இந்து சமயம் (சைவம்) மிகவும் சுயாதீனமான போக்குடைய ஒரு மார்க்கம். எவரையும் அது கட்டாயப்படுத்துவதும் இல்லை மற்றைய மதங்களை அது அவமதிப்பதும் இல்லை. அதேபோல் மத மற்றவர்களுக்கும் கடவுள் இல்லை என்பவர்களுக்கும் கூட.. அது ஆன்மீக வழிகாட்டுகிறது.
இந்து மதத்தில் தான் சாதி.. என்று சொல்கிறவர்கள் இருக்கலாம். அவர்கள் கண்மூடிக் குருடர்கள். சாதிய அமைப்பு முறை தொழில்சார் நிலபிரபுத்துவம் சார் எழுந்து நிற்கிறதே அன்றி மதத்தால் என்பது சில மதவிரோத சிந்தனை உள்ளோரின் எண்ணப்பாடு.
கீழைத்தேய நாடுகளில்.. கிறிஸ்தவர்கள் மத்தியிலும் தொழில்சார்.. நில பிரபுத்துவ சாதி அமைப்புக்கள் இருந்தன. இப்பவும் அவற்றின் எச்சங்கள் உள்ளன. அது இஸ்லாத்திலும் உள்ளது. வகுப்புவாதம்.. எல்லா மதங்களை பின்பற்றுவோர் மத்தியிலும் மதம் அற்றோர் என்போர் மத்தியிலும் கூட உள்ளது. உயர் வகுப்பு.. மத்திம வகுப்பு.. கீழ் வகுப்பு என்று.. பொருண்மிய மனித இயற்றுகை வசதி அடிப்படையிலான பாகுபாடுகளும் உள.
பாலியல் என்று நோக்கினால்.. எந்த மதமும் மனித இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த வழிகாட்டுவதாக இல்லை. எல்லா மதமும் மனித இருப்பை இப்பூமிப்பந்தில் சாத்தியப்படுத்தி.. அதன் சமூக வாழ்வை.. சீராக்குவது பற்றியே சொல்கின்றன. அந்த வகையில்.. பாலியல் என்பது மதங்களில் ரகசியமாகவும் வெளிப்படையாகவும் பேசப்படுகின்றன. அதில் இருந்து இந்து மதமும் விலகி நிற்கவில்லை. அதேவேளை பிரமச்சாரியம் பற்றியும் பேசுகிறது. அது எல்லா மதத்திலும் பேசப்படுகின்ற ஒன்று தான். தனிமனிதர் எந்தப் பாதையை விரும்பினமோ அதில் அவர்கள் பயணிக்க வழிகாட்டுவதே மதங்களின் இருப்பு. மதமற்றவர்கள் என்போர் கூட மதமுள்ளவனின் வழியில் தான் பாதி தூரமோ..முக்கால்வாசி தூரமோ.. வருகின்றனர்.
மேலும்.. இந்து மதம்.. மதமாற்றங்களால் அழிந்து விடும் என்பதில் எவ்வளவு உண்மை இருக்கென்று தெரியவில்லை. இந்து மதம் காலணித்துவ ஆட்சியில் சந்தித்த மதமாற்ற தீவிரத்தை இன்று சந்திக்கவில்லை. இன்று எப்படி ஈழ தேசம் சிங்கள பெளத்த பேரினவாத காலணித்துவத்தில் பெளத்த நிலமாக மாற்றி காட்டப்படுகிறதோ இதையே போர்த்துக்கீசர்களும்.. ஒல்லாந்தர்களும்.. ஆங்கிலேயர்களும் மிசனரிகள் மூலம் செய்தனர். ஆக ஆக்கிரமிப்பாளர்கள் எல்லோரும் ஒரே வகையினர் தான்.
ஆனால்.. இன்றைய நவீனத்துவ உலகில்.. மக்கள் சுயாதீனமான.. கட்டுப்பாடுகள் அதிகம் விதிக்காத.. மத மார்க்கத்தையே விரும்புகின்றனர். அந்த வகையில்.. இந்து மதம்.. பெரும்பான்மை மக்களின் எண்ணத்தைக் கவர்கிறது. இஸ்லாமிய கடும் போக்கு அதன் இருப்பிற்கு ஆதாரமாக உள்ள அதேவேளை அதன் அழிவிற்கும் அதுவே காரணமாக உள்ளது. மக்கள் வெறுப்பிற்கும் அதுவே காரணம். கிறிஸ்தவம்.. இன்று மோசடிகள் நிறைந்த ஒன்றாக.. மாறி அதன் சமூகத் தேவை என்ன என்பதை இழந்து வருகிறது. இன்று பல முன்னைய கிறிஸ்தவ நாடுகள்.. கிறிஸ்தவதத்தில் இருந்து விலகிக் கொண்டு வருகின்றன. பிரிட்டனை எடுத்துக் கொண்டால்.. கடைசிக் கணக்கெடுப்பில்.. கிறிஸ்தவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சியும் மதமற்றவர்களின் எண்ணிக்கையில்.. பல மடங்கு உயர்ச்சியும் ஏற்பட்டுள்ளது. பெளத்தம் அதன் வெறி காரணமாக செல்வாக்கிழந்து வருகிறது. சீனாவில் பெளத்தத்தை தழுவுவோரின் எண்ணிக்கை குறிப்பாக இளைய சமூகத்தில் பலமான வீழ்ச்சியை சந்தித்துள்ளதோடு.. அங்கும் மதமற்றவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்துள்ளது..!
இன்றை மனித சமூகம்.. கூடிய அளவு கட்டுப்பாடற்ற.. சுயாதீன சிந்தனைக்கும் செயற்பாட்டுக்கும் இடம் தேடும் நிலையில்.. இறுக்கமான மதங்களை விட்டு மக்கள் வெளியேறி வருகின்றனர். அந்த வகையில்... இந்து மதத்திலும் சில மார்க்கங்களில் இருந்த இறுக்கங்கள் தளர்ந்துள்ளன... அல்லது தளர்த்தப்பட்டு வருகின்றன. ஒப்பீட்டளவில் இந்து மதம் கூடிய அளவு சுயாதீனமானது என்ற வகையில்.. நவ கால மக்களின் கூடிய தெரிவாக இந்து மதம் மாறும் நிலையே உள்ளது.
சாதியம்.. வகுப்புவாதம்.. மையவாதம்..பொருண்மிய வாதம்.. ஆட்சியவாதம் என்பவை.. ஒரு குறிப்பிட்ட மதம் சார்ந்து கட்டி எழுப்பட்டுதல் உண்மையில்.. இவ்வாறான வாதங்களை முன்வைப்போருக்கு.. மக்களை குழப்பி விட ஒரு வழியாக உள்ளதே அன்றி.. இவற்றின் பின்னால் உள்ள யதார்த்தச் சூழல் என்பது வேறெங்கோ முளைவிட்டு.. விருட்சமாகி உள்ளதை சரியான ஆழமான பார்வையால் மிக எளிதாகக் கண்டுவிடலாம்.
இதற்கு மேல்.. இத்தலைப்பில் சொல்ல எதுவுமில்லை.