Everything posted by கிருபன்
-
பவதா, வலம்புரி கப்பல்கள் முழ்கடிப்பில் வீரகாவியமான 11 கடற்கரும்புலிகள் வீரவணக்க நாள்.!
கடற்கரும்புலி மேஜர் தமிழ்மங்கை.! Last updated Feb 21, 2020 நாலடி நடந்தாலே நகங்களுக்குச் சாயம் பூசும் வளமுள்ள செந்நிற மண்பூமி. விமான ஓடுதளம் மட்டுமன்றி பலாலிப் பகுதி முழுதுமே சிறிலங்காப் படையினரின் பிடியில் சிக்கி விட்டிருந்தது. 1990ஆம் ஆண்டு காலப் பகுதியில் பலாலிப் படைத்தளத்தின் காவலரண்களின் பெரும்பகுதியை விடுதலைப்புலிகள் மகளிர் படையணி பொறுப்பேற்றிருந்தது. இந்தியப் படையினரிடம் போர்ப் பயிற்சியை மூன்றாண்டுகள் பயின்றிருந்த, படையணியின் மூத்த உறுப்பினர்களுடன் அப்போதுதான் பயிற்சி முடித்து வந்த புதியவர்களுமாக துடிப்புமிக்க இளையவர்களால் எமது காவல் அரண்கள் எப்போதுமே விழிப்பாக இருந்தன. கனரக ஆயுதங்களின் பலம் இல்லாத காலம் அது. எழுபத்தைந்து பேர் கொண்ட அணி காவல் செய்யும் பகுதியில் ஒரேயொரு பிறவுண் எல்.எம்.ஜியுடனும் ஒரு ஆர்.பி.ஜியுடனும் நின்ற காலம். எமது படைவலு இலகுரக ஆயுதக்காரர்களது சூட்டு வலுவிலும், மனோ வலுவிலுமே பேணப்பட்டது. கையில் குண்டுகளுடனோ, சுடுகலன்களுடனோ ஒருவர், இருவராக முன்னே போய் பகைக் காப்பரண்களை நெருங்கித் திடீர்த் தாக்குதல் செய்து எதிரியை நிலைகுலைய வைப்பதுதான் அப்போது எமது முக்கிய வேலை. நைற்றிங்கேள் இதில் மிகவும் தேர்ந்தவர். எதிரி ஏவும் இருரவைகளுக்கு இடையேயுள்ள இடைவெளியைப் பயன்படுத்தி முன்னேறவும் பின்னகரவும் அவரால் முடியும் என்று எங்களில் பலரால் அவரது செயல்கள் சொல்லப் படுவதுண்டு. பலாலியின் செழித்த வாழைமரங்களில் ஒன்றுமட்டும் போதும் எதிரியின் கண்ணில் படாமல் இவருக்குக் காப்பளிக்க. அவ்வளவு மெல்லிய உடல்வாகு. தோற்றத்துக்குச் சற்றும் பொருந்தாத கடும் துணிச்சல். சிறிதும் குறிவழுவாத சூடு. 1990ஆம் ஆண்டின் பிற்பகுதியில் மாங்குளத்தில் அமைந்திருந்த சிறிலங்காப் படைத்தளத்தை அழிப்பதற்கான பயிற்சிக்கு திறமையாளர்கள் பலர் தேர்ந்தெடுக்கப் பட்ட போது பட்டியலில் நைற்றிங்கேள் என்ற பெயர் முன்னணியில் இருந்தது. அப்போது அவர் ஏழுபேர் கொண்ட அணியின் பொறுப்பாளர். இவரின் மேலான பொறுப்பாளர் பலாலியிலிருந்து நைற்றிங்கேளைப் போகவிடமாட்டேன் என்று சிறப்புத் தளபதியிடம் ஒற்றைக் காலில் நின்றார். சண்டையொன்றில் தான் விழுந்தால், வெற்றிடத்தை நிரப்ப நைற்றிங்கேள் வேண்டும் என்ற அவரின் பிடிவாதமே கடைசியில் வென்றது. என்னுடைய அணியில் நைற்றிங்கேள் இருக்கவேண்டும் என்ற விருப்பம் இவர் ஒருவரிடம் மட்டுமல்ல, அணித்தலைவிகள் பலரிடமும் இருந்தது. மிகச் சிறந்த சூட்டாளர் என்பதால் இவருக்கு ஆர்.பி.ஜி வழங்கப்பட்டது. ஏவப்படுகின்ற எறிகணைகள் ஒவ்வொன்றும் இலக்கை சரியாகத் தாக்கவேண்டும். “தவறிவிட்டது” என்ற சொல்லுக்கு இவரது அகராதியில் இடமில்லை. எனவே ஆர்.பி.ஜியும் நைற்றிங்கேளும் தோள் சேர்ந்தனர். விடுதலைப்புலிகளின் வரலாற்றுப் புகழ்மிக்க, ”ஆகாய கடல் வெளிச்சமர்” பரந்த வெளியில் விரிந்த போது கடலால் தரையிறக்கப் பட்டு இரைந்து வந்த டாங்கிகளிடமிருந்து எமது ஆளணியைப் பாதுகாக்க ஆர்.பி.ஜியின் பலம் தேவைப் பட்டது. எந்த அணியிலும் இல்லாது நைற்றிங்கேள் தனியாக இயங்க விடப்பட்டிருந்தார். “நைற்றிங்கேளை அனுப்பு” என்ற கட்டளை களத்தின் ஒரு முனையிலிருந்தும், கேணல் பால்ராஜிடமிருந்தும் வரும். மறுமுனையிலிருந்து கேணல் யாழினியிடமிருந்தும் (விதுஷா) வரும். எங்கு டாங்கி இரைந்ததோ, அங்கு அவர் தேவைப் பட்டார். எத்திசையில் அவர் போனாரோ, அங்கு அதன் பின் ராங்கின் இரைச்சல் கேட்காது. களத்தின் தேவைக்கேற்ப கடுகதியாக விரையும் நைற்றிங்கேள், துளியும் தற்பெருமை இல்லாத, எப்போதும் எவரையும் கனம் பண்ணுகின்ற தன் இயல்பில் கடைசிவரை வழுவவில்லை. 1993ஆம் ஆண்டில் பூநகரியிலிருந்த சிறிலங்காப் படைத்தளத்தைத் தாக்குவதற்கு நாம் தயாராகிக் கொண்டிருந்தோம். நடவடிக்கையில் இறங்கப் போகும் ஆர்.பி.ஜிக்களின் பொறுப்பாளர் நைற்றிங்கேள். பூநகரிப் படைத்தள இராணுவம் அதற்கிடையில் முன்னகரப் போவதற்கான அறிகுறிகள் தென்பட, மறிப்பதற்கு பூங்கா தலைமையில் பெண் போராளிகளின் அணியொன்று போனது. மறிப்பு வேலியாகக் காப்பரண்களை அமைத்தது. ஆர்.பி.ஜிக்களுக்கான நிலைகள் மிகநேர்த்தியாக நைற்றிங்கேளின் வழிநடத்தலில் அமைக்கப்பட்டு, பார்வையை ஈர்த்தன. நிலைகளைப் பார்வையிட வந்தார் கேணல் சொர்ணம். அவரின் கவனத்தையும் அந்நிலைகள் ஈர்த்தன. “ஆர் உங்கட ஆர்.பி.ஜி பொறுப்பாளர்?” கேணல் சொர்ணத்தின் முன், காற்றிலாடும் கழுகுபோல வந்துநின்ற நைற்றிங்கேளைப் பார்க்க அவருக்குச் சிரிப்பு வந்துவிட்டது. “எத்தினை ஷெல் அடிச்சிருக்கிறீங்கள்?” “இருபத்திமூண்டு” அதிர்ச்சி தரும் பதில். “எங்கெங்கே அடிச்சீங்கள்?” “ஆனையிறவில பதினெட்டு. அதுக்குப் பிறகு வேற வேற சண்டையளில அஞ்சு” நைற்றிங்கேளைக் கூர்ந்து பார்த்தவர், “நீங்கள்தான் அந்த நைற்றிங்கேளோ?” என்றார். இதுபோதும். இதற்குமேல் நைற்றிங்கேளைப் பற்றி நாம் வேறெதுவும் பேசத் தேவையில்லை. போன சண்டைகள் எதிலுமே அவர் காயப்பட்டதில்லை. தனது இலக்கைத் தாக்கி விட்டு, சிறு கீறல் கூட இல்லாமல் திரும்பி வந்த ஒவ்வொரு முறையும், “ஏதோ ஒரு சண்டையில் நான் முழுசாப் போறதுக்குத்தான் இப்படிக் காயங்களேயில்லாமல் வாறன்” என்றவர் பூநகரி சிங்களக் கூட்டுப்படைத்தளம் மீதான “தவளை” நடவடிக்கையில் காலில்லாமல் வந்தபோது, சற்று நிம்மதியடைந்தோம். ஆள் போவதைவிடக் கால்போனது பரவாயில்லையென்று. ஒற்றைக் காலோடு தன் வாழ்வின் அடுத்த கட்டம் இதுதான் என்பதை அவர் முடிவெடுத்த போது நாம் கவலை அடையவில்லை. கடலிலும் அவரின் வேகம் தணியவில்லை எனப் பெருமைப்பட்டோம். நினைவுப்பகிர்வு:- மலைமகள் மொட்டவிழ்ந்த கனவுகளிலிருந்து……..! https://www.thaarakam.com/news/114438 கடற்கரும்புலி கப்டன் வனிதா.! Last updated Feb 21, 2020 அன்பு…. கரும்புலிகள் உறுதிக் குத்தான் இரும்பை ஒத்தவர்கள். ஆனால், அவர்களின் மனங்களோ மிக மிக மென்மையான உணர்வுகளால் சேர்ந்து உருவாக்கிய அன்புக்கூடு அவர்களுக்கும் காதல் இருந்தது. இந்தத் தேசத்தின் மீதும், தலைவன் மீதும், மக்கள் மீதும், ஏன் இவை எல்லாவற்றோடும் கூடவே அம்மா அப்பா உடன்பிறப்புக்கள் என்ற சுற்றத்தின் மீதும் தான். அம்மா என்றால் அவளுக்கு உயிர். சிறு அகவை தொட்டே அம்மா எங்கு போனாலும் அம்மாவுக்குப் பின்னாலே ஒரு வாலாக அவள்… இரவில் படுப்பது என்றால் ஏன் வெளியில் செல்வது என்றால் எல்லாவற்றிற்கும் அவளுக்கு அம்மா வேண்டும் அம்மாவைப் பிரிந்து அவள் இருந்ததே இல்லை. ஆனால், காலத்தின் தேவையுணர்ந்து அம்மா மீது அன்பு கொண்ட அவள் போராடப் புறப்பட்ட போது அந்த ஊரே முதலில் நம்பவில்லைத்தானே. அவளா….?, எப்படி…? அம்மாவை விட்டுவிட்டு…? எல்லோரது கேள்விகளுக்கும் மாறாகவே அவளது விளக்கம் இருந்தது. தாயை நேசிப்பவனால்தான் தாய் நாட்டுக்காகப் போராட முடியும் நான் அம்மாவை நேசிப்பது உண்மையாக இருந்தால், இந்தத் தேசத்தையும் என்னால் நேசிக்க முடியும் என்று பெரும் தத்துவஞானி போல் கருத்துச் சொல்லுவாள். பயிற்சிகளில், சண்டைக் களங்களில் எல்லாவற்றிலுமே அவள் பெரும்புலி ஆனாலும் அம்மா என்ற சொல்லை உச்சரிக்காமல் அவள் படுக்கைக்குப் போனதே இல்லை. ஒரு முறை அவள் விடுமுறையில் போனபோது அம்மா அதிகம் பாவிக்கும் புடைவை ஒன்றை எடுத்து வந்து விட்டாள். அன்றிலிருந்து அவள் படுக்கையின் தலையணை அது தான். அதில் படுக்கும் போது அம்மாவோடு இருப்பது போன்ற சுகம் அவளுக்கு அவள் எங்கு போனாலும் அதை மட்டும் அவள் மறந்தும் விட்டு விடமாட்டாள். விடுதலையின் தேவைக்காக அவள் நகர்ந்த பயணங்கள் எல்லாவற்றிலும், கூடவே அவளுடன் அந்தப் புடைவையும் நகரும். அந்தப் பூ மனசுக்குள் இப்போது மக்கள் படும் இன்னல்களுக்கெல்லாம் ஒரு முடிவு கட்டவேண்டும் என்ற துடிப்புத் துளிர்விட்டது. மக்களுக்காகத் தன்னைத் துறப்பது என்ற முடிவை அவள் எடுத்து விட்டாள்.ஆனால், தன் ஆசை அம்மா எப்போதும் தன் குரலைக் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காய் தனக்கு விருப்பமான அம்மாப் பாடல்களையெல்லாம் தனது குரலிலே பாடி ஒலிப்பதிவு செய்த ஒரு ஒலி நாடாவை அவள் அம்மாவுக்காக கொடுத்திருந்தாள். இப்படி அம்மா மீது அன்பு கொண்ட அவளால் எப்படிப்பகை அழித்து புதிய வரலாற்றைப் படைக்க முடிந்தது. அது தான் வள்ளுவர் சொன்ன “அன்பிலார் எல்லாம் தமக்கு உரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு” என்ற குறட்பா கடற் கரும்புலி கப்டன் வனிதாவிற்குச் சாலப் பொருத்தமல்லவா? நினைவுப்பகிர்வு:- பிரமிளா. நீலக்கடலின் நெருப்புக்குழந்தைகளிலிருந்து………….! https://www.thaarakam.com/news/114441
-
தேசத்தின் விடிவிற்காய் தன் உயிரை ஆயுதமாக்கி புறப்பட்ட மேஜர் விடுதலை.!
தேசத்தின் விடிவிற்காய் தன் உயிரை ஆயுதமாக்கி புறப்பட்ட மேஜர் விடுதலை.! “தேசத்தின் விடிவிற்காய் தன் உயிரை ஆயுதமாக்கி ஆழியவளை மண்ணிலிருந்து விடுதலைக்குப் போராடப் புறப்பட்ட கரும்புலி மேஜர் விடுதலை” கந்தையா இந்திராணி என்ற இயற்பெயரைக் கொண்ட இவள் வடமராட்சி கிழக்கு ஆழியவளை மண்ணில் பிறந்து வளர்ந்தவள். இந்த மண்ணும் தேசவிடுதலைக்குப் போராட பல போராளிகளை உகந்தளித்த மண். அந்த வகையில் இவளும் போராட்டத்தின் தேவையை உணர்ந்து இனவாத அடக்குமுறைக்கு எதிராக 1992ம் ஆண்டு பிற்பகுதியில் தன்னை விடுதலைப் புலிகளில் முழுமையாக இணைத்துக் கொண்டாள். கடற்புலிகள் மகளிர் படையணியின் முதலாவது பயிற்சி முகாமில் தனது அடிப்படைப் பயிற்சிகளை முடித்துக்கொண்டு தொடர்ந்து ஏனைய பயிற்சிகளையும் முடித்தவள்.கடலில் வேகமாக நீந்தும் திறமை இவள் தன்னை வருத்தியே பயிற்சிகளில் ஈடுபட்டு சிறந்த போராளியாக திகழ்ந்தாள். மண்டைதீவில் கைப்பற்றப்பட்ட நீருந்து விசைப் படகின் இயந்திரம் சம்பந்தமாக கற்பதற்காக சென்ற போராளிகளுள் ஒருத்தியாகச் சென்றவள். பயிற்சிகளை முடித்த நிலையில் பூநகரிச் சமரில் திட்டமிட்டபடி நீருந்து விசைப்படகை கைப்பற்றி அவைகளைக் கொண்டுவருவதற்காக லெப் கேணல் பாமா அவர்கள் தலைமையில் சென்றவர்களில் ஒருத்தியாகச் சென்ற விடுதலை அவைகளை கொண்டுவருவதில் முக்கிய பங்காற்றினாள்.அச்சமரில் விழுப்புண்ணுமடைந்தாள். அதனைத் தொடர்ந்து கடற்புலிகளின் தொழில்நுட்பக்கல்லூரிக்கு மேலதிக பயிற்சிக்காகச் சென்ற விடுதலை .தொடர்ந்து கிளாலிக் கடல் நீரேரியில் இயக்கத்தின் முக்கிய போக்குவரத்திற்க்கான பாதுகாப்புப்பணியில் ஈடுபட்ட விடுதலை அந்நேரத்தில் தலைவர் அவர்கள் வன்னிக்கு வந்துபோகும் நேரத்தில் அப்படகின் இயந்திரவியளாளராக லெப் கேணல் சதீஸ் அவர்ர்களுடன் உதவியாக விடுதலையும் சென்று வந்தவள். யாழ் இடப்பெயர்வின் போது முக்கிய தளபதிகளையும் பாதுகாப்பாக வன்னிக்கு நகர்த்தியதில் முக்கிய பங்காற்றிய விடுதலை. யாழ் இடப்பெயர்வின் பின் தேவிபுரம் பகுதியில் வெளியினைப்பு இயந்திரம் சம்பநதமாகவும் கற்றவள். அதன் பின் கடற்புலிகளின் கடற்தாக்குதல் மற்றும் கடல் விநியோகப் படையணியான நளாயினி படையனிக்குள் உள்வாங்கப்பட்டாள்.இங்கு வந்தவள் கனரக ஆயுதப் பயிற்சி எடுத்து அதனுடன் நின்றவள் அக் காலப்பகுதியில் சாளையில் படகுகளுக்கான பதுங்குகுழி அமைப்பதிலிருந்து உருமறைப்பிலிருந்து படகுகளில் வரும் பொருட்களை இறக்குவதிலிருந்து ஏனைய அனைத்து வேலைகளிலும் சகபோராளிகளுடன் இணைந்து செய்வதில் முன்னின்றவள் அத்துடன் சாளையிலிருந்து தமீழீழத்திற்க்கு பலம் சேர்க்கின்ற விநியோகப் பணிகளிலும் ஈடுபட்ட விடுதலை. விநியோகப் பாதுகாப்புச் சமர் மற்றும் வலிந்த தாக்குதலிலும் படகுச் சாரதியாக ,இயந்திரப் பொறியியளாளராக, தொலைத்தொடர்பாளராக , கனரக ஆயுதத்தின் பிரதான சுடுனராகவும், கட்டளை அதிகாரி என பல் வேறுபட்ட நிலைகளில் மிகத்திறமையாச் செயற்பட்ட விடுதலை .ஒயாத அலைகள் மூன்று நிலமீட்ப்புச் சமரிலும் பங்குபற்றிய விடுதலை இவ்வாறாக பல்வேறு இடங்களில் பல்வேறு சமர்களில் பங்குபற்றி தனது மிகத் திறமையான செயற்பாட்டால் போராளிகள் மற்றும பொறுப்பாளர்கள் மத்தியில் தனக்கான ஒரிடத்தைப் பதித்துக் கொண்டாள் என்று கூறுவதில் மிகையாகாது.இப்படியான விடுதலை சகபோராளிகளுடன் அன்பாகப் பழகுவதில் விடுதலை நிகர் விடுதலையே. கடலில் நடைபெற்ற பெரும்பாலான சமர்களிலும் விநியோகப்பணியிலும் பங்குபற்றிய விடுதலை. அந்தநேரத்தில் தனது நீண்ட நாள் கனவான கடற்கரும்புலிகள் அணியில் இணைவதற்கான அனுமதியை தலைவர் அவர்களிடம் கடிதமூலம் பெற்றுக்கொண்டாள். கடற்கரும்புலிகளுக்கான விசேட பயிற்சியையும் பெற்றாள்.தனக்கான கரும்புலித்தாக்குதலுக்கான சந்தர்ப்பம் வரும்வரை தொடர்ந்தும் அப்பணிகளில் செவ்வனவே செயற்பட்டாள். கரும்புலிகள் உறுதிக் குத்தான் இரும்பை ஒத்தவர்கள். ஆனால், அவர்களின் மனங்களோ மிக மிக மென்மையான உணர்வுகளால் சேர்ந்து உருவாக்கிய அன்புக்கூடு அவர்களுக்கும் தேசம் மீது அளவுகடந்த காதல் இருந்தது. இந்தத் தேசத்தின் மீதும், தலைவன் மீதும், மக்கள் மீதும், ஏன் இவை எல்லாவற்றோடும் கூடவே அம்மா அப்பா உடன்பிறப்புக்கள் என்ற சுற்றத்தின் மீதும் தான். அதிக பற்றுக் கொண்டு உயிரை ஆயுதமாக்கி பகையழிக்கப் புறப்பட்டவள். 21.02.2001 அன்று தமிழீழத்திற்க்குப் பலம் சேர்க்கின்ற ஆழ்கடல் விநியோக நடவடிக்கையின்போது சிறிலங்காக் கடற்படையினருடனான நேரடி மோதலின் போது சகபோராளிகள் எட்டுப் பேருடன் கடலன்னை மடியில் வீரச்சாவடைகிறாள் மேஜர் விடுதலை.இவளோடு இன்றைய நாளில் வீரகாவியமான ஏனைய மாவீரர்களுக்கும் தாயக விடுதலைப் போராட்டப் பாதையில் தங்கள் இன்னுயிர்களை ஈகம் செய்த அனைத்து மாவீரர்களுக்கும் வீரவணக்கம் செலுத்துவோம். என்றும் நினைவுகளுடன் அலையரசி…… “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” https://www.thaarakam.com/news/114280
-
பவதா, வலம்புரி கப்பல்கள் முழ்கடிப்பில் வீரகாவியமான 11 கடற்கரும்புலிகள் வீரவணக்க நாள்.!
பவதா, வலம்புரி கப்பல்கள் முழ்கடிப்பில் வீரகாவியமான 11 கடற்கரும்புலிகள் வீரவணக்க நாள்.! பவதா, வலம்புரி கப்பல்கள் முழ்கடிப்பில் வீரகாவியமான 11 கடற்கரும்புலிகள் வீரவணக்க நாள் இன்றாகும். திருகோணமலைத் துறைமுகத்திலிருந்து 22.02.1998 அன்று காங்கேசன்துறை துறைமுகம் நோக்கிச் சென்று கொண்டிருந்த சிறிலங்கா கடற்படையின் ”வலம்புரி” கப்பல், மற்றும் ”பபதா” படைக்காவிக் (தரையிறக்கம்) கப்பல் தொடரணியை பருத்தித்துறைக் கடற்பரப்பில் வைத்து வழிமறித்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி லெப். கேணல் கரன், கடற்கரும்புலி மேஜர் சுலோஜன், கடற்கரும்புலி மேஜர் வள்ளுவன், கடற்கரும்புலி மேஜர் தமிழினியன், கடற்கரும்புலி மேஜர் குமரேஸ், கடற்கரும்புலி மேஜர் தமிழ்மங்கை, கடற்கரும்புலி கப்டன் மொறிஸ், கடற்கரும்புலி கப்டன் மேகலா, கடற்கரும்புலி கப்டன் ஜனார்த்தினி, கடற்கரும்புலி கப்டன் வனிதா, கடற்கரும்புலி கப்டன் நங்கை ஆகிய கடற்கரும்புலி மாவீரர்களின் 22ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். ஏழு மணிநேரம் இடம்பெற்ற இந்தக் கடற்சமரின்போது தமிழர்களின் வீரம் மீண்டும் சிங்களத்திற்கு கடற்கரும்புலிகளால் புகட்டப்பட்டது. பல சாதனைகள் தடம் பதியப்பட்டும் சென்றது. இத் தாக்குதலில் 47 கடற்படையினர் கொல்லப்பட்டும் 62 கடற்படையினர் படுகாயமடைந்தும் கப்டன் தர அதிகாரி உட்பட சில கடற்படையினர் தமிழ்நாட்டுக்கு தப்பிசென்று பின்னர் விமானம் மூலம் கொழும்புக்கு அனுப்பிவைக்கப்பட்டார்கள் என்பதும் குறிப்பிடத் தக்கது. பவதா தரையிறங்கு கலம் மீதான தாக்குதல் மற்றும் , வலம்புரிக் கப்பல் மீதான தாக்குதலில்வெற்றிகளுக்கு வித்திட்டு கடலன்னை மடியில் உறங்கும் உயிராயுதங்கள்.! https://www.thaarakam.com/news/114421
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தமிழ் சிறி ஐயா! பிறந்தபோதே யாழில் இணைந்த ஒரேயோருவர் தமிழ் சிறி ஐயாதான்!
-
வான்கரும்புலி கேணல் ரூபன், வான்கரும்புலி லெப்.கேணல் சிரித்திரன் வீரவணக்க நாள்
வான்கரும்புலி கேணல் ரூபன், வான்கரும்புலி லெப்.கேணல் சிரித்திரன் வீரவணக்க நாள் இன்றாகும். வான்கரும்புலி கேணல் ரூபன், வான்கரும்புலி லெப்.கேணல் சிரித்திரன் வீரவணக்க நாள் இன்றாகும். சிறிலங்காவின் தலைநகரில் அமைந்துள்ள சிறிலங்கா வான்படை தலைமையகம் மீதும் கட்டுநாயக்காவில் அமைந்துள்ள வான்படை தளம் மீதும் 20.02.2009 அன்று மேற்கொள்ளப்பட்ட வான்கரும்புலி வெற்றிகரத் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட வான்கரும்புலி கேணல் ரூபன், வான்கரும்புலி லெப்.கேணல் சிரித்திரன் ஆகிய தமிழீழ விடுதலைப் புலிகளின் முதல் வான்கரும்புலி மறவர்களின் 11 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் அமைந்துள்ள சிறிலங்கா வான் படை தலைமையகம் மீதும் கட்டுநாயக்கவில் அமைந்துள்ள வான்படை தளம் மீதும் தமிழீழ விடுதலைப் புலிகளின் வான் புலிகளின் கரும்புலிகள் வெற்றிகரமான தாக்குதல்களை நடத்தியுள்ளனர். வான்படையின் தலைமையகமும் கட்டுநாயக்க வான்படை தளமும் தமிழ் மக்கள் மீதான வான் தாக்குதல்களுக்கு முக்கிய பங்கை வகிக்கும் வானூர்தி தளங்களாகும். தமிழ் மக்கள் தொடர்ச்சியான வான் குண்டுத் தாக்குதல்களுக்கு இலக்காகி பல நூற்றுக்கணக்கில் கொல்லப்படுவதற்கு இத்தளங்கள் முக்கிய பங்கை வகித்து வருகின்றமை என்பது இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும். தாயக விடுதலை வேள்வி தன்னில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…! “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” https://www.thaarakam.com/news/114089 உலகத் தமிழர்களை நோக்கி வான்கரும்புலி கேணல் ரூபன் எழுதிய மடலின் உணர்வின் வரிகள் ….! Last updated Feb 19, 2020 சிங்கள தலைநகரில் வான் வழியாக கரும்புலி தாக்குதல் நடாத்தி வீரச்சாவடைந்த கேணல் ரூபன் ‘தாக்குதலுக்கு முன்னதாக’ உலகத் தமிழர்களை நோக்கி எழுதிய மடலின் உணர்வின் வரிகள் ….! “தமிழர்களின் குரலை உலகம் செவிமடுக்கும் இன்றைய கட்டத்தில், விடுதலைப் புலிகளும் தமிழர்களும் வேறு வேறு அல்ல; இது ஒரு மக்கள் போராட்டம் என்று இந்த உலகத்திற்கு எடுத்துக் கூறுங்கள்” என அவர் உலகத் தமிழர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் தாக்குதல் நடத்திய வான் கரும்புலிகளில் ஒருவரான கேணல் ரூபன் தாக்குதல் நடத்துவதற்கு முன்னர் தமிழக மக்களுக்கும் புலம்பெயர் தமிழர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தின் முழு விவரம் வருமாறு: 15.02.2009 தமிழீழம். எனது அன்பிற்கும் பெருமதிப்பிற்குமுரிய தமிழக மக்களே மற்றும் புலம்பெயர் மக்களே! மாவீரர்கள் மாவீரர்களாகப்போகின்ற நாங்கள் உங்களிற்கு தலைவணங்குகின்றோம். நீங்கள் எழுச்சிகொண்டு உங்களது உறவுகளாகிய எமது மக்களின் அழிவைக்கண்டு நடத்தும் போராட்டங்களைக் கேட்டு மகிழ்ச்சியும் தன்னம்பிக்கையும் அடைகின்றார்கள். ‘ ஈகைத் தியாகி முத்துக்குமார் ‘ இட்ட தீ இன்று ஐ.நா வாசலில் கூட பரவியிருக்கின்றது. இப்பொழுது தான் தமிழரின் பிரச்சினை உலகத்தின் காதுகளில் விழத்தொடங்கியுள்ளது. எனவே எமது தமிழினத்தின் விடிவிற்கு நீங்கள் செய்யும் தொடர்ச்சியான போராட்டங்கள் பலம் சேர்க்கும். தமிழகத்தில் இருக்கும் அனைத்துக் கட்சிகளும் ஒன்று சேர்ந்து போராட வேண்டும். அப்போதுதான் மத்திய அரசின் உலகத்தின் ஐ.நாவின் காதுகளில் விழும். மனம் தளரவிடாதீர்கள். தொடர்ச்சியாக போராடுங்கள் தமிழ் மக்களிற்கு விடிவு வரும். புலம்பெயர் எமது உறவுகளே! நீங்கள் செய்த உதவிகளால் தான் எமது போராட்டம் வளர்ச்சியடைந்து நின்றது. அதனை தொடர்ச்சியாக செய்யுங்கள். விடுதலைப் புலிகள் வேறு மக்கள் வேறல்ல. இது மக்கள் போராட்டம் என்று உலகத்திற்கு எடுத்துக் கூறுங்கள். தினம் தினம் உங்களது உறவுகள் இங்கே கொல்லப்படுகின்றார்கள். அதிலும் கொடுமை இறந்தவரைக்கூட எடுத்து அடக்கஞ் செய்யமுடியவில்லை. மருந்தில்லை. உணவில்லை. உடையில்லை. உறையுளில்லை. எவ்வளவு கொடுமைகளை சிங்கள இராணுவம் அரசு செய்கின்றது. தமிழரை வவுனியா திறந்த சிறைச்சாலைக்கு வரவழைத்து தமிழினத்தை அழித்து சிங்கள இனத்தை உருவாக்கப்போகின்றது. வன்னியிலே இருந்து உலக நிறுவனங்களையும் கடைசியாக செஞ்சிலுவைச் சங்கத்தையும் வெளியேற்றி எமது மக்களின் அவலம் வெளியே தெரியாவண்ணம் மூடிமறைக்க முயல்கின்றது. விரைவிலே எமது மக்களிற்கு கொடிய நோய்கள் பரவப்போகின்றது. இவற்றை நீங்கள் உலகத்திற்கு தொடர்ச்சியாக போராடி எடுத்துக்கூறுங்கள். கேளுங்கள் தரப்படும் இல்லாவிட்டால் தட்டுங்கள் திறக்கப்படும். அன்புக்குரிய புலம்பெயர் வாழ் தமிழ்மக்களே! உலகத்தில் வாழ்ந்த யூத இன மக்கள் எல்லோரும் சேர்ந்து தங்களுக்கென்று இஸ்ரவேல் என்றொரு நாட்டை உருவாக்கியது போல் நீங்கள் எல்லோரும் சேர்ந்து தமிழீழத்தை அமைக்க உருவாக்க தயாராகுங்கள். எமது மாவீரர்களின் கனவை நனவாக்குங்கள். அதேபோன்று வன்னி மக்களுக்கும் கேணல் ரூபன் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தின் முழு விவரம் வருமாறு: 15.02.2009 தமிழீழம். அன்புள்ள எனது தமிழீழ மக்களே குறிப்பாக வன்னியில் வாழும் மக்களே, நீங்கள் அனுபவிக்கும் கொடும் வலி கண்டு எனது மனம் குமுறுகிறது, கலங்குகின்றது. எமது மக்கள் சுதந்திரமாக வாழவேண்டும் என்றுதான் எமது தேசியத் தலைவர் போராட்டத்தைத் தொடங்கினார். அவ்வேளை நீங்கள் தான் அவரிற்கு உத்வேகம் கொடுத்து ஆதரித்து போராட்டத்திற்கு வலுச்சேர்த்து உங்கள் பிள்ளைகளை போராட்டத்தில் இணைத்து எமது அமைப்பை வளரச் செய்தீர்கள். நாம் காலங்காலமாக வாழ்ந்த மண்ணில் சுதந்திரமாக வாழத்தான் ஆசைப்பட்டோம். அது தவறா? உலகத்தில் வாழும் மக்களில் எமது தமிழ் இன மக்களின் உயிர் உயிரில்லையா? எவ்வளவோ நாடுகள் சுதந்திரம் அடைந்ததற்கு காரணமாக இருந்த உலக நாடுகள் எமது தமிழினத்தை மட்டும் சிங்கள தேசம் அழிக்கவிட்டு வேடிக்கை பார்ப்பதன் காரணம் தான் எனக்குப் புரியவில்லை. அன்புக்குரிய மக்களே! எமக்காக தமிழகத்தில் இருக்கும் மக்களும் புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் இருக்கும் மக்களும் உங்களின் விடிவிற்காக தீக்குளிப்புக்களிலும் பல வகையான அகிம்சைப் போராட்டங்களையும் நடத்தி வருவது உங்களிற்கு தெரிந்ததே. அவர்களால் வெளியே இருந்து செய்யக் கூடியதை செய்கின்றார்கள். நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் உங்களை போராட்டத்தில் இணைத்து உங்கள் விடிவிற்கான இறுதிப்போரில் போராட வேண்டும். தேசியத் தலைவரின் கைகளைப் பலப்படுத்த வேண்டும். அன்புக்குரிய மக்களே! எதிரியானவன் பல்வேறு சூழ்ச்சிகள் செய்து அதாவது படிப்படியாக உங்களை உங்களது இடங்களில் இருந்து இடம்பெயர வைத்து உணவுத்தடை, மருந்துத்தடை போட்டு உங்களின் மேல் குண்டுமழை பொழிந்து தினம் சாவுக்குள் வாழவைத்து, பாதுகாப்பு வலயம் என அறிவித்து அதற்குள் உங்களை விட்டு குண்டுமழை பொழிந்து உங்கள் உறவுகளை கொன்று உங்களை தனது திறந்த சிறைச்சாலைக்கு வரச்செய்கின்றான். ஏன் தெரியுமா? யூத இனத்தை கிட்லர் பல வதைமுகாம்களை அமைத்து யூத இனத்தை அழித்ததுபோல் மகிந்தவும் உங்களை அழிக்கப்போகின்றான். அது தெரியாமல் நீங்கள் அதற்குள் அகப்படக்கூடாது. கோத்தபாய இராணுவத்திற்கு கூறியிருப்பது தெரியுமா? தமிழரில் பெண்கள் உங்களுக்கு ஆண்கள் கடலிற்கு என்று. அதனடிப்படையில் இங்கிருந்த எத்தனை பெண்கள் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு இராணுவ மருத்துவமனைகளில் இராணுவத்தை பராமரிப்பதற்கு விடப்பட்டுள்ளர்கள் என்று தெரியுமா. இதைவிட எவ்வளவோ கொடும் செயல்கள் வெளியே தெரியாவண்ணம் உள்ளது. அன்புக்குரிய மக்களே! எமக்கு இந்த இழிவுநிலை தேவையா? நிச்சயமாக இதை நீங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டீர்கள். ஏனென்றால் அதற்காக தான் நீங்கள் போராடி வருகின்றீர்கள். அதற்காக 24,000 மேற்பட்ட மாவீரர்களை அர்ப்பணித்திருக்கின்றீர்கள். இவர்கள் யார் போராளிகளாக பிறந்தவர்களா இல்லை. காலம் தான் போராளிகளாக்கியது. போராளிகள் பிறப்பதில்லை அவர்கள் உருவாக்கப்படுகின்றார்கள். யார் உருவாக்கியது. சிங்கள தேசம் எமக்குரியதை தந்திருந்தால் எமது தேசியத்தலைவர் ஆயுதமேந்த தேவை ஏற்பட்டிருக்காது. அன்புக்குரிய மக்களே! நாம் விரும்பியோ விரும்பாமலோ எம்மை போராட சிங்களதேசம் பணித்து விட்டது. 30 வருடங்களாக போராடி உங்களது இறுதி இலட்சியமாம் தமிழீழத்தை அடையும் நேரம் வந்திருக்கும் வேளை நீங்கள் போராட்டத்தை விடப்போகின்றீர்களா? உங்கள் விடிவிற்காக நீங்கள்தான் போராட வேண்டும். நீங்கள் போராடாவிட்டால் உங்களுக்காக யார் போராடுவது? If we don’t fight for our freedom who else will? வன்னியில் இருக்கும் 250,000 பேரில் 50,000 பேர் போராட வலுவில்லாமலா இருக்கிறீர்கள்? சிந்தித்து பாருங்கள் 50,000 இளைஞர் யுவதிகள் போராட்டத்தில் இணைந்து போராடினால் சிங்கள இராணுவம் வந்த இடம் தெரியாமல் பறந்திடும். அன்புக்குரிய தம்பி, தங்கை அக்கா அண்ணா உறவுகளே! போராட்டத்திற்கு வயதெல்லை கிடையாது வயது பார்த்தா இராணுவம் உங்களை கொல்கின்றது. 1990 ஆம் ஆண்டு 14 வயதில் நான் போராட புறப்பட்டேன். காரணம் இடப்பெயர்வு பாடசாலை இல்லை. நாம் நிம்மதியாக வாழ எமக்கென்று ஒரு தேசம் வேண்டுமென்பதால் நீங்களும் அதேபோல்தான் நினைப்பீர்கள். உங்களது வலியை நேரில் தினம் தினம் கண்டு மனம் வெதும்பி குமுறுவதுபோல் இன்னொன்றையும் நினைத்து குமுறுகிறது. நீங்கள் தாங்குகின்ற வலியை உங்களது வயதில் நான் தாங்கவில்லை அப்படியிருந்தும் என்னைப் போராட உந்தியது. ஆனால் நீங்கள் எவ்வளவோ வலியை ஏற்படுத்திய சிங்கள இராணுவத்திற்கு எதிராக போராட ஏன் இன்னும் கிளர்ந்தெழாமல் இருக்கின்றீர்கள் என்பதை நினைக்க நினைக்க மனம் வெதும்புகின்றது. சிங்கள இராணுவம் ஏற்படுத்திய வலி காணாதா? இன்னும் வலியை ஏற்படுத்தினால் தான் நீங்கள் போராடுவீங்களா? அன்புக்குரிய மக்களே! எமது தேசியத் தலைவர் காலத்தில் நீங்கள் சுதந்திரம் அடையாவிட்டால் ஒரு காலமும் நீங்கள் சுதந்திரமாக வாழமாட்டீர்கள் என்பதை தெளிவாக புரிந்துகொள்ளவேண்டும். தமிழீழ தேசியத் தலைவர் கூறியது போல் ‘ஒரு விடுதலை இயக்கம் தனித்து நின்று போராடி விடுதலையை வென்றெடுத்ததாக வரலாறு இல்லை. ஒரு விடுதலை இயக்கத்தின் பின்னால் மக்கள் சக்தி அணிதிரண்டு எழுச்சி கொள்ளும் பொழுதுதான் அது மக்கள் போராட்டமாக- தேசியப் போராட்டமாக முழுமையும் முதிர்ச்சியும் பெறுகின்றது. அப்பொழுதுதான் விடுதலையும் சாத்தியமாகின்றது.’ ‘கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்’ கேட்டோம் தந்தார்களா? இல்லை என்னத்தை தந்தார்கள் தாங்கொணா வலியை தந்தார்கள். அதன்பின்னர் என்னசெய்ய வேண்டும் தட்டுங்கள் நிச்சியமாக திறக்கப்படும். அன்புக்குரிய மக்களே! எல்லோரும் சேர்ந்து ஆயுதம் ஏந்தி விசைவில்லை தட்டுங்கள் நிச்சியமாக சுதந்திரம் கிடைக்கும். அன்புக்குரிய மக்களே! தமிழரிற்கு இருந்த போர்க்குணம் குன்றிவிட்டதா இல்லை. அதை நீங்கள் இன்னும் வெளிக்காட்டவில்லை. அந்தத் தருணம் வந்துவிட்டது. நான் யார்? நாங்கள் யார்? உங்களது பிள்ளைகள் நீங்கள் வளர்த்துவிட்டவர்கள் நாங்கள் வெளிநாடுகளில் இருந்து வந்து போராடவில்லை. எனவே அன்புக்குரிய தாய்மாரே! தந்தைமாரே! எனது குடும்பத்தில் ஒரு மாவீரர் எனது குடும்பத்தில் இரு மாவீரர் என பார்க்காதீர்கள். போராட வலுவுள்ள உங்களது பிள்ளைகளை நீங்கள்தான் அனுப்பி வைக்க வேண்டும். அப்பொழுதுதான் இளம் சந்ததிக்கு சுதந்திரமான வாழ்க்கையை அமைத்துக்கொடுக்கலாம். எமக்கென்று ஒரு தேசிய இராணுவத்தை கட்டி எழுப்புங்கள். இந்தப் பூமிப்பந்திலே இருப்பை, பலம் தான் தீர்மானிக்கின்றது. வலிந்தவன் பிழைப்பான் என்ற தத்துவத்திற்கேற்ப எல்லோரும் சேர்ந்து தேசியத் தலைவரின் கையை பலப்படுத்துங்கள். எம்மிடம் தேவையான ஆயுதம் உள்ளது. மிகுதி எதிரியிடம் உள்ளது. எமக்கு தேவையானது எல்லாம் ஆளணி ஒன்றுதான். பல மடங்கு கொண்ட ஆளணியையும் உலக நாடுகள் வழங்கும் இராணுவ தளபாடங்களையும் கொண்டுள்ள சிங்கள இராணுவத்திற்கு எதிராக குறைந்த ஆளணியை வைத்து இரண்டு வருடத்திற்கு மேலாக நாம் போராடுகின்றோம் என்றால் யாரிற்கு வெற்றி நீங்கள் நினைத்துப்பார்த்தீர்களா? நாங்கள் அழிவது போல் சிங்கள தேசமும் அழிந்துகொண்டுதான் இருக்கின்றது பொருளாதாரத்தில், இந்தத் தருணம் நீங்கள் திரண்டெழுந்து ஓங்கி ஒரு அடி அடித்தால் எழும்ப முடியாமல் சிங்களம் நொருங்கும். அன்புக்குரிய இளைஞர் யுவதிகளே! உங்களிற்கு உங்களது பெற்றோரை பார்க்கும் பொறுப்பு இருக்கு என்பது தெரியும் தாய் தந்தைமாரை காப்பாற்ற வேண்டும் என்றால் தாய்நாட்டை காப்பாற்றினால் தான் முடியும். இது கற்பனையல்ல இதுதான் நிஜம். நாம் எவ்வளவு காலம் சாவிற்குள் வாழ்வது? தினம் தினம் செய்தியில் சிங்கள இராணுவத்தின் எறிகணை வீச்சில் வான் தாக்குதலில் இத்தனைபேர் படுகொலை செய்யப்பட்டு காயப்பட்டுள்ளனர் என்பதை தான் கேட்கின்றோம், பார்க்கின்றோம். இவர்களில் அரைவாசிப்பேர் போராட வலுவுள்ளவர்களாகத்தான் இருக்கின்றார்கள் அந்த வயதில் இவர்கள் ஏன் அநியாயமாக சாகவேண்டும். செத்தவர்கள் வீதியோரங்களிலும் காணிகளிலும் புதைக்கப்படுகின்றார்கள். ஏன் இந்த அவலம். இவர்கள் எல்லாம் எமது அமைப்பில் இணைந்து ஆயுதம் ஏந்தி இராணுவத்தை கொன்று வீரச்சாவு அடைந்தால் தமிழன் வீரத்தோடு வாழ்ந்தான் அல்லது வீரத்தோடு மடிந்தான் என்று வரலாறு சொல்லும். அன்புக்குரிய மக்களே! சுதந்திரத்திற்கான காலம் கனிந்துகொண்டிருக்கின்றது. வெண்ணை திரண்டுவரும்பொழுது பானையை போட்டு உடைத்துவிடாதீர்கள். ஒவ்வொருவரும் தன்நம்பிக்கையாக இருங்கள். உங்களது இன்னல்கள் வலியை கண்டுதான் தலைவர் போராட்டத்தை தொடங்கினார். உங்களிற்கு ஏற்படும் வலியைக் கண்டு அவரது மனம் அப்பொழுதிலிருந்து இப்பொழுதுவரை குமுறிக்கொண்டுதான் இருக்கிறது. அதில் எள்ளளவும் குறையவில்லை. நாங்கள் (மாவீரர்கள்) திரும்பத் திரும்ப உங்களிடம் கேட்பது எல்லாம் தலைவரை பாதுகாக்குங்கள். அவரின் கையை பலப்படுத்துங்கள். உங்கள் பிள்ளைகளை போராட விடுங்கள். தலைவர் நிச்சியமாக உங்களிற்கு சுதந்திரம் பெற்றுத்தருவார். எமக்கும் சிங்கள இராணுவத்திற்கும் தான் யுத்தம் சிங்கள மக்களுக்கல்ல. ஆனால் இராணுவமோ எமது மக்களை குண்டு வீசி கொல்கின்றது. எமக்கும் சிங்கள மக்களை கொல்ல முடியும். சிங்கள மக்கள் இதை தெளிவாக புரிந்துகொள்ளவேண்டும். ஆனால், நாம் அப்படிச் செய்யவில்லை. நாம் தலைவரை சந்தித்து குண்டு போடப்போகும் பொழுது திரும்பத் திரும்ப வலியுறுத்துவது மக்கள் மீதோ மருத்துவமனைகள் மீதோ தவறியும் குண்டு போடாதீர்கள் என்று. ஆனால் சிங்கள வான் கழுகுகள் எமது மக்களையும் மருத்துவமனைகளையும் தேடித் தேடி குண்டு போடுகின்றது. நாம் சிங்கள தேச மக்களுக்கு ஒன்றை தெளிவாக சொல்ல விரும்புகின்றோம். தமிழினத்தை அழித்துவிட்டு நீங்கள் நிம்மதியாக வாழலாம் என்று கனவு காணாதீர்கள். எமது தலைவிதியை நாமே தீர்மானித்து உங்களுடன் ஒற்றுமையாக வாழத்தான் நாங்கள் விரும்புகின்றோம். இதைத்தான் நாங்கள் திரும்பத் திரும்ப வலியுறுத்தி வருகின்றோம். நாம் எமது மண்ணில் சுதந்திரமாக வாழத்தான் ஆசைப்படுகின்றோம். அன்புக்குரிய வன்னிவாழ் மக்களே! நாம் சிங்கத்தின் குகைக்குள் வெடி சுமந்து போகின்றோம். நாம் யார், தமிழன் யார் எனக் காட்டுவோம். நான் எப்பொழுதும் அநியாயமாக சாவதை விரும்பியதில்லை. அந்த வகையில் நான் மாவீரனாக அதிலும் கரும்புலி வீரனாக எனது தாய்நாட்டிற்கும், மக்களிற்கும் பெருமை சேர்ப்பதை நினைத்து நான் பெரும் மகிழ்ச்சியடைகின்றேன். திலீபன் அண்ணை கூறியது போல்…. “மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் அமையும்” “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் தமிழரின் தாகமும் அதுதான்” இப்படிக்கு, தம்பி, அண்ணா, மகன், போராளி இ.ரூபன். https://www.thaarakam.com/news/114093
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அகஸ்தியன், நுணாவிலான்🎉🎉🎉
-
எதிரியின் பல முன்னேற்றங்களை தடுத்து நிறுத்தி கடுஞ்சமர் புரிந்த லெப். கேணல் வீரமைந்தன்
எதிரியின் பல முன்னேற்றங்களை தடுத்து நிறுத்தி கடுஞ்சமர் புரிந்த லெப். கேணல் வீரமைந்தன் On Feb 13, 2020 லெப். சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி தாக்குதல் தளபதி லெப்டினன்ட் கேணல் வீரமைந்தன். கிளிநொச்சி மாவட்டம் கோணாவில் கிராமத்தைச் சேர்ந்த கந்தசாமி மங்களேஸ்வரன் என்ற இளம் மாணவன் தாயக விடுதலையில் வேட்கை கொண்டு, 1998 ம் ஆண்டு துவக்கத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்தான். அடிப்படைப் பயிற்சிகளை முடித்துக் கொண்டு வீரமைந்தன் என்ற இளம் போராளியாக கடற்புலிகளில் இணைக்கப்பட்டான். விசேட பயிற்சிகளை பெற்றுக் கொண்ட வீரமைந்தன் , புங்குடுதீவு சிறிலங்கா கடற்படை மீதான தாக்குதலில் தனது கன்னிச் சமரை தொடங்கி திறமுடன் செயற்பட்டான். தொடர்ந்து எமது கடற்பரப்பில் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டான். பின்னர் தரைத் தாக்குதல் விசேட பயிற்சிகளில் ஈடுபடுத்தப்பட்டு 1999 ம் ஆண்டு சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியில் இணைக்கப்பட்டான். ஊரியான் பரந்தன் முன்னரங்கில் படையணியின் வீரமணி கொம்பனியில் ஒரு செக்சன் லீடராக வீரமைந்தன் தனது களச் செயற்பாடுகளைத் துவங்கினான். பாதுகாப்பு கடமைகளிலும் பயிற்சிகளிலும் திறமுடன் செயற்பட்ட வீரமைந்தன் சிறப்புத் தளபதி ராகவன், துணைத் தளபதி ராஜசிங்கம் ஆகியோரின் பாராட்டுக்களை பெற்ற அணித் தலைவராக வளர்ந்தான். 1999ல் பரந்தன் பகுதிகளில் எதிரி மேற்கொண்ட பாரிய இராணுவ நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புச் சமரில் படையணியின் தளபதி விமலன் அவர்களின் கட்டளையில் திறமுடன் களமாடினான் . சுட்டத்தீவு வரையிலான முன்னரங்க பகுதிகளில் பாதுகாப்பு கடமைகளில் தனது செக்சனை திறமுடன் ஈடுபடுத்தினான் . கொம்பனி லீடர் இராசநாயகத்தின் பொறுப்பில் தடையுடைப்பு அணியில் பங்கேற்று தீவிர பயிற்சிகளில் ஈடுபட்டு தனது திறன்களை மேலும் வளர்த்துக் கொண்டான். படையணியின் போர்ப் பயிற்சி ஆசிரியர்கள் வரதன் முதலானோர் நடத்திய இளம் அதிகாரிகளுக்கான பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு சிறந்த இளம் அணித் தலைவனாக வளர்ந்தான். “ஓயாத அலைகள் – 03” நடவடிக்கை துவங்கிய போது, வீரமைந்தன் தடையுடைப்பு அணியில் செக்சன் லீடராக கடுஞ்சமர் புரிந்தார். அம்பகாமம், கறிப்பட்டமுறிப்பு களங்களில் தீரமுடன் செயற்பட்ட வீரமைந்தன், இச் சமரில் படுகாயமுற்று சில மாதங்கள் சிகிச்சையில் இருந்தார். உடல் நலம் பெற்று களமுனைக்கு திரும்பிய வீரமைந்தன் ஆனையிறவு மீட்புச் சமரில் திறமுடன் செயற்பட்டார். 2000ம் ஆண்டு படையணியின் சிறப்புத் தளபதி சேகர் அவர்களின் கட்டளையில் நாகர்கோவில் பகுதியில் மேற்கொண்ட வலிந்த தாக்குதல் நடவடிக்கைகளில் தீவிரமாக களமாடிய வீரமைந்தன் காலில் படுகாயமுற்று சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு மிக மோசமாக சிதைந்த நிலையில் பல மாதங்கள் ஓய்வில் இருக்க வேண்டியேற்பட்டது. படையணியின் மேஜர் பிரியக்கோன் மருத்துவ தளத்தில் வீரமைந்தன் தங்கியிருந்த நாட்களில் அழகாக ஓவியங்கள் வரைவதிலும் வெற்றுப் போத்தல்கள் போன்ற கழிவுப் பொருட்களைக் கொண்டு அழகிய கலைப் பொருட்களைக் செய்வதிலும் தனது நேரத்தை செலவிட்டார். தன்னுடன் இணைந்து போராடி வீரச்சாவைத தழுவிக் கொண்ட மாவீரர்களின் நினைவாக பல ஓவியங்களை வரைந்து எமது தளங்களை அழகுபடுத்தினார் . படையணி போராளிகளால் நடத்தப்பட்ட ” அக்கினி வீச்சு ” கையெழுத்து இதழ் வீரமைந்தனின் அழகிய ஓவியங்களைத் தாங்கி வந்து, போராளிகளிடையே பெரும் வரவேற்பையும் பாராட்டையும் பெற்றன. 2001 ம் ஆண்டு படையணியின் பத்தாண்டுகள் நிறைவின் போது, சிறப்பாக செயற்படடவர்களுக்காக தேசியத் தலைவரால் வழங்கப்பட்ட சிறப்புச் சான்றிதழய வீரமைந்தன் பெற்றார். 2002 ம் ஆண்டு போர் நிறுத்தம் அமலில் இருந்த காலத்தில் வீரமைந்தன் வட்டக்கச்சியில் புதிய மருத்துவ தளம் அமைக்கும் பணியில் கடமையாற்றினார். தொடர்ந்து பிரபல்யன் மருத்துவ தளத்தின் பொறுப்பாளராக செயற்பட்டார். தளபதி கோபித் அவர்களின் வழிநடத்தலில் படையணியின் மருத்துவ பொறுப்பாளர் கடற்கதிருடன் இணைந்து காயமடைந்த போராளிகளுக்கு சிகிச்சை அளித்து பராமரிப்பதில் திறமுடன் கடமையாற்றினார். பின் தள நிர்வாகத்தில் பல்வேறு கடமைகளில் நின்ற நவக்குமார் , ரகுராம், குமுதன், தமிழரசன், முல்லை, ஈழப்பருதி, வைத்தி, சிலம்பரசன், தேவமாறன், யாழின்பன், மதன், முதலானோருடன் இணைந்து பல கடமைகளில் செயற்பட்டார். தாக்குதலணி பின்தளத்திற்கு வரும் ஒவ்வொரு முறையும் தளபதிகளின் வழிகாட்டுதல் படி கலை நிகழ்ச்சிகளையும் பயிற்சி வகுப்புகளையும் திறம்பட ஒழுங்குபடுத்தி நடத்துவதில் மிகுந்த விருப்புடன் செயற்பட்டு போராளிகளின் அன்பையும் பாராட்டையும் பெற்ற பொறுப்பாளராக வீரமைந்தன் திகழ்ந்தார். மேலும் தனது சக தோழன் கப்டன் இளஞ்சுடர் அவர்களின் களச் செயற்பாடுகளை களப் படப்பிடிப்பாளர் தமிழவள் மற்றும் இசைப்பிரியாவுடன் இணைந்து துயிலறைக் காவியம் நிகழ்ச்சியில் பதிவு செய்தார். 2005ம் ஆண்டு வீரமைந்தன் மீண்டும் தாக்குதலணிக்கு வந்துவிட்டார். பிரிகேடியர் தீபன் அவர்களின் G-10 போர்ப்பயிற்சி கல்லூரியில் தாக்குதலணியில் பிளாட்டூன் லீடராக கடமையேற்று தன் களச் செயற்பாடுகளை தொடர்ந்தார். இன்னும் நேராக நிமிர்ந்து நடக்க முடியாத உடல்நிலையிலும் தளபதிகள் மற்றும் சக தோழர்களின் மிகுந்த ஊக்கத்தினால் வீரமைந்தன் தனது பிளாட்டூனை பயிற்சிகளிலும் பாதுகாப்பு கடமைகளிலும் திறமுடன் நடத்தினார். முகமாலை கண்டல் முன்னரங்கிலும் நாகர்கோவில் முன்னரங்கிலும் பாதுகாப்பு பணியில் சிறப்புடன் செயலாற்றினார். இந் நாட்களில் வீரமைந்தன் இடையறாது தொடர்ந்து நடந்து நடந்து திரிந்ததால் அவருடைய கால் அங்கவீனம் கொஞ்சம் கொஞ்சமாக சரியாகி நேராக நிமிர்ந்து நடக்கலானார். படையணியின் போர்ப் பயிற்சி ஆசிரியர்கள் தென்னரசன், பாவலன் முதலானோருடன் இணைந்து தனது அணியை பல்வேறு சிறப்பு பயிற்சிகளில் தொடர்ந்து ஈடுபடுத்தினார். 2006 ம் ஆணடில் முகமாலை களமுனையில் யுத்தம் மூண்டபோது வீரமைந்தன், படையணியின் தாக்குதல் தளபதி அமுதாப்புடன் நாகர்கோவில் களமுனையில் நின்று செயற்பட்டார். பின்னர் சிறப்புத் தளபதி கோபித்தின் வழிநடத்தலில் கொம்பனி லீடராக பொறுப்பேற்று இளம் போராளிகளுக்கு சிறப்புப் பயிற்சிகளை வழங்குவதில் ஓய்வின்றி செயற்பட்டார். இந் நாட்களில் இவருடைய இணைபிரியா தோழன் செல்லக்கண்டு இவருடன் நின்று பல்வேறு கடமைகளில் திறமுடன் கடமையாற்றினார். 2007ம் ஆண்டு அமுதாப்புடன் இணைந்து கொம்பனி லீடராக செயற்பட்ட வீரமைந்தன், மன்னார் களமுனையில் சிறப்புத் தளபதி கோபித் அவர்களால் களமிறக்கப்பட்டார். இங்கு எதிரியின் பல முன்னேற்றங்களை தடுத்து நிறுத்தி கடுஞ்சமர் புரிந்தார். தாக்குதல் தளபதியாக வளர்ந்த வீரமைந்தன், தனது சக தோழர்கள் சோழநேயன், வாணன், செல்லக்கண்டு முதலானோருடன் இணைந்து சிறந்த பாதுகாப்பு வியூகங்களை உருவாக்கி எதிரியின் முன்னேற்றத்தை பல மாதங்கள் தடுத்து நிறுத்தினார். மன்னார் பெரிய தம்பனை பகுதியில் சிறிலங்கா படையினர் தொடர்ச்சியாக மேற்கொண்ட பாரிய ஆக்கிரமிப்பு நகர்வை வீரமைந்தன் மிகுந்த மன உறுதியுடனும் அசாத்தியமான வீரத்துடனும் தடுத்துப் போராடி மாபெரும் வெற்றிகளைப் பெற்று எமது இயக்கத்தின் வீரமரபுக்கு பெருமை சேர்த்தார். 2008 ம் ஆண்டு துவக்கத்தில் பனங்காமம் களமுனையில் எதிரி பாரிய ஆக்கிரமிப்புக்கான தயார்படுத்தலை மேற்கொண்டதை தொடர்ந்து, அங்கு கடமையிலிருந்த தாக்குதல் தளபதி செங்கோலன் அவர்களுடன் இணைந்து பணியாற்ற வீரமைந்தன் பனங்காமத்திற்கு அனுப்பப்பட்டார். அங்கு உடனடியாகவே தனது அதிரடிச் செயற்பாடுகளைத் துவங்கிய வீரமைந்தன், செங்கோலனின் கட்டளையில் எமது முன்னரண் பகுதிகளைப் பாதுகாப்பதற்கான விரிவான திட்டத்தை உருவாக்கி செயல்படுத்தினார். படையணியின் மூத்த அணித் தலைவர்கள் ஜெயசீலன், பகலவன் (மாவைநம்பி ), படைய ரசன், புயலரசன், செல்லக்கண்டு, கரிகாலன் முதலானோருடன் இணைந்து பல முறியடிப்புத் தாக்குதல்களை வெற்றிகரமாக நடத்தினார். ஏராளமான கிளைமோர்களையும் நிலக் கண்ணிவெடிகளையும் கையாண்டு, குறைந்தளவிலான போராளிகளைக் கொண்டு பெரும் பிரதேசத்தை பாதுகாத்து நின்றார். இவ்வாறானதொரு திட்டத்தின் படி எதிரிக்கு மிக நெருக்கமான பகுதியொன்றில், வீரமைந்தன் தனது குழுவுடன் கண்ணிவெடிகளை நிலைப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டிருந்த போது, எதிரி திடீரென ஒரு நகர்வை மேற்கொண்டான். வீரமைந்தன் உடனடியாக முறியடிப்புத் தாக்குதலை தீரமுடன் நடத்தினர். இந்த வீரம்மிக்க தாக்குதலில் படுகாயமடைந்த வீரமைந்தன் அங்கே வீரச்சாவைத தழுவிக் கொண்டார. இளம் வயதிலேயே தாயக விடுதலை வேட்கையுடன் புலிகள் இயக்கத்தில் இணைந்த வீரமைந்தன், பலமுறை படுகாயங்களுக்கு உள்ளாகியும் இறுதிவரை உறுதியுடன் போராடினார். தனது சக போராளிகளிடம் மிகுந்த அன்பும் சகோதரனுக்குரிய பரிவும் கொண்ட வீரமைந்தன் சிறந்த போராளிக் கலைஞனாகவும் திகழ்ந்தார். இவருடைய சீரிய செயற்பாடுகளுக்காக எமது தேசியத் தலைவராலும், கட்டளைத் தளபதிகள் பால்ராஜ், ஜெயம் ஆகியோராலும் பாராட்டப் பெற்ற போராளியாக வீரமைந்தன் விளங்கினார். எமது மண்ணையும் மக்களையும் ஆழமாக நேசித்த வீரமைந்தன் பல்லாயிரக்கணக்கான மக்களின் பேரன்பைப் பெற்ற போராளியாக திகழ்ந்தார். லெப். சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் புகழ்பூத்த தாக்குதல் தளபதிகளுள் ஒருவராக விளங்கிய லெப்டினன்ட் கேணல் வீரமைந்தன் அவர்களின் உற்சாகம் பொங்கும் வரலாறு தமிழினத்தின் வீரமரபாக என்றும் நிலைத்திருக்கும். “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” நினைவுப்பகிர்வு: பெ.தமிழின்பன். https://www.thaarakam.com/news/113368
-
மரணித்தது மரணமே கௌசல்யன் அல்ல.!
மரணித்தது மரணமே கௌசல்யன் அல்ல.! Last updated Feb 6, 2020 கௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. 2005 பெப்ரவரி 7 சிங்களப் பேரினவாதமானது தமிழினத்தின் தேசிய ஆன்மாவில் விழுத்திய ஆழமான வடுக்கள் ஒருபோதும் மாறப்போதில்லை. ஒரு விடுதலை வீரனின் சாவு ஒரு சாதாரண் மரண நிகழ்வல்ல. அந்தச் சாவு ஒரு சரித்திர நிகழ்வு. ஒரு உன்னத இலட்சியம் உயிர் பெறும் அற்புதமான நிகழ்வு. உண்மையில் ஒரு விடுதலை வீரன் சாவதில்லை. அவனது உயிராக இயங்கி வந்த இலட்சிய நெருப்பு என்றுமே அணைந்து விடுவதில்லை. அந்த இலட்சிய நெருப்பு ஒரு வரலாற்றுச் சக்தியாக மற்றவர்களைப் பற்றிக் கொள்கின்றது. ஒரு இனத்தின் தேசிய ஆன்மாவைத் தட்டியெழுப்பிவிடுகின்றது. – தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள். அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. சேக்ஸ்பியர் என்னும் மாபெரும் மனிதன் மனிதத்தின் ஆழங்களையெல்லாம் ஊடுருவிய ஓரு உன்னதப் பிறவி. யலிய சீசரின் படுகொலையை பலவாறு விளக்கும் போது எல்லாவிதமான குரூருங்களில் இது மிகவும் ஈவிரக்கம் அற்ற வெட்டு எனக் குறிப்பிடுவர். கட்டுறுதி உள்ள உடல். கண்ணிலே நல்ல குணம். புன்னகை தவழும் முக அழகு. சு.ப தமிழ்செல்வன் கூறியதுபோல் எங்கள் செல்லப்பிள்ளை. பொருவில் அன்புருவமானவன். அந்த அன்பின் வடிவத்தை காணப்பெற்றவர்கள் பாக்கியசாலிகள். நிராயுதபாணியாக வீர அபிமன்னுவாக அவன் நின்றபோது ஆயுதம் தரித்த சிங்களபேரினவாதம் தமிழ் துரோகிகளின் பெயரில் கௌசல்லியனை படுகொலை செய்துள்ளனர். அன்று புலேந்திரன், குமரப்பா, பின்பு கிட்டு என்னும் சகாப்தம். இன்று கௌசல்யன். இவர்களின் மறைவுகளுக்குப் பின்னால் பலவீனமான ஈனப்பிறவிகளின் செயல்பாடுகள் எம் கண்முன்னே விரிகின்றன. ஆயின் இவர்கள் இழப்புக்கள் எல்லாம் எதிரிகள் நினைத்ததிற்கு மாறாக தமிழ் தேசியத்தை தமிழர் தாயகக்கோட்பாட்டை மேலும் வலுப்பெறச் செய்துள்ளன என்பதே இன்றைய யதார்த்தமாகும். சி.சிவசேகரம் என்னும் கவிஞன் யாரை உள்வாங்கி எழுதினானோ நான் அறியேன் . ஆயின் அவர் குறிப்பிடும் கவிதை வரிகளான .”…………ஆழக்கிடங்கினின்று அலைகடலின் கீழிருந்து விலங்கின் குடல் கிழித்து வானவெளஹ கடந்து சுட்டெரித்த சாம்பலின் , பீனிக்ஸ் பறவையென வெட்டுண்டு கீழ் வழிந்த குருதித் துளியுயிர்த்து சஞ்சீவி மாமலையின் காற்றுறிஞ்சி நான் வருவேன். அறைகின்ற சிலுவைகளில் மரித்து உயிர்த்தெழுவேன் வானளந்து நான் வருவேன் தூண்பிளந்து நான் வருவேன் நீ நம்ப மறுக்கின்ற கதையெல்லாம் நிசமாக்க விடுதலையும் சமத்துவமும் முழங்குமொவ்வோர் மு~ச்சினிலும் அடிமைத்தனத்துடனே அடக்குமுறை உள்ளவரை மறுபடியும் மறுபடியும் மறுபடியும் நான் வருவேன்……” என்னும் கவிக்கோலங்கள் எங்கள் கௌசல்யனுக்காகவே எழுதப்பட்டதோ? ஆம் தமிழ் தேசியத்தின் மூச்சில், தமிழர் தாயகக்கோட்பாட்டில் அவன் சம்பவாமி யுகே யுகே. சேக்ஸ்பியர் கூறியதுபோல் …. . ”….He lives, he wakes, ’tis death is dead, not he..” கௌசல்யன் வாழ்கிறான். அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. 2005 பெப்ரவரி 7ம் திகதி தமிழர் தாயகத்தின் சோக நாள். தமிழீழ விடுதலை வரலாற்றில் விடுதலைக்காக நின்ற லெப்.கேணல் கௌசல்யன் மாமனிதர் சந்திரநேரு மற்றும் மூன்று மாவீரர்களையும் சிங்களப் படையினருடன் சேர்ந்தியங்கும் தேசவிரோதக் கும்பல் கோழைத்தனமாகக் கொன்று இரத்த வெறி தீர்த்த அந்த துயரச் சம்பவம் நடந்து ஆண்டு பதின்மூன்று இன்னமும் தாயக மக்களிடையே கௌசல்யன் என்ற அந்த வீரமறவனின் அர்ப்பணிப்பு மிக்க சேவையும் தியாகமும் மாறாது மனக் கண் முன்னே நிற்கின்றது. லெப்.கேணல் கௌசல்யன் கொக்கட்டிச்சோலை பண்டாரியாவெளியை பிறப்பிடமாகக் கொண்டவன். தமது பாடசாலைப் பருவம் அது சிங்கள வெறி இராணுவம் தமிழர் தாயகத்தில் தமிழின அழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டமை இந்த கௌசல்யன் மனதை சுட்டெரித்தது. தேசியத் தலைவனின் விடுதலைப் போராட்டம் அவனை ஈர்த்தது. இதன் விளைவாய் இவன் விடுதலைப் போராட்டத்தில் இணைகிறான். மனோ மாஸ்டரின் தலைமையில் அவரது இராணுவப் பயிற்சிக் கல்லூரியில் பயிற்சி பெற்ற கௌசல்யன் எதிரிக்கு எதிராக தமது வீரத்தினை உறுதிப்படுத்தினான். பரந்த அறிவும் துடுதுடுப்பும், அர்ப்பணிப்பும் விடுதலை மீதான தாகமும் கௌசல்யனை மிகச் சிறந்த போராளியாக மெருகூட்டியது. காலவோட்டத்தில் மட்டு அம்பாறை மாவட்டத்தின் நிதித்துறைப் பொறுப்பாளராக சிறந்த முறையில் பணியாற்றிய இவன், பின்னர் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டத்தின் அரசியல்த்துறைப் பொறுப்பாளராக பொறுப்பினை ஏற்கிறான். போர்ச் சூழலில் தமிழ் முஸ்லிம் சமூகங்களிடையே இருந்த கசப்புணர்வினை மாற்றி முஸ்லிம் சகோதர்களுடன் நட்புறவை, இன ஐக்கியத்தை வளர்பதற்காக கௌசல்யன் அரும்பாடுபட்டான். காலவோட்டத்தில் தமிழ் பேசும் உறவுகளிடையேயும் கௌசல்யன் காத்திரமான நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கினான். இது மாத்திரமின்றி மட்டு அம்பாறை மாவட்டம் போரினால் பாதிப்புற்று பொருளாதார வலுவுற்றுள்ள நிலையில் மாவட்டத்தை முன்னேற்றமடையச் செய்ய வேண்டும் அபிவிருத்தி அடையச் செய்ய வேண்டுமென்பதில் கௌசல்யனின் சிந்தனைகள்இ செயற்றிட்டங்கள் விசேடமானவை. ஒட்டுமொத்தத்தில் அன்பு பண்பு பாசம் அடக்கம் அறிவு வீரம் விவேகம் விடுதலை உணர்வு என அத்தனை சிறப்புக்களுக்கும் சொந்தக்காரனாக வலம் வந்த கௌசல்யன் அவர்கள் கடந்த 2004ம் ஆண்டு தமிழீழ விடுதலை வரலாற்றில் நம்பிக்கைத் துரோகம் மட்டுமல்ல தேசத்துரோகமிழைக்க முனைந்த கருணாவின் சதித்திட்டங்களை நன்கு உணர்ந்து கொண்டான். கருணா குறுகிய பிரதேசவாதத்தினூடாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தை களங்கப்படுத்த முனையக் கூடாது என்பதற்காகக் கருணாவின் சதித்திட்டங்களிலிருந்து விடுபட்டு வன்னி செல்கிறனர். தேசியத் தலைவரிடம் கருணாவின் துரோகத்தனங்களை தெரியப்படுத்தினர். கருணாவின் பிரதேச வாதம் மற்றும் சதித் திட்டங்களை எல்லாம் முறியடித்ததுடன் மட்டுமன்றி மட்டக்களப்பு மக்களுக்கு உண்மை நிலைகளை புரிய வைத்து தெளிவுபடுத்தியிருந்தார். கருணாவின் துரோகத்தனம் முடிவுக்கு வந்த பிற்பாடு தமது அரசியல் பணிகளை மீளவும் முன்னெடுத்த கௌசல்யன் தமிழ் பேசும் சமூக ஒற்றுமைக்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு பல சந்திப்புக்களை முஸ்லிம் சகோதர்களுடன் ஏற்படுத்தி ஐக்கியத்தை வலுவூட்டுவதற்காக அரும்பாடுபட்டான். திடீரென எற்பட்ட சுனாமிப் பேரனர்த்தம் தமிழ் மனித இழப்பு பாதிப்பு அவலங்கள் எல்லாம் கௌசல்யனை மிகவும் வாட்டியது. துயர் துடைப்புப் பணிகளில் அதிக அக்கறையோடு செயற்பட்டார். இறுதியாக 2005ம் ஆண்டு பெப்ரவரி கிளிநொச்சி சென்றிருந்த கௌசல்யன் தேசியத் தலைவருடன் கலந்துரையாடிவிட்டு மட்டக்களப்பு நோக்கி வந்து கொண்டிருந்த போதுதான் அத்துயரச் சம்பவம் இடம்பெற்றது. 2005 மார்ச் 7ம் திகதி கிளிநொச்சியிலிருந்து மாமனிதர் சந்திரநேரு மற்றும் அரசியல்துறைப் போராளிகளுடன் தனியார் வேன் ஒன்றில் வந்து கொண்டிருந்த போது வெலிக்கந்தைப் பகுதியில் வைத்து சிறிலங்கா ஒட்டுபடைகளால் வழிமறிக்கப்பட்டு துப்பாக்கிப் பிரயோகம் செய்தபோது லெப். கேணல் கௌசல்யன் வீரச்சாவடைந்தான். இவனுடன் மேஜர் புகழவன் (சிவலிங்கம் சுரேஷ் தன்னாமுனை) மேஜர் செந்தமிழன் (தம்பிராசா கந்தசாமி சின்னவத்தை) 2ம் லெப்.விதிமாறன் (சிவபாதம் மதன் செட்டிபாளையம்) மாமனிதர் அரியநாயகம் சந்திரநேரு மற்றும் வாகன சாரதி எஸ்.விவேகானந்தமூர்த்தி ஆகியோரின் உயிர்கள் பறிக்கப்பட்டன. சிறிலங்கா படையினரின் முழுமையான கட்டுப்பாட்டுப் பகுதியில் வைத்து போர் நிறுத்த உடன்படிக்கை அமுலிலிருந்த காலத்தில் ஈவிரக்கமற்ற முறையில் துரோகிகள் இந்தப் படுகொலையை நடத்தியிருந்தனர். கௌசல்யனை வீரமரணம் கேட்டு தமிழர் தாயகம் மட்டுமல்ல சர்வதேசமே கலங்கிப்போனது. ஐ.நாவின் அப்போதைய செயலாளர் நாயகம் கொபி அனானே இந்தப் படுகொலையை கண்டித்து அறிக்கை விட்டார். முஸ்லிம் சகோதர்களும் வாய்விட்டு அழுதனர். போர் நிறுத்தம் சமாதானம் என கூறி நயவஞ்சகத்தனமாக சிங்கள அரசு இந்தப் படுகொலையைச் செய்தது. கௌசல்யன் மற்றும் போராளிகளின் இறுதி வணக்க நிகழ்வில் அமரத்துவமடைந்த தமிழீழ அரசியல்துறை பொறுப்பாளர் சு.ப.தமிழ்செல்வன் முக்கிய உறுப்பினர் க.வே.பாலகுமார் உட்பட துறைசார் பொறுப்பாளர்கள் தளபதிகள் போராளிகள் வருகை தந்து கதறி அழுதனர். அந்தக் காட்சி இன்றும் உள்ளத்தை உருக்குகின்றது. ஆனால் இன்னும் கொலையாளிகளின் கொடூரங்கள் இன்றும் அந்த வெலிக்கந்தைப் பகுதியில் தொடர்கதையாகும் வகையில் தான் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் பணியாளர்கள் ஐவர் மிருகத்தனமாக ஆயுததாரிகளால் கடத்தப்பட்டுபடுகொலை செய்யப்பட்டதுடன். மற்றும் ஐவருடன் வாகனத்தையும் இன்றுவரை காணவில்லை என்பது இங்கு சுட்டிக் காட்டப்பட வேண்டியது. இதேவேளை வெலிக்கந்தையில் லெப்.கேணல் கௌசல்யன் மற்றும் போராளிகள் மீதான தாக்குதலில் படுகாயமடைந்த அம்பாறை மாவட்ட தமிழ்க் கூட்டமைப்பு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அ.சந்திரநேரு 2005 பெப்ரவரி 8ம் நாள் மரணமடைந்தார். இவரது மரணம் அம்பாறை மாவட்ட தமிழ் மக்களுக்குப் பேரிழப்பாக இருந்தது. 06.40.1944 ல் பிறந்த இவர் தந்தை அறப்போர் அரியநாயகத்தை போன்று தமிழினத்தின் உரிமைக்காக பாடுபட்டு உழைத்தார். இவரின் தீவிர செயற்பாடுகளை பொறுக்க முடியாத சிறிலங்கா படைத்தரப்பு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 1983ம் ஆண்டு கைது செய்தது. 86ம் ஆண்டு வரை மூன்று வருடங்கள் பூசா சித்திரைவதை முகாமில் இருந்து விடுதலையான இவர் தமிழ்த் தேசியத்திற்காக அர்பணிப்புக்களுடன் சேவையைத் தொடர்ந்தார். இதன் பலாபலன் கடந்த 2001ம் ஆண்டு சிறிலங்காவின் 12வது பொதுத் தேர்தலில் இவரை வேட்பாளராக நிறுத்துவதற்கு மக்கள் விரும்பினர். மக்களின் விருப்புக்கமைய தலைமை வேட்பாளராக இவர் 4ம் இலக்கத்தில் போட்டியிட்டு 27000 வாக்குகளை பெற்று நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார். மாவட்டத்தில் இவர் ஐந்தாவது நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார். தமது குறுகிய நாடாளுமன்றப் பதவிக் காலத்தில் மக்களுக்குச் சிறந்த முறையில் சேவையாற்றினார். எனினும் 13வது நாடாளுமன்றத் தேர்தலில் இவரது வெற்றி துரதிஷ்டவசமாகக் கிடைக்காது போனாலும் மாவட்டத்தில் மக்களின் குறை நிறைகளை இனங் கண்டு அவற்றிற்குத் தீர்வு காண்பதில் அதிக அக்கறை காட்டினார். சுனாமிப் பேரழிவின் பின்னர் அதிக உயிரிழப்புக்களை சந்தித்த அம்பாறை மாவட்ட மக்களின் துயர்துடைப்புக்காக அயராது பாடுபட்டார். அது மாத்திரமின்றி அவர் தமிழ்த் தேசியத்தின் மீதும் தேசியத் தலைமை மீதும் கொண்டிருந்த பற்றுறுதி மிகப் பெரியது. துரோகக் கும்பலால் இவர் சுட்டுக் கொல்லப்பட்டது யர்களின் மத்தியில் தேசியத் தலைவர் அவர்கள் சந்திரநேரு அவர்களுக்கு உயர் தேசிய விருதான மாமனிதர் விருது வழங்கி உயர் நிலைப்படுத்தியிருந்தார். இவர் தேசியத்திற்காக செய்த சேவையினை மாமனிதர் விருது வெளிப்படுத்துகின்றது என்றே கூறவேண்டும். வெலிக்கந்தை படுகொலையின் துயரநினைவுகள் இன்னும் தாயக மக்களின் நெஞ்சை சுட்டெரிக்கிறது. அந்த சுட்டெரிப்பு தேச விடுதலையை விரைவாக வென்றெடுக்க வழிகோலும். எதை இலட்சியமாகக் கொண்டு தேசியத் தலைவரின் வழி நடத்தலில் இறுதிவரை நின்று வழிகாட்டிய கௌசல்யனின் போரியல் வாழ்வு தாயக உறவுகளுக்கு சரித்திரமாகி விட்டது. அவனது கடந்த கால வரலாறுகளை கண்ணுற்று எம்மை பலப்படுத்துவோம். “நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும். நினைவுப்பகிர்வு ஈழத்தில் இருந்து ந. ஈழவேந்தன். “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” https://www.thaarakam.com/news/112359
-
செயற்திறன் மிக்க தளபதி லெப் கேணல் விநாயகம்
செயற்திறன் மிக்க தளபதி லெப் கேணல் விநாயகம் On Feb 4, 2020 இரண்டு தசாப்தகாலமாக தமிழீழ விடுதலைப் போராட்டப் பயணத்தில் வெற்றிநடைபோட்டு விழிமூடிக்கொண்ட கடற்புலிகளின் துணைத் தளபதி லெப். கேணல் விநாயகம். நிலையுடன் பெயர்: லெப். கேணல் விநாயகம். சொந்தப்பெயர்: தங்கவேலு சுதரதன். சொந்த முகவரி: மருதங்கேணி வடக்கு தாளையடி. (யாழ் மாவட்டம்) வீரச்சாவுத்திகதி: 04.02.2009 வீரச்சாவுச் சம்பவம்: சுண்டிக்குளம், பேப்பாரைப்பிட்டிப் பகுதியில் சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட வழிமறிப்புத் தாக்குதலில். விநாயகம் அண்ண வீரச்சாவு என்ற செய்தி எனது காதுகளை எட்டியபோது ஒருமுறை எனது இதயம் உறைந்து போனது. விடுதலைப் போராட்டத்தில் இழப்புக்கள் ஒன்றும் புதியவை அல்ல. இழப்புக்கள் இன்றி விடுதலை கிடைக்கவாய்ப்பில்லை என என்னைத் தேற்றிக் கொண்டேன். விநாயகம் அண்ண எமைவிட்டுப் பிரிந்து ஐந்து ஆண்டுகள் கடந்து விட்ட நிலையிலும் அந்த உத்தம வீரனின் ஆற்றல் மிகுந்த தளபதியின் நினைவுகள் எம்மனங்களில் அலை மோதுகின்றன. யாழ் குடாநாட்டின் வளம்மிகுந்த வடமராட்சிக் கிழக்குப் பிரதேசத்தில் கடலலைகள் தழுவுகின்ற மருதங்கேணி எனும் அழகிய கிராமத்தில் தங்கவேலு காந்திமலர் தம்பதியினருக்கு 1973ம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் இரண்டாவது மகனாகப்பிறந்தவர்தான் சுதரதன் எனும் இயற் பெயரைக் கொண்ட லெப் கேணல் விநாயகம் அவர்கள். இவரை வீட்டில் ஏல்லோரும் சுதன் என்றே அழைத்தனர். சுதன் தனது இளமைக் காலக் கல்வியை உடுத்துறை மகாவித்தியாலயத்தில் தொடர்ந்தார். சுதன் கல்வியிலும் விளையாட்டிலும் சிறந்து விளங்கியதோடு கலைத்துறையிலும் ஈடுபாடு கொண்டவராகத் திகழ்ந்தார். இந்து சமயத்தவர்களின் பாரம்பரிய கலை வடிவங்களில் ஒன்றான காத்தவராயன கூத்து மருதங்கேணியில் அரங்கேற்றப்பட்டபோது அதில் சுதனும் நடித்து மக்களின் அபிமானத்தைப் பெற்றிருந்தார். இவ்வாறு அவரது இளமைக்காலம் இனிதாக நகர்ந்து கொண்டிருந்த வேளையில் அமைதி என்ற போர்வையில் எமது தாயக மண்ணில் அகலக்கால் பதித்த இந்தியப் படையினர் அதற்கு முற்றிலும்மாறாக ஆக்கிரமிப்புப்போரையும் தமிழ்மக்கள் மீதான அடாவடித் தனங்களையும் பெருமெடுப்பில் கட்டவிழ்த்துவிட்டிருந்தனர். இவ்வாறு இந்தியப்படையினர் தாயகத்தில் பல நூற்றுக் கணக்கான தமிழ் மக்களின் உயிர்களைப் பலிகொண்டதுவும் இந்தியப் படையினர் நாளாந்தம் தமிழ்மக்கள் மீது தொடரும் கெடுபிடிகளும் அதன் விளைவாக தமிழ்மக்கள் அனுபவித்துவரும் அவல வாழ்க்கையும் 1989ம் ஆண்டு காலப்பகுதியில் உடுத்துறை மகாவித்தியாலயத்தில் தரம் 11ல் கல்வி கற்றுக்கொண்டிருந்த சுதனின் மனதை மிகவும் ஆழமாகப்பாதித்தது. அது விடுதலைப்புலிகள் இயக்கம் மக்களின் ஆதரவுடன் தலைமறைவு வாழ்க்கையைமேற்கொண்டு விடுதலைப்போராட்டத்தை முன்னெடுத்துக் கொண்டிருந்த காலம். லெப். கேணல் மறவன் மாஸ்ரரின் உதவியுடன் சுதனும் அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த இன்னும் பல இளைஞர்களும் தம்மை முழுமையாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இணைத்துக் கொண்டார்கள். அமைப்பில் இணைந்து கொண்ட சுதனும் மற்றய இளைஞர்களும் வடமராட்சிக் கிழக்குப் பிரதேசத்தின் எல்லைப் பகுதியான சுண்டிக்குளம் ஊடாக மணலாற்றுக் காட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டார்கள். மணலாற்றுக் காட்டிற்குச் சென்ற சுதன் அங்குதான் இயக்கப் பெயராக விநாயகம் எனும் பெயரைப் பெறுகின்றார். அங்கு வியட்னாம் பயிற்சிப் பாசறையில் இரண்டாவது பயிற்சி அணியில் விநாயகமும் இணைக்கப்பட்டு ஒரு போர்வீரன் கற்றுக்கொள்ள வேண்டிய அனைத்து படைத்துறைப் பயிற்சிகளிலும் கொமாண்டஸ் பயிற்சிகளிலும் மிகச்சிறப்பாகத் தேர்ச்சிபெற்று சிறந்த போராளியாக பயிற்சிப் பாசறையிலிருந்து விநாயகம் அவர்கள் வெளிவருகின்றார். தொடர்ந்து இந்தியப் படையினருக்கெதிரான தாக்குதல்கள் தேசவிரோதக் கும்பல்களுக்கெதிரான தாக்குதல்கள் என அவரின் போர்ப் பயணம் தொடர்ந்தது. 1990ம் ஆண்டின் முற்பகுதியில் இந்தியப்படையினர் தாயகத்திலிருந்து முழுமையாக வெளியேறியதையடுத்து அந்த ஆண்டின் நடுப்பகுதியில் இலங்கை அரசபடையினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் மீண்டும் போர் வெடித்தது. அந்தக் காலப்பகுதியில் யாழ். கோட்டை படைமுகாம்மீது விடுதலைப்புலிகள் முற்றுகைப்போரை மேற்கொண்டிருந்தபோது விநாயகம்அவர்களும் அந்த தாக்குதல்அணியில் பங்கெடுத்து அந்தச்சமரில் தனது போரியல் ஆற்றலை வெளிப்படுத்தியிருந்தார். தொடர்ந்து அவ்வவ்போது குடாநாட்டில் தான் சந்தித்த களமுனைகளிலும் களப்பணிச் செயற்பாடுகளிலும் தனது நேர்மைத்திறனையும் அர்ப்பணிப்பான உழைப்பையும் வெளிக்காட்டி பொறுப்பாளர்கள் மத்தியில் நன்மதிப்பைப்பெற்றிருந்தார். இதேகாலப்பகுதியில் அப்போதய விடுதலைப்புலிகள் இயக்கத்தின் பிரதித்தலைவரும் மக்கள் முன்னணித் தலைவருமாகிய மாத்தையா அவர்களின் அணியில் விநாயகம் அவர்களும் இணைக்கப்பட்டு அவரது மெய்ப்பாதுகாப்பு அணியில் விநாயகம்அவர்களின் பணி தொடர்ந்தது. 1991ம் ஆண்டு ஆனையிறவு ஆகாயக்கடல்வெளிச்சமரிலும் விநாயகம் அவர்கள் பங்கெடுத்திருந்தார். 1993ம் ஆண்டின் நடுப்பகுதியில் மாத்தையாவின் அணி கலைக்கப்பட்டபோது அதில் குறிப்பிட்ட போராளிகள் கடற்புலிகள் படையணியில் உள்வாங்கப்படபோது விநாயகம்அவர்களும் கடற்புலிகள் படையணியில் உள்வாங்கப்பட்டிருந்தார். 1993ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் பூநகரி நாகதேவன்துறை படைத்தளம்மீது விடுதலைப்புலிகள் மேற்கொண்ட தவளை நடவடிக்கையின்போது கடற்புலிகளின் தாக்குதலணியில் விநாயகமும் அங்கம் வகித்திருந்தார். வரலாற்று முக்கியத்துவம்பெற்ற அந்தச் சமரில் அபாரமான துணிச்சலுடன் களமாடிய விநாயகம் அவர்கள் நாகதேவன்துறைப் படைத்தளத்தின் வெற்றிக்கு முன்நின்று உழைத்ததோடு அந்த வெற்றிச்சமரில் வீரவடு ஏந்தியதன் விளைவாக ஒரு கண்பார்வையை இழந்திருந்தார். 1994ம் ஆண்டு காலப்பகுதியில் கடற்புலிகளின் மன்னார் மாவட்ட அரசியல்த்துறைப் பொறுப்பாளராக விநாயகம்அவர்கள் பொறுப்பு வகித்திருந்தார். இவர் மன்னார் மாவட்டத்தில் அரசியல்த்துறைப் பொறுப்பை பொறுப்பேற்றுக்கொண்ட காலத்திலிருந்து விடுதலைப் போராட்டப் பங்களிப்பில் மக்கள் மத்தியில் புதிய உத்வேகம் பிறந்தது. பொதுமக்களின் வழிகாட்டிகளாகத் திகழ்வதும் மக்களை பிரதிநிதித்துவப் படுத்துவதுமான நிர்வாகக்கட்டமைப்புக்களுக்கு புத்துயிரூட்டி புதுப்பொலிவுடன் அவை செயற்பட வழிசமைத்ததுடன் அவைகளுக்கு ஊடாக கடற்புலிகளின் படைக்க ட்டமைப்பை மன்னார் மாவட்டத்தில் விரிவாக்கம் செய்வதற்கு முதன்மையாக உழைத்தவர். இதன் பிற்பாடு குடாநாட்டில் அரசியல்ப்பணியும் குறிப்பிட்டகாலம் புலனாய்வுக் கல்வியையும் கற்றுத் தேர்ச்சிபெற்று அதுசார்ந்த பணிகளும் தேவையேற்படும் சந்தர்ப்பங்களில் படைத்துறை ரீதியான செயற்பாடுகளுமென விநாயகம் அவர்களின் போராட்டப்பயணம் தொடர்ந்தது. 1996ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் யாழ். குடாநாடு முழுமையாக அரசபடையினரின் ஆக்கிரமிப்பிற்கு உள்ளாக்கப்பட்டபோது ஐந்து லட்சம் மக்களுடன் விடுதலைப்புலிகளின் அனைத்து படைக் கட்டமைப்புக்களும் நிர்வாகக் கட்டமைப்புக்களும் வன்னிப் பெரு நிலப்பரப்பிற்கு நகர்த்தப்பட்டு வன்னியை தளமாகக்கொண்டு செயற்பட்டபோது விநாயகம் அவர்களின் போரியல் செயற்பாடுகள் வன்னியில் தொடர்ந்தது. இந்தக் காலப் பகுதியில் கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசைஅவர்களின் பிரரதான மெய்ப் பாதுகாவலராகவும் சில காலம் விநாயகம் அவர்கள் கடமையாற்றியிருந்தார். அத்துடன் சூசை அவர்களின் மெய்ப் பாதுகாப்பு அணிக்கு தேர்வு செய்யப்படுகின்ற போராளிகளுக்கு பாதுகாப்புப்பயிற்சி வழங்குகின்ற பயிற்சி ஆசிரியராகவும் விநாயகம் அவர்கள் செயற்பட்டிருந்தார். 1996ம் ஆண்டு யூலை மாதம் முல்லைத்தீவு படைத்தளம் மீது விடுதலைப்புலிகள் மேற்கொண்ட ஓயாத அலைகள் 01 வெற்றிச் சமரிலும் விநாயகம்அவர்கள் பங்கெடுத்து தீரமுடன் களமாடி முல்லைத்தீவு படைத்தளத்தின் வெற்றிக்கு அர்ப்பணிப்புடன் உழைத்ததோடு அந்த வெற்றிச் சமரில் தலைப்பகுதியில் விழுப்புண்ணடைந்தார். மருத்துவச் சிகிச்சைகளுக்கு ஊடாக விழுப்புண் தேறிய நிலையில் விநாயகத்தின் போர்ப்பணி மீண்டும் தொடர்ந்தது. ஆனாலும் தலைப்பகுதியில் புதைந்திருந்த சன்னம் இறுதிக்காலம் வரையிலும் அவரை உபாதைக்கு உட்படுத்தியிருந்தது. தொடர்ந்து செம்மலையில் தளம் அமைத்து செயற்பட்டுக் கொண்டிருந்த கடற்புலிகளின் கிழக்கு மாகாண விநியோக அணியில் விநாயகம்அவர்களும் இடம்பெற்றிருந்தார். கடற்புலிகளின் சண்டைப்படகில் இரண்டாம் நிலை கட்டளைஅதிகாரியாக செயற்பட்டு பல சவால்களுக்கு மத்தியில் கிழக்குமாகாண விநியோக நடவடிக்கைகள் வெற்றிகரமாக இடம் பெறுவதற்கு அயராது உழைத்தார். அத்துடன் செம்மலையில் அமையப் பெற்றிருந்த கிழக்குமாகாண விநியோக அணிக்கான முகாம் பொறுப்பாளராகவும் பொறுப்புவகித்து போராளிகளின் உணவு உள்ளிட்ட அனைத்து அடிப்படைத் தேவைகளிலும் கூடிய கவனம் செலுத்தி குறித்த முகாம் செயற்பாடுகள் திறம்படசெயற்படுமளவிற்கு மிக நேர்த்தியாக தனது கடமையினை ஆற்றியிருந்தார். 1999ம் ஆண்டு காலப் பகுதியில் கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசை அவர்கள் விநாயகம் அவர்களை கடற்புலிகளின் அரசியல்த்துறைப் பொறுப்பாளராக நியமித்திருந்தார். குறிப்பிட்ட காலமாக மந்தகதியில் செயற்பட்டுக் கொண்டிருந்த கடற்புலிகளின் அரசியல்த்துறையின் செயற்பாடுகள் விநாயகம் அவர்களின் அரசியல் பிரவேசத்துடன் புதுப்பொலிவுடன் முழுவீச்சுப்பெற்றன. முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சமாசம் மற்றும் மன்னார் மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சமாசம் அவற்றின் ஆளுகைக்குட்பட்டிருந்த கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்கள் அத்துடன் வர்த்தகர் சங்கங்கள் பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கங்கள் விளையாட்டுக் கழகங்கள் போரெழுச்சிக் குழுக்கள் என சமூகக் கட்டமைப்புக்களை தொடராக சந்தித்து தமிழீழ விடுதலைப் போராட்டத்தை வெற்றிப் பாதையில் கொண்டு செல்வதற்கு மக்களின் இன்றியமையாத பங்களிப்பை வலியுறுத்தி கருத்துக்களை எடுத்துக்குறி அதற்கு ஊடாக மக்களை போராட்டத்தின்பால் அணிதிரட்டி எல்லைக் காப்புப் படையணிகள் கிராமியப் படையணிகள் ஆகிய கட்டமைப்புக்களை விரிவாக்கம் செய்து 1999ம் ஆண்டின் பிற்பகுதியில் விடுதலைப்புலிகள் இயக்கத்தால் முன்னெடுக்கப்பட்ட ஓயாத அலைகள் 03 நடவடிக்கையின்போது கட்டைக்காடு, வெற்றிலைக்கேணி படைத்தளங்களை விடுதலைப்புலிகள் கைப்பற்றியதுடன் வடமராட்சிக் கிழக்குப் பிரதேசத்தின் மேலும் சிலபகுதிகளை மீட்டெடுத்தவாறு விடுதலைப்புலிகளின் படையணிகள் முன்னேறிக் கொண்டிருந்தபோது முல்லை மாவட்டத்தில் மாத்தளன் பொக்கணை வலைஞர்மடம் முள்ளிவாய்க்கால் பகுதிகளில் உருவாக்கப்பட்டிருந்த எல்லைக் காப்புப்படையணிகளை விநாயகம் அவர்களே தலைமையேற்று கூட்டிச்சென்று களமுனையின் பின் களப் பணிகளையும் மீட்கப்பட்ட பகுதிகளில் எல்லைக் காப்புப் படையணிகளை பாதுகாப்பு நிலைகளில் நிலைப் படுத்துவதையும் மிக நேர்த்தியாக நெறிப்படுத்தியிருந்தார். அந்தக் காலப்பகுதியில் பெரும்பாலானமக்கள் வடமராட்சி வடக்கு மற்றும் வடமராட்சிக் கிழக்குப் பிரதேசங்கிளிலிருந்து இடம்பெயர்ந்து வந்து மாத்தளன் பொக்கணை வலைஞர்மடம் முள்ளிவாய்க்கால் ஆகிய பகுதிகளில் வசித்துவந்தார்கள். இந்த மக்களுக்கும் விநாயகம் அவர்களுக்கும் அரசியல் ரீதியாகவும் அதற்கு அப்பாலும் நெருக்கமான உறவுப்பிணைப்பு இருந்து வந்தது. இந்த உறவுப்பாலம் தான் அவர் எல்லைக்காப்புப் படையணிக் கட்டமைப்புக்களை நேர்த்தியாக நெறிப்படுத்துவதற்கு உந்துசக்தியாக விளங்கியது. இவ்வாறாக கடற்புலிகளின் அரசியல்த்துறைப் பொறுப்பை மிகவும் சீரிய முறையில் நெறிப்படுத்திவந்த விநாயகம் அவர்கள் 2002ம் ஆண்டு நோர்வே நாட்டின் அனுசரணையில் இலங்கை அரசிற்கும் விடுதலைப்புலிகளுக்கும் மத்தியிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் நடைமுறைக்குவந்த காலப்பகுதியில் குறிப்பாக யுத்தத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு நகரத்தின் அபிவிருத்திக்காக அயராது உழைத்தார். யுத்த காலத்தில் இடம்பெயர்ந்து முள்ளியவளை புதுக்குடியிருப்பு ஆகிய பிரதேசங்களில் செயற்பட்டுவந்த முல்லைத்தீவு மாவட்டச் செயலகம் கரைத்துறைப்பற்று பிரதேச செயலகம் கரைத்துறைப்பற்று பிரதேசசபை உள்ளிட்ட அரச நிர்வாகக் கட்டமைப்புக்கள் மீளவும் முல்லை நகரத்தில் செயற்படுவதற்கு முதன் நிலைக் காரணகர்த்தாவாகவும் விளங்கினார். அரச நிர்வாகக் கட்டமைப்புக்களை துரிதகதியில் முல்லைத்தீவுக்கு நகர்த்தியதற்கு ஊடாகவே இடம்பெயர்ந்திருந்த முல்லைத்தீவு மக்களையும் மீள்குடியேற்றம் செய்வதற்கு ஏதுநிலையாக அமைந்திருந்தது. இந்த முயற்சிகளில் விநாயகம் அவர்கள் முழுமூச்சாக நின்று உழைத்ததன் பயனாகவே குறுகியகாலத்தில் முல்லைத்தீவு நகரம் புதுப்பொலிவுடன் மிளிர்ந்தது. 2002ம் ஆண்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்த காலப்பகுதியில் விநாயகம் அவர்களின் திருமணத்திற்கு சிறப்புத் தளபதி சூசைஅவர்கள் அனுமதி வழங்கியதையடுத்து அதற்கான ஏறபாடுகள் நடைபெறறன. தனது நீண்டநாள் காதலியான இதயாவை 2002ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12ம் நாளன்று விநாயகம் அவர்கள் தனது வாழ்க்கைத் துணைவியாக கரம் பிடித்துக்கொண்டார். இல்லறம் எனும் நல்லற வாழ்க்கையில் அலைக்குமரன் ஐங்கரன் ஆகிய இரண்டு குழந்தைகளுக்கும் சிறந்ததொரு அப்பாவாகவும் திகழ்ந்தார். இவ்வாறாக அவரின் இல்லறவாழ்க்கையும் போரியல் வாழ்வும் ஒரே பாதையான தமிழீழ தேசத்தின் விடுதலையை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது. சமாதான காலப்பகுதியில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட கரையோரப் பிரதேசங்களை தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் உதவியுடன் மீள்கட்டுமானம் செய்யும் நோக்குடனும் அந்தப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்குடனும் கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசைஅவர்கள் விநாயகம் அவர்களை தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் கரையோரப் பிரதேசங்களுக்கான இணைப்பாளராக நியமித்திருந்தார். அத்துடன் மற்றுமொரு பொறுப்பையும் சூசைஅவர்கள் விநாயகத்திடம் ஒப்படைத்திருந்தார். அதாவது கடற்புலிகளின் கடற்கண்காணிப்பு நிலையங்கள் அனைத்திற்குமான மேலாளராகவும் நியமித்திருந்தார். குறித்த இந்த இரண்டு பொறுப்புக்களையும் விசுவாசமாகவும் பொறுப்புணர்வுடனும் செயலாற்றி தமிழர் புனர்வாழ்வுக் கழகப் பொறுப்பாளர் மத்தியிலும் கடற்புலிகளின் சிறப்புத் தளபதியின் மத்தியிலும் நனமதிப்பைப் பெற்றிருந்தார். எல்லாவற்றிற்கும் மேலாக அவர் ஒரு சிறந்த அரசியல்ப் பேச்சாளர். அவரது பேச்சாற்றலையும் அரசியல் சாணக்கியத்தையும் நீண்ட நாட்களாகவே அறிந்திருந்த சூசைஅவர்கள் தேசியத்தலைவர் அவர்களின் ஏற்பாட்டில் ஐரோப்பிய நாடுகளில் தமிழ்த்தேசியத்தின் அரசியல் கொள்கைப் பரப்புரைகளை முன்னெடுப்பதற்காக தேர்வு செய்யப்பட்ட குழுவில் விநாயகம்அவர்களையும் சிபார்சு செய்திருந்தார். விநாயகம் உள்ளிட்ட ஐவர் அடங்கிய அந்த அரசியல் பரப்புரைக் குழுவை தமிழீழத் தேசியத்தலைவர் அவர்கள் சந்தித்து அரசியல்ப் பரப்புரைகள் தொடர்பாக விளக்கமளித்து ஆசிகூறி வழியனுப்பி வைத்திருந்தார். 2004ம் ஆண்டு ஒக்டோபர்மாதம் தாயகத்திலிருந்து புறப்பட்ட விநாயகம் உள்ளிட்ட குழுவினர் நோர்வே சுவிச்சர்லாந்து உள்ளிட்ட இன்னும் சில ஐரோப்பிய நாடுகளில் தமது கொள்கைப் பரப்புரைகளை வெற்றிகரமாக முன்னெடுத்தனர். குறிப்பாக விநாயகம் அவர்கள் தமிழீழ விடுதலைப் போராட்டம தொடர்பாகவும் அதற்கு புலம்பெயர்ந்த தேசங்களில் வாழ்கின்ற தமிழ்மக்கள் ஆற்றவேண்டிய பங்களிப்புக்கள் தொடர்பாகவும் எடுத்துக் கூறிய கருத்துக்கள் புலம்பெயர்ந்து வாழ்கின்ற தமிழ்மக்களை பெரிதும் கவர்ந்தன. விநாயகம்அ வர்கள் வெளிநாட்டில் நின்ற நாட்களிலேயே சுனாமி ஆழிப்பேரலை அனர்த்தம் இலங்கை உள்ளிட்ட இன்னும் சில நாடுகளையும் தாக்கியது. யுத்த காலத்தில் பாரிய உயிரழிவுகளையும் சொத்தழிவுகளையும் சந்தித்த வடக்கு கிழக்கு தாயகத்து மக்கள் மீண்டும் இயற்கையின் சீற்றத்தினால் குறுகிய நேரத்திற்குள்ளேயே பல ஆயிரக்கணக்கான மனிதஉயிர்கள் காவுகொள்ளப்பட்டு பல கோடி பெறுமதியான சொத்தழிவுகளைச் சந்தித்து பாரிய மனிதப் பேரவலத்தைச் சந்தித்தபோது எமது தாயக விடுதலைப் போராட்டத்தில் தோளோடு தோள்நின்று உழைத்த மக்கள் ஆழிப் பேரலையினால் அடித்துச் செல்லப்பட்ட அவலத்தை புலம்பெயர்ந்த தமிழ்மக்கள் மத்தியில் மிகவும் உருக்கமாக எடுத்துக் கூறினார். விநாயகம் அவர்களின் சாணக்கியமான அரசியல்ப் பேச்சுக்களால் கவரப்பட்ட புலம்பெயர்ந்த தமிழ்மக்கள் எமது விடுதலைப்போராட்டத்தை வீச்சாக்குவதற்கும் வடக்கு கிழக்கு தாயகத்தை மீள்கட்டுமானம் செய்வதற்குமாக பெருந் தொகையான நிதியை மனமுவந்து தந்தனர். மூன்று மாத காலமாக தமது ஐரோப்பிய நாடுகளுக்கான சுற்றுப் பயணத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு 2005ம் ஆண்டு ஜனவரி மாதத்தின் பிற்பகுதியில் விநாயகம்அவர்களும் மற்றயவர்களும் தாயகம் திரும்பியிருந்தனர். தாயகம் வந்த விநாயகம்அவர்கள் சிறப்புத் தளபதி சூசைஅவர்களால் பணிக்கப்படுகின்ற பிரத்தியேகமான பணிகளை முன்னெடுத்ததுடன் வடமராட்சி வடக்கு மற்றும் வடமராட்சிக் கிழக்குப் பிரதேசங்களில் உருவாக்கப்பட்ட மக்கள் படைக் கட்டுமானத்திலும் அயராது உழைத்தார். அத்துடன் மக்கள் படைக் கட்டுமானத்தைக்கொண்டு முல்லைத்தீவு மாவட்டம் மற்றும் வடமராட்சிக் கிழக்குப் பிரதேசங்களின் கரையோரமாக உருவாக்கப்பட்டிருந்த பாதுகாப்பு நிலைகளுக்கான பொறுப்பாளராகவும் செயற்பட்டார். இவரது சேவையைப் பாராட்டி தமிழீழ தேசியத்தலைவர் அவர்கள் கைத்துப்பாக்கி ஒன்றும் வாகனம் ஒன்றும் இவருக்கு அன்பளிப்பாகக் கொடுத்திருந்தார். 2006ம் ஆண்டு மற்றும் 2007ம் ஆண்டின் முற்பகுதிகளில் போராட்டத்திற்கு புதிதாக இணைகின்ற புதிய போராளிகளில் கடற்புலிகளுக்கு தகுதியானவர்களை தேர்வுசெய்து கடற்புலிகளுக்கு உள்வாங்குகின்ற பொறுப்பையும் சிறப்புத் தளபதி அவர்கள் விநாயகத்திடமே ஒப்படைத்திருந்தார். அந்தப்பணியை சிரமேற்கொண்டு கடற்புலிகளுக்கென பிரத்தியேகமாக செயற்பட்டுக் கொண்டிருந்த அடிப்படை படயப்பயிற்சிக்க ல்லூரியின் பண்டிதர் றஞ்சன் லாலா அப்பையா லிங்கம் ஆகிய பயிற்சி அணிகளுக்கு ஆற்றல் மிகுந்த திடகாத்திரமான இளைஞர்களைத் தேர்வுசெய்து குறித்த பயிற்சி அணிகள் சிறப்பாக தமது பயிற்சிகளை நிறைவு செய்து பின்நாளில் அவர்கள் சிறந்த போராளிகளாகவும் அணித் தலைவர்களாகவும் கடற்புலிகள் படையணியை அலங்கரித்திருந்தார்கள். இந்த செயற்திட்டத்தில் விநாயகம் அவர்களின் உழைப்பு மிகவும் அளப்பரியது. அத்துடன் குறிப்பிட்ட காலம் கடற்புலிகளின் படைய அரசியல்ப் பொறுப்பாளராகவும் பொறுப்புவகித்து ராஜன் கல்விப்பிரிவினருடன் இணைந்து போராளிகளுக்கான கல்விச்செயற்பாடுகளிலும் போராளிகளுக்கான அரசியல் வகுப்புக்களை ஏற்பாடு செய்தல் முதலான சிறப்புத் தளபதி சூசை அவர்கள் பணிக்கின்ற அரசியல் மற்றும் புலனாய்வுச் செயற்பாடுகளையும் சிறப்புத் தளபதியின் எண்ணத்திறகு ஏற்றவாறு செயல்வடிவம் கொடுத்திருந்தார். 2007ம் ஆண்டு யூலை மாதம் கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசை அவர்கள் படகு விபத்திற்குள்ளாகி தீவிர மருத்துவக் கண்காணிப்பில் இருந்தபோது அவரது தனிப்பட்ட பாதுகாப்புக்கள் உறுதிப்படுத்தப்படல் வேண்டும் என்ற பலதரப்பினரதும் அபிப்பிராயக் கருத்துக்களுக்கு அமைவாக விநாயகம் அவர்கள் சூசை அவர்களின் பிரதான மெய்ப்பாதுகாப்பு அணிப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தார். நம்பிக்கையாகவும் விசுவாசமாகவும் அந்தப் பொறுப்பையேற்று இரவு பகல் பாராது கண்துஞ்சாது பாதுகாப்புக் கடமையை மிகவும் செவ்வனே செய்திருந்தார். 2007ம் ஆண்டு செப்ரெம்பர் மாதத்தில் தமிழீழ தேசியத்தலைவர் அவர்களால் விநாயகம் அவர்கள் கடற்புலிகளின் துணைத் தளபதியாக நியமிக்கப்பட்டிருந்தார். துணைத் தளபதியாகப் பொறுப்பேற்றுக் கொண்ட விநாயகம் அவர்கள் தனது ஆளுகைக்கு உட்பட்ட கடற்புலிகளின் நிர்வாகச்செயலகம் மருத்துவப்பகுதி அரசியல்த்துறை புலனாய்வுத்துறை ஆகிய கட்டமைப்புக்கள் புதுப்பொலிவுடன் செயற்பட சிறந்த வழிகாட்டியாகத் திகழ்ந்ததுடன் கடற்புலிகளில் அங்கம் வகித்த போராளிகள் அனைவரின் நலன்களிலும் கூடியகவனம் செலுத்தி அவர்கள் முகம்கொடுக்கின்ற தனிப்பட்டதும் பொதுவானதுமான பிரச்சினைகளுக்கு உடனுக்குடன் தீர்வினைப் பெற்றுக்கொடுத்து அவர்களும் தங்களது கடமைகளை நேர்த்தியாக முன்னெடுத்துச் செல்வதற்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்தார். 2008ம் ஆண்டு பிற்பகுதியில் மணலாற்றுக்கள முனையில் தாக்குதல்கள் தீவிரம் பெற்றதையடுத்து முல்லைத்தீவில் மக்களை அணிதிரட்டி மிகப்பெரிய மக்கள்படைக் கட்டமைப்பை உருவாக்கி அவர்களுக்கான பயிற்சிகளையும் வழங்கி நாளாந்தம் நூறு பேர்வரையில் மணலாற்றுக் களமுனைக்கு அனுப்புகின்ற செயற்திட்டத்தை சிறப்புத் தளபதியின் ஆலோசனைக்கு அமைவாக தானே பொறுப்பேற்று மணலாற்றுக் களமுனையை அண்டியதான அளம்பிலை தளமாக வைத்துக்கொண்டு மிநேர்த்தியாக நெறிப்படுத்தினார். இவரால் அனுப்பப்பட்ட மக்கள்படை களமுனையில் போராளிகளுக்கு தோள் கொடுத்ததுடன் துணிகரத் தாக்குதல்களையும் நிகழ்த்தியிருந்தார்கள் என்பதுவும் குறிப்பிடத்தக்கது. 2009ம் ஆண்டு ஜனவரி மாதத்தின் முற்பகுதியில் நாகர்கோவிலில் நிலைகொண்டிருந்த அரசபடையினர் முன்னேற்ற நடவடிக்கையை மேற்கொண்டு வடமராட்சிக் கிழக்கின் எல்லைப் பகுதியான சுண்டிக்குளம், நல்லதண்ணீர்த் தொடுவாயவரையிலும் ஆக்கிரமித்திருந்தனர். ஆகவே யாழ். மாவட்டத்தின் கரையோரத்தினதும் முல்லைத்தீவு மாவட்டத்தின் கரையோரத்தினதும் மையத்தில் அமையப்பெற்ற பேப்பாரைப்பிட்டி எனும் பகுதியில் பலமான காவல் நிலைகளை விடுதலைப்புலிகள் அமைத்திருந்தார்கள். அதாவது பேப்பாரைப்பிட்டியை அடுத்துள்ள சாலைப்பகுதியையும் கடந்தால் அடுத்துவருவது மாத்தளன் ஆகும் அப்போது மாத்தளன் மற்றும் பொக்கணையில் இடம்பெயர்ந்து வந்திருந்த பல ஆயிரக்கணக்கான மக்கள குடியிருந்தார்கள். எனவே பேப்பாரைப்பிட்டி காவல்நிலைகளை அரசபடையினர் கைப்பற்ற விடுவதில்லை என்ற மனவுறுதியுடனேயே விடுதலைப்புலிகளின் படையணிகள் நிலைகொண்டிருந்தன. அதில் விநாயகம்அவர்கள் பகுதிப் பொறுப்பாளராக பொறுப்பு வகித்துக்கொண்டிருந்தார். 2009ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 04ம் நாளன்று நல்லதண்ணீர்த் தொடுவாயில் நிலைகொண்டிருந்த படையினர் பேப்பாரைப்பிட்டியை நோக்கியதாக யுத்த டாங்கிகள் பல்குழல் எறிகணைகள் உள்ளிட்ட கனரக ஆயுதங்களின் சூட்டாதரவுடன் பெருமெடுப்பிலான முன்னேற்ற நடவடிக்கையை மேற்கொண்டனர். இந்த முன்னேற்றநடவடிக்கையை எதிர்த்து விடுதலைப்புலிகள் வழிமறிப்புத் தாக்குதலை மேற்கொண்டனர். எதிரியின் முன்னேற்றத்தை துணிகரமாக எதிர்த்து களமாடிய கடற்புலிகளின் துணைத் தளபதி லெப். கேணல் விநாயகம் அவர்கள் அந்த வழிமறிப்புத் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார். அவருடன் கடற்புலிகளின் கட்டளைத் தளபதிகளான லெப். கேணல் குகன் (காதர்) லெப். கேணல் பகலவன் உட்பட மேலும் பல போராளிகளும் வீரச்சாவைத் தழுவிக்கொண்டனர். இரண்டு தசாப்த காலமாக தமிழீழ விடுதலைப்போராட்டப் பயணத்தில் தளராத உறுதியுடன் வீறுநடை போட்ட உத்தமத் தளபதி லெப். கேணல் விநாயகம் அவர்கள் பேப்பாரைப்பிட்டி மண்ணை முத்தமிட்டு தமிழீழ விடுதலைக்காக தன்னை ஆகுதியாக்கிக் கொண்டார். அவரது இழப்பு எம்மை ஆறாத் துயரில் ஆழ்த்தியிருந்தாலும் அவரது வித்துடலை எமது தோளகளில் சுமந்து விதைகுழிக்கு ஒருபிடி மண் எடுத்துப் போட்டிருந்தாலும் ஓரளவுக்கேனும் மனம் ஆறியிருப்போம். ஆனாலும் அதற்குக்கூட அவரது வித்துடல் எமக்கு கிடைக்கவில்லை. எனவே கடற்புலிகளில் தனக்கென தனித்துவமான அத்தியாயத்தை பதிவாக்கிவிட்டு விழிமூடிக்கொண்ட கடற்புலிகளின் துணைத் தளபதி விநாயகம் அவர்களின் ஆறாவது ஆண்டு நினைவு தினத்தில் அவரையும் அவருடன் வீரச்சாடைந்த மாவீரர்களையும் எமது இதயத்தில் பூசித்து தமிழீழ விடுதலைப்பயணத்தில் வெற்றிநடைபோடுவோமாக……… “கடலிலே காவியம் படைப்போம்” நினைவுப்பகிர்வு:- செங்கோ “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” https://www.thaarakam.com/news/111954
-
உளப்பலத்தால் உழைத்தவன் கரும்புலி மேஜர் குமுதன்.
உளப்பலத்தால் உழைத்தவன் கரும்புலி மேஜர் குமுதன். Last updated Feb 1, 2020 அந்த நிகழ்வுகளில் இருந்து குமுதனின் நினைவுகளை பிரிக்க முடியாததாய் இருந்தது. இப்போதெல்லாம் அவனது சுவாசம் அந்த நினைவுகளைத் தழுவியதாகவே வந்து போனது. அதே நினைவுகள் தான் குமுதனின் கண்களையும் நெஞ்சையும் நினைத்துக் கொண்டிருந்தன. வெட்டையும் திட்டுத்திட்டாக வளர்ந்திருக்கும் சிறு பற்றைகளும் நிறைந்து பரந்து விரிந்த அந்தப் பிரதேசத்தின் நெஞ்சைக் கிழிப்பதைப்போல் கிளிநொச்சி நகரினை நோக்கி இராணுவம் முன்னேறிக்கொண்டிருந்தது. பெரிய இராணுவ நகர்வை எதிர்த்து நேருக்குநேர் சமரிட்டுக் கொண்டிருந்த எமது தாக்குதல் அணியின் ஒரு பிளட்டூன் அணித்தலைவனாக குமுதனும் நின்று சமதிட்டுக் கொண்டிருந்தான். ஒவ்வொரு அங்குல நிலத்தையும் இராணுவ பாதங்கள் மிதிக்கின்றபோதும் அவனிற்குள்ளேயே எரிந்த ஆவேச நெருப்பால் கண்ணிலும் குரலிலும் இடையிடையே பொறி பறந்தது. இதே தாக்குதல் அணியுடன் சற்று நாட்களுக்கு முன் அலம்பில் பகுதியில் தரையிறங்கிய சிறப்புப்படையினரை எதிர்த்துச் சண்டையிட்டு இராணுவம் நினைத்து வந்த இலக்கை எட்டவிடாது தடுத்ததில் பங்கெடுத்தவன் குமுதன். தாக்குதல் அணியின் பிளட்டூன் உதவி அணித்தலைவராக நின்றாலும் சண்டை உக்கிரம் அடைந்து சென்றபோது ஒரு பகுதி முழுவதற்குமான கட்டளைகளை அவனே வழங்க வேண்டியிருந்தது. அதிகப்பேர் விழுப்புண்பட்டு வீரச்சாவடைந்து போனமையாலும் அணியின் ஆட்தொகையில் பெரும் சரிவு ஏற்பட்டிருந்தது. இந்த இறுக்கம் நிறைந்த சூழலிலும் இருக்கும் உறுப்பினர்களை ஒழுங்குபடுத்தி எதிரி முன்னேறாதவாறு மறிப்புப் போட்டு விட்டு காயக்காரரையும் வீரந்நாவடைந்தோரையும் பின்னுக்கு அனுப்பினான். இதுவரைக்கும் தன் தோள்பட்டையில் பாய்ந்திருக்கும் குண்டைப் பற்றியோ அல்லது அவனின் மேல்சட்டையையும் மீறிப் பாய்கின்ற குருதியைப் பற்றியோ கவனிக்கவில்லை. அவனது சிந்தனையும் செயல்களும் இராணுவத்தின் நோக்கத்தை எப்படியும் முறியடித்துவிட வேண்டுமே என்று துடித்துக்கொண்டிருந்தன. அதுபோன்றதொரு துடிப்பு நெஞ்சில் கனன்று கொண்டிருக்கவே சத்ஜய எதிர்ச்சமர்க்களத்திலும் அவன் சுழன்று கொண்டிருந்தான். “அண்ணை எங்களிற்குக் கிட்டவா டாங்கி வந்திட்டுது” குமுதனுக்குப் பக்கவாட்டாக இருந்த காவலரணில் இருந்தவன் நிலமையை குமுதனிற்குத் தெரியப்படுத்தினான். மரஞ்செடிகளைப் போல உருமாற்றம் செய்து நகர்ந்துகொண்டிருந்த கவசவாகனங்கள் சிறுபற்றைகளை நெரித்து பெரிய புகைமண்டலங்களை உருவாக்கியபடி காவலரணிற்கு மிக அண்மையாக வந்து நின்றது. “அங்காலப் பக்கத்தால் டாங்கிகள் வந்து முட்டிட்டானாம். நீங்கள் அங்க போய் அதை மறியுங்கோ கவனம் மறைப்பெடுத்துப்போங்கோ.” குமுதன் சொல்லி முடிக்கின்ற போது அவனது கட்டளைக்காகவே காத்திருந்த இரண்டு டாங்கி எதிர்ப்பு வீரர்களின் கண்களிலும் வேகம் பிறப்பெடுத்தது. சண்டை எல்லா இடங்களிலும் பெரும் முழக்கமிட்டு தொடர்ந்து கொண்டிருந்தது. இரண்டு கவச எதிர்ப்புப் போராளிகளும் அந்த டாங்கிகளை தடுத்து நிறுத்துவதற்காக போராடிக்கொண்டிருந்தார்கள். ஆனாலும் எதிரியின் சூட்டுவலுவினால் அந்தப் பிரதேசம் முழுவதும் வலைகளாக ரவைகள் பொழியப்பட்டுக்கொண்டிருந்தது. அந்த வலைப்பின்னலிற்குள்ளேயே இரண்டு கவச எதிர்ப்புப் போராளிகளும் சிக்கிக்கொண்டனர். குமுதன் இறுதியாகப் பார்த்து விடைகொடுத்தனுப்பிய இரண்டு இளைய வீரர்களுமே வித்துடல்களைக்கூட பார்க்கமுடியாதளவு உடல் சிதைந்துபோய் இருந்தார்கள். அந்த நிகழ்வைக் கண்ட பின்னர் குமுதனது கண்கள் அதையே சொந்தமாகக் கொண்டன. கண்களால் கண்டு பதிந்து கொண்ட அந்த நிகழ்வுகளை எண்ணுகின்ற போதெல்லாம் நெஞ்சு பெரிதாக வலிக்கிறது. மற்றவனின் துன்பத்தைக் கண்டு தாங்கிக்கொள்ள முடியாத அவனிற்கு அவனது நெஞ்சில் ஆழமாகப் பதிந்த நிகழ்வுகள் ஆறாத தழும்புகளாய் இருந்தன. அந்தப் பெருஞ்சமர் ஓய்ந்த போதும் குமுதனின் மனம் ஓயவில்லை. தனியொரு நெஞ்சிற்குள் மட்டும் எத்தனையோ சமர் அரங்குகள் திறக்கப்பட்டன. முடிவிலாது குமுறிக்கொண்டிருந்த குமுதனின் கண்களில் புதியதான வடிவம் ஒன்றின் வாசல் முளைவிட்டது. குமுதன் தனக்குள்ளேயே எரிந்துகொண்டிருக்கும் பெரிய இலட்சிய நெருப்போடுதான் “கரும்புலிகள்” அணியிற்குள் தன்னை இணைத்துக் கொண்டான். அங்கு அவனை எதிர்கொள்ளவிருந்த சவால்களோ ஏராளம். “இனியென்னன்று குமுதன் அந்தக் காரியத்தைச் செய்து முடிக்கப்போகிறான். சாதாரண மனித வலுவுடையவர்களே செய்ய சிரமப்படும் அந்தக் கரும்புலிகள் அணிப்பயிற்சியை குமுதன் செய்து முடிப்பானா?” ஆச்சரியத்தால் உயர்ந்த புருவங்களை உயர வைத்தபடியே அதிசயிக்க வைத்தான். ஒரு போராளி தன்னைக் கரும்புலி அணியில் சேர்த்துக் கொள்ளப்போகிறான் என்றால் அவனைப் பற்றிய அடிப்படையான சில தகுதிகளைப் பரிசோதிப்பதுண்டு. அதுபோலவே குமுதனும் தன்னைக் கரும்புலிகள் அணியில் சேர்த்துக்கொண்டபோது அவனைப்பற்றிய தகுதிகளும் பார்க்கப்பட்டது. ஒரு போராளி கரும்புலிகள் அணியில் தன்னை இணைத்துக்கொள்ள வேண்டுமாயின் அவர் இரண்டு வருடங்கள் இயக்கம் வழங்கிய பணிகளைச் சரிவரச் செய்து முடித்திருக்க வேண்டும். குமுதனைப் பொறுத்தவரை ஐந்து வருடங்களுக்கு மேலாக இயக்கம் வழங்கிய கடமைகளை இயக்கம் எதிர்பார்த்தது போல செய்து முடித்தவன். எனவே அதில் அவனிற்குத் தடையிருக்கவில்லை. குறிக்கப்பட்ட நேரத்திற்குள் குறித்த வில பயிற்சிகளை செய்துமுடிக்கும் உடற்தகுதி பெற்றவரா என்ற கேள்விக்கும் அவன் இதுவரை பெற்ற பயிற்சிகள் விடைபகர்ந்தன. குமுதன் இயக்கத்திற்கு வந்ததிலிருந்து எந்தப்பயிற்சியிலும் விட்டுக் கொடுத்ததில்லை. எப்படியான பயிற்சி என்றாலும் செய்து முடிக்கக்கூடியவன். இதுவரை 50 கலிபர் பயிற்சி, சிறப்பு அதிரடிப் படைப் பயிற்சி போன்றன பெற்றிருக்கிறான். எனவே அதிலும் சிக்கல் இருக்கவில்லை. ஆனால் அடுத்து வந்த மருத்துவ பரிசோதனைதான் நிறையப்போரிற்கு அதிர்ச்சி தருவதாக இருந்தது. இதுவரையும் தனக்குள்ளேயே மறைத்து வைத்திருந்த நோய் அப்போதுதான் வெளித்தெரிய வந்தது. ஆனால் இதுவரை எந்த சந்தர்ப்பத்திலும் அவன் தன் நோயினை வெளிக்காட்டியதே இல்லை. குமுதனிற்குள் இருக்கும் இதய நோயையும் தொய்வு நோயையும் மருத்துவ பரிசோதனை மூலம் அறிந்துகொண்ட போது, அவனைக் கரும்புலிகள் அணியில் சேர்த்துக்கொள்வதற்கான அனுமதி மறுக்கப்பட்டது. குமுதனோ விடுகிறபாடில்லை. ஒரேபிடியாகத் தன்னைக் கரும்புலிகள் அணியில் இணைத்துக்கொள்ளுமாறு வேண்டினான். “அண்ணை தேர்வுப் பயிற்சி வரைக்கும் எண்டாலும் விடுங்கோ, நான் அதில என்னால முடியுமென்று நிரூபிச்சுக் காட்டுறன்” என்று கெஞ்சலான குரலில் உறுதியாகக் கேட்டுக் கொண்டிருந்தான் அவனது இலட்சிய தாகம் முழுவதையும் தனது குரலிலே பரவவிட்டான். அவனின் உறுதி குலையாத தன்மை வீணாகவில்லை. தேர்வுப் பயிற்சிகள் ஆரம்பிக்கப்பட்டது. அதில் குமுதனும் ஒருவனாக இருந்தான். தேர்வுப் பயிற்சி நிறைவுறும் போது அனைத்துப் பயிற்சிகளிலும் சித்தி பெற்று தனது இலட்சியத்திற்கு நோய் இடையூறு இல்லை என நிரூபித்தான். இப்படித் தேசத்திற்காக தான் வரித்துக் கொண்ட கொள்கையில் உறுதியான குமுதன் தான் இப்போ ஆனையிறவுப் பெருந்தளத்தினுள் நுழைந்த கரும்புலிகள் அணியிற்கு தலைமைதாங்கி இலக்கை நெருங்கிக்கொண்டிருந்தான். இன்னும் சில விநாடிகளைக் காலம் வேகமாக விழுங்கிக்கொள்ளுமாயின் அங்கே இருளாய், அமைதியாய் நிலைத்திருக்கும் சூழ்நிலை மாறி புதிய சமர்க்களம் உருவாகும். அந்த ஓரிரு கண நேரத்திற்காகவே காலமும், கரும்புலியணி வீரர்களின் கால்களும் முன்னோக்கி வேகமாக நிதானமுடன் நகர்ந்து கொண்டிருந்தன. நினைவுகள் மட்டும் பின்னோக்கி விரையத் தொடங்கின. கரும்புலிகள் பயிற்சி முடிய தாண்டிக்குளம் சண்டைக்குச் சென்று, அங்கு விழுப்புண் பட்டமையால் தாக்குதலில் பங்குபெறாது பின்னிற்கு வந்ததும் பின் விழுப்புண் குணமடைய மணவாளன்பட்டமுறிப்புச் சண்டையிற்குச் சென்றது என்று எல்லா நிகழ்விலும் நினைவுகள் தடம் பதிக்கத் தொடங்கியது. அதிலும் மணவாளன்பட்டமுறிப்புத் தாக்குதல் வந்ததும் நினைவுகள் அதைவிட்டு நகரவேயில்லை. எதிரி கைப்பற்றி வைத்திருக்கும் இராணுவ பிரதேசத்துக்குள் தான் அவர்களிற்கான இலக்கு. அதுவும் அதியுயர் பாதுகாப்பு வலயம் எனக் கருதி அங்கேயே அந்த உலங்கு வானூர்தி தரையிறங்கி ஏறியது. அந்த உலங்குவானூர்தியைத் தாக்கி அழிப்பதே தாக்குதல் அணியின் நோக்கமாகவிருந்தது. கொமாண்டோப் பாணியில் சென்று இலக்கைத் தாக்குவது – அது சாத்தியப்படாவிட்டால் கரும்புலித்தாக்குதல் மூலமாவது அந்த இலக்கை அழித்து விட வேண்டும் என்பதற்காகவே கரும்புலிவீரர்கள் அந்தத் தாக்குதலுக்கு தெரிவுசெய்யப்பட்டிருந்தார்கள். அதுவோ மிகவும் வித்தியாசமான இலக்கு. முன்திட்டமிடலோ மாதிரிப் பயிற்சியோ இல்லாது இலக்கைச் சென்றடைந்து அதைப்பார்த்து அங்கு நிலவும் களச்சூழலுக்கேற்ப அணித்தலைவரே முடிவெடுத்துச் செயற்பட வேண்டும். அதனால் அந்தக் கரும்புலிகள் அணியிற்கு குமுதனே தலைமை தாங்கிச் சென்றிருந்தான். தலைவரிற்கு குமுதனின் வழிநடத்தலில் அதிக நம்பிக்கையிருந்தது. ஏனென்றால் குமுதன் மெய்ப்பாதுகாப்புப் பணியேற்று தலைவருடன் நெருங்கி நின்ற நாட்களில் எல்லாம் அவனது ஒவ்வொரு அசைவையும் தலைவர் நேரே கவனித்தார். அப்போது அவனிற்குள் இருக்கும் வழி நடத்தும் ஆற்றலை தலைவர் நன்கு அறிந்திருந்தார். எனவேதான் இத்தாக்குதல் அணியை அவன் தலைமையிலேயே அனுப்பிவைத்தார். இலக்கினை நோக்கி கரும்புலிகள் அணி நகர ஆரம்பித்த கொஞ்ச நேரத்திற்குள் எல்லாம் வானம் பிரிந்து விட்டதைப்போல் மழை வாரிப் பொழிந்து கொண்டிருந்தது. உடையோடு சேர்ந்து நனைந்து போயிருக்கும் உடலுக்குள்ளால் ஊசிபோல உள்நுழையும் குளிர் உடலின் ஒவ்வொரு கலத்தையும் நடுங்க வைத்தது. தரையில் சாய்ந்து கொள்ளவோ, இருக்கவோ முடியாது. ஒரே சேறும் தண்ணீரும் நிறைந்திருந்தன. பேணிகளிலும் பைகளிலும் அடைக்கப்பட்ட உணவுகளைத் தவிர வேறொரு சூடான உணவுவகைகளும் இல்லை. இவ்வாறு சிக்கல் நிறைந்த சூழலில்தான் குமுதனிற்குள் மறைந்திருந்த அந்த நோய் வெளியே வரத் தொடங்கியது. குமுதனால் ஒரு மூச்சைக்கூட சிரமம் இன்றி விடமுடியவில்லை. ஒவ்வொரு மூச்சையும் உள் இழுத்து வெளிவிடுவதற்கு ஒரு போராட்டமே நடத்த வேண்டியிருந்தது. குந்தியிருந்தான். குனிந்து நின்றான். கைகளை தலைக்கு மேல் உயர்த்தினான். இப்படி ஒவ்வொரு மூச்சுக்கும் சிரமப்பட்டாலும் தனக்கு இந்த நேரம் வந்த நோய் யாருக்கும் தெரிந்துவிடக்கூடாது என்று பெரும் சிரமத்தின் மத்தியிலும் அதைத் தனக்குள்ளேயே மறைக்க முயன்றான். இந்த நேரத்தில் தன்னைப் பற்றியோ தனது வருத்தத்தைப் பற்றியோ சிந்திப்பவனாக இல்லை. அவனது நெஞ்சிற்குள் கதைத்ததெல்லாம் அந்த இலக்கை எப்படியும் அழித்துவிட வேண்டும் என்பதே. இத்தனை சிரமங்களையும் பொருட்படுத்தாது இலக்கை அழித்துவிட வேண்டும் என்பதை மட்டுமே சுமந்து அந்த இலக்கை அழித்துவிட்டு வரும்வரையும் தனது நோயினைப்பற்றி யாருடனும் கதைக்கவேயில்லை. பின் மெல்ல மெல்ல கதை தெரியவந்தபோது அவனது உறுதியும் தாயகப்பற்றும் பளிச்சென்று வெளித்தெரிந்தது. ஆனையிறவு தளத்திற்குள் தாக்குதல் ஆரம்பிக்கும் நேரம்வரை காத்திருந்த கரும்புலிகளை அதற்கான நேரம் அண்மிக்கக் குமுதனின் கட்டளையோடு தாக்குதல் ஆரம்பமானது. இடியும் மின்னலும் தரையில் இருந்து பிறப்பெடுப்பதைப்போல சத்தமும் தீச்சுவாலைகளும் மண்ணில் எல்லா முனைகளிலும் இருந்தும் எழுந்தது. அமைதியும் இருளும் கருக்கலைய ஆனையிறவுப் படைத்தளத்தின் மையத்தளம் புதிய சமரரங்கமாய் கருவுற்றிருந்தது. கண்ணிற்குத் தெரியும் கறுப்பு உருவங்கள் எல்லாம் தங்கள் எதிரிகள் என்று இருட்டில் எல்லா இடங்களிலும் இராணுவம் சுட்டுக்கொண்டிருந்தது. தாக்குதல் ஆரம்பித்த சில கணங்களுக்குள் கரும்புலிகள் அணி அவர்களிற்கு வழங்கப்பட்ட இலக்குகளை அழித்துவிட்டு திட்டத்தின்படி பின்வாங்கிக்கொண்டிருந்தார்கள். இந்த வேளையில்தான் குமுதன் விழுப்புண் அடைகிறான். அவன் விழுப்புண் அடைந்தாலும் நிதானத்தை இன்னும் இழந்துவிடவில்லை. களநிலைமைகளுக்கு ஏற்றதுபோல் கட்டளைகளை வழங்கிக்கொண்டிருந்தான். இப்போதெல்லாம் குமுதன் இன்னும் ஒரு தோழனின் கைத்தாங்கலிலேயே பின்னிற்கு நகர்ந்து கொண்டிருந்தான். சிறிது நேரத்தில் குமுதனைக் கைத்தாங்கலாகத் தூக்கி வந்த தோழனும் விழுப்புண் அடைந்துவிடுகிறான். குமுதனிற்கு தெரியும் இன்னும் கொஞ்ச நேரத்தில் நினைவிழந்து விடப்போகிறேன் என்று. இறுதியாக் கழிகின்ற ஒவ்வொரு கணத்திலும் தனது சிறு அசைவைக்கூட தேசத்திற்கு பயனுள்ளதாகச் செய்துவிட வேண்டுமெனத் துடித்துக் கொண்டிருந்தான். இறுதியாக அவனை பிரிந்துவிடத்துடிக்கும் மூச்சுக்காற்றையும் நினைவுகளையும் தக்கவைத்தபடி அவனிற்கான ஒவ்வொரு பணியையும் செய்து முடித்தான். அணிகள் அனைத்தையும் பின்வாங்குவதற்கேற்ற ஒழுங்குகளைச் செய்துவிட்டு விழுப்புண் பட்டாலும் பின்னிற்கு குமுதனையும் தூக்கிச் செல்வதற்காக நின்ற தோழனைப்பார்த்து “மச்சான் இன்னும் கொஞ்ச நேரத்தில் நான் சாஜ்சரை இழுக்கப்போறன்இ நீ கட்டாயம் வெளியில போய் இஞ்ச நடந்ததை சொல்ல வேண்டும். எத்தின இலக்கை அழிச்சனாங்கள்இ இன்னும் எத்தின இலக்கு இருக்குதெண்டு சொல்லு. அது இன்னொரு சண்டைக்கு உதவும்.” அடுத்த சில மணித்துளிகளில் தனது சாவைத் தானே தீர்மானிக்கப்போகும் அந்த வீரன் சொல்லிய சேதி இது. எப்படி அவனால் முடிந்தது. எதிரிகளின் இடைவிடாத தாக்குதலுக்கு மத்தியிலும் தன் களமாடிய தோழர்களை இழந்துவிட்ட நிலையிலும் ஏற்கனவே பலவீனமான அவனது உடல் விழுப்புண் அடைந்து வேதனையால் சோர்ந்து விட்ட போதும் எதைப்பற்றியுமே சிந்திக்காது அந்த இறுதிக்கணத்திலும் அனது அணியைப் பற்றியும், தனக்கு வழங்கப்பட்ட கட்டளைகளைப் பற்றியும் சிந்தித்துக் கொண்டிருக்கும் அவன்; இதுவரை காலமும் இயக்க வாழ்வில் ஒவ்வொரு மணித்துளியையும் எவ்வளவு பயனுடையதாக செலவு செய்திருப்பான் என்பதை எடுத்துக்காட்டியது. எவ்வளவு தூரம் எமது தாயகத்தில் பற்றுவைத்து உழைத்திருப்பான். குமுதன் கூறியனுப்பிய சேதிகளைச் சொல்லி விடவேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காகவே முகாமைவிட்டு பல சிரமங்களையும் பொருட்படுத்தாது வெளியேறிய தோழன் குமுதன் சொல்லிவிட்ட சேதிகளைச் சொன்ன போது குமுதன் காவியமாகிவிட்டான். அவன் சொல்லிவிட்ட சேதிகளே இன்னுமொரு தாக்குதலுக்கு பக்கபலமாக அமைந்துவிட்டது என்று எண்ணுகிறபோதெல்லாம் அந்த இளைய வீரனின் முகமே கண்ணுக்குள் தெரியும். அவன் என்றென்றைக்கும் வாழுகின்ற வரலாறு. வீரப் போரிற்கு குமுதன் தோள்கொடுத்த களங்கள்: கரும்புலியாகும் முன்: ஆகாய கடல்வெளிப் பெருஞ்சமர் மின்னல் இராணுவ நடவடிக்கை முறியடிப்புத் தாக்குதல். “ஓயாத அலைகள் 01” இல் அலம்பில் பகுதியில் தரையிறங்கிய விசேட அதிரடிப் படையினர் மீதான தாக்குதல். சத்ஜய 1, சத்ஜய 2 போன்ற இராணுவ நடவடிக்கைகளிற்கு எதிர் நடவடிக்கை. கரும்புலியாகிய பின்: தாண்டிக்குளம் இராணுவத்தளம் மீதான தாக்குதல். மணவாளன்பட்ட முறிப்பில் உலங்கு வானூர்தி மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல். இவர்பெற்ற சிறப்புப் பயிற்சிகள்: 50 கலிபர் கனரக ஆயுதப் பயிற்சி 203 பயிற்சி மெய்ப்பாதுகாவலர் பயிற்சி கரும்புலி அணிக்குரிய சிறப்புப் பயிற்சி. – விடுதலைப்புலிகள் இதழ் https://www.thaarakam.com/news/111447
-
வெளித்தெரியா வேர்கள் கரும்புலி லெப். கேணல் சுபேசன்…!
வெளித்தெரியா வேர்கள் கரும்புலி லெப். கேணல் சுபேசன்…! Last updated Feb 1, 2020 இவனின் குடும்ப விருட்சம்; ஒரு அண்ணனும் மூன்று அக்காவும் , நான்கு தம்பியும் , ஒரு தங்கையும் . நேரம் நள்ளிரவை நெருங்கிக்கொண்டிருந்தது. அந்த இரவின் அமைதி குலைந்து நீண்ட நேரமாகிவிட்டது. கருமை பூசியிருந்த இருளினை இடையிடை முழங்கிய துப்பாக்கி , குண்டுகளின் வெளிச்சம் சீர்குலைத்துக்கொண்டிருந்தது. எதிரியின் பலமான தடைகளை உடைத்துக்கொண்டு உள்நுழைந்த எமது கரும்புலி அணிகள் தாக்குதல்களை வேகப்படுத்தின. நாங்கள் தேடிச்சென்ற இலக்குகள் குறித்த நேரத்திற்குள் தகர்த்தெறியப்பட்டன. இலக்குகளை அழித்தும் கரும்புலி மேஜர் குமுதனிடம் இருந்து பின்வாங்கும்படி கட்டளை கிடைத்தது. நாங்கள் பின்வாங்குவதர்க்கான வியூகங்களை ஏற்படுத்தி வேகமாகப் பின்வாங்கத் தயாரானோம். ஆனால் எங்கள் அணியினைப் பொறுப்பேற்று வந்திருந்த சுபேசனிற்க்கு காலிலும் , நெஞ்சிலும் குண்டு பாய்ந்திருந்தது. எங்களுடன் சேர்ந்து சுபேசனால் பின்வாங்க முடியவில்லை. தூக்கிக்கொண்டு வந்தாவது அவனைக் காப்பாற்றுவோம் என முயற்சித்தோம். அந்த நிலையில் அது சாத்தியப்படாத காரியம். “என்னைப் பார்த்து நிற்காதீர்கள். என்னைத் தூக்கிக்கொண்டு பின் வாங்க இயலாது. நீங்கள் போங்கோ” சுபேசன் எங்கள் எல்லோரையும் , பார்த்து எதுவித கலக்கமும் இல்லாது உறுதியாக இறுதி விடை தந்தான். எப்படி அவனைப் பிரிந்து போவது , எங்களுக்கு அது கஸ்ரமாக இருந்தது. “நீங்கள் நிறையச் சாதிக்க வேண்டியனீங்கள். என்னைப் பார்த்து நின்று வீணாய் காயப்படாதீர்கள் தயவுசெய்து போங்கோ ….. நான் சாஜ்சரை இழுக்கப்போறேன்…..” இப்பொழுது நாங்கள் அவனைப் பிரிந்து போனால் இன்னும் ஒருசில வினாடிகளுக்குள் அங்கே சம்பவிக்கப்போகும் அந்த நிகழ்வு நினைத்துப்பார்க்கவே உயிரைப் பிளிந்தது. இனி என்றுமே, எப்பவுமே அவனைப் பார்க்கவோ அவனோடு பேசவோ முடியாது. அப்படி ஒரு நிகழ்வு இங்கே நடக்குமானால்….. எண்ணிக்கொள்ளவே நெஞ்சு கனத்தது. “சுபேசன் வீரச்சாவடைந்துவிட்டான்” என்று எப்படி அவன் தங்கையிடம் போய்ச்சொல்வது. அதை அவள் எப்படித் தாங்கிக்கொள்ளப்போகிறாள்….? “சுபேசன் தங்கை மீது எவ்வளவு பாசம் வைத்திருந்தான். என்னமாதிரி எல்லாம் நேசித்தான். சின்ன வயதில் இருந்து ஒருவர்மேல் ஒருவர் அளவில்லாத பாசம் வைத்து வளர்ந்தவர்கள். தாய் – தந்தையிலோ, மற்ற சகோதரர்களிலோ வைத்த பாசத்தை விட சுபேசன் மீது அதிக பாசம் வைத்திருந்தாள் அவள். நாங்கள் சீனன்குடாத் தாக்குதலுக்காக பயிற்சி எடுத்துக்கொண்டிருந்த வேளை…. சுபேசனின் தங்கையை யாரோ ஒருவன் கடத்திச் சென்றான். சுபேசன் துடித்துப்போய் ஓடிச்சென்று தங்கையைக் காப்பாற்றுகின்றான். இருந்தாலும் தலையில் பலமாக அடிபட்டு மயங்க்கிவிடுகிறாள். மயங்கிய தங்கையை கைகளில் சுமந்து, பின் ஓரிடத்தில் தண்ணீர் தெளிக்கவே அவள் மயக்கம் தெளிந்தாள்.” இப்படி ஒரு கனவினைக் கண்டுவிட்டு அவன் நிஜமாகவே துடித்துப்போய் விட்டான். நித்திரையில் திடுக்கிட்டு விழித்தவனுக்கு மறுபடியும் தூக்கம் வரவில்லை. தங்கையின் நினைவுகளே சுற்றி சுற்றி அவன் கண்களுக்குள் நுழைந்தன. விடிந்ததும் தங்கையிடம் சென்று அவளைப் பார்த்து தான் கண்ட கனவினை அவளோடு கதைத்த பின்னர்தான் அவனின் மனம் ஆறுதலானது. இரவு கனவு கண்டுவிட்டு எழுந்து போராளிகளிடம் கூறும்போது எவ்வளது துடித்தான். கனவிலேயே தங்கை படும் கஸ்ரத்தைக் கண்டுவிட்டு தங்கைக்கு என்னவோ – ஏதுவோ என ஏங்கிய அவனது உணர்வுகள் தங்கையை இறுதியாய் பிரிகின்றவேளை எப்படி இருந்திருக்கும் , அவனின் மனம் என்ன பாடுபட்டிருக்கும்….! ஆனையிறவுப் படைத்தளமே எமது இலக்கிற்கான இடம். எமது முகாமில் இருந்து நாங்கள் புறப்பட்ட அந்த இறுதி நேரம்….. நாங்கள் எல்லோரும் வாகனத்தில் ஏறி அமர்ந்து விட்டோம். இன்னும் சில வினாடிகளில் வாகனம் புறப்பட்டுவிடும். இறுதியாய்ப் பிரிகின்ற அந்தக்கணம் – எல்லோரும் மாறி மாறி விடைகொடுத்துக் கொள்கின்றோம். இந்த இருதியான் விடைகொடுப்பு யார்யாருக்கு நிரந்தரமாய் போகும் சர்ந்தப்பம் கிடைக்குமோ தெரியாது. என்றுமே , எப்பவுமே இனிக்கான முடியாத அந்தப் பிரிவு நிகழ்ந்த வேளை…… சுபெசனை விட்டு பிரிந்திருக்க முடியாது இயக்கத்திற்கு வந்த அவனது பாசத்தங்க்கையும் அங்கே நிற்கின்றாள். இன்னும் ஒன்றோ – இரண்டோ வினாடிகளில் அவன் புறப்படப்போகின்றான். அந்த ஒரு சில வினாடிகளைக் கூட தங்கையுடனேயே பேசிக்கழித்தான். இரண்டு பெருநதிகள் ஓடிவந்து கலக்குமே ஓர் இடம்… அங்கு எழுகின்ற ஆர்பரிப்பினைப் போன்று இரண்டுபேர் மனதிற்குள்ளும் எத்தனையோ மனக்குமுறல்கள் , என்னால் சொல்ல முடியவில்லை. போராளிகளுடன் சிறிதுகாலம் பழகிப் பிரியும்போது கூட தாங்கிக்கொள்ள முடியாத சுபேசன் , நினைவு வந்த நாளில் இருந்து உயிராய் நேசித்த தங்கையின் பிரிவை எப்படித்தான் தாங்கிக்கொள்ளப்போகின்றான். தங்கைக்கு தெரியும் அண்ணன் கரும்புலி என்று. இப்பவும் கரும்புலித் தாக்குதல் ஒன்றிற்குத்தான் போகின்றான்…. போனான்…. சீனன்குடாவில் இலக்குகளை அழித்துவிட்டு வந்தமாதிரி இந்தச்சண்டையிலும் இலக்கு அழித்துவிட்டு அன்னான் திரும்பி வரமாட்டானா…?….! அவளது மனம் பிராத்தித்தது. உயிரோடு ஒட்டிய உறவல்லோ. சுபேசனிற்க்கும் வேதனையாகத்தான் இருந்தது. தங்கையின் கண்ணீரத்துடைத்து ” அழக்கூடாது ” தலைவர் இருக்கிறார். கவலைபடக்கூடாது ” தங்கையிற்கு அறிவுரை சொல்லி , ஆறுதல் வார்த்தைகள் கூறி எவ்வளவோ மனப்போராட்டத்தின் மத்தியில் பிரிக்க முடியாத பின்னிப்போன உறவைப் பிரித்துக்கொண்டு வாகனத்தில் ஏறி அமர்ந்துகொள்கிறான். அவன் அண்ணனுக்கு கையசைத்தாள். அவனும் கையசைத்தான். வினாடியாகளிக் காலம் மிக வேகமாக விழுங்கிக்கொண்டது. தங்கையின் விசும்பல் காதில் கேட்கிறது. தங்கையின் சிறு கலக்கத்தைக் கண்டு தாங்கிக்கொள்ள முடியாத சுபேசனிற்கு எப்படி இருந்ததோ. வாகனம் மெல்ல மெல்ல நகரத்தொடங்குகின்றது. மீண்டும் ஒரு தடவை தங்கையைப் பார்த்துவிட வேண்டுமென ரோச்சடித்துத் தங்கையைப் பார்க்கிறான். தங்கையின் முகம் தெரிகின்றது. அவளின் வாட்டத்தைக் கண்டது , அவளிற்கு ஆறுதல் சொல்லவேண்டும் போல துடித்தது அவன் மனம். வாகனம் மெல்ல மெல்ல வேகம் கூடியது. பிரிவைத் தாங்க முடியாத சுபேசன் தலைகவிழ்ந்துகொள்கிறான். இந்த இறுதி நேரம் அவன் உணர்வுகள் எத்தனை தடவை சிலிர்த்திருக்கும் இவ்வளவு பாசமான் உறவினைவிட இந்தத் தேசத்தின் மீதும் மக்களின் மீதும் எவ்வளவு உன்னதமான பற்று வைத்திருக்கின்றான். அவனது இலட்சியம் எவ்வளவு புனிதமானது. அவன் தன் தேசத்தில் எல்லோரையும் ஆழமாக நேசித்தான். அதனால்த்தான் அவர்களின் துயரத்தைக்கண்டு தாங்கிக்கொள்ள முடியாமல் கரும்புலியானான். அடுத்தவர் துயரத்திற்கு தோள்கொடுக்கவும் , மற்றவர்களின் வேதனைக்காக கண்ணீர் சிந்தவும் பழகிய இதயம் அவனது இதயம். தலைவர் ஒரு போராளியை எப்படியெல்லாம் எதிர்பார்த்த்தாரோ அத்தனியும் பிரதிபலிப்பதாகத் திகழ்ந்தான். 1993ம் ஆண்டு தன்னைக் கரும்புலிகள் அணியில் இணைத்துக் கொண்டவன் சுபேசன். இன்றுவரை எத்தனை ஆண்டுகள் மனம் சலிக்காது கொள்கை ஒன்றையே நெஞ்சில் சுமந்து எவ்வளவு கடுமையான பயிற்சிகளை எல்லாம் எடுத்திருப்பான். இறுதி மூச்சிலே பகை எரிக்க அந்த இலக்கு கிடைக்கும்வரை இத்தனை வருடங்கள் காத்திருந்தானே….! அவனது இலட்சியம் எத்தனை பெரியது. அவனிற்கு உடம்பில் ஏராளமான காயங்கள். 1994ம் ஆண்டு காலப்பகுதியில் ஆனையிறவுப்படைத்தளம் மீதான் கரும்புலித் தாக்குதல் ஒன்று செய்வதற்கான இறுதி வேவிற்கு சுபேசன் சென்றிருந்தான். அன்று எதிரியுடன் மோத நேர்ந்தது. சுபேசனிற்கு கையில் பெரிய காயம். அன்று ஏற்ப்பட்ட காயத்தினால் இன்றும் பெரிய வேலைகள் செய்தால் கைமூட்டுக்கள் கழன்றுவிடும். பின் அவன் தானே கைமூட்டைக்கொழுவி தன் பணிகளை செய்துகொள்வான். எல்லா ஆயுதங்களையும் சிறப்புற இயக்கம் தேர்ச்சி பெற்றதோடு சிறந்த சூட்டு வல்லமையும் கொண்டவன். எந்த ஒரு இருக்கானாம சூழ்நிலையிலும் நன்கு திட்டமிட்டு அணிகளை சிறந்தமுறையில் வழிநடத்தக் கூடியவன். சீனன்குடாவில் எதிரி வானூர்திகளையும் , கனரக ஆயுதங்களையும் அழித்த கரும்புலி அணிகளுக்கு சுபேசனே தலைமையேற்றுச் சென்றிருந்தான். அன்றொருநாள் ஆகாயக் கடல்வெளித் தாக்குதலை முறியடிப்பதற்காக வெற்றிலைக்கேணியிலிருந்து ஆனையிறவுக்கு சிங்கள இராணுவம் பெரிய நகர்வு ஒன்றினை மேற்கொண்டது. அதற்க்கு ஊடறுப்புத்தாக்குதல் மேற்கொள்ள நின்ற எமது அணிகளுடன் ஒன்றாக சுபேசனும் 05 பேர் கொண்ட வேவு அணியுடன் நின்றான். முதல் நாள் சுபேசனும் சென்று வேவு பார்த்துவிட்டு வந்திருந்தான். அடுத்தநாள் ஊடறுப்புத் தாக்குதலுக்குத் திட்டமிடும் வேலை இருந்தமையால் சுபேசன் வேவுக்குச் செல்லாது முகாமில் தங்கிக்கொள்கிறான். சண்டைச் சூழ்நிலை காரணமாக உணவு விநியோகம் பெரிது சீர்குலைந்திருந்தது. எப்போதாவது வரும் சாப்பாட்டை சாப்பிடுவது , சாப்பாடு வராவிட்டால் சாப்பாட்டை எதிர்பார்க்காது தத்தமது கடமைகளை செய்யவேண்டிய ஒரு சூழ்நிலையே இருந்தது. அன்று சாப்பாடு வந்திருந்தது ஆனால் , அங்கே நின்ற ஆட்களை விட வந்திருந்த சாப்பாடுப் பொட்டலங்கள் குறைவானதாக இருந்தது. 05 பேர் கொண்ட சுபேசனின் அணிக்கு இரண்டு சாப்படுப் பொட்டலங்கள் கிடைத்தன. தனது தோழர்கள் வேவு பார்த்துவிட்டு களைத்துப்போய் வருவார்களே அவர்களுடன் சேர்ந்து சாப்பிடுவோம் என எண்ணியவன் அந்த உணவுப்பொட்டலங்களை துணி ஒன்றினால் சுற்றி கவனமாக வைத்துவிட்டு படுத்துவிடுகின்றான்.. அவன் முதல்நாள் சாப்பிட்ட சாப்பாடுதான்….. அன்று மதியம் கழிந்துகொண்டிருந்தது. இந்தளவு நேர இடையிர்க்குள் ஒன்றோ இரண்டு இளநீர் குடித்துவிட்டான். படுத்திருந்த சுபேசனிற்கு வேவு பார்க்கச் சென்ற தோழர்கள் வருகின்றார்கள் என்ற செய்தி காதில் எட்ட , நித்திரை விட்டு எழுகின்றான். எழுந்திருந்தவன் உடனே தான் எடுத்துவைத்திருந்த சாப்பாட்டுப் பொட்டலங்களைப் பார்க்கின்றான். பொட்டலங்களைக் காணவில்லை…. யாரோ அந்தச் சாப்பாட்டுப் பொட்டலங்களை எடுத்து சாப்பிட்டுவிட்டார்கள் பொங்கி வந்த அழுகையினை சுபேசனால் அடக்கிக்கொள்ள முடியவில்லை. உணவு யுக்கும் என்ற நம்பிக்கையோடு வருவார்களே தன் தோழர்கள் அவர்களுக்கு எவ்ன்னவேன்று சாப்பாடு இல்லைஎனச்சொல்வது ….. அவன் துடித்துப் போனான். முதல் நாள் மதியம் சாப்பிட்ட சாப்பாட்டுடன் சென்று களைத்துப்போய் வருகிறார்களே எப்படி பசியைத் தாங்கிக்கொள்ளப் போகிறார்கள். அவர்களிற்கு ஒருவேளை உணவு கூட கொடுக்கமுடியவில்லையே என கலங்கினான். அவனது மனவேதனை கண்களால் வெளியேறிக்கொண்டிருந்தது. பெற்ற பிள்ளைகள் பசியில் துடிப்பதைப் பார்த்து ஒரு தாள் அழுவாளே அதே மாதிரி அழுதான் எங்கள் சுபேசன். அவன் தோழர்கள் எவ்வளவு சமாதானப் படுத்தியும் சுபேசனின் அழுகை தீருவதாக இல்லை. நின்ற வேறு தோழர்கள் அங்கு தேடி , இளநீர்களைப் பிடுங்கிக்கொண்டு வந்து எல்லோருக்கும் கொடுத்து சுபேசனிற்கு கொடுத்தபோதும் அவன் குடிப்பதாக இல்லை. “என்ர பெடியள் சரியான பசியாய் இருப்பாங்கள் அவர்களுகுக் கொடுங்கோ எனக்கு வேண்டாம்” அவன் மறுத்தே விட்டான். இப்படித்தான் என்றும் தன்னைவிட பிறரை நேசிக்கும் மனம் அவனிற்கு…. நான் கடைசியாகச் சிரித்து அவனோடு பேசிய அந்த இறுதியான அந்த நேரமே இவனது உணர்வுகள் எவ்வளவு புனிதமாக இருந்தது. ஆனையிறவு படைத்தளத்திற்குள் ஊடுருவி முதலாவது தடை தாண்டியாகிவிட்டது. தாக்குதல் ஆரம்பிக்க இன்னும் ஒரு சில மணித்தியாலங்கள் இருந்தது. இறுதியாக நாங்கள் பழரின்களையும் , உளர் உணவுகளையும் சிரித்து கலகலப்பாகச் சாப்பிட்ட்டுக் கொண்டிருந்தோம். சுபேசன் மட்டும் ஒவ்வொரு போராளியின் மனத்தையும் பாசமாய்ப் பார்த்தான். அவனது முகத்தில் லேசாக சோகம் படர்ந்திருந்தது. இன்னும் ஒரு சில மணித்தியாலத்திற்குள் வெடிக்கப் போகும் அந்த சுபேசன் என்ன சொன்னான் தெரியுமா……? “பார் மச்சான் எவ்வளவு சிரிப்பு கலகலப்பாக இருக்கிறார்கள். இன்னும் கொஞ்ச நேரத்தில்….. ….” அவனால் அதற்குமேல் எதுவும் பேசமுடியவில்லை. தீயிர்க்குள் இருந்து நீர் வடியும் உணர்வு அவனுக்கு. அவன் தனியாக இலக்கை அழிக்க சென்றிருந்தால் கவலைப்படட்டிருகக்மாட்டான். தன்னுடன் சேர்ந்து கூடிக் கும்மாளம் போட்டுப்பழகிய இந்த வீரர்கள் இன்னும் சில மணி நேரத்தில் காவியங்களாகப் போகின்றார்களே…! என்ற ஏக்கம்தான் அவனுக்கு. தன்னை அழிக்கத் துணிந்த அந்த வீரன் இறுதி நேரத்தில் இப்படி ஏங்கினான் என்றால் , அவன் மற்றவர்களின் வாழ்வை , மற்றவர்களை எப்படி உன்னதமாக நேசிக்கின்றான். இப்படி எல்லோரிலும் பாசம் வைக்கும் சுபேசன் இயக்கத்திற்கு வந்ததும் , அண்ணனைப் பிரிந்து வாழமுடியாது என்று அண்ணனுடன் கூட இருப்பதற்காக இயக்கத்திற்கு வந்தாலே அவன் தங்கை. அவள் மீது எவ்வளவு பாசம் வைத்திருப்பான். தன் தங்கை மீதும் , எம் தேசம் மீதும் ஒவ்வொரு மக்கள் மீதும் , எங்கள் தலைவன் மீதும் எவ்வளவு பாசம் வைத்திருந்தானோ அதுதான் அவனை ஒரு உன்னத கரும்புலி வீரனாக்கியது. சண்டைகளின் சீறல் இன்னும் அடங்கியதாய் இல்லை. தொடர்ந்து வெடிமுழக்கம். “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” சுபேசன் அழுத்தமாக உரைத்தது வானில் எதிரொலித்தது. எப்போதுமே மற்றவர்களிற்க்காக சுவாசித்துப் பழகிப்போன அவனது மூச்சு நிட்சயம் எம் தேசத்தை வாழவைக்கும். கரும்புலியாய் இணைந்து கொள்ள முன் பங்குபற்றிய தாக்குதல்கள்… * ஆகாய கடல்வெளிப் பெருஞ்சமர். * மின்னல் இராணுவ நடவடிக்கைக்கு எதிரான சண்டை, கொக்குத்தொடுவாயில் மேற்கொள்ளப்பட்ட பதுங்கித் தாக்குதல். * சின்னமண்டலாய்ப் பகுதியில் மேற்கொண்ட காவலரண் அழிப்புச்சண்டை. * கட்டுப்பத்தை இராணுவ முகாம் தாக்குதல் -விடுதலைப்புலிகள் இதழ் “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” https://www.thaarakam.com/news/111443
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
லெப். கேணல் கோபி மாஸ்ரர் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்! Last updated Jan 26, 2020 லெப். கேணல் கோபி மாஸ்ரர் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும். 26.01.1991 அன்று ஆனையிறவு பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினருடனான நேரடி மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட புலனாய்வுத்துறை வீரவேங்கை பற்றிக் அவர்களின் 29ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். 26.01.2009 அன்று தாய் மண்ணின் வெவ்வேறு பகுதியிலும், வெவ்வேறு கள சம்பவங்களின் போதும் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப். கேணல் கோபி மாஸ்ரர் உட்பட ஏனைய மாவீரர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். லெப்.கேணல் கோபி மாஸ்ரர் (திருநாவுக்கரசு சதீஸ்குமார்) மேஜர் அகன் (மங்களேஸ்வரன் சுரேஸ் – ஒட்டுசுட்டான், முல்லைத்தீவு) மேஜர் மச்சவல்லவன் (இராமையா சேர்வைநடராசா – புலோப்பளை கிழக்கு, யாழ்ப்பாணம்) மேஜர் பேரன்பு (சண்முகலிங்கம் சுதாகரன் – யாழ்ப்பாணம்) மேஜர் குறிஞ்சிச்சுடர் (தில்லைநாதன் கஜேந்திரா – ஜெயந்திநகர், கிளிநொச்சி) மேஜர் மதிமாறன் / ஈழக்கடல் (மகேந்திரன் திலீபன் / தினேஸ் – மன்னார்) மேஜர் பிறைசூடி / கீர்த்தனன் (தங்கவேல் தங்கேஸ்வரன் – பொன்நகர், திருமுறிகண்டி, கிளிநொச்சி) கப்டன் கலையரசன் (திருஞானம் அன்ரன் ஜெயக்குமார் – இரணைமாதா நகர், முழங்காவில், முல்லைத்தீவு) கப்டன் அறிவாளன் (முத்தையா ஜெயந்தகுமார் – யாழ்ப்பாணம்) கப்டன் சாளரசன் (சத்தியசீலன் ஜெயக்குமார் – யாழ்ப்பாணம்) கப்டன் அன்புமலை (லக்சுமிகந்தராசா கிருஸ்ணராஜ், யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் ஒளிநிலா / தூயமுல்லை (இரத்தினம் சுஜித்தா – யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் அல்லியரசி (கதிரவேலு புனிதவதி – யோசப் கடை, மலையாளபுரம், கிளிநொச்சி) லெப்டினன்ட் அரசி /குமுதா (சுப்பிரமணியம் பிரியதர்சினி – ஆனந்தபுரம், கிளிநொச்சி) லெப்டினன்ட் சீர்விழி (இராமநாதன் தயாளினி – செல்வாநகர், கிளிநொச்சி) 2ம் லெப்டினன்ட் அரிகரன் (அன்னலிங்கம் ரதீஸ் – வட்டக்கச்சி, கிளிநொச்சி) 2ம் லெப்டினன்ட் நவநீதன் (அழகிப்பொடி சோமசுந்தரன் – மட்டக்களப்பு) வீரவேங்கை மலரவன் (செல்வராஜா கவிதாஸ் – யாழ்ப்பாணம்) போருதவிப்படை வீரர் ராகுலன் (யோகேந்திரன் ராகுலன் – செஞ்சுடர் குடியிருப்பு, கைவேலி, புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு) 26.01.2007 அன்று யாழ். மாவட்டம் கிளாலிப் பகுதியில் சிறிலங்கா படையினருடனான நேரடி மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கப்டன் கார்முகிலன் அவர்களின் 13ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். 26.01.2007 அன்று யாழ். மாவட்டம் முகமாலைப் பகுதியில் சிறிலங்கா படையினருடனான நேரடி மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட வீரவேங்கை பாமா அவர்களின் 13ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தாய்மண்ணின் விடிவிற்காக 26.01.2008 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மேஜர் அசோகன், லெப்டினன்ட் கானக்கதிர் / கதிர், லெப்டினன்ட் வஞ்சி, 2ம் லெப்டினன்ட் திருவேந்தி, 2ம் லெப்டினன்ட் இன்மொழி, வீரவேங்கை செங்கையாழினி ஆகிய வேங்கைகளின் 12ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…! “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” https://www.thaarakam.com/news/110428
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நண்பர் முரளி என்ற கலைஞனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்🎉🎉🎉
-
கேணல் கிட்டு
கிட்டு ஒரு தனிமனித சரித்திரம்! Last updated Jan 15, 2020 கேணல் கிட்டு (ஜனவரி 2, 1961 – ஜனவரி 16, 1993) சதாசிவம் கிருஸ்ணகுமார் தனது பதினெட்டாவது வயதில் 1979 இல் தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் இணைந்தார். வெங்கிட்டு எனப் பெயர் மாற்றம் பெற்று, பின் கிட்டு என தோழர்களால் செல்லமாக அழைக்கப்பட்டார். போராட்ட வரலாறு தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனிடம் இராணுவப் பயிற்சி பெற்றார். 1983 ஏப்ரல் 7 இல் விடுதலைப் புலிகளின் தாக்குதல் அணியில் கிட்டு இரண்டாவது பொறுப்பாளராக நிலையுயர்த்தப்பட்டார். இதன்பின் உள்ளுராட்சித் தேர்தலை பகிஸ்கரிக்கும் பொருட்டு யாழ்ப்பாணம், கந்தர்மடம் வாக்குச்சாவடியில் இராணுவம் மீது நடாத்தப்பட்ட தாக்குதல், ஜூலை 23 இல் இராணுவ வாகனங்கள் மீது நடாத்தப்பட்ட திருநெல்வேலிக் கண்ணி வெடித்தாக்குதல் என்பனவற்றிலும் கலந்து கொண்டார். 1983இன் இறுதிக் காலத்தில் இந்தியாவுக்குப் பயிற்சிக்கெனச் சென்ற இயக்கத்தின் முதற்குழுவில் கிட்டு இடம்பெற்றார். பயிற்சியை முடித்து தமிழீழம் வந்த கிட்டு 1984 மார்ச் 2 இல் நடைபெற்ற குருநகர் இராணுவமுகாம் தாக்குதல் உட்பட்ட பல்வேறு தாக்குதல்களில் முக்கிய பங்கு வகித்து நெறிப்படுத்தினார். இதேநேரம் யாழ். மாவட்டத் தளபதியாக இருந்த கப்டன் பண்டிதர் 1985 ஜனவரி 9 இல் வீரச்சாவடைய அவரின் இடத்திற்கு கிட்டு நியமிக்கப்பட்டார். யாழ். மாவட்டத் தளபதி ஆனவுடன் யாழ். பொலிஸ் நிலையத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்று நடாத்தி, அங்கிருந்த பெருந்தொகையான ஆயுதங்களைக் கைப்பற்றினார். 1987 மார்ச் இறுதியில் கைக்குண்டுத் தாக்குதலினால் தனது இடதுகாலை இழந்தார். இந்திய-இலங்கை ஒப்பந்த காலத்தில் தனது சிகிச்சைக்காக இந்தியா சென்றார் கிட்டு. கிட்டுவை இந்திய அரசு வீட்டுக்காவலிலும், சென்னை மத்திய சிறையிலும் கைதியாக அடைத்து வைத்திருந்தது. இந்திய அரசு அவரை தமிழீழத்தில் விடுதலை செய்தது. 1989 இல் இலங்கை அரசுடன் பேசுவதற்கு கொழும்பு சென்ற குழுவில் அங்கம் வகித்த கிட்டு விடுதலைப் புலிகளின் வெளிநாட்டுப் பிரிவுப் பொறுப்பாளராக அங்கிருந்தபடியே லண்டன் சென்றார். பின்னர் லெப். கேணல் குட்டிசிறி உட்பட 10 பேருடன் ‘குவேக்கர்ஸ்’ இன் சமாதானச் செய்தியுடன் சர்வதேச கடற்பரப்பினூடாக எம்.வி அகத் என்ற கப்பலில் தமிழீழம் திரும்புகையில் இந்தியக் கடற்படையால் சுற்றி வளைக்கப்பட்ட போது கப்பலை வெடிக்க வைத்து வீரச்சாவடைந்தார். வங்கக் கடலின் நடுவே அந்த தியாக வேள்வித் தீ எரிந்து அணைந்து இன்றுடன் ஒன்பது ஆண்டுகள் ஓடி மறைந்துவிட்டன. ஆனால், தமிழ் மக்களின் மனங்கள் அதை நினைத்து நினைத்து இன்னும் எரிந்துகொண்டேயிருக்கின்றன. கேணல் கிட்டுவும், அவருடன் வந்த ஒன்பது தோழர்களும் தீயோடு தீயாகி, வங்கக் கடலில் சங்கமித்த அந்தச் சம்பவம் சரித்திரம் மறக்காத ஒரு சாவு மட்டுமல்ல, அது எங்கள் நெஞ்சங்களை நீங்க மறுக்கும் நெடும் அலையாகி, நினைவெங்கும் நிலைபெற்று விட்டதொன்று. கேணல் கிட்டு தேசியத் தலைவரால் அதிகம் நேசிக்கப்பட்டவர். அவரின் அன்பை அனுபவித்தவர். தலைவரின் இலட்சியத்திற்கு தோள் கொடுத்து அவரின் மனதோடு ஒன்றித்து வாழ்ந்தவர் அதனால்தான், தமிழீழத் தேசியத் தலைவர் “கிட்டுவை ஆழமாக நேசித்தேன், தம்பியாக, தளபதியாக, எனது சுமை களைத் தாங்கும் உற்ற தோழனாக நான் அவனை நேசித்தேன். இது சாதாரண மனித பாசத் திற்கு அப்பாலானது. ஒரே இலட்சியப்பற்று ணர்வில் ஒன்றித்து, போராட்ட வாழ்வில் நாம் பகிர்ந்துகொண்ட அனுபவத்தில் ஒருவரை யொருவர் ஆழமாக இனங்கண்ட புரிந்துணர் வில் வளர்த்த நேயம் அது” என கேணல் கிட்டுவிற்கும் தமக்கும் இடையே இருந்த பாசப் பிணைப்பினை வெளிப்படுத்துகிறார். கிட்டு எந்தளவிற்கு தலைவரின் மனதில் இடம்பிடித்தாரோ அதேயளவு தமிழீழ மக்களின் மனங்களிலும் நிறைந்திருக்கின்றார். எந்தக் காலத்திலும் மறக்கமுடியாத அவரின் நினைவுகளோடு இன்று தமிழீழம் நிமிர்ந்து நிற்கிறது. தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலத்திலிருந்து ஆழப்பதிக்கப்பட்ட கிட்டுவின் வரலாற்றுத் தடங்கள் அழிக்க முடியாத பெரும் பதிவாக பரிணமித்து, தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. 1979ல் ஆரம்ப காலப் பகுதி விடுதலைப் போராட்டத்திற்கு அடித்தளமிடப்பட்ட காலம், சதாசிவம் கிருஸ்ணகுமார் என்னும் பதினெட்டு வயது நிறைந்த இளைஞன் தன்னை விடுதலைப் போராளியாக மாற்றியதன் மூலம் வெங்கிட்டு எனப் பெயர் மாற்றம் பெற்று, பின் கிட்டு என தோழர்களால் செல்லமாக அழைக்கப்பட்டார். கிட்டுவும், இன்னும் சில தோழர்களும் தலைவரிடமே போரியலை நேரில் கற்றார்கள். கிட்டுவின் துடிப்பும், வேகமும் அங்கிருந்தவர்களிடையே அவரை வேறுபடுத்திக் காட்டியது. எதையும் அறிந்துகொள்ள வேண்டுமென்ற வேகமும் எந்த விடயத்தையும் அறிந்துகொள்ளும் ஆற்றலும் கிட்டுவிற்கு இயல்பாகவே இருந்ததால் தலைவரின் எண்ணங்களை, சிந்தனைகளை, மக்கள் மீது அவர் கொண்டிருந்த எல்லை கடந்த பாசத்தை, தலைவரின் அருகில் இருந்த கிட்டு அறிந்துகொள்கிறார். அளவு கடந்த திறமையுடன் வேகமும் விவேகமும் நிறைந்த அவரது செயற்பாடுகள் அவர் மீதான தனி நம்பிக்கை வளரக் காரணமாகின்றன. தன் மீது தலைவர் வைத்திருக்கும் நம்பிக்கையை நிரூபிக்கும் காலம் கனிந்துவரும் வரை கிட்டு காத்திருக்கிறார். 1983 மார்ச் 04 இல் அற்புதன் தலைமையில் உமையாள்புரம் தாக்குதலுக்காக விடுதலைப் புலிகளின் அணி ஒன்று செல்கிறது. அதில் கிட்டுவும் ஒருவர், தாக்குதலுக்கான களம் தீர்மானிக்கப்படுகிறது. வீதியில் நிலக் கண்ணிவெடிகளை பொருத்திவிட்டு எதிரியின் வரவை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். கண்ணிவெடிகளை கையாளும் போதியளவு செயற்திறன் போராளிகளுக்கு இல்லாத காலம் அது. இராணுவ வாகனங்கள் இலக்காக அண்மிக்கும் நேரத்தில், துரதிஸ்ட வச மாக வாகனங்களைக் கண்டு மிரண்டு ஓடி வந்த ஆட்டுக்குட்டியின் கால்கள் பட்டு கண் ணிவெடிகள் வெடிக்க போராளிகள் நிலை குலைந்து போகிறார்கள். துப்பாக்கி ரவை களைக் கக்கியவாறு இரு இராணுவ கவச வாகனங்கள் போராளிகளை நெருங்கிவர, பின்வாங்கிச் செல்வதைத்தவிர வேறு வழி அவர்களுக்குத் தெரியவில்லை. ஆனால், கிட்டு மட்டும் எதிரியை எதிர்கொள்ளும் சாதகமற்ற களநிலையைக் கருத்திற்கொள்ளாது துணிந்து நின்று தான் வைத்திருந்த ஜுத்திறி (பு-3) துப்பாக்கியால் இராணுவ கவசவாக னத்தை நோக்கிச் சுடுகிறார். இலக்குத் தவற வில்லை. சாரதி காயப்பட வாகனம் செய லற்றுப் போகிறது. தலைவரின் நம்பிக்கையை மெய்ப்பித்த மகிழ்ச்சியோடு கிட்டு களம் விட்டு அகன்றார். அவரின் முதல் களமே தனி மனித சாதனையாக ஆரம்பமாகிறது. 1983 ஏப்ரல் 07இல் விடுதலைப் புலிகளின் தாக்குதல் அணியில் கிட்டு இரண்டாவது பொறுப்பாளராக நிலையுயர்த்தப்பட்டார். இதன்பின் சிறீலங்கா அரசால் திணிக்கப்பட்ட உள்ளுராட்சித் தேர்தலை பகிஸ்கரிக்கும் பொருட்டு கந்தர்மடம் வாக்குச்சாவடியில் இராணுவம் மீது நடாத்தப்பட்ட தாக்குதல , ஜுலை 23ல் இராணுவ வாகனங்கள் மீது நடாத்தப்பட்ட திருநெல்வேலிக் கண்ணி வெடித்தாக்குதல் என்பனவற்றிலும் கலந்து கொள்கின்றார். இவ வாண்டின் இறுதிக் காலத் தில் இந்திய மண்ணில் பயிற்சிக்கெனச் சென்ற இயக்கத்தின் முதற்குழுவின் இரண் டாவது பொறுப்பாளராக கிட்டு நியமிக்கப் படுகின்றார். பயிற்சியை முடித்து தமிழீழம் வந்த கிட்டு 1984 மார்ச் 02இல் நடைபெற்ற குருநகர் இராணுவ முகாம் தாக்குதல் உட்பட்ட பல்வேறு தாக்குதல்களில் முக்கிய பங்கு வகித்து நெறிப்படுத்துகின்றார். இதேநேரம் யாழ். மாவட்டத் தளபதியாக இருந்த கப்டன் பண்டிதர் 1985 ஜனவரி 09இல் எதிரியுடனான மோதலில் வீரச்சாவடைய அவரின் இடத்திற்கு கிட்டு தலைவரால் நியமிக்கப்படுகின்றார். யாழ். மாவட்டத் தளபதி ஆனவுடன் யாழ். பொலிஸ் நிலையத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்று நடாத்தி, அங்கிருந்த பெருந்தொகையான ஆயுதங்களைக் கைப்பற்றினார். யாழ். மாவட்டத்தில் கிட்டுவின் வெற்றிகரத் தாக்குதல்கள் தொடர்ந்தன. எதிரிப்படை யாழ். மண்ணில் அவனுடைய முகாமுக்குள்ளேயே முடக்கப்படுகிறது. யாழ். கோட்டையை ஆக்கிரமித்திருந்த சிறீலங்கா இராணுவம் கிட்டு என்ற பெயரைக் கேட்டாலே கதிகலங்கிப் போகும் நிலை உருவானது. மக்கள் மத்தியில் கிட்டு என்ற மூன்றெழுத்துப் பெயர் மந்திரமாக உச்சரிக்கப்படுகிறது. யாழ். மண்ணில் எதிரிப்படையை மட்டும் அவர் வெற்றிகொள்ளவில்லை. மாறாக, மக்களின் மனங்களையும் அவர் வெற்றிகொண்டார். மக்கள் பிரச்சினையைத் தீர்ப்பதில் அவர் அதிக அக்கறை செலுத்தினார். தொழில் நிலையங் கள், நூலகங்கள், மலிவுவிலைக் கடைகள், பூங்காக்கள் என்பவற்றை நிறுவி மக்களின் வாழ்க்கை நிலையை உயர்த்தினார். இவ வாறாகக் கிட்டுவின் சமூகப்பணிகள் விரி வடைய, அவர் தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனைகளைப் பிரதிபலிக்கும் ஒரு ஒப்பற்ற போராளியாக மக்களால் உணரப்பட்டார். தமிழீழ மக்கள் மனங்களில் மாத்திரமல்ல, எல்லைகடந்து வாழும் தமிழ் உறவுகள் அனைவருமே கிட்டுவின் வீரசாதனைகளை அறிந்து பெருமிதம் அடைந்தார்கள். விடுதலைப் புலிகளால் மன்னாரில் வைத்துச் சிறைப்பிடிக்கப்பட்ட இரு சிங்களச் சிப்பாய்களின் விடுவிப்பு தொடர்பாக 1986 நவம்பர் 10இல் சிங்கள இராணுவத் தளபதியான கேணல் ஆனந்த வீரசேகரா, கப்டன் கொத்தலாவை ஆகியோரை தனது இடத்திற்கு அழைத்துச் சந்தித்ததன் மூலம் கிட்டு என்ற பெயர் சிங்கள மக்கள் மத்தியிலும் பிரபல்யம் அடைந்தது. 1987 மார்ச் இறுதியில் தேசத்துரோகி ஒருவனின் கைக்குண்டுத் தாக்குதலினால் தனது இடதுகாலை இழந்த கிட்டு தனது மனஉறுதியால் முன்னைய வேகத்துடனும், திடகாத்திரத்துடனும் விடுதலைப் போருக்கு வலுச்சேர்ப்பவராக வளர்ந்து வந்தார். இந்திய இலங்கை ஒப்பந்த காலத்தில் தனது சிகிச்சைக்காக இந்தியா சென்ற கிட்டு ஒப்பந்தம் முறிவடைந்த நிலையில், இந்திய அரசினால் திணிக்கப்பட்ட போரின் உண்மை நிலைப்பாட்டை வெளிக் கொணர பெரிதும் பாடுபட்டார். இந்திய அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்களர், கலைஞர்கள், பேராசிரியர்கள் எனப் பலரையும் சந்தித்து, எமது நிலைப்பாடு தொடர்பாக எடுத்து ரைத்தார். எமது தியாக வரலாறுகளை பல வெளியீடுகள் மூலம் இந்திய மக்களின் பார்வைக்குக் கொண்டுவந்தார். இவவாறான நிலையில் கிட்டுவை இந்திய அரசு வீட்டுக்காவலிலும், சென்னை மத்திய சிறையிலும் கைதியாக அடைத்துவைத் திருந்தது. சிறைக்குள் இருந்தபடியே அவர் தமிழகத்திலிருந்து வெளிவரும் தேவி இதழுக்கு போராட்டம் தொடர்பான நீண்ட தொடர் கட்டுரையை எழுதினார். சிறையிலிருக்கும் தன்னை விடுவிக்கும்படி கிட்டு நடாத்திய அகிம்சைப் போருக்கு அஞ்சிய இந்திய அரசு அவரை தமிழீழத்தில் விடுதலை செய்தது. விடுதலை பெற்ற கிட்டு வன்னிக் காட்டில் தலைவரைச் சந்தித்து இந்திய இராணுவத்திற்கு எதிரான போருக்கு இறுதிவரை முகங் கொடுத்தார். இந்திய இராணுவம் மெல்ல மெல்ல தோல்விமுகம் காணும் நிலை உருவானது. அமெரிக்காவிற்கு வியட்நாமும், ரஸ்யாவிற்கு அப்கானிஸ்தானும் புகட்டிய பாடத்தை தமிழீழம் இந்தியாவிற்குப் புகட்டியது. இந்நிலையில் இலங்கை அரசு இந்தியாவை நிராகரித்து புலிகளுடன் பேச முன்வந்தது. 1989இல் சிறீலங்கா அரசுடன் பேசுவதற்கு கொழும்பு சென்ற குழுவில் அங்கம் வகித்த கிட்டு விடுதலைப் புலிகளின் வெளிநாட்டுப் பிரிவுப் பொறுப்பாளராக அங்கிருந்தபடியே லண்டனுக்குப் பயணமானார். கிட்டு லண்டனில் வாழ்ந்த காலத்தில் புலம்பெயர்ந்து வாழ்ந்த தமிழரிடையே போராட்ட உணர்வையும், நம்பிக்கையையும் ஊட்டினார். ‘களத்தில்’, ‘எரிமலை’ எனப் பல்வேறு சஞ்சிகைகள் மூலம் ஈழத்தில் நடக்கும் நிகழ்வுகளை மக்களுக்கு எடுத்துச் சென்றார். விடுதலைப் புலிகள் மாணவர் அமைப்பு, விடுதலைப் புலிகளின் கலைபண்பாட்டுக் கழகம், எனப் பல்வேறு அமைப்புக்களையும் வெளிநாட்டில் அமைத்துச் செயற்பட்டார். விடுதலை உணர்வையும், தாய் மண்ணின் பற்று றுதியையும் தாயக மண்ணை விட்டு புலம்பெயர்ந்த மக்கள் மறந்து போகாவண்ணம் தனது செயற்பாட்டை விரிவுபடுத்தினார். எனினும் கிட்டு எங்குதான் வாழ்ந்தாலும் எப்பணியைச் செய்தாலும் அவர் மனம் தமிழீழ மண்ணையே சுற்றிவந்தது. அவர் தலைவரை, தாயகத்தை, தமிழீழ மக்களை ஆழமாக நேசித்தார். தமிழீழத்தில் எப்போது தனது கால் மீண்டும் பதியும் என ஏக்கத்தோடு காத்திருந்தார். கிட்டு எதிர்பார்த்திருந்தது போல தமிழீழத்திற்குச் செல்லும் வாய்ப்பு அவருக்குக் கிட்டியது. குவேக்கஸ் சமாதானக் குழுவின் யோசனைகளுடன் ஐரோப்பிய நாடொன்றிலிருந்து சர்வதேச கடற்பரப்பினூடாக எம்.வி அகத் என்ற கப்பலில் கிட்டுவும் அவரது தோழர்களும் பயணமானார்கள். யாரும் சென்று வரக்கூடிய சர்வதேச கடற்பரப்பில் இந்தியா தனது சதிவலையைப் பின்னியது. இந்தியக் கடற்படை சர்வதேச கடல் எல்லையில் கிட்டுவின் கப்பலை மறித்து வலுக்கட்டாயமாக தனது எல்லைக்குள் இழுத்துச் சென்றது. சமாதான முயற்சிகள் பற்றி இந்திய அரசிடம் எவ வளவோ எடுத்துச் சொல்லியும் அவை பயனற்றுப் போயின. குமரப்பா, புலேந்திரன், திலீபன், ஜொனி என எமது தளபதிகளின் தொடர் இழப்புக்குக் காரணமான இந்தியா தனது பொறிக்குள் மூத்த தளபதி கிட்டுவையும் சிக்கவைத்தது. உயிரிலும் பெரிது தன்மானம் என நினைக்கும் தலைவனின் வழியில் வளர்ந்த கிட்டுவும் ஒன்பது தோழர்களும் அன்று ஆட்சியிலிருந்த இந்திய அரசிடம் பணிந்து போகாது. தமிழீழத்தை, தலைவனை நினைத்தவாறே தீயில் கலந்து கடலில் சங்கமித்துப் போனார்கள். கேணல் கிட்டுவின் இறுதி அஞ்சலி நிகழ்வில் தமிழீழத் தேசியத் தலைவர் கிட்டுவின் இழப்பு தலைவனின் ஆத்மாவை மாத்திரமல்ல, தமிழினத்தின் ஆத்மாவையே பிழிந்த ஒரு சோக நிகழ்வு. மக்களால் மனதாரப் போற்றப்பட்ட அந்தப்பெரு வீரனை இனி எங்கு காண்போம் எனத் துடித்தனர் மக்கள். பல இழப்புக்களைக் கடந்து வாழக்கற்றுக்கொண்ட மக்களிற்கு கிட்டுவின் இழப்பு ஜீரணிக்கமுடியாத தொன்றாகவே இருந்தது. எனினும் தோல்விகளையும், இழப் புக்களையும் தனக்கான வெற்றியின் பாடமாக்கிக் கொள்ளும் தலைவர், கிட்டுவின் இழப் பிற்கு புதிய பரிமாணத்தைக் கொடுக்கின்றார். “கிட்டு நீ சாகவில்லை, ஒரு புதிய மூச்சாக பிறந்திருக்கிறாய்” எனக்கூறி தனக்குள் ஒரு வீரசபதம் எடுத்துக்கொள்கிறார். இன்றைய உலகில், தமிழினத்தின் விடுதலைப் போராட்டம் எவராலும் நிராகரிக்க முடியாத பெரும் வடிவம் எடுத்ததில் கிட்டுவின் பங்கு இன்றியமையாதது. உலகெங்கும் சிதறிவாழ்ந்த தமிழ் மக்களை ஒருங்கிணைத்து, தமிழீழ விடுதலையை நோக்கி அவர்களை அணிதிரட்டுவதில் கிட்டு வெற்றி கண்டார் என்றே சொல்லவேண்டும். அந்தநிலை இன்று இன்னும் விரிவடைந்து மக்கள் -புலிகள் என்ற வேறுபாட்டை இல்லாதொழித்துவிட்டது. சர்வதேச சமூகம் விடுதலைப் போராட்டங்களையும், பயங்கரவாதத்துடன் இணைத்து தனது பிற்போக்குத் தனமான செயலை நியாயப்படுத்திவரும் வேளைகளில்கூட, உலகெங்கும் பரந்துநிற்கும் தமிழ் மக்கள் அந்த நெருக்கடிக்கு முகம் கொடுத்து தொடர்ந்தும் எழுச்சி கொள்கிறார்களென்றால் அது கிட்டுவால் அன்று விதைக்கப்பட்ட விடுதலை குறித்த கருத்துருவாக்கமும் விழிப்புணர்வுமே அடிப்படைக் காரணமாகின்றன. கெரில்லா அமைப்பாக இயங்கிய அந்த நாடகளில், சிறியரக ஆயுதங்களைக்கொண்டு பெரும் சாதனைகளை நிலைநாட்டிய அந்த ஒப்பற்ற வீரனின் பெயரிலே, இன்று தமிழீழ தாயகத்தில் உருவாக்கப்பட்டுள்ள கனரக ஆயுதங்களைக் கொண்ட மிகப்பெரிய படையணி தனது சாதனைகளால் உலகத்தை வியக்கவைக்கின்றது. போரியல் நுணுக்கமும் போரிடும் திறனும் கொண்ட கேணல் கிட்டு பீரங்கிப் படையணி எண்ணிலடங்கா சமர்க்களங்களில் ஈட்டிய பெரும் வெற்றிகள் மூலம், தனது சாதனைத் தடங்களை தொடர்ந்தும் பதித்துக்கொண்டிருக்கின்றது. நவீன போரி யற்கலையில் தமிழனின் தேசியப்படை முன்னேறிச் செல்வதற்கு கிட்டுவின் கனவும் ஒரு காரணம். ஊடகங்களில் தமிழரின் உண்மையான முகம் வெளியில் தெரியவேண் டும் என்பதில் கிட்டு அதிக அக்கறை காட்டினார். தமிழினத்தின் நியாயப் போராட் டங்களை பயங்கரவாதப்படுத்தி உலகெங்கும் பொய்யுரைக்கும் சிறீலங்கா அரச ஊடகங்களையும் அவற்றைச் சார்ந்துநிற்கும் சர்வதேச ஊடகங்களையும் கடந்து, உண்மையான செய்திகள் உலகெங்கும் தெரிவிக்கப்படவேண்டும் என்பதே அவர் கொண்டிருந்த எண்ணமாகும். இவை இன்று நிறைவேறிக்கொண்டிருக்கின்றன. தமிழீழத்திலும் உலகெங்கிலும் வாழும் தமிழ் மக்கள் தங்களுடைய விடுதலைப் போராட்டத்தின் உண்மை முகத் தோற்றத்தை உணரக்கூடிய விதத்தில் தமிழ் ஊடகத்துறை பெற்றிருக்கும் அபரிமிதமான வளர்ச்சிக்கு கிட்டுவின் எண்ணங்களின் தாக்கமும் ஒரு காரணம். சிறுவர் நலன்பேணும் திட்டங்கள், கல்வி, அபிவிருத்தி, பொருண்மிய மேம்பாடு, சமூக மேம்பாடு என மக்கள் நலன்பேணும் திட்டங்களில் அவர் காட்டிய அதீத அக்கறையின் பயனாக இன்னும் எம்மண்ணில் இச்செயற்பாடுகள் பெரும் வளர்ச்சி பெற்ற நிலையில் முன்னெடுக்கப்படுகின்றன. இவற்றுக்கு மேலாக, ஒன்றுபட்ட தமிழினத்தின் எழுச்சியை இவர் கனவாகக் கொண்டிருந்தார். எதிரியின் இறுகிய பிடிக்குள்ளும் நிமிர்ந்து நின்று தமிழ் மக்கள் வெளிப்படுத்தும் உணர்வெழுச்சி கிட்டுவின் கனவிற்கு கட்டியம் கூறிநிற்கின்றது. எங்கும் எதிலும் எல்லாவற்றிலும் கிட்டு என்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். தமிழினத்தின் ஆன்மாவில் அழிக்கமுடியாததோர் இடம் அவருக்கு என்றுமுண்டு. எல்லையற்ற திறமைகளாலும் மக்கள் மேல் அவர் வைத்திருந்த உண்மையான பாசத்தினாலும் தமிழினத்தில் நீங்காத நினைவுகளை அவர் பதித்துச் சென்றி ருக்கின்றார். இறுதிமூச்சுவரை தமிழினத்தின் தன்மானம் காத்து தமிழினத் தலைவனுக்குப் பெருமையைச் சேர்த்த அந்த ஒப்பற்ற வீரனை எந்நாளும் எவராலும் மறக்கமுடியாது. “கிட்டு ஒரு தனிமனித சரித்திரம், நீண்ட ஓய்வில்லாத புயலாக வீசும் எமது விடுதலை வரலாற்றின் ஒரு காலத்தின் பதிவு” எனக்கூறும் தமிழீழத் தேசியத் தலைவரின் எண்ணங்களோடு ஒன்றிணைந்து கேணல் கிட்டுவை நெஞ்சிலேற்றுவோம். அவர் நினைவு தினத்தில் உறுதியெடுத்துக்கொள்வோம் நன்றி எரிமலை https://www.thaarakam.com/news/45615
-
மேஜர் சோதியா 23ம் அண்டு நினைவு – விடியலின் சோதி
வீர வணக்கங்கள்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ராசவன்னியன் ஐயா!🎉🎉🎉
-
உலகறியச் செய்த தாக்குதல்களை வழிநடத்திய உத்தம வீரன் கேணல் சாள்ஸ்.!
உலகறியச் செய்த தாக்குதல்களை வழிநடத்திய உத்தம வீரன் கேணல் சாள்ஸ்.! Last updated Jan 5, 2020 தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் அதியுச்ச நிலையை உலகறியச் செய்த தாக்குதல்களை வழிநடத்திய உத்தம வீரன் தான் கேணல் சாள்ஸ் சாள்ஸ் உண்மையில் எல்லோருக்கும் தெரியாத ஒருவர். ஆனால் எதிரிக்கு இவரை நன்கு தெரியும். கடந்த காலங்களில் பல வரலாற்றுத் திருப்பங்களை ஏற்படுத்திய பல வெற்றிகரமான தாக்குதல்களை தெற்கில் தளம் அமைத்து வழிநடத்திய தளபதி. யாழ். மாவட்டத் தளபதியாக இருந்த கேணல் கிட்டண்ணாவின் நிர்வாகத்தின் கீழ் குடாநாட்டுப் படையினர் முகாம்களுக்கு முடக்கம் காண வைக்கப்பட்ட போது பாடசாலையயில் கல்வி பயின்று கொண்டு பகுதி நேரமாக பருத்தித்துறை காவலரணில் காவலிற்காக வந்து நின்றவர் தான் சாள்ஸ். சிறிய வயதில் தன்னுடைய போரியல் வாழ்கையை தொடங்கியபோது அவரின் தோற்றமும் வயதும் போதாத காரணத்தால் வடமராட்சியில் போர் நெருக்கடி காரணமாக மக்களுக்கு கிடைக்கக்கூடிய பொருட்கள் கிடைக்காத பட்சத்தில் தளபதி கிட்டண்ணாவினால் தெரிவு செய்யப்பட்டிருந்த நியாய விலைக்கடையில் பொருள் விற்பனையாளராக தன்னுடைய பணியைத் தொடர்ந்தார். பின்னர் வடமராட்சியில் “ஒப்பரேசன் லிபரேசன்” நடவடிக்கையைச் சந்தித்த போது பருத்தித்துறை களமுனையில் இறுதிவரை நின்று போராடி பிற்பாடு விலகி மீண்டும் மில்லரின் புதிய சகாப்தத்துடன் உள்நுழைந்து சாதனை படைத்தார். இந்திய இராணுவம் முழுமையாக யாழ். குடாநாட்டை ஆக்கிரமித்து எல்லா இடங்களிலும் திரிந்துகொண்டிருந்த நேரம், தங்க இடமின்றி- உணவின்றி- இருப்பிடமின்றி அலைந்து திரிந்த வேளையில் பருத்தித்துறைப் பகுதிக்கு பொறுப்பாக இருந்த கப்டன் மொறிசின் தலைமையின் கீழ இந்தியப் படைக்கு எதிராக தாக்குதல்களை தொடுத்து, இந்திய இராணுவத்தின் நடவடிக்கைக்கு முகம் கொடுத்து, பின்னர் அங்கிருந்து மணலாற்றுக்கு வந்தார் சாள்ஸ். அங்கு மீண்டு ஒழுங்குபடுத்தப்பட்ட நிலையில் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டு அவர்களுடன் யாழ். குடாநாட்டுக்குச் சென்று பணியைத் தொடர்ந்தவர். 1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இந்தியப்படை வெளியேறிய பின்னர் அன்று தொடக்கம் வடமராட்சியினை தளமாகக் கொண்டு செயற்பட்ட சாள்சின் செயற்பாடு கண்டு- புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டு அவர்களால் அடையாளம் காணப்பட்டு- தெற்கில் தளம் அமைப்பதற்காகவும், அங்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முகம் தெரியாத புலியாகச் சென்றார். உண்மையில் நீண்டகாலமாக தென்னிலங்கையில் நின்று வெற்றிகரமாக பல தாக்குதல்களை குறிப்பாக சிறிலங்காப் படையின் கூட்டுப்படைத் தலைமையகம் உள்ளிட்ட பல வெற்றிகரமான தாக்குதல்களை தலைமையேற்று வழிநடத்தி அங்கு சிறிலங்காப் படைகனளால் தேடப்படும் போது மட்ட்க்களப்பைத் தளமாக வைத்துக்கொண்டு பல வெற்றிகரமான தாக்குதலை மேற்கொண்டு வழிநடத்தினார். 2001 ஆம் ஆண்டு உலகமே வியக்கத்தக்க வகையில் எந்தவொரு பொதுமகனும், வெளிநாட்டுப் பிரயாணியும் பாதிப்படையாத வகையில் கட்டுநாயக்கா வான்படைத் தளத்தினை தகர்த்து எறிவதற்காக கரும்புலி அணிக்கான நீண்டகாலப் பயிற்சியினை வழங்கி, தாக்குதலை வழிநடத்தி தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் அதியுச்ச நிலையை உலகறியச் செய்த உத்தமவீரன். ஆனால் எங்கள் மக்களுக்கு அவர் முகம் தெரியாத ஒரு தளபதி. தொடக்க காலத்தில் தான் சார்ந்திருந்த துறையில் இருந்து கொண்டு கடற்புலிகளையும் வடக்கு-கிழக்கிற்குள் மட்டுப்படுத்தப்படாமல் தெற்கிலும் பாரிய தாக்குதலை மேற்கொள்ள வேண்டும் என்ற நோக்குடன் சில மறைமுக கடற்கரும்புலிகளை உருவாக்கி அவர்களுக்கு புலனாய்வுத்துறையில் பணிகளை முன்னெடுத்த அதேநேரம் ஒரு அணியை உருவாக்கி அந்த அணிக்கு ஊடாக சிறிலங்காவின் காலி கடற்படைத்தளத்தை மறைமுக கடற்கரும்புலிகளைக் கொண்டு தகர்ப்பதற்காக பல ஆண்டுகளாக அப்பணியைத் தொடர்ந்து, அத்தாக்குதல் நடைபெறுகின்ற நேரம் தொடர்புகளைப் பேணி வழி நடத்திய தளபதி இன்று எம்முடன் இல்லை. ஆனால் அவரால் உருவாக்கப்பட்ட போராளிகள் கண்டிப்பாக அவரின் கனவுகளை சுமந்து இப்போரியலை முன்னெடுத்துச் செல்வர். சாள்ஸ் எல்லோரோடும், தலைவர் அவர்களுடனும் நட்பு உரிமையுடன் பழகுகின்றவர். இவர் தனித்துவமாக தெற்கில் மட்டும் தகாக்குதலை தீவிரப்படுத்தவில்லை. யாழ். குடாநாட்டிலும் தாக்குதலை முன்னெடுத்து புதிய படைய புலனாய்புப் போராளிகளைக் கொண்டு முகமாலை முன்னரங்க நிலைகளை உடைத்து முன்னேறுகின்ற நடவடிக்கையிலும் அணியை வழிநடத்தியவர் இன்று இல்லை. இன்றை சூழ்நிலையில் இவரின் இழப்பு விடுதலைப் போராட்த்திற்கு பாரிய இழப்பாகவும் உள்ளது. எமது விடுதலைப் போராட்டம் பல தளபதிகளையும் துறைசார் பொறுப்பாளர்களையும் இழந்து நிற்பினும் படிப்படியாக பல வெற்றிகரமான நடவடிக்கைகளை முன்னெடுத்துக்கொண்டு வருகின்றது. இழப்புக்களை தாங்கிக்கொள்வது கடினம். ஆனால் இழப்புக்கள் இல்லாமல் விடுதலையை பெற்றுவிட முடியாது. நிச்சயமாக சாள்சின் கனவினையும் விடுதலைப் போராட்டத்தின் எண்ணத்தையும் முன்னெடுத்து எமது விடுதலைப் போராட்டத்தை வீச்சாக்குவோம் என்றார் அவர். கேணல் சாள்ஸ் அவர்களின் வீரவணக்க நிகழ்வில் 06.01.2008 அன்று கேணல் சூசை ஆற்றிய உரையில் இருந்து …! “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” https://www.thaarakam.com/news/107102 கேணல் சாள்ஸ் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.! Last updated Jan 4, 2020 கேணல் சாள்ஸ் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும். மன்னார் மாவட்டத்தில் 05.01.2008 அன்று பள்ளமடுப் பகுதியில் சிறிலங்கா படைகளின் ஆழஊடுருவும் படைப்பிரிவு நடாத்திய கிளைமோர்த் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட விடுதலைப் புலிகளின் படைய புலனாய்வுப்பிரிவுப் பொறுப்பாளர் கேணல் சாள்ஸ் (அருள்வேந்தன்) லெப்டினன்ட் வீரமாறன், லெப்டினன்ட் காவலன், லெப்டினன்ட் சுகந்தன் ஆகிய மாவீரர்களின் 12ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…! https://www.thaarakam.com/news/107119
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அக்னியஷ்த்ராவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்🎉🎉🎉
-
போராட்ட வரலாற்றில் பல புகழ்பூத்த படையணி பூநகரிப் படையணி!
போராட்ட வரலாற்றில் பல புகழ்பூத்த படையணி பூநகரிப் படையணி! Last updated Dec 31, 2019 தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் பல புகழ்பூத்த படையணிகள் பற்றியும் அவற்றின் நீண்ட போரியல் வரலாறு பற்றியும் நாமறிவோம். ஆயினும் பல்வேறு காலகட்டங்களிலும் தேவைகருதி உருவாக்கப்பட்டு பின்னாளில் வேறு படையணிகளுடன் அல்லது பிரிவுகளுடன் இணைக்கப்பட்ட படையணிகள், பிரிவுகள் இப்போராட்ட வரலாற்றில் இருந்தன என்பது நம்மில் பலருக்குத் தெரிய வாய்ப்பில்லை. அடுத்த தலைமுறைக்கு அவைபற்றி எதுவுமே தெரியாமல் போகலாம். அந்தந்த காலகட்டங்களில் அவ்வப் படையணிகள், பிரிவுகள் ஆற்றிய போராட்டப் பங்களிப்புகள் வரலாற்றில் பதியப்படவேண்டிய மிகவும் தார்மீகக் கடமையாகும். அந்தவகையில் பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் தொலைநோக்குடன் கூடிய முயற்சியில் தோற்றம்பெற்ற பூநகரிப் படையணி பற்றி் சற்றுக் குறிப்பிடுவது பொருத்தமானதாகும். பூநகரிக் கட்டளைப் பணியகம் என பூநகரிப் பகுதியில் நிலைகொண்டிருந்த அரசியல்துறைப் போராளிகள், ராஜன் கல்விப்பிரிவுப் போராளிகள் மற்றும் புதிய போராளிகள் எனப் பல்வேறு தரப்புப் போராளிகளுடன் 2007 இல் இப் படையணி உருவாக்கப்பட்டது. அப்போது படையணியின் சிறப்புத் தளபதியாக லெப்.கேணல் ஈழப்பிரியனும் தளபதியாக கேணல் கீதனும் துணைத்தளபதியாக வேந்தனும் நியமிக்கப் பட்டனர். மிக அதிகளவான புதிய இளம் போராளிகளைக் கொண்டதொரு படையணியாக இருந்த போதும் இப்படையணி களங்களில் காட்டிய வீரமும், ஈகமும், உணர்வுவெளிப்பாடும் மிக உன்னதமானவை. இருபது வயதைக்கூட எட்டாத அந்த இளைய தலைமுறையின் உறுதியும் தாங்குமாற்றலும் உயர்வானவை. பூநகரியைத் தளமாகவும் முக்கொம்பன் மற்றும் செம்மண்குன்று ஆகிய பகுதிகளை பயிற்சித் தளமாகவும் இப்படையணி கொண்டிருந்தது. மிகத் தாக்கமான பயிற்சிகள், சிறந்த தெளிவூட்டல், பொறுப்பாளர்களுக்கும் போராளிகளுக்கும் இடையேயான சிறந்த உறவு நிலை, புரிந்துணர்வு என்பன மிகக் குறுகிய காலத்தில் படையணியின் வளர்ச்சிக்கு வித்திட்டன. மன்னார் களமுனையில் மிகக் கடுமையான சண்டைகள் இடம்பெற்றுக் கொண்டிருந்த வேளையில், இப்படையணி அங்கு அழைக்கப்பட்டது. இப்படையணியின் ஆண், பெண் போராளிகள் அங்கு நிலைப்படுத்தப்பட்டனர். அடம்பனைக் கைப்பற்ற படையினர் மேற்றுக்கொண்ட பல முன்னேற்ற நடவடிக்கைகள் இப்போராளிகளால் வெற்றிகரமாக முறியடிக்கப்படடன. ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன. மன்னார் பரந்தவெளிகளில் எதிரியின் கடுமையான எறிகணைத் தாக்குதல்கள், ‘ராங்கி’ என்னும் கவச ஊர்தித் தாக்குதல்கள், பதுங்கிச்சூட்டுத் தாக்குதல்கள் என்பனவற்றிற்கு மட்டுமன்றி இயற்கையின் இரக்கமற்ற பெரும் தாக்குதல்களுக்கும் இவர்கள் தாக்குப் பிடிக்கவேண்டியிருந்தது. ஆறடி உயர மண்ணணை அரையடியாகக் கரைந்த நிலையிலும், நகர்வகழிகளில் மார்பளவு நீர் நிறைந்திருந்தபோதும் அந்தக் களமுனையில் அவர்கள் நிலைத்திருக்க வேண்டியிருந்தது. இரவுபகலின்றிப் பெய்த பெரு மழையில் விடியவிடிய நனைந்தபடி குளிரில் உடல் விறைக்க, அதிகாலையில் அலையெனவரும் எதிரியுடன் மோதவேண்டியிருந்தது. இப்படையணியில் ஆண்போராளிகளுக்கு நிகராகப் பல சமயங்களில் அதற்கு மேலாக பெண் போராளிகள் செயற்பட்டனர். பல களமுனைகளில் ஆண் போராளிகளை, பெண் போராளிகள் வழிநடத்திச் செயற்பட்ட வரலாறுகளும் உண்டு. மன்னாரில் மட்டுமன்றி, மணலாறு, முகமாலைப் பகுதிகளிலும் இப்படையணி எதிரிகளுடன் சமரிட்டது. படைகளிலிருந்து விட்டோடுதல் பொதுவானது எனினும், இப்படையணியில் அது மிக மிக அரிதாகவே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. வீட்டிற்கொருவர் என இணைக்கப்பட்ட போராளிகளே இப்படையணியில் அதிகம் இருந்த போதும் பற்றுறுதியிலும் வீரத்திலும் தாம் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்பதை இவர்கள் நிரூபித்தே வந்துள்ளனர். விடுமுறையில் சென்றாலும், காயம்பட்டு மருத்துவமனை சென்றாலும் விரைந்து களம் திரும்பவேண்டும் என்ற உணர்வு அவர்களிடம் என்றும் மேலோங்கியே நின்றது. இப்படையணியின் ஒருவருட நிகழ்வில் களங்களில் திறமையாகச் செயற்பட்டவர்களுக்குச் சான்றிதழ்களை வழங்கிப்பேசிய முதுநிலைத்தளபதிகள் பிரிகேடியர் பானு ,பிரிகேடியர் தீபன் ஆகியோரின் கருத்துக்கள் இவற்றிற்குச் சான்றாக அமைந்தன. அதுமட்டுமன்றி, இப்படையணியின் செயற்பாடுகளை அவதானித்து வந்த தேசியத்தலைவர் மிக இறுக்கமான காலச் சூழ்நிலையிலும் இந்த இளம் போராளிகளை சந்தித்து அளவளாவியது அவர்களுக்கு கிடைத்த மற்றொரு சிறப்பாகும். அனுபவம் மிக்க மூத்த போராளிகளாகவோ அல்லது அகவை அதிகம் கொண்டவர்களாகவோ இவர்களில் அநேகர் இல்லையாயினும், உணர்விலும் துணிவிலும் இவர்கள் என்றும் குறைந்து போய்விடவில்லை. “ராங்கி” கவச ஊர்திகளால் காவலரண்கள் தரைமட்டம் ஆக்கப்பட்டபோதும், தளராது நிலைத்து நின்று முறியடித்த இளம் போராளிகள்…… ஒற்றையாளாக நின்று காப்பரண் காத்தவர்கள்…… பக்கவாட்டுக் காவலரண் எதிரியால் கைப்பற்றப் பட்டபோதும் வாரக்கணக்கில் நிலைத்து நின்று போரிட்டவர்கள…… காயமடைந்தும் களம் விட்டகலாதவர்கள்….… காவலரணை விட்டு வெளியேற மறுத்து இறுதிவரை இலக்குச் சொல்லி இல்லாமல் போனவர்கள்….. காதலனை, காதலியை களத்தில் இழந்தபோதும் கடுகளவும் கலங்காது தம்பணி தொடர்ந்தவர்கள்…… இப்படையணியின் தளபதிகளாக, பொறுப்பாளர்களாக இருந்தவர்கள் அவரவர் பணிகளை முன்மாதிரியாகவும் பொறுப்புணர்வுடனும் முன்னெடுத்துச் சென்றனர். அந்த வகையில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட தளபதிகளான லெப்.கேணல் ஈழப்பிரியன், கேணல் கீதன் மற்றும் களங்களில் போராளிகளை வழிநடத்திய லெப்.கேணல் ரகு, லெப்கேணல் ஜெரோம், லெப். கேணல் மாறன், லெப். கேணல் செஞ்சுடர், மேஜர். குமரதேவன், மேஜர். கலைச்சோழன், கப்டன். ஆதிரை, சிறப்பு நடவடிக்கை அணிக்குப் பயிற்சி அளித்த லெப்.கேணல் நிசாந்தன் ஆசிரியர் உள்ளிட்ட பலர் நினைவில் கொள்ளத் தக்கவர்கள். போர் இறுதிக்கட்டத்தை அண்மித்த காலக்கட்டத்தில் இப்படையணியின் ஆண் போராளிகள் இம்ரான் பாண்டியன் படையணியுடனும், பெண் போராளிகள் வேறு படையணிகள், பிரிவுகளுடனும் இணைக்கப்பட்டனர். அதன்பின்னர், திரு.வேலவனைச் சிறப்புத் தளபதியாகக் கொண்டிருந்த இம்ரான் பாண்டியன் படையணியின் தளபதியாக லெப்.கேணல் ஈழப்பிரியனும் துணைத்தளபதியாக கேணல்.கீதனும் நியமிக்கப்பட்டனர். பூநகரிப் படையணியின் போராளிகள் வேறு படையணிகளில், பிரிவுகளில் உள்வாங்கப்பட்டபோதும் அவர்கள் தமது தனித்துவமான பண்புகளுடனும் அர்ப்பணிப்புடனும் தொடர்ந்தும் பயணித்தனர். பூநகரிப்படையணியின் செயற்பாட்டுக் கால அளவு குறுகியதாயினும் அதன் செயற்றிறனும் வீரமும் அர்ப்பணிப்புகளும் மிக வீரியமானவை. அந்த வகையில் அதன் மாவீரர்களும் போராளிகளும் நினைவில் கொள்ளப்பட வேண்டியவர்களே. (இந்த எழுத்துருவாக்கம் இப்படையணியின் ஒரு முழுநிறைவான செயற்பாட்டுப் பதிவல்ல. இது மிகச் சுருக்கமான ஒரு நினைவுப்பதிவே. இன்னும் சொல்லப்பட வேண்டிய விடயங்கள் அநேகம் உண்டு. அவற்றை தெரிந்தவர்கள், சம்பந்தப் பட்டவர்கள் பதிவிடலாம். அறியத்தரலாம். தொடர்புடைய ஒளிப்படங்கள் இருப்பின் பதிவிடலாம் அல்லது தந்துதவலாம்.) *** குறிப்பு:- தமிழன் வன்னிமகன் மேஜர் கடலரசன், பூநகரிக் கட்டளைப் பணியகம்: மன்னார் அடம்பன் களமுனை! மன்னார் களமுனையின் அடம்பன் பகுதி. ”KP 02” எனக் குறிக்கப்பட்ட காவலரண் பகுதியில் எதிரியின் தாக்குதல் முன்னகர்வொன்று திடீரென ஆரம்பிக்கிறது. ‘ராங்கி’ மற்றும் கடுமையான எறிகணைச் சூட்டாதரவு என்பவற்றுடன் அந்த முன்னகர்வு ஆரம்பமாகிறது. ஒரு குளத்தின் மண்தடுப்பணையில் அமைக்கப்பட்டிருந்த அந்தக் காப்பரண் எமக்கு முக்கியமானதொன்று. அந்தக் காப்பரண் விடுபட்டால் அந்தப் பகுதியையே நாம் இழக்க வேண்டிவரும். நிலைமைகள் கட்டளைப் பீடத்திற்கு அறிவிக்கப்படுகிறது. சூட்டாதரவு, மீள்வலுவூட்டல் நடவடிக்கைகளுக்குத் தேவையான கால அவகாசம்வரை தாக்குப் பிடிக்க உடனடி ஆதரவு அவசியமாகிறது. ”KP 02′ இற்கு உடனே இரும்பை அனுப்புங்கோ,” என்று கட்டளைப்பீடத்தில் இருந்த கேணல் கீதன் மாஸ்ரரிடமிருந்து பகுதிப்பொறுப்பாளருக்கு தகவல் பரிமாறப்படுகிறது… “நான் அங்கேதான் நிக்கிறன் K7, சரமாரியான சூட்டொலிகள்.. எறிகணை வெடிப்புகளுக்கிடையே அவனது குரல் தொலைத்தொடர்புக் கருவியூடாகத் தெளிவாகக் கேட்கிறது.” இவ்வளவு வேகமாய் எப்படிப் போனான்.. இப்படி கள நிலைமையை புரிந்துகொண்ட அவன் விரைந்து செயற்படுவது இது முதல்தடவை அல்ல என்பதை தளபதி அறிந்தே இருந்தார். அவர் மட்டுமல்ல; அங்கிருந்த அனைத்துப் போராளிகளும் அறிந்தே இருந்தனர். நாங்கள் அவனை இரும்பு என்றுதான் அழைப்போம். எனக்கு இவன் முதலில் அறிமுகமானது 2008இன் ஆரம்பப் பகுதியிலேயே. பூநகரிப் படையணி ஆரம்பிக்கப் பட்டபின் தனது கன்னிக் கள நடவடிக்கைகளுக்காக அடம்பன், பாலைக்குளி ஆகிய பகுதிகளில் நிலைகொள்ளத் தயாரானது. இந்த அணியில் அவனும் உள்ளடங்கியிருந்தான். நல்ல உயரம்… உறுதியான உடலமைப்பு… குத்து வரியில் தனது கனரக ஆயுதத்துடன் கம்பீரமாக நின்றிருந்தான். சித்திரை மதம் 2008 அதிகாலை ‘வேட்டையா முறிப்புப்’ பகுதியில் எதிரியின் முன்னேற்ற நடவடிக்கை தொடங்கியது. எமது கட்டளைத் தளபதி லெப்.கேணல் ரகு (இப்போது மாவீரர்) அவர்களால் அழைக்கப்பட்டேன். “சுருதியின் காப்பரண் பகுதியில் தொடர்பில்லை.. இரும்பை உடனடியாக ‘மோட்டார் சைக்கிளில்’ கொண்டு அங்கு இறக்கிவிட்டு வா,” என்று எனக்குக் கட்டளை வழங்கப்பட்டது. அவன் தனது முழு ஆயத்தநிலையில் அங்கு நின்றிருந்தான். அவனையும் மற்றுமொரு போராளியையும் ஏற்றிக்கொண்டு சண்டை நடக்குமிடத்திற்கு விரைகிறேன். “வேகமாப்போ …! வேகமாப் போ..!” என சத்தமிட்டபடி வருகிறான். சண்டை நடக்கும் பகுதியை அண்மித்ததும் நிறுத்தும்படி கூறியவன் ‘”இஞ்ச விட்டுட்டு நீ போ” என்கிறான். “நானும் உங்களோட வாறன் கடல்,” என்று நானும் அவனுடன் புறப்பட, “அங்க ‘ரோமியோ-2’ இன் இடத்தில அவசரத்துக்கு ஆக்கள் இல்ல, நீ திரும்பிப் போ, கவனம்,” என்று கூறிவிட்டு, எதிரியை மறித்துத் தாக்குவதற்காக விரைகிறான். நெடுநேரம் இடம்பெற்ற இச் சண்டை முடிவுக்கு வந்தபோது எமது காப்பரண் பகுதிகள் மீட்கப்பட்டதுடன், எதிரியின் படைக்கலன்களும் கைப்பற்றப்பட்டன. இச்சண்டையில் கடலரசனின் பங்கு முக்கியமானதாக இருந்தது. இப்படித்தான் முன்னணிக் காப்பரண் வரிசையில் கடலும் அவனது PKLMG உம் எதிரியை மறித்துத் தாக்குதல் நடத்துவதிலும் விடுபட்ட நிலைகளை மீட்பதிலும் மிகவும் காத்திரமான பங்களிப்பைச் செய்தன. கடலைப் பொறுத்தவரை PK இனை மட்டுமல்ல, RPG எனப்படும் உந்துகணைச் செலுத்தியையும் மிகத் துல்லியமாகக் கையாளக்கூடிய திறமையைக் கொண்டிருந்தான். பலமுறை அவனது RPG தாக்குதலும் எதிரியின் நகர்வுகளை முறியடிப்பதற்கு உதவியாய் அமைந்திருந்தத. மல்லாவி களமுனைக்கு எமது அணிகள் அனுப்பிவைக்கப்பட்டிருந்தன. மல்லாவி மத்திய கல்லூரியை அண்டிய பகுதியில் படையினரின் பெருமெடுப்பிலான நடவடிக்கை ஒன்று இடம்பெற்றது. மிகவும் கடுமையான சண்டை மூண்டது. “ஒரு ரீமோட கடலை உடனே அனுப்புங்கோ,” என்று பிரிகேடியர் பானுவிடமிருந்து கட்டளை பறந்தது. கடலரசன் அந்தச் சிறு அணியுடன் விரைகிறான். எதிரிகளை முறியடித்து அவனது அணி முன்னேறுகின்றது. எதிரியிடமிருந்து அங்கு கைப்பற்றிய RPG இனை அவன் எதிரிகளை நோக்கி இயக்குகிறான்… இன்னுமொரு இலக்கு… விரைந்து முன்னேறி இலக்குப் பார்த்தவனின் தொடைப் பகுதியில் எதிரியின் குண்டொன்று ஆழத் துழைத்தது! இச்சமரில் பல ஆயுதங்களும் எதிரியின் வாகனங்களும் கைப்பற்றப்படுகின்றன. ஆனால் எங்கள் கடலை எங்களால் காப்பாற்ற முடியவில்லை. களமெங்கும் கனன்று, விழுப்புண் பலதாங்கி, வீரம் விதைத்த இம் மாவீரன் மல்லாவி மண்ணில் விதையாகிப் போனான். “தம்பி டேய், நான் வீரச்சாவடஞ்சா என்னப்பத்தி நாலுவரி எழுதுவியா..” அவனின் குரல் இன்றும் என்னுள் ஒலிக்கிறது… https://www.thaarakam.com/news/106254
-
எல்லோருக்கும் கடைசிப்பிள்ளை லெப். கேணல் ஈழப்பிரியன்.!
எல்லோருக்கும் கடைசிப்பிள்ளை லெப். கேணல் ஈழப்பிரியன்.! Last updated Dec 31, 2019 பிரியா என் அன்பு நண்பனே…! உனக்கு…… என் வீரவணக்கங்கள்..! ஈழப்பிரியன், ஆரம்பத்தில் இருந்தே அரசியல் துறைப்பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப. தமிழ் செல்வன் அவர்களின் வளர்ப்பில் வளர்ந்தவன். மெய்ப்பாதுகாவலனாக, தனிப்பட்ட உதவியாளனாக, கிலோ வண் முகாம் பொறுப்பாளனாக, அரசியல் துறைக்கு ஆயுத அறிக்கை பரிசோதனாக, பயிற்சியாளனாக, துப்பாக்கி சூட்டு பயிற்சியாளனாக, வினியோக அணி பொறுப்பாளனாக, முகாம்கள் கட்டுமான பணிப்பாளனாக, இறுதியாக படையணிப்பொறுப்பாளனாக….. எவ்வளவு பணிகள்? எவ்வளவு பொறுப்புக்கள்.. சிறிய வயதிற்குள்.. மிகப்பெரிய பொறுப்புக்கள்… கிளிநொச்சி உருத்திரபுரம் தான் அவனது பெற்றோர் வீடு என நினைக்கின்றேன் அப்பா ஓர் சாதாரண அரச ஊழியர்.. அவனது தம்பி திருமணம் முடித்துவிட்டான்.. அதனால் ஈழப்பிரியனுக்கு கொஞ்சம் கோபம்.. கோபம் வந்தால் அவனது முகம்.. பழுத்த மிளகாய் போல் இருக்கும்..கோபம் வந்தால் கதை வராது மாறாக கொன்னைக்கதைதான் வரும்… கண்ணை மூடிவிடுவான்.. போ..போ.. என சொல்லிவிட்டு தலையினை ஒருபக்கம் திருப்பி விட்டு.. சென்றுவிடுவான்.. கதைக்கவே மாட்டான்.. இப்படி ஒரு சில மாதங்கள் என்னுடன் பேசாமல் இருந்தான்.. நான் வேணும் என்று அவனுக்கு ஆத்திரமூட்டுவதற்காக கிட்ட கிட்ட செல்வேன்.. அவனுக்கு இன்னும் இன்னும் கோபம் வரும்.. ஆனால் ஒரு நாள் என்னிடம் வந்து சொறி சொன்னான்.. ஏனென்றால் அவன் என்னிடம் ஆத்திரப்பட்டதற்கு எந்தக்காரணங்களும் இருக்கவில்லை. உயரம் குறைவு, உருண்டு திரண்ட உடல்.. கிட்டத்தட்ட புறூஸ்லி மாதிரி உடல்கட்டமைப்பு.. அதற்கேற்ப எப்போதும் பயிற்சியும் ஓட்டமும் தான்.. உடல்வாகுவையும் உயரத்தினையும் பார்த்து நாங்கள் எல்லோரும் பண்டிக்குட்டி என்று அழைப்போம்.. ஆனால் அவனுக்கு அப்படி கூப்பிட்டால் கோபம் வராது. எந்தப்பணி ஆனாலும் தெரியாது, அல்லது செய்ய மாட்டேன், என சொல்லமாட்டான். அதேபோல பணி செய்வதற்கு தனக்கு என்னென்ன தேவை என்றும் கேட்கமாட்டான்.. எல்லாம் தானே உருவாக்கி கொள்வான் அல்லது தேடிக்கொள்வான். ஒரு பொறுப்பாளனாக தன்னை ஈழப்பிரியன் நினைப்பதே இல்லை.. எல்லோருக்கும் கடைசிப்பிள்ளைபோலவே இருப்பான் என்ன வேலை சொன்னாலும் என்ன உதவி கேட்டாலும் செய்வான். அதனைவிட அரசியல்துறை மற்றும் இயக்க முக்கிய பொறுப்பாளர்கள் எங்கு இருக்கினம், எப்படி தொடர்பு கொள்ளலாம் என்ற விபரம் அவனின் சுண்டு விரலில் இருக்கும்.. அதனால் தமிழ்ச்செல்வன் அண்ணர் அவனை எங்கு சென்றாலும் கூட்டிக்கொண்டு போவார். குறிபிட்ட ஒருவரை தமிழ்செல்வண்ணர் கூட்டிவரச்சொன்னால்.. அடுத்த கணத்தில் எப்படியாவது ஆட்களை கொண்டுவந்து சேர்த்திடுவான். கூடவே கூட்டிவாறவர்களுக்கு உடுப்பு பாக் உடன் வரட்டாம் என்று பேதியும் குடுப்பான். தமிழ்ச்செல்வண்ணரால் குந்தி இருந்து டொய்லட் போகமுடியாது.. (விழுப்புண் காரணமாக மேற்கொள்ளப்பட்ட சிகிச்சையின் பின்னர்) ஆகவே கொமட் தேவை. ஆனால் வெளியே செல்லும் போது கொமட் இருக்காது அதனால் எப்போதும் ஓர் உள்ளூரில் வடிவமைக்கப்பட்ட முக்காலி ஒன்று வாகனத்தில் இருக்கும்.. அதுபோல டயபற்றிக்ஸ் மருந்தும் கட்டாயம் தேவை. ஈழப்பிரியன் தனக்கு உடுப்பு, பிறஸ் எடுக்காமல் மறந்து போனாலும் மேற்கூறிய கொமட் மற்றும் டயபற்றிஸ் மருந்துகளை எப்போதும் மறக்கவே மாட்டான்.. இவ்வாறு பொறுப்பாளர்களின் முக்கியத்துவத்தை மட்டும் அன்றி தன் சக போராளிகளின் தேவைகளைக்கூட பூர்த்தி செய்த பின்னர்தான் தன்னைப்பற்றி சிந்திப்பான் இந்த போராளி. எல்லோரையும் சாப்பிட்டுவிட்டீர்களா? குளித்துவிட்டீர்களா.. என கேட்டுக்கொண்டே இருப்பான் அதன் பின்னர்தான் தான் சாப்பிடுவான். நிர்வாகத்தில் மட்டுமல்ல சண்டை, பயிற்சி, சூட்டுப்பயிற்சி, ஒழுக்கம், சுகாதாரம், எல்லாவற்றிலும் திறமையானவன்.. இத்தனைக்கும் மத்தியில் அவன் பெரிதாக படிக்கவில்லை.. ஆனால் உண்மையில் சக போராளிகளுக்கு அவன் ஓர் சமூக பல்கலைக்கழகம் என்றே கூறலாம். சிலவேளை அவனின் கதைகள் மிகப்பெரிய பொறுப்பாளர்கள், அல்லது பெற்றோர்கள் போலவும் இருக்கும். இயக்கத்தை விட்டு விலத்தப்போறேன் என்று கூறும் போராளிகள், பொறுப்பாளரின் நடவடிக்கைகளால் மனம் உடைந்து போன போராளிகள் ஆகியோர்களிடம் இவன் பேசும்போது பார்த்தால்.. உண்மையில் ஓர் முதிர்ச்சியடைந்தவர்கள் பேசுமால் போல் விளக்கங்கள் கொடுப்பான். இந்த சின்ன வயதில் இவற்றையெல்லாம் .. இந்த உளவியல் பயிற்சிகளை எங்கு கற்றான் என்று எனக்குள் கேட்டுக்கொள்வேன்.. ஏனென்றால் அவன் புத்தகங்கள் வாசிப்பதனை நான் பார்த்ததே இல்லையே. அரசியல் துறைப்பொறுப்பாளர் வீரச்சாவடையும் போது அவன் பூனகரி பகுதியில் முன்னணி காப்பரண் கண்காணிப்பு பொறுப்பாளராக இருந்தான்… அரசியல் துறைப்பொறுப்பாளர் வீரச்சாவு அவனை பெரிதும் பாதித்திருந்தது.. என்றாலும் அவனின் பொறுப்புணர்ச்சி, கடமை, உறுதி, போராளிகளை வழி நடத்தும் பக்குவம், தற்துணிவு, ஆகியவற்றை கவனத்தில் கொண்டு.. எங்கள் ஈழப்பிரியனை முழுமையாக ஓர் தளபதியாக்கினார் தேசியத்தலைவர்.. அப்போது நான் அங்கு இல்லை.. என்றாலும் எனக்கு மிகப்பெரிய சந்தோசம்.. அவன் தளபதியான செய்தி.. ஏனென்றால் அவன் சாதிக்கப்பிறந்தவன். முன்பு என்றால் அவன் எங்களை பகிடி பண்ணுவான்.. என்ன அண்ணர் நீங்கள் எல்லாம் படிச்சனிங்கள்.. உங்களுக்கு நிறையப்பணிகள் கதைக்கவே மாட்டீங்கள் போல .. (பகிடிக்குத்தான்)… ஆனால் அவன் தளபதி ஆனதும்… நாங்கள் கடிக்க வெளிக்கிட்டுவிட்டம்.. என்ன தளபதி இனி நீங்கள் இனிமேல் கதைக்கமாட்டீங்கள் என்று.. இனி எப்படி கூப்பிடலாம் தளபதி என்றா என கடிப்போம்.. ஆனால் அவன் மண்ணாங்கட்டி… என்று அங்கால தூசணத்தால்.. ஒன்று விடுவான். பெண்போராளிகளுக்கு ஏதாவது செய்தி கொண்டு போய் சொல்வதே அவனுக்கு மிகப்பெரிய கஸ்டமான பணியாக இருந்திருக்கும்.. அவ்வளவு வெட்கம்.. பெண் போராளிகள் முகாம் வந்தால் அல்லது ஏதாவது கேட்க வந்தால் ஈழப்பிரியன் எஸ்கேப். இறுதிக்கட்ட போரில் ஈழப்பிரியன் தனது கொம்பனியுடன் நாச்சிக்குடா பக்கமும் , பூனகரி கடற்கரையோரமும் லைன் போட்டு நிலை கொண்டிருந்தான்.. அப்போது எம்முடன் பேசினான். யாழ்ப்பாணத்தால இறங்க விடமாட்டேன்.. கடலால இறங்க விடமாட்டேன் என்றான்… உண்மைதான்.. அவன் இறங்கவிடவில்லை.. ஆனால் மன்னாரில் இருந்து வந்த படையணிகளில் ஒன்று ஆனைவிழுந்தான் பகுதிக்கால் முன்னேறி வந்துவிட்டதால் பூனகரி, நாச்சிக்குடா பகுதிகள் துண்டிக்கப்பட்டது. இதன் பின்னர் கிளி நொச்சி, கரடிப்போக்கு பகுதிக்கு வந்து அங்கே லைன் போட்டு கிளி நகரை பாதுகாக்கும் வியூகத்தில் வடபகுதி காவலரண்களுக்கு பொறுப்பாக நின்றான். அப்போதும் பேசினான். அவன் சொன்ன வார்த்தைகள் இதுதான்.. இந்த முன்னணிக் காவலரண்களை இராணுவம் உடைக்க விடமாட்டேன் அப்படி சில வேளை நடந்து இராணுவம் உள் நுழைந்தால் அது என் வெற்றுடல் மீதுதான் நடக்கும் என்றான். ஈழப்பிரியனின் உயிர் இருக்கும் வரை இந்த லைனை உடைக்க விடமாட்டேன் என்றான். ஆனால் எனக்கு அவன் சொல்வதனை கேட்டு உண்மையில் பயம்தான் வந்தது.. ஏனென்றால் அவன் எப்போதும் சொல்வதனை நிறைவேற்றுவான்.. சண்டையின் போக்கை பார்த்தால் கிளி நொச்சி வீழ்ப்போவதற்கு சில நாட்களே இருக்கலாம்.. ஆனால் கிளி நொச்சி முக்கியமல்ல எங்களுக்கு ஈழப்பிரியனே வேண்டும்.. ஏனென்றால் அவன் இயக்கத்திற்கு.. எம் தலைவரிற்கு.. எம் போராளிகளுக்கு தேவை.. அதனால் தான் எங்களுக்கு பயம்.. கடவுளே அவன் சொன்னது போல .. நடந்துவிட்டதே..! எங்கள் அன்பின் பண்டிக்குட்டியை நாங்கள் பார்க்க மாட்டோம்….. டேய் பண்டிக்குட்டி நீயும் உன்னைப்போன்ற எம் வீரர்களும் வலிமையுடையவர்கள்.. எங்களை விட வலிமை உடையவர்கள்.. உங்கள் மூச்சு உங்கள் இலட்சியம் அடையும் வரை .. எங்களை சுற்றிக்கொண்டே இருக்கும்.. மீண்டும் பிறந்து வாருங்கள்.. எங்களையும் கூட்டிக்கொண்டு செல்லுங்கள்.. நாம் சென்ற பாதை, செல்கின்ற பாதை , செல்லப்போகின்ற பாதை.. எல்லாமே ஒன்றுதான் மாற்றமாட்டோம்.. நண்பனே….! நினைவுப்பகிர்வு:- பாசறை நண்பர்கள் உமை… ‘வேலன்’. “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” https://www.thaarakam.com/news/106382
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ஏராளனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்🎉🎉🎉
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நிழலி🎉🎉🎉
-
இலக்குத்தவறாத இலட்சியப்பயணத்தில் மேஜர் வேணுதாஸ்
இலக்குத்தவறாத இலட்சியப்பயணத்தில் மேஜர் வேணுதாஸ் 28வது ஆண்டு நினைவு ( 11.12.2019 ) மீள் பதிவு பொன் . வேணுதாஸ் அவர்களைப்பற்றி நாம் எழுதமுனையும் பொழுது மட்டக்களப்புப்பற்றியும் மாவட்ட அரசியல்பற்றியும் எழுதுவது தவிர்க்கமுடியாத ஒன்றாகும். அன்னியர் ஆதிக்கத்தால் இழந்துபோன ஈழத்தமிழருக்கான இறமையுள்ள தாயகத்தை இலங்கையின் வடகிழக்கே நிறுவவேண்டுமென்ற இலட்சியத்தை சொல், செயல், சிந்தனை மூலம் பள்ளிப்பருவத்திலிருந்து ஆரம்பித்த இவருடையபணி எமது தேசிய விடுதலை இயக்கத்திற்கு நீண்டகால ஆதரவாளராக செயல்பட்டவர்கள் என்றவரிசையிலும் உள்ளடக்கப்படுகின்றது. கிழக்கு மாகாணம் என்றழைக்கப்படுகின்ற தென்தமிழீழம் மூன்று மாவட்டங்களை உள்ளடக்கிய தமிழர்நிலமாகும். 1948 ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட சிங்கள ஆக்கிரமிப்பு வாதிகளின் நிலப்பறிப்பு நடவடிக்கையினால் திருகோணமலை அம்பாறை மாவட்டங்களின் இனவிகிதாசாரம் மாற்றப்பட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் தமிழர்பெரும்பான்மையாக வாழும் நிலைமை இன்றுள்ளது. ஆங்கிலேயர்களால் இலங்கைத் தீவிற்கு வழங்கப்பட்ட சுதந்திரம் உண்மையில் சிங்களவர்களுக்குத்தான் கிடைக்கப்பெற்றது. தமிழர்கள் அன்றிலிருந்து சிங்களஆக்கிரமிப்புக்குள் கொண்டுவரப்பட்டனர். 1972 ம் ஆண்டு புதிய அரசியலமைப்பின் உருவாக்கமும் தமிழ் மாணவர்களுக்குகெதிரான கல்வியில் தரப்படுத்தல் சட்டமும் தமிழ் மாணவர் பேரவை உருவாக்கத்திற்கு அடிகோலியது .1948 ம் ஆண்டிலிருந்து சிங்கள அரசுகளின் நிலப்பறிப்பு மொழிச்சிதைப்பு என்பவற்றால் தமிழ் மக்கள் தங்களை விடுவித்துக்கொள்ள போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். மட்டக்களப்பு நகரத்தில் 05 . 11 .1952 அன்று பிறந்த மேஜர் வேணுதாஸ் உயர் கல்வி மாணவராக இருந்தகாலத்தில் கொண்டுவரப்பட்ட கல்வியில் தரப்படுத்தல் சட்டம் தமிழ் மாணவர்களை மிகவும் பாதித்தது. இச்சட்டத்திற்கு எதிரான போராட்டங்களில் தமிழ் மாணவர் பேரவை ஈடுபட்டது. தமிழர்களால் ஏற்றுக்கொள்ளப்படாத 1972 ல் உருவாக்கப்பட்ட புதிய அரசியிலமைப்பின் மே 22 குடியரசு தினக்கொண்டாட்டங்களையும் தமிழ் மாணவர் பேரவை உட்பட முழுத் தமிழர்களும் புறக்கணித்தனர். இப்போராட்டங்களில் மாணவராக மேஜர் வேணுதாஸ் மற்றும் எமது தேசிய விடுதலை இயக்கத்தின் மட்டக்களப்பு – அம்பாறை மாவட்டங்களின் முதல் மாவீரர் லெப்.பரமதேவா போன்றவர்கள் தீவிரமாக ஈடுபட்டனர். இதன் மூலம் மேஜர் வேணுதாஸ் தமிழ் மக்களின் விடுதலை சார்ந்த அரசியலில் தன்னை முழுமையாக ஈடுபடுத்த ஆரம்பித்தார். அன்றுதொடக்கம் இவர் வீரச்சாவடைய மட்டும் இவருடைய பணி தமிழ்மக்களின் விடுதலையையொட்டியதாகவே இருந்தது. பள்ளிக்கூட நாட்களில் மாணவ தலைவனாகவும் இல்லத்தலைவனாகவும் பின்பு தமிழ் மாணவர் பேரவை தமிழ் இளைஞர் பேரவை போன்றவற்றின் மட்டக்களப்பு மாவட்ட தலைவராகவும் இவர் செயற்பட்டத்தை இன்று எண்ணிப்பார்க்கின்றபோது இவர் உயிரோடு இருந்திருந்தால் இன்று மட்டக்களப்பில் ஏற்பட்டுள்ள அரசியல் வெற்றிடம் ஏற்பட்டிருக்காது என எண்;ணத்தோன்றுகிறது. அது மட்டுமல்லாமல் மட்டக்களப்புத் தமிழ்மக்களுக்கு அரசியலில் ஒரு உண்மை உணர்வுமிக்க தலைவனும் கிடைத்திருப்பார். அரசியல் பேச்சுவார்த்தைகள் மூலம் எமது மக்களின் உரிமையைப் பெற்றுக்கொள்ள முடியாது என்ற நிலை கடந்தகாலங்களில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் ஏற்பட்ட ஒப்பந்தங்கள் கிழித்தெறியப்பட்ட சம்பவங்கள் மூலம் நாம் அறிந்து கொள்ளமுடிகின்றது. இதனால் தமிழ் மக்களின் விடுதலையில் எவ்வித சுயநலப்போக்குமில்லாத விடுதலை அமைப்பையும். அதன் தலைமையையும் ஏற்றுக்கொண்டு எமது தேசிய விடுதலை இயக்கமான தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு தீவிர ஆதரவாளராக இருந்து பின்பு உறுப்பினராக தன்னை இணைத்துக்கொண்டார் . தமிழ்மக்களின் விடுதலையில் தீவிரமாக இளைஞர்கள் செயல்பட ஆரம்பித்தகாலத்தில் உருவாக்கம்பெற்ற தமிழ் இளைஞர் பேரவையில் தீவிர செயல்பாட்டாளராக தன்னை மாற்றிக்கொண்டார். இவருடன் இணைந்து செயல்பட்டவர்களில் லெப். பரமதேவா, லெப். சரவணபவான், மேஜர். சந்திரன் (வள்ளுவன்) (காசி ஆனந்தன் தம்பி), லெப் ரஞ்சன் (சைமன்) பொத்துவில் ,பன்னீர்ச்செல்வம் (கல்முனை), மேஜர் கோவிந்தசாமி ஐயா (வந்தாறுமூலை) போன்றவர்களையும் குறிப்பிடமுடியும். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஆரம்பகால உறுப்பினர்கள் மட்டக்களப்பில் செயல்படத்தொடங்கியவேளையில் வேணுதாஸ் அவர்களின் ஒத்துளைப்பு அவர்களுக்கு பூரணமாகக்கிடைத்தன. மட்டக்களப்பு நகரில் போராளிகள் தங்குவதற்கு மறைவிடத்தை ஒழுக்கு படுத்தியதிலிருந்து விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முதல் பயிற்சிப் பாசறைக்கு மட்டக்களப்பிலிருந்து போராளிகளை அனுப்புவதற்கு குறிப்பிடத்தக்கவர்களை இணைத்து விட்டதிலிருந்து இவருடையபணி ஆரம்பமானது. இவரைப்போன்றவர்களைத்தான் மட்டக்களப்பில் நீண்டகால தமிழ்த்தேசிய ஆதரவாளர் என்று நாம் குறிப்பிட முடியும். அது மட்டுமல்லாமல் விழுப்புண் அடைந்த போராளிகளுக்கு மறைவிடத்தில் வைத்து சிகிச்சையளிப்பதற்கு வைத்தியர் ஒருவரையும் ஒழுக்கு படுத்திக்கொடுத்தார். இவ்வாறு பல்வேறு வழிகளில் இயக்கத்தின் போராளிகளுக்கு ஆதரவு வழங்கிக்கொண்டிருந்தார். உள்ளுராட்சித் திணைக்களத்தில் எழுதுனராகப் பணியாற்றிய வேணுதாஸ் சட்டம் பயின்று சட்டவாளரானார். இவருடைய மனைவி ஜமுனாதேவி அரச வங்கியொன்றில் பணியாற்றினார் அவருக்கும் குடும்பத்துக்கும் வசதியான வாழ்வு கிடைத்தும் தமிழ் மக்கள் விடுதலை பெற்று தலை நிமிர்ந்து வாழ வேண்டுமென்பதில் தீவிரமாக அவருடைய எண்ணங்கள் இருந்ததால் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அப்போதைய மட்டக்களப்பு – அம்பாறை மாவட்ட அரசியல் துறைப்பொறுப்பாளர் மேஜர் பிரான்சிஸ் அவர்களுக்கு மிகவும் நெருக்கமானவராகவும் தேவையான சந்தர்ப்பத்தில் ஆலோசகராகவும் செயல்பட்டதனால் இவர்களின் வழிநடத்தலில் மட்டக்களப்பு மாவட்ட அன்னையர் முன்னணி உருவாக்கம் பெற்றது. இந்தியப்படையின் வருகையும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கெதிரான அவர்களின் போரும் தமிழ் மக்களை மிகவும் பாதிப்புக்குள்ளாக்கியது. தமிழ் மக்கள் தங்களுடைய தேசியவீரர்களான தமிழீழவிடுதலைப்புலிகள் இயக்கத்திற்கெதிரான இந்தியப்படையின்போர் நிறுத்தப்படவேண்டுமென மட்டக்களப்பு மாவட்ட அன்னையர் முன்னணி உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தது. இப்போராட்டத்திற்கான ஆதரவையும் ஆலோசனையையும் வேணுதாஸ் அவர்கள் வழங்கி வந்தார் இதனால் வேணுதாஸ் அவர்களின் வீட்டுக்குச் சென்ற இந்தியப் படையினர் அவரை மிகவும் கடுமையாகத் தாக்கினர். அகிம்சைப் போராட்டத்தின் பிறப்பிடமாகச் சொல்லப்படுகின்ற காந்தி பிறந்த மண்ணிலிருந்து தமிழீழ மண்ணுக்கு வந்திருந்த இந்தியப்படையினர் அகிம்சைப் போராட்டத்தை மதிப்பதற்கு தவறியதால் சாகும்வரை உண்ணாவிரதமிருந்த அன்னை பூபதி அவர்கள் தற்கொடைச்சாவைத்தழுவினார். தமிழீழத் தேசிய விடுதலைப்போராட்டத்தில் இந்தியப்படையின் ஆக்கிரமிப்புக்கெதிராக அகிம்சைப் போராட்டத்தில் சாகும்வரை உண்ணாவிரதமிருந்து வீரச்சாவடைந்த லெப். கேணல் திலீபன் அவர்களைத்தொடர்ந்து தமிழ்க் குடும்பபெண்ணான அன்னை பூபதி அவர்களின் தற்கொடைச்சாவு அப்போதைய இந்திய அரசின் உண்மையான எண்ணங்களை தமிழீழ மக்கள் அறிந்து கொள்வதற்கு உதவியாக இருந்தன. இக்காலகட்டத்தில் வேணுதாஸ் அவர்கள் மீண்டும் இந்தியப்படையினரால் கைதுசெய்யப்பட்டு தாக்குதலுக்குள்ளானதால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கு இரகசியமானமுறையில் கொலை செய்வதற்குமுயற்சித்த போது அங்கிருந்து தப்பினர். ஆனால் மீண்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 1990 ம் ஆண்டு முற்பகுதியில் விடுதலை செய்யப்பட்ட வேணுதாஸ் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறையினரின் வேலைத்திட்டங்களுக்கு முழுமையான ஆதரவை வழங்கி வந்தார். மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த்தொழிற்சங்க சம்மேளனச் செயலாளராகக் கடமையாற்றிய இவர் 1990 ம் ஆண்டு மட்டக்களப்பு நகரில் பிரமாண்டமாக நடத்தப்பட்ட மே தினக் கூட்டத்தை ஒழுங்கு செய்து இருந்தார். இக் கூட்டத்தில் பெருந்திரளான தமிழ் மக்கள் கலந்து கொண்டனர். மற்றும் மட்டக்களப்பு நகரின் மாவட்டத்தின்நாலாபுறமிருந்து மக்கள் திரண்டு வந்து தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு தங்கள் ஆதரவை தெரிவித்த பிரமாண்டமான கூட்டஒழுங்குகளிலும் இவருடைய பணி குறிப்பிடத்தக்களவு இருந்தன. மேஜர் வேணுதாஸ் வரலாறு காணத மக்கள் கூட்டம் மட்டக்களப்பு நகரில் கூடியதும்இதுவாகத்தான் இருக்க முடியும் என நம்புகின்றோம். இரண்டாம் கட்ட ஈழப்போர் ஆரம்பமானவுடன் வேணுதாஸ் போராளிகளுடன் இணைந்து மயிலவட்டுவான் பிரதேசத்துக்குள் சென்று அங்கு மக்களுடனும் போராளிகளுடனும் தங்கியிருந்தார். இந்த வேளையில்தான் அவருடைய வாழ்க்கையில் சோகமான ஒரு சம்பவம் நிகழ்ந்தது. சின்ன ஊறணி தொடக்கம் ஓட்டமாவடி வரையிலான மட்டக்களப்பு திருமலை நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கிராம்மக்கள் எல்லாம் தங்களுடைய இருப்பிடங்களைவிட்டு வயலப்பிரதேசங்களில் வாழ்ந்தநேரம் மக்களும் விடுதலைப் புலிகளும் ஒரே இடத்தில் ஒன்றாக தங்கியிருந்தனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் எங்கும் பாதுகாப்பற்ற பயணம் நிலவிய நேரம் ஜமுனாஅவர்கள் வவுணதீவு பாதைவழியாக மிதிவண்டியிலும் வயல்வரம்புகளில் நடந்தும் நரிபுல்தோட்டத்துக்கு வந்தடைந்தார். பின்பு பன்குடாவெளி வருவதற்காக தோணி மூலம் குறுக்கே ஓடுகின்ற மட்டக்களப்பு வாவியை கடந்து சிரமமான ஒரு பயணத்தின் மூலம் தனது கணவரைச் சந்தித்து பின்பு பிள்ளைகள் தனியாக உறவினர்களுடன் இருப்பதால் அவசரமாக செல்வதற்காக 23.12 . 1990 அன்று காலையில் செங்கலடி வழியாக சிலருடன் பயணித்தபோது இராணுவத்தினரின் துப்பாக்கி தாக்குதல் இவர்களை நோக்கி இடம்பெற்றதையும் அதற்கு பிறகு இவர்களைப் பற்றிய தகவல்கள் கிடைக்கவில்லை. அடுத்தநாள் காலையில் ஆரையம்பதியை சேர்ந்த றம்போ என்றழைக்கப்பட்ட போராளி பிரசாத்துடன் சென்ற குழுவினர் சம்பவம் நடந்த இடத்தில் தேடியபோது செங்கலடி வைத்தியசாலை வளவு கிணற்றினுள் அணிந்திருந்த நகைகள் அபகரிக்கப்பட்டு குரல்வளை அறுக்கப்பட்ட நிலையில் முதுகில் துப்பாக்கி குண்டு ஏற்படுத்திய காயத்துடன் கண்டெடுத்த அவரின் உடலை விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதிக்குளிருந்த பன்குடாவெளிக்கு கொண்டுவந்தனர். சிங்கள இராணுவத்தினர் மாத்திரமே தங்கியிருந்த செங்கலடியில் இவ்வாறு சென்றுவருவது என்பது மிகவும் பயங்கரமான செயலாக இருந்தும் பிரசாத் அவர்களின் துணிவு அதனை சாதித்தது. சம்பவம் நிகழ்ந்த அன்றிரவு முழவதும் வேணுதாஸ் நித்திரையின்றி ஜமுனா அவர்களைப்பற்றி கதைத்துக் கொண்டிருந்தார் . எனது வீட்டில் எல்லா விடயங்களையும் கவனித்துக்கொண்டு பிள்ளைகளையும் பராமரித்து அனைத்து தேவைகளையும் நிறைவேற்றிக் கொண்டிருந்தார் . நான் அரசியல் தமிழ் மக்களின் விடுதலை என்று வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டபோதும் ஜமுனா எந்தவித விமர்சனமு மில்லாமல் எனது செயல்பாடுகளை ஏற்றுக்கொண்டு செயல்பட்ட நல்லுள்ளம் கொண்ட ஒரு குடும்ப பெண்ணாக இருந்தார் என்று மிகவும் கவலையடைந்து கொண்டிருந்தார். இச் சம்பவம் அவருடைய கவலையை மேலும் விரிவடைய வைத்தது. விடுதலைப் போராட்டத்தில் இவ்வாறான நிகழ்வுகள் அர்ப்பணிப்புகள் எல்லோருடைய மனதிலும் அழியாத நினைவுகளை ஏற்படுத்தினாலும் தாயும் தந்தையுமின்றி பெண் பிள்ளைகள் வாழும் நிலை எமது பண்பாட்டைப் பொறுத்தவரை தாக்கமானதொன்றுதான். என்றாலும் இவர்களுடைய உறவினர்கள் அதையும் தாங்கிக் கொண்டார்கள். மட்டக்களப்பு நகரத்தில் தங்கியிருந்த இவர்களுடைய 7 வயதிலும் 4 வயதிலும் உள்ள பெண்குழந்தைகளால் தாயின் இறந்த உடலை பார்க்க முடியவில்லை. தந்தையின் அரவணைப்பும் அவர்களுக்கு கிடைக்கவில்லை இவ்வாறான ஒரு சூழ்நிலையில்தான் வேணுதாஸ் அவர்களின் அர்ப்பணிப்பு அமைந்திருந்தது. இவருடன் சட்டக்கல்லூரியில் பயின்ற நண்பன் ஒருவர் வெளிநாட்டிலிருந்து இவருக்கு அனுப்பிய கடிதத்தில் மனைவியை இழந்த நீ பிள்ளைகளுக்காக வெளிநாடு வருவது பற்றி முடிவு எடுக்கவேண்டும் என்று குறிப்பிட்ட கருத்தையிட்டு வேணுதாஸ் அவர்கள் கூறியவற்றை இங்கே குறிப்பிட விரும்புகின்றோம். இந்த விடுதலைப் போராட்டத்தில் எனது குழந்தைகள் மாத்திரமல்ல நூற்றுக்கணக்கான குழந்தைகளுக்கு இந்தநிலை ஏற்பட்டுள்ளது. இன்நிலையிற்தான் எனது மனைவியையும் நான் இழந்திருக்கின்றேன். இனிமேல் நான் ஏன் வெளிநாடு செல்லவேண்டும் எனது மனைவி இறந்ததுபோல் இந்தமண்ணில் மக்களுடன் வாழ்ந்து மடியவே நான் விரும்புகின்றேன் என்று குறிப்பிட்டார். இவ்வாறு நீண்டகாலமாக தமிழ்மக்களின் விடுதலைக்காக செயல்பட்ட வேணுதாஸ் தான் நேசித்த மண்ணிலேயே தன்னை அர்ப்பணித்தார். மனைவியைப் பிரிந்தபோதும் இரண்டு பிள்ளைகள் இருந்தும் தன்னை விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் முழுநேரமாக இணைத்துக்கொண்டார். நாட்டுப்பற்று இனப்பற்று மொழிப்பற்று இனத்திற்கான விடுதலை வேட்கை என்பன வேணுதாஸ் அவர்களையும் ஒரு மாவீரராக வரலாற்றில் பதிவு செய்தது. தாயும் தந்தையுமின்றி எதிர்காலத்தில் வாழப்போகும் அவருடைய இருபெண்பிள்ளைகளைப்பற்றியும் நாம் எண்ணிப்பார்க்கின்றபோது இவ்வாறான அர்பணிப்புக்களும் எமது மண்ணில் நிகழ்ந்துள்ளது என்பதை எமது மக்கள் அறிந்துகொள்ளுவதற்கு இப்பதிவு உதவும் எனவும் எதிர்பார்க்கின்றோம். மயிலவட்டுவான் என்கின்ற அழகிய எழில் கொஞ்சும் சிற்றூர் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள்பட்ட வட்டத்தில் அமைந்திருந்ததால் விடுதலைப் புலிகளின் அரசியல் துறையினரின் சந்திப்பு இடமாகவும் அது விளங்கியது. ஆறும் வயலும் சூழ்ந்த இவ்வூரில் சுமார் 50 குடும்பங்கள் நிரந்தரமாக வாழ்த்துவந்தன. எப்போதும் பசுமையாக காட்சியளிக்கும் இவ்வூரை என்றும் எம்மால் மறக்கமுடியாது. இங்கு நாம் அநேகமான போராளிகளுடன் உறவாடி வாழ்ந்திருக்கின்றோம். களுவாஞ்சிக்குடி என்னும் ஊரைச்சேர்ந்த கப்டன் முத்துசாமி என்பவருடன் இவ்வூர்மக்கள் ஒட்டி. உறவாடியதையும் இச்சந்தப்பத்தில் நினைவுகூருகின்றோம். 11 . 12 . 1991 ம் ஆண்டு அது ஒரு காலைப்பொழுது மயிலவட்டுவானில் சர்வதேச செஞ்சிலுவைச்சங்கத்தினருடான சந்திப்பு ஒன்றுக்காக மாவட்ட அரசியல்பிரிவுப் பொறுப்பாளர் கப்டன் சத்துருக்கன் அவர்களுக்கான மொழிபெயர்ப்புச்செய்வதற்காக மேஜர் வேணுதாஸ் அவர்களும் புகைப்படப்பிடிப்புப் போராளி 2 வது லெப். ராஜா சத்துருக்கன் அவர்களின் உதவியாளர் வீர வேங்கை பிரசாந் ஆகியோர் காத்திருந்தனர். எப்போதும் மயிலவட்டுவானில் காலைவேளைகளில்; சன நடமாட்டம் அதிகமாகவே காணப்படும். ஏனெனில் பட்டிகளிலிருந்து பால்கொண்டு வருபவர்கள் வயலுக்குச் செல்பவர்கள் என எல்லோரும் அப்போதுதான் இவ்வழியாக வருவார்கள். குறிப்பிட்ட கால இடைவெளியில் சர்வதேச செஞ்சிலுவைச்சங்கத்தினர் அவ்விடத்திற்கு வந்துசேர்ந்தனர். சில நாட்களுக்கு முன் சந்தனமடு குடாவட்டை போன்ற வயல் வட்டங்களில் சிங்கள இராணுவத்தினரின் நடவடிக்கையினால் மக்களின் குடியிருப்புக்கள் எரிக்கப்பட்டிருந்தன. இச்சம்பவத்தை பார்வையிடுவதற்காக சர்வதேச செஞ்சிலுவைச்சங்கத்தினரை அழைத்துக்கொண்டுசென்ற சில நிமிடங்களின் பின்பு வெடிச்சத்தங்கள் கேட்டன. சிவத்தப்பாலத்திற்கு அருகாமையில் பதுங்கியிருந்த சிங்கள இராணுவத்தினர் திடீரென தாக்கியதில் நான்கு பேரும்வீரச்சாவைத் தழுவியதாக எமக்குச் செய்திகிடைத்தது . சர்வதேச செஞ்சிலுவைச்சங்கத்தினரின் வாகனம் திரும்ப மயில வட்டுவானுக்கு வந்து சேர்ந்தது. அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் என்னுமிடத்தைச் சேர்ந்த மட்டு அம்பாறை மாவட்டத்தின் முதல் பயிற்சிப் பாசறையில் பயிற்சி எடுத்துக்கொண்ட கப்டன் சத்துருக்கன் மட்டக்களப்பு நகரில் மக்களுக்கெல்லாம் அறிமுகமான சட்டத்தரணி வேணுதாஸ் இருதயபுரம் என்னுமிடத்தைச் சேர்ந்த ராஜா பன்குடாவெளி என்னும் ஊரைச் சேர்ந்த பிரசாந் ஆகியோருடைய வீரச்சாவும் உறுதிப்படுத்தப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்து கொண்டிருந்த ஈழநாதம் நாளிதழில் மேஜர் வேணுதாஸ் அவர்கள் பற்றிய கட்டுரையைப்பார்த்த பின்புதான் எமது தேசியத் தலைவர் அவர்கள் வேணுதாஸ் அவர்களின் வீரச்சாவினை அறிந்துகொண்டார். அப்போது யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்த மட்டக்களப்பு – அம்பாறை மாவட்ட போராளிகளை அழைத்து வேணுதாஸ் அவர்களைப் பற்றி எமது தேசியத் தலைவர் குறிப்பிட்டுகூறியதை இங்கு பதிவு செய்கின்றோம். வேணுதாஸ் அவர்கள் தமிழ் மக்களின் விடுதலையைப்பற்றி நான் சிந்திக்கத் தொடங்கிய காலத்திலே அவரும் சிந்திக்கத் தொடங்கிவிட்டார். ஆனால் பயணத்தின் பாதைகள் வேறாக இருந்தபோதும் இறுதியில் சரியானபாதையை தெரிவுசெய்து எம்முடன் இணைந்துகொண்டார். இவரைப் பற்றியும் இவருடையவாழ்வு பற்றியும் போராளிகளாகிய நீங்கள் அறிந்திருக்க வேண்டும். என்று கூறியதோடு தாயையும் தந்தையையும் இழந்த இந்த பிள்ளைகளை நாம்தான் பாதுகாக்க வேண்டும் அவர்களை யாழ்ப்பாணத்துக்கு அழைத்து வரவேண்டும் என்று தெரிவித்தார். இச்சந்தப்பத்தில் இன்னோர் கருத்தையும் குறிப்பிட்டார். ¨போராட்டத்தின் விளைவினால் பெற்றோரை இழக்கின்ற பிள்ளைகள் என்றும் அனாதைகள் இல்லை. நான் இருக்கும் வரை இவர்கள் எல்லோரும் நன்றாகப் பராமரிக்கப் படுவார்கள்¨. இதிலிருந்து தேசியத் தலைவர் அவர்களின் தொலை நோக்குப்பற்றி நன்றாகப் புரிந்துகொண்டு செயற்படுவதற்கு முன் வரவேண்டும். இவ்வாறு இலக்குத் தவறாத தமிழீழ தாய் நாட்டின்விடுதலைக்கானா இலட்சியப்பயணத்தில் வேணுதாஸ் அவர்களும் இணைந்துகொண்டார். இவர் காலத்தில் வாழ்ந்த எமது நெஞ்சினில் இவருடைய நினைவுகளும் என்றும் நிலைத்துநிற்கும். இல்லாதவர் இன்று இருக்கவேண்டிய இடம்.இருப்பவர்கள் இல்லாமல் இடம் தெரியாமல் இருக்கவேண்டிய காலம். ஆனால் காலம் நம்பிக்கை வைத்து இருக்கவிட்டுள்ளது.காலத்தின் நம்பிக்கைக்குதுரோகம் செய்யாமல் கடமையைச் செய்யவேண்டிய கட்டாயம் நண்பர்களுக்கு உண்டு.நண்பர்களான நாம் எம்மை நாம் சுயசுத்திகரிப்புசெய்வது இனத்திற்குச் செய்யும் பெரும்பணியாகும். நடந்துவந்த பாதை உணர்வும்,உறுதியும் இணைந்த பயணம் குடும்பமும்,உறவும் களைந்த கொள்கை உயிரையும் மிஞ்சிய துணிவான இலட்சியம் என்பதை வாழ்ந்து காட்டிய ஓர் போராளியின் புனித பயணம்தான் பதிவு மட்டக்களப்பின் அரசியல் தலைமைத்துவத்தில் நாம் இழந்த தன்னினப்பற்றாளர் மட்டக்களப்புத் தமிழர்களால் ஆழமாக நேசிக்கப்பட்டவர் பற்றியபதிவு இன்றையநிலையில் அறிவதும்,புரிவதும் தேடலும் இன்றியமையாத ஒன்றாகும்.கிழக்கின் அரசியல்வானில் கிழக்கைமீட்கும் நண்பர் கோபாலகிருஷ்ணன் தமிழரசின் வழிநடத்தர் நண்பர் துரைராஜசிங்கம் ஆகியோர் இவருக்கும் நண்பர்கள் நண்பரின் பயணம் நண்பர்களுக்கும் வழிகாட்டட்டும். ஏழுகதிர் http://www.battinaatham.net/description.php?art=22753
-
மலரும் நினைவுகள் ..
இப்படி உங்கட மூத்த பிள்ளை சொன்னதா? இல்லாட்டி கடைப்பிள்ளை சொன்னதா தமிழ் சிறி ஐயா?😂🤣
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று தமது பிறந்தநாளைக் கொண்டாடும் ரஞ்சித் என்ற ரகுநாதனிற்கும், வல்வை சகாறா அக்காவுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்🎉🎉🎉