Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

nunavilan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by nunavilan

  1. பாடல்:தேனி காற்றோரம் படம்: வணக்கம் சென்னை இசை: அனிருத் பாடியவர்கள் அனிருத், பிரகதி வரிகள்:கார்க்கி
  2. மால் ஆஃப் அமெரிக்கா(mall of America) மினசோட்டாவின் பெருமைகளில் ஒன்றான மால் ஆஃப் அமெரிக்காவிற்கு இது வெள்ளி விழா ஆண்டு. அப்படியென்ன பெருமை என்றால், அமெரிக்காவின் மிகப் பெரிய அங்காடி வளாகம் என்ற பெயரைக் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாகச் சூடிக் கொண்டு நிற்கிறதே. மினியாபொலிஸ் வாசிகளுக்கு இந்த மால் மேல் எந்தளவு க்ரேஸ் இருக்கிறதோ தெரியாது, இங்கு வரும் வெளியூர் விருந்தினர்களுக்கு இதன் மேல் பெரும் ஆர்வம் இருக்கும். மினியாபொலிஸில் பார்க்க வேண்டிய இடங்கள் என்னும் லிஸ்டில் இது கண்டிப்பாக இருக்கும். இதன் முக்கியச் சிறப்பம்சம், இந்த மாலின் நடுவே இருக்கும் நிக்கலோடியன் யூனிவர்ஸ் (Nickelodeon Universe) உள்ளரங்குக் கேளிக்கைப் பூங்கா. குழந்தைகளைக் கவரும் கேளிக்கை விளையாட்டுப் பூங்கா இது. உள்ளரங்கில் இருப்பதால், மழை, வெயில், பனி என்று எவ்விதத் தடங்கலும் இல்லாமல், வருடம் முழுக்கச் சென்று விளையாடுவதற்கு ஏற்ற இடம் இது. குளிர்காலத்தில் வெளியே எங்கே செல்வது என்று குழப்பமில்லாமல், ஒருநாள் முழுக்க நேரத்தைக் கழிப்பதற்கு, இவ்விடம் உதவும். இந்த மால் வளாகத்திற்குள்ளோ அல்லது இந்த விளையாட்டுத் திடலுக்கோ நுழைய எந்தக் கட்டணமும் இல்லை. விளையாடுவதற்குத் தனித்தனியாக டிக்கெட்டோ, அல்லது ஒருநாள் முழுக்க அனுமதி அளிக்கும் கை வளையமோ (Wristband) வாங்கிக்கொண்டு செல்லலாம். ஒருநாள் அனுமதி வாங்கினால், எதில் வேண்டுமானாலும், எவ்வளவு முறை வேண்டுமானாலும் விளையாடிக் கொள்ளலாம். அங்கு சென்று வாங்குவதை விட, இணையத்தில் வாங்கினால் கொஞ்சம் சீப்பாகக் கிடைக்கும். அதைவிட மலிவாகக் காஸ்கோவில் (Costco) கிடைக்கும். இங்கு குழந்தைகளைக் கவரும் மற்றொரு இடம் – சீ லைஃப் அக்வாரியம் (SeaLife Aquarium). இது ஒரு கடல்வாழ் உயிரினங்களின் அழகிய கண்காட்சிச் சாலை. நட்சத்திர மீன், கடல் குதிரை போன்ற காண்பதற்கு அரிய உயிரினங்களை இங்குக் காணலாம். நட்சத்திர மீன் போன்றவற்றைத் தொட்டுக் கூடப் பார்ப்பதற்கு வாய்ப்புக் கொடுப்பார்கள். இங்குக் கடலுக்கு அடியில் மீன்களுடன் சேர்ந்து நடக்கும் உணர்வை அளிக்கும் கடல் சுரங்கப்பாதை (Ocean Tunnel) பார்வையாளர்களைக் கவரும். இந்த இடத்தில் இரவு முழுக்க விட்டத்தில் மீன்கள் அங்குமிங்கும் சென்று வருவதைப் பார்த்துக் கொண்டே, ஒரு குழுவாக உறங்குவதற்குத் திட்டம் வைத்திருக்கிறார்கள். கடலுக்கு அடியில் தூங்க முடியுமா என்று யோசிப்பவர்கள், இதை முயற்சித்துப் பார்க்கலாம். மால் ஆஃப் அமெரிக்காவில் இவை சிறார்களைக் கவரும் அம்சம் என்றால், பெண்களைக் கவரும் அம்சமாகப் பல கடைகள் உள்ளன. மொத்தம் ஐநூறுக்கும் மேற்பட்ட கடைகள். பரப்பளவில் மட்டுமல்ல, கடைகளின் எண்ணிக்கையிலும், அமெரிக்காவின் பெரிய மால் இது தான். மேசிஸ், சியர்ஸ், நார்ட்ஸ்ராம், மார்ஷல்ஸ், ஓல்ட் நேவி, ஃபாரெவர் 21 முதலிய பெரிய உடை அலங்கார மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களுக்குமான கடைகளும், ஆப்பிள், மைக்ரோசாஃப்ட், பெஸ்ட் பை போன்ற தொழில்நுட்பக் கடைகளும் இங்கே அமைந்துள்ளன. ஒரு பக்கம் பெண்களையும், மறுபக்கம் குழந்தைகளையும் அனுப்பிவிட்டுவிட்டு, ஆண்கள் இன்னொரு பக்கம் வருவோர் போவோரைப் பராக்குப் பார்க்கலாம்!! திருமணம் செய்யும் திட்டம் உள்ளவர்கள், இங்கிருக்கும் காதல் தேவாலயத்தை (Chapel of Love) ஒரு முறை சென்று பார்க்கவும். இது வரை இங்கு 7500 க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடந்துள்ளன. திருமணத்திற்குத் தேவையான உடைகளும் பிற பொருட்களும் இங்கே கிடைக்கின்றன. திருமணம் ஆன பின்பு, எப்படியும் குழந்தை குட்டியோடு இங்கு அடிக்கடி வர வேண்டி இருக்கும். அப்படி வரும்போது, இந்த நிலைக்குக் காரணமான நிகழ்வு இங்குதான் நடந்தது என்பதை மகிழ்வாகவோ, அல்லது அவரவர் நிலைக்கு ஏற்பவோ நினைவு படுத்திக் கொள்ளலாம்!! இன்று மால் ஆஃப் அமெரிக்கா இருக்கும் இடத்தில் தான், 1956 இல் இருந்து 1981 வரை மெட்ரோபாலிடன் ஸ்டேடியம் என்ற விளையாட்டு மைதானம் இருந்தது. 1986 இல் இந்த இடத்தை வாங்கிய கெர்மேசியன் (Germezian) என்ற நிறுவனம், 1989 இல் கட்டுமானப் பணியைத் தொடங்கியது. 1992 இல் கட்டுமானப் பணி நிறைவுற்று, இந்த மால் திறக்கப்பட்டது. திறந்த சமயத்தில் இருந்தே, இதுதான் அமெரிக்காவின் பெரிய ஷாப்பிங் மால். இன்றும் இதுவே அமெரிக்காவின் பெரிய ஷாப்பிங் மால். வட அமெரிக்கக் கண்டம் என்று எடுத்துக் கொண்டால், கனடாவில் இருக்கும் வெஸ்ட் எட்மான்டன் மால் (West Edmonton Mall) தான் பெரியது. அதன் உரிமையாளர்கள் தான், இதைக் கட்டியவர்களும் கூட. முன்பு இங்கு இருந்த ஸ்டேடியத்தின் ஞாபகமார்த்தமாக, அங்கிருந்த ஸ்டேடியத்தின் பெயர் பொறித்த சட்டகத்தினை இங்குத் தரையில் பதித்து வைத்திருக்கிறார்கள். அங்கிருந்த நாற்காலி ஒன்றையும் இங்குள்ள ஒரு சுவரில் மாட்டி வைத்திருக்கிறார்கள். மால் ஆஃப் அமெரிக்கா கட்டிடத்தில் மொத்தம் நான்கு தளங்கள் உள்ளன. முதல் தளமான தரைத்தளத்தில் ஏற்கனவே நாம் குறிப்பிட்ட நிக்கலோடியன் யூனிவர்ஸ் விளையாட்டு அரங்கமும், சுற்றிலும் நான்கு பக்கமும் கடைகளும் உள்ளன. இங்கிருக்கும் லெகோ (Lego) கடையில் சிறுவர்கள் உட்கார்ந்து லெகோ விளையாட்டுப் பொருட்கள் கொண்டு விளையாடுவதற்கு வசதி செய்து கொடுத்திருக்கிறார்கள். ஹார்ட் ராக், க்ரேவ் ஆகிய உணவகங்கள் தரைத்தளத்தில் உள்ளன. இரண்டாம் தளத்தில், ஓக்லே ஸ்டோர், ஸ்கெட்சர்ஸ், அவேடா, சன்க்ளாஸ் ஹட் போன்ற ஆடை, அணிகலன்களுக்கான கடைகள் உள்ளன. மேசிஸ், சியர்ஸ் போன்ற பெரும் நிறுவனங்களின் பேரங்காடிகள் பல தளங்களுக்குப் பரந்து இருக்கின்றன. மூன்றாவது தளம், உணவுக்கான தளம். பலவித சாப்பாட்டுக் கடைகள் இருக்கின்றன. பஃபலோ வைல்ட் விங்க்ஸ், கிரேவ், ரெயின் பாரஸ்ட் கபே போன்ற சாவகாச உணவகங்களும், சிப்போட்லே, பர்கர் கிங், நூடுல்ஸ் & கம்பெனி உள்ளிட்ட துரித உணவகங்களும் பல இங்குக் கடை விரித்திருக்கிறார்கள். முன்பே சொன்னது போல், ஒருநாள் முழுக்க இருந்து, விதவிதமாகச் சாப்பிட்டு விட்டுச் செல்லலாம். மற்றபடி, நடக்கும் வழியெங்கும் அனைத்து தளங்களிலுமே, கரிபோ, ஸ்டார் பக்ஸ் போன்ற காபிக்கடைகள் இருக்கின்றன. நான்காவது, ஸ்மாஷ் என்ற விர்சுவல் ரியாலிட்டி விளையாட்டு அரங்கம். இந்திய பூர்வீகத்தைக் கொண்ட நிறுவனம். மற்ற தளங்களை ஒப்பிடுகையில், இங்கு நான்காவது தளம் கொஞ்சம் குறைந்த ஜன நடமாட்டத்துடன் தான் இருக்கும். முன்பு, சில தியேட்டர்கள் இருந்தன. இப்போது அவை மூடப்பட்டு, விளையாட்டுத் தளமும், சில உணவகங்கள் மட்டுமே உள்ளன. மக்கள் அதிகம் சுற்றிக் கொண்டு இருப்பது, முதல் தளத்திலும், மூன்றாம் தளத்திலும் தான். பறக்கும் அனுபவம் (Flyover America), வண்ண அனுபவம் (Crayalo Experience), ஒளி அனுபவம் (Universe of Light) என இன்னும் பார்க்க இங்கு இருக்கின்றன. விருப்பத்திற்கேற்ப ஒரு ரவுண்ட் சென்று வரலாம். இந்த மால் ஊரில் சரியான இடத்தில் அமைந்திருக்கிறது எனக் கூறலாம். மினியாபொலிஸிற்குத் தெற்கே இருக்கும் ப்ளுமிங்டன் பகுதியில் இந்த மால் இருக்கிறது. மினியாபொலிஸ் டவுண்டவுன், செயின்ட் பால் டவுண்டவுன் இரண்டுக்குமே சம தொலைவில் அமைந்துள்ளது. இதற்கெனத் தனியாகவே பகுதி இலக்க எண் (Zip Code) தபால் துறையால் அளிக்கப்பட்டிருப்பதாகக் கூறுவர்கள். ஆனால், அது அப்படியல்ல. இந்த எண்ணில் அருகே இருக்கும் பிற பகுதிகளும் அடக்கம். நகருக்குள்ளேயே இந்த மால் இருப்பதால், சென்று வருவது சுலபம். பஸ் வசதி, ரயில் வசதி இரண்டும் உள்ளன. பக்கத்தில் தான் ஏர்போர்ட் என்பதால், ப்ளைட்டில் வந்து கூட இறங்கலாம். டவுன்டவுனில் இருந்தும், ஏர்போர்ட்டில் இருந்தும், மாலுக்கு நேரடியாகச் செல்ல ரயில் இருக்கிறது. இவையனைத்திற்கும் மேல், காரில் சென்றால் பார்க் செய்வதற்கு 12000+ இடங்கள் உள்ளன. பார்க் செய்த தளம் மறந்து விடக் கூடாது என்பதற்காக, ஒவ்வொரு தளத்திற்கு ஒவ்வொரு அமெரிக்க மாகாணத்தின் பெயரைச் சூட்டியுள்ளார்கள். மால் ஆஃப் அமெரிக்காவிற்குப் பக்கத்தில் தான் ஐக்கியாயும் (IKEA), வாட்டர் பார்க் ஆஃப் அமெரிக்காவும் (Water Park of America) அமைந்துள்ளன. தற்சமயம், வாட்டர் பார்க் ஆஃப் அமெரிக்கா சீரமைப்பு வேலைகளுக்காக மூடப்பட்டுள்ளது. ஒரே மாதிரி பெயர் இருந்தாலும், இதற்கும் மால் ஆஃப் அமெரிக்காவிற்கும் எந்தச் சம்பந்தமுமில்லை. ஒவ்வொரு ஊரிலும் ஆங்கிலப் புத்தாண்டுக்கு மக்கள் ஏதேனும் இடத்தில் ஒன்று சேர்ந்துக் கொண்டாடுவது உலக மரபாகிவிட்டது. புத்தாண்டு சமயம் குளிர் உச்சத்தில் இருப்பதால், மினசோட்டாவாசிகளுக்குத் திறந்த வெளியில் புத்தாண்டு கொண்டாடுவது சிரமமான விஷயம். வருடத்தின் முதல் நாளிலேயே அவ்வளவு சிரமத்தை அனுபவிக்கக் கூடாதல்லவா? அதனால் மக்கள் பெரும் திரளாக இந்த மாலுக்குப் படையெடுத்து விடுவார்கள். வருட இறுதி நாளின் மாலையில் இருந்தே சேரத் தொடங்கும் கூட்டம், நடுராத்திரி வரை இங்கேயே உலாவுவார்கள். விளையாடுவார்கள். உண்பார்கள். பனிரெண்டு மணிக்கு முன்பாக மாலின் மத்திய பகுதி ஒன்றில் கவுண்ட் டவுன் தொடங்கப்பட்டு மின்னணுப் பலகையில் ஒளிரத் தொடங்க, மக்கள் அனைவரும் இங்கு சங்கமிக்கத் தொடங்குவார்கள். பனிரெண்டு மணிக்குக் கவுண்ட் டவுன் இறுதியில் பலமான இசைச் சத்தத்துடன் மக்கள் ஆரவாரத்துடன் ஆடத் தொடங்குவார்கள். அப்படியே அரை மணி நேரம் கூட்ட நெரிசலில் ஆடிக் களைத்து, உறங்க வீட்டிற்குக் கலைந்துச் செல்வார்கள். இப்படி மினசோட்டாவாசிகள் பலரின் வருடப் பிறப்பு இங்கு தான் தொடங்கும். வருடப் பிறப்பில் முதலில் இந்த மால் தரிசனம். பிறகு தான், மற்ற ஆலய தரிசனமெல்லாம். வருடத்திற்கு வருகை தரும் 40 மில்லியன் விருந்தினர்களில், 40 சதவிகிதம் வெளியூர்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் தான் இங்கு வருகிறார்கள். இது மினசோட்டாவின் “டோண்ட் மிஸ்” இடமாக இருப்பதில் ஆச்சரியமேதுமில்லை. http://www.panippookkal.com/ithazh/archives/12389
  3. ஐபியால் உருவாக்கப்படும் போலித் தீவிரவாதிகள்! ஐ.பி! * நம் நாட்டின் எல்லைப்புறப் பாதுகாப்புக்கு ஏதேனும் ஆபத்து உள்ளதா? * புதிதாகப் பதவியேற்கும் அரசியல் பிரமுகர்கள், நீதிபதிகள் ஆகியோரின் பின்னணியில் ஐயத்திற்கிடமாக ஏதும் இருக்கிறதா? * முக்கிய அரசியல் தலைவர்களது பாதுகாப்புக்கு பங்கம் விளையக் கூடிய சாத்தியம் நிலவுகிறதா? * உள்நாட்டில் தீவிரவாதம்/குழப்பம் உருவாகக் கூடிய சாத்தியமுள்ள இடங்கள், சூழ்நிலைகள் யாவை? ஆகியவை குறித்துத் தகவல்கள் சேகரிப்பது ஐபி என்று சுருக்கி அழைக்கப் படும் இண்டெலிஜென்ஸ் ப்யூரோ (Intelligence Bureau) ஏஜென்ஸியின் வெளிப்படையான நடவடிக்கைகளாகும். ஆனால், இந்திய உளவுத்துறைக்குத் தகவல் சேகரித்து அனுப்பும் நிறுவனமான இந்த இரண்டெழுத்து நினைத்தால் தனியொரு மனிதனுடைய வாழ்க்கையைத் தடம் புரள வைக்கலாம்; வளர்ந்து வரும் ஓர் அமைப்பு/கட்சியை இரண்டாக உடைக்கலாம்; மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட ஓர் ஆட்சியைக் கலைத்து விடலாம்; இல்லாத ஒரு கருத்துருவாக்கத்தைச் செய்து, அதுதான் இயல்பான உண்மை என்பதுபோல் மக்கள் மத்தியில் உலா விடலாம். இவற்றுள் எதையும் யாரும் கேள்வி கேட்க முடியாது; ஏனெனில் இவற்றையெல்லாம் செய்வது யார் என்று வெளிப்படையாகத் தெரிந்து கொள்வது அத்துணை எளிதன்று. இன்றைக்கு விடுதலைப் புலிகளை ஆதரிப்பதில் அடக்கி வாசிக்கும் முதல்வர் கருணாநிதியின் தி.மு.க. அரசு 1990இல் கலைக்கப் பட்டதன் பின்னணியில் இருந்தது ஐபிதான். அனைத்து அரசு இயந்திரங்களையும் கையில் வைத்துக் கொண்டு அன்றைக்கு(ம்) இயக்கிக் கொண்டு முதல்வர் பதவியிலிருந்த கருணாநிதிக்கே அப்போது இந்த உண்மை தெரியாது! அரசியல் கட்சிகள், அதீத வளர்ச்சியைப் பெறும் சமுதாய அமைப்புகள் அடிக்கடி உடைகின்ற செய்தியைப் படிக்கும்போது, தலைவர்களுக்கிடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு என்றுதான் சாதாரண மக்கள் நினைப்பார்கள். ஆனால், அத்தனை கருத்து வேறுபாடுகளையும் உருவாக்கும் கைங்கரியத்தை ஐபி செய்யும் இரகசியம் வெளியே யாருக்கும் தெரியாது. உயர் மட்டத் தலைவர்கள் காதில் ஊதப் படும் செய்திகளை உருவாக்குவது மட்டுமின்றி, 'ஆசிரியருக்குக் கடிதம்' எழுதுவதுவரை அத்தனை சேவை(!)களையும் செய்பவர்கள் ஐபியின் ஐப்பீஎஸ் ஆஃபிஸர்கள் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? ஐபி உருவாக்குவது போலிக் கருத்துருவாக்கங்கள் மட்டுமல்ல; போலித் தீவிரவாதிகளையும்தான் என்பதே சான்றுகளால் நிறுவப் பட்ட இத்தலையங்கத்தின் கரு. அது, இறுதியில் சொல்லப் பட்டுள்ளது. ஐபி என்ற புலிவாலைப் பிடித்தவர்களைப் பற்றிச் சொல்வதற்கு முன்னர் கொஞ்சம் கேரளாவும் காஷ்மீரும் ... "கஷ்மீரில் இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவர்களில் மலையாளிகளும் அடக்கம் என்பதை அடிப்படையாகக் கொண்டு அரசும் காவல்துறையும் கேரளத்தில் நடத்திக் கொண்டிருக்கும் காட்டு தர்பார், முஸ்லிம்களுக்கு எதிரான திட்டமிட்ட சதியாகும்" எனப் பிரபல கவிஞர் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு தேஜஸ் மலையாள நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். "இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் வெறுக்கப் பட்டவர்களாக காண்பிக்க வேண்டும் என்பதே அவர்களது இலட்சியம்" என்றும் அவர் குறிப்பிட்டார். "நெருங்கி வரும் பாராளுமன்றத் தேர்தலில் இலாபம் அடைய இந்த என்கவுண்டரைப் பயன் படுத்திக் கொள்வதற்கு இடதுசாரிகளும் சங் பரிவாரமும் முயல்கின்றன. கஷ்மீரில் தீவிரவாதச் செயல்பாடுகளுக்காகச் சென்றவர்களுள் பணம் கொடுத்தால் என்ன வேண்டுமானாலும் செய்வதற்குக் கூச்சப் படாத கொச்சியிலுள்ள கிரிமினல் குண்டர் குழுவில் இருந்த சிலரும் அடக்கம் என்பதே தற்பொழுது வெளியாகி இருக்கும் தகவல்களாகும். இதிலிருந்து தெளிவான திட்டத்துடன் பணம் கொடுத்து, ஏதோ ஓர் ஏஜன்ஸி குற்றப்பின்னணியுடைய மலையாளி இளைஞர்களைத் தீவிரவாதச் செயல்பாடுகளுக்காக உருவாக்குகின்றது என்பது தெளிவாகின்றது. இந்த ஏஜன்ஸி, அரசின் ஐபியோ சங் பரிவார தனி அமைப்புகளோ காஷ்மீர் அமைப்புகளோ எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். முஸ்லிம்கள் மீதும் இஸ்லாத்தின் மீதுமுள்ள நல்லெண்ணத்தைத் தகர்த்தால் அதன் பலனை அடைந்து கொள்வது ஆர்.எஸ்.எஸ்ஸாகும். முஸ்லிம்கள் இந்தியாவிற்கு எதிரானவர்கள் என்ற எண்ணத்தை மக்களிடையே உருவாக்குவதே இவர்களின் இலட்சியமாகும். இக்காரணத்தினாலேயே இச்சம்பவங்களின் பின்னணியில் செயல்படுபவர்களாக நான் அவர்களைச் சந்தேகிக்கிறேன். இந்தியாவில் ஐபியே நேரடியாகக் குண்டுவெடிப்புகளை நடத்தியுள்ளது விசாரணைகளில் தெளிவாகியுள்ளது. ஜாமிஆ சம்பவத்தில்காவல்துறையின் பொய்முகம் தற்பொழுது வெளிச்சத்துக்கு வந்து விட்டதே?. 'ஃபாயிஸின் தாய் தேச விரோதியான மகனின் உடலைக்கூடப் பார்க்க மறுத்ததைப் பலரும் பெரிய தேசப்பற்றாக உயர்த்திக் காட்டுகின்றனர். பிறந்த ஊரில் இன்னும் கொஞ்ச காலம் வாழ வேண்டிய கட்டாயத்திலுள்ள எளிய தாயொருத்தி, நிர்பந்திக்கப் பட்டச் சூழலில் கூறிய வாசகங்களாகும் அவை. கஷ்டப்பட்டுப் பெற்ற எந்த ஒரு தாயும் தன் மகனைப் பற்றி மனப்பூர்வமாக இவ்விதம் கூறமாட்டாள். நேற்று வரை கிறிஸ்தவனாகவும் ரவுடியாகவும் வாழ்க்கை நடத்திய வர்கீஸ், திடீரென யாசிராக மாறி கஷ்மீரில் கொல்லப்பட்ட உடன், அதன் முழுப் பொறுப்பையும் இஸ்லாம் ஏற்றெடுக்க வேண்டும் எனக் கூறுவது சரியல்ல. கொச்சியில் தம்மனம் ஷாஜி உட்பட எல்லா குண்டர்களும் கஷ்மீரில் என்றல்ல, எங்கு போய்க் கொல்லப்பட்டாலும் மக்களிடையே எவ்வித எதிர்ப்புகளும் உருவாகப் போவதில்லை. கிரிமினல்களை மதம் மாற்றி, தீவிரவாதச் செயல்பாடுகளில் பங்கு கொள்ள வைத்து, ஒரு மதத்துக்குக் களங்கம் உண்டாக்குவதற்கானக் கூட்டுசதி வரை நடக்கலாம் என நான் சந்தேகப் படுகிறேன். காவல்துறையும் ஊடகங்களும் கூறுவது எதையும் நாம் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டிய கட்டாயமில்லை. காவல்துறையும் ஊடகங்களும், "மஅதனி சிறையிலிருந்து வெளியானால் நாட்டில் கலவரம் உருவாகும்" என அச்சுறுத்தி வந்தனர். பின்னர் அது என்ன ஆனது?" என்று பாலசந்திரன் கேள்வி எழுப்பினார். "கஷ்மீரில் சுட்டுக்கொல்லப்பட்ட கேரள முஸ்லிம்களை, காஷ்மீருக்குக் கடத்திக் கொண்டு போய்ச் சேர்த்ததன் பின்னணியில் ஐபி செயல்பட்டுள்ளது" என்றும் "இது நாட்டில் முஸ்லிம்களை அழித்தொழிப்பதற்கான திட்டமிட்ட சதியின் ஒரு பகுதி" என்றும் இந்திய தேசிய லீக்கின் அகில இந்தியத் தலைவர் பேரா. முஹம்மது சுலைமான் குற்றம் சாட்டியுள்ளார். "சிறிய கிரிமினல் வழக்குகளில் தொடர்புடையவர்கள் மீது தேசத் துரோகக் குற்றம் சுமத்திச் சிறை வைப்பதும் சுட்டுக் கொல்வதும் தொடர்கிறது. போலித் தீவிரவாதிகள் உருவாக்கப் படுகின்றனர். பின்னர், தாக்குதலில் 'முஸ்லிம் தீவிரவாதி'கள் கொல்லப்பட்டதாகச் செய்தி வருகிறது. முஸ்லிம் தீவிரவாதத்திற்கு எதிரான தங்களின் பிரச்சாரங்கள் சரியானவைதாம் என்ற கருத்துருவாக்கத்தை மக்களிடையே திணிப்பதற்காகக் காவல்துறையும் இராணுவமும் இணைந்து என்கவுண்டர் நாடகங்களை நடத்தி வருகின்றனர். நாட்டில் மதசார்பின்மையையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டிய உளவுத்துறைகூட, மக்களிடையே அச்சத்தையும் மனக் கலவரத்தையும் விதைத்து, நாட்டின் அமைதியைக் குலைக்க முயல்கின்றது. காஷ்மீருக்குக் கேரளத்திலிருந்து இளைஞர்களைக் கடத்தி, அங்கு வைத்து அவர்களைச் சுட்டுக் கொன்றதன் பின்னணியில் ஐபிதான் செயல்பட்டுள்ளது" எனக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்கக் கேரளத்திற்கு வந்த பேரா. முஹம்மது சுலைமான் செய்தியாளர்களிடம் கூறினார். தீவிரவாதத்திற்கு எதிரான போராட்டத்திற்கு மக்களுடைய ஆதரவைத் திரட்ட, காவல்துறையும் ஹிந்துத்துவ சக்திகளும் இணைந்து போலித் தீவிரவாதிகளை உருவாக்குகின்றன என்பதற்கான தெளிவான ஆதாரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. கதை-வசனம், தயாரிப்பு, டைரக்ஷன் என்பது நாடகம்/திரைப்படங்களுக்கு மட்டும் சொந்தமானவையல்ல; அவை ஐபிக்கும் சொந்தமானவைதாம் என்பது வெள்ளிடை மலையாகி விட்டது. டெல்லி காவல்துறையின் ஸ்பெஷல் செல் மற்றும் மத்திய உளவுத்துறையின் இன்டலிஜன்ஸ் பியூரோ (ஐபி) என்றழைக்கப் படும் நுண்பிரிவு ஆகியவற்றால், "இன்ஃபார்மர்" என்று செல்லப் பெயரால் அழைக்கப் படும் உளவாளியாக நீண்ட காலம் புலிவாலைப் பிடித்த கதையாகச் செயல்பட்ட இர்ஷாத் அலி என்பவர் திகார் சிறையிலிருந்து பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அனுப்பியக் கடிதத்தில் இது தொடர்பான அதிர்ச்சி அளிக்கக்கூடிய பல தகவல்கள் அடங்கியுள்ளன. காஷ்மீரில் இயங்கும் லஷ்கரே தொய்பாவில் சேர்ந்து கொள்வதற்கும் பாகிஸ்தான் எல்லையில் அதற்கான பயிற்சி மையத்தில் இணைவதற்கும் கட்டாயப் படுத்திய ஐபியின் கட்டளைகளுக்கு இணங்காததால் இர்ஷாத் அலி என்பவரும் அவரின் நண்பர் நவாப் கமர் என்பவரும் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஐபிக்கு உதவா விட்டால் தங்களது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்ற அச்சத்துடன் நீண்ட நாள்களாக ஐபியின் உளவாளிகளாகச் செயல்பட்ட அவ்விருவரும் சிறையில் தள்ளப் பட்டதற்கான காரணம், ஐபியின் சதிக்குத் தற்போது அவ்விருவரும் இணங்க மறுத்ததுதான் என அவர்களின் வழக்கறிஞரான சுஃப்யான் சித்தீக் கூறுகிறார். இர்ஷாதுக்கு ஐபியால் அன்பளிப்பு(!)ச் செய்யப் பட்ட 9873303646 என்ற மொபைலுக்கு ஐபியின் அலுவலகத் தொலைபேசியில் இருந்து 56 முறை ஓர் ஐபி அதிகாரி தொலைபேசியுள்ளதன் மூலம் இர்ஷாத் அலியும் கமரும் ஐபியின் இன்ஃபார்மர்களாகச் செயல் பட்டவர்கள்தாம் என்பதையும் சிபிஐ உறுதி செய்துள்ளது. இரு இன்ஃபர்மர்களோடும் தொடர்பிலிருந்த ஐபி ஆஃபிஸர்கள்: பெயர் மொபைல் சஞ்சீவ் யாதவ் 9810058002 லலித் மோகன் 9811980604 ஹர்தேவ் பூஷான் 9811980601 மாஜித் (எ) காலித் 9810702004 அஃப்தாப் 9810702004 தங்கள் மீது பொய் வழக்குப் போட்டுத் திகார் சிறையில் அடைத்துள்ளதாகவும் இதுவரை எவ்வித விசாரணையும் இன்றித் தங்களை அடைத்து வைத்துள்ளதாகவும் இதனை விசாரிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தும் பிரதமருக்கு இர்ஷாத் கடிதம் எழுதியுள்ளார். உயர்நீதி மன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து சி.பி.ஐ இது குறித்து விசாரணை நடத்தி வருகிறது. விசாரணையில், ஐபி அதிகாரி முஹம்மது காலித், டெல்லி ஸ்பெஷல் செல்லிலுள்ள லலித், பூஷண் மற்றும் ராஜேந்திரன் ஆகியோர் இணைந்து இர்ஷாதையும் நவாப் கமரையும் கடத்திச் சென்றனர் என்பதைச் சான்றுகளுடன் ஸி.பி.ஐ வெளிக் கொண்டு வந்துள்ளது. நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் நடக்கும் 'தீவிரவாதத் தாக்குதல்'களில் முஸ்லிம் 'தீவிரவாதிகள்' கொல்லப்படுவது எப்படி? என்பதைப் பிரதமருக்கு அனுப்பிய கடிதத்தில் இர்ஷாத் அலி தெளிவு படுத்தியுள்ளார். காவல்துறையின் முக்பிர்(உளவாளி)ஆகச் செயல்பட்ட தனது சொந்த அனுபவத்தை, திகார் சிறையின் 8ஆம் எண் வார்டிலிருந்து விவரிக்கும் இர்ஷாதின் கடித வரிகள்: "இஸ்லாமிய மார்க்க விஷயங்களில் ஓரளவு அறிவுள்ள, தாடியும் தலைப்பாகையும் அணிந்த ஓர் உளவாளி முல்லாவை முஸ்லிம்கள் பெருவாரியாக வசிக்கும் பகுதிகளில் குடியமர்த்துவதே ஐபியின் முதல் நடவடிக்கையாகும். பெரும்பாலும் பள்ளிவாசலின் அண்மையில் உள்ள வாடகைக் கட்டிடங்களிலோ பள்ளிவாசலிலேயோ உளவாளியின் வசிப்பிடம் அமையும். உறுதியான இஸ்லாமிய அடிப்படைகளைப் பேணுவதும் வசீகரிக்கும் படியான அவரது பழக்கவழக்கங்களும் நாட்கள் செல்லச் செல்ல இளைஞர்களை இவரோடு நெருங்க வைக்கும். அவர்களுள் உறுதியானவரும் மிகுந்த நம்பிக்கையாளருமான இளைஞர்களையே முல்லா குறி வைப்பார். தம்மிடம் நெருங்கிப் பழகும் இளைஞர்களிடம், "இந்திய முஸ்லிம்களின் பரிதாபகரமான நிலைமைக்கு ஜிஹாத் மட்டுமே ஒரே தீர்வு" என்று கொஞ்சம் கொஞ்சமாக அவர்களுக்கு வெறியூட்டுவார். தன்னோடு தொடர்ந்த தொடர்பிலிருப்பவர்களுள் நம்பிக்கையானர்வகளிடம், தான் ஒரு லஷ்கரே தொய்பா கமாண்டர் என்று மெதுவாக உளவாளி முல்லா அறிமுகம் செய்து கொள்வார். ஐபி சொல்லிக் கொடுத்தபடி அவர்களுக்குச் சிறிய அளவிலான ஆயுதப் பயிற்சியும் வெடிகுண்டுகள் தயாரிப்பதற்கான வழிமுறைகளையும் அவர் கற்றுக் கொடுப்பார். அதற்குத் தேவையான ஆர்.டி.எக்ஸ் வெடிபொருட்களையும் உபகரணங்களையும் ஐபியே ஏற்பாடு செய்யும். அதன் பின்னர், யாராவது ஒருவரை அல்லது கோயில் போன்ற பொது இடத்தை இலக்காக்கித் தாக்குவதற்கான திட்டத்தை ஐபியின் உத்தரவுப்படி ஐபி உளவாளி முல்லா தயாராக்குவார். முன்னரே தீர்மானித்தபடி சம்பவ இடத்திற்கு முல்லா மூலம் ஐபி வழங்கிய ஆயுதங்களுடன் வரும் இளைஞர்களை, ஐபி உளவாளி முல்லா ஏற்கனவே கொடுத்த தகவலின் அடிப்படையில் அங்கு மறைவாகக் காத்திருக்கும் காவல்துறை, ஐபியின் திட்டப்படி உருவாக்கப் பட்ட இளைஞர்களைச் சுற்றி வளைத்துக் கைது செய்யும்; அல்லது தாக்குதலில் தீர்த்துக் கட்டும். இதற்குப் பின்னணியில் செயல்பட்ட முல்லாவைக் குறித்து, அதன் பின்னர் எவ்வித விவரங்களும் வெளியாவதில்லை" என இர்ஷாத் அலி தனது கடிதத்தில் கூறுகிறார். 'ஆபரேஷன் முல்லா' மூலம் கைது செய்யப்படும் இளைஞர்களை மறைமுகமாக வைக்க, டெல்லி காவல்துறைக்கு விசாலமான 'ஃபாம் ஹவுஸ்கள்' உண்டு. மனித உரிமை கமிஷன்கள் எதுவும் அந்தப் பக்கம் தலை காட்ட முடியாது. பொய் என்கவுண்டர்களில் கொல்லப் படுபவர்களின் உடல்களைப் பாதுகாப்பதும் அங்குத்தான். மாதக்கணக்கில் சில 'கைதிகள்' அங்குக் காக்க வைக்கப் பட்டு, தேவைப்படும் வேளைகளில் கொலை செய்யப் படுவர். பின்னர் மீண்டும் ஒரு என்கவுண்டர் நாடகம் மூலம் அவர்களது உடல்கள் மீண்டும் அவ்விடத்திற்கே கொண்டு வரப்படும். இவ்வாறு கொல்லப் படுபவர்களின் உடல்களைப் பொதுமக்கள் முன்னிலையில் பார்வைக்கு வைக்கக் காவல்துறையோ ஊடகங்களோ முயல மாட்டார்கள். அவர்களின் தாய், தந்தையரோ, தங்களுக்கே தெரியாமல் திடீர்த் 'தீவிரவாதி' ஆகிபோன மகனின் உடலைப் பெற்றுக்கொள்வதற்கு முன்வர மாட்டார்கள். 'முஸ்லிம் தீவிரவாத'த்தைக் குறித்தத் தங்களின் பிரச்சாரம் சரிதான் என்பதை நிறுவுவதற்குக் காவல்துறை செய்து கொண்டிருக்கும் சதிகளில் தங்களுக்கும் பங்குண்டு என்பதால் இவ்விவரங்களை வெளி உலகத்திற்குத் தெரிவிப்பது தங்களின் கடமை என்பதை உணர்ந்ததுதான் இக்கடிதம் எழுதுவதற்கான காரணம் எனப் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் இர்ஷாத் அலி குறிப்பிட்டுள்ளார். "நமது நாட்டின் பாதுகாப்பு ஏஜன்ஸிகள் நாட்டைப் பதுகாப்பதற்கு மாறாக, மக்களின் மனங்களில் கலவரத்தையும் அச்சத்தையும் விதைத்து, குழப்பத்தையே உருவாக்குகின்றன. தீயைக் கொண்டு தீயை அணைக்க இயலாது. தீயை அணைப்பதற்குத் தேவை தண்ணீர்தான். ஆனால், நமது பாதுகாப்பு ஏஜன்ஸிகள், பெட்ரோல் ஊற்றித் தீயை அணைக்க முயல்கின்றன" - எனக் குறிப்பிட்டிருப்பதோடு, தங்களின் விஷயத்தில் தலையிட்டு, நியாயமான விசாரணை நடத்தி, நீதி வழங்க வேண்டும் எனப் பிரதமருக்கு அனுப்பிய கடிதத்தில் இர்ஷாத் அலி கோரிக்கை வைத்துள்ளார். *** புலி வாலைப் பிடித்த கதையாக, உருவாக்கப் படும் உளவாளிகளால் ஒரு காலகட்டத்துக்குமேல் அதிகப் பயனேதுமில்லை என்று அறிய வரும்பொழுதோ தாங்கள் செய்யும் சட்டவிரோதத் செயல்கள் உளவாளி இன்ஃபார்மர்கள் வழியாக வெளியாக வாய்ப்புள்ளது எனத் தெரிய வரும்போதோ உளவாளிகள் காவல்துறையினால் 'தீவிரவாதிகளாக' மாற்றப்பட்டு என்கவுண்டர் மூலம் கொல்லப்படுவர்; அல்லது சிறையில் அடைக்கப்பட்டு, சித்திரவதை செய்யப் படுவர் என்பதற்கு அண்மையில் கஷ்மீரில் சுட்டுக் கொல்லப்பட்ட கிரிமினல் வழக்குகளில் தொடர்புடைய கேரளாவைச் சேர்ந்த நான்கு இளைஞர்களும் பாராளுமன்றத் தாக்குதலில் தொடர்புடையவராக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அஃப்சல் குருவும் திகார் சிறையிலிருந்து பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ள இர்ஷாத் அலியும் அவரது கூட்டாளியும் மிகச் சிறந்த உதாரணங்களாவர். தென்காசி, நான்டட், கான்பூர், மாலேகோன், கண்ணூர் என "தேசப்பற்றாளர்கள் முகமூடி" அணிந்து உல்லாசமாக உலாவந்த இந்துத் தீவிரவாதிகளின் பொய் முகங்களும் இந்துத் தீவிரவாதமும் ஒவ்வொன்றாக வெளிச்சத்துக்கு வந்து கொண்டிருக்கும் வேளையில்..... நாட்டில் தீவிரவாதமாம்; காரணம் முஸ்லிம் தீவிரவாதிகளாம்!அசத்துகிறது ஐபி! ஜெய் ஹிந்த்! நன்றி: சத்தியமார்க்கம் இணையதளம்
  4. 6 முதல் 9 வாய்பாடு, விரல்கள் மூலம் சுலபமாக கற்பித்தல்..
  5. சுகன்;ரகு மற்றும் சகாறாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  6. சிறுநீர்? ஒண்ணுக்கு வந்தா அடக்காதீங்க! – சிறுநீரக தொற்றுகளும் தீர்வுகளும் ஷாப்பிங், சினிமா, கோயில், குடும்பவிழாக்கள். என்று மணிக்கணக்கில் நீளும் நிகழ்வுகளுக்காக செல்லும் போது, சிறுநீர் கழிப்பதைத் தவிர்ப்பது, பெண்களில் பலருக்கும் வழக்கமாகவே இருக்கிறது. ‘பாத்ரூம் சரியில்லை …’, ‘நேரமே இல்லை…’, ‘பாத்ரூமே இல்லை… ரோட்டுலயா போக முடியும்?’ என்பது போன்ற கேள்விகளைத் தங்கள் தரப்பு நியாயங்களாக எழுப்பி, தங்களை சமாதானப்படுத்திக்கொள்ளவும் இவர்கள் தவறுவதில்லை. இவர்களில் நீங்களும் ஒருவரா? “இத்தகைய போக்கு, மிகப்பெரிய ஆபத்தை நோக்கி உங்களை இழுத்துச் சென்றுவிடும்” என்று உங்களை நோக்கி எச்சரிக்கை மணி அடிக்கிறார். சென்னை, ராமச்சந்திரா மருத்துவமனையின் சிறுநீரகத்துறை தலைமை மருத்துவப் பேராசிரியர் Dr. பி.சௌந்தர ராஜன். ”சிறுநீரக நோய்த்தொற்று என்பது ஆண்களைவிட பெண்களுக்கு 20 சதவிகிதம் வாய்ப்பு அதிகம். இதற்கு முக்கியக் காரணம், வெளியிடங்களு க்குச் செல்லும் போது சிறுநீரை வெளியேற்றாமல் அடக்கிக்கொள்ளும் பழக்கம்தான்!” என்று சொல்லும் டாக்டர், சிறுநீர் பிரச்சனை ஏற்படுவதற்கான காரணங்கள், முக்கியமாகப் பாதிக்கப்படு பவர்கள், தவிர்ப்பதற்கான வழிகள், தினமும் குடிக்க வேண்டிய நீரின் அளவு, சிறுநீரகத் தொற்று நீக்கும் உணவு வகைகள், இன்னும் பல விழிப்பு உணர்வுத் தகவல்கள் எனத் தொடர்ந்தார். ஆரோக்கியத்தின் முதல் படி… சீரான சிறுநீர் வெளியேற்றம்! ”உடல் ஆரோக்கியத்துக்கான முக்கியமான இயக்கங்களில் ஒன்று, இயல்பாக சிறுநீர் கழிப்பது. உடம்புக்குத் தேவையான நீர் எடுத்துக் கொள்ளப்பட்ட பிறகு, உடற்கழிவுகளுட ன் வெளியேறும் மீதமுள்ள நீர்தான் சிறு நீர். தினமும் தேவையான அளவு நீர் குடிப்பதும், சிறுநீர் கழிப்பதற்கான உணர்வு ஏற்பட்டவுடன் தக்கவைக்காமல் வெளியேற்றுவதும் ஆரோக்கியத்தின் முதல் படி. வெளியேற்றாமல் தேக்கும்போது, சிறுநீர்ப்பையின் கொள்ளளவையும் மீறிய சுமையை அது தாங்க வேண்டி வரும். இதையே தொடர்ந்து செய்யும்போது, சிறுநீரகத் தொற்று ஏற்பட்டு, சிறுநீரகச் செயலிழப்பு வரை பிரச்னைகள் வரிசை கட்டும். எனவே, சிறுநீர் வந்தால் உடனடியாகக் கழிக்க வேண்டியது அவசியம். எவ்வளவு தண்ணீர் குடிக்கவேண்டும்? கோடை காலத்தில் ஒரு நாளைக்கு 3 லிட்டர் தண்ணீரும், மற்ற பருவநிலைக் காலங்களில் 2 லிட்டர் தண்ணீரும் போதுமானது. குடிநீரைத் தவிர, பால், பழச்சாறு, காய்கறி போன்றவற்றில் இருந்தும் உடலுக்குத் தேவையான நீர்கிடைத்து விடும். அதேசமயம், தேவைக்கு அதிகமாகத் தண்ணீர் குடிப்பதும் பிரச்னையே! ஏ.சி. அறையில் இருப்பவர்கள், ஏ. சி. வாகனங்களில் தொடர்ந்து பயணிப்பவர்களுக்கு தாகம் எடுக்காமல் இருக்கலாம். என்றாலும், ஒரு நாளைக்கு குறைந்தது ஒன்று முதல் 2 லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும். தாகம் எடுப்பதன் காரணமாக இந்த அளவை விட கூடுதலாகத் தண்ணீர் குடிப்பதில் தவறில்லை. ஆனால், தண்ணீர் குடிப்பது நல்லது என்று பிறர் சொல்வதற்காக இஷ்டம்போல குடிப்பதுநல்லதல்ல. இப்படிக் குடிப்பது, சிறுநீரகத்துக்கு கூடுதல் பளு தருவதாகத்தான் அமையும். கூடவே, இதயம் பழுதானவர்கள் மருத்துவர் பரிந்துரைத்ததற்கும் அதிகமாகக் கண்டிப்பாக தண்ணீர்குடிக்கக்கூடாது. இதன் காரணமாக இதயமானது ரத்தத்தை சரிவர ‘பம்ப்’ செய்ய முடியாமல் போகும். அதேபோல, சிறுநீரகம் பாதிக்கப்பட்டவர்களும், கல்லீரல் நோயாளி களும் அதிகமாகத் தண்ணீர் குடிக்கக் கூடாது. சிறுநீரகத்தில் கல் உள்ளவர்கள் அதிகமாகத் தண்ணீர் குடிக்கும் போது அது கற்களைக் கரைத்து வெளியேற்றும் என்பதால், அவர்களை மட்டும் மருத்துவர்கள் அதிக நீர் அருந்தச் சொல்வோம். சிறுநீர்த் தொற்று ஏற்பட காரணங்கள்! தேவையான அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பது, சிறுநீரை அடக்குவது, சுகாதாரமற்ற கழிப்பறையைப் பயன்படுத்துவது, மரபு, சுய சுத்தமின்மை, தாம்பத்யம் … என்று பல காரணங்களால் சிறு நீர்த் தொற்று ஏற் படக்கூடும். சாதாரணமாக ‘யூரினரி இன்ஃபெக்‌ஷன்’ என்று இதைச் சொல்லி, எளிதாகக் கடப்பதுதான் வழக்கமாக இருக்கிறது. இதைக் கவனிக்காமல் விட்டால் அடுத்தடுத்து வரிசை கட்டும் பிரச்சனைகளின் பட்டியல் நீளும். நீர்க்கடுப்பாக ஆரம்பித்து, அடிக்கடி சிறுநீர் வெளியேற்றும் உணர்வு, சொட்டு சொட்டாக சிறுநீர் வெளியேறுவது, சிறுநீர் வெளியேறும்போது தாங்க முடியா த வலி மற்றும் எரிச்சல், முதுகு வலி, சிறுநீரகத்தில் நோய்த் தொற்று ஏற்படுத்தும் கிருமிகள் உற்பத்தியாவது வரை கலங்கவைக்கும். கர்ப்பிணிப் பெண்கள், நீரிழிவு நோயாளிகள், முதியவர்களுக்கு சிறுநீர்த் தொற்று ஏற்பட்டால் அது சீரியஸ் பிரச்னை என்பதை உணர வேண்டும். கர்ப்பகாலத்தில் தாய் சிறுநீரகப் பிரச்சனை யால் பாதிக்கப்பட்டால், குழந்தைக்கும் அந்த பாதிப்பு ஏற்படலாம்… ஜாக்கிரதை! சிறுவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி இருக்கும் என்பதால், சிறுநீர்த் தொற்று ஏற்பட்டாலும் பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. ஆனால், 5 – 15 வயது வரை மீண்டும் மீண்டும் சிறுநீர்த் தொற்றால் பாதிக்கப்பட்டால், மருத்துவ ஆலோசனை நிச்சயம் பெற வேண்டும். குறிப்பாக, ஆண் குழந்தைகள். நீரிழிவு நோயாளிகள், சிறுநீரக மாற் று அறுவைசிகிச்சை மேற்கொண்டவர்களுக்கு இந்தப் பிரச்னை தீவிரமாக இருக்கும். யூரிக் ஆசிட் உள்ள உணவுப் பொருட்களான இறைச்சி, பீர், வொயின் போன்றவற்றை அதிகளவில் எடுத்துக் கொள்ளும்போது, சிறுநீர்ப் பிரச்னைக்கான வாய்ப்பை அது அதிகரிக்கும். சிறுநீர்த் தொற்றைத் தவிர்க்க! சிறுநீர் வெளியேற்றுவதற்கான உணர்வு ஏற்பட்ட பின்னும் சிறு நீரை அடக்கக் கூடாது. நன்றாக கை கழுவுவது மிகமிக முக்கியம். குழந்தைகளுக்கு நகம் வெட்டக் கற்றுக்கொடுக்க வேண்டும். மாதவிடாய் காலங்களில் நாளொன்றுக்கு இரண்டு எனும் வகையில் நாப்கினை சுகா தாரமாக பயன்படுத்த வேண்டும். தாம்பத்யத்துக்குப்பிறகு, பிறப்புறுப்பை நன்கு சுத்தம் செய்ய வேண்டும். சிறுநீர் கழிப்பதில் பிரச்சனை எனில், உடனே மருத்துவரை அணுக வேண்டும். தேவையான சிகிச்சையுடன் சிறுநீர் பெருக்கி உணவு வகைகளான சுரைக்காய், முள்ளங்கி, வாழைத்தண்டு, வெள்ளரி, தர்பூசணி இவற்றை எல்லாம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக, கிரேன்பெரி ஜூஸ் (cranberry juice) நல்ல பலன் தரும். உலகம் முழுக்கவே 150 வருடங்களுக்கு முன் சிறுநீரகப் பிர ச்சனைகளுக்கு இதுவே மருந்தாகப் பயன்பட்டிருக்கிறது”என்று விளக்க ங்களைத் தந்த டாக்டர், ”சிறுநீரகங்கள் தான் நம் உடலின் துப்புரவுத் தொழிற்சாலை. நம் கழிவறையில் பிரச்னை என்றாலோ, பழுதானாலோ, வீடே என்ன கதிக்கு ஆளாகிற து? நம் உடலின் கழிவறையில் பிரச்னை என்றால், உடல் என்னவாகும் யோசித்துப் பாருங்கள்!” என்றுகேட்டார். ‘இதெல்லாம் ஒரு பிரச்னையா?’ என்று நினைக்காமல், இனி ‘நம்பர் ஒன்’ பிரச்னைக்கு கொடுங்கள் நம்பர் ஒன் முக்கியத்துவம்! ________________________________ தினமும் எவ்வளவு தண்ணீர்? கோடை காலத்தில் 3 லிட்டர். மற்ற பருவ காலங்களில் 2 லிட்டர். ஏ.சி. அறை, ஏ.சி. வாகனங்களில் இருப்பவர்கள் 1 2 லிட்டர்(தாகம் எடுக்காவிட்டாலும்) ________________________________ எவ்வளவு சிறுநீர்? ஆரோக்கியமான மனிதன் 4 6 மணி நேரத்துக்கு ஒரு முறை சிறுநீர் கழிக்க வேண்டும். ஒன்றிரண்டு மணி நேரத்து க்கு ஒருமுறை கழித்தால், அது ஃப்ரீக் வன்ஸி என்கிற வகையில் வரும். (அதேசமயம் அதிக குளிர், மழைக்காலங்கள் மற்றும் ஏ.சி. அறை, ஏ.சி. வாகனங்கள் பயன்படுத்தும்போது ஒன்றிரண்டு மணி நேரத் துக்கு ஒரு தடவை வருவதில் தவறில்லை). சிறுநீரக டி.பி, குடி, சிகரெட், முதுமை, சிறுநீர்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த ஃப்ரீக்வன்ஸி ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. சிலர் ஏழெட்டு மணிநேரம் கூடத் தண்ணீரே குடிக்காமல் இருப்பார்கள். இதனால், வெளியேற வேண்டிய கழிவு தேங்கி யூரினரி இன்ஃபெக்‌ஷன், எரிச்சல்ஏற்படும். அதேபோல, ஒரு நாளில் ஒன்றரை முதல் இரண்டு லிட்டர் சிறுநீர் வெளி யேறுவதுதான் இயற்கை. மூன்று லிட்டருக்கும் மேல் சிறுநீர் வெளியேறினால், அது பாலியூரியா (polyuria). அதாவ து, அளவுக்கு அதிகமாக சிறுநீர் வெளியேறும் நோய். பிறந்த குழந்தைக்கு ஒரு நாளில் இருநூறு மில்லி சிறுநீர் வெளியேறினாலே போதுமானது. http://atchayakrishnaa.blogspot.ca/2015/02/blog-post_32.html
  7. மகிசா பகீதரனின் நீ தானே .....
  8. நான் சுத்தி வளைச்சு பேச விரும்பல

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.