Jump to content

ரஞ்சித்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    8740
  • Joined

  • Last visited

  • Days Won

    103

Everything posted by ரஞ்சித்

  1. அத்தியடிக் குத்தியான் வெறும் தமிழ்நாட்டு ப ஜ க தலைவர்களை சந்தித்தது ஒன்றும் பெரிசில்லை. இந்தியாவின் வெளிவிவகார மந்திரியே சந்தித்து ஆலோசனை நடத்தியிருக்கிறார். அவனுக்கெதிரான வழக்காவது மண்ணாவது! தமிழர்களுக்கு எதிரானவர்கள் என்றாலே இந்தியாவின் நண்பர்கள் என்றுதானே அர்த்தம்?!!!!!
  2. ரஸ்ஸியாவின் அக்கிரமங்களுக்கு வெள்ளையடிக்க சிலர் காட்டும் அதீத ஈடுபாடு புல்லரிக்க வைக்கிறது. இந்த இலட்சணத்தில் இவர்கள் மனிதாபிமானம் வேறு பேசுவார்களாம்.
  3. காசி ஆனந்தனாக மாறிய காளிமுத்து சிவானந்தன் வைகாசி 6 ஆம் திகதி மாலைவேளை, நல்லூர் முடமாவடிப்பகுதியில் அமைந்திருந்த பத்மனாதனின் வீட்டிற்கு அருகில் தனது அமைப்பின் உறுப்பினர்கள் சிலரை தங்கத்துரை வேவுபார்க்க அனுப்பியிருந்தார். இருள் பரவத் தொடங்கியவேளை பத்மானாதனும் அவரது மனைவியும் காரில் ஏறிச் சென்றதாக அவருக்கு உறுப்பினர்கள் செய்தியனுப்பினர். அதனையடுத்து பத்மனாதனின் வீட்டிற்குச் சென்ற தங்கத்துரையும் அவரது உறுப்பினர்கள் சிலரும், அங்கிருந்த பத்மனாதனின் பிள்ளைகள் ஒருவரிடம் தாம் பத்மனாதனின் மனைவியிடம் திருமணம் ஒன்றை பதிவுசெய்வது தொடர்பாகப் பேச வந்திருப்பதாகக் கூறினர். பத்மனாதனின் மனைவி திருமணப் பதிவாளராகச் செயற்பட்டு வந்திருந்தார். தமது பெற்றோர், நண்பர்கள் சிலரைப் பார்க்கச் சென்றிருப்பதாகவும், விரைவில் வந்துவிடுவார்கள் என்றும் பிள்ளைகள் தங்கத்துரையிடம் கூறினர். இதனைத் தொடர்ந்து, தாம் வீதியின் ஓரத்தில் அவர்கள் வரும்வரைக் காத்திருப்பதாகச் சொல்லிவிட்டு வீட்டிற்கு வெளியே சென்றனர் தங்கத்துரையும் உறுப்பினர்களும். பத்மனாதன் திரும்பிவரும்வரை அவரது வீட்டு முகப்பில் அவர்கள் காத்திருந்தனர். பத்மனாதன் காரை விட்டு இறங்கி வாயிற்கதவை திறக்க எத்தனித்தபோது ஜெகன் தனது கைத்துப்பாக்கியினால் பத்மனாதனின் நெற்றிப்பொட்டில் சுட்டார். 55 வயது நிரம்பியிருந்த பத்மனாதன் நிலைகுலைந்து வீழ்ந்து அவ்விடத்திலேயே மரணமானார். அவரைக் கொன்றவர்கள் எதுவித தடயமும் இன்றி இருட்டினுள் மறைந்துபோனார்கள். பத்மனாதனின் கொலையுடன், வடக்கில் பொலீஸாரின் கட்டமைப்பை அழிக்கவே போராளிகள் முயல்கிறார்கள் என்பதைத் தெளிவாகப் புரிந்துகொண்ட அரசு, தேவநாயகம் தயாரித்து வந்த போராளிகளுக்கெதிரான சட்டங்களை உடனடியாக உருவாக்கி நடைமுறைப்படுத்துவதில் அதீத அக்கறை காட்டியது. அதன்படி புலிகளையும், அவர்களின் அமைப்பினை ஒத்த ஏனைய அமைப்புக்களையும் தடை விதிக்கும் சட்டத்தின் வரைவினை தேவநாயகம் முன்வைத்தார். இந்த வரைபு அரசியலமைப்புச் சட்ட ஆணைக்குழுவினரிற்கு ஜே ஆர் இனால் அனுப்பப்பட்டதோடு, அதனை உடனடியாக சட்டமாக்கும்படியும் அவரால் அழுத்தம் கொடுக்கப்பட்டது. பாராளுமன்றத்தின் ஒரு பகுதியில் இயங்கிவந்த நீதிமன்றிற்குச் சென்ற தேவநாயகம் இத்தடை சட்டமாக்கப்படுவதன் அவசியத்தை வலியுறுத்திப் பேசினார். இந்த வழக்குத் தொடர்பான சில தகவல்களை நான் டெயிலிநியூஸ் பத்திரிக்கையில் பதிவிட்டிருந்தேன். இச்சட்டத்தின் ஊடாக பொலீஸாருக்கும், இராணுவத்திபருக்கும் வழங்கப்படவிருக்கும் அதீத அதிகாரம் குறித்து நீதிமன்றம் அச்சம் கொண்டிருந்தது. இச்சட்டம் பொலீஸாருக்கும், இராணுவத்தினருக்கு சந்தேக நபர்களைக் கைதுசெய்தல், தடுத்து வைத்தல், அவர்களின் சொத்துக்களை கையகப்படுத்துதல், மரண தண்டனை வழங்கல் உட்பட பல தங்குதடையின்றிய அதிகாரங்களை வழங்கியிருந்தது. இசாட்டத்தினைப் பாவித்து அரசாங்கம் எதிர்க்கட்சிக்குச் சார்பான தொழிற்சங்கங்களைக் கூட துன்புறுத்த முனையும் என்றும் சிறிமாவின் வழக்கறிஞர் தனது கட்சியின் அதிருப்தியினைத் தெரிவித்திருந்தார். இதற்குப் பதிலளித்துப் பேசிய தேவநாயகம் எதிர்க்கட்சியினரது அச்சம் தேவையற்றது என்றும், இச்சட்டம் ஒருவருட காலத்திற்குள் அகற்றப்பட்டுவிடும் என்றும் உறுதியளித்தார். இந்தச் சட்டத்தை அரசாங்கம் நீட்டித்துக்கொள்ளும் உத்தேசம் இருக்கிறதா என்று நீதிபதிகள் வினவியபோது, தேவநாயகம் பின்வருமாறு பதிலளித்தார், "நாம் இந்தச் சட்டத்தினை ஒருவருடத்திற்கு மேலாக நீட்டிக்க வேண்டிய தேவை இருக்காது. இந்த ஒருவருட காலத்திற்குள் பயங்கரவாதிகளை முற்றாக அழித்துவிடுவோம் என்று எமது அரசாங்கம் உறுதியாக நம்புகிறது" என்று கூறினார். இதனையடுத்து இச்சட்ட நகலை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், இச்சட்டத்தின் மூல அரசியல் யாப்பிற்கு பாதிப்பேதும் ஏற்பட்டுவிடாதென்று கூறியதோடு, இதனை பாராளுமன்றத்தில் விவாதப்பொருளாக்கவும் அனுமதியளித்தது. பாராளுமன்றத்தில் இந்த வரைபு பலத்த ஆதரவுடம் வைகாசி 18 ஆம் திகதி சட்டமாக்கப்பட்டது. தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினருடன் சேர்ந்து சுதந்திரக் கட்சியினர் இந்த சட்டத்திற்கு எதிராக வக்களிக்க 131 ஆதரவு வாக்குகளுக்கு 25 எதிர் வாக்குகள் என்கிற அடிப்படையில் இந்தத் தடை சட்டமாக உருவாக்கப்பட்டது. பாராளுமன்றத்தில் தனக்கிருந்த அறுதிப்பெரும்பான்மையினைப் பாவித்து மிக இலகுவாக இச்சட்டத்தினை ஜே ஆர் நிறைவேற்றினார். காசி ஆனந்தன் இச்சட்டத்தினைப் பாவித்து பொலீஸார் பிரபாகரன் தலைமையிலான 38 போராளிகளின் பெயர்களை தேடப்படுபவர்களாக அறிவித்தனர். இந்த போராளிகளின் படங்கள் மற்றும் அவர்களின் பெயர்கள் அடங்கிய சுவரொட்டிகளை கொழும்பிலும், தமிழ் மக்கள் அதிகம் வாழும் பகுதிகளிலும் பொலீஸார் ஒட்டினர். இவ்வாறு தேடப்பட்ட போராளிகளில் பலர் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரின் இளைஞர் பிரிவின் உறுப்பினர்களாக இருந்தவர்கள் என்பதும், இவர்கள் முன்னர் கைதுசெய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது. தேடப்பட்டு வந்த 38 இளைஞர்கள் 26 இளைஞர்கள் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் வழக்கறிஞர்களின் ஆலோசனைக்கிணங்க வைகாசி 26 ஆம் திகதி பொலீஸாரிடம் சரணடைந்தனர். இவர்களுள் காசி ஆனந்தன், மாவை சேனாதிராஜா, வண்ணை ஆனந்தன், புஸ்பராஜா, நடேசானந்தன், சிறி சபாரட்ணம், சபாலிங்கம் மற்றும் சந்ததியார் உற்பட பலரும் இருந்தனர். இவர்கள் எவருமே பஸ்டியாம்பிள்ளையின் கொலையுடன் தொடர்புபட்டிருக்கவில்லையென்பதும், அக்கொலையில் ஈடுபட்ட எவருமே சரணடையவில்லை என்பதும் இங்கே குறிப்பிடத் தக்கது. தேடப்படும் இளைஞர்களின் பட்டியலில் காசி ஆனந்தனின் பெயரும் சேர்க்கப்பட்டது கேலிக்குரிய விடயமாக பல தமிழ் ஊடகவியலாளர்களால் அன்று பார்க்கப்பட்டது. அவரது உண்மையான பெயர் காளிமுத்து சிவானந்தன் ஆக இருந்தபோதும், கவர்ச்சிக்காக தனது பெயரை அவர் காசி ஆனந்தன் என்று மாற்றியிருந்தார். அவர் மட்டக்களப்பு அமிர்தகழியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். அவர் கவிதைகளை எழுதிவந்ததோடு, சமஷ்ட்டிக் கட்சியின் கூட்டங்களில் தனது கவிதைகளைப் பாடியும் வந்தவர். சமஷ்ட்டிக் கட்சி வன்முறையற்ற போராட்டங்களை ஆரம்பித்த 60 களின் காலப்பகுதியில் அவர் எழுதிய இரு கவிதைகள் மிகவும் பிரபலமாக இருந்தன. ################################# "பத்துதடவை படை வராது, பதுங்கிப் பாயும் புலியே தமிழா' செத்து மடிதல் ஒரு தரம் அன்றோ?, சிரித்துக்கொண்டே செருக்களம் வாடா!" ################################# "வெறிகொள் தமிழர் புலிப்படை, அவர் வெல்வார் என்பது வெளிப்படை" காசி ஆனந்தனின் கவிதை எழுதும் விருப்புப் பற்றிப் பொலீஸார் அறிந்திருக்கவில்லை. இவை புலிகள் அமைப்போ அல்லது அவர்களின் முன்னைய அமைப்பான புதிய தமிழ்ப் புலிகள் அமைப்போ உருவாகும் முன்னரே வெளிவந்திருந்த கவிதைகள். தனது கவிதைகளில் புலி எனும் பதத்தினைப் பாவித்தமைக்காகவே காசி ஆனந்தனையும் தேடப்படுவோர் பட்டியலில் பொலீஸார் சேர்த்திருந்தனர். சோழர்களின் வழித்தோன்றல்கள் என்றும் தம்மை கூறிக்கொள்ளும் இலங்கைத் தமிழர்கள் புலியினை தமது இலட்சினையாக வரிந்துகொள்வது அக்காலத்தில் இயல்பாக இருந்தது. என்னிடம் உமா பேசும்போது பஸ்டியாம்பிள்ளையின் கொலைக்குப் பின்னரான நிலைமைகள் குறித்து பிரபாகரன் திருப்தியுடன் காணப்பட்டதாகக் கூறினார். பஸ்டியாம்பிள்ளையின் கொலைச் சம்பவத்தினூடாக பொலீஸாரிடமிருந்து புலிகள் கைப்பற்றியிருந்த உப தானியங்கித் துப்பாக்கியை பிரபாகரன் பொக்கிஷம் போலப் பாதுகாத்து வைத்திருந்ததாக உமா கூறினார். சமூக விரோதிகளின் கொலைகளுக்கான உரிமை கோரல்கள் மற்றும் தம்மீதான தடை ஆகியவற்றின் மூலம் உலகில் அடக்குமுறைக்குள் அகப்பட்டிருக்கும் மக்களின் விடுதலைக்காககப் போரிடும் போரட்ட அமைப்புக்களில் ஒன்றாக புலிகளும் ஆகிப்போனார்கள். தம்மீதான தடையினை ஜே ஆர் தமக்களித்த பரிசாக பிரபாகரன் கருதியதாக உமா கூறினார். "தமிழ் ஆயுதக் ககுழுவுக்கெதிராக தமது அரசாங்கம் போராடுவதாக ஜே ஆர் உலகிற்கு அறிவித்தார். இதைவிட மேலான பரிசொன்றினை ஜே ஆரினால் புலிகளுக்கு வழங்கியிருக்க முடியாது. ஆகவே, ஜே ஆர் எமக்கு வழங்கிய கெளரவத்திற்கு நாம் தகுதியுடையவர்கள் தான் என்பதை நிரூபிக்க நாம் ஏதாவது பாரிய நடவடிக்கை ஒன்றினைச் செய்யவேண்டும் என்று எண்ணினோம். இங்கிருந்தே அவ்ரோ விமானத்தைத் தகர்க்கும் திட்டம் உருவானது" என்று உமா மேலும் கூறினார். புலிகளையும் ஏனைய தமிழ் ஆயுத அமைப்புக்களையும் தடை செய்யும் தீர்மானத்தை ஜே ஆர் நிறைவேற்றியபின்னர் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் பெட்டிப் பாம்பாக அடங்கிப் போனமை போராளிகளுக்குக் கடுமையான ஏமாற்றத்தினை அளித்திருந்தது. ஆத்திரமடைந்த இளைஞர் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைமைக்கெதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைக்கத் தொடங்கினர். இத்தலைவர்களுக்கு எதிராக யாழ் வைத்தியசாலை மதிலில் எழுதப்பட்டிருந்த வாசகம் இவ்வாறு கூறியது, " கேட்டது தமிழ் ஈழம், கிடைத்ததோ ஜப்பான் ஜீப்" பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜே ஆரினால் வழங்கப்பட்ட ஜப்பானிய ஜீப் வண்டிகளை முன்வைத்தே மேற்படி வாசகம் எழுதப்பட்டிருந்தது. தந்தை செல்வா இருக்கும்வரை அரசாங்கத்திடமிருந்து வந்த சலுகைகள் எல்லாவற்றையும் வேண்டாம் என்று உதறித்தள்ளியிருந்த தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தற்போது அவற்றை மிகுந்த ஆவலுடன் பெற்றுக்கொள்ளும் நிலைமைக்கு இறங்கியிருந்தனர். அமிர்தலிங்கத்திடம் இதுகுறித்த அவரது நிலைப்பாடுபற்றிக் கேட்டேன், "அவர்கள் இன்னும் வெறும் பையன்கள் தான். சூழ்நிலையின் நுணுக்கங்களை புரிந்துகொள்ளும் பக்குவம் அவர்களுக்கு இல்லை" என்று என்னிடம் அவர் கூறினார். மேலும், தான் கூறப்போவதை வெளியே பதிவிட வேண்டாம் என்று என்னைக் கேட்டுக்கொண்டபடியே, "உங்களின் எதிரி யாரென்பது குறித்து நீங்கள் மிகத் தெளிவாக இருக்க வேண்டும். எங்கள் மீது பாய்வதற்கு அவர் தயாராகிக்கொண்டு இருக்கிறார்" என்றும் அவர் கூறினார். உண்மையாகவே அப்படியான பாரிய திட்டம் ஒன்றில் ஜே ஆர் ஈடுபட்டிருந்தார். ஆனால், அவரது திட்டம் கடுமையான தோல்வியினைச் சந்தித்தது. அவரது நோக்கம் தமிழர் ஐக்கிய முன்னணியினரை தமிழர்கள் மத்தியிலும், தேசிய அளவிலும் பலவீனப்படுத்துவதாகவே இருந்தது. இதன் மூலம் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் அடங்கிப்போய், தன்னிடம் பணிந்து வந்து தனது தயவினை நாடுவார்கள் என்று அவர் எதிர்பார்த்தார். இதன்மூலம் சர்வதேசத்தில் தனது நடவடிக்கைகளை நியாயப்படுத்த முடியும் என்றும், தமிழ்ப் போராளிகளை முற்றாக அழித்துவிட முடியும் என்றும் அவர் நம்பினார். தமிழர்களைத் தாக்குவதற்கென்றே ஜே ஆரினால் அரவணைக்கப்பட்டு வந்த சிறில் மத்தியூ எனும் சிங்கள இனவாதியை அமிர்தலிங்கத்தின்மீது காரசாரமான விமர்சனங்களை முன்வைக்கும்படி ஜே ஆர் ஏவிவிட்டார். இதனையடுத்து விசேட பத்திரிக்கையாளர் மாநாடொன்றினைக் கூட்டிய சிறில் மத்தியூ புலிகளுக்குப் பின்னால் இருந்து தூண்டிவிடுவது அமிர்தலிங்கமே என்று அடித்துக் கூறினார். புலிகளின் உரிமைகோரல் கடிதமே அமிர்தலிங்கத்திற்கும் புலிகளுக்கும் இடையிலான தொடர்பினை வெளிப்படுத்துகிறது என்று அவர் வாதிட்டார். இதன்ம்முலம், அமிர்தலிங்கத்தை தற்காப்பு நிலைக்குத் தள்ள சிறில் மத்தியுவினால் முடிந்தது. அமிர்தலிங்கமும் சிறில் மத்தியூ வைத்த பொறிக்குள் வீழ்ந்ததுடன், புலிகளால் வெளியிடப்பட்ட கடிதம் போலியானது என்றும், பொலீஸாரே இந்த கடிதத்தினைப் புலிகளின் பெயரில் வெளியிட்டனர் என்றும் கூறத் தலைப்பட்டார். "சகல சந்தேகங்களுக்கும் அப்பால், இக்கடிதம் பொலீஸாரின் உயர்மட்டத்தின் திட்டப்படி வெளியிடப்பட்டது என்பதை முழு அத்காரத்துடன் என்னால் கூறமுடியும். புலிகளால் வரையப்பட்ட கடிதம் என்று போலியாக அனுப்பப்பட்ட இக்கடிதம் அரச அதிகாரத்திலிருக்கும் சில சக்திகளால் உருவாக்கப்பட்ட நாடகம்" என்று பாராளுமன்றத்தில் அமிர்தலிங்கம் கூறியதோடு, புலிகள் என்கிற அமைப்பே இல்லையென்றும் வாதிட்டார். மேலும், அமிர்தலிங்கத்தின் மனைவியான மங்கையற்கரசிக்கெதிரான விஷமப் பிரச்சாரத்தில் இறங்கிய சிறில் மத்தியூ, தமது கனவான ஈழத்தை அடைய சிங்களவரின் குருதியில் குளிக்க தமிழர் தயாராக இருப்பதாக மங்கையற்கரசி பொதுக்கூட்டம் ஒன்றில் பேசியதாகவும் அவர் கூறினார். மேலும், சிங்களவர்களின் தோலில் செருப்புக்களைச் செய்து தாம் அணியப்போவதாக மங்கையற்கரசி பேசியதாகவும் அவர் கூறினார். இவ்விரு குற்றச்சாட்டுக்களையும் அமிர்தலிங்கம் முற்றாக மறுத்திருந்தார். ஜே ஆர் பின்னர் இன்னொரு பொறியினையும் அமிர்தலிங்கத்திற்கெதிராக வைத்தார். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரை ஆனி 10 ஆம் திகதி பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுத்ததுடன், இதற்கு மிகப்பெரிய பிரச்சாரத்தினையும் வழங்கினார். போராளிகள் இதனால் சினமடைந்தனர். ஆகவே, இந்த அழைப்பினை ஏற்கவேண்டாம் என்று தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினருக்கு அவர்கள் கூறினர். ஆனால், அவர்களின் வேண்டுகோளை அமிர்தலிங்கம் நிராகரித்தார். தங்கத்துரை அணியினர் மீண்டும் தாக்குதலில் இறங்கினர். பஸ்டியாம்பிள்ளைக்குப் பின்னர் தமிழ் ஆயுத அமைப்புக்களைக் கண்காணித்து வந்த இன்னொரு தமிழ் பொலீஸ் அதிகாரியான உதவிப் பொலீஸ் அத்தியட்சகர் குட்டிப்பிள்ளை குமார், வெள்ளிக்கிழமை அன்று கோயிலிக்குச் செல்லும்போது தனது கைத்துப்பாக்கியைக் கொண்டுசெல்வதில்லை என்பதை தங்கத்துரை அணியினர் அறிந்து வைத்திருந்தனர். ஆகவே ஆனி 9, வெள்ளிக்கிழமை அன்று கோயிலில் பூஜைக்காக வாழைப்பழங்களையும் ஏனைய பொருட்களையும் கொள்வனவு செய்ய வல்வெட்டித்துறை நகர்ப்பகுதிக்கு கால்நடையாக குமார் வந்தார். அப்பகுதியில் மறைந்திருந்த குட்டிமணியும் ஜெகனும் குமார் மீது பாய்ந்து அவரை கீழே வீழ்த்திக் கொன்றனர். குமாரின் கொலை ஜே ஆருக்கும், அமிர்தலிங்கத்திற்கும் விடுக்கப்பட்ட எச்சரிக்கையாகக் கருதப்பட்டது. ஜே ஆரின் தடைபற்றி தாம் சிறிதும் கவலைகொள்ளவில்லை என்று டெலோ அமைப்பு அறிவித்திருந்தது. ஆனால், அமிர்தலிங்கத்திற்கு அனுப்பப்பட்ட எச்சரிக்க மிகத் தெளிவானது, "ஜே ஆர் உடன் எந்த தொடர்புகளையும் வைத்துக்கொள்ள வேண்டாம்" என்பதே அது. அமிர்தலிங்கமும், சிவசிதம்பரமும், சம்பந்தனும் ஆனி 10 ஆம் திகதி அழைக்கப்பட்ட கூட்டத்தில் ஆஜராகியிருந்தனர். அங்கு பேசிய ஜே ஆர், மாவட்ட ரீதியிலான நிர்வாகத்தை மக்கள் முன் எடுத்துச் செல்வது குறித்து தான் கவலைப்படுவதாகவும், ஆகவே மாவட்ட மட்டத்திலான அமைச்சர்களை நியமிப்பது குறித்து தான் சிந்தித்து வருவதாகவும் கூறினார். மேலும், இந்த மாவட்ட அமைச்சர்கள் திட்டம் வெற்றிபெற தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரும் தனக்கு ஒத்துழைப்புத் தரவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். "உங்களுக்கு நான் சில மாவட்ட அமைச்சர் பதவிகளைத் தரப்போகிறேன், நீங்களே அந்த மாவட்டங்களை நடத்திக்கொள்ளுங்கள். ஆகவே, இதுபற்றிச் சிந்தித்து, இத்திட்டம் வெற்றிபெற நாம் ஒன்றிணைந்து வேலை செய்யலாம்" என்று அவர்களைப் பார்த்து ஜே ஆர் கூறினார். இதற்குப் பதிலளித்த அமிர்தலிங்கம், "இதுபற்றி மேலதிக விபரங்களைத் தாருங்கள், நாம் இதுகுறித்து சாதகாமன் முறையில் பரிசீலிக்கிறோம்" என்று கூறினார். இந்தப் பேச்சுவார்த்தையின் தகவல்கள் லேக் ஹவுஸ் பத்திரிக்கைகளான டெயிலி நியூஸ், தினகரன் மற்றும் தினமின ஆகிய நாளிதழ்களுக்கு வேண்டுமென்றே கசியவிடப்பட்டன. தான் செய்ய விரும்பியதை ஜே ஆர் செய்துகொண்டார். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினருக்கும் போராளிகளுக்கும் இடையே பகைமையினை இதன்மூலம் அவர் உருவாக்கினார். அமிர்தலிங்கத்தின் இந்த செயற்பாடு போராளிகளை மிகவும் ஆத்திரப்பட வைத்திருந்தது, குறிப்பாக டெலோ இதுகுறித்து கடுமையான அதிருப்தியைக் கொண்டிருந்தது. ஆகவே அவர்களின் பிரச்சாரக் கிளை ஜே ஆர் மீதும், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி மீதும் மிகக் காரசாரமான விமர்சனங்களை முன்வைக்கத் தொடங்கியது. இதே காலப்பகுதியில் தமிழ் மக்களிடமிருந்து போராளிகள் பற்றிய தகவல்களைத் தமக்கு வழங்கிவருபவர்களின் எண்ணிக்கை வற்றுப்போனதையும், தமிழ் மக்கள் பொலீஸாரிடமிருந்தும், இராணுவத்திடமிருந்தும் தம்மை அந்நியப்படுத்திக்கொண்டுள்ளார்கள் என்பதையும் பொலீஸார் தெளிவாக அறிந்துகொண்டனர். தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையிலான பிளவு இங்கிருந்து விரிவாகத் தொடங்கியிருந்தது.
  4. அது வேறு யாரும் இல்லை, அருண் சித்தாத் எனும் நச்சுப்பாம்பு. பின்னர் மக்களால் பச்சைமட்டை அடிகொடுத்துக் கலைக்கப்பட்டதாகக் கேள்வி.
  5. ஜே ஆர் இன் பரிசு - தடை அமிர்தலிங்கத்தின் தட்டச்சுப்பொறியில் தட்டச்சு செய்யப்பட்ட புலிகளின் கடிதம் பஸ்டியாம்பிள்ளையைக் கொன்ற புலிகளின் குழு அவரின் காரில் கிளிநொச்சி வரை சென்றுவிட்டு, அடர்ந்த காட்டுப்பகுதியில் அதனை எரித்துவிட்டுத் தலைமறைவாகியது. சிறு குழுக்களாகப் பிரிந்து சென்ற அவர்கள் இறுதியில் வவுனியா பூந்தோட்டம் முகாமை அடைந்தார்கள். தாக்குதலில் ஈடுபட்ட குழுவை முகாமில் பிரபாகரன் வரவேற்றார். செல்லக்கிளியைக் கட்டித் தழுவிய பிரபாகரன் அவரைப் பார்த்து, "தமிழர்கள் உன்னால் பெருமையடைந்துவிட்டார்கள்" என்று கூறியதாக உமா என்னிடம் தெரிவித்தார். தமது இயக்கம் வெளிப்படையாக இயங்குவதுபற்றிய விவாதத்தினை மத்திய குழுவில் தான் ஆரம்பித்துவைத்ததாக உமா என்னிடம் கூறினார். "நாம் தொடர்ந்தும் இரகசிய அமைப்பாக இயங்கிக்கொண்டிருக்க முடியாது. நாங்கள் வெளியே வரவேண்டும். இதுவே அதற்கான சரியான தருணம். நாடுமுழுவதுமே எம்மைப்பற்றிப் பேசுகிறார்கள்" என்று மத்தியகுழுவில் தான் கூறியதாக அவர் என்னிடம் தெரிவித்தார். பல தாக்குதல் சம்பவங்களின் பிறகு மக்கள் மத்தியில் வெளித்தெரிந்த பல கெரில்லா இயக்கங்களை உமா சுட்டிக்காட்டிப் பேசியதாகத் தெரிகிறது. தான் கூறியதை பிரபாகரனும் ஏற்றுக்கொண்டதாகக் கூறிய உமா, "பலஸ்த்தீன விடுதலை இயக்கம், ஐரிஸ் விடுதலை இராணுவம் போன்று நாமும் இப்போது தெரியவந்திருக்கிறோம்" என்று பிரபாகரன் கூறியதாக உமா மேலும் தெரிவித்தார். ஆகவே, தம்மால் நடத்தப்பட்ட கொலைகளுக்கு உரிமை கோரும் முடிவினை அவர்கள் எடுத்தார்கள். கொலைக்கான காரணங்கள் அடங்கிய கடிதத்தினை வரைவது மற்றும் அதனைப் பிரசுரிப்பது ஆகிய கடமைகள் அமைப்பின் அரசியல்த்துறைத் தலைவரான உமாவிடம் வழங்கப்பட்டது. கொழும்பிற்கு இரகசியமாகச் சென்றிறங்கிய உமா, லண்டனில் இருக்கும் தனது தொடர்பாளருடன் தொடர்புகளை ஏற்படுத்தினார். லண்டனுக்குத் தொலைபேசி அழைப்புக்களை மேற்கொள்வதென்பது அந்நாட்களில் அவ்வளவு இலகுவான காரியமல்ல. கொழும்பிலிருக்கும் மத்திய தொலைத்தொடர்புப் பரிவர்த்தனை நிலையத்திற்குச் சென்ற உமா, லண்டனுக்கான தனது தொலைபேசி அழைப்பிற்கு அனுமதியைப் பெற்று சுமார் 3 மணித்தியாலங்கள் காத்திருந்து பேசினார். லண்டனிலிருந்த புலிகளின் ஆதரவாளர்கள் உமாவை உற்சாகப்படுத்தியிருந்தனர். உலகிலுள்ள மற்றைய கெரில்லா அமைப்புக்கள் செய்த விடயங்களை அவர்கள் உமாவுக்குத் தெரியப்படுத்தினர். 1976 ஆம் ஆண்டு சென்னையில் புலிகளால் உருவாக்கப்பட்ட கடிதத் தலைப்பில் உமா தண்டனைக்கான விளக்கக் கடிதத்தினைத் தயாரித்தார். கடிதத் தலைப்பின் இடதுபக்க மேற்புறத்தில் புலிகளின் இலட்சினையும், தமிழீழ விடுதலைப் புலிகள் எனும் பெயரும் தடித்த எழுத்துக்களில் பதியப்பட்டிருந்தது. கீழே ஆங்கிலத்திலும் அப்பெயர் இருந்தது. தன்னால் தயாரிக்கப்பட்ட கடிதத்தையும், புலிகளின் இலட்சினைக் கொண்ட கடிதத் தலைப்பையும் தன்னுடன் வைத்திருந்த உமா, கொழும்பில் கண்ணாடிக் கடையொன்றில் பணிபுரிந்து வந்த ஊர்மிளா தேவி எனும் தனது தூரத்து உறவுப் பெண் ஒருவரைச் சந்தித்தார். விவாகரத்தாகியிருந்த அந்தப் பெண் கொழும்பில் இயங்கிவந்த தமிழர் இளைஞர் பேரவையில் மிகுந்த ஆர்வத்துடன் செயற்பட்டு வந்ததுடன், பொன் சிவகுமாரனின் தாயாரான அன்னலட்சுமி பொன்னுத்துரையின் தலைமையில் இயங்கிவந்த தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் மகளிர் அமைப்பிலும் உறுப்பினராக இருந்தார். இந்த மகளிர் அமைப்பின் செயலாளராக அமிர்தலிங்கத்தின் துணைவியார் மங்கையற்கரசி பதவி வகித்தார். தான் கையில் கொண்டுவந்திருந்த கடிதத்தினை ஊர்மிலா தேவியிடம் காட்டிய உமா, அக்கடிதத்தின் 8 நகல்கள் தனக்கு வேண்டுமென்று கூறியதுடன், இது ஒரு இரகசியமான பணி என்றும் கூறினார். அதனை வாங்கிக்கொண்ட ஊர்மிளா, பழைய பாராளுமன்றக் கட்டிதத்தில் இருந்த எதிர்க்கட்சித் தலைவருக்கான அலுவலகத்திற்குச் சென்றார். அமிர்தலிங்கத்தின் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்திற்கு நன்கு பரீட்சயமான ஊர்மிளா, அங்கு பல தடவைகள் சென்றிருந்ததுடன், அமிருக்கும், அவரின் செயலாளரான பேரின்பநாயகத்திற்கு பல தட்டச்சு வேலைகளை முன்னர் செய்து கொடுத்திருக்கிறார். ஆகவே, உமா தன்னிடம் கொடுத்த கடிதத்தினைத் தட்டச்சுச் செய்வதற்கு, அமிரின் அலுவலகமே பாதுகாப்பானது என்று அவர் நினைத்தார். ஆகவே, பாராளுமன்றம் இயங்காத வேளை ஒன்றில் அமிருக்கோ பேரின்பநாயகத்திற்கோ தெரியாமல் அங்குசென்று புலிகளின் கடிதத்தினைத் தட்டச்சுச் செய்தார். கணிணிகள் அக்காலத்தில் பாவனையில் இருக்கவில்லை, போட்டோப் பிரதி இயந்திரங்களும் அதிகம் புழக்கத்தில் அப்போது இருக்கவில்லை. அமிர்தலிங்கத்தின் அலுவலகத்தில் இரு தட்டச்சு இயந்திரங்கள் மாத்திரமே இருந்தன. அமிர்தலிங்கத்தின் காரியதரிசி உபயோகிக்கும் தட்டச்சியந்திரத்தையே ஊர்மிளா அன்று பாவித்தார். பிரதிகளை எடுக்க காபன் தாள்களை அவர் பாவித்தார். கடிதங்கள் தயாரிக்கப்பட்டதும், செயலகத்திற்கு அருகில் பேரூந்து நிலையத்தில் காத்து நின்ற உமாவிடம் அவற்றைக் கொடுத்தார். ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்த்தலத்திற்கு முன்னால் அமைந்திருந்த கொழும்பு பெரிய தபாலகம் நோக்கி நடந்துசென்ற உமா, அக்கடிதங்களை தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர், ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர், காங்கேசந்துறைப் பொலீஸ் நிலையப் பொறுப்பதிகாரி, வல்வெட்டித்துறை பொலீஸ் நிலையப் பொறுப்பதிகாரி, குற்ற விசாரணை திணைக்களத்தின் இயக்குநர் மற்றும் வீரகேசரிப் பத்திரிக்கையின் ஆசிரியர் ஆகியோருக்கு அனுப்பி வைத்ததுடன், மூலப் பிரதியை தன்னுடனேயே வைத்துக்கொண்டார். சித்திரை 28 இல் இக்கடிதத்தினை சிறிய செய்தியாக வீரகேசரி பிரசுரித்திருந்தது. "சம்பந்தப்பட்டவர்களுக்கு" என்று தலைப்பிடப்பட்டு, சித்திரை 25, 1978 அன்று வரையப்பட்ட இக்கடிதம் பின்வருமாறு கூறியது. "புதிய தமிழ்ப் புலிகள் எனும் ஆரம்பப் பெயரினையும், தமிழீழ விடுதலைப் புலிகள் எனும் புதிய பெயரையும் கொண்ட நாம் பின்வரும் கொலைகளுக்கு உரிமை கோருகிறோம்". திரு அல்பிரெட் துரையப்பா - யாழ்ப்பாண மேயரும், சுதந்திரக் கட்சியின் வடமாகாண ஒருங்கிணைப்பாளரும் திரு என். நடராஜா - உரும்பிராய் எரிபொருள் நிலைய உரிமையாளரும் சுதந்திரக் கட்சியின் கோப்பாய்ப் பகுதியின் ஒருங்கிணைப்பாளரும், குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்டார். திரு ஏ. கருநாநிதி - காங்கேசந்துறைப் பொலீஸ் நிலைய உளவுப்பிரிவு, சுட்டுக் கொல்லப்பட்டார் திரு சண்முகனாதன் - காங்கேசந்துறைப் பொலீஸ் நிலைய உளவுப்பிரிவு, சுட்டுக் கொல்லப்பட்டார் திரு சண்முகனாதன் - வல்வெட்டித்துறை பொலீஸ் நிலைய உளவுப்பிரிவு, சுட்டுக் கொல்லப்பட்டார் திரு தங்கராஜா - முன்னாள் நல்லூர் சுதந்திரக் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் அருளம்பலத்தின் செயலாளர் திரு கனகரட்ணம் - முன்னாள் பொத்துவில் தொகுதி தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி பாராளுமன்ற உறுப்பினரும், இந்நாள் ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினரும், திரு பஸ்டியாம்பிள்ளை - பொலீஸ் பரிசோதகர், உளவுப்பிரிவு திரு பேரம்பலம் - உப பொலீஸ் பரிசோதகர், உளவுப்பிரிவு திரு பாலசிங்கம் - பொலீஸ் சார்ஜெண்ட், உளவுப்பிர்வு திரு சிறிவர்த்தனா - பொலீஸ் சாரதி 1978 ஆம் ஆண்டு சித்திரை 7 ஆம் திகதி, பஸ்டியாம்பிள்ளையும் அவரது குழுவினரும் புலிகளைத் தேடியழிக்கும் நடவடிக்கை ஒன்றிற்காக உப இயந்திரத் துப்பாக்கி, ரைபிள்கள், சுழற்துப்பாக்கிகள், கைத்துப்பாக்கிகள் சகிதம் வந்திருந்தனர். ஆனால், தமக்கு உயிரிழப்போ, காயங்களோ ஏற்படாவண்ணம் அக்குழுவை முற்றாக புலிகள் அழித்துவிட்டனர். அவர்கள் பயணம் செய்த காரும் புலிகளால் எரியூட்டப்பட்டது. "வேறு எந்தச் அமைப்புக்களோ, தனிநபர்களோ இந்தத் தாக்குதல்களுக்காக உரிமை கோர முடியாது. புலிகளைத் தவிர இலங்கையிலோ அல்லது வெளிநாட்டிலோ எவரும் இத்தாக்குதல்களுக்கு உரிமை கோரினால் கடும்னையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இதற்கு முன்னர் நடத்தப்பட்ட கொள்ளைச் சம்பவங்களுக்கும் எமக்கும் எந்தவித தொடர்பும் இல்லை" இப்படிக்குச் செயலாளர், மத்திய குழு" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. உமா எதிர்பார்த்துபோலவே வீரகேசரி பிரசுரித்த இச்செய்தி பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியிருந்தது. பொதுமக்கள், குறிப்பாகத் தமிழர்கள் சிங்கள ஆக்கிரமிப்பினை எதிர்த்துப் போராடுவதற்கு அமைப்பு ஒன்று உருவாகிவிட்டதை அறிந்துகொண்டார்கள். யாழ்ப்பாணத்தில் அக்காலத்தில் வெளியாகி வந்த ஈழநாடு மற்று Saturday Review ஆகிய பத்திரிக்கைகளின் ஊடகவியலாளர்கள் இச்செய்தி மக்களிடம் பெருமையுடன் உள்வாங்கப்பட்டிருந்ததாக என்னிடம் கூறினார்கள். "எங்கட பெடியன்கள் செய்துபோட்டாங்கள்" என்கிற பெருமையான உணர்வே அனைவரிடம் காணப்பட்டது. உளவுப்பிரிவிற்கு அனுப்பப்பட்ட கடிதங்கள் ஜனாதிபதியின் பார்வைக்கும் கொண்டுசெல்லப்பட்டது. புலிகளின் கடிதத்தைக் கண்ணுற்றபோது ஜே ஆர் மிகவும் ஆத்திரப்பட்டார். எதிர்பார்த்ததுபோலவே உடனடியாக அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். அத்துடன் நின்றுவிடாமல் உள்ளூர் அலுவல்கள் அமைச்சரான தேவநாயகத்திடம் புலிகளையும் அவர்களைப்போன்ற ஏனைய அமைப்புக்களையும் தடைசெய்யும் சட்டத்தினை உடனடியாக வரையுமாறு உத்தரவிட்டார். தனது இன்னொரு அமைச்சரும் பெயர்போன சிங்கள இனவாதியுமான சிறி மத்தியூவிடம் தமிழருக்கெதிரான தாக்குதல்களை ஒருங்கிணைக்குமாறும் உத்தரவிட்டார். தாக்குதலில் இறங்கிய டெலோ அமைப்பு புலிகளின் நடவடிக்கைகளால் தாம் ஓரங்கட்டுப்பட்டுவிடுவோமோ என்று தங்கத்துரை குழுவினர் நினைத்திருந்த வேளை, குட்டிமணியின் மீள்வருகை அவர்களுக்குப் புதுதெம்பினை அளித்திருந்தது. ஜெயவர்த்தனா பிரதமராகிய பின்னர் ரோகண விஜேவீரவுடன் குட்டிமணியையும் விடுதலை செய்திருந்தார். பொலீஸ் பரிசோதகர் பத்மநாதன் புலிகளால் கொல்லப்பட்ட பஸ்டியாம்பிள்ளைக்கு அடுத்தபடியாக தமிழ் ஆயுத அமைப்புக்கள் மீது கடுமையான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தவர். தமிழ் இளைஞர்கள் தொடர்பாக அதிகம் அறிந்துவைத்திருந்தவர். ஆகவே பஸ்டியாம்பிள்ளையின் இழப்பின் பின்னர் யாழ்ப்பாணத்தில் புலனாய்வுத்துறையின் வேலைகளுக்குப் பொறுப்பாக பத்மனாதன் நியமிக்கப்பட்டார். ஆகவே பதமானதனைக் கொல்வதன் மூலம் தமிழ் ஆயுத அமைப்புக்களின் உறுப்பினர்களை வேட்டையாட பொலீஸார் அமைத்திருந்த கட்டமைப்பு பாதிப்படையும் என்று தங்கத்துரை எண்ணினார்.
  6. இனப்படுகொலையாளிகளைக் கண்டிக்க மறுத்து, நடப்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த இன்னொரு கோடரிக்காம்பு. இனக்கொலை முடிந்த பின்னர் வதை முகாம்களில் அடைக்கப்பட்ட மக்களைப் பார்க்கவென்று சுற்றுலா வந்தவன். தான் செயலாளர் நாயகமாக வந்தபொழுது தனது பால்ய நண்பனான விஜய் நம்பியாரை தனது செயலாளராக அமர்த்தியவன். இந்த விஜய் நம்பியாரின் சகோதரான சதீஷ் நம்பியாரே இலங்கை ராணுவத்தின் ஆலோசகராக இனக்கொலை யுத்த காலத்தில் பணியாற்றியவன். உயர் பாதுகாப்பு வலயங்கள் இவனது ஆலோசனையின்படியே பல இடங்களில் அமைக்கப்பட்டன. பேச்சுவார்த்தை குழம்பிய விடயங்களில் இவனது உயர் பாதுகாப்பு வலயங்களும் உள்ளடக்கம். வெள்ளைக்கொடி விவகாரத்தில் நம்பியார்களின் கைவரிசை பரவலாகப் பேசப்பட்டது. பா கீ மூனை கைக்குள் போட்டுக்கொண்டு இந்த இரு நம்பியார்களும் இனக்கொலை யுத்தத்திற்கான ஆயத்தங்களையும், யுத்தத்தின்போதான சதிகளையும் இந்தியா சார்பில் செய்தார்கள். பா கீ மூன் வடக்குக் கிழக்கிற்கு வந்தால் நிச்சயம் எமது எதிர்ப்பினை இந்தக் கோடரிக் காம்பிற்குக் காட்ட வேண்டும். https://www.tamilnet.com/art.html?catid=13&artid=8291 https://www.tamilnet.com/art.html?catid=79&artid=33259 https://www.tamilnet.com/art.html?catid=79&artid=35889
  7. பஸ்டியாம்பிள்ளையின் கொலை தலைவருடன் செல்லக்கிளி அம்மான் கனகரட்ணம் மீதான தாக்குதல் ஜெயவர்த்தனாவை ஆத்திரப்பட வைத்திருந்ததுடன் பொலிஸாரை அவமானத்திற்குள்ளும் ஆழ்த்தியிருந்தது. ஆகவே, யாழ்ப்பாணத்திலேயே முகாமிட்டு தங்கத்துரை அமைப்பையும், பிரபாகரனின் அமைப்பையும் அழித்துவிடவேண்டும் என்று பொலீஸ் பரிசோதகர் பஸ்டியாம்பிள்ளைக்கு அறிவுருத்தல் வழங்கப்பட்டது. பஸ்டியாம்பிள்ளைக்கு உதவியாக பரிசோதகர் பத்மநாதனும், உதவிப் பரிசோதகர் பேரம்பலமும் அமர்த்தப்பட்டார்கள். இந்தத் தமிழ் பொலீஸ் அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றிய சிங்கள அதிகாரிகளின் கருத்துப்படி இவர்கள் விசாரணைகளை மேற்கொள்வதில் சிறந்து விளங்கியவர்கள் என்றும், கடுமையான சித்திரவதைகளும், குரூரமான தண்டனைகளும் இவர்களுக்கு மிகவும் பரீட்சயமாக இருந்ததாகவும் கூறுகிறார்கள். அப்படியிருந்தபோதும்கூட பஸ்டியாம்பிள்ளைக்கும் பதம்நாதனுக்கும் இடையே போட்டி மனப்பான்மை இருந்துவந்ததையும் அவர்கள் சொல்லத் தவறவில்லை. தனது ரகசிய உளவு வலையமைப்பூட்டாக, பிரபாகரனும் அவரது தோழர்களும் மன்னார் மாவட்டத்தின் வட மேற்குப் பதியான மடுக் காட்டுப்பகுதியில் ரகசிய பயிற்சிமுகாம் ஒன்றினை நடத்தி வருவதை பஸ்டியாம்பிள்ளை அறிந்துகொண்டார். இந்த ரகசியத் தகவலை தன்னிடமே வைத்திருந்த பஸ்டியாம்பிள்ளை சித்திரை 4 ஆம் திகதி நள்ளிரவு தனது உதவியாளர்களான கொன்ஸ்டபிள் பேரம்பலம், கொன்ஸ்டபில் பாலசிங்கம் மற்றும் சாரதி சிறிவர்த்தனா ஆகியோரை திடீர் சோதனை ஒன்றிற்குத் தயாராகுமாறு உத்தரவிட்டார். ஆனால், எங்கு செல்லாப்போகிறார்கள் என்பதை அவர் கூறவில்லை. பஸ்டியாம்பிள்ளையின் உத்தியோகபூர்வ வாகனமான பேஜோ 404 காரில் இந்த நால்வரும் ஆ 9 வீதியூடாக வவுனியா நோக்கிப் பயணமானார்கள். தம்முடன் ஒரு துணை இயந்திரத் துப்பாக்கி, இரண்டு ரைபிள்கள், மற்றும் கைத்துப்பாக்கிகள் சுழற்துப்பாக்கிகள் என்று ஒரு தொகை ஆயுதங்களையும் கொண்டு சென்றனர்.சித்திரை 7 ஆம் அதிகதி, காலை புளரும் வேளை புலிகளின் முகாமினை அண்மித்த பகுதியை அவர்களின் கார் அடைந்தது. முருங்கன் - மடு வீதியிலிருந்து காட்டினுள் செல்லும் ஒற்றையடிப் பாதையினைப் பார்த்தவுடன் அவர்கள் காரை நிறுத்திக்கொண்டார்கள். அங்கிருந்துகொண்டே தடயங்கள் ஏதாவது தென்படுகின்றனவா என்று தேடத் தொடங்கினார்கள். அவர்கள் இறங்கி நின்றுகொண்டு தேடிய இடம் புலிகளின் முகாமிலிருந்து சில நூறு மீட்டர்கள் தூரத்திலேயே இருந்தது. புலிகளின் மத்திய குழு உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள் அன்று அங்கிருந்திருக்கிறார்கள். அங்கிருந்தவர்களில் உமா மகேஸ்வரன், நாகராஜா, செல்லக்கிளி, சிவகுமார், ரவி, கணேச ஐய்யர் ஆகியோரும் உள்ளடக்கம். பிரபாகரன் மட்டுமே அங்கிருக்கவில்லை. முகாமிற்கருகிலிருந்த உயரமான மரத்தில் அமைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு நிலையில் உமா மகேஸ்வரனும், நாகராஜாவும் மறைந்திருந்தார்கள். ஏனையவர்கள், அருகிலிருந்த கொட்டகையினுள் இருந்தார்கள். 1987 ஆம் ஆண்டு நடைபெற்றுவந்த வடக்குக் கிழக்கு மாகாணங்களின் இடைக்கால நிர்வாகம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருந்த காலப்பகுதியில் கொழும்பில் உமா மகேஸ்வரனைச் சந்தித்த நான், பஸ்டியாம்பிள்ளையின் கொலை தொடர்பாக டெயிலி நியூஸ் பத்திரிகைக்காகப் பேட்டி கண்டேன். "நானும் நாகராஜாவும் கண்காணிப்பு நிலைக்குப் போனோம். காலை 6 மணியளவில் ஒரு காரின் விளக்கு வெளிச்சம் கண்களுக்குத் தெரிந்தது. அக்கார் மிக மெதுவாக ஊர்ந்து வந்துகொண்டிருந்தது. ஆள் நடமாட்டம் எதுவுமற்ற அந்த வீதியில் இப்படி ஒரு வாகனம் மெதுவாக ஊர்ந்து வருவது மிகவும் அசாதாரணமாக எமக்குத் தெரிந்தது. எமக்குச் சந்தேகம் வந்துவிட்டது. எமது முகாமுக்கு வரும் நடைபாதையின் அருகில் அக்கார் நிறுத்தப்பட்டது. நாம் கீழே முகாமினுள் இருந்தவர்களுக்கு உடனே தகவல் அனுப்பினோம். செல்லக்கிளி நிலைமையினைப் பொறுப்பெடுத்தார்" என்று உமா கூறினார் காரிலிருந்து பஸ்டியாம்பிள்ளையும், பேரம்பலமும் இறங்கியபோது அவர்களது சந்தேகம் உறுதிப்படுத்தப்பட்டது. "நாம் அதிர்ச்சியில் உறைந்துபோனோம். இந்த ராஸ்கல்கள் இங்குவரை எம்மைத் தேடி வந்துவிட்டார்களே என்று நாகராஜாவிடம் ரகசியமாகக் கூறினேன். நாம் காரில் வந்தவர்கள் பற்றி செல்லக்கிளியிடம் தகவல் சொன்னோம்" என்றும் உமா கூறினார். பொலீஸாரால் தேடப்படாத தனது இரு உதவியாளர்களை நடைபாதையூடாக செல்லக்கிளி அனுப்பினார். அவர்களில் ஒருவர் கட்டைக் காற்சட்டையும், மற்றையவர் சரம் ஒன்றினையும் அணிந்திருந்தனர். அவர்கள் இருவரும் பொலீஸாரைக் கடந்து செல்ல முற்பட்டவேளை, பொலீஸார் அவர்களை மறித்தனர். அவர்கள் யாரென்பதை பஸ்டியாம்பிள்ளை அறிய விரும்பினார். "நாங்கள் பண்ணையில் வேலை செய்யும் கூலித் தொழிலாளிகள்" என்று அவர்கள் கூறினார்கள். "நீங்கள் சட்டவிரோதமான மரத் தறிப்பில் ஈடுபட்டு வருகிறீர்களா?" என்று அவர்களைப்பார்த்து பஸ்டியாம்பிள்ளை கேட்கவும், அவர்கள் இருவரும் "இல்லை" என்று பதிலளித்தார்கள். "அப்படியானால் எதற்காகக் காட்டிற்குள் கொட்டகை அமைத்திருக்கிறீர்கள்?" என்று மீண்டும் அவர்களைப் பார்த்துக் கேட்டார் பஸ்டியாம்பிள்ளை. "ஏனென்றால், அங்கே நல்லதண்ணிக் கிணறு ஒன்று இருக்கிறது. அதனாலேயே அங்கு கொட்டகை அமைத்தோம்" என்று இளைஞர்கள் பதிலளித்தார்கள். தாம் முருங்கன் பொலீஸ் நிலையத்திலிருந்து வருவதாகக் கூறிய பஸ்டியாம்பிள்ளை, தமக்கு இப்பகுதியில் சட்டவிரோதமாக மரம் தறிக்கும் வேலைகளில் சிலர் ஈடுபட்டிருப்பதாகத் தகவல் கிடைத்ததாகக் கூறினார். மேலும், அவர்களது கொட்டகையினைப் பார்க்க வேண்டும் என்று பஸ்டியாம்பிள்ளை கேட்டபோது, அந்த இளைஞர்கள் இருவரும் அவர்களைக் கூட்டிக்கொண்டு கொட்டகை நோக்கி நடக்க ஆரம்பித்தார்கள். கொட்டகை வாயிலில் செல்லக்கிளி பொலீஸாரை வரவேற்றார். பஸ்டியாம்பிள்ளை செல்லக்கிளியை உடனடியாக அடையாளம் தெரிந்துகொண்டாலும், அவர் அதனைக் காட்டிக்கொள்ளவில்லை. கையில் உப இயந்திரத் துப்பாக்கியுடன் பஸ்டியாம்பிள்ளை கொட்டகையினுள் தேடுதல் நடத்த, பேரம்பலமோ கைத்துப்பாக்கியுடன் கொட்டகையின் சுற்று வட்டாரத்தை அலசிக்கொண்டிருந்தார். கையில் ரைபிளுடன், பஸ்டியாம்பிள்ளைக்குப் பாதுகாப்பாக அருகிலேயே நடந்து கொண்டிருந்தார் பாலசிங்கம். நடைபாதையினை மறித்து சாரதியான சிறிவர்த்தனா நின்றிருந்தார். "சரி, சரி, நாங்கள் எங்கள் கடமையினைச் செய்ய வேண்டும். நீங்கள் எங்களுடன் பொலீஸ் நிலையத்திற்கு வந்து ஒரு அறிக்கையொன்றினைத் தாருங்கள். கடமைக்காக இதனைச் செய்யவேண்டியிருக்கிறது. அது முடிந்தவுடன் நாங்கள் உங்களை இங்கே கொண்டுவந்து இறக்கிவிடுகிறோம்" என்று பஸ்டியாம்பிள்ளை செல்லக்கிளியிடமும், அங்கிருந்த ஏனைய இளைஞர்களையும் பார்த்துக் கூறினார். செல்லக்கிளியும் அதற்கு ஒத்துக்கொண்டார். "அவர்கள் தேநீர் போட்டுவிட்டார்கள், குடித்துவிட்டே போகலாம்" என்று செல்லக்கிளி தனது தோழர்களை சிலரைக் காட்டி பஸ்டியாம்பிள்ளையிடம் கூறினார். இளைஞர்களில் ஒருவர் தேனீர்க் குவளையை பஸ்டியாம்பிள்ளையிடம் கொடுக்கவும், பஸ்டியாம்பிள்ளை தனது இயந்திரத் துப்பாக்கியை அருகில் வைத்துவிட்டு தேனீர்க் குவளையினைப் பெற்றுக்கொள்ள தனது கையை நீட்டினார். சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திய செல்லக்கிளி பாய்ந்து பஸ்டியாம்பிள்ளையின் இயந்திரத் துப்பாக்கியைக் கைப்பற்றி அதனைக் கொண்டு பஸ்டியாம்பிள்ளையின் தலையில் ஓங்கி அடித்தார். பிரபாகரனின் மெய்க்காப்பாளராக பணியாற்றி வந்த செல்லக்கிளிக்கு இயந்திரத் துப்பாக்கியை இயக்குவது கடிணமானதாக இருக்கவில்லை, நிலைகுலைந்து கீழே சரிந்த பஸ்டியாம்பிள்ளை மீது அவரது இயந்திரத் துப்பாக்கியினாலேயே சரமாரியாகச் சுடத் தொடங்கினார் செல்லக்கிளி. அவ்விடத்திலேயெ விழுந்து உயிர் விட்டார் பொலீஸ் பரிசோதகர் பஸ்டியாம்பிள்ளை. மீண்டும் தனது இயந்திரத் துப்பாக்கியை பொலீஸ் கொன்ஸ்டபிள் பாலசிங்கம் நின்றிருந்த திசை நோக்கிச் சுழற்றிய செல்லக்கிளி அவரையும் கண்ணிமைக்கும் நேரத்தில் சுட்டு வீழ்த்தினார். கொன்ஸ்டபிள் பேரம்பலத்தை ஏனைய இளைஞர்கள் மடக்கிப் பிடித்துச் சுட்டுக் கொன்றனர். நடைபாதையில் நின்றபடியே நடப்பதை அவதானித்த சாரதி சிறிவர்த்தனா தப்பியோட எத்தனிக்க, அவரைத் துரத்திச் சென்ற இளைஞர்கள் வழியிலேயே சுட்டுக் கொன்றனர். "எல்லாமே கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்துவிட்டது. தமிழர்கள் தமது ஆயுதப் போராட்டத்தினை இன்னொரு நிலைக்கு உயர்த்தியிருந்தார்கள்" என்று சிரித்துக்கொண்டே கூறினார் உமா. ஆனால், அவர் கூறத் தவறிய இன்னொரு விடயம் இந்தத் தாக்குதலில் புலிகள் ஒரு தானியங்கித் துப்பாக்கியையும் கைப்பற்றிக்கொண்டதுதான். இவை நடந்து முடிந்ததும், மரத்திலிருந்து இறங்கிவந்த உமாவும், நாகராஜாவும் பேரம்பலத்தின் உடலை கிணற்றில் வீசிவிட்டு, ஏனைய மூவரின் உடல்களையும் காட்டிற்குள் எறிந்தார்கள். பின்னர் கொட்டகையை தீமூட்டிவிட்டு பஸ்டியாம்பிள்ளையின் பேஜோ 404 இல் அங்கிருந்து கிளம்பினார்கள். சில நாட்களுக்குப் பின்னர் அந்தக் கார் எரிந்த நிலையில் கிளிநொச்சிக் காட்டுப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. சில நாட்களுக்குப் பின் மடுக் காட்டுப்பகுதியில் விறகுவெட்டச் சென்ற ஒருவர் துர்நாற்றம் வீசுவதை உணர்ந்து தேடியபோது உருக்குலைந்த நிலையில் காணப்பட்ட மூன்று உடல்கள் பற்றி பொலீஸுக்கு அறியத் தந்திருந்தார். விசாரணைகளின்போது அந்த மூவரும் பஸ்டியாம்பிள்ளை, பாலசிங்கம், சிறிவர்த்தனா என்பதைக் கண்டுகொண்ட பொலீஸார், கிணற்றுக்குள் இருந்து தாம் மீட்ட சடலத்தின் சட்டைப்பையிலிருந்த அடையாள அட்டையினைக்கொண்டு அவர் பேரம்பலம் தான் என்று உறுதிப்படுத்திக்கொண்டனர். புலிகளின் முகாமைச் சல்லடை போட்டுத் தேடிய பொலீஸார், அங்கிருந்த 300 வெற்றுத் தோட்டாக்கள், குறிபார்த்துச் சுடும் பயிற்சிக்காகப் பாவிக்கப்பட்ட மனித தலையின் உருவப்படம், தகர டப்பாக்களின் அடைக்கப்பட்ட உணவு மற்றும் சமையல்ப் பாத்திரங்கள் என்பவற்றைக் கண்டுபிடித்தனர். மேலும் அப்பகுதிக்கு அருகாமையில் இயங்கிவந்த ஈரோஸ் அமைப்பின் பயிற்சி முகாமையும் அவதானித்த பொலீஸார், அங்கே சில இளைஞர்கள் பயிற்சிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்ததையும் கண்டனர். அந்த இளைஞர்கள் ஆயுதங்கள் எவையுமின்றி தடிகளை வைத்துப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அவர்களைக் கைதுசெய்து கடுமையாகத் தாக்கிய பொலீஸார், ஆயுதங்களை எங்கே மறைத்து வைத்திருக்கிறீர்கள் என்று விசாரிக்கத் தொடங்கினர். பஸ்டியாம்பிள்ளையின் கொலை அரசாங்கத்திற்கு கடுமையான அதிர்ச்சியைக் கொடுத்திருந்தது. 1963 ஆம் ஆண்டு உப பரிசோதகராக கடமையேற்ற பஸ்டியாம்பிள்ளை தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரையும், அவர்களோடு தொடர்புபட்ட ஆயுத அமைப்புக்களின் இளைஞர்களையும் கண்காணிக்கும் உளவுப் பிரிவுக்குப் பொறுப்பாகவிருந்தார். பஸ்டியாம்பிள்ளையின் கொலை நடந்து சரியாக மூன்று வாரங்களின் பின்னர், சித்திரை 25 ஆம் திகதி புலிகள் முதன்முதலாக வெளியே வந்தனர். புலிகளின் உத்தியோகபூர்வ இலட்சினையைக் கொண்ட கடிதத் தலைப்பில் அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் அல்பிரெட் துரையப்பா, பொலீஸ் உளவாளி நடராஜா (உரும்பிராய் எரிபொருள் விற்பனையாளர்) மற்றும் பஸ்டியாம்பிள்ளை உட்பட ஒன்பது பொலீஸ் அதிகாரிகளின் கொலைக்கு தாமே பொறுப்பேற்பதாக அறிவித்தனர். புலிகள் இனிமேலும் புறக்கணிக்கக் கூடிய சக்தியல்ல என்பதை அரசாங்கம் புரிந்துகொண்டது. பஸ்டியாம்பிள்ளை தலைமையிலான பொலீஸ் அணியினரை அழித்ததன் மூலமும் பின்னர் தாமே அதற்கான பொறுப்பினை வெளிப்படையாக உரிமை கோரியதன் மூலமும் சிங்கள ஆதிக்க அரசாங்கத்திற்கு புலிகள் கடுமையானா சவால் ஒன்றினை ஏற்படுத்தியிருந்தார்கள். தமிழர்கள் ஆர்ப்பாட்டங்களை மட்டுமே நடத்திக்கொண்டிருக்கமாட்டார்கள், தமது உரிமைக்காக ஆயுதமேந்திப் போராடவும் தயாராகி விட்டார்கள் என்பதனை இந்த நிகழ்வு அப்பட்டமாகக் காட்டியிருந்தது.
  8. சர்வதேசச் செய்தி நிறுவனம் ஒன்றில் மேற்குநாடுகள் உக்ரேனுக்கு 321 புதிய ரக தாங்கிகளை வழங்கவிருக்கின்றன என்று செய்தி வெளிவந்திருக்கிறது. ஜேர்மனின் நவீன லெப்பேர்ட் - 2 ரகத் தாங்கிகள், அமெரிக்கத் தயாரிப்பான ஏப்ராம் தாங்கிகள் மற்றும் இங்கிலாந்தின் சலெஞ்சர் ரக தாங்கிகளும் இதற்குள் அடக்கமாம். தற்போது உக்ரேன் யுத்தத்தில் பாவித்துவரும் தாங்கிகள் சோவியத் ஒன்றியத்தின் காலத்தில் தயாரிக்கப்பட்டவையாம் . குறைந்தது 40 வருடங்களுக்கு முன்னதான தொழிநுட்பமே இத்தாங்கிகளில் காணப்படுவதால் தாக்குதல்த் திறன் குறைவானதென்று நிபுணர்கள் கூறியிருக்கிறார்கள். ரஸ்ஸியாவின் நவீன ரக தாங்கிகளுக்கு நிகராக இவற்றால் தாக்குப் பிடிப்பதென்பதே இலேசான காரியமல்ல என்று சொல்லப்படுகிறது. ஆனாலும், பல களங்களில் இந்தப் பழமையான சோவிய கால தாங்கிகளைப் பாவித்தே உக்ரேன் தாக்குப்பிடித்து வருகிறது. போதாக்குறைக்கு, மேற்குநாடுகள் நீண்டதூர எறிகணைகள், மிகயொலி யுத்த விமானங்களையும் தரும் யோசனையில் இருக்கின்றனவாம். https://edition.cnn.com/2023/01/27/world/ukraine-tanks-western-allies-intl-hnk/index.html https://edition.cnn.com/videos/world/2023/01/29/ukraine-tanks-pleitgen-cnntmw-vpx.cnn
  9. பொலீஸார் புலிகளைத் தேடிக்கொண்டிருக்கையில், தங்கத்துரையின் அமைப்பு மீண்டும் செயலில் இறங்கியது. சித்திரை முதலாம் திகதி தாடி தங்கராஜா எனும் பொலீஸ் உளவாளியை அவர்கள் கொன்றனர். இவர் முன்னாள் நல்லூர் பாராளுமன்ற உறுப்பினர் சி. அருளம்பலத்தின் நெருங்கிய ஆதரவாளர். தங்கத்துரை, அருளம்பலத்தையும் கொல்லத் திட்டமிட்டிருந்தார். ஆனால் அவர் கொழும்பிலேயே தங்கிவிட்டதனால் அது சாத்தியமாகவில்லை. அருளம்பலம் சிறிமாவினால் கொண்டுவரப்பட்ட 1972 ஆம் ஆண்டின் குடியரசு யாப்பிற்கு ஆதரவளித்திருந்தார். காங்கிரஸ் கட்சியூடாக அரசியலில் பிரவேசித்த அருளம்பலம் 1970 ஆம் ஆண்டுத் தேர்தலில் சமஷ்ட்டிக் கட்சியின் வேட்பாளரான நாகதனை 13,116 வாக்குகளுக்கு 12,508 வாக்குகள் என்ற அடிப்படையில் தோற்கடித்திருந்தார். ஆனால் 1977 ஆம் ஆண்டுத் தேர்தலில் சுதந்திரக் கட்சி சார்பாகப் போட்டியிட்ட அருளம்பலம் மிக்கடுமையான சரிவைச் சந்தித்து வெறும் 1042 வாக்குகளையே பெற்று மூன்றாம் நிலைக்குத் தள்ளப்பட்டார். இதே தேர்தலில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் வேட்பாளர் சிவசிதம்பரம் 29858 வாக்குகளைப் பெற்று, 28137 வாக்குகளால் வெற்றிபெற்றிருந்தார். கொக்குவில் பகுதியில் அமைந்திருந்த தங்கராஜாவின் வீட்டிற்குச் சென்ற தங்கத்துரையும் ஜெகனும் அவரை பெயர் சொல்லி வெளியே அழைத்தபின்னர் அவர்மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர். ஆனால் தன்னைத் தாக்கவந்தவர்கள் மீது தங்கராஜா திருப்பிச் சுட்டபோது அவர்களுக்குக் கால்களில் காயம் ஏற்பட்டது. அப்போது ஏற்பட்ட கைகலப்பில் தங்கராஜாவின் நாய்களைக் கொன்றுவிட்டு தங்கத்துரையும் ஜெகனும் தப்பிச் சென்றனர்.
  10. வெளியே வந்த புலிகள் பொலீஸ் வலையமப்பை அழித்தல் அல்பிர்டெ துரையப்பாவின் கொலை தனக்கு விடுக்கப்பட்ட சவாலாக சிறிமாவின் அரசாங்கம் கருதியது. துரையப்பாவின் மரணச் சடங்கிற்கு முன்னதாக கொலையாளிகள் கைதுசெய்யப்படவேண்டும் என்று சிறிமாவின் அரசு பொலீஸாருக்கு உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்தப் பொறுப்பு பொலீஸ் அதிகாரிகளான பஸ்டியாம்பிள்ளை - பதமநாதன் தலைமையிலான பொலீஸ் குழுவினரிடம் வழங்கப்பட்டது. சிங்கள அரசியல்வாதிகள் மத்தியில் இந்த இரு தமிழ் பொலீஸ் அதிகாரிகளும் அவர்களது திறமைக்காகவும், குரூரத்திற்காகவும் பேர்பெற்றிருந்தார்கள். துரையப்பா கொலையுடன் சம்பந்தப்பட்ட நால்வரில் இருவரை அவர்கள் கைதுசெய்திருந்தார்கள். கைதுசெய்யப்பட்டவர்கள் கலபதியும் கிருபைராஜாவும் ஆகும். கொலை நடந்து மூன்று மாதங்களின் பின்னர் அவர்கள் கைதுசெய்யப்பட்டிருந்தார்கள். மீதி இருவரான பிரபாகரனையும், பற்குணராஜாவையும் பொலீஸாரால் கைதுசெய்ய முடிந்திருக்கவில்லை. ஆனால், பொலீஸார் இவர்கள் இருவரையும் தொடர்ச்சியாகத் தேடியே வந்தனர். இவர்களைத் தேடும் முயற்சியில் ஈடுபட்ட பொலீஸ் குழுவில் கொன்ஸ்டபிள் ஏ. கருநாநிதியும் இருந்தார். இவர் காங்கேசந்துறை பொலீஸ் நிலையத்தைச் சேர்ந்தவர். 1977 ஆம் ஆண்டு, மாசி 14 ஆம் திகதி மாவிட்டபுரத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளால் இவர் சுட்டுக் கொல்லப்பட்டார். கருநாநிதியே தமிழ் ஆயுத அமைப்புக்களால் முதன் முதல் சுட்டுக்கொள்ளப்பட்ட பொலீஸ் உத்தியோகத்தர் ஆவார். அவரது கொலை பொலீஸாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய்ருந்தது. மேலும் தேடுதல்களில் பங்கெடுத்த இரு கொன்ஸ்டபிள்களான ஒரே பெயரைக் கொண்ட சண்முகநாதன், சண்முகநாதன் ஆகியோர் 1977 ஆம் ஆண்டு வைகாசி மாதம் 18 ஆம் திகதி சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்களுள் ஒருவர் காங்கேசந்துறை பொலீஸ் நிலையத்தையும், மற்றையவர் வல்வெட்டித்துறைப் பொலீஸ் நிலையத்தையும் சேர்ந்தவர்கள். தமக்கு கிடைக்கப்பற்ற நம்பகமான தகவல் ஒன்றினையடுத்து இவர்கள் இருவரும் இனுவில் நோக்கி சிவில் உடையில் பஸ்ஸில் பயணித்திருக்கிறார்கள். உந்துருளியொன்றில் இவர்களைத் தொடர்ந்து கண்காணித்துக்கொண்டு வந்த இரு இளைஞர்களில் ஒருவரான பாலா, காங்கேசந்துறை வீதி, இணுவில் சந்தியின் அருகில் இவர்களை சுட்டுக் கொன்றார். பிரபாகரன் எதிர்பார்த்திருந்த தாக்கத்தினை இந்த இரு பொலீஸாரின் கொலையும் ஏற்படுத்திக் கொடுத்தது. இக்கொலைகளின் பின்னர் தமிழ் ஆயுத அமைப்புக்களைக் கண்காணிக்கவும், தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபடவும் தமிழ்ப் பொலீஸ் அதிகாரிகளை அமர்த்துவதென்பது அரசிற்குக் கடிணமாகிப் போனது. அப்படி அமர்த்தப்பட்ட தமிழ் அதிகாரிகளும் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியிடங்களுக்கு மாற்றல்களை கேட்டுச் சென்றனர். பிரபாகரனின் போராளிகள் பொலீஸாரைக் கொன்றதன் மூலம் ஏற்பட்ட தைரியம் மற்றும் மக்களிடையே அக்கொலைகளுக்குக் கிடைத்த வரவேற்பினையடுத்து தங்கத்துரையின் அமைப்பும் செயற்பாட்டில் இறங்கியது. அவ்வருடம் ஆவணியில் தெற்கில் தமிழர் மீது நடத்தப்பட்ட வன்முறைகளையடுத்து இவ்விரு குழுக்களும் செயலில் இறங்கின. ஆவணி 31 ஆம் திகதி, நீலநிற மொறிஸ் மைனர் காரில் மானிப்பாயில் இயங்கிவந்த மக்கள் வங்கிக்குச் சென்ற நான்கு இளைஞர் அணியொன்று அங்கிருந்த ஊழியர்களை பயமுறுத்தி 26,000 ரூபாய்களை கொள்ளையிட்டுச் சென்றது. அதே நாள் வேறு இளைஞர் அணியொன்று யாழ்ப்பாணத்தில் அமைந்திருந்த சுங்கத்திணைக்கள அலுவலகத்திற்குச் சென்று 8 ரைபிள்களை எடுத்துச் சென்றது. பல பாடசாலைகளிலிருந்து இரசாயணங்கள் களவாடப்பட்ட சம்பவங்களும் இக்காலப்பகுதியில் நடந்தேறின. தொழிற்சாலைகளில் சேமித்து வைக்கப்பட்ட டைனமைட் குச்சிகளும் காணாமற்போயின. திருநாவுக்கரசர் தங்கத்துறை மிகுந்த இறைபக்தி கொண்டவர். தனது அமைப்பின் உறுப்பினர்களுடன் பேசு முன் திருநாவுக்கரசரின் "நாம் யார்க்கும் குடியல்லோம்" என்கிற மந்திரத்தை ஓதியபின் பேச ஆரம்பித்தார். நாம் சுமார் பத்து வருடங்களாக ஒழுங்கான கட்டமைப்பின்றி இயங்கி வருகிறோம். ஆனால், அதனை உருவாக்கவேண்டிய தேவை இப்போது வந்துவிட்டது. அவருக்கு ஆதரவாக சிறி சபாரட்ணம், சின்ன சோதி, பெரிய சோதி ஆகியோரும் கருத்துத் தெரிவித்தனர். அரசியல் விடயங்களைக் கவனிப்பதற்கு அரசியல்ப் பிரிவும், இராணுவ விடயங்களைப் பார்த்துக்கொள்வதற்கு ராணுவப் பிரிவுமாக ஐரிஸ் விடுதலை இராணுவத்தை ஒத்த கட்டமைப்பொன்றினை உருவாக்கவேண்டும் என்று தங்கத்துரை விரும்பியிருந்தார். அதன்படி தனது இராணுவப் பிரிவிற்கு தமிழ் ஈழ விடுதலை இராணுவம் ( டெலா) என்றும், அரசியல்ப் பிரிவிற்கு தமிழ் ஈழ விடுதலை இயக்கம் ( டெலோ) என்று பெயரிடலாம் என்று யோசனையினை அவர் முன்வைத்தார். சிறி சபாரட்ணம் அதனை வழிமொழிந்தார் சிறி சபாரட்ணம் டெலோ அமைப்பின் சில உறுப்பினர்கள் தமது அமைப்பே முதலில் உருவாக்கப்பட்ட அமைப்பென்று உரிமை கோருகிறார்கள். டெலோ அமைப்பின் பாடல்களில் ஒன்றும் இதனையே சொல்கிறது. ஆனால், இது உண்மையல்ல. 1973 இல் தமிழ் இளைஞர் பேரவையினை விட்டு வெளியேறிய முத்துக்குமாரசாமி ஈழம் விடுதலை இயக்கம் (எலோ) எனும் அமைப்பினை உருவாக்கினார் என்றும், அவ்வமைப்பே காலப்போக்கில் டெலோவாக மாற்றம்பெற்றதென்றும் அவர்கள் கூறுகிறார்கள். ஆனால், 1976 ஆம் ஆண்டு புலோலி பலநோக்குக் கூட்டுறவுச் சங்கக் கொள்ளையின் பின்னர் எலோ அமைப்பு முற்றாக அழிந்து போய்விட்டது. ஆகவே, அதன் தொடர்ச்சியாக டெலோ இருக்கிறதென்பது உண்மையில் தவறான கருத்தாகும். கனகரட்ணம் மீதான கொலைமுயற்சி 1978 ஆம் ஆண்டு தமிழ் இளைஞர்களின் அதிகரித்த ராணுவச் செயற்பாட்டினக் கண்ட ஆண்டாகும். தமிழ் ஈழ விடுதலைப் புலிகளும் (அப்போதுவரை பிரபாகரன் அமைப்பு என்றே அறியப்பட்டு வந்தது) டெலோ அமைப்பும் செயற்படத் தொடங்கியிருந்த காலம் அது. அவ்வருடம் சித்திரை மாதத்தில் கனகரட்ணம் மீதான கொலை முயற்சி மற்றும் பொலீஸ் பரிசோதகர் பஸ்டியாம்பிள்ளை கொலை ஆகியவற்றின் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புப் பற்றிய செய்திகள் பரவலாக அடிபடத் தொடங்கின. பின்னர், எயர் சிலோன் என்றழைக்கப்பட்ட விமானச் சேவையின் அவ்ரோ 748 விமானத்தைத் தகர்த்தெறிந்தது மற்றும் திருநெல்வேலி மக்கள் வங்கிக் கொள்ளை ஆகிய நடவடிக்கைகளையும் புலிகள் செய்திருந்தனர். டெலோ அமைப்பும் தன் பங்கிற்கு பொலீஸ் பரிசோதகர் பத்மநாதனையும், பொலீஸ் உளவாளி "தடி" தங்கராஜாவையும் கொன்றிருந்தனர். அரசாங்கம் உடனடியாக தமிழ் ஈழ விடுதலைப் புலிகளையும் அவர்களையொத்த ஏனைய அமைப்புக்களையும் தடைசெய்வதாக அறிவித்தது. 1978 ஆம் ஆண்டு தை மாதம் 26 ஆம் திகதி சனநெரிசல் மிக்க இரவு தொடரூந்தொன்றில் பிரபாகரன் கொழும்பிற்குச் சென்றார். அவரை கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் உமாமகேஸ்வரன் வரவேற்றார். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரும், இராணுவத் தளபதியும் புகையிரத நிலையத்திற்கு முன்னாலிருந்த ஆனந்த பவன் எனும் விடுதிக்குச் சென்றனர். பிரபாகரன் அங்கு குளித்தவுடன் அவ்விடுதியிலேயே காலையுணவையும் உட்கொண்டனர். அங்கிருந்து பொத்துவில் தொகுதியில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட இரண்டாவது பாராளுமன்ற உறுப்பினரான எம்.கனகரட்ணம் வசித்துவந்த கொல்லுப்பிட்டி நோக்கி பேரூந்தில் பயணமானார்கள். 1977 ஆம் ஆண்டுப் பாராளுமன்றத் தேர்தல்களில், இரு ஆசனங்களைக் கொண்ட அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் தொகுதியில் எம். கனகரட்ணம் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி சார்பாகப் போட்டியிட்டிருந்தார். சுயேட்சை வேட்பாளரின் மரணத்தையடுத்து அத்தொகுதிக்கான தேர்தல் புரட்டாதி 12 ஆம் திகதியே நடைபெற்றிருந்தது. இத்தேர்தலில் கனகரட்ணம், ஐ.தே. க உறுப்பினர் ஜலால்தீனுக்கு அடுத்ததாக அடுத்ததாக தெரிவுசெய்யப்பட்டார். ஜலால்தீனின் 30,315 வாக்குகளுக்குப் பதிலாக கனகரட்ணம் 23,990 வாக்குகளைப் பெற்றிருந்தார். தனிநாட்டிற்கான ஆணையினை முன்வைத்தே கனகரட்ணம் தேர்தலில் வாக்குக் கேட்டிருந்ததால் பெரும்பான்மையான தமிழர்கள் அவருக்கு வாக்களித்திருந்தனர். கனகரட்ணம் நிலச்சுவாந்தராக இருந்ததுடன், நெடுங்காலமாக ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளராகவும் இருந்தார். கிழக்கு மாகாணத் தமிழர்களும் தனிநாட்டிற்கே தமது விருப்பைத் தெரிவித்திருக்கிறார்கள் எனும் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் கருத்தினை உடைத்து அதனைத் தவறென்று நிறுவ, கனகரட்ணத்தை எப்படியாவது தனது கட்சிக்குள் இழுத்துவிடவேண்டும் என்று கங்கணம் கட்டியிருந்தார் ஜெயவர்த்தனா. கனகரட்ணத்தின் கட்சித் தாவல் செய்தி எனது காதுக்கு எட்டியபோது மார்கழி 18 ஆம் திகதி காலை அவரை பழைய பாராளுமன்றக் கட்டிடத்தில் சந்தித்துப் பேசினேன். அதனை உறுதிப்படுத்திய கனகரட்ணம் தான் நாளையே கட்சி தாவப்போவதாகவும், அதற்கான காரணத்தை தான் விளக்கி அறிக்கையொன்றினை வெளியிடவிருப்பதாகவும் என்னிடம் கூறினார். "நீங்கள் என்ன விளக்கத்தைக் கொடுக்கப் போகிறீர்கள் ?" என்று அவரிடன் வினவினேன். "நான் பிரேமதாசவின் உதவியாளர் சண்முகலிங்கத்திடம் இதுபற்றிக் கூறிவிட்டேன், நீங்கள் அவரிடமே கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்" என்று கூறினார். சண்முகலிங்கத்தை எனக்குத் தெரிந்திருந்தது. அவர் அதிபரின் அலுவலகத்தில் அதிகாரியாகப் பணியாற்றி வந்தார். பிரேமதாசாவே அந்த அலுவலகத்திற்குப் பொறுப்பாகவிருந்தார். நான் அவரின் அலுவலகத்திற்குச் சென்றபோது, தயாரிக்கப்பட்ட அறிக்கையின் நகல் ஒன்றினை எனக்குக் காட்டினார். மறுநாள் காலை, 19 ஆம் திகதி டெயிலிநியூஸ் பத்திரிக்கை இச்செய்தியைப் பிரசுரித்தது. கனகரட்ணம் தனது அறிக்கையில் தான் கட்சி தாவுவதற்கான இரு காரணங்களைத் தெரிவித்திருந்தார். முதலாவது காரணம், ஜெயவர்த்தனா தமிழர் பிரச்சினைக்கு முடிவொன்றினைத் தருவார் என்று தான் பூரணமாக நம்புவதாகத் தெரிவித்தார். இரண்டாவது, கிழக்கு மாகாணத் தமிழர்கள் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்கு வக்களித்திருந்தாலும்கூட, தனிநாட்டினை உருவாக்க அவர்கள் ஆதரவு வழங்கவில்லை என்று அவர் கூறினார். பாராளுமன்றத்தில் கனகரட்ணம் சமூகமளித்தவேளை அவரைத் துரோகி என்று அமிர்தலிங்கமும் ஏனையோரும் எள்ளி நகையாடினர். மார்கழி 22 அன்று கூடிய தமிழீழ விடுதலைப் புலிகள் மத்தியகுழு கனகரட்ணம் ஒரு துரோகியென்று பிரகடனம் செய்ததுடன், துரோகிகளுக்குப் பாடம் கற்பிக்கப்படவேண்டும் என்றும் கூறியது. அதுவரையில் புலிகள் அமைப்பு பொலீஸ் உளவாளிகள், பொலீஸார் மற்றும் அரசியல்வாதிகளுக்கே மரண தண்டனையை நிறைவேற்றி இருந்தது. அதுவரையில் அல்பிரெட் துரையப்பாவே மரண தண்டனை கொடுக்கப்பட்ட ஒரே அரசியல்வாதியாகும். அவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபோதும், கொல்லப்படும்போது யாழ்நகர மேயராகவே இருந்தார். தியாகராஜாவின் மீதான கொலைமுயற்சி தமிழ் மாணவர் பேரவையாலும், அருளம்பலம் மீதான கொலை முயற்சி தங்கத்துரை அமைப்பாலும் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இவர்கள் எல்லோருமே வடமாகாணத்தைச் சேர்ந்த அரசியல்வாதிகள். கனகரட்ணமே புலிகளின் மத்திய குழுவினரால் மரணதண்டனை தீர்ப்பளிக்கப்பட்ட முதலாவது பாராளுமன்ற உறுப்பினர் ஆவார். கிழக்கு மாகாணத்திலிருந்து வந்த பாராளுமன்ற உறுப்பினர்களில் மரண தண்டனைத் தீர்ப்பளிக்கப்பட்டவர்களில் முதலாமவரும் அவரே. கனகரட்ணத்தின் நடமாட்டங்களை உமா மகேஸ்வரன் இருவாரங்கள் தொடர்ச்சியாக அவதானித்து வந்தார். கனகரட்ணம் ஒவ்வொரு நாள் காலையும் 9 மணிக்கு வீட்டிலிருந்து காரில் புறப்பட்டுச் செல்வது வழமை. ஒருகாலை, பிரபாகரனும், உமா மகேஸ்வரனும் கனகரட்ணத்தின் வீட்டிற்கு அருகில் இருந்த பற்றைக்குள் அவருக்காகக் காத்திருந்தனர். கனகரட்ணம் தனது காரை நோக்கி நடந்துவருகையில் அவர்களில் ஒருவர் கனகரட்ணம் மீது சுட்டார். குண்டுபட்டு கீழே விழுந்த கனகரட்ணத்தை உதவியாளர்கள் வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றனர். அவர் தப்பிவிட்டார். அவருக்கு நெஞ்சிலும், கழுத்திலும், விலாப் பகுதியிலும் குண்டு பாய்ந்திருப்பதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். இரு இளைஞர்கள் தன்னை நோக்கிச் சுட்டுவிட்டு தப்பியோடுவதைக் கண்டதாக கனகரட்ணம் பொலீஸாரிடம் கூறினார். அவர்களில் ஒருவர் உயரமானவர், மற்றையவர் சற்று உயரம் குறைந்தவர் என்றும் அவர் கூறினார். விசாரணகளின்போது அந்த உயரம் குறைந்தவர் பிரபாகரன் என்பதையும், உயரமானவர் உமாமகேஸ்வரன் என்பதையும் பொலீஸார் அறிந்துகொண்டனர். பிரபாகரன் அன்றே கோட்டை புகையிரத் நிலையத்தினூடாக யாழ்ப்பாணத்திற்குச் சென்றுவிட, உமாமகேஸ்வரன் கொழும்பிலேயே தங்கிவிட்டார். பிரபாகரனின் புகைப்படத்தினை பொலீஸார் அதுவரை கொண்டிருக்காமையால், அவர் கடுமையாகத் தேடப்பட்டு வந்தபோதும், அவரால் இயல்பாக கொழும்புவரை வந்து செல்ல முடிந்தது. தனது வீட்டை விட்டுப் புறப்படும்பொழுது, வீட்டிலிருந்த தனது அனைத்துப் புகைப்படங்களையும் அழித்துவிட்டே அவர் சென்றிருந்தார். குழுவாக எடுத்த புகைப்படங்களில் இருந்தும் தனது படத்தை அவர் வெட்டி அகற்றியிருந்தார். சிறுநீரக வியாதியால் அவதிப்பட்ட கனகரட்ணம் சுடப்பட்ட அன்று உயிர் பிழைத்திருந்தாலும், அச்சம்பவத்தின் தாக்கத்தினால் மூன்று மாதங்களில் இறந்துவிட்டார். இச்சூட்டுச் சம்பவம் இரு சர்ச்சைகளைக் கிளப்பி விட்டிருந்ததுடன் இரு வேடிக்கையான பொலீஸாரின் தவறுகளையும் உருவாக்கியிருந்தது. முதலாவது சிக்கல், கனகரட்ணத்தைச் சுட்டது யாரென்பது. பிரபாகரன் குறிபார்த்துச் சுடுவதில் நிபுணர் என்பது பலரும் அறிந்த விடயம். ஆனால், கனகரட்ணம் மேல் நடத்தப்பட்ட தாக்குதல் இலக்குத் தவறியிருந்தது. ஆகவே, கனகரட்ணத்தைச் சுட்டது உமா மகேஸ்வரன் தான் என்று பேசப்பட்டது. இரண்டாவது வாதம், பிரபாகரனே தாக்குதலை மேற்கொண்டார், ஆனால் உமா மகேஸ்வரன் ஒத்துழைக்காததால் பிரபாவின் குறி தப்பி விட்டது என்பது. ஆனால், எவர் சுட்டிருந்தாலும், நடத்தப்பட்ட தாக்குதல் மிகக்கடுமையான தாக்கத்தினை ஏற்படுத்தியிருந்தது. புலிகள் கொழும்பிற்கு வந்து பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் மீது தாக்குதல் நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுவிட்டார்கள். இத்தாக்குதலையடுத்து கடும் கோபமுற்றிருந்த ஜெயவர்த்தனாவின் கேள்விகளுக்குப் பொலீஸாரால் பதிலளிக்க முடியவில்லை. இத்தாக்குதலையடுத்து சினமும், ஏமாற்றமும் ஒருங்கே ஜெயவர்த்தனாவை ஆட்கொள்ள, கடுமையான நடவடிக்கைகளுக்கு உத்தரவிட்டார். தனது கட்டுப்பாட்டிலிருந்த ஊடத்துறையைப் பாவித்து தான் எதிரியென்று கருதியவர்கள் மீது விஷமப் பிரச்சாரத்தை முன்னெடுக்கத் திட்டமிட்டார். தனது ஊடகத்துறைப் பொறுப்பாளரையும், பாராளுமன்ற உறுப்பினர்களையும் இந்த நடவடிக்கைக்குப் பாவித்தார். அவரது நெருங்கிய ஆதரவாளரான வீரவன்னி சமரவீர எனும் பாராளுமன்ற உறுப்பினரை பாராளுமன்றத்தில் கனகரட்ணம் மீதான கொலைமுயற்சிபற்றிப் பேசுமாறு அவர் ஏவிவிட்டார். வைகாசி 2 ஆம் திகதி பாராளுமன்றத்தில் பேசிய வீர்வன்னி அமிர்தலிங்கமே இக்கொலை முயற்சியின் பின்னாலிருப்பதாகவும், ஏனென்றால் கனகரட்ணத்தைத் துரோகி என்று அமிர்தலிங்கம் அழைத்து ஒரு மாத காலத்தின் பின் இது நடத்தப்பட்டிருக்கிறது என்றும் தெரிவித்தார். அமிர்தலிங்கம் இந்த விஷமத்தனமான கருத்துப்பற்றி சபாநாயகர் ஆனந்த திஸ்ஸ் டி அல்விஸிடம் முறையிட, வீரவன்னியின் கூற்று பாராளுமன்றப் பதிவிலிருந்து நீக்கப்பட்டது. சபாநாயகரின் கட்டளைப் பணிந்த வீரவன்னி, கனகரட்ணம் மீதான கொலையினை அமிர்தலிங்கமும் கண்டிக்க வேண்டும் என்று சவால் விட்டார். எதிர்க்கட்சித் தலைவரின் செயற்பாடுகளை கூறும்படி கேட்டதன் மூலம் வீரவன்னி பாராளுமன்றத்தில் சரித்திரம் ஒன்றை உருவாக்கிவிட்டுள்ளதாகக் கூறினார் அமிர்தலிங்கம். உடனேயே ஆளுந்தரப்பும் உறுப்பினர்கள் அமிரை நோக்கி கூக்குரலிடத் தொடங்கவே, "உங்கள் கூச்சல்களுக்கு நானோ எனது கட்சியோ அஞ்சப்போவதில்லை" என்று பதிலுக்குக் கூச்சலிட்டார். ஆனால், அடக்கத்துடன் வீரவன்னியின் கோரிக்கைக்குச் சம்மதித்த அமிர்தலிங்கம் கனகரட்ணம் மீதான தாக்குதலை தானும் தனது கட்சியும் வன்மையாகக் கண்டிப்பதாகக் கூறினார். இக்கொலையின் பின்னால் இருப்பவர்களைத் தேடிக் கைதுசெய்ய பொலீஸார் அதிகாரி பஸ்டியாம்பிள்ளை தலைமையில் பொலீஸ் குழுவொன்றினை உருவாக்கினார்கள். தாக்குதலில் ஈடுபட்டவர்களில் ஒருவர் உயரமானவர் என்பதை வைத்துக்கொண்டு தமிழ் மாணவர் பேரவையின் உறுப்பினரான மாவை சேனாதிராஜாவே அது என்று எண்ணிக்கொண்டு அவரைக் கைதுசெய்யுமாறு பஸ்டியாம்பிள்ளை பொலீஸாருக்கு உத்தரவிட்டார். மேலும் நான்கு தேடப்பட்ட இளைஞர்களின் புகைப்படங்களுடன் சுவரொட்டிகளையும் ஒட்டினார் பஸ்டியாம்பிள்ளை . அந்த நால்வரும் உமா மகேஸ்வரன், நாகராஜா, வாமதேவன் மற்றும் கண்ணாடி ஆகியோராகும். ஆனால் 1973 இல் கண்ணாடி கொல்லப்பட்டது அப்போது பஸ்டியாம்பிள்ளைக்குத் தெரிந்திருக்கவில்லை. தமிழர் வாழும் பகுதிகளில் சுமார் ஒரு லட்சம் சுவரொட்டிகளை ஒட்டிய பஸ்டியாம்பிள்ளை, இவர்களைக் காட்டித் தருவோருக்கு ஒரு லட்சம் ரூபாய் சன்மானமும் வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.
  11. வெளியே வந்த போராளிகள் 1977ஆம் ஆண்டில் தமிழ் மக்கள் மீதான சிங்கள அரச காவல்த்துறையினரால் யாழ்ப்பாணத்தில் நிகழ்த்தப்பட்ட அட்டூழியங்கள், நாடு முழுவதும் தமிழர்மேல் கட்டவிழ்த்துவிடப்பட்ட சிங்களவர்களின் தாக்குதல்கள் மற்றும் அமிர்தலிங்கம் மீது ஜே ஆரினால் செய்யப்பட்ட விஷமத்தனமான பிரச்சாரம் ஆகியன மிதவாத தமிழர்களை பின்னுக்குத் தள்ளிவிட்டிருந்ததோடு, ஆயுத அமைப்புக்கள் முன்னுக்கு வரவும் காரணமாக அமைந்தன. தனது நடவடிக்கைகள் மூலம் தமிழ்மக்கள் அச்சமடைந்து அடங்கிவிடுவார்கள், போராட்டங்களைக் கைவிட்டு விடுவார்கள் என்று ஜே ஆர் நிணைத்தது மிதவாத தமிழ் அரசியல்வாதிகளான அமிர்தலிங்கம் மற்றும் ஏனைய தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் உறுப்பினர்களைப் பொறுத்தவரை உண்மையாகவே இருந்தது. 1977 ஆம் ஆண்டின் தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் தமிழ் மக்கள் அடைந்த இன்னல்கள் பற்றி அரசுடன் கலந்துரையாடுவதற்கு தமிழர் ஐக்கியமுன்னணி பலமுறை சென்றிருந்தது. இந்தக் கூட்டங்களின் மூலம் அரச பதவிகளில் பணிபுரிந்த தமிழ் உத்தியோகத்தர்கள் இக்கலவரங்களினால் பாதிப்படைந்தது பற்றிப் பேசும் சந்தர்ப்பத்தை த.ஐ.வி. மு பாவித்துக்கொண்டது. முன்னணியின் கரிசணைகளை ஜே ஆர் ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்திருந்தார். 1977 ஆம் ஆண்டு, மார்கழி 18 ஆம் திகதி யாழ்ப்பாணம் செயகலத்தில் வர்த்தக அமைச்சரான லலித் அத்துலத்முதலி தலைமையில் நடைபெற்ற யாழ்ப்பாண மாவட்ட விவசாயிகள் குழுக் கூட்டத்தில் முன்னணியும் கலந்துகொண்டது. முன்னர் இக்கூட்டத்தில் கலந்துகொள்வதில்லை என்கிற தமது முடிவை மாற்றிக்கொண்டு அமைச்சர் நடத்திய இக்கூட்டத்தில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி கலந்துகொண்டது இளைஞர்களுக்குக் கடுமையான விசனத்தை ஏற்படுத்தியிருந்தது. முன்னணியின் இந்தத் திடீர் முடிவினை எதிர்த்து யாழ்ப்பாணம் முழுவதும் கண்டனச் சுவரொட்டிகள் இளைஞர்களால் ஒட்டப்பட்டிருந்தன. யாழ்ப்பாணச் செயலகத்தின் முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம் என்று எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. ஆகவே, மிதவாதிகளான முன்னணியின் தலைவர்களுக்கு யாழ்ப்பாணத்தில் உலாவுவதற்கு பொலீஸ் பாதுகாப்பு அரசால் வழங்கப்பட்டது. மிதவாதிகள் என்று அறியப்பட்ட தமிழ்த் தலைவர்கள் யாழ்ப்பாணச் சமூகத்திலிருந்து மெதுமெதுவாக அந்நியப்பட்டுப் போகத் தொடங்கினார்கள். அதுலத் முதலியின் யாழ்ப்பாணப் பயணத்தை பதிவிடுவதற்காக நான் அப்பொழுது யாழ்ப்பாணத்திற்குச் சென்றிருந்தேன். அமிர்தலிங்கத்தின் திறமையான பேச்சினை நான் டெயிலி நியூஸ் பத்திரிக்கையில் பிரசுரித்திருந்தேன். ஏ. அமிர்தலிங்கம் அவர் இப்படிக் கூறினார், "தமிழ்ச் சமூகத்தால் எதிர்நோக்கப்படுகின்ற பல பிரச்சினைகளை சுமூகமாகத் தீர்த்துவைக்க பிரதமர் ஜே ஆர் ஜெயவர்த்தனா எடுத்துவரும் முயற்சிகளுக்கு தமிழ் மக்கள் தமது முழு ஆதரவினையும் வழங்கவேண்டியது அவர்களின் கடமையாகும். இந்தப் பிரச்சினைகளையெல்லாம் நீதியுடனும் நேர்மையாகவும் தீர்த்துவைக்கப்போவதாக பிரதமர் எம்மிடம் உறுதியளித்திருக்கிறார். அவருக்கு நாம் தேவையான கால அவகாசத்தினையும் சந்தர்ப்பத்தினையும் வழங்கவேண்டும். பரஸ்பர நல்லெண்ணமே இன்று தேவையானது. எமது சார்பில் முழு ஆதரவினையும் நல்லெண்ணத்தையும் நாம் அரசுக்கு வழங்கியிருக்கிறோம். எமக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை அரசாங்கம் செயல்வடிவில் நிகழ்த்தும் என்று நாம் முழுமையாக நம்புகிறோம்" என்று பேசியிருந்தார். பாராளுமன்றத்திலும் த.ஐ.வி. மு அரசுக்கான தனது ஆதரவினை வழங்கி வந்தது. 1977 ஆம் ஆண்டு மார்கழி 21 ஆம் திகதி பாராளுமன்றத்தில் பேசிய அமிர்தலிங்கம் பின்வருமாறு கூறினார், "எதிர்க்கட்சியின் வேலை அரசு செய்யும் எல்லா விடயங்களையும் எதிர்ப்பது என்பது அல்ல. மாறாக தாம் நியாயம் என்று நினைக்கும் விடயங்களை ஆதரிப்பது, தவறென்று நினைப்பதை சுட்டிக்காட்டி, ஆட்சி சிறந்தவகையில் முன்னெடுக்கப்படுவதை உறுதிசெய்வதுமே ஆகும்". மார்கழி 26 இல் டெயிலி நியூஸ் பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலில் அவரது அரச ஆதரவு நிலை பற்றி வினவியபோது, "இது ஒன்றும் புதிய விடயம் அல்லவே? எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில்க் கூட பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக எமது கட்சி அரசுக்கு ஆதரவு வழங்கும் என்று கூறியிருந்தோமே?" என்று பதிலளித்தார். தமது தேர்தல் விஞ்ஞாபனத்தை அரசுக்கு ஆதரவு கொடுக்கும் விதத்தில் அமிர்தலிங்கம் விளக்க முனைந்தமை ஜே ஆருக்கு மகிழ்வினைக் கொடுத்திருந்தது. ஜே ஆர் ஜெயவர்த்தனா தமிழர்களை நீதியாகவும், சமமாகவும் நடத்தும் ஒரு தலைவர் எனும் பெயரினை சர்வதேசத்தில் பெற்றுக்கொள்ளவே ஜே ஆர் முயன்று வந்தார். ஆகவே அதற்கு வலுச் சேர்க்கும் முகமாக தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி செயற்படவேண்டும் என்று ஜே ஆர் விரும்பினார். அவர் நினைத்தவாறே அமிரும் அவரது மிதவாத அரசியல் சகாக்களும் அப்போது செயற்பட்டு வந்தனர். விளைவுகள் எப்படியாக இருப்பினும் தமிழருக்கு இருக்கும் பிரச்சினைகள் தான் நிச்சயம் தீர்த்துவைப்பேன் என்று ஜே ஆர் 1978 ஆம் ஆண்டு கூறியிருந்தார். அரசுக்கு எதிரான நிலைப்பாட்டினை படிப்படியாகத் தளர்த்தி வந்திருந்த தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி, ஜே ஆரின் இந்தப் பேச்சோடு முழுவதுமாக தனது எதிர்ப்பினைக் கைவிடும் நிலமைக்கு வந்திருந்தது. ஒவ்வொரு சுதந்திர தின நிகழ்வையும் கறுப்புக்கொடி காட்டிப் புறக்கணிப்புச் செய்துவந்த தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் 1978 ஆம் நடைபெற்ற 30 ஆவது சுதந்திர தின நிகழ்வினை கறுப்புக்கொடி காட்டி எதிர்ப்பதில்லை என்கிற முடிவை எடுத்தனர். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ஜே ஆர் பதவியேற்கும் நாளன்று பேசிய அமிர், ஜே ஆர் மீது தாம் மிகுந்த நம்பிக்கை வைத்திருப்பதால் அவருக்கெதிரான எந்தவித புறக்கணிப்புப் போராட்டங்களையும் கைக்கொள்ளப்போவதில்லை என்று அறிவித்தார். 1972 ஆம் ஆண்டின் குடியரசு யாப்பினை மாற்றியமைத்தே ஜே ஆர் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தன்னை நிலைப்படுத்திக்கொண்டார். 1978 ஆம் ஆண்டு, சித்திரை 22 ஆம் திகதி, அனைத்துப் பாராளுமன்ற செயற்குழுக்களிலும் அங்கம் வகிப்பதன் மூலம் அரசுக்கு ஆதரவாக நெருங்கிச் செயற்படும் முடிவினை அமிர்தலிங்கமும் அவரது கட்சியும் எடுத்திருந்தார்கள். அமிர் தலைமையிலான தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரின் அரசுக்கு ஆதரவான செயற்பாடுகளை இளைஞர்கள் மிகுந்த எரிச்சலுடன் அவதானித்துக்கொண்டிருந்தனர்.
  12. இருநாட்களுக்கு முன்னர் கொல்லப்பட்ட 11 பலஸ்த்தீனியர்களுக்குப் பழிவாங்கலாக இருக்கலாம். அப்பாவிகளைக் கொல்வது எத்தரப்பாயினும் தவறே!
  13. தமிழ் மிதவாதிகளின் நிலை பரிதாபத்திற்குரியதாக மாறியது. பொலீஸ் அராஜகத்தினை ஜே ஆர் நியாயப்படுத்தியிருந்ததும், தமிழர்களுடான போருக்கான அவரின் அறைகூவலும் தமிழ் இளைஞர்களை வெகுவாக ஆத்திரப்பட வைத்திருந்தன. ஆகவே, ஆயுத அமைப்புக்கள் தாமும் மோதலுக்கு ஆயத்தம் என்கிற ரீதியில் துண்டுப்பிரசுரங்களை வெளியிட்டனர். ஜே ஆருக்கு யுத்தமே வேண்டுமென்றால், நாமும் அதனைத் தருவதற்கு தயாராகவே இருக்கிறோம் என்று அவர்கள் கூறியிருந்தனர். தமிழருக்கெதிரான வன்முறைகளின்போது நேரடியாகப் பாதிக்கப்பட்ட பல இளைஞர்கள் அத்தாக்குதல்களுக்காகப் பதிலடி வழங்கியே தீரவேண்டும் என்கிற மனநிலையில் இருந்தனர். தாம் தமிழர் என்பதற்காகவே சிங்களக் காடையர்களால் தாக்கப்பட்டதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இவர்களில் சிலர் தங்கத்துரையின் அமைப்பிலும், பிரபாகரனின் அமைப்பிலும் இணைந்துகொண்டனர். கொழும்பில் இயங்கிவந்த குற்றச்செயல் விசாரணைப் பிரிவு அரசுக்கு அனுப்பிய உளவுக் குறிப்பில் இவ்விரு அமைப்புக்களிலும் இணைந்துள்ள இளைஞர்களின் எண்ணிக்கை 30 இலிருந்து 50 வரை இருக்கலாம் என்றும், அனுதாபிகளின் எண்ணிக்கை 100 இலிருந்து 200 வரை இருக்கலாம் என்று கூறியிருந்தது. இதேவேளை மக்களின் அனுதாபம் இளைஞர்களின் பக்கம் திரும்பியிருந்தது. ஆயுத அமைப்புக்கள் உடனடியாக தமிழர் ஐக்கிய விடுதலை முன்ன்ணையினர் மீது, குறிப்பாக அமிர்தலிங்கத்தின் மீது அழுத்தம் கொடுக்க ஆரம்பித்தனர். அரசுக்கெதிராக கடுமையான நிலைப்பாட்டினை எடுக்குமாறு அவர் கோரப்பட்டார். இளைஞர்களின் அழுத்தத்திற்குப் பணிந்துபோவதைத்தவிர த.ஐ.வி.மு தலைமைத்துவத்திற்கு வேறு வழி இருக்கவில்லை. அரசாங்கத்தின் கொள்கை விளக்கவுரை புரட்டாதி முதலாம் வாரத்தில் பாராளுமன்றத்தில் நடைபெற்றவேளை, அதற்குத் திருத்தம் ஒன்றினை முன்வைத்த த.ஐ.வி.மு தலைமைப்பீடம், தமிழ் மக்களுக்கான தனிநாட்டினை அரச கொள்கை உரையில் இணைத்துக்கொள்ளாமைக்குக் கண்டனம் தெரிவித்திருந்தது. இதனால் கொதிப்படைந்த அரசுதரப்பு அமிர்தலிங்கம் இனங்களுக்கிடையே பகைமையுணர்வினை உருவாக்கும் பேச்சுக்களில் ஈடுபடுகிறார் என்று குற்றஞ்சாட்டியது. மகாவலி அபிவிருத்தி அமைச்சராக இருந்த காமினி திஸாநாயக்க அமிர்தலிங்கம் மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்ததுடன், அமிர் முற்கரண்டி நாக்குக் கொண்டவர் என்றும், இருமுகம் கொண்டவர் என்றும் சாடினார். தெற்கில் சிங்களவருக்கு ஒரு முகத்தினையும், வடக்கே சென்றவுடன் தமிழருக்கு இன்னொரு முகத்தினையு காட்டுபவர் என்றும் கூறினார். அமிர்தலிங்கத்தின் இனவாதப் பேச்சே சிங்கள மக்களை கலவரங்களில் ஈடுபடத் தூண்டியதாகவும் அவர் நியாயப்படுதினார். புரட்டாதி 22 ஆம் திகதி சபாநாயகரின் அதிகாரத்தைப் பலப்படுத்தி குடியரசு யாப்பில் திருத்தங்களைச் செய்யக்கூடியவகையில் தீர்மானம் ஒன்றைப் பாராளுமன்றத்தி ஜே ஆர் சமர்ப்பித்தார். இதன்மூலம் யாப்பு, அதனோடிணைந்த ஏனைய சட்டங்களையும் சீர்செய்யும் குழுவினரையும், அதன் தலைவரையும் உருவாக்கும் அதிகாரம் சபாநாயகருக்கு வழங்கப்படும். இத்தீர்மானம் மறுநாளே பாராளுமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இளைஞர்களிடமிருந்து கடுமையான அழுத்தத்தினச் சந்தித்துவந்த அமிர்தலிங்கமும் அவரது கட்சியும், அரசியலமைப்பை மாற்றும் குழுவின் கூட்டங்களில் பங்கேற்பதில்லை என்ற முடிவிற்கு வந்தனர். அனால், 1978 ஆம் ஆண்டு மாசி மாதம் 4 ஆம் திகதி நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தன்னை நிலைநாட்ட கடும் முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டும், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரை உலகிற்கு "அரசுக்கு ஆதரவளிக்கும் எதிர்க்கட்சி" என்று காட்டியும் தன்னைப் பலப்படுத்த நினைத்திருந்த ஜே ஆருக்கு அமிர்தலிங்கத்தின் இந்தப் புறக்கணிப்பு கடுமையான எரிச்சலை ஏற்படுத்தியது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக வருவதன் மூலம் சிறிமாவின் அரசியல் பலத்தை முற்றாக முடக்கிவிடலாம் என்று அவர் எண்ணியிருந்தார். செளமியமூர்த்தி தொண்டைமான் அரசியல் யாப்புச் சீர்திருத்தத்தின் தெரிவுக்குழுவின் அங்கத்தவர்களின் விபரம் கார்த்திகை 3 ஆம் திகதி வெளியானது. த.ஐ.வி.மு இனரின் பிரதிநிதி எவரையும் இத்தெரிவுக்குழு கொண்டிராதபோதும், தொண்டைமான் இக்குழுவில் பங்கேற்றிருந்தார். இத்தெரிவுக்குழுவின் அங்கத்தவர் விபரங்கள், ஜே ஆர் ஜெயவர்த்தனா - தலைவர், ஆர் பிரேமதாசா, லலித் அத்துலத் முதலி, காமினி திஸாநாயக்கா, ரொனி டி மெல், கே. டபிள்யூ தேவநாயகம், எம் எச் எம் நைனா மரிக்கார், சிறிமாவோ பண்டாரநாயக்கா, மைத்திரிபால சேனநாயக்கா மற்றும் தொண்டைமான். அமிர்தலிங்கத்தை மையப்படுத்தி, மொத்த த.ஐ.வி. மு இனர் மீது மிகக்கடுமையான பிரச்சாரத்தை ஜே ஆர் கட்டவிழ்த்து விட்டிருந்தார். லேக் ஹவுஸ் பத்திரிக்கைகள், ரூபவாகினி எனப்படும் தேசியத் தொலைக்காட்சி, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் ஆகியவற்றைக் கைவசம் வைத்துக்கொண்டு ஜே ஆர் இந்தப் பிரச்சாரத்தை முடுக்கி விட்டிருந்தார். ஊடகத்துறையின் சுயாதீனமான செயற்பாட்டிற்காக முன்னர் குரல்கொடுத்த ஜே ஆர், ஆட்சிக்கு வந்தவுடன் அரச ஊடகத்துறையினை தனது சொந்த கருத்து வெளியிடும் சாதனங்களாக மாற்றினார். தனது முன்னாள் காரியதரிசி ரனபால பொடினாகொடவை லேக் ஹவுஸ் நிறுவனத்தின் தலைவராக அமர்த்தியதுடன், அவரூடாகவே பத்திரிக்கைத் துறையினைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். பொடினாகொட ஒவ்வொரு காலையிலும் ஜே ஆரின் வாசஸ்த்தலத்திற்குச் சென்று, ரூபவாகினி மற்றும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத் தலைவர்களுடன் ஜே ஆரைச் சந்தித்து, அங்கு ஜே ஆர் கூறும் செய்திகளை அப்படியே தத்தமது ஊடகங்களில் பிரச்சாரப்படுத்தி வருவது வழமையானது. ஆரம்பத்திலிருந்தே அமிர்தலிங்கமும், சிறிமாவோவுமே ஜே ஆரின் முக்கிய இலக்குகளாக இருந்து வந்தனர். அமிர்தலிங்கத்தை தட்டி, அடக்கிவைப்பது, சிறிமாவின் அரசியல் எதிர்காலத்தைச் சிதைப்பது ஆகிய இரண்டுமே ஜே ஆரின் குறிக்கோளாக அன்று இருந்தன. அமிர்தலிங்கத்திற்கெதிரான பிரச்சாரம் அவரை ஒரு பூதமாக சிங்களவர் மத்தியில் காட்டியதோடு, தமிழ் ஆயுதக்குழுக்களை பின்னாலிருந்து தூண்டிவிட்டு பிரிவினைவாதத்தை வளர்த்தெடுக்கும் ஒரு தமிழ் இனவாதியாகவும் சித்தரித்திருந்தார். அமிர்தலிங்கத்திற்கு இருபுறத்திலும் இருந்து அழுத்தம் பிரயோகிக்கப்பட்டிருந்தது. அவரது அன்றைய நிலையினை முன்னிறுத்தி அவரை 1978 ஆம் ஆண்டு ஐப்பசி 5 ஆம் திகதி பேட்டி கண்டேன். பாராளுமன்றத் தெரிவுக்குழுவைப் புறக்கணித்ததன் காரணம் ஜே ஆர் இன் ஜனாதி அதிகாரத்தை புறக்கணிப்பதாக அர்த்தப்படுத்தவில்லையென்றும், ஜே ஆர் ஜனாதிபதியாக இருந்தால் என்ன, பிரதமராக இருந்தாலென்ன, தமிழர்கள் அதுபற்றிக் கவலைப்பட்டிருக்கவில்லை என்றும் அவர் கூறினார். "உங்கள் முழு வீடுமே தீப்பிடித்து எரிந்துகொண்டிருக்கும்போது யன்னல்களின் திரச்சீலைக்கு என்ன வர்ணம் பூசுவது என்று உங்களால் கவலைப்பட முடியுமா? " என்று அவர் கேட்டார். மத்தளத்திற்கு இருபக்கமும் அடிபோல தனது நிலை இருப்பதாக இச்செவ்வியில் அவர் கூறினார். "நான் ஜே ஆரின் பக்கம் நிற்பதாக இளைஞர்கள் எண்ணி என்மீது விமர்சனம் செய்கிறார்கள். ஜே ஆரோ நான் இளைஞர்களின் பக்கம் நிற்பதாக நினைத்து என்மீது தாக்குதல் நடத்துகிறார்" என்று அவர் கூறினார். என்னிடம் தனிப்பட்ட ரீதியில் கூறும்போது, "இவர்கள் இருவரில், ஜே ஆரே மிகவும் ஆபத்தானவர், பழிவாங்கும் எண்ணம் கொண்டவர். நாம் அவரை பிழையான வழியில் அணுகினோம் என்றால், தமிழர்களை முற்றாக அழித்துவிடுவார்" என்றும் அவர் கூறினார். ஜே ஆரின் பழிவாங்கும் குணத்தைப்பற்றி நான் கேள்விப்படுவது இதுவே முதற்தடவையல்ல. 1950 களில் ஜோன் கொத்தலாவலை ஜே ஆரைப் பற்றிக் கூறும்போது, "புல்லுக்குள் மறைந்திருக்கும் பாம்பு" என்று விளித்திருந்தார். சிறிமா பலமுறை ஜே ஆர் ஐப் பழிதீர்க்கும் மனிதர் என்று அழைத்திருந்ததுடன், அவர் கையால் பலமுறை துன்பங்களுக்கும் ஆளாகியிருக்கிறார். தமிழர்களைப்பொறுத்தவரை 1977 ஆம் ஆண்டின் கலவரங்களைத் தூண்டிவிட்டது ஜே ஆரே என்று உறுதியாக நம்புகின்றனர். யாழ்ப்பாண மக்களால் தான் அவமானப்படுத்தப்பட்டதாக ஜே ஆர் கருதியதாலேயே தமிழினத்தை பலவீனப்படுத்தும் நடவடிக்கைகள் அவர் ஈடுபட்டு வருவதாக அவர்கள் உறுதியாக நம்பினர். ஜே ஆர் தான் அவமானப்படுத்தப்பட்டதாக நினைக்கும் சம்பவம் 1977 ஆம் ஆண்டுத் தேர்தல் காலத்தில் இடம்பெற்றிருந்தது. ஐ தே க வை ஆதரித்துப் பிரச்சாரம் செய்ய ஜே ஆர் யாழ்ப்பாண பிரச்சாக் கூட்டம் ஒன்றிற்கு போயிருந்தார். யாழ் முற்றவெளியில், துரையப்பா அரங்கிற்கு அருகில் தற்காலிக மேடையொன்று அமைக்கப்பட்டிருந்தது. ஜே ஆர் மேடையில் ஏறியபொழுது மேடை சரிந்து வீழுந்து குழப்பகரமான நிலையொன்றினை அங்கு ஏற்படுத்தியிருந்தது. ஜே ஆரும், மேடையில் அவருடன் இருந்தோரும் கீழே விழுந்தனர். அதன்பின்னர் கூட்டம் நிறுத்தப்பட்டது. இது தனக்கு ஏற்பட்ட பெருத்த அவமானமாக ஜே ஆர் கருதினார். மேடையினை பலவீனமாக்கிய செயலின் பின்னால் இருந்தவர்கள் தமிழ் ஈழ மாணவர் அமைப்பான ஈரோஸ் அமைப்பின் அன்றைய உறுப்பினர்களும், இன்று கொழும்பில் ஈ பி டி பி அமைப்பில் செயல்ப்பட்டு வருகிறார்களுமான சிலரே. என்னிடம் அவர்கள் இதுகுறித்து ஒருமுறை பேசியபோது, மேடையைச் சுற்றி நிலையாக நடப்படும் குற்றிகளை, அவை வீழ்ந்துவிடாமலிருக்கக் கட்டும் கயிற்றை தாம் அறுத்துவிட்டதனாலேயே மேடை சரிந்து வீழ்ந்ததாகக் கூறினர்.
  14. கொழும்பு திரும்பிய அமிர் ஆவணி 19 அன்று கொழும்பு திரும்பிய அமிர் பாராளுமன்ற ஒத்திவைப்புப் பிரேரணையில் பேசும்போது யாழ்ப்பாணத்தில் பொலீஸார் நடத்திவரும் அராஜக வன்முறைகளைப் பற்றி முறையிட்டார். இந்த விவாதத்தில் பேசிய அமிர், "என்னை நோக்கிச் சுடுவதற்காக பொலீஸார் துப்பாக்கியை நீட்டினர். இன்று நான் உயிருடன் இருப்பதே எனது அதிஷ்ட்டம் தான். அவர்கள் எல்லோருமே பொலீஸ் சீருடையில்த்தான் இருந்தார்கள், தம்மை அடையாளம் காண்பதைத் தவிர்த்துக்கொள்ள அவர்களது இலக்கங்கங்கள் சீருடையிலிருந்து அகற்றப்பட்டிருந்தன. எதற்காக அப்பாவிகளைக் கொல்கிறீர்கள் என்று நான் அவர்களை வினவியபோது என்னை தூஷண வார்த்தைகளால் வைததோடு, துப்பாக்கியின் பின்புறத்தாலும் அடித்தார்கள்" என்று கூறினார். இதனைக் கேட்டுக்கொண்டிருந்த சில ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள், "எங்கே, அந்த தூஷண வார்த்தைகளைச் சொல்லுங்கள் கேட்கலாம்" என்று ஏளமாக அமிரைப் பார்த்துக் கேட்டார்கள். "இல்லை சபாநாயகர் அவர்களே, இந்த கெளரவமான அவையில் அந்த அருவருக்கத்தக்க, இனவாதத் தூஷணச் சொற்களைக் கூறப்போவதில்லை. பாராளுமன்றத்தில் பேசப்பட முடியாத கீழ்த்தரமான சொற்கள் அவை" என்று அமிர் கூறினார். யாழ்ப்பாணத்தில் நடந்த வன்முறைகள் தொடர்பான விரிவான அறிக்கையொன்றினை அமிர் பாராளுமன்றத்தில் வழங்கியதோடு, இவற்றுக்கெல்லாம் காரணம் பொலீஸாரே என்பதையும் உறுதிப்படுத்தினார். பின்னர் பிரதமரைச் சுட்டிக்காட்டி, "இவ்வாறு வன்முறைகளில் ஈடுபடும் பொலீஸாரைக் கொண்டு ஒரு நாட்டினை எப்படி நடத்துவீர்கள்?" என்று அவர் கேட்டார். அதற்குப் பதிலளித்த ஜெயவர்த்தனா, "மிக அண்மைக்கலம் வரை போலீஸார் தமிழர்களிடமிருந்து தாக்குதலை எதிர்கொண்டே வந்திருக்கிறார்கள், ஆகவேதான் திருப்பித் தாக்கத் தொடங்கியிருக்கிறார்கள்" என்று கூறினார். ஒத்திவைப்புப் பிரேரணையில் இறுதியாகப் பதிலளித்துப் பேசிய ஜெயவர்த்தனா அமிர்தலிங்கத்தின் குற்றச்சாட்டுக்களைக் கடுமையாக மறுத்ததுடன், சினமேலீட்டுடன் பதிலளித்தார். புத்தூர் சம்பவம் பற்றிக் குறிப்பிட்ட ஜே ஆர், "என்ன துணிவிருந்தால் உங்கள் பையன்கள் எமது பொலீஸாரை நோக்கித் துப்பாக்கியை நீட்டுவார்கள்?" என்று கேட்டார். இலங்கையில் பிரிவினையினை உருவாக்க அமிர்தலிங்கம் முயல்கிறார் என்று ஜே ஆர் கூறியபோது பாராளுமன்றமே அதிரும்வகையில் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் ஆரவாரமிட்டனர். "இலங்கையில் தனியான நாடொன்றினை உருவாக்கப்போகிறார்கள், திருகோணமலையினையே அதற்குத் தலைநகராக்கப் போகிறார்கள் என்று கூறும்போது மக்கள் அமைதியிழக்கிறார்கள். திருக்கோணமலையினைக் கைப்பற்றினால் ஆசியாவுக்கான வாயில் திறக்குமென்று நெப்போலியன் கூறியதாகவும், அந்தத் திருகோணமலையினையே தமிழர்கள் தலைநகராக்கப்பார்க்கிறார்கள் என்றும் பத்திரிக்கைகளில் செய்திகள் வரும்போது சிங்களவர்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கப்போவதில்லை. அடுத்ததாக, நெப்போலியன் அப்படியொன்றைச் சொன்னார் என்பதைக்கூட நாம் நம்பவில்லை". "நீங்கள் வன்முறைகளில் ஈடுபடுவதில்லை என்று கூறிக்கொண்டே வன்முறைகளில் ஈடுபடும்போது நாட்டிலுள்ள ஏனைய மக்கள் இதற்கு எந்தவிதத்தில் பதிலளிப்பார்கள் என்று நீங்கள் கருதுகிறீர்கள்? உங்களுக்குச் சண்டைதான் வேண்டுமென்றால், வாருங்கள், தாராளமாகச் சண்டை செய்துபார்க்கலாம். உங்களுக்குச் சமாதானம் வேண்டுமென்றால், சமாதானம் செய்யலாம். தமிழர்களுக்கு நான் கூறவிரும்புவது இதைத்தான், சிங்கள மக்களும் இதைத்தான் சொல்கிறார்கள்" என்று ஜே ஆர் ஆவேசமாகக் கூறினார். ஆயிரக்கணக்கான தமிழர்கள் இடம்பெயரவும், அவர்களின் சொத்துக்கள் நாசமக்கப்படவும் காரணமாக இருந்த பொலீஸாரின் வன்முறைகள் பற்றி ஜே ஆர் சிறிதும் வருத்தமடையவில்லை. வேண்டுமென்றால், ஒரு விசாரணைக் கமிஷனை அமைக்கலாம், அதைவிட வேறு எதுவும் என்னால் செய்யமுடியாது என்று அவர் கையை விரித்து விட்டார். பாராளுமன்றத்தில் ஜே ஆரின் ஆக்ரோஷமான பேச்சினையடுத்து கொழும்பில் வன்முறைகள் வெடிக்க ஆரம்பித்தன. கொழும்பு, பாணதுறை, களுத்துறை ஆகிய பகுதிகளில் ஆவணி 19 அன்றிரவு வன்முறைகள் ஆரம்பித்திருந்தன. வீதிகளின் முக்கிய சந்திகளில் கூடிய சிங்கள மக்கள் கூட்டம் பொலீஸார் பார்த்திருக்க தமிழர்களின் வீடுகள் கடைகள் என்று ஒவ்வொன்றாகத் தேடித் தேடித் தாக்கத் தொடங்கியது. 1958 ஆம் ஆண்டுக் கலவரத்தைப் போலல்லாமல், இம்முறை தமிழர்களின் வீடுகளுக்குச் சென்ற சிங்களவர்கள் அங்கிருந்தவர்களை அடித்துத் துன்புறுத்தியதுடன், பலரைக் கொன்றதோடு, அவர்களின் வீடுகளைக் கொள்ளையடித்தபின் எரியுமூட்டினர். இந்தத் தாக்குதல்களின்போது சிங்களவர்கள் பல சைவக் கோவில்களையும் எரியூட்டியபடியே சென்றனர். கலகத்தைக் கட்டுப்படுத்துவதற்காக மறுநாளான ஆவணி 20 ஆம் திகதி மாலை 5 மணிக்கு அரசாங்கம் 35 மணிநேர ஊரடங்கு உத்தரவினைப் பிறப்பித்ததுடன் இராணுவத்தினரையும், கடற்படையினரையும் நகரங்களில் நிறுத்தியது. ஆவணி 22 ஆம் திகதியன்று ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படத் தொடங்கியதுடன் 30 ஆம் திகதி முற்றாக விலக்கிக்கொள்ளப்பட்டது. ஆவணி 29 அன்று வெளியான டெயிலி நியூஸ் பத்திரிக்கை இத்தாக்குதல்களில் 112 தமிழர்களே கொல்லப்பட்டதாகக் கூறியதோடு சுமார் 25,000 தமிழர்களின் வீடுகள் எரிக்கப்பட்டதாகவும், ஆயிரம் மில்லியன் ரூபாய்கள் பெறுமதியான தமிழரின் சொத்துக்கள் அழிக்கப்பட்டிருப்பதாகவும் செய்தி வெளியிட்டிருந்தது. ஆனால், சுயாதீன தரப்புக்கள், வைத்தியசாலைகளின் விபரங்களின்படி கொல்லப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை குறைந்தது 300 ஆவது இருக்கும் என்று கணிக்கப்பட்டதுடன் 30,000 தமிழர்கள் அகதிகளாக்கப்பட்டிருப்பதாகவும், 300 சைவக் கோவில்கள் எரியூட்டப்பட்டதாகவும் தெரியவந்தது. தெற்கின் பல இடங்களிலும் தமிழ் அகதி முகாம்களைத் திறந்த அரசாங்கம் அங்கிருந்த தமிழர்களை படிப்படியாக கப்பல்கள் மூலம் வடக்குக் கிழக்கிற்கு அனுப்பி வைத்தது. தமிழர்கள் கொல்லப்பட்டும் அவர்களது உடமைகள் சூறையாடப்பட்டும் உள்ளதை அறிந்தபோது தமிழ் மக்களும் இளைஞர்களும் கொதித்துப்போனார்கள். மேலும் வடக்கில் வாழ்ந்துவந்த சிங்களவர்கள் மீது பதில்த்தாக்குதல்கள் நடைபெறலாம் என்கிற வதந்தியும் அப்போது உலாவி வந்தது. ஆனால், வடக்கில் வாழ்ந்துவந்த எந்தச் சிங்களவர் மீதும் தாக்குதல்கள் நடத்தப்படாத போதிலும், பல வருடங்களாக வடக்கில் வாழ்ந்துவந்த சிங்களவர்கள் தமக்கு அருகிலிருந்து பொலீஸ் நிலையங்களில் அடைக்கலம் புகுந்தார்கள். சிங்கள மக்களுக்கான அகதி முகாம்களை பொலீஸார் சிங்கள மகா வித்தியாலயத்திலும், நாகவிகாரையிலும் திறந்திருந்தனர். இலங்கையில் தமிழர் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் தமிழ்நாட்டில் கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்ததுடன், அவர்களைக் கோபங்கொள்ளவும் செய்திருந்தது. தாக்குதல்களுக்கான தமது கடுமையான கண்டனத்தை தெரிவித்த தமிழ் நாடு பாராளுமன்றம், அப்போதைய பிரதமர் மொரார்ஜி தேசாய் உடனடியாக ஒரு அமைச்சரை இலங்கைக்கு அனுப்பி வன்முறைகள் பற்றிய விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டும் என்று கேட்டிருந்தது. ஆனால், ஜே ஆருடன் மிகவும் நெருக்கமான மொரார்ஜியோ, தனது வெளிவிவகார அமைச்சரின் மூலம் இந்தியாவின் கரிசணையினை தில்லியிலிருந்த இலங்கை உயர்ஸ்த்தானிகரிடம் கூறச் சொல்லிவிட்டு அமைதியாகிவிட்டார். சென்னையில் ஆளும் தி மு க அரசு தமிழர்களுக்கு ஆதரவு தேடி மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் ஒன்றினை ஒழுங்கு செய்திருந்தது. ஆர்ப்பாட்டத்தின் முடிவில் சென்னையில் அமைந்திருந்த இலங்கை பிரதி உயர்ஸ்த்தானிகரலாயத்தில் மனுவொன்றும் பேரணியில் கலந்துகொண்டவர்களால் கொடுக்கப்பட்டது. 1977 ஆம் ஆண்டின் தமிழர் மீதான சிங்களவர்களின் வன்முறைகள் இவ்விரு இனங்களுக்கிடையிலான உறவின் முக்கிய திருப்புமுனையாக அமைந்துவிட்டது. தமிழர் மீதான வன்முறைகள் பல்வேறு வழிகளில் நடத்தப்பட்டதுடன், கடுமையான பின்விளைவுகளையும் ஏற்படுத்தியிருந்தன. இந்த வன்முறைகளின் விளைவுகளை பின்வருமாறு சாராம்சப்படுத்தலாம், தமிழர்கள், குறிப்பாக இளைஞர்கள் ஜே ஆரின் மீது வைத்திருந்த நம்பிக்கையினை முற்றாக இழந்தனர் தமிழர்கள் இலங்கைப் பொலீஸார் வைத்திருந்த நம்பிக்கையினை இழந்ததுடன் அவர்களை சிங்களப் பொலீஸார் என்று அழைக்கவும் ஆரம்பித்தனர் தனிநாட்டிற்கான தேவை மேலும் மேலும் உறுதியடைந்தது மிதவாதத் தலைவர்கள் தமிழ் மக்கள் மீது கொண்டிருந்த செல்வாக்கு பாரிய வீழ்ச்சியைக் காண, ஆயுத அமைப்புக்கள் மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெறத் தொடங்கின பிரபாகரனின் சுலோகமான திருப்பியடி எனும் கொள்கை மக்களிடையே வரவேற்பினைப் பெறத் தொடங்கியது தமிழர்களின் பிரச்சினையில் தமிழ்நாடும், இந்தியாவும் உள்வாங்கப்பட்டன மிதவாதிகள் இலக்குவைக்கப்பட்டார்கள்
  15. இதைத்தானே நானும் சொல்கிறேன். ஆக்கிரமிக்கப்பட்டு இனவழிப்புச் செய்யப்படும் அந்த மக்களின் அவலங்களில் எனது மக்களின் அவலங்களை நான் பார்க்கிறேன். எனக்கு ஏனைய சக்திகள் பற்றிக் கவலையில்லை.
  16. அமெரிக்காவேதான், அதில் என்ன சந்தேகம்?
  17. உங்களின் ஆதரவிற்கு நன்றி. ஆனால், நான் எழுதுவது பச்சைக்காக அல்ல, எமது போராட்டம் பற்றிய விடயங்கள் எங்காவது ஒரு இடத்தில் பதியப்பட்டிருக்கவேண்டும் என்பதற்காகத்தான்.
  18. இலங்கைக்குத் தேவையான அத்தனை ஆயுதங்களையும் ரஸ்ஸியா வழங்கும் - செர்கே லவ்ரோவ், ரஸ்ஸிய வெளிநாட்டமைச்சர் https://www.tamilguardian.com/content/russia-supply-sri-lanka-all-weapons-they-need https://www.ndtv.com/world-news/russia-backs-lankan-war-against-ltte-391267
  19. Military ties Russia helped Sri Lanka to obtain Russian based weapons from several countries throughout the past 30 years. Examples of this would be Mikoyan-Gurevich MiG-27, Mil Mi-17 used by Sri Lanka Air Force and T-54/55 battle tanks, BTR-80 APC used by Sri Lanka Army.
  20. உங்களிடமிருந்து இப்படியொன்றை எதிர்பார்க்கவில்லை பையன். விலகியிருங்கள் என்று கேட்பது நியாயமா? எனக்கிருக்கும் ஒரே நாயகன் வேலுப்பிள்ளை பிரபாகரன் தான். அவரைத்தவிர வேறு எவரையும் அடைமொழி வைத்துப் பேச மனம் இடம்கொடுப்பதில்லை. இங்கே அமெரிக்காவுக்கு எதிர்ப்பைக் காட்ட இனக்கொலையாளி ஒருவனை மாண்புமிகு என்று கெளரவப்படுத்தும் அநாகரீகத்தைத்தான் நான் கேள்வி கேட்டேன். நான் என்னை எப்படித் தாழ்த்திவிட்டேன், எவரது கண்ணோட்டத்தில் நான் தாழ்த்தப்பட்டேன் என்று நான் கவலைப்படவில்லை. எனக்குச் சரியென்று பட்டதை எழுதுகிறேன். விலகியிருங்கள் என்றோ, உங்களைத் தாழ்த்தவேண்டாம் என்றோ கூறுவது நியாயமா?
  21. எனக்கொரு சந்தேகம் கிருபன் ஜி, ஒரு நாடு தனது பாதுகாப்பைப் பலப்படுத்த அயல்நாடுகளை அடாத்தாக ஆக்கிரமிக்கலாம், அந்த மக்களையும் தேவையானளவு கொல்லலாம் என்று நம்மவர்கள் கூறும் நிலைக்கு வந்திருக்கிறோம். இது இப்போது ரஸ்ஸியாவையும் தாண்டி, இந்தியா இலங்கை என்று வந்து நிற்கிறது. அதாவது இந்தியா தனது பாதுகாப்பை உறுதிப்படுத்த ஈழத்தமிழினத்தைப் பகடைக் காயாக்கி அழிக்கலாம், ஏனென்றால் அது இந்தியாவின் பாதுகாப்போடு சம்பந்தப்பட்ட விடயம் என்பதால் ஈழத்தமிழர்களில் சிலரே அதனை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறார்களாம், அதுதான் உலக நியதியாம். அவர்கள் இனிச் சொல்லக் காத்திருக்கும் விடயம் இலங்கையின் பாதுகாப்பைப் பேணுவதற்கு ஈழத்தமிழர் மேல் இனவழிப்பொன்றினைச் (இன்று ரஸ்ஸியா உக்ரேனில் செய்வதுபோல) செய்து, முற்றான ஆக்கிரமிப்பின் கீழ் வைத்திருப்பது நியாயமானது, ஏனென்றால் அதுதான் உலக நியதி என்று சொல்வது மட்டும்தான். சரி, சந்தேகத்திற்கு வருகிறேன். மாண்புமிகு எனும் கெளரவப் பதத்தினை விட்டு விட்டு இனிமேல் "மேதகு" என்று சொன்னால் நன்றாக இருக்குமோ இல்லையோ? ஏனென்றால், இப்போது வேலுப்பிள்ளை பிரபாகரனைக் காட்டிலும் விளாடிமிர் புட்டினே நாயகனாக ஈழத்தமிழருக்குத் தெரிகிறார், அதனால் கேட்டேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ஜி?
  22. பொலீஸாரின் வன்முறை தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரின் பாராளுமன்றக் குழுவிற்கெதிராக இளைஞர்கள் தமது செயற்பாடுகளை அதிகரிக்கத் தொடங்க இலங்கை வரலாற்றில் முதலாவது பொலீஸ் அட்டூழியத்தினை யாழ்ப்பாணக் குடாநாடு கண்டது. அது ஒரு சிறிய சம்பவமாகவே ஆரம்பித்தது. பொலீஸார் பேரூந்துகளில் பயணம் செய்யும்போதோ அல்லது களியாட்ட நிகழ்வுகளுக்குச் செல்லும்போதோ அனுமதிச் சீட்டினை வாங்குவதில்லை என்பது பொதுவான நடைமுறையாகவே இருந்துவந்தது. அதன்படி, ஆவணி 2 ஆம் திகதி யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரியில் இடம்பெற்ற கார்னிவல் நிகழ்வுக்கு சிவில் உடையில் பொலீஸாரின் குழுவொன்று சென்றிருந்தது. புனித பத்திரிசியார் கல்லூரி, யாழ்ப்பாணம் கண்பார்வையற்றவர்களுக்கான மருத்துவ உபகரணங்கள் மற்றும் யாழ்ப்பாண புற்றுநோய் வைத்தியசாலைக்கான உபகரணங்கள் என்பவற்றுக்காக நிதிசேகரிப்பு நிகழ்வே அன்று புனித பத்திரிசியார் கல்லூரியில் நடைபெற்றுக்கொண்டிருந்தது. வாயிற்கடமையில் ஈடுபட்டிருந்த காவலர்கள் சிவிலுடையில் வந்த பொலிஸார் நுழைவுச் சீட்டினை வாங்கினால் ஒழிய உள்ளே அனுமதிக்க முடியாது என்று கூறிவிட்டனர். சில நேர வாக்குவாதங்களுக்குப் பின்னர் பொலீஸார் நுழைவுச் சீட்டுக்களை வாங்கினர். உள்ளே நுழைந்து மதுபானங்களை அருந்திவிட்டு, வெளியே போகும் போது வாயிலில் கடமையிலிருந்தவர்கள் மீது கடுமையான தாக்குதலினை அவர்கள் மேற்கொண்டனர். அந்த களியாட்ட நிகழ்வினை ஒழுங்குசெய்தவர்களில் ஒருவரான வைத்தியர் பிலிப்ஸ் அவர்கள் பொலீஸ் உயரதிகாரிகளைத் தொடர்புகொண்டு பொலீஸ் கொன்ஸ்டபிள்களை களியாட்ட நிகழ்வுக்கு அனுமதிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். ஆனால், மறுநாள் ஆவணி 13 அன்று யாழ்ப்பாணத்தின் ஏனைய பொலீஸ்நிலையங்களிலிருந்து இந்த நிகழ்வுக்குச் சென்ற பல பொலீஸார் மதுபோதையில் பொதுமக்களுடன் கடுமையான கைகலப்பில் ஈடுபட்டனர். சீருடையில் அங்கு சென்றிராத பொலீஸார் மீது திருப்பித் தாக்கிய பொதுமக்கள் அவர்களை அங்கிருந்து விரட்டிவிட்டனர். இதற்குப் பதிலடியாக வன்முறையில் இறங்கிய பொலீஸார் மறுநாள், ஆவணி 14 ஆம் திகதி தமது பொலீஸ் நிலையங்களிலிருந்து வெளியே வந்து வீதிகளில் சென்றுகொண்டிருந்த பொதுமக்கள் மீது கண்மூடித்தனமாகத் தாக்கத் தொடங்கினர். சைக்கிள்களில் சென்றவர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டதுடன், அவர்கள் தமது சைக்கிள்களைக் காவிச் செல்லுமாறு நிர்ப்பந்திக்கப்பட்டனர். புத்தூர்ப் பகுதியில் சைக்கிள்களில் சென்றுகொண்டிருந்த மூன்று இளைஞர்களை வழிமறித்து பொலீஸார் தாக்கத் தொடங்கவே ஒரு இளைஞர் தான் மறைத்துவைத்திருந்த கைத்துப்பாக்கியினால் பொலிஸார் மீது சுடவும் ஒரு பொலீஸ்காரருக்குத் தொடையில் காயம் பட்டது. மறுநாளான ஆவணி 15 அன்று யாழ்ப்பாணப் பொலீஸ் நிலையத்திலிருந்து புறப்பட்ட பொலீஸ் குழுவொன்று தம் கண்ணில் பட்டவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்யத் தொடங்கியது. இத்துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் 4 தமிழர்கள் கொல்லப்பட்டதுடன் மேலும் 21 பேர் காயமடைந்தனர். தமது துப்பாக்கிச் சூட்டினை நியாயப்படுத்திய பொலிஸார், ஆயுதம் தரித்த இளைஞர்களிடமிருந்து ஆயுதங்களைத் தாம் களைய எத்தனித்தபோது அவர்கள் எதிர்த்தமையினாலேயே தாம் துப்பாக்கிப் பிரயோகம் செய்யவேண்டி ஏற்பட்டதாக அது கூறியது. யாழ்ப்பாணப் பாராளுமன்ற உறுப்பினர் வி. யோகேஸ்வரன் இத்தாக்குதல் தொடர்பாக கொழும்பு பொலீஸ் தலைமைச் செயகலத்தில் முறையிட்டபோதும், பொதுமக்கள் மீதான தாக்குதல்களை பொலீஸார் நிறுத்தவில்லை. ஆவணி 16 இலும் பொலீஸாரின் தாக்குதல்கள் தொடர்ந்தன. டிரக் வண்டிகளில் யாழ்ப்பாணவீதிகளில் வலம் வந்த பொலிஸார் கடைகளுக்குத் தீவைத்துக்கொண்டே சென்றனர். ஆவணி 17 ஆம் திகதி யாழ்ப்பாணம் பொலீஸ் நிலையத்திலிருந்து புறப்பட்ட பொலீஸ் அணி யாழ்ப்பாணம் சந்தைக்கும் அருகிலிருந்த வியாபார நிலையங்களுக்கும் தீவைத்துக்கொண்டு சென்றது. சந்தையின் ஒருபகுதி முற்றாக எரிந்துபோக பல கடைகளும் முற்றாக எரிந்து நாசமாகின. வீதியில் சென்ற தமிழர்கள் மீது பொலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அன்றும் இரு தமிழர்கள் கொல்லப்பட்டனர். இச்சம்பவங்கள் ஆரம்பித்த வேளை அமிர்தலிங்கம் கொழும்பிலேயே தங்கியிருந்தார். ஆனால், பொலீஸாரின் வன்முறைகள் தொடர்ந்ததையடுத்து ஆவணி 17 அன்று இரவு யாழ்ப்பாணம் வந்த அவர், மறுநாள் காலை, எரிந்துபோன யாழ்ப்பாணச் சந்தைப்பகுதியினைச் சென்று பார்வையிட்டார். சந்தைப்பகுதியில் நின்றுகொண்டிருந்த பொலீஸ் அத்தியட்சகரைக் கண்ட அமிர்தலிங்கம் அவர் அருகில் சென்று "ஏன் அப்பாவிகளைக் கொல்கிறீர்கள்?" என்று கோபத்துடன் கேட்கவும், அந்த அதிகாரி அமிர்தலிங்கத்தை தகாத வார்த்தைகளால் வையத் தொடங்கினர். அந்த அதிகாரியின் பின்னால் நின்றிருந்த இன்னொரு பொலீஸ் கொன்ஸ்டபிள், தான் வைத்திருந்த துப்பாக்கியின் பிடியால் அமிர்தலிங்கத்தின்மீது தாக்குதல் நடத்தத் தொடங்கினான். தமிழ் மக்கள் மீது பொலீஸார் யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்துவைத்த வன்முறைகள் தெற்கிற்கும் பரவத் தொடங்கின. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பயின்றுவந்த சிங்கள மாணவர்கள் கலவரத்தைத் தூண்டிவிட, பொலீஸார் வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்றனர். 1964 ஆம் ஆண்டிலிருந்து தமிழ் - சிங்கள நல்லுறவை வளர்க்கவென்று வருடா வருடம் ஒருதொகை சிங்கள மாணவர்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு அனுமதிக்கப்பட்டு வந்தார்கள். ஆனால், தமது வாழிடங்களிலிருந்தான தொலைவு, புதிய சமூகம், மொழி, மதம், பழக்கமில்லா கலாசாரம் என்பவற்றிற்காக சிங்கள மாணவர்கள் தாம் யாழ் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாவதை விரும்பியிருக்கவில்லை. ஆகவே தமது வீடுகளுக்கு அண்மையாக கொழும்பு, பேராதனை, வித்யோதயா மற்றும் வித்யாலங்கார ஆகிய பகுதிகளில் இயங்கும் பல்கலைக்கழகங்களுக்கு மாற்றம் பெற்றுச் செல்லவே அவர்கள் முயன்று வந்தனர். அதைவிடவும் 1977 ஆம் ஆண்டு இன்னொரு தனியான சம்பவம் ஒன்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நடந்திருந்தது. தமிழ் மாணவி ஒருவரை சில சிங்கள மாணவர்கள் சீண்டியதையடுத்து, அம்மாணவியின் உறவினர்கள் அந்தச் சிங்கள மாணவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டிருந்தனர். இதுவும் ஒரு காரணம் சிங்கள மாணவர்கள் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தினை வெறுத்ததற்கு. ஆகவே, நடந்துவந்த வன்முறைகளைப் பாவித்து தாம் வீடுசெல்ல முடிவெடுத்தனர் சிங்கள மாணவர்கள். யாழ்ப்பாணத்தில் நிலவிவந்த வன்முறைச் சூழலினால் தமது உயிருக்கு அச்சுருத்தல் ஏற்பட்டுள்ளதால், தாம் உடனடியாக வீடு செல்லவேண்டும் என்று அவர்கள் கேட்டனர். ஆகவே, இந்த சிங்கள மாணவர்கள் விசேட பேரூந்துகளில், பலத்த பொலீஸ் பாதுகாப்புடன் ஆவணி 17 ஆம் திகதி அநுராதபுரத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அநுராதபுரத்தினை இப்பேரூந்துகள் அடைந்தவுடன், அம்மாணவர்களின் தலைவனான ஒருவன் பேரூந்தின் கூரையின் மீது ஏறி தன் முன்னே திரண்டிருந்த சிங்கள மக்கள் கூட்டத்தை நோக்கி "யாழ்ப்பாணத்தில் தமிழர்கள் சிங்களவர்களைத் தாக்குகிறார்கள்" என்று கூக்குரலிடத் தொடங்கினான். மாணவனின் பேச்சைக் கேட்டு வெறியேறிய அந்தச் சிங்களக் கூட்டம் உடனடியாக வன்முறைகளில் இறங்கியது. அநுராதபுரத்தில் வாழ்ந்துவந்த பல தமிழர்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டு, பல வியாபார நிலையங்கள் சூறையாடப்பட்டபின் தீக்கிரையாக்கப்பட்டன. தெருக்களிலும் வீடுகளிலும் தமிழர்கள் தேடித்தேடித் தாக்கப்பட்டார்கள். தமிழர் மீதான தாக்குதல்களை பொலீஸார் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டனர். உயிரச்சம் காரணமாக பொலீஸ் நிலையங்களை நாடி ஓடிவந்த பல தமிழர்களை பொலீஸார் விரட்டியடித்தனர். பொலீஸாரே தமிழர்களை எதிரிகளாக நடத்தத் தொடங்கினர். ஆவணி 18 ஆம் அன்று தமிழருக்கெதிரான வன்முறைகள் குருநாகல, மாத்தளை மற்றும் பொலொன்னறுவை ஆகிய மாவட்டங்களிலும், ஆவணி 19 ஆம் திகதி கண்டி மற்றும் ஏனைய மலையகப் பகுதிகளிலும் கட்டவிழ்த்து விடப்பட்டன.
  23. மிதவாதிகளால் புறக்கணிக்கப்பட்ட மக்கள் ஆணை எதிர்க்கட்சித் தலைவர் ரொனி டி மெல், அமிர்தலிங்கம், ஜெயவர்த்தன, ஆனந்த திஸ்ஸ டி அல்விஸ் - பாராளுமன்ற விருந்துபசாரத்தின்போது 1975 ஆம் ஆண்டு, மாசி மாதம் 6 ஆம் திகதி நடத்தப்பட்ட காங்கேசந்துறை இடைத்தேர்தல்க் காலத்திலிருந்தே வடக்குக் கிழக்கு மக்கள் தமது சொந்தத் தாயகத்தில் தம்மைத் தாமே ஆளும் வகையில் தனியான நாடொன்று தமக்குத் தேவை என்பதைத் தொடர்ச்சியாகவகே பிரகடணம் செய்து வந்திருக்கிறார்கள். தந்தை செல்வா தனது தேர்தல் வெற்றிப் பேச்சில் கூறியதுபோல, தமிழர்கள் தமது விருப்பை மிகத் தெளிவாக வெளிப்படுத்திவிட்டார்கள். தமது விருப்பத்தை 1976 ஆம் ஆண்டு வைகாசி மாதம் 14 ஆம் திகதியன்று நடைபெற்ற வரலாற்று முக்கியத்துவம் மிக்க வட்டுக்கோட்டைத் தீர்மானத்தில் மீண்டும் தெளிவுபடுத்திய தமிழ் மக்கள், 1977 ஆம் ஆன்டுப் பொதுத் தேர்தலில் தமது விருப்பினை மக்கள் ஆணையின்மூலம் மீண்டும் உறுதிப்படுத்தியிருந்தார்கள். வட்டுக்கோட்டைப் பிரகடணத்தின் பின்னரான காலப்பகுதியில் பிரதமர் சிறிமாவைச் சந்தித்த தந்தை செல்வா அவர்கள் தனியான நாடு எனும் தமது நிலையிலிருந்து தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி எந்த விட்டுக்கொடுப்பினையும் செய்யாது என்று திட்டவட்டமாகக் கூறியிருந்தார். அதேபோன்றே அமிர்தலிங்கமும் தனது தேர்தல் வெற்றிப் பேச்சில் தந்தை செல்வாவின் நிலைப்பாட்டினை "எமது இலட்சியமான ஈழத்தை அடையும் வரை முன்னோக்கிச்ச் செல்வோம்" என்று கூறியதன் மூலம் மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தினார். தனிநாட்டிற்கான போராட்டத்தினை ஆரம்பிக்கப்போவதாக தனது தேர்தல் வெற்றிப் பேச்சில் சூளுரைத்த அமிர்தலிங்கமும், ஏனைய தமிழர் ஐக்கிய முன்னணியின் தலைவர்களும் சரியாக ஏழு நாட்களின் பின்னர் தாம் கொடுத்த வாக்குறுதிகளிலிருந்து பின்வாங்க முடிவெடுத்தனர். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியே இரண்டாவது அதிகூடிய ஆசனங்களைப் பெற்ற கட்சியாக இருந்தமையினால் எதிர்க்கட்சித் தலைவர் எனும் பொறுப்பு அவர்களின் மடியில் தானாகவே வந்து வீழ்ந்தது. அப்பதவியினை இழக்க அக்கட்சியினர் சிறிதும் விரும்பவில்லை. அந்தப் பதவிக்காக தமது இலட்சியமான தனிநாடு நோக்கி முன்னெறுவேம் என்று மக்களுக்குக் கொடுத்த சத்தியத்தைப் பிற்போட அவர்கள் முடிவெடுத்தனர். தேர்தலின் மொத்தப் பெறுபேறுகளும் வெளிவந்த நாளான ஆடி 23 ஆம் திகதியன்று எதிர்க்கட்சித் தலைவர் எனும் பொறுப்பினை ஏற்றுக்கொள்வதென்று கட்சி உத்தியோகபூர்வமாக முடிவெடுத்தது. யாழ்ப்பாணத்தின் கட்சி அலுவலகத்தில் கூடிய அமிர்தலிங்கம், சிவசிதம்பரம், கதிரவேற்பிள்ளை, யோகேஸ்வரன் மற்றும் ஆனந்தசங்கரி ஆகியோர் அடங்கிய குழு இந்த முடிவினை எடுத்திருந்தது. இக்கூட்டத்தில் பேசிய கதிரவேற்பிள்ளை பின்வருமாறு கூறினார், "இது எமக்குக் கிடைத்திருக்கும் ஒரு பொன்னான சந்தர்ப்பம். இதனை நாம் தவறவிடக் கூடாது" என்று மற்றையவர்களுக்கு அழுத்தம் கொடுத்துக்கொண்டிருந்தார். அமிர்தலிங்கமோ சிறிது தயங்கியவராகக் காணப்பட்டார். தமது இந்த முடிவிற்கு இளைஞர்களின் எதிர்வினை எப்படியாக இருக்குமோ என்று பயந்தார். "நாம் இளைஞர்களின் உணர்வுகுறித்து மிகவும் அவதானமாக இருக்க வேண்டும்" என்று அவர் கூறினார். வழக்கமாக இளைஞர்களை அழைக்கும் "பையன்கள்" எனும் சொல்லிற்குப் பதிலாக "பெடியன்கள்" எனும் சொல்லை அவர் அங்கு பாவித்தார். அதற்குப் பதிலளித்த சிவசிதம்பரம், "அவர்கள் சில நாட்களுக்குக் கத்துவார்கள், அதன்பின்னர் எல்லாம் அடங்கிவிடும்" என்று ஏளனமாகக் கூறினார். ஆடி 30 அன்று, வவுனியா நகரசபை மண்டபத்தில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரின் அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்ற கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியினை ஏற்றுக்கொள்வதான தீர்மானம் மேலும் உறுதிப்படுத்தப்பட்டது. கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களின் தலைவராக அமிர்தலிங்கமும், உப தலைவராக சிவசிதம்பரமும் தெரிவுசெய்யப்பட்டார்கள். தலைவர்கள் தேர்வின் பின்னர், எந்தவித கேள்விகளுமின்றி, கட்சியின் அனைத்து உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவோடு எதிர்க்கட்சித் தலைவர்ப் பொறுப்பை ஏற்றுக்கொள்வது என்று முடிவாகியது. இதனை அறிந்தபோது இளைஞர்கள் கொதிப்படைந்தனர். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் இளைஞர் அணி இம்முடிவுக்கெதிராக கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டதுடன் மக்கள் ஆணைக்கு எதிராகக் கட்சித் தலமைப்பீடம் செயற்படுவதாகவும் விமர்சித்தனர். மக்களுக்கு வழங்கிய ஆணையின் பிரகாரம் இந்தப் பாராளுமன்றக் குழு தனி ஈழத்திற்கான பாராளுமன்றக் குழுவினை உருவாக்கி, தமிழ் ஈழத்திற்கான அரசியல் யாப்பினை வரைந்து, தனிநாடு நோக்கிய பயணத்தினை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் என்று கேட்டிருந்தது. இக்கண்டனங்களுக்கு அறிக்கை ஒன்றின்மூலம் பதிலளித்த கதிரவேற்பிள்ளை பின்வருமாறு கூறியிருந்தார், "எமது பாராளுமன்றக் குழு பாராளுமன்றத்தினை தனிநாட்டிற்கான பிரச்சாரத்தைச் செய்யும் களமாகப் பாவிக்கும்". ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவைக்கு செவ்வியொன்றினை வழங்கிய அமிர்தலிங்கம் தமது முடிவிற்கான மேலும் இரு காரணங்களை முன்வைத்தார். எதிர்க்கட்சித் தலைவர் எனும் பதவியின் வாயிலாக தமிழர்கள் தமது செய்தியினை முழு உலகிற்கும் தெளிவாகச் சொல்லும் சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. அத்துடன் சர்வதேச அளவில் முக்கிய அமைப்புக்களுடனும், தனிநபர்களுடனும் தொடர்புகொள்ளும் சந்தர்ப்பத்தினையும் இப்பதவி வழங்கியிருக்கிறது என்றும் அவர் தமது முடிவினை நியாயப்படுத்தினார். ஆவணி 3 ஆம் அதிகதி, தொண்டைமானின் வாசஸ்த்தலத்தில் மீண்டும் கூடிய பாராளுமன்றக் குழு, மறுநாள் நடைபெறவிருந்த பாராளுமன்றத்தின் உத்தியோகபூர்வ ஆரம்பநாள் நிகழ்வுகளில் பங்கேற்பது என்று எடுத்த முடிவு இளைஞர்களுக்கு மேலும் கோபத்தினை ஏற்படுத்தியிருந்தது. புதிதாகப் பதவியேற்கும் பிரதமர் ஜெயவர்த்தனேயுடன் சிநேகபூர்வமாக பணிபுரிந்து, அவருக்குத் தேவையான கால அவகாசத்தினை வழங்குவதற்காக தனிநாட்டிற்கான கோரிக்கையின அப்போதைக்கு தள்ளிவைக்கலாம் என்று தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் எடுத்த தீர்மானமே இளைஞர்களுக்கு அதிக சினத்தினை ஏற்படுத்தியிருந்தது. ஆவணி 4 ஆம் திகதி சபாநாயகரைத் தெரிவுசெய்யும் வாக்கெடுப்பிற்காக பாராளுமன்றம் கூடியவேளை, அமிர்தலிங்கம் எதிர்க்கட்சித் தலைவர் ஆசனத்தில் அமர்ந்திருந்தார். அவரது கட்சியின் அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களும் 1972 ஆம் ஆண்டின் குடியரசு யாப்பினை முற்றாக ஏற்றுக்கொள்வதாக அதன் மீது சத்தியம் செய்து தமது பாராளுமன்றப் பொறுப்புக்களை அன்று காலை ஏற்றுக்கொண்டதோடு, சபாநாயகருக்கான வாக்கெடுப்பிலும் கலந்துகொண்டனர். பின்னர் பிரதமராகத் தெரிவுசெய்யப்பட்ட பிரேமதாசா, ஆனந்த திஸ்ஸ டி அல்விஸின் பெயரை சபாநாயகர் பதவிக்குப் பிரேரிக்க, எதிர்க்கட்சித் தலைவரான அமிர்தலிங்கம் அதனை வழிமொழிந்தார். பின்னர் பிரேமதாசாவும், அமிர்தலிங்கமும் புதிதாகத் தெரிவுசெய்யப்பட்ட சபாநாயகரை அழைத்துச் சென்று சபாநாயகர் ஆசனத்தில் அமரவைத்தனர். சபாநாயகரிடம் அப்போது பேசிய அமிர்தலிங்கம், தானும், தனது கட்சியும் பாராளுமன்ற நடவடிக்கைகள் ஒழுங்காக நடந்தேறுவதற்கு சபாநாயகருக்குத் தம்மாலான முழு ஆதரவினையும் வழங்குவதாகவும், அவ்ருடன் ஒத்துழைத்துச் செயற்படத் தயாராக இருப்பதாகவும் உறுதியளித்தார். 1957 ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட தனிச்சிங்களச் சட்டத்திற்கெதிராக தமது கண்டனத்தைப் பதிவு செய்யும் முகமாக அதுவரை பாராளுமன்ற திறப்பு நிகழ்வில் பங்கேற்பதனைப் புறக்கணித்து வந்த தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர், சுமார் 20 ஆண்டுகளுக்குப் பின்னர் அன்று நடைபெற்ற பாராளுமன்ற உத்தியோகபூர்வ திறப்பு நிகழ்வில் கலந்துகொண்டனர். அமிர்தலிங்கத்தின் ஒத்துழைப்பிற்கு நன்றியுடன் பதிலளித்த ஜெயவர்த்தனா தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தான் குறிப்பிட்ட தமிழ் மக்களின் பிரச்சினைகள் எனும் பதத்தினை நினைவுகூர்ந்தார். தமது செயற்பாடுகளால் இளைஞர்கள் கடுமையான அதிருப்தியில் இருக்கிறார்கள் என்பதனை நன்றாகப் புரிந்திருந்த அமிர்தலிங்கம், ஆவணி 7 ஆம் திகதி அவர்களின் சீற்றத்தினைத் தணிக்கும் முகமாக அறிக்கயொன்றினை வெளியிட்டார். அமிர்தலிங்கத்தின் ஒத்துழைப்பிற்கு பிரதியுபகாரமாக ஜெயவர்த்தனா எதிர்க்கட்சித் தலைவர் எனும் பதவிக்கு தகுந்த கெளரவத்தினை வழங்கினார். அமிர்தலிங்கத்திற்கு உத்தியோகபூர்வ வாசஸ்த்தலம், பொலீஸ் பாதுகாப்பு, உத்தியோகபூர்வ மோட்டார் வண்டி, காரியதிரிசி எனபன ஜெயவர்த்தனவினால் வழங்கப்பட்டன. அரசியல் தந்திரத்தில் மிகவும் சூட்சுமமானவராகத் திகழ்ந்த ஜெயவர்த்தனா அமிர்தலிங்கத்திற்கும், அவரது கட்சிக்கும் தொடர்ச்சியான சலுகைகளை வழங்குவதன் மூலம் தனிநாட்டிற்கான அவர்களது இலட்சியத்தை அவர்களாகவே கைவிட்டுவிட திட்டமிட்டுச் செயற்பட்டு வந்தார். அமிர்தலிங்கம் தொடர்ந்தும் சிங்களவர்களுடன் ஒத்துழைத்துச் செயற்படுவதை உறுதிப்படுத்தும் அனைத்து நடவடிக்கைகளையும் ஜெயவர்த்தனா எடுத்தார். தமது கண்முன்னே நடந்துகொண்டிருக்கும் ஏமாற்றுவேலையினை இளைஞர்கள் தெளிவாகப் புரிந்துகொண்டனர். அதுவரை தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் மீது இருந்த அதிருப்தி மொத்தமாக அமிர்தலிங்கம் மீது திரும்பியது. இளைஞர்களால் யாழ்ப்பாணதில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன, "கேட்டது தமிழ் ஈழம், கிடைத்தது எதிர்க்கட்சித் தலைவர் பதவி" என்று வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகள் யாழ் நகரில் பரவலாக ஒட்டப்பட்டன. மேலும், தமிழ் மக்கள் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி மீது வைத்திருந்த நம்பிக்கைக்கு அக்கட்சியினர் துரோகமிழைத்து ஏமாற்றிவிட்டார்கள் என்கிற துண்டுப்பிரசுரங்களையும் இளைஞர்கள் விநியோகித்தனர். ஒரு துண்டுப்பிரசுரம் பின்வருமாறு கேள்விகேட்டிருந்தது, "தமிழ் ஈழத்தின் தேசிய பாராளுமன்றத்திற்கு என்ன நடந்தது?" என்றும் "மக்கள் உங்களுக்குத் தந்த ஆணையினை உடனடியாக நடைமுறைப்படுத்துங்கள்" என்று தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரின் தலைமையினையும் கேட்டிருந்தது.
  24. இது ஒரு முக்கியமான வழக்கு. சிங்களவர்களால் வணங்கப்பட்டு வருகின்ற, அதீத மரியாதைக்குரிய, எந்த அதிகாரத்திற்கும் உட்படாத , நீதித்துறைக்கு அப்பாற்பட்ட இராணுவத்திற்கெதிராக இவ்வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. இதே கோத்தாவின் ஆட்சியென்றால், ஒன்றில் இந்த வழக்கே ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்காது, அல்லது வழக்கினைத் தாக்கல் செய்தவர்கள் விரைவில் கொல்லப்படுவார்கள். ஆனால் என்ன, இவ்வழக்கும் மிக விரைவில் நீதிமன்றத்தால் தூக்கி வீசப்பட்டுவிடும். சிங்கள பெளத்தநாட்டில் இராணுவத்திற்கெதிராகக் கேள்விகேட்கும் உரிமை எவருக்குமே இல்லை என்பது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்படப்போகின்றது.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.