Everything posted by நன்னிச் சோழன்
-
Unidentified statue .. Help me to discover this master piece.jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
Unidentified statue .. Help me to discover this master piece 6.jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
Unidentified statue .. Help me to discover this master piece 7.jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
Unidentified statue .. Help me to discover this master piece 8.jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
Unidentified statue .. Help me to discover this master piece 9.jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
Unidentified statue .. Help me to discover this master piece 2.jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
Unidentified statue .. Help me to discover this master piece 3.jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
Unidentified statue .. Help me to discover this master piece 4.jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
Unidentified statue .. Help me to discover this master piece 5.jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
களம்பல கண்ட மன்னார் மாவட்டக் கடற்புலிகளின் தளபதி லெப். கேணல் எழிற்கண்ணன்
குடாரப்பு தரையிறக்கம்: இரண்டாம் நாள் மாலை https://vayavan.com/?p=11828 குடாரப்பு தரையிறக்கத்தில் பல நூறு போராளிகளை சில மணி நேரத்தில் தரையிறக்கிய பணியில் பங்கு கொண்டு சிறப்பான பணிதனை ஆற்றியவர்களை கடந்து ஆனையிறவு வெற்றியை பற்றி கதைக்க முடியாது. அந்த வகையில் அலைகடலை தாண்டி தரைவேங்கைகளை பக்குவமாய் தரையிறக்கிவிட்ட கடல்வேங்கை கடற்புலி லெப்.கேணல் எழில்கண்ணன் பிரதான பங்கினை வகித்தார். படையணிகளை வெற்றிகரமாக தரையிறக்கம் செய்துவிட்டு தொடர்ச்சியாக வந்த நடைகளில் ஆயுத உணவு விநியோயகம் செய்திட தன்னால் இயன்றளவு முயற்சிகளை எடுத்தவர். நூறு கடல்மைல்களை துல்லியமாக அவதானிக்க கூடிய அதி நவீன இஷ்ரேல் தயாரிப்பான் “மிதக்கும்_கோட்டை”கள் போன்ற கப்பல்கள் உட்பட பல சுப்ப டோரா படகுகள்( Super Dvora)வடமராட்சி கிழக்கின் கடல் முழுவதையும் ஆக்கிரமித்தன. காங்கேயன்துறை,திருகோணமலை கடற்படை தளங்களில் இருந்து விரைந்து வந்த எதிரியின் சுப்படோறாக்கள் ஆர்ப்பரிக்கும் கடல் அலையின் பயங்கரத்தையும் விஞ்சியே நின்றன. அத்தனை கடல் வியூகங்களையும் உடைத்துக் கொண்டு லெப்.கேணல் எழில்கண்ணன் தலைமையிலான படகுத் தொகுதி சுண்டிக்குளம் கடலோரம் இருந்து தன் பயணத்தை தொடர்ந்தது. தாளையடியை அண்டிய கடலோரம் வரை வெற்றிகரமாக பெருமளவு உடன் சமைத்த உணவு, உலர் உணவு மற்றும் ராங்கி எதிர்ப்பு ஆயுதமான எஸ்.பி. ஜி 9(SPG – 9) உட்பட சில கனரக ஆயுதம் உட்பட நடைபேசி(வோக்கி)களுக்கான மின்கலம் உட்பட அந்த களத்துக்கான அத்தியாவசிய பொருள்களுடன் அந்த படகுத் தொகுதி வந்து கொண்டிருந்தது. அபிவிருத்துயடைந்த நாடுகளின் உயர் கடற்படை பயிற்சி மற்றும் அதிநவீன கண்காணிப்பு வசதிகளுடன் கடலில் நின்று கொண்டிருந்த எதிரியின் தாக்குதல் வியூகத்தினுள் ஈற்றில் அந்தப் படகு அகப்பட்டுக்கொண்டது. #கடற்சூரியன் என புகழப்படும் இந்த வீரன் அந்த நிலையிலும் தன்னையும் படகுத்தொகுதியையும் சம நிலைப்படுத்தி தனது படகினை விடுதலைப் புலிகளினால் தரையிறக்கத்தின் மூலம் புதிதாக தமது ஆளுகையின் கீழ் கொண்டு வந்த செம்பியன்பற்று கடற்கரையினை நோக்கி செலுத்திவிட்டிருந்தார். படகு தரைதட்டிய சில விநாடிகளில் மயக்க நிலையினை அடைந்தார். தலையில் ஏற்பட்ட பலமான காயமே இந்த வீரனை கோமா(Coma stage) நிலைக்கு இட்டுச் சென்றது. படகு தொகுதிக் கொமாண்டரான லெப்.கேணல் எழில்கண்ணன் விழுப்புண் அடைந்த நிலையில் செம்பியன்பற்றில் அன்றிருந்த களமுனை வைத்தியசாலையில் எங்களால் சிகிச்சை அளிக்கப்பட்டார். அங்கேயே பராமரிக்கப்பட்ட எழில்க்கண்ணன் தரைப்பாதை பிடிக்கப்பட்ட பின்னர் அங்கிருந்து கட்டைக்காட்டில் அமைக்கப்பட்டிருந்த Dr.தூயவன் அவர்களின் கடமையிலிருந்த வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். உடல் தேறிய பின்னரும் பல களங்களை கண்ட இந்த எங்கள் தங்கக் கடற்சூரியன் 07.08.2006 அன்று முள்ளிவாய்க்கால் பகுதியில் ஏற்பட்ட விபத்தொன்றில் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்”.
-
எருக்கலம்பிட்டியில் வீரவரலாறாகிய கடற்புலி மேஜர் சீர்மாறன்.
11-06-2008. அதிகாலை 5.00 மணியிருக்கும். புதுக்குடியிருப்பு- கைவேலிப்பகுதியில் அமைந்திருந்த எனது முகாம் வோக்கி “அல்பா றோமியோ……. அல்பா றோமியோ….. பப்பா சேரா……” என்று தொடர்ச்சியாக அழைத்துக்கொண்டிருந்தது. அரைத்தூக்கத்தில் படுத்திருந்த நான் வோக்கி அழைக்கும் சத்தம் கேட்டதும் அவசரமாக எழுந்து வோக்கியின் அழைப்பை ஏற்றுக்கொண்டபோது எதிர்முனையில் கடற்புலிகளின் நிர்வாகச்செயலகப்போராளி கதைத்தார். “சீர்மாறனும் இன்னும் நான்கு போராளிகளும் வீரச்சாவு. மன்னார்- எருக்கலம்பிட்டியில் எங்கடயாட்கள் நல்ல அடி கொடுத்திருக்கிறார்கள். நவீனரக ராடர்களும் ஆயுதங்களும் எடுத்திருக்கிறார்கள்.” என்றுடி கூறிவிட்டு தொடர்பை துண்டித்துக்கொண்டார் அந்தப்போராளி. இந்தத்தகவல் கிடைத்ததும் நான் உடனேயே குளித்து வெளிக்கிட்டு கிளிநொச்சி புறப்படுவதற்காக ஆயத்தமானேன். காலை 6.30 மணிக்கு புதுக்குடியிருப்பு- பரந்தன் வழித்தடத்தில் முதலாவது சேவையில் ஈடுபடும் தமிழீழ போக்குவரவுக்கழகத்திற்குச்சொந்தமான பேரூந்தில் ஏறி சீர்மாறனின் நினைவுகள் இதயத்தை நெருட பரந்தனை நோக்கி சென்றுகொண்டிருந்தேன். 2001-ம் ஆண்டின் நடுப்பகுதியில் தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் தன்னை இணைத்துனக்கொண்ட சீர்மாறன் அதேயாண்டு பிற்பகுதிகளில் செம்மலையில் நிறுவப்பட்டிருந்த இரும்பொறை- 01 அடிப்படைப்பயிற்சிப்பாசறையில் அடிப்படைப்பயிற்சிகளை நிறைவுசெய்துகொண்டார். 2002-ம் ஆண்டுகாலப்பகுதியில் இந்த அணியில் குறிப்பிட்ட போராளிகள் தேர்வுசெய்யப்பட்டு இவர்களுக்கு அணிநடைப்பயிற்சியும் சிறப்பாக வழங்கப்பட்டது. 2002-ம் ஆண்டு யூலைமாதம் 16-ம்நாள் நடைபெற்ற கடற்புலிகளின் பத்தாவது ஆண்டு நிறைவுவிழாவில் பிரதமவிருந்தினராக வருகைதந்திருந்த தமிழீழத் தேசியத்தலைவர் அவர்களை வரவேற்கும்முகமாக நிகழ்த்தப்பட்ட அணிவகுப்பு மரியாதையின்போதும் சீர்மாறன் அந்த அணியில் பங்கெடுத்திருந்தார். அதனைத்தொடர்ந்து அதேயாண்டு மாவீரர் எழுச்சிநாட்களான நவம்பர் 26-ம்திகதி வடமராட்சிக்கிழக்கிலும் 27-ம்திகதி முல்லைத்தீவிலும் கடற்புலிகளின் பிரமாண்டமான அணிவகுப்பு மரியாதைகளுடன் மாவீரர்நாள் நடைபெற்றபோது இந்த அணியில் சீர்மாறன் முதன்மையான வகிபாகம் வகித்திருந்தார். 2003-ம்ஆண்டுகாலப்பகுதியில் கடற்புலிகளின் முதன்மைப்படையணியான சாள்ஸ் படையணியில் (சாலைத்தளத்தில); தனது படையச்செயற்பாடுகளை முன்னெடுத்திருந்த சீர்மாறன் கடல் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டிருந்தார். 2004-ம்ஆண்டுகாலப்பகுதியில் எமது இயக்கச்செயற்பாடுகளுக்காக கடற்புலிகளில் குறிப்பிட்டதொகைப்போராளிகள் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களுக்கு சென்றபொழுது சீர்மாறனும் அங்கு சென்று கட்டளைத்தளபதி லெப் கேணல் சிறீராம் அவர்களது ஆளுகையின்கீழ் மட்டு-அம்பாறை மாவட்டங்களில் செயலாற்றினார். நிலையுடன் பெயர்: மேஜர் சீர்மாறன். சொந்தப்பெயர்: வேலுச்சாமி சுரேஸ். சொந்த முவகரி: பாரதிபுரம்- விசுவமடு. (முல்லைத்தீவு) வீரச்சாவுச்சம்பவம்: 11-06-2008 அன்று மன்னார் எருக்கலம்பிட்டியில் அமைந்திருந்த சிறிலங்கா கடற்படைமுகாம் தாக்குதலின்போது வீரச்சாவைத்தழுவிக்கொண்டார். 2005 -ம் ஆண்டுகாலப்பகுதியில் இயக்கத்தின் அனைத்துப்படையணிகள் மற்றும் துறைகளிலிருந்து போராளிகள் தேர்வுசெய்யப்பட்டு தலைமைச்செயலகத்தின் நெறிப்படுத்தலில் உயர் அலைவரிசை (எச் எவ் செற்) கற்கைநெறி தொடங்கப்பட்டபோது கிழக்குமாகாணத்தில் கடமையாற்றிக்கொண்டிருந்த சீர்மாறன் மீண்டும் வன்னிக்கு அழைக்கப்பட்டு இன்னும் மூன்று போராளிகள் இணைக்கப்பட்டு நான்கு போராளிகள் கடற்புலிகள் சார்பாக குறித்த உயர் அலைவரிசைக்கல்வி கற்பதற்காக சென்றிருந்தனர். சுமார் ஐந்து மாதங்களாக நடந்த இந்த கற்கைநெறி 2006-ம்ஆண்டு பெப்ரவரி முற்பகுதியில் நிறைவடைந்தது. இந்த கற்கைநெறி நிறைவுநாளில் தமிழீழத் தேசியத்தலைவர் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்ததோடு உயர் அலைவரிசை கல்விகற்றுத்தேர்நச்சிபெற்ற அனைத்துப்போராளிகளுக்கும் சான்றிதழ்கள் வழங்கிக்கௌரவித்தார். இந்நிகழ்வில் சீர்மாறனும் தமிழீழத் தேசியத்தலைவர் அவர்களால் பாராட்டுப்பெற்று அவரது கையால் சான்றிதழும் பெற்றுக்கொண்டதுவும் இங்கு குறிப்பிடத்தக்கது. உயர் அலைவரிசை கற்கைநெறியை நிறைவுசெய்துவந்த சீர்மாறன் கடற்புலிகளின் சிறப்புத்தளபதி சூசை அண்ணா அவர்களது உயர் அலைவரிசைப்பகுதி (எச் எவ் செற்) தொடர்பாளராக அமர்த்தப்பட்டார். 2006-ம்ஆண்டு நவம்பர்மாதம் சிறப்புத்தளபதி சூசையண்ணாவிற்கான உயர் அலைவரிசைப்பகுதி எனது பொறுப்பில் சூசையண்ணாவால் தரப்பட்டபோது சீர்மாறன் எனது பொறுப்பில் எச் எவ் செற் தொடர்பாளராக கடமையாற்றினார். எச் எவ் செற் தொடர்பாளராக செயற்பட்டது மட்டுமல்லாது நான் சிறப்புத்தளபதி சூசையண்ணாவின் பிரத்தியேக நிர்வாகப்பணிகளை முன்னெடுத்துக்கொண்டிருந்தவேளையில் எனக்கு பலவழிகளிலும் உதவியாகவிருந்தார். குறிப்பாக நான் கடமைநிமிர்த்தமாக தூர இடங்களுக்கு மற்றும் இரவு நேரங்களில் பயணம்செய்யவேண்டியநிலையேற்பட்டால் எனக்கு உதவியாளராகவும் எனது உந்துருளி ஓட்டுநராகவும் சீர்மாறன்தான் செயற்பட்டிருந்தார். அத்துடன் நான் ஏதாவது Nலைகள் கொடுத்தாலும் அதனை நிறைவாகச்செய்துமுடிக்கின்ற பக்குவமும் அவருக்கு உண்டு. 2007-ம்ஆண்டு ஒக்ரோபர்மாதம் கடற்புலிகளுக்கான ஈரூடகத்தாக்குதலணி ஒன்றை உருவாக்குவதற்காக கடற்புலிகளின் பல்வேறு அணிகளிலிருந்து போராளிகள் தேர்வுசெய்யப்பட்டபோது சீர்மாறனும் அதில் உள்வாங்கப்பட்டு ஒரு அணியாக உருவாக்கப்பட்டு விடுதலைப்புலிகளின் விசேட பயிற்சிக்கல்லூரியான பசுமை எனப்படும் முகாமிற்கு சீர்மாறன் உள்ளிட்ட குறித்த போராளிகளைக்கொண்ட அணி விசேட பயற்சிகள் பெற்றுக்கொள்வதற்காக அனுப்பிவைக்கப்பட்டார்கள். சுமார் மூன்று மாதங்களாக பசுமைமுகாமில் விசேடபயிற்சிகளால் புடம்போடப்பட்ட அவ்வணி பசுமையில் முதற்கட்டப்பயிற்சிகளை நிறைவுசெய்துகொண்டு 2008-ம்ஆண்டு பெப்ரவரிமாதத்தில் இரணைப்பாலையிலுள்ள உதயம் முகாமிற்கு வந்திருந்தார்கள். அவ்வேளையில் உதயம்முகாமில் நான் சீர்மாறனை சந்தித்ததோடு மறுநாள் சீர்மாறன் எனது முகாமிற்கும் வருகைதந்து நீண்டநேரமாக நட்புரீதியாக அளவளாவியிருந்தோம். ஓரிருநாட்கள் ஓய்வின்பின்னர் அந்த அணி கடற்பயிற்சிக்காக வெற்றிலைக்கேணிப்பகுதிக்கு சென்றிருந்தது. கடற்பயிற்சிகளைத்தொடர்ந்து அவ்வணி முழங்காவிலுக்குச்சென்று தொடரான விசேட பயிற்சிகளில் ஈடுபட்டிருந்தது. வெற்றிலைக்கேணியில் கடற்பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சந்தர்ப்பத்திலும் ஒருதடவை புதுக்குடியிருப்புக்கு வந்தபொழுதும் எனது முகாமிற்கு வந்து என்னை சந்தித்துக்கொண்டார். 2008-ம்ஆண்டு மேமாதத்தின்நடுப்பகுதி. குறித்த இந்த ஈரூடகத்தாக்குதலணியின் முதலாவது கன்னித்தாக்குதலான சிறுத்தீவு கடற்படைமுகாம் தாக்குதலுக்கான ஒத்திகைப்பயிற்சிகள் சாலைப்பகுதியில் நடைபெற்றுக்கொண்டிருந்தது. இதேகாலப்பகுதியில் அதாவது 15-05-2008 அன்று புதுக்குடியிருப்பு மத்தியகல்லூரி பொன்விழா மண்டபத்தில் அண்மைக்காலத்தில் வீரவரலாறுகளைப்படைத்த கடற்கரும்புலிகள் நினைவாக வீரவணக்கநிகழ்வு ஒன்று இடம்பெற்றது. அதாவது 22-03-2008 அன்று நாயாற்றுக்கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினரின் டோறாப்படகை மூழ்கடித்து வீரகாவியமாகிய கடற்கரும்புலிகளான லெப் கேணல் அன்புமாறன் மேஜர் நிறஞ்சினி மேஜர் கனிநிலா மற்றும் 10-052008 அன்று திருகோணமலை துறைமுகத்தில் தரித்துநின்ற சிறிலங்கா கடற்படைக்குச்சொந்தமான ஏ-520 என்ற துருப்புக்காவிக்கப்பலை தாக்கியழித்து வீரவரலாற்றை எழுதிய கடற்கரும்புலிகளான லெப் கேணல் செம்பியவளவன் மேஜர் அற்புதன் ஆகியோர்கள் நினைவாக கடற்புலிகளால் பிரத்தியேகமாக ஒழுங்கமைக்கப்பட்ட வீரவணக்கநிகழ்வாகவே அது அமைந்திருந்தது. இந்நிகழ்விற்கு கடற்புலிகளின் சகல அணிகள் மற்றும் துறைகளிலிருந்தும் போராளிகள் வருகைதந்திருந்தனர். சாலைப்பகுதியில் ஒத்திகைப்பயிற்சிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த குறித்த ஈரூடகத்தாக்குதலணிப்போராளிகளும் இந்நிகழ்விற்கு வருகைதந்திருந்தனர். இந்நிகழ்விலும் சீர்மாறனை சந்திக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. இதன்பிற்பாடு குறித்த அணி பூநகரிப்பகுதிக்கு நகர்த்தப்பட்டு சிறுத்தீவுக்கடற்படைமுகாம் தாக்கியழிப்பதற்கான இறுதித்தயார்ப்படுத்தல்களில் ஈடுபடலானார்கள். இத்தாக்குதற்திட்டத்தின்படி 29-05-2008 அன்று இரவுப்பொழுதில் தாதக்குதலணிகள் புளுஸ்ரார் படகுகள்மூலமாக பூநகரி கடல்வழியாகச்சென்று சிறுத்தீவில் தரையிறங்கி கடற்படைமுகாம்மீது அதிரடியான தாக்குதலைத்தொடுத்தனர். இத்தாக்குதலில் பதின்மூன்று சிறிலங்கா கடற்படையினர் கொல்லப்பட்டதோடு அந்த முகாமிலிருந்து அனைத்து ஆயுதங்கள் மற்றும் படையப்பொருட்களும் கடற்புலிகளால் பைகயகப்படுத்தப்பட்டன. இத்தாக்குதலில் கடற்புலிகள் தரப்பில் மேஜர் சீனு (போர்மறவன்) எனும் போராளி வீரச்சாவைத்தழுவிக்கொண்டார். குறிப்பிட்டநேரம் கடற்படைமுகாமை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த கடற்புலிகளின் தாக்குதலணிகள் முகாமை முற்றாக அழித்துவிட்டு அங்கிருந்து வெளியேறினர். வெற்றியின் அடையாளங்களான கைப்பற்றப்பட்ட ஆயுதங்களையும் கொல்லப்பட்ட பதின்மூன்று கடற்படையினரது சடலங்களும் கொண்டுவரக்கூடிய சூழ்நிலை இல்லாததால் நல்ல நிலையிலிருந்த மூன்று கடற்படையினரது சடலங்களையும் வெற்றிவாகைசூடிய மேஜர் சீனுவின் வித்துடலோடு தாக்குதளணிப்போராளிகளையும் சுமந்துகொண்டு புளுஸ்ரார் படகுகள் பாதுகாப்பாக தளம் திரும்பின. கைப்பற்றப்பட்ட மூன்று கடற்படையினரின் சடலங்களும் மறுநாள் சர்வதேச செஞ்சிலுவைச்சங்கத்தினர் ஊடாக இலங்கை அரசிடம் கையளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. சிறுத்தீவுத்தாக்குதலில் ஈடுபட்ட போராளிகள் தாக்குதலை ஒருங்கிணைத்த பொறுப்பாளர்கள் மற்றும் தாக்குதல்ப்பயிற்சி ஆசிரியர்கள் என அனைவரையும் பாராட்டி பரிசில்கள் வழங்கும்முகமாக சிறப்புத்தளபதி சூசையண்ணா அவர்களால் ஒரு கௌரவிப்பு நிகழ்வு 03-06-2008 அன்று பூநகரி- பள்ளிக்குடா பாடசாலையில் ஒழுங்குசெய்யப்பட்டு நடைபெற்றிருந்தது. இந்நிகழ்வில் கலந்துகொள்ளும் வாய்ப்பு எனக்கும் கிட்டியது. அன்றையதினம் மாலைப்பொழுதில் குறித்த பாடசாலையில் ஈரூடகத்தாக்குதலணிப்போராளிகள் மற்றும் குறித்த தாக்குதல்நடவடிக்கையில் சம்பந்தப்பட்ட பொறுப்பாளர்கள் என அனைவரும் ஒன்றுகூடியிருந்தார்கள். குறித்த கௌரவிப்புநிகழவிற்கு கடற்புலிகளின் சிறப்புத்தளபதி சூசையண்ணா வருகைதந்ததைத்தொடர்ந்து போராளிகள் பொறுப்பாளர்கள் அனைவரும் பாடசாலைக்கட்டடம் ஒன்றில் ஒன்றுகூட்டப்பட்டார்கள். சிறப்புத்தளபதி சூசையண்ணா அவர்கள் நடந்துமுடிந்த சிறுத்தீவு வெற்றிகரத்தாக்குதல் தொடர்பாகவும் கடற்புலிகளின் ஈரூடகத்தாக்குதலணியின் உருவாக்கத்தின் முக்கியத்துவம் தொடர்பாகவும் தொடர்ந்துவரும்நாட்களில் ஈரூடகத்தாக்குதலணியின் காத்திரமான வகிபாகம் தொடர்பாகவும் விரிவான விளக்கவுரைளை போராளிகளுக்கு வழங்கினார். இந்த கௌரவிப்பு நிகழ்வில்வைத்துத்தான் சூசையண்ணாவால் குறித்த ஈரூடகத்தாக்குதலணிக்கு “லெப் கேணல் சேரன் ஈரூடகத்தாக்குதலணி” என்று பெயர் சூட்டப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து போராளிகள் பொறுப்பாளர்கள் பயிற்சி ஆசிரியர்கள் அனைவருக்கும் சிறப்புத்தளபதி சூசையண்ணா பரிசில்கள் வழங்கி கௌரவித்தார். இதன்போது சீர்மாறனும் சூசையண்ணாவிடமிருந்து பரிசில் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. பரிசளிப்புநிகழ்வு நிறைவடைய எல்லோரும் ஒனடறாகச்சேர்ந்திருந்து கடற்புலிகளின் வழங்கற்பகுதிப்பொறுப்பாளர் கொண்டுவந்திருந்த கோழிப்புக்கையை ருசித்துவிட்டு சீர்மாறனுடனும் மற்றய போராளிகளுடனும் நீண்டநேரம் உரையாடியிருந்தேன். அப்போதுதான் சீர்மாறன் என்னிடம் “இன்னுமொரு நடவடிக்கை கெதியில நடக்கப்போகுதுபோலயிருக்குது. அந்த நடவடிக்கை முடிய நாங்கள் தேவிபுரத்துக்குத்தான் வரப்போறம். அவ்வாறு வந்தபிறகு நான் உங்களது முகாமிற்கு வந்து உங்களை சந்திக்கின்றேன்.” என்று கூறியிருந்தார். அதுதான் சீர்மாறனை நான் சந்திக்கும் கடைசிச்சந்திப்பாகவிருக்கும் என்பதை அப்போதைக்கு நான் எள்ளளவிலும் எண்ணிப்பார்த்திருக்கவில்லை. இப்போது நினைவுகள் திரும்ப “அடுத்த நடவடிக்கை முடிய ரீம் தேவிபுரத்துக்கு நகர்த்தப்படும். அதன்பிறகு உங்களது முகாமிற்கு வந்து உங்களை சந்திக்கின்றேன்.” என்றுகூறிய சீர்மாறனின் வித்துடலை பொறுப்பெடுப்பதற்காகவே பேரூந்தில் தியாகசீலம் நோக்கிப்போய்க்கொண்டிருக்கின்றேன். சீர்மாறன் கூறியபடி சிறுத்தீவுத்தாக்குதல் நடைபெற்று இரண்டு வாரங்களுக்குள்ளாகவே எருக்கலம்பிட்டி கடற்படைமுகாம்மீது தாக்குதல் நடைபெற்றது. இந்தத்தாக்குதல் நடவடிக்கையைத்தொடர்ந்து சேரன் ஈரூடகத்தாக்குதலணி தேவிபுரத்திற்கு நகர்த்தப்பட்டது. ஆனால் சீர்மாறன் வரவில்லை. மேஜர் சீர்மாறனாக அவருடன் மேஜர் தணிகைமணி. கப்டன் சுடர்க்குன்றன். லெப்ரினன்ட் செந்தமிழ்வீரன். லெப்ரினன்ட் தமிழ்நிலவன் ஆகிய போராளிகளும் தளம் திரும்பவில்லை. அவர்கள் வெற்றிக்கு வித்திட்டு வித்துடல்களாக தியாகசீலம் வந்திருந்தார்கள். இந்த எருக்கலம்பிட்டி கடற்படைமுகாம்மீதான தாக்குதலின்போது பலவகையான கனரக ஆயுதங்கள் மற்றும் நவீனரக கடற்கண்காணிப்பு சாதனம் (ராடர்கருவி) உட்பட பலவகையான படையப்பொருட்கள் கடற்புலிகளால் கையகப்படுத்தப்பட்டதோடு இலங்கை கடற்படையினர் பத்துப்பேர் கொல்லப்பட்டனர். நான் பரந்தனுக்குச்சென்று கடற்புலிகளின் மாவீரர்பணிமனைப்பொறுப்பாளரையும் அழைத்துக்கொண்டு அவரது உந்துருளியில் கிளிநொச்சியில் அமைந்திருந்த தியாகசீலத்திற்கு (போராளிகளது வித்துடல்கள் சுத்தம் செய்யப்படும் இடம்) சென்றோம். அங்கு சென்றதும் அவர்கள் “விபரங்கள் தங்களுக்கு கிடைத்திருக்கின்றது. ஆனாலும் இந்தச்சம்பவம மன்னாரில் இடம்பெற்றதால் ஜெயபுரத்தில் அமைந்துள்ள தியாகசீலத்திற்கு வித்துடல்கள் கொண்டுசெல்லப்பட்டு அங்கு சுத்தம்செய்யப்பட்டபின்னர்தான் இங்கு கொண்டுவரப்படும். வித்துடல்கள் வந்ததும் உங்களுக்கு அறிவிக்கின்றோம்.” என்று கூறினார்கள். நாங்களிருவரும்மீண்டும் பரந்தனுக்கும் கிளிநொச்சிக்கும் வந்து சில வேலைகளை முடித்துவிட்டு இடையில் இரண்டு தடவைகள் தியாகசீலத்திற்கும் சென்று பார்;த்துவிட்டு திரும்பிவந்து மூன்றாவது தடவையாக மதியம் 1.00 மணியளவில் தியாகசீலம் சென்றபோது மேஜர் சீர்மாறன் உள்ளிட்ட நான்கு போராளிகளது வித்துடல்கள் வந்திருந்தது. மேஜர் தணிகைமணி மன்னார் மாவட்டத்தைச்சேர்ந்தவராதலால் அவரது வித்துடல் ஜெயபுரத்து தியாகசீலத்திலிருந்து மன்னார் கோட்ட அரசியல்த்துறைச்செயலகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தது. நால்வரது வித்துடல்களையும் வாகனத்தில் ஏற்றிவிட்டு நானும் கடற்புலிகளின் மாவீரர் பணிமனைப்பொறுப்பாளருமாக உந்துருளியில் விசுவமடுக்கோட்ட அரசியல்த்துறைச்செயலகத்தை சென்றடைந்தோம். நாங்கள் அங்கு சென்றடைவதற்கு சற்றுமுன்பாக வித்துடல்கள் ஏற்றிச்சென்ற வாகனம் அங்கு சென்றடைந்துவிட்டது. சீர்மாறனது வீரச்சாவுச்செய்தி அவரது பெற்றோருக்கு ஏற்கனவே உரியமுறையில் அரசியல்த்துறையின் வட்டப்பொறுப்பாளரால் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்பின்னர் சீர்மாறனது வித்துடல் விசுவமடுக்கோட்ட அரவசியல்த்துறையினரால் அவரது வீட்டிற்கு கொண்டுசெல்லப்பட்டு பெற்றோர்கள் உறவினர்கள் பொதுமக்களின் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அப்போது பொழுது சாய்ந்து இருள்சூழ்ந்துகொண்டிருந்தது. அதனைத்தொடர்ந்து நானும் கடற்புலிகளின் மாவீரர் பணிமனைப்பொறுப்பாளரும் சீர்மாறனின் வீட்டிற்குச்சென்று வட்டப்பொறுப்பாளருடன் இணைந்து ஏனையவிடயங்களை கவனித்துவிட்டு எனது முகாமைச்சென்றடைந்தேன். மறுநாள் 12-06-2008 அன்று காலைவேளையிலேய நான் சீர்மாறனது வீட்டிற்குச்சென்றிருந்தேன். நூற்றுக்கணக்கான பொதுமக்களும் போராளிகளும் சீர்மாறனது வித்துடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்கள். மாலை 3.00 மணியளவில் சீர்மாறனது வித்துடல் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஊர்வலமாக விசுவமடு மாவீரர் மண்டபத்திற்கு எடுத்துவரப்பட்டு வீரவணக்கக்கூட்டம் நடைபெற்றது. இதில் கடற்புலிகள் சார்பாக வீரவணக்க உரையை நான் நிகழ்த்தினேன். அதனைத்தொடர்ந்து சீர்மாறனது வித்துடல் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் விசுவமடு மாவீரர் துயிலும் இல்லத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு முழுப்படைய மதிப்புக்களுடன் தூயவிதைகுழியில் விதைக்கப்பட்டது. அந்த நிகழ்வுகள் நிறைவடைந்ததும் நானும் எனது போராளிநண்பர்களும் மீண்டும் சீர்மாறனின் வீட்டிற்கு வந்து அவரது பெற்றோர் சகோதரர்களுக்கு ஆறுதல் கூறிவிட்டு சீர்மாறனின் இழப்பு இதயத்தை அழுத்த ஆயிரமாயிரம் மாவீரர்களின் கனவுகளை நெஞ்சில் சுமந்துகொண்டு எனது முகாம்நோக்கி பயணமானேன். “தமிழரின்தாகம் தமிழீழத் தாயகம்.” நினைவுப்பகிர்வு: கொற்றவன்.
-
களம்பல கண்ட மன்னார் மாவட்டக் கடற்புலிகளின் தளபதி லெப். கேணல் எழிற்கண்ணன்
எந்தப்படகு வெள்ளோட்டம் விடவேண்டும் என்றாலும் முதலில் உச்சரிக்கும் பெயர் இவனுடையதுதான். மிராஜ் வகைப் படகுகள் கட்டுமானத்தில் அதன் வெள்ளோட்டத்தின்போது அதில் எத்தனை போராளிகளை ஒரேதடவையில் ஏற்றிவரமுடியும் என தலைவர் பரீட்சித்துப்பார்க்கும்படி கூறியிருந்தார்.முதலில் 30 போராளிகளை ஏற்றிக்கொண்டு ஓடிப்பார்த்து பின்னர் மேலும் முப்பது போராளிகளை ஏற்றிப்பார்த்து ஓடிய எழிற்கண்ணன் ஒரேதடவையில் ஒரு போராளி தனது உடமை மற்றும் தனது சிறியரக AK வகை ஆயுதம் உட்பட மொத்தமாக நாற்பது போராளிகளை ஏற்றியெடுக்க முடியும் என பரிந்துரைத்தான். அதுபோன்று முதன்முதலில் ஸ்ரெல்த் எனப்படும் சிறிய வேகப்படகுக்கான வெள்ளோட்டத்தை செய்து இவன் கொடுத்த தரவுகளையே தலைவருக்கு அனுப்பி வைத்தோம். அதுதான் எழிற்கண்ணன். பின்னாளில் அவன் ஒரு படகு கட்டளை அதிகாரியாகவும், பொறியியலாளனாகவும்,அதன்பின் படகு கட்டுமானத்துறை பொறுப்பாளனாகவும் அதன் பின்னர் மன்னார் மாவட்ட கடற்புலிகள் தளபதியுமாகவும் உயர்ந்து விளங்கினான். அந்தவீரனை போர்க்களத்தில் கொல்லமுடியாத சாவு வாகன விபத்தில் கொன்றுபோட்டது. வீரவணக்கம் மாவீரனே. https://vayavan.com/?p=11828
-
லெப். கேணல் நிரோஜன்
கட்டளை அதிகாரியாக படகேறினான் லெப் கேணல் நிரோஜன்! போர்க்களத்தில் ஒரு போர்வீரனின் உளவுரணைச் சிதைப்பது அவனருகில் காயத்திற்குள்ளான போர்வீரனுக்கு சிகிச்சையளிக்காமல் அப்போர்வீரன் துடித்துக்கொண்டிருப்பதுதான். ஏனெனில் தனக்கும் இதேகதிதான் என அப்போர்வீரனின் மனதில் எழும் உணர்வே அவனைத் தொடர்ந்து போராடுவதற்கான துணிவை இல்லாதொழிக்கும். இது சம்ர்க்களங்களில் இயக்கம் கண்டறிந்த போரியல் உண்மை. ஒரு நாட்டின் இராணுவமே தனது படைநடவடிக்கைகளில் காயத்திற்குள்ளாகும் இராணுவத்துக்கு சிகிச்சை அளிப்பதற்கு இன்னொரு நாட்டின் உதவியை எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் நேரத்தில், ஒரு விடுதலை இயக்கமாக எந்தவொரு நாட்டின் உதவிகளுமின்றி போர்க்களத்தில் விழுப்புண்ணடையும் போராளிகளுக்கு போராளிகளைக்கொண்டே சிகிச்சையளித்து பராமரிக்கும் திறனைக் கொண்டிருந்த உலகின் ஒரேயொரு விடுதலை இயக்கம் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மட்டுமே. ஒரு பெரும் தாக்குதல் நடவடிக்கைக்கு எமது படையணிகள் தயாராகத் தொடங்கினால் சமநேரத்தில் விழுப்புண்ணடையும் போராளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான அணிகளும் கூடவே நகரத்தொடங்கும். பின்னணித்தளங்களில் அத்தியாவசியமான மருந்துப்பொருட்கள் அனைத்தும் களஞ்சியப்படுத்தப்படும். அத்தியாவசிய மருந்துப்பொருட்களுக்கும் சிறிலங்கா அரசு பொருளாதாரத்தடை போட்டிருந்தது. பொதுமக்களின் தேவைகளைக்கூட நிறைவேற்ற முடியாமல் பொது வைத்தியசாலைகள் திணறிக்கொண்டிருந்த காலம் அது. போதிய மருத்துவ சிகிச்சையின்றி மக்களின் உயிர்கள் காவு கொடுக்கப்பட்டுக் கொண்டிருந்த வேளையில் இயக்கம் மருந்துப்பொருட்களை வழங்கிய சந்தர்ப்பங்களும் நிறையவே நடந்தேறிது. இவ்வாறான இடர்சூழ்ந்த நிலையிலேயே இயக்கம் ஆனையிறவு படைத்தளம் மீதான தாக்குதலை நடத்துவதற்கான தயார்படுத்தலை மேற்கொண்டிருந்தது. உலக இராணுவ வல்லுனர்களால், ‘தாக்கியழிக்கப்பட முடியாத தளம்’ என எதிர்வுகூறப்பட்டிருந்த ஆனையிறவுத்தளத்தை அழிப்பதென்பது பெரும் சவாலானதாகவே நோக்கப்பட்டது. ஆனாலும் புலிகளின் போரியலையும் தலைவரின் மதிநுட்பத்தையும் தளபதிகள், போராளிகளின் வீரத்தையும், போராட்டத்திற்கு உறுதுணையாக தொடர்ந்து நம்பிக்கையோடு பயணித்துவரும் மக்களின் விடுதலை அவாவையும் இந்த உலகத்திற்கு உணரவைப்பதற்கு ஆனையிறவுத்தள அழிப்பு காலத்தின் அவசியமென்பதை தலைவர் தனது தீர்க்கதரிசனப் பார்வையால் தெளிவுபடுத்தினார். திட்டங்கள் தீட்டப்பட்டது. போருக்கான பயிற்சிகள் இரவுபகலாக நடைபெற்றுக்கொண்டிருந்தது. கடற்புலிகளுக்கு கண்ணுறக்கம் மறந்தே போனது. ஆனையிறவு தள அழிப்புக்கு தேவையான ஆயுதவெடிபொருட்களுக்கான வினியோக நடவடிக்கைகளின் போது 01/10/1999 அன்று வங்கக்கடலில் ஏற்பட்ட கடற்சமரில் லெப். கேணல் அண்ணாச்சி, மேஜர் ராகினி உட்பட மிகப்பெறுமதியான கடற்புலி மாவீரர்கள் படகோடு எரிந்து அலையோடே கரைந்துவிட்டிருந்தனர். ஆனாலும் எமது படகுகள் மீண்டும் கடலேறிப் பாய்ந்தது. சீரற்ற காலநிலையெனினும், கடற்க்கொந்தளிப்புகளுக்கு மத்தியிலும், இருளை ஊடறுத்து போராளிகள் கண்கள் இரத்தச் சிவப்பாக பயணம் தொடர்ந்தது. ஒருமுனையில் வங்கக்கடல் ஊடான ஆயுதவெடிபொருட்களுக்கான வினியோகமும் மறுமுனையில் மன்னார் கடற்பரப்பு ஊடாக மருத்துவப் பொருட்களுக்கான வினியோகமும் மாறிமாறி நடைபெறத் தொடங்கியது. வினியோகப் படகுகளுக்கான பாதுகாப்பை வழங்க சண்டைப்படகுகள் எந்நேரமும் தயாராக நிறுத்தப்பட்டு, மறிப்புச் சண்டைகளில் ஈடுப்பட்டிருந்தது. படகுத்தொகுதிகளில் ஒரு பிரிவு சுண்டிக்குளம் பகுதியிலும்,மற்றொன்று வட்டுவாகல் பகுதியிலும், இன்னொன்று அளம்பில் பகுதியிலும் நிலைகொண்டு,மறிப்புச் சண்டைகளில் ஈடுபட்டுவந்தது. மன்னார் கடல் ஊடான நடவடிக்கைக்காக எமது சண்டைப்படகுகள் இரவோடிரவாக படகுகாவி மூலம் விசுவமடு, வட்டக்கச்சி ஊடாக மன்னாருக்கு இழுக்கப்பட்டது. வேங்கை, போர்க், எரிமலை போன்ற பெரிய படகுகளை நகர்த்துவது சிரமம் என்பதால் அருணா, கேசவன், சுகி போன்ற சண்டைப்படகுகளையே மன்னாருக்கு அதிகம் நகர்த்துவோம். அன்றும் வழமைபோல மன்னாருக்கு நகர்த்துவதற்காக அளம்பில் பகுதியிலிருந்து கேசவன் படகு தயாரானது. இங்கே கேசவன் படகு பற்றிய சிறு வரலாற்றுக்குறிப்பொன்றைப் பகிர்ந்துகொள்வது முதன்மையாகின்றது. ஓயாத அலைகள் முல்லைத்தீவு படைத்தள அழிப்பின்போது சண்டைப்படகான நெடுமாறன் படகின் கட்டளை அதிகாரியாகச் செயற்பட்டு அதே கடற்சண்டையில் காவியமான கடற்புலி மேஜர் கேசவன் நினைவாக அவனின் பெயர்தாங்கி வலம்வரத்தொடங்கியது கேசவன் சண்டைப்படகு. லெப் கேணல் நாவரசன், லெப் கேணல் வள்ளுவன், லெப் கேணல் பழனி, லெப் கேணல் சுயரூபன், மேஜர் ஆழியன் உட்பட பல திறமையான கடற்புலி மாவீரர்கள் கடற்போரியல் கட்டளைத் தளபதிகளாக ஏறிநின்று போரிட்ட கடற்புலிகளின் போர்வாளாக சண்டைக்களங்களில் உறுமித்திரிந்தது மேஜர் கேசவன் நினைவாக பெயர் பொறிக்கப்பட்ட கேசவன் சண்டைப்படகு. அதில் பொருத்தப்பட்டிருந்த முன்னணி ஆயுதமானது ஓயாத அலைகள்௧ முல்லைச்சமரின்போது, முல்லைக்கடலில் மூழ்கடிக்கப்பட்ட றணவிறு எனும் பீரங்கிக்கலத்தில் இருந்து கடற்புலிகளின் சுலோஜன் நீரடி நீச்சல் பிரிவினரால் கழட்டியெடுக்கப்பட்ட 14.5 ம்ம் இரட்டைக்குழல் கனரக ஆயுதமாகும். 200 குதிரைவலுக்கொண்ட மூன்று ஜமகா இயந்திரங்கள் பொருத்தப்பட்டு மணிக்கு 40 கடல்மைல் வேகத்தில் செல்லக்கூடிய கேசவன் படகில், ஓட்டியாக மேஜர் காமினியும், 14.5 மிமீ இரட்டைக்குழல் துப்பாக்கியின் பிரதான சூட்டாளனாக மேஜர் சோழனும், உதவியாளர்களாக 2 ஆம் லெப் இசைவாணன், வீரவேங்கை முதல்வன், வீரவேங்கை செம்பியன், ஆகியோரும், இயந்திரப் பொறியியலாளனாக மேஜர் நகுலனும், பொறியியலாளனின் உதவியாளனாக வீரவேங்கை இனியவனும், தொலைத்தொடர்பாளனாய் கப்டன் இளநிலவனும், 50 கலிபர் துப்பாக்கிகளின் சூட்டாளர்களாய் மேஜர் குகன், மற்றும் லெப் பாவேந்தனும், PK GMG துப்பாக்கிகளின் சூட்டாளர்களாக லெப் நாகமணி, லெப் சொற்கோ, லெப் தமிழ்நம்பியும், RPG உந்துகணை செலுத்தியுடன் 2 ஆம் லெப் மாறனும், படகேற… அன்றைய மன்னார் கடல்வினியோக நடவடிக்கைக்கான பாதுகாப்புக் படகு அணிக்கான கட்டளை அதிகாரியாக படகேறினான் லெப் கேணல் நிரோஜன். வழமையாக நிரோஜன் தொகுதிக் கட்டளை அதிகாரியாக படகேறும் கடற்சண்டைகளில் வினியோகப் படகுகள் பத்திரமாக கரைசேரும் எனும் நம்பிக்கை போராளிகளிகளுக்கு ஏற்பட்டிருந்தது. மருந்துப்பொருட்களுடன் வினியோகப் படகுகள் கரைநோக்கி வந்துகொண்டிருந்தன. வாடைக்காற்று வீசியடிக்க கரையினில் அலைகள் மௌனமாக கரைந்துகொண்டிருந்தது. ஆனால் உயரக்கடலில் அலைகள் தாண்டவமாடியது. இப்படியானதொரு கடல்வினியோக நடவடிக்கையொன்றில்தான் லெப் கேணல் நாவரசன் உட்பட புலனாய்வுத்துறையைச் சேர்ந்த மேஜர் ஜாக்கர் மற்றும் மருத்துவத்துறையைச் சேர்ந்த மேஜர் சிந்தனைச்செல்வன் எனப் பல போராளிகளை முன்னர் இதே கடற்பரப்பில் இழந்திருந்தோம். அன்றும் அதுபோலவே கார்முகில்கள் சூழ்ந்திருக்க இருளை ஊடறுத்து பயணித்துக்கொண்டிருந்த வினியோகப் படகுகளை திடீரென சிறிலங்கா கடற்படை தாக்கத்தொடங்கியது. காரிருள் சூழ்ந்ததனால் ரேடார் கருவிகளில் முற்கூட்டியே எதிரியின் இலக்குகளை கண்காணிப்பது சிரமமானதால் வினியோகப் படகுகள் தாக்குதலுக்குள்ளான பின்னரே சண்டைப்படகுகள் எதிரியின் இலக்குகள் மீது தாக்குதலை தொடங்கியிருந்தது. படகு அணியின் கட்டளை அதிகாரியான நிரோஜனின் எண்ணமெல்லாம் வினியோகப்படகுகளை பத்திரமாக மீட்டெடுக்கவேண்டுமென்பதே. அதற்கான முயற்சியில் கடைசிவரை தாக்குதலை வழிநடத்திக்கொண்டிருந்த நிரோஜனின் அந்தக் கம்பீரக்குரல் மன்னார் கடலில் ஓய்ந்துபோனது. அவனுடன் கூடவே 14 கடற்புலி வீரர்களும் அந்தக்கடல் மடியில் கண்ணுறங்கிப்போயினர். கேசவன் படகு கரை திரும்பவில்லை. கரையில் படகுகாவி வெறுமையாக காத்துக்கிடந்தது. அருகில் நிரோஜனின் மோட்டார் சைக்கிள். கடற்போரியலில் களநாயகனாக வலம்வந்த நிரோஜனின் இழப்பும் கேசவன் சண்டைப்படகின் வலிமையும் பின்னாளில் நாம் எதிர்கொண்ட கடற்சமர்களில் எல்லாம் எம்மால் உணரப்பட்டது. கடற்சண்டைகளின் போது சண்டை இறுகும் நெருக்கடியான நேரங்களில் சிறப்புத்தளபதி சூசையண்ணை அடிக்கடி கூறுவார், "நிரோஜனைப் போல முடிவெடுக்கப்பழகுங்கள்… நிரோஜனைப்போல யோசியுங்கள்…" வெல்லப்பட முடியாத தளம் என உலகம் கணித்த ஆனையிறவு படைத்தளம் எம் காலடியில் வீழ்ந்தபோது அதன் வெற்றிக்காக கடல்மடியில் கண்ணுறங்கிப்போன லெப் கேணல் நிரோஜன் உட்பட்ட கடற்புலிகளின் உயிர்த் தியாகங்களே எம் நெஞ்சங்களில் நீங்காது நிலைத்துப்போனது. நினைவுகளுடன்… புலவர், கடற்புலிகள்.
-
செயற்திறன் மிக்க தளபதி லெப் கேணல் விநாயகம்
செயற்திறன் மிக்க தளபதி லெப் கேணல் விநாயகம் -செங்கோ- மூன்று பக்கங்களும் கடலால் சூழப்பட்ட யாழ்.குடாநாட்டின் வெள்ளலைகள் கரைதழுவுகின்ற வடமராட்சிக் கிழக்குப்பிரதேசத்தில் மருதங்கேணி எனும் நெய்தல் நிலமண்ணில் 1973-ம் ஆணடு பெப்ரவரி மாதத்தில் தங்கவேலு காந்திமலர் தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தான் சுதரதன். அம்மா அப்பா மற்றும் இரண்டு சகோதரர்களையும் ஒரு சகோதரியையும் கொண்ட அளவான குடும்பம். சுதரதனை எல்லோரும் செல்லமாக சுதன் என்றே அழைத்தனர். சுதன் தனது மழலைப் பருவத்தைக் கடந்து தனது பள்ளிப் படிப்பில் ஆரம்பக் கல்வியை மருதங்கேணி இந்துவித்தியாலயத்திலும் இடைநிலைக் கல்வியை உடுத்துறை மகா வித்தியாலயத்திலுமாகத் தொடர்ந்தான். இளமையிலேயே சுறுசுறுப்பும் துடிப்பும் குறும்புத்தனமும் இவனுடன் கூடிப்பிறந்த குணவியல்புகளாக இருந்தன. கல்வியிலும் விளையாட்டிலும் தனது திறமைகளை வெளிக்காட்டிய சுதனிடம் கலைத்திறனும் மிதமாகவே காணப்பட்டது. அன்றய நாட்களில் மருதங்கேணியில் அரங்கேற்றப்பட்ட காத்;தவராயன் சிந்துநடை மரபுவழிக்கூத்தில் பிரதான பாத்திரங்களையேற்று நடித்த சுதன் பலரது அபிமானத்தையும் பாராட்டுக்களையும் பெற்றிருந்தான். 1989-ம் ஆண்டுகாலப்பகுதி. இந்தியப்படையினர் தாயகத்தில் நிலைகொண்டிருந்த காலப்பகுதி. அமைதிப்படை என்ற பெயரில் தாயகத்தில் கால்பதித்த இந்தியப்படையினர் அதற்கு மாறாக ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர். இவனது வீட்டிலிருந்து சுமார் ஒரு மைல் துரத்தில் தாளையடியில் இந்தியப்படையினரின் முகாம் அமைந்திருந்தது. தாளையடி முகாமிலிருந்து அடிக்கடி ரோந்து நடவடிக்கையில் ஈடுபடும் இந்தியப்படையினர் மக்கள் குடியிருப்புக்கள் மீது மேற்கொள்ளும் சுற்றிவளைப்புக்கள் மற்றும் கைதுகள் சித்திரவதைகள் என்பனவும் க.பொ.த.சாதாரணதரத்தில் கல்விகற்றுக்கொண்டிருந்த சுதனின் மனதில் ஆறாத வடுக்களை அன்றய நாட்களில் ஏற்படுத்தியிருந்தது. அந்த நாட்களில் விடுதலைப்புலிகள மணலாற்றுக் காடுகளிலும் ஏனைய இடங்களிலும் தலைமறைவு வாழ்க்கையை மேற்கொண்டிருந்தனர். இநதச்சூழ்நிலையில்த்தான் சுதனும் வடமராட்சிக்கிழக்கைச்சேர்ந்த இன்னும் சில இளைஞர்களும் அன்னை மண்ணை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டெடுத்து சுதந்திர தமிழீழம் அமைப்பதை இலட்சியமாக வரித்துக்கொண்டு விடுதலைப்போராட்டத்தில் இணைந்துகொள்வதற்கு முடிவெடுத்தனர். அந்த நாட்களில் வடமராட்சிக்கிழக்கு சுண்டிக்குளம் காட்டுப்பகுதியிலும் விடுதலைப்புலிகளின் ஒரு அணியினர் தலைமறைவாகியிருந்து போராட்டப்பணிகளை முன்னெடுத்தனர். இந்த அணியில் லெப் கேணல் மறவன் மாஸ்ரரும் ஒருவராகவிருந்தார். மறவன் மாஸ்ரர் வடமராட்சிக்கிழக்கு தளையடியைச் சேர்ந்தவரும் முன்னாள் உடுத்துறை மகா வித்தியாலயத்தின் ஆசிரியருமென்பதால் பாடசாலை மாணவர்களிடத்திலும் மக்களிடத்திலும் நெருக்கமானதொரு உறவுநிலையிருந்தது. போராட்டத்திற்கான ஆட்கள்; இணைப்புப்பணியை மறைமுகமான முறையில் மேற்கொள்வது மற்றும் போராளிகளுக்கான சாப்பாட்டுப் பார்சல்கள் உட்பட போராட்டத்திற்கான முக்கியமான தேவைகள் சிலவற்றயும் மக்களிடத்திலிருந்து இரகசியமான முறையில் பெற்றுக்கொள்வது போன்ற வேலைத்திட்டங்களை மறவன் மாஸ்ரர்தான் மேற்கொண்டிருந்தார். இந்த நிலையில்த்தான் விடுதலைப்போராட்டத்தில் இணைந்துகொள்ள முடிவெடுத்த பதினாறு வயதேயான சுதன் மறவன் மாஸ்ரருடன் மறைமுகமான முறையில் தொடர்பினை ஏற்படுத்தியிருந்தான். அதற்கமைவாக மறவன் மாஸ்ரரின் ஏற்பாட்டில் 1989-ம் ஆண்டின் முற்பகுதியில் சுதனும் இன்னும் சில இளைஞர்களும் சுண்டிக்குளம் காட்டுப்பகுதிக்குச் சென்று புதிய போராளிகளாக இணைந்து கொண்டனர். இதன் பின்னர் இந்த புதிய போராளிகள் அணியினர் மணலாற்றுக் காட்டுப்பகுதிக்குச் சென்று பின்னர் அங்கிருந்து வவுனியா காட்டுப்பகுதியில் அமைந்திருந்த வியட்னாம் பயிற்சிப்பாசறைக்குச் சென்றனர். வியட்னாம் பயிற்சிப்பாசறையின் இரண்டாவது அணியினருக்கான அடிப்படைப் பயிற்சிகள் தொடங்கியபோது வடமராட்சிக்கிழக்கிலிருந்து சென்ற இந்தப்புதிய போராளிகள் அணியினரும் அடிப்படைப்பயிற்சியில் இணைத்துக்கொள்ளப்பட்டார்கள். அங்குதான் சுதனுக்கு இயக்கப் பெயராக விநாயகம் என்ற பெயர் சூட்டப்படுகிறது. உடற்பயிற்சி கொமாண்டஸ் பயிற்சி, ஆயுதங்களின் சூட்டுப்பயிற்சி போன்ற அனைளத்துப் பயிற்சிகளிலும் மிகத்திறமையாகத் தேர்ச்சி பெற்ற விநாயகம் சிறந்த போர்வீரனாக பயிற்சிப்பாசறையிலிருந்து வெளிவருகின்றான். http://www.eelapparavaikal.com/wp-content/uploads/2019/02/vinayakam1.jpg அன்றைய நாட்களில் தாக்குதல்கள் பெரும்பாலும் மணலாற்றுக் காட்டுப்பகுதிகளிலேயே விரிந்திருந்தது. மணலாற்றுக்காட்டுப்பகுதியில் இந்திய இராணுவத்தினருக்கெதிரான தாக்குதல் ஒன்றுதான் விநாயகத்தின் கன்னித்தாக்குதலாக அமைந்திருந்தது. அதைத் தொடர்ந்து தேசவிரோதக் குழுக்கள் மீதான தாக்குதல் என விநாயகத்தின் களமுனைகள் விரிந்தன. 1990-ம் ஆண்டின் முற்பகுதியில் இந்தியப்படையினர் தாயகத்திலிருந்து முற்றாக வெளியேறியிருந்தனர். அதைத்தொடர்ந்து 1990-ம் ஆண்டின் நடுப்பகுதியில் இலங்கை இராணுவத்தினருடனான இரண்டாம் கட்ட ஈழப்போர் தொடங்கியிருந்தது. யாழ்-கோட்டையில் நிலைகொண்டிருந்த இராணுவத்தினரை விடுதலைப்புலிகள் முற்றுகையிட்டிருந்த போது விநாயகமும் அந்த அணியோடு நின்றிருந்தார். அத்தோடு கோட்டை இராணுவத்தளத்தை கைப்பற்றுவதற்கு விடுதலைப்புலிகள் மேற்கொண்ட தாக்குதல்களிலும் விநாயகம் நேரடியாகப் பங்கெடுத்திருந்தார். கோட்டை இராணுவ முகாம் விடுதலைப்புலிகளின் வசம் வீழ்ந்ததைத்தொடர்ந்து பலாலி கட்டுவன் பகுதிகளிலும் களப்பணிகளிலும் சில தாக்குதல்களிலும் பங்குகொண்ட விநாயகம் அவர்கள் பின்னர் அப்போதய விடுதலைப்புலிகளின் பிரதித்தலைவரும் மக்கள் முன்னணித்தலைவருமாகிய மாத்தையா அவர்களின் மெய்ப்பாதுகாவலர் அணியில் இணைத்துக்கொள்ளப்படுகின்றார். மெய்ப்பாதுகாவலர் அணிக்கான பயிற்சியிலும் மிகத்திறமையான முறையில் தேர்ச்சி பெற்று மாத்தையா அவர்களின் பிரதான மெயப்பாதுகாப்பாளர்களில் ஒருவராகச்செயற்பட்டுக்கொண்டிருந்தார். இந்தக்காலப்பகுதியில் அதாவது 1991-ம் ஆண்டு காலப்பகுதியில் நடைபெற்ற ஆகாயக்கடல்வெளிச்சமர் உட்பட இன்னும் பல தாக்குதல்களிலும் பங்கெடுத்திருந்தார். தொடர்ந்துவந்த நாட்களில் 1993-ம் ஆண்டின் நடுப்பகுதியில் விநாயகம் அவர்கள் கடற்புலிகள் அணிக்குள் உள்வாங்கப்பட்டார். கடற்புலிகள் அணிக்குள் உள்வாங்கப்பட்டிருந்த விநாயகத்திடம் அரசியல் ஆளுமையும் நிர்வாகத்திறனும் இருப்பதைக்கண்டுகொண்ட கடற்புலிகளின் சிறப்புத்தளபதி சூசை அவர்கள் விநாயகம் அவர்களை கடற்புலிகளின் மன்னார் மாவட்டத்தின் அரசியல்த்துறைப்பொறுபாளராக நியமித்திருந்தார். மன்னார் மாவட்டத்தின் அரசியல் நிர்வாகத்தை பொறுப்பேற்றுக்கொண்ட விநாயகம் அவர்கள் தனது அரசியல் ஆளுமையினாலும் உறுதியானதும் தெளிவானதுமான பேச்சுக்களினாலும் மக்கள் மனங்களில் இடம்பிடித்திருந்தார். இந்தகாலப்பகுதியில் நடைபெற்ற பூநகரி-நாகதேவன்துறை கூட்டுப்படைத்தளம் மீதான சமரின்போது அதில் விநாயகமும் பங்குகொண்டிருந்தார். அந்தச்சமரில் காயமடைந்த விநாயகம் அவர்கள் தனது ஒரு கண்பார்வையையும் இழந்தார். அதனைத்தொடர்ந்து குறிப்பிட்ட நாட்கள் மருத்துவ ஓய்விலிருந்த விநாயகம் அவர்கள் மீண்டும் தனது அரசியல் பணிகளை முன்னெடுத்தார். அதனைத்தொடர்ந்து விநாயகம் அவர்கள் சிறப்புத்தளபதி சூசை அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக குறிப்பிட்ட காலப்பகுதிக்கு புலனாய்வுக்கல்வியை சிறப்பான முறையில் கற்று நிறைவு செய்திருந்தார். 1996-ம் ஆண்டு ஏப்ரல் மாததில் விடுதலைப்புலிகள் யாழ்.குடாநாட்டிலிருந்து வெளியேறி வன்னிப்பெருநிலப்பரப்பை தளமாகக்கொணடு செயற்பட்டவேளையில்தான் முல்லைத்தீவு இராணுவத்தளம்மீதான ஓயாதஅலைகள்-01 நடவடிக்கையினை விடுதலைப்புலிகள் மேற்கொண்டு அந்த இராணுவத்தளத்தை விடுதலைப்புலிகள் கைப்பற்றியிருந்தனர். http://www.eelapparavaikal.com/wp-content/uploads/2019/02/27073052_617387558592404_1146573242043362400_n.jpg இந்த தாக்குதலிலும் பங்குகொண்ட விநாயகம் இந்தச்சம்பவத்தில் தனது தலையில் காயமடைந்திருந்தார். அதனைத்தொடர்ந்து மருத்துவ சகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்டு உடல்நிலை தேறியிருந்தார். தொடர்ந்துவந்த நாட்களில் சிறப்புத்தளபதி சூசை அவர்கள் தனக்கான பிரதான மெயப்பாதுகாப்பு அணிப்பொறுப்பாளராக விநாயகம் அவர்களை நியமித்திருந்தார். சிறப்புத்தளபதி சூசை அவர்களுக்கான பாதுகாப்புக்கடமையை விசுவாசமாகவும் அர்ப்பணிப்புடனும் செய்துவந்தார். அத்தோடு பாதுகாப்பு அணிக்கென தேர்வுசெய்யப்படுகின்ற போராளிகளுக்கும் பாதுகாப்புப்பயிற்சியை வழங்குகின்ற பயிற்சி ஆசிரியராகவும் விநாயகம் விளங்கினார். குறிப்பிட்ட காலப்பகுதியில் பாதுகாப்புப்பணிகளை சிறப்பாகச்செய்து சூசை அவர்களின் நம்பிக்கைக்குப்பாத்திரமான விநாயகம் அவர்கள் பின்னரான நாட்களில் முல்லைத்தீவு-செம்மலைப்பகுதியில் தளமிட்டிருந்த வசந்தன் கடற்சண்டை அணிக்குள் உள்வாங்கப்பட்டிருந்தார். அந்த கடற்சண்டை அணியில் சண்டைப்படகு ஒன்றின் இரண்டாம் நிலையிலான கட்டளை அதிகாரியாகச் செயற்பட்டு குறிப்பிட்ட சில கடற்சண்டைகளிலும் கிழக்கு மாகாணத்திற்கான விநியோக நடவடிக்கைகளிலும் ஈடுபட்டிருந்ததுடன் அந்த கடற்சண்டை அணியினரின் முகாமின் நிர்வாகப்பொறுப்பாளராகவும் செயற்பட்டு போராளிகளின் நன்மதிப்பையும் பெற்றிருந்தார். இதன் பின்னரான நாட்களில் அதாவது 1999-ம் ஆண்டுகாலப்பகுதியில் சிறப்புத்தளபதி சூசை அவர்களால் விநாயகம் அவர்கள் கடற்புலிகளின் அரசியல்த்துறைப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தார். இவர் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து கடற்புலிகள் அரசியல் துறையின் செயற்பாடுகள் முழுவீச்சுப்பெற்றன. தனது நேர்த்தியான செயற்பாடுகளாலும் பேச்சுத்திறனாலும் மக்களுக்கும் கடற்புலிகளுக்குமிடையிலான நெருக்கமான உறவுப்பாலத்தை ஏற்படுத்தியிருந்தார். அத்துடன் தனது ஆளுகையின் கீழ் கடமையாற்றுகின்ற அரசியல் போராளிகளையும் பூரண அரசியல்தெளிவும் ஆளுமைமிக்க போராளிகளாகவும் வளர்த்தெடுத்தார். 1999-ம் ஆண்டின் இறுதிப்பகுதியில் விடுதலைப்புலிகள் மேற்கொண்ட ஓயாத அலைகள்-03 நடவடிக்கை மூலமாக வெற்றிலைக்கேணி-கட்டைக்காடு இராணுவத்தளங்கள் உட்பட வடமராட்சிக்கிழக்கின் பல பகுதிகளும் மீட்கப்பட்டபோது ஏற்கனவே வடமராட்சிக்கிழக்கிலிருந்து இடம்பெயர்ந்து மாத்தளன் பொக்கணை பகுதிகளில் வசித்துவந்த மக்களை எல்லைக்காப்புப்படையணியாகவும் கிராமியப்படையாகவும் அணிதிரட்டி அதற்கு தானே தலைமையேற்றுச்சென்று வடமராட்சிக்கிழக்குப்பிரதேசத்தில் விரிந்த களமுனைகளில் பங்கெடுத்திருந்தார். இதன் பின்னரான நாட்களில் எல்லைக்காப்புப்படையணிகளை வீதிப்பாதுகாப்பு மற்றும் கடற்கரையோரப்பாதுகாப்பு போன்ற பாதுகாப்புக் கடமைகளையும் சிறந்த முறையில் நெறிப்படுத்தினார். இவ்வாறாக சுமார் நான்கு ஆண்டுகள் தனது அரசியல்த்துறைப்பொறுப்பு நிலையை மிகவும் சிறப்பான முறையில் மேற்கொண்டார். நோர்வே அரசின் அனுசரணையுடன் போர்நிறுத்தம் அமுல் படுத்தப்பட்டிருந்த காலப்பகுதியில் அதாவது 2003-ம் ஆண்டின் முற்பகுதியில் விநாயகம் அவர்கள் தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தின் கடற்புலிகள் பிரதேசங்களுக்கான இணைப்பாளராகவும் கடற்கண்காணிப்பு நிலையங்களுக்கான பொறுப்பாளராகவும் சிறப்புத்தளபதி சூசை அவர்களால் நியமிக்கப்பட்டார். சமநேரத்தில் இரண்டு பொறுப்பு நிலைகளையும் வகித்த விநாயகம் அவற்றை மிகவும் அர்ப்பணிப்புத்தன்மையுடன் செய்திருந்தார். இவர் பொறுப்பேற்றதைத்தொடர்ந்து தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தின் அபிவிருத்தித்திட்டங்கள் கடற்புலிகளின் பிரதேசங்களில் துரிதகதியில் முன்னெடுக்கப்பட்டன. இவரது பேச்சுத்திறன்கள் அதிகரிக்கவே 2004-ம் ஆண்டு நவம்பர்மாதம் சிறப்புத்தளபதி சூசை அவர்களால் விநாயகம் அவர்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு பரப்புரைப்பணிகளுக்காக அனுப்பப்பட்டிருந்தார். நோர்வே சுவிஸ் உட்பட இன்னும் பல நாடுகளுக்குச்சென்று தனது பேச்சாற்றலினால் விடுதலைப்போராட்டத்தின் நியாயப்பாடுகளை புலம்பெயர் மக்களுக்கு தெளிவுபடுத்தினார். சுமார் இரண்டு மாதகாலமாக புலம்பெயர்நாடுகள் பலவற்றிலும் தனது பரப்புரைப்பணிகளை மேற்கொண்டு அதற்கூடாக விடுதலைப்போராட்டம் வீச்சுப்பெறுவதற்காக பெரும்தொகையான நிதி கிடைப்பதற்கு உறுதுணையாக உழைத்திருந்தார். ஆழிப்பேரலை அனர்த்தம் ஏற்பட்டு அந்த பேரலையின் ஊழித்தாண்டவத்தில் தனது உறவினர்களும் தான் நேசித்த மக்களுமாக ஆயிரக்கணக்கில் பலிகொள்ளப்பட்டபோதிலும்கூட அந்த துயரங்களையெல்லாம் தாங்கிக்கொண்டு தனது கொள்கையில் குறிதவறாமல் புலம்பெயர் நாடுகளில் தனது கடமையை நிறைவாகச்செய்திருந்தவர். இதன்பின்னரான நாட்களில் 2005-ம் ஆண்டு ஜனவரி மாதத்தின் நடுப்பகுதியில் தாயகத்திற்கு வந்து கரையோரப்பாதுகாப்புப் பொறுப்பாளராக செயற்பட்டதோடு மக்கள் படைக்கட்டுமானப்பயிற்சித்திட்டங்களை நெறிப்படுத்துபவராகவும் செயற்பட்டார். அத்தோடு சிறப்புத்தளபதி சூசை அவர்களின் பிரத்தியேகமான இராணுவ மற்றும் நிர்வாக வேலைத்திட்டங்களையும் நெறிப்படுத்தினார். இந்தக்காலப்பகுதியில்தான் இவரது சேவைகளை கோரவிருக்கும் முகமாக தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்கள் விநாயகம் அவர்களுக்கு கைத்துப்பாக்கியும் (பிஸ்ரல்) டாட்டாப்பிக்கப் வாகனமும் வழங்கப்பட்டிருந்தது. தொடர்ந்து வந்த நாட்களில் கடற்புலிகளின் இராணுவ அரசியல்ப்பொறுப்பாளராக குறிப்பிட்ட காலப்பகுதியில் செயற்பட்டிருந்தார். 2007-ம் ஆண்டின் நடுப்பகுதியில் சிறப்புத்தளபதி சூசை அவர்கள் படகு விபத்திற்கு உள்ளாகி முழுமையான மருத்துவக்கண்காணிப்பில் இருந்தபோது அவருக்கான பாதுகாப்புப்பொறுப்பாளராக விநாயகம் அவர்கள் செயற்பட்டார். இதைத்தொடர்ந்து 2007-ம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்தின் இறுதிப்பகுதியில் தேசியத்தலைவர் அவர்களால் விநாயகம் அவர்கள் கடற்புலிகளின் துணைத்தளபதியாக நியமிக்கப்பட்டிருந்தார். துணைத்தளபதியாக பொறுப்பேற்றதைத்தொடர்ந்து சிறப்புத்தளபதி சூசை அவர்களின் வேலைச்சுமைகளில் ஒரு பகுதியை தானே பொறுப்பேற்று அவற்றை சிறப்பான முறையில் முன்னெடுத்திருந்தார். நான்காம் கட்ட ஈழப்போர் வீச்சுப்பெற்ற வேளையில் போராளிகளுக்கான புத்தூக்கப்பயிற்சி மற்றும் மக்கள் படைக்கட்டுமானப்பயிற்சி என்பவற்றையும் அவரே நேரடியாக நின்று நெறிப்படுத்தியிருந்தார். என்னதான் வேலைப்பழுக்கள் இருந்தாலும் மக்கள் சந்திப்புக்களை நடத்தி மக்களின் தேவைகளைக்கேட்டறிந்து அவற்றுக்கான தீர்வுகளையும் உடனுக்குடன் பெற்றுக்கொடுத்தார். வன்னியில அரசபடைகளின் ஆக்கிரமிப்புப்போர் உச்சம் பெற்றிருந்தவேளையில் யாழ.;மாவட்டத்தையும் முல்லைத்தீவுமாவட்டத்தையும் பிரிக்கும் சுண்டிக்குளம்-நல்லதண்ணீர்த்தொடுவாய் வரையிலும் படையினர் முன்னேறியிருந்தனர். இந்தச்சூழ்நிலையில் நல்லதண்ணீர்த்தொடுவாயை அடுத்துள்ள பேப்பாரைப்பிட்டிப்பகுதியில் பலமான காவல்நிலையொன்றை அமைக்கவேண்டிய நிர்ப்பந்தம் விடுதலைப்புலிகளுக்கு ஏற்பட்டது. ஏனெனில் பேப்பாரைப்பிட்டி சாலைப்பகுதிகளை இராணுவம் கைப்பற்றும் படசத்தில் மாத்தளன் பொக்கணை கிராமங்களின் இருப்பு கேள்விக்குறியாகவிருந்தது. ஆகவேதான் பேப்பாரைப்பிட்டிப்பகுதியில் பலமான காவல்நிலை விடுதலைப்புலிகளால் அமைக்கப்பட்டது. பே;பாரைப்பிட்டியின் களமுனைகளின் கட்டளைத்தளபதிகளாக துணைத்தளபதி விநாயகம் மற்றும் செழியன் காதர் பகலவன் ஆகியோர் நியமிக்கப்பட்டிருந்தனர். 2009-ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 04-ம் திகதி நல்லதண்ண்ணீர்த்தொடுவாய்ப்பகுதியில் நிலைகொண்டிருந்த படையினர் யுத்த டாங்கிகள் ஆட்லறிகள் மற்றும் கனரக ஆயுதங்களின் சூட்டாதரவுடன் பேப்பாரைப்பிட்டியை நோக்கியதான முன்னேற்றத்தை மேற்கொண்டிருந்தனர். இதைத்தொடர்ந்து பேப்பாரைப்பிட்டிப்பகுதியில் விடுதலைப்புலிகளுக்கும் அரசபடையினருக்கும் கடும் சமர் மூண்டது. பேப்பாரைப்பிட்டி பெரும் சமர்க்களமாக மாறியது. இறுதிவரையிலும் தான் வரித்துக்கொண்ட இலட்சியத்தில் உறுதியுடனும் துணிச்சலுடனும் சமரிட்டு பேப்பாரைப்பிட்டி மண்ண்ல் தனது உயிரை தமிழ்த்தாயின் விடுதலைக்காக அர்ப்பணித்திருந்தார். இந்த சமரில் துணைத்தளபதி லெப் கேணல் விநாயகம் உடபட கேணல் காதர் லெப் கேணல் பகலகன் உட்பட இன்னும் பல போராளிகள் வீரச்சாவினைத்தழுவிக்கொண்டனர். மாவீரர்களின் வரலாற்றில் துணைத்தளபதி லெப் கேணல் விநாயகம் அவர்களின் வரலாறும் தனித்துவமான அத்தியாயத்தை வகிக்கின்றது.
-
01.05.1999 நடந்த கடற்சமரில் வீரச்சாவடைந்த லெப்.கேணல் தேவநேயன் (தர்சன்)
எழுத்துருவாக்கம்: குணா ஜெயசிக்குறு இராணுவநடவடிக்கைக்கு எதிரான மறிப்புச் சமரை படையணிகள் நடாத்திக்கொண்டிருந்த அதேவேளை அந் நடவடிக்கைக்குத் தேவையான பொருட்களை தலைவர் அவர்களின் நீண்டகாலத் திட்டத்தின் அடிப்படையிலும் தலைவர் அவர்களின் ஆலோசனையின் அடிப்படையில் கடற்புலிகளின் விநியோக அணிகள் செயற்பட்டுக் கொண்டிருந்தவேளையில் அதாவது 01.05.1999 அன்று முல்லைத்தீவுக் கரையிலிருந்து லெப் கேணல் தர்சன் அவர்கள் தலைமையிலான படகுத் தொகுதி 110கடல்மைல்களுக்குச் சென்று கப்பலில் பொருட்களை ஏற்றிக் கொண்டு வந்து கொண்டிருந்தவேளையில், 55 கடல்மைல் தூரத்தில் இலங்கைக் கடற்படையின் டோறாப் பீரங்கிப் படகுகள் வழிமறிக்கமுற்பட்ட வேளையில் அக்கடற்படையினருடன் சண்டையிட்டு வந்து கொண்டிருந்த அதே சமயம் தளபதி நிறோஐன் அவர்கள் தலைமையிலான சண்டைப்படகுகள் வந்து கடற்படையினரை வழிமறித்து தாக்குதல் நடாத்தி விநியோகப் படகுகளுக்கு பாதுகாப்பு வழங்கிக் கொண்டிருந்த வேளையில் காங்கேசந்துறையிலிருந்து வந்தடோறாப்படகுகள் கப்டன் ஈழமைந்தன் அவர்களின் விநியோகப் படகை வழிமறிக்க முற்பட்டவேளையில் அக்கடற்படையினருடனான மோதலில் ஈழமைந்தனின் படகு பற்றி எரிந்து கடலில் மூழ்கியது. (ஈழமைந்தனின் படகு அன்றையதினம் எரிபொருள் ஏற்றிக்கொண்டு வந்தது .) தொடர்ந்து மேலதிகமாக வந்த பலடோறாப்படகுகளுடன் .தளபதி நிறோஐன் அவர்களின் சாதுர்யத்தால் (அதாவது கடற்படை விநியோகப் படகின்மீது தான் தாக்குதல்களை மேற்கொள்வான் ஏனெனில் விநியோகப் படகுகள் பொருட்கள் ஏற்றி வருவதால் வேகம் குறைவாகத்தான் வரும் .ஆகவே சண்டைப்படகுகள் டோறா மீது தாக்குதல் நாடத்தி தூரத்திற்க்கு கலைத்தவிட்டு சண்டைப் படகுகள் விநியோகப்படகுகளின் வேகத்திற்க்கு ஏற்றமாதிரி வந்தார்கள்.இதனால் கடற்படைக்கு விநியோகப்படகுகளை இணங்காணுவது மிகவும் கஸ்ரமாக இருந்தது.இவ்யுக்தியைக் கையாண்டார் தளபதி நிறோஐன் அவர்கள். ஏனைய விநியோகப்படகுகள் பாதுகாப்பாக சாளைத் தளம் வந்தடைந்தது இந்நடவடிக்கையில் கடற்புலிகளின் பிரதான கட்டளைமையமான சாளைத் தளத்தின் ராடர் கட்டளை மையத்தின் பொறுப்பாளராகவும் விநியோகக் தொகுதிக் கட்டளை அதிகாரியுமான லெப் கேணல் தர்சன்/ தேவநேயன் (தர்சன் அவர்களின் மேலும் இரண்டு சகோதரர்களும் மாவீரர்களாவர்.) உட்பட பதினொரு போராளிகள் அன்றைய தினம் கடலிலே காவியமானார்கள். இவ் அனைத்து நடவடிக்கைகளையும் கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசை அவர்கள் சாளைத் தளத்திலிருந்து வழிநடாத்தினார்.தொடர்ந்து படகுகளிற்க்கு பொருட்கள் வழங்கிய கப்பலை பற்றிய தகவல்களை இலங்கைக் கடற்படையினர் இந்தியக் கடற்படையினருக்குத் தெரிவித்தனர். அதற்கமைவாக 01.05.1999 அன்று மாலை இந்தியக்கடற்படையினர் இந்திய விமானப்படையின் உதவியுடன் பின்தொடர்ந்து கப்பலிலிருந்தவர்களை சரணடையச் சொல்லியும் எச்சரிக்கை வேட்டுக்கைளைத்தீர்த்தும் .கப்பலிலிருந்தவர்கள் தங்களைத் தாங்கள் அழிக்கவேண்டும் இல்லையேல் தங்களிடம் சரணடையவேண்டும் இதில் எதையாவது ஒன்றைச் செய்யவேண்டும் .என்பதற்காக கடும் அழுத்தத்தைத் தொடுத்தனர். ஆனாலும் போகும் வரை போவம் இல்லாவிட்டால் இயலாது விட்டால் முடிவெடுப்பம் என்ற கப்பல் தலைவரின் உறுதிமிக்க செயற்பாட்டாலும் தலைவர் அவர்களின் ஆலோசனை மிக்க செயற்பாட்டாலும் .05.05.1999 அன்று இவர்களின் கப்பல் கப்பல்கள் செல்லும் பிரதான பாதைக்குச் சென்று மற்றக் கப்பல்களுடன் சென்றபோது தீடிரென ஏற்பட்ட காலநிலைமாற்றத்தால் இந்தியக் கடற்படையால் இவர்களது கப்பலை அடையாளம் காணமுடியாமல் போனதால் இவர்களது கப்பல் தங்களது பாதையில் சென்றது. உண்மையில் இந்த ஐந்து நாட்களும் கப்பலிலிருந்தவர்கள் தாங்களும் கப்பலும் எதிரியிடம் பிடிபடக்கூடாது என்பதில் உறுதியாகச் செயற்பட்டுக்கொண்டிருந்தனர்.கப்பல் தவைரின் செயற்பாடும் மிகவும் அளப்பரியது .கப்பல் தலைவரின் அர்ப்பணிப்பு மிக்க செயற்பாட்டால் தான் அன்றைய பாரிய இழப்பு தவிர்க்கப்பட்டது எனச் சொன்னால்.அது மிகையாகாது. லெப். கேணல் தர்சனுக்கு ஏற்கனவே இரு சகோதரர்கள் மாவீரர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
நினைவுகளாய் வாழும் கடற்புலிகளின் மகளீர் பிரிவு சிறப்புத்தளபதி லெப். கேணல் பூரணி
விடுதலைப்புலிகளின் கடற்புலிகள் படையணியில் அங்கம் வகித்த ஒவ்வொரு உறுப்பினர்களிடமும் கடற்புலிகளின் மகளீரணியின் சிறப்புத் தளபதியாகவிருந்த பூரணியக்காவைப் பற்றி ஏதொவொரு நினைவுகள் அலைபாய்ந்து கொண்டேயிருக்குமென நம்புகின்றேன். விடுதலைப்புலிகளின் கடற்புலிகள் படையணியானது பல தாக்குதல் அணிகளையும் பல நிர்வாக அணிகளையும் தன்னகத்தே கொண்ட ஒரு பெரும்படைக் கட்டமைப்பாகும். இங்கு அனைத்து அணிகளிலும் மகனார் மற்றும் மகளீர் ஆகிய இருபாலாரும் இணைந்தே களப்பணிகள் மற்றும் நிர்வாகப்பணிகள் ஆகியவற்றை முன்னெடுத்திருந்தனர். அந்தவகையில் பூரணியக்கா தான் வகிக்கின்ற பொறுப்பு நிலைகளுக்கு அப்பால் ஒவ்வொரு போராளிகளிடமும் ஒரு நல்ல அக்காவாக தனது வயதில் மூத்தவர்களிடம் ஒரு நல்ல தங்கையாக இடம்பிடித்துக்கொண்டார் என்று கூறினால் அதுமிகையாகாது. இருபாலாரையும் இணைத்து நிர்வகிக்கின்ற ஆளுமை பூரணியக்காவிடம் இருந்தது என்று கூறுவதற்கு 2003-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2007-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரையான சுமார் நான்கு ஆண்டு காலப் பகுதிகளில் அக்கா நிர்வகித்திருந்த கடற்புலிகளின் அரசியல்த்துறைப் பொறுப்பை இங்கு சிறந்த எடுத்துக்காட்டாகக் குறிப்பிடலாம். கடற்புலிகளின் சண்டைப்படகுகளில் படகுக் கட்டளையதிகாரியாகவும் தொகுதிக் கட்டளையதிகாரியாகவும் மகளீர் செயற்பட்டிருக்கின்றார்கள். ஆனாலும் நிர்வாகச் செயற்பாடுகளில் குறிப்பாக மகனார் மற்றும் மகளீர் ஆகிய இருபாலாரையும் உள்ளடக்கிய அரசியல்த்துறைக் கட்டமைப்பில் அதுவும் மக்கள் மத்தியில் வேலைசெய்கின்ற ஒருகட்டமைப்பை நிர்வகிப்பதென்பது சாதாரண விடயமல்ல. ஆனாலும் பூரணியக்கா அதனை செவ்வனே செய்துகாட்டியிருந்தார். 1992-ம் ஆண்டின் முற்பகுதியில் கடற்புலிகளின் மகளீரணி தோற்றம் பெற்று புதிய போராளிகள் உள்வாங்கப்பட்டு கடற்புலிகளின் மகளீரணிக்கென முதலாவது அடிப்படைப் பயிற்சிப்பாசறை தொடங்கப்பட்டபோது அந்தக் காலப்பகுதியில் பூரணியக்காவும் தன்னை போராட்டத்தில் இணைத்துக்கொண்டு அந்தப்பாசறையில் ஒருபோராளிக்கு வேண்டிய அனைத்து பயிற்சிகளையும் சிறப்புடன் பெற்று சிறந்ததொரு ஆளுமைமிக்க போராளியாக பூரணியக்கா அந்தப் பாசறையிலிருந்து வெளியேறினார். அன்றையநாட்களில் கடற்புலிகளுக்கான தரைத் தாக்குதலணிகளும் செயற்பட்டு வந்ததோடு பல களங்களையும் அவை கண்டிருந்தன. கடற்புலிகளின் மகளீர் தரைத் தாக்குதலணியான சுகன்யா படையணியில் உள்வாங்கப்பட்ட பூரணியக்கா அந்தத் தாக்குதலணி யாழ்ப்பாணத்திலும் பின்னர் வன்னிப் பெருநிலப்பரப்பிலுமாக பங்கெடுத்திருந்த குறிப்பிடக்கூடிய தாக்குதல்கள் மற்றும் களச்செயற்பாடுகளிலும் தனது வகிபாகத்தை வகித்திருந்தார். இவ்வாறாக தனது துணிச்சலான களச்செயற்பாடுகளாலும் அணிகளை வழிநடாத்தும் ஆளுமையாலும் நாளடைவில் சுகன்யா படையணியின் பொறுப்பாளராக பொறுப்பேற்றுக்கொண்டார். ஓயாதஅலைகள்-03 என விடுதலைப்புலிகளால் பெயர்சூட்டப்பட்டு தொடரான நிலமீட்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டபோது வடமராட்சி கிழக்கு பிரதேசத்தின் பல கிராமங்கள் மீட்கப்பட்ட நடவடிக்கையிலும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த குடாரப்பு தரையிறக்கத்தின்போது தாளையடியில் அமைந்திருந்த படைத்தளத்தை தகர்த்து தரையிறங்கிய அணிகளுக்கான தரைவழி விநியோகப் பாதையை ஏற்படுத்துவதிலும் கடற்புலிகளின் தரைத் தாக்குதலணிகளான சூட்டி படையணி மற்றும் சுகன்யா படையணிகளது பங்கு மிகஅளப்பரியது. இந்த நடவடிக்கைகளின்போது பப்பா வண் (P1) என்ற சங்கேதக் குறியீட்டுப்பெயரைக் கொண்ட பூரணியக்காவின் காத்திரமான பங்கும் அவரது அர்ப்பணிப்பான உழைப்பும் இன்றியமையாததாக அமைந்திருந்தது. 2001-ம் ஆண்டின் பிற்பகுதிகளில் விடுதலைப் போராட்டத்தில் கடற்புலிகளுக்கென புதிதாக இணைந்த பெண் போராளிகளுக்கான அடிப்படைப் பயிற்சிப் பாசறையான மேஜர் கலாநிதி அடிப்படைப் பயிற்சிப்பாசறை முல்லைத்தீவு – சிலாவத்தைப் பகுதியில் நிறுவப்பட்டபோது அந்தப் பயிற்சி முகாமின் பொறுப்பாளராக பூரணியக்கா நியமிக்கப்பட்டிருந்தார். அந்தப் பயிற்சிப் பாசறையில் பூரணியக்காவின் வழிநடாத்தலின் கீழ் பயிற்சிபெற்று போராளிகளாகப் புடம்போடப்பட்டு அந்தப் பாசறையிலிருந்து வெளியேறிய பல மகளீர் போராளிகள் தொடர்ந்து வந்த காலப்பகுதிகளில் கடற்புலிகளின் மகளீரணியில் சண்டையணிகளிலும் நிர்வாகச் செயற்பாடுகளிலும் முதன்மையான வகிபாகம் வகித்திருந்ததை நான் நன்கறிவேன். இந்தக்காலப்பகுதிகளில் ஓர்நாளில் பூரணியக்கா உந்துருளியில் பயணித்துக் கொண்டிருக்கையில் அதே வீதி வழியாப் பயணித்த சாதாரண பொதுமகன் ஒருவருக்குச் சொந்தமான மினிபஸ் ஒன்றுடன் ஏறபட்ட விபத்தில் பூரணியக்கா காயமடைந்ததோடு அவரது கால் ஒன்றும் கடுமையான பாதிப்பிற்குள்ளாகியிருந்தது. பின்னர் தீவிர மருத்துவச் சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்டு பாதிப்படைந்த காலுக்குள் உலோகத்தகடுகள் வைக்கப்பட்டு உடைந்த எலும்புகள் பொருத்தப்பட்டபோதிலும் அக்காவின் பாதிக்கப்பட்ட கால் சிறிது கட்டையாகவேயிருந்தது. இதனால் அக்கா அந்தக் காலுக்கு சில பாட்டாக்களைச் சேர்த்து ஒட்டப்பட்ட ஒட்டுபாட்டாவையே பயன்படுத்தினார். பின்னைய நாட்களில் சமாதான காலப்பகுதியில் எங்களுடன் கதைக்கின்றபோது இந்தச்சம்பவத்தையிட்டு பூரணியக்கா பல சந்தர்ப்பங்களில் கவலைப்பட்டதுண்டு. ‘எத்தனையோ சண்டைகளிலெல்லாம் நேரடியாகப் பங்குகொண்டிருக்கிறன். அப்போது கூட ஒரு சிறிய கீறல்க்காயம்கூட ஏற்படவில்லை. ஒரு விபத்து ஏற்பட்டு என்னை முடமாக்கிப்போட்டுது. ஆனால் சண்டை தொடங்கினால் நான் அங்குசென்று சண்டை ஸ்பொட்டில் நிற்பன். ஒருகால்தானே இயலாது பரவாயில்லை என்னால் சண்டைபிடிக்க முடியும்.” என்று பூரணியக்கா பலசந்தர்ப்பங்களில் ஆதங்கப்பட்டுக் கூறியிருக்கின்றார். ஒருமுறை அவருக்கு ஏற்பட்ட அந்த விபத்துச்சம்பவம் தொடர்பாக அவருடன் கதைத்துக்கொண்டிருந்தபொழுது நான் “அந்த மினிபஸ்சாரதிக்கு நடடிவக்கை எதுவும் எடுக்கவில்லையா?” என்று கேட்டேன். அதற்கு பூரணியக்கா “அப்படி எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது. மக்கள் பாவம். மக்களுக்காகத்தானே போராடுகின்றோம். ஏதோ தவறுதலாக அந்த விபத்து நடந்துவிட்டது. அதற்காக ஒரு அப்பாவிப்பொதுமகனை தண்டிக்கமுடியுமா? அது எந்தவகையில் நியாயம்? அப்படியெல்லாம் செய்யக்கூடாது என்று அழுத்தமாகக்கூறினார். பூரணியக்கா மக்கள் மீது எந்தளவிற்கு ஆழமான பற்றும் பாசமும் கொண்டிருந்தார் என்பதற்கு மேற்குறிப்பிட்ட சம்பவம் சிறந்ததொரு எடுத்துக்காட்டாகும். 2002-ம்ஆண்டு போர்நிறுத்தமும் சமாதானமும் நடைமுறைக்கு வந்த காலப்பகுதியில் சில மாதங்கள் லெப் கேணல் சிலம்பரசன் (றஞ்சன்) அவர்கள் கடற்புலிகளின் அரசியல்த்துறைப் பொறுப்பாளராக பொறுப்பேற்றிருந்தார். ஆனாலும் அவரது பணி சர்வதேசக் கடல் நடவடிக்கைகளுக்கு இன்றியமையாததாகவிருந்ததால் 2002-ம் ஆண்டு ஒக்ரோபர் மாதமளவில் லெப் கேணல் சிலம்பரசன் அவர்கள் சர்வதேசக் கடல் நடவடிக்கைகளுக்கு சூசையண்ணாவால் அனுப்பி வைக்கப்பட்டார். இந்நிலையில் 2002-ம் ஆண்டு ஒக்ரோபர் மாதத்திலிருந்து 2003-ம்ஆண்டு மார்ச் மாதம் வரையிலும் லெப் கேணல் சிலம்பரசன் உள்ளிட்ட பதினொரு போராளிகள் சர்வதேசக் கடற்பரப்பில் வீரச்சாவுச் சம்பவம் நடைபெற்ற காலப்பகுதி வரையிலுமாக சுமார் ஆறுமாதங்கள் கடற்புலிகளின் அரசியல்த்துறைக்கென பொறுப்பாளர்கள் எவரும் நியமிக்கப்பட்டிருக்கவில்லை. கடற்புலிகளின் ஆளுகைக்குட்பட்ட அந்தந்தப் பிரதேசங்களுக்கான மற்றும் மாவட்டங்களுக்கான பொறுப்பாளர்கள் அவற்றை நிர்வகித்துக்கொண்டிருக்க எல்லாவற்றையும் ஒருங்கிணைத்து அப்போது கடற்புலிகளின் தளபதியாகவிருந்த லெப் கேணல் மங்களேஸ் மேற்பார்வைசெய்துகொண்டிருந்தார். 2003-ம் ஆண்டு ஏப்ரல்மாதமளவில் கடற்புலிகளின் அரசியல்த்துறைப்பொறுப்பாளராக பூரணியக்கா அவர்களை சிறப்புத்தளபதி சூசையண்ணா அவர்கள் நியமித்திருந்தார். அந்தக்காலப்பகுதியில் நான் வடமராட்சிக் கிழக்குப் பிரதேசத்தில் அரசியல் பணிகனை முன்னெடுத்துக் கொண்டிருந்தேன். அரச படையினரின் ஆக்கிரமிப்பிலிருந்து விடுவிக்கப்பட்ட வடமராட்சி கிழக்குப் பிரதேசத்தின் அனைத்துக் கிராமங்களிலும் மக்கள் மீள்குடியேறிக்கொண்டிருந்தனர். அப்போது சுண்டிக்குளம் தொடக்கம் குடாரப்பு வரையிலுமாக பத்து கிராம அலுவலர் பரிவுகள் எமது ஆளுகையிலிருந்தன. இவற்றை நிர்வகிப்பதற்கு வடமராட்சிக் கிழக்குப் பிரதேச அரசியலிற்கென நியமிக்கப்பட்டிருந்த பொறுப்பாளர் உட்பட நாம் மூன்று போராளிகள் மாத்திரமே அங்கு அரசியல் பணிகளை முன்னெடுத்துக்கொண்டிருந்தோம். மீள்குடியேறிய மக்கள் அநேகமான விடயங்களுக்கு அரசியல்த்துறை செயலகத்தையே நாடிவரவேண்டியிருந்தது. அந்த மக்களுக்கான மக்கள் சந்திப்புகளை மேற்கொள்ளுதல் அத்தோடு அபிவிருத்திப் பணிகளுக்காக வருகின்ற அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளைச் சந்தித்தல் மக்களது தேவைகளை நிவர்த்தி செய்வதற்காக பிரதேச செயலர் மற்றும் கிராம அலுவலர்களை சந்தித்தல். அரச அதிகாரிகளுடன் இணைந்து கிராமங்கள்தோறும் மக்கள் சந்திப்புக்களை மேற்கொள்ளுதல் முதலான ஏகப்பட்ட பணிகளை பிரதேச அரசியல் துறையினராகிய நாமே நிர்வகிக்கவேண்டியிருந்தது. மாதர் சங்கங்களையும் பெண்கள் சம்பந்தமான விடயங்களையும் கையாள்வதற்கு அன்றைய நாட்களில் வடமராட்சி கிழக்கு அரசியல் பணிகளுக்கென மகளீர் எவரும் நியமிக்கப்பட்டிருக்கவில்லை. மக்கள் சந்திப்பு என்ற முதன்மையான பணியை நான் முன்னெடுத்துக் கொண்டிருந்ததால் பெண்கள் சம்பந்தமான விடயங்களை கையாள்வதில் அவ்வப்போது நெருக்கடிகளை எதிர்கொண்டேன். ஆதலால் கடற்புலிகளின் அரசியல்த்துறைப் பொறுப்பாளராக பூரணியக்கா பொறுப்பேற்றிருந்த நிலையில் அவரிடம் நான் முன்வைத்த முதலாவது வேண்டுகோள் என்னவெனில் வடமராட்சிக் கிழக்கு பிரதேசத்தில் மகளீர் சம்பந்தமான அரசியல்ப் பணிகளை முன்னெடுப்பதற்கு மகளீர் போராளிகள் இருவரை அரசியல் பணிக்கு அமர்த்தவேண்டும் என்பதுவே அதுவாகும். எங்களது பணிச் சுமைகளை நேரில் வந்து அவதானித்த பூரணியக்கா வெகுவிரைவில் இரண்டு மகளீர் போராளிகளை அரசியல்ப் பணிகளுக்கு அமர்த்துவதாக உறுதியளித்தார். அதன்படியே சிலவாரங்களில் இரண்டு மகளீர் போராளிகளை கூட்டிவந்து எனக்கு அறிமுகப்படுத்தி வைத்து அவர்களை அரசியல்ப் பணிகளுக்காக நியமித்திருந்தார். அத்தோடு போரினால் அதிகமான பாதிப்புக்களைச் சந்தித்த பிரதேசம் வடமராட்சி கிழக்குப் பிரதேசம் என்பதால் பூரணியக்கா மற்றும் மங்களேசண்ணா ஆகியோர் தமது கூடிய கவனத்தை வடமராட்சி கிழக்குப் பிரதேசத்தில் செலுத்தியிருந்ததால் அதன் பிற்பாடு ஓரளவிற்கு இலகுவாக அரசியல் பணிகளை எம்மால் முன்னெடுக்கக்கூடியதாக அமைந்திருந்தது. 2004-ம்ஆண்டு காலப்பகுதியில் கடற்புலிகளின் அளம்பில்-செம்மலைப் பிரதேச அரசியல் துறைப் பொறுப்பாளராக நான் கடமையாற்றிய காலப்பகுதியில் பூரணியக்காவின் வழிகாட்டுதலும் ஆலோசனைகளும் தாராளமாகவே எனக்கு கிடைத்திருந்தது. அன்றைய நாட்களில் எமது அமைப்பு சார்ந்த தேசியநினைவுநாள் நிகழ்வுகளுக்கும் மக்களுடனான கலந்துரையாடல்களுக்கும் நான் பூரணியக்காவிற்கு முன்னறிவித்தல் கொடுத்தால் கண்டிப்பாக பூரணியக்கா அந்நிகழ்வுகளுக்கு வருகைதந்து அவற்றை சிறப்பித்துச்செல்வது வழக்கமானது. 2005-ம்ஆண்டு பிற்பகுதியில் கடற்புலிகளின் சிறப்புத்தளபதி பிரிகேடியர் சூசை அவர்களால் கடற்புலிகளின் மகளீரணியின் சிறப்புத்தளபதியாக பூரணியக்கா நியமிக்கப்பட்டிருந்தார். அதாவது 2005-ம்ஆண்டு பிற்பகுதியிலிருந்து 2007-ம்ஆண்டு ஏப்ரல் மாதம் வரையும் அரசியல்த்துறைப் பொறுப்பையும் மகளீரணிப் பொறுப்பையும் ஏற்றிருந்து சமநேரத்தில் இரு பிரதான பொறுப்புக்களை வகித்திருந்தார் என்பதுவும் இங்கு குறிப்பிடத்தக்கது. கடற்புலிகளின் மகளீரணியின் கட்டமைப்புக்கள் அனைத்தையும் அக்கா மிகவும் நேர்த்தியாக நெறிப்படுத்தியிருந்தார். 2006-ம்ஆண்டு முற்பகுதியில் தமிழீழத் தேசியத்தலைவர் அவர்கள் கடற்புலிகளில் திறமையாகச் செயற்பட்ட பதினொரு இளநிலைத் தளபதிகளை தேர்வுசெய்து அவர்களை நேரில் அழைத்து அவர்களுக்கு கைத்துப்பாக்கிகளை (பிஸ்ரல்) வழங்கியிருந்தார். இதில் ஒன்பது மகனாரும் இரண்டு மகளீரும் உள்ளடங்கியிருந்தனர். அந்த இரு மகளீரில் ஒருவர் பூரணியக்கா என்பது குறிப்பிடத்தக்கது. 2007-ம்ஆண்டு நடுப்பகுதியில் புதிய போராளிகளுக்கான அடிப்படைப் பயிற்சிப் பாசறையான லெப் கேணல் புயலினி பயிற்சிப் பாசறையிலிருந்து போராளிகள் பயிற்சியை முடித்து வெளியேறியிருந்தனர். அந்தக் காலப்பகுதியில் நான்காவது கட்ட ஈழப்போர் தாயகமெங்கும் முனைப்புப் பெற்றிருந்தன. இவ்வாறாக மணலாற்றிலிருந்து இராணுவத்தினர் அடிக்கடி முன்னேற்ற முயற்சிகளை மேற்கொள்வதும் அது விடுதலைப்புலிகளால் தடுத்து நிறுத்தப்படுவதுமாக மணலாற்றுக் களமுனையில் அவ்வவ்ப்போது உக்கிர சண்டைகள் நடந்தன. இந்நிலையில் மணலாற்றுக் களமுனையின் பகுதிகள் பல படையணியினருக்கு பிரித்துக் கொடுக்கப்பட்டிருந்தது. இவற்றின் அனைத்து நடவடிக்கைகளையும் மணலாறு கட்டளைப்பணியகம் ஒருங்கிணைத்துக் கொண்டிருந்தது. அந்தவகையில் கடற்புலிகளுக்கும் மணலாறுக் களமுனையில் ஒருபகுதி கொடுக்கப்பட்டிருந்தது. இதில் மகனார் மற்றும் மகளீர் இருபாலாரும் உள்ளடக்கம். புயலினி அடிப்படைப் பயிற்சிப்பாசறையில் பாயிற்சி முடித்து வெளியேறிய மகளீரை உள்ளடக்கிய அணியொன்று அங்கு சென்று மகனாரோடு இணைந்து கடற்புலிகளுக்கு கொடுக்கப்பட்டிருந்த பகுதியில் முன்னரங்க நிலைகளை அமைத்து களநடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர். இந்த அணியில் அநேகமானோர் புதியபோராளிகளாகவிருந்ததன் காரணமாக பூரணியக்காவை சிறப்புத் தளபதிநிலையிலிருந்து கொண்டே அங்கு நின்று அவர்களை மேற்பார்வைசெய்துகொண்டு அவர்களை வழிநடாத்தும்படி சிறப்புத்தளபதி சூசையண்ணா பூரணியக்காவை பணித்திருந்தார். பூரணியக்காவைப் பொறுத்தவரையில் புதியபோராளிகளுக்கு ஒரு தாயாக சகோதரியாக பொறுப்பாளராக தளபதியாக எல்லாம் ஒருசேர வழிநடாத்துவதில் அவருக்குநிகர் அவர்தான் என்பதில் எந்தவிதமான ஐயமும் இல்லை. மணலாறுக்களமுனை கட்டம் கட்டமாக பின் நகர்ந்து வந்துகொண்டிருந்தபோதிலும் அவ்வவ்ப்போது எதிரிப் படையினருடன் கடும் சமர்க்களமும் தொடுத்திருந்தனர். அந்தவகையில் அளம்பில் உடுப்புக்குளம் சிலாவத்தை முல்லைத்தீவு வட்டுவாகல் என சிங்களப் படைகளுடன் பாரிய மறிப்புச் சமர் புரிந்து நூற்றுக்கணக்கான படையினரை கொன்றொழித்து பல படையினரின் உடலங்களையும் படையப் பொருட்களையும் கையகப்படுத்திய வெற்றிச்சமர்கள் அனைத்திலும் பூரணியக்காவின் சாதனைகள் குவிந்திருக்கின்றது. 17-05-2009 அன்று அதிகாலையில் முள்ளிவாய்க்காலில் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கான ஆயுதப் போராட்டத்தின் இறுதி மணித்தியாலங்களுக்கான யுத்தம் மூர்க்கமாக நடந்துகொண்டிருந்தது. நாலாபுறமும் எறிகணைகள் வீழ்ந்து வெடித்துக் கொண்டிருந்தன. எறிகணைகள் வீழ்ந்து வெடித்ததில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த வாகனங்களும் தரப்பாள்க் கூடாரங்களும் தீப்பிழம்பாக எரிந்துகொண்டிருந்தன. உயிரற்ற மனிதஉடலங்கள் ஆங்காங்கே அநாதரவாகக்கிடந்தன. அப்போது நாங்கள் நின்றிருந்த இடத்தில் எங்களுடன்கூட நின்ற கடற்கரும்புலி அணியைச் சேர்ந்த அமுதினியக்காவின் வோக்கி அலறியது. வோக்கியில் எதிர்முனையில் பூரணியக்கா தனது வழமையான கம்பீரமானதும் உறுதி தளராததுமான குரலில் அமுதினியக்காவுடன் சிலவார்த்தைகள் பேசினார். அதுவே நான் கடைசியாகக் கேட்ட கேட்ட பூரணியக்காவின் குரல். பூரணியக்காவின் அந்தக்கணீர் என்ற கம்பீரமானகுரல் இப்போதும் எனது செவிகளில் ஒலித்துக்கொண்டிருக்கின்றது. தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம் நினைவுப்பகிர்வு: கொற்றவன்.
-
எத்தனையோ போராளிகளை வளர்த்து விட்ட ஒரு உன்னதக் கடற்புலி லெப் கேணல் தமிழ்முரசு
எழுத்துருவாக்கம்..சு.குணா. ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கையின் தாக்கத்தால் 1998ம் ஆண்டில் விடுதலைப் புலிகளமைப்பில் இணைந்து கொண்டவர்களில் ஒருவனாக இணைந்தவன் தான் தமிழ்முரசு. கரும்புலி லெப் கேணல் சுபேசன் அவர்கள் நினைவாக அவரது பெயரைச் சுமந்த பயிற்சி முகாமான சுபேசன் 02ல் பயிற்சி முடித்து கடற்புலிகளனியில் இணைக்கப்பட்டு மாவீரரான லெப் கேணல் தமிழன் அவர்கள் தலைமையில் செம்மலையில் கடற்புலிகளின் அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரியில் பயிற்சிகள் பெற்று பயிற்சிகள் முடிவடைந்ததும். விடுதலைப் புலிகளால் மேறகொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கையான ஒயாத அலைகள் மூன்றில் பங்குபற்றி தனது முதலாவது சமரில் மிகவும் திறம்பட செயற்பட்ட தமிழ்முரசு.அதன் பின்னர் தமிழீழத்திற்க்கு பலம் சேர்க்கின்ற பணிகளுக்காக சாளைக்கு வந்தவன். விநியோக நடவடிக்கையில் தான், அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரியில் கற்றவைகளில் ஒன்றான இயந்திரப் பொறியியலாலராகச் சென்றுவந்தான்.(அத்தோடு இவன் வீட்டில் இருக்கும்போதே பொறியியல்துறை சம்பந்தமான வேலைகளைச் செய்திருந்தான்). அவ் வேளையில் வெளிநாட்டிலிருந்து படகு வருவதால் அப்படகை கொண்டு வருவதற்காக கப்பலுக்குச் சென்றவன் அங்கே கப்பலின் இயந்திரப் பகுதியில் வேலையும் செய்தான். இவனது இயந்திரங்கள் மீதான ஆர்வம் அவைகளைக் கையாள்கிற விதம் என்பவற்றைக் கவனித்த அக்கப்பலின் கப்டனான பின்னர் மாவீரரான கடற்கரும்புலி லெப் கேணல் பெத்தா அவர்கள் இவனுடன் கதைத்தபோது தான் இவன் ஏற்கனவே டீசல் இயந்திரங்கள் சம்பந்தமாக பூரண அறிவைபெற்றிருப்பது தெரியவர பெத்தா அவர்கள் அப்போதைய டீசல் இயந்திரப் பொறுப்பாளரான மாவீரரான லெப் கேணல் சதீஸ் அவர்களிடம் இவனைப் பற்றிக் கூற, சதீஸ் அவர்கள் சிறப்புத் தளபதியின் அனுமதியுடன் இவனை டீசல் இயந்திரப் பிரிவிற்க்குள் சேர்த்துக் கொண்டார்.அதனைத் தொடர்ந்து டீசல் இயந்திரத்துறைக்குச் சென்றவன்.அங்கே சதீஸ் அவர்களுடன் இணைந்து பல்வேறு பணிகளைச் செய்து வர 02.11.2000 அன்று ஆழ்கடல் விநியோகப் பணியின் போது வீரச்சாவடைந்த லெப் கேணல் சதீஸ் அவர்களின் இடத்திற்க்கு தமிழ்முரசு சிறப்புத்தளபதி சூசை அவர்களால் நியமிக்கப்பட்டான். தொடர்ந்து புதிய போராளிகளுக்கும் கடற்கரும்புலிகளுக்கும் பயிற்சிகள் வழங்கி அவர்களையும் தனக்கு நிகராக வளர்த்தெடுத்தான். முல்லைத்தீவுக் கடற்பரப்பிலிருந்து மேற்கொள்ளப்ட்ட விநியோகம் நிறுத்தப்பட்டு மன்னார் கடற்பரப்பிற்க்கு மாற்றப்பட்டபோது அவ் விநியோகம் முற்றிலுமாக மாறுபட்டிருந்தது அதாவது ரோலரில் சென்று கப்பலிலிருந்து பொருட்களை தமிழீழத்திற்க்கு கொண்டுவருவதாகும். ரோலர் டீசல் இயந்திரமாதலால் டீசல் இயந்திரப் பொறியியலாலராக தமிழ்முரசுவிடம் பயிற்சி பெற்ற அணியினரே சென்று வந்தனர். அத்தோடு கொழும்பில் டீசல் இயந்திரத்தைக் கொள்வனவு செய்து இராணுவப் பிரதேசத்தில் அவ் இயந்திரங்களைப் பிரித்து அவ் இயந்திரங்களை புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் படகின் மூலம் கொண்டு வந்து இவ்விநியோகத்திற்க்கு வலுச்சேர்த்தான். நீர்மூழ்கிக் கப்பல் தயாரிக்கும் முயற்சியிலும் முழுமையாக பங்காற்றினான். இப்படியாக அணைத்துப் பணிகளிலும் சிறந்து விளங்கிய தமிழ்முரசை 2005ம் ஆண்டின் முற்பகுதியில் அழைத்த தலைவர் அவர்கள் தனது பாராட்டையும் தெரிவித்தார். ரோலரில் வெடிமருந்து இணைக்கப்பட்டு இருக்கும் விநியோக நடவடிக்கையில் ஈடுபட்டு கொண்டிருக்கும்போது சிறிலங்காக் கடற்படையினர் இடையூறு விளைவித்தால் இரகசியத்தைக் காப்பதற்காக இயக்க மரபிற்கிணங்க அவ்ரோலரைத் தகர்ப்பார்கள். இவ் விநியோக நடவடிக்கையை கடற்கரும்புலிகளே பெரும்பாலும் செய்து வந்தனர்.அந்தவகையில் கப்பலுக்குச் சென்ற ரோலரின் இயந்திரம் பழுதானதால் அவ் ரோலருக்கு புதிய இயந்திரத்தைக் கொண்டு சென்று கப்பலின் உதவியோடு மாற்றச் செல்லும்போது தான்தமிழ்முரசுவின் ரோலரை மன்னார் கற்பிட்டிக் கடற்பரப்பில் 23.03.2006 அன்று சிறிலங்காக் கடற்படையினர் சோதனை செய்ய முற்பட்ட வேளையில் மிகவும் அருகாமையில் வந்த டோராப் படகுடன் தங்களது ரோலரை வெடிக்கவைத்து அவ் டோராவையும் தாக்கி அழித்து வீரச்சாவடைகின்றார்கள். தமிழ்முரசுவைப் பொறுத்தளவில் இவன் கடற்கரும்புலி அல்ல இருந்தாலும் அவ் ரோலரை தகர்க்கும் முயற்சியில் முற்று முழுதாக தன்னை அர்பணித்தவன் விநியோக நடவடிக்கைக்கு எந்தவித இடையூறும் நிகழக்கூடாது என்று உறுதியாக நின்றவன். இயக்க மரபிற்கிணங்க தங்களையும் அழித்து கடற்படையினரையும் அழித்து கற்பிட்டிக்கடற்பரப்பில் கடலோடு சங்கமமானார்கள். எத்தனையோ போராளிகளை வளர்த்து விட்டவன். தலைமையின் சிந்தனைக்கேற்ப செயற்பட்டவன் . சிறப்புத் தளபதியின் வேகத்திற்ககேற்ப ஈடுகொடுத்த ஒருவீரன். நிலைமையறிந்து செயற்பட்ட ஒரு வீரன் போரளிகளோடு பழகுகிற விதம் இப்படியான ஒரு உன்னத போராளியை 23.03.2006 இழந்து விட்டோம்.
-
கடமையுணர்வு கொண்ட கடற்புலி கப்டன் கலைஞன்
மூலம் http://irruppu.com/2021/09/22/கடமையுணர்வு-கொண்ட-கப்டன்/ நினைவுப்பகிர்வு: கொற்றவன். http://irruppu.com/wp-content/uploads/2021/09/IMG-138e0c5ac5e8fd151b2fbf71566ddc95-V.jpg யாழ்மாவட்டத்தில் வடமராட்சிகிழக்கு உடுத்துறையை பிறப்பிடமாகக் கொண்ட கப்டன் கலைஞன் தனது பள்ளிப்படிப்பபை உடுத்துறை மகாவித்தியாலயத்தில் தொடர்ந்தார். 2004ம் ஆண்டு பிற்பகுதியில் தன்னை தமிழீழ விடுதலைப்பேகாராட்டத்தில் இணைத்துக்கொண்ட கலைஞன் தனது அடிப்படை படையப்பயிற்சிகளை முடித்துக்கொண்டபின்னர் கடற்புலிகள் உறுப்பினராகச்செயற்படலானார். 2005-ம்ஆண்டுகாலப்பகுதியில் சிறிதுகாலம் திருமலைமாவட்டத்தில் போராட்டச்செயற்பாடுகளை முன்னெடுத்த கலைஞன் மீண்டும் வன்னிக்குவந்தார். வன்னிக்கு வந்த கலைஞன் அடிப்படை படையப்பயிற்சிகளை வழங்குவதற்கான ஆசிரியப்பயிற்சிகளை (மாஸ்ரர்ப்பயிற்சி) பெற்றுக்கொள்வதற்காக படையத்தொடக்கப்பயிற்சிக்கல்லூரிப்பொறுப்பாளர் பிரிகேடியர் ஆதவன் (கடாபி) அவர்களிடம் சென்று மாஸ்ரர்ப்பயிற்சிகளைப்பெற்று, தகுதிபெற்ற ஒரு பயிற்சிஆசிரியராக தன்னை வளர்த்துக்கொண்டு மீண்டும் கடற்புலிப்போராளியாக தனது செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தார். 2006-ம்ஆண்டுகாலப்பகுதியில் கடற்புலிகளுக்கென மட்டுப்படுத்தப்பட்டளவில் அடிப்படை படையப்பயிற்சிக்கல்லூரி ஒன்று முள்ளியவளை- கேப்பாப்பிலவுப்பகுதியில் செயற்பட்டுக்கொண்டிருந்தது. இந்தக்கல்லூரியின் பொறுப்பாளராக பாண்டியன்மாஸ்ரர் செயற்பட்டார். இந்தப்பயிற்சிக்கல்லூரியில் கலைஞன் ஒரு பயிற்சி ஆசிரியராகச் செயற்பட்டிருந்தார். 2006-ம்ஆண்டின் நடுப்பகுதியில் பெருமளவான புதியபோராளிகள் விடுதலைப்போராட்டத்தில் தம்மை இணைத்துக் கொண்டிருந்தார்கள். இந்நிலையில் கடற்புலிகளின் படைக்கட்டுமானங்களை விரிவாக்கும் நோக்குடன் குறிப்பிட்ட தொகைப் புதியபோராளிகள் கடற்புலிகளுக்கு உள்வாங்கப்பட்டிருந்தனர். இவர்களுக்கான அடிப்படைப்பயிற்சிகளை வழங்குவதற்கென சகலவளங்களையும் உள்ளடக்கியதான பயிற்சிமுகாம் ஒன்று விசுவமடுப்பகுதியில் நிறுவப்பட்டது. இவ்வாறு விசுவமடுப்பகுதியில் நிறுவப்பட்ட அடிப்படை படையப்பயிற்சிக்கல்லூரிக்கு பொறுப்பாளராக பாண்டியன்மாஸ்ரரும் அவரது ஆளுகையின்கீழ் பயிற்சிகளை வழங்குவதற்கென தேர்ச்சிபெற்ற பயிற்சி ஆசிரியர்களும் உரியபொறுப்புக்களில் அமர்த்தப்பட்டனர். தேசியத்தலைவரின் அறிவுறுத்தல்களுக்கமைவாக புதியபோராளிகள் (ஆண்கள்) நான்குகட்டங்களாக கடற்புலிகளுக்குள் உள்வாங்கப்பட்டனர். முதலாவதாக உள்வாங்கப்பட்ட அணிக்கு கப்டன் பண்டிதர் பயிற்சிக்கல்லூரி எனப்பெயரிட்டு புதிய போராளிகளுக்கான அடிப்படைப்பயிற்சிக்கல்லூரி 2006-ம்ஆண்டு நவம்பர்மாதம் முதலாம்திகதி உத்தியோகபூர்வமாக தொடங்கப்பட்டது. இந்தப்பயிற்சி அணிக்கு பயிற்சி வழங்குகின்ற பிரதான பயிற்சிஆசிரியராக கலைஞன் செயற்பட்டார். கப்டன் பண்டிதர் பயிற்சிக்கல்லுரி நிறைவுபெற்றதும் அதனைத்தொடர்ந்து கப்டன் றஞ்சன்லாலா பயிற்சிக்கல்லுரி அடுத்து லெப் கேணல் அப்பையா பயிற்சிக்கல்லுரி அதையடுத்து கப்டன் லிங்கம் பயிற்சிக்கல்லுரி என பிரதானமாக நடைபெற்ற நான்கு பயிற்சி அணிகளுக்கும் பயிற்சி வழங்குகின்ற பிரதான பயிற்சிஆசிரியராக கலைஞன் செயற்பட்டதோடு பலநூற்றுக்கணக்கான புதியபோராளிகளை புடம்போட்டு போர்த்திறன்மிக்க போராளிகளாக வளர்த்துவிட்ட பெருமையும் இவருக்கு உண்டு. கலைஞன் அமைதியான சுபாவம்கொண்டவர். அதிகமாக யாருடனும் பேசமாட்டார். ஆனாலும் தனக்கு வழங்கப்பட்ட பணிகளை செவ்வனே செய்துமுடிக்கும் திறன்கொண்டவர். இவரால் புடம்போட்டு வளர்க்கப்பட்ட போராளிகள் பலபேர் குறிப்பாக 2007 2008 மற்றும் 2009-ம்ஆண்டின்முற்பகுதிவரையிலும் கடலிலும் தரையிலும் சிறிலங்காப்படைகளுடன் சமர்க்களங்கள்புரிந்து வீரவரலாறுகளை எழுதியமையும் இங்கு குறிப்பிடவேண்டியது முக்கியமாகும். 2007-ம்ஆண்டு யூலைமாதம் 15-ம்நாளன்று கடற்புலிகளின் சிறப்புத்தளபதி சூசைஅண்ணா அவர்கள் படகுப்பரீட்சார்த்த நடவடிக்கை ஒன்றை நெறிப்படுத்திக்கொண்டிருந்தவேளையில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட படகுவிபத்தில் சிறப்புத்தளபதி சூசையண்ணாஅவர்கள் கடுமையான காயங்களுக்கு உள்ளாகியிருந்தார். முல்லை- புதுக்குடியிருப்பு பொன்னம்பலம் ஞாபகர்த்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைகள் வழங்கப்பட்டதையடுத்து அவர் ஆபத்தான கட்டத்தை தாண்டியிருந்தார். சுமார் மூன்றுவாரங்கள் மருத்துவமனையில் சிகிச்சைகளைப் பெற்றுவந்தநிலையில் அவரது உடல்நிலை முறையாகத்தேறாத நிலையிலும் அவரது பாதுகாப்புக் காரணங்களுக்காகவும் வேறுசில காரணங்களுக்காகவும் சூசையண்ணா மருத்துவமனையிலிருந்து வெளியேறவேண்டிய தேவையேற்பட்டது. 2007-ம்ஆண்டு ஆகஸ்ட்மாதம் அவர் மருத்துவமனையிலிருந்து வெளியேறி புதுக்குடியிருப்பில் பிரத்தியேகமாக ஒழுங்குசெய்யப்பட்ட இடத்தில் அவருக்கான மருத்துவ சிகிச்சைகளும் மருத்துவப்பராமரிப்புக்களும் தொடர்ந்து வழங்கப்பட்டுவந்தது. இக்காலப்பகுதியில் கடற்புலிகளின் கட்டமைப்புக்களில் சிலமாற்றங்கள் நடைமுறைக்குவந்தன. அந்தவகையில் அதுவரையில் அடிப்படைப்பயிற்சிக்கல்லுரிப்பொறுப்பாளராகவிருந்த பாண்டியன்மாஸ்ரருக்கு மேலதிகமாக இரண்டு பொறுப்புக்கள் வழங்கப்பட்டது. அதாவது கடற்புலிகளின் புலனாய்வுத்துறைப்பொறுப்பாளராகவும் சிறப்புத்தளபதி சூசையண்ணாவிற்கான மெய்ப்பாதுகாப்புஅணிப்பொறுப்பாளராகவும் பாண்டியன்மாஸ்ரர் அமர்த்தப்பட்டார். இந்நிலையில் பாண்டியன்மாஸ்ரர்அவர்களால் சூசையண்ணா மருத்துவப்பராமரிப்பு பெற்றுக்கொண்டிருந்த முகாமிற்கான பிரதான மெய்ப்பாதுகாவலராக கலைஞன் அவர்கள் அமர்த்தப்பட்டார். மிகவும் பொறுப்புவாய்ந்த இந்தக்கடமையை ஏற்றுக்கொண்ட கலைஞன் சூசையண்ணைக்கு அருகிலிருந்து அவருக்கான மெய்ப்பாதுகாப்புப்பணியை மிகவும் நேர்த்தியாகவும் விசுவாசமாகவும் ஆற்றியிருந்தார். முழுநேரக் காவற்கடமைகளை ஒழுங்குசெய்துவிடுவதிலிருந்து சூசையண்ணையின் அவ்வவ்ப்போதைய பணிப்புரைகளுக்கு அமைவாக சூசையண்ணையின் சந்திப்பிற்கான பொறுப்பாளர்களை உரியநேரங்களிற்கு அறிவித்து அழைத்து ஒழுங்குசெய்வது வரையுமான கடமைகளை மிகவும் விசுவாசமாகவும் நேர்த்தியாகவும் ஆற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. குறிப்பிட்டகாலம் இக்கடமைகளை முன்னெடுத்த கலைஞன் பின்னர், பாண்டியன்மாஸ்ரரால் வேறுசிலசெயற்பாடுகளிலும் ஈடுபடுத்தப்பட்டார். இக்காலப்பகுதியில் கடற்புலிகளின் சிறப்புத்தளபதி சூசையண்ணாவிற்கு அடுத்தநிலையான தளபதியாக திரு நரேன் அவர்கள் தேசியத்தலைவர் அவர்களால் அமர்த்தப்பட்டார். 2007-ம்ஆண்டின் இறுதிப்பகுதியில் தேசியத்தலைவரின் ஆலோசனைகளுக்கு அமைவாக நரேன்அண்ணையின் மேற்பார்வையில் கப்பல்க்கல்லூரி தொடங்கப்பட்டது. அதாவது விடுதலைப்புலிகளின் சர்வதேசக்கடல் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற கப்பல்களில் கடமையாற்றுவதற்கான கலிவிச்செயற்பாடுகளை முன்னெடுப்பதுவே கப்பல்க்கல்லூரியின் பிரதான செயற்பாடாகும். குறித்த இந்தக்கப்பற்கல்லூரிக்கு தகுதிவாய்ந்த போராளிகளை தேர்வுசெய்தபோது கலைஞனும் அந்த அணிக்குள் உள்வாங்கப்பட்டிருந்தார். கிளிநொச்சி- திருவையாற்றிலும் பின்னர் முல்லைத்தீவிலுமாக இந்தக்கப்பற்கல்லூரி பலமாதங்களாக தொடர்ந்து நடைபெற்றுவந்தது. 2008-ம்ஆண்டு டிசெம்பர்மாதம் விடுதலைப்புலிகளின் பெரிய படகு ஒன்று சண்டைப்படகுகளுக்கான இயந்திரங்கள் மற்றும் அமைப்பிற்குத் தேவையான இன்னும் சில பொருட்களையும் சுமந்துகொண்டு சிலபோராளிகளுடன் இந்தோனேசியாவிலிருந்து முல்லைத்தீவு நோக்கி வந்துகொண்டிருந்தது. குறித்த இந்தப்படகிற்கு பாதுகாப்புவழங்குவதற்காக கடற்புலிப்படகுகளும் கடற்கரும்புலிப்படகுகளும் களத்தில் இறங்கியது. இந்நடவடிக்கையின்போது கப்பற்கல்லூரியில் கல்விகற்றுக்கொண்டிருந்த போராளிகள்சிலரும் சண்டைப்படகுகளில் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டனர். எதிர்பார்த்தபடி 20-12-2008 அன்று இலங்கை கடற்படையினருக்கும் கடற்புலிகளுக்கும் பெரும்கடற்சமர் முல்லைக்கடலில் மூண்டது. இந்தோனேசியாவிலிருந்து வந்துகொண்டிருந்த படகிற்கு பாதுகாப்பு வழங்கியபடியே கடற்புலிகளின் படகுகள் இலங்கைக்கடற்படைப்படகுகளுடன் தீரமுடன் போரிட்டுக்கொண்டிருந்தன. இந்தோனேசியாவிலிருந்து வந்துகொண்டிருந்த விடுதலைப்புலிகளின் படகும் போராளிகளும் மிகவும் பாதுகாப்பாக முல்லைத்தீவு- முள்ளிவாய்க்கால்க்கரையை வந்துசேர்ந்தனர். இந்தப்பாதுகாப்பு நடவடிக்கைக்கான கடற்சமரின்போது சில கடற்புலிகளும் கடற்கரும்புலிகளும் தங்களது இன்னுயிர்களை ஆகுதியாக்கிக்கொண்டார்கள். 20-12-2008 அன்று இந்தப்பாதுகாப்பு கடல்நடவடிக்கையின் வெற்றிக்கு விதையாகிய மாவீரர்களின் வரிசையில் கலைஞனும் தேசவிடுதலைக்காக விழிமூடிய ஆயிரமாயிரம் மாவீரர்களுடன் கப்டன் கலைஞனாக தானும் சேர்ந்துகொண்டான். தமிழீழத் தாயக விடுதலை வேள்வியில் ஆகுதியாகிய ஆயிரமாயிரம் மாவீரர்களின் நினைவுகளோடு கப்டன் கலைஞனின் நினைவுகளையும் விடுதலைத்தாகத்தையும் இதயத்தில் சுமந்துகொண்டு கனத்தமனதுடன் எமது விடுதலைப்பயணத்தை தொடர்வோமாக…. “தமிழரின்தாகம் தமிழீழத்தாயகம்.”
-
நினைவுகளில் நிலைத்துநிற்கும் லெப். கேணல் மங்களேஸ்.!
https://www.uyirpu.com/?p=9537 நினைவுப்பகிர்வு:- கொற்றவன். தமிழீழ விடுதலைப் போராட்டப் பயணத்தில் சுமார் பதினெட்டு ஆண்டுகளாக ஓய்வின்றி உழைத்த உத்தமத்தளபதிதான் லெப் கேணல் மங்களேஸ் அண்ணா அவர்கள். 1990ம் ஆண்டின் முற்பகுதிகளில் தனது பதினாறாவ துவயதில் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டு ‘மங்களேஸ்’ என்ற நாமத்தைத் தனதாக்கிக்கொண்டு அன்றுமுதல் அவர் விழிமூடும் நாள்வரையிலும் அவர் விடுதலைக்காக ஆற்றிய பணிகள் மிக நீண்டது. தொடக்கத்தில் ஒரு போராளி பெற்றுக்கொள்ள வேண்டிய படையப் பயிற்சிகளை நிறைவு செய்துகொண்டு இயக்கத்தின் அப்போதய பிரதித்தலைவர் திரு மாத்தையா அவர்களின் தாக்குதலணியில் தனது களப்பணிகளை முன்னெடுத்திருந்தார். 1991ம் ஆண்டு யூலை மாதத்தில் ஆனையிறவுப் படைத்தளம் மீது விடுதலைப்புலிகளால் மேற்கொள்ளப்பட்ட ‘ஆகாயக் கடல் வெளி’ நடவடிக்கையில் ஒரு போராளியாகப் பங்கெடுத்திருந்தவர். அதனைத் தொடர்ந்து மணலாற்றில் சிறிலங்காப் படைகளால் முன்னெடுக்கப்பட்டிருந்த ‘மின்னல்’ இராணுவ நடவடிக்கையை எதிர்த்து விடுதலைப்புலிகள் மேற்கொண்ட எதிர்த்தாக்குதல் நடவடிக்கையிலும் தனது போராற்றலை வெளிப்படுத்தியிருந்தார் மங்களேசண்ணா. 1992ம் ஆண்டு காலப்பகுதியில் கடற்புலிகள் அணிக்கு பிரிவுமாற்றம் பெற்றுவந்த மங்களேசண்ணா வேவு நடவடிக்கைகளில் ஈடுபட்டு அதைத்தொடர்ந்து கடற்புலிகளின் ஆழ்கடல் விநியோக நடவடிக்கையின் பிரதானதளமான சாலைத்தளத்தில் நின்று விடுதலைப் போராட்டத்திற்கு வளம் சேர்க்கின்ற பலம் சேர்க்கின்ற நடவடிக்கையான ஆழ்கடல் விநியோக நடவடிக்கைகளில் திறமையுடனும் அர்ப்பணிப்புடனும் செயற்பட்டு சிறப்புத்தளபதி சூசை அவர்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக விளங்கினார். அவரது ஆளுமையை இனம் கண்டுகொண்ட சூசை அவர்கள் விடுதலைப்புலிகள் யாழ்ப்பாணத்தை தளமாகக்கொண்டு செயற்பட்ட காலப்பகுதியில் மங்களேசண்ணா கடற்புலிகளின் வன்னி மாவட்டத் தளபதியாகவும் குறிப்பிட்டகாலம் செயற்பட்டிருந்தார். அதைத்தொடர்ந்து 1996ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் யாழ் குடாநாடு முழுமையாக அரசபடையினரால் ஆக்கிரமிக்கப்பட்டதையடுத்து விடுதலைப்புலிகள் வன்னிப் பெருநிலப்பரப்பை தளமாகக்கொண்டு செயற்பட்ட காலப் பகுதியிலும் ஆழ்கடல் விநியோக நடவடிக்கைகளை முன்னெடுத்துக் கொண்டிருந்த மங்களேசண்ணா 1996ம் ஆண்டு யூலை மாதத்தில் விடுதலைப்புலிகளால் ‘ஓயாதஅலைகள்-01’ எனப்பெயரிடப்பட்டு முல்லைத்தீவுப் படைத்தளத்தை மீட்பதற்காக மேற்கொள்ளப்பட்ட வெற்றிச்சமரின் போதும் படையினருக்கு உதவுவதற்காக கடல்வழியாக கடற்படையினர் மேற்கொண்ட முயற்சிகளை முறியடித்து குறித்த முல்லைப் படைத்தளம் வெற்றி கொள்ளப்படுவதற்கு மங்களேசண்ணாவின் உழைப்பும் அர்ப்பணிப்பும் மிகவும் காத்திரமானது. இதன் பின்னரான காலப்பகுதியில் மணலாறு-செம்மலையைத் தளமாகக்கொண்டு செயற்பட்ட கிழக்கு மாகாணத்திற்கான கடல்வழி விநியோக அணிக்குப் பொறுப்பாளராகச் செயற்பட்ட மங்களேசண்ணா அந்த விநியோக நடவடிக்கைகளிலும் பங்கெடுத்திருந்தார். குறித்த இந்த கிழக்கு மாகாணத்திற்கான கடல்வழி நடவடிக்கையின்போது ஒரு சந்தர்ப்பத்தில் திருகோணமலை புடவைக்கட்டுக் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினருடன் ஏற்பட்ட கடற்சமரில் மங்களேசண்ணா வயிற்றுப்பகுதியில் விழுப்புண்பட்டிருந்தார். தீவிர மருத்துவச் சிகீச்சைகளின் மூலம் தேறிய மங்களேசண்ணா மீண்டும் களப்பணிகளிலேயே தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். இதனைவிட வேறுபல தாக்குதல்களிலும் மங்களேசண்ணா விழுப்புண்பட்டிருந்ததுவும் குறிப்பிடத்தக்கது. கிழக்குமாகாண விநியோக நடவடிக்கையைத் தொடர்ந்து மன்னார் மாவட்டத்தைத் தளமாகக்கொண்டு இந்தியா-தமிழ்நாட்டிலிருந்து எமது போராட்டடத்திற்குத் தேவையான மருந்துப் பொருட்கள் உபகரணங்கள் மற்றும் ஏனைய மூலவளங்களையும் கடல்வழியாகத் தாயகத்திற்குக் கொண்டுவந்து சேர்க்கின்ற உயரிய பணிகளையும் செவ்வனே செய்திருந்தார் மங்களேசண்ணா. ஆழ்கடல் நடவடிக்கை கிழக்கு மாகாணத்திற்கான கடல் நடவடிக்கை மன்னார் – தமிழ்நாடு கடல்நடவடிக்கை என அனைத்து சவால்கள் நிறைந்த கடல் நடவடிக்கைகளிலும் பங்குகொண்டிருந்த மங்களேசண்ணா அந்த நடவடிக்கைகளில் பல கடற்சமர்களையும் கண்டிருந்தார். 1999ம் ஆண்டு டிசெம்பர் மாதத்தில் விடுதலைப்புலிகளால் முன்னெடுக்கப்பட்டிருந்த ஓயாதஅலைகள்-03 நடவடிக்கையில் வெற்றிலைக்கேணி – கட்டைக்காடு படைத்தளங்கள் விடுதலைப்புலிகளால் வெற்றிகொள்ளப்பட்டபோது சமநேரத்தில் கட்டைக்காட்டிற்கும் ஆனையிறவிற்கும் இடைப்பட்டபகுதியிலுள்ள புல்லாவெளி என்னும் இடத்தில் அமைந்திருந்த படையினரின் முகாமை கைப்பற்றுகின்ற பொறுப்பு மங்களேசண்ணாவிடம்தான் ஒப்படைக்கப்பட்டிருந்தது. புல்லாவெளிக்கு தாக்குதலணிகளை நகர்த்துவதானால் சுண்டிக்குளம் நீரேரியூடாக படகுகளில்த்தான் அணிகளை நகர்த்தவேண்டியிருந்தது. அதற்கமைவாக மங்களேசண்ணா தலைமையிலான தாக்குதலணி இயந்திரங்கள் பொருத்தப்பட்ட சிறியவகைப் படகுகளில் சுண்டிக்குளம நீரேரியூடாகச் சென்று முகாமை அண்மித்ததும் இயந்திரத்தின் சத்தங்கள் படையினருக்கு கேட்கும் என்பதால் குறிப்பிட்ட தூரம்வரைக்கும் தண்ணீருக்குள்ளால் படகுகளை தள்ளிச்சென்று புல்லாவெளியில் தரையிறங்கி புல்லாவெளி படைமுகாம்மீது தாக்குதல்களைத் தொடுத்து அந்த முகாமை வெற்றிகொண்டனர். வெற்றிலைக்கேணி கட்டைக்காடு புல்லாவெளி படைத்தளங்களின் வெற்றியே தொடர்ந்துவந்த ஆனையிறவுப்படைத்தளத்தின் வெற்றிக்கு திறவுகோல்களாக அமைந்திருந்தன. ஆனையிறவுப் படைத்தளத்தை வெற்றிகொள்வதற்காக 26.03.2000 அன்று விடுதலைப்புலிகளால் மேற்கொள்ளப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த குடாரப்பு தரையிறக்கத்தின் போது வெற்றிலைக்கேணியைத் தளமாகக்கொண்டு தரையிறங்க வேண்டிய அணிகளை படகுகளில் ஏற்றி அனுப்புகின்ற பிரதான பொறுப்பாளராக மங்களேசண்ணா தேர்வு செய்யப்பட்டிருந்தார். லெப் கேணல் பாக்கியண்ணாவின் உதவியோடு தரையிறங்கவேண்டிய ஆயிரத்துஇருநூறு போராளிகளையும் குறித்தநேரத்திற்குள் படகுகளில் ஏற்றி அனுப்பிவைத்து குடாரப்பு தரையிறக்கநடவடிக்கையை வெற்றிகரமாக மேற்கொள்வதற்கு மங்களேசண்ணாவின் அர்ப்பணிப்பும் உழைப்பும் மிகவும் முக்கியமானது. 2001ம் ஆண்டு செப்ரெம்பர் மாதத்தில் மங்களேசண்ணா கடற்புலிகளின் தளபதியாக நியமிக்கப்பட்டிருந்தார். (அதாவது சிறப்புத்தளபதிக்கு அடுத்தநிலையான பொறுப்பு) கடற்புலிகளின் நிர்வாகச்செயலகம் கடற்புலிகளின் அரசியல்த்துறை கடற்புலிகளின் புலனாய்வுத்துறை கடற்புலிகளின் மருத்துவப்பகுதி முதலான கடற்புலிகளின் நிர்வாகக் கட்டமைப்புக்கள் அனைத்தையும் நேர்த்தியுடன் நிர்வகித்தமை. மக்கள் சந்திப்புக்கள். மக்கள் அபிவிருத்திக் கட்டமைப்புக்கள். மீள்குடியேற்றம். சுனாமி ஆழிப்பேரலை அனர்த்தம் ஏற்பட்ட காலப்பகுதியில் சுனாமி மீள்கட்டுமானப்பணிகள். 2005 2006ம் ஆண்டு காலப்பகுதிகளில் மணலாறு –நாயாற்றுப் பகுதியைத் தளமாகக்கொண்டு திருவடி மக்கள் படைக் கட்டுமானப் பயிற்சிப் பாசறையை நிறுவி முல்லைத்தீவு மாவட்டத்தின் கரையோரப் பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான இளைஞர்களுக்கு மக்கள் படைப் பயிற்சிகளை வழங்கி ஒருவலுவான மக்கள் படைக் கட்டுமானத்தை உருவாக்கியது என அவர் கடற்புலிகளின் தளபதியாகப் பொறுப்புவகித்த சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாகவும் அவர் எமது விடுதலைப் போராட்டத்திற்கு ஆற்றிய பணிகள் நீண்டு கொண்டே செல்கின்றது. இந்தக் காலப்பகுதியில் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் கடற்புலிகளில் முதன்மையாகச் செயற்பட்ட பதினொரு இளநிலைத் தளபதிகளை அழைத்து அவர்களை கௌரவித்து கைத்துப்பாக்கிகள் (பிஸ்ரல்) வழங்கியபோது அந்த அணியில் மங்களேசண்ணாவும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. 2006ம் ஆண்டு டிசெம்பர் மாதத்தில் பணி நிமிர்த்தமாக போர்க்கருவித் தொழிலகத்திற்கு பிரிவுமாற்றம் பெற்றுச்சென்று அங்கு குறுகியகாலம் கடமையாற்றிவிட்டு பின்னர் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக படையப் புலனாய்வுப் பிரிவில் மங்களேசண்ணா உள்வாங்கப்பட்டு மன்னார் மாவட்டத்தில் குறித்த ஒரு பகுதிக் களமுனைக்கு கட்டளைத் தளபதியாக மங்களேசண்ணா நியமிக்கப்பட்டு அங்கு களநடவடிக்கைகளை முன்னெடுத்துக் கொண்டிருந்தார். 08.03.2008 அன்று அரச படையினர் ஆக்கிரமித்திருந்த ஒருபகுதியை மங்களேசண்ணா தலைமையிலான அணி அரசபடையினர்மீது தாக்குதலைத்தொடுத்து படையினரை அங்கிருந்து விரட்டியடித்ததையடுத்து அந்தப்பகுதியை கிளியர்பண்ணிக்கொண்டிருக்கையில் படையினர் புதை;துவிட்டுச்சென்ற மிதிவெடிகள் அடுத்தடுத்து வெடித்ததில் போராளிகளாலும் பொதுமக்களாலும் ஆழமாக நேசிக்கப்பட்ட எங்கள் மங்களேசண்ணா தாய்மண்ணை முத்தமிட்டு வீரச்சாவைத்தழுவிக்கொண்டார். சுமார் பதினெட்டு ஆண்டுகளாக தமிழீழமண் விடுதலையே உயிர்மூச்சாக வாழ்ந்து அந்த மண்ணினதும் மக்களினதும் விடுதலைக்காக விழிமூடிக்கொண்ட மங்களேசண்ணாவினதும் தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் தங்களது இன்னுயிர்களை ஆகுதியாக்கிக்கொண்ட ஆயிரமாயிரம் மாவீரர்களினதும் நினைவுகளுடன் எமது விடுதலைப்பயணத்தைத்தொடர்வோமாக… “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
-
MERCS_RUHUNU - damaged.jpg
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
MV Nimalawa sunk.jpg
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
MV Nimalawa.jpg
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
- Mr. Hans Brattskar receiving the IA proposals from Mr. S. P. Thamilchelvan. Photo-Vasanth 31 October 2003.jpg
-
வான்புலிகள் இன் படிமங்கள் | LTTE Sky Tigers Images
முன்-பின் இருக்கைகள் கொண்ட தற்சுழல்பறனை (Gyroplane) 1998 இப்படிமங்கள் 2009 ஆம் ஆண்டு மே மாதம் வெளிவந்த சிங்கள மொழி நாளேடு ஒன்றில் இடம்பெற்றுள்ளது. ஆனால் அது எந்த நாளேடு என்பதை என்னால் அறியமுடியவில்லை. ஏலுமானவர்கள் யாரேனும் தேடிப் பார்த்து இதன் பெரிய அளவு நிழற்படங்களைக் கண்டுபிடியுங்கள். பக்கவாட்டு இருக்கைகள் கொண்ட தற்சுழல்பறனையின் படிமம் முதலாம் பக்கத்தில் தரப்பட்டுள்ளது. 'தமிழீழ வானோடிகள் இருவர் (அச்சுதன் மற்றும் இன்னொருவர்) வானூர்தியோடு நின்று நிழற்படத்திற்கு பொதிக்கின்றனர்' 'தமிழீழ வானோடி ஒருவர் நிழற்படத்திற்கு பொதிக்கின்றார்(pose)'
- 63 replies
-
- sky tigers
- தமிழ் வான்படை
- ltte pictures
- sri lankan airforce
-
Tagged with:
- sky tigers
- தமிழ் வான்படை
- ltte pictures
- sri lankan airforce
- eelam kamikaze pilots
- ltte photos
- வான்புலிகள் தாக்குதல்
- tamil tigers airforce
- வான்படை வானூர்திகள்
- ltte air control room
- ltte images
- இலங்கை வான்படை
- zlin 143 ltte
- ltte skyforce
- sri lanka airforce
- வான்புலி தாக்குதல்
- வான்புலிகள்
- வான்படை
- தமிழரின் வான்படை
- tamil eelam air force
- tamil rebel airforce
- ltte airforce
- air tigers
- புலிகளின் வான்படை
- kamizkaze pilots
- srilankan airforce
- ltte gyroplane
- வான்கரும்புலிகள்
- சிங்கள வான்படை
- taf
- ltte airwing
- eelam airforce
- tamil eelam airforce
- சிறீலங்கா வான்படை
- தமிழீழ வான்படை
- tamileelam airforce
- tamil airforce
- புலிகளின் வான்பிரிவு
- வான்பிரிவு
- eelam air force
- tamil air force
- tamil tigers
- liberation tigers of tamil eelam
- ltte
- eelam
- tamil eelam
- tamil pilots
- tamil eelam de-facto
- tamil tigers images
- liberation tigers of tamil eelam images
- tigers sri lanka
- tamil guerillas
- eelam guerillas
- sri lankan guerillas
- tamil eelam guerillas
- tigers images
- tamil eelam images
- guerilla airforce
- rebel airforce
- tamil eelam rebel airforce
- taf ltte
- ltte aircrafts
- tamils planes
- tamils air force
- tamil aircraft
- tamil tigers aircrafts
- tamils aircraft
- tamil eelam aircrafts
- airforce
- tamil forces
-
தரைப்புலிகள் இன் படிமங்கள் | LTTE Ground Tigers' Images
நிகழ்வுகளில் மட்டக்களப்பு மாவட்டத்தின் அன்பரசி படையணியின் அணிநடை அதிகாரிகள் & படைஞர்கள் காலம்: 2001-2003
- 1194 replies
-
- தமிழீழ ராணுவம்
- இராணுவம்
- sri lanka rebel army
- விடுதலைப்புலிகள்
-
Tagged with:
- தமிழீழ ராணுவம்
- இராணுவம்
- sri lanka rebel army
- விடுதலைப்புலிகள்
- சிறிலங்கா இராணுவம்
- விடுதலைப் புலிகளின் நிழற்படங்கள்
- sri lanka rebels
- தமிழீழம்
- புலிகளின் படங்கள்
- விடுதலைப் புலிகள்
- தமிழீழ விடுதலைப் புலிகள்
- புலிகளின் படையணிகள்
- tamil eelam army
- prabhakaran
- eelam land force
- தமிழீழ விடுதலைப்புலிகள்
- ltte land force
- தமிழீழ இராணுவம்
- ltte brigades
- ltte land tigers
- ltte fighters
- தமிழீழப்படை
- tamil eelam army images
- eelam army
- தரைப்படை
- ltte
- ltte army
- தமிழீழத் தரைப்படை
- ltte regiments
- kotti
- kotty
- srilankan rebel army
- ltte rebel
- ltte fire teams
- ltte battlions
- தமிழீழ படைத்துறை
- srilanka rebels
- சிறீலங்கா
- sri lankan land force
- sri lankan army
- ltte rebels
- ltte images
- ltte pictures
- ltte photos
- புலிகள்
- eelam fighters
- படைத்துறை
- ஈழப்படை
- prabakaran
- ராணுவம்
- tamil army
- tamil forces