Everything posted by ரஞ்சித்
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
மக்கள் விடுதலை முன்னணியின் கலகம் சித்திரை ஐந்தாம் திகதி மக்கள் விடுதலை முன்னணியினர் தமது தாக்குதல்களை மொனராகலைப் பகுதியிலும், வெல்லவாயாப் பகுதியிலும் ஆரம்பித்தனர். மாலையே அரம்பிக்க திட்டமிடப்பட்ட தாக்குதல்கள், தவறான தொடர்பாடலினால் முன்னரேயே அரம்பித்து விட்டிருந்தது. சித்திரை 2 ஆம் திகதி வித்யோதய சங்கராமய எனும் பெளத்த விகாரையில் கூடிய மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர்கள் நாடுதழுவிய ரீதியில் தமது தாக்குதல்களை சித்திரை 5 ஆம் திகதி மாலை 5 மணிக்கு நாட்டிலுள்ள அனைத்து ராணுவ மற்றும் பொலீஸ் நிலையங்கள் மீதும் ஒரே நேரத்தில் ஆரம்பிப்பதென்று முடிவெடுத்திருந்தார்கள். சங்கேத மொழியில் அனுப்பப்பட்ட தந்தி ஒன்றில் "ம.வி.மு அப்புஹாமி இறந்துவிட்டார், நல்லடக்கம் 5" என்று குறிப்பிட்டு அனுப்பப்பட்டிருந்தது. தாக்குதல் ஆரம்பிப்பதற்கு சமிக்ஞையாக அரச வானொலியில் "நீல கொப்பேயா" எனும் பாடல் ஒலிபரப்பப்பட்டது. இதனைத் தொடர்ந்து மொனராகலையிலும், வெல்லவாயாவிலும் ஆயத்தமாக இருந்த மக்கள் விடுதலை முன்னணியினர் காலையிலேயே தாக்குதலை ஆரம்பித்துவிட்டனர். சுதாரித்துக்கொண்ட சிறிமாவின் அரசு நாட்டின் ஏனைய பொலீஸ் ராணுவ முகாம்களை உஷார் நிலைக்குக் கொண்டுவந்தது. தாக்குதலை எதிர்பார்த்து பொலீஸாரும் ஆயத்தத்துடன் இருந்தனர். தாக்குதலை முறியடித்து, முன்னேறும் முயற்சிகளையும் பொலீஸார் மேற்கொண்டனர். தமது தவற்றினை உணர்ந்துகொண்ட மக்கள் விடுதலை முன்னணியினருக்கு, தாக்குதலைத் தொடர்ந்து நடத்துவதைத்தவிர வேறு வழியிருக்கவில்லை. சுமார் 25 - 30 வரையான இளைஞர்கள், பொலீஸ் நிலையங்களைச் சுற்றிவளைத்து வீட்டில் தயாரிக்கப்பட்ட பெற்றொல்க் குண்டுகளையும், கையெறிகுண்டுகளையும் பாவித்து தாக்குதல் நடத்தத் தொடங்கினர். நாடு முழுவதுமிருந்த 273 பொலீஸ் நிலையங்களில் 93 பொலீஸ் நிலையங்கள் மக்கள் விடுதலை முன்னணியினரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டன. பலவீனமான பகுதிகளில் அமைந்திருந்த காவல் நிலையங்களை அரசாங்கமே மீளப்பெற்றுக்கொண்டது. சிங்களக் கலகக்காரர்கள் மிகவும் பலவீனமான ஆயுதங்களை வைத்திருந்தனர், அவர்களில் எவருக்குமே தரமான போர்ப்பயிற்சிகள் கிடைத்திருக்கவில்லை, அவர்களைச் சரியான திட்டத்தில் வழிநடத்தத்தன்னும் தலைவர்கள் இருக்கவில்லை. அவர்களின் ஆரம்ப வெற்றிகளுக்கான ஒரே காரணம் பொலிஸார் இத்தாக்குதல் பற்றி அறிந்திருக்காமைதான். ஆனால், ஆரம்பகட்டத் தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டவுடன், தன்னை மீள ஒருங்கமைத்த அரசகாவல்த்துறை கடுமையான எதிர்த்தாக்குதலை முடுக்கிவிட்டது. ராணுவமும் துணைக்கு அழைக்கப்பட்டதுடன், வெளிநாடுகளிலிருந்தும் உதவி கோரப்பட்டது. பல நாடுகள் உதவிசெய்ய, இந்தியாவும் தன்பங்கிற்கு உலங்கு வானூர்திகளையும், வானிலிருந்து குதிக்கும் தாக்குதல் ராணுவக் குழுக்களையும் உடனடியாக அனுப்பிவைத்தது. http://telo.org/telooldnews/wp-content/uploads/2014/11/Premawathie-Manamperi.jpg கடுமையான முறியடிப்புத் தாக்குதலில் ஈடுபட்ட ராணுவம் சுமார் 3 வாரங்களில் கலகக்காரரின் முதுகெலும்பை முறித்துப் போட்டது. மேலும், ஆண்டின் இறுதியில் சுமார் 18,000 கலகக்காரரும், ஆதரவாளர்களும் சிறைப்பிடிக்கப்பட்டனர். அரச தகவல்களின்படி சுமார் 5,000 பேர்வரையில் கொல்லப்பட்டிருக்கலாம் என்று கணக்கிடப்பட்டது. ஆனால், குறைந்தது 25,000 சிங்கள இளைஞர்கள் இதன்போது பலியானதை அரசு உத்தியோகபூர்வமற்ற வகையில் ஒத்துக்கொண்டிருந்தது. கடுமையான சித்திரவதைகளும், கூட்டுப் படுகொலைகளும் இடம்பெற்றதற்கான சான்றுகள் முன்வைக்கப்பட்டிருந்தாலும், அவை அனைத்தும் அரசினால் நிராகரிக்கப்பட்டன. ஹம்மெர்ஹெயில் கோட்டை ஹம்மெர்ஹயில் கோட்டை இத்தாக்குதல்களின்ப்பொது மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்ட ஒருவிடயம் கொழும்பில் தங்கியிருந்த சிறிமாவும், அவரது பிள்ளைகளும் கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டிருந்த கப்பல் ஒன்றினுள் ஒளிந்துகொண்டதுதான். கொழும்பு நகர் பாதுகாப்பானதாக வரும்வரை அவர்கள் அக்கப்பலிலேயே தஞ்சமடைந்திருந்ததாக அறியமுடிகிறது. ஆனால், தமிழர்கள் ஆர்வம் காட்டிய இன்னொரு செய்தியிருக்கிறது. அதுதான் யாழ்ப்பாணம் காரைநகர் ஹம்மெர்ஹயில் கோட்டையில் அமைந்திருந்த கடற்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் ரோஹண விஜேவீரவும் அவரது தோழர்கள் 12 பேரையும் மீட்க அக்குழு முயன்ற செய்தி. தமிழர்கள் வங்கதேச விடுதலையிலும் மிகுந்த ஆர்வம் காட்டியிருந்தனர். இந்தியத் துணைக்கண்ட சுதந்திரத்தின்போது இந்தியா பாக்கிஸ்த்தான் எனும் இரு நாடுகளாகப் அது பிரிக்கப்பட்டது. பிரிக்கப்படுவதற்கு முன்னர், முஸ்லீம்கள் பெரும்பான்மையினராக வாழ்ந்த பகுதிகள் பாக்கிஸ்த்தானுக்குள் சேர்க்கப்பட்டன. இந்தப் பகுதிகள் மேற்குப் பாக்கிஸ்த்தான் என்றும் கிழக்குப் பாக்கிஸ்த்தான் என்று இரு பிரிவுகளாக இருந்தன. பாக்கிஸ்த்தானின் இவ்விரு மாநிலங்களுக்குமிடையே சுமார் 1600 கிலோமீட்டர்கள் அகலமான இந்தியப் பகுதி அமைந்திருந்தது. பாக்கிஸ்த்தானின் இரு பகுதிகளிலும் நிலப்பரப்பில் பெரிய பகுதி மேற்குப் பாக்கிஸ்த்தான் ஆகும். இதனுள் பஞ்சாப், சிந்த், பாலுச்சிஸ்த்தான் மற்றும் வடமேற்கு எல்லைப்பகுதி ஆகிய நான்கு மாநிலங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன. கிழக்குப் பாக்கிஸ்த்தானில் கிழக்கு வங்காளம் எனப்படும் பகுதிமட்டுமே இருந்தது. சனத்தொகையில் கிழக்குப் பாக்கிஸ்த்தான் மேற்குப் பாக்கிஸ்த்தானைக் காட்டிலும் அதிகமான மக்களைக் கொண்டிருந்தது. ஆனால், சுதந்திரத்தின்பின்னர் பாக்கிஸ்த்தானின் அரசியல்ப் பலம் மேற்குப் பாக்கிஸ்த்தானின் உயர்மட்ட வர்க்கத்தின் கைகளிலேயே குவிந்து கிடந்தது. நாட்டின் மொத்த வருமானத்தின் பெரும்பகுதி மேற்குப் பாக்கிஸ்த்தானின் அபிவிருத்திக்கே செலவிடப்பட்டதுடன், கிழக்குப் பாக்கிஸ்த்தான் தொடர்ச்சியாகப் புறக்கணிக்கப்பட்டு வந்தது. மேற்குப் பாக்கிஸ்த்தானின் ஆட்சியாளர்களால் தாம் புறக்கணிக்கப்படுவதாகவும், சுரண்டப்படுவதாகவும், தம்மை மாற்றாந்தாய் மனப்பாங்கோடு மேற்குவாசிகள் நடத்துவதாகவும் கிழக்குப் பாக்கிஸ்த்தான் மக்கள் அதிருப்தியடையத் தொடங்கியிருந்தார்கள். இந்தப் பிணக்கு மெதுமெதுவாக வெளிக்கிளம்பத் தொடங்கியது. பாக்கிஸ்த்தான் உருவாக்கப்பட்ட காலத்திலிருந்தே அரசியல் ஸ்த்திரத்தனமையினமையாலும், பாரிய பொருளாதார நெருக்கடிகளினாலும் தொடர்ச்சியாகப் பாதிக்கப்பட்டு வந்தது. மக்களாட்சி முறை தோற்கடிக்கப்பட்டு ராணுவ ஆட்சியே அங்கு தொடர்ச்சியாக இடம்பெற்று வந்தது. மேற்கின் ராணுவ ஆட்சியினை வெறுத்த கிழக்குப் பாக்கிஸ்த்தான் மக்கள் தமது தலைவராக ஷேக் முஜிபுர் ரகுமானை தேர்வுசெய்து, மேற்கின் ராணுவ ஆட்சிக்கெதிரான தமது எதிர்ப்பினை ஜனநாயக ரீதியில் காட்டி வந்தனர். அவாமி லீக் எனப்படும் அரசியல்க் கட்சியை ஆரம்பித்த முஜிபுர் ரகுமான் பிரிக்கப்படாத பாக்கிஸ்த்தானில், சமஷ்ட்டி அடிப்படையில் கிழக்குப் பாக்கிஸ்த்தானுக்கு ஆட்சியதிகாரம் வழங்கப்படவேண்டும் என்று கோரிவந்தார். 1970 ஆம் ஆண்டில் இடம்பெற்ற தேசிய பாராளுமன்றத் தேர்தல்களில் 313 ஆசனங்களில் முஜிபுர் ரகுமானின் அவாமி லீக் கட்சி 170 ஆசனங்களைக் கைப்பற்றியது. ஆட்சியமைக்கப் போதுமான பலத்தை முஜிபுர் ரகுமான் பெற்றுக்கொண்டபோதும், மேற்குப் பாக்கிஸ்த்தானின் ஆளும்வர்க்கம் அவரைக் கைதுசெய்து சிறையிலடைத்ததுடன், அவரது கட்சியான அவாமி லீக்கையும் தடைசெய்தது. இதனையடுத்து பாக்கிஸ்த்தான் முழுவதும கடுமையான ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பித்தன. அன்றைய பாக்கிஸ்த்தான் ஜனாதிபதி யகயா கான் ஆர்ப்பாட்டங்களை ஒடுக்க தனது மகனான டிக்கா கானை அனுப்பிவைத்தார்.1971 ஆம் ஆண்டு பங்குனி 25 அன்று அவரது பணிப்பின்கீழ் செயற்பட்ட ராணுவம் கலகக்காரர்களுக்கெதிரான நடவடிக்கைகளை ஆரம்பிக்க பல்லாயிரக்கணக்காணோர் கொல்லப்பட்டனர். கிழக்குப் பாக்கிஸ்த்தானின் ராணுவத்தைக் கலைத்து, நிராயுதபாணிகளாக்க மேற்கு பாக்கிஸ்த்தான் ராணுவம் முயன்றது. இந்த நடவடிக்கைக்காக மேற்கிலிருந்து விமானம் மூலம் ராணுவத்தினரைக் கொண்டுவரவேண்டிய தேவை அதற்கு ஏற்பட்டது. பாக்கிஸ்த்தான் ராணுவத்தில் பணியாற்றிய வங்களி இன அதிகாரிகளும், சிப்பாய்களும் ராணுவத்திலிருந்து விலகி சுதந்திரப் போராட்ட வீரர்களுடன் சேர்ந்துகொண்டனர். முஜிபுர் ரகுமானின் நெருங்கிய ஆதரவாளர்களும் இன்னும் பத்து மில்லியன் வங்காளிகளும் இந்தியாவுக்குத் தப்பியோடினர். அங்கே தமக்கான தற்காலிக அரசாங்கம் ஒன்றையும் அவர்கள் அமைத்தனர். கிழக்குப் பாக்கிஸ்த்தானை விடுவிப்பதற்கான போரில் ஈடுபட்டுவரும் கிழக்குப் பாக்கிஸ்த்தான் சுதந்திர போராட்ட வீரர்களான முக்திபாகினி அமைப்பிற்கு ராணுவ ரீதியில் உதவும் முடிவினை இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி அம்மையார் எடுத்தார். முக்திபாகினி கெரில்லாக்கள் இந்திய எல்லைக்குள், கிழக்குப் பாக்கிஸ்த்தானின் எல்லையோரங்களில் தொடர்ச்சியான முகாம்களை அமைத்து வந்தார்கள். இந்த முகாம்கள் மீது மேற்குப் பாக்கிஸ்த்தான் ராணுவம் கடுமையான ஷெல்வீச்சுத்தாக்குதலை மேற்கொண்டபோது, இந்தியாவும் பதில்த்தாக்குதல் செய்யவேண்டிய தேவை ஏற்பட்டது. இதனையடுத்து மேற்குப்பகுதியூடாக இந்தியாவினுள் நுழைந்து தாக்குதல் நடத்த பாக்கிஸ்த்தான் ராணுவம் திட்டமிட்டபோது, இந்தியா முழு அளவிலான போரை மார்கழி 3 ஆம் திகதி பாக்கிஸ்த்தான் மீது ஆரம்பித்தது. இந்திய ராணுவமும், வங்காளி கெரில்லாக்களும் இணைந்து நடத்திய தாக்குதலில் கிழக்குப் பாக்கிஸ்த்தனில் நிலைகொண்டிருந்த மேற்குப் பாக்கிஸ்த்தான் ராணுவம் நிலைகுலைந்துபோனது. மார்கழி 16 ஆம் திகதி கிழக்கிலிருந்து பாக்கிஸ்த்தான் ராணுவம் முற்றாகச் சரணடைய சுதந்திர வங்காளதேசம் உருவானது. ஆயுதப் போராட்டம்பற்றிய எண்ணத்தை ஆரம்பித்திருந்த தமிழ் இளைஞர்கள் தெற்கின் தோல்வியடைந்த ம.வி.மு இன் போராட்டத்தையும், சுதந்திர வங்காளதேசத்தின் உருவாக்கத்தையும் உன்னிப்பாக அவதானித்து சில பாடங்களையும் கற்றுக்கொண்டனர். இன்று கனடாவில் வசித்துவரும் முன்னாள் போராளியொருவர் கூறுகையில், "நாம் இந்த இரு சம்பவங்களையும் மிக உன்னிப்பாக அவதானித்து வந்தோம். இவையிரண்டிலும் இருந்து ஏறாளமான பாடங்களை நாம் கற்றுக்கொண்டோம். இவ்விரு நடவடிக்கைகளும் எம்மை உற்சாகப்படுத்தியிருந்தன. எம்மை இந்த நிகழ்வுகள் வெகுவாக ஊக்கப்படுத்தியிருந்தன" என்று கூறினார். மக்கள் விடுதலை முன்னணியினரின் தாக்குதல் முயற்சி தோல்வியடைந்திருந்தாலும்கூட, அரச படைகள் மேல் தாக்குதல் நடத்துவதென்பது சாத்தியமானதுதான் என்கிற நம்பிக்கையினை தமக்கு அது ஏற்படுத்திவிட்டிருந்ததாகவும் அவர் கூறினார். உத்வேகமும், இலட்சியம் மீதான உறுதியும், ஆயுதங்களும் சரியான தலைமையும் வாய்க்கப்பெறுமிடத்து அரச படைகள் மேல் தாக்குதல் நடத்தி வெற்றிபெறுவதென்பது சாத்தியமானதுதான் என்பதை ம.வி. மு இனரின் தாக்குதல் முயற்சி தமக்கு ஏற்படுத்தியதாக அவர் மேலும் கூறினார். "அவர்களின் தாக்குதல் முயற்சி சிறுபிள்ளைத்தனமானது, அவர்களிடம் சரியான ஆயுதங்கள் இருக்கவில்லை, பயிற்சிகள் ஏதுமின்றியே அவர்கள் தாக்குதலை ஆரம்பித்தார்கள், அவர்களின் தலைமை மிகவும் பலவீனமானதாக இருந்தது, அதனாலேயே அவர்களது திட்டம் பிழைத்துப்போனது" என்றும் அவர் கூறினார். "நாங்கள் கற்றுக்கொண்ட இரண்டாவது பாடம், கைப்பற்றும் ஒரு பிரதேசத்தைத் தக்கவைத்துக்கொள்ள முடியாவிட்டால், அப்பிரதேசத்தைக் கைப்பற்ற முயற்சிக்கக் கூடாது என்பதுதான். இதன்படி, ம.வி. மு செய்தது தற்கொலைக்குச் சமனானது. ஆரம்பத்தில் பாரிய நிலப்பரப்புக்களை அவர்கள் கைப்பற்றிக்கொண்டாலும், பின்னர் ராணுவமும் பொலீஸாரும் பதில்த்தாக்குதல்களை ஆரம்பித்தபோது, அவர்களை தாம் கைப்பற்றிய இடங்கள் அனைத்தையும் கைவிட்டு விட்டு ஓடி ஒளித்துக்கொண்டனர். அதனேலேயே நாம் மறைந்திருந்து தாக்கிவிட்டு, மறைந்துவிடும் நகர்ப்புற கெரில்லா பாணியைக் கையாண்டோம்". "அதேவேளை, வங்கதேச உருவாக்கத்திலிருந்து நாம் கற்றுக்கொண்ட பாடங்கள் மிகவும் சிக்கலானவை. சமஷ்ட்டிக் கட்சியின் பிரச்சாரகரான மாவை சேனாதிராஜாவோ அல்லது இளைஞர்களை உசுப்பேற்றும் காசி ஆனந்தன், வண்ணை ஆனந்தன் மற்றும் கோவை மகேசன் ஆகியோர் போதிக்கும் பாடங்களைப் போலல்லாமல் மிகவும் சிக்கலானவை" என்று அவர் மேலும் கூறினார். பிரதமர் இந்திரா காந்தியின் பாக்கிஸ்த்தானின் மீதான ராணுவ வெற்றியையும், வங்கதேச உருவாக்கத்தையும் பாராட்டி சமஷ்ட்டிக் கட்சியினர் 1972 ஆம் ஆண்டு தைமாதம் 12 ஆம் திகதி காங்கேசந்துறையில் 7 கட்சி பேரணியொன்றை நடத்தியிருந்தனர். அங்கே சமூகமளித்திருந்த இளைஞர்களின் தலைவர்கள், இலங்கையிலும் இந்தியா வங்கதேசத்தில் செய்ததுபோல தமிழர்களுக்கென்று தனிநாட்டை விடுவித்துதரும் என்று மக்களிடம் கூறத் தலைப்பட்டனர். ஆனால், அவர்கள் கவனிக்கத் தவறிய ஒருவிடயம் தான் வங்கதேசத்தின் விடுதலையென்பது வெறுமனே இந்திய ராணுவத்தின் நடவடிக்கையினால் மட்டுமே உருவானதல்ல என்பது. நன்கு பயிற்றப்பட்டு, நன்றாக ஆயுதம் தரித்த, வெகுவாக ஒழுங்கமைக்கப்பட்ட, ஆயிரக்கணக்கான வீரர்களைக்கொண்ட முக்திபாகினி எனும் கிளர்ச்சிப்படையுடன் சேர்ந்தே இந்திய ராணுவம் மேற்குப் பாக்கிஸ்த்தான் ராணுவத்தைத் தோற்கடித்திருந்தது. அதுமட்டுமல்லாமல், சமஷ்ட்டிக் கட்சி தனது வன்முறையற்ற அகிம்சா ரீதியிலான போராட்டப் பாதையினை மாற்ற ஒருபோதுமே தயாராக இருக்கவில்லை. அமிர்தலிங்கம் மட்டுமே அயுதப் போராட்டம் தொடர்பான சாதகமான எண்ணத்தைக் கொண்டிருந்தார். ஆனால், அவர்கூட மிகவும் அவதானமாக, மேலெழுந்தவாரியாக இதுகுறித்துப் பேசிவந்தார். "தமிழர்கள் தீர்க்கமான விடுதலைப் போராட்டம் ஒன்றின் மூலம் தமக்கான தனியான நாட்டினை அடைவதற்கான நேரம் நெருங்கியிருக்கிறது. இதனை அடைவதில் வெளிநாட்டு உதவியினைப் பெற்றுக்கொள்வதில் அவர்கள் தயக்கம் காட்டக் கூடாது. சுதந்திரம் கடையில் வாங்கும் சரக்கல்ல. ஒரு கடுமையான போராட்டம் மூலமே அதனை நாம் பெற்றுக்கொள்ளமுடியும், தேவையேற்பட்டால் நாம் அதற்காக இரத்தம் சிந்தவும் தயாராக இருக்க வேண்டும். தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து, வங்கதேசத்து மக்களை முன்னுதாரணமாகப் பாவித்துப் போராட வேண்டும்" என்று அவர் கூறினார். ஆனால், போராளிகள் வங்கதேசப் போரை அரசியல்க் கட்சித் தலைவர்களைக் காட்டிலும் மிகவும் ஆளமாக ஆராய்ந்தனர். அதன்மூலம் அவர்கள் ஒரு முடிவிற்கு வந்திருந்தனர், "தமிழர்கள் தமக்கான தனிநாட்டினை அடைவதற்கு இந்தியா ஒருபோதும் துணை நிற்காது". தனது எதிரியான பாக்கிஸ்த்தானைப் பலவீனப்படுத்தவே இந்தியா வங்கதேசப் போரில் இறங்கியது. சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்து இந்தியாவின் மேற்கிலும் கிழக்கிலும் இருந்து பாக்கிஸ்த்தானின் அச்சுருத்தலை அது எதிர்கொண்டு வந்தது. சீனாவுடனான அதன் மோதலையடுத்து வடக்கிலிருந்தும் அது அச்சுருத்தலினை எதிர்நோக்கத் தொடங்கியிருக்கிறது. ஆகவேதான், மேற்குப் பாக்கிஸ்த்தானிலிருந்து கிழக்குப் பாக்கிஸ்த்தானைப் பிரித்தெடுத்து, தனியான நாடாக அங்கீகரிப்பதன்மூலம், கிழக்கிலிருந்த எதிரியை அது இல்லமலாக்கியிருக்கிறது. ஆனால், இலங்கையிலோ நிலைமை வித்தியாசமானது. இலங்கையிலிருந்து ஈழத்தை இந்தியா பிரித்துக் கொடுத்தால், ஈழம் எனும் நட்பு அயல் நாட்டை அது கொண்டிருக்கும். ஆனால், அது இந்தியாவுக்கெதிரான இலங்கை எனும் நாட்டை உருவாக்கிவிடும். இந்த புதிய எதிரி நாடு இந்தியாவின் எதிரிகளுடன் சேர்ந்துவிடும். ஆகவேதான், இந்தியா ஒருபோதுமே ஈழம் எனும் தமிழருக்கான தனிநாடு உருவாவதற்கு எமக்கு உதவப்போவதில்லை. அவர்கள் கூறுவது சரிதான். இந்தியாவின் அன்றைய நிலைப்பாடும், இன்றைய நிலைப்பாடும் இதுதான் என்பதும் சந்தேகமில்லை.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
நம்பிக்கையிழந்த தமிழர்கள் சிறிமாவின் அதிதீவிர இனவாத நிலைப்பாடு தமிழரிடையே கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது, குறிப்பாக இளைஞர்களிடையே இது பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தியிருந்தது. தமிழர்கள் சிங்களவர்களை மேலும் நம்பத் தயாராக இருக்கவில்லை. தமிழர்களின் மனநிலை சிறிது சிறிதாக இறுக்கமடையத் தொடங்கியிருந்தது. அரசியல் யாப்புருவாக்கத்தில் அதுவரையில் பங்களிப்புச் செய்துவந்த சமஷ்ட்டிக் கட்சியை அதிலிருந்து உடனடியாக விலகுமாறு இளைஞர்கள் அழுத்தம் கொடுக்கத் தொடங்கினர். "உங்களது கோரிக்கைகள் அனைத்தையுமே அவர்கள் நிராகரித்துவிட்ட பின்னரும் இன்னும் ஏன் அரசியலமைப்பு உருவாக்கத்தில் பங்கெடுத்து வருகிறீர்கள்?" என்று அவர்கள் கேட்க ஆரம்பித்தார்கள். அடங்காத் தமிழன் என்று அறியப்பட்ட சுந்தரலிங்கம் இதுதொடர்பாக தனது கண்டனத்தை அறிக்கையாக வெளியிட்டிருந்தார், "உங்களை போகவேண்டாம் என்று சொன்னோம். உங்களை மீறி அவர்கள் தமக்கு விரும்பியதைச் செய்துவிடுவார்கள் என்று கூறினோம். இப்போது என்ன நடந்திருக்கிறதென்பதை பாருங்கள்? உங்களைத் தமது பலத்தின் மூலம் தோற்கடித்திருக்கிறார்கள். உங்கள் குரலினை அவர்கள் செவிசாய்க்கவில்லை.நாங்கள் உங்களை எச்சரித்தபடியே தமிழரின் இலட்சியத்தை பலவீனப்படுத்திவிட்டு வந்து நிற்கிறீர்கள்" என்று கடுமையாக சமஷ்ட்டிக் கட்சியினரைச் சாடியிருந்தார். சுந்தரலிங்கத்தின் விமர்சனத்திற்குப் பதிலளிக்க சமஷ்ட்டிக் கட்சி அமிர்தலிங்கத்தை நியமித்திருந்தது. பத்திரிக்கையாளர்கள் அவரைத் தொடர்புகொண்டபோது, தாம் தோற்கடிக்கப்பட்டதை அவர் ஒப்புக்கொண்டார். தனது கருத்தினை பத்திரிக்கையில் பிரசுரிக்க வேண்டாம் என்று கூறிய அமிர்தலிங்கம் பின்வருமாறு கூறினார், "அவருக்கு என்ன பதிலினை நான் கொடுக்க முடியும்? அரசாங்கத்திலிருக்கும் இடதுசாரிகள் கூட எம்மை ஏமாற்றி விட்டார்கள். இளைஞர்களின் முன்னால் நாம் இப்போது முட்டாள்களைப்போல நிற்கிறோம்" இந்த அவமானகரமான தோல்வியிலிருந்து சமஷ்ட்டிக் கட்சிக்கு வெளியே வரச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. ஆனி 21 ஆம் திகதி அரசியலமைப்புக் குழுவிலிருந்து தமது கட்சி வெளியேறுவதாக தந்தை செல்வா அறிவித்தார். தாமது முடிவுபற்றி தந்தை செல்வா பின்வருமாறு கூறினார், "இந்த அரசியலமைப்பில் பிரஜாவுரிமை, அடிப்படை மனிதவுரிமைகள் உட்பட பல மாற்றங்களைக் கொண்டுவர நாம் முயற்சித்தோம். ஆனால், அவை அனைத்தையும் அவர்கள் நிராகரித்து விட்டார்கள். தமிழர்களுக்கு இருக்கும் பிரச்சினைகள் குறித்தும், அவற்றினை அரசியல் யாப்பில் உள்ளடக்குவது குறித்தும் பேசுவதற்கு பிரதமருடனும் அரசியல் யாப்பு அமைச்சருடனும் முயற்சித்தேன். பாராளுமன்ற வாக்குப் பலத்தினால் மட்டுமல்லாமல், பரஸ்பர விட்டுக்கொடுப்பினாலும் இணக்கப்பாட்டினை உருவாக்கமுடியும் என்று நான் நம்பியிருந்தேன். ஆனால், இவை எதுவுமே அவர்களுடான பேச்சுக்களின்போது என்னால் செய்துகொள்ளமுடியாமற் போய்விட்டது. இனச்சிக்கல் குறித்து விட்டுக்கொடுப்புகளைச் செய்து இணக்கப்பட்டிற்கு வருவதற்கு நாம் எப்போதும் தயாராகவே இருக்கிறோம். அரசியல் யாப்பில் குறைந்தபட்சம் அடிப்படை உரிமைகளாவது உள்ளடக்கப்பட வேண்டும் என்று பிரதமரையும், அரசியலமைப்பு அமைச்சரையும் நாம் வேண்டினோம், எமது கோரிக்கைகளை செவிமடுக்க அவர்கள் தயாராக இருந்தபோதும், அவற்றினை ஏற்றுக்கொண்டு யாப்பில் திருத்தங்களைச் செய்ய அவர்கள் விடாப்பிடியாக மறுத்து விட்டனர்" என்று கூறினார். அரசியல் யாப்புருவாக்க சபையில் இருந்து சமஷ்ட்டிக் கட்சி வெளியேறுவதாக எடுத்த முடிவினை இளைஞர்கள் ஒரு வெற்றியாகவே பார்த்தனர். சிங்களவர்களுடனான இணக்கப்பாட்டு அரசியல் படுதோல்வியினைச் சந்தித்துவிட்டதனால், இனிமேல் வேறு போராட்ட மார்க்கங்களின் மூலமே எமது இலட்சியத்தை அடைய முயற்சிக்கவேண்டும் என்று அவர்கள் வெளிப்படையாகவே பேசத் தொடங்கினர். ஆனாலும், குறைந்த எண்ணிக்கையிலான இளைஞர்களைத் தவிர பெரும்பாலான மக்கள் வன்முறையற்ற வழிமுறைகளில் தொடர்ந்தும் ஈடுபட்டுப் பார்க்கலாம் எனும் எண்ணத்திலேயே இருந்தனர். புரட்சிகளிலிருந்து கற்றுக்கொண்ட பாடங்கள் 1971 இல் அரசியலமைப்புச் சபை யாப்பினை உருவாக்குவதில் மும்முரமாக ஈடுபட்டிருந்த வேளை , தமிழ் இளைஞர்கள் இரு வேறு சம்பவங்களில் தமது கவனத்தைச் செலுத்தியிருந்தனர். முதலாவது பங்குனி - சித்திரை மாதங்களில் தெற்கில் இடம்பெற்று வந்த மக்கள் விடுதலை முன்னணியினரின் கலகம். இரண்டாவது, மார்கழியில் இடம்பெற்ற வங்கதேசத்திற்கான சுதந்திரப் போர். சாதாரண தமிழர்களோ அல்லது தமிழ் அரசியல்த் தலைவர்களோ தெற்கில் இடம்பெற்றுவந்த தீவிர இடதுசாரிகளின் ஆயுத வன்முறை பற்றி அதிகம் அக்கறை காட்டவில்லை. அவர்களைப்பொறுத்தவரை, அது ஒரு தனிச்சிங்களப் பிரச்சினை, இரு சிங்களப் பிரிவுகளுக்கிடையேயான பிணக்கு, அவ்வளவுதான். ஆட்சியிலிருக்கும் சிறிமாவின் அரசாங்கத்திற்கும், அவ்வாட்சியுடன் முரண்பட்ட சிங்கள இளைஞர்களுக்கும் இடையேயான பிரச்சினையாகவே அதனை அவர்கள் கருதியதால், தமிழர்களுக்கும் அப்பிரச்சினைக்கும் தொடர்பிருப்பதாக அவர்கள் நினைக்கவில்லை. ஆனால், வங்கதேச விடுதலைக்காக அங்கே நடந்துவந்த போர்பற்றி அதிக அக்கறை தமிழர்களால் காட்டப்பட்டது. பல தமிழர்கள் இந்தப் பிரச்சினை ஆரம்பமாகிய சமயத்திலிருந்தே அதனை மிக ஆளமாக உள்வாங்கி செய்திகளைப் பிந்தொடர்ந்து வந்தனர். தமிழர்கள் இந்தப் போரில் அதிக ஆர்வம் காட்டக் காரணமாக அமைந்தது இந்தியா, இன்னொரு நாட்டின் சுதந்திரத்திற்காக போரில் இறங்கியிருக்கிறது என்பதுதான். அதுமட்டுமல்லாமல், போரின் இறுதியில் வங்காளதேசம் எனும் புதிய சுதந்திர நாடு உருவாக்கப்பட்டதையும் அவர்கள் உன்னிப்பாக அவதானித்து வந்தார்கள். தெற்கில் மக்கள் விடுதலை முன்னணியின் வன்முறைக் கலகமும், வங்கதேச சுதந்திரப் போராட்டமும் கிட்டத்தட்ட 1970 இன் ஆரம்பகாலத்திலேயே உருப்பெறத் தொடங்கியிருந்தன. இந்த இரு சம்பவங்களுக்குமான அடிப்படைக் காரணங்கள் ஏறத்தாள ஒரேமாதிரியானவை. பொருளாதாரத்தில் பின்தங்கியிருந்த தெற்கின் சிங்கள இளைஞர்கள் அரசுக்கெதிரான சுலோகமாக "எங்களுக்கு தேங்காய்ப்பாலைத் தந்துவிட்டு, கொழும்பிலிருப்பவர்களுக்கு பசுப்பாலையா கொடுக்கிறீர்கள்?" என்பதை முன்னிறுத்தினார்கள். அதேவேளை வங்கதேச சுதந்திரப் போரில், "கிழக்குப் பாக்கிஸ்த்தானை மேற்குப் பாக்கிஸ்த்தான் சுரண்டுகிறது" என்பது கோஷமாக முன்வைக்கப்பட்டது.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
பொறுமையிழந்த தமிழ் மக்கள் 1970 ஆம் ஆண்டு ஆடி மாதம் 11 ஆம் திகதி தந்தை செல்வா தலைமையில் வவுனியாவில் கூடிய சமஷ்ட்டிக் கட்சியின் செயற்குழு கொல்வின் ஆர் டி சில்வாவின் வேண்டுகோள் பற்றி ஆராய்ந்தது. கூட்டத்தில் பேசிய தந்தை செல்வா அரசாங்கம் தமிழ் மக்களுக்கு பல்ல நல்ல விடயங்களை இந்த அரசியல் யாப்பில் உள்ளடக்கியிருப்பதால் தமிழர்கள் இந்த சந்தர்ப்பத்தினைத் தவற விடக்கூடாது என்று கூறினார். சி ராஜதுரை, சி என் நவரட்ணம் ஆகியோர் இதனால் தமிழருக்கு ஏதாவது நலன்கள் கிடைக்கும் என்று நம்புகிரீர்களா என்று செல்வாவிடம் தமது சந்தேகத்தை எழுப்பினர். இறுதியில் இந்த அழைப்புப் பற்றி தமிழ்ச் சமூகத்திலுள்ள முக்கியமானவர்களுடன் கலந்துரையாடி அரசியலமைப்புச் சபையில் பங்கேற்பதா இல்லையா என்பதனை முடிவெடுக்கலாம் என்றும், அவ்வாறு பங்கெடுக்கும் பட்சத்தில் சில தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களால் எழுப்பப்பட்ட சந்தேகங்களுக்கான தீர்வுகளை எப்படி உறுதிசெய்துகொள்ளலாம் என்பதுபற்றியும் தீர்மானிக்கலாம் என்றும் முற்றாகியது. சரியாக ஒரு வாரத்தின் பின்னர் கொழும்பு சைவ மங்கையர் கழக மண்டபத்தில் கூடிய சமஷ்ட்டிக் கட்சியினர், கொழும்பிலிருந்த பிரபலமான தமிழ் வழக்கறிஞர்கள், மூத்த தமிழர்கள் ஆகியோருடன் நீண்ட கலந்தாலோசனையில் ஈடுபட்டனர். ஆலோசனைகளின் முடிவில் அரசியல் யாப்பு உருவாக்கச் சபையில் கலந்துகொள்வதென்று முடிவாகியது. அதேவேளை, யாப்பினை உருவாக்கும் பொழுது தமிழர்களுக்கான உரிமைகள் உள்ளடக்கப்படுவதை யாப்புருவாக்கத்தில் பங்குபற்றும் தமிழ்ப் பாரளுமன்ற உறுப்பினர்கள் உறுதிசெய்துகொள்ளவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. சுமார் 3 மணித்தியாலங்கள் நடைபெற்ற கலந்தாலோசனைகளின் முடிவில் பேசிய தந்தை செல்வா பின்வருமாறு கூறினார், "இக்கூட்டம் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர் அரசியல் யாப்பு உருவாக்கச் சபையில் கலந்துகொள்ளவேண்டும் என்று தீர்மானித்திருக்கிறது. மேலும், இந்த யாப்பில் தமிழர்களுக்கான அடிப்படை உரிமைகள் சமஷ்ட்டி அடிப்படையில் உள்ளடக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கையினை இவர்கள் அரசிடம் முன்வைப்பார்கள். மத்திய அரசிடமிருந்து கணிசமான அதிகாரங்கள் பிராந்தியங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படுவதை இவர்கள் உறுதிசெய்யும் வழியில் யாப்பு அமைய இவர்கள் அழுத்தம் கொடுப்பார்கள். தமிழ் மொழிக்கான சம அந்தஸ்த்தும், தாய்மொழியில் கல்விகற்கும் நிலையும் ஏற்பட அழுத்தம் கொடுப்பதுடன் அடிப்படை உரிமைகள் மீறப்படாமல் இருக்கவும், அவ்வாறு மீறப்படும் பட்சத்தில் சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்கும் ஏற்பாடுகளும் உள்ளடக்கப்படுவதை இவர்கள் உறுதிசெய்வார்கள். மேலும் அதிகாரம் மிக்க அமைப்பொன்றினை நாம் உருவாக்கி, அதன்மூலம் எமது பரிந்துரைகள் பட்டியலிடப்பட்டு அரசிடம் கையளிக்கவும் முடிவு செய்திருக்கிறோம்" என்றும் கூறினார். பிரதமர் சிறிமாவின் அழைப்பினையேற்று 1970 ஆம் ஆண்டு, ஆடி 19 அன்று ரோயல் கல்லூரியின் கேட்போர் கூடத்தில் கூடிய பாராளுமன்ற உறுப்பினர்கள் மூன்று நாள் கருத்தரங்கின் பின்னர் அரசியலமைப்பு உருவாக்கச் சபையினை சேர்ந்து உருவாக்கினார்கள். இச்சபை புதிய அரசியலமைப்பை உருவாக்கவும், அதனைச் சட்டமாக மாற்றவும், இறுதியில் அதனை அரசியலமைப்பாக நடைமுறைப்படுத்தவும் முடிவெடுத்தார்கள். எதிர்க்கட்சித் தலைவர் ஜே ஆர் ஜெயவர்த்தனா, சமஷ்ட்டிக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் எஸ் கதிரவேற்ப்பிள்ளை, தமிழ் காங்கிரஸ் உறுப்பினர் வி ஆனந்தசங்கரி ஆகியோர் தமது கட்சிகள் ஆதரவு அரசியலமைப்பு உருவாக்கத்திற்கு இருக்கும் என்பதனை உறுதிப்படுத்தினர். அரசியலமைப்பை வரைவதற்காக அமைக்கப்பட்ட செயலணி அனைத்துக் கட்சிகளினதும் பிரதிநிதிகளை உள்ளடக்கியிருந்ததுடன் அரசியலமைப்பின் அடிப்படை நகலினை இனிவரும் கூட்டங்களில் வரையலாம் என்றும் முடிவெடுத்தது. சமஷ்ட்டிக் கட்சியின் அரசியலமைப்பு கமிட்டி தமது பரிந்துரைகளை ஒரு நகலாக வரைந்து புரட்டாதி மாதமளவில் பிரதான அரசியலமைப்பு குழுவின் முன்னால் சமர்ப்பித்தது. அந்த பரிந்துரை நகலில் 7 தலைப்புகளின் கீழ் 60 கட்டுரைகள் வரையப்பட்டிருந்தன. தமிழர்களின் பிரதான ஐந்து பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ளக்கூடிய அடிப்படை தீர்வுகளை இந்த நகல் கொண்டிருந்தது. சமஷ்ட்டிக் கட்சி முன்வைத்த பரிந்துரைகளில் பகுதி 1 சமஷ்ட்டிக் கட்டமைப்புப் பற்றி விவரிக்கிறது. அதன்படி ஒரு மத்திய அரசாங்கமும் ஐந்து பிராந்திய அரசுகளும் பரிந்துரைக்கப்பட்டிருந்தன. இந்த ஐந்து பிராந்தியங்களும் பொருளாதாரத்தின் அடிப்படையில் பிரிக்கப்பட்டிருந்தன. பொருளாதாரத்தில் முன்னேறியிருந்த மேற்கு மற்றும் தெற்குப் பகுதிகள்ஒரு பிராந்தியமாகவும், தென்னஞ்செய்கை அதிகமாகக் காணப்படும் வடமேற்கு மற்றும் வட மத்திய பகுதிகள் ஒரு பிராந்தியமாகவும், தேயிலை, இறப்பர் அதிகமாகப் பயிரிடப்படும் ஊவா, சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்கள் இணைந்து மூன்றாவது பிராந்தியமாகவும், வடமாகாணம், மட்டக்களப்பு, திருகோணமலை அடங்கிய கிழக்கு மாகாணத்தின் மாவட்டங்கள் இணைந்து வட கிழக்குப் பிராந்தியமாகவும், முஸ்லீம்களைப் பெரும்பான்மையினராகக் கொண்ட அம்பாறை மாவட்டம் தென்கிழக்குப் பிராந்தியமாகவும் வகுக்கப்பட்டிருந்தன. பகுதி ஒன்றில் மத்திய அரசும், பிராந்திய அரசுகளும் அதிகாரத்தினை எவ்வாறு பகிர்ந்துகொள்ளவேண்டும் என்பதுபற்றியும் விவரிக்கப்பட்டிருந்தது. மத்திய அரசாங்கம் பாராளுமன்றம் மூலம் நடத்தப்படும் அதேவேளை பிராந்திய அரசுகள் அவற்றிற்கான பிராந்திய அதிகார சபைகளினால் நிர்வகிக்கப்படும். இந்த பிராந்திய அலகுகளுக்கான நிர்வாக உறுப்பினர்களை அப்பிராந்தியங்களின் மக்களே தெரிவுசெய்வார்கள். பிராந்திய அலகுகள் மேலும் பல நிர்வாகக் குழுக்களாக பிரிக்கப்பட்டு அவற்றிற்கான தலைவர்கள் உறுப்பினர்களால் தெரிவுசெய்யப்படுவார். இந்தக் கமிட்டியின் தலைவர்கள் பிராந்திய சபைக்கான உறுப்பினர்களை பரிந்துரைக்க, இவ்வாறு பரிதுரைக்கப்படும் உறுப்பினர்களால் அப்பிராந்தியத்துக்கான முதலமைச்சர் தீர்மானிக்கப்படுவார். இதன்படி மத்திய அரசாங்கம் பின்வரும் விடயங்களைத் தனது அதிகாரத்தின் கீழ் வைத்திருக்கும். சர்வதேச தொடர்பாடல்கள், பாதுகாப்பு, சட்டம் & ஒழுங்கு, காவல்த்துறை, பிரஜாவுரிமை, குடிவரவு & குடியகல்வு, சுங்கத்துறை, தபால் & தொலைத்தொடர்புத்துறை, துறைமுகங்கள், கடல், வான் மற்றும் ரயில் போக்குவரத்து, பிராந்தியங்களுக்கிடையிலான வீதிப் பராமரிப்பு, மின்சாரத்துறை, நீர்ப்பாசனம், அளவைகள், சுகாதாரம் & கல்வி தொடர்பான கொள்கை வகுப்பு, மத்திய வங்கி & பணவியல் கொள்கை. இவை தவிர்ந்த ஏனைய துறைகளும் அதிகாரங்களும் பிராந்திய சபைகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் என்றும் பரிந்துரைக்கப்பட்டிருந்தது. பகுதி 4 தமிழும் சிங்களமும் உத்தியோகபூர்வ மொழிகளாக பயன்பாட்டில் இருக்கும் என்றும், வடக்குக் கிழக்கில் நீதிமன்ற சேவைகள் தமிழ் மொழியிலேயே நடைபெறும் என்றும் நாட்டின் ஏனைய பகுதிகளில் நீதிமன்ற சேவைகள் சிங்கள மொழியிலேயே நடைபெறும் என்றும் பரிந்துரைக்கப்பட்டது. அத்துடன் நாட்டில் எந்தவொரு தனிமனிதனும் தனது தாய்மொழியில் அரசாங்கத்துடன் தொடர்பாட முடியும் என்றும் கூறப்பட்டிருந்தது. பகுதி 5 இன்படி, பிராந்தியங்களின் மக்களுக்கான அரச கட்டளைகள், அறிவுருத்தல்கள் அவர்களின் தாய்மொழியிலேயே அனுப்பிவைக்கப்படும் என்று குறிப்பிடுகிறது. பகுதி 3 ஒவ்வொரு தனிமனிதனுக்குமான அடிப்படை உரிமைகள் பற்றிப் பேசுவதோடு தனிமனிதனுக்கெதிரான அநீதிகளுக்கு எதிராக அம்மனிதன் நீதிச்சேவையினைப் பெற்றுக்கொள்வ்தற்கான அடிப்படை உரிமை என்பன பற்றிக் குறிப்பிடுகிறது. உத்தேச அரசியலமைப்பினை வழிநடத்திச் செல்லும் குழுவும், பகுதிகளுக்குப் பொறுப்பான குழுக்களும் 1971 ஆம் ஆண்டு தை மாதத்திலிருந்து தொடர்ச்சியாகக் கூடி கலந்தாலோசித்து வந்தபோதும் கூட, சமஷ்ட்டிக் கட்சியினால் பரிந்துரைக்கப்பட்ட அரசியலமைப்பு நகலினை ஏறெடுத்தும் பார்க்க அவர்கள் விரும்பவில்லை. அதற்குப் பதிலாக அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட அடிப்படை தீர்மானங்களை அரசியல் யாப்பாக்குவதிலேயே குறியாக இருந்தனர். அதன்படி அரசு முன்வைத்த தீர்மானங்களில் முதலாவதாக இலங்கை நாடு சுதந்திரமான, இறமையுள்ள சோசலிசக் குடியரசு என்பது சேர்க்கப்பட்டு, முற்றான ஆதரவுடன், ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இரண்டாவது அடிப்படைத் தீர்மானம் பின்வருமாறு கூறுகிறது, "இலங்கைக் குடியரசு ஒற்றையாட்சியினை மட்டுமே கொண்ட நாடாகும்". இது தொடர்பாக சமஷ்ட்டிக் கட்சி தனது கடுமையான ஆட்சேபணையினை அரசிடம் முன்வைத்தபோதும்கூட, அதனை அரசு கண்டுகொள்ளவில்லை. எஸ் தர்மலிங்கம் சமஷ்ட்டிக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ் தர்மலிங்கம் இந்த அரசியலமைப்பில் மாற்றம் ஒன்றினை பங்குனி 16 அன்று பாராளுமன்றத்தில் முன்வைத்தார். அவரின் மாற்றம் பின்வருமாறு கூறியது, "இலங்கைக் குடியரசு பிரிவினையற்ற சமஷ்ட்டிக் குடியரசாக இருக்கும்" என்பதாகும். பாராளுமறத்தில் சிங்களத் தலைவர்களிடம் மன்றாட்டமாகப் பேசிய தர்மலிங்கம், இனச்சமத்துவம் இல்லையேல் நாடு பாரிய இனச்சிக்கலுக்குள் அகப்படும் என்றும், பொருளாதாரம் கடுமையான வீழ்ச்சியைக் காணும் என்றும் கூறினார். ஆகவே சமஷ்ட்டி அடிப்படையிலான தீர்வே தமிழ் மக்களின் உரிமைகளைப் பாதுகாக் கூடியது என்றும், இதனால் முழு நாடுமே நண்மைஅடையும் என்றும் கூறினார். ஆனால், அரச தரப்பிலிருந்த் அனைத்து உறுப்பினர்களும் தர்மலிங்கத்தின் வேண்டுகோளினை முழுமையாக எதிர்த்துப் பேசியதுடன் சமஷ்ட்டி தொடர்பில் தாம் ஒருபோது சிந்திக்கவோ செயற்படவோ போவதில்லையென்றும் கூறினர். தர்மலிங்கத்தின் பேச்சு கீழே, "உங்களிடம் சமஷ்ட்டி அமைப்புப் பற்றிப் பேச ஆணையோ அதிகாரமோ இல்லையென்றால் குறைந்தபட்சம் மத்திய அரசிடம் குவிந்துகிடக்கும் நிர்வாக அதிகாரங்கச்ளையாவது மாநிலங்களுக்குப் பகிர்ந்துகொடுக்கப்படுவதை உறுதிப்படுத்துங்கள்". "நான் எனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த விரும்புகிறேன். 1947 ஆம் ஆண்டு இடம்பெற்ற இலங்கையின் முதலாவது பாராளுமன்ற அமர்விலேயே தமிழ் மக்கள் மிகவும் தெளிவாகவும் உறுதியாகவும் ஒற்றையாட்சி அமைப்பினை முற்றாக நிராகரித்து விட்டார்கள். அதற்கு மேலதிகமாக 1965 இல் இடம்பெற்ற தேர்தல்களிலும் தமிழ் மக்கள் சமஷ்ட்டி அடிப்படையிலான தீர்விற்கே தமது ஆணையைத் தந்திருக்கிறார்கள்". என்று கூறினார். ஆனால், தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் பலத்த ஆட்சேபணைகளுக்கும் மத்தியிலும் ஒற்றையாட்சியை மையமாகக் கொண்ட அடிப்படை அரசியலமைப்பு பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு 1971 ஆம் ஆண்டு பங்குனி 27 அன்று சட்டமாக்கப்பட்டது. தர்மலிங்கம் ஒரு தீவிர சோஷலிச ஆதரவாளர். சிங்கள அரசுத் தலைவர்களின் இனவாதப் போக்குக் குறித்து மனமுடைந்த அவர் பின்வருமாறு தமிழ்ப் பத்திரிக்கையாளர்களிடம் பேசினார், " இன்றைய நாள் இலங்கையின் துரதிஷ்ட்டமான நாள். எனது சிங்கள நண்பர்களின் பிரச்சினை என்னவென்றால், அவர்கள் சிங்கள மக்கள் பற்றியும், அவர்களின் நலன்கள் பற்றி மட்டுமே சிந்திக்கிறார்கள். தமிழர் தரப்பு நியாயங்களை பார்க்க மறுக்கும் அவர்கள் , தமிழர் நலன்கள் பற்றி எதுவித அக்கறையினையும் கொண்டிருக்கவில்லை". ஒற்றையாட்சிக் கோட்பாட்டுக்குள்ளேயே இலங்கையினை வழிநடத்த ஆரம்பித்த சிங்களத் தலைவர்கள், சமஷ்ட்டி கட்சி பரிந்துரைத்த தமிழ் மொழிக்கான அந்தஸ்த்து, உத்தியோக பூர்வ மொழிப் பயன்பாடு குறித்தும் கடுமையான நிலைப்பாட்டினைக் கொண்டிருந்ததுடன், அதனையும் முற்றாக நிராகரித்தும் இருந்தனர். இதற்கு மாற்றீடாக அரசு முன்வைத்த அடிப்படை தீர்மானம் பின்வருமாறு கூறியது, "1965 ஆம் ஆண்டின் இலங்கை அரசியல் யாப்பின் பகுதி 33 இன் படி இலங்கையின் உத்தியோக பூர்வ மொழியாக சிங்களம் மட்டுமே இருக்கும்" என்று கூறியது. இதன்மூலம் சிறிமாவின் அரசு முன்னைய பிரதமர் பண்டாரநாயக்காவின் 1965 ஆம் ஆண்டின் தனிச்சிங்களச் சட்டத்திற்கு மீண்டும் உயிர்கொடுத்திருந்தது. அதுமட்டுமல்லாமல், தமிழ் மொழியினை முடிந்தளவிற்கு தமிழர் பகுதிகளில் பயன்படுத்தும் சட்டத்தினை மீளவும் கொண்டுவருமாறு சமஷ்ட்டிக் கட்சியினர் முன்வைத்த கோரிக்கையினையும் அரசு முற்றாக நிராகரித்துவிட்டது. அத்துடன், சிங்கள மொழிக்கு விசேட அந்தஸ்த்தும், மொழிரீதியிலான வழக்குகள் பிற்காலத்தில் வருமிடத்து அதற்கெதிரானா காப்பும் புதிய அரசியலமைப்புச் சட்டத்தில் சேர்க்கப்பட்டது. மேலும், அடிப்படை தீர்மானங்களின்படி மொழிதொடர்பான சட்டங்கள் அனைத்தும் சிங்களத்திலேயே இருக்குமென்றும், தேவையேற்படின் அச்சட்டங்களுக்கான தமிழ் மொழிபெயர்ப்புகள் வழங்கப்படலாம் என்றும் கூறப்பட்டது. சமஷ்ட்டிக் கட்சியினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையான அனைத்துச் சட்டங்களும் தமிழ் மொழியிலும் இருக்கும் எனும் கோரிக்கை இந்த அடிப்படைத் தீர்மானத்தின் மூலம் முற்றாக நிராகரிப்பட்டுப் போனது. அத்துடன், நாடுமுழுவதும் உள்ள நீதிமன்றங்களில் சிங்கள மொழியிலேயே செயற்பாடுகள் நடைபெறவேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது. இதன்மூலம் சமஷ்ட்டிக் கட்சியினரால் முன்வைக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நீதிமன்றச் செயற்பாடுகளில் தமிழ்மொழியே பயன்படுத்தப்படவேண்டும் என்கிற கோரிக்கையும் இச்சட்டத்தின்மூலம் முற்றாக நிராகரிக்கப்பட்டிருந்தது. கே ஜெயக்கொடி தமிழ் மொழியும், தமிழ் மக்களின் பிரச்சினைகளும் முற்றாக நிராகரிக்கப்பட்டு, சிங்களவர்களுக்கும், சிங்கள மொழிக்கும் மட்டுமே முன்னுரிமை கொடுத்து வரையப்பட்டு சட்டமாக்கப்பட்ட புதிய அரசியலமைப்புக் குறித்து பல தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் தமது ஆட்சேபணையினைத் தெரிவித்திருந்தனர். அந்தவகையில் சமஷ்ட்டிக் கட்சியின் உடுப்பிட்டித் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் கே ஜெயக்கொடி பாராளுமன்றத்தின் தனது ஆட்சேபணையினை பின்வருமாறு தெரிவித்தார், "நீங்கள் குறைந்தத பட்சம் வடக்குக் கிழக்கில் உள்ள நீதிமன்றங்களிலாவது தமிழ் மொழியில் நீதிமன்ற அமர்வுகளை நடத்த அனுமதியுங்கள்" என்று கோரியபோது, சிங்களப் பாராளுமன்ற உறுப்பினர்கள் அவரை எள்ளிநகையாடி, மறுதலித்துக்கொண்டிருந்தனர். இவை எல்லாவற்றிற்கும் மகுடம் வைத்தாற்போல் பெளத்த மதத்திற்கு அதிவிசேட முக்கியத்துவம் வழங்கப்பட்டது. அடிப்படை தீர்மானத்தின்படி பெளத்த மதத்திற்கான முன்னுரிமை இவ்வாறு கூறப்பட்டது, " இலங்கைக் குடியரசில் பெளத்த மதத்திற்கு மற்றைய மதங்களைக் காட்டிலும் முக்கிய இடம் வழங்கப்படும். மேலும், பெளத்த மதத்தினை போற்றிப் பாதுகாத்து, அதனை மேலும் வளர்ப்பது அரசுகளின் தலையாய கடமையாகும். மற்றைய மதங்களுக்கான உரிமைகள் இச்சசனத்தின் 18 ஆம் பகுதி, பிரிவு 1 "டி" இல் குறிப்பிடப்பட்டதுபோல வழங்கப்படும்" என்றும் கூறப்பட்டிருந்தது. சிங்கள பெளத்த மக்களை மட்டுமே முன்னிலைப்படுத்தி இந்த அரசியலமைப்பை வரைந்தவர்கள் இத்துடன் நிற்கவில்லை. சோல்பரி அரசியலமைப்பின் பிரகாரம் பகுதி 29 இல் குறிப்பிட்டிருந்த "சிறுபான்மையின மக்களுக்கெதிரான செயற்பாடுகளிலிருந்தான பாதுகாப்பு" எனும் சரத்து இப்புதிய அரசியலமைப்பில் முற்றாக நீக்கப்பட்டிருந்தது. சோல்பரி யாப்பு, பகுதி 29 , பிரிவு 2C இன் பிரகாரம் ஒரு மதமோ, இனமோ ஏனைய மதத்தினருக்கோ அல்லது இனமக்களுக்கோ பாதகம் விளைவிக்கும் வகையில் சட்டங்கள் பாராளுமன்றத்தால் இயற்றப்படுவதைத் தடுக்கும் சட்டமும் இந்தப் புதிய அரசியலமைப்பில் இருந்து முற்றாக அகற்றப்பட்டது. பல லட்சம் மலையகத் தமிழரின் வாக்குறிமைகளைப் பறித்தபோது நடைமுறையிலிருந்த சோல்பரி யாப்பின் சட்டம் அம்மக்களைக் காக்க முடியாதபோதும், அச்சட்டம் தொடர்ந்து அமுலில் இருக்கும்வரை எதிர்காலத்தில் சிங்கள மக்களின் நலன்களை முன்னிறுத்தி முன்னெடுக்கப்படும் எந்த நடவடிக்கையினையும் இச்சோலப்ரி யாப்பின் சட்டம் தடுத்துவிடலாம் என்று அஞ்சிய சிறிமாவோ, இந்த சரத்து முற்றாக நீக்கப்படவேண்டும் என்று அரசியலமைப்பினை வரைந்தவரான கொல்வி ஆர் டி சில்வாவிடமும் ஏனைய சிங்களவர்களிடமும் கூறியிருந்தார். அத்துடன், பாராளுமன்றமே அதியுயர் அதிகாரம் மிக்க அமைப்பு என்று கூறியதுடன், பாராளுமன்றத்தில் அதிகப்படியான பெரும்பான்மையினைக் கொண்ட சிங்களவர்களின் பலம் மேலும் அதிகரிக்கப்படுவதோடு, அவர்களின் விருப்பத்தின் அடிப்படையேலே நாடு இயங்கும் என்பதும் இதன்மூலம் உறுதியாகியது.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
இலங்கைக் குடியரசு யாப்பு தமிழ் மாணவர் பேரவை வீதிப் போராட்டங்களையும், சுவரொட்டிப் போராட்டத்தினையும் முடுக்கிவிட்டிருந்த அதே காலப்பகுதியில் சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய முன்னணி தனது தேர்தல் வாக்குறுதிகளுக்கு அமைய புதிய அரசியலமைப்பை வரைவதற்கு அரசியலமைப்புச் சபையொன்றினை உருவாக்கியது. புதிய அரசியலமைப்பின்படி இலங்கை நாடானது சுதந்திரமான, இறைமையுள்ள குடியரசாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. சமஷ்ட்டி அடிப்படையிலான தீர்வொன்றிற்கு உழைப்பதாகக் கூறிச் செயற்பட்டு வந்த சமஷ்ட்டிக் கட்சியும் அரசியலமைப்பு உருவாக்கத்தில் அரசுக்கு உதவ முன்வந்திருந்தது. ஆனால், சமஷ்ட்டிக் கட்சியின் அரசுடனான இந்த ஒத்துப்போதல் முடிவிற்கு தமிழ் இளைஞர்களிடமிருந்து கடுமையான எதிர்ப்பு எழுந்தது. உத்தேச அரசியலமிப்பிற்கும் தமிழ்ப் பராளுமன்ற உறுப்பினர்களுக்கும் தொடர்பிருக்கக் கூடாது என்று வாதிட்ட இளைஞர்கள் இந்த அரசியலமைப்பு பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பிற்கு விடப்படும்பொழுது, தமிழர்கள் தோற்கடிக்கப்பட்டு சிங்களவர்களின் ஒட்டுமொத்த ஆதரவுடன் இச்சட்டம் அமுலாக்கப்படும் என்றும், ஏற்கனவே நலிந்துபோயுள்ள தமிழரின் இன்றைய நிலை உலகத்தின்முன்னால் மேலும் பலவீனமாக்கப்பட்டுவிடும் என்றும் அவர்கள் வாதாடினர். சுந்தரலிங்கமும் நவரட்ணமும் இந்த அரசியல் யாப்புருவாக்க முயற்சியிலிருந்து சமஷ்ட்டிக் கட்சியை விலகிநிற்குமாறு தம்மால் ஆன அனைத்து வழிகளிலும் போராடிப் பார்த்தனர். ஆனால், அரசியல் யாப்புருவாக்கத்தில் தனது பங்களிப்பினையும் நல்குவது எனும் முடிவில் சமஷ்ட்டிக் கட்சி மிகவும் உறுதியாக நின்றுவிட்டது. தமது இறுதி முயற்சியாக சுந்தரலிங்கமும் நவரட்ணமும் சமஷ்ட்டிக் கட்சியின் யாழ்ப்பாண நகர மேயர் நாகராஜாவின் வீட்டில் சமஷ்ட்டிக் கட்சியின் தலைவர்களை சந்தித்து அவர்களை அரசியலமைப்பு விவகாரத்திலிருந்து விலகும்படி கேட்கச் சென்றிருந்தனர். ஆனால், அங்கு பேசிய அமிர்தலிங்கம், "அரசியல் அமைப்பு உருவாக்கத்திற்கு சமஷ்ட்டிக் கட்சியினைப் போகக் கூடாது என்று சொல்வதற்கு எவருக்கும் உரிமையில்லை" என்று மிகவும் கண்டிப்பாகக் கூறினார். பிரபல சிங்கள பெளத்த இனவாதிகளுடன் அமிர்தலிங்கம் சுந்தரலிங்கத்திடமும், நவரட்ணத்திடமும் பேசிய அமிர்தலிங்கம், "இலங்கை சமசமாஜக் கட்சியின் உப தலைவர் கலாநிதி கொல்வின் ஆர் டி சில்வாவே அரசியலமைப்பு விவகார அமைச்சராகவும் மலையகத் தோட்டங்களின் அமைச்சராகவும் அமர்த்தப்பட்டிருக்கிறார். அவர் எமது பாராளுமன்ற உறுப்பினர் திருச்செல்வத்துடன் பேசும்போது புதிய அரசியலமைப்பில் தமிழர்களுக்கென்று பல சலுகைகள் இடம்பெற்றிருக்கின்றன. ஆகவே இந்தச் சந்தர்ப்பத்தினை தவறவிடக் கூடாதென்று கூறியிருக்கிறார்" என்றிருக்கிறார். சமஷ்ட்டிக் கட்சித் தலைவர்களை நம்பவைத்து ஏமாற்றிய கொல்வின் ஆர் டி சில்வா - சிறிமாவுக்கு இடதுபுறத்தில். 1956 ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட தனிச்சிங்களச் சட்டத்தை எதிர்த்த விரல்விட்டு எண்ணக்கூடிய சிங்களவர்களில் கொல்வின் ஆர் டி சில்வாவும் ஒருவர் என்பதால் அமிர்தலிங்கம் உட்பட பல சமஷ்ட்டிக் கட்சி தலைவர்கள் அவர்மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தனர். "ஒரு மொழியென்றால் இரு நாடு, இரு மொழியென்றால் ஒரு நாடு" என்ற கொல்வின் ஆர் டி சில்வாவின் மயக்க வார்த்தைகளில் மதிமயங்கிய சமஷ்ட்டிக் கட்சித் தலைவர்கள், அவரால் தாம் முழுமையாக ஏமாற்றப்படவிருக்கிறோம் என்பதனை அப்போது அறிந்திருக்கவில்லை.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
எரிக்கப்பட்ட பேரூந்து பிரபாகரனின் முதலாவது வன்முறைச் செயற்பாடு 1970 ஆம் ஆண்டின் முற்பகுதியில் இடம்பெற்றது. அவரும் அவரது மூன்று தோழர்களும் இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேரூந்தொன்றிற்குத் தீமூட்டியிருந்தனர். அரசாங்கத்தின் தமிழர் விரோதச் செயற்பாடுகளுக்கு தமது எதிர்ப்பினைத் தெரிவிக்கும் நோக்கில் அரசுடைமைகளை எரியூட்டுவது சரியானதாக அவர்களுக்குப் பட்டது. ஆனால், அவ்வாறு அரசுடைமைகளைச் சேதப்படுத்தும்போது பொதுமக்கள்ளுக்கு எந்தத் தீங்கும் ஏற்பட்டுவிடக் கூடாதென்பதில் அவர்கள் மிகக் கவனமாக செயற்பட்டுவந்தனர். வல்வெட்டித்துறைக்கான தனது அன்றைய சேவையினை முடித்துக்கொண்டு பருத்தித்துறையில் அமைந்திருக்கும் பேரூந்து டிப்போவுக்கு வரும்வழியில் அதனை எரிப்பதென்று தீர்மானிக்கப்பட்டது. வல்வெட்டித்துறைக் கிராமத்தின் மூலையிலிருந்த ஒதுக்குப்புறமான வீதியின் அருகில் பிரபாகரனும் அவரது தோழர்கள் மூவரும் கைகளில் பெற்றோல் கொள்கலன் ஒன்றையும், தீப்பெட்டிகளையும் ஏந்திக்கொண்டு காத்திருந்தனர். தூரத்தில் பேரூந்தின் விளக்குகளின் வெளிச்சத்தைக் கண்ட தோழர்கள் இருட்டினுள் நழுவிவிட, பிரபாகரன் நிதானமாக தாம் கொண்டுவந்திருந்த தென்னை மரக் குற்றியினை வீதிக்குக் குறுக்காக இழுத்துப் போட்டார். தமக்கு முன்னால் விதிக்குக் குறுக்கே கிடந்த தென்னங்குற்றியை அகற்றிவிட பேரூந்தின் சாரதியும் நடத்துனரும் கீழே இறங்கிவர, அவர்களை பேரூந்தைவிட்டு விலகிச் செல்லுமாறு விரட்டினார் பிரபாகரன். மக்கள் எவருமற்றை வெற்றுப் பேரூந்தின் மீது தான் கொண்டுவந்த பெற்றோலினைத் தெளித்துவிட்டு, பேரூந்திற்குத் தீமூட்டினார். இந்தச் சம்பவத்தின் பின்னர் தோழர்களிடையே பிரபாகரனுக்கான மதிப்பு அதிகரிக்கத் தொடங்கியது. சோமவீர சந்திரசிறி சிவகுமாரனின் முதலாவது வன்முறைச் செயற்பாடு 1970 ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் இடம்பெற்றது. சிங்களப் பெளத்த இனவாதி என்று தமிழரால் பரவலாக அறியப்பட்ட உதவிக் கலாசார அமைச்சர் சோமவீர சந்திரசிறி உரும்பிராய் இந்துக் கல்லூரிக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்தார். இச்சந்தர்ப்பத்தினைப் பாவித்து அவர்மேல் தக்குதல் நடத்தத் திட்டமிட்ட சிவகுமாரன் காரின் அடிப்பகுதியில் தான் கொண்டுவந்த குண்டினைப் பொறுத்திவிட்டு கூட்டத்திற்குள் மறைந்துபோனார். சிறிது நேரத்தில் குண்டு பாரிய சத்தத்துடன் வெடித்துச் சிதற உதவியமைச்சரின் காரும் பலத்த சேதமடைந்தது. ஆனால், இத்தாக்குதலில் அமைச்சருக்கோ அல்லது வெறு எவருக்குமோ எந்தவித பாதிப்பும் ஏற்பட்டிருக்கவில்லை. இதனைத் தொடர்ந்து இன்னொரு தாக்குதல் முயற்சியையும் சிவகுமாரன் மேற்கொண்டார். அன்றைய காலத்தில் யாழ்ப்பாண நகர மேயராக இருந்த அல்பிரெட் துரையப்பாவை இலக்குவைத்து 1971 ஆம் ஆண்டு மாசி மாதம் ஒரு குண்டுத்தாக்குதலை அவர் மேற்கொண்டார். யாழ்ப்பாணம் இரண்டாம் குறுக்குத்தெருவில் வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த துரையப்பாவின் கார்மீது தான் கொண்டுவந்த கையெறிகுண்டை அவர் வீசியெறிய காரும் பலத்த சேதமடைந்தது. ஆனால், துரையப்பா அப்போது அங்கிருக்காததினால் தப்பித்துக்கொண்டார். யாழ்ப்பாண மாவட்டத்தில் தான் மேயராக இருந்த 1971 முதல் 1975 வரையான காலப்பகுதியில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதான அமைப்பாளராக அல்பிரெட் துரையப்பாவே செயற்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
தமிழ் மாணவர் பேரவையின் உருவாக்கம் சமஷ்ட்டிக் கட்சியினரின் உதவியினை இதுதொடர்பாக நாடிய மாணவர்கள், புதிய தரப்படுத்தல் திட்டத்திற்கெதிராக ஆர்ப்பாட்டங்களை நடத்துமாறு கோரியிருந்தனர். ஆனால், சமஷ்ட்டிக் கட்சி இதற்கு உடனடியான பதில் எதனையும் வழங்க விரும்பவில்லை. சமஷ்ட்டிக் கட்சியின் மெளனத்தினால் ஆத்திரமடைந்த சில இளைஞர்கள், இத்தரப்படுத்தலுக்கெதிரான நடவடிக்கைகளை தமது கைகளில் எடுப்பதற்காக யாழ் பொது நூலகத்தின் கேட்போர் கூடத்தில் ஒன்றுகூடினார்கள். அவர்களிடம் சத்தியசீலன் பேசும்போது, "நாம் தமிழ்க் காங்கிரஸ் மீது ஒருநாளுமே நம்பிக்கை வைத்தவர்கள் இல்லை. அது மிகவும் பழமையானதும், புதிய சிந்தனைகளை அறவே ஒதுக்குவதுமான ஒரு கட்சி. அதேபோல சமஷ்ட்டிக் கட்சியும் பழமைநோக்கிச் செல்வதுடன், இளைஞர்களின் உணர்வுகளுக்கு, குறிப்பாக மாணவர்களின் பிரச்சினைக்கு ஒருபோதுமே செவிசாய்த்ததில்லை. ஆகவே, எமது பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண எமக்கு புதிய அமைப்பொன்று தேவை". ஆகவே அந்த மாணவர் குழு தமக்கான புதிய அமைப்பொன்றை உருவாக்கியது. அதற்கு "தமிழ் மாணவர் பேரவை" என்று அவர்கள் பெயரிட்டனர். அவ்வமைப்பின் தலைவராக சத்தியசீலன் பொறுப்பெடுத்ததோடு, செயலாளராக திஸ்ஸவீரசிங்கம் செயற்பட்டார். இந்த அமைப்பில் சிவகுமாரன், அரியரத்திணம் மற்றும் முத்துக்குமாரசாமி ஆகியோரும் பங்கேற்றிருந்தனர். ஆரம்பத்தில் உயர்தரம் வரை கல்விகற்ற மாணவர்கள் மாத்திரமே அமைப்பினுள் சேர்க்கப்பட்டபோதும்கூட பின்னர் அது சாதாரண தரம் வரை கற்ற மாணவர்களையும், அண்மையில் பாடசாலையினை விட்டு நீங்கிய மாணவர்களையும் சேர்த்துக்கொண்டது. ஒரு சில மாதங்களுக்குப் பின்னர் சிவகுமாரன் அமைப்பை விட்டு வெளியேற பிரபாகரன் சேர்ந்துகொண்டார். 1971 ஆம் ஆண்டு தை 12 ஆம் திகதியன்று நடைபெறவிருந்த சமஷ்ட்டிக் கட்சியின் பொதுச்சபையின் கூட்டத்தில் இந்தத் தரப்படுத்தல் திட்டம் தொடர்பாக பேசவேண்டும் என்று கேட்பதற்காக மாணவர் பேரவையினர் அமிர்தலிங்கத்தை அணுகியிருந்தனர். ஆகவே சமஷ்ட்டிக் கட்சியின் இளைஞர் பிரிவுக்குப் பொறுப்பாகவிருந்த அமிர்தலிங்கம் மாணவர்களின் கோரிக்கை பற்றி பொதுச்சபையில் பேசியதோடு பாராளுமன்றத்தில் இதுகுறித்துப் பேசுமாறு மாணவர்கள் விடுத்த வேண்டுகோளினையும் அக்கூட்டத்தில் குறிப்பிட்டார். ஆனால், 1970 தேர்தல்களில் காரைநகர் இந்துக்கல்லூரியின் முன்னாள் அதிபர் ஏ தியாகராஜாவிடம் தோற்றிருந்த அமிர்தலிங்கம் பாராளுமன்றம் செல்லத் தவறியதோடு, சமஷ்ட்டிக் கட்சியும் மாணவர்களின் ஆதங்கத்தின் ஆழத்தினைப் புரிந்துகொள்ளத் தவறிவிட்டிருந்ததுடன், இன்னும் ஐந்து பிரச்சினகளுடன் இன்னொன்றாக இத்தரப்படுத்தல்பற்றிப் பேசலாம் என்று வாளாவிருந்துவிட்டது. தந்தை செல்வாவுடன் அமிர்தலிங்கம் சமஷ்ட்டிக் கட்சியின் பொதுச்சபையில் விவாதிக்கப்பட்ட சில விடயங்களை பிரத மந்திரியுடன் பேசுவதற்கென்று சமஷ்ட்டிக் கட்சியிலிருந்து தந்தை செல்வா தலைமையில் 11 உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டார்கள். தன்னை சந்திக்க விரும்பிய சமஷ்ட்டிக் கட்சியின் உறுப்பினர்களை கல்வியமைச்சர் பாடி உட் டின் மகமூட்டுட்டன் பேசுமாறு அனுப்பிய சிறிமாவோ, கல்வித்திட்டத்தில் மாற்றங்கள் சிலவற்றைச் செய்ய ஒத்துக்கொண்டாலும்கூட தரப்படுத்தல் திட்டம் அப்படியே தொடரும் என்பதனை சமஷ்ட்டிக் கட்சியின் உறுப்பினர்களிடம் கண்டிப்பாகக் கூறினார். அவ்வாறே அக்குழுவினருடன் பேசிய கல்வியமைச்சரும், தரப்படுத்தல் முடிவு மந்திரி சபையினால் எடுக்கப்பட்டதேயன்றி, தனது தனிப்பட்ட முடிவல்ல என்றும் கூறியதோடு, தான் அங்கு எடுக்கப்பட்ட முடிவினை செயற்படுத்தும் அமைச்சர் மட்டுமே என்றும் கூறினார். மேலும், இந்த முடிவினை மாற்றவோ, அல்லது திருத்தங்களை மேற்கொள்ளவோ தனக்கு அதிகாரம் இல்லையென்றும் கையை விரித்துவிட்டார். 1972 இல் புதிய தரப்படுத்தல் திட்டம் அமுலாக்கப்பட்டு அதன் தீவிரத் தன்மை தமிழ் மாணவர்களால் உணரப்பட்டபோது, தமிழ் மாணவர் பேரவை தனது எதிர்ப்புப் போராட்டங்களை முடுக்கிவிடத் தொடங்கியது. சிங்கள வராலாற்று ஆசிரியரான கெ. எம். டி சில்வா இத்தரப்படுத்தல் முறை பற்றி பதிவிடும்போது, 1972 இல் மருத்துவத்துறைக்கு தெரிவான மாணவர்களில் சிங்கள மாணவர்கள் 400 புள்ளிகளுக்கு வெறும் 229 புள்ளிகள் மட்டுமே எடுத்திருந்த நிலை போதுமானதாக இருக்க தமிழ் மாணவர்களோ 250 புள்ளிகளாவது பெறவேண்டும் என்கிற கட்டாயம் ஏற்படுத்தப்பட்டது. அவ்வாறே பல்வைத்தியத் துறைக்கு சிங்கள மாணவர்கள் 215 புள்ளிகள் மட்டுமே பெற்றுத் தெரிவாகும்போது, தமிழ் மாணவர்கள் குறைந்தது 245 புள்ளிகளாவது பெறவேண்டும் என்கிற கட்டாயம் ஏற்படுத்தப்பட்டது. மேலும் கால்நடை வைத்தியத்துறைக்கு சிங்கள மாணவர்கள் 200 புள்ளிகளுடன் தெரிவாகியபோது தமிழ் மாணவர்கள் 230 புள்ளிகளுக்கு அதிகமாக எடுத்தால் ஒழிய தேர்வுசெய்யப்படும் நிலையினை இழந்திருந்தார்கள். இது பல்கலைக் கழகங்களுக்குத் தெரிவாகும் தமிழ் மாணவர்களின் எண்ணிக்கையில் கடுமையான வீழ்ச்சியினை ஏற்படுத்தியிருந்தது. இதன்படி 1972 இல் பல்கலைக்கழகங்களுக்கு விஞ்ஞான பாடங்களுக்குத் தெரிவான மாணவர்களில் தமிழ் மாணவர்களின் எண்ணிக்கை 33.6 வீதமாக வீழ்ச்சியடைய சிங்கள மாணவர்களின் எண்ணிக்கை 63 வீதமாக அதிகரித்திருந்தது. இந்தச் சரிவு பின்வரும் வருடங்களில் மேலும் அதிகரித்ததுடன் 1973 ஆம் ஆண்டு தமிழ் மாணவர்களின் எண்ணிக்கை 29.3 வீதமாக வீழ்ச்சிகாண சிங்கள மாணவர்களின் எண்ணிக்கை 67.4 வீதமாக அதிகரித்துக் காணப்பட்டது. தாம் இனரீதியில் பாகுபாடு செய்யப்பட்டதை உணர்ந்த தமிழ் மாணவர்கள், சிங்கள அரசியல்த் தலிமைகளிடமிருந்து தமிழ் மாணவர்களுக்கு ஒருபோதுமே நீதி கிடைக்கப்போவதில்லையென்பதையும் உணரத் தலைப்பட்டார்கள். இந்த சிக்கலில் இருந்து வெளியே வர இருக்கும் ஒரே மார்க்கம் தனிநாடுதான் என்றும் அதனை அடைவதற்கான ஒரே வழி ஆயுத ரீதியிலான எதிர்ப்புப் போராட்டமே என்று திடமாக நம்பத் தொடங்கினார்கள். பிரபாகரனும், சிவகுமாரனும் இந்த எண்ணக்கருவை மிகவும் ஆணித்தரமாகவும், உணர்வுபூர்வமாகவும் தமது தோழர்களிடையே பரப்பத் தொடங்கியிருந்தனர். பொன் சிவகுமாரன் ஆனால் இவர்கள் இருவரும் பெரிதாகச் சந்தித்துக்கொண்டதில்லை. தமக்கே உரிய அமைப்புக்களில் இதனை அவர்கள் செய்துவந்தார்கள். இவர்கள் இவ்வாறு தனித்தனியாகச் செயற்பட்டு வந்தாலும், இவர்கள் இருவருக்குமே பல பொதுவான பண்புகள் இருந்ததாக அவர்களின் தோழர்கள் கூறுகிறார்கள். அவர்கள் ஒருபோதும் ஓய்ந்திருக்கவில்லை, தமது நோக்கங்கள் நிறைவேற ஏதாவது செய்தாக வேண்டும் என்கிற துடிப்பு அவர்களிடம் இருந்துகொண்டேயிருந்தது. அவர்கள் இருவருமே இந்தியச் சுதந்திரப் போராட்ட வீரர் சுபாஸ் சந்திரபோசை தமது முன்மாதிரியாகக் கொண்டிருந்தார்கள். இரவு முழுவதும் ஆயுதப் போராட்டம் பற்றிப் பேசவும், ஆலோசிக்கவும், வாதிடவும் அவர்களால் முடிந்தது. சிவகுமாரன் பற்றிப் ருத்திரமூர்த்தி சேரன் பின்வருமாறு கூறுகிறார், "சிவகுமாரன் ஆயுதப் போராட்டம் பற்றி இரவிரவாகப் பேசுவார். ஆயுதப்போராட்டமே தமிழர்களின் ஒரே தீர்வு என்பதை அவர் எமக்குக் கூறிக்கொண்டே இருப்பார்". பிரபாகரனின் முன்னைய தோழர்களில் ஒருவர் பேசும்போது, "அவர் பேசத் தொடங்கினால், அவரை நிறுத்துவது கடிணமானது. தமிழர்களின் பாரம்பரிய புகழ்பற்றித் தொடர்ச்சியாகப் பேசும் பிரபாகரன், அப்புகழினை மீண்டும் தமிழினம் அடையவேண்டும் என்றால் ஆயுத ரீதியிலான விடுதலைப் போராட்டத்தினூடாக தனிநாட்டினை உருவாக்குவதன் மூலமே அதனைச் செய்யமுடியும் என்று அவர் கூறுவார்" என்று பகிர்ந்தார்.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
தரப்படுத்தல் 1970 ஆம் ஆண்டு, வைகாசி 27 இல் இடம்பெற்ற தேர்தல்களில் சமஷ்ட்டிக் கட்சி 13 ஆசனங்களையும், காங்கிரஸ் 3 ஆசனங்களையும் பெற்றுக்கொண்டன. இதே தேர்தலில் சுதந்திரக் கட்சி தலைமையில் போட்டியிட்ட ஐக்கிய முன்னணி, சம சமாஜக் கட்சி மற்றும் கம்மியூனிஸ்ட் கட்சி ஆகியவை இணைந்து 106 ஆசனங்களையும் பெற்றுக்கொண்டன. தேசியப் பட்டியல் மூலம் தெரிவான மேலும் 6 ஆசனங்களையும் சேர்த்து இந்த முன்னணி 112 ஆசனங்களைப் பாராளுமன்றத்தில் பெற்றிருந்தது. இது வெறும் 151 உறுப்பினர்களை மாத்திரமே கொண்டிருந்த பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையினைக் காட்டிலும் அதிகமானதாகும். ஐக்கிய தேசியக் கட்சி வெறும் 17 ஆசனங்களை மட்டுமே இத்தேர்தலில் பெற்றிருந்தது. சுதந்திரக் கட்சியின் தலைவரான சிறிமாவோ பண்டாரநாயக்கா தனது மந்திரிசபையினை அமைத்திருந்தார். தனது கல்வியமைச்சராக கம்பொல சகிராக் கல்லூரியின் முன்னாள் அதிபராகக் கடமையாற்றிய கலாநிதி பாடி உட் டின் மகமூட்டீனை நியமித்தார். பாடி உட் டின் மகமூட் கல்வியமைச்சராக வந்தவுடன் அவர் செய்த முதலாவது வேலை ஊடகங்கள் மூலமாக மந்திரிசபையில் தீர்மானிக்கப்பட்ட தரப்படுத்தலினை அறிவித்ததுதான். ஏற்கனவே தமிழ் இளைஞர்கள் மனதில் முளைத்திருந்த பிரிந்துபோதல் எனும் எண்ணக்கருவிற்கு இந்த அறிவிப்பு மேலும் உரம் ஊட்டியது. பாராளுமன்றத்தில் பேசிய கல்வியமைச்சர் பாடி உட் டின், சிங்களவர்கள் பல்கலைக்கழகமூடான கல்வியினை நிராகரித்து வருகிறார்கள் என்றும், அதன்மீதான நம்பிக்கையினை இழந்துவருகிறார்கள் என்றும் கூறியதோடு, இதற்கெல்லாம் காரணம் பெரும்பாலான தமிழர்கள் பல்கலைக் கழக அனுமதியினைப் பெறுவதும், பல தமிழர்கள் பொறியியலாளர் மற்றும் மருத்துவர்களாக உருவாக்கப்படுவதும் இதற்கு இன்னொரு காரணம் என்றும் கூறினார். தற்போதிருக்கும் பல்கலைக் கழக அனுமதி மூன்று வழிகளில் தமிழ் மாணவர்களுக்கு அனூகூலமாக இருக்கின்றது என்று வாதிட்ட அவர், அவற்றைனைப் பின்வருமாறு விளக்கினார். முதலாவதக வரலாற்று ரீதியான காரணங்கள். அதாவது வடபகுதியில் இயங்கிவரும் மிகப் பிரபலமான, தரமான பாடசாலைகள். இரண்டாவது தமிழ் பரீட்சைத் தாள்களைத் திருத்தும் தமிழ் ஆசிரியர்கள் தமிழ் மாணவர்களுக்கு அதிகமான புள்ளிகளை வழங்கிவருகிறார்கள் என்பது. மூன்றாவதாக, பல்கலைக்கழகங்களில் செய்முறைத் தேர்வுகளின்பொழுது, தமிழ் ஆசிரியர்கள் தமிழ் மாணவர்களுக்கு உதவிவருகிறார்கள் என்பது. ஆகவேதான், சிங்கள மாணவர்களுக்கு இழைக்கப்பட்டுவரும் அநீதியினைத் தடுப்பதற்கு மந்திரிசபை கடுமையான தீர்மானங்களை நிறைவேற்றவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக அவர் அங்கே விபரித்தார். ஆகவேதான், விஞ்ஞானப் பாடங்களுக்கான செய்முறைத் தேர்வுகளை தான் இரத்துச் செய்வதாகவும், தரப்படுத்தலினை அமுல்ப்படுத்தப்போவதாகவும் கூறினார். தமிழ் மாணவர்கள் பெருவாரியாக தகுதி அடிப்படையில் பல்கலைக் கழகங்களுக்குத் தெரிவாவதாகவும், பல்கலைக் கழகங்களில் பணியாற்றும் தமிழ் ஆசிரியர்கள் தமிழ் மாணவர்களுக்கு விஞ்ஞான செய்முறைத் தேர்வுகளில் உதவிவருவதால் சிங்கள மாணவர்கள் பாதிக்கப்படுவதாகவும் கூறி சிங்கள பெளத்த அமைப்புக்களும் மாணவர் சங்கங்களும் முறையிட்டு, இந்தத்ப் பல்கலைக் கழக தேர்வுமுறை முற்றாக நீக்கப்படவேண்டும் என்றும் சிறிமாவுக்குத் தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்து வந்த நிலையில், தேர்தல் பிரச்சாரங்களில் இந்தக் கோரிக்கைகளை தான் நடைமுறைப்படுத்துவேன் என்று தான் அளித்த வாக்குறுதிகளுக்கு அமைவாக தான் ஆட்சியில் ஏறியதும் அதனைச் செய்யத் தலைப்பட்டார் சிறிமா. ஆனால், வடமாகாணப் பாடசாலைகள் பலவற்றில் செய்முறை விஞ்ஞான பாடங்களுக்கான திறமையான உபகரணங்கள் இருந்தன என்பதையும் மறுப்பதற்கில்லை. அதனாலேயே பல்கலைக்கழக விஞ்ஞான பாடங்களுக்கு பெருமளவில் வடபகுதித் தமிழ் மாணவர்கள் தெரிவுசெய்யப்பட்டார்கள். 1974 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் விஞ்ஞான மற்றும் பொறியியல் பாடநெறிக்கு தேர்வானவர்களில் 37.2 வீதமானவர்களும், வைத்தியத்துறை மற்றும் பல்வைத்திய பாடநெறிகளுக்குத் தெரிவானவர்களில் 40.5 வீதமானவர்களும், விவசாயம் மற்றும் கால்நடை வைத்தியத்துறைக்குத் தெரிவானவர்களில் 41.9 வீதமானவர்களும் இலங்கைத் தமிழர்களாக இருந்தார்கள். இலங்கைத் தமிழ் மாணவர்கள் பல்கலைக் கழகத் தேர்வுகளில் கணிசமான இடங்களைத் தக்கவைத்துவந்த இந்த நிலை 1971 வரையில் தொடர்ந்து வந்தது. இவ்வருடத்தில் விஞ்ஞான பாடநெறிகளுக்குத் தெரிவானவர்களில் 35.2 வீதமான மாணவர்கள் இலங்கைத் தமிழர்களா இருந்ததுடன், பொறியியல்ப் பீடங்களுக்குத் தெரிவானவர்களில் 40.8 வீதமானவர்களும் மருத்துவத்துறைக்குத் தெரிவானவர்களில் 40.9 வீதமானவர்களும் இலங்கைத் தமிழர்களாக இருந்தார்கள். பாடி உட் டின் மகமூட்டீன் தமிழ் மாணவர்கள் மற்றும் தமிழ் ஆசிரியர்களின் மீதான கடுமையான விமர்சனம் தமிழ் மாணவர்களைச் சினங்கொள்ள வைத்திருந்தது. கல்வித்திட்டத்தை ஏமாற்றியும், தமிழ் ஆசிரியர்களின் உதவியினையும் கொண்டே தமிழ் மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாவதாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டினைக் கடுமையாக மறுத்த தமிழ் மாணவர்கள், தமது அயராத உழைப்பினாலும் கடுமையான பயிற்சியினாலுமே தாம் பலகலைக் கழகங்களுக்குத் தெரிவாகி வருவதாக வாதிட்டார்கள். http://www.cmb.ac.lk/wp-content/uploads/science-old.jpg இலங்கைப் பல்கலைக்கழகம் 1942 இல் ஆரம்பிக்கப்பட்டது முதல் 1957 வரையான காலப்பகுதிவரை பாடநெறிகள் ஆங்கிலமொழியிலேயே நடைபெற்றுவந்தன சிங்கள மற்றும் தமிழ் மாணவர்கள் ஒரே பரீட்சையினை ஆங்கில மொழியிலேயே எழுதிவந்தனர். ஆனால், 1957 முதல் பரீட்சைகளுக்கான விளக்கப்படுத்தல்கள் சிங்களத்திலோ தமிழிலோ வழங்கப்பட முடியும் என்கிற முறை கொண்டுவரப்பட்டதோடு, அதுவரை இருந்த செயன்முறைகளும் மாற்றம் பெறத் தொடங்கின. இரு மொழிகளைப் பேசும் மாணவர்கள் ஒரே பரீட்சைத் தாளினை எழுதினாலும் கூட, அவற்றை தமது தாய் மொழிகளில் பதிலளிக்கும் வழிமுறை ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது. பரீட்சைகளில் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் பதிலளிக்கப்பட்ட பரீட்சைத் தாள்கள் திருத்தப்பட்டு, அவர்கள் பெற்ற புள்ளிகளின் அடிப்படையில் ஒரே பட்டியலில் அதிகூடிய புள்ளிகள் முதல் அதி குறைந்த புள்ளிகள் வரை தரப்படுத்தப்பட்டது. இந்த நடைமுறை, தகுதி அடிப்படியில் தரப்படுத்தும் முறை என்று அறியப்பட்டது. பல்கலைக்கழகங்களில் ஒவ்வொரு பாடநெறிக்கும் ஒதுக்கப்பட்ட ஆசனங்களுக்கு அமைவாக இந்தப் பட்டியலில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்ற மாணவர்களில் இருந்து தேர்வு செய்யப்பட்டார்கள். ஆனால், சிறிமாவின் அரசாங்கம் கொண்டுவந்த தரப்படுத்தல் திட்டத்தின்படி, சிங்கள மாணவர்களும் தமிழ் மாணவர்களும் தாம் பெற்ற புள்ளிகளின் அடிப்படையில் தனித்தனியாக பட்டியலிடப்பட்டு, ஒரே மொழியில் பரீட்சை எழுதியவர்களின் புள்ளிகள், ஒருவரின் புள்ளிகளுக்கெதிராக இன்னொருவரின் புள்ளிகள் ஒப்பிட்டுப் பார்க்கப்பட்டு தேர்வுசெய்யப்பட்டார்கள். இந்தப் புதிய தரப்படுத்தல் முறை சிங்கள மாணவர்களுக்கு மிகவும் அனூகூலமாகவும், தமிழ் மாணவர்களில் பல்கலைக் கழக அனுமதியில் கடுமையான தாக்கத்தினையும் ஏற்படுத்தப்போவதை தமிழ் மாணவர்கள் புரிந்துகொண்டார்கள். ஆகவே இந்தப் புதிய தரப்படுத்தல்த் திட்டத்திற்கெதிராக பாரிய மாணவர் ஆர்ப்பாட்டம் ஒன்றினை மாணவர்களான பொன்னுத்துரை சத்தியசீலனும் சபாலிங்கமும் ஏற்பாடு செய்தார்கள். இந்த மாணவர் ஆர்ப்பாட்டம் யாழ்ப்பாணம் வைத்தீஸ்வராக் கல்லூரியில் இருந்து ஆரம்பமாகி, பின்னர் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி, கனகரட்ணம் மகா வித்தியாலயம் (பின்னாளில் ஸ்டான்லிக் கல்லூரி என்று அறியப்பட்டது), பரி யோவான் கல்லூரி, புனித பத்திரிசியார் கல்லூரி, யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி ஆகிய பாடசாலைகள் ஊடாகப் பயணித்து இறுதியாக யாழ்ப்பாணம் முற்றவெளியில் இடம்பெற்ற பாரிய பொதுக்கூட்டத்துடன் நிறைவுபெற்றது. கூட்டத்தின் இறுதியில் சிறிமாவின் நோக்கத்தின் கருவியாகச் செயற்பட்ட பாடி உட் டின் மகமூட்டீன் உருவப்பொம்மை தீக்கிரையாக்கப்பட்டது. கூட்டத்தில் பேசிய மாணவன் சத்தியசீலன் பின்வருமாறு கூறினார், "மொத்தத் தமிழ்ச் சமூகத்தினதும் இருப்பையும் பாதிக்கும் வகையிலேயே இந்த புதிய தரப்படுத்தல் திட்டம் கொண்டுவரப்பட்டிருக்கிறது. இதன்மூலம் பல தமிழ் மாணவர்களின் உயர்தரக் கல்வி கடுமையான வீழ்ச்சியினை அடையப்போவதுடன் பல தமிழ் மாணவர்களின் உயர்தரப் பெறுபேறுகளின் தகமையும் குறைவடையப் போகிறது. இத்திட்டத்தின் மூலம் பெருமளவு தமிழ் மாணவர்களின் உயர்கல்வியும் அதனூடான வேலைவாய்ப்பும் தட்டிப் பறிக்கப்பட்டிருக்கிறது. தமது கல்வியின் மூலம் தரமான தகுதியினையும், வேலைவாய்ப்புக்களையும் அடையமுடியும் என்று இருந்த தமிழ் மாணவர்களின் கடைசி நம்பிக்கையும் இதன்மூலம் அழிக்கப்பட்டிருக்கிறது".
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
தனிநாடு தமிழர்களுக்கான ஒரே தீர்வு தனிநாடே என்று உறுதியாகத் தீர்மானித்த பிரபாகரன் இளைஞர்களை தனிநாட்டுக்கான போராட்டம் நோக்கி உந்திவந்த அரசியல்ச் செயற்ப்பாட்டாளர்களான ஈழவேந்தன், கோவை மகேசன் போன்றோரைத் தொடர்ச்சியாகச் சந்தித்து கலந்தாலோசித்து வந்தார். அவர்களுடனான ஆலோசனைகளின்போது சமஷ்ட்டிக் கட்சியின் கையாலாகாத் தனத்தையும், சிங்கள அரசுகளுக்கு ஆதரவாகச் செயற்படும் கொள்கையினையும் கடுமையாக விமர்சித்த பிரபாகரன், சுந்தரலிங்கம் மற்றும் நவரட்ணம் போன்றோரின் நிலைப்பாடான தனிநாடு நோக்கி சமஷ்ட்டிக் கட்சி போராட்டத்தினை முன்னெடுக்கவேண்டும் என்று கூறிவந்தார். சுந்தரலிங்கம் தனியான நாடு எனும் கொள்கையினை முதன்முதலில் எதிர்த்தவர் சுந்தரலிங்கம்தான். ஆனால், 1958 இல் தமிழர் மீதான சிங்களவர்களின் தாக்குதலின் பின்னர் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்ட அவர் பாராளுமன்றத்தில் உரையாற்றும்போது தமிழர்களுக்கான ஒரே தீர்வு தனியான நாடுதான் என்று கூறியதோடு, அதனை தாம் ஈழம் என்று அழைப்பதாகவும் கூறினார். மேலும், தனிநாட்டிற்குக் குறைவான எந்தத் தீர்வையும் தமிழர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடாது என்றும் அவர் வாதிட்டு வந்தார். சிங்கள அரசியல்வாதிகளுடனும், புத்திஜீவிகளுடனும் தனக்கு இருக்கும் அனுபவத்தின் அடிப்படையில் அவர்கள் இலங்கையினை ஒரு பெளத்த சிங்கள நாடாக மாற்றவே முயன்று வருகிறார்கள் என்று வெளிப்படையாகவே அவர் கூறிவந்தார். சிங்களவர்கள் அரசியல் நம்பகத்தன்மையற்றவர்கள் என்றும், ஏற்றுக்கொள்ளும் எந்த முடிவினையும் அவர்கள் நடைமுறைப்படுத்தப்போவதில்லையென்றும் வாதிட்ட அவர் தமிழர்களுக்கான உரிமைகளையோ மொழிக்கான அந்தஸ்த்தையோ சிங்களவர்கள் ஒருபோதுமே தரப்போவதில்லை என்பதையும் ஆணித்தரமாகக் கூறிவந்தார். அந்நியர்களின் ஆக்கிரமிப்பிற்கு முன்னர் இருந்த நிலையான வடக்குக் கிழக்கின் பூர்வீக இனமக்கள் தமிழர்களே எனும் நிலையினை மீண்டும் உருவாக்கவேண்டும் என்றும் அத்தாயகம் ஈழம் என்று அழைக்கப்படவேண்டும் என்றும் சுந்தரலிங்கம் வாதாடிவந்தார். ஆனால், அவரது கோரிக்கையான தனிநாடு தமிழரிடையே முக்கியத்துவத்தினைப் பெறத் தவறிவிட்டது. 1960 இலும் 1965 இலும் பாராளுமன்றத் தேர்தல்களில் வவுனியாவில் ஈழத் தமிழர் ஒற்றுமை முன்னணி எனும் பெயரில் போட்டியிட்ட அவரது கட்சியைத் தமிழர்கள் புறக்கணித்திருந்தார்கள். 1960 தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகக் களமிறங்கிய சிவசிதம்பரத்தின் 5370 வாக்குகளுக்கு எதிராக சுந்தரலிங்கத்திற்கு 4231 வாக்குகளே கிடைத்தன. மேலும் 1965 தேர்தலில் தமிழ்க் காங்கிரஸில் போட்டியிட்ட சிவசிதம்பரத்தின் 7265 வாக்குகளுக்கு எதிராக சுந்தரலிங்கத்திற்கு 3952 வாக்குகள் மட்டுமே கிடைத்திருந்தன. இதன் பிற்பாடு காங்கேசந்துறையில் சமஷ்ட்டிக் கட்சியின் தலைவர் செல்வநாயகத்தை எதிர்த்துப் போட்டியிட்ட சுந்தரலிங்கம் 5788 வாக்குகளைப் பெற்றுக்கொள்ள செல்வாவோ 13,520 வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றிருந்தார். நவரட்ணம் 1970 தேர்தல்களில் போட்டியிட்ட நவரட்ணத்தின் சுயாற்சிக் கழகமும் தேர்தலில் அவ்வளவாகப் பிரகாசிக்கவில்லை. அதுவும் தமிழ்மக்களால் நிராகரிக்கப்பட்டது. 1963 இல் இருந்து ஊர்காவற்துறை தொகுதியில் வெற்றிபெற்ற வந்த நவரட்ணம், புதிய கட்சிக்கு மாறியதன் பின்னர் தனது ஆதரவாளர்களின் வாக்குகளை இழந்தார். 1963 இல் 14,963 வாக்குகளையும் 1965 இல் 13,558 வாக்குகளையும் பெற்று வெற்றியீட்டிய நவரட்ணம், 1970 தேர்தலில் வெறும் 4758 வாக்குகளைப் பெற்றுத் தோல்வியடைந்திருந்தார். பெரும்பாலான வாக்காளர்கள் நவரட்ணத்தின் முன்னைய கட்சியான சமஷ்ட்டிக் கட்சிக்கே வாக்களித்ததுடன் புதிதாக போட்டியிட்ட ரட்ணம் என்பவரைத் தெரிவுசெய்தார்கள். முழு யாழ்ப்பாணக் குடாநாடுமே நவரட்ணத்தின் தனிநாட்டுக்கான கோரிக்கையினை அன்று நிராகரித்திருந்தது. 1956 ஆம் ஆண்டிலிருந்து தனிநாட்டுக் கொள்கையினை முற்றாக நிராகரித்திருந்த சமஷ்ட்டிக் கட்சியினர் தமிழருக்கான தீர்வாக சமஷ்ட்டி முறையிலான அரசியல் தீர்வையே தொடர்ச்சியாக முன்வைத்து வந்தனர். 1970 ஆம் ஆண்டு சித்திரை 4 ஆம் திகதி வெளியிடப்பட்ட சமஷ்ட்டிக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் பின்வருமாறு கூறுகிறது, "...இந்த நாட்டினை கூறுபோடும் எந்த நடவடிக்கையும் இந்த நாட்டிற்குப் பாதகமாக அமையும் என்பதையும் , தமிழ் மக்களுக்கு இதனால் எந்தப் பலனும் கிடைக்காது என்பதனையும் நாம் மிகவும் உறுதியாக நம்புகிறோம். ஆகவே, தனிநாட்டுக் கோரிக்கையினை முன்வைத்து தேர்தலில் போட்டியிடும் எந்த அரசியல்க் கட்சிக்கோ அல்லது அமைப்பிற்கோ ஆதரவளிக்க வேண்டாம் என்று நாம் தமிழ்மக்களைக் கேட்டுக்கொள்கிறோம்" தனது தேர்தல் தோல்வி குறித்து டெயிலி நியூஸிற்கு செவ்வி கொடுத்த நவரட்ணம், தனிநாட்டிற்கான தனது கோரிக்கைக்குக் கிடைத்த இத்தோல்வி தற்காலிகமானதுதான் என்று கூறியதுடன், தான் மாவட்ட சபைத் தேர்தல்களில் கூறிய நிலைப்பாடு மாறாது என்றும் கூறினார். "இந்தத் தேர்தலினை நான் அரசுக்கும், பெரும்பான்மைச் சிங்களச் சமூகத்திற்கும் ஒரு செய்தியை அனுப்பும் நடவடிக்கையாகப் பாவித்தேன். அதாவது, சிங்கள அரசுகளும், தலைவர்களும் தமிழர்களின் அவலங்களைத் தீர்த்துவைத்து கெளரவமான தீர்வொன்றைத் தருவார்கள் என்கிற நம்பிக்கையினைத் தமிழர்கள் முற்றாக இழந்துவிட்டார்கள் என்பதுதான் அந்தச் செய்தி. இவர்களின் செயற்பாடுகளினால் தமிழர் சிங்களவர் ஆகிய இரு இனங்களும் இனிமேல் ஒன்றாக வாழமுடியாது என்கிற நிலையினை அடைந்துவிட்டோம். இனிமேல் தமிழர்கள் பிரிந்துசென்று தமது தலைவிதியை தாமே தீர்மானிக்கும் கட்டத்தை அடைந்துவிட்டார்கள்" என்று அவர் கூறினார். தனிநாட்டிற்கான கோரிக்கையினை முன்வைத்து சுந்தரலிங்கமும், நவரட்ணமும் தேர்தலில் போட்டியிட்டுத் தோற்றிருந்தாலும்கூட, இளைஞர்களின் மனதில் தனிநாட்டிற்கான தேவையினை உணரவைப்பதில் பாரிய வெற்றியினைப் பெற்றிருந்தார்கள். பல இளைஞர்கள் தனிநாட்டை அடைவதற்கான வழிமுறைகள் பற்றித் தீவிரமாக ஆராய முற்பட்டிருந்தார்கள். வன்முறையற்ற வழிமுறைகள் மூலம் போராடுவது பலத்த தோல்வியினையே சந்தித்திருக்கிறது என்று அவர்கள் வாதாடினார்கள். ஆயுதத்தினை ஆயுதத்தின் மூலமே எதிர்கொள்ளவேண்டும், அதன்மூலமே தமிழர்களை மரியாதையுடன் நடத்தவேண்டும் என்பதனை சிங்களவர்கள் உணர்ந்துகொள்வார்கள். எமது பதிலடி கடுமையாக இருக்கும்போதுதான் திருப்பி எம்மீது தாக்குதல் நடத்து முன் அவர்கள் சிந்திப்பார்கள் என்று இளைஞர்கள் நியாயப்படுத்தத் தொடங்கினர்.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
கரிகாலன் தங்கத்துரை எனப்படும் ந. தங்கவேலு அவர்களின் ரகசியக் குழுவிற்கு தங்கத்துரையே தலைவராக இருந்தார். அவரை அவர்கள் மாமா என்று பாசத்துடன் அழைத்து வந்தார்கள். அந்த அமைப்பில் சுமார் 25 இளைஞர்கள் இருந்தார்கள். அனைவரும் வல்வெட்டித்துறையைச் சேர்ந்தவர்கள், ஒருவருக்கொருவர் உறவினர்கள். 1970 இல் தங்கத்துரை இரு சுழல்த் துப்பாக்கிகளை வாங்கியிருந்தார். ஒன்று 0.22 எம்.எம் வகையும் மற்றையது 0.38 எம்.எம் வகையையும் சேர்ந்தது. இவை உள்ளூரில் தயாரிக்கப்பட்டிருந்ததுடன், இவற்றினை பயிற்சிக்காக அவர்கள் பாவித்து வந்தார்கள்.அமைப்பிலிருந்தவர்களை இவ்வகையான சுழல்த் துப்பாக்கிகளைத் தயாரிக்குமாறு தங்கத்துரை கேட்டிருந்தார். வானொலி திருத்துனரான கண்ணாடி என்று அழைக்கப்பட்டவர் இந்த தயாரிப்பு முயற்சிக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டார். அவரது உதவியாளராக "தம்பி" பிரபாகரன் நியமிக்கப்பட்டார். அவர்கள் அவ்விரு துப்பாக்கிகளையும் பாகம் பாகமாய்ப் பிரித்தெடுத்து மீண்டும் அவற்றைச் சேர்த்து துப்பாக்கிகளாக பொருத்தினார்கள். சில நாட்களிலேயே துப்பாக்கிகளைக் கழற்றிப் பூட்டுவதில் நன்கு தேர்ச்சி பெற்று விட்டார்கள். 1982 ஆம் ஆண்டு கொழும்பு குயீன்ஸ் கிளப்பில் தங்கத்துரை மற்றும் குட்டிமணிக்கெதிராக நடத்தப்பட்ட வழக்கின்போது நான் அவர்களைச் சந்தித்துப் பேசும் வாய்ப்புக் கிடைத்திருந்தது. அவர்களின் துப்பாக்கித் தயாரிப்பு முயற்சி பற்றி நான் வினவியபோது தங்கத்துரை பின்வருமாறு கூறினார், "துப்பாக்கிகளைத் தயாரிப்பதுபற்றிய அறிவு எங்களுக்கு அப்போது இருக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால், எமது தோழர்களில் பலர் இப்போதுதான் துப்பாக்கியை முதல்முறையாகக் கண்டிருக்கிறார்கள். நான் கண்ணாடியிடமும் பிரபாகரனிடமும் அவற்றை கழற்றிப் பார்க்குமாறு கூறியிருந்தேன். ஒரு வீட்டின் விறாந்தையில் அமர்ந்தபடி சுத்தியலினாலும் திருகாணிக் கழற்றியினாலும் அவற்றைக் கழற்ற முயன்றார்கள். மிகச் சிறிய நேரத்திலேயே அவர்களால் அவற்றினை முற்றாகக் கழற்றியெடுக்க முடிந்தது. தம்மால் பிரித்தெடுக்கப்பட்ட பாகங்களைக் கவனமாக ஒரு பத்திரிகைத் தாள் மீது பரவிவிட்டு பின்னர் அப்படியே துப்பாக்கியாகப் பொருத்தினார்கள். அவர்கள் இருவருக்கும் மிகவும் சிறப்பான அவதானிப்பும், ஞாபகசக்தியும் இருந்ததை நான் கவனித்தேன்". சிறிது காலத்திலேயே கைத்துப்பாக்கிகளைத் தாமாகவே தயாரிக்கும் நிலையினை அவர்கள் அடைந்தார்கள். சிலவற்றை அவர்களே தயாரித்தார்கள். அதேபோல ரவைகளைத் தயாரிக்கும் புதிய முறைகளையும் அவர்கள் அறிந்துகொண்டார்கள். முதலில் தீப்பெட்டிகளில் இருக்கும் இரசாயணத்தைக் கொண்டு ரவைகளை அவர்கள் செய்துபார்த்தார்கள். பின்னர் சரவெடிகளில் இருக்கும் இரசாயணத்தை ரவைகளில் நிரப்பி முயன்று பார்த்தார்கள். அவற்றுள் மூலை வெடி என்றழைக்கப்பட்ட முக்கோண வடிவ வெடிகளை அதன் வெடிச் சக்திக்காக ரவைகளில் பாவிக்க விரும்பினார்கள். வட்டுக்கோட்டைத் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் ஏ தியாகராஜா அக்காலத்தில் சிவகுமாரன் பயன்படுத்திய துப்பாக்கி, உலகநாதனைக் கொல்ல குட்டிமணி பயன்படுத்திய துப்பாக்கி, வட்டுக்கோட்டை பாராளுமன்ற உறுப்பினர் ஏ தியாகராஜாவைக் கொல்ல திஸ்ஸவீரசிங்கம் பாவித்த துப்பாக்கி மற்றும் அல்பிரட் துரையப்பாவைக் கொல்ல பிரபாகரன் பயன்படுத்திய துப்பாக்கி ஆகிய எல்லாமே அவர்களால் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டவைதான். அதேபோல குண்டுகளைத் தயாரிப்பதிலும் அவர்கள் தேர்ச்சி பெற்றார்கள். அமைப்பின் அனைத்து உறுப்பினர்களும் குண்டுகளைத் தயாரிப்பதில் முழுமூச்சாக ஈடுபட்டார்கள். துப்பாக்கிகளைத் தயாரிப்பதைக் காட்டிலும் குண்டுகளைத் தயாரிப்பது ஆபத்தானது. இவ்வாறான குண்டுத் தயாரிப்புக்களில் இரு வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்றன. முதலாவது 1970 ஆம் ஆண்டு தொண்டைமானாறு பனங்காட்டில் இரசாயணங்களை அவர்கள் கையாளும்போது ஏற்பட்டிருந்தது. குண்டுக்கான வெடிபொருட்களை அவர்கள் இணைத்துக்கொண்டிருக்கும்போது வெடிப்பு ஏற்பட்டது. அதில் சின்னச் சோதி காயப்பட்டிருந்தார். இரண்டாவது வெடிப்பு சற்றுத் தீவிரமானது. தங்கத்துரை, சின்னச் சோதி, பிரபாகரன் மற்றும் நடேசுதாசன் ஆகியோர் எரிகாயங்களுக்கு உள்ளானார்கள். பிரபாகரனுக்கு வலதுகாலில் எரிகாயம் ஏற்பட்டிருந்தது. அக்காயம் ஆறுவதற்கு சிலகாலம் சென்றதுடன், அது நிரந்தரமான கருத்த வடுவையும் அவரது காலில் ஏற்படுத்திவிட்டிருந்தது. பிரபாகரனுக்கு தனது காலில் ஏற்பட்ட காயம் பெருமையாக இருந்தது. தனது நண்பர்களுக்கு அக்காயத்தைக் காட்டி அவர் மகிழ்ந்தார். காலில் கருமையான காயம் ஏற்பட்டுள்ளதால் தான் இனிமேல் கரிகாலன் என்று அழைக்கப்படலாம் என்று நகைச்சுவையாக அவர் தனது நண்பர்களிடம் சொல்லிக்கொள்வதுண்டு. சோழர்களின் புகழ்மிக்க இளவரசனான கரிகாலச் சோழன் மீது பிரபாகரன் பெரிதும் மதிப்பு வைத்திருந்தார். கரிகாலச் சோழன் கூட தனது காலில் ஏற்பட்ட கருமை நிறத் தழும்பிற்காகவே "கரிகாலச் சோழன்" என்று அழைக்கப்பட்டு வந்ததாக வரலாறு கூறுகிறது. கரிகாலச் சோழன் தனது போர்த்திறமை மூலம் சோழ நாட்டினை விஸ்த்தரித்து சோழப் பேரரசாக மாற்றியிருந்தார். பிரபாகரனும் தனது பெயரை கரிகாலன் என்று வரிந்துகொண்டார். 1982 இல் தமிழ்நாட்டின் பாண்டி பஸார் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பதிவுசெய்யப்பட்ட பொலீஸ் அறிக்கையில் பிரபாகரனின் பெயர் "கரிகாலன்" என்றே பதியப்பட்டிருந்தது. பிரபாகரனின் வலது காலில் இருக்கும் எரிகாயத் தழும்பை முன்வைத்தே பொலீஸார் தமது தேடுதல்களை நடத்தியிருந்தார்கள். ஆயுதங்களையும் குண்டுகளையும் தயாரிக்கும் பிரபாகரனின் அவா இன்றுவரை தொடர்கிறது. இராணுவத்தினரிடமிருந்து கைப்பற்றப்படும் ஆயுதங்களைப் பரிசோதித்துப் பார்க்கும் பிரபாகரன் அவற்றை மெருகூட்டுவதன் மூலம் எவ்வாறு தாக்குதல்களில் அவற்றை திறமையாகவும், குறைந்த ரவைகளுடன் பயன்படுத்தலாம் என்று எப்போதுமே சிந்தித்துக்கொண்டிருப்பார். இராணுவத்திடமிருந்து கைப்பற்றப்பட்ட கனரக மோட்டார்கள், நீண்ட தூர ஆட்டிலெறிகளைக் கூட உருமாற்றி, இலங்கையரசு பாவித்த மேற்கு நாடுகளிலிருந்து வாங்கப்பட்ட எறிகணைச் செலுத்திகளின் இடத்தைத் துல்லியமாகக் கண்டறியும் கருவிகளின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு பாதுகாப்பாக உபயோகிக்கும் வழிமுறைகளைப் பிரபாகரன் கையாண்டு வந்தார். பிரபாகரன் 14 வயது நிரம்பியிருந்த வேளையிலேயே அவரது மைத்துனரான சாதாரண தரத்தில் கல்விபயின்று வந்த பெரிய சோதி என்பவரால் அமைப்பினுள் சேர்க்கப்பட்டார். அன்றிலிருந்து பாடசாலைக்குச் சமூகமளிப்பதைத் தவிர்த்து வந்த பிரபாகரன் அரசியல் கூட்டங்களிலும் ஆலோசனைகளிலும் பங்கேற்கத் தொடங்கினார். 1968 இல் டட்லியின் அரசிலிருந்து சமஷ்ட்டிக் கட்சி வெளியேறி, எதிர்க்கட்சிக்கு ஆதரவளிப்பதாக முடிவெடுத்ததன் பிற்பாடு, யாழ்க்குடாநாட்டில் அரசியல் ஆலோசனைக் கூட்டங்களும், விவாதங்களும் மிகவும் மும்முரமாக இடம்பெற்று வந்தன. சமஷ்ட்டிக் கட்சியின் எதிர்க்கட்சிக்கு ஆதரவளிக்கும் முடிவினை இளைஞர்கள் கடுமையாக எதிர்த்ததுடன், தமிழர்களுக்கான அரசியல் உரிமைகளைப் போராடி பெறுவதை விடுத்து, மீண்டும் இன்னொரு சிங்களக் கட்சிக்கே ஆதரவளிப்பதென்பது கட்சியின் நோக்கத்திற்கு முரணானது என்று வாதிட்டனர். சமஷ்ட்டிக் கட்சியின் முடிவு பற்றி தந்தை செல்வா என்னதான் சமாதான சொல்ல முனைந்தாலும், இளைஞர்கள் அதனைக் கேட்கும் நிலையில் இருக்கவில்லை. குறிப்பாக வி நவரட்ணத்தின் சுயாட்சிக் கழக உறுப்பினர்கள் இதனால் பெரிதும் அதிருப்தியடைந்து காணப்பட்டார்கள்.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
சமஷ்ட்டிக் கட்சியிலிருந்து பிரிந்துசென்ற குட்டிமணியும் தங்கத்துரையும் அன்று கல்வியமைச்சராக இருந்த ஐ. எம். ஆர். ஏ. ஈரியகொள்ள, ஹரிஜன்களாக இருந்த தமிழ் மாணவர்கள் சிலர் பெளத்த மதத்தினைத் தழுவிக் கொண்டதால், ஹரிஜன்களால் உருவாக்கப்பட்ட மூன்று பாடசாலைகளை சிங்களப் பாடசாலைகளாக அரசால் பொறுப்பெடுக்கப்பட வேண்டும் என்று ஒரு அறிவித்தலை விடுத்துடன், இந்த பொறுப்பேற்றல் நிகழ்வில் தான் பிரதம அதிதியாகக் கலந்துகொள்ளப்போவதாகவும் அறிவித்து தமிழ் மாணவர்களின் மனநிலையினை மேலும் கொதிநிலைக்குக் கொண்டு சென்றார். ஐ. எம். ஆர். ஏ. ஈரியகொள்ள இவ்வறிவித்தல் தமக்கு விடுக்கப்பட்ட சவால் என்றுணர்ந்த தமிழ் மாணவர்கள் இந்த நிகழ்வுக்கெதிரான பாரிய சத்தியாக்கிரகப் போராட்டத்திற்கு அனைத்து மாணவர்களுக்கும் அறைகூவல் விடுத்தனர். ஆனால், பிரதமர் டட்லியுடன் இதுகுறித்து பேசிய சமஷ்ட்டிக் கட்சியினர், பாடசாலைகளை சிங்கள மயமாக்கும் அரசின் முடிவினை மீளப்பெறுவதில் வெற்றிகண்டனர். ஆனாலும், சமஷ்ட்டிக் கட்சியின் இளைஞர் பிரிவு அரசின் எகத்தாளமான முயற்சிக்கு தமது எதிர்ப்பினைக் காட்ட சத்தியாக்கிரக நிகழ்வினை நடத்த முயன்றபோது, அரசு பொலீஸாரைப் பாவித்து அதனைத் தடுத்து நிறுத்திவிட்டது. ஆனால், பொலீஸாரின் தடையினை தான் உதாசீனம் செய்யப்போவதாக சமஷ்ட்டிக் கட்சியின் இளைஞர் அணி அறிவிக்கவே, அரசு சம்பந்தப்பட்ட மூன்று பாடசாலைகளுக்கும் கடற்படையின் பாதுகாப்பைப் போட்டது. ஆனால், தமது இளைஞர் அணியுடன் பேசிய சமஷ்ட்டிக் கட்சியின் தலைமை, போராட்டத்தைக் கவிடும்படி வேண்டிக்கொண்டதுடன், இளைஞர்கள் கடற்படையுடன் மோதும் சந்தர்ப்பத்தினையும் தவிர்த்துக்கொண்டது. எந்த முடிவையோ அல்லது நடவடிக்கையையோ காலம் தாழ்த்தி, தாமதமாகவே எடுக்க நினைக்கும் சமஷ்ட்டிக் கட்சியின் நிலைப்பாடு தமிழ் இளைஞர்களிடையே மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தி விட்டிருந்தது. இதனால் இளைஞர் அணியிலிருந்து பல உறுப்பினர்கள் வெளியேறிச் சென்று தமக்கான அமைப்புக்களை உருவாக்கினார்கள். அவர்களுள் ஒன்று குட்டிமணி - தங்கத்துரை அமைப்பு. குட்டிமணியும், தங்கத்துரையும் பிரபாகரனின் ஊரான வல்வெட்டித்துறையினைப் பிறப்பிடமாகக் கொண்டவர்கள். குட்டிமணியின் இயற்பெயர் செல்வராஜா யோகச்சந்திரன் என்பதுடன் தங்கத்துரையின் இயற்பெயர் நடராஜா தங்கவேலு ஆகும். 1969 இல் அவர்கள் யாழ்ப்பாணத்தில் கூட்டமொன்றினை ஒழுங்கமைத்திருந்தார்கள். சமஷ்ட்டிக் கட்சியின் கையாலாகாத் தனத்தினை கடுமையாக விமர்சித்த அவர்கள், தமிழ் மக்களின் தேசத்தின் விடுதலைக்காக ஆயுதப் போராட்டம் ஒன்றினை ஆரம்பிக்க வேண்டும் என்று தீர்மானித்தார்கள். பாலஸ்த்தீனத்து மக்களின் விடுதலைக்காகப் போரிட்டுக் கொண்டிருந்த யாசீர் அரபாத்தை முன்னுதாரணமாகக் கொண்டிருந்த தங்கத்துரை தமது குழுவிற்கு தமிழ் விடுதலை இயக்கம் என்று பெயரிட விரும்பினார். ஆனால், அக்கூட்டத்தில் பெயர் குறித்த எந்த முடிவும் எடுக்கப்படமலேயே முற்றுப்பெற்றது. ஆனாலும், ஆயுதப் போராட்டத்தில் குதிப்பதென்று அங்கிருந்த அனைவருமே ஒருமித்து முடிவெடுத்திருந்தனர். தொண்டைமனாறு குண்டுவெடிப்பில் காலில் காயம்பட்ட பிரபாகரன் பருத்தித்துறையில் இருந்த விசாலமான வீடொன்றில் குட்டிமணி - தங்கத்துரை ஆகியோர் தலைமையிலான அமைப்பு தமது கூட்டங்களை தொடர்ச்சியாக நடத்தி வந்தது. பிரபாகரனும் இந்த கூட்டங்களில் தவறாது பங்கெடுத்து வந்தார். அந்தக் குழுவில் இருந்தவர்களில் பிரபாகரனே வயதில் இளையவராக இருந்தார். அவருக்கு அப்போது 14 வயது. குட்டிமணி, தங்கத்துரைக்கு மேலதிகமாக இக்கூட்டங்களில் பெரிய சோதி, சின்னச் சோதி, செல்லையா தனபாலசிங்கம் (செட்டி), செல்லையா பத்மனாதன் (கண்ணாடி), சிறீ சபாரட்னம், பொன்னுத்துரை சிவகுமாரன் மற்றும் வைத்திலிங்கம் நடேசுதாசன் ஆகியோரும் கலந்துகொண்டுவந்தனர். "நாங்கள் புரட்சி பற்றிப் பேசினோம். புரட்சியாளர்கள் பற்றிப் பேசினோம். ஆனாலும், இவையெல்லாவற்றையும் விட குண்டுகளைத் தயாரிப்பது பற்றியும், ஆயுதங்களைப் பெற்றுக்கொள்வதைப் பற்றியுமே அதிகமாகப் பேசினோம். நாங்கள் வெறும் 15 பேர் மட்டுமே கொண்ட சிறிய அமைப்புத்தான்" என்று நடேசுதாசன் தமிழ் இதழொன்றிற்குப் பேட்டியளிக்கும்போது தமது ஆரம்பகால அமைப்புப்ப்பற்றிக் கூறியிருந்தார். 1971 முதல் 1972 வரையான காலப்பகுதியில் இந்த அமைப்பினர் குண்டுகளைத் தயாரிக்கும் முயற்சிகளில் இறங்கியிருந்தனர். இவ்வாறான ஒரு முயற்சியில் ஈடுபட்டிருந்தபொழுது தொண்டைமனாறு பனத்தோப்பு ஒன்றினுள் இடம்பெற்ற தற்செயலான குண்டுவெடிப்பில் இவ்வமைப்பின் பல உறுப்பினர்கள் காயப்பட நேர்ந்தது. அவர்களில் ஒருவர் பிரபாகரன். அவரது காலில் கடுமையான தீக்காயம் ஒன்று ஏற்பட்டதுடன், அது கருமையான அடையாளம் ஒன்றினை நிரந்தரமாகவே ஏற்படுத்தியிருந்தது.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
பிரபாகரனும் ஊர்ச்சண்டியர் சம்பந்தனும் ஒருநாள் காலை பிரபாகரனும் அவரது தோழர்களில் ஒருவரும் பஸ்ஸில் ஏறி பருத்தித்துறை நோக்கிப் பயணமானார்கள். பாடசாலைக் காற்சட்டை அணிந்த இரு சிறுவர்கள் தனது கைத்துப்பாக்கியை வாங்க வந்திருப்பதைக்கண்ட சண்டியர் சம்பந்தன் திகைத்துப்போனார். ஆகவே, அவர்களை அங்கிருந்து சென்றுவிடும்படி அவர் மிரட்டினார். ஆனாலும், அந்தக் கைத்துப்பாக்கியை பார்த்துவிடவேண்டும் என்று பிரபாகரனும் தோழரும் விரும்பியதால், அதனை அவர்களிடம் காண்பித்தார் சண்டியன். காண்பித்ததோடு நின்றுவிட்ட சண்டியன், அவர்கள் அதனைத் தொட்டுப்பார்க்க அவர் இடம் கொடுக்கவில்லை. "இதுவொன்றும் விளையாட்டுத் துவக்கல்ல. சிறுவர்களான நீங்கள் இதனைத் தொடக்கூடாது" என்று அவர்களிடம் கண்டிப்பாகக் கூறினார் சண்டியன் சம்பந்தன். கைத்துப்பாக்கியொன்றை முதன்முதலாகத் தனது கண்முண்னே கண்டபோதும்கூட அதனைத் தொட்டுப்பார்க்க அனுமதிக்கப்படாததால் அவரது கண்கள் கலங்கிவிட்டன. ஆகவே அந்தக் கைத்துப்பாக்கியை எப்படி இயக்குவதென்று தனக்குக் காண்பிக்குமாறு அந்தச் சண்டியரிடம் அவர் மன்றாடத் தொடங்கினார். ஆனால், சம்பந்தனோ, இது விளையாட்டுத் துப்பாக்கியல்ல, சிறுவர்கள் இதனைத் தொடக்கூடாது என்று கூறி, பிடிவாதமாக மறுத்துக்கொண்டே, "உங்களுக்கு எதற்குக் கைத்துப்பாக்கி?" என்று அவர் அவர்களைப் பார்த்துக் கேட்டார். இதைக் கேட்ட பிரபாகரன், "ராணுவத்தையும் பொலீஸாரையும் எதிர்த்துப் போராடப் போகிறோம்" என்று பெருமையாகக் கூறினார். "நாம் அவர்களை இங்கிருந்து துறத்தியடிக்க வேண்டும். அவர்களே சிங்கள ஆக்கிரமிப்பாளர்களின் கருவிகளாக இங்கே இருக்கிறார்கள்" என்று ஆத்திரத்துடன் முழங்கினார். "ஏன்?" என்று திருப்பிக் கேட்டார் சம்பந்தன். "சிங்கள ஆக்கிரமிப்பிலிருந்து தமிழர்களின் தேசத்தை விடுவிக்க வேண்டும்" என்று பிரபாகரன் மீண்டும் பெருமையாகக் கூறினார். பிரபாகரன் கூறியதை கேட்டு அதிர்ந்துபோன சம்பந்தன், "உங்களின் வயதிற்கு மீறிய கதைகளைப் பேசுவதை விட்டு விட்டு, கல்வியில் கவனம் செலுத்துங்கள்" என்று கூறினார். "இந்த விடயங்களைப் பார்ப்பதற்கு தலைவர்கள் இருக்கிறார்கள். நீங்கள் படிப்பதை மட்டுமே இப்போதைக்குச் செய்யுங்கள். என்னைப்போல வளர்ந்து பெரியவர்களாகிய பின்னர் வேறு விடயங்கள் பற்றிச் சிந்திக்கலாம், இப்போது போய்வாருங்கள்" என்று அவர்களைப் பார்த்துக் கூறினார் சம்பந்தன். பிரபாகரனுக்கோ கைத்துப்பாக்கியை விட்டுவிட்டுச் செல்ல மனம் இருக்கவில்லை. "மீதிப்பணத்தைக் கொண்டுவந்தால் துப்பாக்கியைத் தருவீர்களா?" என்று அவரைப் பார்த்துக் கேட்டார் அவர். ஆனால், துப்பாக்கியை அவர்களுக்கு விற்பதில்லை என்று சம்பந்தன் பிடிவாதமாக இருந்துவிடவே, பிரபாகரன் மனமுடைந்துபோனார். வெளிச்சம் சஞ்சிகைக்கு வழங்கிய செவ்வியில் பிரபாகரன் பின்வருமாறு இந்த நிகழ்வினைப் பகிர்ந்திருந்தார். "எனக்கு அப்போது 14 வயதுமட்டுமே ஆகியிருந்தது. எனது கருத்துக்களோடு ஒத்துப்போன இன்னும் ஏழு தோழர்களும் சேர்ந்து ஒரு பெயரில்லாத அமைப்பை உருவாக்குவதென்று முடிவெடுத்தோம். எமது நோக்கம் விடுதலைக்காத் தொடர்ந்து போராடுவதும், ராணுவத்தினர் மீது தாக்குவதுமாகவே இருந்தது. நானே அந்தச் சிறிய அமைப்பின் தலைவராக இருந்தேன். அந்த நேரத்தில் எமது மனங்களில் இருந்த ஒரே எண்ணம் எப்படியாவது ஒரு துப்பாக்கியை வாங்கிவிட வேண்டும் என்பதும், சில குண்டுகளையாவது தயாரித்துவிடவேண்டும் என்பதும் தான். தாம் வாரம் வாரம் சேர்த்து வந்த 25 சதங்களை எனது தோழர்கள் என்னிடம் கொண்டுவந்து தருவார்கள்". "சுமார் 40 ரூபாய்கள் சேரும்வரை அந்தப் பணத்தினை நானே பாதுகாப்பாக வைத்திருந்தேன். இந்த நேரத்தில்தான் பக்கத்துக் கிராமத்தில் வாழ்ந்துவந்த சண்டியரான ஒருவர் தனது கைத்துப்பாக்கியை 150 ரூபாய்களுக்கு விற்கவிரும்புவதாக நாம் கேள்விப்பட்டோம். அதனை நாம் எப்படியாவது வாங்கிவிட வேண்டும் என்று நாங்கள் முடிவெடுத்தோம். எனது சகோதரியின் திருமணத்திற்கு எனக்கு வழங்கப்பட்ட மோதிரத்தை விற்றும் இன்னும் 70 ரூபாய்களை நாம் சேர்த்துக்கொண்டோம். மேலும் 40 ரூபாய்கள் போதாமையினால், அவரிடமிருந்து துப்பாக்கியை வாங்கும் எமது எண்ணத்தை நாம் கைவிடவேண்டியதாயிற்று". சண்டியன் சம்பந்தன் மட்டுமே அன்றைய காலத்தில் பிரபாகரனைப் புறக்கணித்திருக்கவில்லை. பிரபாகரன் கல்விபயின்ற சிதம்பராக் கல்லூரியின் முன்னாள் ஆசிரியர் ஒருவர் கூறும்போது, "எமது பாடசாலையில் பிரபாகரன் இருந்த வகுப்பு பல ஆசிரியர்களின் கவனத்தை ஈர்த்திருந்ததாகவும், பல ஆசிரியர்கள் அந்த வகுப்பு மாணவர்களை எச்சரித்து வந்ததாகவும் கூறிய அவர், பிரபாகரன் என்று ஒரு மாணவன் அவ்வகுப்பில் இருந்தார் என்று நான் பெரிதாக அறிந்திருக்கவில்லை என்று கூறினார். பிரபாகரனும் சமஷ்ட்டிக் கட்சியும் சாதாரணதர வகுப்பினை அடைந்தபோது பிரபாகரனுக்கு படிப்பில் இருந்த ஆர்வம் குறைந்துவிட்டது. அவர் மும்முரமாக அரசியலில் ஈடுபடத் தொடங்கினார். அரசியல் கூட்டங்களுக்கும், அரசியல் சார்ந்த ஆலோசனைக் கூட்டங்களுக்கும் அவர் தொடர்ந்தும் போய்வந்தார். 1969 ஆம் ஆண்டு, சித்திரை 7 முதல் 9 வரை உடுவில் பகுதியில் நடைபெற்ற சமஷ்ட்டிக் கட்சியின் வருடாந்த மாநாட்டில் பிரபாகரனும் கலந்துகொண்டார். இந்தக் கூட்டத்திலேயே சிங்கள அரசுகளுடன் சேர்ந்து செயலாற்றுவதன் மூலம் தமிழர்களது அரசியல் உரிமைகளைப் பெற்றுவிட முடியும் என்று தான் முயன்ற அனைத்து முயற்சிகளும் தோற்றுவிட்டன என்று வெளிப்படையாக மக்களிடம் கூறினார் தந்தை செல்வா. "1960 களிலிருந்து பிரதான சிங்கள அரசியல்க் கட்சிகளுடன் செயற்பட்டு வருகிறோம். முதலில் ஐக்கிய தேசியக் கட்சியை பதவியிலிருந்து நீக்க 1960 பங்குனியில் சுதந்திரக் கட்சிக்கு ஆதரவு வழங்கினோம். ஆனால், ஆட்சிக்கு வந்தவுடன் எம்முடன் செய்துகொண்ட உடன்படிக்கையினை அவர்கள் உதாசீனம் செய்தார்கள். ஆகவே 1965 இல் சுதந்திரக் கட்சியை பதவியிலிருந்து அகற்றி, ஐக்கிய தேசியக் கட்சியை ஆட்சிக்குக் கொண்டுவருவதன் மூலம் தமிழருக்கான உரிமைகளைப் பெற்றுவிடலாம் என்று நினைத்து அவர்களுக்கு ஆதவளித்தோம். ஆனால், அவர்கள் எம்முடன் செய்துகொண்ட உடன்படிக்கையினை ஆட்சிக்கு வந்ததும் தூக்கியெறிந்துவிட்டார்கள். நாம் இன்று அனைவராலும் கைவிடப்பட்டு நிற்கிறோம்" என்று செல்வா மிகுந்த வருத்தத்துடன் மக்களுக்குக் கூறினார். தமிழருக்கான தனிநாடே எமது தீர்வு என்று பிரகடனம் செய்யுங்கள் என்று கோஷமிட்டுக்கொண்டிருந்த இளைஞர் கூட்டத்தில் பிரபாகரனும் கட்டைக் காற்சட்டை அணிந்து நின்றிருந்தார். இரு பிரதான சிங்களக் கட்சிகளும் தமிழர்களை ஏமாற்றிவிட்டதால், தமிழர்கள் தமக்கான தனிநாட்டை உருவாக்குவதைத்தவிர வேறு வழிகள் அவர்களுக்கு இல்லை என்று அங்கிருந்த இளைஞர்கள் வாதிட்டனர். ஆனால், இளைஞர்கள் கேட்ட தனிநாட்டுத் தீர்மானத்தை அந்த வருடாந்த மாநாட்டில் நிறைவேற்றுவதற்கு விரும்பாத சமஷ்ட்டிக் கட்சி, அவர்களைச் சமாதானம் செய்து அனுப்பிவிட்டது. ஆனால், கூட்டத்திற்கு வந்திருந்த இளைஞர்கள் கேட்ட தனிநாட்டுத் தீர்மானம் குறித்த சமஷ்ட்டிக் கட்சியின் நிலைப்பாடு என்ன என்று பத்திரிக்கையாளர்கள் செல்வாவிடம் கேட்டனர். சிங்களவர்கள் உங்களை சமஷ்ட்டிவாதிகள், பிரிவினைவாதிகள் என்று கேலிசெய்கிறார்கள். ஆனால், நீங்களோ தமிழ் இளைஞர்கள் கோரிய தனிநாட்டுப் பிரகடனத்தைக் கைவிடுமாறு அவர்களுக்கு அழுத்தம் கொடுத்து அனுப்பி வைத்துவிட்டீர்கள். ஏன் அவர்களது தனிநாட்டுக்கான தீர்மானத்தை நிராகரித்தீர்கள்" என்று கேட்டார்கள். அதற்குப் பதிலளித்த தந்தை செல்வா, " நாம் அதனை நிராகரிக்கவில்லை. எங்களுக்குச் சிறிது நேரம் தாருங்கள் என்று மட்டுமே அவர்களைக் கேட்டோம். எம்மை பிரிவினைவாதிகள் என்று கூறும் சிங்களவர்களே எம்மை சமஷ்ட்டிவாதிகள் என்று அழைக்கும் நிலையினை நாம் உருவாக்குவோம். சமஷ்ட்டி என்பது ஒருநாட்டில் ஒற்றுமையாக வாழும் ஒரு பொறிமுறையே அன்றி, தனியான நாட்டுக்கான கருவியல்ல என்பதனை அவர்கள் ஏற்கச் செய்வோம். நமது இளைஞர்கள் சமாதானமான முறையில் எமது பிரச்சினையினைத் தீர்ப்பதற்கு எமக்கு கால அவகாசம் வழங்கியிருக்கிறார்கள்" என்று கூறினார். "நீங்கள் கூறுவதுபோல சிங்களத் தலைவர்களை உங்களின் கோரிக்கைக்கு உடன்படவைக்க முடியாமல்ப் போனால் என்ன செய்வீர்கள்?" என்று ஒரு பத்திரிக்கையாளர் செல்வாவிடம் வினவியபோது, "வயோதிபர்கள் தோல்வியடையும்போது இளைஞர்கள் வெற்றிபெறுவார்கள்" என்று அவர் அமைதியாகப் பதிலளித்தார்.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
பிரபாகரனும் கைத்துப்பாக்கியும் பிரபாகரனின் தோழர்களில் எழுவர் இராணுவத்தினரை எதிர்த்துப் போராடவேண்டும் என்கிற நிலைப்பாட்டில் இருந்தனர். அதற்காக தம்மைப் பயிற்சிகளில் ஈடுபடுத்தி வந்தனர். குண்டுகளைத் தயாரிப்பதிலும் ஈடுபட்டு வந்தனர். தமது நடவடிக்கைகளை ஒருங்கமைப்பதற்காக ஒரு குழுவை அவர்கள் உருவாக்கினர். தமது குழுவுக்கான பெயரைத் தேடுவதில் அவர்கள் அதிகம் நாட்டம் காட்டவில்லை. அவர்களுக்கிருந்த இலக்கு ஒன்றுதான், அதுதான் தம்மை ஆக்கிரமித்து நிற்கும் காவல்த்துறை, ராணுவம் உட்பட்ட சிங்கள அரசின் ஆயுதக் கருவிகளை அனைத்தையும் எதிர்த்துப் போராடுவது. ஆனால் இலட்சியத்தை மட்டுமே கொண்டிருப்பதில் பயனேதும் இல்லை என்று பிரபாகரன் தனது தோழர்களிடம் கூறினார். எதிர்த்துச் சண்டையிடுவதற்கு ஆயுதங்கள் வேண்டும், குறைந்தது ஒரு கைத்துப்பாக்கியாவது எமக்கு வேண்டும் என்று அவர் கூறினார். துப்பாக்கிகளை பொலீஸார் காவித்திரிவதையும், சில பெரியோர்கள் அவற்றை வைத்திருந்ததையும் அவர்கள் முன்னர் பார்த்திருக்கிறார்கள். ஆனால், பிரபாகரனோ தோழர்களோ ஒருபோதுமே அவற்றைத் தொட்டுக் கூடப் பார்த்ததில்லை. ஆகவே, ஒரு துப்பாக்கியை வாங்கலாம் என்று அவர்கள் முடிவெடுத்தார்கள். ஆனால், துப்பாக்கி வேண்டுவதற்குப் பணம் தேவை. ஆகவே துப்பாகியொன்று தேவையான பணத்தினை தமக்கு வீட்டில் தரப்படும் வாராந்தப் பணமான 25 சதத்தினை சேமிப்பதன் மூலம் சேர்த்துக்கொள்ளலாம் என்று அவர்கள் முடிவெடுத்தனர். பிரபாகரனே அந்தச் சிறிய குழுவின் தலைவராகவும், செயலாளராகவும், பொருளாளராகவும் இருந்தார். ஏனென்றால், தமக்குள் பிரபாகரனே மிகவும் நம்பிக்கையானவர் என்று அவரது தோழர்கள் ஒருமித்து முடிவெடுத்தனர். ஆகவே, சேர்க்கப்படும் பணத்தை பிரபாகரனே பாதுகாத்து வந்தார். சுமார் 20 வாரங்களில் அவர்களிடம் 40 ரூபாய்கள் சேர்ந்துவிட்டன. தாம் சிறுகச் சிறுக சேர்த்த பணத்தைக் கொண்டு கைத்துப்பாக்கியொன்றை அவர்கள் வாங்கத் தீர்மானித்தனர் . பருத்தித்துறையில் பெருஞ்சண்டியர் என்று பேசப்பட்ட சம்பந்தன் என்பவர் தனது கைத்துப்பாக்கியை 150 ரூபாய்களுக்கு விற்க விரும்புவதாக அவர்களுக்குத் தகவல் வந்திருந்தது. அதை எப்படியாவது வாங்கிவிடவேண்டும் என்று பிரபாகரனும் தோழர்களும் முடிவெடுத்தனர். தாம் சேர்த்த பணமான 40 ரூபாய்களுக்கு மேலதிகமாக தனது சகோதரி ஜெகதீஸ்வரியின் திருமணத்தில் அணிவிக்கப்பட்ட மோதிரத்தை பிரபாகரன் விற்று மேலும் 70 ரூபாய்களைச் சேர்த்துக்கொண்டார். ஆனால் துப்பாக்கியை வாங்குவதற்கும் இன்னமும் 40 ரூபாய்கள் தேவையாக இருந்தது. ஆகவே, சண்டியரைச் சந்தித்து, தமது நோக்கத்தினையும், அதற்கான தேவையினையும் விளக்கி, மீதிப் பணத்தை ஆறுதலாகத் தரமுடியுமா என்று கேட்கலாம் என்று பிரபாகரன் முடிவெடுத்தார்.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
நேர வெடிகுண்டு தனது சிறுபராயத்திலிருந்தே ராணுவத்தினரின் பிரசன்னத்தையும், அத்துமீறலையும் பிரபாகரன நன்கு அனுபவித்து உணர்ந்திருக்கிறார். அவரது கிராமமான வல்வெட்டித்துறை ராணுவத்தின் அக்கிரமங்களைத் தொடர்ச்சியாக சந்தித்தே வந்திருந்தது. சுற்றிவளைப்புக்கள், தேடுதல் வேட்டைகள், பணப்பறிப்புகள், கைதுசெய்தல்கள், சித்திரவதைகள் என்று அக்கிராம மக்கள் ராணுவத்தினரின் கொடூரத்தை தினசரி சந்தித்தே வந்தனர். அதனால், அம்மக்களால் ராணுவம் வெறுக்கப்பட்டது. சிறுவர்கள் ராணுவத்தை அச்சத்துடனும், வெறுப்புடனும் பார்த்தனர். ராணுவம் மக்களால் வெறுக்கப்பட்ட ஒரு காலத்திலேயே தான் வளர்ந்ததாகக் கூறும் பிரபாகரன், தமிழ் மக்களை தொடர்ச்சியாக துன்புறுத்திவரும் ராணுவம் மீது தனக்கு இயல்பாகவே வெறுப்பு ஏற்பட்டு இருந்தது என்று கூறுகிறார். பிரபாகரனுக்கு 6 வயது நிரம்பியிருந்த நிலையில் அவரது ஊரான வல்வெட்டித்துறையில் அப்பாவி இளைஞர்கள் மீது ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தி மூவரைக் காயப்படுத்தியிருந்தது. அதே நாளான சித்திரை 14 இல் பருத்தித்துறைப் பகுதியில் ஒரு இளைஞரைக் கொன்றும் இன்னும் இருவரைக் காயப்படுத்தியும் இருந்தது. சமஷ்ட்டிக் கட்சித் தலைவர்களை ராணுவம் கைதுசெய்து இழுத்துச் சென்றதற்கு தமது எதிர்ப்பைத் தெரிவிக்கும் முகமாக தமிழ் இளைஞர்கள் ராணுவ வண்டி ஒன்றின்மீது கல்லெறிந்ததே ராணுவம் அவர்களைச் சுட்டுக் கொல்வதற்கு காரணமாகியதென்று கூறப்பட்டது. ராணுவத்தின் தாக்குதல்களில் காயப்பட்டுக் கிடந்த இளைஞர்களின் வீட்டிற்குப் பிரபாகரனும் சென்றிருந்தார். காலம் காலமாக சிறுவர்கள விளையாடிவரும் திருடன் - பொலீஸ் விளையாட்டிற்குப் பதிலாக வல்வெட்டித்துறையில் தமிழ்ச் சிறார்கள் புதிய விளையாட்டொன்றை அறிமுகப்படுத்தியிருந்தார்கள். விளையாட்டுக் கைத்துப்பாகிகளை தமது இடுப்பிற்குக் கீழ் மறைத்தபடி மறைந்திருந்து கெரில்லாக்கள் ராணுவத்தினரைத் தாக்குவது போன்று அவர்கள் விளையாடினார்கள். தனது நண்பர்களுடன் இவ்விளையாட்டில் ஆர்வத்துடன் ஈடுபட்ட பிரபாகரன், கெரில்லா குழுவின் தலைவனாக தன்னை எப்போதுமே நினைத்துக்கொண்டு விளையாடுவார். தனது குழுவிற்கான மறவிடம், அவர்களுக்கான பயிற்சிகள், தாக்குதலுக்கு தயார்ப்படுத்தல் என்று தனது சிறுவயதிலேயே இந்தச் செயற்பாடுகளை விளையாட்டிலேனும் அவர் செய்துவந்தார். ராணுவத்தின் மீதான பிரபாகரனின் வெறுப்பென்பது ஆசிரியர் வேணுகோபாலின் அறிமுகத்தின் பின்னரே இரட்டிப்பாகியது. அரசியல் ரீதியில் மும்முரமாக பிரபாகரன் செயற்படத் தொடங்கினார். அரசியல் கூட்டங்களில் அவர் தவறாது கலந்துகொண்டதோடு, சமஷ்ட்டிக் கட்சியின் இளைஞர் அணித் தலைவர்களையும் இடையிடையே சந்தித்து வந்தார். தமிழர்களின் அவலங்கள் குறித்துப் பேசும்போதெல்லாம் ஒற்றைக்கேள்வியுடன் அவரது சம்பாஷணை முற்றுப்பெறும், "நாம் திருப்பியடிக்க முடியாதா?" என்பதுதான் பிரபாகரனுக்கிருந்த ஒரே கேள்வி. சிங்களவர்கள் தமிழர்களை எவ்வாறெல்லாம் வதைத்தார்கள் என்று தான் கேள்விப்பட்ட விடயங்களை தனது பாடசாலை நண்பர்களுடன் தொடர்ச்சியாக பிரபாகரன் பேசிவந்தார். மேலும், அமிர்தலிங்கத்தின் அரசியல்க் கூட்டங்களில் தொடர்ச்சியாக பங்குபற்றி வந்த பிரபாகரன், ஆயுத ரீதியிலான எதிர்ப்புப் போராட்டமே தமிழருக்கு இருக்கும் ஒரே வழியென்று அமிர் பேசிவந்ததுகுறித்தும் பிரபாகரன் நண்பர்களுடன் கலந்துரையாடியிருக்கிறார். "சுவாமி விவேகானந்தரின் பேச்சுக்கள் அடங்கிய புத்தகம் ஒன்றை பிரபாகரன் வாசித்து வந்தார். அப்புத்தகம் பற்றி எம்மிடம் பேசிய பிரபாகரன் சைவ இளைஞர்கள் மதத்தினைக் காக்க ஒன்றிணைந்து செயற்படவேண்டும் என்று ஒருமுறை கூறியிருக்கிறார். நாம் அவரைப் பார்த்து நீ சுவாமி விவேகானந்தரைப் பிந்தொடரப்போகிறாயா என்று கிண்டலடித்தபோது, இல்லை, தமிழ் மக்களின் அவலங்களை அகற்றுவதே எனது தலையாய கடமை. அதற்கு முன் இந்த ராணுவ அடக்குமுறையினை நாம் அழிக்கவேண்டும் " என்று தம்மிடம் கூறியதாக இன்று அவுஸ்த்திரேலியாவில் வசித்துவரும் பிரபாகரனின் பள்ளிக்கால நண்பர் ஒருவர் கூறுகிறார். அவர்கள் ராணுவ அட்டூழியங்கள் பற்றியும், அவற்றைத் தடுக்க தாம் போராட வேண்டிய தேவைபற்றியும் பேசினார்கள். "நீங்கள் சுலோகங்களை உச்சரித்துக்கொண்டு அவர்கள் முன்னால் சென்று நிற்கமுடியாது. அவர்கள உங்களை தாக்குவார்கள். ஆகவே நீங்களும் திருப்பித் தாக்க வேண்டும், அப்போதுதான் எம்மீது தாக்குதல் நடத்துவதை அவர்கள் நிறுத்துவார்கள்" என்று பிரபாகரன் கூறவும், அவரைச் சுற்றியிருந்த நண்பர்களும் அதனை ஆமோதித்திருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் ராணுவத்தை எதிர்த்துச் சண்டையிடுவதற்கு தமக்கு ஆயுதங்கள் தேவையென்பதையும் அவர்கள் அப்போது உணரத் தொடங்கியிருந்தனர். வெடிகுண்டுகளை எப்படித் தயாரிக்கலாம் என்கிற ஆராய்ச்சியில் பிரபாகரனும் அவரது தோழர்களும் இறங்கினர். தமக்கு அதிக இழப்பின்றி தாக்குதலை நடத்துவதற்கு சரியான ஆயுதம் நேரம் குறித்து வெடிக்கும் குண்டுதான் என்று பிரபாகரன் கருதினார். பட்டாசுகளில் வேறு இரசாயணத் திரவியங்களைக் கலப்பதன் மூலம் வெடிகுண்டுகளைத் தயாரிக்கமுடியுமா என்று அவர்கள் முயன்றனர். பின்னர் பாடசாலை இரசாயண ஆய்வுகூடத்திலிருந்து தாம் எடுத்துவந்த இரசாயணங்களை வெற்றுப் போத்தல்களில் அடைத்து அவற்றை சக்கைகள் கொண்டு மூடினர். சக்கைகளினூடு திரியொன்றைச் செலுத்தி அப்போத்தல் வெடிப்பதற்கான வழியையும் அவர்கள் ஏற்படுத்தினர். இன்று அவுஸ்த்திரேலியாவில் வாழும் அவரது பள்ளி நண்பன் மேலும் கூறும்போது, "எமது மதிய உணவு இடைவேளையின்போது நாம் தயாரித்த போத்தல் வெடிகுண்டை பரீட்சித்துப் பார்க்கத் தீர்மானித்தோம். மாணவர்கள் பாடசாலைக் கழிவறைகளைப் பாவித்து வகுப்பறைகளுக்கு மீளும்வரை காத்திருந்தோம். நாம் வெளியே காத்திருக்க, பிரபாகரனும் இன்னொரு தோழரும் வெடிகுண்டை கழிவறையினுள் கொண்டு சென்று திரியைப் பற்றவைத்தனர். நாம் மூச்சைப்பிடித்துக்கொண்டு வெளியே காத்திருந்தோம். சில நிமிடங்களாகியும் எதுவுமே நடக்கவில்லை. பொறுமையிழந்த பிரபாகரன் என்னதான் போத்தலுக்கு நடந்தது என்பதைக் கண்டறிய போத்தலின் அருகே சென்றார். கூடவிருந்தவர்கள் அவரைத் தடுத்தபோதும் அவர் கேட்கவில்லை, அவர் அருகில் செல்லவும் குண்டு வெடித்தது. நாம் அனைவரும் சிரிக்க ஆரம்பித்தோம். அந்த குண்டுவெடிப்பு முயற்சி எமக்கு வினோதமாக இருந்தது. எமது கூட்டத்தில் ஒருவர் அதிபர் வருகிறார் என்று கூவவும், அனைவரும் வகுப்பறைக்குச் சென்று பதுங்கிக்கொண்டோம். கழிவறைக்குச் சென்று அங்கு என்ன நடந்தது என்பதைக் கண்டறிந்த அதிபர் நேராக பிரபாகரனின் வகுப்பிற்கே சென்றார். வல்வை கல்வியியல் கல்லூரிக்குச் சமூகமளிக்கும் மாணவர்களே இதனைச் செய்திருக்கவேண்டும் என்று அவர் திடமாக நம்பினார். ஏனென்றால், வல்வை கல்வியியல் கல்லூரியில் கற்பிக்கும் வேணுகோபால் மாஸ்ட்டரே மாணவர்களை ஆயுதப் போராட்டத்திற்கு ஊக்குவித்து வருகிறார் என்று வல்வையில் மக்கள் பொதுவாகப் பேசிவந்தனர். அதிபர் மிகக்கடுமையான தொனியில் இதை யார் செய்தது, சொல்லுங்கள், யார் செய்தது? என்று எம்மைப் பார்த்துக் கேட்டார். வகுப்பறை முழுதும் நிசப்த்தமாக இருந்தது. எவரும் வாய்திறக்கவில்லை. ஆனால் அதிபருக்கோ சமூகத்தில் நடந்துவரும் விடயங்கள் குறித்த சரியான புரிதல் இருந்தது. இளைஞர்கள் மனதில் தாங்கொணாச் சினம் உருவாகிவருவதை அவர் நன்கு உணர்ந்தே இருந்தார். ஆகவே, மாணவர்களை மேலும் வருத்தாமல், "சரி, பரவாயில்லை. உங்கள் முயற்சிகளைப் பாடசாலைக்கு வெளியே வைத்துக்கொள்ளுங்கள்" என்று அமைதியாகக் கூறிவிட்டு வெளியேறிச் சென்றார்". ராணுவத்துடனான தனது மோதல்களுக்கான ஆயத்தப்படுத்தல்களை பிரபாகரன் அன்றிலிருந்து பாடசாலைக்கெ வெளியிலேயே வைத்துக்கொள்ள தீர்மானித்தார். அவரும் அவர்து தோழர்களும் கராத்தே மற்றும் ஜூடோ போன்ற தற்காப்புக் கலைகளை ஓரளவிற்குத் தெரிந்துகொண்டனர். தமது உடல்களை தொடர்ச்சியான வலியினையும், பட்டினியையும் தாங்கக் கூடிய நிலைக்கு பயிற்றுவிக்கத் தொடங்கினர். தம்மை வெற்றுச் சாக்குகளின் கட்டிக்கொண்டு நாள்முழுதும் சூரிய வெப்பத்தைத் தாங்கிக்கொள்ள தம்மைத் தயார்ப்படுத்தினர். சிலவேளைகளில் மிளகாய்ச் சாக்குகளின்மேல் படுத்திருந்து உடல்வலியை சமாளிக்கும் மனோதிடத்தினை வளர்க்க முயன்றனர். தமது நகங்களை தாமே ஊசிகள் மூலம் துளைத்து பொலீஸ் சித்திரவதைகளை தாங்கும் பக்குவத்தை அடைய பயிற்சிகளில் ஈடுபட்டு வந்தனர். இவ்வாறான சித்திரவதைகளையே அந்த நேரம் ராணுவமும் பொலீஸாரும் கைக்கொண்டு வந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது. "நாம் சுதந்திரப் போராட்ட வீரர்கள். ஆகவே சித்திரவதைகளைத் தாங்கிக்கொள்ள மனோரீதியில் நாம் எம்மைத் தயார்ப்படுத்திக்கொள்ள வேண்டும்" என்று பிரபாகரன் தன்னுடைய தோழர்களிடம் கூறிவந்தார்.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிப் பிரச்சினைக்கு முன்னரே தமிழர் மீதான ஆக்கிரமிப்பை சிங்கள அரசுகள் ஆரம்பித்துவிட்டன அண்ணா. சிங்களக் குடியேற்றத்திட்டங்கள், தனிச்சிங்களச் சட்டம், வேலைவாய்ப்பில் பாரபட்சம் என்று பல முனைகளில் ஆக்கிரமிப்பை அவர்கள் ஆரம்பித்துவிட்டார்கள். ஆகவே, வெறும் பல்கலைக்கழக வெட்டுப்புள்ளி பிரச்சினைக்காகத்தான் தலைவர் போராடத் தொடங்கினார் என்று கருதுவது சரியான கருத்தாக இருக்க முடியாது.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
அவரது கல்வி தானாகவே பல விடயங்களை அவர் கற்றறிந்து கொண்டாலும்கூட, அவர் மற்றையவர்களைப்போலவே பாடசாலைக் கல்வியினை முறைப்படி கற்றவர்தான். அவரது ஆரம்பக் கல்வி ஆலடிப் பள்ளிக்கூடம் என்றழைக்கப்படும் ஆலடி சிவகுரு வித்தியாலயத்திலே தொடங்கியது. அவர் தனது உயர்கல்வியினை வல்வை சிதம்பராக் கல்லூரியில்யில் பத்தாம் வகுப்பு வரைதொடர்ந்தார், ஆனாலும் இந்த வகுப்பில் நடக்கும் சாதாரணதரப் பொதுப்பரீட்சையில் அவர் பங்கெடுக்கவில்லை. பாடசாலையில் மிகவும் கலகலப்பாக இருந்த பிரபாகரன் பாணந்துறையில் சைவப் பூசகர் எரியூட்டப்பட்டுக் கொல்லப்பட்ட விடயம் தொடர்பாக மிகுந்த வருத்தம் அடைந்திருந்ததாக அவரது பாடசாலை நண்பர்கள் நினைவுகூர்ந்தனர். தற்போது கொழும்பில் செல்வந்த வர்த்தகராக இருக்கும் பிரபாகரனின் பள்ளிக்கால நண்பர் ஒருவர் இச்சம்பவம் பற்றிக் கூறுகையில், "அதுபற்றிப் பேசும்போதெல்லாம் அவரது கண்களில் கண்ணீர் வழிந்து ஓடுவதை நான் பார்த்திருக்கிறேன்" என்று கூறுகிறார். வீட்டில் தனது தகப்பனாரோடு தான் பேசும் அரசியல் சார்ந்த விடயங்களை தனது பள்ளி நண்பர்களோடு பகிர்ந்துகொள்ள பிரபாகரன் தவறுவதில்லை. பாடசாலையிலிருந்து வீடு வரும்வழியில் அவருக்கென்று ஒரு பொழுதுபோக்கு இருந்தது. அதுதான் கவணில் கல்லுவைத்து இலக்கு நோக்கி எறிவது. மாம்பழங்களையும், விளாம்பழங்களையும் அவர் கவனால் சுட்டு வீழ்த்துவதில் கைதேர்ந்தவராக இருந்தார். தனது நண்பர்களிடம் கல்லொன்றை மேலே எறியச் சொல்லிவிட்டு அதனை கவனால் இலக்குவைத்து எறிந்து பழகுவார். அவ்வப்போது சில அணில்களும் அவரது கவனுக்கு இரையாகியிருக்கின்றன. வல்வை சிதம்பராக் கல்லூரியில் அவருக்குக் கல்விகற்பித்த பல ஆசிரியர்கள் அவர் பற்றிக் கூறும்போது அவர் வகுப்பில் சராசரி மாணவனாகவே கல்வியில் விளங்கியதாகக் கூறினார்கள். தான் கற்கும் புத்தகக் கல்வியினை விட அரசியலிலேயே அவருக்கு அதிக ஆர்வம் இருப்பதை தாம் அவதானித்ததாக அவர்கள் கூறுகிறார்கள். தனது மகனை கட்டிட பொறியியலாளனாக உருவாக்க நினைத்த வேலுப்பிள்ளைக்கு பிரபாகரனின் பாடசாலைக் கல்வியின் தரம் கவலையினை ஏற்படுத்தியிருந்தது. அதனால், அவரின் கல்வியறிவினை மேம்படுத்த வல்வை கல்வியியல் நிறுவனம் எனப்படும் தனியாருக்குச் சொந்தமான நிலையத்திற்கு அனுப்பி வைத்தார். 8 ஆம் வகுப்பில் கல்விகற்ற வந்த அவருக்கு அப்போது 14 வயது. அங்கேதான் பிரபாகரனுக்கு வேணுகோபால் எனும் ஆசிரியரின் சிநேகம் கிடைத்தது. சமஷ்ட்டிக் கட்சியின் இளைஞர் பிரிவின் அங்கத்தவராக இருந்த வேணுகோபால், பிரபாகரனுக்குத் தமிழ் சொல்லித் தந்தார். அடிக்கடி அரசியல் பேசும் வேணுகோபாலுக்கு ஒரு கவலை இருந்தது. அதுதான் சமஷ்ட்டிக் கட்சியினரின் அரச எதிர்ப்பு என்பது உயிர்ப்புடன் இல்லையென்பது. அக்காலத்தில் சமஷ்ட்டிக் கட்சியின் முக்கிய உறுப்பினர் ஒருவருடன் சேர்ந்து வேணுகோபால் சுயாட்சிக் கழகம் எனும் தீவிர சுயாட்சிக் கட்சியொன்றை ஆரம்பித்திருந்தார். இவர்களது தீவிர அரசியல் கண்ணோட்டத்தினால் சம்ஷ்ட்டிக் கட்சியிலிருந்து வேணுகோபாலும் அவரது நண்பரும் விலக்கப்பட்டிருந்தார்கள். தனது தமிழ் ஆசானான வேணுகோபால் தனது அரசியல் வாழ்வில் பெருமளவு தாக்கத்தினை ஏற்படுத்தியிருந்ததாக பிரபாகரன் ஒருமுறை கூறியிருந்தார். "ஆயுதப் போராட்டமே தமிழருக்கான ஒரே தீர்வு எனும் நம்பிக்கையினை என்னில் முதன்முதலில் ஏற்படுத்தியவர் எனது ஆசிரியர் வேணுகோபால் தான். எனது கிராமம் ஒவ்வொருநாளும் ராணுவ அழுத்தத்தினைச் சந்தித்து வந்தது. உலகின் பல நாடுகளிலும் சுதந்திரத்திற்காகப் போராடிவரும் மக்கள் கூட்டங்கள் பற்றி என்னுடன் பேசும் அவர், பாராளுமன்ற அரசியலினால் எதனையும் சாதிக்க முடியாது எனும் கருத்தினை தீவிரமாக முன்வைத்து வந்தார். 14 வயது நிரம்பிய எனக்கும் நாமும் எம்மை தயார்ப்படுத்திக்கொண்டு திருப்பித் தாக்க வேண்டும் என்கிற எண்ணம் தோன்றியது. அத்துடன், தமிழர்களுக்கென்று தனியான நாடு நிச்சயம் எமக்கு வேண்டும் என்கிற உணர்வும் அப்போதிருந்து எனக்கு ஏற்பட்டிருந்தது". தனது தீர்மானத்தில் உறுதியான பிரபாகரன் தமிழர்கள் திருப்பித் தாக்குவதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை என்று பிரபாகரன் கொண்டிருந்த கருத்தினை வேணுகோபால் ஆசிரியரின் பாராளுமன்ற அரசியலால் தமிழருக்கு எதுவுமே கிடைக்கப்போவதில்லை என்கிற கருத்து மேலும் உறுதிப்படுத்தியிருந்தது. 14 வயதே நிரம்பியிருந்த பிரபாகரன் எனும் அந்தச் சிறுவன் ஆயுதப் போராட்டத்திலும், தனிநாட்டிற்கான தேவையிலும் மேலும் மேலும் நம்பிக்கை வைக்கத் தொடங்கினார். திரு வேணுகோபால் இருவகையான கருத்தாடல்களை முன்வைத்தார். முதலாவது, எண்ணிக்கையில் சிறுபான்மையினராக தமிழர்கள் இருந்தாலும் கூட அவர்கள் தனியான தேசம் ஒன்றிற்கு சொந்தக்காரர்கள். ஒரு தனியான தேசம் ஒன்றிற்கான சகல இலக்கணங்களையும் அவர்கள் கொண்டிருக்கிறார்கள். தனித்துவமான அடையாளம், தனித்துவமான மொழி, மதம், கலாசாரம், வரலாறு, பண்பாடு, தனியான பூர்வீகத் தாயகம் மற்றும் இவையெல்லாவற்றிற்கும் மேலாக தமது அடையாளத்தை எப்பாடு பட்டாவது காத்துக்கொள்ளவேண்டும் என்கிற அணையாத அவா ஆகியன தமிழர்கள் தமக்கான தேசம் ஒன்றிற்கு உரித்துடையவர்கள் என்பதை உறுதிப்படுத்துவதாக அவர் வாதிட்டார். தமது அடையாளத்தை எவ்விலை கொடுத்தாவது காப்பாற்ற வேண்டும் என்பதற்காகவே சரித்திர காலத்திலிருந்து அவர்களின் தாயகம் மீது நடத்தப்பட்ட பல சிங்களப் படையெடுப்புக்களை அவர்கள் தோற்கடித்து வந்ததுடன், அவற்றிற்கான முயற்சிகளையும் முளையிலேயே கிள்ளி எறிந்தும் வந்திருந்தனர். சில சமயங்களில் தெற்கிலிருந்து தமிழர் தாயகம் மீது மேற்கொள்ளப்பட்ட பல சிங்கள படையெடுப்புக்களை தோற்கடித்து தெற்குநோக்கியும் தமது தாயகத்தை சற்றே விரிவுபடுத்தியும் இருந்தனர். வேணுகோபால் முன்வைத்த இரண்டாவது கருதுகோள், பாராளுமன்ற அரசியலினை நம்பி அன்றைய தமிழ்த் தலைமை முன்னெடுத்துவரும் எந்த நடவடிக்கையும் தமிழர்களின் அரசியல் உரிமைகளைப் பெற்றுத்தரப்போவதில்லை என்பதனால், தமிழருக்கு இருக்கும் ஒரே தெரிவு ஆயுதப் போராட்டமே என்பதுதான். தனது மாணவர்களிடையே பேசும்போது வேணுகோபால் ஒரு விடயத்தினை அடிக்கடி முன்வைத்து வந்தார். அதாவது, பல்லின சமூகங்கள் வாழும் நாடொன்றில், ஒற்றையாட்சிக் கோட்பாட்டினைப் பாவிப்பதன் மூலம் எண்ணிக்கையில் பெரும்பான்மயான இனம் தனது நிலையினை ஸ்த்திரப்படுத்தி ஏனைய சிறுபான்மையினங்களை அடக்கியாண்டு அடிமைப்படுத்தி விடும் என்றும், இதற்கு இலங்கையே சிறந்த உதாரணம் என்றும் கூறிவந்தார். தமிழரின் நிலங்களை பலாத்காரமாக வல்வளைத்து அவற்றில் தனது இனமக்களை குடியேற்றிய சிங்கள அரசுகள், அப்பகுதியின் தேர்தல் வாக்கு பலத்தைத் தமக்குச் சார்பானதாகவும் மாற்றிக்கொண்டனர். பாராளுமன்றத்தில் உள்வாங்கப்படும் தமிழ் உறுப்பினர்களின் எண்ணிக்கையினைத் திட்டமிட்டுக் குறைப்பதன்மூலம், அரசாட்சியில் தமிழரின் பங்களிப்பைக் குறைப்பதே இதன் நோக்கமாக இருந்தது. அத்துடன், சுமார் 10 லட்சம் மலையகத் தமிழரின் வாக்குரிமையினைப் பறித்ததன் மூலம் அவர்களை நாடற்றவர்கள் ஆக்கியதோடு, அரசியல் அநாதைகளாகவும் மாற்றிவிட்டிருந்தனர். இதற்கு மேலதிகமாக, சிங்களம் ஒன்றே ஆட்சி மொழி என்று சட்டம் கொண்டுவந்ததோடு, தமிழ் மொழியின் முக்கியத்துவத்தைச் சிதைத்து, அரச உத்தியோகஸ்த்தர்களாக வர விரும்பின் தமிழர்கள் கட்டாயம் சிங்கள மொழியினைக் கற்கவேண்டும் எனும் சட்டத்தையும் கொண்டுவந்தனர். எதிர்பார்த்ததைப்போலவே உத்தியோகபூர்வ மொழிச் சட்டம், வேலைவாய்ப்பில் பாரபட்சம் ஆகிய இனவாத நடவடிக்கைகளை தமிழர்கள் முழுமூச்சாக எதிர்த்தனர். தமிழரின் அகிம்சை ரீதியிலான போராட்டங்களை அரசு ஒருங்கமைக்கப்பட்ட சிங்களக் காடையர் கூட்டங்களைக் கொண்டும், அரச ராணுவத்தினரைப் பாவித்தும் ஆயுதமுனையில் மிகவும் மூர்க்கத்தனமாக அடக்கி வந்தது. தமிழர்களால் முதன்முதலாக மேற்கொள்ளப்பட்ட காலிமுகத்திடல் சத்தியாக் கிரக நடவடிக்கையினை அரச ஆதரவுபெற்ற சிங்களக் காடையர்களை அனுப்பி கலைத்தததுடன், தமிழர்கள் இனிமேல் அரசுக்கெதிரான ஆர்ப்பாட்டங்களை, குறிப்பாக தலைநகர் கொழும்பில் செய்வதற்கான எண்ணங்களையும் முற்றாகவே அடித்து நொறுக்கியிருந்தது. அதுமட்டுமல்லாமல், தமிழர்களின் எந்தவொரு பிற்கால ஜனநாயக ஆர்ப்பாட்டமும் மிகவும் மூர்க்கத்தனமாக சிங்கள அரசுகளால் அடக்கப்படும் எனும் எச்சரிக்கையினையும் இந்த அராஜகம் மூலம் சிங்கள அரசு விடுத்திருந்தது. சமாதான முறையில் பொதுமக்கள் அரசியல் நோக்கத்திற்காக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட முடியாது எனும் பிரகடனத்தை 1961 ஆம் ஆண்டிலிருந்து மேலும் 5 வருடங்களுக்கு அப்போதைய அரசு நீடித்தது. இந்தச் சட்டம் தமிழரின் தாயகமான வடக்குக் கிழக்கு மாகாணங்களுக்கும் கொண்டுவரப்பட்டதுடன், இந்தச் சட்டத்தை நிலைநாட்டவென பெருமளவு சிங்கள ராணுவமும் தமிழரின் தாயகத்திற்கு அனுப்பிவைக்கப்படது. இதே வருடத்தில் சமஷ்ட்டிக் கட்சியின் தலைவர் செல்வநாயகம் தனிச்சிங்களச் சட்டத்திற்கெதிராக அமைதிவழிப் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தார். தமிழர் தாயகத்தில் ஐந்து அரச கச்சேரிகளுக்கு தமிழ் அதிகாரிகள் சிங்கள மொழியில் தமது அலுவல்களைச் செய்வதற்குச் செல்வதனைத் தடுத்தே இந்த ஆர்ப்பாட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய மாவட்ட செயலகங்களுக்கு முன்னால் தந்தை செல்வா தலைமையிலான சமஷ்ட்டிக் கட்சியினர் வாயில்களை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக அவசர காலச் சட்டத்தினை நடைமுறைப்படுத்திய சிங்கள அரசு, ஊரடங்கு உத்தரவினையும் பிரயோகித்தது. அவசர காலச் சட்டத்தின் அதிகாரங்களைப் பாவித்து இந்த அமைதிவழி ஆர்ப்பாட்டங்களை ராணுவத்தைக் கொண்டு மிகவும் கொடூரமாக அடக்கிய அரசு, பல தமிழ் அரசியல்த் தலைவர்களையும் சிறையில் அடைத்தது. 1961 ஆம் ஆண்டு திருகோண்மலையில் சத்தியாக் கிரகத்தில் ஈடுபடும் தந்தை செல்வா, தம்பையா ஏகாம்பரம், ராஜவரோதியம் ஆகியோர். பாராளுமன்றத்திற்கு வெளியேயான அமைதிவழி ஆர்ப்பாட்டங்களைச் செய்யும் உரிமை தமிழ் மக்களிடமிருந்து முற்றாகப் பறிக்கப்பட்டது. அத்துடன் பாராளுமன்றம் ஊடாக தமிழர்கள் தமக்கான உரிமைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்கிற கனவும் சிங்களவர்களால் மிகவும் திட்டமிட்டுத் தோற்கடிக்கப்பட்டது. தமிழ்த் தலைவர்களால் இருவேறு சிங்கள அரச தலைவர்களின் சம்மதத்துடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்களும் அவர்களாலேயே கிழித்தெறியப்பட்டது. 1957 இல் செல்வாவுடன் பண்டாரநாயக்கா செய்துகொண்ட ஒப்பந்தம், தனது வீட்டின் முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெளத்த துறவிகளுக்குப் பயந்து முற்றாகக் கைவிடப்பட்டது. இதன் அடையாளமாக பெளத்த துறவிகளின் முன்னிலையில் தான் செல்வாவுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் மூலத்தை பண்டா சிறு சிறு துண்டுகளாகக் கிழித்தெறிந்து, பெளத்த துறவிகளுக்கான தனது விசுவாசத்தைக் காட்டிக்கொண்டார். அவ்வாறே, 1965 இல் செல்வாவுடன் டட்லி சேனநாயக்க செய்துகொண்ட ஒப்பந்தமும் கிழித்தெறியப்பட்டது. 3 வருடங்கள் ஆகியும் ஏன் ஒப்பந்தத்தில் நீங்கள் ஒத்துக்கொண்ட விடயங்களை இன்னும் நடைமுறைப்படுத்தவில்லை என்று தந்தை செல்வா டட்லியிடம் கேட்டபோது, "பெளத்த துறவிகளின் எதிர்ப்பினை மீறி இந்த ஒப்பந்தத்தினை என்னால் நடைமுறைப்படுத்த முடியாது" என்று மிகச் சாதாரணமாக டட்லி கூறினார். பாராளுமன்ற ஆசனங்களை வைத்துக்கொண்டு சிங்கள அரசுகளை பதவியில் அமர்த்தியும், தேவைப்படின் பதவியிலிருந்து அகற்றியும் தமிழ் மக்களுக்கான அரசியல் உரிமைகளைப் பெற்றுவிடலாம் என்று தந்தை செல்வா முன்னெடுத்த எந்தச் சதுரங்க ஆட்டமும் வெற்றியளிக்கவில்லை. 1960 இல் இலங்கை சுதந்திரக் கட்சியுடன் சேர்ந்துகொண்ட செல்வா அவர்கள், டட்லியின் அரசை வீட்டிற்கு அனுப்புவதன் மூலம் சுதந்திரக் கட்சியின் தலைமையில் தமிழர்களுக்கான உரிமைகளைப் பெற்றுவிடலாம், அவர்களின் அவலங்களைத் தீர்த்துவிடலாம் என்று நம்பினார். ஆனால், ஆட்சிக்கு வந்த சுதந்திரக் கட்சியின் புதிய பிரதமர் சிறிமா, ஒப்பந்தத்தில் கூறப்பட்ட எதனையும் நடைமுறைப்படுத்த முடியாது என்று திட்டவட்டமாக மறுத்து விட்டார். அத்துடன் நின்றுவிடாமல், தனிச்சிங்களச் சட்டத்தை மிகத் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்போவதாக சூளுரைத்தார். 1965 இல் கட்சி மாறிய தந்தை செல்வா, டட்லி சேனநாயக்க மீண்டும் ஆட்சியமைக்க உதவினார். ஆனால், மீண்டுமொருமுறை அவர் சிங்களத் தலைவர்களால் எம்மாற்றப்ப்ட்டுப் போனார். இந்த அரசியல் ரீதியான தமிழரின் நடவடிக்கைகளின் படு தோல்வியினை அடிக்கடி விமர்சித்து வந்த வேணுகோபால், பாராளுமன்ற அரசியலோ, அமைதிவழி ஆர்ப்பாட்டங்களோ தமிழரின் அவலங்களுக்கு ஒருபோதுமே தீர்வாக அமையப் போவதில்லை என்று தனது மாணவர்களிடம் கூறிவந்தார். "பாராளுமன்ற ஜனநாயகத்தின்மூலம் உலகின் எந்தவொரு இனச் சிக்கலும் இதுவரை கெளரவமாகத் தீர்த்து வைக்கப்படவில்லை. ஆயுதப் போராட்டங்களின் மூலமே இனப்பிரச்சினைகள் தீர்த்துவைக்கப்பட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுதந்திரம் கிடைத்திருக்கிறது, பாராளுமன்றம் மூலமான அரசியல்ச் செயற்பாடுகள் ஒருபோதும் வெற்றிபெற்றிருக்கவில்லை" என்று கூறிவந்திருந்தார் வேணுகோபால்.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
இந்திய சுதந்திர போராட்ட வீரர்கள் குறித்து பிரபாகரன் அதிக மதிப்பு வைத்திருந்தார். இவர்களுள் குறிப்பிட்டுக் கூறக்கூடியவர் சுபாஸ் சந்திரபோஸ்தான் என்றால் அது மிகையில்லை. ஆயுத ரீதியிலான எதிர்ப்பு, ஜேர்மனுக்கு தப்பியோடியது, நீர்மூழ்கிக் கப்பல் மூலம் ஜப்பானை சென்றடைந்தது, அங்கிருந்து இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி, ஜப்பானியர்களின் உதவியுடன் இந்தியா நோக்கி படை நகர்த்தியது என்று சுபாஸ் சந்திரபோசின் அனைத்து நடவடிக்கைகளும் பிரபாகரனுக்கு ஊக்கம் கொடுத்திருந்தன. தனது போராட்டத்திற்கு அவரையே பிரபாகரன் நாயகனாகவும் வரிந்துகொண்டார். இவை எல்லாவற்றிற்கும் மேலாக சுபாஸ் சந்திரபோஸின் கூற்று அவரைக் கட்டிப்போட்டிருந்தது, "எனது உடலின் இறுதிச் சொட்டு இரத்தம் இந்த மண்ணில் சிந்தும்வரை இந்த மண்ணின் விடுதலைக்காக நான் போராடிக்கொண்டிருப்பேன்" என்பதுதான் அது. வெளிச்சம் சஞ்சிகைக்கு அவர் மேலும் கூறும்போது, "எல்லாவற்றிற்கும் மேலாக சுபாஸ் சந்திரபோஸின் வாழ்க்கை எனக்கு ஒரு வழிகாட்டியாக இருந்தது, நான் செல்லவேண்டிய பாதையினை அது எனக்கு வகுத்துக் கொடுத்தது. அவரது ஒழுக்கம் மிகுந்த வாழ்க்கையும், இலட்சியத்தை அடைவதில் அவருக்கிருந்த அசைக்கமுடியாத உறுதியும் என்னை பிரமிப்பில் ஆழ்த்தியிருந்ததுடன் எனக்கு வழிகாட்டும் வெளிச்சமாகவும் மாறிவிட்டன" என்று கூறுகிறார். பிரபாகரன் மேலெழுந்தவாரியாக ஒரு புத்தகத்தைப் படிப்பவர் அல்லர். முன்னட்டையிலிருந்து பின்னட்டைவரை ஒரு புத்தகத்தை முழுவதுமாகப் படித்து அதனுள் தன்னை முற்றிலுமாக தொலைத்துவிடுவதில் அவர் வல்லவர். ஒவ்வொரு புத்தகத்தைப் படிக்கும்போதும் ஏன், எதற்காக, இது எப்படி நடந்தது எனும் கேள்விகள் அவருக்கு எப்போதுமே எழுந்துகொண்டிருக்கும். புலிகளுடன் முரண்பட்டிருந்த இன்னொரு தமிழ் போராளிக்குழுவான ஈழப் புரட்சிகர் மாணவர் அமைப்பு (ஈரோஸ்) எனும் இயக்கத்தின் தலைவரான சங்கர் ராஜி பிரபாகரன் குறித்துப் பேசும்போது, பிரபாகரனை தனக்கு 70 களின் ஆரம்பத்திலிருந்தே நன்றாகத் தெரிந்திருந்தது என்றும், தான் படிக்கும் புத்தகத்தினுள் முற்றாக தன்னை அமிழ்த்தி எடுப்பதென்பது என்பது பிரபாகரனின் இயல்பு என்றும் கூறுகிறார். பிரபாகரனின் அறையில் தான் கண்ணுற்ற புத்தகங்களை அவர் நினைவுகூரும்போது சேகுவேரா, பிடெல் காஸ்ட்ரோ, ஹோ சி மின், மாவோ சேதுங் ஆகியோர் பற்றிய புத்தகங்களைத் தான் பார்த்ததாகக் கூறுகிறார். வியட்நாமிய, சீன விடுதலைப் போராட்டங்கள் குறித்து பிரபாகரன் மிகுந்த அபிமானம் கொண்டிருந்ததாகக் கூறும் சங்கர் ராஜி பிரபாகரனின் அறையில், "நீயாகவே பழகிக்கொள்" எனும் தலைப்பில் சில புத்தகங்கள் இருந்ததையும் தான் கண்டதாகக் கூறினார். அவற்றில் குறிப்பிடத் தக்கது, "குறிபார்த்துச் சுடுவது எப்படி" எனும் புத்தகம் என்பதையும் அவர் கூறத் தவறவில்லை.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
பிரபாகரனின் வரலாறு..... பிரபாகரன் சிறுபராயத்தில் மிகவும் விளையாட்டுத்தனமானவராக இருந்தார். தனது மூத்த சகோதரிகளுடன் விளையாட்டாகச் சீண்டுவது அவருக்குப் பிடித்திருந்தது. தான் பார்த்த நகைச்சுவையான படங்களிலிருந்து சில காட்சிகளை நடித்துக் காட்டி தாயாரையும் சகோதரிகளையும் மகிழ்விப்பது அவருக்குப் பிடிக்கும். தான் பார்த்த சிவாஜி கணேசனின் பராசக்தி படத்திலிருந்து சில வசனங்களை பேசிக் காட்டி அவர் ஒருமுறை வீட்டில் நடித்தார். அதேபோல வீரபாண்டிய கட்டப்பொம்மன் படத்தில் சிவாஜிக்கும் வெள்ளைக்காரத் துரைக்கும் இடையே நடக்கும் சம்பாஷணையினையும் அவர் தனக்கே உரித்தான் பாணியில் பேசிக்காட்டி அனைவரையும் மகிழ்வித்தார். இந்திய சுதந்திரப் போராட்டத்தினைத் தழுவி வெளிவந்த பல திரைப்படங்களும், தமிழரின் பாரம்பரியத்தை எடுத்தியம்பிய படங்களையும் அவர் விரும்பிப் பார்த்தார். இவற்றின்மூலமே தமிழர்களும் சுதந்திரம் அடையவேண்டும் என்கிற அவாவும், தமிழ்மீதான பற்றும் தனக்குக் கிடைத்தன என்று அவர் கூறியிருக்கிறார். கட்டப்பொம்மன், கப்பலோட்டிய தமிழன் ஆகிய இருபடங்களும் அவரை வெகுவாகப் பாதித்திருந்தன. இவ்விரு படங்களும் அந்நியரின் அடக்குமுறைக்கெதிரான தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தினைக் கதையாகக் காண்பித்திருந்தன. இரண்டாவதாக, சிதம்பரனார் நடத்திய கப்பல் நிறுவனம் தொடர்பானது. இதில், அந்நிய ஆக்கிரமிப்பிற்கெதிரான கருவியாக தமிழரின் கப்பலோட்டும் திறன் காட்டப்பட்டிருந்தது, இதுவே பிற்காலத்தில் பிரபாகரனும் கடல்ப்பலத்தில் அதிக ஈடுபாடு செலுத்தக் காரணமாகியிருக்கலாம். இன்று புலிகளுக்கு பல கப்பல்கள் இருக்கின்றன. ராஜராஜ சோழன் படத்தின்மூலம் தமிழரின் கடற்பலம் குறித்த சரித்திரத்தை பிரபாகரன் அறிந்துகொண்டதனாலேயே தனது விடுதலை அமைப்பில் கடற்பிரிவு பலமானதாக இருக்கவேண்டும் என்று செயற்பட்டுவந்தார். தமிழரின் சரித்திரகாலப் பலம் மட்டுமல்லாமல், ஒளவையார் போன்ற படங்கள் மூலம் தமிழரின் இலக்கியத் தொன்மை பற்றியும் பிரபாகரன் அறிந்துவைத்திருந்தார். ஆங்கிலத் திரைப்படங்களில் அவருக்கு கிளின்ட் ஈஸ்ட்வூட் நடித்து வெளியான கெளபாய் திரைப்படங்கள் பிடித்திருந்தன. அவர் போர் தொடர்பான திரைப்படங்களைப் பெரிதும் விரும்பிப் பார்ப்பார். குறிப்பாக விடுதலைப் போராட்டம் ஒன்றுடன் தொடர்புடைய திரைப்படங்கள அவரை மிகவும் கவர்ந்திருந்தன. அல்ஜீரிய விடுதலைப் போராட்டத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் ஒன்றில் அலி எனும் பெண்போராளி உடலில் கட்டிய குண்டுடன் பிரஞ்சு ராணுவ முகாம் ஒன்றிற்குள் பாய்ந்து அதனை அழிப்பதுபோன்று படமாக்கப்பட்டிருந்தது. இக்காட்சி அவரை உற்சாகப்படுத்தியிருந்ததாக கூறப்படுகிறது. இவ்வாறான பல திரைப்படத் தொகுப்புகள் அவரிடம் இருந்தன. தமிழ் நாவல்களின் பொற்காலம் என்று கருதப்படும் 60 களிலும் 70 களிலும் கல்கி, ஆனந்த விகடன், குமுதம் ஆகிய தமிழ்நாட்டின் வார சஞ்சிகைகள் தமிழ் சரித்திர நாவல்களைத் தொடராக பிரசுரித்து வந்திருந்தன. சிறுவயதிலிருந்தே நாவல்களைப் படிக்கும் ஆர்வம் கொண்டிருந்த பிரபாகரன் இச்சஞ்சிகைகளில் பிரசுரிக்கப்பட்ட தொடர்களை விரும்பிப் படித்து வந்தார். கல்கியின் சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு, அகிலனின் கடல்ப்புறா, கெளசல்யனின் பாமினி பாவைகள், கலியப் பெருமாளின் கல்லுக்குள் ஈரம், ராஜாஜியின் மஹாபாரதம் மற்றும் இராமாயணம் ஆகிய நாவல்களை அவர் விரும்பிப் படித்தார். சோழர்களின் கடல்ப் பலத்தையும், அதனைப் பாவித்து அவர்கள் கம்போடியா தாய்லாந்து ஆகிய நாடுகளைக் கைப்பற்றி அரசாண்டதையும் கடல்ப்புறா காவியமாகக் கூறுகிறது. தமிழர்களின் கடற்பலம் சோழர் காலத்திலேயே உச்சத்தினைத் தொட்டிருந்தது. சோழர்கள் தமது பிரதான கட்டளைக் கப்பலுக்கு கடல்ப்புறா என்றே பெயரிட்டிருந்தனர். கல்லுக்குள் ஈரம் எனும் நாவல், இந்தியாவின் சுதந்திரப் போராட்ட காலத்தில் காந்தியின் அகிம்சை வழிமுறையிலிருந்து விலகி ஆயுத முறையில் செயற்பட்ட ஒரு குழுவினர் சென்னை ஜோர்ஜ் கோட்டையினைத் தாக்கியதை நாவலாக வரைந்திருந்தது. இவையிரண்டுமே பிரபாகரனின் சிந்தனையில் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தியிருந்தன. வெளிச்சம் சஞ்சிகைக்கு அவர் வழங்கிய செவ்வியில், தமிழரின் சரித்திரகால பேரரசுகளையும் அவர்களது பெருமையினையும் இந்த நாவல்களூடாகவே தான் அறிந்துகொண்டதாகக் கூறியிருந்தார். "எனது மக்கள் இன்று தாம் அகப்பட்டிருக்கும் அடிமைத்தளைகளிலிருந்து விடுதலையாகி , தன்மானத்துடனும், கெளரவத்துடனும், விடுவிக்கப்பட்ட தமது பூர்வீகத் தாயகத்தில் வாழவேண்டும் என்கிற அடங்காத ஆசை இந்த நாவல்களைப் படித்த போதே ஏற்பட்டது. மேலும், எம்மை அடிமைப்படுத்தியவர்களுக்கு எதிராக நாம் ஏன் ஆயுதம் தூக்கக் கூடாது எனும் கேள்வியினையும் இந்த நாவல்கள் எனக்குள் ஏற்படுத்தி விட்டிருந்தன" என்றும் அவர் கூறினார். அவர் மேலும் பேசும்போது, மகாபாரதம் , இராமாயணம் போன்ற நாவல்கள் வாழ்வில் தான் கடைப்பிடிக்கவேண்டிய நன்னெறிகளைக் கற்றுத்தந்ததாகக் கூறியிருந்தார். "பலனை எதிர்பாராது உனது கடமையினைச் செய் என்று பகவத் கீதை சொல்கிறது. இதனை மகாபாரதம் எனும் நாவலைப் படிக்கும்போது நான் உணர்ந்துகொண்டேன். இவ்வாறான மேன்மையான நாவல்களைப் படிக்கும்போது ஒரு மக்கள் கூட்டத்திற்காகத் தனது வாழ்வினை அர்ப்பணிக்கும் எவரும் தமது தனிப்பட்ட வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்கத்தினை நான் உணர்ந்துகொண்டேன்" என்றும் அவர் கூறினார். மகாபாரத்தத்தின் கதாப்பாத்திரங்கள் குறித்துப் பலரும் பல கோணங்களின் தமது கருத்தினைக் கொண்டிருப்பார்கள். ஆனால், பிரபாகரனைப் பொறுத்தவரை கர்ணனின் பாத்திரம் அவருக்கு மிகவும் பிடித்துப் போயிருந்தது. தியாகத்தின் வரைவிலக்கணமாகத் திகழ்ந்த கர்ண்னனின் பாத்திரம் அவருக்குப் பிடித்திருந்தது போலவே, பீமனின் அடக்கமும், சுயநலமற்ற குணமும் வருக்குப் பிடித்திருந்தன. "தனது உயிரையே கொடுக்க முன்வந்த கர்ணனின் தியாகம் எனக்குப் பிடித்திருந்தது" என்று அவர் கூறினார். ஒழுக்க சீலம் என்பது பிரபாகரனது தனிப்பட்ட வாழ்விலும், அவரால் கட்டியமைக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிலும் மிக முக்கியமானதாக இருந்தது. தன்னை ஒரு ஒழுக்கமான பாடசாலையின் அதிபராகப் பார்ப்பதாக அவர் ராமிடம் கூறியிருந்தார். "ஒரு பாடசாலையின் அதிபர் கட்டுக்கோப்பிலும் ஒழுக்கத்திலும் சிறந்து விளங்குவாராக இருந்தால், அவரிடம் கல்விகற்கும் பிள்ளைகளும் ஒழுக்கத்தில் சிறந்து விளங்குவதோடு, வாழ்விலும் முன்னேற்றத்தைக் காண்பார்கள். இதை நீங்கள் எங்கும் காணலாம். பல பாடசாலைகளின் மாணவர்கள் ஒழுக்கத்தில் சிறந்து விளங்குவதற்குக் காரணம் அப்பாடசாலையின் ஆசிரியர்களும், அதிபரும் சிறந்த ஒழுக்கத்தினைக் கடைப்பிடிப்பதால் தான். அவ்வாறான அதிபர் ஒருவரிடம் கல்விகற்ற பல தலைமுறை மாணவர்கள் வாழ்வில் சிறந்துவிளங்குவதை நீங்கள் பார்க்கலாம். அதே கொள்கையினைத்தான் நாம் எமது இயக்கத்திற்குள்ளும் வளர்த்து வருகிறோம். அதனாலேயே ஒழுக்கம் தொடர்பாக மிகுந்த சிரத்தையெடுத்து வருகிறோம்" என்று அவர் ராமிடம் கூறினார். அதே செவ்வியில் பேசிய பிரபாகரன், தாம் ஒழுக்கத்தினைக் கடுமையாகக் கடைப்பிடிப்பதற்கு இரு பிரதான காரணங்கள் இருப்பதாகக் கூறியிருந்தார். "முதலாவதாக, புலிகளின் உறுப்பினர் ஒருவர் மக்களுக்காகவே போராட வந்தவர். அவ்வாறான ஒருவர் மக்கள் விரோத நடவடிக்கைகள் ஈடுபடுவாராக இருந்தால், அவர் மக்களின் எதிரியாக மாறிவிடுவார். இதனால் நமது போராட்டத்திற்கு மக்கள் தரும் ஆதரவு நாளடைவில் இல்லாமப் போய்விடும். இரண்டாவதாக, சமூகத்தில் ஆயுதங்களுடன் உலாவருபவர்களுக்கு அதீதமான பலமும் அதிகாரமும் கைகளுக்கு வந்துவிடுகிறது. ஆகவே, இவ்வாறான அதிகாரமும் பலமும் போராளிகளை தவிர்க்கமுடியாமல் சர்வாதிகாரிகளாக மாற்றிவிடக்கூடியன" என்று அவர் கூறினார் அவரது குடும்பம் ஆனந்த விகடன் , கல்கி ஆகிய சஞ்சிகைகளை வாங்கியபோது, அயலவர்கள் கலைமகள், குமுதம், கல்க்கண்டு ஆகியவற்றினை வாங்கியிருந்தனர். வீட்டில் செய்யும் வேலைகளுக்காக, சிறு உதவிகளுக்காக கைப்பணமாகத் தனக்குக் கிடைக்கும் சிறியதொகைப் பணத்தினைக் கொண்டு பிரபாகரன் காலைக்கதிர் எனும் மாதாந்த விஞ்ஞான வெளியீட்டையும், மஞ்சரி எனும் மாதாந்த செய்தித் தொகுப்பையும் வாங்கிப் படித்தார். ஊரின் ஓரத்தில் இருந்த சிறிய புத்தகசாலையில் இவற்றை அவர் வாங்கிவந்தார். இயல்பாக சிறுபராயத்திலிருந்து புத்தகங்களை வாசிப்பதில் ஆர்வம் கொண்டிருந்த பிரபாகரன், குறிப்பாக சரித்திர நாவல்களையும், சரித்திர நிகழ்வுகளையும், சரித்திர நாயகர்களின் சரிதைகளையும் பெரிதும் விரும்பிப் படித்தார். "புத்தகங்கள் மூலமே நெப்போலியன், அலெக்ஸாண்டர் ஆகியோரின் மகத்தான திறமைகளையும், வெற்றிகளையும் என்னால் அறிந்துகொள்ள முடிந்தது. புத்தகங்கள் வாயிலாகவே இந்தியச் சுதந்திர போராட்ட வீரர்களான சுபாஸ் சந்திரபோஸ், பகத் சிங், பாலகெங்காதரா திலக் ஆகியோர் பற்றி அறியும் வாய்ப்புக் கிடைத்தது. இவ்வாறான புத்தகங்கள் ஊடாகவே ஒரு புரட்சியாளானாக எனது வாழ்வினை அமைத்துக்கொள்ளும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. எனது மனதினுள் உழன்றுகொண்டிருந்த அந்நியருக்கெதிரான விடுதலைப் போராட்டத்தினை வெளியே கொண்டுவந்து அதனை நனவாக்குவதில் இந்தியச் சுதந்திர போராட்ட வரலாறும், நாயகர்களும் பாரிய தாக்கத்தினைச் செய்திருக்கின்றனர்" என்றும் அவர் கூறினார்.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
பிரபாகரனின் வரலாறு..... தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தவும் அவர்களை அவமானப்படுத்தவும் சிங்களக் காடையர்களை அரசு இறக்கியிருந்தது குறித்து பிரபாகரன் மிகுந்த விசனம் கொண்டிருந்தார். அதேவேளை இந்த திட்டமிட்ட தாக்குதல்களைத் தடுக்கும் நடவடிக்கைகள் எதனையும் எடுக்காது, வெறுமனே அகிம்சை ரீதியில் போராடலாம் என்று சொல்லிவந்த தமிழ்த் தலைமைகள் மீதும் அவருக்கு பாரிய அதிருப்தி ஏற்பட்டு வந்தது. ஆனால், அவரது ஆத்திரத்தை வெளிப்படுத்தும் வழி அவருக்கு அன்று தெரிந்திருக்கவில்லை. அவர் அப்போது சிறுவனாக இருந்தது மட்டுமல்லாமல் அவரது தந்தையார் மிகவும் கண்டிப்பானவராகவும் இருந்தார். தனது சிறுவர்பராய வாழ்வு குறித்து இந்து ராமிடம் பிரபாகரன் பின்வருமாறு பகிர்ந்துகொண்டார், "சிறுபராயம் முதலே மிகவும் கண்டிப்பான முறையிலேயே நான் வளர்க்கப்பட்டேன். வெளியாருடன் அதிகம் நான் பழகுவதற்கு வீட்டில் அனுமதி இருக்கவில்லை. பெண்பிள்ளைகளைக் கண்டால் இயல்பாகவே நான் கூச்சப்படுவேன். நேர்மையினையும் ஒழுக்கத்தையும் கடைப்பிடிப்பதென்பது வீட்டில் கட்டாயமாக இருந்தது. எனது தந்தையார் எமக்கெல்லாம் முன்மாதிரியாகத் திகழ்ந்தார். தனது பிள்ளைகள் ஒழுக்கத்தில் சிறந்து வளரவேண்டும் என்பதற்காக வெற்றிலை போடுவது கூடத் தவறென்று அவர் கருதிவந்தார். அவரிடமிருந்தே நான் பல நற்பண்புகளைக் கற்றுக்கொண்டேன். அவர் அரச உத்தியோகத்தில் இருந்தார். மாவட்ட காணி அதிகாரியாக பணிபுரிந்த அவர் நேர்மையாகத் தனது கடமையைச் செய்துவந்தார். அவர் வீதியால் நடந்துசெல்லும்போது வீதியில் முளைத்திருக்கும் சிறு புற்கூட பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்று கவனமாக இருப்பார் என்று அயலவர்கள் கூறுவதைக் கேட்டிருக்கிறேன். ஆனால், அவரது மகனான நான் இப்படி இருக்கிறேன்......எனது செயல்களை விமர்சிக்கும்போது கூட, இப்படியொரு தகப்பனுக்கு இப்படியொரு மகனா என்று வியந்து அவர் பேசியதையும் நான் கேட்டிருக்கிறேன். அவர் கண்டிப்பானவர்தான், இருந்தாலும் மிகவும் மென்மையான உள்ளத்தையும், மற்றையவர்களின் கருத்துக்களை செவிமடுத்து ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தையும் கொண்டிருந்தார். என்னை ஒழுக்கத்தில் கண்டிப்புடன் வளர்த்தபோதும்கூட, ஒருகட்டத்தில் என்னைத் தனது நண்பனாகவே நடத்திவந்தார். எனக்கு அவ்வப்போது அறிவுரைகளைக் கூறிவந்தாலும், என்னுடன் பல விடயங்கள் குறித்து அலசுவது அவருக்குப் பிடித்திருந்தது" என்று கூறினார். அவரது தாயாரும், மூத்த சகோதரிகளும் அவரைச் செல்லமாக "தம்பி" என்றே அழைத்து வந்தனர். 1994 இல் வெளிச்சம் சஞ்சிகைக்கு அவர் வழங்கிய நேர்காணலில் தனது சிறுபராய வாழ்வு குறித்து பசுமையான நினைவுகளை மீட்டிருந்தார் பிரபாகரன். "வீட்டில் நான் அனைவரினதும் செல்லப்பிள்ளையாக, விரும்பப்பட்டவனாக இருந்தேன். எனக்காக பல கட்டுப்பாடுகள் வீட்டில் அவ்வப்போது தளர்த்தப்பட்டு வந்தன. அயலில் உள்ளவர்களே எனக்கு விளையாட்டுத் துணையாகிப் போனார்கள். எனது வீட்டிற்குள்ளும், எனது அயலவர்களின் வீட்டிற்குள்ளும் எனது உலகம் சுருங்கிப் போனது. தனிமையான அந்தச் சிறிய வீட்டிற்குள்ளேயே எனது சிறுபராயம் கழிந்தது" என்று அவர் கூறினார். பிரபாகரனின் வீட்டு அயலவர்கள் அவரது சிறுபராயம் தொடர்பாக மிகவும் பாசத்துடன் தமது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர். அவர் சிறுவனாக இருந்த காலத்தில் அவர்களுக்காக அவர் ஓடியோடி வேலைகள் செய்து கொடுத்திருக்கிறார். தனது பேரனாரின் நினைவுதின அன்னதானச் சடங்குகளின்பொழுது பிரபாகரன் தானே முன்னின்று பல வேலைகளைச் செய்வது வழமை. அன்னதானத்திற்குச் சமூகமளிக்கமுடியாமற்போன அயலவர்களுக்கு பிரபாகரனே உணவுப் பொட்டலங்களிக் கொண்டுபோய் விநியோகித்துவருவார். அதேபோல வீட்டில் நடக்கும் விசேட நிகழ்வுகளின்போது தாயார் பார்வதியம்மாள் சமைக்கும் சுவையான தின்பண்டங்களை மகிழ்வுடன் அயலவர்களுக்குக் பகிர்ந்துகொடுப்பது பிரபாகரனுக்கு அலாதி பிரியம். கோயிலில் நடக்கும் பூஜைகளின்பின்னர் தனது உறவுகளுக்கும், அயலவர்களுக்கும் பிரசாதத்தினைக் கொண்டுவந்துகொடுப்பதும் அவருக்குப் பிடித்தமான இன்னொரு விடயம். பிரபாகரனின் வரலாறு..... பிரபாகரனின் விருந்தோம்பல் வன்னிக் காட்டில் அவர் தனது தோழர்களுடன் ஒளிந்திருந்தபோதும் அவரை விட்டு விலகவில்லை. வன்னியில் அவரது வீட்டில் சமைக்கப்படும் விசேட உணவுவகைகள் அவரது நண்பர்களுக்கும் அனுப்பி வைக்கப்படும். விடுதலை வேட்கை எனும் தான் எழுதிய புத்தகத்தில் பிரபாகரனின் வீட்டிலிருந்து தனக்கு அனுப்பிவைக்கப்பட்ட விசேட உணவுவைகைகள் குறித்து அடேல் பாலசிங்கம் குறிப்பிட்டிருக்கிறார். அவர் மேலும் அதுகுறித்து எழுதும்போது, பிரபாகரனுக்குக் கோழிக்கறி என்றால் மிகவும் பிடிக்கும் என்று கூறுகிறார். தான் மரக்கறி வகைகளை மட்டுமே உண்டுவந்தபோதும், தனது கணவரான அன்டன் பாலசிங்கம் பிரபாகரனின் வீட்டுக் கோழிக்கறியை மிகவும் விரும்பிச் சாப்பிடுவார் என்று மேலும் அடேல் குறிப்பிட்டிருக்கிறார். மிகச்சிறந்த கெரில்லா ராணுவத்தின் தலைவராக பிரபாகரன் இருந்தபோதும், தனக்குப் பிடித்தமான மரக்கறி உணவுகளை அவர் விதம் விதமாக தயாரித்து அனுப்புவதில் ஆர்வம் கொண்டிருந்தார் என்று அடேல் தொடர்ந்து எழுதுகிறார். பிரபாகரனின் உறவினர்களும், அயலவர்களும் அவரது தாயார் மிகச் சிறந்த ஒரு சமையல்க் காரர் என்று கூறுகின்றனர். அவரிடமிருந்தே விதம் விதமாகச் சமைக்கும் கலையினை பிரபாகரன் கற்றிருக்க வேண்டும் என்று அவர்கள் கூறுகின்றனர். பார்வதியம்மாளும், வேலுப்பிள்ளையும் 2003 இல் தமிழ்நாட்டில் தாம் தங்கியிருந்த திருச்சி வீட்டிலிருந்து சுமார் 19 வருடங்களுக்குப் பின்னர் நாடு திரும்பியிருந்தனர். 2002 இல் வேலுப்பிள்ளை மாரடைப்பால் அவஸ்த்தைப்பட்டிருந்தார். ஆகவே அவரைப் பராமரித்துக்கொள்வதற்கு கனடாவிலிருந்து பிரபாகரனின் சகோதரி வினோதினியும் கணவர் ராஜேந்திரனும் வந்து அவர்களுடன் தங்கியிருந்தனர். சமைப்பதில் பிரபாகரனுக்கும் அவரது சகோதரி வினோதினிக்கும் இடையில் எப்போதுமே ஒரு போட்டியிருக்கும். ஆனால் மூத்த சகோதரி ஜெகதீஸ்வரியோ இப்போட்டியில் கலந்துகொள்வதில்லை. தனது தம்பி சமையலில் சிறந்தவன் என்று விட்டுக் கொடுத்து ஒதுங்குவதில் அவர் பெருமைப்பட்டுக்கொள்வார். என்னால் தம்பியுடன் ஒருபோதுமே போட்டி போட முடியாது, அவன் எப்போதுமே எனக்குச் செல்லத் தம்பிதான் என்று அவரது சகோதரன் மனோகரன் கூறுவார். பிரபாகரன் ஒரு உணவுப் பிரியர். அசைவ உணவுகளென்றால் அவருக்குப் பிடித்துப் போகும். அதிலும் கோழிக்கறி அவருக்கு மிகவும் பிடித்தது. ஆனால், தற்போது அவருக்கு சீன உணவுவகைகளும் பிடிக்கிறதாம் என்று அடேல் கூறுகிறார். தனது போராளிகளுக்கு உணவைச் சிறந்த முறையில் தயாரிப்பதிலும், அதனை சுவைத்து உண்பதிலும் உள்ள நுணுக்கங்களை அவர் கற்றுத்தந்திருக்கிறார். அவரது போராளிகளில் ஒருவர் பிரபாகரனுடனான உணவுதொடர்பான சம்பாஷணை குறித்து விடுதலைப் புலிகள் சஞ்சிகையில் பின்வருமாறு எழுதுகிறார். "முல்லைத்தீவுக் காட்டிற்குள் நாம் முகாமிட்டிருந்த பகுதியை நெருங்கி இந்திய ராணுவம் முற்றுகை ஒன்றினைப் போட்டிருந்தது. உண்பதற்கு கெளப்பியைத் தவிர வேறு எதுவும் எம்மிடம் இருக்கவில்லை. நாம் கெளப்பியைத் திறந்த பானையில் வைத்து அவித்துக்கொண்டிருந்தோம். அடுப்பிலிருந்து பானையினை இறக்கும்போது, கை தவறி பானை சறுக்கிவிட, சிறிது கெளப்பி நிலத்தில் சிந்திவிட்டது". "நான் பயந்துவிட்டேன். யாராவது கண்டால், தண்டனையாக ஒருவாரம் முழுதும் சமைக்கும்படி ஆகிவிடும். ஆகவே நான் அவசர அவசரமாக மண்ணினால் சிந்தப்பட்ட கெளப்பியை மூடி மறைத்துவிட்டேன். ஆனால், தலைவர் அதனைப் பார்த்துவிட்டார். பிள்ளை என்று என்னை அழைத்த தலைவர், ஏன் இப்படிச் செய்தாய் என்று கேட்டார். அது எனது மதிய உணவுக்குப் போதுமானதே என்று கேட்டுக்கொண்டே நிலத்தில் சிந்தியதைப் பொறுக்கிக் கழுவத் தொடங்கினார். தனது கைகளிலிருந்த கெளப்பிய உண்டுகொண்டே, ஆறினாப் பிறகு மற்றவங்களுக்கும் கொடு என்று கூறிச் சென்றுவிட்டார். தலைவரைப் பொறுத்தவரை உணவு எப்போதுமே சுத்தமானதாகவும், சுவையாகவும் இருக்க வேண்டும், அத்துடன் எதுவுமே வீணாக்கப்பட்டுவிடக் கூடாது என்பதில் அவர் கவனமாக இருப்பார்" என்று அவர் தனது அனுபவத்தைப் பகிர்கிறார்.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
சித்தியின் எரிந்த முகம் சிங்களவர்களால் தனது சித்தியின் முகம் எரியுண்டது என்று கேள்விப்பட்டபோது பிரபாகரன் அடைந்த கோபத்திற்கு அளவேயிருக்கவில்லை. 1958 ஆம் ஆண்டின் தமிழ்ர் மேலான திட்டமிட்ட இனக்கலவரம் நடந்து முடிந்து சரியாக ஒருவருடத்திற்குப் பின்னர் சித்தி ஆலடி ஒழுங்கையில் உள்ள பிரபாகரனின் வீட்டிற்கு வந்திருந்தார். அவரது முகமும் கைகளும் தீக்காயங்களால் அலோங்கோலப்பட்டுக் கிடந்ததை பிரபாகரன் கண்ணுற்றார். "உங்கள் முகமும் கைகளும் எப்படி எரிந்தது?" என்று அவர் சித்தியைப் பார்த்துக் கேட்டார். சித்தி மெளனமாக இருக்கவே, "இனக்கலவரத்தின்போது எரிந்துவிட்டது" என்று தாயார் பதிலளித்தார். பிரபாகரனும், அவரது இரு மூத்த சகோதரிகளான ஜகதீஸ்வரி மற்றும் வினோதினி ஆகியோர் சித்தியிடம் அவருக்கு நடந்த அசம்பாவிதம் குறித்துத் தங்களிடம் கூறும்படி வேண்டிக்கொண்டிருந்தனர். சித்தி பேசத் தொடங்கினார், "நானும், எனது கணவரும் பிள்ளைகளுடன் கொழும்பில் வாழ்ந்து வந்தோம். தமிழருக்கெதிரான தாக்குதல் நடந்த தினம் நாம் எமது மலசல கூடத்தில் பதுங்கியிருந்தோம். நாம் உள்ளே ஒளிந்திருப்பது தெரிந்தே எமது வீட்டிற்கும், கூடவே மலசல கூடத்திற்கும் அவர்கள் தீமூட்டினார்கள். எரிந்துகொண்டிருந்த வீட்டிலிருந்து உயிர்தப்புவதற்காக நாம் தப்பியோட எத்தனித்தபோது, முன்னால் ஓடிய எனது கணவரை பொல்லுகளால் தாக்கி அவர்கள் கொன்றனர். எமக்கு நடக்கப்போகும் விபரீதத்தை உணர்ந்த நானும் பிள்ளைகளும் மதிலேறி அயலவர்களின் காணிக்குள் குதித்தோம். எரிந்துகொண்டிருந்த நெருப்பினூடாகக் குதித்தபோது எனது உடலில் தீக்காயங்கள் ஏற்பட்டன. அயலில் இருந்த சில நல்ல உள்ளம் படைத்த சிங்களவர்கள் எம்மைக் காப்பாற்றி வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றனர். சிங்களவர்களின் அக்கிரமங்களுக்கும், இன்னும் சில சிங்களவர்களின் நற்குணத்திற்கும் அத்தாட்சியாக எனது தழும்புகள் இருக்கின்றன" என்று அவர் கூறினார். தமிழருக்கு அன்று நடந்த அழிவுகள் பற்றி சித்தி பேசிக்கொண்டிருக்கும்போது பிரபாகரனின் சகோதரிகள் நடுங்கத் தொடங்கிவிட்டனர். பிரபாகரனோ ஆத்திரம் மிகுந்து காணப்பட்டார். ஒரு கட்டத்தில் சித்தி தன் கண்முன்னே தமிழ்க் குழந்தை ஒன்று பெற்றோரிடமிருந்து பிடுங்கப்பட்டு கொதிக்கும் தார்ப் பீப்பாயில் எறியப்பட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை விபரிக்கும்போது சகோதரிகள் அழத் தொடங்கிவிட்டனர். பிரபாகரனோ ஆத்திரம் மீதியால் மெளனமாக சித்தி கூறுவதைக் கேட்டுக்கொண்டிருந்தார். சுமார் 25 வருடங்களுக்குப் பின்னர், 1984 இல் அனிதா பிரத்தாப்பிடம் பேசும்போது இதுகுறித்தும் பிரபாஅகரன் பேசியிருந்தார். "தமிழருக்கெதிரான கலவரங்களின்பொழுது சிங்களவர்கள் எனது சித்தியின் வீட்டையும் தாக்கினார்கள். அவரது வீட்டிற்குத் தீ வைத்ததுமல்லாமல் அவரது கணவரையும் அடித்தே கொன்றனர். சித்தியும் அவரது பிள்ளைகளும் பலத்த தீக்காயங்களுடன் உயிர் தப்பியிருந்தனர். அவரது உடலில் ஏற்பட்டிருந்த தீக்காயங்களைப் பார்த்தபோது நான் மிகவும் வேதனையும் அதிர்ச்சியும் அடைந்தேன். தமிழ்க் குழந்தைகள் எரியும் தார்ப் பீப்பாய்களில் வீசப்பட்டுக் கொல்லப்பட்ட செய்திகளையும் நான் அறிந்துகொண்டேன். இவ்வாறான இழப்புக்களைப் பற்றிக் கேள்விப்படும்போதெல்லாம் தமிழ் மக்கள் மீது பாரிய அனுதாபமும் பாசமும் என்னை அறியாமலேயே ஏற்பட்டு விடுகிறது. இந்த அவலமான, அடக்குமுறை வாழ்விலிருந்து அவர்களை எப்படியாவது விடுவித்துவிடவேண்டும் என்கிற அவா எனக்கு ஏற்பட்டுவிட்டது. பாதுகப்பற்ற, அப்பாவிகளான எனது மக்கள் மீது ஏவிவிடப்பட்டிருக்கும் ஆயுத சன்னதத்தினை ஆயுதத்தின் மூலமே எதிர்கொள்ளவேண்டும் என்கிற கட்டாயத்தையும் அது எனக்கு ஏற்படுத்தித் தந்துவிட்டது. நான் எனது சித்தியிடம் ஒரு விடயத்தைக் கூறினேன், அதாவது தமிழர்கள் திருப்பியடிப்பார்கள் என்கிற பயம் இருந்தால் சிங்களவர்கள் உங்களைத் தொட்டிருக்க முடியுமா சித்தி என்று கேட்டேன்" என்று அவர் கூறினார்.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
பிரபாகரனின் வரலாறு .......... சுவற்றில் பல சைவக் கடவுள்களின் படங்களோடு ஒரு சில இந்தியர்களின் படங்களும் தொங்கும். நேருவும் காந்தியும் தவறாமல் அங்கே இருக்க சைவ சிந்தனையாளர் விவேகானந்தரின் படமும் வேலுப்பிள்ளையால் கொழுவப்பட்டிருந்தது. பிரபாகரனும் தனது பங்கிற்கு இருவரின் படங்களை அங்கே பதிவிட்டிருந்தார். அகிம்சை வழியை விடவும் ஆயுத ரீதியிலான எதிர்ப்பினால் மட்டுமே ஆங்கிலேய ஆதிக்கத்தினை இந்தியாவிலிருந்து விரட்ட முடியும் என்றும் நம்பிய சுபாஸ் சந்திரபோஸினதும் பகத் சிங்கினதும் படங்களே அவை. யாழ்ப்பாண அரசர் காலத்தில் வல்வெட்டித்துறை மிகவும் சுறுசுறுப்பானதும், பிரபல்யமானதுமான துறைமுகமாக இயங்கி வந்தது. ஆனால், போர்த்துக்கேய, ஒல்லாந்தர் காலத்தின் பின்னர் அத்துறைமுகத்தின் பயன்பாடும் முக்கியத்துவமும் குறைவடையத் தொடங்கியதுடன், பின்னர் ஆங்கிலேயரின் ஆட்சிக் காலத்தில் முற்றிலுமாகச் செயலிழந்துபோனது. ஆனாலும், கப்பலோட்டுவதுவதில் மிகவும் தீரர்களான வல்வெட்டித்துறையின் மைந்தர்கள் ஆங்கிலேயரின் அடக்குமுறையினையும் மீறி கப்பலோட்டத்தில் தொடர்ந்தும் ஈடுபட்டு வந்ததனால் ஆங்கிலேயர்களால் "கடத்தல்க்காரர்கள்" என்று அழைக்கப்பட்டனர். இதனால் ஆங்கிலேயக் காவலர்களுடனும், பிற்காலத்தில் ஆட்சியில் அமர்ந்த சிங்களப் பேரினவாதிகளினால் இறக்கிவிடப்பட்ட காவல்த்துறை மற்றும் ராணுவத்தினருடனும் அவ்வப்போது வல்வெட்டித்துறையின் மைந்தர்கள் மோதவேண்டிய நிலை ஏற்பட்டது. சுமார் 10,000 பேர்கொண்ட வல்வெட்டித்துறைத் தமிழர்கள் மிகவும் நெருக்கமான சமூகக் கட்டமைப்பைக் கொண்டிருந்தார்கள். கடத்தல்க் காரர்களைத் தேடுகிறோம் என்கிற போர்வையில் சிங்கள காவல்த்துறையும் ராணுவமும் வல்வெட்டித்துறை மக்களை ஆரம்பத்திலிருந்தே துன்புறுத்தி வந்ததனால், அம்மக்கள் ராணுவத்தின்மீதும் காவல்த்துறை மீதும் கடுமையான அதிருப்தியைக் கொண்டிருந்தனர். வல்வெட்டித்துறையை கடத்தல்க்காரர்களின் சொர்க்கபுரி என்று சிலர் ஒரு காலத்தில் அழைத்ததுண்டு. சோசலிச இலங்கைக் குடியரசில் கிடைக்காத பல பொருட்கள் வல்வெட்டித்துறையில் தாராளமாகக் கிடைத்ததே இதற்குக் காரணம் என்றால் மிகையில்லை. கப்பலோட்டத்தில் மிகச் சிறந்து விளங்கிய வல்வையின் மைந்தர்கள் பல கடற்கொந்தளிப்புக்களை எதிர்கொண்டு மியன்மார், தாய்லாந்து, இந்தியா என்று பல நாடுகளுக்குச் சென்று பல பொருட்களைக் கொண்டுவந்து சேர்த்ததுடன், செல்வத்துடனும் விளங்கினர். தமது கடுமையான கடற்பயணங்களின்போது அவ்வப்போது கரையோரக் காவல்த்துஇறையுடன் சமர்புரியும் சந்தர்ப்பங்களும் அவர்களுக்கு அமைந்திருந்தன.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
நான் இத்தொடரில் பின்னாட்களில் எழுதிய பெரும்பகுதி அழிக்கப்பட்டு விட்டது. அவற்றைச் சேமித்து வைக்கத்தவறியமைக்காக வருந்துகிறேன். நேர விரயம்.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
வைகாசி 1958 இல் தமிழர்கள் மேல் நடத்தப்பட்ட தாக்குதல்கள் மிகவும் திட்டமிட்ட முறையில் பரவலாக ஒரே நேரத்தில் நடத்தப்பட்டவை. இலங்கையின் பொருளாதாரத்தின்மீது தமிழ் வர்த்தகர்கள் கொண்டிருந்த செல்வாக்கினை அழிக்கும் நோக்கிலேயே இத்தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டது. தென்னிலங்கையில் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த மொத்த தமிழ்ச் சமூகமுமே இத்தாக்குதலிற்குள் அகப்பட்டுப் போனது. மாகாண நகரங்களில் இயங்கிவந்த தமிழரின் வர்த்தக நிலையங்கள் சூறையாடப்பட்டபின் தீக்கிரையாக்கப்பட்டன. சைவ ஆலயங்கள் இடிக்கப்பட்டதுடன், எல்லையோரத் தமிழ்க் கிராமங்களில் வசித்துவந்த தமிழர்கள் அடித்து விரட்டப்பட்டனர். இவ்வாறு தமிழர்கள் விரட்டியடிக்கப்பட்ட பூர்வீக தமிழ்த் தாயகத்தில் உடனடியாகவே சிங்களவர்கள் அரசினால் குடியேற்றப்பட்டார்கள். இவ்வாறான திட்டமிட்ட தாக்குதல்களினால் பாதிக்கப்பட்டு ஆங்காங்கே அகதி முகாம்களில் தஞ்சமடைந்த பெருமளவு தமிழர்களை ராணுவப் பாதுகாப்புடன் தமிழரின் பூர்வீக வாழிடமான வடக்குக் கிழக்கிற்கு "இதுதான் உங்களுக்குப் பாதுகாப்பான பகுதி" என்று அரசு அனுப்பி வைத்தது. இத்தாக்குதல்கள் தாம் பாதுகாப்பற்றவர்கள், ஆகவே எம்மைப் பாதுகாத்துக்கொள்ளவும், கெளரவமாக வாழவும் எமக்கான தனியான தேசம் வேண்டும் என்கிற சிந்தனையினை தமிழர்கள் மனதில் ஆழமாக ஏற்படுத்தி விட்டிருந்தது. மாவட்ட காணி அதிகாரியாக இருந்த வேலுப்பிள்ளை அவர்கள் சிங்களக் குடியேற்றங்கள் தமிழர் தாயகத்தில் நடத்திவரும் அழிப்புப் பற்றியும், தமிழர் மீதான அரசின் திட்டமிட்ட தாக்குதல்கள தொடர்பாகவும் மாலை வேளைகளில் தனது வீட்டில் கூடும் நண்பர்களுடன் கலந்துரையாடி வருவார். "சுவர் இருந்தால்த்தான் சித்திரம் வரைய முடியும்" எனும் தந்தை செல்வாவின் சுலோகம் அடிக்கடி வேலுப்பிள்ளையின் நாவில் தவழ்ந்துகொண்டிருக்கும். தமிழரின் தாயகம் பாதுகாப்பட்டால் ஒழிய தமிழ் இனத்தின் தனித்துவத்தினைக் காப்பாற்ற முடியாது என்பதே அவரின் வாதமாக இருந்தது. பிரபாகரனின் அரசியல் பிரவேசம் இங்கிருந்தே ஆரம்பமாகியது. தனது வீட்டில் குழுமியிருந்து பெரியவர்கள் பேசும் விடயங்களை அவர் கூர்ந்து கவனித்துக்கொண்டிருப்பார். ஆனால், அந்த பேச்சுக்களில் அவர் ஒருபோதும் பங்குகொண்டது கிடையாது. இந்த சிறப்பியல்பு அவரை சிறந்த செவிமடுப்பாளனாக உருவாக்கியதுடன், நாளடைவில் அவரது குணாதிசயங்களில் மிக முக்கியமானதாகவும் மாறிப்போனது. தமிழ்ப் பூசகரை உயிருடன் தீக்கிரையாக்கிய விடயம் அவரை வெகுவாகப் பாதித்திருந்தது. அவரை கடுமையான சீற்றத்திற்குள்ளும் அது தள்ளியிருந்தது. "அவர் ஏன் திருப்பி அடிக்கவில்லை அப்பா?" என்று அவர் கேட்டுக்கொண்டே இருந்தார். அந்தப் பூசகரும் தமிழர்களும் திருப்பி அடித்திருக்க வேண்டும் என்று அவர் தொடர்ந்தும் அவர்களுடன் விவாதம் செய்துகொண்டிருந்தார். அப்பூசகரால் திருப்பி அடிக்க முடியவில்லை. அன்று கால கொழும்பின் பல பகுதிகளில் சிங்களவர்கள் கூடுவதை அவர் அறிந்துகொண்டார். அக்கூட்டம் மாலையாகியதுடன் தமிழர்களுக்குச் சொந்தமான கடைகளை உடைத்து கொள்ளையில் ஈடுபடத் தொடங்கியது. தமிழர்களின் கடைகள் முற்றாகச் சூறையாடப்பட்ட பின்னர் அவற்றிற்கு சிங்களவர்களால் தீவைக்கப்பட்டது. நகரின் பலவிடங்களில் தமிழர்களின் வீடுகளும் குறிவைத்து தக்கப்பட்டு, கொள்ளையிட்டபின்னர் எரியூட்டப்பட்டன. அதுமட்டுமல்லாமல், அரச அலுவலகங்களில் வேலைபார்த்துவந்த தமிழர்கள் அவ்விடங்களிலேயே அச்சத்தில் ஒளிந்திருந்த வேளை அவர்களை வீதிகளுக்கு இழுத்துவந்த சிங்களவர்கள் கடுமையாகத் தாக்கினார்கள். திருவேங்கடம் வேலுப்பிள்ளை பாணந்துரை சந்தியில் கூடிய காடையர் கூட்டம் தனது கோயில் நோக்கி வருவதை அவதானித்த பூசகர் மிகவும் பதட்டமடைந்தார். உடனடியாக தனது அறைக்குள் ஓடிய பூசகர், தனது கட்டிலின் அடியில் ஒளிந்துகொண்டார். தாம் தேடிவந்த பூசகரை அறையினுள் கண்டுபிடித்த காடையர் கூட்டம் அவரை தலை முடியில் பிடித்து வெளியே இழுத்து வந்தது. பக்கத்தில் இருந்த எரிபொருள விற்பனை நிலையத்திலிருந்து தாம் எடுத்துவந்த பெற்றோலினை அவர்மீது ஊற்றிய அச்சிங்களக் காடையர்கள் அவர்மீது தீவைத்தனர். தனது உயிருக்காகக் கதறிக்கொண்டு பூசர் எரிந்துகொண்டிருக்க சுற்றியிருந்த சிங்களக் காடையர்கள் "பறத் தமிழனுக்கு பாடம் புகட்டிவிட்டோம், இனிமேல் தமிழ் மொழிக்கு சம அந்தஸ்த்தும் , தமிழருக்கு உரிமையும் கேட்கட்டும் பார்க்கலாம்" என்று எக்காளமிட்டுச் சிரித்துக்கொண்டு போனது. தமது மதகுரு ஒருவரை உயிருடன் எரித்தது தமிழ்ச் சைவர்களை வெகுவாகப் பாதித்திருந்தது. மிகுந்த இறைபக்தி உள்ள குடும்பத்தில் வளர்ந்துவந்த சிறுவன் பிரபாகரனை இது அதிகம் வேதனைப்பட வைத்திருந்தது. அவரது பெற்றோர்கள் ஊரில் கோவில்களைக் கட்டி வாழ்ந்த பரம்பரையினைச் சேர்ந்தவர்கள். வல்வெட்டித்துரையில் இருக்கும் மிகப்பெரும் கோயிலான வல்வை சிவன் கோவிலின் பிரதம நிர்வாகியாக வேலுப்பிள்ளை இருந்துவந்தார். பிரபாகரனின் மூதாதையர்களில் ஒருவரான திருமேனியார் வெங்கடாச்சலம் என்பவரால் அக்கோயில் கட்டப்பட்டது. அக்கோயில் மட்டுமல்லாமல் இன்னும் இரு கோயில்களான நெடியகாடு பிள்ளையார் கோயில், வல்லை முத்துமாரியம்மண் கோயில் ஆகியனவற்றின் கட்டுமானத்தில் பிரபாகரனின் குடும்பம் பாரிய உதவியினை வழங்கியிருந்தது. பிரபாகரனின் தாயரான வல்லிபுரம் பார்வதியம்மாளும் ஊரில் கோயில் கட்டும் குடும்பம் ஒன்றினைச் சேர்ந்தவர். இன்னொரு வடபகுதி துறைமுக நகரான பருத்தித்துறை மெத்தை வீட்டு நாகலிங்கம் குடும்பத்தைச் சேர்ந்தவர் அவர். மிகுந்த இறைபக்தி கொண்ட அவர், தொடர்ச்சியான விரதங்களையும் மேற்கொண்டு வந்தவர். தந்தை பிரதான ஆலய நிர்வாகியாகவும், தாயார் மத அனுஷ்ட்டானங்களில் பயபக்தியுடன் ஈடுபட்டுவருபவராகவும் இருக்க சிறுவன் பிரபாகரன் இவ்வாறான மதச் சூழ்நிலையிலேயே வளர்ந்துவந்தார். அவரது வீட்டின் பூஜை அறையில் சிவனுக்கான பெரிய உருவப் படமும் முருகன் பிள்ளையாருக்கென்று சிறு படங்களும் எப்போதுமே வைக்கபட்டிருக்கும். குடும்பத்தில் பிள்ளைகள் அனைவரும் நாளாந்தம் மத வழிபாடுகளில் ஈடுபட்டதுடன் தேவாரங்களையும் பாடிவந்தனர். தீயவர்களை அழித்து தர்மத்தை நிலைநாட்டும் முருகனை பிரபாகரன் தனது பிரதான கடவுளாக வழிபட்டு வந்தார்.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
அவர் ஏன் திருப்பி அடிக்கவில்லை ? பாணந்துரை பிள்ளையார் கோயில் பூசகரை சிங்களவர்கள் உயிருடன் தீக்கிரையாக்கிய செய்தியை தனது தந்தையாரான திருவேங்கடம் வேலுப்பிள்ளை சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்த சிறுவனான பிரபாகரனின் மனதில் ஒரு கேள்வி எழுந்தது, "அவர் ஏன் திருப்பி அடிக்கவில்லை அப்பா?" என்பதுதான் அது. சமஷ்ட்டிக் கட்சித் தலைவர் தந்தை செல்வாவின் தீவிர ஆதரவாளரான வேலுப்பிள்ளையிடம் தனது மகனின் கேள்விக்கான பதில் இருக்கவில்லை. தமது உரிமைகளை காந்தீய, வன்முறையற்ற போராட்ட வழிகளில் பெற்றுக்கொள்ளமுடியும் என்று அவரைப்போன்றவர்கள் அதுவரை நம்பியே இருந்தனர். காலிமுகத்திடலில் கால்களை மடக்கிக் குந்தியிருந்து, தமது தெய்வங்களை நோக்கி மன்றாட்டுக்களை வைப்பதுவும், வேண்டுவதுமே சிங்களத் தலைவர்களின் கல்மனங்களைக் கரைத்துவிடும், அதன்பின் தமக்கான உரிமைகள் கிடைத்துவிடும் என்று அவர்கள் நம்பியிருந்தார்கள். பாணந்துரை பிள்ளையார் கோயில் ஆனால், மூன்றரை வயதே நிரம்பிய, வீட்டில் எல்லாராலும் "துரை" என்று செல்லமாக அழைக்கப்பட்ட சிறுவன் பிரபாகரனின் இந்தக் கேள்வி அங்கிருந்த எல்லோருக்கும் நியாயமானதாகவும், தர்க்கரீதியில் சாதகமானதாகவும் அன்று தெரிந்தது. வீட்டில் தான் விரும்பியதைச் செய்யவும், கேட்டுப் பெற்றுக்கொள்ளவும் தனது பெற்றோரிடமிருந்தும், சகோதர சகோதரிகளிடமிருந்தும் எப்போதும் நினைத்ததை அடைந்துகொள்ளும் சிறுவன் பிரபாகரனுக்கு அவரது தாயார் பார்வதியம்மாள் சரியாகவே "துரை" என்று பெயர் வைத்திருந்தார். நான்கு பிள்ளைகளில் இளையவராகப் பிறந்த பிரபாகரன் தகப்பனாரின் செல்லப்பிள்ளையாக இருந்ததுடன், சிறுவனாக இருந்த காலத்தில் தகப்பனாருடன் தூங்குவதை வழக்கமாகவும் கொண்டிருந்தார். பிரபாகரன் யாழ் வைத்தியசாலையில் 1954 ஆம் ஆண்டு, கார்த்திகை 26 இல் பிறந்தார் என்பது குறிப்பிடத் தக்கது. தனது தந்தையாருடன் அவரது நண்பர்கள் மாலை வேளைகளில் தனது வீட்டில் நடத்தும் சந்திப்புக்களில் பிரபாகரனும் தவறாது சமூகமளிப்பார். 50 களின் இறுதிப்பகுதிகளில் இலங்கையில் நடைபெற்று வந்த தமிழருக்கெதிரான பல விடயங்கள் அங்கே பேசப்பட்டன. தனிச்சிங்களச் சட்டம், காலிமுகத்திடல் சத்தியாக்கிரகம், சத்தியாக் கிரகப் போராட்டக்காரர்கள் மீதான சிங்களக் காடையர்களின் மூர்க்கமான தாக்குதல்கள், கொழும்பிலிருந்து ஏனைய பகுதிகளுக்கும் பரவிய தமிழர் மீதான வன்முறைகள், கல்லோயாக் குடியேற்றவாசிகளால் படுகொலை செய்யப்பட்ட தமிழர்கள், பண்டா செல்வா ஒப்பந்தமும் அதன் தோல்வியும், 1958 இல் அரசால் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட தமிழர் மீதான தாக்குதல்கள், இறுதியாக பாணந்துரை பிள்ளையார் கோயில் பூசகரின் கொடுமையான கொலை என்று பல விடயங்கள் அங்கே பேசப்பட்டன. சிறுவனாக தலைவர் பிரபாகரன் அந்த நிலையில் இலங்கையில் தமிழருக்கும் சிங்களவருக்கும் இடையே பாரிய பிளவொன்று தோன்றியிருந்ததுடன், ஒருமித்த இலங்கை எனும் கோட்பாட்டையும் அது பலவீனப்படுத்திவிடும் என்கிற நிலைமையினையும் தோற்றுவித்திருந்தது. தமிழரின் பூர்வீக தாயகமான வடக்குக் கிழக்கு மாகாணங்களின் எல்லைகளை ஊடறுத்து அரசால் மிகவும் திட்டமிட்ட முறையில் நடத்தப்பட்டு வந்த சிங்களக் குடியேற்றங்கள் இரு இன மக்களுக்கும் இடையே உணர்வுபூர்வமான எதிர்ப்பினை உருவாக்கியிருந்தது. மேலும் ஏறத்தாள பத்து லட்சம் மலையகத் தமிழர்களின் பிரஜாவுரிமையினைப் பறித்த நிகழ்வு சிங்களவர்களின் உண்மையான நோக்கம் என்னவென்பதனையும் தமிழர்களுக்கு மிகவும் தெளிவாகவே உணர்த்தியிருந்தது. தமிழ் மொழிக்கு உத்தியோகபூர்வ அந்தஸ்த்து கொடுக்கப்பட மாட்டாது என்கிற சிங்களத் தலைவர்களின் நிலைப்பாடு ஏற்கனவே கொதிநிலையில் இருந்த தமிழரின் உணர்வுகளை மேலும் அதிகமாக்கி விட்டிருந்தது. இந்த மூன்று காரணங்களையும் முன்வைத்து தந்தை செல்வாவினால் முன்மொழியப்பட்ட தமிழருக்கான தனி அதிகாரம் மிக்க நாட்டினை இலங்கைக்குள் உருவாக்குவதெனும் கருத்தினை தமிழ் மக்களிடையே உறுதிப்படுத்தியதுடன், 1948 இல் முதன்முறையாக செல்வாவினால் முன்மொழியப்பட்ட இக்கருதுகோள் 1956 தேர்தல்களில் தமிழ் மக்களால் முழுமனதாக ஏற்றுக்கொள்ளவும் பட்டது. அன்றிலிருந்து ஆனி 1956 முதல் வைகாசி 1958 வரையான காலப்பகுதிவரை தமிழர் மீது நடத்தப்பட்ட திட்டமிட்ட தாக்குதல்களால், தமிழரின் பாதுகாப்பு எனும் நான்காவது காரணமும் தமிழ் - சிங்கள பகையுணர்விற்கான காரணங்களுடன் சேர்க்கப்பட்டது. ஆனி 5, 1956 இல், இரு அரச பாராளுமன்ற உறுப்பினர்களின் தலைமையில் சென்ற சிங்களக் காடையர்கள் அன்றைய பாராளுமன்ற முன்றலில், காலிமுகத்திடலில் அமைதிவழியில் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்ட சுமார் 250 தமிழர்கள் மீது மிலேச்சத்தனமான தாக்குதலினை மேற்கொண்டதுடன், தமிழர்களை மிகவும் கேலவலமாக நடாத்தி அவமானப்படுத்தியது. இத்தாக்குதலினை சுற்றியிருந்து பார்த்து ரசித்த ஏனைய சிங்களவர்கள் தமிழர்கள் மீது கற்களை எறிந்து எள்ளி நகையாடியதுடன், கிழக்கு மாகாணத்திலிருந்து வருகை தந்த தமிழர்கள் தமது ரயிலுக்காக புகையிரத நிலையத்தை நோக்கி ஓடுவரை வீதிகள் தோறும் விரட்டி விரட்டி அடிக்கப்பட்டார்கள். காலிமுகத்திடலில் தமிழர்கள தாக்கப்படுவதை ரசித்த அரசு, மறுநாள் கொழும்பின் பல பகுதிகளிலும் தமிழர்கள் மீது தாக்குதல்களை ஒருங்கிணைத்து நடத்தியது. இதன் ஒரு கட்டமாக, கல்லோயா குடியேற்றம் என்று சிங்களவர்களால் பெயர் மாற்றம் செய்யப்பட்ட தமிழரின் பூர்வீக நிலமான பட்டிப்பளையில் வாழ்ந்துவந்த தமிழர்கள் மீதும் அரசு தாக்குதலை நடத்தியது. இத்தாக்குதலில் சிக்குண்டவர்கள் போக ஏனையவர்கள் இரவோடு இரவாக அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்டனர். தமிழரின் பூர்வீகத் தாயகத்திலிருந்து தமிழர்கள் வன்முறைகள் மூலம் விரட்டியடிக்கப்படும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளின் ஆரம்பப்புள்ளியே பட்டிப்பளையிலிருந்தே ஆரம்பமாகியது. பட்டிப்பளை (கல்லோயாக் குடியேற்றத் திட்டம்)
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
பிரபாகரனின் இலட்சியம் பிரபாகரனின் இலட்சியம் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தில் கூறப்பட்டதுபோல இலங்கையில் தமிழ் மக்களின் இருப்பைப் பாதுகாத்துக்கொள்வதற்கு அவர்களுக்கான தனிநாடான ஈழத்தை அடையவேண்டும் என்பதாகவே இருந்தது.1977 இல் தமிழ் மக்கள் கூட்டணிக்கு வழங்கிய ஆணையின்படி தமிழ் ஈழத்திற்கான அரசியல் யாப்பினை வரையும்படியும், அதன் பிரகாரம் சமாதான வழியிலோ அல்லது போராட்ட வழிமுறைகளைப் பாவித்தோ அதனை அடையும்படியும் கேட்டிருந்தார்கள். ஆனால், அந்த மக்கள் ஆணையினை கூட்டணி உதாசீனம் செய்து தாம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியிலிருந்தும் விலகியிருந்தார்கள். அத்துடன், சமாதான வழிமுறைகளில் தமிழர்களுக்கான நீதியினைப் பெற்றுக்கொள்வது இயலாத காரியம் என்பதனையும் கூட்டணியினர் உணர்ந்திருந்தார்கள். மேலும், தந்தை செல்வா அதுவரை காலமும் பரீட்சித்துப் பார்த்துவந்த விட்டுக்கொடுப்புகள், ஒத்துப்போதல்கள், வன்முறையற்ற அகிம்சை ரீதியிலான நேரடியான மக்கள் போராட்டங்கள் என்று அனைத்துமே தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வினைப் பெற்றுத்தரப்போவதில்லை என்பதை தமிழ் மக்களுக்கு நன்கு உணர்த்தியே இருந்தது. அதனாலேயே, தமிழ் மக்களுக்கு முன்னால் இருக்கும் ஒரே தீர்வு ஆயுத ரீதியிலான மக்கள் போராட்டம் மட்டும்தான் என்பதை பிரபாகரன் நன்றாக உணர்ந்திருந்தார். தமிழ் மக்கள் எதிர்கொண்ட சொல்லொணா துன்பங்களும் துயர்களும் பிரபாகரனை ஆயுதரீதியிலான எதிர்ப்பு நடவடிக்கைக்கு உந்தித் தள்ளியிருந்தன. அதனாலேயே நகர்ப்புற கரந்தடிப்படையான புலிகளை அவர் உருவாக்கினார். அந்த கரந்தடிப்படையினை உருவாக்குவதில் அவர் பட்ட துன்பங்கள், அவர் பெற்ற வெற்றிகள், எதிர்கொண்ட தோல்விகள், தனது கரந்தடிப்படையினை ஒரு மரபு வழி ராணுவமாக மாற்றியமைக்க அவர் செய்த வேலைத்திட்டங்கள், தியாகத்தின் உயரிய தற்கொலைப்படையினை உருவாக்கியமை, மிகப் பலமான கடற்படையொன்றினை உருவாக்கியமை, தமிழருக்கான காவல்த்துறையினை நிறுவியமை, தமிழருக்கான நீதிச்சேவைகள், மிகவும் திறன்வாய்ந்த நிர்வாகக் கட்டமைப்பு என்பவை அனைத்துமே ஒரு கரந்தடிப்படையொன்றினால் செய்யக் கூடியவை என்பதை இந்த உலகில் முன்னர் எவருமே கண்டிராதது. நான்காவது வாழ்க்கைச் சரித்திரத்தை நான் பிரபாகரன் தொடர்பாக எழுத ஆரம்பித்தபோது, பல இடர்களைச் சந்திக்க நேரிடும் என்று நான் எதிர்பார்த்தே இருந்தேன். இதற்கு முன்னர் நான் எழுதிய மூன்று வாழ்க்கைச் சரித்திரங்களும் ஒப்பீட்டளவில் இலகுவானவை. 1957 இல் இருந்தே தொண்டைமான், தந்தை செல்வா, அமிர்தலிங்கம் ஆகியோருடன் நான் பழகியே வந்திருக்கிறேன். அவர்கள் இறக்கும்வரை அவர்களுடன் மிக நெருங்கிய தொடர்புகளை நான் கொண்டிருந்தேன். இதனாலேயே அவர்களின் வாழ்வின் மிக முக்கியமான நிகழ்வுகளை பதிவுசெய்யும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அவர்களின் வாழ்வினைப் பாதித்த நிகழ்வுகள், காலங்கள் குறித்து பலமுறை அவர்களுடன் சந்திப்புக்களை நடத்திக் கலந்தாலோசித்திருக்கிறேன். ஆனால், நான் ஒருபோதுமே பிரபாகரனையோ அல்லது அவரது மூத்த உதவியாளர்களையோ சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை. அரச பத்திரிக்கை நிறுவனமான லேக் ஹவுஸில் பணிபுரிந்ததனால், ராணுவம் வெளியிடும் செய்திகளை அப்படியே வெளியிடுவது மாத்திரமே எனது தொழிலாக இருந்தது. இலங்கையில் மிகவும் தேடப்பட்ட மனிதரான பிரபாகரன் பற்றி நான் எழுதுவதென்பது முற்றாகத் தடைசெய்யப்பட்டே இருந்தது. ஆனாலும், பிரபாகரன் பற்றி எழுதும் வேறு எந்த எழுதாளருக்கும் கிடைக்காத வரப்பிரசாதம் ஒன்று எனக்கு இருந்தது. நான் மிதவாதத் தமிழ்த் தல்கைவர்களுடம் மிக நெருக்கமாகவே பழகிவந்தேன். அதுமட்டுமல்லாமல் இனப்பிரச்சினையில் அதிகளவு பங்களிப்பைச் செலுத்திய சிங்களத் தலைவர்களான சிரில் மத்தியூ, லலித் அத்துதல்முதலி, காமினி திசாநாயக்க, ரஞ்சன் விஜேரத்ன, ரணசிங்க பிரேமதாசா, பேராசிரியல் ஜி எல் பீரிஸ் மற்றும் பலருடன் நான் மிகவும் நெருக்கமாகப் பழகியிருக்கிறேன். மேலும் இலங்கை தொடர்பான இந்தியாவின் கொள்கைகளை நெறிப்படுத்திய இந்தியர்களான ஜி கே சத்வால், ஜே என் டிக்ஷீட், எல் மெஹோத்ரா போன்றவர்களுடன் எனக்கு நெருங்கிப் பழகும் சந்தர்ப்பம் கிடைத்திருந்தது. 1996 இல் அமிர்தலிங்கம் பற்றிய எனது புத்தகத்தை வெளியிட்ட சில காலத்திலேயே பிரபாகரன் பற்றியும் எழுதவேண்டும் என்கிற ஆர்வம் எனக்கு வந்தது. அமிர்தலிங்கம் தொடர்பான புத்தக் வெளியீட்டிற்கு நீலன் திருச்செல்வத்தை நான் அழைத்திருந்தேன். அச்சந்திப்பில்த்தான் அவர் நான் பிரபாகரன் பற்றியும் எழுதவேண்டும் என்று என்னைக் கேட்டுக்கொண்டார். அவர் அப்படி என்னைக் கேட்டது என்னை பெரும் வியப்பில் ஆழ்த்தியிருந்தது. "எங்கள் போராட்டத்தினை அவர் ஒரு முடிவிற்குக் கொண்டுவரப்போகிறார்" என்று நீலன் அன்று எதிர்வுகூறினார். கின்ஸி டெரேஸில் அமைந்திருந்த நீலனின் அலுவலகத்திலிருந்து குயீன் வீதியில் அமைந்திருந்த குமார் பொன்னம்பலத்தின் வீட்டிற்குச் சென்றேன். நீலனின் வேண்டுகோளை குமாரும் ஏற்றுக்கொண்டதுடன், பிரபாகரன் தொடர்பான எனது புத்தகத்திற்கு தன்னாலான் உதவிகளைச் செய்யவிரும்புவதாகவும் அவர் கூறினார். இது ஒரு மிகவும் சிக்கலான காரியம் என்பதை நான் உணர்வேன். பத்திரிக்கையாளனாக உணர்வுகளுக்கு அப்பாற்பட்டு, பக்கச்சார்பில்லாமல், நடுநிலை தவறாது, ஒருவிடயத்தைக் கூறவேண்டும் என்றே பழக்கப்பட்டிருக்கிறேன். நான் எழுதும் விபரங்கள் உண்மையானவையாக இருக்க வேண்டும் என்று விரும்புபவன் நான். அதனால, அவற்றில் தவறுகள் இருப்பின், அதற்கான முழுப் பொறுப்பினையும் நானே ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பதும் எனக்கு நன்கு தெரியும். இவ்விடயங்கள் குறித்து எவரும் சுட்டிக்காட்டும் தறுவாயில் அவற்றை தவறாது திருத்திக்கொள்ளவும் ஆயத்தமாக இருக்கிறேன். எமது காலத்தில் வாழ்ந்த ஒரு சிறந்த மேதையான பிரபாகரனின் வாழ்க்கைச் சரித்திரம் இதனால் மேலும் மெருகூட்டப்படும் என்பதில் எனக்கு துளியும் ஐய்யமில்லை.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
தமிழ் மக்களால் தூக்கியெறியப்பட்ட அமிரின் மாவட்ட அபிவிருத்திச் சபை டெயிலி நியுஸ் எனும் ஆங்கிலப் பத்திரிக்கைக்குப் பேட்டியளித்த அமிர்தலிங்கம், "தமிழ் மக்கள், கூட்டணி மீது அதிருப்தி கொண்டிருக்கிறார்கள், அவர்கள் வேறொரு தலைமை மீது ஆர்வம் கொண்டிருக்கிறார்கள்" என்று வெளிப்படையாகவே கூறினார். "மாவட்ட அபிவிருத்திச் சபைகள் மூலம் தமிழ் மக்களுக்கான பிரச்சினைகளைத் தீர்க்கமுடியாது என்கிற புலிகளின் பரப்புரையினை எம்மால் சமாளிக்க முடியாத நிலைக்கு நாம் இறங்கிவிட்டிருக்கிறோம். மாவட்ட அபிவிருத்திச் சபைகள் என்கிற வெற்றுக் கோதுகளை வைத்துக்கொண்டு நாம் மக்களிடம் போக முடியாது". என்று அவர் மேலும் கூறினார். அமிர்தலிங்கமும், கூட்டணியும் தாம் செய்யாப்போவதாக உறுதியளித்த எதனையும் செய்யப்போவதில்லை என்று இளைஞர்கள் தமிழ்மக்களிடையே தீவிர பிரச்சாரத்தை முன்னெடுத்து வந்தனர். அதுமட்டுமல்லாமல், கூட்டணியினரை ஜே ஆர் தொடர்ந்தும் ஏமாற்றிவருவதாகவும், கூட்டணியினர் இதனைத் தெரிந்திருந்தும் அதற்குத் துணைபோவதாகவும் குற்றஞ்சாட்டியிருந்தனர். மேலும், கூட்டணியின் தலைவர்கள் தமது தொகுதிகளுக்குச் செல்லும்போதெல்லாம் அவர்கள் கொடுத்த வாக்குறுதிகளுக்கு என்னவாயிற்று என்றும் கடுமையாகக் கேள்வி கேட்கத் தொடங்கியிருந்தனர். அமிர்தலிங்கத்தின் யாழ்ப்பாண விஜயங்களின்போது, நகரின் பலவிடங்களிலும் "மக்கள் ஆணைக்கு என்ன நடந்தது? தமிழ் ஈழத்திற்கான தேசிய பாராளுமன்றக் கூட்டம் எப்போது?" போன்ற கேள்விகளுடன் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. இதே காலத்தில் விரக்தியும், கோபமும் கொண்ட இளைஞர்கள் ஆங்காங்கே பொலீஸார்மீதும், ராணுவத்தினர்மீதும் சிறி சிறு தாக்குதல்களை மேற்கொள்ளத் தொடங்கியிருந்தனர். தமிழ் மக்களுக்கும் அமிர் தலைமையிலான கூட்டணிக்கும் இடையே வளர்ந்துவரும் விரிசலை மேலும் பெரிதாக்க எண்ணிய ஜே ஆர், மாவட்ட அபிவிருத்திச் சபைகளுக்கான அதிகாரத்தையோ, சட்டமியற்றும் அதிகாரம், வரியை அறவிடும் அதிகாரம் போன்ற எவற்றையுமே ஒருபோதும் வழங்கமாட்டேன் என்று கூறிவிட்டார். கூட்டணியின் தமிழ் மக்கள் மீதான பிடியைப் பலவீனமாக்குவதனூடாக தமிழ் மக்களின் தனிநாட்டிற்கான கோரிக்கையினை நீர்த்துப் போகச் செய்யலாம் என்று ஜே ஆரும் அவரின் ஆலோசகர்களும் எண்ணியிருந்தனர். இதற்காக சிறில் மத்தியூ எனும் பேர்பெற்ற சிங்கள இனவாதியின் தலைமையில் பிரச்சாரக் குழு ஒன்றினை இயக்கிவிட்ட ஜே ஆர், தமிழ் ஆயுதக் குழுக்களின் பின்னால் அமிர்தலிங்கமே இருப்பதாக கடுமையான பிரச்சாரத்தினை சிங்களவர்களிடையே செய்யத் தொடங்கினார். எதிர்கட்சித் தலைவராக இருந்த அமிருக்கு எதிராக பாராளுமன்றத்தில் அரச பாராளுமன்ற உறுப்பினர்களால் நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்று கொண்டுவரப்பட்டதுடன் , சிங்கள மன்னர் காலத்தில் துரோகிகளுக்கு வழங்கப்படும் தண்டனையான ஒருவரை சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொல்வதுபோல், அமிரும் கொல்லப்படவேண்டும் என்று கோஷமிட்டனர். தமிழர்களைப் பலவீனப்படுத்தும் முகமாக ஜே ஆர் மிகவும் திட்டமிட்ட முறையில் தனது குண்டர்களைப் பாவித்து தமிழர்கள் மீது இரு முறை தாக்குதல்களை மேற்கொண்டார். 1977 இல் இலங்கைத் தமிழர்கள் மீதும், 1979 இல் மலையகத் தமிழர்கள் மீதும் இந்த வன்முறைகள் ஜே ஆரினால் கட்டவிழ்த்து விடப்பட்டன. இதே வழிமுறையினைப் பின்பற்றி, அரச ராணுவம் மற்றும் பொலீஸாரைப் பாவித்து 1983 இல் தமிழ் மக்கள் மிகவும் கொடூரமான இன்னுமொரு இரத்தக்களரியை ஜே ஆரும் அவரது ஆலோசகர்களும் நடத்தி முடித்தனர். பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு பற்றிய அத்தியாயம், மிதவாதியின் கொலை எனும் பதிவிலிருந்தே ஆரம்பிக்கிறது.