Everything posted by ரஞ்சித்
-
இந்துக்களை விழிப்படையுமாறு கோரி துண்டுப்பிரசுரம்
இல்லை, ஏன் மதம் மாறுகிறார்களென்ற காரணத்தை இதுவரை நீங்கள் தேடவில்லை. இதுவரை இங்கே கக்கியதெல்லாம் கிறீஸ்த்தவர்கள் கெட்டவர்கள், இந்துக்களை மதம் மாற்றுகிறார்கள் என்கிற வக்கிரம் மட்டுமே. அப்படி காரணத்தைத் தேடியிருப்பீர்களென்றால் நிச்சயம் இங்கே இப்படி எழுதிய்ருக்க மாட்டிர்கள். தூயவன் என்று தன்னைக் கூறிக்கொள்பவர் "எனக்கு முஸ்லீம்களிக்கூடப் பிடிக்கும், ஆனால் கிறீஸ்த்தவர்களைப் பிடிப்பதில்லை" என்றும், இதே திரியில் மருதங்கேணி என்று நினைக்கிறேன், "எனக்குக் கிறீஸ்த்தவர்களைக் கொஞ்சமும் பிடிப்பதில்லை" என்றும் கூறியிருக்கிறார்கள். அதை முதலில்ப் படியுங்கள். ஒருவன் மதம் மாறுகிறார் என்றால் அவரேன் மதம் மாறுகிறார் என்பதைக் கண்டுபிடியுங்கள். கத்திஅதன்பிறகு கிறீஸ்த்தவர்களை தள்ளிவைக்கலாம், விமர்சிக்கலாம், எதுவும் செய்யலாம்.
-
இந்துக்களை விழிப்படையுமாறு கோரி துண்டுப்பிரசுரம்
தமிழ்ச்சூரியன், நீங்கள் இங்கே என்ன செய்கிறீர்கள்? உங்களை இந்துத்துவக் கத்தோலிக்கன் என்று நிறுவ முயற்சிக்கிறீர்களா?? அல்லது நான் கத்தோலிக்கன்தான் என்று சொன்னால் யாழ்களத்தில் உங்களை ஒதுக்கிவிடுவார்கள் என்று பயப்படுகிறீர்களா?? உங்களின் அடையாளத்தை எதற்காக இவர்களுக்காக விட்டுக்கொடுத்து சமரசம் செய்ய வேண்டும். சிலர் நீங்கள் மட்டும் நல்லவர், மற்றைய 999 கிறீஸ்த்தவர்களும் கெட்டவர்கள் என்று நற்சான்றுப்பத்திரம் வேறு கொடுக்கிறார். இவர்கள் யார் நமக்குச் சான்றிதழ் கொடுக்க ?? இவர் தமிழர்களென்றால், நாங்கள் யார்?? தமிழரில்லையா?? போர்க்களத்திலும், அரசியலிலும் நாங்கள் போராடியபோது மட்டும் நாங்கள் தமிழர், இப்போது மட்டும் தீண்டத்தகாதவர்கள், வேண்டப்படாதவர்கள் அப்படித்தானே?? ஒரு பெண்ணோ அல்லது ஆனோ திருமணத்திற்காக இன்னொரு மதத்தைத் தழுவுகிறார் என்றால் அது அவரது தவறு. நிச்சயம் அவரால் இன்னொரு மத அனுட்டாங்களையோ அல்லது கடவுள்களையோ தனது கடவுளாகவும் மதமாகவும் ஏற்றுக்கொள்ள முடியாது. பிறப்பிலிருந்து திருமணம் முடிக்கும்வரை ஒரு மதத்தை மட்டுமே வழிபட்டு விட்டு, பெண்ணிற்காகவும், ஆணிற்காகவும் திடீரென்று இன்னொரு மதத்தை கண்ணை மூடிக்கொண்டு ஏற்றுக்கொள்வதென்பது சுத்த நாடகமேயன்றி வேறில்லை. அப்படியொருவர் செய்கிறார் என்றால் அவர் தன்னைத்தானே ஏமாற்றுகிறார் என்றுதான் அர்த்தம். என்னைப்பொறுத்தவரை ஒருவரை தனது மதத்திற்கு மாறு என்று கேட்பதும் தவறு, அப்படி மாறுவதும் தவறு. அவரவர் தனது மத்தத்தில் இருந்துகொண்டே வாழ்க்கையைல் அனுசரித்துப் போவதுதான் சரி.
-
இந்துக்களை விழிப்படையுமாறு கோரி துண்டுப்பிரசுரம்
இங்கே சிலருக்கு தமிழ்க் கிறீஸ்த்தவர்களை அறவே பிடிக்காது, இன்னும் சிலருக்கு கிறீஸ்த்தவர்களுடன் ஒப்பிடும்போது முஸ்லீம்கள் எவ்வளவோ மேல். இவர்கள் எல்லோருக்கும் நான் சொல்லிக்கொள்ள விரும்புவது ஒன்றுதான். நீங்கள் விரும்பினாலென்ன, விரும்பாவிட்டாலென்ன நாங்களும் தமிழர்கள்தான். எங்கள் தாயகமும் தமிழீழம்தான். நாங்கள் பின்பற்றும் கலாச்சாரமும் பாரம்பரியமும் தமிழரின் கலாச்சாரப் பாரம்பரியங்கள்தான். . உங்களைப்போலவே தாயக விடுதலைப் போராட்டத்தில் நாங்களும் தியாகங்கள் செய்திருக்கிறோம். நீங்கள் பட்ட அதேயளவு துன்பங்களை நாங்களும் பட்டிருக்கிறோம். சிங்களவன் உங்களுக்கு வேறு, எங்களுக்கு வேறு என்று பிரித்துப்பார்த்து இனவழிப்புச் செய்யவில்லை. அவனைப் பொறுத்தவரையில் நானும், நீங்களும் தமிழர்களே. நான் பிறப்பால் கத்தோலிக்கன். அது நான் விரும்பியோ அல்லது புரிந்துகொண்டோ சேர்ந்துகொண்ட மதம் கிடையாது. எனது தாய் தந்தையர் கத்தோலிக்கர்கள் , அதனால் நானும் கத்தோலிக்கன். எனது தாய்வழியில் அவர்து பெற்றோரில் ஒருவர் இந்து. மற்றையவர் கத்தோலிக்கர். ஆனால் யாரையும் யாரும் வற்புறுத்தி தமது வணக்கத்தலங்களுக்கு அழைத்துச் செல்லவில்லை. தேவையான சுதந்திரம் எல்லோருக்கும் இருந்தது. சைவத்திலிருந்து ஒருவன் இன்னொரு மதத்திற்குச் செல்கிறான் என்றால் அது ஏன் என்று அறிய முற்படுங்கள். அதைவிடுத்து தூற்றவேண்டாம். இன்று கத்தோலிக்கர்களாக இருப்பவர்கள் கூட முன்னர் இந்துக்களே. பிரபாகரன் எனும் ஒப்பற்ற மனிதன் பிறந்த இனத்தில் பிறந்ததற்காக நான் தமிழன் என்று பெருமைப்பட்டிருக்கிறேன். பிரபாகரன் சைவனா கத்தோலிக்கனா என்று நான் பார்க்கவில்லை. என்னைப்பொறுத்தவரை அவன் ஒரு தமிழன், அவன் பின்னால் செல்ல அது ஒன்றே போதுமானதாக இருந்தது எனக்கு. ஆனால் இன்று முதன் முதலாக தமிழன் என்று சொல்வதற்கு வெற்கப்படுகிறேன். முஸ்லீம்களை "தேசியப் பாதுகாப்பு " காரணத்துக்காக இந்துக்களுடன் கத்தோலிக்கர்களும் சேர்ந்த்தேதான் யாழ்ப்பாணத்திலிருந்து விரட்டினார்கள்.அப்போது இந்துக்களுக்கு மற்றைய தமிழர்கள் கத்தோலிக்கர்களாகத் தெரியவில்லை. இப்போது தெரிகிறது. 1990 இல் முஸ்லீம்களை விரட்டப்பட்டார்கள், இன்று கத்தோலிக்கர்களை தமிழினத்திலிருந்து வெளியேற்றுவது பற்றிச் சிந்திக்கிறோம். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. முஸ்லீம்கள், கத்தோலிக்கர்கள்........இப்படியே எல்லோரையும் விரட்டிவிட்டு இந்துத்துவ தமிழீழம் கேட்கப்போகிறீர்களா?? சந்தோஷம். தாராளமாகக் கேளுங்கள்:. முன்பு யாரோ ஒருவர் சொன்னது ஞாபகத்திற்கு வருகிறது, " அவர்கள் யூதர்களைத் தேடி வந்தார்கள், நாம் வாய்திறக்கவில்லை, பின்னர் கம்மியூனீஸ்களைத் தேடி வந்தார்கள், அப்போதும் நாம் வாய் திறக்கவில்லை. இறுதியாக எம்மைத்தேடி வந்தார்கள், எமக்காப் பேசுவதற்கு அபோது எவருமே இருக்கவில்லை ". வாழ்க இந்துத்துவத் தமிழீழம் !!!!! சண்டமாருதன், இங்கே தமிழ்த் தேசியத்தின் தூண்களென்று தம்மை வரிந்துகட்டிக் கொண்டு எழுதுபவர்கள் எல்லாம் இந்துத்துவ அடிப்படைவாத சிந்தனையுடையவர்கள் என்பது சிறிது சிறிதாக வெளிச்சத்திற்கு வருகிறது. முதன் முதலாக தமிழன் என்று என்னைக் கூறுவதில் வெட்கப்படுகிறேன். ஏனென்றால் அப்படியொன்றில்லை இங்கே. இருப்பதெல்லாம் சைவ - இந்துத்துவ - தமிழர்கள் மட்டும்தான். மற்றையவர்கள் எல்லாம் ஒன்றில் முஸ்லீம்கள் அல்லது கிறீஸ்த்தவர்கள். நீங்கள் தொடர்ந்து எழுதுங்கள். உங்கள் கருத்தக்கள் ஆறுதலாக இருக்கின்றன.
-
கவிஞர் ஜெயபாலன் (பொயட்) கைது!
அவரது சொந்தக் கருத்துக்கள் எப்படியாவது இருக்கட்டும். ஒரு தமிழனாக அவர் விடுதலையடைய வேண்டுமென்று விரும்புகிறேன். இலங்கையில் தேனும் பாலும் ஓடுகிறது என்று சொல்பவர்களுக்கு இவரது கைது ஒரு பாடமாக அமையட்டும். துளசி, கைய்யொப்பம் இட்டிருக்கிறேன். நன்றி.
-
கவிஞர் ஜெயபாலன் (பொயட்) கைது!
இவர் ஒரு முன்னால் தமிழீழ மக்கள் விடுதலைக் கழக முக்கியஸ்த்தர். வெளிப்படையாக இல்லாவிட்டாலும் புலிகளை விமர்சிப்பவர். இந்திய தமிழக அரசியலில் நண்பர்கள் பலரைக் கொண்டவர். சாதாரணத் தமிழர் ஒருவர் கைதுசெய்யப்பட்டால் நடக்கும் அநீதிகள் இவருக்கு நடக்க வாய்ப்புக் குறைவு. விரைவில் விடுதலை செய்யப்படுவார் என்பதுதான் எனது எண்ணம். இவர் ஒன்றும் புதுவை ரத்திணதுரை அல்லவே கைதுசெய்யப்பட்டுக் கொல்லப்பட??
-
சென்னை மெட்ரோ ரயில்...
சென்னை ரயில்களில் பாதுகாப்பு எப்படி ?? போக்கிரி படம் பார்த்தபின்னர் சென்னை ரயில் பற்றி நினைக்கவே பயமாக இருந்தது.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
மாற்றம் வாறது நல்லதுதான். ஆனால் அந்த மாற்றம் ஒரே முறையில் நடப்பதை விடவும் கட்டம் கட்டமாக நடப்பதுதான் நல்லது. மாற்றங்களை உள்வாங்கவும் இலகுவாக இருக்கும். அதை விடுத்து ஒரேயடியாக மாற்றினால் தலை சுற்றுகிறது. மாற்றங்கள் கொண்டுவரப்படும் முன்னர் சம்மந்தப்பட்ட எல்லோருடனும் கலந்து பேசப்பட்டிருக்க வேண்டும். இது மாற்றத்திற்கான அவசியத்தை எல்லோரிடமும் உணரவைப்பதோடு மாற்றத்தினையும் இலகுவாக்கும். ஆனால் இவை எதுவுமே இங்கு நடைபெறவில்லை.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
இவ்வளவு பிரச்சனைகள் இருக்க நீங்கள் அவசரப்பட்டு மாற்றவேண்டியதன் அவசியம் என்ன?? இப்படிச் செய்யாப்போகிறோம் என்று யாருக்காவது சொன்னீர்களா?? ஒருகட்டத்தில் இனி யாழுக்கே வருவதில்லை என்றிருந்தேன். தான்தோன்றித்தனமாகச் செயல்ப்படுவது என்பது இதுதானோ என்னவோ?! ஏன் யாழில் எழுதமுடியாமல் வேறிடத்தில் எழுதிக்கொண்டு வந்து ஒட்ட வேண்டியிருக்கிறது ? இது தற்காலிகமானதா அல்லது நிரந்தரமானதா?? மோகன், நீங்கள் எவ்வளவு கஷ்ட்டப்பட்டு வேலை செய்கிறீர்கள் என்பது புரிகிறது. ஆனால் இவ்வளவு கஷ்ட்டங்களும் நன்றாக இயங்கிவன்த தளத்தினை மேம்ப்டுத்தியிருக்கிறதா என்றால் கேள்விக்குறிதான். ஏதோ எனக்குப் பட்டதைச் சொன்னேன், அவ்வளவுதான்.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
I Have downloaded one of the suggestions you made. Now what?? Still I cannot write in Tamil.
-
முதல் பெண் மாவீரர் மாலதி நினைவு நாள்
வீரவணக்கங்கள் !!
-
ஓயாத அலைகள் 2ல் வீரகாவியமான மாவீர்களின் நினைவு
மாவீரர்களுக்கு வீரவணக்கம் !