Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Justin

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Justin

  1. ஈழ அரசியல் வரலாறு பற்றி இவ்வளவு நீளமாக எழுதும் அளவுக்கு எனக்கு நேரம், கடமை, ஆர்வம் -இப்படி எவையும் இல்லை, எனவே நான் எனக்குத் தெரிந்த விடயங்களுக்குள் மட்டுமே நிற்கிறேன். ஆனால், இலங்கையில் இங்கே பேசப்படுகிற நிகழ்வுகள் பெரும்பாலானவை நடந்த காலத்தில் வாழ்ந்திருக்கிறேன், செய்திகளையும் நிகழ்வுகளையும் பார்த்திருக்கிறேன் என்ற வகையில் இங்கே இருப்பது ஒரு பக்கப் பார்வை என்று உறுதியாகச் சொல்ல முடியும்! உதாரணமாக: நீலன் திருசெல்வம் செய்த துரோகச் செயல்கள் எவையென்று யாருக்காவது தெரியுமா? சோளாவாளாவான பதில்கள் கிடைக்கும். ஆனால், அவர் ஆயுதப் போரை விரும்பவில்லை என்பதைத் தவிர வேறெந்த விதத்திலும் தமிழர்களுக்கு தீங்கு செய்யவில்லை! எனவே "ஒரு அமைப்பினால் கொல்லப் பட்டவர்கள் எல்லாரும் துரோகிகளே!" என்ற முன்முடிவை எடுத்து விட்டு இங்கே விடைகள் தேடிக்கொண்டிருக்கிறார்கள் என நான் கருதுகிறேன். அமெரிக்காவில் சொல்வது போல: "Shoot first, ask questions later" நிலை தான் இது!
  2. வளவன், ரஞ்சித்தின் இந்த உழைப்பு மெச்சத் தக்கது. ஆனால் இது திருத்தமான தகவல்களை மட்டும் வைத்து எழுதப் பட்ட ஒரு வரலாற்று ஆவணம் என்பதை நான் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. "ரஞ்சித்திற்கு துரோகியாகத் தெரிபவர்கள் பற்றிய தகவல்கள்" என்ற ஒரு ஆவணமாக மட்டும் இது இருக்கலாம்! ஏற்கனவே ரஞ்சித் எடுத்த முடிவுகளை நிலை நிறுத்துவதற்காக பெரும்பாலும் cherry-picking எனப்படும் முறையில்,தேர்ந்தெடுத்த தகவல்களின் தொகுப்பாக மட்டுமே இந்த ஆவணம் இருக்கிறது என்பது என் தாழ்மையான அபிப்பிராயம்!
  3. வணக்கம் கோசான், நல்வரவு! வரும் போதே ஆணி நிறையப் பதித்த உருட்டுக் கட்டையோட தான் வருவீர் போல! 😂 கண்டது மகிழ்ச்சி!
  4. தானியங்கி வேலை செய்யவில்லைப் போல, நீங்கள் தான் என் பார்வையாளர் நிலையை மாற்ற வேணும் போல் இருக்கு!
  5. யாயினி, அவசரப் படாதீர்கள். பல காலம் வராமல் இருந்தால் பார்வையாளர் என்ற நிலைக்கு நகர்த்தப் பட்டு, மீள வரும் போது தானே உறுப்பினராக்கும் என்கிறார்கள். அப்படித் தானியங்கியாக நடப்பதில்லைப் போல இருக்கு. இங்கே வந்து சொன்னால் தான் சரி செய்கிறார்கள். இதுக்கெல்லாம் கோபமேன்?
  6. ஒரு விடயம்பற்றிய தவறான பார்வையாக இருந்ததால் கேட்டேன். ரஞ்சித்துக்கு இடைஞ்சல் செய்யாமல் இதை வேறிடத்தில் பேசலாமே?
  7. மன்னிக்க வேண்டும் ரஞ்சித், உங்கள் இந்தப் பதிவில் நீங்கள் வயது குறைந்த போராளிகளை உருவாக்கியது கருணா மட்டுமே, புலிகள் அமைப்பிற்குத் தொடர்பில்லை என்று நிறுவ முயல்கிறீர்கள். இது தவறான தகவல் என்பதைப் பதிவு செய்கிறேன். இது கிழக்கிற்கு வெளியேயும் நடந்திருக்கிறது. இதை வாசிக்கும் பலர் புலிகளின் பிரச்சாரக் கூட்டங்களில் கேட்போராக இருந்திருக்கிறோம். ஒரு கட்டத்திற்குப் பின்னர் சர்வதேச அங்கீகாரம் நாடி இது நிறுத்தப் பட்டது. ஆனால், இது கருணாவின் கைங்கரியம் மட்டுமே என்பது தவறு. தொடருங்கள், குறுக்கிட்டதற்கு மன்னியுங்கள்!
  8. ரஞ்சித், இந்த 168 வயது குறைந்த போராளிகளை கருணா பிரிந்து போன பின்னர் சேர்த்தாரா அல்லது புலிகளோடு இருக்கும் போதே சேர்த்தாரா?
  9. தாயக மக்களின் தேர்தல் தெரிவுகளுக்கு காரணங்கள் இருக்கின்றன. அவற்றைப் புரிந்து கொண்டால் யாரை அவர்கள் தேர்ந்திருக்கிறார்கள் என்றும் புரிந்து விடும்! ஈழத்தில் தமிழ் தேசியம் என்பது, நிலம், மொழி, அபிவிருத்தி என்ற மூன்று முனைகளில் முன்னேற வேண்டும். இந்த மூன்று முனைகளிலும் வேலை செய்யக் கூடிய தமிழர்கள் எந்த அணியில் இருந்தாலும் ஆதரவு மறைமுகமாவது கொடுக்கப் பட வேண்டும்! ஒரு அமைப்பின் legacy குறித்துக் கவலைப் பட வேண்டிய காலம் தாயகத்தில் மலையேறி விட்டது எனவே நினைக்கிறேன்!
  10. ரதி, விற்றமின் பி17 ஐயும் சில தாவரங்களையும் உண்டால் அவர்கள் பாசையில் "கேன்சர் குறைபாடு" வராது என்பது இன்றைய காலத்தில் மூடநம்பிக்கை தான்! சில நூறு வகையான புற்று நோய்கள் சில நூறு காரணங்களால் வருகின்றன. அந்த பதிவை எழுதியவருக்கு புற்றுநோய் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நோய் என்பதே தெரியாது! இவை ஆபத்தை ஏற்படுத்தும் போலி நம்பிக்கைகள், இது போன்ற போலி ஆலோசனைகளால் புற்று நோய்க்கு மருந்தெடுக்காமல் நோய் முற்றி இறந்தவர்கள் இருக்கிறார்கள். எனவே தான் களவிதிப்படி அகற்றினர் என நினைக்கிறேன்!
  11. நேக்கும் தான் தலை சுத்திப் போட்டுது! சமரசமாகியாகியாச்சு! ஆனா வாத்தியார் இப்படி வந்து இனி மயக்க மருந்து தர மாட்டெனென்று சத்தியம் செய்து தர வேண்டும்! 😎
  12. இது நீங்கள் எழுதியது! நான் சொன்னது களவிதியை மீறாமல் நான் எல்லாவற்றையும் கேள்வி கேட்பேன் என மட்டுமே! எல்லாம் என்பதன் வரையறை என்னை பொறுத்த வரையில் பொது அமைப்புகள், கொள்கைகள், கருத்துகள்! ஆனால், "எல்லாம்" என்பது சிலருக்கு மற்றையோரின் திருமண வாழ்வில் நடந்த அனர்த்தங்கள் முதல் ஒருவரின் தொழில் அவரது படிப்பினால் அவருக்கு ஏற்படும் இயல்புகள் என அர்த்தப் படுத்தப் படுவதால் தான் இந்தப் பிரச்சினையே! உங்களுக்கு உண்மையிலேயே தனி மனித தாக்குதல்களை நிறுத்தும் மானசீக அக்கறை இருந்தால் சம்பந்தமில்லாத திரிகளில் வந்து எள்ளல்கள் விடும் கருத்தாளர்களைத் திருத்துங்கள்! முதலில் உங்களையே நீங்கள் திருத்த வேண்டியிருக்கும்! ஒரு செய்தியைப் பற்றி நான் கருத்து சொன்னால், வந்து "பேச்சிலர் டிகிரி, டாக்டரேற் ." என்று நக்கல் செய்ததையே திரும்பி ஒருதரம் போய் வாசித்து விட்டு உங்கள் முகங்களைக் கண்ணாடியில் பாருங்கள்! பிறகு மற்றையோருக்கு fire breathing ஆக ஆலோசனை கொடுங்கள்!
  13. மருதர், ஓம். இது ஒரு உறுப்பினர் என்னுடைய தொழிலை நக்கலாக விளித்து எழுதியமைக்கு எழுதிய பதில்! அது முறையிடப் பட்டு அகற்றப் பட்டது. அதை நீங்கள் பார்த்து விட்டுப் பேசாமல் போயிருப்பீர்கள் அல்லது பார்க்கவில்லை! இரண்டில் எது நடந்திருந்தாலும் இப்படி ஒரு தலைப் பட்சமாக வந்து குற்றம் சாட்டும் தகுதி உங்களுக்கு இல்லை! அப்படியான தனி நபர் தாக்குதல்கள் செய்வது, பிறகு அதற்கான பதில்களை இப்படி வந்து குற்றம் சாட்டி நீட்பிப்பது இவையெல்லாம் கருத்துகளை தரவுகள், டீசண்டான மறுப்புகள் மூலம் எதிர் கொள்ள முடியாத வெப்பிசாரத்தில் எதிர் கருத்தாளரை வெறுப்பேற்றி மௌனமாக்கும் ஒரு திட்டத்தின் பாகம் என்று அறிந்திருக்கிறேன்! எனவே, கருத்தில் தவறிருந்தால் மட்டுகளுக்கு அறிவியுங்கள்! அவர்கள் நீக்குவர்! மற்றபடி இந்த ஆக்ரோஷம் அச்சுறுத்தல் எல்லாம் என்னைக் கட்டுப் படுத்தாது! கள விதி மீறலில்லாமல் எதையும் நான் எழுதுவேன்!
  14. அனேகமாக நீங்கள் உங்கள் முயற்சியில் வென்று விட்டீர்கள் என்றே நினைக்கிறேன்! என்ன செய்தாலும் நீங்கள் வந்து சுவரில் மூத்திரம் பெய்வதைத் தடுக்க இயலவில்லை!
  15. இந்த இடத்தில் இதைக் கேட்கலாமோ தெரியவில்லை, திரிக்கு தொடர்பே இல்லாமல் பின் தொடர்ந்து வந்து காவித் திரிவோரைக் கட்டுப் படுத்த புது விதிகள் ஏதாவது இயற்ற வேண்டுமா அல்லது இருக்கிற விதிகளே போதுமா?
  16. மீன், தேசிக்காய், வெங்காயம் எல்லாம் சரி, முக்கியமான "அயிட்டம்" எங்க நைனா காணோம்?? :D
  17. நெடுக்ஸ், நீங்கள் சந்தேகப் படுவது ஏனென்று புரிகிறது. வன்னியில் விமானத்தாக்குதல் தொடர்வது உண்மை. நான் நினைக்கிறேன் தானியங்கி விமான எதிர்ப்பு எனப் புலிகள் சொல்லி விட்டதால், அந்தப் பக்கம் தான் புலிகளின் ஓடு பாதை இருப்பதாக சந்தேகித்து எப்படியும் அழித்து விட அதே இடத்திலல்லவா தாக்க வேண்டும்?. ஆனால் இரணைமடுவைத் தவிர்த்துத் தாக்குதல் தொடர்வது ஏதோ நேற்று நடந்ததைத் தெளிவாக்குகிறது. மேலும், தமது மறுப்பை மேலும் உறுதிப்படுத்தவும் தாக்குதலைத் தொடரக்கூடும். பாருங்கள் நீங்கள் தமது மறுப்பை நம்பும்படி செய்து விட்டார்கள். மேலும் எனக்குத் தனிப்பட்ட தொடர்புகளூடாகக் கிடைத்த தகவலின் படி ஒரு மிக் விமானம் திரும்பி வரவில்லை. அது வடக்கின் தளங்களிலும் தரையிறக்கப்படவில்லை. இந்தத் தகவலின் மூலம் சிறி லங்கா வான்படைக்குள்ளிருந்து. யார் எவர் எனப் பெயர் கேட்க மாட்டீர்கள் என நம்புகிறேன். கேட்டாலும் இதற்கு மேல் நான் சொல்லப் போவதில்லை.
  18. காவடி சேர், யார் நம்பினது இதையெல்லாம்? சிங்களப் பைலட்டாயிருந்தால் அவனுக்கு இந்தத் தப்பும் வழிமுறையெல்லாம் தெரியாது என்று நிச்சயமாக நம்பலாம்!
  19. பாதுகாப்பு அமைச்சுக்கு இன்னும் தகவலே கிடைக்கவில்லைப் போல! ஒரு தொழில்நுட்பக் கோளாறு கூட தமது விமானங்களில் ஏற்படவில்லையாம்! அதுவும் சரி தான், பொட்டென்று போட்டால் தொழில்நுட்பக் கோளாறும் வராது அதைக் கட்டுப்பாட்டு நிலையத்திற்குச் சொல்லவும் அவகாசம் இருக்காது. நாளை காலையில் விமானங்களை எண்ணும் போது தான் தெரிய வரலாம்! ஈழவன் ஐயா! பைலட் "புட்டுகிட்டான்" என்று பார்த்தால் "எஜெக்டரில்" பாய்ந்து தப்பித்திருப்பான் போலிருக்கே?
  20. பிபிசி இன்னும் வாய் திறக்கவில்லை ஏன்? ஆமி வெப் சைட்டில் இன்னும் வரவில்லையா? அல்லது பேண்ட புள்ளேயின் அடுத்த பேட்டிக்காகக் காத்திருக்கிறார்களா?
  21. கிலி பிடித்துக் குழம்பிப் போன சிங்களவங்களுக்கு மறை கழண்டு போச்சுதாம். வெளிநாட்டிலிருந்து போவோர் விளையாட்டு விமானம் மற்றும் ரிமோட் கன்ட்ரோல் விளையாட்டுக் கார் எல்லாம் கொண்டு போகத் தடையாம்!கட்டுநாயக்காவில் பறித்து விடுகிறார்களாம். இன்னும் எங்களை விளையாட்டுப் பிள்ளையளாப் பார்க்கினம் பாருங்கோ! :P

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.