Jump to content

Justin

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    5723
  • Joined

  • Last visited

  • Days Won

    67

Everything posted by Justin

  1. மீண்டும் மீண்டும் இந்த 5% வந்து கிலியைக் கிளப்புகிறதே😂?
  2. உங்களைத் தவிர இங்கு யாருக்குமே விளக்கமில்லை உறவே! 74=52, இது யாருக்கு விளங்கும்😂?
  3. அங்கே என்ன நடந்தது? 1. "ரேடாரில் மாட்டாமல் தாழப் பறக்கும் நுட்பத்தை முதலில் பயன்படுத்தியது இஸ்ரேல்" என்று நான் எழுதினேன் (கவனியுங்கள்: அமெரிக்கா அல்ல, இஸ்ரேல்). 2. நீங்கள் வந்து "ஜப்பான் காரர் இதை பேர்ள் ஹாபரில் செய்து விட்டார்கள், சொம்பு, முட்டு, பொங்கல், அவியல்" என்று குதித்தீர்கள். ஆதாரம் கேட்டேன், மௌனமாகப் போய் விட்டீர்கள் (ஏனெனின், ஜப்பான் காரன் கூட தான் இதைச் செய்ததாக எங்கும் சொல்லி நான் அறியவில்லை). 3. பின்னர் நான் ரேடாரில் ஜப்பான் விமானங்கள் தெரிந்தமை, ஏன் அமெரிக்கா தவற விட்டது என்று வரலாற்று நூல்களில் இருந்த தகவல்களைச் சொன்னேன். 4. இன்னொரு உறவு, விமானங்கள் ரேடாரில் தெரிந்ததை உறுதிப் படுத்தும் ஒரு ஆதாரப் பதிவை இணைத்தார் (கவனியுங்கள்: நீங்கள் எதுவும் இணைக்கவில்லை😎!) அதே ஆதாரத்தை , தாழப் பறந்து வந்து ஜப்பானியர் தாக்கியதன் ஆதாரமாக எனக்கு நீங்கள் சிவப்பெழுத்தில் கோடிட்டுக் காட்டியிருந்தீர்கள் (மீண்டும் கவனியுங்கள்: "ஆங்கிலம் ஒரு மொழியேயொழிய, அது அறிவல்ல!" - எங்கேயோ கேட்ட குரல்😎!) எனவே, இது வரை ஜப்பானியர் தாழப் பறந்து வந்து ரேடாரில் இருந்து தப்பினர் என்பதற்கு ஒரு ஆதாரமும் நீங்கள் தரவில்லை (இல்லாத ஆதாரத்தை எப்படித் தருவதாம்😂?). இனி உங்கள் பிரச்சினைக்கு வருவோம்: நீங்கள் உட்பட யாழில் ஓரிருவரின் பிரச்சினை "மேற்கு எதிர்ப்பு" என்ற ஒரு உணர்ச்சி. அந்த உணர்ச்சிக்கு நியாயமான காரணங்கள் இருக்கலாம், அதை மறுக்க யாருக்கும் உரிமையில்லை. ஆனால், அந்த உணர்ச்சி மட்டுமே உலகத்தை, சம்பவங்களைப் புரிந்து கொள்ளப் போதாது. அப்படி உணர்ச்சி மட்டும் வைத்து "நாசா சந்திரனுக்குப் போகவில்லை" என்று கூட வாதாடும் நிலை இருக்கிறது பாருங்கள்? அந்த முட்டாள் தனத்தைத் தான் நான் சவாலுக்குட் படுத்துகிறேன். இனியும், தவறாமல் செய்வேன் - நீங்கள் சொம்போடு குறுக்கே மறுக்கே ஓடினாலும், நான் நிறுத்தாமல் செய்வேன்! ஏன் இப்படி சவலுக்குட்படுத்துவது முக்கியம்? இந்த மேற்கு எதிர்ப்பு உணர்ச்சி மயப் பட்டு, பொய்த்தகவல்களை உங்கள் போன்றோர் பரப்புவதால் மேற்கிற்கு ஒரு கீறலும் விழாது. ஆனால், எங்கள் தமிழ் சமுதாயத்தில், குறிப்பாக புலத் தமிழ் சமுதாயத்தில், இதனால் ஒரு முட்டாள் பரம்பரை உருவாகி வரும் ஆபத்து இருக்கிறது. எனவே, உங்கள் போன்றோரை அடிக்கடி இப்படிச் சவாலுக்குட்படுத்துதல் அவசியம். உங்களுக்கு முடிந்தால், இந்த சவால்களை ஆதாரங்களை இணைத்து எதிர் கொள்ளலாம். இல்லையேல் சொம்போடு நின்று விடலாம், இரண்டும் எனக்கு சௌகரியமே!
  4. இதை பாஞ் செய்ததாக எழுதவில்லை, ஆனால் இலங்கையில் இறங்கியதும் நடை உடை பாவனையில் உள்ளூர் காரர் போல மாறி "ஜோதியில்" கலந்து விடா விட்டால் இது போன்ற பிரச்சினைகள் வரலாம். பல வருடங்கள் முன்பு நானும் என் ஐரோப்பாவில் வசிக்கும் அண்ணரும் ஊர் போனோம். அவர் கடைக்கு மீன் வாங்கப் போனால் ஒரு கிராமத்திற்கே தேவையான கடலுணவுகளை தலையில் கட்டி அனுப்பி விடுவார்கள் மீன் வியாபாரிகள்😂. உடைகளை அவர் மாற்றிக் கொள்ளவேயில்லை, அது தான் காட்டிக் கொடுத்திருக்கிறது.
  5. இது வரை, இந்த மேற்கு சார்ந்த ஊடகங்கள் பொய்" என்ற "ரிபீட் பல்லவியைத்" தாண்டி, அந்த தரவுகளை நீங்கள் மறுத்து எந்த சான்றையும் தந்ததை நான் காணவில்லையே? இனிச் செய்வீர்களா? எதிர்காலத்தில் வரக்கூடிய ஒரு உரையாடல் சந்தர்ப்பத்தில் உங்கள் கையை (handle) ப் பிடித்து அழைக்க எனக்கு அனுமதி இருக்கிறதா? அறியத் தாருங்கள்😎!
  6. இந்த விடயத்தில் எனக்காகவும் சேர்த்தே அறிவுரை சொல்லியிருக்கிறீர்கள் என்பதால் நன்றிக் குறி போட்டிருக்கிறேன்! பி.கு: நீங்களும் இனி பப்புக்குப் போய் டயற் பெப்சி குடிப்பதை க் கைவிட வேண்டும்😎. அப்படி ஒரு வெண்டிங் மெசின் கூட இல்லையா லண்டனில் டயற் பெப்சி எடுக்க?
  7. ஈரான் இப்போது தான் இஸ்ரேலினுள் நேரடியாக தாக்கி இருக்கிறது. ஆனால், ஈரானின் உள்ளே 2020 இலேயே இஸ்ரேல் மிக நவீன முறையில் தாக்குதலொன்றை நடத்தியது. 2017 இல் இருந்து கண்காணித்து வந்த ஒரு ஈரானிய அணு விஞ்ஞானியை, 2020 இல் ஒரு ஆளில்லாமலே இயங்கக் கூடிய இயந்திரத் துப்பாக்கியை, ஈரானுக்கு வெளியே இருந்து இயக்கி, இஸ்ரேல் கொன்றது (அருகில் இருந்த மனைவிக்கு ஒரு கீறலும் விழவில்லை). இதைப் பற்றிய செய்தியை கீழே வாசிக்கலாம், மிக நவீனமான முறையில் கொலை. https://www.timesofisrael.com/mossad-killed-irans-top-nuke-scientist-with-remote-operated-machine-gun-nyt/ ஆனால், நான் சொல்ல வருவது அதுவல்ல. இந்த 2020 கொலையை, ஈரான் மண்ணில் தயக்கமின்றி இஸ்ரேல் செய்ய ஒரு பிரதான காரணம், அமெரிக்காவினால் கொல்லப் பட்ட ஈரானிய IRG ஜெனரலின் கொலைக்கு, ஈரான் பாரிய பதிலடி எதுவும் கொடுக்காத தைரியம் தான் என்கிறார்கள். இதன் படி பார்த்தால், இந்த ஈரானிய பதிலடி இல்லா விட்டால், நிலைமை எப்போதும் கட்டுக்குள் வராது, வன்முறை தொடரும். அப்படி நடக்காமல் எச்சரிக்கும் deterrence தான் ஈரானிய பதில் தாக்குதல். எனவே, இரு தரப்பும், சிவப்பு கோட்டைக் கிழித்து விட்டு வடிவேலு பாணியில் "கோட்டைக் தாண்டி நீயும் வராதே, நானும் வர மாட்டேன்"😂 என்று விலகுவதே புத்தி சாலித்தனம்.
  8. தனிப்பட்ட கோப தாபங்கள் இல்லை. ஆனால், நீங்கள் ஒரு கருத்தாளர் தரும் தரவுகளைக் கேள்விக்குள்ளாக்கும் போது மறுத்துரைக்கும் தரவுகளைத் தருவதில்லை. கொஞ்சம் வற்புறுத்திக் கேட்டால் "மேற்கின் , அமெரிக்காவின் செம்பு" என்பீர்கள். நீங்கள் உருப்படியான தரவுகளைத் தந்ததை விட "செம்பு" என்பதைத் தான் அதிக தடவைகள் பாவித்திருக்கிறீர்கள் என்பது என் அவதானிப்பு, இன்னும் நீங்கள் "சுழல் கழிப்பறை" பாவிப்பதாலோ தெரியாது😂!
  9. ஏராளன் இதை சிவப்பு மையில் போடும் வரை எனக்கு பகிடி விளங்கவில்லை! ஸ்ரார்ட்டர் லூசான ரியூப்லைற் நான்😂!
  10. அப்படியெதுவும் நடக்காது😂. இஸ்ரேலும், ஈரானும் என்னைப் பொறுத்த வரையில் புத்தி சாலிகள் (ரஷ்யாவை விட). துலங்கல் செய்யாமல் இருந்து தவறான சமிக்ஞையைக் கொடுக்காமல், பொருத்தமான எதிர்வினையை ஆற்றி விட்டு அடங்கியிருக்கிறார்கள். இனி proxy யுத்த முனைக்குத் திரும்பி விடுவர் இரு தரப்பும்.
  11. வடக்கு கிழக்கில் சிங்களவர், தெற்கில் தமிழர் இரண்டும் ஒன்றல்ல. மேலே பலர் சுட்டியிருப்பது போல அரச ஆதரவுடன் குடியேற்றம் என்பது தான் முக்கிய காரணி. ஆனால், சில விடயங்களை நாம் எதிர்க்க முடியாது. உதாரணமாக, ஒரு சிங்களவர் மிக அடிப்படையான தமிழ் பரிச்சயத்துடன் வடக்கில் வேலை செய்ய நியமனம் கிடைத்தால் அதில் எதிர்க்க எதுவும் இல்லை. ஏனெனில், மிகக் குறைந்த சிங்களப் பரிச்சயத்துடன் தெற்கில் தமிழர்கள் வேலை செய்கிறார்கள். அதே போல, யாழ் பல்கலைக்கு சிங்கள மாணவர்கள் விரும்பி வருவதையும் நாம் எதிர்க்க இயலாது. தெற்கின் பல்கலைகளில் தமிழ் மாணவர்கள் விரும்பிச் சென்று படிக்கிற நிலையும் இருக்கிறது.
  12. ஏனைய கருத்துக்களில் மறுக்க எதுவும் இல்லை. ஆனால், ஸ்திரத் தன்மை இல்லாமல் இருப்பதை அனேகமான மேற்குலக நாடுகள் விரும்புவதில்லை. தங்கள் நலனுக்காக பல நாடுகளில் மேற்குலகம் ஸ்திரமின்மையை ஊக்குவித்தமை பனிப்போர் காலங்களில் நிகழ்ந்திருக்கின்றன. ஈராக் ஒரு அமெரிக்க நிர்வாகத்தின் பெரும் முன் யோசனையற்ற தவறு. ஆப்கானிஸ்தான் நேட்டோ போயிருக்க வேண்டிய இடம் தான், அமெரிக்க படைகள் அங்கே நடந்து கொண்ட விதம் தவறானாலும். சிரியாவின் ஸ்திரமின்மை - தோற்றுவாயோ, தற்கால நிலையோ- மேற்கின் முழுத்தவறல்ல. இது என் கருத்து. (நீங்கள் மட்டும் எழுதிக் கொண்டிருக்க எனக்கு லாங்லியில் இருந்து போனைப் போட்டுத் திட்டுறாங்கள், எனவே நானும் எழுத வேண்டியதாயிற்று😎!)
  13. இவ்வளவு "நீண்ட" வாதப் பிரதி வாதம் ஒரு நகைச்சுவைப் பதிவை விளங்கிக் கொள்ள அவசியமாக இருந்திருக்கிறது என்பதைக் காணும் போது, உங்களிடம் இனி ஜோக்கே சொல்லக் கூடாதென பலர் இங்கே சுய குறிப்பெடுத்துக் கொண்டிருப்பர் என நம்புகிறேன்😂. "சிரிக்க சிறக்க "வில் இணைத்தால் இது போன்ற திரிகள் அகற்றப் படாதென அவர் அறிந்திருக்கிறார்😎. ஆனால், இணைத்ததன் நோக்கம் நகைச்சுவை தானா எனக் கண்டறிவது கடினம்!
  14. நீங்கள் சீரியசாக எடுத்து விட்டீர்களென தெரிகிறது. நீங்கள் கடிந்து கொள்வது போல நீரோட்டம், ஆமை, ஓசோன் வெளிவிடும் துளசிச் செடி என்று கற்பனைக் கதைகள் பரப்பும் போக்குடைய ஒரு அரசியல் தரப்பு தமிழ்நாட்டில் இருக்கிறது, அதன் தீவிர விசிறிகள் யாழில் இருக்கிறார்கள். அவர்களைக் கலாய்க்கும் ஒரு நையாண்டிப் (sarcastic) பதிவு இது. நையாண்டி விளங்க வேண்டுமானால் சுற்றி நடக்கிற சமகால நிகழ்வுகள் பற்றியும் புரிந்து கொள்ள வேண்டுமென நினைக்கிறேன்.
  15. நீங்கள் சொல்லும் காரணமும் இருக்கலாம். பொது வெளியில், வெளிப்படையாக சொல்லப் பட்ட காரணத்தைப் பற்றித் தான் நாம் கருத்துரைக்க முடியும். அன்ரன் பாலசிங்கத்தின் "போரும் சமாதானமும் பக்கங்கள் 710 முதல் 716" இல் புலிகளின் அமெரிக்கா மீதான ஏமாற்றம் தெளிவாக வெளிப்படுத்தப் பட்டிருக்கிறது. இந்தப் பக்கங்களில் இருக்கும் சில தகவல்களை வைத்து சர்வதேச இராஜதந்திரத்தில் தமிழர் தரப்பின் பாரிய குறைபாட்டையும் காண முடிகிறது. "யாருடன் பேசுகிறோம்-know your audience" என்பது எந்தத் தொடர்பாடலிலும் முக்கியம். ரெனிசியில் பிறந்து, மிசிசிப்பியில் வளர்ந்து, புஷ் நிர்வாகத்தில் வேலை செய்த ஆஸ்லி வில்ஸ் தான் அமெரிக்க தூதுவர் - நிச்சயமாக சிறுபான்மையினரின் ஏமாற்றங்களைப் புரிந்து கொள்ளாத ஒருவராக இவர் இருந்திருப்பார். வில்சின் மேலதிகாரி ரிச்சர்ட் ஆர்மிரேஜ் என்ற தெற்காசிய விவகார பொறுப்பதிகாரியும் இவர் போன்றவரே. இவர்கள் இருவரிடமும் எதையும் எதிர்பார்த்திருக்கக் கூடாது என்பது என் அபிப்பிராயம். ஆட்சேபனை தெரிவித்து விட்டு ரோக்கியோ போய் அந்தப் பிரகடனத்தில் மாற்றம் கொண்டு வந்திருக்க முடியுமா என முயன்றிருக்கலாம் என்பது என் அபிப்பிராயம். சரி வந்தால் மலை, போனால் தலை முடி! அப்படிச் செய்திருந்தால் முள்ளிவாய்க்கால் நடப்பதற்கான வாய்ப்பு 50/50 ஆக இருந்திருக்கும் என நினைக்கிறேன்.
  16. நூற்றுக் கணக்கான யானைகளை தந்தத்திற்காகக் கொன்ற வீரப்பன் "வனக்காவலன்" ஆக முடியுமென்றால், ஸ்ராலின் "கிளி காத்த செம்மலாக" முயல்வதில் என்ன தவறு யுவர் ஆனர்😎?
  17. கோசான் சொல்வது போலவே இவை பற்றிய விளக்கங்கள் redundant ஆக மாறிக் கனகாலம். ஆனால், சம்பவங்கள், வரலாறு இவற்றை உணர்ச்சி எனும் வர்ணக் கண்ணாடியூடாகப் பார்க்கும் நிலை இன்னும் மாறவில்லை. ஒரு உதாரணம் மட்டும், நினைவூட்ட: அமெரிக்கா புலிகளை உதவி மாநாட்டிற்கு வருமாறு அழைக்கவில்லை, அழைத்திருந்தாலும் விசா கிடைத்திருக்காது (தற்போது சில சிறி லங்கா இராணுவத்தினருக்கு விசா கொடுக்காதது போல). அதன் பின்னர் நிகழ்ந்த ரோக்கியோ மாநாட்டிற்கு இந்தக் கோபத்தில் தமிழர் தரப்பு போகவில்லை. இது போன்ற, யதார்த்த நடைமுறையை உதாசீனம் செய்யும் உணர்ச்சி மயமான நிலை இன்னும் தமிழ் தேசியம் பேசுவோரிடையே இருக்கிறது. இது இருக்கும் வரை, பலர் தமிழ் தேசிய செயல்பாடுகளில் இருந்து ஒதுங்கிப் போவது தொடரும், உணர்ச்சி மயமான "சிந்தனைத் தலைவர்கள்" இந்த தலைமுறையோடு இல்லாமல் போன பின்னர், ஏதாவது நல்லது எமக்கு நிகழலாம். அது வரை பெரிதாக எதிர் பார்க்க எதுவுமில்லை!
  18. இது எவ்வளவு பாரதூரமான தவறு என்று தெரியவில்லை (இரண்டு ஒலி வாங்கிகளுக்கும் ஆளி மட்டும் தான் வித்தியாசம்). இப்படியான குறைகள் சேர்ந்து நா.த.க வாக்குகளைக் குறைத்து விட்டதென பின்னர் கூற முயல்வார்கள் என நினைக்கிறேன். ட்ரம்ப் இவர்களிடம் கற்றாரா அல்லது இவர்கள் ட்ரம்பிடம் கற்றார்களா எனக் குழப்பமாக இருக்கு😂!
  19. எல்லாம் நல்லாத் தான் இருக்கு, ஆனால் இது👆 யாரும் நினைத்தே பார்க்க முடியாத படைப்பு, வாய்ப்பேயில்லை! வேற மட்டம்!😂
  20. விசுகர், என்ன சொல்ல வருகிறீர்கள்? இந்தத் தாக்குதலை ஒரு அமைப்பு, கொள்கை சார் நபர்கள் செய்தார்கள் என்று ஐலண்ட் நம்புகிறார் என்று நீங்கள் ஒரு கற்பிதத்தை உருவாக்குகிறீர்கள் போல தெரிகிறதே? முதலில் அந்த யூ ரியூப் சனலில் "சேறடிப்பிற்கு இந்த சம்பவம் பாவிக்கப் படுகிறது" என நான் சுட்டிக் காட்டியிருக்கிறேன். அதையே ஐலண்டும் சொல்கிறார். ஒருவர் "சுட்டிக் காட்டி விட்டதாலேயே அதை நம்புகிறார், இயக்கத்தை, பிரபாகரனைக் கொச்சைப் படுத்துகிறார்" என்று கதையை புரட்டிப் போடுகிறார் குமாரசாமி😂, நீங்களும் அதைப் பின் தொடர்கிறீர்கள். உண்மையாக திரியின் தலைப்பையும், அதன் கீழ் ஓரிருவர் எழுதியிருக்கும் கருத்துக்களையும் பார்க்கும் ஒருவருக்கே ஏன் தாக்குதல் நடந்திருக்கிறது என்று புரிந்து விடும் நிலை. இங்கே "அப்பன் குதிருக்குள் இல்லை" என்று புலிகளையும், பிரபாகரனையும் காட்டிக் கொடுத்திருப்பது யார்?
  21. ஓம். கியூபா, வெனிசுவெலா குடிவரவு, அமெரிக்க கடவுச் சீட்டில் தங்கள் சீல் எதுவும் குத்துவதில்லை. மெக்சிகோ போய், கனடா போய் அங்கிருந்து போகிறார்கள். நமக்கு "சிங்கிள் எஞ்சின் செஸ்னா" வாழ்க்கை பொருந்திப் போய் விட்டது! இனி போற காலத்தில ஏன் மாத்துவான்😂?
  22. வணக்கம் தும்ஸ், தொடர்ந்து நில்லுங்கோ. இந்த அக்கரையிலும் இக்கரையிலும் "வீடு வைச்சிருக்கும்" பழக்கமும் புலம் பெயர்ந்து வந்து விட்டது. கனடாவில் இருந்து கியூபாவில் வடலி வளர்த்துக் கள்ளுக் குடிப்போர் இருக்கிறார்கள் என அறிந்தேன் (அமெரிக்காவில் இருந்து கியூபா போக முடியாது என்பதால், நாம் சிங்கிள் எஞ்சின் தான்😂!)
  23. லா சப்பல் வந்தால் எனக்கும் அறை விழலாம்😎 ஆனால் நான் இவர்களைப் பார்ப்பது முட்டாள்களாகத் தான். இந்த செயலால், அந்தப் பெண்ணின் செயல்பாடுகள் மாறவில்லை, அந்த வகையில் விளைவேதும் தராத ஒரு நடவடிக்கை இது. இன்னொரு கோணத்தில், இந்த லா சப்பல் சம்பவத்தை இணையத்தில் தேடினால் Paris Telegraph என்ற ஒரு யூ ரியூப் சனலில் "பாரிசில் பெண்களுக்கு ஒரு குறிப்பிட்ட குழுவினால் அச்சுறுத்தல்" என்று சொல்லும் காணொளி வருகிறது. எந்த "குறிப்பிட்ட குழு" என்ற ஊகித்துக் கொள்ளுங்கள். எனவே, இந்த நிகழ்வு சேறடித்தலுக்கும் இனிப் பயன்படப் போகிறது என்பது தெளிவாகிறது. எந்த சட்டத் தரணியிடமும் ஆலோசனை கேட்டால் இதை உங்களுக்குச் சொல்வார்கள்: நீங்கள் என்ன உணர்கிறீர்கள், மகாஜனங்கள் என்ன உணர்கிறார்கள் என்பதை விட, நீதி விசாரணையில் நீங்கள் என்ன ஆதாரங்கள், நியாயங்களை முன் வைக்கிறீர்கள் என்பதில் தான் கேசினுடைய வெற்றி, தோல்வி இருக்கிறது. என்ன நடக்கிறதெனப் பார்க்கலாம்.
  24. 11 வது தொடங்கும் வரை, 10 பக்கம் வந்து விட்டதென்று மார் தட்ட முடியாது! @satan என்ன பம்மல்? ஏன் மௌனம்😎?
  25. 🤣😂 அட! பிரெஞ்சு சட்டம் இவ்வளவு மென்மையாக இருக்குமென்று எனக்குத் தெரியாது. மாக்ரோனைக் கன்னத்தில் அறைந்தவருக்கு 18 மாதம் சிறைத்தண்டனை கிடைத்தது, அதில் 14 மாதங்களை ஒத்தி வைத்தார்களாம் (இன்னொரு குற்றம் செய்தால், அந்தப் 14 மாதமும் சேர்க்கப் படும், புதிய குற்றத்தின் தண்டனையோடு!). எனவே, அடித்தவர்கள் ரெடியாக இருப்பார்கள் என நம்புகிறேன்😎.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.