Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

RishiK

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by RishiK

  1. இந்த நூறுபேருடன் முடியப்போவதில்லை, இனி வரப்போகும் நாட்களில் எத்தனை பேர் வருவார்கள் என்று தெரியவில்லை.
  2. நாங்கள் எங்கும் எதிலும் அரசியல் செய்வோம்.
  3. கனடாவின் முடிக்குரிய பூர்வீகக் குடிகள், வடக்கு விவகாரங்கள் மற்றும் வடக்கு பொருளாதார அபிவிருத்தி நிறுவனங்களுக்கான அலுவல்கள் அமைச்சர் ஹரி ஆனந்த சங்கரிக்கும் இலங்கைத் தமிழரசுக்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்குமிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. கொழும்பு பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியொன்றில் இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இச்சந்திப்பில் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், பத்மநாதன் சத்தியலிங்கம், சண்முகம் குகதாசன், ஞானமுத்து ஸ்ரீநேசன், இளையதம்பி ஸ்ரீநாத் ஆகியோர் இந்த சந்திப்பில் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. கனேடிய அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரிக்கும் தமிழரசுக்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்குமிடையில் சந்திப்பு - ஜே.வி.பி நியூஸ்
  4. யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதியில் இன்று காலை 8 மணி முதல் புத்துார் சோமஸ்கந்தா பாடசாலைக்கு முன்பாக போக்குவரத்துப் பொலிசார் மிகக் கேவலமான முறையில் வாகனச் சாரதிகளை அச்சுறுத்தி பணம் பறித்து வருகின்றதாக விசம் வெளியிடப்பட்டுள்ளது. புத்துார் சந்திக்கு அருகில் உள்ள வளைவுப் பகுதியில் உள்ள ஒற்றைக் கோட்டைத் தாண்டி வருவதாக கூறி நீதிமன்ற நடவடிக்கை என சாரதிகளை அச்சுறுத்தி ஆயிரம் முதல் 3 ஆயிரம் வரையாக பணப்பறிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். சட்டத்தரணிகளே 5 ஆயிரம் வாங்குவாங்கள் இந்நிலையில் கோட்டைத் தாண்டாமல் வந்த வாகனங்களைக் கூட வழி மறித்து ஒற்றைக் கோட்டை தாண்டி வருவதாகக் கூறி வழக்குப் பதியப் போவதாக அச்சுறுத்தி பணப்பறிப்பில் ஈடுபட்டு வருகின்றார்கள். அதோடு நீதிமன்றத்திற்கு அனுப்பப் போவதாக அச்சுறுத்தி அங்கு போனால் சட்டத்தரணிகளே உங்களிடம் 5 ஆயிரம் வாங்குவாங்கள். அ்த்துடன் தண்டனைப் பணம் 7500 கட்ட வேண்டும். மேலும் மல்லாகம் நீதிமன்றத்தில் வந்து ஒரு நாள் முழுவதும் நிற்க வேண்டும் என கூறி ஆயிரம் முதல் 2 ஆயிரம் வரையான பணத்தைப் பெற்று வருகின்றதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். யாழில் போக்குவரத்து பொலிசார் அட்டகாசம்; மக்கள் விசனம் - ஜே.வி.பி நியூஸ்
  5. யாழ்மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தனது நாடாளுமன்ற உரிமைகள் மீறப்பட்டுள்ளமை தொடர்பில் நாடாளுமன்ற சபாநாயகருக்கு கடிதமொன்றை எழுதியுள்ளார். நாடாளுமன்றத்தில் உரையாற்றுவதற்கான நேரத்தை பெறமுடியாமலிருப்பது குறித்த தனது ஆழ்ந்த கரிசனையை வெளியிடுவதாக அந்த கடிதத்தில் அருச்சுனா எம். பி தெரிவித்துள்ளார். இன்னமும் தீர்வு வழங்கப்படவில்லை மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதி என்ற அடிப்படையில் எனது கடமைகளை நிறைவேற்றுவதற்கு இந்த உரிமை மிகவும் அவசியமானது எனவும் அவர் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். யாழ் விபத்தில் இளைஞன் மரணம்; மாட்டால் பறிபோன உயிர் உங்கள் அலுவலகம் அறிவித்தது போல இந்த விவகாரம் குறித்து ஆராய்வதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ள போதிலும் இந்த விவகாரத்திற்கு இன்னமும் தீர்வு வழங்கப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார்.' இந்த நிலைமையை சரி செய்வதற்கான உடனடி நடவடிக்கைகளை சபாநாயகர் எடுக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள அர்ச்சுனா, இந்த விடயத்திற்கு தீர்வு கிடைக்காத பட்சத்தில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தின் அமர்வுகளில் இருந்து வெளிநடப்பு செய்ய தீர்மானித்துள்ளதாகவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்யப்போவதாக அருச்சுனா எம்.பி கடிதம் - ஜே.வி.பி நியூஸ்
  6. கிளிநொச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து வெளியேறும் மலக்கழிவை 24 மணித்தியாலத்திற்கு அகற்றி சுகாதாரத்தை பேண தவறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கரைச்சி சுகாதார வைத்திய அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார். கிளிநொச்சி மத்திய பேருந்து நிலையத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக மலக்கழிவு வெளியேறுகின்ற நிலையில் உரிய அதிகாரிகளுக்கு சுகாதார துறையினர் சுகாதாரத்தை பேணுமாறு தெரிவித்தனர். இருப்பினும், இதுவரையில் நடவடிக்கை எடுக்காத நிலையில் இன்றையதினம் (08-01-2025) கரைச்சி சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பொதுச்சுகாதார பரிசோதகர் இங்கு சென்ற நிலையிலே இவ் விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://jvpnews.com/article/kilinochchi-central-bus-stand-health-officer-alert-1736352464
  7. யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம், கொழும்பு சர்வதேச விமான நிலையம் (இரத்மலான) மற்றும் மத்தல ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையங்களுக்கான புறப்படுதல் வரிச் சலுகைகளை நீடிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. சிவில் விமான சேவைகள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனை அதன்படி யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு திட்டமிடப்பட்டுள்ள விமானப் பயண நேர அட்டவணைக்கமைவான விமான சேவைகளுக்கு தற்போது நடைமுறையிலுள்ள புறப்படுதல் வரியில் 50% வீதக் கட்டணத்தை கையுதிர்க்கும் சலுகையை 2026.01.30 வரை நீடித்தல். கொழும்பு சர்வதேச விமான நிலையத்திற்கு (இரத்மலான) திட்டமிடப்பட்டுள்ள விமானப் பயண நேர அட்டவணைக்கமைவான விமான சேவைகளுக்கு தற்போது நடைமுறையிலுள்ள புறப்படுதல் வரியில் 50% வீதக் கட்டணத்தை கையுதிர்க்கும் சலுகையை 2025.03.27 தொடக்கம் ஒருவருட காலத்திற்கு நீடித்தல். மத்தல சர்வதேச விமான நிலையத்திற்கு திட்டமிடப்பட்டுள்ள விமானப் பயண நேர அட்டவணைக்கமைவான விமான சேவைகளுக்கு தற்போது நடைமுறையிலுள்ள புறப்படுதல் வரிக்குரிய சலுகையை முழுமையாக வழங்குவதை 2024.12.29 தொடக்கம் மேலும் ஒருவருட காலத்திற்கு நீடித்தல். நேற்று முன் தினம் (6) நடைபெற்ற அமைச்சரவையில் இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம், கொழும்பு சர்வதேச விமான நிலையம் (இரத்மலான) மற்றும் மத்தல ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையங்களுக்கான சர்வதேச விமான சேவைகளை கவர்ந்திழுக்கும் நோக்கில் வரையறுக்கப்பட்ட விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் ( இலங்கை) (தனியார்) கம்பனியால் சர்வதேச விமான நிலைய சேவைகளுக்கான ஊக்குவிப்புச் சலுகைத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. குறித்த விமான நிலையங்களுக்கு புறப்படுதல் வரிச் சலுகைகளை கீழ்வருமாறு நீடிப்பதற்கு போக்குவரத்து, துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கே இவ்வாறு அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://jvpnews.com/article/tax-extended-for-3-airports-including-jaffna-1736327039
  8. வெளிநாட்டு வாழ் தமிழர்கள் வட மாகாணத்தில் முதலீடு செய்வது தொடர்பாக தமது ஆர்வத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இது தொடர்பாக யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி மற்றும் வைத்தியர் பவானந்தராஜா வெளிநாட்டு விவகார அமைச்சர் கௌரவ விஜித ஹேரத்துடன் கலந்துரையாடல் ஒன்றை இன்று (08-01-2025) நாடாளுமன்ற அலுவலகத்தில் நடத்தினர். இதன்போது வடக்கு மாகாணத்தில் 5 தொழிற்பேட்டை நிலையங்களை அமைப்பதற்காக காணிகள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் விரைவில் வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார். மேலும் ஆர்வமுள்ளவர்கள் இலங்கைமுதலீட்டு சபையின் ஊடாக தங்கள் செயற்திட்டங்களை முன்வைக்க முடியும் எனவும் பதிலளித்தார். அதேபோன்று நீண்ட காலமாக புலம்பெயர்ந்து நாட்டுக்கு வர முடியாது இருக்கும் தமிழர்கள் தாங்கள் நாட்டுக்கு வர விரும்புவது தொடர்பாகவும் எம்.பி றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி அமைச்சருக்கு தெரியப்படுத்தியுள்ளார். https://jvpnews.com/article/foreign-tamils-interested-investing-in-the-north-1736356551#google_vignette
  9. வவுனியாவில் உள்ள இலுப்பையடி பகுதியில் மொத்த மரக்கறி விற்பனை நிலையங்களுக்கு வரும் சில மரக்கறிகள் கழிவுகள் நிறைந்த வவுனியா குளத்தில் கழுவிய பின் விற்பனை செய்யப்பட்டு வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக கரட் போன்ற மரக்கறிகளை கொள்வனவு செய்யும் மொத்த வியாபாரிகள் அதனை தமது கடைகளின் பின் இருக்கும் கழிவுகள் வீசப்படும் வவுனியா குளத்தில் கழுவிய பின் அதனை விற்பனை செய்து வருகின்றனர். இது குறித்து கடந்த சில மாதங்களுக்கு முன் சுகாதார பரிசோதகர்களுக்கு அறிவிக்கப்பட்ட போது, அவர்கள் சம்பவ இடத்திற்கு வருகை தந்து வர்த்தகர் ஒருவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்த போதும், தற்போதும் சில வியாபாரிகள் வவுனியா குளத்தில் கழுவிய பின் விற்பனை செய்து வருகின்றனர். வவுனியா குளமானது நகரில் அமைந்துள்ளதால் பல வர்த்தக நிலையங்களின் கழிவுகள் மற்றும் குப்பை கூலங்கள் என்பன அதில் வீசப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் குறித்த நீரில் மரக்கறிகளை கழுவி விற்பனை செய்வது தொடர்பில் நகரசபை கவனம் செலுத்த வேண்டும் என்பதுடன் அவர்களது வர்த்தக உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும் மரக்கறி கொள்வனவு செய்யும் நுகர்வோர் கோரியுள்ளனர். https://jvpnews.com/article/vegetables-washed-and-sold-at-vavuniya-pond-1736357979
  10. வடக்கில் உள்ள ஆலயங்கள் இப்போது சமூகசேவைக்கு செலவு செய்வதிலும் பார்க்க வழக்குகளுக்கே அதிகளவு பணத்தைச் செலவு செய்வதாக வடக்கு மாகாண வடக்கு ஆளுநர் நா.வேதநாயகன் வேதனை வெளியிட்டார். அன்னை சிவத்தமிழ் செல்வி பண்டிதை கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களின் நூற்றாண்டு விழா நேற்று (07) இடம்பெற்றது. நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், 1993ஆம் ஆண்டு காலப் பகுதியில் தெல்லிப்பழை பிரதேச செயலக உதவி அரசாங்க அதிபராக இருந்தமையை நினைவுகூர்ந்து அன்றைய நாட்களில் அம்மையாருடன் நெருங்கிப்பழகும் வாய்ப்புக் கிடைத்தது. சமூகப் பணிகள் எமது மக்களுக்கு மிக அவசியமானவை போர் மற்றும் இடப்பெயர்வுகளின் போதும் அம்மையார் சமூகப் பணிகளை திறம்பட முன்னெடுத்தமையைச் நேரில் கண்டேன். அன்றைய காலத்தில் ஆலயங்கள் சமூகப் பணிகளை முன்னெடுக்காதிருந்த சூழலில், அம்மையார் அவர்களே அதனைத் தொடக்கி அதன் முன்னோடியாக இருந்ததார். ஆனால் இன்று ஆலயங்களில் உண்மையான கடவுள் பக்தி இல்லை இதனால் பல ஆலயங்கள் நீதிமன்றப்படியேறியுள்ளன. புலம்பெயர் தேசங்களிலிருந்து ஆலயங்களுக்கு நிதி உதவி வழங்கப்பட்டாலும் ஆலய நிர்வாகங்கள் ஒழுங்காக கணக்கறிக்கைகள் முன்வைப்பதில்லை இது பிரச்சினைகளுக்கு அடிநாதமாக இருக்கின்றது. தனது காலத்தின் பின்னரும் இந்த அறப்பணிகள் தொடர்ந்தும் தடையுறாது முன்னெடுத்துச் செல்வதற்கு பொருத்தமான ஒருவரான கலாநிதி ஆறுதிருமுருகனை அம்மையார் வளர்த்து அடையாளம் காட்டியுள்ளார். புலம்பெயர் மக்களின் பங்களிப்பு அவரின் சேவைகளைப் தொடரவேண்டும் காய்க்கின்ற மரம் கல்லெறி படுவதைப்போல அவர் மீதும் பலர் விமர்சனங்களையும் குறைகளையும் முன்வைக்கின்றனரே தவிர அவர் செய்யும் சேவைகளைப் பாராட்ட முன்வருவதில்லை. எமது சமூகத்தில் இந்த விடயம் இப்போது ஆழமாக வேரூன்றி விட்டது ஆறுதிருமுருகன் மீதான நம்பிக்கையிலேயே புலம்பெயர் தேசத்திலிருப்பவர்களும் இங்கிருப்பவர்களும் அவர் ஊடாக உதவிகளைச் செய்ய முன்வருகின்றனர். இந்தச் சமூகப் பணிகள் எமது மக்களுக்கு மிக அவசியமானவை இதைத் விடாது தொடரவேண்டும் என்றும் வடக்கு மாகாண வடக்கு ஆளுநர் நா.வேதநாயகன் இதன்போது கூறினார். https://jvpnews.com/article/governor-vedhanayagan-about-the-temples-north-1736338738
  11. அருச்சுனா சத்தமாவது போடுகிறார் மற்றவர்களின் அசுமாத்திரத்தைக் காணவில்லை.
  12. மேலை நாடுகளிலும் பெரும்பாலும் சான்றிதல்கள் சரிபார்ப்பதில்லை, பிரித்தானியாவில் ஒரு பாகிஸ்தானியர் போலிச்சான்றுதல்களுடன் வைத்தியராகவே வேலை செய்த கதை கூட உள்ளது.
  13. அவர் இதுவரை பெற்று வந்த சம்பளத்தை திரும்ப பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  14. இராணுவம் விடுவிக்க காணியின் உரிமையாளன் வெளிநாட்டில் இருந்து வந்து எல்லைப் போடாவிட்டால் சரி.
  15. அமெரிக்காவின் இன்னொரு மாநிலமாக அங்கீகரிக்க முடியுமா என்று கேட்டால் என்ன?
  16. இன்னும் 4 அரசாங்கள் வந்தாலும் விசாரணைகள் நிறைவடையாது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.