Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

nunavilan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by nunavilan

  1. காதல் பேருந்து இருபதாவது நாளாய் அவளிடமிருந்து அழைப்பு எதுவும் இல்லை என்னிடமிருந்து எந்த அழைப்பையும் ஏற்கவும் இல்லை பேருந்து நிறுத்தத்திலும் அவள் இல்லை அலுவலகத்திலும் விடுமுறை என்பதைத் தவிர வேறு தகவல் இல்லை வீடும் மூடிக் கிடந்தது அவளது அடுக்குமாடிக் குடியிருப்பில் அடுத்திருக்கும் சேட்டுக்கு என் பதட்டத்தில் ஆர்வமில்லை. கடைசியாக கடற்கரையில் பிணக்குடன் பிரிந்தோம் என் கோபத்தால் நான் தொலைத்த மற்றுமொரு வேலை பற்றியதாய் அது இருந்தது வழக்கமான ஒன்றுதான் அது வழக்கம்போல் அவளிடம் அடுத்தநாளே மன்னிப்பு கேட்க தயார் ஆகவே இருந்தேன். ஆனால் அவள் வரவே இல்லை… அடுத்த நாளும் அடுத்த நாளும் அடுத்த நாளும்.. சண்டை போட்ட இடத்திலேயே மன்னிப்பு கேட்டு மீண்டும் பணியில் சேர்ந்தேன் அவளுக்காகதான் அதை செய்கிறேன் என்பதை ஒரு கடிதமாக எழுதி வைத்தேன். விடுமுறை முடிந்து திரும்புகையில் தருவதற்காக. நடைப் பாதைக் கடைகளில் அவளுக்கென ஏதேதோ வாங்கிச் சேர்த்தேன். சில கவிதைகளும் செய்தேன். அவள் அலுவலகம் திரும்பவேண்டிய நாளில் சரியாக சவரம் செய்து படிய வாரி அவளுக்கு பிடித்த நிறத்தில் உடை அணிந்து பேருந்து நிறுத்தம் போனேன். நான் போகும் முன்பே அவள் வந்திருந்தாள். ஆர்வத்துடன் விரைந்து ஓடினேன். அருகில் போன பின்பே கவனித்தேன் அவள் வேறுமாதிரி உடை அணிந்திருந்தாள். அருகில் வேறு யாரோ நின்றிருந்தான். நிறைய நகை போட்டிருந்தாள் அதன் நடுவில் புதுக் கருக்குடன் மஞ்சள் கயிறு ஒன்று இருந்தது. என்னை ஏறிட்டு பார்க்கவே இல்லை. ”உங்கள் பேருந்து போய்விட்டது” என்றார் பழக்கமானவர். ”ஆம்”என்றேன் அயர்வாய்… http://menporul.wordpress.com/
  2. வருகை திரும்பத் திரும்ப நான் இந்தப் பூமிக்கு வந்திருக்கிறேன் வானத்தில் இருந்தாலும் எரிநட்சத்திரமாய் வீழ்ந்தாவது இங்கு வந்து சேர்ந்திருக்கிறேன் மனிதனாய் விலங்காய் பறவையாய் கொடியாய் பூண்டாய் கிருமியாய் ஆணாய் பெண்ணாய் அற்றவனாய் தமிழ் தேசத்தனாய் மகா வம்சத்தனாய் வடுகனாய் சீனனாய் திரும்பத் திரும்ப வந்திருக்கிறேன் பாலை நிலங்களில் அலையும் மூர் தேசத்தனாய் சிலுவைப் போர்களில் மரித்தவனாய் பிரமிடுகளில் பிணங்களைத் தொழுதவனாய் ரோமர்களின் நிலத்தில் சிங்கங்ககளோடு பொருதியவனாய் கிரேக்க உடற் பயிற்சிக் கூடங்களில் சிறுவர்களைப் புனர்ந்தவனாய் வர்ஜீனிய செம்மண நிலங்களில் அடிமையாய் சிறு முலை கனத்து எஜமானர்களின் குழவிக்கு பால் ஊட்டியவளாய் நீண்ட தோல் கால் உறைகளோடு கண் சாய்ந்த செங்கிகிஸ்கானின் பின்னால் புழுதிப் புயலாய் வந்தவனாய் பெரிய கோயிலில் உளிதட்டியவனாய் கூரை விதானங்களில் கழுத்து வலிக்க கடைசி விருந்து வரைந்தவனாய் ராஜேந்திரனின் அணுக்கியரில் ஒருவனாய் பழையனூர் நீலியை வஞ்சித்த வேதியனாய் கை உயர்த்தி வாழ்க ஹிட்லர சொல்லியவனாய் ஹிரோஷிமாவில் கதிர் தாக்கித் துடித்தவனாய் காசியில் நிணம் சாப்பிடும் அகோரியாய் மயிற்பீலி சமணனாய் முண்டன பௌத்தனாய் முதிர்தாடி முல்லாவாய் ஒரே இரவில் வேறு தேதசத்தவர் ஆகிவிட்ட காபிர்களைத் தேடித் தேடிக் கொன்றவனாய் குஜராத்தில் தூக்கிய வாளுடனும் குறியுடனும் பழி வாங்க அலைந்தவனாய்.. பிறையர்கள் துரத்த தீ புகுந்து கற்பு காத்த ரஜபுத்ரியாய் சோனா கஞ்சில் முதிரா யோனிகளின் இதழ்களைப் பிரிப்பவனாய் திரும்பத் திரும்ப நான் இங்கு வந்திருக்கிறேன் என்னைத் தெரியவில்லையா? http://ezhuththuppizhai.blogspot.ca/
  3. இப்படியும் பாம்புகள்! எமது ஊரில் உள்ள தண்ணீர்ப் பாம்பு போல ஐரோப்பாவில் உள்ள ஒரு பாம்பு ஐரோப்பிய புல் பாம்பு. இந்த பாம்பு விசத்தன்மை இல்லாதது. இது தண்ணீரில் அநாயசமாக நீந்தும். வருடத்தில் நிறைய நாட்கள், குளிர்கால உறக்கத்தை மேற்கொள்ளுகிறது. அதாவது, அசைவின்றி அப்படியே கிடக்கும். உணவு உண்ணாது. எதுவும் செய்யாது, மூச்சு விடுவதைத் தவிர..! ஆனால் எதிராளியிடமிருந்து தன்னை காத்துக் கொள்ள பல அற்புதமான நடவடிக்கைகளைக் கையாளுகிறது. சிந்தனைத் திறன் உள்ள மனிதன் போல, தேர்ந்த நடிகன் போல என்று கூட சொல்லலாம். நீண்ட நேரம் நீருக்குள்ளேயே இருந்து எதிரியிடமிருந்து தப்பிக்கப் பார்க்கும் சில சந்தர்ப்பங்களில் தன் உடலை முடிந்தவரை உப்பி, பயமுறுத்தப் பார்க்கும். சிலசமயம் வேகமாய் சீறும். வேறு பல சமயங்களில் பூண்டு அல்லது பெருங்காய மணமுடைய மலத்தை வெளியேற்றி எதிராளியை விரட்ட முயற்சிக்கும். அதுவும் பலிக்கவில்லை என்றால், கடைசியாக ஒரு போர்க்கால தந்திரத்தை அஸ்திரத்தை எடுத்து வீசும்...! என்ன யுக்தியாக இருக்கும் சொல்லுங்களேன்...! மூளையை கசக்கி யோசித்து விட்டீர்களா? அந்தப் புல்வெளிப் பாம்பு செத்தது போல நடிக்குமாம்; என்ன நம்புகிaர்களா? உண்மைதான். அப்படியே உடம்பைத் திருப்பி போட்டு வாயைப் பிளந்து, நாக்கை வெளியில் நீட்டி, உண்மையாகவே செத்துவிட்டது போல நம்மையும் மிஞ்சி நடிக்கும். சுமார் 15 நிமிடங்கள் அப்படியே கிடக்குமாம். எதிராளி பாம்பு செத்துவிட்டது என நம்பிக் கம்பி நீட்டிவிடும். எப்படி இருக்கிறது? வாழை மரங்கள் வாழை மரங்கள் உண்மையில் மரங்கள் இல்லை. அதாவது வாழை மரம் என்று நாம் கூறுவது தவறு. அது ஒரு தாவரம். ஏன் எனில் மரங்களில் உள்ளது போல் கடினமான தண்டுப் பகுதியோ, கிளைகளோ இருப்பதில்லை. தாவரங்களைப் போல பூத்துக் காய்த்தபின் இறந்துவிடுகின்றன. எனவே உலகிலேயே பெரிய தாவரம் வாழை மரம் என்று கூறப்படுகிறது. வாழை அதன் வகையில் தாவரம் என்றாலும், நமக்கு அது மரம் என்றுதானே அறிமுகமானது. எனவே அவ்வாறே இதில் கூறுவோம். வெப்பம் மிகுந்த ஈரமான காலநிலைகளில் வாழை மரங்கள் நன்றாக வளர்கின்றன. இதற்கான நிலப் பகுதியில் நல்ல நீர்ப்பாசன வசதி இருக்க வேண்டும். வாழை ஆசியாவில் தோன்றியது என்றாலும், அது மற்ற வெப்ப மண்டலக் கண்டங்களான ஆபிரிக்கா, தென் அமெரிக்கா போன்றவற்றுக்குப் பரவியது. வாழைப்பழம் விளைவிப்பதில் உலகிலேயே உச்சத்தில் நிற்பது நமது இந்தியாதான். இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 170 இலட்சம் தொன் வாழைப்பழம் உற்பத்தி செய்யப்படுகிறது. வாழையின் மற்றொரு சிறப்பு என்னவென்றால், வாழை மரத்தின் அனைத்து பாகங்களும் மக்களுக்கு பயன்படுகிறது. பூ, இலை, காய், கனி, தண்டு, நார்ப் பகுதி என்ற எதுவும் வீணாகாது. மேலும், வாழைப்பழக் கழிவுகள் காகிதமாக மாற்றப்படுகின்றன. வாழை இழைகளைக் கொண்டு பட்டுப் போன்ற மென்மையான துணிகள் நெய்யப்படுகின்றன. ஜப்பானில் பாரம்பரிய கிமோனோ ஆடைகளை உருவாக்கவும், நேபாளத்தில் கம்பளம் தயாரிக்கவும் வாழை இழைகள் பயன்படுத்தப்படுகின்றன. http://www.thinakaran.lk/2010/08/12/_art.asp?fn=f1008123
  4. தாயக விடிவுக்காக தமது இன்னுயிரை அர்ப்பணித்த மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.
  5. ஆகாயத்தை நூலால் அளக்க முடியும் அந்த ஆழக்கடலை காலால் அளக்க முடியும் பூலோகத்தை புதிதாய் அளக்க முடியும் கரும்புலிகளை இங்க யாரால் அளக்க முடியும் தந்தானானே தாரேனானா தானா ஏய் தந்தானானே தாரேனானா தானா…. ஆகாயத்தை நூலால் அளக்க முடியும் அந்த ஆழக்கடலை காலால் அளக்க முடியும் பூலோகத்தை புதிதாய் அளக்க முடியும் கரும்புலிகளை இங்க யாரால் அளக்க முடியும் கரும்புலிகளை இங்க யாரால் அளக்க முடியும் கரும்புலிகளை இங்க யாரால் அளக்க முடியும் கரும்புலி இதயம் இரும்பென எழுதும் கவிதைகள் பொய் ஆகும் அது இரும்பினிலில்லை அரும்பிய முல்லை என்பதே மெய் ஆகும் ஆகாயத்தை நூலால் அளக்க முடியும் அந்த ஆழக்கடலை காலால் அளக்க முடியும் பூலோகத்தை புதிதாய் அளக்க முடியும் கரும்புலிகளை இங்க யாரால் அளக்க முடியும் கரும்புலிகளை இங்க யாரால் அளக்க முடியும் கரும்புலிகளை இங்க யாரால் அளக்க முடியும் சாவை தன் வாசலில் சந்திக்கும் போதிலே யாருக்குமே உடல் வேர்க்கும் அந்த தேவ பிறவிகள் சாவை தொடுகையில் சாவுக்குத்தானெடா வேர்க்கும் வளர்த்த கோழி உரித்திடாத வாழ்வை எடுத்தவர் அவர் படுக்கும் பாயில் வளர்க்கும் நாயை கிடக்க விடுபவர் ஆகாயத்தை நூலால் அளக்க முடியும் அந்த ஆழக்கடலை காலால் அளக்க முடியும் பூலோகத்தை புதிதாய் அளக்க முடியும் கரும்புலிகளை இங்க யாரால் அளக்க முடியும் கரும்புலிகளை இங்க யாரால் அளக்க முடியும் கரும்புலிகளை இங்க யாரால் அளக்க முடியும் காங்கை நெருப்புக்கள் தூங்குவதே இல்லை யாருக்கு இங்கே இது தெரியும் கரும் வேங்கைகள் தாகங்கள் ஏதென தாங்கிடும் வேர்களுக்கே இது புரியும் இலக்கை நோக்கி நகரும் போதும் கணக்கை பார்ப்பவர் அவர் வெடிக்கும் போதும் அனுப்பும் தோழர் உறவை காப்பர் ஆகாயத்தை நூலால் அளக்க முடியும் அந்த ஆழக்கடலை காலால் அளக்க முடியும் பூலோகத்தை புதிதாய் அளக்க முடியும் கரும்புலிகளை இங்கு யாரால் அளக்க முடியும் கரும்புலிகளை இங்கு யாரால் அளக்க முடியும் கரும்புலி இதயம் இரும்பென எழுதும் கவிதைகள் பொய் ஆகும் அது இரும்பினிலில்லை அரும்பிய முல்லை என்பதே மெய் ஆகும் கரும்புலிகளை இங்கு யாரால் அளக்க முடியும் கரும்புலிகளை இங்கு யாரால் அளக்க முடியும் கரும்புலிகளை இங்கு யாரால் அளக்க முடியும்
  6. பாடல்: அன்னையின் கருவில் படம்: ஹரிதாஸ் பாடியவர்: சங்கர் மகாதேவன் இசை:எஸ்.விஜய் அன்ரனி
  7. சாப்பிட்டபின் செய்யக்கூடாதவைகள் 1. சாப்பிட்ட பின்பு ஒருவர் சிகரெட் பிடித்தால் - அவருக்கு அப்பழக்கம் உண்டு என்றாலும்கூட, அது சாதாரண நேரங்களில் சிகரெட் பிடிப்பதைவிட மிகப்பெரிய கெடுதல் ஆகும். 10 சிகரெட்டுகளை ஒரே நேரத்தில் பிடித்தால் எவ்வளவு பெரிய புற்றுநோய் அபாயம் உண்டோ அவ்வளவு பெரிய தீமையாகும். 2. அதேபால், சாப்பிட்டவுடனேயே பழங்களைச் சாப்பிடும் பழக்கம் நம்மில் பலருக்கு உள்ளது. அது கெடுதியானது. காரணம், உடனே அது காற்றினை வயிற்றுக்குள் அனுப்பி வயிறு உப்புசத்திற்கு ஆளாக்கும் நிலையை (Bலொஅடெட் நித் ஐர்) உருவாக்குகிறது. எனவே, சாப்பிடுவதற்கு ஒரு மணிநேரம் முன்பு பழம் சாப்பிடுங்கள் அல்லது சாப்பிட்டு ஒரு மணி அல்லது 2 மணி நேரத்திற்குப் பின்பு பழங்களைச் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். 3. சாப்பிட்டவுடன் தேநீர் அருந்தாதீர். (இது எவ்வளவு பேருக்குச் சாத்தியமோ தெரியாது) ஏனெனில் தேத்தூள் தழையில் ஆசிட் உள்ளது. இது உணவில் உள்ள புரதச்சத்தினை கடினமாக்கி (Hஅர்டெனிங்) செரிமானத்தைக் கஷ்டமாக்கும் வாய்ப்பு ஏராளம் உண்டு. 4. சாப்பிட்ட பிறகு உங்களது பெல்ட்டுகளை தளர்த்திவிடாதீர்கள் (Dஒன்’ட் ளோசென் Yஒஉர் Bஎல்ட்). ஏனெனில், அது குடலை வளைத்து தடுக்க வாய்ப்பு உண்டு. 5. சாப்பிட்ட உடனேயே குளிக்கும் பழக்கத்தைக் கைக்கொள்ளக்கூடாது. ஏனெனில், குளிக்கும்போது உடல் மற்றும் கை, கால்களுக்கு ரத்த ஓட்டம் அதிகரிக்கும். வயிற்றுக்குச் செரிமானத்திற்குச் செல்ல வேண்டிய ரத்த ஓட்டம் குறையும் வாய்ப்பு உள்ளது! வயிற்றில் உள்ள செரிமான உறுப்புகளை மிகவும் பாதிப்பு அடையச் செய்யக்கூடும்! 6. சாப்பிட்ட பின்பு நடப்பது நல்லது என்று சிலர் - ஏன் சிலர் விவரமறிந்தவர்களே கூடச் சொல்வது உண்டு. சர்க்கரை நோய் (டயாபடிக்) உள்ளவர்களுக்கு உடனே சர்க்கரை உருவாகாமல் தடுக்க அந்த உடனடி நடை உதவும் என்று கூடச் சிலர் சொல்ல நானே கேட்டுள்ளேன். ஆனால், 1989௯0 களில் இதயநோய்க்காக நான் சென்னை பொது மருத்துவமனையில் இதயநோய் பிளாக்கில் சிகிச்சை பெற்று வந்தபோதே, ஒரு டாக்டர் இது ஒரு தவறான கருத்து; சிலர் சாப்பிட்டவுடன் ஒரு 100 அடி நடந்தால் 99 ஆண்டுகூட வாழலாம் என்று சிலர் பிரச்சாரம் செய்கின்றனர்; பெரிய தவறான கருத்து ஆகும் என்று கூறினார். நடந்தால், செரிமான உறுப்புகளுக்குப் போய்ச் சேர்ந்து, உணவை நன்கு செரிக்கச் செய்வதைத் தடுத்து, இரத்த ஓட்டம் உணவின் சத்துகளை ஈர்த்து இரத்தத்தில் சேர்க்காமல் செய்யவே அந்நடைப் பழக்கம் பயன்படும். எனவே, இந்தத் தவறான பழக்கம் யாருக்காவது இருந்தால் அதனை உடனே கைவிடுவது நல்லது! 7. மதிய உணவு, இரவு உணவுக்குப் பின்னர் உடனே படுத்து உறங்கும் பழக்கம் கூடாது. உணவு உண்ட பின் அரை மணிநேரம் கழித்தே உறங்கச் செல்லவேண்டும். மருத்துவத் துறையில் "நவீன மூட நம்பிக்கைகள்" பலவும் இதுபோல உண்டு. எனவே, மற்றவர்களுக்கும் இதனை எடுத்துக் கூறி, பயன்படும் "தொண்டறம்" புரிக! http://thachankurichymail.blogspot.in/2013/06/blog-post_13.html
  8. மல்லிகைவாசம், பிரியாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். கிருபன், கோமகனுக்கு பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
  9. அந்தளவுக்கு சின்ன நாடா இருந்துகொண்டு இஸ்ரேலால் எப்படி அந்தளவுக்கு பலமான படையாக இருக்க முடிகிறது என்று நிறையப் பேருக்கு குழப்பம்... நீங்களே சொல்லுங்கோ... இவங்க எல்லாம் சண்டை பிடிக்கப் போனா யாராவது சண்டை பிடிப்பானா? உடன சரணடைஞ்சிருவாங்கள்..............................
  10. கிருபனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
  11. The World's Smallest Woman is from India Jyoti Amge recently turned 18 and became and the World's SmallestWoman. He height is only 62.5 centimetres. The primary cause for her short height is an illness called Achondroplasia which stops bones from growing with normal human rate and is the primary cause of dwarfism.
  12. They have two spines which join at the pelvis This man has the World's widest human mouth! The lips and cheeks of Francisco Domingo Joaquim (Angola), were measured, at full stretch, to be 17cm (6.69 in) wide.
  13. பாடல்: வாங்கண்ணா வணக்கங்கண்ணா படம்: தலைவா பாடியவர் : விஜய்
  14. https://www.facebook.com/photo.php?fbid=497678633634582&set=a.372742019461578.83246.372163186186128&type=1&theater
  15. பாடல்: உன்னை உன்னை படம்: அம்பிகாபதி பாடல் வரிகள் : வைரமுத்து இசை : A R ரஹ்மான்
  16. California's Salton Sea is eerily beautiful, as shown by this 1999chromogenic print by Terry Falke. But all is not well at this huge artificial lake: tens of thousands of birds and over 2 million dead fish were found in the area over the 12 months before Falke made his picture. The Salton Sea was created when levees on the Colorado river broke during a flood in 1905. This accident was turned to the good when, in the 1950s, the resulting lake was stocked with fish. The fish in turn attracted millions of migrating birds, and the "sea" became a valuable natural habitat, despite its artificial origins. Now higher temperatures and changing irrigation patterns mean the lake is evaporating rapidly. Its remaining water is becoming increasingly saline, making it inhospitable to birds and fish; pollution borne by the Mexicali New river is also affecting the environment. The sea's unusual history has made it difficult to determine what actions, if any, should be taken to save it. (Image: Terry Falke/National Academy of Sciences)
  17. நிரம்பும் பாத்திரம் இறுக மூடிய பின்னும் சொட்டும் துளிகள் நிரம்பி வழிகிறது ஒன்றை மறந்து பிறிதொன்றை கேட்டபடி இருக்கும் மகனின் ஆசைகளும் நாளை பார்க்கலாம் அடுத்த வாரம் கட்டாயம் வரும் மாதமென பாத்திரங்களை மாற்றிக்கொண்டே இருக்கிறேன்... http://naperiyasamy.blogspot.in/2013/07/blog-post.html#comment-form
  18. பாடல்: மெல்ல பூக்குதே படம்:புத்தகம் இசை: ஜேம்ஸ் வசந்தன்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.