Everything posted by nunavilan
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், கலைஞன்.
-
கருத்து படங்கள்
- மனதைக் கவர்ந்த கவிதைகள்
**கலைய மறுக்கும் கனவு !** தரையில் நீ நடந்து வந்தாய் தமிழ்த் திரையுலக கலைமகள் நீ என்றேன்-- மயக்கும் மலர்களைச் -சூடி வந்தாய்- மலைகளை ஆட்சி செய்யும் மலைமகள் நீ என்றேன் !! சிரிப்பொலிகளின் சிதறல்களை அலைஅலையாய் .அழைத்துவந்தாய் அலை மகள் தான் -நீ என்றேன் மழைநீரில் நீ நனைந்து-உன் மலர்க் கூந்தல் அதை விரித்து வளைந்தும் நெளிந்தும் . நீ - ஆடுவது மயிலாட்டம் தான் என்றேன் !! குத்துவிளக்கு நீ ஏற்றி--உன் பத்து விரல்களால் அதைப் பற்றி சுற்றம் சூழ நான் இருக்க-- சுருதி விலகாமல் நீ படிப்பாய் தேவாரம்- அதை குயில் பாட்டுத் தான் என்றேன்-- இன்று அருகிலும் நீ இல்லை அண்மித்த நாட்டிலும் உன் வீடில்லை- கனவில் மட்டும் ஏனோ- கதவுகள் திறந்து வருகின்றாய் காலமெல்லாம் வாழ்கின்றாய் **** நன்றியுடன் வேலணையூர் லிங்கா- அழகு நிலவே
- சிரிக்க மட்டும் வாங்க
- கருத்து படங்கள்
- சிந்தனைக்கு சில படங்கள்...
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
- கருத்து படங்கள்
- சிந்தனைக்கு சில படங்கள்...
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
- கருத்து படங்கள்
- உங்களுக்கு தெரியுமா?
கோபுர ரகசியமும், நம் முன்னோரின் விஞ்ஞான அறிவாற்றலும் முற்காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும் இருக்கக் கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இருந்தது. என்ன காரணம்? கோயில்களையும் உயரமான கோபுரங்களையும் அதன் மேல் இருக்கும் கலசங்களையும் பார்த்திருப்பீர ்கள். அதன் பின் ஒளிந்திருக்கும் ஆன்மிக உண்மை தெரியவில்லை. ஆனால் அதன் பின் எவ்வளவு பெரிய அறிவியல் ஒளிந்திருக்கிறது என இப்போதுதான் தெரிகிறது. கோபுரத்தின் உச்சியில் தங்கம், வெள்ளி செம்பு(அ) ஐம்பொன்னால் செய்யப்பட்ட கலசங்கள் இருக்கும். இக்கலசங்களிலும் அதில் கொட்டப்படும் தானியங்களும், உலோகங்களும் மின் காந்த அலைகளை ஈர்க்கும் சக்தியை கலசங்களுக்குக் கொடுக்கின்றன. நெல், உப்பு, கேழ்வரகு, தினை, வரகு, சோளம், மக்கா சோளம், சலமை, எள் ஆகியவற்றைக் கொட்டினார்கள். குறிப்பாக வரகு தானியத்தை அதிகமாகக் கொட்டினார்கள். காரணத்தைத் தேடிப் பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கிறது. வரகு மின்னலைத் தாங்கும் அதிக ஆற்றலைபெற்றிருப்பது என இப்போதைய அறிவியல் கூறுகிறது. இவ்வளவுதானா? இல்லை, பன்னிரெண்டு வருடங்களுக்கு ஒரு முறை குடமுழுக்கு விழா என்ற பெயரில் கலசங்களில் இருக்கும் பழைய தானியங்கள் நீக்கப்பட்டு புதிய தானியங்கள் நிரப்பப்படுகிறது. அதை இன்றைக்கு சம்பிரதாயமாகவே மட்டும் கடைபிடிக்கிறார்கள். காரணத்தைத் தேடினால், அந்த தானியங்களுக்குப் பன்னிரெண்டு வருடங்களுக்குத்தான் அந்த சக்தி இருக்கிறது. அதன் பின் அது செயல் இழந்து விடுகிறது!! இதை எப்படி அப்போது அறிந்திருந்தார்கள்..? ஆச்சர்யம்தான். அவ்வளவுதானா அதுவும் இல்லை. இன்றைக்குப் பெய்வதைப் போன்று மூன்று நாட்களா மழை பெய்தது அன்று? தொடர்ந்து மூன்று மாதங்கள் பெய்தது. ஒரு வேளை தானியங்கள் அனைத்தும் நீரில் மூழ்கி அழிந்து போனால், மீண்டும் எதை வைத்துப் பயிர் செய்வது? இவ்வளவு உயரமான கோபுரத்தை நீர் சூழ வாய்ப்பில்லை. இதையே மீண்டும் எடுத்து விதைக்கலாமே ஒரு இடத்தில் எது மிக உயரமான இடத்தில் அமைந்த இடி தாங்கியோ அதுதான் முதலில் 'எர்த்' ஆகும். மேலும் அது எத்தனை பேரைக் காப்பாற்றும் என்பது அதன் உயரத்தைப் பொறுத்தது. அடிப்படையில் கலசங்கள் இடிதாங்கிகள். உதாரணமாக கோபுரத்தின் உயரம் ஐம்பது மீட்டர் என்றால் நூறு மீட்டர் விட்டம் வரைக்கும் பரப்பில் எத்தனை பேர் இருந்தாலும் அவர்கள் இடி தாங்காமல் காக்கப்படுவார்கள். அதாவது சுமார் 75008 மீட்டர் பரப்பளவிலிருக்கும் மனிதர்கள் காப்பாற்றப்படுவார்கள்! சில கோயில்களுக்கு நான்கு வாயில்கள் உள்ளன. அது நாலாபுறமும் 75000சதுர மீட்டர் பரப்பளவைக் காத்து நிற்கிறது! இது ஒரு தோராயமான கணக்கு தான். இதைவிட உயரமான கோபுரங்கள் இதை விட அதிகமான பணிகளை சத்தமில்லாமல் செய்து வருகின்றன. "கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்" என்ற பழமொழி நினைவுக்கு வருகிறது http://aanmeegaiyarkai.blogspot.ca/2014/12/blog-post_10.html- அழகு நிலவே
- உங்களுக்கு தெரியுமா?
இந்தியாவின் மக்கள் தொகை 121 கோடி சில சுவாரசியங்கள் @ இந்திய மக்கள் தொகை 121 கோடியை தாண்டியிருப்பது கணக்கெடுப்பில் மூலம் தெரிய வந்துள்ளது @ கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியாவின் மக்கள் தொகை 18 கோடி பேர் அதிகரித்துள்ளனர். @ இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை எடுக்கபடுகிறது @ 2001 ஆண்டுக்கு பிறகு இந்த ஆண்டு எடுக்கப்ட்டுள்ளது @மக்கள் தொகை வளர்ச்சி அரசின் விழிப்புணர்வு மற்றும் மக்களின் விழிப்புணர்வு மூலம் தற்போது 17% குறைந்துள்ளது. @மக்கள் தொகையில் மற்றும் ஒரு சுவாரசியம் இந்திய ஆண்களின் எண்ணிக்கை 62.3 கோடி பெண்களின் எண்ணிக்கை 58.6 கோடியாகவும் உள்ளது @இந்தியாவின் மக்கள் தொகை ஐந்து நாட்டு மக்கள் தொகையுடன் கூட்டினால் கூட அவர்கள் நம்மை நெருங்க முடியாது (என்ன ஒரு சாதனை ) இந்தோனேசியா,அமெரிக்கா, பிரேசில், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளின் மக்கள்தொகையை கூட்டினால் வரும் எண்ணிக்கையை விட அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. @இரண்டு மாநில மக்கள் தொகையுடன் கூட்டினால் கூட அமெரிக்க மக்கள் தொகை ஈடாகாது அந்த இரண்டு மாநிலங்கள் உத்திரபிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா @அதே அளவில் படிப்பதிலும் இந்திய மக்கள் முன்னேற்றம் அடைந்து உள்ளனர் கற்றவர்களின் எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில் 9.21 உயர்ந்துள்ளது @இந்த விசயத்தில் ஆண்களை காட்டிலும் பெண்களே அதிகம் படிப்பறிவு பெற்றுள்ளனர் @ இந்திய மக்கள் தொகையில் 74 % விழுக்காட்டினர் படிப்பறிவு பெற்றவர்கள். 26 % படிப்பறிவு பெறாதவர்கள் ஆவர். @ இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த செலவிட்ட தொகை எவ்வளவு தெரியுமா ? ரூ.2,200 கோடி @ அதிகம் மக்கள் தொகை உள்ள மாநிலம் எது தெரியுமா உத்தரபிரதேசம். அங்கு மக்கள் தொகை 19.9 கோடி. @ குறைவான மக்கள் தொகை உள்ள மாநிலம் சண்டிகர் @உலக அளவிலான மக்கள் தொகைக்கு நம்மால் முடிந்த உதவி எவ்வளவு தெரியுமா ? 17 % http://arumbavur.blogspot.ca/2011/03/121.html- உங்களுக்கு தெரியுமா?
*மாலை கல்லூரி உருவான வரலாறு..* ஒரு முறை ஒரு பெண் காமராஜரிடம் வந்து... தான் நல்ல மார்க் வாங்கி இருப்பதாகவும், எனக்கு கல்லூரியில் சீட் கிடைக்கவில்லை என்றும் சொல்லி வருத்தப்பட்டராம்.... காமராஜர் சம்பந்தப்பட்டவர்களை கூப்பிட்டு கேட்க... கல்லூரி முதல்வர் 12 மாணவிகளுக்கு தான் ளப் வசதி இருப்பதால், 13 வதாக இன்னொரு பெண்ணை சேர்க்க இயலாது என்று சொல்ல.... காமராஜர்... உங்கள் வீட்டில் எத்தனை பேருக்கு சமைக்கிறீர்கள் ? என்று கேட்டாராம்... அந்த முதல்வர் 4 பேருக்கு என்று சொல்ல, இன்னும் 4 பேர் வந்தால் என்ன செய்வீர்கள்... அதற்கு அந்த முதல்வர் இல்லை ஒரு முறை சாதம் செய்து விட்டு இரண்டாம் முறையும் செய்வேன் என்று சொன்னாராம்.... அதையே ஏன் கல்லூரியிலும் செய்யக்கூடாது. 3.30 க்கு கல்லூரி முடிந்ததும், இன்னும் 12 பேருக்கு கல்லூரி வைத்து, அதே ளப் ஐ பயன்படுத்தலாமே என்று சொல்ல, அப்படி பிறந்தது தான் மாலை கல்லூரி ஏவெனிங் Cஒல்லெகெ. முடியாது என்று சொல்வதை விட தீர்வை நோக்கி பயணிப்பதே மக்கள் பணி என்பதற்கான எடுத்துக்காட்டு தான்... *கர்மவீரர் காமராஜர்.* http://nadarmakkaljothi.blogspot.ca/2016/10/blog-post_79.html- அதிசயக்குதிரை
1. கணவன் – “இப்படி நாம அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டு இருப்பதை அக்கம் பக்கத்திலே இருப்பவங்கள் பார்த்தா சிரிப்பாங்க... தெரியுமா?“ மனைவி – “அப்போ நாம போடுற சண்டை அவ்வளவு தமாஷாவா இருக்கு!“ 2. கணவன் – “இந்தத் தீபாவளிக்கு உனக்குப் பட்டுப் புடவை!“ மனைவி – “அப்படியா! எதை வச்சி சொல்லுறீங்க?“ கணவன் – “உன் வளையலை வைச்சுத்தான் சொல்லுறேன்.“ 3. மனைவி – “ஏங்க நம்ம பொண்ணுக்கு வயசாகிட்டே போகுதே. அவளுக்குச் சீக்கிரமா ஒரு மாப்பிள்ளை பார்க்கக் கூடாதா?“ கணவன் – “அழகா லட்சணமா ஒரு மாப்பிள்ளை கிடைக்கிறவரை காத்திருக்கட்டுண்டி.“ மனைவி – “எங்கப்பா அப்படியா காத்திருந்தார்?“ 4. கணவன் – “என்ன இது மிக்ஸி, கிரைண்டர், புடவைன்னு ஏகப்பட்ட சாமான்களோட வேன்ல வந்து இறங்கிறே....!“ மனைவி – “நீங்க தானே சொன்னீங்க.... பேங்கில இருக்கிற நம்ம ஜாயிண்ட் அக்கவுண்டை குளோஸ் பண்ணனும்ன்னு. அதைத் தான் செய்துட்டு வர்றேன்.“ 5. கணவன் – “ஏன் நான் உள்ளாற வந்தவுடனே கண்ணாடியை எடுத்துப் போட்டுக்கிடுற?“ மனைவி – “டாக்டர் தான், தலைவலி வந்தவுடனே கண்ணாடியைப் போட்டுக்கச் சொன்னார்.“ 6. மனைவி – “வேலைக்காரி உங்க மேலே விழறாப்லே உரசிட்டுப் போறா.... நீங்க பேசாம நிக்கிறீங்களே....“ கணவன் – “திரும்பி வரட்டும்.... பதிலுக்கு நானும் உரசிக் காட்டுறேன் பாரு.“ 7. மனைவி – “வர வர எனக்கு இந்த நகை, புடைவைகள் பேரில் இருக்கிற ஆசையே விட்டுப் போயிடுச்சிங்க“ கணவன் – “நிஜமாவா சொல்லற?“ மனைவி – “ஆமாம். எத்தனை நாளைக்குத்தான் இந்தப் பழைய நகைகளையும், பழைய புடவைகளையும் கட்டிண்டு இருக்கிறது.....“ 8. கணவன் – “இதோபாரு.... நம்ம வீட்டுல சினிமாச் செலவு ரொம்ப அதிகமாயிட்டு வருது. இதைப் பாதியா குறைக்கணும். சரியா?“ மனைவி – “சரிங்க.... இனிமே நான் மட்டும் சினிமாவுக்குப் போறேன்.“ 9. கணவன் – “வரதட்சணை வாங்கிட்டு கல்யாணம் செஞ்சது என் மனசை உறுத்திக்கிட்டே இருக்குது“ மனைவி – “அதுக்காக இப்போ என்ன பண்ணுவதாம்...?“ கணவன் – “வரதட்சணை வாங்காம இன்னொரு கல்யாணம் செய்துகிட்டு பிராயச்சித்தம் செய்யலாம்ன்னு இருக்கேன்“ மனைவி – கர்ர்ர்ர்ர்ர்..... 10. மனைவி – “நீங்க எனக்கு ஒரு பட்டுப் புடவை வாங்கித்தர்ற மாதிரி நேற்று கனவு கண்டேன்“ கணவன் – “இன்னைக்கு அதைக் கட்டிக்கிறதா கனவு கண்டுவிடு. சரியாய்ப் போயிடும்...“ 11. கணவன் – “அரை மணி நேரமா நான் கரடியா கத்துறேன். நீ பதில் பேசலைன்னா என்ன அர்த்தம்?“ மனைவி – “எனக்கு கரடி பாஷை புரியலேன்னு அர்த்தம்.“- நகைச்சுவைக் காட்சிகள்
- கருத்து படங்கள்
- அழகு நிலவே
- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சசி, ராஜவன்னியன், அக்கினியஸ்திரா ஆகியோருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
- சிரிக்க மட்டும் வாங்க
- மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: எந்த பக்கம் படம்:தர்மதுரை இசை: யுவன் சங்கர் ராஜா பாடியவர்கள்:சின்மயி , ராகுல் நம்பியார்- உங்களுக்கு தெரியுமா?
உலக நாடுகள் -தூரப்பார்வை-அங்கோலா- அர்ஜென்டினா அங்கோலா கொய்சாம் எனும் மொழி பேசும் ஆப்ரிக்க இன மக்கள் ஆதியில் வசித்து வந்த அங்கோலா நாட்டில், பான்டு மொழி பேசும் மக்கள் 1000 ஆண்டு களுக்கு முன் பெருமள வில் இடம் பெயர்ந்து வந்து குடியேறினார்கள். நாளடைவில் ஒண்ட வந்த பிடாரி ஊர்ப் பிடாரியாகிவிட்ட கதை நடந்துவிட்டது. ஆதிக்கம் செலுத்தும் அளவுக்கு பான்டு மொழி பேசும் மக்கள் வளர்ந்துவிட்ட னர். 1480 ஆண்டு வாக்கில் போர்த்துகீசிய வணிகர்கள் இந்நாட்டுக்கு வந்தனர். 1575 இல் லுவான்டா எனும் தலைநகரை உரு வாக்கியதே அவர்கள் தான்! அதுவே பின்னர், இந்தியாவுடனும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுடனும் வணிகம் செய்ய வாய்ப்பான மய்ய இட மாக வளர்ந்தது. கொடுமை என்னவென்றால், போர்த்துக்கீசிய குடியேற்ற நாடான பிரேசில் நாட்டுக்கு ஆப்ரிக்க அடிமைகளை அனுப்பும் முக்கிய நகர மாகவும் வளர்ந்துவிட்டது. அடிமைப்பட்டுக் கிடந்த நாட்டில் விடுதலை எண்ணம் வேரூன் றத் தொடங்கியது. தேசிய உணர்வு மிக்க இயக்கங் கள் தோன்றின. விடுதலை யைப் பெற வேண்டும் எனும் எண்ணத்தில் கொரில்லாப் போர் முறைத் தாக்குதலில் இறங்கினர். பாப்புலர் லிபரேஷன் மூவ்மெண்ட் ஆப் அங்கோலா எனும் சமதர்மக் கொள்கை கொண்ட அமைப்பு (MPLA) 1956 இல் அமைக்கப்பட்டது. (FNLA)1957இல் போராளி இயக்கம் ஒன்றும் தொடங்கப்பட்டது. (UNITA)எனும் மற்றொரு அமைப்பும் முழுச் சுதந்திரம் அடைய வேண்டும் என்கிற நோக்கத்தில் 1966இல் தொடங்கப்பட்டது. ஜொனாஸ் சாவிம்பி என்பவர் இதனைத் தொடங்கினார். இவர்களின் போராட்டத்தின் விளைவாக 1975இல் போர்த்துகீசிய ஆதிக்கவாதிகள் அந்நாட்டை விட்டு வெளியேறினார்கள். அதிகாரத்தை மாற்றிக் கொடுக்காமலே வெளியேறி விட்டார்கள். 500 ஆண்டுக் காலம் ஆண்டு அனுபவித்த நாட்டைக் கைமாற்றிக் கொடுக்க மனம் வரவில்லை போலும்! மவுனமாகப் போய்விட் டனர். உள்ளூரில் இருந்த பல கட்சிகளில் பதவிப் போட்டி தொடங்கியது. ஒவ்வொரு அமைப்புக்கும் ஒவ்வொரு வெளி நாட்டின் ஆதரவு தானாகவே கிடைத்தது. MPLA அமைப்புக்கு கியூபா ஆதரவு அளித்தது. FNLAவும் UNITAவும் இணைந்து போட்டியில் இறங்கிய போது தென் ஆப்ரிகாவும் அமெரிக்காவும் ஆதரவு தந்தன. லுவான்டா (தலைநகர்)வில் கட்டுப்பாடு செலுத்திய MPLL அமைப்பு விடுதலை பெற்ற அங்கோலாவின் அரசாங்கமாகத் தம்மை அறிவித்துக் கொண்டது. மற்ற இரு அமைப்புகளும் வேறொரு நகரமான ஹூவாம்போவில் தங்கள் அரசு அமைந்திருப்பதாகப் பிரகடனப்படுத் தினார்கள். இம்மாதிரி நிலையை உருவாக்க வேண்டும் என்றுதான் போர்த்துகீசியர்கள் பேசாமல் வெளியேறி விட்டார்களோ? பதவிப் போட்டிகளில் ஈடுபட்டிருந்த அமைப்புகளுக்கி டையே 1994 இல் ஓர் ஒப்பந்தம் ஏற்பட்டது. லூசாகா அமைதிப் பேச்சு ஒப்பந்தம் 1996 இல் ஏற்பட்டது. MPLA அமைப்பின் எடுவர்டோ டாஸ் சன்டேர்ஸ் என்பவரும் UNITA அமைப்பின் நிறுவனர் ஜொனாஸ் சவிம் பியும் இணைந்து அரசு அமைப்பதாக ஒத்துக் கொண்டார்கள். ஆனால் இது நடைமுறைக்கு வரவில்லை. 2002 பிப்ரவரி மாதத் தில் ஜொனாஸ் சவிம்பி அரசு தரப்புப் படையின ரால் கொல்லப்பட்டார். அதன் பிறகு அரசும் UNITA அமைப்பினரும் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்து கொண்டனர். இது நடந்தது 2002 ஏப்ரல் மாதத்தில்! ஜொனாஸ் சவிம்பி தடையாக இருந்தாரோ? தலைமையை இழந்துவிட்டதால் அமைதியை நாடினார்களோ? ஆப்ரிக்கக் கண்டத்தின் தென் பகுதியில் கடலோர நாடாக உள்ள அங்கோலா 12 லட்சத்து 46 ஆயிரத்து 700 ச.கி.மீ. பரப்புள்ளது. 1 கோடியே 22 லட்சம் பேர் மக்கள் தொகை கொண்ட இந் நாட்டில், போர்த்துகீசிய மொழியும் பான்டு உள்பட ஆப்ரிக்க மொழிகளும் பேசப்படுகின்றன. ரோமன் கத்தோலிக்க மதத்தை 38 விழுக்காட்டினர் பின்பற்றுகின்றனர். புரொடஸ்டன்ட் பிரிவை 15 விழுக்காட்டினரும் மீதமுள்ள 45 விழுக்காட்டினர் ஆப்ரிக்கப் பழைய நம்பிக்கைகளையும் பெற்றுள்ளனர். வறுமைக் கோட்டுக்குக் கீழே 70 விழுக்காடு மக்கள் உள்ளனர். ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------அர்ஜென்டினா தென் அமெரிகாவின் தென் பகுதியில் அட்லாண் டிக் பெருங்கடலின் ஓரத்தில் அமைந்துள்ள அர்ஜென்டினா நாட்டின் டீகோ மாரடோனா, சிறந்த கால் பந்தாட்ட வீரர். இந்நாட்டின் வட மேற்குப் பகுதியில இன்கா வமிசத்தினர் ஆட்சி புரிந்தனர். 1535 ல் ஸ்பெயின் நாடு ஒரு குழுவை இந்நாட்டுக்கு அனுப்பிக் குடியேறச் செய்தது. பெட்ரோ டி மென்டோசா என்பவரின் தலைமையிலான இக்குழுவினர் தொடக்கத்தில் வெற்றிகளைப் பெற்று சான்டா மரியா டெல் புவோன் அயர் நகரத்தை உருவாக்கினர். இந்நகரம்தான் தற்போது போனஸ்அயர்ஸ் எனும் இந்நாட்டின் தலைநகர். 1776 இல் ஸ்பெயின் நாடு தன் சாம்ராஜ்ய எல்லையை விரிவுபடுத்தியது. தற்போதைய அர்ஜென்டினா, உருகுவே, பராகுவே, பொலிவியாவின் தென்பகுதி ஆகியவற்றை உள்ளடக்கிய நாட்டை உருவாக்கி, போனஸ் அயர்சைத் தலைநகராக்கிக் ஆண்டது. நூறு ஆண்டுகளுக்குப் பிறகு, பிரேசில், உருகுவே, ஆகியவற்றுடன் அர்ஜென்டினாவும் சேர்ந்து லத்தீன் அமெரிக்க நாடுகளின் ரத்தப் போராட்டம் எனத்தக்க; சண்டையில் இறங்கியது. பராகுவே நாட்டிற்கு எதிராக இந்த மூன்றுநாடுகளும் நடத்திய போரில் பராகுவே தோற்கடிக்கப்பட் டது. 1865 முதல் 1870 வரை 5 ஆண்டுகள் இப்போர் நடைபெற்றது. இரண்டாம் உலகப் போர் நேரத்தில் தான் ஒரு நடு நிலை நாடு என அர்ஜென்டினா அறி வித்துக் கொண்டது. ஆனாலும் 1943 இல் ராணுவ ஆட்சி இங்கு அமைந்துவிட்டது. கர்னல் ஜூவான் பெரோன் என்பவர் இந்த ஆட்சியின் முக்கியப் புள்ளி. 1944 இல் ஜப்பான், ஜெர்மனி நாடுகளுடன் அரசு ரீதியான உறவை முறித்துக் கொண்ட அர்ஜென்டினா 1945 இல் அந்நாடுகளுடன் போரிட்டது. 1946இல் பெரோன் நாட்டின் புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரின் இரண்டாம் மனைவி ஈவா பெரோன். எவிட்டா என்று அழைக்கப்பட்ட இவர் சமூகநலத் துறையின் பொறுப்பாளராக அதிகார பூர்வமற்ற வகையில் நியமிக்கப்பட்டார். அதன் விளைவாகத் தொழிலாளர்களின் ஊதியங்களை உயர்த்துவதற்கு ஏற்பாடு செய்து அதன் வாயிலாக அதிப ரான தன் கணவருக்கு உதவினார். ஆனாலும் 1955 இல் பதவியிலிருந்து அகற்றப்பட்ட பெரோன் மீண்டும் 1973 இல் அதிகாரத்திற்கு வந்தார். ஆனால் 1974இல் மரணம் அடைந்துவிட்டார். பெரோனின் மூன் றாம் மனைவியும் துணை அதிபராக இருந்தவருமான இசபெல் அடுத்த அதிபராகப் பதவி ஏற்றார். பணவீக்கம் எக்கச்சக்கமாக ஏறிக் கொண்டே போய், 1976இல் ராணுவம் புரட்சி செய்து, ஜார்ஜ் விடெலா எனும் ராணுவத் தளபதியின் தலைமையில் ஆட்சியைக் கைப்பற்றியது. நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. கொடுமைகளும் கொலைகளும் திட்டமிட்டுச் செய்யப் பட்டன. அசிங்கமான போர் என வருணிக்கப் படும் சண்டைகளில் ஆட்சியை எதிர்த்தவர்கள் ஆயிரக்கணக்கில் அழிக்கப்பட்டனர். 1981 இல் லியோ போல்டோ கல்டியரி எனும் தளபதி ஆட்சித் தலைமையை ஏற்றார். இவர் காலத்தில்தான் பக்கத்தில் இருந்த ஃபாக் லாண்டு தீவில் அர்ஜென்டினா தாக்குதல் நடத்தி கைப்பற்றிக் கொண்டது. வல்லரசுகளில் ஒன்றான இங்கிலாந்து நாட்டின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட தீவு இது. பிரிட்டன் எதிர்த் தாக்குதல் தொடுத்து மீண்டும் தீவைக் கைப்பற்றிக் கொண்டது. இதனால் தளபதி கல்டியரி பதவி இழக்கும் நிலை ஏற்பட்டு ஜெனரல் ரெனால்டோ பிக்னான் என்பார் அதிபரானார். 1983 இல் நாட்டில் மீண்டும் மக்களாட்சி மலர்ந்தது. ரவுல் அல் போன்சின் என்பவர் அதி பரானார். பணவீக்கம் மீண்டும் தாறுமாறாக உயர்ந்தது. 900 விழுக் காடு எனச் சொல்லக் கூடிய அளவுக்கு உயர்ந்து விட்டது. அதன் காரண மாக கார்லோஸ் மெனம் என்பவர் அதிபராகத் தேர்ந்து எடுக்கப்பட்டார். பொருளாதாரச் சிக்கன நடவடிக்கைகளை எடுத்தார். புதிய பண நோட்டுகளைப் புகுத்தினார். பழைய நோட்டுகளைச் செல்லாது என அறிவித்தார். ஆயினும் என்ன? பொருளாதார மந்தம் ஏற்படுவதைத் தடுக்க முடியவில்லை. 2002 இல் உலக வங்கிக்குச் செலுத்தவேண்டிய 8 ஆயிரம் லட்சம் டாலர் கடனைத் திருப்பிச் செலுத்த முடிய வில்லை. மேற்கொண்டு சர்வதேச நிதியத்திடம் (IMF) இருந்து கடன் பெறவும் முடியவில்லை. கடன் தொகைக்கான வட்டியை மட்டும் செலுத்தினால் போதும் என்கிற அளவில் அர்ஜென்டினாவும் சர்வதேச நிதியமும் ஒப்பந்தம் செய்துகொண்டன. இதுவாவது அந்நாட்டைக் காப்பாற்றிக் கரை சேர்க்குமா? 27 லட்சத்து 66 ஆயிரத்து 890 சதுர கி.மீ. பரப்புள்ள இந்நாட்டின் மக்கள் தொகை 4 கோடி ஆகும். 92 விழுக்காட்டி னர் ரோமன் கத்தோலிக்க மதத்தினர். யூதர்களையும் புராடெஸ்டன்ட் கிறித்தவர்களும் 2 விழுக்காடு வீதமே உள்ளனர். ஸ்பெயின் நாட்டிலிருந்து 1986 ஆம் ஆண்டு ஜூலை 9 இல் விடுதலை பெற்ற பழம் பெரும் குடியரசு நாட்டின் கதி என்று தேருமோ? ------------------நன்றி:-"விடுதலை" 28-5-2009Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- மனதைக் கவர்ந்த கவிதைகள்