ஜெயலலிதா விடுதலையை தொடர்ந்து ஓடப்போகிறது சென்னை மெட்ரோ ரயில்!
சென்னை: சென்னை மெட்ரோ ரயில் சேவை ஜூன் முதல் வாரத்தில் தொடங்கப்படலாம் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சென்னையில் 2008ம் ஆண்டு ரூ.14,600 கோடி செலவில் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் தொடங்கப்பட்டன. இப்போது இந்தத் திட்டம் ரூ.20 ஆயிரம் கோடி செலவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இரு வழித்தடங்கள்1/5 இரு வழித்தடங்கள் மெட்ரோ ரயில் திட்டம் மூலம் சென்னையில் 45.1 கிலோ மீட்டர் தொலைவுக்கு 2 வழித்தடங்களில் ரயில் பாதை அமைக்கப்பட்டு வருகிறது. வண்ணாரப்பேட்டை - சென்னை விமான நிலையம் இடையே 23.1 கிலோ மீட்டர் தொலைவுக்கு முதல் வழித்தடமும், சென்ட்ரல் - பரங்கிமலை இடையே 22 கிலோ மீட்டர் தொலைவுக்கு 2வது வழித்தடமும் அமைக்க திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. Show Thumbnail Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/chennai-metro-train-first-service-may-commence-from-june-first-weak-227485.html