Everything posted by Justin
- Inchon landing.jpg
- Korean armistice .jpg
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
இது தான் என் அவதானிப்பும். ஏனைய தளங்களில், ரஷ்ய உக்ரைன் யுத்தம் பற்றி எழுதப் பட்டிருக்கும் பெரும்பாலான கட்டுரைகள், ஆய்வுகள் எதையும் கூர்மையாக நேரம் செலவழித்து வாசித்தறிந்த பின் எழுதப்பட்டவையாக எனக்குத் தெரியவில்லை. இவற்றை மிக இலகுவாகக் கண்டு பிடிக்க ஒருவழி, சமூக வலை ஊடகங்களில் மிதந்து திரியும் cliche எல்லாம் ஏதோ வரலாற்றின் அரிய தரவுகள் போல மீள ஒப்புவிக்கப் பட்டிருக்கும். மேலே ஒரிஜினல் கட்டுரையாளரின் இந்த வசனம் ஒரு உதாரணம்: "...நவீன உலகில் அதிகமான நாடுகளில் போர்களை நடத்திய நாடு, தொடர்ந்தும் போர்களை நடத்திக் கொண்டிருக்கின்ற நாடு எதுவெனக் கேள்வி கேட்டால் அது அமெரிக்கா எனச் சிறுபிள்ளை கூடச் சொல்லி விடும்" இதை ஒப்புவித்த சிலரிடம் நான் கேட்டிருக்கிறேன்: சரி, இரண்டாம் உலகப் போரின் பின் உலகில் நிகழ்ந்த யுத்தங்கள் மொத்தமாக எத்தனை? அதில் அமெரிக்கா/நேட்டோவினால் ஆரம்பிக்கப் பட்டவை எத்தனை? இரண்டிற்கும் பதில் கிடைக்காது. "நீ மேற்கின் அடிவருடி!" என்ற மூலையில் போய் நிற்பார்கள்😂
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
பகிடிக்குத் தான் இரண்டு பேரும் சொல்லியிருக்கிறீர்களென்றாலும், இந்த சமூக வலைத் தளங்களில் வரும் போலித் தகவல்களை ஆதாரமாக வைத்துக் கட்டுரை எழுதும் ஆய்வாளர்களால் தான் புலம் பெயர் தமிழ் சமூகத்தின் ஒரு பிரிவினரிடையே ரஷ்ய ஆதரவு நிலைப்பாடு வேரூன்றியது. சில கட்டுரைகள் deadpan comedy போல இருக்கும்: உதாரணமாக பதிவுகள் இணையத்தில் ஒரு வருடம் முன்பு, ஜோதிகுமார் என்ற சிவப்புப் சட்டைக்காரர் எழுதியிருக்கும் தகவலைப் பாருங்கள்: "....போரின் மூன்றாவது சுற்று இப்படியாய் முடிவடைந்த நிலையில் அடுத்த நான்காவது சுற்று, ரஷ்யாவின் இலத்திரனியல்-மின்னியல் தாக்குதல்களை முறியடிக்கும் வகையில் அரங்கேற்றப்பட்டது. எலன்-மஸ்க் (Elon Musk) தனது Starlink செய்மதிகளை உக்ரைனுடன் தொடர்புபடுத்துவது மாத்திரமல்லாமல் தேவைப்படும் Terminalகளையும் உக்ரைனுக்கு தந்துதவி ரஷ்ய தாக்குதல்களால் செயலிழந்து போன உக்ரைன் அலைவரிசைகளை மீள உயிர்ப்பிக்க உதவப் போவதாக அறிவித்தார். இதனைத் தொடர்ந்து, ரஷ்யா, கீவ்வின் மிக உயர்ந்த தொலைதொடர்பு கோபுரத்தை துல்லிய குண்டுவீச்சுகளால் தாக்கியழித்து, அங்கே பணியாற்றிய ஐந்து ஊழியரையும் கொன்றொழித்து விட்டதாய் உக்ரைனே அறிவித்தது. அதாவது எலன் மஸ்க்கின், Starlink செய்மதிகளின் தொடர்பாடல், ரஷ்யா படைத்தரப்பால் ஏட்டிக்குப் போட்டியான நிலையில் பரிசீலிக்கப்பட்டு, அதற்கு பதிலடியான நடைமுறை மேற்கொண்டதன் மூலம், மேற்படி நான்காம் சுற்று முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், போரை, விண்வெளி நோக்கி விஸ்தரிக்க எடுக்கப்பட்ட நகர்வு, முதலடியிலேயே நிறுத்தப்பட்டது" அதாவது, உக்ரைனின் வானலை வழி தொலைத்தொடர்பை ரஷ்யா குறிவைத்துத் தாக்கி வந்த நிலையில், செய்மதி மூலம் உக்ரைனை வெளியுலகோடு இணைக்கும் நோக்கில் Starlink வழங்கப் படுகிறது. "உள்ளூர் வானலைக் கோபுரத்தை அழித்ததால், ரஷ்யா செய்மதித் தொடர்பை அழித்து விட்டதாக ஜோதிகுமார் எழுதுகிறார். இது தொழில்னுட்பம் புரியாமையா அல்லது, "வாசிப்பவர்கள் கேனையர்கள்" என்ற நம்பிக்கையா என்பது இவர் போன்ற கட்டுரையாளர்களுக்கே வெளிச்சம்! 😂
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
செய்திகளுக்குத் திரும்பினால், தென்னாபிரிக்காவில் நடக்கவிருக்கும் மாநாட்டிற்கு புரின் வரமாட்டாராம், அவருக்குப் பதிலாக ரஷ்ய வெளிநாட்டமைச்சர் லவ்ரோவ் வருவாராம். பிபிசி சொல்கிறது. https://www.bbc.com/news/world-africa-66247067 ரஷ்யாவைப் பகைக்கவும் முடியாமல், மேற்கின் ஆக்கினையை உதறவும் முடியாமல் தென்னாபிரிக்கா தவிக்கிறதெனத் தெரிகிறது.
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
ரஷ்யர்களே கழட்டி மடித்து வைத்த சிவப்புச் சட்டையோடு "நடுநிலை" நாடான சுவிசிலிருந்து எழுதியிருக்கிறார். ரஷ்யா "உக்ரைன் பாவித்தால், நானும் பாவிப்பேன்" என்று சொன்னதை, "ரஷ்யா இது வரை பாவிக்கவேயில்லை" என்று நம்பி எழுதுகிறார் - அங்க நிற்கிறார் ஆய்வாளர்!😂
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
நேட்டோ நேரடியாக வெளுக்கும் நிலையை ஏற்படுத்தினால் நல்லது தான்! ஒரு வாரத்தில் முடிவு வரலாம்!
-
சந்திரயான்-3: நாசா நிலவில் கால் பதித்துவிட்ட பிறகு ஆளில்லா ரோவர்களை அனுப்புவதால் என்ன பயன்?
நன்றி ஏராளன் (நீண்ட பதில், மன்னிக்கவும்!) முன்கதை சந்திராயன் போன்ற ஒரு விண்கலம் பூமியின் ஈர்ப்பு விசையை மீறி அதன் சுற்றுப் பாதைக்குச் செல்வதற்கு முதலில் இரண்டு ரொக்கற் இயந்திரங்களைப் பாவிக்க வேண்டும். சந்திராயன் 3 இன் தோற்றத்தில் அந்த இரண்டு பக்கமும் அமைந்திருக்கும் தாங்கிகள் தான் முதல் நிலை (Stage 1) இயந்திரம். இவற்றை ஊக்கிகள் (boosters) என்றும் அழைக்கலாம். இந்த ஊக்கிகள் முதல் சில நிமிடங்களில் எரிந்து முடித்து கழன்று பூமியில் வீழ்ந்து விடும். இதன் பிறகு, இரண்டாம் நிலை (Stage 2) ஊக்கி வேலை செய்து விண்கலத்தை பூமியில் இருந்து 22 000 மைல்கள் தொலைவு வரை தள்ளி விடும். இந்த உயரத்தில் தான் சந்திராயன் பூமியைச் சுற்றி வரும் சுற்றுப் (orbit) பாதையில் நுழையும். தன் வேலையை முடித்த பின்னர், இந்த இரண்டாம் நிலை எஞ்சின் பகுதியும் விண்கலத்திலிருந்து கழரும், ஆனால் பூமிக்கு முழுமையாக மீளுவதில்லை. இனித் தான் நீங்கள் கேட்ட கேள்விக்கான பதில்: சந்திராயனோ, அல்லது நிலவுக்கு முன்னர் சென்ற எந்த விண்கலமுமோ நேராக நிலவுக்குப் பறக்கவில்லை. பூமியைச் சுற்றி மிக உயரத்தில் Geo-synchronous orbit (GEO) என்ற வட்டப் பாதையில் அவை சுற்றி வந்து கொண்டிருக்கும். படிப்படியாக, 22,000 மைல்கள் உயரத்தில் இருந்து மேலதிக உயரத்திற்கு ஏறி, விண்கலம் சுற்றிக் கொண்டிருக்கும். ஒரு கட்டத்தில் இந்த பூமியின் சுற்றுப் பாதையில் இருந்து விலகி, நிலவினைச் சுற்றி வரும் ஒரு வட்டப் பாதையில் விண்கலம் இணையும். இப்படி, சுற்றுப் பாதையை மாற்றிக் கொள்ளவும் (orbit transfer), விண்கலத்தின் திசையை மாற்றிக் (maneuver) கொள்ளவும் தான் விண்கலத்திற்கு விசையுருவாக்கும் இயந்திரம் தேவை. அந்த இயந்திரத்தின் பெயர் மூன்றாம் நிலை (Stage 3) இயந்திரம். வெற்றிடத்தில், காற்றில்லாமல் வேலை செய்யக் கூடிய இந்த இயந்திரம் "உறைநிலை எரிபொருள்" (cryogenic) இயந்திரம் எனும் விசேட வகையைச் சார்ந்தது. இந்தியாவின் தயாரிப்பான உறைநிலை இயந்திரம் CE-20 சந்திராயன் 3 இல் விண்கலத்திற்குப் பின்னால் தாங்கி போல இருக்கும் பகுதி தான் CE-20 எனப்படும் உள்ளூர் தயாரிப்பான கிறையோஜெனிக் ரொக்கற் இயந்திரம். இந்த இயந்திரம் உள்ளூர் தயாரிப்பாக உருவாக வித்திட்டது, 1992 இல் அமெரிக்கா இந்தியாவின் விண்வெளி ஆய்வை முடக்க எடுத்த ஒரு நடவடிக்கை தான். 90 களில் இந்தியா இந்த கிறையோஜெனிக் இயந்திரங்களை வெளிநாட்டிலிருந்து வாங்க முயன்றது. அமெரிக்காவும், பிரான்சும் சொன்ன விலையை விட, ரஷ்யாவின் இயந்திரங்கள் மலிவாக இருந்ததால், இந்தியா ரஷ்யாவின் கிறையோஜெனிக் இயந்திரங்களை வாங்க ஒப்பந்தம் போட்டது. அமெரிக்காவோ, இது ஏவுகணைத் தொழில்நுட்பத்தை ஒத்தது, எனவே ஏவுகணைப் பெருக்கக் கட்டுப்பாட்டு விதிகளுக்கு முரண் எனக் கூறி, அடுத்த 2 வருடங்களுக்கு இந்தியாவின் விண்வெளி ஆய்வு நடவடிக்கைகளை முடக்கும் வகையில் ஏற்றுமதி இறக்குமதித் தடையை விதித்தது. அன்றே, இந்தியா உள்ளூரில் கிறையோஜெனிக் இயந்திரங்களை உருவாக்கும் முயற்சிகளைத் தொடங்கி, இன்று பெங்களூரில் இதற்கெனத் தனியான ஒரு பிரிவை உருவாக்கியிருக்கிறது. அங்கே உருவாக்கப் பட்டு, தமிழ்நாட்டில் போன வருடம் வெற்றிகரமாகப் பரீட்சிக்கப் பட்ட ஒரு இயந்திரம் தான் இந்த CE-20. எப்படி வேலை செய்கிறது கிறையோஜெனிக் இயந்திரம்? சில நாட்கள் முன்பு ஒரு திரியில், ஐதரசன் வாயு ஒட்சிசனுடன் சேர்ந்தால் பெரும் வெப்பம் உருவாகும் என்று குறிப்பிட்டுப் பேசிக் கொண்டிருந்தோம் அல்லவா? அதே exothermic இரசாயனத் தாக்கம் தான் கிறையோஜெனிக் இயந்திரத்தின் செயல்பாட்டுப் பொறிமுறை. மொத்தமாக 27,000 கிலோ நிறையுடைய திரவ நிலை ஓட்சிசனும், திரவ நிலை ஐதரசனும் இந்த இயந்திரத்தின் தாங்கிகளில் சேமிக்கப் பட்டிருக்கிறது. தேவையேற்படும் போது, பம்பிகள் மூலம் இந்த திரவ வாயுக்கள் கலக்கப் பட்டு, தீயை ஒரு தீயுருவாக்கி (ignition) ஏற்படுத்த, தாரை இயந்திரம் போன்ற அமைப்பு அந்தத் தீ-வாயுக்கலவையை பின் நோக்கித் தள்ளுவதால் உந்துகை (propulsion) நிகழ்கிறது. இதில் கவனிக்க வேண்டியது என்னவெனில், இந்த கிறையோஜெனிக் இயந்திரம் தொடர்ந்து இயங்க வேண்டியதில்லை: மொத்தமாக 40 நாட்கள் எடுக்கும் சந்திராயனின் நிலவுப் பயணத்தில், வெறும் 720 செக்கன்களுக்குத் தான் இந்த கிறையோஜெனிக் இயந்திரம் வேலை செய்ய வேண்டியிருக்கும். ஏனெனில், நியூட்டனின் முதல் விதியின் படி: இயக்கத்திலிருக்கும் பொருள் தடை ஏற்படும் வரை இயக்கத்திலிருக்கும். இதனால், உராய்வில்லாத விண்வெளி வெற்றிடத்தில் தொடர்ந்த உந்துகையின்றியே சந்திராயன் நகரும். சுற்றுப் பாதைகளை மாற்றும் போது மட்டும், கிறையோஜெனிக் இயந்திரம் வேலை செய்து விசையை வழங்கும். அப்படி அது வேலை செய்ய வேண்டிய கால அளவு மொத்தமாக வெறும் 720 செக்கன்கள் என்று கணித்திருக்கிறார்கள். மேலே, சந்திராயன் ஏவப் பட்ட பின்னர், இந்தியர்கள் பெருமைப் பட்ட சந்தர்ப்பங்களை நக்கல் நையாண்டி செய்திருப்போர் கவனிக்க வேண்டிய ஒன்று: உள்ளூரில் இப்படிப்பட்ட ஒரு சிக்கலான கிறையோஜெனிக் ரொக்கற் இயந்திரத்தை உருவாக்கியமை உண்மையில் சாதனை தான். 90 களில், அமெரிக்காவின் ஒரு சில்லறைத்தனமான சேட்டைக்குப் பதிலாக நரசிம்மராவ் உருவாக்கிய உள்ளூர் முயற்சி, அதில் முழுமையாக உள்ளூர் விஞ்ஞானிகளின் பங்களிப்பு (பலர் தென்மாநிலத்தவர், தமிழர்கள் என்பது கூடுதல் பெருமை!) என்பன தென்னாசிய நாடுகளைப் பொறுத்த வரை ஒரு சிறப்பான முன்மாதிரி. இந்தியர்கள் பெருமைப் பட சந்திராயன் 3 நியாயமான காரணம் தான்!
-
சந்திரயான்-3: நாசா நிலவில் கால் பதித்துவிட்ட பிறகு ஆளில்லா ரோவர்களை அனுப்புவதால் என்ன பயன்?
நியூட்டனின் மூன்றாம் விதி: ஒரு விசையை உருவாக்கினால் அதற்கு சமனும் எதிருமான விசை உருவாகும், இது வெற்றிடத்திலும் நடக்கும். விண்கலம் எரிபொருளை எரித்து வெளிவிடும் உந்துகைக்கு (thrust) எதிர் விசை விண்கலத்தை முன் தள்ளும். (பயனுள்ள திசையில் திரியை நகர்த்த முனைந்தமைக்கு ஒரு பச்சை!) உங்கள் கேள்வி "காற்றில்லை, அதனால் ஒட்சிசன் இல்லாமல் எப்படி உந்துகை கிடைக்கிறது" என்பதா?
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
நல்ல செய்தி! நாதத்தின் மொழியில் சொல்வதானால்: "அடிச்சான் பாரு அப்பாயின்ற்மென்ற் லெட்டரு!"😂
- DM Neuropathies
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
இது நிகழ்ந்தால், மிகவும் தவறான ஒரு நடவடிக்கை. கொத்துக் குண்டுகளால், உக்ரைன் படைகளுக்கு மேலதிக நன்மை எதுவும் கிடைக்குமென நினைக்கவில்லை. மறு பக்கம், வெடிக்காத bomblets நிறைந்த நிலப்பகுதியை ரஷ்யாவிடமிருந்து மீட்டு உக்ரைனியர்கள் குடியேறும் போது அது உக்ரைனிய மக்களுக்கு ஆப்பாக முடியும். யுத்தம் முடிந்த பின்னர், இந்தக் கொத்துக் குண்டுகளை கறுப்புச் சந்தையில் வேறு நாடுகளும், பயங்கரவாத அமைப்புகளும் உக்ரைனிடமிருந்து வாங்கவும் வாய்ப்புகள் உண்டு. பைடன், அனேகமாக நல்ல முடிவை எடுப்பாரென நம்புகிறேன்.
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
இந்தச் செய்தி ஆச்சரியமாகத் தான் இருக்குது. நவால்னிக்குப் பக்கத்தில் அறை ஒதுக்கியிருப்பார்களோ என்று யோசிக்கிறேன். அரச தொலைக்காட்சியில் பிரிகோஷினின் மாளிகை, கைப்பற்றப் பட்ட தங்கக் கட்டிகள் என்பன காட்டினார்களாம் என்கிறது பிபிசி.
-
டைட்டானிக் சுற்றுலாப்பயணிகளிற்கான நீர்மூழ்கி காணாமல்போயுள்ளது
ஓம், இப்படித் தான் நடந்திருக்கிறது. அது நான், எங்காவது உடையாமல் சிக்கிக் கொண்டிருக்கிறார்களோ என்ற சந்தேகங்கள் இருந்த போது எழுதியது.
- Liver & DM-1.jpg
- Liver & DM-2.jpg
-
டைட்டானிக் சுற்றுலாப்பயணிகளிற்கான நீர்மூழ்கி காணாமல்போயுள்ளது
ஒரு குறுகிய 20 அடிகள் நீள உருளைக்குள், ஆழ் சமுத்திரத்தில் கொஞ்சம் கொஞ்சமாக ஒக்சிசனும் வெப்பநிலையும் குறைந்து, இறப்பதென்பது கொடுமையான விடயம். இது போன்ற தண்டனையைப் பெறுவதற்கு இந்த ஐந்து பேரும் செய்த குற்றங்கள் செல்வந்தர்களாக இருப்பதும், தங்கள் செல்வத்தைப் பாவித்து ஒரு தனித்துவமான அனுபவத்தைப் பெற முயன்றமையும் மட்டும் தான் என நினைக்கிறேன்.
- Renal
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
இலங்கையில் சட்ட ஆட்சி எப்பவுமே ஒரு நொண்டிக் குதிரை என்பதற்கு சாட்சி இந்தக் காணிக் கபளீகரப் பிரச்சினை தான்! இதை உணர்ந்தே அப்பா இறுதி வரை வீடு கட்ட முடியாமல் வெறுமனே வைத்திருந்த யாழ்ப்பாணக் காணி பங்கு பிரிப்பு வரும் போது நான் ஒதுங்கி விட்டேன். அமெரிக்காவின் ஒரு மூலையில் ஒரு அரைப்பரப்புக் காணி உரிய சட்டப் பாதுகாப்புடன் போதும். பின்னர், ஒரு ஆறடி நிலம் - எரித்தால் அதை விடக் குறைவான அளவு நிலம்- அமெரிக்காவின் ஒரு மூலையில் போதும்! Less is more!
-
தமிழனின் சிற்பக் கலை.
இந்த "6000 ஆண்டுகள் முன்பு தமிழனுக்குத் தெரிந்த கருக்கட்டல் முறை" பற்றிப் பார்க்கலாம்: MyIndiaMyGlory என்ற ஒரு இணையத்தளம். மோடி ரீமின் "கோமிய விஞ்ஞானம்" உட்பட பல ஜோக்குகளை சீரியசாக சிரிக்காமலே பிரசுரித்து வரும் ஒரு தளம். "பிரிட்டிஷ் காரன் எங்களைப் பாம்பாட்டி நாடு என்றான், இந்தா பார் எவ்வளவு முன்னேற்றமாக இருந்திருக்கிறோம்?" என்பதே இந்த கோமிய இணையத் தளத்தின் மையக் குமுறல். அதன் ஒரு பகுதி தான் இந்த பாம்பு சந்திரனை விழுங்கும் சிற்பத்தை, " விந்து முட்டை இணையும்" கருக்கட்டல் சிற்பம் என்று 4 ஆண்டுகள் முன்பே எழுதியிருக்கிறார்கள். அது இப்போது தான் முகநூல் வழியாக யாழுக்கு வந்திருக்கிறது. இன்னொரு பகிடி: அந்த தளத்தில் "தமிழனின் கண்டு பிடிப்பு" என்று கூட அவர்கள் சிலாகிக்கவில்லை, சோழர்கள் காலத்தில் ஏற்கனவே இருந்த ஆலயம் என்பதோடு நிறுத்திக் கொண்டார்கள். ஆனால், தமிழுணர்வாளர்கள் மிகுதியைச் சேர்த்து, சோழர் காலத்திற்கு இன்னொரு 5000 ஆண்டுகளையும் கூட்டி விட்டார்கள். வாசித்துச், சிரித்துக் கடந்து போங்கள்! 😂
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
ஒருங்கிணைந்த பண்ணைகளின் சிறந்த மாதிரிகளைப் பார்க்க விரும்புவோர் போக வேண்டிய இடம் மத்திய மாகாணம். 20 ஆண்டுகளுக்கு முன்பே, குண்டசால, சரசவிகம, ஹிந்தகல, மஹகந்த போன்ற பேராதனையை அண்டிய சிறு கிராமங்களில் அருமையான ஒருங்கிணைந்த பண்ணைகள் இருந்தன. இவற்றுள் பலவற்றிற்கு கால்நடை மருத்துவ சேவைகளை வழங்கிய அதிர்ஷ்டம் கிடைத்தது. இவற்றுள் ஹிந்தகலவில் இருந்த பண்ணை சேதன பண்ணையாக இருந்தது. குண்டசாலையில் இருந்த ஒருங்கிணைந்த பண்ணையில், லொத்தர் அடிப்படையில் ஒரிரு குடும்பங்களைத் தேர்வு செய்து சில வருடங்களுக்கு பண்ணையில் வசித்து பயிற்சி பெறச் செய்யும் ஒரு திட்டத்தை நடைமுறைப்படுத்தினர். வளர்க்கும் பயிர்கள், ஆட்டினங்கள், மாட்டினங்கள் என்பன வடமாகாணத்தில் வேறாக இருக்கும், ஆனால், செயல்படுத்தும் நுட்பங்கள், முறைகள் பற்றி இந்த மத்திய மாகாண ஒருங்கிணைந்த பண்ணைகளில் கற்கலாம், ஆலோசனை பெறலாம்.
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
அருமையான பயணக் கட்டுரை சுமே. ஊர் போய்ப் பார்த்து வந்த மாதிரியே இருக்குது. நான் இலங்கை போனால் அங்க இங்க போவதற்கு பொதுப் போக்குவரத்துத் தான் பயன்படுத்துவது. வெளிநாட்டிலிருந்து வந்திருப்பவர் போல அல்லாமல் மக்கள் ஜோதியோடு இரண்டறக் கலந்து விடுவது இலங்கையில் நல்லது! ஆனால் குடும்பமாகப் போனால் அது சாத்தியமில்லை என்பது உண்மை.
- திரும்பும் வரலாறு!
- திரும்பும் வரலாறு!
-
திரும்பும் வரலாறு!
நொச்சி, நன்றி வாசித்துக் கருத்துப் பகிர்ந்தமைக்கு. 1. இறையாண்மை, தெளிவான பௌதீக எல்லை என்பன கொண்ட நாடுகள் யுத்தம் முடிந்த பின்னர் முன்னோக்கி நகர்வது இலகுவானது. இதில் தோல்வி கண்ட நாடு முன்னோக்கி நகர அந்த நாட்டின் ஒருமித்த தேசிய அடையாளம் (national identity) பலமாக இருந்தால் முன்னோக்கி நகர்வது இன்னும் இலகு. உதாரணம் ஜேர்மனி, ஜப்பான், இத்தாலி. 2. ஆனால், இப்படி ஒருமித்த அடையாளம் இல்லா விட்டால் இறையாண்மை கொண்ட நாடுகள் கூட சிதைந்து போகும்: உதாரணம், ஈராக் (சுனி, ஷியா, குர்து, கிறிஸ்தவர்), லிபியா (லிபிய தேசிய அடையாளம் என்ற ஒன்று இல்லை), ஆப்கானிஸ்தான் (தாஜிக், பஷ்ரூன், இன்ன பிற அடையாளங்கள், ஆப்கான் தேசிய அடையாளம் மிகவும் நொய்மையானது!). 3. இப்ப, எங்கள் பிரச்சினை சட்டரீதியாக (de jure) தமிழர் தரப்பு இறையாண்மை கொண்ட நாடாக இருக்கவில்லை, எனவே எல்லோருக்கும் அது உள் நாட்டு யுத்தம். உள் நாட்டு யுத்தத்தில் வெல்லும் தரப்பின் மனநிலை தான் தோற்ற தரப்பின் முன்னோக்கிய நகர்வைத் தீர்மானிக்கும். சிங்கள மனநிலை என்னவென்று நான் விளக்க வேண்டியதில்லை, எனவே முட்டுப் பட்டு நிற்கிறோம். ஆனால், நாம் சர்வதேசத்தை எதிர்பார்ப்பதற்கு முன்னர் நாம் செய்ய வேண்டிய எல்லாவற்றையும் செய்து விட்டா சர்வதேசத்தின் முகத்தைப் பார்க்கிறோம்? இல்லையென்று தான் நினைக்கிறேன். உதாரணமாக: ஈழத்தமிழருக்கு இப்போது தேவையான 5 விடயங்களை, ஒரு முக்கியத்துவ (priority)அடிப்படையிலான பட்டியலாக ஈழத்தில் இருக்கும் தமிழ்க்கட்சிகள் எல்லாம் ஒருமித்து தயாரித்திருக்கின்றனவா? அந்தப் பட்டியலோடு, சிங்களவரிடம் பேசப் போயிருக்கின்றனரா? எங்கள் தரப்பிலிருக்கும் இந்தப் பெரிய ஓட்டையை சாமான்யன் நானே அடையாளம் கண்டு கொண்டிருக்கும் போது, சிங்களவருக்கும், சர்வதேசத்திற்கும் இது தெரியாமலிருக்குமா?