Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by கிருபன்

  1. கீழடி தந்த வெளிச்சம் 2019 - மகுடேசுவரன் · கட்டுரை கீழடித் தொல்லியல் களத்தின் ஆய்வு முடிவுகள் அறியக் கிடைத்தவுடன் தமிழ்க் குமுகாயத்திற்குப் புத்துயிர் பெற்றதுபோல் ஆகிவிட்டது. வரலாற்றினை வைத்துப் பேசும்போது, நமது பழைய இலக்கியங்களிலிருந்தே பெரும்பான்மையான எடுத்துக்காட்டுகளைக் கூறிக்கொண்டிருந்தோம். அவற்றை முறையாய் நிறுவும் பருப்பொருள் சான்றுக்கு நம்மிடம் பற்றாக்குறைதான். எண்ணற்ற தமிழறிஞர்கள் தமிழின் தொன்மையைக் குறித்துப் பேசமுற்பட்டபோதெல்லாம் ‘அறிவியல் மட்டத்திலான ஆய்வுகளைக் கொண்டுவாருங்கள், களங்களைக் காட்டுங்கள்’ எளிமையாய் ஒதுக்கி வைக்கப்பட்டார்கள். நூற்றாண்டுகட்கும் மேலாக நம் தமிழறிஞர்கள் தத்தம் முடிவுகளைத் தமக்குள்ளேயே அறிவித்துக்கொண்டு அடங்கினர் என்பதுதான் உண்மை. திருக்குறளை எடுத்துக்கொள்ளுங்கள். ‘திருவள்ளுவர் எப்போது பிறந்தார், திருக்குறள் எப்போது இயற்றப்பட்டது ?’ என்பது பேசுபொருளாக இருந்தது. திருக்குறள் கிபி இரண்டாம் நூற்றாண்டுக்குப் பிறகே இயற்றப்பட்டது என்று ஒரு தரப்பினர் தொடர்ந்து கூறிவந்தனர். பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான திருக்குறள், சங்கம் மருவிய காலத்தில் தோன்றியது என்ற மட்டத்தில்தான் ஏற்றுக்கொண்டனர். அதனிலும் பல இடையூறுகள் இருந்தன. திருக்குறள் ஒருவரால் இயற்றப்பட்டிருக்க முடியாது என்றும் பல்வேறு காலகட்டத்தில் எழுதப்பட்டவற்றின் தொகுப்பு நூல்தான் அஃது என்றும் கூறினர். ‘திருக்குறளில் பல வடசொற்கள் கலந்திருக்கின்றன, அதனாலேயே அதன் காலக்கணக்கினைப் பின்தள்ளியே எடுத்துக்கொள்ள வேண்டும்’ என்றனர். இருபதாம் நூற்றாண்டின் முதல் காற்பகுதியில் தமிழின் மாண்பினைக் கெடுக்கும் மணிப்பிரவாள நடைக்கு எதிரான இயக்கம் தோன்றியது. மறைமலையடிகளார் தோற்றுவித்த தனித்தமிழ் இயக்கம் அதற்கான முன்னெடுப்புகளைச் செய்தது. ‘கிறித்து பிறப்பதற்கு முப்பத்தோராண்டுகள் முந்திப் பிறந்தவர் திருவள்ளுவர்’ என்று மறைமலையடிகள், தெ.பொ.மீ., திரு.வி.க. ஆகியோர் கூடிய அவையில் முடிவு செய்யப்பட்டது. அதன்வழியே திருவள்ளுவர் ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது. நம்முடைய தொன்மை அடையாளங்கள் எவ்வாறு அழிந்துபோயின என்பதைக் குறித்து ஓய்வுபெற்ற பேராசிரியர் ஒருவரோடு உரையாடினேன். ‘அக்காலத்தில் இயற்கையைவிடவும் போர்களே பேரழிவுகளை நிகழ்த்தின’ என்றார். பகைமுதிர்ச்சி பெற்ற மன்னர்களில் ஒருவன் போரில் வெற்றி பெற்றவுடன் எதிரி நாட்டு நகரங்களைத் தரைமட்டமாக்கி ஏர்பூட்டி உழுது எள் விதைத்து எருக்கம்பால் தெளித்துவிட்டே அகன்றானாம். நம் அறநூல்கள் அதைத்தானே சொல்கின்றன? நெருப்பிலும் பகையிலும் சிறிதும் மீதம் வையாதே என்கின்றன. ஒவ்வொரு தலைநகரமும் இப்படித்தான் வீழ்த்தப்பட்டது. ஒவ்வோர் அரசும் இப்படித்தான் உருத்தெரியாமல் அழிக்கப்பட்டது. இவ்வழி மட்டுமின்றி வெளியார் படையெடுப்புகள், கொள்ளையிடல்கள், சூறையாடல்கள் என எங்கெங்கும் அழிவுச் செயல்கள். இவற்றோடு இயற்கையும் தன் பங்குக்கு வேண்டிய பேரழிவினைச் செய்தது. குணகடலின் (வங்காள விரிகுடா) கரையில் அமைந்திருந்த துறைமுகத் தலைநகரங்கள் கடல்கோள்களால் மூழ்கடிக்கப்பட்டன. கடல்கோள் என்றால் என்னவென்றே தெரியாதிருந்த நமக்கு, அண்மையில் நேர்ந்த ஆழிப்பேரலைப் பேரிடர்தான் உண்மையையே உணர்த்தியது. இன்றைக்கு நமக்கு மாமல்லையும், பூம்புகாரும், நாகையும், கபாடபுரமும் எப்படியெல்லாம் கடலலைகளால் விழுங்கப்பட்டிருக்கும் என்று கற்பனையில் காணத் தெரியும். சங்கம் வளர்த்த தமிழின் காலக் கணக்குகள் மயங்கி விழ வைக்கின்றன. தலைச்சங்கத்தின் காலம் ஏறத்தாழ, நான்காயிரத்து நானூற்று நாற்பது ஆண்டுகள். இடைச்சங்கம் நிலவிய காலம் மூவாயிரத்து எழுநூறு ஆண்டுகள். இடைச்சங்க காலத்தின் முடிவில்தான் கடல்கோளால் கபாடபுரம் நீரில் மூழ்கியது. கடலோரத்தில் தலைநகரம் இருப்பதால் ஏற்படும் அழிவை எண்ணி இன்றுள்ள மதுரைக்குப் பாண்டிய மன்னன் இடம்பெயர்ந்தான். இன்றைய மதுரையில் பாண்டியன் முடத்திருமாறனால் நிறுவப்பட்டதே கடைச்சங்கம் எனப்படுவது. அதன் காலம் ஏறத்தாழ, ஆயிரத்து எண்ணூற்று ஐம்பது ஆண்டுகள். தமிழின் முச்சங்கங்கள் நிலவிய காலக்கணக்கு பத்தாயிரம் ஆண்டுகளைத் தொடுகிறது. கடல்கோள் ஏற்பட்ட பகுதிகளில் அகழாய்வுகள் செய்வதற்கு நாட்டின் செல்வ வளமும் அறிவியற் கருவிகளின் மேம்பாடுகளும் தேவைப்படும். அது நடக்கும் காலமும் வரும். ஆனால், கடைச்சங்கம் கூடிய இன்றைய மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளில் இயன்றவரை அகழாய்வு செய்வதற்குத் தடையேதுமில்லை. முச்சங்கங்களின் காலக் கணக்குகள் இவ்வாறு இருக்கையில், அவற்றை நாம் தமிழ் இலக்கண, இலக்கிய நூல்கள் வழியாகத்தான் தொடர்ந்து பற்றி வந்தோம். நம்மிடம் மீந்திருக்கும் தொன்மை நூல்கள் பலவும் வரலாற்றுக் காலத்தோடு தொடர்புடைய பேராக்கங்கள். வரலாற்றினை முந்திக்கொண்டு ஓரடி எடுத்துவைப்பதற்கு நமக்கு ஒரு பற்றுக்கோலும் கிடைக்கவில்லை. கீழடி அகழாய்வு முடிவுகளால் தமிழ்மொழி, தமிழ்ப் பண்பாடு, தமிழரசுகள் குறித்த அனைத்துக் கருதுகோள்களும் ஒரே பாய்ச்சலில் வரலாற்றின் முடியேறி நிற்கின்றன. இந்திய வரலாற்றினை எடுத்தியம்பும் நூல்கள் ஆங்கிலம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் தோன்றியிருக்கின்றன. அவற்றினை முனைந்து ஆக்குவதற்கு ஆங்கிலேயர் ஆட்சிக் காலம் தொட்டு இன்றைய காலகட்டம்வரை பல்வேறு அறிஞர் பெருமக்களும் பேருழைப்பினைச் செலுத்தியிருக்கிறார்கள். வரலாறு என்ற தகுதியைக் கொடுத்து ஏற்றுக்கொள்வனவற்றுக்கு தொன்மைச் சான்றுகள் பலவும் துணை நிற்க வேண்டும் என்கிறார்கள். மொழிப் படைப்புகள் அவற்றின் பழைமை கருதியே பொருட்படுத்தத்தக்கன என்றாலும் அவையே போதுமானவையல்ல. அவர்களுக்குத் திடமான சான்றுகள், ஆதாரங்கள், அகழ்விடங்கள், எச்சங்கள் வேண்டும். உலக வரலாறு தோன்றியது முதற்றே தோன்றி இயங்கும் நகரங்கள் பலவும் தமிழ்நாட்டில் உள்ளன என்றாலும் அங்கே எஞ்சியிருப்பவை முற்காலச் சான்றுகள்தாம். மதுரையிலும் காஞ்சியிலும் இல்லாத வரலாறா? ஆனால், அங்கே எஞ்சியிருப்பவை வரலாற்றுக் காலத்தின் எச்சங்கள். அதற்கும் முன்தள்ளி ஒருநாள் எண்ணை இடுவதற்கு நாம் எதனையும் பெற்றிருக்கவில்லை. நிலைமை இவ்வாறிருக்கையில், கீழடியில் கிடைத்தவை யாவும் பல நூற்றாண்டுகட்குப் பின்னே போ என்று வழிகாட்டிவிட்டன. பள்ளியிலும் கல்லூரியிலும் பயின்ற வரலாற்று நூல்களை நினைவுபடுத்திப் பாருங்கள். இந்திய வரலாற்றின் காலம் மொகஞ்சதாரோ, அரப்பா என்றுதான் தொடங்கும். சிந்து ஆற்றங்கரையில் கண்டறியப்பட்ட ஒரு நாகரிகம் அதுநாள்வரை நாம் கருதியிருந்த வரலாற்றுக் காலத்திற்கு முன்னே கூட்டிச் செல்கிறது. அதன் நகர அமைப்புகள், கழிவுநீர் வடிகால் முறைகள், வீட்டுக் கட்டுமானங்கள், சித்திரச் செதுக்கல்கள், அறிதற்கரிய எழுத்து வடிவங்கள் ஆகியன அங்கே ஒரு வளவாழ்வு நிகழ்ந்த சுவடுகளை எடுத்துக் காட்டின. அவர்கள் அந்நிலத்தில் தோன்றி நிலைத்த குடிகளா, இடம்பெயர்ந்து வாழ்ந்த மக்களா என்று அறிவதில் ஆராய்ச்சிகள் தொடர்கின்றன. உலகெங்கிலும் நதிக்கரைகளில் செய்யப்பட்ட அகழாய்வுகள் மனித வரலாற்றுக் காலத்தை மூவாயிரம் ஆண்டுகளேனும் பின்னகர்த்தி அறிவிக்கின்றன. மொகஞ்சதாரோ, அரப்பா என்று தொடங்கும் இந்திய வரலாறு அடுத்து கௌதம புத்தர், மகாவீரர் என்னும் சமயப் பெரியார்களிடம் வந்து நிற்கும். பௌத்தத்தோடும் சமணத்தோடும் தொடர்புடைய நூல்கள் பேரளவு காப்பாற்றப்பட்டு வந்திருக்கின்றன. இந்திய வரலாற்றில் இடம்பெறும் முதற்பேரரசர் மௌரியரான அசோகர் ஆவர். அசோகருக்கு முந்தி இந்நிலத்தில் மன்னர்கள் ஆண்டார்கள்தாம். ஆனால், அவர்களைப் பற்றிய தொன்மைச் சான்றுகள் எவையும் கிடைக்கவில்லை. நந்தர்கள், மகதர்கள் மரபினில் பல அரசர்களை வரலாறு சுட்டிக்காட்டினாலும் அசோகரின் ஆட்சிக் காலத்துத் தொன்மைச் சான்றுகளால் அவரைப் பற்றிய செய்திகளை நிலைக்கச் செய்துவிட்டார். குப்தர்கள், அலெக்சாண்டர் படையெடுப்பு என அடுத்தடுத்து இந்திய வரலாறு தெளிவுபெற்று நடக்கிறது. காலவெள்ளத்தில் கரையாமல் இன்றுவரை எஞ்சியுள்ள கல்வெட்டுகளும் கட்டுமானங்களும் அம்மன்னர்களின் இருப்பினை வரலாற்றில் பதிய வைத்துவிட்டன. ஆனால், பத்தாயிரம் ஆண்டுத் தமிழ்ச்சங்க வரலாற்றினை உடைய தமிழினத்திற்கும் தமிழ் மன்னர்கட்கும் வரலாற்றின் முதற்பக்கங்களில் சிறு குறிப்பளவிலேனும் இடம் தரப்படவில்லை. கீழடியில் கிடைத்த சுவடுகள் அந்தத் தடையை உடைத்து நொறுக்குகிறது. புத்தர் பிறந்தது கி.மு. 563ஆம் ஆண்டு. கீழடியின் பழைமை கி.மு. ஆறாம் நூற்றாண்டைத் தொட்டு நிற்பதால் கீழடி தமிழினத்தின் வரலாற்றினை புத்தருக்கு முன்னதாக எழுதியாக வேண்டும். இந்திய வரலாற்றின் பாட வரிசை மொகஞ்சதாரோ, அரப்பா, கீழடியாம் மதுரை, புத்தர், மகாவீரர் என்று மாற்றியாகவேண்டும். அஜந்தா குகைகட்குச் சென்றிருந்தபோது அதன் பழைமையைக் கண்டு வாயடைத்துப் போனேன். ஒரு மலைவளைவைப் பயன்படுத்தி அதன் பக்கவாட்டுச் சுவரை முகப்பாகக் கொண்டு முப்பதுக்கும் மேற்பட்ட குகைகள் குடையப்பட்டிருக்கின்றன. அதன் பழைமையான குகையினை கி.மு. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று கணிக்கின்றனர். அதிலிருந்து கி.பி. எட்டாம் நூற்றாண்டு வரைக்கும் ஒவ்வோர் அரசரும் தம் பங்களிப்பாக ஒரு குகையைக் குடைந்து வழங்கியிருக்கிறார். பௌத்த மதத் துறவிகள் அதில் வசித்திருக்கின்றனர். குகை என்றால், குனிந்து நுழைகின்ற சிறுவழி என்று நினைத்துக்கொள்ளாதீர். ஒவ்வொரு குகையும் இன்றைய திருமண மண்டபத்தளவுக்கு இருக்கும். உள்ளே பதின்கணக்கில் தனியறைகளும் கூடமும் தலைமையறையுமாக அவற்றைக் காண்பதற்கே மூச்சடைக்கும். தரையைத் தவிர்த்து மேல்கீழ் இடம்வலம் என எங்கெங்கும் சிறு இடைவெளியில்லாமல் ஓவியங்கள் வரையப்பட்டிருக்கும். காலப்போக்கில், வட இந்தியாவில் பௌத்தத்தின் செல்வாக்கு குன்றியதும் அக்குகைகள் கைவிடப்பட்டு பல நூற்றாண்டுகளாகக் கேட்பாரற்றுக் கிடந்தன. புலி வேட்டைக்கு வந்த ஆங்கிலேயர் ஒருவர் அக்குகைகளைக் கண்டறிந்தார். தமிழர் வரலாற்றில் அப்படி ஏதேனும் ஒரு குகையோ, குடைவரையோ, மேற்குத் தொடர்ச்சி மலைகளில் கண்டறியப்பட்டால் நன்றாக இருக்குமே என்று கற்பனை செய்திருக்கிறேன். மேற்குத் தொடர்ச்சி மலைச் சிற்றூரான மறையூரிலுள்ள கல்திட்டைகள் அத்தகைய தொல்லிடம்தான். சேரன் செங்குட்டுவன் இமயத்திலிருந்து கல்லெடுத்து வந்து கண்ணகிக்கு எடுப்பித்த ‘கண்ணகி கோட்டம்’ இன்றைக்கும் குமுளி மலைச் சிகரத்தில் கல்சரிந்து கிடக்கிறது. இவ்விரண்டைத் தவிர, அம்மலைத்தொடர்களில் தொன்மையானவை என்று கூறுவதற்கு எதுவும் என் நினைவுக்கு வரவில்லை. பேரியாற்றங்கரையில் சேரனின் முசிறித் துறைமுகம் வரைக்கும் பலப்பல அகழ்வுச் சான்றுகள் இருக்கலாம்தான். ஆனால், தொடர்ச்சியான வெள்ளப்பெருக்கும் அணைப்பரவல்களும் அச்சான்றுகளைப் பெயர்த்திருக்கக்கூடும். என் விருப்பத்திற்குக் கிடைத்த விடையாக அமைந்துவிட்டவைதாம் கீழடியின் வைகை ஆற்று வாழ்வுத் தடயங்கள். மேலே சொன்ன பேராசிரியர் கூறிய கூற்றொன்று இன்றும் நினைவிருக்கிறது. ‘தமிழ் மன்னர்களாம் சேர சோழ பாண்டியர்களைக் கற்பனை என்று நிறுவவும் வரலாற்றுப் புலத்தில் சில முணுமுணுப்புகள் எழுந்தன. அதனைத் தகர்த்தது ஒடியாவின் புவனேசுவரத்திற்கு அருகிலுள்ள உதயகிரிக் குன்றுகளில் கிடைத்த காரவேலனின் ஹாத்தி கும்பாக் கல்வெட்டுத்தான்’ என்றார், அவர். இந்திய வரலாற்றில் ஒரு கட்டுரை அளவுக்குக் கிடைத்த பெரிய கல்வெட்டு உதயகிரிக் குன்றத்தின் ஹாத்தி கும்பாக் கல்வெட்டுத்தான். கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் செதுக்கப்பட்ட பழைமையான கல்வெட்டு அது. உதயகிரிக் குன்றுகளிலிருந்து கூப்பிடு தொலைவில்தான் அசோகரின் தௌலிக் கல்வெட்டும் உள்ளது. காடு சூழ்ந்த இயற்கை நிலமான ஒடியாவில் ஹாத்தி கும்பாக் கல்வெட்டானது, யாரும் தொடமுடியாத உயரத்தில் ஒரு பாறையின் நெற்றிப்பகுதியில் எழுதப்பட்டிருக்கிறது. நேரில் சென்று அதனைக் கண்டபோது நானடைந்த பேருணர்ச்சிக்கு அளவே இல்லை. அவ்வெழுத்துகளைச் செதுக்குவதற்கு இராட்டிரகூடத்திலிருந்து எழுத்தறிஞர் ஒருவர் யானைமீது அமரவைத்து அழைத்து வரப்பட்டாராம். அதன் பொருள், அன்றைய ஒடியத்தில் எழுதத் தெரிந்தவர் பக்கத்து நாட்டில்தான் இருந்திருக்கிறார் என்பதே. கல்வெட்டு முழுக்க அந்நிலத்தின் அரசன் காரவேலனின் அருமை பெருமைகளாக இருக்கின்றன. காரவேலன் என்ற பெயரே தமிழ்த்தன்மையோடுதான் இருக்கிறது. காரவேலன், அவரை வென்றான் இவரை வென்றான் என்று செல்லும் அந்தக் கல்வெட்டின் ஒரு பகுதியாக வரும் சொற்றொடர்தான் ‘தமிர தேக சங்காத்தம்’ என்பது. ‘பதின்மூன்று நூற்றாண்டுகளாக யாராலும் வெல்ல முடியாத வலிமையோடு திகழ்ந்த தமிழ்மன்னர்களின் கூட்டணி’ என்று அதற்குப் பொருளுரைக்கிறார்கள். அந்தக் கல்வெட்டினால் தமிழ் நிலத்தில் மூவேந்தர்கள் ஆண்டதும் அவர்கள் ஆயிரத்து முந்நூறாண்டுகள் ஒற்றுமையாய் விளங்கியதும் நிறுவப்பட்டது. அந்தப் பதின்மூன்று நூற்றாண்டினை வெறும் பதின்மூன்றாண்டுகள் என்று எடுத்துக்கொள்வோரும் இருந்தனராம். கீழடியில் கிடைத்த சான்றுகள் தமிழ் மன்னர்களின் அமைதியான ஆட்சிக் காலத்தைப் பதின்மூன்று நூற்றாண்டுகட்குத் தங்குதடையின்றி நிறுவுகிறது. கீழடியில் கண்டறியப்பட்ட தமிழி எழுத்துகள்தாம் அனைத்திலும் உயர்வு. எழுதுவதற்கு வேறொரு நாட்டிலிருந்து எழுத்தறிஞர் அழைத்துவரப்பட்ட ஒடியப் பேரரசனுக்கு நானூறு ஆண்டுகள் முன்னமே கீழடித் தமிழர் ஒவ்வொருவரும் எழுத்தறிவு பெற்றிருந்தனர். அங்கே பானைகளில் கீறப்பட்டுள்ள பெயர்கள் ஒருவரே செய்ததுபோல் இல்லை என்பது ஆய்வு முடிவு. ஒவ்வொன்றிலும் வெவ்வேறு கையெழுத்து முறை இருப்பதாக உறுதிப்படுத்துகிறார்கள். அந்தப் பானைக்கு உரியவர் எவரோ, அவரே தம் பெயரை எழுதியுள்ளார். பானை செய்யப்பட்டபோது பச்சை மண்ணில் எழுதப்பட்டிருந்தால் செய்வினைஞரே அதனைச் செய்தார் என்று கொள்ளலாகும். அப்படியில்லாமல், சுட்ட பானையின்மீது கீறப்பட்ட எழுத்துகள் அவை. இரண்டாயிரத்து அறுநூறு ஆண்டுகட்கு முன்னம் ஒரு பானையை உடைமையாகக் கொண்டவர் எழுதப் படிக்கத் தெரிந்தவராக இருந்திருக்கிறார். இதனோடு தொடர்புபடுத்திப் பார்த்தால், தலைச்சங்கத்தில் 4449 புலவர்கள் தோன்றிப் பாடினர் என்பதும் இடைச்சங்கத்தில் 3700 புலவர்கள் தோன்றிப் பாடினர் என்பதும் எவ்வளவு நெருக்கமான உண்மை! புலவர்க்கு ஒரு நூல் என்று கணக்கிட்டாலும் எட்டாயிரம் நூல்கள் எழுதப்பட்டிருக்க வேண்டுமே. அழிந்துபோன நூல்கள், கடல்கொண்ட நூல்கள் என்று நாம் கொள்ளவேண்டியவை அவற்றைத்தாம். தொடர்ந்து இலக்கண நூல்களில் பயிற்சி மேற்கொண்டிருக்கும் அடிப்படையில் சொல்கிறேன். இலக்கண நூல்களுக்கு நிகரானவை அவற்றுக்கு எழுதப்பட்ட உரைகள். தமிழ் மரபில் முதல்நூல், வழிநூல், உரைநூல் என நூல் இயற்றுவதில் உரைநூல்களுக்கும் மதிப்பான இடம் தந்திருக்கிறோம். இலக்கணத்தின் திறவுகோல்கள்தாம் அவற்றுக்கு எழுதப்பட்ட உரைநூல்கள். நம் உரைநூல்களில் இலக்கணத்தை விளக்கும் பொருட்டு அடிக்கடி எடுத்துக் காட்டப்படும் பெயர்கள் ஆதன், சாத்தன், கொற்றன் போன்றவை. இந்த ஆதன் என்ற பெயர்க்கு உயிர் என்று பொருள். உயிரானவன். தமிழர்கள் தமக்குச் சூடிக்கொண்ட பெயர்களில் ஆதன் என்பதற்குத் தலையாய இடமுண்டு. சேரர்களும் தம் பெயர்களோடு ஆதன் என்று சேர்த்துக்கொள்வர். சேரலாதன் என்று சேர மன்னர்கள் பலரும் பெயர்கொண்டிருக்கின்றனர். சாத்தன் என்பதற்கு உண்மையானவர் என்ற பொருளைக் கற்பிப்பேன். சீத்தலைச் சாத்தனாரை அறிவோம். கீழடியில் காணப்பட்ட பானை உடைவுகளில் தமிழி எழுத்துகளில் ஆதன், குவிரன் முதலான பெயர்ச்சொற்களைக் காண்கிறோம். குவிரம் என்றால் காடு. காட்டுக்குரியவன் என்ற பொருள் தருவது குவிரன் என்ற சொல். அந்தப் பானையை வைத்திருந்தவன் ஆதன் என்பானும் குவிரன் என்பானும். ஆதன் என்ற சொல்லுக்குத் தமிழ்ப் பெயர் மரபோடு அவ்வளவு நெருக்கமான தொடர்புண்டு. எம் தந்தை எந்தை என்று ஆகும். நும் தந்தை நுந்தை என்று ஆகும். ஆதன் தந்தை ஆந்தை என்றும் சாத்தன் தந்தை சாத்தந்தை என்றும் சேரும். பிசிர் என்ற ஊரைச் சேர்ந்த ஆதனின் தந்தைதான் பிசிர் ஆந்தை எனப்பட்டவர். பிசிராந்தையார் என்ற புலவர் எழுதிய ஆறு பாடல்கள் சங்க இலக்கியத்தில் காணப்படுகின்றன. இவற்றை எல்லாம் வைத்துப் பார்க்கையில் பிசிர் ஆந்தையாரின் மகன் வைத்திருந்த மட்கலமோ அது என்ற பேருவகை பெருகுவதைத் தவிர்க்க முடியவில்லை. கீழடிக் காலத்தை அன்றைய நிலைமையோடு தொடர்புபடுத்திப் பார்த்தால்தான் அதன் பெற்றி உணரப்படும். கிழக்கிலும் தென்கிழக்கிலும் மேற்கிலும் கண்மாய்கள் அமைந்த வளமான நிலத்தில் ஒரு நகரமைப்பும் தொழிற்கூடமும் இருந்திருக்கின்றன. வைகை ஆறு ஊற்றுத் தண்ணீருக்குப் பெயர் பெற்றது. வை கை என்ற தொடரே வைகை ஆயிற்று என்பர். வைகை ஆற்றில் வெள்ளம்போனால்தான் தண்ணீர் கிடைக்கும் என்றில்லை. வெள்ளம் வடிந்தபிறகும் அதன் மணற்பரப்பில் கையை வைத்தால் ஊற்றுத் தண்ணீர் கைக்குழியில் நிறைந்துவிடும். அப்படியொரு பஞ்சுப் படுகையைக் கொண்ட ஆறுதான் வைகை. இன்றுள்ள வைகை ஆற்றிலிருந்து கூப்பிடு தொலைவில் அமையப்பெற்றுள்ள கீழடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள உறைகிணறுகள் நம் நீர்மேலாண்மையைப் பறைசாற்றுபவை. மூன்றடி விட்டத்திற்குப் பன்னிரண்டு அடிகள் வரைக்கும் ஆழமாய் எடுக்கப்பட்ட கிணற்றிலிருந்து நிலத்தடி ஊற்றுநீர் பெருகிவர, அதனைக் காப்புச் செய்வதற்கு மட்பாண்ட அமைப்பினை வனைந்து கவிழ்த்து உறையிட்டிருக்கின்றனர். அதனால் நீர் நிறைந்ததும் குளிர்ந்துவிடும். நிறைநீரினால் கிணற்றின் ஓரச்சுவர்கள் அரிக்கப்படமாட்டா. ஊற்றாய்ப் பெருகிய நீர் ஓரச்சுவர்களால் உறிஞ்சப்படுவதும் தடுக்கப்படும். வேறுசில பானைகள் அளவான துளைகளோடு கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் கூழாங்கல், மணல் போன்றனவற்றை இட்டு நீரினை வடிகட்டியிருக்கிறார்கள். வேறொரு பானையிலும் கணக்கான துளைகள் உள்ளன. ஒரு விளக்கினை ஏற்றிவைத்து அவ்விளக்கினை அப்பானையைக் கொண்டு மூடிவிடுவார்கள். விளக்கின் சுடரானது காற்றில் அணையாமல் எல்லாத் திக்கிலும் சீரான ஒளியைக் கொடுக்கும் ஏற்பாடு. அவை மட்டுமின்றி, ஓரிடத்தில் பானை உடைவுகள் பெருங்குவியலாய்க் கிடக்கின்றன. அவ்விடத்தில் மட்பாண்டங்கள் வனையும் தொழிலகம் இருந்திருக்கும் என்பது துணிவு. தொல்மாந்தரின் கட்டுமான அறிவினில் மூன்று முறைகள்தாம் பெரிதாக வியக்கப்படுகின்றன. முதலில், இயற்கைக் குகைகளைத் தமக்கான இருப்பிடமாகக் கொண்டான். அடுத்து, குகையைக் குடையும் கலையையும் கற்றான். தன் தலைக்குமேல் பேரெடையை நிறுவிக்கொள்ளும் கூரை முறைகளில் திட்டமான இடத்திற்கு அவன் சேராததால் பாறைகளையும் மலைகளையும் குடைந்து பெற்ற வதிவிடங்களில் பாதுகாப்பாய் வாழ்ந்தான். மனித வாழ்வு பரவலாக்கம் ஆனபோது எல்லாவிடங்களிலும் பாறையையும் மலையையும் தேடமுடியாதே. அதனால் கற்களைச் சீராக அடுக்கும் முறையில் ஒரு கட்டுமானத்தைக் கண்டான். முறையான வடிவங்களில் உடைத்தெடுக்கப்பட்ட கற்களை அடுக்கிச் சுவர்களை நிறுத்தி அதற்கு மேற்கூரை வேயும் முறை அது. அந்த மேற்கூரைகள் கீற்றுகளாகவோ, ஓலைகளாகவோ, கற்பாளங்களாகவோ இருந்தன. கற்கள் கிடைக்காத இடத்தில் என்ன செய்வது? அங்கேதான் கட்டுமானத்திற்கு உதவும் கற்களைச் செயற்கையாக ஆக்கிக்கொள்ளவும் தொடங்கினான். வண்டலும் களிமண்ணும் சேர்ந்த கலவையை நன்கு பிசைந்தெடுத்து வேண்டிய வடிவில் பாளங்களாக வார்த்தெடுத்துச் சுட்டால் அதுதான் செங்கல். அவ்வாறு சுடப்பட்ட செங்கல் எடை தாங்கும் வலிமையோடு காலங்கடந்து நிற்கும். ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த கீழடித் தமிழனுக்குச் சுட்ட செங்கல்லின் ஆக்கமும் பயன்பாடும் தெரிந்திருக்கிறது. அங்கே கண்டுபிடிக்கப்பட்டுள்ள சுவர்க் கட்டுமானங்கள் நல்ல திட்டமான வடிவத்தில் வார்த்தெடுக்கப்பட்ட செங்கற்களைக் கொண்டு கட்டப்பட்டிருக்கின்றன. அப்படியானால், கட்டுமானக் கலையில் தமிழர்கள் உலகோர்க்கு முன்னோடியாக விளங்கியிருக்கிறார்கள் என்றே கொள்ளலாம். அந்தக் கட்டுமானப் பேரறிவு சுவரோடு நின்றுவிடுவதில்லை. கலம் கட்டுவது வரைக்கும் நீளும். உலோகங்கள் எனப்படுகின்ற மாழைப் பொருள்கள் கத்திகளாகவும் வாள்களாகவும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. ஆறாம் நூற்றாண்டுத் தமிழன் அம்பு, ஈட்டி என்று வைத்திருப்பான் என்று நினைத்தால் அவனுக்கு இரும்பு உருக்கு முறைகளும் கருவியாக்கங்களும் தெரிந்திருக்கின்றன. அந்நாள் தமிழணங்குத் தங்கப் பொருள்களை அணிகலன்களாக அணிந்திருக்கிறாள். தொலைவுத் தேயங்களிலிருந்து வருவிக்கப்பட்ட அருமணிகள் கிடைத்திருக்கின்றன. சுட்ட மண்ணால் செய்யப்பட்ட மண்மணிகளையும் கோத்து அணிந்திருக்கிறார்கள். கண்ணாடி மணிகள், பீங்கானைப்போன்ற உடைவுகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. நெய்வுக்குப் பஞ்சிலிருந்து நூல்கோக்கும் தக்களிப் பொருள்கள் பல கிடைத்திருக்கின்றன. எலும்பினால் செய்யப்பட்ட கீறுபொருள்களும் தந்தத்தினால் செய்யப்பட்ட வேறுபொருள்கள் சிலவும் காணக் கிடைக்கின்றன. ஓய்ந்த நேரத்தில் பகடை விளையாடியிருக்கிறார்கள். பகடைக்காய்கள் சுட்ட மண்ணால் செய்யப்பட்டிருக்கின்றன. இன்றைய சதுரங்க விளையாட்டினைப் போன்ற ஒரு விளையாட்டையும் விளையாடியிருக்கிறார்கள். அவ்விளையாட்டுக்குரிய காய்கள் கருங்களிமண்ணால் தனியாகச் செய்யப்பட்டுள்ளன. பாண்டி விளையாடுவதற்குப் பயன்படும் தட்டை வட்ட ஓடுகள் பலப்பல எடுக்கப்பட்டுள்ளன. எதனைச் சொல்வது எதனை விடுவது! அன்றைய தமிழரின் வளவாழ்வின் தடயங்களைக் காணுகையில் காலத்திடம் தொலைத்துவிட்ட தலைவாயிலின் தங்கத் திறவுகோலினைக் கண்டுபிடிக்கப்பட்டதைப்போல் உணர்கிறேன். கீழடித் தொல்லியல் சான்றுகள், தமிழர்களின் தொன்மையைக் ‘கனவுப்பொருள்கள் நினைவில் வந்ததைப்போல்’ மீட்டுக் கொடுத்திருக்கின்றன. அவற்றின் அருமையுணர்ந்து அவ்விடத்தைக் கண்போல் காக்கவேண்டும். அங்கே கண்டெடுக்கப்பட்ட ஐயாயிரத்திற்கும் மேலான பொருள்களை முறையாக அருங்காட்சியகப்படுத்த வேண்டும். ஆந்திர அரசாங்கம் கரும்பெண்ணை ஆற்றின் நாகார்ச்சுனசாகர் அணை நடுவில் ஒரு தீவுப்பகுதியை ஒதுக்கியிருக்கிறது. எதற்குத் தெரியுமா? கி.மு. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த சாதவாகனப் பேரரசின் சான்றுகள் யாவற்றையும் அங்கே அருங்காட்சியம் ஒன்றைக் கட்டிக் காட்சிப்படுத்துவதற்காக. அங்குள்ள ஒரு சிலையைக்கூட நாம் படமெடுக்க முடியாதபடி கடுங்காவல் போட்டிருக்கிறார்கள். கீழடித் தொல்லகத்தையும் அவ்வாறு காவல் செய்யவேண்டும். கண்டெடுக்கப்பட்ட தொல்பொருள்கள் அனைத்தையும் ஆந்திர அரசு செய்ததைப்போன்று காட்சிக்கு வைக்கலாம். உணர்கருவிகள் போன்ற உயர்வகை அறிவியல் முறைகளைக்கொண்டு தமிழகத்தின் தொல்லியல் அகழ்வுக்கு வாய்ப்புள்ள இடங்கள் அனைத்தையும் முறையாக ஆய்வுசெய்து மேலும் பல புதிய திறப்புகளை ஏற்படுத்த வேண்டும். இவை யாவும் நிறைவேறுகையில் நாம் வரலாற்றின் உயர்முடிகளில் கொடிநாட்டிக்கொண்டிருப்போம். https://uyirmmai.com/article/கீழடி-தந்த-வெளிச்சம்/
  2. கீழடி காட்டுவது ஆரியமா, திராவிடமா, தமிழியமா? 2019 - இரா.முரளி · கட்டுரை கீழடி என்ற பெயர், தமிழக வரலாற்றில் ஒரு முக்கியமான கட்டமாக மட்டுமின்றி தமிழர் உணர்விலும் பெரிய அதிர்வை உண்டாக்கியுள்ளது. பொதுவாக, இம்மாதிரி கண்டுபிடிப்புகள் வெளிவரும்போது புத்திஜீவிகள் வட்டாரத்தில் சற்று பரபரப்பாக பேசப்பட்டு அது தணிந்துவிடுவது வழக்கம். ஆனால் இம்முறை, கீழடியில் அகழ்வாய்வு கண்டுபிடிப்புகள் வலைதளங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் அனைத்திலும் அதிகமாகப் பேசப்படும் பொருளாக ஆகியுள்ளது. தமிழகத்தின் மொத்த வரலாற்றினையும் கீழடி அகழ்வாராய்ச்சி மாற்றப் போகிறது என்று ரொமிலா தாப்பர் கூறுகின்றார். ஆற்றங்கரை நாகரிகம் என்ற நிலையிலிருந்து, தமிழ் நாகரிகம் என்று பேசும் அளவிற்கு நகர்த்தப்பட்டு உள்ளது, கீழடி அகழ்வாராய்ச்சி. கிணறு தோண்ட பூதம் கிளம்பியது என்பார்கள். இங்கே 1974இல் கிணறு தோண்டியபோது வெளிப்பட்ட வரலாற்று பூதம்தான் இது. பள்ளி ஆசிரியர் பாலசுப்ரமணியன் அவர்கள் தன்னுடைய மாணவர்கள் தங்கள் பகுதியில் கிணறு தோண்டும்போது கிடைத்ததாக கூறிய தடயங்களைக் கண்டு வியந்து மத்திய, மாநில தொல்லியல் துறைக்கு தொடர்ந்து கடிதம் எழுதியுள்ளார். ஆனால் பெரிதாக ஒன்றும் நடந்துவிடவில்லை. டாக்டர் கே.வி.ராமன் என்னும் தொல்லியல் அறிஞர், 1950இல் ஒரு தொல்லியல் நிலஅளவையை மதுரை, திருமங்கலம், மேலூர், பெரியகுளம் ஆகிய தாலுகாக்களில் தமிழகத்தில் மேற்கொண்டார். களஆய்வில், இப்பகுதிகளில் தொல்லியல் அகழ்வாராய்ச்சிகள் நடத்த இடங்களும், தடயங்களும் அதிகமாக உள்ளன என்றார். பிறகு 2006இல் பேராசிரியர் ராமன் அவர்கள், தங்கள் மாணவர்களுடன் வைகை நதிக்கரையோரம் தொல்லியல் ஆய்வை மேற்கொண்டார். பின்னர் 293 இடங்களில் நடத்தப்பட்ட அகழ்வாய்வில் கல்வெட்டுகள், ஈமத்தாழிகள், பானை ஓடுகள், புதைக்கப்பட்டவர்களின் எலும்புகள் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டன. அதன்பின்னர் அமர்நாத் இராமகிருஷ்ணன் தலைமையில் மத்திய தொல்லியல் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது. 2014 முதல் தொடங்கிய இந்த ஆய்வு, தொடர்ந்து மூன்று ஆண்டுகள் மத்திய தொல்லியல் துறை சார்பாக நடத்தப்பட்டு பிறகு கைவிடப்பட்டது. இந்நிலையில், தமிழகத்தில் எழுப்பப்பட்ட பலத்த எதிர்ப்பின் விளைவாக தமிழக அரசே மாநில தொல்லியல் துறை மூலமாக கீழடியில் அகழ்வாய்வைத் தொடரத் தொடங்கியது. 2017 முதல் இன்று வரை இந்த ஆய்வு நடைபெற்று வருகிறது. செப்டம்பர் மாத இறுதியில் ஐந்தாம் கட்ட ஆய்வு நிறைவுபெறுகிறது. 110 ஏக்கர் பரப்பளவுள்ள கீழடி மணலூர் போன்ற கிராமங்களில், இதுவரை சுமார் 4 ஏக்கர் பரப்பளவில்தான் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. கீழடி அகழ்வாய்வில், மக்கள் வளமாக வாழ்ந்து சென்றதற்கான சில புதிய தரவுகள் கிட்டியுள்ளன. இவை தமிழர்களுக்குத் தமிழ் வரலாற்றை அறிவதில் ஆர்வத்தை அதிகரித்துள்ளன. பெரும்பாலும் சங்க இலக்கியக் குறிப்புகளை மட்டுமே வைத்து தமிழர் வரலாற்றுச் சிறப்பை பேசிவந்த நிலை மாறி, தற்போது வரலாற்றுச் சான்றுகளை முன்வைத்து பேசக்கூடிய அளவிற்கு தமிழ்ப் பண்பாட்டின் பலம் கூடியிருக்கின்றது. இதுவரை, சுடுகாடு மற்றும் இடுகாடுகள்தான் அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்டன. ஆனால் இம்முறை, மக்கள் வாழ்விடம் கண்டெடுக்கப்பட்டுள்ளதே கீழடியின் சிறப்பாகும். இலக்கியத் தரவுகள், பல அகழ்வாய்வு கண்டுபிடிப்புகளுடன் ஒத்துப்போவதையும் அறிஞர்கள் சுட்டிக்காட்டி வருகிறார்கள். கீழடியில், முதல்முறையாக சங்ககால மக்கள் வாழ்க்கையைக் காட்சிப்படுத்தும் ஆதாரங்கள் கிட்டியுள்ளன. கட்டட அமைப்புகள், வீட்டுச் சுவர்கள், தரைத்தளம், வடிகால்கள், தொட்டிகள், கிணறுகள் என்று பலவகையான கட்டிட அமைப்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 200 செ.மீ தோண்டியபோது பொருட்களின் காலகட்டம் கி.பி. மூன்றாம் நூற்றாண்டு. 353 செ.மீ அடிக்குமேல் தோண்டிய பொருட்களின் காலகட்டம் கி.பி.ஆறாம் நூற்றாண்டு என்று அறியவருகிறது. தோண்டத்தோண்ட வரலாறு மேலெழும்புகின்றது. புதிய கேள்விகளை அது உருவாக்குகின்றது. நம்முடைய அரசியல் கருத்தியல்களை கேள்விக்குள்ளாக்கும் சக்தி அவற்றிற்கு இருப்பதாகக் கருதுகிறேன் என்ன காரணத்தினாலோ, தமிழகத்தில் அதிக அளவு அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்படவில்லை. மேற்கொள்ளப்பட்ட இடங்கள் பற்றிய அறிக்கையும் முழுமை பெறவில்லை. அவை பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் பெரியளவில் ஏற்படவில்லை. ஆனால் கீழடியில் அகழ்வாய்வு தமிழகத்தைப் பெரிய அளவில் ஈர்த்திருக்கிறது. அவ்வூரில் பெரும் கட்டடங்கள் கட்டப்படாத நிலை உள்ளதால், ஆய்வு மேற்கொள்ள முடிந்திருக்கிறது. அதுவும் பனைமரத் தோப்புகள் அதிகம் உள்ளதால் அந்தப் புவிப்பரப்பு பாதிப்படையாமல் பாதுகாக்கப்பட்டு வந்துள்ளது சிறப்பான அம்சம். 1001 பானை ஓடு எழுத்துகள் கிடைத்துள்ளன. கருப்பு-சிவப்பு வண்ணங்களில், மற்றும் கலை வடிவங்களுடன் கிட்டியுள்ளது நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. பானையில் எழுத்துகளைப் பதிக்கவேண்டுமென்றால், பானை சுடுவதற்குமுன் எழுத்துகளை களிமண்ணில் எழுதி பின்னர் சுடவேண்டும். அப்போதுதான் பெயர் அப்படியே பொறிக்கப்படும். அப்படியானால் அதை பானை செய்தவர்களே செய்திருக்கவேண்டும். அப்படியாயின், குயவர்கள் எழுத்து அறிவு கொண்டவர்களாக இருந்திருக்கின்றனர். இதில் 17 பானை மாதிரிகள் இத்தாலியைச் சேர்ந்த பைசா நகர் பல்கலைக்கழகத்திற்கு கரிம சோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டன. கருஞ்சிவப்பு பானைகள் உருவாக்க 1100 டிகிரி செல்சியஸ் சூடு செய்யப்படவேண்டும். அப்போதுதான் கருப்பு-சிவப்பு பானை உருவாகும். அதைச் செய்யும் அளவிற்கு அவர்கள் திறனாளியாக இருந்திருக்கிறார்கள். கீழடியில் கால்தடம் பதிக்கும் இடமெல்லாம் பழங்கால பானை ஓடுகளைப் பார்க்க முடிகிறது. மக்கள் புழங்கிய இடம் என்று புரிகிறது. பதினைந்தாயிரம் பேர் இங்கு வாழ்ந்திருக்கக் கூடும் என்று அமர்நாத் கூறுகின்றார். ஹரப்பா நாகரிகத்தில் 30 ஆயிரம் பேர் வாழ்ந்ததாகவும் சொல்லப்படுகிறது. இவ்வளவு பேர் வாழ்ந்திருந்தால், அது ஒரு நகர நாகரிகம்தான். வெளிநாட்டுப் பானைகளும் இங்கே காணப்படுவதாகத் தெரிகிறது.. இதிலிருந்து வேறுநாட்டுடன் வணிகம்சார்ந்த தொடர்பு இருந்திருக்கலாம் என்றும் யூகிக்கலாம். எழுபது வகை விலங்குகளின் எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சுடுமண் சிற்பங்களில் மனித முகம் முதல் விலங்குகள் வரை காணப்படுகின்றன. தங்கம் இரும்பு, செம்பு என்று உலோகப் பொருட்களும் காணப்படுகின்றன. தங்க நகைகளும் தென்படுகின்றன. இவையெல்லாம் ஒரு வளமான நகர நாகரிகத்தின் எச்சங்கள் என்பதில் எந்த ஐயமும் இல்லை. தற்போது கீழடியில் அகழ்வாய்வு நடைபெறும் இடத்திற்குச் சொந்தக்காரர் தமிழ்ப் பேராசிரியர் கரூர் முருகேசன் அவர்கள். முதல் கட்டத்தில், கிராமத்தில் இணைந்த மக்கள் பலர் இந்த அகழ்வாய்வு குறித்து அச்சப்பட்டார்கள். முருகேசன், தன் நிலத்தை தொல்லியல் துறைக்கு தானமாக வழங்கத் தயாராக உள்ளதாக, தெரிவித்தப் பிறகு, படிப்படியாக மக்கள் இந்த அகழ்வாய்வுத் தங்கள் வாழ்வாதாரத்தை பாதிக்காது என்று புரிந்துகொள்ளத் தொடங்கி ஒத்துழைப்பும் தந்துவருகிறார்கள். ஏதென்ஸும் கீழடியும் சென்ற ஆண்டு நான் ஏதென்ஸ் நகருக்குச் சென்றிருந்தேன். அங்கு இம்மாதிரி அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்ட இடம் பாதுகாக்கப்பட்டு அற்புதமான அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது. கீழடி போன்றே நீர் வாய்க்கால்களும், பானை ஓடுகளும், கல்வெட்டுகளும், சிலைகளும் இன்னும் பல அம்சங்களைக் கொண்ட இடம் அது.. கீழடி போன்று பல தடயங்களைக் கொண்டுள்ள அந்த நிலப்பரப்பில்மேல் கண்ணாடி கூரை வேய்ந்து அதன்மீது நின்று பார்வையாளர்கள் கீழேயுள்ள தொல்லியல் எச்சங்களை காணக்கூடிய வாய்ப்பை அந் நாடு ஏற்படுத்தியுள்ளது. ஆனால் கீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட நீர் வாய்க்கால்களும், அடுக்கு கிணறுகளும் தனித்தனியாக பெயர்த்து கொண்டு செல்லப்பட்டு, பின்னர் வாய்ப்பு இருப்பின், அதேமாதிரி ஏதாவது ஒரு மியூசியத்தில் அருங்காட்சியகத்தின் மூலையில் அடுக்கப்படும். இல்லையெனில், இருட்டு குடோனில் மூட்டைகட்டி வைக்கப்பட வாய்ப்பு உண்டு. தமிழர் பண்பாட்டின் அபூர்வத் தரவுகளைப் பாதுகாத்து, வரும் தலைமுறையினர் தொடர்ந்து பார்க்கக்கூடிய வாய்ப்பை ஏற்படுத்துவது மிகமிக அவசியம். இந்த நிலையில், அக்டோபர் மாதத்தில் தோண்டப்பட்ட குழிகள் அனைத்தும் மூடப்பட உள்ளன. கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் மற்றும் கட்டட அமைப்புகள், மூட்டை கட்டப்பட்டு மூலையில் அடுக்கப்பட்டால், அதுவொரு வரலாற்றுத் துரோகமாகும். கீழடியைப் பொருத்தவரை மக்களின் பங்களிப்பு அதிகரித்து வருகின்றது. அதுபற்றிய உரையாடல்கள் நிகழ்ந்தவண்ணம் உள்ளன. இவை கண்டிப்பாக தொல்லியல் துறைக்கும், இதர அதிகார அமைப்புகளுக்கும் பெரும் நெருக்கடியை உண்டாக்கும் என்பதில் ஐயமில்லை. ஆனாலும் மறதி என்னும் நோய், திசை திருப்புதல் என்னும் செயல் மக்களின் வேகத்தைக் குறைக்கும் வேலையைச் செய்யும். இது ஒருபுறமிருக்கையில், சில முக்கிய விவாதங்களை கீழடி அகழ்வாய்வு ஏற்படுத்தியிருக்கிறது. பல பதில் சொல்ல இயலாத பல கேள்விகள் உண்டாகி வருகின்றன. ஆரியமா, திரவிடமா, தமிழியமா? கீழடி நாகரிகம் என்று சொல்லும்போது நாகரிகம் என்ற சொல் ஒரு பிரமாண்ட உணர்வை உண்டாக்குகிறது. தமிழர் நாகரிகம் என்று சொல்லும்போது மேலும் இனப் பெருமை உணர்வு அதிகரிக்கத்தான் செய்கிறது. ஆனால் இந்தப் பெருமை, இதுகாறும் பேசப்பட்டு வந்த திராவிடப் பெருமையை எதிர்ப்பதாக, திராவிடப் பெருமைக்கு சவால்விடுவதாக அமையும்போது இதை எப்படிப் புரிந்துகொள்வது என்ற சிக்கல் திராவிடப் பாரம்பரியத்தை ஆதரித்துவந்த தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ளது. அதேபோன்று, ஆரிய நாகரிகத்தின் நீட்சியா இது என்று கேட்டால், மேலும் சிக்கல் அதிகரிக்கிறது. ஆரியமா, திராவிடமா, தமிழியமா என்ற கேள்விகள் பண்பாட்டு அரசியல் தளத்தில் இன்று மேலோங்கி நிற்கின்றன. அரசியல் அமைப்புகள் அவரவர் கருத்தியல் நிலைப்பாடுகளுக்கு ஏற்ப ஏதேனும் ஒரு அம்சத்தை எடுத்துக்கொண்டு அதைப் போற்றுவதும் மற்ற இரண்டை நிராகரிப்பதுமான வேலையைச் செய்துவருவதையும் நாம் காணமுடிகிறது. இந்தப் பிரச்சினையை எப்படி அணுகுவது என்பதுபற்றி என்னுடைய கம்யூனிச தோழர் மதிவாணன் அவர்களிடம் உரையாடியபோது, அவர் சொன்ன பதில் யோசிக்கத் தக்கதாக இருந்தது. இந்தக் கால அளவுகளையும் கோட்பாடுகளையும் வைத்து புராதன கால, பண்டைக்கால வாழ்வியல் முறைகளையும், பண்பாட்டையும் புரிந்துகொள்ள முயற்சிப்பது தவறானதாகும் என்பதே அது. மேலும் ஆரியம், திராவிடம் என்ற சொற்கள் அல்லது பாகுபாடுகள் எவையும் இல்லாத காலகட்டத்தை தற்பொழுது இந்த வேறுபாடுகள் கொண்டு வகைபாடு செய்வது நியாயம்தானா என்ற கேள்வியும் அர்த்தமுள்ள கேள்விதான். மனித குலம் தோன்றிய வரலாறு என்பதோடுதான் எந்த ஒரு பண்பாட்டு அகழ்வாய்வையும் இணைத்துப் பார்க்க வேண்டும் என்றார், அவர். அதற்கான முயற்சிகள் கீழடியில் முதல் அடியாக எடுத்து வைக்கப்பட்டுள்ளது. மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் மூலமாக ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் உள்ள ஆய்வு மையத்துடன் இணைந்து மரபணு ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட உள்ளது. வழக்கமான தொல்லியல் ஆய்வுகள் மட்டுமே கீழடி பண்பாட்டை நாகரிகத்தை புரிந்துகொள்ள போதுமானதாக இருக்காது. மேலும் பல அறிவியல் ஆய்வுகள் தேவைப்படும். அப்படி ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்போது அதன் முடிவுகள் கீழடியை மனிதகுல வரலாற்றின் மற்றுமொரு முக்கியப் புள்ளியாக உறுதிப்படுத்தும் வாய்ப்புகள் நிறைய உள்ளன. ஆப்பிரிக்காவிலிருந்து புறப்பட்ட ஆதிமனிதன், இனக்குழுக்களாக ஆங்காங்கே நாடோடியாகத் திரிந்து வாழ்ந்தான் என்பதும் மானிடவியல் அம்சமாகும். அந்த வகையில், மரபணு ஆய்வு என்பது நம்முடைய வரலாற்றுப் பார்வையை மேலும் விசாலமாக்கும் ஆகும் வாய்ப்புள்ளது. இந்த நிலையில், எனக்கு ஆச்சரியமளித்த முக்கியமான ஒரு விஷயம் என்னவென்றால், அங்கு காணப்பட்ட ஒரு பெயர்தான். உதிரன், மடைச்சி குவிரன், அயனன், சாதன், சந்தனவதி, வேந்தன் போன்ற பெயர்கள் எல்லாம் கண்டெடுக்கப்பட்டுள்ளபோதிலும், ‘ஆதன்’ என்ற பெயர் என்னை மிகவும் ஈர்க்கிறது. கிரேக்கத்தின் ஏதன்ஸ் நகரம் ஆதன் நகரமாகத்தான் தமிழர்களால் பேசப்படுகிறது. கிரேக்கத்தில் ஆதன் என்ற சொல் சூரியன் என்று பொருள்படும். இங்கும் அப்படியே. இன்னும் பல மொழிக் குறியீடுகள் நமக்கு உலகளாவிய தொல்லியல் கண்டுபிடிப்பு குறியீடுகளை ஒத்திருப்பது ஆச்சரியத்தைத் தருகின்றன. தமிழர்கள், கடல்கடந்து வாணிகம் மேற்கொண்டதால் இம்மாதிரியான பொதுமைப் பண்புகளை இங்கு காணமுடிகிறது என்று அதற்கு ஒரு பதில் கூறப்படுகிறது என்றாலும் இன்னும் அறியப்படவேண்டிய வரலாற்று ரகசியங்கள் ஏராளமாக இருக்கக்கூடும். அவை தெரிய வரும்பொழுது இந்த நாகரிகங்கள் ஆரியமும் அல்ல திராவிடமும் அல்ல தமிழியமும் அல்ல, மானுடம் என்று உணரும்நிலையும் வரக்கூடும். மக்கள் தொல்லியல் தமிழினத்தின் தொன்மையை பறைசாற்றும் இந்த அகழ்வாய்வு, அரசியல் காரணங்களால் வீரியம் குறைக்கப்பட்டு, முடக்கப்படும் அபாயமும் உள்ளது. பேராசிரியர் ரத்தினகுமார் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டுள்ளதுபோல, தொல்லியல் தற்போது மக்கள் தொல்லியலாக மாறிவிட்டது. ஒரு கட்டத்தில், கீழடி அகழ்வாய்வு நிறுத்தப்படும் நிலை உண்டானபோது பல தரப்புகளிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பின என்பதும், மக்கள் விழிப்போடு போராடினார்கள் என்பதும், தனி ஒரு வழக்கறிஞர் வழக்குத் தொடுத்தார் என்பதும் மட்டுமல்ல, பல்வேறு நாடுகளில் இருந்தும் கீழடி அகழ்வாய்வை காண லட்சக்கணக்கான மக்கள் வந்துபோகிறார்கள் என்பதும் இது மக்கள்மயப்பட்ட தொல்லியல் ஆகிவிட்டது என்பதை புரியவைக்கிறது. பானையோடுகளிலும் கல்வெட்டுகளிலும் பொறிக்கப்பட்ட எழுத்துகளை ஏன், பிராமி என்று அழைக்கிறீர்கள். அது தமிழிதான் என்று தமிழ்தேசியவாதிகள் மட்டுமல்ல; பலரும் இன்று பேசுவது மொழி வரலாற்றில் மற்றும் ஒரு திருப்புமுனையாகும். தமிழகத்தில், தமிழுக்கே உண்டான சொல் கலைச்சொற்களை எழுத்து வடிவத்தில் வைத்திருப்பதற்குப் பெயர் தமிழியாகத்தான் இருக்கவேண்டும் என்று இனிவரும் தொல்லியல் அறிஞர்களுக்கு, இயக்கவாதிகள் வழிகாட்டி வருகிறார்கள். பொதுவாக தொல்லியல் அறிஞர்கள், அறிவியல் கோட்பாட்டை மட்டுமே நம்பி, தங்கள் ஆய்வை வெளிக்கொண்டு வருவது வழக்கம். ஆனாலும், அந்த ஆய்வு முறைகளில் பண்பாட்டுக் கூர்மை, நுணுக்கங்கள் கணக்கில் எடுக்கப்பட வேண்டும் என்ற முக்கிய அம்சமும் தொல்லியல் ஆய்வு முறைகளில் சேர்க்கப்படும் நிலை இன்று உருவாக்கப்பட்டுள்ளது. அக்காலத்தில் சாதிகள் இருந்தனவா, வழிபாடுகள் இருந்தனவா என்ற கேள்விகளுக்குத் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் ஆய்வுகள்தான் பதில் சொல்லமுடியுமே தவிர, இப்போது கிடைத்தவை போதாது. ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக கீழடி ஆய்வு இடத்தை அரசு பாதுகாத்து அதை ஒரு தொல்லியல் அருங்காட்சியகமாக அமைக்கவேண்டும் என்பதற்காக அனைவரும் வேறுபடுகளின்றி குரல் எழுப்புவது அவசியம். https://uyirmmai.com/article/கீழடி-காட்டுவதுஆரியமாதி/
  3. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அருள்மொழிவர்மன்🎉🎉🎉
  4. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சசிவர்ணம்🎉🎉🎉
  5. இன்றும் மெதுவாக வேலை செய்கின்றது☹️
  6. ‘தமிழர் நாகரிகம் 2,600 ஆண்டுகள் பழமை வாய்ந்தது’ Editorial / 2019 ஒக்டோபர் 03 வியாழக்கிழமை, பி.ப. 02:18 Comments - 0 -எம்.காசிநாதன் துரைக்கு “மீனாட்சி அம்மன்” பெருமை சேர்ப்பது போல், மதுரையிலிருந்து 13 கிலோமீற்றர் தொலைவிலும், வைகை நதிக்கு 2 கிலோமீற்றர் தொலைவிலும் இருக்கும் “கீழடி” தமிழ்நாட்டுக்கும் - இந்தியாவுக்கும் பெருமை தேடித்தந்துள்ளது. “தொல்லியல், மரபு குறித்த ஆர்வம் தமிழ்நாட்டில் தற்போது புத்தாக்கம் பெற்றுள்ளது” என்று “கீழடி” ஆய்வு பற்றி தமிழக அரசாங்கத்தின் சார்பில் வெளியிட்டுள்ள புத்தகத்தில், தனது துவக்கக் கருத்தை தெரிவித்திருக்கிறார். தொல்லியல் துறையின் முதன்மை செயலாளர், ஆணையாளராக இருக்கும் உதயசந்திரன். அவரது அரிய முயற்சி அனைவராலும் பாராட்டப்படுகிறது. பொதுவாக தமிழக அரசாங்கத்தின் கீழ் உள்ள தொல்லியல் துறை என்பது அரசாங்கத்துக்கு வேண்டாதவர்களுக்கு “போஸ்டிங்” கொடுப்பதற்காக வைத்துள்ள துறை என்பது தமிழகத்தில் உள்ள இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளுக்கு மட்டுமின்றி, ஆட்சிக்கு வரும் எந்தக் கட்சிக்கும் தெரியும். ஆனால் ஐ.ஏ.எஸ் அதிகாரியான உதயச்சந்திரன் “தமிழர் பண்பாட்டு” வரலாற்றில் புதிய அத்தியாயத்தை எழுதியிருப்பது ஒவ்வொரு தமிழர் உள்ளங்களிலும் மகிழ்வை தந்திருக்கிறது. “கீழடி” அகழ்வாராய்ச்சி ஆரம்பத்திலிருந்தே சர்ச்சையில் தத்தளித்துக் கொண்டிருந்தது. மத்திய அரசாங்கத்தின் தொல்லியல்துறை முதலில் ஆய்வு மேற்கொண்டு, அந்த ஆய்வைச் செய்த அதிகாரி திடீரென்று மாற்றப்பட்டது எல்லாம் சர்ச்சையானது. அது மட்டுமின்றி, பிறகு ஆய்வு தற்காலிகமாக நிறுத்தப்பட்டதே மிகப்பெரும் சர்ச்சையானது. தற்போது மதுரை நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சு. வெங்கடேசன் முதன் முதலில், கீழடி ஆய்வுகள் குறித்துப் பெரிய அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்த, பிறகு அரசியல் கட்சிகள் அனைத்துமே இதை தங்கள் கையில் எடுத்துக் கொண்டன. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் “கீழடி” பற்றிய முழக்கம் கேட்கத் தொடங்கியது. “தமிழர் நாகரிகத்தை மறைக்க முயற்சி” என்று தமிழகத்தில் உள்ள கட்சிகள் எல்லாம் போர்க்குரல் எழுப்பின. இந்தச் சூழ்நிலையில்தான், 110 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள கீழடியில் 4 மற்றும் 5ஆம் கட்ட ஆய்வுகளை உதயச்சந்திரன் தலைமையிலான தொல்லியல்துறை செய்து வருகிறது. தமிழக அரசாங்கமே இந்த ஆய்வை மேற்கொண்டு வரும் நிலையில், 4ஆம் கட்ட ஆய்வில் கிடைத்த அரும்பொருள்கள் குறித்து ஒரு தனி புத்தகத்தை மாநில தொல்லியல்துறை வெளியிட்டாது. இப்படி வெளியிட்டதற்காக தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சராக இருக்கும் பாண்டியராஜனுக்கும் தொல்லியல் துறை முதன்மை செயலாளராக இருக்கும் உதயச்சந்திரனுக்கும் தி.மு.க தலைவர் ஸ்டாலின் பாராட்டுத் தெரிவித்தார். அ.தி.மு.கவில் உள்ள ஓர் அமைச்சர் ஸ்டாலின் பாராட்டைப் பெற்றார் என்றால் அது கீழடி அகழாய்வில் மட்டும்தான் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த அளவுக்கு “தமிழர் நகரிகம்”, “பண்பாடு” தொடர்பான இந்தக் கீழடி ஆய்வில் அரசியல் கட்சிகள் “அரசியல் செய்யாமல்” தமிழர் சமுதாயத்தின் நகரிகத்தை முன்னிறுத்தி அரசியல் செய்ததைப் பார்க்க முடிகிறது. நான்காம் கட்ட ஆய்வில் கண்டெடுக்கப்பட்ட அரும்பொருள்கள் இன்றைக்கு தமிழர் நாகரிகத்தைக் கம்பீரமாக எழுந்து நிற்க வைத்துள்ளது. இதுவரை பண்டைய தமிழ்சங்கம், வணிக மையங்கள், உரோமாபுரி, பிற இந்திய மாநிலங்களுடன் தமிழ்நாடு கொண்டிருந்த வணிகத் தொடர்புகள் குறித்த ஆதாரங்கள் 40க்கும் மேற்பட்ட தொல்லியல்துறையின் அகழாய்வுகளில் கிடைத்தன. அந்த “40” ஆய்வுகளில் இருந்து இந்த “கீழடி” ஆய்வு முற்றிலும் வேறு விதமான அரிய தகவல்களை அள்ளிக் கொண்டு வந்து “கோபுரமாக” குவித்திருக்கிறது. தமிழர்களின் நாகரிகத்தின் அடையாளமாக - ஆதாரமிக்க சான்றுகளாக இன்றைக்கு கீழடி அகழ்வாராய்ச்சி முடிவுகள் வெளிவந்துள்ளன. கீழடி, நான்காவது அகழாய்வில் 5820 அரும்பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவை அனைத்தும் ஆய்வுக்கு அனுப்பி அதன் முடிவுகளும் வந்துவிட்டன. “தமிழர், நாகரிகம் பண்டைய காலத்திலேயே வளர்ச்சி அடைந்த நாகரிகம்” என்பதை அறிவிக்கும் விதத்தில் 50க்கும் மேற்பட்ட தமிழ் பிரமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட மட்கல துண்டுகள் கீழடி ஆய்வில் தோண்டியெடுக்கப்பட்டுள்ளன. “கீழடி பண்பாடு 2,600 ஆண்டுகள் பழமை வாய்ந்தது” என்பது இந்த அகழாய்வில் கிடைத்துள்ள மிக முக்கியமான இந்திய வரலாற்றுக்கே பாடம் எடுக்கும் கண்டுபிடிப்பு. இதுவரை தமிழர்களின் நகரமயமாதல் கி.மு. 3 நூற்றாண்டை சேர்ந்தது என்றுதான் ஆதாரங்கள் இருந்தது. ஆனால் இப்போது கி.மு. 6 ஆம் நூற்றாண்டிலேயே தமிழர்கள் மத்தியில் “நகரமயமாதல்” இருந்துள்ளது என்பது ஆதாரபூர்வமாகக் காணப்பட்டுள்ளது. இதுவரை தமிழ்ப் பிரமி எழுத்துகள் கி.மு 5ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்ற கூற்றுதான் இருந்து வந்தது. இப்போது அது கி.மு 6ஆம் நூற்றாண்டுக்குரியது என்பது உறுதி செய்யப்பட்டு தமிழ்ப் பிரமி எழுத்துகள் வரலாறு நூறாண்டுகளுக்கு முன்பு சென்றுள்ளது. கறுப்பு, சிவப்பு நிறப் பானைகளில் காணப்படும் இந்தப் பிரமி எழுத்துகள் வரலாற்று பொக்கிஷமாகக் கிடைத்திருப்பது தமிழர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழகம் கி.மு 3ஆம் நூற்றாண்டில்தான் எழுத்தறிவு பெற்ற சமூகமாக விளங்கியது என்று இதுவரை நம்பியிருந்தார்கள். ஆனால், கீழடி ஆய்வில் தமிழர்கள் கி.மு 6ஆம் நூற்றாண்டிலேயே எழுத்தறிவு பெற்ற சமூகமாக வாழ்ந்திருப்பது தெரியவந்துள்ளது. ஆகவே, தமிழர்களின் எழுத்தறிவு வரலாறு 300 ஆண்டுகள் முன்பு சென்றுள்ளதை இந்த ஆய்வு வெளிப்படுத்தியிருக்கிறது. சான்றோர்கள் வாழ்ந்த பூமி தமிழர் பூமி என்பது நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இங்கு கிடைத்த “கீறல்கள்” சிந்து சமவெளி நாகரிகத்துக்கு சமமாக இருக்கிறது என்ற அரிய தகலும் கிடைத்திருக்கிறது. தமிழர்கள் வளர்த்த விலங்குகள் பட்டியலில் திமில் காளை, எருமை, வெள்ளாடு, கலைமான், காட்டுப்பன்றி, மயில் போன்றவற்றின் எலும்புத் துண்டுகள் “கீழடி ஆய்வில்” கண்டறியப்பட்டுள்ளன. அப்படிக் கண்டெடுக்கப்பட்டுள்ள 70 எலும்புத் துண்டுகளில் திமில் காளை, எருமை, வெள்ளாடு போன்றவற்றின் எலும்பு துண்டுகள் 53 சதவீதம் என்று கணக்கிடப்பட்டுள்ளது மட்டுமின்றி, சில துண்டுகளில் வெட்டு காயங்கள் இருப்பது தமிழர்கள் அசைவப் பிரியர்களாகவும் இருந்திருக்கிறார்கள் என்பது தெரிய வந்திருக்கிறது. இதன் மூலம், சங்க கால சமூகம் வேளாண்மையை முதன்மைத் தொழிலாகக் கொண்டிருந்ததும், கால்நடை வளர்ப்பில் முக்கிய பங்கு வகித்ததும் தெரிய வந்திருக்கிறது. தமிழர் பெண்களின் வரலாறு பற்றியும் கீழடி ஆய்வில் பல முக்கியத் தகவல்கள் கிடைத்திருக்கின்றன. பெண்கள் தங்களை அலங்கரித்துக் கொள்ளும் கல் மணிகள், சுட்டு வளையல்கள், தந்த வளையல்கள் உள்ளிட்ட 4,000 பொருள்கள் இந்த ஆய்வில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த அலங்காரப் பொருள்கள் சங்க கால சமூகம் வளமும் செழிப்பும் மிகுந்து விளங்கியதற்கு சான்றாவணங்களாக இருக்கின்றன. தமிழ்குலப் பெண்கள் விளையாடும் விளையாட்டுப் பொருள்களான வட்டச் சில்லுகள் ஏறக்குறைய 600 கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த “வட்டச் சில்லு” தற்போது மதுரை வட்டாரத்தில் “பாண்டி” விளையாட்டு என்று பெண்கள் மத்தியில் மிகவும் பிரபல்யமாக இருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக 80 சதுரங்க காய்களும் இந்தக் கீழடி அகல்வாய்வில் எடுக்கப்பட்டுள்ளன என்று விளையாட்டுத்துறையில் பழங்காலத் தமிழர்களின் ஆர்வத்தை எடுத்துரைப்பதாக அமைந்திருக்கிறது. “கீழடி ஆய்வில் கிடைத்த அரும்பொருள்களைப் பத்திரப்படுத்த உலகத் தரத்தில் மத்திய அரசாங்கமே ஓர் அருங்காட்சியகத்தை அமைக்க வேண்டும்” என்ற கோரிக்கையை அனைத்து அரசியல் கட்சிகளும் முன்வைத்துள்ளன. இந்நிலையில், “150 மில்லியன் இந்திய ரூபாய் செலவில் அருங்காட்சியகம் ஒன்று உலக தரத்தில் அமைக்கப்படும்” என்று கீழடியில் ஆய்வு நடத்திய தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் அறிவித்திருக்கிறார். அதே நாளில், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினும் கீழடிக்குச் சென்று ஆய்வுப் பணிகளைப் பார்வையிட்டுள்ளார். “சங்ககாலம் கி.மு 3ஆம் நூற்றாண்டு அல்ல. கி.மு 6ஆம் நூற்றாண்டு” என்பதும், “கீழடி பண்பாடு காலம் கி.மு 6ஆம் நூற்றாண்டு” என்பதும் கீழடித் தமிழர்களுக்குத் தந்துள்ள மிகப்பெரிய பெருமை. தமிழர்களின் நாகரிகத்துக்குக் கிடைத்துள்ள மிக உறுதியான ஆதாரபூர்வமான சான்றிதழ். சாதி ரீதியாகவும் மத ரீதியாகவும் உணர்வுகளைத் தட்டியெழுப்பும் அரசியல் யுகத்தில், தமிழின நாகரிகத்தின் அடிப்படையில் “கீழடி” யின் பெருமை பேசப்படுகிறது. ஒரு தொல்லியல் ஆய்வு இவ்வளவு பெரிய விழிப்புணர்வை தமிழகத்தில் ஏற்படுத்துமா என்று அனைவரும் வியப்படையும் வண்ணம் “தமிழர் நாகரிகம்” குறித்த விழிப்புணர்வு தமிழக மக்கள் மத்தியில் உத்வேகமாக கிளர்ந்து எழுந்துள்ளது. இந்த உணர்ச்சிப் பெருக்குக்கு இரை போடும் விதமாக அரசியல் கட்சிகளும் கீழடி நோக்கி பயணம் மேற்கொள்கின்றன. http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/தமிழர்-நாகரிகம்-2-600-ஆண்டுகள்-பழமை-வாய்ந்தது/91-239542
  7. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் விசுகு ஐயா🎉🎉🎉
  8. விம்பகத்தில் அல்பத்தில் சேமிக்கப்படும். ஆனால் எந்தத் திரியிலும் அவற்றை பின்னர் கருத்து எழுதும் பெட்டியில் Insert other media ஐ கிளிக் பண்ணி Insert existing attachment ஐ கிளிக் பண்ணி படங்களை உள்ளிடலாம்.
  9. மறக்காமல் சொல்லுவோம்-பரமபுத்திரன்… September 24, 2019 போர், போராட்டம் என்ற சொற்கள் தமிழர்கள் மத்தியில் வெறுப்பான அல்லது விரும்பத்தகாத ஒன்றாக மாறிவிட்டது அல்ல மாற்றப்பட்டுவிட்டது. இதற்கான காரணத்தை நாம் தேடிக் கண்டுபிடிக்க வேண்டிய அவசியமில்லை. ஈழத்தில் நடந்த விடுதலைப்போராட்டம்தான் எம்மை இந்த வெறுப்புக்கு ஆளாக்கியது என்று எல்லோரும் சுலபமாக சொல்லிடுவர். ஆனால் போரும் போராட்டமும் மனித வாழ்கையில் மட்டுமல்ல புவியில் வாழும் ஒவ்வொரு உயிருக்கும் பொதுவானது. நாம் விரும்பியோ விரும்பாமலோ வாழ்க்கையுடன் போராடினால்தான் எம்மை நிலைப்படுத்தமுடியும் என்பது மறுக்கமுடியாத உண்மை. உணவு, பாதுகாப்பு, வாழிடம், சந்ததி நிலைப்படுத்தல் என எல்லாவற்றுக்கும் போராடியே ஆகவேண்டும். இருப்பினும் இவை எல்லாம் நாளாந்த வாழ்கையில் நடந்து முடிவதால் அவை போராட்டம் என்று எமக்கு புரிவதில்லை அல்லது எமது சுயநலத்துக்காக செய்வதால் சுமையாக எமக்குத்தெரிவதில்லை. அடுத்து புலம் பெயர்ந்தோர் என்ற வகுதிக்குள் வருவதை சிந்திப்போம். சொந்த நாட்டில் இருந்து புலம்பெயர்வதற்கும், புலம்பெயர்ந்த நாட்டில் நம்மை நிலைப்படுத்தவும், அந்நாட்டின் குடிமகன் ஆவதற்கும் எவ்வளவு போராட்டங்களை எதிர்கொள்கின்றோம். அந்தப்போராட்டங்களை ஏற்றும் கொள்கின்றோம். காரணம் நாங்கள் புதிய வளங்களை பெறுவதாக நினைக்கின்றோம் அல்லது எங்களை ஒரு நிலையிலிருந்து இன்னொரு நிலைக்கு உயர்த்துவதாக மகிழ்கின்றோம் அந்தப்போராட்டம் எம்மால் விரும்பப்படுகின்றது. ஆனால் எங்களது பிறப்புரிமை, வாழ்வுரிமை எல்லாம் எங்கோ தொலைத்து புதிதாக பெற்றுக்கொள்ள இன்னோர் இடத்தில் போராடுகிறோம் என்பதையும், எங்களுக்கு சொந்தமற்ற நிலத்தில் அல்லது அரசுடன் போராடுகின்றோம் என்பதையும் மறந்து விடுகிறோம். ஆனாலும் நம்மில் சிலர் வெற்றி பெற சிலர் தோல்வியடைவர். தோல்வியுற்றோர் தங்களை நிலைப்படுத்த தொடர்ந்து போராடுவர். அதேவேளை வெற்றிபெற்றோர் அவர்களை மறந்துவிட்டு எங்களை முன்னேற்ற புறப்பட்டு விடுவோம். அவர்கள் தொடர்பாக யோசிக்கவும் நேரமில்லை, அவசியம் என்ற எண்ணமும் வருவதில்லை. அவர்களது கடினமான நிலையை புரிந்து கொள்ள முயல்வதும் இல்லை. அவர்களுக்கு உதவ நினைப்பதுமில்லை. என்பது உண்மையான செய்தி. சிலவேளைகளில் ஒரு நாள் ஒதுக்கி கூட்டமாக கூவிடுவோம்.அத்துடன் எங்கள் பணி முடிந்துவிட்டது என ஒதுங்கிடுவோம். போராட்டம் என்பது வெல்லும்வரை தொடர்ந்து முயற்சி செய்வது என்று யாரும் நினைப்பதில்லை. சிலர் சமூக நலங்களில் அக்கறைகொண்டு நான் இவர்களுக்கு என்ன செய்யலாம், என்னால் செய்யக்கூடிய நன்மை என்ன என்று சிந்திப்பர். பலர் சிந்திப்பதுடன் நிறுத்திவிட்டாலும் சிலர் செயற்பாட்டில் இறங்கிடுவர். அவர்கள்தான் சமூகநேயம் கொண்டவர்கள் என அடையாளம் காணப்படுவர். இவ்வாறு நல்லெண்ணத்துடன் இயங்குபவர்கள் காலப்போக்கில் சமுக எதிரிகளாக இனம் காட்டப்படும் நிகழ்வுகளும் காலகாலமாக அரங்கேறாமல் இல்லை. இவர்கள் எப்படி சமுக எதிரிகள் ஆகின்றனர் என்பதன் முன் போராட்டம் எவ்வாறு உருவெடுக்கிறது என்பது பற்றி சிந்திப்போம். ஒரு சமுகத்திற்கான போராட்டம் என்பது அந்த சமுகத்தின் உரிமைகள், நலன்களுக்காக தூரநோக்கில் திட்டமிடப்பட்டு மக்களது உடனடி நன்மைக்காக மட்டுமன்றி நீண்டகால பயன்பாட்டுக்காகவும் நடக்கின்ற ஒன்று என்பதை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும். இங்கு வெற்றி பெறுவதற்கு பல இழப்புகள் வந்தே தீரும். இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும். இவையாவும் தவிர்க்க முடியாதவை. இவை யாவும் சமுதாய சிறப்புக்காக அல்லது உலக மேன்மைக்காக நடக்கும் போராட்டங்களுக்கே பொருந்தும். இது கடந்த காலங்களில் உலகில் நடந்த போராட்டங்கள் இவற்றை எமக்கு பறைசாற்றுகின்றன. இந்த நிலைகள் யாவற்றையும் எதிர்கொண்டு உறுதியுடனும், நேர்மையுடனும், பொதுநோக்குடன் கடந்த போராட்டங்களே வெற்றிபெற்றுள்ளன. ஆனால் உறுதியான, ஆக்கபூர்வமான, மக்களுக்கு நன்மைதரும் போராட்டங்களை எந்த ஆட்சியாளர்களும் விரும்பமாட்டார்கள். எந்த மக்களுக்காக போராட்டம் நடக்குமோ அந்த போராட்டத்திற்கு எதிராகவே மக்களையே திசை திருப்புவர். உலக வரலாற்றில் எந்த ஒரு போராட்டமும் அடக்கப்பட வேண்டும் என்பதே கொள்கையாக நிலைத்துள்ளதே தவிர, போராட்டக்காரர்களின் கோரிக்கை என்ன, ஏன் அவர்கள் போராடுகிறார்கள், அவர்களின் குறைகள் என்ன என்று அறிந்து அதனை தீர்க்க, நசுக்கப்படும் மக்களுக்காக ஆபிரகாம் இலிங்கன்கள் இந்த உலகில் தொடர்ந்து தோன்றவில்லை. மாறாக சமூக விரும்பிகளை வன்முறை கொண்டு அடக்கிடும் அரசுகள் அல்லது அவற்றின் ஏவலாளர்களே தொடர்ந்து உலகினை ஆள்கின்றார்கள். இந்த தவறான முன் உதாரணங்களே இன்றும் உலகில் கடைப்பிடிக்கப்படுகின்றது. அதை மக்களாகிய நாம் ஏற்றுக்கொள்கின்றோம். ஏனென்றால் எங்களை எப்படியாவது காக்க வேண்டும் என்பதே எண்ணம். இன்றும் இந்த புரிந்து கொள்ளாமை நிலையே எங்களை போராட்டத்தில் இருந்து விளக்கி வைக்கின்றது அல்லது அதனை வெறுக்க வைக்கின்றது. இதற்கும் மேலாக உயிர் ஆசை, சொத்துஆசை, வாழவேண்டும் என்ற பேராசை என்பன எம்மை வாழ்வதற்கு போராட தள்ளுகிறதே தவிர, சிந்திக்க ஊக்கப்படுத்தவில்லை. இந்த அடிப்படை காரணங்களே போராட்டம் தேவையற்ற ஒன்று என எம்மை நினைக்க வைத்து விடுகிறது. இதுவே உலக வரலாறு. ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்தவர்களில் வரும் வழியில் இறந்தவர்கள், வந்தும் வெளிநாடுகளில் இறந்தவர்கள், சமூகமும் கைவிட்டு சொந்தபந்தங்களும் இல்லாமல் மனம் உழன்று தற்கொலை செய்தவர்கள் என்றும் தொடர்ந்து சொல்லமுடியும். மேலும் இலங்கையில் கூட ஈழத்தமிழர் போராட்டம் ஆரம்பிக்க முன்பு மேதினம் என்பது பேரூந்துக் கட்டணம் குறைந்த நாளாகவும், சினிமா கொட்டைகளில் குறைந்த கட்டணத்தில் சினிமா பார்க்கும் தினமாகவுமே பார்க்கப்பட்டதே தவிர அதன் பெறுமானம் என்ன என்பது யாருக்கும் தெரியவில்லை என்றுதான் சொல்லமுடியும். இன்றைய உலகம் மொத்த வியாபாரிகள் கைகளில் சுத்தமாக போய் சேர்ந்துவிட்டது. சுதந்திர மனிதன் இயந்திர மனிதனாக மாறிவிட்டான். பொதுவுடைமைவாதிகளின் கருத்துக்கள் தோற்றுவிட்டன. வாழ்க்கை பற்றி தெரியாமலே மனிதன் அதன் பின் ஓடுகின்றான். என்னவென்று தெரியாமல் வாழ்கையை சுமையாக்கிக்கொண்டு ஓடுவதால் சிந்திக்க நேரமில்லை. சுயசிந்தனை தொலைந்து விட்டது. சுற்றிவிட்ட பம்பரம்போல் சுழன்றுகொண்டு வாழ்கிறான். இதனால் வியாபார உலகம் நன்மை கண்டது. வெற்றிபெற்றது என்பது கண்கூடு. அதனால்தான் பொதுவுடைமைவாதி சொன்னான் சுதந்திரம், உரிமை என்பவற்றை பெற்றுக்கொடுத்தால் மட்டும் போதாது அவற்றை அனுபவிக்க கற்றும் கொடுக்கவேண்டும். காரணம் மக்கள் அவற்றை அனுபவிக்க விரும்புவதில்லை. ஏனென்றால் உரிமைகளை கேட்டு நாம் இருப்பவற்றையும் இழந்து விடுவோம் எனப்பயப்படுவர். அப்படியான ஒரு உளவியலுக்குள் சிக்கவைத்து மக்களை வாழப்பழக்கிவிட்டனர். எனவே எங்கள் உரிமைகளை கேட்டால் நாம் இருப்பவற்றையும் இழக்க வேண்டும் என்று பயந்தே உரிமைகளை இழந்து வாழ துணிந்துவிட்டனர். தனக்காகவும் தான் சமூகத்துக்காகவும் உரிமைகளை தட்டி கேட்பவன் சமுக எதிரியாகிறான். அவன் செய்வது சரி என்றும், அவன் மக்களுக்காக போராடுகிறான் எனத்தெரிந்தும், நாம் அவனை வெறுப்போம். இல்லையேல் அவனை வெறுக்க வைக்கப்படுவோம். வாழவேண்டும் என்ற ஆசை எங்களை துரத்த, தனிப்பட்ட ஆசைகளை நிறைவேற்ற எங்கள் மட்டத்தில் போராடுவோமே தவிர, பொதுநிலைக்கு வரமாட்டோம். இந்த இடம் தான் மக்களுக்கான போராட்டம் சரிவை சந்திப்பதும், போராட புறப்பட்டவர்கள் எதிரிகளாக மாற்றப்படுவதும், வெற்றிகரமாய் நடந்தேறும் இடம். ஆனால் காலப்போக்கில் அப்போராளிகளின் உண்மை நிலை நம்மத்தியில் நிலைபெற ஆரம்பிக்கும் ஆனாலும் பயனற்ற ஒன்றாகவே அது அமையும். போராட்டம் என்பது மக்களிடம் திணிக்கப்பட்டதாகவோ அல்லது அவசியமானதாகவோ இருக்கலாம். பொதுவாக போராட்டத்தை மக்கள் மத்தியில் ஆட்சியாளர்களே முன்னிலைப்படுத்துவர் அல்லது திணிப்பர். ஒரு இனத்தை வீழ்த்தவேண்டுமாயின் அவர்களின் முன்னேற்றமான இயல்புகள் மழுங்கடிக்கப்பட்டு பலவீனமான பக்கங்கள் ஊக்கப்படுத்தப்படும். ஈழத்தமிழன் அறிவினால் உயர்ந்தான் என்றால் அது வீழ்த்தப்பட்டு பணத்தாசை புகுத்தப்பட்டது. மேல்நாட்டு மோகம், ஆடம்பர வாழ்வு அறிமுகப்படுத்தப்பட்டது. இன்று போதையும் வன்முறையும் பழக்கப்படுத்தப்பட்டுவிட்டது. அவர்களை அவர்களே அறியாமல் அடிமையாகி அழிகின்றனர். புலம்பெயர்ந்த நாடுகளில் எங்களை நாங்கள் இனம் காட்ட முடியாமல் அல்லது இனம்காட்ட விரும்பாமல் நாங்களும் கரைந்து உருமாறிச்செல்கின்றோம். நாங்கள் யாரென்று எங்களுக்கும் தெரியவில்லை எங்கள் பிள்ளைகட்கும் சொல்லவில்லை. இது புலம்பெயர்ந்ததால் வந்ததல்ல. வெள்ளையர்கள் ஈழத்தில் காலூன்றிய காலத்தில் புகுத்திவிட்ட மனநிலை. ஆதலால் தான், எங்கள் மூத்தோர் ஆங்கிலத்தில் பேசுவது பெருமை என்றும் அக்கலாசார உடைகளுக்கு மதிப்பளித்தல் சிறப்பென்றும் நமக்கு வழிகாட்டுகின்றனர். ஒரு காலத்தில் தமிழ் பேசும் பண்டிதர்கள் தரம் தாழ்ந்து பார்க்கப்பட்டதாலும், அவர்கள் அணிந்த வேட்டி சட்டை இழிவாக கணிக்கப்பட்டதாலுமே பள்ளிகளில் மட்டுமல்ல எங்கள் மக்களிடமிருந்தே அவை விடைபெற ஆரம்பித்தன என்பது ஒப்புக்கொள்ள வேண்டிய உண்மை. தமிழர்கள் தனித்துவம் பேணிவாழ பெருமளவு நாட்டம் கொள்ளவில்லை. சிங்களர் தங்களை விட்டுக்கொடுத்து வாழவும் விரும்பவில்லை, தமிழன் ஆள்வதையும் விரும்பவில்லை. தங்களுடன் சமமாய் வாழ்வதையும் ஏற்கவில்லை. இதனால் ஈராயிரம் ஆண்டுகள் பழமை கொண்ட இலங்கையில் இரண்டு இனங்கள் இணங்கி வாழமுடியவில்லை. புத்தம் போதிக்கும் நாட்டில் யுத்தம் நடக்கின்றதே தவிர அன்புநெறி நிலைக்கவில்லை அல்லது அரவணைத்துச் செல்லவில்லை. தமிழ் மக்களை கொல்லத்தயங்கவில்லை. மக்களாட்சி நடக்கின்றது தமிழ்ச்சனம் மன அமைதியுடன் வாழவழியில்லை. இது பாராளுமன்ற அரசியலின் தோல்வி என யாரும் ஏற்கவும் இல்லை. உயிர் போகிறது என்று உரத்து கத்தியும் உதவிக்கு ஆளில்லை. சனநாயகம் கூட சத்தம் போடாது தூங்கிவிட்டது. சமாதானம் சொல்லும் நல்லோர்கூட உயிர்காக்க வரவில்லை. இப்படியான எதிர்காலம் எமக்கு வந்துவிடக்கூடாது என்று முன்னே சிந்தித்து போராடியவர்கள் மத்தியில் நினைவு கொள்ளப்படவேண்டிய பிரதான போராளி திலீபன். விடுதலைப்புலிகள் ஆள ஒருநாடு அல்ல தமிழ் மக்கள் வாழ ஒருநாடு வேண்டும் என்று முழங்கினான்.. நீரின்றி வாழாது உலகு, உணவின்றி வாழாது உயிர்கள். இறப்பேன் என்று தெரிந்தே இருந்தான் உண்ணாநோன்பு அப்போதும் உறுதியுடன் சொன்னான் “நான் இறந்தபின் தமிழ்மக்கள் விடுதலை பெற்று வாழ்வதை வானத்திலிருந்து பார்ப்பேன்” என்று. ஆயுதமேந்தி போராடிய வீரன், உறுதியான போராளி, உண்ணாநோன்பிருந்து உயிரீந்த பெருவீரன். தமிழரால் ஒவ்வொரு நாளும் நினைக்கப்பட வேண்டியவன். ஆனால் செப்டம்பர் மாதம் கண்டிப்பாக நினைக்கப்படவேண்டியவன். காரணம் அவன் உணவொறுத்து தமிழர்க்காய் உயிர்க்கொடை தந்த மாதம் இது. எம்சந்ததிக்கு அவன் கதையை மறக்காமல் சொல்லி வைப்போம். வேலையும், பணமும் பெரிதென்று போராடி, பிள்ளைகளுக்கும் அதனையே பயிற்றுவிக்கும் நாம், திலீபன் இறந்துவிட்டான், இருந்தாலும் ஈழத்தமிழ் மக்கள் நிலைமாறவில்லை, இன்னும் சமூகநேசர்கள் தோன்றுவார்கள், திலீபனின் குறிக்கோளும் வெல்லும் என்று எம்பிள்ளைகட்கும் சொல்லி வைப்போம். ஈராயிரம் ஆண்டுகள் பழமை கொண்ட நாடு இலங்கை. இருப்பினும் இரண்டு இனங்கள் இணங்கி வாழமுடியாது சண்டையிடும் பூமி. புத்தம் போதிக்கும் ஆட்சி ஆனால் நித்தம் தமிழர்களுக்கு சோதனை. அன்புநெறி கூறினாலும் அடக்குமுறைக்கு குறைவில்லை.மக்கள் ஆட்சி எனினும் தமிழ்மக்கள் வாழவழி கிடைக்கவில்லை. இது பாராளுமன்ற அரசியலின் தோல்வி என யாரும் ஏற்கவும் இல்லை. உயிர் போகிறது என்று உரத்து கத்தியும் உதவிக்கு ஆளில்லை. உலக சனநாயகம் கூட சத்தமின்றி அமைதியாகிவிட்டது. இப்படியான எதிர்காலம் எமக்கு வந்துவிடக்கூடாது என்று முன்னே சிந்தித்து போராடியவர்கள் மத்தியில் மறக்கமுடியாத போராளி திலீபன். விடுதலைப்புலிகள் ஆள ஒரு நாடு அல்ல, ஈழத்தமிழ் மக்கள் வாழ ஒரு நாடு வேண்டும் என்று முழங்கினான். ஆயுதமேந்தி களத்தினில் போராடியது மட்டுமன்றி, ஈழத்தமிழ் மக்களுக்காக வீரத்தின் உச்ச நிலையான உண்ணாநோன்பிருந்து உயிரீந்த பெருவீரன். உணவொறுத்து, தமிழர்க்காய் உயிர்க்கொடை தந்து, விடுதலையை விரும்பிய வீரன் திலீபன். திலீபனின் உடலில் இருந்து உயிர் நீங்கியிருப்பினும் அவன் குறிக்கோள் வெல்லும். பரமபுத்திரன் http://globaltamilnews.net/2019/130985/
  10. மிதவை நாடகம் – கோகுல் பிரசாத் by Gokul Prasad உச்சக்காட்சியைத் தவிர்த்து ஆதி முதல் அந்தம் வரை கதையை எழுதி வைப்பது ஒரு வகை. அதற்கு விக்கிப்பீடியாவும் தமிழும் தெரிந்தால் போதுமானது. படம் பார்க்கும் போது இன்ன இன்ன உணர்ச்சிகளும் சிந்தனைகளும் தோன்றின என எழுதுவது இன்னொன்று. சிந்தனைகள் கூட அல்ல, எண்ணச் சிதறல்கள். அவை அந்தப் படத்திலிருந்து பெற்றுக் கொண்டவையாகவோ நமது நனவிலியின் கூட்டுத் தொடர்ச்சியாகவோ கூட இருக்கலாம். கதையல்ல, காட்சித்துளிகளின் (shots) ஒருங்கிணைவே திரைப்படம். நிகழ்வுகளின் (incidents) தொகுப்பாக ஒரு திரைப்படத்தை அணுகுவதைக் காட்டிலும் தருணங்களின் (moments) மோதல்களாக அறிந்துணர்வதே தரமான அனுபவத்தை அளிக்கும். ஒரு சிறந்த படைப்பைக் குறித்து உறுதியாக எதையும் சொல்லிவிட முடியாது தான். ஆனால் அதில் இருந்து பெற்றுக் கொண்ட உணர்ச்சிகளையும் எண்ணங்களையும் தர்க்க ஒழுங்குடன் ஆராயலாம் அல்லது பரிபூரணத்தை நெருங்கி விடத் துடிக்கும் உன்னத கலைச்செயல்பாட்டில் அமிழ்ந்து கரைந்தும் போகலாம். ஒரு நல்ல விமர்சனத்தில் சிந்தனையும் உணர்ச்சியும் ஒன்றை ஒன்று நிகர் செய்பவை என்பது குறித்த தெளிவிருக்கும். சுருக்கமாக, படம் தந்த நிறைவை மொழியின் துணை கொண்டு மீட்டெடுத்தலே விமர்சனச் செயல்பாடு. கலையை பொருத்தமட்டில் நிறைவு என்பது சிதறடிப்பு. நோவா பவ்ம்பாக் (Noah Baumbach) இயக்கிய அமெரிக்கத் திரைப்படம். 2012இல் வெளியானது என்றாலும் கருப்பு வெள்ளையில் படமாக்கப்பட்டது. ஒரு பெண்ணின் Quarter life Crisis குறித்த பொய்யான பிதற்றல்கள் மற்றும் பாவனைகள் ஏதுமின்றி அசலாய் எடுத்து வைத்திருக்கிறார்கள். இளமை நழுவியவாறு இருக்க கனவுகளைத் தடுமாற்றங்களுடன் துரத்திக் கொண்டிருப்பவளின் அல்லாட்டம் படம் முழுக்கத் தளும்புகிறது. வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறதே என இருபதுகளின் முடிவில் தொடங்கும் பதற்றத்தை எவராலும் எதனாலும் தணித்து வைக்க முடிவதில்லை. எதைச் செய்தாலும் கூடவே வந்து ஒட்டிக்கொள்ளும் திருப்தியின்மை தீராத உளச்சோர்வை தர வல்லது. நம்முடைய இலட்சியமும் கனவுகளும் வாழ்வுடனான சமரசத்திற்கு இணங்கி உயிரின் அலை ஓய்ந்து ஒழியும் காலம். வெகுளித்தனங்களின் இடத்தை துளி இடமில்லாது பொறுப்புகள் நிரப்பிக் கொள்கின்றன. பறத்தலுக்கான யத்தனங்கள் அத்தனையும் சிறிய வட்டத்திற்குள் அடைக்கப்படுகின்றன. கற்பனைகளின் மன விரிவைப் புரிந்து கொள்ளாத சுற்றமும் நட்பும் அவற்றை வெறும் கற்பிதங்கள் எனக் கேலி செய்யும் போது நமது நம்பிக்கைகளில் தத்தளிப்பு உண்டாகிறது. ‘இது போதும்’ என்பவர்களையும் நிறைவின்றி அலைபவர்கள் நெருக்கித் தள்ளுகிறார்கள். போதும் என்பது தேக்கம் தான் என்பவர்கள் சரியாகத் தான் சொல்கிறார்களா எனச் சந்தேகமாக உள்ளது. படத்தைப் பார்த்தால் அப்படித் தெரியவில்லை. எதிலாவது முழுமை கிடைத்து விடாதா எனும் நப்பாசையினால் தான் ஏதேதோ விஷயங்களை மனிதர்கள் முயன்றபடியே இருக்கிறார்கள். ‘செட்டில்’ ஆகி விட்ட மயக்கத்தில் உழல்பவர்களுக்கு எத்தகைய மாயங்கள் புரிந்தாலும் இந்த வாழ்க்கை குறைபாடுடையது எனும் அறிதல் பீதியூட்டக் கூடியது. அதனாலேயே நவீன வாழ்வின் விரைவுக்கு தம்மை ஒப்புக்கொடுக்காமல் ஓர் இறகு போல மிதந்து வருபவர்கள் தாங்கிக் கொள்ள முடியாதவர்களாகிறார்கள். இறகின் அலைக்கழிப்புகள் சாதாரணமானதல்ல. அது அசைந்தாடி அடங்கி ஆசுவாசம் கொள்ளும் நிலமும் நிரந்தரமற்றது என்கிற பட்சத்தில் மனம் விழுந்தால் எல்லாம் சரிந்து புதையும் நிலை. இழந்தவை ஏற்படுத்தும் மன உளைச்சலை விட இழக்கப் போகிறோம் எனும் தன்னுணர்வு தரும் நடுக்கம் தாள முடியாதது. இருக்கின்ற ஒரே பற்றுகோளும் கை நழுவிப் போகும் பதற்றத்தில் கொப்பளித்து பீறிடும் அழுத்தம் மண்டைக்குள் ஓராயிரம் கடப்பாரைகளை சொருகுகிறது. முட்டுச்சந்தில் தடுமாறி நிற்கிறவனை இழுத்துக் கொண்டு போய் முச்சந்தியில் அம்மணமாக்கி விட்டு வேடிக்கை பார்க்கும் வாழ்க்கை எல்லோருக்கும் எப்போதாவது அமைந்து விடுவது தான். அது இளமையில் வேண்டாம் என்பது மட்டுமே நம்முடைய பிரார்த்தனையாக இருக்க முடியும். படத்தில் வழக்கமான காதல் இல்லை. ஆனால் ஒவ்வொரு சட்டகத்திலும் பிரியத்தில் தோய்ந்த இலயிப்பு மின்னுகிறது. ஃபிரான்செஸும் சோஃபியும் அர்த்தப்பூர்வ சிநேகத்துடன் ஒருவரை ஒருவர் கண்டு கண்களை விலக்கிக் கொள்ளும் தருணங்களில் அவ்வளவு உயிர்ப்பு! ஒரு பார்வையில் நமக்கு எல்லாம் புரிந்து விடுகிறது. படத்தின் ஆரம்பக் காட்சிகளில் ஒரே சட்டகத்தினுள் அடைபட்டுக் கிடக்கும் இருவரும் அவர்களுக்கிடையேயான மன விலக்கத்திற்குப் பின்னர் தனித்தனி ஃபிரேம்களில் காட்டப்படுகிறார்கள். அந்த விலகலில் வெளிப்படும் நுட்பமும் உணர்வுப் பரிமாற்றங்களும் சமீபத்தில் பார்த்திராதது. அப்போதும் ஃபிரான்செஸ் எவர் மீதும் குற்றஞ்சாட்டுவதில்லை. மனிதர்கள் இப்படித்தான் என்கிற சலிப்பு கூட ஏற்படாத பரிசுத்தம். அவளது சிரிப்பூட்டும் முயற்சிகளுக்குப் பின்னால் எப்போதும் மென்சோகம் மந்தகாசப் புன்னகையுடன் நம்மை ஆரத்தழுவிக் கொள்ள காத்திருக்கிறது. இந்தப் படம் வாழ்வின் அர்த்தமின்மையை காரணமாகக் காட்டி அதன் மீது பழிகள் சுமத்தி தப்பித்துக் கொள்வதில்லை. மாறாக, ஓயாது அனலடிக்கும் விதியுடனான சமரில் நிழலை அரவணைத்து எழுகிறது. பெரிய பெரிய கனவுகள் முன் நிதர்சனத்தின் போதாமையை உணர்ந்தவாறு உள்ளுக்குள் வெப்பத்தைச் சுமந்தலையும் மனிதர்களின் மாதிரி வடிவம் ஃபிரான்செஸ் ஹா! கிரேட்டாவின் (Greta Gerwig) கதாபாத்திரத்தை எப்படியெல்லாம் வளர்த்தெடுத்திருக்கிறார்கள் என்பதை ஆச்சரியத்துடனேயே கவனித்துக் கொண்டிருந்தேன். எதிலும் பிணைத்துக் கொள்வது குறித்து அலட்டிக் கொள்ளாத இந்தத் தலைமுறை ஆட்களின் மனப்பான்மையை சரியாகத் தொட்டிருந்தார்கள். அது வெறும் பாவனை தான் என்பதால் விலகுந்தோறும் நெருங்கி வரும் விந்தையையும் உள்ளடக்கி இருந்தது. தெருவில் போகிறவர்கள் வருகிறவர்கள் முன்பு ஃபிரான்செஸால் தன்னை மறந்து ஆட முடிகிறது. மார்ஸல் ப்ரூஸ்ட்டின் நாவலை மட்டும் எடுத்துக் கொண்டு இரண்டு நாள் பயணமாக பாரீஸுக்கு கிளம்பிச் செல்லும் அவளது இலகுவான மனதின் விசையை பொறாமையுடன் தான் உணர்ந்தேன். அவள் விரும்பியது பாரீஸில் நடக்கவில்லை. தெருக்களில் இலக்கின்றி அலைந்து விட்டு சோர்வுடன் நியூ யார்க் திரும்பிய வேளையில் தாமதமாக ஒலிக்கும் எதிர்பார்த்திருந்த அழைப்பும் அதை உணர்ச்சியின்றி ஃபிரான்செஸ் எதிர்கொள்ளும் விதமும் தூக்கமற்ற இரவுகளின் விவரிக்க இயலாத வெறுமை. பின்னணியில் Every 1’s a winner பாடல் ஒலிக்க தனது கையாலாகத்தனத்தையும் தனக்கு நேர்ந்துவிட்ட அவமானத்தையும் எதிர்கொள்ளத் தெரியாமல் செயலிழந்த பற்று அட்டையை வைத்துக் கொண்டு அவள் அங்குமிங்கும் ஓடும் பதைபதைப்பை இப்போது நினைத்துப் பார்த்தாலும் நெஞ்சம் துணுக்குறுகிறது. கருப்பு வெள்ளை படங்களில் மட்டுமே திரண்டு வரக்கூடிய ஒரு காவிய சோகம் நியூயார்க் நகர வீதிகளில் உசாவுகிறது. அவளுக்கு இறுதியில் கிட்டியது வெற்றியா தோல்வியா என்பது அவரவர் நிலைப்பாடுகளைப் பொறுத்து மாறுபடும். எடுத்துக் கொண்டதை விட்டு இம்மியும் விலகாத கதை. இனி நெடுங்காலம் திரும்ப முடியாது என்பதை உணர்ந்து எங்கோ விடைபெற்றுக் கிளம்புகையில் மனசில் கவியும் துக்கம் இந்தப் படம். http://tamizhini.co.in/2018/07/09/மிதவை-நாடகம்-கோகுல்-பிரச-2/
  11. வாழ்த்து - இன்பா அ. எல்லா வாழ்த்துகளும் எல்லா நன்றி நவில்தலும் கொஞ்சம் எச்சரிக்கை செய்கின்றன எல்லாப் பாராட்டுக்களும் ஏதோ ஒரு தொடக்கத்திற்காகவே ஆரம்பிக்கின்றன பதில் பாராட்டை எதிர்பார்த்தே ஒவ்வொரு வாழ்த்தும் கடந்து போகிறது எல்லாவற்றையும் உதறிவிட்டால் பிரியத்தின் ஈரம் காய்ந்துவிடக் கூடும் எல்லாவகை பாராட்டுகளும் எல்லையற்றது சில்லிட்ட வார்த்தைகளையே தேடிக்கொண்டுவருகிறது எச்சரிக்கையாய் இல்லாவிட்ட்டல். மனச்சந்துக்குள் புகுந்துகொண்டு நச்சரித்துவிடுகிறது சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு மனத்திற்கு போட்டுவிட்டேன் வேலி தேவைப்படும்போது திறந்துகொள்ளட்டும் https://solvanam.com/2019/09/17/கவிதைகள்-இன்பா-அ/
  12. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சபேஷ்🎉🎉🎉
  13. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நந்தன்
  14. தமிழ் மக்களுக்கு விடுதலைக்காகப் போராடி மரணித்த வீரர்களுக்கு வீரவணக்கங்கள்.
  15. குமாரசாமி ஐயாவுக்கும், புத்தன் அண்ணாவுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🎉🎉🎉
  16. நாய் வேடமிட்டவரின் நிர்ப்பந்தங்கள் - காஸ்மிக் தூசி அழுக்கு வெள்ளையில் அம்மை கண்டது போல் உடல் எங்கும் கரும் புள்ளிகள். இளச்சிவப்பு உள் தெரியும் பெரிய காதுகள். கால் முதல் தலை வரை ஒன்றாய் தைத்து வெள்ளாடு போல் வால் வைத்து, இழுத்து மூடும் ஆடையில் நாய் வேடமிட்டு வந்த கடவுள் நகைக்கடைத் தெருவின் நடைபாதையில் இறங்கி சாலையின் குறுக்கே நடந்து செல்கிறார், ஒரு குல டால்மேஷன் நாயைப்போல. மின்கம்பத்தின் அருகில் நிதானித்து பின்னங்காலை பக்கவாட்டில் தூக்கியதும் உரக்க சிரிக்கிறான் ஒரு சிறுவன் வலது புறம் கிடந்த வாழைப்பழத் தோலை முகர்ந்து இடது பின்னங்கால் கொண்டு பிடரியில் சொறிந்து காற்றடிக்கும் நாற்றாங்கால் போல முதுகை சிலிர்த்துவிட்டு நடக்கையில், தனக்கு முன் சென்ற திரளில் சும்மா கேட்டுக்கொண்டு சென்றவனிடம் இடைவெளிவிடாமல் பேசிக்கொண்டு சென்ற குறுந்தாடிக்காரனை இடை மறித்து விளக்கிச் சொல்ல எத்தனையோ விஷயம் இருந்தது அவரிடம். இருந்தும், பேசுபவனை பார்த்து நின்று லொள், லொள் என தோராயமாக குரைத்த பிறகு நிதானமாய் நடந்து செல்கிறார், நான்கு கால்களால். நாய் வேடமிட்ட கடவுள். மனிதபாஷையில் மனிதர்களிடம் விளக்கிச்சொல்ல ஆயிரம் விஷயம் இருந்தும், நாய் வேடமிட்டிருக்கையில் நாய்போல குரைப்பதன்றி வேறெதைத்தான் கூற முடியும்? கடவுளாகவே இருந்தாலும்? https://padhaakai.com/2019/08/10/நாய்-வேடமிட்டவரின்-நிர்ப/
  17. யாழ் கள உறவுகளின் வாழ்த்துக்களுக்கு நன்றி😊

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.