Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by கிருபன்

  1. தென்தமிழீழம் பெற்ற மாவீரன் தளபதி அன்ரனி ! வசிட்டர் வாயால் பிரமரிஷி என்பதுபோல கிட்டு வாயால் சிறந்த தளபதி அன்ரனி ! "உலகெங்கிலும் கிடைக்காத மலிவான கூலி - எவ்வளவு அடித்தாலும் தாங்குவார்கள்" என அடையாளப் படுத்தப்பட்டவர்கள் தமிழர்கள். ஆனால் திருப்பியும் அடிக்கக் கூடியவர்கள் இவர்கள் என்ற வரலாற்றை ஆரம்பித்தவர்கள் ஈழத் தமிழர்கள். இந்த ஆரம்பம் கல்முனை - துறைநீலாவணைப் பகுதியில் இடம்பெற்றது. பெரும் பாலானோருக்குத் தெரியாது. தம்மைத் தாக்க வந்த ஆயுத தாரிகளான சிங்களவர்களை ஓட ஓட விரட்டியவர்கள் கனகசூரியம் உள்ளடங்கிய குழுவினர். அம்பாறை பட்டிப்பளையில் அரசமரக் கிளையொன்றை நாட்டிய இலங்கையின் முதலாவது பிரதமரான டி.எஸ் .சேனநாயக்கா, " இந்த மரக்கன்று பெரிய விருட்சமாகும் போது உங்களைத் தவிர வெளியார் யாரும் இருக்கக் கூடாது " என்று சிங்களவர் மத்தியில் உரையாற்றினார். அந்த வெறியூட்டும் பேச்சுத்தான் அம்பாறை சிங்களவர்களுக்கு மட்டுமே சொந்தமானது என்ற நினைப்புக்குத் தள்ளியது. கல்லோயா திட்டத்தின் கீழ் கரும்புத் தோட்டத்தில் பணிபுரிந்த சுமார் 150 தமிழர்களை வெட்டியும் தீயிட்டும் கொல்ல வைத்தது. தொடர்ந்து தமது ஆதிக்க எல்லையை விரிவுபடுத்த கல்முனை - துறை நீலாவணைப் பகுதிக்கு ஆயுத தாரிகளாக வந்து சேர்ந்தனர் சிங்களவர்கள். அச்சமயமே தமிழனின் ஆயுதப் போராட்ட வரலாறு ஆரம்பித்தது. அன்றைய தினம் ஆயுதம் தூக்கிய கனக சூரியத்தின் மகன்தான் பின்னாளில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அம்பாறை மாவட்ட தளபதியாக விளங்கிய மேஜர் அன்ரனி .( சிறிதரன் ) இன்று அவரது 28வது ஆண்டு நினைவு தினமாகும். கனகசூரியம் சௌந்தரி தம்பதியினர் இருவரும் கல்முனை பட்டின சபை 1 ஆம்,2 ஆம் வார்டுகளின் உறுப்பினர்களாக விளங்கியவர்கள், இவர்களுக்கு ஐந்து ஆண்பிள்ளைகள், ஆறு பெண் பிள்ளைகள் மொத்தம் 11 பிள்ளைகள் இவர்களில் ஆறாவது பிள்ளையாக 24/04/1964 அன்று பிறந்தார் அன்ரனி. " வசிட்டர் வாயால் பிரம்ம ரிஷி " என்பார்கள் அது போலவே தமிழர் விடுதலைப் போராட்ட காலத்தில் களத்தில் நின்று வழிநடத்தியவர்களில் முதன்மையாளராக விளங்கிய கேணல் கிட்டுவின் வாயால் "சிறந்த கொமாண்டர் " என்று வியந்து பாராட்டப்பட்டவர். அன்ரனி. இந்திய இராணுவ காலத்தில் முற்றுகைக்குத் துணை புரிய முகாமில் இருந்து புறப்பட்ட படையினரை முன்னேறவிடாமல் மோட்டார் படையணியை நெறிப்படுத்திய விதம் - கட்டளையிடும் பாங்கு என்பவற்றைப் பார்த்த பின்பே கிட்டு இவ்வாறு பாராட்டினார். அடுத்த தொகுதியில் சிறந்த தலைமைத்துவம் உருவாகி வருவது குறித்து மகிழ்ச்சியுற்றார். கௌரவிப்பவரின் தகுதியை வைத்தே கௌரவம் பெறுவோர் குறித்து வெளியில் உள்ளோர் தீர்மானிப்பார். இதனை உறுதிப் படுத்துமாற்போல் அன்ரனிக்கு 203 ரக துப்பாக்கியைப் பரிசளித்தார் தலைவர். பொதுவாக தளபதிகளுக்கே இக் கௌரவம் வழங்கப் படுவது வழக்கம். அந்த வகையில்அன்ரனி இக் கௌரவத்தைப் பெறத்தகுதியானவர்தான். இந்திய ராணுவத்தின் போரிடும் வலுமிக்க சக்தியாகக் கருதப்பட்டது கூர்க்காப் படையணி. கூர்க்காக்கள் குறித்து இயல்பாகவே பெருமிதமாகவே குறிப்பிடுவார்கள் ஒரு கூர்க்கா கத்தியை வெளியே எடுத்தால் இரத்தம் காணாமல் உறைக்குள் அதனை வைக்கமாட்டான் என்று புகழ்வார்கள் அவ்வாறன கூர்க்கா படையணி நொந்து நூடில்ஸ் ஆகிப்போன இடம் மணலாறு, கூர்க்காக்கள் தமது கத்தியை மண்ணில் புதைத்துக் கொண்டார்கள் என்று கூறுமளவுக்கு அந்தப் படையணி புலிகளிடம் அடிவாங்கியது. இந்தச் சமரில் கணிசமானளவு மட்டக்களப்பு போராளிகள் பங்குபற்றினர். தொடர்ந்து பல சமர்களில் அவர்கள் தமது திறமையை வெளிப்படுத்தினார். பிறகொரு சந்தர்ப்பற்றில் இவ்விடயங்களை அன்ரனியிடம் குறிப்பிட்டார் ஒரு போராளி தொடர்ந்து " இங்கே இவ்வளவு திறமையாக மட்டக்களப்பு போராளிகள் செயற்படுகின்றனர் ஆனால் இதேஅளவு திறமையை மட்டக்களப்பில் வெளிப்படுத்தப் படவில்லையே ?" என வினாவினார். இதற்குச் சிரித்துக்கொண்டு பதிலளித்தார் அன்ரனி. "ஒரு முயலை வேட்டை நாயொன்று துரத்திச் சென்றது தனது உயிரைப் பாதுகாக்க மிக வேகமாகப் பாய்ந்து சென்றது முயல். ஒரு இடத்தில் அதன் கால்கள் பதிந்ததும் திரும்பி நாயை நோக்கிப் பாய்ந்தது அது. முயலின் வேகத்தைப் பார்த்த நாய் திரும்பி ஒடத் தொடங்கியது.தனது உயிரைப் பற்றிய அச்சம் அதற்கு வந்துவிட்டது. இதற்குக் முயலின் கால்கள் பதிந்த இடம் பாஞ்சாலம் குறிச்சி. வீர பாண்டிய கட்டப்பொம்மன் பிறந்த மண் என்பதால் அது வீரம் விளைந்த பூமியாகத் திகழ்ந்தது. அது போலத்தான் எங்கள் தலைவரோடு இருக்கின்றோம் என்ற நினைப்பே எமது போராளிகளுக்குத் தனிச் சக்தியை ஆற்றலைக் கொடுக்கிறது அதுதான் காரணம். தலைவர் மீதான அன்ரனியின் விசுவாசம் அன்று பலருக்கும் வெளிப்பட்டது. ஒரு சமயத்தில் தலைவர் வாடாப்பா மட்டக்களப்புத் தளபதி என்று விநாயகமூர்த்தியின் மகனின் தோளிலும் வாடாப்பா அம்பாரைத் தளபதி அன்ரனியின் தோளிலும் கை போட்டபடி படம் எடுத்துக் கொண்டார். அச்சமயம் தலைவரின் மறுபக்கம் நின்றவரின் முகம் போன போக்கை அன்ரனி அறியவில்லை. வெளியில் நின்றவர்கள் அவதானித்துக்கொண்டார்கள் அம்பாறை திரும்பிய அன்ரனி 1989 ஆகஸ்ட் 24 அன்று வளத்தாப்பிட்டியில் இந்தியப் படையினர் மீது தாக்குதல் மேற்கொண்டார் புலிகள் தரப்பில் இழப்பேதுமின்றி நடத்தப்பட்ட இத் துணிகரத் தாக்குதலில் பல படையினர் கொல்லப்பட்டனர் 4 ஆயுதங்கள் 20 ரவைக்கு கூடுகள் கைப்பேற்றப் பட்டன. இந்தியப்படை அம்பாறையிலிருந்து வெளியேற முன்னர் அவர்களுடன் சேர்ந்தியங்கிய EPRLF. TELO.ENDLF. ஆகிய குழுக்களுக்கு ஏராளமான ஆயுதங்களை வழங்கி தமிழ்த் தேசிய இராணுவம் என்ற ஆயுதக் குழுவை உருவாக்கியது. திருக்கோயில் பகுதியில் நிலைகொண்டிருந்த EPRLF. முகாம் மீது அன்ரனி தலைமையிலான குழுவினர் தாக்குதல் நடத்தினார்.மிக உக்கிரமான இத் தாக்குதலில் சொந்தப் பலத்தில் நம்பிக்கையில்லாத EPRLF. யினர் சீக்கரமே தமது தோல்வியை உணர்ந்தனர். ஆயுதங்கள் வாகனம் வாகனமாக கைப்பெற்றப்பட்டன. மறுபக்கம் TELO. முகாம் றீகன் தலைமையிலான குழுவினரிடம் வீழ்ந்தது அம்பாறையை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த பின்னர் மட்டக்களப்பு நோக்கி தனது படையணியை நகர்த்தினார் அன்ரனி. மட்டக்களப்பு அரசியல் பொறுப்பாளராக விளங்கிய பிரான்சிஸ் (இராசையா சடாச்சரபவான்) யின் விதை குழிக்குச் சென்ற அவரும் அவரது படையினரும் அங்கு வீர வணக்கத்தைச் செலுத்தினர்.EPRLF. இனருடன் கூடச் சென்ற இந்தியப் படையினராலேயே வீரச்சாவைத் தழுவினார் பிரான்சிஸ். பிரான்சிஸின் தந்தையைச் சந்தித்து உரையாடிய பின்னர் படையணி மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியூடாக நகர்ந்தது. அப்போது சீறிலங்காப் படையினருடன் யுத்த நிறுத்தம் அமுலில் இருந்தது. களுவாஞ்சிகுடி போலீஸ் நிலையப் பகுதி யூடாக அவர்கள் சென்றபோது இங்கேதான் லெப். ராஜா (இராமலிங்கம் பரமதேவா ) வீரச்சாவைத் தழுவினார். எனவும் அத் தாக்குதல் பற்றியும் விளக்கினார். மட்டக்களப்பில் மோதல் தொடர்ந்த வண்ணம் இருந்தது அன்ரனி மட்டக்களப்பு நோக்கி நகர்கிறார் என்ற செய்தியை அறிந்ததும் தமிழ்த் தேசத் துரோகிகளின் நம்பிக்கை போய்விட்டன மட்டக்களப்பு புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. இரண்டாம் கட்ட ஈழப்போர் தொடங்கியதும் அன்ரனியின் களமுனை யாழ்ப்பாணத்தில் திறக்கப்பட்டது யாழ் கோட்டை முகாம் மீதான முற்றுகையின் போது அன்ரனியின் பங்கு கணிசமானதாக இருந்தது வசாவிளான் நோக்கி வந்த படையினர் தொடர்ந்து முன்னேற முயன்றனர். வசாவிளான் வந்த ஆமி புன்னாலைக் கட்டுவனுக்கு வராமலிருக்க வேண்டுமாயின் கடுமையாக போராட வேண்டும் எனக் கூறிவிட்டு சென்றார் அன்ரனி. அன்றைய சமரில் குறிப்பிட்ட பகுதியை நெருங்குவது கடுமையானதாக இருக்கிறது என சிங்கள தரப்பு தமது தலைமைக்கு விளக்கமளித்தது. இந்த உரையாடல் தலைவரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு யார் இருக்கிறார் என அவர் விசாரித்தார். அன்ரனியின் படையணிதான் அங்கு நிற்கிறது என்ற தகவல் கிடைத்தது. அவருக்குத் திருப்தியாக இருந்தது எனினும் வரலாறுஅவரை எம்மிடமிருந்து பிரித்தது. தமது பகுதியில் வீரச்சாவெய்திய அன்ரனிக்கு மரியாதையை செய்யும் முகமாக புன்னாலைக் கட்டுவன் மக்கள் அங்குள்ள ஆஸ்பத்திரி வீதிக்கு அன்ரனி வீதி என பெயரியிட்டனர். லெப் கேணல் .ராதா தலைமையிலான ஐந்தாவது பயிற்சிமுகாமில் பயிற்சி பெற்று மணலாறு,மட்டு- அம்பாறை, யாழ்ப்பாணம் என்று சகல இடங்களிலும் சமர்க்களமாடிய அன்ரனியை அவருடன் கூடப்பழகியவர்கள் கண்கள் பனிக்க பெருமையுடன் இன்று நினைவு கூறுகின்றனர். அன்ரனியின் சகோதரர்கள் மோகன்,விஜயராஜா இருவரையும் யுத்த காலத்தில் இழந்த குடும்பம் அவரது சகோதரி யொருவர் ஈ பி ஆர் எல் எப் வின் பிரமுகரும் வடகிழக்கு மாகாண சபை நிதி அமைச்சராக இருந்தவருமான கிருபாகரனைத் திருமணம் செய்திருந்தார்.எனினும் எப்போதும் பிரபாகரனுக்கு மட்டுமே விசுவாசமாக இருந்தார் அன்ரனி .தளம்பவில்லை, ஆனால் விநாயகமூர்த்தியின் ஒருமகன் போராட்டத்திற்கு துரோகம் இழைத்து தனி அணி கண்டபோது இன்னொரு மகனான ரெஜியும் இணைந்து கொண்டார். முக்கிய தளபதியொருவர் ரெஜி யுடன் நீண்ட நேரம் தொலைத்தொடர்பில் உரையாடிய போதும் தனது தம்பியுடன் தான் நிற்கப் போகிறேன் என்று கூறி அவ்வாறே நடந்து கொண்டார். அச்சமயத்தில் பலரும் அன்ரனியை நினைவு கூர்ந்தனர். http://www.battinaatham.net/description.php?art=17102
  2. சசி வர்ணத்திற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்???
  3. கிச்சன் கீர்த்தனா: சிக்கன் லாலிபாப்! தினமும் வேலை வேலை என பரபரப்பாக ஓடிக்கொண்டிருப்பதால், குழந்தைகளுக்கும், வீட்டில் உள்ளவர்களுக்கும் சுவையான சாப்பாடு செஞ்சுக் கொடுக்க முடியலன்னு புலம்புகிற பெண்களை பார்க்காமல் இருக்கவே முடியாது. குறிப்பாக, வீட்ல உள்ள குழந்தைகள் கேட்குற சிக்கன் லாலிபாப்புகளைக் கூட ஸ்விகி, உபேர் ஈட்ஸ் போன்ற உணவு ஆப்களில் பதிவு செஞ்சு வாங்கி கொடுத்துக்கிட்டு இருக்குற நிறைய பேரை பார்க்கமுடியுது. சிக்கன் லாலிலாப்பை வீட்டிலேயே செய்றது எப்படின்னு இந்த வார வீக் எண்ட் ஸ்பெஷலாக பார்க்கலாம் வாங்க. தேவையான பொருட்கள் சிக்கன் லாலிபாப் துண்டுகள் - 8 முட்டை - 1 இஞ்சி பூண்டு விழுது - 2 டீ ஸ்பூன் மிளகுத் தூள் - 1 டீ ஸ்பூன் மிளகாய்த் தூள் – ½ டீ ஸ்பூன் எலுமிச்சை சாறு - 1 டீ ஸ்பூன் தயிர் - 50 மில்லி சோள மாவு - 1 டேபிள் ஸ்பூன் சிவப்பு கலர் - 1 சிட்டிகை (விருப்பமிருந்தால்) எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு உப்பு – தேவைக்கேற்ப அலங்கரிக்க வெங்காயத் தாள் அல்லது கொத்தமல்லித்தழை செய்முறை முதலில் சிக்கன் லாலிபாப் துண்டுகளை நன்கு கழுவி சுத்தம்செய்து வைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் முட்டை, இஞ்சி-பூண்டு விழுது, மிளகுத்தூள், மிளகாய்த்தூள், எலுமிச்சை சாறு, தயிர், சோள மாவு, உப்பு, சமையலுக்கு பயன்படுத்தக்கூடிய சிவப்பு கலர் சேர்த்து நன்கு கலக்கி வைத்துக் கொள்ளவும். அதனுடன் சுத்தம் செய்து வைத்திருக்கும் சிக்கன் லாலிபாப் துண்டுகளைச் சேர்த்துப் பிரட்டி எடுக்கவும். பின்னர், மசாலா கலவை சிக்கனில் முழுக்கப் பரவி இருக்குமாறு செய்யவும். இந்த கலவையை சுமார் அரைமணி நேரம் ஊற வைக்கவும். அதன்பின்னர், ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், ஊறவைத்துள்ள சிக்கன் லாலிபாப் துண்டுகளை ஒவ்வொன்றாக அதில் பொரித்தெடுக்கவும். பொரித்தெடுத்த சிக்கன் லாலிபாப் துண்டுகளை டிஸ்யூ பேப்பர்களில் அல்லது சாதாரண பேப்பர் தாள்களில் எடுத்து வைத்து, எண்ணெய் உறிஞ்சியதும் டூத்பிக்கை சொருகி சூடாகப் பரிமாறவும். வீட்டிலேயே சூடான லாலிபாப் ரெடி! குறிப்பு டோமாட்டோ சாஸ் அல்லது சில்லி சாஸ்ஸுடன் பரிமாறவும். https://minnambalam.com/k/2018/10/13/19
  4. கிச்சன் கீர்த்தனா: புரட்டாசி ஸ்பெஷல் - பாரம்பரிய சாம்பார்! புரட்டாசி சனிக்கிழமை நாளையுடன் முடியப்போகுது. அப்புறம் விரதம் எதுவும் கிடையாது. எப்பப் பார்த்தாலும் புரட்டாசி மாசம், அசைவ உணவு சாப்பிட மாட்டோம்; சைவ உணவுதான் சாப்பிடுவோம் என்கிற வார்த்தையை இந்த மாசம் முழுவதும் கேட்டிருப்போம். அதனால, பெரும்பாலான வீடுகளில் தினமும் சாம்பார், புளிக்குழம்பு, பருப்புக் குழம்பு, காரக் குழம்பு இப்படியான ஒரேவிதமான சமையல்தான் இருந்திருக்கும். இதில், சற்று வித்தியாசமாக பாரம்பரிய சாம்பார் எப்படி வைக்கிறதுன்னு இன்றைய கிச்சன் கீர்த்தானாவில் அதற்கான செய்முறையை பார்க்கலாம் வாங்க. தேவையான பொருட்கள் சாம்பார் பொடி தயாரிக்க துவரம்பருப்பு – 1 டேபிள்ஸ்பூன் காய்ந்த மிளகாய் – 5 தனியா – 2 டேபிள்ஸ்பூன் சீரகம் – அரை டீஸ்பூன் வெந்தயம் – கால் டீஸ்பூன் கடலைப்பருப்பு – 1 டேபிள்ஸ்பூன் விழுதுக்கு தேங்காய்த் துருவல் – கால் கப் சின்ன வெங்காயம் – 7 சீரகம் – கால் டீஸ்பூன் சாம்பாருக்கு துவரம்பருப்பு – 200 கிராம் மஞ்சள்தூள் – 1 டீஸ்பூன் புளி – எலுமிச்சையளவு தக்காளி - 2 கத்திரிக்காய் – 2 முருங்கைக்காய் – 1 உப்பு - தேவையான அளவு தாளிக்க எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன் கறிவேப்பிலை - சிறிதளவு நறுக்கிய வெங்காயம் – கால் கப் கடுகு – கால் டீஸ்பூன் அலங்கரிக்க கொத்தமல்லித்தழை - சிறிதளவு பெருங்காயத்தூள் - சிறிதளவு செய்முறை முதலில் துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, வெந்தயம், சீரகம், தனியா, காய்ந்த மிளகாய் எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து லேசான தீயில் வறுத்து சாம்பார் பொடி தயார் செய்து கொள்ளவும். அதன்பின்னர், தேங்காய்த் துருவல், வெங்காயம், சீரகத்தைச் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். இதற்கிடையில், குக்கரில் துவரம்பருப்பு, மஞ்சள்தூள், தண்ணீர் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும். பின்னர், புளியைக் கரைத்துக் கொள்ளவும். அதன்பின், ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு கறிவேப்பிலையை போட்டுத் தாளித்தவுடன், வெங்காயம், தக்காளியைச் சேர்த்து வதக்கிக் கொள்ளவும். பிறகு அதனுடன் கத்திரிக்காய், முருங்கைக்காயையும் சேர்த்து வதக்கவும். பின்னர், புளிக்கரைசல், துவரம்பருப்பு, உப்பு இரண்டையும் ஒன்றாகச் சேர்த்து வதக்கிய காய்கறிகளை அதனுடன் சேர்க்கவும். அதன் பின்னர், பொடித்துவைத்துள்ள சாம்பார் பொடியைச் சேர்த்து தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும். காய்கறிகள் அரை பதத்தில் வெந்ததும் அதனுடன் தேங்காய் விழுதைச் சேர்த்து 10 நிமிடங்கள் வேக விடவும். பின்னர், அடுப்பை அணைத்து பெருங்காயத் தூள் மற்றும் கொத்தமல்லித் தழை தூவி சூடான சாதத்துடன் பரிமாறவும். https://minnambalam.com/k/2018/10/12/6
  5. தென்தமிழீழம் தந்த இன்னுமோர் முத்து - அக்பர்! நன்றி "விடுதலைப்புலிகள்" விடுதலை வீரியம் விக்ரர் கவச எதிர்ப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்டினன்ட் கேணல் அக்பர் / வழுதி.................. வட போர்முனையின் கட்டளைப் பணியகம். தொலைத்தொடர்புக் கருவி அக்பரைத் தேடுகிறது. தொடர்பு இல்லை. காலையில்தான் முன்னணி நிலைகளைப் பார்த்துவிட்டு, அணித் தலைவர்களைத் தயார்படுத்துவதற்காக பின் தளத்திற்குப் போய் வருவதாகத் தளபதி தீபனிடம் கூறிச்சென்றவன். இன்னமும் வரவில்லை. மாலை 3.00 மணி அக்பரின் தொடர்பில்லை. மாலை 5.00 மணி தொடர்பில்லை. இரவு 8.00 மணி தொடர்பில்லை. தளபதியின் மனதில் ஐயம் தோன்றுகின்றது. நாளை விடிந்தால் எதிரி முன்னேறக்கூடிய நிலையில் அக்பர் ஒருபோதும் இத்தனை மணிநேரம் தொடர்பில்லாமல் நிற்கமாட்டான். நேரம் செல்லச் செல்ல தளபதியிடமும் ஏனைய போராளிகளிடமும் ஏக்கம் தொற்றிக்கொள்கிறது. அவனுக்கு ஏதும் நடந்துவிட்டதா? அவனை எப்படித்தான் நாம் இழக்கமுடியும்? எல்லோரும் அவனைத் தேடினார்கள். அவன் எத்தனை பெறுமதிக்குரிய வீரன். களங்களில் அவன் சாதித்தவைகள்தான் எத்தனை. நாளைக்கும் அவன் வேண்டு மல்லவா? அவன் எங்கே போய்விட்டான்? அக்பர் பிறந்தது தவழ்ந்தது வளர்ந்தது எல்லாமே மட்டக்களப்பின் கதிரவெளியில்தான். போராட்டத்திற்கும் அவன் குடும்பத்திற்கும் நெருங்கிய ஒன்றிப்பிருந்தது. அண்ணன் அப்போது போராளியாய் இருந்தான். இந்திய படைகள் ஊருக்குள் நுழைந்து வீடுவீடாய் புகுந்து இளைஞர்களை வீதிக்கு இழுத்துச் துயரப்படுத்தின. இந்த அவலங்களுக்கு அக்பரும் விதிவிலக்காகவில்லை. அவனை வீட்டிற்குள் வந்து இழுத்து வெளியே தள்ளினார்கள். வண்டியில் ஏற்றி முகாமிற்குக் கொண்டு போய்க் கட்டிவைத்துச் சித்திரவதை செய்தார்கள். அண்ணன் போராளியாய் இருந்ததைச் சொல்லி அவனை கொடுமைப்படுத்தினார்கள். இந்தத் தாக்கங்கள்தான் அவனையும் போராளியாக்கியது. 1990ஆம் ஆண்டில் வன்னிக்கு வந்த அவன் அடிப்படைப் பயிற்சிகளை மணலாற்றில் பெற்றதோடு அவனின் நீண்ட போராட்டவாழ்வு முளைவிடுகின்றது. பல இரகசியப் பணிகளிலும் கடுமையான பயிற்சிகளிலும் ஈடுபட்ட அவன், சிறிய சிறிய சண்டைகளிலும் பங்குகொண்டு தன்னை ஒரு சிறந்த போர்வீரனாக வளர்த்துக்கொண் டான். அக்பரின் இந்த வளர்ச்சித்திறன் சூரியக்கதிர் எதிர் நடவடிக்கையின்போது முழுமையாய்த் தெரிந்தது. முன்னேறிவரும் எதிரியைத் தடுத்து நிறுத்தித் தாக்குதல் செய்வதற்கான வேவு நடவடிக்கைகளில் துணிச்சலாக ஈடுபட்டான். அவன் பார்த்த வேவுகளின்படி தாக்குதல்களும் நடந்தது. ஒரு சாதாரண போராளியாய் சண்டைக் களங்களைச் சந்தித்த அவன், வேவு அணிகளை வழிநடத்தும் அணித் தலைவனாக வளர்ந்தான். இந்த நாட்களில்தான் முல்லைத்தீவிலிருந்த சிறிலங்கா படைத்தளம் மீது ஓயாத அலைகள் – 01 என்ற பெயரில் பாரிய படைநடவடிக்கையைத் தலைவர் அவர்கள் திட்டமிட்டுத் தயார்ப்படுத்தினார். இந்தத் தாக்குதலுக்கு இம்ரான் பாண்டியன் படையணியின் முறியடிப்பு அணியின் பற்றாலியன் உதவிக் கட்டளை அதிகாரியாக அக்பர் அமர்த்தப்பட்டான். எதிரி நினைத்திராத பொழுதில் முல்லைத்தீவுத் தளத்தில் அடிவிழுந்தபோது சிங்களம் திகைத்தது. யாழ்ப்பாண ஆக்கிரமிப்பிற்குப் பலமாய் நிற்கும் முல்லைத்தீவுத் தளத்தை இழக்க விரும்பாமல் கடைசிவரை அதைத் தக்கவைக்க கடும் முயற்சி செய்வார்கள் என்பது தலைவருக்கு நன்கு தெரியும். முல்லைத்தீவுப் படைகளைக் காப்பாற்ற சிங்களப்படை தரையிறக்கம் ஒன்றைச் செய்யும் என்பதை உய்த்தறிந்த தலைவர் அவர்கள், அணிகளைத் தயாராய் வைத்திருந்தார். எதிர்பார்த்தபடி அளம்பிலில் சிங்களப்படை வந்து தரையிறங்கியது. ஒரு தன்மானப்போர் அங்கே நடந்தது. கட்டளை வழங்கும் தளபதியாய் இருந்த அக்பர் சண்டை இறுக்கம் அடைந்த போது தானும் களத்திற்குள் புகுந்துவிட்டான். திறமையாய் அணியை வழிநடத்தினான். அளம்பில் மண்ணில் எதிரியைக் கொன்று போட்டான். முல்லைத்தீவுச் சமர் முடிந்து ஓயாத அலைகள் – 01 நடவடிக்கை வெற்றிவாகை சூடியபோது, அக்பர் ஒரு சிறந்த சண்டைக்காரனாக வெளிப்பட்டான். முல்லைத்தீவில் அடிவாங்கிய சிங்களப்படை, தங்கள் அவமானச் சின்னங்களை இல்லாமல் செய்வதற்காக ‘சத்ஜெய’ என்ற பெயரில் கிளிநொச்சியை வல்வளைப்பு படை நடவடிக்கையை தொடங்கியது. பரந்தனில் சிங்களப் படைகளை எதிர்கொண்ட புலி வீரர்கள் கடும் சமர்புரிந்தார்கள். சிங்களப்படை டாங்கிகளுடன் எங்கள் பகுதிகளுக்குள் புகுந்து கொண்டிருந்தது. சண்டை நடந்த இடத்திலிருந்து 500 மீற்றர் தூரத்தில் கட்டளைகளை வழங்கிக் கொண்டிருந்த அக்பர், சண்டையின் இறுக்க நிலையைப் புரிந்து கொண்டு உடனே சண்டை நடந்த இடத்தை நோக்கி ஓடினான். உடனடியாக முடிவெடுத்து அங்கு நின்ற ஆர்.பி.ஜி உந்து கணை செலுத்தி வைத்திருந்த மூன்று வீரர்களை ஒன்றாக்கி முன்னேறிவந்த டாங்கிகள் மீது ஒரு துணிச்சலான தாக்குதலை மேற்கொண்டான். இந்தத் தாக்குதலில் இரண்டு டாங்கிகள் எரிந்து அழிந்தன. இக்கட்டான ஒரு சூழ்நிலையில் அக்பரின் விரைவானதும் நுட்பமானதுமான இந்தத் திட்டம் வெற்றிகரமாய் நிறைவேறியது. அன்றைய நாளில் எதிரியின் முன்னேற்ற முயற்சியைத் தடுத்து நிறுத்தியதில் அக்பர் முக்கிய காரணமாய் இருந்தான். ஏ – 9 சாலையைப் பிடித்து யாழ்ப்பாணத்திற்கு தரைவழிப் பாதையைத் திறக்கும் பாரிய நில வல்வளைப்பிற்கு அப்போதைய சிறிலங்காவின் துணைப்பாதுகாப்பு அமைச்சர் ரத்வத்தவின் பேரிகை முழக்கத்தோடு, தொடங்கப் போகும் ‘ஜயசிக்குறு’ படை நடவடிகையை முறியடிக்கும் திட்டத்தில் தலைவர் அவர்கள் அதிக நேரத்தைச் செலவிட்டார். டாங்கிகளை எதிரி அதிகம் பயன்படுத்துவான் என்பதையும் தலைவர் புரிந்துகொண்டார். இந்த டாங்கிகளைச் சிதைப்பதற்காக ஒரு படையணியை உருவாக்குதவற்கு முடிவெடுத்து அதற்கான கட்டளைத் தளபதியாக யாரைத் தெரிவு செய்யலாமெனத் தேடியபோது அதற்குப் பொருத்தமானவனாய் தலைவரின் கண்ணுக்குள் தோன்றியது அக்பரின் முகம்தான். சத்ஜெய முறியடிப்புச் சமரில் அக்பரின் திறமையினைத் தலைவர் அவர்கள் இனம் கண்டுகொண்டார். அக்பரின் தலைமையின்கீழ் இம்ரான் பாண்டியன் படையணியின் சிறப்புப் பயிற்சி பெற்ற போராளிகள் விக்டர் சிறப்புக் கவச எதிர்ப்பு அணியாக உருவாகினர். இந்தப் படையணியில் நுழைந்த அனைவருக்கும் கடும் பயிற்சி. அக்பரில் தொடங்கி சாதாரண போராளி வரைக்கும் எல்லோரும் பயிற்சியெடுத்துத் தேர்வின்போது சித்தியெய்திய பின்னரே இந்த அணிக்குள் நுழைந்தனர். அக்பர் ஒரு கட்டளை அதிகாரியாய் இருந்தபோதும் ஒவ்வொரு போராளிக்குமுரிய எல்லாக் கடமையையும் தானும் நிறைவேற்றினான். ஒவ்வொரு சின்னச் சின்ன விடயங்களிலும் கவனமெடுத்தான். போராளிகளுக்கும் தனக்குமான இடைவெளியைக் குறைத்து ஒரு நெருக்கமான, இறுக்கமான உறவை ஏற்படுத்தினான். எல்லாக் கடினபயிற்சிகளிலும் தானும் ஈடுபட்டபடி மற்றப் போராளிகளையும் ஊக்கப்படுத்துவான். பயிற்சித் தேர்வின்போது எந்தப் போராளியும் சித்தியெய்தாமல் விடக்கூடாது என்பது அவனது நோக்கமாய் இருந்தது. அப்படித் தேர்வில் சித்தியெய்தத் தவறியவர்களை மீண்டும் மீண்டும் பயிற்சியில் ஈடுபடுத்திச் சித்தியெய்த வைத்தான். பயிற்சியுடன் மட்டும் நின்றுவிடாமல் போராளிகளுக்கு உணவு கொடுப்பதைக்கூட தானே நேரில் நின்று உறுதிப்படுத்திக் கொள்வான். ஒருமுறை நண்பகல்வேளையில் போராளிகளுக்குக் கொடுக்கும் பசுப்பாலைக் காய்ச்சும்போது எரித்துவிட்டார்கள். அதன்பின், தான் நிற்கும் நேரங்களில் தானே பால் காய்ச்சி போராளிகளுக்குக் கொடுப்பான். போராளிகள் தவறிழைத்தால் அல்லது கவனமின்றிச் செயற்பட்டால் அவன் எடுக்கும் நடவடிக்கை போராளிகள் எதிர்காலத்தில் எந்தவேளையிலும் அத்தகைய தவறுகளை விடாதபடி படிப்பினை மிக்கதாய் இருக்கும். ஒருநாள் போராளிகள் கிணற்றடியில் குளித்துக்கொண்டிருந்தார்கள். அக்பரும் குளிப்பதற்காக கிணற்றடிக்கு வந்தான். அந்தச் சூழலை அவன் மேலோட்டமாய்ப் பார்த்தபோது அன்று காலையில் கிணற்றடி சுத்தம் செய்யப்படாமல் பயன்படுத்திய பொருட்களின் தடயங்கள் அப்படியே கிடந்தது. அக்பர் ஒன்றும் பேசவில்லை. யாரையும் குறைகூறவுமில்லை. தங்ககத்திற்குப்போய் விளக்குமாறினை எடுத்துக் கொண்டுவந்து தானே கிணற்றடியைச் தூமைப்படுத்தினான். போராளிகள் அப்பொழுதுதான் விழித்துக் கொண்டவர்களாய் விளக்குமாறினை வாங்கிச் தூய்மைப்படுத்த முனைந்தார்கள். அக்பர் யாரையும் அதற்கு இசையவில்லை. அன்றைய நாளில் அந்தப் பகுதியை முழுமையாய் தானே தூய்மைப்படுத்தினான். அதன் பின்புகூட அவன் அதைப்பற்றி யாரிடமும் எதுவும் பேசவில்லை. அக்பரின் இந்தச் செயற்பாடு போராளிகளின் விழிகளைக் கசியச்செய்தது. அதன்பின் ஒரு போதும் அந்தத் தவறைப் போராளிகள் விட்டதில்லை. அக்பரின் இந்தப் பண்பும் தவறிழைத்தவர்களைக் கூட யாரிலும் நோகாமல் தன்னைமட்டுமே வருத்தி அதற்குத் தீர்வு காணும் திறனும் போராளிகளிடத்து ஒரு தந்தைக்குரிய நிலையை அவனுக்குப் பெற்றுக்கொடுத்தது. அக்பர் விளக்குமாறு பிடிப்பதில் மட்டுமல்ல களத்திலே ஆயுதம் பிடித்துச் சுடுவதுவரை இதே முடிவைத்தான் கடைப்பிடித்தான். அக்பரின் உச்சமான வளர்ச்சிகளுக்கு இதுவே அடிநாதமாய் இருந்தது. நீண்ட எதிர்பார்ப்புகளோடு தலைவர் இந்த அணியை உருவாக்கினார். 1997ஆம் ஆண்டு மே திங்கள் 13ம் நாள். புத்தபிரான் முன் சூளுரை எடுத்துக்கொண்டு வன்னி மீது ‘ஜயசிக்குறு’ என்ற பெயரில் பாரிய படை நடவடிக்கையை சிங்களம் தொடங்கியது. தயாராய் இருந்த விடுதலைப் புலிகளின் படையணிகள் களத்திலே எதிரியை நேருக்குநேர் எதிர்கொண்டனர். மனோபலத்திலே எங்களுக்குக் கீழே நின்ற எதிரி ஆயுதபலத்தில் எங்களுக்கு மேலே நின்றான். சண்டைகளின் போது டாங்கிகளை முன்னணிக்கு அனுப்பி டாங்கிகளின் சுடுகுழல்களால் எங்கள் காப்பரண்களைச் சல்லடை போட்டுக்கொண்டு அந்த இரும்புக் கவசங்களின் மறைவில் பதுங்கிப் பதுங்கி எங்கள் பகுதிகளுக்குள் நுழைந்தான். இந்தச் சூழலை எதிர்பார்த்து அதற்கென்றே தயாராய் இருந்த அக்பரின் அணி, களத்தை நேரடியாய் சந்தித்தது. எதிரி ஒவ்வொரு அடி நிலத்தையும் வல்வளைப்புச் செய்ய அதிகவிலை கொடுத்தான். 25.05.1997 மன்னகுளத்தில் ஒரு கடுமையான முறியடிப்புச் சமரை எங்களது படையணிகள் நடாத்தின. டாங்கிகள் பரவலாய் முன்நகர்ந்தன. அக்பர் கட்டளை வழங்கும் காப்பரணில் நின்றபடி ஆர்.பி.ஜி ஏந்திய தனது போராளிகளை வழிநடத்திக் கொண்டிருந்தான். போராளிகள் எதிரியுடன் நெருங்கி நின்று சண்டை பிடித்தனர். சண்டை உச்சமடைந்து கைகலப்புச் சண்டையாக மாறியது. இந்த வேளையில்தான் ஆர்.பி.ஜி கொமாண்டோ வீரன் பாபு வீரச்சாவடைந்த செய்தி அக்பரின் காதிற்கு எட்டுகின்றது. அக்பரின் இரத்த நாளங்களில் துடிப்பு அதிகரிக்கின்றது. எத்தனை அன்பாய் அவன் வளர்த்த வீரர்கள் மடிந்துகொண்டிருந்த போது அவனால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. நேரே சண்டை நடந்த இடத்திற்கு ஓடினான். எதிரி மீதான அவனின் சினம் அங்கு வீழ்ந்துவெடிக்கும் எறிகணைகளின் தாக்கத்திலும் மேலானதாய் இருந்தது. ஒரு கட்டளை மேலாளரான அக்பர் களத்திலே தான் வளர்த்தவர்களின் அருகில் நின்றபடி, பாள்ளி வகுப்பில் பாடம் சொல்லிக் கொடுக்கும் ஆசானைப்போல் களத்திலே சீறியபடி செல்லும் ரவைகளுக்குள்ளும் நெருப்புத் துண்டங்களாய் உடலைக் கிழித்தெறியத் துடிக்கும் எறிகணைத் துண்டங்களையும் கவனத்திற்கொள்ளாது டாங்கிகளைச் சிதறடிக்கும் வழியைக் காட்டினான். இறம்பைக்குள மண் அதிர்ந்தது. அந்தப்பொழுதில் அக்பர் அவர்களுக்குள் ஒருவனாய் நின்று ஆடிப்பாடி வளர்த்த நான்கு இளம் போராளிகளை விலையாய்க் கொடுத்து இரு டாங்கிகளையும் ஒரு படைக்காவியையும் அழித்து இரு டாங்கி களைச் சேதமாக்கியும் எதிரியின் கவசப் படைக்கு வலுவான அடியைக்கொடுத்தான். இத்தாக்குதல் முறியடிப்பின் மூலம் களத்தை முழுமையாய் வழிநடத்தும் கட்டளைத் தளபதிகளுக்கு விக்டர் சிறப்புக் கவச எதிர்ப்பு அணியின் செயற்பாட்டில் நேர்த்தியான செயற்திறன் மீதான நம்பிக்கையை அக்பர் ஏற்படுத்திக் கொடுத்தான். 10.06.1997அன்று தாண்டிக்குளத்தில் தளம் அமைத்திருந்த ஜயசிக்குறு படைமீது ஒரு வலிந்த தாக்குதலை எமது படையணிகள் மேற்கொண்டன. இந்தக் களத்திலும் எதிரியின் டாங்கிகளின் நகர்வை முறியடிக்க ஒரு பிளாட்டூன் போராளிகளுடன் அக்பர் களமிறங்கினான். சண்டை கடுமையாய் நடந்தது. எதிரியை நெருங்கி மேற்கொண்ட இத்தாக்குதலின் ஒரு கட்டத்தில் அக்பர் விழுப்புண் அடைகின்றான். விழுப்புண்ணின் வலி அவன் உடலை வருத்தியதை விட எதிரி எங்கள் நாட்டின்மீது மேற்கொள்ளும் வல்வளைப்பின் வலி அதிகமாய் இருந்தது. விழுப்புண்ணிற்கு இரத்தத்தடுப்புத் துணியைக் கட்டிக்கொண்டு தொடர்ந்தும் தன் அணியை வழிநடத்திச் சண்டையிட்டான். இச் சண்டையில் இரு டாங்கிகளைத் தாக்கி அழித்து ஒரு படைக்காவியைச் சேதமாக்கி தாக்குதல் ஓய்விற்கு வந்த பின்னரே அக்பர் தளம் திரும்பினான். அக்பர் களங்களில் சாதித்த வெற்றிகளுக்கு அவன் வளர்த்த அணித் தலைவர்களும் காரணமாயிருந்தனர். தன்னிடமிருந்த நற்பண்புகளை அவர்களுக்கும் ஊட்டி வளர்த்தான். தனித்து முடிவெடுத்துச் செயற்பட வேண்டிய நேரங்களில் அதற்கும் வாய்ப்புக் கொடுத்தான். கட்டம் கட்டமாய்ப் பாரிய இழப்புக்களைச் சந்தித்தபடி முன்னேறிய எதிரிப்படையைப் புளியங்குளத்தில் வைத்து ஒரு வலிமையான தடுப்பு அரண் அமைத்துச் சண்டையிட்டன எமது படையணிகள். 19.08.1997 அன்று காலைப்பொழுது. பேரிரைச்சலைக் கிளப்பியவாறு வேகமாய் வந்த டாங்கிகளும் துருப்புக்காவியும் எங்களது காப்பரண்களை ஏறிக்கடந்து புளியங்குளம் சந்தியை மூலப்படுத்தியிருந்த எமது தளத்திற்குள் நுழைந்தன. நிலைமையைப் புரிந்து கொண்டு விழித்துக்கொண்ட எமது அணிகள் முகாமிற்குள் எதிரியைச் சல்லடை போட்டார்கள். ஆர்.பி.ஜி கொமாண்டோப் போராளிகளுக்கு மேஜர் காவேரிநாடன் கட்டளை வழங்கி வழி நடத்த முகாமிற்குள் நுழைந்த எதிரியுடன் பதட்டமில்லாமல் சமரிட்டு இரண்டு டாங்கிகளை அழித்தும் ஒரு துருப்புக்காவியைக் கைப்பற்றியும் சிலவற்றைச் சேதமாக்கியும் எதிரியின் கனவைச் சிதைத்து ஓட ஓட விரட்டியடித்தனர். இந்தச் சண்டையின்போது அக்பர் களத்தில் இல்லாபோதும் அவன் வளர்த்த அணித் தலைவர்களும் போராளிகளும் விக்ரர் சிறப்புக் கவச எதிர்ப்பு அணியின் பெயரை நிலை நிறுத்தினர். இப்படி ஜயசிக்குறு களத்தில் அக்பர் பல சண்டைகளை எதிர்கொண்டான். ஒவ்வொரு சண்டைகளிலும் எதிரியின் டாங்கிப் படைக்கு நெடுக்குவரியைக் கண்டால் குலை நடுங்கும்படி உருவாக்கினான். எப்போதாவது டாங்கிகள் பேசுமாயின் தாங்கள் நடுங்கிப்பயந்து ஒடுங்கிப்போனது பற்றி அவைகூடச் சொல்லும். ஏனென்றால் அக்பர் தன் போராளிகளை வைத்து களங்களில் அப்படித்தான் சாதித்தான். ஓயாத அலைகள் – 02 நடவடிக்கை தலைவர் அவர்களால் திட்டமிடப்பட்டு கிளிநொச்சி நகரையும் பரந்தனையும் ஊடறுத்து எதிரியை இரண்டாகப் பிரித்துத் தாக்கும் அணிகளுடன் விக்ரர் சிறப்புக் கவச எதிர்ப்பு அணியும் இணைக்கப்பட்டது. சண்டை தொடங்கியதும் ஊடறுப்பு அணிகள் உள்நுழைந்தன. கிளிநொச்சிப் படைத்தளம் தனிமைப்படுத்தப்பட்டது. வயல் வெளிகளுக்குள் இரண்டு பகுதியாலும் முன்னேற முயலும் எதிரியைத் தடுத்து நிறுத்தும் களச் செயற்பாட்டில் அணிகள் ஈடுபட்டன. கிளிநொச்சித் தளம் மீது பலமுனைகளில் அழுத்தம் கொடுத்துத் தாக்குதல் தொடுக்க முற்பட்டபோது கிளிநொச்சியைத் தம்முடன் இணைப்பதற்காக பரந்தனில் இருந்து டாங்கிகளுடன் படையினர் முன்னேறினர். இவர்களை வழிமறித்த ஏனைய படையணிப் போராளிகளும் விக்டர் சிறப்பு கவச எதிர்ப்பு அணிப் போராளிகளும் கடும் சமர்புரிந்தனர். அவ்வேளையில் நிலைகளைப் பார்த்து உறுதிப்படுத்தியபடி வந்துகொண்டிருந்த அக்பரும் ஏ – 9 பிரதான சாலையை அண்மித்திருந்தான். முன்னேறிய டாங்கிகளைத் தாக்கி அழிக்கும் பொறுப்பை மணிவண்ணனிடம் ஒப்படைத்துவிட்டுத் தான் நின்ற பகுதி நோக்கி வந்துகொண்டிருந்த துருப்புக்காவி ஒன்றினை அருகில் நின்ற கொமாண்டோ வீரனின் ஆர்.பி.ஜியை வாங்கித் தானே தாக்கியழித்தான். இந்தத் தாக்குதலில்தான் லெப். கேணல் மணிவண்ணனும் ஒரு டாங்கியைத் தாக்கியழித்தான். தங்களது கவசங்கள் உடைந்ததால் எதிரியின் உளவுரனும் உடைந்தது. பரந்தனையும் கிளிநொச்சியையும் இணைக்கும் அவர்களின் கனவு கைகூடாமல் போனது. கிலிகொண்ட சிங்களப்படை கிளிநொச்சியைவிட்டுத் தப்பியோடியது. இதேபோன்றுதான் 26.06.1999 பள்ளமடுப் பகுதிமீது மேற்கொள்ளப்பட்ட ரணகோச நடவடிக்கை மீதும் அக்பரின் படையணி முத்திரை பதித்தது. இந்தச் சண்டையில் எதிரி டாங்கிகளைக் கூடுதலாகப் பயன்படுத்தி டாங்கி நகர்வாகவே மேற்கொண்டான். ஆர்.பி.ஜி அணிக்கு இது ஒரு சவாலான சண்டையாக இருந்தது. டாங்கிகள் உந்துகணைகளை அந்த நிலம் முழுவதும் விதைத்தது. காப்பு மறைப்புக்கள் பெரிதாக இல்லாத அந்த நிலத்தில் நின்றபடி அக்பர் தெளிவாகக் கட்டளைகளை வழங்கினான். அக்பரின் கட்டளைக்கேற்ப நிலைகுலையா வலிமைகொண்ட போராளிகள் கடும் சமர்புரிந்தனர். இந்தச் சண்டையின் முடிவில் ஏழு போராளிகள் உயிர்களைத் தாயக விடுதலைக்காய் கொடுத்து ஆறு டாங்கி களை எரித்தழித்திருந்தனர். எதிரியின் கவசப் படையின் பலத்தை விக்ரர் சிறப்பு கவச எதிர்ப்பு அணி நிலைகுலையச் செய்தது. இப்படித்தான் ஜயசிக்குறுப் படை மூக்கை நுழைத்த திசையெல்லாம் அக்பர் செயலால் தன்னை வெளிப்படுத்தினான். அக்பரின் குறியீட்டுப்பெயர் ‘அல்பா – 1’. களத்திலே ‘அல்பா – 1’ வந்துவிட்டால் எல்லாப் போராளிகளுக்கும் உடலில் புது இரத்தம் ஓடும். களத்தில் ‘அல்பா – 1’ இன் ஆட்கள் வந்தால் எதிரிப்படைக்கு வியர்த்து ஓடும். அப்படித்தான் அக்பர் சாதித்தான். அக்பர் எந்தச் சூழ்நிலையிலும் எந்தவேளையிலும் தனித்து முடிவெடுத்துச் செயற்படுத்தும் திறன்வாய்ந்தவன். ஒட்டிசுட்டான் பகுதியை வல்வளைப்புச் செய்யும் நோக்கோடு இரகசிய நகர்வின்மூலம் எதிரி எமது பகுதிக்குள் நுழைந்த செய்தி அக்பரின் காதுக்கு எட்டிய உடனேயே தனது போராளி களின் ஆர்.பி.ஜி உந்துகணை செலுத்திகளை வாங்கிக்கொண்டு அவர்களின் கையில் துப்பாக்கிகளைக் கொடுத்து அணியினைத் தயார்ப்படுத்தும்படி கூறிவிட்டு எதிரி முன்நகர்ந்த இடங்களைக் கண்டறிவதற்கு அக்பர் விரைந்தான். அப்போது அக்பரின் முகாம் அந்த இடத்திற்கு நெருங்கிய பகுதியில்தான் அமைந்திருந்தது. முன்னேறிய எதிரியை நகர விடாமல் உடனடியாகவே ஒரு தடுப்பு நிலையை உருவாக்கி நிலைமையைக் கட்டுப் பாட்டுக்குள் கொண்டுவந்து ஏனைய தாக்குதல் அணிகள் அந்த இடத்தைப் பொறுப்பேற்கும் வரை அவனே அந்த நிலைகளைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தான். ஆனையிறவை வீழ்த்துவதற்காக இத்தாவிலில் ஒரு தரையிறக்கத்தினைச் செய்து ஒருமாத காலம் சமர் புரிந்தபோது அக்பரும் அவன் போராளிகளும் எதிரியின் கவசப்படையின் முன்னேற்ற முயற்சிகள் அனைத்தையும் முறியடித்துப் பல கவசங்களைச் சிதைத்தனர். இத்தாவிலில் சிங்களம் சந்தித்த தோல்விக்கும் ஆனையிறவை வீழ்த்தி விடுதலைப்புலிகள் வெற்றிவாகை சூடியதற்கும் அக்பரிற்கும் அவன் படையணிக்கும் பெரும் பங்கிருந்தது. விடுதலைப் புலிகளிடம் வீழ்ந்துவிட்ட ஆனையிறவை மீளக் கைப்பற்றும் நோக்கோடு ‘தீச்சுவாலை’ என்ற பாரிய இராணுவ நடவடிக் ஷகையை எதிரி மேற்கொண்டபோது டாங்கிகளை அவன் முந்நிலைப்படுத்தவில்லை. ‘ஜயசிக்குறு’ களச் சமர்களின்போது இஸ்ரேல் தயாரிப்பில் உருவான டாங்கிகளையும் படைக்காவிகளையும் அக்பர் நொருக்கி அழித்தான். அவற்றின் சுழல்மேடையினையும் சுடுகலங்களையும் தன் காலடிக்குள் பணியவைத்தான். ஒட்டு மொத்தமாய் களத்தில் டாங்கிகளின் செயற்திறனை இல்லாநிலைக்கு கொண்டுவந்தான். தலைவர் அவர்கள் எப்படி எண்ணி இந்த விக்ரர் சிறப்புக் கவச எதிர்ப்பு அணியை உருவாக்கினாரோ, அந்தக் கனவில் சிறிதும் பிழை இல்லாமல் நினைத்ததை அப்படியே தனது அணியை வைத்து அக்பர் செய்து முடித்தான். இரும்புக் கவசத்தின் வலிமையைச் சிதைத்து விடுதலைப் போராளிகளின் வலிமையை உலகிற்குக் காண்பித்தான். அக்பர் இப்படிப்பல பணிகளைப் புரிந்தான். பின்னாளில் பல அணிகளை இணைத்தும், பல புதுமையான ஆயுதங்களை உள்ளடக்கியதுமான அணிகளையும் அக்பர் வழிநடத்தினான். புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பின் மட்டக்களப்பின் ஆண்டாங்குளப் பொறுப்பாளராகத் தலைவரின் சிறப்புப் பணிப்பின் பேரில் சென்று பணிபுரிந்தான். களப்பணியையும் மக்கள் பணியையும் ஒன்றாகச் செய்தான். தூர இடங்களுக்குக்கூட கால்நடையாகச் சென்று வேவுபார்த்துத் தாக்குதல்கள் மேற்கொள்வது, மக்களின் தேவைகளை நிறைவேற்றுவது என அவன் எப்போதும் இயங்கிக்கொண்டிருந்தான். ஒரு தளபதியாய் இருந்தபோதும் ஒரு இயல்பான போராளியாகவே தன்னை கருதிக் கொள்வதும் ஏற்றத்தாழ்வு இன்றி எல்லோரையும் மதித்து நடப்பதும் பண்பான சொற்களைப் பயன்டுத்தி உரையாடுவதும், புன்சிரிப்பை மெல்லியதாய் பரவவிடுவதும் அவனுடன் கூடப்பிறந்த குண இயல்புகள். இந்த வீரன் 23.05.2005இல் தமிழீழத் தேசியத் துணைப்படையின் வடபோர்முனைக் கட்டளைத் தளபதியாக நியமிக்கப்பட்டான். அன்றிலிருந்து முன்னணி நிலைகளுள் அவர்களுடன் வாழ்ந்து ஒரு சிறந்த படையாக அதை உருவாக்கினான். 11.08.2006இல் முகமாலையில் எதிரி முன்னேறியபோதும், தொடர்ந்துவந்த சண்டைகளிலும் தேசியத் துணைப்படை எதிர்பார்த்ததிலும் அதிகமாய் அல்லது எதிர்பார்க்காத வகையில் சண்டையிட்டதாயின் அதன் ஆணிவேராய் இருந்தது அக்பர்தான். அக்பர் கட்டளை வழங்கினால் அவர்கள் சாதிப்பார்கள், அல்லது சாதனைக்காய் மடிவார்கள். அக்பர் அப்படித்தான் வாழ்ந்தான். இந்த வீரன்தானே எதிரியின் எறிகணை வீச்சில் எங்களை விட்டுப்பிரிந்து போனான். அவனுடன் கூடப்போன சாதுரியனும் அன்று மடிந்தான். அக்பரின் பிரிவு தளபதிகளில் இருந்து போராளிகள் வரை எல்லோரின் இதயத்தையும் ஒருமுறை உலுப்பி விழிகசிய வைத்தது. அக்பர் என்ற பெயருக்கு களத்தில் ஒரு வலிமை இருந்தது. ஒவ்வொரு ஆர்.பி.ஜி கொமாண்டோ வீரனின் வலிமையும் அக்பர்தான். அந்த வீரனின் நினைவுகளைச் சிறப்புத் தளபதிகளுடன் பகிர்ந்துகொண்டபோது அவன் ஒரு களஞ்சியமாய்த் தோன்றினான். அக்பர் ஒரு பண்பான போராளி, பெருந்தன்மையில்லாது பெரிய சாதனைகளைப் படைத்த தூயவீரன். தலைவன் நினைத்ததைச் செய்துமுடித்தவன், எந்த வேளையிலும் எந்த வளப்பற்றாக்குறையிலும் பெரிய வேலைகளையும் அமைதியாய் செய்து முடிப்பவன். சொல்வதைச் செய்வான், செய்வதைச் சொல்ல மாட்டான். இரும்பின் வலிமையை மிஞ்சிய தந்திரசாலி. எல்லாவற்றிற்கும் மேலாய் அக்பர் எங்களின் படையச் சொத்து. இத்தனை செயற்திறன் மிக்க வீரன் எங்களுக்குள் சத்தமில்லாமல் நடமாடித்திரிந்தான். களத்திலே இப்போதும் அவன் நிறையச் செய்யத்துடித்தான். உறங்குநிலையில் இருந்த ஆர்.பி.ஜி அணியை மீண்டும் இயங்குநிலைக்குக் கொண்டுவந்து பாரிய நடவடிக்கை ஒன்றினை முறியடிக்கும் முன்னேற்பாட்டுபோது அவன் மடிந்துபோனான். ஆயினும் அந்தப் பெயரின் வலிமை இப்போதும் இருக்கிறது. அக்பர் வீழ்ந்தபின்னும் அவன் வளர்த்த போராளிகள் எதிரியின் டாங்கிகளை நொருக்கினார்கள். ”தலைமைத்துவத்தின் பண்பு என்பது அவன் உயிருடன் இருக்கும் போது மட்டுமல்ல, அவன் வீழ்ந்துவிட்ட பின்பும் அவனின் கட்டளைகளை நிறைவேற்றுவது தான் அவன் தேடிவைத்த சொத்து” அக்பர் இந்தச் சொத்தை அதிகம் தேடிவைத்திருக்கிறான். கடைசியில், அக்பருக்கு ஒரு ஆசையும் ஆதங்கமும் இருந்தது. அக்பர் திருமணம் செய்து இரண்டு குழந்தைகளுக்குத் தந்தையான போராளி. அவன் களங்களிலேயே அதிகம் வாழ்ந்தவன். தன் குழந்தைகளோடு கொஞ்சிவிளையாட அவனுக்கு நேரம் கிடைத்தது குறைவு. எங்காவது ஒரு பொழுதில் வீட்டிற்குச் சென்றாலும் தங்கி நிற்கமாட்டான். துணைவி மறிப்பாள். அவளின் வேண்டுகை அவனுக்குப் புரியும். அவளைத் தலைவரின் படத்திற்கு முன் கூட்டிவருவான். தலைவரின் படத்தைக்காட்டி, ”அண்ணை நிறைய எதிர்பார்க்கிறார். அண்ணையைப்போல நாங்களும் செயற்படவேணும். பட்ட கஸ்ரங்களோடை சேர்ந்து எல்லாரும் உழைத்தால் விரைவில் விடிவு கிடைக்கும். விடிவு கிடைச்சா என்ர குழந்தைகளோட செல்லங்கொஞ்சி அவையள நான் வடிவா வளர்ப்பன்தானே” என்று கூறி விட்டுப் போய்விடுவான். அப்படியே அவன் போய்விட்டான். தனக்கென்று வாழாத இந்த உன்னத வீரனின் கடைசி ஆசைப்படி அவனின் குழந்தைகளின் சிறப்பான எதிர்காலத்தை நாம்தானே போராடிப் பரிசளிக்க வேண்டும். நினைவுபகிர்வு:- ச.புரட்சிமாறன். விடுதலைப்புலிகள் (ஐப்பசி, கார்த்திகை 2006) இதழிலிருந்து தேசக்காற்று. “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
  6. அன்பின் புலேந்திரன், தமிழ் மக்களின் பாதுகாப்புக்குத் தானே உத்தரவாதம் என்று எமது ஆயுதங்களைப் பெற்ற இந்தியா, நீ திருமலைக்குப் போவதற்குப் பாதுகாப்புக் கேட்டபோது இந்திய இராணுவத்திலுள்ள மேஜர் கருப்பசாமி உனக்குச் சொன்னார், “இன்றும் இல்லை, இனி எப்போதும் இல்லை” என்று. விடுதலைக்காகப் போரிடும் ஓரினம் தன்னைத் தானே நம்பியிருக்கவேண்டும் என்ற உண்மையைக் கருப்பசாமி வாயிலாக அன்று இந்தியா உணர்த்தியது. பின்னர் அதே செய்தி உனது மரணம் மூலம் ஊர்ஜிதப்படுத்தப்பட்டது. உனது மரணம் தமிழீழத்தையே உலுக்கியது. மாபெரும் வரலாற்றுக் துரோகமல்லவா அது. தமிழீழ வரலாற்றில் உனது பெயர் அழியாஇடத்தைப் பெற்றதல்லவா? முதன் முதன் சிறீலங்கா இராணுவத்தினருக்கு எதிராக் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் (1981 இல் காங்கேசன்துறை வீதிச் சம்பவம் ) பங்கு பற்றியவர்களில் சீலன், ரஞ்சன் ஆகியோர் வீரச்சாவெய்திய பின் நீ தானே எஞ்சியிருந்தாய். கடைசியில் நம்பிக்கை துரோகத்துக்கல்லவா நீ பலியாகியிருக்கிறாய். தமிழீழ விடுதலைப் போரின் பல வரலாற்றுப் பதிவுகள் உனது வீரச்சாவால் ஸ்தம்பிதமாகிவிட்டனவே. நான் இந்தியப் படைகளின் சிறையில் இருந்த காலத்தில் எனது மனைவி எனது மகளின் நிலையைப் பற்றி ஒரு செய்தி சொன்னாள். வீதியில் தமது தகப்பனுடன் செல்லும் குழந்தைகளை வெறித்தபடி பார்ப்பாளாம். தனது பார்வையிலிருந்து அவர்கள் மறையும் வரை வேறெதையும் பார்க்கமாட்டாளாம், பேசமாட்டாளாம், இச் செய்தியைக் கேட்டதும், தந்தை அருகில்லாதது ஒரு குழந்தைக்கு எப்படியான ஏக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. என்பதை உணர முடிகிறது. கூடவே உனது ஞாபகம் என்னை வாட்டியது. எனது மகள் என்றோ ஒருநாள் தனது தந்தையைக் கண்டவள். இனி மேலும் அந்த வாய்ப்புக் கிடைக்கலாம். ஆனால் உனது மகன் பிறக்கும்போதே ‘இன்னும் இல்லை இனி எப்போதும் இல்லை’ என்ற நிலையல்லவா ஒ…எவ்வளவு விலை கொடுத்திருக்கிறோம் எமது தாயக விடுதலைக்கு. கூடவே எம் இயக்கத்தின் சக்தியையும் கணக்கிட்டுக் கொள்கின்றேன். இதையெல்லாம் தாங்கும் வலிமையை எபப்டிப் பெற்றுக் கொண்டோமென்று . இயக்க ரீதியாக என்பதை விட தனிப்பட்ட முறையிலும் எமது கிராமத்து மக்களின் இதயத்தைப் பொருத்தவரை நீ அவர்களது தத்துப்பிள்ளை பாடசாலை மாணவர்கள் என்ற போர்வையில் பொட்டுவின் வீட்டில் வாடகைக்கு குடியிருந்த அந்த நாட்களை நினைத்துக் கொள்கிறேன். மீள வருமா அந்த நாட்கள் “புலேந்திரன், புலேந்திரன்” என்று உருகி வழிந்தர்களே எனது கிராம மக்கள்! எங்கள் எல்லோருக்கும் இடையில் உன்னிடம் மட்டும் அப்படியென்ன சக்தியிருந்தது? விஷேசமான கறிகள் சமைத்தாலோ, கோயில் விஷேசங்களின் பிரசாதங்கள் என்றாலோ உனது பெயரைச் சொல்லி விசாரித்துக் கொண்டுவந்து ஒரு பங்கை தருவார்களே அது ஏன் ? அந்தக் காலத்தில் எனது கிராமத்தில் நடந்த மரண ஊர்வலங்களில் பிரேதத்தைச் சுமக்கும் தோள்களில் ஒன்று உன்னுடையது. மங்கள காரியங்கள் நடைபெறும் வீடுகளில் அலங்கார வேலைகளுக்கிடையே உனது குரல் தனித்துக் கேட்கும். குடும்பத்தில் முரண்டு பிடிக்கும் இளைஞர்களுக்கெல்லாம் உனது வார்த்தைகள் நாணய கயிறு, மாலை நேரத்தில் சனசமூக நிலையை மைதானத்தில் நீ தான் உதைபந்தாட்டப் பயிற்சியாளன். அயலிலுள்ள மாணவர்களுக்கு இலவசக்கல்வி போதனையாளன். இன்னும் எத்தனை எத்தனை? இந்தச் சம்பவங்களையெல்லாம் எனது கிராம மக்கள் ஞாபகப்படுத்திச் சொல்கையில் அவர்களது கண்கள் கலங்கும். தொண்டை அடைத்துக் கொள்ளும். மீண்டும் பிறந்து வரமாட்டாயா? என்ற ஏக்கம் பிறக்கும். ‘சுப்பர்சொனிக்’ அது தான் நாங்கள் உனக்கு இட்ட பட்டப் பெயர். எங்கும் எதிலும் வேகம் காட்டும் உனது போக்கு – மிதிவண்டி தொடங்கி எந்த வாகனத்திலும் உன்னுடன் நாம் வரப் பயப்படுவது உனது வேகத்தைப் பார்த்துதான். எங்கே பொய் அடிபட்டாலும் இறுதியில் நொண்டுவதும் நாங்கள் தான். நீ சிரித்தபடியே எழும்பி வருவாய் அப்படியான சர்ந்தப்பங்களில் ஒரு போதுமே நீ உனது தவறை ஒத்துக்கொள்வதில்லை “நானென்ன செய்யிறது திடீரெண்டு வந்திட்டான் – திடீரெண்டு வளைவு வந்திட்டுது” என்றெல்லாம் நீ சொல்லும் பொது நாங்கள் வழியை மறந்து சிரிப்போம். பயிற்சியின் போது ஒழுங்காகச் செய்வதற்காக நாங்கள் தண்டனை பெறும்போது நீ மேலதிகமாகச் செய்ததற்காகத் தண்டனை பெறுவாய். அந்த கடுமையான பயிற்சி முடிந்தும் நாங்கள் தரையில் கிடந்தது தத்தளிக்கும் போது நீயோ சிரித்தபடியே துள்ளித் திரிந்தாய் மீண்டும் வருமா அந்த நாட்கள்? நாங்கள் செம்மணியிலிருந்து கொடிகாமம் வரை ஓடிப் பயிர்சியெடுப்பது எதுக்கு ஓடுகிறோம் என்று தெரியாமல் எமது கிராமத்து இளைஞர்கள் ” நாங்களும் வாறம் ” எனத் துணைக்கு ஓடி வருவது ” எந்த இடத்து றேசுக்கு ஓடிப்பழகுறீங்கள் ? ” என்று சாவகச்சேரி காவல் நிலையக் காவலர்கள் கேட்பது. இவற்றில் நான் எதை நினைப்பது? எதை மறப்பது அன்று எமது வியர்வையை தாங்கிக் கொண்ட அந்த வீதி அந்த வீதியால் செல்லும் பொது உதிரும் கண்ணீரையும் ஏற்றுக்கொள்கிறது. உனது மகன் வளரட்டும் இந்தப்பாதையெல்லாம் கூட்டிச் சென்று ” இதால தானடா கொப்பரும் நாங்களும் ஓடிப்பழகினது ” என்று காட்டுகிறேன். புலேந்திரன் நீ நடத்திய தாக்குதல்கள் ஒவ்வொன்றுமே சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தவை. சிறீலங்காவின் சகல படைகளுக்கு எதிராகவும் தாக்குதல் நடத்தியிருகிறாய். குடியேற்றம் மூலம் எனது பாரம்பரிய பிரதேசங்களைக் கபளீகரம் செய்ய முனைந்த சிங்களப் பேரினவாதிகளுக்கு நீ சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தாய். அதனால் தான் உன்னை பணயமாக வைத்து தமது சிப்பாய்களைக் கேட்க முனைந்தது சிறீலங்கா அரசு. மணமாகி மூன்று மாதங்கள் உனது வரிசைச் சுமக்கும் உனது மனைவி இந்த நிலையிலும் அடிபணிய மறுத்தாய்.”சிறீலங்கா இராணுவத்தினர் யுத்தகாலத்தில் கைது செய்யப்பட்டவர்கள். நாம் சமாதான காலத்தில் கைது செய்யபப்ட்டவர்கள்” என்றாய். முடிவில் சயனைட் உட்கொண்ட நிலையிலும் கைகள், கால்கள் பற்களால் யுத்தம் நிகழ்த்தினாய். உனது உடலில் தெரிந்த காயங்கள் சிங்களப்படை உன்மீது எவ்வளவு ஆத்திரம் கொண்டு இருந்தது என்பதைப் புலப்படுத்தின. “இந்தியா எமக்குச் செய்த பாவத்தைக் கழுவ புனித கங்கை நீர் போதாது” என்று ஒரு வரலாற்றறிஞர் குறிப்பிட்டதை நினைவு கூறுகின்றேன். திலீபனின் மரணம், உனது மரணம் எமது மக்களுக்கெதிரான போர் இவற்றைக் குறித்தே அவர் அவ்வாறு கூறினார். லெப் கேணல் புலேந்திரன் பற்றிய சில குறிப்புகள்… விடுதலைப்புலிகளின் மத்தியகுழு உறுப்பினரான லெப் கேணல் புலேந்திரன் திருகோணமலை மாவட்டத் தளபதியாகவும் பொறுப்பு வகித்தார். இவர் பங்கேற்ற முக்கிய தாக்குதல்கள் : * 15.10.1981 அன்று முதன்முதலாக சிறீலங்கா இராணுவத்தினர் மீதான தாக்குதலான யாழ். காங்கேசன்துறை வீதித் தாக்குதல். * 27.10.1983 அன்று சாவகச்சேரி பொலிஸ் நிலையத் தாக்குதல். * 18.02.1983 அன்று பருத்தித்துறையில் பொலிஸ் ‘ஜீப்’ மீதான தாக்குதல். * 29.04.1983 அன்று சாவகச்சேரி ஐக்கிய தேசியக்கட்சி வேட்பாளர் முத்தையா மீதான தாக்குதல். * 18.05.1983 அன்று கந்தர்மடம் தேர்தல் சாவடியில் சிறீலங்கா இராணுவத்தினர் மீதான தாக்குதல். * 23.07.1983 அன்று திருநெல்வேலித் தாக்குதல். * 18.12.1984 அன்று பதவியா – புல்மோட்டை வீதி சிரீபுரச் சந்தியில் சிறீலங்கா இராணுவத்தினர் மீதான தாக்குதல். * 09.01.1985 அன்று அச்சுவேலி சிறீலங்கா இராணுவ முருகைக்கு எதிராக நிகழ்ந்த தாக்குதல். * 14.02.1985 அன்று கொக்கிளாய் சிறீலங்கா இராணுவ முற்றுகைக்கு எதிராக நிகழ்ந்த தாக்குதல். * திருமலை – கிண்ணியா வீதியில் இராணுவத்தின் கவசவாகனம் மீதான தாக்குதல். * திருமலை – கிண்ணியா வீதியில் விமானப்படையினர் மீதான தாக்குதல். * முள்ளிப்பொத்தானை சிறீலங்கா இராணுவ முகாம் மீதான தாக்குதல். * பன்மதவாச்சி சிறீலங்கா இராணுவத்தினர் மீதான தாக்குதல். மூலம்: கரும்பறவை. நன்றி: தீருவில் தீ 05,10.1992, சூரியப் புதல்வர்
  7. லெப். கேணல் குமரப்பா, லெப். கேணல் புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகளின் வீரவணக்க நாள்.! 1987 செப்ரெம்பர் 26ம் நாள் தமிழீழம் எங்கும் ஒரு துயரம் தோய்ந்த சோகநாளாகவே அமைந்தது. திலீபனின் இழப்பு அனைத்து தமிழர் மனங்களையும் வாட்டிவதைத்தது. சிறீலங்கா – இந்தியா ஒப்பந்தம் மூலம் தமிழீழத்தை ஆக்கிரமித்த இந்திய அரசின் வஞ்சகச்சதியால் மக்களுக்காக வாழ்ந்த அந்த ஒளிவிளக்கு ஓய்ந்தது. இத்தோடு முடிந்துவிட்டது என்று மக்களின் மனத்தில் எண்ணங்கள் ஓட, தமிழீழக் கடற்பரப்பிலே பயணித்துக் கொண்டிருந்த லெப். கேணல் குமரப்பா, லெப். கேணல் புலேந்திரன் உட்பட்ட பன்னிரு வேங்கைகளைக் கைதுசெய்து அவர்களின் சாவுகளுக்கு சிறீலங்கா – இந்திய அரசுகள் காரணமாகின. அது அனைத்து மக்களையும் இன்னுமோர் சோகத்தில் ஆழ்த்தியது. 1987ம் ஆண்டு யூலை 29ம் நாள் சிறீலங்கா – இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. சிறீலங்கா – இந்திய ஒப்பந்தம் மூலம் தமிழ் மக்களிற்கு நன்மைகள் கிட்டும், இந்தியா எமக்கு ஒரு வழியைக்காட்டும் என நம்பியிருந்த மக்களிற்கு மாறாக துன்பங்களையும் துயரங்களையுமே சிறீலங்கா அரசும், இந்திய அரசபடைகளும் சுமத்தின. 1987ம் ஆண்டு ஒக்டோபர் 3ம் நாள் தமிழீழக் கடற்பரப்பிலே நிராயுத பாணிகளாக எதிர்கால எண்ணக் கனவுகளுடன் லெப்.கேணல் குமரப்பா, லெப்.கேணல் புலேந்திரன் உட்பட்ட பன்னிரு வேங்கைகள் படகில் பயணித்தனர். அன்று விடுதலைப் போராட்டம் முனைப்பு பெற்றிருந்த காலத்தில் மிகத்திறமையான படகோட்டிகள், ஆழ்கடலோடிகளாகச் செயற்பட்டவர்கள் இவர்கள். சிறீலங்கா இராணுவத்தின் ஆதரவோடு தமிழீழக் கடற்பரப்பில் வைத்து இந்தியப் படைகளால் கைதுசெய்யப்பட்டனர். 1987ம் ஆண்டு ஒக்ரோபர் 3ம் நாள் இவர்களைக் கைதுசெய்து பலாலி இராணுவ முகாமிற்கு கொண்டுசென்று விசாரணகள் நடாத்திவிட்டு, பின் கொழும்பு கொண்டுசென்று அதன் மூலம் ஒரு சதி நாடகத்தை அரங்கேற்றலாம் என எண்ணி சிறீலங்கா பேரினவாத அரசு திட்டம் தீட்டியது. பலாலி இராணுவ முகாமில் பன்னிருவேங்கைகளும் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளை மேற்கொண்ட சிறீலங்கா அரசபடைகள் எதுவித பலனையும் அடையவில்லை. தமிழர்களின் காவலர்களாகவும், தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் உயிர் நாடியாகவும் இருந்த இவர்களைக் கைதுசெய்வதன் மூலம் தமிழ் மக்களையும் விடுதலைப் போராட்டத்தையும் அழித்துவிட எண்ணி பல சதிகளைச் செய்தனர். சிறையிலும் எதுவித தளர்வுகளும் இன்றி தமிழர்களின் உரிமைக்காகவே வாதாடினார்கள். இரண்டு நாட்கள் பலாலி இராணுவ முகாமில் தடுத்துவைத்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. அவ்வாறு அது நடைபெறும் சமநேரத்தில் விடுதலைப் புலிகள் அவர்களை மீட்டுவிட முடியும் என்ற நம்பிக்கையில் இந்தியப் படைகளுடன் பேச்சுவார்த்தையும் நடாத்திப் பார்த்தனர். அதுவும் பயனற்றுப் போய்விட்டது. குமரப்பா, புலேந்திரன் உட்பட்ட பன்னிரு வேங்கைகளையும் கொழும்பு சிறைச்சாலைக்கு கொண்டு செல்ல அரசு திட்டமிட்டிருந்தது. 1987ம் ஆண்டு ஒக்ரோபர் 5ம் நாள், தமிழ் மக்கள் மீதும் தாயக மண்மீதும், தலைவர் மீதும் கொண்ட பற்றினால் அங்கு நின்ற இராணுவத்துடன் தங்களால் இயன்றவரை அவர்களுடன் மோதி இறுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் வீர மரபினைக்காக்க சயனைட் அருந்தி பன்னிரு வேங்கைகளும் அந்த மண்ணில் தங்கள் உயிர்களை அர்ப்பணித்தனர். அன்றைய நாட்களில் அச்சம்பவம் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கும் தமிழீழ மக்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. ஆனாலும், விடுதலைப் போராட்டம் இன்னும் வீச்சுடன் முன்னகர்ந்தது. தமிழ் மக்களுக்கு தொடர்ந்தும் போரிடும் வல்லமையை தூண்டியது. பலாலி இராணுவ முகாமில் வைத்து சயனைட் உட்கொண்டு வீரச்சாவடைந்த லெப். கேணல் குமரப்பா, லெப். கேணல் புலேந்திரன் மற்றும் ரகு, நளன், ஆனந்தக்குமார், மிரேஸ், அன்பழகன், றெஜினோல்ட், தவக்குமார், கரன் உட்பட்ட பன்னிரு வேங்கைகளின் வித்துடல்களும் யாழ்ப்பாணம் வடமராட்சி தீருவிலிற்கு எடுத்துவரப்பட்டு பல்லாயிரக்கணக்கான மக்கள் போராளிகள் முன்னிலையில் தீயில் சங்கமமாகின. இன்று அங்கு அந்தப் பன்னிருவேங்கைகள் நினைவான நினைவுச் சதுக்கம் ஆக்கிரமிக்கப்பட்டு சிங்களப் படைகளால் சிதைக்கப்பட்டாலும், அவர்களின் நினைவுகள் மக்களின் மனதில் வாழ்ந்து கொண்டே உள்ளன. இந்த திட்டமிட்ட சிறிலங்கா அரசின் சதி நடந்தேறி 22 ஆண்டுகள் நிறைவடைகின்றன. ஆனால் தமிழ் மக்கள் மத்தியில் ஆறாத வடுவாகவே அந்தச் சம்பவம் உள்ளது. ஆனால், சிறிலங்கா அரசோ, சர்வதேசமோ கடந்த கால சமாதான காலத்திலும் சரி, அதற்கு முற்பட்ட காலங்களிலும் சரி தமிழ் மக்களின் மீதும் நிராயுதபாணிகளாக உள்ள போராளிகள் மீதும் தமது நடவடிக்கைளை மேற்கொண்டு தமிழினத்தை அழிக்கும் நடவடிக்கையிலேயே முனைப்புடன் செயற்படுகின்றன. தற்போதைய நில ஆக்கிரமிப்பு, மக்களின் மீதான வான், எறிகணைத் தாக்குதல்கள் இதனையே சுட்டிக் காட்டி நிற்கின்றன. http://www.battinaatham.net/description.php?art=16929
  8. விசுகு ஐயாவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்???
  9. கேணல் சங்கர் என்னும் பெருவிருட்சம் தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் விடுதலைக்காய் நாம் கொடுத்த மிகப் பெரிய விலைகளில் இதுவும் ஒன்று. தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களுடன் உறுதுணையாக நின்று, இருபது ஆண்டுகளுக்குமேலாக தளரா உறுதியுடன், தமிழீழ விடிவே குறியாகக்கொண்டு செயற்பட்டு வந்த கேணல் சங்கர் என்னும் பெருவிருட்சம் சாய்ந்துவிட்டது. ஈழ விடுதலைக்காய் கொடுத்த மிகப் பெரிய விலைகளில் இதுவும் ஒன்று. 26-09-2001 காலை 10.45 மணிக்கு ஒட்டுசுட்டானுக்கு அண்மித்த பகுதியில், சிறீலங்காப் படைகளின் ஊடுருவல் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட கிளைமோர் கண்ணிவெடித் தாக்குதலில் கேணல் சங்கர் அவர்கள் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார். அன்றைய தினத்தில் தியாகி திலீபனின் நினைவெழுச்சி நிகழ்வுகளில் தமிழீழ மக்களும், போராளிகளும் உணர்வுபூர்வமாக சங்கமித்திருந்த வேளையில் சிறீலங்கா அரசு மேற்கொண்ட அநாகாகச் செயலானது சிறீலங்கா அரசின் போர்மீது உள்ள விருப்பைக் காட்டுவதுடன், தமிழீழ மக்களினதும், போராளிகளினதும் நெஞ்சங்களில் அனலை மூட்டிவிட்டிருக்கின்றது. இருபத்தி நான்கு ஆண்டுகளுக்கு முன் இதே தினத்தில் தமிழீழம் முன்பொருமுறையும் நெஞ்சில் அனல் சுமந்து பொங்கிப் பிரவாகித்தது. சிறீலங்கா அரசின் அடக்குமுறைக்குள் சிக்கிச் சின்னாபின்னப்பட்ட தமிழீழ மக்களுக்கு வசந்தத்தின் வாசலைத் திறந்துவிடுவதாகக் கூறி அமைதிப்புறா வேடமணிந்து எம் மண்ணில் காலூன்றியது இந்தியப்படை. ஆனால், காக்கவந்தவர்கள் தம்மைத் தாக்கத் தயாரானபோது ஐந்தம்சக் கோரிக்கைகளை முன்வைத்து தண்ணீருமின்றி உண்ணா நோன்பிருந்து உயிர்த்தியாகம் செய்து, பாரத அரசின் உண்மை முகத்தை உலகறியச் செய்து காவியமானான் தியாகி திலீபன். அவனது உயிர்பிரிந்தபோது வரலாற்றில் என்றுமில்லாதவாறு, நெஞ்சில் அனல் பற்றியெழ பொங்கி எழுந்தது ஈழத் தமிழினம். அங்கே பிரகாசிக்கத் தொடங்கியது மக்கள் புரட்சி என்னும் புதிய விடுதலை ஒளி. தலைவனுக்கு உற்ற தோழன். போராளிகளுக்கு நல்ல ஆசான். பழகுவதற்கு பண்பானவன். மக்களுக்கு அரசியல், இராணுவ அணுகுமுறைகளில், எதிரிக்கு ஒரு சவால் என இருபது வருடம் நன்கு செழித்து வேர்விட்டு விழுதெறிந்த ஆலமரம் கேணல் சங்கர். வல்வெட்டித்துறை மண் தந்த வீரப்புதல்வர்கள் வரிசையில் வழிவந்தவர்தான் கேணல் சங்கர். 1981இன் ஆரம்பகாலங்களில் தனது சகோதரன் மூலமாக தமிழீழ விடுதலைப் போராட்டப்பாதையில் தமிழீழத் தேசியத் தலைவர் வே. பிரபாகரன் அவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்ட சங்கர் அவர்கள் 1983இல் தன்னை முழுமையாக போராட்டத்துடன் இணைத்துக் கொண்டார். அன்றிலிருந்து தனது இறுதி மூச்சுவரை தமிழீழ விடுதலைப் போராட்டப் பாதையில் விடுதலைப் புலிகளின் சகல நடவடிக்கைகளிலும் தன்னை முழுமையாக அர்ப்பணித்துச் செயற்பட்டார். தேசியத் தலைவர் அவர்களது எண்ணப்படி விடுதலைப் புலிகள் அமைப்பின் புதிய புதிய பரிமாணங்களுக்கும், கட்டுமானங்களிற்கும் செயல்வடிவம் கொடுத்து விடுதலைப் போராட்ட போரியல் வரலாற்றில் புதிய திருப்புமுனைகளை ஏற்படுத்தியவர் கேணல் சங்கர். ஈழப்போரில் கடற்பரப்பின் முக்கியத்துவம் கருதி தலைவரின் சிந்தனைப்படி ‘கடற்புறா’ என்னும் பெயரில் கடற்புலிகள் அமைப்பை உருவாக்கியது மட்டுமன்றி, முதன்முதலில் சிறீலங்காக் கடற்படையின் பாரிய யுத்தக் கட்டளைக் கப்பல் ஒன்றின் மீதான கடற்கரும்புலித் தாக்குதல் ஒன்றுக்காக கடற்புலிகளான காந்தரூபன், கொலின்ஸ், வினோத் ஆகியோரைப் பயிற்றுவித்து, நெறிப்படுத்தி வெற்றிகரமான தாக்குதலொன்றை செய்துமுடித்தவர். இதேபோன்று விடுதலைப் புலிகளின் மகளிர் அமைப்பின் உருவாக்கத்திற்கும் உதவி புரிந்தவர். சகல போராளிகளுக்கும் போரியல் நுணுக்கங்களையும், ஆயுத, வெடிபொருட்பாவனையின் நுட்பங்களையும், காடுகளின ஒவ வொரு அங்குலங்களையும் அணுவணுவாகக் கற்பித்து, மரம், செடி, கொடி, விலங்குகள் என்பன பற்றிய தகவல்களை தெளிவுபடுத்தி பயிற்றுவித்த நல்லாசிரியர் கேணல் சங்கர். இறுதியாக தலைவரின் நேரடி வழிகாட்டலில் நடைபெற்ற ஓயாத அலைகள் நடவடிக்கையில் தலைவருடன் அருகில் நின்று இராணுவ அசைவுகளுக்கேற்ப போராளிகளின் செயற்பாடுகளை ஒழுங்குபடுத்தி சமர்களை, வெற்றிப் பாதையில் கொண்டு செல்ல உதவியவர். இராணுவ நடவடிக்கைகளில் மட்டுமன்றி, அரசியல் பேச்சுக்களிலும் பங்குபற்றி ஈழத் தமிழர்களது நியாயமான நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியவர். இறுதியாக நோர்வே சமாதானத் தூதுக்குழுவினருடனான பேச்சுக்களின் போதும் தலைவருடன் கூட இருந்து சமாதானப் பேச்சுக்களில் ஈடுபட்டவர் சங்கர் அவர்கள். அமைதியாக இருந்தவாறு தனது ஆளுமையால், தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு பல்வேறு வகையிலும் தன்னை முழுமையாக அர்ப்பணித்துச் செயற்பட்டவர் கேணல் சங்கர் அவர்கள். இவர் மட்டுமன்றி இவரது குடும்பமும் தன்னை முழுமையாக விடுதலைப் போராட்டத்திற்கு அர்ப்பணித்து நிற்கின்றது. 1986இல் நாவற்குழி இராணுவ முகாம் மீதான தாக்குதல் முயற்சியில் இவரது சகோதரன் சித்தாத்தன், லெப். கேணல் பொன்னம்மான் அவர்களுடன் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார். இவரே சங்கர் அவர்களை தமிழீழத் தேசியத் தலைவருடன் தொடர்புபடுத்தியவர். இவரின் இன்னொரு சகோதரன் கப்டன் கரன் இந்திய-சிறீலங்கா கூட்டுச் சதியால் லெப். கேணல் குமரப்பா, புலேந்திரன் உட்பட பன்னிருவேங்கைகளில் ஒருவராக ‘சயனைட்’ அருந்தி வீரச்சாவை அணைத்துக்கொண்டார். 2000ஆம் ஆண்டில் ஓயாத அலைகள் நடவடிக்கையின்போது சிறீலங்கா இராணுவத்தின் எறிகணைவீச்சில் மேலும் இரு சகோதரர்கள் யாழ்ப்பாணத்தில் கொல்லப்பட, மற்றொரு சகோதரன் கொழும்பில் தமிழ்த் துரோகக் கும்பல் ஒன்றினால் அழிக்கப்பட்டார். இவ வாறு கேணல் சங்கர் அவர்களது குடும்பம் தமிழீழ விடுதலைக்காய் இரத்தம் சிந்தி தன்னை முழுமையாக அர்ப்பணித்து நிற்கிறது. தேச விடுதலைக்காய் தன்னால் மட்டுமன்றி, தன் குடும்பத்தாலான முழுவதையும் தந்து நிற்கும் இவ வீரமறவன் மீது சிங்கள ஊடுருவல் படை மறைந்திருந்து தாக்குதல் நடத்தி மண்ணில் சாய்த்ததானது, தமிழீழ மக்களினதும் போராளிகளினதும் நெஞ்சங்களில் என்றும் நீறுபூத்த நெருப்பாக கனன்று கொண்டிருக்கும். இதற்கான பதிலை சிறீலங்கா பெற்றுக்கொள்ளும் நாட்கள் வரும். “இலட்சிய வேங்கைகள் இறப்பதும் இல்லை, விடுதலைப் புலிகள் வீழ்வதும் இல்லை” தமிழீழ தேசம் தியாக தீபம் லெப். கேணல் திலீபனின் 14ம் ஆண்டு வீரவணக்க நாளில் மக்களுடன் இணைந்து நினைவு நிகழ்வில் பங்குபற்றிவிட்டு ஒட்டுசுட்டானிலிருந்து புதுக்குடியிருப்பு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த வேளை 26.09.2001 அன்று காலை 10.45 மணிக்கு ஒட்டுசுட்டானுக்கு அண்மித்த பகுதியில், சிறீலங்காப் படைகளின் ஆழ ஊடுருவும் அணியினரால் மேற்கொள்ளப்பட்ட கிளைமோர் கண்ணிவெடித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிய விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினரும், வான்படையின் சிறப்புத் தளபதி கேணல் சங்கர் / முகிலன் அவர்களின் 17ம் ஆண்டு வீரவணக்க நாள் -26.09.2018 http://www.battinaatham.net/description.php?art=16852
  10. மட்டக்களப்பு பெற்ற லெப்கேணல். சித்தா மாஸ்டர் 20ம்ஆண்டு நினைவு நாள் மட்டக்களப்பு மாவட்டத்தின் விடுதலைப்புலிகளின் தளப்பகுதி. அடிப்படைப் பயிற்சி முகாம் ஒன்று நிறைவடைந்து புதிய போராளிகள் பல்வேறு முகாம்களுக்கும் அனுப்பப்பட்டுக் கொண்டிருந்தனர். அத்தகைய வேளைகளில் இயல்பாகக் காணப்படும் புத்துணர்வும், கலகலப்பும் அவர்களின் முகங்களில் வெளிப்படையாகவே தெரிந்தது. ஆயினும் எமது முகாமிற்கு வரவிருந்த புதிய போராளிகள் அநேகரின் முகங்களில் ஒருவகையான கலக்கத்தை அவதானிக்க முடிந்தது. காரணத்தை ஊகிப்பது அவ்வளவு கடினமல்ல. படைத்துறைப் பயிற்சிப் பிரிவாக செயற்பட இம் முகாம் சற்று வேறுபாடானதுதான். மிகக் கடுமையான விதிமுறைகளுக்கும், விசித்திரமான தண்டனைகளுக்கும் பெயர் பெற்றது. அதேவேளை ஆற்றல் விருத்திக்கு அது அடித்தளமாகவும் இருந்தது. “பாவம் நல்லா மாட்டுப்பட்டுத்துகள், எப்படித்தான் நிண்டு பிடிக்கப்போகுதுகளோ” மூத்தபோராளி ஒருவன் பரிதாபப்பட்டான். “ஏன் அண்ண, உயிரையும் கொடுப்பம் எண்டுதானே போராட வந்தனாங்க, நிட்சயம் எதுக்கும் நிண்டுபிடிப்பம்.” மிக அமைதியான சுபாவம் கொண்ட அந்தப் புதிய போராளியிடமிருந்து வந்த நம்பிக்கையும், உறுதியுமிக்க வார்த்தைகள் எம்மை ஆச்சரியப்பட வைத்தன. “தம்பி உங்கட பேரென்ன?” “சித்தார்த்தன்” ஆம். அவனிடம் தொனித்த அந்த நம்பிக்கை, உறுதி அவன் போராளியாக வாழ்ந்த காலம் முழுவதும் அவனிடம் நிறைந்தே இருந்தது... இன்னும் வலிமையாய்.... * * * * * * * * * * * * * * * * * * * * * * மட்டக்களப்பில் 1992இல் தனது தொடக்கப்பயிற்சியை நிறைவுசெய்த “சித்தா” (நாங்கள் அவனை அப்படித்தான் அழைப்போம்) படைத்துறைப் பயிற்சிப் பிரிவில் இணைக்கப்படுகின்றான். இந்தப் பிரிவில் நின்றுபிடிப்பது கஸ்டம் என்று கூறப்பட்ட அந்த நாட்களில் அவன் இங்கு தன்னை மிக விரைவாக தகவமைத்துக் கொண்டான். தொடர்ச்சியான பயிற்சிகள், மிகக் கடினமான வேலைகள், புதிரான பாடங்கள், எதிரியின் தாக்குதல்கள், எமது வலிந்த தாக்குதல் முன்னெடுப்புகள் என்றிருந்த அந்த நாட்களில், சராசரிக்கு மேற்பட்ட ஒரு போராளியாக அவன் இனங்காணப்பட்டான். மிக அமைதியான சுபாவமும், உதவும் பண்பும், கடினமான வேலைகளைக்கூட தானாக விரும்பி ஏற்றுச் செய்யும் பக்குவமும், அவனது செயற்திறணும் போராளிகள் மத்தியில் அவனுக்கென்றொரு இடத்தை ஏற்படுத்திக் கொடுத்தன. * * * * * * * * * * * * * * * * * * * * * * பூநகரி கூட்டுப்படை முகாம் மீதான “தவளை” நடவடிக்கையே வடதமிழீழத்தின் அவனது முதற் களமாக அமைந்தது. சமர் முடிந்த கையோடு எழுதுமட்டுவாள் பகுதியில் பயிற்சி ஆசிரியர்களுக்கான மேலதிக பயிற்சிகள் தொடங்கப்பட்டன. இப் பயிற்சிக் காலத்தில் பயிற்றுவித்த ஆசிரியர்களே பெருமைப்படக்கூடிய அளவிற்கு அவனது செயற்பாடுகள் அமைந்திருந்தன. அதேபோன்று, அவன் பயிற்சி வழங்கத் தொடங்கியபோது, வழமையான “பயிற்சி ஆசிரியர்கள்” என்ற தோற்றப்பாட்டிற்கு அப்பால் ஒரு வேறுபாடான பயிற்சி ஆசிரியராக அவன் இனங்காணப்பட்டான். செயற்திறண், முன்மாதிரி, அணுகுமுறை என்பவற்றால் “சித்தா மாஸ்ரர்” என்ற பெயர் போராளிகளின் மனங்களில் நிலைபெற்ற ஒன்றாக மாறிவிட்டிருந்தது. படைத்துறை தொடர்பிலான தொழிநுட்பக் கற்கைநெறி ஒன்றினைப் நிறைவு செய்து தென்தமிழீழம் திரும்பத் தயாரான வேளை சிறிலங்காப் படையினரால் “முன்னேறிப்பாய்தல்” நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இந்நடவடிக்கைக்கு எதிராக எம்மால் முன்னெடுக்கப்பட்ட “புலிப்பாய்ச்சல்” உட்பட்ட தாக்குதல்களில் பங்கு கொண்டான். இவற்றைத் தொடர்ந்து கொக்குளாய் இராணுவமுகாம் தாக்குதலிலும் பங்கெடுத்தான். அவன் சார்ந்திருந்த ஜெயந்தன் படையணி மீண்டும் தென்தமிழீழம் திரும்பியபோது சித்தாவும் புறப்பட்டான். * * * * * * * * * * * * * * * * * * * * * * பயிற்சி ஆசிரியர் பிரிவில் 1992 இல் இணைந்து கொண்டவன் மிக விரைவிலேயே அப்பிரிவின் பொறுப்பாளராக உயர்ந்தான். இக் காலகட்டத்தில் மட்டக்களப்புப் பகுதியில் இடம்பெற்ற பல தாக்குதல்களில் பங்கு கொண்டான். 1993இல் ஜெயந்தியாய இராணுவ முகாம் தாக்குதலுடன் தொடங்கிய இவனது சமர்க்களப் பட்டறிவு, மாவடிவேம்பு படை முகாம் , கிண்ணையடி படை முகாம், குடாப்பொக்கணை காவல்துறை நிலையம், புளுகுணாவ சிறப்பு அதிரடிப்படை முகாம், மாவடிவேம்பு படை முகாம், கறப்பள படை முகாம், வவுணதீவு படை முகாம் என விரிந்ததுடன் எம்மால் நடாத்தப்பட்ட பல்வேறு பதுங்கித் தாக்குதல்களும் முற்றுகை முறியடிப்புகளும் அப்பட்டறிவிற்கு மேலும் வலுச்சேர்த்தன. * * * * * * * * * * * * * * * * * * * * * * யாழ்.குடாநாட்டிற்கு பாதை திறக்கவென சிறிலங்காப் படைத்தரப்பு முன்னெடுத்த “ஜெயசிக்குறு” நடவடிக்கை தொடங்கப்பட்டபோது மீண்டும் தென்தமிழீழப் படையணிகள் வன்னி நோக்கி விரைந்தன. எதிர்கொள்ளப் போகும் சமரின் பரிமாணத்தைக் கருத்தில் கொண்டு ஜெயந்தன் படையணி மீள் ஒழுங்கு செய்யப்பட்டது. இதன்போது ஆற்றல் மிக்க அணித்தலைவர்களின் தேவையும் உணரப்பட்டது. இவ் அடிப்படையில் ஒரு கொம்பனி கொமாண்டராக சித்தா நியமனம் பெற்றான். அந்நாட்களில் கொம்பனி கொமாண்டராக, கொம்பனி மேலாளராக, குறித்ததொரு வேளையில் படையணியின் தாக்குதற் தளபதி என, பொறுப்பேற்று களங்களில் அணிகளை வழிநடத்தினான். * * * * * * * * * * * * * * * * * * * * * * “ஜெயசிக்குறு” எதிர்ச் சமர்முனையின் மாங்குளப் பகுதி, முன்னணிக் காவலரண் பகுதியில் அவனை சந்திக்கிறோம். கையில் ஏற்பட்ட விழுப்புண் முற்றாக மாறாத நிலையில் அவன் இயல்பாகச் செயற்பட்டுக் கொண்டிருந்தான். “என்ன சித்தா வழமைபோல காயம் மாறமுதல் வந்தாச்சி போல.... இது எத்தனையாவது....” சித்தாவிடமிருந்து அந்த வழமையான புன்னகையே பதிலாகக் கிடைத்தது. “முதல் மூண்டு... ஜெயசிக்குறுவில நாலு.... மொத்தம் ஏழு” அருகில் நின்ற போராளி அழுத்தமாய் கூறுகின்றான். ஓ... இவன் என்ன மாதிரியான மனிதன். ஏற்கனவே மூன்றுமுறை, அதில் கறப்பளையில் மார்பை ஊடறுத்த ரவை அவனை சாவின் வாசலுக்கே கொண்டுசென்றது. தாண்டிக்குளத்தில் காயமடைந்து அது மாறமுன்பே களம் வந்தான், மீண்டும் பெரியமடுவில்... அது மாறுமுன் மீண்டும் களம், அடுத்தது ஓமந்தையில்... குணமாகும் முன் மாங்குளம் வந்தான், மாங்குளத்திலும் அவனைத்தேடி ரவை வந்தது. இதோ இப்போது கைக்காயத்துடன் முன்னணியில்.... * * * * * * * * * * * * * * * * * * * * * * ஓயாத அலைகள் - 2. கிளிநொச்சி பிரிகேட் தளத்தைக் கைப்பற்றுவதற்கான தாக்குதல்கள் தொடங்கின. இத் தாக்குதல்களில் ஜெயந்தன் படையணியின் கொம்பனிகள் வெவ்வேறு முனைகளில் சண்டையிட வேண்டியிருந்தது. சித்தாவின் அணிக்கு கிளிநொச்சி குளப்பகுதி முன்னணி அரண் வரிசையைக் கைப்பற்றி குறித்த இலக்கு நோக்கி தாக்குதல் தொடுக்கும் பணி வழங்கப்பட்டிருந்தது. நீர் நிறைந்திருந்த குளத்தின் ஊடாக மிக இரகசியமாக நகரவேண்டியிருந்தது. நகர்வை மிகச் சிறப்பாகச் செய்த அவ்வணி குள பண்டை கடந்து கொண்டிருந்தபோது அங்கு சண்டை மூண்டது. சாதகமற்றதொரு சூழ்நிலையில், தரையமைப்பில் சண்டை தொடங்கி விட்டது. உக்கிரமான தாக்குதல், அந்த அணியின் வீரர்கள் அதன் தலைவனைப்போல் உறுதியானவர்கள், இறுதிவரை போராடக்கூடியவர்கள்..... அடுத்த நாள் கிளிநொச்சி பிரிகேட் தளம் அழிக்கப்பட்டு, கிளிநொச்சி நகர் மீட்பு வெற்றிச் செய்தி வெளியாகிக் கொண்டிருக்கின்றது.... * * * * * * * * * * * * * * * * * * * * * * குறித்ததொரு பயிற்சித் திட்டம் தொடர்பாகக் கதைப்பதற்காக தேசியத் தலைவரால் அழைக்கப்பட்டிருந்தோம். மூத்த தளபதிகள் சிலருடன் தேசியத் தலைவர் உரையாடிக் கொண்டிருந்தார். அப்போது எல்லைப்படை வீரர்களுக்கான பயிற்சிப் பாசறைக்கு பொருத்தமான பெயர் சூட்ட வேண்டும் என மூத்த தளபதி ஒருவர் கோரிக்கை வைக்கிறார். பலரும் பல்வேறு பெயர்களை முன்மொழிகின்றனர். தேசியத் தலைவரின் முகத்தில் சிந்தனை ரேகைகள்.... “சித்தா பயிற்சிப் பாசறை என்று பெயர் வையுங்கோ.” “லெப்.கேணல் சித்தா ஒரு அமைதியான சுபாவம் கொண்ட ஆற்றல் மிக்க லீடர், ஒரு நல்ல பயிற்சி ஆசிரியர், களத்தில் பலதடவை காயப்பட்டவர், கடைசிச் சண்டையில்கூட மிக உறுதியாகச் செயற்பட்டவர்....” என சித்தா மாஸ்ரரைப் பற்றி தேசியத் தலைவர் கூறிக்கொண்டு போக எமக்கு ஆச்சரியமாகவும், அதேவேளை மிகப் பெருமையாகவும் இருந்தது. ஒரு உண்மை வீரனுக்குக் கிடைக்கக்கூடிய அதியுயர் மதிப்பு இதைத்தவிர வேறு எதுவாக இருக்க முடியும்?. எமது போராட்ட வரலாற்றில் ஒரே களத்தில் நான்குமுறை விழுப்புண் ஏற்று ஒவ்வொரு விழுப்புண்ணும் மாறும் முன்பே களம் வந்து படைநடத்திய வீரன் அவன் ஒருவனாகத்தான் இருக்க முடியும். அந்தப் பெரும் சமர்க்களத்தில் அவன் ஐந்தாவது முறையாகவும் காயப்பட்டான். மீண்டும் அவன் களம் வரவில்லை, வரவேயில்லை. சித்தா....அமைதியான ஆழுமை. ஆர்ப்பாட்டமற்ற ஆற்றல். http://www.battinaatham.net/description.php?art=16865
  11. (மக்தலேனா) மரியாளின் சுவிசேஷம் சுகுமாரன் என்னைத் தொடாதே, நான் இன்னும் என் பிதாவின் இடத்திற்கு ஏறிப் போகவில்லை. யோவான் 20:17. ஏன் என்னை விலக்குகிறீர், ரபூனி? ஏன் உம்மைத் தொடக் கூடாது என்கிறீர்? உம் சீடர்களைப் பார்க்கிலும் வார்த்தையைத் தொடரும் அர்த்தம்போல உம்மைப் பின்தொடர்ந்தவள் நானல்லவா? என் பிரியரே, மரியாள் நான் ஒருத்திமட்டுமே அல்லள். உமது வெளிச்சத்தைப் பகிரங்கமாக்கிய நிழலான ஒவ்வொரு பெண்ணும் மரியாள்தானே? மகதலேன் எனது மட்டுமான ஊர் அல்ல உமது பாத்த்தின் வியர்வையில் ஒட்டிய ஒவ்வொரு ஊரும் மக்தலேன்தானே? போதகரே, உம் சீடரைப் பார்க்கிலும் எங்களிடமே நீர் பிரியங் கொண்டீர் உம் சீடரைப் பார்க்கிலும் நாங்களே உம்மிடம் நேசம் கொண்டிருந்தோம் எனினும் என்னை ஏன் தள்ளிவைக்கிறீர், ரபூனி? உம்மை ஏன் பற்றக் கூடாது என்கிறீர்? திராட்சைரசம் மணக்கும் உமது அதரங்களால் நீர் முத்தமிட்டது என்னைத்தானே? அப்போது உம் சீடரின் கள்ள முத்தத்தில் நாறிய புளித்த காடியை உணர்ந்தீரா? சீமோன் மாளிகை விருந்தில் உமது பாதங்களைக் கண்ணீரால் கழுவிக் கூந்தலால் துடைத்து உதடுகளால் உலர்த்திப் பரிமளத்தைலம் பூசினேனே, அப்போது உமது பாதங்களைத் துளைத்த ஆணியின் காரிரும்பு மணத்தை முகர்ந்தீரா? அன்பரே, கற்களை ஓங்கிய கைகளின் மத்தியில் நடுங்கி நின்றவள் நானே பாவமற்ற கரம் எறியட்டும் என்று என்னை மீட்டவர் நீர் - அப்போது நிலத்தில் நீர் எழுதியது என் பெயரல்லவா? அப்போது இலக்கு நானல்ல; நீரே என்று அறியாமலா இருந்தீர்? உம் மீது விழுந்த கசையடியில் துடிதுடித்தவளும் உம் சிரசிலிருந்து பெருகிய ரத்த வியர்வையை ஒற்றியவளும் உமது கடைசிக் கண்ணீர்த் துளியைக் கையிலேந்தியவழும் நானல்லவா? அப்போது உயிரின் ஆரம்பம் பெண்ணின் சரீரம் என்று உச்சாடனம் செய்யவில்லையா நீர்? பின்பு ஏன் உயிர்த்தெழுந்ததும் மாறிப் போனீர்? ரபூனி, நான் பற்றிப் பிடித்துக் கொண்டால் பிதாவிடம் ஏறமுடியாது எனில் நான் நாங்கள் மரியாள்கள் விலக்கப்பட்ட கனிகளா? எனில் போதகரே, மரியாள்கள் தொடாத நீர் வயற்புலத்தின் விதையல்ல பாறைமேல் சிதறிய தானியம். பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்த இத்தாலிய ஓவியர் டிஷியனின் ‘ என்னைத் தொடாதே ( Noli me tangere ) ஓவியத்தால் தூண்டப்பட்ட கவிதை. http://vaalnilam.blogspot.com/2018/09/blog-post.html?m=1
  12. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சபேஸ்???
  13. பிரளயச் செங்கன்னூரில் கண்ணகி தேவியின் தூமை ஸ்ரீபதி பத்மநாபா பாண்டியனைக் கொன்று தன் இடமுலை திருகி வீசி மதுரையை எரித்தாள் அவள். அதன் பின்னர் மதுரை விட்டு நீங்கி வையையாற்றின் கரை வழியே மேற்றிசை நோக்கிச் சென்று மலைநாட்டை அடைந்து அங்கு திருச்செங்குன்று என்ற மலை மீதேறி ஓர் வேங்கை மரத்தின் நிழலில் வந்து நின்றாள். அங்கு தேவர்கள் பூமாரி பொழிய ஆகாயத்தினின்றும் அழகிய விமானம் கீழே இறங்க, அவ்விமானத்தில் தெய்வ வடிவோடு கோவலன் இலங்க, கண்ணகி களிகூர்ந்து அவ்விமானத்திலேறி விண்ணுலகடைந்தாள். * செங்குன்றூருக்கு (இன்று பிரளயத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் செங்கன்னூர்) சேரன் செங்குட்டுவன் வருகிறான். அங்கு மக்கள் வியந்தோதும் கண்ணகியின் கதையைக் கேட்கிறான். இமயத்திலிருந்து எடுத்து வந்த ஒரு கல் கொண்டு சிலை வடித்து செங்கமலவல்லி எனும் தெய்வமாக்குகிறான். * பல நூற்றாண்டு ஐதீகத்தின் கீற்றுகள் இவை. இன்றும் இந்தக் கோவிலில் கண்ணகி வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறாள். அதுவும் தன் மாதவிடாய் நாட்கள்கூட இன்னும் தீராத ருதுவதியாய். * கேரளத்தில் கோட்டயம் திருவல்லா கடந்து சபரிமலையின் அடிவாரத்தில் இருக்கும் ஊர் செங்கன்னூர். பம்பை ஆற்றங்கரையில் பரந்து விரிந்து கிடக்கிறது செங்கன்னூர் மகாதேவர் கோவில். பெயரில் ஆண் தெய்வம் இருந்தாலும் செங்கன்னூர் பகவதி என்றுதான் சொல்வார்கள். இந்தக் கோவிலின் மேல்சாந்திக்கு மற்ற கோவிலின் சாந்திகளில் இருந்து வேறுபட்ட ஒரு முக்கியமான நித்தியக்கடன் ஒன்று உண்டு. இரவுகளில் இணத்தோர்த்து (இணைத்துவர்த்து) உடுத்துறங்கும் தேவியின் உடையாடையில் மாதவிடாயின் அம்சம் ஏதேனும் இருக்கிறதா என்று தினமும் காலையில் பரிசோதிக்கும் கடன் அது. தூமையின் அம்சம் இருக்குமாயின் அந்த உடையாடையை கோவில் அலுவலகத்தில் ஒப்படைக்கிறார் அவர். கோவிலின் தந்திரி வகையினரான தாழமண் மற்றும் வஞ்சிப்புழை இல்லத்தைச் சேர்ந்த மூத்த பெண்கள் யாரேனும் வந்து விலக்கை உறுதிப்படுத்துகிறார்கள். ‘திருப்பூத்து’ உறுதியானவுடன் தேவியின் நடை அடைக்கப் படுகிறது. ஸ்ரீகோவிலுக்கு வெளியே நாலம்பலத்து க்குள் ஏதேனும் ஓர் இடத்தில் உற்சவ தேவியாகிறாள் அவள். இப்போது அவள் தமிழ் மரபுப்படி வெள்ளை ஆடையணிந்த செங்கமலவல்லி. நான்காம் நாள். பம்பை நதிக்கரையின் மித்திரக் கடவுத்துறைக்கு அழைத்துச் செல்லப்படுகிறாள். அங்கே அவளுக்குப் புனித நீராட்டு செய்யப்படுகிறது. திருப்பூத்து ஆறாட்டு. பின் யானையின் மீது அமர்ந்து கோவிலுக்குச் செல்கிறாள். கோவில் வாசலில் மகாதேவன் அவளுக்காக இன்னொரு யானையில் காத்துக்கொண்டிருக்கிறார். நாலம்பலத்தை மும்முறை பிரதட்சணம் செய்கிறார்கள். மகாதேவன் கிழக்குத் திசையிலும் வல்லி மேற்குத் திசையிலுமாகத் தங்கள் நடைகளுக்குள் நுழைந்து கொள்கிறார்கள். கொடுங்கல்லூர் தேவி புராணத்திலும் கண்ணகி வந்து சேர்ந்த காதை இவ்வாறே இருக்கிறது. ஆனால் கொடுங்கல்லூர் தேவிக்கு இந்த மாதவிடாய் நாட்கள் இல்லை. முன்பெல்லாம் மாதம் தவறாமல் ஏற்பட்டுக் கொண்டிருந்த(!) விலக்கின் கிரமம் இப்போது குறைந்திருக்கிறது என்றாலும், பக்தர்களிடம் திருப்பூத்து ஆறாட்டின் மகிமை இன்னும் மங்கி விடவில்லை. தேவியின் திருப்பூத்து உடையாடை பக்தர்களில் ஒருவருக்கு வழங்கப்பட்டு விடுகிறது. அது வீட்டிலிருந்தால் ஐஸ்வர்யம் என்பது ஒரு நம்பிக்கை. முன்னாள் ஜனாதிபதி வி.வி.கிரி, முன்னாள் கவர்னர் ஜோதி வெங்கடாசலம், சித்திரைத் திருநாள் மஹாராஜா, இசையரசி எம்.எஸ்.சுப்புலட்சுமி ஆகியோரும் இந்த உடையாடைக் காணிக்கையைப் பெற்றிருக்கின்றனர். தேவியின் உடையாடையைப் பெறுவதற்கு முன்பதிவு அவசியம். பத்துப் பதினைந்து வருடங்களுக்கு அந்தத் தூமைத் துணி முன்பதிவு செய்யப்பட்டு விட்டது. ஸ்ரீபதி பத்மநாபாவின் ‘மலையாளக் கரையோரம்’ கட்டுரைத் தொகுப்பிலிருந்து இந்தப் பத்தி எடுக்கப்பட்டுள்ளது. ஸ்ரீபதி பத்மநாபா எழுத்தாளர்; மொழிபெயர்ப்பாளர். https://thetimestamil.com/2018/08/22/பிரளயச்-செங்கன்னூரில்-கண/
  14. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நந்தன் ???
  15. மனுஷ்யபுத்திரன் ஏன் எப்போதும் மதவாதிகளுக்கு இலக்காகிறார்? ஆர். அபிலாஷ் தனது “ஊழியின் நடனம்” கவிதைக்காக தற்போது எச். ராஜா உள்ளிட்ட தமிழக இந்துத்துவர்களால் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறார் மனுஷ்யபுத்திரன். அது சற்றே சிக்கலான கவிதை; அதை எச். ராஜா படித்து புரிந்து கண்டித்து மனுஷை கைது செய்ய வேண்டுமென கோரியிருக்கிறார் என்பதெல்லாம் ஆச்சரியமாக இருக்கிறது. இதுவரை எத்தனையோ முறை மனுஷ் மோடியையும் பாஜகவினரையும் கடுமையாய் தாக்கி எழுதியிருக்கிறார். ஏன் அப்போதெல்லாம் கொதிக்காத ராஜா இப்போது கொந்தளிக்கிறார்? ஏன் மனுஷின் தொலைபேசி எண்ணை பகிர்ந்து, அவரைத் தாக்கும்படி தன் கட்சியினரை தூண்டி விட்டு, மனுஷை நிலைகுலைய வைக்க முயல்கிறார்? முகநூலில் ராஜன் குறை குறிப்பிட்டது போல இது ஒரு அரசியல் வியூகம் மட்டுமே. மனுஷ்யபுத்திரன் ஒரு இஸ்லாமியர், ஒரு இஸ்லாமியர் இந்துக்களை அவமதிக்கிறார் எனும் சித்திரத்தை உருவாக்குவதே எச். ராஜாவின் நோக்கம். ஆனால் அவர் நிச்சயம் வெல்லப் போவதில்லை; ஏனெனில் தமிழகத்தில் இஸ்லாமிய வெறுப்பின் சுவடுகள் இருந்ததில்லை; இஸ்லாமியரை மற்றமையாய் பார்க்கும் மரபோ வரலாறோ நமக்கு இல்லை. இஸ்லாமிய படையெடுப்பினால் நாம் நிலைகுலைந்த தருணங்கள் நம் வரலாற்றில் இல்லை. ஆனாலும் இது ஒரு சள்ளுபிடித்த பிரச்சனை தான். ஒருவர் சாக்கடையில் விழுந்து குதித்தால் சாலையில் போகிறவர்களின் மீது தான் சாக்கடை நீர் பட்டு அழுக்காகும். இந்துத்துவர்கள் அப்படி தம்மையும் சேறாக்கி வழிப்போக்கர்களையும் சேறாக்க போகிறார்கள். என்ன வியப்பென்றால், மனுஷ்யபுத்திரன் இதே போல முன்பு ஜனாய்லுதீன் தலைமையிலான பிற்போக்காளர்களால் தாக்கப்பட்டிருக்கிறார் – அப்போது அவர் (நக்கீரனில் அவர் எழுதிய ஒரு கட்டுரையில்) இஸ்லாத்தை அவமதித்து விட்டார் என சொன்னார்கள். அப்போது அவர் இஸ்லாத்தை விமர்சித்த ஒரு இஸ்லாமியர்; இப்போது அவர் இந்து தெய்வத்தை அவமதித்த இஸ்லாமியர். இஸ்லாத்தை விமர்சிப்பவர் இஸ்லாமியரே அல்ல தானே; அப்படி எனில் இஸ்லாத்தில் இருந்து வெளியே வந்து விட்ட மனுஷ், இப்போது “ஊழியின் நடனம்” எழுதிய மனுஷ், இஸ்லாமியர் அல்ல தானே? இஸ்லாத்தின் உள்ளே இருந்தும் அடி, வெளியே இருந்தும் இடி என்பதே அவரது அவல நிலை. ஒரு காரணம் மனுஷ் ஒரு முற்போக்காளர், தன் மதத்தை துறந்த முற்போக்காளர், என்பது. ஆனால் இந்தியாவில் நீங்களே மதத்தை துறந்தாலும் மதம் உங்களைத் துறக்காது. இது மேற்கில் நிகழாது – அங்கே பெர்ட்னெண்ட் ரஸலை யாரும் கிறித்துவர் எனப் பார்க்க மாட்டார்கள்; அவர் ஒரு நாத்திகர். அவர் ஒருவேளை இஸ்லாத்தை விமர்சித்து எழுதியிருந்தால் இஸ்லாமிய அமைப்பினர் ஒரு கிறுத்துவர் தம்மை அவமதித்து விட்டார் எனப் பார்க்க மாட்டார்கள். நம் நாட்டில் மட்டுமே மதம் ஒரு நிழல் போல நம்மைத் தொடர்கிறது. “ஊழியின் நடனம்” ஒரு அரசியல் கவிதை – ஆக அது நேரடியாகவும் கூர்மையாகவும் உள்ளது. நகைமுரணே அதன் தொனி. “தேவி உன் விடாய்க் குருதி ஊழிக் காலங்களை உருவாக்க வல்லதா?” எனக் கேட்கையில் சபரி மலையில் பெண்கள் நுழைவதற்கு உரிமை கோரும் போராட்டத்தை, அதன் மீதான தெய்வ சாபமே இப்போதைய கேரள வெள்ளம் எனும் சர்ச்சையை குறிக்கிறார். “உன் விடாய்க் குருதியை அசுத்தம் என்றார்கள் தீட்டு என்றார்கள் உன் குருதியின் வெள்ளம் இந்த நிலத்தின் மீதிருக்கும் அத்தனையையும் முழுமையாக கழுவிக் கொண்டிருக்கிறது இவ்வளவு தூய்மை எங்களுக்கு வேண்டாம்” இந்த இடத்தில் நகைமுரண் தோன்றுகிறது. தேவியின் விடாய்க் குருதி அல்ல, பக்தைகளின் விடாய்க் குருதி அல்ல, இந்துத்துவர்களின் வெறியே அசிங்கம் என சுட்டுகிறது. இந்த வெள்ளம் அதைக் கழுவுவதற்கான தேவ கோபம் என்கிறது. போதும், கருணை காட்டு என தெய்வத்தை கோருகிறது. இது ஒரு எளிய கவிதை தான். ஆனால் இதன் நகைமுரணை புரிந்து கொள்ளும் திறன் நம் சங்கிகளுக்கு உண்டா எனத் தெரியவில்லை. சரி, இது போன்ற சர்ச்சைகளில் மாட்டிக் கொள்ளாமல் இருக்க மனுஷ் என்ன செய்ய வேண்டும்? ஒன்றும் செய்ய முடியாது – அவர் எந்த மதத்தையும் சாராதவராய், எல்லா மதங்களையும் விமர்சிப்பவராக, அதே நேரம் தன் பிறப்படையாளத்தை அழிக்க முடியாதவராய் (அது அவர் தவறல்ல என்றாலும்) இருக்கும் வரையில், இது போன்ற தாக்குதல்கள் வந்து கொண்டே தான் இருக்கும். http://thiruttusavi.blogspot.com/2018/08/blog-post_20.html?m=1
  16. தேவி மகாத்மியம் - சுகுமாரன் தெய்வமானாலும் பெண் என்பதால் செங்ஙன்னூர் பகவதி எல்லா மாதமும் தீண்டாரி ஆகிறாள் ஈரேழு உலகங்களையும் அடக்கும் அவள் அடிவயிறு வலியால் ஒடுங்குகிறது; கனன்று எரிகிறது விடாய்த் தினங்களில் விடும் பெருமூச்சு யுகங்களாக வேரூன்றிய விருட்சங்களை உலுக்குகிறது. தொடைபிளக்கும் வேதனையில் அவள் எழுப்பும் தீனக்குரலில் திசைகள் எட்டும் அதிர்கின்றன எரிமலைக் குழம்புபோலப் பொங்கி யோனியிலிருந்து வழியும் குருதித் தாரையில் நதிகள் சிவந்து புரள்கின்றன. விலக்கப்பட்ட உதிரத்தை ஒற்றிய வெண்பட்டு புனிதச் செம்பட்டாகிறது அண்டமெங்கும் தெறித்த செந்நீர்த் துளிகள் உலர்ந்து குங்குமமாகிறது எந்தத் தேவி இந்தப் பூமியைப் புரக்கிறாளோ அவளே ஆற்றல் என்று விண் முழங்குகிறது. மண் எதிரொலிக்கிறது. செங்ஙன்னூர் பகவதி தேவியானது தெய்வம் என்பதால் அல்ல பெண்ணாக இருந்ததால். http://vaalnilam.blogspot.com/2018/08/blog-post.html?m=1
  17. குமாரசாமி ஐயாவுக்கும் புத்தன் அண்ணாவுக்கும் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்???
  18. வாழ்த்துக்களுக்கு நன்றிகள்? நிழலியின் மகன் மிதாக்கும் எனக்கும் ஒரே நாளில்தான் பிறந்தநாள்! ஆனால் அவர் இப்போதுதான் பதின்ம வயதுக்குள் உள்நுழைந்துள்ளார்; நானோ பல வருடங்களாக பதின்ம வயதுக்குள்ளேயே நிற்கின்றேன்? மிதாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்???
  19. ஆண்டவன் கட்டளை படத்தில் "அமைதியான நதியினிலே ஓடம் ஓடும் அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்" நடிப்பு : நடிகர் திலகம் சிவாஜி கணேசன் , தேவிகா
  20. வட்டத்துக்குள் சதுரம். 1978 ஆம் ஆண்டில் வெளி வந்த ஒரு அருமையான திரைப்படம் இயக்கம்: S P முத்துராமன் இசை: இளையராஜா பாடலாசிரியர்: பஞ்சு அருணாசலம் பாடியது: B S சசிரேகா, S ஜானகி இளையராஜா ஐயாவின் ஆரம்ப கால கட்டத்தில் உருவான இந்த பாடல் வெகுவாக மறந்து போன பாடல். ஆனால் கேட்டு பாருங்கள். இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல்..!!! அதோ அதோ என் பாட்டிலே ஒரே ராகம்..!!! கொடி நீ மலர் நான் கிளை நீ கனி நான்..!!! மனம்போல் வாழ்வோம் துணை நீ ____________________________________ ஓடுது ரயில் பாரு மனம் போலவே பாடுது குயில் அங்கே தினம் போலவே, மாமரம் பூ பூத்தது விளையாடுது காடெங்கும் புதுவாசம் பறந்தோடுது, பார்த்தது எல்லாம் பரவசமாக புதுமைகள் கண்டோம் என்நாளுமே இனி வாழ்வில் நீ தான் என் சொந்தமே..!!! ============================== தீபத்தின் ஒளியாக ஒரு பாதி நான் தேன் கொண்ட மலராக மறு பாதி நான். காற்றினில் ஒளியாக வருவேனடி கனவுக்குள் நினைவாக வருவாயடி நிலவுக்கு வானம் நீருக்கு மேகம் கொடிக்கொரு கிளை போல் துனை நீயம்மா..!!! இனி வாழ்வில் நீ தான் என் சொந்தமே..!!! ============================== ஓடமும் நீரின்றி ஓடாதம்மா..! நீ செல்லும் வழி நானே வருவேனம்மா.! தோழமை உறவுக்கு நீ சொல்லும் மொழி நானே சேர்ப்பேனம்மா.!!! உனக்கென நானும் எனக்கென நீயும் உலகினில் வாழ்வோம் என்நாளுமே..!!! இனி வாழ்வில் நீ தான் என் சொந்தமே..!!! ============================== ராமனின் குகனாக நான் பார்க்கிறேன்..!!! மாலதி அனுவாக நான் வாழ்கிறேன்..!!! இருமனம் அன்பாலே ஒன்றானது, நேரத்திலே உள்ளம் பன்பாடுது, பறவைகள் போலே பறந்திடுவோமே..!!! மகிழ்வுடன் வாழ்ந்தோம் என்நாளுமே..!!! இனி வாழ்வில் நீ தான் என் சொந்தமே....... இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல்......
  21. புலிகளின் முதலாவது வெற்றிகரமான தாக்குதல் - லெப்.செல்லக்கிளி அம்மானின் 35வது நினைவுநாள் லெப்.செல்லக்கிளி அம்மான் சதாசிவம் செல்வநாயகம் தமிழீழம்(யாழ் மாவட்டம்) தாய் மடியில் 15.06.1953 மண் மடியில் 23.07.1983 தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்களில் ஒருவர் இவர். புகழ்பெற்ற திருநெல்வேலித் தாக்குதலில் வீரச்சாவை அணைத்துக்கொண்டார். இயக்க வளர்ச்சியில் தலைவருக்கு தோழ்கொடுத்தவர். 1983ம் ஆண்டு யூலை 23ம் திகதி இரவு 11மணியளவில் திருநெல்வேலிச் சந்தியைக் கடந்து யாழ்ப்பாணம் நோக்கி ஒர் வெள்ளை நிற டெலிக்கா வான் வந்துகொண்டிருக்கிறது. வானை செல்லக்கிளி செலுத்த அவனை அடுத்து கையில் S.M.G உடன் கம்பீரமாக உட்கார்ந்திருக்கிறான் விக்ரர். அவனை அடுத்து நான் வானின் பின்பகுதியில் தம்பி, மற்றும் ஏனைய தோழர்கள். நாம் முன்பு திட்டமிட்டபடி வான் தபால்பெட்டிச் சந்தியில் நிற்க எல்லோரும் கீழே இறங்குகிறோம். அங்கு தான் கண்ணிவெடி புதைக்க வேண்டும். வான் அந்த இடத்தில் நின்று நாங்கள் இறங்க அயல் சனங்கள் அரவம் கேட்டு வெளிவரத்தொடங்க விக்ரரும், செல்லக்கிளியும் (இராணுவச் சீருடை அணிந்து இருந்தனர்) சிங்களத்தில் உரக்கத் கதைத்தபடி றோட்டிலே நடக்கத் தொடங்க வெளியே எட்டிப் பார்த்த தலைகளை காணவில்லை. வெளிச்சம் போட்ட இருவீடுகளின் விளக்குகளும் அணைந்து விட்டது. யாரும் வெளிவரவில்லை. இராணுவத்தினர் வந்து நிற்கின்றனர் என்று நினைத்து விட்டனர். முன்பு திட்டமிட்டபடி அப்பையா அண்ணை, விக்ரர், செல்லக்கிளி மூவரும் வெடிகளைப் புதைக்க ஆரம்பிக்கின்றனர். விக்ரரும் செல்லக்கிளியும் பிக்கானால் றோட்டிலே கிடங்கு வெட்டுகின்றனர். கண்ணிவெடி புதைப்பது பெரிய வேலை. வெடிமருந்து தயார்படுத்துகையில் வெடிமருந்தின் நச்சுத் தன்மையால் தலையிடிக்கும். என்னுடைய அனுபவப்படி தாங்க முடியாத தலையிடி. அதன்பின் கிடங்குவெட்டி, (இறுகப் போடப்பட்ட தார் றோட்டிலே கிடங்கு வெட்டுவது அவ்வளவு இலகுவானதல்ல) இவற்றையும விட தாக்குதலின் போது சண்டையும் போடவேண்டும். எமது தகவலின் படி சுமார் நள்ளிரவு 12 மணியளவில் பலாலியில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு ஒரு ஜீப் வண்டியிலும், ஒரு ட்ரக் வாகனத்திலும் இராணுவத்தினர் வருவது வழக்கம். ஜீப்பில் 4 இராணுவத்தினரும் ட்ரக்கில் 10 பேர் அளவிலும் வருவார்கள் எனத் தகவல். எனவே யாழ். பல்கலைக்கழக பின்வீதி பலாலி றோட்டைச் சந்திக்கும் இடமாகிய தபால் பெட்டிச் சந்தியில், கண்ணிவெடிபுதைத்து இரண்டாவதாக வரும் வாகனத்துக்கு கண்ணி வெடியால் தாக்க முன்னால் வரும் வாகனத்தைச் சுட்டு மடக்குவது என்று நாம் வகுத்த திட்டம். அதன்படி திருநெல்வேலிச் சந்தியில் ஒரு வோக்கிரோக்கி. அது அவர்களுடைய வரவை எமக்கு அறிவிக்கும். விக்ரரும் செல்லக்கிளியும் அப்பையா அண்ணையும் கண்ணிவெடி தயார்படுத்திக் கொண்டிருக்கையில் மற்ற எல்லோரும் அருகில் உள்ள வீடுகளின் சுவர்களின் உள்ளே பாய்ந்து தத்தமக்கு உரிய இடத்தை தேர்ந்தெடுக்கத் தொடங்கினோம். ஒவ்வொருவருக்கும் இடம் கிடைத்தது. கண்ணிவெடியை புதைத்துக் கொண்டிருக்கையில் விக்ரர் விலகி தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த இடத்தின் சுவரின் உள்ளே பாய்கின்றான். சுவர் அவனை விட உயரமாக இருக்க பின்பு வெளியில் குதித்து உயரம் வைப்பதற்காக தெருவில் தேடி சில பெரிய கற்களை எடுத்து உள்ளே போட்டு தன் உயரத்தைச் சரிப்படுத்திக்கொண்டு அந்த சுவரின் மறைவைக் கொண்டு தன் நிலையை சீர்படுத்திக் கொள்கிறான். துப்பாக்கியை தோளில் வைத்து இயக்கிப்பார்க்கும் விதங்களையும், துப்பாகியை இலகுவாக இயக்கமுடியுமா என்பதையும் சரி பார்த்துக் கொள்கின்றான். தம்பி (பிரபாகரன்) தபால் பெட்டிச் சந்தியில் இருந்து திருநெல்வேலிப்பக்கமாக உள்ள ஒரு வீட்டின் சுவரின் பின்னே நிலையை எடுத்து தாக்குதலுக்கு தன்னை தயார்படுத்திக் கொண்டிருக்கையில் வோக்கி செல்லக்கிளியை கூப்பிடுகின்றது. செல்லக்கிளி அம்மான் மிக அவசரமாக தன் வேலையை முடித்துக்கொண்டு மீதி வேலையை அப்பையா அண்ணையிடம் விட்டுவிட்டு தனது நிலைக்குச் செல்கின்றான். அம்மான் அருகில் உள்ள ஒரு கடையின் மேல் வெடிக்கவைக்கும் கருவியுடனும் தானியங்கி இயந்திரத் துப்பாக்கியுடனும் தயாராகின்றான். வெளிச்சம் எமக்கும் தெரிந்தது. அப்பகூட வேலை முடியவில்லை. விக்ரர் ”அப்பையா அண்ணை வெளிச்சம் வருகின்றது கெதியா மாறுங்கோ”” என்று கத்த அப்பையா அண்ணை வயர் ரோல்களுக்கு ரேப் சுத்திக் கொண்டிருக்கையில், வோக்கி மீண்டும் அலறியது. “அம்மான் நாங்கள் பார்த்துக் கொண்டிருப்பவர்கள்தான். முன்னால் ஜீப், பின்னால் ட்ரக்” என்று அறிவித்தது. எனவே அம்மான் ட்ரக் வண்டிக்கு கண்ணிவெடியால் தாக்க முன்னால் வரும் ஜீப்புக்கு நாம் தாக்குதல் தொடுக்கத் தயாராகிக் கொண்டிருக்கையில் வெளிச்சங்கள் நெருங்கிக் கொண்டிருக்கின்றன. ஜீப்பை எம்மிடம் வரவிட்டு, பின்னால் வரும் ட்ரக்வண்டியை கண்ணிவெடியால் தாக்கி அதில் தப்புவர்களைச் சுடுவதாக எமது திட்டம். ட்ரக் வண்டியில் பின்பக்கமாக இருப்பவர்களை சுடக்கூடியவாறு விக்ரர் நிற்கின்றான். விக்ரரையும் தாண்டுபவர்களை கவனிக்க தம்பியும் சில தோழர்களும் நிற்கின்றனர். வெளிச்சங்கள் திருநெல்வேலிச் சந்தியைக் கடந்து வந்துகொண்டிருந்தது. நான் எட்டிப்பார்த்தேன். முன்னால் இரு விளக்குகளுடன் ஒரு வாகனம். அந்த விளக்குகளுக்கிடையிலான இடைவெளியைக் கொண்டு அது ஜீப் என்று புரிந்துகொண்டேன். அடுத்து ட்ரக். மெல்ல வந்து கொண்டிருக்கின்றன. நாம் ஜீப்பைத் தாக்குவதற்குத் தயாராகிக்கொண்டிருக்க ஜீப் விக்ரர் நின்ற இடத்தைத் தாண்டி கண்ணிவெடி வைத்த இடத்தை அண்மித்த போது கண்ணிவெடி வெடிக்க வைக்கப்பட்டுவிடுகிறது. எமக்கு அதிர்ச்சி. ஏன் அப்படி நடந்தது? சிந்திக்க நேரமில்லை. உண்மையில் ஜீப்வண்டியை விட்டு பின்னால் வரும் ட்ரக் வண்டிக்கே கண்ணிவெடி வைக்க இருந்தோம். இன்றுவரை அது ஏன் ஜீப்புக்கு வெடிக்க வைக்கப்பட்டது என்பது தெரியாது. ஏனென்றால் அதை வெடிக்க வைத்த செல்லக்கிளி அதை விளக்கவில்லை. சண்டை முடிந்தபோது அவனை நாம் இழந்துவிட்டோம். மூத்த உறுப்பினர் லெப். செல்லக்கிளி அம்மான் பற்றி தேசியத்தலைவர் காணொளியில். சிந்திக்க நேரமில்லை. உடனே நானும் என்னோடு நின்றவர்களும் சுடத்தொடங்கினோம். ஜீப்பின் வெளிச்சம் அணையவில்லை. எனவே பின்னால் நடப்பவை பற்றி ‘ எமக்குத் தெரியவில்லை. எனது G3யால் இரு விளக்குகளையும் குறிபார்த்து உடைத்தேன். விளக்கு உடைந்ததும் பின்னால் நின்ற ட்ரக்கின் வெளிச்சத்தில் ஜீப்பில் இருந்த சில உருவங்கள் இறங்குவதைக் கண்டு அவற்றை நோக்கியும் ஜீப்பை நோக்கியும் ரவைக் கூட்டில் போடப்பட்டு இருந்த அத்தனை குண்டுகளையும் சுட்டேன். அது இப்படி இருக்க விக்ரரைப் பார்ப்போம். ஜீப் வண்டி அவனைத் தாண்டும் போது விக்ரர் தன் தலையை சுவருக்கு உன்ளே இழுத்துக் கொண்டு நிற்கையில் மிகப்பெரிய சத்தத்துடன் கண்ணிவெடி வெடிக்கிறது. விக்ரர் தலையை நிமிர்த்திப் பார்க்க ஓரே புழுதிமண்டலம். மங்கலாக ஒருவன் வெடித்த ஜீப்பில் அருந்து ஓடிவருவது தெரிய அவனைக் குறிவைத்து விசையை அழுத்த. சில குண்டுகள் அவனின் உடலில் பாய அவன் தூக்கி எறியப்படுகின்றான். அப்படியே சுருண்டுவிழுந்து விட்டான். இன்னுமொருவன் ஓடிவர அவனை நோக்கிச் சுட அவன் மீண்டும் ஓடிவர மீண்டும் சுட குண்டுகள் அவனை வீழ்த்தவில்லை. ஆனால் காயத்துடன் பல்கலைக்கழக பின் வீதியால் ஓடினான். விக்ரர் அவனைத் திருப்பிச் சுட்டான். வானளாவ உயர்ந்த புழுதி மண்டலம் அடங்கவில்லை. மற்றும் தகுந்த வெளிச்சம் இல்லை. எனவேதான் சரியாகச் சுடமுடியவில்லை. அவன் ஓடிவிட ஜீப்புக்குக் கிட்டே ஒன்றோ இரண்டோ துப்பாக்கிகள் விக்ரரை நோக்கிச் சுட்டன. அதன் சுவாலையை விக்ரர் கண்டான். தன் இயந்திரத் துப்பாக்கியால் அந்த சுவாலையை மையமாக வைத்து சில வேட்டுக்களைத் தீர்த்தான். பின்பு அடங்கிவிட்டது. மேலும் ஒருசில உருவங்கள் தெரிய அவற்றை நோக்கியும் சில குண்டுகளைச் சுட்டான் துப்பாக்கி திடீரென்று நின்றுவிட்டது. விக்ரருக்கு விளங்கிவிட்டது. போடப்பட்ட குண்டுகள் தீர்ந்துவிட்டது. குண்டுகள் நிரப்பப்பட்ட மறு ரவைச் சட்டத்தைமாற்றி மீண்டும் சுட்டான். அதேவேளை பின்னால் வந்த ட்ரக் வண்டியின் சாரதி வெடி வெடித்ததைப் பார்த்தான். அவன் உடல் சில்லிட்டது. பெரிய வெளிச்சத்தையும், ஜீப் மேலே தூக்கி எறியப்பட்டதையும் கண்ட சாரதி தன்னை அறியாமலே பிரேக்கை இறுக அமத்தினான். ஏன் பிரேக் அழுத்தும் மிதி மீது ஏறி நின்றான் என்றே கூறலாம். ட்ரக் பிரேக் போட்டு நின்றதும் ட்ரக்கின் பின்புறத்தில் இராணுவத்தினர் தம் துப்பாக்கியை தயாராக்கியவாறு இருக்கையிலிருந்து எழத்தொடங்கினர். தம்பி இரு வாகனங்களும் தன்னைத் தாண்டு மட்டும் சுவரின் மறைவிலே குந்தியிருக்க, இரு வாகனங்களும் அவரைத் தாண்டுகிறது. சிறிதாக நிமிர்ந்து பார்க்கையில் ஜீப் வண்டி கண்ணி வெடியை நெருங்கிக் கொண்டிருக்க ட்ரக் அவருக்கு 20 யார் தூரத்தில் சென்றுகொண்டிருக்க கண்ணிவெடி வெடித்தது. ட்ரக் அவருக்கு மிகக் கிட்ட கையில் எட்டிப்பிடிக்குமாப் போல் துரத்தில் பிரேக் போட்டதால் குலுங்கி நிற்க தான் எப்போதும் உடன் வைத்திருக்கும் அவருடைய G3 வெடிக்கத்தொடங்கியது. ட்ரக்கின் இருக்கையில் இருந்து இராணுவத்தினர் எழுந்தும் எழாததுமான நிலையில் தம்பியின் G3 வெடிக்கத் தொடங்கியது. G3 யிலிருந்து புறப்பட்ட சூடான ரவைகள் தாக்குதலுக்குத் தயாராக எழுந்த இராணுவத்தினரை வரிசையாக விழுத்தத்தொடங்கியது. சற்றும் எதிர்பாரமல் ஏற்பட்ட இத்திருப்பம் தம்பியை ஆபத்தின் உச்ச எல்லைக்குள் சிக்கவைத்துவிட்டது. ஆனால், இந்த எதிர்பாராத திருப்பமே இப்போரின் முழுவெற்றிக்கு வழி அமைத்தது எனலாம். மிகத் துரிதமாகவும் குறிதவறாமலும் துப்பாக்கியை கையாள்வதில் முதன்னமயாளராகத் திகழும் தம்பியிடம் ட்ரக்கில் வந்த 9 இராணுவத்தினரும் சிக்கியதே எமது முழு வெற்றிக்கு வழி கோலியது. ட்ரக் மிகக் கிட்ட நிற்பதால் இலகுவாக தம்பியால் அவர்களைச் சுடமுடிகிறது. வெடியன் அதிர்வில் தெரு விளக்குகள் அணைந்துவிட்ட பொழுதிலும் மிகக் கிட்டேயிருப்பதால் ஒவ்வொருவராகக் குறிவைத்துச் சுட்டார். ஆனால் மிக அபாயகரமான நிலை அவருக்கு. இராணுவத்தினரைப் பொறுத்தவரையில் தம்பி மிகக் கிட்டே நிற்கிறார். எதிர்பாராமல் இத்தாக்குதலில் மிக அபாயத்தின் எல்லையில் தம்பிதான் நிற்கிறார். ஆனால் தனது ஆளுமையால், ஆற்றலால் வரிசையாக இராணுவத்தினரை விழுத்தி வந்த போதிலும் இரண்டு சாதுரியமான இராணுவத்தினர் ட்றக்கிலிருந்து கீழே சில்லுக்குள் புகுந்துகொண்டு, மறைந்திருந்து தமது தாக்குதலை ஆரம்பித்தார்கள். தம்பி நின்ற சுவரில் வேட்டுக்கள் பட்டுத் தெறித்துக்கொண்டிருந்தன. இத்துடன் ட்றக்கின் முன்புறத்தில் இருந்தவர்களும் கீழே பாய எத்தனித்தனர். இதை நோக்கிய தம்பியின் G3 இவர்களையும் நோக்கி முழங்குகிறது. இதிலே மிகவும் சங்கடம் என்னவென்றால் தம்பிக்கு உதவிக்கு எவரும் இல்லை நாம் எமது திட்டத்தின் படி ஜீப்பை முன்னே விட்டு ட்ரக் வண்டிக்கு கண்ணிவெடித் தாக்குதல் செய்வதாக இருந்ததோம். அத்திட்டத்தின்படி தம்பியை மிகப் பின்னுக்கு வைத்திருந்தோம். ஆனால் இப்போ தனியாகவே ட்றக்கை சமாளிக்க வேண்டிய நிலைக்கு தம்பி தள்ளப்பட்டு விட்டார். இதே நேரம் ஜுப்பை நோக்கி சுட்டுக்கொண்டிருந்த விக்ரர் தனக்கு 20 யார் பின்னே ட்ரக் நிற்பதையும் அதிலிருந்து துப்பாக்கிகள் சடசடப்பதையும் அவதானித்தான். தன் இயந்திரத் துப்பாக்கியை ட்றக்கை நோக்கி திருப்பினான். ட்றக்கின் முன் கண்ணாடிகள் சிதறுகின்றன. கண்ணாடிக்கு குறுக்காக ஓர் நீளவரிசையாகச் சுட்டான். அப்பொதுதான் சாரதி இறந்திருக்க வேண்டும். நாம் பின்பு பார்த்தபோது தனது இருக்கையிலேயே ஸ்ரேறிங்கில் சாய்ந்து வாயால் இரத்தம் கக்கியபடி உயிரை விட்டிருந்தான். விக்ரரின் இடத்திலிருந்து சற்று முன்னோக்கி எதிரில் இருந்த ஒழுங்கையிலிருந்து ‘”பசீர் காக்கா”” றிப்பீட்டரால் ஜீப்பை நோக்கிச் சுட்டுக்கொண்டிருந்தார். றிப்பீட்டரில் தோட்டாக்கள் முடியும்போது அதை மாற்றித் திருப்பித் தாக்கும் படி செல்லி உற்சாகமூட்டிக் கொண்டிருந்தார் காக்காவின் அருகிலிருந்த அப்பையா அண்ணை. அப்போழுது ஒழுங்கையை நோக்கி ஒருவன் S.M.G உடன் ஓடி வந்தான். ‘சுடு” என்ற அப்பையா அண்ணை உடனே ‘கவனம் எங்கட பெடியளோ தெரியாது பார்த்துச் சுடு” என்றார். றிப்பீட்டர் சத்தம் ஓய வந்தவன் பிணமாகச் சரிந்தான். அவனது S.M.Gயை அப்பையா அண்ணை ஓடிவந்து எடுத்துக்கொண்டார். இவனே ரோந்துப் பிரிவுக்கு தலைமை தாங்கிய லெப்ரினன்ட் என்று பின்னர் தெரிந்து கொண்டோம். அவனது விசேட இராணுவப் பட்டிகள் அதை உறுதிப்படுத்தின. இதே நேரம் தம்பி தனியே நிற்பதை உணர்ந்து ரஞ்சனையும் இன்னொரு போரளியையும் ”தம்பியிடம் ஓடு” என்று துரத்தினேன். அவர்கள் அருகிலுள்ள வீடுகளால் பாய்ந்து தம்பியை நோக்கிச் சென்றனர். ஆனால் ரஞ்சனும் சக போராளியும் தம்பியை நோக்கி சென்றடைந்த போது ட்றக்கிலிருந்த அனைத்து துப்பாக்கிகளையும் தம்பியின் தனி ஒரு G3 ஓயவைத்துவிட்டது. சாதாரணமாக எவரும் நம்புதற்கரிய இவ்வீரச்செயலை முடித்து விட்டு அமைதியாக வீட்டின் அருகேயுள்ள மாமரத்தின் கீழிருந்து முடிந்த ரவைக்கூட்டிற்கு ரவைகளை நிரப்பிக் கொண்டிருந்தார் தம்பி. மதிலேறிக்குதித்த ரஞ்சனும் மற்றைய போரளியும் ஆயுதத்தோடு ஒரு நபர் இருப்பதைக் கண்டு ஆயுதத்தைத் தயார்நிலைக்குக் கொண்டுவந்து ”யாரது”” என்று முன்னே வந்தனர். ”அது நான்ராப்பா”” என்றவாறு ரஞ்சனை அடையாளம் கண்ட தம்பி இங்கே எல்லாம் முடிந்தது. உங்கடை பக்கம் எப்படி என்றார். ”அண்ணை எங்கடை பக்கம் பிரச்சினையில்லை”” என்றார் ரஞ்சன். ”இங்கையும் எல்லாம் முடிந்து விட்டது, ஆனால், எனக்கு சற்று முன்பாக எதிரேயிருந்த புலேந்திரனையும் சந்தோசத்தையும் காணவில்லை, வா பார்ப்போம்”” என்றவாறு தன் பிரியத்திற்குரிய பG3யை தூக்கிக்கொண்டு விரைந்தார் தம்பி. மதிலேறிக் குதிப்பதற்குமுன் ரஞ்சனுடன் வந்த போராளி தம்பியின் அனுமதியைப் பெற்று எதற்கும் முன்னெச்செரிக்கையாக ஓர் குண்டை வீசினான். குண்டு ட்ரக்கின் கீழ் விழுந்து வெடித்து எரிபொருள் தாங்கியை உடைத்தது. இதன்பின் மதிலேறிக் குதித்து றோட்டைத் தாண்டி புலேந்திரன் சந்தோசத்தின் இடத்தையடைந்தான். அங்கு புலேந்திரன் சந்தோசத்தைக் காணவில்லை. ‘எதற்கும் முதலில் இறந்தவர்களின் ஆயுதங்களைச் சேகரியுங்கள்” எனக் கட்டளையிட்டார் தம்பி. மதிலேறி றோட்டில் குதிக்க ஆயத்தமான ரஞ்சனுடன் வந்த மற்ற வீரன் தம்பியைப் பார்த்து ”அண்ணா அவன் அனுங்குகிறான்.” மீண்டும் ஒருமுறை முழங்கிய G3 அவனின் அனுங்கலுக்கு முற்றுப்புள்ளி வைத்தது. இதன் பின் ட்ரக்கை நெருங்கி ஆயுதங்களை சேகரிக்கத் தொடங்கினர். தம்பி எதற்கும் என்று வெளியே கிடந்த இராணுவத்தினரின் தலையில் இறுதி அத்தியாயத்தை G3ஆல் எழுதிவைத்தார். Gயின் வேகம் மண்டையோடுகளைப் பிளக்க வைத்தது. இதே நேரம் பல்கலைக்கழக பின் வீதியால் ஓடிய ஓர் இராணுவவீரனை இன்னோர் போரளி துரத்திச் சென்று சுட்டான். ஜீப்பை முற்றாக முடித்துவிட்டு பொன்னம்மானும் நானும் என்னுடைய போரளிகளும் ட்ரக்கை நோக்கி நடு றோட்டால் ஓடினோம். ”கரையால் வாருங்கள்”” என்ற குரல் எம்மை வரவேற்றது. எல்லோரும் தம்பியை சூழ்ந்துகொண்டு மகிழ்சி ஆரவாரம் செய்து கொண்டு ஆயுதங்களைப் பொறுக்கத் தொடங்கினோம். இதற்கிடையில் பொன்னம்மான் அதீத மகிழ்ச்சியுடன் இறந்து கிடந்த இராணுவத்தினரின் ஹெல்மெட்டை தலையில் போட்டுக்கொண்டு ட்ரக்கின் கீழே இறந்து கிடந்த இராணுவ வீரர்களினது ஆயுதங்களை தேடி எடுத்துக்கொண்டான். இத் தாக்குதல் இரவு நேரடி மோதலால் எம்மையும் இராணுவத்தினரையும் பேறுபிரிக்க நாம் ஹெல்மெட்டைத் தான் குறியீடாகப் பாவித்தோம். எனவே ஹெல்மெட்டுடன் ஓர் உருவம் நகர்வதைக்கண்ட தம்பி உடனடியாக துப்பாக்கியை தயார்நிலைக்கு கொண்டு வந்து ”யாரது” என்று வினவ அம்மான் ”அது நான் தம்பி” என்றவாறு தனது தவறை உணர்ந்து ஹெல்மெட்டைக் கழற்றினார். பொன்னம்மானை செல்லமாக கண்டித்தவாறு எல்லாரையும் சரிபார்க்குமாறு தம்பி பணிக்க ”அம்மானைக் காணவில்லை”” என்று விக்ரர் கத்தினான். விக்ரரும் புலேந்திரனும் அம்மான் நின்ற கடையின் மேல் ஏறினர். ”டேய் அம்மானுக்கு வெடி விழுந்திட்டுது” என்ற விக்ரரின் குரல் எங்கும் எதிரேலித்தது. எல்லோரும் அங்கே ஓட நான் வானை எடுத்து வந்தேன். வானில் அம்மானை ஏற்றும்போது அம்மானின் உடல் குளிர்ந்துவிட்டது. லிங்கம் இறுதியாக இராணுவத்தினரின் தலையில் போட றெஜி ஆயுதங்களைப் பொறுக்கினான். வான் புறப்படத் தொடங்க மழையும் மெதுவாகத் தன் கரங்களால் வாழ்த்துத் தெரிவித்தது. எமக்கு செல்லக்கிளி அம்மானின் மரணத்திற்காக இடியும் மின்னலும் சேர்ந்து இறுதி வணக்கம் செலுத்த வான் எமது முகாம் நோக்கி பறந்தது. அன்புடன் கிட்டு http://www.battinaatham.net/description.php?art=16073
  22. கட்டுநாயக்கா விமானப்படை தளம் மீதான தாக்குதலின் 17ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். தமிழீழ விடுதலை புலிகளின் பயணத்தில், வெற்றி மகுடம் சூட்டிய நாள்.ஆம். கட்டுநாயகா வான்படை தளத்தை தகர்த்த நாள்! 1983 ஆம் ஆண்டு யூலை மாதம், தமிழர்களின் வாழ்வில் மறக்க முடியாத,இன்னல்கள், கொடிய துயரங்கள் நிறைந்த மாதம். கொடுங்கோலன் சிங்களவனால்,ஒரு மிகப்பெரிய யுத்தத்தை, தமிழர்களின் வாழ்வில் திணித்த நாள். ஆயிரக்கணக்கான தமிழர்களை, சிங்களன் கொன்றொழித்த நாள். லட்சத்துக்கும் அதிகமான தமிழர்கள்,வீடுகளற்ற அகதிகளாக நடுத்தெருவில் நின்ற நாள். பல்லாயிரகணக்கான தமிழர்களின் வீடுகளையும், ,உடமைகளையும்,அவர்களின் வியாபார ஸ்தலங்களையும் அடித்து நொறுக்கிய நாள். தமிழர்களுக்கு பெருமளவில் பொருட்சேதமும், உயிர் சேதமும் நிகழ்ந்த இந்த மாதத்தை தான், கறுப்பு யூலை என்று நினைவு படுத்தி,புலம் பெயர் மக்கள் வாழும்,அனைத்து தேசங்களிலும் ஆண்டு தோறும் அஞ்சலி செலுத்துவது வழக்கம். புலம் பெயர் தமிழன் ஒவ்வொருவனும்,யூலை மாதத்தின் கடைசி நாட்களை தன் வாழ்நாளில் மறக்க இயலாத அளவுக்கு கொடுமையான சம்பவங்கள் நிகழ்ந்த காலம் இது. இனி சிங்களனோடு பேசுவதில் எந்த பிரயோஜனமும் கிடையாது. சிங்களனுக்கு புரிந்த மொழி, திருப்பி அடிப்பது தான். பொருளாதாரத்தில் அவனை சிதைப்பது தான் என்று முடிவு கட்டிய,தமிழீழ விடுதலைப் புலிகள், கறுப்பு யூலைக்கு பதிலடியாக, ஒரு மாபெரும் யுத்தத்தை, இழப்பை சிங்களனுக்கு தரவேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு இருந்தார்கள். ஆம் அந்த தாக்குதலுக்காக 2001 ஆண்டு யூலை 24 ஆம் நாள் என்று,தேதி குறிக்கப்பட்டது. கட்டுநாயகா வான்படை தளத்தை தகர்ப்பது என்று முடிவெடுத்தார்கள் விடுதலைப்புலிகள். வடக்கிலும் கிழக்கிலும் வாழ்ந்த விடுதலைப்புலிகள், எதிரியை அவன் கோட்டைக்குள்ளேயே புகுந்து தாக்கி, தங்கள் வீரத்தை நிலைநாட்ட வேண்டும் என்று முடிவெடுத்து, இலங்கையின் இதயமான கொழும்புக்கு உள்ளேயே ஊடுருவினார்கள். பதினான்கு கரும்புலிகள் யூலை மாதம் 24 ஆம் தேதி அதிகாலை மூன்றரை மணிக்கு, கட்டுநாயகா வான்படை தளத்துக்குள் நுழைந்தார்கள். இருபத்தாறு விமானங்களை தகர்த்தார்கள். அதில் பண்டார நாயகா விமான நிலையத்தில் நின்ற, நான்கு பயணிகள் இல்லாத விமானம் உட்பட. அதிகாலை மூன்றரை மணிக்கு ஆரம்பித்த யுத்தம்,காலை எட்டரை மணிக்கு முடிவுக்கு வந்தது. வெறும் ஐந்து மணி நேரத்தில்,எதிரியின் இருபத்தாறு போர் விமானங்களை தகர்த்த எம் கரும்புலிகள், வீரச்சாவை தழுவினார்கள். இந்த யுத்தத்தை திட்டமிட்டு, முன்னின்று நடத்தியவன் மாவீரன் தளபதி சார்லஸ். இந்த தாக்குதலால் சிங்களனுக்கு ஏற்பட்ட இழப்போ முன்னூற்று ஐம்பது மில்லியன் அமெரிக்க டாலர்கள்.அது மட்டுமா, பாதுகாப்பில்லை என்று கருதி,சிங்களனின் சுற்றுலா வணிகம் அடியோடு சிதைந்து போனது. விமான நிலையம் மூடப்பட்டது. கடும் பொருளாதார வீழ்ச்சியை சிங்களவன் சந்தித்தான். துன்பத்தை தந்தவனுக்கே,அந்த துன்பத்தை திருப்பி கொடுத்தார்கள் எம் மாவீர கண்மணிகள். கொழும்பு விமான படை தளத்தில் புகுந்து இருபத்தாறு விமானங்களை தாக்க தெரிந்த விடுதலை புலிகளுக்கு, சிங்களனில் ஒரு ஆயிரம் பேரை கொல்வது என்பது கடினமான விடயமா? சாவை துச்சமென மதித்து தான், கரும் புலிகளாக களத்தில் நிற்கிறார்கள். அப்படி துணிந்த பிறகு சிங்களனில் ஒரு ஆயிரம் பேரை கொன்றிருக்க முடியாதா? ஏன் செய்யவில்லை? காரணம் தலைமை அப்படி.நம் எதிரி சிங்கள அரசும், ராணுவமும் தானே ஒழிய,சாதாரண சிங்கள மக்கள் அல்ல.அவர்கள் நம் இலக்கு அல்ல என்று பல முறை அழுத்தம் திருத்தமாக பதிவு செய்தவன் எங்கள் தலைவன் பிரபகாரன். அந்த அளவுக்கு கட்டுப்பாடுகளோடு, படை நடத்தியன் எங்கள் தலைவன் பிரபாகரன். முப்பதாண்டு கால ஆயுத போரில், விடுதலைப்புலிகள் ஒரு சிங்களத்தியை, கையைப் பிடித்து இழுத்தார்கள், பாலியல் ரீதியாக துன்புறுத்தினார்கள் என்று எவனாவது குற்றம் சொல்ல முடியுமா? ஏன் என் எதிரி சிங்களன் அப்படி ஒரு குற்றசாட்டை சொல்ல முடியுமா? முடியாது.காரணம் அந்த அளவுக்கு ஒழுக்கமான தலைமை, தலைவனின் வழியில் கட்டுகோப்பான போராளிகள். எங்கள் போராட்டங்களில் வேண்டுமானால், பின்னடைவு ஏற்பட்டு இருக்கலாம். ஆனால் எங்கள் போராட்ட வழியில் நேர்மையும், நியாயமும் இருந்தது. எதிரியை தாக்குவதில் கூட ஒரு கட்டுப்பாடு இருந்தது. உலக விடுதலை போராட்ட வீரர்களில், விடுதலைப் புலிகளை போல வீரம் செறிந்த போராளிகளும் இல்லை. பிரபாகரனை போன்ற மாவீரன் எவனும் இல்லை என்று மார் தட்டி சொல்வோம். தமிழீழ விடுதலைப் புலிகளின் வெற்றிகரமான கரும்புலித் தாக்குதலினால் சிங்கள இன வெறியர்களுக்கு ஏற்படுத்தப்பட்ட இழப்புகள் ...! இலங்கை அரசின் கூற்றுப்படி அழிக்கப்பட்ட விமானங்கள் 14 என்று கூறப்பட்டது. விடுதலைப்புலிகளின் அதிகாரப் பூர்வப் பத்திரிக்கையான ஈழநாதத்தின் கூற்றுப்படி அழிக்கப்பட்ட விமானங்கள் எண்ணிக்கை 28 ஆக வெளியிடப்பட்டது. சார்பற்ற அறிக்கை 26 வானூர்திகள் அழிக்கப்பட்டன அல்லது சேதமாக்கப்பட்டன என்று கூறுகின்றது. முற்றிலுமாக அழிக்கப்பட்டவை தொகு இரண்டு எ (A) - 340 - 300 பயணிகள் விமானங்கள் ஒரு எ (A) - 330 -200 பயணிகள் விமானம் நான்கு கிபிர் போர் விமானங்கள் மூன்று கெ (K)-8 பயிற்சி விமானங்கள் இரண்டு எம்.ஐ.ஜி (MIG) - 27 ஜெட் போர் விமானங்கள் இரண்டு பெல் (bell) 412 உலங்கு வானூர்தி இரண்டு வி.வி.ஐ.பி (VVIP) 412 உலங்கு வானூர்தி இரண்டு எம்.ஐ (MI) -17 உலங்கு வானூர்தி மூன்று K-8 சேதப்படுத்தப்பட்டவை தொகு இரண்டு - A-320 பயணிகள் விமானங்கள் ஒரு - A-340 பயணிகள் விமானம் ஒரு அண்டொனோவ் (Antonov) போக்குவரத்து விமானம் ஒரு எம்.ஐ (MI) -24 உலங்கு வானூர்தி ஒரு பெல் (Bell) 412 உலங்கு வானூர்தி நான்கு கிபிர் போர் விமானங்கள் விடுதலைப்புலிகளால் நடத்தப்பட்ட இத்தாக்குதலானது இலங்கையின் பொருளாதாரத்தில் வரலாறு காணாத மாற்றத்தை ஏற்படுத்தியது. இத்தாக்குதலின் மூலம் சுமார் 375 மில்லியன் அமெரிக்க டாலர்களிற்கும் அதிகமான சொத்துக்கள் அழிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.கட்டுநாயக்கா வான்படை தாக்குதலில், வீரச்சாவை தழுவிய எம் கரும்புலி வீர மறவர்களுக்கும்,கறுப்பு யூலையில், சிங்களவனால் கொடூரமாக கொன்றொழிக்கப்பட்ட,எம் உடன்பிறப்புகள் அத்தனை பேருக்கும் எங்கள் வீர வணக்கம்! புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் http://www.battinaatham.net/description.php?art=16087
  23. பான்ஸ் லாபிரிந்த் (Pan’s Labyrinth) திரைப்படம் ஒரு பார்வை . . . . . . . . ! உலக சினிமா, சினிமா May 11, 2018 ஆசிரியர்குழு‍ மாற்று பான்ஸ் லாபிரிந்த் (Pan’s Labyrinth) -Directed by Guillermo del Toro போர் தொடர்பான திரைப்படங்கள், பெரும்பாலும் உறக்கமற்ற இரவுகளிலே நம்மைக் கொண்டு செல்லும். அப்படியானதொரு, நிறம் மங்கியிருந்த விடியல் பொழுதொன்றை தான் ஒஃபிலியாவும்(Ofelia) எனக்கு வழங்கியிருந்தாள். வன்முறைகள் எவ்வளவு நிகழ்ந்தாலும், சலனப்படாத கலைஞர்கள்(!) பலரைக் காண்கிறோம். நந்தினி, ஹாசினி போன்ற சிறுமிகள் பாலியல் வல்லுறவுக்கு ஆட்பட்டு கொல்லப்பட்டாலும், அனிதாக்கள் மரணித்தாலும், மலக்குழிகளில் இறக்கி மக்களைக் கொன்றாலும், எவ்வித சலனமும் இல்லாமல், கைகள் நிரம்ப மலர்களைக் கொண்டு செல்லும் வண்ணதாசன் போன்ற கவிஞர்களையும்(!) நம் கண் முன்னே காண்கிறோம். ஆனால், போருக்குப் பின், அமைதியான ஈரான் என்ற ஒன்றை என்னால், படம் எடுக்க இயலாது என்ற குர்திஷ் இயக்குனர் பாமென் கோபாடி(Bahman Ghopadi)யின், Turtles Can Fly என்ற திரைப்படம் பல நிம்மதியற்ற நாட்களை எனக்கு வழங்கியிருக்கின்றது. அதிகாரத்தினை நிலைநாட்டும் போரில், பெண்கள், சிறுமிகள் எப்பொழுதும் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்படுகின்றனர். நம் கண்ணெதிரே ஈழப்போரில், பெண்போராளிகளும் கூட பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டனர். போரில் மட்டுமில்லை; திருமணத்திற்கு பின்பு, தனது வாழ்க்கைத்துணையை பாலியல் வன்கொடுமை செய்வது இந்தியா உட்பட பல நாடுகளில் சட்டப்படி குற்றமல்ல. இது பெண்களைத் தனது உடமைப் பொருளாக பாவிக்கும் ஆணாதிக்க சமூகத்தின் வழக்கம். பெண்களை குடும்ப உறவிலும், வெறும் பிள்ளை பெற்று வளர்க்கும் கருவியாகவும், பாலியல் தேவைகளுக்காகவும், குடும்ப வேலைகளுக்காகவுமே பயன்படுத்தப்படுகின்றனர். இரத்தவழி உறவே, அதுவும் ஆணே, தனது உடமைப்பொருளுக்கு வாரிசாக வர வேண்டும் என்னும் ஆணாதிக்கப்போக்கே, பெண்களை கீழே தள்ளி, தனது வாரிசை மேலே உயர்த்துகின்றது. ஒஃபிலியாவின் தாயும் இங்கே வெறும் பிள்ளை பெறும் கருவியாகவே பயன்படுத்தப்படுகிறாள். அவள் உடல்நலம் குறித்து சிறிதும் அக்கறைகொள்ளாமல், தனக்கு பிறப்பது ஆண் குழந்தையே; அதுவும் தந்தையின் அருகிலேயே பிறக்க வேண்டும் என ஒஃபிலியாவின் தாயை நெடுந்தொலைவு பயணித்து வரவழைக்கிறார் கேப்டன் விடல். அந்த மாற்றுத்தந்தையை(step father) தந்தை என சொல்லவும் மறுக்கிறாள் ஒஃபிலியா. போர், இறந்த தனது தந்தை, கருவுற்றதினால் பயணித்து உடல் நலமற்ற தனது தாய், அதிகாரமிக்க தனது மாற்றுத் தந்தை என தன்னைச் சுற்றிலுமான நிகழ் உலகிலிருந்து தன்னை சிறிது சிறிதாக விடுவித்து குழந்தைகளுக்கான விசித்திரக்கதைகளுக்குள் நுழைகிறாள் ஒஃபிலியா. தனது தனிமை, பயம், விரக்தி, வெறுப்பு என எல்லாவற்றுக்குமாய்ச் சேர்த்து பானை(pan or faun) அணைத்துக்கொள்கிறாள். தனது தாயின் கருவறையின் உள்ள ஒரு குழந்தையே, தனது தாய்க்கு பெரும் உடல்நலக்குறைவினை ஏற்படுத்துவதை ஒஃபிலியா உணர்கிறாள். தன்னுடைய அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வான சாவியை மரத்தின் வயிற்றில் இருந்து பெறுகிறாள். அடிமரத்தில், பெண்ணுறுப்பின் வடிவினை ஒத்ததொரு வடிவில் தொடங்கும் வழியில் நுழைந்து மரத்தினுள் வாழும் பெருந்தவளையினை அழித்து, அதனிடமிருந்த அச்சாவியினைப் பெறுகிறாள். புரட்சியாளர்களுக்கு மெர்சடீஸ் உதவுவதை அறிந்த ஒஃபிலியா, அது குறித்து வெளியே பகிர்ந்துகொள்ளாமல் இரகசியம் காக்கிறாள். ஃபலான்ஜிஸ்ட்டான தன்னுடைய மாற்றுத்தந்தையை, அவருடைய ஆணாதிக்கத்தை, அதிகாரப்போக்கை அடியோடு வெறுக்கிறாள். போர், அதிகாரம், பிரசவம் எனும் பெயரில் தாயின் மீது நிகழ்த்தப்பட்ட கொலை என தன்னைச் சுற்றிலுமான உலகில் வாழ்ந்துகொண்டே, தன்னை விசித்திரக்கதைகளுடனும் பிணைத்துக்கொள்கிறாள். ஒரு புறம் மேஜை முழுவதும் பழரசமும், பழங்களும் கண்ணைக்கவரும் பொழுதில், மறுபுறம் குழந்தைகளைக் கொன்று தின்னும் அவ்வுருவம் அருகே குவிந்துகிடக்கும் குழந்தைகளின் செருப்புகளைக் காணும் பொழுதில், இச்சமூகம் குழந்தைகள் மீது எப்பெரும் வன்முறையை நிகழ்த்திவருகிறது என்பதினை ஒஃபிலியா உணரவைக்கிறாள். இந்தக் கொடூரங்களிலிருந்து விலகி, ஒஃபிலியா இளவரசியாகிறாள். – நிலவுமொழி. http://maattru.com/pans-labyrinth/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.