உங்களுக்கு என்றாலும் இந்தளவோட.. எனக்கென்னவோ.. பார்த்த நேரத்தில இருந்து தோல் எல்லாம் கூசுது. உப்படி ஆகிட்டா.. என்ற பீதியா வேற. உந்தாள் எங்க தான் உதுகளை தேடி எடுக்கிறாரோ தெரியல்ல.
ஆம் குறைகள் சில நிவர்த்திக்க முடியாதவை தான். ஆனால்... அதனை வெளிப்படுத்துவன் ஊடாக மற்றவர்களின் அனுதாபத்தை விட அசெளகரியத்தை சம்பாதிக்க நேரிட்டால்.. அதனை வெளிக்காட்டாமல் தவிர்ப்பது நல்லம். அதேவேளை.. குறைகளை நிவர்த்திக்கின்ற அல்லது குறைக்கின்ற அல்லது அவற்றோடு.. இருந்தாலும் மறுவாழ்வு அளிக்கிற பொறிமுறைகளை பின்பற்ற வழிகாட்டுவதே சிறப்பு. குறையில்லாத மனிதர்கள் இல்லை. ஆனாலும் சில குறைகள்.. மற்றவர்களால் பெரிதாக எடுக்கப்படும் போது பாதிப்பு குறை உள்ளவர்களுக்கே அதிகமாகும். உதவி என்பது அவசியம். அதற்காக.. குறைகளை வெளிச்சம் போடனுன்னு சொல்வது சரியல்ல.