நெடுக்ஸ், நீங்கள் சந்தேகப் படுவது ஏனென்று புரிகிறது. வன்னியில் விமானத்தாக்குதல் தொடர்வது உண்மை. நான் நினைக்கிறேன் தானியங்கி விமான எதிர்ப்பு எனப் புலிகள் சொல்லி விட்டதால், அந்தப் பக்கம் தான் புலிகளின் ஓடு பாதை இருப்பதாக சந்தேகித்து எப்படியும் அழித்து விட அதே இடத்திலல்லவா தாக்க வேண்டும்?. ஆனால் இரணைமடுவைத் தவிர்த்துத் தாக்குதல் தொடர்வது ஏதோ நேற்று நடந்ததைத் தெளிவாக்குகிறது. மேலும், தமது மறுப்பை மேலும் உறுதிப்படுத்தவும் தாக்குதலைத் தொடரக்கூடும். பாருங்கள் நீங்கள் தமது மறுப்பை நம்பும்படி செய்து விட்டார்கள். மேலும் எனக்குத் தனிப்பட்ட தொடர்புகளூடாகக் கிடைத்த தகவலின் படி ஒரு மிக் விமானம் திரும்பி வரவில்லை. அது வடக்கின் தளங்களிலும் தரையிறக்கப்படவில்லை. இந்தத் தகவலின் மூலம் சிறி லங்கா வான்படைக்குள்ளிருந்து. யார் எவர் எனப் பெயர் கேட்க மாட்டீர்கள் என நம்புகிறேன். கேட்டாலும் இதற்கு மேல் நான் சொல்லப் போவதில்லை.