் மற்றும் 1985 ஓட்டமாவடி (மட்டக்களப்பு) - 1983 மற்றும் 1985 காரைதீவு (அம்பாறை) - 1985 ஏப்ரல் 12 - 14 திராய்க்கேணி (அட்டாளைச்சேனை, அம்பாறை) - 1985 கிண்ணியா (கிண்ணியா, திருமலை) - 1986.05.04 (மேலதிக திருகோணமலை மாவட்டத் தகவல்கள் சேகரித்து வருகிறேன்) முஸ்லிம் ஜிகாத் மட்டும் பங்கேற்றது: உடும்பன்குளம் (அக்கரைப்பற்று, அம்பாறை) - 1986 பெப்ரவரி 19 *****
  3. கட்டுரை இரத்தமும் சதையும் உயிருமாக தென் தமிழீழத்து வாழ்வு மூலம்: குரல் 46, பக்கம் 8 & 11, விடுதலைப்புலிகள் இதழ் வெளியிடப்பட்ட ஆண்டு: மாசி 1994 எழுத்துணரியாக்கம்: நன்னிச் சோழன் மன்னம்பிட்டி ஒரு சிறிய கிராமம். பொலநறுவை மாவட்டத்தின் எல்லையோடு அது அமைந்துள்ளது. பிரதான வீதியில் ஒரு பக்கம் சிங்களக் கிராமத்தையும், அடுத்த பக்கம் ஒரு முஸ்லிம் கிராமத்தையும் கொண்டிருந்த தமிழ் ஊர் அது. 1992 ஆம் ஆண்டின் துவக்கப் பகுதியில் ஓர் இரவு. சனங்கள்கள் உறங்கினார்களோ இல்லையோ ஊர் பேச்சுமூச்சற்றுக் கிடந்தது. சிங்கள - முஸ்லீம் காடையர்களோடு, இராணுவத்தினர் இரு பக்கங்களாலும் நுழைந்தனர். துப்பாக்கிகளைவிட அவர்களுக்கு அதிகம் பிடித்தமான சுத்திகள், பொல்லுகள், வாள்கள், அலவாங்குகள் கைகளில் கிடந்தன. நாய்களின் வெறித்தனமான குரைப்பு ஊரைத் துடித்தெழச் செய்தது. அன்று நடந்த கோரத்தின் அதிர்ச்சியிலிருந்து இன்றும் மீளாத ஒரு சிறுவன் எரிந்து சாம்பரான அந்த இரவின் கதையைச் சொன்னான் - தாய்மாரைக் கட்டிப்பிடித்தபடி ஆழ்ந்து தூங்கிய பச்சிளங் குழந்தைகளை, கால்களில் படித்து பிடுங்கி இழுத்தார்கள். பதறி எழுந்து "ஐயோ!...... என் குழந்தை ......" அன்னை சொல்லி முடிக்கமுன், வீறிட்டுக்கத்திய மழலையின் பிஞ்சு முகத்தைச் சுவரோடு ஓங்கி அறைந்து சிதறடித்து, "இந்தா... பிடி......" எனத் தாயின் மடியில் எறிந்துவிட்டுப் போனார்கள். கணவனைத் தூக்கி இழுத்து பெற்றோலைத் தலையில் ஊற்றித் தீப்பெட்டியைத் தட்டியபோது, "ஐயோ...அவரை விடுங்கோ.." எனக் கதறியோடிவந்து கட்டிப்பிடித்த துணைவியையும் சேர்த்துக் கட்டி, "நீயும் அவரோடயே போ......" என்று தீ மூட்டிய வெறியர்கள், மரண ஓலமிட்டு - துடித்துத் துடித்து மெல்ல அடங்கி கருகி முடியும்வரை கும்மாளமிட்டுச் சிரித்தார்கள். பயந்தொடுங்கி, பெற்றோருக்கிடையில் பதுங்கி ஒளித்த பெண்பிள்ளைகளை வெளியில் இழுத்தார்கள். பெற்றவர்கள் பார்த்து நிற்கவே, உடைகளைக் கிழித்தெறிந்தார்கள். உடல் சோர்ந்து, உணர்வு சோர்ந்து, உயிர் சோர்ந்து சாகும்வரை அவர்கள்மீது காமவெறியாடிய காடையர் கூட்டம் போகும்போது பிள்ளைகளின் பிணத்தைத் தூக்கிப் பெற்றவர்களின் கையில் கொடுத்துவிட்டு, எக்காளச் சிரிப்போடு வெளியேறியது. மூன்று நாட்கள் நரவேட்டைக்குப் பிறகு - வயல்கள், வீடுகள், குடிசைகள், ஆலயம், பாடசாலை என - அந்தச் சின்னக் கிராமம் முற்றிலுமாகக் கருகிப்போய்க் கிடந்தது. மனித சஞ்சாரமே அற்று மன்னம்பிட்டி வெறிச்சோடிப் போயிருந்தது. வீதிகளில் இழுபட்ட பிணங்களை நாய்கள் நரிகளோடு, பறவைசுளும் உணவாக்கின. துல்லியமான புள்ளிவிபரங்கள் இல்லையாயினும், கொல்லப்பட்டவர்களது தொகை 250 இற்கும் அதிகம் என்பது பிழைக்காது. இத்தொகை 450- 500 வரைகூட இருக்கலாம். 1500 குடும்பங்கள் வரை வாழ்ந்த அந்தக் கிராமத்தின் அத்தனை குடிகளும் விரட்டியடிக்கப்பட்டனர். பாடசாலையின் தளபாடங்களை முஸ்லிம் சிங்கள அயல் கிராமங்கள் பங்கிட்டுக்கொண்டன. வீடுகளை உடைத்து கதவுகள், சாளரங்கள், ஓடுகளைச் சேதாரமில்லாமல் கழற்றி பத்திரமாக எடுத்து, பக்கத்துக் கிராம வீடுகளுக்காக வாகனங்கள் ஏற்றிச் சென்றன. மேனி உருக்கிச் சேனை செய்து எம்மக்கள் சேர்த்து வைத்த நெல்மூடைகள், உழவு இயந்திரத் தொடுப்பிகளில் அடக்கி அப்புறப்படுத்தப்பட்டன. கொண்டுசெல்ல வசதியற்று எஞ்சிய பொருட்கள் எல்லாம் நெருப்புக்குக் கொடுக்கப்பட்டன. அறுவடைக்குத் தயாராயிருந்த வயல்களின் வரம்புகளைத் தாவிக்கடந்த படை வண்டிகள், 'சூடடித்து' விட்டுப்போயின. பரிபூரணமான ஒரு ஊரழிப்பு நடந்து முடிந்தது. மன்னம்பிட்டி ஒரு உதாரணம் மட்டும் தான். திருக்கோணமலைத் துவக்கத்தில் சாம்பல்தீவிலிருந்து, மட்டக்களப்பின் வாகரை, வாழைச் சேனை, கிரானுக்கூடாக அம்பாறைத் தொங்கலில் வீரமுனைவரை இதுதான் நடந்தது; இப்போதும் நடந்துகொண்டிருக்கிறது. எந்தக் கிராமமும் எந்த நேரத்திலும் வேட்டை சிங்கள தேசத்துப் படைகளின் கைகளில், எங்கள் தாயகத்தின் தென்பிராந்தியம் துவண்டு போய்க் கிடக்கின்றது. கல்லாறைச் சேர்ந்த அவருடைய பெயர் இராசன். அவர் ஒரு கடற்றொழிலாளி. ஒரு நள்ளிரவுப் பொழுதில் வந்தவர்கள் தட்டி எழுப்பிக் கூட்டிப் போனார்கள். தேடாத இடமில்லை; தேடியும் ஆளில்லை: என்றானபின் ஒரு நாள் - "75,000 ரூபா. பணத்தோடு வந்து ஆளைக் கூட்டிச்செல்லவும்." ரெலோ முகாமிலிருந்து தகவல்வந்தது. இருந்ததையெல்லாம் ' வித்துச் சுட்டும்' சேர்ந்தது 15, 000 ரூபா மட்டும்தான். "இதை வச்சுக்கொண்டு ஆளை விடுங்கோ" என்று மன்றாடிக் கெஞ்சியவர்களிடம் பணத்தை வாங்கிக்கொண்டு, "நீங்கள் போங்கோ; ஆளை அனுப்பிவிடுகிறம்" என்றான் ஒரு ரெலோக்காரன். வாரமொன்று போயும் வராத ஆளைத் தேடி 'ரெலோ' முகாம் போய் ஏனென்று கேட்டபோது, "நீங்கள் பணம் கொடுத்தது யாருக்கென்று எனக்குத் தெரியாது. பிடித்து வந்தது நான்தான். சொல்லி அனுப்பியதைப் போல 75,000 ரூபா தந்துவிட்டு ஆளைக்கொண்டு போங்கோ" என்றான் அங்கிருந்த இன்னொரு 'ரெலோ'க்காரன். போனவர்கள் விக்கித்துப் போனார்கள். கத்தினார்கள்; கதறினார்கள்; ஒவ்வொரு சதம் காசுக்கும் பாடுபடும் தங்கள் வறுமை நிலையைச் சொல்லி அழுதார்கள். கரைந்து போனது கண்ணீர்தான்; அந்தக் கல்நெஞ்சங்களில்லை. திரும்பிப் போகும் போது. "75,000 " - ஞாபகப்படுத்தி அனுப்பிவிட்டார்கள். ஊர்க்காரரிடம் கடன் வாங்கி, உறவுக்காரரிடம் கடன்வாங்கி, கையிலிருந்த காணியையும் விற்று, வீட்டிலிருந்த எல்லாவற்றையும் விற்று குறிப்பிட்ட தொகையோடு முகாமிற்கு ஓடினார்கள். எண்ணி வாங்கிக்கொண்ட 'ரெலோ'க்காரன், "வீட்டுக்குப் போங்கோ; ஆள் வருவார்" என்றான். நம்ப முடியவில்லைத் தான்; மாற்று வழியுமில்லையே. நாள் நகர்ந்தது; ஆனால், ஆள் வரவில்லை. வராத ஆளைத்தேடி முகாமிற்கு ஓடினார்கள். அலுவலக மேசையில்- எதையோ - எழுதிக்கொண்டு "வேலையில் மூழ்கிப்போய் இருப்பவராய்" இருந்த ' ரெலோ' அதிகாரி, குனிந்த தலை நிமிராமல் எழுதிக் கொண்டே சொன்னார் - "நாங்கள் அவரை அனுப்பவேண்டிய இடத்திற்கு அனுப்பீட்டம். நீங்கள் அவருக்குச் செய்ய வேண்டியதுகளைச் செய்யுங்கோ!" இது ஒரு உதாரணம் அவருடைய பெயர் இராசையா. கொக்கட்டிச் சோலை முனைக்காட்டைச் சேர்ந்தவர். 7 பிள்ளைகளின் தந்தையான அவருச்குச் சிறிய கடை ஒன்றிலிருந்து மட்டும்தான் வருமானம். ரெலோ கும்பல் ஒரு லட்சம் ரூபா கேட்டது; மிரட்டியது. வேறு வழியற்ற நிலையில் குறித்த தொகையைச் செலுத்தினார்: பற்றுச்சீட்டும் பெற்றிருந்தார். இன்னொரு இரவு - திரும்பவும் வந்து - அவரைப் பிடித்துக்கொண்டு போனவர்கள், இம்முறை பணத்தோடு, அவரது மகளையும் கொண்டுவரச் சொல்லித் திருப்பி அனுப்பி விட்டார்கள். நிலைமை சிக்கலானது. 'ரெலோ'க் காரர்கள் அடிக்கடி வந்தார்கள்; "சொன்னவற்றைக் கொண்டு வா" மிரட்டினார்கள். - பெரிய இழுபறி நடந்தது. வெளிநாடுகளுக்கோ, அல்லது வேறு மாவட்டத்திற்கோ ஓடி விடுமாறு ஊரவர்கள் ஆலோசனை சொன்னார்கள். ஆனால், எதுவரினும் எம் நிலம் விட்டு அசையோம், என அங்கேயே குடியிருந்தது குடும்பம். இராசையா அவர்களையும், துணைவியாரையும். மகளையும், இரண்டு மகன்களையும் தவிர ஏனையவர்களை மட்டுமே அவர்களால் உயிரோடு காக்க முடிந்தது. இது இன்னொரு உதாரணம். இதேபோன்று ஆயிரக்கணக்கில் நடந்த சம்பவங்களின் துயரங்களை இந்தப் பிராந்திய மக்கள் கதைகதையாகச் சொல்கின்றார்கள். ஆட்களைக் கடத்திப் பணயம் வைத்துப் பணத் தைக் கேட்பதும், முடிவில் - ஆட்களையும் கொன்று பணத்தையும் கொள்ளையிடுவதும் வழமையாகிவிட்டது. எங்காவது ஒரு இடத்தில் இது எந்நாளும் நடக்கும்; தொகை மாத்திரம் மாறுபடும். கடத்துகின்றவனின் தேவைவைக்கேற்பவும், கடத்தப்படுகின்றவர்களின் பொருளாதாரப் பின்னணியைப் பொறுத்தும் - தீர்மானிக்கப்படும் பணயத்தொகையின் அளவு - ஐம்பதாயிரத்திலிருந்து இலட்சக்கணக்கில் உயர்ந்து செல்லும். மாலை 6.00 மணிக்குப் பிறகு, "வீடுகளுக்கு வெளியே தலைக்கறுப்புத் தெரியக் கூடாது" என்பது இங்கு சட்டம்; கட்டளை. என்னதான் உயிர்போகிற காரியமாக இருந்தாலும், மீறினால் உயிர்போகும். கருக்கல் பொழுதுகளில் போனவர்கள் " காணமல் போனவர்களாய்" போய்விடுவார்கள்; அல்லது, கண்ட துண்டமாகக் காலையில் மீட்கப்படுவார்கள். 'மயான அமைதி' என்பதின் மிகச்சரியான அர்த்தத்தை தென் தமிழீழத்து இரவுகளில் உணரலாம். இரவின் நிசப்தம் பயங்கரமானதாக இருக்கும். எந்த வீட்டிற்குள்ளும் எந்த நேரத்திலும் அவர்கள் நுழைவார்கள். அங்கிருக்கும் எவரையும் எந்தக் காரணத்தைச் சாட்டியும் இழுத்துச் செல்வார்கள். அப்படிக் கொண்டு செல்லப்பட்டவர்கள் வந்ததில்லை; வருவார்கள் என்ற நம்பிக்கை வீட்டிலுமில்லை. " ஊரவங்க ஆராவது அவசரத்துக்கு வந்து கூப்பிட்டாலே, ' அவங்க தானோ?' எண்டு நெஞ்சு விறைச்சுப் போகும். எங்காச்சும் நாய் குலைச்சாலோ 'அவங்க தான் வர்றாங்களோ?' எண்டு பயம்மா இருக்கும்... நம்ம சனங்கள் நிம்மதியாத் தூங்கி நாலு வருசமாச்சு மகனே" என்றார், வந்தாறுமூலையைச் சேர்ந்த நான்கு போராளிகளின் தாய் ஒருவர். 'பெண்டுகள் சேனை'யைச் சேர்ந்த - பூநகரிச் சமரில் களப்பலியாகிவிட்ட ஒரு புலிவீரனின் - தாயார் சொன்னார், "விடியத்தால பாத்தா, ஆரிடையெண்டு அறியேலாத விதமா மனுசப் புணங்கள் தெருவோரத்திலையோ, ஆத்து மேட்டிலையோ கெடக்கும். தலையிருக்காது, கண்ணிருக்காது மண்டையப் பொளந்திருப்பாங்க ச்சீ.... ... அது ஒரு நரக வாழ்க்க.......' எந்த நேரத்தில் எவருக்கு என்ன நடக்கும் என்பதை ஊகிக்க முடியாது. எப்போதும், எவரும், என்ன விதமாகவும் கொல்லப்படுவார்கள். காலையில் கண்டு கதைத்துவிட்டுப் போனவர், மதியத்திற்குள் கழுத்தறுபட்டுக் கிடப்பார். கொல்லப்படுவதற்குக் காரணங்கள் சொல்லப்படுவதில்லை. வேறிடமென்றால் செத்துக்கிடக்கும் தெரு நாயை அப்புறப்படுத்தக்கூட ஆளிருக்கும். ஆனால் இங்கு ... ஊரோரம் இரண்டு உடல்கள் கிடப்பதை எல்லோரும் காணுவார்கள்: நரி, காகம், நாய்கூடத் தின்றுவிட்டுப் போகும். ஆனால், யாரும் தொடமுடியாது. உரித்தானவர்கள் மட்டுமே எடுத்துச்சென்று, வீட்டார் மட்டுமே சடங்கு செய்து, ஊரார் கூடாமல் அடக்கம் செய்ய வேண்டும். பக்கத்து வீட்டுக்காரர் எட்டிப்பார்த்தால்கூட, "இந்தக் கண்ணாலதானே பார்த்தாய்" என்று தோண்டி எடுத்துக்கொண்டு போய்விடுவார்கள்; அல்லது "இந்தக் கையாலதானே தூக்கினாய் " என்று வெட்டிக்கொண்டு போய்விடுவார்கள். "பொம்பிளைப் பிள்ளையள வீடுகளில் வைச்சிருக்கிறதைப் போல பயங்கரம் வேறையில்ல மகன். அது பெரிய சீரழிவு" என்று ... சினந்துகொண்டார், பெரிய கல்லாறைச் சேர்ந்த இரண்டு பெண் போராளிகளின் தாய் ஒருவர். பாடசாலை முடிகிற நேரம் இலக்கத்தகடில்லாத ஒரு வெள்ளை நிற 'வான்' வீதிக்கு வரும். சிங்கள - முஸ்லிம் ஆயுதபாணிகளோடு துரோகக் கும்பல் ஆட்களும் உள்ளே இருப்பார்கள். பள்ளிக்கூடத்திலிருந்து வீடு செல்லும் பெண் பிள்ளைகள் தெரிவுசெய்து தூக்கிப் போடப்படுவார்கள். வீதியால் வரும் இளவயதுப் பெண்களைப் பார்த்து, முகாம்களின் வாசலில் பல்லிளித்துக் கொண்டு நிற்கும் கூட்டம் நள்ளிரவில் வீடுகளுக்குள் புகுந்து இழுத்துக்கொண்டு போகும். வீதிச் சோதனைக்காக நிறுத்தப்படும் பயணி ஊர்திகளிலிருந்து பெண்கள் இழுத்திறக்கப்படுவார்கள். இவற்றுக்கெல்லாம் ஏன்? எதற்கு? - எங்கே? என்ற கேள்விகளுக்கு இடமில்லை. அப்படிக் கொண்டுசெல்லப்படுபவர்களில் அநேகமானவர்கள் வருவதில்லை; வந்தவர்களுக்கு மனநிலை சரியில்லை. இன்னும் சிலர் - உடைகளற்ற உடலில் நகங்களும், பற்களும் பதிந்த கொடூரமான காயங்களோடு - ஊருக்கு வெளியே உயிரற்று மீட்கப்பட்டார்கள். பெற்றவர்களுக்கு முன்னால், கணவன்மார்களுக்கு முன்னால் உடன் பிறந்தவர்களுக்கு முன்னால், ஊரவர்களுக்கு முன்னால்கூட, காடையர் கூட்டத்தின் காமவெறிக்குப் பலியாக்கப்பட்ட பெண்பிள்ளைகள் பலர். வெலுக்காக் கண்டிக்கு அருகில் மூங்கில்மலை சுற்றிவளைக்கப்பட்டபோது, திருமணமாகி ஒரு வாரம்கூட ஆகியிருக்காத சின்னவன் - கமலா தம்பதிகளில், கணவனுக்கு முன்னால் மனைவிக்கு நடந்தது, அவற்றுள் ஒரு சம்பவம். தென் தமிழீழத்தின் ஒவ்வொரு அங்குல நிலத்திலும், மிகப் பெரிய துயரம் படிந்து கிடக்கின்றது. அங்கு வாழும் ஒவ்வொரு தமிழனுக்குப் பின்னாலும், சொல்லில் அடங்காத சோகம் இருக்கின்றது. மன்னம்பிட்டியிலிருந்து வெள்ளை வானில் ஏற்றிச் செல்லப்பட்டு, உமித்திடலில் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட கணக்கற்ற தமிழர்கள் - கொக்கட்டிச்சோலை உடும்பன்குளத்தில் கல்லில் வைத்துப் படுக்கச் சொல்லி, தலையில் பாறாங்கல்லால் அடித்துச் சிதறடிக்கப்பட்ட மூன்று இளைஞர்கள்- 'ரெலோ'க் காரர்கள் பிடித்துக்கொடுத்துப் பார்த்து நிற்க, முஸ்லிம் காடையர்கள் பாலியல் வன்முறையால் உயிர்பிரியச் செய்த, ஆரையம்பதியைச் சேர்ந்த விஜி என்ற 9 ஆம் வகுப்பு மாணவி - செங்கலடியிலிருந்து புல்லுமலைக்கு நகர்ந்த சிங்களப்படை வெலுக்காக்கண்டிக்குள் நுழைந்த போது,''ஆமி வாறான்" என்ற குரல் கேட்டு "ஆமியா... .. .. .." என ஏங்கிய போது மூச்சு நின்ற பூரணிக் கிழவி. அக்கரைப்பற்று சின்னப்பள்ளி எனுமிடத் தில், முஸ்லிம்கள் காரில் கட்டி இழுத்து நாராய்க் கிழித்த தனபால்- பெரியகல்லாறு தேவாலயத்திற்கு முன்னால் சதைக்கும்பமாக வெட்டிக் குவிக்கப்பட்டிருந்த 35 ஆண்களுக்குள் அடங்கிய, இரு கண்களும் பார்வையிழந்த ஒரு தந்தை கன்னன்குடாவுக்கு அருகில் கடுக்காமுனை எனும் இடத்தில் கிணற்றுக்குள் இறக்கிவிட்டு கல்லுகளால் தூக்கி எறிந்தே கொலை செய்யப்பட்ட பேர்தெரியாத 4 இளைஞர்கள் - ஊரைவிட்டு ஓடும்படி சிங்களப்படை மிரட்டியபோது, காலாதி காலமாக நான் குடியிருந்த நிலத்தை விட்டு- கணவனோடு நான் களித்து வாழ்ந்த குடிசை விட்டு - எழேன் என்றதற்காக, படுத்தபடுக்கையிலேயே சாக்குக் கட்டுகளைப் போட்டு, மண்ணெய் ஊற்றி, குடிசையோடு எரித்துச் சாம்பராக்கப்பட்ட 80 வயது மணி ஆச்சி - இலுப்பையடிச் சேனையில் திருமணமாகிய அடுத்த நாளே, ஒன்றாகச் சேர்த்துக் கட்டி விட்டு ரயர் மாலை போட்டுக் கருக்கப்பட்ட புதுத்தம்பதிகள் - மட்டக்களப்பு நகரிலிருந்து, இலக்கத்தகடில்லாத வெள்ளை வானில் கடத்திச் செல்லப்பட்டு கண்களைத் தோண்டிவிட்டு, சாக்குகளில் கட்டி ஆற்றுக்குள் போடப்பட்ட ஏராளமான மாணவர்கள்- கல்முனையில் - தாங்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கிவிட்டு, நகரின் மத்தியில் உடைகளைந்து நிற்க வைத்து, முஸ்லிம்கள் கற்களால் எறிந்தே தங்கள் மதமுறைத் தண்டனையை நிறைவேற்றிய 16 வயதுச் சிறுமி - இடித்துக் கொல்லக் கலைத்து வந்த கவச வண்டிக்குத் தப்ப ஓடுகையில், சில்லுக்குள் அகப்பட்ட சேலையை அவிழ்த்துவிட்டும் ஓடும் போது, நடுவீதியிலேயே கவச வண்டியால் துரத்தி ஏற்றி நசுக்கப்பட்ட பாடசாலை ஆசிரியை - உடும்பன்குளத்தில், புல்லுமலையில், மகிழடித்தீவில், காத்தான்குடியில், அம்பாறை 'சென்ரல் காம்ப் ' பில், வீரமுனையில், களுவாஞ்சிக்குடியில், பனிச்சங்கேணியில், முதலிக் குளத்தில், திருக்கோவிலில், கிளிவெட்டியில், திருக்கோவிலில், சாய்ந்தமருதுவில், சாம்பல்தீவில் என ஒவ்வொரு கிராமத்திலும் - 100, 200, 300 என - கூட்டம் கூட்டமாகவும், சிறுசிறு தொகைகளிலும், தனித்தனியாகவும் படுகொலைசெய்து குவிக்கப்பட்ட ஏறக்குறைய 15,000 வரையிலான எமதினிய மக்கள் - இவர்கள் எல்லோரும் எங்கள் தாயகத்துக்கு உரமாகப்போனவர்கள். தமிழீழத்தின் விடுதலைப் போராட்டத்திற்கு, அதன் தென் பிராந்தியம் செலுத்திய விலை மிகமிக அதிகம். படுவான்கரையைச் சேர்ந்தவரும், லொறி ஓட்டுநரும் இரண்டு பிள்ளைகளைப் போராட அனுப்பிவிட்ட தந்தையுமான ஒருவர் கீழே உள்ளதைச் சொன்னார் - "40 வருடங்களாக நாங்கள் முயற்சி செய்துவிட்டோம்: முடியவில்லை. அதைவிட மேலாக - இந்த நான்கு வருடங்களுக்குள் நிறையத் துன்பப்பட்டுவிட்டோம்; நன்றாகப் படித்து விட்டோம். இனி எப்போதும் சிங்களவர்களோடு சேர்ந்து வாழ்வதைப்பற்றி நாங்கள் சிந்திக்கவே முடியாது." *****
  4. கட்டுரை தமிழீழ விடுதலைப் போராட்டமும் தமிழீழ முஸ்லிம்களும் மூலம்: குரல் 30, பக்கம் 4, 5, 10 & 11, விடுதலைப்புலிகள் இதழ் வெளியிடப்பட்ட ஆண்டு: வைகாசி-ஆனி 1992 எழுத்துணரியாக்கம்: நன்னிச் சோழன் தமிழ் பேசும் மக்கள் என்ற வகையில் தமிழர்களைப் போன்றே முஸ்லிம்களும் அரசியல் - பொருளாதார - சமூக ரீதியில் சிங்களப் பேரினவாதத்தால் அடக்கப்படுகின்றனர், இவ் அடக்குமுறையிலிருந்து விடுதலை அடைவதற்காக தமிழ் பேசும் மக்கள் தங்கள் தாயக பூமியில் ஒரு தனியரசை அமைக்க ஆயுதப் போராட்டத்தை நடாத்தி வருகின்றனர். சிங்களப் பேரினவாதத்தின் சூழ்ச்சி இப்போராட்டத்தில் முஸ்லிம் மக்களை இணையவிடாது தடுப்பதில் சிங்களப் பேரினவாதம் பல சூழ்ச்சிகளையும் , சதிகளையும் செய்து வருகின்றது. இவ்வித சதி அரசியலில் ஈடுபடுவதற்குப் பிரதான காரணம் ஒன்றுண்டு. அதாவது , தமிழ் - முஸ்லிம் மக்களின் இணைவு போராட்டத்திற்கு அதிக வலிமை சேர்க்கும் என்பதுடன், உலக முஸ்லிம் நாடுகளின் ஆதரவையும் உதவியையும் போராட்டம் பெறுவதானது அதன் வெற்றியை உறுதிப்படுத்திவிடும். இவை சிங்களப் பேரினவாதத்தின் நோக்கங்களுக்குக் குந்தகமாக அமையும். ஆகவேதான், முஸ்லிம்களை இப் போராட்டத்திலிருந்து பிரித்து வைக்கச் சிங்களப் பேரினவாதம் காலங்காலமாகப் பல சூழ்ச்சிகளைச் செய்துவருகின்றது. சிங்களப் பேரினவாதத்தைப் பொறுத்தவரை தென் தமிழீழத்தை அதாவது கிழக்கு மாகாணத்தைத் தமிழர்களிடமிருந்து அபகரித்து அதைச் சிங்களமயமாக்குவதுதான் அதன் பிரதான இனவாதத்திட்டமாகும். கிழக்கு மாகாணத்தில் தமிழர்களும் முஸ்லிம்களும் இணைந்து நின்றால், சிங்களப் பேரினவாதத்தின் எண்ணம் ஈடேறமாட்டாது. எனவே முஸ்லிம்களை தமிழர்களிடமிருந்து பிரித்துத் தன்னுடன் இணைத்து, தமிழர்களுக்கெதிராகப் போர்புரியச் சூழ்ச்சிகள் செய்தது. தனது சூழ்ச்சி வலைக்குள் முதலில், கொழும்பில் நலன்களைக் கொண்டிருந்த முஸ்லிம் தலைவர்களையும் - முஸ்லிம் மதபீடத்தையும். வீழ்த்தி, அதன்மூலம் முஸ்லிம் மக்களையும் தனது சதிவலைக்குள் சிக்கவைக்க முயன்றது. இச்சூழ்ச்சிகளையும் சதிகளையும் நாம் முன்னரே நன்கு அறிந்திருந்தோம். இதனால், இச்சூழ்ச்சிகர அரசியலைப்பற்றி தமிழ் மக்களுக்கு விளங்கவைத்ததுடன் முஸ்லிம்களையும் சதிக்குள் வீழாது தடுக்க அரும்பாடுபட்டோம். ஆனாலும், சிங்களப் பேரினவாதத்தின் சூழ்ச்சி வலைக்குள் முஸ்லிம்கள் கண்ணை மூடிக்கொண்டு வீழ்ந்துவிட்டனர். இந்திய அரசின் சூழ்ச்சி 1987ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் நேரடியாகத் தலையிட்ட இந்திய அரசும், முஸ்லிம் - தமிழ் முரண்பாட்டை மேலும் வளர்த்து விடும் முயற்சிகளில் ஈடுபட்டது. சிங்களப் பேரினவாதம் கருதியதைப்போன்றே, தமிழ் முஸ்லிம் மக்களின் இணைவு தனது தேசிய பிராந்திய நலன்களுக்குக் குந்தகமாக அமையும் என, இந்திய ஏகாதிபத்தியமும் கருதியது. தமிழீழமக்களின் தன்னாட்சி உரிமைப் போராட்டம் வலுவடைவதை அது விரும்பாது. ஏனெனில் இப் போராட்டப் அதன் தேசிய பிராந்திய நலன்களுக்கு முரணானது என, இந்திய ஏகாதிபத்தியம் கருதுகின்றது. எனவே, சிங்களப் பேரினவாதம் முஸ்லிம் மக்கள் மத்தியில் வளர்த்த தமிழ் விரோதப்போக்கை மேலும் தீவிரமாக்க, அது நடவடிக்கை எடுத்தது. தமிழர் விரோத சக்திகளான முஸ்லிம் காங்கிரசிற்கும் ஜிகாத் அமைப்பிற்கும் ஆயுதங்களை வழங்கி, தமிழ் மக்களுக்கும் போராட்டத்திற்கும் எதிராக முஸ்லிம்களை ஆயுதமயமாக்கியது. அதேசமயம் தன்னுடன் ஒட்டிக் கொண்டிருந்த தமிழ் துரோகக் கும்பல்களை முஸ்லிம் மக்கள் மீது ஏவி விட்டு தன்னை நடுநிலைவாதியாகவும், சமாதான விரும்பியாகவும் காட்டிக்கொண்டது. சதி வலைக்குள் சிக்கிய முஸ்லிம்கள் இந்தச் சூழ்ச்சிகர அரசியலைப் புரிந்துகொள்ளாத முஸ்லிம்கள், தமிழர்களைத் தமது எதிரிகளாகக் கருதத்தொடங்கினர். ஆனாலும், புலிகளாகிய நாம் இந்த நெருக்கடி நிலையை அவதானமாகவும் பொறுமையாகவும் கையாண்டோம். இந்திய இராணுவம் வெளியேற்றப்பட்ட பின்னர் சிங்கள - இந்திய அரசுகளின் சதி வலைக்குள் சிக்குண்ட முஸ்லிம் மக்களை மீட்டெடுக்க, எமது இயக்கம் அரும்பாடுபட்டது; எமது அரசியல் வேலைகளில் பெரும்பங்கை நாம் இதற்காகவே செலவிட்டோம். ஆனால், சிங்களப் பேரினவாதத்தின் கைக்கூலிகளாக இருந்த முஸ்லிம் அரசியல் - மதத் தலைமைகள், முஸ்லிம் மக்கள் மத்தியில் தமிழ் மக்களையும் போராட்டத்தையும் எதிரியாகக் காட்டியபடி வெறிப் பிரச்சாரங்களில் ஈடுபட்டன. இந்த நிலை படிப்படியாக வளர்ந்து, சிங்களப் படைகளுடன் போர்தொடங்கிய 1990 யூன் 10ஆம் திகதிக்குப் பின்னர், ஆயுதம்தாங்கிய முஸ்லிம் காடையர்களும் - ஊர் காவற்படையினரும் தமிழர்களை இனப்படுகொலை செய்யத் தொடங்கினர். சிங்களப் பேரினவாதத்தினதும் இந்திய ஏகாதிபத்தியத்தினதும் சூழ்ச்சிகளுக்கு முஸ்லிம் மக்கள் முழுமையாகவே பலியாகிவிட்டார். எமகாதகர்கள் பாத்திரத்தில் முஸ்லிம்கள் இதனால், இன்று தென் தமிழிழம் கொலைக்களமாக மாறிவிட்டது. இதுவரைகாலமும் ஆக்கிரபாளர்களான சிங்கள ஆயுதப்படைகளும் சிங்களக் குடியேற்றவாசிகளும், ஆங்காங்கே எமகாதகர்கள் பாத்திரத்தை வகித்துவந்தனர். இப்பொழுது, தமிழர்களுடன் காலங்காலமாகக் கூடி வாழ்ந்த முஸ்லிம்களும் - அப்பாத்திரத்தை அங்கு பங்கு பிரித்து விட்டனர். ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிக்குள் வாழும் மக்கள் மீது எதிரி இராணுவம் என்ன செய்யுமோ அதையெல்லாம், முஸ்லிம் வெறியர்களும் - முஸ்லிம் ஊர்காவற்படையினரும் தமிழ் மக்கள் மீது காட்டிக்கொண்டிருக்கின்றனர். மட்டக்களப்பில் முஸ்லிம்களால் படுகொலை செய்யப்பட்ட இளைஞன் ஒருவன் | மூலம்: குரல் 30, விடுதலைப்புலிகள் படுகொலை, பாலியல் வன்முறை, கொள்ளை, தீயிட்டழித்தல், கலாசாரச் சின்னங்களை அழித்தல், பொருளாதார நிலையைச் சிதைத்தல் என்று சிங்களப் பேரினவாத அரசு தமிழீழ மக்களுக்கு எதிராகச் செய்து வரும் இன அழிப்பு வடிவங்களை, சிங்கள ஆயுதப்படையின ருடன் சேர்ந்து முழு அளவில், முஸ்லிம் வெறியர்களும் தமிழ மக்கள் மீது புரியத் தொடங்கிவிட்டது. தென் தமிழீழத்தைப் பொறுத்தவரை இன்று சிங்கள ஆயுதப்படைகளுக்கு அஞ்சுவதை விட முஸ்லிம் வெறியர்களுக்கே தமிழீழ மக்கள் பெரிதும் அஞ்சுகின்றனர். தமிழ்ப் பெண்கள் மீது பாலியல் வன்முறைகளில் சிங்கள ஆயுதப் படையினர் ஈடுபடுவதைவிட அதிகளவிலும், கொடூரமான முறைகளிலும் முஸ்லிம் வெறியர்களே ஈடுபடுகின்றனர் என்ற துக்ககரமான - வெறுக்கத்தக்க உண்மையை, நாம் ஒப்புக்கொள்கின்றோம். அத்துடன் தமிழர் கிராமங்களுக்குள் புகுந்து பெருமளவில் படுகொலைகளைச் செய்து, கிராமங்களைத் தீயிட்டழித்து, தமிழர் நிலங்களை, வீடுகளை சொத்துகளைக் கைப்பற்றி, ஒரு எதிரிப்படைகளைப் போல தென்தமிழீழ முஸ்லிம் காடையர்கள் செயற்பட்டுவருவதை யாரும் மறுக்க முடியாது. முஸ்லிம்களால் படுகொலைகள் தென் தமிழீழ மக்கள் இன்று ஒரே தடவையில் இருமுனைகளிலிருந்து எதிரிப் படைகளைச் சந்திக்கின்றனர். ஒருபக்கம் சிங்கள ஆயுதப்படை யினரையும் - சிங்களக் குடியேற்ற வாசிகளையும், மறுமுனையில், ஆயுதந்தாங்கிய முஸ்லிம் காடையர்கள் - முஸ்லிம் ஊர் காவற்படையினரையும் எதிர்கொள்ளவேண்டியுள்ளது. 1990ஆம் ஆண்டு யூன் மாதம் சிங்கள ஆயுதப்படையினருடன் மூண்ட இரண்டாம் கட்டப் போரைத்தொடர்ந்து இன்றுவரை, கொடூரம்மிக்க - மனிதாபிமானமற்ற ஒரு எதிரி இராணுவத்தைப் போன்றே பெரும்பாலான தென் தமிழீழ முஸ்லிம்கள் செயற்பட்டு வருகின்றனர். இந்த இரண்டு வருடப் போரிலும் கொல்லப்பட்ட சுமார் 10,000 தமிழர்களில் அரைப்பங்கினர் முஸ்லிம் வெறியர்களினாலேயே கொல்லப்பட்டுள்ளனர். அதுவும் தென் தமிழீழத்தின் அம்பாறை மாவட்டத்தில் கொல்லப்பட்ட தமிழர்களில் முக்காற் பங்கினர் ( 3/4 ) . முஸ்லிம் வெறியர்களினாலேயே - கொல்லப்பட்டுள்ளனர் என்ற கசப்பான உண்மை, வரலாற்றில் மறைக்கப்பட முடியாதது. அம்பாறை மாவட்டத்தில் 6,000 பேருக்கு மேல் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் 5,000 பேர் முஸ்லிம் வெறியர்களினாலேயே கொல்லப்பட்டனர். (கணக்கு விபரம் சரியாகத் தெரியவில்லை. சில வேளை இதைவிட அச்சமூட்டும் வகையில், கொல்லப்பட்டவர்களின் தொகை அதிகமாக இருக்கலாம். காணாமல் போனவர்களும் பலர்.) இம்மாவட்டத்தின் பழந்தமிழ்க் கிராமங்கள் பல முஸ்லிம் வெறியர்களினால் அடியோடு அழிக்கப்பட்டுவிட்டன. இன்று அவை முஸ்லிம்களினால் ஆக்கிரமிக்கப்பட்ட கிராமங்களாக மாறிவருகின்றன. நூற்றுக்கும் மேற்பட்ட தமிழர் கிராமங்களைக் கொண்டிருந்த அம்பாறை மாவட்டத்தில் இன்று ஐந்து இடத்தில் மட்டும் தான் தமிழர்கள் வாழ்கின்றார்கள் . பாண்டிருப்பு காரைதீவு கோமாரி தம்பிவில் திருக்கோவில் இவைகூட அகதிமுகாம்களாகவே இருக்கின்றன. இதில் கேவலம் என்னவென்றால் இவ்வகதி முகாம்கள் முஸ்லிம் வெறியர்களினால் தாக்கப்படாமலிருக்க, சிங்கள இராணுவம் அகதிமுகாம்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதுதான்! வெறிபிடித்த ஓநாய்களிடமிருந்து ஆடுகளைப் பாதுகாக்க சிங்கம் காவலிருக்கின்றது. வேடிக்கையாக இருந்தாலுங்கூட இதுதான் அங்கு உண்மை நிலை. ஏன் இந்தத் துயரம் நிகழ்ந்தது? காலங்காலமாகத் தமிழர்களுடன் கூடிவாழ்ந்த முஸ்லிம்கள், ஏன் திடீரென தமிழர்களின் எதிரிகளாக மாறினார்கள்? ஏன் இந்த மிலேச்சத்தனமான பாலியல் வன்முறைகளிலும், காட்டு மிராண்டித்தனமான படுகொலைகளிலும் முஸ்லிம்கள் ஈடுபடுகின்றார்கள்? தமிழர்கள் முஸ்லிம் மக்களைச் சிங்கள ஆயுதப்படையினருக்குக் காட்டிக் காட்டிக் கொடுத்தார்களா? அல்லது முஸ்லிம் பெண்களைப் பாலியல் வன்முறைக்குட்படுத்திப் படுகொலை செய்தார்களா? அல்லது முஸ்லிம்களின் நிலங்களைப் பறித்து, அவர்களின் கலாசாரச் சின்னங்களைத் துடைத்தெறிந்து, தனித்துவத்தைச் சிதைக்க முயன்றது தமிழர்களா? அல்லது தமிழ்மக்களின் தேசிய இயக்க மாகிய புலிகள் இயக்கம் அரசியல் ரீதியாக முஸ்லிம் மக்களுக்குத் முஸ்லிம் எதிர்ப்பு உணர்வைக் காட்டி முஸ்லிம்களை இம்சித்ததா? எதுவுமேயில்லை. அப்படியாயின் தமிழர்களைப் பொது எதிரியைப்போன்று கருதி, உண்மையில் பொது எதிரியான சிங்களப் பேரினவாத சக்திகளுடன் கூட்டுச் சேர்ந்து, முஸ்லிம் மக்கள் தமிழர்களை ஏன் அழிக்கின்றார்கள்? இதில் துயரம் என்னவென்றால், முஸ்லிம் மக்களில் பெரும்பாலானோர் தமிழர்களை எதிரிகளாகம் கணித்து வன்முறைகளில் ஈடுபடுவதுதான். தமிழ் - முஸ்லிம் மக்களிடையே காலத்திற்குக்காலம் பொருளாதாரக் காரணிகளாலும், குழல் பிட்டு போன்ற வாழிடம் காரணமாகவும் இடையிடையே சிறியளவில் முரண் பாடுகள் தலை தூக்குவதும் அது சில சமயங்களில் கைகலப்புகள், குழுச்சண்டைகளாக மாறுவதும், பின்னர் சமரசத்திற்கு வந்து அமைதி திரும்புவதும் பழைய வரலாறு. 1983 ஆம் ஆண்டு இலங்கைத் தீவில் சிங்களப் பேரினவாத சக்திகள் தமிழ் மக்களுக்கெதிராக ஒரு படுகொலையை ஏவி விட்டதும், அதன் எதிர் விளைவாக பெருமளவில் தமிழ் இளைஞர்கள் ஆயுதப் போரில் இணைந்து கொண்டதும், அதனால் சிங்கள - தமிழ் தேசிய இன முரண்பாடுகள் மேலும் கூர்மையடைந்ததும் எல்லோரும் அறிந்ததே. சிங்களக் குடியேற்றவாசிகள் காட்டுமிராண்டித்தனமாக தமிழர்களைத் தாக்கி அழிக்கத் தொடங்கினர். இக்காலப் பகுதியில் தமிழர்களுக்கெதிராக சிங்கள ஆயுதப்படை பகிரங்கமாக ஏவிவிடப்பட்டது. இந்த யதார்த்த நிகழ்வுகளுக்குப் பின்னர், தமிழ் - முஸ்லிம் மக்களிடையே சிறியளவில் முரண்பாடுகள் ஏற்படும் போதும் அம்முரண்பாடுகள் பெரியளவில் மோதலாகவும் வெடிக்கத் தொடங்கியது. முன்னரைப் போலல்லாது குறித்த இக்காலகட்டங்களில் முரண்பாடுகள் எழும்போது தமிழ் மக்களைத் தாக்க முஸ்லிம் மக்கள் முண்டியடித்தபடி திரண்டெழுத்தனர். இதற்குக் காரணம் தமக்குப் பக்க பலமாகவும் தமிழர்களுக்குப் பாதகமாகவும் சிங்கள ஆயுதப்படைக்களும், சிங்களக் குடியேற்றவாசிகளும் இருப்பதை முஸ்லிம்கள் வெளிப்படையாகக் கண்டு உணர்ந்து கொண்டதுதான். அம்பாறை மாவட்டத்திலுள்ள காரைதீவு என்ற தமிழ்க் கிராமம் 1985 ஆம் ஆண்டு, அதைச் சூழவுள்ள முஸ்லிம் கிராமங்களால் தாக்கி எரியூட்டப்பட்டது. இது தான் தமிழர்களுக்கு எதிராக முஸ்லிம்கள் புரிந்த முதலாவது பாரிய தாக்குதற் சம்பவமாகும். சிங்களக் காவற்துறையும், ஆயுதப்படைகளும் தமிழர்களுக்கெதிரான இந்த வன்முறைகளைக் கண்குளிர்ச்சியுடன் பார்த்து நின்றனர். இதைத் தொடர்ந்து மஞ்சந்தொடுவாய் என்ற தமிழ்க் கிராமத்தைக் காத்தான்குடி முஸ்லிம்கள் தாக்கியபோது அவர்களுடன் கூட வந்த சிறீங்காவின் விசேட அதிரடிப் படையினர், புலிகளைக் கூட்டி வந்து முஸ்லிம்களைக் கொல்லும்படி, பாதிக்கப்பட்டு ஓடிக் கொண்டிருந்த தமிழர்களுக்கு ஆலோசனை கூறினர். ஆனால் புலிகளாகிய நாம் சிங்களப் படையினரின் நயவஞ்சக நோக்கத்தைத் தமிழ் மக்களுக்குத் தெளிவுப்படுத்தியதுடன், இம்மோதலை எமது மக்கள் மத்தியிலான ஒரு உள் முரண்பாடாகவே கருதி, கலவரத்தை நிறுத்தி அமைதியை ஏற்படுத்த அவதானமாகச் செயற்பட்டோம் . புலிகளாகிய எமது நிலைப்பாடு என்ன? முஸ்லிம்களுக்கு எதிராகக் கலவரத்தில் பங்குகொண்ட தமிழர்களை நாம் கைது செய்தோம். (இவர்கள் அனைவரும் இக்கலவரத்தில் முஸ்லிம்களால் பாதிக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது). உணர்ச்சிவசப்பட்ட நிலையில் முஸ்லிம்களை - ஆயுதம்கொண்டு தாக்க எத்தனித்த ஈ.பி.ஆர்.எல்.எவ்., ரெலோ போன்ற அன்றைய "விடுதலை இயக்கங்களை" அவ்வாறு செய்யவிடாது தடுத்தோம். ஆனால் , தமிழர்கள் மீது வன்முறை செய்த முஸ்லிம்களைத் தெரிந்திருந்தும் நாம் கைது செய்யவில்லை. காரைதீவு தொடக்கிவைத்த கலவரம் ஏறாவூர், காத்தான்குடி, வாழைச்சேனை ஆகிய பகுதிகளிலும் பரவி தமிழர்கள் தாக்கப்பட்டனர். தமிழர்களின் வீடுகள், தீயிலிடப்பட்டன. அங்கேயும் சிங்களப் படையினர் மகிழ்ச்சியுடன் பார்த்து இரசித்து, முஸ்லிம் காடையர்களை ஊக்குவித்துக்கொண்டிருந்தனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரிய முஸ்லிம் கிராமங்களை அண்டியிருந்த சிறிய தமிழ்க் குடியிருப்புகள் தாக்கப்பட்டு எரியூட்டப்பட்டன. ஆனால், பெரிய தமிழ்க் கிராமங்களுக்கு அருகில் இருந்த சிறிய முஸ்லிம் குடியிருப்புகள் தாக்கப்பட வில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். ஏனெனில் அத்தகைய முஸ்லிம் கிராமங்களை எமது போராளிகள் பாதுகாத்தனர். ஆனால் பெரிய முஸ்லிம் கிராமங்களுக்கு அருகில் இருந்த தமிழர் கிராமங்களுக்கு , நாம் எந்தவித பாதுகாப்பு வசதிகளும் செய்யவில்லை. 1990 - ஆம் ஆண்டு யூன் மாதத்திற்கு முன்னர் தமிழ் முஸ்லிம் மோதல்கள் இடம்பெற்ற போதெல்லாம், புலிகளாகிய நாம் முஸ்லிம்கள் பக்கம் நின்றுதான் பிரச்சினைகளைப் பார்க்கவும் - தீர்க்கவும் முயன்றோம். அதன் காரணமாக தமிழ் மக்களின் கோபத்தையும் சம்பாதித்துக் கொண்டோம். தமிழர்களைத் தாக்கும் முஸ்லிம்களுக்கு ஆதரவாக புலிகள் இயக்கம் செயற்படுவதாகக் குற்றம் சுமத்தி காரைதீவு, மஞ்சந்தொடுவாய்த் தமிழர்கள் அக்காலகட்டத்தில் புலிகள் இயக்கத்திற்கெதிராக ஊர்வலம் போனார்கள். இக்கலவரம் முடிந்தபின் காத்தான்குடியில் முதன் முதலாக, ஆயுதம் தாங்கிய கார்காவற்படையை முஸ்லிம்கள் அமைத்தனர் . இது தமிழ் மக்களுக்கு எதிராக ஆயுதம் தாங்கிய ஒரு முஸ்லிம் குழுவை அமைத்ததற்கு ஒப்பாகும். இவ் ஊர்காவற்படைகள் படிப்படியக தென் தமிழீழத்திலுள்ள பெரும்பாலான முஸ்லிம் கிராமங்களில் அமைக்கப்பட்டு, முஸ்லிம்கள் ஆயுதமயமாக்கப்பட்டு, தமிழ் மக்களுக்கெதிரான ஆயுத வன்முறையில் முஸ்லிம்கள் படிப்படியாக ஈடுபடத்தொடங்கினர். இவர்களுக்கு உரிய ஆயுதங்களைச் சிங்கள அரசு கொடுத்துவந்தது. எமது போராட்ட நடவடிக்கைகள் தென் தமிழீழத்தில் முடுக்கி விடப்பட்ட போது ( 1984 - 1985 ) காட்டிக்கொடுப்போரையும் , கடும் குற்றம் புரிந்தவர்களையும் , சமூக விரோதிகளையும் மரண தண்டனைக்குட்படுத்தினோம். ஆனால், காட்டிக் கொடுப்போராகவும், சமூக விரோதிகளாகவும், முஸ்லிம் இளைஞர்கள் இருக்கும் போது அவர்களுக்கெதிராக நாம் எந்த நடவடிக்கையும் எடுக்காது அக்குற்றவாளிகளுக்குத் தண்டனை கொடுக்கும் பொறுப்பை அவ்வப்பகுதி பள்ளிவாசல்களிடமே விட்டோம். ஆனால் பள்ளிவாசல்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பல சந்தர்ப்பங்களில் தென் தமிழீழத்தில் எமது போராளிகள் முஸ்லிம் கிராமவாசிகளினால் பலவந்தமாகப் பிடிக்கப்பட்டு இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் அல்லது காட்டிக்கொடுக்கப்பட்டுள்ளனர். யாரோ ஒருவரால் அல்லது ஒரு குடும்பத்தால் இரகசியமாக ஒரு போராளி காட்டிக் கொடுக்கப்படுவது என்பது வேறு கிராம மக்களே சேர்ந்து போராளியை இராணுவத்திடம் பிடித்துக்கொடுப்பதென்பது வேறு. இரகசியமான காட்டிக்கொடுப்புகள் எங்கும்தான் நிகழ்கின்றன. அது ஒரு கோடரிக்காம்பின் வேலை. ஆனால் கிராமமக்கள் பலர் சேர்ந்து ஒரு போராளியைப் பிடித்து எதிரி இராணுவத்திடம் கொடுப்பதென்பது அக்கிராமம் எதிரியா? நண்பனா? என்பதைப் பொறுத்திருக்கின்றது. இவ்விதமாக போராட்டத்திற்கும் தமிழ் மக்களுக்குகெதிராக முஸ்லிம் கிராமங்கள் சில செயற் பட்டுவந்தபொழுதிலும் கூட , நாம் முஸ்லிம்கள் தொடர்பாக மென் போக்கைக் கடைப்பிடித்தும் அதிகளவு சலுகைகளையும், விட்டுக் கொடுப்புக்களையும் செய்தும், முஸ்லிம் மக்களின் நம்பிக்கையைப் பெற்று அவர்களையும் போராட்டத்துடன் இணைத்துச் செல்ல அரும்பாடுபட்டோம் . இந்தியப் படையிடமிருந்து ஆயுத உதவிகள் இந்த நிலையில் 1987 ஆம் ஆண்டு யூலை 29 ஆம் திகதி, இந்தியப் படைகள் தமிழீழத்தை ஆக்கிரமித்தன. சிங்களப் பேரினவாத அரசுடன் ஒட்டிக்கொண்டிருந்ததைப் போல, முஸ்லிம் தலைமைகள் இந்திய இராணுவ பீடத்துடனும் ஓட்டிக் கொன்ளத் தொடங்கின. இந்திய அரசிடமிருந்து முஸ்லிம் காங்கிரஸ் ஆயுதங்களையும் பெற்றுக் கொண்டது. இந்த ஆயுதங்கள் சிங்களப் படையுடன் போராட அல்ல, தமிழ் மக்களைப் போன்று இனரீதியாக ஒடுக்கப்பட்டிருந்த போதிலும் கூட, முஸ்லிம்கள் ஆயுதமேந்திச் சிங்கள அரசிற்கு எதிராகப் போராடியதாக வரலாறே இல்லை. அப்படியாயின் அவர்கள் யாருக்கு எதிராகப் போராட ஆயுதங்களைப் பெற்றார்கள்? சந்தேகமேயில்லை. தமிழர்களைக் கொன்று குவிக்கத்தான் சிங்களப்படையினரிடமிருந்தும், இந்திய அரசிடமிருந்தும் ஆயுதங்களைப் பெற்றார். ஆனால், இந்தியப் படையினர் மத்தியிலிருந்த முஸ்லிம் விரோதப்போக்காலும், இந்திய இராணுவத்துடன் ஓட்டிக் கொண்டிருந்த தமிழ்த் துரோகக் கும்பல்களின் முஸ்லிம் விரோதப் போக்காலும், தமிழர்களுக்கு எதிராக வன்முறைகளில் ஈடுபடாது அடங்கியிருந்த முஸ்லிம் வெறியர்கள் இந்தியப் படையின் வெளியேற்றத்தின் பின்னர், மீண்டும் சிங்களப்படைகளுடன் கூட்டுச்சேர்ந்தனர். இந்திய இராணுவத்தை வெளியேற்ற சிறீலங்கா அரசுடன் பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்ட காலத்தில் ( 1989 - 1990). முஸ்லிம் மக்களைப் போராட்டத்தின்பால் வென்றெடுக்க, நாம் பகிரத முயற்சிகளைச் செய்தோம். போராட்டத்திற்குத் தேவையான நிதியை வரி மூலமும், வற்புறுத்தல் மூலமும் வசதி படைத்த தமிழர்களிடமிருந்து பெற்றுவந்த அதேவேளை, முஸ்லிம் சமூகத்திலிருந்து இந்நிதியை நாம் பெறவேயில்லை. ஒரு சில சம்பவங்கள் அப்படி நடந்திருந்தாலும் கூட அவை உடனடியாகவே எமது தலைமைப்பீடத்தின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டு, நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன. இவ்விதம் தாராள மனப்பான்மைகள், மென்போக்குகள், விட்டுக் கொடுப்புகள், சகிப்புத்தன்மைகள் போன்ற அணுகுமுறைகள் மூலம் முஸ்லிம் மக்களை அணிதிரட்ட நாம் எடுத்த முயற்சிகள் முடிவில் படுதோல்வியே அடைந்தன. 1990 இல் வெடித்த போருக்குப் பின் சிறீலங்கா அரசுடனான பேச்சு வார்த்தைகளில் ஏற்பட்ட முரண்பாடுகள் சிறிது சிறிதாக 1990 யூன் 10 ஆம் திகதி போராக வெடித்தது. மட்டக்களப்பு - அம்பாறையில் சிங்களப்படைகளுக்கும் புலிகளுக்குமிடையில் சண்டைகள் நடந்தன. ஆனால் நாம் யாருமே எதிர் பாராதவகையில், பொத்துவில் பகுதியில் வாழ்ந்துவந்த தமிழ் மக்கள் முஸ்லிம் வெறியர்களினால் வேட்டையாடப்படத் தொடங்கினர். தமிழ் மக்களின் வீடுகள் கொளுத்தப்பட்டு, சொத்துக்கள் கொள்ளையடிக்கப்பட்டு, தமிழ்ப் பெண்கள் முஸ்லிம் வெறியர்களினால் பாலியல் வன்முறைக்குட்படுத்தப்பட்டனர். பொத்துவிலில் தொடங்கிய முஸ்லிம் இனவாதம் அம்பாறை மாவட்டமெங்கும் பரவி, தமிழ் மக்களைக் கொன்றொழிக்கத் தொடங்கியது. இது எமக்குப் பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் கொடுத்தது. சிங்களப்படைகளுடன் பெரியளவில் போர் நடந்து கொண்டிருந்தபடியால், முஸ்லிம் வெறியர்களிடமிருந்து தமிழ்க் கிராமங்களை எம்மால் பாதுகாக்க முடியாமற் போய்விட்டது. இப்பொழுது தென் தமிழீழ மக்கள் சிங்கள ஆயுதப்படைகளினாலும் - சிங்களக் குடியேற்றவாசிகளினாலும், முஸ்லிம் வெறியர்களினாலும் இனப்படுகொலைக்குள்ளாக்கப்பட்டு வருகின்றனர் . 1990 ஆம் ஆண்டிற்கு முன்னர் தென் தமிழீழத்தில் முஸ்லிம்-தமிழ் மோதல் நடக்குமானால், குறித்த சில கிராமங்களுக்கிடையே நடப்பதுதான் வழமை. ஆனால் 1990 ஆம் ஆண்டு யூன் மாதம் 10 ஆம் திகதி சிறீலங்காப் படைகளுடன் போர் தொடங்கியதும, தென் தமிழீழத்தில் வாழ்ந்த மிகப் பெரும்பாலான முஸ்லிம்கள் வெறிகொண்டு - மிலேச்சத்தனமான வழிமுறைகளில் - தமிழர்களை வேட்டையாடத் தொடங்கினர். அம்பாறை தமிழர்களின் மயானம் ஆகியது. குறிப்பாக பாலியல் வன்முறைகளில் காட்டுமிராண்டிகளின் நிலைக்கு முஸ்லிம் வெறியர்கள் சென்றனர். இதில் வேதனையானதும் வெட்கம்கெட்டதுமான விடயம் என்னவென்றால் , கடத்திவரப்படும் தமிழ்ப் பெண்கள் முஸ்லிம் கிராமங்களுக்குக் கொண்டுவரப்பட்டு அங்கேயே பாலியல் வன்முறைக்குட்படுத்தப்படுவதாகும். அம்முஸ்லிம் கிராமத்திலிருக்கும் ஆண் - பெண், பெரியோர், சிறியோர், படித்தோர் - பாமரர் அனைவரும் அறிந்த நிலையிலேயே இம்மிலேச்சத்தனம் நடைபெறுகின்றது. இது பெண்களை உயர்வாகப் போற்றுவதாகச் சொல்லிக்கொள்ளும் முஸ்லிம் மதக்கலாசாரத்திற்கு, மிக இழிவைத் தேடிக் கொடுக்கும் அநாகரிகச் செயல்கள் ஆகும். அம்பாறை மாவட்டம் இலங்கைத் தீவிலேயே முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட மாவட்டமாகும். இந்த மாவட்டத்தில் நடாத்தப்பட்ட திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்தால் அதிக நிலப்பரப்புகளையும், பொருளாதார வாய்ப்புகளையும், உரிமைகளையும் இழந்தது தமிழர்கள் அல்ல; முஸ்லிம் மக்கள் தான். ஆனால் அத்துமீறி குடியேற்றத் திட்டங்களைத் தடுத்து நிறுத்த நாம் எடுத்த ஆயுத நடவடிக்கைகளினால், சிங்களப் பேரினவாதிகளின் நில அபகரிட்பு நோக்கம் பல இடையூறுகளைச் சந்தித்தது. இதனால் நன்மையடைந்தது தமிழர்களைவிட முஸ்லிம்கள் தான், ஆனால் இவ்வளவு தூரம் இன அழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட சிங்களப் பேரினவாதிகளை நண்பர்களாகவும், முஸ்லிம்களின் உரிமைக்காகவும் போரிட்டு எண்ணற்ற தியாகங்கள் புரிந்து வரும் தமிழர்களை எதிரிகளாகவும் முஸ்லிம்கள் கணிக்கின்றனர். அம்பாறை மாவட்டத்திலிருந்து சுமார் 75 ,000 தமிழர்கள் அடித்து விரட்டப்பட்டுள்ளனர். சுமார் 6,000 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர். கொல்லப்பட்டவர்களில் 5,000 பேர் முஸ்லிம் வெறியர்களினாலேயே கொல்லப்பட்டுள்ளனர். இன்று தென் தமிழீழம் முழுவதுமே சிங்களப் பேரினவாதிகளினதும் முஸ்லிம் வெறியர்களினதும் சிறையாகவே இருக்கின்றது அதற்குள் அகப்பட்டுள்ள தமிழர்கள் அவர்கள் வீடுகளில் வாழ்ந்தாலும் சரி - அகதிமுகாம்களில் வாழ்ந்தாலும் சரி - கைதிகளைப் போன்றே வாழ்ந்து வருகின்றார்கள். பெரும்பாலும், இம்மக்களது தலைவிதி முஸ்லிம் வெறியர்களாலேயே தீர்மானிக்கப்படுகிறது. அகதி முகாம்களுக்குச் சிங்களப்படையினருடன் செல்லும் முஸ்லிம்களே, யாரைக் கைது செய்வது எனத் தீர்மானிக்கிறார்கள். தென் தமிழீழத்திலுள்ள அகதி முகாம்களில் உதாரணமாக கிளப்பன்பேக் (திருமலை), வந்தாறுமூலை பல்கலைக்கழக அகதிமுகாம்களில் நடைபெற்ற கைதுகளுக்கும் கொலைகளுக்கும் சூத்திரதாரிகள் முஸ்லிம் வெறியர்களாகவே இருக்கின்றனர். முஸ்லிம் மக்கள் உணர வேண்டிய உண்மை! தமிழர்களை அழிப்பதன் மூலம் தங்களது சுதந்திரம், தனித்துவம், இறைமை பாதுகாக்கப்படும் என முஸ்லிம்கள் கருதுகிறார்கள் போல் தோன்றுகிறது. அதன்மூலம் தான் முஸ்லிம் மக்களுக்கு நிரந்தரப் பாதுகாப்புக் கிடைக்கும் எனவும் நம்புகிறார்கள் போலும். இங்கே புலிகளாகிய நாங்கள் கூறவிரும்புவது என்னவென்றால், எதிரி யார்? நண்பன் யார்? என்பதைத்தான். முஸ்லிம்களைப் பொறுத்தவரை அவர்களது அரசியல் எதிர்காலமும் பொருளாதார சுபீட்சமும், தமிழீழத்தில் தான் இருக்கப்போகின்றது. தமிழீழம் தான் முஸ்லிம்களின் தாயகமுமாகும். தமிழ்த் தேசிய இனத்தின் ஓர் அங்கமான முஸ்லிம்கள் தமிழர்களின் விரோதிகள் அல்ல. இவர்கள் தமிழர்களுடன் இணைந்து வாழ வேண்டியவர்கள். தமிழ்மக்கள் முஸ்லிம் மக்களின் விரோதிகளுமல்லர்; பகைவர்களுமல்லர். முஸ்லிம்களின் உண்மையான விரோதிகள் சிங்களப் பேரினவாதமும் இந்திய ஏகாதிபத்தியமுமேயாகும். இந்த உண்மையை உணர்ந்து. முஸ்லிம்கள் தமது தமிழர்விரோத உணர்வைக் கைவிடவேண்டும்; தமிழர்களுடன் ஒன்றிணைந்து வாழ்வதில் தான் முஸ்லிம் சமூகத்தின் எதிர்காலமே தங்கியுள்ளது. *****
  5. கட்டுரை இப்படித்தான் தென் தமிழீழம் விடுதலைப்போருக்கு விலை செலுத்துகிறது மூலம்: குரல் 18, பக்கம் 6 & 7, விடுதலைப்புலிகள் இதழ் வெளியிடப்பட்ட ஆண்டு: ஐப்பசி- கார்த்திகை 1990 எழுத்துணரியாக்கம்: நன்னிச் சோழன் உலக சரித்திரத்தில் நடந்த கொடூரமான போர்களின் போதும் எழுச்சியுற்ற விடுதலைப் போராட்டங்களை அடக்கி அழிக்கவும் நிகழ்த்தப்பட்ட படுகொலைகள், கொடூரமானவை. உலகின் மிகக் கொடிய சர்வாதிகாரிகளாக இருந்தவர்கள் - தாங்கள் ஆக்கிரமித்த நாடுகளில் துப்பாக்கி சன்னங்களையோ, வெடிகுண்டுகளையோ பயன்படுத்தாமல் மிகப் பெரிய மனித அழிவுகளைச் செய்தார்கள். அவற்றைப் போலவே இன்றும்..... 2ம் உலகப்போரிலும், அதற்கு முன்னரும், பின்னரும் உலகில் நிகழ்த்தப்பட்ட மனித அழிப்புகளை இன்றைய தென் தமிழீழம் அச்சொட்டாக நினவுபடுத்துகிறது. இப்படித்தான் தென் தமிழீழம் விடுதலைப் போருக்கு விலை செலுத்துகின்றது. இரண்டாம் உலகப் போரின் போதும்‌, அதன்‌ பின்னரும் கோரமான சம்பவங்கள், அவலக் காட்சிகள் என வரலாற்று ஆசிரியகளினால் குறிப்பிடப்படும் சம்பவங்களை ஒத்த மிருகத்தனமான காட்சிகளை, இன்று தென் தமிழீழப் பகுதிகான மட்டக்களப்பு, அம்பாறை, திருக்கோணமலை கண்டு வருகின்றன. உலகிலிருந்த யூத இனத்‌தைப்‌ பூண்டோடு ஒழிக்க முயற்சித்‌த கிட்லரின் படைகள்‌, வழக்கமாக வைத்திய பரிசோதனைகள், ஆய்வுகளுக்காக எலிகளைப் பயன்படுத்தும் முறைமகளைத் தவிர்த்து, எலிகளுக்குப்‌ பதிலாக கைதாகியுள்ள யூதர்களைப்‌ பயன்படுத்தும்படி கட்‌டளையிட்டார்கள்‌. இதையொத்த சம்பவமொன்று 13.09.1990 அன்று திருக்கோணமலையிலுள்ள பச்சனூர்‌, இருதயபுரம் அகதி முகாமில்‌ இடம்பெற்றுள்ளது. தாங்கள்‌ உருவாக்கிய புதிய வகை மிதிவெடிகளின் சக்தியை கண்ணெதிரிலேயே பரீட்சித்துப்‌ பார்க்க இராணுவத்தினர்‌ விரும்பினார்கள்‌. எனவே இந்த அகதி முகாமுக்கு முன்னால் மிதிவெடிகளைப் புதைத்துவிட்டு, அதற்கு மேலால் நடந்து செல்லும்படி அங்கிருந்த இரண்டு தமிழ்ச் சிறுமிகளுக்கு இராணுவத்தினர் உத்தரவிட்டனர். விளைவு.... பத்து வயதுச் சிறுமி ஒருத்தி காலை இழந்தாள். பின்னால் வந்த ஒன்பது வயதுச் சிறுமி ஒருத்தி இரண்டு கண்களையும் இழந்தாள். வரலாற்றின் சோகங்கள்: 1942ம்‌ ஆண்டு சித்திரை 23ம்‌ இங்கிலாந்துப்படையின்‌ "யோக்சயர்'' காலாட்படையின்‌ இரண்டாவது பிரிவினர்‌ பர்மாவிலுள்ள ரங்கூனிலிருந்து 50 மைல்‌ தொலைவில்‌ இருந்த சிறு கிராமமொன்றில்‌ மாலை நேரத்தில்‌ தங்கியிருந்தபோது, திடீரெனக்‌ கிராமத்தின்‌ ஒரு புறத்திலிருந்து புகை மண்டலம் எழுவதைக் கண்டனர்‌. (அப்போது ரங்‌கூன்‌ ஐப்பானியப்‌ கட்டுப்பாட்டுக்குள்‌ இருந்தது) உடனே இதை அவதானித்த ஆங்கிலேய இராணுவம்‌ "பிறிஸ்பற்றிக்" என்ற படை அதிகாரியின் தலைமையில் அவ்விடத்தை நெருங்கினர்‌. அங்கே வீடொன்று தீப்‌பிடித்து எரித்து கொண்டி ருந்தது. தமது வருகையை ஜப்பானியப்‌ படையினருக்கு பூடகமாக அறிவிக்கவே வீட்‌டினை எரித்துப்‌ புகையினைக்‌ கிழப்புகின்றார்கள்‌ எனச்‌ சந்‌தேகித்து, அப்படை அதிகாரி அக்கிராமத்திலிருந்த ஆண்‌கள்‌ அனைவரையும்‌ அழைத்து வந்து அவர்களைக்‌ கொன்று குவித்தார்கள்‌. பைலோ ரஷ்யாவிலுள்ள "கத்‌தீன்‌" செக்கோசிலவாக்‌கியாவிலுள்ள "லிடிஸ்" பிரான்சிலுள்ள “ஒறாடொர்‌” ஆகிய கிராமங்கள்‌, யுத்த வரலாற்றில்‌ கிட்லர்‌ வாதிகள்‌ இழைத்த கொடுஞ்‌ செயல்களுக்கு அடையாளச்‌ சின்னங்களாக விளங்குகின்றன. அக்‌ கிராமங்களில்‌ வாழ்ந்த சகலரும்‌ கிட்லர்‌ வாதிகளினால்‌ படுகொலை செய்யப்பட்டனர்‌. (1985, சோவியத்நாடு இதழ்‌ 9) இதே போன்ற சம்பவங்கள்‌ தென்‌ தமிழீழத்தில்‌ ஏராளமாக இடம்‌ பெற்றுள்ளன. தென் தமிழீழத்தில் முஸ்லிம்களால் படுகொலையான ஒருவரின் என்புக்கூட்டுத்தொகுதி | மூலம்: குரல் 18, விடுதலைப்புலிகள் 11/09/1990 அன்று மட்டக்களப்பிலுள்ள தன்னாமுனை, பிள்ளையாரடி, சத்துருக்‌கொண்டான்‌ ஆகிய தமிழர்‌ பகுதிகளைச் சிங்களப்‌ படையினரும், முஸ்லிம்‌ ஊரர்காவற்‌ படையினரும் சுற்றி வளைத்‌தன. பால்குடிக்கும்‌ குழந்தையிலிருந்து குடுகுடு கிழவர்கள்‌ வரை ஆண்கள்‌, பெண்‌கள்‌ அனைவரும்‌ சுட்டும்‌ வெட்‌டியும் குத்தியும்‌ கொல்லப்‌ பட்டனர். இதில் மொத்தம் 217 தமிழர்கள் கொல்லப்பட்டனர். இதே போன்று அம்பாறை மாவட்டத்திலிருந்த சவளக்கடை, புதுக்‌குடியிருப்பு, பாட்டாளிபுரம்‌, நல்லூர், வீரமாநகர்.... திருக்கோணமலை மாவட்டத்திலிருந்த இலக்கந்தை, கூனித்திவு, சம்பூர்‌ மூதூர், கட்டைபறிச்சான்‌ போன்ற இடங்களில்‌ தமிழர்‌கள்‌ குவியல்‌ குவியலாகக்‌ கொன்றொழிக்கப்பட்டனர்‌. இதில்‌ முக்கியமான விடயம்‌ என்னவென்றால்‌ இப்படுகொலைகள்‌ இடம்‌பெற்றதற்கான சான்றுகள்‌ ஏதாவது அகப்பட்டு, அது சரித்திரத்தில்‌ பொறிக்கப்பட்டுவிடக்‌ கூடிய நிலைமைகள்‌ ஏற்படாமல்‌ மிகக்‌ கவனமாகத்‌ திட்டமிட்டு இப்படுகொலைகள்‌ செய்யப்பட்டுள்ளன. யூதர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த முகாம்களிலிருந்து கூட்டங்கூட்டமாக அவர்களைக் கொண்டுசென்று அறைகளுக்குள் அடைத்து விசவாயுக்களைச் செலுத்தி அவர்களைக் கொன்றதாக வரலாறு குஊறுகின்றது. இவ்வகையில் "கெஸ்டபோ" சிறைச்சாலை பிரபல்யம் பெற்றிருந்தது. யூதர்களைக்‌. கொல்வதற்காக குண்டுகளைப் பயன்படுத்துவது வீணானது என்றே நாஜிக்கள் கருதினர். இதேபோன்ற நிகழ்வுகள்‌ மட்டக்களப்பு மாவட்டத்‌திலுள்ள வந்தாறுமூலை, சித்தாண்டி ஆகிய இடங்களில்‌ அமைந்திருந்த அகதிகள்‌ முகாமில்‌ இடம்பெற்றுள்ளன. 5.9.90 அன்று வந்தாறுமூலை பல்‌கலைகழகத்துள் அமைந்திருந்த அகதிகள்‌ முகாமினுள்‌ புகுந்த சிங்களப்‌படைகளும் முஸ்லிம்‌ காடையர்களும், இளவயதினரைத்‌ தேர்ந்தெடுத்து 142 தமிழர்களைக் கைது செய்தனர்‌. இவர்களில்‌ 6 பேரின்‌ கைகளில்‌ வகை- 56 ரக துப்பாக்கிகளைக்‌ கொடுத்து புகைப்படம்‌ பிடித்தனர்‌. பின்‌னர்‌ இந்த 6 இளைஞர்களின் கழுத்தில்‌ சைக்கிள்‌ ரயர்களை மாட்டி உயிருடன்‌ எரித்தனர்‌. ஏனையவர்கள்‌ தடயங்கள்‌ இல்லாதவாறு அழிக்கப்பட்‌டுள்ளனர்‌. இந்தச்‌ சம்பவத்தில்‌ கொலை செய்வதற்காக துப்பாக்கிகள்‌ பயன்படுத்தப்பட்டதை விட கத்தி, வாள்‌ போன்ற கூரிய ஆயுதங்களே பயன்படுத்தப்‌பட்டுள்ளன. இவ்வாறு கைது செய்யப்பட்டு கொல்லப்பட்டவர்களில்‌ பெரும்பாலோர்‌ திருமணமானவர்கள்‌. செஞ்சிலுவைச்‌ சங்கத்தினர்‌ போன்ற சமூக சேவையாளர்‌ முன்னிலையில்‌ இச்‌சம்பவம்‌ இடம்பெற்றும்‌ இப்‌ படுகொலைகளைப்‌ பகிரங்கப்‌படுத்துவதில்‌ இவர்கள்‌ சிரத்தை காட்‌டவில்லை. மேற்குறித்த வந்தாறுமூலை பல்கலைக்கழகப்‌ படுகொலை நடந்த பின்னரும்‌, இதே முகாமில்‌ மீண்டும்‌ 27.9.90 அன்று 8 பேர்‌ இவ்வாறு கைது செய்து அழிக்கப்பட்ட னர்‌. பெருமளவு தமிழ்ப்‌ பெண்கள்‌ சிங்கள இராணுவத்தாலும்‌, முஸ்லீம் காடையர்களினாலும் இவ் அகதி முகாமிலிருந்து வெளியே இழுத்தெடுக்கப்பட்டு பாலியல்‌ வன்முறைக்குட்படுத்‌திய பின்‌ கொல்லப்பட்டுள்ளனர்‌. வந்தாறுமூலை பல்கலைக்‌கழக அகதி முகாமில்‌ சுமார்‌ 52,000 தமிழ்‌ அகதிகள்‌ தங்‌கயிருத்தனர்‌. துயரம்‌ நிறைந்த பகுதி: இதன்‌ காரணமாக ஏற்‌பட்ட இடநெருக்கடி, சுகாதாரப்‌ பற்றாக்குறை காரணமாக வயிற்றோட்டம்‌ கண்டு 32 சூழந்தைகள்‌ உட்பட 40 பேர்‌ மரணமாகியுள்ளனர்‌. குறிப்பாக, அகதி முகாமை அண்மித்திருந்த வீடுகளுக்குச்‌ சென்றவர்கள்‌ காணாமல்‌ போயுள்ளனர்‌. கைது செய்யப்‌பட்ட தமது பிள்ளைகளை, கணவன்மாரைத்‌ தேடிச்‌ சென்ற பெற்றோரும்‌, மனைவிமாரும் காணாமற்‌ போயுள்ளனர்‌. சித்தாண்டி முருகன்‌ கோயில்‌, சவளக்கடை, கல்லாறு, தம்‌பலகாமம்‌ ஆலய இடங்களிலிருத்த அகதி முகாம்களிலும்‌ இவ்வாறான துயரங்கள்‌ நடந்துள்ளன. திருக்கோணமலை பகுதியிலிருந்த தம்பலகாமம்‌ அகதி முகாமிலிருந்து கைது செய்யப்‌பட்டுக் கொண்டு செல்லப்பட்டவர்கள்‌ பற்றி அவர்களின்‌ உறவினர்கள்‌. அப்‌பகுதி இராணுவ அதிகாரிகளுள்‌ ஒருவரான "சுரேஸ்காசிம்‌" என்‌பவரைக்‌ கேட்டபோது "கைது செய்யப்பட்டவர்களைப்‌ பற்றி மட்டும்‌ கேட்க வேண்‌டாம்‌” என்று புன்னகைத்தபடி பதிலளித்தாராம்‌. இந்த சுரேஸ்காசிம் தான் 85, 86 ம் ஆண்டு காலப்பகுதியில் திருக்கோணமலை - அம்பாறை மாவட்டங்களில் நடந்த படுகொலைகளில் பிரதான பங்கு வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 1986 ஆம்‌ ஆண்டு மாசி மாதம்‌ 19 ஆம்‌ திகதி நூற்றுக்கும்‌ மேற்பட்ட தமிழ்‌ விவசாயிகள்‌ படுகொலை செய்யப்பட்ட உடும்பன்குளம்‌ படுகொலையில்‌, சுரேஸ்‌ காசிம்‌ என்ற இந்த முஸ்லிம்‌ இராணுவ அதிகாரியின்‌ பங்கும்‌ இருந்தது. தென்‌ தமிழீழத்தின்‌ மையப்‌ பகுதியான மட்டக்களப்பு மாவட்டம்‌ இன்று அகதிகளால் நிரம்பி வழிகின்றது. அம்பாறை மாவட்டத்திலிருந்து தமிழர்களை முற்றாக வெளியேற்றும் திட்டத்தை மிகத் தீவிரமாகச் சிங்கள அரசுடன்‌ சேர்ந்து முஸ்லிம்‌ கும்பல்களும்‌ செயற்படுத்துவதினால்‌ தம்பிலுவில்‌, திருக்‌கோவில்‌, காரைதீவு ஆகிய பகுதிகளுக்குள்‌ அடைபட்ட தமிழர்‌களைத்‌ தவிர ஏனையோர்‌ அனைவரும்‌ மட்டக்களப்பு மாவட்டத்துள்‌ தஞ்சம்‌ புகுந்துவிட்டனர்‌. இவர்கள்‌ மட்டக்‌களப்பு வாவிக்கு மேற்குப்‌புறமாக உள்ள பகுதிகளிலேயே (படுவான்கரை) தஞ்சமடைந்துள்ளனர்‌. மட்டக்களப்பில் முஸ்லிம்களால் படுகொலை செய்யப்பட்ட இளைஞன் ஒருவன் | மூலம்: குரல் 18, விடுதலைப்புலிகள் இதேவேளை திருக்கோணமலை மாவட்டத்திலிருந்து அகதிகளானோரில்‌ கணிசமானவர்கள்‌ மட்டக்களப்பு - இருக்கோணமலை மாவட்டத்தின்‌ எல்லையாக விளங்கும்‌ வெருகலிலும்‌, மற்றும்‌ கதிரவெளி, வாகரை போன்ற பகுதிகளிலும்‌ தற்‌போது வசித்து வருகின்றனர்‌. வாழைச்சேனை தொடக்கம்‌ மருதமுனை வரையிலான பிரதான பாதையை அண்டிய பகுதிகளில்‌ ஓட்டமாவடி, வாழைச்சேனை, ஏறாவூர்‌, காத்தான்குடி ஆகிய முஸ்‌லிம்‌ கிராமங்களைத்‌ தவிர ஏனைய தமிழ்க்‌ கிராமங்கள்‌ அனைத்தும்‌ இன்று காலியாகவே உள்ளன. இப்பகுதி மக்‌கள்‌ காட்டுக்‌கரைகளிலும்‌, ஆற்றங்கரை ஓரங்களில்‌ சிறுகுடிசைகளை அமைத்தும்‌ மரநிழல்களிலும்‌ வாழ்ந்து வருகின்றனர்‌. அம்பாறை மாவட்டத்தில்‌ பாண்டிருப்பு, கல்முனை, 3ம்‌ குறிஞ்சி, வீரமுனை, அட்டைப்‌பள்ளம்‌ போன்ற பகுதிகளில்‌ இன்று தமிழர்கள்‌ இல்லை அவர்கள்‌ முஸ்லிம்‌ ஊர்காவல்‌ படைகளின்‌ அட்டகாசம்‌ அதிகரித்துள்ளதனால்‌ தங்களது இருப்பிடத்துக்கு திரும்புவது பற்றி நினைத்துக்கூடப் பார்க்க முடியாத நிலையிலுள்ளன. அம்பாறை மாவட்டத்தைச்‌ சுற்றிவரப் பல பகுதிகளில்‌ இராணுவ, ஊர்காவற்படை முகாங்‌கள்‌ போடப்பட்டுள்ளதால்‌ அங்கே இராணுவ பயங்கரவாதம் தலைவிரித்து ஆடுகிறது. அப்பகுதிகளில் முஸ்லிம் ஊர்காவற் படையினரே தமிழின அழிப்பில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். சிறிலங்கா முஸ்லிம்‌ காங்கிரசின்‌ தீவிர மத வெறிப்‌ பிரச்சாரம்‌ மேற்குறித்த நிலைமைக்கு முக்கிய காரணமாகவுள்ளது. இதுவரை காலமும் முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்கும் அவ்வப்போது முரண்பாடுகள் தோன்றினாலும் தமிழ்ப் பெண்கள் பாலியல் வன்முறைக்‌கு உட்படுத்தப்படுவது மிகக்குறைவு, ஆனால் இம்முறை சிங்கள இராணுவத்துக்கு இணையாக முஸ்லிம் காடையர்களும் தமிழ்ப் பெண்கள் மீது பாலியல் வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளனர்‌. பாதிக்கப்படும்‌ பெண்கள்‌ அனேகமாக உயிருடன்‌ திரும்புவதில்லை. சில பெண்கள்‌ காட்டுமிராண்‌டித்தனமாகக்‌ கொல்லப்பட்‌டுள்ளனர்‌. பிறக்கும் முன்னரே தந்தையை இழந்த தென் தமிழீழ அவலத்திற்குச் சாட்சியான குழந்தை | மூலம்: குரல் 18, விடுதலைப்புலிகள் கல்முனையில்‌ இராணுவ பயங்கரவாதத்திலிருந்து தப்பி ஓடிக்‌கொண்டிருந்த 14 வயது தமிழ் இளைஞி ஒருத்தி சிங்களப்‌ படைகளிடம் சிக்கி பாலியல் வன்முறைக்குட்படுத்தப்பட்டாள். பின்னர் இவள் முஸ்லிம் ஊர்காவற்படையிடம் கொடுக்கப்பட்டாள். ஒரு கல்லை நட்டு நிர்வாணமாகவே அதை மூன்று முறை சுற்றும்படி ஊர்காவற்‌படையால்‌ பணிக்கப்பட்‌டாள்‌. அவ்விதமே சுற்றி வந்ததும்‌ "இஸ்லாமிய மார்க்கத்தில்‌ விபச்சாரிக்குரிய தண்டனை இதுதான்‌” எனக்‌ கூறிக்கொண்டு பாலியல்‌ வன்முறைக்குட்படுத்தப்‌பட்ட அந்த இளைஞியை கல்லால் எறிந்து கொன்றார்கள். மட்டக்‌களப்பு பிராந்திய அரசியல்‌ பொறுப்பாளர்‌ கரிகாலனின்‌ கூற்றுப்படி என்றுமில்லாதவாறு இன்று தென் தமிழீழத்தில் தமிழ்‌ இனப்படுகொலை நடைபெறுகின்றது. இம்முறை சிங்களப் பேரினவாதிகளுடன் முஸ்லிம் வெறியர்களும் இணைந்துவிட்டார்கள். இதுவரை மட்டக்களப்பு- அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த 4000ற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்‌. பல்‌லாவிரக்கணக்கானோர்‌ காணாமல்‌போயுள்ளனர்‌, ஆயிரக்கணக்கான வீடுகள்‌, வணிக நிலையங்கள்‌ கொள்ளை இட்டபின் தகர்க்கப்பட்டுவிட்டன. பல தமிழர் கிராமங்கள் முழுமையாக அழிக்கப்பட்டன. அம்பாறை மாவட்டத்திலுள்ள சில தமிழர் கிராமங்கள் முஸ்லிம் கும்பல்களினால் ஆக்கிரமிக்கப்பட்டுவிட்டன. தமிழ்பெண்களை பாலியல் வன்முறைக்குட்படுத்துவதில் சிங்கள இராணுவத்‌தையும்‌ மிஞ்சும்‌ வகையில்‌ காடையர்கள்‌ வெறித்தனம் காட்டுகின்றனர்‌. திருக்கோணமலை அரசியல் பொறுப்பாளர் ரூபன் சொல்கிறார்‌: இராணுவ பயங்கரவாதம்‌ ஒருபக்கம் முஸ்லிம்‌ கும்பல்‌களின் அராஜகம் இன்னொருபுறம் இருக்க தென் தமிழீழ மக்கள் பட்டினி அரக்கனுடனும் போராட்டம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். மாங்காயும் தேங்காயும் தான் இவர்களின் பிரதான உணவு. இந்த உணவையும் பெறுவதற்கு உயிரைக் கையில் பிடித்தபடி இரவில் கிராமங்களுக்குச் சென்று சேகரித்து வந்து உண்கின்றனர். அகதி முகாங்களிலுள்ள சிறுவர்களைப் பார்க்கும் போது வெளிநாட்டு சஞ்சிகைகளில் வரும் எத்தியோப்பிய சிறுவர்களைப் போன்று எலும்பும் தோலுமாகக் காட்சியளிக்கின்றனர். கிட்லரின் தடுப்பு முகாம்களைப் போலவே சிறிலங்கா அரசு அமைக்கும் அகதி முகாம்களும் உள்ளன. அகதி முகாங்கள் என்ற ஒன்றே தென் தமிழீழத்தில் இல்லை. தடுப்பு முகாங்களைத் தான் சிறிலங்கா அரசு அவ்விதம் அழைக்கின்றது. அத்தடுப்பு முகாங்களிலிருந்து கொண்டு செல்லப்படும் தமிழர்களைக் கொன்று குவியலாகப் போட்டுவிட்டு ரயர் போட்டு எரிப்பது சாதாரண விடயம். அண்மையில் (23/10/1990) திருக்கோணமலை மாவட்டத்திலுள 'கிளப்பன்பேக்' அகதி முகாமிலிருந்து சிங்கள இராணுவத்தாலும் முஸ்லீம் ஊர்காவற்படையாலும் அழைத்துச்‌ செல்லப்பட்ட 23 தமிழர்கள்‌ உவர்மலையில் வைத்துக்‌ கொல்லப்பட்டார்கள்‌. இதே போன்று பச்சலூர்‌ அகதி முகாமிலிருந்தும்‌ 25/08/1990 அன்று 42 தமிழர்கள் சிங்களப்படைகளாலும் முஸ்ளிம் ஊர்காவற்படைகளினாலும்‌ அழைத்துசெல்லப்பட்டு கொன்று புதைக்கப்பட்டனர்‌. இன்னும் பலர் காணாமல் போயுள்ளனர். தென்தமிழீழத்திலிருந்து தமிழர்களை முற்றுமுழுதாக வெளியேற்றி அதைச்‌ சிங்கள மயமாக்கும்‌ திட்டத்தை சிறிலங்கா அரசு நடைமுறைப்படுத்துகின்றது. அதற்காக மாபெரும்‌ மனிதப்படுகொலையைப்‌ புரிகின்றது. இந்தப் படுகொலைகளில்‌ பெரும்பாலானவை வெளியுலகத்திற்குத் தெரியாதபடி மறைக்கப்பட்டுவிட்டன. இதில்‌ வேதனைக்குரிய விடயம் என்னவென்றால்‌ எமது மக்களுனேயே வாழ்ந்த முஸ்‌லிம்களும்‌ தமிழினப்படு கொலைகளில்‌ இறங்கயிருப்‌பதுதான்‌. ஆனாலும்‌ இத்துரோகத்‌தனத்தின்‌ மத்தியிலும்‌ இன அழிப்புகளுக்கு முகம்கொடுத்தபடி தென் தமிழீழத்தில் விடுதலைத்‌ தீ முன்னைவிட இன்று கொழுந்து விட்டெரிகின்றது. *****
  6. கட்டுரை முஸ்லீம்களால் ஒரு நெருக்கடி மூலம்: குரல் 18, பக்கம் 1 & 11, விடுதலைப்புலிகள் இதழ் வெளியிடப்பட்ட ஆண்டு: ஐப்பசி- கார்த்திகை 1990 எழுத்துணரியாக்கம்: நன்னிச் சோழன் கிழக்கில் மட்டும் 4,000 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர்; அவர்களில் 2,000 மக்கள் முஸ்லீம்களால் கொல்லப்பட்டுள்ளனர். தமிழீழ விடுதலைப் போராட்டம்‌ இன்று ஒரு புதிய நெருக்கடியைச்‌ சந்தித்துள்ளது. இதுவரை நாளும் சிங்களப் பேரினவாதத்தால்‌ நசுக்கப்பட்டுவந்த தமிழர்கள்‌ - இன்று - முஸ்லிம்‌ காடையர்களின்‌ கொலைவெறிக்‌குள்ளும்‌ அகப்பட்டு சொல்லொணாத்‌ துயர்களை அடைந்து வருகின்றனர்‌. தங்கள்‌ ஆக்கரமிப்புக்கெதிராக தமிழர்களுடன் சேர்ந்து போராடவேண்டிய தமிழீழ முஸ்ஸிம்கள்‌ எந்தவிதமான தீர்க்க தரிசனப்‌ பார்வையும்‌ இராது சிங்களப்‌ பேரினவாதத்திற்கு உட்பட்டு தமிழின அழிப்பு நடவடிக்கைகளில்‌ ஈடுபட்டு வருகின்றனர்‌. இத்தகைய செயல்கள்‌ தமிழீழத்தில்‌ வாழும்‌ முஸ்லிம்கள்‌ தொடர்பான எமது நிலைப்பாட்டில்‌ நாம்‌ வைத்திருந்த நம்பிக்கையைச்‌ சிதைத்துள்ளது. கடந்த ஆனிமாதம்‌ 11ஆம்‌ தொடங்கிய (11.06.1990) தமிழீழ - சிறிலங்கா போரைத் தொடர்ந்து அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலைப் பகுதிகளில் ஆயுதம் தாங்கிய முஸ்லிம்‌ கும்பல்களினால்‌ தமிழ்‌ மக்கள் கூட்‌டம்‌ கூட்டமாகப்‌ படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர்‌. மிருகத்தனமான முறையில் தமிழ்ப்பெண்கள்‌ முஸ்லிம்‌ காடையர்களினால்‌ பாலியல்‌ வன்முறைக்‌குள்ளாகின்‌றனர்‌. சிறுவர்கள்‌, பெண்கள்‌, முதியவர்கள்‌ என்ற பேதமில்லாது. காட்டுமிராண்டித்தனமாக வெட்டியும்‌, குத்தியும்‌ கொல்‌லப்படுகின்றார்கள்‌. கொல்லப்படும்‌ தமிழர்களின்‌ தலைகள்‌ கொய்யப்பட்டு சாக்‌கினுள்‌ கட்டி கடலினுள்‌ வீசப்படுகிறது. படுகொலை செய்யப்படும்‌ இளைஞர்களினதும்‌, இளைஞிகளினதும்‌ சடலங்கள்‌ சோடிசோடியாகக்‌, கட்டி ஆற்‌றில்‌ எறிந்து மிலேச்சத்‌தனமான இரசனைகளை முஸ்‌லிம்‌ காடையர்கள்‌ வெளிப்‌படுத்துகின்‌றனர்‌. பாண்டிருப்பு, கல்முனை, வீரமுனை, சொறிகல்முனை.... இவைபோன்று அம்பாறை மாவட்டத்திலிருக்கும்‌ பல தமிழர்‌ கிராமங்கள்‌ பூண்‌டோடு அழிக்கப்பட்டு அங்கே முஸ்லிம்‌ குடியேற்றங்களை உருவாக்கி மண்ணை அபகரிக்‌கும் திட்டம்‌ செயற்படுத்தப்‌படுகின்றது. தீவிர மதவெறிபிடித்த முஸ்லிம்‌ காடையர்களின்‌ வெறிச்‌செயல்களினால்‌ கிழக்கு மாகாணத்தின்‌... (தென்‌ தமிழீழம்‌), பெரும்‌ பகுதியில்‌ தமிழர்கள்‌ சொந்த இடங்களிலிருந்து விரட்டப்பட்டு விட்டார்கள்‌. தமிழ்பேசும்‌ மக்கள்‌ என்ற ரீதியில்‌ தமிழீழ விடுதலைப்‌ போராட்டத்தில்‌ முஸ்லிம்‌ முழுமையாக இணைத்து போராட்டத்தை நடாத்த வேண்டும்‌ என்ற நோக்கில்‌ முஸ்லிம்‌ சமூகத்துடன்‌ சுமூகமான உறவை ஏற்படுத்தவும்‌, தனித்துவமான அவர்களுடைய மத கலாச்சாரங்களைப்‌ புரிந்து கொண்டு பல்வேறு விதமான எதிர்ப்புகள்‌, சக்திகளுக்கு மத்தியிலும் முஸ்லிம் மக்களை அணிதிரட்ட முயன்றோம். அரசியல்‌ அமைப்பு வாயிலாக - எந்தக் காலத்‌திலுமே நிலைத்திருக்கக்‌ கூடிய விதத்‌தில்‌ முஸ்லிம்‌ மக்களின்‌ உரிமைகளை பாதுகாப்பதாக முடிவெடுத்‌து அதைப் பகிரங்‌கமாக அறிவித்து அதன்படி செயற்பட்டும்‌ வந்தோம்‌. ஆனாலும்‌, பள்ளிவாசல்‌களின்‌ நிர்வாகத்தை தனது கைக்குள்‌ வைத்திருந்த பணப்‌ பலம்மிக்க முஸ்லிம்‌ காங்கிரசின்‌ தலைமை முஸ்லிம்களுக்கு சுலபமான மதவெறியூட்டியதுடன்‌ தனது ஆயுதக்குழுவை தமிழர்கள்‌ மீது ஏவிவிடச்‌ சத்தர்ப்பத்கை எதிர்பார்த்‌திருத்தது. சிறீலங்காப்‌ படைகளுடன்‌ போர்தொடங்கி சிலநாட்களில்‌ தமிழர்‌ பகுதிகளை நோக்கி சிங்களப்படை நகரத்‌ தொடங்கியதும்‌ சிங்களப்‌படையுடன்‌ சேர்ந்து "ஜிகாத்‌" என்ற பெயரில்‌ முஸ்லிம்‌ காங்‌கிரசின்‌ சமூக விரோதக்‌ குழுவினர்‌ தமிழ்‌ மக்களை படுகொலை செய்யத்‌ தொடங்கினர்‌. தமிழ்ப்‌ பெண்களை பாலியல்‌ வன்முறைகளுக்குள்‌ளாக்கத்‌ தொடங்கினர்‌. நாட்கள்‌ செல்லச்‌ செல்ல இந்தப்படுகொலையிலும்‌ சூறையாடல்களிலும்‌, பாலியல்‌ வன்முறைகளிலும்‌ முஸ்லிம்‌ இளைர்களில்‌ மிகப்பெரும்பாலானோர்‌ ஈடுபடத்தொடங்கினர்‌. சிறீலங்கா அரசின்‌ தூண்டுதலின்‌ பேரில்‌ முஸ்லிம்‌ காங்கரசினால்‌ ஊர்காவற்படைகள்‌ அமைக்கப்பட்டு அவர்களுக்கு நவீன ரக ஆயுதங்களும்‌ கொடுக்கப்பட்டுள்ளன. வயது வேறுபாடின்றி இந்த ஆயுதங்‌களை வைத்திருந்த முஸ்லிம்‌கள்‌ தமிழ்‌ இனப்படுகொலையில் ஈடுபடத்‌ தொடங்கினர்‌. அம்பாறை, மட்டக்களப்பு பகுதிகளிலிருந்த பல தமிழர்‌ கிராமங்‌கள்‌ கொலைக்களங்கள்‌ ஆகின. சிங்களப்‌ படைகளுடன்‌ சேர்ந்து கொண்ட இவர்களது வெறித்தனத்தால்‌ கிழக்கு மாகாணத்தில்‌ பல இலட்சம்‌ மக்கள்‌ அகதிகளானார்கள்‌. அங்கே, கொல்லப்பட்ட 4000ற்கும்‌ மேலான தமிழர்‌களில்‌ சுமார்‌ 2000பேர்‌ முஸ்‌லிம்களால்‌ கொல்லப்பட்டனர்‌. அம்பாறை மாவட்டத்தில்‌ மட்டும்‌ கொல்லப்பட்ட சுமார்‌ 2500 தமிழர்களில்‌ பெரும்பாலானோர்‌ முஸ்லிம்களால்‌ கொல்லப்பட்டனர்‌. அங்கே பல்லாயிரக்கணக்கான மக்கள்‌ காணாமல்‌ போயுள்ளனர்‌. இதே சமயம்‌ எமது இயக்‌கத்தில்‌ உறுப்பினர்களாக இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட முஸ்லிம்‌ இளைஞர்கள்‌ இயக்‌கத்தை விட்டோடி சிங்களப்‌ படைகளுடன்‌ சேர்ந்து எமது முகாம்களைக்‌ காட்டிக்‌ கொடுத்தனர்‌. எமது ஆயுதங்‌களில் சில பறிபோகவும்‌, எமது போராளிகள்‌ சிலர்‌ கொல்லப்‌படவும்‌ எமது போராளிகள்‌ பலர்‌ படுகொலை செய்யப்படவும்‌ காரணமாக இருந்தார்‌கள்‌. சிங்களப்படைகளைவிட முஸ்லிம்களாலேயே தமிழ்ப்‌ பெண்கள்‌ பாலியல்‌ வன்‌முறைக்குள்ளாகின்றனர்‌. கிழக்கிலுள்ள முஸ்லிம்‌ கிராமங்களுள்‌ பெரும்பாலானவை இன்று ஊர்காவற்படைகளும் சிங்கள இராணுவமும் சேர்ந்த ஒரு படைமுகாமைப் போலவே விளங்குகின்றன. இத்தகைய நிகழ்வுகள்‌ முஸ்‌லிம்‌ மக்கள்‌ நாம் வைத்‌திருந்த நம்பிக்கையைச்‌ சிதையச் செய்துவிட்டன. இருந்த பொழுதிலும்‌ எமது இயக்கத்தின்‌ கட்டுப்பாட்டுக்குள்‌ இருக்கின்ற வடமாகாணத்தில்‌ எந்த ஒரு முஸ்லிமும்‌ கொல்லப்படவுமில்லை எந்த ஒரு முஸ்லிம்‌ பெண்‌ணும்‌ பாலியல்‌ வன்முறைக்‌குட்படுத்தப்படவுமில்லை. சிங்கள இனவாதப்‌ பூதத்‌தைத்‌ திருப்திப்படுத்தி அற்ப சலுகைகளைப்‌ பெறுவதற்‌காக அயலவர்களான தமிழர்‌களைக்‌ கொன்றொழித்த முஸ்லிம்கள்‌ - நாளை அதே சிங்கள இனவாதப் பூதத்‌தால்‌ விழுங்கப்படப்போகிறார்கள்‌. *****
  7. கட்டுரை தமிழீழத்தில் முஸ்லீம்கள் மூலம்: குரல் 18, பக்கம் 8, விடுதலைப்புலிகள் இதழ் வெளியிடப்பட்ட ஆண்டு: ஐப்பசி- கார்த்திகை 1990 எழுத்துணரியாக்கம்: நன்னிச் சோழன் தமிழீழம்‌ ஓர்‌ மத சார்பற்ற நாடாகும்‌. ஆனால் அங்கு எல்லோருக்கும்‌ மத சுதந்திரம் உண்டு. அதே வேளை மத வெறியர்களுக்கு இடமளிக்கப்பட மாட்டாது. இலங்கையில்‌ வாழும்‌ தமிழ்‌ பேசும்‌ முஸ்லிம்கள்‌ தனிச்சிறப்‌புடைய மதக் கலாச்சாரப் பண்புகளைக்‌ கொண்ட இனக்குழு என்பதனையும்‌, தமிழீழத்தில்‌ வாழும்‌ முஸ்லிம்கள்‌ முழுமையான உரிமையுடன்‌ வாழ வேண்டும்‌ என்பதையும்‌ எமது அமைப்பு ஏற்றுக்‌கொண்டுள்‌ளது. இன்று முஸ்லிம்கள்‌ தமிழீழப்‌ போராட்டத்திற்கு எதிராகச் செயற்படுகிறார்கள்‌. தமிழீழப்‌ போராட்டத்திற்கு எதிராக முஸ்‌லிம்களைச்‌ செயற்பட வைப்பதில்‌ சிறீலங்கா அரசும்‌ ஓரளவு வெற்றி பெற்றுள்ளது. தமிழர்களையும்‌, முஸ்லிம்‌களையும்‌ பிரித்தால்‌ தமிழீழப்‌ போராட்டத்தை அழிப்பது சுலபம்‌ என சிறீலங்கா நினைக்‌கின்றது. தமிழீழப்‌ போராட்டம்‌ அழிக்கப்பட்டால் முஸ்லீம்களின்‌ உரிமைக்கான குரலும்‌ அழிந்து போகும்‌ என சரியாகக் கணித்து செயற்படுகின்றது. கிழக்கில்‌ இருந்து கிழக்‌கு வாழ்‌ முஸ்லிம்‌ மக்களின்‌ உரிமைக்காக போராடப்‌ போவதாக உருவாக்கப்பட்டது, முஸ்‌லிம்‌ காங்கிரஸ்‌. ஆனால்‌ அதன்‌ தலைமையின் நலன் முழுவதும் சிறிலங்காவில்‌ (கொழும்பில்‌) தங்கி இருக்கிறது. அவர்களது குறுகிய வழியில் பதவிகளை தலைமையைப் பெறும் எண்ணத்தையும் கொழும்பில் தங்கிநிற்கும் நிலையையும் பயன்‌படுத்தி தமிழர்களையும்‌ முஸ்‌லிம்களையும்‌ பிரிப்பதில்‌ சிங்கள அரசு வெற்றிகண்டுள்ளது. தமிழீழத்தில் முஸ்லீம்களின் நிலைப்பாடு குறித்து ஓரளவு பார்ப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்‌. சிறிலங்காவிலோ, தமிழீழத்‌திலோ முஸ்லிம்கள்‌ தமது உரிமைகளுக்காகப் போராடியது கிடையாது. சிறீலங்காவால்‌ தமிழர்களும்‌, முஸ்லிம்களும்‌ ஒடுக்கப்பட்டார்‌கள்‌. தமிழர்கள்‌ ஒடுக்குமுறைக்‌கெதிராகப்‌ போராடினார்கள்‌. ஆனால்‌ முஸ்லிம்களோ தமிழர்‌, சிங்களவர்‌ என்ற முரண்‌பாட்டைப்‌ பயன்படுத்தி வாழ முயன்றார்கள்‌. தாங்கள்‌ தமிழர்களும்‌ அல்ல, சிங்களவர்களும்‌ அல்ல, முஸ்‌லிம்கள்‌ எனவும்‌, அராபியர்‌கள்‌ எனவும்‌ இனம்‌ காண முயன்றார்கள்‌. அதன்‌ மூலம்‌ சிங்கள தேசத்‌திடம் அற்ப சலுகைகளை பெறலாம்‌ என நம்பினார்கள்‌, சில சலுகைகளையும்‌ பெற்‌ றார்கள்‌. உண்மையில்‌ இத்தீவில்‌ வாழும் முஸ்லிம்களில் 95% வீதமானோர் தமிழர்கள்‌. இங்கு வாழும் முஸ்லீம் மக்களின் வாழ்க்கை முறையில்‌ எத்தகைய அராபிய பண்பாட்டையும் காணமுடியாது. ஒரு சிலரைத்‌ தவிர வேறு யாருக்கும்‌ அரபு மொழி தெரியாது. அவர்கள்‌ பாரம்‌பரியமாக வாழ்ந்த எந்த ஊருக்கும்‌ அரபுப்‌ பெயர்‌ கிடையாது. இன்று சிறிலங்காவிலும்‌, தமிழீழத்திலும்‌ முஸ்லிம்கள்‌ தமிழ்‌ பேசுகின்றார்கள்‌. இதற்‌கு முக்கிய காரணம்‌ கலாச்சாரமே. முஸ்‌லிம்‌ பெண்கள்‌ வெளியே சென்று மற்றைய சமூகத்தினரோடு கலந்து வாழாததால்‌ வீட்டு மொழி தாய்மொழித் தமிழ் பிள்ளைகளால் தொடர்ந்து பேசப்படுகிறது. இப்படியாக தமிழ்‌ மொழி சிறீலங்காவில்‌ அழியாமல்‌ காப்பாற்றப்பட்டது. ஆனால்‌ அரபு மொழி பேணப்படவில்லை. இவை முஸ்லிம்கள்‌ தமிழர்‌கள்‌ என்பதை தெளிவாக எடுத்துக்‌ காட்டப்‌போதுமானவை. சிங்களவர்களிடம்‌ சலுகைகளைப்‌ பெறுவதற்காக முஸ்‌லிம்‌ மக்கள்‌ தமது வரலாற்றை மறைத்‌து நிற்பதை நாம்‌ பார்க்கிறோம்‌. கொழும்புத்‌ தலைமைகள்‌ அல்லது அங்கு வணிக மற்‌றும்‌ நலன்களைக்‌ கொண்ட தலைமைகளே, முஸ்லிம்‌ மக்‌களை வழிநடாத்தும்‌ பள்ளிவாசல்களைக்‌ கட்டுப்படுத்துகின்றன. மார்க்கம்‌ என்பதன்‌ பெயரால்‌ அறியாமையில்‌ வாழும்‌ பல முஸ்லிம்‌ மக்கள்‌ இத்‌தலைமைகளால்‌ பிழையாக வழிநடாத்தப்படுகின்றார்கள்‌. 33% முஸ்லிம்‌ மக்கள் வாழ்ந்த புத்தளம்‌ இன்று சிங்‌களவர்களிடம்‌ பறிபோயிற்று. 46.1% முஸ்லிம்கள்‌ வாழ்ந்த அம்பாறை மாவட்டத்தில்‌ 1732 சதுர மைலில்‌ 1200 சதுர மைலுக்கு மேல்‌ சிங்களவர்களிடம்‌ பறிபோயிற்று. விகிதாசார அடிப்படையில்‌ தேர்தல்‌ என்பதின்‌ பெயரால்‌. முஸ்லிம்‌ மக்களின் பிரதிதிதித்துவம்‌ குறைக்கப்பட்டது. முஸ்லிம்களிடமிருந்து வர்த்தகம்‌ திட்டமிட்டு சிங்களவர்களால்‌ கைப்பற்றப்பட்டது. இதற்கு ஓர் சிறந்த உதாரணம். புத்தளத்தில் பழைய பேருந்து நிலையத்தில் முஸ்லிம் மக்களின் வர்த்தகத்தை உடைக்க புதிய நிலையம்‌ ஒன்று அமைக்கப்‌பட்டு அங்குள்ள கடைகள்‌ சிங்‌களவருக்கு கொடுக்கப்பட்டமை யாகும்‌. இதை எதிர்த்த முஸ்லிம்களைப் பெரிய பள்ளி வாசலுக்குள்‌ வைத்து சிங்களப்‌ படை சுட்டுக்‌ கொன்றது. இவற்றை எதிர்த்து முஸ்லிம்‌கள்‌ போராடவில்லை. பதிலாக, முஸ்லிம்களின்‌ உரிமைகளையும்‌ பாதுகாக்கக்கூடிய தமிழீழ விடுதலைப்‌ போராட்டத்தை அற்ப சலுகைகளுக்காக சிங்‌கள அரசுகளுடன்‌ சேர்ந்து. அழிக்க முனைகின்றனர்‌. தமிழீழப் போராட்டத்தால்‌ கிழக்கில் 50, 000 சிங்களக்‌ குடும்பங்கள்‌ குடியேற்றப்படுவது தடுக்கப்பட்டது. விகிதாசார அடிப்படையில்‌ வேலை வாய்ப்பு, பதவி உயர்‌ என சில சலுகைகளை சிறிலங்கா வழங்க முன்வந்தது. முஸ்லிம்கள்‌ தமது உரிமை பற்றிப்‌ பேசும் பலத்தைப்‌ பெற்றனர்‌. இப்போராட்டத்தோடு இணைத்து நின்று போராடாமல், போராட்டத்திற்கு எதிராகவே முஸ்லிம் மக்கள் செயற்பட்டனர். 1983 ல்‌ இருந்து தமிழீழப்‌ போராட்டம்‌ கூர்மை அடையத்‌ தொடங்கியதும்‌, தமிழ்‌ மக்களையும்‌, முஸ்லிம்‌ மக்களையும்‌ பிரித்து அழிக்கும்‌ திட்டத்தை சிறீலங்கா செயற்‌படுத்தத்‌ தொடங்கியது. தமிழர்‌, சிங்களவர்‌ முரண்‌பாட்டில்‌ வாழ நினைக்கும் முஸ்லிம்களை சிறிலிங்கா பயன்‌படுத்தியது. முஸ்லிம்‌ ஊர்காவல்‌ படைகளை உருவாக்கியது. தனது கைக்கலிகளைக்‌ கொண்டு தமிழ்‌, முஸ்லிம்‌ சமூகக்‌ கலவரங்களைத்‌ தூண்டியது. விசேட அதிரடிப்படை, முஸ்‌லீம் ஊர்காவற்படையின் துணையுடன்‌ பல தமிழ்‌ கிராமங்களில்‌ கிராமியப்‌ படுகொலைகளை நடாத்தியது. தமிழ்க்‌ கிராமங்களிலலிருந்து விரட்டப்பட்ட தமிழ் மக்கள் குறைந்த விலைக்கு தமது நிலங்களை விற்றனர்‌ அல்லது விட்டுச்‌ செல்ல நிர்ப்பந்திக்கப்‌பட்டனர்‌. சிறிலங்கா எதிர்பார்‌த்தது போல தமிழ்‌, முஸ்லிம் மக்களின்‌ உறவு நிலை உடைக்‌கப்பட்டது. சிறீலங்காப்‌ படையில்‌ அல்‌லது காவல்‌துறையில்‌ சேரும்‌ தமிழர்கள்‌ துரோகிகளாக கருதப்பட்டதால்‌ தமிழர்கள்‌ அதில்‌ சேர்வதைத்‌ தவிர்த்தனர்‌. ஆனால்‌ முஸ்லிம்கள்‌ தாம்‌ தனித்துவமானவர்கள்‌ எனக்‌ கூறிக்‌கொண்டு அதில்‌ சேர்ந்‌தனர்‌. இந்த முரண்பாட்டையும்‌ சிறீலங்கா பயன்படுத்தத்‌ தவறவில்லை. தமிழ்‌, முஸ்லிம்‌ மக்களின்‌ உறவுநிலை மிகப் பாதிப்‌படைத்த நிலையில்‌ நாம்‌ முஸ்‌லிம்‌ மக்கள்‌ சார்பாக ஓர்‌ வேலைத்‌ திட்டத்தை 21.4.1988ல்‌ முஸ்லிம்‌ ஐக்கிய விடுதலை முன்னணியூடாக முன்‌ வைத்தோம்‌. முஸ்லிம்கள்‌ ஒன்றிணைந்த தாயகத்தில் 30% குறைவில்லாத வகையில் மாகாண சபையில் பிரதிநிதித்துவம் பெறவும் அமைச்சரவையில் இடம்பெறவும் உரித்துடையவர்கள். எதிர்காலக் காணிப்‌ பங்கீடு முஸ்லிம்களுக்கு கிழக்கு மாகாணத்தில்‌ 35% குறைவில்லாத வகையிலும்‌, மன்னார்‌ மாவட்‌டத்தில்‌ 30% குறைவில்லாத வகையிலும்‌, வடமாகாணத்தின்‌ ஏனைய பகுதிகளில்‌ 5% குறைவில்லாத வகையிலும்‌ இருக்க வேண்டும்‌. முஸ்லிம்‌ மக்களுக்கு இஸ்‌லாமிய பல்கலைக்‌கழகம்‌ நிறுவப்படும்‌. தமிழீழத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் வாழும் விகிதாச்சாரத்தின் படி பொதுத்துறை வேலை வாய்ப்புக்கான உரிமையை முஸ்லிம்‌ மக்கள்‌ கொண்டிருப்பர்‌. முஸ்லிம்‌ மக்களின் தனித்துவத்தின்‌ உரிமைகள், அக்கறைகள்‌ என்பவற்றை பாதிக்‌கக்கூடிய எதுவித சட்டவாக்‌கங்களும்‌ அவற்றிற்கு முஸ்லிம்‌ பிரதிநிதிகளின் 3/4 பெரும்‌பான்மையினர்‌ சார்பாக வாக்‌களித்தாலன்றி தமிழீழத்தில்‌ நிறைவேற்றப்படலாகாது என்‌னும்‌ வகையில்‌ பல விடயங்‌களில்‌ இணக்கம்‌ கண்டோம்‌. ஓர்‌ சுமூகமான சூழ்நிலை உருவாகத்‌ தொடங்கியது. முஸ்லிம்‌ மக்கள்‌ மனதில்‌ தமிழீழ விடுதலைப்‌ புலிகளின்‌ போராட்டத்தினால்‌ தான்‌ தமது நிலங்களும்‌ உரிமைகளும்‌ பாதுகாக்கப்படும்‌ என்ற உணர்வு வளரத்‌ தொடங்கியது. பல வழிகளில்‌ நாம்‌ முஸ்லிம்‌ மக்களை அணுகிப்‌ பேசினோம்‌. சாதாரண முஸ்லிம்‌ மக்கள்‌ உண்மையைப் புரிந்து கொண்டு போராட்டத்தை ஆதரிக்கும்‌ செயலில்‌ இறங்கத்‌ தொடங்கினர்‌. கொழும்பில்‌ தங்கி நிற்கும்‌ முஸ்லிம்‌ தலைமைகள்‌ தமது தலைமைக்கு ஆபத்து வருவதை உணர்ந்து கொண்டனர்‌. தமது நீண்டகால திட்டங்‌கள் உடைந்து போவதைக்‌ கண்டது சிறீலங்கா. தமிழீழ விடுதலைப்‌ புலிகளை அழித்து தமிழ்‌, முஸ்லிம்‌ மக்கள் உறவை, தமது குறுகிய நலனுக்காக உடைக்க வேண்‌டிய அவசியம்‌ இவர்கள்‌ எல்‌லோருக்கும்‌ ஏற்பட்டது. முஸ்லிம்‌ மக்களுக்கு பாதுகாப்பு என்னும்‌ பெயரில்‌ இந்தியப்படையுடனும் பின்னர்‌ சிறிலங்காவுடன்‌ சேர்ந்த முஸ்லிம் காங்கிரஸ்‌ ஓர்‌ சமூக விரோதக் கும்பலை, முஸ்லிம்‌ மத வெறியை வளர்த்தது. தமிழீழ விடுதலைப்‌ புலிகளின்‌ முஸ்லிம் உறுப்பினர்களையும் ஆதரவளர்களையும் கொலைசெய்தனர். தமிழீழ விடுதலைப்‌ போராட்‌டத்திற்கு எதிராக அராபிய நாடுகளில் பொய்ப்‌ பிரச்சாரங்‌களைக் கட்டவிழ்த்து விட்டனர். விடுதலைப்‌ புலிகள்‌ முஸ்லிம்‌களை கொல்கின்றார்கள்‌ எனக்‌ கூறி பணம்‌ திரட்டி தமது சு௧போக வாழ்க்கைக்கு பயன்‌படுத்தினர்‌. தமிழீழப்‌ போராட்டத்திற்கு எதிராகச் செயற்பட்டுக் கொண்டு தமிழீழப்‌ போராட்ட வெற்றிகளில்‌ பங்கு வேண்டும்‌ என நியாயமற்ற தீர்வுகளை நிபந்‌தனைகளோடு வைத்தனர்‌. மீண்டும்‌ தமிழீழ-சிறிலங்காப்‌ போர்‌ ஆரம்பித்த போது, சிறீலங்காவுடன்‌ சேர்ந்து பெருமளவில்‌ தமிழ் மக்களைக்‌ கொலை செய்தனர்‌. பல பெண்கள்‌ பாலியல்‌ வன்‌முறைக்குள்ளாக்கப்பட்டனர்‌. கிழக்கில்‌ இவர்களின்‌ செயலால்‌ 4 இலட்சம்‌ தமிழ்‌ மக்கள்‌ அகதிகள்‌ ஆகினர்‌. கொல்லப்‌பட்ட 4000ற்கும்‌ மேலான மக்‌களில்‌ 2000ற்கும்‌ மேற்பட்‌டோர்‌ முஸ்லிம்களால்‌ கொல்‌லப்பட்டனர்‌. அம்பாறையில்‌ 80,000 கும்‌ மேற்பட்ட தமிழ் மக்கள் கொலைசெய்யப்பட்டு விரட்டப்பட்டனர்‌. பல கிராமியப்‌ படுகொலைகள்‌ நடந்தன. வடக்கில்‌ இருந்த 600,000ம்‌ மக்களில்‌ 30,000ம் பேர் போர்‌ ஆரம்பித்ததும்‌ சிறீலங்காவுக்கு பாதுகாப்புத்‌ தேடிச்‌ சென்றனர்‌. மிகுதிப்‌ பேர்‌ அவர்கள்‌ பாதுகாப்புக்‌ கருதி அனுப்பிவைக்கப்பட்டனர்‌. விடுதலைப்‌ புலிகளின்‌ கட்டுப்‌பாட்டில்‌ இருந்த பகுதிகளில் ஒரு முஸ்லீம் கூட கொல்லப்படவுமில்லை, ஒரு முஸ்லிம் பெண்கூட பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வடக்கும்‌ கிழக்கும்‌ இணைந்த நிர்வாகத்தில்‌ கிழக்கில்‌ 33% இருக்கும்‌ முஸ்‌லிம்‌ மக்களின் வீதம்‌ 18 வீதமாக மறைந்துவிடும்‌. இணைந்த நிவாகத்தால்‌ முஸ்லிம் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற கருத்து முன்வைக்கப்படுகின்‌றது. இணைந்த நிர்வாகத்தில்‌ வடக்கில்‌ 4.7% இருக்கும் முஸ்லிம்கள்‌ வீதம்‌ 16 வீதமாக உயருவது பற்றியும்‌ இலங்‌கைத்தீவில்‌ கிழக்கு மாகாணத்‌தில்‌ முஸ்லிம்களின்‌ வீதம்‌ 2.1 ஆகும்‌. இது இணைந்த நிர்வாகத்தில் 18% உயருவதையும்‌ யாரும்‌ பேசுவதில்லை. அம்பாறையில்‌ இருக்கும் 1,01,754 முஸ்லிம் மக்கள் குறித்து பெரிதும்‌ பேசும்‌ முஸ்‌லிம்‌. தலைமை கண்டியில்‌ வாழும் முஸ்லிம்கள் வாழும்‌ 1,25,646 முஸ்லிம்கள் குறித்தும் கொழும்பில் வாழும் 1,68,956 மக்கள்‌ குறித்து எதுவும்‌ பேசுவது கிடையாது. உரிமைப்‌ போராட்டத்திற்கு ஆதரவு தராமல்‌ அதைக்‌ குழப்பும்‌ இவர்களது தன்மை இதனால்‌ தெளிவாகும்‌. முஸ்லிம்‌ மக்களின்‌ உரிமைக்‌காக தமிழர்கள்‌ தொடர்ந்து குரல்‌ கொடுத்து வந்துள்ளனர்‌. 1976ம்‌. ஆண்டு மாசி 2ம்‌ தான்‌ புத்தளம்‌ பெரிய பள்ளிவாசலில்‌ சிறீலங்கா காவற்‌துறையால்‌ 7 முஸ்லிம்கள்‌ சுட்டுக்‌ கொல்லப்பட்டபோது யாருமே அது குறித்துப்‌ பேசாதபோது தழர்கள்‌ தான்‌ அது குறித்துப்‌ பேசினார்கள்‌. தமிழீழ விடுதலைப்‌ புலிகள்‌ தமிழீழத்தில்‌ உள்ள தமிழ் மக்களுக்காக மட்டுமல்ல முஸ்லிம்களுக்காகவும்‌ தான்‌ போராடினார்கள்‌. தமிழ்‌ மக்களோடு தமிழீழ விடுதலைப்‌ புலிகளோடு சேராது முஸ்லிம்‌ மக்கள்‌ போராட்டக் காலத்தில்‌ பிரிந்து நின்றதன் மூலம் வரலாற்றுத்‌ தவறையும்‌, தமிழீழ விடுதலைப்‌ புலிகளையும், தமிழ்‌ மக்களையும்‌ அழிப்பதன்‌ மூலம்‌ வரலாற்றுத்‌ துரோகத்தையும்‌ செய்துள்ளனர்‌. தாம்‌ தமிழர்‌ அல்ல, சிங்களவர்‌ அல்ல என தனித்து நின்ற காலம்‌ போய்‌ இப்போது, தம்மை அராபியர்கள்‌ என இனம்‌ காண முயல்கின்றனர்‌. இவர்கள்‌ அராபியர்களும் இல்லை, சிங்களவரும் இல்லை. தமிழர்கள் தான். இவர்கள் தமது தவறைத்‌ திருத்தாது தமிழ்‌ மக்களுக்கு எதிராக தமிழீழ போராட்டத்‌திற்கு எதிராக செயற்பட்டு சிங்கள தேசத்திடம்‌ சலுகைகள்‌, பெறும்‌ எண்ணத்தைக் கைவிட வேண்டும்‌. சிங்கள தேசம்‌ இவர்களைப்‌ பயன்படுத்திய பின்‌ இவர்‌களை அழிக்கத் தயங்காது. இந்த நிலை தொடருமாக இருந்தால்‌ இலங்கைத் தீவில்‌ தங்களது தனித்துவங்களை இழந்த ஒரு உதிரிகள்‌ கூட்டமாகத்தான்‌ முஸ்லிம்கள்‌ வாழு வேண்டிய ஒரு சூழ்நிலை ஏற்படலாம்‌. *****
  8. கட்டுரை LTTE–MUSLIM ACCORD Book: The Satanic Force, Volume 1, 1988 April Page no: 747 A significant development took place in Madras in the third week of April, which passed off without much fanfare or publicity, but which could well prove to be a historic turning point in the Tamil struggle in Sri Lanka. Understanding was reached between the Liberation Tigers of Tamil Eelam and the visiting Muslim delegation on a wide spectrum of issues concerning the two people. The Muslim delegation of the recently formed Muslim United Liberation Front (MULF) was headed by former SLIiT Minister Dr. Al Haj Baduddin Mahmud and included the Secretary General of the Front, Mr.M.I.M.Mohideen and former M.P. for Kalmunai Mr.M.C.Ahmed. A joint statement of both parties, signed on behalf of the LTTE by the Madras-based farmer Jaffna Commander Mr.Krishnakumar (Kittu) and by Mr.Mohideen of the MULF has far-reaching implications, apart from opening the way for a close identity in Tamil-Muslim relations in the Eastern Province. The meetings were spread over three days — the 15th, 16th and 19th April. The high degree of boldness evidenced by both sides and the spirit of give-and-take that was displayed stand out in terms of the joint statement. Following are some of the highlights: • It is understood that although the Muslim people living in Sri Lanka speak the Tamil language, they are a distinct ethnic group falling within the totality of Tamil nationality. • The Muslim people recognise that the area composed of the northern and eastern provinces is as much their traditional homeland as it is of the rest of the Tamil-speaking people. • The Muslim people believe that their interests could be safeguarded only in their homeland, and this could be achieved only through a greater unity between all Tamil-speaking people. • Since the Muslim people constitute a minority in their homeland, and hence it is important that they should be assured of a life free from fear and insecurity, the LTTE will take all steps to ensure this and extend all co-operation in the future to have the security of the Muslim people guaranteed by law. • Whatever steps taken to safeguard the interests of the Muslim people and the arriving at a reasonable power-sharing agreement will be done in such a way as not to undermine the territorial integrity of the Tamil homeland. • While the Muslim people form 33% of the population in the Eastern Province and will comprise 18% in the combined Northern and Eastern Provinces, it is agreed that in order to ensure maximum safeguard for them and enable them to enjoy an equitable power-sharing, they will be entitled to not less than 303 of the representation in the Provincial Council and the Cabinet. • It is agreed that in all future land distribution, the Muslim people will be entitled to not less than 35% in the Eastern Province, not less than 30% in the Mannar district and not less than 5% in other areas. • Unless otherwise a Muslim has been appointed Chief Minister of the Northern-Eastern Provincial Council, legal provision should be made to ensure that a Muslim is appointed as the Deputy Chief Minister of said Council. • A decolonization policy should be evolved in order to redress the adverse effects caused by planned Government colonization. • The forthcoming election for the Provincial Council of the Tamil-speaking Province should be based on a voters' list compiled in a manner that is fair and justifiable • It was agreed that in order to alleviate the sufferings of the vast mass of innocent civilians who are the ones who are truly affected by the military actions, and to enable them to return to a normal, peaceful life, there should be an immediate ceasefire. • Once hostilities cease, it is imperative that there should be an interim administration until such time as people return to normal life and Provincial Council elections are held. The composition of the interim administration should be in accordance with the earlier decision arrived at in this connection. Some of the major implications that follow from this agreement are: The Muslims in the Eastern and Northern Provinces have decided that their future well-being lies in identifying themselves with the other Tamil-speaking people in these two provinces, and not look for succour outside; that they are no longer prepared to be led by Muslim leaders in the south-west; that they recognise in the LTTE its Tamil representative character; above all, they have decided to support the concept of the Tamil traditional homeland. On their return to Colombo, the M.U.L.F. has appealed to Indian Prime Minister Rajiv Gandhi to announce a ceasefire, and urged President Jayewardene to issue a proclamation merging the Northern and Eastern Provinces. While the M.U.L.F. delegation's visit to Madras was by all accounts a big success and its dialogue with the LITE cordial and fruitful, there were a couple of unpleasant incidents prior to their departure, according to informed sources. They arose out of statements made by the visiting Muslim leader to Indian journalists that the LITE had no hand in the recent killings of some Muslims in Kalmunai and that another militant group was the one responsible. This apparently irked some members of two other militant groups in Madras, who, on the pretext of seeking an interview with the Muslim leaders at the hotel President, where they were staying, tried to browbeat them.'The LITE was responsible for the killing of 17 Muslims in Kalmunai. How can you cover it up ?', asked one of them heatedly.'You came to Madras to speak only to the LTTE ? You think that only the LTTE has weapons? We too have arms, you know, said another, adopting an offensive tone. According to a report in the Tamil weekly, the JUNIOR VIKATAN, the Muslim leaders while being polite, dealt with the discourteous youths very firmly. 'Look here, "Thambimare"— we do not issue statements about happenings in the Eastern Provinces while seated in Madras. We are all people who came from there. We have evidence to prove that it was your organisation that was responsible for the killings of Muslims in Kalmunai. If you so desire, we are ready to produce the evidence in public'. The second man who spoke about arms was told 'Please don't run away with the idea that we are afraid of weapons. We came to talk to the LTTE not because they have arms, but because we consider them the legitimate representatives of the Tamils. If you try to threaten us with arms, we can assure you that we Muslims can get any amount of arms from abroad, and we are not going to take shelter behind third parties and display our might.. ' (in an obvious reference to the group's consorting with the IPKF in the East). The interview ended on that note, with the youths walking out in that same threatening mood! *****
  9. கடற்புலிகளின் தாழ் தோற்றுருவக் கலம் | Low Profile Vessal of SBT முக்கியமான சில படிமங்கள் இதன் வகுப்புப் பெயர் (Class name) அல்லது கலப்பெயர் (Craft name) யாருக்கேனும் தெரிந்தால் தெரியப்படுத்துங்கள்.... நானும் கேட்கிறன், இதுவரைக்கும் ஆரும் சொன்னதில்லை. இனிமேலும் தெரியப்படுத்துவார்கள் என்ற நம்பிக்கையில்லை. இருந்தாலும் சும்மா கேட்கிறன், வரலாற்றிலை பதிய விரும்பினால் சொல்லுங்கோ. 'நீரினுள் தாழ்கிறது' இதையொத்த கடற்கலன்:
  10. கடற்கரும்புலிகளின் தாழ் தோற்றுருவக் கலம் | Low Profile Vessal of SBT முக்கியமான சில படிமங்கள் ஈழத்தமிழர் தங்களிடம் உள்ள புலிகளின் நிகழ்படங்கள் மற்றும் நிழற்படங்களை காசுக்காக விற்கிறார்கள். சிலர் வைத்திருந்தும் தர மறுக்கிறார்கள்! இதன் வகுப்புப் பெயர் (Class name) அல்லது கலப்பெயர் (Craft name) யாருக்கேனும் தெரிந்தால் தெரியப்படுத்துங்கள்.... நானும் கேட்டுக்கொண்டிருக்கிறன், இதுவரைக்கும் ஆரும் சொன்னதில்லை! இனிமேலும் தெரியப்படுத்துவார்கள் என்ற நம்பிக்கையில்லை! இருந்தாலும் சும்மா கேட்கிறன், வரலாற்றிலை பதிய விரும்பினால் சொல்லுங்கோ. "சின்கள கடற்படை வீரனொருவன் புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட இக்கடற்கலத்தில் அமர்ந்திருக்கிறான்" இதையொத்த கடற்கலன்:
  11. நான் உந்த சிக்னேச்சரிலை வைத்திருக்கும் வசங்கள் எல்லாம் கள உறுப்பினர் அல்லாதவர்களால் பார்க்க இயலவில்லை. ஏன் அப்படி என்று அறியலாமா?
  12. நிழற்படங்கள் நினைவாலயம் & நினைவுத்தூண்கள் இதற்குள் முஸ்லிம்களாலும் அவர்களின் துணையோடும் செய்யப்பட்ட இப்படுகொலைகள் நினைவாய் தமிழர்கள் அமைத்த நினைவுத்தூண்களின் படிமங்கள் உள்ளன. வீரமுனைப் படுகொலை: இப்படுகொலையினை முஸ்லிம் ஊர்காவல் படையினர் சிங்களப் படையினரோடு இணைந்து மேற்கொண்டனர். இந்த நினைவுத்தூணானது அடுத்தடுத்து வரும் தலைமுறைகளுக்கு தைக்கிறது என்றும் அதனால் இதனை உடைத்தெறிய வேண்டும் என்று பள்ளிவாசல் ஒன்றில் சிற்றிசன் கொமிற்றி, சமாதான அமைப்பு போன்ற ஒன்று, ஏற்படுத்தப்பட்ட கூட்டத்தில் முஸ்லிம்கள் விடுத்த கோரிக்கையினை தமிழர்கள் புறந்தள்ளினர். தமது தலைமுறைகள் இந்த வரலாற்றை அறியவேண்டும் என்று முஸ்லிம்களிடத்தில் ஆணித்தரமாக கூறி மறுத்தனர். படிமப்புரவு: வீரகேசரி வலைத்தளம் படிமப்புரவு: Arangam சத்துருக்கொண்டான் படுகொலை: இப்படுகொலையினை முஸ்லிம் ஊர்காவல் படையினர் சிங்களப் படையினரோடு இணைந்து மேற்கொண்டனர். படிமப்புரவு: Lest We Forget - Massacres of Tamils 1956 - 2001 Part I படிமப்புரவு: BBC தமிழ் சவுக்கடி படுகொலை: 20.09.1990 திகதி காலை 8.30 மணியளவில் இப்படுகொலையினை முஸ்லிம் ஊர்காவல் படையினர் சிங்களப் படையினரோடு இணைந்து மேற்கொண்டனர். படிமப்புரவு: IBC தமிழ் புதுக்குடியிருப்பு படுகொலை: இப்படுகொலையில் முஸ்லிம் ஊர்காவல் படையினர் ஈடுபட்டனர். படிமப்புரவு: maddunews மேலுள்ள படிமத்தின் வலது கைப் பக்கத்திலுள்ளது போன்றே இடது கைப் பக்கத்திலும் ஒரு சிட்டியின் படிமம் இருந்தது. | படிமப்புரவு: வேசுபுக்கு
  13. நிழற்படங்கள் படுகொலைகள் தென் தமிழீழத்தில் சிங்களவரோடு சேர்ந்து முஸ்லிம்களால் மேற்கொள்ளப்பட்ட அட்டூழியங்களால் ஏற்பட்ட அழிபாடுகள் மற்றும் படுகொலைகள் தொடர்பான படிமங்கள் இங்கே பதிவிடப்பட்டுள்ளன. படிம மூலம்: தரிசனம் பார்வை-1 இங்கே உள்ள தமிழரின் சடலங்கள் யாவும் அரைகுறையாக எரியூப்பட்டுள்ளன. இவை மட்டு-அம்பாறையில் படம் பிடிக்கப்பட்டனவாகும். 'மட்டு. கல்லடிப் பாலத்திற்குக் கீழே நீர்த்தாவரங்களுக்குப் பக்கத்தில் சடலமொன்று கிடப்பதைக் காண்க'

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.