Jump to content

ரஞ்சித்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    8740
  • Joined

  • Last visited

  • Days Won

    103

Everything posted by ரஞ்சித்

  1. சுண்டல், நான் எனது மதம் மேலானது என்று எங்கும் சொல்லவில்லையே. உண்மையாகவே இந்துக்களை பலாத்காரப்படுத்தித்தான் போர்த்துக்கேயரால் கிறீஸ்த்தவம் இலங்கையில் பரப்பப் பட்டது என்பதை நான் நன்கு அறிவேன். இதில் எனக்கு எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. நீங்கள் மேலே மேற்கோள் காட்டியிருக்கும் என்னால் எழுதப்பட்ட பகுதி கிறீஸ்த்தவம் மேலானது என்று காட்ட எழுதப்படவில்லை. தூயவன் பைபிளில் உள்ளதென்று ஒரு கருத்தை எழுதியிருந்தார். அது தவறென்று தெரிந்ததால்த்தான் பைபிளில் உண்மையாக எழுதியிருப்பதை எழுதியிருந்தேன். அதற்காக எனது மதம் இந்து மதத்திலும் மேலானதென்று நான் ஒருபோதும் நினைக்கவோ, எழுதவோ இல்லையே. அடுத்ததாக, பைபிளில் சில இடங்களில் (குறிப்பாக ஆதியாகமத்தில்) சொல்லப்பட்டுள்ள விடயங்கள் பாதிக் கற்பனை என்றும் எழுதியிருக்கிறேன். அப்படியிருக்க, நான் எனது மதம் இந்து மதத்திலும் மேலானதென்று எப்படிச் சொல்ல முடியும் ?
  2. பைபிளில் ஆதியாகம் என்ற அத்தியாயத்தில்தான் இந்த ஆதாம் ஏவாள் என்கிற கதை வருகிறது. அதன்படி கடவுளால் ஆதாமும் ஏவாளும் மட்டுமே படைக்கப்பட்டதாக பைபிள் சொன்னாலும், இதை எழுதியவர்கள், சரித்திர வசதிக்காக இந்த தம்பதியினரை மட்டுமே மைய்யப் பொருளாகக் கொண்டு கதையை நகர்த்தியிருப்பதாக நான் படித்திருக்கிறேன். ஆதாம் - ஏவாள் போன்றே இன்னும் பல தம்பதிகளைக் கடவுள் படைத்ததாகவும் சொல்லப்படுகிறது. மனித சந்ததி இதன் மூலம் பரவியதாகச் சொல்கிறார்கள். பைபிளில் சொல்வதை அப்படியே நீங்கள் ஏற்றுக்கொண்டால், இன்றுள்ள மனிதவினம் (இந்துக்கள் உற்பட ) ஒரே குடும்பத்து தாம்பத்திய உறவினால் உருவாக்கப்பட்ட இனம் எனும் முடிவில் வந்து நிற்கவேண்டியேற்படுகிறது. ஆனால் இது உண்மையில்லை என்பதும் எனக்குத் தெரியும். ஆனால் உண்மை அதுவல்ல. ஆதியாகமத்தில் சொல்லப்பட்டுள்ள கதையில் பாதி உண்மையென்றும் மீதி கற்பனையென்றும் கேள்விப்பட்டிருக்கிறேன். ஏனென்றால், ஆதியாகம் சொல்லும் காலத்தில் சரித்திர ஆசிரியர்களோ அல்லது சரித்திரத்தை வரையும் அறிவோ இருந்திருக்க வாய்ப்பில்லை. ஆகவே பாதிக் கற்பனைக் கதையின் மூலம் கொண்டு நகர்த்தப்படும் ஆதியாகமத்திலிருந்து விவாதம் புரிவது சாத்தியமற்றது. ஆனால், நீங்கள் மேலே எடுகோளாகக் காட்டியமைக்காக ஒரு பேச்சுக்கு எடுத்துக்கொண்டால், இன்றும் எமது சமூகத்தில் மாமனை மருமகள் முடிப்பதும், சொந்த மச்சானை மச்சாள் முடிப்பதும், சித்தப்பாவை பெறாமகள் முடிப்பதும், ஒன்றுவிட்ட சகோதரங்கள் மணம் முடிப்பதும் நடப்பதைக் கண்டிருக்கிறேன். நாகரீக வளர்ச்சியடைந்த இன்றைய காலத்தில்க் கூட இப்படித் திருமணங்கள் நடப்பதால், முன்னைய நாகரீகமற்ற காலத்தில் எதுவும் நடந்திருக்கலாம். நான் இதைக் கூறுவதுகூட ஒரு பேச்சுக்கேயன்றி, உண்மையாக அப்படி நடந்திருக்கும் என்றல்ல. ஏனென்றால், ஆதியாகமத்திலிருப்பதை அப்படியே கிறீஸ்த்தவர்கள் கூட ஏற்றுக்கொள்ளவில்லை. சில விடயங்களை அக்கு வேறு ஆணிவேறாக பிரித்து மேய்ந்தோமானால் இப்படியான குதர்க்கமான கேள்விகளில் வந்து நிற்பதைத் தவிர்க்க முடியாது. மனிதன் மூற்றாக மதத்தை விளங்கிக்கொள்ள முடியுமென்றால் அது மதமாகவோ மறைபொறருளாகவோ இருக்கமுடியாது. மனிதனுக்கு அப்பாற்பட்ட சக்தி என்று சொல்கின்றோமே, அது போலத்தான் இதுவும். எமக்குச் சரியென்று படுவதை ஏற்றக்கொண்டு முன்னேறவேண்டியதுதான், குழப்பமானதை குழப்பி இன்னும் நாமும் குழம்பி மற்றையவனையும் குழப்பத் தேவையில்லை. இன்றைக்கு என்னைக் கேட்டீர்களென்றால், ஆதாம் ஏவாள் கதையை விடவும், கடல் வாழ் உயிரினத்தின் பரிணாம வளர்ச்சிதான் இன்றுள்ள மனித இனமென்னும் தியரி ரொம்பப் பிடித்திருக்கிறது. நம்பவும் கூடியதாக இருக்கிறது. ஈசன், இந்துசமயத்தை அவமதித்து கிறீஸ்த்தவர்களால் இந்தத்திரியில் முன்வைக்கப்பட்ட கருத்து எதுவென்று சொல்லுங்கள். நான் சொல்லியிருந்தால் நிச்சயம் அதைத் திருத்திக்கொள்ள முயற்சிக்கிறேன். என்னைப்பொறுத்தவரை தமிழும் சைவமும் பிரிக்கமுடியாதவை. தமிழனான என்னில் இருப்பது முற்றான சைவக் கலாச்சராம்தான். அதனால் நான் சைவத்தை ஒருபோதுமே தூற்றவில்லை. ஆனால் சைவ மதத்தைப் பின்பற்றும் ஒருசிலரின் மற்றைய மதங்களுக்கு எதிரான வக்கிரத்தைத்தான் எதிர்க்கிறேன். நான் வளரும் காலத்தில் யேசுநாதரின் பாட்டுக்களைவிஅட அதிகம் கேட்டது முருகனினதும், பிள்ளையாரினதும் பாட்டுக்களைத்தான்.
  3. இஸ்மாயில் வைப்பாடிக்குப் பிறக்கவில்லை. அரைகுறையாக பைபிளை விலங்கிக்கொண்டு கற்றுக்குட்டி போல எழுத வெளிக்கிட்டால் இதுதான் பிரச்சினை. நடந்தது இதுதான், . வயதான ஆபிரகாம் - சாராள் தம்பதிகளுக்கு நெடுநாட்களாக பிள்ளைப்பேறு இருக்கவில்லை. அதனால் கவலையடைந்த ஆபிரகாம் கடவுளிடம் வேண்டினார். பயப்படாதே, உனது சந்ததியைப் பல்கிப் பெருகச் செய்வோம் என்று கடவுள் அவருக்கு உறுதியளித்தார். ஆனாலும் பொறுமையிழந்த ஆபிரகாமின் மனைவி சாராளோ அன்றைய பழக்க வழக்கத்தின்படி தமது வாரிசை உருவாக்கவேண்டும் என்று எண்ணி, தனது வீட்டில் பணிப்பென்னாக இருந்த ஆகாரிடம் தனது கணவனான ஆபிரகாமை உடலுறவுகொண்டாவது பிள்ளையொன்றைப் பெற்றெடுக்க வேண்டுமென்று விரும்பினாள். அதன்பேறாக ஆபிரகாமுக்கும் பணிப்பெண் ஆகாருக்கும் பிறந்த குழந்தைதான் இஸ்மாயில். ஆனால், சில வருடங்களிலேயே ஆபிரகாமின் மனைவி சாராளும் கர்ப்பமடைந்து ஆபிராகமின் உண்மையான வாரிசான ஈசாக்கைப் பெற்றெடுத்தாள். பிள்ளைகள் இருவரும் ஒரேவிட்டில் வளர்ந்து வந்துகொண்டிருக்க மூத்தவனான இஸ்மாயில் தனது மகனான ஈசாக்கை அடிப்பதைப் பொறுக்கமுடியாத ஆபிரகாமின் மனைவி சாராள், தனது கணனவனைக் கட்டாயப்படுத்தி பணிப்பெண் சாராளையும், அவளது குழந்தை இஸ்மாயிலையும் வீட்டை விட்டே துரத்துகிறாள். ஆபிரகாமிற்குப் பிறந்ததால், இஸ்மாயிலின் வம்சத்தையும் தான் ஆசீர்வதிப்பதாக கடவுள் ஆபிரகாமுக்கு உறுதியளித்தார். ஆனாலும் கூட இந்த இரு ஆபிரகாமின் பிள்ளைகளின் வம்சங்களுக்கு இடையே தீராத பகை இருக்கும் என்று எச்சரித்த கடவுள், இஸ்மாயிலின் வம்சம் உலகத்துக்கு எதிராகத் திரும்பும் என்றும், முழு உலகும் அந்த வம்சத்துக்கு எதிராகப் போர்தொடுக்கும் என்றும் அன்றே கூறியிருந்தார். இன்றைக்கு யூதர் என்று அழைக்கப்படுமபீனம் ஆபிரகாமின் மனைவிக்குப் பிறந்த ஈசாக்கின் வம்சம். அதேபோல இன்று முஸ்லீம்கள் என்று அழைக்கப்படும் இனம், ஆபிரகாமிற்கு அவரது வீட்டுப் பணிப்பெண்ணான ஆகாரின் மூலம் பிறந்த இஸ்மாயிலின் வம்சம். பைபிளில் சொல்லப்பட்டதுபோல யூதர்களுக்கும் - இஸ்லாமியருக்குமான போர்தான் இன்று முழு உலகத்திலும் நடந்துவருகிறது.ஆகார் - ஆபிரகாமின் வைப்பாட்டியில்லை. பைபிளில் அப்படியிருக்கிறது, இப்படியிருக்கிறது என்று ஏன் சகட்டுமேனிக்குச் சொல்கிறீர்கள். புரியாவிட்டால் படித்துப்பாருங்கள், அல்லது தெரிந்தவர்களைக் கேளுங்கள்.
  4. இந்த வக்கிரத்துக்கு அளவேயில்லை. என்ன செய்வது, நாங்கள் சிறுபான்மையாகிவிட்டோமோ என்கிற கவலை வருகிறது. ஒரு மதத்தை இப்படியெல்லாம் தூற்றமுடியுமா என்று நான் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. இதுவரைக்கு எந்தக் கிறீஸ்த்தவனும் இந்து மதத்தை இகழவில்லை. மதமாற்றம் தவறென்று தொடக்கப்பட்ட திரி இப்போது தாயைப் புணர்ந்த மதம் என்று சொல்லுமளவிற்கு இறங்கிவிட்டது. மற்றைய இடங்களில் கண்ணியம் பார்த்துக் கருத்துக்களை அகற்றும் நிர்வாகம் இங்கே வெளியே இருந்து வேடிக்கை பார்க்கிறது. நல்ல விடயம் ஐய்யா. இதை விட எமக்குள் இன்னும் இழிவாக மோத முடியுமா என்று தெரியவில்லை. தொடர்ந்து இந்தத் திரியை அணையாது வளருங்கள், தமிழுக்கு மிகவும் ஆரோக்கியமாக இருக்கும் !!
  5. என்னிடம் இருக்கிறது. மடுத்தேவாலயம் முன்னர் இந்துக்கோயில் இருந்த பகுதியில் கட்டப்படவில்லை. சங்கிலி மன்னன் யாழ்ப்பாணத்தை ஆண்ட காலப்பகுதியில் புதிதாக கத்தோலிக்கத்துக்கு (போர்த்துக்கேயரால் பரப்பப்பட்ட) மதமாற்றம் அடைந்திருந்த 600 யாழ்ப்பாணத்து தமிழர்கள் சங்கிலியனுக்கு அஞ்சி ஓடிவந்து ஒளிந்திருந்த இடமே மாந்தைப் பாகுதி. இவர்களைத் துரத்திச் சென்ற சங்கிலியனது படைகள் இன்று மடுத்தேவாலயம் உள்ள பகுதியில் வைத்து வெட்டிக் கொன்றனர். இவ்வாறு வெட்டிக்கொள்ளப்பட்ட குழந்தைகள், வயோதிபர்கள், ஆண்கள் பெண்களான வேதசாட்சிகளுக்காக எழுப்பப்பட்ட கத்தோலிக்க ஆலயமே மடுத்தேவாலயம். சரித்திரம் தெரியாவிட்டால் தேடிப்பாருங்கள். நீங்கள் கேள்விப்பட்டவாறு அங்கே இந்துக்குக்கோயில் எதுவுமே இருக்கவில்லை.
  6. அது முடியாது ஈசன். நாங்கள் எங்களில் இதுவரை 2 லட்சத்துக்கும் அதிகமான மக்களைப் பலிகொடுத்துவிட்டோம். கொன்றவர்களுடன் சேர்ந்திருப்பதென்பது முடியாது.
  7. உங்கள் எல்லாரிடமும் ஒரு கேள்வி. உங்களில் எத்தனை பேர் உண்மையாகவே உங்கள் கடவுள்கள் இருப்பதாக நம்புகிறீர்கள்? நீங்கள் இங்கே விவாதிப்பது உண்மையாகவே உங்கள் கடவுள்களுக்கக்கவா அல்லது எதிரி மதக்காரனை பிழையென்று நிறுவிவிட வேண்டும் என்பதற்காகவா? என்னைப்பொறுத்தவரை இங்கே பெரும்பாலானோர் தமிழினத்துக்குள்ளேயே இருக்கும் இரு மதங்களில் தமது மதமே சரி, மற்றையது பிழை என்கிற அடிப்படையிலேயே கருத்துக்களை முன்வைக்கிறீர்கள். இது எமக்கு எந்தப்பலனையும் தரப்போவதில்லை. முகத்திரை கிழிகிறது, முகமூடி கிழிகிறதென்றெல்லாம் சந்தோஷப்படுமளவிற்கு மற்றையவர்கள் கேவலமானவர்களோ அல்லது நீங்கள் நினைப்பதுப்போல தரங்கெட்டவர்களோ கிடையாது. பிள்ளைபிடிக்காரர் என்று சிலர் கிறீஸ்த்தவரகளை அழைக்க விரும்புவது வீண் வீம்பே அன்றி வேரில்லை. அது அவர்களுடைய ஆழ் மனதிலிருந்து சிறுபராயம் தொட்டு ஊட்டி வளர்க்கப்பட்ட எதிர்ப்புணர்வின்பால் வருவது. இலகுவில் திருத்தப்பட முடியாததும் கூட. அதைப்பற்றியும் எனக்குக் கவலையில்லை. இப்படிப் பலரை ஏற்கனவே பார்த்தாயிற்று. பெரும்பாலான இந்துக்கள் கத்தோலிக்கரை தமது சகோதரர்களாகவே பார்க்கிறார்கள். அது இனிமேலும் தொடரும். சரி, எனது கேள்விக்கு வருகிறேன், 2009 இல் பச்சிளம் பாலகர்கள், கைக்குழந்தைகள், இன்னும் பிறக்காதிருந்த சிசுக்கள், கர்ப்பிணிகள், தாய்மார், வயோதிபர் என்று ஈவு இரக்கமில்லாமல் சிங்களவன் அடித்துக் கொல்லும்போது நாங்கள் இங்கே தூக்கிப் பிடிக்கும் சிவனும், யேசுவும், முருகனும், மரியாளும், பிள்ளையாரும், அந்தோனியாரும் எங்கே போயிருந்தார்கள்?? வற்றாப்பளை அம்மன் கோவில், மருதமடு தேவாலயம், சென் பீற்றர்ஸ் தேவாலயம், சென். ஜேம்ஸ் தேவாலயம், செல்வச் சந்நிதி என்று எமது தாயகத்திலுள்ள எல்லாக் கடவுள்களின் உறைவிடங்களிலும் சிங்களவன் எங்களுக்குப் பலிக்களம் அமைத்து ரசித்தபோது இந்தக் கடவுள்கள் எல்லாம் எங்கே போய் ஒளிந்திருந்தார்கள்? மன்னாரிலிருந்து மக்கள் வெளியேறியபோது மடுமாதா சொரூபத்தையும் மக்கள் தங்களுடன் தூக்கிகொண்டு சென்றார்களாம், தெய்வத்திற்கே பாதுகாப்புக் கிடைக்கவில்லை அன்று !!! உலகில் கிறீஸ்த்தவம் தோன்றிய ஊற்றாகிய யூத மதத்தின் யூதர்களில் 7 மில்லியன் மக்களை அடொஃப் ஹிட்லர் 1939 இலிருந்து 1945 வரைக்குள் நாசி வதை முகாம்களில் விஷவாயுவுக்கும், பீரங்கிகளுக்கும் உணவாக்கியபோது அந்தக் கடவுள் எங்கே போயிருந்தார்? தான் பிறந்த இனமாகிய யூத இனத்தையே யேசுநாதராலோ அல்லது பரம பிதாவாலோ அன்று காப்பாற்ற முடியவில்லையே? இதற்கு என்ன விளக்கம் தரப்போகிறீர்கள் என்று பல குருமார் உற்பட கிறீஸ்த்தவப் பாதிரியார்களைக் கேட்டுப் பார்த்தாயிற்று. எவருக்குமே விடை தெரியவில்லை. உண்மையில், இதற்கான விடை ஒன்றுதான். கடவுள் என்பவர் இன்று இல்லை. அப்படி ஒருவர் இருந்திருந்தால் இந்த அவலங்கள் எல்லாம் நடந்திருக்க வாய்ப்பில்லை என்பதே எனது கருத்து. அப்பாவிகள் கொல்லப்படவும், ஏதுமறியா பாலகர்கள் உயிருடன் எரிக்கப்படவும் வந்து கப்பாற்ற முடியாத கடவுள்கள் இருக்கிறார்கள் என்றால், அவர்களால் எமக்கு என்ன பலன்? இந்தக் கேள்வியை நான் இப்போது அடிக்கடி என்னையே கேட்டு வருகிறேன். உங்களுக்குப் புரிகிறதா?
  8. எனது பிரச்சினையும் இதுதான். காதலிக்கும்போது மட்டும் பேசாமல் இருந்துவிட்டு கல்யாணம் என்று வரும்போதுமட்டும் அவனை மதம் மாறு என்பது சுத்த அடாவடித்தனம்,. இதனால் எனது நண்பன் மேல் நானும் கோபப்ப்ட்டிருக்கிறேன். இப்போது அவன் சைவனுமில்லாமல் - கிறீஸ்த்தவனுமில்லாமல், எந்தச் சாமியத் தொழுவதென்று தெரியாமல் வாழ்ந்துகொன்டிருப்பானென்று நினைக்கிறேன். அவள் சரியாக இருந்திருந்தால் நீ உனது மதத்தில் இரு, நான் எனது மதத்தில் இரு என்று சொல்லியிருக்க வேண்டும், ஆனல் அப்படி நடக்கவில்லை என்பதுதான் கவலை.
  9. இதுபோதும் எனக்கு. ஏனென்றால் நானும் எனது ஒரே அடையாளம் ஆகிய "தமிழன்" என்பதை எவருக்ககவும் விட்டுக்கொடுக்கவும் தயாரில்லை. முதலில் நான் தமிழன், பிரபாகரன் இனத்தில் பிறந்தவன். அதன் பிறகே இந்தக் கத்தோலிக்கம் மதம் எல்லாம். உங்களுக்கு நன்றி !
  10. திருமணத்தினால் மதமாற்றம் நிகழ்கிறது. அதுதான் தவறென்று நீங்கள் கருத்தாடினால் நிச்சயம் நானும் உங்களுடன் ஒத்துப்போகிறேன். ஆனால், அதைச் சாட்டாக வைத்துக்கொண்டு கிறீஸ்த்தவர்கள்மேல் காழ்ப்புணர்வைக் கொட்டுவது தவறு. என்னைப்பொறுத்தவரை கிறீஸ்த்தவர்கள் இந்துவை மணமுடிக்கும்போது மதம் மாறும்படி கேட்பது பலமுறை நடந்திருக்கிறது. நானும் அனுபவத்தில் பார்த்திருக்கிறேன். இது தவறு. மணமகணையோ அல்லது மணமகளையோ அவரவர் மதத்தில் இருக்க சுதந்திரம் கொடுக்க வேண்டும். பொதுவாக காதல்த் திருமணங்களில்த்தான் இது நடக்கிறது. பெற்றோரின் எதிர்ப்பு இருப்பது தெரிந்துகொண்டு காதலித்துவிட்டு இறுதியில் ஒருவரை மதம் மாறுங்கள் என்று கேட்பது அடாவடித்தனம்தான், ஒத்துக்கொள்கிறேன். அதற்காக கிறீஸ்த்தவர்கள் எல்லோரையும் பொதுவாகவே கெட்டவர்கள் என்று வாதிடுவது எந்த விதத்தில் நியாயம் ? எனது நண்பர் ஒருவர் இந்துவாகவிருந்து கத்தோலிக்கனாக திருமணத்தின்பின்னால் மாறியவர். அவருடன் பலமுறை தேவாலயத்திற்குச் செல்லும்போது அவர் அங்கே வணங்கும் விதத்தைப் பார்க்கும்போது பிறப்பிலேயே கத்தோலிக்கனான எனக்கே வியப்பு ஏற்படுவதுண்டு. ஏனென்றால் பக்திப் பரவசத்தில் அவர்மூழ்கியிருந்து செபித்துக்கொண்டிருப்பார். சிலவேளைகளில் பல கார்களில் தூரத்துத் தேவாலயம் ஒன்றிற்குச் செல்லும் குடும்பங்கள் இவருக்காகவே பலமணிநேரம் வெளியே காத்திருக்க வேண்டியும் ஏற்பட்டிருக்கிறது. என்னைப் பொறுத்தவரை இதெல்லாம் வெறும் நாடகம். பிறந்ததிலிருந்து சிவனையிம், முருகனையும் , பிள்ளையாரையும் வழிபட்ட ஒரு தீவிர சைவரால் ஒரே நாளில் எப்படி முழுக் கத்தோலிக்கனாக மாறி செபிக்கத் தோன்றுகிறது. இப்போதெல்லம் இவர் செபிப்பதைப் பார்க்கும்போது எனக்குள்ளேயே சிரித்துக்கொள்வேன். ஒருவகையில் அவர் பரிதாபப்படவேண்டிய ஒருவர் என்று நினைப்பதுண்டு. தனது கடவுளை விட்டு விட்டு ஊர் உலகத்திற்காக வேஷம் போட்டு வாழ வேண்டிய நிர்ப்பந்தம் அவருக்கு ஏற்பட்டதே பாவம். இவ்வாறு நடப்பதைத் தடுக்கவேண்டுமென்றால் அது தனது மதத்தில் நிலையாக நிற்பதால் மட்டுமே முடியும். பெண்ணிற்காகவும் ஆணிற்காகவும் மதம் மாறவேண்டிய நிர்ப்பந்தம் என்றால் அந்தக் காதலின் உண்மைத்தன்மை எது ??
  11. முடிவாக என்னதான் சொல்கிறீர்கள்? கிறீஸ்த்தவர்கள் கெட்டவர்கள், அதனால் தள்ளி வைத்துவிடலாம் என்றா?? அல்லது இந்தத் திரியின் நோகமென்ன?? வெறுமனே கிறீஸ்த்தவர்கள் கெட்டவர்கள், இரண்டு கருத்துக்கள் எழுதினோமா, எல்லாம் முடிந்தது, இனி வேறு அலுவல்ப் பார்க்கலாம் என்பதா?? இந்தத்திரி இங்கே கொண்டுவரப்பட்டதற்கான நோக்கம் ஒன்றிருக்கிறது. அதன் முடிவு எப்படியிருக்கப்போகிறதென்று அறிவது எனது விருப்பம். ஈற்றில் முஸ்லீம்களைப்போலவே இவர்க்ளையும் ஒரு நாளைக்குள் விரட்டலாம் என்று முடிந்தாலும் நான் ஆச்சரியப்படப் போவதில்லை.
  12. வெள்ளையர்கள் இலங்கையை ஆக்கிரமித்தபோது பல இந்துக்களை கிறீஸ்த்தவர்களாக மதமாற்றம் செய்தார்கள். அதேபோல அதேகாலத்தில் வேலை வாய்ப்பிற்காக பல இந்துக்கள் கிறீஸ்த்தவத்தைத் தழுவிக்கொண்டார்கள். ஆனால் இன்று எவரும் துப்பாக்கியோ அல்லது வாளோ ஏந்திக்கொண்டு மதம் மாறுங்கள் என்று வற்புறுத்துவதில்லை. 2 வருடங்களுக்கு முன்னர் தாயகத்திலிருந்து அகதியாக ஒரு இளம்பெண் இங்கே வந்திருந்தார். அவருக்கு இங்கே எவரையும் தெரிந்திருக்கவில்லை. கத்தோலிக்கக் குடும்பம் ஒன்று அவருக்கு எல்லா உதவிகளையும் செய்து அவர் அகதி அந்தஸ்த்துப் பெற உதவியது. இதனால் அந்த சைவப் பெண் ஒருநாள் கத்தோலிக்கத் திருப்பலியின்போது கத்தோலிக்க மதத்தைத் தழுவிக்கொண்டது மட்டுமல்லாமல் தனது குடும்பந்த்தில் தாயகத்தில் எஞ்சியிருந்தவர்களையும் இங்கே அழைத்து அவர்களையும் மதமாற்றம் செய்தார். அவர் மதம் மாரவேண்டும் என்று எவருமே அவரைக் கட்டாயப்படுத்தவில்லை. அவராகவேதான் மதம் மாறினார். எனது நண்பர்களில் ஒருவர். பிறப்பிலிருந்தே தீவிர சைவர். பல்கலைக் கழகத்தில் கத்தோலிக்கப் பெண்ணொருவரை விரும்பினார். பெண்ணின் குடும்பமோ யாழ்ப்பானத்தில் பெயர்பெற்ற கத்தோலிக்க ஆயரின் குடும்பத்தைச் சேந்ர்தவள். அவளால் தனது மதத்தைவிட்டு வரமுடியவில்லை. மணமகன் மாறிக்கொண்டார். இதில் தவறு யாரது ? வெறுமனே சகட்டுமேனிக்கு தமிழ்க் கிறீஸ்த்தவர்களை வெ௳றுக்கிறேன் என்றால் என்ன அர்த்தம் ?? முதலில் அதற்கான காரணத்தைச் சொல்லுங்கள்.
  13. இல்லை, ஏன் மதம் மாறுகிறார்களென்ற காரணத்தை இதுவரை நீங்கள் தேடவில்லை. இதுவரை இங்கே கக்கியதெல்லாம் கிறீஸ்த்தவர்கள் கெட்டவர்கள், இந்துக்களை மதம் மாற்றுகிறார்கள் என்கிற வக்கிரம் மட்டுமே. அப்படி காரணத்தைத் தேடியிருப்பீர்களென்றால் நிச்சயம் இங்கே இப்படி எழுதிய்ருக்க மாட்டிர்கள். தூயவன் என்று தன்னைக் கூறிக்கொள்பவர் "எனக்கு முஸ்லீம்களிக்கூடப் பிடிக்கும், ஆனால் கிறீஸ்த்தவர்களைப் பிடிப்பதில்லை" என்றும், இதே திரியில் மருதங்கேணி என்று நினைக்கிறேன், "எனக்குக் கிறீஸ்த்தவர்களைக் கொஞ்சமும் பிடிப்பதில்லை" என்றும் கூறியிருக்கிறார்கள். அதை முதலில்ப் படியுங்கள். ஒருவன் மதம் மாறுகிறார் என்றால் அவரேன் மதம் மாறுகிறார் என்பதைக் கண்டுபிடியுங்கள். கத்திஅதன்பிறகு கிறீஸ்த்தவர்களை தள்ளிவைக்கலாம், விமர்சிக்கலாம், எதுவும் செய்யலாம்.
  14. தமிழ்ச்சூரியன், நீங்கள் இங்கே என்ன செய்கிறீர்கள்? உங்களை இந்துத்துவக் கத்தோலிக்கன் என்று நிறுவ முயற்சிக்கிறீர்களா?? அல்லது நான் கத்தோலிக்கன்தான் என்று சொன்னால் யாழ்களத்தில் உங்களை ஒதுக்கிவிடுவார்கள் என்று பயப்படுகிறீர்களா?? உங்களின் அடையாளத்தை எதற்காக இவர்களுக்காக விட்டுக்கொடுத்து சமரசம் செய்ய வேண்டும். சிலர் நீங்கள் மட்டும் நல்லவர், மற்றைய 999 கிறீஸ்த்தவர்களும் கெட்டவர்கள் என்று நற்சான்றுப்பத்திரம் வேறு கொடுக்கிறார். இவர்கள் யார் நமக்குச் சான்றிதழ் கொடுக்க ?? இவர் தமிழர்களென்றால், நாங்கள் யார்?? தமிழரில்லையா?? போர்க்களத்திலும், அரசியலிலும் நாங்கள் போராடியபோது மட்டும் நாங்கள் தமிழர், இப்போது மட்டும் தீண்டத்தகாதவர்கள், வேண்டப்படாதவர்கள் அப்படித்தானே?? ஒரு பெண்ணோ அல்லது ஆனோ திருமணத்திற்காக இன்னொரு மதத்தைத் தழுவுகிறார் என்றால் அது அவரது தவறு. நிச்சயம் அவரால் இன்னொரு மத அனுட்டாங்களையோ அல்லது கடவுள்களையோ தனது கடவுளாகவும் மதமாகவும் ஏற்றுக்கொள்ள முடியாது. பிறப்பிலிருந்து திருமணம் முடிக்கும்வரை ஒரு மதத்தை மட்டுமே வழிபட்டு விட்டு, பெண்ணிற்காகவும், ஆணிற்காகவும் திடீரென்று இன்னொரு மதத்தை கண்ணை மூடிக்கொண்டு ஏற்றுக்கொள்வதென்பது சுத்த நாடகமேயன்றி வேறில்லை. அப்படியொருவர் செய்கிறார் என்றால் அவர் தன்னைத்தானே ஏமாற்றுகிறார் என்றுதான் அர்த்தம். என்னைப்பொறுத்தவரை ஒருவரை தனது மதத்திற்கு மாறு என்று கேட்பதும் தவறு, அப்படி மாறுவதும் தவறு. அவரவர் தனது மத்தத்தில் இருந்துகொண்டே வாழ்க்கையைல் அனுசரித்துப் போவதுதான் சரி.
  15. இங்கே சிலருக்கு தமிழ்க் கிறீஸ்த்தவர்களை அறவே பிடிக்காது, இன்னும் சிலருக்கு கிறீஸ்த்தவர்களுடன் ஒப்பிடும்போது முஸ்லீம்கள் எவ்வளவோ மேல். இவர்கள் எல்லோருக்கும் நான் சொல்லிக்கொள்ள விரும்புவது ஒன்றுதான். நீங்கள் விரும்பினாலென்ன, விரும்பாவிட்டாலென்ன நாங்களும் தமிழர்கள்தான். எங்கள் தாயகமும் தமிழீழம்தான். நாங்கள் பின்பற்றும் கலாச்சாரமும் பாரம்பரியமும் தமிழரின் கலாச்சாரப் பாரம்பரியங்கள்தான். . உங்களைப்போலவே தாயக விடுதலைப் போராட்டத்தில் நாங்களும் தியாகங்கள் செய்திருக்கிறோம். நீங்கள் பட்ட அதேயளவு துன்பங்களை நாங்களும் பட்டிருக்கிறோம். சிங்களவன் உங்களுக்கு வேறு, எங்களுக்கு வேறு என்று பிரித்துப்பார்த்து இனவழிப்புச் செய்யவில்லை. அவனைப் பொறுத்தவரையில் நானும், நீங்களும் தமிழர்களே. நான் பிறப்பால் கத்தோலிக்கன். அது நான் விரும்பியோ அல்லது புரிந்துகொண்டோ சேர்ந்துகொண்ட மதம் கிடையாது. எனது தாய் தந்தையர் கத்தோலிக்கர்கள் , அதனால் நானும் கத்தோலிக்கன். எனது தாய்வழியில் அவர்து பெற்றோரில் ஒருவர் இந்து. மற்றையவர் கத்தோலிக்கர். ஆனால் யாரையும் யாரும் வற்புறுத்தி தமது வணக்கத்தலங்களுக்கு அழைத்துச் செல்லவில்லை. தேவையான சுதந்திரம் எல்லோருக்கும் இருந்தது. சைவத்திலிருந்து ஒருவன் இன்னொரு மதத்திற்குச் செல்கிறான் என்றால் அது ஏன் என்று அறிய முற்படுங்கள். அதைவிடுத்து தூற்றவேண்டாம். இன்று கத்தோலிக்கர்களாக இருப்பவர்கள் கூட முன்னர் இந்துக்களே. பிரபாகரன் எனும் ஒப்பற்ற மனிதன் பிறந்த இனத்தில் பிறந்ததற்காக நான் தமிழன் என்று பெருமைப்பட்டிருக்கிறேன். பிரபாகரன் சைவனா கத்தோலிக்கனா என்று நான் பார்க்கவில்லை. என்னைப்பொறுத்தவரை அவன் ஒரு தமிழன், அவன் பின்னால் செல்ல அது ஒன்றே போதுமானதாக இருந்தது எனக்கு. ஆனால் இன்று முதன் முதலாக தமிழன் என்று சொல்வதற்கு வெற்கப்படுகிறேன். முஸ்லீம்களை "தேசியப் பாதுகாப்பு " காரணத்துக்காக இந்துக்களுடன் கத்தோலிக்கர்களும் சேர்ந்த்தேதான் யாழ்ப்பாணத்திலிருந்து விரட்டினார்கள்.அப்போது இந்துக்களுக்கு மற்றைய தமிழர்கள் கத்தோலிக்கர்களாகத் தெரியவில்லை. இப்போது தெரிகிறது. 1990 இல் முஸ்லீம்களை விரட்டப்பட்டார்கள், இன்று கத்தோலிக்கர்களை தமிழினத்திலிருந்து வெளியேற்றுவது பற்றிச் சிந்திக்கிறோம். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. முஸ்லீம்கள், கத்தோலிக்கர்கள்........இப்படியே எல்லோரையும் விரட்டிவிட்டு இந்துத்துவ தமிழீழம் கேட்கப்போகிறீர்களா?? சந்தோஷம். தாராளமாகக் கேளுங்கள்:. முன்பு யாரோ ஒருவர் சொன்னது ஞாபகத்திற்கு வருகிறது, " அவர்கள் யூதர்களைத் தேடி வந்தார்கள், நாம் வாய்திறக்கவில்லை, பின்னர் கம்மியூனீஸ்களைத் தேடி வந்தார்கள், அப்போதும் நாம் வாய் திறக்கவில்லை. இறுதியாக எம்மைத்தேடி வந்தார்கள், எமக்காப் பேசுவதற்கு அபோது எவருமே இருக்கவில்லை ". வாழ்க இந்துத்துவத் தமிழீழம் !!!!! சண்டமாருதன், இங்கே தமிழ்த் தேசியத்தின் தூண்களென்று தம்மை வரிந்துகட்டிக் கொண்டு எழுதுபவர்கள் எல்லாம் இந்துத்துவ அடிப்படைவாத சிந்தனையுடையவர்கள் என்பது சிறிது சிறிதாக வெளிச்சத்திற்கு வருகிறது. முதன் முதலாக தமிழன் என்று என்னைக் கூறுவதில் வெட்கப்படுகிறேன். ஏனென்றால் அப்படியொன்றில்லை இங்கே. இருப்பதெல்லாம் சைவ - இந்துத்துவ - தமிழர்கள் மட்டும்தான். மற்றையவர்கள் எல்லாம் ஒன்றில் முஸ்லீம்கள் அல்லது கிறீஸ்த்தவர்கள். நீங்கள் தொடர்ந்து எழுதுங்கள். உங்கள் கருத்தக்கள் ஆறுதலாக இருக்கின்றன.
  16. அவரது சொந்தக் கருத்துக்கள் எப்படியாவது இருக்கட்டும். ஒரு தமிழனாக அவர் விடுதலையடைய வேண்டுமென்று விரும்புகிறேன். இலங்கையில் தேனும் பாலும் ஓடுகிறது என்று சொல்பவர்களுக்கு இவரது கைது ஒரு பாடமாக அமையட்டும். துளசி, கைய்யொப்பம் இட்டிருக்கிறேன். நன்றி.
  17. இவர் ஒரு முன்னால் தமிழீழ மக்கள் விடுதலைக் கழக முக்கியஸ்த்தர். வெளிப்படையாக இல்லாவிட்டாலும் புலிகளை விமர்சிப்பவர். இந்திய தமிழக அரசியலில் நண்பர்கள் பலரைக் கொண்டவர். சாதாரணத் தமிழர் ஒருவர் கைதுசெய்யப்பட்டால் நடக்கும் அநீதிகள் இவருக்கு நடக்க வாய்ப்புக் குறைவு. விரைவில் விடுதலை செய்யப்படுவார் என்பதுதான் எனது எண்ணம். இவர் ஒன்றும் புதுவை ரத்திணதுரை அல்லவே கைதுசெய்யப்பட்டுக் கொல்லப்பட??
  18. சென்னை ரயில்களில் பாதுகாப்பு எப்படி ?? போக்கிரி படம் பார்த்தபின்னர் சென்னை ரயில் பற்றி நினைக்கவே பயமாக இருந்தது.
  19. மாற்றம் வாறது நல்லதுதான். ஆனால் அந்த மாற்றம் ஒரே முறையில் நடப்பதை விடவும் கட்டம் கட்டமாக நடப்பதுதான் நல்லது. மாற்றங்களை உள்வாங்கவும் இலகுவாக இருக்கும். அதை விடுத்து ஒரேயடியாக மாற்றினால் தலை சுற்றுகிறது. மாற்றங்கள் கொண்டுவரப்படும் முன்னர் சம்மந்தப்பட்ட எல்லோருடனும் கலந்து பேசப்பட்டிருக்க வேண்டும். இது மாற்றத்திற்கான அவசியத்தை எல்லோரிடமும் உணரவைப்பதோடு மாற்றத்தினையும் இலகுவாக்கும். ஆனால் இவை எதுவுமே இங்கு நடைபெறவில்லை.
  20. இவ்வளவு பிரச்சனைகள் இருக்க நீங்கள் அவசரப்பட்டு மாற்றவேண்டியதன் அவசியம் என்ன?? இப்படிச் செய்யாப்போகிறோம் என்று யாருக்காவது சொன்னீர்களா?? ஒருகட்டத்தில் இனி யாழுக்கே வருவதில்லை என்றிருந்தேன். தான்தோன்றித்தனமாகச் செயல்ப்படுவது என்பது இதுதானோ என்னவோ?! ஏன் யாழில் எழுதமுடியாமல் வேறிடத்தில் எழுதிக்கொண்டு வந்து ஒட்ட வேண்டியிருக்கிறது ? இது தற்காலிகமானதா அல்லது நிரந்தரமானதா?? மோகன், நீங்கள் எவ்வளவு கஷ்ட்டப்பட்டு வேலை செய்கிறீர்கள் என்பது புரிகிறது. ஆனால் இவ்வளவு கஷ்ட்டங்களும் நன்றாக இயங்கிவன்த தளத்தினை மேம்ப்டுத்தியிருக்கிறதா என்றால் கேள்விக்குறிதான். ஏதோ எனக்குப் பட்டதைச் சொன்னேன், அவ்வளவுதான்.
  21. Hi Nels,

    How you doing mate?

    Catch you later.

  22. Hi Kanthappu,

    Were you there at the remembrance day? I was there too. We might have met each other, may be?!

    Cheers

    Ragunathan

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.