-
Posts
572 -
Joined
-
Last visited
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by RishiK
-
அரசாங்கம் மீது ஊழல் தொடர்பில் பாரிய சந்தேகம் என்கிறார் சுமந்திரன்
RishiK replied to ஏராளன்'s topic in ஊர்ப் புதினம்
சுத்திச்சுத்தி சுப்பற்றை கொல்லைக்குள் தான் நிற்கிறார். -
ஐக்கிய மக்கள் சக்தியின் கடுவெல தேர்தல் அமைப்பாளர் ஹிருணிகா பிரேமச்சந்திர(Hirunika Premachandra), 15 கிளை உறுப்பினர்களை பதவியில் இருந்து நீக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு ஆதரவளிக்காமல் வேறு ஒரு வேட்பாளரை ஆதரித்தவர்களே இவ்வாறு நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இளம் வேட்பாளர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும், கட்சியின் அரசியலமைப்பின்படி அவருக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தலைவருக்கு அறிவிக்க நடவடிக்கை எனினும், இவ்விடயம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த நீக்கப்பட்ட பிரதேச அமைப்பாளர் பிரேமரஞ்சித் பெரேரா, அமைப்பாளரைத் தன்னிச்சையாக நீக்கியதை தாம் ஏற்றுக்கொள்ளவில்லை என கூறியுள்ளார். மேலும், இது தொடர்பில் கட்சித் தலைவருக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஹிருணிகாவால் அதிரடியாக நீக்கப்பட்ட 15 அமைப்பாளர்கள்! - தமிழ்வின்
-
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு(Mahinda Rajapaksa) எதிராக டயஸ்போராக்கள் செயற்பட்டு வருவதாகவும், வெளிநாடுகளில் இருக்கும் பிரிவினைவாத கொள்கையுடையவர்களால் அவருக்கு அச்சுறுத்தல் உள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி.சானக தெரிவித்துள்ளார். ராஜபக்சர்களை பழிவாங்கும் வகையில் தான் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு தொடர்ந்தும் தெரிவிக்கையில், முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு முறையற்ற வகையில் குறைக்கப்பட்டுள்ளது. 30 வருட யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, மகிந்த ராஜபக்ச மற்றும் கோட்டபய ராஜபக்ச ஆகியோர் கடுமையான தீர்மானங்களை எடுத்தனர். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச 30 வருடகால யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு உறுதியான தீர்மானத்தை எடுத்ததால் தான் இந்த நாட்டில் ஜனநாயகம் இன்றும் நடைமுறையில் உள்ளது என்பதை அனைவரும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். அத்துடன் மக்கள் விடுதலை முன்னணி வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு சென்று தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டு வெற்றிப் பெற முடிந்தது என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு தொடர்பில் பரிந்துரைகளை முன்வைத்துள்ள குழுவின் அறிக்கையை ஏற்றுக் கொள்ள முடியாது. ராஜபக்சர்களை பழிவாங்கும் நோக்கத்தில் தான் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு குறைக்கப்பட்டு, இராணுவ பாதுகாப்பை முழுமையாக நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ரணில் விக்ரமசிங்க, மைத்திரிபால சிறிசேன ஆகியோரின் பாதுகாப்பு உறுதிப்பாட்டுடன் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பை ஒப்பிட முடியாது. டயஸ்போராக்களும், பிரிவினைவாத கொள்கையுடையவர்களும் இன்றும் ராஜபக்சர்களுக்கு எதிராகவே செயற்படுகிறார்கள் என்பதை அரசாங்கம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள இராணுவ பாதுகாப்பை நீக்குவது தொடர்பில் எடுத்துள்ள தீர்மானத்தை அரசாங்கம் மீள்பரிசீலனை செய்ய வேண்டும். செலவுகளை குறைப்பதாக குறிப்பிட்டுக் கொண்டு முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பை பலவீனப்படுத்த வேண்டாம் என குறிப்பிட்டுள்ளார். வெளிநாட்டில் உள்ளவர்களால் மகிந்தவுக்கு அச்சுறுத்தல்! ராஜபக்ச தரப்பின் முக்கிய அறிவிப்பு - தமிழ்வின்
-
இலங்கையில் இருந்து அவசரமாக வெளியேறிய இஸ்ரேலிய சிப்பாய் இலங்கைக்குள்(Sri lanka) நுளைந்த "டெர்மினேட்டர்" என்று அடையாளம் காணப்பட்ட ஒரு இஸ்ரேலிய சிப்பாய், பாலஸ்தீன ஆதரவு அமைப்பு ஒன்றினால்,அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து, நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக செனல் 12 ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. ஹிந்த் ரஜப் அறக்கட்டளையானது, கால் ஃபெரன்புக்(Gal Ferenbook) என்ற குறித்த இராணுவ சிப்பாயின் புகைப் படத்தை வெளியிட்டு, காசாவில் ஒரு குடிமகனைக் கொன்றதற்காக, அவரைக் கைது செய்யக் கோரி இலங்கை அதிகாரிகள், சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் மற்றும் இன்டர்போலிடம் மேல்முறையீடு செய்ததாகவும் கூறப்படுகிறது. இஸ்ரேலிய சிப்பாய் இந்தநிலையில், கைது செய்யப்படுவதற்கு முன்னர் கொழும்பை விட்டு வெளியேறுமாறு இஸ்ரேலிய அதிகாரிகளிடமிருந்து ஃபெரன்புக்கிற்கு அவசர அழைப்பு வந்ததாக செனல் 12 தெரிவித்துள்ளது. இந்தநிலையில், இஸ்ரேலுக்குத் திரும்பியதும் ஃபெரன்புக் ஒழுங்கு நடவடிக்கை அல்லது குற்றவியல் நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டுமா என்பது தொடர்பில் செனல் 12 கேள்வி எழுப்பியுள்ளது. இலங்கையில் இருந்து அவசரமாக வெளியேறிய இஸ்ரேலிய சிப்பாய் - தமிழ்வின்
-
முன்னாள் சபாநாயகர் அசோக சபுமல் ரன்வல தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்க வாய்ப்புகள் இருப்பதாக தேசிய மக்கள் சக்தியின் வழக்கறிஞர் அகலங்க உக்வத்த தெரிவித்துள்ளார். தனது கலாநிதி பட்ட சான்றிதழை சமர்ப்பிக்க தவறினால் இந்த நிலைமை ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஊடக நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். கல்வி தகமை தனது கல்வி தகமையை வெளிப்படுத்த நேரம் வழங்குமாறு அசோக ரன்வல கோரியுள்ளார். அதற்கமைய, அவருக்கு நேரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்குள் அவர் தனது சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும். அவ்வாறு சமர்ப்பிக்கவில்லை என்றால் அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிபோகும் என தேசிய மக்கள் சக்தியின் வழக்கறிஞர் மேலும் தெரிவித்துள்ளார். முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வலவின் பட்டப்பின்படிப்பு தொடர்பில் ஏற்பட்ட சர்ச்சையை அடுத்து, அவர் பதவி விலகியிருந்தமை குறப்பிடத்தக்கது. நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்கும் அபாயத்தில் முன்னாள் சபாநாயகர் - தமிழ்வின்
-
முன்னாள் பிரதி காவல்துறை மா அதிபர் வாஸ் குணவர்தன ( Vass Gunawardena) உள்ளிட்ட ஐந்து பிரதிவாதிகளுக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய அமர்வு விதித்த மரண தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது கோடீஸ்வர தொழிலதிபர் முகமது ஷியாம் கொலை தொடர்கான வழக்கில் பிரதிவாதிகளுக்கு குறித்த தீர்ப்பானது இன்று (20) கொழும்பு மேல் நீதிமன்றில் அறிவிக்கப்பட்டுள்ளது இந்த தீர்மானத்தை அறிவிப்பதற்காக குறித்த வழக்கின் பிரதிவாதிகளான முன்னாள் பிரதி காவல்துறை மா அதிபர் வாஸ் குணவர்தன, அவரது மகன் ரவிந்து குணவர்தன மற்றும் குறித்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஐவரும் சிறைச்சாலை அதிகாரிகளினால் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர். குறித்த தண்டனைக்கு எதிராக பிரதிவாதிகள் முன்வைத்த மேன்முறையீட்டு மனுக்களை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளதாக கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய பட்டபெந்திகே பிரதிவாதிகளுக்கு அறிவித்தார். அதன்படி, கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய அமர்வினால் அவர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளதாக பிரதிவாதிகளுக்கு நீதியரசர் ஆதித்ய பட்டபெந்திகே தெரிவித்தார். பிரதிவாதிகள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி நீதிமன்றத்தில் சமர்ப்பணங்களை முன்வைத்ததுடன், பிரதிவாதிகளுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறைவேற்றும் திகதியை உயர் நீதிமன்றம் குறிப்பிடவில்லை என சுட்டிக்காட்டினார். ஜனாதிபதி மன்னிப்பு குற்றவாளிகள் ஜனாதிபதியின் மன்னிப்பை எதிர்பார்க்கும் பட்சத்தில் தண்டனையை நிறைவேற்றும் திகதி அவர்களுக்கு மிகவும் முக்கியமானது என சுட்டிக்காட்டிய சட்டத்தரணி, அதற்கமைய தண்டனையை நிறைவேற்றும் திகதி தொடர்பில் உத்தரவு பிறப்பிக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார். எனினும், இது தொடர்பில் உயர் நீதிமன்றத்தினால் மட்டுமே முடிவெடுக்க முடியும் எனவும் இது தொடர்பில் தனக்கு உத்தரவு பிறப்பிக்க முடியாது எனவும் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய பட்டபெந்திகே தெரிவித்தார். முன்னாள் பிரதி காவல்துறை மா அதிபருக்கு மரண தண்டனை - ஐபிசி தமிழ்
-
இவரைப் பிடித்து ஒரு மாகாண ஆளுனராக நியமிக்க முடியுமா என்று அனுராவைக் கேட்டால் போச்சு.
-
கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பில் விசேட அறிவிப்பு!
RishiK replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
முதலில் வளங்களை சரியாக பகிரமுடியுமா? நகர ஆசிரியர்கள் கிராமங்களுக்குப் போகத்தயாரா? -
சத்தியமூர்த்திக்கும் இன்னும் ஒரு வருடம் கூடியுள்ளது.
-
Too early , கொஞ்சக்காலம் பொறுக்கவும் இல்லையென்றால் அடுத்த தேர்தலுக்கு முன்னர் உடைந்து விடும்.
-
“Clean Sri Lanka” தொடர்பில் வௌியான வர்த்தமானி அறிவித்தல்
RishiK replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
ஜனாதிபதித் தேர்தலின் பின் மாவட்டரீதியாக நெயமிக்கப்பட்ட 8 பேருக்கும் என்ன நடந்தது? இப்பவும் தகவல் சொல்லுகின்றார்களா? -
அநுர – மோடி கூட்டறிக்கையில் ’13’ஏன் இல்லை; ‘ இந்து பத்திரிகை ‘கேள்வி
RishiK replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
”நாம் எமது நாட்டின் அரசியலமைப்பின் பிரகாரம்தான் செயல்படுகிறோம். எமது அரசியலமைப்பில் 13ஆவது திருத்தச்சட்டம் உள்ளது. இது தொடர்பில் புதிதாக பேசுவதற்கும் கூட்டு அறிக்கையில் உள்ளடக்குவதற்கும் அவசியமில்லை. அத்தோடு இப்ப இருக்கும் நிலமையில் சுமந்திரனைத்தவிர வேறொருவரும் மாகணச்சபைத் தேர்தலைக் கோரவில்லை. -
அவர் தனக்கு விமானப்பயணம் மேற்கொள்ள முடியாது என்று கூறி ஒரு மெடிக்கல் சான்று அனுப்புவார்.
-
குழாயில் எண்ணெய் இந்தியாவில் வருமா அல்லது அரபு நாடுகளிலிருந்தா?
-
தவறான கொடுப்பனவுகளை திரும்ப பெறும் உரிமை உள்ளதா? அல்லது அரசியல் ஸ்டண்டா?
-
தனிப்பட்ட செயலாளர் பிரச்சனை வர தலையை கை காட்டி விட்டார்.
-
எனது தோல்விக்கு சமூக ஊடகங்களும் ஒரு காரணம் - டக்ளஸ் தேவானந்தா
RishiK replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
அப்ப தோல்விக்கு வேறு ஒரு காரணமும் இல்லை அப்படித்தானே? -
யாழ். ஆழியவளையில் இரவோடு இரவாக இடம்பெறும் பாரிய மணல் கொள்ளை
RishiK replied to ஏராளன்'s topic in ஊர்ப் புதினம்
ஆட்சி மாறினாலும் அன்னக்கைகள் அடங்காது போலத் தெரியுது. -
103 பேருடன் முள்ளிவாய்க்கால் மேற்கு கடலில் கரை ஒதுங்கிய வெளிநாட்டுப் படகு !
RishiK replied to ஏராளன்'s topic in ஊர்ப் புதினம்
படகின் அமைப்பைப் பார்க்கும் போது அவர்கள் தூரதேச பயணத்திற்கு ஆயத்தமானார்கள் போலத் தெரியவில்லை. -
கருணா அம்மான் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலை
RishiK replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
இவர்களால் பல உண்மைகள் வர வாய்ப்புள்ளது, புலிகளின் தலையில் விழுந்த பல அரசியல் புள்ளிகளின் கொலைகள் உட்பட.