Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

RishiK

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by RishiK

  1. உணவு, இருப்பிடம் ஆகியவற்றிற்குப் பிறகு அவர்களின் குடிவரவு உரிமை என்னவாக இருக்கும்? பிள்ளைகள் என்ன மொழியில் கல்வி கற்க முடியும்?
  2. முதலில் clean Sri Lanka என்றால் என்னவென்று மக்களுக்கு தெரியப்படுத்தவும்.
  3. பணிபுறக்கணிப்பு தொடர்ந்தால் சகல பஸ்களும் அரசு உடமையாக்கப்படும்.
  4. போக்குவரத்தில் தனியார் அரசு பஸ்கள் இடையான போட்டிகளைத் தடுத்து நிறுத்தினால் அரைவாசிப் பிரச்சனை தீர்ந்து போகும்.
  5. எங்கள் நீதி அமைச்சரையும் சேர்த்துக் கொள்ளவும்.
  6. தமிழ் நாட்டு மாநில அரசு போல் ஒரு இலவச பொங்கல் package சங்கக்கடையின் ஊடாகக் கொடுத்தால் நன்றாக இருக்கும். ஆனால் IMF க்கு மட்டும் தெரியாமல் இருக்க வேண்டும்.
  7. அதற்கு முன் ஶ்ரீ மாஸ்டரை கட்சியில் இருந்து நீக்கி விட தீயாய் வேலை செய்து கொண்டிருக்கிறார்.
  8. அவரின் கருத்து என்னவென்றால் தனது client நேரடியாக கல்லைத் தோண்டவில்லையாம். அவர் ஒரு logistics provider ஆம். அத்துடன் சம்பந்தப்பட்ட சட்டத்தில் பெரிய ஓட்டை உள்ளதாம். இளங்குமரன் இதை அதனது தலைவர்களுக்கு எடுத்து சொல்லி ஓட்டையை அடைக்க வேண்டும்.
  9. போற போக்கப்பார்த்தால் வன்னியிலே ஆளுக்கு அரை ஏக்கர் நிலத்தை கொடுத்து இருத்தி விடுவார்கள் போலக்கிடக்குது.
  10. நாட்டில் பதிவு செய்யப்படாத மருத்துவர்கள் சட்ட விரோதமாக தொழில் செய்து வருவதாக சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ(Nalinda Jayatissa) தெரிவித்துள்ளார். இன்று(07) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும், அவர்களுக்கு எதிராக அரசாங்கம் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும், அவ்வாறான நபர்கள் தொடர்பில் மக்களுக்கு அறிவிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார். இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், சில மருத்துவர்கள் தாங்கள் பதிவு செய்துள்ள மருத்துவ முறைக்குப் புறம்பாக மருத்துவ முறைகளை நடைமுறைப்படுத்த முனைகின்றனர். நாட்டில் பல மருத்துவ முறைமைகள் இயங்கி வருகின்றன. சில மருத்துவப் பயிற்சியாளர்கள் தாங்கள் பதிவு செய்த மருத்துவ முறைகளுக்குப் புறம்பாக மருத்துவ முறைகளைப் பயன்படுத்துவதாகக் கூறப்படுகிறது. வைத்திய நிபுணர்கள் உரிய மருத்துவ சபைகளில் பதிவு செய்ய வேண்டும். சில மருத்துவ கவுன்சில்களில் சிக்கல்கள் உள்ளன. நாட்டில் சுமார் 40,000 போலி மருத்துவர்கள் இருப்பதாகக் கூறப்படுகின்ற நிலையில் இவ்வளவு பேர் இருப்பதாக நான் நினைக்கவில்லை. ஆனால் சில மோசடிகள் இருப்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். இதுபோன்ற பதிவு செய்யப்படாத பயிற்சியாளர்கள் மீது சுகாதார மருத்துவ அதிகாரிகளால் (MOHs) சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன, சில நபர்கள் மீது ஏற்கனவே சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட மருத்துவ கவுன்சிலில் தங்களை பதிவு செய்யாமல் பயிற்சி செய்யும் நபர்கள் குறித்து தெரிந்தால் தெரிவிக்குமாறு மக்களை கேட்டுக் கொண்டுள்ளார். https://tamilwin.com/article/govt-admits-to-illegal-doctors-in-country-1736230723
  11. வீதி விதிமுறைகளை மீறியதாக குற்றம் சுமத்தப்பட்ட தனியார் பேருந்து ஓட்டுநர் ஒருவர், பயணிகளை இறக்கிவிட்டு, பேருந்தை மீண்டும் தமது இடத்துக்கே செலுத்தி சென்ற சம்பவம் பதிவாகியுள்ளது இந்த சம்பவம் பாணந்துறை பகுதியில் இடம்பெற்றுள்ளது. வீதி விதிமுறைகளை மீறியதாக கூறப்படும் குறித்த பேருந்தில், சாதாரண உடைகளில் பயணித்த இரண்டு பொலிஸ் அதிகாரிகள், போக்குவரத்து பொலிஸாருக்கு சம்பவம் தொடர்பில் தகவல் வழங்கியுள்ளனர். பொலிஸ் அதிகாரிகளால் சோதனை இதனடிப்படையில் பேருந்து பொலிஸ் அதிகாரிகளால் சோதனைக்காக நிறுத்தப்பட்டுள்ளது. பின்னர், பேருந்து ஓட்டுநர் மேற்கொண்டதாக கூறப்படும் விதிமுறை மீறல் தொடர்பில் அவருக்கு விளக்கமளிக்கப்பட்டு, அவருக்கான அபராத சீட்டும் கையளிக்கப்பட்டுள்ளது. எனினும் இதனை ஏற்றுக்கொள்ளாத ஓட்டுநர், பொலிஸாரின் நடவடிக்கை நியாயமற்றது என்று கூறி, பயணிகளை பேருந்திலிருந்து இறங்குமாறு அறிவுறுத்தியுள்ளார். பின்னர் பயணிகள் இன்றி தமது பேருந்தை மீண்டும் தாம் புறப்பட்ட இடத்துக்கே ஓட்டிச்சென்றுள்ளார். இதேவேளை இந்த நடவடிக்கை, தூய்மையான இலங்கை திட்டத்தின்கீழ் முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://tamilwin.com/article/bus-driver-caught-violating-law-1736213354#google_vignette
  12. இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக உயர்ஸ்தானிகர் ஒருவரையும் நான்கு தூதுவர்களையும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) நியமித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இன்று (07) இடம்பெற்ற வைபவத்தின் போது ஜனாதிபதி உத்தியோகபூர்வ நியமனங்களை கையளித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது. நியூசிலாந்திற்கான உயர் ஸ்தானிகராக டபிள்யூ.ஜி.எஸ் பிரசன்னவும், கட்டாருக்கான தூதுவராக ஆர்.எஸ்.கான் அசார்ட், ரஷ்யாவுக்கான தூதுவராக எஸ்.கே.குணசேகர, குவைத்துக்கான தூதுவராக எல்.பி.ரத்நாயக்க மற்றும் எகிப்திற்கான தூதுவராக ஏ.எஸ்.கே.செனவிரத்ன ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். சர்வதேச சந்தை வாய்ப்புகள் இதனைத் தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி, இராஜதந்திரிகளின் திறன்களில் நம்பிக்கையை வெளிப்படுத்தியதுடன், இலங்கையின் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதிலும் அந்தந்த நாடுகளுடன் ஒத்துழைப்பை வளர்ப்பதிலும் அவர்களின் தேவையை சுட்டிக் காட்டியுள்ளார். வெளிநாடுகளில் குறிப்பாக மத்திய கிழக்கு, தென் கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளில் கணிசமான எண்ணிக்கையிலான புலம்பெயர்ந்தோர் பணிபுரியும் இலங்கையர்களின் நலனை உறுதிப்படுத்துவதற்கு இலங்கையின் இராஜதந்திரிகளின் அவசியத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தினார். மேலும், புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இராஜதந்திரிகளை, நேரடி வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதிலும், இலங்கையின் தொழில் முயற்சியாளர்களுக்கு சர்வதேச சந்தை வாய்ப்புகளை விரிவுபடுத்துவதிலும் கவனம் செலுத்துமாறும் ஜனாதிபதி திஸாநாயக்க கூறியுள்ளார். https://tamilwin.com/article/president-appoints-five-diplomats-1736236461
  13. இன்று வரை எனக்கு நாடாளுமன்றத்தில் உரையாற்றுவதற்கு சந்தர்ப்பம் வழக்கப்படவில்லை என யாழ் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் ( Ramanathan Archchuna) சுட்டிக்காட்டியுள்ளார். குறித்த விடயத்தை 2025 ஆம் ஆண்டுக்கான முதல் வார நாடாளுமன்றக் கூட்டத் தொடர் இன்று (07) கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார். யாழில் இருந்து நாடாளுமன்றத்திற்கு வருகை தரும் தனக்கு சரியான பதிலை வழங்குமாறும் அவர் கேள்வியெழுப்பியிருந்தார். இது தொடர்பில் கருத்து தெரிவித்த சபாநாயக்கர், இது தொடர்பில் பதில் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மற்றும் இது தொடர்பில் குழு ஒன்று நியமிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://ibctamil.com/article/today-parliment-speech-dr-archuna-against-sajith-1736230580
  14. புதிய இணைப்பு யாழ்ப்பாணம் - கோப்பாய் காவல்துறை பிரிவுக்குட்பட்ட உரும்பிராய் பகுதியில் ஒருவரை கட்டி வைத்து தாக்குதல் நடத்தியமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தாக்குதல் சம்பவம் தொடர்பாக வெளியான காணொளியை அடிப்படையாக கொண்டு கோப்பாய் காவல்துறையினரால் மூன்று பேரும் யாழ்ப்பாணம் காவல்துறை புலனாய்வு பிரிவினரால் இரண்டு பேரும் என ஜவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
  15. இந்தியாவிடம் தொழில்நுட்பத்தை பெற்று இலங்கையில் தயாரிக்க முடியாதா?
  16. கட்டாக்காலி நாய்களுக்கும் ஊசியைப்போட்டு மட்டையை கழுத்தில் மாட்டி விடவும்.
  17. அதேநேரம் ஶ்ரீ தலதா மாளிகைக்கு வழிபாட்டிற்காக வருகை தந்திருந்த வௌிநாட்டு யுவதி ஒருவர் இராணுவத் தளபதி சல்யூட் அடித்து மரியாதை தெரிவித்து அங்கு குழுமி இருந்தவர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இதே நம்ம பெண்ணாய் இருந்தால் புலம்பெயர்ந்த விடுதலைப்புலி என்று பயங்கரவாதச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருப்பார்.
  18. குருணாகல் போதனா வைத்தியசாலைக்குள் ஸ்டெதஸ்கோப்புடன் நுழைய முற்பட்ட போலி வைத்தியர் ஒருவர் நேற்று (05) கைது செய்யப்பட்டதாக குருணாகல் பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர் குருணாகல், பொத்துஹெர, ஹந்துகல பிரதேசத்தை சேர்ந்த 43 வயதுடையவர் என கூறப்படுகின்றது. அதோடு சந்தேக நபரிடம் இருந்து களனி பல்கலைக்கழகத்தின் ராகம மருத்துவ பீடத்தின் வைத்திய அடையாள அட்டை மற்றும் ஸ்டெதஸ்கோப் உள்ளிட்ட பொருட்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குருநாகல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://jvpnews.com/article/fake-doctor-caught-in-a-kurunegala-hospital-1736143845
  19. யாழ்.மாநகரில் உள்ள மதுபானசாலை ஒன்றுக்குள் முகத்தை மூடிய நிலையில் கறுப்பு ஆடை அணிந்த ஒரு குழுவினர் பலவந்தமாக நுழைந்து அங்கிருந்த பலரை தாக்கி இருவரை வாளால் வெட்டி காயப்படுத்தியுள்ள சம்பவம் தொடர்பில் விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று முந்தினம் (04) இடம்பெற்ற நிலையில், வாள்வெட்டு மற்றும் தாக்குதல் சம்பவங்களில் காயமடைந்த மூவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மூவர் வைத்தியசாலையில் அனுமதி இலங்கை பதில் பொலிஸ் மா அதிபர் யாழ்ப்பாணம் வந்து குற்றவாளிகள் மற்றும் பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புடையவர்களை மிக விரைவில் கைது செய்வோம் என உறுதியளித்த பத்து மணித்தியாலங்களுக்குள் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. தாக்குதலுக்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை என்பதுடன், சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். அதேவேளை , தனது மதுபானக் கடைக்குள் அத்துமீறி நுழைந்த சிலரின் நடத்தையால் அச்சமடைந்த மதுபானக் கடையின் உரிமையாளர், சம்பவத்தின் பின்னர் தனது கடையை இதுவரை திறக்கவில்லை. குற்றச்செயல்கள் அதிகரிப்பால் மக்கள் அச்சம் இதேவேளை, சில தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் இளைஞர்கள் குழுவொன்று நகரின் நடுவில் விருந்து வைத்து, பொறுமையின்றி வீதியில் பயணித்தவர்களைத் தாக்கிய சம்பவங்கள் பதிவாகியிருந்தன . இது தொடர்பாக, மாகாணத்தில் இதுவரை 6 இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் தற்போது குற்றச் செயல்கள் நடந்துவருவதுடன், குடிபோதையில் பஸ் சாரதிகளைத் தாக்குவது, ஹோட்டல் உரிமையாளர்களிடம் பலவந்தமாக உணவு வழங்கக் கோருவது, ஹோட்டல்களை அடித்து நொறுக்குவது, வீதியில் செல்லும் மக்களை தடியடி நடத்தி பணத்தை கொள்ளையடிப்பது போன்ற குற்றச்செயல்களும் அதிகரித்துள்ளதால் மக்கள் பீதியில் உள்ளனர். யாழ்ப்பாணத்தில் பெருமளவிலான பொலிஸ் மற்றும் பாதுகாப்புப் பிரிவினர் இருக்கும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. https://jvpnews.com/article/incident-inside-jaffna-liquor-store-1736146810
  20. கிளிநொச்சி பரந்தனில் , விபச்சார விடுதி ஒன்றை பொலிஸார் சுற்றிவளைத்து கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. இதன்போது விடுதியில் இருந்த இரு சிறுமிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. சம்பவத்தில் 15 வயதான சிறுமி உட்பட இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேவேளை யாழ்ப்பாணம், கிளிநொச்சி உள்ளிட்ட தமிழர் பகுதிகளின் கலாச்சார சீர்கேடுகளும் , குற்றச்செயல்களும் அதிகரித்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். https://jvpnews.com/article/a-brothel-in-kilinochchi-was-raided-1736141662
  21. வனப்பகுதிக்கு விடுமுறையை கழிக்கச் சென்ற எட்டு பேரை நல்லதண்ணி வனத்துறை அதிகாரிகள் மற்றும் அதிரடி படையினர் கைது செய்துள்ளனர். வனப்பகுதியில் சிலர் விடுமுறைக்குச் சென்றிருப்பதாக கிடைக்க பெற்ற இரகசிய தகவல்களையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற நல்லதண்ணி வனத் துறை அதிகாரிகள் மற்றும் அதிரடி படையினர் சந்தேகத்தின் பேரில் குறித்த பகுதியில் இருந்த எட்டு பேரை கைது செய்துள்ளனர். மேலதிக விசாரணை மஸ்கெலியா காட்மோர் பகுதியில் உள்ள வனப் பகுதியில் இருந்து கவரவில பகுதிக்கு செல்லும் சமவெளி வன பகுதியில் வைத்து இவர்கள் நேற்று(05) கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் இரண்டு பெண்களும் ஆறு ஆண்களும் அடங்குவதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், மேலதிக விசாரணைகளை நல்லத்தண்ணி பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர். https://tamilwin.com/article/arrested-who-went-to-spend-vacation-in-the-forest-1736132429

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.