Everything posted by uthayakumar
-
இலங்கையின் ஜனாதிபதி தேர்தலும் ஈழத் தமிழர்களும் பா.உதயன்
அன்று ஒரு நாள் அந்த ஈழத்தின் தந்தை செல்வா சொன்னார் ஆண்டவன் தான் தமிழனை காப்பாற்ற வேண்டும் என்று. ஆண்டன் கூட கை விட்டு அனைத்தும் இழந்த தமிழனாய் குந்தி இருக்கக் கூட ஒரு முழ நிலம் கூட இல்லாமல் அடிமை ஆகிப் போன வரலாறாய் தொடர்கிறது துன்பம் இன்று வரை. எப்பொழுது ஒரு சிறுபான்மை தேசிய இனம் தனது போராட்டத்தின் சம பலத்தை இழக்கிறதோ (Balance of power) அன்றில் இருந்தே அதன் பேரம் பேசும் பலத்தையும் (Bargaining power) இழந்து பெரும்பான்மை இனத்தின் ஆக்கிரமிப்போடு அடிமையாகி விடுகிறது. அதன் பூர்வீக பிரதேசங்கள் யாவும் அரச ஒடுக்கு முறைக்கி உள்ளாகி அந்த மக்கள் அடிமைகளாக இரண்டாம் தர பிரஜைகளாக ஒடுக்கப்படுவர். ஈழ தமிழர்களின் போராட்டம் முள்ளிவாய்க்காலின் பின் இப்படிதான் ஆக்கப்பட்டிருக்கிறது. வெற்றி கொள்பவன் எல்லாவற்றையும் தனதாக்கி கொள்கிறான். Winner takes it all. தொலைந்தவனை தேடும் தாயின் கண்ணீர் நிலம் முழுக்க நனைகிறது. யுத்தம் முடிந்து பல வருடம் ஆகிறது பதின் மூன்றுக்கு மேல் (13th plass amendment) தருவோம் என்றார்கள் அதில் பாதி கூடி தரவில்லை. இன்று வரையில் எந்த அதிகாரப் பகிர்வையும் ( Devolution of power) செய்ய முயலவில்லை .அரசியல் கைதியாக அவர்கள் படும் துன்பம் வேறு. தாய் வேறு பிள்ளை வேறாய் தமிழன் துயர் தொடர்கின்றது. தானாகவே வந்து சிங்களம் தமிழனுக்கு தருவதற்கு என்ற ஒன்றும் இல்லை. அன்று ஒரு நாள் அந்த கிழவன் கேட்ட சமஸ்டியை (Federal state ) கொடுத்து இருந்தால் இத்தனை அழிவு இலங்கையில் இருந்திருக்குமா, அன்று தொடக்கம் அரசியல் தலைவர்கள் விதைத்த இனவாதம், மதவாதம், இன்று எல்லா இன மக்களையும் பிரித்து இருக்கிறது. இது ஒரு புறம் இருக்க அமைதியையும், சமாதானத்தையும் , அன்பையும் , போதித்த புத்த பகவானின் சிந்தனையில் இருந்து விலகி இன்று இலங்கையின் பௌத்த தேரர்கள் முழுமையான இனவாதத்தை பேசி இலங்கையின் அமைதிக்கும் சமாதானத்துக்கும் பங்கம் விளைவிப்பதோடு மட்டும் அன்றி சகல இனங்களுக்கு இடையிலான பிளவை ஏற்படுத்தி மேலும் இனங்களுக்கு இடையிலான மோதலை வன்முறையை வளர்த்து வருகின்றனர். இலங்கையின் சிங்கள அரசியல் தலைவர்கள் உண்மையான பெளத்தர்களாக இருந்து இருந்தால் நாம் துப்பாக்கி ஏந்தி இருக்க மாட்டோம். if jayawardana was real buddhist we would not be carrying a gun. என்று விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் (India today) இந்தியா ருடே என்ற இதழுக்கு பேட்டி கொடுக்கும் போது கூறியது இன்று எவ்வளவு பொருத்தமாக உள்ளது என்று தெரிகிறது. இலங்கை சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து குடும்ப ஆட்சியில் இருந்த கட்சிகளும் அதன் தலைவர்களும் இன்று வரை எமக்கு தந்த துன்பம் எழுத்தில் அடங்காது. தமது மண்ணை விட்டு ஓடினார்கள் அகதியானார்கள. கல்வியே வாழ்வு என்று இருந்த தமிழன் வாழ்வை தீ இட்டு எரித்தது இன்னும் ஒரு இனவாத அரச பயங்கரவாதம். தமிழனின் வாழ்வும் வளமும் அடையாளமும் அழித்து ஒழித்த வரலாறு அந்த மண்ணுக்குள் சிவப்பாக சிதறிக் கிடக்கிறது. வட கிழக்கு தமிழர் தாயகத்தை பிரித்து அங்கெல்லாம் புத்தர் சிலையை கொண்டு வந்தார்கள். எழுதுவதும் ஏமாற்றுவதும் கிழிப்பதுமாய் எத்தனை ஒப்பந்தங்கள். அரசியல் தீர்வு ரீதியாக நாங்கள் ஏமாற்றபட்ட (Political duplicity) வரலாறுகளே அதிகம் . இதே போல் இன்று வரை பல சகாப்தமாக மலையக தமிழர் இன்று வரை தொடரும் துன்பம் இன்னும் ஒரு கறை படித்த அத்தியாயம். எல்லா குடும்ப ஆட்சியாளரின் கையில் ஈழ தமிழனின் இரத்த கறைகள் பதிந்துள்ளன. இப்படி இருக்கையில் ஜனாதிபதி தெரிவு நடக்கவிருக்கிறது எவரை தெரிவு செய்வது என்ற பெரும் குழப்பம் தமிழர்களிடையே நிலவுகின்றது. எந்த ஜனாதிபதி வேட்ப்பாளர்களிடமும் அவர்களின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழர் தீர்வுக்கான முழுமையான எந்த அரசியல் தீர்வும் முன்வைக்கப்படவில்லை. வேறு எந்த தெரிவும் இல்லாத தமிழ் மக்கள் முள்ளி வாய்க்காலின் பின் தம் பலத்தை இழந்து நிற்கும் தமிழ் மக்கள் என்ன தெரிவை மேற்கொள்ள போகின்றார்கள் என்று பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். கடந்த காலங்களில் விட்டு சில பிழைகளையும் படிப்பினையாக கொண்டு என்ன முடிவை எடுப்பதென்பது அந்த மக்களின் நீண்ட கால அரசியல் விடுதலைக்கு வித்து இடுவதாக அமைய வேண்டும். யுத்தம் முடிந்து பல ஆண்டுகள் ஆகியும் அழிக்கப்பட்ட தமிழர் பிரதேசதில் அபிவிருத்தி எதுகும் இல்லை. அரசியலும் அபிவிருத்தியும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போலவே. அரசியல் தீர்வு ஒன்று அடிப்படையாக அமையும் இடத்து அவிவிருத்தி பாதைக்கு இது வழி சமைக்கிறது. இன்றும் கூட சர்வதேச நாடுகளினால் ஒரு பாரிய அவிவிரித்தி பணி செய்ய முடியாமைக்கு அங்கு ஓர் அடிப்படை அரசியல் தீர்வு ஒன்று இல்லாமல் இருப்பது தான். அரசியல் ஸ்திரத்தன்மை( Political stability) இல்லாமல் செய்யும் எந்த அபிவிரித்தியும் உதவிகளும் அந்த மக்களுக்கு போய் சேர முடியாது மாறாகவே ஊழ அரசியல் வாதிகளின் கைகளுக்குகே போய் சேருகின்றன. ஒரு காலம் ஒற்றுமையோடு இருந்த ஈழத் தமிழர் இனம் இன்று ஒற்றுமை இன்றி சிதைந்து கிடக்கிறது. ஒரு பொது தெளிவான இலக்கின் அடிப்படையிலேனும் இவர்களால் ஒன்று பட முடியவில்லை. ஜனநாயக சூழலுக்கு ஏற்ப பல கட்சி அமைப்பு இருந்த போதிலும் ஒடுக்கப்பட்ட ஒரு இனத்தின் சார்பில் ஒற்றுமையாக குரல் கொடுக்க முடியாதவர்களாகிப் போனார்கள். இன்று 70 வருடங்களுக்கு மேல் தீர்வு தருவார்கள் என மாறி மாறி சிங்கள அரசை நம்பி பேச்சுவார்த்தைள் நடத்தியும் இவர்களுக்கு ஆதரவு வழங்கியும் இதுவரை எதுவுமே தராத எந்த சிங்கள தலைமைகளையும் இனி நம்பி பிரியோசனம் இல்லை என்று தெரிந்து இன்று தமிழர் தரப்பில் இருந்து ஒரு பொது வேட்பாளரை நிறுத்தி இருக்கிறார்கள். எது எப்படி இருப்பினும் தமது எதிர்காலம் கருதி தமிழ் மக்கள் நிதானமாக அறிவு பூர்பமாக சிந்திப்பார்கள் என நம்புவோம். பா.உதயன் ✍️
-
தமன்னாவும் எங்கள் தம்பிமாரும் பொருளாதார அபிவிருத்தியும் -பா.உதயன்
தமன்னாவும் எங்கள் தம்பிமாரும் பொருளாதார அபிவிருத்தியும் -பா.உதயன் ஒரு சமூகத்தில் எல்லா விதமான மக்களும் இருப்பார்கள். எது பிழை எது சரி என்று அறிந்து கொள்வதில் தான் சமூகங்களிடையே குழப்பங்களும் பிரச்சினைகளும் உருவாகுகின்றன. கலாச்சாரம் எல்லாம் இப்போ மெல்ல மெல்ல காணாமல் யாழ்ப்பாணத்தில் இருக்க கல்வி தாறன் என்று சொல்லி தமன்னாவை கூட்டி வந்து காட்டினா தம்பிமார் சும்மாவா இருப்பாங்கள் மானாட மயிலாட இவங்கள் சேர்ந்தாடி கூத்தாடாமலா விடுவார்களா. பொருளாதார அபிவிருத்தி என்று வந்தால் தனியவே உங்கள் பொக்கற்றை மட்டும் நிரப்புவது இல்லை. இந்த மக்களுக்கும் இதன் பலன் போய் சேர வேண்டும். சரியான திட்டமிடல் இல்லாமல் மக்களை குழப்பக் கூடாது. ஒரு தொழில் அதிபருக்கு சரியான திட்டமிடல் Leadership and planning என்பது தெரிந்து தான் இருக்கவேண்டும் இல்லாவிடில் ஆலோசனைகளை அந்த மக்களிடமோ சிவில் அமைப்புகளிடனோ கூடி கதைத்திருக்க வேண்டும். A vision without a strategy remains an illusion. சரியான திட்டமிடலும் மூலோபாயத் திட்டமும் ஒரு நிறுவனத்தின் வெற்றிக்கான பாதையாகும். வன்னியிலும் மலையகத்திலும் மனிதர் படும் துன்பம் கண்டும் ஒருவேளை உணவுக்காய் பல சனம் படும் பாடு கண்டும் பள்ளி சென்று படிக்க கூட வழியில்லாமல் பலர் இருக்க யுத்த வடுக்களும் துன்பமும் துயரமும் இன்னும் எம் இனத்தை விட்டு அகலாத போதும் இத்தனை லட்ஷம் பணத்தை இப்படியா தமிழர் கொட்டுவது. நாங்கள் அறிவு சிந்தனை நாகரீகத்தோடு வாழ்ந்த மக்கள் ஆதலால் நாம் இன்று தொலைந்து போன எம் அமைதி வாழ்வையும் சுதந்திரத்தையும் தான் முதலில் தேட வேண்டும். பொருளாதார அவிவிருத்தி மட்டுமே போதும் அரசில் தீர்வும் தேவை இல்லை என்பது தான் இலங்கை அரசின் நிலைப்பாடு. நிரந்தர ஒரு சமாதான தீர்வு இல்லாத எமக்கான பாதுகாப்பு இல்லாத திட்டமிடப்படாத பொருளாதார அபிவிருத்திகள் இப்படியான குழப்பங்கள் பிரச்சினைகளில் தான் முடியும். எது எப்படி இருப்பினும் 2009 க்கு பின் ஈழத் தமிழர் மத்தியிலே பல மாற்றங்கள் நடந்திருப்பது அவதானிக்க முடிகிறது. ஒன்றாக கூடி ஒரே தலைமையின் கீழ் இணைந்திருந்த மக்கள் இன்று அந்தத் தலைமை எதுவும் இல்லாமல் சிதறிப் போய் இருக்கிறார்கள். கல்வி கலை ஒழுக்கம் என்று அமைதியாக வாழ்ந்து வந்த மக்கள் இன்று பெரும் அச்சுறுத்தல்களுக்கும் இன்னல்களுக்கும் உள்ளாக்கப் பட்டிருக்கிறார்கள் அதேபோலவே திட்டமிட்டு கொண்டுவரப்பட்ட கலாச்சார சீரழிவுகளும் போதைப் பொருட்களின் உபயோகமும் என இளைஞர்கள் மத்தியிலே கூடி அங்கு வன்முறைகளாக குழு மோதல்களாக இருந்து வருவதைப் பார்க்கிறீர்கள். ஒரு காலம் கல்வியிலே முன்னேறி இருந்த யாழ்ப்பாணம் இன்று இந்த கலாச்சார சீரழிவுகளினால் மெல்ல சிதைந்து வருவது உண்மைதான். மேய்ப்பவன் இல்லா மந்தைகள் போல சரியான தலைமைகள் இல்லாமல் நாம் எங்கு போவதென்று தெரியாமல் நிற்கிறோம். இருந்த போதிலும் இந்த இளையர்களை குறை கூறி என்ன வருவது. இவர்களை மட்டும் குறை சொல்லி எந்த பயனும் இல்லை சரியான வழிகாட்டல் இன்றி இந்த இளைஞர்கள் பிழையான பாதைகளை தெரிவு செய்கின்றனர். ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் போலவே நல்லவை கெட்டவை என்ற பக்கங்கள் இருக்கும். குழப்பங்களும் பிரச்சனைகளும் எல்லா உலக சமூகத்திலும் தான் இருக்கின்றன தனியவே தமிழர் சமூகத்தில் மட்டும் இல்லை. நாகரீகமான சமுதாயமென்று சொல்லிக் கொள்ளும் ஐரோப்பிய சமுதாயத்தில் அரசியல் ரீதியாகவும் கலாச்சார ரீதியாகவும் இங்கும் எத்தனையோ குழப்பங்களை கண்டிருக்கிறோம். ஒரு உதைபந்தாட்ட போட்டிகள் நடைபெறும் பொழுது அங்கு கூடி பல குழப்பங்களை விளைவித்து அடிதடியில் முடிவடைவதை நாம் பலமுறை கண்டிருக்கிறோம். அரசியல் பொருளாதார பிரச்சினைகள் என்று இருக்கும் தேசங்களில் இது இன்னும் பிரச்சினையானதாகவே இருக்கும். நாமும் நம் மூதாதையினர் விட்டுச்சென்ற நாகரிகமான பாதையில் சென்று அறமும் தர்மமும் ஒழுக்கமும் தொலையாமல் எங்கள் ஒற்றுமையோடு கூடிய தேசிய உணர்வும் அடையாளமும் தொலையாமல் இருப்போம். பா.உதயன்✍️
-
எங்கே கனவுகள் தொலைந்து போனதா-பா.உதயன்
உணர்வுகளுக்குள் சிக்கி இருக்கும் போதெல்லாம் தொலைந்து போன வாழ்வு வந்து வந்து போகிறது, நினைவுகள் தொலையாமல் இருக்கும் வரையிலும். நீங்கள் கிருபன் சொல்லுவது போலும் எதையும் எதிர் கொள்ளும் சக்தியோடு மாற்றங்களோடு எழுவது மனித வாழ்வின் இன்னும் ஒரு பக்கமே. நன்றிகள்
-
எங்கே கனவுகள் தொலைந்து போனதா-பா.உதயன்
கள உறவுகளுக்கு நன்றிகள் 🌺
-
எங்கே கனவுகள் தொலைந்து போனதா-பா.உதயன்
இங்கே ஒரு வாழ்வு இருந்தது அங்கே ஒரு கதை இருந்தது அதிலும் ஒரு அறம் இருந்தது அப்போ எல்லாம் அழகு இருந்தது வீடு இருந்தது மரம் இருந்தது மரத்தில் பல பறவை இருந்தது பாடி இருந்தது கூடி இருந்தது பல குஞ்சுகள் அங்கு கூவி இருந்தது நிலவும் இருந்தது கனவும் இருந்தது நித்தம் இசைக்கும் பாடல் இருந்தது ஆட்டம் இருந்தது கூத்தும் இருந்தது எங்கும் சலங்கை ஒலியாய் இருந்தது நதி இருந்தது கடல் இருந்தது பூ இருந்தது கனியும் இருந்தது அருகில் எங்கும் ஆலயம் இருந்தது அங்கே ஒலிக்கும் மணி இருந்தது பள்ளி இருந்தது படிப்பும் இருந்தது துள்ளித் திரிந்த காலம் ஒன்றிருந்தது அடிக்கடி கூடும் நண்பர் இருந்தனர் அணைத்து எம்மை தாங்கும் ஆலமரமிருந்தது கோவில் இருந்தது சாமி இருந்தது வருடா வருடம் திருவிழா நடந்தது அம்மன் ஆடி வரும் தேரும் இருந்தது அதை விட அழகு எது தான் இருந்தது அறிவு இருந்தது தேடல் இருந்தது ஆயிரம் பள்ளிகள் அருகில் இருந்தது கலை இருந்தது தமிழ் மொழி இருந்தது காக்கவென்றொரு தெய்வம் இருந்தது மார்கழி மாதம் ஊர்களில் எல்லாம் கூவுத் திரியும் குயில்கள் இருந்தனர் பூவும் ஆட கூந்தலும் ஆட கண்கள் ஆலே கவிதைகள் பேசி சந்திரன் போலே பெண்கள் இருந்தனர் காதல் இருந்தது கனிவும் இருந்தது பாசம் இருந்தது நேசம் இருந்தது பங்கு பிரித்து உண்ணும் வாழ்வு இருந்தது உண்மை இருந்தது நேர்மை இருந்தது நீரும் இருந்தது நெருப்பும் இருந்தது நித்திய வாழ்வினில் சத்தியம் இருந்தது அறமும் இருந்தது தர்மமும் இருந்தது அழியாப் பிரம்ம ஜோதி எரிந்தது இத்தனை வாழ்வும் எங்கே போனது எத்தனை கனவுகள் வந்து போகுதே இன்னும் கனவுகள் உயிர்க்கவில்லையா எமக்காய் இரவுகள் விடியவில்லையா எங்கே கனவுகள் தொலைந்து போனதா. பா.உதயன்✍️
-
படிச்சாலும் படி மருத்துவராய் படி-பா.உதயன்
நல்ல கருத்துகள் நன்றிகள் கிருபன்!
-
படிச்சாலும் படி மருத்துவராய் படி-பா.உதயன்
பல தமிழ் பெற்றோருக்கு மருத்துவம் மட்டுமே படிப்பாக தெரிகிறது அதுக்கென்ன படிப்பது நல்லதுதான் என்ன தான் இருந்தாலும் சும்மாவா மருத்துவ படிப்பும் ஆழமா அறிவோட படித்தால் தானே அங்கும் நுழைய முடியும் எத்தனை தமிழன் மருத்துவர் என்று எங்களுக்கு பெருமை தானே ஆனால் மருத்துவம் மட்டும் படித்தால் போதுமா கழுவவும் துடைக்கவும் தேடவும் தெரியவும் ஆடவும் பாடவும் அறிவோடு எழுதவும் அரசியல் பொருளியல் உளவியல் உயிரியல் சட்டம் சமூகவியல் சர்வதேச அரசியல் தத்துவம் என்றும் இலக்கியம் கலை கவிஞன் என்று எழுதவும் பேசவும் உந்தன் உரிமையை வெல்லவும் புவியியல் அரசியல் பூகோளத்திற்காய் என்றும் எத்தனை பேர் தேவை ஆதலால் இந்தப் படிப்புகளும் சும்மாவா புலம் பெயர்ந்து வந்தாலும் பிள்ளையின் படிப்புக்காகவும் உறவுகளின் பசிக்காகவும் உரிமைக் குரலுக்காகவும் விடிய விடிய வியர்வை சிந்தி குளிரிலும் பனியிலும் கொடுத்தானே வாழ்வை அவன் கூட சும்மாவா வந்தாலும் வந்தான் அகதியாய் வந்தாலும் ஆழமாய் புதைத்தாலும் அந்த விதை போலவே சட்டென்று முளைத்து பட்டென்று நிமிர டக்கென்று தெரியுதே என்று ஐயோ ஐரோப்பியருக்கும் அதிசயம் தானம் ஆதலால் அனைத்தையும் படிபோம் ஆயுதம் செய்வோம் அறிவைத் தேடுவோம். பா.உதயன் ✍️
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வாழ்த்துகள் வாழ்க வளமுடன் 🌺🙏
- இன்று மாவீரர் தினம்!
-
காவலூர்க் கனவுகள்
அந்த காவலூர்காரன் நானும் அந்த காற்றோடும் மண்ணோடும் என் கனவும் பேசியது நினைவிருக்கு.என் கண் முன்னே என் ஊரை கண்டது போல் கவிதை சொல்லியது.மகிழ்ச்சி வாழ்த்துகள்.
-
கொரோனா வந்து அமைதி போச்சு-பா.உதயன்
வாதவூரன் வல்வை சகாரா யாவர்க்கும் நன்றிகள்.ஐயோ நான் சனியன் என்பது சங்கடம் தரும் கொரோனாவை தான்.இனி எள்ளு எண்ணெய் எரித்து கொல்லாமல் விடமாட்டான்.தப்பா நினைக்காதேங்கோ கொரோனாக்களை தான் சொல்லுகிறேன்.😂
-
அன்புள்ள அம்மா....
எல்லாமே மாறும் உலகில் அம்மாவின் அன்பு ஒன்று தான் மாற முடியாது.அருமை தொடருங்கள்.
-
கொரோனா வந்து அமைதி போச்சு-பா.உதயன்
ஈழப்பிரியன்,மல்லிகை வாசம்,குமாரசாமி ,கிருபன்,காவலூர் கண்மணி,சுவே,தமிழ் சிறி உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் .
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் தமிழ் சிறி 💐
-
கொரோனா வந்து அமைதி போச்சு-பா.உதயன்
- பரிசு.
இலக்கியம் நடனம் கொள்கிறது உங்கள் கவிதையில் அருமை தொடருங்கள் சுவி- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்கள் 💐- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
மனிதர்கள் எல்லாம் இப்போ ஒருவரை ஒருவர் குத்திறான்கள் மாடுகள் எல்லாம் இப்போ மனிதர்கள் ஆகிவிட்டனர்.- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
இறகு பிடுங்கிய கோழிகளுக்கு நாடாளுமன்றத்தில் சில அவிவிருத்திக்கான அருசி போடப்படும் என்கிறீர்களா குமாரசாமி.- சிந்தனைக்கு சில படங்கள்...
யாரை பிரட்டினாலும் என்ர காலைப் பிரட்ட முடியாதுடா- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
அவ ஹையோ ஹையோ ஹையோ கொல்லுறாளே Thousand watt ல் கண்ணால என்ன மெல்ல மெல்ல மெல்ல மெல்லுறாளே சூடான ஜிலேபி போல... அவ ஹையோ ஹையோ ஹையோ கொல்லுறாளே அந்தக் கன்னத்தின் குளியில என்னைத் தள்ளுறாளே வெள்ளை நிலவின் நிறம்போலே ரோசாப் பூவின் முகத்தினிலே லேசா தேனீ கடித்ததுபோல் யார் வந்து கடித்த மாங்கனியோ அவ ஹையோ ஹையோ ஹையோ கொல்லுறாளே கட்டி கட்டி இழுக்கிறாளே Thousand watt ல் கண்ணால காதலால் கட்டி இழுக்கிறாளே அவ ஹையோ ஹையோ ஹையோ ஐயோ மெல்லிறாளே என்னைக் கொல்லுறாளே. நன்றாக இருக்கிறது உங்கள் டூயட் குமாரசாமி.சும்மா பகிடியா முடித்து வைத்தேன்- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் பெண்ணின் அன்பின் முன்னால்- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
கால் நடை கொஞ்சம் தளர்ந்து கட்டினிலே படுத்தாலும் உன் பூ மணம் விட்டு போகுமோடி. தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் பெண்ணின் அன்பின் முன்னால்- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
உழவனுக்கு ஒரு பானையிலை பொங்கினா காணும் ஊர் குடிகாரனுக்கு பல பானையிலை பொங்க வேணும் காணும்.- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
அம்மா அப்பா சொல் படி நடப்பியா வீட்டுப் பாடம் ஒழுங்கா செய்வியா ஓம் என்று சொல்லு மட்டும் உந்த இடத்தை விட்டு அரக்கன் பாரு.நானும் கன நாளா உன்னை கவனிச்சிக்கிட்டு தான் வாறேன் பாரு. - பரிசு.
Important Information
By using this site, you agree to our Terms of Use.